Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இளமை புதுமை பல்சுவை

Featured Replies

  • தொடங்கியவர்

குழந்தைகளின் விட்டுக் கொடுக்கும் மனப்பான்மையை வளர்ப்பது எப்படி? - பெற்றோர்கள் கவனத்துக்கு

 

parenting_14368.jpg

தற்போதைய சூழலில் பல குழந்தைகள் சுயநலமாகவே வாழப் பழகி வருகின்றனர். குறிப்பாக பழக்கிவிடப் படுகின்றனர். இதற்கு பெரும்பான்மையான காரணம் பெற்றோர்களின் வளர்ப்பு முறையே. மேலும், பல குழந்தைகள் பிரச்னைகள் ஏற்பட்டால் அதை எதிர்கொள்வதை விடுத்து, ஒதுங்கி செல்லவே துணிகின்றனர். எதையும் தைரியமாக ஒப்புக்கொள்ளும் அல்லது தைரியமாகப் போராடும் நிலையும் குறைந்து வருகிறது. இதற்கு காரணம் பெரும்பாலும் ஒரு சில குடும்பங்களில் ஒரு குழந்தையே போதும் என்ற தங்களது சுயநலம்தான் காரணம். இதனால் குழந்தைகள் தனித்து விடப்பட்டு, சுயநலமாகவே வாழப் பழகிவிடுகின்றனர். தனக்கு ஒரு சகோதரனோ அல்லது சகோதரியோ இருந்தால் அவர்களுக்குள் ஒரு ஒற்றுமை மற்றும் விட்டுக்கொடுக்கும் பண்பு தானாகவே வளர்ந்து, அது ஆரோக்கியமான பழக்கமாகிவிடும்.

சின்னச் சின்ன தவறுகளும், புறக்கணிப்புகளும் பெரிய அளவில் பாதிப்பை உண்டாக்கி தவறான முடிவுகளுக்கு கொண்டு சென்று விடுகின்றனர். எது அவமானம், எது பாராட்டுக்குரியது என்பதை அறியாமலே அந்த உணர்வுகளை தங்களுக்குள் எடுத்துக் கொண்டு சரியான முடிவு எடுக்க முடியாமல் பல குழந்தைகள் திணறி வருகின்றனர்.

இதற்கு எல்லாம் காரணம் தன்னைச் சுற்றி உள்ளவர்களை நம்பிக்கை இல்லாதவர்களாக மாற்றி வருவதே. யாரையும் நம்பாதே, எதன் மீதும் பற்றுக் கொள்ளாதே, உதவப் போனால் உபத்திரம் ஏற்படும், ஒருவரிடம் உதவி கேட்டு நிற்கும் நிலையில் இருக்காதே இப்படி பெற்றோர்கள் கண்டிப்பு என்கிற பெயரில் தவறான போதனைகள் கொடுத்து வருகின்றனர். இதற்கு காரணம் அவர்கள் வாழ்க்கையில் சந்தித்த பிரச்னைகளே. இதை தங்கள் பிள்ளைகளிடம் சொல்லி வளர்க்கும் பொழுது, அவர்கள் முன் கூட்டியே அந்த பிரச்னைகளில் இருந்து ஒதுங்கிக் கொள்ளக் கூடிய வாய்ப்பு அதிகம் உள்ளதாகவும் நினைக்கின்றன. 

இதனால் குழந்தைகள் வளரும்போது அவர்கள் சந்திக்கும் பிரச்னைகளை யாரிடமும் நம்பகத்தன்மையாக முன் வந்து அதற்கான தீர்வுகளை தேடுவதில்லை. இணையதளம், சமூக வலைதளங்கள் வாயிலாக அவர்களுக்கான தீர்வுகளை தேடுகின்றனர். அந்தப் பிரச்னைகளில் இருந்து விடுபட, மற்றொரு பிரச்னைகளின் வசம் சிக்குகின்றனர். 

eating_14106.jpg

இப்படி குழந்தைகள் வழி மாறாமல் இருக்க பெற்றோர்கள் செய்ய வேண்டிய விஷயங்களை இங்கு பார்ப்போம்,

* பிற குழந்தைகளுடன் ஒப்பிட்டுப் பேசுவதை தவிருங்கள்.

* ஒரு தோல்வி ஏற்பட்டால், அதுதான் வெற்றிக்கான முதல் படி என்பதை அவர்களுக்கு உணர்த்துங்கள்.

* ஏமாற்றங்கள் தோல்விகள் அல்ல என்பதை எடுத்து கூறுங்கள்.

* அவர்கள் கேட்டதை எல்லாம் வாங்கிக் கொடுக்காதீர்கள். எது அத்தியாவசியம், எது அத்தியாவசியம் இல்லாதது என்பதை சொல்லிக் கொடுங்கள்.

* ஒரே குழந்தை இருக்கும் பட்சத்தில், அவர்களுக்கு எல்லாமே தனக்கானது என்கிற மனப்பான்மை இருக்கும். இவர்களுக்கு மற்றவர்களுக்கு பகிர்ந்து கொடுக்கும் பழக்கத்தை சிறு வயதில் இருந்தே கற்றுக் கொடுங்கள்.

* அடிக்கடி உறவினர்கள் வீட்டுக்கு அழைத்துச் செல்லுங்கள். அங்கிருக்கும் குழந்தைகளோடு ஒன்று கலந்து பழகும் சூழலை உருவாக்குங்கள்.

* ஆண், பெண் வித்தியாசம் பற்றி கற்றுக் கொடுங்கள்.

* இரண்டும், மூன்று குழந்தைகள் இருப்பின், ஒருவரை இன்னொருவருடன் ஒப்பிட்டுப் பார்ப்பது, குறை சொல்லிப் பாராட்டுவது போன்றவற்றை விட்டுவிட்டு, தட்டிக் கொடுத்து சமமாக நடத்துங்கள்.

* உங்கள் வீட்டுக்கு வருபவர்களிடம் கொடுக்கும் பொருட்களை, உங்கள் குழந்தைகளின் கரங்களாலேயே கொடுக்க வையுங்கள்.

* பள்ளிக்கூடங்களில் பகிர்ந்து உண்ண வேண்டும் என்பதை வீட்டிலும் கற்றுக் கொடுங்கள். 

* கணவன், மனைவி இடையே பிரச்னையோ, உறவினர்களிடம் மனஸ்தாபமோ இருந்தால் அவற்றை உங்கள் குழந்தைகள் முன்பு காட்டிக் கொள்ளாதீர்கள்.

* செய்யும் தவறுகளுக்கு மன்னிப்பு கேட்கும் பழக்கத்தைக் கற்றுக் கொடுங்கள்.

* போதும் என்கிற மனப்பான்மைக்கு பழக்குங்கள்.

* அவர்களுடன் நட்புடன் பழகுங்கள். எந்த விஷயமாக இருந்தாலும் மறைக்காமல் உங்களிடம் குழந்தைகள் சொல்லும் அளவுக்கு அவர்களிடம் நடந்து கொள்ளுங்கள்.

vikatan

  • Replies 11.3k
  • Views 1.5m
  • Created
  • Last Reply
  • தொடங்கியவர்
மிஸ் சுப்ரநெஷனல் 2016 அழகுராணியாக இந்தியாவின் ஸ்ரீநிதி தெரிவு்; இலங்கை அழகுராணி ஒர்னெலா 4 ஆம் இடம்பெற்றார்
 

மிஸ் சுப்­ர­நெ­ஷனல் 2016 (Miss Supranational 2016) அழ­கு­ரா­ணி­யாக இந்­தி­யாவின் ஸ்ரீநிதி ஷெட்டி தெரி­வா­கி­யுள்ளார்.

 

210812.jpg

ஸ்ரீநிதி ஷெட்டி

 

2108115350696_670081856485936_5541831152

 

21081IMG_0269M.jpg

ஹங்கேரி, இலங்கை, இந்தியா, வெனிசூலா, சூரினாம் நாடுகளின் அழகுராணிகள்


 

மிஸ் சுப்­ர­நெ­ஷனல் போட்டி போலந்தில் நடை­பெற்­றது. 71 நாடு­களின் அழ­கு­ ரா­ணிகள் இப்­ போட்­டியில் பங்­கு­பற்­றினர்.

 

2108115219649_1165877496852647_602065346

 

2108115219660_1165877323519331_792423904

 

கடந்த வெள்­ளிக்­கி­ழமை நடை­பெற்ற இறு­திச்­சுற்றில் இந்­தி­யாவின் ஸ்ரீநிதி ஷெட்டி முத­லிடம் பெற்றார்.

 

21081_15253587_1165878400185890_53296456

 

இலங்கை அழ­கு­ராணி ஒர்­னெலா குண­சே­கர இப்­ போட்­டியில் நான்காம் இடம் பெற்­றமை குறிப்­பி­டத்­தக்­கது.

 

21081_15349805_1165878796852517_66423407

 

வெனி­சூலா அழ­கு­ராணி வெலே­ரியா வெஸ்­போலி 2 ஆம் இடத்­தையும் சூரினாம் அழ­கு­ராணி ஜெலீஸா பிகொட் 3 ஆம் இடத்­தையும் ஹங்கேரியின் கொரினா கொக்சிஸ் 5 ஆம் இடத்தையும் பெற்றனர்.

 

21081_1.jpg

 

metronews.lk

Edited by நவீனன்

  • தொடங்கியவர்

வால்ட் டிஸ்னி பிறந்த தினம் இன்று

 

400_08089.jpg

உலகப் புகழ்பெற்ற கார்டுன் ஓவியர் வால்ட் டிஸ்னி பிறந்தநாள் இன்று. சித்திரத்தால் அனைவரையும் சிரிக்கவைத்த குழந்தைகள் கவர்ந்த மிக்கிமவுஸ் மற்றும் டொனால்ட் டக், போன்றவற்றை உருவாக்கிவர். 20-ம் நூற்றாண்டின் கேளிக்கை உலகில் தனக்கென ஒரு முத்திரை பதித்தவர். 26 ஆஸ்கர் விருதுகளை வென்றுள்ளார்.  

 

அவருடைய பிரபலமான கருத்து

'If you can dream it, you can do it.' 

  • தொடங்கியவர்

15380616_371790459825197_604051620335227

J. Jayalalithaa seated second from left in the picture.

15338813_371790466491863_766826573950412

Jayalalithaa seated in the bottom row, extreme right in the picture. This during her 4th grade at Sacred Heart Matriculation School, popularly known as Church Park Convent.

15350461_371791166491793_111541268453077

15319055_371791376491772_284539322385709

 

15319270_371847209819522_666029958753801

15317913_371847333152843_883143545103058

15350604_371847389819504_300096158224706

 

Edited by நவீனன்

  • தொடங்கியவர்

 

“சாக்லெட்டில் சர்க்கரை” - காணொளி

  • தொடங்கியவர்

jaya1948_2016dec06_1.jpg

தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் திரையுலக பயணம்: ஒரு புகைப்படப் பார்வை

1965ல் வெளியான 'வெண்ணிற ஆடை'

1965ல் வெளியான 'வெண்ணிற ஆடை'

1965ல் வெளியான 'ஆயிரத்தில் ஒருவன்'

1965ல் வெளியான 'ஆயிரத்தில் ஒருவன்'

1966ல் வெளியான 'தனிப்பிறவி'

1966ல் வெளியான 'தனிப்பிறவி'

1966ல் வெளியான மேஜர் சந்திரகாந்த்

1966ல் வெளியான மேஜர் சந்திரகாந்த்

1966ல் வெளியான 'யார் நீ?'

1966ல் வெளியான 'யார் நீ?'

1966ல் வெளியான 'மோட்டார் சுந்தரம்பிள்ளை'

1966ல் வெளியான 'மோட்டார் சுந்தரம்பிள்ளை'

1967ல் வெளியான 'நான்'

1967ல் வெளியான 'நான்'

1967ல் வெளியான 'அரச கட்டளை'

1967ல் வெளியான 'அரச கட்டளை'

1967ல் வெளியான 'காவல்காரன்'

1967ல் வெளியான 'காவல்காரன்'

1967ல் வெளியான 'கந்தன் கருணை'

1967ல் வெளியான 'கந்தன் கருணை'

1968ல் வெளியான 'எங்க ஊர் ராஜா'

1968ல் வெளியான 'எங்க ஊர் ராஜா'

1968ல் வெளியான 'குடியிருந்த கோவில்'

1968ல் வெளியான 'குடியிருந்த கோவில்'

1968ல் வெளியான 'ஒளிவிளக்கு'

1968ல் வெளியான 'ஒளிவிளக்கு'

1969ல் வெளியான 'மாட்டுக்கார வேலன்'

1969ல் வெளியான 'மாட்டுக்கார வேலன்'

1969ல் வெளியான 'அடிமைப்பெண்'. ஜெயலலிதா 4வது முறையாக இரட்டை வேடங்களில் நடித்த திரைப்படம் இது.

1969ல் வெளியான 'அடிமைப்பெண்'. ஜெயலலிதா 4வது முறையாக இரட்டை வேடங்களில் நடித்த திரைப்படம் இது.

1970ல் வெளியான 'எங்க மாமா'

1970ல் வெளியான 'எங்க மாமா'

1970ல் வெளியான 'எங்கள் தங்கம்'

1970ல் வெளியான 'எங்கள் தங்கம்'

1971ல் வெளியான 'சவாலே சமாளி'

1971ல் வெளியான 'சவாலே சமாளி'

1972ல் வெளியான சக்தி லீலை

1972ல் வெளியான சக்தி லீலை

1973ல் வெளியான 'சூரியகாந்தி'

1973ல் வெளியான 'சூரியகாந்தி'

BBC

Edited by நவீனன்

  • தொடங்கியவர்

வெண்ணிற ஆடை முதல் நதியை தேடி வந்த கடல் வரை ஜெயலலிதா: புகைப்படத் தொகுப்பு

 

1965ல் வெளியான 'வெண்ணிற ஆடை'

1965ல் வெளியான 'வெண்ணிற ஆடை'

1966ல் வெளியான 'சந்திரோதயம்'

1966ல் வெளியான 'சந்திரோதயம்'

jayalalitha

'நவரசத்தாரகை' என்னும் பட்டம் ஜெயலலிதாவிற்கு வழங்கப்பட்ட போது.

'நவரசத்தாரகை' என்னும் பட்டம் ஜெயலலிதாவிற்கு வழங்கப்பட்ட போது.

1966ல் வெளியான 'மேஜர் சந்திரகாந்த்'

1966ல் வெளியான 'மேஜர் சந்திரகாந்த்'

1967ல் வெளியான 'அரச கட்டளை'

1967ல் வெளியான 'அரச கட்டளை'

1972ல் வெளியான 'சக்தி லீலை'

1972ல் வெளியான 'சக்தி லீலை'

1973ல் வெளியான 'வந்தாள் மகராசி'

1973ல் வெளியான 'வந்தாள் மகராசி'

 

1980ல் தயாரான 'நதியை தேடி வந்த கடல்'

1980ல் தயாரான 'நதியை தேடி வந்த கடல்'

ஜெயலலிதாவின் புகைப்படத் தொகுப்பு

ஜெயலலிதாவின் புகைப்படத் தொகுப்பு

 

BBC

  • தொடங்கியவர்

10 செகண்ட் கதைகள்

 

ஓவியங்கள்: ஸ்யாம்

 

p40l.jpg

p40a.jpg

அக்கறை

``கராத்தே க்ளாஸுக்குப் போன பொண்ணு தனியா வரும். சீக்கிரமாப் போய், பத்திரமாக் கூட்டிட்டு வாங்க'' என்றாள் மனைவி.

- நந்த குமார்


p40b.jpg

ட்ரெண்ட்

``1,000 ரூபாய்க்கு சில்லறை வாங்கிட்டு வரச்சொல்லி, வில்லனைத் தெருத் தெருவா அலையவிட்டுச் சாகடிக்கிறீங்க. இதான் சார் ஒன்லைன்'' என்று கதை சொன்னார் டைரக்டர்.
  
- சி.சாமிநாதன்


p40c.jpg

குழப்பம்
 
`சேர்த்துவைத்த பழைய நோட்டை மாற்ற மகனிடம் கொடுத்தால், திரும்பி வருமா?' எனக் குழப்பத்தில் இருந்தார் அப்பா.

- அ.ரியாஸ்


p40d.jpg

வொர்க்அவுட்

இரண்டு மணி நேரம் ஜிம்மில் வொர்க்அவுட் செய்துவிட்டு வந்த ரவி, தன் டூ வீலரை நகர்த்த வாட்ச்மேனை அழைத்தான்.

- ராஜ் தீபா


p40e.jpg

ATM வேலை

 ``24 மணி நேரமும் ஏ.டி.எம்-ல கூட்டம் இருக்கிறதுனால, இப்ப வாட்ச்மேன் வேலைக்கு ஆள் வேண்டாமாம்!'' என்று நண்பனிடம் புலம்பினார் காவலாளி.

- ஆர்.கே.மணிகண்டன்


p40f.jpg

முடிவு

``பொண்ணோட ஃபேஸ்புக் அப்டேட்ஸ் எல்லாம் பார்த்துட்டுத்தான் எங்க முடிவைச் சொல்வோம்'' என்றார் மாப்பிள்ளையின் அக்கா.

- பெ.பாண்டியன்


p40g.jpg

ஆதாரம்

“பாட்டி, தலைவலிக்கு நீ சொல்லும் மருந்து நெட்டில் இல்லையே! எப்படி நம்புவது?” என்று கேட்டான் பேரன்.

- இரா.இரவிக்குமார்


p40h.jpg

நட்பு

``போன வருஷம் வந்த வெள்ளத்தின்போது மொட்டைமாடியில உங்களைச் சந்திச்சது. எப்படி இருக்கீங்க?'' என்று ஏ.டி.எம் வரிசையில் தன் பக்கத்து ஃப்ளாட்காரரிடம் விசாரித்தான் ராஜேந்திரன்.

- பத்மாவதி சாம்பசிவம்


p40i.jpg

காட்சி

``அந்தக் காலத்துல நிறைய முறை பேய்களைப் பார்த்திருக்கேன்'' என்ற தாத்தாவிடம், ``சாமியை ஒருமுறையாச்சும் பார்த்திருக்கியா தாத்தா?'' எனக் கேட்டான் பேரன்.

- கோ.பகவான்


p40j.jpg

விசாரிப்பு

15 ஆண்டுகளுக்குப் பிறகு சந்தித்துக்கொண்ட தோழர்கள் விசாரித்துக்கொண்டனர், அவரவரின் சுகர் அளவை.

- பெ.பாண்டியன்

vikatan

  • தொடங்கியவர்
1992 : இந்தியாவில் பாபர் மசூதி இடிக்கப்பட்டது
 

1060 : முதலாம் பேலா ஹங்கேரியின் மன்னனாக முடிசூடினார்.

 

1240 : யுக்ரைனின் கீவ் நகரம் மொங்கோலியரிடம் வீழ்ந்தது.

 

1768 : பிரிட்டானிக்கா கலைக்களஞ்சியத்தின் முதற் பதிப்பு வெளியிடப்பட்டது.

 

861varalaru-06-12-2016.jpg1790 : ஐக்கிய அமெரிக்க நாடாளுமன்றம் நியூயோர்க் நகரில் இருந்து பிலடெல்பியாவுக்கு இடம்பெயர்ந்தது.

 

1865 : ஐக்கிய அமெரிக்காவில் அடிமை முறை தடை செய்யப்பட்டது.

 

1897 : உலகில் முதற்தடவையாக வாடகை வாகனம் லண்டனில் சேவைக்கு விடப்பட்டது.

 

1907 : அமெரிக்காவின் மேற்கு வேர்ஜீனியாவில் மொனொங்கா என்ர இடத்தில் நிலக்கரிச் சுரங்கம் ஒன்றில் இடம்பெற்ற வெடிவிபத்தில் 362 தொழிலாளர்கள் கொல்லப்பட்டனர்.

 

1917 : ரஷ்யாவிடம் இருந்து சுதந்திரமடைவதாக பின்லாந்து அறிவித்தது.

 

1957: வாங்கார்ட் ரொக்கெட் ஏவப்படுகையில், வெடித்துச் சிதறியதால் செய்மதியொன்றை முதல்தடவையாக விண்வெளிக்கு ஏவும் நடவடிக்கை தோல்விடைந்தது.

 

1917 : கனடாவின் நோவா ஸ்கோசியாவில் ஹலிஃபாக்ஸ் துறைமுகத்தில் ஆயுதக் களஞ்சியக் கப்பல் ஒன்று வேறொரு கப்பலுடன் மோதி வெடித்ததில் 1900 பேர் கொல்லப்பட்டதுடன் நகரத்தின் பெரும் பகுதி அழிந்தது.

 

1921 : இங்கிலாந்துக்கும் அயர்லாந்துக்கும் இடையில் நட்புறவு ஒப்பந்தம் கையெழுத்தாகியது.

 

1922 : ஐரிஸ் சுதந்திர நாடு உருவானது.

 

1941 : இரண்டாம் உலகப் போரில் பின்லாந்துக்கு எதிராக ஐக்கிய இராச்சியம் போர்ப் பிரகடனம் செய்தது.

 

1957 : வங்கார்ட் விண்கலம் ஏவப்படுகையில் வெடித்ததை அடுத்து பூமியின் சுற்றுவட்டத்துக்கு ஐக்கிய அமெரிக்கா தனது முதலாவது செய்மதி அனுப்பும் திட்டம் நிறைவேறவில்லை.

 

1967 : அட்ரியன் கன்ட்ரோவிட்ஸ் என்பவருக்கு இதயமாற்று சத்திரசிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. அமெரிக்காவில் மேற்கொள்ளப்பட்ட முதலாவது மனித இதயமாற்று சத்திரசிகிச்சை இது.

 

1971 : பங்களாதேஷை இந்தியா  அங்கீகரித்ததைத் தொடர்ந்து பாகிஸ்தான் இந்தியாவுடனான அனைத்து ராஜதந்திர உறவுகளையும் துண்டித்தது.

 

1977 : பொப்புதட்ஸ்வானா பிராந்தியத்துக்கு தென் ஆபிரிக்கா சுதந்திரம் அளித்தாலும் எந்த நாடும் அதனை அங்கீகரிக்கவில்லை.

 

1992 : இந்தியாவின் அயோத்தி நகரில் முகலாய மன்னர் பாபரினால் 16 ஆம் நூற்றாண்டில் நிர்மாணிக்கப்பட்ட  பாபர் மசூதி, இந்துத்வா அமைப்பினரால் இடித்து அழிக்கப்பட்டது.

 

1997 : ரஷ்யாவின் சைபீரிய பிராந்தியத்தில் ரஷ்ய சரக்கு விமானம் ஒன்று குடியிருப்புத் தொடர் ஒன்றில் மோதியதில் 67 பேர் கொல்லப்பட்டனர்.

 

2005 : சீனாவின் டொங்சூ என்ற இடத்தில் இடம்பெற்ற ஆர்ப்பாட்டத்தின் போது பல கிராம மக்கள் சுட்டுக்கொல்லப்பட்டனர்.

 

2005 : ஈரானிய விமானப்படை விமானமொன்று தெஹ்ரான் அருகே விபத்துக்குள்ளானதால் 84 பேர் உயிரிழந்தனர்.

 

2006 : செவ்வாய்க் கோளில் இருந்து மார்ஸ் குளோபல் சேர்வயர் அனுப்பிய படங்களின் மூலம்,  அங்கு நீர் திரவ நிலையில் இருப்பதற்கான சாத்தியங்கள் இருப்பதாக நாசா அறிவித்தது.

 

2013 : கொழும்பு புறக்கோட்டை போதிராஜா மாவத்தையில் ஏற்பட்ட தீயினால் சுமார் 100 கடைகள் தீக்கிரையாகின.

metronews.lk

Edited by நவீனன்

  • தொடங்கியவர்

"என்னுடைய வாழ்க்கையும், கரியரும் சூறாவளி போன்றது!'' #JayalalithaaQuotes

வாழ்க்கை

 

"செய்வீர்களா... நீங்கள்? செய்வீர்களா?" என்று தேர்தல் பிரசாரங்களில் போது கம்பீரமாக முழங்கிய ஜெயலலிதா, தன் வாழ்க்கையின் பல்வேறு கட்டங்களில் சொன்ன சில முக்கியமான வாசகங்கள் மட்டும் தொகுப்பாக இங்கே... ஜெயலலிதா சொல்லிய ஒவ்வொரு சொல்லுக்கு பின்னாலும் வலிமை, வேதனை, போராட்டம், நம்பிக்கை... மிகுந்து இருப்பதை இவர் சொன்ன வாக்கியங்களில் இருந்தே புரிந்துகொள்ள முடிகிறது.

 

"என்னுடைய வாழ்க்கையும், கரியரும் ஒரு சூறாவளி காற்றை போன்றது."

"எனக்கு உள்ளும் சோகம், கோபம், அழுகை எல்லாம் உண்டு. ஆனால், ஒரு தலைமை பொறுப்பிற்கு வரும்போது உங்கள் உணர்ச்சிகளை கட்டுப்படுத்த வேண்டிய அவசியம் இருக்கிறது."

"அம்மா சம்பாதித்ததை எல்லாம் சேர்த்துவைத்திருந்தால், நான் சினிமாவுக்கே வந்திருக்க வேண்டாம். என்னை நல்லா படிக்கவைச்சு, சாதாரணமான  குடும்பத்துப் பெண் மாதிரி 18, 19 வயசிலே நல்ல இடத்திலே கல்யாணம் பண்ணிக் கொடுத்திருந்தால், நான் நாலு குழந்தைகளுக்குத் தாயாகி இருப்பேன் ஹேப்பியாக. இத்தனை அப்ஸ் அண்ட் டவுன்ஸ் என் லைஃப்பிலே இருந்திருக்காது."

"என்னை வீழ்த்த நினைத்தவர்கள் ஒருபோதும் வென்றதில்லை. நம் கட்சியினர் நினைத்தது குறித்த நேரத்தில் நடக்கும். இதை யாராலும் தடை செய்ய முடியாது."

"நமது இலட்சியம் உயர்வானது! நமது பார்வை தெளிவானது! நமது வெற்றி முடிவானது!"

"இந்தியாவில் நடைபெறும் அத்தனை போராட்டங்களிலும் 25 சதவீதம் தமிழ்நாட்டில் மட்டுமே நிகழ்கின்றன என்றால் அவ்வளவு தாராள மனதோடு ஜனநாயக நெறிமுறைகளை காக்க வேண்டும் என்ற உணர்வோடு இந்த அரசும், காவல்துறையும் அத்தனை போராட்டங்களுக்கும் அனுமதி வழங்குகின்றன என்று தான் பொருள்."

unnamed_09079.jpg

"எனக்கென்று தனிப்பட்ட வாழ்வு இல்லை. எனக்கென்று தனிப்பட்ட எதிர்பார்ப்புகள் ஏதும் இல்லை. நான் வாழ்வதே இந்த இயக்கத்திற்காகத்தான்; தமிழக மக்களுக்காகத்தான்."

“குடும்ப அரசியல் என்னும் நச்சு மரம் தமிழகத்தில் வேர்களையும், விழுதுகளையும் பலப்படுத்திக்கொள்ளுமேயானால் அது தனிமனித சுதந்திரத்திற்கு ஆபத்தாக முடியும்.”

"காவிரி நடுவர்மன்றத் தீர்ப்பு அரசிதழில் வெளியிடப்பட்டது, எனது 30 ஆண்டு கால அரசியல் வாழ்வில் கிடைத்த வெற்றி."

"எப்போதெல்லாம் நான் ஆட்சிக்கு வருகிறேனோ, அப்போதெல்லாம் தமிழ் சினிமாத் துறைக்கு தேவையான ஆதரவையும் ஊக்கத்தையும் வழங்கி வருகிறேன்."

"தமிழக மக்கள் யாரிடத்திலேயும் கை நீட்டிப் பெறுகின்ற நிலைமை இருக்கக் கூடாது. இந்த நிலையை எனது வாழ்நாளில் நான் காண வேண்டும் என்ற ஆசை எனக்கு இருக்கிறது. அதுதான் என்னுடைய இலட்சியம்."

"எனக்கென்று யார் இருக்கிறார்கள். நான் தவ வாழ்க்கை வாழ்கிறேன்."

"உயிரைவிட வேண்டுமானால் கட்சிக்காக விடத்தயார்."

"என் வாழ்வின் ஒருகட்டத்தில் நான் தற்கொலை செய்துகொள்ள முயற்சித்தேன். ஆனால், என் மன வலிமையினால் அதில் இருந்து மீண்டு வந்தேன்."
 
"முதல் தவறு, என் வாழ்க்கையில் சம்பந்தப்பட்ட அநேகம் பேர்கள் இருக்கும்போது சுயசரிதம் எழுத ஆரம்பித்தது. இரண்டாவது தவறு, எழுதுவதில் ரொம்ப ஃபிராங்க் ஆக இருந்ததுதான்."

vikatan

  • தொடங்கியவர்

15284975_1208690742512951_63870768934776

இந்திய கிரிக்கெட் அணியில் கலக்கி வரும் நட்சத்திர சகலதுறை வீரர், இப்போது நடைபெற்று வரும் டெஸ்ட் தொடரின் கலக்கல் சுழல்பந்து வீச்சாளர் ரவீந்திர ஜடேஜாவின் பிறந்தநாள்.
Happy Birthday Ravindra Jadeja

  • தொடங்கியவர்

கணிதக் கதை - எண்களைக் கூறு கட்டிய மனிதர்கள்!

 

 
பெர்க்டாமா பழங்குடி - எண் குறியீடு கொண்ட ஓநாய் எலும்பு - கார்ல் அப்சலான்
பெர்க்டாமா பழங்குடி - எண் குறியீடு கொண்ட ஓநாய் எலும்பு - கார்ல் அப்சலான்
 
 

மனிதர்கள் விரல் விட்டு எப்படி எண்ண கற்றுக்கொண்டார்கள் என்பதைப் போன மாதம் பார்த்தோம். விரல் விட்டு எண்ணக் கற்றுக்கொண்டது கணிதத்தில் மிக முக்கியமான வளர்ச்சி. இந்த முறையில் எண்ணும்போது ஒவ்வொரு கோடு அல்லது விரலுக்குப் பெயர் கொடுக்காவிட்டால் என்ன நடக்கும்?

எத்தனை எண்களை எண்ணினோம் என்பது மறந்து போய், திரும்பத் திரும்ப ஒரே எண்ணையே எண்ணிக்கொண்டிருப்போம் அல்லது குறிப்பிட்ட எண்ணிக்கைக்கு மேல் எண்ணவே முடியாது. இந்த நிலையில்தான் ஒவ்வொரு எண்ணுக்கும் பெயர் கொடுக்க வேண்டிய அவசியத்தை ஆதி மனிதர்கள் உணர்ந்துகொண்டார்கள். எண்களுக்குப் பெயரிடும் முறை உலகெங்கும் நிறைய சுவாரசியங்களை உருவாக்க ஆரம்பித்தது.

தொகுதி தொகுதியாக

நம்ம ஊர் சந்தைகளுக்குப் போயிருக்கிறார்களா? மால்களைப் போலவோ, மார்கெட்டைப் போலவே மிகப் பெரிதாக இல்லாமல், சின்னச் சின்ன வியாபாரிகள், குறைந்த அளவு பொருட்களைச் சில்லறை விலைக்கு விற்றுக்கொண்டிருப்பார்கள். இந்தச் சந்தைகளில் காய்கறி, இன்னும் சில பொருட்களை எண்ணிக்கையிலோ, எடை போட்டோ விற்க மாட்டார்கள். கொஞ்சம் கொஞ்சமாகப் பிரித்துக் கூறுகட்டி விற்பார்கள். ஒவ்வொரு ‘கூறும்' ஒரே விலை. நமக்குத் தேவையான அளவு இரண்டு கூறையோ, மூன்று கூறையோ வாங்கிக்கொள்ளலாம். இப்படி கூறுபோடுவது போல, எண்களையும் ஆதிகால மக்கள் தொகுதி தொகுதியாகவே பயன்படுத்தினார்கள்.

ஒரே எண், வித்தியாச பெயர்

ஃபிஜி தீவில் உள்ள பழங்குடி மக்கள் 10 படகுகளை ‘போலா' என்றார்கள். அதே 10 தேங்காய்கள் என்றால், அதை ‘போலா' என்று சொல்வது கிடையாது. அது ‘கோரோ'. இப்படி ஒவ்வொரு பொருளை எண்ணும்போதும் ஒரே எண்ணுக்கு வித்தியாசமான பெயரை அவர்கள் வைத்திருந்தார்கள்.

கனடாவைச் சேர்ந்த பழங்குடிகள் எல்லாவற்றுக்கும் பெயர் கொடுத்தே எண்ணினார்கள். வெவ்வேறு பொருட்களை எண்ணுவதற்கு வசதியாக, ஏழு பிரிவு வார்த்தைகளை அவர்கள் வைத்திருந்தார்கள். இந்த வார்த்தைகளிலிருந்து ஒவ்வொரு பொருளுக்கும் வித்தியாசமான பெயரையும் கொடுத்துவந்தார்கள்.

ஃபிஜி தீவு பழங்குடிகள், கனடா பழங்குடிகளைப் போல ஒவ்வொரு பழங்குடி இன மக்களும் வெவ்வேறு பொருட்களின் எண்ணிக்கையைக் குறிக்கும் ஒரே எண்ணை வித்தியாசமான பெயரில் அழைத்தார்கள். ஒவ்வொரு பகுதியிலும், ஒவ்வொரு நாட்டிலும் எண்களுக்கு வித்தியாசமான பெயர்கள் கொடுக்கப்பட்டன.

இரட்டை இரட்டையாக

தென்னாப்பிரிக்காவில் உள்ள பெர்க்டாமா பழங்குடிகளுக்கு ஒன்று, இரண்டு வரைதான் சரியாக எண்ணத் தெரியும். அதற்கு மேலான எண்கள் எல்லாவற்றையுமே அவர்கள் ‘ஏராளமானவை' என்றார்கள். சரி, இவர்கள் மூன்று என்ற எண்ணை எப்படிக் குறிப்பிடுவார்கள்? இரண்டு + ஒன்று என்றுதான். இதற்கு ‘பண்டைய எண்ணும் முறை' என்று பெயர்.

நாம் எல்லாவற்றையும் ஒவ்வொன்றாக எண்ணுகிறோம். இந்தப் பழங்குடிகளோ எல்லா எண்களையுமே இரட்டை, இரட்டையாக எண்ணினார்கள். பிறகு அவற்றுக்குப் பெயர் கொடுத்தார்கள். தென்னமெரிக்கா, பப்புவா நியூ கினியா, ஆஸ்திரேலியாவில் உள்ள பழங்குடிகள் எண்களை இப்போதும் இரட்டை இரட்டையாகவே எண்ணி வருகிறார்கள். இது ‘இரட்டை எண்ணும் முறை' எனப்படுகிறது.

ஐந்து ஐந்தாக

இப்படியே கொஞ்சம் கொஞ்சமாக வளர்ந்து ஐந்து ஐந்தாக எண்ணும் முறை உருவானது. 1937-ல் தொல்லியல் அறிஞர் கார்ல் அப்சலான், செக்கஸ்லோவாகியா நாட்டில் அகழ்வாராய்ச்சி செய்துகொண்டிருந்தார். அப்போது ஒரு ஓநாயின் எலும்பைக் கண்டெடுத்தார். அந்த எலும்பு 30,000 ஆண்டு பழமையானது. அந்த எலும்பில் பண்டை காலத்தில் வாழ்ந்த யாரோ சிலர், குறியீடுகளைச் செதுக்கி இருந்தார்கள். அந்தக் குறியீடுகள் அனைத்துமே ஐந்து ஐந்தாக இருந்தன.

ஒவ்வொன்றாக விரல் விட்டு எண்ணுவதைக் காட்டிலும் ஐந்து ஐந்தாக எண்ணுவது மிக எளிதுதான். ஏன் தெரியுமா? ஐந்து ஐந்தாக எண்ணும்போது பெரிய எண்களை நம்மால் எண்ண முடியும். இப்படி ஐந்து ஐந்தாக எண்ணுவது உலகின் பல பகுதிகளில் பிரபலமடைய ஆரம்பித்தது. அதற்கு முக்கியக் காரணம். நம்முடைய ஒவ்வொரு கையிலும் ஐந்து விரல்கள் இருப்பதுதான். இப்படியாக, ஒரு கையில் இருக்கும் ஐந்து விரல்களையும் முழுமையாகப் பயன்படுத்தி எண்ணும் முறை பரவலானது.

புதுச் சொற்கள்

அகழ்வாராய்ச்சி, அகழாய்வு - மண்ணைத் தோண்டி அதில் புதைந்து கிடக்கும் பண்டைக் காலப் பொருட்களை ஆய்வு செய்வது

கூறு - தொகுதி தொகுதியாகப் பிரித்து வைக்கும் முறை

சந்தை - பல பொருட்களை மொத்தமாக விற்கும் இடம்

tamil.thehindu

  • தொடங்கியவர்

 

காளையை அடக்கும் மாது - காணொளி

  • தொடங்கியவர்

 

126p1.jpg

கேமரா... ஸ்டார்ட்... ஆக்‌ஷன்!

நிஜ சினிமாவையே மிஞ்சும் அளவிற்குப் பரபரப்பான திருப்பங்களோடு தென்னிந்திய நடிகர் சங்கத்தின் பொதுக்குழு நடந்து முடிந்துள்ளது. பல நெருக்கடிகளுக்குப் பின் நடிகர் சங்க மைதானத்தில் பொதுக்குழுவை நடத்துவதென முடிவானது. கருணாஸின் கார் கண்ணாடி உடைப்பு, வாசலில் மோதல், கைது, சிலர் மீது வழக்குப்பதிவு எனப் பல களேபரங்கள் நடந்தேறின. அனைத்தையும் மிஞ்சும் வகையில், முன்னாள் நிர்வாகிகளான சரத்குமார் மற்றும் ராதாரவி ஆகியோர் தென்னிந்திய நடிகர் சங்கத்திலிருந்து நிரந்தரமாக நீக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டது. குதூகலமான நெட்டிசன்கள் மீம்களைத் தெறிக்கவிட்டதில், இந்திய அளவிலான ட்ரெண்டில்  #nadigarsangam டேக் வலம் வந்தது. அரசியல்ல இதெல்லாம் சாதாரணமப்பா!


126p2.jpg

சின்ன தல!

கிரிக்கெட் வீரர் சுரேஷ் ரெய்னா, தனது 30-வது பிறந்தநாளை நண்பர்கள் மற்றும் குடும்பத்தினருடன் கடந்த வாரம் கொண்டாடினார். அதிரடி நாயகன் விரேந்திர சேவாக், யுவராஜ் சிங் போன்ற கிரிக்கெட் உலகினர் வாழ்த்து மழையில் ரெய்னாவை நனைத்தனர். சென்னை சூப்பர் கிங்ஸ் அணி சமீபகால ஐ.பி.எல். போட்டிகளில் பங்கேற்காவிட்டாலும், அந்த அணியின் செல்லப்பிள்ளையான ரெய்னாவை ரசிகர்கள் மறக்கவில்லை. #hbdraina என்ற டேக்கில் சி.எஸ்.கே. அணிக்காக ரெய்னா ஆடிய சிறப்பான ஆட்டங்களைப் பகிர்ந்தும், வாழ்த்துகளைத் தெரிவித்தும் ட்ரெண்ட் ஆக்கினர். வாழ்த்துகள் சின்னத்தல!


126p3.jpg

ரியல் ஜோடி!

பிரபல மலையாள நட்சத்திரங்களான திலீப் மற்றும் காவ்யா மாதவன் இருவருக்கும் கொச்சியில் கடந்த வாரம் திருமணமானது. கடந்த ஆண்டு இருவருமே விவாகரத்து பெற்றிருந்தனர். இருவருக்கும் இடையே திருமணம் நடக்கப்போகிறது என ஆரம்பத்தில் வந்த செய்தியை இருவருமே மறுத்துவந்த நிலையில், நெருங்கிய நண்பர்கள் மற்றும் சினிமாத் துறையினர் முன்னிலையில் இந்தத் திருமணம் நடைபெற்றுள்ளது. சினிமா வாழ்க்கையில் மட்டுமில்லாது நிஜ வாழ்க்கையிலும் இருவரும் ஜோடி சேர்ந்ததை அடுத்து ட்விட்டரில் #kavyamadhavan #dileep இருவர் பெயரும் அடுத்தடுத்து ட்ரெண்ட் ஆகின. வாழ்த்துகள்!


126p4.jpg

வைரல் மேட்டர் பாஸ்!

500, 1,000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்ற மத்திய அரசின் அறிவிப்பிற்குப் பிறகு இன்னும் ஏ.டி.எம்-களில் கூட்டம் குறைந்தபாடில்லை. இது திருமண சீசன் என்பதால் திருமணத்திற்கான போதிய செலவுகள் செய்யமுடியாமலும், மொய்ப்பணம் வரத்துக் குறைவாக இருக்கும் என்பதாலும் பலர் குழப்பத்தில் இருக்கின்றனர். இந்நிலையில் மணமேடையில் ஸ்வைப் மெஷினுடன் போஸ் கொடுத்த மணமக்களின் புகைப்படம் #CoupleWithSwipeMachine என்ற பெயரில் கடந்த வாரம் வைரலானது. கேலிக்காக மணமக்கள் அப்படி போஸ் கொடுத்தது பின்பு தெரியவந்தது. எப்படியெல்லாம் யோசிக்கிறாங்க!


126p5.jpg

படமாகும் ஒபாமா வாழ்க்கை!

 தொடர்ந்து இருமுறை அமெரிக்க அதிபராகப் பதவி வகித்த பராக் ஒபாமா பற்றி `பேர்ரி' என்ற பெயரில் திரைப்படம் ஒன்று வெளிவர இருக்கிறது. சிறுவயதில் ஒபாமாவை அவரது நண்பர்கள் பேர்ரி என்றுதான் அழைப்பார்களாம். இளமைக்காலத்தில் நியூயார்க் நகருக்கு வந்திறங்கிய ஒபாமா, இனவாதப் பிரச்னைகளை எப்படி எதிர்கொண்டு அதிபர் பதவியை எட்டிப்பிடித்தார் என்பதுதான் படத்தின் கதை! இப்படத்தின் டீஸர் கடந்த வாரம் வெளியானது. அரசியல் மற்றும் சினிமா ஆர்வலர்கள் மத்தியில் படம் பற்றிய பெரும் எதிர்பார்ப்பை இந்த டீஸர் ஏற்படுத்தியுள்ளதால் எங்கும் #Barry மயம். இப்படத்தை இயக்கியிருப்பவர் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த விக்ரம் காந்தி. 'பேர்ரி....பேர்ரி'!


126p6.jpg

புரட்சிகர சகாப்தம் மறைந்தது!

கியூபப் புரட்சியின் தலைவரும், அந்நாட்டின் முன்னாள் அதிபருமான ஃபிடல் காஸ்ட்ரோவின் மரணம் உலகையே அதிர்ச்சிக்குள்ளாக்கியது. அமெரிக்காவின் ஆதிக்கத்துக்கு எதிராகப் போர்க்குரல் எழுப்பியதோடு, கல்வி, பொது மருத்துவம் கியூப மக்கள் அனைவருக்கும் கிடைக்கும்படிச்செய்து உலகே வியக்கும்படி கியூபாவை மாற்றிக்காட்டிய மகத்தான மனிதர் அவர். தனது 90-வது வயதில் மறைந்த காஸ்ட்ரோவிற்கு, உலகத் தலைவர்கள் அனைவரும் தங்களது இரங்கல்களைத் தெரிவித்தனர். நெட்டிசன்களும் தங்களது ஆதர்சம் குறித்துப் பதிவிட்டதில், லட்சக்கணக்கான ட்வீட்களோடு #fidelcastro டேக் உலக அளவில் ட்ரெண்டில் இடம்பெற்றது. இரங்கல்கள்!


126p7.jpg

இது புது சினிமா!

`இங்கிலீஷ் விங்கிலீஷ்' படத்தின் வெற்றிக்குப்பின் இயக்குநர் கெளரி ஷிண்டே இயக்கியுள்ள `Dear Zindagi' திரைப்படம் கடந்த வாரம் வெளியானது. ஷாருக் கான் மற்றும்  அலியா பட் நடிப்பில் உருவான இத்திரைப்படத்திற்குப் பல இடங்களில் இருந்து பாசிட்டிவ் விமர்சனங்கள் குவிந்தவண்னம் இருக்கின்றன. ஷாருக் கானின் போட்டியாளர்களில் ஒருவராகக் கருதப்படும் சல்மான் கான் உட்பட பலரும் இப்படத்தைப் பாராட்டி யுள்ளனர். படத்தைப் பார்த்து ரசித்த ரசிகர்களும், ட்விட்டரில் தங்களது பாராட்டுகளைக் குவித்ததில், #lovedearzindagi டேக்கில் மட்டும் பல்லாயிரக்கணக்கான ட்வீட்கள் பதிவாகி ட்ரெண்ட் அடித்துள்ளது.

vikatan

  • தொடங்கியவர்

p36a.jpg

`300', `ட்ரெட்', `தி பர்ஜ்' போன்ற படங்களில் நடித்த லேனா ஹெட்டேயின் ஹாட் பக்கங்களைத்தான் இந்தவாரம் பார்க்க இருக்கிறோம்.

பெர்முடாவில் பிறந்த முக்கோண மக்ரூன். அப்பா ஸ்ட்ரிக்ட்டான போலீஸ் ஆபீஸர். அதனால் அடிக்கடி ட்ரான்ஸ்ஃபர் ஆக, அந்த வயதிலேயே ஸ்டேட் விட்டு ஸ்டேட் சுற்றினார். #இந்தப் பக்கமும் வந்திருக்கலாம்!

p36b.jpg

டாட்டூக்கள் குத்திக்கொள்ள அவ்வளவு பிடிக்கும்.`டாட்டூக்களைப் போல அமைதியைத் தருபவை எதுவுமே இல்லை' என்பது அவரின் ஸ்டேட்மென்ட். #`பச்சை'க்கிளி!

p36c.jpg

நடனமாட மிகவும் பிடிக்கும். சிறு வயதில் முறையாக பாலே கற்றுக்கொண்டார். இப்போதுவரை அது விரல் நுனியில்! #பாலே பார்பி!

p36d.jpg

சிறு வயதிலிருந்தே நாடகங்களில் நடிக்க ஆரம்பித்தார். அப்படி ஒரு நாடகத்தைப் பார்த்துதான் இவரை சினிமாவிற்கு அழைத்து வந்தார்கள். #எல்லாமே நாடகம்தான்!

p36e.jpg

பக்கா வெஜிடேரியன். ஆனாலும் படங்களில் விலங்குகளை வேட்டையாடுவது போன்ற காட்சிகளில் நடித்தார். விளைவு, இப்போது நான்வெஜ் வெளுத்து வாங்குவார். #வெள்ளைக்கார ராஜ்கிரண்!

p36f.jpg

தொடக்கத்தில் துண்டு துக்கடா ரோல்கள்தான் கிடைத்தன. கொஞ்சம் கொஞ்சமாக வளர்ந்து இன்று வெரைட்டி ரோல்களில் அசத்துகிறார். #படிப்படியான வளர்ச்சி! 

p36g.jpg

2007-ல் இசையமைப்பாளர் பீட்டர் லாக்ரனோடு டும்டும்டும் நடந்தது. ஆனால் நான்கே ஆண்டுகளில் பிரிந்துவிட்டார்கள். #நோ கமென்ட்ஸ்!

ஒரு மகன், ஒரு மகள் என இரண்டு குழந்தைகள். மகன் பிறந்த பின் போஸ்ட்பார்ட்டம் டிப்ரஷனால் கடுமையாக பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றார். #என்னாச்சு காதும்மா?

vikatan

  • தொடங்கியவர்

 

அசையாமல் நின்று தலையில் சாப்பாட்டுப் பொருட்களை வைத்துகொள்வதில்...
அசையாமல் நின்று தலையில் சாப்பாட்டுப் பொருட்களை வைத்துக்கொள்வதில் இந்த நாய் ஒரு கில்லாடி!
  • தொடங்கியவர்

விமர்சனம் செய்தவர்களையும் கண்ணீர் சிந்த விட்டாயே அம்மா.

15380736_372277939776449_730158817994292

15355734_372277903109786_406212840942094

  15338667_372277919776451_501457691812371

  • தொடங்கியவர்

15391142_10155281316494578_7591925657988

Iron women of India..

  • தொடங்கியவர்

வாடகை வாகனம் உலகில் முதல்முறையாக லண்டனில் சேவைக்கு வந்த நாள் (டிச.6- 1897)

 

1897-ம் ஆண்டு டிசம்பர் மாதம் 6-ந்தேதி உலகில் முதல்முறையாக சேவைக்கு வந்தது. இதே தேதியில் நிகழ்ந்த முக்கிய நிகழ்வுகள்:- * 1865 - ஐக்கிய அமெரிக்காவில் அடிமைமுறை தடை செய்யப்பட்டது. * 1877 - வாஷிங்டன் போஸ்ட் செய்திப்பத்திரிகை முதற்தடவையாக வெளியிடப்பட்டது. * 1884 - வாஷிங்டன் டிசியில் வாஷிங்டன் நினவுச்சின்ன அமைப்பு வேலைகள் முடிவடைந்தது. * 1897 - வாடகை வாகனம் உலகில் முதற்தடவையாக லண்டனில் சேவைக்கு விடப்பட்டது. * 1907- மேற்கு வெர்ஜீனியாவில் மொனொங்கா என்ற இடத்தில் நிலக்கரிச்

 
 
 
 
வாடகை வாகனம் உலகில் முதல்முறையாக லண்டனில் சேவைக்கு வந்த நாள் (டிச.6- 1897)
 
1897-ம் ஆண்டு டிசம்பர் மாதம் 6-ந்தேதி உலகில் முதல்முறையாக சேவைக்கு வந்தது.

இதே தேதியில் நிகழ்ந்த முக்கிய நிகழ்வுகள்:-

* 1865 - ஐக்கிய அமெரிக்காவில் அடிமைமுறை தடை செய்யப்பட்டது. * 1877 - வாஷிங்டன் போஸ்ட் செய்திப்பத்திரிகை முதற்தடவையாக வெளியிடப்பட்டது. * 1884 - வாஷிங்டன் டிசியில் வாஷிங்டன் நினவுச்சின்ன அமைப்பு வேலைகள் முடிவடைந்தது. * 1897 - வாடகை வாகனம் உலகில் முதற்தடவையாக லண்டனில் சேவைக்கு விடப்பட்டது. * 1907- மேற்கு வெர்ஜீனியாவில் மொனொங்கா என்ற இடத்தில் நிலக்கரிச் சுரங்கம் ஒன்றில் இடம்பெற்ற வெடிவிபத்தில் 362 தொழிலாளர்கள் கொல்லப்பட்டனர்.

* 1917 - பின்லாந்து ரஷ்யாவிடம் இருந்து விடுதலையை அறிவித்தது. * 1957: வங்கார்ட் விண்கலம் ஏவப்படுகையில் வெடித்துச் சிதறியது. * 1917 - கனடாவின் நோவா ஸ்கோசியாவில் ஹலிபாக்ஸ் துறைமுகத்தில் ஆயுதக் களஞ்சியக் கப்பல் ஒன்று வேறொரு கப்பலுடன் மோதி வெடித்ததில் 1900 பேர் கொல்லப்பட்டு நகரத்தின் பெரும் பகுதி அழிந்தது. * 1921 - இங்கிலாந்துக்கும் அயர்லாந்துக்கும் இடையில் நட்புறவு ஒப்பந்தம் கையெழுத்தாகியது. * 1922 - ஐரிய சுதந்திர நாடு உருவானது. * 1941 - இரண்டாம் உலகப் போர்: ஐக்கிய இராச்சியம் பின்லாந்து மீது போரை அறிவித்தது. * 1957 - வங்கார்ட் விண்கலம் ஏவப்படுகையில் வெடித்ததை அடுத்து பூமியின் சுற்றுவட்டத்துக்கு ஐக்கிய அமெரிக்கா தனது முதலாவது செய்மதி அனுப்பும் திட்டம் நிறைவேறவில்லை.

* 1971 - இந்தியா வங்காள தேசத்தை அங்கீகரித்ததைத் தொடர்ந்து பாகிஸ்தான் இந்தியாவுடனான அனைத்து ராஜதந்திர உறவுகளையும் துண்டித்தது. * 1977 - தென் ஆப்பிரிக்கா பொப்புதட்ஸ்வானாவுக்கு விடுதலை அளித்தாலும் எந்த நாடும் அதனை அங்கீகரிக்கவில்லை. * 1992 - அயோத்தியாவில் 16-ம் நூற்றாண்டு பழமைவாய்ந்த பாபர் மசூதி இந்துத் தீவிரவாதிகளால் இடித்து அழிக்கப்பட்டது. * 1997 - சைபீரியாவில் ரஷ்ய சரக்கு விமானம் ஒன்று குடிமனைத் தொடர் ஒன்றில் மோதியதில் 67 பேர் கொல்லப்பட்டனர்.

* 2005 - சீனாவின் டொங்சூ என்ற இடத்தில் இடம்பெற்ற ஆர்ப்பாட்டத்தின் போது பல கிராம மக்கள் சுட்டுக்கொல்லப்பட்டனர். * 2006 - செவ்வாய்க் கோளில் இருந்து மார்ஸ் குளோபல் சேர்வயர் அனுப்பிய படங்களில் இருந்து அங்கு நீர் திரவ நிலையில் இருப்பதை உறுதிப்படுத்தியதாக நாசா அறிவித்தது.

http://www.maalaimalar.com

  • தொடங்கியவர்

15267860_1184000988344337_85775270184685

15284943_1184001021677667_66163068729586

15220169_1184001071677662_73094264959098

15350520_1184001115010991_37481419602945

15268002_1184001151677654_34065828561615

சிங்கப்பூரில் பொங்கல் தோரணங்கள் .இப்போதே !

 

  • தொடங்கியவர்

ஏன் மனிதனுக்குக் கண் புருவங்கள் உள்ளன?

  • தொடங்கியவர்
மரணம் புதிதல்ல
 

article_1481082441-yujgui.jpgஎல்லா மனிதர்களுமே நோய் வந்துதான் மரணிக்க வேண்டியுள்ளது. இயற்கை எய்தினார் என நாம் சொல்கின்றோம். அதாவது, நோய் என்னும் இயற்கை நிகழ்வு, எப்படியோ மரண காலம் வந்தவுடன் மனிதர் உயிரைப் பறித்து விடுகின்றது. 

உடலில் உறுப்புகள் செயலிழந்ததும் உயிர் பிரிந்து விட்டதாகச் சொல்கின்றோம். தானாக உயிர் அடங்கிப் பிரிவது, ஆன்மிக வள்ளல்களுக்கே நிகழ்கின்றது. இவர்கள் நோய் இன்றியே, தமது ஆன்மா பிரியும் நேரத்தையும் அனைவருக்கும் சொல்லிவிடுவார்கள்.  

ஆனால், சாமானியர்களுக்கு இப்படி நிகழாது. ஏதோ ஒரு நோய் அவயவத்தில் ஏற்பட்டு, பின்பு மரணத்தை ஏற்படுத்தி விடுகின்றது.  

தற்கொலை, கொலை, விபத்து என்பவற்றைத் தவிர, இயற்கை மரணங்கள் நோய் காரணமாகத்தான் நடப்பது ஒன்றும் புதிதல்ல. 

உடலை ஒருவன் பேணினால் அவன் வாழ்நாளில் சிரமமின்றி, நிம்மதியாக வாழமுடியும். மரணம் புதிதல்ல அது வராமலும் இருக்க முடியாது. உடல்வாழ ஆன்மாவையும் தூய்மையாக வைத்திருங்கள்.  

Edited by நவீனன்

  • தொடங்கியவர்

யாசர் அராபத் இஸ்ரேலை தனிநாடாக அங்கீகரித்த நாள்: 7-12-1988

 

இரண்டாம் உலகப்போருக்குப் பின் பாலஸ்தீனத்தின் ஒருபகுதியைப் பிரித்து இஸ்ரேல் நாடு உருவானது. இதை முதலில் பாலஸ்தீனம் ஏற்கவில்லை. பின் 1988-ம் ஆண்டு யாசர் அராபத் இஸ்ரேல் நாட்டை அங்கீகரித்தார். இதே நாளில் நிகழ்ந்த முக்கிய நிகழ்வுகள்:- * 1815 - நெப்போலியனுக்கு ஆதரவாக இருந்த பிரெஞ்சுத் தளபதி மிக்கேல் நேய் என்பவனுக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டது.

 
 
 
 
யாசர் அராபத் இஸ்ரேலை தனிநாடாக அங்கீகரித்த நாள்: 7-12-1988
 
இரண்டாம் உலகப்போருக்குப் பின் பாலஸ்தீனத்தின் ஒருபகுதியைப் பிரித்து இஸ்ரேல் நாடு உருவானது. இதை முதலில் பாலஸ்தீனம் ஏற்கவில்லை. பின் 1988-ம் ஆண்டு யாசர் அராபத் இஸ்ரேல் நாட்டை அங்கீகரித்தார்.

இதே நாளில் நிகழ்ந்த முக்கிய நிகழ்வுகள்:-

* 1815 - நெப்போலியனுக்கு ஆதரவாக இருந்த பிரெஞ்சுத் தளபதி மிக்கேல் நேய் என்பவனுக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டது. * 1900- மாக்ஸ் பிளாங்க் தனது பேர்லின் இல்லத்தில் வைத்து புகழ்பெற்ற கரும்பொருள் வெளியேற்ற விதியைக் கண்டுபிடித்தார். * 1910- யாழ்ப்பாணம், மானிப்பாய் இந்துக் கல்லூரியின் புதிய கட்டடம் திறக்கப்பட்டது. * 1917- முதலாம் உலகப் போர்: ஆஸ்திரியா- ஹங்கேரி மீது ஐக்கிய அமெரிக்கா போரை அறிவித்தது. * 1941- இரண்டாம் உலகப் போர்: பின்லாந்து, ஹங்கேரி, போலந்து, ருமேனியா ஆகியவற்றின் மீது கனடா போரை அறிவித்தது.

* 1941- இரண்டாம் உலகப் போர்: ஜப்பானியர் ஹவாயின் பேர்ள் துறைமுகத்தைத் தாக்கினர். * 1946- ஜார்ஜியாவின் அட்லாண்டாவில் உணவுச்சாலை ஒன்றில் இடம்பெற்ற தீவிபத்தில் 119 பேர் கொல்லப்பட்டனர். * 1949- சீனக் குடியரசின் அரசு நான்கிங் நகரில் இருந்து தாய்வானுக்கு மாறியது. * 1966 - துருக்கியில் ராணுவ முகாம் ஒன்றில் இடம்பெற்ற தீ விபத்தில் 68 பேர் கொல்லப்பட்டனர். * 1971 - பாகிஸ்தானில் நூருல் அமீன் பிரதமராகவும் சுல்பிக்கார் அலி பூட்டோவை உதவிப் பிரதமராகவும் கொண்ட கூட்டணி அரசை அதிபர் யாகியா கான் அறிவித்தார்.

* 1972 - அப்போலோ திட்டத்தின் கடைசி விண்கலம் அப்போலோ 17 சந்திரனை நோக்கி ஏவப்பட்டது. * 1975 - கிழக்குத் தீமோரை இந்தோனீசியா முற்றுகையிட்டது. * 1983 - ஸ்பெயின் மாட்ரிட் நகரில் இரண்டு விமானங்கள் மோதியதில் 93 பேர் கொல்லப்பட்டனர். * 1987 - கலிபோர்னியாவில் பறந்து கொண்டிருந்த விமானத்தில் பயணி ஒருவர் தனது முன்னாள் முதலாளியையும் விமான ஓட்டியையும் சுட்டுக் கொன்றபின் தன்னைத்தானே சுட்டுக் கொன்றான். இதனால் விமானம் தரையில் மோதியதில் அதில் பயணம் செய்த 43 பேரும் கொல்லப்பட்டனர்.

* 1988- ஆர்மீனியாவில் இடம்பெற்ற 6.9 ரிக்டர் நிலநடுக்கத்தில் 25,000 பேர் கொல்லப்பட்டு 4,00,000 பேர் வீடுகளை இழந்தனர். * 1988- யாசர் அரபாத் இஸ்ரேலை தனிநாடாக அங்கீகரித்தார். * 1995 - கலிலியோ விண்கலம் விண்ணுக்கு ஏவப்பட்டு 6 ஆண்டுகளின் பின்னர் வியாழனை அடைந்தது.

http://www.maalaimalar.com

  • தொடங்கியவர்

விண்வெளி வீரர்களுக்குப் புதிய சிற்றுண்டி

 
 
nasa_3099776f.jpg
 
 
 

அப்பல்லோ விண்கலக் காலத்திலிருந்து விண்வெளி வீரர்களுக்குக் கொடுக்கப்படும் உணவுகள் அளவில் சிறியவையாகவும் சத்துமிக்கவையாகவும் இருப்பதற்கான ஆராய்ச்சிகள் தொடர்ந்த வண்ணம் உள்ளன. இந்நிலையில் நிலவைத் தாண்டி ஆராய்ச்சி செய்யும் ஓரியன் விண்கலத்தில் பயணம் செய்யும் விண்வெளி வீரர்களுக்காகக் காலை உணவு பார்களை நாசா விண்வெளி நிலையத்தில் உருவாக்க முயன்று வருகின்றனர். விண்வெளி வீரர்கள் நாள் முழுவதும் உற்சாகமாக இருக்க இந்த ‘ப்ரேக்ஃபாஸ்ட் பார்கள்’ செய்யப்படவுள்ளன. அத்துடன் தொடர்ந்து சாப்பிட்டாலும் ருசியிலும் சலிக்காத வண்ணம் இந்தப் புதிய பார்கள் இருக்கும்.

1998-ல் உருவாக்கப்பட்ட சர்வதேச விண்வெளி ஆராய்ச்சி நிலையத்தில் (The International Space Station) மாட்டிறைச்சித் துண்டங்கள், ஹாம்பர்கர்கள், பழங்கள், எஸ்பரசோ காபி உட்பட 200 உணவுப் பொருட்களை வைத்துக்கொள்ள இடமிருந்தது.

ஒரேயொரு உணவு அலமாரி

ஆனால் ஓரியன் போன்ற நவீன விண்கலங்கள் மிகவும் சிறியவை என்பதால் ஒரேயொரு உணவு அலமாரி யும் உணவு பண்டங்களைச் சூடாக்கும் ஒரு அவன்(oven)-ம் வைப்பதற்கு மட்டுமே இடம் இருக்கிறது. நிலவையும் தாண்டி ஆழமான வெளியில் ஆய்வுகளை நடத்துவதால் எடை மிகவும் குறைவாக இருக்க வேண்டியது அவசியம். தொலைதூர ஆய்வுப் பயணம் என்பதால் உணவுகளைத் திரும்பப் பூமியிலிருந்து வழங்குவதற்கும், அதிகமாகக் குப்பைகளைச் சேமித்து வைப்பதற்கும் வாய்ப்பு கிடையாது.

அதனால்தான் நாசாவில் காலை உணவுக்காக உணவு பார்களை விண்வெளிப் பயணிகளுக்கு வழங்குகிறார்கள். சமச்சீரான ஊட்டச்சத்து கொண்ட பிரத்யேகமான முறையில் பாதுகாக்க வேண்டியிராத, அதிகம் பொதியப்பட (பேக்கேஜிங்) வேண்டியிராத உணவுகளுக்கான தொடர்ந்த ஆய்வின் விளைவு இது.

சுவையும் சத்தும்

இப்போது நாசாவால் உருவாக்கப் பட்டுள்ள புதிய காலை உணவு பார்கள் 700 முதல் 900 கலோரிகளும் சமச்சீரான ஊட்டச்சத்தும் கொண்டவை. இதில் ஆரஞ்ச் க்ரான்பெர்ரி, வாட்டியெடுத்த கடலை(barbecue nut) ஆகியவற்றின் சுவையையும் சேர்ப்பதற்குத் தற்போது விஞ்ஞானிகள் முயன்று வருகின்றனர்.

நாசாவின் ஹியூமன் ரிசர்ச் ப்ரோக்ராம் குழுவினர் இந்தக் காலை உணவு பார்களை உருவாக்கும் பணியில் உதவிவருகின்றனர். அமெரிக்காவின் விண்வெளி அமைப் பான ஹெச் இஆர்ஏ(HERA) வில் உள்ளவர்களுக்கு இந்த உணவு பார்கள் கொடுக்கப்பட்டு அவர்களிடம் அதன் தோற்றம், ருசி மற்றும் சலிக்காத தன்மை ஆகியவை பரிசோதிக்கப்பட்டு வருகிறது.

tamil.thehindu

  • தொடங்கியவர்

விராட் கோலியின் அனுஷ்கா பற்றிய கோபம்தான் 2016- ன் கோல்டன் ட்விட்!!

விராட் கோலி

இந்தியாவின் ட்விட்டர் ட்ரெண்ட் என்ன எனும் தகவலை ட்விட்டர் நிறுவனம் வெளியிட்டுள்ளது. #YearOnTwitter ரிப்போர்ட்டின் படி ஒவ்வோரு ஆண்டும் எந்த ட்விட் கோல்டன் ட்விட் அந்தஸ்தை பெற்றது என அறிவிக்கப்படும். அதன் படி 2016ம் ஆண்டுக்கான கோல்டன் ட்விட்டாக விராட் கோலியின் ட்விட் அறிவிக்கப்பட்டுள்ளது. 

இந்த தகவலை வெளியிட்ட ட்விட்டரின் தெற்காசிய பிரிவு மேலாண்மை இயக்குநர் மாயா ஹரி, விராட் கோலி இந்தியாவில் மிகவும் இன்ஃப்ளுயஸான ட்விட்டர் பிரபலமாக இருக்கிறார். அவர் அனுஷ்காவிற்காக செய்த ''ஷேம் ட்விட்'' தான் இந்த வருடத்தின் கோல்டன் ட்விட் என அறிவித்தார். 

Shame on people for trolling @AnushkaSharma non-stop. Have some compassion. She has always only given me positivity pic.twitter.com/OBIMA2EZKu

— Virat Kohli (@imVkohli) March 28, 2016

பாலிவுட் நடிகையான அனுஷ்கா ஷர்மாவுக்கும், விராட் கோலிக்கும் இடையே காதல் என்ற செய்தி அனைவருக்கும் தெரிந்ததே. டி20 உலகக் கோப்பை தொடரில் அரையிறுதி போட்டிக்கு முன்பு விராட் கோலி மார்ச் 28ம் தேதி தனது ட்விட்டர் பக்கத்தில் ஷேம் என்ற புகைப்படத்துடன் ஒரு ட்விட் செய்திருப்பார் அதில் அனுஷகா ஷர்மாவை கேலி செய்பவர்களை கண்டு அருவருப்படைகிறேன்...அனுஷ்கா என் வாழ்க்கையில் பாசிட்டிவாக மட்டுமே இருந்திருக்கிறார் என்று கோவமாக ட்விட் செய்தார். அது 39800க்கும் அதிகமான ரீ-ட்விட்களையும்,  ஒரு லட்சத்துக்கும் அதிகமான லைக்குகளையும் பெற்றது.  இந்த ட்விட் தான் இந்தியாவிலிருந்து ட்விட் செய்யப்பட்ட ட்விட்களில் கோல்டன் ட்விட் என்ற அந்தஸ்தை பெற்றுள்ளது. 

அதேபோல் இந்தியாவில் ட்ரெண்டான விஷயங்களில் மோடி 500, 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என அறிவித்தது நம்பர் 1 இடத்தை பிடித்துள்ளது இந்தியாவின் டாப் 5 ட்ரெண்டுகள் இதோ...

1. இந்தியாவில் 500,1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என அறிவித்தது.

இந்தியாவில் 500, 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என போடி அறிவித்ததும் அது குறித்து ஒரே நாளில் 6.5 லட்சம் ட்விட்கள் குவிந்தன. இந்தியாவின் இந்திய ஆண்டின் சிறந்த ட்விட்டர் நிகழ்வாக இது ப‌திவாகியுள்ளது.

2. ரியோ ஒலிம்பிக்கில் இந்திய பெண் வீராங்கனைகள்

ரியோ ஒலிம்பிக்கில் இந்திய பெண் விராங்களைகள் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். தீபா கர்மகர், பி.வி.சிந்து, சாக்ஷி மாலிக் ஆகியோரது அபாரமான செயல்பாடு ட்விட்டரில் வைரலானது.

3. உலகக் கோப்பையில் இந்தியா பாகிஸ்தான் இடையேயான டி20 கிரிக்கெட் போட்டி

எப்போதுமே இந்தியா-பாகிஸ்தான் கிரிக்கெட் வைரல் தான். உலகக் கோப்பை டி20யின் பரபரப்பான ஆட்டம், விராட் கோலி சச்சினுக்கு செய்த சல்யூட் என இந்த ஆட்டம் ஃபைனலை விட அதிகம் ட்ரெண்டானது.

4. டெல்லி மாசு

டெல்லி சில ஆண்டுகளாகவே மாசுபட்டு வருகிறது. உலகின் மாசடைந்த நகரங்களின் பட்டியலில் இடம்பெற்றது. 

5. இந்தியாவில் தீபாவளி கொண்டாட்டம்

இந்தியா பண்டிகைகளை சிறப்பாக கொண்டாடும் நாடு, ஒபாமா துவங்கி மோடி வரை தீபாவளிக்கு வாழ்த்து சொல்ல பட்டாசாய் ட்ரெண்டானது தீபாவளி
 

இது தவிர இந்தியாவில் ட்ரெண்டான பிரபல ஹேஷ்டேக்குகளையும் வெளியிட்டுள்ளது 

#Rio2016

#IndvsPak

#InsvsWI

#IndvsBan

#WT20

#PVSindhu

#InsvsAus

#surgicalstrike

#MakeInIndia 

#JNU

ட்விட்டரின் இந்த ட்ரெண்டில் அதிகம் இடம்பிடித்தது இந்தியாவில் நடைபெற்ற உலகக் கோப்பை ஆட்டங்கள் தான். ஒலிம்பிக்கில் இந்தியா சிறப்பாக செயல்பட்டதும் இந்த வரிசையில் இடம்பிடித்துள்ளது. பிரபலமான 10 ஹேஷ்டேக்குகளில் 7 விளையாட்டு தொடர்பானது என்பது குறிப்பிடத்தக்கது.

vikatan

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.