Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இளமை புதுமை பல்சுவை

Featured Replies

  • தொடங்கியவர்

Bild könnte enthalten: 3 Personen, Personen, die lachen, Baseball und Text

 
 
ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவரும், உலகின் தலை சிறந்த துடுப்பாட்ட வீரர்களில் ஒருவருமான ரிக்கி பொன்டிங்கின் பிறந்தநாள் இன்று.

மூன்று தடவை உலகக் கிண்ணம் வென்ற ஆஸ்திரேலிய அணியின் பெருமைக்குரியவர்.
இதில் இரு தடவை இவரது தலைமையிலேயே ஆஸ்திரேலியா முடிசூடியது.

பொன்டிங்கின் துடுப்பாட்டமும் வழிநடத்தலும் ஆஸ்திரேலியாவுக்கு இன்னும் பல டெஸ்ட் வெற்றிகளையும், கிண்ணங்களையும் பெற்றுக்கொடுத்துள்ளது.

அவுஸ்திரேலிய அணி டெஸ்ட் தரப்படுத்தலில் முதலிடம் பெற சிறப்பான தலைமையை வழங்கியவர்.
டெஸ்ட் போட்டிகளில் இரண்டாவது அதிகூடிய ஓட்டங்கள் குவித்தவர்.

Happy Birthday Ricky Ponting
  • Replies 11.3k
  • Views 1.5m
  • Created
  • Last Reply
  • தொடங்கியவர்

டோன்ட் மிஸ் 2016 சினிமாஸ்! - உலக சினிமா

 

 

ந்த ஆண்டின் மிஸ் செய்யக் கூடாத படங்கள் லிஸ்ட்டில் ஏற்கெனவே மலையாளம், ஹாலிவுட் கோட்டா முடித்து பூசணிப் உடைத்தாயிற்று. இப்போது உலக சினிமா வரிசையின் முறை. உலகம் முழுக்க நூற்றுக்கணக்கான சூப்பர் சினிமாக்கள் ஆண்டுதோறும் ரிலீஸாகின்றன. அதில் ஒரு சின்னப் பகுதிதான் இது. இந்தப் படங்களை எல்லாம் பார்த்தே ஆகணும்னு சொல்லல. பார்த்தா நல்லா இருக்கும்னுதான் சொல்றோம்.

78p1.jpg

Love & Friendship :

‘லேடி சூசன்’ என்ற இங்கிலாந்து நாவலை மையமாக வைத்து எடுக்கப்பட்ட திரைப்படம். முதல் கணவரை இழந்து பொருளாதார ரீதியாகத் தடுமாறும் லேடி சூசன் இரண்டாவதாகத் திருமணம் செய்ய முடிவெடுக்கிறாள். கூடவே தன் மகளுக்கும் திருமணம் செய்ய நினைத்து இருவருக்கும் மாப்பிள்ளை தேடுகிறாள். அப்படித் தன் மகளுக்குப் பார்த்த ஜேம்ஸ் என்ற மாப்பிள்ளையை சூசனே திருமணம் செய்துகொள்ள முடிவெடுக்க, அதன் விளைவுகள்தான் கதை. எக்குத்தப்பான இந்தக் கதையை காமெடி பாணியில் சொன்னதற்காகப் பாராட்டப்பட்டார் இயக்குநர் விட் ஸ்டில்மென். மொத்த பட்ஜெட்டைவிட ஆறு மடங்கு வசூலைக் குவித்தது இந்தப் படம்.

78p2.jpg

Things to Come :

ஈரான், கொரியா போலவே ஃபிரான்ஸ் நாட்டுப் படங்களுக்கும் உலக சினிமா ரசிகர்களின் அமோக ஆதரவு இருக்கிறது. இந்த ஆண்டு அப்படிக் கொண்டாடப்பட்ட படங்களில் இதுவும் ஒன்று. நடாலி என்னும் தத்துவ ஆசிரியையின் தாய் திடீரென மரணம் அடைகிறார். இதிலிருந்து மீள்வதற்குள் அவள் வேலை பறிபோகும் சூழல் உருவாகிறது. இதற்கு நடுவே தன் கணவன் தனக்குச் செய்யும் துரோகமும் அவளுக்குத் தெரிய வருகிறது. இப்படிப் பிரச்னைகளிடையே வாழும் அவளின் வாழ்க்கைதான் கதை. உலகம் முழுக்கப் பல சினிமா விழாக்களில் விருதுகளைக் குவித்தது இந்தப் படம்.

78p3.jpg

The Wailing :

த்ரில்லர், ஹாரர் படங்களுக்குப் பெயர் போன தென் கொரியாவில் இருந்து இறக்குமதியான ‘திக்திக்’ சினிமா. மலையடிவார கிராமம் ஒன்றில் திடீரென வித்தியாச நோய் ஒன்று பரவுகிறது. அந்த நோயால் பாதிக்கப்பட்டவர்கள் அடுத்தடுத்து மரணமடைய, இதற்குக் காரணம் புதிதாக அந்த ஊருக்கு வந்துள்ள ஒரு கிழவன்தான் என நம்புகிறார்கள் போலீஸ்காரர்கள். அவனைத்தேடி அவர்கள் அலைய அதன்பின் நடக்கும் விறுவிறு திருப்பங்கள்தான் கதை. கொரிய சினிமாக்களின் ஸ்பெஷலே திரைக்கதைதான் என்பதை இந்தப் படமும் நிரூபித்தது. படம் ரசிகர்களால், விமர்சகர்களால் விமரிசையாகக் கொண்டாடப்பட்டது.

78p4.jpg

Moonlight :

ஹாலிவுட்டில் நூற்றுக்கணக்கில் வெளியாகும் கமர்ஷியல் சினிமாக்களுக்கு நடுவே சில குறிஞ்சிப்பூ சினிமாக்களும் ரிலீஸாகின்றன. அப்படி இந்த ஆண்டு பூத்த குறிஞ்சிப்பூதான் இந்தப் படம். மியாமியின் ஒதுக்குப்புறத்தில் வாழும் கறுப்பின இளைஞனைப் பற்றிய கதை. சிறுவன், டீன் ஏஜ் பையன், இளைஞன் என அவனின் மூன்று பருவங்களை டீட்டெய்லாகச் சொல்லும் கதை. ‘இது மிகவும் அரிதான சினிமா, மிஸ் பண்ணக் கூடாத சினிமா’ என நாடுகள் பாகுபாடில்லாமல் அத்தனை சினிமா ரசிகர்களும் கொண்டாடினார்கள். ஸோ, இந்தப் படத்தை நீங்களும் மிஸ் பண்ணிடாதீங்க மக்களே!

78p5.jpg

Sing Street :

அயர்லாந்து நாட்டில் வெளியான மியூஸிகல் காமெடிப் படம். அயர்லாந்தின் டப்ளின் நகரில் வளரும் சிறுவனுக்கு இசையில் எக்கச்சக்க ஆர்வம். சதா சண்டை, சச்சரவு என இருக்கும் வீட்டில் இருந்து ஓடி வந்துவிடுகிறான். வெளியே சுற்றும்போது ஒரு பெண்ணைச் சந்திக்க, அவளை இம்ப்ரஸ் செய்ய ஒரு இசைக்குழுவை உருவாக்க முயல்கிறான். அந்த முயற்சி என்னவாகிறது என்பது மீதிக்கதை. மியூஸிகல் மூவி என்பதால் படத்தில் ஏராளமான பாடல்கள். ‘ஒரு ஃபீல் குட் படத்தைப் பார்க்க விரும்புபவர்களுக்கு இந்தப் படம் ட்ரீட்’ எனப் பாராட்டினார்கள் விமர்சகர்கள். நீங்க என்ன சொல்றீங்க?

78p6.jpg

The Handmaiden :

‘Fingersmith’ என்ற நாவலை மையமாக வைத்து எடுக்கப்பட்ட சைக்கலாஜிகல் த்ரில்லர். விறுவிறு திரைக்கதைக்கும் பெயர் போன கொரியன் சினிமா. ஜப்பான் ஆக்ரமிப்பு கொரியாவில், ஜப்பான் இளவரசியைத் திருமணம் செய்யத் திட்டமிடும் ஒருவன் அதற்காக ஒரு பெண்ணை இளவரசியின் வேலைக்காரியாக அனுப்புகிறான். அதன்பின் நடக்கும் கிறுகிறு மர்ம சம்பவங்கள்தான் கதை. அடல்ட்ஸ் ஒன்லி காட்சிகள் எக்கச்சக்கமாக இருந்ததால், பல நாடுகள் இந்தப் படத்தை தயக்கத்துடனே அனுமதித்தன. ஆனாலும் ரசிகர்கள் மத்தியில் படம் பெரிய வரவேற்பைப் பெற்றது.

78p7.jpg

Hunt for the Wilderpeople :

நியூசிலாந்து நாட்டுத் திரைப்படம். ‘Wild Pork and Watercress’ என்ற நாவலை மையமாக வைத்து வந்த சினிமா. வயதான பெல்லா - ஹெக் தம்பதிக்கு சிறுவர் சீர்திருத்தப் பள்ளியில் இருந்து தத்துக் கொடுக்கப்படுகிறான் ரிக்கி என்ற சிறுவன். பாசமாய்ப் பார்த்துகொண்ட வளர்ப்புத் தாய் பெல்லா இறந்துவிட, ஸ்ட்ரிக்ட்டான ஹெக்கிற்கு பயந்து காட்டுக்குள் ஓடுகிறான் ரிக்கி. அவனைத் தேடி காட்டுக்குள் அலையும் ஹெக் இறுதியாகக் கண்டுபிடித்துவிடுகிறார். இதற்குள் ஹெக் ரிக்கியைக் கடத்திக்கொண்டு தலைமறைவாகிவிட்டதாகத் தகவல் பரவ, போலீஸ் இருவரையும் தேடத் தொடங்குகிறது. கேட்கும்போது சீரியஸாக இருக்கும் இந்தக் கதையை காமெடியாக சொல்லியிருந்தார் இயக்குநர். படம் விமர்சகர்களிடையே கொண்டாடப்பட்டது.

78p8.jpg

The Innocents :

நாஜிக்களை எதிர்த்த பிரெஞ்சுப் போராளிக் குழு ஒன்றில் பணியாற்றிய ரெட் க்ராஸ் டாக்டரான மேடலின் பாலியாக் என்பவரின் அனுபவங்களை மையமாக வைத்து எடுக்கப்பட்ட படம். போரில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு சிகிச்சையளிப்பதற்காகப் போலந்து வருகிறார் ஒரு மருத்துவர். அங்கு அவர் சற்றும் எதிர்பாராத அதிர்ச்சி ஒன்று காத்திருக்கிறது. அது என்ன? பின் என்னவாயிற்று என்பதைப் படம் பார்த்துதான் தெரிந்துகொள்ள வேண்டும். மாறுபட்ட கதைக்களத்துக்காவே இந்தப் படத்தைத் தவறாமல் பார்க்க வேண்டும் எனப் பரிந்துரைக்கிறார்கள் விமர்சகர்கள்.

78p9.jpg

Under the Shadow :

பெர்ஷிய மொழித் திரைப்படம். கணவன் ராணுவப் பணிக்குச் சென்றுவிட தன் மகளோடு வீட்டில் தனியாக வசிக்கிறாள் ஷிடா. ஒருநாள் அவர்கள் வீட்டின் மீது ஒரு விமானம் மோதுகிறது. அதன் பின் அவர்களை ஏதோ ஒரு தீய சக்தி துரத்துவதை உணர்கிறாள் ஷிடா. அது என்ன? ஏன் இவர்களைத் துரத்துகிறது என்பதுதான் மிச்சக்கதை. ஹாலிவுட் பேய்ப்படங்களுக்கு கொஞ்சமும் சளைக்காத சினிமா இது என முத்திரை குத்துகிறார்கள் ரசிகர்களும் விமர்சகர்களும். ஹாரர் பட விரும்பிகளுக்கு இந்தப் படம் பக்கெட் பிரியாணிதான்.

78p10.jpg

Train to Busan :

ஸோம்பி படங்கள் எடுப்பதில் நாங்கள்தான் கில்லி என மார்தட்டிய ஹாலிவுட்டின் நினைப்பைத் தவிடு பொடியாக்கியது இந்தப் படம். சியோலில் இருந்து பூஸனுக்கு ட்ரெயினில் பயணிக்கிறார்கள் ஒரு அப்பா - மகள் ஜோடி. ஒரு கட்டத்தில் அந்த ரயிலில் இருப்பவர்கள் ஒவ்வொருவராய் ஸோம்பியாக மாற, உயிர் பிழைக்க கம்பார்ட்மென்ட் கம்பார்ட்மென்ட்டாக ஓடுகிறார்கள் அவர்கள். இறுதியில் தப்பித்தார்களா இல்லையா என்பதைப் பதைபதைக்கச் சொல்லியிருப்பார்கள். கொரியன் சினிமாவில் அதிக வசூல் செய்தது இந்தப் படம்தான். உலக அளவில் இந்த ஆண்டின் மிகப்பெரிய ஹிட்களுள் ஒன்று. மிஸ் பண்ணாதீக, அப்புறம் வருத்தப்படுவீக!

vikatan

  • தொடங்கியவர்

கத்திச்சண்டை பட “நான் கொஞ்சம் கருப்பு தான்” பாடல் வீடியோ!

 

இயக்குநர் சுராஜ் இயக்கத்தில் விஷால், தமன்னா, சூரி நடிப்பில் உருவாகிவரும் படம் கத்திச்சண்டை. நீண்ட நாளுக்குப் பிறகு வடிவேலு நடித்திருப்பதால் இப்படத்திற்கு எதிர்பார்ப்பு கூடியிருக்கிறது. மனோதத்துவ டாக்டராக கலக்கியிருக்கிறார் வடிவேலு. பொங்கல் ரிலீஸ் என்று முன்னர் அறிவிக்கப்பட்டிருந்த இப்படம், வரும் 23ம் தேதி ரிலீஸ் உறுதியாகியிருக்கிறது. ஹிப்ஹாப் தமிழா ஆதி இசையில் இப்படத்தில் இடம்பெற்றுள்ள, “நான் கொஞ்சம் கருப்பு தான்” பாடல் வீடியோ இதோ... 

 

 

.vikatan

  • தொடங்கியவர்

சொல்வனம்

 

ஓவியங்கள்: ஹாசிப்கான்

 

ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் IX-611

p92.jpg

ம்... என்றால் அழுதுவிடும் மனதை
தோளில் கை போட்டுத் தேற்றி நிறுத்தியிருக்கிறேன்
இமிக்ரேஷன் வரிசையில்.
‘இப்படியே போய்விடுகிறேனே’ எனப் புலம்பியபடியிருந்த
அதன் காதுகளில் மூன்றே மூன்று மந்திரங்களைச் சொன்னேன்
பிறகு அது கம்மென நின்றுகொண்டது.
கண்டங்களை ஊடறுக்கும் ஒரு பிரமாண்டப் பறவையென
ஓடுதளத்தில் பாந்தமாக நிற்கிறது ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ்
ஒன்றுமே தெரியாத பச்சப்பிள்ளையைப்போல.
உலகம் என்பது ஒரு சிறிய கிராமமாகிவிட்டபடியால்
தேவனிடத்தில் ஏதொன்று கேட்பதற்கும் வழியில்லை.
இந்த நேரத்தில் எந்தையிடம் அளவிலாத அன்பும்
நம் சமூகத்திடம் அளவற்றக் கோபமும்கொள்கிறேன்.
ஒரே ஆறுதல் அத்துணை வாஞ்சையால் உளங்கவரும்
இதோ இந்தப் பணிப்பெண்தாம்.
அம்மணி எத்தனைப் பொலிவு உன் பூ முகத்தில்
‘இருக்கை வாரைக் கட்டுங்கள்’ என்பதில்தான் எத்தனைக் கொஞ்சல்!
பொறுக்க முடியாக் காலம் சுழற்றிவிட்ட சவுக்கடியில்
மூச்சிரைக்க ஓடி தன் வலியச் சிறகுகளால்
வான் நோக்கிச் சீறுகிறது ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ்.
ஜன்னலில் இப்போது பார்க்கிறேன்
எனக்கு நேரெதிர் திசையில் விடுபட்டுக்கொண்டிருந்தது
சிறியதாக
மிக மிகச் சிறியதாக
என் மையத்தில் சுழலும் ஓர் உலகம்,
தாவிப்பிடிக்க யத்தனிக்கும் சிறுவனின் கைகளிலிருந்து
அதுபாட்டுக்கு நழுவிச்செல்லும்
ஒரு ரப்பர் பந்தைப்போல.

- தர்மராஜ் பெரியசாமி


தலைப்பிடப்படாத கவிதை

p92b1.jpg

லைப்பிடப்படாத கவிதை ஒன்று
நடந்துசெல்கிறது.
சரம்சரமான மல்லிகைப்பூ தொங்குகிறது.
வாசமான வாசம்
குணம் மணத்துடன்
ஸ்கூட்டியில் போகும்போது
திசைவேகமும்கொள்கிறது.
கொஞ்சம் முத்தமும் வெப்பமும்
முகிழ்த்து நுரைக்கின்றன தோழர்களுக்கு.
தலைப்பெல்லாம் ஒரு பொருட்டா என்றபடி
அந்தக் கவிதை
எல்லாவற்றையும் ஒருமுறை
அசைத்துப்பார்க்கிறது.

- சச்சின்


இரண்டு கிலோ கெளரவம்

p92a1.jpg

ர்பூசணி என்று அழைப்பது
கெளரவக் குறைவு என்று எண்ணியதால்
`தர்பூஸ் ரெண்டு என்ன ரேட்?’ என்றார்
செல்கடை சித்தப்பு.
தர்பூசணியை எடைக்கு விற்கும்
புத்திசாலிகள் நிறைந்த நாட்டில்
ஏமாளியாக இருத்தல் வரம் ஆதலால்
ஒன்றுக்கு இரண்டாக வாங்கினார்.
`எப்போ இறங்கிய பழம்?’ என
வியாபாரியிடம் விசாரித்த சித்தப்பு
`நேற்றுதான்’ எனச் சொன்னதும்
`கிட்டன்ஸ்லதானா?’ எனக் கேட்டுவிட்டு
பெருமை பொங்கப் பார்த்தார்.
வண்டியைக் கிளப்பிய அவரிடம்
நடந்துவந்த ஒருவன்
மருத்துவமனைக்கு வழி கேட்டபோது
`ஹாஸ்பிட்டல் இப்படியே போனா வாக்கபிள்தான்’
எனச் சொல்லி
விசிலடித்தபடியே கிளம்பிப் போனார்.

- சச்சின்

vikatan

  • தொடங்கியவர்

சர்ச்சையில் சிக்கிய ஷூமேக்கரின் புகைப்படம்

 

ஷூமேக்கர்

கார் பந்தய ஜாம்பவான் மைக்கேல் ஷூமேக்கர், சிகிச்சை பெற்று வரும் புகைப்படம் வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. உலகின் நம்பர் ஒன் கார் பந்தய வீரரான மைக்கேல் ஷூ மேக்கர், 7 முறை ஃபார்முலா ஒன் பந்தயங்களில் சாம்பியன் பட்டம் வென்றவர். 2013-ம் ஆண்டு விபத்து ஒன்றில் சிக்கி கோமா நிலைக்குச் சென்றார். அதன்பின் நினைவு திரும்பி சிகிச்சைப் பெற்று வருகிறார். இந்நிலையில் அவரது புகைப்படம் வெளியானது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.   

இவர் அவ்வப்போது பனிச்சறுக்கு விளையாட்டில் ஈடுபடுவது வழக்கம். 2013-ம் ஆன்டு டிசம்பர் 29-ம் தேதி பிரான்சின் ஆல்ப்ஸ் மலைப்பகுதியில் உள்ள மெரிபெல் நகரில் பனிச்சறுக்கு விளையாட்டில் ஈடுபட்டபோது, அங்குள்ள பாறை மீது அவரது தலை மோதி பலத்த காயம் ஏற்பட்டது. கிரெனோபில் பல்கலைக்கழக மருத்துவமனையில் கோமா நிலையில் இருந்த அவருக்குத் தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. உலகம் முழுவதும் உள்ள அவரது ரசிகர்கள் இந்த செய்தியறிந்து அதிர்ச்சிக்கு உள்ளாகினர்.

அதன்பின், 2014-ம் ஆண்டு ஜூன் மாதம் ஷூமேக்கருக்கு நினைவு திரும்பியது. மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பியபோதும், உடலின் பல பாகங்கள் செயல்படாததால் தொடர்ந்து சிகிச்சை பெற்று வந்தார். விபத்திற்கு உள்ளானதிலிருந்து, தற்பொழுது வரை அவரின் புகைப்படம் வெளியிடப்படவில்லை.

இந்நிலையில், சமீபத்தில் ஷூமேக்கர் படுக்கையில் சிகிச்சை பெறும் புகைப்படம் ஒன்று வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தியது. தனி மனித உரிமையை பறிக்கும் விதமாக வெளியான இந்தப் புகைப்படம் குறித்து ஷூமேக்கரின் மேனேஜர் புகார் அளித்துள்ளார். முதல்கட்ட விசாரணையில் மர்ம நபர், 1 மில்லியன் பவுண்டுகளுக்கு ஷூமேக்கரின் புகைப்படத்தை விற்றுள்ளதாகத் தெரியவந்துள்ளது. இவர் ஷூமேக்கரின் நெருங்கிய நண்பராக கூட இருக்கலாம் என ஜெர்மன் காவல்துறை சந்தேகம் தெரிவித்துள்ளது.

vikatan.

  • தொடங்கியவர்

உழைக்கத்தெரியாமல் கடன்படேல்!
 

article_1482118878-gfgfgj.jpgமக்களிடம் சிறுகச் சிறுக சேமிக்கும் பழக்கத்தை உருவாக்கவே வங்கிகள் ஆரம்பிக்கப்பட்டன. இவற்றுக்கு இதர பணிகள் பல இருந்தாலும், சேமிக்கும் விடயங்களை மக்களிடையே உருவாக்கச் செய்யும் பணிகளை இன்றளவும் செய்து வருகின்றன. 

ஆனால், துரதிர்ஷ்டவசமாக மக்களில் பலர் ஆடம்பர வாழ்க்கைக்கு ஆசைப்பட்டு, அரசாங்க வங்கிகள், தனியார் நிதி நிறுவனங்களிடம் கடன் வாங்கும் பழக்கம் வைரஸாகப் பரவிவிட்டது. 

சொகுசு வாகனங்களைக் கடனுக்கு வாங்குதல், வருமானத்துக்கு மீறிய வகையில் வீடுகளைக் கடன்பட்டுக் கட்டுவதற்காக புற்றீசல்கள்போல் வங்கிகளை மொய்த்துப் பணம்பெற்று, ஈற்றில் பெற்ற பணத்துக்கு வட்டிகூடக் கட்ட வழியின்றி, வீடு, வாசல், வாகனங்களை இழந்து, நடுத்தெருவில் நிற்கும் மக்கள் கூட்டம் ஏராளம், ஏராளம். 

தகுதிக்கு மீறி ஆசைப்படேல்; உழைக்கத்தெரியாமல் கடன்படேல்! 

Edited by நவீனன்

  • தொடங்கியவர்

இன்று சர்வதேச மனித ஒருமைப்பாடு தினம்

400_08578.jpg

ஐ.நா சபை கடந்த 2002-ம் ஆண்டு டிசம்பர் 20-ம் தேதி சர்வதேச மனித ஒருமைப்பாடு தினத்தை அறிவித்தது. வளரும் நாடுகளில் வறுமையை ஒழிப்பது, வேற்றுமையில் ஒற்றுமை காண்பது,  மனித ஒருமைப்பாடு குறித்த விழிப்பு உணர்வை ஏற்படுத்துவது மற்றும் மனித சமூக மேம்பாட்டுக்கு உதவுவதே இந்நாளின் நோக்கமாகும். 

  • தொடங்கியவர்

ஜெயலலிதா முகம் பதித்த இட்லி!

idly_10452.png

ஜெயலலிதா முகத்தை போன்று வடிவமைக்கப்பட்ட இட்லி, மெரினா கடற்கரையில் வைக்கப்பட்டுள்ளது. சென்னை மெரினாவில்  ஜெயலலிதா அடக்கம் செய்யப்பட்ட இடத்தை பொதுமக்கள் பார்வையிட்டு வருகின்றனர்.

இந்நிலையில், இன்று காலை ஜெயலலிதா முகம் போன்று வடிவமைக்கப்பட்ட 68 கிலோ இட்லி, பொதுமக்கள் பார்வைக்காக வைக்கப்பட்டுள்ளது. 

Chennai (Tamil Nadu): Idly weighing 68 kg made in the form of late TN CM Jayalalithaa's face at Marina Beach

C0GDDyCUQAEjcJO.jpg
C0GDoptUQAAflmR.jpg
C0GDpoGUoAAD-9i.jpg
 
 

.vikatan.

  • தொடங்கியவர்
சுவிட்ஸர்லாந்து பாரம்பரிய நீச்சல் விழாவில்…
 

சுவிட்ஸர்லாந்தின் ஜெனீவா ஏரியில் நேற்று முன்தினம் “நத்தார் கிண்ணம்” எனும் பாரம்பரிய நீச்சல் போட்டிகள் நடைபெற்றன.

 

21322666137-01-02.jpg

 

78 ஆவது வருடமாக நடைபெற்ற இப் போட்டிகளில் 1800 இற்கும் அதிகமானோர் பங்குபற்றினர். இப் போட்டிகளில் பங்குபற்றிய சிலரைப் படங்களில் காணலாம்.

 

21322665984-01-02.jpg

 

 

.metronews.lk

Edited by நவீனன்

  • தொடங்கியவர்

கொலம்பியாவில் ஏற்பட்ட போயிங் விமான விபத்தில் 160 பேர் பலி (டிச.20- 1995)

அமெரிக்காவின் போயின் விமானம் ஒன்று கொலம்பியாவில் உள்ள மலை மீது மோதி 160 பேர் பலியானார்கள். இதே தேதியில் நிகழ்ந்த முக்கிய நிகழ்வுகள்:- * 1952 - ஐக்கிய அமெரிக்காவின் வான்படை விமானம் வாஷிங்டனில் மோதி வெடித்ததில் 87 பேர் கொல்லப்பட்டனர். * 1955 - கார்டிஃப் வேல்சின் தலைநகரமாக அறிவிக்கப்பட்டது. * 1960 - வியட்நாம் விடுதலைக்கான தேசிய முன்னணி அமைக்கப்பட்டது. * 1973 - ஸ்பானியப் பிரதமர் "லூயிஸ் கரேரோ பிளாங்கோ" மாட்ரிட் நகரில் கார்க்குண்டுவெடிப்பில் கொல்லப்பட்டார். * 1984 - இங்கிலாந்தில்

 
 
 
 
கொலம்பியாவில் ஏற்பட்ட போயிங் விமான விபத்தில் 160 பேர் பலி (டிச.20- 1995)
 
அமெரிக்காவின் போயின் விமானம் ஒன்று கொலம்பியாவில் உள்ள மலை மீது மோதி 160 பேர் பலியானார்கள்.

இதே தேதியில் நிகழ்ந்த முக்கிய நிகழ்வுகள்:-

* 1952 - ஐக்கிய அமெரிக்காவின் வான்படை விமானம் வாஷிங்டனில் மோதி வெடித்ததில் 87 பேர் கொல்லப்பட்டனர்
 
* 1955 - கார்டிஃப் வேல்சின் தலைநகரமாக அறிவிக்கப்பட்டது. * 1960 - வியட்நாம் விடுதலைக்கான தேசிய முன்னணி அமைக்கப்பட்டது.
 
* 1973 - ஸ்பானியப் பிரதமர் "லூயிஸ் கரேரோ பிளாங்கோ" மாட்ரிட் நகரில் கார்க்குண்டுவெடிப்பில் கொல்லப்பட்டார்.
 
* 1984 - இங்கிலாந்தில் சுரங்க ரெயில் பாதையில் 1 மில்லியன் பெட்ரோல் பொருட்களை ஏற்றிச் சென்ற சரக்கு ரெயில் ஒன்று தடம் புரண்டு தீ பரவியதில் பலத்த சேதம் ஏற்பட்டது.

* 1987 - பிலிப்பைன்சில் பயணிகள் கப்பல் ஒன்று எண்ணெய்த் தாங்கிக் கப்பலுடன் மோதி மூழ்கியதில் 4,000 (அதிகாரபூர்வமாக 1,749) பேர் கொல்லப்பட்டனர்.
 
* 1988 - போதைப்பொருள் கடத்தலுக்கெதிரான ஐநா சாசனம் வியென்னாவில் கையெழுத்திடப்பட்டது. *
 
1989 - பனாமாவின் அதிபர் மனுவேல் நொரியேகாவைப் பதவிலிருந்து அகற்ற ஐக்கிய அமெரிக்கா தனது படைகளை பனாமாவுக்கு அனுப்பியது.
 
* 1995 - அமெரிக்க போயிங் விமானம் ஒன்று கொலம்பியாவில் மலை ஒன்றுடன் மோதியதில் 160 பேர் கொல்லப்பட்டனர்.
 
 

அணுக்கள் மூலம் முதற்தடவையாக மின்சாரம் தயாரிக்கப்பட்ட நாள்: 20-12-1951

வடக்கு அமெரிக்காவில் உள்ள ஐடஹோவில் உலகத்திலேயே முதற்தடவையாக அணு மூலம் உருவான மின்சாரம் கொண்டு விளக்கு எரிக்கப்பட்டது. இதே தேதியில் நிகழ்ந்த முக்கிய நிகழ்வுகள்:- * 1803 - பிரெஞ்சுகளிடம் இருந்து லூசியானா விலைக்கு வாங்கப்பட்டதைக் குறிக்க நியூ ஓர்லென்ஸ் நகரில் பெரும் கொண்டாட்டங்கள்

 
 
 
 
அணுக்கள் மூலம் முதற்தடவையாக மின்சாரம் தயாரிக்கப்பட்ட நாள்: 20-12-1951
 
வடக்கு அமெரிக்காவில் உள்ள ஐடஹோவில் உலகத்திலேயே முதற்தடவையாக அணு மூலம் உருவான மின்சாரம் கொண்டு விளக்கு எரிக்கப்பட்டது.

இதே தேதியில் நிகழ்ந்த முக்கிய நிகழ்வுகள்:-

* 1803 - பிரெஞ்சுகளிடம் இருந்து லூசியானா விலைக்கு வாங்கப்பட்டதைக் குறிக்க நியூ ஓர்லென்ஸ் நகரில் பெரும் கொண்டாட்டங்கள் இடம்பெற்றன. * 1844 - இலங்கையில் அடிமைகளை வேலைக்கமர்த்துவதற்கெதிரான சட்டமூலம் கொண்டுவரப்பட்டது.

* 1860 - அமெரிக்க உள்நாட்டுப் போர்: தெற்கு கரொலைனா ஐக்கிய அமெரிக்காவில் இருந்து வெளியேறிய முதலாவது மாநிலமானது. * 1915 - முதலாம் உலகப் போர்: கடைசி ஆஸ்திரேலியப் படைகள் துருக்கியின் கலிப்பொலி நகரை விட்டுக் கிளம்பியது.

* 1917 - சோவியத்தின் முதலாவது ரகசியக் காவற்துறை "சேக்கா" அமைக்கப்பட்டது. * 1942 - இரண்டாம் உலகப் போர்: கல்கத்தா ஜப்பானியர்களின் குண்டுத்தாக்குதலுக்கு உள்ளானது. * 1943 - பொலிவியாவில் ராணுவப் புரட்சி நடந்தது.
 

http://www.maalaimalar.com

  • தொடங்கியவர்
2016 உலக அழகு ராணி தெரிவு
 

புதிய உலக அழகுராணியாக புவர்ட்டே ரிக்கோ நாட்டைச் சேர்ந்த ஸ்டெபானி டெல் வெலே தெரிவாகிகியுள்ளார்.

 

21318_1.jpg

 

66 ஆவது உலக அழகுராணி (Crowned Miss World 2016) போட்டியின் இறுதிச்சுற்று அமெரிக்காவின் மேரிலண்ட் மாநிலத்திலுள்ள ஒக்ஸோன் ஹில் நகரில் நேற்று முன்தினம் நடைபெற்றது. 117 யுவதிகள் இப்போட்டியில் பங்குபற்றினர்.

 

21318_669045-01-02.jpg

 

இதில், புவர்டே ரிக்கோவின் ஸ்டெபானி டெல் வெலே முதலிடத்தைப் பெற்று 2016 உலக அழகுராணி (2016 மிஸ் வேர்ல்ட்) அழகுராணியாக முடிசூட்டப் பட்டார். 

 

21318_668961-01-02.jpg

 

டொமினிக்கன் குடியரசை சேர்ந்த ரெயெஸ் ரெமிரெஸ் 2 ஆம் இடத்தையும் இந்தோனேஷியாவின்  நட்டேஷா மனுவேலா 3 ஆம் இடத்தையும் பெற்றனர்.

 

21318MED191216-PG11-R1.jpg

.metronews.lk

Edited by நவீனன்

  • தொடங்கியவர்

ரஷ்ய தூதர் படுகொலையை படம்பிடித்த தில் போட்டோகிராஃபர்

 

ap_13109.jpg

உலகம் முழுவதும் நடுக்கத்தை ஏற்படுத்தியுள்ள ரஷிய தூதர் படுகொலை சம்பவம், ஒரு தைரியமான புகைப்படக்காரரை அடையாளம் காட்டியுள்ளது. துருக்கியில் நேற்று மேடையில் பேசிக் கொண்டிருந்த ரஷ்ய தூதரை, மர்ம நபர் சுட்டுக் கொன்றுவிட்டு, கையில் துப்பாக்கியுடன்,  ’Don't forget Aleppo!’ என உரக்க கோஷமிட்டார். இந்த காட்சியை கண்டு அங்கிருந்தவர்கள் பயத்தில் உறைந்து போய் நின்ற சமயத்தில், சற்றும் கலக்கமடையாமல் அந்த காட்சியை தன் கேமராவில் பதிவு செய்துள்ளார் அசோசியேடட் பிரஸ் புகைப்படக்காரர் ’பர்கன் ஒஸ்பிலிசி’. இந்த புகைப்படத்தையும், பதிவு செய்தவரின் தைரியத்தையும் வரலாறு பேசும்!

russia_13525.jpg

நன்றி : AP

vikatan

  • தொடங்கியவர்

ஆயுத மோதலைத் தவிர்க்க ஒருமித்த தீர்வு- சர்வதேச கருத்தொற்றுமை தின பகிர்வு !

 

கருத்தொற்றுமை தினம்

இன்று...'சர்வதேச மனித கருத்தொற்றுமை தினம்'. கடந்த 2002-ம் ஆண்டு ஐ.நா. சபை நிறைவேற்றிய தீர்மானத்தின் அடிப்படையில், ஆண்டுதோறும் டிசம்பர் 20-ம் தேதி இந்த தினம் கடைபிடிக்கப்படுகிறது.

"ஒன்றுபட்டால் உண்டு வாழ்வு; நம்மில் ஒற்றுமை நீங்கிடில் அனைவருக்கும் தாழ்வே...."  ஏதோ, தற்போதைய தமிழக அரசியல் சூழ்நிலையுடன் தொடர்புடையவை இந்த வரிகள் என்று யாரும் எண்ணிவிட வேண்டாம்.மக்களிடையே ஒற்றுமையை எப்போதுமே வலியுறுத்தி வந்த பாரதியார் மேலும்..

"பாமரராய், விலங்குகளாய், உலகனைத்தும்
இகழ்ச்சி சொல் பான்மை கேட்டு,
நாமமது தமிழரெனக் கொண்டு இங்கு
வாழ்ந்திடுதல் நன்றோ? சொல்வீர்!  

தேமதுரத் தமிழோசை உலகமெலாம்
பரவும் வகை செய்தல் வேண்டும்" 
- என்று தெரிவித்து தனது தேசிய ஒருமைப்பாட்டை மக்களிடையே விதைத்தார். 

"உலகளவிலான முக்கியப் பிரச்னைகளுக்கு கூட்டானதொரு தீர்வு தேவைப்படுகிறது. 
பல பிரச்னைகளில் வேறுபட்ட கருத்துகள் ஏற்படும்போது, ஆயுத மோதல் தொடங்கி, கட்டாய குடிபெயர்தல் வரை, பொதுநோக்கத்திற்காக மக்கள் ஒருவருக்கொருவர்  அச்சத்துடனேயே நீடிப்பதை வெகுகாலம் தொடர முடியாது" - ஐ.நா. பொதுச் செயலாளர் பான் கி மூன், சர்வதேச மனித கருத்தொற்றுமை தினத்தை ஒட்டி தெரிவித்துள்ள கருத்து இப்படியாக உள்ளது. 
அனைத்து தரப்பினரிடமும் கருத்தொற்றுமையை ஏற்படுத்தாமல், உலக நாடுகள் எந்தவொரு சட்டத்தையும் நிறைவேற்ற முடியாது. பின்வாசல் வழியாக எந்தவொரு முக்கிய முடிவையும் திணித்து விட முடியாது.

'நீடித்த வளர்ச்சிக்கான இலக்குகள்' என்றும் புதிய கருத்துகளுடன் கூடிய தீர்மானத்தை உலக நாடுகளின் தலைவர்கள் எடுத்துள்ள நிலையில், இந்த ஆண்டு சர்வதேச மனித கருத்தொற்றுமை தினம் கடைபிடிக்கப்படுகிறது. வறுமை ஒழிப்பு, நாடுகளின் கௌரவத்தை உறுதிசெய்தல், சுற்றுச்சூழல் பாதிப்புகளில் இருந்து பூமியைப் பாதுகாத்தல் ஆகிய கருத்துகளும் ஐ.நா.-வால் இந்த நாளில் முன்வைக்கப்பட்டு வருகிறது.

மனித உரிமைகள் அடிப்படையில், மக்களையும், பூமியையும் பாதுகாக்க வேண்டிய கடமை நம் அனைவருக்கும் அல்லது அனைத்து நாடுகளுக்கும் உண்டு. வறுமை, பசி, நோய் ஆகியவற்றில் இருந்து மக்களைக் காக்க வேண்டியதும் சம்பந்தப்பட்ட நாடுகளின் கடமையாகும். இத்தகைய நோக்கங்களை நிறைவேற்ற உலக நாடுகளின் ஆதரவும், கருத்தொற்றுமையும் அவசியமாகிறது என்று ஐ.நா. தொடர்ந்து வலியுறுத்தி வந்துள்ளது.

சர்வதேச கருத்தொற்றுமை தினம் என்பதை, 

"வேற்றுமையில் ஒற்றுமையை கொண்டாடும் நாள், சர்வதேச ஒப்பந்தங்களில் ஒப்புக் கொள்ளப்பட்ட உறுதிமொழிகளை அந்தந்த நாடுகளின் அரசுகள் மதித்து நடப்பதை நினைவுகூரும் நாள், கருத்தொற்றுமையின் முக்கியத்துவம் தொடர்பான விழிப்பு உணர்வை பொதுமக்களிடம் அதிகரிக்கும் நாள். வறுமையை முற்றிலுமாக ஒழித்தல் மற்றும் வளர்ச்சியுடன் கூடிய சாதனைகளுக்காக கருத்தொற்றுமையை ஊக்குவிக்கும் வழிகள் குறித்த விவாதத்தை ஆதரிக்கும் நாள் எனக் கொள்ளலாம்.

உலகமயமாதல் மற்றும் புவி வெப்பமயமாதல் அதிகரித்துவரும் இப்போதைய கால கட்டத்தில், கருத்தொற்றுமை என்பது அவசியமான ஒன்றாகி விட்டது. சர்வதேச நாடுகள் ஒன்றிணைந்து, மிக முக்கியமான பிரச்னைகளில் விவாதித்து, கருத்தொற்றுமை ஏற்படுவதன் மூலம் மட்டுமே பல்வேறு பிரச்னைகளுக்குத் தீர்வு காண முடியும்.

ஐ.நா. உருவாக்கப்பட்டதன் நோக்கமே உலக நாடுகளிடையே ஒற்றுமையை மேம்படுத்துவது தான். அதுபோன்ற சூழ்நிலையில் பல்வேறு விஷயங்களில் ஒவ்வொரு நாடுகளுக்கும் உள்ள நிலைப்பாட்டை அறிந்து, அவற்றில் இருந்து, சாத்தியமானதொரு கருத்தை உருவாக்கி, அதனை எல்லா நாடுகளுமே ஏற்றுக் கொள்ளச் செய்வதற்காகவே சர்வதேச கருத்தொற்றுமை தினம் கடைபிடிக்கப்படுகிறது.

vikatan

 

Edited by நவீனன்

  • தொடங்கியவர்

பூமியை இவ்ளோ அழகா பார்த்திருக்கவே மாட்டீங்க!

 

சர்வதேச விண்வெளி மையத்தில் இருக்கும் வீரர்கள் பலமுறை நமது பூமியை மேலிருந்து புகைப்படம் எடுப்பார்கள். அதில் இந்த ஆண்டில் எடுக்கப்பட்ட சிறந்த 16 போட்டோக்களை வெளியிட்டுள்ளது நாசா. பாலைவனம், எரிமலை, கடல்,பனி, சூரியோதயம் என பூமியின் ஒவ்வொரு பரிமாணத்தையும் அவ்வளவு அழகாக காட்டியிருக்கின்றனர்.

View My Video

 

  • தொடங்கியவர்

பேசும் படங்கள்: சுவாசக் காற்றே நீ சுத்தமாவது எப்போது?

 
000_3106319f.jpg
 
 
 

இந்தியா உள்ளிட்ட பல்வேறு நாடுகளில் காற்று மாசு என்பது முக்கிய பிரச்சினையாக உருவெடுத்துள்ளது. இது மனிதர்களின் உடல் நலம், உணவு உற்பத்தி, சுற்றுச்சூழல் மற்றும் இயற்கை வளங்களைப் பாதிப்பதாக உள்ளது. உயிரினங்களுக்கு உணவு, தண்ணீர் எவ்வளவு முக்கியமோ, அதே அளவுக்கு காற்றும் சுத்தமானதாக இருக்க வேண்டும். ஆனால், அந்த நிலை இப்போது இல்லை என்பதுதான் உண்மை.

தொழிற்சாலைகள், வாகனங்களால் வெளியாகும் புகை, சாலைகளில் பறக்கும் புழுதிக் காற்று என திரும்பும் திசையெல்லாம் மாசடைந்த காற்றையே நாம் சுவாசிக்க வேண்டிய நிலை உள்ளது. இதனால் பாதிக்கப்படுவோரில் முதியோர், சிறுவர்கள் மற்றும் குழந்தைகளே அதிகம். இதயம், நுரையீரல் நோய்களால் பாதிக்கப்பட்டோர் இந்த மாசடைந்த காற்றால் மேலும் சிரமத்துக்குள்ளாகின்றனர். உலகில் எந்த ஒரு உயிரினமும் நீண்ட நாள் ஆரோக்கியத்துடன் உயிர் வாழ வேண்டுமெனில் நீர், நிலம், காற்று ஆகியவை மாசுபடுத்தப்படுவது தடுக்கப்பட வேண்டும். காற்று மாசின் தீவிரத்தை உணர்த்தும் புகைப்படத் தொகுப்பு இது.

001_3106320a.jpg

002_3106321a.jpg

003_3106322a.jpg

004_3106323a.jpg

005_3106324a.jpg

 
 

tamil.thehindu.

  • தொடங்கியவர்

திருமணம் முடித்த ஹாலிவுட்டின் ட்ரீம் கேர்ள்..!

 

marg_600_13063.jpg

ஹாலிவுட்டின் பிரபல நடிகை மார்கோ ராபி திடீர் திருமணம் முடித்துள்ளார். தனது நீண்ட நாள் காதலனான இங்கிலாந்தைச் சேர்ந்த டாம் அக்கர்லீ-யை மணமுடித்ததை இன்ஸ்ட்டாகிராம் மூலம் அறிவித்துள்ளார் ராபி. பிறப்பால் ஆஸ்திரேலியரான ராபி, தனது திருமணத்தையும் ஆஸ்திரேலியாவில் தான் முடித்துள்ளார். 

கடந்த வாரமே சர்வதேச பத்திரிகைகள், ராபி திருமணம் முடிக்க உள்ளார் என தகவல்கள் கூறி வந்த நிலையில் இன்ஸ்ட்டாகிராம் மூலம் திருமண செய்தியை வெளியிட்டுள்ளார். மிகவும் ரகசியமாக நடந்த இந்த திருமணத்தில் மிகவும் நெருக்கமான 50 பேர்கள் தான் கலந்து கொண்டதாக கூறப்படுகிறது. 

 

 

  • தொடங்கியவர்

தமிழ் சினிமாவின் மறக்க முடியாத 10 கிறிஸ்துமஸ் பாடல்கள்! #ChristmasSpecial

 

கிறிஸ்துமஸ்

 

தீபாவளி, பொங்கல் பண்டிகை நாட்களைப் போலவே கிறிஸ்துமஸ் விழா நாட்களில் வானொலிகளிலும் தொலைக்காட்சிகளிலும் இந்தப் பாடல்கள் தவறாமல் ஒலிக்கும். மதங்களைக் கடந்த ஒரு சமூக நல்லிணக்கம் தமிழ் மக்களிடம் எப்போதும் உண்டு. 'மிஸ்ஸியம்மா' முதல் 'மின்சாரக் கனவு' வரை தமிழ் சினிமாவில் மறக்க முடியாத கிறிஸ்துமஸ் பாடல்கள் பல உண்டு. அவற்றில் சிறப்பான பாடல்களின் தொகுப்பு இதோ

மிஸ்ஸியம்மா - எனையாளும் மேரிமாதா...

 

 

 

கண்ணே பாப்பா - சத்திய முத்திரை...

 

 

 

 

 

அச்சாணி - மாதாவின் கோயிலில்...

 

 

 

 

அவர் எனக்கே சொந்தம் - தேவன் திருச்சபை மலர்களே...

 

 

 

 

ஞான ஒளி - தேவனே என்னைப்பருங்கள்...

 

 

 

 

அன்புள்ள ரஜினிகாந்த் - கடவுள் உள்ளமே...

 

 

 

 

அன்புள்ள ரஜினிகாந்த் - என்ன வேணும்...

 

 

 

 

அலைகள் ஓய்வதில்லை - தோஸ்திரம் பாடியே....

 

 

 

 

வெள்ளை ரோஜா - உலகமெல்லாம்...

 

 

 

 

மின்சாரக்கனவு - அன்பென்னும் மழையிலே...

 

 

 

இந்தப் பாடல்கள் உங்கள் கிறிஸ்துமஸ் கொண்டாட்டங்களை மேலும் இனிமையாக்கட்டும்.

  • தொடங்கியவர்

அநாதையான நூற்றுக்கணக்கான நாய்களுக்காக வாழ்வை அர்ப்பணித்த மென்பொறியாளர்

 

ராக்கேஷ் சுக்லா, கைவிடப்பட்ட நாய்களை பராமரிப்பதற்காக தனது வாழ்வை அர்ப்பணித்துவரும் ஒரு மென்பொறியாளர்.

45 வயதாகும் ராகேஷ் ஷுக்லா ஒரு மென்பொறியாளர்
 45 வயதாகும் ராகேஷ் சுக்லா ஒரு மென்பொறியாளர்

தென் இந்திய மாநிலமான கர்நாடகாவின் தலைநகருக்கு அருகில் உள்ள பண்ணை வீட்டில் புழுதி பறக்க கார் ஒன்று வந்து நின்றது; அதனையடுத்து சுற்றியிருந்த நாய்கள் மகிழ்ச்சியில் குரைக்கவும் குதிக்கவும் தொடங்கின.

சில நொடிகளில் அந்த நாய்கள், காரிலிருந்து இறங்கி வந்த ராகேஷ் சுக்லாவை தடவிக் கொடுத்தது நாவினால் நக்கவும் செய்தன; ராகேஷ் சுக்லாவும் நாய்களை கண்டவுடன் மகிழ்ச்சியடைந்தார்; அவற்றை தடவிக் கொடுத்தும், காதுகளுக்கு பின்னாடியும் அவற்றின் தோள்களிலும் அவற்றிற்கு பிடித்த மாதிரி தடவி கொடுத்தார்.

பின்பு ராகேஷ் சுக்லாவின் மூன்றரை ஏக்கர் பண்ணையை சுற்றிப் பார்த்த பிபிசியின் கீதா பாண்டே, அங்கு 735 நாய்கள் இருந்ததாகக் கூறுகிறார்.

ஷுக்லாவின் பண்ணையில் 735 ஆதரவற்ற நாய்கள் பராமரிக்கப்படுகின்றன  ஷுக்லாவின் பண்ணையில் 735 ஆதரவற்ற நாய்கள் பராமரிக்கப்படுகின்றன

லேப்ரடார், கோல்டன் ரேட்ரீவர், பீகள், ராட்வெய்லர், சயிண்ட் பெர்னாட், பக் உள்ளிட்ட பல உயர் ரக நாய்களை பார்க்க முடிந்தது. கலப்பின நாய்கள் என கூறப்படும் மாங்கரெல் இன நாய்ளும் நூற்றுக்கணக்கில் இருந்தன.

அதில் பெரும்பாலானவை தெரு நாய்கள்; மேலும் பிற, அதன் உரிமையாளர்களால் கைவிடப்பட்டவை. பண்ணையில் சமீபமாக சேர்ந்தவை, 22 பெடிக்ரீ இன நாய்கள், அவற்றின் உரிமையாளரான தொழிலதிபர் சுட்டுக் கொல்லப்பட்டதையடுத்து அவை ராக்கேஷ் சுக்லாவிடம் தஞ்சம் அடைந்துள்ளன.

உரிமையாளர்களால் கைவிடப்பட்ட நாய்களுக்கு ஆதரவு அளிக்கிறார் ஷுக்லா உரிமையாளர்களால் கைவிடப்பட்ட நாய்களுக்கு ஆதரவு அளிக்கிறார் ஷுக்லா

"இந்த நாய்களின் கடைசி புகலிடம் நான் தான். இவைகள் இதற்கு மேலாக தடவிக் கொடுக்கும் நிலையிலும், கொஞ்சுவதற்கான இயல்பிலும் இல்லை. அவைகள் நோய் வாய்ப்பட்டுள்ளன". என்கிறார் 45 வயதாகும் ராகேஷ் சுக்லா.

"நாய்களின் தந்தை" என்று அவர் அன்பாக அழைக்கப்படுகிறார், அவரும் அந்நாய்களை தனது குழந்தைகளாகவும் தான் அவைகளின் தந்தையென்றும் கூறுகிறார்.

பத்து வருடங்களுக்கு முன், தன் மனைவியுடன் சேர்ந்து மென்பொருள் நிறுவனம் ஒன்றை நிறுவியுள்ளார் சுக்லா; தனது நாய்களை கவனித்து கொள்ள ஒரு வாரத்தில் மூன்று அல்லது நான்கு நாட்கள் தனது பண்ணைக்கு வருகிறார்.

கைவிடப்பட்ட மற்றும் நோய்வாய்ப்பட்ட நாய்களை காணும் போதெல்லாம் தனது வீட்டிற்கு அழைத்து வந்து விடுகிறார் ஷுக்லா  கைவிடப்பட்ட மற்றும் நோய்வாய்ப்பட்ட நாய்களை காணும் போதெல்லாம் தனது வீட்டிற்கு அழைத்து வந்து விடுகிறார் ஷுக்லா

"நான் டெல்லி மற்றும் அமெரிக்காவில் பணி புரிந்துள்ளேன்; பிறகு, பெங்களூருவில் எனது சொந்த நிறுவனத்தை தொடங்கிவிட்டேன். ஆடம்பர கார்கள், விலை உயர்ந்த கடிகாரங்கள், வசதியாக வாழ்வது என்பது மட்டுமே வாழ்க்கையாக இருந்தது; உலகில் பல பகுதிகளையும் சுற்றிப்பார்த்துள்ளேன் இருப்பினும் நான் மகிழ்ச்சியாக இல்லை". என்று கூறுகிறார் சுக்லா.

பிறகு ஒரு நாள் காவ்யா அவரின் வாழ்வில் வந்துள்ளாள். அழகான 45 வயது கோல்டன் ரெட்ரீவர் இன வகை நாய்தான் காவ்யா. அதன் மீது ராகேஷிற்கு அளவு கடந்த பிரியம் ஏற்பட்டது. காவ்யா தன்னிடம் வந்த நாள் ஜூன் 2009 என்று அதை நினைவு கூறுகிறார் சுக்லா.

ராகேஷிடம் வந்த முதல் நாய் காவ்யா ராகேஷிடம் வந்த முதல் நாய் காவ்யா

"நாங்கள் அவளை வீட்டிற்கு கூட்டிக் கொண்டு வந்தவுடன் அவள் ஒரு மூலையில் மறைந்து கொண்டாள்; நான் அவள் அருகில் சென்று அவளை அழைத்தேன். அவள் என்னை பார்த்தாள், அவள் பயமுற்றிருந்தாள், ஆனால் என்னை நம்ப வேண்டும் என்று அவள் விரும்பினாள் என்பதை என்னால் புரிந்து கொள்ள முடிந்தது" என தெரிவித்தார் சுக்லா.

"அந்த தருணம் தான் என்னுள் ஒரு உணர்வு எழுந்தது; மயிர் கூச்சம் ஏற்பட்டது; ஒரு மிதமான உணர்வு - அதன் பிறகு இங்கு ஏன் வந்தேன் என்ற கேள்வியை நான் கேட்டதே இல்லை" என்றார் சுக்லா.

பண்ணையை நாய்களுக்கு ஏற்றவாறு அமைத்துள்ளார் சுக்லாபண்ணையை நாய்களுக்கு ஏற்றவாறு அமைத்துள்ளார் சுக்லா

காவ்யா வந்த அடுத்த மூன்று மாதங்களில் சுக்லாவின் இரண்டாம் நாய் லக்கியை அவர் தெருவிலிருந்து காப்பாற்றி வீட்டிற்கு கூட்டிவந்தார். "அப்போழுது 12-13 நாட்கள் தொடர்ந்து மழை பெய்தது லக்கி மிகவும் நனைந்து பாவமாக காணப்பட்டாள். எனவே அவளை நான் இங்கு அழைத்து வந்து விட்டேன்" என்று தெரிவிக்கிறார் சுக்லா.

அடுத்தடுத்து வந்த நாட்களில் தெருநாய்களையோ அல்லது கைவிடப்பட்ட நாய்களை கண்டாலோ அவர் வீட்டிற்கு கூட்டி வந்து விடுவார். முதலில் நாய்களை வீட்டில் வைத்து வளர்த்துள்ளார். பிறகு அவரின் மனைவி அதற்கு எதிர்ப்பு தெரிவித்ததால் தனது அலுவலகத்தின் மொட்டை மாடியை நாய்களின் தங்கும் இடமாக மாற்றியுள்ளார்.

நாய்கள் நோய்வாய்ப்பட்டவுடன் கைவிடப்பட்ட பல நாய்கள் இங்கு உள்ளன  நோய்வாய்ப்பட்டவுடன் கைவிடப்பட்ட பல நாய்கள் இங்கு உள்ளன

2012 ஆம் ஆண்டு நாய்களின் எண்ணிக்கை அதிகரித்ததால் சுக்லா டாட்பல்லாபூர் நகரில் இடம் வாங்கி நாய்களுக்கான பண்ணையை அமைத்தார். வயதான, நோய்வாய்ப்பட்ட, அல்லது வேண்டாம் என்று கைவிடப்பட்ட நாய்களுக்கு அது புகலிடமாக அமைந்தது.

அந்த பண்ணையில், நாய்கள் ஓடி விளையாடுவதற்கேற்ப திறந்த வெளியும், நாய்கள் நீந்துவதற்கு ஒரு குளமும், நாய்களின் பாதுகாப்பிற்கு இரண்டடுக்கு வேலியும் அமைக்கப்பட்டது.

 

பல மூன்று கால் நாய்களும் சுக்லாவின் பண்ணையில் காணப்படுகின்றன

 பல மூன்று கால் நாய்களும் சுக்லாவின் பண்ணையில் காணப்படுகின்றன

அங்கு பயிற்சியளிக்கப்பட்ட கால்நடை பணியாளர்கள் உட்பட, நாய்களை கவனித்து கொள்ளவும், அவற்றிற்கு உணவு சமைக்கவும் அவைகளுக்கு உணவு வழங்கவும் 10 பேர் பணிபுரிகின்றனர்.

அங்குள்ள நாய்களுக்கு தினமும் 200கிலோ கோழிக் கறியும், 200கிலோ அரிசி உணவும் வழங்கப்படுகின்றன. மேலும் நோய்வாய்பட்ட நாய்களுக்கு முறையான மருந்துகளும் கவனிப்பும் தரப்படுகின்றன.

பண்ணையை நடத்துவதற்கு நாள் ஒன்றிற்கு 45,000 முதல் 50,000 ரூபாய் செலவாகிறது

 

 நாள் ஒன்றிற்கு 45,000 முதல் 50,000ரூபாய் செலவாகிறது

 

பண்னையில் உள்ள நாய்களுக்கு தினமும் 200கிகி கோழிக் கறி மற்றும் 200 கிகி அரிசி உணவு வழங்கப்படுகிறது

 பண்னையில் உள்ள நாய்களுக்கு தினமும் கோழிக் கறி மற்றும் அரிசி உணவு

இந்த பண்ணையை நடத்துவதற்கு நாள் ஒன்றிற்கு 45,000 முதல் 50,000 செலவாகிறது. அதில் 93 சதவீதம் நன்கொடையாக வருகின்றது என சுக்லா தெரிவிக்கிறார்.

கடந்த வருடம் விலங்கியல் ஆர்வலர்கள் சிலர் நாய்கள் சுதந்திரமாக இருக்க வேண்டும் என்று பிரச்சனை எழுப்பியுள்ளனர்.

மேலும் அவர் பல நாய்களை வளர்ப்பது மூலம் பிறருக்கு தொந்தரவு கொடுக்கிறார் என்ற புகார்களும் எழுந்தன.

சிறுநீரக பாதிப்பிற்குள்ளான நாய் ஒன்றிற்கு சிகிச்சை அளிக்கப்படுகிறது

 

 சிறுநீரக பாதிப்பிற்குள்ளான நாய் ஒன்றிற்கு தினசரி சிகிச்சை அளிக்கப்படுகிறது

அந்த பண்ணையை மூட வேண்டும் என்ற கோரிக்கையும் அவருக்கு வைக்கப்பட்டது.

ஆனால் அவற்றையெல்லாம் ஒப்புக் கொள்ள மறுக்கும் அவர், "நானும் எனது நாய்களும் இறந்தால் மட்டுமே பிரிவது என்ற ஒப்பந்தம் போட்டுள்ளோம்" என்று தெரிவிக்கிறார்.

BBC

  • தொடங்கியவர்

வரலாற்றில் இன்று....

டிசம்பர் - 20

 

69 : நீரோ மன்னனின் முன்னாள் தளபதியாக இருந்த வெஸ்பசியான் ரோமப் பேரரசனாகத் தன்னை அறிவிக்கும் பொருட்டு ரோம் நகரை அடைந்தான்.

 

869mv-dona-paz-tragedy.jpg1192 : சிலுவைப் போரை முடிவுக்குக் கொண்டு வந்த உடன்படிக்கையில் கையெழுத்திட்டு விட்டு இங்கிலாந்து திரும்பும் வழியில் இங்கிலாந்து மன்னர் முதலாம் ரிச்சார்ட் ஆஸ்திரியாவின் ஐந்தாம் லியோபோல்டினால் கைது செய்யப்பட்டார்.

 

1606 : வேர்ஜீனியா கம்பனியின் மூன்று கப்பல்கள் ஆங்கிலேயர்களை ஏற்றிக் கொண்டு வேர்ஜீனியாவின் ஜேம்ஸ்டவுனை நோக்கிக் கிளம்பியது. இதுவே, அமெரிக்க கண்டத்தில் இடம்பெற்ற முதலாவது நிரந்தர ஆங்கிலக் குடியேற்றத் திட்டமாகும்.

 

1844 : இலங்கையில் அடிமை முறைமையை ஒழிப்பதற்கான சட்டம் கொண்டுவரப்பட்டது.

 

1860 : அமெரிக்க உள்நாட்டுப் போர்: தெற்கு கரோலினா ஐக்கிய அமெரிக்காவில் இருந்து வெளியேறிய முதலாவது மாநிலமானது.

 

1915 : முதலாம் உலகப் போரில் கடைசி அவுஸ்திரேலியப் படைகள் துருக்கியின் கலிப்பொலி நகரை விட்டுக் கிளம்பின.

 

1917 : சோவியத்தின் முதலாவது இரகசியக் காவற்துறையான "சேக்கா" அமைக்கப்பட்டது.

 

1942 : இரண்டாம் உலகப் போரில் இந்தியாவின் கல்கத்தா நகரம் ஜப்பானியர்களின் குண்டுத்தாக்குதலுக்கு உள்ளானது.

 

1943 : பொலிவியாவில் இராணுவப் புரட்சி நடந்தது.

 

1951 : அணு சக்தியிலான மின்சாரம் முதற்தடவையாக அமெரிக்காவின் ஐடஹோ மாநிலத்தில் பிறப்பிக்கப்பட்டது. இது நான்கு மின்குமிழ்களை எரிப்பதற்குப் பயன்பட்டது.

 

1952 : ஐக்கிய அமெரிக்காவின் வான்படை விமானம் வொஷிங்டனில் மோதி வெடித்ததில் 87 பேர் கொல்லப்பட்டனர்.

 

1955 : பிரிட்டனின் வேல்ஸ் பிராந்திய தலைநகரமாக கார்டிஃப் நகரம் அறிவிக்கப்பட்டது.
1960 : வியட்நாம் விடுதலைக்கான தேசிய முன்னணி அமைக்கப்பட்டது.

 

1971: பாகிஸ்தானின் 4 ஆவது ஜனாதிபதியாக ஸ{ல்பிகார் அலி பூட்டோ பதவியேற்றார்.

 

1973 : ஸ்பானியப் பிரதமர் "லூயிஸ் கரேரோ பிளாங்கோ" மட்றிட் நகரில் கார்க் குண்டுவெடிப்பில் கொல்லப்பட்டார்.

 

1984 : இங்கிலாந்தில் சுரங்க ரயில் பாதையில் 1 மில்லியன் பெற்றோலியப் பொருட்களை ஏற்றிச் சென்ற சரக்கு ரயிலென்று தடம் புரண்டு தீ பரவியதில் பலத்த சேதம் ஏற்பட்டது.

 

1987 : பிலிப்பைன்ஸின் பயணிகள் கப்பலான எம்.வி. டோனா பாஸ், பிலிப்பைன்ஸின் தப்லாஸ் நீரிணையில் வெக்டர் எனும் எண்ணெய்த் தாங்கிக் கப்பலுடன் மோதி மூழ்கியதில் 4,000 (அதிகாரபூர்வமாக 1,749 என அறிவிக்கப்பட்டது) பேர் உயிரிழந்தனர்.

 

1988 : போதைப்பொருள் கடத்தலுக்கு எதிரான ஐ.நா. சாசனம் வியன்னாவில் கையெழுத்திடப்பட்டது.

 

1989 : பனாமாவின் ஜனாதிபதி மனுவேல் நொரியேகாவைப் பதவிலிருந்து அகற்ற ஐக்கிய அமெரிக்கா தனது படைகளை பனாமாவுக்கு அனுப்பியது.

 

1995 : அமெரிக்க விமானமொன்று கொலம்பியாவில் மலை ஒன்றுடன் மோதியதில் 160 பேர் கொல்லப்பட்டனர்.

 

1999 : மக்கவ் பிராந்தியத்தை மக்கள் சீனக் குடியரசிடம் போர்த்துக்கல் கையளித்தது.

 

2007 : பிரிட்டனில் இரண்டாம் எலிஸபெத் அரசி, மிக அதிக வயதில் பதவியிலிருந்த அந்நாட்டு அரசியானார் (அப்போது 81 வருடங்கள் 7 மாதங்கள், 29 நாட்கள் வயது) அவருக்குமுன் விக்டோரியா அரசி மிக அதிக வயதில் பதவியிலிருந்தவராக விளங்கினார். 

 

metronews.lk

Edited by நவீனன்

  • தொடங்கியவர்

மனிதம் வென்ற பைக் ஆம்புலன்ஸ்! #InvincibleIndians

 

பைக் ஆம்புலன்ஸ்

உலகில் அங்கே, எங்கே என்று ஏதாவது ஓர் இடத்தில் உயிர்ப்போடு இருக்கும் மனிதம், எத்தனை விதங்களில் எத்தனை பேரைச் சென்று சேர்கிறது! அவசரமாக நோயாளிகளை அழைத்துச் செல்ல ஆம்புலன்ஸ் தேவை. இந்த ஆம்புலன்ஸ்களால் பல உயிர்கள் பிறந்துள்ளன.  இது இல்லாமல் பல உயிர்கள் இவ்வுலகை விட்டுச் சென்றும் உள்ளது. இதில் இரண்டாவது விஷயம் தன் தாய்க்கு நிகழ, மேற்கு வங்காளத்தைச் சேர்ந்த கரிமுல் ஹவுக் விதியை நொந்து அமர்ந்துவிடவில்லை. என்ன செய்திருக்கிறார் தெரியுமா?  

கரிமுல் ஹவுக். இவரது ஊர், மேற்கு வங்காளத்தில் உள்ள ஜல்பௌகுரி என்ற ஒரு பக்கா கிராமம். அங்கே இவரது அம்மாவுக்குத் திடீரென உடல் நலம் சரியில்லாமல் போகவே, மருத்துவமனையில் உடனே  அனுமதிக்கவேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது. ஆனால், கிராமத்திலோ மருத்துவ வசதிகளும் இல்லை, ஆம்புலன்ஸ் வசதிகளும் இல்லை. எவ்வளவோ முயற்சிகள் செய்தும், சரியான நேரத்துக்கு மருத்துவமனை செல்ல முடியவில்லை. அம்மா இறந்து விட்டார். அந்த சமயத்தில், அம்மா இழந்த சோகத்தையும் தாண்டி, ‘நம்மை போல இந்த ஊரில் இன்னும் எத்தனை எத்தனை பேர் இதேபோல பாதிக்கப்பட்டிருப்பார்கள்.. எத்தனை பேர் பாதிக்கப்பட போகிறார்கள். ஒரு ஆம்புலன்ஸ் இல்லாததால், சரியான நேரத்தில் சிகிச்சை அளிக்கப்படாமல் உயிர்போவது என்பது எத்தனை பெரிய சோகம்’ என்றெல்லாம் எண்ணியிருக்கிறார். 

பைக் ஆம்புலன்ஸ்:

மனிதம்ந்த நிகழ்வு அவருக்குள் ஏற்படுத்திய பாதிப்பு தான், அவரை ஒரு திடமான முடிவு எடுக்க வைத்துள்ளது இன்று. இனி இவ்வூரில் வேறு எவரும் என் தாயை போல மருத்துவ வசதிகள் இன்றி உயிரை விட கூடாது என எண்ணினார். வயதால் முதிர்ந்த முதியவரோ, சின்ன குழந்தையோ, இது போன்ற வசதியின்மை இனி எந்த சூழ்நிலையிலும் அவர்களுக்கு தெரியவரக்கூடாது என்று நினைத்தாலும், அடுத்தகட்ட நடவடிக்கை பற்றி யோசிக்கும் போது, ‘தான் ஒரு சாதாரண ஆள். தன்னால் எந்த வகையில் இதைச் செய்ய முடியும்’ என்பது போன்ற கேள்விகளை தனக்கு தானே கேட்டுக்கொண்டு இருந்துள்ளார். அச்சமயத்தில், உடன் இருக்கும் ஒரு தேயிலை தோட்ட தொழிலாளி உடல்நிலை சரியில்லாமல் போய் சரிந்து விழுந்துள்ளார். அந்த நேரத்தில் வேறு எதையும் யோசிக்காமல், தனது பைக்கில் அவரை ஏற்றிக்கொண்டு புறப்பட்டுள்ளார். அதன் பின்னர் தான் தனது பைக்கை அவசர ஊர்தியாக பயன்படுத்தலாம் என்ற யோசனை உதித்துள்ளது.

 

அதன்பிறகு கரிமுல் வாழ்க்கையின் பலப்பல மாற்றங்கள். ஊருக்குள் யாருக்கு நோய்வப்பட்டாலும் இவரை அழைப்பார்கள். இவர் தான் எடுத்த முடிவில் உறுதியாக நின்று, ஒவ்வொரு முறையும் தனது கிராமத்து மக்களுக்கு உற்ற துணையாக, ஒரு நல்ல தோழனாக இருந்துள்ளார். இன்றுவரை இருந்து வருகிறார். இவர்கள் ஊரில் இருந்து வெளியே போக ஒரு ஆற்றினை கடக்க வேண்டியிருப்பதனால், அவ்வூர் மக்கள் அங்கே ஒரு ஆள் நடக்கும் அளவிலான பாலம் அமைத்துள்ளனர். பாலத்தில் காரோ அல்லது கனரக வாகனமோ ஏற கூட இயலாது என்ற நிலையில், தனது இந்த பைக் ஆம்புலன்ஸ் சேவைக்கு இது ரொம்ப பெரிய பலமாக இருக்கும் என அகமகிழ்ந்து உதவி செய்துள்ளார்.. செய்து வருகிறார்.

எத்தனை பேர் தெரியுமா?

முதலில் அவ்வூரில் இருப்பவர்கள் இதனை கிண்டல் செய்தாலும், நாளாக நாளாக ஆச்சர்யப்பட தொடங்கிவிட்டனர். ஒரு கட்டத்தில், அனைவரும் இதனை ஆமோதிக்க, இந்த பைக் ஆம்புலன்ஸ் பெயர் வாங்கிவிட்டது. தற்போது அங்குள்ள மக்கள் யாருக்காவது உதவி தேவைப்பட்டால், அடுத்த குரல் கரிமுள்ளிற்கு தான். இதுவரை இவர் எத்தனை பேரை தனது பைக்கில் ஏற்றிக்கொண்டு அவசர உதவி செய்திருக்கிறார் தெரியுமா? 3000 பேர்!  தன் கிராமம் மட்டுமின்றி சுற்றியுள்ள 15 ஊர்களுக்கு இவரது சேவை நீண்டுள்ளது. முதியவர்கள் குழந்தைகள் என 3000 பேருக்கு மருத்துவமனை செல்ல உறுதுணையாக இருந்த இவரை ‘ஆம்புலன்ஸ் தாதா’ என்று அழைக்கின்றனர் ஊரார். இவர் கூறும்போது, “சில நேரங்களில், ஒன்றுக்கும் மேற்பட்டவட்டவர்கள் என்னிடம் உதவி கேட்பார்கள். அது போன்ற சமயங்களில் உதவி செய்ய முடியாமல் போய் விடுகிறது.... அந்த ஒரு விஷயம் தான் எனக்கு மிகவும் நெருடலாக உள்ளது” என்கிறார்.

உதவிக்கரம் நீட்டிய பஜாஜ்

மனிதம்

இவரது இந்த சேவையைக்குறித்து அங்குள்ள ஒரு நாளிதழ் வெளியிடவே பஜாஜ் நிறுவனம் தானே முன் சென்று அவரது சேவைகள் குறித்த நிகழ்வுகளை படம் பிடித்து தங்கள் யூ-ட்யூப் சேனலில் பதிவு செய்துள்ளனர். மேலும், அவரது குறையை நிறைவு செய்வதற்காக, தங்கள் நிறுவனத்தின் சார்பில், ஒரே நேரத்தில் ஒன்றுக்கும் மேற்பட்டோரை ஏற்றிச் செல்ல முடிகிற வகையில் ஆம்புலன்ஸ் போல வடிவமைக்கப்பட்ட ஒரு V15 டிசைனர் பைக்கை பரிசாக வழங்கியுள்ளது. பைக்கில் ஆம்புலன்ஸ் என எழுதி, கீழே அவரது மொபைல் நம்பரும் எழுதப்பட்டுள்ளது. பைக்கை பார்த்த கரிமுல், கண்கள் விரிய ஆச்சர்யத்தில் வாயடைத்து சில நொடிகளிலேயே கண்ணீர் விட்டுவிட்டார். பின்னர் அமைதியாகி, “என்னுடைய அம்மாவே திரும்பி வந்தது போல இருக்கிறது எனக்கு......இனி எனக்கு எந்த கவலையும் இல்லை. எத்தனை பேர் வந்தாலும், ஏற்றிக்கொண்டு செல்வேன்.... எனது சேவைகள் அதிகரிக்கும்” என்று கூறியுள்ளார்.

இவரது சேவையைப் பற்றி மருத்துவர் ஒருவர் கூறும்போது, “இவ்வூர் மக்களுக்கு கரிமுல் ஒரு மிகப்பெரிய எடுத்துக்காட்டு. இவரைப் பார்த்து வளரும் தலைமுறையினர் நிறைய கற்றுக்கொள்வார்கள்” என்கிறார். அங்குள்ள மக்களோ, “ஆபத்தில் இருக்கும் எங்களுக்கு இவர் உதவும் போது, எங்கள் கண்ணிற்கு கடவுள் போல தெரிகிறார் இவர்" எனக் கூற, “கடவுள் வேறு. நான் வெறும் மனிதன்தான்” என்கிறார் கரிமுல் அடக்கமாக.

இவரைப் போன்றவர்கள் இருக்கும்போது எல்லா நாளுமே மனிதாபிமானத்திற்கான நாள்தான்!

வீடியோவைக் காண:-

 

 

 

vikatan

  • தொடங்கியவர்

மாடித்தோட்டம் அமைத்து அசத்தும் இன்ஜினீயரிங் மாணவன்!

 

மாடித்தோட்டம்

ன்றைய இளைஞர்கள் பெரும்பாலும் படிக்கும்போது படிப்பின்மீது மட்டுமே கவனம் செலுத்தி வருகின்றனர். படிப்பில் காட்டும் அக்கறைக்கு இளைஞர்கள் வேலையில்லாமல் திண்டாடும் நிலையும் இங்கு இருந்துதான் வருகிறது. அதிலும் இன்ஜினீயரிங் மாணவர்களின் நிலை இன்று மிகவும் மோசமாகி வருகிறது. இதற்கு மத்தியில் படிப்பிலும் கவனம் செலுத்திக்கொண்டு அத்துடன் மாடித்தோட்டம் அமைத்துக் கொடுத்துக் கொண்டிருக்கிறார், திருச்சியை சேர்ந்த கல்லூரி மாணவர் ஜெயராஜ். மாடித்தோட்டம் அமைப்பதையும் ஒரு பொழுதுபோக்காகவே ஆரம்பித்து செய்து வந்திருக்கிறார். அதன் பின்னர் ஜெயராஜின் நட்பு வட்டாரம் 'வானகம்' வரை போய் பயிற்சி எடுக்கும் அளவுக்கு விரிவானது. அப்போதிருந்தே நம்மாழ்வார் கொள்கைகளால் ஈர்க்கபட்டு இயற்கையின் மீது நாட்டம் கொண்டு மாடித்தோட்டத்தை அமைத்து கொடுத்து வருகிறார். மாடித்தோட்ட வேலைகளில் ஈடுபட்டிருந்த ஜெயராஜை சந்தித்தோம்.

33_13032.jpg

“என்னோட அப்பா இன்ஜினீயர், அம்மா கல்லூரி பேராசிரியை. நான் ஒரே பையன். எனக்கு கல்லூரி முதல் வருஷம் படிக்கும்போதே எனக்கு இயற்கை மேல ஆர்வம் இருந்தது. என்னால விவசாயம் பண்ண முடியாது, ஆனால் மாடியில் தோட்டம் போடலாம்னு ஒரு எண்ணம் வந்தது. என் பெற்றோர்கிட்ட அனுமதி வாங்கி மாடித்தோட்டம் அமைச்சேன். இதையும் இயற்கையில செய்யணும்னு நம்மாழ்வார் ஐயாவோட வானகம் பயிற்சி பட்டறைக்கு போயி இயற்கையை பத்தி முழுமையா தெரிஞ்சுகிட்டேன். அவரோட வார்த்தைகளை நேர்ல கேட்க முடியலைனாலும், யூடியூப்ல அதிகமா கேட்பேன். நான் வானகத்துக்கு போனபோது அதிகமான இயற்கை வேளாண்மை செய்யும் நபர்களோட அறிமுகமும் கிடைச்சது. அதுக்கு பின்னாடி என்னோட வீட்ல மாடித்தோட்டம் முழுமையா அமைச்சேன். இப்போ பக்கத்துல இருக்குறவங்க எங்க வீட்லையும் மாடித்தோட்டம் அமைச்சு கொடுங்கனு கேக்குறாங்க.

collage_13535.jpg

இதுபோக தெருக்கூத்து, நாடக கலைகள்னு எல்லாமே நல்லா தெரியும். என்கிட்ட அக்கறையோட கேட்குறவங்ககிட்ட அதை தினமும் பராமரிக்கிறவங்கதான் மாடித்தோட்டம் அமைக்க எனக்கு உதவியா இருக்கணும்னு சொல்லிடுவேன். அபோதான் மாடித்தோட்டத்தின் அருமை அவங்களுக்கு புரியும். இயற்கையை உண்டாக்குறது எவ்வளவு கஷ்டமான அனுபவம்னு அவங்களுக்கு தெரியும். மாடித்தோட்டம் அமைச்சுக் கொடுத்த பின்னாடி அவங்களுக்கு மாடித்தோட்டம் பற்றிய வகுப்பெடுப்பேன்.  தரமான 50-க்கும் மேற்பட்ட நாட்டு விதைங்க என்கிட்ட இருக்கு. நானே விதையை வச்சு காய்கறி நாத்துக்களையும் உற்பத்தி செய்து கொடுக்குறேன். இதுவரைக்கும் 10-க்கும் மேல பயிற்சி வகுப்புகளை நடத்தியிருக்கேன்" என்றவர் தொடர்ந்தார்.

14_13367.jpg

“என் வீட்ல இருக்குற குப்பைகளும் காய்கறி கழிவுகளும்தான் இங்க உரமா பயன்படுத்துறேன். மாட்டு எருவையும் மண்புழு உரத்தையும் அடியுரமா பயன்படுத்துறேன். மாடித்தோட்டத்துக்கு தண்ணீரை காலை, மாலை என இரு வேளைகளிலும் தெளிக்கணும். அடியுரம் கலக்கும்போது கொஞ்சம் தேங்காய் நார்களை சேர்த்துக் கொண்டால் தண்ணீரை தேக்கி வைக்கும். மீன் கழிவுகளையும் வாங்கிட்டு வந்து அதை பதப்படுத்தி நாட்டுச்சர்க்கரையை கலந்து அந்த உரத்தை பயிர்களில் தெளிப்பது மூலமா பயிரோட வளர்ச்சி அதிகமாகும். மீன் அமிலம், பஞ்சகவ்யா, மண்புழு உரம் என இதையும் நான் தயாரிச்சு விற்பனை செய்யுறேன். இதை அப்படியே கல்லூரியிலும் அமைச்சேன். என்னோட கல்லூரி இன்ஜினீயரிங் கல்லூரி என்பதால பழைய பேட்டரி டப்பாவை வச்சு தோட்டம் அமைச்சிருக்கேன். என்னோட ஜூனியர், சீனியர்னு என்கிட்ட அதிகமான மாணவர்களும் மாடித்தோட்டத்தை பத்தி கேட்டு தெரிஞ்சுக்குவாங்க. எங்க வீட்ல மார்கெட்ல போய் காய்கறிகள் வாங்குறது இப்போ கம்மியாயிடுச்சு. இப்போ பரவலாக விவசாய ஆர்வத்தை போக்குறது மாடித்தோட்டம் மட்டும்தான். மனசுக்கும், உடலுக்கும் ஆரோக்கியமானது. என்னதான் பொறியியல் படிப்புல இருந்தாலும் கூட எனக்கு வேளாண்மை பத்தின புரிதலையும், இயற்கை சார்ந்த விஷயங்களையும் மக்களுக்கு எடுத்துக்கொண்டு போறதுதான் என்னோட கனவு. இயற்கைக்காக மாறணும்ங்குறதுக்காக சூரிய ஒளி மின்சார தகடுகளை வாங்கி பொருத்தியிருக்கேன். இதுமூலமா கணிசமான மின்சாரத்தேவை குறையுது" என்றபடி விடைகொடுத்தார், மாடித்தோட்ட மாணவர்.

vikatan

  • தொடங்கியவர்

விண்வெளிக் கழிவுகளை அகற்ற புதிய யுக்தி

 

space-debris-3-polar-orbit_23217.jpg

ஜப்பானிய விண்வெளி ஆய்வு மையமான JAXA, விண்வெளியில் உள்ள கழிவுகளை அகற்ற புதிய யுக்தியைக் கையாள உள்ளது. இதன்படி, கடந்த வாரத்தில் சர்வதேச விண்வெளி ஆய்வு மையத்திற்குக் கொண்டு செல்லப்பட்டுள்ள விண்கலம் மூலம், விண்வெளியில் சுற்றிவரும் கழிவுகள் பூமியின் வளிமண்டலத்திற்கு இழுத்து வரப்பட்டு தகர்க்கப்பட உள்ளதாக நாசா தெரிவித்துள்ளது.

2013-ம் ஆண்டு வரை பல்வேறு விண்வெளி ஆய்வு மையங்களின் ஆய்வில், 5 லட்சம் எண்ணிக்கையுள்ள விண்வெளிக் கழிவுகள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக நாசா தெரிவித்துள்ளது. செயலிழந்த செயற்கைக்கோள்களின் பாகங்கள் பூமியின் சுற்றுவட்டப் பாதையில் இன்னும் சுழன்று கொண்டிருக்கின்றன. இது விண்வெளி ஆய்வு மையங்களுக்குப் பெரும் பிரச்னையாக உள்ளது. ஜப்பானின் இந்தப் புதிய தொழில்நுட்பம் மூலம் 700 மீட்டர் வரை நீளமுள்ள மின்சக்தி கொண்ட உலோகக் கயிறுகளால் விண்வெளிக் கழிவுகள் பூமியின் வளிமண்டலத்திற்குக் கொண்டுவரப்பட்டு தகர்க்கப்பட உள்ளன.

விண்வெளிக் கழிவுகள் ஜி.பி.எஸ். உதவியுடனும், ஆப்டிகல் கேமராக்கள் உதவியுடனும் அடையாளம் காணப்பட்டு தகர்க்கப்படும். இந்தப் பரிசோதனை முயற்சியின் கீழ் சில நூறு கிலோவிலிருந்து, சில டன் எடைகொண்ட கழிவுகள் வரை அகற்றப்பட உள்ளதாக நாசா தெரிவித்துள்ளது.

  • தொடங்கியவர்

ஜெரோஸ்லாவ் ஹெரோவ்ஸ்கி

 
muthu1_3106223f.jpg
 
 
 

போலரோகிராப் சாதனத்தை உருவாக்கியவர்

வேதியியலுக்கான நோபல் பரிசை வென்ற செக் குடியரசின் அறிவியல் அறிஞர் ஜெரோஸ்லாவ் ஹெரோவ்ஸ்கி பிறந்த தினம் இன்று (டிசம்பர் 20). அவரைப் பற்றிய அரிய முத்துக்கள் பத்து:

* செக் குடியரசின் தலைநகரம் பிராக்கில் பிறந்தவர் (1890). பள்ளிக் கல்விக்குப் பிறகு, 1913-ல் லண்டன் பல்கலைக்கழகக் கல்லூரியில் பி.எஸ்சி. பட்டம் பெற்றார். மின்வேதியியலில் மிகவும் ஆர்வம் கொண்டார். முதல் உலகப் போரின்போது ராணுவ மருத்துவமனையில் வேதியியலாளராகவும் கதிரியக்க சிகிச்சை வழங்குபவராகவும் பணியாற்றினார்.

* போருக்குப் பின்னர், உயர் கல்வி பயின்று டி.எஸ்.சி. பட்டம் பெற் றார். லண்டனில் அலுமினியத்தின் எலக்ட்ரோ நாட்டம் குறித்து ஆய்வு செய்து முனைவர் பட்டமும் பெற்றார். பிராக், சார்லஸ் பல்கலைக்கழகத்தில் பகுப்பாய்வு வேதியியல் கல்வி அமைப்பில் துணை ஆசிரியராகத் தன் தொழில் வாழ்வைத் தொடங்கினார்.

* 1926-ல் அந்தப் பல்கலைக்கழகத்தில் இயற்பியல் சார் வேதியியல் துறையின் முதல் பேராசிரியராக நியமிக்கப்பட்டார். அலுமினியத்தின் ரசாயனப் பண்புகள் குறித்து ஆராய்ந்தார். புதிதாகப் பிறந்த மின் வேதியியல் துறையில் பல ஆய்வுகளை மேற்கொண்டார். அலுமினியத்தின் எலக்ட்ரோட் ஆற்றலைத் நிர்ணயம் செய்தார்.

* வோல்ட்டா அளவியலிலும் குறிப்பிடத்தக்கப் பங்களிப்பை வழங்கினார். பாதரசத்தின் மின் நுண்புழைமை (capillarity) குறித்தும் ஆய்வுகள் மேற்கொண்டார். மின் வேதியியல் பகுப்பாய்வு முறையை கரிம மற்றும் கனிம சேர்மங்கள் குறித்த ஆய்வுகளுக்குப் பயன்படுத்தினார். 1925-ல் முதன் முதலாக போலரோகிராப் என்ற சாதனத்தை உருவாக்கினார்.

* கரிம மற்றும் கனிம சேர்மங்களின் வேதியியல் அமைப்புகள் குறித்த ஆய்வுகளில் இவரது சாதனம், ஒரு வரமாகவே கருதப்பட்டது. பல்வேறு வேதியியல் ஆய்வுகளின் பிரச்சினைகளுக்கு தீர்வு காண விஞ்ஞானிகளுக்கு இது பேருதவியாக அமைந்தது. மேலும், அலைவு (oscillation) போலரோகிராபி குறித்தும் ஆராய்ந்தார். 1938-ல் முனைப்படு வரைவியல் முறையைக் (polarographic method) கண்டறிந்தார்.

* போலரோகிராபியின் பகுப்பாய்வு சாதனத்தையும் கண்டறிந்தார். அறிவியல் பகுப்பாய்வின் முனைப்படு வரைவியலைக் கண்டறிந்து மேம்படுத்தியதற்காக இவருக்கு 1959-ல் வேதியியலுக்கான நோபல் பரிசு வழங்கப்பட்டது.

* மின்பகுப்பாய்வு முறையின் (electroanalytical method) தந்தை எனப் போற்றப்பட்டார். மின்னோட்டம் அல்லது வோல்ட்கள் அல்லது இரண்டையும் அளந்து கண்டறியும் முறை இது. ஜெர்மன், ஆங்கிலம், பிரெஞ்ச் மொழிகளில் எழுதிய அறிவியல் கட்டுரைகள், இதழ்கள் பெரிய அளவில் அங்கீகாரம் பெற்றன.

* எனவே இவர் செக் அறிவியல் இதழ்கள் உருவாகவும் செக் மொழியில் அறிவியல் வார்த்தைகளைக் கண்டறிவதிலும் நிறைய நேரம் செலவிட்டார். செக் குடியரசின் போலரோகிராபிக் இன்ஸ்டிடியூட்டின், அறிவியல் அகாடமி இயக்குநராக 1950-ல் நியமிக்கப்பட்டார்.

* வார்ஷா பல்கலைக்கழகம், பாரீஸ் பல்கலைக்கழகம் உள்ளிட்ட பல பல்கலைக்கழகங்கள் இவருக்கு டாக்டர் பட்டம் வழங்கின. பெங்களூரு, இந்திய அறிவியல் கழகம் மற்றும் அமெரிக்க, ஹங்கேரி, போலந்து உள்ளிட்ட பல நாடுகளின் அறிவியல் அமைப்புகளின் கவுரவ உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

* மின் வேதியியல் மற்றும் பகுப்பாய்வு வேதியியல் துறையில் உலக அளவில் குறிப்பாக, செக் குடியரசின் அறிவியல் களத்தில் மகத்தான பங்களிப்பை வழங்கிய ஜெரோஸ்லாவ் ஹெரோவ்ஸ்கி 77-வது வயதில் (1967) மறைந்தார்.

tamil.thehindu

  • தொடங்கியவர்

நடப்பது நல்ல உடற்பயிற்சியா?

உடற்பயிற்சி கூடத்திற்கு சென்று உடற்பயிற்சி செய்ய முடியாதவர்கள் நடைப்பயிற்சி செய்யலாம். நடப்பதும் நல்ல உடற்பயிற்சிகளுள் ஒன்று.

 
நடப்பது நல்ல உடற்பயிற்சியா?
 
உடற்பயிற்சி கூடத்திற்கு சென்று உடற்பயிற்சி செய்ய முடியாதவர்கள் நடைப்பயிற்சி செய்யலாம். நடப்பதும் நல்ல உடற்பயிற்சிகளுள் ஒன்று.

நடக்கும் போது இரத்த ஓட்டம் சீராக உடலில் எல்லா பாகங்களுக்கும் கிடைக்கிறது. இதனால் திசுக்களுக்குத் தேவையான சக்தி (கலோரிகள்) கிடைப்பதால் நமது உடல் நலம் நன்றாக இருக்கும்.

நாம் ஒரே இடத்தில் வெகுநேரம் உட்கார்ந்து கொண்டோ, நின்று கொண்டோ வேலை செய்பவராக இருந்தால், நமது கால்களில் உள்ள இரத்தக் குழாய்களுக்கு அங்குள்ள இரத்தத்தை திரும்பவும் இதயத்துக்கு அனுப்ப போதுமான அளவு அழுத்தம் கிடைப்பதில்லை.

இதனால் இரத்த ஓட்டம் உடலின் எல்லா பாகங்களுக்கும் சீராக இருப்பதில்லை. நடக்கும் போது நமது கால்களில் உள்ள தசைகள் இயங்கி, அருகிலுள்ள இரத்தக் குழாய்களை அழுத்தி இரத்தத்தை இதயத்துக்கு அனுப்பத் தேவையான சக்தியை அளிக்கின்றன.

ஆகவே தினமும் 2 அல்லது 3 கி.மீட்டர் தூரம் நடப்பது மிகவும் சிறந்த உடற்பயிற்சி ஆகும். உடற்பயிற்சி செய்ய முடியாதவர்கள் கண்டிப்பாக வாரம் 5 நாட்கள் நடைப்பயிற்சியை மேற்கொள்ள வேண்டியது மிகவும் அவசியமானது.
  • தொடங்கியவர்

வரலாற்றில் இன்று...

டிசம்பர் 21

 

1768 :  நேபாள இராஜ்­ஜியம் ஸ்தாபிக்­கப்­பட்­டது.

 

1913 : உலகின் முத­லா­வது குறுக்­கெ­ழுத்துப் போட்டி "நியூயோர்க் வேர்ல்ட்" பத்­தி­ரி­கையில் வெளி­யா­னது.

 

870varalaru-21-12.jpg1967 : உலகின் முத­லா­வது இத­ய­மாற்றுச் சிகிச்சை பெற்ற தென்­  ஆ­பி­ரிக்­காவைச் சேர்ந்த லூயிஸ் நாஷ்­கான்ஸ்கி சிகிச்சை பெற்று 18 நாட்­களின் பின்னர் இறந்தார்.

 

1968 : சந்­தி­ர­னுக்­கான மனி­தனை ஏற்றிச் சென்ற விண்­கலம் அப்­பலோ 8  அமெ­ரிக்­காவின் புளோ­ரி­டாவில் இருந்து ஏவப்­பட்­டது. புவி­யீர்ப்பை கடந்து சென்ற முத­லா­வது மனித விண்­கலம் இது­வாகும்.

 

1971 : ஐ.நா.வின்  பொதுச் செய­லராக கூர்ட் வால்ட்­ஹெயிம் தெரி­வானார்.

 

1973 : அரபு – இஸ்ரேல் பிரச்­சி­னைக்குத் தீர்வு காண்­ப­தற்­கான ஜெனீவா மாநாடு ஆரம்­ப­மா­னது.

 

1979 : ரொடீ­சி­யாவின் (தற்­போ­தைய ஸிம்­பாப்வே) சுதந்­தி­ரத்துக்­கான உடன் ­ப­டிக்கை லண்­டனில் கைச்­சாத்­தி­டப்­பட்­டது.

 

1988 : ஸ்கொட்­லாந்தில் லொக்­கர்பி என்ற இடத்தில் பறந்து கொண்­டி­ருந்த அமெ­ரிக்­காவின் பான் எம். 103 எனும்  விமா­னத்தில் குண்டு வெடித்­ததில் 270 பேர் கொல்­லப்­பட்­டனர்.

 

1991 : கசகஸ்­தானின் அல்­மா-­ஆட்டா நகரில் கூடிய பதி­னொரு சோவியத் குடி­ய­ர­சு­களின் தலை­வர்கள் சுதந்­தி­ர ­நா­டு­களின் பொது­ந­ல­வாய அமைப்பை உரு­வா­க்கி­யதுடன் சோவியத் ஒன்­றியம் கலைக்­கப்­படும் என அறி­வித்­தனர். 

 

1992 : நெதர்­லாந்து விமா­ன­மொன்று போர்த்­துக்­கலில் வீழ்ந்­ததில் 56 பேர் கொல்­லப்­பட்­டனர்.

 

1995 : இயேசு கிறிஸ்து பிறந்த பெத்­லஹேம் நகரம் இஸ்­ரே­லி­யர்­க­ளிடம் இருந்து பலஸ்­தீ­னர்­க­ளிடம் ஒப்­ப­டைக்­கப்­பட்­டது.

 

1999 : ஸ்பெய்னின் மெட்ரிட் நகரில் தாக்­குதல் நடத்­து­வ­தற்­காக வேன் ஒன்றில் ஏற்­றிச்­ செல்­லப்­பட்ட 950 கிலோ­கிராம் வெடி­பொ­ருட்­களை  அந்நாட்டுப் படையினர் கைப்பற்றினர்.

 

 2007 : பாகிஸ்தானில் பெஷாவர் நகரில் மசூதி ஒன்றில் இடம்பெற்ற தற்கொலைக் குண்டுத் தாக்குதலில் சுமார் 50 பேர் கொல்லப்பட்டனர்.

metronews.lk

Edited by நவீனன்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.