Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இளமை புதுமை பல்சுவை

Featured Replies

  • தொடங்கியவர்

இந்த விஷயங்களுக்கு எல்லாம் ஆப் இருந்தா நல்லா இருக்கும்ல!

 

நம்ம முன்னோர்கள் காலத்துப் பணமான பழைய ஐநூறையும், ஆயிரத்தையும் தடை பண்ணிட்டதால ஆளாளுக்கு `பாயசம் எங்கடா'னு கேட்கிற ரேஞ்சுக்கு  `பணம் எங்கடா'னு கேட்க ஆரம்பிச்சிட்டாங்க. நம்ம பர்ஸ்லயும் பணம் இல்லை, ஏ.டி.எம்-லயும் பணம் இல்லைனு பேங்குக்குப் போனா அங்கேயும் பணம் இல்லைனுதான் சொல்றாங்க. யார்கிட்ட தான் பாஸூ பணம்லாம் இருக்குனு கேட்டா `நீங்க pay டி.எம் யூஸ் பண்ணலாமே ஃப்ரெண்ட்ஸ்`னு ஈசியா சொல்ல ஆரம்பிச்சிட்டாங்க. காசு இல்லைனா pay டி.எம் ஆப் யூஸ் பண்ண சொல்ற  நம்ம நாட்டுல இன்னும் எதுக்கெல்லாம் ஆண்ட்ராய்டை நம்பியே வாழச் சொல்வாங்க?

ஆப்

* இந்த கேஷ்லெஸ் நாடு மாதிரியே சாப்பாடு லெஸ் நாட்டையும் உருவாக்கிட்டா ரொம்ப நல்லா இருக்கும். இனி யாருமே சாப்பிட வேணாம் சும்மா கூகுள்ல சாப்பாடு போட்டோவை சர்ச் பண்ணி அதைப் பார்த்தே பசி ஆறிக்குங்க மக்களேனு சொல்லிடணும். சாப்பாடு செலவாவது மிச்சம் ஆகும்.

* இப்போலாம் அடிக்கடி ரெண்டு மாநிலங்களுக்கு இடையில தண்ணிக்கு சண்டைவந்து எல்லோரும் கஷ்டப்படுறாங்க. இனிமே தண்ணிப் பிரச்னையே வரக் கூடாது, யாருக்கும் தண்ணி தாகமே எடுக்கக் கூடாதுனா அதுக்கு ஒரே வழிதான் இருக்கு. எல்லா மக்களுக்கும் வாட்டர் பாட்டில் கம்பெனிங்க அவங்க வாட்டர் பாட்டிலை pdf ஃபைலா அனுப்பிட்டா யார் தண்ணி கேட்பாங்க?

* இனிமே யாருமே காதலிக்கவே வேணாம் எல்லாரும் ஜாலியா கெளதம் மேனன் படத்தைப் பார்த்துட்டு சந்தோஷமா இருங்கனு சொல்லிடணும். கெளதம் படத்தைப் பார்க்கிறதுக்கு வசதியா ஹாட்ஸ்டார் அக்கவுன்ட் ஓப்பன் பண்ணித் தரணும். ஆமா எதுக்குக் காதலிக்கணும்? எதுக்குக் கையை அறுத்துக்கணும்?

* காதல்னா அடுத்து கல்யாணம்தானே பாஸ்! கல்யாணத்துக்குப் பையனோ, பொண்ணோ தேடுறதுக்குப் பதிலா மொபைல்லேயே பார்ட்னரை செலெக்ட் பண்ணிட்டு அதுலேயே கல்யாணம் பண்ணிட்டு அப்படியே டைவர்ஸ் தேவைப்பட்டா அதுலேயே வாங்கிக்கலாம்னு சொல்லிட்டா, கல்யாணச் செலவாவது குறையும். ஆப்புக்கு காதல் முதல் கல்யாணம் வரைனுகூட பேரு வைக்கலாம்.

* தமிழ்நாட்டுல எங்கே திரும்பினாலும் இன்ஜினீயர்ஸ்தான் இருக்காங்க. அதனால நாலு வருசம் காலேஜ் போய் இன்ஜினீயரிங் படிக்கிறதுக்குப் பதிலா வி.ஐ.பி-னு ஒரு ஆப் க்ரியேட் பண்ணி எல்லோரையும் அதுலேயே எக்சாம், அரியர் எல்லாத்தையும் எழுதச் சொல்லிட்டா ஹைவே ஃபுல்லா இன்ஜினீயரிங் காலேஜ் கட்டுறதாவது குறையும்ல.

* காலைல எழுந்திரிச்சதும் பால் பாக்கெட் வாங்க ஒரு டைம், காய்கறி வாங்க ஒரு டைம், கருவேப்பிலை வாங்க ஒரு டைம்னு மாத்தி மாத்தி மார்க்கெட்டுக்குப் போறதுக்கு பதிலா எல்லாருக்கும் ஒரு ஆப்பை இன்ஸ்டால் பண்ணிட்டு அப்படியே வீட்டுக்கும் டோர் டெலிவரி பண்ணச் சொல்லிடணும். இந்த மாதிரி ஆப் ஏற்கெனவே இருந்துச்சுனா அதை எல்லாரும் கண்டிப்பா யூஸ் பண்ணணும்னு அவசரச் சட்டம் கொண்டுவரணும்.

* என்னதான் படிச்சிட்டுக் கஷ்டப்பட்டு ஆபீஸ்ல வேலைக்குப் போனாலும் இந்த டார்கெட் முடிக்கிறது என்னவோ எல்லோருக்கும் கஷ்டம்தான். அதனால வேலைக்குப் போகாம வீட்டுல இருந்து ஆப் மூலமாவே வேலை பார்த்துட்டு, அதுவே டார்கெட் முடிச்சுக் கொடுக்கிற மாதிரி ஒரு ஆப் க்ரியேட் பண்ணா புண்ணியமாப் போகும்.

* எப்படியும் இன்னும் கொஞ்சநாள்ல ஆக்சிஜன் இல்லாம எல்லாரும் `ஆக்சிஜனைத் தேடி ஒரு பயணம்னு` தெருத்தெருவா சுத்தப் போறாங்க. அதுக்கு முன்னாடி நாமளே ஏன் ஆக்சிஜனை ஆண்ட்ராய்ட் ஆப்பா மாத்தி பிளேஸ்டோர்ல விடக் கூடாது? 

இதெல்லாம் சின்னச் சின்ன ஐடியாதான். இதைவிடப் பெரிய திட்டம் வந்தாலும் வரும்.....வரும்!

vikatan

 

 

  • Replies 11.3k
  • Views 1.5m
  • Created
  • Last Reply
  • தொடங்கியவர்

வலைபாயுதே

 

சைபர் ஸ்பைடர்

 

p100.jpg

twitter.com/Writter_Naina:
ஹோட்டல்ல சாப்பிட்டு முடிச்சதும் சர்வர் டிப்ஸ் கேட்டாரு.

`வெந்தயம் போட்டு ஆட்டினால், இட்லி மிருதுவாக இருக்கும்'னு டிப்ஸ் கொடுத்தேன்... முறைக்கிறார்.

twitter.com/teakkadai:
ரசம், ஊறுகாய்க்கே இன்னைக்கு காசு இல்லாம அலைஞ்சு ரெடி பண்ணவேண்டியதாப்போச்சு. பேலியோ மக்கள் எல்லாம் எப்படிச் சமாளிக்கிறாங்கனு தெரியலையே!

twitter.com/dhandaa75:
என்னங்க... இந்த மொய் கவரைத் திறக்கவே முடியலை. நீங்க கொஞ்சம் ட்ரை பண்ணுங்க!

நாசமாப்போச்சு... அது, புது 2,000 ரூபா நோட்டு!

twitter.com/balu_gs:
குழந்தைப் பருவத்தை, ரயில்வே பிளாட்பாரத்தில் கழித்தேன் - மோடி.

இதை இப்போ பிளாட்பாரத்தில் நின்னுதான் படிச்சுட்டு இருக்கோம் தல!

twitter.com/Kozhiyaar:
வீட்டுச் சண்டைக்குப் பிறகு, கொஞ்சம் தண்ணி வயித்துக்கும், மிச்ச தண்ணி சோத்துக்கும் ஊத்திட்டுத் தூங்குறதுதான் நம்ம தமிழர் வழக்கம்!

p100a.jpg

twitter.com/naatupurathan:
ஜல்லிக்கட்டு விளையாட, 1,008 கேள்வி கேக்கானுவ... ரம்மி விளையாட வீடு வரைக்கும் டி.வி-யில வந்து கூப்பிட அனுமதி தர்றானுவ!

என்ன எழவெடுத்த நாடுடா!

twitter.com/thoatta: `இன்னிக்கு நைட்டும் சப்பாத்தியா?'னு கேட்டா, உடனே அம்மாகூட `எல்லையில் ராணுவ வீரர்கள் தினமும் சப்பாத்தி...'னு ஆரம்பிக்கிறாங்க :-/

twitter.com/SolitaryReaper_: அன்பெல்லாம் அப்புறம்… நம்புங்கள் முதலில்.

twitter.com/mekalapugazh:
ஆதிமனிதனின் ஆரோக்கியம் அவன் உண்ட உணவில் இல்லை..

உணவுத்தேடலுக்கான அவன் உழைப்பில் இருந்தது.

twitter.com/dlakshravi:
சொல்வது பொய் என்பது தெரிந்த பிறகு அடுத்த கேள்வி தவிர்க்கப்படுகிறது.

twitter.com/Raittuvidu:
பொசுக் பொசுக்னு எல்லாத்துக்கும் பூஜையைப் போட்டே வாழ்க்கையைப் வாழ்ந்திருக்கான் பண்டைய தமிழன்!

p100b.jpg

facebook.com/syed.ibrahim:  நம்ம 2,000 ரூபாய் பற்றிப் பேசிட்டிருக்கோம். அவய்ங்க `2.0' படத்தைப் பற்றி பேசிட்டிருக்காய்ங்க, தட்ஸ் ஆல்!

facebook.com/eniyan.ramamoorthy:
`மாமா, அவசரமா ச்சூச்சு வருது. ஆனா, இங்கே எல்லாம் ஒசரமா இருக்கு' என்ற 7 வயது குழந்தையை, அவன் முழுவதுமாக இருக்கும் வரை கை வலிக்கத் தூக்கிப் பிடித்துக் கொண்டிருக்கும்போது `அடிப்படைத் தேவைகளுக்காக உலகில் அதிகம் புறக்கணிக்கப்படுபவர்கள் குழந்தைகள்தான்' எனத் தோன்றுகிறது.

facebook.com/IamManushi:
பிங்க் கலர் பிடிக்காமல்போகுது :(

facebook.com/boopath23:
சனிக்கிழமை மாலை ஆரம்பித்து திங்கள் காலை வரை ஒரு வாழ்க்கை; திங்கள் காலை ஆரம்பித்து சனிக்கிழமை மாலை வரை வேறொரு வாழ்க்கை.

facebook.com/venkatesh.arumugam1:
பாஸ்வேர்டுகளை பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே கண்டுபிடித்த வர்கள் மந்திரவாதிகளே! ஓம்... ரீம்... க்ரீம்... ஹம்... லம்..!

facebook.com/arun.dir1:
ரெண்டு நாளைக்கு முன்னாடி மோடியை ஆதரிச்சு ஸ்டேட்டஸ் போட்ட ஒருத்தனைக்கூடக் காணோம். பாவம், எந்த பேங்க் வாசல்ல நின்னுகிட்டிருக் காய்ங்களோ!

p100c.jpg

facebook.com/prabhuramakrishnan
``மாஸ்டர் கொஞ்சம் எக்ஸ்டராவா சட்னி தாங்க''

``தம்பி... எல்லையில் இருக்கும் ராணுவ வீரர்கள்...''

``ஐய்யோ! எனக்கு இட்லிகூட வேண்டாம். ஆளை விடு.''

facebook.com/kokilan.gokul
“தம்பி, இந்த மோடி போட்ட சட்டம் நல்லதா... கெட்டதா?”

``யாராவது ரெண்டு லட்சம் ரூபாய் எங்கிட்ட கொடுத்தா, ரொம்ப நல்ல திட்டம். இல்லைன்னா...”

facebook.com/mani.pmp.5
சிலர் எண்ணம் எல்லாம் இரண்டாயிரம் ரூபாய் நோட்டு மாதிரி, கடைசி வரைக்கும் மாற்றவே முடியாது.

facebook.com/aruna.raj.35
மாலுக்கு ஹவாய் செருப்பும்,  சினிமாவுக்கு அரை டிரவுசரும் போடுறவன் பேச்சுலர் என்றறிக.

vikatan

  • தொடங்கியவர்

15203312_1508652565817816_72949616661808

இது ஒரு ஹோட்டலாம். எங்கே சாப்பிட்டீங்கனு வீட்டுல கேட்டா எப்படி சொல்லுறது? ..:grin:

 

  • தொடங்கியவர்

இணையத்தால் பிரபலமான பாகிஸ்தான் டீ மாஸ்டரின் புதிய வீடியோ!

 
arshad_khan1

 

பாகிஸ்தானில் உள்ள இஸ்லாமாபாத்தில் டீக்கடையில் பணியாற்றிய அர்ஷத் கானை ஒரு புகைப்படக்கலைஞர் படமெடுத்து அதை சமூகவலைத்தளத்தில் வெளியிட்டார். பார்க்க அழகாக, இளமையாக, நீலநிறக் கண்களுடன் இருந்ததால் அர்ஷத் கானின் படம் வியப்புடன் பலராலும் பகிரப்பட்டது. இதனால் அவரைப் பற்றிய செய்திகளும் வெளியாகின.

ஒரு கிளிக் அர்ஷத் கானின் வாழ்க்கையை மாற்றியது. இணையத்தால் பிரபலமான அர்ஷத் கானை நேரில் பார்த்து புகைப்படம் எடுத்துக்கொள்ள பலரும் வந்தார்கள். இணையத்தினால் உள்ளூரிலும் உலக அளவிலும் பிரபலமானார்.

இதையடுத்து அவருக்கு மாடலிங் வாய்ப்புகளும் வந்ததால் வாழ்க்கையே மாறிப்போனது. டீக்கடை மாஸ்டராக இருந்தவர் ஒரேநாளில் மாடல் ஆகியுள்ளார். இப்போது அவரைப் பற்றிய சாய்வாலா என்கிற வீடியோ ஆல்பம் தயாரிக்கப்பட்டுள்ளது. இந்த வீடியோவுக்கும் நிறைய ரசிகர்கள் கிடைத்துள்ளார்கள்.  

 
  • தொடங்கியவர்
புரிதலும் காதலை வளர்க்கும்
 
 

article_1480480980-youipu8p.jpgஉரிமையுடன் அதிகாரம் செலுத்தும் கணவனையே மனைவி விரும்புகின்றாள். தன்னை ஒருவன் விரும்பி, உண்மையான காதலை வெளிப்படுத்தியமையை உணர்ந்தவள், அவனது அன்பின் ஆழுமைக்குள் பிரவேசித்து விடுகின்றாள். 

இதனால், இவள் என்னவள் என்ற அதீத அன்பினால், அவள் மீது அதிகாரம் செலுத்துவது ஒன்றும் புதுமையானது அல்ல! இந்த அதிகாரத்தை மனைவி அல்லது காதலி செலுத்துவதையும் ஆண்மகன் இரசிக்கின்றான். சில சமயங்களில் போலியான கோபங்கள் ஏற்படுவது கூட மேலான காதலின் இறுக்கத்தினால் அன்றி, வேறல்ல. 

இதனை, மானசீகமாகப் புரிந்து கொள்ளாமல் ஒருவருக்கு ஒருவர் தப்பபிப்பிராயங்கள் எழுவதுண்டு. இதனை, இவர்களே புரிந்து பேசித் தீர்ப்பதும் சுலபமான விடயம்தான்.  

கணவன், மனைவி தமக்கிடையில் சின்னச் சின்னச் சண்டைகள் புரிவதும் இணைவதும் அவர்களின் காதலை மென்மேலும் வளர்க்கும். 

Edited by நவீனன்

  • தொடங்கியவர்

இந்த மாதத்தை  இப்படியல்லவா ஆரம்பிக்க வேண்டும்? #MotivateYourSelf

உங்கள் காலில் முள் குத்தினால், நீங்கள் தான் அதைப் பிடிங்கி ஓரமாக போட வேண்டும். முள் மாதிரி தான் பிரச்னைகளும். நமக்கான தீர்வுகளை நாம் தானல்லவா தேட வேண்டும். எல்லோருக்கும் பிரச்னைகள் இருக்கத் தான் செய்கின்றன, எதை யார் எப்படி அணுகுகிறார்கள் என்பதை பொறுத்து தான் வெற்றி தேவதை  கை மாறுகிறாள்.

இந்த வருடத்தின் இறுதிக்கட்டத்திற்கு வந்துவிட்டோம், இது கடைசி மாதம். இந்த ஆண்டு, எதையெல்லாம் நாம் இனி ஒழுங்காக செய்ய வேண்டும் என நினைத்து செய்யாமல் விட்டோமோ அதையெல்லாம், இப்போதாவது செய்து முடித்து விட வேண்டும் ஏன் உறுதி கொள்ளுங்கள். இந்த  இறுதி மாதத்தின் தொடக்கநாளான இன்றே அதைச் செயல்படுத்த ஆரம்பியுங்கள்.

ஆங்கிலத்தில் மோட்டிவேஷனல் கோட்ஸ் மிக பிரபலம், உலகம்முழுவதும் இணையத்தில் கலக்கும் பத்து கோட்ஸ் உடன் இன்றைய நாளை ஆரம்பிப்போம்.

உங்கள்

 

உங்கள் இலக்கு எது வேண்டுமானாலும் இருக்கலாம். அதை அடைய நீங்கள்  தொடர்ந்து முயற்சி செய்து  கொண்டே இருக்க வேண்டும், எப்போது விடாமுயற்சியை கைவிடுகிறீர்களோ அப்போது தான் நீங்கள் தோற்கிறீர்கள். 

 

m2_23086.jpg

ஒரு  விஷயத்தை செய்து முடிக்க வேண்டும் என எண்ணுகிறீர்கள், ஆனால் அது கைகூட வில்லை என்றால், கொஞ்ச நேரம் ஓய்வு எடுத்து விட்டு மீண்டும் முயற்சிக்க வேண்டும். அதை விடுத்து அந்த விஷயத்தை விட்டு ஒதுங்கிவிடக்கூடாது. 

 

m3_23285.jpg

 பயம். அது  தான் மிக மோசமானது. எந்தச் சூழ்நிலையிலும் பயம் உங்கள் வாழக்கையை தீர்மானிக்க கூடாது என்பதில் தெளிவாக இருங்கள்.  யார் தடுத்தாலும், உங்களால் உங்கள் கனவை அடைய முடியும் என்பதில் தெளிவாக இருங்கள்.

 

m4_23176.jpg

எல்லோருக்கும் ஆசைகள்  இருக்கின்றன, ஆனால் பலர் தங்களது ஆசைகளை அடைய செயல்வடிவம் கொடுப்பதே இல்லை. ஆசைகளை தன்னுள்ளேயே புதைத்துக் கொண்டு தியாகியாக வாழ நினைப்பது முட்டாள்தனம். உங்களது கம்ஃபோர்ட் ஜோனில் இருந்து வெளியே வாருங்கள், சிறிய வட்டத்துக்குள் சுருங்காமல்  தைரியமான முயற்சிகளை மேற்கொள்ளுங்கள். "இருக்கிற இடம் தெரியாமல் இருந்துட்டு போயிரணும்பா" எனும் வாழ்க்கை வேண்டாம். 

m5_23361.jpg

தவறுகள் எல்லோருக்கும் சகஜம் தான், உங்களுக்கு ஆங்கிலம் பேச வேண்டும் என்ற ஆசை இருக்கலாம், அதற்கு முதலில் தவறோ, சரியோ நண்பர்களிடம் ஆங்கிலம் பேசி பழக வேண்டும். சிலர் ஊக்குவிக்கலாம், சிலர் கேலி செய்யலாம். ஆனால் கவலைப்படக் கூடாது. நீங்கள் தவறு செய்கிறீர்கள் என்றாலே முயற்சிக்கிறீர்கள் என்று தான் அர்த்தம்.  தவறை எப்படி திருத்துவது என்பது தான் பார்க்க வேண்டுமே தவிர, இந்த விஷயம் நமக்கு சரி வராதுப்பா என அப்படியே ஒதுக்கி விட வேண்டாம்.

m6_23547.jpg

 தினமும் காலை எழுந்து,கண்ணாடி முன்பு நில்லுங்கள், என்னால் முடியும் என பத்து தடவை சொல்லுங்கள். பாசிட்டிவ் வார்த்தைகள் நம்மை மாற்றும். ஒவ்வொரு நாளையும் புது உத்வேகத்துடன் ஆரம்பியுங்கள். எவ்வளவு தோல்விகள் வந்தாலும், மீண்டும் மீண்டும் மூர்க்கத் தனமாக போராடுங்கள்.

m7_23132.jpg

அஜய்க்கு சைக்கிள் ஓட்ட வேண்டும் என ஆசை உண்டு. விஜய்க்கும் தான்.  அஜய் சைக்கிள் எடுத்து ஓட்டினான், தெருவில் ஒரு குப்பைத்தொட்டி அருகே ஒரு கம்பத்தில் மோதி படுகாயமடைந்தான். விஜய் சைக்கிள் ஒட்டவே முயற்சிக்கவே இல்லை. அஜய் காயம் குணமான பிறகு மீண்டும் சைக்கிள் எடுத்தான், ஒரே வாரத்தில் ஓட்ட பழகினான். இன்று அஜய் சென்னை நெரிசல்களில் லாவகமாக  ராயல் என்பீல்டில் செல்கிறான். விஜய்க்கு இன்னமும் எந்த வண்டியும் ஓட்டத் தெரியாது. நீங்கள் விஜய்யாக இருக்க  ஆசைப்படுகிறீர்களா அல்லது அஜய்யாக இருக்க ஆசைப்படுகிறீர்களா? 

m8_23301.jpg

வாய்ப்புகள் தானாக அமையாது, நாம் தான் அமைத்துக் கொள்ள வேண்டும் என கோச்சடையான் படத்தில் ஒரு வசனம் வரும்.  அது நிதர்சனம். உங்களுக்கு வாய்ப்பு வரும், புதையல் கிடைக்கும், அதிர்ஷ்டக் காற்று வீசும்  என்றெல்லாம் காத்திருக்காமல், கிடைக்கும் வாய்ப்புகளை எல்லாம் பயன்படுத்துங்கள், உங்களால் அந்த வாய்ப்பு மரியாதை கிடைக்கும் அளவுக்கு நடந்து கொள்ளுங்கள்.

m9_23475.jpg

கொதிக்கும் தண்ணீரில்,  திட உணவான  உருளைக் கிழங்கை போட்டால் அது மிருதுவாக, உடைத்து தின்னும் வகையில் மாறி விடும். ஒருவேளை முட்டையை வைத்தால், அதில் உள்ளே இருக்கும் நீர்ம வடிவிலான பொருள்,  கெட்டியாகி  அவித்த முட்டையாக நமக்கு கிடைக்கும். உங்கள் சுற்றியுள்ள சூழ்நிலை உங்களை நிர்ணயிக்க கூடாது, உங்களுக்கு என பிரத்யேகத் தனித் தன்மை வேண்டும். அதில் எதையும் செய்து முடிக்கும் மன உறுதியும், ஆற்றலும்  இருக்க வேண்டும்.

 

m10_23040.jpg

ஆப்பிள் மொபைல் வாங்க வேண்டும் என்றாலும் சரி,  எவெரெஸ்ட்  சிகரம் ஏற வேண்டும் என்றாலும் சரி, உங்கள் ஆசைகள் குறித்து முதலில் யோசியுங்கள். முயற்சி செய்தால் சாத்தியம் என்பது தெரிந்தால், அடுத்து உங்கள் மேல் அளவில்லாத நம்பிக்கையை வையுங்கள், மூன்றாவதாக கனவு காணுங்கள். முடிவாக செய்து முடிப்பீர்கள். 

vikatan

  • தொடங்கியவர்

உயிர்க்கொல்லிக்கு விடைகொடுப்போம்! உலக எய்ட்ஸ் தினம் - டிசம்பர் 1 #WorldAidsDay

உலக எய்ட்ஸ் தினம்

`ஹெச்.ஐ.வி பாதிப்பும் மற்றும் எய்ட்ஸ் நாளுக்கு நாள் அதிகமாகிக்கொண்டே இருக்கின்றன. இவை குறித்த அக்கறையின்மையும் மக்களிடம் அதிகமாக இருக்கிறது. ஏற்கெனவே எத்தனையோ நண்பர்களையும் சக தோழர்களையும் எய்ட்ஸால் இழந்து நிற்கிறோம்.’ - டேவிட் ஜெஃபன், அமெரிக்க தொழிலதிபர், சமூக ஆர்வலர். 

‘மிக மோசமான உயிர்க்கொல்லி’ என வர்ணிக்கப்படுவது எய்ட்ஸ். மற்ற நோயாளிகளுக்கு இல்லாத சில சங்கடங்கள் எய்ட்ஸ் நோயாளிகளுக்கு உண்டு. அவை, இழிவாகப் பார்க்கப்படுதல்; சமூகப் புறக்கணிப்பு; தனிமைப்படுத்தப்படுதல். உலகம் முழுக்க, இன்றைக்கும் இந்த நிலையில் பெரிய அளவுக்கு மாற்றம் இல்லை. இந்தச் சூழலில்தான் டிசம்பர் 1-ம் தேதியை ‘உலக எய்ட்ஸ் தின’மாக எதிர்கொள்கிறோம். 

aidss130_20385.jpg

 

1988-ம் ஆண்டில் இருந்து உலக சுகாதார நிறுவனம், டிசம்பர் 1-ம் தேதியை ‘உலக எய்ட்ஸ் தினம்’ என அனுசரித்து வருகிறது. `உலக அளவில் 3 கோடியே 67 லட்சம்பேர் ஹெச்.ஐ.வி பாதிப்போடு வாழ்கிறார்கள்; அவர்களில் 18 லட்சம் பேர் குழந்தைகள்’ என்கிறது, 2015-ம் ஆண்டுக்கான ஒரு புள்ளிவிவரம். அதே 2015-ம் ஆண்டில்தான் 11 லட்சம் பேர் எய்ட்ஸ் பாதிப்புக்கு ஆளாகி இறந்து போயிருக்கிறார்கள்.

வருவாயில் பின் தங்கிய மற்றும் நடுத்தர நாடுகளில்தான் பெரும்பான்மையானோர் ஹெச்.ஐ.வி-யால் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள். 2015-ம் ஆண்டு, இந்தியாவில் ஹெச்.ஐ.வி பாதிப்புக்கு ஆளானோர் எண்ணிக்கை 21 லட்சம்; எய்ட்ஸ் தொடர்பான நோய்களால் இறந்தவர்கள் 68,000 பேர். இதில் கொடுமை என்னவென்றால், உலகில், ஹெச்.ஐ.வி பாதிப்போடு வாழ்கிறவர்களில் 40 சதவிகிதத்தினருக்கு, தங்களுக்கு இப்படி ஒரு பாதிப்பு இருப்பதே தெரியாது என்பதுதான். 

WAD2016_Day_top_5_20373.png

ஒரு தினத்தை நினைவுபடுத்தி அனுசரிப்பதன் நோக்கம், அதற்கான முக்கியத்துவத்தை எல்லோருக்கும் உணரவைப்பதாகும். மருத்துவம், தொழில்நுட்பம் எனப் பல துறைகளில் எவ்வளவோ முன்னேற்றம் ஏற்பட்டுவிட்ட இன்றையச் சூழலில் நமக்குத் தேவை, எய்ட்ஸ் மற்றும் ஹெச்.ஐ.வி குறித்த போதிய விழிப்பு உணர்வு. இந்த ஆண்டு, இந்த தினத்துக்கான கருப்பொருளாக அறிவிக்கப்பட்டிருப்பது, `ஹெச்.ஐ.வி-யைத் தடுக்கக் கைகளை உயர்த்துவோம்' (Hands up for #HIV Prevention). ஹெச்.ஐ.வி வராமல் தடுத்துவிட்டால், எய்ட்ஸில் இருந்து தப்பித்துவிடலாம்.

அதைத் தடுக்க என்ன செய்யவேண்டும்; நம் வாழ்க்கைமுறையில் பின்பற்றவேண்டியவை என்னென்ன என்பதை ஒரு பெரும் பிரசாரமாகச் செய்யவேண்டியிருக்கிறது. திரும்பத் திரும்ப அவற்றை கிளிப்பிள்ளைக்குச் சொல்வதைப்போல் மக்களுக்குச் சொல்லி விழிப்பு உணர்வை ஏற்படுத்தவேண்டியது அவசியம். இந்த நாளில் அதற்கு நாம் ஒவ்வொருவரும் உறுதி ஏற்போம். எதிர்கால சந்ததியினருக்காகவாவது உயிர்க்கொல்லிக்கு வைப்போம் ஒரு முற்றுப்புள்ளி! 

vikatan

  • தொடங்கியவர்

15327367_1201513226564036_56802115692987

 

இலங்கை கிரிக்கெட் அணியின் மிகச்சிறந்த முன்னாள் அணித்தலைவர்களில் ஒருவரும், 1996ஆம் ஆண்டு இலங்கை உலகக்கிண்ணம் வென்ற போது தலைமை தாங்கியவருமான அர்ஜுன ரணதுங்க இன்று தனது பிறந்த நாளைக் கொண்டாடுகிறார்.

வாழ்த்துக்கள் அர்ஜுன.

நிதானம் தவறாத ஆனால் போராட்ட குணம் நிறைந்த ஒரு தலைவராக விளங்கிய அர்ஜுன Captain Cool என்று பெருமையோடு அழைக்கப்பட்டவர்.

இப்போது நேர்த்தியான ஒரு அமைச்சராக தனது கடமைகளைப் பொறுப்பாக ஆற்றிவருகிறார் ரணதுங்க.

இலங்கை டெஸ்ட் அந்தஸ்து பெற்று விளையாடிய முதல் போட்டியில் பள்ளி மாணவனாக விளையாடி அரைச் சதம்
பெற்றிருந்தார் அர்ஜுன.

Happy Birthday Arjuna Ranatunga

 

 

இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவர் அர்ஜூன ரணதுங்கவின் பிறந்த தினம் இன்று
 

இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவர் அர்ஜூன ரணதுங்க இன்று  தனது 52 ஆவது பிறந்த தினத்தை கொண்டாடுகிறார்.

 

21008arjuna-ranatunga-2016-world-cup.jpg1982 ஆம் ஆண்டு நடைபெற்ற இலங்கையின் முதலாவது டெஸ்ட் போட்டியில் 18 வயது பாடசாலை மாணவனாக இருந்த அர்ஜூன ரணதுங்கவும் பங்குபற்றினார். இங்கிலாந்துடனான அப் போட்டியின் முதல் இன்னிங்ஸில் அர்ஜூன அரைச்சதம் (54) குவித்தமை குறிப்பிடத்தக்கது.


இலங்கையின் சார்பில் 93 டெஸ்ட் போட்டிகளில் 5105 ஓட்டங்க ளையும் 269 ஒருநாள் சர்வதேச போட்டிகளில்  7456 ஓட்டங்களையும் குவித்த அர்ஜூன டெஸ்ட் போட்டிகளில் 16 விக்கெட்களையும் ஒருநாள் சர்வதேச போட்டிகளில் 79 விக்கெட்களையும் வீழ்த்தினார்.


1996 ஆம் ஆண்டு உலக கிண்ணப் போட்டிகளில் இலங்கை அணி சம்பியனாகியதில் அர்ஜூனவின் தலைமைத்துவமும் துடுப்பாட்ட மும் முக்கிய பங்குவகித்தன.


1999 உலக கிண்ணத் தொடருடன் ஒருநாள் போட்டிகளிலிருந்து ஓய்வு பெற்ற அவர், 2000 ஆம் ஆண்டு டெஸ்ட் போட்டிகளிலிருந்து ஓய்வு பெற்றார். பின்னர் அரசியலில் ஈடுபட்ட அவர் தற்போது துறை முகங்கள், கப்பல் துறை அமைச்சராக விளங்குகிறார்

.metronews.lk

Edited by நவீனன்

  • தொடங்கியவர்

சிவாஜி, ஜிகர்தண்டா, கத்தி படங்கள்ல இந்த சீன்லாம் நீங்க தியேட்டர்ல பாத்திருக்க மாட்டீங்க!

நாம் திரையில் பார்க்கும் படம் விறுவிறுப்பாக அமைவதற்கு எடிட்டர்களின் பங்கு மிகவும் அத்தியாவசியமானது. நேரத்தைக் குறைப்பதற்காகவும், திரைக்கதையை சுவாரசியமாக்கவும் பல காட்சிகள் நீக்கப்பட்டுதான் திரைப்படம் இறுதி வடிவம் பெறுகிறது. ஹிட் அடித்த சில படங்களின் நீக்கப்பட்ட காட்சிகளின் தொகுப்பு இது.

நீக்கப்பட்ட காட்சிகள்

கத்தி :

'துப்பாக்கி' ஏந்தி ஸ்லீப்பர் செல்களின் தலைவனைப் போட்டுத்தள்ளிய விஜய்யின் கையில், கார்ப்பரேட் நிறுவனங்களை எதிர்க்க 'கத்தி' பிடிக்க வைத்திருப்பார் இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ். அவ்வளவு பெரிய கம்யூனிசத்தை இட்லியை வைத்தே விஜய் தனது தங்கைக்கு விளக்கிய காட்சி பலரது கைதட்டல்களைப் பெற்றது. இந்தப் படத்தின் இந்தக் காட்சியும் படத்தில் இருந்திருந்தால் இதற்கும் கண்டிப்பாக கைதட்டல்கள் கிடைத்திருக்குமோ எனத் தோன்ற வைக்கிறது.

 

 

இறுதிச்சுற்று :

குப்பத்தில் குத்தாட்டம் போட்டபடி பலரது தாடையை உடைத்து ரத்தம் பார்த்துக்கொண்டிருந்த கதாநாயகியை, கதாநாயகன் தனது பயிற்சியால் குத்துச்சண்டை சாம்பியனாக்குவது தான் படத்தின் கதை. கதாநாயகியாக அறிமுகமான ரித்திகா சிங் நிஜ வாழ்க்கையிலும் குத்துச்சண்டை வீராங்கனை என்பது படத்துக்குக் கூடுதல் பலமாக அமைந்தது. வட இந்திய உதடுகளையும் முணுமுணுக்க வைத்தது சந்தோஷ் நாராயணனின் இசை. இப்படத்தில் இருந்து கட் செய்யப்பட்ட காட்சியைக் காண கீழே க்ளிக் செய்யுங்கள்.

 

 

மெட்ராஸ் :

வட சென்னை மக்களின் வாழ்க்கை முறையையும், அரசியல் சூழ்ச்சிகளால் மக்களின் வாழ்க்கை எப்படி துண்டாடப்படுகிறது என்பதையும் காட்டிய படம் இது. ஒரு சுவருக்கு இத்தனை அக்கப்போரா என ஆரம்பத்தில் சொன்னவர்களையும் 'அட' போட வைத்தது இப்படத்தில் தூவப்பட்டிருந்த குறியீட்டு மசாலா. நடிகர் கார்த்தியின் சினிமா டைரியில் முக்கியமான படமாகவும் எழுதப்பட்ட இப்படத்திலிருந்து நீக்கப்பட்ட காட்சிகள் கீழே...

 

ராஜா ராணி :

தனது முதல் படத்திலேயே இயக்குநர் அட்லி சிக்ஸர் அடித்த படம் இது. பார்த்துப் பழகிய திரைக்கதை என்றாலும் நயன்தாரா-ஆர்யா கூட்டணி, க்யூட் நஸ்ரியா, அதிரி புதிரி காமெடி, ரிச் விஷுவல்ஸ் எல்லாம் கலந்துகட்டி வசூலில் பொளந்து கட்டியது. இப்படத்தின் எடிட்டர் ரூபன் செம ஸ்ட்ரிக்ட் பேர்வழி போல. படத்தில் பாடல்கள், சில காட்சிகள் என நிறைய கட். அதில் சில காட்சிகள்.

 

 

ஜிகர்தண்டா :

'பீட்சா' படத்திற்குப் பிறகு கார்த்திக் சுப்புராஜ் இயக்கிய இப்படத்தில் நாயகன் சித்தார்த்தை விட 'அசால்ட்' சேதுவாக முரட்டுத்தனமான வில்லன் கதாபாத்திரத்தில் அசால்ட் காட்டியிருப்பார் பாபி சிம்ஹா. பின்நாளில் தன்னைச் சந்தித்த கார்த்திக் சுப்பராஜிடம், ’சேது’ பாத்திரத்தை நான் அதிகம் விரும்பினேன். சிம்ஹாவின் நடிப்பு எனது ’பரட்டை’ கதாபாத்திரத்தை ஞாபகப்படுத்தியது' என சூப்பர்ஸ்டார் பாராட்டினார் என்றால் பார்த்துக்கொள்ளுங்கள். இப்படத்தில் எக்கச்சக்கமான காட்சிகள் பாரபட்சம் பார்க்காமல் நீக்கப்பட்டிருக்கின்றன.

 

 

சிவாஜி :

வில்லன் சுமனை மட்டுமில்லாமல் கறுப்புப் பணத்தையும் ஒழித்துக்கட்டி, நாட்டை சுபிட்சமாக்கிய சூப்பர்ஸ்டாரின் வெற்றிப்படம் இது. 'கறுப்புப் பண வேட்டை தீவிரம் '500 ரூபாய், 1000 ரூபாய் பணம் செல்லாது' என  டைட்டில் கார்டில் ஓடவிட்ட இந்த தீர்க்கதரிசனத் திரைப்படம், தமிழ் மற்றும் தெலுங்கில் ஒரே நேரத்தில் ரிலீஸ் ஆகி வசூல் வேட்டையாடியது. அநேகமாக ஒரு படத்தின் நீக்கப்பட்ட காட்சிகளை அதிகம் பேர் பார்த்த வரலாறும் இத்திரைப்படத்திற்குத்தான் இருக்கும்.

 

 

இவை எல்லாம் சாம்பிள்ஸ்தான். இப்படி ஏகப்பட்ட காட்சிகள் ஒவ்வொரு படத்திலிருந்தும் வெட்டப்பட்டுதான் முழுமை அடைகின்றன. எடிட்டர்ன்னா சும்மா இல்லை பாஸ்!

vikatan

  • தொடங்கியவர்

"ரிங்கா ரிங்கா ரோஸஸ்" ரைம்ஸ் அல்ல...ஒரு வரலாற்று சோகம்!

 

ரிங்கா ரிங்கா ரோஸஸ்

" ரிங்கா ரிங்கா ரோஸஸ்..." என சின்ன வயதில் நாம் விளையாடிய விளையாட்டுக்கும், சமீபத்தில் இங்கிலாந்தில் கண்டெடுக்கப்பட்ட 13-ம் நூற்றாண்டைச் சேர்ந்த எலும்புக் கூடுகளுக்கும் ஓர் நெருங்கிய தொடர்பு இருக்கிறது என்பது எத்தனை பேருக்குத் தெரியும் ? அந்தத் தொடர்பை தெரிந்து கொள்வதற்கு முன்னர்... மனித இனத்தின் ஒரு பேரழிவு நிகழ்வினை, வரலாற்றுத் துயரத்தை தெரிந்து கொள்ள வேண்டிய அவசியம் இருக்கிறது...

1300 களின் காலகட்டம்... சீனாவின் பல பகுதிகளிலும் மக்கள் ஒரு விசித்திர நோயால் பாதிக்கப்பட்டு கொத்து கொத்தாய்  உயிரிழந்தனர் . அது "பிளேக்" நோய் என்று அவர்கள் கண்டுபிடித்து முடிப்பதற்குள், அது வட இந்தியா வரை பரவி விட்டிருந்தது. எலிகளிடமிருந்து, ஃப்ளீ (Flea) என்ற பூச்சியினம் இந்த நோயை மனிதர்களுக்கு கடத்தியது . சீனா மற்றும் வட இந்தியக்  கடற் பகுதிகளில் வர்த்தகங்களை முடித்துவிட்டு தங்கள் நாடுகளுக்கு கப்பல்களில் கிளம்பினர் ஐரோப்பியர்கள். அவர்களின் கப்பல்களில் பிளேக்கால் பாதிக்கப்பட்ட எலிகள் இருந்ததை  அவர்கள் சரியாக கவனிக்கவில்லை. அதே நேரத்தில், ஒரு பெரிய மங்கோலியப் படையும் ஐரோப்பாவை நோக்கி கப்பல்களில் பயணப்பட்டுக் கொண்டிருந்தது. 

ஐரோப்பாவில் இவர்கள் சென்றடைந்த இடம், இத்தாலிய கடற் பகுதியில் இருக்கும் கஃப்ஃபா (Kaffa) நகரம் . மங்கோலிய படையிலிருந்த பலரும் அந்தப் பயணத்திலேயே பிளேக்கால் பாதிக்கப்பட்டனர். தரையிறங்கிய அந்தப் படை... பாதிக்கப்பட்ட நோயாளிகளை கலன்களில் கட்டி, கோட்டைச் சுவற்றைத் தாண்டி, கஃப்ஃபா நகரத்துக்குள் தூக்கியெறிந்தனர். என்ன ஏதென்று தெரியாமல் பக்கம் வந்த மக்களுக்கும் நோய் தொற்றியது . கஃப்ஃபா நகர மக்கள் பயந்து போய் ஊரை காலி செய்து கொண்டு பல்வேறு இடங்களுக்கு குடி பெயரத் தொடங்கினர். போகுமிடமெல்லாம் நோய் பரவத் தொடங்கியது. அதே சமயம் ஆசியாவில் இருந்து  ஐரோப்பாவின் பல்வேறு இடங்களுக்கு சென்றடைந்த வர்த்தக கப்பல்களில் இருந்த எலிகளும் நோய் பரவ முக்கிய காரணமாக இருந்தன. 

ரிங்கா ரிங்கா ரோஸஸ்

இந்த இழப்புகள் இதுவரை மனித  இனம் சந்தித்திராத அளவுக்கு இருந்தது. ஐரோப்பாவின் மக்கள் தொகையில் 60% வரை இந்த நோயால் உயிரிழந்தனர். உலகம் முழுக்க கிட்டத்தட்ட 20 கோடி பேர் உயிரிழந்தனர். இந்தப் பேரழிவை ஆங்கிலத்தில் "பிளாக் டெத்" (Black Death) என்று குறிப்பிடுகிறார்கள். நோய் தாக்குதலுக்கு முன்னிருந்த உலக மக்கள் தொகையை மீண்டும் எட்டுவதற்கு கிட்டத்தட்ட 300 ஆண்டுகள் ஆனது. இந்த பெரும் சோக நிகழ்வை உலகின் பல நாட்டு ஆராய்ச்சியாளர்களும், பல தடயங்களைக் கொண்டு ஆராய்ந்து வந்துள்ளனர். அதன் ஒரு பகுதியாக இந்த வாரத் தொடக்கத்தில், இங்கிலாந்தின் லிங்கன்ஷைர் பகுதியில் 13-ம் நூற்றாண்டைச் சேர்ந்த 48 எலும்புக் கூடுகளைக் கண்டெடுத்துள்ளனர். அதில் 27 எலும்புக் கூடுகள் குழந்தைகளுடையது. 

எலும்புக் கூடுகளில் இருந்த பற்களை கனடாவிலிருக்கும் ஆராய்ச்சி மையத்துக்கு அனுப்பி வைத்தனர். இவர்கள் அனைவரும் "பிளேக்" நோயால் இறந்தது உறுதி செய்யப்பட்டுள்ளது . உலகின் பல்வேறு பகுதிகளிலும் இது போன்ற பிணக் குழிகளை கண்டு பிடித்திருந்தாலும், ஒரே குழியில் இத்தனை எலும்புக் கூடுகளை இப்போது தான் கண்டுள்ளனர். மேலும், இந்த எலும்புக் கூடுகள் குவியலாய் இல்லாமல் சீராக, பக்கம் பக்கமாக அடக்கம் செய்யப்பட்டுள்ளது. இதைக் கொண்டு இவர்கள் நோய் தொற்று ஆரம்பித்த காலத்தில் இறந்தவர்களாக இருக்கலாம் என்று சொல்லப்படுகிறது. காரணம் ஆரம்பக் கட்டத்தில் இறந்தவர்களை, மக்கள் மரியாதையுடன் இறுதிச் சடங்குகளை செய்து புதைத்தனர். பின்பு, பலி எண்ணிக்கை அதிகரிக்க, அதிகரிக்க பிணங்களை குழியில் குவியலாய் கொட்ட ஆரம்பித்தனர் என்கிறார்கள் ஆராய்ச்சியாளர்கள். 

தற்போது கிடைத்திருக்கும் இந்த ஆதாரங்களைக் கொண்டு, இவர்கள் இறந்த காரணங்களைக் கண்டறிவது எளிது. ஆனால், இறப்பதற்கு முன்னரான இவர்களின் வாழ்க்கையைத் தேடுவதே மிக முக்கியம் என்று சொல்லியிருக்கிறார்கள் இங்கிலந்து ஆராய்ச்சியாளர்கள். அது நடந்தால் மனித இனத்தின் மிக முக்கிய வரலாற்றுப் பக்கங்கள் காணக் கிடைக்கும்... சரி இந்தக் கதைக்கும் "ரிங்கா ரிங்கா ரோஸஸ்..." விளையாட்டுக்கும் என்ன சம்பந்தம் ??? 

ரிங்கா ரிங்கா ரோஸஸ்

பிளேக்கால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உடலில் வட்ட வட்டமாக கொப்புளங்கள் வரும். அதற்கு அவர்கள் "Posies"" என்ற ஒரு நாட்டு மருந்தை உண்பார்கள். அது கைகொடுக்காத நிலையில் டிஷூம், டிஷூம் என்று தொடர் தும்மலால் பாதிக்கப்பட்டு, இறுதியில் இறந்து போவார்கள். இப்படி இறப்பவர்களுக்கான ஒப்பாரி பாடல் தான்..

" Ring of Ring of Rashes,
  Pocket full of Posies,
  Ai - tishoo, Ai - tishoo,
  All for down..." அழுது கொண்டே அவர்கள் பாடிய அந்த ஒப்பாரிப் பாடல் தான், கால மாற்றத்தில் குழந்தைகள் சிரித்து விளையாடும் ரைம்ஸ் பாடலாக மாறிப் போனது என்பது ஒரு சாராரின் கருத்து. இல்லை...ஆனால், பிளேக் நோயில் தும்மல் ஏற்படாது; அதனால் இது குழந்தைகளின் விளையாட்டுப் பாடல்தான் என்று வாதாடுபவர்களும் உண்டு !!!

vikatan

  • தொடங்கியவர்
Miss Asia Pacific International 2016
 

2098615181445_718597174970206_2266397138மிஸ் ஏசியா பசிபிக் இன்டர்நெஷனல் அழகுராணி போட்டி பிலிப்பைன்ஸில் நடைபெற்றது.

 

இப் போட்டியில் நெதர்லாந்தைச் சேர்ந்த தெரா லே கோன்ஞ் முதலிடம் பெற்று மிஸ் ஏசியா பசிபிக் இன்டர்நெஷனல் 2016 அழகுராணியாக தெரிவானார்.

 

இப் போட்டியில் தாய்லாந்தின் சவன்யா தனோம்வாங் 2 இரண்டாமிடத்தையும் பிலிப்பைன்ஸைச் சேர்ந்த இந்திய – பிலிப்பைன்ஸ் கலப்பினத்தவரான ஜெனியல் கிருஷ்ணன் 3 ஆம் இடத்தையும் பெற்றனர்.

 

குக் தீவுகளைச் சேர்ந்த பெலிசியா ஜோர்ஜ் 4 ஆம் இடத்தையும் கொரியாவின் சொயேவொன் கிம் 5 ஆம் இடத்தையும் பெற்றனர்.

 

 

20986_1111.jpg

 

20986_winner.jpg

 

20986_2nd.jpg

 

20986_3rd.jpg

 

20986_4th.jpg

 

20986_5th.jpg

 

20986_L-to-R.jpg

 

20986_15094900_714667045363219_438865314

 

20986_15192777_715352418628015_235680396

 

20986_15203123_715362881960302_737294204

 

metronews.lk

Edited by நவீனன்

  • தொடங்கியவர்

உலகின் மிகவும் செல்வாக்குமிக்க புகைப்படம்

 

gandhi-spinning-wheel-01_19048.jpg

டைம் பத்திரிகை உலகின் மிகவும் செல்வாக்குமிக்க (எல்லா காலத்திலும்) 100 புகைப்படங்கள் அடங்கிய தொகுப்பை வெளியிட்டுள்ளது. இதில் மகாத்மா காந்தி ராட்டை அருகே அமர்ந்துள்ள படமும் இடம்பெற்றுள்ளது. இந்தப் படம் கடந்த 1946-ம் ஆண்டு எடுக்கப்பட்டது. காந்தியின் இந்த படத்தை மார்கரேட் என்பவர் ஒரு பேட்டிக்காக எடுத்துள்ளார். ஆனால், இந்த படம் காந்தியின் மரணத்துக்கு பின்னரே வெளியிடப்பட்டுள்ளது. குறிப்பாக இந்த தொகுப்பில் கடந்த 1820-ம் ஆண்டு முதல் 2015-ம் ஆண்டு வரையிலான படங்கள் இடம்பெற்றுள்ளன. அதில் சிரியாவில் கடற்கரையோரம் ஒதுங்கி இருந்த மூன்று வயது குழந்தை சடலத்தின் படம், ஒசாமா பின்லேடனை கொல்லும் ரகசிய திட்டத்தை ஒபாமா சீனியர் அதிகாரிகளுடன் பார்வையிடும் படம், ட்வின் டவரில் இருந்து ஒருவர் விழும் படம் உள்ளிட்டவைகள் இடம்பெற்றுள்ளன.

vikatan

  • தொடங்கியவர்

அன்டார்டிக்கில் ஐஸ் மாராத்தான்..!

 

 

 

அன்டார்ட்டிக்காவின் யூனியன் க்ளேசியர் Union Glacier பகுதியில் 42.2 கிலோ மீட்டருக்கான மாராத்தான்  நடந்திருக்கிறது. இந்தப் போட்டி தான், உலகிலேயே கடும் குளிர் பிரதேசத்தில் நடக்கும் தொடர் ஓட்டப் போட்டி எனக் கூறப்படுகிறது. இந்த போட்டியில் பங்கேற்க உலகின் பல்வேறு பகுதிகளில் இருந்து 50 பேர் வந்திருந்தனர்.

'இது மிகக் கடினமானதாக இருந்தது. மாராத்தானின் முதல் சுற்றிலேயே என் உடம்பு மிகவும் சூடாகி இருக்கலாம்.' என்று ஆண்களுக்கான மாராத்தானில் வெற்றி பெற்ற ஐயர்லாந்தைச் சேர்ந்த கேரி தார்ன்டன் கூறினார். அவர் பந்தய தூரத்தை 3 மணி நேரம் 37 நிமிடம் 13 நொடியில் கடந்தார்.

.vikatan

  • தொடங்கியவர்

உலகில் அதிகம் சம்பாதிக்கும் இசைக் கலைஞர் யார் தெரியுமா?

 

Taylor-Swift-revenge-nerds_20473.jpg

இந்த ஆண்டு உலக அளவில் அதிகம் சம்பாதிக்கும் இசைக் கலைஞர்கள் பட்டியலை ஃபோர்ப்ஸ் இதழ் வெளியிட்டுள்ளது. இதில், இந்த ஆண்டுக்கான பட்டியலில் அமெரிக்காவின் டெய்லர் ஸ்விஃப்ட் முதலிடத்தில் வந்துள்ளார். இவர் இந்த ஆண்டு 1,160 கோடி ரூபாய் வரை சம்பாதித்து உள்ளார். அவருக்கு 26 வயதுதான் ஆகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

பிரிட்டனைச் சேர்ந்த 'ஒன் டைரக்‌ஷன்' பாப் குழு கிட்டத்தட்ட 735 கோடி ரூபாய்கள் சம்பாதித்து இரண்டாம் இடத்தில் உள்ளது. இங்கிலாந்து நாட்டின் பாடகி அடேல் 547 கோடிகள் மதிப்புடன் மூன்றாம் இடத்தில் உள்ளார். பிரபல பாப் பாடகி மடோன்னா நான்காம் இடத்தில் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

vikatan

  • தொடங்கியவர்

வாடிக்கையாளர் பொய் புகார்: டாக்ஸி டிரைவரை போலீசிடம் இருந்து காப்பாற்றிய பெண்!

 

டாக்ஸிஸி

மும்பையைச் சேர்ந்த இளம் பெண் ஹிமானி. அண்மையில் உபேர் டாக்ஸி ஒன்றில் ஹிமானி பயணித்தபோது, வித்தியாசமான அனுபவத்தைச் சந்திக்க நேர்ந்தது. தனது அனுபவத்தை ஃபேஸ்புக்கில் ஹிமானி பதிவிட்டிருந்தார். அவரது பதிவு சமூக வலைதளங்களில் அமோக வரவேற்பை பெற்றது. கிட்டத்தட்ட 6,500 முறை ஹிமானியின் பதிவு ஷேர் செய்யப்பட்டுள்ளது. 42 ஆயிரத்துக்கும் அதிகமானோர் லைக் செய்திருந்தனர். ஏராளமானோர் ஹிமானியின் செயலை பாராட்டி வாழ்த்து தெரிவித்திருந்தனர். அந்த பதிவின் சுருக்கம் இங்கே...

சமீபத்தில் அலுலகத்தில் இருந்து வீட்டுக்கு செல்வதற்காக ஒரு உபேர் டாக்ஸியை புக் செய்தேன். டிரைவர் மிகவும் பணிவாகவும் மரியாதையுடனும் நடந்து கொண்டார். அது ஒரு ஷேர் டாக்ஸி. என்னுடன் 30 வயதை நெருங்கிக் கொண்டிருக்கும் பெண் ஒருவரும் பயணித்தார். காருக்குள் ஏறியதுமே, அந்தப் பெண் டிரைவரிடம் மிகவும் மோசமாக நடந்து கொண்டார். டிராப் செய்வது குறித்து டிரைவரிடம் கடுமையான விவாதத்தில் ஈடுபட்டார். டிரைவர் பணிவாக பதில் அளித்தும் அவர் கவனத்தில் கொள்ளவில்லை. 'ஆப்பில் குறிப்பிட்டுள்ளபடி உங்களை டிராப் செய்துவிடுகிறேன் ' என டிரைவர் கூறினார். ஆனால், அந்த பெண்ணின் கோபம் அடங்கவில்லை. 

அவரது கோபம் அதிகமாகிக் கொண்டே போனது. மூன்றாம் தர வார்த்தைகளை உபயோகித்து டிரைவரைத் திட்டியதோடு, 'அடித்து துவைத்து விடுவேன்' எனக் கொந்தளித்தார். டிரைவரின் நிலையோ பரிதாபமாக  இருந்தது. அவர் எவ்வளவோ சமாதானப்படுத்தியும் அந்த பெண் சமாதானமாகவில்லை. நானும் சமாதானப்படுத்திப் பார்த்தேன். 'இருவருக்கும் மிஸ் கம்யூனிகேசனால்தான் பிரச்னை. போதும் விடுங்கள்' என்றேன். அவர் காதில் ஏற்றிக் கொள்ளவேயில்லை. ஒரு கட்டத்தில் கோபத்தின் உச்சிக்குச் சென்ற அந்த பெண், 'போலீஸ் நிலையத்துக்கு வண்டியை விடு, போலீசில் புகார் அளிக்க வேண்டும்' என்றார். மேலும் என்னிடமும்' நீங்களும் எனக்கு ஆதரவாக இருக்க வேண்டும்' என்றார். நான் உடனடியாக மறுத்தேன். தொடர்ந்து என்னையும் திட்டத் தொடங்கினார்.

டிரைவர் பரிதாபமாக என்னை நோக்கினார். பின்னர், 'என்னை மன்னித்து விடுங்கள். நீங்கள் வேறு ஒரு காரை பிடித்து வீட்டுக்குச் செல்லுங்கள்'  என்று என்னிடம் கூறினார். இருவருக்குமிடையே நடந்த வாக்குவாதத்தைப் பார்த்து 20க்கும் மேற்பட்டவர்கள் அங்கு கூடினர். இந்த சமூகம் பெண்ணுக்கு ஆதரவாகத்தானே பேசும். அந்த பெண்ணுக்கு ஆதரவாக டிரைவரை அனைவரும் திட்டினர். இதற்கிடையே இருவருமே அவசர போலீசை கூப்பிட, அந்த இடத்துக்கு இரு பெண் போலீசும் வந்தனர். பெண் போலீசாரிடம், டிரைவரின் நிலையை நான் விளக்கினேன் டிரைவர் பக்கம் தவறு இல்லை எனக் கூறினேன். 'போலீஸ் நிலையத்தில் அவருக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்பட்டால், என்னைக் கூப்பிடுங்கள் நான் டிரைவருக்கு ஆதரவாக வருவேன்' என அவர்களிடம் தெரிவித்தேன். அத்துடன் எனது செல்போன் எண்ணையும் கொடுத்தேன்.

மேலும் டிரைவருக்கு ஆதரவாக வாக்குமூலம் தரவும் நான் தயாராக இருப்பதாக தெரிவித்தேன். அப்போது, என்னிடம் வந்த பெண் போலீஸ், ''மேடம் நீங்களும் தயவு செய்து போலீஸ் நிலையம் வாருங்கள் அதுதான் நல்லது ''என எனக் கேட்டுக் கொண்டார். அதற்கு முன்பு வரை நான் போலீஸ் நிலையம் சென்றது இல்லை. அப்போதே இரவு மணி 9 மணியாகிவிட்டது. ஆனாலும், டாக்ஸி டிரைவரை அப்படியே விட்டுவிட்டு போக என் மனம் இடம் கொடுக்கவில்லை. நானும் போலீஸ் நிலையத்துக்கு அவர்களுடன் சென்றேன். 

போலீஸ் நிலையத்தில், அந்த பெண், டிரைவர் மீது எப்ஐஆர் பதிவு செய்ய வேண்டும் என பிடிவாதம் பிடித்தார். நான் போலீசாரிடம் உண்மையை விளக்கினேன். நிலைமையை புரிந்து கொண்ட போலீசாருக்கு டிரைவர் மீது இரக்கம் பிறந்தது. அந்த பெண்ணை போலீஸ் நிலையத்தை விட்டு வெளியேறச் சொன்னார்கள். இரவு 11 மணி வரை அவர் போலீஸ் நிலையத்தை விட்டு வெளியேறவில்லை. 'டிரைவர் தனது காலைத் தொட்டு மன்னிப்புக் கேட்டால்தான், போலீஸ் நிலையத்தை விட்டு வெளியே போவேன்' என்று அடம் பிடித்துக் கொண்டு அங்கேயே இருந்தார். 

பெண்ணின் நடவடிக்கையால் கோபமடைந்த போலீசார், டிரைவரை  தனி அறைக்கு கொண்டு சென்றனர். தனி அறையில் வைத்து டிரைவரை அடிப்பது போல வெளியே சத்தம் கேட்டது. உடனே நான் அங்கே ஓடினேன். அங்கே சென்று பார்த்தபோதுதான் போலீசாரின் செயல் என் மனதை நெகிழ வைத்துவிட்டது. போலீசார் வெறும் தரையில்  போட்டு பெல்ட்டை அடித்துக் கொண்டிருந்தனர், டிரைவரோ சிரித்தபடி வலியால் துடிப்பது போல கத்திக் கொண்டிருந்தார்.

அறைக்குள் சென்ற  என்னிடம், டிரைவருக்கு ஆதரவாக வந்ததற்காக போலீசார் நன்றி தெரிவித்தனர். 'நீங்கள் உண்மையை விளக்கவில்லை என்றால் கேஸ் போட்டிருப்போம். அவரது வாழ்க்கை பாழாகிப் போயிருக்கும்' என்றனர். போலீசார் டிரைவரை அடித்ததாக நினைத்து சமாதானமடைந்த அந்த பெண்ணும் போலீஸ் நிலையத்தில் இருந்து வெளியேறினார்.  நாங்கள் இருவரும் போலீசாருக்கு நன்றி தெரிவித்து விட்டு  வீட்டுக்கு புறப்பட்டோம். நான் வீடு போய் சேர்ந்த பிறகு அந்த டிரைவருக்கு போன் செய்தேன். அவரது குரலில் ஒரு பாதுகாப்பு உணர்வு தெரிந்தது.

சூழலை புரிந்து கொண்ட மும்பை போலீசுக்கு நன்றி!

vikatan

  • தொடங்கியவர்

சீனாவில் 'டைட்டானிக்'..!

 

titanic%201_18472.jpg

சீனாவின் சிச்சுவான் மாகாணத்தில், 1912ம் ஆண்டில் தயாரிக்கப்பட்ட டைட்டானிக் கப்பல் போலவே ஒரு 'மாதிரி கப்பல்' கட்டப்பட உள்ளது. சுற்றுலா பயணிகளை கவர்வதற்காக இந்த திட்டம் கொண்டுவரப்படுகிறது. 990 கோடி ரூபாய்  இந்த திட்டத்துக்காக ஒதுக்கப்பட்டுள்ளது. இந்த டைட்டானிக் கப்பல் நிரந்தரமாக சிச்சுவான் மாகாணத்தில் இருக்கும்.


'டைட்டானிக் கப்பல் என்பது ஒரு நாட்டுக்கு மட்டுமே சொந்தமானது இல்லை. எப்படி, 'குங் ஃபூ பாண்டா' படத்தை அமெரிக்க எடுக்கிறதோ, அதே போன்று தான் நாங்கள் டைட்டானிக் கட்டுவதும். டைட்டானிக் கப்பலுக்கு ஒரு உலகத்தர மதிப்பு இருக்கிறது.' என்று டைட்டானிக் கப்பலை கட்டும் சீனத் தரப்பு கூறி இருக்கிறது.

vikatan

  • தொடங்கியவர்

15230773_10153924951050163_5234340134264

வில்லோ மரப் பட்டையில் இருந்து கிடைக்கின்ற ரசாயன சாலிசின் மருந்து வகையை படிகமாக்கி புகைப்படம் எடுத்துள்ளார். சாலிசின் மருந்துதான் அடைப்படையான வலி நிவாரண ஆஸ்பிரினை உருவாக்குகின்றன. இந்த காரணத்தால் தான் வில்லோ மரப் பட்டையை சில விலங்குகள் மென்று சாப்பிட பயன்படுத்துகின்றன என்பதில் ஐயமில்லை.

  • தொடங்கியவர்

இந்த ஆண்டு வன உயிரின புகைப்பட கலைஞர் போட்டி – மக்களின் தேர்வு விருது (புகைப்படத் தொகுப்பு)

95 நாடுகளில் இருந்து சமர்ப்பிக்கப்பட்ட ஏறக்குறைய 50 ஆயிரம் புகைப்படங்களில், விருதுக்கு முன்னதாக தெரிவு செய்யப்பட்ட 25 புகைபடங்களையும் கீழே காணலாம்.

15327414_10153924949265163_6311742167012

கனடாவின் மனிடோபாவிலுள்ள வபுஸ்க் தேசிய பூங்காவில், தாயின் பின்னால் தொங்கி கொண்டு உறைபனியின் தாக்கத்தில் இருந்து தப்பிக்கும் பனி கரடிக் குட்டி
சுவிட்ஸர்லாந்தில் டெய்ஸி கிலார்டினி புகைப்பட கலைஞரால் எடுக்கப்பட்ட இந்த புகைப்படம் வன உயிரின புகைப்பட கலைஞர் போட்டியில், மக்கள் தெரிவு விருதுக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட 25 புகைப்படங்களில் ஒன்றாகும். இது லண்டன் இயற்கை வரலாறு அருங்காட்சியகத்தில் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளது.

15230746_10153924949255163_2026006811739

அலாங் மஃபார் ரிநோடிர் ஜப்பானில் மேற்கொண்ட குளிர்கால பயணத்தின்போது ஜிகோகுடானி பனி குரங்கு பூங்காவுக்கு சென்றிருந்தார். தாய் குரங்கின் கை கட்யின் தலையை மூடி பாதுகாப்பாக வைத்திருக்க தூங்குகிற ஜப்பானிய குரங்கின் படத்தை அப்போது தான் கிளிக் செய்தார்.

15232047_10153924949270163_8548361248090

பாதுகாப்பாக மறைந்திருந்து இந்த புகைப்படம் எடுக்கப்பட்டிருந்தாலும், 4 மீட்டர் (13 அடி) நைல் முதலை கொல்வதை கண்பது மனதை உறைய வைக்கிறது. இயற்கையில் இறந்ததை இந்த முதலை உண்பது தென் ஆப்ரிக்காவின் ஸிமான்கா தனியார் விளையாட்டு வாழிவிடத் தீவில் பென்ஸ் மேட்டால் படம் பிடிக்கப்பட்டது. சூரிய ஒளியில் குளிர் காயவும் இந்த முதலை வந்திருந்தது.

15284833_10153924949450163_8151065532605

தென் ஆப்ரிக்காவில் ககாலாகாடி எல்லை தாண்டிய பூங்காவில் பிறந்த பிறகு இந்த சிறிய மறிமானை ஜோகான் கலோப்பர்ஸ் கண்டார். அந்த நாளிலேயே அதனுடைய இறப்பை பார்ப்பார் என்று அவர் நினைக்கவில்லை. இந்த சிறி மறிமான் மந்தை ஒரு சிங்கக் கூட்டத்தை கடந்து சென்றது. அதில் ஒரு மறிமான் குட்டியை பெண் சிங்கம் ஒன்று பிடிக்க, ஆண் சிங்கம் அதனை பின்னர் எடுத்துகொண்டது.

15241238_10153924949475163_4388649725981

ஜப்பானின் ஷோடோஷிமா தீவிலுள்ள குளிர் காலநிலை, "மங்கி பால்" என்று கூறப்படும் குரங்குகள் வட்டவடிவில் கூடுவதற்கு காரணமாகிறது. அப்போது ஐந்து அல்லது அதற்கு மேலான குரங்குகள் தங்களை வெப்பமாக பராமரித்துகொள்ள இவ்வாறு கூடுகின்றன. தாமஸ் கோக்டா ஒரு மரத்தில் ஏறி இந்த படத்தை எடுத்துள்ளார்.

15241798_10153924949470163_3211569846083

அமெரிக்காவில் நியூ மெக்ஸிகோவிலுள்ள பாஸ்கியு டெல் அப்பாச் தேசிய வன உயிரின புகலிடத்தில், அதிகாலை ஊதா நிற வெளிச்சத்தில் இந்த பனி வாத்துக்கள் ஏறக்குறைய பேய்கள் போல தோற்றமளிக்கின்றன.

15193578_10153924949795163_6446781587248

தென் ஆப்ரிக்காவில் ககாலாகாடி எல்லை தாண்டிய பூங்காவில் நீர் முகதுவாரத்திற்கு அருகில் பெர்னாடு வாசியோல்கா ஒரு சிங்க கூட்டத்தை பார்த்தார். ஆண் சிங்கங்களில் ஒன்று அருகிலுள்ள மரத்தின் கிளைகளில் மீது தெளித்து அடையாளமிட்டது, பின்னர், இரு பெண் சிங்கங்கள் அந்த அடையாளத்தை முகர்ந்து, சற்று நேரம் அதே நிலையை அப்படியே பராமரித்தது.

15220148_10153924949815163_5183832155360

சீனாவின் சின்லிங் மலைகளிலுள்ள ட்சௌட்ச்சு இயற்கை பாதுகாப்பு தளத்திலுள்ள ஒரு பள்ளத்தாக்கில் காணப்படுகின்ற பொன் நிற சப்பை மூக்கு குரங்கை புகைப்படம் பிடிக்க ஸ்டீபன் பால்ச்சர் ஒரு வாரம் செலவிட்டுள்ளார். குளிர்கால உறைபனியை தாங்கி கொள்ளும் வகையில் மிக அடர்த்தியான உரோமங்களை கொண்டுள்ள இந்த குரங்கினம் கொண்டிருக்கிறது. இரண்டு ஆண் குரங்குகள் சண்டையிட இருப்பதை இந்த புகைப்படம் காட்டுகிறது. ஒன்று பாறையின் மேல் உள்ளது. இன்னொன்று இளம் குரங்கோடு உள்ளது

15181550_10153924950045163_6263089278437

 
இந்த காட்டு மாடு ஜோடியை அதனுடைய இயற்கை வாழிடத்தில் வைத்து பார்க்க, நார்வேயிலுள்ள டவ்ரெப்ஜெல்-சுண்டால்ஸ்ஃப்ஜெல் இயற்கை பூங்காவுக்கு தாபியோ கைஷா பயணம் மேற்கொண்டார். வசந்த காலம் பருவ எழுச்சி அளிக்கும் காலமாக இல்லாது இருந்தபோதும், இவை இரண்டும் தங்களின் வலிமையை கடுமையாக பரிசீலனை செய்து பாக்க தொடங்கிவிட்டன. அவற்றின் தலைகள் ஒன்றுடன் ஒன்று மோதியபோது, பலந்த ஒலி காற்றை நிறைத்தது.

15268028_10153924950300163_7512704363512

இந்தோனீஷியாவின் பாலி தீவில் துலாம்பென் கடற்கரையில் வாகனத்தில் பயணித்தபோது, செர்ஜியோ சார்தா, சிறிய கோல்மேன் இறால்களின் முள் காப்பு அமைப்புடைய ஒரு நேர்த்தியான ஜோடியான பிரகாசாசமான நிறத்திலான உயிரினத்தை கண்டார். இந்த முள் காப்பு அமைப்பில் இருக்கும் பெரிய இறகு வடிவமானது, மனிதருக்கு மிகவும் நஞ்சானது. இதனால் ஏற்படும் ஆபத்துக்களை தவிர்ப்பதற்காக இந்த இறகுகளுக்கு இடையிலான பாதுகாப்பான பகுதிகளை இறால்கள் தேடுகின்றன.

15219540_10153924950310163_6526902601778

அன்டிரியா மார்ஷெல் மொஸாம்பிக் கடற்கரையில் நீருக்கடியில் நீச்சலின்போது, பெரிய ஜெல்லி மீன்களை கண்டார். இந்த கடலோரத்தில் இருந்த போக்குவரத்து அமைப்பை சாதகமாக பயன்படுத்தி, பல குறு நட்சத்திரமீன்கள், சந்தர்ப்பவாத ரைடர்ஸால் மூடப்பட்டிருந்தன. மென்மையான விளக்குகள் அமைப்பு, ஜெல்லி மீன்களை பார்வையாளர் வண்ணமயமாக இழைநயத்தோடு காண செய்கிறது.

15181534_10153924950325163_2380481206576

அமெரிக்காவின் டெக்ஸாஸ் மாகாணத்திலுள்ள சன் அன்றோனியோவில் அமைந்துள்ள பிராக்கன் குகைக்கு கோடைகால மாதங்களில் 20 மில்லியன் மெக்ஸிகோ வாலற்ற வவ்வால்கள் குட்டியிடவும், அவற்றை வளர்க்கவும் வருகின்றன. ஒவ்வொரு நாளும் மாலையில் பசியெடுக்கும் தாய் வவ்வால்கள், பூச்சிகளை பிடிப்பதற்காக அந்த குகையின் நுழைவாயிலை கடப்பதை தான் காரின் எக்னர் படம் பிடித்துள்ளார்.

15232110_10153924950495163_6608673052475

 
நீருக்கடியில் இருக்கின்ற நிறங்கள் மற்றும் அடுக்குகளில் அல்லி மேடோவெல் கவனம் செலுத்தி வருகிறார். இரவு முழ்கியபோது படம்பிடித்த கிளியினது போன்ற அலகும் பளபளப்பான வண்ணமுடைய மீன்வகை
15230590_10153924950500163_4095437841231
சபெல்லா ஸ்பால்லான்ஸாணி என்பது கடலிலுள்ள போலிசாய்ட்டி வகைகளில் ஒன்று. இது முள் புழு என்று அறியப்படுகிறது. இந்த புழு சளி போன்ற ஒரு பொருளை வெளியேற்றுகிறது. அது கடினமாகி மணலில் இருந்து குழாய் போல நீட்டி கொண்டு இருக்கிறது, இந்த குழாய்க்குள் இழுத்துகொள்ளக்கூடிய உணவு ஊட்டும் உணர் கொம்புகளில் இரண்டு அடுக்குகள் உள்ளன. ஒரு அடுக்கு சுருள் வடிவத்தை கொண்டுள்ளது.
15267529_10153924950450163_7227520883398
 
கிரேக்கத்தின் கெர்கினி எரியில் காணப்படும் தால்மாஷியன் பெலிக்கான், உலகிலேயே மிகவும் பெரிய பெலிக்கான் இனமாகும். இது கிழக்கு ஐரோப்பா, ரஷ்யா மற்றும் ஆசியாவை சேர்ந்த்தாகும். இருப்பினும், சில இடங்களில் வேட்டையாடுதல், நீர் மாசுபாடு மற்றும் உறைவிட இழப்பு குறிப்பாக சதுப்புநிலம் குறைந்து வருவதால் இத்தகைய பெலிக்கான்களின் குறைந்து வருகிறது.
 
15327369_10153924950560163_2737710189395
வேட்டையாடுதலால், தென் ஆப்ரிக்காவின் வெல்கெவென்டனிலுள்ள தென் பகுதி வெள்ளை காண்டாமிருகத்தின் எதிர்காலத்தின் உறுதியின்மையை பற்றி படம் பிடிக்க ருடி குல்ஷோஃப் விரும்பினார். இரண்டு காண்டாமிருகங்கள் ஒன்றுகொண்டு எதிராக நடந்து சென்றபோது, அந்த தருணத்தை சரியாக கிளிக் செய்துபோது, இரண்டு தலையடைய காண்டாமிருகம் செல்வது போன்ற மாய தோற்றமுடைய புகைப்படத்தை எடுத்தார்.
 
 
15219541_10153924950575163_6443868833399
 
 
இந்த இயற்கையான உலகு வினோதமான எண்ணற்ற தருணங்களை வழங்குகிறது. ஒரு மலரின் அல்லிவட்டத்தில் இருக்கும் தேனை சுவைக்க அழகான ரீங்கார பறவை தன்னுடைய அலகை மெதுவாக கொண்டு செல்கிறது. இந்த தருணத்தை கோஸ்டோ ரிக்காவின் லாஸ் குயேட்ஸாலெஸ் தேசிய பூங்காவில் வைத்து படம்படித்திருக்கிறார் கிறிஸ்டோபால் செர்ரானோ.
15241293_10153924950590163_1381300554951
 
இந்த பறவையின் இறகு விளிம்பு கிரேட்ங்காக செயல்படுகிறது. முகடுகள் மற்றும் பிளவுகளுக்குள் மீண்டும் மீண்டும் செய்கின்ற மேற்பரப்பு வடிவமைப்பை சிறப்பாக செய்ய இந்த இறகு தான் உதவுகிறது. உள்ளே வருகின்ற ஒளி விரிந்து தெரியவும், பல வண்ணங்களில் பிரிந்து காணப்படவும், இத்தகைய வானவில் வண்ண தோற்றத்தை ஏற்படுத்துவும் இந்த இறகு பயன்படுகிறது.
 
 
15326425_10153924950680163_4951318981023
 
அமெரிக்காவில் கொலராடோ மாகாணத்தில் அஸ்பென்னில் வைத்து, ஜனவரி மாதத்தில் சுறுசுறுப்பான, தெளிவான ஒரு நாளில் தன்னுடைய அண்டை வீட்டாரின் வயலில் வைத்து கொலராடோ சிவப்பு நரி வேட்டை நடைபெற்றபோது அன்னி காட்ஸ் இதனை கண்டார். அவரை நெருங்கி புகைப்படக் கருவியின் லென்ஸை பார்த்த வேளையில், சரியாக அன்னி காட்ஸ் அதனை படம்பிடித்தார்.
 
15219429_10153924950735163_7946213830654
 
கென்னியாவின் நைரோபியில் ஒட்டகச்சிவிங்கி பண்ணை உன்றை வாங்கிய பிறகு, அவற்றின் முக்கிய வாழிடங்கள் பிரிக்கப்பட்டு சிறியதாக மாறிவருவதால், அங்கிருக்கும் ரோத்திஸ்சைல்டு ஒட்டகச்சிவிங்கிகள் அழியும் ஆபத்தில் இருப்பதை அறிய வந்தனர். எனவே இந்த வகை ஒட்டகச்சிவிங்கிகளை மீண்டும் வனங்களில் புதிய இனப்பெருக்க திட்டத்தை அறிமுகப்படுத்தினர். இன்று பார்வையாளர்கள் அங்கு வாழும் ஒட்டகச்சிவிங்கிகளை பார்த்து ரசிக்க முடியும்.
15135736_10153924950760163_4105360074792
 
குன்தர் ரியேக்லி அன்டார்டிக்கா பனி கடலில் சூரிய ஒளி பிரகாசித்த வேளையில் வந்திருந்தார். மாலையில் புயல் தொடங்கியது பனி பொழிந்தது. எம்பரர் பென்குயின்கள் நெருங்கி நின்று தங்களை பாதுகாத்து கொள்வதை படம் எடுப்பதில் அவர் தன்னுடைய முயற்சியை ஒருமுகப்படுத்தினார்.
 
15253626_10153924950910163_5544297166785
 
இது இனபெருக்க காலம் என்பதால், எல்லா ஆண் வான்கோழிகளும் பெண் வான்கோழிகளை தேடுகின்றன. இந்த வான்கோழி அதற்கு முன்னால் நிற்பது தன்னுடைய பிரதிபலிப்பு என்று அறியாமல், அதனையே எண்ணி கொண்டு நிற்கிறது.
 
15319167_10153924950855163_6661861689831
 
 
இந்த இயற்கையான உலகு வினோதமான எண்ணற்ற தருணங்களை வழங்குகிறது. ஒரு மலரின் அல்லிவட்டத்தில் இருக்கும் தேனை சுவைக்க அழகான ரீங்கார பறவை தன்னுடைய அலகை மெதுவாக கொண்டு செல்கிறது. இந்த தருணத்தை கோஸ்டோ ரிக்காவின் லாஸ் குயேட்ஸாலெஸ் தேசிய பூங்காவில் வைத்து படம்படித்திருக்கிறார் கிறிஸ்டோபால் செர்ரானோ.

15241136_10153924950895163_1434716676370

இந்த இயற்கை குளத்திற்கு மீன் கொத்தி அடிக்கடி வருகிறது. மாரியோ சியே ஒரு வேகமாக மூடும் செயற்கை வெளிச்சத்தோடு இதனை படம் பிடித்துள்ளார். இந்த மீன் கொத்திக்கு வெளிச்சம் அளிக்க பல ஃபிலஸ் விளக்குகளை பயன்படுத்தியிருக்கிறார். நீரை நோக்கி தெலைகீழாக செல்கையில், எழுகின்றபோது படம்பிடிக்க தொடர்ந்து எரிகின்ற விளக்குகளை அவர் பயன்படுத்தியிருக்கிறார்

 

 

 
 

BBC

  • தொடங்கியவர்

மனம் அற்ற நிலையே தியானம்
 
 

article_1479871549-sadhguru-on-meditatioதொலைக்காட்சியில் ஒருவர் தாங்கள் மக்களுக்கு ஞானமூட்டும் விதத்தினை இப்படிச் சொன்னார். 

“நீங்கள் நோய்வாய்ப்பட்டால் ‘கப்சியூல்ஸ்’ (கூட்டுக்குளிசை) எடுக்கின்றீர்கள். அது உங்கள் நோய்களை உடனே நீக்கிவிடுகின்றது. அது போலவே நாங்களும் உங்களுக்கு மூன்றே மூன்று நாட்கள் தியானப் பயிற்சியின் ஊடாகத் தியானத்தை முழுமையாகச் சொல்லிக் கொடுக்கின்றோம்” என்றார். 

மனம் அற்ற நிலையே தியானம் ஆகும். இன்று எத்தனை பேர் மனம் அற்ற நிலையை அடைந்து விட்டார்கள்? மனம் அற்ற தியான நிலை என்ன சாதாரணமா? ரிஷிகள் எத்தனை வருடங்கள் தவம் இருந்து பெறும் நிலையல்லவா? இது என்ன விற்பனைக்குரிய வியாபாரமா? 

மூன்று நாட்களில் ஞானியாக்க முடியும் என்று எத்தர்கள் சொன்னதைக் கேட்டு, இலட்சாதி இலட்சம் மக்கள் கூடுகின்றார்கள். வெட்கம்!

Edited by நவீனன்

  • தொடங்கியவர்

காரணம் ஆயிரம்: தண்ணி காட்டும் தண்ணீர்!

 

 
 
 
water_3096261f.jpg
 
 
 

ரொம்பவும் தாகத்துடன் வீட்டுக்குள் நுழைகிறீர்கள். ஃபிரிட்ஜைத் திறந்து, தண்ணீர் பாட்டிலை எடுத்து மடக்…மடக்கெனத் தண்ணீர் குடிக்கிறீர்கள். இப்போது கேள்வி இதுதான்: குடிக்கிற தண்ணீர் எப்படித் தொண்டைக் குழிக்குள் போகிறது? அது வாயில் நிரம்பி வெளியே வழிவதில்லையே? இது என்ன கேள்வி, தண்ணீர் குடித்தால் வயிற்றுக்குத்தானே போகும்? அது எப்படி வழியும்?

குழந்தைகளுக்கு அம்மாக்கள் வலுக்கட்டாயமாக மருந்து கொடுப்பதைப் பார்த்திருப்பீர்கள். குழந்தை முரண்டு பிடித்து அழும்போது, அந்த மருந்து வெளியில் வழியத்தானே செய்கிறது. அழாமல் இருந்தால்கூட அனிச்சை செயல் மாதிரி அது கடைவாய் வழியே வெளியே வழிந்து விடுவதையும் பார்த்திருப்பீர்கள், இல்லையா? தொண்டைக்குள் ஊற்றும் தண்ணீர் (குடிக்கும் தண்ணீர்) உள்ளே சென்றுவிடும் என்றால், சில சமயங்களில் ஏன் அது கீழே வழிகிறது? இறந்தவர்களின் வாயில் ஊற்றும் தண்ணீரோ பாலோ ஏன் உள்ளே செல்லாமல் வழிகிறது?

தண்ணீர் குடிப்பதன் பின்னால் ஒரு பெரிய அறிவியல் தத்துவம் ஒளிந்திருக்கிறது. அதற்கு முன், ஒரு தகவலைத் தெரிந்துகொள்ளுங்கள். கடைகளில் மண்ணெண்ணெய் வாங்கும்போது பாட்டிலில் அல்லது கேன்களில் புனல் வழியாக ஊற்றுவார்கள் அல்லவா? புனலில் மண்ணெண்ணெயை ஊற்றும்போது, புனல் நிரம்பி வழிவது போலத் தெரிந்தால், புனலை சற்று மேலே தூக்க வேண்டியிருக்கும். ஏனென்றால் எண்ணெய் ஊற்ற வேண்டிய பாட்டில் அல்லது கேனில் முழுவதுமாக காற்று நிரம்பியிருக்கும். இவ்வாறு நிரம்பியிருக்கும் காற்று எண்ணெய் உள்ளே விடாமல் அடைத்துக்கொண்டு விடும். புனலை மேலே தூக்கி காற்றை வெளியேற்றினால், மீண்டும் எண்ணெயை உள்ளே ஊற்ற முடிகிறது.

பாட்டிலில் உள்ள காற்று வெளியேற முடியாமல் புனல் அடைத்துக்கொள்வதால் புனலை மேலே தூக்கி சரிசெய்ய வேண்டியிருக்கிறது. இந்தக் காற்றழுத்த மாறுபாடு தண்ணீர் குடிக்கும்போது நடக்கிறது. இதுதான் அறிவியல் ரகசியம்.

தண்ணீரை உறிஞ்சும்போது (அது ஸ்ட்ரா வழியாக உறிஞ்சினாலும் சரி) வளிமண்டலக் காற்றழுத்த மாறுபாடு, நாம் தண்ணீர் குடிப்பதைப் பாதிக்கச் செய்கிறது. முதலில், நாம் தண்ணீர் குடிக்கத் தயாரானவுடன் நம் மார்புக்கூடு விரிவடைந்து நுரையீரல் விரிவடைகிறது. நுரையீரல் விரிவடைவதால் அதன் பரப்பளவு (கொள்ளளவு) அதிகரிக்கிறது. எனவே மார்புக்கூட்டில் உள்ள காற்றின் அடர்த்தி குறைகிறது. அடர்த்தி குறைந்த இடத்தை நோக்கி, அழுத்தம் அதிகமான வெளிப்புறக் காற்று உள்ளே செல்கிறது. செல்லும் வழியில் உள்ள தண்ணீரை (நாம் உதட்டருகே உறிஞ்சும் தண்ணீரை) அது உட்புறமாகத் தள்ளுகிறது. அதனால்தான் நாம் தண்ணீரைக் குடிக்க முடிகிறது.

வெப்பத்தால் காற்று விரிவடைவதால் அதன் அடர்த்தி குறையும். எனவேதான் வெயில் காலங்களில் நமக்கு அதிக தாகம் எடுக்கிறது. குளிர் காலங்களில் நம் உடலுக்குள் இருக்கும் காற்று அடர்த்தி அதிகமாக இருப்பதால் நமக்கு தாகம் எடுப்பதில்லை. குளிர் ஜுரத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நுரையீரலில் காற்றின் அடர்த்தி அதிகமாக இருக்கும். அதனால்தான் அவர்கள் தண்ணீர் குடிக்க மிகவும் சிரமப்படுவார்கள்.

வாய் வழியாகத்தான் தண்ணீர் குடிக்கிறோம். ஆனால், உண்மையில் தண்ணீர் குடிப்பதற்கு நிறைய உதவி செய்வது காற்றும் நுரையீரலும்தான்.

இது உண்மையா என்பதை இன்னொரு உதாரணத்தின் மூலம் நிரூபிக்கலாமா?

# சிறிய வாயுள்ள தண்ணீர் பாட்டிலை எடுத்துக்கொள்ளுங்கள்

# பாட்டிலின் வாய்ப் பகுதியை, உங்கள் உதடுகளால் முழுமையாக மூடிக்கொள்ளுங்கள். (அந்த பாட்டிலில் சிறிதளவு தண்ணீர் இருக்கலாம்).

# உங்கள் உதடுகளால் பாட்டிலின் வாயை முழுமையாக மூடிக்கொண்ட பின், உங்கள் உதடுகளோடு அந்த பாட்டில் முழுமையாக ஒட்டிக் கொள்ளும். அப்போது உள்ளே இருக்கும் நீரை உங்களால் உறிஞ்ச முடியாது.

அதுபோல அந்த பாட்டிலும் கீழே விழாது. என்ன காரணம் தெரியுமா? உங்கள் வாயில் இருக்கும் காற்றின் அழுத்தமும், பாட்டிலின் உள்ள காற்றின் அழுத்தமும் சமமாக இருப்பதே. சமமான காற்றழுத்தம் இரண்டு பொருள்களுக்கு இடையே எந்த மாற்றத்தையும் ஏற்படுத்தாது.

tamil.thehindu

  • தொடங்கியவர்

15192715_1202839629764729_72125056389524

பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் சிறந்த சகலதுறை வீரர்களில் ஒருவரான அப்துல் ரசாக்கின் பிறந்தநாள்.
Happy Birthday Abdul Razzaq

  • தொடங்கியவர்

இதே தேதியில் நிகழ்ந்த முக்கிய நிகழ்வுகள்:-

 

பெனாசீர் பூட்டோ பாகிஸ்தானின் முதல் பெண் பிரதமரான நாள்: 2-12-1988

 
 
 

பாகிஸ்தான் நாட்டின் முதல் பெண் பிரதமராக பெனாசீர் பூட்டோ பதவி ஏற்ற நாள். இதே தேதியில் நிகழ்ந்த முக்கிய நிகழ்வுகள்:- * 1848 - முதலாம் பிரான்ஸ் ஜோசப் ஆஸ்திரியாவின் பேரரசர் ஆனார். * 1851 - புதிதாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரெஞ்சு தலைவர் சார்ல்ஸ் லூயி பொனபார்ட் இரண்டாம் குடியரசைக் கலைத்தார். * 1852 - மூன்றாம் நெப்போலியன் பிரான்சின் பேரரசர் ஆனார். * 1908 - பூ யி தனது

 
 
 
 
பெனாசீர் பூட்டோ பாகிஸ்தானின் முதல் பெண் பிரதமரான நாள்: 2-12-1988
 
பாகிஸ்தான் நாட்டின் முதல் பெண் பிரதமராக பெனாசீர் பூட்டோ பதவி ஏற்ற நாள்.

இதே தேதியில் நிகழ்ந்த முக்கிய நிகழ்வுகள்:-

* 1848 - முதலாம் பிரான்ஸ் ஜோசப் ஆஸ்திரியாவின் பேரரசர் ஆனார். * 1851 - புதிதாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரெஞ்சு தலைவர் சார்ல்ஸ் லூயி பொனபார்ட் இரண்டாம் குடியரசைக் கலைத்தார். * 1852 - மூன்றாம் நெப்போலியன் பிரான்சின் பேரரசர் ஆனார். * 1908 - பூ யி தனது இரண்டாவது வயதில் சீனாவின் பேரரசனாக முடிசூடினார். * 1942 - மன்காட்டன் திட்டம்: என்றிக்கோ பெர்மி தலைமையிலான குழு செயற்கையாகத் தானே தொடருமாறு நிகழும் அணுக்கரு தொடர்வினையை ஆரம்பித்தது.

* 1946 - பிரித்தானிய அரசாங்கம் நேரு, பால்தேவ் சிங், ஜின்னா மற்றும் லியாகத் அலி கான் ஆகிய தலைவர்களை இந்தியாவின் சட்ட சபையைப் பிரதிநிதித்துவப்படுத்த அழைத்தது. * 1947 - பாலஸ்தீன நாட்டைப் பிரிக்க ஐ.நா. சபை எடுத்த முடிவை அடுத்து ஜெருசலேமில் கலவரம் வெடித்தது. * 1954 - சீனாவுக்கும் ஐக்கிய அமெரிக்காவுக்கும் இடையில் பாதுகாப்பு ஒப்பத்தம் வாஷிங்டன் டிசியில் கையெழுத்தானது * 1956 - பிடல் காஸ்ட்ரோ, சே குவேரா மற்றும் ஆதரவாளர்களும் கியூபா புரட்சியை முன்னெடுப்பதற்காக கிரான்மா என்ற படகில் கியூபாவை சென்றடைந்தனர். * 1961 - பிடெல் காஸ்ட்ரோ தன்னை ஒரு மார்க்சிச-லெனினிசவாதி எனவும் கியூபா கம்யூனிச நாடாக இருக்கும் எனவும் அறிவித்தார். * 1971 - அபுதாபி, புஜெய்ரா, ஷார்ஜா, துபாய் மற்றும் உம் அல் குவைன் ஆகியன இணைக்கப்பட்டு ஐக்கிய அரபு அமீரகம் என்ற ஒரே நாடாக ஆக்கப்பட்டது.

* 1971 - ஐக்கிய இராச்சியத்திடம் இருந்து ஐக்கிய அரபு அமீரகம் விடுதலை பெற்றது. * 1975 - பத்தே லாவோ என்பவர் லாவோசின் ஆட்சியைப் பிடித்து லாவோ மக்கள் ஜனநாயகக் குடியரசை அமைத்தார். * 1976 - பிடெல் காஸ்ட்ரோ கியூபாவின் அரசுத் தலைவரானார். * 1980 - எல் சல்வடோரில் நான்கு ஐக்கிய அமெரிக்க கன்னியாஸ்திரிகள் சுட்டுக் கொலை செய்யப்பட்டனர். * 1988 - பெனாசீர் பூட்டோ பாகிஸ்தானின் முதல் பெண் பிரதமரானார். * 1990 - ஒன்றுபட்ட ஜெர்மனியில் 1932-ம் ஆண்டுக்குப் பின்னர் இடம்பெற்ற முதலாவது பொதுத்தேர்தலில் அதன் வேந்தர் ஹெல்முட் கோல் தலைமையிலாண கூட்டணி வெற்றி பெற்றது. * 1993 - ஹபிள் விண்வெளித் தொலைநோக்கியைத் திருத்தும் நோக்கோடு நாசாவின் எண்டெவர் விண்ணோடம் விண்ணுக்கு ஏவப்பட்டது.

* 1995 - யாழ்ப்பாணக் குடாநாடு இலங்கை ராணுவத்திடம் வீழ்ச்சி அடைந்தது. * 2002 - இலங்கை அரசுக்கும் விடுதலைப் புலிகளுக்கும் இடையில் பேச்சுவார்த்தைகள் ஒஸ்லோவில் ஆரம்பமாயின. * 2005 - போதைப்பொருள் கடத்தல் குற்றத்துக்காக ஆஸ்திரேலியரான வான் துவோங் நியூவென் சிங்கப்பூரில் தூக்கிலிடப்பட்டார். * 2006 - பரிதிமாற் கலைஞரின் நூல்கள் தமிழக அரசினால் நாட்டுடமை ஆக்கப்பட்டன. * 2006 - பீகார் மாநிலத்தின் பகல்பூரில் பாலம் இடிந்து வீழ்ந்ததில் அதன் வழியாகச் சென்ற விரைவு எக்ஸ்பிரஸ் ரெயில் விபத்துக்குள்ளாகியதில் 35 பேர் கொல்லப்பட்டனர்.

http://www.maalaimalar.com

  • தொடங்கியவர்

இவர்தான் இன்ஸ்டாகிராமின் இளவரசி..!

 

sellll_13394.jpg

இன்ஸ்டாகிராமில் இந்த ஆண்டு அதிகப்பட்ச லைக்குகள் வாங்கி, ஆதிக்கம் செலுத்திய ஒரே நபர், செலினா கோம்ஸ் தானாம். 

அமெரிக்க நடிகை, பாடகர், இசையமைப்பாளர், பாடலாசிரியர் என பன்முகங்களை கொண்ட செலினா, இன்ஸ்டாவில் இந்த ஆண்டு பகிர்ந்த அனைத்து புகைப்படங்களும் உலக முழுவதும் உள்ள இன்ஸ்டா பயனர்களை அதிகம் கவர்ந்துள்ளன. இன்ஸ்டாவில் 2016 ஆம் ஆண்டின் அதிகம் விரும்பப்பட்ட டாப் 5 புகைப்படங்களும் செலினாவின் படங்கள் தான் . குளிர்பான பாட்டிலுடன்  போஸ் குடுத்த இவரின் ஒரு போட்டோவிற்கு மட்டும் 5.9 மில்லியன் லைக்ஸ். இன்ஸ்டாவில், அதிகம் விரும்பப்பட்ட புகைப்படங்கள் பட்டியலில் முதல் ஐந்து இடத்தை ஒரே நபர் பிடித்துள்ளது இதுவே  முதல்முறை!

vikatan

  • தொடங்கியவர்

தமிழ் சினிமால இந்த சீன்களை எல்லாம் கிராஃபிக்ஸ் இல்லாம பார்த்திருக்கீங்களா?

 

ஹாலிவுட் சினிமாவை ஆவென கொசு உள்ளே போய் குடும்பம் நடத்தும் அளவிற்கு வாயைப் பிளந்து பார்த்ததெல்லாம் ஒரு காலம். இப்போது அதே ஹாலிவுட் கலைஞர்களின் வழிகாட்டுதலோடு, நம் ஊர் திறமைசாலிகளின் பங்களிப்போடு கிராஃபிக்ஸ் காட்சிகளில் பின்னிப் பெடலெடுக்கிறது தமிழ் சினிமா. அப்படி நம்மை வாய் பிளக்கவைத்த சில காட்சிகளின் Before - After வெர்ஷன்தான் இது.

(படத்தில் இடம்பெற்ற காட்சிகளை கீழே கொடுத்திருக்கிறோம். அதை க்ளிக் செய்தால் கிராஃபிக்ஸ் இல்லாத நிஜக் காட்சிகளை தரிசனம் செய்யலாம்) 

Click or Touch the image

காஷ்மோரா :

தமிழ் சினிமாவின் லேட்டஸ்ட் மிரட்டல். ராஜ்நாயக் வரும் போர்ஷன் முழுக்க உழைப்பைக் கொட்டியிருக்கிறார்கள் படக்குழுவினர். காஸ்ட்யூம், மேக்கப் என எல்லாம் சரிவிகிதத்தில் அமைய, அந்தக் காட்சிகளில் ரிச் லுக் தெறிக்கிறது.

kashmora%20after.jpg
kashmora%20before.jpg

எந்திரன் :

தமிழ் சினிமா ரசிகனுக்கு வி.எஃப்.எக்ஸ் பற்றிய அரிச்சுவடியைக் கற்றுக்கொடுத்த படம். ஷங்கரின் கனவுப்படம். சுஜாதாவின் கைவண்ணத்தில் செம்மையாக, அதை மேலும் அழகாக்கினார்கள் தொழில்நுட்பக் குழுவினர். இளம் இயக்குநர்களுக்கு இந்தப் படம் ஒரு பாலபாடம்.

enthiran%20after.jpg
enthiran%20before.jpg
enthiran%20after%202.jpg
enthiran%20before%202.jpg

இரண்டாம் உலகம் :

செல்வராகவனின் பேன்டஸி மேஜிகல் உலகம். படத்துக்கு வரவேற்பு பெரிதாக இல்லையென்றாலும் மேக்கிங் எல்லோராலும் கவனிக்கப்பட்டது. மஞ்சள், பச்சை, பிங்க் என வொண்டர்லேண்டைக் கண்முன் கொண்டுவந்த சினிமா.

irandam%20ulagam%20after%20.jpg
irandam%20ulagam%20before.jpg

விஸ்வரூபம் :

உலக நாயகனின் 'உலக' சினிமா. சென்னைக்கு வெளியே செட் போட்டு ஆப்கானிஸ்தானின் புழுதி படர்ந்த மணற்பிரதேசத்தையும் அமெரிக்காவின் பளபள கட்டடங்களையும் கண் முன் கொண்டுவந்தது படக்குழு. நடுநடுவே வரும் தத்ரூப ஆக்‌ஷன் காட்சிகள் வி.எஃப்.எக்ஸ் குழுவின் செஞ்சுரி ஆட்டம்.

viswaroopam%20after%201.jpg
viswaroopam%20before%201.jpg
viswaroopam%20after%202.jpg
viswaroopam%20before%202.jpg
viswaroopam%20after%203.jpg
viswaroopam%20before%203.jpg

புலி :

இளைய தளபதியின் முதல் பேன்டஸி சினிமா. கதை கலவையான விமர்சனங்களைப் பெற்றாலும் விஷுவல் எஃபெக்ட்ஸுக்காக பாராட்டுகளைக் குவித்த படம். கோட்டை, சூனியக்காரி, ஒற்றைக்கண் ராட்சஷன் என சின்ன வயதுக் கதைகளை கண்முன் கொண்டுவந்த படம்.

puli%20after%201.jpg
puli%20before%201.jpg
puli%20after%202.jpg
puli%20before%202.jpg
puli%20after%203.jpg
puli%20before%203.jpg

24 :

இந்த ஆண்டின் பெஸ்ட் சயின்ஸ் ஃபிக்‌ஷன். காலத்தை வெல்லும் இளைஞனைக் கண்ணில் காண்பிக்க அசாத்திய உழைப்பைக் கொட்டினார்கள் தொழில்நுட்பக் கலைஞர்கள். முன்னும் பின்னும் ஊஞ்சலாடும் கதையை இறுக்கிப் பிடித்த கயிறு இவர்கள்தான்.

24%20after.jpg
24%20before.jpg

தெறி :

சென்னையின் முக்கிய இடங்கள்தான் கதைக்களம். ஆனால் அந்த இடங்களில் ஷூட்டிங் செய்ய எக்கச்சக்க நடைமுறைச் சிக்கல்கள். கைகொடுக்க வந்தது சி.ஜி டீம். பிராட்வே, நேப்பியர் பாலம் என சென்னையை தத்ரூபமாகக் கண்முன் நிறுத்தினார்கள்.

theri%20after%201.jpg
theri%20before%201.jpg
theri%20after%202.jpg
theri%20before%202.jpg

பாகுபலி :

இந்திய சினிமாவின் பிரமாண்டம். முழுக்க முழுக்க விஷுவல் எஃபெக்ட்ஸ்கள் கொண்டு நம்மை மிரட்டிய படம். அரண்மனைகள், கொட்டும் அருவிகள், ரத்தக்களறியான போர்க்களக் காட்சிகள் என ஹாலிவுட்டைத் தோளோடு தோள் உரசிய சினிமா. இதோ அடுத்த பாகத்தோடு சீக்கிரமே வர இருக்கிறார்கள்.

bahubali%20after%201.jpg
bahubali%20before%201.jpg
bahubali%20after%202.jpg
bahubali%20before%202.jpg
bahubali%20after%203.jpg
bahubali%20before%203.jpg

 

vikatan

  • தொடங்கியவர்

லெகின்ஸ் அணிபவர்களுக்கு ஃபேஷன் டிசைனரின் 10 டிப்ஸ்!

 

LEGGINGS_15436.jpg

பெண்கள் கல்லூரி மற்றும் இருபாலர் கல்லூரிகளில் படிக்கும் மாணவிகள் பலருக்கும் லெகின்ஸ் அணிந்து வரக்கூடாது என பல கல்லூரிகள் தடை விதித்துள்ளது பற்றி அடிக்கடி செய்திகளில் படித்து வருகிறோம். இதற்கு பல கல்லூரி மாணவிகளும், பெண்களும் எதிர்ப்பு தெரிவித்தும் வருகின்றனர். ஆனால், பல வண்ணங்களிலும், டிசைன்களிலும் லெகின்ஸ் கிடைப்பதால் பல டாப்ஸூக்களுக்கு மேட்சாக அணிவதற்கும் நன்றாக இருப்பதாக பல பெண்கள் நினைக்கின்றனர். இப்படி லெகின்ஸை ஆர்வமாக அணிந்து வரும் பெண்கள், அதைச் சரியாக தேர்ந்தெடுத்தாலே போதும் மற்றவர்களின் பேச்சுக்கு நாம் ஆளாகத் தேவையில்லை. நாம் இப்போது இந்த விஷயத்துக்குள் போவதற்கு முன்பாக பெண்கள் அணியும் உடைகளில் பெரும்பாலும் தவிர்க்க வேண்டிய விஷயங்கள் நிறையவே இருக்கிறது. உள்ளாடைகள் முதற்கொண்டு வண்ணங்கள் வரை பல விஷயங்கள் கவனமாக இருக்க வேண்டும் என்கின்றனர் மகளிரியல் சிறப்பு மருத்துவர்கள். ஏனென்றால் இறுக்கமான லெகின்ஸ் அணிவதால் இரத்த ஓட்டம் பாதிக்கப்படுவதாகவும், காற்றோட்டம் இல்லாமல் இருப்பதால் பெண்களுக்கு பல உடல் சார்ந்த பிரச்னைகள் ஏற்படுவதாகவும் மகளிர் சிறப்பு மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர். அதை சரியாக அணிந்தாலே எந்த பிரச்னையும் வராது என்கின்றனர். லெகின்ஸைப் பொறுத்தவரை நிறைய வெரைட்டிகள் ஷோரூம்களில் கிடைக்கின்றன. லெகின்ஸ், லெஜீன்ஸ், பிரின்டட் லெகின்ஸ், லேஸ் வொர்க் லெகின்ஸ் என பல வெரைட்டிகள் கிடைக்கின்றன. 

LEG_15088.jpg

saleema_15011.jpgஇதில் எந்த லெகின்ஸை தேர்ந்தெடுக்க வேண்டும் என்பது குறித்த ஐடியாக்களைத் தருகிறார் சென்னை, சூளைமேடு 'சராஸ் பொட்டீக்'கின் உரிமையாளர், ஃபேஷன் டிசைனர் சலீமா கமால், 

* குறைவான விலைகளில் கிடைக்கிறதே என மிகவும் மெல்லிதாக இருக்கும் லெகின்ஸை அணிவதை தவிர்ப்பது நல்லது. இது வெளிப்படையாக ஸ்கின் மற்றும் பாடி ஷேப் தெரியும்.

* இந்த கலர் லெகின்ஸ் இல்லை, மெட்டீரியல் நல்லதாக இருக்கிறது என சைஸ் பெரியதாகவோ, சின்னதாகவோ இருந்தாலும் அட்ஜஸ்ட் செய்து கொள்ளலாம் என எடுத்து அணிய வேண்டாம்.

* LYCRA 4 WAYS STRETCH (ஸ்போர்ட்ஸூக்கும் இதை பயன்படுத்துவார்கள்) மெட்டீரியல்கள் நிறைய கிடைக்கிறது. 

* பெரும்பாலும் காட்டன் மெட்டீரியல் லெகின்ஸை தேர்ந்தெடுப்பது நல்லது.

* பிரான்டட் இல்லாத லெகின்ஸ் பெரும்பாலும் சாயம் போக வாய்ப்பிருக்கிறது.

* லெகின்ஸை விட தற்போது பலரும் லெஜீன்ஸை விரும்புகிறார்கள். அது பார்ப்பதற்கு ஜீன்ஸ் போன்றே இருப்பதால் அழகாக இருக்கும்.

* அவரவர் உடல்வாகுக்கு ஏற்றவாறு லெகின்ஸை தேர்ந்தெடுப்பது நல்லது. 

* பெரும்பாலும் டார்க் வண்ணங்களை தேர்ந்தெடுத்தால் நன்றாக இருக்கும். அதற்கு டாப்ஸ் லைட் கலரில் இருக்கலாம்.

* லெகின்ஸ் மட்டுமல்ல எந்த ஆடையாக இருந்தாலும் சரி, முதலில், தனியாக வாஷ் செய்து அணிவது நல்லது. ஏனென்றால், சில மெட்டீரியல்கள் சாயம் போகும் வாய்ப்பு உள்ளது. 

* எலாஸ்டிக் மற்றும் கைவேலைப்பாடுகள் செய்யப்பட்டுள்ள ஆடைகளை வாஷிங் மிஷினில் போடாமல், கையில் வாஷ் செய்வது நல்லது. ஒவ்வொரு ஆடைகளிலுமே எதில் வாஷ் செய்யக் கூடாது என்பதை தெளிவாக குறிப்பிட்டிருப்பார்கள். 

vikatan

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.