Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இளமை புதுமை பல்சுவை

Featured Replies

  • தொடங்கியவர்

18 காரட் தங்கத்திலான கழிப்பறை நியுயார்க்கில் திறப்பு !

 

மௌரிஸியோ கேட்டலோன உருவாக்கிய "அமெரிக்கா" என்று பெயரிடப்பட்ட தங்கக் கழிப்பிடம்

 கலையா ? மௌரிஸியோ கேட்டலோனின் "அமெரிக்கா" - தங்கக் கழிப்பிடம் !

நியு யார்க் நகரின் குகென்ஹெய்ம் அருங்காட்சியகத்தில் திறக்கப்பட்டுள்ள தங்கக் கழிப்பறை பொதுமக்கள் பாவனைக்குத் திறந்துவிடப்பட்டிருக்கிறது.

' அமெரிக்கா' என்று பெயரிடப்பட்டிருக்கும் இந்த முழுமையாக இயங்கும் 18 காரட் தங்கத்திலானா கழிப்பறையை இத்தாலியக் கலைஞரும் சிற்பியுமான மௌரிஸியோ கேட்டெலான் உருவாக்கியுள்ளார்.

குகென்ஹெய்ம் அருங்காட்சியகத்தில் பொதுமக்கள் குளியலறைகள் ஒன்றினில் வைக்கப்பட்டிருக்கும் இந்த தங்கக் கழிப்பறை முழுமையாக பயன்படுத்தப்படக்கூடியதே என்று நியு யார்க்கர் சஞ்சிகை கூறுகிறது.

இந்தப் படைப்பை "துணிச்சலான,மதிக்காத" படைப்பு என்று வர்ணிக்கிறது இந்த அருங்காட்சியகம்.

 

மௌரிஸியோ கேட்டலோன்

 இந்தப் படைப்பு பொருளாதார சமத்துவமின்மையால் உந்தப்பட்டது , என்கிறார் கேட்டலான்

சாதாரண பீங்கானால் செய்யப்பட்ட , ஒரு நபர் மட்டுமே பயன்படுததக்கூடிய, கழிப்பறை ஒன்றில், பீங்கான் கழிப்பிடம் இருந்த இடததில், இந்த தங்கக் கழிப்பிட இருக்கை வைக்கப்பட்டுள்து.

அருங்காட்சியகத்துக்குள் வர நுழைவுக் கட்டணம் செலுத்தும் எவரும் இந்தக் கழிப்பறையை அவர்கள் விருப்பப்படி பயன்படுத்திக்கொள்ள முடியும்.

இந்தப் படைப்பு " மானுட குலம் பகிர்ந்து கொள்ளும் தவிர்க்க முடியாத உடல் ரீதியான யதார்த்தங்களை நமக்கு ஞாபகப்படுத்துகிறது" என்று குகென்ஹெய்ம் அருங்காட்சியகம் கூறியது.

இந்தக் காட்சிப் படைப்பு, உலக மக்கள் தொகையில் "ஒரு சதவீதத்தினருக்கு மட்டுமே கிடைக்கக்கூடிய ஒரு அசாதாரணமான ஆடம்பரப் பொருளை பொதுமக்களுக்கும் கிடைக்கும்படி செய்யும் நோக்கிலானது" , என்று அருங்காட்சியகம் கூறுகிறது.

Twitter

 

இதை பார்வையாளர்கள் தனிப்பட்ட முறையிலும், அந்தரங்கமான வகையிலும் பயன்படுத்த முடிவது என்பது ஒரு கலைப் படைப்பை முன்னெப்போதும் கண்டிரத வகையில் மிகவும் நெருக்கமாக பார்க்கும் அனுபவத்தைப் பார்வையாளர்களுக்குத் தரும் , என்கிறது குகென்ஹெய்ம் அருங்காட்சியகம்.

இத்தாலியில் மிலன் நகரில் வசிக்கும் கலைஞரும், ஒரு ட்ரக் ஓட்டுநரின் மகனுமான , கேட்டலான், இந்தப் படைப்பு பொருளாதார சமத்துவமின்மையால் உந்தப்பட்டது என்று இந்த ஆண்டு முன்னதாகக் குறிப்பிட்டிருந்தார்.

இந்தக் காட்சிப் படைப்பு, 1917ல் , மார்சல் டுஷாம்ப் என்ற கலைஞர் அவரது பரிசோதனைப் படைப்பான "பவுண்டன்" என்ற பெயரிடப்பட்ட பீங்கானால் செய்யப்பட்ட சிறுநீர்க் கழிப்பிடத்தைக் காட்சிக்கு வைத்த போது ஏற்பட்ட பரபரப்புடன் ஒப்புமை காட்டி பேசப்படுகிறது.

இந்த தங்கக் கழிப்பிடத்தை உருவாக்கிய கலைஞர் கேட்டலானுக்கு 55 வயது. போப்பாண்டவர் இரண்டாம் ஜான் பால் விண்கல் ஒன்றால் தாக்கப்பட்டு விழுவது போன்ற ஒரு காட்சியைக் காட்டும் " லா நோனா ஒரா" ( ஒன்பதாவது மணி நேரம்) போன்ற சர்ச்சைக்குரிய சிற்பங்களை வடிவமைத்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

http://www.bbc.com/tamil

  • Replies 11.3k
  • Views 1.5m
  • Created
  • Last Reply
  • தொடங்கியவர்

14322707_1130593980322628_73365431613633

இத்தாலிய நாடுகாண் பயணியும் வர்த்தகருமான
மார்க்கோ போலோவின் பிறந்த தினம்.

இவரது பல்வேறு நாடுகளுக்கான விஜயத்தின் நாட்குறிப்புக்கள் உலகின் வரலாற்றுப் பதிவுகளாகக் கருதப்படுகின்றன.

  • தொடங்கியவர்

 

“லாகோஸில் நீர் சறுக்கு” - காணொளி
கடல் பயத்தை போக்கும் நீர் சறுக்கு பள்ளி நடத்தும் காட்பவர்

  • தொடங்கியவர்

14330173_1130590263656333_75818491447253

பாகிஸ்தானின் முன்னாள் சுழல்பந்துவீச்சு மாயாஜால மன்னன் அப்துல் காதிரின் பிறந்ததினம் இன்று.
Happy Birthday Abdul Qadir

  • தொடங்கியவர்

வாழ்க்கை வரலாறு: பொறுமையும் பொறுப்பும்

 

 
 
எடிசன் பயன்படுத்திய சோதனைக் கூடம்
எடிசன் பயன்படுத்திய சோதனைக் கூடம்

விஞ்ஞானி தாமஸ் ஆல்வா எடிசன் ஆயிரம் முறைகளுக்கு மேல் தோல்வி கண்டு, பெரும் முயற்சிக்குப் பின்னரே மின்சார பல்பைக் கண்டுபிடித்தார். ஆனால், வெற்றிக்குப் பின்னர் அந்த ‘பல்பு’ எடிசன் உதவியாளரால் உடைத்து நொறுக்கப்பட்டது. அப்போது எடிசன் எப்படி நொந்து போயிருப்பார்?

அந்த அதிர்ச்சிகரமான நிமிடங்களில் எடிசன் பொறுமையுடன் நடந்து கொண்ட சுவாரஸ்யமான சம்பவம் இது.

தனது நண்பர்களுக்கும், சக விஞ்ஞானிகளுக்கும் மின்சார பல்பை ஒளிர வைத்துக் காட்டுவதற்காக எடிசன், ஒரு சந்திப்பு நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்தார். அவரது ஆய்வகத்தின் மேல் தளத்தில் இந்தச் சந்திப்பு நடைபெற்றது.

எடிசன், தனது உதவியாளரை அழைத்து மின்சார பல்பை மேல் தளத்துக்குக் கொண்டு வரச்சொன்னார். பல்பை கொண்டு வரும்போது, அது கைத்தவறி விழுந்து உடைந்துவிட்டது. அங்கிருந்த எல்லாருமே அதிர்ச்சி அடைந்தார்கள். உதவியாளர் பதற்றம் அடைந்தார். ஆனால், எடிசன் சற்றும் திகைக்கவில்லை.

ஆயிரம் தோல்விகளைச் சந்தித்து வெற்றி கண்ட அவருக்கு, மின்சார பல்பை மீண்டும் உருவாக்குவது எளிதாக இருந்தது. சிறிது முயற்சி செய்து ஒரு பல்பை திரும்பவும் உருவாக்கினார். அதனை மீண்டும் அந்த உதவியாளரிடமே கொடுத்து மேலே எடுத்துவரச் சொன்னார்.

edison_2_3009609a.jpg - எடிசன் கண்டுபிடித்த விளக்கு

பல்பை கீழே போட்டு உடைத்தவனிடமே மீண்டும் அந்த வேலையைக் கொடுக்கிறீர்களே? என்று சிலர் எடிசனிடம் கேட்டேவிட்டனர்.

அதற்கு, “பல்பு உடைந்தாலும் என்னால் திரும்பவும் செய்துகொள்ள முடியும். ஆனால், அவரது மனதை காயப்படுத்திவிட்டால் அதை என்னால் சரிசெய்து கொடுத்துவிட முடியுமா? அதனால்தான் திரும்பவும் அவனிடமே பணியைக் கொடுத்தேன். அவர் தனது பொறுப்பையும், எனது நம்பிக்கையும் உணர்ந்து கூடுதல் கவனத்துடன் பணிபுரிவார்” என்றார்” எடிசன்.

எடிசனுக்கு வெற்றியைப் பெற்றுத்தந்த பொறுமை உணர்ச்சி எல்லையை அப்போதுதான் மற்றவர்கள் முழுமையாக உணர்ந்தார்கள். குழந்தைகளே! உங்களுக்கு எந்த அளவுக்கு பொறுமை உண்டு?

tamil.thehindu

  • தொடங்கியவர்

யார் சாமி நீங்க... எங்கே இருந்து வந்தீங்க? #HBDSwamy

Swamy.jpg

சர்ச்சையான கருத்துகள் மூலம் அடிக்கடி செய்தித்தாள்களில் இடம்பெறும் பெயர் சுப்ரமணியன் சுவாமி. சமீபத்தில் கூட 'காவிரி தண்ணீருக்காக கத்திக்கொண்டிருப்பதற்குப் பதிலாக கடல்நீரை குடிநீராக்கி விவசாயத்திற்கும், குடிநீருக்கும் பயன்படுத்திக்கொள்ளுங்கள்' என முத்தான கருத்தை உதிர்த்திருக்கிறார். அவர் இன்று 77-வது பிறந்தநாளைக் கொண்டாடுகிறார்.  எல்லோரையும் எந்நேரமும் பிஸியாவே வெச்சுக்கணும் என்பதைக் கொள்கையா வைத்திருக்கும் நம்மவருக்கு பிறந்த நாள் மெமரீஸ்..! 

* சென்னையில் உள்ள மயிலாப்பூரில் பிறந்திருந்தாலும், இவரது பூர்விகம் மதுரை அருகில் சோழவந்தான். அதனால்தான் என்னவோ... நானும் மதுரக்காரன்தான்டா எனத் தோளில் துண்டைப்போட்டு அடிக்கடி கிளம்பிவிடுகிறார். கணிதத்தில் இளங்கலைப் பட்டத்தை டெல்லியில் உள்ள ஹிந்து கல்லூரியிலும் (குறியீடு... குறியீடு), புள்ளியியல் முதுகலைப் பட்டத்தை கொல்கத்தாவிலும், பொருளாதாரத்திற்கான பி.எச்.டி. பட்டத்தை ஹார்வர்ட் பல்கலைக் கழகத்திலும் முடித்துள்ளார். ஹார்வர்ட் பல்கலைக் கழகத்தில் படிக்கும்போதுதான், கணிதத்தில் பி.எச்.டி. படித்துவந்த ரோக்ஸ்னா என்ற பார்சி இன இந்தியப் பெண் மீது காதல் வந்தது  இருவருக்கும் 1966-ல் திருமணம் முடிந்து இரு மகள்கள் உள்ளனர். 

* 1970-ம் ஆண்டு ஐ.ஐ.டி-யில் பொருளாதாரத்தைப் பற்றிப் பாடமெடுத்துக்கொண்டிருந்தார் சுவாமி. அதற்கு முந்தைய ஆண்டுதான் அயல்நாட்டு முதலீட்டைப் பெருக்கும் வகையில் இந்தியாவின் பணமதிப்பு குறைக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் ஐந்தாண்டுத் திட்டங்களைக் கைவிடும்படியும், வெளிநாட்டிலிருந்து முதலீடு பெறுவதை நிறுத்த வேண்டும் என்றும் சுவாமி இந்திய அரசுக்குப் பரிந்துரைத்தார். இந்தக் கருத்துக்கு பட்ஜெட் விவாதத்தின்போது பதிலளித்த அப்போதைய பிரதமர் இந்திரா காந்தி, 'சாத்தியமற்ற கருத்துகளைச் சொல்லும் சான்டா க்ளாஸ்' என சுவாமியை விமர்சித்தார். இதன் விளைவு 1972-ம் ஆண்டில் ஐ.ஐ.டி-யில் இருந்து சுவாமி நீக்கம் செய்யப்பட்டார். அதன்பின் நீதிமன்றம் வாயிலாக 1991-ம் ஆண்டு அந்த நீக்கம் செல்லாது என்ற உத்தரவு வந்தது. ஐ.ஐ.டி-க்குச் சென்ற அவர் அடுத்த நாளே பதவியை ராஜினாமா செய்து கெத்து காட்டியது தனிக்கதை. #சுவாமிடா!

* இந்திரா காந்திக்கு எதிராகத் தைரியமாகக் கருத்துகளைக் கூறுபவர்கள், மக்கள் மனநிலையில் அப்போது மாவீரர்களாகப் பார்க்கப்பட்டார்கள். 1974-ம் ஆண்டு இந்திரா காந்திக்கு எதிராக செயல்பட்ட கட்சியான ஜனசக்தி சார்பாக மாநிலங்களவைக்கு சுவாமி அனுப்பப்பட்டார். 1975-ம் ஆண்டுதான் எமர்ஜென்சி அறிவிக்கப்பட்டது. வழக்குப் பதிவு செய்யப்பட்டு தேடப்பட்டவர்கள் பட்டியலில் சுவாமியும் ஒருவர். அமெரிக்காவுக்குத் தப்பிச்சென்ற சுவாமி, 1976-ம் ஆண்டு அங்கிருந்து இந்தியா வந்து பாராளுமன்றக் கூட்டத்தொடரில் கலந்துகொண்டு, பாதுகாப்பையும் மீறி திரும்ப அமெரிக்காவுக்குத் தப்பிச்சென்றது அப்போது பரபரப்பான டாபிக். அந்தக் கூட்டத்தொடர் தொடக்கத்தில் மாநிலங்கள் அவைத் தலைவராக இருந்த குடியரசுத் துணைத்தலைவர் பி.டி. ஜாட்டி, இறந்துபோன நாடாளுமன்ற உறுப்பினர்கள், அரசியல் தலைவர்கள் பற்றி இரங்கல் உரை ஆற்றிக்கொண்டிருந்தார். இடைமறித்த சுவாமி, 'இறந்தவர்கள் பட்டியலில் ஜனநாயகத்தையும் சேர்த்துக்கொள்ளுங்கள்’ எனப் பேசியது வீராவேசமாகக் கருதப்பட்டது. #தில்லு! 

* சர்ச்சைகளைக் கிளறி பலரின் பதவி காலியாவதற்குக் காரணமாக இருந்த சுவாமியே ஒருமுறை பதவி நீக்கம் செய்யப்பட்டாரென்றால் உங்களால் நம்ப முடிகிறதா? உண்மைதாங்க. ஹார்வர்ட் பல்கலைக் கழகத்தில் விரிவுரையாளராக மாணவர்களுக்கு அவ்வப்போது பாடம் எடுத்துக்கொண்டிருந்தார் சுவாமி. 'சமஸ்கிருதம் கற்றுக்கொள்வது மற்றும் வந்தே மாதரம் பாடுவதைக் கட்டாயமாக்க வேண்டும். இதை மறுப்பவர்களுக்கு வாக்களிக்கும் உரிமையை ரத்து செய்ய வேண்டும்' என்ற சர்ச்சையான கருத்துகளை டி.என்.ஏ. என்ற பத்திரிகையில் எழுதியதால் அப்பல்கலைக்கழகம் அவரை விரிவுரையாற்ற அதன்பின் அனுமதிக்கவில்லை. அதுவரை அவர் எடுத்து வந்த இரண்டு பாடங்களையும் நீக்கிவிட்டது. #வாத்தியாருக்கு தண்டனை!

* தனது இந்துத்வா கருத்துகளுக்காக அவ்வப்போது வாங்கிக்கட்டிக்கொள்வது சுவாமிக்கு சகஜம். ஒரு முறை இப்படித்தான் 'இந்தித் திணிப்பு பிடிக்காதவர்களுக்கு ஒரு மாற்றுவழி உள்ளது; அதுதான் பள்ளிக்கே செல்லாமல் இருப்பது' என ட்விட்டரில் ரிப்ளை செய்ய... அதற்கு ஒருவர் 'சரி! நாளை முதல் நாடெங்கும் அசைவம் மட்டுமே வழங்கப்பெறும். பிடிக்காதவர்களுக்கு மாற்றுவழி ஒன்று உள்ளது; அதுதான் பட்டினி கிடப்பது' எனப் பதிலடி கொடுத்து வாயை அடைத்தார். #ஜூப்பரேய்!

46801_thumb.jpg

 

* தொண்டர் ஒருவர் திருமணத்திற்கு தாலி எடுத்துக் கொடுப்பதற்குப் பதில் தாலியை மணமகள் கழுத்துவரை கொண்டு சென்றது மீம் கிரியேட்டர்களுக்கு பெரும் இரை போட்டதை யாரும் மறந்துவிட முடியாது.#நவீன சின்னத்தம்பி!

* 'டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால், ஐ.ஐ.டி. படிப்பிற்கான போட்டித் தேர்வு எழுதவில்லை, தவறான வழியில் நுழைந்துள்ளார், அவரது டிகிரியில் எனக்கு சந்தேகம் உள்ளது' எனப் பரபரப்பைக் கிளப்பினார். இறுதியில் ஆம் ஆத்மி கட்சியினர், கெஜ்ரிவாலின் சான்றிதழை நிருபர் சந்திப்பில் வெளியிட்டதும்தான் சுவாமி கப்சிப் ஆனார்.#இதெல்லாம் சகஜமப்பா!

* ஜெயலலிதா சொத்துக்குவிப்பு வழக்கு, 2ஜி ஸ்பெக்ட்ரம் வழக்கு, சேது சமுத்திரத் திட்டம் தடை வழக்கு என நாடு முழுவதும் சர்ச்சைகளைக் கிளறிய பல வழக்குகளைத் தொடர்ந்தது இவர்தான். எப்போதும் ஏதாவதொரு பரபரப்பைக் கிளப்பிவிட்டு பிஸியாக இருப்பதே இவர் வேலை. சமீபத்தில் ரிசர்வ் வங்கி ஆளுநராக இருந்த ரகுராம் ராஜன், மீண்டும் ஆளுநராகத் தொடர விருப்பம் இல்லை என அவர் வாயிலிருந்து வரும்வரை குறிவைத்துத் தொடர் கருத்துகளை வெளியிட்டு இம்சை செய்தது தேசிய மீடியாக்கள் வரை பிரபலம். #எவ்வளவோ பண்ணிட்டோம்!

 

கடைசியாக ஒன்று....

* 'எனது குற்றச்சாட்டுக்கு என்னிடம் ஆதாரம் உள்ளது. தக்க நேரத்தில் அதை வெளியிடுவேன்' என சுவாமி இதுவரை 1,308 தடவை கூறியுள்ளார் என்பதற்கும் ஆதாரம் உள்ளது. 

ஆங்!

vikatan

  • தொடங்கியவர்

அண்ணாவிடம் இரண்டு ரூபாய் கேட்ட எம்.பி.! #HBDAnna

CN%20Annadurai.jpg

 

‘‘வாசிக்கும் திறன்தான் ஒரு மனிதரை அறிவுடையவராக அடையாளம் காட்டும்’’ என்றவர் அண்ணா. எழுத்து, பேச்சு, அரசியல், நடிப்பு எனப் பன்முகம் கொண்ட அவர், 1909-ம் ஆண்டு செப்டம்பர் 15-ம் நாள் நடராஜன் - பங்காரு தம்பதியருக்கு மகனாகப் பிறந்தார். தனது பள்ளிப் படிப்பை சென்னை பச்சையப்பா உயர்நிலைப் பள்ளியில் தொடங்கினார்.

ஆங்கிலம் பேச மறுத்த அண்ணா!

அண்ணா, சென்னை பச்சையப்பன் கல்லூரியில் படித்துக்கொண்டிருந்தபோது, விடுமுறையில் அவர் பாட்டி வீட்டுக்குச் சென்றார். அப்போது அவருடைய பாட்டி, ஆங்கிலம் பேசுமாறு சொல்ல, ‘‘அதற்கு ஆங்கிலம் பேசினால் உனக்கென்ன புரியும்? நாம் இப்போது பேசிக்கொண்டுதானே இருக்கிறோம்’’ என்று மறுத்துவிட்டார். போலியாக, தேவையில்லாமல் ஆங்கிலம் பேசுவதில் அண்ணாவுக்கு உடன்பாடில்லை. ஆனால், இன்று பல பேர் தங்களுக்கு ஆங்கிலம் தெரியாவிட்டாலும், அது தெரிந்தமாதிரி காட்டிக்கொள்கிறார்கள். அண்ணா, சில பொதுக்கூட்டங்களுக்குக் காலதாமதமாகச் செல்வதுண்டு. இதுகுறித்து ஒருவர் கேட்டுள்ளார். அதற்கு அண்ணா, ‘‘முன்கூட்டியே வந்தால், அடுத்தவரைப் பேசவிடாமல் செய்துவிடுகிறார்கள். அதனால்தான் ஊருக்கு வெளியில் நின்று அனைவரது பேச்சையும் கேட்டுவிட்டு கடைசியில் வருகிறேன்’’ என்றாராம். இன்று அப்படியா நடக்கிறது? சில தலைவர்கள் வரும்வரை கூட்டம் ஆரம்பிக்கப்படாமலேயே இருக்கிறது. ஆரம்பித்தாலும் தலைவர் பேசி முடித்துவிட்டவுடன் கலைந்துவிடுகிறது கூட்டம்.

அதேபோல் தேர்தல் நேரத்தில் ஒரு கூட்டத்துக்குப் பேசச் சென்றிருக்கிறார் அண்ணா. ஆனால், அந்தக் கூட்டத்துக்குச் சென்றபோது காலதாமதமாகிவிட்டது. கட்சித் தொண்டர்கள் நித்திரையில் ஆழ்ந்திருந்தனர். அப்போது மைக் பிடித்த அண்ணா, மாதமோ சித்திரை... மணியோ பத்தரை... உங்களைத் தழுவுவதோ நித்திரை... மறக்காது எமக்கு இடுவீர் முத்திரை!’’ என்று பேச்சைத் தொடங்கித் தொண்டர்களை உற்சாகப்படுத்தினார்.

இரண்டு ரூபாய் கேட்ட எம்.பி.!

CN%20Annadurai%20003.png

 

அறிஞர் அண்ணா எம்.பி-யாக இருந்தபோது, தன் சக எம்.பி-க்களுடன் நாடாளுமன்ற அவை வளாகத்தில் பேசிக்கொண்டிருந்தாராம். அப்போது ஒரு எம்.பி. அவரிடம், ‘‘நீங்கள் எனக்கு இரண்டு ரூபாய் தரவேண்டும்’’ என்று கேட்க, அதற்கு அண்ணா, ‘‘நான் உங்களிடம் எப்போது கடன் வாங்கினேன். எனக்கு ஞாபகத்தில் இல்லையே?’’ எனச் சொல்ல... அதற்கு அந்த எம்.பி., ‘‘நான் ஒருமுறை சென்னை வந்திருந்தபோது உங்களுடைய பேச்சைக் கேட்க விரும்பி இரண்டு ரூபாய் கொடுத்து ஒரு டிக்கெட் வாங்கினேன். ஆனால், நீங்கள் அந்தக் கூட்டத்துக்கு வரவேயில்லை. அந்த இரண்டு ரூபாயைத்தான் இப்போது கேட்கிறேன்’’ என்றார் புன்னகையுடன்


உடனே அண்ணா, ‘‘அதுவா விஷயம்? நான் மீண்டும் ஒருமுறை சென்னையில் பேச இருக்கிறேன். அப்போது நீங்கள் வந்தீர்கள் என்றால், உங்களுக்காக நானே ஒரு டிக்கெட் எடுத்துக் கொடுத்துவிடுகிறேன்’’ என்று சொல்லிவிட்டுச் சிரிக்க... அங்கிருந்த அனைவருமே சிரித்துவிட்டனர்.

‘‘அந்தக் குறையைப் போக்கிவிடுவீர்கள்!’’

ஒருமுறை சட்டமன்றத்தில், ஆளும் காங்கிரஸ் சார்பில் வைக்கப்பட்ட குற்றச்சாட்டுக்கு அண்ணா மிக சாதுர்யமாகப் பதிலளித்ததைக் கண்டு ஆளும் கட்சியான காங்கிரஸ் கட்சியே வியந்துபோனது. அவர்கள், அண்ணாவை நோக்கி... ‘‘அண்ணாதுரையால் நல்ல எதிர்க் கட்சியாக இயங்கத் தெரியவில்லை’’ என்றனர். அதற்கு அண்ணா, ‘‘நீங்கள் எதிர்க் கட்சி சரியில்லை என்று அடிக்கடிச் சொல்லிக்கொண்டிருப்பதைப் பார்த்தால்... விரைவில் நீங்களே, அந்தக் குறையைப் போக்கிவிடுவீர்கள் என்று எண்ணுகிறேன். நாங்கள் ஒரு காலத்தில் நீங்கள் இப்போது உள்ள இடத்தில் அமர வேண்டியவர்கள் என்பதால் பொறுப்புணர்ந்து அடக்கத்துடன் கூறுகிறேன்’’ என்றாராம். ஆனால், இன்று சட்டமன்றத்தில் எதிர்க் கட்சிக்குப் பேச வாய்ப்பு அளிக்கப்படுவது இல்லை என்பது வேதனையாக இருக்கிறது.

CN%20Annadurai%20002.png

 

‘‘நாட்கள் எண்ணப்படுகின்றன!’’

சட்டமன்றத்தில் எதிர்க் கட்சியைச் சேர்ந்த உறுப்பினர் ஒருவர், அண்ணாவைப் பார்த்து... ‘‘உங்களுடைய (ஆட்சியின்) நாட்கள் எண்ணப்படுகின்றன’’ என்று சொன்னதும், அதற்கு அண்ணா, ‘‘என்னுடைய ஒவ்வோர் அடியும் அளந்துவைக்கப்படுகிறது’’ என்று நயம்பட பதில் சொன்னார். இதையே இன்றைய உறுப்பினர்கள் யாராவது சொல்லி இருந்தால் அவர் காணாமலே போயிருப்பார். அந்த அளவுக்கு மிகவும் சாதுர்யமாகப் பதில் சொன்னவர் அண்ணா.

எம்.ஜி.ஆர் கொடுத்த புலிக்குட்டி!

சட்டமன்றத்தில் ஒருமுறை எதிர்க் கட்சித் தலைவராய் இருந்த கருத்திருமன், ‘‘அண்ணாவிடம், கொட்டைப் பாக்குக்கு விலை கேட்டால், பட்டுக்கோட்டைக்கு வழி சொல்கிறார்’’ என்றாராம் நக்கலாய். அதற்கு அண்ணா, ‘‘கொட்டைப் பாக்குக்கு பட்டுக்கோட்டையில் விலை குறைவு என்பதை எதிர்க் கட்சித் தலைவர் புரிந்துகொள்ள வேண்டும்’’ என்று விளக்கம் கொடுக்க அவையில் சிரிப்பலை எழுந்தது. அதேபோல் வேறொரு சட்டமன்ற நிகழ்வில், ‘‘நான் கொடுத்த ஆண் புலிக்குட்டியை மிருகக் காட்சி சாலையில் சரியாகக் கவனிப்பதில்லை. ஆனால், எம்.ஜி.ஆர் கொடுத்த பெண் புலிக்குட்டி நன்றாக வளர்க்கப்படுகிறது. ஏன் இந்த ஓர வஞ்சனை?’’ என்று கேட்டிருக்கிறார் உறுப்பினர் விநாயகம். அதற்கு அண்ணா, ‘‘சம்பந்திகள் இருவரும் உட்கார்ந்து பேசித் தீர்த்துக்கொள்ளுங்கள்’’ என்று பதில் சொல்ல... புகார் கூறியவர் உட்பட அனைவரும் மகிழ்ச்சியில் ஆர்ப்பரித்தனர்.

அண்ணாவின் காரை சோதனையிட்ட அதிகாரி!

தமிழக முதலமைச்சராக அண்ணா பொறுப்பேற்ற காலகட்டத்தில், வெளிமாநிலங்களுக்கு அரிசி செல்லக் கூடாது என்ற கட்டுப்பாடு CN%20Annadurai%20001.pngஇருந்தது. அந்தச் சமயத்தில், ஒருநாள் அண்ணா விருத்தாசலம் கூட்டத்தை முடித்துவிட்டுத் திரும்பிகொண்டிருந்தபோது, வழியில் சோதனைச்சாவடியில் அவரது கார் நிறுத்தப்பட்டு சோதனை செய்யப்பட்டது. காரின் டிக்கியில் மாலைகள், கைத்தறி ஆடைகள், வாழ்த்து மடல்கள் இருந்தன. அவற்றைப் பார்த்த பிறகுதான் சோதனை செய்த அலுவலருக்கு வண்டியில் வந்திருப்பது யார் என்று தெரிந்தது. உடனே அவர் அண்ணாவின் அருகில் சென்று, ‘‘தெரியாமல் நடந்துவிட்டது. என்னை மன்னித்துவிடுங்கள்’’ என்றார். ஆனால், அண்ணா அவர் உதவியாளரிடம், ‘‘இந்த அலுவலரின் பெயரைக் குறித்துக்கொள்ளுங்கள்’’ என்றாராம். அந்த அலுவலர் தனக்கு ஏதோ நடந்துவிடப் போகிறது எனப் பயந்து அழாத குறையாகக் கெஞ்சியுள்ளார். அதற்கு அண்ணா, ‘‘நாங்கள் போடும் சட்டங்களைச் சரியான முறையில் நிறைவேற்றும் பொறுப்பு உங்களைப்போன்ற அதிகாரியின் கையில்தான் இருக்கிறது. இன்று நேரில் உங்கள் செயலைப் பார்த்தேன். உங்களைப்போன்றவர்கள்தான் உயர் பதவிக்கு வரவேண்டும். அதற்காகத்தான் உங்கள் பெயரைக் கேட்டேன்’’ என்றாராம். அத்துடன் அவருக்கு பதவி உயர்வும் வழங்கப்பட்டது. இன்றைய காலத்தில் சாதாரண கவுன்சிலர் கார்களையே சோதனையிட விரும்பாத அதிகாரிகள், அமைச்சர்கள், முதல்வரின் காரையா சோதனையிடப் போகிறார்கள்? அந்த அளவுக்குத் துணிச்சல்மிக்க அதிகாரிகள்தான் இருக்கிறார்களா?

‘‘கண்டனத்தைத் தாங்கிக்கொள்ளும் திடமனம் இல்லை என்றால், கடமையை நிறைவேற்ற முடியாது’’ என்றார் அண்ணா. ஆம்... உண்மைதான். இன்று எவரும் கடமையை நிறைவேற்றுகிறார்களோ இல்லையோ, கண்டனத்தைப் பொறுத்துக்கொள்ள முடியாதவர்களாக இருக்கிறார்கள்.

எதையும் தாங்கும் இதயம் வேண்டும்.

vikatan

  • தொடங்கியவர்
வரலாற்றில் இன்று: செப்டெம்பர் 16
 
 

 

article_1474001036-M._H._M._Ashraff.jpg1947: ஜப்பானில் வீசிய சூறாவளியினால் 1930 பேர் பலி.

1959: முதலாவது போட்டோ பிரதி இயந்திரம் நியூயோர்க்கில் அறிமுகப்படுத்தப்பட்டது.

1963: மலேஷிய கூட்டமைப்பு ஸ்தாபிக்கப்பட்டது.

1970: ஜோர்தானில் இராணுவ ஆட்சி அறிமுகப்படுத்தப்பட்டது.

1975: பப்புவா நியூகினியா அவுஸ்திரேலியாவிலிருந்து சுதந்திரம் பெற்றது.

1978: ஈரானில் ஏற்பட்ட பூகம்பத்தினால் சுமார் 26,000 பேர் பலி.

1982: லெபனானில் பாலஸ்தீன அகதி முகாங்களான சப்ரா, ஷட்டீலா ஆகியவற்றில், லெபனானிய இராணுவத் துணைப்படையினரால் ஆயிரக்கணக்கானோர் படுகொலை செய்யப்பட்டனர்.

1987: ஓசோன் படலத்தைப் பாதுகாக்கும் பிரகடனம் மொண்ட்றியால் நகரில் கைச்சாத்திடப்பட்டது.

1991: பதவியிலிருந்து விலக்கப்பட்ட பனாமா சர்வாதிகார மனுவல் நொரீகாவுக்கு எதிராக அமெரிக்காவில் விசாரணை ஆரமப்மாகியது.

2000: இலங்கை முஸ்லிம் காங்கிரஸ் கட்சித் தலைவரும் அமைச்சருமான எம்.எச்.எம்.அஷ்ரப், உலங்கு வானூர்தி விபத்தில் உயிரிழந்தார்.

2002: விடுதலைப் புலிகளுக்கும் ரணில் விக்கிரமசிங்க அரசுக்கும் இடையிலான பேச்சுவார்த்தை, தாய்லாந்தில் ஆரம்பமாகியது.

2007: தாய்லாந்தில் 128 பேரை ஏற்றிச்சென்ற விமானம் ஒன்று வீழ்ந்ததில் 89பேர் கொல்லப்பட்டனர்.

tamilmirror.lk

Edited by நவீனன்

  • தொடங்கியவர்

14311367_1131270070255019_82412120278069

குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி, தமிழின் முன்னணி நட்சத்திர கதாநாயகியாக நீண்ட காலம் ஜொலித்து, மீண்டும் தற்போது நடித்து வரும், பலரின் அபிமானம் வென்ற 'கண்ணழகி' மீனாவின் பிறந்தநாள் இன்று.

  • தொடங்கியவர்

காற்றினிலே வரும் கீதம்... - எம்.எஸ்.சுப்புலட்சுமி நூற்றாண்டு!

newssssuppu.jpg

இசையைச் சுவாசித்தவர். இசையில் தியானித்தவர். இசையொடு இரண்டற இணைந்தவர். தன் இசையைக் கேட்கும் ஒவ்வொருவரையும் புனிதப் பயணம் அழைத்துச்சென்று ஆலயங்களைத் தரிசிக்கவைத்தவர். காஞ்சி காமாட்சியையும், மதுரை மீனாட்சியையும் கண்முன் கொண்டுவரும் திறன், எம்.எஸ். அவர்களின் பாடல்களுக்கு உள்ளது.  இத்தகைய பெருமைமிக்க இசை அரசி எம்.எஸ்.அம்மாவிற்கு, இன்றோடு(செப்.16) 100 வயது ஆகிறது. இந்த ஆண்டு, எம்.எஸ்.ஸின் நூற்றாண்டு ஆகும். இந்த இசை அரசியை பற்றி சில செய்திகள் இங்கே……..

17 வயதில் இருந்தே:

தொண்ணூறுகளின் தொடக்கத்தில் மதுரையில் சங்கீத உலகின் அதிசயங்களில் ஒருவராகப் பிறந்தார். செம்மங்குடி சீனிவாச ஐயரிடம் கர்நாடக இசையையும், பண்டிதர் நாராயண ராவ் வியாஸிடம் இந்துஸ்தானியையும் கற்றுக்கொண்ட இவர், தனது 17வது வயதிலேயே இசைத் துறையில் இனிய குரலைப் பதிய வைத்தார்.

தரணி  ஆண்ட எம்.எஸ்.:

கல்யாணக் கச்சேரி என்றால் ஒரு மாதிரி, கோயில் கச்சேரி என்றால் ஒரு மாதிரி, சபா கச்சேரி என்றால் வேறு மாதிரி என்ற பாகுபடுகளை தன் வாழ்நாளில் என்றுமே வைத்துக் கொண்டதில்லை எம்.எஸ்.அவர்கள். ‘பரணியில் பிறந்தவர் தரணி ஆள்வார்’ என்று சொல்வார்கள். அவ்வகையில், பரணியில் பிறந்த இந்த இசையரசி தரணியை ஆளத்தான் செய்தார். சங்கீத உலகின் முடிசூடா மகாராணியாக திகழ்ந்த எம்.எஸ்.சுப்புலட்சுமிக்கும், திரைப்படத்துக்குமான உறவு இன்றைய இளைய சமுதாயம் அதிகம் அறிந்திராத ஒன்று. திரைப்படங்களில் ஆயிரம் பேர் பாடியிருக்கலாம். ஆனால் திரையில் ஒலித்த தெய்வீகக் குரல் எம்.எஸ்.சுப்புலட்சுமியினுடையது. சங்கீத சாம்ராஜ்யத்துக்கு திரையுலகம் விட்டுக் கொடுத்த பொக்கிஷம் எம்.எஸ்.சுப்புலட்சுமி. திரையுலகில் அவரது பங்கு மிக குறைவானதாக இருக்கலாம். ஆனால் நிறைவானது. இன்று வரை எம்.எஸ்.சின் உயரம் யாராலும் தொட முடியாத உயரமாகவே உள்ளது.

subbu600.jpg

 

உறுதுணையாக இருந்த கணவர்:

ஒருமுறை மும்பைக்கு கச்சேரி செய்ய சென்றபோது ரெயிலில் அறிமுகமானார் இளைஞர் சதாசிவம். எம்.எஸ்.ஸின் தீவிர ரசிகர். அவரின் திறமைகளை மேலும் வெளிக்கொண்டுவர வேண்டும், அவ்வாறு செய்து அவரது புகழை உச்சிக்கு கொண்டு செல்ல வேண்டும் என விரும்பினார். பின்னாளில் இசை அரசியை திருமணம் செய்துகொண்டார். சங்கீதத்திலும், சமூகத்திலும் தன் மனைவி சிறப்பு எய்த வேண்டும் என்ற ஒன்றையே குறிக்கோளாக கொண்டவர். தனது இசை பயணத்தை மேலும் செப்பனிட தன் கணவரும் வரப்போகிறார் என்பதை எண்ணிப் பூரித்துவிட்டார் எம்.எஸ். அதன் பின் அவர் பாடாத பாட்டும் இல்லை, செல்லாத நாடும் இல்லை, வாங்காத விருதும் இல்லை எனுமளவு புகழ்க்கொடி நாட்டினார். தான் பாடிச் சம்பாதித்த பணத்தின் பெரும் பகுதியை சமூக காரியங்களுக்கு அள்ளிக் கொடுத்தார். தெய்வீக பணிகளுக்கு வாரிக் கொடுத்தார்.

மீரா ஏற்படுத்திய அழகிய தாக்கம்:

திரு.கல்கி கிருஷ்ணமூர்த்தி அவர்கள், கிருஷ்ணனை நினைத்து நினைத்து உருகும் பக்த மீராவின் கதையை எல்லிஸ்.ஆர்.டங்கன் இயக்கத்தில் உருவாக்கினார். இசை அரசியை திரையுலகம் வியந்து போற்றியது. எஸ்.வி.வெங்கட்ராமனின் இசையில் எம்.எஸ். பாடிய பாடல்களோடு மீராவாக எம்.எஸ்.அம்மாவை பார்க்கும் போது இது படமா அல்லது மீராவே உயிர்த்தெழுந்து வந்தாரா என நினைக்கும் அளவுக்கு இருக்கும். எம்.எஸ். அவர்களின் வாழ்வில், இந்த பக்த மீரா ஒரு மைல்கல்லாக இருந்துள்ளாள். சரோஜினி நாயுடு அவர்கள் படத்தை பார்த்து விட்டு, ‘இந்தியாவின் இசைக்குயில்’ என்ற பட்டத்தை வழங்கினார். அன்றைய பிரதமர் நேரு அவர்கள் கூறும் போது, “இந்த இசை அரசிக்கு முன்னால் நான் சாதாரண பிரதம மந்திரியே” என்றார்.

இசை சமூகத்துக்கு ரொம்பவே அவசியம்:

இன்றைய இளைஞர் சமுதாயம் நல்ல சங்கீதத்தால் மேன்மை அடைய வேண்டும் என்று எண்ணிய அம்மா அவர்கள், “தாய்மார்கள் அடுத்த தலைமுறையினருக்கு நல்ல ரசனை உணர்வை ஊட்டினால், நாட்டில் சங்கீதம் பெருகும், அதாவது பக்தி பெருகும், நாட்டு மக்களுக்கும் நல்வாழ்வு கிடைக்கும்” என்றார். இசை பெருகுவதன் மூலம் மக்களின் நலமும் நாட்டின் நலமும் பெருகும் என்பதை உளமார நம்பியவர். சுமார் 40வருடங்களுக்கு முன்னர் எம்.எஸ். அவர்கள் கூறிய கருத்துக்கள் யாவும் இன்றளவும் ஏற்புடையதாகவே இருக்கின்றது.

‘இது நூற்றாண்டல்ல, இசை ஆண்டு’ :

இசையும், இறை பணியும், வள்ளல் குணமுமாய், இந்திய பெண்களின் அடையாளமாய் வாழ்ந்த எம்.எஸ்.சுப்புலட்சுமி 2004ம் ஆண்டு டிசம்பர் 12ந் தேதி மறைந்தார். உலகையே தன் இசையால் வென்ற இவரின் இன்று தொடங்கும் அவரது நூற்றாண்டை இசை ஆண்டாக தமிழகம் கொண்டாடட்டும்.

vikatan

  • தொடங்கியவர்

புவி கவசத்தில் ஒரு துளை! சர்வதேச ஓசோன் தினம் 2016

osaaan.jpg

ஓசோன் பற்றி மக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தி ஓசோனை பாதுகாக்க  ஐ.நா.சபை ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் 16-ம் தேதியை ஓசோன் தினமாக கொண்டாடுகிறது.

ஓசோன் பற்றி...

ஓசோன் என்பது ஆக்ஸிஜனின் ஒரு வடிவம் ஆகும்(O3). அதாவது மூன்று ஆக்சிஜ‌ன் அணுக்கள்  சேர்ந்த ஒரு ஓசோன் மூலக்கூறு ஆகும். ஓசோனை C.F. ஸ்கோன்பின் என்பவர் கண்டறிந்தார். ஓசோனானது பூமிக்கு மேலே வாயு மண்டலத்தில் ஸ்ட்ரேடோஸ்பியரில் 10-50 கிமீ தொலைவில்  காணப்படுகிறது. ஸ்பெக்ரோபோட்டோ மீட்டர் என்ற கருவியை கொண்டு பூமியில் இருந்து ஓசோனை அளக்கலாம். ஓசோனின் முக்கிய பணியே சூரியனில் இருந்து வரும் புற ஊதாக்கதிர்களை தடுத்து பூமியில் உள்ள உயிர்களை பாதுகாக்கிறது. ஸ்ட்ரேடோஸ்பியரில் உள்ள ஓசோனின் அளவு 1% குறைந்தாலும் பூமியை வந்து அடையும் புற ஊதாக்கதிரின் அளவு அதிகரித்து உயிரிகளின் டிஎன்ஏவை(DNA) நேரிடையாக பாதிக்கும் இதனால் அனைவரும் கடலுக்கு அடியிலோ தரைக்கு அடியிலோ பதுங்க வேண்டிய நிலை ஏற்படும். உயிரினங்கள் கடுமையான சூழ்நிலையை எதிர்கொள்ள வேண்டிய நிலை ஏற்படும்.

ஓசோன் துளை:

ஓசோன் துளை என்பது வளி  மண்டலத்தில் உள்ள மற்ற இடங்களை ஒப்பிடுகையில் இங்கு  ஓசோன் படலத்தின் அடர்த்தி குறைந்து காணப்படும் நிலை  ஆகும்.  உண்மையில் இது துளை இல்லை.  இயற்கையில் ஓசோன் உருவாகும் அளவும் சிதைக்கப்படும் அளவும் சமமாக இருக்கும் போது வளிமண்டலத்தில் ஓசோனில் எந்தவித பாதிப்பு இல்லை. ஆனால் மனித செயல்பாட்டால் அதிக அளவில் ஓசோன் சிதைக்கபடுவதால் ஓசோனில் துளை ஏற்படுகிறது. 1980-ம் ஆண்டில் அண்டார்க்டிக்காவில் மிகப் பெரிய  ஓசோன் இழப்பு (துளை) கண்டுபிடிக்கப்பட்டது. மேலும் இங்கு ஓசோனின் அளவானது மற்ற இடங்களில் ஒப்பிடுகையில் 30% குறைந்து காணப்பட்டது. இதற்கு முக்கிய காரணம் குளோரோ புளூரோ கார்பன் ஆகும். இதே போன்ற துளைகள் ஐரோப்பா மற்றும் அமெரிக்க போன்ற இடங்களிலும் கண்டறியப்பட்டது.

ozz_aa1.jpg

 

ஓசோன் இழப்பினால் ஏற்படும் விளைவுகள்:

ஓசோன் இழப்பால் அதிகமான புற ஊதா கதிர்கள் பூமியை வந்து அடைவதால் மனிதனுக்கு தோல் நிறமிப் புற்றுநோய் கண்பார்வை குறைபாடு நோய்தடை காப்பு மண்டலம் செயலிழப்பு எரித்திமா போன்ற பாதிப்புகள் ஏற்படும் இறுதியாக மனித இனமே புவியில் இருந்து அழிந்து விடும்.

புவியில் உள்ள அனைத்து  தாவரங்களிலும்  பச்சையங்கள் பாதிக்கப்பட்டு  விளைச்சல் இல்லாமல் தாவர இனமே அழிவை சந்தித்து விடும்.
நீர் மற்றும் நிலத்தில் வாழும் விலங்குகள் இறக்க நேரிடும் இதனால் புவியில் உணவு சங்கிலி பாதிக்கப்படும்.

ஓசோன் படலத்தில் ஏற்படும் இழப்பை தடுக்கும்  முறைகள்:

குளோரோ ப்ளூரோ கார்பன்களுக்கு(CFC) பதிலாக ஹைட்ரோ குளோரோ ப்ளூரோ கார்பன்கள்(HCFC), ஹைட்ரோ ப்ளூரோ கார்பன்கள்(HFC), ஹைட்ரோ கார்பன்களான பியூட்டேன் புரோபேன் போன்றவற்றையும், அம்மோனியா நீர் மற்றும் நிராவி போன்றவை மாற்று பொருளாக  பயண்படுத்தலாம். ஓசோன் படலத்தை பாதிக்கும் பொருட்களை உற்பத்தி செய்வதை தடை செய்யவோ அல்லது கடுமையான வரைமுறைகளை கொண்டு வரலாம்.குளிர்சாதன பெட்டிகள் மற்றும் குளிரூட்டிகள் போன்றவற்றின் பயன்பாட்டை வெகுவாக குறைக்கலாம்.

மிக முக்கியமாக புவியில் அதிகமான மரங்களை நட்டு வளர்பதன் மூலம் ஓசோன் படல இழப்பை குறைக்கலாம்.

vikatan

  • தொடங்கியவர்

14361344_1131268346921858_43254755945958

முன்னாள் தென் ஆபிரிக்க கிரிக்கெட் அணியின் விக்கெட் காப்பாளரும் இப்போது சர்வதேச கிரிக்கெட் பேரவையின் பிரதம நிறைவேற்று அதிகாரியாகக் கடமையாற்றுபவருமான டேவ் ரிச்சர்ட்சனின் பிறந்தநாள்

  • தொடங்கியவர்

''முடியாதா...அகராதியிலேயே கிடையாது''!- ஆச்சரியப்பட வைக்கும் ஆர்ம்லெஸ் ஆர்ச்சர்

archs%20.jpg

மத் ஸ்டட்ஸ்மேனுக்கு பிறக்கும் போதே இரு கைகளும் கிடையாது. தோள்பட்டைக்கு பிறகு ஒன்றும் இல்லை.ஆனால்,  கையில்லாத ஸ்டட்ஸ்மேனின் அகராதியில் 'முடியாது ' என்ற வார்த்தைக்கு  மட்டும் இடம் கிடையாது. காரை காலால் ஓட்டி வித்தைக் காட்டுவார். தலையால் கூடைப்பந்து விளையாடுவார். காலால் தோள்பட்டையால் வாயால் கூட எழுதுவார். கையால் தாடியை ஷேவ் பண்ணும் போதே நமக்கு நாலு இடத்தில் வெட்டு விழுகிறது. ஆனால், ஸ்டட்ஸ்மேன், காலால் ஐந்தே நிமிடத்தில் ஷேவிங்கை முடித்துவிட்டு போய்கிட்டே இருப்பார்.ஒரு வாசல் அடைக்கப்பட்டால் இன்னொரு வாசல் திறக்கும்... ஆனால், அந்த வாசலை நாம் திரும்பிக் கூட பார்ப்பதில்லை எனச் சொல்வார்கள். கைகள் இல்லை என்று ஸ்டட்ஸ்மேன் சோர்ந்து விடவில்லை. கால்களைத் திரும்பிப் பார்த்தார். கைகள் போல கால்களைப் பயன்படுத்தினார்.

அமெரிக்காவைச் சேர்ந்த 33 வயதான மத் ஸ்டட்ஸ்மேனின் சாதனைகளில் இதுவெல்லாம் ஒரு சாம்பிளுக்குத்தான். இதையெல்லாம் தாண்டி அவர் மிகச்சிறந்த வில் வித்தை வீரர். கை இல்லாதவர் எப்படி வில்வித்தை வீரர் ஆக முடியும் என்றெல்லாம் ஸடட்ஸ்மேன் விஷயத்தில்  யோசிக்க வேண்டாம். இவரது அகராதியில்தான் 'முடியாது' என்ற வார்த்தைதான் கிடையாதே. உலகிலேயே அதிக தொலைவு உள்ள இலக்கை மிக துல்லியமாக குறி வைத்து அம்பை எய்தவர் என்ற சாதனைக்கும் இவர் சொந்தக்காரர்.கையுள்ள வீரர்களால் கூட ஸ்டட்ஸ்மேனின் இந்த சாதனையை இன்று வரை முறியடிக்க முடியவில்லை. 

வலது காலால் வில்லைப் பிடித்து கழுதை சாய்த்து நாணை இழுத்து நாடியால் அவர் அம்பு எய்யும் அழகை பார்க்கவே கோடிக் கண்கள் வேண்டும். சாதாரண வில்வித்தை வீரர்களால் கூட அத்தனை துல்லியமாக இலக்கை நோக்கி அம்பை செலுத்த முடியாது. அத்தனைத் துல்லியம் ஸ்டட்ஸ்மேனிடம் இருக்கும். இத்தனைக்கும் கடந்த 2009ம் ஆண்டு வரை  நம்ம ஸ்டட்ஸ்மேனுக்கு வில்வித்தை என்றால் என்னவென்றுத் தெரியாது. வேலை வெட்டியில்லாமல் சும்மாதான் சுற்றித்திரிந்தார். இவருக்கு மனைவியும் மூன்று குழந்தைகளும் உண்டு. மனைவிதான் வேலைக்கு போய் குடும்பத்தை காப்பாற்றி வந்திருக்கிறார்.

 

 

 

''ஒரு நேரத்தில் வேலையில்லாமல் வீட்டில் முடங்கி கிடந்தேன். இப்போது நிற்க கூட நேரமில்லை. வேலைக்கு போய்க் கொண்டிருந்த எனது மனைவி ஹவுஸ்வொய்ஃப் ஆகி குழந்தைகளை பார்த்துக் கொள்கிறார்;; எனக் கூறும் ஸ்டேட்ஸ்மேனுக்கு கார்ட்டர், கேமரான், அலெக்ஸ் என மூன்றுக் குழந்தைகள். ''நான் ஒன்றும் லெப்ரான் ஜேம்ஸ் அளவுக்கு 'ரிச்' கிடையாது. ஆனாலும் வசதியாக வாழும் அளவுக்கு சம்பாதிக்கிறேன்'' என்கிறார் ஸ்டேட்ஸ்மேன்.

arch1.jpg

லண்டன் பாராலிம்பிக் போல, ரியோ பாராலிம்பிக் ஸ்டட்ஸ்மேனுக்கு இனிப்பாக அமையவில்லை. காலிறுதிச் சுற்றில் தோல்வியைத் தழுவினார். ''  பதக்கம் வெல்வதற்காக மட்டும் வில்வித்தையில் நான் பங்கேற்கவில்லை. பதக்கம் வென்றிருந்தால் கூடுதல் மகிழ்ச்சி அவ்வளவுதான். என்னைப் பார்த்து மற்றவர்களும் முயல வேண்டும். முடங்கிவிடக்  கூடாது என்பதுதான் எனது நோக்கம்'' தோல்வியின் தாக்கம் இல்லாமல் அதே உற்சாகத்துடன் கூறுகிறார் ஸ்டட்ஸ்மேன்.

ஆதரவற்றோர் இல்லத்தில் இருந்த ஸ்டட்ஸ்மேனை 13 மாதக் குழந்தையாக இருக்கும் போது லியோன்- ஜீன் தம்பதியர் தத்தெடுத்து வளர்த்துள்ளனர். தனது வளர்ப்பு பெற்றோர் பற்றி கூறுகையில் ஸ்டட்ஸ்மேனுக்கு கண்களில் நீர் தளும்புகிறது. '' என்னைப் போன்ற ஒரு குழந்தையை தத்தெடுத்து வளர்க்க யார் விரும்புவார். ஆனால், எனது பெற்றோர் என்னை வளர்த்து ஆளாக்கினர். அவர்கள் என்னிடம் சொன்ன ஒரே வார்த்தை, 'முயற்சிக்காமல் எந்த உதவியையும் எங்களிடம் கேட்கக் கூடாது' என்பதுதான். எனது தந்தை என்னை ஆகாயத்தில் பந்து போல போட்டு பிடிப்பார். அப்போது, 'உன்னை நாங்கள் தத்தெடுத்தது மாதிரி இந்த உலகத்தை தத்தெடுப்பது எப்படி என நீ யோசிக்க வேண்டும்' என்பார். அதுதான் எனக்கு மந்திரச் சொல்.

ஆனாலும் 25 வயதில்தான் எனக்கு ஒரு வழி தெரிந்தது.  வில்வித்தை வீரரான பிறகு, புதியதாக ஒரு வில் வாங்க ஒரு கடைக்குச் சென்றேன். வில் வேண்டுமென்ற போது, அந்த கடைக்காரர் என்னை ஒரு மாதிரியாக பார்த்தார். சிரித்தே விட்டார். பின்னர், 'எப்படி எய்வீங்க' என்றார்.நான் ' எனக்குத் தெரியாது' என்றேன். வில்லை கொடுத்து விட்டு, ஒரு வித நமட்டுச்சிரிப்புடன் நகர்ந்தார். இப்போது, நான் அம்பு எய்வதே பார்க்கவே ஆயிரக்கணக்கில் கூட்டம் கூடுகிறது. இந்த உலகம் அலட்சியம் நிறைந்த மனிதர்களால் நிரம்பியது. அவர்களை எளிதாக கடந்தால் நாம் சம்திங் டிஃபரன்ட்தான்'' என்கிறார் வெற்றிச் சிரிப்புடன்!

vikatan

  • தொடங்கியவர்
சிங்கராஜா வனத்தை அண்டிய பகுதியிலும் அரிய வகை புதிய பாம்பு கண்டுபிடிப்பு; விஷத்தன்மையற்ற இந்தப் பாம்பு கோபமடையும் போது சிவப்பு நிறமாக மாறுகிறது
 


சிங்­க­ராஜா வனத்தை அண்­டிய பிர­தே­சத்தில்  இலங்­கைக்கு உரித்­தான  அரிய வகை புதிய பாம்பு இனம் ஒன்று  கண்­டு­பி­டிக்­கப்­பட்­டுள்­ளது. இலங்­கை­யி­லுள்ள பாம்­புகள் தொடர்­பான சிரேஷ்ட ஆராய்ச்சி நிபு­ண­ரான மெண்டிஸ் விக்­ர­ம­சிங்­க­வினால் இது கண்­டு­பி­டிக்­கப்­பட்­டுள்­ளது.

 

193133.jpg

 

மறை­வான பிர­தே­சங்­களை அண்டி வாழும் இத்­த­கைய பாம்பு இனம் இற்­றைக்கு 12 ஆண்­டு­க­ளுக்கு முன்னர் தெனி­யாய பிர­தே­சத்தின்  சிங்­க­ராஜா வனப்­ப­கு­தியில் காணப்­பட்­ட­தா­கவும் தெரி­விக்­கப்­பட்­டுள்­ளது.

 

இதற்கு பின்னர் மேற்­கொள்­ளப்­பட்ட நட­வ­டிக்­கை­களின் போது  இலங்­கையின் குடவ, அத்­வெல்­தொட, பெலேன,ககு­லே­கங்க ஆகிய பிர­தே­சங்­க­ளிலும்    இந்த புதி­ய­வகை பாம்பு இனம் கண்­டு­பி­டிக்­கப்­பட்­டி­ருந்­தது.

 

193132.jpg

 

இத­னை­ய­டுத்து முன்­வைக்­கப்­பட்ட ஆரா­ய்ச்சி அறிக்­கை­க­ளுக்­க­மைய Dendrelaphis sinharajensis என்ற விஞ்­ஞானப் பெயருடன் இந்த பாம்பு உல­குக்கு அறி­முகம் செய்து வைக்­கப்­பட்­டது.

 

கீழைத்­தேய மழைக்­கா­டு­களை அண்டி வாழும் இப்­ பாம்­புகள் நச்­சுத்­தன்­மை­யற்­றது என மெண்டிஸ் விக்­ர­ம­சிங்க தெரி­வித்­துள்ளார். 57.69 சது­ர­கி­லோ­மீற்றர்
பகு­தி­யினுள் கண்­டி­பி­டிக்­கப்­பட்ட இப்­ பாம்பு மிகவும் அரிய வகையை சார்ந்­தது என தெரி­விக்­கப்­பட்­டுள்­ளது.

 

193134.jpg

 

67.2 சென்­றி­மீற்றர் நீளத்தைக் கொண்ட இப் ­பாம்பு மெல்­லிய உருளை வடி­வான உட­ல­மைப்­பி­னையும்  சற்று பெருத்த தலை­யையும் கொண்­டுள்­ளது. உடல் முழு­வதும் சிவப்பு நிறத்­தி­னா­லான இப்­ பாம்பின் உடலில் கறுப்பு மற்றும் வெள்ளை கோடு­களும் காணப்­ப­டு­கின்­றன.

 

இப்­ பாம்­புகள் கோப­ம­டையும் வேளை­களில் அவற்றின் பின்­பக்க உடற்­ப­குதி சற்று பெரி­தா­வ­தோடு உடலும் கடும் சிவப்பாக மாறுவதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

 

193137.jpg

 

அத்துடன் இவற்றின் அடிப்பகுதி கபில நிறத்தில் காணப்படுவதனால் இவை மரத்தில் இருக்கும்போது அதன் நிறம் மரங்களுடன் ஒன்றித்து காணப் படுகின்றது.

 

19313Untitled-10.jpg

metronews.lk

Edited by நவீனன்

  • தொடங்கியவர்

 

ஆல்ப்ஸ் மலை உறைபனி அண்டார்டிகாவில் சேமிப்பு

பிரான்ஸ் ஆல்ப்ஸ் மலைத்தொடரில் தங்கி உலகின் அதிவேகமாக கரைந்துவரும் உறைபனி ஏரியிலிருந்து பனிப்பாறைகள் சிலவற்றை வெட்டி எடுத்து பாதுகாக்கும் திட்டத்தின் முதல் கட்டத்தை ஆய்வாளர்கள் நிறைவு செய்திருக்கிறார்கள்.

BBC

  • தொடங்கியவர்

அப்பிள் 7 ற்கு வந்த நிலை

 

அப்பிள் 7 கையடக்கதத்தொலை பேசியை வாங்குவதற்காக உலகிலுள்ள பல நாடுகளில் அப்பிள் அபிமானிகள் நீண்ட நேரம் காத்திருந்து வாங்கியுள்ளனர்.

385F52D600000578-3792024-image-a-33_1474

குறிப்பா இரண்டு நாட்கள் வரிசையில் தவம் இருந்து அப்பிள் 7 கையடக்கத் தொலைபேசியை பெற்றுள்ளனர்.

386A1E2300000578-3792024-Some_dedicated_

386A04ED00000578-3792024-The_phones_will

3869E5EF00000578-3792024-Mr_Barsoum_spea

3869F75800000578-3792024-Apple_staff_cla

3869EDB800000578-3792024-They_had_to_be_

386A28D500000578-3792024-She_held_it_alo

386D932200000578-3792024-image-a-91_1474

3869EDB000000578-3792024-They_and_three_

386A079600000578-3792024-The_first_group

3869FC5000000578-3792024-Fans_in_the_200

385F535300000578-3792024-Lucy_Dwyer_22_w

3869EE6000000578-3792024-Apple_fans_lini

386D92FD00000578-3792024-image-a-93_1474

386D587600000578-3792024-image-a-66_1474

386D604B00000578-3792024-image-m-65_1474

386B55FE00000578-3792024-image-a-49_1474

386DE82A00000578-3792024-image-a-97_1474

386D5D5B00000578-3792024-image-a-60_1474

386CC2B800000578-3792024-image-m-52_1474

386DFB4500000578-3792024-image-a-114_147

385F532700000578-3792024-Some_pitched_te

386DFB4A00000578-3792024-image-a-111_147

386E68B800000578-3792024-image-a-142_147

386B82B600000578-3792024-image-a-56_1474

386DA60500000578-3792024-image-a-108_147

386DA91500000578-3792024-image-m-107_147

386D57C100000578-3792024-image-a-57_1474

386A818400000578-3792024-image-a-54_1474

386D698700000578-3792024-image-m-73_1474

3869FCCF00000578-3792024-image-a-38_1474

386E0EA400000578-3792024-image-m-130_147

386E315D00000578-3792024-image-m-127_147

virakesari.lk

  • தொடங்கியவர்

 

Jaffna Boy

  • தொடங்கியவர்

14352225_1131267753588584_37866818393616

இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் துடுப்பாட்ட தூண்களில் ஒருவர், முன்னாள் உப தலைவர், 1996 உலகக்கிண்ணப் போட்டிகளில் இலங்கையின் வெற்றிக்கான காரணகர்த்தாக்களில் ஒருவரான அசங்க குருசிங்கவின் பிறந்தநாள்.

Happy Birthday Asanka Gurusinha

 
  • தொடங்கியவர்

 

“வழி வழியாக வந்த அறிவு” - காணொளி

பாரம்பரியத்தை பேணவே மக்கள் பிடிவாதமாக இருப்பதாக கண்டுபிடிப்பு

BBC

  • தொடங்கியவர்

SPL கிரிக்கெட் என்ன தெரியுமா?

 

p8a.jpg

‘‘ஆண்ட்ராய்ட் கேம்ஸ் எத்தனை வந்தாலும், சுளீர் வெயிலில் மட்டையைச் சுழற்றி சிக்ஸர் அடிக்கிற கெத்துக்கு ஈடாகாது’’ - வியர்வை சொட்டச் சொட்ட சொல்கிறார்கள் அந்தச் சுட்டிகள்.

அது, கோயம்புத்தூர் ஆர்.எஸ்.புரம் பகுதியில் இருக்கும் ஒரு மைதானம். இந்தியர்களுக்கு சாப்பாடு, தண்ணீர்போல ஆகிவிட்ட விளையாட்டு, கிரிக்கெட். தமிழ்நாடு பிரீமியர் லீக் போட்டிகள் உச்சத்தை நெருங்கிக்கொண்டிருக்கும் நேரம், சுட்டிகளின் SPL கிரிக்கெட்டை (அதாங்க, Street Premier league) பார்க்க ஒரு ரவுண்டு வந்தோம்.

p8.jpg

‘‘ஸ்கூல் நாளில், காலையில் எட்டு மணிக்கும் சொக்கும் தூக்கம், லீவு நாளில் ஆறு மணிக்கே ஓடிப்போயிடும். படுக்கும்போதே, கட்டிலுக்குக் கீழே கிரிக்கெட் பேட்டை வெச்சுட்டுதான் படுப்பேன். டாஸ், பவுண்டரி, சிக்ஸர் என கனவெல்லாம் கிரிக்கெட்தான் ஓடும். விடிஞ்சதும் இங்கே ஓடி வந்துருவேன்’’ என்கிறான் ராகேஷ்.

“தினமும் பள்ளிக்கூடம் விட்டு வந்ததும் கிரிக்கெட் விளையாட வந்துருவேன். பெரிய அண்ணண்கள் வந்தால், அவங்களுக்கு பௌலிங் போட்டும் விளையாடுவோம்’’ என்றான் பாலா.

மட்டையின் கைப்பிடியில் சின்சியராக நூலைச் சுற்றிக்கொண்டிருந்த கிஷோர், ‘‘அடிக்கடி அப்பாகிட்டே புது பேட் கேட்க முடியாது. நாம அடிக்கிற வேகத்துக்கு, ஹேண்டில் உடையாம இருக்கணுமில்லே. இப்படி ஃபெவிக்கால் தடவி, நூலைச் சுத்தினால், ஸ்ட்ராங் ஆகிடும்.  சிக்ஸருக்கும் பவுண்டரிக்கும் தூக்கலாம்’’ என்றான்.

 p8b.jpg

இந்த மாதிரி தெரு விளையாட்டின் சுவாரஸ்யங்களில் ஒன்று, தாறுமாறான ரூல்ஸ்.

‘‘ஆமா, பூவா தலையா டாஸ் போட மாட்டோம். இரண்டு டீம் கேப்டனும் ஒற்றையா ரெட்டையா போட்டு, பேட்டிங் எடுப்போம். தெருவிலும் சின்ன கிரவுண்டிலும் சிக்ஸர் அடிச்சா அவுட்டு. ஏன்னா, யார் வீட்டிலாவது போய் விழுந்திடும். பந்தை எடுத்துவெச்சுட்டு கொடுக்க மாட்டாங்க. அதனால, சிக்ஸர் அடிக்காமலே நிறைய ரன்னை எடுக்கிறதுதான் சவால். இன்னொரு சவால், ரன் அவுட்டை ஒப்புக்க வைக்கறது. அம்பயரா வந்து நிற்கிறவன் செத்தான்’’ என்கிறான் ரமேஷ்.

p8c.jpg

‘‘பேட்டிங் டீமில் இருக்கிற ஒருத்தனே அம்பயரா நிற்கணும். ஓவர் த்ரோவுக்கு ரன் ஓடக் கூடாது. நாட் ரன் சைடுனு ஒவ்வொரு இடத்துக்கும் ஒரு பக்கத்தை வெச்சிருப்போம். அங்கே பந்து போனால், ரன் அவுட் கிடையாது. வைய்டுக்கும் நோ பாலுக்கும் எக்ஸ்ட்ரா பந்து உண்டு; ஆனால், ரன் கிடையாது... இப்படி நிறைய ரூல்ஸ் உண்டு’’ என்று அடுக்கினான் புவனேஷ்.

‘‘ஆள் குறைவா இருக்கும்போது சிங்கிள்ஸ் விளையாடுவோம். கிரிக்கெட்டை கண்டுபிடிச்சது இங்கிலாந்துன்னா, இந்த சிங்கிள்ஸைக் கண்டுபிடிச்சது நிச்சயமா நம்ம நாட்டு பசங்கதான். இதுல இருக்கிற ரூல்ஸைத் தெரிஞ்சுக்க தனி கோர்ஸ் படிக்கணும். சச்சினே வந்தாலும் திணறிடுவாரு’’ என்று சிரிக்கிறான் ரமேஷ்.

p8d.jpg

இந்த வருங்கால வீரர்களுக்கு இருக்கும் இன்னொரு பெரிய்ய்ய்ய்ய சவால், பெற்றோரை சமாளித்து விளையாட வருவது.

p8e.jpg

‘‘ஐயையோ... அதை ஏன் கேட்கறீங்க? தோனியும் கோஹ்லியும் சிக்ஸர் அடிச்சா, கைதட்டற அப்பாக்களே, நாம பந்தைத் தொட்டதும் பாய்ஞ்சு வந்துப் பிடுங்கறாங்க. கணக்குல நூத்துக்கு நூறு எடுத்தால், பேட் வாங்கிக் கொடுக்கிறேன்னு பிளாக்மெயில் பண்றாங்க. அந்தச் சவாலையும் ஏத்துக்கிட்டு போன வருஷம், கணக்கில் 100 எடுத்தேன். அப்போ வாங்கினதுதான் இந்த 600 ரூபாய் பேட். சும்மா பந்தைத் தொட்டாலே, சிக்ஸருக்குப் பறக்கும்’’ என்று மட்டையைச் சுழற்றினான் ராகேஷ்.

p8f.jpg

‘‘அப்பாக்களையாவது சமாளிச்சுடலாம். இந்த அம்மாக்கள் இருக்காங்களே, ‘அடுப்புல போட்டு  எரிச்சுடுவேன், பந்தை ஒளிச்சு வெச்சுருவேன்’னு விதவிதமா மிரட்டுவாங்க. இவங்களுக்குப் பயந்து, ஒவ்வொரு நாளும் வீட்டுல புது புது இடங்களை கண்டுபிடிச்சு ஒளிச்சு வைப்போம். அப்படியும் கண்டுபிடிச்சுடுவாங்க. ஃப்ரெண்ட்ஸ்   வீட்டுல வெச்சுக்கச் சொல்லி கொடுத்தால், என் அம்மாவுக்கு உன் அம்மா எவ்வளவோ பரவாயில்லைனு அலறுவாங்க’’ என சோக மழையாக கொட்டினான் பாலா.

p8g.jpg

“என் அம்மா, ஞாயித்துக்கிழமைன்னா நல்லாத் தூங்கணும்னு சொல்லுவாங்க. ஃப்ரெண்ட்ஸ் வீடு தேடி வந்தாலும், ‘தூங்கறான் போங்கடாங்க’னு விரட்டி விட்ருவாங்க. அதனால், காலையிலேயே எஸ்கேப் ஆகி வந்துருவோம். மதியம் ஐஸ் விற்கிற அண்ணா வந்தால், அதையே லன்ச் மாதிரி சாப்பிட்டு, சாயந்திரம்தான் வீட்டுக்குப் போவோம்’’ என்று எஸ்கேப் தந்திரங்களைச் சொன்னான் புவனேஷ்.

p8h.jpg

இப்படி பல தடைகளையும் போராட்டங்களையும் தாண்டி அடுத்த கட்டத்துக்கு வருவதுதான் இவர்களின் மாஸ். அதென்ன அடுத்த கட்டம்?

p8i.jpg

‘‘நல்லா விளையாட ஆரம்பிச்சோம்ன்னா, சீனியர் அண்ணன்கள்கிட்டே போய்ப் பேசுவோம். அவங்க விளையாடும் டோர்னோமென்ட்ல நமக்கும் சான்ஸ் கொடுப்பாங்க. தீபாவளி, பொங்கல் சமயத்தில் டோர்னோமென்ட் நடக்கும். அப்படி சீனியர்கள் டீமில் விளையாடி மூணு முறை கப் ஜெயிச்சு இருக்கோம்’’ என்றான் ராகேஷ்.

சபாஷ், கில்லியான பசங்கதான்!

vikatan

  • தொடங்கியவர்

மன உலகத்தின்ன் (வி)சித்திரங்கள்

 
  • புத்தகம் திற... புது உலகம் காண்...
    புத்தகம் திற... புது உலகம் காண்...
  • நிழலும் நீ என்று உணர்...
    நிழலும் நீ என்று உணர்...
  • கல்லாததும் கிடைக்காததும் வானளவு
    கல்லாததும் கிடைக்காததும் வானளவு
  • அறிவுப் புதையலா.... புதைக்கும் செல்வமா...
    அறிவுப் புதையலா.... புதைக்கும் செல்வமா...
  • கொஞ்சம் மூளைக்கு... கொஞ்சம் வயிற்றுக்கு...
    கொஞ்சம் மூளைக்கு... கொஞ்சம் வயிற்றுக்கு...
  • விளக்கு இது... விளக்கம் தேவையா?
    விளக்கு இது... விளக்கம் தேவையா?

தென்கொரியத் தலைநகரான சியோலைச் சேர்ந்த சர்ரியலிஸ ஓவியர்தான் ஜுன்கோ லீ. அதென்ன ‘சர்ரியலிஸம்’ என்று கேட்கிறீர்களா? நமக்குக் கொம்பு முளைப்பதுபோன்றும் இறக்கை முளைப்பது போன்றும் அல்லது ரோஜாப் பூவுக்குப் பற்கள் இருப்பது போன்றும் விசித்திரமான கனவுகள் வருமல்லவா! அது மாதிரியெல்லாம் ஓவியமாக வரைவதோ, இலக்கியமாக எழுதுவதோதான் சர்ரியலிஸம். அதாவது ஆழ்மனதின் விசித்திர வெளிப்பாடுதான் சர்ரியலிஸம்.

காலத்தைக் காட்டிக்கொண்டே கடிகாரம் ஒன்று மேசையிலிருந்து உருகி வழிவதுபோல் சல்வதோர் தலி (Salvador Dali) வரைந்த ஓவியம் இதுபோன்ற ஓவியங்களுக்கு கிளாஸிக் உதாரணம். இந்த சர்ரியலிஸப் பாணியில் அட்டகாசமான பல ஓவியங்களை ஜூன்கோ லீ வரைந்திருக்கிறார். 2016-க்கான ’உலக சித்திர விரு’தையும் சமீபத்தில் வென்றிருக்கிறார். புத்தகங்களை நம் அன்றாட வாழ்வில் தொடர்புபடுத்தி, லீ இந்த சமீபத்திய சர்ரியலிஸ ஓவியங்களை வரைந்திருக்கிறார். புத்தகத்துக்குள் இருக்கும் பிரபஞ்சத்துக்குள் விண்மீன் பிடிப்பது போன்று அவர் வரைந்திருக்கும் ஓவியம் சர்ரியலிஸப் பாணியில் மட்டுமல்லாமல் வெளி (space), காலம் இரண்டும் வளையக் கூடியவை என்பதை விளக்கும் வகையிலும் இருக்கிறது.

tamil.thehindu

Edited by நவீனன்

  • தொடங்கியவர்

போலியான பாராட்டுக்கள் தேவை இல்லை
 
 

article_1473825521-stick_figure_bullhornதற்புகழ்ச்சி செய்யாமல் தனது கருமங்களைச் சீராகச் செய்தால்இ அவர்களது தன்னடக்கத்தைக் கண்டு எல்லோருமே மெச்சுவார்கள்.   

தன்னடக்கம் உள்ளவர்களுக்கு ஆன்மபலம் அதிகரிக்கின்றது. மேலும் இத்தகையவர்கள்இ ஏனையவர்களை ஏளனம் செய்வதில்லை.   

உயர் நிலையில் வாழ்ந்து வரும் சான்றோர்கள்இ அனைவரையும் அரவணைப்பதுடன் எளிய வாழ்க்கையையே விரும்பி ஏற்பார்கள்.  

இன்று டாம்பீக வாழ்வில் மோகம் கொள்பவர்கள்இ அதுவே தமக்கான கௌரவம் என்று எண்ணுகின்றார்கள். இதனால்இ ஒருவித மமதையையும் தமக்குள் ஏற்படுத்தி விடுகின்றார்கள்.  

எங்களது வாழ்வை மேம்படுத்த ஏனையவர்களின் முகஸ்துதிகளும் போலியான பாராட்டுதல்களும் தேவையே இல்லை.   

Edited by நவீனன்

  • தொடங்கியவர்

14359017_10154996642624578_3465985236470

  • தொடங்கியவர்

நெட்டிசன் நோட்ஸ்: பெரியார்- நெட்டில்லா காலத்துப் போராளி!

 

 
 
படம்: ட்விட்டர் பகிர்வுகள்
படம்: ட்விட்டர் பகிர்வுகள்

செப். 17 - இன்று தந்தை பெரியார் பிறந்த நாள். பெரியாருக்கு வாழ்த்துச் சொல்லி நெட்டிசன்கள் ட்விட்டரில் #HBDPeriyar என்ற ஹேஷ்டேகை இந்திய அளவில் ட்ரெண்டாக்கினர். அவற்றின் தொகுப்பு இன்றைய நெட்டிசன் நோட்ஸில்...

கில்லர்

தமிழ் இனத்திற்கு சுயமரியாதை கற்றுத்தந்த கலகக்காரன்! என் இனத்தின் நந்தாவிளக்கு, தலைவர்களுக்கெல்லாம் தலைவன் தந்தை பெரியார்! #HBDperiyar

Doha

”உன் மதம் சாதி பார்க்கும் மதம், உன் சாமி சாதி பார்க்கும் சாமி … சக மனிதனையே மனிதனாக மதிக்காத இரண்டையுமே ஒழி ! ” - பெரியார்.

பித்தன்

எண்ணிய எண்ணியாங்கு பேசியவன், என்றும் பேசப்படுபவன் ! #HBDPeriyar

Sahoo :p ‏@sahoodmail

நாடு போற்றும் சிறந்த தலைவர்களுள் ஒருவர் தந்தை பெரியார், பகுத்தறிவுவாதி.. வாழ்த்துக்கள் #HBDPeriyar

மது ‏

புரட்டாசியும் இன்றுதான் பிறக்கிறது. புரட்டு ஆசிகளை நம்பாதே என்பவரும் பிறந்த தினம் இன்று. #HBDPeriyar

Cine Tent ‏

மதங்களை கடந்த மாமனிதர் அய்யா பெரியாரின் பிறந்த நாள் இன்று...

Siva

"யார் சொல்லியிருந்தாலும், எங்கு படித்திருந்தாலும், நானே சொன்னாலும் உனது புத்திக்கும் பொது அறிவுக்கும் பொருந்தாத எதையும் நம்பாதே!" - பெரியார்

SumiSumathi

ரெண்டாயிரம் வருஷ மனு ஆட்சியை / கடவுள் நம்பிக்கைய 90 வருஷம் மட்டுமே வாழ்ந்த ஒரு கிழவனால் ஆட்டிப்படைக்க முடிந்ததே, இதுவே பெரியாரின் வெற்றி...

Jokin Jeyapaul

பெரியார் எனும் பெயரை உச்சரித்தால் இன்னும் சிறியவர்களுக்கு எரிச்சல் வருகிறது. அது தான்உங்கள் வாழ்நாள் சாதனை. #HBDPeriyar

ஓலைக்கணக்கன்

என்ன வேணா செஞ்சிருக்கட்டும், உன் அறிவுக்கு ஒத்துக்க முடியலேன்னா கேள்வி கேளுன்னு சொன்னார் பாருங்க. அது ஒண்ணு போதும். #hbdperiyar

புகழ்

பக்தி வந்தால் புத்தி போகும்.. புத்தி வந்தால் பக்தி போகும்..- தந்தை பெரியார்.

ராவணன் ‏

பக்தி என்பது தனிசொத்து. ஒழுக்கம் என்பது பொது சொத்து. #HBDperiyar

ஆ இளங்குமரன்

என்றும் தேவைப்படும் ஈரோட்டு ஏந்தல்... தந்தை பெரியார் #HBDPeriyar

navaneetha

மானமும் அறிவும் மனிதர்க்கு அழகு.

ஆ இளங்குமரன் ‏

அன்று இடுப்பில் கட்டிய துண்டு, இப்போது நம் தோளில் இருக்க காரணமே பெரியார் தான்

ரா.கிருஷ்ணமூர்த்தி

ராகுல் சர்மா, கிஷோர் ரெட்டி, அங்கித் கவுடாக்களுக்கு மத்தியில் நான் சுப்ரமணியனாக மட்டுமே.. நன்றி #HBDPeriyar

Arun Nedunchezhiyan

எனக்குச் சிலை வைத்தார்கள் என்றால், இந்தச் சிலை எனக்கு மணியடிக்கிற சிலை இல்லை; பூசை செய்கிற சிலை இல்லை. கடவுள் இல்லை..

Sudhakar Ganesan ‏

தமிழ் நாட்டில் எல்லா தரப்பு மக்களும் கோவிலுக்குள் சென்று கும்பிட காரணமானவர் கடவுள் மறுப்பாளர் பெரியார்.

அறந்தை மணி

எவரொருவர் பெயரைக் கேட்டால், சாதி, மதம், இனம் கடந்து ஒரு இனம்புரியாத உணர்வுடன் மனிதம் தழைக்க நினைக்கிறதோ அங்கு வாழ்கிறார் பெரியார்.

arulselvam ‏

மண்டைச்சுரப்பை உலகு தொழும், தூய தாடி மார்பில் விழும், அவர்தாம் பெரியார்.

Doha Talkies ‏

“பெரியார் மட்டும் இல்லாவிட்டால் நீங்களும் நானும் அருவாள், கம்பைத் தூக்கிக் கொண்டுதான் திரிந்திருப்போம்” - மூப்பனார்.

Thadagam Mugund

பெரியாரும் - ஒரு பெரியவாள் தானே;

ஆம்; அவர் நம் -

பேதமைகளை அரிந்தெடுத்த

பெரிய வாள்தானே !- வாலி

வரிப்புலி

தாழ்த்தப்பட்டோர்க்கு "ஐயா, சாமி, துரை" என்று பெயரிட்டு எல்லோரையும் அழைக்க வைத்தவரின் பிறந்தநாள். #HBDperiyar

Manikandan ‏

தேர்தலில் தேர்வு செய்யப்பட்டவன் அயோக்கியன் எனில், தேர்ந்தெடுத்தவன் முட்டாள் என்று அர்த்தம் - பெரியார்.

kiramaththan

எல்லோர்க்கும் பதில் மட்டுமே சொல்லிக் கொண்டிருந்த காலத்தில் கேள்விகள் கேட்டவன் நீ! #HBDPeriyar

Satheesh Kumar ‏

30+ மாநிலங்கள். தமிழகம் பலவற்றில் முன்னணி. மிகப்பெரும்பான்மையான பட்டதாரிகள். வேற்றுமையற்ற சகோதரத்துவம். நீர் அதன் முதல் புள்ளி. #HBDPeriyar

karthik tpr ‏

தன் மக்களின் சூத்திர பட்டம் நீங்க, 95 வயதிலும் மூத்திர சட்டியை கையில் ஏந்தி இன உணர்வூட்டிய கொள்கைக்குன்று, தந்தை பெரியார்.

Doha Talkies

“பெரியாரின் முரட்டுத்தனமான அணுகுமுறை; அதெல்லாம் சரிப்பட்டு வராதுங்க!” இது முடிவெட்டும் தோழரின் மகனான எலக்ட்ரிக்கல் என்ஜினியர் சொன்னது.

வெள்ளந்தி

திராவிடர்கள் வணங்க வேண்டிய உண்மையான கடவுள். #HBDperiyar

ரெவுனி

பெரியார், ஒருதடவ அந்த பேரை மனசுக்குள்ள சொல்லிப்பாரேன், உன்னையே நீ புதிதாய் உணர்வாய்!

govikannan

தமிழ்நாட்டின் பெருமைக்கு தாடி வைத்த இந்த இருவரே போதுமானது, வள்ளுவர் மற்றும் பெரியார். #hbdperiyar

Lakschumi

ஏதோ பெண் சுதந்திரமென பிதற்றுகிறோம் இன்னும் ஒரு நூறாண்டு இருந்திருக்கலாம்; அந்த வெண்தாடிக் கிழவன். #HBDPeriyar

ச ப் பா ணி ‏

இணையம் இல்லாத காலத்துலேயே போராடியவர். #HBDPeriyar

roshanriswan

மானம் கெடுப்பாரை, அறிவைத் தடுப்பாரை, மண்ணோடு பெயர்த்தெடுத்த கடப்பாரை!

வானம் உள்ளவரை, வையம் உள்ளவரை யார்தான் மறப்பார் நம் பெரியாரை?

tamil.thehindu

  • தொடங்கியவர்

14322312_1132133853501974_32354825552152

இளையவர்களின் இதயம்கவர் நடிகை.
தமிழ்த்திரையுலகில் தனக்கென தனியிடம் பிடித்த பெயர் சொல்லும்
நடிகை பிரியா ஆனந் இன்று பிறந்தநாளைக் கொண்டாடுகிறார்


Happy Birthday Priya Anand

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.