Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இளமை புதுமை பல்சுவை

Featured Replies

  • தொடங்கியவர்

லாரி பேக்கர்

 
muthukal_3139284f.jpg
 
 

கட்டிடக் கலை நிபுணர்

இந்தியக் கட்டிடக்கலை சிற்பி எனப் போற்றப்படும் லாரி பேக்கர் (Laurie Baker) பிறந்த தினம் இன்று (மார்ச் 2). அவரைப் பற்றிய அரிய முத்துக்கள் பத்து:

* பிரிட்டனில் பிறந்தார் (1917). இவரது முழுப்பெயர், லாரன்ஸ் வில்பர்ட் பேக்கர். கிங் எட்வர்ட் கிராமர் பள்ளியில் பயின்றார். பள்ளிப் படிப்புக்குப் பிறகு பிர்மிங்ஹாம் வரைகலைக் கல்லூரியில் கட்டிட வரைகலைப் பயின்றார்.

* பட்டப்படிப்பு முடித்த உடன் இரண்டாம் உலகப்போர் சமயத்தில் ராணுவத்தில் சேர்ந்தார். அனஸ்தடிக் பயிற்சி பெற்று சீனா, பர்மா நாடுகளில் அறுவை சிகிச்சைக் குழுவுடன் பணியாற்றினார்.

* 1944-ல் பர்மாவிலிருந்து லண்டன் செல்வதற்காக மூன்று மாதங்கள் கப்பலுக்காகக் காத்திருக்க நேர்ந்தபோது காந்திஜியைச் சந்தித்தார். இவரிடம் வீடு, தொழில் பற்றி காந்தியடிகள் விசாரித்தார். குறைந்த செலவில் எளிமையான வீடுகளை உருவாக்க விரும்புவதாக இவர் கூறினார்.

* அதுகுறித்து காந்தியடிகள், நவீன வீடுகளின் மிகப்பெரிய சிக்கல், அவை கட்டுவதற்காகும் செலவில் பெரும்பகுதி அதற்கான பொருள்களைக் கொண்டுவந்து சேர்ப்பதற்குப் போய்விடுகிறது என்றும் அதைத் தவிர்த்துவிட்டால், குறைந்த செலவில் வீடுகளைக் கட்டலாம் என்றும் கூறினார்.

* 1945-ல் உலகத் தொழுநோய் பணிக்கழக அமைப்பின் கட்டிட வரைகலையாளராக இந்தியா வந்தார். உற்பத்தி, நுகர்வு இரண்டும் ஒரே இடத்தில் நிகழ வேண்டும் என்ற காந்திஜியின் பொருளியல் கோட்பாட்டின் அடிப்படையில் செயல்படத் தொடங்கினார். உள்ளூரில் கிடைக்கும் பொருட்களைக் கொண்டு, உள்ளூர் சூழல்களுக்கு ஏற்ப செலவு குறைவான, தரமான வீடுகளைக் கட்டும் முறையை உருவாக்கினார்.

* இரும்புக் கம்பிகளுக்குப் பதிலாக மூங்கில்களைப் பயன்படுத்த முடியும் என்பதைக் கண்டறிந்தார். உள்வெளியையும் வெளி இடத்தையும் தனித்தன்மை வாய்ந்த முறையில் பயன்படுத்தினார். இது ‘லாரி பேக்கர் பாணி’ என்று பிரபலமடைந்தது.

* 1966-ல் பீர்மேட்டுக்கு வந்து தங்கி, பழங்குடி மக்களுக்கு வீடுகளை வடிவமைத்தார். பெரிய மரங்களை வெட்டாமல் கட்டிடங்களை உருவாக்கும் உத்தி, மழைநீர் சேமிப்பு வழிமுறை ஆகியவற்றைப் பின்பற்றினார். 1970-ல் திருவனந்தபுரத்தில் குடியேறினார். அங்கு இவர் வடிவமைத்த வளர்ச்சி ஆய்வுகளுக்கான மையம் இவருக்குப் பெரும் புகழை ஈட்டித் தந்தது.

* வீடுகள், விடுதிகள், கல்வி நிறுவனங்கள், மருத்துவமனைகள் என அனைத்தும் இவரது பாணியைப் பின்பற்றிக் கட்டப்பட்டன. தனது உத்திகள் குறித்து எளிய செயல் விளக்கப் புத்தகங்களைத் தானே வரைந்த ஓவியங்களுடன் வெளியிட்டார். பல கட்டிட கலைஞர்கள் இவரது செயல்படும் பாணியால் ஈர்க்கப்பட்டனர்.

* ‘ஏழைகளின் பெருந்தச்சன்’ என அன்புடன் குறிப்பிடப்பட்டார். விரைவில் ‘பேக்கர் பாணி’ வீடுகள் இந்தியா முழுவதும் பிரபலமடைந்தன. தன் வடிவமைப்பில் கட்டப்பட்டு வரும் கட்டுமானங்கள் நடைபெறும் இடங்களில் ஆஜராகிவிடுவார்.

* 1988-ல் இந்தியக் குடியுரிமை பெற்றார். 1990-ல் இவருக்கு பத்மஸ்ரீ விருது வழங்கப்பட்டது.

* பிரிட்டிஷ் அரசின் ‘ஆர்டர் ஆஃப் தி பிரிட்டிஷ் எம்பயர்’ விருது பெற்றார். சர்வதேச கட்டிடக்கலை ஒன்றியத்தின் விருது உள்ளிட்ட பல விருதுகளை வென்றார். ‘லாரி பேக்கர் – லைஃப், ஒர்க்ஸ் அண்ட் ரைட்டிங்ஸ்’ எனும் இவரது வாழ்க்கை வரலாற்று நூலை கவுதம் பாட்டியா எழுதியுள்ளார். வடிவமைப்பது, எழுதுவது என இறுதிக் காலம்வரை சுறுசுறுப்புடன் இயங்கி வந்த லாரி பேக்கர் 2007-ம் ஆண்டு 90-வது வயதில் மறைந்தார்.

http://tamil.thehindu.com/

  • Replies 11.3k
  • Views 1.5m
  • Created
  • Last Reply
  • தொடங்கியவர்

யானைகள் எப்போது கனவு காணும் தெரியுமா?

மூச்சிரைக்க மலையேறிக்கொண்டிருந்தோம். ஊட்டிக்கு மேலிருக்கும் முக்கூர்த்தி மலைப்பகுதி. எங்களை அந்த வன நடைக்கு அழைத்துச் சென்றிருந்த கணேசன், திடீரென "நில்லுங்கள்... சத்தம் போடாதீர்கள்..." என்று சைகையில் சொன்னார். நாங்கள் நால்வரும் ஆடாமல், அசையாமல் அப்படியே நின்றோம். வியர்வைத்துளிகள் நெற்றியிலிருந்து வழிந்து கண்களில் பட்டன. கண்கள் எரிந்தன. கணேசனைத் தவிர அனைவரும் "புஸ்...புஸ்..." என்று மூச்சினை இழுத்து விட்ட சத்தம் பெரும் பிரளையமாகக் கேட்டது. அனைவரின் கண்களிலும் ஒரு மிரட்சி. எங்களோடு வந்திருந்த பாரஸ்ட் கார்டு, கணேசனை நெருங்கி ’என்ன?’ என்பதாய்க் கேட்டார். கணேசன் தன் இடது கையை, வலப் பக்கமாய்க் காட்ட அங்கு நான்கு யானைகள் நடந்து போய்க்கொண்டிருந்தன.

யானைகள் ஆப்ரிக்கா தூக்கம்

யானைகள் கடந்ததும், அந்த இடத்திலேயே ஓய்வெடுத்தோம். கணேசன் முள்ளு குரும்பர் இனத்தைச் சேர்ந்தவர். யானைகள் பற்றிய பேச்சு வந்த போது, 

" ஆச்சரியமான ஜீவன் சார் இந்த பெரியவங்க (யானைகளை பெரியவர் என்றே அவர் அழைப்பார்)... எவ்வளவு தூரம்னாலும் சலிக்காம நடப்பாங்க. இராப்பகலா தூங்காம கூட நடப்பாங்க. பெரிய வயிறுல... நிறைய உணவ தேடணும்ல..." என்று சொன்னார்.
கணேசன் நடக்கத் தொடங்கியதும், " அவங்க சொல்றதெல்லாம் அப்படியே எடுத்துக்காதீங்க தம்பி... அதெல்லாம் உண்மையா இருக்குமான்னு தெரில. ஆராய்ச்சிகள் இல்லாம சும்மா பேச்சு வாக்குல ஏதாவது சொல்லுவானுங்க..." என்று எங்களுக்கு விழிப்புணர்வு ஊட்டினார் அந்த கார்டு. 

கொஞ்சம் தூரம் நடந்ததும் ஒரு இடத்தைச் சுட்டிக் காட்டினார் கணேசன். 

" மூணு வருசத்துக்கு முன்னாடி எங்க குடிக்கு வந்திருந்த ஒருத்தர இந்த இடத்துல பெரியவரு தூக்கிப் போட்டாரு சார். அந்த ஆளு பாறைல தலைபட்டு செத்துட்டாரு. பெரியவரு ரொம்ப நேரம் அங்கேயே நின்னுட்டிருந்தாரு. இந்த மூணு வருஷத்துல இந்த இடத்த கடக்கும் போதெல்லாம் கொஞ்ச நேரம் அமைதியா நின்னுட்டுத்தான் போவாரு. பெரியவங்களுக்கு அபாரமான ஞாபக சக்தி இருக்கும். மனிதாபிமானமும் அதிகம்..." என்று கணேசன் சொல்ல, அந்த கார்டு எங்களைப் பார்த்து மெலிதாக சிரித்தார்.  கணேசன் எதைப் பற்றியும் கண்டுகொள்ளாமல், செருப்பில்லாத தன் கால்களைக் கொண்டு அந்தக் காட்டிற்குள் சாதாரணமாக நடந்து போனார். 

இது நடந்து கிட்டத்தட்ட 6 வருடங்கள் ஆகிவிட்டன. இதைப் பற்றி இப்பொழுது குறிப்பிடுவதற்கும், மார்ச் 1 ஆம் தேதி ஆப்ரிக்காவின் பாட்ஸ்வானாவில் சமர்ப்பிக்கப்பட்ட  ஓர் ஆராய்ச்சிக் கட்டுரைக்கும் நெருங்கிய தொடர்பு இருக்கிறது. ஆப்ரிக்காவின் சோபி தேசியப் பூங்காவில் ஆப்ரிக்க யானைகளின் உறக்கம் குறித்து ஒரு ஆராய்ச்சியை மேற்கொண்டார் பேராசிரியர் பால் மேங்கர்.

யானைகள் ஆப்ரிக்கா தூக்கம்உலகிலேயே மிகக் குறைந்த நேரம் உறங்கும் பாலூட்டி யானைதான் என்று சொல்லியிருக்கிறார் பால் மேங்கர். காட்டில் சுற்றும்  இரண்டு பெண் யானைகளின் தந்தத்தில் Actiwatch என்ற கருவி பொருத்தப்பட்டது. இது அந்த யானைகளின் உறங்கும் நேரத்தைக் கணக்கெடுக்கும். மேலும் அதன் தோளில் Gyroscope என்ற கருவி பொருத்தப்பட்டது. இது யானைகள் எந்தெந்த நிலைகளில் உறங்கும் என்பதைக் கணக்கிடும். 
இதன்படி யானைகள் சராசரியாக ஒரு நாளைக்கு இரண்டு மணி நேரம் மட்டுமே உறங்குவதாக கண்டறிந்திருக்கிறார்கள். மேலும், அதிகபட்சமாக 46 மணி நேரம் வரை தூங்காமல் தொடர்ந்து நடந்துகொண்டே இருந்ததையும் பதிவு செய்துள்ளனர். இது உலக ஆராய்ச்சியாளர்களை ஆச்சரியப்படுத்தியிருக்கிறது.

இதுவரை சரணாலயத்திலோ, மிருகக்காட்சி சாலைகளிலோ இருக்கும் யானைகளைக் கொண்டுதான் ஆராய்ச்சிகளைச் செய்திருக்கிறார்கள். அதன்படி ஒரு யானை சராசரியாக 6 மணி நேரம் வரை தூங்கும் என்று சொல்வார்கள். ஆனால், காட்டு யானைகள் இவ்வளவு குறைந்த நேரம்தான் தூங்குகிறது என்பது ஆச்சரியமான விஷயம். 

யானைகள் ஆப்ரிக்கா தூக்கம்

யானைகளின் குறைந்த நேரத் தூக்கத்திற்கு காரணம் அதன் உடல் பெரிது என்பதும், நிறைய உணவுகளைத் தேடி சாப்பிட வேண்டும் என்பதால் நிறைய நடந்து, குறைவாகத் தூங்குவதாகச் சொல்லியிருக்கிறார்கள். ( 6 ஆண்டுகளுக்கு முன்பு கணேசன் சொன்னது!!!). 
இரண்டு நாட்களில் தூங்காமல் தொடர்ந்து 30 கிமீ தூரத்திற்கு உணவைத் தேடி அவை நடக்கின்றன. மேலும், சில இடங்களில் தனக்கு ஆபத்து ஏற்படும் என்று தெரிந்தால் அந்தப் பகுதிகளில் நிற்காமல் கடக்கின்றன யானைகள். யானைகள் குறித்த விடை தெரியா மற்றுமொரு கேள்வியையும் எழுப்பியிருக்கிறது இந்த ஆராய்ச்சி முடிவு. 

யானைகள் ஆப்ரிக்கா தூக்கம்

ரெம் REM என்று சொல்லக்கூடிய Rapid Eye Movement Sleep உறக்கத்தின் 5 நிலைகளில் ஒன்று. நம் தசைகளும், எலும்புகளும் ஓய்வெடுக்கும் போது, இந்த உறக்க நிலை நமக்குக் கிடைக்கும். இந்த நிலையில் தான் லூசிட் (Lucid) கனவுகள் வரும். அதாவது, அரைத் தூக்கக் கனவு மாதிரி. இந்தக் கனவுகள் நமக்கு நன்றாக நினைவிலிருக்கும். மிருகங்களுக்கு இந்தக் கனவுகள் தான் அதிகப்படியான ஞாபக சக்தியைக் கொடுக்கின்றன. பாலூட்டிகளில் அதிக ஞாபக சக்தி கொண்டது யானை தான் என்று சொல்கிறார்கள் ஆராய்ச்சியாளர்கள் ( கணேசனும் கூடத் தான்). ஆனால், யானைகள் நெடு நேரம் நின்றுகொண்டே தூங்குகின்றன. மிகவும் குறைவாகத் தூங்குகின்றன. இந்த நிலைகளில் தசைகளும், எலும்புகளும் இறுகியே இருக்கும். இதன்படி பார்த்தால் யானைகளுக்கு "ரெம்" உறக்கம் அதிகபட்சமாக வாரத்திற்கொரு முறைதான் வரும் வாய்ப்பு இருக்கிறது. லூசிட் கனவுகளும் வாரத்திற்கொரு முறைதான். முடிவுகள் இப்படியிருக்க, யானைக்கு எப்படி அபாரமான ஞாபக சக்தி இருக்கிறது எனக் குழம்பிக் கொண்டிருக்கிறார்கள் உலக ஆராய்ச்சியாளர்கள். 

ஒருவேளை இதற்கான பதில் கணேசனுக்குத் தெரிந்திருக்குமோ??? 

http://www.vikatan.com

  • தொடங்கியவர்

குன்னக்குடி வைத்தியநாதன் பிறந்த தினம்: மார்ச் 2- 1935

குன்னக்குடி வைத்தியநாதன் இந்தியாவின் தமிழகத்தைச் சேர்ந்த ஒரு வயலின் கலைஞர், இசையமைப்பாளர். குன்னக்குடியில் பிறந்த இவர் இந்திய அரசின் பத்மஸ்ரீ விருது பெற்றவராவார். கர்நாடக இசையை வயலினில் வாசித்தோரில் மிக முக்கியமானவராகக் கருதப்படுகிறார். நெற்றி முழுவதும் நீண்ட திருநீற்றுப் பட்டையும் பெரிய குங்குமப் பொட்டும் அணிந்து காட்சியளித்தவர். வயலில் உழுதோரையும் வயலின் கேட்கச் செய்தவர் என இவரைப் பற்றிக் குறிப்பிடப்படுகிறது.

 
 
 
 
குன்னக்குடி வைத்தியநாதன் பிறந்த தினம்: மார்ச் 2- 1935
 
குன்னக்குடி வைத்தியநாதன் இந்தியாவின் தமிழகத்தைச் சேர்ந்த ஒரு வயலின் கலைஞர், இசையமைப்பாளர். குன்னக்குடியில் பிறந்த இவர் இந்திய அரசின் பத்மஸ்ரீ விருது பெற்றவராவார். கர்நாடக இசையை வயலினில் வாசித்தோரில் மிக முக்கியமானவராகக் கருதப்படுகிறார்.

நெற்றி முழுவதும் நீண்ட திருநீற்றுப் பட்டையும் பெரிய குங்குமப் பொட்டும் அணிந்து காட்சியளித்தவர். வயலில் உழுதோரையும் வயலின் கேட்கச் செய்தவர் என இவரைப் பற்றிக் குறிப்பிடப்படுகிறது.

1935-ல் தமிழ்நாட்டின் சிவகங்கை மாவட்டத்திலுள்ள குன்னக்குடியில் ராமசாமி சாத்திரி, மீனாட்சி அம்மையார் தம்பதிகளுக்கு மகனாகப் பிறந்த வைத்தியநாதன் தனது 12-வது அகவையிலிருந்து இசைக் கச்சேரிகளில் பங்கேற்றார்.

ஆரம்பத்தில் செம்மங்குடி சீனிவாச ஐயர், மகாராஜபுரம் சந்தானம், சூலமங்கலம் சகோதரிகள், சீர்காழி கோவிந்தராஜன் ஆகியோருடன் இணைந்து பங்கேற்ற குன்னக்குடி பின்னர் தனிக் குழுவை அமைத்து கச்சேரிகள் நடத்தி வந்தார். தனியாகவும் பின்னர் கச்சேரி செய்ய ஆரம்பித்தார்.

அரியக்குடி ராமானுஜ ஐயங்காருக்கு காரைக்குடியில் நடந்த இசை நிகழ்வொன்றில் பக்க வாத்தியமாக வயலின் வாசித்தமையே வைத்தியநாதனின் வயலின் அரங்கேற்றமாகக் கருதப்படுகின்றது. காலங்காலமாக வயலினுடன் மிருதங்கம் வாசிக்கப்பட்டமையில் மாற்றஞ் செய்து வலயப்பட்டி சுப்பிரமணியம் என்பாரின் தவிலுடன் பெருமளவு வயலின் கச்சேரிகளைச் செய்துள்ளார். கருநாடக இசை, திரைப்பட இசை என்பவற்றோடு பறவைகள், மிருகங்களின் ஓசைகள் போன்ற இயற்கை ஒலிகளையும் வயலினில் வாசித்தார்.

வா ராஜா வா (1969) என்ற திரைப்படத்துக்கு முதன்முதலில் இசையமைத்த வைத்தியநாதன் தெய்வம், கந்தன் கருணை உள்ளிட்ட மொத்தம் 22 திரைப்படங்களுக்கு இசையமைத்தார். திருமலை தென்குமரி (1970) திரைப்படத்திற்கு இசையமைத்தமைக்காக தமிழக அரசின் சிறந்த இசையமைப்பாளர் விருது பெற்றார். தோடிராகம் (1983) என்னும் திரைப்படத்தைச் சொந்தமாகத் தயாரித்தார். டி. என். சேஷகோபாலன் இதில் முக்கிய பாத்திரமாக நடித்தார். குன்னக்குடி வைத்தியநாதன் சில திரைப்படங்களில் கௌரவ வேடங்களில் நடித்தும் உள்ளார்.

திருவையாறு தியாக பிரம்ம சபையின் செயலராக 28 வருடம் பணியாற்றியுள்ளார். தமிழ்நாடு இயல்இசை நாடக மன்றத்தின் தலைவராகவும் இருந்துள்ளார்.

'ராக' ஆராய்ச்சி மையம் என்ற அமைப்பை நிறுவி இசையால் நோய்களை குணமாக்க முடியுமா என்ற ஆய்விலும் ஈடுபட்டிருந்தார். இவர் 2008, செப்டம்பர் 8 ஆம் நாள் தனது 75 ஆவது வயதில் சென்னை போரூர் ராமச்சந்திரா மருத்துவமனையில் இரவு 9மணியளவில் மாரடைப்பால் காலமானார். வைத்தியநாதன் பாகீரதி தம்பதியினருக்கு நான்கு மகன்களும் ஒரு மகளும் உள்ளனர்.

http://www.maalaimalar.com

  • தொடங்கியவர்

சுமார் ஏழு கோடி ரூபா மதிப்புள்ள மெர்ஸிடிஸ் மேபேச் காரை வாங்கிய ‘முடி திருத்துனர்’!

 

இந்தியாவில், விஜய் மல்லையாவுக்கு அடுத்தபடியாக ‘மெர்ஸிடிஸ் மேபேச்’ ரகக் கார் ஒன்றை வாங்கி அசத்தியிருக்கிறார் முடி திருத்துனர் ஒருவர்! அவர் பெயர் ரமேஷ் பாபு!

4_Ramesh_Babu.jpg

இந்தியாவில் கடந்த மாதம் நடைபெற்ற ‘ஏரோ இந்தியா’ கண்காட்சியில் கலந்துகொண்ட ஜேர்மன் பிரதிநிதிகள், மெர்ஸிடிஸ் மேபேச் காரிலேயே பயணிக்க விரும்பினர். ஆனால், இந்தியாவில் அந்தக் கார் விற்பனை செய்யப்படுவதில்லை என்பதால், நிர்வாகிகள் கையைப் பிசைந்தனர். 

அப்போதுதான், குறித்த ரகக் காரை ரமேஷ் பாபு என்ற முடி திருத்துனர் அண்மையில் இறக்குமதி செய்திருப்பதை அறிந்து ஆச்சரியப்பட்டு, அவரிடம் அந்தக் காரை வாடகைக்குப் பெற்று ஜேர்மன் பிரதிநிதிகளைத் திருப்திப்படுத்தியுள்ளனர்.

4_Ramesh_Babu_2.jpg

ரமேஷ் பாபுவின் தந்தையும் முடி திருத்துனரே! ரமேஷுக்கு ஒன்பது வயது இருக்கும்போது அவரது தந்தை காலமானார். இதையடுத்து மிகுந்த சிரமங்களுக்கு மத்தியில் ரமேஷின் வாழ்க்கை ஓடியது. பத்தாம் வகுப்புக்கு மேல் அவரைப் படிக்கவைக்க அவரது தாய்க்கு வசதியிருக்கவில்லை. இதனால் தந்தையைப் போலவே முடி திருத்துனராக மாறினார்.

தனது சொந்தப் பணத்தை வைத்து 1994ஆம் ஆண்டு மாருதி ஓம்னி ரக வேன் ஒன்றை வாங்கி  வாடகைக்கு விடத் தொடங்கினார் ரமேஷ்! அன்று முதல் அவருக்கு கார்களின் மீது தீராத காதலும் உருவானது. ரமேஷ் டுவர்ஸ் எண்ட் ட்ராவல்ஸ் என்ற பெயரில் வாடகைக் கார் நிறுவனத்தையும் ஆரம்பித்தார். இரண்டு தொழில்களையும் சிறப்பாகக் கவனித்துவந்த ரமேஷ் கொஞ்சம் கொஞ்சமாக வாழ்க்கையில் முன்னேறத் தொடங்கினார். 

4_Ramesh_Babu_1.jpg

2011ஆம் ஆண்டு, உச்சபட்ச செல்வந்தர்களின் அடையாளமாக விளங்கும் ரோல்ஸ் ரொய்ஸ் காரை வாங்கியபோது இந்தியாவே இவரைத் திரும்பிப் பார்த்தது. இப்போது ரமேஷிடம் சுமார் 150 அதிசொகுசுக் கார்கள் இருக்கின்றன. அவற்றை, நம்பிக்கைக்குரிய வாடிக்கையாளர்களுக்கு வாடகைக்குக் கொடுக்கிறார்.

4_Ramesh_Babu_3.jpg

‘பழசை’ மறக்காத ரமேஷ், எத்தனைதான் வசதி வந்தபோதும், தினமும் சுமார் ஐந்து மணிநேரத்தை தனது முடி திருத்தகத்தில், முடி திருத்துனராகவே செலவிடுகிறார்.

http://www.virakesari.lk

  • தொடங்கியவர்

பராமரிப்பாளரின் காலை திரும்ப திரும்ப பற்றிக் கொள்ளும் பாண்டா

பராமரிப்பாளரின் காலை திரும்ப திரும்ப பற்றிக் கொள்ளும் இந்த பாண்டாவின் காணொளி முகநூல் பக்கத்தில் நான்கு நாட்களில் 16 கோடியே 30 லட்சம் முறை பார்க்கப்பட்டுள்ளது.

ச்சி யி என்று அழைக்கப்படும் இந்த பாண்டா, சீனாவின் தென் மேற்கில் சிச்சுவான் மாகாணத்திலுள்ள செங்து ராட்சத பாண்டா இனபெருக்க தளத்தில் வாழ்ந்து வருகிறது.

  • தொடங்கியவர்

இந்த கோடீஸ்வரரின் ஆசைக்கு 4 ஆண்டுகளில் 500 மிருகங்கள் பலி..!

கோலியத் மெதுவாக... மிக மெதுவாக நடந்து கொண்டிருந்தான். அவன் உலகம் மிகவும் சிறியது. அதற்குள் இப்படித் தான் அவன் மெதுவாக நடந்து கொண்டே இருப்பான். சுவற்றை ஒட்டியிருந்த அந்த கரன்ட் கம்பியை அவன் கவனிக்கவில்லை. அவனின் மிருதுவான கால்கள் அதைத் தொட்டவுடன்... ஒரு நொடி தான். யாராலும் உடைக்க முடியாத தன் ஓட்டுக்குள் தலையை இழுத்துக் கொள்ள முயற்சிக்கிறான். உயிர் வாழ்ந்திட போராடுகிறான். ஆனால், அனைத்தும் ஒரு நொடியில் கருகிவிடுகிறது. கோலியத் ஒரு அழகான ஆமை. 

மிருகங்கள் மிருகக்காட்சி சாலை பிரிட்டன்

மெதுவாக நகர்ந்து செல்லும் கோலியத்...

மிஸ்காவும், நடஸ்ஜாவும் அழகான பனிச் சிறுத்தைகள். எப்போதும் விளையாடிக் கொண்டேயிருக்கும் சிறு பிள்ளைகள். அந்த நாள் காலை அவர்களின் கூண்டில் இருவரும் இறந்து கிடந்தார்கள். 

அந்த சிங்கம் 7 குட்டிகளை ஈன்றிருந்தது. கருவறைக் கடந்து உலகைப் புதிதாகப் பார்த்த சந்தோஷத்தில் துள்ளி விளையாடிக் கொண்டிருந்தன. ஆனால், இந்த உலகில் அவர்களுக்குச் சரியான இடம் இல்லை, உணவில்லை. சில நாட்களிலேயே 7 பேரும் இறந்து போனார்கள். போஸ்ட் மார்டம் ரிப்போர்ட்டில் 7 சிங்கக்குட்டிகளுமே ஆரோக்கியமாக பிறந்தவைதான் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. 

3 வயது காண்டாமிருகம் இண்டியானா. தன்னைவிட வலிமையான காண்டாமிருகம் சுவற்றில் வைத்து நசுக்கியதில்... நசுங்கிப் போய் உயிரிழந்தான். 

மிருகங்கள் மிருகக்காட்சி சாலை பிரிட்டன்

அன்றொரு நாள் காலை... மிஸ்காவும், நடஸ்ஜாவும் இறந்துக் கிடந்தார்கள்...

2013-ம் ஆண்டு மன அழுத்தத்தில் தவித்துக் கொண்டிருந்தான் படாங் என்ற 14 வயது புலி. என்ன நினைத்தானோ தெரியவில்லை, தனக்கு உணவளிக்க வந்த காவலர் சாரா மெக்லே மீது பாய்ந்துவிட்டான். சாரா ரத்த வெள்ளத்தில் இறந்து போனார். அதன் பின்னர் 3 ஆண்டுகள் சரியாக சாப்பிடாமல், தனிமையில் உடலும், மனமும் சோர்ந்து போய் புழுங்கிக் கொண்டிருந்த படாங் கருணைக் கொலை செய்யப்பட்டான். 

இதுமட்டுமில்லை... இன்னும், இன்னும் நிறையக் கதைகள். அணில் குரங்கு இறந்து போனது, நரிக்குட்டி கருகிப் போனது, தவறான உணவுகளால் உடல்நலம் பாதிப்படைந்து ஒட்டகச்சிவிங்கி இறந்து போனது, அலிசியா  என்ற புலி தொண்டையில் சிக்கிய கறித்துண்டின் காரணமாக மூச்சுத் திணறி இறந்தது என கடந்த 4 ஆண்டுகளுக்குள்ளாகவே மட்டும் 500 மிருகங்கள் உயிரிழந்திருக்கின்றன. இல்லை... உயிர் பறிக்கப்பட்டிருக்கின்றன. 

இவை கற்பனைக் கதைகள் அல்ல. பிரிட்டனின் கம்ப்ரியாவில் இருக்கும் "சவுத் லேக்ஸ் சஃபாரி ஜூ" வில் (South Lakes Safari Zoo) நடந்த கொடூரங்கள். 51 ஏக்கர் பரப்பளவில் அமைந்திருக்கும் இந்த மிருகக்காட்சி சாலையின் உரிமையாளர் டேவிட் கில். பிரிட்டனின் மிகப் பெரிய கோடீஸ்வரர்களில் ஒருவர். 

மிருகங்கள் மிருகக்காட்சி சாலை பிரிட்டன்

இப்படியான தொடர் மரணங்கள் நடப்பதைக் கவனித்து சில தொண்டு நிறுவனங்களைச் சேர்ந்தவர்கள் மிருகக்காட்சி சாலையில் ஆராய்வுகளை மேற்கொண்டார்கள். அதில் " இடமின்மை, அதிகக் கூட்டம், சரியான உணவின்மை, மிருகங்களின் இயற்கை குறித்த புரிதலின்மை, மருத்துவ வசதிகளின்மை மற்றும் அளவுக்கதிகமான பணம் சேர்க்கும் ஆசை" ஆகியவை தான் இந்த மரணங்களுக்கான காரணங்கள் என்று சொல்லியிருக்கிறது. 

தற்சமயம் கிட்டத்தட்ட 1500 மிருகங்கள் இங்கு அடைத்து வைக்கப்பட்டிருக்கின்றன. 2013-ல் மெக்லே இறந்தபோதே இந்த மிருகக் காட்சியின் மீது சில புகார்கள் வந்தன. மெக்லே இறப்பிற்கு நீதிமன்றமும் 4,50,000 யூரோக்கள் அபராதம் விதித்தது. ஆனால், பிரச்னை வந்த போதெல்லாம் பணம் கொடுத்து தன் மீதும், தன் மிருகக்காட்சி சாலையின் மீதுமான புகார்களை கலைந்திருக்கிறார் டேவிட் கில் என்ற குற்றச்சாட்டும் முன்வைக்கப்படுகிறது. இன்னும் சில தினங்களில் மிருகக்காட்சியின் உரிமத்தைப் புதுப்பிக்க வேண்டும், இந்த மிருக்கக்காட்சிக்கான உரிமத்தை ரத்து செய்ய வேண்டுமென பல இயற்கை ஆர்வலர்கள் போராடி வருகின்றனர். ஆனால், ஏனோ பொது மக்கள் மத்தியில் எதிர்ப்பு மனநிலை குறைவாகவே இருக்கிறது. இந்த மிருக்கக்காட்சி சாலையில் இருக்கும்பொழுது போக்கு அம்சங்கள் குறித்து இணையத்தில் பெருமையாகப் பேசப்பட்டு வருகிறது. 

மிருகங்கள் மிருகக்காட்சி சாலை பிரிட்டன்

மனிதர்களை மிருகங்கள் புரிந்து கொள்ளும் அளவுக்குக் கூட, மனிதர்களால் மிருகங்களைப் புரிந்து கொள்ள முடிவதில்லை என்பது தான் நிஜம். காட்டின் ராஜாவாக இருக்கும் சிங்கங்களை காட்சிப் பொருளாக்குவது, பரந்து விரிந்து கிடக்கும் காடுகளில் பயணிக்கும் புலிகளை சில அடிகள் கொண்ட கூண்டில் அடைப்பது, மரமேறி குதித்து, வெகுவேகமாக ஓடி வேட்டையாடும் சிறுத்தைகளுக்கு சில கறித் துண்டுகளைப் போட்டு பேலியோ டயட்டில் வைப்பது என மிருகங்களை மனிதர்களாக்க நினைக்கும் நொடியிலேயே மனிதர்களுக்கான வீழ்ச்சி தொடங்கிவிடுகிறது. 

வனங்களில் வனாந்திரமாக சுற்றியிருக்க வேண்டிய மிருகங்கள் சின்னக் கூண்டுகளில் அடைக்கப்பட்டு அழித்தொழிக்கப்பட்டது ஆகப்பெரும் வன்முறை. கோலியத், மிஸ்கா, நடஸ்ஜா, அலிசியா, இண்டியானா, படாங்... என கூண்டுகளில் கண்களை மூடிய நண்பர்களின் ஆன்மாவாவது கூண்டுகளைச் சுற்றாமல், காடுகளில் சுதந்திரமாக சுற்றி அலையட்டும். சுற்றி, சுற்றி அலையட்டும். சுற்றிக் கொண்டே இருக்கட்டும்...

http://www.vikatan.com/

  • தொடங்கியவர்

இன்பாக்ஸ்

 

p35a.jpg

`2.0' படத்துக்காக, பூந்தமல்லியில் பிரமாண்ட செட் ஒன்று போடப்பட்டிருக்கிறது. இந்த செட்டின் மதிப்பு மட்டும் 20 கோடி ரூபாய். `பிரமாண்டம்னா இதான்யா!' என, பார்த்தவர்கள் அனைவரும்  மிரண்டுபோயிருக்கிறார்களாம். ஆனால், `இதெல்லாம் ஜுஜூபி பாஸ்' என்கிறார்கள் படக்குழுவினர். இந்தப் பிரமாண்ட செட்டில் சண்டைக்காட்சி ஒன்றைப் படமாக்கிக்கொண்டிருக்கிறது ஷங்கர் டீம். இந்தச் சண்டையில் ரஜினி கிடையாதாம். வில்லன் அக்‌ஷயோடு மோதப்போவது ஏமி ஜாக்சன். சர்ப்ரைஸ் ஷங்கர்!

p35b.jpg

ஷாரூக்கின் சமீபத்திய பொழுபோக்கு, மகனுடைய விளையாட்டுப் பொம்மைகளை எடுத்துவைத்துக்கொண்டு விளையாடுவதுதான். `சிறுவயதிலேயே தந்தையையும் பிறகு, தாயையும் இழந்தவன். அதனால் மிகச்சிறிய வயதிலேயே மிகப்பெரிய மனிதனாக யோசித்து முடிவெடுக்கவேண்டியதாகிவிட்டது. பொம்மைகளுடன் விளையாடுவதற்குப் பதில், வாழ்க்கையுடன் விளையாடவேண்டியதாக இருந்தது. இப்போதுதான் பொம்மைகளுடன் விளையாட நேரம் கிடைத்திருக்கிறது' என ஷாரூக் எமோஷனலாகச் சொல்ல, ஃபீலானது பாலிவுட். மீசைவெச்ச குழந்தையப்பா!

p35c.jpg

பாலிவுட்டில் விரைவிலேயே அறிமுகமாக இருக்கிறார் நடிகர் சைஃப் அலிகான் மகள் சாரா அலிகான். கரண் ஜோகர் இயக்கும் படத்தின் மூலம் சினிமா என்ட்ரி கொடுக்க இருக்கிறார் சாரா. ராரா சாரா!

p35d.jpg

`ஷமிதாப்'புக்குப் பிறகு சத்தமில்லாமல் இருந்த அக்‌ஷராஹாசன், இந்த இடைவெளியில் `லாலி கி ஷாதி மெய்ன் லட்டூ திவானா' என்ற இந்திப் படத்தில் நடித்து முடித்திருக்கிறார். கூடவே அஜித்தோடு `விவேகம்' படத்திலும் அக்‌ஷரா நடிக்கிறார்.  இவ்வளவு பிஸியிலும் அப்பா கமல்ஹாசன் இயக்கும் `சபாஷ் நாயுடு’ படத்தில் உதவி இயக்குநர் வேலையையும் பார்க்கிறார். பிஸி பேபி!

p35e.jpg

பாலிவுட் பயோபிக்குகள் வரிசையில் அடுத்து படமாக இருப்பது சஞ்சய் தத்தின் கதை. இயக்குநரும் சஞ்சய் தத்தின் நண்பருமான ராஜ்குமார் ஹிரானி, படத்தை இயக்கிவருகிறார். நடிகராக சஞ்சயின் வளர்ச்சி, வீழ்ச்சி, சர்ச்சைகள் என அனைத்தும் படத்தில் வருகின்றன. சஞ்சய் தத்தாக நடிப்பவர் ரன்பீர் கபூர். இதில் சஞ்சய் தத்தின் அம்மா பற்றிய காட்சிகளும் வருகின்றன. சஞ்சய் தத்தின் அம்மா வேடத்தில் நடிக்க இருப்பது மனிஷா கொய்ராலா.  பயோபிக் ஃபீவர்!

p35f.jpg

டொனால்டு ட்ரம்ப்புக்காகப் பாதுகாப்பு உபகரணங்கள் பொருத்தப்பட்ட `Cadillac One' கார், விரைவில் வழங்கப்பட உள்ளது. இதற்கிடையே ட்ரம்ப் இதற்கு முன்பு பயன்படுத்திய 1988-ம் ஆண்டைச் சேர்ந்த Cadillac Limousine கார், விற்பனைக்கு வந்துள்ளது. `Cadillac Trump' என அழைக்கப்படும் இந்த கார், இங்கிலாந்தில் உள்ள குளொசெஸ்டர் நகரத்தைச் சேர்ந்த கிரேக் எனும் கார் டீலரிடம் இருக்கிறது. இதன் ஆரம்ப விலையே 50 லட்சம் ரூபாயைத் தாண்டும் என்கிறார்கள். நடத்துங்க... நடத்துங்க!

`தற்கொலை செய்துகொள்கிறவர்கள் எண்ணிக்கையில், இந்தியாதான் டாப்!' எனச் சொல்லியிருக்கிறது உலக சுகாதார நிறுவனம். `ஐந்து கோடிக்கும் அதிகமான இந்தியர்கள், மன அழுத்தத்தால் பாதிக்கப்பட்டுள்ளனர்' என இன்னொரு ஷாக்கும் கொடுத்திருக்கிறது. உலக அளவில் மன அழுத்தப் பாதிப்புகள் அதிகம் பேரைக் கொண்டிருக்கும் இரண்டு நாடுகளில் இந்தியாவும் ஒன்றாம்.
இந்திய மனசே ரிலாக்ஸ் ப்ளீஸ்!

  • தொடங்கியவர்

வித்யாசாகர் இசையமைத்த இந்தப் பாடல்களைக் கேட்டிருக்கிறீர்களா? #HBDVidyasagar

இளையராஜா வருகைக்கு முன், 70-களில் சில காலம் இந்தி பாடல்களால் நிரம்பியிருந்தது தமிழ் ரசிகர்களின் கேசட்டுகள். அவர்களைத் திருப்பி தமிழ் பாடல்கள் கேட்க அழைத்து வந்தார் இளையராஜா. 90-களுக்குப் பின் வந்த ரஹ்மான் தமிழ் திரை இசையை வேறு இடத்துக்குக் கொண்டு சென்றார். ஆனால், ராஜா - ரஹ்மான் இவர்களுக்கு இடைப்பட்ட கேட்டகரி ஒன்று உண்டு. அந்த இடத்தில் தன்னை அழகாகப் பொறுத்திக் கொண்டவர் வித்யாசாகர். அந்த மெலடி கிங்கின் பிறந்தநாள் இன்று. அவரது இசையில் அதிகம் கவனம் பெறாத சில மெலடிகள் இங்கே...

வித்யாசாகர்

பனிக்காற்றே - ரன்:

‘காதல் பிசாசே’, ‘இச்சுத்தா’, ‘தேரடி வீதியில்’ என ‘பெப்பி நம்பர்ஸ்’ இருந்தாலும், இதே படத்தில் ‘மின்சாரம் என் மீது’, ‘பொய் சொல்லக் கூடாது’ என மெலடியிலும் கலக்கி இருப்பார் வித்யாசாகர். மற்ற பாடல்கள் போல ‘பனிக்காற்றே பனிக்காற்றே...’ பிரபலமாகவில்லை. எப்போதாவது லோக்கல் சேனலிலோ, எஃப்.எம்-மிலோ போடும்போதுதான் கேட்டு சிலிர்த்திருப்போம்.

 

 

அற்றைத்திங்கள் - சிவப்பதிகாரம்:

ஸ்வர்ணலதா பாடிய ‘சித்திரையில் என்ன வரும்’ பாடல் போலவே, சுஜாதா, மதுபாலகிருஷ்ணன் பாடியிருக்கும் ‘அற்றைத் திங்கள் வானிடம்...’ பாடலும் செம.

 

ஒரே மனம் - வில்லன்:

சாதனா சர்கம், ஹரிஹரன் பாடிய ‘ஒரே மனம்...’ அந்த ஆல்பத்திலேயே பீக் லெவல் மெலடி. பின்னணியில் மிக மெலிதாக ஒரு பீட் தொடர்ந்து கொண்டே இருக்க, அதை முந்திக் கொண்டு மெலடியிலேயே பயணிக்கும் பாடல்.

 

மௌனமே பார்வையாய் - அன்பே சிவம்:

‘யார் யார் சிவம்...’, ‘பூ வாசம்...’ பாடல் மட்டுமல்ல, ‘மௌனமே பார்வையாய்...’ பாடலும் அன்பே சிவம் ஆல்பத்தில் அல்டிமேடான ஒன்று. எஸ்.பி.பி + சந்த்ரயி கூட்டணியில் செம மெஸ்மரிசப் பாடல் இது. 

 

வெண்ணிலா - பொன்னியின் செல்வன்:

முகத்தில் இருக்கும் வடு காரணமாக தாழ்வு மனப்பான்மையில் இருக்கும் ஹீரோவை உற்சாகப்படுத்துவதற்காக, ஹீரோயின் பாடும் பாடல் இது. இன்ஸ்பிரேஷன் பாடலைத் தன் ஸ்டைலில் கொடுத்திருப்பார் வித்யாசாகர்.

 

என்னைக் கொஞ்சக் கொஞ்ச - ஆதி:

மழைப் பாடல். ஆரம்பத்தில் தடக்கு தடக்கு... என ஆரம்பித்து, ‘என்னைக் கொஞ்ச கொஞ்ச...’ என ராகத்தால் மழையில் குளிர்ச்சியை உணரச் செய்திருப்பார்.

ஆழக் கண்ணால் - மொழி:

மொழி படத்தில் ‘காற்றின் மொழி...’, ‘கண்ணால் பேசும் பெண்ணே...’, ‘செவ்வானம் சேலையக் கட்டி...’ பாடல்கள் மிகப் பிரபலம். மியூசிக் சேனல்களில் அடிக்கடி பார்க்க முடியும். ஆனால், பேத்தாஸ் பாடலான ‘பேசா மடந்தையே...’ கூட சிறப்பாக இருக்கும். கூடவே துண்டுப் பாடல்களாக வரும் ‘என் ஜன்னலில் தெரிவது’, ‘மௌனமே உன்னிடம்’, ‘ஆழக் கண்ணால்’ பாடல்களும் மிக அழகாக உருவாக்கப்பட்டு அதே அழகுடம் படத்திலும் உபயோகிக்கப்பட்டிருக்கும். ஜோதிகாவின் நடிப்பைப் போல இந்தப் படத்துக்கு வித்யாசாகரின் இசையும் பலம் சேர்த்தது.

 

இரு விழியோ - பிரிவோம் சந்திப்போம்:

திருமண நிகழ்வுக்கு ஒரு பாடல். வழக்கம்போல இல்லாமல் வேறு டைப்பில் பாடல் ஒன்றைக் கொடுத்திருப்பார் வித்யாசாகர். கூடவே இப்படத்தில் ‘கண்டேன் கண்டேன்’, ‘நெஞ்சத்திலே நெஞ்சத்திலே’, ‘கண்டும் காணாமல்’ பாடல்களும் சிறப்பாக இருக்கும்.

மழை நின்ற பின்பும் - ராமன் தேடிய சீதை:

தான் நிராகரித்த ஹீரோ மீதே காதல் பூக்கிறது. அந்த சூழலுக்கு மிக இதமாக ஒரு மெலடி. வரிகள் பளிச்செனத் தெரியும் படியான மெட்டமைத்துக் கொடுத்திருப்பார். 

இன்னும் வித்யாசாகர் கொடுத்த அசத்தாலன பாடல்கள் கீழே... இதில் மிஸ்ஸான இன்னும் ஸ்பெஷலான பாடல்களைக் கமெண்டில் பதிவிடலாமே ஃப்ரெண்ட்ஸ்!

தென்றலுக்கு நீ - அறை எண் 305ல் கடவுள்:

மேகம் வந்து போகும் - மந்திரப் புன்னகை:

சடசட - காவலன்:

கொலகாரா - தம்பி வெட்டோத்தி சுந்தரம்:

உன்னப் பாக்காம - ஜன்னல் ஓரம்:

 

http://www.vikatan.com

Edited by நவீனன்

  • தொடங்கியவர்

புற்றுநோய் பரப்பும், வெள்ளம் கொல்லும் ஆறுகள்..! உலகின் மோசமான ஆறுகள் இவை

ஆறுகள்

நதிகள் என்பது இயற்கை நமக்குத் தந்த வரங்கள். ஒரு நாட்டின் குடிநீர்த் தேவையில் ஆரம்பித்து ஒரு நாட்டின் வளர்ச்சி வரைக்கும் நதிகளுக்கு முக்கியப்பங்கு உண்டு. இந்த நதிகளானது இயற்கையின் கணிக்க முடியாத மிகப்பெரிய சக்திகளுள் ஒன்று. மக்கள் வாழ்வதற்குத் தேவையான வாழ்வாதாரமும் நதிகள்தான். ஒரு நாட்டினுடைய நாகரிகமும் ஆற்றங்கரையோரத்தில்தான் ஆரம்பிக்கிறது. இந்த ஆறுகளானது பெரிய வனப்பகுதிகள், மலைகள் மற்றும் பள்ளத்தாக்குகள் ஆகியவற்றைக் கடந்தே சமவெளிப்பகுதிக்கு வருகின்றன. உலகில் பாதுகாப்பான ஆறுகள் பல இருந்தாலும், மிரட்டும் ஆபத்தான ஆறுகளும் இருக்கத்தான் செய்கின்றன. 

1. யாங்ஜி ஆறு: 

யாங்ஜி ஆறு

ஆசியாவிலேயே 4,000 மைல்கள் பயணிக்கும் மிக நீளமான ஆறு இதுதான். இந்த ஆற்றின் பெரும்பகுதியானது சீனாவில் பாய்கிறது. மேலும், மக்கள் வாழ்வாதாரத்துக்கு முக்கிய ஆதாரமாகவும் இது விளங்குகிறது. இந்த ஆற்றில் சீன முதலைகள், கடற்பன்றிகள், துடுப்பு மீன்கள் ஆகிய உயிரினங்கள் கொண்டதாகவும், மேலும் உலகப்புகழ்பெற்ற கோர்ஜஸ் அணையும் இந்த நதியில் அமைந்துள்ளது. இந்த கோர்ஜஸ் அணையில் ஹைட்ரோ-மின்சாரம் தயாரிக்கப்படுகிறது. இவை அனைத்துமே ஒருங்கே அமையப்பெற்ற இந்த வளங்கள் யாங்ஜி ஆறுக்கு நல்லதல்ல. ஆனால் கடந்த பல ஆண்டுகளாகத் தொழில் நகரமயமாக்கல் காரணமாக தீவிரமாகப் பரவிய மாசினால் ஆற்றின் வளம் பாதிக்கப்பட்டது. இதனால் அதனைச் சார்ந்திருந்த விவசாயத்தின் வளர்ச்சியும் பாதிக்கப்பட்டது. இந்த ஆற்றில் மே முதல் ஆகஸ்ட் வரை பெய்யும் மழையால் வெள்ளம் கரைபுரண்டு ஓடும். இந்த ஆற்றில் 1954-ம் ஆண்டு மிகப்பெரிய வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு 30,000 மக்கள் உயிரிழந்தனர். 

2. பரணா ஆறு: 

பரணா ஆறு

பரணா ஆறு 3,030 மைல்களைத் தாண்டி பயணிக்கும் மிகப்பெரிய ஆறு. தென் அமெரிக்காவில் மற்ற நதிகளைவிட (அமேசான் நதி உட்பட) இதுதான் நீளமானது. பரணா ஆற்றில் ஏற்படும் எதிர்பாராத வெள்ளம் கட்டுப்படுத்த முடியாத வலுவான நீரோட்டம் ஆகியவற்றால் இந்த நதியானது ஆபத்தான நதிகளின் பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளது. இந்த ஆற்றில் வெள்ளம் ஏற்படும்போது மக்கள் தமது வீடுகளை இழப்பது நிச்சயம். ஒவ்வொரு வருடமும் வெள்ளத்தால் அதிகமான மக்கள் தங்கள் உடைமைகளை இழந்து விடுகின்றனர். 

3. காங்கோ ஆறு: 

காங்கோ ஆறு

ஆப்பிரிக்காவிலுள்ள காங்கோ ஆறு மிக ஆழமான மற்றும் நீளமான ஆறு, இதுவும் 3,000 மைல்களைக் கடக்கிறது. இந்த ஆற்றுக்கென தனி வரலாறு உண்டு. இந்த ஆறானது கருமை நிற இதயம் கொண்ட ஆறு என அழைக்கப்படுகிறது. இந்த ஆற்றில் 75 மைல் நீளமான கணிக்க முடியாத பயங்கரமான பள்ளத்தாக்குகளைக் கொண்டுள்ளதால் 'நரகத்தின் வாயில்' எனவும் அழைக்கப்படுகிறது. 

4. அமேசான் ஆறு: 

அமேசான் ஆறு

அமேசான் நதி உலகின் மிகப்பெரிய நதிகளில் ஒன்றாகவும், உலகின் இரண்டாவது நீளமான நதியாகவும் விளங்குகிறது. இது இரண்டாவது நைல் நதி எனவும் அழைக்கப்படுகிறது. இந்த அமேசான் காடுகளில் மிகப்பெரிய அனகோண்டா பாம்புகளும், நதியில் காளை சுறாக்கள் எனப் பலவகையான நீர்வாழ் உயிரினங்கள் இருக்கின்றன. மேலும் உலகின் மிக ஆபத்தான நதியாகவும் இந்த நதியானது விளங்குகிறது. 

5. ஒரினோகோ ஆறு: 

ஒரினோகோ ஆறு: 

தென் அமெரிக்காவின் முக்கியமான நதியாகும். இது 1330 மைல் நீளமானது. இந்த ஆறானது கொலம்பியா, வெனிசுலா மற்றும் அடர்ந்த வனங்கள் ஆகியவற்றைக் கடந்து பயணிக்கிறது. கிட்டத்தட்ட 200 கிளை நதிகளையும், ஆபத்தான பல அருவிகளையும் தன்னகத்தே கொண்டுள்ளது. இந்த ஓரினோகொ எல்லையில் வாழும் மக்கள் ஆண்டு முழுவதும் ஏற்படும் வெள்ளத்தைச் சந்தித்து வருகின்றனர். 

6. மீகாங் ஆறு: 

மீகாங் ஆறு

ஆசியாவின் 7-வது நீளமான நதியாகும். மீகாங் நதியானது சீனா, பர்மா, லாவோஸ், தாய்லாந்து, கம்போடியா, வியட்நாம் ஆகிய 6 நாடுகளில் பயணிக்கிறது. இந்த மீகாங் நதியில் மென்மையான ஷெல் ஆமைகள், முதலைகள், பெரிய டால்பின்கள் போன்ற அரியவகை உயிரினங்கள் காணப்படுகின்றன. மேலும் உப்பு எடுக்கும் தொழிலும் இந்த ஆற்றங்கரையில் பிரபலம். இந்தக் கடல் போக்குவரத்துக்குப் பெரிதும் உதவுகிறது. ஆனால் நெடுந்தூரம் பயணிக்க முடியாது. இந்த ஆற்றில் ஏற்ற இறக்கங்கள் நீண்டும், குறுகியும் காணப்படுகிறது. கடந்த 2008-ம் ஆண்டு மீகாங் ஆறானது 12 மீட்டர் உயரத்துக்கு மோசமான வெள்ளத்தைச் சந்தித்தது குறிப்பிடத்தக்கது. 

7. எநிசி ஆறு: 

எநிசி ஆறு

மங்கோலியா மற்றும் சீனா வழியாக இந்த நதி சென்று ஆர்டிக் கடலில் கலக்கும் பெரிய நதியாகும். இந்த ஆற்றில் இருக்கும் நச்சுத்தன்மை மற்றும் அதன் கதிர்வீச்சானது ஆற்றை ஆபத்தான பட்டியலில் சேர்த்துள்ளது. நீர்வாழ் அறிஞர்களின் ஆய்வுப்படி, புளுட்டோனியம் சுத்தம் செய்யும் தொழிற்சாலைகளில் இருந்து வெளியேறும் கழிவுகளால் முழுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது. மேலும் அந்த ஆற்றினை சுற்றியுள்ள பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு மரபணு பிறழ்ச்சி மற்றும் மார்பக புற்றுநோய் ஆகியவை ஏற்படுகிறது. 

8. மிசி சிப்பி ஆறு: 

மிசி சிப்பி ஆறு

வடமெரிக்காவின் பெரிய நதியாகக் கருதப்படும் மிசி சிப்பி ஆறு மினசோட்டா, விஸ்கான்சின், அயோவா, ஆர்கன்சாஸ் மற்றும் லூசியானா உட்படப் பல அமெரிக்க மாநிலங்களைக் கடந்து செல்கிறது. இந்த ஆற்றில் சில பகுதிகளில் காளை சுறாக்கள் மற்றும் ஈட்டி மீன்கள் போன்ற மிகப்பெரிய நீர்வாழ் விலங்கினங்கள் வாழ்கின்றன. இந்த ஆறானது 2340 மைல் நீளமுடையது. இந்த ஆறானது பிளாஸ்டிக்குகள், மிதக்கும் மற்ற குப்பைகள் எனப் பலவகை குப்பையால் மாசடைந்து காணப்படுகிறது. 

 மேற்கண்ட ஆறுகளைப்போல நம் நாட்டில் மனிதர்களுக்குப் பாதிப்பை ஏற்படுத்தக்கூடிய ஆறுகள் இல்லை. இன்றைய நிலையில் மனிதர்களால்தான் இந்திய ஆறுகளுக்குப் பாதிப்பே தவிர ஆறுகளால் மனிதர்களுக்குப் பாதிப்பு இல்லை. நம் நாட்டில் இருக்கும் வளங்களையும், நதிகளையும் பாதுகாத்தாலே போதும். ஆனால் தண்ணீர் ஓடவேண்டிய ஆறுகளில் பெரும்பாலானவற்றில் புழுதிக்காற்று மட்டுமே வீசுகிறது...இனியாவது இயற்கை வளங்களைப் பாதுகாப்போம். 

http://www.vikatan.com

  • தொடங்கியவர்

 

பெங்களூர் சாலையில் ஆட்டோ ஓட்டி மகிழ்ந்த மைக்கேல் கிளார்க்

ஆஸ்திரேலிய முன்னாள் கிரிக்கெட் வீரர் மைக்கேல் கிளார்க், பெங்களூர் சாலையில் ஆட்டோ ஓட்டி மகிழ்ந்துள்ளார்.

 
பெங்களூர் சாலையில் ஆட்டோ ஓட்டி மகிழ்ந்த மைக்கேல் கிளார்க்
 
பெங்களூர்:

இந்தியா-ஆஸ்திரேலியா இடையிலான 2-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி நாளை பெங்களூர் சின்னச்சாமி மைதானத்தில் தொடங்கவிருக்கிறது. இதற்கான பயிற்சியில் இரு அணி வீரர்களும் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

இந்த போட்டியில் வர்ணனையாளராக செயல்பட்டு வரும் ஆஸ்திரேலிய முன்னாள் கேப்டன் மைக்கேல் கிளார்க், இதற்காக பெங்களூர் வந்துள்ளார்.

D0D3B7AE-5685-450A-93B1-08E21338C915_L_s

பெங்களூர் நகரை சுற்றிப்பார்த்த கிளார்க்குக்கு ஆட்டோ ஓட்ட வேண்டும் என ஆசை பிறந்துள்ளது. இதனைத் தொடர்ந்து அந்த வழியாக சென்ற ஆட்டோ ஒன்றை நிறுத்திய கிளார்க் தனது ஆசையை டிரைவரிடம் தெரிவிக்க, டிரைவரும் மகிழ்ச்சியாக தனது ஆட்டோவைக் கொடுத்துள்ளார்.

ஆட்டோ ஓட்டுவது குறித்து டிரைவரிடம் கேட்டுத் தெரிந்து கொண்ட கிளார்க், சிறிது தூரம் ஆட்டோ ஓட்டி தனது ஆசையைத் தீர்த்துக் கொண்டுள்ளார். தான் ஆட்டோ ஓட்டுவது போன்ற வீடியோவை மைக்கேல் கிளார்க் தன்னுடைய பேஸ்புக் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். இதுவரை 2 லட்சத்திற்கும் அதிகமானோர் இந்த வீடியோவைப் பார்த்து ரசித்துள்ளனர்.
  • தொடங்கியவர்

தூங்காமலே இருந்தாலும் யானைகளின் நினைவாற்றல் நீடிப்பதெப்படி?

யானைகள் எதையும் மறக்காதவை என்பார்கள்.
ஆனால் அவை பெரும்பாலும் தூங்குவதே இல்லை என்கிறார்கள் ஆய்வாளர்கள்.


போட்ஸ்வானா யானைகளை கண்காணித்த ஆய்வாளர்கள், அவை சராசரியாக ஒரு நாளைக்கு இரண்டுமணி நேரமே தூங்குவதாகவும் சிலநாட்கள் அவை தூங்குவதே இல்லை என்பதையும் கண்டறிந்துள்ளனர்.


ஆரோக்கியமான தூக்கமே நினைவாற்றலுக்கு அடிப்படை என்று பல ஆய்வுகள் காட்டியுள்ளன.


ஆனால் அதிகபட்ச நினைவாற்றல் கொண்ட பாலூட்டிகளான யானைகள், மிகக்குறைவான நேரமே தூங்கினாலும் அவற்றின் நினைவாற்றல் பாதிக்கப்படாமல் இருப்பதன் ரகசியம் என்ன?

  • தொடங்கியவர்

 

ஒவ்வொருவருக்கும் வெவ்வேறு மாதிரி தும்மல் ஏற்படுவது ஏன்?

  • தொடங்கியவர்
பேச்சை அளந்து பேசுதல் நல்லது
 
 

article_1488171853-mouth-with-speech-bub“உனக்கு மட்டும் இந்த இரகசியத்தைச் சொல்கின்றேன். தப்பித்தவறி வேறு ஒருவரிடமும் இந்த இரகசியத்தைச் சொல்ல வேண்டாம்” எனச் சொல்லுவார்கள். ஏற்கெனவே, இந்தச் சமாசாரத்தைப் பலபேரிடமும் சொல்லியிருப்பார்கள். இந்த இரகசியம் இப்படியே பலபேரூடாகப் பரவி, வேற்று உருவுடன் பரபரப்பாய்ப் போய்ச் சேருவதை, முதலில் சொன்னவர் கேட்டாலே ஆச்சரியப்பட்டுப் போய்விடுவார். 

ஒருவரது இரகசியத்தை அல்லது பல நபர்கள் சம்பந்தப்பட்ட விடயங்களைப் பரகசியமாக்குவது சிலருக்கு இஷ்டமான பொழுதுபோக்கு.

ஆனால், தங்கள் வீட்டு விடயங்களை, மூடிமறைத்துவிட்டு, மற்றவர் விடயங்களில் கரிசனை காட்டுவதுபோல் நடிப்பது வேடிக்கையானது; ஆனால் விஷமத்தனமானது.

சில அப்பாவிகளிடம் கண்ட விடயங்களையும் பரிமாறினால் அவர்களும் சொல்லக் கூடாத விடயங்களை உடன் மற்றவர்களிடம் பரிமாறிக் கொண்டு விடுவர். 

நாங்கள் பேசுபவர்களின் நடத்தையறிந்து, பேச்சை அளந்து பேசுதல் நல்லது. 

Edited by நவீனன்

  • தொடங்கியவர்

இறைவழிபாட்டில் தவிர்க்க வேண்டிய மலர்கள் எவை? #PhotoStory 

லர் என்றால் நம் நினைவுக்கு வருவது வண்ணம், வாசம், மென்மை, அழகு … இப்படி அடுக்கிக்கொண்டே போகலாம். அதேபோல மலர்கள் என்பது ஆன்மிகத்தில் முக்கியமான அர்ப்பணிப்பாக போற்றப்படுகிறது. மலர்களை உள்ளன்போடு அர்ப்பணித்து அர்ச்சனை செய்வது  இறைவனுக்கு மிகவும் பிரியமானது. இறைவனின் அருளை நமக்குப் பெற்றுத் தரும்.

மலர்கள் 

ஆனால், இப்படி நாம் அர்ப்பணிக்கும் மலர்களில்கூட சில நியதிகள் உள்ளன. சில மலர்கள் கடவுளுக்கு உகந்தவை என்றும் சில மலர்கள் கடவுளுக்கு உகந்தவை அல்ல என்றும் சொல்லப்பட்டு உள்ளது. காலம்காலமாக நம் முன்னோர்களால் கடைப்பிடிக்கப்பட்டது. எந்த மலரை எந்த தெய்வத்துக்கு அர்ப்பணிக்கக்கூடாது என்பதை அறிந்துகொள்வோம்.

விநாயகர் 

துளசி

பொதுவாக விநாயகருக்கு துளசியால் அர்ச்சனை செய்யக்கூடாது என்பார்கள். ஆனால் சதுர்த்தியில் மட்டும் விநாயகருக்கு துளசியால் அர்ச்சனை செய்யும் வழக்கம் உண்டு. 

விஷ்ணு 

ஊமத்தம்பூ


விஷ்ணுவுக்கு ஊமத்தம்பூ, எருக்கம்பூ ஆகியவற்றால் அர்ச்சனை செய்யக்கூடாது. 

சிவன் 

சிவபெருமானை தாழம்பூவினால் அர்ச்சிக்கக் கூடாது. ஆனால் சிவராத்திரி தினத்தில் சிவனாருக்கு தாழம்பூவும் அணிவிப்பது உண்டு. 

அம்பிகை 

அறுகம்புல் 


அம்பிகையை அறுகம்புல்லினால் அர்ச்சிக்கக் கூடாது. 

லட்சுமி 

தும்பை மலர் 

 
லட்சுமிக்குத் தும்பைப் பூவினால் அர்ச்சனை செய்யக்கூடாது. 


துர்கை  

துர்கைக்கு அறுகம்புல்லால் அர்ச்சிக்கக் கூடாது. 


சூரியன் 

வில்வம் 

சூரியனுக்கு வில்வத்தால் அர்ச்சிக்கக் கூடாது. 


சரஸ்வதி 

பவள மலர்

சரஸ்வதிக்கு பவள புஷ்பத்தால் அர்ச்சிக்கக் கூடாது 


பைரவர் 

மல்லிகை மலர்

பைரவருக்கு மல்லிகையால் அர்ச்சிக்கக் கூடாது. 

http://www.vikatan.com

  • தொடங்கியவர்

காரணம் ஆயிரம்: சுற்றும் பம்பரத்தின் ரகசியம்

 

 
top_3138925f.jpg
 
 

பம்பரம் விளையாடி இருக்கிறீர்களா? தரையில் ஜம்மென்று பம்பரம் சுழலும் அழகே தனிதான். முன்பெல்லாம் தச்சர்கள் மரக்கட்டைகளில் பம்பரம் செய்து, வீட்டில் கைவசம் இருக்கும் வண்ணங்களைப் பூசி விற்பார்கள். வாங்கிய பம்பரத்தின் முனையில் ஆணி அடித்து, அதைக் கூர் தீட்டி, பம்பரக் கயிற்றைப் பக்குவப்படுத்திப் பம்பரம் விளையாட நிறையப் பயிற்சி பெற வேண்டும். ஒரே முயற்சியில் பம்பரத்தைச் சுற்ற வைக்கவும் முடியாது.

இன்றைக்குக் கடைகளில் பிளாஸ்டிக்கை உருக்கி, கெட்டிப்படுத்திய வண்ணமயமான பம்பரங்கள் விற்பனைக்குக் கிடைக்கின்றன. அதெல்லாம் சரி, நீண்ட கயிற்றை முழுவதும் சுற்றி விருட்டென்று தரையில் விட்டதும், பானை செய்யும் சக்கரம் போலப் பம்பரம் சுழல்வதைப் பார்த்திருப்பீர்கள். அப்படிப் பம்பரம் சுழலும்போது, அதனோடு சேர்ந்து ஓர் அறிவியலும் சுழல்வதைக் கவனித்திருக்கிறீர்களா?

ஒரு பம்பரத்தை ஆணியோடு தரையில் நிற்க வைக்க முடியுமா? முடியாது அல்லவா? ஆனால், அதே பம்பரம் ஆணியுடன் சுற்றுவது மட்டும் எப்படி? அதுவும் எப்படிப் படுவேகமாகச் சுற்றுகிறது? அதுதான் அறிவியல் ஆச்சரியம்!

காரணம் என்ன?

பம்பரம் விடும்போது அது சுற்றுவதை நன்றாகக் கவனியுங்கள். சுழல்கிற பம்பரத்தின் ஒரு பகுதி உங்களை நோக்கி வரும். இன்னொரு பகுதி உங்களை விட்டு விலகிச் செல்லும். உங்களுக்கு அருகில் உள்ள பம்பரத்தின் பகுதி உங்களை விட்டு விலகிச் செல்கிறது. உங்களுக்கு எதிர்த் திசையில் இருக்கும் பம்பரம் உங்களை நோக்கி வருகிறது.

உங்களுக்கு எதிர்த்திசையில் இருக்கும் பம்பரத்தின் பகுதி கீழ் நோக்கி இயங்குவதையும் உங்கள் பக்கத்துக்கு வரும் பம்பரத்தின் பகுதி மேல் நோக்கி இயங்குவதையும்கூட நீங்கள் உற்றுக் கவனிக்க முடியும். சுழலும் பம்பரம் கிட்டத்தட்ட செங்கோணத்தில் இயங்குகிற மாதிரியான நிலை உருவாகும். செங்கோணத்தில் ஒரு பொருள் ஒரே திசையில் சுழலும்போது அது பக்கவாட்டில் விழுவதற்கான வாய்ப்புகள் குறைவு. (சிறுவர்கள் சைக்கிள் டயரை உருட்டி விளையாடும்போது எந்தப் பிடிமானமும் இல்லாமல் டயர்கள் சுற்றிக்கொண்டே செல்கிறது இல்லையா)

அதுபோல ஒரு இயக்க நிலை பம்பரத்திலும் உருவாகிறது. அதனால் பம்பரம் சாய்வதில்லை. இது ஒரு காரணம். இன்னொரு காரணமும் உள்ளது. பம்பரம் சுழலும்போது அதன் சுற்று வேகம் அதிகமாக இருக்கும். அதாவது நீங்கள் பம்பரக்கயிறு மூலம் கொடுத்த வேகத்தைவிடப் பம்பரத்தின் விளிம்பில் வேகம் ரொம்ப அதிகமாக இருக்கும். நீங்கள் கயிற்றில் கொடுக்கும் வேகத்தோடு, பம்பரம் தன்னுடைய இயக்க வேகத்திலிருந்தே கூடுதலாக வேகத்தையும் எடுத்துக்கொள்கிறது. ஆக இரண்டு வேகங்கள் சேர்ந்தே பம்பரம் சுழல்கிறது.

இரண்டு வேகங்கள் எப்படி உருவாகின்றன என்பதை இன்னொரு உதாரணம் மூலம் உணரலாம். ஒரு நாணயத்தை நீங்கள் தரையின் மீது சுண்டிச் சுழலச் செய்யும்போது, அந்த நாணயம் அதன் இயக்கத்தில் இருந்து தொடர்ந்து சுழல இயக்க வேகத்தைப் பெற்றுக் கொள்கிறது. நாம் நாணயத்துக்குக் கொடுக்கும் விசை அந்த நாணயத்தை ஒரு முறை மட்டுமே சுழலச் செய்யும். மாறாக அந்த நாணயம் தொடர்ந்து சுழலக் காரணம், தன்னுடைய சுழற்சியிலிருந்தே இயக்க வேகத்தைப் பெற்றுக் கொள்வதுதான்.

இந்த உதாரணம் பம்பரத்துக்கும் பொருந்தும். நாம் ஒருமுறை கொடுக்கும் விசையிலிருந்து பலமுறை சுழல்வதற்காக விசையைப் பம்பரம் பெற்றுக் கொள்வதால் அது தொடர்ந்து பலமுறை சுழல்கிறது. வேகமாகச் சுழன்று கொண்டிருப்பதால், பம்பரத்தின் நிலையில் எந்த மாறுதலும் ஏற்படுவதில்லை. எனவே அது தொடர்ந்து சுழல்கிறது. வேகம்தான் பம்பரம் கீழே விழாமல் தொடர்ந்து சுழலக் காரணமா என்றால், வேகமும் ஒரு காரணம்.

இயற்பியலில், நியூட்டனின் முதல் இயக்க விதியைப் புரிந்துகொண்டால் பம்பரம் தொடர்ந்து சுழலும் காரணத்தைத் தெளிவாகத் தெரிந்துகொள்ளலாம். வெளிப்புற விசை ஒன்று தாக்காத வரை இயக்க நிலையில் உள்ள ஒரு பொருள் தொடர்ந்து இயக்க நிலையிலேயே இருக்கும். ஓய்வில் உள்ள ஒரு பொருள் ஓய்வு நிலையிலேயே இருக்கும். இதுதான் நியூட்டனின் முதல் இயக்க விதி.

பம்பரத்தின் சுழற்சி இந்த விதிக்கு அப்படியே பொருந்தும். பம்பரம் வேகமாகச் சுழலும்போது அது வெளிப்புற விசையால் பாதிப்புக்கு உள்ளாவதில்லை. அது தன் இயக்க நிலையிலேயே தொடர்ந்து இருக்கிறது.

நாம் கயிற்றின் மூலமாகப் பம்பரத்துக்குக் கொடுத்த விசை கொஞ்சம் கொஞ்சமாகக் குறைய ஆரம்பிக்கிறது (அதாவது இப்போது வெளிப்புற விசை தாக்குகிறது). எனவே பம்பரம் இயக்கத்துக்கு எடுத்துக்கொள்ளும் விசையும் குறைகிறது. இதனால் கடைசியில்தான் பம்பரம் சாய்கிறது.

மாணவர்களே! இனிப் பம்பரம் விளையாடும்போது இந்த அறிவியலையும் நினைத்துக்கொள்வீர்கள் அல்லவா?

(காரணங்களை அலசுவோம்)

http://tamil.thehindu.com

  • தொடங்கியவர்

‘சச்சின், சச்சின்... இப்போதும் கேட்கிறது’ என்ன தவம் செய்தேனோ!’ - நெகிழும் டெண்டுல்கர்

‘வேட்டையாடு விளையாடு' படத்தில் ஒரு காட்சி. கமலிடம், ‘அவங்க இல்லாத வாழ்க்கை எப்படியிருக்கிறது?' என ஜோதிகா கேட்பார். கமல், கண்ணை மூடிக்கொள்வார். நினைவுகள் சுழலும். ஓய்வுக்குப் பின் சச்சின் எதிர்கொள்ளும் ஒவ்வொரு கேள்வியிலும், அவர் நினைவில் நிழலாடுகிறது, கிரிக்கெட்.

ஓய்வுக்கு பிறகு சச்சின் வாழ்க்கை

புகழ்பெற்ற விளையாட்டு வீரர்கள் சந்திக்கும் மிகப் பெரிய பிரச்னை, ஓய்வுக்குப் பிறகு என்னசெய்வது என்பதே. சச்சின் போன்ற சாதனை வீரர்களின் நிலையோ இன்னும் பரிதாபம். எவ்வளவு பெரிய விளையாட்டு வீரராக இருந்தாலும், காலம் ஒருநாள் அவர்களை ஓய்வை நோக்கித் தள்ளிவிடும். 

சச்சின் ஓய்வுபெற்ற தினத்தில், அவர் மனைவி அஞ்சலி இப்படிச் சொன்னார்... ‘சச்சின் இல்லாத கிரிக்கெட்டை என்னால் நினைத்துப் பார்க்க முடியும். கிரிக்கெட் இல்லாத சச்சினை என்னால் நினைத்துப் பார்க்க முடியாது.’ அதானே... கிரிக்கெட் இல்லாத சச்சின் எப்படி இருக்கிறார்? 

சச்சின் ஓய்வுபெறும்போது, அவர் வயது 38. கிட்டத்தட்ட 24 ஆண்டுகள் கிரிக்கெட் மைதானத்திலேயே கிடந்தவர். ‘இனிமேல் கிரிக்கெட்டே  விளையாடப் போவதில்லை' என்ற நினைப்பே அவரை என்னவோ செய்திருக்கும்தானே! கிரிக்கெட் இல்லாத அந்த வாழ்க்கையையும் அவர் எதிர்கொண்டுதானே ஆக வேண்டும். இதோ ஓய்வுக்குப் பின் கிரிக்கெட் இல்லாத தன் வாழ்க்கை எப்படி இருக்கிறது என, சச்சின் தெரிவித்துள்ளார். LinkedIn-ல் Influencer என்ற பெயரில் இணைந்துள்ள சச்சின், 'My Second Innings' என்ற தலைப்பில் சில விஷயங்களைப் பகிர்ந்துள்ளார். அதன் விவரம். 

‘ஒரு விளையாட்டு வீரர் ஓய்வு பெற்ற பின் செய்ய நிறைய விஷயங்கள் இருக்கின்றன. வெற்றிகள், தோல்விகள், கொண்டாட்டங்கள், அழுகை, மெளனம், சவால் என பல ஆண்டுகள் கடந்துவிட்டன. என் முதல் இன்னிங்ஸ் இப்படி முடிந்துவிட்டது. 2011-ல் இந்தியா உலகக் கோப்பை வென்றபின், என் கனவு நனவாகிவிட்டது. என் முதல் இன்னிங்ஸ் கனவுகளைத் துரத்துவதில் கழிந்துவிட்டது எனில், இரண்டாவது இன்னிங்ஸ் திருப்தியாக உள்ளது. எனக்கு எல்லாமுமாக இருந்த விளையாட்டுக்கும், இந்த சமூகத்துக்கும் என்னால் முடிந்த அளவு திருப்பிக்கொடுக்கும் நேரம் இது. அதனால்தான், கடந்த ஆண்டு ஓய்வுபெற்ற கிரிக்கெட் வீரர்களைவைத்து, அமெரிக்காவில் ஒரு தொடருக்கு ஏற்பாடு செய்தோம்’ என குறிப்பிட்டுள்ளார். 

சச்சின்

ஓய்வு முடிவு குறித்து எழுதுகையில், ‘பொதுவாக, என் காலைப் பொழுது ஜிம்மில்தான் இருக்கும். 24 ஆண்டுகளாக இதைத் தொடர்ந்து வந்தேன். ஆனால், டெல்லியில் 2013-ல் சாம்பியன்ஸ் லீக் போட்டிகள் நடந்த சமயம், திடீரென ஒருநாள் காலை, எழுந்து பயிற்சி செய்வது சிரமமாக இருப்பதாக உணர்ந்தேன். ஒரு சிறு தயக்கம். இதுதான் ஓய்வுக்கான அறிகுறியா? பொறி தட்டியது. 

சுனில் கவாஸ்கர் என் பால்ய கால ஹீரோ. ஓய்வு குறித்த சிந்தனை தனக்கு வந்த விதத்தை ஒருமுறை என்னிடம் இவ்வாறு பகிர்ந்து கொண்டார். ‘மைதானத்தில் இருக்கும்போது லஞ்ச், டீ டைமுக்கு இன்னும் எவ்வளவு நேரம் இருக்கிறது என வாட்ச்சை பார்க்க ஆரம்பித்து விட்டோமோ... அப்போதே நம்  உடல்நிலை ஓய்வுக்குத் தயாராகிவிட்டது என்று அர்த்தம்’ என்றார். இது என் நினைவுக்கு வந்தது. நானும் ஓய்வு குறித்து சிந்திக்கத் தொடங்கிவிட்டேன்’’ என சச்சின் குறிப்பிட்டுள்ளார்.

சச்சினைப் பொறுத்தவரை ஓய்வுக்குப் பிறகு முடங்கிவிடவில்லை. எம்பி-யாக மக்கள் பணியாற்றுகிறார். ஆந்திராவில் புட்டம்ராஜு கண்டிகா என்ற கிராமத்தைத் தத்தெடுத்துள்ளார்.  வீடுகள், பள்ளிகள் கட்டிக்கொடுத்து, கல்வி வசதியை ஏற்படுத்தியிருக்கிறார். கிராமத்துக்கு வந்து குழந்தைகளுடன் உரையாடுகிறார். ஐஎஸ்எல் தொடரில், 'கேரளா பிளாஸ்டர்ஸ்' அணியை வாங்கி, கால்பந்து வளர்ச்சியில் பங்குவகிக்கிறார்.

‘‘ஓய்வுக்குப் பின் என்னால் குடும்பத்துடன் அதிக நேரம் செலவழிக்க முடிகிறது. எனக்குப் பிடித்த விஷயங்களைச் செய்கிறேன். பல இடங்களுக்குப் பயணிக்கிறேன். ஆனால், ஒன்று மட்டும் மாறவில்லை. கிரிக்கெட் வீராராக இருந்தபோது, என்னைக் கண்டதும் 'சச்சின் சச்சின்' எனக் கூச்சலிடுவார்கள். அதே குரல், இப்போதும் எழுகிறது. அதற்கு நான் என்ன தவம் செய்தேனோ?'' என சச்சின் நெகிழ்ந்துள்ளார்.

http://www.vikatan.com

  • தொடங்கியவர்

இயற்கையின் இதயத்தைத் தேடும் மோனாவின் சாகசப் பயணம்! #Moana

மோனா

அது கருப்பின பழங்குடிகள் வசிக்கும் ஒரு தீவு. அந்தத் தீவின் குட்டி இளவரசி மோனா. அவளுக்குக் கடல் மீது இனம்புரியாத ஈர்ப்பு. கடல் அவளை ‘உள்ளே வா’ என்று அழைத்துக்கொண்டிருப்பது போலவே ஒரு பிரமை. கடல் ஏன் அவளை மட்டும் தேர்ந்தெடுத்து அழைக்கிறது? அது என்ன ரகசியத்தை வைத்திருக்கிறது? அதன் பின்னணி என்ன? - இவற்றுக்கான பதில்களை அறிய, பல நூறு வருடங்களுக்கு முன்பு அங்கு நிகழ்ந்த பழைய வரலாற்றை அறிந்துகொள்வது அவசியம்.

கடல் மட்டுமே இருந்த காலகட்டம் அது. நிலம் ஒரு கருணை மிகுந்த பெண் தெய்வமாக தோன்றுகிறது. அதன் பெயர் 'டி பிட்டி'. மனிதர்கள் மகிழ்ச்சியாக வசிப்பதற்காகப் பல தீவுகளை உருவாக்கி அளிக்கிறது. கடலில் உள்ள இதர தீயசக்திகள், அதன் இதயத்தைத் திருடுவதற்காக திட்டமிடுகின்றன. அதன் மூலம் தங்களுக்கும் படைக்கும் சக்தி கிடைக்கும் என்பது அவற்றின் நோக்கம். இந்தத் திருடர்களின் வரிசையில் ஒரு பயில்வானும் இருக்கிறான். அவன் பெயர் 'மவ்வி'. கடவுள் அளித்த சில சக்திகளைப் பெற்றவன். அவனிடம் உள்ள சக்தி வாய்ந்த மீன்கொக்கியின் மூலம் நினைத்த உருவங்களை அவனால் சட்டென மாற்றிக்கொள்ள முடியும். இந்த பயில்வான், பெண் தெய்வத்தின் இதயத்தைத் திருடிவிடுகிறான். வெற்றி மகிழ்ச்சியுடன் திரும்பும்போது, ஒரு நெருப்பு அரக்கன் வழிமறிக்கிறான். இருவருக்குள் நடக்கும் பயங்கரமான சண்டையில்,  இதயம் கடலுக்குள் விழுந்துவிடுகிறது. கூடவே, மவ்வியின் மீன்கொக்கியும். அதற்குப் பிறகு எந்தத் தகவலும் இல்லை.

கடலில் உள்ள தீயசக்திகள், துர்தேவதைகள் எல்லாம் அந்த இதயத்தைத் தேடி கடலுக்குள் அலைந்துகொண்டே இருக்கின்றன. இதனால், ஒவ்வொரு தீவாக அழிந்துகொண்டே வருகிறது. பறிக்கப்பட்ட இதயம் பெண் தெய்வத்தின் உடலில் பொருத்தப்பட்டால்தான், தீவுகள் அதன் இயல்புக்குத் திரும்பும். இல்லையென்றால் கூண்டோடு கைலாசம்தான். இதையெல்லாம் மோனாவின் பாட்டி, கதையாக குழந்தைகளுக்கு சொல்கிறாள். மற்ற குழந்தைகள் நடுங்கும்போது மோனாவுக்கு மட்டும் சந்தோஷமாக இருக்கிறது. 'எக்காரணத்தைக் கொண்டும் கடலின் பகுதியை தாண்டிச் செல்லக் கூடாது. அது ஆபத்து, தீவில் இருப்பதுதான் பாதுகாப்பானது' என எச்சரிக்கிறார் மோனாவின் தந்தை. அவர்தான் அந்தத் தீவின் தலைவர்.

ஒரு நாள்... மோனா கடல் பகுதியில் நின்றுகொண்டிருக்கும்போது நீர் விலகி, கடல் அவளை உள்ளே அழைக்கிறது. அது அவளுடன் விளையாடிவிட்டு, பெண் தெய்வத்தின் இதயத்தை அளிக்கிறது. அதற்குள் மோனாவின் தந்தை பதற்றத்துடன் அங்கே வந்து அழைத்துச் சென்றுவிடுகிறார். இதயம் தவறி கடலுக்குள் விழுகிறது. மோனா அதை ஏக்கத்துடன் பார்த்துக்கொண்டே செல்கிறாள்.

இப்போது... மோனா கொஞ்சம் வளர்ந்துவிட்டாள். தீவின் அடுத்த தலைவியாக அவள் தேர்ந்தெடுக்கப்படுவதற்கான சூழல். 'இந்தத் தீவுக்கு நீ தொடர்ந்து நல்லது செய்ய வேண்டும்' என்று அவளது தந்தை உபதேசிக்கிறார். அப்போது, தீவில் சில தீய மாற்றங்கள் ஏற்படுகின்றன. தேங்காய்கள் அழுகிவிடுகின்றன. பூக்களும் செடிகளும் கருகுகின்றன. கடல் பகுதியில் மீன்கள் வருவதில்லை. தீவு மக்கள் கவலை அடைகிறார்கள். மோனாவின் பாட்டி சொல்கிறார். 'இதுதான் சரியான சமயம் மோனா, கடல் உன்னைதான் தேர்ந்தெடுத்திருக்கிறது. போ, எப்படியாவது இந்த இதயத்தைத் தெய்வத்தின் உடலில் பொருத்திவிடு. இந்தத் தீவையும் உலகத்தையும் காப்பாற்று'

மோனா

தந்தையின் எச்சரிக்கையையும் மீறி கடலுக்குள் ஆபத்தான பயணத்தை மேற்கொள்கிறாள் சிறுமியான மோனா. அவள் முதலில் பயில்வான் மவ்வியை தேடிக் கண்டுபிடிக்க வேண்டும். அவனுடைய உதவியுடன்தான் கடல் பயணத்தை மேற்கொள்ள முடியும். வழியில் உள்ள தீயசக்திகளின் ஆபத்துக்களை முறியடித்து, பெண் தெய்வத்தை அடைய வேண்டும். மோனா மவ்வியைக் கண்டுபிடித்தாளா? அவன் உதவி செய்தானா? கடலில் என்னென்ன ஆபத்துக்கள் ஏற்பட்டன? மோனா பத்திரமாக தன் தீவுக்குத் திரும்பினாளா? இதயத்தைப் பொருத்தினாளா என்பது போன்ற கேள்விகளுக்கான விடையை ஒரு திரில்லர் படத்துக்கு இணையான சாகசக் காட்சிகளோடு சொல்லியிருக்கிறார்கள்.

இதில் வரும் பாத்திரங்கள், சம்பவங்கள் அத்தனையும் அருமை. தற்பெருமை பேசி அடிக்கடி மண்ணைக் கவ்வும் பயில்வான் மவ்வி, மோனாவின் கடற்பயணத்தில் கூடவே வரும் விநோத பழக்கமுள்ள கோழியான ஹெய்ஹெய், வழிமறிக்கும் தேங்காய் மண்டை கடல்கொள்ளையர்கள், மவ்வியின் சக்திவாய்ந்த மீன்கொக்கியை தன் புதையலின் மீது வைத்துப் பாதுகாக்கும் பிரம்மாண்டமான நண்டு, அச்சத்தை ஏற்படுத்தும் நெருப்பு அரக்கன் டீக்கா போன்றவர்களோடு இந்த சாகசப் பயணம் விறுவிறுப்பாகவும் நகைச்சுவையாகவும் செல்கிறது.

மோனாவும் மவ்வியும் ஒருவரையொருவர் கலாய்த்துக்கொள்ளும் காட்சிகள் நகைச்சுவை ரகளை. மவ்வியின் உடலில் வரையப்பட்டிருக்கும் ஓவியங்கள் துள்ளிக் குதிப்பதும், இந்த வரலாறு முழுவதுமே அந்த ஓவியங்களில் இருப்பதும் அருமை. தன் தோல்வியை ஒப்புக்கொண்டு மவ்வி விலகிவிட, தனியாக இருக்கும் மோனாவை இறந்துபோன அவளது பாட்டி, அருவமாக வந்து ஆறுதல்படுத்துவதும், அதைக் கேட்டு மோனா பழைய உற்சாகத்தை அடைவதும் அற்புதமான காட்சிகள்.

வண்ணமயமான இந்த அனிமேஷன் திரைப்படத்தில் ஆங்காங்கே வரும் பாடல்கள் அனைத்தும் இனிமை. மோனாவின் முன்னோர்கள் கடற்பயணம் செய்தவர்கள். இந்த ரகசியத்தைப் பாட்டி சொல்கிறார். கடலுக்குள் உற்சாகமாகப் பாயும்போது அவர்கள் பாடும் 'அவ்வே... அவ்வே...' என்கிற பாடல், அபாரம்.

இளம் வயது மோனாவின் உருவம் மிக அழகாக இருக்கிறது. அவள் பெரியவளாகும்போது இன்னமும் அழகானவளாக மாறுகிறாள். அமெரிக்கத் திரைப்படங்களில் பொதுவாக வெள்ளையினத்தைச் சார்ந்தவர்களே பிரதானமான பாத்திரங்களில் சித்தரிக்கப்படுவார்கள். கருப்பினத்தைச் சார்ந்த சிறுமி ஒருத்தி நாயகியாகச் சித்தரிக்கப்படுவது, காலமாற்றத்தில் உருவாகும் நல்ல அடையாளம். அதுபோல, ஆண்களே நாயகர்களாக உருவாக்கப்படும் வழக்கத்தில் இருந்து விலகி, ஒரு சிறுமியின் சாகசத்தை சொல்வதும் சிறப்பே. 'நான் ஆண்' என்கிற பெருமையுடன் மோனாவை அவ்வப்போது கிண்டலடிக்கும் மவ்வியின் பிரம்மாண்டமான உருவம் சாதிக்க முடியாததை, சிறுமியான மோனா சாதிக்கிறாள். பல சமயங்களில் மவ்வியையே அவள்தான் காப்பாற்றுகிறாள்.

வால்ட் டிஸ்னி ஸ்டூடியோவின் தயாரிப்பில் முப்பரிமாணத்தில் உருவான இந்தத் திரைப்படம், வரைகலைநுட்பத்தின் உச்சங்களோடு அற்புதமாக உருவாக்கப்பட்டிருக்கிறது. மோனாவுக்காக கடல் வழிவிடும் காட்சி, தீவின் வண்ணமயமான தோற்றங்கள், கடல் பயணத்தில் ஏற்படும் போராட்டங்கள், மவ்வியின் உடலில் குதிக்கும் ஓவியங்கள் போன்றவை அற்புதமாகப் படைக்கப்பட்டிருக்கின்றன.

பெண் தெய்வத்தின் இதயம் என்பது, இயற்கையின் குறியீடு. இயற்கையைச் சுரண்டிக்கொண்டே இருக்கும் மனித குலம், தனக்கான அழி்வையும் உண்டாக்கிக்கொள்வதை உணரவில்லை. இயற்கையோடு இயைந்த வாழ்வே மகிழ்ச்சிகரமானது, இயற்கைக்கு எதிராகச் செயல்படுவது ஆபத்தானது என்கிற செய்தியை இந்தத் திரைப்படம் சொல்கிறது. சிறந்த அனிமேஷன் திரைப்படத்துக்காக ஆஸ்கர் நாமினேஷன் பட்டியலில் இருந்த 'மோனா' விருதை வெல்லாவிட்டாலும், பார்வையாளர்களின் இதயங்களை வென்றுவிட்டாள்! பார்க்கத் தவற விட்டுவிடக் கூடாத பட்டியலில் மோனாவுக்கு நிச்சயம் இடம் உண்டு.
 

http://www.vikatan.com

  • தொடங்கியவர்

 

நாய்க்குட்டியும் ஆந்தையும் ஆத்மநண்பர்களான கதை

  • தொடங்கியவர்

உலகை திரும்பிப் பார்க்க வைத்த 4 இந்தியப் புகைப்படங்கள்

 2017-ம் ஆண்டுக்கான சோனி உலக புகைப்பட விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. அதில் முதல் பத்து சிறந்த புகைப்படங்களில் நான்கு இந்தியப் புகைப்படக்காரர்களின் புகைப்படங்கள் இடம்பெற்றுள்ளன.

2017 Sony World Photography Awards
 

மேலும் சிறந்த 50 புகைப்படங்களில் 11 இந்திய புகைப்படங்கள் இடம்பெற்றுள்ளன. மொத்தம் 183 நாடுகளில் இருந்து 2,27,000 புகைப்படங்கள் இந்த போட்டிக்கு அனுப்பப்பட்டுள்ளன. 

http://www.vikatan.com

  • தொடங்கியவர்

 

இரத்தினக்கற்கள் அதிகமுள்ள நாடு அதனால் பயனடைகிறதா?

நிலத்தில் புதைந்துள்ள கனிமங்கள் மற்றும் உலோகங்களில் பெரும்பாலானவை ஏற்கனவே கண்டுபிடிக்கப்பட்டுவிட்டதால், சுரங்கத்தொழில் ஆச்சரியங்கள் நிகழ வாய்ப்பில்லை என்றே பரவலாக பார்க்கப்படுகிறது.


ஆனால் rubies எனப்படும் சிகப்பு ரத்தினக்கற்களைப் பொருத்தவரை அது பொருந்தாது.


எட்டு ஆண்டுகளுக்கு முன் உலகின் பாதியளவு சிகப்புக்கல் படிமங்கள் மொசாம்பிக் நாட்டில் கண்டுபிடிக்கப்பட்டது.


அந்த சிகப்புக்கல் சுரங்கத்துறையின் தற்போதைய நிலவரம் என்ன என்பதை நேரில் ஆராய்கிறது பிபிசி.

  • தொடங்கியவர்

அலெக்ஸாண்டர் கிரகாம் பெல் பிறந்த தினம் (மார்ச்.3, 1847)

அறிவியலாளரும், பொறியாளருமான அலெக்ஸாண்டர் கிரகாம் பெல் 1847-ஆம் ஆண்டும் மார்ச் மாதம் இதே தேதியில் ஸ்காட்லாந்தில் எடின்பெர்க்கில் பிறந்தார். இவருக்கு ல்வில்லி ஜேம்ஸ் பெல் (1845–70) , எட்வர்டு ஜேம்ஸ் பெல்(1848–67) என்ற இரண்டு சகோதரர்கள். இவர்கள் இருவரும் காசநோயால் மரணமடைந்து விட்டனர். இவருடைய தந்தை அலெக்சாண்டர் மெல்வில்லி பெல் ஒரு பேராசிரியர். தாயார் எலிசா கிரேஸ் ஆவார். எட்டு வயதிலேயே கிரகாம் நன்றாகப் பியானோ வாசிப்பதில் வல்லவராகத் திகழ்ந்தார். பத்து வயதானபோது அவருக்குப் பள்ளி செல்ல நாட்டமில்லாமல் போனது.

 
 
 
 
அலெக்ஸாண்டர் கிரகாம் பெல் பிறந்த தினம் (மார்ச்.3, 1847)
 
அறிவியலாளரும், பொறியாளருமான அலெக்ஸாண்டர் கிரகாம் பெல் 1847-ஆம் ஆண்டும் மார்ச் மாதம் இதே தேதியில் ஸ்காட்லாந்தில் எடின்பெர்க்கில் பிறந்தார். இவருக்கு ல்வில்லி ஜேம்ஸ் பெல் (1845–70) , எட்வர்டு ஜேம்ஸ் பெல்(1848–67) என்ற இரண்டு சகோதரர்கள். இவர்கள் இருவரும் காசநோயால் மரணமடைந்து விட்டனர்.

இவருடைய தந்தை அலெக்சாண்டர் மெல்வில்லி பெல் ஒரு பேராசிரியர். தாயார் எலிசா கிரேஸ் ஆவார். எட்டு வயதிலேயே கிரகாம் நன்றாகப் பியானோ வாசிப்பதில் வல்லவராகத் திகழ்ந்தார். பத்து வயதானபோது அவருக்குப் பள்ளி செல்ல நாட்டமில்லாமல் போனது.

இலத்தீன், கிரேக்க மொழிகளைப் படிப்பதைவிட பியானோ வாசிப்பதிலும், ஒலி அலைகளைப் பற்றி ஆராய்ச்சி செய்வதிலும் தனது நேரத்தைப் போக்கினார். பேச்சை மின் ஒலியாக மாற்றும் ஆராய்ச்சியில் ஈடுபட்டிருந்தபோது வந்த காது கேளாத பெண்ணை விரும்பி அவளையே திருமணம் செய்துகொண்டார்.

கிரகாம் பெல்லின் குடும்பம் கனடாவிற்குக் குடி பெயர்ந்தது. போஸ்டன் நகரத்தில் வசித்தபோது காது கேளாதோர் பள்ளி ஆசிரியர்களுக்குப் பயிற்சி தருவதற்காக பெல் ஒரு பள்ளிக்கூடத்தை ஏற்படுத்தினார். அதில் பேச்சுமுறை பற்றிய அடிப்படைகளைக் கற்பித்தார். அவரது ஆய்வுமுறை, அறிவாற்றல் எங்கும் பரவியதால், பாஸ்டன் பலகலைக்கழகம் பேச்சு அங்கவியல் பேராசிரியராக இவரை பணியில் அமர்த்தியது.

பியானோவில் ஒலி எழுப்பி மின்சாரம் மூலமாக அந்த இசையை ஒரு குறிப்பிட்ட தொலைவுக்கு அணுப்பினார் பெல். தந்தி முறையில் வெறும் ஒலிகள் மட்டுமே அனுப்பப்பட்டன. பேச்சுகளையும் அந்த முறையில் அனுப்பலாமே என்று கிரகாமுக்கு 18 வயதிலேயே தோன்றியது. அதனால் அந்த முயற்சிகளில் ஈடுபடார்.

அக்காலத்தில் மனிதனின் பேச்சொலிகளை ஓரிடத்திலிருந்து மற்றோரிடத்திற்கு தந்திகள் மூலம் அனுப்பப்பட்டு வந்தது. அந்த முறைகள் இவருடைய ஆராய்ச்சிக்கு மிகவும் உதவியாயிருந்தன. 1875 இல் இந்த முயற்சிகள் ஓரளவு வெற்றி பெற்றன. முதலில் தெளிவில்லாத பேச்சொலிகளை அனுப்ப முடிந்தது.

1876 ஆம் ஆண்டு உலகின் முதல் தொலைபேசி பேசியது. பெல் அவருடைய உதவியாளர் வாட்சன் என்பவரிடம் பேசினார். அவர் முதலில் தொலைபேசியில் பேசிய சொற்றொடர் "வாட்சன் இங்கே வாருங்கள். உங்களைக் காண வேண்டும்." என்பதுதான். இந்த சொற்களை வாட்சனால் தெளிவாகக் கேட்க முடிந்தது.

ஆனால் பெல் கண்டுபிடித்த தொலைபேசியைப் பற்றி யாரும் அக்கறை கொள்ளவில்லை. பிலெடெல்பியாவில் நடைபெற்ற ஒரு கண்காட்சியில் தனது தொலைபேசியைப் பார்வைக்கு வைத்தார். அங்கு வந்த பிரேசில் நாட்டு மன்னர் அதை வியப்போடு எடுத்துப் பயன்படுத்திய பின்னர் தான் தொலைபேசியின் பெருமை எங்கும் பரவியது.

அமெரிக்காவில் உள்ள தனது மாமனாரின் உதவியுடன் 1876 மார்ச்சு 7 ஆம் தேதி தொலைபேசிக்கான காப்புரிமையைப் பெற்றார். 1877 இல் தன் உதவியாளர் வாட்சனுடன் சேர்ந்து "பெல் தொலைபேசி கம்பனி" என்ற பெயரில் தொலைபேசி நிறுவனம் ஒன்றை நிறுவினார்.

தொலைபேசியைக் கண்டுபிடித்ததற்காக பிரெஞ்சு அரசு அவருக்கு வழங்கிய 50,000 பிராங்க் பரிசுத் தொகையைக் கொண்டு வோல்டா ஆய்வுச் சாலை  என்ற பெயரில் ஓர் அமைப்பை நிறுவினார்.

பெல் தொலைபேசியுடன் மட்டும் நின்றுவிடவில்லை. அரசு நிறுவனத்தின் மூலம் பொட்டோ போன், ஆடியோ மீட்டர்[, மெட்டல் டிடக்டர், இன்டக்‌ஷன் பேலன்ஸ், வாக்ஸ் ரிகார்டிங் சிலிண்டர், கிராமபோன் போன்ற கருவிகளைக் கண்டு பிடித்தார். பெல் விமானம் கண்டுபிடிக்கும் முயற்சியிலும் ஈடுபட்டார். ஆனால் அது அவருக்கு வெற்றி தரவில்லை.

http://www.maalaimalar.com

  • தொடங்கியவர்

வலைபாயுதே

 

104p1.jpg

twitter.com/Thiru_navu: யாரையாவது நம்பித்தான் ஆகவேண்டியிருக்கிறது. ஆகவேதான் நம்பிக்கைத் துரோகங்கள் உயிர்ப்போடு இருக்கின்றன.

twitter.com/Kozhiyaar: `மாற்றம் ஒன்றே மாறாதது' என்பது எதுக்கு சரியா இருக்கோ இல்லையோ, ஆறு மாசத்துக்கு ஒரு தடவை பேன்ட் சைஸுக்கு சரியா இருக்கு.

twitter.com/mymindvoice: என் வரையில், பிரியாணியால் தீர்க்க முடியாத சோகமென்று எதுவும் இல்லை.#வொய்சோறுஇஸ்காட்மொமன்ட்?

twitter.com/RealMan_Naan: கடைக்காரன் extra-வா கொடுத்த 100 ரூபாயை அவனுக்குத் திருப்பிக் கொடுக்கிற அந்த 10 Sec-க்குள்ள, நமக்குள் நடப்பது கடவுளுக்கும் சாத்தானுக்குமான போராட்டம்.

twitter.com/Russetlane: ஒருத்தர் ஆள் இல்லாத கடையில டீ ஆத்துறார். இன்னொருத்தர் ஆள் இல்லாத ரோட்டுல பெல் அடிக்கிறார். புதுசா ஒருத்தர் ஆட்டோ கண்ணாடியைத் திருப்பி ஸ்டார்ட் பண்றார்.

104p2.jpg

twitter.com/Aathithamilan: `கோயிலை இடித்துவிட்டு, பள்ளிக்கூடம் அமைப்போம்' என்றார்கள். ஆனால், உண்டியலை அகற்ற மறந்துவிட்டார்கள்.

twitter.com/tparavai: அ.தி.மு.க-வினர் செய்யும் ஏமாற்று வேலைகளுள் முதன்மையானது, ஜெயா டிவி-யை `HD'னு ஸ்டிக்கர் ஒட்டி ஒளிபரப்புவதுதான்.

twitter.com/_thara_: Hydro carbon கூட்டத்தில்... மீத்தேனும் ஈத்தேனும் ஒருவரை ஒருவர் பார்த்துக்கொண்டும், பேசிக்கொண்டும், சிரித்துக்கொண்டும்...

twitter.com/urs_priya : நினைத்த பொழுதில் விக்கல் வருமானால், கடவுள் எல்லாம் என்ன செய்வார்... பாவம்;-)

twitter.com/i_Soruba: தொலையச் சொல்லும் இரவு ஓர் இறைவன். தேட வாய்க்கும் இரவு ஒரு சாத்தான்.

twitter.com/rmdkarthi: நாமதான் ஸ்கூலுக்குப் போக ரொம்ப அழுதோம்னு நினைக்கிறேன். இப்போ குழந்தைகள் எல்லாம் ஜாலியா ஸ்கூலுக்குப் போறாப்ல தோணுது.

104p3.jpg

facebook.com/shanmugam: இத்தனை பிரச்னைகளுக்கு நடுவிலும் சாந்தனு ஆடும் பாடலில் வரும் சொல் `டுமுக்காத்தானா' இல்லை `டுபுக்காத்தானா' என்ற அதிமுக்கியக் கேள்விகளையும் மனம் எழுப்பியபடியே இருக்கிறது. #தேடல்

facebook.com/vel.kumar.9: என்ன பெரிய லா லா லேண்டு! எங்க விக்ரமன்லாம் படம் பூரா லா... லா... லா... போட்டவருடா.

facebook.com/yuvathamizh: `எம்.ஜி.ஆரோட அம்மா தீபாவா?'ன்னு ஒருத்தன் டவுட் கேட்குறான். கட்சி பேரை இவ்வளவு பின்நவீனத்துவமா வெச்சா இப்படித்தான் குழப்பம் வரும் :(

facebook.com/ Shyam Sundar: எல்லாவற்றையும் பார்க்கும்போது மோடிக்கே சிறந்த சாமியார் ஆகும் தகுதி இருப்பதாகத் தெரிகிறது.

http://www.vikatan.com

  • தொடங்கியவர்

 

தனியார் ராக்கெட்டில் நிலவுக்கு செல்லப்போகு இருவர் யார்?

தனியார் நிறுவனமான ஸ்பேஸ்எக்ஸ்இன் ராக்கெட்டில் நிலவுக்குசெல்ல இருவர் பணம் கட்டியுள்ளனர்.

  • தொடங்கியவர்

அறிவியலில் சாதித்த பெண்களுக்கு நியூயார்க் பெண்ணின் போஸ்டர் பூங்கொத்து

பெண்

அறிவியலில் சாதித்த பெண்களின் பெயர்களைக் கேட்டால் மேரி க்யூரிக்குப் பிறகு ரொம்பவே யோசிப்போம். சிலருக்கு எவ்வளவு நேரம் யோசித்தாலும் எந்தப் பெயரும் நினைவுக்கு வராது. இந்த நிலைமையை உடைத்தெரிய பெண் விஞ்ஞானிகளைப் பற்றி மக்களுக்கு தெரியப்படுத்தும் சூப்பரான முயற்சியை எடுத்து வருகிறார் அமன்டா பிங்க்போதிபக்கியா. நியூயார்க் நகரைச் சேர்ந்த டிசைனரான இவர், அறிவியல், தொழில்நுட்பம், பொறியியல், கணிதம் ஆகிய துறைகளில் நோபல் பரிசு பெற்ற பதினாறு பெண்களுக்கும், இந்தத் துறைகளில் சாதனைகள் செய்த வேறு பதினாறு பெண்களுக்கும் போஸ்டர்களை வடிவமைத்து வருகிறார்.

“பியான்ட் கியூரி” என்று அழைக்கப்படும் இந்தத் திட்டத்தின் முன்னோட்டமாக சில போஸ்டர்களும் வெளியிடப்பட்டுள்ளன. முன்னோட்டப் படங்களே பலரின் புருவங்களை உயர வைத்து, பாராட்டுகளைக் குவித்து வருகின்றன. சீன விஞ்ஞானி சீன் ஷிங் வூ, அயர்லாந்து நாட்டு அறுவைசிகிச்சை நிபுணர் மார்கரெட் ஆன் ஆகியோரும் இந்தப் பட்டியலில் அடங்குவர். அறிவியல் பெண்களின் முகத்துடன் அவர்களின் சாதனையை இணைக்கும் வகையில் ஒரு கொலாஜ் முறையில் அட்டகாசமான போஸ்டர்களைத் தயார் செய்துவருகிறார் அமன்டா.

பெண்கள்

பெண் சாதனையாளர்களில் அதுவும் குறிப்பிட்டத் துறைகளுக்கு மட்டும் ஏன்?

இந்தியா மட்டுமல்ல, வளர்ந்த நாடுகள் உட்பட உலகில் பல நாடுகளில் ஆண், பெண் சமத்துவம் முழுமை அடையவில்லை. இன்றைக்கே இந்த நிலைமை என்றால் ஐம்பது, நூறு ஆண்டுகளுக்கு முன், நிலையை எண்ணிப் பாருங்கள். சென்ற நூற்றாண்டிலிருந்துதான் பெண் கல்விக்கு முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது. தாமதமாக கிடைத்தாலும் கல்வி தந்த வெளிச்சத்தில் பெண்கள் சாதனை செய்திருக்கிறார்கள் என்றால் அவற்றை தலைமேல் வைத்துக்கொண்டாட வேண்டிய ஒன்றுதானே. அவர்களின் வெற்றியை மனப்பூர்வமாக வாழ்த்துவதோடு எந்தத் தயக்கமும் இன்றி பாராட்ட வேண்டியது அவசியம்.

கடந்த 2012-ம் ஆண்டு முதல் அறிவியல், தொழில்நுட்பம், பொறியியல், கணிதம் ஆகிய துறைகளில் பட்டம் பெற்று வந்தவர்களில் ஐம்பது விழுக்காடு பெண்கள்தான். ஆனால் இந்தக் கால இடைவெளியில் பெண்களில் சொற்பமான எண்ணிக்கையில்தான் நோபல் பரிசு வழங்கப்பட்டுள்ளது. அது ஏன் என்று கேள்வி எழுப்புகிறார் அமன்டா. மேலும், இந்தத் துறைகளில் பெண்களுக்கு எதிராக பாரபட்சம் பார்க்கப்படுவதோடு, பெரும் பதவிகளுக்கு வர விடாமல் பெண்கள் புறக்கணிக்கப்படுகின்றனர். அதன் பிறகு அவர்கள் காணாமல் போய் விடுகின்றனர் என ஆதங்கத்தை வெளிப்படுத்துகிறார் அமன்டா.

அறிவியல், தொழில்நுட்பம், கணிதம், பொறியியல் ஆகிய நான்கு துறைகளில் ஈடுப்பட்டுள்ள பெண்களுக்கு ஆதரவு தர வேண்டும். ஏனெனில், மூன்றில் ஒரு பெண் இந்தத் துறைகளில் பாலியல் தொந்தரவுக்கு ஆளாகிறார். இவற்றை எல்லாம் ஒரு பெண் கடந்து, சாதனை செய்வது என்பது மிகுந்த கடினமான செயல்மட்டுமல்ல, கடும் வலியை தரும் பயணமும்கூட.  STEM – Science, Technology, Engineering, Mathematics என்று அழைக்கப்படும் இந்தத் துறைகளில் சாதனை செய்ய மேலும் பெண்களை இந்த பியான்ட் கியூரி திட்டம் நிச்சயம் ஊக்குவிக்கும். இதுபோன்ற தொடர்ந்து பல்வேறு முயற்சிகளை மேற்கொள்வேன் என்றும் நம்பிக்கையோடு கூறுகிறார் அமன்டா.

அடுத்தடுத்த தலைமுறைக்கும் அறிவைக் கொண்டுச் சேர்த்த பெண்களுக்குப் பெருமைச் சேர்க்கும் அமன்டாவின் பணி சிறக்கட்டும்

http://www.vikatan.com

  • தொடங்கியவர்

வாட்ஸ் அப் கலக்கல்: பாட்டு ஓடுனா மிக்ஸி ஓடும்

 

 
title_3139643f.jpg
 
 
 

1_3139650a.jpg

2_3139649a.jpg

3_3139648a.jpg

4_3139647a.jpg

5_3139646a.jpg

6_3139645a.jpg

7_3139644a.jpg

 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.