Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இளமை புதுமை பல்சுவை

Featured Replies

  • தொடங்கியவர்

சாப்பிடலாம்... சிலிர்க்கலாம்!

 

ஹோட்டல்கள், ரெஸ்டாரென்ட்கள்னாலே டைனிங் டேபிள் இருக்கும், மெனுகார்ட் இருக்கும்... வேற என்ன புதுசா இருக்கப்போகுதுனு யோசிச்சிருக்கீங்களா..? அப்படி நம்மளை மாதிரியே யோசிச்ச யாரோதான் இப்படிப்பட்ட வித்தியாசமான ரெஸ்ட்டாரன்ட்களையும் வடிவமைச்சுருக்கணும். உலகம் முழுவதிலும் இருக்கும் வித்தியாசமான ஹோட்டல்களைப் பார்ப்போம் வாங்க...

30p1.jpg

Ristorante Grotta Palazzese

இத்தாலியில் அமைந்திருக்கும் இந்த ரெஸ்டாரென்ட், நம்ம ஊர் குடைவரைக்கோயில் போலக் கற்பாறைகளுக்கு நடுவே குடைந்து வடிவமைக்கப்பட்டிருக்கிறது. கடலுக்கு அருகே இருக்கும் பாறைகளின் வழியாகக் குனிந்து உள்ளே சென்றால், நீண்ட குகைப்பாதையின் முடிவில் பெரிய ஹோட்டல் வரவேற்கிறது. உள்ளே அமர்ந்து விதவிதமான உணவுகளைச் சுவைத்தபடி, மறுபக்கம் கடலின் அழகை ரசிக்கலாம். #அழகிய கடலே...

30p2.jpg

Aiguille Du Midi Restaurant

ஃபிரான்ஸ் நாட்டின் சாமொனிக்ஸ் நகரத்தில் பனிமலைகளின் முகட்டில் இருக்கிறது இந்த ரெஸ்டாரென்ட். மேலிருந்து கீழே பார்த்தாலே ஈரக்குலை நடுங்கும் 3,842 மீட்டர் உயரத்தில் அமைந்திருக்கிறது. வெளியிலிருந்து பார்க்கும்போது ஏற்படும் பயமின்றிச் சாப்பிட அமர்ந்தால், பனிமலைகளின் அழகு கண்முன்னே தெரியும்படி சிறப்பாக வடிவமைக்கப்பட்டிருக்கிறது. #சாப்பாடு பாதி, பயம் மீதி!

30p3.jpg

Giraffe Manor

கென்யா நாட்டின் லங்காடா பகுதியில் இருக்கும் இந்த ஹோட்டல் இன்னும் வித்தியாசமானது. காட்டுப் பகுதியில் அமைந்திருக்கும் இந்த ஹோட்டலில் ஒட்டகச்சிவிங்கிகளோடு சேர்ந்து உங்கள் உணவைப் பரிமாறிக்கொள்ளலாம். ஒட்டகச்சிவிங்கிகள் நீண்ட கழுத்தை ஹோட்டலுக்கு உள்ளே நுழைத்து உங்கள் தட்டிலிருக்கும் சாப்பாட்டைக் கவ்விக்கொள்ளும் அளவுக்கு ஜன்னலை அமைத்திருக்கிறார்கள். # சொந்தக் காசுல சூனியம்!

30p4.jpg

Ithaa undersea Restaurant

மாலத்தீவில் கடலுக்கு அடியில் ஐந்து மீட்டர் ஆழத்தில் அமைந்திருக்கிறது இந்த கடலடி ரெஸ்டாரென்ட். கண்ணாடிக் கூண்டு போன்ற அமைப்பில் பெரிதாக இருக்கும். உள்ளே போய் அண்ணாந்து பார்த்தால், தலைக்கு மேலே மீன்கள் நீந்திக்கொண்டிருக்கும். கடலுக்குள்ளேயே அமர்ந்து கடல் உணவுகளை ஒரு கை பார்க்கலாம். கடல் பிரியர்கள் மத்தியில் பெருத்த வரவேற்பைப் பெற்றது இந்த ஹோட்டல். #சுறாப்புட்டு சாப்பிட்டா, சுறா வருமா பாஸ்? 

30p5.jpg

The Green Dragon Pub

நியூசிலாந்தின் `ஹாபிடன்' எனும் இடத்தில் இருக்கும் இந்த ஹோட்டல் குடிமகன்களுக்காகப் பிரத்யேகமாகக் கட்டப்பட்டது. பழைய வீடுகளின் அமைப்பைப் போல இருக்கும் இந்த பார்ட்டி ஹோட்டலில் சரக்குகள் பெரிய பேரலில் நிரப்பி வைக்கப்பட்டிருக்குமாம். குழாயைத் திறந்தால் இங்கே சரக்கு வரும். கட்டணம் கொஞ்சம் கூடுதலாக இருந்தாலும் அடர்ந்தக் காட்டுக்கு நடுவே குடிப்பதை அநேகம் பேர் விரும்புகிறார்களாம். #கார்ப்பரேஷன் குழாயில் காத்துதான் வரும்!

30p6.jpg

Ali Barbour’s Cave Restaurant

கென்யாவில் அமைந்திருக்கும் இந்த ரெஸ்டாரென்ட்டை அடைய குகைக்குள் நடந்து செல்ல வேண்டும். இருட்டறையாக இருக்கும் இந்தப் பகுதி முழுவதும் மெழுகுவத்திகளால் சூழப்பட்டு இரவு நேரங்களில் தங்கமாகத் தகதகவென ஜொலிக்கிறது. #அலிபாபான்னு பேர் வெச்சா, `திறந்திடு சீசேம்' சொல்லணுமோ..?

30p7.jpg

Labassin Waterfall Restaurant

பிலிப்பைன்ஸ் நாட்டின் லெப்பாசின் நீர்வீழ்ச்சியில், உச்சிப்பாறைகளில் இருந்து தண்ணீர் தெறித்துவிழும் இடத்தில் நட்டநடுவே அமைந்திருக்கிறது இந்த ஹோட்டல். தடுக்கி விழுந்தால் தண்ணீரில்தான் கால்வைக்க வேண்டும். நீர் ஓடிக்கொண்டிருப்பதற்கு மேலேயே டேபிளைப் போட்டு ரெஸ்டாரென்டாக்கி இருக்கிறார்கள். இந்த ஐடியாவுக்கே வாடிக்கையாளர்கள் குவிகிறார்களாம். #நீங்கள்லாம் எங்கிருந்துய்யா வர்றீங்க..?

30p8.jpg

Hot Air Balloon Restaurant

நெதர்லாந்தில் இருக்கிறது (ஸாரி... பறக்கிறது) இந்த ஹோட்டல். பறக்கும் பாராசூட் பலூனிலேயே இரண்டு குடும்பங்கள் அமர்ந்து சாப்பிடும் அளவுக்கு இருக்கிறது இந்த ஹோட்டல். பறந்துகொண்டே சாப்பாட்டைப் பறக்கவிடாமல் பதறியபடி சாப்பிடலாமாம். உயிர் போற பயத்துல சாப்பாடு எப்படி உள்ளே இறங்கும்? #என்னத்த சொல்ல..!

30p9.jpg

The SnowCastle of kemi

முழுக்க முழுக்கப் பனிப் பாறைகளாலும், பனிக்கட்டிகளாலும் சூழ்ந்திருக்கிறது இந்த ஹோட்டல். உட்காருவதற்கு மட்டும் இருக்கையில் கொஞ்சம் கம்பளி போட்டிருக்கிறார்கள். இங்கே ஐஸ்க்ரீம் முதல் க்ரில் வெரைட்டிகள் வரை எல்லாமே கிடைக்குமாம். குளிரில் நடுங்கினால் கிச்சனுக்குத்தான் ஓட வேண்டும். #என்ன்ன்னா குளிரு..?

30p10.jpg

Dinner in the sky

தொங்கும் தோட்டம் போல, இது அந்தரத்தில் தொங்கும் ஹோட்டல். இங்கே சீட் பெல்ட் அணிந்தபடிதான் சாப்பிட விடுவார்களாம். கிரேன் இயந்திரத்தின் உதவியோடு தொங்கவிடப்பட்டிருக்கும் இந்த மிதக்கும் ஹோட்டலில், விபத்து நிகழாதவாறு நிறையப் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருக்கிறதாம். #இதெல்லாம் தேவையா முருகேசா..!

vikatan

  • Replies 11.3k
  • Views 1.5m
  • Created
  • Last Reply
  • தொடங்கியவர்
அறியாமல் விட்டுவிட்டால் கஷ்டப்படுவது யார்?
 

article_1484799376-yhfkjk.jpgபோனால் போகட்டும் எனச் சிலர் வெகு சுலபமாகச் இழப்புப் பற்றிச் சொல்லுவார்கள். தமக்கு ஏற்பட்ட இழப்புக்கு யார் காரணம்? எதற்காக நடந்தது? என்பது பற்றிச் சிந்திக்காமல் இப்படிச் சொல்லலாமா?  

எதனையும் செய்யும்போது, அது பற்றித் தெரிந்து, ஆராய்ந்து செய்ய வேண்டும். நட்டங்களுக்கான காரணத்தை அறியாமல் விட்டுவிட்டால் கஷ்டப்படுவது யார்? 

பாடுபட்டு உழைத்தவர்கள் கூட தங்களது அறியாமையினால் ஈட்டிய பொருளைப் போக்கடித்துவிட்டு, வாட்டத்துடன் வாழுகின்றனர்.  

உழைப்பதைவிட, அதன் மூலம் சேர்த்த பொருளைக் காப்பாற்றுவதே பலருக்கும் சிரமமாக இருக்கிறது.  

நிதானம், எச்சரிக்கை, முன் அனுபவம், இவையே அத்தொழிக்கு வாய்ப்பாக அமையும். உணர்க! 

Edited by நவீனன்

  • தொடங்கியவர்

வரலாற்றில் இன்று....

ஜனவரி - 19

 

1806 : நன்னம்பிக்கை முனையை பிரித்தானியா பிடித்தது.

 

1817 : சிலி மற்றும் பெருவை விடுதலை செய்ய ஜோஸ் டெ சான் மார்ட்டின் தலைமையில் 5,423 போர் வீரர்கள் கொண்ட படை, ஆர்ஜென்டீனாவிலிருந்து அந்தீஸ் மலைத்தொடரை கடந்தது.

 

1839 : பிரித்தானிய கிழக்கிந்தியக் கம்பனி யேமனின் ஏடென் நகரைக் கைப்பற்றியது.

 

1899 : ஆங்கிலோ-–  எகிப்திய சூடான் அமைக்கப்பட்டது.

 

1903 : ஐக்கிய அமெரிக்காவுக்கும் இங்கிலாந்துக்கும் இடையே முதலாவது வானொலி ஒலிபரப்பு ஆரம்பமாகியது.

 

888varalaru---Indira-Gandhi.gif1917 : லண்டனில் ஆயுதக் களஞ்சியம் ஒன்றில் இடம்பெற்ற வெடிவிபத்தில் 73 பேர் உயிரிழந்ததுடன், 400 பேர் காயமடைந்தனர்.

 

1927 : சீனாவுக்கு பிரித்தானியா  படைகளை அனுப்பியது.

 

1937 : ஹோவார்ட் ஹியூஸ் என்பவர் லொஸ் ஏஞ்சலஸ் இலிருந்து நியூயோர்க் நகரத்திற்கு 7 மணிநேரம், 28 நிமிடங்கள், 25 விநாடிகளில் பறந்து சாதனைப் புரிந்தார்.

 

1941 : இரண்டாம் உலகப் போர்: பிரித்தானியப் படைகள் இத்தாலி வசமிருந்த எரித்திரியாவைத் தாக்கின.

 

1942 : இரண்டாம் உலகப் போரின்போது ஜப்பானியப் படைகள் பர்மாவை முற்றுகையிட்டன.

 

1949 : இஸ்ரேலை கியூபா அங்கீகரித்தது.

 

1966 :  இந்தியாவின் பிரதமராக இந்திரா காந்தி முதல் தடவையாக தெரிவுசெய்யப்பட்டார்.

 

1981 : ஈரானில் 14 மாதங்களுக்கு முன்னர் பணயக் கைதிகளாகப் பிடிக்கப்பட்ட 52 அமெரிக்கர்களை விடுவிக்க ஐக்கிய அமெரிக்காவும் ஈரானும் ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்டன.

 

1983 : நாசி போர்க் குற்றவாளி கிளவுஸ் பார்பி பொலிவியாவில் கைது செய்யப்பட்டான்.

 

1986 : முதல் ஐ.பி.எம். ரக கணினி வைரஸான (சி) பிரெயின் ((c) Brain) பரவத் தொடங்கியது.

 

1991 : வளைகுடா யுத்தத்தின்போது இஸ்ரேல் மீது தனது இரண்டாவது ஸ்கட் ஏவுகணையை ஈராக் ஏவியது. இதனால் 15 பேர் காயமடைந்தனர்.

 

1993 : செக் குடியரசு, ஸ்லோவாக்கியா ஆகியன ஐ.நாவில் இணைந்தன.

 

1997 : யஸிர் அரபாத் 30 ஆண்டுகளுக்குப் பின்னர் பலஸ்தீன மேற்குக் கரை நகரான ஹெப்ரோனுக்குத்  திரும்பினார்.

 

2006 : ஸ்லோவாக்கி யாவின் விமானப்படை விமானம் ஹங்கேரியில் வீழ்ந்து நொருங்கியது.

 

2006 : புளுட்டோவுக்கான முதலாவது நியூ ஹரைசன்ஸ் என்ற விண்ணுளவியை நாசா விண்ணுக்கு ஏவியது.

metronews.lk

Edited by நவீனன்

  • தொடங்கியவர்

மசாலா தோசை இப்போ பர்கராச்சு, அடுத்து என்ன ? - இந்தியர்களின் கற்பனைகள்

  •  

பாரம்பரியமிக்க சில இந்திய உணவு வகைகளை பர்கர் வடிவில் தாங்கள் தயாரித்து பரிமாறும் திட்டத்தை துரித உணவுக்குப் பேர் போன மெக்டொனால்ட் நிறுவனம் அறிவித்தது பரபரப்பை உருவாக்கியுள்ளது.

இது தோசையா? பர்கரா?

 

 இது தோசையா? பர்கரா?

பர்கர் வடிவில் பரிமாற மெக்டொனால்ட் திட்டமிட்டுள்ளதில் பிரபல தென்னிந்திய உணவான மசால் தோசையும் ஒன்றாகும்.

கடந்த வாரத்தில் மெக்டொனால்ட்டின் புதிய உணவு திட்டங்களான ''தோஸா பர்கர்'' மற்றும் ''அண்டா புர்ஜி பர்கர் (முட்டை துருவல்) ஆகியவை குறித்து தங்களின் கருத்துக்களை பெரும்பாலான இந்தியர்கள் ட்விட்டர் வலைத்தளத்தில் பகிர்ந்தனர்.

சிலர் மெக்டொனால்ட் நிறுவனம் இந்திய உணவுகளுக்கு பொருத்தமான மாற்று உணவுகளை தயாரிக்கும் முயற்சியில் உள்ளதாக கருத்து தெரிவித்துள்ள சூழலில், வேறு சிலர் மேலும் பல இந்திய உணவுகளை எவ்வாறு மெக்டொனால்ட் நிறுவனம் தங்கள் பாணியில் பரிமாற மாற்ற முயற்சிக்கலாம் என்று நகைச்சுவையாக கருத்து வெளியிட்டனர்.

இவர்களின் நகைச்சுவையான ஆலோசனைகளை, பிபிசியின் கார்ட்டூனிஸ்டான (கருத்துக் சித்தரக் கலைஞர்) கீர்திஷ் பட் கருத்தில் எடுத்துக் கொண்டு, உலக அளவிலான துரித உணவு சங்கிலிகளில், இந்திய உணவின் பங்கு மற்றும் பரிமாறப்படும் விதம் குறித்து தனது கை வண்ணத்தில் வடிவமைத்துள்ளார்.

'மெக் சமோசா' முயற்சித்து பார்க்கலாமே!

 

'மெக்டொனால்ட் சமோசா' - இது எப்படி?

'மெக்டொனால்ட் சமோசா' - இது எப்படி?

இந்தியாவில் சாதாரண வீதிகளில் கிடைக்கும் எளிய, அதே சமயத்தில் மிகவும் பிரபலமாக உள்ள உணவு சமோசாவாகும். முழுமையாக இந்திய உணவுகளை தயாரித்து, பரிமாறும் துரித உணவகமாக மெக்டொனால்ட் நிறுவனம் மாறுவதற்கு, இதனை தனது மெனு கார்ட்டில் சேர்த்துக் கொள்ள வேண்டும் என்று ஒருவர் ட்விட்டரில் ஆலோசனை தெரிவித்திருந்தார்.

ஏன் 'லஸி' பானத்தை சேர்க்கக் கூடாது?

  லஸி

மெக்டொனால்ட் நிறுவனத்தின் இந்திய உணவு மெனு கார்ட் லஸி பானம் இல்லாமல் நிறைவு பெறாது என்று மற்றொரு ட்விட்டர் பயன்பாட்டாளர் தெரிவித்துள்ளார். தயிரால் தயாரிக்கப்படும் ஒரு அடர்த்தியான இனிப்பு பானம் லஸியாகும்.

அவரவர் பாணி அவரவருக்கே

மெக்டொனால்ட் போன்ற சர்வதேச துரித உணவகங்கள் இந்திய உணவகங்களாக மாற முயற்சிக்கும் வேளையில், சில இந்திய உணவகங்கள் தங்களை சர்வதேச உணவகங்களாக காட்டிக் கொள்ள , பிரபல சர்வதேச துரித உணவு சங்கிலிகளின் பெயர்களை தங்கள் உணவகங்களுக்கு வைத்துள்ளன.

கேஎஃப்சி  

தென் இந்திய மாநிலமான கேரளாவில் பரிமாறப்படும் பிரபல உணவுகளில் ஒன்றான சட்யா உணவு வாழை இலையில் பரிமாறப்படுகிறது.

கேஎஃப்சி துரித உணவகம் இந்திய உணவுகளை தயாரித்து பரிமாறினால் , அது கேஎஃப்சி உணவகமாக தோன்றாமல் முற்றிலும் மாறுபட்டதாக காட்சியளிக்கும்.

'சப்வே' சாம்பார் - இது எப்படி இருக்கு?

சாம்பார் விற்பனையில் 'சப்வே'

 

 சாம்பார் விற்பனையில் 'சப்வே'

சப்வே உணவகம் இந்தியாவில் ஆரம்பிக்கப்பட்டிருந்தால், அந்த உணவகம் பிரபல தென்னிந்திய குடும்பப் பெயரான சுப்பிரமணியன் என்ற பெயரால் ஈர்க்கப்பட்டிருக்கும்.

ரொட்டி (சாண்ட்விச்) மற்றும் சாலடுகளுக்கு பதிலாக, அரிசி ரொட்டியையும், சாம்பார் எனப்படும் பருப்பு குழம்பையும் சப்வே உணவகம் விற்பனை செய்திருக்கும்.

''யுஎஸ்'' என்றால் அமெரிக்காவா? 'உத்தம் சிங்கா?

 

''யுஎஸ்'' என்றால் அமெரிக்காவா? 'உத்தம் சிங்கா?

 ''யுஎஸ்'' என்றால் அமெரிக்காவா? 'உத்தம் சிங்கா?

இந்தியாவெங்கும் உள்ள பிரபல சங்கிலி உணவகமாக யுஎஸ் (அமெரிக்கா) பீட்ஸா உணவகம் கருதப்படுகிறது. பெரும்பாலும், வேறு எந்த நாட்டையும் விட அமெரிக்காவுடன் தான் பீட்ஸா உணவு தொடர்புபடுத்தப்பட்டுள்ளது.

இந்த கண்ணோட்டத்தில் பார்க்கும் போது, ஏன் ''யுஎஸ்'' என்பது ''உத்தம் சிங்'' என்ற பிரபல வட இந்திய பெயரை குறிப்பிடுவதாக இருக்கக் கூடாது எனபதற்கு எந்த காரணமும் இல்லை.

BBC

  • தொடங்கியவர்
மிஸ் யூனிவர்ஸ் 2016 அழகுராணி போட்டியில்...
 

மிஸ் யூனிவர்ஸ் (பிரபஞ்ச) 2016 அழகுராணி போட்டி பிலிப்பைன்ஸில் தற்போது நடைபெற்றுவருகிறது.

 

21895malaysia.jpg

 

218951.jpg

 

218952.jpg

 

சேபு நகரில் நேற்று முன்தினம் நடைபெற்ற நீச்சலுடை பெஷன் ஷோவில் பங்குபற்றிய போட்டியாளர்கள் சிலரை படங்களில் காணலாம்.

 

218953.jpg

 

 

metronews.lk/

Edited by நவீனன்

  • தொடங்கியவர்
பிரம்ம கமலம் மலர்ந்தது
 

article_1484813134-20170117_222420.jpg

நள்ளிரவு 12 மணிக்கு பூத்து, சூரியன் உதிக்கும் முன்பாக மறைந்து விடும் பூவான பிரம்ம கமலம் என்ற பூ, தலவாக்கலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஹேமசந்திரா மாவத்தை பகுதியில், நேற்று (18) மலர்ந்துள்ளது. பிரம்ம கமலம் (Epiphyllum oxypetalum) என்பது வருடத்துக்கு ஒருமுறை மட்டுமே நள்ளிரவில் மலரக்கூடிய அபூர்வ வகை பூவாகும்.(கு.புஸ்பராஜ்)

article_1484813148-20170117_222427.jpg

article_1484813161-20170117_222534.jpg

 

.tamilmirror.lk

Edited by நவீனன்

  • தொடங்கியவர்
On 18.1.2017 at 6:54 AM, நவீனன் said:

ஜல்லிக்கட்டு போராட்டக்களத்தில் கலக்கும் சிறுமி

Alanganallur Jallikattu protest

அலங்காநல்லூரில் நடந்து வரும் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவான போராட்டத்தில் கலந்து கொண்ட சிறுமியின் புகைப்படம் சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது. ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக சிறுமி கோஷம் எழுப்பும் வீடியோ காட்சியும் அதிகம் பகிரப்பட்டு வருகிறது. ஃபேஸ்புக்கில் பலர் இச்சிறுமியின் புகைப்படத்தை ப்ரொஃபைல் படமாக வைத்துள்ளனர்.  

 

vikatan

 

“இதற்காகத்தான் என் 8 வயது மகளை ஜல்லிக்கட்டு போராட்டத்துக்கு அனுப்பினேன்!” - உருகும் தந்தை

ஸ்வேதா ஜல்லிக்கட்டு

'Turtles can fly' என்கிற ஈரானிய படத்தில் ஹீரோ சாட்டிலைட் என்கிற கதாபாத்திரத்தின் கூடவே துறுதுறுவென ஒரு கதாபாத்திரம் வந்துகொண்டேயிருக்கும். கிட்டத்தட்ட ஸ்வேதா அப்படித்தான் இருக்கிறார், ஜல்லிக்கட்டுக்கு ஆதரவான அலங்காநல்லூர் போராட்டக்களத்தில் எதிரொலித்த எட்டு வயது ஸ்வேதாவின் குரல்தான் தற்போது ஒட்டுமொத்தமான தமிழ்நாட்டின் பிரம்மாண்ட செல்லக்குரல்.

ஸ்வேதா''சொந்த ஊரு சோழவந்தான். இப்போ இருக்குறது கோச்சடை. எனக்கு இரண்டு பொண்ணுங்க, பெரிய பொண்ணு ஸ்ரீநிதி. சின்னப் பொண்ணு ஸ்வேதா. ரெண்டாவது படிக்கிறா. அப்படியே எதிர்மாறானா பொண்ணு. நாங்க விவசாயக் குடும்பம்தான். ஆனா, இப்போ உள்ள நிலைமையில விவசாயத்த சுருக்கிக்கிட்டோம். எங்க வீட்டுலேயும் சரி, என் மனைவி வீட்டுலேயும் சரி... ஜல்லிக்கட்டு காளைகள் இருந்துச்சு. ஆனா, இப்போ அதுவும் இல்ல. இதைப்பத்தி எல்லாம் வீட்டுல பேசுவோம். நாங்க ஜல்லிக்கட்ட நேருல பார்த்து வளர்ந்த தலைமுறை, ஸ்வேதாவுக்கு டிவில-தான் காட்டி இருக்கோம்.

பெத்தவுங்களான நாம  பண்ற விஷயங்கள்தான் குழந்தைங்ககிட்ட முதல்ல போய்ச் சேரும். நம்மள பார்த்துத்தானே அவுங்க கத்துக்கிறாங்க. வீட்டுல சும்மா இருக்குற நேரத்துல விவசாயத்த பத்திப் பேசுவோம். நம்மாழ்வார் கருத்துகளை இவங்களுக்கு ஏத்த மாதிரி கதை பாணில சொல்வோம், இப்படி நாங்க பேசுற எல்லா விஷயத்துலேயுமே அவளோட கவனம் இருக்கும். பீட்டாவ பத்தி நாங்க பேசிக்கிட்டு இருக்கும்போது அதென்னப்பா காளை மாட்ட மட்டும் தடை பண்றாங்க? பசுவும் மாடுதானே, அதை தடை ஸ்வேதாபண்ண மாட்டாங்களா? அப்புறம் ஏன் பால் கறக்குறாங்கன்னு எதிரெதிர் கேள்வி கேட்க ஆரம்பிச்சுடுவா. அவ கேட்குற  கேள்விக்கு பதில் சொல்லிடுவோம்..சில கேள்விகளுக்கு நாங்களும் பதில் தெரியாம முழிக்க ஆரம்பிச்சுடுவோம்.

ரொம்ப சேட்டைக்கார பொண்ணு. ஆனாலும் படிப்பு, படம் வரையுறதுன்னு எல்லாத்துலயும் தனித்துவம் இருக்கும். இப்போகூட ஸ்கூலுக்கு போறப்போ... 'திரும்ப எப்போ அப்பா அலங்காநல்லூரு போகலாம்'னு கேட்குறா? பிரச்னை சரி ஆகிடும். இல்லைன்னா திரும்பப் போகலாம்னு சொல்லியிருக்கேன்.

எங்க வீட்டைப் பொறுத்தவரை பையன் பொண்ணு எல்லாம் பிரிவினை இல்ல. இங்க எல்லாருமே ஒண்ணுதான் .இது எங்க தலைமுறையோட முடிஞ்சுப்போற பிரச்னை இல்ல. நம்ம மேல நசுக்கப்படுற  அதிகாரத்த எதிர்த்து கேள்வி கேட்கணும்கிற ஒரு துடிப்பு அவுங்களுக்குள்ளேயும் வரணும். அப்படிங்கிறதுக்காகத்தான் நாங்கள் அனுப்பிவெச்சோம்'' என்றார் ஸ்வேதாவின் தந்தை அசோக்.

இவரோடு பேசிக்கொண்டிருந்த நேரத்தில் யாரோ ஒரு பெற்றோர் தன் குழந்தைகளை ரியாலிட்டி ஷோக்களின் பாதிப்பில் வலுக்கட்டாயமாக ஏதோ ஒரு கோச்சிங் செண்டருக்கு அனுப்பி வைத்திருக்கலாம்.

vikatan

  • தொடங்கியவர்

ஜல்லிக்கட்டு தடையையடுத்து சேலத்தில் ‘நரி ஜல்லிக்கட்டு’

தமிழகத்தில் ஜல்லிக்கட்டுக்கு தடை விதிக்கப்பட்டு, அந்தத் தடையை எதிர்த்து தமிழகமே திரண்டு போராட்டம் நடத்திவரும் இவ்வேளையில், சேலத்தில் ‘நரி ஜல்லிக்கட்டு’ நடத்தப்பட்டுள்ளது.

7_Fox_Jallikkattu.jpg

சேலம் கிராமப்பகுதியொன்றில் ஒவ்வொரு ஆண்டும் காணும் பொங்கல் தினத்தன்று இந்த நரி ஜல்லிக்கட்டு நடத்தப்படுவது வழக்கம். அதன்படி, இந்த வருடமும் கடந்த 16ஆம் திகதி காணும் பொங்கல் தினத்தன்று இந்த நரி ஜல்லிக்கட்டு நடத்தப்பட்டது.

வனத்துறையினர் அனுமதியுடன் நடத்தப்பட்ட இந்த நிகழ்வின்போது, காட்டில் இருந்து பிடிக்கப்பட்ட நரியொன்று கொண்டுவரப்பட்டது. முன்னெச்சரிக்கையாக அதன் வாயைக் கட்டியபின் அதற்கு பூமாலை சூட்டி கிராமத்தின் கோயிலில் வைத்து வழிபாடு நடத்தப்பட்டது.

7_Fox_Jallikkattu_1.jpg

அதன்பின், ஊர் மக்கள் திரண்டு நிற்க, பின்னங்கால்கள் கட்டப்பட்ட நிலையில் நரி கீழே இறக்கிவிடப்பட்டது. இங்கும் அங்கும் ஓடித் திரிந்த நரியைப் பிடிக்க இளைஞர்கள் சிலர் முயற்சி செய்தனர். கடைசியில் நரியைப் பிடித்த ஒருவர் வெற்றியாளராக அறிவிக்கப்பட்டார்.

விளையாட்டு நிகழ்வு முடிந்ததும் அந்த நரி மீண்டும் காட்டில் விடப்பட்டது.

virakesari.lk/

  • தொடங்கியவர்

காலத்தை' வென்ற சினிமாக்கள்!

 

ஹாலிவுட்டைப் பொறுத்தவரை சயின்ஸ் ஃபிக்‌ஷன் திரைப்படங்களுக்கு எப்போதுமே பெரிய வரவேற்பு உண்டு. அதிலும், `டைம் ட்ராவல்' கதைக்களம் கொண்ட ‘பேக் டு தி ஃப்யூச்சர்’ போன்ற திரைப்படங்கள் பல பாகங்களாக வெளிவந்து, தயாரிப்பாளர்களுக்கு வசூலை வாரி இறைத்தன. கொஞ்சம் பிசகினாலும் ஆடியன்ஸ் தலையைச் சொறிவார்கள் என்பதால் இவ்வகைப் படங்களை மிகுந்த கவனத்துடன் கையாள வேண்டிய நிர்பந்தம் படக்குழுவுக்கு இருந்தது. `டைம் ட்ராவல்' கதைக்களம் கொண்ட, உலகம் முழுக்க சூப்பர் ஹிட்டடித்த படங்களின் லிஸ்ட் இது...

102p1.jpg

Intersteller :

வித்தியாசமான மற்றும் குழப்பமான கதைக்களத்தை சுவாரஸ்யமான திரைப்படமாகத் தரும் பிரபல இயக்குநரான கிறிஸ்டோபர் நோலன் இயக்கிய திரைப்படம் இது. பருவநிலை மாற்றங்களால் மனிதன் வசிக்க முடியாத இடமாக பூமி மாறுகிறது. மனிதன் வாழத் தகுதியான இன்னொரு கிரகத்தைக் கண்டுபிடிக்கும் நாசாவின் முயற்சியில் கதாநாயகன் மேத்யூ மெக்கனாகேவும் பங்கேற்கிறார். வார்ம் ஹோல், ப்ளாக் ஹோல், ஐந்தாம் பரிமாணம், விண்வெளி நேரம் போன்ற இயற்பியல் கோட்பாடுகள் காரணமாக பூமிக்கும், கதாநாயகனோடு பயணிக்கும் குழுவுக்கும் இடைப்பட்ட காலநேரம் பெரிதும் வேறுபடுகிறது. இறுதியில் பூமியைப் போன்ற கிரகத்தைக் கண்டுபிடித்தார்களா? இவர்களுக்கு இடைப்பட்ட காலநேரத்தால் என்ன விளைவு ஏற்படுகிறது? என்பதை உணர்வுபூர்வமாக படமாக்கி இருந்தார்.  விஷூவல் எஃபெக்ட்டுக்காக இப்படம் ஆஸ்கர் வென்றதோடு, வசூல் வேட்டையாடியது.

102p2.jpg

Frequency :

‘இது கொஞ்சம் ரிஸ்க்கான கதை’ எனப் பல இயக்குநர்கள் ஒதுக்கிய இப்படத்தை இயக்கும் வாய்ப்பு கிரேகோரி ஹாப்ளிட்டுக்குக் கிடைத்தது. சில்வஸ்டர் ஸ்டாலோன் முதலில் நடிப்பதாக இருந்து, பின்னர் அந்தக் கதாபாத்திரத்தில் டென்னிஸ் குயாட் நடித்தார். துருவ ஒளி மாற்றத்தால் 30 வருட காலத்தைக் கடந்து பரவும் ரேடியோ அலைகள் மூலம், எதிர்பாராதவிதமாக தந்தையும், மகனும் பேசிக்கொள்கிறார்கள். அதன் விளைவாக அவர்களின் வாழ்க்கையில் நடக்கும் எதிர்பாராத மாற்றங்கள்தான் கதை. 2000-ம் ஆண்டில் வெளியான இத்திரைப்படம், சீட் நுனியில் உட்காரவைக்கும் த்ரில்லிங்கான திரைக்கதையால் விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் ஹிட் அடித்தது.

102p3.jpg

Deja vu :

‘இதை ஏற்கெனவே எங்கேயோ பார்த்திருக்கேன்’ எனச் சில சம்பவங்கள் நம்மை யோசிக்க வைக்குமே? அப்படிப்பட்ட உணர்வுகளைத்தான் `தேஜா வு' என அழைக்கிறார்கள். இதே பெயரில் உருவான இத்திரைப்படம் 2006-ல் வெளியானது. ‘ட்ரூ ரொமான்ஸ்’, ‘எனிமி ஆப் தி ஸ்டேட்’ போன்ற படங்களை இயக்கிய டோனி ஸ்காட்தான் இப்படத்தின் இயக்குநர். கப்பலில் வெடிகுண்டு விபத்து நிகழ்ந்து, கடற்படையில் பயிற்சியை முடித்த வீரர்களும், அவர்களின் குடும்பத்தாரும் இறக்கிறார்கள். இதை விசாரிக்க வரும் ஏஜென்ட்டான டென்சல் வாஷிங்டன், பரிசோதனையில் இருக்கும் இயந்திரத்தைப் பயன்படுத்தி கடந்த காலத்துக்கு வந்து எப்படி அத்தனைப் பேர் உயிரையும் காப்பாற்றுகிறார் என்பதுதான் கதை. ஆவரேஜ் விமர்சனங்கள் பெற்றாலும், பாக்ஸ் ஆபீஸில் ஹிட் அடித்தது.

102p4.jpg

Predestination :

2004-ம் ஆண்டு வெளியான இத்திரைப்படத்தை இயக்கியவர்கள் ‘தி ஸ்பீரிக் பிரதர்ஸ்’ என்றழைக்கப்படும் பீட்டர் ஸ்பீரிக் மற்றும் மைக்கேல் ஸ்பீரிக். கடந்த காலத்தில் நடந்த பெரிய குற்றச்செயல்களை, காலத்தைக் கடந்துசென்று தடுக்கும் ஏஜன்ட்டாக நடித்திருக்கிறார் ஏதன் ஹாக். 1975-ல் குண்டுவெடிப்பை நிகழ்த்திய ஒரேயொரு குற்றவாளி மட்டும் இவருக்குத் தண்ணி காட்டுகிறான். தனது கடைசி வேலையாக மீண்டும் 1975-ம் ஆண்டுக்குச் செல்லும் ஏதன் ஹாக், அங்கு அவன் சந்திக்கும் ஒரு வாடிக்கையாளருக்கு உதவப்போய் நிகழும் திருப்பங்கள் பார்வையாளர்களுக்கு மிரட்சியை ஏற்படுத்தும். `டைம்-லூப்' எனப்படும் கால சுழற்சியை அடிப்படையாகக்கொண்டு உருவான இத்திரைப்படம், பல்வேறு விருதுகளைப் பெற்றதோடு, செமத்தியாகக் கல்லா கட்டியது. `டைம்ட்ராவல்' பட விரும்பிகள் தவறவிடக்கூடாத படங்களில் இதுவும் ஒன்று.

102p5.jpg

Groundhog day :

பில் முர்ரே மற்றும் ஆண்டீ மெக்டாவல் நடிப்பில் 1993-ல் வெளிவந்த திரைப்படம் இது. அடாவடியான குணம் கொண்ட வானிலை செய்தி அறிவிப்பாளரான பில் முர்ரே, பனிப்பொழிவு காரணமாகத் தனது செய்திக்குழுவோடு பெனிசில்வேனியா மாகாணத்தில் சிக்கிக்கொள்கிறார். பிப்ரவரி மாதம் 2-ம் தேதி உள்ளூர்வாசிகளால் கொண்டாடப்படும் ‘க்ரவுண்ட் ஹாக் டே’ நிகழ்ச்சியை கவர் செய்யச் செல்லும் அவர், அதே தினத்திலேயே டைம்-லூப்பில் சிக்கிக்கொள்கிறார். அவரது வாழ்க்கையில் அந்த ஒரேயொரு நாள் திரும்பத்திரும்ப நிகழ்கிறது. இதிலிருந்து மீள அவர் படும் அவஸ்தைகளும், அவரின் குணத்தில் ஏற்படும் மாற்றங்களும்தான் படத்தின் கதை. காமெடி கலந்துகட்டிய இப்படம் பெரிய வரவேற்பைப் பெற்றது. பல விருதுகள் வென்றதோடு, அவசியம் பார்க்க வேண்டிய படங்களின் பட்டியலில் இடம்பெற்றுள்ளது.

102p6.jpg

Source code :

ஜேக் ஜில்லென்ஹால் நடிப்பில் 2011-ம் ஆண்டு வெளியான திரைப்படம் இது. ராணுவ வீரரான ஜேக், சிகாக்கோ செல்லும் ரயிலில் வேறொருவரின் உடம்பில் கண்விழிக்கிறார். சிறிது நேரத்தில் அந்த ரயில் வெடி விபத்தில் சின்னாபின்னமாகிறது. அமெரிக்க அரசின் ‘சோர்ஸ் கோட்’ என்ற பரிசோதனைத் திட்டத்தின் கீழ், ஜேக் கடந்த காலத்துக்கு அனுப்பப்படுவது தெரிகிறது. மீண்டும் பழையபடி ரயில் பயணத்தில் கண்விழிக்கும் ஜேக், வெடிகுண்டு விபத்தை நிகழ்த்தும் கொலைகாரனைக் கண்டுபிடிப்பதுதான் இப்படத்தின் விறுவிறுப்பான கதைக்களம். படம் வெளியாகி பல விருதுகளை அள்ளியதோடு, வசூலையும் குவித்தது. இப்படத்தின் அடுத்த பாகம் தற்போது தயாராகி வருகிறது. திகட்டாத `டைம்ட்ராவல்' படம் பார்க்க விரும்புவர்களை இப்படம் நிச்சயம் ஏமாற்றாது.

102p7.jpg

The butterfly effect :

‘ஃபைனல் டெஸ்டினேசன்’ திரைப்பட வரிசை மூலம் ரசிகர்களுக்கு மரணபயத்தைக் காட்டிய எரிக் ப்ரெஸ் மற்றும் மெக்கீ க்ரூபர் இயக்கிய `டைம்ட்ராவல்' வகை திரைப்படம் இது. ஒரு சின்ன சம்பவத்தால் சங்கிலித் தொடர் போல அடுத்தடுத்து நிகழும் மாற்றங்கள்தான் பொதுவாக ‘பட்டர்ஃப்ளை எஃபெக்ட்’ என்றழைக்கப்படும். சிறு வயதில் ஏற்பட்ட பிரச்னைகள் காரணமாக ஒரு மோசமான வாழ்க்கையை வாழ்வதாக நினைக்கும் கதாநாயகன் அஷ்டன் கட்சர், தனது சிறுவயது டைரியை வாசிக்கும்போது கடந்த காலத்துக்குப் பயணிக்கும் வித்தியாசமான சக்தியைப் பெறுகிறான். கடந்த காலத்துக்குச் சென்ற கதாநாயகன் செய்யும் மாற்றங்களால் தற்காலிக வாழ்க்கை எப்படியெல்லாம் மாறுகிறது என்பதை சுவாரஸ்யம் குறையாமல் திரைக்கதை ஆக்கியதால், வெளியான அத்தனை நாடுகளிலும் பெரிய வெற்றி பெற்றது.

vikatan

  • தொடங்கியவர்
மூடப்படுகிறது உலகின் மிகப்பெரிய மீன்சந்தை
மூடப்படுகிறது உலகின் மிகப்பெரிய மீன்சந்தை
----------------------------------------------------------------------------------
உலகின் மிகப்பெரிய மீன்சந்தை இது. 1935 ஆம் ஆண்டு டோக்கியோ சுகுஜியில் பிரத்யேகமாக இந்த மீன் அங்காடி வடிவமைத்து கட்டப்பட்டது.

இந்த ஆண்டின் முடிவில் இது மூடப்பட்டு டோக்யோ பே பகுதியில் புது இடத்தில் புது கட்டிடத்தில் இருந்து செயற்படும்.

பிரபல சுஷி உணவு விடுதி உரிமையாளர்கள் தினமும் காலையில் இங்கே தரமான மீன்களை வாங்குவார்கள். 210 கிலோ எடையுடைய நீலச்செதில் ட்யூனா மீன் $632,000 விலைக்கு விற்கப்படுகிறது.

அதிக அளவில் பிடிக்கப்பட்ட நீலச்செதில்ட்யூனா மீன்களுக்கு, 1960 முதலே தட்டுப்பாடு நிலவுகிறது.

குளிரூட்டப்பட்ட மீன்கள் ஒரு நாளைக்கு ஆயிரத்தை விட குறைவாகவே இங்கு விற்பனைக்கு வருகின்றன.

கடலிலிருந்து நேராக இங்கே வரும் மீன்களின் அளவு அதிகபட்சம் 300, 200 சிலசமயம் 100 அல்லது அதைவிட குறைவு.

மீன்வரவு குறைந்துகொண்டே வருவதால் தேவையான மீன்களை இங்கே விற்கமுடிவதில்லை என்கிறார் தோய்சிரோ லிடா. தன் வாழ்நாள் முழுக்க இங்கே பணிசெய்தார். மீன் வரத்தின் மாற்றங்களை நன்கு கவனித்து வருகிறார்.

நீலச்செதில் ட்யூனா மீன் அழிவதற்குள் அதை பிடிக்கத்தடை விதிக்க வேண்டுமென சூழலியலாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
  • தொடங்கியவர்

குழந்தைகளுக்கான குறும்படம்: சிறுமியும் சுண்டு விரல் சிறுவனும்

 
animation_3119553f.jpg
 
 
 

நீங்கள் காகிதத்தில் ராக்கெட் செய்து அதை மேலே பறக்க விட்டு விளையாடியிருப்பீர்கள். இதைப்போலவே ஒரு சிறுமி செய்யும் குட்டி விமானத்தின் ஐடியா சுண்டு விரல் அளவுக்கு உள்ள ஒரு குட்டியூண்டு சிறுவனுக்கு எப்படி உதவுகிறது என்பதைச் சொல்கிறது ‘சோர்’ (soar) என்ற குழந்தைகளுக்கான குறும்படம். அதோடு எந்த ஒரு முயற்சியையும் எப்படித் திருவினையாக்க வேண்டும் என்றும் சொல்கிறது இந்தப் படம்.

அந்தச் சிறுமி ஒரு குட்டி விமானத்தைச் செய்து அதை வானில் தூக்கி வீசுகிறாள். ஆனால், அது சிறிது தூரம் பறந் போனதும் கீழே விழுந்து விடுகிறது. உடனே அவள் சோகத்தில் அமைதியாக உட்கார்ந்துவிடுகிறாள். அப்போது வானத்திலிருந்து ஒரு சிறிய பை அவளது தலையில் ‘தொப்’ பென்று விழுகிறது. அது என்னவென்று பார்ப்பதற்குள், ஒரு சிறிய விமானம் அவள் அருகில் வந்து, மரத்தில் மோதி உடைந்து விழுகிறது.

அதிலிருந்து ஒரு குட்டியூண்டு சிறுவன் வெளியில் வருகிறான். அவன் சுண்டு விரல் அளவே இருக்கிறான். பெரிய உருவமாக நிற்கும் அந்தச் சிறுமியைப் பார்த்துப் பயப்படுகிறான். அருகில் கிடக்கும் ஒரு பென்சிலை எடுத்துச் சிறுமியுடன் சண்டைக்குத் தயாராகிறான். பயந்தபடியே அந்தப் பையை எடுக்க முயல்கிறான்.

ஆனால், அந்தச் சிறுமியோ அந்த பென்சிலை அவனிடமிருந்து பிடுங்கி, அவனது உடைந்த விமானத்தின் இறக்கைகளைச் சரி செய்கிறாள். தான் செய்த விமானத்தோடு அவனது விமானத்தையும் சேர்த்துக் கட்டுகிறாள். குட்டிச் சிறுவனின் நண்பர்கள் பறந்துசெல்லும் திசையை நோக்கிப் பறக்க வைக்க முயல்கிறாள். ஆனால், அந்த விமானம் மீண்டும் கீழே விழுந்து விடுகிறது. இப்படி ஒவ்வொரு முயற்சியும் தோல்வியிலேயே முடிகிறது.

animation_2_3119554a.jpg

அதனால் அச்சிறுவன் இனிமேல் தன் நண்பர்களோடு சேர முடியாதோ என்று சோகத்தில் மூழ்குகிறான். அந்தச் சிறுமியும் நம்மால் உதவ முடியவில்லையே என்று வருத்தம் கொள்கிறாள். அப்போது காற்றில் ஒரு காகிதம் பறந்து வருகிறது. அதைப் பார்த்ததும் அச்சிறுமிக்கு ஒரு யோசனை தோன்றுகிறது. அந்த யோசனைப்படி குட்டிச் சிறுவனை வானில் பறக்க வைக்கச் சிறுமியால் முடிகிறதா? அதற்கு அவள் என்ன செய்தாள்? அந்தக் குட்டி சிறுவன் தன் நண்பர்களோடு சேர்ந்தானா? இதுதான் ‘சோர்’ அனிமேஷன் குறும்படத்தின் கதை.

மொத்தம் 6.14 நிமிடங்கள் இந்தக் குறும்படம் ஓடுகிறது. 2014-ம் ஆண்டு மார்ச் வெளியானது இப்படம். அலைஸ் ட்சுயூ என்ற தைவானைச் சேர்ந்த பெண் இயக்குநர் இப்படத்தை இயக்கினார். ‘முயற்சி திருவினையாக்கும்’ என்ற அடிப்படைக் கருத்தை அழகாகக் கூறி, பல விருதுகளை அள்ளிக் குவித்தது இந்தப் படம். இந்தப் படத்தைப் பார்க்க விரும்புகிறீர்களா? இதோ

 

 

tamil.thehindu

  • தொடங்கியவர்

Bild könnte enthalten: 1 Person, lächelnd, Nahaufnahme

காலஞ்சென்ற பிரபல பின்னணிப் பாடகரும், புகழ்பெற்ற கர்நாடக சங்கீத இசைப்பாடகருமான சீர்காழி கோவிந்தராஜன் அவர்களின் பிறந்தநாள்.

 
  • தொடங்கியவர்

 

அண்டார்டிக் பனிப்படலத்தில் மாபெரும் வெடிப்பு
  • தொடங்கியவர்

இன்பாக்ஸ்

 

 36p5.jpg

36p1.jpg

செம கொண்டாட்டத்தில் இருக்கிறது தெலுங்கு சினிமா. பாலகிருஷ்ணாவின் 100-வது படம் `கெளதம புத்ர சட்டகர்னி', ஒன்பது ஆண்டுகளுக்குப் பிறகு ரீஎன்ட்ரி கொடுத்திருக்கும் சிரஞ்சீவியின் 150-வது படம் `கைதி நம்பர் 150' என இரண்டு படங்களும் ஒரே நேரத்தில் ரிலீஸாகி, பாக்ஸ் ஆபீஸில் பட்டையைக் கிளப்புகின்றன. `கத்தி' ரீமேக்கான `கைதி எண் 150' படத்தில் 61 வயதான சிரஞ்சீவி செம ஸ்மார்ட் லுக், துள்ளல் டான்ஸுமாக மிரட்ட, இன்னொரு பக்கம் சட்டகர்னியாக பாலையா கிராஃபிக்ஸில் தெறிக்கவிட, ரசிகர்கள் டபுள் ஹேப்பி. பாய்ஸ் ஆர் பேக்!


36p2.jpg

25 ஆண்டுகளுக்குப் பிறகு மலையாளப் படத்துக்கு இசையமைக்கிறார் இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான். `ரோஜா' படம் வெளிவந்த புதிதில் மோகன்லால், மதுபாலா நடித்த `யோதா' என்ற படத்துக்கு இசையமைத்த
ஏ.ஆர்.ரஹ்மான், இப்போது இரண்டாவது முறையாக மோகன்லாலுடன் இணைகிறார். எம்.டி.வாசுதேவன் நாயர் எழுதிய `ரந்தமூழம்' வரலாற்று நாவலைத் தழுவி எடுக்கப்படும் இந்தப் படத்தில், பாஞ்சாலியாக ஐஸ்வர்யா ராய் நடிக்க, மலையாளத்தின் மெகா பட்ஜெட் படமாக உருவெடுக்க இருக்கிறது `ரந்தமூழம்'. சேட்டன்ஸ் சேஞ்சிங்!


36p3.jpg

அடுத்த அதிரடிக்கு அமீர்கான் ரெடி. `தக்ஸ் ஆஃப் இந்தோஸ்தான்' படத்தில் `பிக் பி' அமிதாப் பச்சனுடன் நடிக்கிறார் அமீர். `தூம் 3'  இயக்குநர் விஜய் கிருஷ்ணா இயக்கும் இந்தப் படம்,  `கன்ஃபெஷன்ஸ் ஆஃப் ஏ தக்' நாவலை அடிப்படையாக வைத்து எடுக்கப்பட இருக்கிறது. பிரிட்டிஷ் இந்தியாவின்போது கொள்ளைக்காரர்களாக, கொலைகாரர்களாக அடையாளப்படுத்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்தவர்களைப் பற்றிய கதை. கொள்ளைக் காரராக அமீர்கான் நடிக்க, கூட்டத்துக்குத் தலைவனாக அமிதாப் பச்சன் நடிக்கிறார். பாலிவுட் அதிரப்போகுது!


36p4.jpg

இந்த ஆண்டு ஆஸ்கரில் பல விருதுகளை அள்ளப்போகும் படமாக எதிர்பார்ப்புகளைக் கிளப்பியிருக்கிறது `லா லா லேண்ட்'. காதலும் காதல் நிமித்தமுமான இந்தப் படத்தில், ரயான் கோஸ்லிங், எம்மா ஸ்டோனின் ரொமான்ஸ் செம!  சிறந்த படம், இயக்குநர், நடிகர், நடிகை, திரைக்கதை, இசை, பாடல் என, ஏழு கோல்டன் குளோப் விருதுகளை வென்றிருக்கிறது. அடுத்தது ஆஸ்கர்தான் என உற்சாகத்தில் இருக்கிறது படக்குழு.
விருது விருது... வருது வருது!

vikatan

  • தொடங்கியவர்

மகாகவி பாரதியாரின் 98 ஆண்டு பழமையான புகைப்படம் வெளியிடப்பட்டுள்ளது (Photo)


மகாகவி பாரதியாரின் 98 ஆண்டு பழமையான புகைப்படம் வெளியிடப்பட்டுள்ளது (Photo)
 

ஆங்கிலேய ஆட்சியில் அடிமைப்பட்டுக் கிடந்தவர்களை தனது புரட்சிகரமான கவிதைகளால் தட்டி எழுப்பியவர் மகாகவி சுப்பிரமணிய பாரதியார்.

தனது தனிச்சிறப்பு வாய்ந்த கட்டுரைகளால் மக்களிடையே விடுதலை வேட்கையைத் தூண்டிய பாரதியாரின் 98 ஆண்டுகால பழமையான புகைப்படம் ஒன்று தற்போது கிடைத்துள்ளது.

புதுடெல்லியில் கிடைத்த இந்த புகைப்படத்தை சென்னை பல்கலைக்கழகத்தில் தமிழ்த்துறையின் பேராசிரியர் மணிகண்டன் நேற்று (16) சென்னையில் நடந்த ஒரு விழாவில் வெளியிட்டுள்ளார்.

முன்னாள் மதராஸ் மாகாணத்தின் விக்டோரியா ஹாலில் 2-3-1919 அன்று நடந்த கருத்தரங்கில் பாரதியார் பேச வந்தபோது இந்த புகைப்படம் எடுக்கப்பட்டுள்ளது.

தலையில் முண்டாசு கட்டி, முறுக்கு மீசையுடன் கம்பீரமாக தோற்றமளிக்கும் இந்த பழமையான புகைப்படத்தையும் சேர்த்து பாரதியாரின் அசல் புகைப்படங்களின் எண்ணிக்கை ஆறாக உயர்ந்துள்ளது.

201701171309412676_A-new-98yearold-photo-of-an-poet-Bharati_SECVPF.gif

http://newsfirst.lk/

  • தொடங்கியவர்
உறைந்த ஆற்றின் பனிக்கட்டிக்குள் சிக்கிய நரி
 

ஜேர்­ம­னியைச் சேர்ந்த நபர் ஒருவர், உறைந்த ஆற்றின் பனிக்குள் சிக்­கி­யி­ருந்த நரி ஒன்றை வெளியே எடுப்­ப­தற்­காக பாரிய பனிக்­கட்­டியை உடைத்­துள்ளார்.

 

21837shutterstock_553637716.gif

 

டனுபே ஆற்று நீர் கடும் குளி­ரினால் உறைந்­த­போது, இந்த நரி சிக்­கிக்­கொண்­டது.

 

21837icet-5.gif

 

ஜெகர் பிரான்ஸ் ஸ்டேலே என்­பவர் நரியை காப்­பாற்­ற­வ­தற்­காக அது சிக்­கி­யி­ருந்த பனிக்­கட்டிப் பகு­தியை வெட்டி எடுத்தார். எனினும் , இயற்­கை­யான முறையில் அந்த நரி இறந்­து­விட்­ட­தாக தெரி­விக்­கப்
­ப­டு­கி­றது.

 

21837icet.gif

 

பனிக்­கட்­டிக்குள் நரி சிக்­கியி­ருந்­த­போது பிடிக்­கப்­பட்ட புகைப்­ப­டங்­க­ளையும் ஜெகர் பிரான்ஸ் ஸ்டேலே வெளி­யிட்­டுள்ளார். சிலர் இப்
­ப­டங்கள் போலி­யா­னவை எனத் தெரி­வித்­துள்­ளனர்.

 

21837ice2.gif

 

எனினும், இவை உண்­மை­யான புகைப்­ப­டங்கள் எனவும் உறைந்த நீர்­நி­லைகள் குறித்து மக்­களை எச்­ச­ரிப்­ப­தற்­காக இப்­ பு­கைப்­ப­டங்­களை தான் வெளியிட்டதாகவும் 61 வயதான ஜெகர் பிரான்ஸ் ஸ்டேலே தெரிவித்துள்ளார்.

.metronews.lk

 

Edited by நவீனன்

  • தொடங்கியவர்
அறியாமல் விட்டுவிட்டால் கஷ்டப்படுவது யார்?
 
 

article_1484799376-yhfkjk.jpgபோனால் போகட்டும் எனச் சிலர் வெகு சுலபமாகச் இழப்புப் பற்றிச் சொல்லுவார்கள். தமக்கு ஏற்பட்ட இழப்புக்கு யார் காரணம்? எதற்காக நடந்தது? என்பது பற்றிச் சிந்திக்காமல் இப்படிச் சொல்லலாமா?  

எதனையும் செய்யும்போது, அது பற்றித் தெரிந்து, ஆராய்ந்து செய்ய வேண்டும். நட்டங்களுக்கான காரணத்தை அறியாமல் விட்டுவிட்டால் கஷ்டப்படுவது யார்? 

பாடுபட்டு உழைத்தவர்கள் கூட தங்களது அறியாமையினால் ஈட்டிய பொருளைப் போக்கடித்துவிட்டு, வாட்டத்துடன் வாழுகின்றனர்.  

உழைப்பதைவிட, அதன் மூலம் சேர்த்த பொருளைக் காப்பாற்றுவதே பலருக்கும் சிரமமாக இருக்கிறது.  

நிதானம், எச்சரிக்கை, முன் அனுபவம், இவையே அத்தொழிக்கு வாய்ப்பாக அமையும். உணர்க! 

Edited by நவீனன்

  • தொடங்கியவர்

பேசும் படங்கள்: மெரினா வாசலில் பெரும் தவம்!- தமிழகம் முழுவதும் கரைபுரளும் எழுச்சி: சிறப்பு புகைப்பட தொகுப்பு

 
ஆர்ப்பரிக்கும் வங்கக்கடலுக்குப் போட்டியாக, சென்னை மெரினா கடற்கரையில் எழுச்சியோடு 3-வது நாளாக திரண்டிருக்கின்றனர் இளைஞர்கள். ஜல்லிக்கட்டுக்கு அனுமதி கிடைக்கும்வரை ஓயமாட்டோம் என்பதை மாபெரும் தவமாக, சபதமாக ஏற்று கடற்கரையை நிறைத்திருக்கிறது இளைஞர் கூட்டம். வானத்து நட்சத்திரக் கூட்டம் தரையிறங்கி வந்ததோ என்று வியக்கும்வண்ணம் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள லட்சக்கணக்கான இளைஞர்கள் நேற்று இரவு தங்களது செல்போன் மூலம் வெளிச்சத்தை ஏற்படுத்தி கோரிக்கை முழக்கமிட்டனர்.
ஆர்ப்பரிக்கும் வங்கக்கடலுக்குப் போட்டியாக, சென்னை மெரினா கடற்கரையில் எழுச்சியோடு 3-வது நாளாக திரண்டிருக்கின்றனர் இளைஞர்கள். ஜல்லிக்கட்டுக்கு அனுமதி கிடைக்கும்வரை ஓயமாட்டோம் என்பதை மாபெரும் தவமாக, சபதமாக ஏற்று கடற்கரையை நிறைத்திருக்கிறது இளைஞர் கூட்டம். வானத்து நட்சத்திரக் கூட்டம் தரையிறங்கி வந்ததோ என்று வியக்கும்வண்ணம் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள லட்சக்கணக்கான இளைஞர்கள் நேற்று இரவு தங்களது செல்போன் மூலம் வெளிச்சத்தை ஏற்படுத்தி கோரிக்கை முழக்கமிட்டனர்.
 
 

1_3120656a.jpg

‘எனது முதல் பிறந்தநாள் தமிழனுக்காக...’ என்ற பதாகையுடன் தனது முதலாம் ஆண்டு பிறந்தநாள் கொண்டாடும் குழந்தையுடன் போராட்டத்தில் பங்கேற்ற பெண்.

 

2_3120655a.jpg

ஜல்லிக்கட்டு மீதான தடையைக் கண்டித்து திருச்சி நீதிமன்றம் எம்ஜிஆர் சிலை அருகில் நேற்று 2-வது நாளாக போராட்டத்தில் ஈடுபட்ட மாணவ, மாணவிகள்.

3_3120654a.jpg

திருப்பூர் மாநகராட்சி அலுவலகம் அருகே நேற்று நடந்த ஆர்ப்பாட்டத்தில், பறையடித்து கரகம் ஆடி போராட்டக்காரர்களை உற்சாகப்படுத்தும் வெள்ளியங்காடு தாய்த்தமிழ் பள்ளிக் குழந்தைகள்.

4_3120653a.jpg

ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாகப் போராடும் இளைஞர்களுக்கு நாங்களும் குரல் கொடுப்போம் என்று சென்னையில் பதாகை ஏந்தி ஆதரவு தெரிவித்த வெளிநாட்டினர்.

 

5_3120652a.jpg

‘எங்களுக்குத் தேவை ஜல்லிக்கட்டு’ என்ற வாசகத்துடன் சென்னை மெரினா கடற்கரையில் அறவழிப் போராட்டத்தில் அலைகடலெனத் திரண்ட இளைஞர் கூட்டத்தின் ஒரு பகுதி.படம்: ராய்ட்டர்ஸ்

 

6_3120651a.jpg

மத்திய அரசுக்கு எதிர்ப்பு தெரிவித்து சேலம் டவுன் ரயில் நிலையம் அருகே முள்ளுவாடி கேட் பகுதியில் பெங்களூருவில் இருந்து காரைக்கால் நோக்கி செல்லும் ரயிலை சிறைபிடித்து போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள். இரவுக்குப் பிறகும் இந்த போராட்டம் நீடித்தது.

7_3120650a.jpg

10_3120642a.jpg

11_3120643a.jpg

12_3120644a.jpg

13_3120645a.jpg

9_3120646a.jpg

8_3120648a.jpg

அலங்காநல்லூர் அருகே மரங்களை வெட்டிப்போட்டு சாலை மறியல் செய்யும் கிராம மக்கள்.

 

tamil.thehindu

  • தொடங்கியவர்

வரலாற்றில் இன்று....

ஜனவரி - 20

 

1265 : இங்கிலாந்து நாடாளுமன்றம் தனது முதலாவது கூட்டத்தை வெஸ்ட்மின்ஸ்டர் அரண்மனையில் நடத்தியது.

 

1523 : டென்மார்க், நோர்வேயின் மன்னர் பதவியில் இருந்து சுவீடன் மன்னர் இரண்டாம் கிறிஸ்டியன்  அகற்றப்பட்டார்.

 

1649 : இங்கிலாந்தின் முதலாம் சார்ள்ஸ் மன்னருக்கு எதிராக தேசத்துரோகக் குற்றச்சாட்டுகளுக்காக விசாரணைகள் ஆரம்பமாகின.

 

1783 : பிரித்தானியா, பிரான்ஸ் மற்றும் ஸ்பெயின் ஆகியன புரட்சிப் போரை முடிவுக்குக் கொண்டு வரும் வகையில் சமாதான உடன்பாட்டில் கைச்சாத்திட்டன.

 

889varalru.jpg1788 : இங்கிலாந்தில் இருந்து கைதிகளை ஏற்றிக்கொண்டு வந்த முதல் தொகுதி கப்பல்களின் மூன்றாவது கப்பல் அவுஸ்திரேலியாவின் நியூ சௌத் வேல்ஸின் பொட்டனி விரிகுடாவை அடைந்தன.

 

1795 : பிரெஞ்சுப் படைகள் நெதர்லாந்தின் ஆம்ஸ்டர்டாம் நகரைக் கைப்பற்றின.

 

1839 : யூங்கே என்ற இடத்தில் பெரு மற்றும் பொலிவியா கூட்டுப் படைகளுடன் நடைபெற்ற சமரில் சிலி வெற்றி பெற்றது.

 

1841 : பிரித்தானியாவினால் ஹொங்கொங் தீவு கைப்பற்றப்பட்டது.

 

1887 : ஹவாயின் பேர்ள் துறைமுகத்தை கடற்படைத்தளமாகப் பாவிப்பதற்கு அமெரிக்க செனட் அனுமதியளித்தது.

 

1892 : முதலாவது அதிகாரபூர்வமான கூடைப்பந்தாட்ட விளையாட்டு அமெரிக்காவின் மசாசுசெட்ஸ் மாநிலத்தில் நடைபெற்றது.

 

1936 : எட்டாம் எட்வேர்ட் ஐக்கிய இராச்சிய மன்னனாக முடிசூடினார்.

 

1929 : வெளிப்புறக் காட்சிகளைக் கொண்ட முதலாவது முழு-நீளத் திரைப்படம் In Old Arizonaதிரையிடப்பட்டது.

 

1944 : இரண்டாம் உலகப் போர்: பிரித்தானிய வான்படையினர் பேர்லின் மீது 2,300 தொன் குண்டுகளை வீசினர்.

 

1945 : ஹங்கேரி இரண்டாம் உலகப் போரில் தனது பங்கை முடித்துக் கொள்வதாக அறிவித்தது.

 

1948 : கொலை முயற்சி ஒன்றிலிருந்து மகாத்மா காந்தி உயிர் தப்பினார்.

 

1969 : கிழக்குப் பாகிஸ்தான் பொலிஸாரினால் மாணவர் ஒருவர் கொல்லப்பட்டார். இதனால் ஏற்பட்ட கிளர்ச்சிகளும் பங்களாதேஷ் விடுதலைப் போராட்டத்துக்கு பங்காற்றின.

 

1981 : ஐக்கிய அமெரிக்காவின்  ஜனாதிபதியாக 69 வயதான ரொனால்ட் ரீகன் பதவியேற்றார். மிக அதிக வயதில் அமெரிக்க ஜனாதிபதியாக பதவியேற்றவர் இவர். (70 வயதான டொனால்ட் டரம்ப் இன்று ஜனாதிபதியாக பதவியேற்கிறார்)

 

1981 : அமெரிக்க ஜனாதிபதியாக ரொனால்ட் ரீகன் பதவியேற்ற 20 நிமிடங்களில் ஈரான் தான் 444 நாட்களாகப் பிடித்து வைத்திருந்த 52 அமெரிக்க பணயக் கைதிகளையும் விடுவித்தது.

 

1990 : அஸர்பைஜானிய சுதந்திரத்துக்கு ஆதரவான போராட்டம் சோவியத் இராணுவத்தினரால் நசுக்கப்பட்டது.

 

1992 : பிரான்ஸிலுள்ள மலையொன்றில்  விமானமொன்று மோதியது. விமானத்திலிருந்த 96 பேரில் 87 பேர் உயிரிழந்தனர்.

 

1999 : சீன அரசாங்கம் இணையத்தள பாவனைகளை கட்டுப்படுத்தவுள்ளதாக  சீனச் செய்திச் சேவை அறிவித்தது.

 

1992 : பிரான்ஸில் பயணிகள் விமானம் ஒன்று வீழ்ந்து நொறுங்கியதில் 85 பேர் கொல்லப்பட்டனர்.

 

2001 : பிலிப்பைன்ஸில் நடைபெற்ற புரட்சியில் ஜனாதிபதி ஜோசப் எஸ்ட்ராடா பதவியிலிருந்து அகற்றப்பட்டு, குளோரியா அராயோ ஜனாதிபதியானார்.

 

2009 : அமெரிக்க ஜனாதிபதியாக பராக் ஒபாமா பதவியேற்றார். அமெரிக்காவின் முதலாவது கறுப்பின ஜனாதிபதி இவராவார்.

 

2016 : பாகிஸ்தானின்  கைபர் பக்துன்கவா மாகாணத்தின்  சர்சடா மாவட்டத்தில் உள்ள பச்சா கான் பல்கலைக்கழகத்தில் தலிபான்கள் நடத்திய தாக்குதலில் ஆசிரியர்கள், மாணவர்கள் உட்பட 21 பேர் உயிரிழந்தனர்.

.metronews.lk

Edited by நவீனன்

  • தொடங்கியவர்

நீர்த்தேக்கத்துக்குள் 600 ஆண்டுகள் பழைமை வாய்ந்த புத்தர் சிலை

 

சீனாவில், நீர்த்தேக்கம் ஒன்றைச் சீரமைக்கும் பணியின்போது 600 ஆண்டுகள் பழைமை வாய்ந்த புத்தர் சிலை ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

சீனாவின் ஜியாங்ஸி மாகாணத்தில் உள்ள நீர்த்தேக்கம் ஒன்றைப் புதுப்பிக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. இதன் ஒரு பகுதியாக அந்த நீர்த் தேக்கத்துக்கு பாரிய மின் கதவு ஒன்றைப் பொருத்தவும் அதிகாரிகள் திட்டமிட்டனர். இதற்காக நீர்த்தேக்கத்தின் அளவு படிப்படியாகக் குறைக்கப்பட்டது.

3_Buddha_Statue-1.jpg

முதற்கட்டமாக அங்கிருந்த நீரில் பத்து மீற்றர் அளவு குறைக்கப்பட்டது. நீரின் அளவு குறையக் குறைய புத்தர் சிலையொன்றின் தலைப்பகுதி தெரியத் தொடங்கியது. இதைக் கண்ட ஒரு கிராமவாசி அது குறித்து அதிகாரிகளுக்குத் தெரியப்படுத்தினார்.

இதையடுத்து அந்த நீர்த்தேக்கத்தில் தொல்லியல் ஆய்வாளர்கள் ஆராய்ச்சி நடத்தினர். அதில், இந்த புத்தர் சிலையுடன், கோவில் ஒன்றின் தளப் பகுதியையும் அவர்கள் கண்டுபிடித்தனர்.

3_Buddha_Statue-2.jpg

இந்த புத்தர் சிலை சுமார் பன்னிரண்டடி உயரம் கொண்டது. நீர்த்தேக்கம் அமைந்துள்ள பாறையின் உட்புறமாக, பாறையைக் குடைந்து இந்தச் சிலை செதுக்கப்பட்டுள்ளது. அமர்ந்த நிலையில் உள்ள இந்த புத்தர் சிலையானது சீனாவை ஆண்ட ‘மிங்’ வம்சத்தவர்களது காலப்பகுதியில் - அதாவது, கி.பி.1368-1644 காலப்பகுதியில் - வடிக்கப்பட்டிருக்கலாம் என்று நம்பப்படுகிறது.

3_Buddha_Statue-3.jpg

அடியில் கோயில் தளம் ஒன்றும் காணப்படுவதால், அக்காலப் பகுதியில் இது ஒரு வழிபாட்டுத் தலமாக விளங்கியிருக்கலாம் என்றும் ஆய்வாளர்கள் நம்பிக்கை தெரிவிக்கின்றனர்.

சீனாவில், நீருக்கு அடியில் இருந்து தோன்றியுள்ள இந்த புத்தர் சிலை தமது நாட்டுக்கு ஒரு நல்ல அறிகுறியாக இருப்பதாக அந்நாட்டு மக்கள் தெரிவிக்கின்றனர். தற்போது இந்த நீர்த்தேக்கத்துக்கு வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளும் வந்து போக ஆரம்பித்துள்ளனர்.

virakesari.lk

  • தொடங்கியவர்

வலைபாயுதே

சைபர் ஸ்பைடர்

 

p102d.jpg

twitter.com/poopoonga:
ஓ.பி.எஸ்-ஸை, முதலமைச்சரா மதிக்கிறது ஸ்டாலின் மட்டும்தான்போல.

twitter.com/sundartsp: `கொண்டாடுற அளவுக்கு நான் வொர்த் இல்லைடா'னு ஒவ்வொரு புது வருடமும் ஒரே மாதத்தில் சொல்லிவிடுகிறது.

twitter.com/sss_offl: பைக்/கார் ஓட்டத் தெரியும்னு பந்தா காமிச்சா, ரொம்ப நாள் கழிச்சுதான் தெரிய ஆரம்பிக்குது, நம்மள டிரைவரா யூஸ் பண்றாங்கன்னு ::-((

p102a.jpg

                                facebook.com/SRK: பாலிவுட் பாட்ஷாஸ்! (குடும்பத்தினருடன் ஷாரூக்கான்)

twitter.com/manipmp: விருப்பமான பாடல் எல்லாமே பக்கத்து வீடுகளில்தான் ஒலிக்கும்.

twitter.com/sundartsp: ஏ.டி.எம்-மில் பணம் எடுத்த பிறகு, வரிசையைப் பார்க்கும் சுகமே தனி.

twitter.com/manipmp: மிகவும் குழப்பமான பெயரில் மருந்தின் பெயர் இருந்தால், `ஸ்டாக் இல்லை'னு சொல்லிடுறாங்க லோக்கல் மருந்துக்கடையில். எஸ்கேபிசம்!

twitter.com/saathaan_: இந்த நகரத்தின் எல்லாக் கொண்டாட்டங் களுக்குப் பின்னும் வெறும் குப்பைகள் மட்டுமே எஞ்சியிருக்கின்றன.

twitter.com/sashi16481: மொதல்ல என்ன நோய்னு கண்டுபிடிக்க, பல்ஸ் செக் பண்ணுவேன்.

இப்போ எல்லாம் 2,000 ரூபாய்க்கு சில்லறை மாத்த வந்திருக்காங்களான்னு பர்ஸை செக் பண்றேன்.

p102c.jpg

twitter.com/manipmp: சேனல் மாற்றும்போதுகூட, பொதிகையில் நல்ல நிகழ்ச்சி ஓடியது கிடையாது.
தனியாருக்குப் பலியான முதல் அரசு எலுமிச்சைப்பழம்.

twitter.com/meenamdu: அழகைக் கூட்ட பியூட்டி பார்லர் போற மாதிரி, அன்பைக் கூட்ட அம்மா வீட்டுக்குப் போகணும்.

twitter.com/mekalapugazh: பெரும்பாலான நல்ல புத்தகங்கள், ஒரு சினிமா டிக்கெட்டின் விலையில்தான் இருக்கின்றன. ஆனாலும், விற்பனையில் சாதனை ஏதும் இல்லாதது வருத்தமே.

twitter.com/manipmp: வியர்வையில் ஒட்டிய சட்டையை, காற்று வந்து பிரிக்கும்போது உணரும் மெல்லிய அதிர்வு பேரின்பம்.

p102b.jpg

              facebook.com/VIP2: ஷூட்டிங்... ஸ்டார்ட்டிங்
(தனுஷுடன் சமுத்திரக்கனி மற்றும் செளந்தர்யா)

twitter.com/_Mynaah_ : என்னிடம் பேசாதே என்றால், என்னைக் கொஞ்சு என்று அர்த்தம்.

twitter.com/rajaa_official: `போராடும் புதியதொரு தலைமுறையை உருவாக்கிவிட்டோம்' என்ற சிறு புன்னகையோடு இந்த வெற்றியைக் கடந்திருப்பான் மக்கள் தலைவன் #தோனி.

twitter.com/manipmp: சாப்பாட்டைக் கேட்டால் அப்படியே தூக்கிக் கொடுக்கும் குழந்தைதான், சாக்லேட்டில் பாதி கேட்டால் முறைத்துவிட்டுப் போகிறது.

facebook.com/Murali Kannan: தோல்வி அடைந்தவனின் ஞாயிற்றுக்கிழமைதான் எவ்வளவு மோசமானதாக இருக்கிறது!

குழந்தைகளின் பழுப்பேறிய சீருடைகளைத் துவைக்கும்போது அடுத்த மாதமாவது புதுச் சீருடைகள் வாங்கித் தர வேண்டும் என வருந்தவைக்கிறது.

பக்கத்து வீட்டுக் கறிக்குழம்பு வாசனை வராமல் சாளரத்தை அடைக்கவைக்கிறது.

நீண்ட நேரம் மணி ஒலிப்பதாகத் தோன்றும் ஐஸ்க்ரீம் வண்டி விரைவாகக் கடந்துவிட வேண்டுமே எனப் பதறவைக்கிறது.

மாலை வேளைகளில் பக்கத்து வீட்டுக் குழந்தைகள் சைக்கிள் ஓட்டுவதை, பிள்ளைகள் ஏக்கத்துடன் பார்ப்பதைச் சகிக்க வேண்டியிருக்கிறது.

`எந்தப் புள்ளியில் இணையுடன் சண்டை தொடங்குமோ' எனப் பதைபதைப்புடன் இந்த நாள் விரைவாகக் கடந்துவிடாதா என எண்ணவைக்கிறது.
சாக்கு சொல்ல முடியாமல் விசேஷங்களில் கலந்துகொண்டு அவமானப்படவேண்டி இருக்கிறது.

இந்த வாரமும் நோயுற்ற பெற்றோரைச் சென்று சந்திக்க முடியவில்லையே என, வேதனைப் படவைக்கிறது.
இத்தனை பிரச்னைகளையும் மறக்க வைத்து விடும் திங்கள்கிழமையே போற்றி... போற்றி!

facebook.com/Nelson Xavier:
மனம் விரும்பிய வேலை, மீளவே முடியாத போதை!

vikatan

  • தொடங்கியவர்

வாட்ஸ் அப் கலக்கல்: ஜல்லிக்கட்டு ஜாலி

 

 
1_3120286f.jpg
 
 
 

7_3120280a.jpg

6_3120281a.jpg

5_3120282a.jpg

4_3120283a.jpg

3_3120284a.jpg

2_3120285a.jpg

 

tamil.thehindu

  • தொடங்கியவர்

பயந்து நடக்கலாம்!

 

4p1.jpg

லகின் மிகவும் ஆபத்தான நடைபாதையைப் பார்க்க வேண்டுமா? ஒரு எட்டு சீனாவுக்குப் போயிட்டு வாங்க பாஸ்!

சீனாவின் மவுன்ட் ஹுஷான் மலையில் இருக்கும் இந்த நடைபாதை, கடல்மட்டத்திலிருந்து கிட்டத்தட்ட 7,000 அடி உயரத்தில் அமைந்துள்ளது. கொஞ்சம் கீழே இடறினாலும், நல்லி எலும்பு மிஞ்சாது. ஒன்றரை அடி அகல மரப் பலகைகளால் அமைந்திருக்கும் இந்த நடைபாதையில் பாறைகளில் கட்டப்பட்டிருக்கும் கயிறுகளின் உதவியோடும் மரண பயத்தோடும் நடந்து செல்ல வேண்டுமாம். ஆண்டு முழுவதும் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த சாகசப் பிரியர்கள் இதில் நடந்து சென்று செல்ஃபி எடுத்துக்கொள்கிறார்கள். ஒன்றிரண்டு உயிர்ப்பலிகளும் நிகழ்வதுண்டு! 

4p2.jpg

நாங்க ஏன்யா நடுராத்திரி சுடுகாட்டுக்குப் போகணும்?

  • தொடங்கியவர்
தெய்வத் தன்மை குழங்தைகளிடம் தாளம்
 
 

article_1484882469-images.jpgசிறுவன் ஒருவன் வீதியில் மயங்கி விழுந்து விட்டான். அதனை வேடிக்கை பார்த்தவர்கள், ஆளாளுக்கு இது ஏன் நடந்தது என ஆராய்ச்சி பண்ணிக் கொண்டிருந்தனர்.

கூட்டத்தை விலக்கிய பாடசாலைச் சிறுமி, மயங்கி வீழ்ந்திருத்த பையனைப் பார்த்தான். தனது கைப்பையில் இருந்த தண்ணீர்ப் போத்தலை எடுத்து, அவன் முகத்தில் தெளித்தாள். அவன் உடன் கண்விழிக்க, அவனைத் தன்மடியில் படுக்கவைத்து, தலையை உயர்த்தி, தான் கொண்டுவந்த உணவுப் பொட்டலத்தைப் பிரித்து ஊட்டலானாள்.

வியாக்கியானம் செய்தவர்கள் அங்கிருந்து கழன்று நழுவினர். ஏழைச் சிறுவன் தோற்றத்தில் ஒருவன் ஏன் மயங்கினான் என்பதை உணர்வு பூர்வமாக உணராத மக்கள் இவர்கள்.

தெய்வத் தன்மை குழங்தைகளிடம் தாளம்.

Edited by நவீனன்

  • தொடங்கியவர்

வடிவமற்ற கட்டிடங்கள்

கட்டிடக் கலை மரபாக ஒரு நேர்த்தியான வடிவத்தில் உருவாக்கப்படுகின்றன. செவ்வகம், சதுரம் போன்ற அமைப்பில்தான் உருவாக்கபட்டு வந்தன. இருபதாம் நூற்றாண்டில் இந்தக் கட்டிடவியல் ஒழுங்கு மறுபரிசீலனைக்கு உட்படுத்தப்பட்டுப் புதுக் கட்டிட முறை பிறந்தது. அது வடிவற்ற வடிவம் (Deconstructivism) என அழைக்கப்பட்டது. பிரெஞ்சு தத்துவவியலாளர் ஜாக்கூஸ் டெரிடா இதை உருவாக்கினார். இந்தப் புதிய முறையில் பீட்டர் ஈஸ்மேன், ஃப்ராங்க் கெரி, ஷாகா ஹதித் ஆகிய முன்னணிக் கட்டிடக் கலைஞர்கள் கட்டிடங்களை எழுப்பினார். இன்று இந்த முறையில் கட்டிடங்கள் எழுப்பப்படுகின்றன. அந்த முறையில் பிரபலமான கட்டிடங்களின் ஒளிப்படத் தொகுப்பு இது:

shapeless_3120860f.jpg

america_3120859f.jpg

denmark_3120857f.jpg

england_3120856f.jpg

spain_3120850f.jpg

imperial_3120851f.jpg

IAC_3120852f.jpg

germany_3120853f.jpg

fiher_3120854f.jpg

experience_3120855f.jpg

 

 

 

tamil.thehindu

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.