Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இளமை புதுமை பல்சுவை

Featured Replies

  • தொடங்கியவர்

ஞாபகம் இருக்கா?

 

p120a.jpg

சின்னவயசில் நாம் சின்னப்புள்ளத்தனமா விளையாடிய சில விளையாட்டுகள்தான் இவை... இப்பவும் விளையாடலாமா?

பல்லாங்குழி:

p120b.jpg

பணியாரக்குழியைப் போல இங்கிட்டு ஏழு, அங்கிட்டு ஏழு குழிகளில்  புளியங்கொட்டைகளைப் போட்டு ஆடும் விளையாட்டு பல்லாங்குழி. புளியங்கொட்டைகள் கிடைக்கவில்லையெனில் ஆட்டுப்புழுக்கைகளை வைத்தும் விளையாடலாம். பல்லாங்குழி விளையாடுவதற்கு அப்படி ஒன்றும் பிரம்ம பிரயத்தனம் தேவையில்லை. சில விதிகள் தெரிந்தால் போதுமானது. ‘பல்லாங்குழியின் வட்டம் பார்த்தேன், ஒற்றை நாணயம்...’ என ரொமான்ஸ் செய்யவும் இந்த விளையாட்டு பயன்பட்டது.

கூட்டாஞ்சோறாக்கல்:

p120c.jpg

ஒன்றாக ஊர்சுற்றிக்கொண்டிருக்கும் ஒரே குட்டையில் ஊறிய மட்டைகள் அஞ்சாறு பேர் ஒன்று சேர்ந்து ஆளாளுக்கு வீட்டிலிருந்து அரிசி, உப்பு, மிளகாய்ப்பொடி, சர்க்கரை என ஆட்டையைப்போட்டு யாரும் அண்டாத காட்டுப்பக்கமாய்ச் சென்று அடுப்பு மூட்டிச் சோறாக்குவார்கள். எல்லோரும் ஆளுக்கு ஒரு பொருள் என முறைவைத்துக் கொண்டுவரும்போது உப்பை மட்டும் கொடுத்து ஒப்பேற்றியவர்கள் எதிர்காலத்தில் பெரிய பிஸினஸ்மேன்களாக மாறும் மாட்டுமூளைக்காரர்கள்.

கிச்சு கிச்சு தாம்பாலம்:

p120d.jpg

ஒரு முழம் நீளத்திற்கு மணலை மேடாகக் குவித்து ஒரு சிறு குச்சியை அந்த மணலில் புதைத்து வைக்க வேண்டும். குச்சி இருக்கும் இடத்தைச் சரியாகக் கணித்து எதிராளி அதன்மீது கையை வைத்து மறைக்க வேண்டும். சரியான இடத்தைக் கண்டுபிடிக்கவில்லையெனில் மீண்டும் கண்டுபிடிக்கும்வரை அவரே மண்டை காயவைக்கப்படுவார். இது சிறுவர்களுக்கான விளையாட்டு. இப்போது நீங்கள் விளையாடினால் ‘ஏழுகழுதை வயசுல என்னடா வெளையாட்டு இது’ என போவோர் வருவோரிடமெல்லாம் திட்டு வாங்க நேரிடலாம்.

கிட்டிப்புள்:

p120e.jpg

இரண்டு பக்கமும் கூராக சீவப்பட்ட ஒரு அரையடிக் குச்சியும், ஒரு ஒன்றையடிக் குச்சியும்தான் இந்த விளையாட்டின் சாதனங்கள். தரையைச் சுரண்டி ஒரு கோடுபோலக் குழியைத்தோண்டி அதன்மீது சின்னக் குச்சியை வைத்துப் பெரிய குச்சியால் தூக்கிவிட வேண்டும். அதை ரெய்னா போலப் பாய்ந்து பிடிக்க நினைத்தால், உடலில் ஆங்காங்கே கீறல் விழ வாய்ப்புகள் அதிகம். அதனால் கண்ணை மூடிக்கொண்டு குத்துமதிப்பாக தடுக்க வேண்டும். அந்தக் குச்சி எவ்வளவு தூரம் போகிறதோ அதைப்பொறுத்து பாயின்டுகள் வழங்கப்படும். இந்த விளையாட்டுதான் இன்றைய நவீன கிரிக்கெட்டுக்கு ஆதித்தாய் என வாட்ஸ்-அப்பில் சிலர் பெருமைக்கு எருமை மேய்ப்பார்கள்!

நாடு பிடித்தல்:

p120f.jpg

பக்கத்து நாட்டைக் கைப்பற்றும் அரசர்களின் ஆதிக்க மனோபாவத்தின் ஆணிவேர் பட்டுப்போகாமல் தொட்டுத் தொடர்ந்ததன் விளைவால் உருவான விளையாட்டு இது. பெரிய கட்டங்களாக வரைந்து அதற்குள் அவரவர் இடத்தில் நிற்க வேண்டும். ஒருவர் ஒரு குச்சியை வேறொருவரின் இடத்தில் போட்டுவிட, மற்றவர்கள் ஓடிவிட வேண்டும். குச்சி விழுந்த இடத்திற்குச் சொந்தமானவர் குச்சியைத் தொட்டதும், ஓடுபவர்கள் அப்படியே நின்றுவிட அவர்மீது குச்சியை சரியாக எறிந்தால், அவர் நாட்டை முடிந்தவரை எடுத்துக்கொள்ளலாம். இல்லையெனில் ‘ராஜா இந்த வாட்டியும் அம்பை எய்ம் பண்ணுறாரு... ஜஸ்ட்டு மிஸ்’

கல்லா? மண்ணா?:

p120g.jpg

‘சாட் பூட் த்ரீ’யில் தோற்ற குழந்தை ‘மண்’ என்று சொன்னால், உடனே பிற குழந்தைகள் ஓடிப்போய் கல் மீது ஏறி நின்றுகொள்ளும். ‘கல்’ என்றால் மண்ணில் நின்றுகொள்ளும். கல்லைவிட்டுக் கீழே இறங்கி மண் மீது நிற்கும் குழந்தைகளைத் தொடப் போகும்போது, அக்குழந்தைகள் மீண்டும் கல்மீது ஏறிக்கொண்டு ‘பிம்பிளிக்கா பிலாப்பி’ காட்டும். அவுட்டான குழந்தை ஏதாவது ஒரு குழந்தையைத் தொட்டுவிடும். பின்னர் அந்தக் குழந்தை மூஞ்சியைத் தொங்கப்போட்டபடி ஆட்டத்தை ஆரம்பிக்கும். அம்மாக்கள் சாப்பிடக் கூப்பிடும் வரை இந்த விளையாட்டு தொடரும்.

vikatan

  • Replies 11.3k
  • Views 1.5m
  • Created
  • Last Reply
  • தொடங்கியவர்

'ஆலாயால் தர வேணாம்' - செம்ம பாட்டுங்க..!

கேரளாவின் கவளம் நாராயண பணிக்கர் எழுதிய பிரபல பாடலான 'ஆலாயால் தர வேணாம்' பாடலுக்கு மாடர்ன் டச் கொடுத்திருக்கிறது 'மசாலா காபி' இசைக்குழு. ரீமிக்ஸ் என்றால் ஹிப்ஹாப் பீட்களை சேர்க்கும் காலத்தில், இது ஓரு உண்மையான முயற்சி. பாடலுக்கான வீடியோவும் கண்ணுக்கு அவ்வளவு அழகு. டிரம்ஸ், பேஸ் கிட்டார்..சான்ஸே இல்ல!

 

  • தொடங்கியவர்

வலைபாயுதே

சைபர் ஸ்பைடர்

 

p106a.jpg

twitter.com/indiavaasan: எவ்வளவு பெரிய சாலை விபத்தும், ஐந்து நிமிட வேகக் குறைப்புக்கு மட்டுமே என்றாக்கிவிட்டது வாழ்க்கை ஓட்டம்.

twitter.com/altappu: `ஏழு சரவணன்... ஒரே மீனாட்சி’ - பெண் குழந்தைகளுக்கு கள்ளிப்பால் ஊத்தின சம்முவத்துக்கு இதுவும் வேணும்... இன்னமும் வேணும்.

twitter.com/Sandy_Offfl டெக்னாலஜி தெரியாத பெற்றோர்களைக் கிண்டல் செய்யாதீர்கள். கீரை பேர்கூட என்ன எனத் தெரியாமல்தான் வளர்ந்து கொண்டிருக்கிறோம்.

twitter.com/Aruns212: அத்தனை வேலைகளையும் இழுத்துப்போட்டுச் செய்யும் அம்மாவைப் பார்த்தே அதிகம் சொல்கிறோம், `போம்மா... உனக்கு வேற வேலையே இல்லை'.

twitter.com/Kozhiyaar : குழந்தைகளின் திருட்டு முழி, அவர்கள் செய்த தவறைவிட சுவாரஸ்யமாக இருக்கும்.

twitter.com/teakkadai: தங்களை பணக்காரர்கள் என நினைத்துக்கொள்ளும் நடுத்தர வகுப்பினர்தான், பின்னாளில் ஏராளமான சிரமங்களை அனுபவிக்கிறார்கள்.

twitter.com/devaseema: `நாளைக்கு லன்ச்-க்கு இட்லி கொடுக்கட்டா செல்லம்?’னா, `பத்து வருஷமா அதுதானம்மா குடுக்குறீங்க’ங்து பொடிசு # அதுக்கு வயசே நாலுதான் ஆவுது.

twitter.com/pshiva475: இந்திய அரசே... ரயில்வே ஸ்டேஷன்ல மட்டும் இலவச WiFi வசதி செஞ்சுக்கொடுத்தா, `ட்ரெயின் லேட்டா வர்றதைப் பத்தி நாங்க ஏன் கவலைப்படவோ, கம்ப்ளைன்ட் பண்ணவோபோறோம்?’

twitter.com/kurumbuvivek: 20 ஆயிரம் சம்பளம் வாங்கினப்ப மிடில் க்ளாஸா இருந்த மக்கள், இப்ப 60 ஆயிரம் சம்பளம் வாங்கியும் மிடில் க்ளாஸாவே வெச்சிருக்கிறதுதான் இந்த ஐ.டி துறை.

twitter.com/santhiyagu0009: `பஸ்களில் ஸீட் பெல்ட்’ - தமிழ்நாடு போக்குவரத்துக் கழகம் ஆலோசனை. #முதல்ல ஸீட்டுக்கு நாலு போல்டு போடுங்கப்பா... என்னா ஆட்டம் ஆடுது!

twitter.com/vandavaalam: எங்கே பார்த்தாலும்... யாரைப் பார்த்தாலும் வெயிட் குறைக்கிறதுலேயே குறியா இருக்காங்க.

ரெண்டு கிலோ குறையும்னா மூளையைக் கூடக் கழட்டி வெச்சிருவானுகபோல!

p106b.jpg

twitter.com/ravi3875: எந்த நேரத்தில் நான் சாப்பிட வேண்டும், என்ன சாப்பிட வேண்டும் என்பதைத் தீர்மானிப்பது அம்மாவாக இருந்த வரை, என் உடல் ஆரோக்கியமாக இருந்தது!

twitter.com/Boopaty Murugesh: குடத்துல தண்ணி புடிச்ச காலம் வரை, பெண்கள்தான் தூக்கினாங்க. தண்ணி கேன் வந்ததுல இருந்து ஆம்பளையைத் தான் தூக்கவிடுறாய்ங்க :-(

twitter.com/iindran: நம் ஊர்ல கொலை பண்ணிட்டுக்கூட சர்வசாதாரணமா நடந்து போலாம். திடீர்னு ஒருநாள் டக்கின் பண்ணிட்டு கேஷுவலா ஆபீஸ் போக முடியாது

# போறோம் இன்னைக்கு!

twitter.com/vandavaalam: சண்டே எல்லாம் ஒவ்வொரு நிமிஷத்தையும் அனுபவிச்சு அனுபவிச்சு வேஸ்ட் பண்ணணும்.

twitter.com/ajithkumarc10: எவ்ளவோ டெக்னாலஜி இருக்கு. அதோடு மாத்திரையையும் இனிப்பா மாத்தித் தந்தா நல்லாயிருக்கும்... இதை உட்டுட்டு கண்டுபுடிக்கிறாங்களாம்!

twitter.com/deebanece: ஃப்ரெண்ட் வீட்ல யாரும் இல்லைன்னா, சொந்த வீடு வாங்கின மாதிரி ஒரு ஃபீலிங்!

twitter.com/prakashalto: `அப்பா இன்னைக்கு ஃபீஸ் கட்ட கடைசி நாள்’ என்றான் மகன். `கட்டுறதும் கட்டாததும் அம்மா கையில் இருக்கு’ என்றான் அப்பன். கடந்த முறை அவள் காதில் இருந்தது!

p106c.jpg

facebook.com/varavanaiyaan: `ரசத்தை இறுத்து ஊத்தணும், குழம்பை சோத்துக்கு நடுவுல ஊத்தணும்...’ என்பது போன்ற எனக்கான எளிய பரிமாறல் விதிகள் மட்டுமே வைத்திருக்கிறேன்.

மற்றபடி உணவின் ருசி பிடிக்காவிட்டால் உண்ணும் அளவைக் குறைத்துக்கொள்வேன் அவ்வளவே. குறை சொல்லவே மாட்டேன்.

`ரூல்ஸ்படி ஊத்தணும்னா, ஒங்கொம்மாவே வந்து கஞ்சி ஊத்தட்டும்.’

`டக்கென வாட்ச்சைத் திருகியதில் 15 ஆண்டுகளுக்கு முன்னர் போய் நின்றேன்.’

`வர்றவ வந்து கொமட்லயே குத்தினாத்தான், `இந்தியன்' கமல் மாதிரி சாப்பிடுற நேரத்துல வியாக்கியானம் பேசாம சாப்பிடுவ’ என யாரோ ஒரு அம்மா, மகனைத் திட்டிக்கொண்டிருந்தார்.

இப்ப நான் என்ன கேட்டுட்டேன்?

facebook.com/nelsonxavier08:

கர்ப்பிணிப் பெண் ரயிலில் ஏறியதும், தானாக எழுந்து கதவுப் பக்கம் ஒதுங்கிப் போனவர்...

சார்... பேன்ட்ல பர்ஸ் நீட்டிக்கிட்டிருக்கு, உள்ளே வைங்கனு சொல்லிட்டுப் போறவர்...

மறந்து வைத்துவிட்டுப் போன கூலிங் கிளாஸை ஓடோடி வந்து தந்தவர்...

சிக்னலில் `நீங்க முதல்ல போங்க’ என வண்டியை நிறுத்தியவர்...

தேங்கி நிற்கும் மழைநீரில், நம் மீது சேறு அடிக்கும் என ஒதுங்கிப்போய் தடுமாறியவர்...

நாம் சாப்பிட வேண்டும் என மாலை 5 மணி வரை பிரியாணியையும் மீன்குழம்பையும் நமக்காக ஒதுக்கிவைத்திருந்தவர்...

இவ்வளவு அடைமழையிலும் `மீட்டர்ல வர்றதைக் குடுங்க சார்’ எனச் சொன்ன ஆட்டோ டிரைவர்...

அத்தனை பேரையும் கடந்த 8 மணி நேரத்தில் சந்தித்திருக்கிறேன். மழையால் மண்ணும், மனிதர்களால் மனதும் குளிர்ந்திருக்கின்றன!

vikatan

  • தொடங்கியவர்

தென்னிந்தியாவின் மூன்றுலோக குலாபிகள் இந்த வார அக்கடதேசத்தில்...!

டோலிவுட் அர்த்தனா விஜயகுமார் 

p32a.jpg

ந்திர தேசத்து நடிகர் விஜய்குமாரின் ஒரே மகள். டி.வி காம்பியரிங், குறும்பட நடிப்பு என எக்கச்சக்க அனுபவங்களுக்குப் பிறகுதான் ‘கல்யாண் சில்க்ஸ்’ விளம்பரத்தில் நடிக்கும் வாய்ப்பு வந்தது அர்த்தனாவுக்கு. விளம்பர ஹோர்டிங்குகளில் ஹைதராபாத்தில் சிரித்துக்கொண்டிருக்கும் அர்த்தனாவுக்கு ஒரு நண்பர் மூலமாக  ‘சீதம்மா அண்டாலு ராமய்யா சித்ராலு' படத்தில் ஹீரோயின் ஜாக்பாட் கிடைத்தது. ராஜ் தருணோடு நடித்த அந்தப் படம் சுமாராக ஓடினாலும் ‘திரையில் ஹீரோவைவிட ஹீரோயின் செம’ என எழுந்த விமர்சனங்களால் அடுத்த படம்  ‘முத்துகாவ்' கிடைத்தது.  ‘‘மாஸ் கம்யூனிகேஷன் படித்து முடித்துவிட்டு ஐ.ஏ.எஸ் படிக்க நினைத்தேன். ஆனால், இன்று கேமரா முன்னால் பிஸியாகி விட்டேன். நாளை என்ன ஆவேன், நானறியேன்!'' என்று தத்துவார்த்தமாகப் பேசுகிறார் அர்த்தனா. அர்த்தமா பேசுது அர்த்தனா!

சாண்டல்வுட் சைத்ரா சந்திரநாத்

p32b.jpg

டீனேஜைக் கடக்காமலேயே கன்னட சினிமாவுக்கு வந்த வெகு சிலரில் சைத்ராவுக்கு முதலிடம். முதல் படமே மாஸ் ஸ்டார் தர்ஷனோடு  ‘விராட்' என செம காம்போவில் கலக்குகிறார். அந்தக் கால கன்னட நடிகை மஞ்சுளா போல இருப்பதாகப் பலர் பாராட்டுவதால் பொண்ணு ஏக குஷியோ குஷி. சமீபத்தில்  ‘டிகே' படத்துக்காக லடாக்கில் மூச்சுத்திணறலோடு நடித்துக் கொடுத்த சின்ஸியர் சைத்ராவுக்கு வளமான எதிர்காலம் உண்டு என சாண்டல்வுட் பட்சிகள் கிசுகிசுக் கின்றன. சலோ சைத்ரா சலோ !

மல்லுவுட் பெர்லி மானே

p32c.jpg

கொச்சின் அழகி படித்தது பெங்களூரில்  ‘மீடியா'. படிப்பு முடிந்ததும்  ‘தி பெர்ஃபெக்‌ஷனிஸ்ட்' என்ற டைட்டிலில் எடுத்த குட்டி சினிமா பலத்த வரவேற்பைப்பெற அதைப்பார்த்துதான் மலையாள சினிமாவின் இளம் இயக்குநர் சமீர் தாஹிர் தன்  ‘நீலாகாசம் பச்சக்கடல் சுவண்ண பூமி' படத்தில் துல்ஹருக்கு நாயகியாக்கி அழகு பார்த்தார். அமிர்தா டி.வி-யில்  ‘டேஸ்ட் ஆஃப் கேரளா' என்ற சமையல் நிகழ்ச்சியில் கேரளா அறிந்த பிரபலமானதில் இன்னும் பல பட வாய்ப்புகள்.  ‘தி லாஸ்ட் சப்பர்',  ‘ஞான்',  ‘லோஹம்',  ‘டபுள் பேரல்',  ‘புஞ்சிரிக்கு பரஸ்பரம்',  ‘ஜோ அண்ட் தி பாய்' என வரிசை கட்டிப் படங்கள் ரிலீஸாக இப்போது  ‘டீம் 5',  ‘ப்ரேதம்',  ‘பப்பிரி துருத்து' என மூன்று படங்கள் ரிலீஸுக்குத் தயார். ஹீரோயினோ ஹீரோயின் தோழியோ என்ன ரோல் கொடுத்தாலும் நடிப்பார் என்ற நல்ல பெயர் எடுத்திருப்பதால், கால்ஷீட் டைரி நிரம்பி வழிகிறது. தெலுங்குக்கும் பெர்லி போயாச்சு

vikatan

  • தொடங்கியவர்

இன்ஸ்டாகிராமில் பழமொழிகள்!

 
instaa_2942258f.jpg
 

ஒளிப்படப் பகிர்வுச் செயலியான இன்ஸ்டாகிராமைப் பலவிதங்களில் பயன்படுத்தலாம். இங்கிலாந்தின் மான்செஸ்டரைச் சேர்ந்த ஓவியரான ஜஸ்டின் சாப்மேன் பழமொழிகளைப் புதுமையான முறையில் பகிர்ந்து கொள்ள இன்ஸ்டாகிராமைப் பயன்படுத்திவருகிறார்.

சாப்மேன் ஓவியர் என்பதால் பழமொழிகளை விளக்கும் வகையில் அழகான சித்திரங்களை வரைந்து அவற்றைப் படம் பிடித்துத் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுவருகிறார். ஒவ்வொரு பழமொழிப் படத்துக்கும் கீழ் அதற்கான பழமொழி வாசகமும் அது எந்த நாட்டுப் பழமொழி என்பதும் இடம்பெற்றிருக்கிறது.

இப்படி உலகப் பழமொழிகள் பலவற்றை அவர் படக்கதை பாணியில் ஓவியமாக வெளியிட்டுவருகிறார். பழமொழியில் ஆர்வம் கொண்டவர்கள் அவற்றைப் பட விளக்கத்துடன் வாசிக்கும்போது இன்னும் சுவாரஸ்யமாக இருக்கிறது.

tamil.thehindu

  • தொடங்கியவர்

வெளையாடலாமா?

 

p134a.jpg

த்தனை நாளைக்குதான் நாமளும் கபடி, கோலினு ஒரே விளையாட்டை விளையாடிட்டு இருக்கிறது. விளையாட்டிலும் ஒரு மாற்றம், முன்னேற்றம் தேவையில்லையா... அதான் நம் ஊர் அரசியல்வாதிகளை முன்மாதிரியா வெச்சு சில விளையாட்டுகளைக் கண்டுபிடிச்சுருக்கேன். அதை விளையாடி ஜாலியா இருங்க மக்கழே... ஆங்...

தளபதி சைக்கிள் பந்தயம்:

‘நமக்கு நாமே’ பயணத்தில் ஸ்டாலினுக்கு உறுதுணையாக இருந்த சைக்கிளைப் பாராட்டும்விதமாக இந்தப் போட்டி நடத்தப்படும். பந்தயமானது ‘கோபப்படுங்கள்’, ‘முடியட்டும் விடியட்டும்’ என இரு பிரிவுகளாக நடக்கும். ‘கோபப்படுங்கள்’ பிரிவில் எல்லைக்கோட்டை யார் முதலில் தொடுகிறாரோ, அவர்தான் வெற்றியாளர். ‘முடியட்டும் விடியட்டும்’ என்பது அதற்கு அப்படியே எதிர்மறையான ஸ்லோ சைக்கிள் ரேஸ். யார் கடைசியாக எல்லைக்கோட்டைத் தொடுகிறாரோ அவர்தான் வெற்றியாளர். மாலையில் ஆரம்பிக்கும் இந்தப் பந்தயமானது மறுநாள் விடிந்தபிறகுதான் முடிவடையும். அதுதான் ‘முடியட்டும் விடியட்டும்’. இந்தப் போட்டியில் கலந்துகொள்ள டிராக்‌ஷூட், டி-ஷர்ட், ஷூ மிகமிக முக்கியம், எல்லாவற்றையும் விட அவர் தம்பியாக இருக்க வேண்டும். வெற்றிபெற்றவருடன் தளபதி அவர்கள் ஒரு செல்ஃபியும் தட்டுவார்.

அம்மா மியூஸிகல் சேர்:

p134b.jpg

இந்த மியூஸிகல் சேர் போட்டியில் ‘அம்மா என்றழைக்காத உயிர் இல்லையே...’ போன்ற அம்மா சென்டிமென்ட் பாடல்களை ஒலிக்க விட வேண்டும். ஒவ்வொரு நாற்காலியும் ஒவ்வொரு துறையைக் குறிப்பதாகும். ஒவ்வொரு ரவுண்டிலும் யார் யார் எந்தெந்த சேரில் அமர்கிறார்களோ அவர்களே அந்தந்தத் துறைக்கு அமைச்சராக இருக்கும் வாய்ப்பைப் பெறுவார்கள். சுற்று ஏற ஏற ஒவ்வொரு நாற்காலியாக குறைத்துக்கொண்டே வருவார்கள். வெளியேறு பவர்களுக்கு அவர்கள் அனுபவித்த பதவியைப் பறித்துவிட்டு அனுப்பி விட வேண்டும். வெற்றியாளருக்கு ‘ஸ்டிக்கர்’ ஒட்டிய கோப்பை வழங்கப்படும்.

கலைஞர் கட்டுமர சேலஞ்ச்:

p134c.jpg

இந்தப் போட்டியைக் கடல் சார்ந்த பகுதிகளில் மட்டுமே விளையாட முடியும். இதில் வீரர்களைக் கடலில் தூக்கி எறிந்துவிடுவார்கள். அதில் யார் அதிக நேரம் கட்டுமரம் போல மிதக்கிறார்களோ அதில் மூன்று பேர் (ஏனெனில் ஒன்று, இரண்டு எனச் சொன்னால் உதடுகள் ஒட்டாது) மட்டும் இறுதிச்சுற்றுக்குத் தேர்வு செய்யப்படுவார்கள். இறுதிச்சுற்றுதான் டெரர் டேர் டெவில் ரகம். இறுதிச்சுற்றில் கடலில் கட்டுமரமாக மிதந்துகொண்டிருக்கும் வீரர்கள் மீது கிடா மாடு போன்ற ஆட்களை ஏற்றிவிடுவார்கள், அவர்களைத் தாங்கிக்கொண்டு பயணம் செய்ய வேண்டும், கவிழ்ந்துவிடக் கூடாது.

கேப்டன் ‘த்தூ’ தூக்கி அடிக்கும் போட்டி:

p134d.jpg

குண்டு எறிதல், தட்டு எறிதல் போன்று இதுவும் எறியும் வகையைச் சேர்ந்த போட்டிதான். கையில் ரிப்பேரான மைக்கைக் கொடுப்பார்கள், அதை ‘த்தூ’ என இரண்டு முறை துப்பி, தலையைச் சுற்றி மூன்று முறை சுற்றி தூக்கி எறிய வேண்டும், அதிக தூரம் தூக்கி எறிபவரே வெற்றியாளர். தோற்பவர்களைக் காதாம்பட்டை வீங்கும் அளவிற்கு வெற்றியாளர் குத்துவிட வேண்டும். தோற்றவர்கள் ஃபீனிக்ஸ் பறவையாய் மீண்டும் எழுந்துவர சந்தர்ப்பமும் கொடுக்கப்படும். இது தனிநபர் விளையாடும் விளையாட்டா, அணியாக விளையாடும் விளையாட்டா என்பது மட்டும்தான் விளையாடும்போது அவ்வப்போது குழப்பும்.

வைகோ நடைப் போட்டி:

p134e.jpg

‘போகி’யன்று காலை ஆறுமணி அளவில் போட்டியை ஆரம்பிக்க வேண்டும். போட்டியின் விதியே, தலைவிதியை நொந்துகொண்டு தலையில் தலைப்பாகையைக் கட்டிக்கொண்டு நடப்பதுதான். யார் அதிக தூரத்தை நடந்தே கடந்திருக்கிறார்களோ அவர்தான் வெற்றியாளர். சிலர் பாதிதூரம் வாடகை சைக்கிளில் சென்றுவிட்டு நான்தான் அதிக தூரம் சென்றேன் என ராஜதந்திரத்திலும் ஈடுபடுவார்கள். இந்த விளையாட்டு பார்க்கவே காமெடி, திகில், சென்டிமென்ட் என மூன்றும் கலந்த கலவையாக விருந்து படைக்கும். எப்பூடி...

லெட்ஸ் ஸ்டார்ட் தி கேம்!

vikatan

  • தொடங்கியவர்
வெலிக்­கடைச் சிறையில் குட்­டி­மணி, தங்­கத்­துரை, ஜெகன் உட்­பட 37 தமிழ் அர­சியல் கைதிகள் படு­கொலை
 

வரலாற்றில் இன்று: ஜூலை 25

 

1547: இரண்டாம் ஹென்றி பிரான்ஸ் மன்­ன­னாக முடி­சூ­டினார்.


1593: பிரான்ஸின் நான்காம் ஹென்றி புரட்­டஸ்­தாந்து மதத்தில் இருந்து ரோமன் கத்­தோ­லிக்­கத்­துக்கு பகி­ரங்­க­மாக மதம் மாறினார்.


1603: ஸ்கொட்­லாந்தின் ஆறாம் ஜேம்ஸ் பிரித்­தா­னி­யாவின் முத­லா­வது மன்­ன­னாக முடி சூடினார்.


1799: பிரான்ஸின் நெப்­போ­லி­யனின் படைகள் எகிப்தில்  முஸ்­தபா பாஷா தலை­மை­யி­லான ஒட்­டோமான் படை­யி­னரை சமரில் வென்­றன.


1894: முத­லா­வது சீன– ஜப்­பா­னியப் போர் ஆரம்­ப­மா­னது.


1898: புவேர்ட்டோ ரிக்கோ மீதான ஐக்­கிய அமெ­ரிக்­காவின் படை­யெ­டுப்பு ஆரம்­ப­மா­னது. முத­லா­வது அமெ­ரிக்கப் படை­யினர் குவா­னிக்கா துறை­மு­கத்தில் தரை­யி­றங்­கினர்.


1907: ஜப்­பானின் ஆட்­சியின் கீழ் கொரியா  வந்­தது.


1917: கன­டாவில் தற்­கா­லிக ஏற்­பா­டாக வரு­மான வரி அறி­முகம் செய்­யப்­பட்­டது.


1920: சிரி­யாவின் டமஸ்கஸ் நகரை பிரான்ஸ் கைப்­பற்­றி­யது.


1925: சோவியத் யூனியனின் டாஸ் செய்தி நிறு­வனம் ஸ்தாபிக்­கப்­பட்டது.


1934: ஆஸ்­தி­ரிய ஜனா­தி­பதி எங்­கல்பேர்ட் டொல்ஃபஸ் நாஸி­க­ளினால் கொலை செய்­யப்­பட்டார்.


1943: இத்­தா­லிய சர்­வா­தி­காரி பெனிட்டோ முசோ­லினி பத­வியில் இருந்து அகற்­றப்­பட்டார்.


1944: இரண்டாம் உலகப் போர்: பிரான்ஸில் இடம்­பெற்ற நோர்­மண்டி சண்­டையில் 5,021 கனே­டி­யர்கள் கொல்­லப்­பட்­டனர்.


776welikada-prison.jpg1983: கறுப்பு ஜூலை; கொழும்பு வெலிக்­கடைச் சிறையில் குட்­டி­மணி, தங்­கத்­துரை, ஜெகன் உட்­பட 37 தமிழ் அர­சியல் கைதிகள் படு­கொலை செய்­யப்பட்­டனர்.


1984: சல்யூட் 7 விண்­க­லத்தில் சென்ற சோவியத் யூனி­யனின்  ஸ்வெட்­லானா சவீத்ஸ்­கயா விண்­வெ­ளியில் நடந்த முத­லா­வது பெண் என்ற பெரு­மையைப் பெற்றார்.


1993: லெபனான் மீது இஸ்ரேல் பாரிய தாக்­கு­தலை ஆரம்­பித்­தது.


1993: தென் ஆபி­ரிக்­காவில் சென் ஜேம்ஸ் தேவா­ல­யத்தில் 11 மத­கு­ருக்கள் சுட்டுப் படு­கொலை செய்­யப்­பட்­டனர்.


1994:  இஸ்­ரே­லுக்கும் ஜோர்­தா­னுக்கும் இடையில் வா­ஷிங்­டனில் சமா­தான ஒப்­பந்தம் ஏற்­பட்டு 1948ஆம் ஆண்டு முதல் இருந்து வந்த முறுகல் நிலை முடி­வுக்கு வந்­தது.


1996: புரூண்­டியில் இரா­ணுவப் புரட்சி ஏற்­பட்­டது.


1997 : கே. ஆர். நாரா­யணன் இந்­தி­யாவின் 10ஆவது ஜனா­தி­பதியானார். தலித் சமூ­கத்தைச் சேர்ந்த ஒருவர்இப்­ப­த­விக்குத் தெரி­வா­னமை இதுவே முதல் தட­வை­யாகும்.


776_sooriyanfm-logo.jpg1998: சூரியன் எவ்.எம். வானொலி சேவை ஆரம்­பிக்­கப்­பட்­டது. இன்று தனது 18 ஆவது ஆண்டு நிறைவை சூரியன் எவ்.எம். கொண்­டா­டு­கி­றது.


2000: பிரான்ஸின் கொன்கோர்ட் சுப்­பர்­சோனிக் விமானம் பாரிஸ் நகரில் வீழ்ந்­ததில் அதில் பயணம் செய்த 109 பேரும் தரையில் 4 பேரும் கொல்­லப்­பட்­டனர்.


2007: பிரதிபா பட்டேல் இந்தியாவின் முதலாவது பெண் ஜனாதிபதியானார்.


2010: ஆப்கானிஸ்தான் யுத்தம் தொடர்பான பெரும் எண்ணிக்கையான இரகசிய ஆவணங்களை விக்கிலீக்ஸ் வெளியிட்டது.

.metronews.lk

Edited by நவீனன்

  • தொடங்கியவர்

ரோசலிண்ட் ஃபிராங்க்ளின்

10_2945716f.jpg
 

இங்கிலாந்து ஆராய்ச்சியாளர்

மரபணுவின் சரியான வடிவத்தைக் கண்டறிந்த இங்கிலாந்து ஆராய்ச்சியாளர் ரோசலிண்ட் எல்சி ஃபிராங்க்ளின் பிறந்த தினம் இன்று (ஜூலை 25). அவரைப் பற்றிய அரிய முத்துக்கள் பத்து:

லண்டனில் ஆங்கிலோ யூத குடும்பத்தில் (1920) பிறந்தார். தந்தை, ஒரு வணிக வங்கியில் பங்குதாரராக இருந்தவர். சிறுவயது முதலே கணிதம், அறிவியல், மொழிப் பாடங்களில் சிறந்து விளங்கினார். தான் ஒரு விஞ்ஞானியாக வேண்டும் என்று 15 வயதிலேயே தீர்மானித்தார்.

பள்ளிக் கல்வி முடிந்ததும், கல்லூரி செல்ல விரும்பினார். பெண்களுக்கு உயர் கல்வி தேவையில்லை என்ற தந்தை, சமூக சேவையில் ஈடுபடுமாறு வலியுறுத்தினார். அதையும் மீறி 1938-ல் கேம்பிரிட்ஜில் உள்ள நியூன்ஹாம் கல்லூரியில் சேர்ந்தார். 1941-ல் இளங்கலைப் பட்டம் பெற்றார்.

உதவித்தொகை பெற்று அதே கல்லூரியில் ஆராய்ச்சி மாணவி யாகச் சேர்ந்தார். ஆனால், அடுத்த ஆண்டே வெளியேறி, பிரிட்டிஷ் நிலக்கரி ஆய்வு நிறுவனத்தில் பணியாற்றினார். நிலக்கரி, கார்பன்களின் பல்வேறு மைக்ரோ கட்டமைப்புகள் குறித்து 4 ஆண்டுகாலம் ஆராய்ச்சி மேற்கொண்டார்.

எக்ஸ் கதிர் விளிம்பு விளைவுப் படிகவியல் மூலம் நிலக்கரி மூலக் கூறின் அமைப்பைக் கண்டுபிடிக்கும் வழிமுறையை உருவாக்கி னார். இந்த ஆய்வுக் கட்டுரையை எழுதி, 1945-ல் முனைவர் பட்டம் பெற்றார். தனது ஆராய்ச்சி குறித்து 5 கட்டுரைகள் வெளியிட்டார்.

லண்டன் கிங்ஸ் கல்லூரியின் மருத்துவ ஆராய்ச்சி நிறுவனத்தில் உயிர் இயற்பியலாளர் பிரிவில் ஆய்வு உதவியாளராகப் பணியாற்றினார். கரைசல்களில் உள்ள புரதங்கள், கொழுப்புகளின் தன்மை பற்றி ஆராய்ந்தார். மரபணு ஆராய்ச்சியில் 2 ஆண்டுகள் ஈடுபட்டார்.

டிஎன்ஏ இழைகளின் அமைப்பு பற்றி ஆராய்ந்தார். அவற்றை எக்ஸ் கதிர்களின் விளிம்பு விளைவுப் படிகவியல் முறையில் படம் பிடித்தார். இதன்மூலம் மரபணு மூலக்கூறு வடிவத்தை முதலில் படம் பிடித்தவர் என்ற பெருமை பெற்றார்.

பெண் என்பதால், கிங்ஸ் கல்லூரி ஆய்வுக்கூடத்தில் அவமானங்களுக்கு ஆளானவர், லண்டன் பர்பெக் கல்லூரிக்கு இடம்பெயர்ந்தார். வைரஸ் பற்றிய தனது ஆய்வுகளை அங்கு தொடர்ந்தார். 5 ஆண்டுகளில் 17 ஆய்வறிக்கைகள் வெளியிட்டார்.

ஓர் ஆய்வுக்காக அமெரிக்கா சென்றிருந்தபோது, புற்றுநோயால் தான் பாதிக்கப்பட்டிருப்பதை அறிந்தார். அதற்கு சிகிச்சை எடுத்துக்கொண்டே ஆராய்ச்சிகளையும் தொடர்ந்தார். தன் ஆராய்ச்சிகள் மூலம் அறிவியல் களத்தில் மகத்தான பங்களிப்பை வழங்கிய ரோசலிண்ட் எல்சி ஃபிராங்க்ளின் 37-வது வயதில் (1958) மறைந்தார்.

ரோசலிண்ட்டுக்கு மென்மேலும் புகழ் கிடைத்தது, அவரது மறைவுக்குப் பிறகுதான். கிங்ஸ் கல்லூரியில் இருந்து அவர் வெளியேறியபோது, அவர் பதிவு செய்திருந்த மரபணுவின் எக்ஸ்ரே படம், ஆராய்ச்சிக் குறிப்புகள் ஆகியவற்றை உடன் பணியாற்றிய வில்கின்சன் என்ற அறிவியலாளர் எடுத்து வைத்திருந்தார். வாட்சன், கிரிக் ஆகிய அறிவியலாளர்களுக்கு இதை அவர் அனுப்பி வைத்தார்.

அவர்கள் 3 பேரும் இணைந்து இதுதொடர்பாக மேலும் ஆய்வு மேற்கொண்டனர். ஆராய்ச்சியில் வெற்றி கண்ட 3 பேரும் இதற்காக 1962-ல் நோபல் பரிசு பெற்றனர். அதன்பிறகு, ரோசலிண்ட் பெருமை உலகம் முழுவதும் பரவியது. அமெரிக்கா, இங்கிலாந்தில் பல உயர்கல்வி நிறுவனங்கள், ஆராய்ச்சிக் கூடங்களுக்கு இவரது பெயர் சூட்டப்பட்டுள்ளது.

tamil.thehindu

  • தொடங்கியவர்

ஒரே வேலையில் அழுத்தமாக உணர்கிறீர்களா? #MondayMotivation #DailyMotivation

11.jpg

வாரத்தின்  ஆறு நாட்களும் ஒரே வேலையில் மூழ்கி சோர்ந்து போகும் நபரா நீங்கள், அப்படியென்றால் இந்த கட்டுரை உங்களுக்கானது தான். ஏதாவது ஒரு வேலையில் சிக்கி, முழுவதுமாக அதே வேலையில் ஈடுபட்டு வரும்போது ஒருகட்டத்தில் அந்த வேலை அப்படியே தடைபட்டு நின்று போக வாய்ப்புள்ளது. இது உங்கள் செயல்திறனை குறைப்பது மட்டுமின்றி உங்களை அடுத்தகட்டத்துக்கு நகராமல் நீண்ட நாட்கள் அதே இடத்தில் முடக்கிவிடும்.

இதுபோன்ற தருணங்களில் ஒருவர்  இத்தகைய சிக்கலிலிருந்து முழுவதுமாக மீண்டு, புதுமையான விஷயங்களில் ஈடுபட,  சில விஷயங்களை தொடர்ந்து ஒரு மாதம் செய்ய வேண்டும். அப்படி செய்தாலே, ஒருவர் புதுமையான மனிதராக மீண்டும் தன்னை இந்த உலகத்திற்கு அறிமுகப்படுத்திக் கொள்ள முடியும்.

12.jpg
 

"ஒரே வேலையில் சிக்கிக் கொள்ளும் ஒருவருக்கு அவரது வயதும், பணிபுரியும் துறையும் தடையில்லை.  முதலில் இரண்டு விஷயங்கள் உள்ளன. சில விஷயங்களை செய்ய வேண்டும், சில விஷயங்களை கட்டாயம் செய்யக்கூடாது. இந்த 30 நாட்களிலும் ஒருவர் என்ன செய்ய வேண்டும் என்பதை பார்ப்போம்...

1.சைக்கிள் பயணம் மேற்கொள்ளுங்கள்
 
தினமும் காலையில் உங்களுக்கு பிடித்த இடத்தில் தினசரி சைக்கிள் பயணம் மேற்கொள்ளுங்கள். அது உங்கள் உடல் மற்றும் மனநிலையை மாற்றுவதாக அமையும். உங்கள் சைக்கிள் பயணங்களில் உங்களை கவனம் சிதற வைக்கும் விஷயங்களுக்கு இடம் கொடுக்காமல் பயணத்தையும், நீங்கள் செல்லும் இடத்தின் சூழலையும் ரசிக்க பழகுங்கள். இதனை ஒரு வேலையாக பார்க்காதீர்கள். எந்த தொந்தரவும் குறிப்பாக அலைபேசி தொந்தரவுகள் இன்றி இதனை செய்ய பழகுங்கள்.

13.jpg
 
 

2.ஒரு நாளைக்கு 10000 ஸ்டெப்ஸ் நடைபயணம்!
 
ஒரு நாளைக்கு நீங்கள் நடந்து செல்லும் தூரம் 10000 ஸ்டெப்ஸ் என்ற அளவில் இருக்குமாறு பார்த்துக் கொள்ளுங்கள். நீங்கள் காலை எழுந்தது முதல் இரவு உறங்கும் வரை ஒரு நாளைக்கு குறைந்தபட்சம் 10000 ஸ்டெப்ஸ் என்பது 7.5 கிலோமீட்டர். அதற்காக ஒருவர் தினமும் 7.5 கிமீ தூரம் நடந்து செல்ல வேண்டும் என்பது இல்லை.உங்கள் வீட்டு மாடிக்கு ஏறுவது துவங்கி, உங்கள் அலுவலகத்தில் காபி அருந்த கேண்டீனுக்கு செல்வது வரை அனைத்தையும் சேர்த்து இந்த அளவு நடந்தால் போதுமானதாக இருக்கும்.
 
3.தினசரி ஒரு புகைப்படம் எடுங்கள்!

 
தினசரி உங்களுக்கு பிடித்த ஒரு விஷயத்தை அல்லது உங்களுக்கு பார்க்க அழகாக தோன்றும் ஒரு விஷயத்தை புகைப்படமாக பதிவு செய்யுங்கள். இதே போல் 30 நாட்களும் புகைப்படம் எடுங்கள். உங்கள் மனநிலை முதல் நாளிலிருந்து தற்போது எந்த அளவுக்கு மாறியுள்ளது என்பதை பார்த்து தெரிந்து கொள்ளுங்கள். உங்களை புதுமையாக சிந்திக்க வைக்க இந்த பழக்கம் மிகவும் உதவியாக இருக்கும். அது மிகப்பெரிய போட்டொகிராபியாக இருக்க வேண்டும் என்ற அவசியமில்லை. செல்போன் புகைப்படமே போதுமானது.

14.jpg
 

4.ஒரு நாவல் எழுதுங்கள்!
 
ஒரு நாவல் எழுதுங்கள் என்று கூறியவுடன் உங்களுக்குள் ஒரு கேள்வி எழலாம். 'நான் ஒரு கணினி பொறியாளர்... நான் எப்படி நாவல் எழுதுவது?' என்று.  ஒரு நாளைக்கு உங்கள் வாழ்வில் நடக்கும் சுவாரஸ்யமான விஷயங்களை 1667 வார்த்தைகளில் எழுத துவங்குங்கள் 30வது நாள் 50000 வார்த்தைகள் கொண்ட ஒரு நாவல் உங்கள் பெயரில் இடம் பெற்றிருக்கும். அத்துடன் புதுமையான விஷயங்களுக்கு நீங்கள் மாறிய விதம் புரியும்.

5. காதலிக்க பழகுங்கள்:

காதல் என்றவுடன் எதிர்பாலின ஈர்ப்பு என்ற அர்த்தம் இல்லை. உங்களை சுற்றியுள்ள சிறு சிறு விஷயங்களை கவனியுங்கள். நீங்கள் செய்யும் சில கெத்தான விஷயங்களுக்கு உங்களை நீங்களே பாராட்டிக்கொள்ளுங்கள். வேலை செய்யும் நேரம் தவிர மற்ற‌ நேரங்களில் வேலையை பற்றிய‌ நினைவு இல்லாத உற்சாகமான வேலைகளில் நாட்டம் செலுத்துங்கள்.நண்பர்களுடன் சமூக வலைதளங்களில் உரையாடாமல் நேரில் உரையாட பழகுங்கள். மனதிற்கு நெருக்கமான நபருடன் அதிகமான நேரத்தை செலவிடுங்கள்.
 
எதை செய்யக் கூடாது?
 
1. 30 நாட்களில் சமூக வலைதளங்களில் இயங்காதீர்கள்,

2. காஃபைன் நிறைந்த பானங்களை அருந்தாதீர்கள்.

3. தொலைகாட்சி பார்ப்பதை ஓரளவுக்கு தவிர்த்துவிடுங்கள்.

4. வேலையை வீட்டுக்குள் அனுமதிக்காதீர்கள்.

5. அலுவலக நேரம் தவிர அதிக நேரம் அலுவலகத்தில் இருக்காதீர்கள்.

15.jpg

 

இவையெல்லாம் உங்களை பழைய நிலைக்கு எடுத்து செல்பவையாக இருந்துவிடும். உங்களை புதுமையாக சிந்திக்க வைக்க இவற்றை கொஞ்சம் தவிர்க்க பழகுங்கள். இதனை நீங்கள் தொடர்ந்து செய்யும்போது, நீங்கள் நினைத்த புதுமையான உங்களை 30 நாட்களில் நீங்களே தயார்படுத்தி இருப்பீர்கள்.
 
இதனை சரியாக பின்பற்றினால், 30 நாட்களுக்குள் நீங்கள் சரியான பாதையில் பயணிக்க, புதுமையாக உணர, அடுத்தகட்டத்து உங்களை நகர்த்த உதவியாக இருக்கும்.

vikatan

  • தொடங்கியவர்
கட்டைக் காற்சட்டை அணிய தடை விதிக்கப்பட்டதால் பாவாடையுடன் பாடசாலைக்குச் சென்ற ஆண் மாணவர்கள்
 

நீளக் காற்சட்டைக்குப் பதிலாக கட்டை காற்சட்டையுடன் பாடசாலைக்குச் சென்றதால் திருப்பி அனுப்பப்பட்ட ஆண் மாணவர்கள் நால்வர், மறுநாள் பாவாடையுடன் பாடசாலைக்குத் திரும்பிய சம்பவம் இங்கிலாந்தில் இடம்பெற்றுள்ளது.

 

18146dfccschool_24072016_P50_CMY.jpg

 

கிழக்கு சசெக்ஸ் பிராந்தியத்தின் ரொட்டிங்டீன் நகரிலுள்ள லோங்ஹில் உயர் பாடசாலையைச் சேர்ந்த மாணவர்களே இவ்வாறு பாடசாலைக்கு பாவடையுடன் சென்றனர். 

 

கடந்த வாரம் பிரிட்டனின் பல பகுதிகளில் கடும் வெப்பம் நிலவியது. செவ்வாய்க்கிழமை 33 பாகை செல்சியஸுக்கு வெப்பநிலை இருந்தது.

 

18146_Untitled-4.jpgஇதனால், மேற்படி பாடசாலையைச் சேர்ந்த மாணவர்கள் நீளக் காற்சட்டைக்குப் பதிலாக கட்டைக் காற்சட்டை அணிந்து பாடசாலைக்குச் சென்றனர்.

 

புதன்கிழமையும் இவர்கள் கட்டைக் காற்சட்டையுடன் சென்றதால் அம்மாணவர்களில் சிலர் வீட்டுக்கு அனுப்பப்பட்டனர். வேறு சிலர் தனிமைப்படுத்தி வைக்கப்பட்டனர்.

 

இதையடுத்து, கடந்த வியாழக்கிழமை மாணவர்கள் நால்வர் பாவாடை அணிந்துகொண்டு பாடசாலைக்குச் சென்றனர். 

 

9 ஆம் தரத்தில் கல்வி கற்கும் மாணவர்கள் நால்வரே இந்த விநோத எதிர்ப்பு நடவடிக்கையை மேற்கொண்டனர். ஆரம்பத்தில் பாவாடைகளை கழற்றுமாறு மாணவர்கள் அறிவுறுத்தப்பட்டனர்.

 

எனினும், இவ்விடயம் பாடசாலை அதிபர் கேட் வில்லியம்ஸிடம் சென்றபோது, ஏற்றுக்கொள்ளப்பட்ட பாடசாலை சீருடைகளின் எந்தப் பகுதியையும் அணிந்துகொள்ளலாம் என அவர் கூறியுள்ளார்.

 

மாணவர்களில் ஒருவரின் தந்தை வெஸ்லி அலன் இது தொடர்பாக கூறுகையில், இந்த எதிர்ப்பு நடவடிக்கையானது  சீருடை கொள்கை குறித்து மீள்பரிசீலனை செய்ய பாடசாலை நிர்வாகத்தை தூண்டும் என தான் எதிர்பார்ப்பதாக கூறியுள்ளார்.

.metronews.lk

Edited by நவீனன்

  • தொடங்கியவர்
பலூன் மூலம் தனியாக 11 நாட்களில் உலகை சுற்றிவந்து புதிய சாதனை படைத்த மனிதர்
 

181532016-07-23T084558Z_1339049677_S1AETரஷ்யாவைச் சேர்ந்த பெடோர் கொனியுகோவ் பலூன் மூலம் 11 நாட்களில் தனியாக உலகை சுற்றி வந்து புதிய சாதனை படைத்துள்ளார்.

 

65 வயதான பெடோர் கொனியுகோவ் கடந்த 12 ஆம் திகதி அவுஸ்தி ரேலியாவிலிருந்து இப் பயணத்தை ஆரம்பித்தார்.

 

பலூன் ஹீலியம் மற்றும் வெப்ப வாயு மூலம் இயங்கும் 56 மீற்றர் (118 அடி) உயரமான பலூனில் அவர் தனியாக பயணம் செய்தார்.

 

நேற்று முன்தினம் 23 ஆம் திகதி மாலை அவர் மீண்டும் அவுஸ்திரேலி யாவைச் சென்றடைந்தார்.

 

இதன்மூலம் 11 நாட்களில் இப் பயணத்தை பூர்த்தி செய்து புதிய உலக சாதனை படைத்துள்ளார் பெடோர் கொனியுகோவ்.


இதற்குமுன் அமெரிக்காவைச் சேர்ந்த ஸ்டீவ் பொசெட் 2002 ஆம் ஆண்டு 13 நாட்களில் பலூன் மூலம் உலகை சுற்றி வந்தமையே சாதனையாக இருந்தது.

 

181532016-07-23T084603Z_322877480_S1AETR

 

இந்நிலையில் பெடோர் கொனியுகோவ் 12 தினங்களில் இப் பய ணத்தை பூர்த்தி செய்வார் என எதிர்பார்க்கப்பட்டது. எனினும் எதிர்பார்க்கப்பட்டதற்கு 11 தினங்களிலேயே அவர் இப் பணத்தை நிறைவு செய்துள்ளார்.

 

உறையவைக்கும் குளிர், உறக்கமின்மை போன்ற நெருக்கடி களுக்கு மத்தி யில் 34,820 கிலோமீற்றருக்கும் அதிகமான தூரம் பெடோர் கொனியுகோவ் பயணம் செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

 

அவுஸ்திரேலியாவிலிருந்து ஆரம்பித்து நியூஸிலாந்து, பசுபிக் சமுத்திரம், தென் அமெரிக்கா, தென் ஆபிரிக்காவின் நன்நம்பிக்கை முனை, தென் சமுத்திரப் பிராந்தியங்களுக்கு மேலாக அவர் பறந்து சென்றார்.  

 

கப்பல்கள், விமானங்கள் எதுவும் தென் படாத அந்தார்ட்டிக்காவுக்கு அண்மித்த பகுதிக்கு மேலாக பறந்தபோது மிக அச்சம் ஏற்படுத்துவதாக இருந்தது என பெடோர் கொனியுகோவ் தெரிவித்துள்ளார்.

metronews.lk

Edited by நவீனன்

  • தொடங்கியவர்

ஜூலை 25: உதிரிப்பூக்கள் திரைப்படத்தை தந்த இயக்குநர் மகேந்திரன் பிறந்த தினம்

13769360_1185658718159583_69778707962155

  • தொடங்கியவர்

ஆடை மாறிப்போச்சு!

 

p116a.jpg

ர்வதேச கிரிக்கெட் வரலாற்றில் ஒருநாள் போட்டிகளில் கலர் ஜெர்சி அணிந்து ஆடும் பழக்கம் 1980-களின் இறுதியில் அறிமுகமானது. அதுவரை டெஸ்ட் போட்டிகளில் ஆடுவதைப் போலவே கிரிக்கெட் வீரர்கள் வெண்ணிற உடைகளை அணிந்து ஒருநாள் போட்டிகளிலும் ஆடிவந்தனர். 1985-ம் ஆண்டு நடைபெற்ற உலக சாம்பியன்ஷிப் போட்டியின்போது அனைத்து நாடுகளும் கலர் ஜெர்சி அணிந்து ஆடின. 1992-ம் ஆண்டு நடைபெற்ற உலகக்கோப்பைப் போட்டியிலிருந்து, ஒருநாள் போட்டிகளில் கலர் ஜெர்சி அணிந்து ஆடுவது கட்டாயமாக்கப்பட்டது. ஆரம்பம் முதல் தற்போது வரை இந்திய கிரிக்கெட் அணியின் ஜெர்சி மாற்றங்கள்... ஒரு ஃப்ளாஷ்பேக்.

p116b.jpg

p116c.jpg

p116d.jpg

p116e.jpg

p116f.jpg

 

vikatan

  • தொடங்கியவர்

காவியில்  கால்பந்து  அசத்தும் ராம்தேவ்(காணொளி இணைப்பு)

 

கால்பந்து விழிப்புணர்வு விளையாட்டு போட்டியில் பாபா ராம்தேவ் கலந்து கொண்டு விளையாடினார். Baba-Ramdev-parliamentarians.jpg

டெல்லி ஜவஹர்லால் நேரு விளையாட்டரங்கில்,  கண்காட்சி கால்பந்துப் போட்டி நேற்றிரவு நடைபெற்றது.

 

பிரதமர் நரேந்திர மோடியின் 'தூய்மை இந்தியா 'திட்டத்துக்கும், பெண் குழந்தைகள் நலனுக்கான 'பேட்டி பட்சாவோ' திட்டத்துக்கும் நிதி திரட்டும் வகையில்,  இந்த போட்டி ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. Baba-ramdev.jpg

போட்டியில் நாடாளுமன்ற உறுப்பினர்கள் அணியுடன் பாலிவுட் நடிகர்கள் அணி மோதியது. 

இந்தியாவுக்கான கால்பந்து விளையாட்டுக்கான தூதுவராக நியமிக்கப்பட்டுள்ள யோகா குரு பாபா ராம்தேவ் போட்டியைத் ஆரம்பித்து வைத்தார்.Baba-Ramdev-football.jpg

பாபா ராம்தேவ் , வழக்கமான காவி உடையுடன் காலில் சப்பாத்துகளும் அணிந்திருந்தார். அத்துடன் களத்தில் இறங்கியும் விளையாடியுள்ளார். Baba-Ramdev-goal.jpg

நாடாளுமன்ற உறுப்பினர்கள் அணியில், இந்திய அணியின் முன்னாள் தலைவரும் திரிணாமுல் காங்கிரஸ் எம்.பியுமான பிரசுன் பேனர்ஜி, கனரகத் தொழில் துறை அமைச்சர் பாபுல் சுப்ரியா உள்ளிட்டவர்கள் இடம் பெற்றிருந்தனர். Baba-ramdev-gootball-top.jpg

பாலிவுட் நட்சத்திரங்கள் அணியில் அபிஷேக் பச்சன், ரன்பீர் கபூர் உள்ளிட்டோர் இருந்தனர். இந்த கண்காட்சி போட்டியில் டிக்கெட் விற்பனை மூலம் கிடைத்த நிதி, பிரதமரின் 'தூய்மை இந்தியா' மற்றும்  'பேட்டி பச்சாவோ' திட்டங்களுக்கு பகிர்ந்தளிக்கப்பட்டது.  Baba-Ramdev-shoes.jpgexhibition-football-match-between-parlia

http://www.virakesari.lk

  • தொடங்கியவர்

செம த்ரில்!

 

p88a.jpg

ராத்திரியில் டாய்லெட்டுக்கே தனியாகப் போகப் பயப்படுகிற பயந்தாங்கொள்ளிகள் இருக்கும் இதே ஊரில், ‘ரிஸ்க் எடுக்கிறதெல்லாம் எங்களுக்கு ரஸ்க் சாப்பிடுற மாதிரி’னு பயத்தை மடித்து பாக்கெட்டில் வைத்தபடி சொல்லும் சாகசப் பிரியர்களும் இருக்கிறார்கள். அவர்கள் விரும்பும் அபாயகரமான விளையாட்டுகள் நடக்கும் இந்தியாவின் சில முக்கிய இடங்கள் இவை...

ஆலி (உத்தரகாண்ட்):

இந்தியாவில் இருக்கும் பனிச்சறுக்கு விளையாட்டு சாகசப்பிரியர்களின் புகலிடம் ஆலி. உத்தரகாண்ட் இமயமலைப் பகுதிகளின் சரிவில் அமைந்திருக்கும் ஆலி நமது நாட்டின் மிகப்பிரபலமான பனிச்சறுக்குத் தலம். பயிற்சி பெறுபவர்களுக்கு வசதியாக ஆலியில் தங்கும் விடுதிகளும், பனிச்சறுக்குக்குத் தேவையான பொருட்களும், சிறந்த போக்குவரத்து வசதிகளும் கிடைப்பதால் வருடம் முழுவதும் இங்கு பெரும்பாலானோர் குவிகிறார்கள். இங்கே ஸ்கையிங் செய்வதற்கென்றே ரிசார்ட்டுகள் பல பேக்கேஜ்களோடு சுற்றித் திரிகின்றன. ரெண்டு நாள், மூணு நாள் என சின்ன பேக்கேஜ்களும் இருக்கின்றனவாம்.

அந்தமான் நிக்கோபார் தீவுகள்:

p88b.jpg

ஆக்ஸிஜன் சிலிண்டரை முதுகிலேயோ, விலாவிலேயோ கட்டிக்கிட்டுக் கடலுக்கு அடியில் போய் சுறாமீனுக்கெல்லாம் குட்மார்னிங் சொல்லிட்டு வர்ற விளையாட்டுக்குப் பேருதான் ஸ்கூபா டைவிங். இந்தியாவில் ஸ்கூபா டைவிங்குக்குப் பெயர்போனது அந்தமான் நிக்கோபார் தீவுகள். இங்கே பல பயிற்சியாளர்கள் பெரியவர்களுக்கு மட்டுமல்லாது சிறுவர்களுக்கும் கற்றுத் தருகிறார்கள். இதற்காகவே ஆசியாவில் அதிகப்பேர் விரும்பும் சுற்றுலா விளையாட்டுத்தலமாக அந்தமான் திகழ்கிறது.

காம்ஷெட் (மகாராஷ்டிரா):

p88c.jpg

பாராகிளைடிங் என்பது பெரிய பாராசூட்டைத் கட்டிக்கொண்டு மலையிலிருந்து குதிக்கும் உயிருக்கு உலைவைக்கும் விளையாட்டு. காம்ஷெட்தான் இந்தியாவின் மிகப் பாதுகாப்பான பாராகிளைடிங் சாகசம் செய்யும் இடம். இங்கே இருக்கும் பாராகிளைடிங் சாகசக்காரர்கள் புதிதாக வரும் ஆர்வமுள்ளவர்களுக்கு சிறப்பான முறையில் பயிற்சியளிக்கிறார்கள். இதுவரை எந்த விபத்துகளும் நிகழ்ந்ததில்லை என்ற பெருமையையும் காம்ஷெட் பெற்றிருக்கிறது. அண்ணா சாலையில வண்டி ஓட்டுறதே எங்களுக்கு மரண சாகசம்தான். போங்கப்பு!

எலிஃபென்ட் ஃபால்ஸ், ஷில்லாங்:

p88d.jpg

‘பாகுபலி’ படத்தில் பிரபாஸ், சிறுவயதிலிருத்து முயற்சி செய்து ஒருவழியாக மலையில் ஏறி அருவியின் உச்சிக்குச் செல்வார். அதேதான் இந்த ஃபால்ஸ் ரேப்பல்லிங் (Falls Rappelling) சாகச விளையாட்டு. மலையின் உச்சியிலிருந்து ரோப் கட்டப்பட்டு அதைப் பிடித்துக்கொண்டே அவ்வளவு உயரமான நீர்வீழ்ச்சியைக் கடந்து மேலே செல்வார்கள். லேசாக அசந்தாலும்கூட அபாய கட்டத்திற்குச் செல்லவேண்டி வரலாம். ஷில்லாங்கில் இருக்கும் இந்த நீர்வீழ்ச்சியைத் தேடிக் குவிகிறது சாகசக்காரர்கள் கூட்டம்!

கேரளா:

p88f.jpg

இந்தியாவின் ஃப்ளையிங் ஃபாக்ஸ் வீரர்களால் அதிகம் விரும்பப்படும் இடமாக கேரளா இருக்கிறது. காரணம், இங்கே குறைந்த செலவில் நன்றாகப் பொழுது போக்கலாம். ஃப்ளையிங் ஃபாக்ஸ் விளையாட்டில்  உயரமான இரண்டு பகுதிகளுக்கு இடையே கட்டப்பட்டிருக்கும் கம்பியைப் பிடித்து அதில் தொங்கிக்கொண்டே அடுத்த பகுதியை அடைய வேண்டும். கீழே குனிந்து பார்த்தாலே தலை சுற்றும் அளவுக்குப் பள்ளமாக இருக்கும்.  திடீரென அந்தக் கம்பி அறுந்து விழுந்தால் சங்குதான். பயந்தா தொழில் பண்ண முடியுமா.. ஏஹே!

மைசூர்:

p88e.jpg

ஸ்கை-டைவிங் சாகசத்தில் கர்நாடகாவின் மைசூர் முக்கியப் பங்கு வகிக்கிறது. இங்கே பல நிறுவனங்கள் இரண்டு நாளைக்கு 35,000 ரூபாய் கட்டணத்தில் புக்கிங் செய்து பயிற்சி அளிக்கின்றன. ஸ்கை டைவிங்னா காத்துல பட்டம் விடுறது இல்லை; காத்துல பட்டமாவே மாறுவது. பறந்துகொண்டிருக்கும் விமானத்தில் இருந்து ஒரு கயிறோடு அலேக்காகக் குதித்து வானத்தில் மிதக்கும் வித்தைதான் இந்த ஸ்கை-டைவிங். ஃப்ரெண்டின் பைக்கில் 90-ல போனாலே அல்லு கலங்கும் நமக்கு காத்துல பறப்பதெல்லாம் கனவுல மட்டும்தான்!

vikatan

  • தொடங்கியவர்

செல்ஃபி பக்கிகள்!

 

லகம் பூரா செல்ஃபி மோகம் தலை விரிச்சு ஜிங்கு ஜிங்குனு ஆடுது. உலகையே வலம் வரும் சில டெரர் ஷாக்கிங் செல்ஃபிக்கள் இவை... ஷேரிங் மட்டும்தான் நம்ம வேலை!

p30a.jpg

லிபோர்னியாவில் இருக்கும் டிஸ்னி லேண்ட் ரோலர் கோஸ்டர் சவாரியில் எடுக்கப்பட்ட இந்த செல்ஃபியை எடுத்தவர் பெயர் தெரிய வில்லை. ஆனால், இந்த செல்ஃபி வைரலில் உலாவ, பாதுகாப்புக் காரணங் களுக்காக டிஸ்னி நிறுவனம் தங்களின் தீம் பார்க்குகள் எல்லாவற்றிலும் செல்ஃபி எடுக்கத் தடை விதித்துள்ளது. ‘செல்ஃபி ஸ்டிக்’ பெரும் விபத்தை ஏற்படுத்தக்கூடும் என்பது அவர்களுடைய பயம்!


p30b.jpg

போர் விமானத்தில் பறந்தபடி எடுக்கப்பட்ட இந்தக் கொலவெறி செல்ஃபியை எடுத்திருப்பது அமெரிக்க விமானப்படை வீரர் ஒருவர். இது கடும் கண்டனத்துக்கு உள்ளானது. ஏரியல் போட்டோகிராபர் ஆன்டனி லவ்லெஸ் என்பவர் இதைப் பரிசீலித்து, மிகவும் பாதுகாப்போடு எடுக்கப்பட்ட செல்ஃபிதான் என சர்டிஃபிகேட் கொடுக்க விஷயம் வெடிக்காமல் அமுங்கியது!


p30c.jpg

டத்தில் சந்தோஷமாகப் பாட்டுப்பாடிக் கொண்டு செல்ஃபி ஸ்டிக்கோடு படங்களை எடுத்தபடி காரில் செல்லும் இந்த இசைக்குழு இப்போது உயிருடன் இல்லை. ‘பேபி கம் பேக்’ என்ற பாடலைப் பாடியபடி ‘கோப்ரோ’ கேமராவோடு சென்ற இந்தக் குழு ஒரு விபத்தில் சிக்கிக்கொள்ள செல்ஃபி வீடியோ இணையத்தில் வெளியாகி ஐந்து மில்லியன் பேர் பார்த்திருக்கிறார்கள்!


p30d.jpg

ரொம்பத் தனிமையாக ஃபீல் பண்ணும் நபர்களுக்காக கண்டுபிடிக்கப்பட்ட வித்தியாச செல்ஃபி ஸ்டிக் இது. அமெரிக்க ஓவியர்கள் ஏரிக் மற்றும் ஜஸ்டின் என்ற இருவர் வடிவமைத்த இந்த செல்ஃபி ஸ்டிக் அப்படியே அச்சு அசல் மனிதக் கைகளைப்போல உள்ளது. இந்த ஸ்டிக்கில் கேமராவைப் பொருத்திப் படமெடுத்தால் கைகளைக் கோர்த்துக்கொண்டு செல்ஃபி எடுத்த எஃபெக்ட் கிடைக்கும்!


p30e.jpg

எஸ்ஐஎஸ் தீவிரவாதிகளால் துனீஷியன் பீச்சில் தாக்குதல் நடத்தப்பட்ட இரு தினங்களுக்குப் பிறகு இங்கிலாந்தைச் சேர்ந்த அம்ரன் ஹுசைன் என்ற இளம் அரசியல் பிரமுகர் ‘இந்த இடத்தில்தான் 38 பேர் கொல்லப்பட்டார்கள்’ என்ற டேக்லைனோடு போட்ட செல்ஃபி படங்கள் அவரைக் கட்சியை விட்டே துரத்தப்படவும், உலகம் முழுவதும் கண்டனக்குரல் எழவும் காரணமானது!

vikatan

  • தொடங்கியவர்

சச்சின் ஆடிய போட்டிகளை நீங்களும் விளையாடலாம்... அறிமுகமாகிறது புதிய மொபைல் கேம்!

SA_1.jpg

மைதானத்தின் வாயிலாக கோடிக்கணக்கானவர்களின் நெஞ்சங்களில் நிறைந்தது போதாதென்று, கேமிங் என்னும் சக்தி வாய்ந்த ஊடகத்தின் வழியே நம்மை மேலும் நெருங்கப் போகிறார்  இந்தியாவின் கிரிக்கெட் மாஸ்ட்ரோ சச்சின். ஆம் விரைவில் வெளிவரப் போகிறது ‘சச்சின் சாகா’ எனும் அதிகாரபூர்வ சச்சினின் மொபைல் கேம்!

மொத்த உலகமும் அனலாக் மோடில் இருந்து டிஜிட்டல் மோடிற்கு மாறிக்கொண்டிருக்கிறது. கிரிக்கெட், கால்பந்து, சினிமா ஆகியவற்றையெல்லாம் தாண்டி, இந்த டிஜிட்டல் யுகத்தில் யுவன் யுவதிகளை அடிமைப்படுத்தி வைத்திருப்பது மொபைல் கேம்கள்தான். கார்ட்டூனாக வந்து குழந்தைகளின் மனதை ஆக்கிரமித்த போக்கிமான், ‘போகிமான் கோ’வாக வந்து மொத்த உலகையுமே ஆட்டிப்படைத்துக் கொண்டிருக்கிறது.

இந்நிலையில்,  மிகப்பெரிய ‘பிராண்ட் நேம்’ உடன், இந்தியர்களை ஈசியாக ஈர்த்துவிடும் கிரிக்கெட்டை மையப்படுத்தி வரப்போகிறது ஒரு கேம்! அதுவும் சாதாரண கிரிக்கெட் கேம்  அல்ல…சச்சினின் கேம் அது. சச்சினுக்குப் பிடித்த 100 போட்டிகளை நாம் இந்த கேமில் விளையாட முடியும். அதன் மூலம் சச்சின் அச்சூழலில் இருந்த மனநிலை முதற்கொண்டு நாம் அறிந்து கொள்ள முடியுமாம். அதுமட்டுமின்றி சச்சினே இந்த விளையாட்டில் நமக்கு டிப்ஸ் கொடுக்கும் பயிற்சியாளராக இருப்பாராம்.

SA_3.jpg

புனேவைச் சார்ந்த நிறுவனமான ‘ஜெட் சிந்தசிஸ்’ இந்த கேமை டிசைன் செய்ய உள்ளது. மிகப்பெரிய அமெரிக்க கிராஃபிக்ஸ் நிறுவனத்தோடு இணைந்து, இந்த கேமை மிகச்சிறப்பாக வடிவமைக்க உள்ளதாக அந்நிறுவனத்தின் துணைத் தலைவரும் நிர்வாக இயக்குநருமான ராஜன் நவானி தெரிவித்தார்.  சச்சினும் இதனை அதிகாரபூர்வமாக அறிவித்தார்.

“உங்களுடைய திறமையாலும் என்னுடைய நுண்ணறிவாலும் இவ்விளையாட்டை விளையாடி சாம்பியனாவோம். என்னுடைய கிரிக்கெட் பயணத்தின் அனுபவங்களை இவ்விளையாட்டின் மூலமாக என்னோடு சேர்ந்து பகிர்ந்து கொள்ளுங்கள்” என்று சச்சின் குறிப்பிட்டுள்ளார்.

‘சச்சின் சாகா’ கேமின் ப்ரொமோ வீடியோவைக் காண

vikatan

  • தொடங்கியவர்

ஆள் பாதி ஆப்ஸ் பாதி!

 

p38a.jpg

‘மது அருந்துதல் உடல்நலத்திற்குத் தீங்கானது. புகைபிடித்தல் புற்றுநோயை உண்டாக்கும்’னு கேப்ஷன்ஸ் கொடுக்கிற மாதிரி, கூடிய சீக்கிரம் ‘மொபைல் போனைப் பயன்படுத்துவது ஆபத்தானது’னு அறிக்கை விட்டாலும் விடுவாங்க. பின்னே? இப்பவே சார்ஜில் போட்டுப் பேசக் கூடாது, அதிகநேரம் பேசக் கூடாது, மொபைல் வெளிச்சம் கண்ணில் படக் கூடாதுனு ‘மொபைல் பயன்படுத்துவோர் கவனத்திற்கு’ ஆயிரெத்தெட்டு தகவல்கள் வந்துக்கிட்டுதான் இருக்கு. நாமளும், காலையில் கண்ணு முழிச்சதில் இருந்து, ராத்திரி தூங்குறவரை... மொபைலே கதினு கிடக்கிறோம். இதுக்கெல்லாம் ஒரு முடிவு கட்டணும்னு நீங்க ஒரு  முடிவெடுத்தீங்கனா, இந்தா படிங்க ‘பிரேக் ஃப்ரீ’ ஆண்ட்ராய்டு அப்ளிகேஷனை!

அப்ளிகேஷனைப் பார்த்ததுமே, ‘என்னவாம்?’னுதான் கேட்கத்தோணும். ஆனால், இந்த அப்ளிகேஷன் உங்களுக்குச் செய்யப்போகும் சேவைகள் ‘ஆஹாங்’ ரகம். டவுன்லோடு செய்தால், உங்கள் டிஜிட்டல் வாழ்க்கையைக் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்க, இந்த அப்ளிகேஷன் நிச்சயம் உதவும். அழைப்புகள், மெசேஜ், படம், வீடியோ, ஆடியோ, வாட்ஸ்-அப், ஃபேஸ்புக், ட்விட்டர், இன்ஸ்டாகிராம், வெப்சைட்டுகள்... என அத்தனை அத்தியாயங்களும் கையடக்க மொபைலில் இருக்கும்போது, அதை ஒரு நாளைக்கு எத்தனை முறை நீங்கள் பார்க்கிறீர்கள்? 50, 100, 150? எண்ணவே முடியாத கணக்கைக் கடந்துபோகும் இதையெல்லாம் கட்டுப்படுத்துவதுதான், இந்த ‘பிரேக் ஃப்ரீ’ அப்ளிகேஷனின் முக்கியக் கடமை. நீண்டநேரமாக சமூக வலைதளத்தில் மேய்ந்துகொண்டிருக்கிறீர்கள் என்றால், ‘போதும் பாஸ்’னு குரல் கொடுக்கும். நாள் ஒன்றிற்கு இத்தனைமணி நேரத்தில் இருந்து, இத்தனைமணி நேரம்வரை (எமர்ஜென்ஸி அழைப்புகளை செட்டிங் செய்துகொள்ளலாம்) மொபைலைப் பயன்படுத்துவதில்லை என்று உறுதிமொழி எடுக்கவைக்கும். குடும்பத்தோடு, நண்பர்களோடு வெளியே செல்லத் திட்டமிடுகிறீர்கள் எனில், அந்த நேரத்தில் வாட்ஸ்-அப், ஃபேஸ்புக் உள்ளிட்ட சமூக வலைதள ‘வலை’களில் இருந்து உங்களைக் காப்பாற்றுவதற்காக, நோட்டிஃபிகேஷன்களைத் துண்டிக்கும். இதுக்கெல்லாம் எதுக்கு பாஸ் இந்த அப்ளிகேஷனைப் பயன்படுத்தணும்னு நினைக்கிறீங்களா? அப்போ, பின்வரும் காரணங்களுக்காகப் பயன்படுத்தலாம்.

p38b.jpg

அடிக்கடி மொபைலையே பார்த்துக்கொண்டிருப்பதால், மனைவியிடம் வாங்கும் திட்டு குறையும். ‘சார்ஜே நிற்க மாட்டேங்குது’ என நீங்கள் புலம்பிக்கொண்டிருக்க வேண்டிய அவசியம் கொஞ்சமாவது குறையும். அனிச்சையாக அடிக்கடி மொபைலைத் தடவும் பழக்கத்தை நிச்சயம் கைவிடலாம். பொய் சொல்லும் வாய்க்குப் போஜனம் கிடைக்காது என்பதால், இனி நிஜமாகவே ‘நீ கால் பண்ணதைக் கவனிக்கலை மச்சி. இப்போதான் எடுத்துப் பார்த்தேன்’னு உண்மையைப் பேசலாம். இப்படியாக, மொபைல் போனே கதினு கிடக்காமல், வாழ்க்கையைக் கொஞ்சமாவது வாழ்ந்து பாருங்கனு சொல்லுது இந்த அப்ளிகேஷன்!

டவுன்லோடு லின்க் : https://play.google.com/store/apps/details?id=mrigapps.andriod.breakfree.deux

vikatan

  • தொடங்கியவர்
மிஸ் யூனிவர்ஸ் தாய்லாந்து-2016 அழகு ராணி
 

மிஸ் யூனிவர்ஸ் தாய்லாந்து அழகுராணியாக சலீட்டா சுவான்சானே தெரிவு செய்யப்பட்டுள்ளார்.  

 

1444c3813680911_971539286292211_29023739

 

மிஸ் யூனிவர்ஸ் தாய்லாந்து – 2016 அழகுராணி போட்டிகளின் இறுதிச் சுற்று பேங்கொக் நகரில் நேற்று முன்தினம் நடைபெற்றது.

 

1442ee7B5074CD241C440F798F8563D804D5B74_

 

இதில் 21 வயதான சலீட்டா சுவான்சானே முதலிடம் பெற்று மிஸ் யூனிவர்ஸ் தாய்லாந்து அழகுராணியாக தெரிவு செய்யப்பட்டார். இவர் நுண்உயிரியல் துறை மாணவி என்பதும் குறிப்பிடத்தக்கது.

 

144423a13709757_969306999848773_54744630

 

எதிர்வரும் மிஸ் யூனிவர்ஸ் (பிரபஞ்ச அழகுராணி) போட்டியில் தாய்லாந்து சார்பாக சலீட்டா சுவான்சானே பங்குபற்றவுள்ளார்.

 

144Untitled-5.jpg

 

இதுவரை தாய்லாந்தைச் சேர்ந்த இரு யுவதிகள் மிஸ் யூனிவர்ஸ் அழகுராணியாக முடிசூட்டப்பட்டுள்ளனர்.

 

1441fbd58F5B29F17DE4618BD088E47C7CECEB0_

 

1965 ஆம் ஆண்டு தாய்லாந்தின் அப்சரா ஹோஹ்சகுலாவும் 1988 ஆம் ஆண்டு போர்ன்திப் நகிருன்க னோக்கும் மிஸ் யூனிவர்ஸ் அழகுராணியாக தெரிவானார்கள்.

 

1449a234731828BDE2E4E71B9F22E618C05C974_

 

144f15b13731505_1388224317860495_7492277

metronews.lk

Edited by நவீனன்

  • தொடங்கியவர்
வரலாற்றில் இன்று: ஜூலை 26
 
 

article_1469448292-3-puran-appu.jpg657: அலி இப்னு அபு தாலிப் தலைமையிலான படைகள், முதலாம் முஆவியாவின் படைகளுடன் சிஃபின் நகரில் போரில் ஈடுபட்டனர்.

811: பைசண்டை பேரரசன் முதலாம் நிக்கபோரஸ் பல்கேரியாவின் பிளிஸ்கா என்ற இடத்தில் இடம்பெற்ற போரில் கொல்லப்பட்டான்.

1509: விஜயநகரப் பேரரசின் மன்னனாக கிருஷ்ணதேவராயன் முடிசூடினார்.

1788: நியூயோர்க், ஐக்கிய அமெரிக்காவின் 11ஆவது மாநிலமாக இணைந்தது.

1803: உலகின் முதலாவது பயணிகள் ரயில் சேவை, தெற்கு லண்டனில் ஆரம்பமாகியது.

1847: லைபீரியா சுதந்திரப் பிரகடனம் செய்தது.

1848: மாத்தளை கிளர்ச்சி - இலங்கையில் பிரித்தானியருக்கு எதிராக வீரபுரன் அப்பு தலைமையில் கிளர்ச்சி வெடித்தது. வீரபுரன் அப்பு கைது செய்யப்பட்டு ஆகஸ்ட் 8இல் தூக்கிலிடப்பட்டான்.

1891: தாகித்தி பிரான்சுடன் இணைந்தது.

1936: அச்சு நாடுகள் எசுப்பானிய உள்நாட்டுப் போரில் தலையிட முடிவு செய்தன.

1944: பிரிட்டன் மீது ஜேர்மனி முதல் தடவையாக வீ-2 ரொக்கட் தாக்குதல் நடத்தியது.

1945: பிரித்தானிய நாடாளுமன்றத் தேர்தலில் பிரதமர் வின்ஸ்டன் சர்ச்சிலின் கன்சர்வேட்டிவ் கட்சி தோல்வியுற்றது.

1952: எகிப்திய மன்னர் பாருக், தனது மகன் புவாட்டிடம் ஆட்சியை ஒப்படைத்தார்.

1953: பிடெல் காஸ்ட்ரோ,  சுயஸ் கால்வாயை எகிப்து தேசியமயமாக்கியது.

1956: அஸ்வான் அணைக்கட்டுக்கு உலக வங்கி நிதி உதவி வழங்க மறுத்ததை அடுத்து சுயஸ் கால்வாயை எகிப்திய அதிபர் கமால் அப்துல் நாசர் அரசுடமை ஆக்கினார்.

1957: குவாத்தமாலாவின் சர்வாதிகாரி கார்லொஸ் அர்மாஸ் கொல்லப்பட்டார்.

1957: இலங்கைப் பிரதமர் எஸ்.டபிள்யூ.ஆர்.டி.பண்டாரநாயக்காவுக்கும் இலங்கைத் தமிழரசுக் கட்சித் தலைவர் எஸ்.ஜே.வி.செல்வநாயகம் அவர்களுக்கும் இடையே ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டது.

1958: எக்ஸ்புளோரர் 4 ஏவப்பட்டது.

1963: மசிடோனியாவில் இடம்பெற்ற நிலநடுக்கத்தில் 1,100 பேர் வரை கொல்லப்பட்டனர்.

1965: பிரிட்டனிடமிருந்து மாலைதீவு சுதந்திரம் பெற்றது.

1974: ஏழாண்டு இராணுவ ஆட்சியின் பின்னர் கிரேக்கத்தில் மக்களாட்சி ஏற்பட்டது.

1977: கனடாவின் கியூபெக் மாநில சட்டசபை, பிரெஞ்சு மொழியை உத்தியோகபூர்வ மொழியாக்கியது.

1994: எஸ்தோனியாவில் இருந்து ரஷ்யப் படைகளை வெளியேற்ற ஜனாதிபதி பொரிஸ் யெல்ட்சின் முடிவெடுத்தார்.

2005: டிஸ்கவரி விண்ணோடம் ஏவப்பட்டது.

tamilmirror.lk

Edited by நவீனன்

  • தொடங்கியவர்

ஜூலை 26: புகழ்பெற்ற எழுத்தாளர் பெர்னாட் ஷா பிறந்த தினம் இன்று.

ஆஸ்கர்,நோபல் நாயகன் ஷா !

13775523_1186387474753374_65227834006769

 

நக்கல்,நையாண்டி,சமூகத்தைப்பற்றிய பார்வை என்று பின்னி எடுத்த அவரின் வாழ்க்கை வெகு சுவாரசியமானது. வறுமை தான் ஆரம்ப கால வாழ்க்கையில் அவருக்கு இருந்த பரிசு. நிறைய கட்டுரைகள் எழுத ஆரம்பித்தார். மேடை ஏறி பேசவும் முயற்சிகள் செய்தார்;திக்கிப்பேசி மேடையை விட்டு இறங்கிய காலங்கள் உண்டு. விடாமல் கண்ணாடி முன் பார்த்து,தெருக்களில் தனியாக பேசிப்பேசி பயிற்சி செய்தார். மேடையில் அதற்கு பின் அவர்தான் ராஜா. இசை விமர்சனங்களில் குதறி எடுத்து விடுவார். ஒரு இசைக்கலைஞரை “நீயெல்லாம் ஏன் இசைக்கிறாய் ? கோலிகுண்டு விளையாடப்போ ” என்கிற அளவுக்கு எல்லாம் காய்ச்சி எடுத்து இருக்கிறார்.

எழுதி குவித்தார். கம்யூனிச சித்தாந்தங்களை உள்வாங்கி மக்களின் துன்பங்களை எழுத்தில் நாடகமாக வடித்தார். அழுது வடிகிறது என்று தூக்கி எறிந்தார்கள் . ஃபால்பினிசம் மனிதரை கவர்ந்தது. பெரிய எழுச்சி என்பதை விட படிப்படியாக மாற்றங்களை கொண்டு வர முடியும் என்று நம்பினார். பொங்கி வழியும் நகைச்சுவைக்கு நடுவில் கருத்துக்களை அழகாக கோர்த்து நாடகங்கள் எழுதினார்.

அவர் உண்மையில் அயர்லாந்து பகுதியை சேர்ந்தவர். ஆங்கிலத்தில் நாங்கள் தான் அபாரமான உச்சரிப்பு கொண்டவர்கள் என்று கருதிய இங்கிலாந்து வாசிகளை நையாண்டி செய்வது போல நாடகம் எழுதினார். இங்கிலாந்தின் உலகப்போர் வாசத்தை விமர்சித்து எழுதினார். மக்கள் தேசத்துரோகி என்று குறித்தார்கள். இவர் நொந்து போனார். ஜோன் ஆஃப் ஆர்க் எனும் வீரப்பெண்மணியை இங்கிலாந்து தேசத்தவர் திட்டமிட்டு கொன்றதாக வரலாறு சொன்ன பொழுது அவரவரின் பார்வையும் சரியே என்கிற தொனியில் நாடகம் எழுதினார். அது அவருக்கு நோபல் பரிசு மற்றும் ஆஸ்கர் விருதை வாங்கித்தந்தது. இன்றைக்கும் அது ஒரு சாதனை

நோபல் பரிசு அறிவிக்கப்பட்டதும் அவருக்கு கால் செய்தார்கள்,”உங்களுக்கு நோபல் பரிசு ஷா ” என்றார்கள். “எல்லா விருதையும் நானே எனக்கு கொடுத்துக்கொண்டு விட்டேனே” என இவர் சொல்ல, “இது நீங்கள் எழுதிய ஜோன் ஆப் ஆர்க் நாடகத்துக்காக” என்றது எதிர்முனை ;”அது போன வருடம் எழுதியது,உயிருக்கு தண்ணீரில் மூழ்கி போராடிக்கொண்டு இருந்தவனுக்கு கரை சேர்ந்ததும் லைப் ஜாக்கெட் தருவதைப்போல இருக்கிறது” என்ற ஷா அந்த விருதை வாங்கிக்கொள்ள போகவே இல்லை. வந்த பணத்தை இலக்கிய பணிகளுக்கு கொடுத்து விட்டார்

“ஷேக்ஸ்பியரை விட எனக்கு வார்த்தைகள் ஆங்கிலத்தில் அதிகம் தெரியும் “என்றார் அவர். அது உண்மையே;அதே போல அவரை விட என் எழுத்து மேலானது என்றும் சொல்வார். பல ஷேக்ஸ்பியர் காதலர்கள் அவரை அசிங்கப்படுத்த ஒரு விழாவுக்கு அழைத்தார்கள். ஷா பல வரிகளை சீரியஸ் ஆன முகத்தோடு சொல்ல யாரும் கைதட்ட வில்லை. முடிந்ததும் ஷா,”இதுவரை நான் பேசியவை ஷேக்ஸ்பியரின் வசனங்கள்” என்று விட்டு கம்பீரமாக இறங்கினார். “என்னுடைய புத்தகங்களை பாடமாக வைத்து பிள்ளைகளை சாகடிக்காதீர்கள்,அப்புறம் ஷேக்ஸ்பியர் போல என்னையும் அவர்கள் வெறுக்க ஆரம்பித்து விடுவார்கள்” என்ற நல்லவர் அவர்

* ஷாவின் சில பிரபலமான வாசகங்கள் உங்களுக்காக* :

* வாழ்க்கை உங்களை கண்டடைவது இல்லை; உங்களை படைத்துக்கொள்வது

* முயற்சி செய்து தவறுகளால் நிறைந்த வாழ்க்கை மதிப்புக்குரியது மட்டுமல்ல,எதுவுமே செய்யாத வாழ்க்கையை விட பயனுள்ளதும் கூட

* பலர் பிறப்பதற்கும்,புதைப்பதற்கும் நடுவில் மரித்துப்போகிறார்கள்

* பன்றிகளோடு மல்லுயுத்தம் செய்யாதீர்கள். நீங்கள் அழுக்காவீர்கள்; பன்றிகள் அதை ரசிக்கவும் செய்கின்றன

* நீங்கள் இருக்கின்றவற்றை பார்த்து ,”ஏன் இப்படி ?”என்று புலம்புகிறீர்கள், நான் இல்லாத விஷயங்களை பற்றி கனவுகள் கண்டு,”ஏன் இப்படி இருக்க கூடாது ?”என்று கேள்வி எழுப்புகிறேன்

vikatan

  • தொடங்கியவர்

வைரல் படங்கள் #Bestofyesterday

தோழிகளுடன் பெல்ஜியத்தில் ஜாலி டூர்..#சமந்தா

அமிதாப் வீட்டில்  அவரின்  ரசிகர்கள்..

BOY_1.jpg

 

 இளையராஜா பேத்தி ஜியாவுடன் !

BOY_2.jpg

 

தல கிளிக்!

BOY_3.jpg

 

விஷ்ணு விஷால் டிவிட்டரில் ஐந்து லட்சம் ஃபாலோயர்களைத் தொட்டிருக்கிறார்..

BOY_4.jpg

 

தோழிகளுடன் பெல்ஜியத்தில் ஜாலி டூர்..#சமந்தா

BOY_5.jpg

 

காசாவில் அரசிடன் துப்பாக்கி பயிற்சி பெறும் பாலஸ்தீன பெண்

BOY_6.jpg

 

வெற்றிக்களிப்பில் கோலி...

BOY_7.jpg

 

கபாலி படத்தில் இடம்பெறாத சீன்..

BOY_8.jpg

 

லாரன்ஸ்  வித் அம்மா..!

BOY_9.jpg

 

ஒர்க் அவுட் முடிச்சாச்சு..! #சானியா

BOY_10.jpg

vikatan

  • தொடங்கியவர்
இது ஒரு பழைய உண்மைக் கதை!
 
 

article_1469420478-5163077_f260.jpgஇது ஒரு பழைய உண்மைக் கதை!

தனது நண்பனிடம் ஆவேசமாக வந்தவர், 'எனக்கு உனது துப்பாக்கியைத் தந்துவிடுƒ நான் அந்தத் துரோகியைச் சுட்டுவிடப் போகின்றேன்' என்றார். நண்பருக்கோ ஒன்றுமே புரியவில்லை. வந்த நண்பரோ பெரும் பணக்காரர். இவருக்கு என்ன நேர்ந்து விட்டது என்று எண்ணியவர் கோபத்திற்கான காரணத்தைக் கேட்டார்.

'அவனுக்கு என்ன துணிவு இருந்தால் எனது வீட்டிற்கே வந்து எனது மனைவியின் படுக்கை அறைக்கே வந்துவிட்டான். இருவரையும் ஒன்றாக நானே பார்த்து விட்டேன்' என்றார். கேட்டவர் உள்ளுர அவரது செய்கையை எண்ணிப் பரிதாபமும் நகைப்பும் கொண்டு அவரைச் சமாதானப்படுத்தி அனுப்பி வைத்தார். சம்பவம் நடந்து ஓரிரு தினங்களில் பின் கோபித்துப் பின் சமாதானமாக அனுப்பி வைக்கப்பட்டவர் தனது மனைவியுடன் குதூகலமாக நண்பரின் வீட்டிற்கு வந்தார்.

'நாங்கள் சமாதானமாகி விட்டோம். ஆனால் வீட்டிற்கு வந்த துரோகியை மட்டும் விடமாட்டேன்' என்றார்.

ஒழுக்கம் கெட்ட குடும்பத்தில் எல்லாமே நடக்கும்‚ அதுசரி‚ இதில் யார் யாருக்குத் துரோகம் செய்தார்கள்? அப்பாவிக் கணவன் நிலை என்ன?

tamilmirror.lk

Edited by நவீனன்

  • தொடங்கியவர்
உலகைக் கலக்கும் Pokemon Go
 

கபாலி திரைப்­படம், பிரான்ஸின் நீஸ் தாக்­குதல், துருக்­கியின் தோல்­வி­யுற்ற இரா­ணுவப் புரட்சி முத­லான விட­யங்­க­ளுக்கு மத்­தி­யிலும் பல நாடு­களின் ஊட­கங்­களில் அல­சப்­படும் விடயம் Pokémon Go (போகிமான் கோ). இது ஒரு செல்­லிடத் தொலை­பேசி விளை­யாட்டு (Mobile phone game).

 

பொக்கெட் மொன்ஸ்டர்ஸ் (Pocket Monsters) என்­பதுன் சுருக்­கமே போகிமான் ஆகி­யதாம். இவ் ­வி­ளை­யாட்டில், போகிமான் உலகில் சுற்றி மறைந்­தி­ருக்கும் சிறிய போகி­மான்­களை தேடிக் கண்­டு­பி­டித்து நம் வசப்­ப­டுத்த வேண்டும்.

 

160pokemon228.jpg

 

பின்னர் அவற்­றுக்கு பயிற்­சி­ய­ளித்து அவற்றி சக்­தி­களை அதி­க­ரித்து மற்ற போகி­மான்­க­ளுடன் சண்­டை­யிட்டு அதன்மூலம் மேலும் பல­மான போகி­மான்­களை பெற வேண்டும்.

 

போகி­மானை விளை­யாடும் மனி­தர்கள் trainers (பயிற்­று­நர்கள்) என அழைக்­கப்­ப­டு­கின்­றனர். 1996 ஆம் ஆண்டு போகிமான் ஒரு காகித அட்டை விளை­யாட்­டாக (card game) போகிமான் கம்­பி­யினால் அறி­மு­கப்­ப­டுத்­தப்­பட்­டது.

 

160_DSCF2271.0.0.jpg1998 ஆம் ஆண்டு ஸ்தாபிக்­கப்­பட்ட போகிமான் கம்­ப­னி­யா­னது டோக்­கியோ, வோஷிங்டன் டி.சி., லண்டன், சியோல் ஆகிய நக­ரங்­களில் தலை­மை­ய­கங்­களைக் கொண்­டுள்­ளது.


பின்னர் வீடியோ கேம் பதிப்பு வெளி­யி­டப்­பட்­டது. இப்­போது ஸ்மார்ட் போன் தொலை­பேசி மூலம் விளை­யா­டு­வ­தற்­கான பதிப்பு தான் Pokémon Go. அமெ­ரிக்­காவைத் தளமாக் கொண்ட Niantic நிறு­வ­னத்தால் போகிமான் கோ உரு­வாக்­கப்­பட்­டுள்­ளது.


ஏனைய மொபைல் போன் கேம்­க­ளுக்கும் போகிமான் கோவுக்கும் பெரும் வித்­தி­யா­ச­மொன்று உள்­ளது. அதா­வது நாம் இருக்கும் இடத்தின் சுற்­றா­ட­லுடன் தொடர்­பு­டை­ய­தாக இந்த விளை­யாட்டு வடி­வ­மைக்­கப்­பட்­டுள்­ளது.

 

செல்­போ­னி­லுள்ள கெமரா, கூகுள் மெப், ஜி.பி.எஸ். போன்­ற­வற்றின் உத­வி­யுடன் நாம் இருக்கும் சூழல் இனங்­கா­ணப்­பட்டு, நமக்கு அரு­கி­லுள்ள இடங்­களில் போகி­மான்கள் ஒளிந்­து­கொண்­டி­ருப்­ப­தாக காட்­டப்­படும்.

 

1602016-07-11T182235Z_1310714303_S1AETOZ

 

இது அகு­மென்டட் வீடியோ கேம் என அழைக்­கப்­ப­டு­கி­றது. ஸ்மா ர்ட் போனுக்குப் பதி­லாக, கைக்­க­டி­காரம் போன்று மணிக்­கட்டில் அணிந்­து­கொள்­ளக்­கூ­டிய போகிமான் கோ பிளஸ் எனும் சாத­ன­மொன்றின் மூலமும் போகிமான் கோ விளை­யா­டலாம்.  

 

கடந்த 6 ஆம் திகதி அமெ­ரிக்கா, அவுஸ்­தி­ரே­லியா, நியூஸிலாந்து ஆகிய நாடு­களில் போகிமான் கோவை அறி­மு­கப்­ப­டுத்­தி­யது த போகிமான் கம்­பனி.


ஜூலை 17 ஆம் திக­தி­ வரை ஏனைய பல ஐரோப்­பிய நாடுகள், கனடா உட்­பட  32 நாடு­களில் போகிமான் கோ அறி­மு­க­மா­கி­யி­ருந்­தது.

 

1602016-07-20T161046Z_1354198010_S1AETQR

ரஷ்­யா­வில்...


 

இலங்கை, இந்­தியா முத­லான ஆசிய நாடு­களில் போகிமான் கோ அமு­லுக்கு வர­வில்லை.

 

பொது­வாக செல்­போன்­களில் வீடியோ கேம் விளை­யா­டு­ப­வர்கள், கதி­ரை­யிலோ, கட்­டிலோ கிடந்து செல்­போனை குடைந்து கொண்­டி­ருப்­பார்கள். இத்­த­கைய தொழில்­நுட்­பங்கள் மூலம் மக்கள் வர வர சோம்­பே­றி­யாகிக் கொண்­டி­ருக்­கி­றார்கள் என்ற விமர்­சனம் உள்­ளது.

 

ஆனால், போகிமான் கோ விளை­யாட்டில் நிலைமை எதிர்­மா­றா­னது. போகி மான்  கோ விளை­யாட்டில் போகி­மான்­களை கண்­டு­பி­டிப்­ப­தற்­காக எழுந்து நட­மாட வேண்­டி­யி­ருக்கும்.

 

போகி­மான்­களை தேடி பல கிலோ­மீற்றர் நடப்­ப­வர்கள் உண்டு. இதனால், இவ்­ வி­ளை­யாட்டில் ஈடு­ப­டு­ப­வர்கள் தம்மை அறி­யா­ம­லேயே பெரும் உடற்­ப­யிற்சி செய்­ப­வர்­க­ளாகி விடு­கி­றார்கள்.

 

1602016-07-18T135116Z_1352183922_S1AETQH

ஸ்பா­னிய பொலி­ஸார்


 

மன அழுத்­தங்­களால் பாதிக்­கப்­பட்­ட­வர்­களின் முன்­னேற்­றத்­துக்கும் இவ்­ வி­ளை­யாட்டு உதவும் என மருத்­து­வர்கள் சிலர் தெரி­வித்­துள்­ளனர்.

 

கன­டாவின் டொரண்­டோ­வி­லுள்ள உள­வியல் மருத்­து­வரும் ரயோர்சன் பல்­க­லைக்­க­ழக விரி­வு­ரை­யா­ள­ரு­மான டாக்டர் ஒரேன் அமிட்டே இது தொடர்­பாக கூறு­கையில், தனது நோயா­ளிகள் பலர் போகிமான் கோ விளை­யாட்டில் ஈடு­பட ஆரம்­பித்­துள்­ளனர் எனத் தெரி­வித்­துள்ளார்.

 

அமெ­ரிக்­காவின் லொஸ் ஏஞ்சல்ஸ் மெட்ரோ ரயில்­வே­துறை போகிமான் கோ விளை­யாட்டை ஊக்­கு­விக்­கி­றது. தமது ரயில் நிலை­யங்கள், ரயில்­களில் எங்­கெல்லாம் போகி­மான்கள் காணப்­ப­டலாம் என்ற விப­ரங்­களை தனது டுவிட்டர் பக்­கத்தில் தெரி­விக்­கி­றது.

 

வணிக உல­கிலும் போகிமான் கோ கலக்­கு­கி­றது.

 

160777943-01-03.jpgபோகிமான் கோ அப்ஸ் வெளி­யி­டப்­பட்டு 2 வாரங்­களில் உல­க­ளா­விய ரீதியில் 3 கோடி தடவை தர­வி­றக்கம் செய்­யப்­பட்­டுள்­ளது.

 

இதன் மூலம் போகி மான் கோ நிறு­வ­னத்­துக்கு 3.5 கோடி டொலர் (500 கோடி ரூபா) வரு­மானம் கிடைத்­துள்­ளது. ஜப்­பானில் மெக்­டொனால்ட்ஸ் நிறு­வனம் போகிமான் கோ அனு­ச­ர­ணை­யா­ள­ராக இணைந்­துள்­ளது.

 

இது தொடர்­பான தகவல் நேற்­று­முன்­தினம் வெளி­யா­னதும் ஜப்­பானில் மெக்­டொனால்ட்ஸ் பங்­கு­களின் பெறு­மதி 10 சத­வீ­தத்தால் அதி­க­ரித்­தது.

 

போகிமான் கோ விளை­யாட்டின் மேல­திக அம்­சங்­களை வாங்­கு­வ­தற்­காக போகிகொய்ன்ஸ் (PokeCoins) அப்பிள் நிறு­வனம் வெளி­யிட்­டுள்­ளது.

 

இதன்­மூலம் 1,2 வரு­டங்­களில் அப்பிள் நிறு­வ­னத்­துக்கு 3 கோடி டொலர் (சுமார் 447 கோடி ரூபா) வரு­மானம் கிடைக்கும் மதிப்­பி­டப்­பட்­டுள்­ளது.


அதிக போகி­மான்­களை கண்­டு­பி­டிக்­கக்­கூ­டிய இடங்­க­ளுக்கு மக்­களை அழைத்துச் செல்­வ­தற்­காக விசேட வாடகைக் கார் சேவையை வழங்க அமெ­ரிக்க சார­திகள் சிலர் முன்­வந்­துள்­ளனர். 

 

இவ்­வாறு போகிமான் கோ விளை­யட்­டா­னது போக்­கு­வ­ரத்­துத்
­து­றை­யிலும் மாற்­றங்­களை ஏற்­ப­டுத்தும் எனக் கரு­தப்­ப­டு­கி­றது. பல்­தே­சிய நிறு­வ­னங்கள், பெரு நிறு­வ­னங்­க­ளுக்கு மாத்­தி­ர­மல்ல சிறு வியா­பா­ரி­க­ளுக்கும் போகிமான் கோ நன்­மை­ய­ளிக்கும் எனத் தெரி­விக்­கப்­ப­டு­கி­றது.

 

போகி­மான்­களைத் தேடி வீதியில் இறங்­கு­ப­வர்­களின் எண்­ணிக்கை அதி­க­ரிப்­பதால் நடை­பாதை வியா­பா­ரிகள், பெட்­டிக்­
க­டைகள், உணவு விடு­தி­க­ளுக்கு வரு­மானம் அதி­க­ரிக்கும் என கரு­தப்­ப­டு­கி­றது.

 

பாது­காப்புத் துறை­யி­ன­ருக்கு நெருக்­கடி

மறு­புறம், போகிமான் கோ விளை­யாட்­டா­னது பல நாடு­களின் பாது­காப்புத் துறை­யி­ன­ருக்கு நெருக்­க­டியை அதி­க­ரித்­துள்­ளது.


போகி­மான்­களை தேடு­ப­வர்கள் வீதி­களில் சமிக்ஞை விளக்­கு
­க­ளைக்­கூட பொருட்­ப­டுத்­தாமல் நடந்து செல்­கி­றார்­களாம். சில மோச­மான வாகன சார­தி­களும் வாகனம் செலுத்­திக்­கொண்டே போகிமான் கோ வி­ளை­யாட்டில் ஈடு­ப­டு­கின்­றனர்.

 

160775722-01-02.jpg

இந்­தோ­னே­ஷியா­வில்...


 

கன­டாவின் கியூபெக் மாகா­ணத்தில் போகிமான் கோ விளை­யா­டிய சாரதி ஒருவர் தனது வாக­னத்தை பொலிஸ் காரொன்­றி­லேயே மோதினார்.


அத்­துடன், போகி­மான்­களை பின்­தொ­டரும் பலர் பாட­சா­லைகள் பொதுக்­கட்­ட­டங்கள், தனியார் வளா­கங்கள், இரா­ணுவ முகாம்
­க­ளுக்­குள்ளும் அத்­து­மீறி நுழைய முற்­ப­டு­கின்­றனர்.

 

அண்­மையில் அவுஸ்­தி­ரே­லி­யாவின் பாட­சாலை, நாஸி வதை முகாம் தொடர்பான அமெ­ரிக்க நூத­ன­சாலை ஆகி­யற்­றிலும் சிலர் போகி­மான்­களைத் தேடித் திரிந்து சங்­க­டங்­களை ஏற்­ப­டுத்­தினர். 

 

இதனால் “அத்­து­மீறி நுழை­யா­தீர்கள் “என போகிமான் கோ விளை­யா­டு­ப­வர்­களை எச்­ச­ரிக்கும் பதா­தைகள்  சில இரா­ணுவ முகாம் கள், கட்­டங்­க­ளுக்கு வெளியே காட்­சிப்­ப­டுத்­தப்­பட்­டுள்­ளன.

 

ஸ்பானிய பொலிஸார் பாது­காப்­பாக போகிமான் கோ விளை­யா­டு­வது குறித்து பொது­மக்­க­ளுக்கு அறி­வு­றுத்­தல்­களை வழங்­கி­யுள்­ளனர். இது தொடர்­பான புகைப்­ப­டங்­க­ளையும் ஸ்பானிய உள்­துறை அமைச்சு வெளி­யிட்­டுள்­ளது.

 

பொஸ்­னி­யாவில் 1990களில் நடை­பெற்ற யுத்­த­தத்­தின்­போது புதைக்­கப்­பட்ட மிதி­வெ­டி­களில் போகிமான் கோ விளை­யா­டு­ப­வர்கள் சிக்­கி­வி­டக்­கூடும் என உணர்ந்த அதி­கா­ரிகள் இது தொடர்பில் அறி­வு­றுத்­தல்­களை விடுத்­துள்­ளனர்.


ஜப்­பானில் விரைவில் போகிமான் கோ வெளி­யி­டப்­ப­ட­வுள்­ளதை முன்­னிட்டு, விசேட பாது­காப்பு அறி­வு­றுத்தல் பிர­சா­ரங்­களை ஜப்­பா­னிய அர­சாங்கம் ஆரம்­பித்­துள்­ளது.

 

இந்­தோ­னே­ஷி­யாவில் போகிமான் கோ விளை­யா­டிக்­கொண்டு இரா­ணுவ முகா­மொன்­றுக்­குள்­ நு­ழைந்த பிரான்ஸ் நாட்­டவர் ஒருவர் கைது செய்­யப்­பட்­டுள்­ள­தாக கடந்த செவ்­வாய்க்­கி­ழமை பொலிஸார் தெரி­வித்­தனர்.

 

இதே­வேளை, இந்­தோ­னிய ஜனா­தி­பதி மாளிகை அருகில் போகிமான் விளை­யாட வேண்டாம் என அதி­கா­ரிகள் எச்­ச­ரித்­துள்­ளனர். இந்­தோ­னே­ஷிய பொலிஸார், இரா­ணு­வத்­தினர் கடமை நேரத்தில் போகிமான் விளை­யா­டு­வது தடை ­செய்­யப்­பட்­டுள்­ள­தாக அதி­கா­ரிகள் தெரி­வித்­துள்­ளனர்.

 

இந்­தோ­னே­ஷி­யாவில் உத்­தி­யோ­கபூர்வமாக போகிமான் கோ அறி­மு­க­மா­வில்லை. எனினும் சிலர் வெளி­நாட்டு பதிப்­பு­களை சட்­ட­வி­ரோ­த­மாக தர­வி­றக்கம் செய்து விளை­யா­டு­கின்­றனர் எனத் தெரி­விக்­கப்­ப­டு­கி­றது.

 

சவூதியில்...


போகிமான் கோவுக்கு எதி­ரான குரல்­களும் ஒலிக்­கின்­றன. 2001 ஆம் ஆண்டு போகிமான் ஒரு காகித அட்டை விளை­யாட்­டாக இருந்த காலத்­தி­லேயே சவூதி அரே­பிய மதகுருக்கள் போகிமானு க்கு தடை விதித்திருந்தனர்.

 

160775709-01-02.jpg

 

சவூதி அரே­பி­யா­வில்...


 

15 வருடகாலமாக அமுலிலுள்ள இத்தடை போகிமான் கோ அறிமுகத்தின் பின்னர் மீளவும் பிரகடனப்படுத்தப்பட்டுள்ளதாக செய்தி வெளியாகியிருந்தது..

 

ஆனால், சவூதியில் போக்மன் கேம் மீதான தடை மீள பிரகடனப்படுத்தப் பட்டுள்ளதாக வெளியான செய்திகளில் உண்மையில்லை என சவூதி அரேபிய கலாசார மற்றும் தகவல் துறை அமைச்சின் உதவி செயலாளர் தெரிவித்துள்ளார்.

 

அமெரிக்காவின் புளோரிடா மாநிலத்தில் போகி மான்களை பின் தொடர்ந்து சென்ற இருவர் வீட்டு வளாகம் ஒன்றுக்குள் நுழைந்தபோது அவர்களை திருடர்கள் என எண்ணி அவ் வீட்டின் உரிமையாளர் துப்பாக்கிப் பிரயோகம் செய்தார். இதனால் அவ்விரு வரும் காயமடைந்தனர்.

 

குவாத்­த­மா­லாவில் போகி­மான்­களை பின் தொடர்ந்து சென்று வீடொன்­றுக்குள் நுழைந்த 18 வய­தான ஜேர்ஸன் லோபஸ் லியோன் எனும் இளைஞர் சுட்­டுக்­கொல்­லப்­பட்­டுள்­ள­தாக செய்­தி கள் வெளி­யா­கி­யுள்­ளது.

 

இச்­ செய்­திகள் உண்­மை­யானால் போகிமான் கோ கார­ண­மாக இடம்­பெற்ற உலகின் முதல் மர­ண­மாக இது இருக்­கலாம். விரை வில் இலங்­கை­யிலும் போகிமான் கோ அறி­மு­க­மா­கலாம்.

 

பொது இடங்­களில் இவ் ­வி­ளை­யாட்டில் ஈடு­ப­டு­ப­வர்­களும் அவர்­களை எதிர்­கொள்­ப­வர்­களும் எச்சரிக்கையுடன் செயற்படுவது நல்லது.

 

– நவீன்

 

metronews.lk

Edited by நவீனன்

  • தொடங்கியவர்
மின்மினிப்பூச்சி தரும் ஒளியின் இரகசியம்
மின்மினிப்பூச்சி தரும் ஒளியின் இரகசியம்

மின்மினிப்பூச்சி தரும் ஒளியின் இரகசியம்

 

இரவு நேரங்களில் மின்னிக்கொண்டே செல்லும் சில பூச்சிகளை நாம் பார்த்திருக்கிறோம். இதைத்தான் மின்மினிப்பூச்சி என்று அழைப்பார்கள்.

firefly-2

விலங்கினங்களைப் பொறுத்தவரை, ஒருசெல் உயிரியில் இருந்து ஆழ்கடல் மீன்கள் வரை பல்வேறு உயிரினங்கள் ஒளியை உமிழக்கூடிய ஆற்றல் பெற்றவையாக விளங்குன்றன.

அவற்றுள் மின்மினிப் பூச்சிகள் கூட்டமாக ஒளியை உமிழ்ந்து கொண்டு செல்வதைப் பார்க்க மிக அழகாக இருக்கும்.

iridessas-firefly-fun-1425797374

மின்மினி ஒளியை உமிழ்வது உயிர் வேதியியல் செயலாகும். இந்தப் பூச்சிகள், சுவாசத் துளைகளின் வழியாகச் செல்லும் சுவாசக் குழல்கள் மூலம் சுவாசிக்கின்றன.

இவற்றின் அடிவயிற்றுப் பகுதியில் தனிச்சிறப்பு மிக்க செல்கள் காணப்படுகின்றன.

download

இந்தச் செல்களில் லூஸிபெரின் என்ற வேதிப்பொருள் காணப்படுகிறது.

இந்தச் செல்களுடன் சுவாசக்குழல்கள் தொடர்பு கொண்டிருப்பதால், இதனுடன் ஆக்சிஜன் வினைபுரிந்து ஒளியைத் தருகிறது.

இந்த வேதிவினைக்கு ஆற்றலும் தேவைப்படுகிறது. இந்தப் பூச்சிகள் பச்சை, சிகப்பு, மஞ்சள், ஆரஞ்சு என பல்வேறு வகையான ஒளியை உமிழ்கின்றன.

onlineuthayan.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.