Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இளமை புதுமை பல்சுவை

Featured Replies

  • தொடங்கியவர்
‘’போல்ட் பொயின்ட் பேனாவினால் ஓவியம் வரையும் கலைஞர் சந்தன
 

167scan-art-03.jpgபேச்சு  ஊடகம்  அல்­லாத ஊட­கங்­களில் முக்­கிய  ஊட­க­மாக கரு­தப்­ப­டு­வது சித்­தி­ரங்­க­ளாகும்.

 

மனித  விழு­மியப் பரம்­பலில் ஒலி­யா­னது தனது பங்­க­ளிப்பை மிக இல­கு­வா­கவும் தாரா­ள­மா­கவும் துல்­லி­ய­மா­கவும் செய்து வரு­வதை நாடகம், காவியம், இசை போன்ற துறை­களில்  காணலாம். 

 

அளவ்­வையைச் சேர்ந்த சந்­தன ரண­வீர வெறும் போல்ட் பொயின்ட் பேனா­வினால் அழ­கிய ஓவி­யங்­களை வரை­கிறார். இவரின் ஓவி­யங்கள் பெரும்­பாலும் ஆன்­மிகம் சார்ந்­த­வை­யாக உள்­ளன.

 

தன் முன்னே எவ்­வ­ளவோ உப­க­ர­ணங்கள் குவிந்து இருந்­தாலும் தனக்கு மிகவும் விருப்­ப­மான ‘’போல்ட் பொயின்ட்  பேனா’’வை  தூரி­கை­யாக்கி சித்­தி­ரங்கள் தீட்­டு­வதில் வல்­லவர் அளவ்வ சந்­தன என்­கிறார் சிங்­கப்பூர் பௌத்த உயர்­கல்வி நிறு­வ­னத்தின் பேரா­சி­ரியர் சந்­திம விஜே­பண்­டார.

 

ஓவியர் சந்­தன ரண­வீர குறித்து பேரா­சி­ரியர் சந்­திம விஜே பண்­டார மேலும் தெரி­வித்­துள்­ள­தா­வது:
 “ரேகைச் சித்­தி­ரங்­களை நுட்­ப­மான முறையில் வரையும் ஆற்றல் நவீன சித்­திரக் கலை­ஞர்­க­ளி­டையே அரிது. அளவ்வ சந்­தன, தனது எண்ணக் கருக்­களை சித்­தி­ரங்­க­ளாகப் படைத்து  உல­குக்குத் தரும் ஒரு அபூர்வ கலைஞர்.  இயற்­கைக்கும் மனி­த­னுக்கும் உள்ள தொடர்பை  அழ­கியல் ரீதி­யாக  ஆய்வு செய்யும் இவர், யதார்த்த ரீதியில் சிந்­தித்து சித்­தி­ரங்கள் வரை­வதில் வல்­லவர். 

 

167scan-art-01.jpg

 

சித்­திரம் எனும் போது அது சித்­திரக் கலை­ஞ­னி­னதும் அதை  ரசிப்­ப­வ­னதும் எண்ணக் கருக்­களை ஆய்வு செய்­வ­தாகும் என ஜப்­பா­னிய அறிஞர் யகி கொ இவ்ரா கூறி­யுள்ளார். அதற்­கேற்ப, போல் பொயிண்ட் பேனாவால் தனது அபூர்­வ­மான படைப்­புக்­களை படைத்­துள்ளார் சந்­தன.

 

நகர வாழ்க்­கை­யோடு ஒன்­றி­ணை­யாது கிரா­மிய வாழ்க்­கையை தன­தாக்கிக் கொண்டு சமய ஆசார விழு­மி­யங்­களைப் பேணிக்­கொண்டே தனது படைப்­புக்­களை ஆக்­கி­யுள்ளார்  என்­பது இவ­ரு­டைய சித்­திர ஆக்­கங்­களில் இருந்து தெளி­வா­கி­றது.  

 

இரு­பத்­தோராம் நூற்­றாண்டில் பௌத்த சமய பண்­பாட்டு ஆசா­ரங்­களை பின்­பற்றித் தனது எண்ணக் கருத்­துக்­களை முன்­வைத்து சித்­தி­ரக்­க­லையை வளர்க்கும் முறையை தேடு­கிறார்.   

 

167scan-art-02.jpg

 

இவ­ரு­டைய பாணியில் சித்­தி­ரங்கள் வரை­வோரை தேடிப்­பி­டிப்­பது கடினம். மற்­ற­வர்­களின் பாணியில்  செயற்­ப­டு­வதை விட தனக்­கென ஒரு வழியை அமைத்­துக்­கொண்டு செல்லும் அவ­ரது முயற்சி சிறப்­புக்­கு­ரி­யது.

 

இவ­ரு­டைய சித்­திரக் கண்­காட்­சியை பார்­வை­யிட்ட ஒருவர் தன்­வீட்­டுக்குச் செல்­கையில் தியான, பக்தி பூர்வ, தெளிந்த மனதுடன் புது மனிதனாகச் செல்வார் என்பது எனது நிலைப்படாகும்.

 

இவருடைய ஆய்வு மயமான, கருத்தாழமிக்க, சிந்தனையைத் தூண்டும் சித்திரத்துறை சிறப்புற்று வளர  வாழ்த்துகின்றேன்.''

 

.metronews.lk

Edited by நவீனன்

  • Replies 11.3k
  • Views 1.5m
  • Created
  • Last Reply
  • தொடங்கியவர்

பணம் எடுக்க பன்றிக்குட்டியுடன் ஏடிஎம் வரிசையில் நின்ற தென்னிந்திய நடிகர்

தென்னிந்திய நடிகர் ஒருவர் தன்னுடைய கையில் பன்றிக்குட்டியுடன் வங்கி ஒன்றுக்கு முன்னால் வரிசையில் நின்றிருக்கும் புகைப்படம் எடுக்கப்பட்டதை தொடர்ந்து பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார்.

 

''இந்த பன்றிக்குட்டியை ஒரு கணினி வரைகலை கூடத்திற்கு அழைத்து சென்று கொண்டிருந்தபோது, எரிபொருள் நிரப்ப பணம் இல்லை என்பதை நான் உணர்ந்தேன்'' என்று பிபிசியிடம் தெரிவித்துள்ளார் பாபு.

''இந்த பன்றிக்குட்டியை ஒரு கணினி வரைகலை கூடத்திற்கு அழைத்து சென்று கொண்டிருந்தபோது, எரிபொருள் நிரப்ப பணம் இல்லை என்பதை நான் உணர்ந்தேன்'' என்று பிபிசியிடம் தெரிவித்துள்ளார் பாபு.

இந்த பன்றிக்குட்டியின் பெயர் புன்ட்டி, ரவி பாபுவின் திரைப்படத்தில் நடிக்கும் 25 பன்றிகளில் இதுவும் ஒன்று.

இந்த பன்றிக்குட்டியின் பெயர் புன்ட்டி, ரவி பாபுவின் திரைப்படத்தில் நடிக்கும் 25 பன்றிகளில் இதுவும் ஒன்று.

BBC

  • தொடங்கியவர்

15107224_1194668430581849_66176206716852

பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவரும், பாகிஸ்தான் 1992இல் உலகக் கிண்ணத்தை வென்றபோது தலைவராக விளங்கியவரும், உலகின் தலைசிறந்த சகலதுறைவீரருமான இம்ரான் கானின் பிறந்தநாள் இன்று

இ.மு... இ.பி... பாகிஸ்தான் கிரிக்கெட்டின் பாட்ஷாவுக்கு பிறந்த நாள்! #HBDImranKhan

 

இம்ரான் கான்

Either lead from front or push from back. ஒரு தலைவன் எப்படி இருக்க வேண்டும் என்பது குறித்து, முன்னாள் இந்திய கிரிக்கெட் கேப்டன் மன்சூர் அலிகான் பட்டோடி சொன்ன வார்த்தைகள் இவை. இந்த இரண்டுமாக இருந்தவர்கள் கிரிக்கெட் வரலாற்றில் சொற்பம். இந்திய கிரிக்கெட்டில் அதற்கு அச்சாரம் செளரவ் கங்குலி எனில், பாகிஸ்தான் கிரிக்கெட்டுக்கு இம்ரான் கான். 

இம்ரான் கான் என்ற பெயரை  ‛ 'The lion of Pakistan' என கிரிக்கெட் நிபுணர்கள் முன்மொழிந்தால், மறுமொழி பேசாது ஒட்டுமொத்த கிரிக்கெட் உலகமும்  அதை, ஆம் என  வழிமொழியும். தங்கள் நாட்டில் கிரிக்கெட்டை மீட்க வந்த மீட்பராக பார்க்கின்றனர் பாகிஸ்தான் ரசிகர்கள். காரணம்...

1987 உலக கோப்பை முடிந்ததும் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வை அறிவித்தார் இம்ரான். அல்லோலப்பட்டது பாகிஸ்தான் கிரிக்கெட். இதைப் பார்த்து அடுத்த ஆண்டே, ‛இம்ரான்  நீ அணிக்குத் திரும்ப வேண்டும்’ என, பாகிஸ்தான் ஜெனரல் ஜியா உல் ஹக் வேண்டுகோள் விடுத்தார். அதை ஏற்று அணிக்குத் திரும்பிய இம்ரான், 1992ல் பாகிஸ்தானுக்கு உலக கோப்பை வாங்கித் தந்து, கிரிக்கெட்டுக்கு குட்பை சொன்னார். இது ஒன்று போதாதா இம்ரான் கானின்  பெருமை பேச.

இம்ரான் கான்

'பந்துவீசும் போது இம்ரான் கான் ஜம்ப் பார்த்திருக்கிறீர்களா... காற்றில் நிற்பார்' என சிலாகிக்கின்றனர் அந்தகாலத்து கிரிக்கெட் ரசிகர்கள். ஃபாஸ்ட் பெளலர், வேர்ல்ட் கிளாஸ் ஆல் ரவுண்டர், சிறந்த கேப்டன் என ஒற்றை ஆளாக பாகிஸ்தான் கிரிக்கெட்டை தூக்கி நிறுத்தியவர் என்றாலும்,  அவர் விளையாட்டை விட வசீகரம்தான் டாமினேட் பண்ணியது என்பது சீனியர் ரசிகர்களின் கருத்து. இளம் வீரர்களின் திறமையை வெகு விரைவில் கண்டறிந்து அவர்களை வளர்த்து விட்டது அவரது தனி ஸ்டைல். 

"ஒரு விஷயத்தில் இம்ரான்கான் கிரேட். எம்ஜியாரைப் போலவே அவரைப் பற்றியும் பல மித்துகள் அப்போது உலவியது. கல்லூரிகளுக்கு இடையிலேயான போட்டியை காணச்சென்ற இம்ரான், அக்ரமின் பந்து வீச்சைக் கண்டு உடனே தேசிய அணிக்கு அவரைத் தேர்வு செய்தார் என்பார்கள். ஒரு உள்நாட்டுப் போட்டியில் மியாண்டாட்டே திணறும்படி ஒருவர் பந்து வீசியதைக் கண்டு அவரைத் தேர்வு செய்தார். அவர்தான் வக்கார் யூனிஸ் என்பார்கள். வக்கார் யூனிஸின் பந்து வீச்சை அநாயசமாக சமாளித்து ஆடியதற்காகவே இன்ஜமாம் உல் ஹக்கை தேர்வு செய்தார் என்பார்கள். அவருடைய தேர்வுகள் எதுவுமே பொய்த்துப் போனதில்லை’’ என, ட்விட்டரில் பதிவு செய்திருந்தார் அவரின் ரசிகரான முரளிக் கண்ணன். 

1992 உலக கோப்பை இரண்டு முத்துக்களை கிரிக்கெட் உலகுக்கு அடையாளப்படுத்தியது. ஒன்று சச்சின் டெண்டுல்கர். அடுத்து இன்ஜமாம் உல் ஹக். சச்சினுக்கு கொம்பு சீவி விட்டவர் அசார் எனில், இன்ஜமாமுக்கு இம்ரான். இந்த விஷயத்தில் அசார், இம்ரான் இருவரிடமும் ஒரு ஒற்றுமை இருந்தது. இவன் விஸ்வரூபம் எடுப்பான் என அசாருக்கு புரிந்திருந்தது. அதனால்தான், கடைசி வரை அசார், சச்சினை சீண்டவே இல்லை. கடைசி ஓவரை வீச சச்சினை அழைத்ததே அதற்கு சான்று. போலவே, இம்ரான் கான். 

இம்ரான் கான்

இருபது வயதைத் தாண்டாத வாசிம் அக்ரமின் வேகத்துக்கு முன், நம்மால் நிற்க முடியாது என 35 வயது இம்ரான் கானுக்கு நன்றாகவே புரிந்திருந்தது.  அதனால்தான் அந்த இளம் புயலை வீச விட்டு வேடிக்கை பார்த்தார் இம்ரான்.  அக்ரமை வளர்த்து விட்டார். அதற்கு இன்றளவும் இம்ரானுக்கு நன்றி சொல்கிறார் அக்ரம். யாரை எப்போது எப்படி எந்த இடத்தில் பயன்படுத்த வேண்டும் என்பது இம்ரானுக்கு அத்துப்படி. "இம்ரான் கான் பேசினால், எப்போதுமே டிரஸ்ஸிங் ரூமில் பாசிட்டிவ் வைப்ரேஷன் இருக்கும்'’ என்றார் ரமீஸ் ராஜா. 

பாகிஸ்தான் ரசிகர்கள் இன்றளவும் இம்ரான் கானை கொண்டாடக் காரணம் அவரிடம் இருந்த 'ஆர்ட் ஆஃப் மேனேஜ்மென்ட்’. வியூகங்கள் வகுப்பதில் மன்னன். அணி இக்கட்டான சூழலில் இருக்கிறது எனில், தளபதிகளை இறக்காமல் தானே களமிறங்குவார். பலத்தை வெளிப்படுத்துவதை விட பலவீனத்தை மறைப்பது முக்கியம். அந்த விஷயத்தில் இம்ரான் கில்லி. கடைசி காலத்தில் பெளலிங் வேகம் குறைந்து விட்டதை உணர்ந்து பேட்டிங்கில் கவனம் செலுத்தினார். 

இங்கிலாந்துக்கு எதிரான 1992 உலக கோப்பை ஃபைனலில் அமீர் சோகைல் 4, ரமீஸ் ராஜா 8 ஆகிய ஓபனிங் பேட்ஸ்மேன்கள் இருவரும் பத்து ரன்களைத் தாண்டாது அவுட்டாக, ஒன் டவுன் இறங்கிய இம்ரான் 72 ரன்கள் அடித்து நங்கூரம் பாய்ச்சினார். தலைவனாக முன்னின்று அணியை வழி நடத்தியதற்கும், பந்துவீச்சில் வேகம் குறைந்து விட்டதை உணர்ந்து பேட்டிங்கில் கவனம் திருப்பியதற்கும் நல் உதாரணம் அது. எல்லாவற்றையும் விட பாகிஸ்தான் ரசிகர்கள் இம்ரானை கொண்டாடக் காரணம். அவர் இல்லையெனில் பாகிஸ்தானுக்கு உலக கோப்பை கிடைத்திருக்காது. 

சரி இப்ப எதுக்கு இம்ரான் கான் புராணம்? காரணம் இருக்கிறது. இன்று அவர் பிறந்தநாள்.

vikatan

  • தொடங்கியவர்
பெண்­க­ளுக்கு எதி­ரான வன்­மு­றை­களை ஒழிப்­ப­தற்­கான சர்­வ­தேச தினம் இன்று
 

20889_violence2.jpgஇன்று நவம்பர் 25 ஆம் திக­தி­யா­னது பெண்­க­ளுக்கு எதி­ரான வன்­மு­றை­களை ஒழிப்­ப­தற்­கான சர்­வ­தேச தின­மாக உல­கெங்கும் அனுஷ்­டிக்­கப்­ப­டு­கி­றது.

 

1999 ஆம் ஆண்டு ஐ.நா.வினால் உத்­தி­யோகபூர்வமாக இத்­ தினம் பிர­க­ட­னப்­ப­டுத்­தப்­பட்­டது. டொமி­னிக்கன் குடி­ய­ரசில் 1960 ஆம் ஆண்டு அர­சியல் செயற்­பா­டு­களில் ஈடு­பட்ட மிரபால் சகோ­த­ரிகள் எனும் சகோ­த­ரிகள் மூவர் (பெட்­றீ­சியா மிராபல் ரெயீஸ், மரியா மினே­ரவா மிராபல் ரெயீஸ், அன்­டோ­னியா மரியா தெரேசா மிராபல் ரெயீஸ் ஆகியோர்) சர்­வா­தி­காரி ரபாயெல் ட்ரஜில்­லோவின் உத்­த­ர­வினால் 1960 நவம்பர் 25 ஆம் திகதி கொல்­லப்­பட்­டனர்.

 

இத­னை­யொட்டி, பெண்கள் மீதான வன்­மு­றை­க­ளுக்கு எதி­ரான சர்­வ­தேச தின­மாக நவம்பர் 25 ஆம் திகதி தெரி­வு­செய்­யப்­பட்­டது. பெண்­க­ளுக்கு எதி­ரான வன்­மு­றை­யா­னது ஓர் மனித உரிமை மீற­லாகும். 

 

பெண்­க­ளுக்கு எதி­ரான பார­பட்­சத்தின் ஒரு விளை­வாகும், பெண்­க­ளுக்கு எதி­ரான வன்­மு­றை­க­ளா­னவை,  வறுமை ஒழிப்பு, எச்.ஐ.வி. எயிட்ஸுக்கு எதி­ரான போராட்டம் மற்றும் சமா­தானம், பாது­காப்பு உட்­பட பல துறை­களில் பாதிப்­பு­களை ஏற்­ப­டுத்­து­கின்­றன என சுட்­டிக்­காட்­டப்­ப­டு­கி­றது.

 

பெண்­க­ளுக்கு எதி­ரான வன்­மு­றை­களை ஒழிப்­ப­தற்­கான சர்­வ­தேச தினத்தை முன்­னிட்டு, உல­கெங்கும் பல்­வேறு நிகழ்­வுகள் நடத்­தப்­ப­டு­வது வழக்­க­மாகும்.

 

20889_Cx8as4CXUAASSRN.jpg

 

அத்­துடன், வரு­டாந்தம் நவம்பர் 25 முதல்  சர்­வ­தேச மனித உரி­மைகள் தின­மான டிசம்பர் 10 ஆம் திகதி வரை­யான 16 நாட்கள் “பாலின அடிப்­ப­டை­யி­லான வன்­மு­றை­க­ளுக்கு எதி­ரான செயற்­பா­டு­க­ளுக்­கான 16 நாட்கள்” வரு­டாந்தம் அனுஷ்­டிக்­கப்­ப­டு­கின்­றது.

20889_Cx43ecOXUAE7bZp.jpg

 

இலங்கை உட்­பட 164 நாடு­களில் 3,700 இற்கும் அதி­க­மான அமைப்­பு­களால் இப்பதி­னாறு தினங்­களில் பல்­வேறு விழிப்­பு­ணர்வு, பிர­சார செயற்­பா­டுகள் முன்­னெ­டுக்­கப்­ப­டு­கின்­றன.

 

உல­க­ளா­விய ரீதியில், பெண்கள் மற்றும் சிறு­மி­க­ளுக்கு எதி­ரான வன்­மு­றை­களை நிறுத்­து­வதில் எதிர்­நோக்­கப்­படும் பிர­தான சவால்­களில் ஒன்­றாக, பணத் தட்­டுப்­பாடு உள்­ளது.

 

இந்­நி­லையில், 2016 ஆம் ஆண்டின் 16 நாட்கள் திட்­டத்­துக்­கான, ஐ.நா. செய­லாளர் நாயகம் பான் கீ மூனினால் முன்­மொ­ழி­யப்­பட்ட தொனிப்­பொருள் உலகை செம்­மஞ்சள் நிற­மாக்­குங்கள்: பெண்கள், சிறு­மி­க­ளுக்கு எதி­ரான வன்­மு­றை­களை நிறுத்­து­வ­தற்­காக நிதி திரட்­டுங்கள் (Orange the World: Raise Money to end Violence against Women”) என்­ப­தாகும்.  

 

20889_Mlambo-Ngcuka,-Executive-Director-

 

அமெ­ரிக்­காவின் நியூயோர்க் நக­ரி­லுள்ள ஐ.நா. தலை­மை­ய­கத்தில், இது தொடர்­பான வைப­வ­மொன்று அண்­மையில் நடை­பெற்­றது. ஐ.நா. செய­லாளர் நாயகன் பான் கீ மூன், “ஐ.நா. பெண்கள்” நிறை­வேற்றுப் பணிப்­பாளர் எம்­லம்போ என்­குகா ஆகி­யோரும் இந் ­நி­கழ்வில் பங்­கு­பற்­றினர்.

 

ஐ.நா. செய­லாளர் நாயகம் பான் கீ மூன் இந்­ நி­கழ்வில் உரையாற்றுகை யில், பெண்கள், சிறுமிகளை ஆண்கள் ஏன் தாக்குகிறார்கள், பாதிக்கப் பட்டவர்களை சமூகம் ஏன் அவமானப்படுத்துகிறது? குற்றவாளிகளை தண்டிப்பதற்கு அரசுகள் ஏன் தவறுகின்றன.

 

பெண்களின் முழுமையான பங்குபற்றலின் பலன்களைப் பெறுவதை உலகம் ஏன் நிராகரிக்கிறது என்பதை புரிந்துகொள்ள முடியவில்லை எனக் கூறினார்.

metronews.lk

Edited by நவீனன்

  • தொடங்கியவர்

நடிகரின் விளம்பரத்தைப் பார்த்து கொதித்துப்போன நடிகர் சித்தார்த்!

 

siddharth_15015.jpg

'பாய்ஸ்' படத்தின் மூலம் தமிழில் பிரபலமானவர் நடிகர் சித்தார்த். தன்னுடைய செயல்கள் ஒவ்வொன்றிலும் வித்தியாசத்தை காண்பிப்பவர். கடந்த வருட சென்னை வெள்ளத்தின்போது நேரடியாக களத்தில் இறங்கி மக்களுக்கு உதவினார். அதேபோல, தவறு கண்டால் பொங்கும் மனது உடையவர். அப்படித்தான் ஒரு விளம்பரத்தைக் கண்டு தன்னுடைய கோபத்தை தன்னுடைய டுவிட்டரில் வெளிப்படுத்தி இருக்கிறார்.  இந்தி நடிகர் ரன்வீர் சிங் ஒரு சட்டைக்கான விளம்பரப்படத்தில் நடித்தார்.

siddharth%20tweet_15461.jpg

அதில், "வேலையை வீட்டுக்கே எடுத்து செல்லுங்கள்" என்று சொல்லி, வேலைக்கு வந்த ஒரு பெண்ணை தன் தோளில் போட்டு எடுத்துச் செல்வது போல ஒரு காட்சி. அந்த விளம்பரத்திற்கான ஸ்டில்ஸ் மற்றும் கட்டவுட்டாகவும்  மும்பை முழுக்க வைத்திருக்கிறார்கள்.
இதைப் பார்த்து கோபமான சித்தார்த், 'வேலைக்குச் செல்லும் பெண்களை இப்படியா கேவலப்படுத்துவது.. என்று தனது ட்விட்டர் பக்கத்தில் ஆதங்கத்தை வெளிப்படுத்தியிருக்கிறார். அந்த நிறுவனம் விளம்பரங்களை அகற்றுவதாக அறிவித்து இருக்கிறது

vikatan

  • தொடங்கியவர்

வரலாற்றில் இன்று....

நவம்பர் - 25 

 

1120 : இங்­கி­லாந்து மன்னன் முதலாம் ஹென்­றியின் மகன் வில்­லியம் அடெலின், பய­ணஞ்­செய்த கப்பல் ஆங்­கிலக் கால்­வாயில் மூழ்­கி­யதால் உயி­ரி­ழந்தார்.

 

1542 :  ஆங்­கி­லேயப் படைகள் சொல்வே மொஸ் என்ற இடத்தில் ஸ்கொட்­லாந்துப் படை­களைத் தோற் கடித்­தன.

 

1667 : ஆசிய, ஐரோப்­பிய எல்­லை­யி­லுள்ள கவ்­கா­சியாப் பகு­தியில் ஏற்­பட்ட பூகம்­பத்­தினால் நிகழ்ந்த சுமார் 80,000 பேர் உயி­ரி­ழந்­தனர்.

 

856457px-06B_%28Nisha%29_26_November_2001703 : பிரித்­தா­னி­யாவில் வீசிய பாரிய  சூறா­வ­ளி­யினால் 9,000 பேர் உயி­ரி­ழந்­தனர்.

 

1783 : கடைசி பிரித்­தா­னியப் படைகள் நியூயோர்க் நகரை விட்டுப் புறப்­பட்­டன.

 

1795 : சுதந்­திரப் போலந்தின் கடைசி மன்னர் ஸ்டனிஸ்லாஸ் ஓகஸ்ட் பொனி­யாட்­டோவ்ஸ்கி பத­வியில் இருந்து அகற்­றப்­பட்டு ரஷ்­யா­வுக்கு நாடு கடத்­தப்­பட்டார்.

 

1833 : இந்­தோ­னே­ஷி­யாவின் சுமத்­தி­ராவில் 8.7 ரிச்டர் அள­வி­லான பூகம்பம் ஏற்­பட்­டது.

 

1839 : இந்­தி­யாவில் பலத்த சூறா­வளி ஏற்­பட்­டது. ஆந்­தி­ராவின் கொரிங்கா நகரம் முற்­றாக சேத­ம­டைந்­தது. 30,000 பேர் வரையில் கொல்­லப்­பட்­டனர்.

 

1867 : டைன­மைட்­டுக்கு அல்­பிரட் நோபல் காப்­பு­ரிமை பெற்றார்.

 

1905 : டென்மார்க் இள­வ­ரசர் கார்ல் நோர்வே வந்து சேர்ந்தார். இவர் பின்னர் "ஏழாம் ஹாக்கோன்" என்ற பெயரில் நோர்­வேயின் மன்­ன­ரானார்.

 

1926 : ஐக்­கிய அமெ­ரிக்­காவின் ஆர்­கன்சஸ் மாநி­லத்தில் இடம்­பெற்ற சூறா­வ­ளியில் 76 பேர் உயி­ரி­ழந்­த­துடன் பலர் காய­முற்­றனர்.

 

1936 : சோவியத் ஒன்­றியம் தம் மீது படை­யெ­டுத்தால் அதனை கூட்­டாக எதிர்­கொள்­வ­தற்கு ஜப்பான், ஜேர்­மனி ஆகி­யன  பேர்லின் நகரில் ஒப்­பந்தம் செய்து கொண்­டன.

 

1944 : இரண்டாம் உலகப் போரில் ஐக்­கிய இராச்­சியம், டெப்ட்ஃபோர்ட் நகரில் ஜேர்­ம­னிய விமா­னங்கள் நடத்­திய தாக்­கு­தலில் 160 பேர் கொல்­லப்­பட்­டனர்.

 

1950 : ஐக்­கிய அமெ­ரிக்­காவின் வடக்கு கிழக்கில் ஏற்­பட்ட சூறா­வ­ளி­யினால் மேற்கு வேர்­ஜீ­னி­யாவில் 323 பேர் கொல்­லப்­பட்­டனர்.

 

1950 : மக்கள் சீனக் குடி­ய­ரசு ஐ.நா. படை­களை எதிர்க்க கொரியப் போரில் ஈடு­பட்­டது.

 

1973 : கிரேக்கத் தலைவர் ஜோர்ஜ் பாப்­ப­ட­ப­வுலொஸ் இரா­ணுவப் புரட்சி ஒன்றில் பதவி இழந்தார்.

 

1975 :  நெதர்­லாந்­திடம் இருந்து சூரினாம் சுதந்­திரம் பெற்­றது.

 

1981 : ரொடி­ஸி­யா­வி­லி­ருந்து மும்­பாய்க்குப் புறப்­பட்ட எயார் இந்­தியா விமானம் கடத்­தப்­பட்டு தென் ஆபி­ரிக்­காவின் டர்பன் நக­ருக்கு திசை திருப்­பப்­பட்­டது.

 

1987 : பிலிப்­பைன்ஸில் நீனா என்ற சூறா­வளி தாக்­கி­யதில் 1,036 பேர் கொல்­லப்­பட்­டனர்.

 

1992 : செக்­கஸ்­லோ­வாக்­கி­யாவின் நாடா­ளு­மன்றம் அந்­நாட்டை  ஜன­வரி 1, 1993 ஆம் திக­தி­யி­லி­ருந்து செக் குடி­ய­ரசு, ஸ்லவாக்­கியா என இரண்­டாகப் பிரிக்க முடி­வெ­டுத்­தது.

 

1999 : 1960 ஆம் ஆண்டு டொமி­னிக்கன் குடி­ய­ரசில் சர்­வா­தி­காரி ரபாயெல் ட்ருஜில்­லோவின் ஆட்­சியை எதிர்த்­த­மைக்­காக கொல்­லப்­பட்ட 3 சகோ­த­ரி­களின் நினை­வாக, பெண்­க­ளுக்கு எதி­ரான வன்­மு­றையை ஒழிப்பு தின­மாக நவம்பர் 25 ஆம் திக­தியை ஐ.நா. பொதுச்­சபை பிர­க­ட­னப்­ப­டுத்­தி­யது.

 

2000 : அஸர்­பைஜான் தலை­நகர் பக்கு நகரில் இடம்­பெற்ற 7.0 அளவை பூகம்­பத்­தினால் 26 பேர் உயி­ரி­ழந்­தனர்.

 

2006 : சீனாவின் தென் மேற்கு மற்றும் வடக்கு கிழக்குப் பகு­தி­களில் ஏற்­பட்ட நிலக்­கரிச் சுரங்க விபத்தில் 53 பேர் உயி­ரி­ழந்­தனர்.

 

2008 : நிஷா சூறா­வ­ளி­யினால் இலங்­கையின் வட­ப­கு­தியில் 15 பேர் பலி­யா­ன­துடன் சுமார் பல்லாயிரக்கணக்கானோர் இடம்பெயர்ந்தனர். இச்சூறாவளியினால் தமிழ்நாட்டில் 184 பேர் உயிரிழந்தனர்.

 

2009 : சவூதி அரேபியாவின் ஜெத்தா நகரில் பாரிய வெள்ளம் ஏற்பட்டதால் 122 பேர் உயிரிழந்தனர். சுமார் 3000 கார்கள் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டன.

.metronews.lk

Edited by நவீனன்

  • தொடங்கியவர்

மெரினா பீச்சை இப்படி பாத்திருக்கீங்களா? #360DegreesVideo

 

மெரீனா

அந்த மென்மையான மண்ண பார்க்குற குழந்தைங்க துள்ளி விளையாடுவாங்க , ஆர்ப்பரிக்குற அலையும், கால நனைக்குற கடல் தண்ணிலயும் விளையாடுறது டீனேஜ்களின் ஸ்வீட் மெமெரி . மாலை நேரத்துல... அந்தக் குளிர் காற்றுல, அலையோட சத்தத்தின் பின்னணியில காதலியோட கைய பிடிச்சுக்கிட்டு நடக்குற போது கிடைக்குற ரொமாண்டிக் ஃபீல், ஸ்விட்சர்லாந்து போனாலும் கிடைக்காதது.  வீட்டுல சண்டை போட்டுட்டு கடுகடுன்னு இருக்குற கணவன் - மனைவிய, கலகலன்னு சிரிக்க வைக்குற ஒரு அமைதிப் பூங்கா . குச்சி வச்சு நடக்குற தாத்தா, பாட்டிங்க  குதூகலமா பழைய கதைகள பேசி சிரிக்கும் ஒரு சூப்பர் ஸ்பாட் . அடடா... இது என்ன இடம் ? என்கிற  ஆச்சர்யத்தோட இன்னும் கண்டுபிடிக்க முடியாதவங்களுக்கு... ஒரே வார்த்தை... இது நம்ம "மெரினா" ...

பாக்கெட் ஃபுல்லா இருந்தாலும், பர்ஸ் காலியா இருந்தாலும் ... நீங்க ஃபுல் ஹேப்பியா இருக்கலாம். சுட்ட சோளம், வெங்காய பஜ்ஜி, வாழைக்காய் பஜ்ஜி, மிளகா பஜ்ஜின்னு தொடங்கி இன்னும் பல சொஜ்ஜிக்களும் ... அந்தக் கார சட்னியோடு தொட்டு சாப்பிட்டா ... சும்மா "நாசமா " இருக்கும் !!!  நைட் நேரத்துல... நிலா வெளிச்சத்துல கடைக்கார அண்ணா தர்ற பெட்ஷீட்ட கீழ விரிச்சுப் போட்டுட்டு ... கும்பலா உட்கார்ந்து "ஃப்ரைட் ரைஸ்" சாப்பிட்டா... சும்மா "ஆசம்மா" இருக்கும் !!! 

இந்திய தேசம் மட்டுமில்லாம, உலகம் முழுக்கவிருந்து யார் வந்தாலும் சென்னைல கண்டிப்பா பார்க்கக் கூடிய, பார்க்க வேண்டிய இடங்களோட டாப்லிஸ்ட்ல இருக்குற ஒரு இடம் மெரினா . அதிகாலை நேரத்துல, தொப்பைய குறைக்க போராடும் அங்கிள் கூட்டம் ஒரு பக்கம், டம்பிள்ஸ் தூக்கும் இளைஞர் கூட்டம் ஒரு பக்கம், காரணமே இல்லாமல் ஒரு பெரிய காரணத்துக்காக சிரித்துக் கொண்டிருக்கும் "லாஃபிங் க்ளப்" ஒரு பக்கம், தலைகீழா சுழன்று ஆடும் ஸ்ட்ரீட் டான்ஸர்ஸ் ஒரு பக்கம்ன்னு பிசிக்கல் ஆக்டிவிட்டிஸ் பின்னும். கொஞ்சம் தள்ளி குப்பத்து பக்கம் போனா அந்த மீன் வாசனைக்கு நடுவுல பசங்க கபடி, வாலிபால்ன்னு ப்ராக்டிஸ்ல இருப்பாங்க. அவங்கக் கூட ஒரு கை போட்டிங்குன்னா, அடிக்குற வெயில்ல உங்க வியர்வை மின்னும் ... 

அண்ணா சமாதி, எம்ஜிஆர் சமாதி தொடங்கி நேதாஜி சிலை, காந்தி சிலை வரைக்கும் இந்திய தேசத்தோட ரியல் ஹீரோஸ கற் சிலைகளா பார்க்கலாம் . ரஜினி, கமல், அஜித், விஜய் தொடங்கி இன்றைய சிவகார்த்திகேயன் வரை ரீல் ஹீரோஸ கலர் கட்டைகளா பார்க்கலாம் .  கூட நின்னு கெத்தா போட்டோவும் எடுத்துக்கலாம் . இப்படி ஜாலியான விஷயங்கள் மட்டுமில்லாம, ஈழப்படுகொலைக்கு எதிரான பேரணி, ஆசிட் வீச்சு வினோதினிக்கான நினைவேந்தல், நிர்பயாவிற்கான மெழுகுவர்த்தி ஏந்தல், மத்திய, மாநில அரசாங்கங்களுக்கு எதிரான போராட்டங்கள்ன்னு தமிழ்நாட்டு மக்களோட போராட்ட உணர்வுகளுக்கு வடிகாலாய் அமையறதும் "மெரினா" தான் . இது மட்டுமில்ல ... மெரினாவோட புகழ் சொல்ல பக்கங்கள் போதாது. 

இந்த எழுத்துல சொல்ல முடியாத மெரினாவோட இன்னும் சில முக்கியமான விஷயங்கள, கீழ இருக்கக் கூடிய வீடியோ உங்களுக்கு சொல்லப் போகுது . சொல்வதோடு மட்டுமில்லாம ... நீங்க உட்கார்ந்திருக்குற இடத்தில் இருந்தே உங்கள மெரினாவுக்கு ஒரு மாஸ் ட்ரிப் கூட்டிட்டுப் போகப் போகுது இந்த வீடியோ ... அந்த ஆச்சரியத்த அனுபவிக்க பண்ணுங்க ஒரு க்ளிக்.!!!  

 

 

 

vikatan

  • தொடங்கியவர்

சிரியாவின் கோர முகமும், அழகு சிறுமியும்!

 

aleppoa_19429.jpg

சிரியாவின் அலெப்போ நகரில் வசிக்கும் ஏழு வயது சிறுமி பானா அலபெத், ட்விட்டரில் சிரியா போரை நிறுத்துமாறு போராடி வருகிறார். இவரின் பகிர்வுகள் சர்வதேச அளவில் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. 

சிரியாவின் மிகப் பெரிய நகரமான அலெப்போ,  அரசு படைகள் மற்றும் கிளர்ச்சியாளர்களின் தாக்குதல்களால்   அழிந்து வருகிறது. அலெப்போ நகரில் வசிக்கும் பானா, தனது தாயுடன் சேர்ந்து ட்விட்டரில் அங்கு நிகழ்ந்து வரும் பயங்கரவாத தாக்குதல்களை பகிர்ந்து வருகிறார்


தன் தோழி தாக்குதலில் கொல்லப்பட்ட புகைப்படம், வீட்டின் அருகே தரைமட்டமான கட்டிடங்களின் புகைப்படம் என பல பதபதைக்க வைக்கும் படங்களை பகிர்ந்து வருகிறார் இந்த சிறுமி. அண்மையில் பானா வெளியிட்ட ஒரு வீடியோ அதிகளவில் பகிரப்பட்டுள்ளது. 
 

vikatan

அழிந்து வரும் அலெப்போ: கண்கலங்க வைக்கும் 7-வது சிறுமியின் டுவிட்டர் பதிவுகள்

7193CCAB-02F3-4AB2-88C4-A35ED55401C5_L_s

  • தொடங்கியவர்

தொழில்நுட்ப உலகை ஆளப்போகும் ஜப்பான் சூப்பர் கம்ப்யூட்டர் !

 

japannn_19271.jpg

உலகின் வேகமான சூப்பர்  கம்யூட்டர்களை உருவாக்க ஜப்பான் தீவிர முயற்சி எடுத்து வருகிறது. இதற்காக  173 மில்லியன் டாலர்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக செய்தி வெளியாகியுள்ளது. ஜப்பானில் உள்ள உற்பத்தியாளர்கள் ஓட்டுனரில்லா கார், ரோபாட்டிக்ஸ் போன்ற புதிய கண்டுபிடிப்புகளை  மேம்படுத்திக் கொள்ள அவர்களுக்கு சூப்பர் கம்ப்யூட்டர் உதவும் என ஜப்பான் வல்லுனர்கள் இந்த முயற்சியை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சூப்பர் கம்ப்யூட்டர்கள் வினாடிக்கு 130 குவாட்ரில்லியன் கணக்கீடுகளை (130 quadrillion calculations per second) போடும் திறனுடையதாக இருக்கும். 

ஜப்பான், தென் கொரியா, சீனா ஆகிய நாடுகளுக்கு இடையே தொழில்நுட்பத்துறையில் கடும் போட்டி நிலவி வருகிறது. தொழில்நுட்ப உலகில் ஜப்பான் தனது இடத்தை நிலை நிறுத்தி கொள்ளவே இந்த முயற்சி மேற்கொண்டு வருகிறதாம்!

vikatan

  • தொடங்கியவர்

தெருக்களுக்கு Emoji, Meme போன்ற சமூக வலைத்தள வார்த்தைகளின் பெயர்கள்: ஒப்புதலுக்காக காத்திருக்கும் பின்லாந்து

 

 

தெருக்களுக்கு Emoji, Meme போன்ற சமூக வலைத்தள வார்த்தைகளின் பெயர்கள்: ஒப்புதலுக்காக காத்திருக்கும் பின்லாந்து

Emoji, Meme போன்ற சமூக வலைத்தளங்களில் பாவிக்கப்படும் வார்த்தைகளை தெருக்களின் பெயர்களாக வைக்க பின்லாந்தில் முயற்சி மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

தெற்கு பின்லாந்தில் உள்ள ஒரு நகரத்தில் இரண்டு புதிய சாலைகளுக்கு Emoji Street மற்றும் Meme Street எனப் பெயரிடலாமா என்று விவாதம் நடைபெற்று வருகிறது.

பின்லாந்தில், மேற்கு ஹெல்சிங்கி நகரத்திற்கு அருகில் உள்ள லோஹ்யா என்ற பகுதியில் ஒரு புதிய வர்த்தக மண்டலத்தை அமைக்கும் திட்டத்தின் ஒரு பகுதியாக Emojikatu மற்றும் Meemikatu என்ற பின்னிஷ் மொழியில் உள்ள பெயர்களை வைக்கத் திட்டமிடப்பட்டுள்ளது.

இந்தத் திட்டத்திற்கு நகரத் திட்டமிடல் குழு ஏற்கனவே ஒப்புதல் அளித்துவிட்டது.

தற்போது, உள்ளூர் மக்களிடம் அவர்களின் கருத்துக்களை நகர கவுன்சில் கேட்டுள்ளது.

எதிர்காலத் தலைமுறையினர் 21 ஆம் நூற்றாண்டைப் பற்றிய உணர்வைப் பெற, தெருக்களுக்கு நவீன பெயர்களை சூட்ட வேண்டும் என நகரத் திட்டமிடல் குழு விரும்புகிறது என கட்டிடக்கலை நிபுணர் மற்றும் நகரத் திட்டமிடல் குழுவைச் சேர்ந்த யுஹா ஆன்டிலா கூறியுள்ளார்.

எங்களது பகுதியில் உள்ள செடி, மரம் மற்றும் பறவைகளின் பெயர்கள் என எல்லாப் பெயர்களையும் சூட்டியாகிவிட்டது. நவீன காலத்தைப் பற்றி பேசும்பொருளான ஒன்றின் பெயரை வைக்க வேண்டும் என நாங்கள் விரும்புகிறோம்,” என அவர் எம்.டி.வி. செய்தி இணையத்தளத்திடம் கூறியுள்ளார்.

உள்ளூர் மக்கள் லோஹ்யா திட்டத்தை எதிர்க்காவிட்டால், புதுவருட பிறப்பின் போது அதற்கு ஒப்புதல் அளிக்கப்படும். ஆனால், சில பின்லாந்துவாசிகள் ட்விட்டர் தளத்தில், பாரம்பரியம் அல்லாத பெயர்களை வைப்பது சரியானதா என்று விவாதித்து வருகின்றனர்.

வைரஸ் தெரு என்று பெயர் வைக்காமல் இருந்தால் சரி !

http://newsfirst.lk/

  • தொடங்கியவர்

 

ஜனநாயகத்துக்காக குரல்கொடுத்ததற்கான விலையை தான் தற்போது கொடுத்து வருகிறேன் என்கிறார் ஆசியாவின் முன்னணி பாடகி.

  • தொடங்கியவர்
பாவங்களை அள்ளுவதால் என்ன இலாபம்?
 
 

article_1480135121-food.jpgபாவங்களில் அதுவும் கொடிய பாவங்களில் ஒன்று, உணவகங்களில் கலப்படம் செய்த உணவுகளை விற்பனை செய்வதாகும். இதனை உண்பவர்களுக்கு நோய்கள் உண்டாகி விடுகின்றன. தமது உணவகங்களில் செய்யப்படும் உணவினை இவர்கள் தமது குடும்பத்துடன் இருந்து சாப்பிடுவதுண்டா? 

மேலும், சுகாதார சீர்கேடாகச் சமைக்கப்படும் மற்றும் காட்சிக்கு வைக்கப்பட்டிருக்கும் உணவு வகைகளையோ உணவகங்களையோ அரசாங்க அதிகாரிகள் பெரிதாகக் கண்டுகொள்வதில்லை.  

உணவு, பசிப்பிணி போக்குவது; உடற்பிணி ஊட்டுவது அல்ல!  

ஒருமுறை, “நீங்கள் ஏன் திறந்த நிலையில் வைத்து விற்பனை செய்கின்றீர்கள்” என உணவக உரிமையாளர் ஒருவரிடம் கேட்டபோது, அதுபற்றி ஒன்றுமே பேசாது, தமது கருமத்திலேயே கண்ணாயிருந்தார். 

விலைவாசியைச் சாட்டாகச் சொல்லி, உணவு விலையைக் கண்டபடி அதிகரிக்கின்றார்கள். மக்களுக்கு அத்தியாவசியத் தேவையான உணவில் வஞ்சகம் செய்வது, கொஞ்சமும் நல்லது அல்ல! பாவங்களை அள்ளுவதால் என்ன இலாபம்? 

Edited by நவீனன்

  • தொடங்கியவர்

உங்கள் குழந்தைக்கு இந்த ஆச்சர்யங்களைப் பரிசளிக்கத் தயாரா? #WeekendSurprise

 

குழந்தை

குழந்தைப் பருவத்தின் நினைவுகளைச் சொல்லும், இந்த வசனங்களைச் சொல்லி இருப்பீர்கள் அல்லது பெரும்பாலானவர்கள் சொல்லக் கேட்டிருப்பீர்கள்.

‘நான் குழந்தையா இருக்கறப்ப,  சின்ன வயசுல எங்க மாமா வீட்டுக்கு வர்றப்பல்லாம் ஒரு சாக்லேட் வாங்கிட்டு வருவாரு. அதுக்காகவே அவரு எப்படா வருவார்னு காத்துட்டிருப்பேன்’

‘சின்ன வயசுல எங்க பாட்டி வீட்டுக்குப் போறதுன்னா அவ்ளோ குஷியாய்டுவேன்.. அங்கதான் எனக்குப் பிடிச்சதெல்லாம் சமைச்சுக் குடுப்பாங்க’

‘சின்ன வயசுல் பக்கத்து வீட்ல குமார்னு ஒருத்தன் இருந்தான். அவனும் நானும் சேர்ந்தாலே செம லூட்டியா இருக்கும்... ப்ச்.. எங்க இருக்கான்னு தெரியல இப்ப..’

-இப்படி உங்கள் மனதில் நிழலாடும் மகிழ்ச்சியான தருணங்களை ரீ - ப்ளே செய்து பார்ப்பதிலேயே ஒரு இனம் புரியாத மகிழ்ச்சி உங்களுக்கு இருக்கும். 

ஆனால், இவற்றை உருவாக்கிக் கொண்டது நீங்களா? மாமா வந்தால் ஒரு மகிழ்ச்சி என்றால், அவராகத்தானே உங்களுக்காக உங்கள் வீட்டுக்கு வந்திருப்பார்? நீங்களாகவா பாட்டி வீட்டுக்குப் போயிருப்பீர்கள்? அப்பாவோ, அம்மாவோ அழைத்துப் போயிருப்பார்கள்? உங்களை நண்பர்கள் வீட்டுக்கு அனுமதித்ததிலோ, நண்பர்களை உங்கள் வீட்டுக்கு அனுமதித்ததிலோ உங்கள் பெற்றோரின் பங்கு நிச்சயம் இருந்திருக்கும்... இல்லையா? 

ஆனால், இன்று நம் குழந்தைகளுக்கு இந்த மாதிரியான என்ன பொக்கிஷ நினைவுகளைக் கொடுத்திருக்கிறோம்?
நாளை அவர்கள் பெரிதானால் என்ன பேசிக் கொள்வார்கள்?

 ‘எங்கப்பா ஃபோனை எடுத்தார்னா, எங்கம்மா கோச்சுப்பாங்க’

‘சின்ன வயசுல ஒரு ஆங்க்ரி பேர்ட்ஸ்னு  ஒரு வீடியோ கேம்.. செம்மயா இருக்கும்..’

‘எங்கம்மா எவ்ளோ பெரிய ஆளு தெரியுமா? எப்பயும் பிஸியா வேலை செஞ்சுட்டே இருப்பாங்க. நான் டிவில டோரா பார்த்துட்டிருப்பேன்’

 நேற்று வெளியான ‘டியர் ஜிந்தகி’ படத்தில் ஒரு காட்சி. ஷாருக் கான், அவரது அப்பா குறித்துச் சொல்லும்போது ‘எங்கப்பா பீச்சுக்குக் கூட்டிட்டு வருவாரு.. அலைகள் கூட கபடி விளையாடுவோம். இப்பவும் விட்டா நாள் முழுக்க விளையாடுவேன். என் சின்ன வயசுன்னாலே எனக்கு அதுதான் ஞாபகம் வரும்’ என்று பின்வாங்கும் அலைகளை, கபடிக் கபடி என்று துரத்திச்சென்று, அது திரும்ப வரும்போது தொட்டுவிட்டு, கரைக்கு ஓடி வருவார். 

அலியா பட்டிடம், ‘உனக்கு அப்படியேதும் நினைவுகள் உள்ளதா?’ என்று கேட்க அலியா பட் ‘எனக்கு சாய்ராதான் துணை’ என்பார். சாய்ரா என்பது அவரது டெடி பியர் பொம்மை. அதிலிருந்தே அவர் பெற்றோர், அவருக்கான நேரம் ஒதுக்காததைப் புரிந்து கொள்ளலாம். 

நம் குழந்தைகளுக்கும் பொம்மை நினைவுகளையும், வீடியோ கேம், டிவி நினைவுகளையும்தான் அவர்களது Childhood Memories ஆக்கப் போகிறோமா? 

என்னதான் செய்ய வேண்டும் நான் என் குழந்தைக்காக? 


அந்தப் படத்தில் வந்தது போல, அலையோடு கபடி விளையாடுதலை, உங்கள் வாரிசுக்கு என்ன வயதாக இருந்தாலும் செய்யலாம். 2 ஆனாலும் சரி, 25 ஆனாலும் சரி. அவர்கள் பெற்றோருக்கு குழந்தைகள்தானே?

Weekend Tips

உங்கள் குழந்தையின் வயது என்னவாக வேண்டுமானலும் இருக்கட்டும். கீழே உள்ள டிப்ஸ்களைப் படியுங்கள். உங்கள் குழந்தையின் வயதுக்கேற்ப  ஒன்றை இந்த வாரம் ஆரம்பியுங்கள். மாதம் இரண்டு வாரங்களாவது இவற்றில் எவற்றையாவது செய்யுங்கள்.

* வீட்டில் உள்ள பழைய ஃபோட்டோக்களை எடுங்கள். அல்லது உங்கள் கம்ப்யூட்டர் / லேப்டாப்பில். செலக்டீவாக அவற்றில் 25 அல்லது 30 ஃபோட்டோக்களை எடுத்துக் கொள்ளுங்கள். அவற்றில் உங்கள் வாழ்க்கையில் இடம் பெறும் முக்கியமானவர்கள் பலரும் இருக்குமாறு பார்த்துக் கொள்ளுங்கள். உங்கள் வாரிசை உட்காரவைத்துக் கொண்டு, அப்பா-அம்மா இருவரும், அந்த ஃபோட்டோ எடுக்கப்பட்ட தருணத்தைப் பகிர்ந்து கொள்ளுங்கள். கசப்பான அனுபவத்தை நினைவுபடுத்தும், தர்மசங்கட ஃபோட்டோக்களுக்கு ஸ்டிரிக்ட் தடா!

* வீட்டில் வேலையாளோ, அம்மாவோ யார் சமைக்கிறார்களோ.. ஒரு வேளை உணவுக்கு நாங்க ஹெல்ப் பண்ணுவோம்’ என்று வாரிசோடு களம் இறங்குங்கள்.

* அருகிலுள்ள ஏதேனும் அரசு சார்ந்த இடத்திற்கு அழைத்துச் செல்லுங்கள். அப்படி என்றால்? போஸ்ட் ஆஃபீஸ், போலீஸ் ஸ்டேஷன், ஃபயர் சர்வீஸ், சப் ரெஜிஸ்ட்ரார் ஆஃபீஸ், அரசு மருத்துவமனை, ரேஷன் கடை.. இப்படி. அவற்றின் செயல்பாடுகளை அவனுக்கு / அவளுக்கு விளக்குங்கள். தீயணைப்பு நிலையம் என்றால் தைரியமாக உள்ளே சென்று அதிகாரியிடமே ‘என் மகளுக்காக வந்தேன். உங்கள் வேலையப் பற்றி விளக்க முடியுமா?’ என்று கேட்பீர்களானாலும் இன்னும் சிறப்பு. அவர்களுக்கு அந்த சம்பவம் நன்றாக மனதில் பதியும். அவர் ஒருவேளை ‘அதெல்லாம் முடியாது வெள்ல போ’ என்றால், நீங்கள் வெளியே வரும்போது ‘அங்க நிக்கிதுல்ல.. அந்த ஃபயர் சர்வீஸ் வண்டிய பாத்துக்க சொல்றேன்’ என்று சொல்லிக்கொண்டே வெளியே வந்து, அந்தக் கட்டடத்துக்கு எதிரிலேயே நின்று கொண்டு விளக்கலாம். காலத்துக்கும் அவர்கள் நினைவில் நிழலாடும். பெரிய பயணம் மேற்கொளவது நல்லதுதான். அது வருடத்திற்கு ஒன்றோ இரண்டோ முறைதான் முடியும்... இந்த மாதிரி இடங்களுக்கு  மாதத்துக்கு இரண்டு இடங்களுக்குக் கூட்டிச் செல்லலாம். 

* சும்மா உங்கள் வீடிருக்கும் வீதியில் அவர்களோடு நடங்கள். ஃபோன் வீட்டில் இருக்கட்டும். பேசிக்கொண்டே நடந்து போய், வாருங்கள். இதிலென்ன ஞாபகம் வைத்துக் கொள்ள இருக்கும் என்று நினைத்தால், ஒரு சின்ன ஆக்டிவிடியை இணைத்துக் கொள்ளுங்கள். உதாரணமாக, வீட்டிலிருந்து புறப்படும்போது ஒரு சின்ன கல்லை ஐந்தாறு அடி தூரத்துக்கு உதைத்து, அடுத்தது அவனை உதைக்கச் சொல்லுங்கள். அந்தக் கல்லை உதைத்துக் கொண்டே நடந்து போய் அதை ஆரம்பித்த இடத்திலேயே விடவேண்டும் என்று பேசிவைத்துக் கொண்டு ஆரம்பியுங்கள்.

*  வீட்டிற்கு கொஞ்சம் வெளியிலும், வீட்டிற்குள்ளுமாக ஒரு Treasure Hunt விளையாட்டை விளையாடுங்கள்.

* நிறைய கடைகளில் குட்டிக் குட்டி மேஜிக் செய்வதற்கானா கிட் கிடைக்கிறது. ஒரு சண்டேவின் ஒரு பொழுது, அவர்களுக்கு மேஜிக் செய்து காட்டுங்கள்.

* உங்கள் Guide / Philosopher / God Father /குரு என்று யாராவது இருப்பார்களே.. அவரை வீட்டுக்கு வரவழையுங்கள். அல்லது அவர் வீட்டுக்கு நீங்கள் செல்லுங்கள்.

* எழுத்து, பேச்சு, ஓவியம் என்று அவர்களுக்கு எதில் திறமையோ அதைப் பற்றி கூகுள் செய்து, மொட்டை மாடியிலோ, பார்க்கிலோ அமர்ந்து அதை அவனோடு பகிர்ந்து கொள்ளுங்கள்.

 

 இவை, சும்மா சேம்பிள்தான். இவற்றைப் போல எத்தனையோ செய்யலாம். மொத்தமாக வார இறுதியில் 10 மணி நேரமாவது நாம் வீட்டில் இருப்போம். இவற்றில் இருப்பவற்றிற்கு 2 - 3 மணிநேரங்கள் ஒதுக்கினால் போதும். அவர்களுக்கு இது ஒரு நல்ல நினைவைத் தரும். 

அதற்கு ஒன்றே ஒன்றுதான் வேண்டும். மனம்!

vikatan

  • தொடங்கியவர்

வட்டாரக் கலை வீடுகள்

இன்றைக்குக் கட்டிடக் கலையின் நுட்பம் அறிவியல் கண்டுபிடிப்பால் நினைத்துப் பார்க்க முடியாத அளவில் மேம்பட்டுள்ளது.

Desktop_3092570f.jpg

morocco_3092566f.jpg

பெர்பெர் பழங்குடி உலர் கல் வீடு, மொராக்கோ
hakka_3092569f.jpg
ஹக்கா இன மக்களின் வளாக வீடுகள், சீனா
mangolia_3092567f.jpg
கோபி பாலைவன ஜெல் வீடு, மங்கோலியா
 
malaysia_3092568f.jpg
சபா மீனவர்களின் மிதக்கும் வீடுகள், மலேசியா
spain_3092563f.jpg
க்யவ்பா வீடுகள், ஸ்பெயின்
 
tibi_3092562f.jpg
டிபீ அமெரிக்கப் பூர்வகுடி வீடுகள், அமெரிக்கா
newzealand_3092564f.jpg
மாவ்ரி பழங்குடி வீடுகள், நியூசிலாந்து
aslam_3092571f.jpg
அஸ்ஸாம் வீடு, இந்தியா

இன்றைக்குக் கட்டிடக் கலையின் நுட்பம் அறிவியல் கண்டுபிடிப்பால் நினைத்துப் பார்க்க முடியாத அளவில் மேம்பட்டுள்ளது. ஆனால், இந்த அறிவியல் வளர்ச்சியை அடைவதற்கு முன்பே நம் முன்னோர்கள் கட்டிய கட்டிடங்கள் இயற்கைச் சீற்றங்களை எதிர்கொண்டு காலத்தைக் கடந்து கம்பீரமாகக் காட்சி தந்துகொண்டிருக்கின்றன. இதற்கு முக்கியமான காரணம் அவர்கள் கட்டிடங்களை உருவாக்கும்போது தாம் சார்ந்த நிலப் பகுதியை முதலில் படித்துக்கொண்டார்கள். உதாரணமாக அந்தந்தப் பகுதியில் கிடைக்கும் கற்களையும் மணலையும் கொண்டு வீடு கட்டிக்கொண்டனர். மேலும் இயற்கைச் சீற்றங்களை எதிர்கொள்ளும் வலுவுடன் வீடுகளைக் கட்டினர். உதாரணமாக குஜராத் மாநிலப் பகுதி பூகம்பம் நிகழ வாய்ப்புள்ள பகுதி என்பதால், அந்தப் பகுதிகளில் மூலைகள் அற்ற வீடுகள் உருவாக்கப்பட்டன. அதாவது வட்ட

வடிவ வீடுகள். இதுபோல உலகம் முழுவதும் பழங்குடிகள் உருவாக்கிய வீடுகளிலிருந்தும் இன்றைய கட்டிடக் கலை கற்றுக்கொள்ள நிறைய விஷயங்கள் இருக்கின்றன. இன்று பசுமைக் கட்டிடக் கலை என்னும் பெயரில் உலகம் முழுவதும் பரவலாகிவருவதும் இந்த வட்டாரக் கலையுடன் இணக்கமானதுதான். அம்மாதிரியான வட்டாரக் கட்டிடக் கலையில் அமைந்த வீடுகளின் தொகுப்பு

 

tamil.thehindu

  • தொடங்கியவர்

விண்வெளியில் குப்பை - காணொளி

Edited by நவீனன்

  • தொடங்கியவர்

பறக்கும் ராசாளி!

 

 

p36a.jpg

``உலகம் என்பது ஒரு புத்தகம். பயணம் செய்யாதவர்கள் அதன் ஒரு பக்கத்தை மட்டுமே இன்னமும் படித்துக்கொண்டிருக்கிறார்கள்'' என்பது பயணத்தைப் பற்றிய பிரபலமான பொன்மொழி. உலகம் முழுக்க சுற்றிப்பார்க்க நமக்கெல்லாம் ஆசை இருக்கும். ஆனால் அமெரிக்காவைச் சேர்ந்த கஸாண்ட்ரா டி பெகோல் உலகத்தையே சுற்றிவந்து அசத்திக்கொண்டிருக்கிறார்.

2015-ம் ஆண்டு ஜூலை மாதத்தில் தொடங்கி இதுவரை 181 நாடுகளுக்குப் பயணித்திருக்கிறார் இவர். Expedition196 என்ற பெயரில் உலகத்தையே சுற்றிவரத் திட்டமிட்டு தற்போது சாதனையின் விளிம்பில் இருக்கிறார். மீதமிருக்கும் 15 நாடுகளுக்கும் அடுத்த மாதத்திற்குள் பயணித்து, `உலகம் சுற்றி வந்த முதல் பெண்' என்ற சாதனையைப் படைக்கவிருக்கிறார். இது தவிர்த்து, `குறைந்த காலத்தில் உலகின் பல நாடுகளைச் சுற்றிவந்த முதல் நபர்' என்ற சாதனையையும் நிகழ்த்தவிருக்கிறார்.

பக்கத்தில் இருக்கிற ஊருக்குப் போய்ட்டு வந்தாலே கன்னாபின்னான்னு செலவாகுமேனு தலையைச் சொறிஞ்சுகிட்டே விசாரிச்சா... இவருடைய பயணச்செலவுகள் அனைத்தையும் சுற்றுலா மூலம் அமைதியை ஏற்படுத்தும் பன்னாட்டு அமைப்புதான் (International Institute for Peace Through Tourism ) செலவழிக்கிறதாம். இதுவரை இரண்டு லட்சம் அமெரிக்க டாலர்கள் இவரின் இந்தப் பயணத்திற்காகச் செலவாகியுள்ளது.

தான் பயணிக்கும் நாடுகளில் குறைந்தது இரண்டு நாட்கள் தங்கி அந்நாட்டின் கலாசாரம், இடங்கள் பற்றிப் பதிவு செய்வதை வழக்கமாகக் கொண்டுள்ளார் கஸாண்ட்ரா. தனது கேமராவில், பயணிக்கும் நாடுகளைப் படம்பிடித்து சோஷியல் மீடியாவில் லைக்ஸ்களைக் குவிக்கும் இவர், இந்தப் பயணத்திற்காக இதுவரை 254 விமானங்களில் பயணித்திருக்கிறார்!

vikatan

  • தொடங்கியவர்

பிடல் காஸ்ட்ரோவின் புரட்சிகர வாழ்வு - புகைப்படங்களில்

கியூபா புரட்சியின் தளகர்த்தர் பிடல் காஸ்ட்ரோவின் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த வாழ்க்கையின் அரிதான புகைப்படங்கள்

ஃ பிடல் காஸ்ட்ரோ

ஃபிடல் காஸ்ட்ரோ 1926ம் ஆண்டில் பணக்கார குடும்பத்தில் பிறந்தார். இளம் வயதிலேயே அவர் புரட்சிகர அரசியலில் ஈடுபட்டார்.

 

ஃபிடல் காஸ்ட்ரோ

1959ல் ஜனவரி 8ம் தேதி, ஃபிடல் காஸ்ட்ரோ தனது ஆதரவாளர்களிடம் பேசும் காட்சி. தோல்வியில் முடிந்த ஆட்சி கவிழ்ப்பை நடத்தியதால், இரண்டு வருடங்களை சிறையில் கழித்த பிறகு, அவர் மெக்ஸிக்கோவில் புகலிடம் தேடிச் சென்றார். அவர் 1956 ல் திரும்பிய அவர், செ குவெராவுடன் இணைந்து அரசுக்கு எதிராக கெரில்லாப் போர் தொடங்கினார். காஸ்ட்ரோ இறுதியாக கியூபாவில் ஆட்சியை அந்த நாட்டின் புத்தாண்டு தினமான, 1959 இல் கைப்பற்றினார்.

காஸ்ட்ரோவின் ஆட்சியை கவிழ்க்க முயன்றவர்களை எதிர்த்து பே ஆஃப் பிக்ஸில் நடத்திய போர்.

கியூபாவின் கிரோன் என்ற பகுதியில் உள்ள பே ஆஃப் பிக்ஸ் என்ற இடத்தில், ஃபிடல் காஸ்ட்ரோ ஒரு டாங்கியில் இருந்து குதிக்கும் காட்சி. 1961ல் காஸ்ட்ரோ, புலம் பெயர்ந்து வாழ்ந்த 1,500 கியூப நபர்களுக்கு எதிராக தனது படையை முன்னெடுத்துச் செல்கிறார். புலம் பெயர்ந்தவர்கள் அமெரிக்க உளவு அமைப்பான சி.ஐ.ஏவின் ஆதரவு பெற்றவர்கள். காஸ்ட்ரோவின் ஆட்சியை கவிழ்க்க முயற்சி அவர்களை எதிர்த்து பே ஆஃப் பிக்ஸில் நடத்திய போராட்டத்தில் ஒரு காட்சி.

1962ல் காஸ்ட்ரோவிற்கு ஒரு பெரிய சோதனை வந்தது. அமெரிக்க அதிபர் கென்னெடி கியூபாவில் இருந்து சோவியத் ஒன்றியத்தின் ஏவுகணைகளை நீக்குமாறு எச்சரிக்கை செய்தார்.

1962ல் காஸ்ட்ரோவிற்கு ஒரு பெரிய சோதனை வந்தது. அமெரிக்க அதிபர் கென்னெடி கியூபாவில் இருந்து சோவியத் ஒன்றியத்தின் ஏவுகணைகளை நீக்குமாறு எச்சரிக்கை செய்தார்.

1963ல் மே மாதம் ஃபிடல் காஸ்ட்ரோ சோவியத் தலைவர் நிக்கிட்டா குருஷேவின் கைகளைப் பிடித்து உயர்த்தும் காட்சி. இந்தப் படம் அவர் அதிகாரபூர்வமாக மாஸ்கோவிற்கு வருகை தந்தபோது எடுக்கப்பட்டது.

1963ல் மே மாதம் ஃபிடல் காஸ்ட்ரோ சோவியத் தலைவர் நிக்கிட்டா குருஷேவின் கைகளைப் பிடித்து உயர்த்தும் காட்சி. இந்தப் படம் அவர் அதிகாரபூர்வமாக மாஸ்கோவிற்கு வருகை தந்தபோது எடுக்கப்பட்டது. இறுதியில், சோவியத் தலைவர் நிக்கிட்டா குருஷேவ் மற்றும் ஃபிடல் காஸ்ட்ரோ ஏவுகணைகளை அகற்றினர். அணு ஆயுதப் போரும் தவிர்க்கப்பட்டது.

பேஸ்பால் விளையாட்டு ஃபிடல் காஸ்ட்ரோவிற்கு விருப்பமான விளையாட்டு

பேஸ்பால் விளையாட்டு ஃபிடல் காஸ்ட்ரோவிற்கு விருப்பமான விளையாட்டு என்பது நன்கு அறியப்பட்ட தகவல். இது, 1962ல் சியரா மாஸ்ட்ரா என்ற இடத்தில் உள்ள ஆசிரியர்களின் கல்லூரியில் விளையாடும் காட்சி.

பல தாராளவாத கியூப பிரஜைகள் அவரை ஒரு ஒடுக்குமுறை ஆட்சி நடத்திய சர்வாதிகாரி என்று கருதுகின்றனர்.

பல தாராளவாத கியூப பிரஜைகள் அவரை ஒரு ஒடுக்குமுறை ஆட்சி நடத்திய சர்வாதிகாரி என்று கருதுகின்றனர்.

கியூபா நாட்டை சேர்ந்த ஆயிரக்கணக்கானவர்கள் பெரும்பாலும், ஆபத்தான தற்காலிக படகுகள் மீது ஏறி, தங்கள் தாயகத்தை விட்டு அமெரிக்கவிற்குத் தப்பிச் சென்றனர்.

கியூபா நாட்டை சேர்ந்த ஆயிரக்கணக்கானவர்கள் பெரும்பாலும், ஆபத்தான தற்காலிகப் படகுகள் மீது ஏறி, தங்கள் தாயகத்தை விட்டு அமெரிக்கவிற்குத் தப்பிச் சென்றனர்.

ஃபிடல் காஸ்ட்ரோ

ஆனால், ஃபிடல் காஸ்ட்ரோ பொதுமக்களின் ஆதரவைத் தக்கவைத்துக் கொண்டு உலகின் மிக நீண்ட கால ஆட்சி செய்த தலைவர்களில் ஒருவராக மாறினார்

2008ம் ஆண்டு ஜூன் மாதம் 18ம் தேதி, ஹவானாவில் வெனிசுவேலா நாட்டின் அதிபர் ஹியூகோ சாவேஸ் மற்றும் ஃபிடல் காஸ்ட்ரோவின் சகோதரர் மற்றும் அதிகாரத்தில் இருந்த கியூபா அதிபர் ராவுல் காஸ்ட்ரோவுடன் நடந்த ஒரு சந்திப்பின் போது எடுத்த படம்.

2008ம் ஆண்டு ஜூன் மாதம் 18ம் தேதி, ஹவானாவில் வெனிசுவேலா நாட்டின் அதிபர் ஹியூகோ சாவேஸ் மற்றும் ஃபிடல் காஸ்ட்ரோவின் சகோதரர் மற்றும் அதிகாரத்தில் இருந்த கியூபா அதிபர் ரவுல் காஸ்ட்ரோவுடன் நடந்த ஒரு சந்திப்பின் போது எடுத்த படம். 2006 ஆம் ஆண்டு குடல் அறுவை சிகிச்சைக்குப் பின்னர், அவர் தனது சகோதரர் ரவுலிடம் அதிகாரத்தை கையளித்தார். 2008ம் ஆண்டு, முழு அதிகாரத்தையும் ஒப்படைத்த அவர், வெகு அரிதாகவே காணப்பட்டார்.

2010ம் ஆண்டு, செப்டம்பர் 3ம் தேதி, ஹவானா பல்கலைக்கழகத்தில் காஸ்ட்ரோ ஒரு உரை நிகழ்த்தினார். செப்டம்பர் 2010 ல், பிடல் காஸ்ட்ரோ, அறுவை சிகிச்சைக்கு பிறகு, நான்கு ஆண்டுகளுக்குப் பின் முதல் 2010ல் முறையாக ஒரு கூட்டத்தில் உரையாற்றினர். அவர் கடைசியாக 2016 ஆகஸ்ட் மாதம் தனது 90வது பிறந்தநாளின் போது பொது வெளியில் காணப்பட்டார்.

செப்டம்பர் 2010 ல், ஃபிடல் காஸ்ட்ரோ, அறுவை சிகிச்சைக்கு பிறகு, நான்கு ஆண்டுகளுக்குப் பின் முதல் 2010ல் முறையாக ஒரு கூட்டத்தில் உரையாற்றினர். அவர் கடைசியாக 2016 ஆகஸ்ட் மாதம் தனது 90வது பிறந்தநாளின் போது பொது வெளியில் காணப்பட்டார்.

BBC

  • தொடங்கியவர்

சன்னி லியோன் ஆப், ஆன் தி வே..!

 

sunny_13562.jpg

சன்னி லியோன் விரைவில் தனது அதிகாரப்பூர்வ ஆப்பை வெளியிட திட்டமிட்டுள்ளார். அந்த ஆப்பில் அவரைப் பற்றி பல தகவல்கள், புதிய புகைப்படங்கள், கேம்ஸ், பொழுதுபோக்கு போட்டிகள் என அனைத்தும் கலந்துகட்டியிருக்குமாம். இந்த ஆப்பிற்கான அறிவிப்பை அவரது ஃபேஸ்புக் பக்கத்தில் சன்னி பகிர்ந்துள்ளார். இந்த ஆப் ஐஓஎஸ் மற்றும் ஆண்ட்ராய்ட் என இரண்டு ஓஎஸ்களிலும் வருமாம்.

 

 

 

Edited by நவீனன்

  • தொடங்கியவர்

ஒற்றை செருப்புடன் வந்த மத்திய அமைச்சர்!

c1_15354.jpg

கோவை : கோவை விமான நிலையத்தில் தனது செருப்பு அறுந்ததால், ரோட்டோர செருப்பு தைக்கும் கடையில் செருப்பை தைத்துக்கொண்டார் மத்திய அமைச்சர் ஸ்மிருதி இராணி. தொழிலாளியிடம் 100 ரூபாயை நீட்டிய மத்திய அமைச்சர், 90 ரூபாயை டிப்ஸாக கொடுத்தார்.

கோவையில் நடைபெறும் நிகழ்வொன்றில் பங்கேற்பதற்காக மத்திய ஜவுளித்துறை அமைச்சர் ஸ்மிருதி இராணி, இன்று மதியம் கோவை விமான நிலையம் வந்தார். விமான நிலையத்தில் வரும் போது இவரது செருப்பு திடீரென அறுந்தது. இதையடுத்து ஒற்றை செருப்புடன் விமான நிலையத்தில் இருந்து வெளியே வந்தார் ஸ்மிருதி இராணி.

c3_15531.jpg

வழக்கமான செய்தியாளர்களை சந்தித்து பேசும் ஸ்மிருதி இராணி, விமான நிலையத்தில் காத்திருந்த செய்தியாளர்களை சந்திப்பதை தவிர்த்து விட்டு காரில் ஏறி வெளியேறினார். ஸ்மிருதி இராணி ஒற்றை செருப்புடன் விமான நிலையத்தில் இருந்து வெளியேறியது பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்நிலையில், கோவை விமான நிலையத்தில் இருந்து ஈஷா யோகா மையம் சென்ற ஸ்மிருதி இராணி, வழியில் செருப்பு தைக்கும் கடை ஒன்றில் நிறுத்தி செருப்பை தைத்துக்கொண்டார். செருப்பு தைக்க தொழிலாளி 10 ரூபாய் கேட்க, தன் உதவியாளரிடம் இருந்து 100 ரூபாயை வாங்கி கொடுத்தார்.  10 ரூபாய் போதும் என தொழிலாளி சொல்ல, 'கீப் த சேஞ்ச்' என மத்திய அமைச்சர் ஸ்மிருதி இராணி தெரிவித்தார்.

c2_15074.jpg

இதற்கு 'வேலை செய்யாம காசை வாங்குனா பாவம் பிடிச்சுக்கும். வேணும்னா செருப்ப  முழுக்க திரும்பவும் தைச்சு கொடுக்கறேன். திரும்பவும் அறுந்தறாம இருக்கும்," எனச்சொல்லி, செருப்பு அறுந்த இடம் மட்டும் அல்லாது செருப்பு முழுக்க தைத்து கொடுத்தார்.  இந்த நிகழ்வின் போது பி.ஜே.பி. மாநில நிர்வாகி வானதி சீனிவாசன் உடனிருந்தனர்.

இந்த நிகழ்வை, வீடியோ, புகைப்படமாக பதிவு செய்து பி.ஜே.பி. நிர்வாகிகளே பரப்பி வருகிறார்கள். நல்ல கேளுங்க வீடியோவோட 27வது வினாடியில் 'செருப்பு தைக்கிறவங்களையும் சேர்த்து எடுங்க'னு ஒரு வாய்ஸ் வரும். அது வேற யாருடயதும் இல்லை. வானதி சீனிவாசன் குரல் தான்.

என்னமா ப்ளான் பண்றாங்க...

 

 

 

vikatan

Edited by நவீனன்

  • தொடங்கியவர்

சாம்சங் S8ல் புதுசா என்ன இருக்கும்?

 

sam%201_19254.jpg

சாம்சங் நிறுவனத்தின் S7 வகை ஃபோன்கள் பயன்படுத்திக் கொண்டிருக்கும் போதே வெடித்தது என்ற செய்திகளால், அந்நிறுவனத்தின் ஸ்மார்ட் ஃபோன் விற்பனை மிகவும் பாதிக்கப்பட்டது. இந்நிலையில், S7ல் விட்ட சாம்சங் சந்தையை S8 மூலம் பிடிக்க சாம்சங் முயற்சித்து வருகிறது.


தற்போது, S8 வகை ஃபோனில், 6GB ரேம் மற்றும் 256GB இன்டர்னல் சேமிப்பு வசதிகள் இருக்கும் என்று தகவல்கள் கூறுகின்றன. அதே போல பேட்டரி செயல் திறனும் 40 சதவீதம் அளவுக்கு அதிகரிக்கப்படும் என்று கூறப்படுகிறது. சாம்சங் நிறுவனத்தின் கடைசி ஸ்மார்ட் ஃபோனான S7ல் 64GB இன்டர்னல் சேமிப்பு வசதிதான் இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

vikatan

  • தொடங்கியவர்

500 ரூபாய்க்குள் திருமணத்தை நடத்தி முடித்த குஜராத் ஜோடி

 

பணத்தட்டுப்பாடு காரணமாக குஜராத் ஜோடி பரத் - தக்ஷா இருவரும் ரூ.500-க்குள் திருமணத்தை நடத்தி முடித்து அனைவரிடமும் பாராட்டு பெற்றுள்ளனர்.

 
 
500 ரூபாய்க்குள் திருமணத்தை நடத்தி முடித்த குஜராத் ஜோடி
 

சூரத்:

குஜராத் மாநிலம் சூரத் மாவட்டத்தைச் சேர்ந்தவர் பரத். கடந்த மாதம் இவருக்கும் தக்ஷா என்ற பெண்ணுக்கும் திருமணம் செய்ய நிச்சய தார்த்தம் செய்யப்பட்டது.

நவம்பர் இறுதி வாரத்தில் அவர்களது திருமணத்தை நடத்த தேதி குறிக்கப்பட்டது. இந்த நிலையில் 8-ந்தேதி ரூ.500, ரூ.1000 நோட்டுகள் செல்லாது என்று வெளியிடப்பட்ட அறிவிப்பை கேட்டதும் பரத் - தக்ஷா குடும்பத்தினர் அதிர்ச்சி அடைந்தனர். திருமண ஏற்பாடுகளை செய்வதற்காக பணப் பரிமாற்றத்துக்கு இரு வீட்டார்களும் கடுமையாக திணறினார்கள்.

பணம் தட்டுப்பாடு காரணமாக திருமணத்தை வழக்கமான தடபுடல் விருந்துகளுடன் நடத்த இயலாது என்பது அவர்களுக்கு தெரிய வந்தது.

இதையடுத்து திருமண செலவை முற்றிலுமாக குறைக்க அவர்கள் ஆலோசித்து வந்தனர்.

இந்த நிலையில் திருமணத்தை 500 ரூபாய்க்குள் நடத்தி முடிக்க மணமகன் பரத்தும் மணமகள் தக்ஷாவும் தீர்மானித்தனர். அதன்படி ஆடம்பர ஏற்பாடுகள் அனைத்தும் நிறுத்தப்பட்டது.

திருமணத்துக்கு வந்தவர்களுக்கு விருந்து எதுவும் கொடுக்கப்படவில்லை. வெறும் டீயும், தண்ணீரும் மட்டுமே வழங்கினார்கள். இதன் காரணமாக பரத்- தக்ஷா திருமணம் திட்டமிட்டப்படி 500 ரூபாய்க்குள் நடத்தி முடிக்கப்பட்டது. சமீபத்தில் கர்நாடகாவில் தொழில் அதிபர் ஜனார்த்தன ரெட்டியின் மகள் திருமணம் ரூ.500 கோடி செலவில் பிரமிக்கத்தக்க வகையில் நடந்தது. ஆனால் பரத் - தக்ஷா இருவரும் ரூ.500-க்குள் திருமணத்தை நடத்தி முடித்து அனைவரிடமும் பாராட்டு பெற்றுள்ளனர்.

.maalaimalar.

  • தொடங்கியவர்

இந்தப் பெண்கள் உலக அளவில் இஸ்லாமிய உடைகளைப் பிரபலப் படுத்துகிறார்களா?

 

 
noor_tagouri

நூர் தகாவ்ரி டிவி  செய்தியாளர். இருபத்திரண்டு  வயதான  லிபியா  வம்சாவளியைச் சேர்ந்தவர்.  படித்தது   வளர்ந்தது  அமெரிக்காவில். ஹிஜாபுடன் அமெரிக்க  டிவியில் பேட்டி தரும் முதல் இஸ்லாமியப்  பெண்மணி  என்ற பெயர் எடுக்க வேண்டும் என்ற லட்சியத்துடன்  வளர்ந்தவர். ரேடியோ ஜாக்கியாக,  டிவி செய்தியாளராக மாறிய  நூர்,  இஸ்லாமிய மரபுப்படி  முகம் மட்டும் தெரியும்படி  உடை உடுத்திவருகிறார்.

பல விஐபிகளுடன் நூர் இஸ்லாமிய உடையில் நடத்திய பேட்டி, சானல்களில்   ஒளிபரப்பாகி, நூரும் பிரபலமாகவே.. இதர செய்தியாளர்கள் நூரைப் பேட்டி எடுத்தனர். "பிளேபாய்' பத்திரிகையும் நூரை  அணுகியது. பிளேபாய்  பத்திரிகைக்கு முழுக்க முழுக்க உடல் மறைத்து பேட்டி தந்த முதல் பெண்மணி  என்று நூர் பெயர் பெற்றிருக்கிறார். இந்தப் பத்திரிகைக்கு பேட்டி கொடுக்க வேண்டிய அவசியம் என்ன?  என்று விமர்சனங்களும் எழுந்துள்ளன.

பொதுவாக இஸ்லாமிய பெண்களின் மத்தியில்  ஹிஜாப் அணிந்து   கூந்தலை மறைப்பதும், புர்கா அல்லது புர்கினி (பெரிய கவுன்  மாதிரியான  உடை) தரித்து  உடலை மூடுவதும் பெருகி வருகிறது. துபாய்  நீங்கலாக வளைகுடா  நாடுகளில் ஹிஜாப், புர்கினி  அணிவது கட்டாயம். ஆனால், மேற்கத்திய நாடுகளில்  இந்த ஹிஜாப், புர்கா அணிதல் விமர்சனத்திற்கு உள்ளாகிவருகிறது. பிரான்ஸ் நாட்டில்  புர்கா,  ஹிஜாப்  அணிவது தடை செய்யப்பட்டுள்ளது. ரியோ ஒலிம்பிக்சில்  எகிப்து  நாட்டு இளம் பெண்கள் ஹிஜாப் அணிந்ததுடன்   முகம் தவிர்த்து உடல் மறைக்கும்  ஆடை அணிந்து  பீச் வாலிபால்  ஆடினர். அதே சமயம்  எதிர் அணியில், டூ  பீஸ் பிகினி அணிந்து இதர பெண்கள் அணியினர் விளையாடினார்கள். எகிப்தியப் பெண்களை அனைத்து செய்தி ஊடகங்களும்  ஹைலைட் செய்திருந்தன.

ரஹப்  காதிப். முப்பத்திரண்டு வயதாகும்  இவர் ஓர்  அமெரிக்க இஸ்லாமியர்.   மூன்று   குழந்தைகளுக்குத் தாயானாலும்  காதிப்  ஆறு  முறை   ஓடியிருக்கும் மாரத்தான் வீராங்கனை.  காதிப்பை  அங்கீகரிக்கும் விதமாக ‛Womens  Running’  என்ற  பெண்களுக்கான  பிரபல ஃபிட்னெஸ்  பத்திரிகை,  காதிப் படத்தை  அட்டையில் பிரசுரித்து கெளரவித்துள்ளது.

சர்வதேச அளவில்  ஆடைகள் விற்பனையில் இரண்டாவது இடத்தில் இருக்கும் ‛H & M’   நிறுவனம்,  ஹிஜாப்  உடையை பிரபலப்படுத்த  முதல்  தடவையாக   இஸ்லாமிய பெண்ணான மரியா இட்ரிஸ்ஸியை  மாடலாக்கி விளம்பரம் செய்தது.

பிரபல ஆடை வடிவமைப்பாளர்களான  டொமினிகோ டோல்ஸ், ஸ்டெபானோ காபன்னா போன்றோர் ஹிஜாப், புர்கினி உடைகளை வடிவமைத்து விற்பனைக்கு விட ஆரம்பித்து விட்டனர். டாமி  ஹில்பிஜெர், DKNY, மேங்கோ  போன்ற  ஆயத்த ஆடை நிறுவனங்களும்  ஹிஜாப், புர்கினி  விற்பனை செய்ய ஆரம்பித்து விட்டனர்.  ஒரு பக்கம்  ஹிஜாப், புர்கினி  குறித்து   விமர்சனங்கள் எழுந்தாலும்,  வர்த்தக ரீதியாக   ஹிஜாப், புர்கினியை   வடிவமைத்து  விற்பனை செய்வதில்  பல முன்னணி  வர்த்தக  நிறுவனங்கள்  ஆர்வம்  காட்டிவருவதற்குக்  காரணம் இல்லாமல் இல்லை.

நியூயார்க்கில் சென்ற மாதம் நடந்த அழகிகளின் அணிவகுப்பில், ஹிஜாப்,  புர்கினி அணிந்த பெண்கள் கலந்து கொண்டு அசத்தினர். தாம்சன்  ராய்ட்டர்  நிறுவனத்தின் கணக்கெடுப்பு, இஸ்லாமியர்கள்  தங்கள் பாரம்பரிய உடைகள் மற்றும் காலணிக்காக  ஓர் ஆண்டில் சுமார்  266 பில்லியன் டாலர்கள் (17,555 பில்லியன் ரூபாய்) செலவு செய்கிறார்களாம். அது 2019 -ஆம் ஆண்டில் 488 பில்லியனாக உயரும் என்று கணித்திருக்கிறார்கள். இந்த டிரென்டைப் பயன்படுத்தி ஹிஜாப், புர்கினி உடைகளை விற்று கல்லா கட்ட  வணிக நிறுவனங்கள் முடிவு செய்திருக்கின்றன. வணிகர்கள்  வியாபாரத்தில்  மத உணர்வுகளை பார்ப்பதில்லை. வியாபாரம்... விற்பனையை அதிகரித்தல் என்பது மட்டுமே அவர்களின்  நோக்கம். ஹிஜாப்,  புர்கினிக்கு  ஆங்காங்கே எதிர்ப்பு, தடை விமர்சனங்கள் இருந்தாலும், பல நாடுகளில் வணிகம் காரணமாக ஹிஜாப் புர்கினிக்கு அங்கீகாரம் தருகிறார்களோ இல்லையோ ஹிஜாப் புர்கினி விற்பனைக்கு முக்கியத்துவம் தர ஆரம்பித்து விட்டார்கள்.  

http://www.dinamani.com/

  • தொடங்கியவர்

“காலின்றி கால்பந்து விளையாடும் சிறுவன்” - காணொளி

சாதிக்க ஊனம் தடையில்லை என்பதை நிரூபிக்கும் சிறுவன்.

  • தொடங்கியவர்

புரூஸ் லீ பிறந்த தினம் (நவம்பர் 27, 1940)

 
 

தற்காப்பு கலைக்கு உலக அங்கீகாரம் வாங்கிக் கொடுத்தவர் புரூஸ் லீ. இளைஞர்களின் ஆதர்ஷ நாயகன். உடம்பை எங்ஙனம் பேணுவது என உலகுக்கு கற்றுக் கொடுத்த ஆசான். தனது 33-வது வயதிலேயே புரூஸ் லீ மரணத்தை தழுவியது பெரும் இழப்பு. புரூஸ் லீ சண்டையிடும் வேகம் பிரமிக்கத்தக்கது. இவரது கைகளும் கால்களும்

 
 
 
 
புரூஸ் லீ பிறந்த தினம் (நவம்பர் 27, 1940)
 

தற்காப்பு கலைக்கு உலக அங்கீகாரம் வாங்கிக் கொடுத்தவர் புரூஸ் லீ. இளைஞர்களின் ஆதர்ஷ நாயகன். உடம்பை எங்ஙனம் பேணுவது என உலகுக்கு கற்றுக் கொடுத்த ஆசான். தனது 33-வது வயதிலேயே புரூஸ் லீ மரணத்தை தழுவியது பெரும் இழப்பு.

புரூஸ் லீ சண்டையிடும் வேகம் பிரமிக்கத்தக்கது. இவரது கைகளும் கால்களும் எதிரியை தாக்கும் வேகத்துக்கு அன்றைய திரையுலகத் தொழில்நுட்பத்தால் ஈடு கொடுக்க முடியவில்லை. பொதுவாக ஒரு வினாடிக்கு 24 கட்டங்கள் என்பதே கணக்கு. புரூஸ் லீயின் வேகத்துக்கு ஈடுகொடுக்க ஒரு வினாடிக்கு 34 கட்டங்களாக மாற்றியமைத்தனர்.

1940 27, நவம்பர் அமெரிக்காவின் சான் பிரான்சிஸ்கோவின் சைனா டவுன் பகுதியில் உள்ள ஜாக்சன் ஸ்ட்ரீட் மருத்துவமனையில் புரூஸ் லீ பிறந்தார். இவரது தந்தை லீ ஹோய்-சுவென், ஒரு நடிகர். தாய் கிரேஸ் ஒரு கத்தோலிகர்.

புரூஸ் லீக்கு பெற்றோர்கள் 'லீ ஜுன்பேன்' என பெயர் வைத்தனர். சீன மொழியில் இதற்கு உலக பாதுகாவலர் என்று பொருள். இந்த பெயர் அமெரிக்க நர்ஸின் வாயில் நுழையவில்லை 'ஜுன் பேன்' சிரமமாக இருந்ததால் அந்த நர்ஸ் புரூஸ் என செல்லமாக கூப்பிட, அதுவே பிற்காலத்தில் அவரது பெயராக நிலைபெற்றது.

புரூஸ் லீக்கு மூன்று மாதம் ஆனபோது அவரது குடும்பம் ஹாங்காங் வந்தது. 12 வயதுவரை லா செல் கல்லூரியில் மேல்நிலைக் கல்வி பயின்றார் புரூஸ் லீ. பிறகு புனித பிரான்சிஸ் சேவியர் கல்லூரியில் அவரது படிப்பு தொடர்ந்தது.

1959-ம் ஆண்டு தனது பதினெட்டாம் வயதில் ஹாங்காங் கேங்ஸ்டர் ஒருவரின் மகனை தாக்கினார் புரூஸ் லீ. இந்த சம்பவத்தால் பயந்து போன அவரது தந்தை, புரூஸ் லீயை சான் பிரான்சிஸ்கோ அனுப்பி வைத்தார்.

இந்த காலகட்டத்தில் புரூஸ் லீயின் புகழ் தற்காப்பு கலை வட்டாரத்தில் பரவ ஆரம்பித்தது. சான் பிரான்ஸ்கோவிலும், சியாட்டிலிலும் படிப்பை தொடர்ந்தவர் பிறகு வாஷிங்டன் பல்கலைக்கழகத்தில் பிலாஸபி பிரிவில் சேர்ந்தார். அங்கு தான் இவர் தனது மனைவி லிண்டா எமரியைச் சந்தித்தார்.

புரூஸ் லீயின் நடிப்பு வாழ்க்கை அவரது சிறு வயதிலேயே தொடங்கியது. அவரது தந்தை ஒரு நடிகர் என்பதால் தனது 18-வயதிற்குள் இருபது படங்களில் நடித்தார். அமெரிக்காவில் இருந்தபோது 'பேட்மேன்' படத்தின் தயாரிப்பாளர் வில்லியம் டோசியர் பார்வையில் பட்டது இவரது திரை வாழ்க்கையில் திருப்பு முனையை ஏற்படுத்தியது.

அவர் அமெரிக்காவில் இருந்தபோது ’தி கிரீன் ஹார்னட்’ , 'அயர்ன் சைடு’, 'ஹியர் கம் த பிரைடுசு’ ஆகிய தொலைக்காட்சி தொடர்களில் நடித்தார். அமெரிக்காவிலிருந்து ஹாங்காங் திரும்பிய புரூஸ் லீயுடன் கோல்டன் ஹார்வெஸ்ட் கம்பெனி தயாரிப்பாளர் ரேமண்ட் செள ஒப்பந்தம் செய்து கொண்டார். இவரது தயாரிப்பில் புரூஸ் லீ நடித்து வெளிவந்த முதல்படம் பிக்பாஸ். 1971-ல் வெளிவந்த இப்படத்திற்கு முன்பே ஹாங்காங் முழுவதும் பிரபலமாகியிருந்தார் புரூஸ் லீ. பாக்சிங் சாம்பியனாகவும்,'கிரவுன் காலனி சா சா’ சாம்பினாகவும் அறியப்பட்டிருந்த நேரத்தில் இப்படம் வெளியானது.

கடத்தல் முதலாளிகளுக்கும் அப்பாவி தொழிலாளிக்களுக்கும் இடையே நடக்கும் போராட்டமே 'பிக் பாஸ்' படத்தின் கதை. புரூஸ் லீயின் அதிவேக சண்டைகளும், கண்களில் அவர் காட்டிய வெறியும் படத்தை மிகப்பெரிய அளவில் வெற்றி பெற செய்தது. ஆசியாவில் 12 மில்லியன் டாலர்களை இப்படம் வசூலித்தது.

இதையடுத்து 1972-ல் 'பிஸ்ட் ஆஃப் பியூரி' படம் வெளியானது. தனது மாஸ்டரை கொன்றவர்களை புரூஸ் லீ பழிவாங்கும் கதை. நரம்புகள் புடைக்க எதிரியை ஒரே குத்தில் அவர் வீழ்த்தி ஆக்ரோஷமாக கூச்சலிடும் காட்சி ரசிகர்களின் ரத்த ஓட்டத்தை எகிறச் செய்தது. முப்பதுக்கும் மேற்பட்ட ஸ்டூடண்டுகளுடன் சண்டையிடும் காட்சி இதன் பிரதானம். 15 மில்லியன் டாலர்களை இப்படம் குவித்தது.

புரூஸ் லீ கதை எழுதி இயக்கிய 'வே டு த டிராகன்' படம் 'பிஸ்ட் ஆவ் பியூரி' வெளியான அதே ஆண்டு வெளியானது. (இப்படத்தை 'ரிடர்ன் ஆவ் த டிராகன்' எனவும் கூறுவர்). இப்படம் உலகம் முழுவதும் புரூஸ் லீயின் புகழை கொண்டு சேர்த்தது. அவருடன் சேர்ந்து குங்பூ கலையும் புகழடைந்தது.

இந்த காலகட்டத்தில் புரூஸ் லீயின் குங்பூ ஹாலிவுட் சினிமாவில் ஆழமான பாதிப்பை ஏற்படுத்தியது. முக்கியமாக 'வே டு த டிராகன்' படத்தின் இறுதிக்காட்சியில், தான் அமெரிக்காவில் இருந்தபோது சந்தித்த கராத்தே மாஸ்டர் சக் நாரிஸை புரூஸ் லீ பயன்படுத்தினார்.

அமெரிக்க தயாரிப்பு நிறுவனத்துடன் இணைந்து புரூஸ் லீ உருவாக்கிய படம் 'என்டர் த டிராகன்'. ஹாலிவுட்டை மட்டுமின்றி உலகையே ஆட்கொண்டது இந்தப் படம். அன்றைய அமெரிக்க டாலர் மதிப்பில் இது வசூலித்தது (அமெரிக்காவில் மட்டும்) 850, 000 டாலர்கள்! இன்றைய மதிப்பில் இது பல மில்லியன்கள் பெறும். உலகம் முழுவதும் இப்படம் 200 மில்லியன் டாலர்களை வசூலித்து புரூஸ் லீயை தற்காப்பு கலையின் முடிசூடா மன்னனாக்கியது.

ஆனால், இந்த வெற்றியை அவரால் பார்க்க முடியவில்லை; 'என்டர் த ட்ராகன்' வெளியாவதற்கு மூன்று வாரங்கள் முன்பு 1973-ம் ஆண்டு ஜுலை 20 மரணத்தை தழுவினார் புரூஸ் லீ. அன்று இரவு தலைவலி என்று தூங்கச் சென்ற புரூஸ் லீக்கு தூக்க மாத்திரை ஒன்று கொடுக்கப்பட்டது. அதன் பின் அவர் எழவே இல்லை. 'கோமா' நிலைக்கு சென்றவர் ஹாங்காங் குயின் எலிசபெத் மருத்துவமனையில் நினைவு திரும்பாமலே காலமானார். இன்று வரை புரூஸ் லீயின் மரணம் மர்மமாகவே உள்ளது.

இதே தேதியில் நிகழ்ந்த முக்கிய நிகழ்வுகள்

* 1895 - ஊர்ஃபா என்ற இடத்தில் 3,000 ஆர்மேனியர்கள் ஓட்டோமான் படைகளினால் உயிருடன் எரிக்கப்பட்டனர்.


* 1895 - பாரிசில் அல்பிரட் நோபல், நோபல் பரிசுக்கான திட்டத்தை தெரிவித்து தனது சொத்துக்களை அப்பரிசுக்கான மூலதனமாக அறிவித்தார்.


* 1935 - இரத்மலானை விமான நிலையத்துக்கு முதலாவது விமானம் மதராசில் இருந்து வந்திறங்கியது.


* 1940 - ருமேனியாவில் இரண்டாம் கரோல் மன்னனின் ஆதரவாளர்கள் 60 பேரை தளபதி இயன் அண்டோனெஸ்கு கைது செய்து தூக்கிலிட்டான்.


* 1944 - இரண்டாம் உலகப் போர்: ஸ்டபோர்ட்ஷயரில் ஆங்கிலேய விமானப்படைத் தளத்தின் ஆயுதக் கிடங்கில் ஏற்பட்ட பெரும் விபத்தில் 70 பேர் கொல்லப்பட்டனர்.

* 1964 - பனிப்போர்: இந்தியப் பிரதமர் ஜவகர்லால் நேரு அணு ஆயுதச் சோதனைகளை நிறுத்தும்படி ஐக்கிய அமெரிக்காவையும் ரஷ்யாவையும் கேட்டுக்கொண்டார்.


* 1971 - சோவியத்தின் மார்ஸ் 2 விண்கலம் தனது துணை விண்கோள் ஒன்றை செவ்வாய்க் கோளில் இறக்கியது. இது செவ்வாயின் மோதி செயலிழந்தது. செவ்வாயில் இறங்கிய முதலாவது கலம் இதுவாகும்.


* 1975 - கின்னஸ் உலக சாதனை நூலை ஆரம்பித்து வைத்த ரொஸ் மாக்வேர்ட்டர், ஐரிஷ் குடியரசு ராணுவத்தால் சுட்டுக் கொல்லப்பட்டார்.


* 1983 - கொலம்பியாவின் போயிங் 747 விமானம் ஸ்பெயின் தலைநகர் மாட்ரிட் அருகே வீழ்ந்து நொறுங்கியதில் 183 பேர் கொல்லப்பட்டனர்.


* 1989 - ஈழப்போரில் இறந்த போராளிகளை நினைவுகூரும் முகமாக மாவீரர் நாள் தமிழீழ விடுதலைப்புலிகள் அமைப்பினரால் அறிவிக்கப்பட்டது.

* 1999 - நியூசிலாந்தின் முதலாவது பெண் பிரதமராக தொழிற்கட்சியைச் சேர்ந்த ஹெலன் கிளார்க் தேர்வு செய்யப்பட்டார்.


* 2001 - ஹபிள் விண்வெளித் தொலைநோக்கி மூலம் ஓசிரிஸ் கோளில் ஆவியாகக்கூடிய நிலையில் ஐதரசன் மண்டலம் கண்டுபிடிக்கப்பட்டது. சூரிய குடும்பத்திற்கு வெளியே உள்ள கோள் ஒன்றில் வளி மண்டலம் கண்டுபிடிக்கப்பட்டது இதுவே முதல் தடவை.


* 2006 - கனடாவில் பிரெஞ்சு மொழி பேசும் மக்களை பெரும்பான்மையாக கொண்ட கியூபெக் மாகாணத்தைச் சேர்ந்தவர்கள் தனியான தேச இனம் என்ற அங்கீகாரத்தை கனடிய நாடாளுமன்றம் வழங்கியது.


* 2007 - ஈழப்போர்: கிளிநொச்சியில் அமைந்துள்ள புலிகளின் குரல் வானொலியின் ஒலிபரப்பு நிலையம், நடுவப்பணியகம் ஆகியவற்றின் மீது இலங்கை வான்படையின் வானூர்திகள் வான்குண்டுத் தாக்குதலை நடத்தியதில் 9 பேர் கொல்லப்பட்டு 10 பேர் படுகாயமடைந்தனர்.


* 2007 - ஈழப்போர்: இலங்கை ராணுவத்தினர் கிளிநொச்சி மாவட்டம், ஐயன்கேணியில் நடத்திய கிளைமோர் தாக்குதலில் 9 பாடசாலைச் சிறுமிகள் உட்பட 11 பேர் படுகொலை செய்யப்பட்டனர்.


* 2013 - இலங்கையில் பயணிகள் காசோலை வழங்கும் நடைமுறை முடிவுக்கு வந்தது.

 

http://www.maalaimalar.com

  • தொடங்கியவர்

இந்திய விவசாயத்தை நேசித்த ஃபிடல் காஸ்ட்ரோ..!

ஃபிடல்

மது ஊரில் ஒரு குடும்பத்திற்கு ஒரு மாடும் முருங்கை மரமும் இருந்தால் போதும், அந்தக் குடும்பம் வாழ்க்கையில் முன்னேறிவிடும் என சொல்வது வழக்கம். ‘‘முருங்கை இந்தியாவின் நாட்டுப் பயிர். இதன் இலைகளில் ஏராளமான சத்துக்களும், மருத்துவக் குணங்களும் உள்ளன. கியூபா மக்கள் முருங்கையைப் பயன்படுத்திக்கொள்ள வேண்டும்" என இதே அறிவுரையை சில ஆண்டுகளுக்கு முன்னால் கியூபா நாட்டின் அதிபர் ஃபிடல் காஸ்ட்ரோ தன் மக்களுக்கும் சொல்லியிருக்கிறார். உலக வல்லரசு என மார்தட்டிக்கொண்டிருக்கும் அமெரிக்காவிற்கு சிம்ம சொப்பனமாக இருந்தவர்தான், கியூபா மாவீரன் ஃபிடல் காஸ்ட்ரோ. கம்யூனிசம் பற்றி தெரிந்திருக்கும் அளவிற்கு விவசாயத்தை பற்றியும் நன்கு அறிந்து வைத்திருந்தார்.

உலக அளவில் இயற்கை விவசாயத்தில் கியூபாதான் முன்னிலை வகிக்கிறது. இன்று நாம் அமைக்கும் வீட்டுத்தோட்டத்திற்கும் அவர்கள்தான் முன்னோடி. ஆனால், சில நாட்களுக்கு முன்னால் வீட்டுக்கு ஒரு முருங்கை மரத்தை வளர்க்க சொல்லி கியூபா அரசே அறிவித்தது. முன்னாள் அதிபர் ஃபிடல் காஸ்ட்ரோ ஹவான்னாவில் உள்ள தன்னுடைய வீட்டுத்தோட்டத்தில் முருங்கை மரத்தை சாகுபடி செய்திருக்கிறார். தினமும் முருங்கை மரத்தை பராமரிக்கிற வேலையையும் காஸ்ட்ரோதான் செய்து வந்தார். அவர் நேசித்த முருங்கைக்கு பின்னால் முக்கியமான சம்பவம் காரணமாக இருகிறது.

14_15375_18500.jpg

கியூபாவிற்குப் பக்கத்து நாடான, ஹைட்டி தீவில் 2010-ம் வருடம் மிகப்பெரிய பூகம்பம் ஏற்பட்டது. இதனால் லட்சக்கனக்கான மக்கள் பாதிக்கப்பட்டார்கள். பக்கத்து நாட்டில் நடந்த, இந்தத் தகவலைக் கேட்டவுடன் ஃபிடல் காஸ்ட்ரோ கியூபாவில் உள்ள மருத்துவர்களையும், தன்னார்வத் தொண்டர்களையும் அனுப்பி உதவி செய்தார். உதவி செய்யச் சென்றவர்கள், உடனே ஒரு செய்தியை அனுப்பினார்கள். அந்த செய்தியில் " இங்கே பூகம்பம் ஏற்பட்டு அதிகமான மக்கள் இறந்துவிட்டனர். கூடவே காலரா நோய் வேகமாக பரவிக் கொண்டுள்ளது. இந்த தகவலை கேள்விப்பட்ட ஃபிடல் காஸ்ட்ரோ கியூபாவில் உள்ள மருத்துவத்தலைவரையும், முக்கியமான அதிகாரிகளையும் அழைத்துப் பேசியுள்ளார். ஹைட்டி தீவு மக்கள், காலரா நோயிலிருந்து மீண்டு வர என்ன செய்யலாம். இந்த நோய்க்கு என்ன தீர்வு, என்ன மருந்து கொடுக்கலாம் என அந்த கூட்டத்தில் விவாதித்தார். அப்போது கூட்டத்தில் கலந்துகொண்ட பின்லே இன்ஸ்ட்டியூட் (Finlay Institute) மருத்துவ ஆராய்ச்சி மைய டாக்டர் கெம்பா ஹெர்கோ (Dr.Campa Huergo) ‘ஹைட்டி தீவு மக்களுக்கு நோய் எதிர்ப்பு சக்தி கொடுக்கக் கூடிய பொருள் இருக்கிறது' என சொல்லியிருக்கிறார்.

p41a_18086.jpg

"அந்த மருந்துப் பொருள் எங்கே இருக்கிறது, எப்படி வாங்கலாம் சொல்லுங்கள்" என கேட்டார் ஃபிடல். "இந்தியாவில் உள்ள முருங்கை இலைக்குத்தான், நோய் எதிர்ப்புச் சக்தியும், விரைவான ஆற்றல் கொடுக்கின்ற திறனும் இருக்கிறது" என்றார், டாக்டர் கெம்பா ஹெர்கோ. இந்தியா என பெயரை கேட்டவுடனே காஸ்ட்ரோவோட புருவங்கள் விரிய ஆரம்பித்தன. ஏனெனில் அவருக்கு இந்தியா மேல் எப்போதுமே தனிப் பாசம் உண்டு. டாக்டர் கெம்பா ஹெர்கோவுக்கும் கூட இந்திய முருங்கை மேல் ஆர்வம் ஏற்பட்டது. காரணம் பல வருஷமாக யோகா செய்து பலன் அடைந்திருந்தார்கள். இதனால், இந்தியா மேல், இவர்களுக்கு கூடுதல் அன்பு இருந்தது. ஆனால், அந்தக் காலகட்டத்தில் ஃபிடல் காஸ்ட்ரோ கியூபாவோட அதிபர் கிடையாது. அதிகாரம் இல்லாமல் இருந்தால் என்ன? உதவி செய்ய மனசு போதுமே. உடனே, டாக்டர் கெம்பா ஹெர்கோவை இந்தியாவுக்கு அனுப்பி வைத்தார் காஸ்ட்ரோ.

இந்த டாக்டர் முதலில் வந்தது தமிழ்நாட்டிற்குத்தான். முருங்கை சாகுபடி, மருத்துவப் பயன்பாடு என அதிகமான தகவல்களை சேகரித்தார். அதற்கடுத்து ஆந்திரா, கேரளாவிற்கும் சுற்றுப்பயணம் செய்து முருங்கை பற்றிய தகவல்களை திரட்டினார். கியூபாவிற்குப் போகும்போது இந்திய முருங்கைச் செடிகளையும் மறக்காமல் எடுத்துக்கொண்டு சென்றார். ஹைட்டி தீவு மக்களுக்கு, நோய் தாக்கிய மக்களுக்கு முருங்கைக் கீரைகளை இறக்குமதி செய்தும் கொடுத்திருக்கிறார். காலரா நோயும் கட்டுக்குள் வந்தது. இந்தத் தீவு மக்களுக்கும் இந்திய முருங்கை மரங்களை வளர்த்து, கீரை சாப்பிடச் சொல்லியிருக்கிறார்.

அந்த டாக்டர் எடுத்துக்கொண்டு சென்ற முருங்கைச் செடிகள்தான், காஸ்ட்ரோ வீட்டுத்தோட்டம் தொடங்கி, கியூபா முழுக்க வளர்ந்து நிற்கிறது. ‘‘என்னுடைய ஆரோக்கியத்திற்கும், சுறுசுறுப்புக்கும் இந்திய முருங்கைக் கீரைதான் காரணம்’’என வாய் நிறையப் புகழ்ந்து சொல்லிக் கொண்டிருந்தவர், 90 வயது இளைஞர் ஃபிடல் காஸ்ட்ரோ. கம்யூனிச புரட்சியாளரான கியூபா நாட்டு நாயகன் காஸ்ட்ரோ உடல்நலக்குறைவால் நேற்று(26.11.2016) காலமானார். கம்யூனிசம் தவிர்த்து, விவசாயத்தின் பக்கமும் தன் நாட்டத்தை செலுத்தியவர் என்பது நம்மில் பெரும்பாலோனோருக்கு தெரிந்திருக்க வாய்ப்பில்லை.

 

vikatan

Edited by நவீனன்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.