Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இளமை புதுமை பல்சுவை

Featured Replies

  • தொடங்கியவர்

வலைபாயுதே

சைபர் ஸ்பைடர்

 

p101d.jpg

twitter.com/chinnapulla: ஆற்றின் குணமே ஓடுறதுதான். அதைப் போய் அணைக்கட்டி தடுக்குறீங்க. திறந்துவிடு. அது முடிவுபண்ணட்டும் தமிழ்நாடா...கர்நாடகமானு!

twitter.com/Kannan_Twitz : ஹாஃப்பாயிலைச் சூடாக முழுங்கும் தருணம்... நான்கு நடிகர் திலகங்கள், எட்டு உலக நாயகன்கள் வந்து செல்வார்கள். #அனுபவம்

twitter.com/RagavanG : காவிரிக்காக இன்று போராடுபவர்களில் ஒரு சதவிகிதம் பேர்கூட, காப்பாற்ற முடிகிற தாமிரபரணிக்காகப் போராட மாட்டார்கள். # அரசியல் :(

twitter.com/thoatta:  சட்டம் ஓர் இருட்டறை... கீழே மின்கம்பிகள் கிடக்கும் ஜாக்கிரதை!

twitter.com/Kozhiyaar: `இனிமேல் உண்மையைத் தவிர வேறு எதுவும் பேசக் கூடாது’ என்று முடிவெடுக்கும்போதுதான், `சாப்பாடு எப்படி இருக்கு?’னு கேள்வி வருது!

twitter.com/BoopatyMurugesh : ஊர்லேர்ந்து ஒருத்தன், `சென்னையில ஒரு மாசம் தங்க 200 ரூபாய் வாடகையில நல்ல  ஏ.சி ரூம் பாரு’ங்கிறான். வரட்டும் 200 ரூபாயை வாங்கிட்டு  ஏ.டி.எம் ரூமைக் காட்டிவிடுறேன்.

p101a.jpg

facebook.com/Mark Zuckerberg :
செக்கிங்... லுக்கிங்! (மனைவி பிரிசில்லாவுடன் மார்க் ஸூக்கர்பெர்க்)

p101.jpg

facebook.com/AR Rahman :
ஜப்பானில்  ஏ.ஆர்.ரஹ்மான் (இசைக் குழுவினருடன்)


twitter.com/dlakshravi: நாட்டுல என்ன அநியாயம் நடந்தாலும், ஜெயா செய்தியில் மட்டும் அவங்க அம்மா  திட்டங்கள் போட்டுட்டே இருப்பாங்க... மக்கள் நன்றி சொல்லிட்டே இருப்பாங்க!

twitter.com/Kannan_Twitz: ஹோட்டலில் இலையில் ஊத்துற ரசம், மோர் எல்லாத்தையும் லாகவமா தன் கையால் நாலா பக்கமும் அணைகட்டுறாங்க பாரு... அவங்க எல்லாருமே ஒரு நிமிட சிவில் இன்ஜினீயர்தான். #EngineersDay

twitter.com/manipmp: ஒவ்வொரு புது மொபைலுக்குப் பின்னாலும் பழைய மொபைலை வாங்கிக்கொள்ளும் மனைவி இருக்கிறாள்.

twitter.com/Kounter_twitts : `மகிழ்ச்சி’ங்கிறது எப்படி இருக்கணும்னா, ஸ்கூலில் கடைசி பெல் அடிக்கிறப்ப குழந்தைகளுக்கு வருமே அது மாதிரி இருக்கணும்.

twitter.com/RazKoLu:  காவிரிப் பிரச்னையில் தமிழக முதலமைச்சரின் அணுகுமுறை சிறப்பாக இருந்தது -பொன்னார். # தி.மு.க-காரன்கூட இந்த அளவுக்கு அம்மாவைக் கலாய்ச்சது இல்லை.

twitter.com/Kozhiyaar : பேட்டரி தீராத ஒரே ரிமோட் கன்ட்ரோல் `மனைவியின் கண்கள்' மட்டும்தான்!

p101b.jpg

facebook.com/Keerthi  Suresh :
`பைரவா' பவர் கூட்டணி! (சதீஷ் மற்றும் கீர்த்தி சுரேஷுடன் விஜய்)

p101c.jpg

facebook.com/Sania Mirza : வொர்க்அவுட் ஃப்ரீக்! (சானியா மிர்ஸா)


twitter.com/unmaivilambbi: பேரிரைச்சல் பழகிவிட்டது; நிசப்தம் பயமூட்டுகிறது!

twitter.com/thoatta : சிலபேர் கல்யாணம் பண்ணி நாலு வருஷத்துல எல்லாமே முடிச்சு, டிவோர்ஸே வாங்கிடுறானுங்க. நம்மளால தனி ரேஷன் கார்டுகூட வாங்க முடியல :-/

facebook.com/aruna.raj.35: பொறுமை, கடல் அளவு எல்லாம் பெரிதாக இருக்கத் தேவை இல்லை. நமக்கு வரும் கோபத்தைவிட துக்ளியூண்டு பெரிதாக இருந்தாலே போதும். # பட்டதில் புரிந்தது!

facebook.com/aruna.raj.35 : ``யோஹான்... ஏன் கண்ணா க்ளாஸ்ல நிறையப் பேசிட்டே இருக்கியாமே? மிஸ் இன்னைக்கு மறுபடியும் சொன்னாங்க.’’

``நான் பேசறப்ப எல்லாம் மிஸ் ஏன் என்னை வாட்ச் பண்றாங்கனு எனக்குப் புரியவே இல்லம்மா?!’’

vikatan

  • Replies 11.3k
  • Views 1.5m
  • Created
  • Last Reply
  • தொடங்கியவர்

14445084_1139121036136589_32831101235471

அவுஸ்திரேலிய அணியின் முன்னாள் தலைசிறந்த துடுப்பாட்ட வீரர்களில் ஒருவரும் தற்போதைய நேர்முக வர்ணனையாளர்களில் மிகச் சிறந்தவராகக் கருதப்படுபவருமான இயன் சப்பலின் பிறந்தநாள்.
Happy Birthday Ian Chappell

 
  • தொடங்கியவர்

அற்புதம், ஆச்சரியம், ஆனந்தம்-முதல் பரிசு இந்தியருக்கு

 

லண்டன் உயிரியல் கழகத்தின் 2016ஆம் ஆண்டுக்கான போட்டியில் வென்ற படங்கள்

விசிறிவகை பச்சோந்தி

Arctic terns in flight

Kingfisher catching a fish

King Penguins

 

A hippo at a watering hole at sunset

 

A juvenile baboon

Monkey

A toad

 

 

 

 

BBC

  • தொடங்கியவர்

 

Jaffna Boy

  • தொடங்கியவர்

14480624_1139120052803354_21039510426380

டென்னிஸ் உலகின் மாபெரும் அரசி..
வெற்றிகளைக் குவிக்கும் பெரு வீராங்கனை செரெனா வில்லியம்ஸின் பிறந்தநாள் இன்று
Happy Birthday Serena Williams

செரினா வில்லியம்ஸ்

 

 
Serena_2926523f_3023778f.jpg
 

அமெரிக்க டென்னிஸ் வீராங்கனை

*உலகப் புகழ்பெற்ற அமெரிக்க டென்னிஸ் வீராங்கனை செரினா வில்லியம்ஸ் (Serena Williams) பிறந்தநாள் இன்று (செப்டம்பர் 26). அவரைப் பற்றிய அரிய முத்துக்கள் பத்து:

*அமெரிக்காவின் மிச்சிகன் மாநிலம் சாகினோ நகரில் (1981) பிறந்தவர். தந்தை விவசாயி. டென்னிஸ் ஆட்டத்தால் உலகப்புகழ் பெறுவதோடு, நிறைய சம்பாதிக்கவும் முடியும் என்பதால், வீனஸ், செரினா ஆகிய 2 மகள்களையும் டென்னிஸ் வீராங்கனைகளாக்க முடிவுசெய்தார்.

*புத்தகங்கள், வீடியோக்கள் உதவியுடன் குழந்தைப் பருவத்திலேயே அவர்களுக்கு டென்னிஸ் கற்றுக்கொடுத்தார். டென்னிஸ் கோர்ட்டிலும் வீட்டிலும் அப்பாவுடன் சேர்ந்து பயிற்சி பெற்றாள் 3 வயது செரினா.

*போட்டிகளில் 8 வயது முதலே வெற்றிபெறத் தொடங்கினார். கருப்பினத்தை சேர்ந்தவர் என்பதால், பல இடங்களில் கேலி, கிண்டலுக்கு ஆளானார். இவற்றையெல்லாம் கடந்து, 1991-க் குள் தான் விளையாடிய 46 போட்டிகளில் 43-ல் வெற்றி பெற்று, 10 வயதுக்கு உட்பட்டோரில் ‘நம்பர் ஒன்’ அந்தஸ்து பெற்றார்.

*1995-ல் தொழில்முறை வீராங்கனை ஆனார். 2 ஆண்டுகளில் பல வெற்றிகளைக் குவித்தார். உலகத் தரவரிசையில் முன்னணியில் இருந்த வீராங்கனைகளை வென்று உலகையே திரும்பிப் பார்க்கச் செய்தார். உலக டென்னிஸ் தரவரிசையின் 304-வது இடத்தில் இருந்து 99-வது இடத்துக்கு உயர்ந்தார். விரைவில் டாப்-10 பட்டியலிலும் இடம்பிடித்தார்.

*2002-ல் பிரெஞ்ச் ஓபன், விம்பிள்டனில் வென்றார். 2003-ல் ஆஸ்திரேலிய ஓபனில் முதல்முறையாக வென்றார். ஒரே நேரத்தில் 4 முக்கிய டைட்டில்களை வென்ற வகையில், இருமுறை ‘தி செரினா ஸ்லாம்’ பட்டம் பெற்றார்.

*தொடர் தோல்வி, காயங்களால் நீண்ட இடைவெளி, தரவரிசையில் இறங்குமுகம் என தடைகள் குறுக்கிட்டாலும், சீக்கிரமே மீண்டுவந்து, விட்ட இடத்தை பிடித்துவிடுவார்.

*ஆண்கள், பெண்களுக்கான 4 ஒற்றையர் கிராண்ட்ஸ்லாம் போட்டிகளில் 6 முறை டைட்டில் வென்ற ஒரே வீராங்கனை, 20 ஆண்டுகளில் 10 கிராண்ட்ஸ்லாம் ஒற்றையர் டைட்டில் வென்ற ஒரே வீராங்கனை, ஹார்ட்கோர்ட் கிராண்ட்ஸ்லாம் ஒற்றையர் போட்டிகளில் 12 டைட்டில் வென்றவர், ஆஸ்திரேலிய ஓபனில் அதிக டைட்டில் வென்ற ஒரே வீராங்கனை என பல பெருமைகளுக்கு சொந்தக்காரர்.

*308 வெற்றிகளை ஈட்டியதன் மூலம் அதிக கிராண்ட்ஸ்லாம் வெற்றிகளைக் குவித்தவர், சகோதரி வீனஸ் வில்லியம்ஸுடன் சேர்ந்து அதிக எண்ணிக்கையில் கிராண்ட்ஸ்லாம் இரட்டையர் டைட்டில் வென்றவர், உலகின் ‘நம்பர் ஒன்’ வீராங்கனையாக 309 வாரங்களுக்கு மேல் தொடர்ந்தவர், ஒரு ஒற்றையர் மற்றும் 3 இரட்டையர் ஒலிம்பிக் போட்டிகளில் தங்கம் வென்றவர் என நீள்கிறது இவரது சாதனைப் பட்டியல்.

*நேர்த்தியாக, வலுவாக, வேகமாக சர்வீஸ் போடுவதில் வல்லவர். எதிரியின் சர்வீஸை திடமாக எதிர்கொண்டு, அதிரடியாக திசைமாற்றி விடுவதில் நிபுணர். உலக டென்னிஸ் வீராங்கனைகளில் அதிகம் சம்பாதிப்பவர் என்ற சாதனையையும் இந்த ஆண்டு எட்டினார்.

*‘அனரேஸ்’ என்ற பேஷன் நிறுவனம் நடத்துகிறார். தன் பெயரில் அறக்கட்டளை தொடங்கி, கல்வி உதவித்தொகை, நலத்திட்டங்களை வழங்குகிறார். ஆப்பிரிக்காவில் பல பள்ளிகளைத் தொடங்கியுள்ளார். டென்னிஸ், சமூகசேவை இரண்டிலும் தடம் பதித்துவரும் செரினா வில்லியம்ஸ் இன்று 35 வயதை நிறைவு செய்கிறார்.

tamil.thehindu

  • தொடங்கியவர்

 

புட்டு அவித்த சிறுவன்..tw_blush:

  • தொடங்கியவர்
பிள்ளைகள் உயிரும் உணர்வும் உள்ளவர்கள்
 
 

article_1474952013-la-competencia-entre-ஒரு மாணவனுக்கு நல்ல ஆசான் கிடைக்காதுவிடின், அவனுக்கு கல்வியில் வெறுப்பு வந்துவிடும். 

பல மாணவர்கள் தனக்குப் பிடிக்காத பாடத்தைப் பின்னர் வேறு ஓர் ஆசிரியர் மூலம் கற்று, அதே பாடத்தில் சிறப்புத் தேர்ச்சி பெற்றமையும் கண்கூடு. 

எனவே, வளரும் பயிர்களில் கல்வியை உயர்த்திட அர்ப்பணிப்புடன் ஆசிரியர்கள் செயலாற்றுவது அவர்களின் கட்டாய கடமையாகும். 

பிள்ளைகள் உயிரும் உணர்வும் உள்ளவர்கள். அவர்களுடன் ஜடப்பொருள்களுடன் பழகுவதுபோல் பழகக்கூடாது. இந்த ஆத்மாக்களை நேயத்துடன் அணுகுதல் அவசியம்.  

நல்ஆசிரியர் கடவுளின் கிருமையைப் பெறுகின்றார். 

-

Edited by நவீனன்

  • தொடங்கியவர்

ஜாகிங் 10 பலன்கள்!

--> மனநலம்
ஜாகிங் செய்யும்போது மகிழ்ச்சியைத் தூண்டும் ரசாயனங்கள் சுரந்து, மகிழ்ச்சியான மனநிலையை ஏற்படுத்துகிறது. இதனால், மனநலம் மேம்படுகிறது.

--> உடல் எடை குறைகிறது
ஒரு மணி நேரம் ஜாகிங் செய்வதால், உடலில் உள்ள கொழுப்பு செல்கள் வேகமாக எரிக்கப்பட்டு, ஃபிட்டான தோற்றம் கிடைக்கிறது.

--> நுரையீரல்
நுரையீரல், மூச்சுக்குழாய் மற்றும் மூச்சு அறைகளைப் பலப்படுத்துகிறது. ஆஸ்துமா பிரச்னைக்கான வாய்ப்பைக் குறைக்கிறது.

--> சீரான ரத்த அழுத்தம்
ஜாகிங் செய்யும்போது, உடலில் உள்ள ரத்தக் குழாய்கள் நன்கு விரிந்துகொடுக்கின்றன. இது, ரத்தக் குழாய்கள் ஃபிட்டாக இருக்கவும், ரத்த ஓட்டம் சீராகப் பாயவும் வழிவகுத்து, உயர் ரத்த அழுத்தத்தைத் தவிர்க்கிறது.

--> வலிமையான நோய் எதிர்ப்பு மண்டலம்
உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது. இதனால், தொற்றுவியாதிகள் எளிதில் பாதிக்காது.

--> எலும்பு அடர்த்தி அதிகரிக்கிறது
ஜாகிங் செய்யும்போது, உடலில் உள்ள கால்சியம் எலும்புகளால் நன்றாகக் கிரகிக்கிப்படுகிறது. இதனால், எலும்பு அடர்த்தி அதிகரிக்கிறது. எலும்பு தொடர்பான நோய்கள் வருவது தடுக்கப்படுகிறது.

--> உடல் வலிமை அதிகரிக்கிறது
கால், தொடை, இடுப்பு போன்ற கீழ்ப் பகுதிகளின் வலிமை அதிகரிக்கிறது. தசைநார்கள் (லிகமென்ட்) வலிமை பெறுகின்றன.

--> வலுவான மூட்டுக்கள்
எலும்புகள் மற்றும் எலும்புகளை இணைக்கும் தசைநார்களை வலிமையாக்குகிறது. இதனால், சாதாரண விபத்துக்களினால் ஏற்படும் எலும்பு முறிதல், மூட்டுப் பிரச்னை போன்றவை தவிர்க்கப்படுகின்றன.

--> ஆளுமை அதிகரிக்கிறது
ஓட்டப்பயிற்சி மற்றும் ஜாகிங், தனிநபர்களின் ஆளுமையை, தன்னம்பிக்கையை அதிகரிப்பதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. இது உங்களை நீங்களே கட்டுக்கோப்பாக வைத்துக்கொள்ள உதவுகிறது.

--> சர்க்கரை நோய்கான வாய்ப்புக் குறைகிறது
ரத்தத்தில் சர்க்கரை அளவு கட்டுக்குள் இருக்க உதவுகிறது. சர்க்கரை நோய் வருவதற்கான வாய்ப்பைக் குறைக்கிறது.-

vikatan

  • தொடங்கியவர்

14424940_1139928572722502_62817527818168

 
 
தமிழ்த்திரைப்பட நடிகை சந்தியாவின் பிறந்த நாள்
  • தொடங்கியவர்

பயணத்தினை இலகுவாக்க அறிமுகமாகிறது பறக்கும் கார்

 

 

பறக்கும் கார்களை 2018 ஆம் ஆண்டில் அறிமுகப்படுத்த இருப்பதாக ஸ்லோவாக்கியா நாட்டைச் சேர்ந்த ஏரோ மொபில் எனும் நிறுவனம் தெரிவித்துள்ளது.

இருவர் மட்டும் அமர்ந்து பயணிக்கும் வகையில் உருவாக்கப்பட்டுள்ள பறக்கும் காருக்கு ஏரோ மொபில் 3.0 என்று பெயரிடப்பட்டுள்ளது. 

auto_mobil2__large.jpg

வீதியில் பயணிக்கும் சாதாரண கார் போன்று காட்சியளிக்கும் இந்த கார், ஒரு ஆளியினை இயக்குவதன் மூலம் இறக்கைகளைக் கொண்டதாக மாறும். இதன்மூலம் வானில் பறக்கவும் முடியும் என்று ஏரோ மொபில் நிறுவனம் தெரிவித்துள்ளது.

விமானத்தைப் போல் இல்லாமல் எந்தவொரு சமதளப்பரப்பிலும் இந்த காரைத் தரையிறக்கவும், அந்த பரப்பிலிருந்தே வானில் பறக்கவும் முடியும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 6 மீற்றர் நீளமும், 2.4 மீற்றர் அகலமும் கொண்டள்ளது.

auto_mobil3__large.jpg

குறித்த கார் தரையில் அதிகூடிய வேகமாக மணிக்கு 160 கிலோமீற்றரும், பறக்கும் போது மணிக்கு 320 கிலோமீற்றர் வேகத்தில் பயணிக்கும் என்று தெரிவித்துள்ளது.

இதன்மூலம் நீண்டதூரப் பயணங்களுக்கு ஆகும் நேரத்தைக் குறைக்கவும், போக்குவரத்து நெரிசலிலிருந்து தப்பிக்கவும் முடியும் என்று ஏரோ மொபில் நிறுவனம் கூறியுள்ளது.

auto_mobil5__large.jpg

auto_mobil4__large.jpg

54516470_.jpg

http://www.virakesari.lk

  • தொடங்கியவர்

14463116_1239926922732762_47647703384822

நாகேஷ் பிறந்த தின சிறப்பு பகிர்வு - 25 சிரிப்பின் நினைவுகள்..

நாகேஷ்... மாறும் உடல் மொழி... ஏறி இறங்கும் குரல் ஜாலம்... தமிழர்களின் 40 ஆண்டு கால சாயங்காலச் சந்தோஷம். ஈர்க்குச்சி உடம்பால், சிரிப்புத் தீக்குச்சி கிழித்தவர்..!

* பூர்வீகம் மைசூர். ரயில்வே ஸ்டேஷன் மாஸ்டரான தந்தை ஊர் ஊராகப் பணியாற்ற, குடும்பம் மட்டும் தமிழ்நாட்டில் தாராபுரத்தில் இருந்தது. தாராபுரம் பீமராய அக்ரஹாரம்தான் நாகேஷ் வளர்ந்த தொட்டில்!

* பெற்றோர் கிருஷ்ணராவ் - ருக்மணி வைத்த பெயர் நாகேஸ்வரன். பின்னாளில் நாகேஷ் ஆனது. வீட்டுச் செல்லப் பெயர் - குண்டப்பா!

nagesh_vc1%281%29.jpg

* பள்ளி நாடகத்தில் நாகேஷுக்கு எமன் வேஷம். வசனம் பேசிக்கொண்டே பாசக் கயிற்றினை வீச வேண்டும். இவர் வீசிய பாசக் கயிறு எசகுபிசகாக ஒருவர் கழுத்தில் போய் விழுந்தது. பள்ளித் தலைமை ஆசிரியரின் கழுத்து அது!

* இளம் வயதில் வீட்டில் கோபித்துக்கொண்டு ஹைதராபாத்துக்கு வந்தவர். ரேடியோ கடை, ஊறுகாய் கம்பெனி எடுபிடி, மில்லில் கூலி வேலை என்று பல வேலைகள் பார்த்திருக்கிறார்!

* முதன்முதலில் நாடகத்தில் வயிற்று வலி நோயாளியாக நடித்தார். அன்று அவரதுநடிப்பைப் பாராட்டி, முதல் பரிசை வழங்கியவர் எம்.ஜி.ஆர்!

* கோயம்புத்தூரில் பி.எஸ்.ஜி. ஆர்ட்ஸ் காலேஜில் படித்தபோது, அடுத்தடுத்து மூன்று தடவை அம்மை போட்டது. முகம் முழுக்க அம்மைத் தழும்புகளை வைத்துக்கொண்டு பலரது முகத்தை மலரவைத்தது அவரது நடிப்பின் வெளிச்சம்!

nagesh_vc4.jpg

* ஹோட்டலில் தங்கியிருந்த நாகேஷை அவரது நாடக நடிப்பின் மீது கொண்ட காதலால்... தன் வீட்டில் தங்குவதற்கு ஏற்பாடு செய்து தந்தவர் நடிகர் பாலாஜி!

* இவர் மனைவி பெயர் ரெஜினா. ஆனந்த் பாபு, ரமேஷ் பாபு, ராஜேஷ் பாபு என்று மூன்று மகன்கள். மூன்று மகன்களும் வெவ்வேறு மதங்களில் திருமணம் செய்துகொண்டபோது மனமார ஆசி வழங்கியவர்!

* முதல் படம் 'தாமரைக்குளம்' ஷூட்டிங்கின்போது, சரியாக நடிக்கவில்லை என்று உதவி இயக்குநர்கள் நாகேஷைக் கடிந்தனர். உடன் நடிக்க வந்த எம்.ஆர்.ராதாவிடம் மனம் வெதும்பி நடந்ததைச் சொன்னார் இவர். 'மத்தவன் எல்லாம் நடிகன், நீ கலைஞன்... கவலைப்படாம நடி' என்றாராம் ராதா!

* 'அபூர்வ ராகங்கள்' படத்தில் கண்ணதாசனுக்கு வைத்தியம் பார்க்க டாக்டராக வருவார் நாகேஷ். கண்ணதாசனிடம் ஒரு கவிதை சொல்லச் சொல்வார் இவர். கவிதை சொன்ன கண்ணதாசனிடம் பீஸ் கேட்பார் இவர். 'இதுதான்யா ஃபீஸ்' என்பார் அவர்!

* முறைப்படி யாரிடமும் நடனம் கற்றுக்கொண்டது இல்லை. யாரையும் காப்பி அடித்ததும் இல்லை. ஆனால், நடனத்தில் 'நாகேஷ் பாணி' என்கிற தனி முத்திரையைக் கொண்டுவந்தார்!

* எம்.ஜி.ஆருடன் 45 படங்களில் நடித்த நகைச்சுவை நடிகர் இவர்தான். அதில், 19 படங்களில் இவருக்கு ஜோடி மனோரமா!

nagesh_vc5.jpg

* 'திருவிளையாடல்' படத்தின் காட்சிகளை ரஷ் பார்த்த சிவாஜி, 'நாகேஷின் நடிப்பு பிரமாதம். தயவுசெய்து எதையும் கட் பண்ணிடாதீங்க' என்று டைரக்டர் ஏ.பி.நாகராஜனிடம் கேட்டுக்கொண்டாராம்!

* நகைச்சுவையில் மட்டுமல்ல; 'நீர்க் குமிழி' குணச்சித்திரம், 'சர்வர் சுந்தரம்' ஹீரோ, 'அபூர்வ சகோதரர்கள்'ல் வில்லன், 'மகளிர் மட்டும்' பிணம் என்று வெளுத்துக்கட்டியவர்!

* 'அபூர்வ ராகங்கள்' ஷூட்டிங். பாலசந்தர் ஆக்ஷன் சொல்லிவிட்டார். நாகேஷ், கோப்பையைக் கையில் எடுத்து சுவரில் தெரிந்த தன் நிழலைப் பார்த்து, 'சியர்ஸ்' என்று சொல்ல... படம் பார்த்தவர்கள் பாராட்டினார்கள். நாகேஷின் டைமிங் சென்ஸுக்கு இது ஒரு சாம்பிள்!

* இவரை எப்போதும் 'டேய் ராவுஜி' என்று செல்லமாக அழைப்பார் பாலசந்தர்!

* டைரக்ஷன் துறையையும் விட்டுவைக்கவில்லை இவர். 'பார்த்த ஞாபகம் இல்லையோ' இவரது டைரக்ஷனில் வெளிவந்த திரைப்படம்!

* பணம் விஷயத்தில் நாகேஷ் கறார் பேர்வழி என்று சினிமா உலகில் ஒரு பேச்சு உண்டு. ஆனால், 'எவ்வளவு பணம் இருந்தாலும் சாப்பிட ஒரு வயிறு தானே' என்று சொன்ன எளிமையான கலைஞன் என்பதுதான் நிஜம்!

* 'சீட்டாட்டம், டேபிள் டென்னிஸ், தத்துவம், நடனம், நடிப்பு என்று எதைச் செய்தாலும் உச்சம் தொட்ட மகா கலைஞன்' என்று இவரைப் புகழ்ந்தவர் கவிஞர் வாலி!

nagesh_vc6.jpg

* 'நாகேஷ் என் வாழ்வில் நட்சத்திரமாக, மூத்த அண்ணனாக, அறிவுரை சொல்லும் நண்பனாக, அறிவுரை கேட்கும் அப்பாவியாக, சொல்லிக்கொடுத்த ஆசானாக, சொல் பேச்சுக் கேட்கும் மாணவனாகப் பல பொறுப்புகளை ஏற்றிருக்கிறார்' என்று சொன்னவர் கமல்ஹாசன்!

* 'பஞ்சதந்திரம்' ஷூட்டிங். உணவு இடைவேளையில் கமல் சிக்கனை முள் கரண்டியால் குத்திக்கொண்டு இருந்தார். அருகில் இருந்த நாகேஷ் கேட்டார், 'கோழி இன்னும் சாகலையாப்பா?'

* 'தசாவதாரம்' கடைசி நாள் ஷூட்டிங்குக்கு வந்து நடித்துக் கொடுத்தவர் கடைசியாகச் சொன்ன வாக்கியம், 'என் கடைசிப் படம் நல்ல படம். I am honoured-டா கமல்!'

* தாம் வாங்கிய பரிசுகள், ஷீல்டுகள் எதையும் வீட்டு ஷோகேஸில் வைக்கும் பழக்கம் இல்லாதவர்!

* இந்தியாவின் ஜெர்ரி லூயிஸ் என்று அழைக்கப்பட்ட நாகேஷ் பிறந்தது - செப்டம்பர் 27, 1933-ல். மறைந்தது ஜனவரி 31, 2009-ல்!

* 30 ஆண்டுகளுக்கும் மேலாக, தமிழர்களைச் சிரிக்கவைத்த இந்தக் கலைஞனுக்கு 'நம்மவர்' படத்துக்காக மட்டும் தேசிய விருது கிடைத்தது!

vikatan

14434976_1139932772722082_58242103072579

நகைச்சுவை சிகரம்,தமிழ்த் திரைப்படங்களில் நகைச்சுவையை உயர்தரத்தில் பேணிய அற்புதக் கலைஞர்
நகைச்சுவைத் திலகம் நடிகர் நாகேஷ் பிறந்த தினம்

  • தொடங்கியவர்

14480691_1139917792723580_47528593585343

நியூ சீலாந்து கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவரும் அதிரடித் துடுப்பாட்ட வீரருமான பிரெண்டன் மக்கலமின் பிறந்தநாள்.
Happy Birthday Brendon McCullum

எல்லா கிரிக்கெட் ரசிகராலும் மதிப்போடு நேசிக்கப்படும் ஒரு கனவான் வீரர் மக்கலம்

  • தொடங்கியவர்
மிஸ் யுனைடெட் கொன்டினென்ட்ஸ் 2016
 

மிஸ் யுனைடெட் கொன்­டினென்ட்ஸ் அழ­கு­ரா­ணி­யாக பிலிப்­பைன்ஸின் ஜெஸ்லின் சான்டோஸ் தெரி­வு­செய்­யப்­பட்­டுள்ளார்.

 

19533_3.jpg

 

மிஸ் யுனைடெட் கொன்­டினென்ட்ஸ் 2016 அழ­கு­ராணி (Miss United Conti nents 2016) போட்டி ஈக்­கு­வ­டோரில் கடந்த வாரம் நடை­பெற்­றது. இப்­ போட்­டியில் பிலிப்­பைன்ஸைச் சேர்ந்த ஜெஸ்லின் சான்டோஸ் முத­லிடம் பெற்றார்.

 

19533_1.jpg

 

டென்­மார்க்கின் மெட் ரீஸ் இரண்­டா­மி­டத்­தையும் இந்­தி­யாவின் லோப­முத்ரா ரவுட் மூன்­றா­மி­டத்­தையும் பெற்­றனர்.

 

19533_2.jpg

 

பிரே­ஸிலின் டெய்­னரா கார்­கன்­டினி 4 ஆம் இடத்­தையும் மெக்­ஸி­கோவின் சிந்­தியா டுகே 5 ஆம் இடத்­தையும் பனா­மாவின் ரீட்டா சில்­வெஸ்ட்ரே 6 ஆம் இடத்­தையும் பெற்­றனர்.


19533_14484739_759806707491972_591839828

 

ஜெஸ்லின் சான்­டோஸின் இந்த வெற்­றிக்கு முன்­னரும் அண்மைக் காலத்தில் சர்­வ­தேச அழ­கு­ராணி போட்­டி­களில் பிலிப்­பைன்­ஸுக்கு பல முத­லி­டங்கள் கிடைத்­தன.

 

19533_14359022_757304201075556_873505461

 

தற்­போது மிஸ் யூனிவர்ஸ் 2015 அழ­கு­ரா­ணி­யாக பிலிப்­பைன்ஸின் பியா வூர்ட்ஸ்­பாச்சும் மிஸ் ஏர்த் 2015 அழ­கு­ரா­ணி­யாக பிலிப்பைன் ஸின் ஏஞ்சலியா ஒங்கும் விளங்குகின்றமை குறிப்பிடத்தக்கது.

 

metronews.lk

Edited by நவீனன்

  • தொடங்கியவர்
2006 : செப்டெம்பர் 27 ஆம் திகதியை தனது பிறந்த தினமாக கூகுள் நிறுவனம் கொண்டாட ஆரம்பித்தது
 

வரலாற்றில் இன்று..... 

செப்டெம்பர் - 27

 

1529 : ஒட்­டோமன் ராஜ்­ஜி­யத்தின் சுல்­தா­னான முதலாம் சுலை­மானின் படைகள் வியன்னா நகரை முற்­று­கை­யிட்­டன. 

 

1590 : பரி­சுத்த பாப்­ப­ரசர் ஏழாம் ஏர்பன் திருத்­தந்தை பத­வி­யேற்ற 13ஆம் நாள் இறந்தார். இவரே மிகக்­கு­று­கிய காலம் பாப்­ப­ர­ச­ராக இருந்­தவர். 

 

1821 : ஸ்பெயி­னி­ட­மி­ருந்து மெக்­ஸிகோ சுதந்­திரம் பெற்­றது. 

 

816Untitled-5.jpg1825 : உலகின் முத­லா­வது பய­ணிகள் ரயில் இங்­கி­லாந்தில் சேவைக்கு விடப்­பட்­டது. 

 

1854 : “எஸ்.எஸ். ஆர்க்டிக்" நீராவிக் கப்பல் அத்­தி­லாண்டிக் சமுத்­தி­ரத்தில் மூழ்­கி­யதில் 300 பேர் கொல்­லப்­பட்­டனர். 

 

1893 : அமெ­ரிக்­காவின் சிகா­கோவில் நடை­பெற்ற உலக சம­யங்­களின் நாடாளுமன்ற மாநாடு முடி­வ­டைந்­தது. 

 

1905 : அல்பேர்ட் ஐன்ஸ்டைன் முதற் தட­வை­யாக E=mc² என்ற சமன்­பாட்டை அறி­மு­கப்­ப­டுத்­தினார். 

 

1916 : எதி­யோப்­பி­யாவில் இடம்­பெற்ற அரண்­மனைப் புரட்­சியை அடுத்து  மன்னர் இயாசு பத­வியை இழந்தார். 

 

1928 :  சீனக் குடி­ய­ரசை ஐக்­கிய அமெ­ரிக்கா  அங்­கீ­க­ரித்­தது. 

 

1937 : “பாலிப் புலி” இனம் உல­கி­லி­ருந்து அழிந்­து­விட்­ட­தாக பிர­க­ட­னப் ­ப­டுத்­தப்­பட்­டது.  

 

1938 : ஆர்.எம்.எஸ்.குயின் எலி­ஸபெத் உல்­லாசக் கப்பல் கிளாஸ்­கோவில் வெள்­ளோட்டம் விடப்­ப­ட்டது.

 

1939 : இரண்டாம் உலகப் போரில் ஜேர்­ம­னி­யிடம் போலந்து சர­ண­டைந்­தது. 

 

1940 : ஜேர்­மனி, ஜப்பான், இத்­தாலி ஆகி­யன முத்­த­ரப்பு உடன்­பாட்டில் பேர்லின் நகரில் கையெ­ழுத்­திட்­டன. 

 

816kabul-map.jpg1959 : ஜப்­பானின், ஹொன்ஷு நகரில் இடம்­பெற்ற புயலில் 5,000 பேர் வரையில் கொல்­லப்­பட்­டனர். 

 

1961 : சியேரா லியோன் ஐ.நா.வில் இணைந்­தது. 

 

1962 : யேமன் அரபுக் குடி­ய­ரசு ஸ்தாபிக்­கப்­பட்­டது.

 

1964 : ஜோன் எஃப். கென்­ன­டியை லீ ஹாவி ஒசுவால்ட் என்­பவன் வேறு எவ­ரி­னதும் தூண்­டுதல் இன்றிக் கொலை செய்­த­தாக வாரன் ஆணைக்­குழு அறிக்கை வெளி­யிட்­டது. 

 

1977 : கன­டாவின் ஒண்­டா­ரி­யோவில் 300 மீற்றர் உயர தொலைக்­காட்சிக் கோபுரம் ஒன்றில் சிறு விமானம் ஒன்று மோதி­யதில் அதில் பயணம் செய்த அனை­வரும் கொல்­லப்­பட்­டனர். கோபுரம் இடிந்து வீழ்ந்­தது. 

 

1994 : மியன்­மாரில் இரா­ணுவ ஆட்­சியை எதிர்க்க மக்­க­ளாட்­சிக்­கான தேசிய அமைப்பை ஆங் சான் சூ கீ உரு­வாக்­கினார். 

 

1993 : அப்­கா­சி­யாவில் சுகு­மியில் ஜார்­ஜியப் பொது­மக்கள் ஆயி­ரக்­க­ணக்கில் தீவி­ர­வா­தி­களால் கொல்­லப்­பட்­டனர். 

 

1996 : ஆப்­கா­னிஸ்­தானில் முக­மது ஓமார் தலை­மை­யி­லான தலிபான் தீவி­ர­வா­திகள் காபூல் நகரைக் கைப்­பற்றி ஜனா­தி­பதி புர்­ஹா­னுதீன் ரபா­னியை ஆட்­சி­யி­லி­ருந்து விரட்­டினர். முன்னாள் ஜனா­தி­பதி முக­மது நஜி­புல்லா காபூல் நகர மின்­சாரக் கம்­பத்தில் மக்கள் முன்­னி­லையில் தூக்­கி­லி­டப்­பட்டுக் கொல்­லப்­பட்டார்.  

 

2002 : கிழக்குத் திமோர் ஐக்கிய நாடுகள் சபையில் இணைந்தது. 

 

2008 : விண்வெளியில் நடந்த முதல் சீனப் பிரஜை எனும் பெருமையை ஸாய் ஸிகாங் பெற்றார்.

 

2006 : கூகுள் நிறுவனம் செப்டெம்பர் 27 ஆம் திகதியை தனது பிறந்த தினமாக கொண்டாட ஆரம்பித்தது.

.metronews.lk

Edited by நவீனன்

  • தொடங்கியவர்

14445228_1139927472722612_65287762549650

நடிகை காயத்ரி ஜெயராமின் பிறந்த நாள்
Happy Birthday Gayathiri Jayaraman

  • தொடங்கியவர்

14440803_1239939199398201_67004180251226

தேடலுக்கு விடை கொடுக்கும் கூகுளுக்கு வயது 18!
#Google #HBDGoogle

"தேடினால் கிடைக்காதது எதுவும் இல்லை" என்று நம் முன்னோர்கள் சொன்னது, ஒரு வேளை கூகுளை கருத்தில் கொண்டோ?

நாம் கேட்கும் கேள்விகளுக்கு "தெரியாது" என்ற பதிலே சொல்லாத கூகுள் நிறுவனம் தொடங்கி 18 வருடங்கள் ஆகிவிட்டது.

செப்டம்பர் 4,1998 அன்று அமெரிக்காவின் ஸ்டான்பர்ட் பல்கலைக்கழகத்தின் மாணவர்களான லேரி பேஜும், செர்கி ப்ரின்னும் கூகுளை தொடங்கினர்.

இந்த 18 ஆண்டுகளில் கூகுள் கண்ட வளர்ச்சி, "உலகம் கூகுளுக்கு முன், கூகுளுக்கு பின்" என்று நாம் கூறும் அளவிற்கு உள்ளது.

கூகுள் டூடிலுக்கு ரசிகராய் இல்லாதவர் கிடையாது. புகழ் பெற்ற மனிதர்களின் பிறந்தநாட்களுக்கும், பண்டிகைகளுக்கும், வரலாற்று நினைவு நாட்களுக்கும் "டூடில்" செய்த கூகுளுக்கு "தன் பிறந்தநாள்" என்பது தனிக் கொண்டாட்டமே.

2005 வரை செப்டம்பர் 5, பிறந்த நாள் கொண்டாடி வந்த கூகுள், அதன் பின் செப்டம்பர் 27ஆக, தன் பதிவேட்டின் பக்கங்களில் அகவரிசைப் படுத்தும் நாளோடு தன் பிறந்த நாளை இணைத்துக் கொண்டது.

ஒரு தேடுதல் சாதனமாகத் தொடங்கி, இன்று நம் வாழ்கையின் அத்தியாவசியமான அங்கமான மாறிப்போன கூகுள், நம் சரித்திரத்தில் இருந்து அழிக்க முடியாத ஒன்று. ஏன், நம் சரித்திரத்தையே சுமக்கின்ற ஒன்று.

மேஜர் ஆனது கூகுள்! (கூகுள் டூடுல்ஸ் ஸ்பெஷல் தொகுப்பு) #Google

18.png

நம்ம கூகுளுக்கு இன்று முதல் வயசு 18 பாஸ்.. நமது தேடல் நாயகனான கூகுள் நிறுவனத்தின் 18-வது பிறந்தநாள் இன்று. தினசரி எல்லா சிறப்பு தினங்களுக்கும் தனது கூகுள் ஹோம் பேஜில் டூடுல் (Doodle)வெளியிட்டு, சிறப்பிப்பது கூகுளின் வழக்கம். இன்று தனது 18-வது பிறந்தநாளுக்கும் ஸ்பெஷல் டூடுல் வெளியிட்டுள்ளது கூகுள். வழக்கம்போல கூகுளுக்கு ஆல் ஏரியாவில் இருந்து, வாழ்த்துக்கள் குவிந்தாலும், 'எல்லாம் தெரிஞ்ச கூகுளுக்கு, அதோட பிறந்தநாள் எதுன்னே சரியாத் தெரியலையே?" என 'கலாய்' ட்வீட்களும் வந்துவிழுகின்றன. 

கூகுளின் குழப்ப வரலாறு இதுதான்!

history.png

முதன்முதலாக கூகுள் தனது நான்காவது பிறந்தநாளை 2002-ம் ஆண்டு செப்டம்பர் 27-ம் தேதி சிறப்பு டூடுல் ஒன்றை வெளியிட்டுக் கொண்டாடியது. பின், 2003-ம் ஆண்டில் தனது செப்டம்பர் 8-ம் தேதி 5-வது பிறந்தநாளைக் கொண்டாடியது. அதன் பின்னர் 2004-ம் ஆண்டில் செப்டம்பர் 7-ம் தேதி தனது 6-வது பிறந்தநாளைக் கொண்டாடியது. 2005-ம் ஆண்டில், செப்டம்பர் 26-ம் தேதி தனது 7-வது பிறந்தநாளை கொண்டாடியது. 2006-ம் ஆண்டு செப்டம்பர் 27-ம் தேதி 8-வது பிறந்தநாளை கொண்டாடியது. அதன்பிறகு இன்று வரை செப்டம்பர் 27-ம் தேதியை தனது பிறந்தநாளாக கொண்டாடுகிறது கூகுள். இதைப் படிக்கும்போதே உங்களுக்கு கண்ணைக் கட்டுதா? இந்த அளவிற்கு தனது பிறந்தநாள் கொண்டாட்டத்தின் தேதியில் குழம்பிப் போயிருந்தது கூகுள்.

 இதில் எதுதான் சரி?

 கூகுள் நிறுவனத்தின் வரலாற்றினை பார்க்கும்போது, முதன்முதலாக கூகுள் டொமைனை 1997-ம் ஆண்டு செப்டம்பர் 15-ம் தேதியை அதனுடைய நிறுவனர்கள் லாரி பேஜூம், செர்ஜி பிரினும் பதிவு செய்தனர். ஆனால், 1998-ம் ஆண்டு, செப்டம்பர் 4-ம் தேதி, கூகுள் அதிகாரப்பூர்வமான கம்பெனியாக உருவெடுத்தது. கூகுள் தனக்கென தனி ஓர் இடத்தை பிடித்த நாளைத்தான் செப்டம்பர் 27-ம் தேதியை (இன்று) அதனுடைய பிறந்தநாளாக கொண்டாடி வருகிறது. 

Chania
 

கூகுளின் 4-வது பிறந்தநாள் டூடுல்

Chania

கூகுளின் 5-வது பிறந்தநாள் டூடுல்

Flower

கூகுளின் 6-வது பிறந்தநாள் டூடுல்

Flower

கூகுளின் 7-வது பிறந்தநாள் டூடுல்

 

 

Flower

கூகுளின் 8-வது பிறந்தநாள் டூடுல்

Flower

 

கூகுளின் 9-வது பிறந்தநாள் டூடுல்

 

Flower

கூகுளின் 10-வது பிறந்தநாள் டூடுல்

Flower

கூகுளின் 11-வது பிறந்தநாள் டூடுல்

Flower

கூகுளின் 12-வது பிறந்தநாள் டூடுல்

Flower

 

 

கூகுளின் 13-வது பிறந்தநாள் டூடுல்

Flower

 

  Flower

கூகுளின் 15-வது பிறந்தநாள் டூடுல்

 

Flower

 

கூகுளின் 16-வது பிறந்தநாள் டூடுல்

Flower

 

கூகுளின் 17-வது பிறந்தநாள் டூடுல்

Flower

கூகுளின் 18-வது பிறந்தநாள் டூடுல்

 

இன்றுடன் 18 வயதை நிறைவடைந்த கூகுள், தற்போது இணையத்தின் முடிசூடா மன்னனாகத் திகழ்கிறது. நிகழ்காலத்தை மட்டுமே, கருத்தில் கொள்ளாமல் எதிர்காலத்திற்கும் சேர்த்து சிந்திப்பது கூகுளின் ஸ்டைல். மெயில், மேப்ஸ், வீடியோ, இசை, கேம்ஸ் என நாம் இன்று பயன்படுத்தும் பெரும்பாலான சேவைகள் கூகுள் நிறுவனத்துக்கு சொந்தமானதே! இது போல வருங்காலங்களில் இணையத்தில், இன்னும் நிறைய சர்ப்ரைஸ்களை கூகுள் தரலாம். #HBDGoogle

vikatan

  • தொடங்கியவர்

14517612_1139925359389490_27343712302965

நியூசிலாந்து கிரிக்கெட் அணியின் முன்னாள் சகலதுறை வீரர் கவின் லார்சனின் பிறந்தநாள்
Happy Birthday Gavin Larsen

 
  • தொடங்கியவர்

உலக சுற்றுலா தினம்!!!!

TOU_1.jpg


சுற்றுலா…. சுற்றுலா செல்ல விரும்பாத மனிதர்கள் எவரும் இருக்கமாட்டார்கள். இன்று மனிதன் நிலாவுக்கும் சுற்றுலா செல்ல தயாராகிவிட்டான். உலக சுற்றுலா அமைப்பின் சொற்பொருள் விளக்கத்தின் படி வழக்கமான இடத்தை விட்டு வேறு ஒரு இடத்துக்கு ஓய்வு அல்லது மற்ற ஏனைய நோக்கங்களுக்காக சென்று தங்கி வருவது சுற்றுலா என்று கூறப்படுகிறது. ஆனால், நமக்கு சுற்றுலா என்ற வார்த்தை வெறும் பயணம் என்ற சொல்லோடு மட்டும் முடிவு பெற்றுவிடாது. நண்பர்களோடு போனது, சின்ன வயதில் உறவினர்களோடு சென்ற சுற்றுலா என நம் வாழ்வின் ஏகப்பட்ட ஞாபகங்களும், சங்தோஷங்களும் நிறைய இருக்கும்!!! சொல்லும்போதே பலருக்கும் சில நினைவுகள் வந்திருக்கும்….. இதெல்லாம் ஏன் இப்போ என யோசிப்பவர்கள் கவனத்திற்கு…….இன்று உலக சுற்றுலா தினம்.

எதற்காக சுற்றுலா (தினம்) தெரியுமா?

சுற்றுலா தினத்தின் முக்கிய மேற்கோள், சுற்றுலா மூலம், பொருளாதார அபிவிருத்தி, சர்வதேச புரிந்துணர்வு, சமாதானம் ஆகியவற்றை மேம்படுத்துதலும் மனித குலம் முழுவதும் அடிப்படைச் சுதந்தரத்தை அடைவது குறித்த அறிவுகளை பெறுவதும் தான்.

சுற்றுலா தினம்:

சுற்றுலாவின் முக்கியத்துவத்தை வலியுறுத்தும் நோக்கிலும், சுற்றுலாவில் நாட்டின் பொருளாதாரமும் உண்டு என்பதை விவரிக்கும் நோக்கிலும் உலக சுற்றுலா தினம் கொண்டாடப்படுகிறது. உலகில் உள்ள பல்வேறு நாடுகள் சுற்றுலாவை தங்களது கலாச்சாரத்திற்குள் வைத்துள்ளன. சுற்றுலா மூலம் மனித குலத்தை மேம்படுத்தும் வகையில், செப். 27ம் தேதியை உலக சுற்றுலா தினமாக 1970ம் ஆண்டு ஐ.நா.சபை அங்கீகரித்து அறிவித்தது. அவ்வகையில் உலக சுற்றுலா தினம் உலக சுற்றுலா நிறுவனத்தின் (WTO) ஆதரவில் 1980ல் இருந்து கொண்டாடப்பட்டு வருகிறது.  அதன் பின்னர் தான் சுற்றுலாவுக்கான தினம் என்று ஒன்று தனியாக கொண்டாடப்படுகிறது. இப்போது சுற்றுச்சூழல் சுற்றுலா, பாரம்பரிய சுற்றுலா, கலாச்சார சுற்றுலா, கல்வி சுற்றுலா என பல வகைகளாகப் பிரிந்து வளர்ந்துள்ளது.

TOU_3.jpg

சுற்றுலாத்துறை-பொருளாதாரம்:

உலகின் மிகப்பெரிய துறையாக விளைவது நம் சுற்றுலாதுறை தான். உலகின் இரண்டாவது மிகப்பெரிய தொழில் சுற்றுலா. போக்குவரத்துறை, உணவுத்துறை, இடவசதி, ஓய்வு மற்றும் கேளிக்கை என 5 துறைகளை சார்ந்து விளங்குகிறது சுற்றுலா துறை. வளரும் நாடுகளுக்கு மிகப்பெரிய பலம் சுற்றுலா தான். 2010ன் கணக்குப்படி 940 மில்லியன் சர்வதேச சுற்றுலா பயணங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. 2009ல் ஏற்பட்ட பொருளாதார மந்தத்தின் காரணமாக 2008ன் இரண்டாம் பாதியிலிருந்து 2009ன் இறுதிவரை சரிவைக் கண்டது. சுற்றுலாத்துறை பல உலகநாடுகளின் முக்கிய தொழில்துறையாக இன்றளவும் இருக்கிறது

‘கண்கவர் வரிசையில் நாமில்லை’ ?!!! :

மூன்றாம் உலக நாடுகளின் சுற்றுலா பெரும் வருவாய் ஈட்டித்தரும் துறையாகப் பார்க்கப்படுகிறது. சுற்றுலாவுக்கு அடிப்படையானது சுற்றலாடாகும். திட்டமில்லாத கட்டுபாடில்லாத சுற்றுலா என்பது சுற்றாடலில் மிக மோசமான விளைவுகளை ஏற்படுத்தும். நாடுகள் ஒவ்வொன்றும் ஒவ்வொரு ஆண்டை எடுத்துக்கொண்டு அந்த ஆண்டு முழுவதும் தங்களது நாட்டின் சுற்றுலாத் துறையை மேம்படுத்தும் வழக்கமுறை ஒன்று உள்ளது. சென்ற ஆண்டு அதிக வெளிநாட்டு சுற்றுலா பயணிகளை கவர்ந்த நாடுகள் என்ற பட்டியல் ஒன்று வெளியிடப்பட்டது. இதில் சோகம் என்னவென்றால் அந்த பட்டியலில் இந்தியா இல்லவே இல்லை மக்களே! 

TOU_2a.jpg

ஸ்பேஸ் போர்ட்க்கு ரெடியாகிறது உலகம்:

தற்போது விஞ்ஞான ஆராய்ச்சிகளில் நடந்துவரும் முன்னேற்றத்தை பார்க்கும்போது, இன்னும் சில காலங்களில் சுற்றுலா பயணிகளை விண்ணுக்கு சுமந்து செல்ல ஏற்பாடுகள் நடந்து வருகிறது. இந்த திட்டதிற்கு ஸ்பேஸ் போர்ட் அமெரிக்கா என பெயரிட்டுள்ளனர். இந்த திட்டம் வெற்றிபெற்றால், நாம் கற்பனையிலும் நினைக்கமுடியாத ஒரு பயணம் சாத்தியம் ஆகும். யாருக்கு தெரியும்? வருங்காலத்தில் விண்வெளிக்கான சுற்றுலா தினம் கொண்டாடினாலும் ஆச்சர்யப்படுவதற்கு இல்லை!!!!!

‘பணம், நேரம்’ – அவசியம்:

PACA வில் பணியாற்றும் முக்கிய அதிகாரி திரு.லக்ஷ்மன் அவர்கள் கூறும்போது, “சுற்றுலாவுக்கு அடிப்படையாக இரண்டு தேவைகள் இருக்கின்றன. ஒன்று, பணம். மற்றொன்று, நேரம். பணமிருக்கும் பலருக்கு நேரம் இருப்பதில்லை. நேரம் இருக்கும் பலருக்கு பணம் இருப்பதில்லை” என்கிறார். இது கூட நம் நாடு  லிஸ்ட்டில் இல்லாததற்கு காரணியாக இருக்கலாம்.

vikatan

ஒரு பயணம் என்ன செய்யும்?! #WorldTourismDay

" உலகம் ஒரு புத்தகம். பயணிக்காதவர்கள் புத்தகத்தின் ஒரு பக்கத்தை மட்டுமே படிக்கிறார்கள்..."    - செயின்ட் அகஸ்டின்.

tra.png

 

பறக்கும் பறவையில் இருந்து... ஊர்ந்து செல்லும் புழுக்கள் வரை உலகில் அத்தனை ஜீவராசிகளுக்கும் இருக்கும் பொதுவான விஷயங்களில் ஒன்று பயணம்... ஊர் சுற்றுதல் நமக்குப் புது இடங்களின் மூலம் புத்துணர்ச்சியை அளிப்பதோடு மட்டுமல்லாமல், பல புது மனிதர்களை அறிமுகம் செய்து வைக்கிறது. அந்த மனிதர்கள் நம் வாழ்வின் முக்கிய உறவுகளாக மாறும் வாய்ப்பையும் ஏற்படுத்துகின்றது. கடந்த கால தொடர்பும், எதிர்கால உத்திரவாதமும் அல்லாத பயணத்தின் நிகழ்கால உறவுகள் உன்னதமானவையே... அப்படி நான் மேற்கொண்ட ஒரு பயணம்... அதில் நான் சந்தித்த... சம்பாதித்த சில மனிதர்கள்: 

கொடைக்கானலில் இருந்து மூணாருக்கு பொதுப் போக்குவரத்து போகமுடியாத காட்டுப்பாதை ஒன்று இருக்கிறது. காட்டிற்குள் இருக்கும் இரண்டு கிராமங்கள்... அவர்களுக்கான ஒரே போக்குவரத்து நாட்டுக் குதிரைகள் மட்டுமே. குதிரைகளைத் தவிர எதுவும் போக முடியாத அந்தப் பாதையில், வண்டியில் செல்ல நானும், என்னுடைய சில நண்பர்களும் முடிவெடுத்துக் கிளம்பினோம். மாலை நேரம்... மழை பெய்யத் தொடங்கியது, மண்...சேறானது. அடர்ந்த காடு... வண்டிகளை நகர்த்த முடியவில்லை... பாதை தெரியவில்லை...இடையில் மிருகங்களின்  சத்தங்கள். வண்டியை அப்படியே நிறுத்திவிட்டு சில தூரம் நடந்தோம். தூரத்தில் சில குடிசைகள் தெரிந்தன. சிறு பள்ளத் தாக்கில் இருந்த அந்தக் குடிசையின் கதவுகளைத் தட்டினோம். கரண்ட் வசதியில்லாத அந்தக் குடிசையில் இருந்து ஒரு அண்ணன் வந்தார். நாங்கள் சிக்கிக் கொண்ட கதையை அவரிடம் சொன்னோம். வேறு எந்தக் கேள்வியையும் அவர் கேட்கவில்லை. உடனடியாக வீட்டினுள் அனுமதித்தார். 

"சாப்பிட்டீங்களா???"

"சாப்பிட்டுவிட்டோம்..." பொய் சொன்னோம்.

"சும்மா பொய் சொல்லாதீங்க... இந்தக் காட்டுக்குள்ள வந்து என்னத்த சாப்பிட்டிருப்பீங்க... இருங்க பத்தே நிமிஷம் சோறாக்கி தர்ரேன்..."
கொடூர பசியில் இருந்த எங்களுக்கு அந்த சாம்பார் சாதம் அமிர்தமாக இருந்தது. படுக்கைக்கு வசதி செய்து கொடுத்தார்கள். அந்தக் குடிசையில் ஒரு அறை. ஒரு சமையலறை. அவர்கள் சமையலறையில் படுத்துக் கொண்டு எங்களை வசதியாக படுக்க வைத்தார்கள். 
காலை விடிந்தது... சூரியன் வரவில்லை...குடிசையில் இருந்து நான் வெளியில் வந்தேன்...நான்கு பக்கங்களும் மலைகள் சூழ்ந்த ஒரு பள்ளத்தாக்கு... சில இடங்களில் நிலம் சமன் செய்யப்பட்டு, காய்கறிகள் பயிரிடப்பட்டிருந்தன. மூன்று குதிரைகள், இரண்டு நாய்கள், இரண்டு பூனைகள் , நான்கு மாடுகள் என ஆங்காங்கே இவர்களின் வளர்ப்புப் பிராணிகள். பீன்ஸ்களை அறுவடை செய்து கொண்டிருந்த அவர் வந்தார்... நேற்றைய இரவு அவர் முகத்தை சரியாகப் பார்க்க முடியவில்லை. சுருள் முடி, திடமான உடல் கட்டமைப்பு, தலையில் துண்டு, காலில் ரப்பர் ஷூக்கள்... கண்ணன் அண்ணா...வயது நிச்சயம் 35ற்கு கீழ் தான். நிறைய பேசினோம். இரண்டு நாட்கள் அங்கேயே தங்கினோம்... அவருடன் சேர்ந்து விவசாய வேலைகளைக் கவனித்தோம். முதலில் அதிக பூச்சிக் கொல்லிகளை உபயோகப்படுத்திக் கொண்டிருந்தவர், பின்பு ஒரு சமயத்தில் நம்மாழ்வர் நடத்திய வகுப்பில் பங்கெடுத்த பின், இயற்கை விவசாயத்திற்கு மாறிவிட்டார். இரண்டு நாட்கள் கழித்து கிளம்பினோம்... பணம் தர முயற்சித்தேன் இறுதி வரை அவர்கள் வாங்கிக் கொள்ளவே இல்லை.கண்ணன் அண்ணா, அவர் தம்பி சேகர், அவர்களின் அம்மா, கண்ணன் அண்ணாவின் மனைவி ஈஸ்வரி, அவர்களின் குழந்தை அருண்... ஒரு அன்பான குடும்பம் எனக்குக் கிடைத்தது.

கடுமையான காட்டுப் பாதைகளைக் கடந்து மூணாறு வந்து சேர்வதற்குள் இருட்டிவிட்டது... என் "புல்லட்" அதிக காயங்களைக் கண்டிருந்தது. புல்லட் மெக்கானிக்கைத் தேடி அலைந்தோம்.  மெயின் ரோட்டில் இருந்து பல சந்துகளைக் கடந்து, ஒரு டீ எஸ்டேட்டிற்குள் நுழைந்தோம்... அதில் சில கிலோமீட்டர்கள் பயணித்ததும்... ஒரு சிறிய ஷெட் இருந்தது. ஒடுக்கான தேகம், முகத்தில் தாடி, வாயில் பீடி, ஒரு கண் பார்வை, கிழிந்த ஜெர்கின், பாட்டா ஷூ... யோஜன் அண்ணா. புல்லட் மெக்கானிக். அவரின் வெளித் தோற்றம் கண்டு எனக்குள் இருந்த "மனித" புத்தி அவர் மீதான நம்பிக்கையின்மையை தோற்றுவித்தது. அவர் வண்டியை இரவு அங்கேயே விட்டுவிட்டு காலை வரச் சொன்னார். நான் தயங்கினேன்... பின்பு, ஷெட்டிற்குள் சென்று ஒரு நோட்டுப் புத்தகத்தை எடுத்துவந்து என்னிடம் நீட்டினார். அதில் அவரிடம் தங்கள் புல்லட்களை பழுதுபார்க்க கொடுத்த பல சர்வதேச ஊர்சுற்றிகள் அவர் குறித்து எழுதியிருந்தார்கள். பல புகைப்படங்களும் இருந்தன. ஒருவித தயக்கத்தோடு அங்கிருந்து கிளம்பினோம். 

  காலை விடியும் முன்பே பல வித எண்ணங்கள், யூகங்களோடு ஷெட்டிற்கு வந்தோம். வண்டி பத்திரமாக, சுத்தமாக இருந்தது... பெருமூச்சு விட்டேன். யோஜன் அண்ணா... ஷெட்டின் ஒரு மூளையில் சுருண்டு படுத்துக் கொண்டிருந்தார். தட்டி எழுப்பினோம்..." ஆ... வந்துட்டீங்களா... இப்போ கொஞ்ச நேரம் முன்னாடித் தான் வேல முடிஞ்சது. அதான் அப்படியே தூங்கிட்டேன்..." என்றபடியே என் வண்டியில் என்னென்ன வேலைகளை செய்தார் என்பது குறித்து விளக்கினார். மேலும், என் வண்டியில் நான் சமீபத்தில் மாற்றியிருந்த க்ளட்ச் ப்ளேட் டூப்ளிகேட் என்பதை சுட்டிக் காட்டினார். அவரே புதிய ஒன்றையும் போட்டு வைத்திருந்தார். 
" எல்லா பணத்தாசை புடிச்சவனுங்க... காசுக்காக எப்படி பண்றானுங்கப் பாரு... வண்டி வேகமா ஓட்டையில ஏதாவது பிரச்சனையானா உசுரே போயிடுமில்ல. மெக்கானிக் வேல ஒண்ணும் லேசுப்பட்டதில்ல" என்று சொன்னவர். மொத்த வேலைக்கும் 150 ரூபாய் தான் வாங்கினார். நான் அதிகம் கொடுத்தும் வாங்க மறுத்துவிட்டார். 

" இன்னிக்கு இருக்குறவன் நாளைக்கு இல்ல... இருக்குற வரைக்கும் நிம்மதியா, நேர்மையா, சந்தோசமா... வாழ்ந்துட்டுப் போயிரணும்..." என்றபடியே தன் பீடியைப் பற்ற வைத்துக் கொண்டு எங்களுக்கு விடையளித்தார்.

இது நடந்து கிட்டத்தட்ட 5 ஆண்டுகள் ஆகிவிட்டன... வருடத்திற்கு ஒரு முறையாவது கண்ணன் அண்ணா வீட்டிற்குப் போய்விடுவேன். மாதம் ஒருமுறையாவது போனில் பேசிவிடுவேன். சந்தர்ப்பம் கிடைக்கும் போதெல்லாம் யோஜன் அண்ணாவை சந்தித்து வருகிறேன். இந்தப் பயணத்திற்கு எனக்கான மொத்த செலவு 800 ரூபாய்... ஆனால், இதன் மூலம் எனக்குக் கிடைத்த எதிர்பார்ப்பில்லா இந்த உறவுகள் எதற்கும் ஈடு இணையற்றவை... இன்று உலக சுற்றுலா தினம். "அனைவருக்கும் சுற்றுலா" என்ற கருத்தை மையமாகக் கொண்டு இந்தாண்டு கொண்டாடப்படுகிறது. பயணங்கள் அதன் தூரங்களின் அடிப்படையில் மதிப்பிடப்படுவதில்லை... பயணங்களுக்குப் பணமும் ஓர் தடையில்லை. பயணிப்பவர்கள் தொடருங்கள்... பயணிக்காதவர்கள் தொடங்குங்கள்... வாழ்த்துக்கள் !!!

  • தொடங்கியவர்

14409466_1139919749390051_65007707072533

சிம்பாப்வே கிரிக்கெட் அணியின் முன்னாள் சகலதுறை வீரர் + தலைவரும், இந்திய மற்றும் இங்கிலாந்து கிரிக்கெட் அணிகளின் பயிற்றுவிப்பாளருமாக விளங்கியவருமான டங்கன் ப்ளேட்சரின் பிறந்தநாள்
Happy Birthday Duncan Fletcher

  • தொடங்கியவர்

 

p124a.jpg

எம்மி விருதுகள்!

HBO நிறுவனத்தின் பிரமாண்டத் தயாரிப்பில் ஒவ்வொரு வருடமும் வெளியாகி ஒளிபரப்பாகும் தொலைக்காட்சித் தொடரான ‘கேம் ஆஃப் த்ரோன்ஸ்’ நிகழ்ச்சிக்கு உலகம் முழுவதும் ரசிகர்கள் உள்ளனர். சின்னத்திரையின் ஆஸ்கர் என்றழைக்கப்படும் எம்மி விருதை, இந்த ஆண்டு திரைக்கதை, இயக்கம், பெஸ்ட் டிராமா ஆகிய துறைகளில் மட்டுமே இத்தொடர் வென்றது. ஆனாலும் எம்மி விருதுகள் வரலாற்றில் இதுவரை மொத்தம் 38 விருதுகளை வென்றதன் மூலம், அதிக விருதுகளை வென்ற தொடராக இத்தொடர் புதிய சாதனை படைத்துள்ளது. இதன் எதிரொலியாக #emmys2016 #GameofThrones டேக்குகளில் லட்சக்கணக்கில் ட்வீட்கள் குவிந்தன. இந்த நிகழ்ச்சியில் பாலிவுட் நாயகி பிரியங்கா சோப்ரா கலந்துகொண்டது கொசுறுச் செய்தி. நீ வா சுருதி!

p124b.jpg


p124c.jpg

இது உள்ளூர் ஐ.பி.எல்!

 ஐ.பி.எல். தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு விதிக்கப்பட்ட இரண்டாண்டு காலத் தடையால் ஏமாற்றத்தில் இருந்த தமிழக ரசிகர்களை உற்சாகப்படுத்தும் விதமாகத் தொடங்கப்பட்ட தமிழ்நாடு பிரீமியர் லீக் போட்டிகள் கடந்த மாதம் முழுவதும் நடைபெற்றன.  சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்ற இதன் இறுதிப்போட்டியில், தூத்துக்குடி பேட்ரியாட்ஸ் அணி சென்னை சேப்பாக் கில்லீஸ் அணியைத் தோற்கடித்து சாம்பியன் பட்டம் வென்றது. தூத்துக்குடி அணியின் கேப்டனான #NammaPayaluga ட்விட்டரில் ட்ரெண்ட் அடித்தது. எல்லாம் சரி! சி.எஸ்.கே. தடை முடிஞ்சதும் இந்தத் தொடர் என்னாகும்?


p124d.jpg

சிவகார்த்திகேயனி!

‘ரெமோ’ படத்தில் சிவகார்த்திகேயன் லேடி கெட்டப்பில் நடிப்பது ஊரறிந்த செய்தி. இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கிலேயே சிவகார்த்திகேயன் லேடி கெட்டப்பில் தனது லுக்கால் பலரைக் கிறங்கடித்தார். அதிலிருந்தே இன்னும் மீளாமல் இருக்கும் ரசிகர்களைத் தற்போது, மர்லின் மன்றோ ஸ்டைலில் சிவகார்த்திகேயன் கொடுத்த போஸ் ஜொள் விட வைத்து வைரலாகியுள்ளது. நம்ம பசங்க எந்த அளவுக்கு ரசிச்சிருக்காங்கங்கிறதை #MarilynMonroeofTN டேக்கில் நீங்களும் பார்த்து மகிழலாம். படம் வந்தா சிவா என்னாகப் போறாரோ?


p124e.jpg

தேர்தல் நேரம்!

காங்கிரஸ் கட்சியின் துணைத்தலைவர் ராகுல் காந்தி, உத்தரப்பிரதேசம் முழுக்க தற்போது சுற்றுப்பயணம் மேற்கொண்டு பொதுக்கூட்டங்களில் பங்கேற்று வருகிறார். சமாஜ்வாடியின் ஆட்சியில் மக்கள் அவதிப்படுவதாகவும், விவசாயிகள் தற்கொலை அதிகரித்துவிட்டதாகவும் அவர் குற்றம் சாட்டி வருகிறார். #RahulSharesPainOfUP என்ற டேக்கில், ராகுல் காந்தியின் ஆதரவாளர்கள் அவரைப்பற்றிய அப்டேட்டையும், ஆளும்கட்சி குறித்த விமர்சனங்களையும் தெறிக்க விட்டனர். அதே நேரத்தில் ஆளும் கட்சியான சமாஜ்வாடி, சட்டமன்றத் தேர்தல் நெருங்குவதால் ராகுலுக்கு மக்கள் மீது திடீர் அக்கறை வந்துள்ளதாகக் குற்றம் சாட்டியுள்ளது. அரசியல்ல இதெல்லாம் சாதாரணமப்பா!


p124g.jpg

இரு துருவங்கள்!

சாதிய வேறுபாட்டையும் ஆணாதிக்கத்தையும் ஒழிக்கப் போராடிய தந்தை பெரியாரின் பிறந்த நாளன்று சோஷியல் மீடியா பரபரப்பாக இயங்கியது. ட்விட்டர், ஃபேஸ்புக் இரண்டிலும் #hbdperiyar டேக்கில் அவரது கருத்துகளைப் போட்டு அதிகம் பேர் பகிர்ந்ததால் இந்திய அளவில் ட்ரெண்ட் அடித்தது. அதே நாளில்தான் பெரியார் கொள்கைக்கு எதிரான மோடியின் பிறந்தநாளும்! #modibirthday டேக்கில் வாழ்த்துகளும், இப்போ எந்த நாட்ல இருக்காரோ?  என விமர்சனங்களும் ஒருசேரப் பதிவாகின. இந்தத் தேதியில் பிறந்தவங்களுக்கு பயணம் மீது தீராக்காதல் இருக்கும்னு பேசிக்கிறாங்க!


ரைட்டு!

 ஆன்லைன் வர்த்தக நிறுவனமான ஃப்ளிப்கார்ட் ஒவ்வொரு ஆண்டும் `பிக் பில்லியன் டே' என்ற பெயரில் அதிரடி தள்ளுபடிகளை அறிவித்து பெரிய அளவில் விற்பனை செய்துவருகிறது. கடந்த ஆண்டு விற்பனையின்போது அந்நிறுவனத்தின் மீது ஏகப்பட்ட குற்றச்சாட்டுகள் எழுந்தன. இந்நிலையில் இந்த ஆண்டும் #BigBillionDay என்ற பெயரில் அதே ஆஃபரை அறிவித்துள்ளது. ‘நீ போனவருசம் செஞ்சதே போதும் சாமி’  என நெட்டிசன்ஸ் போட்டு வறுத்தெடுத்து வருகின்றனர். இதையும் மீறி அந்த விற்பனை நாள் என்ன என்று  தெரிந்துகொள்ள, ‘கடையை எப்போ சார் திறப்பீங்க!’ என சிலர் ஆவலோடு காத்துக்கொண்டிருக்கின்றனர். ஆசையே துன்பத்திற்குக் காரணம்!

vikatan

Edited by நவீனன்

  • தொடங்கியவர்

14444670_1139919002723459_57207075688689

இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளரான, தமிழக வீரர் லக்‌ஷ்மிபதி பாலாஜியின் பிறந்த நாள்.
தமிழக அணியின் பந்துவீச்சுப் பயிற்றுவிப்பாளராக நியமனமும் பெற்றுள்ளார்
Happy Birthday Lakshmipathy Balaji

  • தொடங்கியவர்

"மொபைல் நாகேஷ்" யார் தெரியுமா? #NageshBdaySpecial

nag2.jpg

இன்று நடிகர் நாகேஷ் அவர்களின் பிறந்தநாள். சில வேடங்களை யாராலும் செய்ய முடியாது அப்படியான வேடங்களில் வெளுத்து வாங்கியவர் நாகேஷ். கதை சொல்லும் முறையிலேயே இம்ப்ரஸ் செய்ய முயலும் 'காதலிக்க நேரமில்லை' படத்தில் புது இயக்குநராக வருவார். தில்லான மோகனாம்பாள் வைத்தி, திருவிளையாடல் தருமி, என அவரின் கேரக்டர்கள் ரிப்ளிக்கா செய்யவே முடியாதவை.  பல்வேறு காலகட்டங்களில் விகடனில் நாகேஷ் எழுதிய, அவர் பகிர்ந்த விஷயங்கள் அவரின் பிறந்தநாள் எக்ஸ்க்ளூசிவாய் இங்கு. 

 

"டேய் நீ பெரியவனாகி அப்பா மாதிரி ஆபிஸுக்கு போனா என்னாடா பண்ணுவ...?"

"முதல்ல லீவு போடுவேன்.." 

 

 

"அன்புள்ள சந்துருக்கு, வணக்கம். 
நீ வேகமாக படிக்கமுடியாது என்ற காரணத்தால் இந்த 
கடிதத்தை மெதுவாக எழுதுகிறேன்....!

ஆனந்த விகடன் நிருபரிடம் சொல்லி தன் பெயரில் நாகேஷ் எழுதச்சொன்ன ஜோக்குகள் இவை. 

"நாடகத்தில் நடித்துக்கொண்டிருக்கும் போது நடிப்பு பிடிக்கவில்லை என்றால் "உள்ளே போ, நாடகம் போர்.. போர்...உள்ளே போ" என்று கத்தினால் நடிகன் மிரண்டு போய் உள்ளே வந்துவிடவேண்டியதுதான். ஆனால் சினிமாவில் படம் போரடித்தால் பார்ப்பவன் வெளியே எழுந்து போக வேண்டியதுதான்"  நாடகத்துக்கும் சினிமாவுக்கும் என்னங்க வித்தியாசம் என்ற சீரியஸ் கேள்விக்கு நாகேஷின் பதில் மேலுள்ளது. ஸ்பான்டேனியஸ் ரிப்ளை மற்றும் ரியாக்‌ஷன் மாற்றுவதில் நாகேஷை இன்றுவரை அடித்துக்கொள்ளவே முடியாது.   

 

nag.jpg

"நான் நகைச்சுவை நடிகனாக வேண்டும் என ஒரு நாள் கூட நினைக்கவில்லை. ஆபிஸ் நாடகங்களிலும் , அமெச்சூர் நாடகங்களிலும் நான் நடித்த போது சிரித்து கை தட்டி 'நாகேஷ் வந்தால் சிரிக்கவைப்பான்' என அவர்களே முடிவு செய்து கைதட்டி நகைச்சுவை நடிகனாக்கிவிட்டார்கள். நான் அதற்கு முயற்சி செய்யவில்லை என்பதால்   அதன் பலாபலன்கள் அனைத்துக்கும் ரசிகர்களே பொறுப்பு" என கூறுவார். 

"1951-ம் வருடம் மார்ச் மாதம் 17-ம் தேதியை மறக்கவே மாட்டேன். அன்றுதான் எனக்கு வைசூரி( அம்மை) ஏற்பட்டது. அதனால்தான்  முகத்தில் நிரந்தர தழும்புகள் ஏற்பட்டது. கல்வியை பாதியில் கைவிடும் அளவிற்கு நோயின் தாக்கம் இருந்தது. தழும்புகளை பார்த்து குலுங்கி குலுங்கி அழுதேன் . அம்மாவின் ஆறுதலால் மட்டுமே மனம் தேறினேன். " தன் நிரந்தர வடுகள் பற்றி இப்படி குறிப்பிடுவார். 

"எனக்கு ரயில்வேயில் கொடுத்த சம்பளமே வேஸ்ட். வேலை செய்யாம ஓபி அடிச்சுகிட்டு இருப்பேன்.  நாடக வசனம் மனப்பாடம் பன்றதுதான் முக்கியமான வேலையா இருக்கும். நாலு மணி அடிச்சா எதாவது ஒரு சாக்கு சொல்லிட்டு வீட்டுக்கு போயிடுவேன். ஒரு நாள் ஒரு நாடக ஒத்திக்கையை வேடிக்கை பார்க்க போனேன், அதில் பேசிய ஒரு கேரக்டரின் டயலாக் இப்படி சொல்ல வேண்டும் என பேசிக்காட்டினேன். அந்த நாடக இயக்குநர் என்னை உதாசீனப்படுத்தி வெளியே அனுப்பிட்டார். அப்பத்தான் நாடகத்தில் நடிக்கனும்ன்னு வெறி ஏற்பட்டது. அந்த நேரம் பார்த்து வீரபாகுன்னு ஒரு தயாரிப்பாளர் "தாமரைக் குளம்" என்கிற படத்தில் நடிக்க அழைத்தார். உடனே ரிசைன் பண்ணிட்டு ஓடிட்டேன். ஆனால் அந்த படமும் சரியா ஓடலை எதிர்பார்த்த பணமும் வரலை. அதுக்கு பிறகு ரொம்ப கஷ்டப்பட்டேன். தங்குறதுக்கு இடமில்லாமல் அங்கும் இங்கும் அல்லாடிகிட்டு இருந்ததால் "மொபைல் நாகேஷ்"ங்கிற பட்டபெயர் வச்சு கூப்பிட அரம்பிச்சுட்டாங்க. நடிகர் பாலாஜிதான் தன் வீட்டின் அவுதவுஸில் எனக்கு இடம் கொடுத்து வாய்ப்பும் பிடித்துதர தொடங்கினார். பாலாஜியின் உதவியை நான் சாகும் வரை மறக்கமுடியாது" என தன் ஆரம்பக்கால  நினைவுகளை விகடனுடன் பகிர்ந்துள்ளார். 

ஜெயகாந்தன் இயக்கிய 'யாருக்காக அழுதான்' படத்தில் 'திருட்டு முழி ஜோசப்' என்கிற பாத்திரத்தில் நாகேஷ் நடித்தார். படத்தின் க்ளைமாக்ஸ் காட்சி ஜெயகாந்தன் காட்சிய விளக்குகிறார். சுற்றி கதாபாத்திரங்கள் பரிவுடன் பார்த்திருக்க நாகேஷ் அழ வேண்டும் "ஸ்டார்ட் ஆக்‌ஷன்" சொல்கிறார். நாகேஷ் அழ ஆரம்பிக்கிறார். மெதுவாக ஆரம்பித்த அழுகை அப்படியே உயர்ந்து கேவிக்கேவி அழுதபடி இருக்க இயக்குநர் ஜெயகாந்தன் போதும் போதும் என சொல்லியும் கிழே விழுந்து அழுதபடியே இருந்திருக்கிறார். உடனே லைட்கள் அணைக்கப்பட்டு வெளியே தூக்கி செல்லப்பட்டிருக்கிறார். அங்கும் அழுகை நின்றபாடில்லை. தன் நீண்டநாள் மனபாரத்தை ஜோசப்பின் வடிவில் இறக்கிவைத்துவிட்டார் நாகேஷ் அன்று. 

புகழின் உச்சத்தில் இருந்த போது ஆனந்த விகடனில் நாகேஷ் ஒரு சிறுகதை எழுதியிருந்தார். இரண்டு நண்பர்கள் நாடகக்கலைஞர்கள் சினிமா வாய்ப்பு தேடிக்கொண்டிருக்கிறார்கள். அதில் ஒருவனுக்கு வாய்ப்பு வருகிறது. ஒருவன் ஏற்றுக்கொள்ள தயங்கும் போது மற்றொருவன் துணிச்சலாக ஏற்றுக்கொள்ள வைக்கிறான். நாட்கள் ஓடுகிறது சினிமாவுக்கு போன நண்பன் பெரியாளாகி விடுகிறான். நீண்ட நாளைக்கு பிறகு நண்பனை பார்க்க வந்த ஏழை நண்பன் உரிமையுடன் அவன் சட்டையை எடுத்துப்போடுகிறான். அதை வீட்டு வேலைக்காரன் தடுக்கிறான். நண்பனிடம் வேலைக்காரனின் செயலை கண்டிக்க சொல்லி கேட்கிறான் ஏழை நண்பன். ஆனால் வேலைக்காரனின் செயலை சரி என்கிறான் நடிக நண்பன். கோபித்துக்கொண்டு புறப்படுகிறான் ஏழை. பின்னால் ஓடிவரும் நண்பன் தனக்கிருக்கும் தோல் நோய் பற்றி விளக்குகிறான்.  நண்பனைக்கட்டிக்கொண்டு ஏழை நண்பன் அழுவதோடு கதை முடிகிறது.

நாகேஷ் புகழின் உச்சத்தில் இருந்த போது எழுதப்பட்ட இந்த கதை அன்று சிறப்பாக பேசப்பட்டது. நாம் நடிக நண்பனாக நாகேஷைத்தான் நினைத்துக்கொள்வோம். உண்மையில் அந்த ஏழை நண்பன்தான் அவர். நடிப்பு வாழ்க்கையில் முதல் முறையாக வாய்ப்பு கிடைத்து நாடகத்தில் நடிக்கிறார். அதுவும் வெறும் ஒன்னரை நிமிடங்கள் மட்டுமே. அதற்கே அன்று சிறப்பு விருந்தினராக வந்திருந்த எம்ஜிஆரிடம் வெள்ளிக்கோப்பை பரிசு வாங்கியவர் நாகேஷ். 

 

nag3.jpg

அதன் பின்னால் நடிப்பு வாய்ப்பு தேடி அலைந்து கொண்டிருந்த காலகட்டத்தில் அந்த வெள்ளிக்கோப்பையை தன் அங்கீகாரமாய் நினைத்துகொண்டிருந்தார். ஒருநாள் அதை காணவில்லை. உடன் தங்கியிருந்த நண்பன் பசி தாங்க முடியாமல் அதை விற்றுவிட்டார். இரவு முழுவதும் தனியாக அழுதாராம். அதன் பின் சாகும்வரை எந்தவிருதையும் அவர் தன் வீட்டில் பார்வைக்கு வைக்கவில்லை. 

vikatan

  • தொடங்கியவர்

வரலாற்றில் இன்று.....

செப்டெம்பர் - 28

 

1687 : கிரேக்­கத்தின் பழங்­காலக் கட்­ட­ட­மான பார்த்­தினன், குண்­டு­ வெடிப்பில் சேத­ம­டைந்­தது.

 

1708 : ரஷ்­யாவின் முதலாம் பீற்றர் மன்னன், சுவீடன் படை­களை லெஸ்­னயா என்ற இடத்தில் இடம்­பெற்ற போரில் தோற்­க­டித்தான்.

 

1791 : பிரான்ஸ் ஐரோப்­பாவில் யூதர்­களை அடி­மைத்­த­ளையில் இருந்து விடி­வித்த முத­லா­வது நாடா­னது.

 

1795 : யாழ்ப்­பா­ணத்தை ஜெனரல் ஸ்டுவேர்ட் தலை­மை­யி­லான பிரித்­தா­னியப் படைகள் ஒல்­லாந்­த­ரி­ட­மி­ருந்து கைப்­பற்­றின.

 

1928 : அலெக்­ஸாண்டர் பிளெமிங் பென்­சி­லினைக் கண்­டு­பி­டித்தார்.

 

8171994--ship.jpg1939 : நாஸி ஜேர்­ம­னியும் சோவியத் ஒன்­றி­யமும் போலந்து நாட்டை தமக்குள் பங்கு போட உடன்­பட்­டன.

 

1939 : இரண்டாம் உலகப் போர் போலந்தின் தலை­நகர் வோர்ஸா ஜேர்­ம­னி­யிடம் வீழ்ந்­தது.

 

1944 : இரண்டாம் உலகப் போர்: சோவியத் இரா­ணுவப் படைகள் எஸ்­தோ­னி­யாவில் இருந்த நாசி­களின் குளூகா வதை­மு­காமை விடு­வித்­தனர்.

 

1950 : ஐ.நா.வில்  இந்­தோ­னே­ஷியா இணைந்­தது.

 

1960 : மாலி, செனெகல் ஆகிய நாடுகள் ஐ.நா.வில் இணைந்­தன.

 

1961 : சிரி­யாவின் டமாஸ்கஸ் நகரில் இடம்­பெற்ற இரா­ணுவப் புரட்­சியின் பின்னர் எகிப்து, சிரியா ஒன்­றி­ய­மான ஐக்­கிய அரபுக் குடி­ய­ரசு முடி­வுக்கு வந்­தது.

 

1994 : பால்ட்டிக் கடலில் சுவீடன் நோக்கிச் சென்று கொண்­டி­ருந்த எஸ்­தோ­னியப் பய­ணிகள் கப்பல் மூழ்­கி­யதில் 852 பேர் கொல்­லப்­பட்­டனர்.

 

1995 : பொப் டெனார்ட் மற்றும் சில கூலிப் படைகள் கொமரோஸ் தீவு­களைக் கைப்­பற்­றினர்.

 

817jaffna.jpg1995 : மேற்குக் கரை மற்றும் காஸா தொடர்­பான இடைக்­கால ஒப்­பந்­தத்தில்  பலஸ்­தீன விடு­தலை இயக்கத்தின் தலைவர் யஸீர் அரபாத், இஸ்­ரே­லிய பிர­தமர் யிட்ஸாக் ரபீன் ஆகியோர் கையெ­ழுத்­திட்­டனர்.

 

1996 : ஆப்­கா­னிஸ்­தானில் 1987 முதல் 1992 வரை ஜனா­தி­ப­தி­யாக பதவி வகித்த மொஹம்மத் நஜி­புல்லா  தலி­பான்­களால் சித்தி­ர­வதை செய்து கொல்­லப்­பட்டார். 

 

2005 : தமி­ழீழ விடு­தலைப் புலி­களின் அங்­கத்­த­வர்கள் ஐரோப்­பிய நாடு­க­ளுக்குப் பயணம் செய்­வ­தற்கு  ஐரோப்­பிய ஒன்­றியம் தடை விதித்­தது.

 

2012 : நேபா­ளத்தின் தலை­நகர் காத்­மண்­டுவில் இடம்­பெற்ற விமான விபத்தில் 19 பேர் உயி­ரி­ழந்­தனர். 

 

2012 : சோமா­லி­யாவின்  கிஷ்மயோ நகரில் அல் சபாபப் கிளர்ச்சியாளர்களுக்கு எதிராக சோமாலியா மற்றும் ஆபிரிக்க ஒன்றியத்தின் படைகள் கூட்டுத் தாக்குதலைகளை ஆரம்பித்தன.

metronews.lk

Edited by நவீனன்

  • தொடங்கியவர்

பிரேக் தி ரூல்ஸ் தலைவா! #MorningMotivation

creative-compressor-1.jpg

எல்லா பெரிய மாற்றங்களும் சிறிய செயல்களிலிருந்து தான் துவங்கும் என்பார்கள். இந்த சின்ன சின்ன செயல்கள் உங்களை வேற லெவலுக்கு கொண்டு செல்லும்...,

1. இன்று இங்கு இப்போதே :

"குட் மார்னிங் தல..." 
நீங்கள் இப்பொழுது தான் எழுந்தீர்கள் என வைத்துக் கொள்வோம். உடனடியாக உங்கள் மனதில் தோன்றுவது என்ன? செல்போன் எங்கே கிடக்கிறதோ?  நேத்துப் போட்ட ஸ்டேட்டஸுக்கு எவ்வளவு லைக் விழுந்திருக்கும்?, ஆண்டவா இன்னைக்கு திங்கள் கிழமையா மட்டும் இருக்க கூடாது என்பதுதானே!. ஆனால் இதையெல்லாம் தாண்டி முதல் நாள் செய்த செயல்களையும், நாளை என்னவாகப் போகிறோம் என்ற கனவுகளையும் அவ்வப்போது அசைபோட்டு பார்ப்போம். அதிலும் நேற்றும் வேண்டாம் நாளையும் வேண்டாம் இன்று இப்போது என்ன செய்ய போகிறோம் என்ற திட்டமிடுதலுடன் ஒவ்வொரு நாளையும் துவங்குபவர்கள் குறைவு. அந்த சிலரில் ஒருத்தராக இருக்க முயற்சி செய்து பார்ப்போமே. இப்படி அன்றைக்கான சின்னச் சின்ன இலக்குகளுடன் உங்கள் ஒவ்வொரு நாளையும் துவங்குங்கள். இலக்குகள் என்றால் மிகப்பெரியதாவும் வேண்டாம். எளிமையானதாகவும்  வேண்டாம். அன்று உங்களால் என்ன செய்ய முடியும் என நீங்கள் நினைக்குறீர்களோ அந்தளவுக்கு மட்டும். ஏனென்றால் உங்களை பற்றி உங்களுக்கு தான் பாஸ் அதிகமாகத் தெரியும்! 

2. இதுக்கெல்லாம் கூச்சமே படாதீங்க பாஸ் : 
காலையில் எழுந்ததும் டீ / காபி குடிக்க வேண்டும். யோகா செய்ய வேண்டும். ரெண்டு கிலோமீட்டராச்சும் மூச்சிரைக்க ஓடிவிட்டு வர வேண்டும் என்பதெல்லாம் இருக்கட்டும். ஆனால் இதையெல்லாம் செய்தது போக ஒரு பத்து நிமிஷம். உங்கள் படுக்கையை எடுத்து மடித்து வைக்க நேரம் ஒதுக்கலாம். உங்கள் அறையை கூட்டி பெருக்கலாம். உங்கள் தோட்டத்தை பராமரிக்கலாம். தினம் தினம் உங்களுக்காக சமையலறையிலேயே தங்கள் காலைப் பொழுதுகளை தொலைத்து விட்ட அம்மாவுக்கோ மனைவிக்கோ உதவி செய்யலாம். இதற்கெல்லாம் ரொம்பவே நேரம் எடுத்துக்கொள்ளாது தான். வாட்ஸ் அப் ஸ்டேட்டஸ் மாற்றுவது ஃபேஸ்புக் அரட்டை போன்றவற்றிற்கு ஒதுக்கும் நேரத்தில் கொஞ்சம் ஒதுக்கினால் கூட போதும் தான். ஆனால்... இதையெல்லாம் தாண்டி இதெல்லாம் நாம செய்ய வேண்டிய வேலை இல்லையே என உங்கள் மனது சொன்னால் அந்த எண்ணத்தை தூக்கியெறிந்து விட்டு வேலையில் இறங்குங்கள். 

Break-The-Rules-Why-Its-Okay-To-Be-Fakin

3. புதியன விரும்புங்கள் :
அலுவலகத்தில் அன்றைய வேலைகளை முடித்து விட்டீர்கள். நேரம் மீதம் இருக்கிறது. என்ன செய்வீர்கள்? வேறென்ன வீட்டிற்கு கிளம்பி போக வேண்டியது தானே என்கிறீர்களா? இனி அந்த எண்ணத்தை கொஞ்சம் தள்ளி வைப்போம். அதற்கு பதிலாக உங்கள் பக்கத்து சீட்டு நண்பரின் வேலையை கொஞ்சம் பகிர்ந்து கொண்டு செய்து பாருங்களேன். உங்கள் வேலையை தாண்டி புதிதான ஒரு வேலையின்ப அனுபவம் கிடைப்பதோடு அந்த நண்பருக்கும் உங்கள் மேல் தனி மரியாதை உருவாகும். எல்லா சின்ன சின்ன மாற்றங்களும் நன்றாக திட்டமிட்டு செயல்படுத்தபடுபவை அல்ல. இது போன்ற சூழ்நிலைகளிலும் மாற்றங்களை முன்னெடுக்க தயாராக இருங்கள். பல்வேறு இடங்களில் இவர் இந்த வேலைக்குத் தான் சரிப்பட்டு வருவார். வேறு வேலைகளை கொடுத்தால் சரியாக செய்ய மாட்டார் என்ற பிம்பம் தோற்றுவிக்கப்பட்டிருக்கும். அந்த எல்லைகளை உடைக்க முயற்சி செய்யுங்கள். ஒவ்வொரு விஷயத்திலும் புதிதான கோணங்களில் அணுகிப் பாருங்கள். ஒவ்வொரு நாளையும் சின்ன மாற்றங்களுடன் தொடங்குவதற்கு எப்போதுமே தயாராக இருங்கள். 

ஆம் அதே தான், பிரேக் தி ரூல்ஸ் தலைவா!

vikatan

  • தொடங்கியவர்

14462960_1140695922645767_73531685444018

மேற்கிந்தியத் தீவுகள் கிரிக்கெட் அணியின் முன்னாள் துடுப்பாட்ட வீரரும், அபார களத்தடுப்பு வீரருமான கஸ் லோகியின் பிறந்தநாள்.
Happy Birthday Gus Logie

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.