Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இளமை புதுமை பல்சுவை

Featured Replies

  • தொடங்கியவர்

அலையோடு விளையாடு! 02 - லிம்கா சாதனையும் பக்கிங்ஹாம் வேதனையும்

 

 
limca_3020550h.jpg
 

வெறும் ஐந்து-ஆறு அடி தண்ணீர் ஓடிய தஞ்சை புது ஆறு என்னைக் கொஞ்சம் தத்தளிக்க வைத்தது. ஆழமே காண முடியாத கடலோ என்னைத் தட்டிக்கொடுத்து வரவேற்றது. அந்தத் தட்டிக்கொடுத்தலின் உற்சாகத்தில்தான், தேசிய அளவில் பேட்லிங்கில் புதிய சாதனையைப் படைத்தேன்.

கடலில் பேட்லிங் பயிற்சி எடுக்க ஆரம்பித்த பிறகு, ஒவ்வொரு பயிற்சியின்போதும் ஒரு கி.மீ., இரண்டு கி.மீ என்று பேட்லிங் பயணத்தின் தொலைவை அதிகப்படுத்திக்கொண்டே பயிற்சி எடுத்துவந்தேன்.

தேசியச் சாதனை

கடந்த ஆண்டு பிப்ரவரி 25-ம் தேதி நானும் நண்பர் செல்வமும், கடலில் அதிகத் தொலைவுக்கு பேட்லிங் செய்ய வேண்டுமெனத் தீர்மானித்துப் புறப்பட்டோம். முதல் 30 நிமிடங்களிலேயே மூன்று கிலோமீட்டர் பயணித்ததை, எங்களுடைய ஜி.பி.எஸ். இடம்சுட்டி கருவி காட்டியது. ம்... குறுகிய காலத்தில் இது நல்ல முன்னேற்றம்தான் என்று பேட்லிங் துடுப்பைத் தொடர்ந்து வலித்தோம்... 50 நிமிடங்களில் ஐந்து கிலோமீட்டரைத் தொட்டிருந்தோம். வேகம் குறையவில்லை. அடுத்ததாக 90 நிமிடங்களில் ஏழு கிலோமீட்டரைக் கடந்தோம். நேரம் செல்லச் செல்ல, அதிக வேகத்தைத் தொடர்வது சாத்தியமில்லை.

அப்போது அந்தப் பக்கமாகச் சென்ற மீனவர்கள், ‘இதற்கு மேலே போகாதீங்க. காற்றின் திசை மாறும் நேரம் இது' என்று எச்சரித்தார்கள். அந்தச் சொல்லை மீறி நாங்கள் போனால், கரை திரும்புவது கடினமாக இருக்கும் என்று வலியுறுத்தினார்கள். கடலைப் படித்தவர்களின் அறிவுரையைப் புறக்கணிக்க முடியுமா? பேட்லிங் பலகையைக் கரையை நோக்கித் திருப்பினோம்.

பேட்லிங்கில் நாங்கள் அன்றைக்குச் சென்ற தொலைவு என்பது, கடலில் எங்களுடைய அதிகபட்சத் தொலைவு. எங்களுக்கு மட்டுமில்லை, இந்தியாவுக்கே அதுதான் அதிகம் என்று லிம்கா சாதனைப் புத்தகம் சொன்னது. கடலில் 90 நிமிடங்களில் 7 கி.மீ. தொலைவுக்குப் பேட்லிங் செய்தது, தேசிய அளவில் அதிகபட்ச தொலைவு சாதனையாக மாறியது.

கண்ணுக்கெட்டிய தூரம் வரை பரந்தும், எளிதில் தரையைத் தொட்டுவிட முடியாத ஆழமும், விடை காண முடியாத பல ஆச்சரியங்களையும் அற்புதங்களையும் பொதிந்து வைத்திருக்கும் கடலன்னையின் மடியில், உயிருக்குப் பெரும்பாலும் ஆபத்து விளைவிக்காத ஒரு விளையாட்டு பேட்லிங் என்பது இந்தச் சாதனைக்குப் பிறகு புரிந்தது.

விழி திறந்த பக்கிங்ஹாம்

கடல் என்பது ஓர் கனவுலகம். தட்பவெப்ப நிலை, காற்றின் வீச்சு - திசை வேகம், காலநிலை ஆகிய மூன்று காரணிகளால் கடல் நீரோட்டத்தின் திசையும் வேகமும் மாறிக்கொண்டே இருக்கும். அலையும் அதற்குத் தகுந்ததுபோல் தாளமிடும். இதனால் தூண்டப்படும் பயத்தால், கடலில் அலைச்சறுக்கு விளையாட்டுக்கும் (Surfing) பேட்லிங்குக்கும் மனிதர்களிடையே வரவேற்பு குறையும். ஆனால், உள்நாட்டு நீர்நிலைகளை மேற்கண்ட அம்சங்கள் பெரிதாகப் பாதிக்காது. முறையான பேட்லிங் பயிற்சிகள் மூலம், பயத்தையும் விரட்டி அடித்துவிடலாம்.

கடலைப் போலவே பக்கிங்ஹாம் கால்வாயில், நண்பர் செல்வத்துடன் கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் நீண்ட நேரத்துக்குப் பேட்லிங் செய்தேன். ஒவ்வொரு புள்ளியிலும் பயண நேரத்தைப் பதிவு செய்துகொண்டும், ஒளிப்படங்களை எடுத்துக்கொண்டும் எங்களுடைய பேடில் மிதந்து முன்னேறிக்கொண்டிருந்தது. கால்வாயின் இரண்டு பக்கங்களிலும் தாவரங்கள் அடர்ந்திருந்தன. கூழைக்கடா, நாரை, கொக்கு, மீன்கொத்தி வகை அரிய பறவைகள், இனப்பெருக்கத்துக்காக அந்தத் தாவரங்களில் தஞ்சம் புகுந்திருந்தன.

திடீரென அமைதியைக் குலைத்தது, ஒரு துப்பாக்கி வேட்டுச் சத்தம். அதிர்ந்து போய்த் திரும்பினால், ஒரு மரத்தின் பின்னால் மறைந்து நின்று ஒருவர் பறவைகளை வீழ்த்திக்கொண்டிருந்தார். உடனடியாக அதைத் தடுத்து நிறுத்துவது சாத்தியமில்லாமல் இருந்தது. சரியான இடத்தில் கரையைத் தொட நேரம் பிடிக்கலாம் என்பது மட்டுமில்லாமல், எங்களிடம் தற்காப்புக்கு எந்த ஆயுதமும் இல்லை. வேறு வழியின்றிப் பயணத்தைத் தொடர்ந்தோம். இன்னொரு பக்கம் கால்வாயில் சாக்கடைத் தண்ணீர் பாய்ந்து வந்து கலப்பதையும் மலை போல் கொட்டப்பட்டிருந்த குப்பையையும் பார்த்துக் கொண்டே நகர்ந்தோம்.

limca_3020550a.jpg

சீரமைக்க முடியாதா?

காலம்காலமாக நம்மை வாழவைத்துக் கொண்டிருக்கும் தண்ணீரையும் உயிரினங்களையும் இப்படி அப்பட்டமாகச் சீரழிக்கிறோமே என்று ரொம்ப வேதனையாக இருந்தது. அறிவிலும் வேலைத்திறன்களிலும் உலகை வியக்க வைக்கும் இன்றைய இளைய தலைமுறையால், இதையெல்லாம் சீரமைக்க முடியாதா? நம்முடைய நீராதாரங்கள் இவ்வளவு மோசமாகச் சீர்கெட்டிருப்பதை நேரடியாகப் பார்த்தால்தான், உண்மை நிலைமை அவர்களுக்குப் புரியும். நீர்நிலைகளை அவர்கள் பாதுகாக்க வேண்டுமென்றால், இவற்றை அவர்கள் நேரடியாகப் பயன்படுத்தும் நிலைமை வர வேண்டும். நீர்நிலைகளுக்கும் அவர்களுக்கும் இடையிலான உறவைப் புதுப்பிக்க வேண்டும். அதற்கு ஏராளமான வழிகள் இருக்கின்றன. இதில் எனக்குத் தெரிந்த வழி பேட்லிங்.

சாக்கடையும் குப்பையுமாகச் சீர்கெட்டுக் கிடக்கும் நீர்நிலையில் பேட்லிங் செய்வது எளிதல்ல. அதேநேரம், இந்த நீர்நிலைகள் இனிமேலாவது தூய்மைப்படுத்தப்படவும், மாசுபடுத்தப்படாமல் எஞ்சியுள்ள நீர்நிலைகள் தூய்மையாக இருப்பதை உறுதிசெய்து பாதுகாக்கவும் பேட்லிங் உதவும். அது மட்டுமல்லாமல் நீர்நிலைகளைப் பேட்லிங் மாசுபடுத்தப் போவதில்லை. பேட்லிங் செய்பவர் விழிப்புடனும் அக்கறையுடனும் இருக்கும்வரை, சின்னதாகக்கூட நீர்நிலை கெடாது. எனவே, பேட்லிங்கை தாராளமாகப் பரவலாக்கலாம்.

அதற்குச் செய்ய வேண்டிய முதல் வேலை, சென்னையைச் சுற்றி உள்ள ஏரிகளையும் நீர்நிலைகளையும் கண்டறிய வேண்டும். ஆகவேதான் ஒவ்வொரு வார இறுதியிலும் புதுப்புது நீர்நிலைகளைத் தேட ஆரம்பித்தேன்.

(அடுத்த வாரம்: கொள்ளையர்களிடமிருந்து தப்பிக்கும் விளையாட்டு)

tamil.thehindu.

  • Replies 11.3k
  • Views 1.5m
  • Created
  • Last Reply
  • தொடங்கியவர்
வரலாற்றில் இன்று: ஒக்டோபர் 16
 
 

article_1476599869-300.jpg1775: ஐக்கிய அமெரிக்காவில், மேய்ன் மாநிலத்தின் போர்ட்லண்ட் நகரம், பிரித்தானியரால் எரிக்கப்பட்டது.

1781: ஜோர்ஜ் வொஷிங்டன், வேர்ஜீனியாவின் யோர்க்டவுன் நகரைக் கைப்பற்றினார்.

1793: பிரெஞ்சுப் புரட்சி - பிரான்சின் பதினாறாம் லூயி மன்னனின் மனைவி மரீ அண்டொனெட், கழுத்து வெட்டி மரணதண்டனைக்கு உட்படுத்தப்பட்டாள்.

1799: பாஞ்சாலங்குறிச்சி மன்னன் கட்டபொம்மன், ஆங்கிலேயரால் தூக்கிலிடப்பட்டான்.

1813: ஆறாவது கூட்டணி நாடுகள், நெப்போலியன் பொனபார்ட் மீது லீப்சிக் நகரில் தாக்குதலை ஆரம்பித்தன.

1834: லண்டன் வெஸ்ட்மின்ஸ்டர் அரண்மனையின் தொன்மைப் பொருட்கள் பல, எரிந்து சேதமடைந்தன.

1905: ரஷ்ய இராணுவம், எஸ்தோனியாவில் மக்கள் கூட்டமொன்றின் மீது சுட்டதில், 94 பேர் கொல்லப்பட்டனர்.

1905: பிரித்தானிய இந்தியாவில், வங்காளப் பிரிப்பு இடம்பெற்றது.

1923: வேர்ல்ட் டிஸ்னி நிறுவனம் ஆரம்பிக்கப்பட்டது.

1934: குவோமின்டாங்குகளுக்கு எதிரான சீனக் கம்யூனிஸ்டுக்களின் தாக்குதல் ஆரம்பமானது.

1939: இரண்டாம் உலகப் போர் - பிரித்தானியா மீதான ஜெர்மனிய வான்படையின் முதலாவது தாக்குதல் இடம்பெற்றது.

1942: மும்பாயில் இடம்பெற்ற வெள்ளப் பெருக்கில், 40,000 பேர் கொல்லப்பட்டனர்.

1949: கிரேக்க கம்யூனிசத் தலைவர் நிக்கலாஸ் சக்காரியாடிஸ் தற்காலிக போர் நிறுத்தத்தை அறிவித்தார். கிரேக்க உள்நாட்டுப் போர் முடிவுக்கு வந்தது.

1951: பாகிஸ்தானின் முதலாவது பிரதமர் லியாகட் அலி கான், ராவல்பிண்டியில் சுட்டுக்கொல்லப்பட்டார்.

1964: மக்கள் சீனக் குடியரசு தனது முதலாவது அணுவாயுதச் சோதனையை மேற்கொண்டது.

1973: ஹென்றீ கிசிங்கர், லே டுக் தோ அமைதிக்கான நோபல் பரிசு பெற்றனர்.

1975: கிழக்குத் திமோரில், அவுஸ்திரேலிய தொலைக்காட்சி ஊடகவியலாளர்கள் ஐந்து பேர் இந்தோனீசியப் படைகளினால் சுட்டுக் கொல்லப்பட்டனர்.

1984: தென்னாபிரிக்காவின் டெஸ்மண்ட் டூடு, அமைதிக்கான நோபல் பரிசு பெற்றார்.

1987: தெற்கு இங்கிலாந்தில் இடம்பெற்ற சூறாவளியில், 23 பேர் கொல்லப்பட்டனர்.

1996: குவாத்தமாலாவில், கால்ப்பந்தாட்டப் போட்டி நிகழ்வில் ஏற்பட்ட நெரிசலில் சிக்கி, 84 பேர் கொல்லப்பட்டனர்.

1998: சிலியின் முன்னாள் சர்வாதிகாரி ஆகுஸ்டோ பினொச்சே, லண்டனில் கைது செய்யப்பட்டார்.

2003: தமிழ் விக்கிப்பீடியாவில் முதலாவது கட்டுரை சிரின் எபாடி பற்றி எழுதப்பட்டது.

2006: இலங்கை, ஹபரணையில் நடத்தப்பட்ட தற்கொலைக் குண்டுத்தாக்குதலில், 102 கடற்படையினர் கொல்லப்பட்டனர்.

2006: 1987இல் இலங்கை - இந்திய ஒப்பந்தத்தை அடுத்து இணைக்கப்பட்டிருந்த வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களின் இணைப்பு செல்லுபடியற்றது என்று இலங்கை உயர்நீதிமன்றம் அறிவித்தது.

http://www.tamilmirror.lk

  • தொடங்கியவர்

இரண்டாம் உலகப்போரில் பத்தாயிரம் பேரைக் காப்பாற்றிய சுரங்கம் இதுதான்!

44_10260.jpg

 பகல் தான்... ஆனாலும், அந்த சுரங்கத்தினுள் ஒரு அடர்த்தியான இருள் சூழ்ந்திருக்கிறது. குறுகலான வழி. மெல்லிய பேட்டரி விளக்கு வெளிச்சத்தில் நடந்து, சில படிகளைக் கடந்தால் அந்த அகண்ட இடம் வருகிறது. இப்பொழுது விளக்குகளின் உதவியால் வெளிச்சம் கொஞ்சம் கூடுதலாகக் கிடைக்கிறது. துருப்பிடித்து, இரும்பு தோல்கள் உரிந்த நிலையில் நிறைய கார்கள். சில நீளமாகவும், சிலவை சிறியதாகவும் இருக்கின்றன. தார் சாலைகளையும், மண் மேடுகளையும், கடற்கரைகளையும் பார்த்து ஆவேசமாய், சமயங்களில் அமைதியாய் ஓடிக் களைத்த ஸ்கூட்டர்கள் மற்றும் பைக்குள். தோலுரிந்து வரலாற்றால் தூக்கி எறியப்பட்ட ஒரு நீல ஸ்கூட்டரின் பக்கவாட்டில்  சிகப்பு வண்ண சுருள் முடி கொண்ட ஒரு பெண்ணின் ஸ்டிக்கர். அவரின் கனவு நாயகியாக இருந்திருக்கக் கூடும். 

33_10427.jpg

இன்னும்... அழுக்கடைந்த அடுப்புகள், கருப்படைந்த பானைகள், உருக்குலைந்த உணவுக் கோப்பைகள், நசுங்கி, நைந்து போயிருக்கும் குழந்தைகளின் குதூகல நடை வண்டிகள் என திரும்பும் திசையெல்லாம் வரலாறு துப்பி எறிந்த மிச்சங்கள். இது இத்தாலி நாட்டின் நேப்பிள்ஸ் நகரின்  " கேலெரியா போர்பொனிகா" (GALLERIA BORBONICA). 

 உலக வரலாற்றின் பல முக்கிய ஆதாரங்களைக் கொண்ட பழைய "பாம்பெய்" ( POMPEII)  தான் இன்றைய "நேப்பிள்ஸ்" நகரம் ... மண் தோண்டினால் பொன் கிடைக்கும் பூமி. இரண்டாம் உலகப் போரின் சமயத்தில் பல தேவாலயங்கள் குண்டுத் தாக்குதல்களுக்கு பலியான போது, ஒன்று மட்டும் உறுதியாக நின்றது. போர் முடிந்த பின்பு, அதை ஆராய்ந்த போது, அதற்கடியில் ஒரு நகரமே இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இப்படி, நேப்பிள்ஸில் வீடு கட்ட மண் தோண்டினால் கூட அங்கு ஒரு பொக்கிஷம் கிடைக்கும் அளவிற்கு தன்னுள் வரலாறுகளைப் புதைத்து வைத்துள்ளது. 

66_10277.jpg

1853யில், இரண்டாம்  ஃபெர்டினான்ட் போர்பன் (FERDINAND BOURBON - 2 ) போர் சமயங்களில் கோட்டையில் இருந்து தப்பிக்க ஒரு சுரங்கத்தைக் கட்ட ஆரம்பித்தான். ஆனால், அதை கட்டி முடிப்பதற்குள் அவனின் ஆட்சி கவிழ்க்கப்பட்டது.  சில காலம் நீர் வழித்தடமாக உபயோகப்படுத்தப்பட்டது. இந்த சுரங்கத்தின் ஒரு பகுதியை 2005யில் கண்டுபிடித்து 7 ஆண்டுகளாக சுத்தம் செய்து கொண்டிருந்தனர். 

 மேற்கூறிய செய்தியை, 2012 ஆம் ஆண்டில் படித்த தொனினோ பெர்சிகோ (TONINO PERSICO) என்ற 90 வயது முதியவருக்கு திடீரென ஒரு ஞாபகம் வந்தது. இரண்டாம் உலகப் போரின் போது, வான்வழித் தாக்குதலிலிருந்து தப்ப ஒரு சுரங்கத்தில் தான் இருந்தது ஞாபகம் வந்தது. அது குறித்த தகவல்களை சுரங்க ஆராய்ச்சியளர்களிடம் கூறுகிறார். அவர்களும் விரைவிலேயே அந்த இடத்தைக் கண்டுபிடிக்கிறார்கள். அதில் அவர்கள் கண்ட விஷயங்கள் பெரும் ஆச்சர்யத்தை ஏற்படுத்தின. 

1930 களின் ஆரம்பத்தில் வண்டிகள் நிறுத்தும் இடமாக உபயோகப்படுத்தப்பட்ட இந்த சுரங்கம், இரண்டாம் உலகப் போரின் போது மக்களுக்கான பதுங்கும் இடமாக இருந்துள்ளது. கிட்டத்தட்ட பத்தாயிரத்திற்கும் அதிகமான மக்கள் இங்கு பதுங்கியிருந்திருக்கின்றனர். மூன்று ஆண்டுகள் சுத்தம் செய்த பிறகு சில மாதங்களுக்கு முன்பு இது பொதுமக்களின் பார்வைக்கு திறந்துவிடப்பட்டுள்ளது. 

22_10014.jpg

" தாக்குதல் முடிந்த பின்னர் மேல் வந்து பார்ப்போம்... பலரின் வீடுகள் தரைமட்டமாகியிருக்கும். அப்படி வீடிழந்தவர்கள் எல்லோரும் நிரந்தரமாக இந்த சுரங்கத்தில் தான் தங்கியிருப்போம். அதிகப்படியான மருத்துவ உபகரணங்கள் இல்லாவிட்டாலும் கூட, எங்களில் இருக்கும் சில மருத்துவர்கள் மருத்துவம் பார்ப்பார்கள். கழிவறை இருந்தது. கணவன் போரில் ஈடுபட்டிருப்பது குறித்து பெண்கள் வருதத்தோடு பேசிக் கொண்டிருப்பார்கள், குழந்தைகளான நாங்கள் ஒரு பக்கம் விளையாடிக் கொண்டிருப்போம்... சமயங்களில் அழகான பல பாடல்களையும் பாடி மகிழ்வோம்." என்று தன் ஞாபகங்களை தட்டி எழுப்புகிறார் தொனினோ பெர்சிகோ . 

" போர் நடக்கும் போது இந்த சுரங்கத்தில் இருந்து மூன்று முறை சங்கு ஊதுவார்கள். அப்படியென்றால், எதிரிப் படை இன்னும் 15 நிமிடங்களில் தாக்குதலைத் தொடங்கும் என்று அர்த்தம். அனைவரும் இதனுள் ஓடிவருவோம்... இன்னும் நினைவிருக்கிறது... அவள் பெயர் "இதினா" ( EDINA )... ரொம்ப அழகாக இருப்பாள். கருப்பு முடி, பச்சைக் கண்கள்... ஒருமுறை இப்படி அவசரமாக ஓடிவரும் போது கூட்டத்தின் கால்களில் சிக்கி... மிதி பட்டு... தரையோடு தரையாய் நசுக்கப்பட்டு இறந்து போனாள்..." என்று வலியோடு தன் நினைவுகளை பதிவு செய்கிறார் டே ஜியோயா (De GIOIA).

வரலாற்றின் வரலாறுகளை சுமந்து கொண்டிருக்கும் இந்த சுரங்கத்தில் இன்னும் கண்டுபிடிக்கப்படாத சில பகுதிகளும் இருக்கின்றன. அதை நோக்கிய தேடுதலில் இருக்கிறார்கள் இத்தாலிய அகழ்வாராய்ச்சியாளர்கள். அதைக் கண்டுபிடித்தால் இன்னும் பல ஆச்சரியங்கள் கிடைக்கும் என்றும் நம்புகிறார்கள். !!!

vikatan

  • தொடங்கியவர்

14681884_1157230904325602_86957825204620

உலக உணவு தினம்.

பசிக்கும் அளவுக்கு புசிப்போம்.
பசித்தவர்க்கும் தவிப்பவர்க்கும் பரிதவிப்போர்க்கும் பகிர்வோம்.

தனியொருவனுக்கு உணவில்லையெனில் தவித்த அவனுக்கு உணவளிப்போம்.

 

உலக உணவு தினமும்...பசியால் வாடும் மக்களும்! #WorldFoodDay

                                                            3_17063.jpg

அக்டோபர் 16 -  உலக உணவு தினம்.
உலகில் உள்ள அனைத்து ஜீவராசிகளுக்கும் பொதுவானத் தேவை; 'உணவு'. பசி என்ற இயற்கை உணர்வுக்கு இயற்கையே உணவுப் பொருட்களையும் கொடுக்கிறது. ஆனால் அந்த உணவுப் பொருளை உற்பத்தி செய்வதில் தொடங்கி அவை ஒருவரது வயிற்றுக்குள் செல்வது வரையிலான பிரச்னைகள் மிக நீண்டவை... நெடியவை.  

உலகின் வேகமாக வளரும் நாடுகளில் இந்தியாவும் ஒன்று. நம்மைப் போன்ற நாடுகளுக்கு மிகப்பெரிய அச்சுறுத்தலாக இருப்பவை மக்கள் தொகை பெருக்கமும், விளைநிலங்கள் எண்ணிக்கை குறைந்து வருவதும், விண்ணை முட்டும் விலைவாசி உயர்வு போன்ற காரணங்கள். இவை மூன்றுமே நம்மைப் போன்ற பல நாட்டு மக்களின் உணவுத் தேவையையும், பசியையும் கேள்விக்கு உள்ளாக்குகின்றன. தங்கள் அதீத வசதியால் ஆடம்பர நட்சத்திர உணவகங்களில் அடிக்கடி உணவு சாப்பிட்டு டிப்ஸ் கொடுக்கும் வர்க்கத்தினரும் நம் நாட்டில் இருக்கின்றனர். அதே வேளையில் ஒருநாளைக்கு ஒருவேளை உணவாவது கிடைக்காதா எனத் தவிப்போரும், கோவில் வாசலிலும் கடைத்தெருக்களிலும் யாசகம் கேட்பவர்களும் இருக்கிறார்கள். உலகம் முழுக்க அன்றாடம் பலர் பட்டினிச்சாவால் மரணிக்கிறார்கள். இயற்கை, இலவசமாகக் கொடுக்கும் உணவுப் பொருட்கள் ஒரு ஏழையின் பசியைப் போக்குவதற்குள் உயிர்வலியும் மரண வலிகளும் கண்முன் காட்டிச்சென்றுவிடுகின்றன. விஷயம் அவ்வளவு தீவிரமானதுதான். ஆனால் இப்போது அல்ல. காலம் காலமாக.

 

                                                           2_17459.png

 

1945-ம் ஆண்டு 16-ம் நாள் ஐக்கிய நாடுகளின் உணவு மற்றும் வேளாண்மை அமைப்பு ஆரம்பிக்கப்பட்டது. இந்த நாளை நினைவு கூறும் விதமாகவும், அனைத்து உயிர்களும் ஆரோக்கியமாக வாழ வேண்டும், அனைவருக்கும் உணவு கிடைக்க வேண்டும், பசியால் யாரும் வாடக்கூடாது; உணவு குறித்த விழிப்பு உணர்வு மக்களிடம் சரியாக சென்றடைய வேண்டும் போன்ற காரணங்களுக்காக 1979-ம் ஆண்டு ஐநா சபையின் 20-வது பொது மாநாட்டில் அக்டோபர் 16-ம் நாள் உலக உணவு தினமாக அறிவிக்கப்பட்டது. 37 ஆண்டுகளை கடந்துவிட்டாலும் உலகின் அனைத்து மக்களுக்கும் பொதுவாக, சரிவிகிதமான உணவு கிடைப்பது உறுதி செய்யப்படவில்லை. உற்பத்தி, பகிர்வு, நுகர்வு இவை அனைத்தும் சரிவிகித அளவில் இல்லாமல் இருப்பதே உணவு சார்ந்த பல பிரச்னைகளுக்குக் காரணமாக இருக்கின்றது.

'தனி ஒரு மனிதனுக்கு உணவில்லை எனில் ஜகத்தினை அழித்திடுவோம்' எனப் பாடினார் பாரதி. ஆனால் இந்தியாவில் தினமும் 30 கோடி மக்கள் இரவு உணவு இல்லாமல் தூங்குகிறார்கள். 18 கோடி மக்கள் காலை அல்லது மதிய உணவின்றி வாழ்கிறார்கள். உலகிலேயே அதிகப்படியான அளவாக இந்தியாவில் 19 கோடி பேர் ஊட்டச்சத்து குறைபாட்டால் பாதிக்கப்பட்டுள்ளதோடு தினமும் ஆயிரக்கணக்கானோர் இப்பிரச்சனையால் பாதிக்கப்படுவதாகவும் ஐநாவின் உணவு மற்றும் வேளாண்மை நிறுவனம் தெரிவிக்கிறது. இதில் பெருகி வரும் மக்கள் தொகை பெருக்கத்திற்கு ஏற்ப அனைவருக்கும் தேவையான உணவு கிடைக்கவும், உணவு உற்பத்தியை அதிகரிக்கவும் தேவையான நடவடிக்கைகளை அரசு சரியாக செய்வதில்லை. அதோடு வசதி படைத்த பெரும் பணக்காரர்களினால் உயர்த்தப்படும் விலைவாசி உயர்வு, கச்சா எண்ணெய் விலையேற்றத்தால் நடுத்தர, ஏழை மக்கள் மட்டுமே கடுமையான சிக்கல்களை சந்திப்பதுடன் வறுமையில் தள்ளப்படுகின்றனர். குறிப்பாக பலர் உணவு சாப்பிட வியர்வை சிந்திய விவசாயி தனக்கு சாப்பிட உணவில்லை என எலி கறியை சாப்பிட்ட கொடுமையெல்லாம் நம் நாட்டில் நடந்ததை நாம் அறிந்திருக்கிறோம். தென்னாப்பிரிக்காவில் மண்ணால் சுடப்பட்ட ரொட்டிகளை சாப்பிட்டு குழந்தைகள் உள்பட பலர் உயிர் இழக்கின்றனர். இப்படி பல நாடுகளில் பல உணவுப் போராட்டங்கள் தினமும் நிகழ்ந்துகொண்டேதான் இருக்கிறது. விளைச்சல் குறைவு, தண்ணீர் பற்றாக்குறை, விவசாய வேலைக்கு ஆட்கள் பற்றாக்குறை, உற்பத்தி பொருட்களுக்கு போதிய விலை இல்லாதது என உணவு உற்பத்தி செய்யப்படும் இடத்திலேயே எண்ணற்ற பிரச்னைகள். இதன் ஒருகட்டமாக விவசாய நிலங்கள் ரியல் எஸ்டேட் போட்டப்பட்டு கட்டடங்களாக மாற்றப்படுகின்றன. இயற்கை விவசாயிகளின் எண்ணிக்கை குறைந்து வருகிறது போன்ற வேதனையான நிகழ்வுகள் நம்மை சர்வ சாதாரணாமாகவே கடந்து செல்கின்றன. 

 

                                                               9_17228.jpg

 

மறுபுறமோ இந்தியாவில் நடுத்தர குடும்பத்தினர் ஆண்டுக்கு 100 கிலோ உணவை வீண் செய்கிறார்கள். திருமண மண்டபங்களில் சராசரியாக 10 - 100 நபர்கள் உண்ணும் அளவிலான உணவுப்பொருள் வீண் செய்யப்படுகிறது. அரசு மற்றும் தனியார் நிறுவனங்களில் வேலை செய்பவர்களும், பள்ளிக் கல்லூரி மாணவ மாணவிகளும் அன்றாடம் பல டன் உணவுப் பொருள் தெரிந்தோ தெரியாமலேயே வீண் செய்கிறோம். இவை அனைத்திற்குமே உணவுப் பொருள் குறித்த விழிப்புஉணர்வு இல்லாமல் இருப்பதே காரணமாக இருக்கின்றது. இப்படி வீண் செய்யும் உணவுப் பொருட்களால் பசியால் வாடும் மக்களின் உணவுத் தேவையை கணிசமான அளவு பூர்த்தி செய்ய முடியும். ஆனால் நம்மிடம் உபரியாக இருக்கும் உணவுப் பொருட்களை மற்றவர்களுக்கு பகிர்ந்துகொடுக்கும் எண்ணம் நம்மில் எத்தனைப் பேருக்கு இருக்கிறது என்பது தெரியவில்லை. 

 

                                                            7_17002.jpg

 

ஆரோக்கியத்தைக் கொடுக்கும் தானிய வகைகளின் உற்பத்தி மிகக்குறைவாக இருப்பதால் அவற்றின் விலை அதிகமாக இருக்கிறதே என புழம்புகிறார்கள் நடுத்தர வர்க்கத்தினர். மறு புறமோ ஏசி அறையில் பீட்சா, பர்கர் போன்ற துரித உணவுகளை உட்கொள்கிறார்கள் இன்னொரு வர்க்கத்தினர். இதில் படித்தவர் படிக்காதவர் என்ற பாகுபாடே இல்லாமல் போய்விட்டதுடன் உணவிலும் நாகரிகத்தை பார்க்க ஆரம்பித்து கூடவே உடல்நலத்தையும் கெடுத்துக்கொள்கிறார்கள். கால்சியம், புரோட்டின், வைட்டமின், மினரல்ஸ் என அனைத்துவித சத்துகளும் நிறைய சரிவிகித உணவை அன்றாடம் மிகக் குறைவானவர்களே உட்கொள்கிறார்கள். தொழில், படிப்பு என வெளியூர்களுக்குச் செல்பவர்கள் பலரும் நல்ல உணவின்றி தவிக்கிறார்கள். இப்படி பரமபத விளையாட்டுப்போல எண்ணற்ற நெழிவு சுளிவுகளைக் கொண்டதாக ஒவ்வொருவரின் வாழ்க்கைச் சூழலும் ஆரோக்கியமும் இருக்கின்றன.

உணவுப் பொருட்கள் வீணாகாமல் தடுக்க நம் வீட்டில் இருந்தே நாம் செய்ய வேண்டிய செயல்கள்:

* என்ன சமைக்கப் போகிறோம் என்பதை முன்கூட்டியே திட்டமிட்டு அதற்கேற்ற உணவுப் பொருட்களை மட்டுமே வாங்க வேண்டும்.

* ஃபர்ஸ்ட் இன், ஃபர்ஸ்ட் அவுட் என்பது போல முதலில் வாங்கிய உணவுப் பொருட்களை பயன்படுத்திய பிறகு அடுத்த பொருட்களைப் பயன்படுத்துவதால் உணவுப்பொருட்கள் கெடுதல், வீணாகுதல் தடுக்கப்படும்.

* ஃப்ரிட்ஜ் இருக்கிறது என பல நாளுக்கான பொருளை ஒரே நாளில் வாங்கி குவித்து வைப்பது. பின்னர் அதில் பலவற்றை தூக்கி எறிவது போன்ற செயல்களை பலர் செய்வதுண்டு. இதுபோன்ற செயல்களைத் தவிர்க்க, சில நாட்களுக்குத் தேவையான உணவுப் பொருட்களை மட்டும் வாங்கி வைக்கலாம்.

* சாப்பிடும்போது உணவுகளைப் பரிமாறும் அளவு குறைவாக இருந்தால், மீதமான உணவை எச்சில் படாமல் மற்றவர்களுக்கு கொடுத்து உதவலாம்.

மக்களிடம் மீதமாகும் உணவுப் பொருட்களை சேமித்து பசியால் வாடும் மக்களுக்கு பகிர்ந்தளிக்கும் பொது நலன் சேவகர்கள் இன்று பெருகிவருவது வரவேற்கத்தக்க செய்தி. இன்னும் அதிகமான சேவகர்கள் உருவாகி பசியால் வாடும் மக்களுக்கு உதவ வேண்டும். அதேசமயம் நாம் வீணாக்கும் உணவுப் பொருட்களின் அளவினையும் கட்டுப்படுத்தி பசியால் வாடுவோர் இல்லை என்ற நிலையை உருவாக்குவோம்.  

 

 

vikatan

  • தொடங்கியவர்

14695569_1157236550991704_50924704894001

உலகின் மிகச் சிறந்த சகலதுறை கிரிக்கெட் வீரர்களில் ஒருவராக எப்போதும் போற்றப்படும், தென் ஆபிரிக்க அணியின் முன்னாள் வீரர் ஜக்ஸ் கல்லிஸின் பிறந்தநாள் இன்று.
பல துடுப்பாட்ட சாதனைகளையும் தன்னகத்தே கொண்டுள்ள நேர்த்தியான, நம்பகமான துடுப்பாட்ட வீரராக, தென் ஆபிரிக்காவின் தூணாக விளங்கிய கண்ணியமான வீரர்.

Happy Birthday Jacques Kallis

 
  • தொடங்கியவர்
துபாய் அராப் பெஷன் வீக்கில்
 

லெபனானிய ஆடை வடிவமைப்பாளர் ஆயிஷா வடிவமைத்த ஆடைகள் ஐக்கிய அரபு எமிரேட்ஸின் துபாயில் நடைபெற்ற, அராப் பெஷன் வீக் (Arab Fashion Week) கண்காட்சியில் லெபனானைச் சேர்ந்த ஆடை வடிவமைப்பாளர் ஆயிஷா ரமடானினால் வடிவமைக்கப்பட்ட ஆடைகளை கடந்த ஞாயிறன்று மொடல்கள் காட்சிப்படுத்தினர்.

 

199031.jpg

 

199032.jpg

 

199033.jpg

 

199034.jpg

 

அவர் வடிவமைத்த ஆடைகளையும் இந் நிகழ்வில் கலந்துகொண்ட மொடல்கள் சிலரையும் ஆயிஷா ரமடானையும் படங்களில் காணலாம்.

 

19903291119-01-02.jpg

 

19903291199-01-02.jpg

 

19903291202-01-02.jpg

 

19903291267-01-02.jpg

 

.metronews.lk

Edited by நவீனன்

  • தொடங்கியவர்
உலகின் மிகப் பெரிய பூசணிக்காய்
 

பெல்­ஜி­யத்தில் 1,190.5 கிலோ­கிராம் (2623 இறாத்தல்) எடை­யுள்ள பாரிய பூசணிக்காய் அறு­வடை செய்­யப்­பட்­டுள்­ளது.

 

19901289121-01-02.jpg

 

19901288554-01-02.jpg

 

19901288548-01-02.jpg

 

உலகில் இது­வரை அறு­வடை செய்­யப்­பட்ட மிகப் பெரிய பூசணிக்காய் இது எனக் கரு­தப்­ப­டு­கி­றது.

 

19901288552-01-02.jpgஜேர்­ம­னியில் நடை­பெற்ற பிர­மாண்ட பூசணிக்காய் சம்­பி­யன்ஷிப் போட்­டியில் சுமார் 1000 கிலோ­கிராம் எடை­யுள்ள பல பூசணிக்­காய்கள் காட்­சிப்­
ப­டுத்­தப்­பட்­டன.

 

பெல்­ஜி­யத்தைச் சேர்ந்த சேர்ந்த மெத்­தாயஸ் வில்­லேமிஜ்ன்ஸ் என்­பவர் 1990.5 கிலோ­கிராம் எடை­யுள்ள பூசணிக்­காயை காட்­சிப்­ப­டுத்­தினார்.

 

இப் பூசணிக்காய் மேற்­படி போட்­டியில் முத­லிடம் பெற்­றது.

 

அதே­வேளை, இது எடை அடிப்­ப­டையில் உலக சாத­னைக்­கு­ரிய பூசணிக்­ கா­யா­கவும் விளங்­கு­கி­றது.

 

சுவிட்­ஸர்­லாந்தைச் சேர்ந்த பெனி மேய்யர் என்­பவர் அறு­வடை செய்த 2323 இறாத்தல் (சுமார் 1053 கிலோ­கிராம்) எடை­யுள்ள பூசணிக்­காயே மிக அதிக எடை­யுள்ள பூசணிக்­கா­யாக இறு­தி­யாக கின்னஸ் சாதனை நூலில் பதிவு செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

 

.metronews.lk

  • தொடங்கியவர்

வலைபாயுதே

சைபர் ஸ்பைடர்

 

p108a.jpg

facebook.com/DavidEXIM:

வீட்டு அம்மாவுக்கு பேங்க் அக்கவுன்ட் ஆரம்பிக்கையில், தோரணையா அவர் மொபைல் நம்பரையே கொடுத்தது தப்பாப்போச்சு. Transaction OTP அதுக்கே அனுப்புறான். ஒவ்வொரு தடவையும் `OTP சொல்லு'னு கேட்டா, `ஏன்... எதுக்கு..?'ங்கிறா.

# பழனியம்மாளுக்கு கார் ஓட்டக் கத்துக்குடுத்தது தப்பாப்போச்சு.

facebook.com/வெ. பூபதி:

லீவுக்கு, அப்பாக்கள் ஒரு ப்ளான் போடுறாங்க; அம்மாக்கள் வேற ப்ளான் போடுறாங்க. கடைசியில் குழந்தைகள் போடும் ப்ளான்தான் நடக்குது.

facebook.com/ஏகலைவன் ஏகன்:

நாம எல்லாரும் வருமானத்துக்கு அதிகமா கடன் வாங்குறவங்க!

twitter.com/thoatta:

எங்க கேப்டன் குழந்தை மாதிரி. அப்பலோ கூட்டிப்போறதுக்கே, உங்களுக்கு ஊசி போட மாட்டாங்கன்னு 2 நாள் சமாதானப்படுத்தி தான் கூட்டிப்போகனும்.

twitter.com/pshiva475:

காசு, பணம் இல்லாம படிப்பை விட்டவன் நிறையப் பேர். ஆனா, காசு இல்லைனு பீடி, சிகரெட், தண்ணி, கஞ்சா, குட்காவை விட்டவன் ஒருத்தன்கூட இல்லை!

#வாழ்க்கை

twitter.com/erode_kathir:

இதுவரை வெளியான வதந்திகளிலேயே பெரிய வதந்தி, `ஓ.பி.எஸ்., எடப்பாடி ரெண்டு பேரும் காவிரிப் பிரச்னைக்காக கவர்னரைச் சந்திச்சாங்க'னு சொன்னதுதான்.

twitter.com/gpradeesh:

ஜெ. கார்டன்ல இருந்தப்பவும், அப்போலோவுல இருக்கிறப்பவும் ஆட்சி நிர்வாகத்துல(?) என்ன வித்தியாசத்தைக் கண்டுட்டு, பொறுப்பு முதல்வர் எல்லாம் கேக்குறாய்ங்க?

twitter.com/kumarfaculty :  மழை இல்லாத போதும் விவசாயம் செய்ய வேண்டும் என்பதற்காக கட்டப்பட்ட அணைக்கட்டுகள், குடிநீர் தேவைகளுக்கானதாக மாற்றியது நம் விவசாயக் கொள்கை!

twitter.com/kumaresann01: வைகோவுக்கும் அதே வசனம்தான் குடுப்பானுக. ஆனா, பாடிலாங்வேஜ்ல அண்ணன் ஸ்கோர் பண்ணிருவாரு! #அப்போலோவில் வைகோ!

p108b.jpg

facebook.com/pudugai.abdulla:

காவேரிப் பிரச்னையில் பிரதமருக்கு, முதலமைச்சர் கடிதம் எழுத இயலாத நிலையில், தலைமைச் செயலாளர் கடிதம் எழுதி அனுப்பி இருப்பதை உங்களில் எத்தனை பேர் கவனித்தீர்கள்? முதலமைச்சர் உடல்நிலை சரி இல்லாத நிலையில் அந்தக் கடிதத்தை பொதுப்பணித் துறை அமைச்சர் எழுதி இருப்பதுதான் முறையே தவிர, தலைமைச் செயலாளர் எழுதி அனுப்பி இருப்பது முறையும் அல்ல... மரபும் அல்ல. அரசியல் அதிகாரம் என்பது, ஆளும் வர்க்கத்திடம் இருந்து அதிகாரிகளுக்குக் கைமாறுவது ஆபத்தான போக்கு... ஜனநாயக விரோதம்.

twitter.com/mymindvoice: சிறு அனுதாபத்துக்காகத்தான் அத்தனை புலம்பலும். மற்றபடி அவரவர் அவரவர் வாழ்க்கையை வாழும்விதம் அறிந்தே இருக்கின்றனர்.

vikatan

  • தொடங்கியவர்
Bild zeigt 1 Person , Text
 

அக்டோபர் 16: வீரபாண்டிய கட்டபொம்மன் நினைவு தினம் இன்று!

இந்திய விடுதலைப் போராட்டம் வீரமும் தீரமும் கொண்டது. மகாத்மா காந்தி சத்தியாகிரகம் செய்வதற்கு முன், இந்திய தேசிய ராணுவத்தை நேதாஜி துவங்குவதற்கு முன் வெள்ளையர்களை வெளியேற்ற வேண்டும் என்று போராடியவர்கள் பலர். அதில் முன்னின்று, வியூகம் அமைத்துப் போரிட்டவர்கள் பாளையக்காரர்கள். அந்தப் பாளையக்காரர்களில் முக்கியமானவர் வீரபாண்டிய கட்டபொம்மன். கட்டற்ற காளை போல் பொங்கியெழுந்து, வெள்ளையரோடு நேருக்கு நேர் நின்று, வீரசமர் புரிந்தவன் வீரபாண்டிய கட்டபொம்மன். ஓங்காரம் எழுப்பி வெள்ளையனை மிரளச் செய்தவன். அவரின் நினைவு தினம் இன்று..

 

 

வீரத்தின் அடையாளமாக திகழ்ந்த கட்டபொம்மன்

 

வீரபாண்டிய கட்டபொம்மன்

 

வியாபார நோக்கிலே இந்தியாவிற்குள் காலூன்றி நம்மை ஆள நினைத்த வெள்ளையர்களுக்கு எமனாய் திகழ்ந்த வீரத்தின் விளைநிலம் தான் வீரபாண்டிய கட்டபொம்மன்.இன்றைக்கு அவரின் நினைவு நாள் அவரை நினைவு கூறும் இந்நாள் இந்தியர்களாகிய நாம் ஒவ்வொருவரும் பெருமைப் படும் நாள்.

பிறப்பு

பொம்மு வம்சாவளியில் வந்த ஜெகவீர கட்டபொம்மனுக்கும், ஆறுமகத்தமாளுக்கும் தமிழ்நாட்டின் பாஞ்சாலக் குறிஞ்சியில்  ஜனவரி மாதம் 3 ஆம் தேதி, 1760 ஆம் ஆண்டில் பிறந்தவர் தான் வீரபாண்டிய கட்டபொம்மன்  அவர்கள்  இவரது இயற்பெயர் ‘வீரபாண்டியன்’ என்பதாகும்.கெட்டி   பொம்மு என்றும் கூறுவர்.  கட்டபொம்மன் என்பது இவரது வம்சாவழியைக் குறிக்கும் அடைமொழியாகும்.பூர்வீகம் ஆந்திரா மாநிலம்(பெல்லாரி). ஆனால் இவர் தமிழனாகவே வாழ்ந்தார்.

வெள்ளயனை எதிர்த்த வீரனாக

தமிழர்களை அடிமைப் படுத்தி தமிழ்நாட்டை ஆட்சிசெய்யலாம் என நினைத்துக்கொண்டு இருந்த வெள்ளையர்களை எதிர்த்து  அவர்களை கதிகலங்க வைத்த வீரன் கட்டபொம்மன். கி.பி. 1797 இல் முதன் முதலாக ஆங்கிலேய ஆலன் துரை பாஞ்சாலங்குறிச்சிக் கோட்டைக்கு வந்தார். 1797 - 1798 இல் நடந்த முதல் போரில் வீரபாண்டிய கட்ட பொம்மனிடம் ஆலன் துரை தோற்று தெறித்து ஓடினார். ஜாக்சன் வீரபாண்டிய கட்ட பொம்மனைச் சந்திக்க அழைத்தார்.
கட்டபொம்மனை அவமானப் படுத்த வேண்டும் என கண்கானம் கட்டிகொண்டு திரிந்தான் ஜாக்சன் துறை ஆனால் கட்ட பொம்மன் அனைத்தையும் பந்தாடினார். வரியை கேட்டு வந்த திறையிடம் மாமனா?மச்சானா? என வீர முழக்கமிட்டார் பொம்மன்.

கட்டபொம்மனின்  தனிப்பட்ட வாழ்க்கை

வீரபாண்டிய கட்டபொம்மன் அவர்கள், ஐந்து குழந்தைகளுள் ஒருவராகப் பிறந்தார். அவருக்கு ஊமைத்துரை, துரைச்சிங்கம் என்ற இரு சகோதரர்களும், ஈசுவர வடிவு, துரைக்கண்ணு என்ற இரு சகோதரிகளும் இருந்தனர். கட்டபொம்மன் வீரசக்கம்மாள் என்பவரை மணமுடித்தார். அவருக்கு முப்பது வயதாகும் வரை, அவரது தந்தை ஜெகவீர கட்டபொம்மன் அவர்கள், பாளையக்காரராக இருந்து வந்ததால், தந்தைக்கு உதவியாக இருந்தார், கட்டபொம்மன். பின்னர், பிப்ரவரி 2 ஆம் தேதி, 1790 மாம் ஆண்டில், 47 வது பாளையக்காரராக அரியணைப் பொறுப்பை ஏற்றார். இவர்களுக்குப் பிள்ளைப் பேறு இல்லை. இவர் 9 ஆண்டுகள், 8 மாதம், 14 நாட்கள் அரசுப் பொறுப்பிலிருந்தார்.

இறக்கும் வரை வீரனாக வாழ்ந்த கட்டபொம்மன்

மரத்தடியில் விசாரணை நடத்தி கட்டபொம்மனை குற்றவாளி என்று பழி சுமத்தினான்  வெள்ளையன். கட்டபொம்மன் தன்  மீது சுமத்தப்பட்ட “குற்றங்களை’  மறுக்கவும் இல்லை. உயிர்ப்பிச்சை கேட்கவும்மில்லை.  கம்பீரத்தோடு “எனது தாய்மண்ணைக் காப்பதற்காக, வெள்ளை தோல்களுக்கு  எதிராக பாளையகாரர்களைத் திரட்டினேன், போர் நடத்தினேன்” என்று வீர முழக்கம்  முழங்கியவாறு தூக்குமேடையேறினார் கட்டபொம்மன்.

தூக்கு மேடை ஏறிய  போதும், அவரது பேச்சில் வீரமும், தைரியமும் நிறைந்திருந்தது. இது சுற்றி நின்ற அனைவரின் உள்ளத்திலும்  பெருமையை  உருவாக்கியது. தூக்குமேடை ஏறியபோது, “இப்படிச் சாவதைவிட பாஞ்சாலங்குறிச்சி கோட்டையைப் பாதுகாப்பதற்காகப் போரிட்டு நான்  செத்திருக்கலாம்’ என்று கட்டபொம்மன் மனம் நொந்து கூறினார்.தூக்கு கயிற்றுக்கு புன்னகையுடன் முத்தமிட்டார் கட்டபொம்மன்.

இறப்பு

அக்டோபர் 1, 1799 இல் புதுக்கோட்டை மன்னர் விஜயரகுநாத தொண்டமானால் கோழைத் தனமாக  வீரபாண்டிய கட்டபொம்மன் கைது செய்யப்பட்டு கும்பினியாரிடம் (கிழக்கிந்திய கம்பெனி) ஒப்படைக்கப்பட்டான்
வீரபாண்டிய கட்டபொம்மன் அவர்கள், ஆங்கிலேயேத் தளபதி பேனர்மேன் உத்தரவின் படி, அக்டோபர் 19ஆம் தேதி, 1799ஆம் ஆண்டில் கயத்தாறு கோட்டையிலே ஒரு ஒரு புளிய மரத்திலே  தூக்கிலிடப்பட்டார்.

கட்டபொம்மனை நினைவு கூறும் சின்னங்களும்,மரியாதையும்.

கயத்தாறில் கட்டபொம்மன் அவர்களின் நினைவிடம் உள்ளது.கட்டபொம்மன் அவர்களின் வாழ்க்கை வரலாறு பல்வேறு தமிழ் புராணங்கள் மற்றும் காவியக் கவிதைகளில் இடம்பெற்றுள்ளன.ஆங்கிலேயர்களை இந்திய மண்ணில், ஆரம்ப காலத்திலேயே எதிர்த்த சுதந்திரப் போராளிகளுள் ஒருவராக இன்றளவும் இந்திய அரசாங்கத்தால் கருதப்படுகிறார்.1974 ல், தமிழக அரசு அவரது நினைவாக ஒரு புதிய நினைவு கோட்டை கட்டியது. மெமோரியல் ஹால் முழுவதும் அவரது வீரச்செயல்களையும், வாழ்க்கை வரலாற்றை சித்தரிக்கும் வண்ணமாக, சுவர்களில் அழகான ஓவியங்கள் இடம்பெற்றிருக்கும். பிரிட்டிஷ் சிப்பாய்களின் கல்லறை கூட கோட்டை அருகே காணப்படுகின்றன.அவரது அரண்மனைக் கோட்டையின் எச்சங்கள் இன்றளவும் இந்திய தொல்பொருள் ஆராய்ச்சி நிறுவனத்தால் பாதுகாக்கப்படுகின்றன.அவர் தூக்கிலிடப்பட்ட இடமான திருநெல்வேலிக்கு அருகேயுள்ள கயத்தாறில், அதாவது இன்றைய NH7 இல், கட்டபொம்மன் அவர்களுக்கு மற்றுமொரு நினைவுச்சின்னம் இருக்கிறது.அவரது வீரத்தை போற்றும் விதமாகவும், நினைவுக் கூறும் விதமாகவும் தமிழ்நாட்டில் உள்ள வெலிங்டனில் ஒரு சிலை வைக்கப்பட்டிருக்கிறது.கட்டபொம்மன் அவர்களை கௌரவிக்கும் விதமாக, அவர் தூக்கிலிடப்பட்டு இரு நூறாம் ஆண்டு விழாவின் நினைவாக அக்டோபர் 16, 1799 ஆம் ஆண்டில், இந்திய அரசு ஒரு தபால் முத்திரையை வெளியிட்டது.இந்தியாவின் முதன்மையான தொடர்பு நரம்பு மையமாகக் கருதப்படும் விஜயனாரயனத்தில் அமைந்துள்ள இந்திய கடற்படைக்கு ‘ஐஎன்எஸ் கட்டபொம்மன்’ என பெயரிடப்பட்டது.1997 வரை, திருநெல்வேலி மாவட்டத்திலிருந்த அரசு போக்குவரத்து பேருந்துகள் அனைத்தும் ‘கட்டபொம்மன் போக்குவரத்து கழகம்’ என்ற பெயராலேயே இயங்கிக் கொண்டிருந்தன.வீரபாண்டிய கட்டபொம்மன் பண்பாட்டுக் கழகம் (வீரபாண்டிய கட்டபொம்மன் கலாச்சார சங்கம்), என்ற ஒரு அமைப்பு அவரது நினைவாக பெயரிடப்பட்டு, செயல்பட்டு வருகிறது.மாவட்ட நிர்வாகம் அவரது ஆண்டுவிழாவை, பாஞ்சாலங்குறிச்சியில் `வீரபாண்டிய கட்டபொம்மன் விழாவாக’ கொண்டாடுகிறது.

ஆங்கிலேயர் ஆட்சியின் ஏகாதிபத்தியத்தை எதிர்த்து நடந்த உணர்வு பூர்வமான சுதந்திர போராட்டத்தில் உண்மையான முதல் சுதந்திர போராட்ட வீரர் வீரபாண்டிய கட்டபொம்மன். அவருடைய வீரத்தையும், தியாகத்தையும் யாராலும் மறக்க முடியாது. ஆகவே அவருடைய நினைவை போற்றும் வகையில் பல நினைவுச்சின்னங்களை இந்திய அரசு எழுப்பி வருகிறது.

Edited by நவீனன்

  • தொடங்கியவர்

தினம் ஒரு பர்கர்!

 

68p1.jpg

‘சுமாரான ஹோட்டலை சூப்பர் ஹோட்டலாக மாற்றுவது எப்படி?' என இவங்ககிட்டதான் கத்துக்கணும். ஆஸ்திரேலியாவின் மெல்போர்ன் நகரில் இருக்கிறது ‘கஃபே 51’ என்ற பர்கர் உணவகம். இங்கேதான் நடந்திருக்கிறது ஒரு ‘அடடே’ சம்பவம்! 

68p2.jpg

தங்கள் உணவகத்தில் ஃபேமஸான பர்கரின் வடிவத்தினைப் போன்றே உடலில் எங்காவது பச்சை குத்திக்கொண்டு வந்தால், வாழ்நாள் முழுவதும் அவர்களுக்குத் தினசரி ஒரு பர்கர் இலவசம் என அறிவித்திருக்கிறார், ஹோட்டலின் உரிமையாளர். அறிவித்த மறுநாளே உடலில் விதவிதமாகப் பச்சை குத்திக்கொண்டு 450 நபர்கள் உணவகத்திற்கு உள்ளே புகுந்து விளையாட... ஓவர்நைட்டில் ஃபேமஸாகி இருக்கிறது இந்த கஃபே 51 ஹோட்டல்! ‘`இப்படிப் பண்ணா, நாங்க எப்படித் தொழில் நடத்துறது?’’ என சக பர்கர் கடைக்காரர்கள் சண்டைக்கு வந்தாலும், ‘`எங்க கடையோட பெயரைப் ஃபேமஸ் ஆக்குறதுக்கு எனக்கு வேற வழி தெரியலையேப்பா!’’ என சிவாஜிகணேசன் ஸ்டைலில் வசனம் பேசிவிட்டு நகர்கிறார், கஃபே 51 ஹோட்டலின் உரிமையாளர்.

நம்ம ஊர்ல ஒரு கிளை தொடங்கலாமே ஃப்ரெண்ச்?

vikatan

  • தொடங்கியவர்

14717178_1157232087658817_14675979052059

'கொலைவெறி'யுடன் புயலாக தமிழ்த் திரையிசையில் புகுந்து, தொடர்ச்சியான ஹிட் பாடல்கள் மூலம் இளைய இசை ரசிகர்களைக் கவர்ந்து முன்னணி இசையமைப்பாளராக வலம் வரும் அனிருத்தின் பிறந்தநாள்.

Happy Birthday Anirudh Ravichander

அனிருத் இசையமைப்பாளர் அல்ல... இன்ஸ்பிரேஷன்! #HBDAnirudh

2007:
அப்போது அந்தப் பையனுக்கு வயது 17. அவன் சொந்தக்காரர் பிரபல நடிகர். (மாமா அதை விட பிரபலம்). பொடியன் கீ போர்டு வாசிப்பதை பார்த்த நடிகர் புதிதாக ஒரு கீ போர்டு வாங்கி பரிசளித்திருக்கிறார். அப்போது அந்த நடிகரை இயக்கிக் கொண்டிருந்த இயக்குநர் “இவ்ளோ காஸ்ட்லியான கீ போர்டு எதுக்கு” என கேட்க, “பாத்துட்டே இருங்க சார். இவன் ஒரு ப்ராடிஜி. இன்னும் சில வருஷத்துல தமிழ் சினிமாவையே கலக்குவான்” என்றார். இயக்குநரையும் அந்த நடிகர் அப்படி கண்டுபிடித்து ஆதரித்தவர் என்பதால் அவருக்கு புரிந்தது. 
அந்தப் பையன் அனிருத். அந்த நடிகர் தனுஷ். அந்த இயக்குநர் வெற்றி மாறன் 

404727-385238-362624-anirudh-ravichander

2011:
தனுஷ் நடிக்கும் 3 படத்துக்கு அனிருத் இசையமைத்துக் கொண்டிருந்தார். எப்படியோ, ரெக்கார்டிங் ஸ்டூடியோவில் இருந்து ஒரு பாடல் திருடு போகிறது. அந்த கொலைவெறி பாடலை தூத்துக்குடியில் இருக்கும் ஒரு பிரவுசிங் செண்டரில் இருந்து யாரோ ஒருவர் நெட்டில் ஏற்றிவிடுகிறார். அனிருத்துக்கு அந்த லிங்க் கிடைக்க, சோர்ந்துவிடுகிறார். காரணம், அது ரஃப் கட். இசை துல்லியமாக இல்லை. ஃபைனல் வெர்ஷன் அது இல்லை என்பதால் துடித்துப் போகிறார். மற்றவர்களுக்கு அது ஒரு பாட்டு. அனிருத்துக்கு அது முதல் பாடல். தனுஷிடம் சொன்னதும், அவசர அவசரமாக ஒரு முடிவு எடுக்கிறார்கள். அது பின்னாளில் தமிழ் சினிமாவின் மிக முக்கியமான திருப்பு முனையாக இருக்கும் என அவர்கள் அறிந்திருக்கவில்லை.

படத்தின் ஹீரோ, ஹீரோயினுடன் அனிருத்தும் கேமராமேனும் ரெடி. பாடல் ரெக்கார்டிங் நடப்பது போல ஒரு வீடியோவை ஷூட் செய்து யூட்யூபில் முழுமையான பாடலை வெளியிடுகிறார்கள். சத்யம் தியேட்டரில் தனது மாமா ரஜினி வெளியிட, படத்தின் நாயகி ஷ்ருதிஹாசனின் அப்பா கமல் பெற்றுக்கொள்ள, தனது முதல் ஆல்பம் வெளியாகும் என நினைத்துக் கொண்டிருந்தவருக்கு யுட்யூபில் ரிலீஸ் என்பது எப்படிப்பட்ட சோகம்? ஆனால் அதன் பின் நடந்தது.... வரலாறு.

பாட்டை ரிலீஸ் செய்தவனை பார்த்து உலகமே கேட்பது போல,கன்யாகுமரியின் தமிழ் ரசிகனில் தொடங்கி, மும்பை அமிதாப், அமெரிக்க பிரிட்னி ஸ்பியர்ஸ் வரை எல்லா உதடுகளும் முணுமுணுத்தது “வொய் திஸ் கொலைவெறி”. 

அன்னக்கிளி வந்த போது தமிழ் சினிமா ஒரு புது இசையை ரசித்தது. ரோஜா வந்த போது புதிய சப்தங்களை கேட்டு ரசித்தது. 3 வந்தபோது புதுவித கொண்டாட்டத்தை கண்டது. 

முழு ஆல்பமும் வெளியான நாளில் கொலைவெறி மட்டுமே ஹிட்டுப்பா என்றார்கள் ரசிகர்கள். அடுத்த நாள் “கண்னழகா” கொல்லுது என பல ஸ்டேட்டஸ்கள். அடுத்த நாள் “போ நீ போ” என் ப்ளே லிஸ்ட்டை விட்டு போக மாட்டேன் என்கிறது என ட்வீட்டுகள். கடைசியில் கொலைவெறிதான் ஆல்பத்தின் மோசமான பாடல் என தீர்ப்பே எழுதினார்கள். 

2014:
தனுஷ் மற்றும் தனுஷ் சார்ந்த படங்களே அதிகம் இசையமைத்துக் கொண்டிருந்த அனிருத்துக்கு ஒரு அதிரடி ஜாக்பாட் கிடைத்தது. அது பற்றி அவரே சொன்னது:

'' 'எதிர்நீச்சல்’ வெளியாகி மூணாவது நாள் முருகதாஸ் சார் ஆபீஸ்ல இருந்து கூப்பிட்டாங்க. பாடல்கள் ஹிட் ஆனதுக்கு வாழ்த்து சொல்லக் கூப்பிடுறார்னு நினைச்சுப் போனேன். 'இப்பத்தான் 'எதிர்நீச்சல்’ பார்த்தேன். மியூசிக் பிரமாதம். அடுத்து விஜய் சார்கூட 'கத்தி’ பண்றேன். நீங்கதான் மியூசிக்’னு எனக்கு ஷாக் கொடுத்தார் முருகதாஸ் சார். நம்பவே முடியலை.

ஒருநாள் கம்போஸிங்ல, 'என்னை ஏன் சார் இந்தப் படத்துக்கு செலெக்ட் பண்ணீங்க?’னு வாய்விட்டே கேட்டுட்டேன். 'என் ஃப்ளாட்ல சின்ன பசங்கள்லாம் 'எதிர்நீச்சலடி...’ பாட்டை கோரஸா பாடிட்டு இருந்தாங்க. அது ஏதோ ராப் மாதிரி இருந்துச்சு. எனக்குப் புரியலை. ஆனா, குழந்தைகளுக்குப் பிடிக்குதுனா, அதுல ஏதோ இருக்குனு தோணிச்சு. அப்புறம் 'எதிர்நீச்சல்’ பட டைட்டில்ல உங்க பேர் வந்தததும் தியேட்டர்ல பயங்கரமா கை தட்டினாங்க. ஃபுல்பார்ம்ல இருக்கீங்கனு புரிஞ்சுபோச்சு. அதான் உங்களை ஃபிக்ஸ் பண்ணிட்டேன்’னு சிரிச்சார்.''

அவ்வளவுதான். அனிருத்தின் கிராஃப் தாறுமாறாக ஏறியது. அதுவரை விஜய் படங்களில் இல்லாத ஸ்டைலில் பக்கம் வந்து ஓப்பனிங் சாங் மாஸ் ஹிட் அடித்தது. செல்ஃபி புள்ள சாங் ஆஃப் த இயர். ஹீரோ, வில்லனுக்கு என தனித்தனி தீம் இசை. ஒவ்வொன்றும் காதில் ஒற்றிக்கொள்ளும் ரகம். விஷால் தால்தானியுடன் அனிருத்தும் சேர்ந்து பாடிய ஆத்தி என நீ அனிருத்தின் ஆல் டைம் ஃபேவரைட்.
அதே வருடம் வந்த வி.ஐ.பி தனுஷ்-அனிருத் காம்போவின் மாஸ்டர் பீஸ். 2015ல் இன்னொரு மாஸ் ஹீரோ அஜித்தின் வேதாளம் ரிலீஸ். ஆலுமா டோலுமா பீட்டுக்கு ஆந்திரா வரை அதிர்ந்தது.  இதுவரை 14 முழு ஆல்பங்கள் இசையமைத்திருக்கிறார். அது தவிர சிங்கிள் பாடல்கள் பல படங்களில் வந்திருக்கின்றன. 

அனிருத்தின் குரல் இளசுகளின் வாய்ஸ் ஆகிப்போனது. ஏ.ஆர்.ரகுமானில் தொடங்கி புதிய இசையமைப்பாளர் நிவாஸ் பிரசன்னா வரை எல்லோரும் தங்கள் இசையில் பாட அனிருத்ததை அழைத்தனர். இசையமைத்தது ஹிட் ஆனால் ஒகே; இவர் பாடிய பாடல்களும் ஹிட் ஆனால்? கிட்டாரில் இருக்கும் ஏழு கம்பிகளிலும் சுக்ரன் குடிக்கொண்ட ஒருவனுக்கே இது நடக்கும்.

CRdDOF7UsAA8XCL_19090.jpg

சர்ச்சைகள்:
அனிருத்தின் கரியரே பாடல் லீக் ஆன பிரச்னையில் தான் தொடங்கியது. அதன் பின் நடிகை ஆண்ட்ரியாவும் அவரும் முத்தமிடும் புகைப்படங்கள் லீக் ஆகி பிரச்னை ஆனது. மொபைலை அணைத்துவிட்டு மும்பைக்கு பறந்தார் அனி. ஒரு வாரம் கழித்து அவர் திரும்பிய போது எல்லாம் ஓய்ந்திருந்தது. அப்போது விகடனுக்கு அவர் அளித்த பேட்டியில் பிரேக் அப் ஆகாமல் என்ன செய்ய வேண்டும் என அவரிடம் கேட்டபோது:

“'நிறையப் பொய் சொல்லாம இருந்தாலே போதும். 'அதான் நெருங்கிட்டோமே’னு அதிகமா அட்வான்டேஜ் எடுத்துக்கக் கூடாது. பார்ட்னரை இறுக்கிப் பிடிக்காம ஃப்ரீயா விட்டுடணும். ஆனா, மூணு இல்லை... மூவாயிரம் டிப்ஸ் கொடுத்தாலும் அதை சின்சியராக் கடைப்பிடிச்சாலும், காதல் பிரேக்-அப் ஆறதைத் தடுக்க முடியாது ப்ரோ!' என்றார்

பின், சிம்புவின் பீப் பாடல் வெளியான போது அதற்கும் அனிருத்துதான் இசை என சர்ச்சை ஆனது. எந்த பதிலும் பேசாமல் வெளிநாட்டில் தனது இசை நிகழ்ச்சிக்காக பறந்துக் கொண்டிருந்தார். 

இப்போதும் தனுஷுடன் பிரச்னை, சிம்புவுடன் நெருக்கம் என அனிருத்துக்கு பிரச்னைகள் பல உண்டு. ஆனால், அவை எதுவும் அனிருத்தின் இசையை பாதிக்காது. அப்படி ஒரு வேலைக்காரர் அனிருத். இந்த வெற்றிகள் அனிருத்தின் கடின உழைப்புக்காக கிடைத்தவை மட்டுமே. இதை அனிருத்தை அறிமுகப்படுத்திய தனுஷும் ஏற்றுக்கொள்வார். ஒரே ஒரு சம்பவமே அதற்கு போதும்.

சென்னை, தி.நகரில் இருக்கும் மீனாட்சி திருமண மண்டபம் அது. சென்னையின் மையம் என்றாலும் அது ஒரு சிறிய மண்டபமே. விகடனின் மாணவப் பத்திரிகையாளர் திட்டத்தின் ஆரம்ப நாள் அது. அங்கு வந்த பேசிய அனிருத் சொன்னார் “இதே மண்டபத்தில் சில கல்யாணங்களுக்கு நான் வாசிச்சிருக்கேன். அந்த பழைய ஞாபகங்கள் வருது”

 

மாமா ரஜினி மற்றும் சுற்றி இருக்கும் அனைவரும் சினிமாக்காரர்கள். வசதியானவர்கள். ஆனால், அனிருத் சில ஆயிரங்களுக்காக திருமணங்களில் வாசித்தார். தன் இசை தன்னை காப்பாற்றும் என நம்பினார். அந்த நம்பிக்கையைதான் தனது இசை மூலம்  அவர் தந்துக் கொண்டிருக்கிறார். அனிருத் இன்றைய இளைஞர்களுக்கு இசையமைப்பாளர் கிடையாது. இன்ஸ்பிரேஷன்.

இனிய பிறந்த நாள் வாழ்த்துகள் அனிருத்!

vikatan

  • தொடங்கியவர்

ஒரு குட்டி மர்ம கதை...

14695441_1461823230500750_86140966954975

 

ஒரு பொண்ணும் ஒரு பையனும் காதலிக்கிறர்கள்.

அவர்கள் காதல் பெண் வீட்டுக்கு தெரிந்ததும் பெண்ணுக்கு வேறு திருமணம் செய்ய ஏற்பாடு நடக்கிறது.

இதை அறிந்த பெண் யாருக்கும் தெரியாமல் 'இனி உங்கள் முகத்தில் முழிக்க மாட்டேன்' என கடிதம் எழுதி வைத்து விட்டு பையனோடு ஊரை விட்டு ஓடி விடுகிறாள்.

மறுநாள் பெண் வீட்டாரும் பெண்ணை எங்கெங்கோ தேடி அலுத்துப்போய், இனி அந்த பெண் வந்தாலும் ஏற்பதில்லை என முடிவு செய்தனர்.

இப்பதான் கதையில் திருப்பம்.

முன்று நாள் கழித்து அந்த பெண் தானாக, பையன் இல்லாமல் வருகிறாள்.

வாசலில் நிறுத்தி அவளை திட்டுகிறார்கள் பெற்றோரும், அண்ணனும்.

அப்பா : "இப்ப எதுக்கு வந்த? உனக்கு என்ன வேணும்?"

அம்மா : "ஊரார் முன்னாடி எங்களை கொன்னுட்டே! இப்ப எங்கடி வந்த?"

அண்ணன் : "ஏன் மறுபடியும் வந்து தொல்லை பண்றே? உனக்கு என்னதான் வேணும். சொல்லித் தொலை?"

மூன்று பேரும் அவளுடைய பதிலுக்காக பரபரப்பாக காத்திருக்கின்றனர்.

அவள் சொன்ன பதிலை கேட்டு அந்த முன்று பேர் மட்டும் அல்ல! இந்த உலகமே அதிர்ந்தது.

அந்த பதில் என்ன?

"என்னுடைய நோக்கியா சின்ன பின் சர்ஜர் மறந்து வைச்சிட்டு போயிட்டேன். அதை எடுத்துட்டு போயிடுறேன்மா."

கதை நீதி : நோக்கியா போன் மூன்று நாளுக்கு சார்ஜ் நிற்கும். .

1f602.png?என்னால முடியல!

(Whatsapp Stories)

  • தொடங்கியவர்

14724463_1157236124325080_50333572633291

ஹிந்தித் திரையுலகில் மின்னிய அதியுச்ச நட்சத்திரங்களில் ஒருவரான நடிகை ஹேமமாலினியின் பிறந்தநாள்.

 
  • தொடங்கியவர்

உலகிலேயே அதிக வயது பாண்டா மரணம்

 

விலங்கு பூங்காவில் வளர்க்கப்படும், உலகிலேயே அதிக வயதுடைய பாண்டாவாக கருதப்படுகின்ற ஜியா ஜியா, ஹாங்காங் கேளிக்கை பூங்காவில் இறந்துள்ளது.

ஜியா ஜியா பாண்டா
 ஜியா ஜியா பாண்டாவின் இறப்பு செய்தியை அறிந்து கவலையடைந்துள்ளளதாக ஹாங்காங் அரசு தெரிவித்திருக்கிறது

கடந்த இரண்டு வாரங்களில் உடல்நலம் மிகவும் மோசமான பெண் பாண்டாவான ஜியா ஜியா, பசி எடுக்கும் உணர்வை இழந்திருந்தது.

ஜியா ஜியா பாண்டா  ஜியா ஜியா பாண்டாவின் 37-வது பிறந்த நாளில் அதற்கு கேக் வழங்கப்பட்டது

ஹாங்காங் ஓஷன் பூங்காவில் இருந்த ஜியா ஜியாவின் 37-வது பிறந்த நாள் கடந்த ஜூலை மாதம் தான் விமரிசையாக கொண்டாடப்பட்டது.

BBC

  • தொடங்கியவர்
அனைவருக்கும் ஆறுதல் ஊட்டுக

 

article_1476679753-i-was-assaulted-on-thஎங்களுக்கு யாருமே இல்லை என எவருமே சொல்ல முடியாத ஒருநிலைமையை நாங்கள் அனைவரும் உருவாக்க வேண்டும். 

ஏழ்மை, நோய், போதிய அன்பு, அரவணைப்பு இல்லாமையினால் ஏங்கும் உயிர்கள் பலகோடி உளர்.

உங்களால், பணம், பொருள் உதவி நல்க இயலாது விடினும், தேறுதல் சொல்லிட நல்ல இதயம் உண்டு.

உலகம் பூராகவும் கஷ்ட்டப்பட்டு வாழ்கின்ற ஆதரவற்ற சிறார்கள், முதியோர், மாற்றுத் திறனாளிகளுக்கான பல தொண்டு நிறுவனங்கள், இல்லிடங்கள், ஆசிரமங்கள், புகலிடங்களை உருவாக்கியுள்ளன. 

சர்வதேசமெங்கும் தொண்டு நிறுவனங்களுடன் தனியார் அமைப்புகளும் உள்ளன. நீங்கள் அங்கு சென்று, ஏழைச் சிறார்களுக்கு, முதியோர், மாற்றுத் திறனாளிகளுக்குத் தேறுதலை ஊட்டுக. 

அதுவொன்றே, அவர்களின் ஏக்கங்களை, தனிமையை நீக்கி, மனதில் இனிமையைப் பொங்க வைக்கும். 

நாம் எல்லோருமே இரக்க சுபாவம் கொண்டவர்களே; அனைவருக்கும் ஆறுதல் ஊட்டுக.  

  • தொடங்கியவர்

வரலாற்றில் இன்று...

ஒக்டோபர் - 17

 

1091 : லண்டனில் பெரும் சூறாவளி தாக்கியது.

 

1346 :  ஸ்கொட்லாந்தின் இரண்டாம் டேவிட் மன்னனை இங்கிலாந்தின் மூன்றாம் எட்வேர்ட் மன்னர், சிறைப்பிடித்து 11 வருடங்கள் லண்டன் கோபுரத்தில் அடைத்து வைத்தார்.

 

1448 : கொசோவோவில் ஹங்கேரிய இராணுவம் ஒட்டோமான் படை களினால் தோற்கடிக்கப்பட்டது.

 

1610 : பதின்மூன்றாம் லூயி பிரான்ஸின் மன்னனாக முடிசூடினான்.

 

1660 : இங்கிலாந்தின் முதலாம் சார்ல்ஸ் மன்னனுக்கு மரண தண்டனையை அறிவித்த ஒன்பது பேர் தூக்கிலிடப்பட்டனர்.

 

829Mother_Teresa.jpg1662 : இங்கிலாந்தின் இரண்டாம் சார்ல்ஸ் டன்கேர்க் நகரை 40,000 பவுணிற்கு பிரான்சுக்கு விற்றான்.

 

1800 : டச்சு குடியேற்ற நாடான குரக்காவோ இங்கிலாந்தின் கட்டுப் பாட்டில் வந்தது.

 

1805 :  ஊல்ம் நகரில் இடம்பெற்ற சமரில் ஆஸ்திரியப் படையினர் பிரான் ஸின் நெப்போலியன் போனபார்ட்டின் படைகளிடம் வீழ்ந்தன.

 

1806 : எயிட்டியின் மன்னன் முதலாம் ஜாக் படுகொலை செய்யப்பட்டார்.

 

1907 : மார்க்கோனி அட்லாண்டிக் நகரங்களுக்கு இடையேயான தனது முதலாவது கம்பியில்லாத் தொடர்பை கனடாவின் நோவா ஸ்கோசியாவுக்கும், அயர்லாந்துக்கும் இடையே ஏற்படுத்தினார்.

 

1912 : முதலாம் பால்க்கன் போர்: பல்கேரியா, கிரேக்கம், சேர்பியா ஆகியன ஒட்டோமான் பேரரசுடன் போரை அறிவித்தன.

 

1917 : முதலாம் உலகப் போரில் ஜேர்மனி பிரித்தானியா மீதான தனது முதலாவது குண்டுத் தாக்குதலை நிகழ்த்தியது.

 

1933 : பௌதிகவியல் விஞ்ஞானி அல்பேர்ட் ஐன்ஸ்டைன், நாஸி ஜேர்மனியில் இருந்து வெளியேறி ஐக்கிய அமெரிக்காவில் குடியேறினார்.

 

1941 : இரண்டாம் உலகப் போரில் முதற் தடவையாக ஜேர்மனிய நீர்மூழ்கிக் கப்பல் அமெரிக்கக் கப்பலைத் தாக்கியது.

 

1956 : உலகின் முதலாவது வர்த்தக அணுமின் நிலையம் இங்கிலாந்தில் திறக்கப்பட்டது.

 

1961 : பாரிஸ் நகரில் போராட்டத்தில் ஈடுபட்ட நூற்றுக்கணக்கான அல்ஜீரியர்கள் பொலிஸாரால்  சுட்டுக் கொல்லப்பட்டனர்.

 

1965 : 1964 நியூயோர்க் உலகக் கண்காட்சி இரண்டாண்டுகளின் பின்னர் முடிவுற்றது. மொத்தமாக 51 மில்லியன் மக்கள் இக்கண்காட்சியைக் கண்டு களித்தனர்.

 

1966 : நியூயோர்க்கில் கட்டடம் ஒன்றில் இடம்பெற்ற தீயில் 12 தீயணைப்புப் படையினர் சிக்கி இறந்தனர்.

 

1973 : சிரியாவுக்கு எதிரான யுத்தத்தில் இஸ்ரேலுக்கு ஆதரவளித்த குற்றச்சாட்டில் மேற்கு நாடுகளுக்கான எண்ணெய் ஏற்றுமதிக்கு ஒபெக் அமைப்பு தடை விதித்தது.

 

1979 : அன்னை தெரேசாவுக்கு சமாதானத்துக்கான நோபல் பரிசு வழங்கப்பட்டது.

 

1995 : யாழ்ப்பாணத்தை விடுதலைப் புலிகளிடம் இருந்து கைப்பற்ற இலங்கை இராணுவம் ரிவிரெச (சூரிய கதிர்) நடவடிக்கையை ஆரம்பித்தது.

 

1998 : நைஜீரியாவில் பெற்றோலியக் குழாய் வெடித்ததில் 1,200 கிராமத்தவர்கள் கொல்லப்பட்டனர்.

 

2003 : தாய்ப்பே 101 உலகின் மிக உயரமான கட்டடமாகியது.

 

2006 : ஐக்கிய அமெரிக்காவின் மக்கள் தொகை 300 மில்லியனை எட்டியது.

metronews.lk

  • தொடங்கியவர்

14633218_1158011117580914_75861022373249

இலங்கை கிரிக்கெட்டின் கலக்கல் நட்சத்திரம் அரவிந்தவுக்கு பிறந்தநாள்.

இலங்கை கிரிக்கெட் அணியின் வரலாற்றின் மிகச் சிறந்த துடுப்பாட்ட மேதை,
1996 இல் இலங்கை அணி உலகக்கிண்ணம் வெல்வதற்கு முக்கிய காரணங்களில் ஒருவரான அரவிந்த டீ சில்வாவின் 50வது பிறந்தநாள்.

இலங்கை அணியின் பல்வேறு துடுப்பாட்ட சாதனைகளுக்கு சொந்தக்காரராக இருந்த முன்னாள் தலைவர் / உப தலைவர்.
சகலதுறை வீரர்.
தேர்வாளராகவும் பாராட்டப்பட்டவர்.

இலங்கை கிரிக்கெட்டின் ஆரம்ப காலங்களிலேயே சர்வதேசமெங்கும் புகழப்பட்ட இலங்கையின் துடுப்பாட்டத் தூணுக்கு இனிய வாழ்த்துக்கள்.

Happy Birthday Aravinda de Silva

Edited by நவீனன்

  • தொடங்கியவர்

‘பான்’ விற்கும் பாண்ட்!

p126d.jpg

ஜேம்ஸ் பாண்ட் கதாபாத்திரத்தில் எத்தனை பேர் நடித்திருந்தாலும், தனது கம்பீரத் தோற்றத்தால் பலரின் மனத்தில் இடம்பிடித்தவர் பியர்ஸ் பிராஸ்னன். வயசானாலும் ஸ்டைல் இன்னும் அவரை விட்டுப் போகவில்லை என்றே சொல்லவேண்டும். இவர் புதிதாக நடித்துள்ள ‘பான்’ விளம்பரம் ஒன்று வெளியாகி இவரது ரசிகர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியது. இந்த விளம்பரத்தில் வயதான தோற்றத்தில் தனது பிரத்தியேக பாண்ட் லுக்கில் தோன்றினாலும், ‘பான்’ விளம்பரத்தில் நடித்ததன் மூலம் பிராஸ்னன் மீதான பிம்பம் ரசிகர்களிடையே சுக்குநூறாகியுள்ளது. #Piercebrosnan பெயர் கடந்த வாரம் முழுவதும் சோசியல் மீடியாவில் ஹாட் டாபிக் ஆனது. அவசரப்பட்டுட்டியே கொமாரு!


எந்திரன் 2.0

p126e.jpg

சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த், இயக்குநர் ஷங்கர், பாலிவுட் நடிகர் அக்‌ஷய்குமார் என மெகா கூட்டணியில் பிரமாண்டமாக உருவாகிவருகிறது எந்திரன் 2.0 திரைப்படம். அடுத்த ஆண்டு தீபாவளிக்கு இத்திரைப்படம் வெளியிடத் திட்டமிடப்பட்டுள்ளதால், இப்போதே பாலிவுட் தயாரிப்பாளர்கள் தங்களது படங்களின் ரிலீஸ் தேதியை மாற்றி வருகின்றனர். இப்படத்தின் ஷூட்டிங் ஸ்பாட்டில் எடுக்கப்பட்ட புகைப்படம் ஒன்றை இயக்குநர் ஷங்கர் தனது ட்விட்டர் பக்கத்தில் கடந்த வாரம் வெளியிட்டார். சிறிது நேரத்தில் #Superstar டேக்கில் வைரலான இந்தப் புகைப்படம், அதன்பின் மீடியா வட்டாரங்களில் செய்தியானது. வந்துட்டேன்னு சொல்லு!


நம்பர் 1 இந்தியா!

p126c.jpg

நியூஸிலாந்து கிரிக்கெட் அணிக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் 178 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றதன் மூலம், 2-0 என டெஸ்ட் தொடரை வென்றது விராட் கோலி தலைமையிலான இந்திய அணி. இதனைத் தொடர்ந்து ஐ.சி.சி. டெஸ்ட் தரவரிசையில் இந்திய அணி, பாகிஸ்தானைப் பின்னுக்குத்தள்ளி முதலிடத்தைப் பிடித்துள்ளது. 500-வது டெஸ்ட் போட்டியில் வெற்றி, தரவரிசையில் முதலிடம் எனத் தொடர்ந்து சாதனை படைத்து வருவதால் விராட் கோலி மட்டுமன்றி இந்திய ரசிகர்களும் செம குஷியில் உள்ளனர். ரசிகர்கள் உற்சாகப் பொங்கல் வைத்ததில் #IndiaNo1 #INDvNZ போன்ற டேக்குகள் ட்விட்டரில் ட்ரெண்ட் அடித்தது. எங்க ஏரியா உள்ள வராதே!


வித்தியாச விழிப்புணர்வு!

p126.jpg

பிரம்மபுத்திரா நதியின் குறுக்கே அணை கட்டுவது, அணுசக்தி வினியோக நாடுகள் கூட்டமைப்பில் இந்தியா சேர எதிர்ப்பு தெரிவித்தது, ஜெய்ஷ்-இ-முகமது தீவிரவாதி மசூத் ஆசாரை ஆதரித்தது என நமது அண்டை நாடான சீனா, தொடர்ந்து இந்தியாவிற்கு எதிரான நிலைப்பாட்டோடு செயல்பட்டு வருகிறது. பொறுமையிழந்த நெட்டிசன்ஸ் #boycottchinaproduct என்ற டேக்கில், சீனப்பட்டாசு உள்பட எந்த சீனப்பொருட்களையும் வாங்காமல் தவிர்த்து அந்நாட்டிற்குத் தக்க பதிலடி தரவேண்டுமென ட்விட்டரில் விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகின்றனர். இந்த டேக் அதிரி புதிரி ஹிட் அடித்து பலரையும் ‘அட!’ போட வைத்துள்ளது.


மக்கள் கலைஞன்!

p126b.jpg

நகைச்சுவை நாயகன் வடிவேலுவின் பிறந்தநாளாக அக்டோபர் 10ம் தேதியை இணையமே தவறுதலாகக் கொண்டாடியது. ஆனால் செப்டம்பர் 12-ம் தேதிதான் அவரது உண்மையான பிறந்தநாளாம்! விக்கிப்பீடியாவின் புண்ணியத்தால்  பிறந்தநாளை (?) ரசிகர்கள்  லேட்டாகக் கொண்டாடி மகிழ்ந்தனர்.  நெட்டிசன்களும், மீம் கிரியேட்டர்களும் சோஷியல் மீடியாவில் திருவிழாவாகக் கொண்டாடித் தீர்த்தனர். #vadivelu #HappyBirthdayVadivelu #vadiveluforlife போன்ற டேக்குகள் இந்திய அளவில் கலக்கின. வாழ்த்துகள் வைகைப்புயல்!


விரைவில் ஷரபோவா!

p126a.jpg

ரஷ்யாவைச் சேர்ந்த அழகுப்பதுமை மரியா ஷரபோவா டென்னிஸ் ஆடும் அழகைப் பார்ப்பதற்காகவே பலரது வீட்டிலும் ரிமோட்கு சண்டை நடக்கும். இவர் ஊக்கமருந்து சோதனையில் தடை செய்யப்பட்ட மருந்தைப் பயன்படுத்தியது தெரியவந்ததால் 2 வருடங்கள் இடைக்காலத் தடைவிதித்து பலரது சாபத்தையும் வாங்கிக் கட்டிக்கொண்டது சர்வதேச டென்னிஸ் சம்மேளனம். இதை எதிர்த்து ஷரபோவா மேல்முறையீடு செய்ததில் தற்போது தடைக்காலம் 15 மாதங்களாகக் குறைக்கப்பட்டுள்ளது. ஊக்கமருந்து பயன்படுத்தியது நிரூபிக்கப்பட்டிருக்கும்போது தடைக்காலத்தை ஏன் குறைக்க வேண்டும் என விமர்சனங்களும் குவிந்தன. எது எப்படியோ... #Sharapova பெயர் உலக ட்ரெண்ட்டில் முதலிடத்தைப் பிடித்தது. நீ வா சுருதி!


கூகுள்டா!

p126n.jpg

ஆப்பிள் நிறுவனத்தின் ஐபோனுக்குப் போட்டியாக, கூகுள் நிறுவனம் ஸ்மார்ட் போன் ஒன்றை அறிமுகப்படுத்தியுள்ளது. எந்த அளவுக்குப் போட்டியென்றால்... ஆப்பிளின் ‘சிரி’க்குப் பதில், இதில் கூகுள் அசிஸ்டன்ட் வசதி கொடுக்கும் அளவிற்கு! கூகுள் பிக்ஸல் மற்றும் பிக்ஸல் எக்ஸல் எனப் பெயரிடப்பட்டுள்ள இந்த இரு மாடல்கள் விரைவில் சந்தைக்கு வரவிருக்கின்றன. இதன் அறிமுகவிழா நடந்துகொண்டிருக்கும்போதே ட்விட்டரில் #GoogleEvent டேக்கில் இதுபற்றிய அப்டேட்கள் கலக்கியதில் ட்ரெண்ட்டில் இடம்பிடித்தது. எல்லாம் சரி, இந்த பிக்ஸல் போனோட தொடக்க விலை எவ்வளவு தெரியுமா? ஜஸ்ட் ரூ.57,000 தான்! ஆத்தி!

vikatan

  • தொடங்கியவர்

சிங்கப்பூரில் தீபாவளி அலங்கார ரயில்

14711633_16460.jpg

தீபாவளி பண்டிகைக்கு இரண்டு வாரங்கள் உள்ள நிலையில், இதற்கான ஏற்பாடுகள் களைகட்டத் தொடங்கியுள்ளது. முக்கியமாக உலக நாடுகள் பலவும் தீபாவளி பண்டிகையைக் கொண்டாட தயாராகி வருகின்றன. தீபாவளிப் பண்டிகையை முன்னிட்டு கடந்த சில வாரங்களுக்கு முன்பு, அமெரிக்கா சிறப்பு தபால் தலையை வெளியிட்டது.


இந்நிலையில் சிங்கப்பூர் தரை போக்குவரத்துத் துறை தீபாவளிப் பண்டிகையை முன்னிட்டு அலங்கரிக்கப்பட்ட அதிவேக ரயில் ஒன்றை இயக்கி வருகிறது. மேலும், அதன் முக்கிய ரயில் நிலையங்களிலும் தீபாவளியை முன்னிட்டு அலங்காரம் செய்யப்பட்டுள்ளது. சிங்கப்பூர் போக்குவரத்து துறை அமைச்சர் பூவான் இந்த ரயிலை தொடங்கி வைத்து, அதில் பயணம் மேற்கொண்டார்.

vikatan

 

 

 

Edited by நவீனன்

  • தொடங்கியவர்

14720554_1158013460914013_75302413787327

 

காலம் அழிக்காத கவி வரிகளைத் தந்து, அனுபவ மொழிகளால் தமிழுக்கு அழகு சேர்த்த கவியரசர் கண்ணதாசனின் நினைவுதினம்.

"நான் மானிட இனத்தை ஆட்டிவைப்பேன்
அவர் மாண்டு விட்டால் அதை பாட்டில் வைப்பேன்
நான் நிரந்தரமானவன் அழிவதில்லை
எந்த நிலையிலும் எனக்கு மரணமில்லை.. "

சீசரின் நண்பன் கண்ணதாசன்...! - நினைவு தினச் சிறப்புப் பகிர்வு

Kannadasan%20600_13297.jpg

 

‘‘யாருக்காகவும் உன்னை மாற்றிக்கொள்ளாதே; ஒருவேளை மாறநினைத்தால், ஒவ்வொரு மனிதர்களுக்கும் நீ மாற வேண்டி வரும்’’ என்றவர் கவிஞர் கண்ணதாசன். அவருடைய நினைவு தினம் இன்று.

‘‘ஆயிரம் பாட்டுக்கு அடி எடுத்துக்கொடுப்பான்டி!’’

மருது பாண்டியர்கள் நீதி தவறாது ஆட்சி செய்த சிவகங்கைச் சீமையின் சிறுகூடல்பட்டியில் வசித்த சாத்தப்பன் - விசாலாட்சி என்ற தம்பதியருக்கு எட்டாவது மகனாய் பிறந்தவர் முத்து. அந்த முத்துதான் பின்னாளில் கண்ணதாசன் என்ற முத்தாய் ஜொலித்தார். பள்ளிக்கூடத்துக்கு மூன்று ரூபாய் கட்டமுடியாத நிலையில், பலமுறை வெளியே அனுப்பப்பட்டார். இறுதியில் ஏட்டுக் கல்வியை எட்டாம் வகுப்போடு நிறுத்திக்கொண்ட கண்ணதாசன், பன்மொழிப் புலவர் கா.அப்பாத்துரையார் தலைமை ஆசிரியராய் இருந்த பள்ளியில் யாருக்கும் தெரியாமல் அடிக்கடி வீட்டுக்குச் சென்றுவிடுவார். ஏட்டுக்கல்விக்குத்தான் விடை கொடுத்தாரே தவிர, எழுதுவதற்கு விடை கொடுக்கவில்லை. தன் வீட்டிலிருந்து இரண்டு மைல் தொலைவிலிருந்த பாப்பாத்தி ஊருணிக் கரையில் அமர்ந்து எதையாவது எழுதிக் கொண்டிருந்தார். வானொலியில் ஒலிபரப்பாகும் பாடல்களைத் திரும்பத் திரும்பக் கேட்டுத் தன் மனதில் பதிய வைத்துக் கொண்டதோடு அதையும் பாடிக் கொண்டிருப்பார். இதைக் கேட்ட பக்கத்து வீட்டு ஆச்சி, ‘‘என்ன நம்ம முத்து பாட்டுல மொத ரெண்டு வரிகள மட்டுமே பாடிக்கிட்டே இருக்கான். முழுசும் பாட வராதா’’ என கவிஞரின் தாயாரிடம் கேட்க... அதற்கு அவர், ‘‘அடி போடி பைத்தியக்காரி... எம் மகன் ஆயிரம் பாட்டுக்கு அடி எடுத்துக்கொடுப்பான்டி. அவனுக்கா தெரியாது’’ என்று அன்றே தன் மகனைப் புகழ் ஏணியில் ஏற்றிப் பெருமைப்படுத்தினார்.

‘‘இனி, மண்ணெண்ணெய் வாங்கிக் கட்டுபடியாகாது!’’

வீட்டில் அனைவரும் தூங்கிய பிறகு, அரிக்கேன் விளக்கை எடுத்துத் தலையணைக்குப் பக்கத்தில் வைத்துக்கொண்டு எதையாவது எழுதிக் கொண்டிருந்த கவிஞரைப் பார்த்து... அவரது அப்பா, ‘‘இனி, மண்ணெண்ணெய் வாங்கிக் கட்டுபடியாகாது’’ எனக் கோபப்படுவாராம். அப்போது எல்லாம், ‘‘அவனை எதுவும் சொல்ல வேண்டாம்’’ என்று அவரது அன்னை, தன் கணவரிடம் வேண்டுகோள் வைப்பாராம். தன் எழுத்துப் பயணத்துக்குத் தீனி போடுவதற்காக யாரிடமும் சொல்லாமல் திருச்சிக்குச் சென்றார்; பின் சென்னை சென்றார். அங்குதான் உறவினரின் உண்மை நிலையையும், சமூகப் பார்வையையும், கடற்கரைக் காதலையும் கற்றுக்கொண்டார். நகரம் என்றாலே நரக வேதனையை அனுபவிக்கும் மக்களிடையே எந்தவிதமான கடமையும் இல்லாமல் பசியுடனும், பட்டினியுடனும் நாட்களை நகர்த்தினார். திறமை மட்டும் இருந்தால் ஒருவரால் முன்னேற முடியாது. சந்தர்ப்பமும் நன்றாக அமைய வேண்டியது முக்கியம் என்பதை நன்றாகத் தெரிந்து கொண்டார் கவிஞர். இடையிடையே விழிகளோடு முடிந்த முதல் காதலும், விடை இல்லாமல் போன இரண்டாம் காதலும் உண்டு. இளம் வயதில் நண்பர்கள் மூலம் விஷமாகும் மதுபானங்களின் பிடியிலும், விலை பேசும் மாதுக்களின் பிடியிலும் சிக்கிக்கொண்டார். காதல்தான் கைகூடவில்லை என்றாலும், கல்யாணத்தில் அவர் வெற்றிபெறத் தவறியதே இல்லை. வாழ்க்கையில் ஏற்பட்ட அவமானங்களையும், சந்தித்த பிரச்னைகளையும் தன் அனுபவங்கள் மூலம் பாடல்களாகவும், கட்டுரைகளாகவும் எழுதியதால்தான் பின்னாளில் அவர், மிகச்சிறந்த கவிஞராக உருவாவததற்கு அடிகோலியது.

தன் மனதைத் தேற்றிக்கொள்ள,

‘கலங்காதிரு மனமே...
கனவெல்லாம் நனவாகும் ஒரு தினமே...’

என்று நம்பிக்கையுடன் எழுதிய பல்லவிதான், ‘கன்னியின் காதலி’ படத்தில், இடம்பெற்ற அவரது முதல் பாடல். அன்று முதல் திரையுலகோடு இலக்கியத்தையும், அரசியலையும், வாழ்க்கையையும் தன்னோடு இணைத்துக்கொண்டு அதில் பயணிக்கலானார். ஜனனத்தையும், மரணத்தையும் தவிர, மனித வாழ்வில் எந்த முடிவும் பரிசீலனைக்குரியதே என்பதை அவர் எண்ணமாகக் கொண்டிருந்தார். அவர் கொண்டிருந்த கனவுகளும் லட்சியங்களும் வாழ்வினோடும், மக்கள் நலனோடும் தொடர்புள்ளவையாய் இருந்தன. அதனால்தான் ஒரு பாடலில்,


‘எல்லோரும் எல்லாமும் பெற வேண்டும் - இங்கு
இல்லாமை இல்லாத நிலை வேண்டும்’
- என்று எழுதினார்.

 

Kanna_14498.jpg

நம்பிக்கை எப்படிப்பட்டது?

நம்பிக்கை ஒன்றே வாழ்வின் அச்சாணி என்பதை, தன்னுடைய ‘எண்ணங்கள் ஆயிரம்’ என்ற தொகுப்பில் இடம்பெற்ற நம்பிக்கை என்ற கட்டுரை மூலம் உணர்த்தினார். அதில் இடம்பெற்ற சில வரிகள்: ‘‘நம்பிக்கை தரும் வெற்றிகளைவிடத் தோல்விகள் அதிகம். அந்தத் தோல்விகளும், வெற்றிகளே என்பது ஒருவனது நம்பிக்கை. நம்பிக்கையின் அளவு எவ்வளவு இருக்க வேண்டும் என்பதை மனிதர்கள் மிருகங்களிடம் இருந்து கற்றுக்கொள்ள வேண்டும். தங்கள் சக்திக்கேற்பவே அவைகள் நம்பிக்கை வைக்கின்றன. நம்பிக்கை துளிர்விடும்போது அச்சம் அற்றுப்போகிறது. அச்சம் அற்றுப்போன இடத்தில், எது செய்தாலும் சரியே என்ற துணிவு வருகிறது. அந்தத் துணிவு, தோல்வியைக் கூட்டிவிடுகிறது. தோல்வி, நம்பிக்கையை சாக அடிக்கிறது. மனித மனம், பழைய நிலைக்குத் திரும்புகிறது. மனிதனது கடைசி நம்பிக்கை, மயானம். இந்த நம்பிக்கை மட்டும் தோல்வியடைந்ததே இல்லை’’.

நம்பிக்கைக்கு விதை விதைத்த கவிஞர், மக்கள் சும்மா இருந்தால் சோம்பேறிகள் ஆகிவிடக் கூடும் என்பதை தன் எழுத்துகளால் சுட்டுத் தள்ளினார். எண்ணும் உரிமை, எழுதும் உரிமை, ஏசும் உரிமை, பேசும் உரிமை என எல்லாம் பெற்றுக்கொண்ட மக்கள், உழைக்கும் உரிமையை மறந்துவிட்டனர். அதை, அவர்கள் துணிவுடன் போராட வேண்டும் என்பதை,
‘சும்மா இருப்பவன் சோம்பேறி அவனிடம்
சொர்க்கத்துக் கென்ன வேலை?
சுடுகின்ற கோடையிலே வளைகின்ற ஏழையால்
அமைந்ததே இன்பச் சோலை’
- என்கிற கவிதை மூலம் உணர்த்தினார்.

அடிப்படைத் தத்துவமான மக்கள் நலன் என்பது நிலையானது. ஆனால், அதை அடையும் வழியில் மாற்றங்களை மேற்கொள்ளும்போது, தலைவரும் தர்பாரும் மாறும் என்பதை,
‘தலைவர் மாறுவர்; தர்பார் மாறும்;
தத்துவம் மட்டுமே அட்சய பாத்திரம்’
- என்னும் கவிதை மூலம் அடித்துச் சொன்னார்.

மக்களையும், மக்களாட்சியையும் பற்றிச் சிந்தித்த அவர், நாட்டின் சமூக அவலத்தை நினைத்து வேதனைப்பட்டார்.
‘மேட்டுக் குடி வாழ்க்கை
மென்மே லுயர்ந்து வர
நாட்டுக் குடி வாழ்க்கை
நடுத் தெருவில் நிற்பதனை
மாற்ற வேண்டும்’
என்று குரல்கொடுத்தார்.

‘‘இருப்பது போதும்; வருவது வரட்டும்; போவது போகட்டும்; மிஞ்சுவது மிஞ்சட்டும் என்று சலனங்களுக்கு ஆட்படாமல் இருப்பதே பற்றற்ற வாழ்க்கையாகும்’’ என்று சொல்லும் கவிஞர், ‘‘பிறப்பிலிருந்து இறப்புவரை துன்பமே இல்லாமல் வாழ்ந்தவர்கள் எத்தனை பேர்? கண்களை மூடிக்கொண்டு எண்ணிப் பாருங்கள். ஒரு கட்டம் அப்படி என்றால், மறு கட்டம் இப்படி. ஏற்றம் என்பது இறைவன் வழங்கும் பரிசு. இறக்கம் என்பது அவன் செய்யும் சோதனை’’ என்று நாம் வாழும் வாழ்க்கை இறைவனைச் சார்ந்தே இருக்கிறது என்பதையும் தெளிவுபடுத்துகிறார். இரவும் பகலும்போன்று வாழ்க்கையில் மாறிமாறி வரும் இன்பத்தையும் துன்பத்தையும் எப்படிப் பகிர்ந்துகொள்ள வேண்டும் என்பதையும் இறைவனிடம் கீழ்வரும் ஒரு கவிதை மூலம் வேண்டுகோளாய் வைக்கிறார்.
‘இரண்டு மனம் வேண்டும்
இறைவனிடம் கேட்பேன்!
நினைத்து வாட ஒன்று...
மறந்து வாழ ஒன்று!’

‘துன்பம் ஒரு சோதனை!’

இதனை மேலும் விரிவுபடுத்தி வாழ்க்கையில் மனிதன் எப்படியிருக்கிறான் என்பதை தன்னுடைய ‘அர்த்தமுள்ள இந்து மதம்’ என்னும் நூலில், ‘துன்பம் ஒரு சோதனை’ என்கிற கட்டுரையில் கவிஞர் இப்படிக் குறிப்பிட்டிருப்பார். ‘‘வெள்ளம் பெருகும் நதிகளும் ஒருமுறை வறண்டு விடுகின்றன. குளங்கள், கோடையில் வற்றி மழைக்காலத்தில் நிரம்புகின்றன. நிலங்கள், வறண்டபின்தான் பசுமையடைகின்றன. மரங்கள், இலையுதிர்ந்து பின் துளிர்விடுகின்றன. இறைவனின் நியதியில் நிரந்தரமாக வாழ்ந்து கொண்டிருப்பது மலை ஒன்றுதான். அதுவும் வளர்வதாகவும், அமிழ்வதாகவும் விஞ்ஞானிகள் கூறுகிறார்கள். இறைவன் மனிதனையும் அப்படித்தான் வைக்கிறான். நிரந்தரமாக இன்பத்தை அனுபவித்தவனும் இல்லை. நிரந்தரமாகத் துன்பத்தில் உழன்றவனும் இல்லை. முதற்கட்டம் வரவு என்றால், அடுத்தகட்டம் செலவு; முதற்கட்டம் இன்பமென்றால், அடுத்தகட்டம் துன்பம். முதற்கட்டமே துன்பம் என்றால், அடுத்தகட்டம் இன்பம். இறைவனது தராசில் இரண்டு தட்டுக்களும் ஏறி ஏறி இறங்குகின்றன. எல்லாச் செல்வங்களையும் நிரந்தரமாக எவனுக்கும் இறைவன் வழங்கியதில்லை. அந்த நாளில் எனக்கு நல்ல பசியெடுத்தது; உணவு கிடைக்கவில்லை. பின் பசியுமிருந்தது; உணவும் கிடைத்தது. இப்போது உணவு கிடைக்கிறது; பசியில்லை. அடுக்கடுக்காகப் பணம் சேர்த்து, ஆயிரம் வேலிக்கு மிராசுதாரர் ஆனார் ஒருவர். ஆன மறுநாளே, அவரை ‘அரிசி சாப்பிடக் கூடாது; சர்க்கரை வியாதி’ என்று சொல்லிவிட்டார் டாக்டர்’’ என்று ஒரு மனிதனின் வாழ்க்கையை அழகாகச் சொல்லியிருப்பார்.

பெண்களை உயர்வாகவே கருதினார்!

பெண்களைப் போதைப் பொருளாக மட்டுமே கண்ணதாசன் பார்த்தார் என்று குற்றஞ்சாட்டுபவர்கள் பலர் இருந்தாலும், பெண்களை என்றுமே அவர் உயர்வாகவே கருதினார். ‘பழைமையின் பெயரில் பொசுக்கும் பருவமும் பொய்யென அவள் கிடக்க வேண்டுமோ’ என்று பெண்களுக்கு ஆதரவாய் குரல்கொடுத்தார். பெண்கள் எப்படிப்பட்டவர்கள் என்பதைக் கீழ்வரும் பாடலில் அழகாக உணர்த்தியிருப்பார்.
‘உள்ளத்தின் கதவுகள் கண்களடா - இங்கே
உறவுக்குக் காரணம் பெண்களடா...
உள்ளத்தை ஒருத்திக்குக் கொடுத்துவிடு - அந்த
ஒருத்தியை உயிராய் மதித்துவிடு!’

இதே பாடலில்தான் காதல் என்ற மந்திரச்சொல்லுக்கும் அழகான கருத்தைப் பதிவுசெய்திருப்பார். அந்தப் பாடல் வரிகள்,
‘காதல் என்பது தேன்கூடு - அதை
கட்டுவதென்றால் பெரும்பாடு...
காலம் நினைத்தால் கைகூடும் - அது
கனவாய்ப் போனால் மனம் வாடும்!’

மதுவைத் தொடாதவர்கள் எப்படிப்பட்டவர்கள்?

அதேபோல், கவிஞர் மதுக்கோப்பையுடனே காலங்கழித்தார் என்று சொல்பவர்களும் ஏராளம். ஆனால் அந்த, மதுவைத் தொடாதவர்கள் எப்படிப்பட்டவர்களாக இருப்பார்கள் என்பதை, ‘‘மதுவைத் தொடாவிடில் சபைகள் மதிக்கும்; அதனால், பற்பல லாபம் உண்டாகும்; அதிக நாட்கள் உழைக்க வலுவிருக்கும்; அனைவரும் வணங்கும் நிலையிருக்கும்’’ என்று மிகவும் அழகாகத் தெளிவுபடுத்தினார்.

ss_14346.jpgஆறு மாதத்தில் தூங்கும் குழந்தையின் தூக்கமே சுகமான தூக்கம் என்று சொல்லும் கவிஞர், தூங்கும் அந்தக் குழந்தையைக்கூட எழுப்ப வேண்டாம் என்று குரல்கொடுக்கிறார்.
‘அவனை எழுப்பாதீர்;
அப்படியே தூங்கட்டும்
பூப்போலத் தூங்குகிறான்
பூமியிலே உள்ளதெலாம்
பார்க்காமல் தூங்குகிறான்’
என்று தன் பேரன் தூங்கியதைக் கண்டு அந்தப் பாடலை எழுதியிருப்பார் கவிஞர்.

‘சரித்திரம்’ என்னும் கட்டுரை!

வாழ்க்கையில் சரித்திரம் எவ்வளவு முக்கியமானது என்பதை, தன்னுடைய ‘சரித்திரம்’ என்னும் கட்டுரையில் உண்மை சரித்திரத்தை உணர்த்தியிருப்பார். அந்தக் கட்டுரையில் இடம்பெற்ற சில வைரவரிகள்: ‘‘சரித்திர நதியின் ஓட்டத்தை நிறுத்தியவனும் இல்லை; திருந்தியவனும் இல்லை. அதன் இரண்டு கரைகளில் ஒன்று வெற்றி; மற்றொன்று தோல்வி! வெற்றிக் கரை, பசுமையாக இருக்கிறது. தோல்விக் கரை, சுடுகாடாகக் காட்சியளிக்கிறது. பசுமையான நிலப்பரப்பை விடச் சுடுகாட்டின் பரப்பளவே அதிகமாக இருக்கிறது. ஒவ்வொரு கட்டத்திலும் சுடுகாடு நிரம்பி வழிவதைப் பார்த்த பிறகும், அடுத்து வருகிறவன் தன்னுடைய பசுமை நிரந்தரமானது என்றே கருதுகிறான். அந்தச் சுடுகாட்டில் அலெக்சாண்டரைப் பார்த்தபிறகும், அகில ஐரோப்பாவுக்கும் முடிசூட்டிக்கொள்ள முயன்று, அங்கேயே போய்ச் சேர்ந்தான் நெப்போலியன். அந்த நெப்போலியனின் எலும்புக் கூடுகள் சாட்சி சொல்லியும்கூட, உட்கார்ந்த இடத்திலேயே உலகத்தை வரவழைக்க முயன்று நெப்போலியனுக்குப் பக்கத்திலேயே படுக்கை விரித்துக்கொண்டான் ஹிட்லர். அந்த ஹிட்லரை எப்போதும் தனியாகவிடாத முசோலினி, அவனுக்கு முன்னாலேயே புறப்பட்டுப் போய் அவனுக்கு இடம் தேடிவைத்தான். அதோ, அந்தச் சுடுகாட்டில் பயங்கர ஜவான்கள். ஜார் பரம்பரைகள், லூயி வம்சாவளிகள் அனைவரும் உலாவிக் கொண்டிருக்கிறார்கள். இப்படிக் காலங்காலமாகச் சாட்சியங்கள் இருந்தும்கூட, கண்மூடித்தனமான அதிகாரவெறி இருந்துகொண்டே இருக்கிறதே. ஏன்? அதுதான் இறைவன் பூமிக்கு வழங்கிய தர்மம். அழிய வேண்டியவன், ஆடி முடித்துதான் அழிய வேண்டும் என்பது காலத்தின் விதி. பதவி என்னும் பச்சை மோகினியின் கரங்களில் பிடிபட்டவனிடமிருந்து அடக்கம் விடைபெற்றுக் கொள்கிறது. ஆணவம் தலை தூக்கி நிற்கிறது. வெற்றி வெற்றி என்று தொடர்ந்து வரவர தோல்வி என்பது தன் அகராதியிலேயே இல்லை என்ற துணிச்சல் வருகிறது. கண்ணுக்கு முன்னால் இருக்கும் பயங்கரப் படுகுழிகூடத் தனக்காகக் கட்டப்பட்ட நீச்சல் குளம்போல் தோன்றுகிறது. விழுந்த பிறகு, எலும்பு முறிந்த பின்தான் மாயை விலகுகிறது; மயக்கம் தெளிகிறது. ஒரு மனிதனின் கரங்களுக்குள் உலகத்தின் சுக துக்கங்கள் விளையாட இறைவன் ஒருபோதும் அனுமதித்தது இல்லை. அடித்த பந்து திரும்பி வந்து தாக்கும்போதுதான் இந்த உண்மை புலப்படுகிறது’’ என்று பல உண்மைகளை அதில் உணர்த்தியிருப்பார் கவிஞர்.

‘‘தன்னுடைய தோழன்’’ சீசர்!

Ceaser_13248.pngதன்னுடைய நண்பர்களிடம் நன்றியைக் காணாததால் விரக்தியடைந்த கவிஞர், ‘சீசர்’ என்ற ஒரு நாய்க்குட்டியை வாங்கி வந்து வளர்த்தார். சோறு கொடுக்கும் கை மீளுமுன்பே வெடுக்கென கடிக்கும் மாந்தர்கள் வாழும் உலகிலே தன்னிடம் நன்றி உணர்வுடன் இருந்த சீசரை, ‘‘தன்னுடைய தோழன்’’ என்றார் கண்ணதாசன். ஆனால், அவருடைய நண்பர்கள்தான் நன்றியை மறந்தார்களே தவிர, அவர் மறக்கவில்லை. கண்ணதாசனுக்கு தக்கசமயத்தில் எல்லாம் உதவி செய்தவர் சின்னப்ப தேவர். கவிஞருடைய வீட்டுத் திருமணங்களில் எல்லாம் கலந்துகொண்டவர் அவர். அப்படி ஒரு நிகழ்வுக்கான செய்தியைக் கவிஞர் சொன்னபோது, ‘‘அந்த நாளில் ஊரில் நான் இருக்க மாட்டேன்’’ என்றாராம் சின்னப்பத் தேவர். உண்மையிலேயே கவிஞர் சொன்ன அந்தத் தேதியில் சின்னப்பத் தேவர் இறந்து விட்டார். அதனால், அந்தத் திருமண வரவேற்பையே நிறுத்தியதோடு தன் நன்றி மறவாமையையும் வெளிப்படுத்தினார்.

பல ஊர்களை வைத்து எழுதிய பாடல்!

ஒரு சமயம் அறிஞர் அண்ணா தனது கழக நண்பரிடம், ‘‘எங்கிருந்து வருகிறீர்கள்’’ என்று கேட்டார். அப்போது அவர், ‘‘நான் கருவூரிலிருந்து வருகிறேன்’’ என்றார். அதைக் கேட்ட அண்ணா, ‘‘எல்லோருமே கருவூரிலிருந்து சாவூருக்குப் போகிறவர்கள்தான்’’ என்றார். அருகில் இருந்த கண்ணதாசன், இந்த வார்த்தைகளைக் கேட்டு மிகவும் ரசித்தார். இதன் பிரதிபலிப்புதான், ‘காட்டு ரோஜா’ என்ற படத்தில், அவர் எழுதிய ‘எந்த ஊர் என்றவனே’ என்ற பாடல். இதில், உடலூர், உறவூர், கருவூர், மண்ணூர், கண்ணூர், கையூர், காலூர், காளையூர், வேலூர், விழியூர், காதலூர், கடலூர், பள்ளத்தூர், மேலூர், கீழூர், பாலூர் என்று பல ஊர்களைப் பற்றிப் பாடி மனித வாழ்க்கையின் தத்துவத்தை அந்தப் பாடல்மூலம் தெளிவுபடுத்தினார்.

தேசிய விருது பெற்ற பாடல்!

சமூகம், காதல், தத்துவம், தாலாட்டு, பக்தி எனப் பல பாடல்களை எழுதினார்.
‘ராமன் என்பது கங்கை நதி
அல்லா என்பது சிந்து நதி
யேசு என்பது பொன்னி நதி
நதிகள் பிறக்குமிடம் பலவாகும் - எல்லா
நதியும் கலக்குமிடம் கடலாகும்’
என்று ஒற்றுமையை உணர்த்தி எழுதப்பட்ட இந்தப் பாடலுக்கு தேசிய விருது கிடைத்தது. ‘சேரமான் காதலி’ என்னும் நாவல் அவருக்கு சாகித்ய அகாடமி விருதைப் பெற்றுத் தந்தது. ‘அர்த்தமுள்ள இந்து மதம்’, ‘இயேசு காவியம்’ என மதம் பார்க்காத புகழ்மிக்க நூல்களை எழுதினார். எம்.ஜி.ஆர் ஆட்சியில் அரசவைக் கவிஞரானார். இப்படி தன் எழுத்தாலும், புகழாலும் இந்த உலகில் இறுதிவரை கொடிகட்டிப் பறந்தார்.

 

இளைஞர்களுக்கு வேண்டுகோள்!

‘‘images_14205.jpgஅன்று எத்தனையோ புத்தகங்கள் எழுதக்கூடிய அளவுக்கு உடலில் வலுவிருந்தது; ஆற்றல் பொங்கி வழிந்தது. ஆனால், வெறும் ரத்தத் துடிப்புக்கு முதலிடம் கொடுத்து பொன்னான காலத்தை விரயமாக்கினேன். இன்று எத்தனையோ எழுத வேண்டும் என்று துடிக்கிறேன். அனுபவங்கள் பொங்கி வழிகின்றன. ஆனால், எனது பாழாய்ப்போன உடம்பு விட்டுக்கொடுக்க மறுக்கிறது. இளைஞனே என்னைப் பார்த்து விழித்துக்கொள். காலம் பொன்னானது. காலம் தாழ்த்தி உணர்ந்து கொள்ளாதே’’ என்று இளைஞர்களுக்கு வேண்டுகோள் விடுத்த முத்தை (கண்ணதாசனை), 1981-ம் ஆண்டு அக்டோபர் 17-ம் தேதி காலன் அபகரித்துக்கொண்டான்.

‘மூன்றாம் பிறை’ படத்தில் மனநிலை பிறழ்ந்த காதலிக்கு எழுதிய தாலாட்டான, கண்ணே கலைமானே என்ற பாடலோடு நிறைவுபெற்றது அவரது திரைப் பயணம். ஆம், நம்பிக்கையில் ஆரம்பித்து தாலாட்டில் முடிந்தது அவரது கலைப்பயணம். அனைத்துத் துறைகளிலும் பல நூல்களை எழுதியுள்ள கவிஞரிடம், ‘‘நீங்கள் எழுதிய நூல்களைப் படிக்கும் வாசகர்களுக்கு நீங்கள் கூறும் அறிவுரை யாது’’ என்று கேட்கப்பட்டது. அதற்கு அவர், ‘‘நூலைப் பின்பற்றுங்கள். ஆனால், நூலாசிரியரைப் பின்பற்றாதீர்கள்’’ என்றாராம்.

பூமியிலே இப்போது நடக்கும் எதையும் அவர் பார்க்காமல் தூங்குகிறார்... ‘அவரை எழுப்பாதீர்... அப்படியே தூங்கட்டும்!’

 

 

 

 

தலைமுறைக்கு எழுதி வைத்த சீட்டு! கவிஞர் கண்ணதாசன் நினைவு நாள்

kannadasan_600_10517.jpg

"காலமெனும் ஆழியிலும் 
காற்று, மழை, ஊழியிலும்
சாகாது கம்பனவன் பாட்டு...
அது தலைமுறைக்கு எழுதி வைத்த சீட்டு...!


கண்ணதாசன், கம்பனுக்கு எழுதிய கவிதை இது. கம்பனுக்கு மட்டுமின்றி, கண்ணதாசனுக்கும் இது பொருந்தும். 
ஐந்தாயிரத்துக்கும் மேற்பட்ட பாடல்கள், நான்காயிரத்துக்கும் மேற்பட்ட கவிதைகள், 20க்கும் மேற்பட்ட நாவல்கள் என காலத்தால் அழிக்க முடியாத படைப்புகளைத் தந்த மாபெரும் படைப்பாளி... சங்க இலக்கிங்களின் செழுமையையும், தத்துவங்களையும், அனுபவங்களையும், சமூக, அரசியல் விழிப்புணர்வையும் பாமர மனிதனுக்கும் புரியும் எளிய மொழியில் எழுதிய இந்த மாபெரும் கவிஞனுக்கு இன்று (அக்டோபர் 17ம் தேதி) 35வது ஆண்டு நினைவு நாள். 

சிவகங்கை மாவட்டம், காரைக்குடிக்கு அருகில் உள்ள சிறுகூடல்பட்டி என்ற கிராமத்தில் பிறந்தவர் கண்ணதாசன். இயற்பெயர் முத்தையா. அப்பா பெயர் சாத்தப்ப செட்டியார். அம்மா பெயர் விசாலாட்சி. உடன் பிறந்தவர்கள், ஆறு சகோதரிகள், மூன்று சகோதரர்கள்.

செட்டிநாட்டில், நிறைய குழந்தைகளைப் பெற்ற தம்பதி, குழந்தைகள் இல்லாத தம்பதிக்கு பிள்ளையை சுவீகாரம் கொடுக்கும் நடைமுறையாக இருக்கிறது. கண்ணதாசனும் அவ்விதம் காரைக்குடியைச் சேர்ந்த பழனியப்ப செட்டியார்-சிகப்பி ஆச்சி தம்பதிக்கு சுவீகாரம் தரப்பட்டார். சுவீகாரம் சென்ற வீட்டில் அவருக்கு வைக்கப்பட்ட பெயர் நாராயணன். எட்டாவதாகப் பிறந்ததாலோ என்னவோ, கண்ணதாசனுக்கு எட்டாம் வகுப்பு வரைக்கும் தான் பள்ளிக்கல்வி வாய்த்தது. 

சிறு வயதிலேயே எழுத்தின் மீது தீராத ஆர்வம். சிறு சிறு புத்தகங்கள் வாசிக்கக் கிடைத்தன. பத்திரிகைகளில் கதை எழுத வேண்டும் என்பது அவரது கனவாக இருந்தது. 16 வயதில் வீட்டுக்குத் தெரியாமல் சென்னைக்கு கிளம்பி வந்தார். சந்திரசேகரன் என்று புனைப் பெயர் சூடிக்கொண்டு திரைப்படங்களில் நடிக்க வாய்ப்புத் தேடினார். 

Kannadasanbanner_main_09588.jpg

 

ஆனால், சென்னை அவருக்கு பல கொடுமையான அனுபவங்களைத் தந்தது. பசியும், எதிர்காலம் குறித்த பயமும் வாட்டியது. திருவொற்றியூரில் உள்ள பட்டினத்தார் கோவிலிலேயே படுத்துக் கிடந்தார். ஒரு நிறுவனத்தில் உதவியாளராக வேலை கிடைத்தது. அந்நிறுவனத்தில் பணியாற்றிக் கொண்டே கதைகள் எழுதத் தொடங்கினார். கிரகலட்சுமி என்ற பத்திரிகையில் ”நிலவொளியிலே” என்ற அவரது முதல் கதை வெளிவந்தது. முதல் கதையை அச்சில் கண்ட உத்வேகத்தில், இன்னும் தீவிரமாக எழுதத் தொடங்கினார். பத்திரிகை துறையின் மீது பெரும் நாட்டம் ஏற்பட்டது. 

ஒரு நண்பரின் பரிந்துரையோடு, புதுக்கோட்டையில் இருந்து வெளிவந்த திருமகள் என்ற பத்திரிகையில், "ப்ரூப் திருத்துனர்" வேலை கேட்டு வந்தார். நேர்க்காணலில், பத்திரிகையின் அதிபர், உங்கள் பெயரென்ன? என்று கேட்டார். அந்த நேரத்தில் எழுத்தாளர்கள் புனைப்பெயர் வைத்து எழுதுவது ஃபேஷனாக இருந்தது. அதிலும் ”தாசன்” என்று முடியும் பெயரை வைத்திருப்பவர்களுக்கு தனி மரியாதை கிடைத்தது. கிடைத்த சில நொடிகளில் ”கண்ணதாசன்” என்று பதில் சொன்னார். முத்தையா, கண்ணதாசனாக மாறியது அந்தத் தருணத்தில் தான்.   

கண்ணதாசனின் திறமையைத் தொடர்ந்து கவனித்த பத்திரிகையின் அதிபர், ஒருநாள் இதழுக்கு தலையங்கம் எழுதச் சொன்னார். இந்திய தேசிய ராணுவம் பற்றி கண்ணதாசன் எழுதிய தலையங்கம், பத்திரிகை அதிபரை பெரிதும் கவர்ந்தது. உடனடியாக பத்திரிகையின் ஆசிரியராக பணி அமர்த்தப்பட்டார். அப்போது அவருக்கு வயது 17. 

பிறகு திரை ஒலி, சண்டமாருதம், தென்றல், தென்றல் திரை உள்ளிட்ட பத்திரிகைகளில் பணியாற்றினார். கண்ணதாசன் என்ற பத்திரிகையை அவரே நடத்தினார். அனைத்து பத்திரிகைகளிலும் அவரது கவிதைகள், கதைகள், கட்டுரைகள், நாடகங்கள் வெளிவந்தன. அவை அப்போதைய இலக்கிய ஆளுமைகள் மத்தியில் பெரிதும் கவனம் பெற்றன.

 

கவிதைகள் மூலம் அடையாளம் கிடைத்த பிறகு, திரைப்படங்களுக்கு பாடல் எழுத வேண்டும் என்ற எண்ணம் கண்ணதாசனுக்கு ஏற்பட்டது. சண்டமாருதம் பத்திரிகை நிறுத்தப்பட்ட பிறகு, மாடர்ன் தியேட்டர்ஸ் கதை இலாகாவில் கண்ணதாசனும் சேர்க்கப்பட்டார். கதை இலாகா சந்திப்புகளில் கருணாநிதியின் நட்பு கிட்டியது. அதன் வழி திராவிட இயக்கத்தின் மீது ஆர்வம் அதிகமானது. 
பிறகு பத்திரிகை பணிகளை உதறிவிட்டு முழுமூச்சாக திரைப்படங்களுக்கு பாடல் எழுத வாய்ப்புத் தேடினார். ஜூபிடர் நிறுவன தயாரிப்பில், தான் இயக்கிய கள்வனின் காதலி படத்தில் பாடல் எழுத வாய்ப்புக் கொடுத்தார் கே.ராம்நாத். ”கலங்காதிரு மனமே... உன் கனவெல்லாம் நினைவாகும் ஒரு தினமே” என்ற பாடல் தான் கண்ணதாசனின் முதல் பாடல். அதன்பிறகு, அடுத்த 30 ஆண்டுகள் திரைத்துறையை முற்றுமுழுதாக ஆளுமை செய்தார் கண்ணதாசன். திரையுலகமே அவர் எழுதும் கவிக்காக காத்துக் கிடந்தது. 
ஆசுகவி என்பார்களே... அதைப்போல, கண்ணதாசனிடம் அருவியெனக் கொட்டியது தமிழ். கதை, வசனம், தயாரிப்பு என சகல துறைகளிலும் இயங்கினார்  இசையமைப்பாளர்கள் எல்லாம் தங்கள் இசையில் அவருடைய பாடல் இடம் பெறுவதை பெருமையாகக் கருதினர். 

பன்மொழிப் புலவர் அப்பாத்துரையாரிடம் கற்ற இலக்கிய வளமை, திராவிட இயக்கத்தின் தீவிரம், பாரதிதாசன் பால் ஏற்பட்ட ஈர்ப்பு எல்லாம் சேர்ந்து கண்ணதாசனை தனித்துவமிக்க படைப்பாளியாக நிலை நிறுத்தியது. 

அரசியலிலும் தீவிர ஆர்வம் காட்டினார். திமுகவில் தொடங்கிய அவருடைய அரசியல் காங்கிரசில் முடிவுற்றது. ஒருமுறை தேர்தலில் நின்று தோற்றார். அவரின் இயல்புக்கு அரசியல் பொருத்தமாக இல்லை. வெளிப்படையான பேச்சு, ஒரு கொள்கை தவறெனப் படும்போது தயக்கமில்லாமல் மாற்றிக்கொள்ளும் நேர்மை, எதற்கும் அஞ்சாத விமர்சனங்கள்... இதெல்லாம் அரசியலுக்கு சரிப்படவில்லை. 
பாடலில் கொடிகட்டிப் பறந்த காலங்களில் கண்ணதாசன் செல்வத்தில் திளைத்தார். ஆனால், சேமித்து வைக்கும் வழக்கமில்லை. சொந்தப்படங்கள் எடுத்தார். அவை கடனில் தள்ளின. 

”பிர்லாவைப் போல சம்பாதித்தேன். ஊதாரியைப் போல செலவழித்தேன். பல நேரங்களில் பிச்சைக்காரனைப் போல ஏங்கி நின்ற வாழ்க்கை தான் எனக்கு வாய்த்திருக்கிறது..” என்று ஒரு கட்டுரையில் பதிவு செய்திருக்கிறார் கண்ணதாசன். 

தொடக்கத்தில் திராவிட இயக்கத்தில் தீவிரமாக இயங்கிய கண்ணதாசன் பிற்காலத்தில் இந்து மதத்தில் பற்றுடையவரானார். இந்து மதம் சார்ந்து எழுப்பப்படும் பல்வேறு கேள்விகளுக்கு எளிய மொழில் பதில்களையும், அனுபவங்களையும் உள்ளடக்கி அவர் எழுதிய ”அர்த்தமுள்ள இந்துமதம்” தொகுப்பு இன்றளவும் அதிகம் விற்பனையாகும் நூல்களின் பட்டியலில் இடம் பிடிக்கிறது. 
கண்ணதாசனுடைய வாழ்க்கை திறந்த புத்தகம். தனக்கு சரியெனப் பட்டத்தை அவர் செய்யத் தயங்கியதே இல்லை. அது தவறென்று உணரும்பட்சத்தில் அதை ஒப்புக்கொள்ளத் தயங்கியதும் இல்லை. தன்னுடைய வாழ்க்கையை கண்ணதாசன் அளவுக்கு வெளிப்படையாக பகிர்ந்து கொண்ட ஆளுமைகள் யாருமில்லை. வனவாசம், மனவாசம், எனது வசந்தகாலங்கள், எனது சுய சரிதம் ஆகிய 4 நூல்களும் கண்ணதாசனின் சுய சரிதைகள்.   

 கண்ணதாசனுக்கு மூன்று மனைவியர். 15 பிள்ளைகள்.

“கண்ணதாசன் எப்போதுமே பாக்கெட்டில் பணம் வைத்துக் கொள்ள மாட்டார். ஒருநாள் மௌண்ட்ரோடு பக்கமாக காரில் போகும்போது அவரது பாக்கெட்டில் பணம் இருந்தது. உடனடியாக ஒரு துணிக்கடையில் காரை நிறுத்தச் சொல்லி உள்ளே நுழைந்து, ”குழந்தைகளுக்கான உடை வேண்டும்” என்று கேட்டார். கடைகாரர் ”குழந்தைக்கு என்ன வயது?” என்று கேட்டார். கவிஞர் திகைத்து விட்டார். பிறகு சுதாரித்துக் கொண்டு, ”நம்ம வீட்டில் எல்லா வயதிலும் குழந்தைகள் உண்டு. எல்லா வயசுக்கும் ஒன்னொன்னு குடுப்பா” என்று சிரித்துக்கொண்டே வாங்கிச் சென்றார்...” என்று கண்ணதாசன் பற்றிய தன் நினைவுகளை சிரிப்போடு பகிர்ந்து கொள்கிறார் அவரிடம் உதவியாளராக இருந்தவரும் மூத்த இயக்குனருமான எஸ்பி, முத்துராமன்.  

கண்ணதாசன் எழுதிய பெரும்பாலான பாடல்கள் அவரின் அனுபவத்தில் விளைந்தவை. அந்தந்த சூழலுக்கேற்ப பாடல் புனைவதில் அவருக்கு இணை யாருமில்லை. 

ஒருமுறை, நெஞ்சில் ஓர் ஆலயம் படத்துக்காக இசையமைப்பாளர் விஸ்வநாதன் ஒரு பாடல் எழுத கண்ணதாசனை அழைத்திருந்தார். கண்ணதாசன் வரத் தாமதமாகி விட்டது. நெடுநேரம் காத்திருந்த விஸ்வநாதன், ”இனிமேல் கண்ணதாசனிடம் பாடல் கேட்கப் போவதில்லை” என்று நண்பர்களிடம் வருத்தமாக சொன்னார். இதைக் கேள்விப்பட்டு உடனடியாக விஸ்வநாதனைச் சந்தித்த கண்ணதாசன், பாடலை கொடுத்தார்.

”சொன்னது நீதானா? சொல்... சொல்.., என்னுயிரே” என்ற அந்தப் பாடலைப் படித்ததும் கண்கலங்கி கண்ணதாசனை கட்டி அணைத்துக் கொண்டாராம் விஸ்வநாதன். இப்படி பெரும்பாலான கதைகள் கண்ணதாசன் வாழ்க்கையில் உண்டு.

இன்றைக்கும் பலருக்குத் தாலாட்டாக, பலரின் துயரங்களுக்கு ஆறுதலாக, மனம் தொய்ந்து கிடக்கும் பலருக்கு உத்வேகமாக இருப்பவை கண்ணதாசனின் பாடல்கள். வாழ்வின் அனுபவத்தில் இருந்து எழும், உண்மையான ஒரு படைப்பு காலத்தை வென்று தலைமுறைகளைக் கடந்தும் நீடித்து வாழும் என்பதற்கு கண்ணதாசனின் பாடல்களும், படைப்புகளும் மிகச்சிறந்த உதாரணம். 

”எப்படியெல்லாம் வாழக்கூடாதோ, அப்படியெல்லாம் வாழ்ந்தவன் நான். அதனால் இப்படித்தான் வாழ வேண்டும் என்று அறிவுரை சொல்லும் தகுதி எனக்கு இருக்கிறது..” என்றார் அவர்.

காலமாகி 35 ஆண்டுகள் கடந்தும் கண்ணதாசன் இன்னும் நம் மத்தியில் வாழ்ந்து கொண்டிருக்கக் காரணம் இந்த நேர்மையும், உண்மையும் தான்..!

kannadasan_1436779883_09223.jpg



கண்ணதாசன் பற்றிய சில தகவல்கள்


* கண்ணதாசன் பாடல்களை தானே எழுதுவதில்லை. சொல்லச் சொல்ல அவரது உதவியாளர்கள் எழுதுவார்கள். இயக்குனர் எஸ்பி.முத்துராமன், பஞ்சு அருணாசலம், இராம.கண்ணப்பன் ஆகியோர் கண்ணதாசனிடம் உதவியாளர்களாக பணியாற்றினார்கள். 

* ”இவ்வளவு சிறப்பாக பாடல் எழுதுகிறீர்களே... உங்களுக்கு ஆதர்சமாக இருந்தது  யார்?” என்று கண்ணதாசனிடம் கேட்கப்பட்டது. ”என் தாய் வாசாலாட்சி பாடிய தாலாட்டு தான் என் பாடல்களுக்கு ஆதர்சம்” என்றார் கண்ணதாசன்.

* மெட்டுக்கு இசையமைப்பதையே விரும்புவார் கண்ணதாசன். பெரும்பாலும், வெறும் சூழ்நிலையை மட்டும் கேட்காமல் படத்தின முழுக்கதையையும் கேட்டு, அக்கதையை முழுமையாக பிரதிபலிக்கும் வகையில் பாடல்கள் எழுதுவார். அப்படி அவர் எழுதிய பாடல்கள் இன்றும் உயிர்ப்போடு இருக்கின்றன. இயக்குனர் பீம்சிங் இயக்கிய பெரும்பாலான ”பா” வரிசைப் படங்களின் பாடல்கள் அப்படி எழுதப்பட்டவை தான். 

* கண்ணதாசன் எப்போதும் மதுவில் திளைத்துக்கிடப்பார் என்றொரு கருத்து உண்டு. ஆனால் கண்ணதாசன் பாடல்கள் எழுதும்போது மது அருந்தமாட்டார். 

*மிகவும் ரசித்து ருசித்து சாப்பிடுவார் கண்ணதாசன். குறிப்பாக அசைவ உணவுகள். கண்ணதாசனின் மனைவி பார்வதி ஆச்சி மிகச்சிறப்பாக அசைவ உணவுகளை சமைப்பார். அவரது மகள் ரேவதி சண்முகம் சமையல் நிபுணராக இருப்பது குறிப்பிடத்தகுந்தது. 

* சேரமான காதலி படைப்புக்காக கண்ணதாசனுக்கு சாகித்ய அகாடமி விருது வழங்கப்பட்டுள்ளது. 

 

 

 

 

 

vikatan

Edited by நவீனன்

  • தொடங்கியவர்

 

Norway!

  • தொடங்கியவர்

நீரில் மூழ்கிய நபரை காப்பாற்றிய யானை : வியக்கவைக்கும் காணொளி : தாய்லாந்தில் சம்பவம்

 

 

தாய்லாந்தில் உள்ள யானைகள் சரணாலயம் பகுதியில் ஆற்றில் அடித்துச் செல்லப்பட்ட நபர் ஒருவரை அங்கிருந்த யானைக்குட்டி காப்பாற்றும் காட்சி சமூக வலைத்தளங்களில் மிகுந்த வரவேற்பை பெற்றுள்ளது.

  • தொடங்கியவர்

14608867_1158522350863124_35847580716425

தமிழ் திரை உலகில் முன்னணி நட்சத்திரங்களில் ஒருவராக கலக்கும் இளசுகளின் இதயம்கவர் நாயகி கீர்த்தி சுரேஷ் பிறந்த நாள்.

  • தொடங்கியவர்

உலகின் எந்த விமான நிலைய வை-ஃபை பாஸ்வேர்டும் இங்கே கிடைக்கும்!

flight_11123.jpg

அமெரிக்காவில் அடுத்த விமானத்துக்காக 5 மணி நேரம் காத்திருக்கிறீர்களா? அதே நேரத்தில் துபாய் விமான நிலையத்தில் உங்களது ஃபேஸ்புக் ஸ்டேட்டஸ் அப்டேட் செய்ய இன்டெர்நெட் இல்லையா? இதெற்கெல்லாம் உங்களுக்கு தேவை வை-ஃபை பாஸ்வேர்டு. உலகின் எந்த விமான நிலையத்தில் இருந்தாலும் வை-ஃபை பாஸ்வேர்ட் உங்களுக்கு கிடைக்கும் என்றால் உங்கள் பதில் ''மகிழ்ச்சி'' தானே...அதை தான் செய்திருக்கிறார் அனில் போலட்

அனில் போலட் ஒரு ட்ராவலர், வல பதிவாளர், கம்ப்யூட்டர் செக்யூரிட்டி இன்ஜினியர். கடந்த ஆறு வருடங்களாக உலகைச் சுற்றி வரும் இவர் ஒவ்வொரு முறையும் தனது பயணத்தின்போது விமான நிலையங்களில் வை-பை பாஸ்வேர்ட் இல்லாமல் இருந்திருந்தால் மிகவும் கஷ்டப்பட்டிருப்பேன் என்கிறார். அதற்காக அவர் பயணித்த அனைத்து விமான நிலையங்களின் வை-பை பாஸ்வேர்டுகளை மேப்பில் தொகுத்துள்ளார். 

https://www.google.com/maps/d/viewer?mid=1Z1dI8hoBZSJNWFx2xr_MMxSxSxY&hl=en_US

 

அதுமட்டுமின்றி தான் அடுத்து செல்ல இருக்கும் ஊர்கள் என்ன? மற்ற யாரேனும் எந்த விமான நிலையத்தின் வை-ஃபையை பயன்படுத்தி அதன் விவரம் இதில் இல்லையென்றால் அவருக்கு அனுப்பும் வசதியையும் தந்துள்ளார். மற்றவர்கள் அளித்த விவரம் மற்றும் இவரது ஆறு  வருட பயணத்தின்போது கிடைத்த அனைத்து விமான நிலையங்களின் தகவல் கீழே உள்ள மேப்பில் இருக்கிறது. இன்னும் தெற்காசிய நாடுகளை அவர் அப்டேட் செய்யவில்லை என்பதால் இந்திய விமான நிலைய விவரங்கள் இல்லை. 

உலகம் சுற்றுவது தான் இவரது பொழுதுபோக்கு இன்னும் நிறைய நாடுகளின் பயணங்களில் அங்குள்ள விமான நிலையங்கள் பற்றியும், அதன் வை-பை பற்றியும் தொடர்ந்து இந்த மேப்பில் அப்டேட் செய்வேன் என்று கூறியுள்ளார். இது மட்டும் இவர் வேலை இல்லை. உலகின் பல்வேறு பகுதிகளில் வாழ்க்கை தேடலை நோக்கிய பயணம் மேற்கொள்ளும் இவர் துருக்கி நாட்டைச் சேர்ந்தவர். இதுவரை என்பது நாடுகளின் விமான நிலையங்களுக்கு பயணித்திருக்கிறார்.

 

 

 

Edited by நவீனன்

  • தொடங்கியவர்

14712888_1158012327580793_28316829380398

 
 
இந்திய அணியின் முன்னாள் சுழல்பந்துவீச்சாளரும் முன்னாள் தலைவருமான அனில் கும்ப்ளேயின் பிறந்தநாள்.
இந்திய அணியின் பயிற்றுவிப்பாளராக இப்போது வெற்றிகளைக் குவிக்க ஆரம்பித்துள்ளார் கும்ப்ளே.

கடும் உழைப்பாளியும் அணிக்காக விளையாடியவருமான கும்ப்ளே, இன்று வரை இந்திய அணியின் சார்பாக அதிக டெஸ்ட் விக்கெட்டுக்கள் வீழ்த்திய சாதனைக்குச் சொந்தக்காரர்.
Happy Birthday Anil Kumble

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.