Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இளமை புதுமை பல்சுவை

Featured Replies

  • தொடங்கியவர்

பென்குயின் எப்படி புரபோஸ் செய்யும் தெரியுமா?

  • Replies 11.3k
  • Views 1.5m
  • Created
  • Last Reply
  • தொடங்கியவர்

எடிசனுக்கு அவர் தாய் கற்றுக் கொடுத்த அந்த ஒரு குணம்!

எடிசன்


இரவை ஒளியால் நிரப்பிய அற்புத மனிதர் தாமஸ் ஆல்வா எடிசன். அறிவியல் மீதான அதீத ஆர்வமும் விடா முயற்சியுமே உலகமே கொண்டாடும் மனிதராக அவரை மாற்றியது. அவரின் வாழ்க்கையை பலரும் முன்மாதிரியாக கொண்டு வாழ்ந்துவருகின்றனர். அப்படியான அவரின் வாழ்வில் நிகழ்ந்த ஆச்சர்யமான சம்பவம் ஒன்று தெரியுமா?

எடிசன் பள்ளியில் படித்துக்கொண்டிருந்த நாளில், அவரிடம் ஒரு கடிதத்தைக் கொடுத்திருந்தார் ஆசிரியர். அந்தக் கடிதத்தை அம்மா மட்டுமே படிக்கவேண்டும் என்று சொல்லியிருந்தார் அவரின் ஆசிரியர். அதன்படி அம்மாவிடம் கொடுத்தார். அந்தக் கடிதத்தைப் படித்த எடிசனின் அம்மாவின் கண்களிலிருந்து நீர் வழிந்தது. கடிதத்தில் என்ன எழுதியிருக்கிறது என எடிசன் கேட்டபோது, "உங்கள் மகன் மிகவும் புத்திசாலி. அவரின் அறிவுக்கு ஏற்றளவில் இந்தப் பள்ளி இல்லை. அதனால் எடிசனை வீட்டிலிருந்தே படிக்க வையுங்கள்" என்று அம்மா உரக்க படித்ததைக் கேட்டு எடிசன் உற்சாகமாக சத்தமிட்டார்.

ஆண்டுகள் படு வேகமாக கடந்தன. தாமஸ் ஆல்வா எடிசன் புதிய புதிய கண்டுபிடிப்புகள் மூலம் உலகமே போற்றும் மகத்தான விஞ்ஞானியாக திகழ்ந்து வந்தார். பாராட்டுகள் குவிந்த வண்ணம் இருந்தன. ஒருநாள் எடிசனின் அம்மாவும் இறந்துபோனார். அதன்பின் சில நாட்கள் கழித்து எடிசன் வேறு ஏதோ தேடுகையில், சின்ன வயதில் ஆசிரியர் கொடுத்தனுப்பிய கடிதம் கிடைத்தது. தன்னைப் பற்றி உயர்வாக எழுதிய கடிதத்தை மீண்டும் படிக்க ஆசைப்பட்டு படித்தார். ஆனால் கடிதத்தில் இருந்த வரிகள் அம்மா வாசித்தவை அல்ல.

4e6a18d67061b4bf54b6f0b3e388b0e4_09212.j

"உங்களின் மகன் மனநிலை சரியில்லை எனக் கருதுகிறோம். அவனை எங்கள் பள்ளியில் படிக்க தொடர அனுமதிக்க முடியாது"

இந்தக் கடிதத்தைப் படித்ததும் எடிசன் உறைந்துவிட்டார். இந்த விஷயம் தனது சின்ன வயதில் தெரிந்திருந்தால் எந்தளவுக்கு மனதளவில் முடங்கிபோயிருப்போம் என்பதை ஒரு நிமிடம் நினைத்து தன்னை உதறிக்கொண்டார். அந்த அதிர்ச்சியிலிருந்து மீள்வதே பெரிய விஷயமாக இருந்தது. தன் உழைப்பையும் முயற்சியையும் பாராட்டி ஊக்கமளித்த அம்மாவை மனதார நன்றியோடு நினைத்துக்கொண்டார்.

ஒருவர் தன்னைப் பற்றிய விஷயங்கள் முழுவதையும் தெரிந்து கொள்ளவேண்டும். அப்போதே தனது பழக்க வழக்கங்களில் ஓர் ஒழுங்கைக் கொண்டு வரமுடியும் என்பார்கள். ஆனால் ஒருவருக்கு தன்னைப் பற்றிய சில விஷயங்கள் தெரியகூடாதவை என்பதும் இருக்கிறது. அதுவும் அவரின் வாழ்க்கைக்கு மிகவும் உதவியாக இருக்கும். இதைத்தான் எடிசனுக்கு அவரது தாய் மறைமுகமாக கற்றுக்கொடுத்திருக்கிறார்.

எடிசன்

அந்தக் கடிதத்தை எடிசன் படிக்கவே கூடாது என அவரின் தாய் நினைத்திருந்தால் அதை தீயில் எரித்திருப்பார். ஆனால் அதை பின்வரும் காலத்தில் எடிசன் படிப்பது சரிதான் என நினைத்ததாலே அதைப் பத்திரப் படுத்தி வைத்திருக்கக்கூடும். குழந்தை வளர்ப்பின் ஒவ்வோர் அடியையும் மிகவும் கவனத்துடன் நகர்த்த வேண்டும் என்பதற்கு இது ஆகச் சிறந்த உதாரணம்.

குழந்தைகள் வளர வளர பல புதிய விஷயங்களைத் தெரிந்துகொள்கின்றனர். அவற்றைக்கொண்டு கூடுதலாக யோசிக்க ஆரம்பிக்கின்றனர். அப்போது எதிர்கொள்பவற்றை புதிய கோணத்தில் பார்க்கின்றனர். அதேபோல பழைய விஷயங்களை முதிர்ச்சியோடு அசைப்போடுகின்றனர். அதனால் பெற்றோர் தங்கள் பொறுப்புகளை கூடுதல் கவனத்துடன் செய்ய வேண்டியிருக்கிறது.

எடிசன் தன் அம்மாவை நெகிழ்ச்சியோடு நினைவுக்கூர்வதுபோல தங்கள் பிள்ளைகளும் நினைவு கொள்ளவேண்டும் என்பதே ஒவ்வொரு பெற்றோரின் எண்ணமாக இருக்கும்.

 

 

http://www.vikatan.com

  • தொடங்கியவர்
வரலாற்றில் இன்று: மார்ச் 17
 

article_1426566934-WorldCup.jpg624: பத்ர் சமரில், முஹம்மது நபிகள் நாயகம் தலைமையிலான மதீனா முஸ்லிம்கள், மக்காவின் குராயிஸ்களை தோற்கடித்தனர்.

1805: இத்தாலிய குடியரசு, நெப்போலியனை மன்னனாகக் கொண்டு இத்தாலிய ராச்சியமாகியது.

1845: இறப்பர் பாண்ட்டிற்கு காப்புரிமை வழங்கப்பட்டது.

1891: ஜிப்ரால்டர் வளைகுடாவில் இரு கப்பல்கள் மோதிக்கொண்டதால் 562 பேர் பலி.

1957: பிலிப்பைன்ஸில் இடம்பெற்ற விமான விபத்தில் பிலிப்பைன்ஸ் ஜனாதிபதி ரோமன் மக்சேசே  உட்பட 25 பேர் பலி.

1959: திபெத்திலிருந்து 14 ஆவது தலாய் லாமா டென்ஸின் கியாட்ஸோ இந்தியாவுக்கு தப்பிச் சென்றார்.

1969: இத்தாலியின் முதல் பெண் பிரதமராக கோல்ட்டா மேயர் பதவியேற்றார்.

1969: வியட்நாம் யுத்தத்தில் 'மை லாய் படுகொலைகள்' தொடர்பான தகவல்களை மறைத்தமைக்காக அமெரிக்க இராணுவத்தின் 14 உத்தியோகஸ்தர்களுக்கு எதிராக குற்றம் சுமத்தப்பட்டது.

1988: கம்போடிய விமான விபத்தில் 143 பேர் பலி.

1992: ஆர்ஜென்டீனாவில் இஸ்ரேலிய தூதரகம் மீது கார் குண்டுத் தாக்குதல் 242 பேர் பலி.

1996: உலகக்கிண்ண கிரிக்கெட் தொடரில் இலங்கை அணி  சம்பியனாகியது

2000: உகண்டாவில் மத அமைப்பொன்றின் தூண்டுதலில் சுமார் 800 பேர் இறந்தனர். இவர்கள் கொல்லப்பட்டிருக்கலாம் அல்லது தற்கொலை செய்துகொண்டிருக்கலாம் என சபொலிஸார் சந்தேகம் தெரிவித்தனர்.

2003: பிரித்தானிய வெளிவிவகார மற்றும் பொதுநலவாய விவகார அமைச்சர் ரொபின் குக், ஈராக் மீதான படையெடுப்பை அடுத்து ராஜினாமா செய்தார்.

.tamilmirror.lk/

Edited by நவீனன்

  • தொடங்கியவர்

சாய்ஸே வேண்டாம்.. வெற்றிக்கு எப்பவும் ஒரே பக்கம்தான்! #MorningMotivation

Morning motivation

"எதை மனித மனம் ஆழமாக சிந்தித்து நம்புகிறதோ, அதை ஒரு நாள் சாதிக்கும்" அமெரிக்காவின் புகழ்பெற்ற எழுத்தாளர் நெப்போலியன் ஹில் சொன்ன நம்பிக்கை வார்த்தைகள் இவை. நன்றாக யோசித்து பார்த்தால் அவர் சொன்னதில் 100% உண்மை இருப்பதைப் புரிந்து கொள்ள முடியும். நம் எல்லா செயல்களும் முதலில் எண்ணங்களாக தோன்றியே செயல் வடிவம் பெறுகின்றன. எண்ணங்கள் இல்லாமல் செயல்கள் இல்லை, செயல்கள் இல்லாமல் நாமும் இல்லை தானே!?

ஒரு செயலை வெற்றிகரமாக செய்ய ஆசைப்படுகிறோம். அதற்காக முதலில் என்ன செய்வோம் அதற்கேற்ற மனநிலையை உருவாக்கிக் கொள்வோம் அல்லவா? எண்ணங்கள்தான் உங்களை உற்சாகமாக வைத்துக் கொள்ளும். குழந்தையின் பிறந்தநாள், திருமண நாள், அலுவலகத்தில் பிரமோஷன் போன்ற தருணங்களில் உங்கள் மனநிலை எப்படி இருக்கும், முகத்தை கோபமாகவா வைத்திருப்பீர்கள்? அதே தான் அந்த நல்ல விஷயங்களை உள்ளுக்குள் வைத்திருக்கும் மனநிலை தானே நம்மை உற்சாகமாக வைத்திருக்கும். அந்த உற்சாகத்தை யாரும் நமக்கு தந்து விடுவதில்லை.

நாமாகத்தான் உருவாக்கிக் கொள்கிறோம். ஒவ்வொரு நாளையும் நல்ல மனநிலையோடு துவங்குங்கள். 

ஒரு குட்டிக்கதையை பார்ப்போமா..

"வருடம் மும்மாரி பொழியும் மழை, செழிப்பான விவசாயம், வணிகத்தில் முதலிடம் என பூம்பொழில் நாட்டில் இல்லாத வளங்களே இல்லை எனச் சொல்லலாம். இந்த எல்லா வளங்களையும் தன் மக்களுக்கு பகிர்ந்தளிக்க அந்த மன்னன் என்றும் தயங்கியதே இல்லை. தன் நாட்டு மக்கள் பயன்படுத்தியது போக எஞ்சியவை மட்டுமே பிறநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டன. ஆனால் வணிகத்தை மட்டுமே நம்பியிருந்த நாடுகளின் மன்னர்களின் கண்களில் சிக்கிக் கொண்டது பூம்பொழில் நாடு. எதிரி நாடுகளின் மன்னர்கள் ரகசியமாக கூடிப் பேசினார்கள். பூம்பொழில் நாட்டின் மீது போர் தொடுக்கலாம் என்ற முடிவு எடுக்கப்பட்டது. எதிரி நாடுகளின் சார்பாக வந்த தூதுவனுக்கு பூம்பொழில் நாட்டில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. அவன் போருக்காக அழைக்க வந்திருக்கிறான் எனத் தெரிந்தும் அவனுக்கான மரியாதையை கொடுக்க சொன்னான் பூம்பொழிலின் மன்னன்.

அரசவை கூடியது மன்னனும் அமைச்சர்களும் தீவிரமாக ஆலோசித்தார்கள். மன்னனுக்கோ, படை வீரர்களுக்கோ துளியும் பயமில்லை. ஆனால், அமைச்சர்கள்தான் கொஞ்சம் கலங்கிப் போனார்கள். எதிரி நாடுகளோடு ஒப்பிடுகையில் பூம்பொழிலின் படைபலம் மிகச் சிறியது. ஒரு வேளை போரில் தோற்றுவிட்டால், நாட்டை யாரிடமிருந்தும் காப்பாற்றிக் கொள்ள முடியாதே என புலம்பித் தீர்த்தார்கள். ஆனால், ‘மன்னன் எவ்வழியோ மக்களும் அவ்வழி தானே’. 'பூம்பொழில் நாடு யாருக்கும் கீழ் இருப்பதை எங்களால் ஏற்றுக் கொள்ள முடியாது. நாங்கள் போருக்கு தயார்' என ஓலை அனுப்பினான் பூம்பொழிலின் மன்னன். எதிரி நாட்டு மன்னர்கள் கொண்டாடித் தீர்த்தார்கள். போருக்கான ஆயத்த வேலைகள் மும்முரமாக நடைபெறத் தொடங்கின. போருக்கான நாளும் வந்தது. பூம்பொழில் நாட்டின் எல்லையில் கூடாரம் அமைத்து தங்கியிருந்தன எதிரிகளின் படைகள்.

அவர்களோடு ஒப்பிடுகையில் பூம்பொழிலின் படைபலம் மிகச் சிறியதுதான். போர் ஆரம்பித்தது, நேரமாக நேரமாக பூம்பொழிலின் படைபலம் குறைந்து கொண்டு வருவதை தளபதி உணர்ந்தான். 

'இனிமேலும் போரிட்டால் மீதம் இருக்கும் வீரர்களையும் இழந்து விடுவோம். வீரர்களுக்கு எதிரி படைகளை பார்த்து மனக்கலக்கம்

ஏற்பட்டு இருக்கிறது. ‘உடனே இருப்பிடம் திரும்புவது நல்லது.’ என ஓலையில் குறிப்பிட்டு மன்னனுக்கு அனுப்பி வைத்தான். மன்னனுக்கு இதை ஏற்றுக் கொள்வதில் தயக்கம் இருந்தாலும் போரில் வெற்றி நமக்குத்தான் என்பதை உறுதியாக நம்பினான். பூம்பொழில் படைகள் பின்வாங்கின.. யாருக்கும் மன்னனின் முகத்தை பார்க்கும் சக்தியில்லை. எல்லையில் இருந்த தங்களது எல்லைச் சாமியின் கோவிலை கடந்த போதுதான் மன்னனுக்கு அந்த யோசனை வந்தது. வீரர்களுக்கு அந்த கடவுளின் மீது அவ்வளவு நம்பிக்கை. உடனே படைகளை நிற்குமாறு கட்டளையிட்டான். குதிரையை விட்டு இறங்கி கோவிலை நோக்கி நடக்க ஆரம்பித்தான். யாருக்கும் ஒன்றும் புரியவில்லை. கோவிலின் முன் நின்ற மன்னன் கர்ஜிக்கும் குரலில் வீரர்களிடையே பேசத் துவங்கினான். 

"இதோ என் கையில் இருக்கும் இந்த நாணயத்தை இங்கே சுண்டி விடுகிறேன். தலை விழுந்தால் திரும்பி விடுவோம், பூ விழுந்தால் மீண்டும் போர்களத்துக்கே திரும்பி வெற்றி வாகை சூடி வருவோம். சரியா!?" என கேட்டுவிட்டு வீரர்களை பார்க்க, அவர்களும் அதை ஆமோதித்தார்கள். நாணயம் காற்றில் அபப்டியே மிதந்து, தரையில் வீழ்ந்தது. தலை மன்னன் முகம் பார்த்து சிரிக்க, வீரர்களுக்கோ இனம் புரியாத புத்துணர்ச்சி கிடைத்தது போல் இருந்தது.

motivation

எதிரிகளின் படைபலத்தை பார்த்து துவண்டு கிடந்த மனது வெற்றியை கொண்டாடுவதைப் பற்றி மட்டும் யோசிக்கத் துவங்கியது.  மீண்டும் போர் களத்துக்கு திரும்பினார்கள். எதிரிகளை ஓட ஓட விரட்டியடித்து வெற்றி வாகை சூடி திரும்பினார்கள். தளபதிக்கோ ஆச்சர்யம் தாங்கவில்லை 'எப்படி மன்னா.. தலை விழும் என்ற நம்பிக்கை உங்களுக்கு முன்பே இருந்ததா!?" என கேட்க.. மென் புன்னகையை உதிர்த்த மன்னன் நாணயத்தை தளபதியின் கையில் திணித்து விட்டு நடக்க ஆரம்பித்துவிட்டான். 

கையை திறந்து பார்த்த தளபதியால் நம்ப முடியவில்லை.. நாணயத்தின் இரண்டு பக்கத்திலும் தலைதான் இருந்தது.

நாணயத்தைப் போலவேதான் வெற்றியும். வெற்றிக்கு ஒரு பக்கம் தானே இருக்கிறது. ஆனால் அது நல்ல மனநிலையை கொண்டவர்களின் பக்கமே நிற்க ஆசைப்படுகிறது. எந்த வேலையைச் செய்தாலும், அதை நல்ல விதமான எண்ணங்களோடு துவங்குகையில் பூம்பொழிலை போல வெற்றியை ருசிக்கத் துவங்கியிருப்போம்.

http://www.vikatan.com

  • தொடங்கியவர்

நீங்கள் இதுவரை பார்த்திராத அணு ஆயுதச் சோதனைகளின் வீடியோக்கள்!

அணுகுண்டு வெடிப்பு என்றாலே, நமக்கு ஹிரோஷிமா தாக்குதலும் அப்போது உருவான புகையும்தான் நினைவுக்கு வரும். ஆனால், அதை விஞ்சும் விதமாக அமெரிக்கா நடத்திய அணு ஆயுதச் சோதனைகள் பலவற்றின் அரிய வீடியோக்களை யூடியூபில் பதிவேற்றியிருக்கின்றனர், லாரன்ஸ் லைவ்மோர் நேஷனல் லேப்-ஐச் சேர்ந்த விஞ்ஞானிகள். மொத்தம் 64 வீடியோக்கள் இருக்கின்றன. மிஸ் பண்ணாமல் பாருங்க!

 

 

http://www.vikatan.com

  • தொடங்கியவர்

இலங்கை கிரிக்கெட் அணி முதன்முதலாக உலககோப்பை வென்ற நாள் (மார்ச் 17, 1996)

ரணதுங்கா தலைமையிலான இலங்கை கிரிக்கெட் அணி 1996-ஆம் ஆண்டு மார்ச் மாதம் இதே நாளில் நடந்த உலககோப்பை இறுதிப் போட்டியில் ஆஸ்திரேலியாவை வீழ்த்தி முதன்முதலாக கோப்பையை வென்றது. ஜெயசூர்யா, அரவிந்த டி சில்வா போன்றோரது சிறப்பான பேட்டிங்கும், சமிந்தா வாஸ், முரளிதரன் போன்றோரது சிறந்த பந்துவீச்சும் இலங்கை அணியின்

 
இலங்கை கிரிக்கெட் அணி முதன்முதலாக உலககோப்பை வென்ற நாள் (மார்ச் 17, 1996)
 
ரணதுங்கா தலைமையிலான இலங்கை கிரிக்கெட் அணி 1996-ஆம் ஆண்டு மார்ச் மாதம் இதே நாளில் நடந்த உலககோப்பை இறுதிப் போட்டியில் ஆஸ்திரேலியாவை வீழ்த்தி முதன்முதலாக கோப்பையை வென்றது. ஜெயசூர்யா, அரவிந்த டி சில்வா போன்றோரது சிறப்பான பேட்டிங்கும், சமிந்தா வாஸ், முரளிதரன் போன்றோரது சிறந்த பந்துவீச்சும் இலங்கை அணியின் வெற்றிக்கு காரணமாக அமைந்தது.

மேலும், இதே நாளில் நடந்த பிற நிகழ்வுகள்

• 1805 - இத்தாலிய பேரரசனாக நெப்போலியன் ஆனான்.

• 1845 - இரப்பர் பட்டி (rubber band) கண்டுபிடிக்கப்பட்டது.

• 1886 - மிசிசிப்பியில் 20 ஆபிரிக்க அமெரிக்கர்கள் கொல்லப்பட்டனர்.

• 1891 - பிரித்தானியாவின் எஸ்எஸ் யூட்டோப்பியா என்ற கப்பல் கிப்ரால்ட்டர் கரையில் மூழ்கியதில் 574 பேர் கொல்லப்பட்டனர்.

• 1919 - றோவ்லட் சட்டத்தை எதிர்த்துப் பிரச்சாரம் செய்வதற்காக மகாத்மா காந்தி சென்னை வந்தார்.

• 1969 - கோல்டா மெயர் இஸ்ரவேலின் முதலாவது பெண் பிரதமரானார்.

• 1988 - கொலம்பியாவின் போயிங் விமானம் மலை ஒன்றில் மோதியதில் 143 பேர் கொல்லப்பட்டனர்.

• 1992 - அர்ஜெண்டினாவில் இஸ்ரேல் தூதரகத்தில் இடம்பெற்ற தற்கொலை தாக்குதலில் 29 பேர் பலியாயினர்.

http://www.maalaimalar.com

Bild könnte enthalten: 4 Personen, Text

1996 மார்ச் 17 !!!
World Champions !!! Sri Lanka Cricket
இலங்கை உலக கிரிக்கெட் சாம்பியனாக மகுடம் சூடிய நாள் இதுவே.
21 ஆண்டுகளின் வெற்றிப் பூர்த்தி !!!
அர்ஜுன ரணதுங்க தலைமையிலான இலங்கை அணி உலக சம்பியனாகியது.
அரவிந்த டீ சில்வாவின் ஆட்டமிழக்காத சதமும் அர்ஜுனாவின் ஆட்டமும் இலங்கைக்கு மகுடத்தை சூட்டியது.

  • தொடங்கியவர்
Bild könnte enthalten: 1 Person, lächelnd, Text
·

இறகுப் பந்தின் வெற்றிச் சிறகு சாய்னா நேஹ்வால் பிறந்த தினம்!
 

சாய்னா நெஹ்வால், மார்ச் 17, 1990-ஆம் ஆண்டு ஹரியானா மாநிலத்தில் உள்ள ஹிஸ்ஸாரில் பிறந்தார். அப்பா, அம்மா இருவருமே இளம் வயதில் தேசிய அளவில் பாட்மின்டனில் ஜொலித்தவர்கள். பெண் குழந்தை பிறந்துவிட்டதே என சாய்னாவின் பாட்டிக்கு ஏகத்துக்கும் வருத்தம். அதனால் தன் மகளை ஆண் பிள்ளை போலத் தைரியமாக வளர்க்க எண்ணி முதலில் கராத்தே கற்றுக்கொள்ள அனுப்பினார் அம்மா உஷா ராணி.

கராத்தேவில் பிரவுன் பெல்ட் தகுதி பெற்ற சாய்னா, எட்டாவது வயதில் பாட்மின்டன் மட்டையைக் கையில் எடுத்தார். அப்பா ஹைதராபாத்துக்கு மாற்றல் ஆக, நானி பிரசாத் என்ற பயிற்சியாளரிடம் பயிற்சி பெற்றார் சாய்னா. தினமும் காலையில் 4 மணிக்கு எழுந்து 50 கிலோமீட்டர் தொலைவில் இருக்கும் லால் பகதூர் மைதானத்துக்கு தந்தையுடன் பயிற்சிக்காகச் செல்வார்.

14 வயதில் தேசிய ஜூனியர் சாம்பியன் பட்டம் வாங்கி, அனைவரையும் அசத்தினார். 'நான் திறமையுடன் பிறந்த ஆட்டக்காரி இல்லை. ஓயாமல் உழைத்தேன். ஆசிரியரை மதித்தேன். அதனால்தான் இவ்வளவு தூரம் உயர முடிந்தது' - சாம்பியன் ஆனதும் சாய்னா சொன்னது இது.

  • தொடங்கியவர்

நீரிலும் ஒட்டிக்கொள்ளும் பசை - விஞ்ஞானிகளை வியக்க வைத்த இயற்கை..!

தியிலிருந்து இயற்கையைச் சார்ந்து வாழ்ந்துகொண்டிருந்த மனிதன், அதன்பின் விஞ்ஞான வளர்ச்சி மற்றும் தொழில்புரட்சி காரணமாக மனிதன் நாளுக்கு நாள் இயற்கையின் வளங்களை சுரண்ட ஆரம்பித்தான். ஆனால் மனிதனால் ஒருபோதும் இயற்கையை வெல்ல முடியாது என்பதை அவ்வப்போது இயற்கை நிரூபித்துக் கொண்டுதான் இருக்கிறது.

இயற்கைக்கு முன்னால் மனிதன் சிறியவன்தான் தான் என்பதை காலம் நமக்கு உணர்த்திக்கொண்டே இருக்கிறது

நிலத்தில் ஒட்டிக்கொள்ளும் கடினமான பசை கூட, பொதுவாக நேரடியாக நீருக்கடியில் ஒட்டிக்கொள்ளாது. தொலைதொடர்பு வசதிக்காக கடலுக்கடியில் பதிக்கப்பட்டும் கேபிள்களில் ஏதாவது பிரச்னை ஏற்பட்டால் கூட, கேபிளின் எந்த இடத்தில் பிரச்னை ஏற்பட்டுள்ளது என்பதைக் கண்டறிந்து அதை கடலுக்கு வெளியே எடுத்து சரிசெய்யும் முறைதான் தற்போது கடைபிடிக்கப்படுகிறது. சாதாரணமாக நீச்சல் குளத்தில் ஏதாவதொரு டைல் உடைந்தால் கூட அதை சரிசெய்ய நீச்சல் குளத்தில் உள்ள மொத்த நீரையும் வெளியேற்றியபின்தான் அதை சரிசெய்ய முடிகிறது. காரணம் தற்போது கிடைக்கும் நீருக்கடியில் ஒட்டிக்கொள்ளும் தன்மைகொண்ட பசைப்பொருள்கள் அவ்வளவு வீரியமாக செயல்படுவதில்லை. இதற்கு தீர்வு கிடைக்காதா என மண்டையைப் பிய்த்துக்கொண்டிருந்த விஞ்ஞானிகளுக்கு, இயற்கை ஒரு வழியைக் காண்பித்திருக்கிறது.

பறக்கும் விமானம், நீர்மூழ்கிக் கப்பல் போன்ற உலகை மாற்றியமைத்த பலவிதமான கண்டுபிடிப்புகளுக்கு உந்துதலாக இயற்கைதான் இருந்துள்ளது. விமானம் கண்டுபிடிக்கப்பட்டதால் தான், உலகம் இன்று சில வாரங்களில் சுற்றிப்பார்க்கும் அளவுக்கு சுருங்கியுள்ளது. சமீபத்தில் அறிவியலாளர்கள் கண்டுபிடித்திருக்கும் நீரிலும் ஒட்டிக்கொள்ளும் பசைக்குக் கூட இயற்கைதான் உந்துதலாக அமைந்துள்ளது.

ஒவ்வொரு உயிரினமும் தன்னை தாக்கவரும் எதிர் உயிரினத்திடமிருந்து தற்காத்துக்கொள்ள ஒரு வழியைக் கடைப்பிடிக்கும். வீட்டின் சுவர்களில் நடமாடும் பல்லியானது, தனது வாலை துண்டித்து எதிர் உயிரினத்தின் கவனத்தை திசை திருப்பி தன்னை தற்காத்துக்கொள்ளும். இதைப் போலவே சிப்பி வகை மீன்களில் ஒன்றான ஷெல் மீனானது, தன்னை எதிரிகள் தாக்கவரும்போது அருகிலுள்ள கடினமான பாறையில் வேகமாகச் சென்று மறைந்துகொள்ளும். எதிரியால் ஷெல் மீனை பாறையிலிருந்து அவ்வளவு எளிதாகப் பிரிக்க முடியாது. ஏனென்றால் தனது உடலில் உள்ள புரதத்தால் ஒருவிதப் பசையை உற்பத்தி செய்து அதன்மூலம் பாறையில் தன்னை ஒட்டிக்கொள்ளும். ஆபத்து நீங்கியபின் தன்னை அதிலிருந்து விடுவித்துக் கொள்ளும். இதை ஆராய்ந்த விஞ்ஞானிகள் நீருக்கடியிலும் ஒட்டிக்கொள்ளும் வலுவான பசையைத் தற்போது உருவாக்கியுள்ளார்கள்.

ஷெல் மீன்களின் உந்துதலில் கண்டுபிடிக்கப்பட்ட நீரிலும் ஒட்டிக்கொள்ளும் பசை

அமெரிக்காவின் இந்தியானா மாகாணத்தில் உள்ள பர்டூ பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த வேதியியல் விஞ்ஞானிகள் இதுகுறித்த ஆய்வு முடிவுகளை வெளியிட்டுள்ளனர். ஷெல் மீன்கள் வெளியிடும் பசையில் அமினோ அமிலமான டை-ஹைட்ராக்சி பினைல் அலனின் என்ற வேதிப்பொருள் இருப்பதை விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர். இதை அடிப்படையாகக் கொண்டு பாலி கேட்டகால் சிரன் என்ற பாலிமர் கலவையை, புரதத்தோடு சேர்த்து செயற்கை முறையில் பசையாக உருவாக்கியுள்ளனர். இந்தப் பசையானது ஷெல் மீன்களின் பசையைவிட 17 மடங்கு அதிகம் வலிமையானதாக இருப்பதாக விஞ்ஞானிகள் முதற்கட்ட ஆய்வில் தெரிவித்துள்ளனர்.

அதே நேரத்தில், "ஷெல் மீன்கள் இதைவிடவும் வலிமையாக பசையை வெளிப்படுத்த வாய்ப்பிருக்கிறது. ஆபத்து நீங்கியபின் பாறைகளிலிருந்து தன்னை விடுவித்துக் கொள்வதற்கு ஏதுவாக, குறைந்த அளவே வலிமை கொண்ட பசையை அது உற்பத்தி செய்ய வாய்ப்பிருக்கிறது" என செயற்கை பாலிமர் பசையைக் கண்டறிந்துள்ள வேதியியல் விஞ்ஞானி ஜானதன் வில்கர் (Jonathan Wilker) தெரிவித்துள்ளார். இந்த பாலிமர் பசையானது தற்போது கிடைக்கும் பசைகளை விட அலுமினியம், மரம் மற்றும் டெப்லான் பொருள்களை பத்து மடங்கு வலுவானதாகவும், விரைவாகவும் நீருக்கடியில் இணைக்கும் திறன் கொண்டதாக உள்ளது. இந்தப் பசைதான் தற்போதைக்கு நீருக்கடியில் ஒட்டிக்கொள்ளும் வலிமையான பசையாகக் கருதப்படுகிறது.

இயற்கையின் உந்துதலில் உருவாக்கப்பட்டுள்ள இந்தப் பசையைக் கொண்டு இனி நீருக்கடியில் மராமத்து வேலைகளை செய்வது எளிதாகும் எனக் கருதப்படுகிறது. இதை மேலும் வலிமையானதாக உற்பத்தி செய்யவும், நடைமுறைப் பயன்பாட்டுக்கு கொண்டுவரவும் முயற்சிகள் நடைபெற்று வருகின்றன. எதிர்காலத்தில் நீருக்கடியில் உள்ள பொருள்களை ரிப்பேர் செய்வது இந்தப் பசை மூலம் மிகவும் எளிதாகும் என விஞ்ஞானிகள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.

எவ்வளவு ஆண்டுகள் ஆனாலும், இயற்கைக்கு முன்னால் மனிதன் சிறியவன்தான் தான் என்பதை காலம் நமக்கு உணர்த்திக்கொண்டே இருக்கிறது.

http://www.vikatan.com

  • தொடங்கியவர்

கோழி கூவுதோ இல்லையோ குட்மார்னிங் வரணும்! - காதல் கசக்குதய்யா!

பொதுவாகக் காதல் என்றாலே நம் அனைவரின் முகத்திலும் புன்னகை தொற்றிக்கொள்ளும். அப்படி புன்னகை ததும்பும் காதலர்களுக்குள்ளே பல்வேறு கசப்புகளும் மொக்கைகளும் இருக்கின்றன. அந்தக் கசப்பும், புளிப்பும் கலந்த பொறுப்புகள் என்னவென்று பார்ப்போமா...

காதல்

* காலையில கோழி கூவுதோ இல்லையோ நம்ம மொபைல்லே இருந்து குட்மார்னிங்னு மெசேஜ் வந்துடணும். அது மட்டும் வரலைன்னா கோழிக் குழம்பு மாதிரி ரெண்டு பேருல ஒருத்தர் கொதிக்க வேண்டி இருக்கும்.

* காலையில இருந்து ராத்திரி வரைக்கும் நாம என்னென்ன பண்றோம்னு நம்ம டைரியில குறிச்சு வைக்கிறோமோ இல்லையோ அவங்களோட வாட்ஸ்அப் மெசேஜ் டைரியில மறக்காம குறிச்சு வைக்கணும்.

* ஒருநாள் பூராவும் நம்ம நெட் யூஸ் பண்ணாலும், பண்ணலைன்னாலும் அது பிரச்னையே இல்லை. ஆனா ஆன்லைன்ல இருந்துக்கிட்டு நமக்கு மட்டும் மெசேஜ் பண்ணலைனா அதுக்காக நடக்கிற போருக்கு முடிவே இல்லாமப் போய்க்கிட்டு இருக்கும்.

* எல்லா விஷயங்களிலும் முதல் அனுபவத்தை நம்ம லைஃப்ல எப்பவுமே மறக்க முடியாது.  முதன்முதலில் சந்திச்ச நாள், இடமெல்லாம் திடீர்னு கேட்கும்போது மறந்துட்டா அவ்வளவுதான். நம்மகிட்டே அன்னம் தண்ணி புழங்கக் கூடாதுனு ஒதுக்கி வெச்சுடுவாங்க.

* 'ஆப்பி பர்த் டே டூ யூ'ன்னு பிறந்தநாள் பாட்டு பாடலைனாலும் பரவாயில்லை. பிறந்தநாளை ஞாபகம் வெச்சி விஷ் பண்ணதோட நின்னுடாம அவங்களுக்குப் பிடிச்ச மாதிரி கிஃப்ட் கொடுக்கலைனா முடிஞ்சுது. நல்ல நாளும் அதுவுமா நமக்கு ஏன் அந்த வில்லங்கம்? 

* போன் யூஸ் பண்றதே பேசுறதுக்குதான். அப்படி இருக்கிற போன்ல எப்பயாச்சும் கால் பண்ணும்போது மொபைல் வெய்ட்டிங்ல போச்சுனா அவ்வளவுதான். நம்மளோட லைஃபே முடிஞ்சு போனதாதான் அர்த்தம். ஆனா இதுக்கு இம்புட்டு... இம்புட்டு ஆகாது ராசா...

* இருவிழிப் பார்வைகள் நமக்குள் இருந்தே ஆகணும்னு அக்ரிமென்ட் போட்டுத்தான் லவ் பண்ண ஆரம்பிப்போம். அதனால வாரத்துக்கு ஒருநாள் கண்டிப்பா பார்த்தே ஆகணும். பார்க்க வரலைன்னா என்னை விட உனக்கு வேற ஒண்ணு முக்கியமா இருக்குலனு அடிச்சாகூட பரவாயில்லை... அதுக்கு பதிலா அழ ஆரம்பிச்சா அவ்வளவுதான். அதைக் குடம் குடமா பிடிச்சு நிரப்பலாம்.

காதல்

* 'உன்ன விட.... ஒசந்தது உலகத்தில் ஒண்ணும் இல்ல'ன்னு விதவிதமா பாட்டுப் பாடி இம்ப்ரெஸ் பண்ணிக்கிட்டே இருக்கணும். எனக்கு எந்தப் பாட்டு பிடிக்குமோ அது உனக்குப் பிடிச்சே ஆகணும்னு ரெக்கார்டு பண்ணி அதை அனுப்பி இப்பவே கேளுன்னு உயிரை வாங்கியே ஆகணும்னுலாம் எதுவும் விதி இருக்கா தெரியலையே... ஐயஹோ.

* தினமும் எந்த டிரெஸ் போட்டுட்டுப் போறேன்னு நான் பார்க்கணும்னு சொல்லி ஃப்ரீயா கிடைச்ச சிம்ல வீடியோ கால் பண்ணி நம்மளை டார்ச்சர் பண்றதும் இல்லாம பக்கத்துல இருக்கிறவனை வெறுப்பேத்துறதெல்லாம் என்ன பழக்கம்ப்பா?

* செலெக்‌ஷனே பண்ணத் தெரியாதவங்களைக் கூப்பிட்டுட்டு விதவிதமா செலெக்ட் பண்ணச் சொல்லிக் கொடுமைப்படுத்துறது... தலையணைல இருந்து செருப்பு வரைக்கும் வாங்கித் தரச் சொல்லி பில்லைப் போடுறது... ச்சை. ஒரே கஷ்டமப்பா.

* ஏதாச்சும் முக்கியமான விஷயம் பேச வரும்போது வேலை இருக்குனு சொல்லிக் கடுப்பாக்குறது, ஹேட் யூ சொல்லி காண்டாக்குறதெல்லாம் என்ன பண்பாடோ? போங்கய்யா.

* விதவிதமான எண்ணங்கள் இருந்தாலும் ரெண்டு பேரும் ஒத்துப்போக போராடுறது ரொம்பவே கொடூரமான விஷயம். இப்படி எக்கச்சக்க வேறுபாடுகள் இருந்தாலும் இரு மனம் ஒன்றி இணைய இருக்கும் காதலர்களுக்கு வாழ்த்துகளைச் சொல்லி முடிச்சு வைப்போம். 

  • தொடங்கியவர்

 

வட்ட வடிவமான ஓடுபாதைகள் : விமான நிலையங்களின் எதிர்காலமா?

விமான சேவைகளின் தேவை அதிகரித்து வரும் நிலையில், விமானநிலையங்களில் போதுமான வசதிகள் இல்லாமல் இருப்பது பெரும் சவாலாக இருக்கிறது.

அதற்கு தீர்வு என்ன? கடந்த நூற்றாண்டின் விமான நிலைய வடிவமைப்பில் இருந்து ஒரு பெரும் மாற்றமாக வட்ட வடிவமான ஓடுபாதைகள் இதற்கு ஒரு தீர்வாகலாம் என்கிறார் ஒருவர்.

  • தொடங்கியவர்

ரஹ்மானை வரவேற்கும் 'office made' 'ருக்குமணி... ருக்குமணி..! - வைரல் வீடியோ

துபாயின் ஷார்ஜாவில் மார்ச் 17-ம் தேதி நடக்கும் இசை நிகழ்ச்சியில் இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் கலந்துகொள்கிறார். இந்த நிகழ்ச்சியை ஒருங்கிணைத்து நடத்தும் க்ளப் எஃப்.எம் UAE 99.6 சார்பில் அவரை வரவேற்று அவரது பாடல்களைப் புதுமையாகப் பாடி கவர் வீடியோக்கள் வெளியிடப் பட்டிருக்கின்றன. வித்தியாசமான முறையில் இசை ஒலிகளை எழுப்பி அமைக்கப்பட்டிருக்கும் பாடல்கள் தற்போது பலத்த வரவேற்பைப் பெற்றிருக்கின்றன. 

ரஹ்மான் - ஆர்.ஜே. பவித்ரா

இந்த இசை நிகழ்ச்சியின் அனுமதிச் சீட்டுகளைப் பெறுவதற்காக ரசிகர்களுக்கு டான்ஸ், பாடல் போட்டிகளையும் நடத்தி ஆட்களைத் தேர்வு செய்திருக்கிறார்கள். ஏ.ஆர்.ரஹ்மானை துபாய்க்கு வரவேற்பதில் ஒரு பகுதியாக, அவர் இசையமைத்த 'ருக்குமணி... ருக்குமணி...' பாடலை க்ளப் எஃப்.எம் ஆர்.ஜே பவித்ரா பாட, அந்த அலுவலகத்தையே ஆர்கெஸ்ட்ராவாக்கி, கீ-போர்டுகளில் 'ARR' எனத் தட்டும் ஓசை, டெலிபோன் ரிசீவரை எடுத்து வைக்கும் ஓசை, மவுசை க்ளிக் செய்யும் சத்தம், ஸ்டேப்ளர் பின் அடிக்கும் ஓசை, காபியை சத்தமாக உறிஞ்சும் ஓசை என அலுவலகத்தில் இருக்கும் எல்லாவற்றையும் உபயோகித்து இசையாக மாற்றி இருக்கிறார்கள். ஆர். ஜே பவித்ராவின் குரலில் 'ருக்குமணி... ருக்குமணி...' பாடல் சக்கைபோடு போடுகிறது. அந்த வீடியோ கீழே...

இதற்கு முன்பும் க்ளப் எஃப்.எம் சார்பில் இப்படி வித்தியாசமான கவர் பாடல்கள் வெளியிடப் பட்டிருக்கின்றன. நாம் சொல்லும் கட்டளைகளைக் கேட்டுப், புரிந்துகொண்டு அதற்கேற்பச் செயல்படும்  'சிரி' எனும் ஐபோன் மென்பொருளைப் பயன்படுத்தி அதிலும் ஒரு இசைக் கோர்வையை நிகழ்த்தி இருக்கிறார்கள். அந்த மென்பொருளில் ஒரு ட்ரில்லியனின் பத்து மடங்கிற்கு எத்தனை பூஜ்யங்கள் எனக் கேட்டதும், அது 'ஜீரோ ... ஜீரோ ... ஜீரோ ...' என வரிசையாகச் சொல்வதையே இசையாக்கி அதற்கேற்ப ஒரு பாடலைப் பாடிப் பதிவு செய்து வைரல் ஆக்கினார்கள்.  அந்த வைரல் வீடியோ கீழே ...

ஏ.ஆர்.ரஹ்மானும், தான் இசையமைக்கும் பாடல்களில் எப்போதும் சில புதுமைகளைப் புகுத்துவது வழக்கம். சமீபத்தில் வெளிவந்திருக்கும் 'காற்று வெளியிடை' படத்தின் 'அழகியே...' பாடலில் இசைக்கருவிகள் இல்லாமல் இசைக்கருவிகளின் இசையைப் போலவே குழுவினர் ஒலி எழுப்பி பாடலின் முதல் சில விநாடிகள் உருவாக்கப்பட்டிருக்கும். இதேபோல சமீபத்தில் 'ஊர்வசி... ஊர்வசி... டேக் இட் ஈஸி ஊர்வசி...' பாடலின் வரிகளை ட்ரெண்டுக்கு ஏற்றாற்போல மாற்றச் சொல்லித் தனது ஃபேஸ்புக் பக்கத்தில் பதிவிட்டிருந்தார். அவரது ரசிகர்கள் பலர் ட்ரெண்டியான பாடல் வரிகளை எழுதிக் குவித்திருந்தார்கள். அதில் சிறப்பான வரிகளை வைத்து அந்தப் பாடலைப் பாடியிருந்தார் . 

இப்போது அவரது ரசிகர்களும் அவர் பாணியிலேயே புதுமையான முயற்சிகள் செய்து கவர் பாடல்களை உருவாக்கி வெளியிட்டு வரவேற்றிருக்கிறார்கள். 'ருக்குமணி... ருக்குமணி...' பாடலைப் பாடிய ஆர்.ஜே.பவித்ராவை சாட்டில் பிடித்தோம். "நான் ரஹ்மான் சாரோட பிக் ஃபேன். சார் இன்னும் நாங்க பண்ணின அந்தப் பாட்டைக் கேட்கலை போல... அவர் பார்த்ததும் சொல்லப்போற முதல் வார்த்தைக்காக வெய்ட்டிங். ஷார்ஜாவில் நடக்கப்போற கான்செர்ட் முடியுறவரை கொஞ்சம் பிஸிங்க... சாரி..." என அரக்கப்பரக்க ஆஃப்லைன் போனார். 

'ருக்குமணி... ருக்குமணி... அக்கம் பக்கம் என்ன சத்தம் ..?'

http://www.vikatan.com

  • தொடங்கியவர்
 
 
 
Bild könnte enthalten: 1 Person, lächelnd, Text
 

கல்பனா சாவ்லா - விண்ணைத்தொட்ட தேவதை பிறந்த தினம்! #KalpanaChawla

அப்பா பிரிவினைக்கு முந்திய இந்தியாவில் இருந்து வந்திருந்தார் ; பாகிஸ்தானில் இருந்து அகதியாக எல்லாவற்றையும் அங்கே விட்டுவிட்டு கொஞ்சம் காசு,ஏகத்துக்கும் நம்பிக்கை என்று சாதித்து காட்டியவர் அவர். அவரின் கரம்பிடித்து நடைபயின்ற குழந்தை என்பதால் கொஞ்சம் கல்பனாவுக்கு அடம் அதிகம்.

நான்கு பிள்ளைகள் இருந்த வீட்டில் கடைக்குட்டி என்பதால் இன்னமும் செல்லம் தூக்கல். எல்லா குழந்தைகளும் வெளியே விளையாடிக்கொண்டு இருக்கும் பொழுது வீட்டின் சுவற்றில் விமானங்களை அவரின் பிஞ்சுக்கரங்கள் கிறுக்கி கொண்டு இருக்கும். அண்ணனுடன் சந்திகர் சாலைகளில் போகிற பொழுது கண்கள் எப்பொழுதும் வானோடு காதல் செய்து கொண்டிருக்கும்.

தாகூர் அரசுப்பள்ளியில் படித்து நல்ல மதிப்பெண்கள் பெற்ற பின் கல்லூரி சேர வேண்டும் என்று முடிவான பொழுது உறுதியாக பெண் பிள்ளைகளே இல்லாத பஞ்சாப் பொறியியல் கல்லூரியின் ஏரோநாடிகல் துறையை எடுத்து சாதித்து காட்டிய அந்த பிடிவாதக்கார பெண் அடுத்து கிளம்பியது அமெரிக்காவுக்கு !

முதுகலைப்பட்டம்,முனைவர் பட்டம் பெற்ற பிறகும் விண்ணை தொடும் அவளின் முயற்சிகள் தொடர்ந்து கொண்டிருந்தன. மூன்றாயிரம் பேர் உயிரை உறைய வைக்கும் தேர்வு முறைகள் இறுதியில் ஆறே ஆறு பேர். அதில் ஒருவராக நம்மின் குட்டிப்பெண்ணும். பயிற்சிகள் ஆரம்பித்தன எந்த அளவுக்கு என்றால் ஆற்றின் ஒரு புறத்தில் இருக்கும் ஒரு பொதிமூட்டையை கொண்டு போய் இன்னொரு புறம் இருட்டில் யாருமே இல்லாமல் சேர்க்க வேண்டும். சேர்த்த பிறகு பிரித்துப்பார்க்க வேண்டும். பிணம் கனம் கனக்கும் அதைக்கொண்டு போய் சேர்த்து பிரித்து பார்த்தால் பிணமே இருக்கும் ! இப்படிப்பட்ட எண்ணற்ற போராட்டங்களை,சோதனைகளைத்தாண்டி விண்ணில் முதல்முறை பறந்த பொழுது விண்வெளியில் பயணம் செய்த முதல் இந்திய பெண்மணி ஆனார் .

கொலம்பியா ஓடத்தில் நாற்பத்தி ஒரு வயதில் பறந்த அந்த வான்வெளி தேவதையின் இறுதி பயணமாக அதுவே மாறிப்போனது. பூமியை ஓடம் தொடுவதற்கு பதினாறு நிமிடங்களுக்கு முன்பு அது வெடித்து சிதற வானோடு உறைந்தது கல்பனா சாவ்லாவின் சிரிப்பு. சின்னஞ்சிறு ஊரில் இருந்து விண்ணைத்தொட்ட அந்த தேவதை பிறந்த தினம் இன்று.

கல்பனா சாவ்லா

 
kalpana_3144579f.jpg
 
 
 

இந்தியாவின் முதல் விண்வெளி வீராங்கனை

இந்தியாவின் முதல் விண்வெளி வீராங்கனையும், இருமுறை விண்வெளிப் பயணம் மேற்கொண்டவருமான கல்பனா சாவ்லா (Kalpana Chawla) பிறந்த தினம் இன்று (மார்ச் 17). அவரைப் பற்றிய அரிய முத்துக்கள் பத்து:

ஹரியாணா மாநிலத்தில் உள்ள கர்னால் என்ற நகரத்தில் பிறந்தவர் (1962). மிகவும் புத்திசாலிக் குழந்தையான இவரை முன்கூட்டியே பள்ளியில் சேர்ப்பதற்காகப் பிறந்த தேதியை 1961, ஜூலை 1-ம் தேதி என்று பெற்றோர் பதிவு செய்துவிட்டனர். இவரது சான்றிதழ்களிலும் அப்படியே காணப்படுகிறது.

தாகூர் பள்ளியில் ஆரம்பக் கல்வி கற்றார். எதிர்காலத்தில் விண்வெளி பொறியாளராக வேண்டும் என்று விரும்பினார். ஆராய்ச்சியாளர்கள், சாதனையாளர்களின் வாழ்க்கை வரலாறுகளை விரும்பிப் படித்தார்.

1982-ல் சண்டிகரில் உள்ள பஞ்சாப் பொறியியல் கல்லூரியில் சேர்ந்து விமானப் பொறியியலில் இளங்கலைப் பட்டம் பெற்றார்.

1984-ல் அமெரிக்காவின் டெக்சாஸ் பல்கலைக்கழகத்தில் விண்வெளிப் பொறியியல் துறையில் முதுகலைப் பட்டம் பெற்றார். 1986-ல் கொலரேடோ பல்கலைக்கழகத்தில் இரண்டாவது முதுகலைப் பட்டம் பெற்றார். தொடர்ந்து பயின்று விண்வெளிப் பொறியியலில் முனைவர் பட்டமும் பெற்றார்.

அமெரிக்க விண்வெளி ஆய்வு நிலையமான நாசாவில் சேர்ந்தார். அங்கு கம்ப்யுடேஷனல் ஃப்ளுயட் டைனமிக்ஸ் மற்றும் வெர்டிகல் / ஷார்ட் டேக்ஆஃப் அன்ட் லாண்டிக் தொடர்பான பல்வேறு ஆராய்ச்சிகளில் ஈடுபட்டார்.

1993-ல் ஓவர்செட் மெத்தட்ஸ் நிறுவனத்தில் துணைத் தலைவராகவும் ஆய்வு விஞ்ஞானியாகவும் சேர்ந்தார். அடுத்த ஆண்டே இவரது விண்வெளிக் கனவை நனவாக்கிக்கொள்ளும் வாய்ப்பு பிறந்தது. விண்வெளிப் பயணத்துக்கான பயிற்சித் தேர்வுக்கு விண்ணப்பித்தார். அதில் தேர்ந்தெடுக்கப்பட்ட 6 பேரில் இவரும் ஒருவர். 1995-ல் பயிற்சி முடிந்து விண்வெளி வீராங்கனையாகத் தகுதி பெற்றார்.

கொலம்பிய விண்வெளி ஊர்தியான எஸ்.டி.எஸ்-87 (STS-87)-ல் பயணம் செய்வதற்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார். 1997-ல் இவரையும் சேர்த்து ஆறு வீரர்கள் கொண்ட குழு ஃப்ளோரிடாவில் கேப் கெனவரல் முனையிலிருந்து விண்ணுக்குச் செலுத்தப்பட்டது. விண்வெளியில் 16 நாட்கள் ஆராய்ச்சிகளில் ஈடுபட்டு 252 தடவை பூமியைச் சுற்றியது இந்த விண்கலம். இதன்மூலம் விண்வெளிக்குச் சென்று வந்த முதல் இந்தியப் பெண்மணி என்ற பெருமையைப் பெற்றார்.

2003-ம் ஆண்டு விண்வெளியில் பறக்க மீண்டும் ஒரு வாய்ப்பு கிடைத்தது. கொலம்பியா விண்கலம் எஸ்.டி.எஸ்-107 (STS-107)-ல்கல்பனா உள்ளிட்ட ஏழு வீரர்கள் அடங்கிய குழு விண்ணில் பாய்ந்தது. பிப்ரவரி 1-ம் தேதி, 16 நாட்கள் பயணம் முடித்து தரையிறங்கு வதற்குச் சுமார் 15 நிமிடங்கள் இருந்தபோது, டெக்சாஸ் வான்பரப்பில் விண்கலம் வெடித்துச் சிதறியது. கல்பனா உட்பட ஏழு பேரும் உயிரிழந்தனர். கல்பனா சாவ்லாவுக்கு அப்போது வயது 41.

சாதாரண நடுத்தரக் குடும்பத்தில் பிறந்து, வானை வசப்படுத்திய கல்பனா, தன் கனவு வெளியான விண்வெளியிலேயே இறந்து போனார்.

அமெரிக்க காங்கிரேஷனல் ஸ்பேஸ் மெடல் ஆஃப் ஹானர் விருது, நாசா ஸ்பேஸ் பிளைட் மெடல், நாசா டிஸ்டிங்குவிஷ்ட் சர்வீஸ் மெடல்உள்ளிட்ட பல பதக்கங்கள், விருதுகள் வழங்கப்பட்டன. 2004-ம்ஆண்டிலிருந்து ‘கல்பனா சாவ்லா’ விருதை இளம் பெண் விஞ்ஞானிகளை ஊக்குவிப்பதற்காக வழங்கிவருகிறது கர்நாடக அரசு. 2011-ம் ஆண்டு முதல் வீரதீர சாகசங்கள் புரியும் பெண் களுக்கு இவரது பெயரில் இந்திய அரசு விருது வழங்கி வருகிறது.

http://tamil.thehindu.com

  • தொடங்கியவர்

கையால் சாப்பிடலாம் வாங்க..! கைக்கும் உணவுக்குமான காதல் அறிவோம்

கையால் சாப்பிடலாம் வாங்க... இப்படி ஓர் அறிவிப்பு காணப்பட்டால் எப்படி இருக்கும் உங்களுக்கு? ஆனால் கையால் சாப்பிடுவதில் நிறைய நன்மைகள் இருக்கின்றன. அப்படியிருக்க, ஸ்பூனைப் பயன்படுத்தி உணவு சாப்பிடுவது இன்றைக்கு ஒரு ஃபேஷனாக மாறிவிட்டது. பிடிக்கிறதோ, இல்லையோ ஸ்பூனில் சாப்பிடுவதுதான் நாகரிகம் என்றாகிவிட்டது. சில பன்னாட்டு நிறுவனங்களில்... உயர்தர உணவகங்களில்... தோசையை ஸ்பூனால் சாப்பிட முயன்று, தோசையோடு சண்டை போட்டுக்கொண்டிருப்பவர்களைப் பார்த்திருக்கலாம். கையால் சாப்பிட இயல்பாக, எளிதாக முடிகிறபோது ஏன் ஸ்பூனோடு மல்லுக்கட்ட வேண்டும்? கையால் சாப்பிட்டால் என்ன நன்மை, பார்ப்போமா?

உணவு

நன்மை செய்யும் பாக்டீரியாக்கள்
உணவைத் தொட்டவுடன் அது சூடாக இருக்கிறதா? காரமாக இருக்கிறதா? என்று எளிதாக உணர்ந்து கொள்ள முடியும். அந்தத் தகவல் உடனடியாக மூளைக்குப் போகிறது. நாம் சாப்பிடப் போகிறோம் என்பதை மூளை உணர்ந்துகொண்டு வயிற்றுக்கு தகவல் அனுப்புகிறது. வயிறு, செரிமானத்துக்குத் தேவையான அமிலங்களைச் சுரக்கும் நிகழ்வை (உணவு வாய்க்கு வந்ததும்) தொடங்கிவிடுகிறது. மேலும், நமது கையில் நன்மை செய்யும் பாக்டீரியாக்கள் உள்ளன. வாய், தொண்டை மற்றும் குடலுக்கு நன்மை செய்யும் இந்த பாக்டீரியாக்கள் செரிமானத்தை எளிதாக்குகிறது. ஆனால் கையைக் கழுவிவிட்டு சாப்பிடும்போதுதான் இந்த பலன் கிடைக்கும். கையைக் கழுவாமல் சாப்பிட்டால் கையில் உள்ள கிருமிகள் உடலுக்குள் சென்றுவிடும். 

கையால் சாப்பிடுதல்

ரசித்து... ருசிக்க!
கைக்குப் பதிலாக ஸ்பூனில் சாப்பிடும்போது மூளைக்கு தகவல் அனுப்புவது உள்ளிட்ட நிகழ்வுகள் தொடங்க தாமதமாகும். அதுவுமல்லாமல் உணவின் தன்மை நமக்குத் தெரியாது என்பதால் சூடான பொருளை ஸ்பூனில் எடுத்து வாயில் வைத்தால் நாக்கை சுட்டுக்கொள்ள நேரிடலாம். ஸ்பூனில் சாப்பிடும்போது நமது கவனம் முழுக்க நாம் எப்படி சாப்பிடுகிறோம் என்பதில்தான் இருக்கிறது. ஒரு விதமான எந்திரத்தன்மை வந்துவிடுகிறது. இதனால் உணவை ரசித்து, ருசித்துச் சாப்பிட முடிவதில்லை. கையால் சாப்பிடும்போது ஸ்பூனில் சாப்பிடுவதைவிட அதிக திருப்தி கிடைக்கிறது. 

ஸ்பூன்

சர்க்கரை நோயாளிகள்
நாம் சாப்பிடும்போது கையை வைத்திருக்கும் அமைப்பானது யோக முத்திரைகள் மட்டுமல்லாமல் பழைமையான நடன முறைகளின் முத்திரைகள் மற்றும் தியானத்தின்மூலம் நோயை குணப்படுத்தும்முறை போன்றவற்றைக் குறிக்கிறது. ஆயுர்வேதத்தைப் பொறுத்தவரை ஒவ்வொரு விரலும் நீர், நிலம், தீ, காற்று, ஆகாயம் ஆகிய ஐந்து பூதங்களைக் குறிக்கிறது. உணவில் உள்ள கெட்ட சக்திகளை இவை விரட்டுவதாக நம்பப்படுகிறது. இந்த பலன்கள் ஸ்பூனில் சாப்பிடும்போது கிடைப்பதில்லை. கடுமையான பசி ஏற்படுவது இரண்டாம் வகை சர்க்கரை நோயின் அறிகுறி. இரண்டாம் வகை சர்க்கரை நோயாளிகள் ஸ்பூனில் சாப்பிடும்போது நிதானமின்றி, அவசர அவசரமாக சாப்பிடுவார்கள். இதனால் ரத்தத்தில் சர்க்கரையின் அளவு அதிகரிக்கும். கையால் சாப்பிடும்போது ஸ்பூன் அளவுக்கு வேகமாக இல்லாமல் நிறுத்தி நிதானமாக சாப்பிடுவதால் ரத்த சர்க்கரை கட்டுக்குள் இருக்கும். 

மன அழுத்தம்
ஸ்பூனில் சாப்பிடுபவர்கள் மிக வேகமாகச் சாப்பிடுவதோடு, அளவுக்கு அதிகமாகவும் சாப்பிடுகிறார்கள். இதனால் அவர்களுக்கு Binge Eating Disorder என்ற நோய் வரலாம். சீரற்ற மனநிலை, மன அழுத்தம் போன்றவையும் இந்த நோய் ஏற்படுவதற்கான பிற காரணங்களாக இருக்கின்றன. இந்தக் காரணங்களோடு ஸ்பூனில் வேகமாகச் சாப்பிடுவது சேர்ந்து கொள்ளும்போது பாதிப்பு அதிகமாகும். கையால் சாப்பிடும்போது அவ்வளவு வேகமாக சாப்பிட முடியாது என்பதால் பாதிப்புகள் குறையும். 

கையில் சாப்பிடுதல்

ஓர் உணவகத்தில்  தரப்படும் ஸ்பூனின் தரம் என்ன என்பது பற்றி நமக்குத் தெரியாது. தரம் பற்றிய பயத்துடன்தான் சாப்பிடவேண்டி இருக்கும். ஸ்பூனில் சாப்பிடும்போது உணவின் சுவையைவிட சாப்பிடும் முறையில்தான் நம் கவனம் அதிகம் செல்லும். கையைப் பயன்படுத்தும்போது இந்தக் கவலைகள் எல்லாம் இல்லை. ஸ்பூன் வைத்துச் சாப்பிடுவது மூன்றாவதாக ஒரு ஆளை வைத்து காதலிப்பதுபோல் உள்ளதாக ஒரு பழமொழி உண்டு. கைக்கும், உணவுக்குமான காதல் எப்போதும் நிலைத்திருந்து பல பயன்களைத் தரவேண்டுமென்றால் அதற்கு ஸ்பூன் போன்ற பொருட்கள் இடையில் வராமல் இருப்பதே சிறந்தது.

http://www.vikatan.com

  • தொடங்கியவர்

 

எரிமலையில் அகப்பட்ட பிபிசி குழு: நூலிழையில் உயிர் தப்பினர்

இது மிக அழகுதான் , ஆனால் அதி பயங்கரமும் கூட. இத்தாலியின் சிசிலி தீவின் எட்னா எரிமலை திடீரென வெடித்து கொதிக்கும் எரிமலைக் குழம்பை இருநூறு மீட்டர்கள் உயரத்துக்கு வானில் விசிறியடித்தது.

கடந்த சில நாட்களாக இந்த எரிமலை குழம்பை கக்கிக்கொண்டுதான் இருந்தது. ஆனால், அது பெரிதாக வெடித்துச் சிதறும் என்று எவரும் எதிர்பார்க்கவில்லை.

பத்து பேர் இதனால் காயமடைந்தனர், ஆனால் பெரியகாயமில்லை.

அந்த நேரத்தில் பிபிசியின் அறிவியல் நிருபர் உட்பட எமது பிபிசி குழு ஒன்றும் அங்குதான் இருந்தது.

  • தொடங்கியவர்

அம்மி மிதித்து... அருந்ததி பார்த்து... ஏன் மூன்று முடிச்சு போடனும்? #சம்பிரதாயம் அறிவோம்

இந்துக்களின் திருமணம் பல சடங்குகளைக் கொண்டது. ஒவ்வொரு சடங்குக்கும் ஓர் அர்த்தம் உள்ளது. நம்முடைய இந்து மதத்தில் பிரம்மச்சர்யம், கிருஹஸ்தம், வானபிரஸ்தம், சந்நியாசம் என்று நான்கு வாழ்க்கைமுறைகள் சொல்லப்பட்டு இருக்கின்றன.

பிரம்மச்சாரிகளுக்கும், வானபிரஸ்தர்களுக்கும், சந்நியாசிகளுக்கும்கூட அவர்கள் உயிர் வாழ்வதற்குத் தேவையான உணவைத் தரும் கிருஹஸ்தம் என்னும் இல்லறத்தில் ஈடுபட்டவர்களே மிகவும் சிறப்புக்கு உரியவர்கள் என்றும், இல்லற தர்மத்தில் இருப்பவர்களே இந்த சமூகத்தின் முதுகெலும்பைப் போன்றவர்கள் என்றும் கௌதம மகரிஷி கூறி இருக்கிறார்.

மூன்று முடிச்சு  

சிறப்பான இல்லற வாழ்க்கையின் தொடக்கம் ஓர் ஆணும் பெண்ணும் இணையும் திருமணம் என்ற பந்தத்தில்தான் தொடங்குகிறது.
இந்தத் திருமண வாழ்க்கை பயனுற அமையவேண்டுமானால், திருமணம் என்னும் பந்தத்தில் இணையும் கணவன் - மனைவி இருவர் மனதிலும் அன்பும் அறமும் பொருந்தி இருக்கவேண்டும். 

சிறப்பு மிக்க கணவன் - மனைவி என்னும் பந்தத்தை ஓர் ஆணுக்கும் ஒரு பெண்ணுக்கும் ஏற்படுத்தும் திருமணத்தில் உள்ள சடங்குகளையும் அவற்றின் அர்த்தத்தையும் பார்ப்போம். 

பெண் பார்க்கும் படலம்:
திருமணத்துக்குப் பெண் பார்க்கும்போது, பிள்ளையின் மனம் முதலில் பெண்ணிடம் லயிக்கவேண்டும். விருப்பம் ஏற்படவேண்டும். இதுதான் முதல் படி. இந்த நிலையில் பிள்ளைக்கு பெண்ணையோ, பெண்ணுக்கு பிள்ளையையோ பிடிக்கவில்லை என்றால், அவர்களுக்கு திருமணம் செய்து வைக்கக்கூடாது. பிள்ளை வீட்டார்தான் முதலில் பெண் வீட்டைச் சேர்ந்தவர்களைப் பார்த்து பெண் கேட்கவேண்டும். அனைத்து பொருத்தங்களும் முடிந்த பிறகு முகூர்த்தத்துக்கு நாள் குறிக்கப்படும். 

நிச்சயதார்த்தம்:
இல்லற வாழ்க்கையின் தொடக்கத்துக்கு ஒரு முன்னுரை போல் அமைந்திருப்பது நிச்சயதார்த்தம் என்னும் சடங்கு. நிச்சயதார்த்தத்தின்போது சில மந்திரங்கள் சொல்லப்படுகின்றன. அந்த மந்திரங்கள் அவர்களுடைய மணவாழ்க்கையை வளம் பெறச் செய்ய தேவர்களை அழைக்கும் மந்திரங்கள் ஆகும்.  

'வருண பகவானே! எனக்கு மனைவியாக வரப்போகிறவள் என் உடன் பிறந்தவர்களுக்கு கெடுதல் நினைக்காதவளாக இருக்கட்டும்'
அடுத்ததாக இந்திரனைப் பார்த்து, 'இந்திர தேவனே! எனக்கு மனைவியாக வர இருப்பவள் தன்னுடைய பிள்ளைகளைப் போற்றி வளர்ப்பவளாக இருக்கட்டும்'

தொடர்ந்து சூரியபகவானைப் பார்த்து, ''இவள் அனைத்துவிதமான செல்வங்களையும் பெற்றவளாகத் திகழட்டும்'
பிறகு தனக்கு நிச்சயிக்கப்பட்ட பெண்ணைப் பார்த்து, ''பெண்ணே! நீ அழகிய கனிவு நிரம்பிய கண்களை உடையவளாகவும், கணவனாகிய எனக்கும் என்னைச் சேர்ந்தவர்களுக்கும் நன்மை அளிப்பவளாகவும், நல்ல மனம் உள்ளவளாகவும், தேஜஸ் நிரம்பப் பெற்றவளாகவும் திகழ்வாயாக. தீர்க்காயுள் உள்ள பிள்ளைகளைப் பெறுபவளாகவும், தெய்வ பக்தி நிரம்பப் பெற்றவளாகவும், அனைவருக்கும் நன்மையை செய்பவளாகவும் இருப்பாயாக'' என்ற பொருளுடைய மந்திரத்தைச் சொல்கிறான்.

இந்த மந்திரங்களைப் போலவே மற்ற அனைத்து திருமண மந்திரங்களும் அர்த்தம் உள்ளதாகத் திகழ்கின்றன.

திருமணம் 

காசி யாத்திரை:

வாழ்க்கையில் பிற்காலத்தில் எப்போதாவது விரக்தி ஏற்பட்டு வீட்டை விட்டு சென்றுவிடலாம் என்ற எண்ணம் ஏற்படும்போது, அந்த எண்ணத்தை மாற்றுவதற்கான தூண்டுகோலாக அமைந்திருப்பதுதான் காசி யாத்திரை விஷயம். எதற்கெடுத்தாலும் நான் சந்நியாசியாகப் போய்விடுவேன் என்று சொல்லும் சஞ்சல மனம் ஆண்களுக்கே இயல்பானது. அப்படி மனம் சஞ்சலம் அடையாமல் இருப்பதற்காகத்தான், ''வேண்டாம் இந்த துறவற மனோபாவம். இல்லறமே நல்லறம். அந்த நல்லறத்தில் நீ ஈடுபடுவதற்காக, நான் இதுவரை செல்லமாக வளர்த்த என் பெண்ணையே உனக்குத் தருகிறேன்'' என்று சொல்லும் நிகழ்ச்சிதான் காசி யாத்திரை. பிற்காலத்தில் கணவனுக்கு எப்போதேனும் மனச் சஞ்சலம் ஏற்படும்போது, இந்த காசி யாத்திரை வைபவத்தை நினைத்துப் பார்த்து மனம் மாறவேண்டும் என்பதற்காகவே காசியாத்திரை நிகழ்ச்சி நடைபெறுகிறது.

கூறைப் புடைவை:

காசி யாத்திரை நிகழ்ச்சிக்குப் பிறகு பெண்ணுக்கு மணமகன் வீட்டு சார்பில் கூறைப் புடைவை கொடுக்கப்படும். கொடுக்கும்போது ஒரு மந்திரத்தை மணமகன் சொல்லவேண்டும். அந்த மந்திரத்தின் பொருள், ''என்னுடைய வாழ்க்கைத் துணையாக வரப்போகிறவளே! இந்தப் புடைவை உன் மேனியைச் சுற்றி உன்னைப் பாதுகாப்பாகவும், உன் அழகைப் பராமரிக்கவும் பயன்படுவதைப் போலவே, தர்ம தேவதைகள் உன்னைச் சூழ்ந்திருந்து, உன்  பண்பு, அழகு ஆகியவற்றையும் பாதுகாக்கட்டும் என்று பிரார்த்திக்கிறேன்'' என்பதாகும்.

பெண்ணின் இடுப்பில் தர்ப்பையால் கட்டுதல்:

கூறைப்புடைவை அணிந்து வந்த பெண்ணின் இடுப்பில் தர்ப்பையில் செய்த கயிற்றைக் கட்டுவார்கள். 'நல்ல மனம், குழந்தைகள், சுமங்கலியாக நீண்ட நாள் வாழும் தன்மை, ஆரோக்கியமான நல்ல உடல், இவற்றை வேண்டிப் பெற்றுக்கொண்டவளாகவும், கணவனை நல்லொழுக்கத்துடன் பின்பற்றும் விரதத்தை மேற்கொள்பவளாகவும், இவள் தூய்மையை உணர்த்தும் நெருப்பின் முன் நிற்கிறாள். இவளைத் தர்ப்பையாகிய கயிற்றால், விவாகம் என்னும் புனிதமான காரியத்துக்காகக் கட்டுகிறேன்' என்பதே இதன் பொருள். 
தேவதைகளை வேண்டும் தேவதா சம்பந்தம் உள்ள மந்திரம் இதை அடுத்துச் சொல்லப்படுகிறது. மணப்பெண்ணை, சோமன், கந்தர்வன், அக்னி ஆகிய தேவர்களுக்கு அர்ப்பணிக்கிறார்கள். அதன் பின்னரே அவள் மணமகனுக்கு உரியவளாகிறாள்.
இதை மேலோட்டமாகப் பார்க்கும்போது, 'தேவர்களுக்கு அர்ப்பணிக்கப்பட்டவளை எப்படி மனைவியாக ஏற்கலாம்?' என்று கேட்கத் தோன்றும்.  ஆனால், உண்மை அதுவல்ல... ஒரு பெண்ணை சிறுவயதில் எத்தனையோ பேர் ஆசையாகத் தூக்கியிருப்பார்கள்... இதனாலெல்லாம் அந்தப் பெண்ணுக்குக் களங்கம் ஏற்பட்டு விடுகிறதா என்ன?

ஒரு பெண்ணின் சரீரத்தில் ரோமம் உண்டாகும்போது சோமன் என்ற தேவன் அவளைப் பாதுகாக்கிறான். 'ரஜஸ்' ஏற்படும்போது (ருதுவாகுதல்) கந்தர்வன் அவளைப் பாதுகாக்கிறான். சோமதேவன் கன்னிப்பெண்ணுக்கு உடல் பலம் அளிப்பவன்; கந்தர்வன் அவளுக்கு அங்க அழகுகளை கொடுப்பவன்; அக்னி அவளுக்கு யௌவனத்தின் பிரகாசத்தைக் கொடுப்பவன். இவற்றைப் பெற்று, இந்த இயற்கை சக்திகளின் ஆசி உடலில் மேன்மையை அளித்த பிறகுதான், அவள் கணவனை அடைய முழுத்தகுதி பெறுகிறாள்.
அவ்வாறு அந்தப் பெண்ணைக் காத்து அருள்பாலித்த தேவர்களுக்கு நன்றி தெரிவிப்பதற்காகவே இந்த மந்திரங்கள் சொல்லப்படுகின்றன. 

கன்னிகாதானம்:

தானங்களிலேயே மிகவும் உத்தமமான தானமாகப் போற்றப்படுவது கன்னிகாதானம். தான் அருமை பெருமையாக வளர்த்த பெண்ணை, தகுந்த வரனுக்கு தானமாகத் தருவதே கன்னிகாதானம். கன்னிகாதானம் செய்பவரின் 21 தலைமுறைகள் நற்கதி அடைவார்கள் என்பது சாஸ்திரம். கன்னிகாதானத்தின்போது பெண்ணின் தந்தை ஒரு மந்திரம் சொல்வார். அந்த மந்திரத்தின் பொருள்: "பொன்நகைகளால் நன்கு அலங்கரிக்கப்பட்டுள்ள என் கன்னிகையை திருமாலின் சொரூபியான திருநிறைச்செல்வா! உனக்குத் தானமாக அளிக்கிறேன். ஏற்றுக்கொள்.. என் மூதாதையர்களும், வருங்கால சந்ததிகளும் பிரும்மலோகத்தில் நித்யானந்த பதவியைப் பெறவே இந்த உத்தமமான மகாதானத்தைச் செய்திருக்கிறேன். இந்த தானத்தால் என் பித்ருக்கள் கடைத்தேறுகிறார்கள். இந்த மங்களயோகத்திற்கு இவ்வுலகைக் காக்கும் பஞ்சபூதங்களும் (நிலம், நீர், காற்று, நெருப்பு, வானம்) சாட்சிகள். எல்லா தேவதைகளும் சாட்சிகள். என் பெண்ணே! நீ என் எதிரில் என்றும் காட்சியளிப்பாயாக! உன் இரு பக்கங்களிலும் பரமேசுவரியே காட்சி தருகிறாள். நீ தேவி அருள் பெற்ற உத்தமி. நீ எனக்கு எல்லாப் பக்கங்களிலும் பெருமை அளிப்பாயாக. உன்னை இந்த நல்ல மணமகனுக்குத் தானம் அளிப்பதால், நான் நற்கதி அடைவேன். மோட்ச சாம்ராஜ்யத்தை உன் மூலமாகப் பெறும் பாக்கியசாலி நான்!"

திருமண மாங்கல்யம் 

மாங்கல்யதாரணம்:
அடுத்து மாங்கல்யதாரணம் நிகழ்கிறது. மாங்கல்யம் என்பது பெண்களின் தற்காப்புக்காக ஏற்பட்டது. அவள் மணமானவள் என்பதைக் காட்டும் அடையாளம் அது!

'மாங்கல்யம் தந்துநாநே' - என்ற மந்திரம் சொல்லி மணமகன் மணமகள் கழுத்தில் தாலி கட்டுகிறான். அந்த மந்திரத்தின் பொருள்: ''இது மங்களசூத்திரம். நான் நீண்டகாலம் வாழவேண்டும் என்று இறைவனை வேண்டி உனக்கு அணிவிப்பது. சௌபாக்கியவதியே! நீ நூறாண்டுகள் சுமங்கலியாக, சுகமாக வாழ்ந்திருப்பாயாக!' 
அப்போது போடப்படும் 'மூன்று முடிச்சு'கள் அர்த்தபுஷ்டியானவை. கணவன் ஒரு முடிச்சு போட, கணவர் வீட்டார் சார்பில் கணவனின் தங்கை மற்ற முடிச்சுகளைப் போடுகிறாள். ஏன்? கணவன் மட்டுமல்லாது, கணவனின் வீட்டாரும் அவளை மகிழ்ச்சிகரமாக தம் குடும்பத்தோடு இணைந்து பந்தத்தில் சேர்த்துக் கொள்கிறார்கள். 
இந்த மூன்று முடிச்சுகளில் பல தத்துவங்கள் அடங்கியிருக்கின்றன. மும்மூர்த்திகளுக்கு இந்த மூன்று முடிச்சுகளை அர்ப்பணிப்பது தெய்விகமான அம்சம். அதுமட்டுமின்றி, உலகியல்படி, தெய்வம், பெற்றோர், கணவன் மூவரையும் அவள் மதிக்கவும் - திரிசுரணசுத்தியாக மனம் - வாக்கு - உடல் இவற்றின் புனிதத்தோடு திருமண பந்தத்தைக் காக்கவும் - முக்காலமும் உணர்ந்து இல்லறதர்மத்தைப் பேணவும் - இந்த மூன்று முடிச்சுகள் அடையாளமாகத் திகழ்கின்றன. 

சப்தபதி:

இதைத் தொடர்ந்து சப்தபதி என்னும் நிகழ்ச்சி நடைபெறுகிறது. இந்து சட்டங்கள் கூட இந்த சப்தபதிக்கு மிக முக்கியத்துவம் கொடுக்கின்றன. இந்த 'சப்தபதி' முடிந்தால்தான் முழுமையாகத் திருமணம் நிறைவேறியதாக அது ஏற்றுக்கொள்கிறது.
மணமகளின் கால்கட்டை விரலைப் பற்றி, மணமகன் தன் வலது கட்டைவிரலைக் கொண்டு, அவளை ஏழு அடிகள் எடுத்து வைக்கச் செய்கிறான். இந்த ஏழு அடிகளையும் யோக பூமியாகப் பாவித்து அவற்றின் மூலம், அவளுடைய உயிரைத் தன் உயிரோடு சேர்த்து, ஓருயிராக இணைத்துக் கொள்கிறான். அப்போது சொல்லப்படும் மந்திரத்தின் பொருள்:

"ஏழு அடிகளைத் தாண்டிய நீ எனக்கு வாழ்க்கையில் தோழியாக வேண்டும். இதன்மூலம் நான் உன் நட்பை அடைகிறேன். நண்பர்களாகிய நாம் ஒருவிதமாகச் சங்கற்பம் செய்து கொள்வோம். நல்ல அன்புள்ளவர்களாகவும், ஒருவரை ஒருவர் விரும்பி நேசிக்கிறவர்களாகவும், உணவையும் - பலத்தையும் சேர்ந்து அனுபவிப்பவர்களாகவும், பரஸ்பரம் நல்ல ருசி உள்ளவர்களாகவும் வாழ்வோம். நமக்குள் எல்லா விதத்திலும் கருத்து ஒற்றுமை நிலவட்டும். இல்லற தர்மத்தை இணைந்து கடைப்பிடிப்போம். விரதங்களை சேர்ந்து அனுபவிப்போம். நான் ஸாமாவாக இருக்கிறேன்; நீ ருக்காக இருக்கிறாய். நான் மேலுலகமாக இருக்கிறேன்; நீ பூமியாக இருக்கிறாய். நான் சுக்கிலமாக இருக்கிறேன்; நீ சுக்கிலத்தை தரிப்பவளாக இருக்கிறாய். இவ்விதம் ஒற்றுமையாக வாழ்ந்து குழந்தைகளையும் - பிறசெல்வங்களையும் அடைவதற்காகவும், இன்சொல் உள்ளவளே நீ வருவாயாக!" என்று இந்த நிகழ்ச்சியில் மணமகன் மணமகளை அழைக்கிறான். இந்த மந்திரத்திற்கு 'ஸகா' என்று பெயர். மனோதத்துவ அடிப்படையில் ஒருவரையொருவர் சார்ந்தும் இணைந்தும் வாழத் தயார் செய்து கொள்கிறார்கள் இந்த அர்த்தமுள்ள சடங்கில்! 

திருமண சடங்கு

அம்மி மிதிப்பது:
அடுத்த சடங்கு அம்மி மிதிப்பது. மணமகன் மணமகளின் வலக்கால் கட்டைவிரலைப் பிடித்து, அக்னிக்கு வலதுபுறம் அம்மி மீது ஏற்றி வைக்கிறான். "இந்தக் கல்லின் மீது ஏறி நிற்பாயாக. இந்தக் கல்லைப்போல நீ மனம்கலங்காமல் உறுதியாக இருக்க வேண்டும். இல்லறவாழ்வில் உனக்கு ஏற்படும் இடர்களைப் பொறுத்துச் சகித்துக் கொள்ள வேண்டும். எது வந்தாலும் அசையாமல் ஏற்றுக்கொள்" என்று கூறி, மனோதத்துவ அடிப்படையில் அவளுக்கு மனோபலம் அளிக்கிறான். எந்த உலோகத்தையும்விடக் கல் உறுதியானது. வளைக்கவோ, உருக்கவோ முடியாதது. அதனால்தான் இந்த பாவனைக்கு மிக உறுதியான கல்லான அம்மியை வைத்து உபயோகிக்கிறார்கள்.

பொரியிடுதல்:
இன்னொரு முக்கியமான சடங்கு பொரியிடுதல் (லாஜ ஹோமம்). மணப்பெண்ணின் சகோதரன் பொரியைச் சகோதரியிடம் கொடுத்து அக்னியில் இடச் செய்கிறாள். கணவனின் நீண்ட ஆயுளுக்காகவும், புத்திசாலிகளான - ஆரோக்கியமான குழந்தைகளைப் பெறவும், ஒளிமயமான சூரியதேவனுக்குப் பிரார்த்தனை செய்யப்படுகிறது. இதில் பிள்ளை வீட்டாரின் சகோதரர்களையும் ஈடுபடுத்துவது, இரு குடும்பங்களும் இணைவதை உணர்த்துகிறது.

தாலி, சடங்குஅருந்ததி தரிசனம்:
அதன்பின் மணமக்கள் அருந்ததி தரிசனம் செய்கிறார்கள். இதன் பொருள் என்ன? சப்தரிஷிகளின்  ஒருவரான வசிஷ்டரின் மனைவி அருந்ததி. வானில் உள்ள நட்சத்திர மண்டலங்களில் சப்த ரிஷி மண்டலம் ஒன்று. வசிஷ்டர் முதலான சப்தரிஷிகளே நட்சத்திரங்களாகத் திகழ்கின்றனர். இந்த நட்சத்திரத் தொகுப்பில் வசிஷ்டர் நட்சத்திரத்துடன் இணைந்தாற்போல் இருக்கும் நட்சத்திரமே அருந்ததி. வாழ்க்கையில் எந்த நிலையிலும் ஒருவரை ஒருவர் பிரியாமல், இணைந்தே இருக்கவேண்டும் என்ற தத்துவத்தை உணர்த்துவதே அருந்ததி பார்க்கும் நிகழ்ச்சி. 

நிறைவாக, மணமக்களுக்குப் பெரியவர்கள் அட்சதை போட்டு ஆசி கூறுகிறார்கள். ஆசீர்வாதம் செய்ய வருபவர்களுக்கு பன்னீரும் - சந்தனமும் தருகிறார்கள், ஏன் தெரியுமா? இந்த மணமக்களைப் பற்றி சிலர் பல்வேறு காரணமாக பகை கொண்டிருந்தாலும், அந்த வினாடியில் கசப்பு மாறி, குளுமையாகவும் - இனிமையாகவும் ஆசி வழங்கத்தான் பன்னீர், சந்தனம், கற்கண்டு விநியோகம்.  

http://www.vikatan.com

  • தொடங்கியவர்

வரலாற்றில் இன்று: மார்ச் 18
 

article_1426652155-itphoto115573.jpg1913: கிறீஸ் நாட்டில் 50 வருடங்களாக ஆட்சியிலிருந்த மன்னர் முதலாம் ஜோர்ஜ் படுகொலை செய்யப்பட்டார்.

1921: போலந்துக்கும் சோவியத் யூனியனுக்கும் இடையில் இரண்டாவது சமாதான ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்டது,

1922: இந்தியாவில் மகாத்மா காந்திக்கு சிவில் ஒத்துழையாமை நடவடிக்கை காரணமாக 6 வருட சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது.

1937: லண்டன் பாடசாலை குண்டுவெடிப்பொன்றில் சுமார் 300 பேர் பலி.

1945: இரண்டாம் உலக யுத்தத்தில் பேர்லின் மீது 1250 அமெரிக்க விமானங்கள் குண்டுத் தாக்குதல் நடத்தின.

1953: துருக்கிய பூகம்பத்தில் 250 பேர் பலி.

1971: பெரு மண்சரிவில் 200 பேர் பலி.

1989: எகிப்தில் 4400 வருட பழைமையான மம்மி கண்டுபிடிக்கப்பட்டது.

1996: பிலிப்பைன்ஸ் இரவு விடுதி தீ விபத்தில் 162 பேர் பலி.

2003: பிரித்தானிய சைகை மொழி, பிரித்தானியாவின் உத்தியோகபூர்வ மொழிகளில் ஒன்றாக அங்கீகரிக்கப்பட்டது.

2003: ஐக்கிய அமெரிக்கா, ஈராக்க்குடன் போரை ஆரம்பித்தது. ஈராக்கின் மத்திய வங்கியில் இருந்து, 1 பில்லியன் டொலர்கள் பெறுமதியான பணம், சதாம் ஹுசேனினாலும் அவரது குடும்பத்தினராலும் எடுத்துச் செல்லப்பட்டது.

2003: தமிழீழ  விடுதலைப் புலிகளுக்கும் இலங்கை அரசாங்கத்துக்கும் இடையிலான் ஆறாம் சுற்றுப் பேச்சுக்கள், ஜப்பான் - ஹாக்கோன் நகரில் ஆரம்பமாயின.

.tamilmirror.lk

Edited by நவீனன்

  • தொடங்கியவர்

கலங்கவைக்கும் செல்லப் பிராணியின் பாசம்!

செல்லப் பிராணிகள் வளர்ப்பவர்களை, நிச்சயமாக இந்தச் செய்தி கண் கலங்க வைக்கும்.

980x2_08136.jpg

செல்லப் பிராணிகள், தன்னை வளர்ப்பவர்கள் மீது எவ்வளவு பாசம் வைக்கும் என்பதற்கு உதாரணமான சம்பவம், மலேசியாவில் நடந்துள்ளது. ஒரு கிராமத்தில், வயதான பெண்மணி ஒருவர் உடல்நலக் குறைவால் உயிரிழந்தார். அவரது இறுதிச் சடங்குக்காக வந்திருந்த உறவினர்கள், வாகனத்தில் சுடுகாட்டுக்குச் சென்றனர். அப்போது, அந்தப் பெண்மணி வளர்த்த பாபி என்ற நாயும் இரண்டு மைல் தூரம் வாகனத்தின் பின்னால் ஓடிச்சென்று சுடுகாட்டை அடைந்தது.

அங்கு, தன் எஜமானியின் உடல் அடக்கம் செய்யும் வரை அருகிலேயே இருந்துள்ளது. இந்தச் சம்பவம், அவரது உறவினர்கள் அனைவரையும் நெகிழவைத்துள்ளது.

‘ஒரு நாய், அதை வளர்ப்பவர்களுக்கு எவ்வளவு விசுவாசமாக இருக்கும் என்பதைப் புரிந்துகொண்டோம்’ என்று அந்தப் பெண்மணியின் உறவினர்கள் கூறினார்கள்.

http://www.vikatan.com

  • தொடங்கியவர்

காதலில் அசத்த பேச்சைக் குறைங்க... இதைப் பண்ணுங்க! #LoveEthics

‘இவ எப்பதான் வாய் திறந்து பேசுவாளோ’ என்பதற்கும், ‘இவ எப்படா பேச்சை நிறுத்துவாளோ’ என்பதற்கும் இடைப்பட்ட காலம்தான் காதல்..!

காதல்

‘கணவன் மனைவியை அடிச்சா பேப்பர்ல செய்தியா போடுறாங்க; மனைவி கணவனை அடிச்சா ஜோக்கா போடுறாங்க’ என்று காதல் பற்றியும், கல்யாணம் பற்றியும் எத்தனை வாட்ஸ்அப் காமெடிகள் வந்தாலும், லவ் என்னைக்குமே கிக்தான் பாஸ்! இதை லவ் பண்றவங்களிடம் கேட்டா தெரியும். சொல்லப் போனால், திருமணத்துக்குப் பிறகுதான் காதல் இன்னும் கிக் ஏற்றும். அதற்கு ஒரே ஒரு விஷயம்தான் நடுநாயகம்.. அது, புரிந்து கொள்ளல்.

காமெடிகள், சண்டைகள், விவாகரத்துகள் கிடக்கட்டும். இன்றும் 80 வயதுவரை உருக உருகக் காதலித்து வாழும் தம்பதியரை நீங்கள் நிச்சயம் எங்காவது பார்த்திருக்கிறீர்கள்தானே! இதற்குக் காரணம், புரிந்து கொள்ளல். இது நான்கைந்து பேர் சாட்சிக் கையெழுத்துப் போட்டு நடக்கும் காதல் கல்யாணத்துக்கும் பொருந்தும்; பெரியோர்களால் நிச்சயிக்கப்பட்டு உறவினர்கள் புடைசூழ நடக்கும் அரேஞ்ஜ்டு மேரேஜுக்கும் பொருந்தும்.

காதல் திருமணம் என்றாலும் சரி, நிச்சயிக்கப்பட்ட திருமணம் ஆனாலும் சரி, நமது வாழ்க்கைத் துணையைத் தேர்ந்தெடுப்பதில் சில புரிதல்கள் வேண்டும். பசங்களுக்கும் சரி; பொண்ணுங்களுக்கும் சரி; 'சமந்தா மாதிரி பெப்பியா இருக்கணும்; ராணா மாதிரி செக்ஸியா இருக்கணும்' என்று வெளியே சொல்ல வெட்கப்படுற அளவுக்கு மில்லியன் டாலர் ஆசைகள் மனசுக்குள்ள கொட்டிக் கிடக்கும். 

சரியான கலர்லயோ, தோற்றத்திலேயோ உங்கள் துணையைத் தேர்ந்தெடுப்பதிலொன்றும் வெற்றி அடங்கி விடாது மக்கா! நீங்கள் தேர்ந்தெடுத்த துணையை உங்களுக்குச் சரியானவராக மாற்றுவதில்தான் உங்கள் குடும்ப இன்பம் அடங்கியிருக்கிறது. அதற்குப் 'புரிந்து கொள்ளல்தான்' சரியான வழி. அந்தப் புரிந்துகொள்ளலுக்கு ஒரு ஈஸி வழி இருக்கிறது. அது எழுத்து! சுருக்கமா சொன்னா, பேச்சைக் குறைச்சுட்டு, எழுத ஆரம்பிக்கிறது உங்க லவ்வை ஸ்ட்ராங் ஆக்கும்.

போன் மூலமோ, சினிமா தியேட்டர் ஓரத்தில் உட்கார்ந்தோ பேசிக் கழிப்பதைவிட, உங்கள் எண்ணங்களை எழுத்துகளாக்கிப் பாருங்கள். ‘மனிதர் உணர்ந்து கொள்ள...’ என்று உங்களுக்கு நீங்களே 'கமல்' போல் கத்திப் பாட வேண்டும்போல் தோன்றும். ஆம், அன்பு வழியும் உங்களின் ஒவ்வொரு எழுத்துகளும்; படிப்பவருக்கும் செம கிக்! உங்களுக்கும் அடிக்கப் போகுது லக்! உங்களுக்காக கொஞ்சம்போல லவ் டிப்ஸ்..

காதல்

* உங்களுக்குத் துணையாக வரப்போகும் நபரை முதல் முறையாகச் சந்தித்தப் பிறகு, உங்களைப் பற்றி நேரில் பேசுவதை விட, சுருக்கமாக ஒரு இரண்டு பக்கங்களுக்கு எழுதிக் கொடுப்பது சிறப்பு. 'என்னது லெட்டரா? அச்சச்சோ'னு ஜெர்க் ஆகாதீங்க. (ஜென் Z லவ்வர்ஸுக்கு இ-மெயில், வாட்ஸ்-அப், ஃபேஸ்புக், ஆண்ட்ராய்டு போன் என்று எக்கச்சக்க ஆப்ஷன்கள் இருக்கின்றன.)

* 'மெசேஜ் அனுப்பி 50 நிமிஷம் ஆச்சு; இன்னும் ரிப்ளை வரலையே'னு அதற்கான பதிலை உடனே எதிர்பார்த்துக் காத்துக்கிட்டே இருந்தால், உங்களை மாதிரி அப்பாவிங்க யாருமே இல்லை. கடமையைச் செய்யுங்க; பலன் பின்னால வரும்.

* அடுத்த சந்திப்பில், என் வாழ்க்கைத் துணையிடம் நான் என்ன எதிர்பார்க்கிறேன் என்று தெரிவிக்கலாம். இந்தக் கடிதம் முதல், உங்கள் கேள்விகளுக்கான பதிலை நீங்கள் எதிர்பார்க்கலாம்.

* அடுத்த நிகழ்வில், துணையின் பதிலில் உள்ள சந்தேகங்கள்... மறு கேள்விகள், எதிர்க்கேள்விகளை ஆரம்பியுங்கள். 

* அடுத்து கொஞ்சம் இம்ப்ரூவ்மென்ட் வேண்டும். 3-ம், 4-ம் நபர்கள் பற்றி... பக்கத்து வீட்டு நாய்க்குட்டி பற்றி, உங்கள்/அவரின் பெரிய அப்பத்தா பற்றி, எடப்பாடி பற்றி என எப்படி வேண்டுமானாலும் புகுந்து விளையாடுங்கள். 

காதல் திருமணமோ, நிச்சயத் திருமணமோ.. வாழ்க்கைத் துணையைத் தேர்வு செய்யும் முன், முதல் ஒரு வாரம் முதல், ஒரு மாதம் வரை இது போன்ற உரையாடல் நிகழ வேண்டும். நீங்கள் தொடங்கி வைத்தால் போதும், அது தானாய் நிகழும். இது ஒரு ஆரோக்கியமான விவாதத்துக்கு வழிவகுக்கும். கடிதம் என்றால், நாள் ஒன்றுக்கு அதிக பட்சம் 2-க்கு மேல் பரிமாறிக்கொள்ள வாய்ப்பு இல்லை. சோஷியல் மீடியா என்றால் ஒரு வாரத்துக்குக் குறைந்தபட்சம் 50 முதல் 100 தகவல்கள். இப்படியான உரையாடலில், யாரும் யாரையும் ஏமாற்ற வேண்டும் என்ற எண்ணமோ, நோக்கமோ இருக்க வாய்ப்பு மிக குறைவு. இருவரும் ஓரளவுக்காவது வெளிப்படையாகத் தகவல்களைப் பரிமாறிக்கொள்ள நேரும். இதில் முழுக்க முழுக்க வாழ்க்கைத் துணையின் முன்னுரிமைகள், எதிர்காலம், எதிர்பார்ப்புகள் தொடர்பான விவாதம் மட்டுமே மேலோங்கும். 

உங்களின் காமெடி சென்ஸ், சீரியஸ் தன்மை, பெண்கள் வேலைக்குச் செல்லும் நிகழ்வு, குழந்தை பெற்றுக்கொள்ளும் காலம், பெற்றோர்கள், உடன்பிறப்புகள், உறவினர்கள் என, சகலவித கேள்விகளுக்கும் பதில் காணும் களமாக இந்த உரையாடல்கள் திகழும். இந்த உரையாடல்களில் யாரையும் யாரும் திருப்திப்படுத்த வேண்டும், நோகடிக்க வேண்டும் என்று எண்ணம் இல்லாமல், நேரடியாகப் பொறுமையாக பதில் கிடைக்கும் வாய்ப்பு ஒன்று உருவாகும். உணர்வுகள், உத்தியோகம், கடவுள் பக்தி, வசதி வாய்ப்பு, உடல் நலம், பழக்க வழக்கம், விருப்பு-வெறுப்பு என சகல விஷயங்கள் பற்றியும் பேசிப் பாருங்களேன்!?

நேரடி உரையாடலைவிட இதுபோன்ற எழுத்துப் பரிமாற்றம், செமயாக ஒர்க்-அவுட் ஆகும்!

உங்கள் காதல் வாழ்வு என்றென்றும் ஜொலிக்க... இப்போதே பேனாவையோ, போனையோ எடுத்து, ‘ஹாய் செல்லம்’ என்று ஆரம்பியுங்களேன்..! 

ஆல் த பெஸ்ட் பாஸ்!!

http://www.vikatan.com

 

  • தொடங்கியவர்

விண்வெளியில் மனிதன் முதன்முதலாக நடந்த தினம் (மார்ச். 18, 1965)

 

சோவியத் விண்வெளி வீரர் அலெக்சி லியோனொவ் வாஸ்கோத் 2 என்ற விண்கலத்தின் வெளியே சுமார் 12 நிமிடங்கள் நடமாடி விண்வெளியில் நடந்த முதல் மனிதன் என்ற பெயரை பெற்றார். அவர், 1965-ம் ஆண்டு மார்ச் மாதம் இதே நாளில் விண்வெளியில் நடந்து இந்த சாதனையை

 
 
விண்வெளியில் மனிதன் முதன்முதலாக நடந்த தினம் (மார்ச். 18, 1965)
 
சோவியத் விண்வெளி வீரர் அலெக்சி லியோனொவ் வாஸ்கோத் 2 என்ற விண்கலத்தின் வெளியே சுமார் 12 நிமிடங்கள் நடமாடி விண்வெளியில் நடந்த முதல் மனிதன் என்ற பெயரை பெற்றார். அவர், 1965-ம் ஆண்டு மார்ச் மாதம் இதே நாளில் விண்வெளியில் நடந்து இந்த சாதனையை படைத்தார். இவர் தற்போது பணி ஓய்வில் இருக்கிறார். இவரது சாதனையை பாராட்டி சோவியத் ஒன்றிய அஞ்சல் தலையில் இவர் விண்வெளியில் நடந்த உருவம் பொறிக்கப்பட்டுள்ளது. இரண்டு தடவை சோவியத் ஒன்றியத்தின் ஹீரோ என்ற விருதையும், லெனின் விருதையும் பெற்றுள்ளார்.

மேலும் இதே நாளில் நடந்த பிற நிகழ்வுகள்:-

* 1241 - போலந்தின் கிராக்கோவ் நகரம் மங்கோலியர்களினால் சேதமாக்கப்பட்டது.

* 1850 - அமெரிக்கன் எக்ஸ்பிரஸ் நிறுவனம் ஆரம்பிக்கப்பட்டது.

* 1913 - கிரேக்கத்தின் முதலாவது ஜார்ஜ் மன்னன் படுகொலை செய்யப்பட்டான்.

* 1944 - இத்தாலியில் வேசூவியஸ் மலை தீக்கக்கியதில் 26 பேர் கொல்லப்பட்டனர்.

* 1945 - இரண்டாம் உலகப் போர்: 1,250 அமெரிக்க குண்டுவீச்சு விமானங்கள் பெர்லின் நகரைத் தாக்கின.

* 1953 - மேற்கு துருக்கியில் இடம்பெற்ற நிலநடுக்கம் காரணமாக 250 பேர் கொல்லப்பட்டனர்.

* 1962 - அல்ஜீரிய விடுதலைப் போர் முடிவுக்கு வந்தது.

* 1971 - பெருவில் நிலச்சரிவு காரணமாக 200 பேர் கொல்லப்பட்டனர்.

* 1989 - எகிப்தில் 4,400 ஆண்டுகள் பழமையான பதனிடப்பட்ட உடல் பிரமிட் ஒன்றினுள் கண்டுபிடிக்கப்பட்டது.

* 1990- கிழக்கு ஜெர்மனியில் 1932 ஆம் ஆண்டுக்குப் பின்னர் முதற் தடவையாக தேர்தல் இடம்பெற்றது.

http://www.maalaimalar.com

  • தொடங்கியவர்

இன்பாக்ஸ்

 

35p1.jpg

 மெஸ்ஸி, நெய்மர், சுவாரெஸ் என ஏராளமான நட்சத்திரங்களைக்கொண்ட சூப்பர் கால்பந்து அணி, ஸ்பெயினின் பார்சிலோனா அணி. சாம்பியன்ஸ் லீக் தொடரில் அப்படிப்பட்ட அணி தோல்வியைத் தழுவினால் என்ன ஆகும்? ரசிகர்கள் அனைவரும் பதறிவிட்டார்கள். சாம்பியன்ஸ் லீக் தொடரின் நாக்அவுட் சுற்றின் முதல் போட்டியில் பார்சிலோனா அணியை பிரான்ஸ் நாட்டின் பி.எஸ்.ஜி அணி 4-0 என்ற கணக்கில் தோற்கடித்தது. ஐந்து முறை சாம்பியன் பட்டம் வென்ற பார்சிலோனாவுக்கு இது மிகப்பெரிய தலைக்குனிவாக இருந்தது. ரசிகர்கள் எல்லாம் இதைப் பெரிய அவமானமாக நினைத்துக்கொண்டிருக்க, இரண்டாவது போட்டியில் அதே பி.எஸ்.ஜி அணியை ஆறு கோல்கள் அடித்துத் தோற்கடித்து இழந்த பெருமையை மீட்டெடுத்திருக்கிறது பார்சிலோனா அணி. கடைசி ஏழு நிமிடங்களில் மட்டும் மூன்று கோல்கள் போட்டதை பி.எஸ்.ஜி அணி வாழ்நாளில் மறக்காது. நான் அடிச்சா தாங்க மாட்ட!


35p2.jpg

35p3.jpg

தான் இசையமைப்பாளராக அறிமுகமாகும் சந்தானத்தின் `சக்கபோடு போடு ராஜா' படத்துக்கு அத்தனை பாடல்களையும் இசையமைத்துப் பதிவுசெய்துவிட்டார் சிம்பு. சந்தானத்தின் இன்ட்ரோ பாடலை அனிருத்தும், இன்னும் இரண்டு பாடல்களை இசையமைப்பாளர்கள் யுவன் ஷங்கர் ராஜாவும் லியோன் ஜேம்ஸும் பாடியிருக்கிறார்கள். கூடவே ஒரு பாடலில் அப்பா டி.ஆரையும், அம்மா உஷாவையும் பாடவைத்திருக்கிறார் எஸ்.டி.ஆர். டண்டனக்கா..!


35p4.jpg

`காற்றுவெளியிடை' படத்துக்கு அடுத்து, சிரஞ்சீவியின் மகன் ராம்சரண் தேஜாவை இயக்குகிறார் மணிரத்னம். இந்தப் படம் முழுக்க முழுக்க ஆக்‌ஷன் படமாக இருக்கும் என்கிறார்கள். இந்தப் படத்தில் ராம்சரணோடு அர்விந்த் சுவாமியும் நடிக்க இருக்கிறாராம். படத்தை மணிரத்னத்தின் மெட்ராஸ் டாக்கீஸும், ராம்சரணின் தயாரிப்பு நிறுவனமும் இணைந்து தயாரிக்கின்றனவாம். இன்னோர் `அக்னிநட்சத்திரம்' பார்ர்ர்சேல்!



35p5.jpg

ர்வதேசப் பெண்கள் தினத்துக்காக, அமெரிக்க வால் ஸ்ட்ரீட் மட்டுமே இரண்டு மில்லியன் டாலர் வரை செலவிட்டுள்ளது. இதில் ஹைலைட் விஷயம், வால் ஸ்ட்ரீட்டை அலங்கரிக்கும் `பாயும் எருது சிலை'யின் முன்பு நிற்கவைக்கப்பட்ட சிறுமியின் சிலை. முறைத்துக்கொண்டு நிற்கும் எருதின் முன், கம்பீரமாக இடுப்பில் கை வைத்துக்கொண்டு எருதை வைத்த கண் வாங்காமல் பார்க்கும் சிறுமியின் சிலை திறக்கப் பட்டுள்ளது. சுமார் ஒரு மாத காலத்துக்கு அங்கே அந்தச் சிலை நிற்கவைக்கப் பட்டிருக்குமாம். இது ஒரு பக்கம் என்றால், வால் ஸ்ட்ரீட்டுக்குப் போட்டியாக கூகுள் நிறுவனம் தனது டூடுளில் உலகின் முக்கியமான பல பெண்களை வரிசைப்படுத்தி சிறப்பு செய்தது. அமெரிக்காவின் முதல் பெண் பத்திரிகையாளர் இடா பெல்ஸ் தொடங்கி, முதல் பெண் விண்வெளி வீராங்கனை சாலி ரைட் வரை பலரின் பெயர் இடம்பெற்றிருந்த இந்தப் பட்டியலில், இந்தியாவிலிருந்து பிரபல நாட்டியக் கலைஞர் ருக்மினிதேவி அருண்டேல் பெயரும் இடம்பெற்றிருந்தது ஹைலைட். மகளிர் சக்தி!


35p6.jpg

 மைக்கேல் ஜாக்சன் இறந்து ஏழு ஆண்டுகள் ஆகிவிட்டன. அவருடைய `த்ரில்லர்' இசை ஆல்பத்தையும், அதில் வரும் `பீட் இட்'ஐயும் மறக்கவே முடியாது. இந்த இசை ஆல்பத்துக்கு இன்னமும் மவுசு குறையவே இல்லை. இன்றும் எல்லா ரெக்கார்டுகளையும் முறியடித்து, இந்த ஆல்பம்தான் முன்னணியில் இருக்கிறது. இதுவரை அமெரிக்காவில் மிக அதிகமாக விற்பனையான இசை ஆல்பம் இதுதான் என சமீபத்தில் அறிவித்திருக்கிறார்கள். கூடவே இந்த ஆல்பத்துக்கு Recording Industry Association of America (RIAA) அமைப்பு வைர விருது வழங்கி கௌரவித்திருக்கிறது. பீட் இட்!


டிக்கடி மேற்கூரை இடிந்து விழும் சென்னை விமானநிலையம்தான் இந்தியாவிலேயே அதிக வருமானம் ஈட்டும் நம்பர் 1 விமானநிலையம். கடந்த ஆண்டு மட்டும் 451 கோடி ரூபாய் வருமானம் ஈட்டியுள்ளது, சென்னை விமானநிலையம். சமீபத்தில் கட்டப்பட்ட ஹைதராபாத் மற்றும் பெங்களூர் விமானநிலையங்கள் நஷ்டத்தைச் சந்தித்திருக்கின்றன. சென்னைதான் கெத்து!

  • தொடங்கியவர்

நீலக் கடலில் டோரியின் சாகசத் தேடல்! #FindingDory

டோரி

Finding Nemo என்றோர் அட்டகாசமான அனிமேஷன் திரைப்படம் 2003-ம் ஆண்டு வெளிவந்தது. பிக்சார் அனிமேஷன் ஸ்டூடியோ உருவாக்கிய இந்தத் திரைப்படம், அந்த வருடத்தில் அதிக வசூலை ஈட்டிய திரைப்படமாக அமைந்தது. 2016-ம் ஆண்டு வெளியான Finding Dory  திரைப்படத்தை, ஒரு வகையில் அதனுடைய தொடர்ச்சி எனலாம். முந்தைய பாகத்தை பார்த்திருந்தால், இன்னமும் சுவாரசியமாக ரசிக்க முடியும். இல்லையென்றாலும், இந்தத் திரைப்படம் தனியாகவும் சுவாரசியத்தைக் கொண்டிருக்கிறது.

முதல் பாகத்தில் என்ன நடந்தது? தன் மனைவியை ஒரு கொடூரமான சீலா மீனிடம் இழந்த பயம் காரணமாக, ஒரே மகன் நீமோவை மிகவும் பத்திரமாக வளர்க்கிறது மர்லின் என்கிற மீன். அதீதமான இந்தப் பாதுகாப்பே ஒரு வகையில் ஆபத்துக்குக் காரணமாகிறது. பாதுகாப்பை மீறி ஒரு சாகசத்தில் ஈடுபட முயலும் குட்டி மீன் நீமோவை, மனிதர்கள் பிடித்துச் சென்றுவிடுகிறார்கள். நினைவாற்றல் குறைபாடுள்ள டோரி என்கிற நீல மீனின் உதவியுடன், தன் மகன் நீமோவை மர்லின் எப்படி தேடிக் கண்டுபிடிக்கிறது என்பதை Finding Nemo திரைப்படத்தில் மிக சுவாரசியமாகச் சொல்லியிருந்தார்கள்.

இரண்டாவது பாகத்தில் இதே அனிமேஷன் தோசையை திருப்பிப் போட்டிருக்கிறார்கள். இப்போது, தன் பெற்றோரைத் தேடுவது நீல மீன் டோரியின் முறை. மர்லின் மற்றும் நீமோவின் உதவியுடன், டோரி தன் பெற்றோரை எப்படித் தேடிக் கண்டுபிடிக்கிறது என்பதைச் சொல்லி இருக்கிறார்கள். இதுவும் வசூலை வாரிக் குவித்த திரைப்படம்தான்.

மர்லின் மற்றும் நீமோவோடு வாழ்ந்துகொண்டிருக்கும் டோரிக்கு, 'மாணிக் பாட்சா' போல தன் பழைய வாழ்க்கை அவ்வப்போது மங்கலாக நினைவுக்கு வருகிறது. கூடவே, பெற்றோர் பற்றிய ஏக்கமும். எனவே, தான் வாழ்ந்த பழைய இடத்தில் பெற்றோர்களைச் சந்திக்க ஆவேசமாகக் கிளம்புகிறது. நினைவுக் குறைபாடு உள்ள டோரியால் எப்படி தனியாகச் செல்ல முடியும்? மர்லினின் உதவியைக் கேட்கிறது. அது ஆபத்துகள் நிறைந்த பயணமாக இருக்கும் என்பதால், டோரியைத் தடுக்கிறது மர்லின். ஆனால், டோரி பிடிவாதம் பிடிப்பதால் தன் மகன் நீமோவை அழைத்துக்கொண்டு பயணிக்கிறது மர்லின். ஏனென்றால், மகனைப் பிரிந்திருக்கும் துக்கம் எத்தகையது என்பது மர்லினுக்குத் தெளிவாகத் தெரியும்.

சில வார்த்தைகள், பொருள்கள், இடங்கள் ஆகியவற்றைக் கண்டவுடன், டோரியால் சிறிது சிறிதாக தன்னுடைய பழைய விவரங்களை நினைவுகூர முடிகிறது. அந்தத் தடயங்கள் அடிப்படையில் அந்தச் சாகசப் பயணம் அமைகிறது. வழியில் கடல் ஆமைகள் இந்தக் குழுவுக்கு உதவுகின்றன. சில பல ஆபத்துக்களும் காத்திருக்கின்றன. டோரியின் அவசர உற்சாகத்தால், மர்லினும் நீமோவும் ஆபத்தில் சிக்கித் தப்பிக்கின்றன. இதனால் ஏற்படும் கருத்து வேறுபாட்டினால் பிரிவு ஏற்படுகிறது. தனியாகச் செல்லும் டோரி, மனிதர்களின் கைகளில் சிக்கிக்கொள்கிறது. அவர்கள் டோரியை ஓர் ஆராய்ச்சிக்கூடத்துக்கு எடுத்துச்செல்கிறார்கள். ஒரு மீன் காட்சியகத்தில் சேர்ப்பதற்கான அடையாள அட்டையை டோரியுடன் இணைக்கிறார்கள்.

டோரி

அந்த ஆராய்ச்சிக்கூடத்தில் 'ஹேங்க்' என்னும் ஆக்டோபஸ் இருக்கிறது. தான் நினைத்த வண்ணங்களிலும் உருவங்களிலும் மாறும் திறமையைக்கொண்டது. அந்த ஆக்டோபஸூக்கு சலிப்பான கடல் வாழ்க்கைக்கு மறுபடியும் செல்ல விருப்பமில்லை. காட்சியகத்தின் கூண்டில் இளைப்பாறி, தன் வாழ்நாளைக் கழிக்கவே விருப்பம். எனவே, டோரியின் அடையாள அட்டையைக் கவர நினைக்கிறது. 'என்னுடைய பெற்றோர்களைக் கண்டுபிடிக்க உதவி செய்தால், இதைத் தருகிறேன்' என்று டோரி பேரம் பேச, ஹாங்க் ஒப்புக்கொள்கிறது.

இன்னொரு பக்கம், மர்லினும் நீமோவும் பிரிந்துபோன டோரியை தேடிப் பயணிக்கிறார்கள். இரண்டு பக்கமும் நிகழும் இந்தத் தேடல் காட்சிகளை விறுவிறுப்பாகவும் சுவாரசியமாகவும் சொல்லியிருக்கிறார்கள். டோரியால் தன் பெற்றோர்களைக் கண்டுபிடிக்க முடிந்ததா, டோரியைத் தேடிச்சென்ற மர்லினும் நீமோவும் என்ன ஆனார்கள், இந்த சாகசப் பயணத்தில் என்னென்ன ஆபத்துகள், சுவாரசியங்கள், திருப்பங்கள் நிகழ்ந்தன என்பதை அற்புதமான காட்சிகளின் மூலம் ரசிக்க வைத்தவர்களின் உழைப்புக்கு மரியாதை செலுத்தியே ஆகவேண்டும்.

பிக்சார் அனிமேஷன் ஸ்டூடியோ குழுவின் அபாரமான கற்பனையையும் கடுமையான உழைப்பையும் எத்தனைப் பாராட்டினாலும் தகும். அத்தனை வண்ணமயமான காட்சிகள். ஏறத்தாழப் படத்தின் அனைத்துக் காட்சிகளும் நீருக்குள் நிகழ்வதால், நாமே கடலுக்குள் இருக்கும் பிரமை. இதுவரை புகைப்படங்களாகவும் சிறிய வீடியோக்களிலும் பார்த்த பலவகையான விநோத மீன்கள், அனிமேஷன் உபயத்தில் விதவிதமாக சேட்டை புரிகின்றன.

அரசியல்வாதிகளின் நாற்காலி போல எதற்காகவும் தங்களின் இடத்தை விட்டுத் தராத இரு கடற்சிங்கங்கள், பார்வைக்குறைபாடுள்ள வெள்ளை சுறா மீன், முட்டாள் வாத்து எனப் பல வகையான உயிரினங்கள் இந்தச் சுவாரஸ்யமான பயணத்தில் பங்குகொள்கின்றன. 'அதெல்லாம் இருக்கட்டும், ஆக்டோபஸால் எப்படி ஐயா பஸ்ஸை ஓட்டும்?' என்று கேள்வி எழும்பினால், நீங்கள் அனிமேஷன் திரைப்படங்களைப் பார்ப்பதற்கான தகுதியை இன்னமும் வளர்த்துக்கொள்ள வேண்டும் என்றே பொருள். சுறாக்களின் ஒலியை டோரி நகல் செய்வது, சுவாரசியமான கற்பனை. முந்தைய பாகத்திலும் இது இருந்தது. மீன்களால் நீரில் மட்டுமே உயிர் வாழ முடியும் என்பது நமக்குத் தெரியும். எனவே, நிலப்பரப்பைக் கடந்து வேறொரு நீர்ப் பகுதிக்கு மீன்கள் செல்லுமாறு காட்சிப்படுத்தி இருக்கும் ஒவ்வொரு ஐடியாவும் பிரமிப்பைத் தருகிறது.

அனிமேஷன் திரைப்படங்கள் பொழுதுபோக்கு நோக்குடனும், குழந்தைகளுக்கு உற்சாகமான காண் அனுபவத்தைத் தருவதற்காகவும் உருவாக்கப்படுவது என்றாலும், அதன் அடிநாதமாக ஒன்றுக்கு மேற்பட்ட நற்செய்திகள் ஒளிந்திருக்கும். அந்த நீதிகள் குழந்தைகளின் ஆழ்மனதில் படியும்போது, வருங்காலத்தில் மேம்பட்ட குடிமைச் சமூகமாக மலர்வதற்கு உதவும். முன்பெல்லாம் வீடுகளில் இருந்த பாட்டிகள் கதை சொல்லிக்கொண்டிருந்தார்கள். அந்தக் கலாச்சாரத்தை நாம் இழந்துவிட்டதால், அனிமேஷன் திரைப்படங்கள் அந்தப் பணியைச் செய்கின்றன எனலாம்.

Finding Dory திரைப்படத்தின் மூலமாகவும் இரு வகையான செய்திகள் அழுத்தமாக வெளிப்படுகின்றன. நம்முடைய சாதாரணமான பார்வையில் சில நபர்களைக் குறைபாடுள்ளவர்களாக பார்க்கிறோம்; கருதுகிறோம். உடல் சார்ந்தும் மனவளர்ச்சி சார்ந்தும் அவர்களால் இயல்பாக இயங்க முடியவில்லை என்று கருதுகிறோம். ஆனால், அவ்வாறு கருதப்படுகிறவர்கள், மற்றவர்களிடம் இல்லாத பிரத்யேகமான திறமைகள் அவர்களிடம் இருக்கும். அந்த மாதிரியான திறமைகளைக் கண்டடைவதற்கு நாம் உதவியாக இருந்தாலே போதும். உபத்திரவமாக இருக்க வேண்டாம். நினைவுக் குறைபாடு உள்ளதாகக் கருதப்பட்ட டோரியால்தான், பல்வேறு வகையான ஆபத்துக்களையும் தூரத்தையும் கடந்து, தன் இலக்கை அடைய முடிகிறது. டோரியைத் தேடும் மர்லினும் நிமோவும்கூட 'டோரியாக இருந்தால் என்ன செய்திருப்பாள்' என்று யோசித்துச் செயல்படும் வகையில் இந்த உத்தி பலன் தருகிறது.

ஓரிடத்தில் அடைபட்டு சொகுசான மனநிலையில் உறைந்திருப்பது ஒரு வகையில் சிறையே. அதற்கு மாறாக, அடுத்த நிமிடம் என்ன நிகழும் என்று அறியாத நிலையில் உள்ள பயணத்தை தொடர்வதில்தான் வாழ்க்கையின் சுவாரசியமே இருக்கிறது. டோரியின் மூலமாக ஆக்டோபஸ் இந்தப் படிப்பினையைக் கற்கிறது. குழந்தைகள் மட்டுமல்ல, பெரியவர்களும் பார்க்கத் தகுந்த சுவாரசியமான திரைப்படம் 'Finding Dory'.

Finding Dory -யின் டிரைலர்:

 

 

http://www.vikatan.com

  • தொடங்கியவர்

கிளிக் தொழில்நுட்ப காணொளி

விற்பனைக்கு வந்துள்ள ஸ்மார்ட்ஆடைகள், ரோபோவுக்கு குறுஞ்செய்தி அனுப்பும் வசதி, மனதால் கட்டுப்படுத்தப்படும் ரோபோ உள்ளிட்டவை அடங்கிய காணொளி

  • தொடங்கியவர்

அதிசயமான அபாய கட்டிடங்கள்

Desktop_3144952f.jpg
கட்டிடக் கலை நவீனமயமாகிவிட்டது. கட்டுமானத்தை எளிதாக்கப் புதிய புதிய நுட்பங்கள் பிறந்துவிட்டன. இந்த நுட்பத்தால் நம்மால் கற்பனைகூடச் செய்து பார்க்காத வகையில் பிரம்மாண்டமான வானுயரக் கட்டிடங்கள் இன்று கட்டப்படுகின்றன.
 
netherland_3144953f.jpg
ஆனால், இந்த நுட்பங்கள் கட்டப்படுவதற்கு முன்பே சீனாவில் ஒரு மலையின் இடையே கோயிலைக் கட்டியிருக்கிறார்கள் | வசகோ அப்பார்ட்மெண்ட்ஸ், நெதர்லாந்து

 

uae_3144954f.jpg
தத்தோங் நகரத்திலுள்ள இந்தக் கட்டிடம் பூமியிலிருந்து 246 அடி உயரத்தில் கட்டப்பட்டுள்ளது. இந்தக் கட்டிடம் 1500 ஆண்டுகள் பழமைகொண்டது. | கேபிட்டல் கேட், ஐக்கிய அரபு நாடுகள்

 

russia_3144955f.jpg
இந்தக் கட்டிடம் உலகின் அதிசயத்தக்க அபாயகரமான கட்டிட அமைப்புகளில் ஒன்றாகக் கருதப்படுகிறது.| சட்யாகெய்ன் ஹவுஸ், ரஷ்யா

 

japan_3144956f.jpg
இதே போல் உலகிலுள்ள அதிசயத்தக்க அபாயகரமான கட்டிட அமைப்பு கொண்ட கட்டிடங்கள் பல உள்ளன. அவற்றில் சிறந்த பத்துக்எ கட்டிடங்களைக் குறித்த ஒளிப்படத் தொகுப்பு இது | டக்காசுகி அன், ஜப்பான்
china_3144957f.jpg
ஹேங்கிங் டெம்பிள், சீனா

 

greece_3144961f.jpg
மீடியோராவில் மோனாஸ்ட்ரீஸ், கிரீஸ்
germany_3144960f.jpg
லிச்டென்ஸ்டீன் காஸ்டில், ஜெர்மனி
 
spain_3144959f.jpg
புயர்ட்ட டி யூரோபா, ஸ்பெயின்
paisa_3144958f.jpg
பைசா கோபுரம், இத்தாலி
  • தொடங்கியவர்

திருநங்கைகளுக்கான சர்வதேச அழகிப் போட்டி: தாய்லாந்தைச் சேர்ந்தவர் முடி சூடினார் (Photos)

 


திருநங்கைகளுக்கான சர்வதேச அழகிப் போட்டி: தாய்லாந்தைச் சேர்ந்தவர் முடி சூடினார் (Photos)
 

திருநங்கைகளுக்காக நடத்தப்படும் மாபெரும் அழகிப்போட்டி தாய்லாந்தின் பட்டாயா நகரில் நடைபெற்றுள்ளது.

உலகளவில் பிரபலம்வாய்ந்த இந்தப் போட்டியில் இம்முறை தாய்லாந்தைச் சேர்ந்த 24 வயதான ஜிராட்சயா ஸ்ரீமோங்கொலாவாவின் என்பவர் சர்வதேச அழகியாக முடி சூடியுள்ளார்.

இறுதிப் போட்டியில் 27 திருநங்கைகள் பங்குபெற்றிருந்தனர்.

திருநங்கைகளைப் போற்றும் வகையில், கடந்த 2004 ஆம் ஆண்டு முதல் இந்த போட்டிகள் நடத்தப்பட்டு வருகின்றன.

இதுவரை நடைபெற்ற போட்டிகளில் தாய்லாந்து 4 முறை வெற்றிவாகை சூடியுள்ளது.

தொடர்ந்து பிலிப்பைன்ஸ் 2 முறையும், வெனிசுலா, பிரேசில், தென் கொரியா, ஜப்பான், மெக்ஸிக்கோ மற்றும் அமெரிக்கா ஆகிய நாடுகள் தலா ஒரு முறையும் வென்றுள்ளன.

குறித்த போட்டியில் பங்குபெறும் திருநங்கைகள் பிறக்கும்போது கண்டிப்பாக ஆணாக பிறக்க வேண்டும், ஆனால் அவர்கள் ஏதேனும் ஒரு கட்டத்தில் பாலின மாற்று அறுவை சிகிச்சை மேற்கொண்டிருக்கலாம்.

இந்த ஆண்டின் அழகியாக வெற்றி பெற்றுள்ள ஜிராட்சயா ஸ்ரீமோங்கொலாவாவின் பல் மருத்துவத்தில் பட்டம் பெற்றவர்.

தற்போது மாடலாகவும் ஆடை வடிவமைப்பாளராகவும் செயற்பட்டு வருகின்றார்.

 

Share This

1489639150964 (1)

1489639150964 (2)

1489639150964 (3)

1489639150964 (4)

1489639150964 (5)

1489639150964

2

3

http://newsfirst.lk/

Edited by நவீனன்

  • தொடங்கியவர்
வரலாற்றில் இன்று: மார்ச் 19
 
 

article_1426739940-UStanksbaghdad.JPEG1279: யேமன் சமரில் மொங்கோலியர்கள் வென்றதால் சீனாவின் சோங் வம்ச ஆட்சி முடிவுக்கு வந்தது.

1915: புளூட்டோ முதல் தடவையாக புகைப்படம் பிடிக்கப்பட்டது. எனினும்  அது ஒரு கிரகமாக அங்கீகரிக்கப்படவில்லை.

1916:8 மெக்ஸிகோ புரட்சித் தளபதி பன்சோ வில்லாவை கைது செய்வதற்காக 8 அமெரிக்க விமானங்கள் கிளம்பின. அமெரிக்க வரலாற்றில் முதல் விமான தாக்குதல் பயணம் இது.

1932: சிட்னி துறைமுக பாலம் திறக்கப்பட்டது.

1944: ஹங்கேரி மீது ஜேர்மனி படையெடுத்தது.

1945: ஜேர்மனியின் தொழிற்சாலைகள், இராணுவ முகாம்கள், கடைகள், போக்குவரத்து தொழில்நுட்ப நிறுவனங்கள் அனைத்தையும் அழிக்குமாறு ஜேர்மன் சர்வாதிகாரி அடோல்வ் ஹிட்லர் உத்தரவிட்டார்.

1945: இரண்டாம் உலகப் போர்- ஜப்பானில் யூ.எஸ்.எஸ் பிராங்கிளின் என்ற அமெரிக்க விமானம் தாங்கிக் கப்பல் மூழ்கடிக்கப்பட்டதில், 800 பேர் கொல்லப்பட்டனர்.

1972: இந்தியாவும் பங்களதேஷும், நட்புறவு ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்டன.

1982: போக்லாந்து போர் - ஆர்ஜெண்டீனியர்கள், தெற்கு ஜோர்ஜியா தீவில் தரையிறங்கினர்.

1988: இந்திய அரசாங்கத்திடம் நீதி கோரி, உண்ணா நோன்புப் போராட்டத்தை, அன்னை பூபதி தொடங்கினார். நீதி வழங்காத நிலையில், ஏப்ரல் 19இல் மரணத்தைத் தழுவினார்.

2002: ஐக்கிய அமெரிக்காவின் ஆப்கானிஸ்தான் மீதான படையெடுப்பு முடிவுக்கு வந்தது.

2002: பொதுநலவாய அமைப்பிலிருந்த ஸிம்பாப்வே நீக்கப்பட்டது.

2003: ஈராக்கிற்கு எதிராக யுத்தத்தை ஆரம்பிக்குமாறு அமெரிக்க ஜனாதிபதி ஜோர்ஜ் டபிள்யூ புஷ் உத்தரவிட்டார்.

tamilmirror.lk

Edited by நவீனன்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.