Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இளமை புதுமை பல்சுவை

Featured Replies

  • தொடங்கியவர்

உலகின் மிக அதிவேக எலக்ட்ரிக் காரை தயாரித்துள்ளது சீன நிறுவனம்..!

 

car%201%20600_14192.jpg

சீனாவைச் சேர்ந்த NextEV என்ற கார் தயாரிப்பு நிறுவனம், உலகின் அதிவேக காரை தயாரித்துள்ளது. இந்த கார் 0-100 கிலோ மீட்டர் வேகத்தை 2.7 நொடிகளில் கடந்து விடுமாம். இந்த கார் அதிகபட்சமாக 314 கிலோ மீட்டர் வேகத்தில் செல்லுமாம்.

 
இந்த காரின் விலை 1.2 மில்லியன் டாலர்கள். இந்திய மதிப்பில் 8.1 கோடி ரூபாய் வரும். 'NIO EP9' என்று பெயரிடப்பட்டுள்ள இந்த கார், ஆறு எண்கள் தான் இப்போது தயாரிக்கப்பட்டுள்ளது. 2017ம் ஆண்டின் நடுப்பகுதியில் NIO EP9 வகை கார் அதிக அளவு தயாரிக்கப்படும் என்று கூறப்படுகிறது. அப்போது, இந்த காரின் விலை கொஞ்சம் குறையும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

vikatan

  • Replies 11.3k
  • Views 1.5m
  • Created
  • Last Reply
  • தொடங்கியவர்

15178976_1396878257019611_84888079815718

  15179123_1396878843686219_22986548673811

15073349_1396879783686125_54838415264867

 

15109462_1396882023685901_27939252065919

 

15170933_1396882067019230_42793991949798

15181273_1396882173685886_60774128374386

15178131_1396882187019218_37752811102065

 

15179169_1396882297019207_46281695169383

 

15094245_1396882323685871_14224490115958

 

15095078_1396882383685865_81177134987734

15192524_1396882490352521_82593893048824

15085712_1396882830352487_22658619833739

 

மகளதிகாரம்

 

Edited by நவீனன்

  • தொடங்கியவர்

 

“உறுதியான நிலைப்பாடும் உடை களைவு சோதனையும்”

இந்த ஆண்டு ஜூலை மாதம் லூசியானாவில் நடந்த 'கருப்பு உயிர்களும் கவனத்துக்குரியவை' பேரணியில் லெஷியா இவான்ஸ் பங்கேற்றார்.

கவச உடையணிந்த காவலர்கள் முன் அமைதியாய், உறுதியாய் நின்ற அவரது படம் உலகெங்கும் பரவியது; பார்க்கப்பட்டது.

"இந்த படத்தில் இருப்பது நான் தான், ஆனால் அது சொல்லும் செய்தி என்னை தாண்டியது; என்னைவிட மிகவும் பெரியது" என்கிறார் லெஷியா.

“ஃபிலாண்டோ கேஸ்டல் உயிரிழந்தார், ஆல்டன் ஸ்டெர்லிங் உயிரிழந்தார். அதற்கான காரணம் என்ன என்று கேட்கவே நான் அங்கே நின்றேன்", என்கிறார் அவர்.

அந்நகர காவல்துறையால் ஆல்டன் ஸ்டெர்லிங் கொல்லப்பட்ட சில நாட்களின் பின்னர் இந்த போராட்டம் அங்கே நடந்தது.

"அவர்கள் என்னை பிடிப்பதற்கு முன்பாக நான் அங்கே நீண்ட நேரம் நிற்கவில்லை; அவர்கள் என்னை அங்கிருந்து அகற்றிஅழைத்து சென்றனர்......சிறைக்கு கொண்டு செல்லப்பட்டு நிர்வாண சோதனைக்குள்ளாக்கப்பட்டேன். அது அவமானகரமானதாக இருந்தது"

"ஆயினும் இந்த படத்தை நான் விரும்புகிறேன். இது பெண்களின் சக்தியை உணர்த்துகிறது. கருப்பினத்தவர் வல்லமையை உரைக்கிறது.

“எம் கருப்பின ஆண்கள் தம் அரசிகள் தமக்காக அங்கே நிற்கிறார்கள் என்பதை அறிவார்கள்.. நீங்கள் தனியராக கைவிடப்படவில்லை".

BBC

  • தொடங்கியவர்

வரலாற்றில் இன்று...
நவம்பர் 22


1574 : சிலியின் ஜுவான் பெர்னாண்டஸ் தீவுகள் கண்டுபிடிக்கப்பட்டன.


1908 : அல்பேனிய அரிச்சுவடி அறிமுகப்படுத்தப்பட்டது.


1922 : எகிப்திய பாரோ மன்னனின் 3,300 ஆண்டுகளுக்கு முற்பட்ட சமாதி கண்டுபிடிக்கப்பட்டது.


1935 : பசுபிக் பெருங்கடலைத் தாண்டி முதன்முறையாக விமானத் தபால்களை விநியோகிக்கும் பணியில் சைனா கிளிப்பர் என்ற விமானம் கலிபோர்னியாவை விட்டுப் புறப்பட்டது. (இவ் விமானம் நவம்பர் 29 இல் 110,000 தபால்களுடன் பிலிப்பைன்ஸின் மணிலாவை அடைந்தது.)


1940 : இரண்டாம் உலகப் போர்: இத்தாலியரின் ஆக்கிரமிப்பைத் தொடர்ந்து கிரேக்கப் படைகள் அல்பேனியாவுக்குள் நுழைந்து கோரிட்சாவை விடுவித்தன.


1942 : இரண்டாம் உலகப் போர்: ஜேர்மனிய தளபதி பிரீட்றிக் பவுலஸ், ரஷ்யாவின் ஸ்டாலின்கிராட்டில் தாம் சுற்றி வளைக்கப்பட்டிருப்பதாக ஹிட்லருக்கு தந்தி மூலம் செய்தி அனுப்பினான்.


1943 : இரண்டாம் உலகப் போர்: அமெரிக்கத் தலைவர் பிராங்கிளின் ரூஸ்வெல்ட், பிரித்தானியப் பிரதமர் வின்ஸ்டன் சேர்ச்சில், சீனத் தலைவர் சியாங் காய்-செக் ஆகியோர் எகிப்தின் தலைநகர் கெய்ரோவில் சந்தித்தனர்.


1943 : பிரான்ஸிடமிருந்து லெபனான் சுதந்திரம் பெற்றது.


1956 : ஒலிம்பிக் விளையாட்டு விழா மெல்பேர்னில் ஆரம்பமாயின.


853varalaru1.jpg1963 : அமெரிக்க ஜனாதிபதி ஜோன் எப். கென்னடி டெக்சாஸ் மாநிலத்தில்  லீ ஹார்வி ஒஸ்வால்ட் என்பவனால் சுட்டுக் கொல்லப்பட்டார். டெக்சாஸ் மாநில ஆளுநர் ஜோன் கொனலி படுகாயமடைந்தார். அதே நாளில் உபஜனாதிபதி லிண்டன் ஜோன்சன் அமெரிக்காவின் 36ஆவது ஜனாதிபதியானார்.


1965 : இந்தோனேஷியாவின் கம்யூனிஸ்ட் தலைவர் இராணுவத்தினரால் கைது செய்யப்பட்டு சுட்டுக் கொல்லப்பட்டார்.


1974 : ஐக்கிய நாடுகள் பொதுச் சபையில் பலஸ்தீன விடுதலை இயக்கம் பார்வையாளர் அந்தஸ்தைப் பெற்றது.


1975 : பிரான்சிஸ்கோ பிராங்கோவின் மறைவை அடுத்து ஜுவான் கார்லொஸ் ஸ்பெயின் மன்னனானார்.


1986: ட்ரவோர் பேர்பிக் என்பவரை மைக் டைசன் தோற்கடித்து மிக இளம் வயதில் உலக அதிபார குத்துச்சண்டை சம்பியனாக தெரிவான பெருமைக்குரியவரானார்.


1989 : லெபனானின் மேற்கு பெய்ரூத்தில் இடம்பெற்ற குண்டுவெடிப்பில் லெபனான் ஜனாதிபதி ரெனே மோவாட் கொல்லப்பட்டார்.


1990 : மார்கரட் தட்சர் பிரித்தானிய கன்சர்வேட்டிவ் கட்சித் தலைவர் தேர்தலிலிருந்து வாபஸ்பெற்றார். பிரித்தானிய பிரதமர் பதவியிலிருந்து அவர் விலகுவதை இது உறுதிப்படுத்தியது.


2002 : நைஜீரியாவில் உலக அழகிப் போட்டியாளர்களை இலக்குவைத்து நடத்தப்பட்ட தாக்குதலில் 100 பேருக்கு மேல் கொல்லப்பட்டனர்.


2003 : ஜோர்ஜியாவின் ஜனாதிபதி  எடுவார்ட் ஷெவர்நாட்சேயின் எதிராளிகள் நாடாளுமன்றத்தைத் தம் கட்டுப்பாட்டினுள் கொண்டு வந்து ஜனாதிபதியை பதவி விலகுமாறு கோரினர்.


2004: யுக்ரேனில் ஜனாதிபதித் தேர்தலின் பின்னர் மக்களின் புரட்சி ஆரம்பமாகியது.


2005 : ஜேர்மனியின் முதலாவது பெண் அதிபராக (சான்சிலர்) ஏஞ்சலா மேர்க்கெல் தெரிவு செய்யப்பட்டார்.


2012: காஸாவில் இஸ்ரேலுக்கும் ஹமாஸ் இயக்கத்தினருக்கும் இடையிலான 8 நாள் யுத்தத்தின்பின் போர்நிறுத்தம் ஏற்பட்டது.


2015: மியன்மாரில் மண்சரிவினால் 116 பேர் உயிரிழந்தனர்.

    

metronews.lk

Edited by நவீனன்

  • தொடங்கியவர்

உலகின் உயரம் குறைவான ஜோடி நிகழ்த்திய சாதனை..!

 

guiness12_19115.jpg

பிரேசில் நாட்டைச் சேர்ந்த பாலோ பேரோஸ் (Paulo Gabriel da Silva Barros) மற்றும் கட்யூசியா ஹோஷினோ (Katyucia Lie Hoshino) லண்டனில் உள்ள கின்னஸ் உலக சாதனை தலைமையகத்தில் திருமணம் செய்து கொண்டனர். இவர்கள் இருவரும் பிறவியிலேயே உயரம் குறைவானவர்கள். அது அவர்கள் இருவரையும் காதலில் விழுவதிலிருந்தோ, திருமணம் செய்துகொளவதில் இருந்தோ நிறுத்தவில்லை. 

அவர்கள் இருவரும் சேர்ந்து 71.42 இன்ச் உயரம் இருக்கிறார்கள். இந்த விஷயத்தால், அவர்களுக்கு 'உலகிலேயே மிகக் குறைவான உயரம் கொண்ட ஜோடி' என்ற பட்டம் கொடுத்துள்ளது கின்னஸ் அமைப்பு. 


இது பற்றி அந்த ஜோடி,'இந்த சாதனை விருது எங்களுக்கு கொடுக்கப்பட்டதை அடுத்து, புற தோற்றங்களின் வேற்றுமை மறக்கப்பட்டு, அனைவரும் சமமாக நடத்தப்பட வேண்டும் என விரும்பிகிறோம்.' என்று கூறினர்.

vikatan

  • தொடங்கியவர்

 

டெனிம்: துணியே தூரிகையாக

லண்டன் கலைஞர் இயன் பெர்ரி லண்டன் வாழ்க்கையை சித்தரிக்கும் தம் கலைப்படைப்புகளுக்கு டெனிம் துணியையே மூலப்பொருளாக கொள்கிறார்

BBC

  • தொடங்கியவர்

ஜப்பானியர்களின் கவனத்தை ஈர்த்துள்ள 19 கிலோ தங்கத்தாலான கிறிஸ்துமஸ் மரம் (Video)

 

ஜப்பானியர்களின் கவனத்தை ஈர்த்துள்ள 19 கிலோ தங்கத்தாலான கிறிஸ்துமஸ் மரம் (Video)

ஜப்பானில் தங்கத்தால் வடிவமைக்கப்பட்டுள்ள கிறிஸ்துமஸ் மரம் ஒன்று அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளது.

ஆடம்பர நகைக்கடை ஒன்றில் பார்வைக்கு வைக்கப்பட்டுள்ள கிறிஸ்துமஸ் மரத்தை உருவாக்க 19 கிலோ தங்கம் பயன்படுத்தப்பட்டுள்ளது.

தங்கத்தை உருக்கி செய்யப்பட்டுள்ள 2 மில்லிமீட்டர் இழைகளைக் கொண்டு 2 மீட்டர் உயரம் உள்ள கிறிஸ்துமஸ் மரம் அழகுபடுத்தப்பட்டுள்ளது.

அவ்வழியே செல்லும் அனைவரையும் கவர்ந்திழுக்கும் இந்த மரத்தின் மதிப்பு 26 கோடியே 63 இலட்சம் ஆகும்.

இது குறித்து நகைக்கடை மேலாளர் டகாஹிரோ இடோ பின்வருமாறு தெரிவித்துள்ளார்,

தற்போது உலக பொருளாதார நிலை சரியில்லை. எனினும், நாங்கள் உருவாக்கியுள்ள தங்கத்தால் செய்யப்பட்டுள்ள கிறிஸ்துமஸ் மரம் தற்போதுள்ள நிலையை மாற்றி ஒளி மிகுந்த வாழ்கையை உருவாக்கும் என நம்புகின்றோம்.
 

 

http://newsfirst.lk

  • தொடங்கியவர்

இந்த ஆண்டுக்குள் உலகில் 50% பேர் ஆன்லைன்

 

ffcv_22194.jpg

ஐ.நா தொலைதொடர்புதுறை நடத்திய ஆய்வில் வளர்ந்த நாடுகளில் 80% பேர் இணைதளம் பயன்படுத்துவதாக தெரியவந்துள்ளது. வளர்ந்து வரும் நாடுகளில் 40% பேர் இணையதளம் பயன்படுத்துவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதே நேரத்தில் வறுமை மிகுந்த ஆப்ரிக்க நாடுகளில் 10-ல் ஒருவர்தான் இணையம் பயன்படுத்துவதாகவும் இதில் கூறப்பட்டுள்ளது. குறிப்பாக தற்போது உலகில் 47% பேர் ஆன்லைனில் இருப்பதாகவும், இந்த ஆண்டு முடிவதற்குள் இந்த எண்ணிக்கை 50% ஆக மாறும் என்றும் கூறப்பட்டுள்ளது. மேலும், 2020-ஆம் ஆண்டுக்குள் உலகில் 60% பேர் ஆன்லைனில் இருப்பார்கள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

vikatan

  • தொடங்கியவர்

ஆண்ட்ராய்டு தத்துவங்கள்!

 

 

டுக்கி விழுந்தா தூக்கிவிட ஆள் வர்றாய்ங்களோ இல்லையோ... தலையைத் தூக்குறதுக்குள்ள தத்துவங்கள் சொல்லிக் கடுப்பேத்துறவங்க எல்லா யுகத்திலும் இருப்பாய்ங்க. தத்துவங்கள் எனும் பெயரில் பழையசோற்றைக் கிண்டாமல், சுடச்சுட பிரியாணி போல இவையெல்லாம் டெக் தத்துவங்கள் பாஸ்!

p70a.jpg

*`ஒன்லி மீ'யில் போடும் ஸ்டேட்டஸ்கள் நிலையானதல்ல!

*ஃபேஸ்புக்கை டி-ஆக்டிவேட் பண்ணினவன் பேச்சு, அடுத்த ஸ்டேட்டஸ் போட்டால் போச்சு.

*இன்பாக்ஸில் மெசேஜ் செய்பவனை விட்டுவிடுங்கள்; வாட்ஸப் க்ரூப்பில் கோத்து விடுபவனிடம் கொஞ்சம் எச்சரிக்கையாயிருங்கள்!

*ஸ்டேட்டஸ் தோற்றுப்போன இடங்களில் கமெண்ட் கைகொடுக்கும்!

*ஷேரிங்குகளைப் பொறுத்தே ஃபாலோயர்ஸ் வாய்க்கும் என்பான் புத்திசாலி!

*நீ எழுத ஸ்டேட்டஸ் இல்லையெனக் கவலைப் படாதே! நீ எழுதுவதெல்லாம் ஸ்டேட்டஸ்களே!

*என்னதான் நீங்க ரேஷன் கடைல க்யூவில் நின்னாலும், டேட்டா ஆன் பண்ணலைன்னா ஆஃப்லைன்னுதான் சொல்லுவாய்ங்க.

*வாட்ஸப் க்ரூப்னா தினம் ஆயிரம் மெசேஜ் வர்றதும், அதை நாம கொத்தோடு மொத்தமா டெலிட் பண்றதும் சகஜம்தானே!

*பைட் சுகத்திற்கு ஆசைப்பட்டு டெராபைட் பேரின்பத்தை இழப்பவன்தான் இணையவாசி!

*ட்ரெண்டு முடிவதற்குள் தானும் ஒரு ஹேஸ்டேக் போடுபவன் பிழைத்துக் கொள்வான்.

*லைக்குகளையும் ரீ-டிவீட்களையும் தேடிச் செல்லாதே! அவை உன்னைத்தேடி வரும்.

*அப்பாடக்கராக இருந்தாலும் ஃபேஸ்புக் ஃப்ரெண்ட்ஸ் லிமிட் ஐயாயிரம்தான்!

vikatan

  • தொடங்கியவர்

ஸ்மார்ட் ஃபோன்கள் இனி நொடிப்பொழுதில் சார்ஜ்

 

o-SMARTPHONE-CHARGING-facebook_22165.jpg

ஸ்மார்ட் ஃபோன்களில் சார்ஜ் செய்யும் பஞ்சாயத்து தீர்க்கப்படாத ஒன்றாகவே இருந்து வருகிறது. இந்நிலையில் ஸ்மார்ட் ஃபோனை நொடிப் பொழுதில் சார்ஜ் செய்யும் புதிய தொழில்நுட்பத்தை அமெரிக்க விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர். Flexible Super-Capacitors எனப்படும் இந்த வகை தொழில்நுட்பத்தில் ஒரு சில நொடிகளில் ஃபோன் சார்ஜ் ஆகிவிடுமாம். அதன்படி ஒரு முறை சார்ஜ் செய்தால் சராசரியை விட 30,000 மடங்கு பேட்டரி பவர் இருக்கும் என்கிறார்கள். அதாவது ஒரு சில நொடிகளில் ஆகும் சார்ஜ் கிட்ட,தட்ட ஒரு வாரத்துக்கு நீடிக்கும் என்கின்றனர் விஞ்ஞானிகள். குறிப்பாக இந்த முக்கியத்துவம் வாய்ந்த கண்டுபிடிப்பில் இந்திய வம்சாவழியை சேர்ந்த ஒரு விஞ்ஞானியும் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது

vikatan

  • தொடங்கியவர்

நம்ப முடிகிறதா? - எவ்வளவு காற்றைச் சுவாசிக்கிறோம்?

 

 
விக்டோரியா அருவி
விக்டோரியா அருவி
 

# பறவை ஓய்வாக இருக்கும்போது அதன் இதயம் நிமிடத்துக்கு 400 முறை துடிக்கும். பறக்கும்போதோ 1000 முறை துடிக்கும்!

# வண்ணத்துப் பூச்சியால் சிவப்பு, பச்சை, மஞ்சள் நிறங்களை அறிய முடியும்.

# ஜாம்பியா, ஜிம்பாப்வே நாடுகளுக்கு இடையே உள்ள விக்டோரியா அருவியின் சத்தத்தை 40 கிலோமீட்டர் தொலைவிலும் கேட்கலாம்.

# 90 சதவீத நோய்கள் ஏற்படவும் தீவிரம் அடையவும் மன அழுத்தமே காரணம்.

# வெப்பத்தால் தண்ணீர் விரிவுடையும் என்ற அடிப்படையில், அன்டார்டிக் பெருங்கடலின் அகலம் ஒவ்வொரு ஆண்டும் 3 சென்டிமீட்டர் அதிகரிக்கிறதாம்.

# பூமித் தரையின் 10 சதவீத பரப்பை பனிக்கட்டிகள் மூடியிருக்கின்றன. இந்த ஐஸ் பகுதிகளில் 96 சதவீதம் அன்டார்டிகாவிலும் கிரீன்லாந்திலும் உள்ளன.

# மனிதனின் டிஎன்ஏ (மரபணு) 95 சதவீதம் சிம்பன்சி டிஎன்ஏவுடன் ஒத்துப்போகிறது.

# தினமும் மனிதன் சராசரியாக 11 ஆயிரம் லிட்டர் காற்றைச் சுவாசிக்கிறான்.

# சிறிய மானைக் கொன்று தூக்கிச் செல்லும் அளவுக்கு கழுகுக்கு வலிமை உண்டு.

# ஆர்டிக்கில் உள்ள பெரும்பாலான பனிப்பாறைகள் ஏறக்குறைய 45 மீட்டர் உயரத்திலும் 180 மீட்டர் நீளத்திலும் இருக்கும்.

tamil.thehindu

  • தொடங்கியவர்

உயிரைப் பணயம் வைத்து மீனவர்களைக் காப்பாற்றிய லேடி கேப்டன்..!

மீனவர்

திடீரென கடும்புயல் மழை என்றால் என்ன செய்வோம். பாதுகாப்பான இடத்தில் ஒதுங்குவோம். நடுக்கடலில் கப்பலில் செல்லும் போது அப்படி ஒரு நிகழ்வு நடந்தால்  என்ன செய்ய முடியும். குறைந்தப்பட்சம்  நம்மைப் பாதுகாத்துக் கொண்டு தப்பிக்க முயல்வோம். ஆனால் ராதிகா மேனன் செய்த செயலோ அசாத்தியமானது. கடந்த ஆண்டு ஜூன் மாதம் 22-ம் தேதி ஒடிசா மாநிலம் கோபால்பூர் அருகே உள்ள வங்கக்கடலில் கடும் மழை மற்றும் பலத்தக் காற்றில் ஒரு மீன்பிடி  படகு சிக்கிக்கொண்டது. நடுக்கடலில் சென்று கொண்டு இருந்த போது திடீரென ஏற்பட்ட கடல் சீற்றத்தால் மீனவர்கள் சென்ற படகின் என்ஜின் பழுதடைந்தது. உதவிக்கு ஆளில்லாமல் படகில் பயணம் செய்த 7 மீனவர்களும் கவிழும் நிலையில் இருந்த படகில் தத்தளித்துக் கொண்டிருந்தனர். ஒருகட்டத்தில் படகு கவிழ்ந்து உயிருக்குப் போராடிக் கொண்டிருந்தனர் மீனவர்கள்.

ராதிகா மேனன் இருந்த கப்பலுக்கும் கடலில் கவிழ்ந்த மீனவர்களின் படகுக்கும் இடையே 2.5.கீ.மி தொலைவு இருந்தது. கடுமையான மழை, பலத்தக் காற்று ராட்சத அலைகள் என்று மோசமான சூழ்நிலை சூழ்ந்து கொண்டிருந்தது. ஆனாலும் அந்த கடுமையான சூழலைப் பொருட்படுத்தாமல்  தன் உயிரைப் பணயம் வைத்து படகு இருக்கும் இடத்துக்குச் சென்று, அங்கு தத்தளித்துக்கொண்டிருந்த ஏழு மீனவர்களையும் பத்திரமாக மீட்டு, தன் கப்பலுக்கு அழைத்து வந்தார் ராதிகா மேனன்.

இந்த  மனிதநேயம் மிக்க சாகசத்துக்காக, ஐ.நா.வின் சர்வதேச கடல்சார் அமைப்பு (International Maritime organisation), ராதிகா மேனனுக்கு வீர தீர விருது வழங்கி கௌரவித்துள்ளது.  உயிரைப் பணயம் வைத்து கடல் பகுதிகளில் மீட்பு பணிகளில் ஈடுபவோர்களை சர்வதேச அளவில் தேர்ந்தெடுக்கப்பட்டு, அவர்களுக்கு ஆண்டுதோறும் வீர தீர விருது வழங்கும் இந்த அமைப்பு  இந்த ஆண்டிற்கான வீர தீர விருதை முதல் முறையாக இந்திய கடற்படையைச் சேர்ந்த பெண் கேப்டன் ராதிகா மேனனுக்கு அளித்து சிறப்பு செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.

நவம்பர் 21-ஆம் தேதி (திங்கள்) லண்டனியில் உள்ள ஐஎம்ஓ தலைமை அலுவலகத்தில் நடைப் பெற்ற விழாவில் ராதிகா மேனன் இந்த வீர தீர விருதினைப் பெற்று இந்தியாவிற்குப் பெருமை சேர்த்துள்ளார்!-

vikatan

  • தொடங்கியவர்
போதனை எனும்பெயரில் போதை
 
 

article_1479788710-religion.jpgமக்கள் தங்கள் துயரங்களில் இருந்து விடுபட, எங்காவது நிம்மதி கிடைக்காதா என ஏங்கும் நிலையில், இறைவன் சந்நிதியை நாடுவது நல்லது. 

ஆனால், அதனை விடுத்து மேலான ஆன்மிகவாதிகள் எனச் சொல்வோரின் நிலையங்களுக்குச் சென்று, எரியும் நெருப்பில் விழும் விட்டில் பூச்சிகள்போல் விழுகின்றார்கள். 

துன்பத்தைத் தொலைக்க அஞ்ஞானிகளிடமா சிறைப்படுவது? மனதில் பாரம் என்றால் தலையில் இடியை விரும்பி ஏற்பதுபோல், போதனை எனும்பெயரில் போதையையே ஏற்றுகின்றமை ஒரு துன்பியல் நிகழ்வேதான். 

இதனால், பல பெற்றோர்கள் பிள்ளைகளை இந்த அஞ்ஞானிகள் மூலம் இழந்து நிற்கின்றார்கள். ஆன்ம ஞானம் மேன்மக்களின் வாயிலாக, மேலான கற்றலின் மூலம், அனுபவம் மூலம் பெறப்படுபவை. ஆன்மிகம் கடையில் விற்கும் உடனடி உணவு அல்ல! 

Edited by நவீனன்

  • தொடங்கியவர்

வரலாற்றில் இன்று....

நவம்பர் - 23

 

1499 : இங்கிலாந்தின் அரசாட்சிக்கு உரிமை கோரிய பேர்க்கின் வோர்பெக் லண்டன் கோபுரத்தில் இருந்து தப்பியோட முயல்கையில் கைதாகி தூக்கிலிடப்பட்டார். இவர் 1497 இல் நான்காம் எட்வேர்ட்டின் மகன் என உரிமை கோரி இங்கிலாந்தை முற்றுகையிட்டார்.

 

1890 : நெதர்லாந்து மன்னன் மூன்றாம் வில்லியம் ஆண் வாரிசு இல்லாமல் இறந்தார். அவரின் மகள் இளவரசி வில்ஹெல்மினா அரசியாவதற்கு ஏதுவாக சிறப்புச் சட்டம் இயற்றப்பட்டது.

 

85414112016vagasard.jpg1940 : இரண்டாம் உலகப் போரில் அச்சு அணி நாடுகளுடன் ருமேனியா இணைந்தது.

 

1955 :  கொக்கோஸ் தீவுகள், ஐக்கிய இராச்சியத்தின் கட்டுப்பாட்டிலிருந்து அவுஸ்திரேலியாவுக்கு மாற்றப்பட்டது.

 

1971 : மக்கள் சீனக் குடியரசின் பிரதிநிதிகள் முதற் தடவையாக ஐக்கிய நாடுகள் அவையில் சீனாவுக்காகப் பிரதிநிதித்துவப்படுத்தினர்.

 

1978 : இலங்கையின் கிழக்கு மாகாணத்தை தாக்கிய  சூறாவளியினால் ஆயிரத்துக்கும் அதிகமானோர் உயிரிழந்தனர். சுமார் 250,000 வீடுகள் சேதமடைந்தன.

 

1979 : இந்தியாவின் கடைசி ஆளுநர் மவுண்ட்பேட்டன் பிரபுவைக் கொலை செய்த குற்றத்துக்காக ஐரிஷ் குடியரசு இராணுவத்தைச் சேர்ந்த தோமஸ் மக்மோகன் என்பவருக்கு டப்ளினில் ஆயுள் தண்டனை வழங்கப்பட்டது.

 

1980 : தெற்கு இத்தாலியில் இடம்பெற்ற பூகம்பத்தினால் 4,800 பேர் கொல்லப்பட்டனர்.

 


1985 : எகிப்திய பயணிகள் விமானம் கிரேக்கத்தில் இருந்து புறப்படும்போது கடத்தப்பட்டு மோல்ட் டாவில் தரையிறக்கப்பட்ட பின் எகிப்தியப் படைகள் நடத்திய முற்றுகையில் 60 பேர் கொல்லப்பட்டனர்.

 

1996 : எத்தியோப்பிய விமானம் கடத்தப்பட்டு  இந்து சமுத்திரத்தில் கொமொரோஸ் தீவுக்கு அருகில் வீழ்ந்ததில் 123 பேர் கொல்லப்பட்டனர்.

 

2003 : பல வாரங் களாக நடைபெற்ற ஆர்ப்பாட்டங்களை அடுத்து, ஜோர்ஜிய ஜனாதிபதி எட்வேர்ட் ஷெவர்நாட்ஸே பதவி விலகினார்.

 

2005 : லைபீரியாவின் தலைவராக எலன் ஜான்சன் சர்லீஃப் தெரிவு செய்யப்பட்டார். ஆபிரிக்க நாடொன்றிண் முதலாவது பெண் தலைவர் இவராவார்.

 

2007 : ஆர்ஜென்டீ னாவுக்குத் தெற்கே பயணிகள் கப்பல் ஒன்று மூழ்கியதில் 154 பேர் கொல்லப்பட்டனர்.

 

.metronews.lk

Edited by நவீனன்

  • தொடங்கியவர்

நீங்கள் நலமாக இருப்பதற்கான 10 அறிகுறிகள் இவைதான்! #BePositive

அறிகுறிகள்

`ங்களைச் சுற்றி இன்னமும் அழகோடு இருக்கும் நல்ல விஷயங்களை நினைத்துப் பாருங்கள்… மகிழ்ச்சியாக இருங்கள்’ என்று சொல்லியிருக்கிறார் ஆனி ஃப்ராங்க். 
ஆனி ஃப்ராங்க், இரண்டாம் உலகப் போர் காலகட்டத்தில் ஜெர்மனில் வாழ்ந்த யூதச் சிறுமி. இவரும் ஹிட்லரின் வதைமுகாமில் இறந்துபோனவர்களில் ஒருவர்தான். நாஜிப் படைகளுக்கு பயந்து, இரண்டாண்டுகள் ஓர் இடத்தில் ஒளிந்திருந்தபோது ஆனி எழுதிய `தி டயரி ஆஃப் எ யங் கேர்ள்’ நாட்குறிப்பு உலகப் பிரசித்தி பெற்றது. ஹிட்லரின் படையால் யூதர்கள் அனுபவித்த கொடுமைகளை வலி மிகுந்த வார்த்தைகளோடு விவரிக்கிறது அவருடைய நாட்குறிப்பு. உயிரைக் கையில் பிடித்துக்கொண்டு `எந்த நேரமும் நம்மை அள்ளிக்கொண்டுபோய், வதை முகாமில் போட்டுவிடுவார்கள்’ என்கிற சூழ்நிலையில் ஆனி ஃப்ராங்க் எழுதுகிறார்… `…மகிழ்ச்சியாக இருங்கள்!’ நாம் மகிழ்ச்சியாக இருக்கிறோம் என்பதற்கு சில அறிகுறிகள் உள்ளன. அதற்கு முன்னால் சில விஷயங்களைப் பார்ப்போம்.

`என்னப்பா… சாதாரண இன்கம் அண்ட் எக்ஸ்பெண்டிச்சர் கணக்கு… அக்கவுன்டன்ஸியில பால பாடம்… அதை டேலி பண்ண முடியலை உனக்கு…’ கடிந்துகொள்கிறார் மேனேஜர். ஒரு கணக்கு உதவியாளராக இருக்கும் நாம் சுருங்கிப்போகிறோம்.  

`தெனோமும்தானே வாங்கிட்டு வர்றே… சர்க்கரை போடாம காபி வாங்கிட்டு வரத் தெரியாது?’ எரிந்துவிழுகிறார் அதிகாரி. ஒரு ப்யூனாக நாம் கூனிக் குறுகி நிற்கிறோம். 
அலுவலகம் போகும் அவசரம்… ஏற்கெனவே தாமதம்… வழியில் நின்று போகிறது இருசக்கர வாகனம். எவ்வளவு உதைத்தும் கிளம்பாமல் அடம்பிடித்து நிற்கிறது. சிக்னலில் சின்னாபின்னப்பட்டு, வண்டியை உருட்டிக்கொண்டு போனால், இருக்கிற ஒரே ஒரு மெக்கானிக் ஷாப்பும் ஷட்டவுண்! ஒரு சராசரி சென்னைவாசியான நாம் பதைபதைத்து, என்ன செய்வதென்று அறியாமல் ரோட்டில் நிற்கிறோம்… 

இவையெல்லாம் சிறிய பிரச்னைகள்… தீர்த்துவிடக்கூடியவை. உண்மையில், எவ்வளவு பெரிய சிக்கலாக, கஷ்டமாக இருந்தாலும்கூட அவையும் தீர்க்கக்கூடியவையே. என்ன… அவற்றுக்கான வழிமுறைகள் மட்டும் மாறுபடலாம். `எனக்கு மட்டும் ஏன் இப்பிடி நடக்குது?’, `நான் என்ன பாவம் செஞ்சேன்… என்னை இந்தப் பாடுபடுத்துறியே சாமி…’, `இதெல்லாம் ஒரு பொழைப்பா… ச்சீ… நாய் பொழைப்பு…’, `என்னால முடியலை…’ இப்படியெல்லாம் சாதாரண மனிதர்களாக புலம்பிப் புலம்பி மருகிப்போகிறோம். `உனக்கும் கீழே உள்ளவர் கோடி…’ என்ற கண்ணதாசனின் வரிகளை ரசிக்க முடிகிற நம்மால், அதைக் கடைப்பிடிக்க முடிவதில்லை. தேவையற்ற, எளிதில் தூக்கியெறியக்கூடிய விஷயங்களை எல்லாம் மூளையில் ஏற்றிக்கொண்டு, அன்றாடம் நொந்து திரிவதே நம் வாழ்க்கைமுறையாகிவிட்டது. கொஞ்சம் யோசித்துப் பாருங்கள்… பின்வரும் 10 அறிகுறிகள் உங்கள் அன்றாட வாழ்க்கையில் தெரிகின்றனவா என ஒப்பிட்டுப் பாருங்கள்… பிறகு ஒரு முடிவுக்கு வாருங்கள். 

இனி 10 அறிகுறிகள்…  

1.தலைக்கு மேல இருக்கு கூரை… போதாதா பாஸ்? 
இருக்க வீடில்லாமல், ஒண்ட ஒரு குடிசைகூட இல்லாமல் நடைபாதையில், ஊருக்கு வெளியே மரத்தடியில், கோயில் சுற்றுப் பகுதிகளில், ரயில்வே ஸ்டேஷனில், பெரிய பேருந்து நிறுத்தங்களில் இரவு வாழ்க்கையை நடத்துகிறவர்கள் இந்தியாவில் லட்சக்கணக்கானோர். `இந்தியக் குடிமகன்’ என்கிற அங்கீகாரம் இல்லாமல், ரேஷன் கார்டு, ஆதார் அட்டை அடையாளங்கள் இல்லாமல் இருப்பவர்கள் அவர்கள். வெளுத்து வாங்குகிற வெய்யிலோ, அடித்துப் பெய்கிற மழையோ நீங்கள் கவலைப்படத் தேவையில்லை. குடியிருக்க வாடகைக்கோ, சொந்தமாகவோ ஒரு வீடு என்று இருக்கிறதுதானே… நீங்கள் பாக்கியவான் சார்… இயற்கை, உங்களை ஆதரித்துக்கொண்டிருக்கிறது. 

shutterstock_323807201_16117.jpg

2. வயிறு நிறைய சாப்பிட்டாச்சு
சோமாலியா… இன்னும் பல ஆப்பிரிக்க நாடுகளில் குழந்தைகளுக்குக்கூட சாப்பிட ஒன்றும் கிடைப்பதில்லை. வெறும் மண்ணைத் தின்று வயிறு வீங்கித் திரியும் குழந்தைகளை நெட்டில் பார்த்திருக்கிறீர்களா? அந்தத் துயரம் நமக்கு வேண்டாம்… இன்று காலை டிபன், மதியம் லஞ்ச், இரவு டின்னர் எல்லாம் உங்களுக்கு உத்தரவாதம்தானே… நீங்கள் இயற்கையால் ஆசீர்வதிக்கப்பட்டிருக்கிறீர்கள். 

3. இதயம் ஆரோக்கியமாக துடிச்சுக்கிட்டு இருக்கு… அப்புறம் என்ன? 
`ராத்திரி படுத்தாரு… காலையில எந்திரிக்கலை… தூக்கத்துலயே உயிர் போயிடுச்சு…’ என்பது பாமரர் புலம்பல். உறக்கத்தில் இதயத் துடிப்பு நின்றுபோனதால் அவர் இறந்திருப்பார் என்பதே உண்மை.  காலை எழுந்தது முதல் இரவு படுத்து உறங்கும் வரை உங்கள் இதயம் உங்களுக்காக ஒத்துழைத்து, விடாமல், சரியாகத் துடித்துக்கொண்டிருக்கிறதுதானே… பிறகென்ன… உங்களை இயற்கை, அரவணைத்துக் காக்கிறது என்று அர்த்தம். 

4. மத்தவங்களுக்கு நல்லது நினைச்சோம்! 
பேருந்தில் பயணம். சிக்னல். இடதுபக்கம், தன்னை அந்தப் பக்கம் அழைத்துப் போய் யாராவது சேர்க்க மாட்டார்களா… என்ற பரிதவிப்போடு நிற்கிறார் ஒரு பார்வையற்ற மாற்றுத் திறனாளி. `அய்யய்யோ… நாம மட்டும் இந்த பிளாட்ஃபார்ம் ஓரமா இருந்திருந்தா, அவரைக் கொண்டுபோய் அந்தப் பக்கம் விட்டிருக்கலாமே..!’ என நினைக்கிறீகளா? இது போதும்… இந்த நல்ல சிந்தனை உங்களுக்கு இருப்பது பெரிய விஷயம். இயற்கை, உங்களைக் கைவிடாது! 

shutterstock_51947899_16502.jpg

5. குடிக்க சுத்தமான தண்ணி கிடைச்சுது! 
தண்ணீர்… இதற்காக ராஜஸ்தான் எல்லாம் போக வேண்டாம். நம் மாநிலத்தில் இருக்கும் பல ஊர்களில் தண்ணீர் பஞ்சம். நல்ல தண்ணீருக்கு, தாக வேட்கையில் உலகின் பல நாடுகளில் அலையோ அலை என்று அலைகிறார்கள் பாஸ்… இது உண்மை. வீட்டில் காசுகொடுத்து ஃபிக்ஸ் செய்த ஆர்.ஓ வாட்டரோ, 30 ரூபாய் கொடுத்து வாங்கும் மினரல் வாட்டரோ, அலுவலகத்தில் அளவில்லாமல் குடிக்க தண்ணீரோ… ஏன்… குறைந்தபட்சம் கார்ப்பரேஷன் தண்ணீரையாவது நீங்கள் குடிக்கிறீர்கள்தானே! இயற்கை, உங்களை கண்ணும் கருத்துமாகப் பார்த்துக்கொண்டிருக்கிறது. 

6. யாரோ ஒருத்தருக்கு உங்க மேல ரொம்ப அக்கறை..! 
`நல்லா இருக்கீங்களா...?’, `சாப்டீங்களா..?’, `பார்த்துப் போங்க..!’, `வண்டியில போகும்போது ஜாக்கிரதைப்பா!’, `உடம்பு சரியில்லைன்னா லீவு போட்டுட்டு டாக்டர்கிட்ட போக வேண்டியதுதானே’, `என்ன வேலையா இருந்தாலும் நேரத்துக்கு சாப்பிட்டுடணும்’… இது போன்ற வாசகங்களில் ஏதாவது ஒன்றையாவது இன்று நீங்கள் கேட்டீர்களா? இதற்குப் பெரிய கூட்டுக் குடும்பத்தில் பிறந்திருக்க வேண்டும் என்கிற அவசியம் இல்லை. உற்றமும் சுற்றமும் சூழ வாழ்ந்துகொண்டிருக்க வேண்டும் என்கிற அவசியமும் இல்லை (அப்படி இருந்தால் மிக்க மகிழ்ச்சி) பிறகென்ன… இயற்கை உங்கள் மீது பெருங்கருணையோடு இருக்கிறது! 

7. மன்னிச்சுட்டீங்க… மன்னிச்சுட்டீங்க..! 
சகிப்புத் தன்மை இருக்கிறதா உங்களுக்கு? அப்படியானால், நீங்கள் வரம் வாங்கி வந்தவர்கள் என்று அர்த்தம். கனமான செருப்பணிந்த ஒருவர், பேருந்து நெரிசலில் உங்கள் காலை மிதித்துவிட்டு, ‘சாரி’ என்ற ஒற்றை வார்த்தையோடு நகர்ந்திருக்கலாம்... நீங்கள் எதிர் வார்த்தை பேசாமல் நின்றிருப்பீர்கள். ஆடி, சித்திரை மாதங்களில் வீட்டுக்கு நேர் எதிரே கட்டப்பட்டிருக்கும் ஒலிபெருக்கியில் இருந்து சத்தமாக அம்மன் பாடல் கேட்பதாக இருக்கலாம்… `ஒரு வாரம்தானே…’ என்கிற ரீதியில் உங்கள் அன்றாடப் பணிகளை இரைச்சலுக்கு மத்தியில் நகர்த்தியிருக்கலாம்… இவ்வளவு ஏன்… பக்கத்தில் உட்கார்ந்திருக்கும் சக ஊழியர் கேட்கும் அர்த்தமற்ற, அபத்தமான கேள்விகளுக்கு எல்லாம் நீங்கள் நிதானமாக, சரியாக பதில் சொல்பவராக இருக்கலாம்… இதுபோல எது வேண்டுமானாலும் இருக்கட்டும்… நீங்கள் பொறுமை காக்கிறீர்களா? உங்களுக்கு மன்னிக்கும் மனப்பான்மை அதிகம் என எடுத்துக்கொள்ளலாம். இயற்கை, உங்களுக்கு என்றென்றும் துணை நிற்கும். 

shutterstock_276951845_16307.jpg

8. உடுத்த உடை இருக்கு! 
`கபாலி’ போல கோட், சூட்கூட வேண்டாம்... அலுவலகத்துக்கோ, வேறு பணிகளுக்கோ, வெளியில் செல்லவோ அணிந்து செல்ல உங்களிடம் கண்ணியமான தோற்றம் தரும் உடைகள் இருக்கின்றனவா? அதுகூட வேண்டாம் பாஸ்… மானத்தை மறைக்கிற உடை உங்களிடம் உண்டுதானே… நீங்கள் அதிர்ஷ்டசாலி! இயற்கை, உங்களை மனதார நேசிக்கிறது என்று பொருள். 

9. நம்பிக்கை இருக்குல்ல..? 
இந்த மாத, வார, அன்றாட சேல்ஸ் டார்கெட்டோ, ப்ராஜக்ட்… எதுவாகவும் இருக்கட்டும். `இது என்ன பெரிய மலையா? நான் கில்லி… முடிச்சிடுவேன்ல?’ என்கிற நம்பிக்கை உங்களுக்கு இருக்கிறதா? அன்றாடப் பாடை விடுங்கள்… எப்படியாவது சமாளித்து வாழ்க்கையை ஓட்ட முடியுமென்கிற நம்பிக்கை உங்களுக்கு இருக்கிறதா? அது கூட வேண்டாம்… அடுத்த வேளை உணவு, இருக்க இருப்பிடம், உடுத்த உடை… இவையெல்லாம் உத்தரவாதமாகக் கிடைக்கும் என்கிற நம்பிக்கை உங்களுக்கு இருக்கிறதா? அப்படிப் போடுங்க! இந்த நம்பிக்கை போதும்… இயற்கை, உங்கள் வாழ்க்கையைப் பார்த்துக்கொள்ளும். 

10. மூச்சுவிட முடியுது
`ஏ யப்பா… என்னா பொல்யூஷன்!’ அங்கலாய்ப்பதை விடுவோம். நடமாடும்போதோ, அமர்ந்திருக்கும்போதோ, உறங்கும்போதோ காற்று சீராக உள்ளே வந்தும் போயும்… நீங்கள் நன்றாக சுவாசித்துக்கொண்டிருக்கிறீர்கள்தானே… மூச்சு என்பது வெறும் காற்று சம்பந்தப்பட்ட விஷயம் இல்லை சார். அது உயிர் சம்பந்தப்பட்ட விஷயம். எதையும் எதிர்கொள்ள நீங்கள் திராணியோடு இருக்கிறீர்கள்… உங்களால் எதையும் சமாளிக்க முடியும் என்கிற தைரியத்தைக் கொடுக்க உயிர் உங்கள் உடலில் ஒட்டிக்கொண்டிருக்கிறது என்று அர்த்தம். இயற்கை, இன்னும் பன்னெடுங்காலம் உங்களை பத்திரமாக வைத்திருக்கும். 

 

 

 

இந்த 10 அறிகுறிகள் சின்ன விஷயங்கள்தான். ஆனால், மிகவும் முக்கியமானவை. அதற்காகவே இயற்கைக்குச் சொல்லலாம் மனசார `நன்றி’… எங்கே சொல்லுங்க!

vikatan

  • தொடங்கியவர்

உலகின் டாப் 5 திகில் கிளப்பும் தீவுகள் !

ஒரு நொடி கண்ணை மூடுங்கள். ஒரு தீவு... அங்கு யாருமே இல்லை... நீங்கள் மட்டும் தனியாக இருக்கிறீர்கள். கொஞ்ச தூரம் நடக்கிறீர்கள். சில பாழடைந்த வீடுகள்... மனிதர்கள் வாழ்ந்ததற்கான அடையாளங்கள் இருக்கின்றன. ஓர் அமானுஷ்யம்... இப்படி ஓர் அனுபவம் ஏற்பட்டால் எப்படி இருக்கும்?. கதையல்ல... நிஜம். அப்படி உலகின் திகில் கிளப்பும் தீவுகள் குறித்த வரலாறு இது... 

கிளிப்பர்டன் தீவு (Clipperton Island) : 

1914-ம் ஆண்டு... மெக்சிகோவின் தென் - மேற்குப் பகுதியில் இருக்கும் இந்தத் தீவை  பிரெஞ்சுக்காரர்களிடமிருந்து பாதுகாக்க 100 பேரை குடியமர்த்துகிறார், அன்றைய மெக்சிகோ அதிபர். ஒரு கலங்கரை விளக்கத்தையும் அமைக்கிறார். இவர்களுக்கான உணவுகள் இரண்டு மாதத்துக்கு ஒரு முறை கப்பலில் அனுப்பப்பட்டு வந்தது. 

திடீரென மெக்சிகோவில் உள்நாட்டு கலவரம் வெடிக்க, இந்தத் தீவையும், இந்த 100 பேரையும் மறந்து போயினர். உண்ண உணவில்லாமல் போராடி, ஒவ்வொருத்தராக செத்து மடிய ஆரம்பித்தனர்.  கடைசியாக லைட் ஹவுஸ் வாட்ச்மேன், அல்வாரிஸும் , 15 பெண்கள் மற்றும் குழந்தைகள் மட்டுமே உயிர் பிழைத்திருந்தனர். பித்துப் பிடித்து போன அல்வாரிஸ், அந்தப் பெண்களை பாலியல் வன்புணர்வு செய்து கொல்ல ஆரம்பிக்கிறான். ஒரு கட்டத்தில், தன் குழந்தைகளைக் காக்க டார்ஸா ரென்டன் என்கிற பெண்மணி அவனை கொலை செய்கிறார். இரண்டாண்டுகள் உயிர் பிழைத்திருந்த 4 பெண்கள் மற்றும் 7 குழந்தைகளை 1917-ல், அந்த வழி வந்த அமெரிக்காவின் ஒரு கப்பல் காப்பாற்றியது. அன்று முதல், இன்று வரை மனித கால் தடம் பதியாமல், மர்ம பூமியாகத் திகழ்கிறது கிளிப்பர்டன் தீவு...

திகில் தீவுகள்

கன்கஞ்சிமா தீவு (Gunkanjima Island) :

ஜப்பானின் நாகசாகி அருகே இருக்கும் ஒரு தீவு. இந்தப் பகுதியில் 1800 களில்  நிலக்கரிச் சுரங்கம் ஆரம்பிக்கப்பட்டது. பிரபல மிட்சுபிஷி நிறுவனத்தின் இந்த சுரங்கத்தில் வேலை செய்ய மக்கள் தீவுக்குள் அனுமதிக்கப்பட்டனர். 16 ஏக்கர் பரப்பரவிளான தீவு முழுக்க, காம்பவுண்ட் சுவர் எழுப்பப்பட்டு அவர்களுக்குத் தேவையான மருத்துவமனைகள், வீடுகள், பள்ளிக் கூடங்கள் என அனைத்தும் கட்டப்பட்டது. இரண்டாம் உலகப் போர் முடியும் வரை பணியாளர்கள் அனவரும் கொத்தடிமை முறையிலேயே பணிபுரிந்து வந்தனர். 1960களின் முடிவில் சுரங்கம் மூடப்பட்டது. மக்கள் அனைவரும் சுதந்திர காற்றை சுவாசித்தவாறு வெளியேறினர். ஒரு வரலாற்றுத் துயரத்தின் சாட்சியாக நீலக் கடலின் நடுவே கான்கிரீட் தீவாக நின்று கொண்டிருக்கிறது கன்கஞ்சிமா.

திகில் தீவுகள்


ராஸ் தீவு (Ross Island) :

அண்டார்டிக் பிரதேசத்தில் இருக்கும் ஒரு தீவு. 1841-ல் ஜேம்ஸ் ராஸ் என்ற பிரிட்டிஷ் ஊர்சுற்றி இந்த தீவைக் கண்டுபிடித்தார். அவரின் பெயரே இதற்கு சூட்டப்பட்டது. எரிபஸ், டெரர் என இரு எரிமலைகள் இங்கு உள்ளது. ராஸ் அமைத்த கூடாரங்கள் இன்னும் இந்த பகுதியில் இருப்பதாக சொல்லப்படுகிறது. அண்டார்டிக் பகுதியில் ஆராய்ச்சியை மேற்கொள்ள அடித்தளமிட்டது இந்த தீவு தான். 1979-ல் ஒரு மிகப்பெரிய விமான விபத்து ஏற்பட்டு 200க்கும் மேற்பட்டவர்கள் இங்கு இறந்ததாக சொல்லப்படுகிறது. இந்தத் தீவின் ஒரு சில பகுதிகளுக்கு இன்று வரை யாருமே சென்றதில்லை.

திகில் தீவுகள்

அல்டாப்ரா தீவு (Aldabra Island) :

செஷல்ஸ் நாட்டின் தீவு. லட்சக்கணக்கான ஆமைகள் வசிக்கும் தீவு. 1888-ல் செஷல்ஸ் அரசாங்கம் இந்தத் தீவில் ஒரு கிராமத்தை உருவாக்கி மக்களை வாழச் செய்தனர். ஆனால், குடிநீர் ஆதாராமற்ற இந்தத் தீவில் மக்களால் தொடர்ந்து வசிக்க முடியவில்லை. இந்த வழி கப்பல்களில் போவோர் ஆமைகளை வேட்டையாடுவதை வழக்கமாக வைத்திருந்தனர். ஒரு கட்டத்தில் ஆமைகளே அழியும் நிலை ஏற்பட்டது. ஆனால், 1950களுக்குப் பிறகு இந்த வழியில் போகும் கப்பல்கள் தீவை எட்ட பயப்படத் தொடங்கினர். காரணம் இன்றுவரைத் தெரியவில்லை. பல ஆண்டுகள் யாரும் அதன் அருகே போகவில்லை. இன்று ஆமைகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. 

திகில் தீவுகள்

ஸ்ட்ரோமா தீவு (Stroma Island) :

திகில் தீவுகள்


ஸ்காட்லாண்டில் இருக்கும் சிறு தீவு. 1901யில் 375 பேர் வாழ்ந்த தீவில், 1961யில் 12 பேர் மட்டுமே வாழ்ந்து வந்தனர். இன்று யாருமில்லை. ஒரேயொருவர் மட்டும் தன்னுடைய கால்நடைகளை மேய்ச்சலுக்காக விட்டபடி, அவ்வப்போது வந்து போகிறார். ஒரு காலத்தில் இந்த தீவு மக்களின் வாழ்க்கை அவ்வளவு அழகாக இருந்திருக்கிறது. தன்னிறைவு பெற்ற தற்சார்பு சமூகமாக வாழ்ந்து வந்துள்ளனர். திடீரென மக்கள் தீவை விட்டு விலகியதற்கான உறுதியான காரணம் இன்று வரை தெரியவில்லை. வெளியேறிய மக்களும் காரணங்களைப் பேச மறுக்கிறார்கள். மக்கள் வெளியேறியத் தொடங்கியது முதல் இந்தப் பகுதியில் பல கப்பல்கள் விபத்துக்குள்ளாகின. இன்றும் அலைகள் மிகச் சாதாரணமாக 12 அடி உயரம் வரை எழுகிறது. ஒரு அமானுஷ்யமான அமைதியோடு தனியே நின்று கொண்டிருக்கிறது ஸ்ட்ரோமா தீவு. 

vikatan

  • தொடங்கியவர்

 

“குழந்தைகளை கொஞ்சுங்கள்; அவர்கள் மூளை நன்கு வளரும்”

குழந்தைகளின் மூளை வளர்ச்சிக்கு பெற்றோர் எப்படி உதவ முடியும்?

குழந்தைகளிடம் அழகாக சிரித்து, செல்லமாக பேசுவது அவர்களது மூளை வளர்ச்சிக்கு உதவுவதாக தெரிவிக்கிறார்கள் விஞ்ஞானிகள்.

குழந்தைகளின் ஆரம்பகால மூளை வளர்ச்சியில் நாம் அவர்களுடன் பேசும் விதம் முக்கிய பங்காற்றுவதாக பிரிட்டனைச் சேர்ந்த மூத்த நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.

அந்த ஆய்வின் முடிவுகள் குறித்த செய்தித்தொகுப்பு.

BBC

Edited by நவீனன்

  • தொடங்கியவர்

15128847_1192801800768512_41526350181665

பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் இளம் துடுப்பாட்ட வீரர் அஹ்மத் ஷெசாட்டின் பிறந்தநாள்
Happy birthday Ahmed Shehzad

  • தொடங்கியவர்

பணமொழிகள்

 
note_3090037f.jpg
 
 

கடன் உதவுற மாதிரி 500, 1000 உதவுமா?

*

மோடி காத்துல கரன்சியும் பறக்கும்!

*

அக்கவுண்டுல போட்டாலும் அளந்து போடு.

*

அச்சம் என்பது மடமையடா.. ஏடிஎம்மில் நிற்பது கடமையடா.

*

நோட்டுள்ள போதே மாற்றிக் கொள்.

*

பணம் எடுத்தவன் எல்லாம் பதுக்கல்காரனா?

*

டெபாசிட் தொகை பான் கார்டிலே தெரியும்!

*

கையில கிரெடிட் கார்டு இருக்கும்போது பணத்துக்கு அலைவானேன்?

*

ஏடிஎம் இல்லா தெருவிலே குடி இருக்க வேண்டாம்!

tamil.thehindu

  • தொடங்கியவர்

குழந்தைகளுக்காக திரையில் ஒலித்த முத்தான 10 பாடல்கள்!

 

                                                           குழந்தை

சினிமா, வெறும் பொழுதுபோக்குக்காக மட்டுமில்லாமல், பல்வேறு சமூகக் கருத்துக்களையும் பிரதிபலிக்கின்றன. குறிப்பாக பெரியவர்களை மையப்படுத்தியே அதிகமாக வெளிவரும் திரைப்படங்களுக்கு மத்தியில் சிறுவர்களுக்கும், அவர்களின் எதிர்கால வளர்ச்சிக்கும் பயன்தரும் பல திரைப்படங்களும், சினிமா பாடல்களும் வெளிவந்துள்ளன. அவற்றில் எல்லாத் தலைமுறை குழந்தைகளும் அவசியம் கேட்க வேண்டிய தமிழ் சினிமா பாடல்கள் பல இருந்தாலும், அவற்றில் சிறந்த 10 பாடல்களின் தொகுப்பு:

1. நல்ல பேரை வாங்க வேண்டும் பிள்ளைகளே!

படம்: நம் நாடு 
பாடலாசிரியர் : வாலி

இப்பாடலில் வரும், சிறந்த கருத்துக்களில் சில... 

நல்ல பேரை வாங்க வேண்டும் பிள்ளைகளே 
நம் நாடு எனும் தோட்டத்திலே 
நாளை மலரும் முல்லைகளே....

பாலூட்டும் அன்னை அவள் நடமாடும் தெய்வம் 
அறிவூட்டும் தந்தை நல் வழிகாட்டும் தலைவன் 

துணையாக கொண்டு நீ நடை போடு இன்று 
உருவாகும் நல்ல எதிர்காலம் ஒன்று.....

கீழே இருக்கும் வீடியோவில், இப்பாடலை முழுமையாகக் காணலாம்:

 

 

2. நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி!
படம் : பெற்றால்தான் பிள்ளையா
பாடலாசிரியர்: வாலி

இப்பாடலில் வரும், சிறந்த கருத்துக்களில் சில..

கருணை இருந்தால் வள்ளல் ஆகலாம்
கடமை இருந்தால் வீரன் ஆகலாம்
பொறுமை இருந்தால் மனிதன் ஆகலாம்
மூன்றும் இருந்தால் தலைவன் ஆகலாம்

அன்னையிடம் நீ அன்பை வாங்கலாம்
தந்தையிடம் நீ அறிவை வாங்கலாம்
இரண்டும் இருந்தால் பேரை வாங்கலாம்
பேரை வாங்கினால் ஊரை வாங்கலாம்

கீழே இருக்கும் வீடியோவில், இப்பாடலை முழுமையாகக் காணலாம்:

 

 

3. திருடாதே... பாப்பா திருடாதே...!

படம் : திருடாதே
பாடலாசிரியர் : பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம்

இப்பாடலில் வரும், சிறந்த கருத்துக்களில் சில... 

திருடாதே... பாப்பா திருடாதே...
வறுமை நிலைக்கு பயந்துவிடாதே
திறமை இருக்கு மறந்துவிடாதே

இருக்கிறதெல்லாம் பொதுவாய் போனா...
இருக்கிறதெல்லாம் பொதுவாய் போனா...
பதுக்குற வேலையும் இருக்காது
ஒதுக்குற வேலையும் இருக்காது...

கீழே இருக்கும் வீடியோவில், இப்பாடலை முழுமையாகக் காணலாம்:

 

4. சின்னப் பயலே சின்னப் பயலே சேதி கேளடா!

படம் : அரசிளங்குமரி
பாடலாசிரியர் : பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம்

இப்பாடலில் வரும், சிறந்த கருத்துக்களில் சில... 

ஆளும் வளரணும் அறிவும் வளரணும் அதுதாண்டா வளர்ச்சி - உன்னை
ஆசையோடு ஈன்றவளுக்கு அதுவே நீ தரும் மகிழ்ச்சி

வேப்பமர உச்சியில் நின்னு பேயொண்ணு ஆடுதுன்னு
வேப்பமர உச்சியில் நின்னு பேயொண்ணு ஆடுதுன்னு
விளையாடப் போகும் போது சொல்லி வைப்பாங்க - உன்தன் 
வீரத்தைக் கொழுந்திலேயே கிள்ளி வைப்பாங்க
வேலையற்ற வீணர்களின் மூளையற்ற வார்த்தைகளை
வேலையற்ற வீணர்களின் மூளையற்ற வார்த்தைகளை
வேடிக்கையாகக் கூட நம்பி விடாதே - நீ
வீட்டுக்குள்ளே பயந்து கிடந்து வெம்பிவிடாதே

கீழே இருக்கும் வீடியோவில், இப்பாடலை முழுமையாகக் காணலாம்:

 

 

5. ஆனா ஆவன்னா இனா ஈயன்னா!
படம் : அன்பு எங்கே
பாடல் ஆசிரியர் - கண்ணதாசன்

இப்பாடலில் வரும், சிறந்த கருத்துக்களில் சில... 

ஆனா ஆவன்னா இனா ஈயன்னா
உனா ஊவன்னா ஏனா ஏயன்னா

ஆனா ஆவன்னா அறிவை வளர்த்தவன் பேரென்ன?
சொல்லு வள்ளுவன்
இனா ஈயன்னா எதையும் வெல்லும் பொருளென்ன?
சொல்லு, அன்பு
உனா ஊவன்னா உலக உத்தமன் பேரென்ன?
சொல்லு, காந்தித் தாத்தா
எனா ஏயன்னா
எழுத்தறிவித்தவன் இறைவன் ஆகும்----------

கீழே இருக்கும் வீடியோவில், இப்பாடலை முழுமையாகக் காணலாம்:  

 

 

6. சிரித்து வாழ வேண்டும் பிறர் சிரிக்க வாழ்ந்திடாதே!
படம் : உலகம் சுற்றும் வாலிபன்
பாடல் ஆசிரியர் : புலமைபித்தன்

இப்பாடலில் வரும், சிறந்த கருத்துக்களில் சில... 

சிரித்து வாழ வேண்டும்
பிறர் சிரிக்க வாழ்ந்திடாதே

உழைத்து வாழ வேண்டும்
பிறர் உழைப்பில் வாழ்ந்திடாதே

அன்பில் வாழும் இதயம் தன்னை
தெய்வம் கண்டால் வணங்கும்
ஆசை இல்லா மனிதர் தம்மை
துன்பம் எங்கே நெருங்கும்

கீழே இருக்கும் வீடியோவில், இப்பாடலை முழுமையாகக் காணலாம்:

 

 

7. பேசும் மணிமுத்து ரோஜாக்கள்!
படம் : நீலமலர்கள்
பாடலாசிரியர் : கண்ணதாசன்

இப்பாடலில் வரும், சிறந்த கருத்துக்களில் சில... 

தேசத்தைக் காத்திடும் வீரர்கள்
தினமும் பொழியும் மேகங்கள்

பள்ளிப்படிப்பினில் மேதைகள்
பக்குவம் வந்ததும் ஞானிகள்
நல்ல வழிகளை தேடுங்கள்
புதிய உலகம் காணுங்கள்

நாளைக்கு தேசம் உன்னிடம்
நம்பிக்கை கொள்வது அவசியம்
நெஞ்சம் வளர்ந்தால் லாபங்கள்
வஞ்சம் வளர்ந்தால் பாவங்கள் 

கீழே இருக்கும் வீடியோவில், இப்பாடலை முழுமையாகக் காணலாம்:

 


8. ராஜா சின்ன ரோஜாவோடு காட்டுப்பக்கம் வந்தாராம்!
படம் : ராஜா சின்ன ரோஜா
பாடலாசிரியர் : வைரமுத்து

இப்பாடலில் வரும், சிறந்த கருத்துக்களில் சில... 

விணை விதைத்தவன் விணை அருப்பான்
திணை விதைத்தவன் திணை அறுப்பான்

நன்மை ஒன்று செய்தீர்கள்
நன்மை விளைந்தது

தீமை ஒன்று செய்தீர்கள்
அட தீமை விளைந்தது
தீமை செய்வதை விட்டுவிட்டு
நன்மை செய்வதை தொடருங்கள்

கீழே இருக்கும் வீடியோவில், இப்பாடலை முழுமையாகக் காணலாம்:  

 

 

9. உன்னால் முடியும் தம்பி தம்பி!
படம் : உன்னால் முடியும் தம்பி
பாடலாசிரியர்: வைரமுத்து

இப்பாடலில் வரும், சிறந்த கருத்துக்களில் சில... 

நாளைய நாட்டின் தலைவனும் நீயே
நம்பிகை கொண்டு வருவாயே
உனக்கென்ன ஒரு சரித்திரமே எழுதும் காலம் உண்டு

கல்லூரி பள்ளி இல்லாத ஊரை கையோடு இன்றே தீ மூட்டுவோம்
கல்லாத பேர்கள் இல்லாத நாடு நம் நாடு என்றே நாம் மாற்றுவோம்
இருக்கிற கோவிலை எல்லாம் படிக்கிற பள்ளிகள் செய்வோம்
அறிவென்னும் கோபுரம் அங்கே நாம் காணுவோம்
வானம் உங்கள் கைகளில் உண்டு ஞானம் உங்கள் நெஞ்சினில் உண்டு
நான் என்று எண்ணாமல் நாம் என்று உறவு கொள்ளனும்

கீழே இருக்கும் வீடியோவில், இப்பாடலை முழுமையாகக் காணலாம்:  

 


10. குழந்தையும் தெய்வமும் குணத்தால் ஒன்று!
படம் : குழந்தையும் தெய்வமும்
பாடலாசிரியர்: வாலி

இப்பாடலில் வரும், சிறந்த கருத்துக்களில் சில... 

குழந்தையும் தெய்வமும் குணத்தால் ஒன்று
குற்றங்களை மறந்து விடும் மனத்தால் ஒன்று

உச்சி வெயில் சூரியனை மேகம் மூடுது - நம்
உள்ளம் என்னும் சூரியனை கோபம் மூடுது

காற்று வந்தால் மறுபடியும் மேகம் ஓடுது - பேசிக்
கலந்து விட்டால் கோபம் மாறி நேசமாகுது 

கீழே இருக்கும் வீடியோவில் இப்பாடல் முழுமையையும் காணலாம்:

 

 

vikatan

  • தொடங்கியவர்

அழகான குட்டி நாடு!

 
country_3090062f.jpg
 
 

மாலத்தீவுகள் என்ற தீவுகள் சேர்ந்த ஒரு நாட்டைப் பற்றி கேள்விப்பட்டிருக்கிறீர்களா? சுமார் 1,190 தீவுகளைக் கொண்ட ஒரு நாடு இது. இவற்றில் 200 தீவுகளில் மட்டுமே மக்கள் வாழ்கிறார்கள். இந்த நாட்டின் மக்கள் தொகையும் ரொம்ப அதிகமில்லை. மொத்தமே சுமார் 4 லட்சம்தான். மக்கள் தொகை பட்டியலின்படி உலகின் குட்டி நாடு. ஆனால், அழகான நாடுகளில் இதுவும் ஒன்று.

இந்தத் தீவு தேசம் எங்கு உள்ளது? இது இந்தியாவின் லட்சத்தீவுகளுக்குத் தெற்கும், இலங்கையிலிருந்து சுமார் 700 கிலோ மீட்டர் தென் மேற்கிலும் உள்ளது. இங்கே உள்ள தீவுகளில் 26 தீவுகள் பவளப்பாறைகளால் உருவானது. இவை மாலை போல் தீவுகளை இணைத்திருக்கின்றன.

island_3090061a.jpg

குட்டி நாடாக இருந்தாலும் இந்த நாட்டுக்குத் தனிப் பாரம்பரியம் உள்ளது. நம் சோழ மன்னர்கள் காலத்தில் இந்தத் தீவு அவர்களின் ஆட்சியின் கீழ் இருந்தது. 1558-ம் ஆண்டில் போர்த்துக்கீசியர் இந்தத் தீவு தேசத்தைக் கைப்பற்றினார்கள். அந்தக் காலத்தில் பல ஐரோப்பிய நாடுகள் நாடு பிடிக்கும் போட்டியில் தீவிரமாக இருந்தன. இதன் காரணமாக 1654-ம் ஆண்டு முதல் டச்சுக்காரர்கள் வசமும், 1887 முதல் ஆங்கிலேயர்களிடமும் இந்த நாடு அடிமைப்பட்டது.

இறுதியாக 1965-ம் ஆண்டில் ஆங்கிலேயர்களிடமிருந்து இந்தக் குட்டி நாடு விடுதலை பெற்றது. மாலத் தீவுகள் நாடு சுற்றுலாவை நம்பித்தான் இருக்கிறது. உலக வெப்பமயமாதல் காரணமாகக் கடல் மட்டம் உயர்ந்தால், கடலில் மூழ்கும் முதல் நாடு இதுவாகத்தான் இருக்கும். இதை உணர்த்துவதற்காக 2009-ம் ஆண்டில் அந்த நாட்டின் அமைச்சரவைக் கூட்டம் கடலுக்கடியில் நடைபெற்றது.

tamil.thehindu

  • தொடங்கியவர்

ஆட்டிசத்தால் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு இசையே மருந்து!

 

musical%20instrument_12126.jpg

ஆட்டிசத்தால் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு தொடர்ந்து இசைப் பயிற்சி கொடுத்தால் அந்தக் குறைபாடு சரியாகும் என்கின்றனர் மருத்துவர்கள். இதன் மூலம் ஆட்டிசத்தால் பாதிக்கப்பட்ட குழந்தைகளின் மூளைக்கு செல்லும் நரம்புகளில் மாற்றம் ஏற்பட்டு, ஆட்டிசத்தை சரி செய்ய வாய்ப்புகள் அதிகம் இருப்பதாக தெரிவிக்கின்றனர். 5 முதல் 6 வயதில் இருக்கும் 23 ஆரோக்கியமாக உள்ள குழந்தைகளை இந்த ஆய்வுக்காக முதலில் எடுத்துக் கொள்ளப்பட்டது. இவர்களுக்கு எந்தவித கட்டுப்பாடோ, ஒழுக்க முறையையோ கற்றுக் கொடுக்கப்படவில்லை. இவர்களுக்கு இசைக் கருவிகள் வாயிலாக இசையை கற்றுக் கொடுத்தப் பிறகு அவர்களுடைய நடத்தையில் நல்ல மாற்றம் தெரிந்தது. 

இதை வைத்தே ஆட்டிசத்தால் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கும் இதே போல் இசைக் கருவிகளைக் கொண்டு இசையை கற்றுக் கொடுத்தனர் மருத்துவர்கள். சாதாரணமாக இருந்தபோது இருந்த அவர்களுடைய சிந்தனைகளிலும், நடத்தைகளிலும் முன்னேற்றம் தெரிய ஆரம்பித்தது. இதை வைத்தே ஆட்டிசத்தால் பாதிக்கப்பட்ட குழந்தைகளை சிறு வயது முதலே இசையை கற்பிப்பதன் வாயிலாக சரி செய்ய முடியும் என நிரூபித்துள்ளனர் மருத்துவர்கள். இசையின் ஒலியானது அவர்களுடைய மூளைக்கு செல்லும் நரம்புகளில் மாற்றத்தை ஏற்படுத்துகிறது. எனவே, அவர்களாலும் மற்ற குழந்தைகளைப் போல மாறுவதற்கு வாய்ப்புகள் அதிகமாக இருக்கிறது என்பதை இதன் மூலம் கண்டறிந்துள்ளனர். 

vikatan

  • தொடங்கியவர்

' டினாவும்...அமீரும்!'- டெல்லியைக் கலக்கிய ஐ.ஏ.எஸ் காதல் கதை

 

tina%202%20600_16207.jpg

இந்திய ஆட்சிப் பணித் தேர்வில் முதல், இரண்டாம் இடங்களைப் பிடித்தவர்கள் வாழ்விலும் ஒன்று சேர்ந்த அதிசயம் நிகழ்ந்துள்ளது. ' நாங்கள் இருவரும் வேறு வேறு சமூகத்தைச் சேர்ந்தவர்கள். எங்களின் திருமணத்துக்கு எதிராக பல விமர்சனங்கள் வந்தன' என்கின்றனர் ஐ.ஏ.எஸ் தம்பதிகள். 

புது டெல்லியைச் சேர்ந்த 22 வயதுப் பெண் டினா தபி. தலித் சமூகத்தைச் சேர்ந்த இவருக்கு சிறு வயதிலேயே ஐ,ஏ.எஸ் ஆக வேண்டும் என்பது லட்சியம். அரசியல் அறிவியல் துறையில் கல்லூரிப் படிப்பை முடித்தவுடன், உத்தரகண்ட் மாநிலத்தில் உள்ள லால் பகதூர் சாஸ்திரி தேசிய அகாடமியில் சேர்ந்தார். ஆசிரியர்களின் தொடர்ச்சியான பயிற்சியால், இரவு பகலாகப் படித்தார். கடந்தாண்டு நடந்த இந்திய ஆட்சிப் பணி தேர்வில், யாரும் எதிர்பார்க்காத வகையில் முதலிடத்தைப் பிடித்தார். இதே தேர்வில் காஷ்மீரைச் சேர்ந்த அத்தர் அமீர்-உல்-ஷஃபி கான் இரண்டாம் இடத்தில் வென்றார். காஷ்மீரில் இருந்து குறைந்த வயதில் ஆட்சிப் பணி தேர்வில் வெற்றி பெற்றிருப்பவர் என்ற பெருமைக்குரியவர் அமீர். பட்டப்படிப்பை இமாச்சல பிரதேசத்தில் இருக்கும், ஐஐடி-யில் முடித்தார். இருவருக்குள்ளும் பெரிதாக எந்த நட்பும் இல்லை. ஆட்சிப் பணித் தேர்வின் நேர்காணலின்போதும் இவர்கள் சந்தித்துக் கொள்ளவில்லை. ஆனால், எதிர்பாராதவிதமாக மத்திய அரசு நடத்திய ஐ.ஏ.எஸ் தேர்வில் வெற்றி பெற்றவர்களுக்கான பாராட்டு விழாவில் டினாவை சந்தித்தார் அமீர். பாராட்டு விழா முடிவதற்குள்ளாகவே டினாவிடம் காதலைச் சொல்லிவிட்டார். தொடக்கத்தில், அமீரின் காதலைப் புறம்தள்ளிவிட்டார். ஆனாலும், டினாவை விடாமல் துரத்தினார். கடந்த ஆகஸ்ட் மாதம் அமீர் மீது காதல் வயப்பட்டார் டினா. தங்களுடைய காதலைப் பற்றி இருவரும் ஃபேஸ்புக்கில் பதிவிட்டனர். வடஇந்திய ஊடகங்களும் ஐ.ஏ.எஸ் காதல் ஜோடியைப் பற்றி செய்திகள் வெளியிட்டன. 

" எங்கள் காதலைப் பற்றி சமூக வலைத்தளத்தில் பகிர்ந்து கொண்டோம். நானும் அமீரும் எடுத்துக் கொண்ட புகைப்படங்களையும் வெளியிட்டோம். தொடக்கத்தில், எதிர்மறையான கமெண்டுகள் வந்து கொண்டிருந்தன. சாதிரீதியாக சிலர் விமர்சித்தனர். வேறு சிலர் இடஒதுக்கீட்டோடு என்னுடைய தேர்வு வெற்றியை சம்பந்தப்படுத்தி பதிவிட்டனர். வேறு மதத்தைச் சேர்ந்த நபரைக் காதலிப்பதே குற்றம் என்பதுபோல் சிலர் கடுமையான விமர்சனம் செய்தார்கள். இதனால் கடுமையான மனஉளைச்சலுக்கு ஆளாக வேண்டியிருந்தது. ஒருகட்டத்தில், நாங்கள் சம்பந்தப்பட்ட பதிவுகளைப் போடுவதையே நிறுத்திக் கொண்டோம். ஒட்டுமொத்த சமூக வலைத்தளத்தில் இதுபோன்று எதிர்மறையாக விமர்சனம் செய்பவர்கள் ஐந்து சதவீதத்துக்கும் குறைவானவர்கள்தான். மற்றவர்கள், எங்கள் காதலின் உன்னதத்தைப் புரிந்துகொண்டு வாழ்த்தினார்கள்" என நெகிழ்கிறார் டினா தபி ஐ.ஏ.எஸ். 

இந்திய குடிமைப்பணி தேர்வில் தலித் சமூகத்தைச் சேர்ந்த பெண் ஒருவர், முதல் இடம் பிடித்திருப்பதை மனித உரிமை ஆர்வலர்கள் பெரிதும் வரவேற்கின்றனர். ' டினாவை முன்மாதிரியாக எடுத்துக் கொண்டு படிக்க வேண்டும்' என பலரும் சமூக வலைத்தளங்களில் பதிவிட்டு வருகின்றனர். இதற்குப் பதில் கூறும் டினா தபி, ' முன்மாதிரி என்று சொல்லும் அளவுக்கெல்லாம் நான் சாதிக்கவில்லை. இப்போதுதான் தேர்வில் வெற்றி பெற்றுள்ளேன். இன்னும் சாதிக்க வேண்டியது எவ்வளவோ இருக்கிறது' என்கிறார் பணிவோடு. 

ஐ.ஏ.எஸ் வெற்றி ஒருபுறம், காதல் வெற்றி மறுபுறம் என உற்சாகத்தில் இருக்கின்றனர் டினாவும் அமீரும். எளிய மக்களின் உள்ளங்களையும் அவர்கள் கொள்ளையடிக்கட்டும்...! 
 

vikatan

  • தொடங்கியவர்

 

குளிரூட்டும் கோபுரங்கள்: உள்ளே என்ன இருக்கிறது?

வானுயர் குளிரூட்டும் கோபுரங்களுக்குள் என்ன இருக்கிறது?

  • தொடங்கியவர்

சருமத்தின் மீது அதிக அக்கறைக் கொண்ட நாடு எது தெரியுமா?

 

skin%20care_11167.jpg

உலக அளவில் ஆண், பெண் இருபாலருக்குமே தங்களுடைய சருமம் மீதான அதிக அக்கறை உள்ளதாக சமீபத்திய ஆராய்ச்சி ஒன்று தெரிவிக்கிறது. உலக அளவில் 43% க்கும் மேற்பட்டவர்கள் ஃபேஸ்புக், ட்விட்டர் போன்ற சமூக வலைதளங்களில் தங்களுடைய படங்களை எடிட் செய்தே பதிவிடுகிறார்கள். இதற்கு காரணம் தங்களுடைய சருமத்தின் மீதுள்ள அதிருப்தியே ஆகும். 24% பேர் சமூக வலைதளங்களை புறக்கணித்து வருகின்றனர். 15% பேர் வெளியில் சுற்றுலா மேற்கொள்வதைத் தவிர்த்து வருகின்றனர். 14% க்கும் மேற்பட்டோர் ஷாப்பிங் செய்வதையும் விரும்புவதில்லை என இந்த ஆராய்ச்சி தெரிவிக்கிறது.

இந்த வரிசையில் அதிக அளவில் தங்களுடைய சருமத்தின் மேல் அக்கறை கொண்டவர்கள் கனடாவை சேர்ந்த மக்கள். லண்டனை சேர்ந்தவர்களுக்கு இந்த 25% அக்கறையும், ஜெர்மனியை சேர்ந்தவர்களுக்கு 22 % அக்கறையும் உள்ளதாக இந்த ஆராய்ச்சி முடிவு தெரிவிக்கிறது. சருமப் பொலிவு குறைவதால் மன அழுத்தத்துக்கு பலரும் உள்ளாகி வருகிறார்கள். இதனால் நட்பு வட்டாரத்திலும் அதிக ஈடுபாடு இல்லாமல் இருக்கிறார்கள் என்கிறது இந்த ஆராய்ச்சி முடிவு. 

vikatan

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.