Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இளமை புதுமை பல்சுவை

Featured Replies

  • தொடங்கியவர்

10 செகண்ட் கதைகள்

ஓவியங்கள்: ஸ்யாம்

 

p201.jpg

முன்கதைச் சுருக்கம்

`தொழில் நஷ்டத்தால் மாயமான படஅதிபரின் வாழ்க்கையை சினிமாவாக எடுக்கலாமா?’ - யோசிக்க ஆரம்பித்தான் புதுமுக இயக்குநர் புவன்.

- ராம்ஆதிநாராயணன்


p202.jpg

புதுச் சீர்

``அப்படியே ஒரு லேப்டாப்பும் மொபைலும் சேர்த்துக்குங்க” என்றாள் கல்யாண சீர்வரிசை சாமான்களுக்குப் பட்டியல் சொன்ன சம்பந்தி அம்மாள்.

- விகடபாரதி


p203.jpg

ஆசை... ஆசை..!

பைக் திருடன் ஆசைப்பட்டான்... கார் திருட!

- பெ.பாண்டியன்


p204.jpg

பேரம்

``தலைவரே... தேர்தல்ல எனக்குத்தான் ஸீட் தரலை... பையனுக்காவது உங்க காலேஜ்ல ஒரு ஸீட் தாங்களேன்’’ என்று கெஞ்சிக்கொண்டிருந்தார் ஒன்றியச் செயலாளர்.

- வேம்பார் மு.க.இப்ராஹிம்


p205.jpg

துட்டி விசாரிப்பு

``ஊர்ல மாமா இறந்துட்டாராம்...’’ என்று அப்பா சொல்ல, ``சண்டேவா இருந்தா போயிருக்கலாம்’’ என்றான் மனோ.

- அ.ரியாஸ் 


p206.jpg

சீரியல்... சீரியஸ்!

`ஏதாவது காமெடி சேனலா மாத்தும்மா' என்றபடியே வந்தாள் படப்பிடிப்பு முடித்து வீடு திரும்பிய சீரியல் நடிகை.

- ஜெயலக்‌ஷ்மி


p207.jpg

வேலை நேரம்

``வீட்ல வேலையா இருக்கேன்... நாளைக்கு ஆபீஸுக்கு வா பேசலாம்’’ என்று நண்பனிடம் சொன்னான் ஹரி.

- வீ.விஷ்ணுகுமார்


p2010.jpg

விடுமுறை தினங்கள்!

`ஒரு மாச ஸ்கூல் லீவுல யார் யார், எங்கெங்கே போனீங்க?' என்று கேட்ட மிஸ்ஸிடம் `டான்ஸ் க்ளாஸ்’, `மியூஸிக் க்ளாஸ்’, `ஸ்போக்கன் இங்கிலீஷ் க்ளாஸ்’, `இந்தி க்ளாஸ்’, `டிராயிங் க்ளாஸ்’... என்றனர் ஒவ்வொரு பிள்ளையும்.

- ஜோஷனா


p208.jpg

ஷோ டைம்!

டி.வி நடனப் போட்டியில் பங்குபெறும் பெண்ணுக்கு மேக்கப் போட்டுவிட்டு, கடைசியாக ஆக்சிடென்ட்டில் கால் உடைந்த மாதிரி பெரிய மாவுக்கட்டும் போட்டார்கள்.

- நந்த குமார்


p209.jpg

வீட்டுக்கொரு...

வீடு, பக்கத்தில் தென்னைமரம் வரைந்த குட்டிப் பையன் மரத்தை அவசரமாக அழித்துவிட்டு, இன்னொரு வீட்டை வரையத் தொடங்கியிருந்தான்.

vikatan

  • Replies 11.3k
  • Views 1.5m
  • Created
  • Last Reply
  • தொடங்கியவர்

 

p22a.jpg

‘கேப்டன் மார்வெல்’ என்ற சூப்பர் ஹீரோயின் படத்தை 2019-ம் ஆண்டு மார்வெல் காமிக்ஸ் குழு வெளியிடத் திட்டமிட்டிருப்பதாக செய்திகள் வெளியாகின்றன. அதில் கேப்டன் மார்வெல்லாக, ப்ரீ லார்சன் நடிக்க இருப்பதாகச் சொல்கிறார்கள். கேப்டன் அமெரிக்காவாகப் படங்களில் நடிக்கும் கிறிஸ் ஈவன்ஸும், ப்ரீக்கு ஆதரவுக்கரம் நீட்டியிருக்கிறார். கேப்டன் அமெரிக்காவே சொல்லிட்டாரா?

p22b.jpg

‘பேஸிக் இன்ஸ்டிங்ட்’ படத்தின் மூலம் பலரது மனதைக் கொள்ளை அடித்தவர் ஷரான் ஸ்டோன். 50 வயதைக் கடந்த ஸ்டோன், ‘இப்போதும் எனக்கு டேட்டிங்கிற்கு ஆள் கிடைப்பது சுலபம்தான். ஆனால், பயங்கர பிஸியாக இருப்பதால், தற்போதைக்கு அதற்கெல்லாம் செல்ல விருப்பம் இல்லை’ என ஹாட் பேட்டி அளித்து இருக்கிறார். கில்லாடி!

p22c.jpg

ந்த மாதம் வெளியாக இருக்கும் ‘தி நியான் டிமான்’ படத்தை ப்ரோமோட் செய்வதில் பிஸியாக இருக்கிறார் நடிகை எல்லி ஃபேனிங். 18 வயதான எல்லி, நாட்டு மக்களுக்கு சொல்லும் கருத்து என்னவென்றால், ‘என் வயதுள்ள பெண்கள் பெர்ஃபெக்ட்டாக இருப்பதற்காக, லூசுத்தனமாக நிறைய விஷயங்கள் செய்கிறார்கள். அதெல்லாம் தேவையே இல்லை’ என்பதுதான். ரொம்ப ஓப்பன்தான்!

p22d.jpg

மெரிக்க நடிகர் ஆஸ்டின் ஸ்டோவெல்லும், பல்கேரிய நடிகை நினா டொப்ரேவும் காதலித்து வந்தனர். தொடர்ந்து தத்தம் படங்களில் பிஸியாக இருப்பதால், சந்தித்துக்கொள்ள முடியவில்லை எனக் காரணம் காட்டிப் பிரிந்தனர் இருவரும்.  ஆஸ்டினோ தற்போது அமெரிக்க நடிகை எம்மா ஸ்டோனுடன் நெருக்கமாக இருக்கிறார். இதைக்கண்டு கடும் வருத்தத்தில் இருக்கிறாராம் நினா. என்னடா இது ஹாலிவுட்டுக்கு வந்த சோதனை!
 

vikatan

  • தொடங்கியவர்
 
ஸ்ட்ராபெரி நிலவு
=================
பிரிட்டனின் ஸ்ட்ராபெரி கால ஆரம்பத்தை குறிக்கும் முழு நிலவு இது. 50 ஆண்டுகளுக்கு பிறகு முதல் முறையாக கோடையில் வடதுருவத்தில் சூரியன் உச்சத்தில் வரும் நாளில் இதுவும் வந்துள்ளது. கடைசியாக அறுபத்தி ஏழாம் ஆண்டில்தான் இப்படி நடந்ததாம்.
  • தொடங்கியவர்

வரலாற்றில் இன்று: ஜூன் 22
 
 

article_1434952470-BamEarthquake.JPG1893: பிரித்தானிய கடற்படை யுத்தக் கப்பலொன்று தற்செயலாக பிரித்தானிய வர்த்தக கப்பலொன்றுடன் மோதியதால் 359 பேர் பலி.

1911: பிரித்தானிய மன்னராக 5ஆம் ஜோர்ஜ் பதவியேற்றார்.

soviet%281%29.jpg

1918: அமெரிக்காவில் இடம்பெற்ற ரயில் விபத்தில் 118 பேர் பலி.

1940: பிரான்ஸில் ஜேர்மனியின் ஆளுகைக்குட்பட்ட பிராந்தியமொன்றை ஸ்தாபிக்க இணங்கும் ஒப்பந்தத்தில் கையெழுத்திட பிரான்ஸ் நிர்ப்பந்திக்கப்பட்டது.

1941: சோவியத் யூனியன் மீது ஜேர்மனி படையெடுத்தது.

1962: மேற்கிந்தியத் தீவுகளில் பிரெஞ்சு விமானமொன்று விபத்துக்குள்ளானதால் 113 பேர் பலி.

1978: புளூட்டோ கிரகத்தின் சந்திரனான சாரோன் கண்டுபிடிக்கப்பட்டது.

2002: ஈரானில் இடம்பெற்ற 6.5 ரிச்டர் அளவிலான பூகம்பத்தினால 261 பேர் பலியாகினர்.

.tamilmirror.lk

Edited by நவீனன்

  • தொடங்கியவர்

13475071_1067289386653088_83061328196838

இளைய தளபதிக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்


தமிழ்த் திரையுலகின் முன்னணி நடிகர், வசூல் மன்னர்களில் ஒருவர், மிகப்பெரிய ரசிகர் கூட்டத்தைத் தன் வசப்படுத்தியுள்ள இளைய தளபதி விஜய்க்கு இன்று பிறந்த நாள்.

 

 

 

Edited by நவீனன்

  • தொடங்கியவர்

கண்ணை நம்பாதே உன்னை ஏமாற்றும்...

தென் கொரியாவைச் சேர்ந்த 22 வயது மேக்கப் ஆர்ட்டிஸ்ட் டேன் யூன் (Dain Yoon) கைகள், முகம், கழுத்து என தானே ஓவியங்களை வரைந்துகொண்டு, படம் பிடித்து சோஷியல் மீடியாக்களில் பரப்பிவருகிறார். இந்த படங்கள் பார்ப்போரை குழப்பமடையச்செய்கிறது.

13445260_736540319781846_133970979451421

13466136_736540323115179_299185244624740

13510977_736540326448512_727747881707747

13466256_736540369781841_966617982233785

13445826_736540373115174_348106823543209

 

  • தொடங்கியவர்

உலகின் பிரம்மாண்டப் படகு!

 
 
ship_2904129f.jpg
 

நாட்டுப்படகு, விசைப்படகு, ஃபைபர் படகு என நிறையப் படகுகளைப் பற்றி நமக்குத் தெரியும். இந்த வரிசையில் சீனாவில் ஒரு சொகுசுப் படகும் உள்ளது. நான்கு ஆண்டுகளுக்கு முன்பு இந்தப் படகு சீனாவில் அறிமுகமானது. இந்தப் படகின் பெயர் அதஸ்ட்ரா.

வழக்கமான படகு போல இது இருக்காது. ஒரு நட்சத்திர ஓட்டலைப் போல இருக்கும். உல்லாசப் படகில் 9 பேர் வரை பயணம் செய்யலாம். படகில் பெரிய டைனிங் ஹால், படுக்கை அறை, குளியல் அறை, விருந்தினர் அறை, ஓய்வு அறை எனப் படகு பிரம்மாண்டமாக உள்ளது.

இது 140 அடி நீளமும், 55 அடி அகலமும் கொண்டது. எடை மட்டுமே 52 டன் (ஒரு டன் = 1000 கிலோ). 4 ஆயிரம் கடல் மைல் தொலைவு வரை இந்தப் படகில் பயணம் செய்ய முடியும். அதாவது, நியூயார்க் நகரிலிருந்து லண்டன் வரை பயணம் செய்துவிடலாம்.

தண்ணீரைக் கிழித்துக் கொண்டு இந்தப் படகு போகும்போது பறவை பாய்ந்து செல்வது போலவே இருக்குமாம். இந்தப் படகைச் செய்வதற்கு ஆன செலவு எவ்வளவு தெரியுமா? ரூ.75 கோடி. இந்த அதஸ்ட்ரா படகை யார் வேண்டுமானாலும் வாங்கிவிட முடியாது. ஒரு பணக்காரருக்காக ஒரே ஒரு படகைத்தான் இதுவரை செய்திருக்கிறார்கள்.

tamil.thehindu

  • தொடங்கியவர்

தோற்றவர்களின் கதை - 4

 

 

தோல்விகளே மிகச் சிறந்த பரிசுகள்!

வால்ட் டிஸ்னியின் சாதனைகளை அடுக்கிக்கொண்டே போகலாம்.  மிக்கி மவுஸ், டொனால்ட் டக் போன்ற அற்புதமான கார்ட்டூன் கதாபாத்திரங்களை உருவாக்கிய மகத்தான கலைஞர். டிஸ்னி லேன்ட் கேளிக்கைப் பூங்காக்களின் ஸ்தாபகர். வால்ட் டிஸ்னி கம்பெனியின் நிறுவனர்.

இந்தச் சாதனைகளின் பின் உள்ள கொடுமையான சோதனைகள் பற்றிப் பெரும் பாலானவர்களுக்குத் தெரியாது.

தோல்விகளின் வலி மிகுந்த தனது வாழ்க்கைப் பயணம் வெற்றிகரமானதாகத் தோற்றமளிப்பது பற்றி வால்ட் டிஸ்னி இப்படிக் குறிப்பிட்டார்.

“நான் தொட்ட காரியமெல்லாம் வெற்றி பெறுவதாகவும், நான் எடுக்கும் முடிவுகள் அபூர் வமாகவே தோற்பதாகவும் சிலர் நினைக்கிறார்கள். உண்மையில் நான் எடுத்தத் தவறான முடிவுகளால் பல முறை படுதோல்வி அடைந்திருக்கிறேன். எனினும், நான் அடுத்தடுத்து முயற்சி செய்து கொண்டே  இருப்பதால், தவறுகள் வெளியில் தெரியாதபடி அதிலிருந்து வேகமாக மீண்டு வந்திருக்கிறேன். என்னைப்போல நீங்களும் அடுத்தடுத்த ஏராளமான முயற்சிகளை எடுக்கக் கற்றுக்கொண்டால் உங்களுக்கும் சராசரி வெற்றி அதிகமாகவே இருக்கும்.” 

p30a.jpg

அமெரிக்காவில் சிக்காகோ நகரில் 1901-ம் ஆண்டு பிறந்தார் வால்ட் டிஸ்னி. வறுமையான பின்னணியால் அவரது தந்தை எலியாஸ் சார்லஸ் டிஸ்னி, தனது கோபத்தை எல்லாம் குழந்தைகள் மீது காட்டுவதை வழக்கமாகக் கொண்டிருந்தார். தந்தையின் துன்புறுத்தல் பொறுக்காமல் வால்ட் டிஸ்னியின் அண்ணன்மார்கள் மூவர் ஊரைவிட்டே ஓடிவிட்டனர். சிரமங்களைச் சகித்துக்கொண்டு பள்ளி சென்றுவந்தார் வால்ட் டிஸ்னி.

டிஸ்னி குடும்பம் கான்சாஸ் நகருக்கு இடம்பெயர்ந்தது. வால்ட் டிஸ்னியின் தந்தை 1911-ம் ஆண்டில் செய்தித்தாள் விநியோக ஏஜென்சி எடுத்தார். அதில், தனது 10 வயதிலேயே பேப்பர் விநியோகிக்கும் கடுமையான வேலையில் வால்ட் டிஸ்னி ஈடுபட்டார். இதன்மூலம் வால்ட் டிஸ்னிக்கு கிடைத்த சொற்ப வருமானத்தையும் அவரது அப்பா பறித்துச் சென்றுவிடுவார். இருந்தாலும், தனது வருமானத்தில் ஒருபகுதியை மறைத்துவைத்து சேமித்தார்.  

1917-ல் டிஸ்னி குடும்பம் மீண்டும் சிக்காகோவுக்கு இடம்பெயர்ந்தது. மெக்கின்லி பள்ளியில் சேர்ந்த வால்ட் டிஸ்னி, சிக்காகோ நுண்கலை அகாடமியில் இரவுநேரப் படிப்பில் சேர்ந்தார். பிற்காலத்தில் அவரது சாதனைப் பயணத்துக்கான படைப்பாற்றல் பயிற்சி அங்கே கிடைத்தது.

1918-ல், முதல் உலகப்போரின்போது ராணுவ வீரராகச் சேர்ந்து போரிட விரும்பிய வால்ட் டிஸ்னியால் அதில் சேர முடியவில்லை. எனினும், செஞ்சிலுவைச் சங்கத்தில் ஆம்புலன்ஸ் டிரைவராகச் சேர்க்கப்பட்டு, பிரான்ஸ் நாட்டுக்கு அனுப்பி வைக்கப்பட்டார். அங்கே அவரது ஆம்புலன்ஸ் மிகவும் பிரபலமாகியது. காரணம், அதன் வெளிப்புறத்தில் அற்புதமான கார்ட்டூன் சித்திரத்தை வரைந்துவைத்திருந்தார் வால்ட் டிஸ்னி.

செஞ்சிலுவைச் சங்கப் பணி முடிந்து ஊருக்குத் திரும்பிய வால்ட் டிஸ்னி, சிபாரிசுகளைப் பிடித்து கன்சாஸ் பத்திரிகை ஒன்றில் கார்ட்டூன் உதவியாளர் பணியில் சேர்ந்துவிட்டார். ஆனால், அவரது மகிழ்ச்சி நீடிக்கவில்லை. அவருக்கு அரசியல் சமூக கோபம் போதிய அளவில் இல்லை என்றும், அதனால் பத்திரிகை கார்ட்டூனிஸ்ட் வேலைக்கு அவர் ஒத்துவரமாட்டார் என்றும் விமர்சிக்கப்பட்டு, வேலையில் இருந்து சில மாதங்களில் வெளியேற்றப் பட்டார் வால்ட் டிஸ்னி. 

p30v.jpg

பின்னர், பேஸ்மன் ரூபின் ஆர்ட் ஸ்டுடியோவுக்கான எடுபிடி வேலைகள் செய்யும் பணி கிடைத்தது. அங்கேயும் கிறிஸ்துமஸ் சீசன் வியாபாரம் முடிந்தவுடன் துரத்திவிட்டர்கள்.
 
அந்த ஸ்டுடியோவில் வேலைபார்த்த ஐவர்க்ஸ் என்ற கார்ட்டூனிஸ்ட் வால்ட் டிஸ்னியின் நண்பரானார். இருவரும் சேர்ந்து ஐவர்க்ஸ் - டிஸ்னி வரைகலை நிறுவனத்தைத் தொடங்கினார்கள். ஆரம்பத்தில் ஒருசில வாடிக்கையாளர்கள் கிடைத்தபோதும் போதிய வருவாய் ஈட்டமுடியவில்லை.

சுயதொழில் முயற்சியை அப்படியே கைவிட்டுவிட்டு, கான்சாஸ் சிட்டி சினிமா விளம்பர நிறுவனத்தில் வேலைக்குச் சேர்ந்தனர். அந்த நிறுவனம் கட்-அவுட் முறை அனிமேஷன் என்ற பழைய தொழில்நுட்பத்தில் விளம்பரப் படங்களைத் தயாரித்து வந்தது. ‘‘செல்லுலாய்டு அனிமேஷன் என்ற புதிய தொழில்நுட்பத்தில் விளம்பரப் படங்களைத் தயாரிப்பது சிறந்தது’’ என்று வால்ட் டிஸ்னி எடுத்துச் சொன்னார். அந்த விளம்பர நிறுவனம் அதனை ஏற்றுக்கொள்ளவில்லை. எனவே அங்கிருந்தும் வெளியேறினார் வால்ட் டிஸ்னி.
 
வீட்டிலேயே செல்லுலாய்டு அனிமேஷன் தொழில்நுட்பம் குறித்து பயிற்சிசெய்த அவர், ஹர்மன் என்ற நண்பருடன் இணைந்து சிறிய அனிமேஷன் நிறுவனம் ஒன்றைத் தொடங்கினார். ஈசாப் குட்டிக் கதைகள் பாணியில் “Newman’s Laugh-O-Grams” என்ற அனிமேஷன் தொடரை வால்ட் டிஸ்னி உருவாக்கினார்.

இந்தத் தொடருக்குக் கிடைத்த வரவேற்பால் உற்சாகமான வால்ட் டிஸ்னி, 1921-ம் ஆண்டில் Laugh-O-Gram ஸ்டுடியோவைத் தொடங்கினார். பிரபலமான அலைஸ் இன் வொண்டெர்லேண்ட் கதையை அனிமேஷன் படமாகத் தயாரித்தார். 12 நிமிட அனிமேஷன் படத்தைத் தயாரித்து முடிப்பதற்குள் பெரும் நிதிநெருக்கடிகளைச் சந்தித்த அந்த ஸ்டுடியோ நிறுவனம், 1923-ம் ஆண்டில் திவாலானது. பெரும் அவமானத்துடன் அந்த ஸ்டுடியோ முயற்சியைக் கைவிட நேர்ந்தது.

வேறு வழியின்றி லாஸ் ஏஞ்செல்ஸ் நகருக்குக் குடிபெயர்ந்தார் வால்ட் டிஸ்னி. தான் தயாரித்த அலைஸ் இன் வொண்டெர்லேண்ட் அனிமேஷன் படத்தை விற்பனை செய்திட அவர் மேற்கொண்ட முயற்சிகள் அனைத்தும் தோல்வியில் முடிந்தன. இறுதியில் நியூயார்க் பட விநியோகஸ்தர் மார்கரெட் வின்க்லெர் என்பவர் வால்ட் டிஸ்னியின் அனிமேஷன் படங்களை விநியோகிக்க முன்வந்தார்.

1923-ம் ஆண்டு அக்டோபரில், வால்ட் டிஸ்னியும் அவரது அண்ணன் ராய் டிஸ்னியும் இணைந்து வால்ட் டிஸ்னி கம்பெனியை ஹாலிவுட்டில் தொடங்கினார்கள். இதனை பழைய நண்பர்களுடன் ஒரு வலிமையான அனிமேஷன் பட நிறுவனமாக வளர்க்கத் தொடங்கினார் வால்ட் டிஸ்னி.

அலைஸ் இன் வொண்டெர்லேண்ட் அனிமேஷன் தொடருக்கான பணிகள் 1927 வரை தொடர்ந்தன. அதில் சலிப்படைந்த வால்ட் டிஸ்னி, தனது நண்பர் ஐவர்க்ஸுடன் இணைந்து Oswald the Lucky Rabbit என்ற கார்ட்டூன் கதாபாத்திரத்தை உருவாக்கினார். இந்தத் தொடரினால் அதிக லாபம் பெற்ற பட விநியோக நிறுவனமான மின்ட்ஸ், உரிய பங்கினை டிஸ்னிக்குத் தர மறுத்தது. Oswald கதாபாத்திர உரிமை தன்னிடமே இருப்பதாக மிரட்டியது. டிஸ்னி நிறுவன ஊழியர்களை வெளியேறச் செய்து, தானே தயாரிப்பு நிறுவனம் தொடங்கி அதில், அவர்களைப் பணிக்கு அமர்த்தி டிஸ்னிக்கு நெருக்கடி கொடுத்தது.

p30b.jpg

நெருக்கடிகளைச் சந்தித்துப் பழகிப்போன வால்ட் டிஸ்னி, விநியோக நிறுவனத்தின் மிரட்டல்களுக்குப் பணிய மறுத்துவிட்டார். வால்ட் டிஸ்னியின் நெருங்கிய நண்பரான ஐவர்க்ஸ் தவிர, பல மூத்த கலைஞர்கள் டிஸ்னியில் இருந்து வெளியேறிவிட்டனர்.

தனது நண்பர் ஐவர்க்ஸுடன் இணைந்து ‘மிக்கி மவுஸ்’ என்ற அட்டகாசமான கதாபாத்திரத்தை 1928-ம் ஆண்டு உருவாக்கினார் வால்ட் டிஸ்னி. முன்னர் திவாலாகிப்போன Laugh-O-Gram ஸ்டுடியோவில், தான் இரவுபகலாக உழைத்தபோது தன்னோடு விளையாடிய ஒரு செல்லமான எலியை மனதில்கொண்டே இந்தக் கதாபாத்திரத்தை வால்ட் டிஸ்னி உருவாக்கினார்.
 
மிக்கி மவுஸ் கதாபாத்திரத்தின் முதல் அனிமேஷன் படம் முடிவுற்றபோதும் உரிய விநியோகஸ்தர் கிடைக்கவில்லை. ஒருவழியாக, பவர்ஸ் சினபோன் என்ற விநியோக நிறுவனத்துடன் ஒப்பந்தம்போட்டு மிக்கி மவுஸ் படம் வெளியானது. படம் வெற்றிபெற்று, விநியோக நிறுவனம் லாபம் குவித்தது. லாபத்தில் உரிய பங்குத் தொகையை வழங்குமாறு டிஸ்னி நிறுவனம் கேட்டபோது, அதற்கு மறுப்புத் தெரிவித்த விநியோக நிறுவனம், வால்ட் டிஸ்னியின் நெருங்கிய நண்பர் ஐவர்க்ஸுக்கு ஆசைகாட்டி அவரை டிஸ்னி நிறுவனத்திலிருந்து வெளியேறச் செய்து, அவரோடு திருட்டுத்தனமாக ஒப்பந்தம் போட்டுக்கொண்டது.

இப்படி அடுத்தடுத்த ஏமாற்றங்களைச் சந்தித்த வால்ட் டிஸ்னிக்கு நரம்புத் தளர்வு ஏற்பட்டது. நீண்ட விடுமுறை எடுத்துக்கொண்டு, கியூபா, பனாமா நாடுகளுக்குச் சென்றுவந்து தனது மனதைத் தேற்றிக்கொண்டார் வால்ட் டிஸ்னி.

புதுத் தெம்புடன் வந்த வால்ட் டிஸ்னி, கொலம்பியா பிக்சர்ஸ் நிறுவனத்துடன் விநியோக ஒப்பந்தம் செய்துகொண்டார். இதனைத் தொடர்ந்து மிக்கி மவுஸ் படங்கள் உலக அளவில் பிரபலமாகின. விருதுகள் தேடிவந்தன. அது, அனிமேஷன் படங்களின் பொற்காலமாக மாறியது. வால்ட் டிஸ்னிக்குப் பல வெற்றிகளைத் தந்தது. 

1939-ம் ஆண்டில் இரண்டாம் உலகப்போர் தொடங்கியபோது, ஐரோப்பாவிலும், அமெரிக்காவிலும் டிஸ்னி படங்களுக்கு போதிய வருமானம் கிடைக்கவில்லை. செலவுகள் மிக அதிகமாகிவிட்டதால், டிஸ்னி நிறுவனம் கடனில் தத்தளித்தது. கடனைச் சமாளிக்க டிஸ்னி நிறுவனம் பொதுப் பங்குகளை வெளியிட்டது. இருப்பினும் நிதிச் சிக்கல்கள் தீரவில்லை. வேறு வழியின்றி தொழிலாளர்களின் ஊதியத்தைக் குறைக்கும் நடவடிக்கைகளை டிஸ்னி நிறுவனம் மேற்கொண்டபோது அதற்குப் பெரும் எதிர்ப்புக் கிளம்பியது. டிஸ்னி நிறுவனத்துக்கு எதிராகப் போராட்டங்கள் வெடித்தன.  

1944-ம் ஆண்டில் அமெரிக்க வங்கியில் டிஸ்னி நிறுவனத்தின் கடன் தொகை 40 லட்சம் டாலராக இருந்தது. பெரும் உழைப்புடன் உருவாக்கப்பட்ட அனிமேஷன் படங்கள் சில, எதிர்பாராதத் தோல்வியைத் தழுவின. தோல்வி மேல் தோல்விகள். கடன் கொடுத்தவர்கள் துரத்திவந்து நெருக்கடி கொடுத்தார்கள். 

p30sma.jpgகலங்கவில்லை  வால்ட் டிஸ்னி.   பின்வாங்குவதற்குப் பதிலாக விரிவாக்கம் பற்றிச் சிந்தித்தார். பொதுமக்கள் விடுமுறைகளைக் குதூகலமாகச் செலவிடுவதற்கான டிஸ்னி லேன்ட் கேளிக்கைப் பூங்காவை பிரமாண்டமாக உருவாக்கத் திட்டமிட்டார். இதற்கு நிதி வழங்க  வங்கிகள் மறுத்துவிட்டன. இந்தநிலையில், அப்போது தொலைக்காட்சியில் பிரபலமாகிவந்த டிஸ்னி லேன்ட் என்ற பொழுதுபோக்கு நிகழ்ச்சியைத் தொடங்கி, அதன்மூலமாக பெரும் நிதி திரட்டினார்.

கேளிக்கைப் பூங்காவை முதலில் ஆதரிக்காத மக்கள், தொலைக்காட்சி நிகழ்ச்சி மூலமாக ஈர்க்கப்பட்டு தேடிவரத் தொடங்கினர். கூட்டம் குவிந்தது. இதுவரை சுமார் 70 கோடி மக்கள் அந்தப் பூங்காவைப் பார்வையிட்டுள்ளனர். உலகின் 14 இடங்களில் கிளைகள் விரிந்தன. தோல்விகளைப் படிக்கட்டுகளாக மாற்றி முன்னேறுவதில் வல்லவரான வால்ட் டிஸ்னி 1966-ம் ஆண்டில், அவரது 65-வது வயதில் புற்றுநோயால் மரணமடைந்தார். எனினும், அவர் உருவாக்கிய டிஸ்னி நிறுவனம் ஆலமரமாய் தழைத்தோங்கியபடி இருக்கிறது. அதன் ஆண்டு வருமானம் மூன்றரை லட்சம் கோடி ரூபாய் என்பதே வால்ட் டிஸ்னி விதைத்த நம்பிக்கை விதைகளின் வலிமையைப் பறைசாற்றுகிறது.

மாபெரும் கனவுத் திட்டங்களை நனவாக்கிய நம்பிக்கை  நாயகன் வால்ட் டிஸ்னி  இளைஞர்களுக்குக் கூறும் அனுபவப் பாடம் இதுதான்:

‘‘தோல்விகளே மிகச் சிறந்த பரிசுகள். நீங்கள் தோல்வி அடையும்போது அதன் அருமை உங்களுக்குத் தெரியாமல் இருக்கலாம். உங்களைக் கீழே வீழ்த்தும் தோல்விதான், இந்த உலகம் உங்களுக்குத் தரும் மிகச் சிறந்த பரிசு என்பதை பின்னர் நீங்கள் உணர்வீர்கள்.’’

(இன்னும் வெல்வோம்)

vikatan

  • தொடங்கியவர்
Happy Birthday Vijay - இளையதளபதி விஜய் குறித்த சுவாரஸ்யமான தகவல்கள்
 

இளைய தள­பதி விஜய்க்கு இன்று (ஜூன் 22) 42 ஆவது பிறந்த தினம். விஜயின் தீவிர ரசி­கர்கள் ஒரு வாரத்­துக்கு முன்­ன­ரே­ அ­வரின் பிறந்த தினம் தொடர்­பான கவுண்ட்­ட­வுனை ஆரம்­பித்து சமூக வலைத்­த­ளங்­களை கலக்க ஆரம்­பித்­து­விட்­டனர்.

 

17479_v0.jpg

 

வழக்­க­மாக  விஜய்யின் பிறந்த தினத்தை முன்­னிட்டு இரத்த தானம், நன்­கொடை வழங்கல் போன்ற சமூகப் பணி­களில் ஈடு­ப­டுவர். 

 

எனினும் தற்­போது விஜய் சென்­னைக்கு வெளியில் இருக்­கிறார். பரதன் இயக்­கத்தில் “விஜய் 60” என தற்­கா­லி­க­மாக பெய­ரி­டப்­பட்ட படத்தில் நடித்து வரு­கிறார் விஜய். எனினும் பிறந்­த­தினக் கொண்­டாட்­டங்­களில் தம்­முடன் இணைந்­து­கொள்ள விஜய் சென்­னைக்கு திடீர் விஜயம் மேற்­கொள்­ளக்­கூடும் என சென்­னை­யி­லுள்ள அவரின் ரசி­கர்கள் எதிர்­பார்க்­கின்­றனர்.

 

42 ஆவது பிறந்த தினம் கொண்­டாடும் விஜய் குறித்த சில  சுவை­யான தக­வல்கள்

லண்­டனில் வசித்த இலங்­கை­ய­ரான சங்­கீதா சொர்­ண­லிங்­கத்தை 1999 ஆம் ஆண்டு விஜய் திரு­மணம் செய்தார். இத்­தம்­ப­தியின் மகன் ஜேசன் சஞ்சய் 2000 ஆம் ஆண்டு லண்­ட­னிலும் மகள் திவ்யா 2005 ஆம் ஆண்டு சென்­னை­யிலும் பிறந்­தனர்.

 

எந்த டான்ஸ் மாஸ்­ட­ரி­டமும் விஜய் நடனம் கற்­றுக்­கொண்­ட­தில்லை. இதன் இர­க­சியம் திற­மையும் கவ­னிப்பும். டான்ஸ் மாஸ்டர் ஒரு முறை ஆடிக்­காட்­டினால் எது எத்­தனை கடி­ன­மான ஸ்டெப்­பாக இருந்­தாலும் ஆடி­வி­டுவார்.

 

17479_theri-vijay-style7-1000x1250.jpgரசி­கர்கள் தன்­னுடன் இணைந்து படம்­பி­டித்துக் கொள்ள விரும்­பினால் அவர்­களின் தோளோடு அணைத்துக் கொண்டு போஸ்­கொ­டுப்­பது விஜய்யின் வழக்கம்.

 

படப்­பி­டிப்பில் யாரு­டனும் அதிகம் பேச­மாட்டார் நடிக்­கிற கெரக்டர் பற்­றித்தான் சிந்­தித்துக் கொண்­டி­ருப்பார். 

 

வெற்றி, குடும்பம், நான் சிகப்பு மனிதன், வசந்த ராகம், சட்டம் ஒரு விளை­யாட்டு, இது எங்க பூமி படங்­களில் குழந்தை நட்­ச­த்தி­ர­மாக நடித்­துள்ளார்.

 

ஹீரோ­வாக நடித்த முதல் படம் நாளைய தீர்ப்பு. முதல் ஹீரோயின் கீர்த்­தனா. 

 

விஜய்யின் ஆரம்ப கால படங்­களின் ஹீரோயின் சங்­கவி. இரு­வரும் இணைந்து நடித்த ரசிகன் படம் 175 நாட்கள் ஓடி­யது. விஜய்யின் முதல் வெள்­ளி­விழா படம் அது.

 

குழந்தை நட்­சத்­தி­ர­மாக இருந்­த­வரை ஹீரோ­வாக்­கி­யது நாளைய தீர்ப்பு. பிளேபோய் ஹீரோ­வாக நடித்­த­வரை செண்­டிமென்ட் ஹீரோ­வாக்­கி­யது காத­லுக்கு மரி­யாதை. எக்ஷன் ஹீரோ­வாக்­கிய படம் பக­வதி.

 

தெறி வரை கதா­நா­ய­க­னாக நடித்து வெளி­யான மொத்த படங்கள் 59. 

 

‘காத­லுக்கு மரி­யாதை’ படத்தில் நடி­த்­ததற்­காக தமி­ழக அரசின் சிறந்த நடிகர் விருதை பெற்றார். அதோடு எம்.ஜி.ஆர்.விருதும், திருப்­பாச்சி படத்­துக்கு சிறப்பு விருதும், தமி­ழக அர­சி­ட­மி­ருந்து பெற்றார்.

 

லயோலா கல்­லூ­ரியில் அவர் விஷ்கொம் படித்து முடித்தார்.

 

ரசிகன் படத்தில் ‘பாம்பே சிட்டி சுக்கா ரொட்டி...’ பாடலை முதன் முத­லாக பாடினார். கடை­சி­யாக தெறியில் ‘செல்­லக்­குட்டி..’ பாடினார் அவர் பாடிய மொத்த பாடல்கள் 31. அத்­த­னையும் ஹிட்.

 

விஜய் குழந்தை நட்­சத்­தி­ர­மாக நடித்த முதல் படம் வெற்றி. அதற்­காக வாங்­கிய சம்­பளம் 500 ரூபா. 

 

சினி­மாவில் நடிக்க வீட்டில் எதிர்ப்பு கிளம்­பி­யதால் ஒரு முறை கடிதம் எழு­தி­வைத்து விட்டு சென்று விட்டார். பின்னர் தேடிக் கண்­டு­பி­டித்து வீட்­டுக்கு அழைத்து வந்­தனர்.

 

17479_17479Untitled-5.jpgவிஜய்க்கு பிடித்­தது கவுண்­ட­மணியின் கொமெ­டியும், இளை­ய­ராஜாவின் பாடல்­களும். 

 

நீண்ட தூரம் காரில் பயணம் செல்­வது ரொம்ப பிடிக்கும். மனசு லேசாக வேண்­டு­மானால் காரை எடுத்துக் கொண்டு கிளம்பி விடுவார்.

அவ­ருக்கு பிடித்த நிறம் கறுப்பு. கார் கம்­பெ­னிகள், நம்­பர்கள் மாறி­னாலும் கறுப்பு நிறம் மட்டும் மாறாது. 

 

பொது­வாக எல்­லோ­ரையும் "வாங்­கண்ணா" என்று அழைப்பார். 

 

தன்னை வைத்து படம் இயக்கி கஷ்­டத்தில் இருக்கும் இயக்­கு­நர்­க­ளுக்கு தலா 5 இலட்சம் கொடுத்து உத­விய நடிகர் விஜய்.

 

ஒவ்­வொரு பிறந்த நாளின் போதும் தன் தாய், தந்­தையை நேரில் சந்­தித்து காலில் விழுந்து ஆசீர்­வாதம் வாங்­குவார்.

 

ஒவ்­வொரு படம் முடிந்த பிறகும் படம் வெற்றி பெற வேண்டும் என்­ப­தற்­காக வேளாங்­கன்னி சென்று பிரார்த்­தனை செய்து விட்டு வருவார். 

 

தனக்­காக மட்டும் இல்­லாமல் பிற நடி­கர்­க­ளுக்­கா­கவும் பின்­னணி பாடி­யி­ருக்­கிறார். ‘பெரி­யண்ணா’ படத்தில் சூர்­யா­வுக்­கா­கவும், ‘வேலை’ படத்தில் விக்­னேஸுக்­காவும் பாடி­யி­ருக்­கிறார்.

 

தந்தை எஸ்.ஏ.சந்­தி­ர­சே­கரின் படங்­களில் ஹீரோவின் பெயர் விஜய் என்றே இருக்கும். அவ­ரது இயக்­கத்தில் அதிக படங்­களில் நடித்­தவர் விஜ­யகாந்த், அவர் அறி­மு­கப்­ப­டுத்­திய இசை­ய­மைப்­பா­ள­ருக்கும் விஜய் ஆண்­டனி என்றே பெயர் வைத்தார். அந்த அள­வுக்கு மகன் மீது அப்­பா­வுக்கு பாசம். 

 

விஜய் படங்­க­ளுக்கு சம்­பளம் வாங்­காமல் கொஸ்ட்­டியூம் டிசை­ன­ராக பணி­யாற்­று­பவர் மனைவி சங்­கீதா.

 

உலகம் முழு­வதும் சுற்­றி­னாலும் சென்­னைக்கு அடுத்து விஜய்க்கு பிடித்த ஊர் லண்டன். காதல் மனைவி கிடைத்த ஊர் அது.

 

குழநதைகள் சஞ்சய், சாஷா என்றால் விஜய்க்கு உயிர். அவர்­களின் மழலை கால பேச்­சுக்­களை ஓடி­யோவில் பதிவு செய்து வைத்­தி­ருக்­கிறார். குழந்­தை­களின் ஒவ்­வொரு பிறந்த நாளையும் வீடி­யோ­வாக எடுத்து அதன் கலெ­க் ஷன்­களை சேர்த்து வரு­கிறார்.

 

17479_vijay_640x480_81429085058.jpgஎளிதில் உணர்ச்சி வசப்­ப­டாத விஜய் தன் அம்­மா­வுடன் ஒரு விளம்­பர படத்தில் நடித்­த­போது ரொம்­பவே உணர்ச்சி வசப்­பட்டார். 

 

தமிழ் நாட்டில் ரசிகர் மன்­றங்­களை அமைப்பு ரீதி­யாக பல­மாக வைத்­தி­ருப்­பது விஜய்தான். சென்­னையில் இருந்தால் மாதத்தில் இரண்­டா­வது மற்றும் நான்­கா­வது ஞாயிற்­றுக்­கி­ழ­மை ரசி­கர்­களை சந்­திக்க ஒதுக்­கு­கிறார்.

 

‘அழ­கிய தமிழ் மகன்’ படத்­துக்கு பிறகு கத்தி படத்தில் இரட்டை வேடத்தில் நடித்தார்.

 

‘நேருக்கு நேர்’, ‘பிரண்ட்ஸ்’ படங்­களில் சூர்­யா­வுடன் நடித்தார். அதன் பிறகு ‘நண்பன்’ படத்தில் ஜீவா, ஸ்ரீகாந்­தோடு நடித்தார்.

 

தெலுங்கு, இந்திப் படங்­களில் நடிக்க வந்த வாய்ப்­பு­களை தவிர்த்­து­விட்டார். தமிழ் படங்­களே போதும் என்­பது அவ­ரது கருத்து. ரவுடி ரத்தோர் படத்தில் பிரபு தேவா கேட்டுக் கொண்­ட­தற்­காக அக் ஷய் குமா­ருடன் ஒரு பாட­லுக்கு ஆடினார்.

 

அதி­க­மான இயக்­குநர்­களை அறி­மு­கப்­ப­டுத்­திய நடிகர் விஜய். பேர­ரசு, ஜெகன், எழில், செல்வா, பரதன், ரமணா, ஜான் மகேந்­திரா, மாதேஷ், எஸ்.பி.ராஜ்­குமார் உட்­பட 22 பேர்.

 

விஜய் தன் பிறந்த நாளை எப்­போதும் ஆடம்­ப­ர­மாக கொண்­டாட விரும்­பு­வ­தில்லை தனது பிறந்த நாளை உதவும் நாளாக கொண்­டா­டுங்கள் என்று அறி­வு­றுத்­துவார்.

 

சிறந்த நடி­க­ருக்­கான விருதை மாத்­தி­ர­மல்­லாமல் சிறந்த பின்னணிப் பாடகருக்கான விருதையும் வென்றவர் விஜய். ‘துப்பாக்கி’ படத்தில் ‘கூகுள் கூகுள்’ பாடலுக்காக SIIMA விருதையும் ‘கத்தி’ படத்தில் செல்பி புள்ள பாடலுக்காக பில்ம்பேர் விருதையும் விஜய் வென்றார்.

 

 தல அஜித்தின் ரசிகர்களும் தளபதி விஜய்யின் ரசிகர்களும் இணையத்தில் கடும் மோதல்களில் ஈடுபடுவதுண்டு. ஆனால், உண்மையில் விஜய் குடும்பத்தினரும் அஜித் குடும்பத்தினரும் நெருங்கிப் பழகுகின்றனர். 

metronews.lk

Edited by நவீனன்

  • தொடங்கியவர்
ரோபோவுடன் பேட்மிண்டன்
பேட்மிண்டன் விளையாட இனி உங்களுக்கு மனித துணை தேவையில்லை; மனிதர்களைப் போல் உங்களுடன் விளையாடும் ரோபோ
  • தொடங்கியவர்

நாட்டுக்கொரு பாட்டு- 11: அண்டை நாட்டின் அழகான கீதம்!

 

  • pak_2904107g.jpg
     
  • pak2_2904106g.jpg
     

அப்போது ஆங்கிலேயர்கள் அகண்ட இந்தியாவை ஆண்டுகொண்டிருந்த காலம். இன்றைய பாகிஸ்தானும், வங்கதேசமும் இந்தியா என்ற ஒரே குடைக்குள் இருந்தன. 1905 ஜூலை 19 அன்று அப்போதைய பிரிட்டிஷ் கவர்னர் ஜெனரல் கர்சன் பிரபு, வங்காளத்தை மதரீதியாகப் பிரித்தார். அதை ‘கிழக்கு வங்காளம்’ என்று தனியாக அறிவித்தார். மக்கள் கொதித்தெழுந்தார்கள். ஊஹூம். ஆங்கிலேய அரசு கேட்பதாக இல்லை. அதே ஆண்டு அக்டோபர் மாதம் 16-ம் தேதி, கிழக்கு வங்காளம் உருவானது.

கவிஞர்

யாருமே ஏற்றுக்கொள்ளாத இந்தப் பிரிவினைக்கு எதிராக நாடே குரல் கொடுத்தது. உலகப் புகழ் பெற்ற வங்கக் கவிஞர் சும்மா இருப்பாரா? வங்காளத்தின் பெருமைகளைப் பாடலாக இயற்றி, இசை வடிவத்துடன் வெளியிட்டார். எதிர்பார்த்தது போலவே, அந்தப் பாடல் பிரபலமானது. அதுவே பின்னர், வங்கதேசத்தின் தேசிய கீதமானது.

யார் அந்தக் கவிஞர்? இந்தியா, இலங்கை நாடுகளின் தேசியக் கீதங்களை இயற்றினாரே, அதே ரவீந்திரநாத் தாகூர்தான்! அவர்தான் வங்கதேசத்தின் தேசிய கீதத்துக்கும் சொந்தக்காரர்!

'பால்' எனும் கலை

இப்பாடல் முதன் முதலில் ‘போங்கோதர்ஷன்' பத்திரிகையில் 1905 செப்டம்பர் இதழில் வெளியானது. சில நாட்களுக்குப் பிறகு கவிஞரின் சகோதரர் சத்யேந்திரநாத் தாகூரின் மகள் இந்திரா தேவி, இப்பாடலுக்கு இசை வடிவம் தந்தார். அப்போது பிரபலமாக இருந்த, ‘பால்' கலைப் பாடகர் ககன் ஹர்காரா அமைத்த ‘அமி கோதே பாபோ தாரே' பாடலின் சாயல்தான் இது.

அறிவிப்பு

இந்தியா சுதந்திரமடைந்தபோது கிழக்கு வங்காளம் பாகிஸ்தானுடன் இணைக்கப்பட்டது. அந்தப் பகுதி கிழக்கு பாகிஸ்தான் என்றழைக்கப்பட்டது. 1971-ம் ஆண்டு இந்தியாவின் உதவியுடன் பாகிஸ்தானிலிருந்து பிரிந்து வங்கதேசம் தனி நாடானது. அப்போது, தாகூர் எழுதிய பாடலின் முதல் 10 பத்திகள், அந்த நாட்டின் தேசிய கீதமாக அறிவிக்கப்பட்டது.

ஆரத்தி

பொதுவாகத் தேசிய கீதம் என்றாலே எப்படி இருக்கும்? வீரம் கொப்பளிக்க, எழுச்சியூட்டும் வகையில் இருக்கும் அல்லவா? இது கொஞ்சம் மாறுபட்டு இருந்தது. தெய்வீக உணர்வுடன் கிட்டத்தட்ட ஒரு ஆரத்தி பாடல் போல இருந்தது. வங்கக் கவிஞரின் நயமான சொற்களும், ரம்மியமான இசையும் இனிமையைக் கூட்டின.

வங்கதேசத்தின் வளத்தைப் பறைசாற்றும் வகையில் இருக்கும் இப்பாடல், எப்படி ஒலிக்கும்?

அமர் சோனார் பாங்க்ளா

அமி தொமாய் பாலோ பாஷி

சிரோதின் தோமர் ஆகாஷ்

தோமார் பாதாஷ்

அமார் ப்ரானே பாஜாய் பாஷி

அமர் சோனார் பாங்க்ளா

அமி தோமாய் பாலோ பாஷி.

ஓ.. மா

ஃபகுனே தோ ரமிர் போனே

க்ரானே பகொல் காரே

மோரி ஹாய்..., ஹாரி ஓ.. மா..

ஓக்ரானே தோர் போரா கேதே

அமி கி தேக்கேச்சி மோதுர் ஹாஸி

அமர் சோனார் பாங்க்ளா

அமி தோமாய் பாலோ பாஷி.

கி ஷோபா கி ச்சாயா கோ

கி ஸ்நேஹோ, கி மாயா கோ

கி ஆச்சோல், பிச்சாயாச்சோ

பாதேர் மூலே,

நோதிர் கூலே கூலே

மா தோர் முகேர் பானி

அமார் கானே லாகே

சுதர் மோதோ

மோரி ஹாய்.. ஹாரி ஓ.. மா..

மா தோர் முகேர் பானி

அமார் கானே லாகே

சுதர் மோதோ

மாதோர் போதோன் கானி மோலின் ஹோலே

அமி நோயோஅன்

ஓ மா அமி நொயோன் ஜோலே பாஸி

சோனார் பாங்க்ளா

அமி தோமாய்.. பாலோ பாஷி.

தமிழாக்கம்

என் பொன்னான வங்காளமே

உன்னை நேசிக்கிறேன்.

நினது வானமும் நினது காற்றும் (கலந்து)

இனிய குழலோசையாய் எமது

இதயத்தில் இசைத்த வண்ணம் உள்ளது.

வசந்தத்தின் தாயே...

மாமரங்களின் வாசம்

ஆனந்தத்தில் திளைக்க வைக்கிறது.

ஆகா! என்ன ஒரு பேரானந்தம்!

வசந்தத்தின் தாயே...

முற்றிய நெல் வயல்களின் சுகந்தம்

முற்றுமாய் எங்கும் விரவிக் கிடக்கிறது.

என்ன அழகு... என்ன குளுமை...

என்ன அன்பு... என்ன கனிவு....

என்ன ஒரு அமைதியை நீ பரவ விட்டுள்ளாய்!

ஆலமரங்களின் காலடியில்...

ஒவ்வொரு நதியின் கரையிலும்....

ஓ.. என்னுடைய தாயே..., நின் திருவாய்ச் சொற்கள்

என் செவிகளுக்கு அமுதம் போன்றது.

ஆகா... என்ன ஒரு பேரானந்தம்!

ஓ... தாயே, வருத்தம்

உன் முகத்தை அண்டுமாயின்,

என் விழிகள் கண்ணீரால் நிரம்பி விடும்.

என் பொன்னான வங்காளமே

உன்னை நான் நேசிக்கிறேன்.

(தேசிய கீதம் ஒலிக்கும்)

tamil.thehindu.

  • தொடங்கியவர்

13502752_1067294316652595_46475698620284

திறமையான குடும்பப்பாங்கான பாத்திரங்களில் கலக்கியவரும் இப்போது சின்னத்திரை நாடகங்களில் முன்னணி நடிகையாக விளங்குபவருமான தேவயானியின் பிறந்த நாள்.

  • தொடங்கியவர்

அவலம் பேசும் ஓவியங்கள்

 

 
paint_2883894f.jpg
 

“ விற்பனையைப் பொருட்படுத்தாமல், சமூக சிந்தனையை ஓவியமாக்க ஒரு தைரியம் வேண்டும்.இங்கு நடத்தப்பட்ட கண்காட்சிகளிலேயே இது மிகவும் வித்தியாசமாக இருக்கிறது’’ என ஆச்சரியத்துடன் கூறிச் செல்கிறார் பார்வையாளர் ஒருவர்.

“என்னோட ஓவியங்கள் பெரும்பாலும் எண்ண ஓட்டத்துடன் தொடர்புகொண்டவை. கண் விழி, விழித்திரை, மூளை, பிரபஞ்சம் இவையெல்லாம் எண்ணத்தோட நெருக்கமானவை. அதனாலேயே அதை அதிகம் பயன்படுத்துறேன்.

paint1_2883897a.png

அதேபோல, வியாபார நோக்கத்தைத் தாண்டி, சமூகப் பிரச்சினைகளைக் கொஞ்சமாவது சொல்லணும். மக்களுக்கு அதை எளிமையாகப் புரியவைக்கணும். என்னோட கலை அதைச் செய்யணும். அதான் முக்கியம் என்கிறார்” ஓவியர் ரமேஷ்.

மற்றொரு ஓவியரான கே.எஸ்.நாதன், பென்சில் வரைபடக் கலை மூலம் நுணுக்கமான ஓவியங்களைக் காட்சிப்படுத்தியிருக்கிறார். கேரளத்தைச் சேர்ந்த இவர், தனது மாநிலத்தின் சிறப்பான கதகளி நடன முக பாவனைகளையும், கேரள யானையின் பிரமிப்பான முகத்தழகையும் அழகியல் ஓவியமாக வைத்துள்ளார்.

paint2_2883906a.jpg

கேரளம் குறித்த செய்திகள் மலையாள மொழியில் சிதறிக் கிடக்க, அதன் பின்னிருந்து கிழிந்த சட்டையுடன் எட்டிப் பார்க்கும் ஏழைச் சிறுவன் மூலம் அம்மாநிலத்தின் இன்னொரு முகத்தை அவர் காட்டியிருக்கிறார். இவர்களுடன் கே.சித்தார்த்தன், ராபின் வி.சிபி ஆகியோரின் ஓவியங்களும் பார்வையாளர்களை வெகுவாகக் கவர்கின்றன.

மற்றொரு ஓவியரான கே.எஸ்.நாதன், பென்சில் வரைபடக் கலை மூலம் நுணுக்கமான ஓவியங்களைக் காட்சிப்படுத்தியிருக்கிறார். கேரளத்தைச் சேர்ந்த இவர், தனது மாநிலத்தின் சிறப்பான கதகளி நடன முக பாவனைகளையும், கேரள யானையின் பிரமிப்பான முகத்தழகையும் அழகியல் ஓவியமாக வைத்துள்ளார்.

கேரளம் குறித்த செய்திகள் மலையாள மொழியில் சிதறிக் கிடக்க, அதன் பின்னிருந்து கிழிந்த சட்டையுடன் எட்டிப் பார்க்கும் ஏழைச் சிறுவன் மூலம் அம்மாநிலத்தின் இன்னொரு முகத்தை அவர் காட்டியிருக்கிறார். இவர்களுடன் கே.சித்தார்த்தன், ராபின் வி.சிபி ஆகியோரின் ஓவியங்களும் பார்வையாளர்களை வெகுவாகக் கவர்கின்றன.

paint4_2883909a.jpg

ஓவியக் கண்காட்சி அழகியல் சார்ந்தது. அதை ரசிக்க ஓவிய ரசனை தேவை, சாதாரண மக்களுக்குப் புரியாது போன்ற எண்ண ஓட்டங்களைத் துடைத்தெறிகின்றன இந்த ஓவியங்கள். பக்கம் பக்கமாகப் படித்துப் புரிய வேண்டிய பல செய்திகளை, இந்தப் புதுமை ஓவியர்களின் ஒற்றை ஓவியம் செய்துவிடுகிறது என்பது சிறப்பு.

tamil.thehindu

  • தொடங்கியவர்

வரலாற்றில் இன்று

ஜுன் - 23

 

1532 : இங்­கி­லாந்தின் எட்டாம் ஹென்­றியும் பிரான்ஸின் முதலாம் பிரான்­சு­வாவும் புனித ரோமப் பேர­ரசின் ஐந்தாம் சார்ல்­சுக்கு எதி­ராக இர­க­சிய ஒப்­பந்­தத்தை ஏற்­ப­டுத்­தினர்.

 

1868 : கிறிஸ்­தோபர் ஷோல்ஸ் தட்­டச்சு இயந்­தி­ரத்­துக்­கான காப்­பு­ரிமம் பெற்றார்.

 

1894 : சர்­வ­தேச ஒலிம்பிக் அமைப்பு பாரிஸ் நகரில் அமைக்­கப்­பட்­டது.

 

754varalaru-june-23.jpg1919 : எஸ்­தோ­னி­யாவின் விடு­தலைப் போரில் வடக்கு லாத்­வி­யாவில் செசிஸ் என்ற இடத்தில் ஜேர்­ம­னியப் படைகள் தோற்ற இந்நாள் எஸ்­தோ­னிய வெற்றி நாளாகக் கொண்­டா­டப்­பட்டு வரு­கி­றது.

 

1942 : இரண்டாம் உலகப் போர்: முதன் முத­லாக அவுஷ்விட்ஸ் வதை முகாமில் நச்சுவாயு அறையில் சேர்ப்­ப­தற்­காக முதல் தொகுதி யூதர்கள் பாரிஸில் இருந்து ரயிலில் அனுப்­பப்­பட்­டனர்.

 

1942 : இரண்டாம் உலகப் போரில் ஜேர்­ம­னியின் போர் விமானம் ஒன்று தவ­று­த­லாக வேல்சில் தரை­யி­றங்­கி­ய­போது கைப்­பற்­றப்­பட்­டது.

 

1945 : ஜப்­பா­னிய இரா­ணு­வத்­துக்கும் அமெ­ரிக்கப் படை­க­ளுக்கும் இடையில் இடம்­பெற்ற ஒகி­னவா சமர் அமெ­ரிக்­காவின் வெற்­றி­யுடன் முடி­வ­டைந்­தது.

 

1956 : கமால் நாசர், எகிப்தின் ஜனா­தி­ப­தி­யானார்.

 

1960 : பத்­திரிஸ் லுமும்பா கொங்கோ குடி­ய­ரசின் மக்­களால் தெரிவு செய்­யப்­பட்ட முத­லா­வது பிர­தமர் ஆனார்.

 

1968 : புவெனஸ் அயர்ஸில் கால்­பந்­தாட்ட மைதா­னத்தில் இடம்­பெற்ற நெரி­சலில் சிக்கி 74 பேர் கொல்­லப்­பட்­டனர்.

 

1980 : இந்­தி­யாவின் அப்­போ­தைய பிர­தமர் இந்­திரா காந்­தியின் மக­னான சஞ்சய் காந்தி விமான விபத்தில் பலி­யானார்.

 

1985 : கன­டா­வி­லி­ருந்து டில்லி நோக்கி சென்­று­கொண்­டி­ருந்த இந்­தி­யாவின் போயிங் 747 விமா­ன­மொன்று அயர்­லாந்தில் அட்­லாண்டிக் கடலின் மேல் 9500மீ உய­ரத்தில் பறந்து கொண்­டி­ருந்­த­போது இடம்­பெற்ற குண்­டு­வெ­டிப்பில் அதில் பயணம் செய்த 329 பேரும் கொல்லப்பட்டனர்.

 

1990 : சோவியத் ஒன்றியத்தில் இருந்து பிரிவதாக மோல்டோவா அறிவித்தது.

 

2014 : சிரியாவினால் பிரகடனப்படுத்தப்பட்ட இரசாயன ஆயுதங்களின் கடைசித் தொகுதி அழிக்கப்படுவதற்காக சிரியாவிலிருந்து அகற்றப்பட்டது.

metronews.lk

Edited by நவீனன்

  • தொடங்கியவர்

13458796_1067950273253666_89628466394721

இலங்கை கிரிக்கெட் அணியின் இளம் வேகப்பந்து வீச்சாளர் ஷமிந்த எரங்கவின் பிறந்தநாள்.
Happy Birthday Shaminda Eranga

தவறான பந்துவீச்சுப்பாணி என்ற காரணத்தால் தற்போது சர்வதேசப் போட்டிகளில் விளையாடுவதிலிருந்து தடைசெய்யப்பட்டுள்ள எரங்க மீண்டும் புயலாகக் களமிறங்க எமது வாழ்த்துக்கள் .

  • தொடங்கியவர்

பசியென்று வந்தால்!

தினமும் ஒரு பிச்சைக்காரன் கலைவாணர் வீட்டு வாசலில் வந்து நிற்பாராம். இவரும் பணம் கொடுப்பார்.

"அவன் உங்களை ஏமாற்றுக்கிறான்" என்று வீட்டில் உள்ளவர்கள் சொல்ல, "அவன் என்னை ஏமாத்தி என்ன மாடி வீடா கட்டப்போறான். வயித்துக்குத்தானே சாப்பிடப்போறான். ஏமாத்திட்டுப் போகட்டுமே" என்றாராம்!

13521989_1162427043816084_69779737927448

 

Edited by நவீனன்

  • தொடங்கியவர்

ஆள் பாதி ஆப்ஸ் பாதி!

 

p86a.jpg

குடி குடியைக் கெடுக்கும்னு விளம்பரம் போட்டுத்தான், அரசாங்கம் டாஸ்மாக்கை நடத்துது. சினிமாவில் ‘எடுத்த எடுப்பில் எய்த் ரவுண்டு போகப்போறேன்’னு பாட்டு எழுதுறாங்க. இருந்தாலும் தப்பு தப்புதான்... அதனாலதான் நாம குடிக்கிறோம்னு அடம் பிடிக்காம, நம்மை நாமே திருத்திக்கணும்னு சொல்லுது ஒரு அப்ளிகேஷன். ஆல்கஹால் + ஆண்ட்ராய்டு இரண்டு பெயரையும் சேர்த்து, ‘ஆல்காட்ராய்ட்’ என்று இதற்குப் பெயர் வைத்திருக்கிறார்கள். வாங்க குடிப்... ஸாரி, படிப்போம்!

புகைப்பழக்கத்தை நிறுத்துவதற்கு ‘ஸ்டாப் ஸ்மோக்கிங்’ பெயரில் ஏராளமான அப்ளிகேஷன்கள் இருக்கும். ஒருநாளைக்கு எத்தனை சிகரெட் புகைக்கிறோம், எவ்வளவு செலவாகிறது, பாதிப்புகள் எந்த நிலையில் இருக்கும்? இப்படியான தகவல்களைக் கொடுக்கும் அந்த அப்ளிகேஷனின் ஃபார்முலாதான் ‘ஆல்காட்ராய்ட்’ என்ற இந்த அப்ளிகேஷனுக்கும். அப்ளிகேஷனை இன்ஸ்டால் செய்து, தீர்த்தவாரித் திருவிழாவுக்குக் கிளம்பும் தருணத்தில் அப்ளிகேஷனை ஓப்பன் செய்யவும். ஆர்டர் கொடுத்த மது வகை, அதில் இருக்கும் ஆல்கஹாலின் அளவு, சரக்கு அடிக்கும் தேதி... என அப்ளிகேஷனில் இருக்கும் தகவல்களைக் கவனமாகப் பதிவு செய்யவும். இனி உங்கள் சுயரூபத்தை நீங்கள் அப்ளிகேஷன் மூலமாக அறிந்துகொள்ளலாம்!

p86c.jpg

ஒருநாளைக்கு, வாரத்திற்கு, மாதத்திற்கு நீங்கள் மதுவுக்காக செலவு செய்த தொகை, ரத்தத்தில் கலந்திருக்கும் ஆல்கஹாலின் அளவு, சென்ற வாரத்தைவிட இந்த வாரம் குடித்த பீர்களின் எண்ணிக்கை அதிகம்... என உங்களைப் பற்றிய தகவல்கள் அனைத்தும் அவ்வப்போது எடுத்துப் பார்த்துத் தெரிந்துகொள்ளலாம். ‘கொஞ்சம் ஓவராத்தான் போறோமோ?’ என ஃபீல் பண்ணி, குடிப்பழக்கத்தைக் குறைத்தால் இந்த ‘ஆல்காட்ராய்ட்’ உங்களைக் கை குலுக்கி வரவேற்கும். சென்ற மாதத்தைவிட, இந்த மாதம் நீங்கள் குடித்த ஆல்கஹாலின் அளவு குறைவு. மிச்சமான தொகை இவ்வளவு... என உங்கள் பாசிட்டிவ் பக்கங்களையும் எடுத்து வைக்கும். சுருக்கமாகச் சொன்னால், குடிப்பழக்கத்திலிருந்து ஒருவரை ஓரளவு மீட்டுக்கொண்டுவரும் முயற்சிதான் இந்த அப்ளிகேஷன். வடிவமைத்தவர்களும் இதைத்தான் சொல்கிறார்கள்.

p86b.jpg

மிக முக்கியமான குறிப்பு: போதையில் ‘அப்டேட்’ கொடுக்க மறப்பவர்கள், ‘நேத்து எவ்வளவு குடிச்சோம்?’னு காலையில் எழுந்து தலையைச் சொறியும் நிலையில் இருப்பவர்களுக்கு, இந்த அப்ளிகேஷனால் ஒரு பிரயோஜனமும் கிடையாது என்பதைத் தாழ்மையுடன் தெரிவித்துக்கொண்டு விடைபெறுகிறேன். நன்றி மக்கழே.. நன்றி!

vikatan

  • தொடங்கியவர்
வாழ்ந்து பார்...
 
 

article_1466654123-jgkguk.jpgஎந்த வயதிலும் சந்தோஷமாக வாழலாம். இது, அவரவர் மனோநிலை, மனத்தின் பலத்தைப் பொறுத்த விடயம்.

இன்பமான பொழுதுகளிலும் சிலர் துன்பங்களைத் தேடுவதுண்டு. எதனையாவது இரைமீட்டி, அன்றை பொழுதை வீணே அழித்துவிடுவர்.

துன்பமான சம்பவங்கள், சில இயற்கையான நிகழ்வுகளே, இதனை யதார்த்தமாகப் புரிந்துகொள்ளும் பக்குவத்தினை, நாம் தான் ஏற்படுத்திக்கொள்ள வேண்டும்.

வாழ்க்கையில் நடந்துகொண்டிருக்கும் சம்பவங்களைச் சுவாரஸ்யமாக எடுத்துக்கொள்ளுங்கள். நாங்கள் என்ன, யுகம் யுகமாகவா வாழப்போகிறோம்?

கடந்து போகும் வாழ்க்கையில் பயம், பீதி, கவலையுடன் கழித்தால், அப்போது சந்தோஷம் என்ற ஒன்றும் உள்ளது என்பதை எப்போது தான் அறியப் போகிறீர்கள்.

வாழ்ந்து பார்ப்பதில்தான், சந்தோஷங்களின் இருப்பிடங்களையும் கைப்பற்றிட முடியும்.

Edited by நவீனன்

  • தொடங்கியவர்

13507145_1067952236586803_36734307112775

உலகின் மிகச்சிறந்த கால்பந்து வீரர்களில் ஒருவரான, முன்னாள் பிரான்ஸ் அணியின் நட்சத்திர வீரர் சினடின் சிடானின் பிறந்தநாள்.
Happy Birthday Zinadine Zidane

13406825_1184643154888257_90694476730533

Zidane in India.

  • தொடங்கியவர்

மின்னல் தாக்கும் போது உயிர் பிழைக்க என்ன செய்ய வேண்டும் ? (புகைப்படத் தொகுப்பு)

 

இந்தியா மற்றும் வங்க தேசத்தில் கடந்த இரண்டு மாதங்களில் மட்டும் சுமார் 130 பேர் மின்னல் தாக்கி இறந்திருக்கிறார்கள். மின்னல் தாக்கும்போது பாதுகாப்பாக இருக்க என்ன செய்யவேண்டும் ?

160623120658_lightning1_624x624_bbc_nocr

160623121015_lightning2_624x624_bbc_nocr

160623121240_lightning3_624x624_bbc_nocr

160623121418_lightning4_624x624_bbc_nocr

160623121736_lightning5_624x624_bbc_nocr

160623122004_lightning6_624x624_bbc_nocr

160623122155_lightning7_624x624_bbc_nocr

160623122312_lightning8_624x624_bbc_nocr

BBC

  • தொடங்கியவர்

இன்று பன்னாட்டுக் கைம்பெண்கள் நாள்
 

13495144_1067974099917950_58838432643817
உலகம் முழுவதும் கணவன்மார்களை இழந்து ஆதரவின்றி தவிக்கும் பெண்களின் நிலை குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்கில் ஜுன் 23 ம் தேதியினை பன்னாட்டு விதவைகள் நாள் (பன்னாட்டுக் கைம்பெண்கள் நாள்) என ஐ.நா. சபை அறிவித்துள்ளது.[1]இந்த நாளில் உலகம் முழுவதும் உள்ள ‌கோடிக்கணக்கான விதவைகள் - கைம்பெண்கள் சந்தித்துவரும் பிரச்னைகள், மற்றும் இன்னல்கள் குறித்து ஐ.நா. கண்காணித்துத் தீர்வுக்கு வழி வகுக்கும்.

  • தொடங்கியவர்

ஆறு வயது சிறுவனின் அசத்தல் சமையல் திறன்! ( வைரலாகும் வீடியோ⁠⁠⁠⁠ )

boycooking60034.jpg

கேரள மாநிலம், திருவனந்தபுரத்தைச் சேர்ந்த நிஹல் ராஜ்,  'Nihal Raj aka Kicha’s YouTube channel' வீடியோவில் சமையலில் அசத்துகிறார். அம்மாவிற்கு பையன் உதவுவதில் என்ன ஆச்சர்யம் என்கிறீர்களா...நிஹல் ராஜ்க்கு வயது ஆறு.

ஆரம்பத்தில் அம்மா சமைக்கும்போது உடன் இருந்து கவனித்துக் கொண்டிருந்த நிஹல் ராஜிற்கு, கொஞ்ச நாளிலேயே சமையல் மீது ஆர்வம் ஏற்பட்டது. தானும் அதேபோல செய்து பார்க்க ஆரம்பித்தான். அதை ஒருநாள் தற்செயலாக பார்த்த நிஹலின் தந்தை ராஜகோபால், தன்னுடைய மொபைல் போனில் வீடியோவாகப் பதிவு செய்தார்

boycooking6002.jpg

2015 ஜனவரி மாதம் முதன் முதலாக இந்த வீடியோவை யூ-டியூப்பில் அப்லோடு செய்தார். இந்த வீடியோவிற்கு ஆரம்பத்தில்  நெட்டிசன்களிடமிருந்து பெரிய அளவில் வரவேற்புக் கிடைக்கவில்லை. ஆனாலும் சளைக்காமல் நிஹலின் தந்தை, அடுத்தடுத்து சிறுவனின் வீடியோக்களை அப்லோட் செய்யவே, அவை வைரலாகத் தொடங்கின.

boycooking6001.jpg

அதனைத்தொடர்ந்து ஒரு தனியார் வலைதள நிறுவனம்,  தங்களது பிரத்யேக முகநூல் பக்கத்தில் அதைப் பகிர அனுமதி அளித்தது. தற்போது தினமும் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் இந்த வீடியோவைக் கண்டு களிப்பதோடு, மறக்காமல் சப்ஸ்கிரைப் செய்கிறார்கள்.

தான் சமைத்த உணவை தானே ருசித்து சாப்பிட்டபடி அவன் சொல்லும், ''வாவ்', 'ஆவ்ஸம்', 'லவ் யூ' போன்ற வார்த்தைகளையும்,  அவன் பாடும் பாடல்களையும் பார்க்க பெரும் ரசிகர் கூட்டம் இருக்கிறது சமூக வலைதளங்களில்.  சிறுவனின் இந்த அசத்தல் வீடியோ அவ்வளவு அழகாக இருக்கிறது. மிக்கி மவுஸ் ஐஸ்கிரீம், ஆரஞ்ச் மில்க்‌ஷேக் என விதவிதமாக அவன் சமைத்துக்காட்டும் உணவு வகைகள்,  'நேரில் வந்து செய்து தரமாட்டானா...' என்ற ஏக்கத்தை ஏற்படுத்துகிறது.

எத்தனை அம்மாக்களுக்கு இந்த பாக்கியம் கிடைக்கும் நம்மூரில்...?

அந்த வீடியோக்களை நீங்களும் பாருங்களேன்...

vikatan

  • தொடங்கியவர்

13490683_1067968853251808_16150755620667

சிம்பாப்வே கிரிக்கெட் அணியின் முதலாவது டெஸ்ட் அணித்தலைவரும் சிறந்த துடுப்பாட்ட வீரருமான டேவிட் ஹௌட்டனின் பிறந்தநாள்
Happy Birthday Dave Houghton

  • தொடங்கியவர்

எலிகளை ஈர்க்கும் மூங்கில் பூக்கள்

 
2_2876881f.jpg
 

பூமியில் மிக வேகமாக வளரக்கூடிய தாவரம் மூங்கில். புல் வகையைச் சேர்ந்த தாவரங்களில் மிகப் பெரியது. ஒரு நாளைக்கு 10 செ.மீ. உயரம் வளரும். சில வகை மூங்கில்கள் ஒரு நாளைக்கு ஒரு மீட்டர் உயரம் வரைகூட வளர்கின்றன. அதாவது 2 நிமிடங்களுக்கு 1 மி.மீ. வளர்கின்றன. மற்ற தாவரங்களைப்போல இல்லாமல், மூங்கில் வளர்வதைக் கண் முன்னே பார்க்க முடியும்.

பெரும்பாலான மூங்கில் வகைகள் 5 முதல் 8 ஆண்டுகளிலேயே முதிர்ச்சியடைந்துவிடுகின்றன. மற்ற மரங்கள் வாரத்துக்கு ஓர் அங்குலமே வளர்கின்றன. ஓக் மரம் 120 ஆண்டுகளுக்குப் பிறகுதான் முதிர்ச்சியே அடைகிறது. ஆனால் மூங்கிலின் இந்த அசுர வளர்ச்சி, பூக்க ஆரம்பித்தவுடன் குறைந்துவிடுகிறது. பூமியில் மெதுவாக வளரக்கூடிய தாவரங்களில் ஒன்றாக மாறிவிடுகிறது!

மூங்கில்கள் உலகம் முழுவதும் ஒரே காலகட்டத்தில் பூக்கின்றன. பூமியின் எந்தப் பகுதியில் இருந்தாலும் எந்தப் பருவநிலை நிலவினாலும் இவை ஒரே காலத்தில் பூக்கின்றன. முன்னொரு காலத்தில் ஒரே தாவரத்திலிருந்து இவை உருவானதால், ஒரே குணாம்சத்தைப் பெற்றிருக்கலாம் என்கிறார்கள் விஞ்ஞானிகள்.

வட அமெரிக்காவில் ஒரு மூங்கில் பூக்கும்போது ஆசியாவிலும் மூங்கில் பூக்கிறது. இந்தத் தன்மை அவற்றின் மரபணுக்களில் கடத்தப்பட்டுவந்திருக்கிறது. பூக்கும் காலங்களில் மரங்களுக்குள் இருக்கும் உயிர்க் கடிகாரம் ஒரே நேரத்தில் பூக்க வைக்கின்றன. 60 ஆண்டுகளிலிருந்து 130 ஆண்டுகளுக்குள் மூங்கில்கள் பூக்கின்றன.

மூங்கில்கள் அதிக அளவில் பூக்கும்போது அவற்றின் சந்ததிகள் பெருக்கப்படுகின்றன. விதைகள் காற்று, வெள்ளம், விலங்குகள், பறவைகள் மூலம் பல இடங்களுக்கும் பரவிவிடுகின்றன. மூங்கில் பூக்கள் பூக்கும்போது அவற்றைச் சார்ந்திருக்கும் விலங்குகளின் இனப்பெருக்கமும் அதிகரிக்கிறது. மூங்கில் அரிசியைச் சாப்பிடும்போது எலிகளைப் போன்ற கொறிக்கும் விலங்குளின் இனப்பெருக்கம் தூண்டப்படுவதால் ஏராளமான குட்டிகளை ஈனுகின்றன. அவற்றின் எண்ணிக்கை அதிகரிப்ப தோடு ஆயுட்காலமும் அதிகரிக்கிறது.

ஆயுள் முடியும் காலகட்டத்தில்தான் மூங்கில்கள் பூக்கின்றன. ஒரு முறை பூத்த பிறகு, விதைகளை உற்பத்தி செய்துவிட்டு அவை இறந்துவிடுகின்றன. விதைகளை உற்பத்தி செய்யும்போது அதிக ஆற்றல் தேவைப்படுவதால், அதற்குப் பிறகு மூங்கில் இறந்துவிடுகிறது என்கிறார்கள் சில ஆய்வாளர்கள்.

இன்னொரு கூற்றின்படி, தாய் மூங்கிலின் வேர்ப் பகுதியில் இருந்து புதிய நாற்றுகள் உருவாகின்றன. இவை அதிக அளவில் தண்ணீரையும் சத்துகளையும் உறிஞ்சிக்கொள்கின்றன. தாய் மரத்துக்குப் போதிய தண்ணீரோ, சத்தோ கிடைக்காமல் போய்விடுவதால் அது இறந்துவிடுகிறது என்கிறார்கள்.

மூங்கில் பூக்கும் காலத்தில் பெருகும் கொறிவிலங்குகளில் எலிகளின் எண்ணிக்கை மிக அதிகமாக இருக்கிறது. பெருகிய எலிகள் அருகில் உள்ள வயல்களுக்குச் சென்று, தானியங்களைச் சாப்பிட்டு, விவசாயிகளுக்கு அதிக அளவில் சேதத்தை விளைவிக்கின்றன. எலிகள் அதிகமாவதால் அந்தப் பகுதியில் வசிக்கும் மனிதர்களுக்கு நோய்களும் பரவுகின்றன. பஞ்சமும் உண்டாவதாகச் சொல்கிறார்கள்.

மிசோரம் மாநிலத்தில் கடந்த 50 ஆண்டுகளாக, எப்போழுதெல்லாம் மூங்கில்கள் பூக்கின்றனவோ, அப்போழுதெல்லாம் தவறாமல் பஞ்சம் ஏற்பட்டதாகச் சொல்கிறார்கள். மூங்கில் அரிசியை மருத்துவக் குணம் மிக்கதாகக் கருதுவதால், மக்கள் விரும்பி வாங்குகிறார்கள். விலையும் அதிகமாக இருக்கிறது.

மூங்கிலில் சுமார் 1,200 வகைகள் இருக்கின்றன. இந்தியாவில் 156 மூங்கில் இனங்கள் பயிர் செய்யப்படுகின்றன. வடகிழக்கு மாநிலங்கள், மேற்கு வங்கம், ஆந்திரம், மகாராஷ்டிரம் போன்றவை மூங்கில் உற்பத்தியில் முன்னணியில் இருக்கின்றன. இந்திய மூங்கில்களில் 40% மரக்கூழ் செய்வதற்கும் காகிதத் தொழிற்சாலைகளிலும் பயன்படுத்தப்படுகின்றன. இசைக் கருவி முதல் வீட்டுக்கு கூரை போடுவது வரை 1,500 விதங்களில் மனிதர்களுக்குப் மூங்கில்கள் பயன்படுகின்றன.

tamil.thehindu

  • தொடங்கியவர்

வரலாற்றில் இன்று

ஜுன் - 24

 

1314 : ஸ்கொட்லாந்துப் படைகள் இரண்டாம் எட்வேர்ட் தலைமையிலான இங்கிலாந்துப் படையினரைத் தோற்கடித்தனர். ஸ்கொட்லாந்து தனது விடுதலையை மீண்டும் பெற்றது.

 

1509 : எட்டாம் ஹென்றி இங்கிலாந்தின் மன்னனாக முடி சூடினார்.

 

1571 : பிலிப்பைன்ஸின் மணிலா நகரம் அமைக்கப்பட்டது.

 

1597 : டச்சு கிழக்கிந்தியக் கம்பனியின் முதலாவது தொகுதியினர் ஜாவாவின் பாண்டாம் நகரை அடைந்தன.

 

1664 : அமெரிக்காவின் நியூ ஜேர்சியில் குடியேற்றம் ஆரம்பமானது.

 

755ErnestoGuevaraycastro.jpg1812 : ரஷ்யாவினுள் ஊடுரும் முயற்சியில் நெப்போலியனின் படைகள் நேமன் ஆற்றைக் கடந்தன.

 

1846 : பிரான்ஸில் அடோல்ப் சாக்ஸ் என்பவர் சாக்ஸபோன் இசைக்கருவிக்கு காப்புரிமை  பெற்றார்.

 

1849 : அமெரிக்கப் பெண்மணியான எலிஸபெத் பிளாக்வெல் என்பவரே அமெரிக்காவில் முதன் முதலாக மருத்துவப் பட்டம் பெற்ற பெண்மணியாவார்.

 

1859 : சார்டீனிய இராச்சியம் மற்றும் பிரான்சின் மூன்றாம் நெப்போலியனின் படைகள் வடக்கு இத்தாலியில் ஆஸ்திரியப் படைகளைத் தோற்கடித்தன.

 

1860 : புளோரன்ஸ் நைட்டிங்கேலின் எண்ணக்கருக்களுக்கமைய முதலாவது தாதிகள் பயிற்சி நிலையம் இங்கிலாந்தில் அமைக்கப்பட்டது.

 

1894 : பிரெஞ்சு அரசுத் தலைவர் மரீ பிராங்சுவா சாடி கார்னோ படுகொலை செய்யப்பட்டார்.

 

1932 : சியாமில் (தாய்லாந்து) இடம்பெற்ற இராணுவப் புரட்சியை அடுத்து மன்னரின் அதிகாரங்கள் வெகுவாகக் குறைந்தன.

 

1938 : 450 மெட்ரிக் தொன் எடையுள்ள விண்கல் அமெரிக்காவின் பென்சில்வேனியா மாநில சிக்கோரா நகரில் வீழ்ந்தது.

 

1940 : பிரான்ஸும் இத்தாலியும் சமாதான ஒப்பந்தத்தை ஏற்படுத்தின.

 

1945 : இரண்டாம் உலகப் போர்: நாஸி ஜேர்மனியரை வெற்றி கொண்ட சோவியத் படைகளின் வெற்றி அணிவகுப்பு மொஸ்கோவில் இடம்பெற்றது.

 

1948 : சோவியத் ஒன்றியம் ஜேர்மனியின் தமது கட்டுப்பாட்டிலுள்ள பேர்லினின் மேற்குப் பகுதியுடன் அமெரிக்க, பிரித்தானிய, பிரெஞ்சுக்கள் வசம் இருந்த பகுதிகளுடனான தரைவழித் தொடர்புகளைத் துண்டித்தது.

 

1956 : மெக்ஸிகோவில் சே குவேரா, ஃபிடல் கெஸ்ட்ரோ உட்பட 26 பேர் கைது செய்யப்பட்டனர். குடிவரவு சட்டத்தை மீறியமை, வெளிநாட்டு அரசுக்கு எதிராக சதி செய்தமை முதலான குற்றச்சாட்டுகள் இவர்கள் மீது சுமத்தப்பட்டன.

 

1975 : அமெரிக்க விமானம் நியூயோர்க்கில் வீழ்ந்ததில் 113 பேர் உயிரிழந்தனர்.

 

1981 : 17 ஆண்டுகளாக உலகின் மிக நீளமான தொங்கு பாலமாக இருந்த ஹம்பர் பாலம் இங்கிலாந்தில் அமைக்கப்பட்டது.

 

1983 : அமெரிக்காவின் முதலாவது விண்வெளி வீராங்கனை சாலி ரைட் தனது முதலாவது பயணத்தை முடித்துக் கொண்டு பூமி திரும்பினார்.

 

2002 : தான்சானியாவில் இடம்பெற்ற ரயில் விபத்தில் 281 பேர் கொல்லப்பட்டனர்.

 

2004 : நியூயோர்க்கில் மரண தண்டனை சட்டபூர்வமற்றதாக்கப்பட்டது.

 

2007 : பாகிஸ்தானின் கராச்சி நகரில் இடம்பெற்ற மழை மற்றும் சூறாவளியில் 200 இற்கும் மேற்பட்டவர்கள் உயிரிழந்தனர்.

 

2010 : விம்பிள்டன் டென்னிஸ் தொடரில் அமெரிக்காவின் ஜோன் ஐஸ்னர், பிரான்ஸின் நிக்கலஸ் மஹுட் ஆகியோருக்கிடையிலான போட்டி 11 மணித்தியாலங்கள், 5 நிமிடங்களுக்கு நீடித்தது. தொழிற்சார் டென்னிஸ் வரலாற்றில் மிக நீண்டநேரம் நீடித்த போட்டி இது. இதில் ஜோன் ஐஸ்னர் வென்றார்.

 

2013 : இத்தாலியின் முன்னாள் பிரதமர் சில்வியோ பேர்லுஸ்கோனி, அதிகார துஷ்பிரயோகம் மற்றும் வயது குறைந்த பாலியல் தொழிலாளியுடன் பாலியல் நடவடிக்கையில் ஈடுபட்டமை ஆகியமை தொடர்பான வழக்கில் குற்றவாளியாக காணப்பட்டார். அவருக்கு 7 வருட சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது.

.metronews.lk

Edited by நவீனன்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.