Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இளமை புதுமை பல்சுவை

Featured Replies

  • தொடங்கியவர்

ஹாலிவுட் மகாராஜா ஸ்டீவன் ஸ்பீல்பெர்க் - பிறந்த தின சிறப்பு பகிர்வு

ஸ்டீவன் ஸ்பீல்பெர்க் டிசம்பர் 18 ,1946 அன்று சின்சினாட்டி நகரில் அமெரிக்காவில் பிறந்தார்.அப்பா கணினி தயாரிப்பில் ஈடுபட்ட மின்னியல் பொறியியலாளர்,அம்மா உணவு விடுதிகளில் பியானோ வாசிப்பாளர் ஆக இருந்தார். ஸ்பீல்பெர்க் அப்பா செல்லம்.அப்பா தன் உடைந்த ஸ்டில் காமிராவை அளித்தது தான் இவர் வாழ்வில் மிகப்பெரிய உந்துதல்.

பள்ளிக்காலத்தில் எட்டுகுட்டி குட்டி படங்களை எடுத்த அனுபவம் உண்டு.இந்த படங்களை வீட்டில் நண்பர்களுக்கு திரையிட்டு காண்பிக்க இருபத்தைந்து சென்ட் வாங்கிக்கொண்டு,தங்கையின் தயாரிப்பில் பாப் கார்னை படத்தின்போது விற்றும் ஜாலியாக இளமைக்காலங்களை கழித்தவர்.ஆனால் எடுத்த படங்கள் எல்லாம் துப்பாக்கி சூடு,போர் என த்ரில் ஆனவை .

steevanspel_1.jpg



தெற்கு கலிபோர்னியா நாடக கல்லூரியில் விண்ணப்பம் போட்டு நிராகரிக்கப்பட்டது.மனம் தளராமல் கலிபோர்னியா மாகாண பல்கலையில் சேர்ந்தார்.ஆனால் அங்கேயும் தொடர்ந்து படிக்கவில்லை,சினிமா ஆர்வம் உந்தித்தள்ள உலகப் புகழ் பெற்ற யுனிவர்சல் ஸ்டுடியோவில் சம்பளம் வாங்காத எடிட்டிங் துறை மாணவராக சேர்ந்து கொண்டார்.ஒரு நாள் கூட விடுமுறை இல்லாத வேலை அது.

யுனிவர்சல் ஸ்டுடியோவுக்காக ஆம்ப்ளின் என்கிற குறும்படத்தை இயக்கியது தான் வாழ்வின் முதல் திருப்புமுனை.இருபத்து ஆறு நிமிடம் ஓடும் இப்படம் கவலைகள் இல்லாத ஒரு ஹிப்பி இளைஞன் ஒரு பெண்ணோடு பாலைவனத்தை கடப்பதை நகைச்சுவையாக வசனமே இல்லாமல் பின்னணியில் கிடார் இசையை கொண்டு மட்டும் சொல்லும்.இது பலவேறு விருதுகளை ஸ்பீல்பெர்க் பெற உதவியது.

ரொம்பவும் கூச்சசுபாவம் உள்ளவர்.பெரும்பாலும் நண்பர்கள் இல்லாதவர். தன் இளமைக்காலத்தில் தந்தை மற்றும் தாய் விவாகரத்து பெற்று பிறந்ததன் தாக்கமும் ,ஒரு மூத்த அண்ணன் இல்லையே என்கிற ஏக்கமும் தான் உலக புகழ் பெற்ற ஈடி படம் எடுக்க உந்துதல் எனவும் சொன்னார்.

steevanspel.jpg



கடுமையாக தன் படங்களுக்கு உழைப்பார்.ஒவ்வொரு படமும் ஒரு மேஜிக்!அப்படிதான் பார்க்கிற ரசிகர்கள் உணரவேண்டும் என்பார்.அதிலும் குழந்தைகளுக்கான படம் எடுப்பதில் ஆர்வம் அதிகம் !அப்படி எடுத்த படங்கள் தான் ஜுராசிக் பார்க்,ஈடி,டின்டினின் சாகசங்கள் போன்றவை.

புத்தகங்கள் படிப்பதை விரும்பாதவர். நன்றாக உற்று கவனிப்பார்.பலபடங்களை ஒரே வாரத்தில் பல முறை பார்த்தும் விடுவார்.கதை சொல்லி குழந்தைகளை மகிழ்விக்கவும் செய்வார்.ஜாஸ் கதையை படிப்பதற்கு முன் வரை அது ஏதோ பல் சம்பந்தப்பட்ட புத்தகம் என்றே நினைத்துக்கொண்டு இருந்தார்.படித்து முடித்ததும் உடனே படம் எடுக்கலாம் என கிளம்பிவிட்டார்.

நிஜம் இல்லாத உலகத்தை காட்டி படத்தை ஓட்டி விடுகிறார் என பிறர் சொன்னதும், 'சிண்ட்லர்ஸ் லிஸ்ட்' எனும் ஹிட்லரிடம் இருந்து ஆயிரம் யூதர்களை காப்பாற்ற போராடும் சிண்ட்லர் எனும் மனிதனின் கதையை கருப்பு வெள்ளையில் சொல்லி கண்ணீர் வரவைத்தார் !அந்த படத்திற்காக சிறந்த இயக்குனருக்கான ஆஸ்கரை பெற்றார் . இப்படத்தின் மூலம் பெறப்பட்ட வருமானத்தை ஷோஆ அறக்கட்டளையை நிறுவி ஹிட்லரின் ஹோலோகாஸ்ட் கொடுமைகளால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு கொடுத்து விட்டார் .

இவருக்கு ஏழு குழந்தைகள் .ஒரு அனிமேஷன் படத்தை தயாரிப்பதற்கு முன் தன் பிள்ளைகளிடம் கதையை சொல்லி அவர்கள் கண்கள் ஒளிர்கிறதா என பார்த்த பின்பே அதை படமாக எடுக்க சம்மதம் சொல்வார் .

"திரையரங்கில் படம் பார்க்கிற ஐநூறு ரசிகர்களில் பெரும்பாலானவர்கள் குழந்தை மாதிரி மாறி என் படத்தை ரசிக்க வேண்டும் அதுதான் என் குறிக்கோள்" என சொல்கிற நம்பிக்கைக்காரர்.

vikatan

  • Replies 11.3k
  • Views 1.5m
  • Created
  • Last Reply
  • தொடங்கியவர்

ஹனிமூன் செல்ல உலகின் பெஸ்ட் இடங்கள் என்ன என்ன?

ஹனிமூன்

சிறப்பு ஆல்பம் பார்க்க இங்கே க்ளிக் செய்யவும்

திருமணமான புதிதில் தம்பதிகளுக்கிடையே புரிதலை ஏற்படுத்துவதில் முக்கிய பங்கு வகிப்பது அவர்களின் தேனிலவுப் பயணம் தான். அந்த வகையில் உலகில் அதிகமான தம்பதிகளை ஈர்க்கும் டாப் ஹனிமூன் ஸ்பாட்களின் தொகுப்பு.   

 ஃபுளோரிடா : 

ஹனிமூன்
 

பாதுகாப்பான அதே சமயம் திரில்லான அட்வெஞ்சர் விளையாட்டுகளுடன் தங்கள் ஹனிமூன் பயணத்தை மேற்கொள்ள நினைப்பவர்கள் ஃபுளோரிடாவை டிக் அடிக்கலாம். எப்போதும் நல்ல பருவ நிலையுடன் திகழும் ஃபுளோரிடாவின் முக்கியமான சிறப்புகளில் ஒன்று அந்த நட்பான ஊர் மக்கள். பல அரியவகை உயிரினங்களை பாதுகாக்கும் தேசிய பூங்கா ஒன்றும் ஃபுளோரிடாவில் இருக்கிறது. நம்மில் பலபேருக்கு சிறு வயதிலிருந்தே டிஸ்னி லேண்டுக்கு செல்ல வேண்டும் என்ற ஆசை இருந்திருக்கும். அந்த கனவையும் ஃபுளோரிடா மாகாணத்தில்  அமைந்திருக்கும் வால்ட் டிஸ்னி லேண்டில் நனவாக்கி கொள்ளலாம். 

அருபா : 

ஹனிமூன்

நெதர்லாந்து நாட்டின் ஆட்சியின் கீழ் கரீபியக் கடலில் அமைந்திருக்கும் குட்டித் தீவு அருபா. தீவின் மொத்த நீளமே 32 கிமீ தான். தீவை சுற்றிலும் கடற்கரைகள், உணவு விடுதிகள், நைட் கிளப்புகள், கேசினோக்கள் என அருபாவில் பொழுபோக்கு அம்சங்கள் அன்லிமிடெட். உலக அளவில் புதுமணத் தம்பதிகளின் தேனிலவுத் திட்டத்தில் அருபாவுக்கு எப்போதும் இடம் உண்டு. ஓய்வெடுப்பதற்கும், மனதை புத்துணர்ச்சியாக்கி கொள்வதற்கும் அருபா சிறந்த இடம். அருபாவின் தலைநகரான ஓரோனியஸ்தாத்தில் இருக்கும் பூபாலி பறவைகள் சரணாலயம் அருபாவின் இன்னொரு ஸ்பெஷல். 

போரா போரா :

ஹனிமூன்


தென்ன 'போரா போரா' என கேட்குறீர்களா? பிரான்ஸின் பொலிசினியாவிலுள்ள ஒரு குட்டித் தீவுதான் போரா போரா. தீவைச் சுற்றி தெளிவான நீலக் கடல், வெள்ளை பவளப் பாறைகள் என போரா போரா ஒவ்வொரு விஷயங்களிலும் உங்களை ஆச்சர்யப்படுத்திக் கொண்டே இருக்கும். கடலுக்கு நடுவே ஆங்காங்கே இருக்கும் குடில்களில் அமர்ந்து காலை நீரில் வைத்துக் கொண்டு உங்கள் துணையுடன் ஒரு கப் காபி அருந்தும் அனுபவத்தை வேறெங்கும் பெற முடியாது. உலகின் அழகான தீவுகளில் போரா போராவுக்கு எப்போதுமே தனி இடம். இந்த குட்டி தீவின் மக்கள் தொகையே ஏறத்தாழ 8000 பேர் தான். தண்ணீர் சாகசங்கள், இரவு நேர பார்ட்டிகள் என களைகட்டும் போரா போரா செல்ல நினைத்தால் மே மாதத்தில் உங்கள் பயண திட்டத்தை வகுத்து கொள்ளலாம். இங்கே இருக்கும் ஒவ்வொரு ரிஸார்ட்டும் ஒவ்வொரு வகையான ஹனிமூன் பேக்கேஜுகளை வழங்குகின்றன. அதை சரியாக விசாரித்து உங்களுக்கு பிடித்த ஸ்டைலில் பதிவு செய்து கொள்ளுங்கள். 

கிரீஸ் :

ஹனிமூன்


லகின் வரலாற்றில் கிரேக்க நாகரிகத்துக்கு எப்போதுமே தனி இடம் உண்டு. கிரேக்க நாகரீகத்தின் கலாச்சாரத்தை தன்னகத்தே கொண்டது கிரீஸ். நகரை ஒட்டி கடல் மலைச்சரிவில் வீடுகள் என கிரீஸுக்கு சென்று வருவது வித்தியாசமான அனுபவமாய் இருக்கும். மிகப் பழமையான வரலாற்று பின்னணி, பல்வேறு வித்தியாசமான நில அமைப்புகளை கண்டது கிரீஸ். மே, ஜூன், ஜூலை, செப்டம்பர், அக்டோபர் மாதங்களில் கிரீஸில் நல்ல பருவநிலை நிலவும். கிரீஸ் நகரை சுற்றிலும் பல்வேறு தீவுகளுக்கும் அரண்மனைகளுக்கும் சென்று வருவது மறக்க முடியாத அனுபவமாய் இருக்கும். ஒவ்வொரு டிராவல் ஏஜென்சியும் பல்வேறு விதமான பேக்கேஜுகளை வழங்குகின்றன. சன்டோரினி சிவப்பு கடற்கரை, இரவு நேரத்தில் கிரீஸின் ஏதென்ஸ் நகரை சுற்றி வருவது என கிரீஸ் ட்ரிப்பில் பல்வேறு சுவாரஸ்யங்கள் உள்ளன.    

ஹவாய் :

ஹனிமூன்


சுபிக் பெருங்கடலின் நடுவே அமைந்திருக்கும் ஹவாய் மாகாணம் பல்வேறு தீவுக்கூட்டங்களை உள்ளடக்கியது. அமெரிக்க மாகாணங்களில் கடலில் இருக்கும் ஒரே மாகாணமும் இதுவே. நூற்றுக்கணக்கான சிறிய தீவுகளை கொண்டுள்ள ஹவாய் புதுமண தம்பதியினருக்கு ஏற்ற இடம். பொதுவாக மிதமான வெப்பநிலையை கொண்டுள்ள ஹவாயில் எந்த தீவுக்கு செல்ல போகிறோம் என முடிவெடுத்து விட்டு செல்ல வேண்டும். ஏனென்றால் ஒவ்வொரு தீவும் ஒவ்வொரு விதமான நில அமைப்பையும். வித விதமான பொழுதுபோக்கு அம்சங்களையும் கொண்டுள்ளன. அழகிய கடற்கரையில் நிலா வெளிச்சத்துடன் புதிதான உணவு வகைகளுடன் உணவருந்த ஏற்பாடு செய்வது உங்கள் துணைக்கு நிச்சயம் பரவசமான அனுபவமாக இருக்கும். ரொமான்டிக்கான இடமாக மட்டுமல்லாமல் அட்வெஞ்சர் விளையாட்டுகளுக்கும் ஏற்ற இடம் ஹவாய். 

பஹாமாஸ் :

ஹனிமூன்

 ட்லாண்டிக் பெருங்கடலில் ஏறத்தாழ 700 குட்டித் தீவுகளை கொண்டது பஹாமாஸ். மென்மையான மணலுக்குள் உங்கள் பாதங்கள் புதைந்திருக்க உங்கள் துணையின் கைகளை கோர்த்துக் கொண்டு  கண்களை மூடித் திறக்கும் பொழுது நீலக்கடல் விரிந்தால் நீங்கள் பஹாமாஸின் ஏதாவதொரு கடற்கரையில் நின்று கொண்டு இருக்கிறீர்கள் என அர்த்தம். பத்தோடு பதினொன்றான சுற்றுலாத் தளம் அல்ல பஹாமாஸ். காதலர்களுக்கும், புதுமணத் தம்பதியினருக்கும் ரொம்பவே ஸ்பெஷலான இடம். தினசரி வாழ்க்கையிலிருந்து தப்பித்து மனதை புத்துணர்ச்சியாக்கிக் கொள்ள நினைப்பவர்களும் பஹாமாஸுக்கு ஒரு டிக்கெட் போடலாம். இரவில் மெல்லிய கேண்டில் வெளிச்சத்தோடு உங்கள் துணையுடன் உணவருந்துவது அன்லிமிடெட் சந்தோஷத்தை கொடுக்கும்.

மெக்ஸிகோ :

ஹனிமூன்

ழக்கமாக ஹனிமூன் என்றால் குளிர் பிரதேசங்களுக்கு தானே பயணம் செல்வார்கள். ஆனால் நல்ல வெப்பமான ஒரு பகுதிக்கு நீங்கள் செல்ல விரும்பினால் மெக்ஸிகோ பெஸ்ட் சாய்ஸ். இயற்கையான சூழல், கடற்கரைகள் என மெக்ஸிகோ  சுற்றுலாவுக்கும் ஹனிமூனுக்கும் ஏற்ற இடம். சுவையான அதே சமயம் புது வகையான உணவு வகைகளின் காதலரா நீங்கள் அப்படியானால்  நீங்கள் தவறவிடக் கூடாத நகரங்களில் இதுவும் ஒன்று. இரவு நேர பார்ட்டிகள், அட்வெஞ்சரஸ் விளையாட்டுகள், பொழுபோக்கு அம்சங்கள் அகழ்வாராய்ச்சி நடத்தப்பட்ட இடங்கள், அருங்காட்சியகங்கள், வாட்டர் ஸ்போர்ட்ஸ் என மெக்ஸிகோவை திகட்டாமல் சுற்றி வரலாம். கடற்கரைகளின் ரிசார்ட்டுகளில் இதமான இசையோடு இரவு உணவை எடுத்துக்கொள்வது நல்ல அனுபவமாய் இருக்கும். புது வித கலாச்சாரங்களை அனுபவித்துப் பார்க்க மெக்ஸிகோவுக்கு ஒரு ட்ரிப் அடிக்கலாம் கப்பிள்ஸ்.

இத்தாலி : 

ஹனிமூன்
     

த்தாலி எப்போதுமே காதலர்களின் கனவு தேசம். காதலர்களுக்கு மட்டுமல்லாது அதிக சுற்றுலா பயணிகள் செல்ல விரும்பும் நகரங்களில் இத்தாலியும் ஒன்று. உலகின் சிறந்த உணவு வகைகள் பழமை மாறாத கட்டிடங்கள் தேவாலயங்கள் என வித்தியாச அனுபவத்துக்கு இத்தாலி சிறந்த சாய்ஸ். வெனிஸ் நகரின் வாய்க்கால்களில் உங்கள் துணையுடன் படகில் பயணம் மேற்கொள்வது தான் இத்தாலியின் இன்னொரு ஸ்பெஷல். வித விதமான வைன் வகைகள் இத்தாலியின் முக்கிய சிறப்புகளில் ஒன்று. அதுமட்டுமல்லாமல் தனியாக வைன் டூர் என்றே ஒரு ட்ரிப் இருக்கிறதாம். நகரம் எங்கும் தேவாலயங்கள், அருங்காட்சியகங்கள் என நிறைந்திருக்க. வெனிஸ், ரோம் நகரங்கள் இத்தாலியில் மிஸ் பண்ணிவிடக் கூடாத நகரங்கள். வெனிஸ் படகுப் பயணத்தில் முக்கியமா உங்க செஃல்பி ஸ்டிக்கை மறந்துடாதீங்க!

vikatan

  • தொடங்கியவர்

பாட்டி சொன்ன ஐடியா ஜெர்மனி போன கதை!

 

ஜெர்மனி

து மார்கழி. கோவில்களில் கைநிறையப் பொங்கல் பிரசாதம் கிடைக்கும் சீசன்!. இலையில் சுடச்சுடத் தரப்படும் பிரசாதத்துக்காகவே, ஏ.டி.எம் வரிசைகளில் காத்துக் கிடப்பவர்களுக்குச் சமமாக கோவில்களில்  க்யூவில் நிற்பவர்களின் எண்ணிக்கை இருக்கும். வீட்டிலும் ஹோட்டல்களிலும் பிளாஸ்டிக் ஆக்கிரமிப்பு தொடங்கிவிட்டாலும் கோவில்களில் மட்டும்  இலையில் சாப்பாடு தரும் மரபு தொடர்ந்து கொண்டுதான் இருக்கிறது. நாகரிகம் மிகவும் ஆக்கிரமிக்காத சிறுநகரப் பகுதிகளிலும் கிராமங்களிலும் இன்றும் இலையில் சாப்பிடும் மரபைக் காணலாம். இலையென்றால் வாழை இலை மட்டுமில்லை. நீண்ட நாள் தேவைகளுக்காக  வாழை இலைகளை வெயிலில் காயவைத்து எடுத்து பதப்படுத்தி வைத்துக்கொள்வது. அல்லது மந்தாரை இலை  போன்றவற்றை பதப்படுத்தி ஈர்குச்சி கொண்டு தைத்து தட்டு போல உருவாக்கி சேமித்து வைப்பது என ப்ளாஸ்டிக்கும் எவர்சில்வரும் உருவாக்கப்படாத காலகட்டத்தில் இந்த இலைகளில் தான் நம்முடைய் தாத்தா பாட்டிகள் சாப்பிட்டு வந்தார்கள்.இதனை ஊர் பக்கம் ’தையல் இலை’ என்பார்கள்.சுடச்சுட சமைக்கப்பட்டிருக்கும் சாப்பட்டை அம்மா இந்த இலைகளில் பரிமார அதனைச் சாப்பிடும்போது கிடைக்கும் சுவை ஐந்து நட்சத்திர ஹோட்டல்களே நினைத்தாலும் தரமுடியாது.

காலப்போக்கில் ஆரோக்கியம் சொல்லிக் கொடுக்க வேண்டிய அவர்களும் அவசர மற்றும் அவசியத் தேவைகளுக்காக ப்ளாஸ்டிக் பக்கம் சாய்ந்துவிட, சருகு இலைகளில் சாப்பிடும் மரபு சருகு போலவே மக்கிவிட்டது. தற்போது இதே டெக்னிக்கை ஜெர்மனி நம்மிடமிருந்து இறக்குமதி செய்திருக்கிறது. ஜெர்மனியைச் சேர்ந்த லீஃப் ரிபப்ளிக் என்னும் அமைப்பு இந்தத் திட்டத்தை தொடங்கி தென்னிந்தியாவின் கிராமப்புறப் பகுதிகளில் சிறுதொழில் செய்யும் பெண்களிடம் இந்த திட்டத்தின் ஒரு பகுதியை ஒப்படைத்திருக்கிறது.

image_12497.jpg

சருகு இலைகளைச் சேமித்து அதனை ஈர்குச்சிகளால் தைத்து இங்கிருந்து ஏற்றுமதி செய்வது இவர்களுடைய வேலை. அங்கே ஜெர்மனியில் இந்த சருகு இலைத் தட்டுகளை இறக்குமதி செய்துகொள்பவர்கள் அப்படியே அதனை உபயோகிக்காமல் உயர் அழுத்த இயந்திரத்தில் கொடுத்து அதனை வலுவாக்கி பிறகு உபயோகிக்கின்றனர். எவ்வளவு அதிகமாக சாப்பாட்டை இதில் வைத்தாலும் உடையாமல் தாங்கும் என இதற்கு தனியாக விளம்பரம் வேறு செய்கின்றனர். ப்ளாஸ்டிக்கால் பெருகி வரும் சுற்றுச்சூழல் மாசைக் கட்டுப்படுத்தவே இந்த யோசனையாம். நம் பாட்டிகளின்  ஐடியாவை பல ஆயிரம் மைல்களுக்கு அப்பால் இருக்கும் ஜெர்மனியே ஏற்றுக்கொண்டுவிட்டது. நாம் எப்போது ப்ளாஸ்டிக்கை தூர எறியப்போகிறோம்?

vikatan

 

Edited by நவீனன்

  • தொடங்கியவர்

150 ஓநாய்களுக்காக 169 கோடி செலவு செய்த வுல்ப்கிங்

(லோகேஸ்வரன்)

வுல்ப்கிங் என மக்களால் அழைக்கப்படுபவரும் யாங்சங்செங் என்ற இயற்பெயருடைய 71 வயதானவர் கடந்த 9 வருடங்களாக 150 ஓநாய்களை பராமரித்து வளர்த்து வருகிறார். 

சீனாவின் ஜின்ஜியாங் பகுதியை சேர்ந்த இவர் 2007 ஆம் ஆண்டு தொடக்கம் ஓநாய்களை வளர்த்து வருகின்றார்.

unnamed__6_.jpg

நண்பர் ஒருவர் மூலம் கிடைக்கபெற்ற ஒரு பெண் ஓநாயையும் அதன் குட்டிகளையும் வளர்க்க ஆரம்பித்துள்ளார். தொடர்ந்து மற்றொரு நண்பர் ஊடாக 9 ஓநாய்கள் கிடைக்கப்பெறவே 2008ஆம் ஆண்டு 20 ஹெக்டயர் நிலத்தை வாங்கி ஒநாய்களை வளர்ப்பதற்கு ஆரம்பித்துள்ளார். 

தற்போது அவரிடம் 9 வகைகளைச் சேர்ந்த 150 ஓநாய்கள் காணப்படுகின்றன.

unnamed__7_.jpg

வுல்ப்கிங் ஓநாய்களை பராமரிப்பதற்காக இதுவரை காலமும் 169 கோடிகளை செலவிட்டுள்ளார். 

தன்னை ஒரே ஓருமுறை மாத்திரமே ஓநாய் கடித்துள்ளதாக கூறும் இவர் தனது பண்ணையில் 1000 ஓநாய்கள் உருவாகியதும் அவற்றை காட்டில் விடுவதற்கு திட்டமிட்டுள்ளதாக கூறியுள்ளார்.

unnamed__5_.jpg

http://www.virakesari.lk

  • தொடங்கியவர்

கட்டடக்கலை 2016 (புகைப்படத் தொகுப்பு)

ஆயிரக்கணக்கான புகைப்படங்களில் இருந்து இந்த ஆண்டு கட்டடக்கலை புகைப்படப் போட்டிக்கு தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள 15 புகைப்படங்கள் இவை. இந்த புகைப்படங்களை எடுத்த புகைப்படக் கலைஞர்களின் குறிப்புக்களோடு அவற்றை உங்களுக்கு வழங்குகிறோம்.

ரோமன் ரோப்ரோக்:

ரோமன் ரோப்ரோக்: "ஒரு வகையான இந்த அழகான கட்டுப்பாட்டு அறை, அலங்கார கலை வடிவத்தை சேர்ந்த ஒன்றாகும்"

பார்வையாளரின் கவனத்தை திசைதிருப்ப, ஒளியை பயன்படுத்தாமல் இருப்பது

ஜோனத்தான் வால்லண்ட்: "புகைப்படக் கலைஞர் எடுத்துகாட்ட விரும்புவதை நோக்கி இருக்கும், பார்வையாளரின் கவனத்தை திசைதிருப்ப, ஒளியை பயன்படுத்தாமல் இருப்பதை விளக்குகின்ற புகைப்படத் தொடரின் ஒரு பகுதி தான் இந்த புகைப்படம்"

செனாடு தாக்மாஸ்:

செனாடு தாக்மாஸ்: "தெளிவான கட்டடக்கலை பார்வையை விவரித்து வழங்கும் அசாதாரணமான சிறிய வடிவம்"

நியூ யார்க் நகரத்தின் அடையாள முக்கியத்துவம் வாய்ந்த ஃப்ளாடிரான் கட்டடம் பனிப்புயலின்போது காட்சியளிக்கிறது

மிச்சேலி பாலாஸோ: "சீறும் காற்று மற்றும் கடும் பனிக்கு இடையில் புகுந்து வரும் ராட்சத கப்பலைப்போல, நியூ யார்க் நகரத்தின் அடையாள முக்கியத்துவம் வாய்ந்த ஃப்ளாடிரான் கட்டடம் பனிப்புயலின்போது காட்சியளிக்கிறது. 2016 ஆம் ஆண்டு ஜனவரி 23 ஆம் தேதி வரலாற்று புகழ்மிக்க புயல் "ஜோனாஸ்" தாக்கியபோது எடுத்த இந்த படம். அந்த புயலுக்கு பின்னர் இந்தப்படம் பெருமளவில் பகிரப்பட்டது.

டெரிக் ஸ்னீ: காற்றை அறுவடை செய்ய தாவரங்களை பயன்படுத்துவதுபோல நீங்கள் கற்பனை செய்து கொள்ளுங்கள். நல்லது, இப்போது அது நம்மால் முடியும். பெற்றோரே, பெரியோரே, சிறுவர்களே, சிறுமியரே....டர்போ டான்டிலையன் காற்றுப்பண்ணை

டெரிக் ஸ்னீ: காற்றை அறுவடை செய்ய தாவரங்களை பயன்படுத்துவதுபோல நீங்கள் கற்பனை செய்து கொள்ளுங்கள். நல்லது, இப்போது அது நம்மால் முடியும். பெற்றோரே, பெரியோரே, சிறுவர்களே, சிறுமியரே....டர்போ டான்டிலையன் காற்றுப்பண்ணை".

பார்பரா ரோஸ்சி:

பார்பரா ரோஸ்சி: "கட்டடம் இடிக்கப்படும் இந்த புகைப்படத்தை நான்தான் எடுத்தேன். இது மாற்றத்தை, செயல்பாட்டை மற்றும் அழகைக் காட்டுகிறது"

ஒலேக்சென்ட்ர் நிஸ்ரோஸ்கி:

ஒலேக்சென்ட்ர் நிஸ்ரோஸ்கி: "உலோக அலங்கார வளைவும் ஒரு மரமும் இருக்கின்ற இந்த புகைப்படம், இயற்கையையும், கட்டடக்கலை அழகையும் இணைத்துக் காட்டுகிறது".

இந்த புகைப்படத் தொடர் கடந்த கால கட்டடக்கலை புகைப்படக்கலை தொழில்நுட்பங்களின் குறைகள்

ஜேம்ஸ் தாரி: "இந்த புகைப்படத் தொடர் கடந்த கால கட்டடக்கலை புகைப்படக்கலை தொழில்நுட்பங்களின் குறைகளை, சரியற்றவற்றை பார்ப்பது பற்றியதாகும். காலக்கெடு முடிந்த இந்த கோடாக்கின் இக்டாகுரோம், வேற்றுலக வண்ணங்களை உருவாக்கும் இந்த மிக பெரிய பாளங்களை உற்பத்தி செய்ய தவறுதலாக ரசாயன கலவைகளால் வளர்க்கப்பட்டன. சில கட்டடங்களைபோல இவை தவறுதலாகவும் சவாலுடனும் உருவாக்கப்பட்டவை.

வடத்தாலான பாலத்தின் முன்னால் ஒரு சிற்பம்

ஒலெக் டாஷகோவ்: "ரிகாவின் கோபுர சாரளமானது, மழை அல்லது சூரிய ஒளி, ஈரம் அல்லது நல்ல வானிலை என எந்தவொரு பருவகாலத்திலும் தன்னுடைய வரலாற்று பதிவை பராமரிக்கிறது. இந்த வடத்தாலான பாலத்தின் அழகால் அவரது கவனம் சிதறிவிட்டதா என்ன? என்னால் நம்ப முடியவில்லை”.

புலென்ட் சுபெர்க்:

புலென்ட் சுபெர்க்: "பாரம்பரிய மசூதியாக இல்லாமல் நவீன கட்டடக்கலை".

ஆண்ணொருவர் செங்கல் எடுக்கையில், பெண் ஒருவர் அவருக்கு பின்னால் வேலை செய்கிறார்

ஷிபாசிஷ் சஹா: தங்களுடைய தனிப்பட்ட குடும்பங்களுக்கு உணவூட்ட இந்த படத்திலுள்ள ஆண்களும் பெண்களும் கடுமையாக வேலை செய்கிறார்கள். தங்களுடைய வலியை மறந்த பெண்கள், ஆண்களோடு செங்கல் சூளையில் வேலை செய்கின்றனர்".

ஒரு புறம் வீடுகளற்ற நிலம். மறுபுறம் நெருங்கி அமைந்திருக்கும் வீடுகள்

மார்க்கொ கிராஸி: 2016 ஜூன் மாதம் தொடங்கி லாருங் கார் என்னுமிடத்தில் அனைத்தும் மாறியிருக்கின்றன. ஆனால், அது யாருக்கும் தெரியாது. முன்பு உலகிலேயே மிகப் பெரிய பௌத்த குடியிருப்பிடமாகவும் நவீன சமூகத்தைவிட தொலைவிலும் இருந்த இவ்விடத்தில், துறவியரும், மடாதிபதிகளும் அமைதியான, செயலற்ற வாழ்க்கை நடத்தினர். தற்போது இவ்விடம் சீன அதிகாரிகளால் இடிக்கப்படுகிறது,

சிறப்பாக அலங்கரிக்கப்பட்ட அரங்கம்

ஜினா சோடன்: "மூரிஷ் கட்டடக்கலைக்கு சிறந்த எடுத்துக்காட்டு. ஆனால், இத்தாலியில் உள்ள ஒரு கோட்டை இது. இந்த அறைகள் எல்லாம் அழகானதொரு கோட்டையை கட்டி, அதனை ஹோட்டலாக திறக்கும் இலட்சியத்தை வைத்திருந்த ஒருவரின் கைகளால் வடிவமைக்கப்பட்டவை".

ஒன்று இயந்திர சிற்பத்தில் மிதக்கும் சிறிய குழந்தை

நாஃப் செல்மானி: "ஹீவ்-கியு தோட்டங்கள் - தேனீ வடிவமைப்பில் உருவாக்கப்பட்ட ஓர் அழகான சிற்பம், புகைப்படங்கள் எடுக்க பார்வையாளர் ஒருவர் மேல் தளத்தில் கண்ணாடி தரையில் படுத்திருக்கையில், கீழிருந்து நோக்கப்படுகிறது. இந்த பன்முக உணர்வறியும் அனுபவம்தான் கலையை, அறிவியலை மற்றும் நிலவியல் கட்டடக்கலையை ஒருங்கிணைக்கிறது.

கடினமாக கட்டப்பட்ட ஏணிகளில் ஏறும் தொழிலாளி

என்ரிக் கிமெனெஸ்-விலில்லா: "வளர்முக நாடுகளில், கட்டங்களை கட்டி, பராமரிக்கின்ற பெயர் அறியப்படாத, எல்லா புத்திசாலி தொழிலாளர்களுக்கும் மரியாதை செலுத்தவே இந்த புகைப்படம்".

BBC

2 hours ago, நவீனன் said:

சுடச்சுட சமைக்கப்பட்டிருக்கும் சாப்பட்டை அம்மா இந்த இலைகளில் பரிமார அதனைச் சாப்பிடும்போது கிடைக்கும் சுவை ஐந்து நட்சத்திர ஹோட்டல்களே நினைத்தாலும் தரமுடியாது.

??

  • தொடங்கியவர்

6 மொழிகளில் விடுமுறை பாடல்கள்: இந்திய - அமெரிக்க சிறுமியின் அசுர சாதனை

 

7 வயதில் கல்லூரியில் சேர்ந்து அசாதாரண சாதனை படைத்த இந்திய - அமெரிக்க சிறுமியான டியாரா ஆபிரகாம் ஆறு மொழிகளில் விடுமுறைக்கால பாடல்களை பதிவு செய்ததன் மூலம் மேலும் ஒரு அசுர சாதனை புரிந்துள்ளார்.

 
6 மொழிகளில் விடுமுறை பாடல்கள்: இந்திய - அமெரிக்க சிறுமியின் அசுர சாதனை
 
நியூயார்க்:

இந்தியாவின் கேரள மாநிலத்தை சேர்ந்த ஒரு தம்பதியர் பல ஆண்டுகளுக்கு முன்னர் அமெரிக்காவுக்கு சென்று அங்கேயே குடியுரிமையும் பெற்று தங்கி விட்டனர். தற்போது, அவர்களின் இரண்டாம் தலைமுறைய சேர்ந்த ஒரு பிள்ளை கலிபோர்னியா மாநிலத்தில் உள்ள அமெரிக்கன் ரிவர் காலேஜில் கடந்த ஆண்டு பட்டம் பெற்றார்.

அவரது தங்கையான டியாரா ஆபிரகாம் பள்ளிப்படிப்புகளில் இரட்டை தேர்ச்சி பெற்று தனது ஏழாவது வயதில் அதே கல்லூரியில் பட்டப்படிப்பில் சேர்ந்தார். இதனால், அறிவுவளர்ச்சியில் வியப்புக்குரிய சிறுமியாக பார்க்கப்பட்ட டியாரா, தனது ஒன்பதாவது வயதில் இசை ஆல்பம் ஒன்றை சமீபத்தில் வெளியிட்டுள்ளார்.
7126CDB8-E46F-4265-80A7-227A75C6C3E9_L_s
கிறிஸ்துமஸ் ‘கேரல்’ பாடல்களுடன், விடுமுறைக்காலங்களில் உல்லாசமாக பாடும் சில பாடல் தொகுப்புகள் இந்த ஆல்பத்தில் இடம்பெற்றுள்ளன. உலகில் உள்ள 9 நாடுகளில் மிகவும் பிரபலமான விடுமுறைக்கால பாடல்களை ஆங்கிலத்தில் மட்டுமின்றி, இத்தாலி, ஜெர்மனி, லத்தின், பிரெஞ்சு, ஸ்பானிஷ் மொழிகளிலும் டியாரா பாடியுள்ளார்.

’வின்ட்டர் நைட்டிங்கேல்’ என்று தலைப்பில் வெளியாகியுள்ள இந்த இசை ஆல்பம் மேற்கண்ட நாட்டு மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.

http://www.maalaimalar.com

  • தொடங்கியவர்

வலைபாயுதே

சைபர் ஸ்பைடர்

 

p104d.jpg

facebook.com/bsankara narayanan: எல்லா ரெய்டுலயும் 2,000 ரூபாய் நோட்டுத்தான் கிடைச்சிருக்கு. 500 இல்லவே இல்லை. எனக்கு மட்டும்தான் கிடைக்கலையோனு வருத்தப் பட்டேன் # நிம்மதி!

facebook.com/writermugil: என்னதான் சூழ்நிலை அசாதாரணமாக இருந்தாலும், பூ, புஷ்பம், புய்ப்பம், புறா, புன்னகைக்கும் பாப்பா படங்களுடன், தவறாமல் குட் மார்னிங் மெசேஜ் அனுப்பும் நல்ல உள்ளங்களுக்குத் தலை வணங்கு கிறேன்!

p104a.jpg

 facebook.com/Nagarjuna:  அன்பின் குடும்பம்... (நாகார்ஜுனா குடும்பத்தினருடன்)

facebook.com/nelsonxavier08: மழையில் நனைவதை நேசிப்பதற்கும் வெறுப்பதற்குமான குட்டியூண்டு இடைவெளியில் கரைந்துவிடுகிறது வாழ்க்கை!

facebook.com/DavidEXIM: வேட்டிகூட `பாரம்பர்யம், அது, இதுனு தம் கட்டிப் பொழச்சுக்கும்போல. லுங்கி வழக்கொழிஞ்சே போச்சே. இப்ப உள்ள பயலுக எவனுமே லுங்கி கட்டிப் பார்த்தது இல்லை!

facebook.com/mrnags: வாழ்க்கை என்பது பன்ச் டயலாக் அல்ல... அது, பஞ்சரான டயருக்குக் கடையைத் தேடும் ஒரு பயணம்!

facebook.com/balaganesh.kandasamy: நாம் என்ன ஆயுதம் எடுக்க வேண்டும் என்பதை, காலையில் பள்ளிக்குக் கிளம்பும் செல்வங்களே தீர்மானிக்கிறார்கள்!

twitter.com/vinodhkrs: யூ ட்யூப்ல இத்தனையாவது நிமிஷத்துலதான் `நீங்க எதிர்பாக்கிற சீன் இருக்கு’னு கமென்ட் எழுதிட்டுப் போறான் பாருங்க... அந்த மனசுதான் சார் கடவுள்!

twitter.com/Kozhiyaar:  எப்ப படுத்தாலும் வரும் தூக்கம் முதல், எப்ப படுத்தாலும் வராத தூக்கம் வரை பயணிக்கிறது வாழ்க்கை!

p104b.jpg

facebook.com/PIB: வாழ்த்துகள்... வாழ்த்துங்கள்.
(குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜியுடன் பிரதமர் மோடி.)

twitter.com/vinothanaseeli : காசு இல்லாத பரிமாற்ற இந்தியாவை உருவாக்குவோம். # பசி இல்லாத இந்தியாவை முதல்ல உருவாக்குங்க சார்!

twitter.com/manipmp : எங்கேயாவது வெளியே சுத்திட்டு, `ஏ.டி.எம் போனேன்’னு சொன்னா நம்பிடுறாங்க # எஸ்கேபிசம்!

twitter.com/Kozhiyaar:  குஸ்கா வந்தவுடன் அதில் `பீஸ் இருக்கா?’ எனத் தேடும் அளவுக்கு, இலவசங்கள் நம்மைக் கெடுத்துவைத்திருக் கின்றன!

twitter.com/manipmp: உனக்கு முன்னால் உள்ள சமூகம் மெதுவாகவே செல்லும் # வங்கி!

twitter.com/vigneshvicky341:  இவனுங்க ஒரு மரணத்தின் மர்மங்களை எல்லாம் ஈஸியா கண்டு பிடிக்கிறானுங்க. நான் 20 நாளா சுத்துறேன்... `ஏ.டி.எம்-ல எப்ப பணம் போடுறாய்ங்க?’னு கண்டுபிடிக்கவே முடியலை!

p104c.jpg

twitter.com/vinodhkrs: அடுத்த மாசம் சம்பளம் எடுக்க ஏ.டி.எம் வெளியே நிற்க அவசியம் இருக்காது. தினமும் இப்படி  ஏ.டி.எம் வாசல்லயே நின்னா, எப்படி சம்பளம் வரும்?

twitter.com/Im_sme: சின்னம்மா... நாட்டை ஆள்றது எல்லாம் அப்புறமா பார்க்கலாம். முதல்ல ஒரு பேட்டி கொடுக்கச் சொல்லுங்க. குரலைக் கேட்போம் ;-)

twitter.com/ipragamenon : அடேய்... ஞாயிற்றுக்கிழமைனா முன்னாடிலாம் ஸ்கூல், காலேஜ், ஆபீஸ்தான் லீவ் விடுவீங்க. இப்ப ஏ.டி.எம்-க்கும் லீவ் விட்டுடுறீங்க. கறி எடுக்கக்கூட காசு இல்லை!

twitter.com/thirumarant : `அம்மா’ இறந்த அதிர்ச்சியைவிட இவிங்க டக்குனு இன்னோர் அம்மாவைத் தத்தெடுத்தாய்ங்க பாருங்க... அதுதான் அதிக அதிர்ச்சியா இருக்கு!

p104e1.jpg

whatsapp: குளிர்காலத்திலே குளிக்கும் முன்னர் silent_Mode-லயும் குளிக்கும்போது Loud_Mode-லயும் குளிச்சு முடிச்சா Vibrating_ Mode-லயும், உடம்பு இருக்கு!

vikatan

  • தொடங்கியவர்

பபுள் கம் வந்த கதை!

 
 
 
 
கோப்புப் படம்
கோப்புப் படம்
 
 

பொதுவாக என் போன்ற சிறுவர்களுக்குப் பபுள் கம் என்றால் ரொம்ப பிடிக்கும். அந்தப் பபுள் கம் எப்படி வந்தது?

முதலில் சூயிங்கம்தான் கண்டுபிடிக்கப்பட்டது. அது கண்டுபிடிக்கப்பட்டுக் கிட்டத்தட்ட 50 ஆண்டுகள் கழித்துத்தான் பபுள் கம்மை தயாரித்தார்கள். ஃப்ராங்க் ஃப்ளீர் என்பவர் ‘ப்ளிப்பர்-ப்ளப்பர்’ என்ற பெயரில் 1906-ம் ஆண்டு முதன் முதலாகப் பபுள் கம்மை தயாரித்தார். அதை மென்ற பிறகு அதை ஊதினார். அப்போது அது முகத்தில் ஒட்டி கொண்டது. ஒட்டிய பபுள் கம்மை எடுக்க எண்ணெய் தேவைப்பட்டது. அதனால், அது விற்பனைக்கே வரவில்லை.

பின்னர் 22 ஆண்டுகள் கழிந்தது. 1928-ல் அவருடைய சிக்லெட் நிறுவனத்தில் வால்டர் டயாமெர் என்பவர் வேலை பார்த்துவந்தார். அவர்தான் சரியான பபுள் கம்மை உருவாக்கினார். வாயில் போட்டு மென்ற சில நிமிடங்களில் பெரிதாக ஊத முடிந்தது. விற்பனைக்கு வந்த பிறகு குழந்தைகள் அதிக ஆர்வத்தோடு பபுள் கம்மை வாங்கினார்கள். பபுள் கம் 1950-களுக்கு முன்பாகவே உலகெங்கும் விற்பனையாகத் தொடங்கியது. விண்வெளியிலும்கூடப் பபுள் கம் சுவைக்கப்பட்டிருக்கிறது. 1965-ம் ஆண்டில் அமெரிக்காவின் ‘ஜெமினி-5’ விண்கலத்தில் சென்ற விண்வெளி வீரர்கள், பபுள் கம்மை சுவைத்தார்கள். இது அதிகாரபூர்வமாகப் பதிவும் செய்யப்பட்டுள்ளது.

பபுள் கம் ஒட்டும்தன்மை உள்ளதால், அதை மெல்லும்போதும், ஊதும்போதும் கவனமாக இருக்க வேண்டும். குழந்தைகள் அதை அப்படியே விழுங்கவும் வாய்ப்பிருக்கிறது. அப்போது தொண்டைப் பகுதியில் பபுள் கம் சிக்கிக் கொள்ளும் ஆபத்தும் உண்டு. அதனால்தான் பபுள் கம்மை சிறுகுழந்தைகள் சாப்பிட வேண்டாம் என்று சொல்கிறார்கள்.

tamil.thehindu

  • தொடங்கியவர்

10 செகண்ட் கதைகள்

ஓவியம்: ஸ்யாம்

 

68p1.jpg

சந்தேகம்

``சாமிக்கும் பேய்க்கும் சண்டை வந்தா, யாருப்பா ஃபர்ஸ்ட் ஜெயிப்பா?'' எனக் கேட்டது குழந்தை.

- க.வி

68p2.jpg

ஆசுவாசம்

பந்தய தூரத்தைக் கடந்ததும் ஆசுவாசப்பட்டது, சவுக்கடி வாங்கிய மாடு.

 - பெ.பாண்டியன்

68p3.jpg

இயல்பு

தமிழகம், மீண்டும் இயல்பு வாழ்க்கைக்குத் திரும்பியது. மக்கள், வங்கி வாசலில்.

- இரா.பார்த்திபன்

68p4.jpg

நடிப்பு

பிச்சைக்காரன் சாப்பிடும் காட்சியில், உண்மையான பிச்சைக்காரனை நடிக்க வைத்தார்கள். நான்கு டேக் எடுத்தான் அவன்.

- நந்த குமார்

68p5.jpg

பேங்க்

``ஏன் எல்லாரும் வரிசையா நிக்குறீங்க?'' என்றேன், ``இது பேங்க் விளையாட்டு'' என்றான் பொடியன்.

- ரியாஸ்

68p7.jpg

சினிமா

தேசிய கீதம் முடிந்து  தொடங்கியது படம்,  அயிட்டம் சாங்குடன்.

- ரியாஸ்

68p6.jpg

நண்பன்

``சார், என்னைத் தெரியலையா?

நான்தான் உங்க ஃபேஸ்புக் ஃப்ரெண்ட்!''

என்றான் டிராஃபிக் போலீஸிடம் மாட்டிக்கொண்டவன்.

- க.வி

68p8.jpg

வாழ்வு

கடவுள் கைவிட்டபோதும், பேய் ஓட்டி வாழ்ந்துகொண்டிருந்தார் கோயில் பூசாரி.

- பெ.பாண்டியன்

68p9.jpg

தேடல்

புதிதாக வெளியூருக்குச் செல்லவிருந்த அப்பாவுக்கு, கூகுள் மேப்பில் வழி காண்பித்தான் சிறுவன் ராகுல்.

- க.விக்னேஷ்

68p10.jpg

நெருக்கம்

நெருங்கவேவிடாதவர்கள், எல்லோரும் நெருங்கி நின்றார்கள் இறுதி ஊர்வலத்தில்.

- கே.சதீஷ்

  • தொடங்கியவர்

கூகுளில் அதிகம் தேடப்பட்ட பிரியங்கா சோப்ராவின் ஆடை!

 

priyanka_00560.PNG

கூகுள் நிறுவனம் ஒவ்வொரு ஆண்டின் இறுதியிலும் அந்த ஆண்டில் அதிகம் தேடப்பட்ட தகவல்களின் பட்டியலை வெளியிடுவது வழக்கம். அதன்படி, இந்த ஆண்டு ஆஸ்கர் விருது வழங்கும் விழாவுக்கு பிரியங்கா சோப்ரா அணிந்துவந்த ஸ்ட்ராப்லெஸ் கவுன் அதிகமான நபர்களால் தேடப்பட்ட ஆடை வடிவமைப்பாக அறிவிக்கப்பட்டுள்ளது. இது பிரபல ஃபேஷன் டிசைனர் ஸுஹாய்ர் முராத் வடிவமைத்தது என்பது குறிப்பிடத்தக்கது. இது குறித்து பிரியங்கா சோப்ரா தனது ட்விட்டர் பக்கத்தில் மகிழ்ச்சி தெரிவித்துள்ளார்.

vikatan

  • தொடங்கியவர்

டெக்மோரா

 

 

62p2.jpg

வீட்டுலயோ, பேச்சுலர் ரூம்லயோ உள்ளவங்களுக்கு கட்டாயம் வை-ஃபை ஷேரிங்கோட அருமை டீச்சர் சொல்லித்தராமலேயே தெரியும். ஆனா, ஒரே ஒரு வை-ஃபை அதுக்கு 10 பேர் ஷேரிங் போட்டா கூகுள் கூட கொஞ்சம் ஸ்லோவாதான் ஓப்பன் ஆகும். ஆனா அந்த கூகுளே ஒரு வை-ஃபை தந்தா? கேட்க ரைமிங்கா இருக்கு... ஆனா அது தான் உண்மை. கூகுள் ஒரு வை-ஃபை கருவியை அறிமுகம் செஞ்சிருக்கு. கூகுள் நிகழ்ச்சியில் இந்த ஆண்டு அறிவிக்கப்பட்ட கூகுள் வை-ஃபை தற்போது விற்பனைக்கு வந்துள்ளது.

62p1.jpg

இந்த கூகுள் வை-ஃபை ஒரு யூனிட்டாகவும், மூன்று யூனிட்களாகவும் இணையத்தில் விற்பனைக்கு வந்துள்ளது. ஒரு யூனிட் 129 டாலர்க்கும், மூன்று யூனிட் கொண்ட செட் 299 டாலர்க்கும் விற்கப்படுகிறது.  இதன் மூலம் 1500 சதுர‌ அடி முதல் 5000 சதுர அடி வரைக்கும் இணைய சேவையை வழங்கும்.

மேலும் இதனை ஆப் மூலம் கட்டுப்படுத்த முடியும். அந்தக் கருவியை `வேண்டாம்' என நிறுத்தி வைக்கவும் இந்த ஆப் மூலம் முடியும்.

62p3.jpg

இதனைக் கொண்டு மொத்த அலுவலகம் அல்லது வீட்டை வை-ஃபை மூலம் இணைத்து அனைத்து வை-ஃபை கருவிகளையும் கட்டுப்படுத்த முடியும். 10 - 25 Mbps வேகத்தில் ட‌வுன்லோட் செய்ய முடியும். ஒற்றை யூனிட் மூலம் செயல்படுவதில் இணையப் பயன்பாட்டு வேகம் 175 Mbps என்ற அளவில் இருக்கும் எனத் தெரிவித்துள்ளது.

எளிதில் எடுத்துச் செல்லக்கூடியதாக வடிவமைக்கப்பட்டிருக்கும் இவை அமேஸானில் விற்பனைக்கு வந்துள்ளது.  வை-ஃபை ரூட்டர், இன்டெர்நெட் இணைப்புகள் ஆகியவற்றுக்கு மாற்றாக இந்த வை-ஃபை இருக்குமாம். இனிமே பாக்கெட்ல போட்டுட்டு போய் ஏரியா முழுக்க வை-ஃபை சப்ளை பண்ண வேண்டியதுதான். அப்பறம் என்ன `ஃப்ரீ வை-ஃபை இங்கு கிடைக்கும்!'னு டி-ஷர்ட் போட்டு சுத்துங்க பாஸ்..!

vikatan

  • தொடங்கியவர்

வாட்ஸ் அப் கலக்கல்: சைக்ளோன் மாதம்

 

 
title_3104566f.jpg
 
 
 

1_3104576a.jpg

10_3104575a.jpg

2_3104574a.jpg

3_3104573a.jpg

4_3104572a.jpg

5_3104571a.jpg

6_3104570a.jpg

7_3104569a.jpg

8_3104568a.jpg

9_3104567a.jpg

 
  • தொடங்கியவர்

முகங்கள்: உணர்வுகளைப் பிரதிபலிக்கும் உருவங்கள்!

 

 
artist_3105193f.jpg
 
 
 

கர்ப்பிணிப் பெண்களின் நிறைமாத வயிறு, பிறந்த குழந்தையின் பிஞ்சு பாதங்கள், திருமணத்தின்போது இணையும் கரங்கள் என வாழ்வின் மறக்கமுடியாத சில தருணங்களைப் பதிவு செய்யும் காஸ்டிங் தொழில்நுட்பம் வெளிநாடுகளில் ஏகப் பிரபலம். வட இந்தியாவில் நிலைநாட்டிய இந்தத் தொழில்நுட்பம், தமிழகத்திலும் எட்டிப் பார்க்கத் தொடங்கிவிட்டது.

artist_2_3105194a.jpg

சென்னை மேடவாக்கத்தைச் சேர்ந்த கீர்த்தியும் காஸ்டிங் அச்சுகளை உருவாக்கி, பரிசுப் பொருட்களாக விற்பனை செய்து வருகிறார். “எனக்கு ரெண்டாவது குழந்தை பிறந்தப்போ, பாதங்களை அச்செடுக்கணும்னு நிறைய இணையதளங்களைத் தேடினேன். எதுவும் கிடைக்கலை. எப்படி செய்யறதுன்னு யூ-டியூபில் பார்த்து அச்செடுத்து வைத்தேன். அப்போ, என் பெரிய மகனும் என் கைகளை ஏன் அச்செடுக்கலைன்னு கேட்டான். இரண்டு பேரின் கைகளையும் அச்செடுத்தோம். வீட்டுக்கு வரும் நண்பர்கள், உறவினர்கள் இதை எப்படிச் செய்தேன்னு கேட்கத் தொடங்கினாங்க. அதைத் தொடர்ந்துதான், இதையே தொழிலா செய்யலாம்னு முடிவெடுத்தேன். போன வருஷம் ஆரம்பித்து, நல்லபடியா போயிட்டிருக்கு” என்று சொன்னவர், ஆன்லைன் மூலமே தன் விற்பனையை மேற்கொண்டுவருகிறார்.

அச்செடுக்க வேண்டிய பகுதியின் மேல், மாவை உற்றி, பிரதி எடுத்து, அதனை அப்படியே மோல்டிங்காக மாற்றுவதுதான் காஸ்டிங். பிறகு வெள்ளி, செம்பு, தங்கம் என்று வாடிக்கையாளர் விரும்பும் நிறங்களை ஏற்றுகிறார். பார்ப்பதற்கு எளிதாகத் தோன்றினாலும், ஓர் அச்சு செய்து முடிக்க ஒருவாரம் எடுத்துக்கொள்கிறார் கீர்த்தி.

keerthi_3105186a.jpg

“எனக்கு ஆர்டர் கிடைத்ததும் நேரடியாகச் சென்றுதான் அச்செடுத்து வருவேன். சென்னை போன்ற நகர்ப்புற பகுதிகளில் கர்ப்பிணி வயிறு, குழந்தையின் பாதம், கைகள் போன்றவற்றை அச்சு எடுக்கச் சொல்வார்கள். தென் மாவட்டங்களில் பெற்றோரின் கைகளைப் பிரதி எடுப்பதில் ஆர்வம் காட்டுகின்றனர். உலகிலேயே உன்னதமான பரிசு அம்மாவின் ஆசிர்வாதம்னு சொல்லி ஒருத்தர் தன் அம்மாவோட கைகளை அச்செடுக்கணும்னு சொன்னார். நானும் அச்செடுத்து, செய்து கொடுத்தேன். அந்தப் பாட்டி தன் கை சுருக்கம், ரேகை, மோதிர அச்சு, அடிபட்ட காயத்தின் தழும்புவரை எல்லாத்தையும் நான் செய்து கொடுத்த காஸ்டிங் உருவத்தில் சரிபார்த்து என்னைப் பாராட்டினாங்க” என்று பெருமிதத்தோடு சொல்கிறார் கீர்த்தி. போட்டோ பிரேம்களுக்குள் வைத்து, சுவரில் மாட்டும் விதத்திலும் காஸ்டிங்குகளை இவர் செய்து தருகிறார்.

tamil.thehindu.

  • தொடங்கியவர்

99p1.jpg

மல்லுவுட் மரியா ராய்

கோட்டயத்தில் பிறந்த கேட்பரீஸ். ஸ்கூல் படிப்பை முடித்துவிட்டு தமிழகம் வந்தவரை அன்போடு வரவேற்றது சென்னை. லயோலாவில் டிகிரி முடித்துவிட்டு சினிமாவிற்குள் நுழைந் தார். ‘நோட்புக்’ படத்தில் சின்ன வேடத்தில் தலைகாட்டியவர் பின், ‘ஹோட்டல் கலிபோர்னியா’ படத்தில் நடித்தார். அதன்பின் கிடைத்தது பிருத்விராஜ் பட வாய்ப்பு. ‘மும்பை போலீஸ்’ படத்தில் நடித்தவர் இப்போது தீவிர டான்ஸ் பயிற்சிகளில் ஈடுபட்டிருக்கிறார். பிரபல எழுத்தாளர் அருந்ததி ராயின் மருமகள்தான் மரியா ராய். இலக்கியத்தில் இன்ட்ரெஸ்ட் உண்டா?

99p2.jpg

டோலிவுட் ஹம்சா நந்தினி

புனேயில் பிறந்த அழகுப்புயல். சிறு வயதிலிருந்தே மாடலிங்கில் ஆர்வம் என்பதால் முதலில் கால் வைத்தது அந்த ஏரியாவில்தான். எக்கச்சக்க டி.வி விளம்பரங்கள், செலிபிரட்டி கிரிக்கெட் லீக் போன்றவற்றில் வந்து போனார். விடுவார்களா டோலிவுட்வாசிகள். `வாங்க' என அழைத்துப் போய்விட்டார்கள். ஹம்சா டான்ஸில் பின்னுவார் என்பதால் முக்கால்வாசி ஐட்டம் நம்பர் டான்ஸ்கள்தான் ஆடியிருக்கிறார். அதுவும் 2013-ல் மட்டும் நான்கு படங்களில் ஆடியிருக்கிறார். இவரின் ராசிக்காகவே அடுத்தடுத்து வாய்ப்பு கள் குவிகின்றன. அப்படியே ஹீரோயின் என்ட்ரி!

99p3.jpg

சாண்டல்வுட் நபா நடேஷ்

ர்நாடகாவின் சிருங்கேரியில் பிறந்த ஜில்ஜில் குல்ஃபி. மங்களூரில் இன்ஜினீயரிங் முடித்த கையோடு மாடலிங் உலகில் நுழைந்தார். `ஃபெமினா மிஸ் இந்தியா' போட்டியில் டாப் மாடல்களுள் ஒருவராக வந்தார். அதன்பின் சில மேடை நாடகங்களில் நடித்தார். அதன் வழியாக ‘ப்ரீத்தி கீத்தி இத்யாதி’ என்ற படத்தில் கெஸ்ட் ரோலில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. இரண்டாவது படத்தில் அடித்தது ஜாக்பாட். சிவராஜ்குமார் ஜோடியாக ‘வஜ்ராக்யா’ படத்தில் நடித்தார். லேட்டஸ்டாய் ‘லீ’ என்ற படத்திலும் திறமை காட்டியிருக்கிறார். தொடர் ஹிட்டுக்கு வாழ்த்துகள்!

  • தொடங்கியவர்
உழைக்கத்தெரியாமல் கடன்படேல்!
 

article_1482118878-gfgfgj.jpgமக்களிடம் சிறுகச் சிறுக சேமிக்கும் பழக்கத்தை உருவாக்கவே வங்கிகள் ஆரம்பிக்கப்பட்டன. இவற்றுக்கு இதர பணிகள் பல இருந்தாலும், சேமிக்கும் விடயங்களை மக்களிடையே உருவாக்கச் செய்யும் பணிகளை இன்றளவும் செய்து வருகின்றன. 

ஆனால், துரதிர்ஷ்டவசமாக மக்களில் பலர் ஆடம்பர வாழ்க்கைக்கு ஆசைப்பட்டு, அரசாங்க வங்கிகள், தனியார் நிதி நிறுவனங்களிடம் கடன் வாங்கும் பழக்கம் வைரஸாகப் பரவிவிட்டது. 

சொகுசு வாகனங்களைக் கடனுக்கு வாங்குதல், வருமானத்துக்கு மீறிய வகையில் வீடுகளைக் கடன்பட்டுக் கட்டுவதற்காக புற்றீசல்கள்போல் வங்கிகளை மொய்த்துப் பணம்பெற்று, ஈற்றில் பெற்ற பணத்துக்கு வட்டிகூடக் கட்ட வழியின்றி, வீடு, வாசல், வாகனங்களை இழந்து, நடுத்தெருவில் நிற்கும் மக்கள் கூட்டம் ஏராளம், ஏராளம். 

தகுதிக்கு மீறி ஆசைப்படேல்; உழைக்கத்தெரியாமல் கடன்படேல்! 

Edited by நவீனன்

  • தொடங்கியவர்

பென்சில்வேனியா நிலக்கரிச் சுரங்க விபத்தில் 239 பேர் பலி: 19-12-1907

அமெரிக்காவின் பென்சில்வேனியா மாநிலத்தில், யுகியோகெனி ஆற்றின் அருகில் உள்ள மலையடிவாரத்தில் பிட்டிஸ்பர்க் நிலக்கரி நிறுவனத்தின் தார் நிலக்கரி சுரங்கம் அமைக்கப்பட்டிருந்தது. சுமார் 2 மைல் ஆழம் கொண்ட இந்த சுரங்கத்தில், வெட்டியெடுக்கப்படும் நிலக்கரியை வெளியில் கொண்டு வரும் பணியில் ஏராளமான தொழிலாளர்கள் ஈடுபட்டனர். கடந்த 1907ம் ஆண்டு டிசம்பர் 19-ம் தேதி

 
பென்சில்வேனியா நிலக்கரிச் சுரங்க விபத்தில் 239 பேர் பலி: 19-12-1907
 
அமெரிக்காவின் பென்சில்வேனியா மாநிலத்தில், யுகியோகெனி ஆற்றின் அருகில் உள்ள மலையடிவாரத்தில் பிட்டிஸ்பர்க் நிலக்கரி நிறுவனத்தின் தார் நிலக்கரி சுரங்கம் அமைக்கப்பட்டிருந்தது. சுமார் 2 மைல் ஆழம் கொண்ட இந்த சுரங்கத்தில், வெட்டியெடுக்கப்படும் நிலக்கரியை வெளியில் கொண்டு வரும் பணியில் ஏராளமான தொழிலாளர்கள் ஈடுபட்டனர்.

கடந்த 1907ம் ஆண்டு டிசம்பர் 19-ம் தேதி காலையில் 240 தொழிலாளர்கள் பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது எரிவாயு திடீரென தீப்பிடித்து வெடித்ததில் சுரங்கம் இடிந்து விழுந்தது. யாரும் வெளியில் வர முடியாதபடி நுழைவு வாயிலும் அடைபட்டது. இதில் சுரங்கத்தில் புதைந்தும், தீயில் கருகியும் 239 பேர் உயிரிழந்தனர்.

நுழைவு வாயிலின் அருகில் நின்றிருந்த ஜோசப் மேப்பிள்டன் என்ற ஒரே ஒரு தொழிலாளி மட்டும் அதிர்ஷ்டவசமாக உயிர்பிழைத்தார். பென்சில்வேனியாவில் நடந்த மிகப்பெரிய பேரழிவுகளில் இதுவும் ஒன்றாகும்.

இதேநாளில் நடந்த முக்கிய நிகழ்வுகள் வருமாறு:-

1961 - போர்த்துகீச குடியேற்ற நாடான டாமன் டையூ பகுதியை இந்தியா தன்னுடன் இணைத்துக்கொண்டது.

1871 - யாழ்ப்பாணத்தில் முதல் தடவையாக கத்தோலிக்க மதகுரு பதவிகள் வழங்கப்பட்டன.

1877 - யாழ்ப்பாணம், நெடுந்தீவில் வாந்திபேதி, மற்றும் சின்னம்மை நோய் பரவியதில் பலர் இறந்தனர்.

1916 - முதலாம் உலகப் போரின்போது பிரான்சில் வேர்டன் என்ற இடத்தில் இடம்பெற்ற போரில் ஜெர்மனியப் படைகளை பிரெஞ்சுப் படைகள் தோற்கடித்தன.

1941 - அடால்ஃப் ஹிட்லர் ஜெர்மனிய ராணுவத் தலைவர் ஆனார்.

1972 - சந்திரனுக்கு கடைசி தடவையாக மனிதனை ஏற்றிச் சென்ற அப்பல்லோ 17 பாதுகாப்பாக பூமி திரும்பியது.

1934 - இந்தியாவின் 12வது குடியரசுத் தலைவர் பிரதிபா பாட்டீல் பிறந்தநாள்.
 
 

ஹாலிவுட் சூப்பர் ஹிட் திரைப்படம் டைட்டானிக் ரிலீஸ் ஆன நாள்: 19-12-1997

மிகப்பெரிய ஆடம்பரக் கப்பலான டைட்டானிக், தனது முதல் பயணத்தின்போதே மூழ்கி பல உயிர்களை பலிவாங்கியதை தத்ரூபமாக காட்டியிருக்கும் பாலிவுட் சூப்பர் ஹிட் படம்தான் ‘டைட்டானிக்’ படம் முழுக்க கப்பலை மட்டுமே காட்டியிருந்தால் அதில் விறுவிறுப்பாக இருக்காது என்பதால், அதில் பயணிக்கும் மக்களின் வாழ்க்கையை பிரதிபலிக்கும் காட்சிகள் இருந்தன. குறிப்பாக அழகான காதல் ஜோடியின் ஆழ்ந்த காதலை யதார்த்தமாக பதிவு செய்யப்பட்டிருந்தது.

 
 
 
 
ஹாலிவுட் சூப்பர் ஹிட் திரைப்படம் டைட்டானிக் ரிலீஸ் ஆன நாள்: 19-12-1997
 
மிகப்பெரிய ஆடம்பரக் கப்பலான டைட்டானிக், தனது முதல் பயணத்தின்போதே மூழ்கி பல உயிர்களை பலிவாங்கியதை தத்ரூபமாக காட்டியிருக்கும் பாலிவுட் சூப்பர் ஹிட் படம்தான் ‘டைட்டானிக்’

படம் முழுக்க கப்பலை மட்டுமே காட்டியிருந்தால் அதில் விறுவிறுப்பாக இருக்காது என்பதால், அதில் பயணிக்கும் மக்களின் வாழ்க்கையை பிரதிபலிக்கும் காட்சிகள் இருந்தன. குறிப்பாக அழகான காதல் ஜோடியின் ஆழ்ந்த காதலை யதார்த்தமாக பதிவு செய்யப்பட்டிருந்தது.

இதற்காக மிகவும் சிரத்தை எடுத்து காட்சிகளை அமைத்த இயக்குனர் கேமரூன், படத்தை 1997-ம் ஆண்டு ஜூலை 2-ம் தேதி திரையிட திட்டமிட்டிருந்தார். ஆனால் தயாரிப்புக்கு பின்னர் தொழில்நுட்ப பணி காரணமாக தாமதம் ஏற்பட்டது. இதனால் டைட்டானிக் எதிர்பார்த்த வெற்றியை பெறாது என்றே எதிர்பார்த்தனர்.

இதுபோன்ற சர்ச்சைகளையெல்லாம் கடந்து, 1997ம் ஆண்டு டிசம்பர் 19-ம் தேதி டைட்டானிக் வெளியிடப்பட்டது. ஆனால் எதிர்பார்த்ததைவிட வசூலை அள்ளிக் குவித்ததுடன் 11 விருதுகளையும் வென்று சாதனை படைத்தது.

லியானார்டோ டிகாப்ரியோ, கேட் வின்ஸ்லெட் மற்றும் பல நட்சத்திரங்கள் நடித்துள்ள டைட்டானிக் ஒட்டுமொத்த ரசிகர்களின் ஆதரவையும் பெற்றது.
 

http://www.maalaimalar.com

  • தொடங்கியவர்

உலகின் மிகப் பழமையான நீர் கண்டுபிடிப்பு!

mining_02321.jpg

லகின் மிக பழமையான நீர் கனடாவில் உள்ள ஒர் சுரங்கத்தில் இருப்பதை கனடா டொராண்டோ பல்கலைக்கழக  விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர். இதுவரை கண்டுபிடிக்கப்பட்ட பழமையான நீர் மாதிரிகளில் இது தான் மிகப் பழமையான நீர் என்று விஞ்ஞானிகள் கருத்துத் தெரிவித்துள்ளனர்.

இதற்கு முன் 2013 ஆம் ஆண்டு கண்டுபிடிக்கப்பட்ட பழமையான  நீர் மாதிரிகள் 2.4 கிலோமீட்டர் ஆழத்திலும், 1.5 பில்லியன் ஆண்டுகளுக்கு முற்பட்டதாகவும் இருந்தது. ஆனால் இப்போது சுரங்கத்தில் கண்டுபிடிக்கப்பட்டிருக்கும், 2 பில்லியன் ஆண்டுகளுக்கு முற்பட்ட இந்த நீர் மாதிரியானது கிட்டத்தட்ட மூன்று கிலோமீட்டர் ஆழத்தில் இருக்கிறது. இந்த நீர் மாதிரியில் அதிக அளவில் சிறு உயிரினங்கள் வாழ்ந்ததற்கான ரசாயன சுவடுகள் கிடைத்துள்ளது. இந்த ரசாயன சுவடுகளை வைத்து ஆராய்ச்சிகள்  மேற்கொண்டுவருவதாக ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

vikatan

  • தொடங்கியவர்

2016 உலக அழகி மகுடம் இவருக்குதான் :)

miss_worlkd_12302.png

போர்ட்டோரிகா (Puerto Rico) நாட்டின் மாடல் அழகி 'ஸ்டெஃபானி டால் வாலஸ் டியாஸ்',   2016ம் ஆண்டின் உலக அழகி பட்டத்தை வென்றுள்ளார்.  2016 ம் ஆண்டின் உலக அழகியை தேர்வு செய்வதற்கான போட்டி, வாஷிங்டனில் நடைபெற்றது. இந்தியா உட்பட  பல்வேறு நாடுகளில் இருந்து 116 அழகிகள், இந்த போட்டியில் கலந்து கொண்டனர். கென்யா, இந்தோனேசியா, டொமினிக்கன் குடியரசு, பிலிப்பைன்ஸ், போர்ட்டோரிகா உள்ளிட்ட நாடுகளைச் சேர்ந்த அழகிகள், முதல் ஐந்து இடங்களை பிடித்தனர்.

போர்ட்டோரிகாவைச் சேர்ந்த 19 வயது ஸ்டெஃபானி டால், ’இந்த வெற்றியை என் தாய்நாட்டிற்கு சமர்ப்பிக்கிறேன்’ எனத் தெரிவித்துள்ளார்.  

Cz_8uxmW8AAWQOs.jpg

The newly crowned Miss World 2016, Stephanie Del Valle from Puerto Rico!

The newly crowned Miss World 2016, Stephanie Del Valle from Puerto Rico!

  • தொடங்கியவர்
1983 : உலகக் கிண்ண கால்பந்தாட்டச் சம்பியன் கிண்ணம் திருடப்பட்டது
 

வரலாற்றில் இன்று...

டிசம்பர் - 19

 

1154 : இங்கிலாந்தின் மன்னராக இரண்டாம் ஹென்றி முடிசூடினார்.

 

1606 : ஐக்கிய அமெரிக்காவின் 13 குடியேற்ற நாடுகளில் முதலாவதான வேர்ஜீனியாவின் ஜேம்ஸ்டவுன் நகரில் இங்கிலாந்தில் இருந்து மூன்று கப்பல்களில் ஆங்கிலேயர்கள் வந்திறங்கினர்.

 

868varalaru.jpg1871 : யாழ்ப்பாணத்தில் முதல் தடவையாக கத்தோலிக்க மதகுரு பதவிகள் வழங்கப்பட்டன.

 

1907 : பென்சில்வேனியாவில் நிலக்கரிச் சுரங்கத்தில் இடம்பெற்ற குண்டுவெடிப்பில் 239 பேர் கொல்லப்பட்டனர்.

 

1916 : முதலாம் உலகப் போரில் பிரான்ஸில் வேர்டன் என்ற இடத்தில் இடம்பெற்ற சமரில் ஜேர்மனியப் படைகளை பிரெஞ்சுப் படைகள் தோற்கடித்தன.

 

1941 : அடோல்ஃப் ஹிட்லர் ஜேர்மனிய இராணுவத்தின் தளபதியானார்.

 

1961 : போர்த்துக்கேய குடியேற்ற நாடான டாமன் டையூ பகுதியை இந்தியா தன்னுடன் இணைத்துக் கொண்டது.

 

1963 : ஐக்கிய இராச்சியத்திடம் இருந்து சான்சிபார் சுதந்திரம் பெற்று, சுல்தான் ஹமூட் பின் முஹமட் தலைமையில் முடியாட்சியை ஏற்படுத்தியது.

 

1967 : இரு நாட்களின் முன்னர் கடலில் நீந்தும்போது காணாமல் போன அவுஸ்திரேலிய பிரதமர் ஹரல்ட் ஹோல்ட் இறந்து விட்டதாக அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டது.

 

1972 : சந்திரனுக்கு கடைசித் தடவையாக மனிதரை ஏற்றிச் சென்ற அப்பலோ17 பாதுகாப்பாக பூமிக்குத் திரும்பியது.

 

1983 : உலக கிண்ண கால்பந்தாட்டச் சுற்றுப்போட்டிகளில் சம்பியன் அணிக்கு வழங்கப்படும் அசல் ஜுலேஸ் ரிமேட் கிண்ணம் பிரேஸிலில் அந்நாட்டு கால்பந்தாட்ட அமைப்பின் தலைமையகத்தில் வைத்துத் திருடப்பட்டது. இக்கிண்ணம் மீண்டும் கண்டுபிடிக்கப்படவில்லை.

 

1984 : ஹொங்கொங்கின் ஆட்சியை ஜூலை 1, 1997 இல் மக்கள் சீனக் குடியரசிடம் மீண்டும் ஒப்படைக்கும் ஒப்பந்தம் சீனத் தலைவர் டெங் க்ஸியாவோபிங், பிரித்தானியப் பிரதமர் மார்கரெட் தாட்சர் ஆகியோருக்கிடையில் கையெழுத்திடப்பட்டது.

 

1986 : சோவியத் எதிர்ப்பாளியான அந்திரேய் சாகரொவ் வீட்டுக் காவலில் இருந்து விடுவிக்கப்பட்டார்.

 

1997 : இந்தோனேஷியாவில் விமானம் ஒன்று வீழ்ந்து நொறுங்கியதில் 104 பேர் கொல்லப்பட்டனர்.

 

1997 : ஜேம்ஸ் கெமரூன் இயக்கிய டைட்டானிக் திரைப்படம் வெளியானது.

 

2001 : ஆர்ஜென்டீனாவில் அரசாங்கத்துக்கு எதிராக பாரிய ஆர்ப்பாட்டங்கள் ஆரம்பமாகின.

 

2010 : இந்திய கிரிக்கெட் நட்சத்திரமான சச்சின் டெண்டுல்கர் டெஸ்ட் போட்டிகளில் 50 ஆவது சதத்தை குவித்து புதிய மைல்கல்லை எட்டினார்.

 

2012 : தென் கொரியாவின் முதலாவது பெண் ஜனாதிபதியாக பார்க் குவென் ஹை தெரிவானார்.

metronews.lk

Edited by நவீனன்

  • தொடங்கியவர்
கைதிகளின் கைவண்ணம்
 

article_1482133643-1.2.jpg

திருகோணமலை சிறைச்சாலை மதிலில் கைதிகளினால் வரையப்பட்ட ஓவியங்களைக் காட்சிக்கு விடும் நிகழ்வும் கைதிகளினால் நிர்மாணிக்கப்பட்ட புனர்வாழ்வுக் காரியாலயத் திறப்பு விழாவும் ஞாயிற்றுக்கிழமை (18) மாலை நடைபெற்றது. (படப்பிடிப்பு: எப்.முபாரக்)

article_1482133725-1.3.jpg

article_1482133701-1.33.jpg

 

.tamilmirror.lk

Edited by நவீனன்

  • தொடங்கியவர்

கிறிஸ்துமஸ் தாத்தாவுக்கு இந்தியச் சிறுவன் எழுதிய உருக்கமான கடிதம்!

 

Letter1_02341.jpg

சிரியாவில் கடந்த பல ஆண்டுகளாக உள்நாட்டுப் போர்  நிலவி வருகிறது. ராணுவத்தினருக்கும் கிளர்ச்சியாளர்களுக்கும் இடையே நடை பெற்றுவரும் தாக்குதல்களால் பொதுமக்கள் பெருமளவில் கொல்லப்படுகின்றனர். தாக்குதல்கள் நிறுத்தப்பட்டு சிரியாவில் அமைதி நிலவ வேண்டும் என்று பலரும் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

சிரியாவில் நடக்கும் தாக்குதல்கள் பெரியவர்களை மட்டுமல்லாமல் சிறுவர்களின் மனதையும் காயப்படுத்தி இருப்பதற்கு இந்தச் சிறுவன் சிறந்த உதாரணம். இங்கிலாந்தின் கிழக்கு மிட்லேண்ட்ஸ் பகுதியைச் சேர்ந்த ஆருஷ் ஆனந்த் என்ற ஏழு வயது சிறுவன் இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவன். நாட்டிங்காம் உயர்நிலைப்பள்ளியில் 3-ம் வகுப்பு படித்துவருகிறான். சமீபத்தில் ஆருஷ் ஆனந்த் கிறிஸ்துமஸ் தாத்தாவிற்கு எழுதிய கடிதம் ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது.

இங்கிலாந்தில் கிறிஸ்துமஸ் பண்டிகை கோலாகலமாக தொடங்கிவிட்டது. இந்நிலையில் ஆருஷ் ஆனந்த் படிக்கும் பள்ளியின் ஆசிரியர் வகுப்பில் மாணவர்களிடம் 'கிறிஸ்துமஸ் தாத்தாவிடம் என்ன பரிசு வேண்டும்?' என எழுதும்படி கூறியுள்ளார். உடனே  பேப்பர் எடுத்த மாணவர்கள், தங்களுக்குப் பிடித்தப் பரிசு பொருட்களை பட்டியலிட்டு எழுதியுள்ளனர். ஆனால் ஆருஷ் ஆனந்த், ' சிரியாவில் அமைதி நிலவவேண்டும். கிறிஸ்துமஸ் பண்டிகை அன்று சிரியாவில் சமாதானம் திகழவேண்டும் அதுவே எனக்கான கிறிஸ்துமஸ் பரிசு' என  உருக்கமான கடிதத்தை எழுதியிருக்கிறான். சிரியாவில் நடக்கும் உள்நாட்டுப் போரில் அப்பாவி சிறுவர்கள் கொல்லப்பட்டுவருவது இவனது மனதை பெருமளவு பாதித்துள்ளது. இச்சிறுவனின் கடிதத்தை ஆசிரியர் ரிச்சர்டு மில்லர் வெளியிட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

vikatan

  • தொடங்கியவர்
Miss France 2017
 

மிஸ் பிரான்ஸ் 2017 (Miss France 2017) அழகுராணியாக அலீசியா அய்லீஸ் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

 

212982.jpg

 

21298663419-01-02.jpg

 

212981.jpg

 

21298662980-01-02.jpg

 

மிஸ் பிரான்ஸ் 2017 அழகுராணி போட்டியின் இறுதிச் சுற்று பிரான்ஸின் மொன்ட்பேலியர் நகரில் நேற்று முன்தினம் நடைபெற்றது.

 

21298663234-01-02.jpg

 

இதில் மிஸ் கயானா அழகுராணியான அலீசியா அய்லீஸ் முதலிடம் பெற்றார்.  18 வயதான அலீசியா அய்லீஸ் சட்டத்துறை மாணவியாவார்.

 

2129815391174_1143974428985520_828166704

metronews.lk

Edited by நவீனன்

  • தொடங்கியவர்

ஒரு நிமிடத்தில் உலக சாதனை படைத்த பெண்!

 

 

 

 

பிரிட்டனைச் சேர்ந்த லிசா டென்னிஸ், ஒரு நிமிடத்தில் 923 டைல்ஸ் பலகைகளை உடைத்து சாதனை புரிந்துள்ளார். இவர் இதற்கு முன்பு, '1000 டைல்ஸ் பலகைகளை வேகமாக உடைத்த பெண்' என்ற சாதனையையும் புரிந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. 1000 டைல்ஸ் பலகைகளை உடைப்பதற்கு அவர் எடுத்துக் கொண்ட நேரம் 83.98 நொடிகள் மட்டுமே. இவரின் கணவர் க்ரிஸ் பிட்மேன், 1000 டைல்ஸ் பலகைகளை வேகமாக உடைத்த ஆண் என்ற சாதனைக்கு சொந்தக்காரர். வெறும் 51.08 நொடிகளில் இந்த சாதனையை அவர் பதிவு செய்தார். 

.vikatan

  • தொடங்கியவர்

தேவதைகளில் நிறம் என்ன?
--------------------------------------------------------------
இதற்கு பதிலளிக்க முயன்றுள்ளார் ஆப்ரிக்க கலைஞர் ஒருவர்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.