Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இளமை புதுமை பல்சுவை

Featured Replies

  • தொடங்கியவர்

அறிவோ அறிவுண்ணே!

 

போட்டோக்களில் இருக்கும் இந்த பிரத்யேகத் தயாரிப்புகளைப் பார்த்தா, `யாருடா இந்த வேலையைப் பார்த்தது?'னு கேட்கத் தோணுதா?

p102.jpg

p102a.jpg

- விக்கி

  • Replies 11.3k
  • Views 1.5m
  • Created
  • Last Reply
  • தொடங்கியவர்

14706754_1158018630913496_75677222985009

பாகிஸ்தானிய சகலதுறை வீரரும் முன்னாள் அணித் தலைவருமான மொஹமட் ஹபீஸின் பிறந்தநாள்.
Happy Birthday Mohammed Hafeez

 
  • தொடங்கியவர்

ஆர்தர் ஆஷர் மில்லர்

 
Arthur-miller_3047860f.jpg
 

அமெரிக்க நாடகாசிரியர்

*அமெரிக்க நாடகாசிரியரும், கட்டுரையாளருமான ஆர்தர் ஆஷர் மில்லர் (Arthur Asher Miller) பிறந்த தினம் இன்று (அக்டோபர் 17). அவரைப் பற்றிய அரிய முத்துக்கள் பத்து:

*அமெரிக்காவின் நியூயார்க் நகரில், புலம்பெயர்ந்த யூதக் குடும்பத்தில் (1915) பிறந்தார். தந்தையின் ஜவுளி உற்பத்தி தொழில் நலிவடைந்ததால், இவரது 13-வது வயதில் குடும்பம் ப்ரூக்ளினில் குடியேறியது.

*அப்போதைய பொருளாதார மந்த நிலையால் ஏற்பட்ட சமூகப் பிரச்சினைகளும், குடும்பத்தை வாட்டிய சிக்கல்களும் இவரிடம் பெரிய அளவில் பாதிப்பை ஏற்படுத்தின. பள்ளிக்கல்வியை முடித்ததும் ரேடியா பாடகர், லாரி ஓட்டுநர், வாகன உதிரிப்பாகங்கள் விற்பனையாளர் என கிடைத்த வேலைகளைச் செய்தார்.

*வருமானத்தை கல்லூரிப் படிப்புக்காக சேமித்து வைத்தார். 1934-ல் மிச்சிகன் கல்லூரியில் சேர்ந்தார். நிறைய எழுதிப் பயிற்சி பெற்றார். பல நாடகங்கள் எழுதினார். அவை நல்ல வரவேற்பை பெற்றன. மாணவப் படைப்பாளியாக பல விருதுகள் பெற்றார்.

*பட்டப்படிப்பு முடிந்தவுடன், நியூயார்க் சென்று, ஃபெடரல் தியேட்டரில் இணைந்தார். முழுநேரப் படைப்பாளியாக மாறினார். இவர் எழுதிய ‘த மேன் ஹு ஹேட் ஆல் த லக்’ என்ற முதல் நாடகம் 1944-ல் அரங்கேறியது. அது மோசமாக விமர்சிக்கப்பட்டு, தோல்வியைச் சந்தித்தது.

*மனமுடைந்தவர் புதுஉத்வேகத்துடன் எழுதத் தொங்கினார். அடுத்த ஆண்டில் ‘ஃபோகஸ்’, ‘சிச்சுவேஷன் நார்மல்’ ஆகிய நாவல்களை எழுதினார். பின்னர், ‘ஆல் மை சன்ஸ்’ என்ற நாடகம், பிரபல பிராட்வே அரங்கில் மேடையேறி மாபெரும் வெற்றி பெற்றது.

*மிகப் பிரபலமான ‘டெத் ஆஃப் ஏ சேல்ஸ்மேன்’ நாடகத்தை 1949-ல் எழுதினார். இது 700-க்கும் மேற்பட்ட முறை மேடைகளில் அரங்கேறியது. இந்த நாடகம் சுமார் 15 மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டு அரங்கேறியது. இது இவருக்குப் புகழையும் செல்வத்தையும் வாரி வழங்கியது.

* சாமானிய மக்களின் வாழ்வில் நடக்கும் அசாதாரண சோகங்களை இவரது நாடகங்கள் வெகுஇயல்பாக எடுத்துரைத்தன. நலிவுற்ற மக்களின் வாழ்க்கைப் போராட்டங்களின் ஆழமான அர்த்தத்தை எடுத்துக் கூறின. இவரது படைப்புகள் தொழிலாளர் வர்க்கத்தினர் மீதான இவரது கவலைகளையும் வெளிப்படுத்தின.

*சமூகம், இனவெறி, மக்களின் நிலை குறித்து 1960, 1970-களில் எழுதி வந்தார். பின்னர் இவரது படைப்புகளில் நகைச்சுவை அதிகம் காணப்பட்டது. 30-க்கும் மேற்பட்ட நாடகங்களை எழுதியுள்ளார். இவரது பல படைப்புகள் பின்னர் திரைப்படங்கள், தொலைக்காட்சித் தொடர்களாகவும் தயாரிக்கப்பட்டன. தனது சில படைப்புகளுக்குத் திரைக்கதையும் எழுதியுள்ளார்.

‘டைம்பெண்ட்ஸ்’ என்ற சுயசரிதையை எழுதினார். அமெரிக்க தேசிய கலை அமைப்பின் தங்கப்பதக்கம், புலிட்சர் பரிசு, பலமுறை டோனி விருதுகள், கென்னடி வாழ்நாள் சாதனையாளர் விருது உட்பட ஏராளமான விருதுகள், பரிசுகளைப் பெற்றவர். ஆக்ஸ்ஃபோர்டு, ஹார்வர்டு பல்கலைக்கழகங்கள் இவருக்கு கவுரவ டாக்டர் பட்டம் வழங்கின.

*வாழ்நாள் முழுவதும் எழுதிவந்த இவர், மனசாட்சியுடனும், சமூக விழிப்புணர்வுடன், தெளிவான சிந்தனையுடனும், பொறுப்புணர்வுடனும், சமுதாய அக்கறையுடனும் செயல்பட்ட படைப்பாளி என பாராட்டப்பட்டவர். அமெரிக்க நாடகத் துறையின் வெற்றிகரமான, முக்கியமான ஆளுமையாகத் திகழ்ந்த ஆர்தர் மில்லர் 90-வது வயதில் (2005) மறைந்தார்.

tamil.thehindu.

  • தொடங்கியவர்

மலேஷியாவில் இருந்து தமிழகம் வந்து காதல் வளர்க்கும் தாம்பூலம்!

தாம்பூலம்

ஆன்மீகத்தில், வழிபாட்டில் மட்டுமின்றி, தமிழர் வாழ்வின் முக்கிய தருணங்கள் அனைத்திலும் ஒன்றியிருக்கிறது வெற்றிலை தாம்பூலம். பண்டிகைகள், கோவில் திருவிழாக்கள் தொடங்கி, வீடுகளில் நடக்கும் நல்லது கெட்டதுகள் வரை எல்லாவற்றிலும் வெற்றிலை தாம்பூலம் தான் பிரதானம். ஆவூர் கொழுந்து வெற்றிலை, கல்யாணபுரம் கிளிஞ்சல் சுண்ணாம்பு, குடவாசல் கொட்டைப்பாக்கு, கும்பகோணம் நெய்ச்சீவல்.. இப்படி தாம்பூலத்தின் ஒவ்வொரு அங்கத்துக்கும் ஒவ்வொரு ஊர்ச்சிறப்பு இருக்கிறது. மேலும், எந்த நிகழ்வுக்கு எப்படி தாம்பூலம் வழங்கவேண்டும், எப்படி தாம்பூலம் போட்டுக்கொள்ள வேண்டும் என்றெல்லாம் மக்கள் இலக்கணமே வகுத்து வைத்திருக்கிறார்கள்.

சில பகுதிகளில் தாம்பூலம் என்பது ஒருவகை உரிமை. கோவில்களில் திருவிழா நடக்கும்போது உரிமைக்காரர்கள் அத்தனை பேருக்கும் "காளாஞ்சி" கொடுக்க வேண்டும். ஒரு தேங்காய்மூடியில இரண்டு வெற்றிலை, ஒரு பாக்கு சேர்த்து கொடுப்பது தான் காளாஞ்சி. இதைக் கொடுக்கவில்லையென்றால் ஊருக்குள் பிரச்னை வந்துவிடும். சுப காரியங்களுக்கு உறவுக்காரர்களை அழைக்கும்போது, தட்டில் தாம்பூலம் வைத்தே அழைக்க வேண்டும். இல்லையென்றால், தங்களை மதிக்கவில்லை என்று சொல்லி நிகழ்ச்சிக்கு வரமாட்டார்கள். சுபகாரியங்களுக்கு வரும்போது மாமன் மச்சான் உறவுகளுக்கு, பங்காளி முறைமைக்காரர்கள் வாசலில் நின்று தாம்பூலம் கொடுத்து வரவேற்க வேண்டும். இல்லை என்றால், ஜனக்கட்டு இல்லாதவன் என்று கேலி பேசத் தொடங்கி விடுவார்கள். அதேபோல் பெண், மாப்பிள்ளை நிச்சயம் செய்யும்போதும் தாம்பூலம் மாற்றிக்கொள்வார்கள். தாம்பூலத்தை நடுவில் வைத்து சத்தியம் செய்யும் வழக்கமும் சில பகுதிகளில் உண்டு. இறப்பு வீடுகளில், பனையோலை கொட்டான்களில் வெற்றிலை, தாம்பூலம் வைக்க வேண்டும். இறந்தவர்களின் வாயிலும் தாம்பூலம் வைத்துக் கட்டும் பழக்கம் உண்டு. அப்படிக் கட்டினால் உடம்பில் இருந்து கிருமிகள் வெளியே பரவாது. 

தாம்பூலம் போடுவது பற்றி சங்க இலக்கியங்களில் குறிப்புகள் உண்டு. "காதலை மேம்படுத்தும் பொருளாக"த் தாம்பூலத்தைக் குறிப்பிடுகின்றன இலக்கியங்கள். அக்காலத்தில், அரசர்களுக்கு தாம்பூலம் மடித்துக் தருவதற்கென்றே "அடப்பக்காரன்" என்றொரு பணியாள் இருப்பாராம். அரசர்கள் போடும் தாம்பூலத்தில் பல ஸ்பெஷல் அயிட்டங்களும் இருக்குமாம். ஒரு கொழுந்து வெற்றிலை; சிறிய பாக்கு; ஒரு மிளகு; ஒரு கிராம்பு; சில கற்கண்டு துண்டுகள்; இரண்டு சீரகம்.. இவற்றை வைத்து, இலை முழுதும் கிளிஞ்சல் சுண்ணாம்பு தடவி நான்காக மடக்கித் தருவாராம். மென்றால் சுகந்தமான வாசனை நாசியெங்கும் பரவுமாம். தாம்பத்யமும் மேம்படுமாம்.  

"தஞ்சை பெரியகோவில் பணிகள் நடந்தபோது, குஞ்சரமல்ல பெருந்தச்சன் நந்தி சிலையை செதுக்கிக்கொண்டு இருந்தார். அவருக்கு பக்கத்தில் நின்ற அடப்பக்காரன் தாம்பூலம் மடித்துக் கொடுத்துக் கொண்டிருந்தான். கோவில் பணிகளைப் பார்வையிட வந்த ராஜராஜன், சிலையின் அழகையும், பெருந்தச்சனின் வேலைப்பாட்டையும் பார்த்து வியந்து, பெருந்தச்சனை கௌரவப்படுத்துறதுக்காக அடப்பக்காரனை போகச்சொல்லிட்டு, தானே தாம்பூலம் மடித்துக் கொடுத்தாராம்..."

பெரியகோவில் பற்றிய கதைகளில் இந்தத் தாம்பூலக் கதையும் ஒன்று. 

பெரியகோவியோடு இணைந்த இன்னொரு தாம்பூலச் செய்தியும் உண்டு. கோவிலைக் கட்டிமுடித்து, லிங்கத்தை பிரதிஷ்டை செய்தபோது அஷ்டபந்தன மருந்து ஒட்டவில்லையாம். கருவூர்தேவர் வந்து தன்னுடைய வாயில் இருந்து தாம்பூலத்தை உமிழ்ந்தபிறகு தான் மருந்து ஒட்டியதாம். 

தொன்மத் தமிழர்கள் தாம்பூலத்தை மருந்தாகவே கருதினர். வெற்றிலை, காரம் மிகுந்தது. அதில் உள்ள ஏழு நரம்புகளும், ரத்தம், நரம்பு, எலும்பு, தசை, சீழ், கொழுப்பு, முடி ஆகிய சப்த தாதுக்களை மேம்படுத்த வல்லது என்கிறார்கள் மருத்துவர்கள். சுபநிகழ்ச்சிகளில் கலந்து கொண்டவர்களுக்கு தாம்பூலப்பை தருவது தமிழர்களின் மரபு. மரியாதை, கௌரவம் ஆகியவற்றின் அடையாளமாகவும் தாம்பூலம் இருக்கிறது. சிவவழிபாட்டில், லிங்கம் இல்லாத இடங்களில் வெற்றிலையை ஆவுடையாகவும், பாக்கை சிவமாகவும் கருதி வழிபடுவதுண்டு. 

துவர்ப்பு சுவையுடைய பாக்கில் இரும்புச்சத்து நிறைய உண்டு. சுண்ணாம்பு கால்சியம். எலும்புகளை வலுவாக்க வல்லது. ஆனால், தக்க அளவில் பயன்படுத்த வேண்டும். அதிகம் சேர்ந்தால் வாய் புண்ணாகிவிடும். பசுமை தவழும் இரண்டு கொழுந்து வெற்றிலை, ஒரு துண்டு பாக்கு அல்லது ஒருபிடி சீவல், நடுவிரல் நுனியளவு சுண்ணாம்பு.. இதற்குமேல், சிறிய ஏலக்காய், கிராம்பு.. இதுதான் ஒரிஜினல் தாம்பூலம். நன்கு அனுபவமுள்ளவர்கள் தாம்பூலம் போடுவதே அழகு தான்.  

சிறுவர்கள் வெற்றிலை போட்டால் கோழிமுட்டும் என்று மிரட்டுவார்கள். சிறுவயதில் வெற்றிலை போடும் பழக்கம் தொற்றிக்கொண்டால் விரைவிலேயே பற்கள் காவிநிறமாகிவிடும் என்பதால் இந்த மிரட்டல். அதேபோல் இரண்டு வெற்றிலை ஒட்டிக்கொண்டிருந்தால், பெண்கள் அதை மாமன் முறையுள்ளவர்களிடம் கொடுப்பார்கள். அதை வாங்காமல் தவிர்ப்பது மாமன் சாமர்த்தியம். என்னவோ, ஏதோவென்று கையில் வாங்கிவிட்டால், முறைப்பெண்ணுக்கு புத்தாடை வாங்கித்தர வேண்டும். திருமணத்தன்று இரவு, சாந்தி முகூர்த்த தருணத்தில் மனைவி, கணவனுக்கு வெற்றிலை மடித்துத்தர வேண்டும். கேலி, கிண்டலோடு நிறைவுறும் இந்த விளையாட்டு மிகவும் சுவாரஸ்யமானது. தாம்பத்யத்தை மேம்படுத்தும் சக்தி தாம்பூலத்துக்கு இருப்பதும் இதன் பின்னணி. தாம்பூலம் போட்டபிறகு பெண்ணின் நாக்கும், உதடுகளும் நன்கு சிவந்தால் கணவன் மீது மிகவும் பாசமாக இருப்பாள் என்று கேலி செய்வார்கள்.       

வெற்றிலையின் பூர்வீகம் மலேசியா என்கிறார்கள். மடகாஸ்கர் வழியாக தாம்பூலப் பழக்கம் இந்தியாவை எட்டியதாக வரலாறு சொல்கிறது. வடகிழக்கு மாநிலங்களில் வெற்றிலையும், கொட்டைப்பாக்கும் தந்து விருந்தினர்களை வரவேற்கும் வழக்கம் இருக்கிறது. இப்படி உலகம் முழுவதும் தாம்பூலப் பயன்பாடு இருந்தாலும் தமிழகத் தாம்பூலம் மக்களின் உயிரோடும், உணர்வோடும், வாழ்க்கையோடும், வழிபாட்டோடும் கலந்திருக்கிறது. 

vikatan

  • தொடங்கியவர்

 

சுறாவுடன் சிக்கியவர்
===================
பாஜா கலிபோர்னியா குடாநாட்டில் பார்வையாளர்களுக்கான ஒரு கூண்டில் வெள்ளை சுறா நுழைந்துவிட்டது. கூண்டுக்குள் ஒரு சுழியோடி இருந்தார் என்பதால் அங்கிருந்தவர்கள் பயந்துவிட்டனர். ஆனால் காயமும் இன்றி சுழியோடி வெளியேவந்தார்.

  • தொடங்கியவர்

14611050_1463546063661800_76786308035360

தமிழ்த்திரையுலகையே புரட்டிப்போட்ட பராசக்தி திரைப்படம் வெளிவந்து இன்றோடு 64 வருடங்கள் ஆகிவிட்டன.

தமிழ்த்திரையுலக வரலாற்றிலேயே, படத்தின் கதை வசனகர்த்தாவின் பெயரை கொட்டை எழுத்தில் பேனரில் போட்டு "இன்னாரது படம்" என ஒரு வசனகர்த்தாவை USP யாக கொண்டு ஒரு படம் விளம்பரப்படுத்தப்பட்டது.

 

vikatan

  • தொடங்கியவர்

வரலாற்றில் இன்று....

ஒக்டோபர் - 18

 

1356 : சுவிட்ஸர்லாந்தில் இடம்பெற்ற நிலநடுக்கம் அதன் பேசல் நகரை முற்றாக அழித்தது.

 

1867 : அலாஸ்கா மாநி­லத்தை 72 லட்சம்  அமெ­ரிக்க டொலர் விலை கொடுத்து ரஷ்யாவிடம் இருந்து  ஐக்­கிய அமெ­ரிக்கா  வாங்­கி­யது. இந்நாள் அலாஸ்கா நாள் எனக் கொண்­டாடப்­ப­டு­கி­றது.

 

1871 : பொறிமுறைக் கணினியைக் கண்­டுபி­டித்த பிரித்­தா­னிய கணி­த­வி­ய­லாளர் சார்ள்ஸ் பாபேஜ் காலமானார்.

 

1898 : புவெர்ட்டோ ரிக்கோவை ஐக்­கிய அமெ­ரிக்கா கைப்பற்­றியது.

 

830alaska-location-map.jpg1908 : கொங்கோவை பெல்­ஜியம்  கைப்­பற்­றியது.

 

1912 : முத­லாவது பால்க்கான் போர் ஆரம்ப­மாகியது.

 

1922 : பி.பி.சி. வானொலி ஆரம்பிக்கப்பட்டது.

 

1931 : புகழ்­பெற்ற விஞ்­ஞானி தோமஸ் அல்வா எடிஸன் கால­மானார்.

 

1944 : இரண்டாம் உலகப் போர்: ஹிட்­ல­ரி­ட­மி­ருந்து ஜேர்மன் தேசிய இரா­ணு­வத்தை அமைப்­ப­தற்­கான கட்­டளை பிறந்­தது.

 

1944 : சோவியத் ஒன்­றியம் செக்கஸ்லோவாக்கியாவை கைப்­பற்­றி­யது.

 

1945 : வெனி­சூ­லாவில் இடம்­பெற்ற இரா­ணுவப் புரட்­சியை அடுத்து அதன் ஜனா­தி­பதி பத­வி­யி­ழந்தார்.

 

1951 : இங்­கி­லாந்தில் பளிங்கு அரண்­ம­னையில் அனைத்­து­லக வர்த்­தகக் கண்­காட்சி முடி­வுற்­றது.

 

1954 : டெக்சாஸ் இன்ஸ்ட்­ருமெண்ட்ஸ் நிறு­வனம் முத­லா­வது டிரான்­சிஸ்டர் வானொ­லியை அறி­மு­கப்­ப­டுத்­தி­யது.

 

1967 : சோவியத் விண்­கலம் வெனேரா 4 வெள்ளி கிர­கத்தை அடைந்­தது. வேறொரு கிர­கத்தின் வளி­மண்­ட­லத்தை அளந்த முத­லா­வது விண்­கலம் இது­வாகும்.

 

1968 : மெக்­ஸி­கோவில் நடை­பெற்ற ஒலிம்பிக் விளை­யாட்டு விழாவில் ஆண்­க­ளுக்­கான 200 மீற்றர் போட்­டியில் புதிய சாத­னை­யுடன் தங்­கப் ­ப­தக்கம் பெற்ற அமெ­ரிக்க வீரர் டொமி ஸ்மித், வெண்­கலப் பதக்கம் பெற்ற அமெ­ரிக்க வீரர் ஜோன் கார்லோஸ் ஆகியோர் அமெ­ரிக்க கறுப்­பி­னத்­த­வர்­களின் உரி­மை­களை வலி­யு­றுத்­து­வ­தற்­காக பரி­ச­ளிப்பு வைப­வத்­தின்­போது கறுப்புக் கையுறை அணிந்த கைகளை உயர்த்திக் காட்­டி­யதால் அமெ­ரிக்க மெய்­வல்­லுநர் சங்­கத்­தி­லி­ருந்து விலக்­கப்­பட்­டனர்.

 

1991 :  சோவியத் ஒன்­றி­யத்­திடம் இருந்து பிரி­வ­தாக அசர்­பைஜான் சுதந்­திரப் பிர­க­டனம் செய்­தது.

 

1991 : தமி­ழ­கத்தின் நாகப்­பட்­டினம் மாவட்டம் அமைக்­கப்­பட்­டது.

 

2006 : காலி கடற்­ப­டைத்­த­ளத்தில் கடற்­பு­லிகள் தாக்­குதல் நடத்­தினர்.  

 

2007 : பாகிஸ்தானின் முன்னாள் பிரதமர் பெனாஸிர் பூட்டோவின் வாகனத் தொடரணி மீது கராச்சியில் தாக்குதல் நடத்தப்பட்டதால் 139 பேர் பலியானதுடன் சுமார் 450 பேர் காய மடைந்தனர். பெனாஸிர் பூட்டோ, இத்தாக்குதலில் காயமின்றி தப்பினார்.

metronews.lk

  • தொடங்கியவர்
காலால் உணவை எடுத்து உட்கொள்ளும் கையில்லாத குழந்தை
 

உணவை கரண்டி மூலம் எடுத்து உட்­கொள்ளும் குழந்­தைகள் பலர், அவ்­வு­ணவை கீழே தமது முக­மெங்கும் அப்­பிக்­கொள்­வ­துண்டு.

 

20039Untitled-7.jpg

 

ஆனால், இரு கைகளும் இல்­லாத ஒரு சிறுமி தனது கால் மூலம் உணவை கரண்­டியால் எடுத்து உட்­கொள்ளும் படங்கள் இணை­யத்தில் வெளி­யா­கி­யுள்­ளன.

 

 ரஷ்­யாவைச் சேர்ந்த வஸ­லினா எனும் இச்­சி­று­மியின் புகைப்­ப­டங்­களை இச்­சி­று­மியின் தாயான எல்­மைரா கெனுட்ஸன் வெளி­யிட்­டுள்ளார். 

 

இச்­சி­றுமி இரு கைகளும் இல்­லாமல் பிறந்­தவர் எனத் தெரி­விக்­கப்­ப­டு­கி­றது.
“வஸ­லி­னாவின் ரசி­கர்­க­ளுக்கு” எனும் குறிப்­புடன் இப்புகைப்படங்களை எல்மைரா வெளி யிட்டுள்ளார்.

metronews.lk

  • தொடங்கியவர்

உங்களின் இன்றைய நாளை அழகாக்கவிருக்கும் விஷயங்கள் இவைதான்!


இன்று போனால், நாளை ஒரு நாள் கிடைக்கும். ஆனால், போன அந்த ஒருநாள் மீண்டும் திரும்ப கிடைக்கவே கிடைக்காது. வாழ்க்கை என்பதே இந்த நாட்களால் ஆனதுதானே! அப்படி நமக்கு கிடைக்கும் நாளை நாம் எப்படியெல்லாம் செலவழிக்க வேண்டும்? கொஞ்சம் ப்ரிப்பேர் பண்ணிக்கலாமே ப்ரோ.

1) உங்களுக்காக நேரம் ஒதுக்குங்கள்:

gratitude_21260.jpg


  நீங்க நல்லா காஃபி போடுவீங்களா? செஞ்சு குடிங்க. இசை பிடிக்குமா? கேளுங்க. மனசுக்கு பிடிச்சத செய்ற ஆட்கள் தான் அதிகம் வெற்றி பெற்றதா புள்ளி விவரம்லாம் சொல்லுது பாஸ். அது கவிதை எழுதறதோ இல்ல கால மடக்கி யோகா செய்றதோ.. தினமும் காலைல உங்களுக்கு பிடிச்ச ஒண்ண செஞ்சிடுங்க.

2) நல்லா சாப்பிடணும்:

nu_21343.jpg


   உடம்புக்கு நல்லதுன்னு காலைல பிடிக்காம ஓட்ஸ் சாப்பிடுறதும், சாப்பிடாம இருக்கிறதும் வேஸ்ட். சாப்பாடுன்றது உடம்புக்கு மட்டுமில்லை. மனசுக்கும்தான். அதிகம் டேமேஜ் பண்ணாத, அதே சமயம் உங்கள குஷியாக்குறத கொஞ்சம் சாப்பிடுங்க. அது தர்ற எனர்ஜி 2 மணி நேரம்ன்னா, சந்தோஷம் நாள் முழுக்க இருக்கும்

3) கோல் செட் பண்ணுங்க:

download_21521.jpg


  கோல்ன்னா உடனே கலெக்டர் ஆகணும், கண் தானம் பண்ணனும்னு சீரியஸாவே யோசிக்க வேணாம். பக்கத்து சீட்டு ஆள சிரிக்க வைக்கிறது, வாங்கின புத்தகம் ஒண்ண படிச்சு முடிகிறது, புதுசா ஒரு விஷயம் கத்துக்கறதுன்னு சின்னச் சின்ன சிம்பிளான விஷயங்களா கூட இருக்கலாம். பண்ண முடியாத கோல் செட் பண்றதுக்கு நாம சும்மாவே இருந்திடலாமே!

4) சந்தோஷத்த ஷேர் பண்ணுங்க:

1579a08d9ff30b5ca0a37134c5b8b14a_21113.j


   ரோடுல கால வச்சாலே டிராஃபிக்காதான் இருக்கும். அதுக்கு முன்னாடி கொஞ்சம் மகிழ்ச்சிய ஷேர் பண்ணிட்டு போனா எவ்ளோ நல்லா இருக்கும்? வாட்ஸ்அப்ல வதந்திதான் வரணும்னு இல்ல. வாழ்த்துகள சொல்லலாம். ட்விட்டர்ல ட்ரோல்தான் பண்ணனும்னு இல்ல. டிரிப்யூட்டும் பண்ணலாம். தினமும் காலைல யாராவது ஒருத்தருக்கு ஒரு ‘வாவ்’ மொமெண்ட் கொடுத்து பாருங்க. உங்க நாளே வாரே வாவா இருக்கும்.

5) ஆர்கனைஸ் பண்ணுங்க..மனசுக்குள்ள:

todo_360_354_90_21313.jpg


  அடுக்கி வச்ச ஷெல்ஃப்லதான ஈசியா வேண்டியத தேடி எடுக்க முடியும்? மனசும் ஒரு ஷெல்ஃப் தான் பாஸ். பெட்ல படுத்தபடியே, அந்த நாள்ல நடக்க இருக்கிற விஷயங்கள கொஞ்சம் அசை போடுங்க. முந்தின நாள் முடிஞ்சத டெலீட் பண்ணுங்க. புது விஷயங்கள எண்டர் பண்ணுங்க. சிஸ்டத்த கொஞ்சம் ரெகுலரைஸ் பண்ணுங்க. அப்புறம் பாருங்க ஆண்ட்ராய்டு ஃபோனாட்டம் ஹேங் ஆன மனசு, ஐஃபோன் மாதிரி தெறிக்கும்.

6) கை,கால நீட்டுங்க:

sleepy-saturday-sleeping-cat-tabby-600x4


  உடனே, ஜிம்முக்கான்னு கடுப்பாவாதீங்க. உங்க பெட்லயே செய்யலாம். இல்லைன்னா இறங்கி பக்கத்துல நின்னு செய்யலாம். துவைச்ச துணிய அயர்ன் பண்னலன்னா, நேராக்கா மாட்டோமா? அந்த மாதிரி உங்க உடம்பா கொஞ்ச ஸ்ட்ரெட்ச் பண்ணுங்க. போதும். ஒரு சின்ன சோம்பல் முறிச்சாலே 1000 வாட்ஸ் பல்பு எரியுதே.. கொஞ்சம் எக்ஸ்ட்ரா முறிச்சா???

7) ஈவ்னிங் என்ன பிளான்?

57569878_XS_21572.jpg


  நாள் முழுக்க வேலை வேலைன்னு ஓடப் போறீங்க? நதியெல்லாம் கடல்ல தானே சேருன்ற மாதிரி, மாலையை தேடித்தானே எல்லாரும் ஓடுறோம்? சோ, காலைலயே மாலை என்ன பண்ணலாம்னு முடிவு பண்ணுங்க. அது வெறும் ஃப்ரெண்டுக்கா இல்ல கேர்ள் ஃப்ரெண்டுக்கா... அப்பா அம்மாவுக்கா இல்ல அம்மன் கோவிலுக்கா... மெகா சீரியலுக்கா இல்ல மெகா மாலுக்கா... முடிவு பண்ணிடுங்க. 
இப்படி பிளான் பண்ணிப் பாருங்க. இன்றைய நாள் நல்லபடியா போகும். அப்படி நடந்ததும் நைட்டு வீட்டுக்கு வந்து, இந்தப் பதிவை நண்பர்களுக்கு ஷேர் பண்ணுங்க. ஏன்னா, ஷேரிங் நல்லது

vikatan

  • தொடங்கியவர்

14606453_1159110570804302_51021176214530

அறிமுகப் போட்டியிலேயே அதிக விக்கெட்டுக்களை (16) வீழ்த்தி சாதனை படைத்த, இந்தியாவின் முன்னாள் சுழல்பந்து வீச்சாளர் நரேந்திர ஹிர்வானியின் பிறந்தநாள்.
Happy Birthday Narendra Hirwani

  • தொடங்கியவர்

உலகின் 200 கலைஞர்களில் இவரும் ஒருவர்! #WireSculpture

கலை

 

“சென்னையில மட்டும் ஒருநாளைக்கு 4500 டன் கழிவுகள் சேருது. அதை அப்படியே அள்ளிக்கொண்டு போய் பள்ளிகரணையிலயோ, கொடுங்கையூர்லயோ கொட்டுறாங்க. இந்த 4500 டன் கழிவுகளை தரம் பிரிச்சு விற்பனை செஞ்சா பல ஆயிரம் ரூபாய் கிடைக்கும். ஆனா, அதை யாருமே பெரிசா எடுத்துக்கிறதில்லை. தெருவெல்லாம் கொட்டி வைக்கிறாங்க. நீர்நிலைகள்ல எல்லாம் போட்டு அழிக்கிறாங்க. இந்தக் குப்பைகளைக் கொண்டு போய் கொட்டுறதுக்குப் பயன்படுத்தும் வாகனங்களால ஏற்படுற மாசு, இன்னொரு பெரிய பிரச்னை. ஒவ்வொருத்தரும் வீட்டுல அஞ்சு நிமிஷம் ஒதுக்கி, கழிவுகளை தரம் பிரிச்சுட்டா நாட்டுல குப்பைகளே சேராது. அதை மக்களுக்கு உணர்த்தத் தான் இந்தக் கலையை கையில எடுத்தேன்..." 

வெகு லாவகமாக கம்பிகளை வளைத்துக்கொண்டே உற்சாகமாகப் பேசுகிறார் ராஜாராம். 

சென்னை போரூரில் வசிக்கும் ராஜாராம், வயர் சிற்பக் கலைஞர். கழிவென்று தூக்கி வீசப்படும் மின் வயரில் இருக்கும் கம்பியைக் கொண்டு அற்புதமான சிற்பங்களை வடிக்கிறார். ராஜாராம் கை லாவகத்தில் தட்டான் பூச்சியாக, ஒட்டகச் சிவிங்கியாக, மானாக, விட்டில் பூச்சியாக அந்த கம்பிக்குள் இருந்து உருவங்கள் உயிர் பெற்று உலவுகின்றன. சட்டக சிற்பங்களையும் வடிக்கிறார்.  wire sculpture   என்று அழைக்கப்படும் இந்த நுட்பமான கலையில் உலகெங்கும் இருநூறுக்கும் குறைவான கலைஞர்களே இருக்கிறார்கள். 

ராஜாராம் ஒரு நிறுவனத்தில் எலெக்ட்ரிகல் இன்ஜினீயராக பணியாற்றி ஓய்வு பெற்றவர். இயல்பிலேயே சுற்றுச்சூழல் ஆர்வம் உண்டு. அது சார்ந்த ஒரு அங்கமாகத்தான் இந்த வயர் சிற்பக் கலையைப் பயன்படுத்துகிறார் ராஜாராம். பூங்காக்கள், மக்கள் அதிகம் கூடும் இடங்களுக்குச் செல்லும் ராஜாராம், ஓரிடத்தில் அமர்ந்து கம்பிகளை வளைத்து சிற்பமாக்கி குழந்தைகளுக்குத் தருகிறார். மெல்ல மெல்ல மக்கள் அவரைச் சுற்றி கூடி நிற்கிறார்கள். குப்பைகளை வீட்டிலேயே தரம் பிரிக்கும் அவசியத்தையும், குப்பைகளால் ஏற்படும் சூழலியல் சிக்கல்களையும், தற்சார்பு வாழ்க்கை முறையின் பயன்களையும் அவர்களுக்கு விளக்குகிறார். பிறகு அடுத்த இடத்தை நோக்கி நகர்கிறார்.

“சிறு வயதில் இருந்தே ஓவியத்தில் ஆர்வம் உண்டு. பள்ளியில் ரகுபதி என்ற ஆசிரியர் மிகச்சிறப்பாக ஓவியம் வரைவார். அவர் என்னை உற்சாகப்படுத்தினார். சரித்திர நாவல்களைப் படித்துவிட்டு, அதில் வரும் பாத்திரங்களை, அணிகலன்களை எல்லாம் ஓவியங்களாக வரைவது எனக்குப் பிடித்தமான பொழுதுபோக்கு. லேண்ட்ஸ்கேப், நேச்சுரல் சீனரி ஓவியங்களும் வரைவேன். தஞ்சாவூர் ஓவியங்களும் வரையக் கற்றுக்கொண்டேன். 

படிப்பு முடித்து, மின் பொறியாளராக வேலைக்குச் சேர்ந்தேன். ஓவிய வாழ்க்கை அதோடு முடிந்துபோனது. பிற்காலம் முழுவதும் மின் வயர்களோடு என் வாழ்க்கை கலந்திருந்தது. விளையாட்டாக ஒருநாள், வயர்களுக்கு மேலுள்ள பாகத்தை அகற்றிவிட்டு, கம்பியை வளைத்துக் கொண்டிருந்தேன். என்னையறியாமலே ஒரு தட்டானின் சிற்பம் உயிர்பெற்றது. அதன்பிறகு, ஓய்வு நேரங்களில் விதவிதமாக செய்து பார்க்க முயற்சித்தேன். இணையத்தில் தேடியபோது, இது ஒரு கலையாகவே வளர்ந்திருப்பது தெரிந்தது. ஜிம்பாப்வேயைச் சேர்ந்த கவின் வொர்த் (www.gavinworth.com), இங்கிலாந்தைச் சேர்ந்த ரேச்சல் டக்கர்  போன்றோர் இந்தக் கலையில் மிகப்பெரிய ஆளுமைகளாக இருந்தார்கள். 

IMG_0429.JPG

இடைக்காலத்தில், பல பட்டனுபவங்களால் சுற்றுச்சூழல் சார்ந்த சிந்தனைகள் அதிகரித்தன. நாம் வாழும் இந்த பூவுலகு மீது சிறிதும் அக்கறையின்றி, பல பேரழிவுகளை நிகழ்த்திக் கொண்டிருக்கிறது இந்த மனித இனம். அடுத்த தலைமுறைக்கேனும் இந்த பிரபஞ்சம் பற்றிய சிந்தனை வரவேண்டும். குறைந்தபட்சம் ஒவ்வொருவரும் தன்னளவில் தவறுகளைத் திருத்திக்கொண்டு, எவரையும் பாதிக்காத ஒரு வாழ்க்கையை வாழ வேண்டும். ஒரு புறம் குளோபல் வார்மிங் பிரச்னை. மற்றொருபுறம் அணுஉலை போன்ற மனிதத் தவறுகளால் ஏற்படும் தீங்குகள், கட்டுப்பாடில்லாத எரிபொருள் பயன்பாடு, வன அழிப்பு... இது குறித்தெல்லாம் மக்களுக்கும், குழந்தைகளுக்கும் புரிதலை உருவாக்க வேண்டும் என்ற எண்ணம் வந்தது. அதற்கு, இந்த வயர் சிற்பக் கலையை பயன்படுத்த நினைத்தேன். 

தினமும் காலையும், மாலையும் பூங்காக்களுக்குப் போய் விடுவேன். வயர் சிற்பங்களை செய்து குழந்தைகளுத்துத் தருவேன். செய்யவும் கற்றுத்தருவேன். இதை வேடிக்கைப் பார்க்க கூடுகிறவர்களை அமர வைத்து பேசுவேன். அவர்களிடம் உறுதிமொழி வாங்குவேன். கடந்த நான்கைந்து வருடங்களாக இதுதான் என் பணி..." என்கிறார் ராஜாராம்.

வயர் சிற்பக்கலை மிகவும் எளிமையான கலை. கற்பனையும் கைத்திறனும் மட்டுமே பிரதானம். ஒரு மூக்குக் குரடு, கொஞ்சம் வயர்கள், கொஞ்சம் படைப்புத்திறன்... இவை போதும்.

“வயர் சிற்பக்கலைக்கு உலகமெங்கும் நிறைய டிமாண்ட் இருக்கிறது. கிரானைட், உலோகங்களில் பெரிய பெரிய உருவங்கள், சிற்பங்கள் செய்வதற்கு முன்பு, மினிமலாக வயர் சிற்பம் செய்து  பார்ப்பார்கள். வெளிநாடுகளில் பொறியியல் படிப்புகளில் வயர் சிற்பக் கலையும் பாடமாக இருக்கிறது. அண்மைக்காலமாக இங்குள்ள கட்டுமானப் பொறியாளர்கள் பலர் வந்து இந்தக் கலையை கற்றுக் கொண்டு போகிறார்கள். வீடுகளில் இன்டீரியர் செய்வதற்கு இக்கலையை பயன்படுத்துகிறார்கள். ஐ.ஐ.டி போன்ற தொழில்நுட்பக் கல்வி நிறுவனங்களுக்குச் சென்று வகுப்புகளும் எடுக்கிறேன். இப்பகுதிகளில் உள்ள பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கும் கற்றுத்தருகிறேன். எங்கு சென்றாலும் இந்தக் கலையை மட்டும் பயிற்றுவிப்பதில்லை. அவர்களிடம், "இந்த பூமியை வதைக்க மாட்டேன். என்னளவில் தற்சார்பான வாழ்க்கையை வாழ்வேன்" என்ற உறுதிமொழிகளையும் பெற்றுக்கொள்கிறேன்..." என்கிறார் ராஜாராம். 

vikatan

  • தொடங்கியவர்

பாகனைக் காக்க ஆற்றுக்குள் குதித்த யானை! (video)

ஓடும் ஆற்றில் தத்தளித்து கொண்டிருந்த தன்னுடைய பயிற்சியாளரை யானை ஒன்று காப்பாற்றிய சம்பவம் தாய்லாந்தில் நிகழ்ந்துள்ளது.

தாய்லாந்து நாட்டில் புகழ்பெற்ற யானைகளுக்கான சரணாலயம் உள்ளது. இந்த சரணாலயத்தில்  ஏராளமான யானைகள் வசித்து வருகின்றன. இங்கு ஐந்து வயதான காம்லா எனும் யானை குட்டி வளர்ந்து வருகிறது. காம்லா யானைக்கு டெரிக் தாம்சன் என்பவர் பாகனாக இருக்கிறார். மனிதர்களை விட விலங்குள் நல்லவை. துன்பத்தில் மனிதனுக்கு கைக் கொடுக்கக் கூடியவை அவற்றுக்கு மனிதர்கள் துன்பம் விளைவிக்கக் கூடாது என்பதை உணர்த்த இந்த யானைகள் சரணாலயம் முடிவு செய்தது. அதனை நிரூபிப்பதற்காக யானைகள் மனிதர்களிடம் எவ்வளவு பாசமாக இருக்கின்றன என்பதை உலகுக்கு காட்டுவதற்காக ஒரு டெஸ்ட் வைத்து அதனை வீடியோவா பதிவு செய்து வெளியிட  முடிவு செய்யப்பட்டது.

 

 

டெரிக் தாம்சனிடம் உனது யானை உன் மீது எந்தளவுக்கு அன்பு வைத்திருக்கிறது என்று பார்க்கலாம் என ஒரு ஐடியா கொடுக்கப்பட்டது. அதன்படி, சரணாலயத்தில் உள்ள ஆற்றில் டெரிக் தாம்சன் குளித்துக் கொண்டிருக்கும்போது, வெள்ளம் தன்னை அடித்துக்கொண்டு செல்வது போல, நடித்தார். அதனைக் கரையில் இருந்து பார்த்துக் கொண்டிருந்த காம்லா யானை உடனடியாக ஆற்றுக்குள் பாய்ந்தது. தண்ணீருக்குள் ஓடிச் சென்று பாகனை மீட்டது. இதனை பார்த்த சரணாலயத்தில் அதிகாரிகள் வியப்பும் ஆச்சரியமும் அடைந்தனர்.

டெர்ரி, '' சிறுவயதில் இருந்தே காம்லா எனது பராமரிப்பில்தான் உள்ளது. அதன்மீது நான் அளவு கடந்த அன்பும் வைத்திருந்தேன். அதுவும் என்மீது அன்பு வைத்திருக்கிறது'' என்கிறார் நெகிழ்ச்சியாக. தற்போது அந்த வீடியோ வெளியிடப்பட்டு இணையத்தில் வைரலாகி வருகிறது. நியூயார்க் டைம்சில் இருந்து சிஎன்என் வரை நேற்று காம்லா யானைதான் நேற்று ஹீரோ.

vikatan

  • தொடங்கியவர்
புவி அழகுராணி 2016 போட்டிகளில்...
 

புவி அழகுராணி 2016  (Miss Earth 2016)  போட்டி பிலிப்பைன்ஸில் நடைபெறுகிறது. 16 ஆவது தடவையாக நடைபெறும் இப்போட்டியில் 84 அழகுராணிகள் பங்கு பற்றுகின்றனர்.

 

2004414671132_1162422163842507_825404537

 

2004414600968_1162421393842584_580377934

 

இலங்கையின் சார்பில் திமின்தி எதிரிரத்ன பங்குபற்றுகிறார். இந்தியாவின் சார்பில் ரஷி யாதவ்வும் பாகிஸ் தானின் சார்பில் அன்ஸேலிக்கா தாஹிரும் பங்குபற்றுகின்றனர்.

 

2004414484830_1162421383842585_885325901

 

20044new.jpg

 

இப் போட்டியில் பங்கு பற்றும் அழகுராணிகள் சிலர் நீச்சலுடையில் தோன்று வதை படங்களில் காணலாம்.  

 

2004419.jpg

 
 

metronews.lk

Edited by நவீனன்

  • தொடங்கியவர்

ஜஸ்டின் பைபர் வீட்டுக்கு ஒரு மாத வாடகை இவ்வளவா?

 

4fe96c6f-cb01-4d8b-916d-9063057bd78c_144

பிரபல பாப் சிங்கர் ஜஸ்டின் பைபர் லண்டனில் பிரம்மாண்டமான வீட்டுக்கு குடி புகுந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதன் வாடகை மாதத்துக்கு 1.3 மில்லியன் பவுண்ட்ஸ் என்று கூறப்படுகிறது. இந்திய மதிப்பில் ரூ.88 லட்சத்துக்கும் மேல் (ஒரு மாதத்துக்கு).  24,000 சதுர அடி கொண்ட அந்த வீட்டின் பாத்ரூம் மட்டுமே 12 வகை இத்தாலியன் மார்பில்ஸால் கட்டப்பட்டது என்கின்றனர். ஜஸ்டினுக்கு நிறைய ப்ரைவசி பிரச்னையாம். அதனால் தான் இந்த பிரம்மாண்ட வீட்டுக்கு குடி புகுந்ததுள்ளதாக கூறப்படுகிறது.

vikatan

  • தொடங்கியவர்

14691938_1159102384138454_92122855535588

தமிழ்த் திரையுலகில் என்றும் ரசிகர்கள் மனதை வென்ற முன்னணி நடிகை - என்றுமே இனிய நடிகை ஜோதிகாவின் பிறந்தநாள்.
36 வயதினிலே மூலம் சில வருடகால இடைவெளிக்கு பிறகு மீண்டும் திரைப்பக்கம் திரும்பியிருந்த திருமதி.சூர்யாவுக்கு 'மகளிர் மட்டும்' இன்னொரு எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

Happy Birthday Jyothika

  • தொடங்கியவர்

தங்களது வழியில் பயணத்தைத் தொடரும் கடல் ஆமைகள்

14732240_10153807076675163_4243845723210

மேற்கு சுமத்ராவில் உள்ள பரியாமன் உயிரினப் பாதுகாப்பு மையத்தைப் பார்வையிட்ட உள்ளூர் சுற்றுலாவாசிகளின் குழு ஒன்று, கடல் ஆமைகளைக் கடலில் விட்டதும், அந்த ஆமைகள் தங்களது வழியில் பயணத்தைத் தொடரும் காட்சி.

கடல் ஆமைகளில் ஏழு வகை இனங்கள் உள்ளன. அவை அனைத்துமே சர்வதேச அளவில் அழிவின் விளிம்பில் உள்ள உயிரினங்களின் பட்டியலில் உள்ளன.

லெதர்பேக்(leatherback) என்ற ஆமையைத் தவிர, மற்ற எல்லாக் கடல் ஆமைகளும் செலோனியேடைய் குடும்பத்தைச் சேர்ந்தவை.

கடல் ஆமைகள் 80 ஆண்டுகள் வரை வாழக்கூடியவை. அவை தங்களின் வாழ்நாளில் பெரும்பகுதியை கடலில் மூழ்கிய வண்ணம் செலவிடுகின்றன.

அவை கடலில் தான் இனப்பெருக்கம் செய்கின்றன. பெண் ஆமைகள் கரைக்கு வந்து மணலைத் தோண்டி , முட்டைகளை இடுகின்றன.

குஞ்சுகள் எந்தப் பாலினம் என்பது மணல் வெப்பநிலையைச் சார்ந்து இருக்கிறது. எனவே, பருவநிலைமாற்றம் கடல் ஆமைகளின் எண்ணிக்கையைப் பாதிக்கும் என்ற அச்சம் நிலவுகிறது.

சூடான வெப்ப நிலை, பெண் ஆமையாக பிறக்கும் விகிததத்தை அதிகரிக்கும் மற்றும் ஆண் ஆமைகளின் எண்ணிக்கையைக் குறைக்கும் வாய்ப்புள்ளதாகக் கூறப்படுகிறது
PHOTO: ADEK

BBC

  • தொடங்கியவர்

அகதிகள் மனதை புண்படுத்தியதற்கு மன்னிப்புக் கேட்ட பிரியங்கா சோப்ரா

priya_17075.png

சில நாட்கள் முன்பு ’டிராவலர்’ இதழின் அட்டைப் படத்தில் வெளியான பிரியங்கா சோப்ராவின் புகைப்படம் பெரும் சர்ச்சயை ஏற்படுத்தியது.

பிரியங்கா அணிந்திருந்த மேல்சட்டையில் எழுதியுள்ள வாசகம், உலகம் முழுவதும் உள்ள அகதிகளின் உணர்வை புண்படுத்துமாறு உள்ளதாக, பிரியங்கா சோப்ராவும்,  Condé Nast Traveller என்னும் பத்திரிகையும்  சமூக வலைத்தளங்களில்  சாடப்பட்டது.


இந்நிலையில் பிரபல இந்திய செய்தி சேனல் ஒன்று இந்த சம்பவத்தை பற்றி எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த பிரியங்கா, ‘அகதிகள் மனதை புண்படுத்தியதற்கு மன்னிப்புக் கோருகிறேன். ஆனால் அந்த அட்டைப் படம் சொல்ல வந்த கருத்து, தவறாக சித்தரிக்கப்பட்டுவிட்டது’ எனத் தெரிவித்துள்ளார். 

vikatan

  • தொடங்கியவர்

14691891_1159108074137885_22945247650398

அவுஸ்திரேலிய அணியின் சுழல்பந்து வீச்சாளர் நேதன் ஹொரிட்ஸின் பிறந்த நாள்.
Happy Birthday Nathan Hauritz

 
  • தொடங்கியவர்
 
 
 
Bild zeigt 1 Person , Text
 

அக்டோபர் 18: கண்டுபிடிப்பாளர் தாமஸ் ஆல்வா எடிசன் நினைவு தினம் இன்று

உண்மையில் டிஸ்லெக்சியாவால் பாதிக்கப்பட்டுப் பள்ளியில் படிக்க லாயக்கில்லை எனத் துரத்தப்பட்ட எடிசன் அன்னையின் அரவணைப்பில் கல்வி கற்றார். உள்நாட்டு போர் நடந்த பொழுது சுடசுட செய்திகளைத் தொடர்வண்டியிலேயே அச்சிட்டு விற்றார். ரயிலில் ஆய்வு செய்து கொண்டிருந்த பொழுது ஒரு பெட்டியில் தீ பற்றிக்கொண்டதற்காக மாஸ்டரிடம் அறை வாங்கி ஒரு பக்கம் கேட்கும் திறனை இழந்த எடிசன் தன் ஓயாத உழைப்பால் பல்வேறு கண்டுபிடிப்புகளை உருவாக்கினார்.

முதன்முதலில் வாக்குப்பதிவு இயந்திரம் ஒன்றை உருவாக்கினார். அதில் தில்லுமுல்லு செய்ய முடியாது. அரசியல்வாதிகள் அதை ஏற்கவில்லை. இனிமேல் மக்களுக்கு உதவும் பொருட்களையே கண்டுபிடிக்க வேண்டும் என்று முடிவு செய்துகொண்டார் அவர்

ஊமைப்படங்களைப் பேச வைக்கும் போனோக்ராஃபை ஆய்வகம் தீப்பிடித்து எரிந்த ஒரு வாரத்தில் உருவாக்கி காட்டினார்.குண்டு பல்பின் இழைக்காக மலேசியா வரை ஆளை அனுப்பிப் பொருட்களைத் தேடிப்பார்த்தார்.பத்தாயிரம் முறை தேடியும் பொருள் சிக்கவில்லை , “நான் பத்தாயிரம் முறை தோல்வியடைந்தேன் எனச் சொல்ல மாட்டேன் ;பத்தாயிரம் பொருட்களில் இருந்து பல்பை ஒளிர வைக்க முடியாது !” எனக் கற்றுக்கொண்டேன் என்றார்.எடிசன் இறுதியாகப் பல்பை டங்ஸ்டனை கொண்டு ஒளிர வைத்தார். அதைச் சாதித்த பொழுது நள்ளிரவு. மனைவியிடம் ஆர்வமாகக் காண்பித்த பொழுது ,”நடுராத்திரியில் தூக்கத்தைக் கெடுத்துக்கிட்டு ;கண்ணு கூசுது விளக்கை அணையுங்க !” என்றார்.

தந்தி அனுப்புவதில் பெரிய ஆர்வம் கொண்டிருந்த எடிசன் தன் முதல் இரு பிள்ளைகளுக்கு டாட் மற்றும் டாஷ் என்று தந்தியின் குறிச்சொற்களால் பெயரிட்டார். ஹலோ என்று போனில் அழைக்கும் முறையைக்கொண்டு வந்ததும் அவரே.

காய்கறி விற்பனை,செய்தித்தாள் விற்றல் , பள்ளியை விட்டு மூன்றே மாதத்தில் வெளியேற்றம் என விரக்தியான வாழ்வில் 1,093 காப்புரிமைகளைப் பெற்று இருந்தார் என்பதற்குப் பின் எத்தகு உழைப்பு இருக்கும் என உணர வேண்டும். வாழ்க்கையில் வலிகள் மிகுந்திருந்த பொழுது ஓயாத உழைப்பை கொட்டிய அவர் வெற்றியை ஓயாத உழைப்பே தீர்மானிக்கிறது என அடித்துச் சொன்னவர்.

அவர் எப்படி மற்ற கண்டுபிடிப்பாளர்களில் இருந்து தனித்து நிற்கிறார் என்றால் தான் கண்டுபிடித்ததை வெற்றிகரமாக அவர் சந்தைப்படுத்தினார்.ஒன்றுக்கும் உதவாத எடிசன் எனப்பட்டவர் மறைந்தார்;அமெரிக்காவில் விளக்குகள் சிலநிமிடம் அணைந்தன. ரேடியோ கரகரத்தது,” எடிசன் வருவதற்கு முன் உலகம் இப்படித்தான் இருந்தது!” மீண்டும் விளக்குகள் ஒளிர்ந்து ஊரே மின்னியது ரேடியோ சன்னமாகச் சொன்னது ,”எடிசன் பிறந்ததற்குப் பின் உலகம் இப்படித்தான் இருந்தது!”

vikatan

  • தொடங்கியவர்

புத்தகம் படித்தால் பணம்! அசத்தும் சலூன் #Kids

barbar1_16387.jpg

மெரிக்காவின் மெக்ஸிகன் மாகாணத்தில் உள்ள இப்சிலான்டி (Ypsilanti) நகரில் அமைந்திருக்கும் ஒரு சலூனுக்கு, பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளை ஆர்வத்துடன் அழைத்துச் செல்கிறார்கள். காரணம்... இங்கு சிறுவர்களுக்கு முடி திருத்தும்போது அவர்கள் கையில் ஒரு புத்தகத்தைக் கொடுக்கிறார்கள். அவர்கள் அதைச் சத்தமாகப் படித்தால் 2 டாலர்கள் பரிசாகக் கிடைக்கிறது, அல்லது கட்டணத்தில் கழிக்கப்படுகிறது. சிறுவர்களுக்குப் புத்தகம் படிக்கும் பழக்கத்தை ஏற்படுத்தும் இந்தச் சலூனுக்கு, நகர மக்களிடம் நல்ல வரவேற்பும் மரியாதையும் கிடைத்துள்ளது.

ஃபுல்லர் கட் (Fuller Cut)... இதுதான் அந்த சலூனின் பெயர். இங்கு ரியான் கிரிஃபின் என்பவர் 20 வருடங்களாக முடி திருத்துகிறார். சலூனின் உரிமையாளருக்கு இவர் சொன்ன ஐடியாதான் இது.

barbar_16087.jpg

14 வயதுக்கு உட்பட்ட சிறுவர்களுக்கு இந்தச் சலுகை கிடைக்கும் என்று சொல்லும் கிராஃபின், விளையாட்டு, விண்வெளி, இலக்கியம் எனப் பல துறைகளிலும் ஆப்பிரிக்க அமெரிக்கர்களின் சாதனைகள் பற்றிய நூல்கள் தங்கள் சலூனில் அதிகம் இருப்பதாகக் கூறுகிறார். ''எங்கள் சலூனுக்கு வருபவர்களில் பெரும்பாலானோர் கருப்பினத்தவர்கள் என்பதால், அந்தக் குழந்தைகளுக்கு தன்னம்பிக்கையை வளர்க்கவே இந்த ஏற்பாடு'' என்று சொல்லும் கிராஃபின், இதற்காக, நூலகங்கள் மூலமாகவும் நகரத்தில் உள்ள மக்களிடம் இருந்தும் புத்தகங்களைச் சேகரிக்கிறார்.

barbar2_16291.jpg

''இன்று இந்த சலூனுக்கு வரும் சிறுவர்கள், பெரியவர்கள் ஆனதும் என்றைக்காவது ஒருநாள் முடிதிருத்திக்கொள்ள இங்கு வரும்போது, அறிவியலாளர், பொறியாளர், பத்திரிகையாளர் என அவர்கள் அப்போது அடைந்திருக்கும் நிலைக்கு, இந்தச் சலூனில் படித்த புத்தகங்களும் காரணம் என்று அவர்கள் சொல்லப்போவது உறுதி" என்கிறார் அவர்களுக்கான நல்வாழ்த்துடன்.

டி.வி, செல்ஃபோன், இன்டர்நெட் என மூழ்கிக்கிடக்கும் இக்காலச் சிறுவர்களிடம் வாசிப்புப் பழக்கத்தை ஏற்படுத்தி தன்னம்பிக்கை வளர்க்கும் கிராஃபின் முயற்சிக்கு பாராட்டுகள்!

vikatan

  • தொடங்கியவர்

 

முகமூடிக் காதல் சேவை

ஜப்பானில் தனியர்களுக்கான வித்தியாசமான டேட்டிங் சேவை ஒன்று அறிமுகமாகி வேகமாக பரவி வருகிறது.

இந்த சேவையின் உறுப்பினராக பதிவு செய்து இதன் கூட்டங்களில் கலந்துகொள்பவர்கள் வழக்கமாக மருத்துவத்துறையில் கிருமிகளை தடுக்க அணியப்படும் மருத்துவ முகமூடிகளை கண்டிப்பாக அணிந்து வரவேண்டும்.

முகத்தின் அழகை விட அகத்தின் அழகே காதலுக்கு அடிப்படையாக அமையவேண்டும் என்பதை வலியுறுத்தவே இந்த ஏற்பாடு என்கிறார்கள் இதன் ஏற்பாட்டாளர்கள்.

BBC

  • தொடங்கியவர்

கப் கேக் -ன் சுவையான வரலாறு தெரிஞ்சுக்கணுமா?

cupcakes%20-1_16450.jpg

 

பலரும் விரும்பிச் சாப்பிடுவதில் சாக்லெட், ஐஸ்கிரீம் ஆகியவற்கு தனி இடம்தான். அதேபோலதான் கப் கேக்-கும். கப் கேக் என்றால், கேக்கைவிட சம்திங் ஸ்பெஷல். ஆண்டுதோறும் அக்டோபர் மாதம் 18ம் தேதி, உலகம் முழுக்க சாக்லேட் கப் கேக் தினமாகக் கொண்டாடப்படுகிறது. ஆம்... இன்று கப் கேக்குக்கு ஹேப்பி பர்த்டே. இந்த கேக்கின் வரலாறும் சுவையானதுதான்.

1796-ம் ஆண்டுவாக்கில், அமெரிக்காவைச் சேர்ந்த குக்கரி எக்ஸ்பர்ட் அமெலியா சைமன்ஸ்(Ameliya Simmons) என்பவரால் கப் கேக் செய்யும் முறை கண்டறியப்பட்டது.    1828-ல் வெளியான  'எலிஸா லெஸ்லீஸ்' என்ற சமையல் குறிப்புப் புத்தகத்தில் இடம்பெற்ற 75 ரெசிப்பிக்களில் இந்த கப் கேக்கும் ஒன்று. 19ம் நூற்றாண்டின் ஆரம்பகாலத்தில் சின்னச் சின்ன கப்கள் மற்றும் மண்ணால் ஆன பாண்டத்தில் கேக் கலவையை வைத்து பேக் செய்தார்கள். ஃபேரி கேக், பட்டி கேக் , கப் கேக் என்ற பெயர்களில் தயாரிக்கப்பட்ட கப் கேக், பல சுவைகளிலும் செய்யப்பட்டது. சாக்லெட் பிரியர்களின் சந்தோஷத்தை அள்ளும் விதமாக, சாக்லெட் கப் கேக்குகளும் செய்யப்பட்டன.

cake%201_17477.jpg



ஆரம்பத்தில், 'கப்  கேக்' என்பதை ஒரு விதமாகவும், 'கப்கேக்' என்பதை மற்றொரு விதத்திலும் தயாரித்தனர். அதாவது, கேக் செய்யத் தேவையான மூலப்பொருட்களை, குறிப்பிட்ட கொள்ளளவு உள்ள கப்பினால் அளந்து அளந்து செய்வது முதல் வகை.  கப் போன்ற சின்னச்சின்ன மண் பாண்டத்தில் மூலப்பொருட்களை நிரப்பி, வெப்பப்படுத்தி எடுப்பது இரண்டாம் வகை.

நான்கு பொருட்கள் சேர்த்துச் செய்யப்பட்டதால் கப் கேக் 1 2 3 4  கேக் என்றும், குவார்ட்டர் கேக் என்றும் அழைக்கப்பட்டது. ஒரு கப் வெண்ணெய், ரெண்டு கப் சர்க்கரை, மூன்று கப் மாவு, நான்கு முட்டை கலந்த கலவையைச் சூடாக்கினால்... மஞ்சள் நிறத்தில் கேக்  ரெடி.

கப் கேக்கில் நட்ஸ், பெர்ரி, உலர் திராட்சை சேர்க்கப்பட்டு சுவை கூட்டப்பட்டதுடன், க்ரீம், ஐஸ்க்ரீம், பழங்கள் என கண்ணைக் கவரும் அலங்கார வேலைகளும் மேக்கிங்கில் சேர்க்கப்பட்டன. நாட்டுக்கு நாடு இதன் வகை, சுவை, அலங்காரம்  வேறுபடும்.

உலக சாக்லேட் பிரியர்கள் கொண்டாடி மகிழ்கிறார்கள் சாக்லேட் கப் தினத்தை!

vikatan

  • தொடங்கியவர்

 

பயணத்தை தொடங்கிய சீன விண்கலம்
சீனா தனது புதிய விண்வெளி நிலையத்திற்கு ஆட்களை கொண்ட விண்கலத்தை முதல்முறையாக அனுப்பியுள்ளது.
  • தொடங்கியவர்

ஹென்றி லூயி பெர்க்சன்

 
henri-bergson-1_3048880f.jpg
 

பிரெஞ்சு தத்துவமேதை

இலக்கியத்துக்கான நோபல் பரிசு பெற்ற பிரெஞ்சு தத்துவ மேதையான ஹென்றி லூயி பெர்க்சன் (Henri Louis Bergson) பிறந்த தினம் இன்று (அக்டோபர் 18). அவரைப் பற்றிய அரிய முத்துக்கள் பத்து:

*பிரான்ஸ் தலைநகர் பாரீஸில் (1859) பிறந்தார். தந்தை, போலந்தை சேர்ந்த வணிகர். தாய் இங்கிலாந்தைச் சேர்ந்தவர். தாயிடம் ஆங்கிலம் கற்றார். வீட்டிலேயே இவருக்கு யூத மதக் கல்வி வழங்கப்பட்டது. இவரது 9-வது வயதில், குடும்பம் பாரீஸுக்கு குடியேறியது.

*புத்திசாலி மாணவரான இவர் அறிவியல், கணிதம் ஆகிய பாடங்களில் அசாதாரணத் திறனை வெளிப்படுத்தி பல பரிசுகளை வென்றார். 18 வயதில் சிக்கலான கணிதத்துக்கு விடை கண்டறிந்து பரிசு பெற்றார். ‘அனலெஸ் டீ மேத்தமெடிகுயஸ்’ என்ற கணித நூலை எழுதி வெளியிட்டார்.

*மொழிகள், அறிவியல், கணிதம் என எல்லாவற்றிலும் திறமை இருந்ததால், எந்தத் துறையைத் தேர்ந்தெடுப்பது என்ற குழப்பம் இருந்தது. நீண்ட சிந்தனைக்குப் பிறகு, மெய்யியலைத் தேர்ந் தெடுத்தார். 1881-ல் ஒரு பள்ளியில் ஆசிரியராகப் பணியாற்றினார்.

*கிரேக்கம், லத்தீன் தத்துவ வரலாற்றில் சிறப்புப் பயிற்சி பெற்றார். 1889-ல் அரிஸ்டாட்டில் குறித்து லத்தீன் மொழியில் ஆய்வு செய்து, பாரீஸ் பல்கலைக்கழகத்தில் முனைவர் பட்டம் பெற்றார். ஒரு கல்லூரியில் 8 ஆண்டுகள் பணியாற்றினார். உயிரியல் களத்தில் அப்போதுதான் உருவாகியிருந்த இனவிருத்தி ஆற்றல் கோட்பாடு குறித்து விரிவான ஆய்வு மேற்கொண்டார்.

*டார்வின் குறித்து ஆராய்ந்து அவரது கோட்பாடுகளுக்கு விளக்கம் அளித்தார். 1896-ல் இவரது முக்கியமான ‘மேட்டர் அண்ட் மெமரி’ நூல் வெளிவந்தது. அதில் மூளையின் இயக்கம், எண்ண ஓட்டங்கள், நினைவகம் குறித்து ஆழமாக ஆராய்ந்து எழுதி யிருந்தார்.

*‘பகுத்தறிவுவாதம், அறிவியலைவிட உடனடி அனுபவமும் உள்ளுணர்வும்தான் உண்மையைப் புரிந்துகொள்ள முக்கியம்’ என்று வலியுறுத்தினார். ஒவ்வொரு நூலை எழுதும் முன்பாக பல ஆண்டுகள் ஆராய்ச்சியில் ஈடுபடுவார்.

*‘நார்மல் சுபீரியர்’ கல்லூரியில் விரிவுரையாளர், பேராசிரியராகப் பணியாற்றினார். 1900-ல் ‘தி காலேஜ் ஆஃப் பிரான்ஸ்’ இவரை கிரேக்கம் மற்றும் தத்துவவியல் துறைத் தலைவராக நியமித்தது. சர்வதேச தத்துவவியல் மாநாட்டில் இவர் வாசித்த கட்டுரை பெரும் வரவேற்பைப் பெற்றது.

*ஸ்காட்லாந்தின் பல பல்கலைக்கழகங்களிலும் அடிக்கடி உரை நிகழ்த்தினார். சமூக நன்னெறிகள் குறித்து எழுதினார். இவரது நண்பர்கள் இவரது கட்டுரைகளைத் தொகுத்து 2 தொகுதி களாக வெளியிட்டனர். இவரது பல படைப்புகளில் தத்துவக் கோட்பாடுகள், நன்னெறிகள், மதம், கலை குறித்த சிந்தனைகள் இடம்பெற்றிருந்தன. இவரது கருத்துகளும் கோட்பாடுகளும் தத்துவவாதிகளிடம் மட்டுமல்லாமல் பொதுமக்களிடமும் பெரும் வரவேற்பைப் பெற்றன.

*இவர் சிறந்த பேச்சாளரும்கூட. காலம், அடையாளம், சுதந்திர எண் ணம், மாற்றம், நினைவாற்றல், பிரக்ஞை, மொழி, கணித அடிப்படை, காரண காரியங்களின் வரம்புகள் ஆகிய அனைத்தையும் குறித்து இவர் பேசியும், எழுதியும் வந்தார். வளமான, ஜீவனுள்ள கருத்துகள் வாயிலாக வாசகர்களிடம் தாக்கத்தை ஏற்படுத்தும் வகையில் எழுதுவது இவரது தனிச் சிறப்பு.

*‘தி கிரியேடிவ் எவால்யுவேஷன்’ நூலுக்காக 1927-ல் இலக்கியத்துக்கான நோபல் பரிசு பெற்றார். 1930-ல் பிரான்ஸின் உயரிய இலக்கிய விருதைப் பெற்றார். நவீன தத்துவவாதத்தின் முன்னோடிகளில் ஒருவரான ஹென்றி லூயி பெர்க்சன் 82-வது வயதில் (1941) மறைந்தார்.

tamil.thehindu

  • தொடங்கியவர்

14695330_1259585377433583_89862267072631

அக்.18: 9முறை விம்பிள்டன் பட்டத்தை வென்ற மார்ட்டினா நவரத்திலோவா பிறந்தநாள் இன்று

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.