Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இளமை புதுமை பல்சுவை

Featured Replies

  • தொடங்கியவர்

 

சேற்றில் சிக்கிய யானைகள்

கம்போடியாவிலுள்ள அருகிவரும் ரக யானைகள் கூட்டம் தண்ணீர் குடிக்கச் சென்று சேற்றில் சிக்கி சிரமப்பட்டு மீண்டன.

  • Replies 11.3k
  • Views 1.5m
  • Created
  • Last Reply
  • தொடங்கியவர்

Bild könnte enthalten: 2 Personen, Personen, die stehen und Bart

 
 
தந்தை செல்வாவின் பிறந்தநாள்.

தமிழரசுக் கட்சியின் ஸ்தாபகத் தலைவர் - தமிழர் விடுதலைக் கூட்டணி என்ற பறந்து, விரிந்த தமிழ் பேசும் கட்சிகளின் கூட்டணியின் கர்த்தா - தமிழ் மக்களின் அரசியல் பாதையின் மிக முக்கிய தீர்க்க தரிசனத் தலைவராக விளங்கிய S.J.V.செல்வநாயகம் அவர்களின் பிறந்தநாள்.

இவர் வழிநடத்திய அரசியலில் செல்வா - டட்லி (சேனநாயக்க) ஒப்பந்தம், செல்வா - பண்டா(ரநாயக்க) ஒப்பந்தம் ஆகியவை நடைமுறைப்படுத்தப்பட்டிருந்தால் இந்த நாடு இரத்தக்களறியாகாமல் எம்மின மக்களும் நிம்மதியாக வாழ்ந்திருப்பார்.

இலங்கை அரசியலில் தந்தை செல்வாவுக்கு என்றும் தனியிடம் இருக்கும்.
  • தொடங்கியவர்

அந்தரத்தில் ஐந்து பல்டிகள்: புதிய உலக சாதனை

பனிச்சறுக்கு விளையாட்டில் புதிய உலக சாதனை படைத்திருக்கிறார் ஆண்ட்ரி ரகெட்லி.

  • தொடங்கியவர்

முள்ளம்பன்றியை உண்ண முயற்சித்த பாம்பிற்கு நேர்ந்த கதி..! (காணொளி இணைப்பு)

 

snake.jpg

 

 

முள்ளம் பன்றி ஒன்றை பிடித்து உண்ணுவதற்கு முயற்சித்த மலைப்பாம்பு ஒன்று, முள்ளம் பன்றியின் தாக்குதலுக்கு இலக்காகியுள்ள காணொளி ஒன்று வெளியாகியுள்ளது. அதாவது பாம்பின் உடல் முழுவதும் பன்றியின் முற்கள் காணப்படுவதும் அது வலியால் துடிப்பதுமான காணொளியே வெளியாகியுள்ளது.

குறித்த சம்பவம் பிரேசிலில் உள்ள கிராமபுர பகுதியில் இடம்பெற்றுள்ளது.

இதேவேளை முள்ளம் பன்றியின் தாக்குதலுக்கு இலக்கான குறித்த பாம்பு மீண்டும் நாய் ஒன்றிடம் மாட்டிக்கொள்வதும் நாயிடம் இருந்து விடுபட போராடுவதுமான காட்சியும் அக்காணொளியில் பதிவாகியுள்ளது.

 

http://www.virakesari.lk

  • தொடங்கியவர்

உலகின் மிகப் பெரிய பறவை!

 
ostrich_3148412f.jpg
 
 
 

பறவைகளில் மிகப் பெரியது தீக்கோழி என்றழைக்கப்படும் நெருப்புக்கோழி. அந்தப் பறவை பற்றிய சுவையான தகவல்களைத் தெரிந்துகொள்வோமா?

> நெருப்புக்கோழிகளில் 3 இனங்கள் உள்ளன. இந்தப் பறவை ஏழு அடி முதல் எட்டு அடி உயரம் வரை வளரும். சுமார் 130 கிலோ எடை வரையில் இருக்கும்.

> சுமார் 12 கோடி ஆண்டுகளுக்கு முந்தைய நெருப்புக்கோழி எலும்புகளின் படிவங்கள் கிடைத்துள்ளன.

> ஆண் நெருப்புக்கோழிகள் கறுப்பு நிறத்திலும் பெண் நெருப்புக்கோழிகள் பழுப்பு நிறத்திலும் காணப்படும்.

> நெருப்புக்கோழிகளின் கால்களில் 2 விரல்கள் மட்டுமே இருக்கும்.

ostrich_2_3148413a.jpg

> நெருப்புக்கோழியால் மணிக்கு 70 கி.மீ. வேகத்தில் தொடர்ந்து 45 நிமிடங்களுக்கு ஓட முடியும். மனிதரைக்கூடச் சுமந்துகொண்டு ஓடும் அளவுக்கு வலுவுள்ளது. ஆனால், இந்தக் கோழிக்குப் பறக்கத் தெரியாது.

> பழங்கள், கொட்டைகள், பூச்சிகள், சிறிய ஊர்வன இனங்களை நெருப்புக்கோழி விரும்பி சாப்பிடும்.

> கும்பல் கும்பலாகக் காணப்படும் நெருப்புக்கோழிகளில் பெண் நெருப்புக்கோழிகளே தலைமை வகிக்கும்.

> நெருப்புக்கோழிகள் வால் பகுதியை ஆட்டியும், தலையை அசைத்தும் தங்களுக்குள் தகவல்களைப் பரிமாறிக் கொள்ளும்.

> உலகிலேயே மிகப் பெரிதாக முட்டை இடுவது நெருப்புக்கோழிகள்தான். இந்த முட்டை 2 டஜன் கோழி முட்டைகளுக்குச் சமம்.

> முட்டையிலிருந்து 40 - 42 நாட்களில் குஞ்சுகள் வெளிவரும்.

> நெருப்புக்கோழியின் ஆயுள் காலம் சராசரியாக 45 ஆண்டுகள்.

> உலகமெங்கும் சுமார் 20 லட்சம் நெருப்புக்கோழிகள் இருப்பதாகக் கணக்கிடப்பட்டுள்ளன.

http://tamil.thehindu.com

  • தொடங்கியவர்

தென் ஆபிரிக்காவின் புதிய அழகுராணி

 

17523042_992806734183796_533570381478311140_n

தென் ஆபி­ரிக்­காவின் புதிய அழ­கு­ரா­ணி­யாக டெமி லீ நெல் பீட்டர்ஸ் தெரி­வு ­செய்­யப்­பட்­டுள்ளார்.

தென் ஆபி­ரிக்­காவின் தேசிய அழ­கு­ராணிப் போட்­டி­யான மிஸ் சௌத் ஆபிரிக்கா 2017 போட்­டி­களின் இறுதிச் சுற்று நேற்­று ­முன்­தினம் தென் ஆபி­ரிக்­காவின் சன் சிட்டி நகரில் நடை­பெற்­றது.

இதில் டெமி லீ நெல் பீட்டர்ஸ் முத­லிடம் பெற்றார். 21 வய­தான டெமி லீ வர்த்­தக முகா­மைத்­துவப் பட்­ட­தா­ரி­யாவார்.

எதிர்­வரும் உலக அழ­கு­ராணிப் போட்­டி­யிலும் பிர­பஞ்ச அழ­கு­ராணிப் போட்­டி­யிலும் தென்­ ஆ­பி­ரிக்­காவின் சார்பில் இவர் பங்­கு­பற்­ற­வுள்ளார்.

தென் ஆபி­ரிக்க அழ­கு­ராணிப் போட்­டியில் கேப் டவுன் இரா­ணுவ வைத்­தி­ய­சா­லையில் பணி­யாற்றும் மருத்­து­வர்­க­ளான அதேவான்ஹீர் தென் இரண்டாமிடத்தையும், பொய்பெலோ மாபே 3 ஆம் இடத்தையும் பெற்றனர்

 

1

 

2

 

3

 

e9f1f31037e64f37a68f17112d42ce4f

http://metronews.lk/

  • தொடங்கியவர்

முதல் பெண் போர் அதிகாரி..!

இந்திய எல்லை பாதுகாப்புப் படையின் 51 கால வரலாற்றில் முதன்முறையாக ஒரு பெண் போர் பிரிவு அதிகாரியாகத் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

tanu

இந்திய நாட்டின் மிகப்பெரிய எல்லை பாதுகாப்புப் படையில் ஓர் பெண் போர் அதிகாரி பதவியேற்பது இதுவே முதல்முறை. 25 வயதான தனுஸ்ரீ பரிக் ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்தவர். 2014-ம் ஆண்டில் நடந்த யூபிஎஸ்சி தேர்வில் தேர்வாகி தற்போது பயிற்சியை நிறைவுசெய்தவருக்கு மத்திய உள்துறை அமைச்சர் பதக்கம் வழங்கி கவுரவித்தார்.

2013-ம் ஆண்டிலிருந்து எல்லை பாதுகாப்புப் படையில் உயர் அதிகாரிகளாக பெண்களைத் தேர்வு செய்து வருகின்றனர். முதல் பெண் போர் அதிகாரியாக அறிவிக்கப்பட்டிருக்கும் தனுஸ்ரீ பஞ்சாப் எல்லையிலுள்ள இந்தோ-பாகிஸ்தான் எல்லையில் பணி அமர்த்தப்பட்டுள்ளார்.

 

 

 

டெல்லியில் இருந்து சென்னைக்கு வந்த இதயம்..!

heart harvest

இதய மாற்று அறுவை சிகிச்சைக்காக டெல்லியிலிருந்து சென்னைக்கு இதயம் கொண்டு வரப்பட்டு வெற்றிகரமாக அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. டெல்லியிலிருந்து சென்னை வரை சுமார் 2000 கிலோ மீட்டர் தூரத்திற்கு இதயத்தைக் கொண்டு வருவது இந்தியாவிலேயே இதுதான் முதல்முறையாகும். இந்திய விமானப்படையில் பணியாற்றிய ஒருவர் செவ்வாயன்று நடைபெற்ற சாலை விபத்தின் காரணமாக டெல்லியில் உள்ள ஆர்.ஆர்.ராணுவ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். மருத்துவமனையில் சிகிச்சை பலனில்லாத நிலையில், மூளைச்சாவு அடைந்தார். அவரது உறவினர்கள் உடல் உறுப்பு தானம் செய்வதற்கு முடிவு செய்தனர்.

அதேநேரத்தில் சென்னை பெரும்பாக்கத்தில் உள்ள கிளிநகல்ஸ் கிரின் மருத்துவமனையில் உள்ள ஒருவருக்கு இதயம் தேவைப்பட்டுள்ளது. எனவே அவருடைய இதயத்தை டெல்லியில் இருந்து சென்னை கொண்டு வருவதற்கு முடிவு செய்யப்பட்டது. இதய மாற்று அறுவை சிகிச்சையைப் பொறுத்தவரையில், உடலிலிருந்து இதயம் எடுக்கப்பட்டு ஆறு மணி நேரத்துக்குள் மாற்று உடலில் அதனைப் பொருத்தி விட வேண்டும். எனவே டெல்லியில் இருந்து 2000 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள சென்னைக்கு கொண்டு வருவது மிகுந்த சவாலான விஷயமாக பார்க்கப்பட்டது.

மிகவும் துல்லியமான திட்டமிடலால் இதயம் பத்திரமாக குறிப்பிட்ட நேரத்தில் சென்னை மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டது. மதியம் 2 மணிக்கு மேல் உடலிலிருந்து எடுக்கப்பட்ட இதயம் ஜெட் ஏர்வேஸில் மாலை 4.12 மணிக்கு டெல்லியில் இருந்து புறப்பட்டு 6.50 மணிக்கு சென்னை விமான நிலையத்தை அடைந்தது. அங்கிருந்து 36 நிமிடங்களில் 7.26 மணிக்கு பெரும்பாக்கத்தில் உள்ள கிளிநகல்ஸ் மருத்துவமனையை அடைந்தது. அதன்பிறகு இதய அறுவை சிகிச்சை நிபுணர்கள் மூலம் அறுவை சிகிச்சை வெற்றிகரமாக நடைபெற்றது.

 

 

 

http://www.vikatan.com

  • தொடங்கியவர்

இன்பாக்ஸ்

 

36p1.jpg

`இந்த ஆண்டு டென்னிஸில் ஃபெடரர் ஆண்டு' என உற்சாகமாகிறார்கள் அவரது ரசிகர்கள். ஆஸ்திரேலிய ஓப்பனில் நடாலை வீழ்த்தி ஃபார்முக்கு வந்த டென்னிஸ் புயல் ரோஜர் ஃபெடரர், அடுத்து இண்டியன்வெல்ஸ் மாஸ்டர்ஸ் போட்டியில், உலகின் மூன்றாவது நிலை வீரரான வாவ்ரிங்காவை வீழ்த்தி, ஏ.டி.பி டென்னிஸ் வரலாற்றில் 90-வது சாம்பியன் பட்டத்தைக் கைப்பற்றியிருக்கிறார். ஜிம்மி கானோர்ஸ், இவான் லென்டிலுக்கு அடுத்தபடியாக அதிகமான பட்டங்களை வென்றவர் பட்டியலில் ஃபெடரர் மூன்றாவது இடத்தில் இருக்கிறார். ரோஜர்னா சும்மாவா!


36p2.jpg

பவர்ஃபுல் பெர்ஃபாமென்ஸ்கொண்ட படங்களில் மட்டுமே நடிப்பது என்ற முடிவில் இருக்கும் பார்வதி, இப்போது பாலிவுட்டுக்குள் நுழைகிறார். இந்தியில் இர்ஃபான் கான் நடிக்கும் படத்தில் பார்வதிதான் ஹீரோயின். ரோடு ட்ரிப்பில் சந்திக்கும் இருவர், காதலர்களாக மாறும் பயணமே படம். தனுஜா என்னும் பெண் இயக்குகிறார். லவ் ட்ரிப்!


36p3.jpg

கால்பந்து சூப்பர் ஸ்டார் லயோனல் மெஸ்ஸி பிறந்தது அர்ஜென்டினா என்றாலும் வளர்த்தது ஸ்பெயின் என்பதால், பார்சிலோனா நகரில் வசித்துவருகிறார். இவர் வீட்டுக்கும் பக்கத்துக்கு வீட்டுக்கும் எப்போதும் பஞ்சாயத்துதான். ஒரு கட்டத்தில் பக்கத்து வீட்டுக்காரர்கள் வீட்டை மேன்ஷன்போல மாற்றி வாடகைக்கு விட்டுவிட அளவுக்கு அதிகமான சத்தத்தால் கடுப்பாகியிருக்கிறார் மெஸ்ஸி. இதனால் பெரிய சுவர் ஒன்றை மெஸ்ஸி கட்ட, அது நகர விதிகளுக்கு மாறானது என விவகாரம் போலீஸ் ஸ்டேஷன் போக மெஸ்ஸி செம அப்செட். இறுதி முயற்சியாக பக்கத்து வீட்டுக்காரர்களுடன் சமாதானம் பேசி, அந்த் வீட்டை மொத்தமாக விலைக்கு வாங்கிவிட்டார் மெஸ்ஸி. சத்தத்திலிருந்து தப்பிக்க மெஸ்ஸி கொடுத்த விலை 20 கோடி ரூபாய். மெஸ்ஸி மனசையே நோகடிச்சிட்டாங்களே!


36p4.jpg

`கின்னஸ் சாதனைப் புத்தகத்தில், ராகுல் காந்தியின் பெயரைச் சேர்க்க வேண்டும்’ என்பதுதான் சமீபத்திய ட்ரெண்டிங் செய்தி. கடந்த ஐந்து ஆண்டுகளில், காங்கிரஸ் கட்சி 27 தேர்தல்களில் படுதோல்வியைச் சந்தித்திருக்கிறது. இத்தனை தேர்தல்களிலும் பிரசாரம் செய்த ராகுல் காந்தி, இந்தத் தோல்விகளுக்கு எல்லாம் பொறுப்பு ஏற்கும் வகையில் அவரது பெயரை கின்னஸ் சாதனை புத்தகத்தில் சேர்க்க வேண்டும் என கின்னஸுக்கு மெயில் அனுப்பியிருக்கிறார் ஒரு இன்ஜினீயரிங் மாணவர். கின்னஸ் நிர்வாகமும் `உங்கள் விண்ணப்பம் பரிசீலனையில் உள்ளது' என்று பதில் அனுப்பியிருக்கிறது. ராகுலோடு விளையாடுறதே வேலையாபோச்சு!


2019-ம் ஆண்டு பொதுத்தேர்தலுக்கு வாக்குப்பதிவு இயந்திரங்கள் வாங்க 9,200 கோடி ரூபாய் ஒதுக்கியுள்ளது மத்திய அரசு. ஒரு வாக்கு இயந்திரத்தின் விலை 7,700 ரூபாய். பாரத் எலெக்ட்ரானிக்ஸ், எலெக்ட்ரானிக்ஸ் கார்பரேஷன் ஆஃப் இந்தியா என்ற மத்திய அரசின் இரண்டு நிறுவனங்கள்தான் இந்த வாக்குப்பதிவு இயந்திரங்களைத் தயாரிக்கின்றன!  ஆல் தி பெஸ்ட்!


உலக நிறுவனங்களிடம் இருந்து முதலீடுகளை தங்கள் மாநிலத்துக்குக் கொண்டுவர அதிகம் செலவழிக்கும் மாநிலங்களில் ஜார்கண்டும் ஆந்திராவும் கடுமையாக மோதுகின்றன. ஜார்கண்ட் மாநிலம் முன்னாள் கிரிக்கெட் கேப்டன் மகேந்திர சிங் தோனியை விளம்பரத் தூதுவராக நியமித்து 48 கோடி ரூபாய்க்கு அவரை வைத்துமட்டுமே பத்திரிகைகளில் விளம்பரங்கள் செய்துள்ளது. டிஜிட்டல் ஸ்டேட் என்பதால் ஆந்திர முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு பல நூறு கோடி ரூபாய்களை டிஜிட்டல் விளம்பரங்களுக்காகச் செலவிட்டிருக்கிறார். விளம்பர முதலீடு! 

  • தொடங்கியவர்

அரசியல் பொழுதுபோக்கு அல்ல
 
 
 
 

article_1490675434-index.jpgபதவிக்காகக் கைகோர்ப்பார்கள்; பின்னர் பதவிகளைக் கைப்பற்ற முடியாது விட்டால், பதவிகளைப் பெற்றவர்களுடன் நாடாளுமன்றத்தில் கைகலப்பில் ஈடுபடுவார்கள்.

இந்த அரிய காட்சிகளைத் தொலைக்காட்சியூடாகப் பார்க்கும் மக்கள் தலையில் கைவைப்பார்கள்; ஆனாலும் இரசிப்பார்கள். 

இதில் வேடிக்கை என்னவெனில், இவர்கள் எல்லாம் ஒழுக்கம் பற்றியெல்லாம் மக்களுக்குப் பாடம் கற்பிப்பார்கள். இந்தப் போலி அரசியலை, அரசியல்வாதிகளை மக்கள் அடிக்கடி உருவாக்கி ஏமாந்து போய்விடுவார்கள்.

இன்னமும் அரசியலில் விழிப்புநிலை உருவாகவில்லை. ஒழுக்கம் சார்ந்த அரசியல் மனப்பாங்கு இல்லாதவரை எந்த நாடும் உருப்படப் போவதில்லை. 

பிரச்சினைகளைத் தீர்க்கும் துணிச்சல் இல்லாதவர்களைப் பொதுமக்கள் தூக்கி எறிய வேண்டும். அரசியல் பொழுதுபோக்கு அல்ல; மக்கள் வாழ்வின் ஆதாரம்.

முன்னேற்றம், நல்ல அரசியலால்த்தான் உருவாகும். 

Edited by நவீனன்

  • தொடங்கியவர்

‘குழந்தைகளை விரும்பும் புத்தகமில்லா காட்டுப் பள்ளி’ குக்கூ உருவான கதை..!

ம் காதுகளை நிறைக்கும் குயிலின் இன்னிசையே ‘குக்கூ’. குழந்தைகள் மனதில் அந்த இனிமையை உணர வைப்பதுதாம் குக்கூ காட்டுப்பள்ளியின் நோக்கம்...ஈரோடு அரச்சலூரை சேர்ந்த சிவராஜ்.. இவரது நண்பர்கள் பீட்டர், ராஜாராம், அழகேஸ்வரி என இந்த நட்பு வட்டத்தில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட கரங்கள் இணைய 'குக்கூ' பலப்பட்டது. ஒவ்வொருவரும் அவரவர் வாழும் பகுதியில் உள்ள குழந்தைகளுக்கு ஓவியம், நாடகம் பயிற்சிப் பட்டறைகள், சிறந்த ரோல் மாடல் மனிதர்களை அறிமுகம் செய்வது..என குக்கூ தனது பயணத்தை துவங்கியது.

குக்கூ குக்கூ அழகேஸ்வரிகுக்கூ

திருவண்ணாமலை மாவட்டத்தின் ஜவ்வாது மலைப்பகுதியில் உள்ள நெல்லிவாசல் மலை கிராமத்தில் இவர்கள் நடத்திய நான்கு நாள் பயிற்சிப் பட்டறையில்... மலைக்கும் குழந்தைகளுக்கும் உள்ள மிக நெருங்கிய தொடர்பை புரிய வைத்தார்கள். இதுதான் குக்கூ தன்னார்வலர்களின் மனதில் காட்டுப் பள்ளிக்கான விதை விட்ட நேரம். மேற்கொண்டு பேசுகிறார் காட்டுப் பள்ளியின் தன்னார்வலரான அழகேஸ்வரி.

''தற்போது பள்ளிகளில் புத்தகம், மதிப்பெண் என்பதை நோக்கியே என்று குழந்தைகளை பயணிக்க அனுமதிப்பதால் அவர்களின்  அறிவுத் தேடலுக்கான வாய்ப்புகள் குறைகிறது. விளைவு... அவர்கள் மனதில் தாழ்வுமனப்பான்மையை விதைக்கிறோம். என்ன படித்தோம்? எப்படி வாழப்போகிறோம்? என்ற பதைபதைப்புடனான கேள்விகளுடன் பள்ளியை விட்டு வெளியில் வருகின்றனர் குழந்தைகள். அரசு பள்ளியை நம்பியிருக்கும் ஆயிரக்கணக்கான குழந்தைகள் குறைந்த மதிப்பெண்ணுடன் வெளியில் வரும் காரணத்தால் கூலி ஆட்களாக மாற்றப்படுகின்றனர். இயல்பில் அவர்களுக்குள் புதைந்து கிடக்கும் திறமை வெளிப்படுத்த வாயப்பளிக்கப்படுவதில்லை. அவர்கள் மீது முட்டாள்கள் என்று முத்திரை குத்துவது எவ்வளவு அபத்தம். இதற்கான விடையைத் தேடத் துவங்கியதுதான் குழந்தைகள் மனதில் நாங்கள் பதிய காரணம். 

குக்கூவுக்கு என்று தலைமை, முதன்மை போன்ற பொறுப்பாளர்கள் இல்லை. ஒத்த கருத்தில் இணைபவர்கள், குழந்தைகளின் மகிழ்வுக்காக பணியாற்ற விருப்பம் உள்ளவர்கள் எங்களோடு கரம் கோர்த்தனர். அப்படிதான் ஜவ்வாது மலை அடிவாரத்தில் புலியானூர் கிராமத்தின் ஐந்தரை ஏக்கர் தரிசு நிலத்தில் குக்கூ காட்டுப் பள்ளி உருவாகியது. இயற்கையை காயப்படுத்தாமல் பள்ளிக்கான கட்டடங்கள் அமைக்க முடிவு செய்தோம். இளம் ஆர்கிடெக்டுகளுடன் இணைந்தோம். இந்திய அளவில் உள்ள குழந்தைகள் பலரிடமும் இருந்து பெற்ற ஒரு பிடி மண்ணால் அஸ்திவாரத்தை எழுப்பினோம்.  

அந்த நிலத்தில் உள்ள மண்ணில் செங்கற்களை உருவாக்கி சுடாமல் வெயிலில் காய வைத்து கட்டடம் கட்டும் பணிகள் ஆரம்பித்தது. குழந்தைகள் தங்கிக் கொள்ள சிறு குடில் அமைப்புகள் உருவாக்கப்பட்டது. பழமையான கோயில்கள், சிதலம் அடைந்த கட்டடங்கள், உதவாத தூண்கள், சேர்கள், நிலைப்படிகள், சுரைக்காய், தூக்கணாங்குருவிக் கூடு, பறவையின் உதிர்ந்த சிறகு எல்லாம் இணைந்து அறைகளை அலங்கரித்தது. 

குக்கூ

மீதமிருந்த வெற்று நிலத்தில் மரக்கன்றுகள் நடுவதும், கட்டடப் பணிகளும் நடந்தது. உபயோகமற்ற பொருட்களில் இருந்து விளையாட்டுப் பொருட்கள் உருவாக்குவது, பேப்பர் எப்படி உருவாகிறது, வட்டப்பாத்திகளில் காய்கறித் தோட்டம் போடுவது என பயிற்சி முகாம்கள் நடத்தினோம். வானம் பார்த்த பூமியில் பறவைகளோடும், நாய்க்குட்டிகளோடும் குழந்தைகள் விளையாடலாம். பூனைக்குட்டிகளை மடியில் அமர்த்தி நலம் விசாரிக்கலாம். ஓடையில் குளிக்கலாம். குளித்த ஈரத்தை வெயிலில் உலர்த்தலாம். ஓடிப்பிடித்து விளையாடலாம். இசைக்கலாம்... குழந்தைகள் தனக்கு பிடித்ததெல்லாம் செய்தபடியே வாழ்வைக் கற்றுக் கொள்ள ஒரு வாய்ப்பளித்தால் எந்த உயரத்தையும் தொட முடியும். மாற்றுத் திறன் குழந்தைகளோடு பெற்றோரும் இந்த பயிற்சி பட்டறைகளில் குழந்தைகளோடு குழந்தைகளாகின்றனர். இப்படியொரு வாய்ப்பை நம்  குழந்தைகளுக்கு வழங்கினோம்.

வழக்கமான அட்மிஷன், அட்டண்டன்ஸ் என எந்த அழுத்தமும் இங்கு உள்ள குழந்தைகளுக்கு இல்லை. இந்தப் பள்ளியை துவங்கி வைத்து குழந்தைகளிடம் ஒப்படைத்தார் அரவிந்த் குப்தா. குழந்தைகளுக்காக பல்வேறு தளங்களில் இயங்கி கொண்டிருக்கும் தன்னார்வலர்களே இங்கு வந்து பயிற்சியளிக்கிறார்கள். குழந்தைகளுக்கு இங்கு வாழ கற்றுக் கொடுக்கப்படுகிறது" என்று செவிகளில் மகிழ்ச்சியை இறைக்கிறார் அழகேஸ்வரி. 

http://www.vikatan.com

  • தொடங்கியவர்

சுவாரசியமளிக்கும் சிலைகள்

 
BGs_3147270f.jpg
உலகப் புகழ்பெற்ற ஸ்பானியக் காவியம் டான் குயிஸாட். அதன் நாயகன் டான் குயிஸாட் அவனது நண்பனான சான்கோபான்சாவுடன் இணைந்து செய்யும் வேடிக்கைகள் சுவாரசியமானவை.
 
 
norway_3147267f.jpg
ஒரு விநோதமான விலங்கு என நினைத்து காற்றலையுடன் சண்டையிடக் கிளம்பும் சாகசப் பிரியர்கள் இவர்கள். இவர்கள் இருவருக்கும் ஸ்பெயின் தலைநகர் மாட்ரிட்டில் சிலை வைத்திருக்கிறார்கள். | ஆங்கிரி பேபி, நார்வே
sigmund_3147266f.jpg
இதுபோல பிரெஞ்சு எழுத்தாளர் மர்செல் அய்மே எழுதிய ஒரு சிறுகதை, ‘A Man Goes Through the Wall’ உலகப் பிரசித்திப்பெற்றது. அதை நினைவூட்டும்படி ஒரு சிலையை பிரான்சில் பாரீஸில் வைத்திருக்கிறார். | சிக்மண்ட் பிராய்ட்-ஹேங்கிங் அவுட், செக்குடியரசு
 
check_3147265f.jpg
இப்படிச் சுவாரசியமூட்டும் சிலைகளின் ஒளிப்படத்தொகுப்பு இது | க்ரவலிங் சைல்டு, செக்குடியரசு

 

spain_3147264f.jpg
டான் குயிஸாட், சான்சோபான்சா, ஸ்பெயின்
 
america_3147269f.jpg
தாட்ஸ் டிஸ்டர்ப்டு, அமெரிக்கா
france_3147268f.jpg
மர்செல் அய்மே ‘த மேன் கோஸ் த்ரோ த வால்’, பிரான்ஸ்
 
 
 

 

http://tamil.thehindu.com

  • தொடங்கியவர்

670 கோடி செலவில் தங்க முலாம் சட்டகமமைக்கும் டுபாய்..!

 

சுற்றுலாப்பயணிகளை கவர்வதற்காக சுமார் 670 கோடி செலவில் டுபாய் நகரின் மத்தியில், அரைவாசி ஈபிள் கோபுரத்தின் உயரத்தை ஒத்த தங்க முலாம் பூசப்பட்ட புகைப்பட சட்டகமொன்றை டுபாய் அரசு அமைத்துள்ளது.

dubai.jpg

தங்க முலாம் பூசப்பட்ட குறித்த புகைப்பட சட்டமானது, 160 மீற்றர் உயரத்திலும் 93 மீற்றர் அகலத்திலும் அமைக்கப்பட்டுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் தகவல் பகிர்ந்துள்ளன.

3EC5B46100000578-4364798-image-m-12_14903EC59EEF00000578-4364798-image-m-10_1490

மேலும் நகரின் முழுத்தோற்றத்தையும் பிரதிபலிக்கும் வகையில் குறித்த புகைப்பட சட்டகம் அமைக்கப்பட்டுள்ளதாகவும், பழைய வடக்கு டுபாய் மற்றும் புதிய தெற்கு டுபாய் உள்ளிட்ட இரு நகர்ப்பகுதிகளின் தோற்றத்தை முழுமையாக குறித்த சட்டகத்திற்குள் புகைப்படமாக வகையில் அமைக்கப்பட்டுள்ளது.

3EC54E7100000578-4364798-image-a-17_1490

3EC5128B00000578-4364798-image-a-7_14908

அத்தோடு சுற்றுலாப்பயணிகளை ஈர்ப்பதற்காக டுபாய் மாநகர சபையால் வடிவமைக்கப்பட்டுள்ள குறித்த புகைப்பட சட்டகத்தினுடாக வருடமொன்றிற்கு சுமார் 20 இலட்சம் சுற்றுலாப்பயனாளர்களை எதிர்பார்ப்பதாக மாநகர சபை அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது. 

http://www.virakesari.lk

  • தொடங்கியவர்

மாணவர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த ஆசிரியை!

 

 

பாடசாலை மாணவர்கள் அனைவருக்கும் துவிச்சக்கர வண்டி வாங்கிக் கொடுக்க விரும்பிய ஒரு ஆசிரியை செய்த செயல் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

4_V_Cycles.jpg

அமெரிக்காவின் தெற்கு கரோலினாவைச் சேர்ந்த சிறுவர் பாடசாலை ஆசிரியை கேட்டி ப்ளொம்குவிஸ்ட். கேட்டி பணியாற்றும் பாடசாலையில் வசதி குறைந்த குடும்பங்களைச் சேர்ந்த சுமார் 650 சிறார்கள் கல்விகற்று வருகிறார்கள்.

கடந்த வருடம் மாணவன் ஒருவன், கேட்டியிடம் தனக்கு துவிச்சக்கர வண்டி என்றால் மிக விருப்பம் என்றும், வறுமையிலுள்ள தன் குடும்பத்தினரால் தனது விருப்பத்தைப் பூர்த்தி செய்ய முடியாதுள்ளது என்றும் கூறியுள்ளான். இதைக் கேட்டு வருந்தி கேட்டி, தனது மாணவர்கள் அனைவருக்கும் துவிச்சக்கர வண்டிகளை வாங்கிப் பரிசளிக்க வேண்டும் என விரும்பினார்.

இதற்காக, கடந்த மே மாதம் முதலாம் திகதி முதல் இணையதளத்தில் நிதி சேகரிக்கும் முயற்சியில் இறங்கினார். தேவையாக இருந்த 65 ஆயிரம் டொலர்கள் சேகரிக்கப்பட்டதும், ஒரே நாளில் மாணவர்களது வயதுக்கேற்ப ஒரே மாதிரியான 650 சைக்கிள்களை வாங்கி பாடசாலை வளாகத்தில் நிறுத்தி, அவற்றை மூடியும் வைத்தார்.

மறுநாள் காலை மாணவர்கள் வந்ததும், அனைவரையும் பாடசாலை வளாகத்துக்கு அழைத்துச் சென்று, மூடியிருந்த துணிகளை விலக்கிக் காண்பித்தார். அங்கே மினுமினுத்துக்கொண்டிருந்த புதிய துவிச்சக்கர வண்டிகளைக் கண்ட மாணவர்கள் பரவசக் கூச்சலிட்டனர். இதைக் கண்டு மிகுந்த மகிழ்ச்சியடைந்தார் கேட்டி.

இதுபற்றித் தெரிவித்த அவர், “நான் நினைத்ததைவிடவும் மாணவர்களின் மகிழ்ச்சி அளவிட முடியாத அளவுக்கு இருந்தது. தேவையான நிதி சேர்ந்துவிட்டது. என்றபோதும் இன்னும் நிதியுதவிகள் தொடர்ந்த வண்ணம் உள்ளன. அந்த நிதியைக் கொண்டு மாணவர்களுக்குத் தேவையான மேலதிக வசதிகளையும் செய்து தர எண்ணியுள்ளேன்” என்று கூறியுள்ளார்.

http://www.virakesari.lk

  • தொடங்கியவர்

 

சக்கரக்கால்களில் சுற்றிவரும் நாய்க்குட்டி

பிரிட்டனில் இரண்டு பின்னங்கால்களும் செயலிழந்துபோன பஃபி என்கிற நாய்க்குட்டி தற்போது சக்கரக்கால்களால் நடமாடுகிறது.

இதற்காக உருவாக்கப்பட்ட பிரத்யேக சக்கரக்கால்களை வாங்க நிதியுதவி தேவையென இதன் உரிமையாளர்கள் இணையத்தில் கோரிக்கை வைத்தனர்.

கோரிக்கை வைத்த சிலநாட்களிலேயே நல்லவர்கள் சிலர் $1800 நிதியுதவி அளித்தனர்.

பஃபிக்காக வந்து குவிந்த நிதியுதவி நெகிழவைத்ததாக கூறும் இதன் உரிமையாளர்கள் இதை தாங்கள் எதிர்பார்க்கவில்லை என்கிறார். உதவி கோரியதும் ஓடோடி வந்து உதவிய அனைவருக்கும் அவர்கள் நன்றி தெரிவித்துள்ளனர்.

தற்போது பஃபியின் வலிமையை கூட்டுவதற்கான உடற்பயிற்சியும் அதற்கு அளிக்கப்படுகிறது.

இரண்டு ஆண்டுகளுக்கு முன் காரில் அடிபட்டதில் அதற்கு பின்னங்கால் நடக்க முடியாமல் போனது.

  • தொடங்கியவர்

சில்க் ஸ்மிதாவிற்கு ஆதார் கார்டு! - அதிர்ச்சியில் அதிகாரிகள்

சில்க் ஸ்மிதாவை தமிழ் ரசிகர்கள் அவ்வளவு எளிதில் மறந்துவிட மாட்டார்கள் என்பது தெரிந்த விஷயம்தான். ஆனால் மத்திய அரசு அதிகாரிகளும் அவரை மறக்கவில்லை என்பதுதான் சமீபத்திய செய்தி. ஆம், 1996-ல் மறைந்த சில்க் ஸ்மிதா என்ற விஜயலட்சுமிக்கு அதிகாரிகள் இப்போது ஆதார் கார்டு வழங்கியிருப்பது பலரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கி இருக்கிறது.

சில்க் ஸ்மிதா

சமீப காலமாக ஆதார் அட்டையைச் சுற்றி எக்கச்சக்க களேபரங்கள் நடந்து வருகின்றன. ஓட்டுநர் உரிமம், பான் கார்டு என ஒவ்வொன்றிற்கும் ஆதார் கார்டு அவசியம் என அறிவுறுத்தி வருகிறது மத்திய அரசு. மறுபக்கம் உச்சநீதிமன்றமோ அரசின் மானியத் திட்டங்களுக்கு ஆதார் கார்டு அவசியம் எனக் கட்டாயப்படுத்தக் கூடாது என அறிவுறுத்தியுள்ளது. ஆனாலும் மத்திய அரசு கேட்பதாக இல்லை.

இந்நிலையில், வி.வி.ஐ.பிகளின் ஆதார் கார்டு விவரங்கள் வரிசையாக லீக்காகி வருகின்றன. சில நாட்களுக்கு முன் ட்விட்டரில் இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் தோனியின் ஆதார் விவரங்கள் வெளியாகி வைரலானது. அதற்கு தோனி கடும் அதிருப்தி தெரிவித்திருந்தார். ஏற்கெனவே ஆதார் பாதுகாப்பில்லை எனக் கூறி வந்தவர்களின் குரல் இந்தச் சம்பவத்திற்குப் பிறகு மேலும் வலுப் பெற்றுள்ளது.

அதன்பின் தொடர்ச்சியாக வி.ஐ.பி.களின் விவரங்கள் வெளியாகி வருகின்றன. அந்த லிஸ்ட்டில் லேட்டஸ்ட்டாக இணைந்திருக்கிறார் சில்க் ஸ்மிதா. அவர் கடைசியாக குடியிருந்த தி. நகர் வீட்டு அட்ரஸுக்கு அவரின் இயற்பெயரான விஜயலட்சுமி ராமலு என்ற பெயருக்கே இந்த ஆதார் கார்டு வழங்கப்பட்டுள்ளது. அப்பா பெயர், வீட்டு முகவரி என அத்தனையும் அப்படியே இருப்பதுதான் அதிகாரிகளின் பணியை மேலும் கேள்விக்குள்ளாக்குகிறது. 'விசாரித்துப் பார்க்காமல் எப்படி ஆதார் அட்டை வழங்க முடியும்?, யார் வேண்டுமானாலும் பொய்த்தகவல்களை அளித்து ஆதார் அட்டை வாங்கிவிடலாமா?’ போன்ற எக்கச்சக்க கேள்விகளுக்கு பதிலில்லை. சில மாதங்களுக்கு முன் அனுமாருக்கு ஆதார் அட்டை வழங்கப்பட்டதாக சர்ச்சை எழுந்தது குறிப்பிடத்தக்கது.

கடந்த வாரம்தான் 'ஆதார் அட்டை மூலமாக ஒருவரின் தனிப்பட்ட தகவல்கள், வங்கிக் கணக்கு விவரங்கள் உள்ளிட்டவற்றை எளிதாக இணையம் வழி தெரிந்துகொள்ள முடியும். அதனால்தான் விவரங்கள் லீக் ஆகின்றன' என மத்திய தொழில்நுட்பத்துறை அதிகாரி அர்ச்சனா துரேஜா அறிவித்தார். அதற்குள் இப்படி...

சில்க் ஸ்மிதாவிற்கு வழங்கப்பட்ட ஆதார் கார்டு, அதிலுள்ள தகவல்கள் பற்றிய படங்களைக் காண இங்கே க்ளிக் செய்யவும்.

http://www.vikatan.com

  • தொடங்கியவர்

வலைபாயுதே

சைபர் ஸ்பைடர்

 

100p1.jpg

facebook.com/Saran Ram: அலாரத்துக்கு முன் ஒலிக்கும் செல்போன்... அதிலும் ஊரிலிருந்து அழைப்பு என்றால், போனை எடுப்பதற்குள் மனம் பதறிவிடுகிறது.

facebook.com/வெங்கடேஷ் ஆறுமுகம்: அதிர்ஷ்டம் இமெயிலில் வருவதற்குள், துரதிர்ஷ்டம் வாட்ஸ்அப்பில் வந்துவிடுகிறது.

twitter.com/tamilsuhi: ஆளுமைமிக்க பதில்கள், சிலர் புன்னகையில் குவிந்து கிடக்கின்றன.

twitter.com/suryamsk: நாங்கள் எந்தச் சின்னத்தில் நின்றாலும் எங்களுக்கே ஓட்டு விழும் - தினகரன். 

#தைரியம் இருந்தா பம்பரம் சின்னத்துல நில்லுயா பாப்போம்.

100p2.jpg

twitter.com /vignasuresh: இந்தியர்களைப் பொறுத்தவரையில் waste management என்பது ஒன்றே ஒன்றுதான் - நம்ம வீட்ல இருந்து குப்பை போனா போதும்.

twitter.com/kalasal: மகிழ்ச்சியான ஒரு  மனநிலையில் கடந்து செல்பவர்கள் மீதெல்லாம் அன்பு பீறிடுகிறது.

twitter.com/kumarfaculty: சின்னி ஜெயந்த்தையும் முரளியையும் கடைசி வரை பாஸ் செய்ய முடியாதவாறே நம் பாடத்திட்டம் வைத்திருந்தது.

twitter.com/kanavulagavaasi: ஒன்றின் மீது விருப்பத்தைச் செலுத்தி, அதைக் கனவாக்கி, அனுதினமும் விரட்டி, அடைந்த பின் வெறுத்தல் ஆணின் இயல்பு.
 
இதில் தலையாயது பெண்.

100p3.jpg

twitter.com/i_soruba: எவ்வளவு நட்பாக இருந்தாலும் ஆண், தன் மகளைத் தாயாகவே பார்க்கிறான். என்ன பாசம் என்றாலும் பெண், தன் மகனை நண்பனாகவேகொள்கிறாள்.

twitter.com/iammuthalib: அனைத்திந்திய அப்ப அவ்ளோதானா திராவிட முன்னேற்றக்கழகம்.

facebook.com/அ.ப. இராசா: எல்லாவற்றுக்கும் உடனடியாகக் கருத்து சொல்ல வேண்டும் என்ற இணைய மனநிலைகூடப் பயங்கர ஆபத்துதான்.

twitter.com/mokkaigal: ஒரு காலத்தில் எல்லாமுமாக இருந்த வர்களை மீண்டும் சந்திக்கும்போது பத்து நிமிடங்களுக்கு மேல் எதைப் பேசுவது எனத் திணறலாக இருக்கிறது.

twitter.com/manipmp:  ஒரு பக்கெட் துணியைத் துவைத்து முடித்து வரும்போது, நாம் போன் நோண்டிக் கிட்டிருப்பதை மனைவி பார்க்கும்போது வருவதுதான் மரணபீதி.

twitter.com/kaviintamizh : சொந்தக்காரர் வீட்டுல ரெண்டு நாள் முழுசா தங்கினாலே சகிப்புத்தன்மை தன்னாலே வந்துடுது.

100p4.jpg

twitter.com/HAJAMYDEENNKS  தமிழ்நாட்டுல மாதிரி அடுத்தவர்களைக் கலாய்த்து, போற்றி, தூற்றி இத்தனை சுவாரஸ்யமாக ட்விட்டரை வேற எந்த நாட்டிலும் பயன்படுத்த மாட்டார்கள்!

twitter.com/mekalapugazh   குறைந்த தகவல்களை மட்டுமே தெரிந்துகொண்டிருந்த காலம் மாறி, நிறைய தவறான/பொய்யான தகவல்களைத் தெரிந்துகொள்ளும் காலத்தில் இருக்கிறோம்.

twitter.com/i_Soruba: உடம்பு மொத்தமும் மனசாகும் அற்புதம் நமக்கு பிரியமானவங்க தப்பு பண்ணிட்டா நடக்கும்:)

twitter.com/Kozhiyaar: நின்றுகொண்டே கேட்பவரைவிட, நடந்துகொண்டே கேட்பவருக்கு எளிதில் `லிஃப்ட்' கிடைத்துவிடுவதாகத் தோன்றுகிறது.

twitter.com/bri2o: சொட்டையர்கள் வீட்டில், பழைய புகைப்படம் என்பது பொக்கிஷம்.

100p5.jpg

facebook.com/Sivakumar Venkatachalam: `Hey, how r you?'னு கேட்டு `I'm doin gud, how abt u!??'னு பதில் வந்தா, மேற்கொண்டு பேச எந்த்துவா இருக்காங்கன்னு அர்த்தம்.

`Am gud, hope u doin gud'னு சொன்னா `இதுக்குமேல பேச விருப்பமில்லை. கௌம்பு!'ன்னு அர்த்தம்.

facebook.com/Sowmya Ragavan: நாளைக்கு எல்லாம் மாறிடும்கிறது நம்பிக்கை. மாறலைன்னாலும் சமாளிப்போம்கிறது தன்னம்பிக்கை.

twitte.com/jeranjit: இணையம், எல்லோரையும் எழுத்தாளராகவும்... எழுத்தாளர்களைக் கோமாளிகளாகவும் மாற்றிவைத்திருக்கிறது.

twitter.com/writternagarani:   இப்பெல்லாம் யாராவது ஏதாவது கேள்வி கேட்டா `அதையும் நீங்கதான் கூற வேண்டும்'னு சொல்லத்தோணுது... தீபா பேட்டி அதிகமா பார்க்கிறேன்போல

  • தொடங்கியவர்

ஒரு நாளைக்கு ரூ.5 கோடி - விளம்பரங்களில் அள்ளும் விராட்

இந்தியாவின் முன்னனி கிரிக்கெட் வீரரான விராட் கோலி விளம்பரப் படங்களில் நடிக்க நாள் ஒன்றுக்கு ரூ.5 கோடி வாங்கவிருக்கிறார். விளம்பரங்களுக்காக அதிக சம்பளம் வாங்கும் இந்தியர்களின் பட்டியலில் முதலிடத்துக்கு முன்னேறியுள்ளார் விராட்.

விராட்

நாட்டிலேயே அதிக வருவாய் ஈட்டுவோர் பட்டியலில் முதலிடத்துக்கு வந்துள்ள விராட், தற்போது விளம்பரப் படம் ஒன்றில் நடிக்க ஒரு நாளைக்கு ரூ.5 கோடி பெறவிருக்கிறார். சல்மான் கான், ஷாருக் கான், அமீர் கான் என இந்தியப் பிரபலங்கள் பலரையும் பின்னுக்குத் தள்ளியுள்ளார் இந்த இளம் கிரிக்கெட் புயல். 

விராட் கோலி நடிக்கும் விளம்பரங்கள் ஒரு நாளைக்கு 643 முறை தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பப்படுவதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்தியாவின் பிரபல நட்சத்திரங்களின் பட்டியலில் பல ஜாம்பவான்களைப் பின்தள்ளியவர், நாட்டின் அதிகம் விரும்பப்படுவோர் பட்டியலிலும் முதலிடம்தான்!

Bild könnte enthalten: 1 Person, Essen

இந்திய கிரிக்கெட் வீரர், தமிழகத்தைச் சேர்ந்த முரளி விஜய்யின் பிறந்தநாள்.
Happy Birthday Murali Vijay

  • தொடங்கியவர்

கிளிக் தொழில்நுட்ப காணொளி

அறிமுகமாகவுள்ள சாம்சங் காலக்ஸி S8 and S8 ப்ளஸ், பறக்கும் கருவிகளுக்காக வான்வழி தடம், மூளைகளை கணினிகளோடு இணைக்கும் தொழில்நுட்பம் உள்ளிட்டவை அடங்கிய காணொளி

  • தொடங்கியவர்

காரணம் ஆயிரம்: எரியும் எரிமலைக்குள் ஒரு புழு

 

 
erimalai_3148410f.jpg
 
 
 

கொஞ்சம் வெயில் அதிகமாகிவிட்டாலே நம்மால் தாங்கிக்கொள்ள முடிவதில்லை. தண்ணீர் குடித்து ஆசுவாசப்படுத்திக்கொள்கிறோம். பாவம், புழுக்கள் என்ன செய்யும்? சுருண்டு விழுந்து இறந்துவிடும். மனிதனால் அதிகபட்சமாக 45 டிகிரி செல்சியஸ் வரை உள்ள வெப்பநிலையைத் தாங்கிக்கொள்ள முடியும். ஆனால், 400 டிகிரி செல்சியஸ் வெப்பநிலையில் எந்தச் சேதாரமும் இல்லாமல் ஓர் உயிர் வாழ்கிறது. அதுவும் ஒரு புழுதான்!

பூமியின் மையப்பகுதியில் அதன் வெப்பநிலை 5000 டிகிரி செல்சியஸ். இந்த வெப்பக் குழம்பை மூடியிருக்கும் தட்டுகள்தான் நாம் வாழும் பூமி. இந்தத் தட்டுகளை ‘டெக்டானிக் ப்ளேட்ஸ்’ எனப் புவியியல் விஞ்ஞானிகள் அழைக்கின்றனர். இந்த டெக்டானிக் தட்டுகள் ஒன்றுக்கொன்று மோதிக்கொள்ளும்போது பூமியில் விரிசல் ஏற்பட்டு, நிலநடுக்கம் உருவாகிறது. கடலுக்கடியில் நிலம் பிளவுபட்டு பெரிய பள்ளம் உருவாகிறது.

இந்தப் பெரிய பள்ளத்தில் நிரம்பும் நீர், பூமியின் அதிக வெப்பத்தால் மிகவும் சூடாகிறது. வழக்கமாக 5 அல்லது 6 டிகிரி செல்சியஸ் வெப்பநிலையில் இருக்கவேண்டிய கடல் நீர், பூகம்பத்தால் 400 டிகிரி செல்சியஸ் அளவுக்கு உயர்கிறது. இந்த 400 டிகிரி செல்சியஸ் வெப்பம் என்பது தகிக்கும் வெப்பம். இப்படிப்பட்ட நிலையில்தான் அந்தப் புழு தோன்றுகிறது. புழு என்றவுடன், ‘தம்தாத்தூண்டு’இருக்கும் என்று நினைத்துவிடாதீர்கள். உருவான இரண்டே ஆண்டுகளில் 7 அடி வரை வளர்ந்துவிடும். ஆம், அது ராட்சசக் குழாய் அளவுக்கு இருக்கும் புழு (Giant tube worm).

நீங்கள் அதன் அருகில் போய் நின்றால் புழுவை அண்ணாந்துதான் பார்க்க வேண்டியிருக்கும். ‘புழு’தான் உங்களைப் புழு மாதிரிப் பார்க்கும். இதன் உருவம் ராட்சச அளவுக்கு இருக்குமே தவிரப் பார்ப்பதற்கு மிகவும் அழகாக இருக்கும். மேலே இறகு போன்ற சிவப்பு நிற ஒரு குப்பி, கிரீடம் வைத்தது போல இருக்கும். தூரத்திலிருந்து பார்க்கும் போது பெண்கள் உபயோகப்படுத்தும் லிப்ஸ்டிக் குப்பிகள் மாதிரி இருப்பதால் இதற்கு லிப்ஸ்டிக் புழுக்கள் என்றும் பெயர் உண்டு.

விலங்குகளின் பெருவகைப்பாட்டில் ‘அன்மீலியா’ என்ற பிரிவின் கீழ்வரும் பாலிகீட்டா வகுப்பைச் சேர்ந்தவை இந்தப் புழுக்கள். இந்தப் புழுவின் விலங்கியல் பெயர் ரிப்ஷியா பாட்சிப்டிலா (Riftia pachyptila). பசிபிக் பெருங்கடலின் ஆழ்கடல் மண்டலங்களில்தான் இவை அதிகம் காணப்படுகின்றன. டெக்டானிக் தகடுகள் நகர்ந்து, வெடித்துச் சிதறுவதால் உண்டாகும் கருமையான புகைமண்டலப் பகுதிதான் இவை விரும்பி வசிக்கும் இடம்.

எரிமலைக் குழம்பை எடுத்து யாராவது குடிக்க விரும்புவார்களா? ஆனால், இந்தப் புழு குடிக்கும்! எப்படி? அதாவது, எரிமலை வெப்பத்தைத் தாங்கி உயிர் வாழ்கிறதே எப்படி? என்ன காரணம்?

கடலுக்கு அடியில் மிக ஆழமான இடத்தில் அழுத்தம் மிகவும் அதிகம். இப்படியொரு ஆழத்தில் மிக வலிமையான கற்பாறைகள் கற்கண்டு மாதிரிச் சிதறிவிடும். ஆனால், எலும்பே இல்லாத புழு எப்படி இத்தனை அழுத்தத்தையும் சமாளிக்கிறது. பூகம்பத்திலும், எரிமலைச் சிதைவிலும் நச்சுப்புகையும், நச்சு அமிலமும்தான் ஆழ்கடல் பகுதியில் இருக்கும். இந்த அமிலங்களில் இந்தப் புழு நீச்சலடிக்கிறதே எப்படி? ஒரே ஒரு காரணம்தான். அமிலம், வெப்பம், அழுத்தம் இவற்றையெல்லாம் இந்தப் புழு உணவாக்கிக்கொள்கிறது. அவ்வுளவுதான்.

இந்த புழுக்களின் உடல் பாதியளவு பாக்டீரியாவால் நிரம்பியிருக்கும். இந்த பாக்டீரியா சுற்றுப்புறத்தில் உள்ள வேதிபொருட்களுடன் வினைபுரிந்து புழுவின் உடலுக்குத் தேவையான உயிர்ச்சத்தை அளிக்கிறது. இந்தப் புழுக்களின் உடல் அமைப்பை ‘வாங்குலர்’ உடலமைப்பு என்று சொல்வார்கள். இதன் உடம்பு நீர்மப் பொருட்களை, உடலின் பல்வேறு பகுதிகளுக்குக் கடத்திச் செல்லும் வகையில் குழாய் போன்ற அமைப்பால் ஆனது.

இந்தப் புழுக்களின் தலைப்பகுதியில் ‘ப்ளும்’ என்ற சிவப்பு நிறக் கொப்பி காணப்படுகிறது. இந்த ‘ப்ளும்’ சுற்றுப்புறத்தில் உள்ள வேதிப் பொருட்களை உடலின் உள்ளே பாக்டீரியாவுக்குக் கடத்துகிறது.

இந்தப் பாக்டீரியாக்கள் ஹைட்ரஜன் சல்பைடு (உயிர்க்கொல்லி) கார்பன்-டை-ஆக்சைடு (கரியமில வாயு) போன்றவற்றுடன் வேதி வினைகளில் ஈடுபட்டு உயிர்ப் பொருட்களாக மாற்றி புழுக்களுக்குத் தேவையான உயிர்சக்தியை அளிக்கிறது. இந்தப் புழு ஒரு வேதித் தொழிற்சாலை மாதிரிச் செயல்படுவதால் இதற்குச் செரிமான மண்டலம், கழிவு நீக்க மண்டலம் என்றெல்லாம் எதுவும் இல்லை.

மிக அதிகமான வெப்பநிலைகளில் புதிய புதிய வேதி வினைகள் நடக்கின்றன. இந்த வேதி வினைகளின்போது உயிரை அழிக்கக்கூடிய நச்சுப் பொருட்கள் தோன்றுகின்றன. இந்த ராட்சத சுருள் புழு நச்சுப் பொருட்களோடு வேதி வினை புரிந்து நச்சுப் பொருட்களை லிப்ஸ்டிக் மாதிரிப் பூசிக்கொள்கிறது. ஆக, இந்தப் புழு வேதி வினைகளால் உயிர் வாழ்வதால் அதிக வெப்பத்தைத் தாங்கி உயிர் வாழ்கிறது. அதிக அளவில் ஹீமோகுளோபின் இருப்பதால் இதன் மொட்டு போன்ற நுனிப்பகுதி சிவப்பு நிறத்தில் காணப்படுகிறது.

இதன் வாழ்க்கை சுழற்சியில் ஒரு சுவாரசியம் உள்ளது. இதற்கு எதிரிகள் என்று யாருமே இல்லை. எந்த விலங்கும் இதைத் தின்று அழிப்பதில்லை. இயற்கைச் சீற்றத்தால் பெரும் ஆபத்து வருவது போலத் தோன்றினால் அதன் ‘ப்ளும்’என்ற சிவப்பு நிற நுனிப்பகுதி மட்டும் உடைந்து விலகிவிடும். மற்றபடி எதிரிகளே இல்லாத புழு இது.

அது சரி, எரிமலையைவிட வேறு ஒரு எதிரி வேண்டுமா என்ன?

(காரணங்களை அலசுவோம்)

tamil.thehindu.

  • தொடங்கியவர்

போலியோவில் இருந்து பல கோடி உயிர்களை காப்பாற்றிய மாமனிதரை மறந்துவிட்ட ‘நன்றி கெட்ட உலகம்’

‘போலியோ இல்லாத- புது உலகம் படைப்போம்’ என்று அறைகூவல் விடுத்து, தீவிர போலியோ சொட்டு மருந்து முகாம்களின் மூலம் போலியோ நோயில் இருந்து சிறு பிள்ளைகளை காப்பாற்றி, வெற்றி பெற்ற நாடுகளின் முதல்தரப் பட்டியலில் தற்போது இந்தியாவும் இடம்பெற்றுள்ளது.

 
போலியோவில் இருந்து பல கோடி உயிர்களை காப்பாற்றிய மாமனிதரை மறந்துவிட்ட ‘நன்றி கெட்ட உலகம்’
 
நியூ யார்க்:

‘போலியோ இல்லாத- புது உலகம் படைப்போம்’ என்று அறைகூவல் விடுத்து, தீவிர போலியோ சொட்டு மருந்து முகாம்களின் மூலம் போலியோ நோயில் இருந்து சிறு பிள்ளைகளை காப்பாற்றி, வெற்றி பெற்ற நாடுகளின் முதல்தரப் பட்டியலில் தற்போது இந்தியாவும் இடம்பெற்றுள்ளது.

உலக நாடுகளில் எல்லாம் போலியோ மற்றும் எய்ட்ஸ் ஒழிப்பு பிரசாரத்திலும், நடவடிக்கைகளிலும் தீவிரமாக ஈடுபட்டுவரும் பிரபல ‘மைக்ரோ ஸாஃப்ட்’ மென்பொருள் உற்பத்தி நிறுவனத்தின் உரிமையாளரன பில்கேட்ஸ்-சின் தாராளமான நிதியுதவியை போற்றிப் புகழ்ந்து, பாராட்டும் சர்வதேச ஊடகங்கள், போலியோவை அழித்தொழிக்கும் தடுப்பு மருந்தை கண்டுபிடித்து, மனித சமுதாயம் நோயின்றி வாழ அந்த மருந்துக்கான காப்புரிமையையும் பொதுவுடமையாக்கிய ‘மாமனிதரை’ தெரிந்தோ.. தெரியாமலோ.. புறக்கணித்து விட்டது.

தமிழ்நாட்டில் போலியோ சொட்டு மருந்து தொடர் முகாம்கள் நடைபெறும் இவ்வேளையில், இந்த சொட்டு மருந்தை கண்டுபிடித்த அந்த ‘அற்புத மனிதரை’ வாசகர்களுக்கு அறிமுகம் செய்விப்பதில் ‘மாலை மலர் டாட்.காம்’ பெருமகிழ்ச்சி அடைகின்றது.
 
201704021001242338_Polio-2._L_styvpf.gif

அமெரிக்காவின் நியூ யார்க் நகரில் 28-10-1914 அன்று பிறந்த ஜோனாஸ் எட்வர்ட் ஸல்க், நியூ யார்க் மருத்துவ பல்கலைக்கழகத்தில் படித்து, பட்டம் பெற்று, சிலவகை மருத்துவ ஆராய்ச்சியில் ஈடுபட்டு வந்தார். இரண்டாம் உலகப் போருக்கு பிந்தைய காலகட்டமான 1950-களில் உலகம் முழுவதும் ‘போலியோ’ எனப்படும் இளம்பிள்ளை வாதம் நோயின் தாக்கமும், அதனால் விளைந்த பாதிப்புகளும் உச்சகட்டத்தை எட்டியது.

குறிப்பாக, 1952-ம் ஆண்டில் அமெரிக்காவில் மட்டும் சுமார் 58 ஆயிரம் மக்கள் போலியோ நோயினால் பாதிக்கப்பட்டனர். இவர்களில் 3 ஆயிரத்து 145 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். 21 ஆயிரத்து 269 பேர் கை, கால்கள் செயலிழந்த நிலையில் முடக்குவாத தாக்கத்திற்கு ஆளாகி, மாற்றுத் திறனாளிகளாக மாறிப் போயினர்.

இந்த அவலநிலையை கண்டு கொதித்துப் போன டாக்டர் ஜோனாஸ் ஸல்க், போலியோவுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் மாற்று மருந்தை கண்டுபிடிக்கும் ஆராய்ச்சியில் இரவும்,பகலும் மூழ்கிப் போனார். 10 ஆண்டுகால கடும் உழைப்பின் பலனாக, 1955-ம் ஆண்டு புதிய மாற்று மருந்து ஒன்றினை வெற்றிகரமாக கண்டுபிடித்தார்.
 
201704021001242338_Polio-4._L_styvpf.gif

அதே ஆண்டில், சோதனை முயற்சியாக 20 ஆயிரம் டாக்டர்கள், 64 ஆயிரம் பள்ளி ஊழியர்கள், சுமார் 2 லட்சம் தன்னார்வ தொண்டர்கள் கொண்ட போலியோவிற்கு எதிரான தற்காப்பு படையினர், அமெரிக்காவில் உள்ள 18 லட்சம் மாணவ-மாணவிகளுக்கு ஜோனாஸ் ஸல்க்-கின் புதிய கண்டுபிடிப்பான ‘போலியோ சொட்டு மருந்து’ போட்டு தீவிர பிரசார முகாமினை தொடங்கினர்.

இந்த மருந்தின் செயலாற்றலின் விளைவாகதான். இன்றைய உலகில் போலியோ இல்லாத இளைய சமுதாயத்தை பார்க்க முடிகிறது. இந்த அரிய கண்டுபிடிப்புக்கான காப்புரிமை (பேட்டண்ட் ரைட்ஸ்) தனக்கு தேவை இல்லை என்று கூறிவிட்ட டாக்டர் ஜோனாஸ் ஸல்க், அதனை மனித சமுதாயத்துக்கு பரிசாக வழங்குவதாகவும் மகிழ்ச்சியுடன் அறிவித்தார்.

அவர் மட்டும் இந்த சொட்டு மருந்துக்கான காப்புரிமையை பெற முயற்சித்திருந்தால் 1960-களிலேயே உலகின் மிகப்பெரிய கோடீஸ்வரராக உயர்ந்திருக்க முடியும். ஆனால், மிகப்பரந்த பெருந்தன்மையுடன் தனது 10 ஆண்டு ஆராய்ச்சியின் பலனை மனித குலத்துக்கு தானமாக வழங்கி, நோயற்ற சமுதாயத்துக்கான வரலாற்றில் நீங்கா தனிச் சிறப்பிடத்தை இவர் பிடித்துள்ளார்.
 
201704021001242338_Polio-5._L_styvpf.gif

அவரது இந்த முடிவை அறிந்து வியந்துப் போன ஒரு பத்திரிகை நிருபர், ‘இந்த கண்டுபிடிப்புக்கான காப்புரிமையைப் பெற ஏன் மறுத்து விட்டீர்கள்’ என்று வினவினார். இந்த கேள்விக்கு டாக்டர் ஜோனாஸ் எட்வர்ட் ஸல்க் சற்றும் சிந்திக்காமல் கூறிய பதில் என்ன தெரியுமா...?

‘அடப்போங்க... சார்! சூரியனுக்கு யாராவது காப்புரிமை கோர முடியுமா..? அதேபோன்றது தான் இந்த சொட்டு மருந்தும் உலகத்தில் உள்ள அனைத்து உயிரினத்துக்கும் பொதுவானதாக இருக்க வேண்டும் என்று நான் விரும்புகிறேன்’ என்று மிகவும் தன்னடக்கத்துடன் அவர் பதில் அளித்தார்.

அவர் மட்டும் இந்த மருந்தினை பொதுவுடமை ஆக்கியிராதிருந்தால்... கடந்த 50 ஆண்டுகளில் போலியோவால் பாதிக்கப்பட்ட பல கோடி உயிர்கள் மரணத்தை தழுவி மடிந்திருக்கும். அந்த துர்மரணத்தில் இருந்து மனித குலத்தை காத்து, வாழ்விக்கப் பிறந்த டாக்டர் ஜோனாஸ் எட்வர்ட் ஸல்க், 23-06-1995 அன்று தனது 80-வது வயதில் காலமானார்.

பிரபல கோடீஸ்வர தொழிலதிபர்கள், சினிமா நட்சத்திரங்கள், அரசியல்வாதிகள் ஆகியோருக்கு அதிக முக்கியத்துவம் வழங்கி செய்திகளை வெளியிடும் உலக ஊடகங்கள், டாக்டர் ஜோனாஸ் எட்வர்ட் ஸல்க் என்ற இந்த ‘மாமனிதர்’ மனித குலத்துக்கு ஆற்றிய மகத்தான சேவையை இருட்டடிப்பு செய்துவிட்டதாகவே பலரும் கருதுகின்றனர்.
 
201704021001242338_Polio-3._L_styvpf.gif

தனது இறுதி மூச்சு வரை உயிர்க் கொல்லி நோயான எச்.ஐ.வி.க்கு எதிரான தடுப்பு மருந்தினை கண்டுபிடிக்கும் அரிய ஆராய்ச்சியில் ஈடுபட்டிருந்த டாக்டர் ஜோனாஸ் ஸல்க். தனது இலக்கினை எட்டாமலேயே இறந்துப் போனது மனித குலத்துக்கு ஏற்பட்ட பேரிழப்பு என்றே கருத வேண்டும்.

இன்று நாடு முழுவதும் போலியோ சொட்டு மருந்து முகாம்கள் முழு அளவில் நடைபெற்று லட்சக்கணக்கான குழந்தைகளை போலியோவில் இருந்து காப்பாற்ற தற்காப்பு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வரும் நிலையில் டாக்டர் ஜோனாஸ் எட்வர்ட் ஸல்க்-ஐ நன்றி உணர்வு மிக்க தமிழர்களாகிய நாமாவது இந்த நாளில் நினைவு கூர்வோம்!

http://www.maalaimalar.com

  • தொடங்கியவர்

ஊர் மட்டுமா, நாடே மாறிப் போச்சு இந்த மாணவருக்கு!

 
 

ஆஸ்திரேலியாவின் சிட்னி நகருக்கு செல்வதற்கு பதிலாக கனடாவின் சிட்னி என்ற இடத்திற்கு தவறுதலாக விமானம் மூலம் சென்றடைந்த நெதர்லாந்து மாணவர் அதிர்ச்சியில் உறைந்து போனார். மிகவும் மலிவாக கிடைத்த விமானப் பயணச்சீட்டின் மூலம் அதிக செலவில்அவர் பாடம் கற்றுக்கொண்டுள்ளார்.

ஆஸ்திரேலியாவுக்கு பதிலாக கனடாவுக்கு பறந்த நெதர்லாந்து மாணவர்படத்தின் காப்புரிமைGETTY IMAGES

பிற பயணச்சீட்டுகள் எல்லாவற்றையும் விட மிகவும் மலிவாக இந்த பயணச்சீட்டு இருந்ததால், அதனை பதிவு செய்து பயணித்து தவறுதலான இடத்திற்கு வந்துவிட்டதாக மிலன் ஸ்கிப்பர் கனடா ஒளிபரப்பு நிறுவனத்திடம் தெரிவித்திருக்கிறார்.

அவர் திட்டமிட்டபடி ஆஸ்திரேலியாவின் சிட்னி நகர கடற்கரையோரத்திற்கு நேராக செல்வதற்கு பதிலாக, ஒரு லேசான மேலாடையை தவிர எதுவுமில்லாதவராக ஒருவித பனிப்புயல் அடிக்கும் காலநிலை நிலவும் பகுதியை சென்றடைந்திருந்தார்.

இந்த சிறிய விமானமா என்னை ஆஸ்திரேலியா கொண்டு செல்ல உள்ளது என்று ஐயமுற்றேன் மிலன் ஸ்கிப்பர்

அவரது இல்லம் அமைந்துள்ள ஆம்ஸ்டர்டாம் நகர் திரும்புவதற்கான பயணச்சீட்டை பதிவு செய்ய அந்த விமான நிறுவன பணியாளர்கள் அவருக்கு உதவியுள்ளனர்.

கனடாவில் சிறிய பயண நிறுத்தத்திற்கு பிறகு அவருக்கான பயண இணைப்பு விமானம் சிறியதொரு கனடா விமானமாக இருப்பதை அறிய வந்தவுடன் ஏதோ குழப்பம் ஏற்பட்டுள்ளதாக 18 வயதான மிலன் ஸ்கிப்பர் உணர்ந்து கொண்டார்.

 

"இந்த விமானம் மிகவும் சிறியதாக இருந்தது. எனவே, இதுவா என்னை ஆஸ்திரேலியா கொண்டு செல்ல உள்ளது என்று ஐயமுற்றேன்" என்று அவர் கனடா ஒளிபரப்பு நிறுவனத்திடம் தெரிவித்திருக்கிறார்.

இது முதல் முறையல்ல

சுற்றுலா பயணியர் ஆஸ்திரேலியாவின் சிட்னி நகரத்திற்கு பதிலாக கனடாவின் சிட்னி நகரத்திற்கு வருகின்ற இத்தகைய தவறுகளை செய்வது இது முதல் முறையல்ல.

2002 ஆம் ஆண்டு ஆஸ்திரேலியாவிலுள்ள ஓப்ரா இல்லத்தை பார்ப்பதற்கு பதிலாக கடல் நண்டு படகுகளுக்கு மிகவும் பிரபலமான கனடாவின் சிட்னியில் பிரிட்டனை சேர்ந்த ஓர் இளம் காதல் ஜோடி வந்திறங்கியது.

ஏர் கனடாபடத்தின் காப்புரிமைROBERTO MACHADO NOA/LIGHTROCKET VIA GETTY IMAGES

2009 ஆம் ஆண்டு, தன்னுடைய மகனுடன் பயணம் செய்த நெதர்லாந்து தாத்தா ஒருவரும் இதே இடத்திற்கு தவறுதலாக வந்தடைந்ததாக டெய்லி மெயில் தகவல் தெரிவித்தது.

2010 ஆம் ஆண்டு இத்தாலிய சுற்றுலா பயணியரும் இதே தவறை இழைத்தனர்.

 

இந்த இடத்தில் ஸ்கிப்பர் சென்று இறங்கியவுடன், அவர் நெதர்லாந்து செல்வதற்கு வசதியாக டொரென்டோவுக்கு செல்வதற்கான பயணச்சீட்டை பதிவு செய்ய விமான நிறுவன பணியாளர்கள் உதவியுள்ளனர்.

ஆம்ஸ்டர்டாமிலுள்ள விமான நிலையத்தில் தன்னுடைய மகனை வரவேற்ற அவனுடைய தந்தை இந்த சம்வத்தை அறிந்தவுடன் மிகவும் விழுந்து விழுந்து சிரித்ததாக கனடா ஒளிபரப்பு நிறுவனத்திடம் தெரிவித்திருக்கிறார்.

http://www.bbc.com/

  • தொடங்கியவர்

யுவராஜின் ஆல்ரவுண்ட், சச்சினின் ரன் வேட்டை, தோனியின் ஹெலிகாப்டர் சிக்ஸ்... மறக்க முடியுமா?! #WC2011Champion #OnThisDay

கிரிக்கெட் உலகின் உச்சம் நான்கு வருடத்துக்கு ஒருமுறை நடக்கும் உலகக் கோப்பை. அந்தக் கோப்பையை கைப்பற்ற வேண்டும் என்பது ஸ்ட்ரீட் கிரிக்கெட்டர்ஸ் முதல் சர்வதேச கிரிக்கெட் வீரர்கள் வரை அனைவர் மனதிலும் இருக்கும் இமாலய கனவு. ஒரு முறையாவது அந்த கோப்பையை தொட்டுவிடமாட்டோமா என்ற ஏக்கம் இல்லாத கிரிக்கெட் வீரர்களே இல்லை. தோனி மட்டும் விதிவிலக்கா என்ன? 1983-ல் கபில் தேவ் தலைமையில் இந்தியா முதன்முறையாக உலகக் கோப்பையை வென்றது. அதன் பிறகு, எத்தனையோ முறை உலகக்கோப்பை நடந்தது. 2007 உலகக் கோப்பை தொடரில் சூப்பர் 8 சுற்றுக்கு கூட இந்தியா முன்னேறவில்லை. அந்த சமயத்தில் பல்வேறு விதமான விமர்சனங்கள் முன் வைக்கப்பட்டன.

அதன் பிறகு, இந்திய அணி நிறைய மாற்றங்களைக் கண்டது. பலத்த எதிர்ப்பார்ப்புடன் 2011 உலகக் கோப்பையை எதிர்கொண்டது தோனி தலைமையிலான இந்திய அணி. அப்போது, ஆறு முறை உலகக் கோப்பையில் பங்குபெற்ற ஒரே வீரர் என்ற பெருமை கொண்ட சச்சின் அந்த உலகக் கோப்பையுடன் ஓய்வு பெற திட்டமிட்டிருந்தார். ஆக, இந்தத் தொடர் மிகவும் சுவாரஸ்யமாக இருக்கும் என்று உலகமே உற்று கவனித்தது.

இந்த தொடரில் சிறப்பாக தன் திறமையை நிரூபித்துவந்த இந்திய அணி நாக் அவுட் சுற்றில் நடப்பு சாம்பியனான, 5 முறை உலகக் கோப்பையை வென்ற தி க்ரேட் ஆஸ்திரேலியாவை அசால்டாக வீழ்த்தியது. அரையிறுதியில் இந்தியா 29 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று பாகிஸ்தானின் உலகக் கோப்பை கனவிற்கு முற்றுப்புள்ளி வைத்தது. இந்தப் போட்டி மொஹாலியில் அரங்கம் அதிர ஒவ்வொரு பந்தும் பலத்த எதிர்ப்பார்ப்புடனே சென்றது. இந்தப் போட்டியில் சச்சின் 85 ரன்கள் குவித்து பாகிஸ்தான் பௌலர்களின் பந்தை பவுண்டரிக்கு பறக்கவிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

தோனி மற்றும் யுவராஜ்

இந்தியா, பாகிஸ்தானை வென்று இறுதியில் யாருடன் மோதப்போகிறது என்ற கேள்விக்கு பதிலாக, ``வா..வா..வா இப்போ வா`` என்று இலங்கை அணி கம்பீரமாக நிற்க.. போட்டி தொடங்கியது ஏப்ரல் 2, மும்பையில். ரவி சாஸ்திரி மைக்குடன் மைதானத்துள்ளே வர அரங்கமே கரகோசத்தில் அதிர்ந்தது. அந்த சத்தத்தில் டாஸ் கேட்பது சரியாக காதில் விழாமல் இரண்டாவது முறை டாஸ் போடப்பட்டது. டாஸ் வென்ற இலங்கை பேட்டிங்கை தேர்வு செய்தது. ஆரம்பத்தில் நிதானமாக ஆடிய இலங்கை அணி 6 ஓவருக்கு 17 ரன்கள் எடுத்த நிலையில் ஜாகீர் கான் வீசிய பந்தை உபுல் தாரங்கா `கவர்ஸ்`ல் அடிக்க முயல, அது பேட்டின் வெளிமுனையில் பட்டு சிதற, சேவாக் டைவ் அடித்து பிடித்து இலங்கைக்கு அதிர்ச்சி கொடுத்தார். அடுத்த சில நிமிடங்களில் தில்சானும் ஹர்பஜன் சுழலில் விழ, இந்தியா ஆர்பரித்தது. பொறுமையாக ஆடிய அணியின் கேப்டன் சங்கக்கரா 48 ரன்கள் எடுத்து தோனியின் லாவகமான கேட்சில் அவுட் ஆனார். அடுத்தடுத்து வந்த வீரர்கள் அவ்வளவாக சோபிக்காமல் போக, பொறுப்புடன் ஆடிய ஜெயவர்தனே சதத்தை பூர்த்தி செய்து அணிக்கு வலு சேர்த்தார். 50 ஓவரில் முடிவில் இலங்கை 6 விக்கெட் இழப்பிற்கு 274 ரன்கள் குவித்து இருந்தது. ஜெயவர்தனே 103 (88) ரன்களுடனும் பெரரா 9 பந்துகளில் 22 ரன்களுடனும் ஆட்டமிழக்காமல் இருந்தனர்.

இந்தியா 275 ரன்கள் எடுத்தால் உலகக் கோப்பை கனவு நனவாகும் என்ற நம்பிக்கையில் களமிறங்கியது. அதிரடி ஆட்டக்காரர் சேவாக்கும் மாஸ்டர் ப்ளாஸ்டர் சச்சின் டெண்டுல்கரும் தொடக்க வீரர்களாக ஆரவாரத்திற்கிடையே பேட்டை சுற்றிக் கொண்டு மைதானத்திற்குள் கால் பதித்தனர். மலிங்கா வீசிய இரண்டாவது பந்தில் சேவாக் எல்பிடபில்யு ஆக, இந்திய ரசிகர்கள் மத்தியில் பெரும் ஏமாற்றமாக அமைந்தது. அடுத்து களமிறங்கிய கம்பீர், தான் சந்தித்த முதல் பந்தை பவுண்டரிக்கு அனுப்பி ஆட்டத்தைத் தொடர்ந்தார். சச்சினும் தன்னுடைய ட்ரைவ் ஷாட்டுகளை ஆட இந்திய ரசிகர்கள் மத்தியில் ஒரு புத்துணர்ச்சி.

மலிங்கா ஓவரில் சச்சினும் பெவிலியன் திரும்ப மைதானமே அமைதியில் இருந்தது. சிலர் மேட்ச் முடிந்தது என்றே நினைத்துவிட்டனர். அடுத்து களத்தில் குதித்த விராட் தன் நிதான ஆட்டத்தினால் ரன்கள் சேர்த்தார். 35 ரன்கள் எடுத்திருந்த நிலையில், தில்சன் வீசிய பந்தை ஸ்ட்ரைட் ட்ரைவ் ஆட முயற்சிக்க, அவர் அவுட். அடுத்ததாக தோனி மைதானத்தில் இறங்க, அனைவருக்கும் அவ்வளவு ஆச்சர்யம். இன்னும் யுவராஜ் இருக்கிறாரே, ஏன் தோனி உள்ளே வந்தார் என இலங்கை வீரர்கள் உட்பட அனைவரும் அதிர்ச்சியாக பார்த்தனர்.

ஒருபுறம் விக்கெட் விழ, எதிர்முனையில் கம்பீர் கம்பீரமாக நின்றது, இலங்கை அணிக்கு உறுத்தலாகவே இருந்தது. கம்பீரை அவுட் செய்ய நிறைய யுக்திகளை பயன்படுத்தினர். ஆனால், அதற்கு சற்றும் சளைக்காத கம்பீர் தன் ஸ்டைலில் பவுண்டரிகளாக ஆடி இந்திய அணிக்கு உறுதுணையாக இருந்தார். தோனியும் தன் பங்குக்கு விளாச ஆரம்பிக்க எதிரணியினர் என்ன செய்வதென்றே அறியாமல் திகைத்து நின்றனர். தோனியும் அரைசதத்தை நெருங்க போட்டி இன்னும் அனல் பறக்க ஆரம்பித்தது. தோனி அரைசதத்தை பூர்த்தி செய்தவுடன் பேக் கிரவுண்டில் ரஹ்மானின் ``வந்தே மாதரம்`` பாட்டு இசைக்க ஆரம்பிக்க இந்திய ரசிகர்களின் ஆரவாரம் இன்னும் அமர்களமானது. தோனி - கம்பீர் ஜோடி 109 ரன்கள் சேர்த்து அசத்தியது. அருமையாக விளையாடிய கம்பீர் நிச்சயமாக சதமடிப்பார் என்று எதிர்ப்பார்க்கப்பட்ட நிலையில், 97 ரன்னில் பெரராவின் பந்தில் அவசரப்பட்டு இறங்கி வந்து போல்டானார்.

தோனியின் சிக்ஸர்

தோனியுடன் யுவி கை கோர்த்தார். இந்த ஜோடிக்கு ஏகப்பட்ட ரசிகர்கள் இருப்பது அனைவரும் அறிந்ததே. இந்தியா இன்னும் 6 ஒவர்களில் 35 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் விளையாடியது. தோனி ஒவ்வொரு பந்தையும் சந்தித்த விதமே அவர் வெற்றி பெற துடிக்கும் எண்ணத்தை வெளிப்படுத்தியது. இருவரும் மாறி மாறி பவுண்டரிகளாக விளாச மைதானத்தில் யாரும் நாற்காலியில் அமரவே இல்லை. அந்த அளவிற்கு ஆரவாரம். 3 ஓவரில் 15 ரன்கள் எடுக்க வேண்டிய தருணத்தில், தொடர்ந்து 2 பவுண்டரிகளை லெக் சைடில் கேப்டன் கூல், கூலாக அடிக்க இந்தியாவின் வெற்றி உறுதி செய்யப்பட்டது.

அப்போதே அரங்கம் முழுவதும் இந்தியாவின் தேசிய கொடி பறக்க ஆரம்பித்தது. 2 ஒவரில் 5 எடுத்தால் வெற்றி என்ற நிலையில், யுவராஜ் சிங்கிள் தட்ட அடுத்த பந்தை தோனி சந்திக்க தயாரானார். வழக்கம் போல கையுறையை சரி செய்து, தோள்களை சிலுப்பி, தோனி பந்தை சந்திக்க தயாராக, அரங்கமே ``வீ வான்ட் சிக்சர்`` என்று முழங்க, தோனி பந்தை லாங் ஆன் திசையில் சிக்ஸர் பறக்க விட, அனைவரும் வானத்தை பார்க்க, பந்து கேலரியில் போய் விழுந்தது.   தோனி பல மேட்ச்களில் சிக்ஸர் பறக்க விட்டு வெற்றியைத் தொட்டிருந்தாலும், இந்த சிக்ஸர் அவரின் ஆகச்சிறந்த ஒன்று. அவரது வாழ்நாளின் மிகச்சிறந்த சிக்ஸர் எனலாம். ஆட்டத்தின் முடிவில் தோனி 91 ரன்களுடனும் யுவராஜ் 21 ரன்களுடனும் களத்தில் நின்றனர். ரவி சாஸ்த்ரி, ``தோனி எப்பவும் போல அவர் பாணியில் போட்டியை முடித்தார்`` என்று வர்ணனை செய்ய, இந்தியாவே மகிழ்ச்சியில் தத்தளித்தது. இந்திய வீரர்கள் ஒருவரை ஒருவர் கட்டித் தழுவி, தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். புத்தாண்டு, தீபாவளியை போல் அன்று இந்தியா முழுவதும் கோலாகலமாக இருந்தது.

மீடியாக்கள் வீரர்களை சூழ, ஆனந்த வெள்ளத்தில் இருந்தனர் நம் வீரர்கள். இந்தக் கோப்பையை நாங்கள் சச்சினுக்கு சமர்பிக்கிறோம் என்று கோப்பை வாங்கி, சச்சினிடம் கொடுத்த நம்ம தல தோனிக்கு பெரிய விசில் அடிக்க...கோலி, ரெய்னா, யூசுப் பதான் ஆகிய மூவரும் சச்சினை தோளில் சுமந்தபடியே மைதானத்தை வலம் வந்த காட்சி என்றும் நம் கண்களில் நிற்கும். இந்தியாவின் 28 ஆண்டுகால கனவு தோனியின் தலைமையில் நிறைவேறி இருக்கிறது என்று சொன்னால் அது மிகையாகாது. அனைவரும் தேசியக் கொடியைப் போர்த்தி மைதானத்தை சுற்றி வந்து ஆர்ப்பரித்த அந்த நிமிடம் ஒவ்வொரு இந்திய கிரிக்கெட் ரசிகன் வாழ்விலும் நீங்கா இடம் பிடித்திருக்கும் என்பது நிதர்சனம். இந்த வெற்றி ஆறு வருடமல்லாமல் எத்தனை வருடங்கள் ஆனாலும் நினைத்தாலே இனிக்கும்...

http://www.vikatan.com

  • தொடங்கியவர்

வெற்றி பெற்றவர்களின் அனுபவ மொழிகள்!

  • தொடங்கியவர்

வன விலங்கு புகைப்படங்கள்

 

வன விலங்கு புகைப்படம்

...
...
...
...
...
...
...
...
...
...
...
...
...
...
...
...
...
...
...
...
...
...
...
...
...
...
...
...
...
...
...
...
...
...
...
...
...
...
...
...

http://www.virakesari.lk

  • தொடங்கியவர்

Love 2500 Km!

‘‘என் வாழ்க்கையில் விதவிதமான மனிதர்களைச் சந்தித்து விட்டேன். ஆனால், இந்தியர்களைப்போல அன்பானவர்கள் இந்த உலகிலேயே இல்லை. முன்பின் அறிமுகமில்லாத என்னை தங்கள் வீட்டுக்கு அழைத்து உணவளிக்கிறார்கள். குடும்பத்தில் ஒருவனாக பார்க்கிறார்கள். குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை எல்லோரும் எனக்குத் துணையாக பல கிலோமீட்டர்கள் நடக்கிறார்கள்.
20.jpg
அவர்களிடம் பழக மொழி ஒரு தடையாகவே இல்லை...’’ என்று அன்பின் மொழியைப் பேசுகின்ற பாட்ரிக், ஆதரவற்ற தெருக் குழந்தைகளின் நல்வாழ்வுக்காக நிதி திரட்ட 2500 கி.மீ நடைப்பயணம் செய்திருக்கிறார். கடந்த ஆண்டு அக்டோபரில் ஆரம்பித்த அவரது பயணம் இந்த மாதத்தின் இறுதியில் முடியப்போகிறது. தினமும் ஆறு மணி நேரம் நடந்திருக்கிறார். தனது பயணத்தை ஃபேஸ்புக் பக்கத்தில் அவர் பதிவிட பலர் ஆதரவுக் கரங்களை நீட்டியிருக்கின்றனர்.

‘‘நிதி திரட்டத்தான் இந்தப் பயணத்தை மேற்கொண்டேன். ஆனால், வழியில் சந்தித்த மனிதர்களும், அவர்களின் வாழ்க்கையும் என்னை முற்றிலுமாக மாற்றிவிட்டது. நான் சந்தித்த ஒவ்வொருவரும் எனக்களித்த அன்பை என் இதயத்தில் பற்றிக்கொண்டே நடந்தேன்!’’ உணர்ச்சிப் பெருமிதத்துடன் சொல்கிற பாட்ரிக்கின் வயது ஜஸ்ட் 63 தான்!

kungumam

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.