Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இளமை புதுமை பல்சுவை

Featured Replies

  • தொடங்கியவர்

பிளாஸ்டிக் சாப்பிடும்‌ மீன்களை நாம்‌ சாப்பிட்டால்..? அதிர்ச்சியூட்டும் உண்மைகள்

தயாராகுங்கள். கடலுக்குள் ஒரு பயணம் போகப்போகிறோம். சுவாசிக்க ஆக்ஸிஜன் மாஸ்க். முதுகில் ஆக்ஸிஜன் சிலிண்டர். அது கிட்டத்தட்ட 22 கிலோ எடை. அந்த நீல நிறப் படகின் பெயர் "ஜேம்ஸ் பாண்ட்". பாண்டிச்சேரி துறைமுகத்திலிருந்து சில கிலோ மீட்டர் பயணித்து இந்த இடத்தை அடைந்திருக்கிறோம். அலைகளில் ஆர்ப்பரிப்பில்லாத நடுக்கடல். சுற்றிலும் நீலக் கடல், மேலே  நீல வானம். காற்றின் சத்தம் மட்டும் கேட்டுக் கொண்டிருக்கிறது. வெயில் அத்தனை உக்கிரமாக இல்லை. பின்பக்கமாக திரும்பி உட்கார்ந்து, இரண்டு கால்களையும் நேராக தூக்கி அப்படியே கடலுக்குள் விழுகிறோம்.  கொஞ்சம் படபடப்பாகத் தான் இருக்கிறது. சில நிமிடங்கள் படகின் கயிற்றைப் பிடித்தபடியே இருந்து... ஒரு மூச்சை இழுத்து அப்படியே கடலுக்குள் மூழ்குகிறோம். காற்றின் சத்தம் கேட்கவில்லை. வெளியிலிருந்த பளிச் வெளிச்சம் குறையத் தொடங்குகிறது. 

ஆழ்கடல் ஸ்கூபா பாண்டிச்சேரி மீன்

படபடப்பு குறையத் தொடங்குகிறது. ஆழ்கடலின் அழகைக் கண்கள் பார்க்கத் தொடங்குகின்றன. பரந்து, விரிந்திருக்கும் கடல். கொஞ்சம் குளிர்ச்சியாக இருக்கிறது மஞ்சள் நிற வால், உடல் முழுக்க சாம்பல் நிறம் என இருக்கும் அந்த மீன்கள்... நிச்சயம் ஒரு நூறு மீன்களாவது இருக்கும். அப்படியே நம் அருகே ஓடுகின்றன. கொஞ்சம், கொஞ்சமாக உள்ளே போகிறோம். கிட்டத்தட்ட 60 அடி ஆழத்தை அடைந்துவிடுகிறோம். மண்ணில் கால்கள் படுகின்றன. அத்தனை மென்மையாக இருக்கிறது மண். அழகான நண்டுகள் நகர்ந்துக் கொண்டிருக்கின்றன. உலகை மறந்து, அத்தனை ஆழத்தில் அந்த அற்புதமான உணர்வை அனுபவித்துக் கொண்டிருக்கும் போது, திடீரென அது கண்களில் படுகிறது. ........... ரீஃபைண்ட் சன்பிளவர் ஆயில் பாக்கெட். அங்கிருந்த சிறு பாறையின் இடுக்கில் அந்தப் பிளாஸ்டிக் கவர் மிதந்து வந்து நிற்கிறது. அந்த இடுக்கிலிருந்து வெளிவர ஒரு மீன் முயற்சித்துக் கொண்டிருக்கிறது. அது போராடிக் கொண்டிருக்க, நம்மை அழைத்து வந்த பயிற்சியாளர் "டெம்பிள் அட்வெஞ்சர்ஸ்" அரவிந்த் , நீந்திச் சென்று அந்த பிளாஸ்டிக் கவரை எடுத்து அந்த மீனை விடுவிக்கிறார். 

ஆழ்கடல் அசுத்தங்கள்

மீண்டும் கொஞ்ச தூரம் நீந்துகிறோம். இப்படியாக ஆழ்கடலின் அழகோடு ஆங்காங்கே, அந்த உயிரினங்களின் உயிரை வாங்கும் பிளாஸ்டிக் பொருட்கள் வந்தபடியே இருக்கின்றன. அரவிந்தும் தன்னால் இயன்ற அளவிற்கு அவைகளை அள்ளிக்கொண்டே இருக்கிறார். 40 நிமிடங்கள் கழித்து படகிற்கு வருகிறோம். ஸ்கூபா அனுபவத்தைப் பரவசத்தோடு அனைவரும் பகிர்ந்துக் கொண்டார்கள். எனக்கு மட்டும் ஏனோ, அங்கிருந்த குப்பைகள் குறித்த எண்ணமே பெரிய கவலையைக் கொடுத்துக் கொண்டிருந்தது. "ஜேம்ஸ் பாண்ட்" கரைக்கு திரும்பும் சமயம், ஒரு பெரிய ஆமை மிதந்தபடியே வந்துக் கொண்டிருந்தது. அதன் குடல் வெளியே தொங்கிக் கொண்டிருந்தது. இறந்து நாட்களாகியிருந்தது. அரவிந்த் அதனருகே சென்று பார்த்தார். கால்களில் மீன் வலைகள் சிக்கியிருந்தன. அதனால் தான் அந்த ஆமை இறந்திருந்தது. படகு கடலில் மிதந்துக் கொண்டிருக்க சில விஷயங்களைப் பேச ஆரம்பித்தார் அரவிந்த்,

கடல் அடியில் அரவிந்த்" நமக்கு இப்போதான் நிலத்தையே சுத்தமாக வைத்துக் கொள்ள வேண்டும் என்கிற எண்ணமே வர ஆரம்பித்திருக்கிறது. ஆனால், ஆழ்கடல் படு மோசமான நிலையை எட்டிக் கொண்டிருக்கிறது. இது குறித்து யாருக்கும் தெரிவதில்லை. உலகம் முழுக்க வருடத்திற்கு, 80 லட்சம் டன் பிளாஸ்டிக் கழிவுகள் கடலுக்குள் வந்து சேர்கின்றன. அது கடல் உயிர்களுக்குப் பேராபத்துக்களை விளைவிக்கின்றன. ஐரோப்பிய நாடுகளிலேயே கடல் வாழ்க்கை மோசமான நிலையில் இருக்கிறது எனும் போது, நம் நாட்டில் சொல்லவே தேவையில்லை. 
கடற்கரையை சுத்தமாக வைப்பதே கஷ்டமாக இருக்கிறது. கடலுக்கடியில் இருக்கும் குப்பைகளை யார் கண்டு கொள்ளப் போகிறார்கள்?.

2008ல் " ஆழ் கடல் சுத்தப்படுத்துதல்" என்ற பெயரில் நானும் என் நண்பர்கள் இருவருமாக முதன் முதலில் பாண்டிச்சேரியின் குறிப்பிட்ட இந்த "டெம்பிள் ரீஃப்" பகுதியை சுத்தப்படுத்தினோம். மூன்று பேர் மட்டும் சேர்ந்து 250 கிலோ அளவிற்கான குப்பைகளை அப்புறப்படுத்தினோம். ஆழ்கடலை சுத்தப்படுத்துவது அவ்வளவு எளிதல்ல. பயிற்சி பெற்ற "டைவர்"களால் மட்டுமே இதைச் செய்ய முடியும். நாங்கள் இதை உயிரைப் பணையம் வைத்து செய்கிறோம். 10 பேர் கீழே போய் சுத்தப்படுத்துவார்கள். அவர்களுக்கு மேல், 5 பேர், அவர்களுக்கு மேல் 3 பேர் என அடுக்கடுக்காக இருந்தபடி வேலை செய்வோம். யாராவது வலையில் மாட்டிக் கொண்டாலோ, அல்லது ஆக்ஸிஜன் தீர்ந்து போவது போன்ற பிரச்சினைகள் ஏற்பட்டாலோ மற்றவர் வந்து காப்பாற்றுவார்கள். இப்போது, வருடத்திற்கு ஒரு முறை 30 பேர் சேர்ந்து ஆழ் கடலை சுத்தப்படுத்தும் வேலைகளை செய்து வருகிறோம்..." என்று சொல்லவும் "ஜேம்ஸ்பாண்ட்" கரையை அடையவும் சரியாக இருந்தது. 

அரவிந்த் சொன்னதைத் தொடர்ந்து, பிளாஸ்டிக்கினால் ஆழ்கடலில் ஏற்படும் பிரச்சினைகள் குறித்த சில விஷயங்களை ஆராய்ந்தோம். பல அதிர்ச்சிகரமான விஷயங்கள் தெரியவந்தன.

கடலில் மீன்களைவிட, பிளாஸ்டிக் குப்பைகள் அதிகம்!

கடந்த வருடம் பிரிட்டனில் நடத்தப்பட்ட ஒரு ஆராய்ச்சியில், அங்கு பிடிக்கப்படும் மீன்களில் மூன்றில், ஒரு மீனின் வயிற்றில் பிளாஸ்டிக் இருப்பதாகச் சொல்லப்படுகிறது.  உலகம் முழுக்க பரந்து, விரிந்திருக்கும் கடற்கரையில் காலாட நடந்து சென்றால் ஒரு அடிக்கு 5 பிளாஸ்டிக் பைகளை நிரப்பும் அளவிற்கான குப்பைகள் இருக்கின்றன. 

இதே நிலைத் தொடர்ந்தால், 2050ல் 99% கடற்பறவைகள் பிளாஸ்டிக் சாப்பிட்டிருக்கும், கடலில் மீன்களின் எண்ணிக்கையைவிட பிளாஸ்டிக் குப்பைகள் தான் அதிகமிருக்கும். வருடத்திற்கு 10 லட்சத்திற்கும் அதிகமான கடல் உயிரினங்கள் பிளாஸ்டிக்கினால் உயிரிழக்கின்றன. கடலில் சேரும் பிளாஸ்டிக் குப்பைகளில் 80% நிலத்திலிருந்து வருகிறது, 20% கடலில் பயணிக்கும் கப்பல்களால் வருகிறது. 

அசுத்தமான ஆழ்கடல்

 

நாம் போடும் பிளாஸ்டிக் மீண்டும் நமக்கே!

உலகளவில் பெரும்பாலான மீன்கள், அதிகப்படியான பிளாஸ்டிக்கை உண்கின்றன. அந்தப் பிளாஸ்டிக் அதன் குடலிலேயே தங்கிவிடுகின்றன. அந்த மீன்களை மனிதர்கள் சாப்பிடும் போது, அந்த பிளாஸ்டிக் கெமிக்கல் மீண்டும் நம் வயிற்றுக்குள் போகிறது. " மீன்களின் குடலைத் தான் நீக்கிவிடுகிறோமே?" என்று கேட்கலாம். ஆனால், 2015ம் ஆண்டு ஜூலையில் "பிளைமோத் மரைன் லேபில்" மேற்கொண்ட ஆராய்ச்சியில் கடலில் வாழும் நுண்ணியிரிகள் கூட பிளாஸ்டிக்கை உண்ணும் விநோதத்தைக் கண்டனர். சில மீன்களின் குடலில் பிளாஸ்டிக் செரித்தாலும், அந்தப் பிளாஸ்டிக்கின் ரசாயனங்கள் அதன் உடலில் தங்கும். அதை மீண்டும் மனிதர்கள் சாப்பிடும் போது, அது பெரும் கேடுகளை விளைவிக்கும். 

கடலில் நாம் தூக்கிப்போடும் ஒவ்வொரு பிளாஸ்டிக் துண்டிற்கும் நாம் பொறுப்பாகிறோம். ஒன்று கொலைகாரனாக அல்லது தற்கொலை செய்து கொள்பவனாக. இதைக் கொஞ்சம் கற்பனை செய்து பாருங்கள், ஒரு பிளாஸ்டிக் கவரை முகத்தை சுற்றி இறுக கட்டிவிடுகிறோம். கைகளை உபயோகப்படுத்த முடியாது. சில நொடிகள் இருக்க முடியுமா நம்மால்? ஆனால், நாம் போடும் பிளாஸ்டிக் கவர்கள் ஒரு ஆமையின் முகத்தையோ, மீனின் முகத்திலோ அப்படித் தான் சிக்குகின்றன. என்ன செய்வதென தெரியாமல், மூச்சுத் திணறி அந்த ஆழ்கடலில் அமைதியாய் அவை மரணித்து விடுகின்றன. இது கொலை. அடுத்ததாக, பிளாஸ்டிக்குகளை சாப்பிடும் மீன்களை, அதன் ரசாயனங்களோடு நாம் சாப்பிடுகிறோம். இது தற்கொலை. 

கடல் மீன்கள் பிளாஸ்டிக் உண்கின்றன

இது ஒரு உண்மைக் கதை... அல்பட்ராஸ் என்ற அந்தக் கடற்பறவை நெடுந்தூரம் பறந்து, பறந்து தன் குஞ்சிற்கு உணவை எடுத்து வந்து ஊட்டுகிறது. 90 நாட்களே ஆன, அந்தப் பறவைக் குஞ்சு கரையில் இறந்து விழுகிறது. தன் குழந்தை இறந்ததைக் கண்டு நீண்ட நேரம் அங்கேயே உட்கார்ந்திருந்தது அந்த தாய்ப்பறவை. இறந்த அந்தப் பறவையை ஒரு மாணவர் எடுத்து ஆராய்ச்சி செய்கிறார். அதன் வயிற்றில் 276 பிளாஸ்டிக் துண்டுகள் இருந்ததைக் கண்டு அதிர்ச்சியடைகிறார். அத்தனை நாட்களும் பிளாஸ்டிக் துண்டுகளை, உணவு என எண்ணி அந்த தாய்ப்பறவை குஞ்சிற்கு கொடுத்தது வந்துள்ளது... தன்னை அறியாமலேயே, தன் குழந்தைக்கு விஷத்தை ஊட்டியுள்ளது. உலகின் மிகத் துயரமான மரணம் அது... 

http://www.vikatan.com

  • Replies 11.3k
  • Views 1.5m
  • Created
  • Last Reply
  • தொடங்கியவர்

நவீன கலாச்சாரக் கட்டிடங்கள்

Desktop_3151998f.jpg

asas_3152000f.jpg
தாஜ்மஹால், சீனப் பெருஞ்சுவர் போன்ற உலக அதியசங்களைப் பற்றி நமக்குத் தெரியும். இவையெல்லாம் உலக அதிசயங்கள் என்பதைத் தாண்டி இந்தக் கட்டிடங்கள் கலாச்சார அடையாளங்கள் | ஃபயினா ஃபோரம், அமெரிக்கா
china_3151999f.jpg
இவையெல்லாம் பழமையான கலாச்சார அடையாளங்கள். இருபதாம் நூற்றாண்டில் கட்டிடக் கலை மிக நவீனமாகியுள்ளது. | நான்ஜிங் யூத் கல்சுரல் செண்டர், சீனா
 
georgia_3151997f.jpg
பழமையான பாணியிலிருந்து விலகி ‘கட்டுடைப்புக் கட்டிட பாணி’ அறிமுகமானது. | ரிக்கி பார்க் மியூசி தியேட்டர், ஜார்ஜியா
 
germany_campus_3151996f.jpg
கட்டிடங்களின் வடிவமைப்பு நம்மால் கற்பனைசெய்து பார்க்கவியாலத வகையில் மாற்றம் அடைந்தது. அம்மாதிரியான கட்டிடங்களின் ஒளிப் படத் தொகுப்பு இது | விட்ரா கேம்பஸ், ஜெர்மனி
 
germany_3151995f.jpg
எல்பில்ஹார்மோனி, ஜெர்மனி
 
 
greece_3151994f.jpg
ஸ்டாவ்ரோஸ் நியார்சோஸ், கிரீஸ்
 
ma_china_3151993f.jpg
மாக்கேஃப், சீனா
saudi_3151992f.jpg
கிங் அப்துலாஸீஸ் செண்டர், சவுதி அரேபியா
  • தொடங்கியவர்

சாலையில் சென்ற இளைஞர்களை நிறுத்தி சச்சின் வைத்த கோரிக்கை!

sachin Tendulkar

சச்சின் டெண்டுல்கர் சாலையில் இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்த இளைஞர்களிடம் ஹெல்மட் அணிந்து கொண்டு வண்டி ஓட்டுமாறு அறிவுரைக் கூறிய வீடியோ ட்ரெண்ட் ஆகி வருகிறது.

சாலையில் சென்று கொண்டிருந்த போது, டிராபிக்கில் ஹெல்மட் இல்லாமல் வண்டியில் இருந்த இரண்டு இளைஞர்களை சச்சின் கவனித்துள்ளார். உடனே தனது கார் கண்ணாடியை இறக்கி, அந்த இளைஞர்களை அழைத்து, ஹெல்மட் இல்லாமல் வாகனம் ஓட்டாதீர்கள் என்று சச்சின் அறிவுரை கூறியுள்ளார். சச்சினை பார்த்து இன்ப அதிர்ச்சி அடைந்த இளைஞர்கள், இனி கட்டாயம் ஹெல்மட் அணிந்து வண்டி ஓட்டுகிறோம் என்று வாக்குறுதி அளித்துள்ளனர். 

சச்சின் தனது ட்விட்டர் பக்கத்தில் இந்த வீடியோவை பகிர்ந்துள்ளார். பகிர்ந்ததோடு மட்டுமில்லாமல், வாகனம் ஓட்டும் போது அனைவரும் கட்டாயம் ஹெல்மட் அணிய வேண்டும். தயவு செய்து இதனை பின்பற்றுங்கள் என்னும் கோரிக்கையை வைத்துள்ளார். 

 

  • தொடங்கியவர்

விக்ரம் பிரபு தயாரித்து நடிக்கும் 'நெருப்புடா' திரைப்பட டீசர்!

Neru_1_19500.jpg

விக்ரம் பிரபு தயாரித்து நடிக்கும் ஆக்‌ஷன்-த்ரில்லர் திரைப்படம் 'நெருப்புடா'. நிக்கி கல்ராணி விக்ரம் பிரபுவுக்கு ஜோடியாக நடிக்க, ஷான் ரோல்டன் இந்தப் திரைப்படத்துக்கு இசையமைத்துள்ளார். இத்திரைப்படத்தின் டீசர் தற்போது வெளியாகியுள்ளது. 

 

  • தொடங்கியவர்
 

தம்பியின் விழிக்கு ஒளி தேடும் அக்காவின் நெகிழ்ச்சி கதை! #Dhanak

dhanak

2016-ல் வெளியான திரைப்படங்களுக்கான தேசிய விருதுகள் சமீபத்தில் அறிவிக்கப்பட்டன. அதில் 'சிறுவர்களுக்கான சிறந்த திரைப்படம்' என்கிற பிரிவில் விருது பெற்ற இந்தி திரைப்படம் 'Dhanak'. 'வானவில்' என்பது இதன் பொருள். இந்திய விருது மட்டுமல்லாமல் சர்வதேச விழாக்களிலும் கவனத்தையும் அங்கீகாரத்தையும் பெற்ற திரைப்படம். சுயாதீன முயற்சியில் மாற்றுத் திரைப்படங்களைத் தொடர்ந்து உருவாக்கும் படைப்பாளியான நாகேஷ் குக்குனூர் (Nagesh Kukunoor) இந்தத் திரைப்படத்தை இயக்கியுள்ளார்.

இது ஒரு Road Movie. கண் பார்வையை இழந்த சிறுவன் ஒருவன். அவனுடைய வாழ்வில் மீண்டும் ஒளி திரும்புவதற்காக ஓர் அசாதாரணமான, நீண்ட பயணத்தை மேற்கொள்கிறாள் அவனது சகோதரி. நெகிழ்வூட்டும் அந்தப் பயணக்காட்சிகளின் தொகுப்பு இந்தத் திரைப்படம். பார்த்து முடித்தவுடன் நல்லதொரு ஃபீல் குட் திரைப்படத்தைப் பார்த்த நிறைவு ஏற்படுவதோடு விருதுக்கு தகுதியான திரைப்படம்தான் என்கிற உணர்வும் ஏற்படுகிறது. ஈரானியத் திரைப்படங்களைப் போல் ஏன் இங்கு நல்ல திரைப்படங்கள் உருவாவதில்லை என்று நமக்குள் எழும் நெடுங்கால குறையைப் போக்க முயற்சிக்கிறது.

***

எட்டு வயதுள்ள சோட்டு கண்பார்வையை இழந்த சிறுவன். அவனுடைய மூத்த சகோதரி பரி. இவர்களுடைய பெற்றோர் விபத்தில் ஒன்றில் இறந்து விட்டதால் தங்களின் மாமா - அத்தை வீட்டில் வளர்கிறார்கள். மாமா இவர்களுக்கு ஆதரவாக இருந்தாலும் அத்தை கடுகடுவென்று திட்டிக்கொண்டே உணவளிக்கிறாள். உடல்நலம் குன்றியதால் வேலைக்குச் செல்ல முடியாத மாமாவால் அத்தையை எதையும் சொல்ல முடிவதில்லை.

சோட்டு, நடிகர் சல்மான்கானின் தீவிர ரசிகன். ஏன், வெறியன் என்றுகூடச் சொல்லலாம். அக்காவான பரி, ஷாருக்கானின் ரசிகை. இருவரும் பள்ளிக்குச் செல்லும் வழியில் காசை சுண்டிப் பார்த்து யார் வெற்றிப் பெறுகிறார்களோ அவர்களின் ஹீரோவை வைத்து கதை சொல்ல வேண்டும். சல்மானைப் பற்றிய கதையைக் கேட்பதற்காக சில தகிடுதத்தங்களை சோட்டு செய்வான். கதை சாதாரணமாக நகர்ந்தால் அவனுக்குப் பிடிக்காது. சல்மான் செய்யும் சாகசங்கள் நிறைந்திருக்க வேண்டும். அக்கா சொல்லும் கதையை இடைமறித்து அதில் பயங்கரமான சண்டைக் காட்சிகளைச் சேர்ப்பான். அத்தைக்குத் தெரியாமல் மாமா இவர்களை அவ்வப்போது சினிமாவிற்கு அழைத்துச் செல்வார். திரையில் நடப்பதையெல்லாம் சோட்டுவிற்கு அக்கா விளக்கிச் சொல்வாள்.

தனது தம்பி சோட்டு மீது அதிக பாசம் வைத்திருப்பவள் பரி. பள்ளிக்கூடத்தில் கூட தனது தம்பியின் அருகிலேயே இருந்து பார்த்துக்கொள்ள வேண்டும் என்பதற்காக வேண்டுமென்றே தோல்வியடைந்து அவனுடைய வகுப்பில் பக்கத்தில் அமரும் அளவிற்கான பாசம். அவனுடைய ஒன்பதாவது பிறந்த நாள் வருவதற்குள் இழந்த, அவனது பார்வையை மீட்டு விட வேண்டும் என்று உறுதி பூண்டிருப்பவள்.

ஒரு முறை இவர்கள் சினிமாவிற்குச் செல்லும் போது அங்கு சுவரில் ஒட்டியிருக்கும் போஸ்டரில் கண் தானத்தை வலியுறுத்தி ஷாரூக்கான் சொல்லியிருக்கும் செய்தியைப் பார்க்கிறாள். எனவே, தனது தம்பியின் நிலைமையைச் சொல்லி உதவி கேட்டு அவருக்கு தினமும் கடிதம் எழுதுகிறாள். 'பணம் பிறகு தருகிறேன்' என்று சொல்லி ஸ்டாம்ப் ஒட்டி அனுப்பச் சொல்லி போஸ்ட் மாஸ்டரிடம் தருகிறாள். முதலில் சில கடிதங்களை அனுப்பும் அவர், இந்த பைத்தியக்காரத்தனத்தை அவளது மாமாவிடம் சொல்லி கடிதங்களைத் திருப்பித் தருகிறார்.

அவர்கள் வசிக்கும் பகுதியில் ஷாரூக்கான நடிக்கும் திரைப்படமொன்றின் படப்பிடிப்பு நடப்பதாக தகவல் வருகிறது.  சுமார் 300 கிலோ மீட்டர்கள் தள்ளியிருக்கும் இடம் அது. எப்படியாவது அங்கு சென்று ஷாரூக்கானிடம் உதவி கேட்டால் தன் தம்பிக்கு பார்வைத் திரும்ப உதவி செய்வார் என்று தீவிரமாக நம்புகிறாள் பரி. அந்த இடத்திற்கு செல்வதற்காக மாமாவிடம் உதவி கேட்டுப் பார்க்கிறாள். அவரோ அழைத்துச்செல்லமுடியாத நிலையில் இருப்பதால், ஏதோ சமாளிப்பாய் பதில் சொல்ல, கோபமுறும் பரி தனது தம்பியை அழைத்துக் கொண்டு வீட்டை விட்டுச் செல்கிறாள்.

கண் பார்வையற்ற ஒரு சிறுவனை அழைத்துக் கொண்டு சுமார் பன்னிரெண்டு வயதுள்ள சிறுமியால் இதைச் சாதிக்க முடியுமா? இந்த நெடும் பயணத்தில் அவர்கள் சந்திக்கும் நல்ல மனிதர்கள், அனுபவங்கள், கெட்ட ஆசாமிகள், நெகிழ்வை அளிக்கும் சம்பவங்கள் ஆகியவற்றால் இந்தத் திரைப்படம் நிறைந்துள்ளது. நெகிழ்வூட்டும் காட்சிகள் நம்மைக் கலங்கவும் புன்னகைக்கவும் வைக்கின்றன.

இவர்களின் இந்தப் பயணம் வெற்றிகரமாக நிறைவேறியதா, சோட்டுவிற்கு பார்வை திரும்பியதா என்பதை இயக்குநர் அபாரமான திரைக்கதையின் மூலம் ஒரு சிறந்த படைப்பாக உருவாக்கியுள்ளார்.

dhanak

சிறுவன் சோட்டுவாக Krrish Chhabria அற்புதமாக நடித்துள்ளான். பார்வையற்ற குறைபாடு குறித்து தாழ்வுணர்வு ஏதுமில்லாமல் தன்னைக் குறைகூறுபவர்களை துணிச்சலுடன் எதிர்க்கும் இவனது துறுதுறுப்பு வெகுவாக கவர்கிறது. சல்மான்கானின் தீவிரமான ரசிகனாக இவன் செய்யும் குறும்புகள், அழிச்சாட்டியங்கள் சிரிக்க வைக்கின்றன. நெருக்கடியான நேரத்தில் தின்பதற்காக தன் அக்காவிடம் எதையாவது கேட்டுக் கொண்டேயிருப்பது ரசிக்க வைக்கிறது. பரியாக Hetal Gadda நடித்துள்ளார். மிக முதிர்ச்சியான நடிப்பு. இருவரும் உண்மையிலேயே உடன்பிறந்தவர்களோ என்று நாம் நினைக்குமளவிற்கு தனது தம்பியின் மீது இவள் கொள்ளும் அக்கறையும் சமயங்களில் காண்பிக்கும் கண்டிப்பும் நம்பகத்தன்மையோடு அமைந்திருக்கின்றன. மாமாவாக விபின் சர்மா, அத்தையாக குல்ஃபம் கான், பெண் சாமியாராக விஃபா சிபர் போன்ற சிறந்த நடிகர்கள் இந்தப் படைப்பிற்கு பெருமை சேர்க்கிறார்கள்.

சத்யஜித் ரே இயக்கிய 'பதேர் பாஞ்சாலி'யில் வரும் துர்கா - அப்பு போன்று அக்கா - தம்பி உறவின் அற்புதம் இந்தத் திரைப்படத்தில் பதிவாகியுள்ளது. ஒரு முறை இந்தப் பயணத்தின் இடையே வழிதவறி பாலைவனத்தில் இருவரும் சிக்கிக் கொள்கிறார்கள். 'உனக்குப் பயமா இருக்கா?'' என்று பரி கேட்கிறாள். 'நீ பக்கத்தில் இருக்கும் போது எனக்கு எந்தப் பயமும் இல்லை' என்கிறான் சோட்டு. மிகுந்த நெகிழ்ச்சியை அளிக்கும் காட்சி இது. போலவே சல்மான் மற்றும் ஷாரூக் ரசிகர்களாக இவர்கள் செய்யும் அக்கப்போர்கள், நம் வீட்டில் இருக்கும் சுட்டிகளை நினைவுப்படுத்தி ரசிக்க வைக்கின்றன.

கண் பார்வையற்ற சிறுவன் சம்பந்தப்பட்ட திரைக்கதை என்பதால் அந்தப் பாத்திரத்தை வைத்து பார்வையாளர்களிடம் இரக்கத்தையும் சோகத்தையும் கோரும் எந்தவோர் அபத்த நாடகத்தையும் இயக்குநர் செய்யாதது பெரும் ஆறுதல். இதற்கு மாறாக சோட்டு பிடிவாதக்காரனாகவும் நேரம் காலம் தெரியாமல் அக்காவிடம் சண்டை போடுபவனாகவும் தீனிப்பண்டாரமாகவும் இருக்கிறான்.

சோட்டுவும் அவனது பயணத்தில் சந்திக்க நேரும் ஒரு சிறுவனும்,  இனிப்புப் பண்டங்களால் வீடு கட்டினால் எப்படியிருக்கும் என்று கற்பனை செய்து பேசிக் கொள்கிறார்கள். லட்டுக்களால் ஆன தரை, ஆனால் ஜன்னலை ஜிலேபிகளால்தான் அமைக்க வேண்டும் என்கிறான் அந்தச் சிறுவன். ஏன் எனப் புரியாமல் விழிக்கிறாள் பரி. "ஜிலேபியில் துவாரங்கள் இருக்கும். அதன் மூலம் காற்று வரும்" என்று சோட்டு பதில் அளிக்கிறான். இப்படியான பல காட்சிகள். சிறுவர்களின் உலகத்தை மிக இயல்பாக சித்தரித்த இயக்குநரை எத்தனை பாராட்டினாலும் தகும்.

இந்தப் பயணத்தில் அவர்கள் சந்திக்கும் ஒவ்வொரு மனிதரும் சுவாரசியமானவர்களாக இருக்கிறார்கள். தாகத்திற்கு இவர்களுக்கு தண்ணீர் அளித்து தனது லாரியில் ஏற்றிச் செல்லும் டிரைவர், தங்களின் திருமண வீட்டிற்கு அழைத்துச் சென்று தன் மகனுக்கு அறிமுகப்படுத்தி உபசரிப்பவர், 'ஷாரூக் என் கூட முன்ன நாடகத்துல நடிச்சவன்தான். கேட்டதாச் சொல்லு' என சிரிக்கும் பெண் சாமியார், இவர்களிடமிருந்து பிடுங்கி உண்ணும் போலீஸ்காரர், இவர்களை வைத்து பணம்பண்ண முயலும் போலி பக்தன், ஆபத்திலிருந்து தற்செயலாக இவர்களைக் காப்பாற்றும் கொள்ளைக்காரி, குறி சொல்லும் பாட்டி, பைக் மாமா, ஒரு வார்த்தை கூட பேசாமல் இவர்களுக்கு உதவி செய்யும் புத்தி சுவாதீனமற்ற ஆசாமி, உலக அமைதிக்காக நடைப்பயணம் செய்யும் வெளிநாட்டவர், நடிகர்களிடம் மீது மக்களுக்கு இருக்கும் மோகத்தைக் கொண்டு பணம் சம்பாதிக்கும் டுபாக்கூர் ஆசாமி என்று விதம் விதமான சுவாரசியமான கதாபாத்திரங்கள்.

ஆங்காங்கே ஒலிக்கும் ராஜஸ்தானின் அற்புதமான நாட்டுப்புறப் பாடல்களும் அதன் இசையும் நம்மை உற்சாகப்படுத்துகின்றன. (இசை: Tapas Relia). ஒரு சிறுவனும் சிறுமியும் தனியாக இப்படி நெடும் பயணம் மேற்கொள்வது சாத்தியமா, படம் நெடுக நாடகத்தனமான காட்சிகளாக இருக்கிறதே என்கிற மெல்லிய கேள்விகள் எழுந்தாலும் தம்முடைய அற்புதமான படைப்பாற்றலால் அதை மறக்கச் செய்யும் திரைக்கதையை உருவாக்கியுள்ளார் இயக்குநர் நாகேஷ் குக்குனூர். சிறுவனுக்கு பார்வையைத் தேடும் இந்தப் பயணத்தின் மூலம் நம்முடைய அகத்திலும் வெளிச்சத்தை ஏற்படுத்தும் நெகிழ்ச்சியை இந்த திரைப்படம் உருவாக்குகிறது.

பெற்றோர்கள் குழந்தைகளுடன் இணைந்து பார்க்க வேண்டிய அற்புதமான திரைப்படம். கோடை விடுமுறையை சிறுவர் சினிமாக்களோடு கொண்டாடுங்கள்.

dhanak படத்தின் டிரைலரைக் காண:

 

http://www.vikatan.com

  • தொடங்கியவர்

128 பயணிகளுடன் அமெரிக்க நீர்மூழ்கி கப்பல் மாயமான நாள்: ஏப்.10- 1963

 

ஐக்கிய அமெரிக்காவின் த்ரெஷர் என்ற நீர்மூழ்கி கப்பல் 1963-ம் ஆண்டு இதே தேதியில் 128 பயணிகளுடன் மாயமானது. இதே தேதியில் நிகழ்ந்த முக்கிய நிகழ்வுகள்:- 1919 - மெக்சிகோ புரட்சித் தலைவர் எமிலியானோ சப்பாட்டா அரச படையினரால் சுட்டுக் கொல்லப்பட்டார்.

 
128 பயணிகளுடன் அமெரிக்க நீர்மூழ்கி கப்பல் மாயமான நாள்: ஏப்.10- 1963
 
ஐக்கிய அமெரிக்காவின் த்ரெஷர் என்ற நீர்மூழ்கி கப்பல் 1963-ம் ஆண்டு இதே தேதியில் 128 பயணிகளுடன் மாயமானது.

இதே தேதியில் நிகழ்ந்த முக்கிய நிகழ்வுகள்:-

1919 - மெக்சிகோ புரட்சித் தலைவர் எமிலியானோ சப்பாட்டா அரச படையினரால் சுட்டுக் கொல்லப்பட்டார்.

1963 - ஐக்கிய அமெரிக்காவின் த்ரெஷர் என்ற நீர்மூழ்கி 129 பேருடன் காணாமல் போனது.

1972 - வியட்நாம் போர்: அமெரிக்க விமானங்கள் வடக்கு வியட்நாமில் குண்டுகளை வீசின.

1979 - டெக்சாஸ் மாநிலத்தில் விச்சிட்டா அருவியில் சுழற்காற்று தாக்கியதில் 42 பேர் கொல்லப்பட்டனர்.

1984 - ஈழப்போர்: பருத்தித்துறை காவல் நிலையம் விடுதலைப் புலிகளால் தகர்க்கப்பட்டது.

1985 - ஈழப்போர்: யாழ்ப்பாணம் காவல் நிலையம் விடுதலைப் புலிகளால் தகர்க்கப்பட்டது.

1991 - இத்தாலியின் மொபி பிரின்ஸ் என்ற பயணிகள் கப்பல் லிவோர்னோவில் எண்ணெய்த் தாங்கி கப்பல் ஒன்றுடன் மோதியதில் 140 பேர் கொல்லப்பட்டனர்.

1992 - லண்டனில் பால்ட்டிக் எக்ஸ்சேஞ்சு என்ற கட்டடம் ஐரிஷ் குடியரசு ராணுவத்தின் குண்டுவெடிப்பால் அழிந்தது.

1998 - அயர்லாந்து குடியரசுக்கும் ஐக்கிய இராச்சியத்துக்கும் இடையில் வட அயர்லாந்து குறித்த பெல்பாஸ்ட் உடன்பாடு எட்டப்பட்டது.

2002 - விடுதலைப் புலிகளின் தலைவர் வே. பிரபாகரன் கிளிநொச்சியில் சர்வதேச ஊடகவியலாளர் மகாநாட்டில் கலந்து கொண்டார்.

2006 - இந்தியாவில் உத்தரப் பிரதேசத்தில் மீரட் நகரில் வர்த்தகக் கண்காட்சி ஒன்றில் ஏற்பட்ட தீயில் 60 பேர் கொல்லப்பட்டனர்.
 

டைட்டானிக் கப்பல் பயணம் செய்த நாள்: ஏப். 10- 1912

 

டைட்டானிக் கப்பல் அண்டார்டிக் கடலில் பனிப்பாறையில் சிக்கி மூழ்கியது. இதில் பயணம் செய்த அனைவரும் இறந்தனர். இந்த கப்பல் 1912-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 10-ந்தேதி தனது பயணத்தை ஆரம்பித்தது.

 
 
டைட்டானிக் கப்பல் பயணம் செய்த நாள்: ஏப். 10- 1912
 
டைட்டானிக் கப்பல் அண்டார்டிக் கடலில் பனிப்பாறையில் சிக்கி மூழ்கியது. இதில் பயணம் செய்த அனைவரும் இறந்தனர். இந்த கப்பல் 1912-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 10-ந்தேதி தனது பயணத்தை ஆரம்பித்தது.

இதே தேதியில் நிகழ்ந்த முக்கிய நிகழ்வுகள்:-

* 1815 - இந்தோனேசியாவில் டம்போரா எரிமலை வெடித்து சிதறியதில் பல தீவுகள் அழிந்தன. 71,000 பேர் கொல்லப்பட்டனர்.

1821 - கொன்ஸ்டண்டீனோபோலின் ஆயர் ஐந்தாம் கிரெகோரி துருக்கியர்களினால் தூக்கிலிடப்பட்டார்.

1826 - துருக்கியப் படைகளின் ஆக்கிரமிப்பை அடுத்து மெசோலோங்கி என்ற கிரேக்க நகரில் இருந்து 10,500 பேர் நகரை விட்டு வெளியேறினர்.
இவர்களில் மிகச்சிலரே தப்பினர்.
1848 - இங்கிலாந்தில் கிரேட் யார்மூத் நகரில் பாலம் ஒன்று இடிந்து வீழ்ந்ததில் 250 பேர் கொல்லப்பட்டனர்.

1864 - முதலாம் மாக்சிமிலியன் மெக்சிக்கோவின் மன்னனாக முடி சூடினான்.

1868 - அபிசீனியாவில் அரோகீ என்ற இடத்தில் பிரித்தானிய மற்றும் இந்தியக் கூட்டுப்படைகள் தியோடர் மன்னனின் படைகளை வெற்றி கண்டன. 700 எதியோப்பியப் படை வீரர்கள் கொல்லப்பட்டனர். இந்திய/பிரித்தானியப் படையினரில் இருவர் மட்டுமே கொல்லப்பட்டனர்.

1869 - கியூபாவில் கியூபா புரட்சிக் கட்சி ஜொசே மார்ட்டீயினால் தொடங்கப்பட்டது.

1912 - டைட்டானிக் பயணிகள் கப்பல் தனது முதலாவதும் கடைசியுமான பயணத்தை இங்கிலாந்தின் சௌதாப்ம்டன் துறையில் ஆரம்பித்தது.

http://www.maalaimalar.com

  • தொடங்கியவர்

3 கோடி செலவில் மாலைதீவில் ஊழியர்களுடன் கொண்டாட்டம்..

 

2017-ம் ஆண்டில் அதிர்ஷ்டசாலி ஊழியர்கள் என்றால் அது எவால்வ் மிக்ஸ்டு மார்ஷியல் ஆர்ட்ஸ் நிறுவன ஊழியர்கள் ஆவார்கள். எப்படி என்கிறீர்களா எவால்வ் மிக்ஸ்டு மார்ஷியல் ஆர்ட்ஸ் நிறுவனர் மற்றும் தலைவரான சட்ரி சிடியாட்ங் தனது ஊழியர்களை மாலைதீவுக்குச் சுற்றுலா கொண்டு சென்றுள்ளார்.

என்னதான் பொருளாதாரச் சவால்கள் நிறைந்து இருந்தாலும் 2016-ம் ஆண்டு 30 சதவீதம் வரை அதிக லாபம் அடைந்துள்ளது. இரண்டு அடுக்க லாப உயர்வை இந்த நிறுவனம் பெற்று வருவது குறிப்பிடத்தக்கது.

சாதாரணச் சுற்றுலா இல்லை

இது ஒன்றும் சாதாரணச் சுற்றுலா இல்லை என்பதை நினைவில் கொள்ள வேண்டும். இந்தச் சுற்றுலாவில் ஊழியர்கள் ஒரு ரூபாய் கூடச் செலவு செய்யவில்லை, ஆனால் 5 நட்சத்திர தங்கும் விடுதியில் தங்க வைக்கப்பட்டனர். மொத்தம் 100 ஊழியர்களுக்கு நிறுவனர் செலவு செய்த தொகை என்னவென்று பார்த்தால் அது 500,000 டாலர்கள் ஆகும்.

625.0.560.350.160.300.053.800.668.160.90.jpg

சிடியாட்ங்

சிடியாட்ங் ஒரு பாதித் தாய் நாட்டவர் பாதி ஜப்பானியர், இவர் மட்டும் தான் ஆசியாவின் இந்த மிகப் பெரிய விளையாட்டு மீடியா பிராப்ரட்டிஸ் நிறுவனத்தின் நிறுவனர் மற்றும் தலைவர் ஆவார்.

தாராள மனப்பான்மை

45 வயதான சிடியாட்ங் தனது ஊழியர்களுடன் தாராள மனப்பான்மை கொண்டவர் ஆவார். மாலைதீவுக்குத் தனது ஊழியர்களை அழைத்து வருவதற்கு முன்பு இந்தோனேசியா, தாய்லாந்து உள்ளிட்ட இடங்களுக்கு ஆடம்பர சுற்றுலா அழைத்துச் சென்றுள்ளார்

625.0.560.350.160.300.053.800.668.160.90.jpg

பயணம் செய்வதில் விருப்பம்

எங்களது நிறுவனத்தில் பணி புரியும் பெரும்பாலான ஊழியர்கள் உலகம் முழுவதும் பயணம் செய்வதில் விருப்பம் உடையவர்கள் அது தான் என்னுடைய விருப்பனும் என்று அமெரிக்கப் பத்திரிக்கைக்குச் சிடியாட்ங் கூறியுள்ளார்.

ஊழியர்களில் பலர் மிகவும் ஏழ்மையான பின்புலம் கொண்டவர்கள்

அதே நேரம் எங்களது நிறுவனத்தின் ஊழியர்களில் பலர் மிகவும் ஏழ்மையான குடும்பத்தில் இருந்து வந்தவர்கள், அவர்களுடைய கனவை நினைவாக்கும் விதமாக இந்த வாய்ப்பு இருக்கும் என்றும் அவர் கூறினார்.

சிறு வெகுமதிகள்

மேலும் நான் இவர்களுக்கு அளிக்கும் இந்தச் சிறு வெகுமதிகளால் இவர்கள் ஈடுபாட்டுடன் பணிபுரிவார்கள். அதனால் இவர்களை ஒவ்வொரு வருடமும் ஆச்சரியமூட்டும் இடங்களுக்கு ஆடம்பர வசதிகளின் அழைத்துச் சென்று வருகிறேன் என்கிறார்.

625.0.560.350.160.300.053.800.668.160.90.jpg

ஆரம்ப கால வாழ்க்கை

சிடியாட்ங் ஒன்றும் பிறப்பால் பணக்காரர் அல்ல. இவருடைய குடும்பம் ஒரு காலத்தில் தங்க இடம் கூட இல்லாமல், ஒரு வேலை உணவு கூடச் சரியாகக் கிடைக்காமல் இருந்தனர் என்பதை இவர் நினைவு கூறுகிறார்.

முதல் வேலை

சொந்தமாக நிறுவனம் துவங்கும் முன்பு இவருடைய குடும்பச் சிக்கல்களில் இருந்து எல்லாம் வெளியில் வருவதற்காக முதலில் நிதி நிறுவனத்தில் தனது பணிபுரிந்துள்ளார்.

சிறந்த மனிதர்

இதில் சிறப்பு என்னவென்றால் சிடியாட்ங் ஒரு சிறந்த மனிதர் என்பதை அவருடைய ஊழியர்கள் மறுக்காமல் ஏற்றுக்கொள்வார்கள் என்பதில் ஆச்சர்யம் ஒன்றும் இல்லை.

 

625.0.560.350.160.300.053.800.668.160.90.jpg

 

- One India

  • தொடங்கியவர்

 

 

ஆட்டு மந்தையில் இணைந்த குரங்கு

  • தொடங்கியவர்

சிரியா மீதான அமெரிக்க தாக்குதலுக்கு ட்ரம்ப் மகள் காரணமா..!?

Ivanka Trump

சில நாள்களுக்கு முன்னர் சிரியா நாட்டில் இருக்கும் இட்லிப் மாகாணத்தில் கிளர்ச்ச்சியாளர்கள் கட்டுப்பாட்டில் உள்ள கான் ஷேக்கான் நகர் மீது ரசாயன வெடிகுண்டுத் தாக்குதல் நடத்தப்பட்டது. சிரிய அரசுப் படையினர் நடத்திய வான்வழித் தாக்குதலில் ராசாயன குண்டுகள் வீசப்பட்டதாகச் சொல்லப்படுகிறது. ரசாயனத் தாக்குதலுக்கு சிரிய அதிபர் பஷார் அல் ஆஷாத் காரணம் என உலக நாடுகள் குற்றம் சாட்டியுள்ளன. இந்தத் தாக்குதலில் 80 பேர் பலியாகினர். இதில் 20 பெண்களும் 30 குழந்தைகளும் அடக்கம். பலி எண்ணிக்கை இன்னும் அதிகம் இருக்கும் என்றும் கூறப்பட்டு வருகின்றது.

இந்த ரசாயன தாக்குதலுக்குப் பின்னர், சிரியா மீது அமெரிக்கா வான் வழித் தாக்குதல் நடத்தியது. குறைவான சேதம் ஏற்படும் வகையில் சிரியா விமானப் படை தளத்தின் மீது இத்தாக்குதல் நடத்தப்பட்டது. இந்த இரு தாக்குதலுக்கும் உலக நாடுகள் பலவும் கடும் கண்டனங்கள் தெரிவித்து வருகின்றன.

இந்நிலையில், அமெரிக்காவின் திடீர் தாக்குதலுக்கு அந்நாட்டு அதிபர் டொனால்ட் ட்ரம்ப் மகள் இவான்கா ட்ரம்ப் மறைமுகக் காரணமாக இருக்கலாம் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன.

‘சிரியாவில் நடத்தப்பட்ட ரசாயன தாக்குதலை அடுத்து வெளியான புகைப்படங்களைப் பார்த்து கடுங்கோபத்துடனும் மனம் உடைந்தும் இருக்கிறேன்' என்று இவான்கா ட்வீட் செய்திருந்தார்.

இதையடுத்து அமெரிக்கா சிரியாவின் விமானப் படை தளத்தின் மீது தாக்குதல் நடத்தியது. இந்த சம்பவத்தையடுத்து இவான்கா, 'நாம் வாழ்ந்து கொண்டிருக்கும் காலம் பல இக்கட்டான முடிவுகளை எடுக்க வைக்கும். மனித குலத்துக்கு எதிராக நடத்தப்பட்டு இருக்கும் இந்த தாக்குதலுக்கு என் அப்பா எடுத்திருக்கும் நிலைப்பாடு பெருமை அளிக்கிறது' என்று ட்விட்டர் பதிவிட்டார். 

மேலும், சிரியாவில் ரசாயான தாக்குதல் மேற்கொள்ளப்பட்ட பிறகு, இவான்கா தனது அப்பா டொனால்ட் ட்ரம்பை, சிரியா அரசுக்கு தக்க பதிலடி கொடுக்கும்படி கூறினார் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன.

http://www.vikatan.com

  • தொடங்கியவர்
வாழ்க்கை ஒரு பரிசோதனைக் கூடமல்ல
 
 

article_1491800822-banglesindianwedding.காதல் ஜோடிகள் பல பிரிவதற்கு இந்தச் சீதன முறைமை பெரும் காரணமாகி விட்டது. பணம், சொத்து இல்லாதவள் திருமணம் செய்ய உரிமையற்றவளா என்கின்ற கேள்வியும் எழுகின்றது அல்லவா?

காதலிக்கு முன்னர் வழங்கிய காதல் மொழிகள் “சீதனம் வாங்கித் தா” எனக் கேட்கும்போது, அந்தப் பேச்சே வாபஸ் பெறப்படுகின்றது. அவன் எழுதிய புதுக்கவிதைகள், இலக்கிய இரசம் மிக்க உரைகள் எல்லாமே கரைந்து போய் விடுகின்றன.

நான் என்ன செய்ய? எனது அம்மாதான் கேட்கிறார். எனக்கு விருப்பமே இல்லை” என நழுவும் ஆசாமிகளை என்னவென்று சொல்ல? 

ஐயன்மார்களே! எதனையும் யோசிக்காது பெண்கள் தங்கள் வாழ்க்கையை அமைக்க இயலாது. தன்னை விரும்புகின்றவன் யோக்கியதை, குடும்பத்தின் நிலை, எண்ணங்கள் அறிந்து கொள்ள வேண்டும்.

வாழ்க்கை ஒரு பரிசோதனைக் கூடமல்ல. அலசி ஆராய்ந்த பின்னரே முடிவு எடுக்க வேண்டும். 

Edited by நவீனன்

  • தொடங்கியவர்

வரலாற்றில் இன்று…

பெப்ரவரி -11

 

1831 : உரு­கு­வேயின் சல்­சி­புதிஸ் என்ற இடத்தில் நூற்­றுக்­க­ணக்­கான “சருவா” இனத்­தவர் படு­கொலை செய்­யப்­பட்­டனர்.


1865 : ஆபி­ரகாம் லிங்கன் தனது கடைசி உரையை நிகழ்த்­தினார்.


1899 : புவேர்ட்டோ ரிக்­கோவை ஐக்­கிய அமெ­ரிக்­கா­வுக்கு  ஸ்பெயின் அளித்­தது.


905 : பௌதீக விஞ்­ஞானி ஐன்ஸ்டீன் தனது சார்புக் கோட்­பாட்டை வெளி­யிட்டார்.

 

1921 : விளை­யாட்டு வர்­ணனை முதன் முறை­யாக வானொ­லியில் ஒலி­ப­ரப்­பா­னது.

 

Idi-Amin---varalaru1955 : ஹொங்கொங்கில் இருந்து புறப்­பட்ட எயார் இந்­தி­யாவின் காஷ்மீர் பிரின்செஸ் என்ற விமானம் குண்­டு­வெ­டிப்பின் கார­ண­மாக இந்­தோ­னே­ஷி­யாவில் கடலில் வீழ்ந்து மூழ்­கி­யது. பல ஊட­க­வி­ய­லா­ளர்கள் உட்­பட 16 பேர் கொல்­லப்­பட்­டனர்.


1957 : சிங்­கப்­பூரின் சுயாட்­சிக்கு பிரித்­தா­னியா சம்­ம­தித்­தது.


1965 : ஐக்­கிய அமெ­ரிக்­காவில் ஆறு  மாநி­லங்­களில் ஏற்­பட்ட சூறா­வளி கார­ண­மாக 256 பேர் கொல்­லப்­பட்­டனர்.


1970 : சந்­தி­ரனில் தரை­யி­றங்­கு­வ­தற்­காக அப்­போலோ 13 விண்­கலம் ஏவப்­பட்­டது. (இவ்­விண்­கலம் சந்­தி­ரனில் தரை­யி­றங்க முடி­யாமல் 6 நாட்­களில் பூமிக்குத் திரும்­பி­யது)


1979 : தான்­சா­னியப் படைகள் உகண்­டாவின் தலை­ந­க­ரான கம்­பா­லாவை கைப்­பற்­றின. உகண்டா சர்­வா­தி­காரி இடி அமீன் தப்­பி­யோ­டினார்.


1981 : தெற்கு லண்­டனில் பிரான்க்ஸ்டன் நகரில் இடம்­பெற்ற பெரும் கல­வ­ரத்தில் 300 காவற்­து­றை­யி­னரும் 65 பொது­மக்­களும் காய­முற்­றனர்.


1987 : இஸ்­ரே­லுக்கும் ஜோர்­தா­னுக்கும் இடையே இர­க­சிய ஒப்­பந்தம் லண்­டனில் கையெ­ழுத்­தி­டப்­பட்­டது.


2002 : வெனி­சூ­லாவில் ஜனா­தி­பதி ஹியூகோ சாேவஸுக்கு எதி­ராக இரா­ணுவப் புரட்சி இடம்­பெற்­றது.


2006: ஈரான் வெற்­றி­க­ர­மாக யுரே­னி­யத்தை செறிவாக்­கி­யுள்­ள­தாக அந்­நாட்டு ஜனா­தி­பதி மொஹம்மத் அஹ­ம­தி­நஜாட் அறி­வித்தார்.


2007 : அல்­ஜீ­ரி­யாவின் தலை­நகர் அல்­ஜியேர்ஸ் நகரில் இடம்­பெற்ற இரு குண்­டு­வெ­டிப்­பு­களில் 33 பேர் கொல்­லப்­பட்டு 222 பேர் காய­முற்­றனர்.


2011 : பெலா­ரஸில் ரயில் ஒன்றில் இடம்­பெற்ற குண்­டு­வெ­டிப்­பினால் 15 பேர் கொல்­லப்­பட்­ட­துடன் 204 பேர் காயமடைந்தனர்.


2012 : இந்தோனேஷியாவில் சுமாத்ரா கடற்பகுதியில் 8.7 ரிச்டர் அளவு நிலநடுக்கம் ஏற்பட்டது. இலங்கை, தமிழ்நாடு ஆகிய இடங்களிலும் இந்நிலநடுக்கம் ஓரளவு உணரப்பட்டது.

http://metronews.lk/

  • தொடங்கியவர்

இந்தக் கட்டுரையை முடித்தபிறகு... மீண்டும் முதல்வரியைப் படிப்பீர்கள்! #MorningMotivation

 Morning motivation

 ‘வெற்றி என்பது என்ன?’

எப்போதேனும்  யாராவது இந்தக் கேள்வியை உங்களிடம் கேட்டிருக்கிறார்களா?   அல்லது உங்களுக்குள்ளேயே கூட இந்தக் கேள்வி தோன்றியிருக்கலாம். இது இரண்டும் இல்லையென்றால்  கொஞ்சநேரம் ஒதுக்கி இந்தக் கேள்வியை உங்களுக்குள்ளேயே கேட்டு பாருங்களேன். சிலருக்கு பதில் கிடைப்பதில் நேரம் பிடிக்கலாம், ஒன்றும் அவசரம் இல்லை நிதானமாக நேரம் ஒதுக்கி இந்த கேள்விக்கு பதில் கண்டுபிடியுங்களேன். விடைகள் ரொம்பவே சுவாரஸ்யமானதாக கிடைக்கும். டெரா பைட் அளவிலான பிரமாண்ட, நீண்ட கால இலக்குகளை விட்டுவிடுவோம்.  பிட் கணக்கிலான விஷயங்களோடு ஒப்பிட்டு பார்ப்போமா?

ஓர் அலுவலகத்தில் கடைநிலை ஊழியராக வேலைக்கு சேர்ந்து இருக்கிறீர்கள், அளவான சம்பளம்தான். அடுத்த ஆறு மாதங்களில் உங்கள் வேலை பிடித்துப் போய் நிர்வாகமே உங்களுக்கு பதவி உயர்வு கொடுத்து, கூடுதலான சம்பளத்தையும் தருகிறது என வைத்துக் கொள்வோம். இது வெற்றி என நினைக்கிறீர்களா? ஆம், இதுவும் ஒரு வகையில் வெற்றிதான். அலுவலகத்தில் பதவி உயர்வு பெறுவது, புதிதாக கார் வாங்குவது, ஊரே வாய் மேல் விரல் வைத்து பார்க்கும் வகையில் மகளுக்கு திருமணம் செய்து கொடுப்பது,  உங்கள் மகனோ மகளோ வகுப்பில் முதல் மாணவனாக வருவது அவ்வளவு ஏன், நீங்கள் அலுவலகம் வரும்போது ஒரு காரை முந்தி வருவதுகூட வெற்றி என்ற வகையில் ஒவ்வொருவருக்கும் வெற்றிக்கான அளவுகளும், தன்மைகளையும் வகுத்து வைத்திருக்கிறோம். ஆனால், இதுதான் வெற்றி, இது மட்டும்தான் வெற்றி எனச் சொல்லிக் கொள்வதற்கு எந்த உதாரணங்களும் கிடையாது என்பதுதானே உண்மை. கடினமாக உழைத்து, சம்பாதித்து ஒரு சிறிய கார் வாங்குகிறோம். அந்தக் கார் வாங்கிய சில நாட்களிலேயே அதை விட சிறந்த கார் வாங்க வேண்டும் என ஆசையை மனதில் விதைத்து விட்டு இன்னும் அதிகமான உழைப்பை கொட்டுகிறோம்.

முதல் காரை விட சில வருடங்களிலேயே அதை விட சிறந்த காரை வாங்கி விடுவோம். இப்படி ஒவ்வொரு விஷயத்திலும் சின்னச் சின்ன இலக்குகள் வெற்றியடைய வெற்றியடைய அடுத்தடுத்த இலக்குகளை நோக்கி நகர்ந்து கொண்டே இருக்கும் மனதும் வாழ்வும். ஆனால், இந்த வெற்றி போதும் இதனுடன் நிறுத்திக்கொண்டு வேறு  வேலையைப் பார்ப்போம் என கொஞ்சம் ஓய்வெடுக்க நினைத்திருப்போமா என்று கேட்டால், இல்லை என்பதுதான் பலரின் பதிலாக இருக்கும்.  இப்போ சொல்லுங்க, வெற்றி என்பது என்ன?

முன்பே சொன்னதுபோல இப்பவும் இந்தக் கேள்விக்கு கொஞ்சம் நேரம் எடுத்துக்கலாம். பதில் கிடைப்பதில் குழப்பம் இருந்தால், கீழே உள்ள சில குட்டிக்குட்டிக் கேள்விகளை  உங்கள் மனதுக்குள் ஓட்டிப்பாருங்கள்:
 
விகடன்  உங்கள பொறுத்தவரைக்கும் வெற்றின்னா என்னன்னு நினைக்கிறீங்க? 

புள்ளி வெற்றிங்குறது எப்பவும் பெருசு பெருசா தான் இருக்கணுமா? 

 விகடன் ’இந்த விஷயத்தை அடைஞ்சா தான் வெற்றி’ன்னு நீங்க மனசுல வெச்சிருக்கறதை  உலகம் ஏத்துக்குமா?  அட உலகம் இருக்கட்டும்.. உங்களைச் சுற்றியுள்ளவர்கள் ஏத்துக்குவாங்களா?   

புள்ளி ஒரு கார் வாங்குறதும், பையன் கிளாஸ்ல முதல் ரேங்க் எடுக்குறதுலையும் வெற்றியடைஞ்சுட்டதா நினைச்சு நம்ம மனசு சந்தோஷப்படுதுன்னா.., இதுல மட்டும்தான் சந்தோசம் கிடைக்குமா? 

விகடன் யாருக்காகவோ, ‘இவ்ளோ பெரிய விஷயங்களையெல்லாம் பண்ணுறேன்’னு  நிரூபிக்க தினம் தினம் அந்தந்த நாட்களோட அழகை ரசிக்காம ஓடிக்கிட்டே இருக்கணுமா? 

நிச்சயமா இந்த கேள்விகளில் இருந்து  வெற்றியைப் பற்றி,  அந்த ஒரு வார்த்தைக்கு பின்னாடி இருக்கிற மாயை  பற்றி உங்களுக்குப் பதில் கிடைச்சுருக்கலாம். இன்னும் சிலர் மேலே உள்ள கேள்விகளை மட்டும் படிச்சுட்டு இந்த வரிக்கு வந்திருக்கலாம். 

‘ஆயிரம் மைல் பயணம் முதல் அடியில் இருந்துதான் துவங்கும்’ எனச் சொல்வார்கள். வெற்றின்னா என்னனு தெரியாம அதுக்காக கடின உழைப்பை கொடுக்குறதை விட, அதை பத்தி முழுசா தெரிஞ்சுக்கிட்டு இலக்கை நோக்கி ஓடுறது ரொம்ப சுலபமா இருக்கும்தானே. பள்ளிப் படிப்பிலிருந்து, கல்லூரி, திருமண வாழ்க்கை என எந்த நிலையில் இருந்தாலும் தினம் தினம் வெற்றிகள் குறித்தே சிந்தித்து கொண்டிருக்கிறோம். வெற்றியாளர்களை குறித்து விவாதிக்கிறோம். அவர்களின் வெற்றி சூத்திரங்களை தெரிந்துகொள்ள ஆவலாய் இருக்கிறோம். ஆனால், அவை எல்லாவற்றையும் தாண்டி ஒரு கேள்வியை எப்பொழுதும் உங்கள் மனதில் கேட்டுக் கொண்டே இருங்கள்.

அதுதான் இந்தக் கட்டுரையின் முதல் வரி! 

http://www.vikatan.com/

  • தொடங்கியவர்

காந்திக்கும் கஸ்தூரிக்கும் இடையிலான காதலின் மின்னல் தருணங்கள்! - கஸ்தூரிபாய் பிறந்தநாள் சிறப்புப் பகிர்வு

கஸ்தூரிபாய்து, ஓர் ஏழு வயது சிறுமியின் வீடு.  அந்த வீட்டில் உறவினர்களும், நண்பர்களும் கூடியிருந்தனர். அவர்களுடன், ஜோசியரும் புரோகிதரும்கூட. முக்கியமாய் பக்கத்துவீட்டு மோகன்தாஸின் அப்பா. இதனால் அங்கு, மகிழ்ச்சி வெள்ளம் கரைபுரண்டு ஓடியது. ''எப்போதும், நம் தந்தையைக் காண வியாபார நண்பர்கள்தானே வருவார்கள்; ஆனால், இந்த முறை இவர்கள் வந்திருப்பது எதற்கென்று தெரியவில்லையே? அது என்னவோ, நமக்கேன் வம்பு... பெரியவர்கள் விஷயம்'' என்று நினைத்தபடியே தோட்டத்துக்குள் ஓடினாள், அந்தச் சிறுமி. அவர், வேறு யாருமல்ல... மகாத்மா காந்தியின் (மோகன்தாஸ்) மனைவி கஸ்தூரிபாய். அவருடைய பிறந்த தினம் இன்று. 

'' 'டூ' விட்டுவிடுகிறார்''! 

கஸ்தூரியின் வீட்டுக்கு அவர்கள் வந்திருந்த அன்றைய நாள்தான், காந்திக்கும் கஸ்தூரிக்கும் திருமணம் நிச்சயிக்கப்பட்ட நாள். இருவருக்கும் ஏழு வயதானபோது நிச்சயிக்கப்பட்ட திருமணம், பின்பு ஆறாண்டுகள் கழித்து... அவர்களுடைய பதின்மூன்றாவது வயதில் திருமணம் நடந்தேறியது. இல்லற வாழ்க்கையே என்னவென்று தெரியாத ஓர் இனம்புரியாத வயதில், அவர்களுக்குள் இருந்த விட்டுக்கொடுக்காத பிரச்னைகளால் ஆரம்பத்தில் சிறுசிறு சலப்புகள் ஏற்பட்டன. ஆனாலும், தன் மனைவி மீது மாறாத அன்புகொண்டு அவரை லட்சியமிக்கவராக மாற்றியவர் மகாத்மா. ஆரம்பத்தில், ''நான் உன் கணவன், ஞாபகமிருக்கட்டும்'' என்று காந்தி கட்டளையிட்டபோதுகூட, அதற்கு கஸ்தூரிபாய், ''ஒப்புக்கொள்கிறேன். ஆனால், என்னை உருட்டி, மிரட்டி அடிமைப்படுத்திவிட முடியாது'' என்றார்.  

காந்தியும்... கஸ்தூரிபாயும்

அன்பு நிறைந்த வாழ்க்கை யாருக்குக் கிடைக்கிறதோ... அதை அகிலமே கிடைத்துவிட்டதாகத்தான் அவர்கள் நினைப்பார்கள்.  அப்படியான வாழ்க்கைதான் இவர்களுக்கும் கிடைத்தது. அவர்கள் இருவரும், ஒருவர் மீது ஒருவர் விட்டுக்கொடுக்காமல்வைத்த அன்புதான், அவர்களை உலகம் அறியும் அளவுக்கு உயர்த்தியது. ''மாமனார் தங்கமானவர்; மாமியார் அன்புத் தெய்வமாக இருக்கிறார்; மைத்துனர்களும், அவருடைய மனைவிமார்களும் நேசம் பாராட்டுகின்றனர்; ஆனால், அவர் மட்டும் ஏன் என்னை இப்படிக் கொடுமைப்படுத்த வேண்டும்? என் வயதுதானே அவருக்கும்! சரி, கணவர்தான். இருக்கட்டுமே... அதற்காக என்னை அடிமைபோல் நடத்த வேண்டுமா; அவர் வழிக்கு நான் போகிறேனா; அவர் மட்டும் ஏன், என் இஷ்டத்தில் குறுக்கிட வேண்டும்? என்மீது அவருக்கு என்ன கோபமோ... அடிக்கடி என்னிடம் 'டூ' விட்டுவிடுகிறார்'' என்று ஆரம்ப நாள்களில் கவலைப்பட்ட கஸ்தூரிபாய், பின்னர் பிறந்த வீட்டிலும், புகுந்த வீட்டிலும் புகழும் அளவுக்கு மிகவும் பக்குவம் பெற்ற பெண்ணாகப் பயணிக்கலாயினார். 

காந்தியும்... கஸ்தூரிபாயும்

வாழ்க்கைச் சம்பவங்கள்!

கஸ்தூரியின் மீது காந்திக்கிருந்த அளவற்ற அன்பால், ''இனி, தினமும் அவளுக்கு நாலு எழுத்து சொல்லித் தரவேண்டும். அறியாமை நீங்கிவிட்டால், கணவனிடம் எப்படி நடந்துகொள்ள வேண்டும் என்பதை அவள் தெரிந்துகொண்டுவிடுவாள்'' என்று காந்தி சிந்தித்தார். காந்தியின் மீது கஸ்தூரிக்கிருந்த கண்ணியமான காதலால், ''ஐயோ... இந்தப் பாழாய்ப்போனவன், என் கணவரைப் படுகுழியில் தள்ளிவிடுவானே? இதை எப்படியாவது அவரிடம் பக்குவமாகச் சொல்ல வேண்டும்'' என்று  தீய நண்பரிடம் சிக்கிக்கொண்ட காந்திக்காக, கஸ்தூரிபாய் ஏங்கினார். அதற்காக அவர், ''இதோ பாருங்கள்... நான் சொல்கிறேன் என்று கோபித்துக்கொள்ளக் கூடாது. அந்த அயோக்கியனுடன் சேராதீர்கள். அவன், பெரிய போக்கிரி. அவன், சகவாசமே வேண்டாம்'' என்று வேண்டுகோள்வைத்தார். அவருடைய கோரிக்கையைக் காந்தி, அப்போது ஏற்காதபோதும் நாளடைவில் உண்மையிலேயே மாறித்தான் போனார். அந்த மாற்றம், பின்னாளில் அவர்களுக்குள் அன்பை விதைத்தது. அதை உணர்த்தும் நிகழ்வாக அவர்களுடைய வாழ்வில் எத்தனையோ சம்பவங்கள் நிகழ்ந்துள்ளன. 

கஸ்தூரிபாய்கஸ்தூரியைச் சிரிக்கவைத்த காந்தி!

ஒருமுறை தன் கணவரிடம்... கஸ்தூரிபாய், ''படிப்பு முடிந்துவிட்டதா'' என்றார். அதற்குக் காந்தி, ''படிப்புக்கு முடிவே கிடையாது. நான் அடுத்தபடி கல்லூரியில் சேரப்போகிறேன்'' என்று பதிலளித்தார். ''எத்தனை வருஷம்'' என்று அவர் கேட்க, ''நாலு வருஷம். பி.ஏ. படிக்கப்போகிறேன். நீயும் வருகிறாயா'' என்று மகிழ்ச்சிப்பொங்க கேட்டார் காந்தி. அதற்கு கஸ்தூரிபாய், ''பி.ஏ. படிக்கவா'' என்று சிரித்தபடியே கேட்டுக்கொண்டு ஓடினார். இதேபோன்று, வழக்கு ஒன்றில் வாதாடுவதற்காகத் தென்னாப்பிரிக்கா வரும்படி காந்திக்கு அழைப்பு விடுக்கப்பட்டது. அங்குச் செல்வதற்கு முன் காந்தி... தன் மனைவியிடம், ''தென்னாப்பிரிக்காவிலிருந்து வரும்போது உனக்கு என்ன வேண்டும், சொல்'' என்று கேட்டார். அதற்கு அவர், ''ஒரு நல்ல புடவையாகக் கிடைத்தால் வாங்கிக்கொண்டு வாருங்கள்'' என்றார். ''பைத்தியம்... இங்கே இல்லாத புடவையா அங்கே? புது ஃபேஷனா ஒரு 'கவுன்' வாங்கிக்கொண்டு வரட்டுமா? உனக்கு ரொம்ப அழகாக இருக்கும்'' என்றார். அதைக் கேட்டதும் கஸ்தூரி பாய்க்கு சிரிப்பு வந்துவிட்டது. ''எப்படியோ, நீ சிரித்துவிட்டாய்; அதுபோதும்'' என்றபடியே அங்கிருந்து நடையைக் கட்டினார் காந்தி.

காந்தியும்... கஸ்தூரிபாயும்

கஸ்தூரியிடம் பயந்த காந்தி!

இப்படியாகக் கடந்துகொண்டிருந்த அவர்களது வாழ்க்கைப் பயணத்தில் ஒருநாள், பகல்வேளை உணவை முடித்து... சமையல் அறையைச் சுத்தமாகவைத்துவிட்டுப் படுக்கச் சென்றுவிட்டார், கஸ்தூரிபாய். உழைப்பின் அசதியால் அவர், உறங்கிவிட்டார். அந்த நேரத்தில், மோதிலால் நேருவும், அவருடன் சிலரும் அங்கு வந்துவிட்டனர். அவர்களுக்கு உணவு தயாரிக்க வேண்டும். அதற்காகக் கஸ்தூரிபாய் இருந்த அறையை எட்டிப்பார்த்தார், காந்தி. அவர், உறங்கிக்கொண்டிருந்ததால், அவரை எழுப்பாமல் பணியாட்களைக்கொண்டு உணவு தயார் செய்யச் சொன்னார், காந்தி. பின்னர், முன்பு இருந்த மாதிரியே அறையையும் சுத்தமாக வைக்கச் சொன்னார். அப்போது, ஒரு பாத்திரம் கீழே விழுந்ததில் 'தடால்' எனச் சத்தம் எழுந்தது. இதில், விழித்துக்கொண்ட கஸ்தூரிபாய், ''ச்சீ... வரவர இந்தப் பூனை தொந்தரவு பொறுக்க முடியவில்லை. சிறிதுநேரம்கூடப் படுக்கவிட மாட்டேன் என்கிறது, சனியன்'' என்றபடியே எழுந்துவந்து எட்டிப்பார்த்தார். ''இது என்ன கலாட்டா'' என்று அவர் கேட்க, அதற்கு அங்கிருந்த பணியாட்கள், ''பாபுஜிதான் செய்யச் சொன்னார்;  யாரோ விருந்தாளிகள் வந்திருக்கிறார்களாம்'' என்றனர். ''ஓஹோ, இதெல்லாம் அவருடைய வேலையா'' என்றவர், அடுத்துக் களத்தில் இறங்கி... அருமையான உணவைச் சமைத்து அவர்களை அசத்தினார். 

காந்தியும்... கஸ்தூரிபாயும்

பின்னர், அன்று மாலை தனியாக இருந்த காந்தியிடம், ''இதெல்லாம் என்ன விளையாட்டு? அந்தக் கத்துக்குட்டிகளை எதற்காகச் சமையல் செய்யச் சொன்னீர்கள்? நான்தான் ஒருத்தி கல்லுக்குண்டு மாதிரி இருக்கிறேனே, என்னிடம் சொல்லக்கூடாதா'' என்றார், கஸ்தூரிபாய். அதற்கு காந்தி, ''உள்ளே வந்து பார்த்தேன். நீ தூங்கிக்கொண்டிருந்தாய்...'' என்றார். ''தூங்கிக்கொண்டிருந்தால் என்ன, எழுப்பினால் எழுந்திருக்க மாட்டேனா? அத்தனை சோம்பேறி என்று என்னை நினைத்துக்கொண்டிருக்கீறீர்களா'' என்று கேட்டார், கஸ்தூரி. ''அது, இல்லை கஸ்தூரி. உன்னை எழுப்புவதற்கு எனக்குப் பயமாக இருந்தது. நீ, திடீரென்று கோபப்பட்டுவிட்டால்...'' என்றார், காந்தி. அதைக் கேட்டதும் கஸ்தூரிக்குச் சிரிப்பு வந்துவிட்டது. ''என்னது, என்னிடம் உங்களுக்குப் பயமா? வேடிக்கையாகத்தான் இருக்கிறது'' எனக் கஸ்தூரி சொல்ல, ''உண்மையைச் சொல்கிறேன் கஸ்தூரி. இந்த உலகத்திலேயே உன் ஒருத்தியிடம்தான் எனக்குப் பயம், தெரியுமா'' என்றார் காந்தி. 

''ஒரு கணவனின் உரிமைதானே?''

எங்கேயும் விட்டுக்கொடுத்துச் சென்றால் வெற்றிபெற்றுவிடலாம் என்பதற்கு உதாரணமாக, காந்தி  - கஸ்தூரிபாய் வாழ்க்கை அமைந்திருக்கிறது என்பதை இதன்மூலம் நன்கு உணரமுடிகிறது. தன் கணவரை எந்த விஷயத்திலும் விட்டுக்கொடுக்காமல் வாழ்ந்தவர் கஸ்தூரிபாய் என்பதற்கு மேலும் ஓர் உதாரணம் இதோ... ஒருமுறை, கஸ்தூரிபாய்க்கு பணக்காரப் பெண் ஒருவர் மடல் எழுதியிருந்தார். அதைப் பிரித்து அவரிடம் படித்துக் காட்டினார் ஒரு பெண்மணி. அதில், ''தாங்கள் மகாத்மாவை மணம் புரிந்துகொண்டதால் வாழ்க்கையில் பல இன்னல்களை அனுபவிக்க வேண்டியிருக்கிறது'' என்று எழுதப்பட்டிருந்தது. இதற்கான பதிலை அந்தப் பெண்மணியிடம் இப்படி எழுதச் சொன்னார், கஸ்தூரிபாய். அவர் சொன்ன பதிலில் சில இதோ... ''காந்திஜி என் வாழ்க்கையைத் துன்பம் நிறைந்ததாக ஆக்கிவிட்டார் என்று நீ எப்படிக் கண்டுபிடித்தாயோ தெரியவில்லை. நான் சோகமாக இருந்ததையும் சோறு இல்லாமல் பட்டினி கிடந்ததையும் நீ இங்குவந்து நேரில் பார்த்தவள்போல் அல்லவா பேசுகிறாய்? எனக்கு வாய்த்ததுபோல் ஒரு கணவர் உலகத்தில் வேறு ஒரு பெண்ணுக்கும் கிடைத்திருக்க முடியாது. சத்தியநெறியைக் கடைப்பிடிக்கும் அவரை, உலகமே போற்றிப் புகழ்கிறது. அவர் உதவியை நாடி ஆயிரமாயிரம் பேர் தினமும் வந்துகொண்டே இருக்கிறார்கள். இன்றுவரை தக்க காரணமின்றி அவர் என்னைக் கடிந்துகொண்டதே இல்லை. நான் தவறுசெயதபோது அதைச் சுட்டிக்காட்டித் திருத்தியிருக்கிறார். அவ்வளவுதான். அது, ஒரு கணவனின் உரிமைதானே? 

காந்தியும்... கஸ்தூரிபாயும்

''காந்திதான் காரணம்!''

என்னிடம் என் கணவர் அளவுகடந்த அன்பு வைத்திருக்கிறார். மனைவிக்குரிய மதிப்பும், மரியாதையும் கொடுத்து என்னுடன் பழகுகிறார். எனக்குக் கிடைத்திருக்கும் புகழுக்கெல்லாம் அவர்தான் காரணம். அப்படியிருக்கையில், நான் மகிழ்ச்சி நிறைந்த வாழ்க்கை நடத்தவில்லை என்று எப்படி நீ துணிந்துகூறுகிறாய்? ஒன்று மட்டும் சொல்ல விரும்புகிறேன். தற்காலத்துப் பெண்களைப்போல் எனக்கு நடந்துகொள்ளத் தெரியாது. கணவரைக் கிள்ளுக்கீரையா நினைத்து அதிகாரம் செய்து அவரைத் தம் கைக்குள் போட்டுக்கொள்ள நினைக்கும் நாகரிக மனைவிகள், கணவர் தங்கள் வழிக்கு வராவிட்டால், தங்கள் இஷ்டப்படி வாழ்க்கை நடத்துவதற்குத் துணிந்துவிடுகிறார்கள். அப்படிச் செய்வது இந்து தர்மத்தைப் பின்பற்றும் ஒரு பெண்ணுக்கு அழகல்ல. எத்தனை பிறவிகள் எடுத்தாலும் சிவபெருமானையே மீண்டும் மீண்டும் கணவனாக அடைய வேண்டும் என்று பார்வதி தேவி வேண்டிக்கொண்டதை உனக்கு நினைவுபடுத்த வேண்டுகிறேன்'' என்று தன் கணவரின் உணர்வையும், வாழ்க்கையின் உண்மையையும் அவருக்கு உணர்த்தியிருந்தார்.
அண்ணலுடனும், அவர் குடும்பத்தினருடனும் அன்பாகவும், அழகாகவும் வாழ்க்கையைப் பகிர்ந்துகொண்ட கஸ்தூரிபாய், தன்னுடைய இறுதிக்காலத்தில் காந்தியின் மடியில் தலைவைத்துப் படுத்தப்படியே, ''எனக்குத் தூக்கம் வருகிறது... தூங்கட்டுமா'' என்று சிறு குழந்தையைப்போல் காந்தியிடம் கேட்ட அவர், அதற்குப் பிறகு கண்திறக்கவே இல்லை.

http://www.vikatan.com

  • தொடங்கியவர்

இந்த வீடியோவை உங்களால் திரும்பவும் பார்க்காமல் இருக்க முடியாது! #VERIFIED

அமெரிக்காவின் டெக்சாஸ் நகரில் வசிக்கும் கென்ட் சிரி, தன் மகன் கேடன் அதிகாலை எழுந்ததும் கையை  உயர்த்தி ராஜ புன்னகை புரியும் வீடியோவை இணையத்தில் பகிர்ந்துள்ளார்.

ஒரு வயதுக் கூட நிரம்பாத கேடனுக்கு ’Moro reflex’ என்னும் நோய் இருப்பதால் இரவுகளில் திடீரென்று கை கால்களை குலுக்கி எழுந்துவிடுவான். இதனால் கேடனின் தந்தை  கென்ட், இரவில் கேடனின் கைகளை உள்ளே வைத்து போர்வையை  உடல் முழுதும் சுற்றிவிடுவார்.

ஒவ்வொரு காலையும், சுற்றிவைத்துள்ள போர்வையை அகற்றும்போது கேடன் சுதந்திரம் கிடைத்தது போல் உற்சாகத்தில் கையை உயர்த்தி புன்னகை புரிவதை டென்ட் கவனித்துள்ளார். இந்த காட்சியை வீடியோ எடுத்து சமூக வலைதளத்தில் பகிர்ந்துள்ளார் கென்ட். இந்த வீடியோவை பகிர்ந்த ஒரே வாரத்தில் நெட்டிசன்ஸ் 2 மில்லியன் முறைக்கு மேல் பார்த்துள்ளனர். கேடனின் ராஜ புன்னகைக்கு உலகம் முழுவதும் ஃபேன்ஸ் அதிகரித்து வருகின்றனர். கேடனுக்கு முகநூலில் தனி பேஜ் உள்ளது (KPtheBaby). 

 

http://www.vikatan.com

  • தொடங்கியவர்

ஒரேயொரு “தட்டுக்கு” 10 ஆயிரம் டாலர் “துட்டா”?: கதிகலங்கிய கப்பல் உரிமையாளர்கள்

‘செய்யும் தொழிலே தெய்வம்-அதில், திறமைதான் நமது செல்வம்’ என்னும் தமிழ் முதுமொழிக்கேற்ப, ஓடாத கப்பலின் என்ஜினை ஒரேயொரு முறை செல்லமாக சுத்தியலால் ‘தட்டி’, 10 ஆயிரம் டாலர்களை ஒருவர் ‘தட்டிப் பறித்த’ கதையை பார்ப்போமா?

 
ஒரேயொரு “தட்டுக்கு” 10 ஆயிரம் டாலர் “துட்டா”?: கதிகலங்கிய கப்பல் உரிமையாளர்கள்
 
லண்டன்:

‘செய்யும் தொழிலே தெய்வம்-அதில், திறமைதான் நமது செல்வம்’ என்னும் பெருமதிப்புக்குரிய தமிழ் முதுமொழி காலகாலமாக பல்வேறு வகையில் நிரூபணமாகியுள்ளது. அவ்வகையில், ஓடாத கப்பலின் என்ஜினை செல்லமாக ஒரேயொரு முறை சுத்தியலால் ‘தட்டி’, 10 ஆயிரம் டாலர்களை ஒருவர் ‘தட்டிப் பறித்த’ கதை, அனுபவத்தை மிஞ்சிய ஆசான் எங்குமில்லை என்பதை மீண்டும் உணர்த்துகிறது.

நடுக்கடலில் சென்று கொண்டிருந்த ஒரு பெரிய கப்பலின் என்ஜின் செயலிழந்ததால் அந்த கப்பல் அங்கிருந்து நகர முடியாமல் தத்தளித்து கொண்டிருக்கும் தகவலை அறிந்த கப்பலின் உரிமையாளர்கள் ஒரு சிறு படகில் ஏறி, பழுதாகி நிற்கும் கப்பலை வந்தடைந்தனர்.

கப்பல் இயந்திரங்களை பழுதுப் பார்ப்பதில் பிரசித்தி பெற்ற பல பிரபல பொறியாளர்களும், மெக்கானிக்குகளும் அங்கு வந்து சேர்ந்தனர். ஒருவர் மாற்றி, இருவர் அந்த என்ஜினை சீரமைக்க பல்வேறு கட்ட முயற்சிகளை செய்துப் பார்த்தனர். ‘ஊஹூம்’ அந்த என்ஜின் மூச்சு விடுவதாக இல்லை.

அவர்களின் முயற்சிகள் அத்தனையும் விழலுக்கு இறைத்த கானல் நீராகிப் போனது. இறுதியாக இதுபோல் ‘முரண்டுப் பிடிக்கும்’ என்ஜின்களை வழிக்கு கொண்டு வருவதில் வல்லவரான ஒரு வயதான அனுபவசாலி மெக்கானிக்கை தேடி கண்டுபிடித்து நடுக்கடலுக்கு அழைத்து வந்தனர்.

கப்பலுக்குள் சென்ற அவர், என்ஜினை ஒருமுறை முழுமையாக தனது எக்ஸ்ரே கண்களால் அலசினார். தன்னுடன் கொண்டு வந்திருந்த பெரிய கைப்பையை திறந்து அதில் கிடந்த கருவிகளில் ஏதோ ஒன்றை வெகு நேரமாக தேடினார்.

201704111236136938_Ship-2._L_styvpf.gif

கப்பலின் உரிமையாளர்கள் இருவரும் அவருக்கு மிக நெருக்கமாக நின்றவாறு, ‘இந்த வயதான முதியவர் என்ன செய்து கப்பலை இங்கிருந்து நகர்த்தப் போகிறார்?’ என்பதை ஆவலுடனும் ஆச்சரியத்துடனும் கண்காணித்து கொண்டிருந்தனர்.

201704111236136938_Ship-3._L_styvpf.gif

தனது பையில் இருந்து ஒரு சிறிய சுத்தியலை எடுத்து, என்ஜினின் ஒரு பகுதியில் செல்லமாக ஒரேயொரு முறை லேசாக தட்டினார். இப்போது என்ஜினை கிளப்பிப் பாருங்கள் என்று கூறியவாறு தனது கருவிகளை எல்லாம் எடுத்து கைப்பையில் போட்டுக் கொண்டிருந்தபோதே, உயிர் பெற்ற அந்த கப்பலின் என்ஜின் ஆக்ரோஷமாக உறுமத் தொடங்கியது..

அவரது அபார திறமையைக் கண்டு வியந்துப்போன கப்பல் உரிமையாளர்கள் அவரது கையை பிடித்து குலுக்கியும், கட்டிப்பிடித்து பாராட்டியும் வழியனுப்பி வைத்தனர். சில நாட்கள் கழித்து அந்த முதியவரிடம் இருந்து கப்பல் உரிமையாளர்களுக்கு ஒரு கடிதம் வந்தது. கடிதத்துடன் கப்பலின் என்ஜினில் இருந்த பழுதை நீக்கியதற்கான பில்லும் இணைக்கப்பட்டிருந்தது.

பில்லில் குறிப்பிடப்பட்டிருந்த தொகையை கண்ட கப்பல் உரிமையாளர்கள் கதிகலங்கிப் போய் அதிர்ச்சியில் வாய் பிளந்தனர். தனது வேலைக்கு பத்தாயிரம் அமெரிக்க டாலர்களை (இன்றைய இந்திய மதிப்புக்கு சுமார் ஆறு லட்சம் ரூபாய்) உடனடியாக அளிக்க வேண்டும் என்று தனது கடிதத்தில் அந்த மெக்கானிக் குறிப்பிட்டிருந்தார்.

இதைக் கண்டு கடுப்பாகிப்போன கப்பல் உரிமையாளர்கள், எங்கள் கப்பலை ஓட வைக்க நீங்கள் என்னென்ன ‘ஆணியைப் பிடுங்கினீர்கள்’? என்று தெளிவாக விபரமாக பட்டியலிட்டு தனியாக ஒரு பில்லை அனுப்பி வையுங்கள் என்று அவருக்கு பதில் கடிதம் அனுப்பினர். அடுத்த சில நாட்களில் அந்த மெக்கானிக்கிடம் இருந்து வந்த இரண்டாவது கடிதத்தில் அவர்கள் கேட்டிருந்த விபரம் முழுமையாக குறிப்பிடப்பட்டிருந்தது.

சுத்தியலால் தட்டியதற்கு = 2 டாலர். எந்த இடத்தில் தட்ட வேண்டும் என்று தெரிந்து தட்டியதற்கு = 9,998 டாலர்கள் என மிக தெளிவாக அவர் குறிப்பிட்டிருந்தார். முதல் கடிதத்தால் வாய் பிளந்த கப்பல் உரிமையாளர்கள், இப்போது இந்த பதிலை கண்டதும் மூச்சுப் பேச்சில்லாமல் வாயடைத்துப் போய் பத்தாயிரம் டாலர்களை அந்த முதியவருக்கு அனுப்பி வைத்தனர்.

விடாமுயற்சிகளும், பெருமுயற்சிகளும் சாதனைகளுக்கு முக்கியமானவைதான், ஆனால், எந்த இடத்தில் எந்த முயற்சி பலனளிக்கும் என்பதை அறிந்தும், உணர்ந்தும் செய்யப்படும் முயற்சிகள்தான் பெரும் வெற்றியையும் பலனையும் அளித்துள்ளன என்பது இந்த சிறிய கதையின் மூலம் நன்கு புலனாகிறது, அல்லவா..?

http://www.maalaimalar.com

  • தொடங்கியவர்

செல்லப்பிராணிகளுக்கு ஒரு ஐஸ்க்ரீம் பார்லர்!

 

நம் ஊரில் தற்போது புதிது புதிதாக, ஐஸ்க்ரீம் பார்லர்கள் படையெடுத்து வருகின்றன. ஆனால், இவை எல்லாம் மனிதர்களுக்கு மட்டும்தான். ஆனால், மெக்ஸிகோவில் நாய்களுக்கு என்று ஒரு ஐஸ்க்ரீம் பார்லர் திறக்கப்பட்டுள்ளது. இங்கு, தயாரிக்கப்படும் ஐஸ்க்ரீம்கள் நாய்களுக்கு என்று பிரத்யேகமாக தயாரிக்கப்படுபவை.

Ice Cream Parlor for Dogs

ஆனால், இதை மனிதர்களும் சாப்பிடலாம் ஒன்றும் ஆகாது என்கின்றனர். குறிப்பாக, இங்கு தயாரிக்கப்படும் ஐஸ்க்ரீம்களை சாப்பிடுவதன் மூலம், நாய்களின் ஜீரண சக்தி அதிகரிக்கும் என்கின்றனர். ஆரம்பித்த சில நாள்களிலேயே இந்த பார்லர் அங்கு செம வைரல் ஆகி விட்டது. இதற்கு, பல ரெகுலர் கஸ்டமர்களும் இருக்கிறார்களாம்.

 

 

மனிதர்களுக்கு தயாரிக்கப்படுவதைப் போலவே, பல வித சுவைகளில், இங்கு நாய்களுக்கும் ஐஸ்க்ரீம்கள் தயாரிக்கப்படுகிறதாம்.

Edited by நவீனன்

  • தொடங்கியவர்

 

நிறமிழக்கும் இயற்கை ஓவியம்

நீருக்கு அடியில் இயற்கை தீட்டிய அற்புத ஓவியங்களில் ஒன்று நிறம் குன்றி களையிழந்து காணப்படுகிறது.

சுமார் ஆயிரத்தி ஐந்நூறு கிலோமீட்டர் பரப்பளவில் படர்ந்துள்ள ஆஸ்திரேலியாவின் Great Barrier Reef என்றறியப்படும் பழப்பாறைத்தொகுப்பின் மூன்றில் இரண்டுபகுதி வெளிர்த்துப்போனதாக விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.

இதுவரை இல்லாத அளவுக்கு இரண்டாவது ஆண்டாகவும் இந்த பாதிப்பு நீடிப்பதை வானிலிருந்து எடுக்கப்பட்ட காட்சிகள் காட்டுகின்றன.

பவழப்பாறைகளின் சிகப்பு நிறத்திற்கு காரணமான கடற்பாசிகள் அழிந்தால் பவழப்பாறைகள் பசியால் வாடத்துவங்கும். உடனடியாக அவை இறக்காது.
ஆனால் அவை வலுவிழந்துபோவதால் படிப்படியாக இறக்கும்.
பழவப்பாறைகள் தாமாகவே மீளுருவாக்கொள்ளும் வலிமை கொண்டவை. ஆனால் சென்ற ஆண்டின் பாதிப்பிலிருந்தே மீளாத நிலையில் இந்த ஆண்டின் பாதிப்பும் சேரும்போது அவை மீளமுடியுமா என்பதே விஞ்ஞானிகளின் கவலை.


இத்தாலி அல்லது ஜப்பான் அளவுள்ள இந்த இயற்கை அதிசயம், 1981 ஆம் ஆண்டுமுதல் உலக பாரம்பரிய சின்னமாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஆஸ்திரேலிய பொருளாதாரத்துக்கு மிகப்பெரிய வருமானத்தை ஈட்டித்தருகிறது.

கடல்நீரின் வெப்பம் அதிகரிப்பதால் ஏற்படும் இந்நிகழ்வு, புவி வெப்பமடைவதால் வேகமெடுத்திருக்கிறது.

உலகின் இயற்கை பொக்கிஷங்களின் ஒன்றை காப்பதற்கான கால அவகாசம் கைநழுவிப்போய்க்கொண்டிருப்பதாக விஞ்ஞானிகள் எச்சரிக்கிறார்கள்.

  • தொடங்கியவர்

Bild könnte enthalten: 1 Person, Hut und Text

 
 
கிரிக்கெட் ரசிகர்களின் ,மனங்கவர்ந்த நியூ சீலாந்தைச் சேர்ந்த நடுவர் பில்லி பவுடனின் பிறந்தநாள்
Happy Birthday Billy Bowden
 
  • தொடங்கியவர்

68 ஆயிரம் ரூபாய்க்கு ஏலம் போன 10 எலுமிச்சம் பழங்கள்!

திருவிழாவில் பூஜை செய்யப்பட்ட 10 எலுமிச்சம் பழங்கள், ஆயிரக்கணக்கில் ஏலம் போன சுவாரஸ்ய சம்பவம் விழுப்புரத்தில் நடந்துள்ளது.

WhatsApp_Image_2017-04-11_at_10_14483.jp

விழுப்புரம் மாவட்டம்,  திருவெண்ணெய்நல்லூரை அடுத்த ஒட்டனந்தல் கிராமத்தில் அமைந்துள்ள இரட்டைக் குன்றில், ரத்தினவேல் முருகன் ஆலயம் அமைந்துள்ளது. இந்தக் கோயிலில், பங்குனி உத்திரத் திருவிழாவை முன்னிட்டு 10 நாள்கள் பூஜை நடைபெறும். இந்த பத்து நாள்களும் கோயில் கருவறையில் இருக்கும் வேலில் குத்தப்படும் எலுமிச்சைப் பழங்கள், பாதுகாத்து வைக்கப்படும். அந்த பத்து எலுமிச்சம் பழங்களும் பொதுமக்கள் முன்னிலையில்   ஒவ்வொன்றாக ஏலம் விடப்பட்டது.

ஊர் நாட்டாமையான பாலகிருஷ்ணன் என்பவர், ஆணி செருப்பின் மீது ஏறி நின்றுகொண்டு, முதல் எலுமிச்சம் பழத்தின் ஏலத்தை ஒரு ரூபாயில் தொடக்கி வைத்தார். சுமார் 1000 பேர் கலந்துகொண்ட அந்த ஏலத்தில், அடுத்த மூன்றாவது நிமிடத்திலேயே, முதல் எலுமிச்சம்பழம் 27 ஆயிரம் ரூபாய்க்குப் போனது. தொடர்ந்து இரண்டாவது, மூன்றாவது என பத்து பழங்களும் ஐந்து ஆயிரம், ஆறு ஆயிரம் என போட்டிப்போட்டுக்கொண்டு ஏலத்தில் எடுக்கப்பட்டது. இறுதியில், அந்த பத்து எலுமிச்சம் பழங்களும் 68 ஆயிரத்துக்கு ஏலம் போனது. இந்த ஏலத்தில், உள்ளூர் மக்கள் மட்டுமே பங்கேற்க முடியும்.

http://www.vikatan.com

  • தொடங்கியவர்

விளையாட்டு வர்ணனை வானொலியில் ஒலிபரப்பான நாள்: ஏப். 11- 1921

விளையாட்டை நேரில் கண்டறிய முடியாதவர்களுக்கு வானொலி மூலம் அதன் வர்ணனையை கேட்கும் வகையில் 1921-ம் ஆண்டு ஏப்ரல் 11ந்தேதி முதன்முறையாக வானொலி வர்ணனை செய்யப்பட்டது இதே நாளில் நிகழ்ந்த முக்கிய நிகழ்வுகள்:- * 1831 - உருகுவேயில் சல்சிபுதிஸ் என்ற இடத்தில் நூற்றுக்கணக்கான சருவா இனத்தவர்

 
விளையாட்டு வர்ணனை வானொலியில் ஒலிபரப்பான நாள்: ஏப். 11- 1921
 
விளையாட்டை நேரில் கண்டறிய முடியாதவர்களுக்கு வானொலி மூலம் அதன் வர்ணனையை கேட்கும் வகையில் 1921-ம் ஆண்டு ஏப்ரல் 11ந்தேதி முதன்முறையாக வானொலி வர்ணனை செய்யப்பட்டது

இதே நாளில் நிகழ்ந்த முக்கிய நிகழ்வுகள்:-

* 1831 - உருகுவேயில் சல்சிபுதிஸ் என்ற இடத்தில் நூற்றுக்கணக்கான சருவா இனத்தவர் படுகொலை செய்யப்பட்டனர்.
* 1865 - ஆபிரகாம் லிங்கன் தனது கடைசி பேச்சை நிகழ்த்தினார்.
* 1899 - ஸ்பெயின் புவேர்ட்டோ ரிக்கோவை ஐக்கிய அமெரிக்காவுக்கு அளித்தது.
* 1905 - ஐன்ஸ்டீன் தனது சார்புக் கோட்பாட்டை வெளியிட்டார்.
* 1921 - விளையாட்டு வர்ணனை முதன் முறையாக வானொலியில் ஒலிபரப்பானது.
* 1955 - ஹாங்காங்கில் இருந்து புறப்பட்ட ஏர் இந்தியாவின் காஷ்மீர் பிரின்செஸ் என்ற விமானம் குண்டுவெடிப்பின் காரணமாக இந்தோனேசியாவில் கடலில் வீழ்ந்து மூழ்கியது. பல ஊடகவியலாளர்கள் உட்பட 16 பேர் கொல்லப்பட்டனர்.
* 1957 - பிரித்தானியா சிங்கப்பூரின் சுயாட்சிக்கு ஒத்துக்கொண்டது.
* 1965 - ஐக்கிய அமெரிக்காவில் ஆறு மத்திய மேற்கு மாகாணங்களில் ஏற்பட்ட சூறாவளி காரணமாக 256 பேர் கொல்லப்பட்டனர்.
* 1970 - அப்போலோ 13 ஏவப்பட்டது.
* 1979 - தான்சானியப் படைகள் உகண்டாவின் தலைநகரான கம்பாலாவை ஆக்கிரமித்தன. இடி அமீன் தப்பி ஓட்டம்.
* 1981 - தெற்கு லண்டனில் பிரான்க்ஸ்டன் நகரில் இடம்பெற்ற பெரும் கலவரத்தில் 300 காவற்துறையினரும் 65 பொதுமக்களும் காயமுற்றனர்.
* 1987 - இஸ்ரேலுக்கும் ஜோர்டானுக்கும் இடையே ரகசிய ஒப்பந்தம் லண்டனில் கைச்சாத்தானது.
* 2002 - வெனிசுலாவில் அதிபர் ஹியூகோ சாவெசிற்கெதிராக ராணுவப் புராட்சி இடம்பெற்றது.
* 2007 - அல்ஜீரியாவின் தலைநகர் அல்ஜியேர்ஸ் நகரில் இடம்பெற்ற இரு குண்டுவெடிப்புகளில் 33 பேர் கொல்லப்பட்டு 222 பேர் காயமுற்றனர்.
* 2012 - இந்தோனேசியாவில் சுமாத்ரா கடற்பகுதியில் 8.7 ரிக்டர் அளவு நிலநடுக்கம் ஏற்பட்டது. இலங்கை, தமிழ்நாடு ஆகிய இடங்களில் இலேசான நிலநடுக்கம் உணரப்பட்டது.

http://www.maalaimalar.com

  • தொடங்கியவர்

'நண்பன்' பட பாணியில் ஓடும் ரயிலில் பிரசவம் பார்த்த மருத்துவ மாணவர்

 
 

விபின் காட்ஸி என்ற மருத்துவ மாணவர் ஏப்ரல் 7-ம் தேதி நாக்பூர் அருகே ரயிலில் சென்று கொண்டிருக்கும்போது வாட்ஸ்அப்பின் உதவியுடன் பெண் ஒருவருக்கு வெற்றிகரமாக பிரசவம் பார்த்துள்ளார். இந்தச் சம்பவம் உலக சுகாதார தினத்தன்று நடைபெற்றுள்ளது. 

_%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%9A%E0

விபின் காட்ஸி என்ற மருத்துவ மாணவர் ஏப்ரல் 7-ம் தேதி அகமதாபாத்-பூரி விரைவு ரயில் வண்டியில் பயணம் செய்துள்ளார். அவர் நாக்பூர் அரசு மருத்துவக் கல்லூரியில் நான்காம் ஆண்டு  படித்து வருகிறார். அதே ரயிலில் 24 வயது மதிக்கத்தக்க சித்ரலேகா என்ற பெண் தனது கணவர் மற்றும் உறவினர்களுடன் பயணம் செய்துள்ளார். அப்போது அவருக்கு பிரசவ வலி ஏற்பட்டுள்ளது. உடனே அவரது உறவினர்கள் ரயிலை நிறுத்துவதற்கான செயினை இழுத்துள்ளனர். உடனே அங்கு வந்த டி.டி.ஆர். ரயிலில் யாரேனும் மருத்துவர் உள்ளனரா என்று தேடியுள்ளார். அப்போது மருத்துவப் பட்டம் பெற்ற மருத்துவர்கள் யாரும் அந்த ரயிலில் இல்லாததால் விபின் காட்ஸி என்ற மருத்துவ மாணவர் பிரசவம் பார்க்க முன்வந்துள்ளார்.

பின்னர் அவர், அந்த பெட்டியில் இருந்த ஆண்களை வெளியேற சொல்லிவிட்டு சில பெண்களை உதவிக்கு வைத்துக் கொண்டும் வாட்ஸ்அப்பின் உதவியுடனும் பிரசவம் பார்க்கத் தொடங்கினார். விபினின் சாமர்த்தியமான முயற்சியால் அந்தப் பெண் அழகான குழந்தையை ரயிலிலேயே பெற்றெடுத்தார். இந்த நெகிழ்ச்சியான அனுபவம் குறித்து தெரிவித்த விபின், 'குழந்தையின் தலை மற்றும் தோள் பகுதிகள் வெளியே வர சிரமப்பட்டது. உடனே நான் அதனை போட்டோ எடுத்து மருத்துவர்கள் உள்ள வாட்ஸ்அப் குருப்பில் பதிவிட்டேன். அதனைப் பார்த்து ஒரு மூத்த மருத்துவர் எனக்கு அறிவுரை கூறினார். அவருடைய அறிவுரையின் படி வெற்றிகரமாக பிரசவம் செய்தேன்' என்று தெரிவித்துள்ளார். நண்பன் படத்தின் இறுதிக் காட்சியில் விஜய், இக்கட்டான சூழ்நிலையில் சாமர்த்தியமாக பிரசவம் பார்த்தது போல விபினும் சாமர்த்தியமாக செயல்பட்டுள்ளார் என்று இணையத்தில் நெட்டிசன்கள் புகழ்ந்து வருகின்றனர்.

http://www.vikatan.com

  • தொடங்கியவர்

பிரக்ஸிட் 1.0 தெரியுமா உங்களுக்கு?

waterfall_3153160f.jpg
 
 
 

ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து பிரிட்டன் வெளியேறிய பிரெக்ஸிட் நிகழ்வு பெரும் அரசியல் குழப்பங்களை ஏற்படுத்திக்கொண்டிருக்கலாம். ஆனால், பிரிட்டன் பிரதமர் தெரெஸா மே தன் கைவசம் என்னென்ன யோசனைகளை வைத்திருந்தாலும் ஐரோப்பியக் கண்டத்திலிருந்து பிரிட்டன் முதல் முறை பிரிந்தபோது நிகழ்ந்த பேரழிவு அளவுக்கு அவை ஏற்படுத்தாது என்றே நம்பலாம்.

பிரம்மாண்டமான அருவிகளும், பிற்பாடு, பெருவெள்ளமும் பிரிட்டனை எப்படி பிரான்ஸிலிருந்து துண்டித்தன என்பதைப் புதிய ஆய்வு ஒன்று கண்டறிந்திருக்கிறது. இந்தத் துண்டிப்பின் காரணமாக பிரிட்டன் தீவுகளும் அகழி போன்ற ஆங்கிலக் கால்வாயும் உருவாயின.

உடைக்கப்படாமல் இருந்திருந்தால்!

“ நில அமைப்பில் தொடர்ந்து ஏற்பட்ட தற்செயலான நிகழ்வுகள் காரணமாக பிரிட்டன் ஒரு தீவானது” என்று சஞ்சீவ் குப்தா கூறுகிறார். இவர் லண்டனின் இம்பீரியல் கல்லூரியில் நில அறிவியல் (Earth Science) பேராசிரியராக இருக்கிறார். இந்த ஆய்வு தொடர்பான கட்டுரையின் இணை ஆசிரியரும்கூட.

“இந்த நிகழ்வுகளெல்லாம் நடக்காமல் போயிருந்தால் பிரிட்டனின் வரலாறே முற்றிலும் வேறாக இருந்திருக்கக்கூடும்” என்றும் அவர் சொல்கிறார். பிரான்ஸுக்கும் பிரிட்டனுக்கும் இடையில் இருந்த நிலமுகடு (ridge) உடைக்கப்படாமல் இருந்திருந்தால் வடக்கு பிரான்ஸுடன் இணைந்தே பிரிட்டன் இருந்திருக்கும். அதன் மூலம் ஐரோப்பாவின் மற்ற பகுதிகளுடன் எளிதில் உறவு கொண்டிருந்திருக்க முடியும்.

‘நேச்சர் கம்யூனிகேஷன்ஸ்’ என்ற இதழில் இந்த ஆய்வின் முடிவுகள் வெளியிடப்பட்டன. குப்தாவும் பிரிட்டன், பிரான்ஸ், பெல்ஜியம் போன்ற நாடுகளைச் சேர்ந்த அவரது சகாக்களும் சேர்ந்து எழுதிய ஆய்வுக் கட்டுரை இது. நீண்ட காலமாக முன்வைக்கப்பட்ட கோட்பாடுகள், ஆங்கிலக் கால்வாயின் தரைப்பகுதி குறித்து நடத்தப்பட்ட ஆய்வுகள் போன்றவற்றைத் தற்போதைய ஆய்வு கணக்கிலெடுத்துக்கொண்டது. மேலும், கடலில் டோவர் நீரிணைக்கு அடியில் உள்ள நிலப்பரப்புக்கென்று துல்லியமாக உருவாக்கப்பட்ட புதிய வரைபடத்தையும் அடிப்படையாகக் கொண்டு பிரான்ஸிலிருந்து இங்கிலாந்து எப்படிப் பிரிந்தது என்ற புதிர் அவிழ்க்கப்பட்டிருக்கிறது.

குழிகளுக்கு காரணம் என்ன?

சுமார் 4 லட்சத்து 50 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு பிரிட்டன், பிரான்ஸுடன் கிட்டத்தட்ட 32 கி.மீ. நீளம் கொண்டிருந்த சுண்ணாம்புப் பாறையால் இணைக்கப்பட்டிருந்தது. அதன் ஒரு புறத்தில் பெரிய ஏரி ஒன்று இருந்தது. அந்த ஏரியில் ஏராளமான பனிப்பாறைகள் இருந்தன. தற்போதைய வடக்குக் கடல் வரைக்கும் அந்த ஏரியின் பனிப்பாளம் நீண்டிருந்தது. “மலைக்க வைக்கும் ஒரு நிலப்பரப்பாக அது இருந்திருக்கும்” என்கிறார் குப்தா. சிறு சிறு ஆறுகள் இல்லாமல் போயிருந்தால் ஆங்கிலக் கால்வாயே வறண்டுதான் காணப்பட்டிருக்கும்; அப்படி இருந்திருந்தால் சுற்றியுள்ள நிலப்பரப்பு அப்போது மிகவும் அச்சுறுத்தும் விதத்தில் இருந்திருக்கும். ஆனால், பனிப்பாளங்கள் உருக ஆரம்பித்ததாலோ வேறு ஏதோ காரணத்தாலோ அணையைப் போன்ற முகட்டுக்கு மேல் நீரோட்டம் பொங்கி வழிந்தது.

“அப்படி நீர் வழிந்து வீழ்ந்த அருவிகள் உருவாக்கிய பெரிய குழிகள் அரிப்புக்குள்ளாகி படிவுப் பாறையானதை (bedrock) கண்டறிந்தோம்” என்றார் குப்தா.

இப்படிப் படிவுகள் நிரம்பிய குழிகள் மிகவும் பெரியவை. 140 மீட்டர் ஆழமும் 4 கி.மீ. விட்டமும் கொண்ட குழிகள்கூட இருக்கின்றன. அந்த நிலப்பரப்பின் குறுக்கே வரிசையாக இந்தக் குழிகள் அமைந்திருக்கின்றன. பல ஆண்டுகளுக்கு முன்பு அவை கண்டுபிடிக்கப்பட்டிருந்தன. இந்தக் குழிகள் காரணமாக சுரங்க ரயில் பாதைத் திட்டத்துக்கான தடங்களை மாற்றிக்கொள்ள வேண்டிவந்தது. எனினும், இந்தக் குழிகளுக்கெல்லாம் காரணம் அருவி நீர் கொட்டியதுதான் என்பதை முதன்முறையாகத் தெளிவான உதாரணங்களுடன் இந்தப் புதிய ஆய்வு விளக்குகிறது.

தொடர்ந்து நீரால் அரிக்கப்பட்டதால் அணைபோன்ற பாறை முகட்டில் கணிசமான சிதைவு ஏற்பட்டிருக்கிறது. இதனால், அதுவரை தேக்கப்பட்டிருந்த ஏரி நீர் பாய ஆரம்பித்துப் பள்ளத்தாக்குகள் உருவாகக் காரணமாயின. அது மட்டுமல்ல இன்னும் நிறைய விஷயங்களும் உண்டு.

ஊழிப் பெருவெள்ளம்

புதிய தரவுகளை ஆராய்ந்து பார்த்ததில் ஒரு பெரிய பள்ளத்தாக்கு இருப்பது தெரியவந்துள்ளது. முன்பு பாறை முகடு இருந்த இடத்திலிருந்து இன்று ஆங்கிலக் கால்வாய் இருக்கும் இடம் வரை நீளும் பள்ளத்தாக்கு அது. அருவிகள் உருவாக்கிய குழிகள், மற்ற பள்ளத்தாக்குகள் ஊடாக அந்தப் பெரிய பள்ளத்தாக்கு நீள்கிறது. ஊழிப் பெருவெள்ளம் ஒன்று ஏற்பட்டிருப்பதை, இது உறுதிசெய்கிறது என்கிறார் குப்தா. சுமார் 1 லட்சத்து 60 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் இந்தப் பெருவெள்ளம் ஏற்பட்டிருக்கலாம் என்று கருதப்படுகிறது. “நீரோட்டத்தில் காணப்பட்ட மற்ற ஏரிகளிலிருந்து வந்த வெள்ளமாக அது இருக்கலாம்” என்கிறார் குப்தா. இந்தப் பெருவெள்ளத்தால் ஆங்கிலக் கால்வாயின் மையப்பகுதி சுரண்டப்பட்டிருக்கலாம் என்றும் கருதப்படுகிறது. இந்த இரண்டு நிகழ்வுகளும் சேர்ந்து டோவர் நீரிணையைத் திறந்துவிட்டன என்கிறார் குப்தா.

- தி கார்டியன், சுருக்கமாகத் தமிழில்: தம்பி

http://tamil.thehindu.com

  • தொடங்கியவர்

ஒரு பறவையின் உடலுக்குள் 276 பிளாஸ்டிக் துண்டுகள்..! - என்ன செய்கிறோம் நாம்?

ஒரு பறவையின் உடலுக்குள் 276 பிளாஸ்டிக் துண்டுகள்..! - என்ன செய்கிறோம் நாம்? #VikatanPhotoStory

 

ஒரு பறவையின் உடலுக்குள் 276 பிளாஸ்டிக் துண்டுகள்..! - என்ன செய்கிறோம் நாம்? #VikatanPhotoStory

 

 

ஒரு பறவையின் உடலுக்குள் 276 பிளாஸ்டிக் துண்டுகள்..! - என்ன செய்கிறோம் நாம்? #VikatanPhotoStory

 

ஒரு பறவையின் உடலுக்குள் 276 பிளாஸ்டிக் துண்டுகள்..! - என்ன செய்கிறோம் நாம்? #VikatanPhotoStory

 

 

 

ஒரு பறவையின் உடலுக்குள் 276 பிளாஸ்டிக் துண்டுகள்..! - என்ன செய்கிறோம் நாம்? #VikatanPhotoStory

 

 

 

ஒரு பறவையின் உடலுக்குள் 276 பிளாஸ்டிக் துண்டுகள்..! - என்ன செய்கிறோம் நாம்? #VikatanPhotoStory

 

ஒரு பறவையின் உடலுக்குள் 276 பிளாஸ்டிக் துண்டுகள்..! - என்ன செய்கிறோம் நாம்? #VikatanPhotoStory

 

ஒரு பறவையின் உடலுக்குள் 276 பிளாஸ்டிக் துண்டுகள்..! - என்ன செய்கிறோம் நாம்? #VikatanPhotoStory

 

 

 

ஒரு பறவையின் உடலுக்குள் 276 பிளாஸ்டிக் துண்டுகள்..! - என்ன செய்கிறோம் நாம்? #VikatanPhotoStory

 

 

ஒரு பறவையின் உடலுக்குள் 276 பிளாஸ்டிக் துண்டுகள்..! - என்ன செய்கிறோம் நாம்? #VikatanPhotoStory

 

ஒரு பறவையின் உடலுக்குள் 276 பிளாஸ்டிக் துண்டுகள்..! - என்ன செய்கிறோம் நாம்? #VikatanPhotoStory

 

ஒரு பறவையின் உடலுக்குள் 276 பிளாஸ்டிக் துண்டுகள்..! - என்ன செய்கிறோம் நாம்? #VikatanPhotoStory

 

ஒரு பறவையின் உடலுக்குள் 276 பிளாஸ்டிக் துண்டுகள்..! - என்ன செய்கிறோம் நாம்? #VikatanPhotoStory

ஒரு பறவையின் உடலுக்குள் 276 பிளாஸ்டிக் துண்டுகள்..! - என்ன செய்கிறோம் நாம்? #VikatanPhotoStory

 

ஒரு பறவையின் உடலுக்குள் 276 பிளாஸ்டிக் துண்டுகள்..! - என்ன செய்கிறோம் நாம்? #VikatanPhotoStory

 

 

ஒரு பறவையின் உடலுக்குள் 276 பிளாஸ்டிக் துண்டுகள்..! - என்ன செய்கிறோம் நாம்? #VikatanPhotoStory

 

 

 

ஒரு பறவையின் உடலுக்குள் 276 பிளாஸ்டிக் துண்டுகள்..! - என்ன செய்கிறோம் நாம்? #VikatanPhotoStory

ஒரு பறவையின் உடலுக்குள் 276 பிளாஸ்டிக் துண்டுகள்..! - என்ன செய்கிறோம் நாம்? #VikatanPhotoStory

 

  • தொடங்கியவர்
வன்முறையின் ஒரு வடிவம்
 
 

article_1491883497-index.jpgசீதனம் வாங்கும் முறைமையினால் கடன்கார மாமனார்கள்தான் கூடி விட்டார்கள். ஏற்கெனவே இந்த மாமனார்கள் முன்னாள் மாப்பிளையாக இருந்து, சீதனத்தை தங்களது மாமன்மார்களிடம் கறந்தவர்கள். 

இந்தப் பாவம் அவர்களைச் சும்மா விடுமா? வாங்கிய தொகைகளைப் பிள்ளைகளின் கல்விக்கும் ஏனைய செலவுகளுக்கும் பயன்படுத்திய பின்னர், ஒன்றுமில்லாத நிலைக்கு வந்துவிடுகின்றனர்.

பெண்களைப் பெற்றோரே இவ்விதமான பிரச்சினைகளுக்கு உட்ளாகின்றனர். ஆண்பிள்ளைகள் பெற்றவர்களுக்கு அவ்வளவாகப் பிரச்சினைகள் எழுவதில்லை. ஆண்பிள்ளைகளை விற்கும் குடும்பமே ஏராளம். 

சில பெற்றோர் தங்கள் ஆண்பிள்ளைகள் மூலம், சீதனம் சேகரிப்பார்கள். ஆனால் தங்களுடைய மகளுக்கு சீதனம் வழங்க மட்டும் நீதி, நியாயம் கேட்பார்கள்.

எவரும் எவரது உழைப்பையும் இலவசமாகக் கோருதல் கொடுமை. இது கூட வன்முறையின் ஒரு வடிவம்தான். 

Edited by நவீனன்

  • தொடங்கியவர்

"சுத்தி இருக்கவங்களோட சந்தோஷத்துக்கு அப்புறம்தான் எல்லாமும்.." #MorningMotivation

 

Morning Motivation

று அல்லது ஏழு மாதங்கள் இருக்கும். மழை கொட்டித்தீர்த்துக் கொண்டிருந்த நள்ளிரவு நேரம் அது. சென்னை எல்லா பரபரப்புகளிலிருந்தும் தன்னை விலக்கிக் கொண்டு அமைதியாக உறங்கி கொண்டிருந்தது. மாநகர பேருந்தின் சன்னல் கம்பிகளில் மழை கொஞ்சம் கொஞ்சமாக சொட்டிக் கொண்டிருந்தது. கோயம்பேடு பேருந்து நிலையத்தில் இறங்கி நனைந்து கொண்டே ஓடிப் போய் கோவை பேருந்தில் ஏறி தேடிப் பிடித்து சன்னலை ஒட்டிய இருக்கையில் அமர்ந்தேன். வெளியே சீரான வேகத்தில் மழை பெய்து கொண்டிருந்தது. வெளியே அப்படி மழை பெய்தாலும் பேருந்துக்குள் அப்படி ஒரு புழுக்கம். சன்னலை திறந்து வைத்து விட்டு மழையை வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்த நேரத்தில் அந்த பெரியவர் வந்தார். பேருந்துக்குள் இருந்த மங்கிய மஞ்சள் விளக்கின் வெளிச்சத்தில் அவருடைய வெண்ணிற தலைமுடி பொன்னிறத்தில் மின்னியது. வயது எப்படியும் 70 இருக்கும். 

"தம்பி, உங்க பக்கத்து சீட்டுக்கு யாரும் வருவாங்களா, நான் உட்கார்ந்துக்கட்டுமா?" என்று அத்தனை கனிவாக கேட்டார். 

"நானும் யாரும் வரலைங்கய்யா, நீங்க உட்கார்ந்துக்கங்க." என்றேன்.

அவருடைய தோற்றத்திலும், குரலிலும் அத்தனை வசீகரம். தன்னுடைய பையைத் தலைக்கு மேலே இருந்த இடத்தில்  வைத்துவிட்டு, அருகில் அமர்ந்து கொண்டார். நான் வெளியே மழையையே வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தேன். மாலையிலிருந்து மழையில் நனைந்து கொண்டே திரிந்ததால் நன்றாக நனைந்திருந்தேன். உடையிலிருந்து ஈரம் சொட்டிக் கொண்டிருந்தது. காற்றும் இல்லை. அவசரமாக கிளம்பியதால், கையில் துண்டு கூட இல்லை. என்ன நினைத்தாரோ தெரியவில்லை. இருக்கையிலிருந்து எழுந்து மேலே இருந்த பையிலிருந்து ஒரு துண்டை எடுத்து என்னிடம் நீட்டினார்.

"இந்தாங்க தம்பி, தலையை துவட்டிக்கங்க. அப்பறம் வேடிக்கை பார்ப்பீங்களாம்." என்றார் சிரித்துக் கொண்டே.

நானோ தயக்கத்துடன் "இல்லிங்கைய்யா பரவால்ல.. கொஞ்ச நேரத்துல காய்ஞ்சுடும்"

"அட! பிடிங்க. அவசர வேலையா கிளம்பி போயிட்டு இருக்கீங்க போல, இப்படி நனைஞ்சு போய் பயணம் பண்ணினா உடம்பு என்னாத்துக்கு ஆகுறது. உடம்பு நல்லா இருந்தாதானே வேலை நல்லா செய்ய முடியும்" எனச் சொல்லி கையில் துண்டை திணித்து விட்டு அமைதியாக உட்கார்ந்துகொண்டார். நானும் துண்டை வாங்கித் தலையை துவட்டி விட்டு எதிரே இருந்த இருக்கையின் கைப்பிடியில் துண்டை உலர்த்திக் கொண்டிருந்தேன். பேருந்து கோவை நோக்கிய தன் பயணத்தை துவக்கியது.

 

எனக்கு தூக்கம் வரவில்லை. அவரும் விழித்துக் கொண்டு தான் வந்தார். கொஞ்ச நேரம் பேசலாமே என்ற எண்ணத்தில் பேச்சு கொடுத்தேன்.

"நீங்க எந்த ஊருங்க, எங்கே போகணும்" என ஆரம்பித்தேன்.

நான் கேட்டதுதான் தாமதம். கடகடவென்று பேச ஆரம்பித்தார்.

"நமக்கு சொந்த ஊரு கோயம்புத்தூர் தான் தம்பி. கோயம்பத்தூருலருந்து பாலக்காடு போற வழியில ஒரு சின்ன கிராமம். பையன் குடும்பத்தோட இங்கே தான் இருக்கான். அவன் ஊருக்கு வந்தே ரொம்ப நாளாச்சு. சொந்த பந்தத்துல ஒரு நல்லது கெட்டதுக்கு கூட வர்றதில்லை. பாவம், அவனும் என்ன செய்வான். ரெண்டு புள்ளைங்க. ஒரு பொண்ணு. அவன் புள்ளைங்களுக்காச்சும் சம்பாதிக்கணும்ல. அதான் நாம வீட்டுல சும்மாதானே இருக்கோம். ஒரு எட்டு பார்த்துட்டு வரலாம்னு வந்தேன்" என்றார்.

பேரப்பிள்ளைகளை பார்த்து அவர்களோடு விளையாடி விட்டு வந்திருந்த பூரிப்பு. இன்னும் அவர் முகத்தில் நிறைந்திருந்ததை பார்க்கவே அவ்வளவு சந்தோஷமாய் இருந்தது.

"ஊரெல்லாம் சுத்திப் பார்த்திங்களா, எப்படி இருக்கு சென்னை?" என்றேன்.

"என்னப்பா ஊரு இது.   எங்கே பார்த்தாலும் ஒரே சத்தமா, இரைச்சலா இருக்கு. எங்கியாச்சும் போய் வர்றப்போ வழி மறந்துட்டா. யாருகிட்டயும் வழி கேக்க கூடவும் தயக்கமா இருக்கு. எல்லோரும் எங்கேயோ வேக வேகமா ஓடிக்கிட்டு இருக்காங்க. அட கொஞ்ச நேரம் அமைதியா இருக்கலாம்னு தான் கோயில் குளம்னு போறோம். அங்கேயும் அப்படித்தான் இருக்காங்க. பையன்கிட்ட கேட்டா 'இங்கெல்லாம் அப்படிதான்ப்பா'ன்னு சொல்லுறான். எல்லோரோட கையிலையும் போன் இருக்கு. அதைப் பார்த்தே சிரிச்சுக்குறாங்க. அதுலயே எல்லோருக்கிட்டவும் பேசிக்கிறாங்க. பக்கத்துல ஒரு மனுஷன் இருக்கானேன்னு கண்டுக்க கூடவும் மாற்றாங்கன்னா பாரேன்." என்றார் முன்பை விட வேகமாக.

நான் அமைதியாக இருக்கவே அவரே தொடர்ந்தார்.

"எங்க காலத்திலெல்லாம் என்னதான் வேலை, சம்பாத்தியம்னு ஓடிக்கிட்டே இருந்தாலும். சுத்தி இருக்கவங்களோட சந்தோஷத்துக்கு அப்புறம்தான் எல்லாமும். ஆனா, இப்போ யாருக்கும் யாரை பத்தியும் கவலை இல்லை. ரோட்டுல நடந்து போறப்போ சின்னதா ஒரு சிரிப்பு கூடவும் யார் முகத்துலையும் இல்லை. அப்படி என்னதான் கவலைன்னு தெரியல. வாழ்க்கையில மூணு வேளை சோறு, நிம்மதியான தூக்கம், நம்மள சுத்திலும் இருக்கவங்களோட சந்தோஷத்தை தாண்டி பெருசா என்னத்த வாழ்ந்து சாதிச்சுட போறோம்." பெருமூச்சுடன் சொல்லி விட்டு அமைதியாக கண்களை மூடிக் கொண்டார். 

எங்கள் பேருந்து தாம்பரத்தை தாண்டி பயணித்துக் கொண்டிருந்தது. இரவு முழுவதும் அவர் எதுவுமே பேசவில்லை. காலையில் பேருந்தை விட்டு இறங்குகையில். கைகளை பிடித்துக் கொண்டு நெற்றியில் ஒரு முத்தமிட்டுவிட்டு மாறாப் புன்னகையுடன்  விடைபெற்றுச் சென்றார்.

எங்களுடைய முகவரியை நாங்கள் பரிமாறிக் கொள்ளவில்லை. ஆனால், அவருடனான அந்தக் குட்டி உரையாடலில் இருந்த அன்பின் ஏக்கம், நாம் ஒரு நிமிடம் யோசிக்க வேண்டியது!  

http://www.vikatan.com

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.