Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Turnitin: மிரட்டலும் மீட்பும்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

Turnitin: மிரட்டலும் மீட்பும்

by விஜயலட்சுமி 

turnitin

கட்டற்ற தகவல் பயன்பாட்டில் தவிர்க்க முடியாத இணைப்புகளாக அறிவுத்திருட்டு (plagiarism) மற்றும் முறையான மேற்கோள் (proper citation) ஆகியவை திகழ்கின்றன. இவை இரண்டையும் முழுவதுமாகப் புரிந்துகொள்ளவும், கைவரப்பெறவும் உருவாக்கப்பட்ட மென்பொருளே Turnitin. ஆனால் ஆய்வாளர்கள் மத்தியில், அதிலும் குறிப்பாக ஆய்வு மாணவர்களின் மத்தியில் Turnitin வெறுக்கத்தக்கதாக இருக்கின்றது. குறிப்பிட்டுச் சொல்வதென்றால் கிழக்காசிய நாடுகளைச் சேர்ந்த ஆய்வாளர்களுக்கு Turnitin மிகப்பெரும் மிரட்டலாகவே இருந்துவருகிறது. ஆங்கில மொழியை இரண்டாம் மொழியாகப் பயன்படுத்தும் ஆய்வாளர்களுக்கு தங்கள் மரபில் புழக்கம் இல்லாத Turnitin ஓர் அந்நியத்தன்மையைக் கொடுக்கிறது.

அதிகமும் ஒன்றைச் சார்ந்து இருக்கும் ஒன்றை, அப்படியே நகல் செய்யும் தன்மையுடைய பண்பாட்டுப் பின்புலத்தைக் கொண்ட இவர்களால் உலகக்கல்விச் சூழலை முழுமையாக உள்வாங்கிக்கொள்ள முடிவதில்லை. சுய ஆய்வு, சுய கண்டடைதல், மேற்கோள் காட்டல் என அனைத்துமே கிழக்காசிய நாடுகளுக்கு புதிய கல்வியியல் கலாச்சாரத்தை போதிப்பவையாகும். இதனை, சாரமாகக் கொண்டு வடிவமைக்கப்பட்ட Turnitinயை மிகக்குறுகிய காலகட்டத்தில் கிழக்காசிய நாடுகளின் உயர்கல்விக் கூடங்களில் பயன்படுத்தத் தொடங்கியதன் விளைவே இவ்வெறுப்புணர்வுக்கு அடித்தளமிடுகிறது. மேலும் Turnitin தொடர்பான தவறான புரிதலும், முறையான மேற்கோள் காட்டும் திறன் குறைவாக இருப்பதும்கூட கருத்தில் கொள்ளவேண்டிய காரணங்களாகும்.

Turnitin முழுக்க முழுக்க உரை பொருத்திப்பார்க்கும் கருவியாக (text-matching tool) மட்டுமே வடிவமைக்கப்பட்டதாகும். இவ்விணைய மென்பொருளால் உலகில் உள்ள அனைத்து எழுத்துப் பிரதிகளையும் பொருத்திப்பார்க்க முடியாது. விவாதங்கள், மின் கலைக்களஞ்சியங்கள், உரைகள், விளக்கப்படங்கள், வரைபடங்கள், மின் புத்தகங்கள் என இணைய உலகில் பொதுப் பகிர்வாகியிருக்கும் தரவுகளை மட்டும் Turnitin மென்பொருள் அடையாளம் காணும்.

அதேவேளை, பொதுவான இணையத் தரவுகள், மின் நூல்கள், ProQuest தரவுத்தளம் ஆகியவற்றைத் தவிர்த்து இதர எந்தவொரு அச்சு வடிவிலான படைப்புகள் மற்றும் சந்தா அடிப்படையிலான தரவுத்தளங்களில் உள்ள படைப்புகளையும் இம்மென்பொருளால் அடையாளம் காணமுடியாது.

சுருக்கமாகச் சொல்ல வேண்டுமென்றால், Turnitin மென்பொருள் இணையவழித் தரவுகளை மட்டும் அடிப்படையாகக் கொண்டு அறிவுத்திருட்டினை அளவிடுகிறது. நமது படைப்பு இணையத்தில் உள்ள எவ்வகைப் படைப்போடு பொருந்தி இருக்கிறது என்பதை அடையாளம் காட்டுகிறது.

தொடர்ந்து, அசல் படைப்பைப் பொழிப்புரை செய்திருந்தாலோ அல்லது அதன் கருத்துகள் எடுத்தாளப்பட்டிருந்தாலோ இம்மென்பொருளால் அவற்றை அடையாளம் காணமுடியாது. மேலும், இதனால் மேற்கோள்களை அடையாளம் காணமுடியாது. அதாவது ஒரு வாக்கியம் அல்லது பத்தி முறையாக மேற்கோள் காட்டப்பட்டிருந்தாலும் அந்தப் பகுதியையும் சேர்த்தே வண்ணமிட்டு அசல் படைப்போடு பொருத்திக் காட்டும்.
ஆக, Turnitin ஒரு படைப்பு அறிவுத்திருட்டு செய்யப்பட்டுள்ளது எனும் முழுமுற்றான தீர்ப்பை வழங்கும் மென்பொருள் இல்லை. மாறாக, தொகுக்கப்பட்ட சில வழிமுறைகளைப் பின்பற்றி நம் படைப்பை அசல் படைப்போடு ஒப்பிட்டு மட்டுமே காட்டுகின்றது.

Romanized எழுத்துருவில் அமைந்துள்ள இணையத் தரவுகளைத் தவிர்த்து சீனம், ஸ்பேனிஷ், ப்ரான்ஸ் எழுத்துருக்களைக் கொண்ட இணையத் தரவுகளை மட்டுமே இதனால் உள்வாங்க முடியும். ஆக, தமிழ்மொழியை இதனால் உள்வாங்க முடியாது என்பதைத் தெளிவில் கொள்ள வேண்டும்.

Turnitin பயன்கள்

அறிவுத்திருட்டை அடையாளம் காண உதவுகிறது

இம்மென்பொருள் உருவாக்கத்தின் நோக்கமே அறிவுத்திருட்டைக் களைவதாகும். அவ்வகையில் பயனர்கள் தங்களது படைப்பை இம்மென்பொருளினுள் பதிவேற்றம் செய்து சரிபார்ப்பதன்வழி அறிவுத்திருட்டிலிருந்து விடுபட முடியும். இம்மென்பொருள் அடையாளமிடும் பகுதிகளைச் செறிவு செய்து, திருப்தி அடையும்வரை மீண்டும் மீண்டும் மீள் பதிவேற்றம் செய்து திருத்துவதற்கு வாய்ப்புகள் உண்டு.
மேற்கோள் காட்ட உதவுகிறது

படைப்பாளர்கள் முறையாக மேற்கோள் காட்டாதபோது Turnitin அதனை வண்ணமாக்கி காட்டுகிறது. அந்நிலையில் பயனர் தனது படைப்பில் சரியான மேற்கோள்களை இடவும், விடுபட்ட மேற்கோள்களை முழுமைப்படுத்தவும் சுலபமாக இருக்கும். ஆக, முறையான மேற்கோள் இடுவதற்கு உதவும் கருவியாக நாம் Turnitin-ஐ புரிந்து கொள்ளலாம். அல்லது மேற்கோள் இடுவதில் மேலும் கவனமாக இருக்க Turnitin வழிகாட்டுவதாகவும்கூடக் கொள்ளலாம்.

தரவுகளை அதிகம் சாராமல் இருத்தல்

தரவுகளை அதிகமாக கொண்டு உருவாக்கப்படும் படைப்பை ‘patch writing’ என்று கல்வியியல் சூழலில் அழைப்பர். ஒரே தரவை 10% மேல் பயன்படுத்தும்போது அதனை Turnitin அடையாளப்படுத்துகிறது. இம்மாதிரியான அம்சத்தைக் கொண்ட படைப்பின் அசல் தன்மை கேள்விக்கு உட்படுத்தப்படுகிறது. அவ்வகையில் Turnitin ஆய்வாளர் ஒரு தரவை அதிகம் சாராமல் இருக்க அவற்றை முறையாக அடையாளம் காட்டி, படைப்பில் திருத்தத்தைச் செய்ய உதவுகிறது.

பொழிப்புரைத் திறனை அதிகரிக்கிறது

அறிவுத்திருட்டைக் களைய, பொழிப்புரை செய்யும் வழிமுறை பயன்படுத்தப்படுகிறது. அசல்படைப்பை சுட்டிக்காட்டும் Turnitin சாம்பல் நிறத்திலான அடையாளத்துடன் பொழிப்புரைக்கு ஏதுவான சில மாற்றுச் சொற்களையும் பயனர்களுக்கு வழங்குகிறது. இதனைத் தொடர்ந்து பயன்படுத்துவதால் ஆய்வாளர்களின் பொழிப்புரை செய்யும் திறன் மேம்படுவதையும் பல ஆய்வுகள் காட்டுகின்றன.

Turnitinல் உள்ள வெவ்வேறு வண்ணங்கள்

இம்மென்பொருள் ஒரு படைப்பு அசல் படைப்போடு பொருந்தியிருப்பதைச் சுட்டிக்காட்ட பல்வேறு வண்ணங்களைப் பயன்படுத்துகிறது. ஒரு தரவில் உள்ள சொற்களின் எண்ணிக்கையை அளவிடுவதன் அடிப்படையிலே இவ்வண்ணங்கள் மாறிமாறி பயன்படுத்தப்படுகின்றன. அசல் தரவில் உள்ள சொற்களில் 20க்கும் மேற்பட்ட சொற்கள் பயன்படுத்தப்படும்போது வண்ணங்கள் இட்டு அடையாளப்படுத்தப்படுகிறது.

அதன் அட்டவணை பின்வருமாறு வகுக்கப்பட்டுள்ளது.
நீலம்    எந்த சொற்களும் அசல் தரவோடு பொருந்தவில்லை
பச்சை    ஒரு சொல் பொருந்தியுள்ளது (24% similarity index)
மஞ்சள்    25-49% similarity index
ஆரஞ்சு    50-74% similarity index
சிவப்பு    75-100% similarity index

இவ்வாறு பொருந்தி இருக்கும் வாக்கியம்/பத்தி அறிவுத்திருட்டு செய்யப்பட்டுள்ளதா இல்லையா எனும் முடிவுக்கு வரும் பொறுப்பு பயனர்களையே சாரும். இறுதி முடிவு எடுக்கும் கடப்பாட்டை நம்மிடமே Turnitin மென்பொருள் விட்டுவிடுகிறது.

உதாரணமாக படைப்பாளர் முறையாக மேற்கோள் காட்டியிருந்தால் குறிப்பிட்டு வண்ணமாக்கி விடப்பட்டிருக்கும் பகுதியின் வண்ணத்தை நீக்கிவிட முடியும். அதன்மூலம் அப்பகுதி அறிவுத்திருட்டு செய்யப்படவில்லை என்பதாக மாறிவிடும். இதனை Instructor எனும் பயனர் மட்டுமே செய்ய முடியும்.

பெரும்பாலும் கல்வி நிறுவனங்கள், பதிப்பு, இதழியல் துறை சார்ந்த நிறுவனங்கள் இந்த மென்பொருளை ஆண்டுச்சந்தா அடிப்படையில் பயன்படுத்துகின்றன. இதில் முக்கிய இரு பிரிவுகளாக Instructor மற்றும் Student ஆகிய இருபிரிவுகள் இருக்கும். Instructor என்பவர் படைப்பின் அசல் தன்மையை சோதனைச் செய்பவராவார். Student என்பவர் படைப்பை இம்மென்பொருளில் பதிவேற்றம் செய்பவராவார் (பயனர்).

Checking originality என்பது படைப்பின் அசல் தன்மையை அடையாளம் காணும் பகுதியாகும். இதில், படைப்பின் அசல் தன்மை சோதனை செய்யப்பட்டு எப்படைப்போடு பொருந்தியிருக்கிறது என்பதை வகைவகையாக வண்ணமிட்டு இம்மென்பொருள் காட்டுகிறது. Instructorக்கு அனுப்பும் முன் எத்தனை முறை வேண்டுமானாலும் நமது படைப்பைத் திருத்தி மீள்பதிவிட்டு அசல் தன்மையைப் பரிசோதனை செய்துகொள்ள முடியும். Instructorக்கு அனுப்பிவிடப்பட்ட படைப்பு அவரால் நிராகரிக்கப்படும்போது, திருத்தம் செய்யப் பணிக்கும்போது மட்டுமே பயனர் அதனைத் திருத்த வாய்ப்புள்ளது.

மேற்கூறிய இவையே Turnitin மென்பொருளைப் பயன்படுத்துபவர்கள் தெரிந்துவைத்திருக்க வேண்டிய அடிப்படையான செய்தியாகும்.

Turnitin மென்பொருளின் நான்கு முக்கிய செயலிகள்

Originality Report (அசல்தன்மை அறிக்கை)
பதிவேற்றம் காணும் ஒரு படைப்பை இணையத்தில் உள்ள பில்லியன் கணக்கான இணைய ஆவணங்கள், இணைய தொகுபதிவகத்தின் (repository) இதழ்கள், பதிப்புகள் மற்றும் Turnitin மென்பொருளில் சேமிக்கப்பட்ட படைப்புகளோடு ஒப்பிட்டு அப்படைப்பின் அசல் அறிக்கை (Originality Report)  என வெளியிடும்.

Quick Mark Sets (QM)
இச்செயலியின்வழி ஏற்கனவே வழங்கப்பட்ட புள்ளிகளை எளிதாக மாற்றியமைக்க முடியும். படைப்பின் எப்பகுதிக்கும் எளிதாக நகர்த்திச் செல்லும் வகையில் இச்செயலி வடிவமைக்கப்படுள்ளது. Turnitin வழங்கியிருக்கும் புள்ளிப் பட்டியலைத் தவிர்த்து Instructor தங்களது தேவைக்கேற்பப் புள்ளிப் பட்டியலை வடிவமைத்துக்கொள்ள முடியும்.

குரல்வழி கருத்துப் பதிவு (Voice Comments)
ஒவ்வொரு சொல்லின், வாக்கியத்தின், பத்தியின் இறுதியிலும் அல்லது விரும்பிய எப்பகுதியிலும் குரல் பதிவினை வைக்கும் வசதியை இம்மென்பொருள் கொண்டுள்ளது. குரல் பதிவின்வழி படைப்பின் குறிப்பிட்ட பகுதிகளில் செய்யவேண்டிய மாற்றங்கள், கருத்து தொடர்பான கேள்விகள் அனைத்தையும் எளிமையாக, தெளிவாக மற்றும் விரைவாக, பயனர்களுக்கு தெளிவுறுத்த முடியும்.  பயனர்களும் தங்களது கருத்துகளை, விளக்கங்களை குரல் பதிவிட்டு Instructorக்குத் தெரியப்படுத்தலாம். இது Instructor மற்றும் Student ஆகிய இருவரின் தட்டச்சு செய்யும் நேரத்தை மிச்சப்படுத்துகிறது.

Rubrics
பயனரின் படைப்புகளை மதிப்பிட்டு புள்ளிகளை வழங்க Rubric பயன்படுத்தப்படுகிறது. இதில் Standard rubric, Custom rubric, Qualitative Rubric என மூன்று விதமான பதிப்பீட்டு சட்டக வகைகள் உள்ளன. இதில் ஏதாவதொன்றைத் தெரிவுசெய்து புள்ளிகள் வழங்குவதற்கான அளவீடுகள் (criteria) மற்றும் ஒப்பளவுகள் (scales) என மதிப்பெண் சட்டகத்தை நெறிப்படுத்தி எளிதாகப் புள்ளிகள் வழங்க முடியும். பயனர்களும் இதனைப் பார்த்துத் தங்களது படைப்புத் தரத்தை மேம்படுத்த துணைநிற்கிறது.

முடிவாக

தகவல் தொழிநுட்ப உலகின் கற்றல்பேறில் ஓர் அங்கமாகி உள்ள Turnitin அதிகம் பயனளிக்கும் மென்பொருளாகும். இதன் செயல்பாட்டையும் தேவையையும் நன்கு புரிந்துகொள்வதன்வழி தரமான, செறிவான, அசல்தன்மைமிக்க படைப்பை உருவாக்க முடியும். தமிழ் மொழியையும் இதனுள் இடம்பெறச் செய்ய வழிவகைகளை மேற்கொள்வதன்வழி தமிழ் கற்றல், கற்பித்தல், ஆய்வுத் துறைகளை மேலும் செறிவாக்க முடியும் என்பது உறுதி. அல்லது குறைந்தபட்சம் மற்ற மொழிகளில் Turnitinயை பயன்படுத்தி அதிலிருந்து பெறப்படும் அனுபவத்தைக் கொண்டு தமிழ் சூழலில் எழுத்துப்பணியினை மேம்படுத்தவாவது முனையலாம்.

http://vallinam.com.my/version2/?p=2264

 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.