Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இளமை புதுமை பல்சுவை

Featured Replies

  • தொடங்கியவர்

உலகில் அழிந்து கொண்டிருக்கும் விலங்குகளின் பட்டியலில் ஒட்டகச்சிவிங்கிகள்

  •  

ஒட்டகச்சிவிங்கிகளின் எண்ணிக்கை நம்பமுடியாத வகையில் குறைந்திருப்பது அவை அழிந்து போவதற்கான எச்சரிக்கையான எச்சரிக்கையாக அமைந்துள்ளது.

ஒட்டகச்சிவிங்கி

கடந்த 30 ஆண்டுகளில் ஒட்டகச்சிவிங்கிகளின் மொத்த எண்ணிக்கை குறைந்தது 40 சதவிகித அளவில் குறைந்துள்ளதாக இயற்கை பாதுகாப்பிற்கான ஒரு சர்வதேச ஒன்றியம் தெரிவித்துள்ளது.

தற்போது ஒட்டகச்சிவிங்கிகளின் எண்ணிக்கை ஒரு லட்சத்திற்கும் குறைவாக இருப்பதால் அதை அழிந்து கொண்டிருக்கும் பட்டியலில் உடனடியாக வைக்க தூண்டியுள்ளது.

இந்த எண்ணிக்கை வீழ்ச்சிக்கு மனித நடவடிக்கைகளே முக்கிய காரணம் என்று ஆர்வலர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

ஒட்டகச்சிவிங்கி 

விவசாயத்திற்காக விலங்குகளின் வாழ்விட அழிப்பு, பிராந்திய மோதல்கள் மற்றும் விலங்குகளை வேட்டையாடுவது போன்றவற்றையும் கோடிட்டுக் காட்டியுள்ளனர்.

ஒட்டகச்சிவிங்கிகளின் நிலைக்கு, தற்போது எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கை விழிப்புணர்வை அதிகரிக்கும் என்றும், அதன் வாழ்நாளை உறுதி செய்யும் என்றும் ஆர்வலர்கள் நம்பிக்கை தெரிவிக்கின்றனர்.

BBC

  • Replies 11.3k
  • Views 1.5m
  • Created
  • Last Reply
  • தொடங்கியவர்

டிரம்ப் விமானம் Vs அமெரிக்க அதிபர் ஏர்ஃபோர்ஸ் ஒன் விமானம்: எது சிறந்தது?

 

 

அமெரிக்க அதிபர் அதிகாரப்பூர்வமாக பயன்படுத்தும் விமானங்களை ஏர்ஃபோர்ஸ் ஒன் என்ற சங்கேத வார்த்தையில் குறிப்பிடுகின்றனர். அந்த விமானங்கள் பல்வேறு விசேஷ வசதிகளை கொண்டவை. இந்த நிலையில், தற்போது பயன்பாட்டில் இருக்கும் விமானங்கள் பழமை அடைந்து விட்ட காரணத்தால், அதன் பராமரிப்புப் பணிகள் மிகுந்த செலவீனமும், பாதுகாப்பு அச்சுறுத்தல்களையும் ஏற்படுத்தி உள்ளன.

 

இதையடுத்து, இரண்டு புதிய விமானங்கள் வாங்குவதற்கு போயிங் நிறுவனத்திடம் ஆர்டர் செய்யப்பட்டுள்ளன. இந்த நிலையில், அமெரிக்காவின் புதிய அதிபராக தேர்வு செய்யப்பட்டு இருக்கும் டொனால்டு டிரம்ப் இந்த புதிய விமானங்களுக்கு கொடுக்கப்பட்ட ஆர்டரை ரத்து செய்ய வேண்டும் என்று அதிரடியாக கருத்து தெரிவித்துள்ளார். இது அமெரிக்க அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

டிரம்ப் விமானம் Vs அமெரிக்க அதிபர் ஏர்ஃபோர்ஸ் ஒன் விமானம்: எது சிறந்தது?

பெரும் பணக்காரரான டொனால்டு டிரம்ப் வசம் ஏற்கனவே சொந்த விமானம் இருக்கிறது. தேர்தல் பிரச்சாரத்தின்போது கூட அவர் தனது சொந்த விமானத்தை பிரச்சார வாகனம் போன்று மாறுதல்களை செய்து பயன்படுத்தினார்.

 

டிரம்ப் விமானம் Vs அமெரிக்க அதிபர் ஏர்ஃபோர்ஸ் ஒன் விமானம்: எது சிறந்தது?

இந்த நிலையில், ஏர்ஃபோர்ஸ் ஒன் விமானம் இல்லாவிட்டால் கூட டொனால்டு டிரம்ப் தனது விமானத்தையே அதிகாரப்பூர்வ விமானமாக பயன்படுத்தலாம் என்ற எண்ணத்தில் இருக்கிறாரா என்ற சந்தேகம் எழுந்துள்ளது. இதனால்தான் புதிய விமானங்களுக்கான ஆர்டரை ரத்து செய்ய வலியுறுத்தியுள்ளதாக கூறப்படுகிறது.

டிரம்ப் விமானம் Vs அமெரிக்க அதிபர் ஏர்ஃபோர்ஸ் ஒன் விமானம்: எது சிறந்தது?

 

ஆயினும், அவர் முடிவு சாத்தியப்படுமா என்பதை இந்த செய்தியை படித்து முடிக்கும்போது நீங்களே உணர்ந்துகொள்ள முடியும். ஏர்ஃபோர்ஸ் ஒன் விமானத்தில் இருக்கும் சில விசேஷ பாதுகாப்பு வசதிகள் டொனால்டு டிரம்ப் விமானத்தில் இல்லை. இரு விமானங்களுக்கும் இடையிலான வித்தியாசங்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

டிரம்ப் விமானம் Vs அமெரிக்க அதிபர் ஏர்ஃபோர்ஸ் ஒன் விமானம்: எது சிறந்தது?

டொனால்டு டிரம்ப் பயன்படுத்தி வரும் விமானம் போயிங் 757-200 என்ற ரகத்தை சேர்ந்தது. தற்போது உற்பத்தியில் இல்லை. கடந்த 1991ம் ஆண்டு தயாரிக்கப்பட்ட இந்த விமானம் 25 ஆண்டுகள் பழமையானது. சுமார் 30 மில்லியன் அமெரிக்க டாலர்கள் விலை மதிப்புடையது.

டிரம்ப் விமானம் Vs அமெரிக்க அதிபர் ஏர்ஃபோர்ஸ் ஒன் விமானம்: எது சிறந்தது?

மறுபுறத்தில் ஏர்ஃபோர்ஸ் ஒன் விமானம் எவ்வாறெல்லாம் டொனால்டு டிரம்ப் விமானத்தை விஞ்சுகிறது என்பதை பார்க்கலாம். தற்போது இரண்டு போயிங் 747-200 பி மாடல் விமானங்கள்தான் அமெரிக்க அதிபருக்கான அதிகாரப்பூர்வ விமானங்களாக பயன்படுத்தப்படுகின்றன. ஒரு விமானம் 26 ஆண்டுகள் பழமையானது. மற்றொன்று 25 ஆண்டுகள் பழமையானது.

டிரம்ப் விமானம் Vs அமெரிக்க அதிபர் ஏர்ஃபோர்ஸ் ஒன் விமானம்: எது சிறந்தது?

 

சாதாரண போயிங் 757 விமானத்தில் 200 பயணிகள் வரை செல்ல முடியும். ஆனால், டொனால்டு டிரம்பிற்கு சொந்தமான போயிங் 757 விமானம் பல்வேறு கஸ்டமைஸ் வசதிகளுடன் தனி நபர் பயன்பாட்டு விமானமாக மாற்றப்பட்டுள்ளது. 43 பேர் செல்வதற்கான வசதி கொண்டது. ஆனால், ஏர்ஃபோர்ஸ் ஒன் விமானத்தில் 70 பேர் வரை செல்ல முடியும்.

டிரம்ப் விமானம் Vs அமெரிக்க அதிபர் ஏர்ஃபோர்ஸ் ஒன் விமானம்: எது சிறந்தது?

 

டொனால்டு டிரம்பின் போயிங் 757 விமானத்தை ஒரு மணி நேரம் இயக்குவதற்கு 8,000 டாலர்கள் செலவு பிடிக்கும். ஏர்ஃபோர்ஸ் ஒன் விமானத்தை ஒரு மணிநேரம் இயக்குவதற்கு 1.79 லட்சம் டாலர்கள் செலவாகிறது.  

 

டிரம்ப் விமானம் Vs அமெரிக்க அதிபர் ஏர்ஃபோர்ஸ் ஒன் விமானம்: எது சிறந்தது?

  டொனால்டு டிரம்ப் விமான்ததில் இரண்டு ரோல்ஸ்ராய்ஸ் எஞ்சின்கள் பொருத்தப்பட்டு இருக்கின்றன. அதிகபட்சமாக மணிக்கு 980 கிமீ வேகத்தில் பறக்கும். ஒருமுறை முழுமையாக எரிபொருள் நிரப்பினால் 7,100 கிமீ தூரம் வரை பயணிக்கும்.

டிரம்ப் விமானம் Vs அமெரிக்க அதிபர் ஏர்ஃபோர்ஸ் ஒன் விமானம்: எது சிறந்தது?

 

ஏர்ஃபோர்ஸ் ஒன் விமானங்களாக பயன்படுத்தப்படும் போயிங் 747-200 பி விமானத்தில் 4 எஞ்சின்கள் பொருத்தப்பட்டு இருக்கின்றன. மணிக்கு 1,128 கிமீ வேகம் வரை பறக்கும் திறன் கொண்டது. ஆனால், சராசரி வேகம் இதைவிட சற்றே குறைவாக இருக்கும். ஒருமுறை எரிபொருள் நிரப்பினால் 12,150 கிமீ தூரம் வரை பறக்கும்.

டிரம்ப் விமானம் Vs அமெரிக்க அதிபர் ஏர்ஃபோர்ஸ் ஒன் விமானம்: எது சிறந்தது?

 

டொனால்டு டிரம்ப் விமானத்தில் படுக்கை வசதி, 53 இன்ச் திரை டிவி பொருத்தப்பட்ட பொழுதுபோக்கு அறை, சாப்பாட்டுக்கூடம், குளியல் அறை போன்ற வசதிகள் உள்ளன. வாஷ் பேஸின், திருகு பம்புகள் மற்றும் சீட்பெல்ட் பட்டைகள் தங்க நிற முலாம் பூசப்பட்டவை.

டிரம்ப் விமானம் Vs அமெரிக்க அதிபர் ஏர்ஃபோர்ஸ் ஒன் விமானம்: எது சிறந்தது?

மறுபுறத்தில் அமெரிக்க அதிபர் பறக்கும் ஏர்ஃபோர்ஸ் ஒன் விமானத்தில் படுக்கை அறைகள், உடற்பயிற்சி கூடம், அலுவலக அறை, ஆலோசனைக் கூடம், சிறிய அறுவை சிகிச்சை அரங்கம், ரத்த வங்கி, சாப்பாட்டுக் கூடம் உள்ளிட்ட பல சிறப்பு வசதிகள் உள்ளன.

 

டிரம்ப் விமானம் Vs அமெரிக்க அதிபர் ஏர்ஃபோர்ஸ் ஒன் விமானம்: எது சிறந்தது?

இந்த விமானத்தில் 80 தொலைதொடர்பு சாதனங்கள் உள்ளன. பெரும்பாலானவை எதிரிகள் அல்லது வெளியாட்கள் இடைமறித்து கேட்க முடியாத வசதி கொண்டது. அதாவது, பறக்கும்போதே ராணுவத்திற்கும், அரசு உயரதிகாரிகளுடன் தொடர்பு கொண்டு பேசுவதற்கும், கட்டளை பிறப்பிதற்கும் ஏதுவானதாக இருக்கும்.

டிரம்ப் விமானம் Vs அமெரிக்க அதிபர் ஏர்ஃபோர்ஸ் ஒன் விமானம்: எது சிறந்தது?

 

ஏர்ஃபோர்ஸ் ஒன் விமானங்களில் ஏவுகணை எதிர்ப்பு வசதி, ரேடார் செயலிழப்பு கருவிகள், பறக்கும்போதே நாட்டு மக்களுக்கு அதிபர் உறை நிகழ்த்துவதற்கான ஸ்டூடியோ, அணுகுண்டு தாக்குதல்களின்போது பயணிகளுக்கு பாதிப்பு ஏற்படுத்தாத விசேஷ கட்டமைப்பு என பாதுகாப்பு அம்சங்களின் பட்டியல் நீள்கிறது. ஆனால், டிரம்ப் விமானத்தில் இந்த பாதுகாப்பு வசதிகள் இல்லை என்பது கவனிக்கத்தக்கது.

டிரம்ப் விமானம் Vs அமெரிக்க அதிபர் ஏர்ஃபோர்ஸ் ஒன் விமானம்: எது சிறந்தது?

 

அவசர சமயங்களில் தொடர்ந்து பறக்க நேர்ந்தாலும் எரிபொருள் பற்றிய பிரச்னை இல்லை. பறக்கும்போதே வேறு விமானத்திலிருந்து அமெரிக்க அதிபரின் விமானத்திற்கு எரிபொருள் நிரப்ப முடியும். ஆனால், இந்த வசதி டொனால்டு டிரம்ப் விமானத்தில் இல்லை.

டிரம்ப் விமானம் Vs அமெரிக்க அதிபர் ஏர்ஃபோர்ஸ் ஒன் விமானம்: எது சிறந்தது?

 

டொனால்டு டிரம்பின் விமானம் 30 மில்லியன் டாலர்கள் விலை மதிப்பு கொண்டது.

ஆனால், ஏர்ஃபோர்ஸ் ஒன் விமானங்கள் ஒவ்வொன்றும் 325 மில்லியன் டாலர் விலை மதிப்பு கொண்டது.

டிரம்ப் விமானம் Vs அமெரிக்க அதிபர் ஏர்ஃபோர்ஸ் ஒன் விமானம்: எது சிறந்தது?

இந்த நிலையில், புதிதாக வாங்க ஆர்டர் கொடுக்கப்பட்ட இரண்டு விமானங்களும் 2024ம் ஆண்டில் பயன்பாட்டுக்கு கொண்டு வருவதற்கு திட்டமிடப்பட்டு இருந்தது. இரண்டு விமானங்களும் 2.7 பில்லியன் டாலர் மதிப்பில் வாங்க திட்டமிடப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

டிரம்ப் விமானம் Vs அமெரிக்க அதிபர் ஏர்ஃபோர்ஸ் ஒன் விமானம்: எது சிறந்தது?

எப்படி பார்த்தாலும், அமெரிக்க அதிபராக பொறுப்பேற்ற பிறகு டொனால்டு டிரம்ப் தனது சொந்த விமானத்தை பயன்படுத்துவது ஆபத்து மிக்கதாகவே இருக்கும் என அமெரிக்க பாதுகாப்புத் துறை வல்லுனர்கள் அச்சம் தெரிவிக்கின்றனர். ஆனால், டிரம்ப் என்ன செய்யப் போகிறார் என்பது அடுத்த மாதம் தெரிந்துவிடும்.

Read more at: http://tamil.drivespark.com/off-beat/donald-trump-private-jet-vs-airforce-one-jet-comparison-011661.html

  • தொடங்கியவர்
சுதந்திரமான மனிதனாக வாழ முயல வேண்டும்
 
 

article_1481256275-%5D%5B%5D.jpgஒருவர் பலவீனமான நிலையில் இருப்பதற்கு முதற்காரணம் அவரேயாவார். அடுத்ததாகவே புறச் சூழ்நிலையாகும்.  

தன்னை விடுவித்துச் சுதந்திரமான மனிதனாக வாழ முயல வேண்டும். தன்னைத்தான் ஒரு கட்டுக்குள் சிறைப்படுத்திக் கொண்டால், அவனால் எங்கே விடுதலை பெறமுடியும்? 

உலகம் தன்னைப் புதுப்பித்துக் கொண்டே இருக்கிறது. அதனை ஏற்காமல், தான் சொல்வதுதான் சரி என வாதிடுபவர்கள், நல்லவை எங்கிருப்பினும் அதனை ஏற்கும் பக்குவத்தைத் தங்களது மனத்துக்குச் சொல்ல வேண்டும்.  

தங்களைப் புதுப்பித்துக் கொள்ளப் பலர் அச்சப்படுவதாலேயே, மன உழைச்சலும் பலவீனமான, நிலை தடுமாறிய, முடிவு எடுக்க முடியாத சோர்வும் ஏற்படுகின்றது.  

எதனையும் மூடி மறைக்காத வெளிப்படைத் தன்மையே துணிச்சலையும் செயற்திறனையும் வலுப்படுத்தும்.  

மனித வலு எதனையும் செய்ய வல்லது. உடலுடன் மனம் இசைவுபட இணைய வேண்டும். அதுவும் உற்சாகத்துடன் இணைய வேண்டும்.    

Edited by நவீனன்

  • தொடங்கியவர்

இன்று சர்வதேச ஊழல் ஒழிப்பு தினம்

400_07214.jpg

2003- ம் ஆண்டு முதல் அக்டோபர் 31- ம் நாள் ஐநா சபையால் டிசம்பர் 9 நாள் சர்வதேச ஊழல் ஒழிப்பு தினமாக அறிவிக்கப்பட்டு கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. ஊழல் ஒரு கடுமையான குற்றம். ஊழலை தடுக்கவும், இதுகுறித்து மக்களுக்கு  விழிப்பு உணர்வை ஏற்படுத்துவதே இன்றைய தினத்தின் முக்கிய நோக்கம் ஆகும்.

  • தொடங்கியவர்

ஒன்றின் மீது ஒன்றாக 121 ‘கோன் ஐஸ் கிரீம்’களை அடுக்கி கின்னஸ் சாதனை

இத்தாலியை சேர்ந்த ஒருவர் ஒன்றின் மீது ஒன்றாக 121 கோன் ஐஸ்கிரீம்களை அடுக்கி கின்னஸ் சாதனை படைத்துள்ளார்.

 
 
ஒன்றின் மீது ஒன்றாக 121 ‘கோன் ஐஸ் கிரீம்’களை அடுக்கி கின்னஸ் சாதனை
 
லண்டன்:

இத்தாலியை சேர்ந்தவர் டிமிட்ரி பன்சியரா. சமீபத்தில் அங்கு ஐஸ்கிரீம் திருவிழா நடந்தது. அதையொட்டி அவர் ஒரு கோனில் 121 ஐஸ் கிரீம்களை ஒன்றின் மீது ஒன்றாக அடுக்கி கின்னஸ் சாதனை படைத்தார்.

9.5 செ.மீட்டர் அகலமுள்ள கோனில் 121 கரண்டி ஐஸ்கிரீம்களை ஒன்றின் மீது ஒன்றாக அடுக்கினார். அவை சரிந்து கீழே விழாதபடி 10 வினாடிகள் தாங்கி பிடித்தபடி நின்றார்.

இதற்கு முன்பு 109 கரண்டி ஐஸ் கிரீம்களை ஒரே கோனில் அடுக்கி சாதனை படைத்து இருந்தார். தற்போது தனது சாதனையை தானே முறியடித்துள்ளார்.

இவர் ஏற்கனவே உலகின் மிகப்பெரிய ஐஸ்கிரீம் அடுக்குகளை உருவாக்கி சாதனை படைத்துள்ளார். 58 சென்டிமீட்டர் அகலத்தில் 1.95 மீட்டர் நீளத்துக்கு உருவாக்கியுள்ளார்.

http://www.maalaimalar.com

  • தொடங்கியவர்

அனைத்துலைக ஊழல் எதிர்ப்பு நாள் 2003: 9-12

 

டிசம்பர் மாதம் 9-ந்தேதி அனைத்துலக ஊழல் எதிர்ப்பு நாளாக ஐ.நா. சபை அறிவித்தது. இந்த நாள் கடந்த 2003-ம் ஆண்டில் இருந்து கடைபிடிக்கப்படுகிறது. இதே நாளில் நிகழ்ந்த முக்கிய நிகழ்வுகள்:- * 1793 - நியூயோர்க் நகரின் முதலாவது நாளிதழ் "தி அமெரிக்கன் மினேர்வா" வெளியிடப்பட்டது. * 1856 - ஈரானிய நகரம் புஷேஹர் பிரித்தானிய ஆக்கிரமிப்புப் படைகளிடம் வீழ்ந்தது. * 1905 - பிரான்சில் அரசையும் கிறிஸ்தவ தேவாலயங்களையும் பிரிக்கும்

 
 
 
 
அனைத்துலைக ஊழல் எதிர்ப்பு நாள் 2003: 9-12
 
டிசம்பர் மாதம் 9-ந்தேதி அனைத்துலக ஊழல் எதிர்ப்பு நாளாக ஐ.நா. சபை அறிவித்தது. இந்த நாள் கடந்த 2003-ம் ஆண்டில் இருந்து கடைபிடிக்கப்படுகிறது.

இதே நாளில் நிகழ்ந்த முக்கிய நிகழ்வுகள்:-

* 1793 - நியூயோர்க் நகரின் முதலாவது நாளிதழ் "தி அமெரிக்கன் மினேர்வா" வெளியிடப்பட்டது. * 1856 - ஈரானிய நகரம் புஷேஹர் பிரித்தானிய ஆக்கிரமிப்புப் படைகளிடம் வீழ்ந்தது. * 1905 - பிரான்சில் அரசையும் கிறிஸ்தவ தேவாலயங்களையும் பிரிக்கும் சட்டமூலம் கொண்டுவரப்பட்டது. * 1917 - பிரித்தானியர் பாலஸ்தீனத்தின் ஜெருசலேம் நகரைக் கைப்பற்றினர். * 1922 - போலந்தின் முதலாவது அதிபராக ‘கப்ரியேல் நருட்டோவிச்’ தேர்வு செய்யப்பட்டார். * 1937 - ஜப்பானியப் படைகள் சீன நகரான நான்ஜிங்கைத் தாக்கின. * 1940 - இரண்டாம் உலகப்போர்: பிரித்தானிய, மற்றும் இந்தியப் படைகள் இத்தாலியப் படையினரை எகிப்தில் தாக்கினர்.

* 1941 - இரண்டாம் உலகப் போர்: சீனக் குடியரசு, கியூபா, குவாத்தமாலா, பிலிப்பைன்ஸ் ஆகியன ஜெர்மனி மற்றும் ஜப்பான் மீது போரை அறிவித்தன. * 1946 - இந்திய சட்டசபை ராஜேந்திர பிரசாத் தலைமையில் அமைக்கப்பட்டது. * 1953 - ஜெனரல் எலெக்ட்ரிக் நிறுவனம் தனது நிறுவனத்தில் பணியாற்றிய கம்யூனிஸ்ட்கள் அனைவரையும் பணி நீக்கம் செய்தது. * 1961 - பிரித்தானியாவிடம் இருந்து தங்கனீக்கா விடுதலை பெற்றது. * 1986 - இந்தியைத் திணிக்கும் அரசியல் சட்ட நகலை எரித்ததற்காக தி.மு.க. தலைவர் கருணாநிதி உள்ளிட்ட 10 தி.மு.க. சட்டப்பேரவை உறுப்பினர்கள் பதவி நீக்கம் செய்யப்பட்டனர்.

* 1990 - லெக் வலேசா போலந்தின் முதலாவது மக்களால் தெரிவு செய்யப்பட்ட அதிபரானார். * 1992 - வேல்ஸ் இளவரசர் சார்லஸ், இளவரசி டயானா இருவரினதும் பிரிவினை அறிவிக்கப்பட்டது. * 1995 - உலகின் முதலாவது 24 மணி முழு நேர தமிழ் வானொலி ஒலிபரப்பு, ‘கனேடிய தமிழ் ஒலிபரப்புக் கூட்டுத்தாபனம்’ என்னும் பெயரில் கனடாவின் டொராண்டோ நகரில் பரீட்சார்த்தமாக ஆரம்பிக்கப்பட்டது.

* 2003 - மாஸ்கோ நகர மத்தியில் இடம்பெற்ற குண்டுவெடிப்பில் 6 பேர் கொல்லப்பட்டனர். * 2006 - மாஸ்கோவின் மருத்துவமனை ஒன்றில் இடம்பெற்ற தீவிபத்தில் சிக்கி 45 பேர் உயிரிழந்தனர்.

http://www.maalaimalar.com

  • தொடங்கியவர்

பாரிஸில் 3 நாட்களாக கார்கள் ஓடவில்லை ஏன்?

 

கார்கள்


மூன்றாவது நாளாக பாரீஸ் நகருக்குள் நுழையும் கார்களை பாரீஸ் நகர அதிகாரிகள் தடுத்துக் கொண்டிருந்தார்கள். இதனால் பாரீஸ் நகருக்குள் நுழையும் கார்கள் பாதியாக குறைந்துள்ளன. பாரீஸ் நகருக்குள் நுழைய தடை செய்யப்பட்ட கார்கள் அனைத்தும் புகை அதிகமாக கக்கிய வாகனங்கள்தான். இதனால் ஏற்படும் போக்குவரத்து தட்டுப்பாட்டை சமாளிக்க பொதுப்போக்குவரத்தை இலவசம் செய்துவிட்டார்கள். இதற்கு முக்கியமான காரணம், பாரீஸ் நகருக்குள் காற்று அதிகமாக மாசுபட்டு வருவதுதான். மேலும் காற்று மாசுபாட்டை சமாளிக்க இதே போன்ற நடவடிக்கைகளை லியோன் மற்றும் விளர்பென் போன்ற நகரங்களிலும் முதன்முதலாக அறிமுகம் செய்யப்பட்டு உள்ளது. இதனை போன்றே இந்தியாவில் டெல்லியில் பின்பற்றியது குறிப்பிடத்தக்கது.

15398985_1501815966513763_690699904_o_11

 பாரீஸ் நகருக்குள் நுழைய அனுமதிக்கப்பட்ட புகை அதிகம் வராத கார்களிலேயே இரட்டை இலக்க எண்கள் கொண்ட கார்கள் மட்டும்தான் அனுமதிக்கப்படுகிறது. ஒற்றை இலக்க எண்கள் கொண்ட கார்கள் அனுமதிக்கப்படுவது இல்லை. இரட்டை இலக்கம் கொண்ட கார்களிலும் 'கார்ஃபூலிங்' சேவைகளை கொண்ட கார்கள் மட்டுமே அனுமதிக்கப்படுகிறது. 'கார்ஃபூலிங்' சேவை என்பது உதாரணமாக ஐந்து பேர் அமரக்கூடிய கார்களில் டிரைவருடன் சேர்த்து கட்டாயம் ஐந்து நபர்கள் அமர்ந்திருக்க வேண்டும். அப்படி ஐந்து பேருக்கு கீழ் அமர்ந்திருந்தால் காரானது நகருக்குள் அனுமதிக்கப்படாது. இந்த நெறிமுறைகளை கடைபிடிப்பதனால் வாகனங்களால் காற்றும், சுற்றுப்புறமும் மாசடைவது ஓரளவு தடுக்கப்படும் என்பது பாரிஸ் நகர அதிகாரிகளின் திட்டம். இந்த திட்டங்களை மீறி உள்ளே நுழையும் வாகனங்களுக்கு 38 டாலர் அபராதம் விதிக்கப்படும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. இந்த திட்டம் அமல்படுத்தப்பட்டு மூன்று நாட்களில் இதுவரை 1700 கார்களுக்கு மேல் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. 

15419462_1501815996513760_770950628_o_11

     இந்த நடவடிக்கைக்கு காரணம், கடந்த சில நாட்களாக பாரீஸ் நகருக்குள் சுற்றுச்சூழல் மாசுபாட்டின் அதிகபட்ச அளவான 80 மைக்ரோகிராம் அளவினை தாண்டி 91 மைக்ரோகிராம் அளவாக அதிகரித்தது. இது நடைமுறை செய்யப்பட்டால் மாசுபடும் காற்றின் அளவு படிப்படியாக குறையும் வாய்ப்பு உண்டு. கடந்த 20 வருடத்தில் இந்த திட்டம் அமல்படுத்தப்படுவது நான்காவது முறையாகும். இந்த மாற்றுப் போக்குவரத்தானது பாரீஸ் நகருக்குள் அறிமுகப்படுத்தப்பட்ட நான்கு வருடங்களிலும், இந்த முறைதான் பல நாட்களாக இத்திட்டம் தொடர்கிறது. இதை பற்றி பேசிய அதிகாரி ஏர்பாரீப், 'கடந்த புதன்கிழமை இப்போக்குவரத்துத் திட்டம் நடைமுறைக்கு வந்தபோது பல டிரைவர்கள் குழப்பத்தில் இருந்தனர். ஆனால், அதன்பிறகு நிலைமை சீரடைந்து தற்போது போக்குவரத்து இயல்பாக இருக்கிறது. மேலும் போக்குவரத்து நெருக்கடியை சமாளிக்க பைக்குகள் மற்றும் மின்சார கார்களும் அதே சமையத்தில் மெட்ரோ மற்றும் பேருந்து போக்குவரத்தும் வியாழக்கிழமை (நேற்று) இலவசமாக வழங்கப்படுகிறது.  இந்த நிலைமை ஏற்படுவதற்கு மாசுக்களின் அதிகமான திரட்சியே காரணம்' என்கிறார். பாரீஸ் நகர ஹால் நிறுவனமானது 'இந்த காற்று மாசுபாடானது குறிப்பிடத்தக்க ஆபத்தை ஏற்படுத்தும்' என்று எச்சரிக்கிறது.

15409646_1501815983180428_1336780018_o_1

பாரிஸ் நகர மேயர் அன்னே ஹிடால்கோ 2025-ம் ஆண்டில் மூன்று முக்கிய நகரங்கள் இணைந்து அனைத்து டீசல் கார்களை தடை செய்யப்போவதாக உறுதி அளித்திருக்கிறார். மேலும், "இந்த காற்று மாசுபாட்டல் பல சுவாசப் பிரச்சனைகள் ஏற்படுவதால் மக்கள் பெரிதும் சிரமத்திற்கு ஆளாகின்றனர். இந்த நடவடிக்கைக்கு கார் மற்றும் பஸ் உற்பத்தியாளர்களின் ஒத்துழைப்பு இருந்தால்தான் சாத்தியம்" என்கிறார்.

http://www.vikatan.com

  • தொடங்கியவர்
நுவ­ரெ­லி­யா குதிரையோட்டத்தில் முதல் தடவையாக பெண்
 

நத்தார் பண்­டிகைக் கால கொண்­டாட்­டதை முன்­னிட்டு றோயல் டேர்வ் க்ளப் நுவ­ரெ­லி­யாவில் ஏற்­பாடு செய்­துள்ள குதி­ரை­யோட்டப் போட்­டியில் நத்தார் தாத்­தாவின் பிரசன்­னத்­துடன் நடை­பெ­ற­வுள்­ளது.

 

2116411.jpgநுவ­ரெ­லியா குதிரைப் பந்­தயத் திடலில் நடை­பெறும் குதிரை ஓட்டப் போட்­டி­யின் போது நத்தார் தாத்தா சிறு­வர்­க­ளுக்கு இனிப்புப் பண்­டங்­க­ளுடன் பரி­சு­களை வழங்­க­வுள்­ளமை விடேச அம்­ச­மாகும்.

 

முதல் தட­வை­யாக பெண் குதி­ரை­யோட்டி ஒருவர் பங்­கு­பற்­ற­வுள்ளார்.

 

இந்­தி­யாவைச் சேர்ந்த என்.ரூபா என்ற பெண் குதி­ரை­யோட்டி ஆண்­க­ளுக்கு இணை­யாக குதி­ரை­யோட்டப் போட்­டியில் பங்­கு­பற்­ற­வுள்ளார். 

 

ஆண்­க­ளுடன் பெண்­களும் ஈடு­கொ­டுத்து குதி­ரை­யோட்­டத்தில் பங்கு­பற்ற முடியும் என்­பதை இதன் மூலம் றோயல் டேர்வ் க்ளப் நிரூ­பிக்­க­வுள்­ள­தென பதில் நிறை­வேற்கு அதி­கா­ரியும் குதி­ரை­யோட்டி (ஜொக்கி) பயிற்­று­ந­ரு­மான சின்­கி­ளயார் மார்ஷல் தெரி­வித்தார்.

 

டிசம்பர் மாதம் 11ஆம் திகதி நடை­பெ­ற­வுள்ள குதி­ரை­யோட்டப் போட்­டி­க­ளின்­போது பெறப்­படும் வசூல் அனைத்­தையும் புற்­றுநோய் பரா­ம­ரிப்பு அறக்­கட்­ட­ளைக்கு எட்வர்ட்ஸ் தம்­ப­தி­யினர் அன்­ப­ளிப்பு செய்வர் என்­பதை றோயல் டேர்வ் கிளப் பிர­தி­நிதி உறுதி செய்தார்.

 

இதே­வேளை இந்த அன்­ப­ளிப்பை புற்­றுநோய் பரா­ம­ரிப்பு அறக்­கட்­டளை பொறுப்­பாளர் டாக்டர் சமதி பெற்­றுக்­கொள்வார். இத­னைவிட தீபிகா ஜயக்­கொடி தனது பரி­சுப்­ப­ணத்தில் 50 வீதத்தை நுவ­ரெ­லியா போனிக் குதிரை சங்­கத்­துக்கு நன்­கொ­டை­யாக வழங்க இணங்­கி­யுள்ளார். 

 

கவர்ச்­சி­க­ர­மான தொப்பி, மிகச் சிறப்­பாக ஆடை­ய­ணிந்த பெண், சிறந்த தம்­ப­திகள், மிகச் சிறப்­பாக ஆடை­ய­ணிந்த சீமான் ஆகி­யோ­ருக்கு 10 இலட்சம் ரூபா பணப்­ப­ரிசு பகிர்ந்­த­ளிக்­கப்­ப­ட­வுள்­ளது.

 

21164horse-racing.jpg

 

குதி­ரை­யோட்டப் போட்­டி­களை கொண்­டாட்டம் மிகுந்த விழா­வாக நடத்துவதற்கான சகல ஏற்­பா­டு­களும் பூர்த்தி அடைந்துள்ளதாக றோயல் டேர்வ் கிளப் தலைவர் சுரஞ்சித் பிரேமதாச தெரிவித்தார். அடுத்த வருட குதிரையோட்டப் போட்டிகள் பெப்ரவரி மாதம் ஆரம்பமாகி மார்ச், ஏப்ரல் மாதங்கள் வரை தொடரும்.

metronews.lk

Edited by நவீனன்

  • தொடங்கியவர்

கால்களையே கைகளாக்கி சாதனைப் புத்தகத்தில் இடம்பித்த ஓவியர் தாமினி!

 

சாதனை

ரு விழாவுக்குச் செல்லவேண்டும் என்றாலும் சரி, கல்லூரிக்குப் போகவேண்டுமென்றாலும் சரி, நேரம் ஆகிறதே என்று பெண்களால் கடகடவென ரெடி ஆக முடியாது. வெளியே புறப்படுவதற்கு அரை மணி நேரம் முன்னதாகவே தலை சீவ, உடை உடுத்துக்கொள்ள, மேக்கப் போட்டுக்கொள்ள என தன்னைத் தயார்படுத்திக்கொள்ள, அம்மாவின் உதவியும் அவசியம்.  தன் வேலைகளைத் தானே செய்ய கஷ்டப்படும் பெண்களுக்கிடையே, தானே சீப்பை எடுத்து தலை சீவிக்கொள்வது, முகத்துக்கு பவுடர் பூசிக்கொள்வது, பொட்டு வைப்பது, ஆடையை உடுத்திக்கொள்வது என எல்லாவற்றையும் தன் கால்களாலேயே செய்துகொள்வதோடு, ஓவியத்திலும் தன் திறமையைக் காட்டி சாதனைப் படைத்திருக்கிறார், தாமினி சேன்.

damini3-500x667_14433.jpg

சத்தீஷ்கர் மாநிலம் ராய்பூரைச் சேர்ந்த 19 வயது தாமினி சேனுக்கு, பிறந்தபோதே இரண்டு கைகளும் இல்லை. ஆனாலும், மற்றவர்களைப் போலவே தன் வேலைகளைத் தானே செய்துகொள்கிறார். தனக்கு இரண்டு கைகள் இல்லையே என்று வருத்தப்படாமல், எல்லோரையும் போல வாழவேண்டும் என எண்ணினார். கால் விரல்களாலேயே தன் வேலைகளைச் செய்துகொள்ள ஆரம்பித்தார். கால்களாலேயே ஓவியம் வரையக் கற்றுக்கொண்டு, ஒரு மணி நேரத்தில் 38 ஓவியங்களை வரைந்து 'கோல்டன் புக் ஆஃப் ரெக்கார்டு' புத்தகத்தில் இடம் பிடித்து, தனக்கென்று தனி முத்திரை பதித்திருக்கிறார் தாமினி.

''ஓவியம் எனக்கு ரொம்பப் பிடிக்கும். மற்றவர்கள் கையால் வரையும் ஓவியங்களைப் பார்க்கும்போதெல்லாம் எனுக்குள்ளே ஆர்வத்தைத் தூண்டியது. அதனால் நானும் கால்களால் ஓவியம் வரைய கற்றுக்கொண்டேன். எப்போதெல்லாம் நேரம் கிடைக்கிறதோ, அப்போதெல்லாம் பயிற்சி செய்வேன்'' என்று 'தி பெட்டர் இந்தியா' வெப்சைட்டுக்கு பேட்டி அளித்தபோது கூறியிருக்கிறார். '' நான் கால்களால் எழுதவும் வரையவும் அம்மாதான் ஊக்கம் அளித்தார்'' என்று கூறும் தாமினி, 10-ம் வகுப்புத் தேர்வை கால்களாலேயே எழுதி, 80 சதவிகித மார்க் எடுத்துள்ளார்.

damini2_14045.jpg

ஒருநாள், காலால் சின்னச்சின்ன ஓவியங்களை பேப்பரில் வரைவதைக் கண்ட அம்மா, தாமினியின் ஆர்வத்தைப் புரிந்துகொண்டு ஊக்கமளித்தார். தனக்கு இரண்டு கைகள் இல்லையே என்று தாமினி மனதில் சோகம் உண்டாவதைத் தடுக்க, அடிக்கடி தன்னம்பிக்கை ஊட்டுவார். ''நன்றாகப் படித்தால்தான் சொந்தக்காலில் நிற்கமுடியும்'' என்பார். 10-ம் வகுப்பு, 12-ம் வகுப்புத் தேர்வில் நல்ல மார்க் எடுக்கவைத்தார். ''ஓவியம் வரைய ஆரம்பித்தால் எனக்கு சந்தோஷம் ஏற்படுகிறது'' என்று சொல்லும் தாமினி, இப்போது சமைக்கவும் செய்கிறார்.

''கை, கால்கள் நல்லா இருந்தும் வேலை செய்யச் சொன்னால் நழுவப்பார்ப்பவர்கள், தாமினியைப் பார்த்து பாடம் கற்றுக்கொள்ள வேண்டும்'' என்று அக்கம் பக்கத்தினர் கூறுகிறார்கள். தற்போது, ராய்பூரில் உள்ள டி.பி. பெண்கள் கல்லூரியில் Bsc முதலாம் ஆண்டு படித்துவருகிறார். ''ஐ.ஏ.எஸ் ஆகி ஊனமுற்றோர்களுக்கு உதவி செய்யவேண்டும் என்பதே என் லட்சியம்'' என்கிறார். நம் நாட்டில் உள்ள ஊனமுற்றவர்களுக்கு நான் சொல்லி விரும்பவது இதுதான்... '' தன் குறைபாட்டைப் பார்த்து, மற்றவர்கள் என்ன நினைப்பார்களோ என அச்சம் கொண்டால், நம்மால் எதையும் சாதிக்கமுடியாது. 'என்னால் முடியும் நானும் சாதிப்பேன்' என்று தன்னம்பிக்கையோடு உழைத்தால், வெற்றி  நம்முடன் வரும்'' என்கிறார், சாதனைப் பெண் தாமினி.

vikatan

  • தொடங்கியவர்

பூமியின் இயற்கை கோபுரங்கள்

 
malai_3099962f.jpg
 
 
 

உலக மலைகள் நாள் - டிசம்பர் 11

இந்தியாவில் எட்டு முக்கிய மலைத்தொடர்கள் உள்ளன. இந்தியத் துணைக் கண்டத்தின் வட பகுதியில் பிறை வடிவில், மூன்று மலைத்தொடர்கள் அமைந்துள்ளன. அவை இமயமலை, ஹிந்துகுஷ், பட்காய் மலைத்தொடர்கள். வடதுருவத்திலிருந்து வீசும் குளிர்க் காற்றை நாட்டுக்குள் விடாமல் தடுக்கும் இயற்கைத் தடுப்பு அரண் இது. மற்றொருபுறம் பருவமழைக் காற்றைத் தடுத்து மழைப்பொழிவை ஏற்படுத்துவதாகவும் இந்த மலைத்தொடர்கள் திகழ்கின்றன. இதன்மூலம் நாட்டின் தட்பவெப்ப சூழ்நிலையில் முக்கியத் தாக்கங்களை இவை ஏற்படுத்துகின்றன.

இமய மலைத் தொடர் ஓர் இயற்கை அற்புதம். இது ஆசியாவையும் இந்தியாவையும் பிரிக்கிறது. இந்தியாவின் வடக்கிலிருந்து வடகிழக்குவரை ஓர் எல்லைபோல அமைந்திருக்கிறது. இமயமலைத் தொடரே உலகின் உயரமான மலைத்தொடர். உலகில் உள்ள உயரமான 10 மலைச்சிகரங்களில் ஒன்பது சிகரங்கள் இமயமலைத் தொடரிலும், ஒரு உயர்ந்த சிகரம் அதற்கு அருகேயுள்ள காரகோரம் மலைத்தொடரிலும் உள்ளன. இத்தனைக்கும் இமய மலைத்தொடர் உலகின் மிகவும் வயது குறைந்த மலைத்தொடர்.

இமயம் என்பதற்கு சமஸ்கிருதத்தில் ‘பனியின் இருப்பிடம்' என்று அர்த்தம். இந்த மலைத்தொடரில் உள்ள பல மலைச்சிகரங்கள் ஆண்டு முழுவதும் பனியால் போர்த்தப்பட்டிருக்கும். கங்கை, யமுனை, சட்லஜ், சீனாப், ராவி ஆகிய ஐந்து முக்கிய நதிகளும் பிரம்மாண்ட பிரம்மபுத்திரா நதியும் இமய மலைத் தொடர் பனி உருகுவதால் ஆறுகளாக உருவெடுப்பவை.

இமய மலைத் தொடர் 2,500 கிலோ மீட்டர் நீளம் கொண்டது. வடக்கே ஜம்மு-காஷ்மீரில் தொடங்கி கிழக்கே அருணாசலப் பிரதேசம்வரை அது நீண்டிருக்கிறது. ஐந்து இந்திய மாநிலங்களில் இமய மலைத் தொடர் விரவியிருக்கிறது. இமய மலைத் தொடரில் பெரும் இமய மலைகள் (இதில் பெரும் பகுதி நேபாளத்தில் உள்ளது), நடுத்தர இமயமலைகள், துணை இமயமலைகள் என மூன்று வரிசைகள் உள்ளன.

2_3099963a.jpg

மேற்கு மலைத் தொடருக்கு சஹயாத்ரி மலைத்தொடர் என்றொரு பெயரும் உண்டு. இது தக்கான பீடபூமியின் மேற்கு விளிம்பில் அமைந்துள்ளது. தபதி நதிக்குத் தெற்கில் இருந்து மகாராஷ்டிரம், கோவா, கர்நாடகம், கேரளம், தமிழகத்தின் வழியாகத் தெற்கில், குமரி மாவட்டம்வரை இந்த மலைத்தொடர் நீண்டிருக்கிறது. இதன் நீளம் 1,600 கி.மீ. கேரளத்தில் உள்ள ஆனைமுடி இந்த மலைத்தொடரின் உயரமான சிகரம், உயரம் 8,842 அடி.

# மேற்கு மலைத்தொடரில்தான் உதகமண்டலம், கொடைக்கானல், இந்தியாவின் இரண்டாவது மிக உயரமான ஜோக் அருவி ஆகிய முக்கியச் சுற்றுலாத்தலங்கள் அமைந்துள்ளன. தென்னிந்தியாவில் பெரும்பாலான நதிகள் மேற்கு மலைத்தொடரிலேயே உருவாகின்றன.

# மேற்கு மலைத்தொடர் உலகின் மிக முக்கியமான உயிரினப் பன்மை (Bio diversity) செழித்திருக்கும் மையம் என்பதால், இதை ‘நீலகிரி உயிர்க்கோளக் காப்பகம்' என்ற பெயரில் சர்வதேச அளவில் முக்கியப் பகுதியாக யுனெஸ்கோ அங்கீகரித்துள்ளது.

# மேற்கு மலைத்தொடரைப் போல தக்கான பீடபூமியின் கிழக்கு விளிம்பில் உள்ளது, கிழக்கு மலைத்தொடர். இது மேற்கு மலைத்தொடரைவிடவும் பழமையானது. கோதாவரி, மகாநதி, கிருஷ்ணா, காவிரி ஆகிய முக்கிய நதிகளால் துண்டிக்கப்பட்டுள்ளதால், இந்த மலைத்தொடர் தொடர்ச்சியாக இல்லை. வங்கத்தில் தொடங்கும் இது தமிழகம்வரை தொடர்ச்சியற்று விரவிக் கிடக்கிறது. விசாகப்பட்டினம், புவனேஸ்வரம் உள்ளிட்ட முக்கிய நகரங்கள் இந்த மலைத்தொடரிலேயே அமைந்துள்ளன.

vindhyas_3099964a.jpg

மத்திய இந்தியாவில் உள்ள விந்திய மலைத்தொடர், இந்தியாவை வடக்கு, தெற்கு என்று இரண்டாகப் பிரிக்கிறது. இதைப் போலவே, இந்திய வரைபடத்தில் அதற்கு மேலே உள்ள சாத்பூரா மலைத்தொடரும் தக்கான பீடபூமி, இந்தோ-கங்கை சமவெளிக்கு இடையே பெரிய தடுப்புபோல அமைந்துள்ளது.

> இந்தியாவின் கிழக்கு எல்லையில் மியான் மரை ஒட்டிய பகுதியில் உள்ளது பட்காய் மலைத்தொடர். இந்த மலைத்தொடரில் காற்றுவீசும் பகுதியில் அமைந்துள்ள சிரப்பூஞ்சி, உலகிலேயே ஒரு மாதத்தில் மிக அதிக மழை பெய்யும் பகுதியாக உள்ளது.

> காரகோரம் மலைத்தொடரில் உள்ள சியாச்சின் பனிச்சிகரம், ஆர்க்டிக் வடதுருவ பனிச்சிகரங்களுக்கு அடுத்தபடியாக மிக உயரமான பனிச்சிகரம்.

kanjan_3099965a.jpg

இந்தியாவின் உயரமான மலைச்சிகரம் கஞ்சன்ஜங்கா. உலகின் மூன்றாவது உயரமான மலை இது. 28,169 அடி உயரத்துடன் சிக்கிம் மாநிலத்தில் இது அமைந்துள்ளது.

 

everesy_3099966a.jpg

எவரெஸ்ட்டே உலகின் மிக உயர்ந்த மலைச்சிகரம் என்றும், அது இந்தியாவில் இருக்கிறதென்றும் தவறாக நம்பிக் கொண்டிருக்கிறோம். இரண்டுமே தவறு. 'கடல் மட்டத்துக்கு மேலுள்ள உயரமான மலை' என்று கணக்கெடுத்தால் மட்டுமே, உலகிலேயே உயரமான சிகரம் எவரெஸ்ட் என்று சொல்ல முடியும். அடித்தளத்தில் இருந்து கணக்கிட்டால் ஹவாயில் கடலுக்கு அடியில் உள்ள மௌனா கியா மலையே உலகில் உயரமானது. அது மட்டுமல்லாமல் எவரெஸ்ட் இந்தியாவில் இல்லை, நேபாளத்தில் சீனாவின் எல்லை அருகே இருக்கிறது. இதன் உயரம் 29,929 அடி.

 

austin_3099967a.jpg

உலகின் இரண்டாவது உயர்ந்த மலைச்சிகரமான கே2 (காட்வின் ஆஸ்டின்) ஜம்மு காஷ்மீரின் பிரச்சினைக்குரிய பகுதியில் காரகோரம் மலைத்தொடரில் உள்ளது. இந்த மலைத்தொடரில் 60-க்கும் மேற்பட்ட உயரமான சிகரங்கள் உள்ளபோதும், கே2 எனப்படும் சிகரம் எவரெஸ்ட்டைவிட 778 அடி குறைவாக 28,251 அடி உயரத்தைக் கொண்டிருக்கிறது.

 

aaravalli_3099968a.jpg

இந்தியாவின் மிகவும் பழமையான மலைத்தொடர் ஆரவல்லி. இது ராஜஸ்தான் மாநிலத்தின் வடகிழக்கிலிருந்து தென்மேற்காகப் பரவியுள்ளது. இந்த மலைத்தொடரே ராஜஸ்தானின் முக்கிய நகரங்கள் பாலைவனமாகாமல் பாதுகாக்கிறது

tamil.thehindu

  • தொடங்கியவர்

திருடப்பட்ட இதயத்தை மீண்டும் ஃபிக்ஸ் செய்யும் ரகளை பொண்ணு! Moana படம் எப்படி?

 

Moana

இந்த ஆண்டு அனிமேஷன் பிரியர்களுக்கும்,குட்டீஸ்களுக்கும் செம்ம தீனி போட்ட ஆண்டு. ஜூட்டோபியா,ஃபைண்டிங் டோரி, தி சீக்ரெட் லைஃப் ஆஃப் பெட்ஸ், தி ஆங்கிரி பேர்ட்ஸ், குங்ஃபூ பாண்டா என மாதம் ஒரு படம் வந்து ஹிட் அடித்தது.அந்த வரிசையில் ஆண்டின் இறுதியை கலர்ஃபுல்லாக நிறைவு செய்திருக்கும் படம் மோனா.

டிஸ்னி அனிமேஷன் ஸ்டூடியோஸ் மூலம் வெளியான தேவதைகளில், புதுவரவு மோனா. தனது தீவைக் காப்பாற்ற மோனா ஏழு கடல் தாண்டி எடுக்கும் சாகச பயணமே ,இந்த வாரம் வெளியாகி இருக்கும் மோனா திரைப்படத்தின் ஒன்லைன்

 மோட்டுநூயி தீவில் தன் தாய், தந்தையுடன் வசித்து வருகிறாள் மோனா.தன் பாட்டி சொல்லும் கதைகளைக் கேட்டு வளரும் மோனாவுக்கு, தீவைக் கடந்து செல்ல வேண்டுமென ஆசை. ஆனால், மோனாவின் தந்தையும், தீவின் தலைவருமான Tui அதற்கு தடை போடுகிறார். எல்லாம் கிடைக்கும் தீவும் ஒரு கட்டத்தில் பொய்த்துப்போக, எல்லைகளை கடக்க பயணம் செல்கிறாள் மோனா. தீவுகளின் கடவுளான டீ ஃபீட்டியின் Te Fiti இதயத்தை பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் திருடி விடுகிறான் மௌயி. அதை மீண்டும் டீ ஃபீட்டியின் நெஞ்சில் ஃபிக்ஸ் செய்ய வேண்டும். அதற்கு மௌயியைக் கண்டுபிடிக்க வேண்டும்.இவை அனைத்தையும் மோனா எப்படி சாதிக்கிறாள் என்பது தான் மோனா திரைப்படம்.  

103 நிமிட படத்தில் பல விஷயங்களை பாடல்களின்வழி இசைத்து இருக்கிறார்கள் மிரண்டா & டீம்.பாட்டி கதை,மௌயி சொல்லும் டாட்டூ கதை,கடலைத்தாண்ட மோனா சொல்லும் கதை என பல பாடல்கள்.ஆனால்,எல்லாமே வாவ் ரகம்..  

குட்டீஸ் படம் என்பதால், படத்தில் கொடூர வில்லன் எல்லாம் கிடையாது. சூழ்நிலையால் மட்டுமே ஒருவர் தீயவர் ஆகிறார்கள் என்பதை அழுத்தமாகச்சொல்லி நல்ல பெயர் எடுக்கிறார்கள் ரான் கிளிமென்சும், ஜான் மஸ்கர்ஸும்.  John Musker & Ron Clements. தி லிட்டில் மெர்மெய்ட், அலாடின், தி ப்ரின்செஸ் அண்டு தி ஃப்ராக் போன்ற படங்களை இயக்கிய ஜோடியை மீண்டும் மில்லியன் டாலர் பேபி ஆக்கியிருக்கிறாள் மோனா. 

மந்திரக்கோல் உதவியுடன் ,நினைத்த நேரத்தில் உருமாறும் சக்தி கொண்ட பயில்வானான டெமி காட் மௌயிக்கு குரல் கொடுத்து இருக்கிறார் WWE புகழ் ராக் (டிவேய்ன் ஜான்சன்). இந்த ஆண்டின் ஆரம்பத்தில் சென்ட்ரல் இன்டெலிஜென்ஸ் படத்தில் காமெடியில் கலக்கியவர் , இந்த முறை மீண்டும் சிக்ஸர் அடித்து இருக்கிறார். ஒவ்வொரு டாட்டூவுக்கும் அவர் சொல்லும் காரணங்கள், மோனாவுடன் ஜாலியாக இடும் சண்டைகள் என அவரது கதாப்பாத்திரம் வேற லெவல். 

Moana-disneys-moana-39571795-500-354_131

Auli'i Cravalho ஔலி கிரவல்ஹோ என்ற 14 வயது சிறுமி தான் மோனாவுக்கு குரல் கொடுத்து இருக்கிறார். டிஸ்னி தேவதைகளுக்கு பெரும்பாலும், காதலனை தேடுவது மட்டும் தான் கதையின் ஒரே வேலையாக இருக்கும்.ஆனால், மோனாவுக்கு இதில் சண்டை,பாசம், என வெரைட்டியான கதாப்பாத்திரம்.

லூசு சேவல்,க்யூட் பன்றி,காமெடி வில்லன்ஸ் தேங்காய் மண்டயன்ஸ், புதையலை பராமரிக்கும் நண்டு, என படம் முழுக்க குட்டீஸ்களுக்காகவே எக்கச்சக்கச்சக்க விசுவல்ஸ். நீரிலும் டிஸ்னி செய்து இருக்கும் அனிமேஷன் வேலைகள் தெறி. எல்லா இடத்திலும் குட்டிச்சுட்டி அனிமேஷன்களால், கலக்கிய டீம், மௌயின் உடலில் இருக்கும் உண்மை சொல்லி டாட்டூஸ்களிலும் சிரிப்பு மூட்டி இருக்கிறார்கள். 

கறுப்பு- வெள்ளை இனவெறி சுழன்று அடிக்கும் தேசத்தில் , டிஸ்னியின் பாக்ஸ் ஆபீஸை நிரப்பப்போகும் பெண் ஒரு வெள்ளை நிற அழகி அல்ல. மாநிறமான மோனா என்பது தான் ஹைலைட். 

தேசிய கீதம் ஆரம்பிப்பதற்கு முன்னர் படத்திற்கு சென்றுவிடுங்கள் மக்கா.  குறும்படமான இன்னர் வொர்க்கிங்ஸை மோனாவிற்கு முன் திரையிடுகிறார்கள். 24*7 வேலை வேலை என்னும் ஹைப்பர்டென்சனில் இருக்கும் பெரியவர்கள் நிச்சயமாய் பார்க்க வேண்டிய குறும்படம் இன்னர் வொர்க்கிங்க்ஸ்.டோன்ட் மிஸ் இட்..

இந்த வீக் எண்டுக்கான பெர்ஃபெக்ட் சாய்ஸ் மோனா. டோன்ட் மிஸ் .

படத்தின் டிரெய்லர்

 

 

 

vikatan

  • தொடங்கியவர்

முதல் போட்டோவுக்கு 1 ரூபாய் சன்மானம் பெற்ற இந்தியாவின் முதல் பெண் போட்டோ கிராஃபர்!

 

போட்டோ

ந்தியாவின் முதல் பெண் போட்டோ கிராஃபர் ஹோமை வியாரவல்லா பிறந்த தின சிறப்பு பகிர்வு.

ஒரு நாட்டின் வரலாற்றை... ஒரு மாமனிதனின் வாழ்க்கையை வார்த்தைகளால் வர்ணிக்கலாம், ஓவியங்களால் எழுதலாம், சிலைகளால் வடிவமைக்கலாம். புகைப்படங்களாலும் பேசவைக்கலாம் என நிரூபித்தவர், இந்தியாவின் முதல் பெண் பத்திரிகை புகைப்படக் கலைஞர் ஹோமை வியாரவல்லா.

1840-ல்தான் போட்டோகிராஃபி இந்தியாவுக்கு வந்தது. பிரிட்டிஷ் கிழக்கிந்தியக் கம்பெனியின் சர்வேயராக நியமிக்கப்பட்ட மெக்கென்சி, கேமரா தொழில்நுட்பம் தெரிந்தவர்களை வேலைக்கு அமர்த்தினார். அரசாங்கத்தினர் மட்டுமே பயன்படுத்திவந்த கேமராக்களை, 1910-ம் ஆண்டுவாக்கில் ஒரு சில ஆண்கள் மட்டும் பொழுதுபோக்காகப் பயன்படுத்தினர்.

போட்டோகிராஃபி என்பது நேர்த்தியாக உருவாக்கப்பட்ட கருவியின் உத்தி என்பதைத் தாண்டி, இயற்கையின் உயிர்ப்பைப் பிரதி எடுப்பது... இரண்டு நபர்களுக்கிடையே தொடர்பை ஏற்படுத்துவது... ஒரு நிகழ்ச்சியைப் பதிவுசெய்வது...  உண்மையை நிரூபிப்பது என்ற பல அர்த்தங்களைத் தன் புகைப்படங்கள் மூலம் எடுத்துகாட்டியவர்தான், வியாரவல்லா.

போட்டோ

ஹோமை வியாரவல்லா, குஜராத்திலுள்ள நவசாரி என்ற இடத்தில் 1913 டிசம்பர்  9-ல் பிறந்தார். இவரது தந்தை உருது-பார்சி நாடகக் கம்பெனியின் நடிகர். 13 வயதிலேயே இவருக்கு புகைப்படக் கலையில் ஆர்வம் ஏற்பட்டது. தனது மேற்படிப்பை மும்பையில் முடித்தார். ஜே.ஜே.ஸ்கூல் ஆஃப் ஆர்ட்டில் டிப்ளோமா பெற்றார். கல்லூரித் தோழர் மானக்க்ஷாவை மணந்தார். புகைப்படம் எடுப்பதில் தணியாத தாகம் கொண்ட கணவர் மானக்ஷா தந்த பேராதரவு உற்சாகம் அளிக்க, தன் பணியை மேலும் சிறப்பாக்கிக்கொண்டார். மும்பை 'பெண்கள் கிளப்' சுற்றுலாக் குழுவை, இவர் எடுத்த முதல் புகைப்படம், 'மும்பை கிரானிக்கல்' என்கிற பத்திரிகையில் 1930-ல் வெளிவந்தது. அதற்காக இவர் பெற்ற தொகை, ஒரு ருபாய்.

இந்திய விடுதலைக்கான போராட்டக்காலத்தில் நடந்த அரசியல் நிகழ்ச்சிகள் முக்கிய நிகழ்வுகள் பலவற்றையும் புகைப்படங்களாகத் தன் கேமராவுக்குள் பிடித்தவர் இவர்.

1947 ஆகஸ்ட் 15-ல் மௌன்ட்பேட்டன் பிரபு இந்தியாவை விட்டுக் கிளம்பியபோது எடுத்த புகைப்படம், செங்கோட்டையில் சுதந்திர இந்தியாவின் முதல் கோடியேற்றத்தை 1947 ஆகஸ்டு 16-ல் புகைப்படமெடுத்ததோடு, இந்தியாவின் முதல் பிரதமர் ஜவஹர்லால் நேருவின் புகைப்படம், மகாத்மா காந்தியின் இறுதிச் சடங்கில் எடுத்த புகைப்படங்கள், லால்பகதூர் சாஸ்திரி, இந்திரா காந்தியும் ஜான் கென்னடியும் இருக்கும் புகைப்படம், முதல் குடியரசு தின அணிவகுப்புப் படங்கள் என ஹோமை எடுத்த புகைப்படங்கள் சரித்திரப் புகழ் வாய்ந்தவை.

போட்டோ

ஹோமையின் வாழ்க்கை இன்றைய ஊடகப் பெண்களைப்போல எளிதாக வாய்த்ததல்ல. பிரிட்டிஷ் அரசாங்கத்தின் பிடியில் சிக்கியிருந்த இந்தியாவில், வெகு சில பெண்களே கல்விபெற வாய்ப்பிருந்த காலத்தில், தன் கடும் உழைப்பாலும் விடாமுயற்சியாலும் போட்டோ ஜர்னலிஸ்ட்டாக தனது சேவையைத் தொடங்கினார். "6 பவுண்டுக்கு மேல் எடைகொண்ட கேமராவைத் தூக்கிக்கொண்டு அங்கும் இங்கும் ஓடி, பத்திரிகைகள் கேட்கும் விதங்களில் படங்களை எடுத்துக்கொடுப்பது சாதாரண விஷயம் அல்ல" என வியாரவல்லாவே கூறியுள்ளார். பார்சி இனப் பெண், துணிச்சலுடன் இந்தத் துறையைத் தேர்தெடுத்து சாதித்தது ஆச்சர்யம்.

தனது அயராத உழைப்பாலும், தன்னம்பிக்கையாலும் சுதந்திரத்திற்கு முன்னும் பின்னுமாக இவர் பதித்த புகைப்பட முத்திரைகள், இந்தியாவின் சமூக அரசியல் நிகழ்வுகளை நெகிழ்ச்சியுடன் நமக்கு இன்றும் நினைவுட்டும் விதமாகத் தொடர்கிறது. மௌன்ட்பேட்டன் பிரபுவின் நினைவுகளை மௌனமாய்ப் பேசும் இவரது புகைப்படத் தொகுப்புகளோடு, 1959-ல் தலாய் லாமா கால்பதித்த சுவடுகளையும் இவர் கேமரா பதிவு செய்யத் தவறவில்லை. இந்திய-பாகிஸ்தான்  பிரிவினையில் வாக்களிக்க வந்த  எலிசபெத் ராணியைப் புகைப்படமாக்கிய பெருமையும் ஹோமைக்கு உண்டு. ஆண்களின் மத்தியில் தனித்துத் தெரியும்படி நிகழ்ச்சிகளின் முகப்பில் நின்று துணிச்சலுடன் புகைப்படம் எடுத்த அந்த நாளில், எதிர்கால இந்தியாவின் ஆவணங்களாய்  அந்தப் புகைப்படங்கள் மாறப்போகிறது என்பதை இவர் அறிந்திருக்கவில்லை.

போட்டோ

டெல்லியில் உள்ள பிரிட்டிஷ் ஹை கமிஷனில் தனது புகைப்பட ஜர்னலிஸ்ட் பணியைத் தொடர்ந்ததோடு, வெளியிலும் நிறைய புகைப்படங்கள் எடுத்துக்கொடுத்துள்ளார். பண்டிட் ஜவஹர்லால் நேருவை நூற்றுக்கும் மேற்பட்ட புகைப்படங்கள் எடுத்திருக்கும் ஹோமையை, ''மிகச்சிறந்த போட்டோஜெனிக் பர்சனாலிட்டி' என்று நேரு குறிப்பிட்டுள்ளார். இவர் எடுத்த அந்த அரிய படங்கள் எல்லாம் அரசு ஆவணக் காப்பகத்தின் சொத்தாக பாதுகாக்கப்பட்டு வருகின்றன.

புகைப்படக்கலைஞராக 1938-ல் தொடங்கிய பயணத்தை, 35 ஆண்டுகள் தளராமல் தன்னிறைவோடு பயணித்தார். 1970-ல் கணவரின் இறப்பு இவரை நிலைகுலையச் செய்தது. போட்டோகிராஃபி தொழிலைக் கைவிட்டார். தன் ஒரே மகனும் 1989-ல் கேன்சர் நோயால் பாதிக்கப்பட்டு இறந்ததால், மனம் முழுக்க வேதனையோடு வதோதரா சென்று, தனியாக வசித்துவந்தார்.
 
கடந்த ஆண்டுகளில், பல்வேறு நிகழ்ச்சிகளில் எடுக்கப்பட்ட புகைப்படங்கள், 'இல்லஸ்ட்ரேட்டட் வீக்லி' பத்திரிகையில் வெளியானது. தனித்தன்மை வாய்ந்த இவரது புகைப்படங்கள் உலக அளவில் அறிமுகமாகிப் பேசப்பட்டன. பிரதமர் ஜவஹர்லால் நேருவின் குடும்ப போட்டோகிராஃபராகவும் தன்னை ஐக்கியப்படுத்திய தன் கலையால், இளமைக்காலத்து அனுபவங்களைத் தன் தோட்டத்துச் செடிகளோடும் மலர்களோடும் பேசிப்பேசி காலம் கழித்தார்.

2012 ஜனவரியில், இடுப்பில் எலும்பு முறிவு ஏற்பட்டு படுக்கையில் விழுந்தார். பக்கத்து வீட்டுக்காரர்களின் உதவியால் மருத்துவமனையின் சேர்க்கப்பட்ட ஹோமை வியாரவல்லா, மீண்டும் உயிரோடு வீட்டுக்கு வரவில்லை. அப்போது அவருக்கு வயது 98.

2013-ல் இவரின் சாதனையைப் பாராட்டி பத்மவிபூஷண் விருது வழங்கி கௌரவித்தது இந்திய அரசு. இந்திய ஊடகவியல் வரலாற்றில் தவிர்க்கமுடியாதவர், ஹோமை வியாரவல்லா. இந்திய வரலாற்றோடு இணைந்த இவரது புகைப்படங்களைத் தேடிப் பார்த்துக் களிப்பதும், அவற்றின் கலைநுட்பத்தைப் பாடமாகப்  படிப்பதும் பெருமை.

.vikatan

  • தொடங்கியவர்

“ரோபோ நீர் நாயை எப்போதாவது பார்த்திருக்கிறீர்களா?” - காணொளி

  • தொடங்கியவர்

தூங்கிக்கிட்டே படிக்கலாம்!

 

 

லருக்கும் பிடிச்ச விஷயங்கள்ல ஒண்ணு புத்தகத்தோட வாசம். புத்தகம் சில பேரை வேற உலகத்துக்குக் கூட்டிப்போகும். அதே நேரத்துல சில பேரைக் குறட்டை விடவும் செய்யும். இந்த ரெண்டையும் ஒண்ணு சேர்த்த மாதிரி ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் கட்டப்பட்டுள்ள ‘புக் அண்ட் பெட்' (Book and Bed) ஹோட்டல் இப்போ அங்கே ஓர் அடையாளமாகவே மாறிக்கிட்டு வருது.

p56a.jpg

இந்த ஹோட்டலின் வெற்றிக்கதை ரொம்ப சிம்பிள். இங்கே வர்ற வாடிக்கையாளர்கள் தங்களுக்குப் பிடிச்ச புத்தகத்தை செலெக்ட் பண்ணிட்டு, புத்தக அலமாரிக்கு நடுவில் இருக்கிற பெட் போடப்பட்ட பங்க்ல படுத்துக்கிட்டே படிக்கலாம். தூக்கம் வந்தாத் தூங்கலாம். போர் அடிச்சா தாகத்தைத் தணிக்க பீர் விற்பனையும் உண்டு. பங்க் அளவைப் பொறுத்து 30 முதல் 50 அமெரிக்க டாலர் வரை இதற்காக கட்டணம் வசூலிக்கப்படுகிறது. போனமாசம் ஆரம்பிச்ச இந்த ஹோட்டல் ஹிட் அடித்ததால், கியோட்டோவில் அடுத்த கிளையோட திறப்புவிழாவுக்குத் தயாராகிட்டு இருக்கு இந்த ஹோட்டலோட நிர்வாகம்.

நம்ம ஊர்ல லைப்ரரி போய்த் தூங்குவோம். ஜப்பான்ல காசு கட்டி ரூம் எடுத்துத் தூங்குறாங்க. அவ்வளவுதான் பாஸ் வித்தியாசம்!

vikatan

  • தொடங்கியவர்

வாட்ஸ் அப் கலக்கல்: கருப்புப் பணம் ஒழிஞ்சிருச்சா?!?!

whtsapp_3101061f.jpg
 
 
 

1_3101069a.jpg

2_3101068a.jpg

3_3101067a.jpg

4_3101066a.jpg

5_3101065a.jpg

6_3101064a.jpg

7_3101063a.jpg

8_3101062a.jpg

 

tamil.thehindu

  • தொடங்கியவர்

இருப்பதைக் கொண்டு வாழுதலே தன்மானம்
 
 

article_1481172530-mnknmk.jpgநல்ல வருமானம், சொத்து சுகம் எல்லாமே இருந்தும் கூட, மற்றையவர்களிடம் சென்று, மேலும் ஏதாவது உதவி பெறலாம் என இரந்து நிற்றல் அல்லது கையேந்துதல் கடவுளுக்கே பொறுக்காது. மேலும் இந்தச் செயற்பாடு, எல்லாவற்றையும் வழங்கி வரும் இறைவனுக்கு நன்றி தெரிவிக்காமல், பேராசையால் அவரை அவமதிக்கும் கருப்பொருளாகும். 

திருப்தியில்லாத வாழ்க்கை பெரு நெருப்புக்குள் படும் அவஸ்தையைப் போன்றதுதான். தனக்குள்ளதை உணராமல் பிறரது நிலையைப் பார்த்து அங்கலாய்ப்பது, தன்னைத்தானே அகௌரவப்படுத்துவது போன்றது. 

இரந்து கேட்டால் தனக்குள்ள இயலாமையையே வெளிக்காட்டும். தன்மானம் என்பது இருப்பதைக் கொண்டு வாழுதலேயாகும். அதுவே நன்மையுமாகும்.  

ஏழைகளுக்குள்ள தன்மானம், சுயகௌரவம், வசதிபடைத்த பலருக்கு இருப்பதில்லை. தாங்கள் நினைத்ததை அடைய எதனையும் செய்யலாம்; அதற்கான உரிமை தமக்கானது என மட்டும் எண்ணும் நபர்கள் வாழும் உலகம் இது!  திருப்தி என்பது பணத்தினால் அல்ல; மனத்தினால் வருவதாகும்.  

Edited by நவீனன்

  • தொடங்கியவர்

#Standup4HumanRights - மனித உரிமைகள் தினம்

400_08371.jpg

ஐ.நாசபை கடந்த 1950 ஆண்டு முதல், டிசம்பர் மாதம் 10 - ம் நாளை சர்வதேச மனித உரிமைகள் தினமாக அறிவித்துள்ளது, இதன்படி உலகம் முழுவதும் மனித உரிமைகள் பிரச்சனைகளை தீர்பதற்கான நடவடிக்கைகளை எடுப்பது,மனித உரிமைகளை மேம்படுத்துதல், மனித உரிமை நிலைகளை வலுப்படுத்துதல், இதுகுறித்து மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்துதலே இன்றைய தினத்தின் முக்கிய நோக்கம்.

  • தொடங்கியவர்

மரித்தவர்களின் வீடு

இருப்பவர்களுக்கு சொந்த வீடு. இல்லாமல் போகிறவர்களுக்கும் ஒரு வீடு வேண்டுமில்லையா? இருந்ததைவிட இல்லாது போகும்போது மிகுந்த மரியாதை அளிப்பது நமது கலாச்சாரம். இறந்தவர்களுக்கான மரியாதைகளைச் சடங்குகளாகக் காலம் காலமாகப் பின்பற்றி வருகிறோம். அதாவது மரித்த பிறகு ஒரு வாழ்க்கை இருக்கிறது என நம்புவதன் அடிப்படையில்தான் நாம் இந்தச் சடங்குகளையும் மரியாதைகளையும் செய்கிறோம். அந்த அடிப்படையில் அவர்களுக்கான கல்லறைகளை எழுப்புகிறோம்.

இந்த வழக்கம் கிறிஸ்து பிறப்பதற்கு முன்பிருந்தே வழக்கத்தில் இருக்கிறது. ஆசியா மட்டுமல்லாது உலகமெங்கும் இந்த முறை வழக்கத்தில் இருக்கிறது. கிரேக்கத்தில் மன்னர் இறந்துபோனால் அவரது பணியாளர்களையும் சேர்த்துப் புதைக்கும் வழக்கத்தில் இருந்துள்ளதாகச் சொல்லப்படுகிறது. அவரது இரண்டாம் வாழ்வுக்குப் பணியாளர்கள் வேண்டாமா?

இந்தியாவில் முகலாயர்கள் காலகட்டத்தில் பிரம்மாண்டமான கல்லறைகள் கட்டப்பட்டன. ஆக்ராவில் வெள்லை ஓவியமாக எழுந்து நிறகும் உலக அதியசமான தாஜ்மஹாலும் ஒரு கல்லறைதான். இப்படி உலகம் முழுவதும் பல்வேறு புகழ்பெற்ற கல்லறைகள் உள்ளன. அவற்றைக் குறித்த ஒளிப்படத் தொகுப்பு:

cemetry_3101880f.jpg

karl_marx_3101879f.jpg
காரல் மார்க்ஸ் கல்லறை, இங்கிலாந்து
humayun_3101878f.jpg
ஷுமாயூன் கல்லறை, இந்தியா
 
uzbek_3101872f.jpg
ஷா-இ-ஜிந்தா, உஸ்பெகிஸ்தான்
tajmahal_3101873f.jpg
தாஜ்மஹால், இந்தியா
 
jahangir_3101874f.jpg
ஜஹாங்கிர் கல்லறை, இந்தியா
 
lenin_3101875f.jpg
லெனின் மாஸோலியம், ரஷ்யா
pyramid_3101876f.jpg
கிசா கிரேட் பிரமிடு, எகிப்து
saint_castle_3101877f.jpg
காஸ்சில் செயின்ட் ஏஞ்சலோ, இத்தாலி

 

 

 

 

tamil.thehindu

  • தொடங்கியவர்

உலக மனித உரிமைகள் நாள்: 10-12-1950

1948-ஆம் ஆண்டு டிசம்பர் 10-ஆம் நாள் ஒன்றுகூடிய ஐக்கிய நாடுகளின் பொது அவையால் அனைத்துலக மனித உரிமைகள் சட்டம் ஏற்றுக் கொள்ளப்பட்டதை பெருமைப்படுத்தும் பொருட்டு இந்நாள் கடைப்பிடிக்கப்படுகிறது. ஐ.நா.வின் பொது அவை நாடுகளுக்கும் தன்னார்வ நிறுவனங்களுக்கும் விடுக்கப்பட்ட வேண்டுகோளுக்கிணங்க 1950 முதல் உலக மனித உரிமைகள் நாள் கடைப்பிடிக்கப்படுகிறது.

 
 
 
 
உலக மனித உரிமைகள் நாள்: 10-12-1950
 
1948-ஆம் ஆண்டு டிசம்பர் 10-ஆம் நாள் ஒன்றுகூடிய ஐக்கிய நாடுகளின் பொது அவையால் அனைத்துலக மனித உரிமைகள் சட்டம் ஏற்றுக் கொள்ளப்பட்டதை பெருமைப்படுத்தும் பொருட்டு இந்நாள் கடைப்பிடிக்கப்படுகிறது. ஐ.நா.வின் பொது அவை நாடுகளுக்கும் தன்னார்வ நிறுவனங்களுக்கும் விடுக்கப்பட்ட வேண்டுகோளுக்கிணங்க 1950 முதல் உலக மனித உரிமைகள் நாள் கடைப்பிடிக்கப்படுகிறது.
 
ஐக்கிய நாடுகள் அவையின் நிகழ்வுகளில் முதன்மையான இந்நாளில், நியூயார்கில் அமைந்துள்ள அதன் தலைமைப்பீடத்தில் முக்கிய நிகழ்வுகள் இடம்பெறுவது வழக்கமாகும். இந்நாளில் ஐந்தாண்டுக்கு ஒருமுறை வழங்கப்படும் மனித உரிமைகளுக்கான ஐக்கிய நாடுகளின் பரிசு வழங்கப்படும். மேலும் பல அரசு மற்றும் அரசு சார்பற்ற நிறுவனங்களும் இந்நாளில் பல முக்கிய நிகழ்வுகளை நடத்துவது வழக்கமாகும்.
 
இதே தேதியில் நடந்த பிற நிகழ்வுகள்:-
 
* 1878- சுதந்திர இந்தியாவின் முதலாவது ஆளுநரும், இந்திய விடுதலை போராட்ட வீரருமான ராஜாஜி பிறந்தநாள்.
 
* 1902 - எகிப்தில் நைல் ஆற்றின் குறுக்கே கட்டப்பட்ட அஸ்வான் அணை திறக்கப்பட்டது.
 
* 1902 - தாஸ்மேனியாவில் பெண்களுக்கு வாக்குரிமை வழக்கப்பட்டது.
 
* 1906 - அமெரிக்க அதிபர் தியோடர் ரூஸ்வெல்ட் அமைதிக்கான நோபல் பரிசைப் பெற்றார்.
 
* 2001 - இந்தி நடிகர் அசோக் குமார் மறைந்த தினம்

http://www.maalaimalar.com

  • தொடங்கியவர்

 

கிளிக்: பிபிசியின் வாரந்திர தொழில்நுட்பக் காணொளி
-------------------------------------------------------------------------------------------------
இந்த வார கிளிக்கில்:
* ஸ்மார்ட் ஃபோன் மூலம் வர்த்தகம்: அமெசானின் 'தொட்டால் போதும்' புது முயற்சி *
* ஆக்டோபஸின் உடல் அசைவுகளை ஒத்த முறையில் அறுவை சிகிக்க்சை முன்னெடுப்பு
* பார்வையிழந்தவர்களாக கண்ணாக இருக்கும் ஹோரஸ் கருவி
* போக்குவரத்து சமிஞ்கைகளை அறிய புதிய கருவையை ஔடி கார் அறிமுகம் செய்துள்ளது.

BBC

  • தொடங்கியவர்

சில மீறல்கள் கண்டுகொள்ளப்படுவதில்லை!- புகைப்பட சாட்சி

 

download_3101970f.jpg
 
 
 

டிசம்பர் 10- சர்வதேச மனித உரிமைகள் தினம்

இன்று சர்வதேச மனித உரிமைகள் தினம். நம்மைச் சுற்றி அன்றாடம் மனித உரிமை மீறல்கள் நடந்து கொண்டேதான் இருக்கின்றன. ஆனால், அவை பெரும்பாலும் கண்டு கொள்ளப்படுவதில்லை. அவற்றிற்கு சாட்சியாக இருக்கும் சில புகைப்படங்கள் இங்கே..

மற்ற எல்லா வேலைகளையும் விட துப்புரவுத் தொழிலில் மிகுந்த சகிப்புத் தன்மையும், பொறுமையும் வேண்டும்.

துப்புரவுத் தொழிலாளர்கள் தகுந்த காலணிகளும், கையுறைகளும் அணிந்துகொண்டு வேலை செய்ய அரசு வழிவகை செய்கிறதா என்ற கேள்விக்கு ஆம் என்று உறுதியான பதிலைக் கூற முடிவதில்லை.

அரசு அவற்றை வழங்கினாலும், அவை கிழிந்துபோகும்போது அடுத்தடுத்த முறைகளில் கொடுக்கப்படுவதில்லை என்ற பரவலான குற்றச்சாட்டை நம்மால் காணமுடிகிறது.

'விஷவாயு தாக்கி துப்புரவு தொழிலாளர்கள் இறப்பு' என்ற செய்திகள் வாடிக்கையாகி விட்ட நிலையில், தொழிலாளர்களுக்கு முறையான முகமூடி அளிக்கப்படாததும், அழுகிப் போய் துர்நாற்றம் வீசும் குப்பைகளைக் கையால் அள்ளச்சொல்வதும் மனித உரிமை மீறல்தான்.

மன நலம் பாதிக்கப்பட்டு தெருக்களில் அலையும் மனிதர்களை சக மனிதர்களாகக் கருதுகிறோமா? அவர்களுக்கான நலத்திட்டங்களை அரசு அறிவிக்க வேண்டும் என்று கோரியிருக்கிறோமா? கிடைத்ததை உண்டு, கிடைக்காத போது மாண்டு போகும் மானுடங்களைக் காப்பாற்ற வேண்டியது அவர்களுக்கு நாம் அளிக்கும் மனித உரிமை.

1_3101969a.jpg

2_3101968a.jpg

கையுறையோ, காலணியோ இல்லாமல், கைகளாலேயே குப்பைகளைத் தரம் பிரிக்கும் துப்புரவுத் தொழிலாளர்

3_3101967a.jpg

பெருங்குடியில் மாநகராட்சிக் குப்பைத் தொட்டியைச் சுத்தம் செய்கிறார்.

4_3101966a.jpg

5_3101965a.jpg

சாந்தோம் பேருந்து நிறுத்தத்தையே தன் இருப்பிடமாக வரித்திருக்கிறார் ஒருவர்.

6_3101964a.jpg

தீர்க்கமான கண்கள் வழியே தான் வாழ்ந்த வாழ்க்கையைப் பரிமாறும் முதியவர்

tamil.thehindu

  • தொடங்கியவர்

வலைபாயுதே

 

சைபர் ஸ்பைடர்

 

p106c1.jpg

facebook.com/venkatesh.arumugam1: ஒரு கிலோ மட்டன் 550 ரூபாயா?! அடேய்... அம்பானிக்கு அபராதமே 500 ரூபாய்தான்டா!

facebook.com/Kanmani.Pandiyan:  `நான்தான் உன் ஒரிஜினல் அப்பா - அம்மா'னு யாராவது கேஸ் போட்டா, எங்க அப்பா - அம்மா `ஆமாம்'னு உடனே என்னை எல்லாம் அவங்ககிட்டயே குடுத்துடுவாங்க!

facebook.com/gkarlmax: இது நம் வாழ்வின் மிகச் சிக்கலான ஒரு காலகட்டம். இதை எதிர்கொள்ள ஒரே வழி முகநூல், டி.வி, செய்தித்தாள்... இவை மூன்றையும் மூடிவைத்துவிட்டு, பக்கத்து வீட்டு ஆயாவுடன் பழங்கதை பேசலாம். அவர் அப்படித்தான் கடந்த 80 ஆண்டுகளாகத் தொடர்ந்து நிம்மதியாக இருக்கிறார்!

twitter.com/skpkaruna: பழைய 500, 1,000 ரூபாய்க்கு டீசல் உண்டு. டோல்கேட் சார்ஜ் வேறு இல்லை. இங்கே ஒருத்தன் டீசல் போட்டுக்கிட்டு குறுக்கும் மறுக்குமாப் போய்க்கிட்டே இருக்கான்!

twitter.com/Kannan_Twitz: தலைவரே, எவ்வளவோ தடை போடுறீங்க. அப்படியே... ஃபிரிட்ஜ்ல ரெண்டு நாளுக்கு மேல சாம்பாரோ, தோசை மாவோ வெச்சு உபயோகிக்கக் கூடாதுனும் ஒரு தடை போடுங்கோ... புண்ணியமாப்போகும்!

p106a1.jpg

twitter.com/CreativeTwitz: பக்கத்துல இருக்கும் மூதேவி, பாஸ்வேர்டைப் பார்த்திருவானு ஜெட் வேகத்துல பாஸ்வேர்டைப் போட்டு,

இதுவரைக்கும் பத்து தடவை `இன்கரெக்ட் பாஸ்வேர்டு'னு வந்திருச்சு!

twitter.com/san_officl: அடேய் ஹாஃப்பாயில்ஸ்... வண்டி திருடுறதுல ஒரு லாஜிக் இருக்கு. வண்டி துடைக்கிற துணியைத் திருடுறீங்களே, இது என்னடா லாஜிக்?

twitter.com/nithya_shre: `அடுத்த மாசம் சம்பளம் வந்த உடனே, ஒரு ATM மெஷின் வாங்கிரணும்'. கூட்டத்துல நிக்க மிடிலடா சாமி!

twitter.com/manipmp: கையில் கொஞ்சம் காசு இருந்தால், நீதான் அதற்கு முதலாளி. ஏ.டி.எம்-மில் காசு இருந்தால், அதுதான் உனக்கு முதலாளி!

twitter.com/naiyandi: தைரியம் இருந்தா `100 புடவைகள் மட்டும் வெச்சுருக்கலாம்’னு சட்டம் கொண்டுவந்துபாருங்க, பார்க்கலாம்!

p106b.jpg

twitter.com/palanikannan04: குழந்தைகள் ஹோம்வொர்க் செய்வதைப் பார்த்திருக் கிறீர்களா? கடமைக்குச் செய்துகொண்டே கடமையில் தவறாமல் செய்வர்!

twitter.com/bommaiya: `சரவணன் மீனாட்சி'ல வர்ற மீனாட்சிக்குப் புதுசா இத்தனை புருஷன்தான் வரணும்னு அப்படியே ஒரு லிமிட் கொண்டுவாங்க ஆபீஸர்ஸ்!

twitter.com/karunaiimaLar: அப்படியே `ஒவ்வொருத்தரும் இவ்வளவு கடன்தான் வெச்சிருக்கணும். மிச்சத்தை கவர்மென்ட் ஏத்துக்கும்'னு சொல்லிட்டீங்கன்னா, புண்ணியமாப்போகும் நியாயமாரே!

twitter.com/Piramachari: இந்தியாவில் கிட்டத்தட்ட 50 லட்சம் ஜோசியக்காரனுங்க இருக்காங்க. அதில் ஒருத்தனுக்குக்கூடவா தெரியவில்லை 500, 1,000 ரூபாய் ஒழிக்கப்போறாங்கன்னு!

twitter.com/joseph1087jo : `என்னதான்டா வேணும்?'னு கேட்கிற காதலிகிட்ட, `நீதான் வேணும்'னு சொல்லிப்பாருங்க...  10 கீர்த்திசுரேஷோட வாயை மொத்தமாப் பார்க்கலாம்!

twitter.com/CreativeTwitz: `படம் போட்டு எவ்வளவு நேரமாகுது ப்ரோ?’
`இப்பதான் தேசிய கீதம் முடிஞ்சது பாஸ்!’

twitter.com/MrMarmaYogi: இனிமேல் லேண்ட் விக்கிறவங்க `ஏ.டி.எம்-க்கு மிக அருகில்'னு கூவ ஆரம்பிச்சுடுவாங்களே. அதை நினைச்சாத்தான்...

twitter.com/Endhirapulavan: நம்மகிட்ட சும்மாவே கிடக்கிற ஒரு பொருள், யாராச்சும் வந்து கேட்கும்போது மட்டும் ரொம்ப முக்கியமான பொருளா மாறிடுது. #நிதர்சனம்!

twitter.com/pradeesh_1291: எல்லார்கிட்டயுமே ஒருத்தன் நல்லவன்னு பேர் எடுத்தா, அவனைவிட அயோக்கியன் உலகத்துல வேற எவனும் இருக்க மாட்டான்!

twitter.comKannan_Twitz: தமிழின் சிறப்பு எந்த அளவுன்னா, ஒரு பொண்ணு நம்மை தமிழ்ல `மாமா'னு கூப்பிட்டா சந்தோஷப்படுவோம். அதுவே ஆங்கிலத்துல `uncle'னு கூப்பிட்டாக் கடுப்பாகிடுவோம்!


Whatsapp: 

ஆசிரியர்: உலகம், ஒரு நாடக மேடை. அதில் நாமெல்லாம் நடிகர்கள்.

மாணவன்: அப்படின்னா எனக்கு ஜோடியா தமன்னாவைப் போடுங்க சார்.

vikatan

  • தொடங்கியவர்

உலகின் மிக வயதான பறவை, முட்டை ஈன்றுள்ளது..!

 

Egg1_17343.jpg

உலகின் மிக வயதான பறவை என்று நம்பப்படும் லேசான் அல்பட்ராஸ் மீண்டும் முட்டை ஈன்றுள்ளது. இந்த பறவை 'விஸ்டம்' என்ற பெயரில் அழைக்கப்படுகிறது. தற்போது இந்த விஸ்டமுக்கு 66 வயதாவதாகக் கூறப்படுகிறது. 1954ல் பறவையியல் நிபுணர் ஒருவர் இந்த விஸ்டமுக்கு  வளையம் (பேண்ட்)  ஒன்றை அதன் காலில் மாட்டியுள்ளார். அந்த பேண்ட் வைத்துத் தான் விஸ்டமுக்கு 66 வயதாகிறது என்று கணக்கிட்டு இருக்கிறார்கள். விஸ்டமின் கூடு ஹவாய் பகுதியில் உள்ள மிட்வே என்ற தீவில் உள்ளது. அதன் துணையோடு இணைந்த பின் இத்தனை ஆண்டுகள் அங்கு தான் முட்டை ஈன்றதாம் விஸ்டம்.

vikatan

  • தொடங்கியவர்

பீட்சா மான்!

 

 

p19a.jpg

வியாபாரத்தில் பல புதுமையான முயற்சிகளைக் கையாளும் டொமினோஸ் பீட்சா நிறுவனம் இந்த ஆண்டும் ஒரு புது உத்தியை அறிமுகப்படுத்தியுள்ளது. ஜப்பானில் இந்த ஆண்டு வழக்கத்தைவிட கடும் குளிர் நிலவுகிறது. கிறிஸ்துமஸ் பண்டிகையின்போது பனிப்பொழிவு அதிக அளவில் இருக்கும் என அந்த நாட்டின் வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. இதனால் கிறிஸ்துமஸ் கொண்டாட்டத்தின்போது வாடிக்கையாளர்களுக்கு பீட்சா டெலிவரியில் தாமதம் ஏற்படலாம் எனக் கருதி, அதைத் தவிர்க்க டொமினோஸ் பீட்சா நிறுவனம் ஒரு வித்தியாசமான முடிவை எடுத்துள்ளது. அதன்படி கிறிஸ்துமஸ் பண்டிகையின்போது பனிச்சறுக்கு வண்டியை இழுக்கும் பெரியகொம்புகள் கொண்ட கலைமான்கள் மூலம் பீட்சாக்களை விநியோகிக்கத் திட்டமிட்டுள்ளது. அதற்காக மான்களுக்கு மிருகப் பயிற்றுனர்கள் பயிற்சி அளித்து வருகின்றனர். மேலும், அந்த மான்களின் உடலில் ஜி.பி.எஸ் சென்சார்களைப் பொருத்தியிருப்பதால் டெலிவரி செய்யப்படும் பொருளை டிராக் செய்துகொள்ளலாமாம். இதை வித்தியாசமான ஏற்பாடு எனச் சிலர் பாராட்டினாலும், மான்களை வதைசெய்வதாகச் சிலர் எதிர்ப்புக்குரல் காட்டியுள்ளனர்.

ப்ளூ க்ராஸ்... நீங்க எங்க இருக்கீங்க..?

vikatan

  • தொடங்கியவர்

எம்.எஸ். சுப்புலட்சுமி இறந்த தினம்: 11-12-2004

 

எம்.எஸ். சுப்புலட்சுமி (மதுரை சண்முகவடிவு சுப்புலட்சுமி) 1916-ம் ஆண்டு செப்டம்பர் 16-ந்தேதி பிறந்தார். இவர் ஒரு புகழ்பெற்ற கர்நாடக இசைப் பாடகி. 1998-ம் ஆண்டு இந்தியாவின் மிக உயர்ந்த விருதான பாரத ரத்னா விருது வழங்கி கௌரவிக்கப்பட்டார். தமிழ், கன்னடம், மலையாளம், தெலுங்கு, வங்காள மொழி, இந்தி, சமஸ்கிருதம், குஜராத்தி ஆகிய பல மொழிகளில் இவர் பாடியுள்ளார். இவர் உலகின் பல நாடுகளுக்கும் பண்பாட்டுத் தூதுவராகச் சென்று

 
 
 
 
எம்.எஸ். சுப்புலட்சுமி இறந்த தினம்:  11-12-2004
 
எம்.எஸ். சுப்புலட்சுமி (மதுரை சண்முகவடிவு சுப்புலட்சுமி) 1916-ம் ஆண்டு செப்டம்பர் 16-ந்தேதி பிறந்தார். இவர் ஒரு புகழ்பெற்ற கர்நாடக இசைப் பாடகி. 1998-ம் ஆண்டு இந்தியாவின் மிக உயர்ந்த விருதான பாரத ரத்னா விருது வழங்கி கௌரவிக்கப்பட்டார்.
 
தமிழ், கன்னடம், மலையாளம், தெலுங்கு, வங்காள மொழி, இந்தி, சமஸ்கிருதம், குஜராத்தி ஆகிய பல மொழிகளில் இவர் பாடியுள்ளார். இவர் உலகின் பல நாடுகளுக்கும் பண்பாட்டுத் தூதுவராகச் சென்று பல நிகழ்ச்சிகள் நடத்தியுள்ளார். மேலும் ஐக்கிய நாடுகள் அவையிலும் இவர் தன் அரங்கேற்றத்தை நிகழ்த்தியுள்ளார். இவர் 2004-ம் அண்டு டிசம்பர் 11-ந்தேதி காலமானார்.
 
இதே தேதியில் நிகழ்ந்த முக்கிய நிகழ்வுகள்:-
 
 *  1816 - இண்டியானா ஐக்கிய அமெரிக்காவின் 19-வது மாநிலமானது. * 1907 - நியூசிலாந்தின் நாடாளுமன்றக் கட்டிடம் தீயில் எரிந்து சாம்பரானது. * 1917 - பிரித்தானியப் படைகள் ஓட்டோமான் பேரரசிடம் இருந்து ஜெருசலேமை மீட்டன. * 1927 - சீனாவின் குவாங்சூ நகரை கம்யூனிஸ்டுகள் கைப்பற்றி அதனை குவாங்சூ சோவியத் என மாற்றியிருப்பதாக அறிவித்தனர். * 1931 - ஆஸ்திரேலியா, கனடா, அயர்லாந்து, நியூசிலாந்து, மற்றும் தென்னாப்பிரிக்கா ஆகியவற்றுக்கு தமது முழுமையான அரசியலமைப்புகளைப் பேணும் சட்டமூலம் வெஸ்ட்மின்ஸ்டர் சட்டம் 1931 பிரித்தானிய நாடாளுமன்றத்தில் கொண்டுவரப்பட்டது.
 
* 1936 - ஐக்கிய இராச்சியத்தின் மன்னன் எட்டாம் எட்வேர்ட் முடி துறந்தார். * 1937 - எஸ்தோனியாத் தலைவர் ஜான் ஆன்வெல்ட் ஸ்டாலின் ஆட்சியாளர்களால் கைது செய்யப்பட்டுக் கொலை செய்யப்பட்டார். * 1941 - இரண்டாம் உலகப்போர்: ஜெர்மனியும் இத்தாலியும் ஐக்கிய அமெரிக்கா மீது போரை அறிவித்தன. * 1946 - ஐக்கிய நாடுகளின் சிறுவர் நிதியம் (யுனிசெப்) நிறுவனம் அமைக்கப்பட்டது. * 1958 - அப்பர் வோல்ட்டா பிரான்சிடம் இருந்து விடுதலையை அறிவித்தது.
 
* 1964 - நியூயார்க் நகரில் ஐ.நா. பொதுச்சபைக் கூட்டத்தில் சே குவேரா உரையாற்றினார். இவர் உரையாற்றிக் கொண்டிருந்தபோது ஐ.நா. கட்டடத்தின் மீது குண்டுத் தாக்குதல் இடம்பெற்றது. * 1972 - அப்பல்லோ 17 சந்திரனில் இறங்கியது. * 1981 - எல் சல்வடோரில் இராணுவத்தினர் நாட்டின் உள்நாட்டுப் போரின் ஒரு கட்டமாக கிட்டத்தட்ட 900 பொதுமக்களை கொன்றனர். * 1993 - மலேசியாவின் தலைநகர் கோலாலம்பூரில் உயர்மாடிக் கட்டிடம் ஒன்று வீழ்ந்ததில் 48 பேர் கொல்லப்பட்டனர். * 1994 - ரஷ்யாவின் அதிபர் போரிஸ் யெல்ட்சின் தமது படைகளை செச்சினியாவுக்கு அனுப்பினார். * 1998 - தாய்லாந்தைச் சேர்ந்த விமானம் வீழ்ந்ததில் 101 பேர் உயிரிழந்தனர்.
 
பிரபலமானவர்கள் பிறந்த தினம்:-
 
* 1781 - சர் டேவிட் ப்ரூஸ்டர், ஸ்காட்லாந்து இயற்பியலாளர். (இ. 1868) * 1803 - ஹெக்டர் பேர்லியோஸ், பிரெஞ்சு இசையமைப்பாளர் (இ. 1869) * 1843 - ராபர்ட் கோக், ஜெர்மனிய அறிவியலாளரும் மருத்துவரும் (இ. 1910) * 1882 - மாக்ஸ் போர்ன், ஜெர்மனிய இயற்பியலாளரும், நோபல் விருதாளரும், (இ. 1970) * 1890 - மார்க் டோபே, அமெரிக்கப் பண்பியல் வெளிப்பாட்டிய ஓவியர் (இ. 1976) * 1911 - நகிப் மஹ்ஃபூஸ், நோபல் பரிசு பெற்ற எகிப்தியப் எழுத்தாளர் (இ. 2006) * 1918 - அலெக்சாண்டர் சோல்செனிட்சின், நோபல் பரிசு பெற்ற ரஷ்ய எழுத்தாளர் (இ. 2008) * 1931 - ஓஷோ, இந்திய ஆன்மீகத் தலைவர், (இ. 1990) * 1935 - பிரணாப் முக்கர்ஜி, இந்திய ஜனாதிபதி * 1951 - பீட்டர் டி. டேனியல்ஸ், மொழியியல் அறிஞர் * 1954 - பிரசந்தா, நேபாளப் பிரதமர் * 1958 - ரகுவரன், நடிகர் (இ. 2008) * 1969 - விஸ்வநாதன் ஆனந்த், இந்திய செஸ் ஆட்டக்காரர் * 1980 - ஆர்யா, தமிழ்த் திரைப்பட நடிகர் 

http://www.maalaimalar.com

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.