Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இளமை புதுமை பல்சுவை

Featured Replies

  • தொடங்கியவர்

விலங்கோடு உறவாடு!

 

p62a.jpg

நியூயார்க்கைச் சேர்ந்த டாபர் ப்ரோப்பி என்பவர், ‘நானும் என் மகனும்தான் பல்லுயிர் உலகின் சாம்பியன்கள்’ என ஸ்டேட்டஸ் தட்டி, தங்களது போட்டோக்களை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்திருக்கிறார். ‘என்னய்யா அங்க சத்தம்...’ என அவரது பக்கத்தைப் பார்வையிட்டால், எல்லா போட்டோக்களிலும் தன்னைப் போலவே காஸ்ட்யூம் போட்ட தனது நாய்க்குட்டியோடு காட்சி தந்திருக்கிறார்!

p62b.jpg

p62c.jpg

p62d.jpg

பல்லுயிர்த் தன்மையை ஊக்குவிக்கும் விதமாக, விலங்குகளோடு நாம் இணைந்து வாழ வேண்டும் என்பதை வலியுறுத்துவதற்காகத் தனது செல்ல நாய் ரோஸன்பெர்க்கைத் தன்னைப் போலவே மாற்றி, ‘மகன்’ எனக் குறிப்பிட்டு தினமும் புகைப்படங்களை `அப்லோடு' செய்து வருகிறார்.

p62e.jpg

p62f.jpg

சமூக நலன்களை வலியுறுத்தும் வாசகங்களோடு வித்தியாசமான உடை அணிந்து போட்டோக்களைப் பரவவிடும் இவர்கள், சமீபத்தில் முடிந்த அமெரிக்கத் தேர்தலில் எல்லோரும் வாக்களிக்க வலியுறுத்தி அந்நாட்டு தேசியக்கொடி போன்ற உடையணிந்தும் வைரலானார்கள். இதைப்போல இனி விலங்குகளுக்கும், மனிதர்களுக்கும் உதவும் விதமாக நிறைய வித்தியாசமான முயற்சிகளை மேற்கொள்ளப் போவதாகவும் தெரிவித்திருக்கிறார்.

என்ன செய்யக் காத்திருக்கிறாரோ?

vikatan

  • Replies 11.3k
  • Views 1.5m
  • Created
  • Last Reply
  • தொடங்கியவர்

நீங்கள் இப்படி மாறினால் குழந்தைகளுக்கு உங்களைப் பிடிக்கும்! #GoodParent

 

குழந்தைகளுக்கு

குழந்தைகள் உலகம் மகிழ்ச்சியானது. அவர்களின் ராஜ்ஜியத்தில், ராஜா, மந்திரி, ஜோக்கர் எல்லாமே அவர்கள்தான். குழந்தைகளுக்கு கற்பனை உலகத்துக்குள் சிறகடித்துப் பறப்பது மிகவும் எளிது. அவர்களிடம்  ஏமாற்று, பொய், பித்தலாட்டம், சூது, வன்முறை போன்ற கயமைகள் கிடையாது. ஆனால், பெரியவர்கள் ஆனதும் எல்லோரும் அப்படி இருப்பதில்லை. வேலைப் பளு, பொருளாதார நெருக்கடிகள், உறவுகளில் ஒட்டாத நிலை என ஒவ்வொருவருக்கும் ஒரு சூழல் மலைப்பாம்பைப் போல கழுத்தைச் சுற்றிக்கொண்டிருக்கும். ஆனாலும், அப்படியே இருந்துவிடுவதும் நல்லதல்ல. நீங்கள் கொஞ்சமாவது உங்கள் குழந்தைகளின் மனம்போல மாற வேண்டியது அவசியம். எப்போதும் குழந்தைகளைப்போல மகிழ்ச்சியாக இருக்க, நீங்கள் என்ன செய்யவேண்டும் என்பதைப் பார்க்கலாம்.

முதலில், குழந்தையை சந்தோஷமாக இருக்க விடுவது நல்லது. அப்போதுதான் பெற்றோர்கள் சந்தோஷமாக இருக்க முடியும். எப்படியென்றால், குழந்தைகளுக்கு ஒரு பிரச்னை என்றால் அதன் பாதிப்பு அவர்களை விட பெற்றோர்களையே அதிகம் தாக்கும். உடலளவிலும் மனதளவிலும் குழந்தை பாதுகாப்புக் கவசம் நீங்களே.

குழந்தை சின்னச்சின்ன விஷயங்களைப் பார்த்துக் குதூகலிக்கும். பட்டம் பறப்பதையும் வானத்தில் விமானம் பறந்து செல்வதையும் பார்த்து அவர்கள் அளப்பறிய ஆனந்தம் அடைவார்கள். குயில் கூவுவதையும், இரு சேவல்கள் சண்டைபோடுவதையும் பார்த்து குதூகலிப்பார்கள். அதை நீங்கள் காதில் விழாததுபோல கேட்டு, 'சேவல்னா சண்டை போடத்தான் செய்யும்' என்று முகத்தில் எந்தவித உணர்ச்சியும் இல்லாமல் சொல்லாதீர்கள். சேவல் சண்டை போடுவது உங்களுக்குத்தான் பழைய விஷயம். ஆனால், உங்கள் குழந்தைக்கோ முதன்முறையாகப் பார்க்கும் காட்சி. அவன் கண்டுகொண்ட உண்மையைத் தயவுசெய்து மறுக்காதீர்கள். இங்கே, உங்கள் குழந்தை ஒரு கண்டுபிடிப்பாளனாக இருக்கிறான் என்பதையும் நீங்கள் அங்கீகரிக்கத் தவறிவிடும்போது, அவன் அதை யாரிடம் சொல்லி பெருமைப்பட முடியும்? 'சண்டைபோடும் இந்தச் சேவலும் கூவும் தெரியுமா... இரவு விடியப்போகிறது என்பதை ஊருக்கே கேட்கும்படிக் கூவி, நம்மைத் தினமும் எழுப்புவது சேவல்கள்தான்' என்று சொல்லி சேவல் போல குரல் எழுப்பிக் காட்டுங்கள். குழந்தையையும் குரல் எழுப்பச் செய்யுங்கள். அப்படிச் செய்யும்போது, உங்கள் குழந்தையும் மகிழ்ந்திருப்பான், அந்த மகிழ்ச்சி உங்களையும் தொற்றிக்கொள்ளும். 

p16_18244.jpg

குழந்தைகளுடன் விளையாடுவது மிக முக்கியம். அதுவும் குழந்தைகளுக்குப் பிடித்தமாதிரி விளையாடப் பழக வேண்டும். விளையாடும்போது, குழந்தை ஓடிச்சென்று ஒளிந்துகொள்ளும் இடம் உங்கள் பார்வையில் தெரியும்படியாக இருக்கும். குழந்தையை, நீங்கள் கஷ்டப்பட்டுத் தேடிக் கண்டுபிடிப்பதாக பாவனைசெய்து அவர்களைக் கண்டுபிடிப்பதையே குழந்தை விரும்பும். எவ்வளவு தேடியும் கண்டுபிடிக்க முடியவில்லை என்பதாகச் சொல்லி, கையை மட்டும் தூக்கி உதவுமாறு சொன்னால், கூடுதல் சந்தோஷத்துடன் குழந்தைகள் விளையாட்டை ரசிப்பார்கள். இந்தமாதிரி மாறும் நிலையில் மாறாமலிருப்பது சந்தோஷம் தரும்.

உங்கள் மன அழுத்தத்தை வேறு வடிவங்களில் காட்டாமல், என்ன நடந்ததோ அதை ஏற்றுக்கொண்டு, அதற்குக் காரணமானவர்களை மன்னிக்கும் குணத்தைப் பெறுவதே உயர்ந்த குணம். ஏதோவொரு வேகத்தில் குழந்தையை பெரியவர்கள் தண்டித்துவிட்டாலும் ஒரு சில நிமிடங்கள் அவர்களை மன்னிப்பதோடு, அதை மறந்துவிடவும் செய்கிறார்கள். அந்தக் குணத்தை குழந்தைகளிடம் கற்றுகொள்வது மட்டுமல்ல, அதை குழந்தைகளிடமும் பயன்படுத்த வேண்டும். மிகச்  சாதாரணமான தவறுகளுக்கு கடிந்துகொள்வதைத் தவிர்க்க வேண்டும். கையில் எடுத்துவரும் தண்ணீரை கீழே கொட்டிவிட்டால், உடனே திட்டவோ, அடிக்கவோ செய்யாமல் ஒரு துணியை நீங்கள் எடுத்துக்கொள்ளுங்கள்; குழந்தைக்கும் ஒரு துணியைத் தந்து இருவரும் பாட்டுப் பாடிக்கொண்டே துடையுங்கள். பிறகு, சிறிது நேரம் கழித்து 'நீ தண்ணீர் கொட்டியதால் இவ்வளவு நேரம் வேஸ்ட் ஆயிடுச்சு... இந்நேரத்தில் டி.வி-யில் கார்ட்டூன் பார்த்திருக்கலாம் இல்லையா" என்றால், புரிந்துகொள்வதோடு உங்களையும் பிடித்துப்போகும்.

school-children_18504.jpg


நீங்கள், ஒரு வித்தியாசமாக உடை அணிந்து செல்லும்போது, பிறர் என்ன நினைப்பார்களோ, என்ன சொல்வார்களோ எனத் தயங்காதீர்கள். தைரியமும் நம்பிக்கையும் இருந்தால், இதுவரை செய்யாத புது விஷயங்களையும் சிறப்பாகச் செய்யமுடியும். நீங்கள், உங்கள் குழந்தைகளுடன் பர்ச்சேஸ் பண்ண கடைக்குச் சென்றால், இதை வாங்கலாம் அப்பா, இதை வாங்கலாம் அம்மா என ஆவல் மிகுதியாக எல்லாவற்றையும் எடுப்பார்கள். அது தவறொன்றுமில்லை. ஒவ்வொன்றையும் நிதானமாகப் பாருங்கள். ஒவ்வொன்றின் நிறம், விலை, அளவு இதுபற்றியெல்லாம் குழந்தைகளே சொல்லும்வரை காத்திருங்கள். கூறும் பதிலைப் பாராட்டுங்கள். வருடத்தில் நான்கைந்து முறைகளே ஜவுளிக்கடைகளுக்குச் செல்லப் போகிறீர்கள். அதனால் அவசரம் காட்ட வேண்டாம். ஒரு கட்டத்தில் அவர்களே சோர்வாகிவிடுவார்கள். நீங்கள் அதுவரை இந்த விளையாட்டைத் தொடருங்கள். குழந்தைகள் ஜவுளிக்கடையில் நுழையும்போது இருந்த மகிழ்ச்சியோடு வெளியே வரும்போதும் இருப்பார்கள்.

குழந்தைகள் எப்போதும் கேள்விகள் கேட்டுக்கொண்டே இருப்பார்கள். அதற்கான பதிலையும் தேடிக்கொண்டே இருப்பார்கள். அதற்காக குழந்தைகளிடம் வெறுப்பைக் காட்டாதீர்கள். நன்றாக கவனித்தீர்கள் என்றால் அதில் ஒரு உண்மை, ஆச்சர்யம் இருக்கும். இதுநாள் வரை நீங்கள் அதுபற்றி யோசித்திருக்கவே மாட்டீர்கள். அப்படி ஏதேனும் நிகழ்ச்சி நடந்தால் அதைக் கொண்டாடுங்கள். வீட்டுக்கு வரும் விருந்தினரிடம் உங்கள் குழந்தைதான் அதை கற்றுக்கொடுத்ததாக சொல்லுங்கள்.

ஒரு விஷயத்தைப் பற்றிய பல கற்பனை எண்ணத்துடன் இருங்கள். பிஸ்கட் மலை, சாக்லேட் ஆறு, ஐஸ்கிரீம் வீடு எனப் பலவிதமாகக் கற்பனை செய்யும் உங்கள் குழந்தையைப் போல இருக்கட்டும். முதலில் சின்னச்சின்ன  விஷயத்திலிருந்து தொடங்குங்கள். உங்கள் குழந்தையின் பிறந்தநாளை எப்படி ஜாலியாகக் கொண்டாடலாம் என கற்பனை செய்யுங்கள். அதற்கு, உங்கள் குழந்தைகளிடமே ஐடியா கேளுங்கள்... அதில் சாத்தியமுள்ள விஷயங்களை அவசியம் செய்யுங்கள். குழந்தைகளின் நலன் குறித்த அக்கரையும் முக்கியம். குழந்தைகளுக்கு உங்களைப் பிடிப்பதோடு உங்களுக்கே உங்களைப் பிடித்துப்போகும். எப்போதும் மன அழுத்தம், டென்ஷன் உங்களை நெருங்காது!

vikatan

  • தொடங்கியவர்

சீனாவில் 50,085 பேர் நடனமாடி உலக சாதனை

 

சீனாவில் 50.085 பேர் சேர்ந்து வித்தியாசமான உலக சாதனை ஒன்றை நிகழ்த்தியுள்ளனர். சீனாவில் உள்ள 12 நகரங்களில் 50,085 பேர் சேர்ந்து நேர்க்கோட்டு குழு நடனம் (world's Largest line dance) ஆடி உலக சாதனை நிகழ்த்தியுள்ளனர்.

 

 

சீனாவில் உள்ள பல நடன அமைப்புகளில் இருந்து பலர் இந்த மாபெரும் சாதனைக்கு பங்களித்துள்ளனர். அதே போன்று பொது மக்களில் பலரும் இந்த குழு நடத்தில் பங்கெடுத்துள்ளனர்.


இந்த சாதனையில் பங்கேற்றவர்கள் அனைவரும் சிவப்பு நிற உடை அணிந்து நடனமாடினர். சீனாவின் பல நகர்ங்களில் குழு நடனம் ஆடியதால், வெயில், பனி என்ற பல்வேறு சூழலில் இந்த சாதனை நிகழ்த்தப்பட்டுள்ளது. 


முன்னர் 31,697 பேர் சேர்ந்து இதே போன்ற சாதனையை சீனா நிகழ்த்தியது குறிப்பிடத்தக்கது

vikatan

  • தொடங்கியவர்

 

கிளிக் தொழில் நுட்ப காணொளி

'தேங்க்ஸ் கிவிங்` என்ற அமெரிக்க பண்டிகை விருந்திற்கு உதவும் ட்ரோன், வழுக்கி விழாத ரோபோ, திருப்பலி பூசை மற்றும் பாவமன்னிப்பு கோரும் இடத்தை அறிய வெளியாகியுள்ள செயலி உள்ளிட்டவை அடங்கிய காணொளி.

  • தொடங்கியவர்

ஆன்டர்ஸ் செல்ஷியஸ்

 
andaas_3094218f.jpg
 
 

ஸ்வீடனைச் சேர்ந்த வானியலாளர், இயற்பியலாளர் மற்றும் கணிதவியலாளருமான ஆன்டர்ஸ் செல்ஷியஸ் (Anders Celsius) பிறந்த தினம் இன்று (நவம்பர் 27). அவரைப் பற்றிய அரிய முத்துக்கள் பத்து:

* ஸ்வீடனில் உப்சாலா என்ற இடத்தில் பிறந்தவர் (1701). தந்தை உப்சாலா பல்கலைக்கழகத்தில் வானியல் பேராசிரியர். எனவே இவர் இயல்பாகவே கணிதம் மற்றும் அறிவியலில் திறமை பெற்றிருந்தார். சொந்த ஊரில் ஆரம்பக் கல்வி கற்றார்.

* அப்பா பேராசிரியராக இருந்த உப்சாலா பல்கலைக்கழகத்திலேயே இவரும் அறிவியலை முதன்மைப் பாடமாகப் படித்தார். 1730-ல் அதே பல்கலைக்கழகத்தில் வானியல் பேராசிரியராக நியமிக்கப்பட்டார். அங்கு பல ஆய்வுகளிலும் ஈடுபட்டார்.

* பூமியிலிருந்து சூரியன் இருக்கும் தொலைவை அளப்பதற்கான புதிய முறை தொடர்பான ‘நோவா மெத்தடஸ் டிஸ்டான்டியம் சொலிஸ் ஏ டெர்ரா டிடர்மினன்டி’ என்ற ஆய்வுக் கட்டுரையை வெளியிட்டார். சூரிய உதயம் (auroral phenomena) குறித்தும் ஆய்வுகள் மேற்கொண்டார். புவிமுனைச் சுடர்வு நிகழ்வு குறித்துப் பிற விஞ்ஞானிகளுடன் இணைந்து ஆய்வு மேற்கொண்டார்.

* வடமுனைச் சுடர்வுக்கும் (aurora borealis) புவி காந்தப் புல மாற்றங்களுக்கும் உள்ள தொடர்பை முதலில் கூறியவர் இவர்தான். வலிமையான இந்தச் சுடர்வுச் செயல்பாட்டின்போது, காந்த ஊசிகள் பெரிய அளவில் விலக்கமடைவதை இவர் கண்டார்.

* 1730களில் ஜெர்மனி, இத்தாலி, பிரான்ஸ் உள்ளிட்ட பல நாடுகளுக்குப் பயணம் மேற்கொண்டார். அப்போது புகழ்பெற்ற பல வானியலாளர்களுடன் இணைந்து பணிபுரிந்தார். 1736-ல் ‘ஃபிரான்ஸ் அகாடமி ஆஃப் சயின்சஸ்’ ஏற்பாடு செய்த அட்சரேகையின் கோணத்தை அளவிட உருவாக்கப்பட்ட குழுவில் இடம்பெற்றார். பூமியின் வடிவத்தைத் தீர்மானிப்பதற்கான ஆய்வுகளை மேற்கொண்ட இவர், 1738-ல் ‘டி அப்சர்வேஷனிபஸ் ப்ரோ டெல்லுரிஸ் டிடர்மினன்டா’ என்ற நூலை வெளியிட்டார்.

* புதிய வானியல் கண்காணிப்பு நிலையம் ஒன்றை உருவாக்குவதற்காக ஏராளமாக நிதி திரட்டினார். 1741-ல் உப்சாலா வானியல் ஆய்வகத்தை நிறுவினார். அங்கு தான் மேற்கொண்ட நீண்ட ஐரோப்பியப் பயணத்தின்போது மிகவும் பாடுபட்டுச் சேகரித்த புத்தம் புதிய தொழில்நுட்பத்தாலான வானியல் கண்காணிப்புக் கருவிகளைப் பொருத்தினார்.

* சில குறிப்பிட்ட நட்சத்திரங்களின் பிரகாசத்தை அளக்க முதன் முதலாக வண்ணக் கண்ணாடித் தட்டுகளைப் பயன்படுத்தினார். அதுவரை வெற்றுக் கண்களால்தான் இவை மதிப்பிடப்பட்டு வந்தன.

* மேலும் ஒளிமறைப்புகள் உள்ளிட்ட பல்வேறு வானியல் ஆய்வு தொடர்பான கருவிகளை உருவாக்கினார். வெப்பநிலையை அளக்க 1742-ல் ஒரு அளவுகோலை உருவாக்கினார். இது முதலில் ‘ஸ்வீடிஷ் தெர்மாமீட்டர்’ எனக் குறிப்பிடப்பட்டது. பின்னர், அது இவரது பெயராலேயே உலகம் முழுவதும் ‘செல்சியஸ் அளவுகோல்’ என்று குறிப்பிடப்படுகிறது.

* ஸ்வீடன் நாட்டுப் பொது நில வரைபடத்தை உருவாக்கப் பல புவிபரப்பு அளவீடுகளைக் கண்டறிந்தார். 1941-ல் ‘அரித்மேடிக்ஸ் ஃபார் தி ஸ்வீடிஷ் யூத்’ என்ற நூலை வெளியிட்டார். ஸ்வீடன் அரசு அறிவியல் கல்விக் கழகத்தின் உறுப்பினராகவும் செயல் பட்டார். வானியலில் கிரகணங்கள் மற்றும் பல்வேறு வானியல் பொருள்களைக் குறித்தும் கண்காணிப்புகளை மேற்கொண்டார்.

* இவரது மரணத்துக்குப் பிறகு வானியல் குறித்து இவர் எழுதி வைத்திருந்த ஏராளமான ஆய்வுக் கட்டுரைகள் வெளியிடப்பட்டன. 18-ம் நூற்றாண்டின் தலைசிறந்த வானியலாளர்களில் ஒருவரான ஆன்டர்ஸ் செல்ஷியஸ் 1744-ம் ஆண்டு காசநோயால் பாதிக்கப்பட்டு இறந்தார்.

tamil.thehindu

  • தொடங்கியவர்

15134754_1226095497436576_1568280889264076674_n.jpg?oh=25055929cad9f7593ceadfa7278ab75d&oe=58C04250

:grin:

  • தொடங்கியவர்

இன்பாக்ஸ்

 

 

58p1.jpg

`எப்படி இருந்த டீம் இப்படி ஆகிடுச்சே!' என உலகம் முழுவதும் உள்ள கிரிக்கெட் ரசிகர்கள் ஆஸ்திரேலிய அணிக்காகக் கண்ணீர் வடிக்கிறார்கள். கிரிக்கெட் வரலாற்றில் தொடர்ந்து 16 டெஸ்ட் போட்டிகளில் தோல்வியே சந்திக்காத அணியாக இரண்டு முறை சாதனை படைத்த ஆஸ்திரேலியா, இப்போது 5 டெஸ்ட் போட்டிகளில் தொடர் தோல்விகளைச் சந்தித்திருக்கிறது. இலங்கைக்கு எதிரான டெஸ்ட் போட்டிகளில் 0-3 என ஒயிட்வாஷ் ஆன ஆஸ்திரேலியா, அடுத்ததாக தென் ஆப்பிரிக்காவிடம் 0-2 என அடிவாங்கியிருக்கிறது. இதில் தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் ஒரு இன்னிங்ஸில் வெறும் 85 ரன்களுக்கு ஆல்அவுட் ஆகி பரிதாபநிலைக்குப் போனது ஆஸ்திரேலியா. ஒரே சோகமா இருக்கே!


58p2.jpg

டம் வெளிவருவதற்கு முன்னரே, `2016-ம் ஆண்டின் ஆஸ்கர் நிச்சயம் ஜெனிஃபருக்குத்தான்' என நம்பிக்கையுடன் இருக்கிறது ஜெனிஃபரின் ரசிகப் பட்டாளம். கிறிஸ்துமஸுக்கு வெளியாகவிருக்கும் `பாசஞ்சர்ஸ்' படத்தில் ஜெனிஃபரின் நடிப்பு டாப் க்ளாஸாம். பூமியில் இருந்து புதுக் கிரகத்துக்குப் போகும் 120 ஆண்டுகாலப் பயணத்தில், மனிதர்கள் அனைவரும் ஒரு பெட்டிக்குள் உறங்கும் நிலையில் வைக்கப்பட்டிருக்கின்றனர். ஆனால், பயணம் முடிய 90 வருடங்கள் இருக்கும் நிலையில் ஹீரோ கிரீஸ் பிராட்டும், ஹீரோயின் ஜெனிஃபர் லாரன்ஸும் கண்விழித்துவிடுகிறார்கள். அண்டவெளியில் தனியே தவித்துக்கொண்டிருக்கும் இவர்கள் பிழைத்தார்களா என்பதே படத்தின் கதை. ஆஸ்கர் அழகி!


58p3.jpg

ரசியல்வாதிகள் என்றால் தங்கள் உடல்நலன் குறித்த தகவல்களை வெளியே சொல்ல மாட்டார்கள் என்பதை உடைத்திருக்கிறார் மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ். ட்விட்டரில் மிக ஆக்ட்டிவான சுஷ்மா, கடந்த வாரம் `சிறுநீரகப் பிரச்னையால் சிகிச்சைக்காக டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கிறேன். தற்போது டயாலிசிஸ் நடைபெறுகிறது. சிறுநீரக மாற்று சிகிச்சைக்காக சில மருத்துவச் சோதனைகள் செய்துள்ளேன்' என்று ட்வீட் போட, இலவசமாக சிறுநீரக தானம் செய்ய, பல நூறு பேர் சுஷ்மாவுக்கு பதில் ட்வீட் போட்டிருக்கிறார்கள். நல்லது நடக்கும்!


வ்வோர் ஆண்டும் அந்த ஆண்டின் சிறந்த வார்த்தையை வெளியிட்டுவருகிறது ஆக்ஸ்ஃபோர்டு அகராதி. 2016-ம் ஆண்டின் சிறந்த, புதிய வார்த்தையாக `post-truth' என்னும் வார்த்தை தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறது. `மக்களின் விருப்பம் என்பது உண்மைகளைக் கடந்து தனிப்பட்ட உணர்வுகள் மற்றும் நம்பிக்கைகளைச் சார்ந்து உருவாகிறது' என்பதுதான் இதன் அர்த்தம். அரசாங்கத்தின் முடிவுக்கு எதிராக ஐரோப்பிய யூனியனில் இருந்து இங்கிலாந்து மக்கள் வெளியேற வாக்களித்தபோது, கருத்துக்கணிப்புகள் எல்லாவற்றையும் பொய்யாக்கி டொனால்ட் ட்ரம்ப் அமெரிக்கா அதிபராக வெற்றி பெற்றபோது எல்லாம் இந்த `போஸ்ட் ட்ரூத்' உலகம் முழுக்க மிக அதிகமாகப் பயன்படுத்தப்பட்டதாகத் தெரிவித்திருக்கிறது ஆக்ஸ்ஃபோர்டு. மக்கள் தீர்ப்பு!


58p4.jpg

`என் கையில் நிறைய 1,000, 500 ரூபாய் நோட்டுக்கள் இருக்கின்றன. இனிமேல் அது செல்லாது என நான் கவலைப்படப்போவது இல்லை. அதில் என் ஆட்டோகிராஃப்பைப் போட்டு மக்களுக்குக் கொடுப்பேன்' என கூலாக பேட்டி தட்டியிருக்கிறார் இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட் கோஹ்லி. நோட்டோகிராஃப்!

  • தொடங்கியவர்

கேரளா சிறையில் இ-நூலகம்

 

Prison-Bible%201_19372.jpg

கேரளாவின் பூஜ்புரா மத்திய சிறையில், சிறைவாசிகள் பயன்படுத்தும் வகையில் இ-நூலகம் கொண்டவரப்பட உள்ளது.  கேரளாவில் இருக்கும் மிகப் பழைய சிறைகளில் ஒன்றான பூஜ்புரா சிறையில் 1,300 கைதிகள் இருக்கின்றனர். ஏற்கனவே இந்த சிறையில் இருக்கும் நூலகத்தில் 15,000 புத்தகங்கள் இருக்கிறது. தற்போது, அங்கு இ-நூலகமும் வரப்போகிறது.


'இ-நூலகத்தைப் பயன்படுத்துவதற்கு என்றே சிறைவாசிகளுக்கு டிஜிட்டல் அடையாள அட்டை வழங்கப்படும். மின்னணு பொருட்களை பயன்படுத்துவதற்கு உரிய பயிற்சிகள் வழங்கப்படும். இந்த இ-நூலகம் திட்டம் மூலம் சிறைவாசிகளுக்கு சிறை நிர்வாகத்தால் டிஜிட்டலுக்கு மாற்றப்படும் புத்தகங்களை தவிர, 'அமேசான் கிண்டில்' போன்ற இணையவழி மூலமும் புத்தகம் வாசிக்க பயிற்றுவிக்கப்படுவர். சிறைவாசிகளுக்கு புத்தக வாசிப்புப் பழக்கம் அதிகம் இருக்கும். காரணம் இங்கு அவர்களுக்கான பொழுதுபோக்கு அம்சங்கள் மிகக் குறைவு என்பதே காரணம்.' என்று இந்த திட்டத்தைப் பற்றி விரிவாக விளக்கினார் சிறை மேற்பார்வையாளர் சந்தோஷ்.

vikatan

  • தொடங்கியவர்

மகளைப் பார்த்து தானும் பாக்ஸிங் கற்றுக்கொண்ட அம்மா!

 

பாகிஸ்தானின் கராச்சி நகரத்தில் உள்ளது 'ஷாஹீன் பாக்ஸிங் கிளப்'. இங்கு அந்த அம்மா - பெண் ஜோடி எதிரெதிரே நின்று சண்டைப்போட்டுக்கொண்ட காட்சி உலகளவில் பிரபலமாக... பாக்ஸிங் புன்னகை தருகிறார்கள் தாயும் மகளும்!

மகள் ரசியா பானுவுக்கு வயது 19. சென்ற வருடம் குத்துச்சண்டை வீரர் முகமது அலி காலமானபோது, இறுதி ஊர்வலத்தில் அவருக்காகத் திரண்ட ரசிகர்களைப் பார்த்த ரசியாவுக்கு, தானும் குத்ச்துச்ண்சண்டை வீரராக வேண்டும் என்று ஆசை வந்தது. அதை அவர் தன் தாய் ஹலீமா அப்துல் அஜிஸிடம் சொன்னபோது, அவர் தயங்கினார். கணவர் இறந்து ஐந்து வருடங்கள் ஆகின்றன, மகளின் ஸ்கூல் ஃபீஸ் கூட  கட்டமுடியாத ஏழ்மை. அதுமட்டுமல்லாமல், பாகிஸ்தானில் ஒரு பெண் குத்துச்சண்டைக் கற்பது என்பது, கட்டுப்பாடுகளை மீறுவதாகும் என்பதுடன், அதனால் தன் மகளின் உயிருக்கே ஆபத்து நேரிடலாம் என்ற அச்சம்... இப்படி அந்தத் தாயின் தயத்துக்குப் பின் இருந்த காரணங்கள் பல. இருந்தாலும், மகளின் விருப்பத்துக்குச் சம்மதித்தார் ஹலீமா. 'பாகிஸ்தானில் குத்துச்சண்டைக் கற்கும் முதல் பெண்' என்ற பெருமையுடன் பாக்ஸிங் கிளப்புக்குச் செல்ல ஆரம்பித்தார் ரசியா.

பாக்ஸிங்

குறைவான நாட்களிலேயே பாக்ஸிங் விளையாட்டின்  நுணுக்கங்களைக் கற்றுக்கொண்டார் ரசியா. தன் மகளின் பாய்ச்சலைக் கண்டு, ஹலீமாவுக்கும் பாக்ஸிங் கற்க ஆசை வந்தது. தனக்கு 35 வயது ஆன போதிலும், ஆர்வத்துடன் பாக்ஸிங் கிளப்பில் சேர்ந்து மகளுடன் பயிற்சி மேற்கொண்டுவருகிறார். ஹலீமா போலவே, ரசியாவின் தைரியத்தைக் கண்டு பாக்ஸிங் கிளப்பில் 20 பெண்கள் சேர, வகுப்புகள் ஜோராக நடந்தன.

இந்தச் சூழ்நிலையில்தான், அந்த பாக்ஸிங் கிளப்பில், மாணவர்கள் தாங்கள் கற்ற திறமையை வெளிப்படுத்த ஒரு பாக்ஸிங் போட்டி நடத்தப்பட்டது. அதன் பல சுற்றுகளில் ஒரு சுற்றில், எதிர்பாராத விதமாக ரசியாவும் ஹலீமாவும் மோத நேரிட, பாக்ஸிங் மேடையில் அம்மாவும், பொண்ணும் எதிரெதிரே நின்று சண்டையிட்ட காட்சி பார்ப்போரை பரவசப்படுத்தியுள்ளது.

''ஆண்கள் வீட்டை விட்டு வெளியே சென்றால் பயப்படத் தேவையில்லை. ஆனால் பெண்கள் வீட்டு வாசலை தாண்டினாலே வீடு திரும்பும்வரை வீட்டில் இருப்பவர்களுக்கு நிம்மதி இருக்காது. அதனால்தான் பெரும்பாலான பெற்றோர்கள் பெண் குழந்தைகளை  வெளியே அனுப்பத் தயங்குகிறார்கள். என் மகளின் வாழ்வு தைரியமும் தன்னம்பிக்கையும் நிரம்பியதாக இருக்க வேண்டும் என்றுதான் அவளை பாக்ஸிங் வகுப்புக்கு அனுப்பினேன். இப்போது நாங்கள் இருவருமே பாக்சர்ஸ்'' என்கிறார் ஹலீமா.

பள்ளி ஒன்றில் ரிசப்ஷனிஸ்டாக பணிபுரியும் ரசியா பானு, ''வேலை முடிந்ததும் மாலை நேரக் கல்லூரில் படிப்பு, கல்லூரி முடிந்ததும் பாக்ஸிங் பயிற்சி என்று பரபரப்பாகச் செல்கிறது வாழ்க்கை. உள்ளூர்வாசிகள் சிலர் பெண்கள் பாக்ஸிங் கற்பது பிடிக்காமல் எங்கள்  பயிற்சி மையத்தின் மீது தாக்குதல் நடத்தினர். இந்த பாக்ஸிங் கிளப்பையே மூடவேண்டும் என்றெல்லாம் மிரட்டினர். அதற்கெல்லாம் எங்கள் பயிற்சியாளர் கான்பரானி அரசவில்லை. அவர் தன்னுடைய இரண்டு மகள்களுக்கும்கூட இங்கு பாக்ஸிங் பயிற்சி அளிப்பது குறிப்பிடத்தக்கது'' என்கிறார் ரசியா.

பாக்ஸிங் பயிற்சியாளராக வேண்டும் என்பது ஹலீமாவின் ஆசை. ஒலிம்பிக்கில் தங்கம் வென்று நாட்டுக்குப் பெருமை சேர்க்கவேண்டும் என்பது ரசியாவின் துடிப்பு. இந்த அம்மா - பெண் ஜோடி, இப்போது பாகிஸ்தான் பெண்களிடம் தன்னம்பிக்கை விதைத்து வருகிறது!

vikatan.

  • தொடங்கியவர்
இவர்களிடம் செல்வது நல்லதல்ல!
 
 

article_1479728133-swami-blinkananda-2.jபலவேடதாரிகள் கடவுளின் தூதராக ஆசைப்படுகின்றார்கள். இதற்காக ஏதேதோ அமைப்புகளை உருவாக்கித் தம்மை முன்னிலைப்படுத்துகின்றார்கள். 

ஊடகங்களிலும் பொது நிகழ்வுகளிலும் தங்களைத் திரைப்பட நாயகர்கள்போல பல விதமான வேடங்களில் காட்சிகொடுத்து, கைகளை விரித்து, ஆசிர்வாதம் வேறு செய்கிறார்கள். 

எல்லாமே தங்கள் அடியாட்கள் போன்ற சீடர்கள் மூலமே நடத்தப்படுவதை இந்த மக்கள் உணர்வதேயில்லை. இந்த மாபெரும் நாடகத்தை நடத்த எங்கிருந்து பணத்தை கௌவுகின்றார்கள்? எல்லாமே ஏமாற்று; மக்களிடமிருந்துதான் என்று சொல்லப்படுகின்றது.  

இறைவனை வழிபட வணக்க ஸ்தலங்கள் இருக்கும்போது, இவர்களிடம் செல்வது நல்லது அல்ல!

Edited by நவீனன்

  • தொடங்கியவர்

ப்ரேக்-அப்பிலிருந்து மீள அலியா பட்டின் 5 டிப்ஸ்!

'ப்ரேக் அப்' - ஆண் பெண் உறவுகளில் சந்திக்க கூடாதது. அதிலிருந்து தப்பிக்க பொறுமை, புரிதல், உங்கள் நிலையை பரிவுடன் துணைக்கு புரிய வைத்தல் என பல்வேறு விஷயங்கள் இருக்கின்றன. இவற்றையெல்லாம் கடந்து ஒரு பிரிவு நடைபெறும்போது  'நாம் காரணம் இல்லை' என்கிற மனநிலையோடு வெளியேறுவபர்கள்தான் அதிக மன உளைச்சலுக்கும் நெருக்கடிக்கும் உள்ளாகிறார்கள். நீங்கள் காரணமில்லாத நிலையில் ஒரு உறவு ப்ரேக் ஆகிவிட்டால் அதிலிருந்து மீண்டு வர 5 ஐடியாக்களை சொல்கிறார் பிரபல இந்தி நடிகை

அலியா பட். 

அலியா பட்

ஐடியா நம்பர் 1 'பயணம்'

பயணத்தை போல உங்கள் மனக்காயத்தினை ஆற்றும் மருந்து வேறொன்றுமில்லை. உடனடியாக உங்கள் வேலைகளை கொஞ்சம் ஒதுக்கி வைத்துவிட்டு ஒரு பயணத்தில் ஈடுபடலாம், ஆனால் தனியாக. தொலை தூரத்தில் இருக்கும் நண்பரிடத்தோ அல்லது உங்களுக்கு பிடித்தமான, போகவேண்டும் என நீண்டநாட்களாக நினைத்த இடத்திற்கோ பயணம் செய்யலாம். 

ஐடியா நம்பர் 2 'வேலை'

பயணம் போய்விட்டு வந்தபின் உங்கள் மனதுக்கு மிகவும் பிடித்த வேலை அல்லது உங்களுக்கு சவால் விடுக்கும் வேலைகளில் ஈடுபடலாம். முழுக்க முழுக்க உங்கள் கவனம் தேவைப்படும் வேலையாக அது இருந்தால் இன்னும் நல்லது.  இது போன்று ப்ரேக் அப்களில் இருந்து வெளியே வர பிடித்தமான வேலையை தேர்வு செய்து அதில் ஈடுபட்டவர்கள் மிகப்பெரிய வெற்றியாளர்களாக மாறியுள்ளார்கள். 

ப்ரேக் அப்

ஐடியா நம்பர் 3 'உடற் பயிற்சி'

உடற் பயிற்சி என்றால் சாதாரணமான பயிற்சிகள் இல்லை. கடுமையான எக்ஸசைஸ்களை மேற்கொள்வது. ஓட்டம் என்றால் வழக்கமாக நீங்கள் ஓடுவதை விட இரண்டுமடங்கு அதிகம் ஓடுவது. ஜிம் போகும் பழக்கம் இருந்தால் பயிற்சியின் நேரத்தை கூட்டுவது என மாற்றிக்கொள்ள வேண்டும். 'நீச்சல்' நிச்சயமாக ப்ரேக் அப் மீட்கும் மாமருந்து என்றே சொல்லலாம்.  வேலை முடித்த பிறகு செய்யும் உடற்பயிற்சிகள் உங்களுக்கும் மனதுக்கு அதிக பலனை அளிக்கும் என்பது எனது தனிப்பட்ட கருத்து. 

ஐடியா நம்பர் 4 'பேச்சு'  

இதில் இரண்டு வித நன்மைகள் இருக்கிறது. ப்ரேக் அப் சூழல் ஏன் ஏற்பட்டது என உங்களின் மனதுக்கு நெருக்கமான நண்பருடன் பேசலாம். வழக்கமாய் அதிகம் பேசாத நபராக நீங்கள் இருக்கும் போது இந்த பேச்சு தெரபி மிகப்பெரிய பயன் கொடுக்கும். உங்கள் பக்கத்து நியாயத்தை, உங்களின் மனக்காயத்தை யாரிடமாவது பகிர்ந்து கொள்வதில்தான் மனதை வெல்லும் வழி இருக்கிறது. அதிகம் பேசும் நபராக இருந்தால் இதற்கு எதிர்பதமாக உங்கள் பேச்சுக்களை மிகவும் சுருக்கிக்கொள்ளுங்கள். ஆம் அப்போதுதான் உங்கள் மனதுடன்  நீங்கள் பேசிக்கொள்வீர்கள். இந்த இரு வேறு குணங்கள் கொண்டவர்கள் எதிர்பதமான ஒன்றை கடைபிடிக்கும் போது பெரிய மாற்றத்தை உணரலாம். 

ஐடியா நம்பர் 5 'நம்புங்கள்' 

வாழ்க்கையின் மீதான நம்பிக்கையை மட்டுமல்ல, அன்பின் மீதான நம்பிக்கையும் எந்த சூழலிலும் கைவிட்டு விடாதீர்கள். ஒரு வலி மிகுந்த பிரிவிலிருந்து நீங்கள் வெளியே வந்திருப்பது தோற்றுப்போய் அல்ல, இன்னும் இன்னும் உங்களை நேசிக்கும் மனிதரை சந்திக்கத்தான் என நம்புங்கள். காரணம் 'அன்பு' என்பதை எந்த சூழலிலும் நீங்கள் தவிர்க்கவே முடியாது. "   

இந்த ஐந்து யோசனைகளையும்  'டியர் ஜிந்தகி' படத்தின் பிரீமியர் ஷோவில் கலந்து கொள்ள வந்த அந்த படத்தின் நாயகி அலியா பட் தெரிவித்தார். 

vikatan

 

  • தொடங்கியவர்

அரிய வகை ஆந்தை மீட்பு

400_10199.jpg

நெல்லையில் அரிய வகை ஆந்தை மீட்கப்பட்டுள்ளது. ரோட்டில் தத்தளித்த ஆந்தையை தீயணைப்பு வீரர்கள் மீட்டனர். இது ஆஸ்திரேலிய நாட்டு வகையை சேர்ந்தது என நம்பப்படுகிறது. மீட்க்கப்பட்ட ஆந்தையை வனத்துறை வசம் ஒப்படைத்தனர்.

vikatan

ஆஸ்திரேலிய ஆந்தை அல்ல

 

400_10199.jpg

நெல்லையில் அரிய வகை ஆந்தை மீட்கப்பட்டுள்ளதாக இன்று காலை தகவல் வெளியானது. ரோட்டில் தத்தளித்த அந்த ஆந்தையை தீயணைப்பு வீரர்கள் மீட்டனர். ஆனால், இது அனைத்து கண்டங்களிலும் (துருவம், பாலைவனம் தவிர) காணப்படும் common barn owl வகை ஆந்தை. இந்தியாவில் பரவலாக உள்ள ஒன்றுதான்.

 

Edited by நவீனன்

  • தொடங்கியவர்

126p1.jpg

யார் இந்த ஜெயலெட்சுமி?

தமிழ் தெரியாத ட்விட்டர் யூஸர்கள் பலரை ட்ரெண்ட் அடித்த #jayalakshmi என்ற ஹேஷ்டேக் கடந்த வாரம் குழப்ப ஸ்பெஷல். விஜய் ஆண்டனி நடித்துள்ள `சைத்தான்' படத்தின் முதல் 9 நிமிடக் காட்சிகளை ப்ரோமோவிற்காக வீடியோ வெளியிட்டது அப்படக்குழு. இந்த வீடியோவில் ஜெயலெட்சுமி என்ற கதாபாத்திரத்தைத் தேடி விஜய் ஆண்டனி அலையும்படி காட்சிகள் இருந்தன. ரசிகர்கள் பலரையும் இந்தக் காட்சியமைப்பு கவர்ந்ததால், ஜெயலெட்சுமி என்ற பேரும் இந்திய அளவில் ட்ரெண்ட் ஆனது. இருந்தாலும் இப்படியா பாஸ்!


126p2.jpg

அண்ணே ஒரு விளம்பரம்...

`கபாலி' பட விளம்பரத்திற்காக பறக்கிற ஃப்ளைட்டில் பெயின்ட் அடிச்சு பிரமாண்டம் காட்டியதை மறந்திருக்க மாட்டோம். இந்தப் படத்தின் இந்தி சாட்டிலைட் உரிமையை ஸ்டார் கோல்ட் வாங்கியிருந்தது. கடந்த வாரம் இப்படத்தை ஒளிபரப்ப நினைத்த ஸ்டார் கோல்ட் நிறுவனம், யூ-டியூப் உட்பட இணையம் முழுக்க விளம்பரப்படுத்தி அசத்தியது. `லிமோசின்' சொகுசு காரை வாடகைக்குப் பிடித்து, விளம்பரத்தை பெயின்ட் பண்ணி மும்பை முழுக்க நடமாடவிட்டதில் ட்விட்டரிலும் #KabaliOnStarGold ட்ரெண்ட் அடிச்சிருக்கு. கேட்கவே தலை சுத்துதே!


126p3.jpg

வைரல் மேட்டர் பாஸ்!

இணையத்தில் எப்போ எது வைரல் ஆகும்கிறதை யாரும் தீர்மானிக்க முடியாது. போன வாரத்தில் சாஸர்கள் அடங்கிய ஒரு அலமாரி வைரலாகிப் பலரையும் முழி பிதுங்க வெச்சது. அப்படி என்னதான் விஷயம்னு பார்த்தா, நில நடுக்கம் காரணமா அலமாரியில் சரிந்த சாஸர்களை எப்படி உடையாம வெளியே எடுக்கிறதுனு தைவானைச் சேர்ந்த  Tseng Shao-Tsen (என்ன பேரு பாஸ் இது!) என்பவர் ஃபேஸ்புக்கில் சந்தேகம் கேட்டிருக்கார். 1,200 கமென்ட்களைத் தாண்டி பதில் வந்ததால் கடைசியில் #ImpossibleToOpen டேக் வைரல் ஆனது. சாஸர்களைப் பத்திரமா அலமாரியில் இருந்து எடுத்த பின்னாலும், இந்த போட்டோ இன்னும் ஷேர் ஆகிக்கொண்டிருக்கிறது. ஆ!


126p4.jpg126p5.jpg

எதிர்பார்க்காத கூட்டணி!

`சிங்கம்-3' படத்தைத் தொடர்ந்து `தானா சேர்ந்த கூட்டம்' படத்தில் பிஸியாக இருக்கும் நடிகர் சூர்யா, இதற்கு அடுத்தபடியாகத் தனது 36-வது படத்தில் இயக்குநர் செல்வராகவனின் இயக்கத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். யாருமே எதிர்பார்த்திடாத கூட்டணி என்பதால், இவர்களது ரசிகர்கள் மட்டுமன்றி நெட்டிசன்ஸ் உட்பட பலரும் ஆச்சர்யம் அடைந்துள்ளனர். `சிங்கம்-3' டீஸர் அளித்த உற்சாகத்தில் இருக்கும் சூர்யா ரசிகர்கள், #suriya36aselvaraghavanfilm என்ற டேக்கில் பொங்கல் வைத்து ட்ரெண்ட் அடித்தனர். வீ ஆர் வெயிட்டிங்!


126p6.jpg

2.0

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் - இயக்குநர் ஷங்கர் கூட்டணியில் உருவாகியுள்ள `2.0' படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியீட்டு விழா கடந்த வாரம் மும்பையில் மிகப் பிரமாண்டமாக நடைபெற்றது. அனைத்து மொழி திரையுலகத்தின் கவனத்தையும் ஈர்த்த இந்த விழாவில், பாலிவுட் நடிகர் அக்‌ஷய் குமாரை ரஜினிகாந்த் வெகுவாகப் பாராட்டினார். #2point0fllaunch #chittireturns டேக்குகள் இந்திய ட்ரெண்ட்டில் முன்னணியில் இடம்பிடித்தன. இணையம் முழுக்க ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்கள் வைரலாகின. ஆனாலும், ஃபர்ஸ்ட் லுக் வெளியிடத் தாமதமானதால், நேரலையில் காத்துக்கிடந்த நெட்டிசன்ஸ் பாரபட்சம் பார்க்காமல் புலம்பித் தள்ளினர். கோபக்காரங்களா இருக்காங்களே!


126p7.jpg

கிரிக்கெட் கடவுள்!

சச்சின் டெண்டுல்கர் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்றுவிட்டாலும், அவரது ரசிகர்கள் இன்னும் ஓயவில்லை. 1989-ம் ஆண்டு நவம்பர் 15-ம் தேதி பாகிஸ்தானுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில்தான் சச்சின் தனது கிரிக்கெட் வாழ்வைத் தொடங்கினார். சச்சின் கிரிக்கெட் வாழ்க்கையைத் தொடங்கி 27 ஆண்டுகள் நிறைவு பெறுகிறது. இதில் இன்னொரு சோகம் என்னன்னா சச்சின் தனது கடைசி டெஸ்ட் இன்னிங்ஸில் பேட்டிங் பிடிச்சதும் இதே நவம்பர் 15-ம் தேதிதான். இதைக் கொண்டாட நினைத்த அவரது ரசிகர்கள், #27yearsofsachinism #GodofCricket டேக்குகளில் தங்களது நினைவுகளைப் பகிர்ந்து எமோஷனல் ஆகினர். சச்சின்டா!


126p8.jpg

லேடி சூப்பர் ஸ்டார்!

அழகுதேவதை நயன்தாரா கடந்த வாரம் தனது 33-வது பிறந்தநாளைக் கொண்டாடினார். பிறந்த நாளுக்கு சில நாட்கள் முன்னரே ட்ரெண்ட்டில் நயனின் பெயர் கலக்கிவந்த நிலையில், பிறந்த நாளன்று தென்னிந்திய ரசிகர்களின் வாழ்த்துகளால் #happybirthdaynayanthara #ladysuperstar #hbdnayanthara ஆகிய மூன்று டேக்குகளும் பாரபட்சமின்றி இந்திய அளவிலான ட்ரெண்ட்டில் இடம்பெற்று அசத்தியது. போதாக்குறைக்கு அவர் நடிக்கும் `கொலையுதிர் காலம்' மற்றும் `அறம்' படங்களின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி ரசிகர்களை மகிழ்வித்தது. வாழ்த்துகள்!

vikatan

  • தொடங்கியவர்

வரலாற்றில் இன்று...

நவம்பர் - 28

 

1703 : இங்­கி­லாந்து, டெவன் என்ற இடத்தில் உள்ள கலங்­கரை விளக்கம் அங்கு நிகழ்ந்த பெரும் சூறா­வ­ளி­யினால் சேத­மாக்­கப்­பட்­டது.

 

1807 : நெப்­போ­லி­யனின் படை­க­ளி­ட­மி­ருந்து தப்­பு­வ­தற்­காக போர்த்­துக்கல் அரச குடும்­பத்­தினர் தலை­நகர் லிஸ்­ப­னி­லி­ருந்து தப்பிச் சென்­றனர்.

 

857varalru.jpg1895 : பாரிஸில் அல்­பிரட் நோபல் பரி­சுக்­கான திட்­டத்தை தெரி­வித்து தனது சொத்­துக்­களை அப்­ப­ரி­சுக்­கான மூல­த­ன­மாக அறி­வித்தார்.

 

1935 : இரத்­ம­லானை விமான நிலை­யத்­துக்கு முத­லா­வது விமானம் மத­ரா­சி­லி­ருந்து (தற்­போ­தைய சென்னை) வந்­தி­றங்­கி­யது.

 

1940 : ருமே­னி­யாவில் இரண்டாம் கரோல் மன்­னனின் ஆத­ர­வா­ளர்கள் 60 பேரை தள­பதி இயன் அண்­டோ­னெஸ்கு கைது­ செய்து தூக்­கி­லிட்டான்.

 

1944 : இரண்டாம் உலகப் போர்: ஸ்டஃபோர்ட்­ஷ­யரில் ஆங்­கி­லேய விமா­னப்­படைத் தளத்தின் ஆயுதக் கிடங்கில் ஏற்­பட்ட பெரும் விபத்தில் 70 பேர் கொல்­லப்­பட்­டனர்.

 

1964 : பனிப்போர்: இந்­தியப் பிர­தமர் ஜவ­ஹர்லால் நேரு அணு­வா­யுதச் சோத­னை­களை நிறுத்­தும்­படி ஐக்­கிய அமெ­ரிக்­கா­வையும் ரஷ்­யா­வையும் கோரினார்.

 

1971 : சோவி­யத்தின் மார்ஸ் 2 விண்­கலம் தனது துணை விண்கோள் ஒன்றை செவ்வாய்க் கோளில் இறக்­கி­யது. இது செவ்­வாயில் மோதி செய­லி­ழந்­தது. செவ்­வாயில் இறங்­கிய முத­லா­வது கலம் இது­வாகும்.

 

1975 : கின்னஸ் உலக சாதனை நூலை ஆரம்­பித்து வைத்த ரொஸ் மாக்­வேர்ட்டர், ஐ.ஆர்.ஏ. கிளர்ச்­சி­யா­ளர்­களால் சுட்டுக் கொல்­லப்­பட்டார்.

 

1983 : போயிங் 747 விமா­ன­ மொன்று ஸ்பெயின் தலை­நகர் மாட்ரிட் அருகே வீழ்ந்து நொருங்­கி­யதில் 183 பேர் கொல்­லப்­பட்­டனர்.

 

1989 : கொலம்­பி­யாவில் பறந்து­ கொண்­டி­ருந்த அவி­யன்கா எயார்லைன்ஸ் விமா­னத்தில் குண்­டு­வெ­டித்­ததால் விமா­னத்­தி­லி­ருந்த 107 பேரும் பலி­யா­கினர். கொலம்­பி­யா­வி­லுள்ள போதைப்­பொருள் கடத்தல் அமைப்­பொன்று இத்­தாக்­கு­த­லுக்கு உரிமை கோரி­யது. 

 

1999 : நியூ­ஸி­லாந்தின் முத­லா­வது பெண் பிர­த­ம­ராக தொழிற்­கட்­சியைச் சேர்ந்த ஹெலன் கிளார்க் தெரிவு செய்­யப்­பட்டார்.

 

2001 : ஹபிள் விண்­வெளித் தொலை­நோக்கி மூலம் ஓசிரிஸ் கோளில் ஆவி­யா­கக்­கூ­டிய நிலையில் ஐத­ரசன் மண்­டலம் கண்­டு­பி­டிக்­கப்­பட்­டது. சூரிய குடும்­பத்­திற்கு வெளியே உள்ள கோள் ஒன்றில் வளி மண்­டலம் கண்­டு­பி­டிக்­கப்­பட்­டது இதுவே முதல் தடவை.

 

2005 : பிரான்ஸில் முத­லா­வது பகு­தி­ய­ளவு முக­மாற்­ற­ சத்­தி­ர­சி­கிச்சை மேற்­கொள்­ளப்­பட்­டது.

 

2006 : கன­டாவில் பிரெஞ்சு மொழி பேசும் மக்­களை பெரும்­பான்­மை­யாக கொண்ட கியூபெக் மாகா­ணத்தைச் சேர்ந்­த­வர்கள் கன­டா­வுக்­குட்­பட்ட தனி­யான “தேச இனம்” என்ற அங்­கீ­கா­ரத்தை கன­டிய நாடா­ளு­மன்றம் வழங்கியது.

 

2009 : ரஷ்யாவில் ரயிலொன்றில் இடம்பெற்ற குண்டுவெடிப்பில் 28 பேர் பலியானதுடன் 96 பேர் காயமடைந்தனர்.

 

2013 : இலங்கை யுத்தத்தில் கொல்லப்பட்டோர், காணாமல் போனோர், சேதடைந்த சொத்துகள் தொடர்பான கணக்கெடுப்பு ஆரம்பமாகியது.

.metronews.lk

Edited by நவீனன்

  • தொடங்கியவர்

பொண்ணுங்க எப்போல்லாம் அழகா இருப்பாங்க தெரியுமா?

 

சங்கள ரெண்டு வகையா பிரிக்கலாம். ஒண்ணு பொண்ணுங்கள கொஞ்சம்கூட வெட்கப்படாம பார்க்குறவங்க. இன்னொண்ணு பொண்ணுங்களுக்கே தெரியாம திருட்டுத்தனமா வேடிக்கை பார்க்குறவங்க. ஏன்னா பொண்ணுங்கள ரசிக்காத பசங்களே கிடையாது. அப்படி  ரசிக்கும்போது பெண்கள் பேரழகா தெரியும் தருணங்கள் எவையெல்லாம் தெரியுமா?

* தமிழ்நாட்டுல மழைக்காலத்துலயும் வெயில் அடிக்கும்கிறது உலகம் அறிஞ்ச விஷயம். கொளுத்துற வெயில்ல கூட்டம் அதிகமான பஸ்ல ஏறிட்டு கர்சீஃப் எடுத்து வியர்வையைத் துடைச்சிட்டு, அதே கர்சீஃப்பை விசிறியாக்கி விசிறும்போதுகூட பொண்ணுங்க அவ்வளவு அழகு பாஸ்! அடிக்கிற சம்மர்ல இதெல்லாமா ரசிப்பீங்கங்கிற உங்க மைண்ட் வாய்ஸ் கேட்குது.

* தெருவுல நடந்து போற வழியில் இருக்கிற எல்லாக் கோயில் வாசலைக் கடக்கிறப்பவும், கண்ணை மூடி ரெண்டு விரலை மட்டும் எடுத்து நெத்தியில் வெச்சுட்டு அப்புறமா அதே விரல்களை கிஸ் பண்றதைப் பார்த்ததுக்கு அப்புறமா 'கடவுள் இருக்கான் கொமாரு'-ன்னு மாறுன பசங்களோட எண்ணிக்கை அதிகம்.

பொண்ணுங்க

* கீழே குனிஞ்சு தெருவையே வெறிக்க வெறிக்கப் பார்த்துட்டு வர்ற பொண்ணுங்க, நாம கிராஸ் ஆகிறப்போ மட்டும் சொல்லி வெச்ச மாதிரி சைடு லுக் விட்டுக்கிட்டே தலைகோதி, பசங்களுக்கு ஆயிரம் டன் மின்சாரத்தை பாய்ச்சுவாங்க பாருங்க! அந்த டைம்ல பசங்க மனசுல சேதாரமே இல்லாம ஒரு விபத்தே நடக்கும்.

* ஏதாவது சண்டை வந்தா கோபமும், கண்ணு கலங்கி ரெண்டு மில்லி லிட்டர் அழுகையும் சேர்த்துப் பேசுவாங்க. வேற வழியில்லாம நம்மப் பசங்க ஸாரி கேட்டு சரண்டர் ஆவாங்க. அந்நேரம் வலியே வராத அளவுக்கு சின்னதா ஒரு அடி அடிக்கிறப்போ பொண்ணுங்க பேரழகு பாஸ்.

* தப்பித்தவறி கோயில் பக்கம் போனா... நெய் விளக்குப் போடுற இடத்துல வலம் வர்ற பொண்ணுங்க, பி.சி.ஸ்ரீராம் ஒளிப்பதிவுல தெரியுற ஹீரோயின் மாதிரி எக்ஸ்ட்ரா அழகோட தெரியுறதைக் கவனிச்சதுண்டா? அதே மாதிரி மோதிர விரல்ல பட்டும் படாம குங்குமத்தை எடுத்து வெச்சுக்கிற அழகை நாள் முழுக்கப் பார்த்துக்கிட்டு இருக்கலாம்னு பசங்களுக்குத் தோணும்.

Capture4_20314.JPG

* எங்கேயோ பார்க்கிற மாதிரி பசங்க பக்கம் திரும்பும்போது கண்ணும் களவுமா மாட்டிக்கிட்டா டக்குனு வேற பக்கம் திரும்பறதுக்கும், மிரட்சி கலந்து சின்னதாப் பொண்ணுங்க சிரிக்கிறதுக்கும் ஆயிரம் லைக்ஸ் தாராளமாப் போடலாம். ஆண்கள என்ன கொடுமைப்படுத்தினாலும் இந்தக் காரணங்களால மன்னிச்சு விட்றலாம்.

* ஏதாவது கேள்வி கேட்டாலோ இல்லை கலாய்ச்சாலோ... ஒரேயொரு புருவத்தைச் சுருக்கி முறைக்கிற பார்வையாலே 'போடா டேய்' அப்படிங்கிறதைக் கண்ணாலேயே பேச பொண்ணுங்களால மட்டும் எப்படித்தான் முடியுதோ? இதையே பசங்க பண்ணா... மைண்ட் வாய்ஸ்ல யோசிக்கிற வடிவேலுவா தெரிவாங்கங்கிறது வேற விஷயம்.

* வேலைக்கு நடுவுல மானிட்டரை வெறிச்சுப் பார்த்துக்கிட்டே இல்லாத நகத்தைக் கடிக்கிறதுலேருந்து... சூடே இல்லாத காபியை ஊதி ஊதிக் குடிக்கிறதுவரை பொண்ணுங்க பண்ற எல்லாமே மொத்தத்துல அழகுதான் ஜி!

vikatan

  • தொடங்கியவர்

ரஜினி, விஜய், அஜித், நயன் நடிச்ச விளம்பரங்கள்ல இதெல்லாம் கவனிச்சிருக்கீங்களா? #RareCommercials

 

விளம்பர

எப்போதுமே சினிமா சம்பந்தப்பட்ட நபர்கள் நடிக்கும் விளம்பரம் மக்கள் மத்தியில் பெரிய ரீச் ஆகும். அந்த வகையில் நம் சினிமா பிரலங்கள் நடித்த விளம்பரங்களின் தொகுப்பு இதோ...

ரஜினிகாந்த்:

சூப்பர் ஸ்டார் நடித்த முதலும் கடைசியும் விளம்பரம் இது தான். கோக்கை தடை செய்திருந்த சமயத்தில் தமிழக அரசால் தயாரிக்கப்பட்ட 'பால்ம் கோலா' பானத்துக்கான விளம்பரம் தான் இது. 

ஏ.ஆர்.ரஹ்மான்:

இந்த விளம்பரம் வந்த போது பலரது செல்ஃபோனும், 4d2, 8d2, 8d2, 4d2, 4a2, 8e2, 8f2, 8e2, 8d2, 4c2, 4e2, 8.d2 என்ற ரிங்டோன் கம்போசிங்களால் சினுங்கியது நினைவிருந்தால் உங்கள் குழந்தைப்பருவம் ஆஸமோ ஆஸம். ரஹ்மான் நடித்த இந்த கமர்ஷியல் செம வைரல். ஆனால் அந்த நாட்களில் வைரல் என்ற வார்த்தை புழக்கத்தில் இல்லையே!

விஜய்:

விஜய் - கத்ரீனாகைஃப் ஜோடியை நாம் இதில் தான் பார்க்க முடியும். இதே சீரிஸ் விளம்பரங்களை கொஞ்சம் கிளறிப் பார்த்தால் ஸ்ரேயாவையும் நீங்கள் பார்க்கலாம்.  இசை ஹாரீஸ் ஜெயராஜ். இதில் வந்த ஒரு வார்த்தை தான் ஹசிலி-ஃபிசிலி. அது பின்னர் ஆதவன் படத்தில் இடம்பெற்றதை ஹாரீசே பல முறை சொல்லியிருப்பார். இதை இயக்கியதும் ராஜீவ் மேனன் தான்.

டோகோமோ விளம்பரத்திலும் தன் ஸ்டைலில் அசத்தியிருப்பார் விஜய்.

 

அஜித்:

"பாரு பாரு மியாமி குஷன் பாரு" எனத் தலையை ஆட்டிய படியே என்ட்ரி ஆவார் தல. இது பல முறை ஃபேஸ்புக்கில் நீங்கள் பார்த்தது தான். இதற்குப் பின் வந்ததுதான் ‘முழிச்சுக்கோ சன்ரைஸ் குடிச்சுக்கோ’. சிம்ரனிடம் ப்ரெப்போஸ் செய்ய காஃபி குடித்து ஐடியா பிடிப்பார். அஜித்துடன் வரும் அந்த குட்டிப் பொண்ணை நினைவிருக்கிறதா, ரமணாவில் விஜயகாந்தின் மகளாக வருவாரே... அவரே தான்.

சூர்யா:

 லாங் லாங் எகோ ஒன்ஸ் அப் ஆன் எ டைம் சூர்யா நடித்தது. இதில் ஸ்பெஷல் சூர்யா-மாதவன் காம்போ தான். காரை பார்க்கிங்கில் வரிசையாக நிற்க வைத்து ஹார்டீனில் சைரனை ஒளிரவிட்டதும் மாடியிலிருந்து பூரித்துப் போவார் ப்ரீத்தி ஜிந்தா. இதன் இந்தி வெர்ஷனில் ஷாரூக்கான், சைஃப் அலிகான் நடித்திருப்பார்கள்.

விக்ரம்:

ரயில்  டன்னலுக்குள் நுழையும் டைமிங்கில் விக்ரம் வைத்திருக்கும் கோக் காலியாகும். யார் குடித்தது என்ற சுவாரஸ்ய ட்விஸ்ட் என க்யூட் விளம்பரம்.  நன்றாக கவனித்தால் உள்ளே சமந்தாவும் இருப்பதைக் கண்டுபிடிக்கலாம்.

நயன்தாரா:

சினிமா என்ட்ரிக்கு முன் நயன்தாரா நடித்த விளம்பரம். அடையாளமே தெரியாமல் செம அமெச்சூர் விளம்பரம் என்றாலும் நயன் நடித்திருப்பதால் இது கொஞ்சம் ஸ்பெஷல். 

த்ரிஷா:

தாத்தா அவனுக்கு சரியான பேருதான் வெச்சிருக்காரு... என அடிக்கடி டிவியில் ஒளிப்பரப்பான காலம் அது. அப்போது இந்தப் பொண்ணுதான் பின்னாளில் ஜெஸ்ஸியாக மாயம் செய்யப் போகிறார் என யாரும் கணித்திருக்க முடியாது, கௌதம் மேனனே கூட. "எபாங் ஒபாங் ஜபாங்" என்ற ஹார்லிக்ஸ் விளம்பரத்துக்கும் முன் இந்த ஹார்லிக்ஸ் விளம்பரம் தான் மிகப் பிரலம்.

 

இதற்குப் பின் த்ரிஷா நடித்த பெர்க் விளம்பரமும் செம ஹிட்.

தமன்னா:

இது தமன்னா தானா என ஆச்சர்யம் வரலாம். இதன் தமிழ் வெர்ஷனை தேடிப்பார்த்து கிடைக்காததால் இந்தி விளம்பரத்தையே பகிர்கிறோம்.

ஸ்ரேயா:

 இதன் தமிழ் வெர்ஷனும் சிக்கவில்லை. ஸ்ரேயா நடிக்க வந்த பிறகு இந்த விளம்பரம் நடித்தவர் தானே எனப் பலருக்கும் நினைவிருக்கும். ஆனால், ஸ்ரேயாவுக்கு ஜோடியாக நடித்திருப்பது 'உன்னாலே உன்னாலே' விநய் என்பது எதேச்சையாக பார்த்தபோது தான் கவனிக்க முடிந்தது. இந்த விளம்பரத்தை இயக்கியது பிங்க் படம் இயக்கிய சூஜித் ஸ்ரீகர்.

ஜெனிலியா:

இந்த விளம்பரத்தைப் போலவே, பார்கர் பென் விளம்பரத்திலும் அழகாக இருப்பார் ஜெனிலியா. அதில் அமிதாப்புடன் நடித்திருப்பார்.

 

 

vikatan

  • தொடங்கியவர்

தாத்தா தோட்டத்துக்குள் ஒரு பசுமைக் கல்யாணம்..! #GreenMarriage

 

பசுமைக் கல்யாணம்

     போஸ்டர்கள், பிளக்ஸ் பேனர்கள், உள்ளூர் டி.வி சேனல்களில் விளம்பரம், பெரிய ஸ்டார் ஹோட்டல்களில் டிரீட்டு திருமணங்களும் அதைத் சார்ந்த நிகழ்ச்சிகளுக்கும் பெரிய தொகையை ஒதுக்கி பிரம்மாண்டமாக நடைபெறுவது வழக்கம். கல்யாணம் என்பது ஒருமுறை நடக்கும் என்பதுதான் இதற்கு பரவலாக சொல்லப்படும் காரணம்தான். இந்த சூழ்நிலையில் ஸ்டாலின் என்பவர் பாண்டிச்சேரியில் வேலை பார்த்துக்கொண்டு திருமணத்தை விருதுநகரிலுள்ள தனது 'தாத்தா தோட்டத்தில்' பசுமைக் கல்யாணம் என்ற பெயரில் நடத்தியிருக்கிறார். இதை கேள்விப்பட்டு ஸ்டாலினின் தாத்தா தோட்டத்துக்குச் சென்றோம்.  

விருதுநகர் மாவட்டம் அழகாபுரிரோட்டில் உள்ள சந்திரகிரிபுரம் கிராமத்திலுள்ள ’’தாத்தா தோட்டத்தில்’’தான் இந்த பசுமைக் கல்யாணம். அழகாபுரி ரோட்டில் இருந்தே தாத்தா தோட்டத்துக்குச் செல்ல கோணிச்சாக்குகளில் எழுதி தொங்கவிடப்பட்டிருந்த வரிகளே நமக்கு பாதைகாட்டும் வழிகாட்டிகளாக இருந்தது. தோட்டத்துக்குள் நுழைந்ததுமே நவதானிய விதைகளால் வரவேற்பு விதைக்கோலம் போடப்பட்டிருந்தது. மண்ணாலான அகல் விளக்கேற்றி அதைச்சுற்றி மண்பானைகளில் நிரப்பிய பாரம்பர்ய வகை நெல் மணிகள் சுற்றிலும் காட்சிக்காக வைக்கப்பட்டிருந்து. 

Pot%20Production%20%281%29_14148.JPG

 மேலும் படங்களுக்கு இங்கே கிளிக் செய்க

கல்யாணத்துக்கு வந்திருந்த சிறுவர்கள் பம்பரம் சுற்றியும், கோலிக்குண்டு வைத்தும், சிறுமிகள் செப்பு சாமன் வைத்தும், பெண்கள் பல்லாங்குழியும் விளையாடிக் கொண்டிருந்தனர். கல்யாண வீடா, விளையாட்டு மைதானமா என்று வியக்கும் அளவுக்கு வியப்போடு இருந்தது. நாகஸ்வரம் – தவில் மங்கள இசை ஒலிக்க கல்யாண மாப்பிள்ளை ஸ்டாலினை அவரது நண்பர்களும், மணமகள் தீபிதாவை அவரது தோழிகளும் அழைத்து வர, வேப்பமரத்தடியில் இருவரும் மாலை மாற்றிக்கொண்டு, மரத்தால் செய்யப்பட்ட மோதிரத்தை (உட் ரிங்க்) மாற்றி திருமணம் செய்து கொண்டனர். திருமணம் முடிந்த கையோடு தோட்டத்தில் ஸ்டாலின், தீபிதா ஆளுக்கொரு பாரிஜாத பூங்கன்றை நட்டு வைத்து, ஸ்டாலின் நட்ட கன்றுக்கு தீபிதாவும், தீபிதா நட்டுவைத்த கன்றுக்கு ஸ்டாலினும் தண்ணீர் ஊற்றினார்கள். இரு கன்றுகளையும் இருவரும் கைபிடித்தவாறே மூன்று முறை சுற்றி வந்து  கை தட்டல், நாகஸ்வர இசை, விசில்கள் பறக்க இருவரையும், அவரது நண்பர்கள் வேப்பமரத்தின் கீழ் போடப்பட்டுள்ள சிறிய மேடையில் மர சோபாவில் அமர வைத்து மணமக்களை வாழ்த்தி தெம்மாங்குப் பாடல்களைப் பாடினர் அவரது நண்பர்கள். 

Seed%20Urundai%20%281%29_14575.JPG

 மேலும் படங்களுக்கு இங்கே கிளிக் செய்க

மணமக்கள் ஸ்டாலின் – தீபிதாவுக்கு வாழ்த்துகளைச் சொல்லிவிட்டு பசுமைத் திருமணம் பற்றி பேசினோம்...முதலில் பேசத்தொடங்கிய ஸ்டாலின், ‘’பள்ளிக்கூடம் படிக்கிறப்போ இருந்தே மரம் வளர்ப்பு, விவசாயம், பொன்வண்டு வளர்க்குறதுல தொடங்கி ஆடு, மாடு வளர்க்குறது வரைக்கும் எல்லாமே ரொம்ப பிடிக்கும். இந்தப் பாரம்பர்யம் பழமையை விரும்புறதுக்கு முக்கியக்காரணம் என்னோட பாட்டி, பள்ளிக்கூட, கல்லூரி அறிவியல் ஆசிரியர்கள்தான். பாண்டிச்சேரியில எலக்ட்ரானிக் டிசைன் இன்ஜினீயரா வேலைபார்த்துட்டு இருக்கேன். என் பார்வை, சிந்தனை, ஈடுபாடு எல்லாமே பாரம்பர்யம், பழமை சார்ந்துதான் இருக்கும். என்னோட கல்யாணமும் அதே மாதிரி இருக்கணும்னுதான் தோட்டத்துக்குள்ள கல்யாணம் நடத்தனுன்னு நினைச்சேன். இந்த தோட்டத்துல வேப்பமரம், மூலிகைகள், தென்னைமரம், மா, வாழை, நெல்லின்னு கிட்டத்தட்ட 300 மரங்கள் இருக்கு. இந்தத் தோட்டத்துல உள்ள வேப்ப மரங்களையெல்லாம் தோட்டத்துல வேலை செய்த சீனிவாசன் தாத்தாதான் நட்டு வளர்த்தார். அதனாலதான் இந்த தோட்டத்துக்கு ’’தாத்தா தோட்டம்’’னு பேரு வெச்சேன். 

collage_14394.jpg

 மேலும் படங்களுக்கு இங்கே கிளிக் செய்க

பொதுவா பொண்ணு பார்த்தா இந்தப் பொண்ணு நல்ல பொண்ணு, நல்ல வேலையில இருக்கா, உனக்கு பொருத்தமா இருப்பான்னு சொல்லித்தான் பொண்ணோட போட்டோ, புரொபைலை பையங்கிட்டக் காட்டுவாங்க. ஆனா, என்னோட அம்மா, ’’பதிமூணு புரொபைல் மேட்சா இருக்கு. ஆனா, ஒன்னை மட்டும் நான் தனியா எடுத்து வச்சிட்டேனு’’ சொன்னதும், வித்தியாசமா சொல்றாங்களேன்னு அந்தப் புரொபைலையும், போட்டோவையும் பார்த்தேன் அதுதான் தீபிதா..! தீபிதாவின் பேஸ்புக் புரொபைலை பார்த்தப்போ, என்னக்கு பிடிச்ச மாதிரியே இயற்கை விவசாயம், மரம் வளர்ப்பு, ஆர்ட், டிசைன், பழமைன்னு ஜாதகப் பொருத்தம் மாதிரியே என்னோட ஈடுபாடும் அவரோட செயல்பாடும் ஒரே மாதிரி பொருந்துச்சு. உடனே, ஓ.கே சொல்லிட்டேன். தீபிதாவும் டபுள் ஓ.கே சொல்லிட்டாங்க. எங்க நிச்சயதார்த்தம் பூ, பழம், வெற்றிலை, பாக்கு, நிரம்பிய தாம்பூலத்தட்டு மாற்றி நடந்தது அல்ல. எங்க வீட்டுல வாகைமர, செர்ரி பழமர கன்றையும், தீபிதா வீட்டுல பெரு நெல்லி, இமாம்பசன் மாமர கன்றுகள் என இரண்டு வீட்டுலயும் மரக்கன்றுகளை மாற்றித்தான் ’’பசுமை நிச்சயம்’’ செய்துக்கிட்டோம். நிச்சயத்துக்கு ஒருவாரத்துக்கு முன்னால தீபிதாவுக்கு பல் வலியால் 3 பல் நீக்கப்பட்டுச்சு. அந்தப் பல்லை பல் மருத்துவர்ட்ட சொல்லி பக்குவம் செஞ்சு, டாலரா மாற்றி தீபிதா என் கழுத்துல போட்டு விட்டாங்க.’’ என்று ஸ்டாலின் பேசிக் கொண்டிருக்கும்போதே தீபிதா குறுக்கிட்டுப் பேசத் தொடங்கினார். 

Pallanguli%20%282%29_14258.JPG

 மேலும் படங்களுக்கு இங்கே கிளிக் செய்க  

"தங்கத்துல எல்லாருமே தாலிகட்டி, மோதிரம் மாத்தி கல்யாணம் செய்வாங்க. ஆனா, நாங்க பழமைய விரும்புறதுனால, அமெரிக்காவில் உள்ள 'கோகோ போலோ'ங்குற வாட்டர் புரூவ் மரத்திலுள்ள மரப்பட்டையால் கை வேலைப்பாடால் செய்த மோதிரத்தை மாத்திக்கிட்டோம். குதிரைவாலி, சாமை, திணை, வரகு, கம்புனு சிறுதானிய விதைகள் அடங்கிய பையோடுதான் கல்யாணப் பத்திரிகையே கொடுத்தோம். பாலவநத்தம் பக்கத்துல இருக்குற கிராமங்களிலுள்ள இயற்கையா ஊற்றுகளில் ஊறிய தண்ணீரை எடுத்துட்டு வந்து அதுல வெட்டிவேர், சீரகம், துளசி கலந்த தண்ணீரைதான் வந்த எல்லாத்துக்கும் குடிப்பதற்காக வச்சிருக்கோம். இது வெறும் கல்யாண நிகழ்ச்சியா மட்டும் இருந்திடக்கூடாது. ஒரு மகிழ்ச்சி, உற்சாகம் கலந்த நிகழ்ச்சியா நம் பாரம்பர்ய வாழ்வியல் கலை சார்ந்து இருக்கணும்னு நினைச்சுதான் சிறுவர்கள், சிறுமிகள், பெண்கள், வயதானவர்கள் என எல்லாருக்குமே மகிழ்ச்சியான அனுபவத்தை கொடுக்கணும் என்பதற்காக பல்லாங்குழி, செப்புசாமான், கோலி, பம்பரம், கயிர் மேல நடத்தல், ஊஞ்சல், சறுக்கு, பானை செய்தல், களிமண்ணில் உருவம் செய்தல், பாரம்பர்ய கலைகள் உணர்த்தும் ஆட்டம்னு கல்யாணத்துக்கு வர்றவங்க ஒவ்வொருத்தரும் எங்க கல்யாணத்தை மறக்கக்கூடாது. அதே சமயம் இனி நடக்குற ஒவ்வொரு திருமணங்களும் பசுமை, பழமை சார்ந்தே நடக்கணும். அதுக்கு எங்க கல்யாணம் ஒரு மாடலா இருக்கும்’’ என்று பேசிக் கொண்டிருக்கும் போதே நாட்டுப்புற கிராமியக் கலைகள் தொடங்கியது. 

Karakattam_14543.jpg

 மேலும் படங்களுக்கு இங்கே கிளிக் செய்க

கலைத்தாய் அறக்கட்டளையின் தலைவர் மாதேஸ்வரன், "தமிழன் ஒவ்வொரு கலைகளிலும் விவசாயத்தையும், வாழ்வியலை உள்ளே புகுத்தியிருக்கான். குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல், பாலை என ஐவகை நிலங்களில் ஒவ்வொன்றிற்கும் ஒரு கலையை உருவாக்கியிருக்கிறான். குறிஞ்சியில் வாழும் மலைவாழ் மக்கள் மலைகளில் ஒவ்வொரு இடங்களில் இருப்பார்கள். தம் மக்களை ஒரே இடத்தில் ஒன்று சேர்க்கவும், பிறப்பு, இறப்பு மற்றும் எச்சரிக்கை என செய்திகளை இசை வடிவில் சொல்ல உருவாக்கியது ’’பறையாட்டம்’’, காடும் காடு சார்ந்த இடமான முல்லையில் ஆடு, மாடு மேய்ப்பவர்கள் சார்ந்துள்ள ஆட்டம் ’’சாட்டைக்குச்சியாட்டம்’’, விவசாயம் செழிக்கும் வயல் பகுதியான மருதநிலத்தில் உழவு, விதைப்பு, களையெடுப்பு, அறுவடை வரை ஒவ்வொன்றையும் உணர்த்துவது ’’ஒயிலாட்டாம்’’, படகுகளில் நகர்ந்து செல்ல சில வருடங்களுக்கு முன்பு வசதிகளுக்காக வடிவமைக்கப்பட்டதுதான் துடுப்பு. துடுப்பிற்கு முன் மூங்கிலான பெரிய நீளமான கம்புதான் உண்டு. படகில் நின்றவாறே தன் முழு மூச்சில் பெரிய கம்பை கடல் தண்ணீரில் ஊன்றியவாறே நகர்ந்து செல்வதுதான் பழையமுறை. பரிசல் பயணங்களில் இந்த பெரிய கம்பு ஊன்றி நகர்தல் முறை உண்டு. கடல் சார்ந்த இடமான நெய்தல் நிலத்தில் உள்ள ஆட்டம் ’’பெரியகம்பாட்டம்’’, முல்லைநிலமும் குறிஞ்சிநிலமும் இணையும் வறண்ட பகுதிக்குத்தான் ’’பாலை’’ என்று  பெயர். பாலைவனம் வறண்ட பகுதி, வறண்ட பகுதியில் நடந்து செல்லும்போது, நாவில் சுரக்கும் உமிழ்நீரை பேசி வீணாக்கினால் உடல் சோர்வு ஏற்படும். உமிழ்நீரை வீணாக்காமல், ஒருவருக்கொருவர் பேசாமல் கோல் கம்புகளை தட்டி செய்திகளை சொல்வதுதான் ‘’கோலாட்டம்’’, தானிய சேமிப்பு, விதைப்புக்கு முன் விதைநேர்த்தி செய்தலுக்கு ’’கரகாட்டம்’’ விதை வீரியத்தை கண்டறிவதுதான் ’’முளைப்பாரி’’, இறப்பை உறுதி செய்ய முள் குத்தி பார்த்தல், சூடு வைத்தலுக்கு அடுத்தபடியாக தப்பு அடித்து உறுதி செய்வதில் ’’தப்பாட்டம்’’ என இப்படியாக ஒவ்வொரு கலையும் தமிழனின் வாழ்வியல், பாரம்பர்யம், விவசாயம் சார்ந்தே இருந்துள்ளது’’ என ஒவ்வொரு கலைகளைப் பற்றியும் விளக்கிச் சொல்லி கலைக்குழுவினரை ஆட வைத்தார். 

திருமணத்தில் பானை செய்தல், களிமண்ணில் உருவம் செய்தல், பாண்டி ஆடுதல், கயிறு மேல் நடத்தல், பம்பரம் சுற்றுதல் என வந்தவர்களை வரவேற்பதில் ஆரம்பித்து, செட்டிநாடு சமையல் பந்தியைப் பரிமாறுபவர் வரை அனைவருமே பாரம்பர்ய வேட்டி- சேலை கட்டியிருந்தனர். காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை தாத்தா தோட்டத்தில் நடந்த ஸ்டாலின் – தீபிதா பசுமைக் கல்யாணம், வரவேற்பு நிகழ்ச்சிகளைப் பற்றிதான் அன்று ஊர் முழுக்கப் பேச்சாக இருந்தது. இறுதியாக பறையாட்ட ஓசை முழங்க மணமக்களுடன், குழந்தைகள், பெண்கள் என கல்யாணத்துக்கு வந்திருந்த அனைவரும் கலந்து ஆடிய குத்தாட்டத்துடன் தாத்தா தோட்டமே திருவிழாக்கோலமாக காட்சியளித்தது. 

vikatan

  • தொடங்கியவர்

2017 ஆம் ஆண்டின் பெப்ரவரி மாதத்தில் ஒரு அதிசயம்

 

2017 ஆம் ஆண்டின் பெப்ரவரி மாதத்தில் ஒரு அதிசயம்

வருகின்ற 2017 ஆம் ஆண்டின் பெப்ரவரி மாதம் ஒரு மாறுபட்ட நிலையை கொண்டுள்ளது.

அதாவது 2017 ஆம் ஆண்டின் பெப்ரவரி மாதத்தில் 4 ஞாயிறு,4 திங்கள்,4செவ்வாய்,4புதன்,4வியாழன்,4 வௌ்ளி,4 சனி என வருடத்தின் அனைத்து கிழமைகளும் 4 என இடம்பெறுகின்றன.

இவ்வாறான சந்தர்ப்பம் சுமார் 823 ஆண்டுகளுக்கு ஒரு முறையே நேரும் என ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.

http://newsfirst.lk/

  • தொடங்கியவர்

பெங்களூரை இப்படி பார்த்திருக்கிறீர்களா..?

 

 

 

கர்நாடகா மாநிலத்தின் தலைநகர் பெங்களூருவை வித்தியாசமாக வீடியோ எடுத்திருக்கிறார்கள் கொச்சியைச் சேர்ந்த தி க்வாட் கேம் ப்ரோஸ் (TheQuadCamBros) என்ற புகைப்படக் குழு.


தோட்டங்களின் நகரம் (கார்டன் சிட்டி) என்று அழைக்கப்படும் நகரம் பெங்களூரு. இருப்பினும், கடந்த சில ஆண்டுகளாக மக்கள் தொகைப் பெருக்கம், அதிக மாசு மற்றும் ரியல் எஸ்டேட் வளர்ச்சி காரணமாக தனது பொலிவை தொடர்ச்சியாக இழந்து வருகிறது பெங்களூரு என்று கூறப்படுகிறது.


 இந்நிலையில், பெங்களூருவின் அழகை சொல்லும் வகையில் கொச்சியைச் சேர்ந்த புகைப்படக் குழு வீடியோ எடுத்துள்ளனர். இரண்டரை நிமிடங்கள் ஓடும் வீடியோ மொத்தமும் ஏரியல் ஷாட் (aerial) என்று சொல்லப்படும் டாப் ஆங்கில் ஷாட் மூலம் படமாக்கப்பட்டுள்ளது. பெங்களூருவின் மீது மீண்டும் காதலில் விழவும் தூண்டுகிறது.

vikatan

  • தொடங்கியவர்

"எங்களுக்கு ஃபிடல் தாத்தா கடிதம் எழுதி இருக்காரே!” - நெகிழும் தமிழகச் சிறுமிகள்

 

ஃபிடல் காஸ்ட்ரோ

'புரட்சிக்காரர், போராளி, கம்யூனிச நாயகன் வல்லாதிக்கத்துக்கு எதிராக நின்றவர், அமெரிக்காவின் 638 கொலை முயற்சிகளை முறியடித்த வீரன், இவைதான் மறைந்த ஃபிடல் காஸ்ட்ரோ பற்றி நமக்கு பரிச்சயமாகத் தெரிந்தவை. ராணுவ உடையில் மிடுக்கென இருக்கும் ஃபிடல் காஸ்ட்ரோவைப் பார்த்தால் அமெரிக்காவுக்கு மட்டுமல்ல. நமக்கும் பயம் கலந்த மரியாதையே இருக்கும். காஸ்ட்ரோவின் கம்பீரமான ராணுவ உடைக்குள் அன்பும், அக்கறையும், இந்தியர்கள் மீது பாசமும் கொண்ட இதயமும் இருந்தது. இதனை தன் செயலின் மூலமே உலக மக்களுக்கு வெளிக்காட்டியவர் காஸ்ட்ரோ. கடல் கடந்து எங்கோ இருக்கும் இரண்டு தமிழகச் சிறுமிகளுக்கு காஸ்ட்ரோ அனுப்பியிருக்கும் கடிதங்களே, அவரின் அன்புக்கும், பாசத்துக்கும் உதாரணங்களாக இருக்கின்றன.

காந்தி, நேரு, இந்திரா, ராஜீவ் என தங்களது மகளுக்கும், மகனுக்கும் இந்திய தலைவர்களின் பெயரை மக்கள் சூட்டிவரும் நிலையில், தமிழகத்தில் இருவர் தனித்து சிந்தித்தனர். கியூபா விடுதலை வீரர் ஃபிடல் காஸ்ட்ரோ மீதான ஈர்ப்பில், தமிழகத்தைச் சேர்ந்த வில்வம் மற்றும் பழபிரபு ஆகியோர் தங்களின் மகள்களுக்கு 'கியூபா' என்ற புரட்சிப் பெயரைச் சூட்டியுள்ளனர். இச்சிறுமிகளை வாழ்த்திதான் 15,000 கிலோ மீட்டர் தொலைவில் இருந்து கடிதம் அனுப்பியிருக்கிறார் காஸ்ட்ரோ.

castroo_16277.jpg

unncaseee_16296.jpg'' எனது முதல் மகளுக்கு சார்லஸ் டார்வின் நினைவாக 'டார்வினா' என பெயர் வைத்தோம். எனக்கு இளமைக்காலம் முதலே சேகுவேரா மீதும், காஸ்ட்ரோ மீதும் அளவு கடந்த ஈர்ப்பு இருந்தது. அதுமட்டுமல்லாமல், கியூபா புரட்சிநாளான ஜூலை 26-ம் தேதி எனது மகள் பிறந்தாள். வருடா வருடம்  ஜூலை 26-ம் தேதி புரட்சிநாளாக கியூபா மக்கள் கொண்டாடுகிறார்கள். அதன் நினைவாக, எனது இரண்டாவது மகளுக்கு 'கியூபா' என பெயர் வைத்தோம். எங்களது குழந்தையின் பெயர் வைக்கும் நிகழ்வை 'கியூபா அறிமுக நாள்' என பத்திரிகை அடித்து அழைத்தோம். அந்த பத்திரிகையை ஃபிடல் காஸ்ட்ரோவுக்கும் அனுப்பி வைத்தோம். பிறகு அதைப்பற்றி நாங்கள் மறந்து விட்ட நிலையில், ஒரு மாதம் கழித்து ஃபிடல் காஸ்ட்ரோவின் கையெழுத்துடன் கூடிய வாழ்த்து அட்டைuncaseee333_16182.jpg எங்களுக்கு வந்தது. வாழ்த்து அட்டை ஸ்பானிஷ் மொழியில் இருந்ததால் எங்களுக்குப் புரியவில்லை, இருந்தாலும் எங்களின் மகிழ்ச்சிக்கு அளவே இல்லை'' என தனது நினைவுகளைப் பகிர்ந்துக் கொண்டார், ஊத்தங்கரையை சேர்ந்த பழபிரபு.

திருச்சியைச் சேர்ந்த வில்வம்,'' கியூபா புரட்சி நூல்களை படித்த எனக்கு இயல்பாகவே ஃபிடல் காஸ்ட்ரோ மீது மரியாதை வந்தது. அதனால், எனது மகளுக்கு 'கியூபா' என பெயர் வைத்தேன். இதனை காஸ்ட்ரோவுக்கு கடிதம் மூலம் தெரியப்படுத்தலாம் என்று நினைத்தேன். ஆனால் சரியான முகவரி தெரியாததால், 'பிடல் காஸ்ட்ரோ, அதிபர், கியூபா' என்று முகவரியை எழுதி கடிதத்தை அனுப்பிவைத்தேன். காஸ்ட்ரோவின் உயிருக்கு பெரும் அச்சுறுத்தல் இருப்பதால், ஒரு பொருள் அவரின் கைகளுக்கு செல்வதற்கு முன்பு 100 சோதனைகளை தாண்டி செல்லும் என படித்திருக்கிறேன். ஆக, நமக்கு எல்லாம் எங்கு பதில் வரப்போகிறது என நினைத்துக்கொண்டேன். ஆனால், ஒரு மாதத்திலே எங்களுக்கு பதில் கடிதம் வந்தது. எங்களது மகள் 'கியூபா'-வை வாழ்த்தி அனுப்பியிருந்த வாழ்த்து அட்டையில் பிடல் காஸ்ட்ரோ கையெழுத்திட்டிருந்தார். அந்த கடிதத்தை நாங்கள் பொக்கிஷம் போல பாதுகாத்து வருகிறோம்'' என்றார்.

அன்பு நிறைந்த புரட்சிக்காரர் இன்று இல்லையே!

vikatan

  • தொடங்கியவர்

 

“பாகிஸ்தானில் தனிநபராக வாழ்தல்” - காணொளி

  • தொடங்கியவர்

வருகிறது அடுத்த தலைமுறை சேமிப்பு கருவி

 

400_13125.jpg

ஒவ்வொரு நாளும் இணையத்தில் தகவல்கள் கொட்டிக் கொண்டே இருக்கின்றன. இந்த தகவல்களை சேமிப்பதற்கென்றே இணையதளங்கள் கோடிக்கணக்கில் முதலீடு செய்கின்றன. இந்நிலையில், ஸ்விட்சர்லாந்தில் உள்ள விஞ்ஞானிகள், அடுத்த தலைமுறைக்கான சேமிப்பு கருவியை கண்டுபிடித்துள்ளனர்.


ஒரு பொருளில் இருக்கும் காந்த பண்புகளை (magnetic properties) மாற்றியமைப்பதன் மூலம் அதிக அளவிலான தகவல்களை சேமிக்க முடியும் என்றும், கால்சியம் டைட்டானியம் ஆக்சைடு கனிமத்தின் காந்த பண்புகளை மாற்றியமைப்பதன் மூலம் அதிக அளவு தகவல்களை சேமிக்க முடியும் என்று கண்டுபிடித்துள்ளனர் விஞ்ஞானிகள்.

vikatan

  • தொடங்கியவர்

தண்ணீர் குடிக்க மறக்கிறீர்களா? நினைவூட்ட ஒரு செயலி!

 

water%20your%20body%20left.jpgதினமும் போதுமான அளவு தண்ணீர் குடிக்க வேண்டும் என்பது எல்லோருக்கும் தெரிந்ததுதான். ஆனால் நாம் தேவையான அளவு தண்ணீர் குடிப்பதை உறுதி செய்து கொள்வது எப்படி?

வேலை பளு, மறதி என பல காரணங்களினால் உடலுக்கு தேவையான அளவு தண்ணீர் குடிக்காமல் இருக்கும் நிலையை எப்படி தவிர்ப்பது?

இந்த கேள்வி உங்கள் மனதிலும் இருந்தால், அதற்கான பதில் அழகான செயலி வடிவில் இருக்கிறது தெரியுமா? ஆம், மறக்காமல் தண்ணீர் குடிக்க நினைவூட்டுவதற்காக என்றே 'வாட்டர் யுவர் பாடி' செயலி உருவாக்கப்பட்டுள்ளது.

ஆண்ட்ராய்டு மற்றும் ஐபோனில் செயல்படும் இந்த செயலி நீங்கள் எப்போதெல்லாம் தண்ணீர் குடிக்க வேண்டும் என்பதை நினைவூட்டுகிறது.

இதை கச்சிதமாக செய்ய,  முதலில் இந்த செயலியில் உங்கள் உடல் எடையை சமர்ப்பிக்க வேண்டும். அதனடிப்படையில் உங்களுக்கு தேவையான தண்ணீர் அளவை அது தீர்மானித்துக்கொள்கிறது. அடுத்ததாக செயலியில் உள்ள தண்ணீர் பாட்டில் மற்றும் கிளாஸ்களின் அளவை தேர்வு செய்ய வேண்டும். இந்த அளவை கொண்டு நீங்கள் ஒவ்வொரு வேளையும் பருக வேண்டிய தண்ணீரின் அளவை செயலி புரிந்து கொண்டு, அதற்கான நேரம் வந்ததும் சரியாக நினைவூட்டும்.

செயலியில் தோன்றும் கிளாஸ் அளவு பொருத்தமாக இல்லை என்றால், உங்களிடம் உள்ள கிளாஸ் அளவை குறிப்பிடுவதற்கான வசதியும் இருக்கிறது. கிளாஸ் அளவை மட்டும் அல்லாமல், எப்போது தண்ணீர் குடிக்க துவங்குகிறீர்கள், நாள் முழுவதும் எச்சரிக்கை செய்யப்பட வேண்டுமா போன்ற விவரங்களையும் நாமே செட் செய்து கொள்ளலாம்.

காலையில் 10 மணிக்கு முதல் கிளாஸ் தண்ணீர் குடித்தீர்கள் என்று வைத்துக்கொள்வோம் அதன் பிறகு உங்களுக்கு நினைவு இருக்கிறதோ இல்லையோ இந்த செயலி அடுத்ததாக எப்போது தண்ணீர் குடிக்க வேண்டும் என நினைவூட்டும். கோடை காலம் என்றால் அடிக்கடி தாகம் எடுத்துக்கொண்டே இருக்கும் என்பதால் தண்ணீர் குடிக்க மறக்க மாட்டோம். ஆனால் மற்ற காலங்களில் தேவையான அளவு தண்ணீர் குடிக்காமல் இருக்கும் வாய்ப்பு இருக்கிறது.

water%20your%20body%20550%201.jpg

ஆனால் இந்த செயலியை ஸ்மார்ட்போனில் வைத்திருந்தால் அது உற்ற நண்பன் போல சரியான நேரங்களில் நினைவூட்டிக்கொண்டே இருக்கும். தண்ணீர் குடிப்பது இயல்பான தேவையாக இருந்தாலும் தினமும் போதுமான அளவு தண்ணீர் குடிப்பது என்பது ஒரு பிரச்னையாகவே இருக்கிறது. சீரான அளவு தண்ணீர் குடிப்பது உடல் ஆரோக்கியத்திற்கு அவசியம் என மருத்துவர்கள் வலியுறுத்தும் நிலையில்,  இதற்காக என்றே ஒரு செயலி இருப்பது நல்ல விஷயம்தான். தண்ணீர் குடிப்பதை மறக்காமல் இருக்க உதவுவதோடு அதை கொஞ்சம் சுவாரஸ்யமானதாகவும் ஆக்குகிறது இந்த செயலி.

அத்துடன் தண்ணீர் அளவு பற்றிய விவரங்களையும் வரைபட அறிக்கையாக தந்து அசத்துகிறது. எனவே பிட்ன்ஸ் செயலிகள் பட்டியலில் இந்த செயலியையும் சேர்த்துக்கொள்ளலாம்.

ஆண்ட்ராய்டில் தரவிறக்கம் செய்ய: https://play.google.com/store/apps/details?id=com.northpark.drinkwater&hl=en

vikatan

  • தொடங்கியவர்

 

சூரியக் குடும்பத்தின் உயர்ந்த மலை எது?

  • தொடங்கியவர்
ஒட்டுக்கேட்பதால் சமாதானம் கெட்டுப்போய்விடும்
 
 

article_1480308984-Why-Missed-.jpgயாராவது ஒருவர் பேசிக் கொண்டிருக்கும்போது, அவர்களுடன் எந்த விதமான சம்பந்தமில்லாத ஒருவர், அவர்கள் பேச்சைக் கேட்பதும் அல்லது பேச்சுக்களில் உட்புகுந்து வீணான உரையாடல்கள் செய்வதும் சகிக்க முடியாத செயல்! 

தனிப்பட்ட முறையில் நண்பர்களுடன் பேசுவதை ஒட்டுக்கேட்பதே நாகரிகமற்ற முறையல்லவா? இன்று நேற்று அல்ல, என்றுமே தேவையற்ற ஒட்டுக் கேட்கும் பழக்கங்களால் பல பிரச்சினைகள் உருவெடுப்பதை நீங்கள் அறிந்திருப்பீர்கள். குடும்ப உறவுகள் சீரற்றுப் போவதற்கு ஒட்டுக்கேட்கும் பழக்கமே பிரதான காரணியாகும். தவறான முறையில் புரிந்து கொண்டு, அதனைத் தப்பாக மொழி மாற்றம் செய்து, கற்பனை புனைந்து, சீண்டு மூட்டுதல் வெட்கம் கெட்ட வேலையாகும். 

இன்று வல்லரசுகள் தங்கள் புலனாய்வுத்துறையினூடாக அத்துமீறல்களை இவ்வண்ணமே, நவீன உத்திகளுடன் நடத்துகின்றன.  

ஒட்டுக்கேட்பதால் சமாதானம் கெட்டுப்போய்விடும்.  

Edited by நவீனன்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.