Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இளமை புதுமை பல்சுவை

Featured Replies

  • தொடங்கியவர்

சாதாரண உணவகத்தில் ஒபாமா! கனடா பிரதமருடன் ருசிகர சந்திப்பு

கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடேவும் அமெரிக்கா முன்னாள் அதிபர் ஒபாமாவும் ஒரு சாதாரண ரெஸ்ட்டாரண்டில் அமர்ந்து இருக்கும் புகைப்படம் தற்போது ஃபேஸ்புக்கில் வைரலாகிக் கொண்டு இருக்கிறது. 

18922903_10155611007065649_1847553070087

கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடே அவரது ஃபேஸ்புக் பக்கத்தில் ஒரு புகைப்படம் பதிவிட்டுள்ளார். அந்த புகைப்படத்தில் ஜஸ்டின் ட்ரூடேவும் அமெரிக்க முன்னாள் அதிபர் ஒபாமாவும் ஒரு சாதாரண ரெஸ்ட்டாரண்ட் அறையில் அமர்ந்திருக்கின்றனர். எதிரெதிர் இருக்கையில் சாதாரணமாக அமர்ந்து பேசிக்கொண்டு இருக்கின்றனர். இதுகுறித்து தனது ஃபேஸ்புக்கில் பதிவிட்டுள்ள ஜஸ்டின், 'ஒவ்வொரு சமூகத்திலும் உள்ள இளம் தலைவர்களை எப்படி செயல்பட வைப்பது என்பது குறித்து உரையாடினோம். என் சொந்த ஊருக்கு வந்த ஒபாமாவுக்கு நன்றி' என்று பதிவிட்டுள்ளார்.

 

 

http://www.vikatan.com

  • Replies 11.3k
  • Views 1.5m
  • Created
  • Last Reply
  • தொடங்கியவர்

பியர் கிரில்ஸ்... இது வெறும் பெயரல்ல... சாகசங்களின் பிறப்பிடம்! #HBDBearGrylls

manvswild5_11269.jpg

Pic.: https://www.facebook.com/RealBearGrylls/

ந்த வாழ்க்கையில், சொகுசு முழுவதையும் உங்களிடமிருந்து பறித்துவிட்டால், எப்படி இருக்கும்...? ஆள் அரவமற்ற தப்பிக்க முடியாத ஒரு பகுதியில், உங்களை விட்டுவிட்டால் நீங்கள் எப்படி பிழைப்பீர்கள்? ஒருவேளை இதுபோன்ற சூழலில் நீங்கள் மாட்டிக்கொண்டால், எப்படி உங்களை நீங்களே காப்பாற்றிக்கொள்வீர்கள்?எவ்வளவு சிக்கலான சூழ்நிலைகளிலும் சில உயிர் வாழும் உத்திகளை நீங்கள் கற்றுக்கொள்வது மிக அவசியம்.

"இப்ப நாம இருக்கிறது சஹாரா பாலைவனத்தோட நடுப்பகுதி. இங்க உயிர் வாழ்வதற்கான மூலக்கூறு ரொம்ப கம்மி. குறிப்பா ஒவ்வொரு 30 நிமிஷத்துக்கும் அரை லிட்டர் தண்ணி குடிக்கிறது ரொம்ப ரொம்ப அவசியம். இல்லனா உங்க மூளைக்கு போற ரத்தத்துல ஆக்சிஜன் குறைவாகி, அடிக்கிற வெயில்ல மயக்க நிலைக்குப் போயிடுவீங்க. இது உயிருக்கு ரொம்ப ஆபத்து. அதனால தண்ணி இல்லாத நேரத்துல உங்க சிறுநீரையே நீங்க குடிக்கணும். இறந்து போன விலங்குகள் கண்ணுல தெரிஞ்சா அதுல தேவையான பகுதிகளை சாப்பிட பயன்படுத்திக்கணும். அதுக்கு நீங்க தயார் நிலையில இருக்கணும்." இதை சொல்வது யார் தெரியுமா? பியர் கிரில்ஸ். ஆம் நமது வீடுகளின் வரவேற்பறைக்கே வந்து, 'ஆபத்தான சூழ்நிலைகளில் எப்படி உயிர்பிழைப்பது?' என வகுப்பெடுக்கும் அதே 'மேன் வெர்சஸ் வைல்டு' பியர்-தான்! 

manvswild_11406.jpg

Pic.: https://www.facebook.com/RealBearGrylls/

''வெயில் புகாத அமேசான் மழைக் காடுகள், வெயில் தாங்க முடியாத சஹாரா பாலைவனம், ஆர்டிக் பனிப்பிரதேசம், ஆபத்து நிறைந்த பசுபிக் தீவுகள், எரிமலைப் பள்ளத்தாக்குகள் என எந்த இடத்திலும் நம்மால் தப்பித்து வெளியே வர முடியும். அதற்கு மிகப்பெரிய தன்னம்பிக்கையும், கொஞ்சம் உழைப்பும், அதோடு சேர்ந்து தைரியமும் இருந்தால் போதும்...'' என உயிர் பிழைத்திருப்பதற்கான உத்திகளை நமக்கு சொல்லிக்கொடுத்துக்கொண்டிருக்கும் சர்வைவர். 'இதெல்லாம் சும்மா... டி.ஆர்.பி-க்காக மக்களை ஏமாத்தும் வேலை' என நீங்கள் நினைத்துக்கொண்டிருக்கும் இந்த நொடியில்கூட பியர் ஏதேனும் ஒரு சாகச வேலையில் ஈடுபட்டுக்கொண்டிருப்பார். அதனால் இவர் பலரின் சாகச நாயகனாக வலம் வருகிறார். சாகசம் என்ற வார்த்தைக்கு ஒரு பொருத்தமான பெயர் வேண்டுமென்றால், அது பியர் - தான். இன்று அந்த சாகச நாயகனின் பிறந்த தினம்!

manvswild1_11530.jpg

Pic.: https://www.facebook.com/RealBearGrylls/

பியரின் இளமைப்பருவம் :

1974 ஆம் ஆண்டு ஜூன் 7 ஆம் தேதி பிறந்த பியர் கிரில்ஸின் உண்மைப் பெயர் எட்வர்ட் மைக்கேல் கிரில்ஸ். ஆனால், இந்தப் பெயர் அவரின் அக்காவுக்குப் பிடிக்கவில்லை. அதனால் 'டெடி பியர்' என தம்பியை செல்லமாக அழைக்க ஆரம்பித்தாள். கடைசியில், அவர் அக்கா வைத்த செல்ல பெயர்தான் கிரில்ஸ்-உடன் சேர்ந்து பியர் கிரில்ஸ் என்றானது. ஆனால், பள்ளிப்பருவத்தில் சக மாணவர்கள் இவருக்கு வைத்தப் பட்டப் பெயர் 'மங்கி'. ஆம், பியரால் ஓர் இடத்தில் நிலையாக உட்கார முடியாது. அங்கும் இங்கும் தாவிக்கொண்டே, சேட்டைகள் செய்துகொண்டே இருந்தான். அதனால், மாணவர்கள் மத்தியில் இவன் ஒரு குரங்கு. ஒரு முறை பள்ளி விடுமுறை காலத்தில், பியர் கிரில்ஸ் தந்தையுடன் 'சைப்ரஸ்' மலைப்பகுதிக்கு சென்றான். அப்போது இருட்டிவிட எப்படி வீட்டுக்குப் போவது என்று வழி தெரியவில்லை. பயத்தில் உறைந்திருந்த தந்தையின் காதுகளில் ''எனக்கு வழி தெரியும் என் பின் தொடர்ந்து வாருங்கள்'' என பியர் சொல்ல... தந்தையும் பியரைப் பின்தொடர்ந்தே வீடு வந்து சேர்ந்தார். இதுதான் பியரின் முதல் சாகசப் பயணம். பள்ளிப் பருவம் முடிந்தபோது குடும்ப நண்பரது அழைப்பின் பேரில், இந்தியாவின் இமயமலை பகுதிக்கு வந்தான் பியர். அப்போது இமயமலையின் உயரத்தைப் பார்த்து, 'சீக்கிரம் இதன் மீது ஏறுவேன்' என சபதம் எடுக்கிறான். 

ராணுவமும், சாகச பயணத்தின் தொடக்கமும் :

dsd_11118.jpg

Pic.: https://www.facebook.com/RealBearGrylls/

பியரின் ஒரே ஆசை, 'எப்படியாவது இந்திய ராணுவத்தில் சேர வேண்டும்' என்பதே. ஆனால், அது நடக்கவில்லை. அதனால், 1994-ஆம் ஆண்டு பியர், பிரிட்டிஷ் ராணுவத்தின் சிறப்புப் படையான SAS (Special Air Service) தேர்வுக்காகச் சென்றார். ஆனால், வலிமை இல்லையென அங்கிருந்த அதிகாரிகளால் வெளியேற்றப்பட்டார் பியர். அந்த அவமானம் பியரினுள் வெறியைத் தர தனது உடலை வலிமையாக்க ஜிம்மிலேயே தவம் கிடக்கத் தொடங்கினார். அதன் பலனாக அடுத்த SAS தேர்வின்போது அனைவரையும் விட சிறந்த வீரனாகத் தேர்வானார். 1996-ஆம் ஆண்டு ஸாம்பியாவில், பணி நிமித்தமாக ஹெலிகாப்டரில் இருந்து குதிக்கிறார் பியர். அதாவது, சுமார் 16,000 அடி உயரத்திலிருந்து தரையை நோக்கி விர்ரென்று பறந்து வந்துகொண்டிருந்தார் பியர். மிகச் சரியாக தரையிலிருந்து 3,000 அடி உயரத்தில் அவர் வந்துகொண்டிருந்தபோது, முதுகில் மாட்டியிருந்த தனது பாராசூட்டை விரிக்க... அது விரியவில்லை. அவசர உதவி பாராசூட்டை திறக்கப் போதிய அவகாசம் இல்லாததால், பாராசூட் பைகளோடு அசுரவேகத்தில் பூமியில் வந்து பொத்தென்று விழுகிறார். இந்த விபத்தில், பியரின் முதுகுத்தண்டில் மூன்று குறுக்கு எலும்புகள் நொறுங்கிப்போனது. ''இனி பியரால் எழுந்திருக்கக்கூட முடியாது'' என மருத்துவர்கள் கைவிரித்துவிட்டனர். அறுவைச் சிகிச்சை, மன அழுத்தம், உடல் வலி... என எல்லாச் சோதனைகளும் பியரை ஒருசேர தாக்கியது. ஆனாலும் தன் மன வலிமையினால், அனைத்து சோதனைகளையும் புறந்தள்ளி தன்னம்பிக்கையோடு எழுந்து நடந்து மருத்துவர்களின் கூற்றைப் பொய்யாக்கினார் பியர். அதன்பிறகு, ''இனி நீங்கள் சாகசப் பயணம் செய்யக்கூடாது'' என மருத்துவர்கள் சொல்ல... "என்னால் அப்படி இருக்க முடியாது" என்று தீர்க்கமாகச் சொல்கிறார் பியர். '3 வருட ராணுவ வேலை போதும்' என நினைத்த பியர், ''இனி சாகசப் பயணங்கள் மட்டும்தான் செய்வேன்'' என்று கூறியபோது அவரின் கண்கள் இமயமலையின் பக்கம் திரும்பியது. மருத்துவர்கள் எவ்வளவோ சொல்லியும் பியர் கேட்கவில்லை.

1998 ஆம் ஆண்டு, மே 26-ம் தேதி காலை 7:22-க்கு உலகின் உச்சியான எவரெஸ்ட்டில் ஏறி நின்று தனது துணிவையும், சாகசத்தையும் நிலைநாட்டினார். உலகிலேயே மிகக் குறைந்த வயதில், இமயமலையில் ஏறமுடியுமானால் அது பியர் கிரில்ஸால் மட்டும்தான் முடியும்; ஆம், அப்போது பியருக்கு வயது 23. அப்படியானால், பியரின் மனோதிடமும், உழைப்பும் எப்படி இருந்திருக்க வேண்டும். மிகச் சிறிய வயதில், எவரெஸ்ட்டில் ஏறியவர் என்ற கின்னஸ் சாதனையையும் படைத்தார் பியர். ஆனால், தற்போது அந்த சாதனை நேபாள நாட்டைச் சேர்ந்த ஒரு சிறுவனால் முறியடிக்கப்பட்டுவிட்டது.

சாதனைக்குப் பின் மனிதநேயம் :

மலை ஏறும்போது கால்களை இழந்த தனது நண்பருக்கு உதவ நினைத்தார் பியர். இதற்காக, புதிய முயற்சி ஒன்றை அறிவித்தார். அதாவது தனது நண்பரது மருத்துவச் செலவுக்காக, தேம்ஸ் நதியை நிர்வாணமாக தான் கடக்கவிருப்பதாக அறிவித்து அதன்படியே நதியைக் கடந்தும் சாதனை படைத்தார் பியர். நிர்வாணமாக நதியைக் கடக்கும் இந்த முயற்சியில் அவருக்குத் துணையாக இருந்தது manvswild4_11127.jpgசாதாரண பாத் டப்!  11 மீட்டர் நீளம் கொண்ட திறந்தவெளிப் படகில், ஆர்டிக் மற்றும் அட்லாண்டிக் பெருங்கடலைக் கடந்தார். 2005 ஆம் ஆண்டு சுமார் 25,000 அடி உயரத்தில், பலூனில் பறந்தபடியே இரவு விருந்து உண்டு புதிய சாதனை படைத்தார். இது எல்லாமே வெவ்வேறு நலத்திட்டங்களுக்காக பியர் செய்த சாதனைகள். 

புத்தம் புது சாதனைகள் :

மீண்டும் எவரெஸ்டின் மீது பியரின் பார்வை திரும்பியது. எவரெஸ்ட் சிகரப் பகுதியில், 29,500 அடி உயரத்தில், உறையவைக்கும் குளிரில் பாராசூட்டில் பறந்து சாதனை படைத்தார் பியர். இந்த நிகழ்வை டிஸ்கவரி மற்றும் சேனல் 4 சேனல்கள் படம்பிடித்தன. இங்கிருந்துதான் பியரின் தொலைக்காட்சிப் பயணம் ஆரம்பமாகிறது. தொலைக்காட்சி வரலாற்றில், `Escape to the Legion’ என்ற நிகழ்ச்சிக்காக சஹாரா பாலைவனத்தை தனியாகக் கடந்ததுதான் பியரின் முதல் சாகச நிகழ்ச்சி. இந்த நிகழ்ச்சி உலகம் முழுவதும் தாறுமாறாய் பரவ... அடுத்தக் கட்டமாக 'Born Survivor' என்ற நிகழ்ச்சியை நடத்தித்தர பியரை சேனல்-4 ஒப்பந்தம் செய்தது. அந்த நிகழ்ச்சிதான்  'MAN Vs WILD' என்ற பெயரில் ஒளிபரப்பாகிறது. அதன் பின் இவருக்கென்றே டி.ஆர்.பி-கள் எகிறத் தொடங்கின. உலகம் முழுவதும் அதிக மக்களால் ரசித்து பார்க்கப்படும் நிகழ்ச்சி பியருடைய 'MAN Vs WILD'. ராணுவத்தில் கற்றுக்கொடுத்த உத்திகளை மட்டுமே வைத்து இவர் இந்த நிகழ்ச்சிகளை செய்யவில்லை. புதுப்புது உத்திகளை பியரே கண்டுபிடித்தார். அதனால்தான் இன்று 'உலக சாரணர்களின் தலைவராக (Chief Scout of World)' இருக்கிறார். இப்போதும் பலப்பல உத்திகளை தானாகவே கண்டுபிடித்தும் வருகிறார் பியர். 

'MAN Vs WILD'-ல் அபாயகரமான செயல்களை இவர் செய்வதைப் பார்த்து... உயிருக்கு ஆபத்தான இடங்களில் எப்படி இவரை தனியாக விடலாம்? என சர்ச்சைகள் எழுந்தது. அதன் பின் பியருக்கு தனிமனிதப் பாதுகாப்பு விதிகளின்படி உரிய பாதுகாப்பு வழங்கப்படுகிறது என்றும், `பியர் கிரில்ஸ் படப்பிடிப்புக் குழுவினருடன்தான் பயணம் செய்கிறார்’ என்றும் நிகழ்ச்சியின் ஆரம்பத்தில் தெளிவாக அறிவிக்கத் தொடங்கினர். இருந்தாலும் இதுவரை உதவிக்கு உபகரணங்கள் இல்லாமல், கையில் கிடைப்பதைக்கொண்டு சாகச செயல்களைச் செய்து வருகிறார் பியர்.

‘சர்வைவல் அகாடமி’ என்ற ஒரு அமைப்பை ஸ்காட்லாந்து மலைப்பகுதியில் அமைத்து நடத்திவருகிறார். இயற்கைப் பேரிடர்களை  மக்கள் எப்படி எதிர்கொள்ளவேண்டும், அவசர காலத்தில் எப்படிப்பட்ட உணவுகளை உட்கொண்டு உயிர்வாழத் தெரிந்திருக்க வேண்டும் என்பது போன்ற உத்திகளை மக்களுக்கு சொல்லிக்கொடுப்பதே இதன் முக்கிய நோக்கம்.

பியரின் தனித்திறன்கள் :

பியருக்கு சாகச கலைகளும் அத்துப்படி. மலையேற்றம், குதிரையேற்றம், பாராமோட்டரிங், நீச்சல், ஸ்கை டைவிங், கராத்தே, வில் வித்தை, யோகா, பூமராங் வீசுவது, விமானம் ஓட்டுவது,  படகு செலுத்துதல் என ஆகச்சிறந்த அத்தனைக் கலைகளும் பியருக்குத் தெரியும். பன்மொழி வித்தகர். உலக மக்களின் நாகரிகம், வாழ்க்கை முறைகள் பற்றிய பட்டமும் பெற்றுள்ளார். உலக சாரணர் சம்மேளனத்தின் தலைமைச் சாரணராகவும் இருக்கிறார். இப்பதவிக்கு அமர்த்தப்பட்டவர்களிலேயே மிக இளைய வயதுக்காரர் பியர் என்பது மற்றுமொரு சாதனை. பியர் கிரில்ஸ் சாகசக் கலைகளில் மட்டும் வல்லவரல்ல.... அவர் மிகச்சிறந்த எழுத்தாளரும்கூட. இதுவரை 11 புத்தகங்கள் எழுதியுள்ளார். இதில் 'மிஷன் சர்வைவல்' (Mission Survival) எனும் புத்தகம் அதிகளவில் விற்பனையாகியுள்ளது.

பயம் அறியா பியர் :

ஒருமுறை 'MAN Vs WILD' நிகழ்ச்சிக்காக பிரேசில் காடுகளில் பியர் அலைந்துதிரிந்த நேரம் அது. இரவு நேரத்தில், மரங்களுக்கிடையே தொங்கு ஊஞ்சல் அமைத்து பியர் தனியாக உறங்கிக் கொண்டிருந்தார். அப்போது பியரை நோக்கி 3 ஓநாய்கள் வந்தன. சாதாரண மனிதன் என்றால் பயத்திலேயே உயிர் போயிருக்கும். ஆனால், அங்கு இருப்பதோ பியர்! அருகில் நின்ற ஒரு ஓநாயின் காலைப்பிடித்து சுழற்றி அடித்திருக்கிறார். இதைக்கண்ட மற்ற ஓநாய்கள் பயத்தில் தெறித்து ஓட... பாதுகாப்பு டீம் வந்து பார்க்கும்போது மெல்லிய வெளிச்சத்தில், ஓநாயின் கழுத்தைக் கடித்தபடி இருந்தார் பியர். வந்தவர்கள் பியருக்கு ஏதோ ஆபத்து என்றெண்ணி ஓநாயைத் தாக்க முற்படும்போதுதான் தெரிந்தது.... ஏற்கெனவே பியரின் கடியினால் ஓநாய் இறந்துபோயிருந்தது. ஆபத்து வரும்போது நிதானிக்க முடியாத வேகத்தில், மிக சாதுரியமாக அவர் எடுக்கும் முயற்சிகளே சாதனையாளன் பியர் க்ரில்ஸாக மக்களின் மனதில் பதிய வைத்திருக்கிறது!

இப்போதும், 'MAN Vs WILD' நிகழ்ச்சிக்காக ஏகப்பட்ட 'கோல்மால்' வேலைகள் நடக்கின்றன என்று பரவலான குற்றச்சாட்டுகள் உண்டு. மேற்சொன்ன அனைத்துமே பியரின் சாதனைப்பயணங்கள் மட்டும்தான். உடம்பு ஒத்துழைக்க மறுத்தது உள்ளிட்ட வலிகள் நிறைந்த மற்றொரு பகுதியும் பியருக்கு உண்டு. ஆனாலும் அதையெல்லாம் தோற்கடித்தே பியர் ஒவ்வொரு முறையும் வெற்றிகொள்கிறார். 

 

பியரின் முயற்சிகள் சாதனைப் பட்டியலில் இடம்பிடிப்பது அல்ல; சாதனைப் பட்டியல்களை தானே புதியதாக உருவாக்குவது. இப்போதும், பல சாகசங்களை செய்யப் பயிற்சியும் முயற்சியும் எடுத்துக் கொண்டிருக்கிறார். வரும் காலத்தில் யாராலும் எளிதில் முறியடிக்கமுடியாத சாதனைகளையும் அவரால் செய்யமுடியுமா? நிச்சயம் முடியும்; ஏனென்றால் அவர் பியர் கிரில்ஸ்!

http://www.vikatan.com

  • தொடங்கியவர்

இனி தாவரங்களிடம் “ஹவ் ஆர் யூ” என்று பேசலாம்... பதில் பெறலாம்! #ProjectFlorence

 

கிளி பாஷை தெரியும்; செடி பாஷை தெரியுமா? அதென்ன செடி பாஷை என்று கேட்கிறீர்களா? தாவரங்களும் ரியாக்ட் செய்யும். அதெப்படி?

தாவரங்களிடம்

(Photo Credit: Project Florence)

இயற்கையின் மீது அதிக ஈடுபாடுள்ள ஆர்வலர்கள், தோட்டக்காரர்கள், விவசாயிகள் போன்றோரை கவனித்தால் தெரியும். மரம், செடி, கொடிகளுடன் ஒருவித வசை மொழி பேசுவார்கள். உதாரணமாக வறட்சி காலங்களில் ‘தெனமும் உனக்கு தண்ணி காட்டுறேனே; என் கண்ணுல மழைய காட்ட மாட்டியா?” , “இத பாரு... இப்படியே பண்ணுன.. அப்புறம் அவ்ளோ தான் சொல்லிபுட்டேன்” என்றெல்லாம் புலம்புவார்கள். இதற்கு தாவரங்கள் எந்த பதில்களும் கொடுப்பதில்லை. அதனால் எல்லா வகையிலும் இயங்குகின்ற தொழில்நுட்பங்கள் இதன் பக்கமும் கொஞ்சம் சாய்ந்துள்ளன.

மைக்ரோசாஃப்ட் ஸ்டுடியோவின் 99-வது நிகழ்வில் பணிபுரிகின்ற ஒரு கலைஞர் ஹெலன் ஸ்டைனர். இவர் தாவரங்களிடமிருந்து வெளிவரும் மின்வேகத்தையும் ரசாயனக் குறியீடுகளையும் தனது ஆராய்ச்சிக்கு பயன்படுத்திக் கொண்டார். . Project Florence எனப்படும் இவரது செயலியில் ஒரு செய்தியை தட்டச்சிட அது தாவரங்களுக்கு புரியும் பாஷையில், ஒளி மூலம் கடத்தப்படும். அதற்கு தாவரங்கள் பதில் அளிக்கும். தாவரங்கள் தரும் கெமிக்கல் பதில்களை Project florence மனிதர்களுக்கு புரியும் பாஷைக்கு மாற்றித் தரும். 

மைக்ரோசாஃப்ட் நிறுவனப் பொறியியலாளர்கள் சுற்றுச்சூழலுடன் மனிதர்களுக்கு இணைப்பை ஏற்படுத்துவதற்காகப் புதுமையான இந்த ஆய்வுப் பயணத்தை மேற்கொண்டுள்ளனர். இது பல்வேறு காரணிகளால் பிரிந்து கிடக்கும் மக்களை ஒருங்கிணைக்கும் என்கிறார்கள். எஞ்சினியர்களும், விவசாயிகளும், மென்பொருள் வல்லுநர்களும் கூட்டாக செய்யும் புராஜெக்ட் இது.  இந்த மாதிரியான கூட்டு முயற்சிதான் டெக்னாலஜியின் வளர்ச்சிக்கு முக்கியம் என்கிறார் மைக்ரோசாஃப்ட் நிறுவனத்தின் முதல்வர் ஆஸ்டா ரோஸ்வே.

ஈக்கள் தனது உடலில் உள்ள சிறிய அளவிலான முடிகளைப் பயன்படுத்தி மலர்கள் அனுப்பும் மின் குறியீடுகளை புரிந்துகொள்ளும். தாவரங்களும் பலவிதமான ரசாயனக் குறியீடுகளை விலங்குகளுடன் உரையாடவும் எச்சரிக்கைக்காகவும் பயன்படுத்தும்.

தாவரங்களுக்குத் துன்பம் ஏற்பட்டாலோ அவை பாதிப்புக்கு உள்ளாக்கப்பட்டாலோ அவை ரசாயனங்களை வெளியேற்றி மற்ற தாவரங்களை உதவிக்கு அழைக்கும். அல்லது எச்சரிக்கை விடுக்கும். இந்த ரியாக்‌ஷன்களை எல்லாம் தொகுத்து வைத்திருக்கிறார்கள். தாவரத்தின் ஒவ்வொரு கெமிக்கல் வெளியீடுக்கும் ஒரு அர்த்தம் உண்டு. அதை Project florence பயன்படுத்துகிறது. Project Florence  பயன்படுத்தி ஒருவர் தாவரத்துக்கு குறுஞ்செய்தியை அனுப்பலாம். பதிலுக்கு தாவரங்கள் வெளியிடும் கெமிக்கல் பதிலை சிஸ்டம் மொழிப்பெயர்த்து சொல்லும். 

நாம் பேசுவது ஒன் வே என்றாலும், தாவரங்களுடன் பேச முடியும் என்பதே சுவாரஸ்யமானது. தாவரங்கள் பேசாது. தனக்கு சுற்றி இருப்பதற்கு ரியாக்ட் செய்யும். அதை வைத்து அத்தாவரத்தைப் பற்றி நாம் அறிந்துகொள்ள முடியும். அந்தச் செடி சந்தோஷமாக இருக்கிறதா அல்லது நம்மைப்போல அது மன அழுத்தத்தால் தவிக்கிறதா என்பதை கூட அறிய முடியும்.  

நம் முன்னோர்கள் இதையெல்லாம் தங்களது நுண்ணர்வு கொண்டு செய்தார்கள். இயற்கையை விட்டு விலகிச்செல்லும் இந்தத் தலைமுறைக்கு தொழில்நுட்பம் அதை சாத்தியாமாக்குகிறது. எது எப்படியோ... மீண்டும் நாம் இயற்கயோடு உரையாட வேண்டும். அது அவசியமானது.

http://www.vikatan.com

  • தொடங்கியவர்

 

மருந்தாகும் மீன்

பிரேசிலில் இருக்கும் பல மீன் பண்ணைகளில் டிலாபியா என்கிற இந்த ரக மீன் வளர்க்கப்படுகிறது. இது ஒருவகை நன்னீர் மீன்.


டிலாபியா மீன் அதிக அளவு ஏற்றுமதி செய்யப்படுகிறது. வேறொரு வகையிலும் இதன் பயன்பாடு அதிகரித்து வருகிறது.


தீக்காயங்களுக்கான சிகிச்சையில் இந்த மீனின் தோலை மருத்துவர்கள் பயன்படுத்த ஆரம்பித்துள்ளனர்.


மீனிலிருந்து உரிக்கப்பட்ட தோல் வெட்டிசுத்தமாக்கி குளிரூட்டிகளில் பாதுகாக்கப்படுகிறது.


தீக்காயங்களின் மீது கட்டுப்போட இந்த மீன் தோல்கள் பயன்படுகின்றன.


இந்த மீன் தோல் தீக்காயத்தில் நோய்த்தொற்று ஏற்படாமல் தடுப்பதோடு தோல்வளர்ந்து காயம்ஆறவும்உதவுகிறது.


தீக்காயங்களுக்கான மற்ற சிகிச்சைகளை விட இது மிகவும் மலிவானது.


இந்த சிகிச்சை முறை இன்னமும் பரிசோதனையாகவே மேற்கொள்ளப்படுகிறது.

மருத்துவர்கள் இந்த சிகிச்சையை மற்ற நாடுகளுக்கும் விரிவாக்க முடியும் என நம்புகிறார்கள்.

  • தொடங்கியவர்

’ரெண்டு பேரும் ஒருத்தருக்கு ஒருத்தர் சளைச்சவங்க இல்ல’.. கிண்டலடிக்கும் நெட்டிசன்ஸ்!

 

பதஞ்சலி நிறுவனர் பாபா ராம்தேவுடன் உத்தரப்பிரதேச முதல்வர் ஆதித்யநாத் யோகா பயிற்சி செய்யும் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகியுள்ளன.

yoga day

2015 ஆம் ஆண்டு முதல், ஜூன் 21 ஆம் தேதி சர்வதேச யோகா தினம் கொண்டாடப்படுகிறது. மத்தியில் குறிப்பாக பா.ஜ.க ஆட்சியமைத்தப் பின்னர், யோகாவுக்கு அதிக முக்கியத்துவம் வழங்கப்படுகிறது. மேலும் யோகா தினம் பெரியளவில் கொண்டாடப்பட்டு வருகிறது.

yoga day

இதனிடையே இந்த வருட யோகா தினத்தை உத்தரப்பிரதேச மாநிலம் லக்னோவில் வெகு விமர்சையாகக் கொண்டாட பா.ஜ.க அரசு திட்டமிட்டுள்ளது. இந்த நிகழ்வில் பிரதமர் நரேந்திர மோடியும் கலந்து  கொள்ளவிருக்கிறார். இந்த யோகா நிகழ்வில், பதஞ்சலி நிறுவனரும், யோகா குருவுமான பாபா ராம்தேவுடன் இணைந்து உத்தரப்பிரதேச முதலமைச்சர் ஆதித்யநாத் யோகா செய்யவுள்ளார். இதற்கான பயிற்சி இன்று நடைபெற்றது.

yoga day
 

யோகியும், பாபா ராம்தேவும் யோகா பயிற்சி செய்த புகைப்படங்கள் இணையத்தில் அதிகம் பகிரப்பட்டு வருகிறது. ’நேற்று விவசாயிகள் கொல்லப்பட்டுள்ளனர். இன்று இந்த யோகா ஒத்திகை தேவையா’, ‘பா.ஜ.க அரசுக்கு விவசாயிகள் மீது அக்கறை இல்லை’, ‘யோகி-ராம்தேவ் இருவரும் ஒருவருக்கொருவர் சளைத்தவர்கள் இல்லை’ என்று இணையவாசிகள் விமர்சித்து வருகின்றனர்!

http://www.vikatan.com

  • தொடங்கியவர்

மன்மோகன் சிங் பிரதமர் ரூட் பிடித்த பின்னணி.. பரபர கதை பேசும் திரைப்படம்!

 
 

மன்மோகன் சிங் இந்தியப் பிரதமராக இருந்த காலக்கட்டத்தை விவரிக்கும் திரைப்படம்தான் 'The Accidental PrimeMinister'. இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் இன்று வெளியானது. 

Manmohansingh

தலைசிறந்த பொருளாதார நிபுணரும், அரசியல்வாதியுமான மன்மோகன் சிங், 2004 ஆம் ஆண்டு முதல் 2014 ஆம் ஆண்டுவரை இந்திய பிரதமராகப் பதவி வகித்தார். சஞ்சய் பாரு என்பவர் 2004 - 2008 வரை மன்மோகன் சிங்கின் ஊடக ஆலோசகராக இருந்தார். அரசியல் விமர்சகரான சஞ்சய்,  மன்மோகன் சிங் பற்றி 2014 ஆம் ஆண்டு புத்தகம் ஒன்றை வெளியிட்டார். அந்தப் புத்தகத்தில் மன்மோகன் சிங் பிரதமராக இருந்த காலக்கட்டத்தில் அவருடன் இணைந்து பணியாற்றியது குறித்து சஞ்சய் எழுதி இருந்தார். மன்மோகன் முழு அதிகாரத்துடன் செயல்படவில்லை என்றும் அவரின் செயல்பாடுகளில் சோனியா காந்தியின் தலையீடு இருந்தது என்றும் அந்த புத்தகத்தில் குறிப்பிடப்பட்டிருந்தது. இது பெரும் சர்ச்சையை கிளப்பியது.

தற்போது, அந்த சர்ச்சை நிறைந்த புத்தகத்தை திரைப்படமாக எடுக்க உள்ளார் இயக்குநர் விஜய் ரத்னாகர் கத்தே. ’The Accidental PrimeMinister’ எனும் அந்த புத்தகத்தின் பெயரையே திரைப்படத்துக்கும் வைத்துவிட்டனர். இத்திரைப்படத்தை சுனில் போரா தயாரிக்கிறார். மன்மோகன் வேடத்தில் அனுபம் கேர் நடிக்கிறார். 2018 ஆம் ஆண்டு வெளியாக உள்ள இத்திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் இன்று வெளியாகி உள்ளது. இதுதொடர்பாக ட்விட்டரில் பதிவு செய்த அனுபம் கேர் ‘சம கால வரலாற்றில் வாழும் ஒருவரின் வேடத்தை ஏற்று நடிப்பது சவாலாக உள்ளது’ என்று குறிப்பிட்டுள்ளார்.

http://www.vikatan.com

  • தொடங்கியவர்

Bild könnte enthalten: 8 Personen, Personen, die lachen

#cricket l உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டிகள் முதல் முறையாக 1975ஆம் ஆண்டு ஜூன் மாதம் 7ஆம் திகதி இங்கிலாந்தில் ஆரம்பமாகியது.
அதற்கு முன்னர் இலங்கை அணியினர் நுவரெலியாவில் எடுத்த புகைப்படமே இது

  • தொடங்கியவர்

ஊருக்குள் வந்த ராட்சஸ முதலை

இலங்கையின் கிராமத்துக்குள் வந்த வித்தியாசமான விருந்தாளி பார்வயாளர்களை ஈர்த்துவருகிறார்.

இலங்கையின் சமீபத்திய வெள்ளத்தில் சிக்கிய இராட்சத முதலை ஒன்று திம்பதுவ கிராமத்தில் புகுந்தது.

காலையில் தேயிலை பறிக்க தோட்டத்துக்குச்சென்ற பெண் இதை முதன் முதலில் பார்த்தார்.

அவரது அலறலைக்கேட்டு ஓடிவந்த கிராமத்தவர் இந்த முதலையை பிடித்துக்கட்டி தூக்கிச்சென்றனர்.


அவர்கள் அதை வனவிலங்கு அதிகாரிகளிடம் அளித்தனர்.

அது பந்துல முதலைப் பண்ணைக்கு கொண்டு செல்லப்பட்டது.

  • தொடங்கியவர்
‘துரோகம் கேவலமானது’
 

image_077a5070a5.jpgநடுச்சந்தியில் நாய்கள் உக்கிரமான சண்டையில் ஈடுபட்டிருந்தன. ஒரு பெண் நாயைச் சுற்றி, காதலியை அடையும் சண்டையிது. உடனே அங்கு புகுந்த ஒரு பெரிய நாய், பலத்துக் குரைத்ததுடன் மற்றைய நாய்களை மிரட்டி, விரட்டிவிட்டது. 

போரிட்டு, காயப்பட்டும் களைத்தும்விட்ட ஆண்நாய், பெண்நாயை அழைத்துக்கொண்டு, ஒரு திருமண வீட்டுக்குச் சென்றது. மிச்ச உணவை வீசி எறிந்த இடத்துக்குச் சென்று, பெண்நாய்க்குச் சாப்பிட வழிவிட்டு நின்றது. பெண்நாயும் ஆர்வத்துடன் உண்ண ஆரம்பித்தது.  

ஆண் நாயோ பெருமிதத்துடன், அதன் அருகே நெருங்கியதுதான் தாமதம், தன்னுடைய உணவை அது சாப்பிட வருவதாக எண்ணி, ஆண்நாய் மீது ஆக்ரோசமாகப் பாய்ந்து குரைத்தது. 

களைப்படைந்திருந்த ஆண்நாயோ, சற்றுப் பின்னால் சென்று, ‘அடி நன்றிகெட்ட நாயே! இப்படிச் செய்து விட்டாய். எனக்கு என்ன வேறு பெண் கிடைக்காதா என்ன’ எனச் சிந்தித்துக் கொண்டு அங்கிருந்து அகன்றது. தூரத்திலிருந்த பல நாய்கள் மீண்டும் பெண்நாயை நோக்கி வந்துகொண்டிருந்தன.  

மனிதர்களிலும் பலர் நன்றிமறந்து நடப்பதுண்டு. சிலர் நன்றிமறப்பதே பிழைப்பதற்கு ஒரு வழி என்று கருதுகின்றனர். துரோகம் கேவலமானது.  

  • தொடங்கியவர்

லண்டன் சிறுவன் பாடிய ’தகிட ததிமி’ ... நெகிழ்ந்த கமல்!

 
 

Landon boy

80-களில் கமல், ஜெயப்ரதா நடிப்பில் வெளியான திரைப்படம், 'சாகர சங்கமம்'. இந்தப் படம்தான் தமிழில் 'சலங்கை ஒலி' என்கிற பெயரில் டப் செய்யப்பட்டது. இந்தப் படத்தில் இடம்பெற்ற 'தகிட ததிமி' பாடல் ரொம்பவே ஃபேமஸ். இந்தப் பாடலை லண்டனைச் சேர்ந்த ஒரு சிறுவன் பாடி, ட்விட்டரில் வெளியிட்டுள்ளார். மேலும், அந்தச் சிறுவன்  கமலிடம், 'இந்த ட்விட் உங்களை (கமல்) அடைந்தால், இந்தப் பாடலுக்கான உங்கள் பதிவை ட்விட்டாகப் பதிவிடுங்கள். உங்கள் படங்களில் எனக்கு மிகவும் பிடித்த பாடல் இது. நான் இந்தப் பாடலை பாட முயற்சிசெய்துள்ளேன்' என்று தெரிவித்துள்ளார்.

இதைப் பார்த்த கமல், அந்தச் சிறுவனுக்கு ட்விட்டரில் வாழ்த்து தெரிவித்துள்ளார். அதில் அவர், ‘இந்தப் பாடலை தெலுங்கில் எத்தனையோ சிறுவர்கள் பாடியுள்ளனர். நீ பாடியது ஸ்பெஷல். இந்தப் பாடலைப் பாடியதற்கு நன்றி’ எனத் தெரிவித்துள்ளார். தற்போது லண்டன் சிறுவன் பாடிய அந்த வீடியோ, சமூக வலைதளங்களில் வைரலாகிவருகிறது.

http://www.vikatan.com

  • தொடங்கியவர்

இன்று உலகக் கடல் நாள்: ஜூன் 8

 

உலகக் கடல் நாள் (World Ocean Day) ஒவ்வொரு ஆண்டும் சூன் 8 திகதி அனுசரிக்கபடுகிறது. நம் பூமியின் பெரும்பகுதியை வியாபித்துள்ளகடல், நமது பூமிக்கு இதயம் போன்றது. நம் உடலின் ஒவ்வொரு பகுதிக்கும் இரத்தத்தை செலுத்துவதுபோல்,நாம் வாழும் பூமியின் நிலப்பகுதிக்கு,

 
 
இன்று உலகக் கடல் நாள்:  ஜூன் 8
 
உலகக் கடல் நாள் (World Ocean Day) ஒவ்வொரு ஆண்டும் சூன் 8 திகதி அனுசரிக்கபடுகிறது. நம் பூமியின் பெரும்பகுதியை வியாபித்துள்ளகடல், நமது பூமிக்கு இதயம் போன்றது. நம் உடலின் ஒவ்வொரு பகுதிக்கும் இரத்தத்தை செலுத்துவதுபோல்,நாம் வாழும் பூமியின் நிலப்பகுதிக்கு, கடல்தான் மழையாய்ப்பொழிந்து செழிக்கசெய்கிறது.

பூமியில் நாம் வாழு கடல்,பெரும்பங்குவகிக்கிறது கண்டங்களை ஒன்றிணைத்து வாணிபம் செய்யவும்,பலநாடுகளின் போக்குவரத்து கடல்மார்க்கமாகவே அமைந்துள்ளது. கடல், ஒவ்வொரு ஆண்டும் பலமில்லியன் கணக்கான மக்களின் உணவுத்தேவையை பூர்த்திசெய்யும், ஆக்சிஜன் உற்பத்திசெய்யவும், முக்கியமான மருந்துகளின் மூலப்பொருட்கள் வழங்குகிறது, மற்றும் காலநிலை மாற்றங்களை சீராக்குகிறது! சில சமூகதினரின் வாழ்வாதாரம் கடலைசார்ந்தே அமைந்துள்ளது எதிர்கால தலைமுறையினர் சுகாதார மற்றும் பாதுகாப்பு உறுதி செய்யும் பொருட்டு, கடல் நம் வாழ்வாதாரத்திற்கான பெரும்பகுதியை தன்னகத்தேவைதுள்ளது.

http://www.maalaimalar.com

  • தொடங்கியவர்

 

உலோக ஒலி எழுப்பும் பழங்கால தூண்கள் :

திருப்பூர் மாவட்டம் தாராபுரம் என்ற ஊரில் பொதுமக்கள் வசிக்கும் குடியிருப்பு பகுதியில் அமைந்திருக்கிறது இந்த கல் மண்டபம். பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்டு பாழடைந்து கிடக்கும் நம் பண்பாட்டு அதிசயங்களைப்போல தான் இந்த இடமும் எவ்வித பராமரிப்புமின்றி காணப்படுகிறது. அப்பகுதி குழந்தைகள் விளையாடும் இடமாக மட்டுமே இப்போது பயன்பட்டு வரும் இந்த கல் மண்டபத்தில் உள்ள கற்தூண்களை தட்டினால் வித்தியாசமாக உலோகங்களில் இருந்து வெளியாகும் சத்தம் நமக்கு கேட்கிறது. இதை இப்பகுதி மக்கள் இசை தூண்கள் என்று அழைக்கின்றனர். கற்களால் செத்துக்கப்பட்ட தூண்களில் இருந்து உலோகத்தின் ஒலி கேட்கிறதென்றால் ஆச்சரியம் தானே...!

  • தொடங்கியவர்

ஃபிரான்சிஸ் கிரிக் 10

 
muthukal_3172822h.jpg
 

நோபல் பரிசு பெற்ற இங்கிலாந்து அறிவியலாளர்

 

இங்கிலாந்து நாட்டைச் சேர்ந்த மூலக்கூறு உயிரியலாளரும், மருத்துவத்துக்கான நோபல் பரிசு பெற்றவருமான ஃபிரான்சிஸ் கிரிக் (Francis Crick) பிறந்த தினம் இன்று (ஜூன் 8). அவரைப் பற்றிய அரிய முத்துக்கள் பத்து:

* இங்கிலாந்தின் நார்த்தாம்டன் நகரில் பிறந்தார் (1916). இவரது முழுப்பெயர், ஃபிரான்சிஸ் ஹாரி கிராம்டன் கிரிக். இளம் பருவத்திலேயே நிறைய அறிவியல் நூல்களைப் படித்தார். 12 வயதுவரை பெற்றோருடன் தேவாலயம் சென்று வழிபட்டு வந்தார்.

* பின்னர், ‘மத நம்பிக்கை தொடர்புடைய கேள்விகளுக்கான அறிவியல் விடைகளைக் கண்டறிந்த பின்தான் வருவேன்’ எனக் கூறி தேவாலயம் செல்ல மறுத்துவிட்டார். இவரது மாமா, தன் வீட்டில் உள்ள கார் ஷெட்டில் வேதியியல் சோதனைகளை மேற்கொள்ள ஏற்பாடு செய்துகொடுத்தார். லண்டனில் ஒரு பள்ளியில் கணிதம், இயற்பியல் மற்றும் வேதியியல் பயின்றார்.

* 21-வது வயதில் லண்டன் பல்கலைக்கழக கல்லூரியில் இயற்பியலில் பட்டம் பெற்றார். கேம்பிரிட்ஜில் கேவண்டிஷ் சோதனைக்கூடம் மற்றும் மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில், மூலக்கூறு உயிரியியல் ஆய்வுக்கூடம் ஆகியவற்றில் பணியாற்றினார். முனைவர் பட்டத்துக்காக, உயர் வெப்பநிலையில் நீரின் பிசுபிசுப்புத் தன்மையை அளவிடும் ஆய்வுகளை மேற்கொண்டார். இரண்டாம் உலகப்போரால் படிப்பு தடைபட்டது.

* உலகப்போரில் ரேடார் மற்றும் மின்காந்தச் சுரங்கங்கள் மேம்படுத்தும் பணியில் பங்கேற்றார். போர் முடிவடைந்ததும், ராணுவத்திலிருந்து வெளியேறி படிப்பைத் தொடர்ந்தார். இவரது ஆர்வம் இயற்பியல் மற்றும் வேதியியல் களத்திலிருந்து உயிரியலுக்கு மாறியது.

* எக்ஸ் கதிர்களின் சிதறல் குறித்து ஆராய்ந்து கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் மூலக்கூறு உயிரியலில் முனைவர் பட்டம் பெற்றார். ஹாவர்ட் உள்ளிட்ட பல பல்கலைக்கழகங்களில் பேராசிரியராகப் பணியாற்றினார். பிரிட்டனின் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த கோட்பாட்டு மூலக்கூறு உயிரியலாளராகப் புகழ்பெற்றார்.

* டி.என்.ஏ.வின் இரட்டை ஹெலிகல் கட்டமைப்பை வெளிப்படுத்தும் ஆய்வுகளில் முக்கியப் பங்களிப்பை வழங்கினார். இதுகுறித்து ‘நேச்சர்’ என்ற அறிவியல் இதழில் கட்டுரை எழுதினார். கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழக மருத்துவ ஆராய்ச்சி கவுன்சிலுக்காக, டி.என்.ஏ. வடிவமைப்பு ஆராய்ச்சிகளை ஜேம்ஸ் டி வாட்சனுடன் இணைந்து தொடங்கினார்.

* நியுக்ளிக் அமிலங்களின் மூலக்கூறு கட்டமைப்பு மற்றும் உயிரினத்தில் தகவல் பரிமாற்றத்துக்கு இதன் முக்கியத்துவம் குறித்த கண்டுபிடிப்புக்காகவும் வாட்சன், மாரிஸ் வில்கின்சன் ஆகியோருடன் இணைந்து, 1962-ல் மருத்துவத்துக்கான நோபல் பரிசு இவருக்கு வழங்கப்பட்டது.

* கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தின் மூலக்கூறு உயிரியல் ஆய்வுக்கூடத்தின் இயக்குநராக 1962-ல் நியமிக்கப்பட்டார். ‘லைஃப் இட்செல்ஃப்: இட்ஸ் ஆரிஜின் அன்ட் நேச்சர்’, ‘தி அஸ்டானிஷிங் ஹிப்போதிசிஸ்’ உள்ளிட்ட பல நூல்களை எழுதினார்.

* ராயல் சொசைட்டி உள்ளிட்ட பல்வேறு அறிவியல் அமைப்புகளில் உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். தனித்துவமான சாதனைக்காக, அமெரிக்க பிலாசிபிகல் சொஸைட்டியின் பெஞ்சமின் பிராங்க்ளின் பதக்கம், லாஸ்கர் ஃபவுன்டேஷன் விருது, கெய்ர்ட்னர் ஃபவுன்டேஷனின் விருது உள்ளிட்ட பல்வேறு விருதுகளைப் பெற்றுள்ளார். மரணப் படுக்கையில்கூட தான் எழுதிய ஒரு அறிவியல் கட்டுரையில் சில திருத்தங்கள் செய்தாராம்.

* இறுதிவரை மருத்துவ மேம்பாட்டு ஆராய்ச்சிகளை மேற்கொண்டு வந்தவரும், உடலியங்கலியல் துறைக்கு மிகச் சிறந்த பங்களிப்பை வழங்கியவருமான ஃபிரான்சிஸ் கிரிக் 2004-ம் ஆண்டு 88-வது வயதில் மறைந்தார்.

http://tamil.thehindu.com

  • தொடங்கியவர்

வாக்குச்சாவடிக்கு நாங்கள் வரக்கூடாதா? பிரிட்டன் வாக்குச்சாவடிகளில் காத்திருந்த நாய்கள்

 

வியாழக்கிழமையன்று கம்ப்ரியாவில் தங்களின் உரிமையாளர்கள் வாக்குப்பதிவு செய்ய சென்ற போது ஃபியோன், லூனா மற்றும் ரோபி ஆகிய நாய்கள் வாக்குச்சாவடியின் வெளியே காத்திருந்த காட்சி

வியாழக்கிழமையன்று கம்ப்ரியாவில் தங்களின் உரிமையாளர்கள் வாக்குப்பதிவு செய்ய சென்ற போது ஃபியோன், லூனா மற்றும் ரோபி ஆகிய நாய்கள் வாக்குச்சாவடியின் வெளியே காத்திருந்த காட்சி

 

பிரிட்டன் எங்கும் பொது தேர்தலில் மக்கள் வாக்களித்து வரும் நிலையில், அவர்களின் நாய்களும் தங்களின் வாக்குரிமையை செலுத்துவது போல் வாக்குச்சாவடிகளில் காத்திருப்பதால், எதிர்பார்த்தபடி #DogsAtPollingstations (வாக்குச்சாவடிகளில் நாய்கள்) என்ற ஹேஷ்டேக் சமூகவலைத்தளமான டிவிட்டரில் வைரலானது.

மான்செஸ்டரில் உள்ள வாக்குச்சாவடியின் வெளியே பொறுமையாக காத்திருக்கும் ஃபோபேபடத்தின் காப்புரிமைTWITTER/@SAMICURE

மான்செஸ்டரில் உள்ள வாக்குச்சாவடியின் வெளியே பொறுமையாக காத்திருக்கும் ஃபோபே

 

இன்று வியாழக்கிழமை காலையில் வாக்குச்சாவடிகள் திறந்தவுடன் பலரும் வாக்குச்சாவடிகளில் காத்திருக்கும் தங்களின் நாய்களின் புகைப்படத்தை சமூகவலைத்தளத்தில் பகிர்ந்தனர். வாக்குப்பதிவு தொடங்கிய இரண்டு நேரத்தில் மேற்கூறிய ஹேஷ்டேக் பலஆயிரம் தடவைகள் பயன்படுத்தப்பட்டது. இது தொடர்பாக 8000-க்கும் மேற்பட்ட டிவீட்கள் பகிரப்பட்டுள்ளன.

ஹாம்ப்ஷைரில் இன்று காலையில் நிலவிய குளிரையும் பொருட்படுத்தமால் வாக்குச்சாவடியின் வெளியே 'ஆட்டோ' மாற்றம் 'அவா' காத்திருக்கும் காட்சிபடத்தின்

ஹாம்ப்ஷைரில் இன்று காலையில் நிலவிய குளிரையும் பொருட்படுத்தமால் வாக்குச்சாவடியின் வெளியே 'ஆட்டோ' மற்றும் 'அவா' காத்திருக்கும் காட்சி

 

உரிமையாளருக்காக நீண்ட நேரம் காத்திருந்ததில் பொறுமையிழந்த ஒரு நாய்படத்தின்

உரிமையாளருக்காக நீண்ட நேரம் காத்திருந்ததில் பொறுமையிழந்த ஒரு நாய்

 

நாட்டிங்காமில் வாக்குச்சாவடியின் வெளியே காத்திருந்த ஹுகோபடத்தின் காப்புரிமைIMAGE

நாட்டிங்காமில் வாக்குச்சாவடியின் வெளியே காத்திருந்த ஹுகோ

 

Deli the dachshund in west London made sure to look the other way to provide some privacyபடத்தின் காப்புரிமைDELI மிகவும் தீவிரமான முகபாவனையுடன் ஒரு வாக்குச்சாவடியின் முன்னர் தோன்றும் டிக்பீபடத்தின்

மிகவும் தீவிரமான முகபாவனையுடன் ஒரு வாக்குச்சாவடியின் முன்னர் தோன்றும் டிக்பீ

 

தோன்றும் டிக்பீ வாக்குச்சாவடிக்கு வெளியே காத்திருக்கும் போது யாராவது தனக்கு பிஸ்கட் தரமாட்டார்களா என்று எதிர்பார்ப்புடன் காத்திருக்கும் ஹேக்கர் டி என்ற நாய்படத்தின்

வாக்குச்சாவடிக்கு வெளியே காத்திருக்கும் போது யாராவது தனக்கு பிஸ்கட் தரமாட்டார்களா என்று எதிர்பார்ப்புடன் காத்திருக்கும் ஹேக்கர் டி என்ற நாய்

 

'எனக்கு வாக்குச்சாவடிக்கு செல்ல விருப்பமில்லை' என்ற மனோபாவத்துடன் வீட்டில் ஓய்வெடுக்கும் ஆட்டோ வான் பிஸ்பார்க்படத்தின்

எனக்கு வாக்குச்சாவடிக்கு செல்ல விருப்பமில்லை' என்ற மனோபாவத்துடன் வீட்டில் ஓய்வெடுக்கும் ஆட்டோ வான் பிஸ்பார்க்

எங்களுக்கும் வாக்குச்சாவடிக்கும் சம்பந்தமில்லை; அதெல்லாம் நாய்களின் வேலைதான் என்று வீட்டில் உறங்கும் ஒரு பூனைபடத்தின்

எங்களுக்கும் வாக்குச்சாவடிக்கும் சம்பந்தமில்லை; அதெல்லாம் நாய்களின் வேலைதான் என்று வீட்டில் உறங்கும் ஒரு பூனை

 

http://www.bbc.com/

Edited by நவீனன்

  • தொடங்கியவர்

பிரச்சார யுத்தத்தில் பிள்ளைகளும் “நடிகர்களா”?

சிரிய நாட்டு போர் அவலத்தின் சின்னமாக மாறிய இந்த சிறுவனின் முகம் நினைவிருக்கிறதா?


அலெப்போ நகர் மீதான குண்டுமழையில் இடிபாடுகளில் இருந்து மீட்கப்பட்ட இந்த பால்வடியும் முகம் கொண பாலகனின் பெயர் ஒம்ரான்.

சிரிய, ரஷ்ய போர்விமானங்களின் அழிவில் மக்கள் படும் துயரத்தின் சாட்சியாக அந்த படம் பரப்பப்பட்டது.

ஆனால் அச்சிறுவன் அரச எதிர்ப்பு குழுவிடமிருந்து மீட்கப்பட்டதாக சிரிய அரசாங்க ஊடகம் கூறுகிறது.

காயங்கள் ஆறிய ஒம்ரானை காட்டும் புதிய காணொளி தற்போது வெளியாகியுள்ளது.

ஒம்ரானின் தந்தையாக தன்னை கூறுபவர் சிரிய அதிபர் அசாதை ஆதரிப்பதாக அந்த காணொளியில் தெரிவிக்கிறார்.

ஆனால் ஒம்ரானின் முந்தைய படம் போலியானது என்று அதிபர் அசாத் முன்பு பலமுறை விமர்சித்திருந்தார்.

இச்சிறுவன் போலியான மீட்பு காணொளிகளில் பலமுறை கிளர்ச்சிக்காரர்களால் நடிக்கவைக்கப்பட்டதாகவும் அசாத் முன்பு கூறியிருந்தார்.

வெள்ளை ஹெல்மெட்குழு விளம்பர நோக்கில் பொய்காணொளிகளை எடுத்ததாக அசாத் குற்றம் சுமத்தியிருந்தார்.
மேற்குலக நிதியில் நடக்கும் இந்த குழு காணொளிகளின் வலிமையை விளக்கும் இந்த காணொளியை எடுத்தது.

இந்த காணொளி உண்மையல்ல என்றும் அது ஒரு மீம் என்றும் பின்னர் விளக்கமளித்த அந்த குழு அதற்காக மன்னிப்பும் கோரியிருந்தது.

சிரியாவில் 6 ஆண்டுகளாக நீடிக்கும் மோசமான போரில் பிரச்சார தளத்திலேயே மிக உக்கிரமான சண்டை நடக்கிறது.

  • தொடங்கியவர்

காரணம் ஆயிரம்: இந்த நீர் கரடியைத் தெரியுமா?

 
tardigrade_1_3172242f.jpg
 
 
 

நம்மால் 150 டிகிரி செல்சியஸ் வெப்பநிலையில் உயிர் வாழ முடியுமா? முடியவே முடியாது. கோடை காலத்தில் 40 டிகிரி செல்சியஸ் வெப்பத்தையே நம்மால் தாங்க முடிவதில்லை. ஆனால், ஒரு உயிரி 150 டிகிரி செல்சியஸ் வெப்பநிலையில் மிகச் சாதாரணமாக வாழ்கிறது. அது என்ன உயிரி?

நம்மால் ஜீரோ டிகிரி செல்சியஸுக்குக் கீழ் உள்ள குளிரைத் தாக்கு பிடிக்க முடியுமா? முடியவே முடியாது. உறைந்து போய்விடுவோம். ஆனால், ஒரு உயிரி மைனஸ் 200 டிகிரி செல்சியஸ் குட்டிக்கரணம் போட்டு விளையாடுகிறது. இது எந்த உயிரி?

அணு உலைக் கழிவு விபத்து ஏற்பட்டால் நம்மைக் காப்பாற்றிக் கொள்ள முடியுமா? பத்து யூனிட் கதிரியக்கம் உடலில் பட்டாலே மரணம்தான். ஆனால், ஒரு உயிரி 5,000 யூனிட் கதிரியக்கத்தைக்கூட அசால்ட்டாக கடந்துசெல்கிறது. இது என்ன உயிரி?

வான் வெளியில் காற்றே இல்லாத இடத்தில் நம்மைக் கொண்டு போய் விட்டால் என்ன ஆகும்? சிறகடித்துப் பறக்க முடியுமா? சிறகொடிந்து விழுந்து விடுவோம். ஆனால் ஒரு உயிரி வான் வெளியில் காற்றே இல்லாத இடத்தில் பத்து நாட்கள் பயணம் செய்துவிட்டுப் பத்திரமாகத் திரும்பி வந்து விட்டது. அட அப்படியா! இது என்ன உயிரி?

இது எல்லாமே ஒரே உயிரிதான், அதன் பெயர் நீர்க்கரடி. செல்லமாக ‘பாசி பன்றிக்குட்டி’ என்று சொல்வார்கள். உடனே அந்த உயிரியைப் பார்க்க வேண்டும் என்று ஆசையா? அப்படியெல்லாம் உடனே பார்க்க முடியாது. ஏனென்றால் அது ஒரு நுண்ணுயிரி. மைக்ரோஸ்கோப் உதவியுடன்தான் அந்த நீர்க்கரடியைப் பார்க்க முடியும். அரை மில்லி மீட்டர் அளவுக்குத்தான் வளரும். விதி விலக்காகச் சில நீர்க்கரடிகள் ஒன்றரை மில்லி மீட்டர் வரைகூட வளரும். அப்போதும் அதை வெறும் கண்களால் பார்க்க முடியாது.

bear_2_3172313a.JPG

1773-ம் ஆண்டு ஜெர்மன் நாட்டு விலங்கியல் அறிஞர் ஜோகன் ஆகஸ்ட் என்பவர் இந்த உயிரியைக் கண்டுபிடித்தார். 3 ஆண்டு கழித்து இத்தாலிய நாட்டைச் சேர்ந்த விலங்கியல் அறிஞர் ‘லாசரே ஸ்பால்லன்ஸானி’ இது நடந்து வருகிற அழகைப் பார்த்துவிட்டு இதற்கு ‘டார்டி கிரேட்’ (tardi grade) என்று பெயர் சூட்டினார். டார்டி கிரேட் என்றால் மெல்ல நடப்பவர் என்று அர்த்தம்

வெயில், மழை, பனி, புயல் மட்டுமல்ல தகிக்கும் எரிமலைகள், பனிபடர்ந்த மலைகள், ஆழ்கடல்கள், காற்றே இல்லா வான்வெளி என எல்லா இடங்களிலும் வாழும் தகவமைப்பை பெற்றது இந்த நீர்க்கரடி. உலகம் முழுவதும் இந்த நீர்க்கரடிகள் காணப்படுகின்றன. நம் நாட்டின் இமயமலையில் 6,000 மீட்டர் உயரத்தில் பனி உறைந்த பிரதேசத்தில் இவற்றால் நிம்மதியாக வாழ முடிகிறது.

இதே போல் ஆழ்கடலில் 4,000 மீட்டர் ஆழத்தில் இவை வாழ்கின்றன. ஒரு முறை ஓர் ஆராய்ச்சிக்காகச் சில நீர்க்கரடிகள் வான் வெளியில் வைத்துப் பார்த்தார்கள். பத்து நாட்களுக்குப் பிறகு மீண்டும் அந்த நீர்க்கரடிகளைப் பூமிக்கு எடுத்து வந்தபோது ஒரு நீர்க்கரடி கூட சாகவில்லை. இதனால்தான் இதற்கு ‘வான் கரடி’ என்ற பெயரும் வந்தது. இவற்றுக்கு 8 கால்கள், ஒவ்வொரு கால்களிலும் நான்கு முதல் எட்டு நகங்கள் வரை இருக்கும். இந்தக் கால்களைக் கொண்டு இது நடந்து வரும் காட்சி கரடி நடப்பது போலவே இருக்கும். அதனால்தான் பெயருடன் கரடியையும் ஒட்ட வைத்துவிட்டார்கள்.

இதன் சுவாசத்துக்கெனத் தனி உறுப்புகள் எதுவும் இல்லை. தன் உடல் அமைப்பு முறையையே இது சுவாசத்துக்குப் பயன்படுத்திக் கொள்கிறது. இதன் உடலின் சில பகுதிகளில் உள்ள ரத்தக் குழிகளைப் பயன்படுத்திச் சுவாசம் எடுத்துக்கொள்கிறது. தன் உடம்பில் உள்ள நீரைப் பயன்படுத்தித் தன் உடலை விரிவடையவும் சுருங்கவும் செய்கிறது. பாசிகள் மீதும், சிறு சிறு நுண்ணுயிரிகள் மீதும் தன் உடம்பில் இருந்து சுரக்கும் திரவத்தைப் பரப்பி அதனை உணவாக்கிக் கொள்கிறது (இதனால் பாசி பன்றிக்குட்டி என்றும் அழைக்கிறார்கள்). உணவும் தண்ணீரும் இல்லாமல் 30 ஆண்டுகள் வரை இவற்றால் உயிர்வாழ முடியும். நீர்ச்சத்து ஒரு சதவீதத்திற்குக் கீழ் குறையும்போதுதான் அது மரணத்தைத் தழுவுகிறது.

எல்லாம் சரி, அது எப்படி எரிமலை, பனி பிரதேசங்கள் என எல்லா இடங்களிலும் வாழ முடிகிறது? உண்மையில் அறிவியல் அதிசயம்தான் இது.

அதிக வெப்பமான காலங்களில் இதன் உடலில் நீர்ச்சத்து 3 சதவீதத்துக்குக் கீழ் குறைந்துவிடும். அப்போதுகூட சுற்றுப் புறத்தில் இருந்து ஈரப்பதத்தை உறிஞ்சுக்கொள்ளும் அளவுக்கு இதன் செல்கள் சக்தி பெற்றிருக்கின்றன (நன்றாக வளர்ந்த நீர்க்கரடி யில் 40,000 செல்கள் வரை இருக்கும்). இந்த நீர்ச்சத்தைக் கொண்டு நீர்க்கரடிகள் மரணத்திலிருந்து தப்பி பிழைக்கின்றன.

bear_3172312a.JPG

கடும் வறட்சி, கடும் குளிர் என இரண்டு நிலைகளிலும் இது உயிர் வாழ மிக முக்கியமாக இரண்டு காரணங்கள் உள்ளன. நீர்க்கரடிகள் உட்கொள்ளும் பூஞ்சைகளில் இருந்து இரட்டைச் சர்க்கரை கிடைக்கிறது. இந்த இரட்டைச் சர்க்கரை நீர்க்கரடிகளின் சவ்வுகளைப் பத்திரமாகப் பாதுகாக்கிறது.

இந்த டிரெஹெலோஸ் (trehalose) இரட்டைச் சர்க்கரை உயிரினங்களில் மிக அரிதான விஷயம். நீர்க்கரடிகளில் மட்டுமே இதைப் பார்க்க முடியும். கதிரியக்கத்திலிருந்து நீர்க்கரடிகளைக் காப்பாற்றுவது அதன் மரபணு. நீர்க்கரடியின் மரபணுவில் மட்டும் டி-சப் (D SUP) என்ற விசேஷப் புரோட்டீன் உள்ளது. இந்தப் புரோட்டீன்தான் கதிரியக்கத்திலிருந்து கரடியைக் காப்பாற்றும் காவலன்.

என்ன ஒரு வித்தியாசமான உயிரி!

http://tamil.thehindu.com

  • தொடங்கியவர்

 

சென்னையில் - இந்தியாவின் முதல் பிரத்யேக "பெண்களுக்கான பகிர்வு பணியிடம்"

Edited by நவீனன்

  • தொடங்கியவர்

இன்பாக்ஸ்

 

 * பாரீஸ் ஒப்பந்தத்துக்கு `டூ’ சொல்லிவிட்டுப் பிரிந்திருக்கிறார் டொனால்ட் ட்ரம்ப். தொழில்புரட்சியின் காரணமாகத்தான் பூமி வேகமாக வெப்பமடைந்து வருகிறது. இதைக் கட்டுக்குள் வைப்பதற்காக உலக நாடுகள் இணைந்து உருவாக்கியதுதான் பாரீஸ் ஒப்பந்தம். இதில் கையெழுத்திட்ட நாடுகள் தங்களது கார்பன் வெளியீட்டைக் குறைத்தே ஆக வேண்டும். அதற்காக மாற்று எரிபொருளை நாட வேண்டியது அவசியம். இது தனது நாட்டின் பொருளாதாரத்தைப் பாதிக்கும் எனச் சொல்லி இதிலிருந்து வெளியேறியிருக்கிறார் அமெரிக்க அதிபர் டிரம்ப். “என்னுடைய தேர்தல் வாக்குறுதிகளில் இதுவும் ஒன்று” என டிரம்ப் சொன்னாலும்,  இந்த முடிவுக்கு உள்நாட்டிலேயே எதிர்ப்பு அதிகரித்திருக்கிறது. ட்ரம்ப்புனாலே டிஷ்யும்தான்!

p38a.jpg

* இந்திய கிரிக்கெட் அணியின் பயிற்சியாளர் கும்ப்ளேவுக்கும் கேப்டன் விராட் கோலிக்கும் இடையே இருந்த முட்டல் மோதல்கள் இறுதிகட்டத்தை நெருங்கியிருக்கின்றன. கும்ப்ளேவின் பதவிக்காலம் சாம்பியன்ஸ் டிராபி போட்டிகளோடு முடிவுக்கு வருகிறது. இதையடுத்து புதிய பயிற்சியாளரைத் தேர்ந்தெடுப்பதில் உத்வேகமாக இருக்கிறது பிசிசிஐ. வீரேந்திர சேவாக் பயிற்சியாளர் பதவிக்கு விண்ணப்பித்திருப்பதாகச் செய்திகள் கசிய, ராகுல் டிராவிட் பயிற்சியாளர் இடத்தைப் பிடிப்பார் என்கிறது பிசிசிஐ ஏரியா. கோஹ்லி கோபம்!

p38b.jpg

* உலகின் புகழ்பெற்ற நூறு விளையாட்டு வீரர்கள் பட்டியலைச் சமீபத்தில் வெளியிட்டுள்ளது ஈஎஸ்பிஎன். இதில் நம்பர் ஒன் இடத்தைப் பிடித்திருப்பவர் கால்பந்தாட்ட வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோ.   இந்தப்பட்டியலில் இடம்பிடித்திருக்கும் நான்கு இந்தியர்களுமே கிரிக்கெட் வீரர்கள்தான். டாப் 20-க்குள் கோஹ்லியும் தோனியும் இடம்பிடித்திருக்கிறார்கள்! வாழ்த்துகள் மக்கா!

p38c.jpg

* தமிழ் சினிமாப் பிரபலங்கள் எல்லாம் ட்விட்டர் ஃபேஸ்புக் என பிஸியாக இருக்க, நிவேததா பெத்துராஜ் மட்டும் புதுரூட் பிடித்து இன்ஸ்டாகிராமில் செம ஆக்டிவாகிவிட்டார். தினமும் நாலைந்து பிரத்யேகப் புகைப்படங்கள் போடுவது, வீடியோவில் ஜாலி அரட்டை அடிப்பது, தன் ரசிகர்களுக்கு லைக் போடுவது என நிவி செம்ம பிஸி. இன்ஸ்டா கேர்ள்!

p38d.jpg

* இங்கிலாந்து பிரதமர் ‘தெரேசா மே’யின் ஆட்சிக்காலம் முடிந்து அடுத்த தேர்தலுக்குத் தயாராகி விட்டது பிரிட்டன். தேர்தலுக்கான பிரச்சாரமும் சூடு பறக்கிறது. மீண்டும் தேர்தலில் போட்டியிடும் தெரேசா மே இம்முறை இந்திய வாக்களர்களின் ஓட்டுகளைக் குறிவைத்துப் பிரசாரம் செய்து வருகிறார். பிரிட்டனில் வசிக்கும் இந்தியர்கள் எண்ணிக்கை 16 லட்சம். இதற்கென `தெரேசா கி சாத்’ என்கிற பிரச்சாரப்பாடல் ஒன்றை இந்தியில் வெளியிட்டுள் ளனர். இதில் இந்தியர்களுடனான தெரேசாவின் அன்பையும் பிரியத்தையும் காட்டி வாக்குக் கேட்கிறார்கள்! இந்தியாவுக்குப் பிடிச்ச பெயர்!

p38e.jpg

* இந்திய ரயில்வே கடந்த மூன்றாண்டுகளில் மூவாயிரம் கோடி ரூபாய்க்கு வருவாய் ஈட்டி இருக்கிறது. இது வெறும் கேன்சலேஷன் மூலமாக வந்த தொகைமட்டும்தான். ஆத்தாடி!

 * அக்‌ஷய்குமாருக்கும் சாய்னா நெஹ்வாலுக்கும் மாவோயிஸ்ட்டுகள் கொலைமிரட்டல் விடுக்க அதிர்ந்துபோய் இருக்கிறது செலிபிரிட்டி உலகம். மார்ச் மாதம் சுக்மாவில் நடந்த மாவோயிஸ்ட் தாக்குதலில் இறந்த 12 சி.ஆர்.பி.எஃப் படை வீரர்களின் குடும்பத்திற்கும் அக்‌ஷய் குமார் 5 லட்சமும் சாய்னா 50ஆயிரமும் வழங்கினர். இது மாவோயிஸ்டுகளைக் கோபப்படுத்த, இப்போது கொலை மிரட்டல் வரை வந்திருக்கிறது. ஓ காட்!

p38f.jpg

யோகா குரு பாபா ராம்தேவின் நிறுவனமான பதஞ்சலியின் வருவாய் கடந்த ஒரேஆண்டில் பல மடங்கு அதிகரித்துப் பத்தாயிரம் கோடியை எட்டியிருக்கிறது. உணவு மற்றும் பானங்கள் சந்தையில் இதுவரை கோலோச்சிய நிறுவனங்களை முந்தி, இரண்டாம் இடத்தைப் பிடித்திருக்கிறது பதஞ்சலி. முதலிடம் எப்போதும் போலவே இந்துஸ்தான் லீவருக்கே. இந்தப் பத்தாயிரம் கோடி வருவாயில் அதிக பங்களிப்பைச் செலுத்திய பதஞ்சலியின் படைப்பு எது தெரியுமா? நெய். பதஞ்சலியின் நெய் மட்டுமே சென்ற ஆண்டு 1,467 கோடிக்கு விற்பனையாகி இருக்கிறதாம்! நெய்ஸ் ப்ரோ!

  • தொடங்கியவர்

2013: இலங்கைக் கடற்­ப­ரப்பில் புயல் கார­ண­மாக சுமார் 40 மீன­வர்கள் பலி

வரலாற்றில் இன்று…

ஜுன் – 08

 

1405 : இங்­கி­லாந்தின் யோர்க் பிராந்­திய ஆயர் ரிச்சார்ட் ஸ்க்ரோப், நோர்ஃபோக் இரண்டாம் நிலை மன்னர் தொமஸ் மோபிறே ஆகியோர் இங்­கி­லாந்தின் மன்னர் நான்காம் ஹென்­றியின் ஆணையின் பேரில் தூக்­கி­லி­டப்­பட்­டனர்.

 

fishermen-varalaru

1783 : ஐஸ்­லாந்தில் லாக்கி எரி­மலை வெடிக்க ஆரம்­பித்து 8 மாதங்­க­ளாக குழம்பை கக்­கி­யது. இதன் விளை­வாக  9,000 பேர் பலி­யா­னதுடன் 7 வரு­ட­கால பஞ்சம் ஆரம்­பித்­தது.


1887 : ஹேர்மன் ஹொலரித் துளை­யிடும் அட்டை கொண்ட கணிப்­பா­னுக்­கான காப்­பு­ரிமம் பெற்றார்.


1929 : ஐக்­கிய இராச்­சி­யத்தில் முதற் தட­வை­யாக தொழிற் கட்சி ஆட்சி அமைத்­தது.


1941 : இரண்டாம் உலகப் போரில் சிரியா, மற்றும் லெபனான் மீது நேச நாடுகள்  தாக்­கு­தலை ஆரம்­பித்­தன.


1942 : இரண்டாம் உலகப் போரில் அவுஸ்­தி­ரே­லி­யாவின் சிட்னி, நியூ­காசில் நக­ரங்கள் மீது ஜப்­பா­னிய நீர்­மூழ்கிக் கப்­பல்கள்  குண்­டுத்­தாக்­கு­தலை நடத்­தின.


1972 : வியட்நாம் யுத்தத்­தின்­போது நேபாம் குண்­டுத்­தாக்­கு­த­லினால் பாதிக்­கப்­பட்ட நிலையில் 9 வயது சிறுமி பான் தி கிம் புக் வீதியில் ஓடி­வரும் பிர­சித்தி பெற்ற புகைப்­ப­டத்தை ஏ.பி.  செய்­திச்­சேவை படப்­பி­டிப்­பாளர் நிக் உட் பிடித்தார்.

 

1953, அமெ­ரிக்கத் தலை­நகர் வாஷிங்டன் டி.சியி­லுள்ள உண­வ­கங்கள் கறுப்­பி­னத்­த­வர்­க­ளுக்கு உணவு பரி­மா­று­வ­தற்கு மறுக்க முடி­யா­தென அமெ­ரிக்க உயர் நீதி­மன்றம் தீர்ப்­ப­ளித்­தது.

2014--Karachi-airport-AFPP-lane

1984 : அவுஸ்­தி­ரே­லி­யாவின் நியூ சவுத் வேல்ஸ் மாநி­லத்தில் ஓரி­னச்­சேர்க்கை சட்­ட­பூர்­வ­மாக அனு­ம­திக்­கப்­பட்­டது.


1992 : முத­லா­வது உலகச் சமுத்­திர நாள்  கொண்­டா­டப்­பட்­டது.


2007 : அட்­லாண்டிஸ் விண்­வெளி ஓடம் 7 பேருடன் சர்­வ­தேச விண்­வெளி நிலை­யத்­துக்கு ஏவப்­பட்­டது.


2007 : அஸ்­தி­ரே­லி­யாவில் நியூ சௌத் வேல்ஸ் மாநி­லத்தில் இடம்­பெற்ற பெரும் காற்று, மற்றும் வெள்­ளத்­தினால் 9 பேர் கொல்­லப்­பட்­டனர்.


2009 : வட­கொ­ரி­யா­வுக்குள் சட்­ட­வி­ரோ­த­மாக நுழைந்த குற்­றச்­சாட்டில் அமெ­ரிக்க ஊட­க­வி­ய­லா­ளர்கள் இரு­வ­ருக்கு 12 வருட சிறைத்­தண்­டனை விதிக்­கப்­பட்­டது.


2013 : இலங்கைக் கடற்­ப­ரப்பில் புயல் கார­ண­மாக சுமார் 40 மீனவர்கள் உயிரிழந்தனர்.


2014: பாகிஸ்தானின் கராச்சி நகரிலுள்ள ஜின்னா சர்வதேச விமான நிலையத்தில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 10 தீவிரவாதிகள் உட்பட 36 பேர் உயிரிழந்தனர்.

http://metronews.lk

  • தொடங்கியவர்
பரமானந்தம் ... பரமானந்தம்…
 

image_ec36c6e536.jpgசொர்க்கம் எப்படி இருக்கும் என்று பலரும் கற்பனைக் கதை புனைவதுண்டு. அது ஜோதி வடிவில் இருக்கும்; மின்சாரம் இல்லாமலேயே கண்ணாடிக் குமிழ்கள் வர்ண ஜாலத்துடன் ஒளிவீசும். இது தங்கத்தினால் ஆன பெரிய மாளிகை போன்ற தோற்றத்தில் ஜொலிக்கும்.  

எங்கும் மெல்லிய இசை வௌ்ளம்; தென்றலுடன் கீதம்; அழகிகளின் ஆனந்த நடனம்; மாளிகையினுள் பட்சிகள் இடையிடையே பறந்து, சஞ்சாரித்து மேனியைத் தொடும். பட்டுகளால் ஆன திரைச்சீலை. நவரத்தின மணிகளால் கோர்க்கப்பட்ட மாலைகள் தொங்கிக்கொண்டிருப்பதும் அவை அசையும்போது, எழும் மெல்லிய இனிய ஓசைகள் ‘கிணுகிணு’ என ஒலி எழுப்புவதும் ஓ... பரமானந்தம் ... பரமானந்தம். 

இங்கே பசி இருக்காது. இதயம் புல்லரித்துப் பூத்திருக்கும். இந்த உடலுக்கு எடை இருக்காது.  

கடவுளுடன் வாழும் ஞானிகளுக்கு இன்ப பரவசம் இதைவிட மேலாக இருக்கும். 

  • தொடங்கியவர்

அரங்கத்தை அதிரவைத்து, அழவைத்த மாற்றுத்திறனாளிப் பெண் (Video)

 


அரங்கத்தை அதிரவைத்து, அழவைத்த மாற்றுத்திறனாளிப் பெண் (Video)
 

அமெரிக்காவில் America’s Got Talent 2017 என்ற நிகழ்ச்சி நடைபெற்று வருகிறது. இதில் திறமை உள்ளவர்கள் எவரும் தங்கள் திறமையை நிரூபிக்கலாம்.

அந்நிகழ்ச்சியில், காது கேட்கும் திறனை இழந்தாலும், மென்டி ஹார்வே எனும் இளம் பெண் ஒருவர் தன்னுடைய இசை அதிர்வுகளை பாதங்களின் வழியே உணர்ந்து பாடிய அதிசயம் நடந்துள்ளது.

இவர் பாடிய பாடலைக் கேட்டு அரங்கில் இருந்த ஒட்டு மொத்த மக்களின் கண்களிலும் கண்ணீர் வந்தது. அந்தளவிற்கு இருந்தது அப்பெண்ணின் திறமை.

அங்கிருந்த நடுவர்களில் சிலரும் தங்கள் கண்களை ஒன்றும் தெரியாதது போல், துடைத்துக் கொண்டனர்.

பாடல் முடிந்தவுடன் அரங்கில் இருந்த அனைவரும் எழுந்து கைதட்டி ஆரவாரம் செய்த போது, அப்பெண் உணர்ச்சியை அடக்கமுடியாமல் அழுதார். இதைக்கண்ட அவரின் தந்தை சற்று நேரம் பிரமித்துப்போய் நின்றார்.

யூடியூப்பில் பதிவேற்றப்பட்டுள்ள மென்டி ஹார்வேயின் பாடலை பலரும் பார்வையிட்டு வருகின்றனர்.

இந்த வீடியோவைப் பார்க்கும் அனைவரும் தமது கண்களிலும் கண்ணீர் வருவதாகக் கருத்துத் தெரிவித்துள்ளனர்.

 

http://newsfirst.lk/

  • தொடங்கியவர்

ஹென்றி ஹாலெட் டேல்

 
 
vanigam_3173221f.jpg
 
 
 

நோபல் பெற்ற இங்கிலாந்து மருத்துவர்

பிரிட்டனைச் சேர்ந்த உடலியல், மருந்தியல் நிபுணரும், மருத்துவத்துக்கான நோபல் பரிசு பெற்றவருமான சர் ஹென்றி ஹாலெட் டேல் (Sir Henry Hallett Dale) பிறந்த தினம் இன்று (ஜூன் 9). அவரைப் பற்றி அரிய முத்துக்கள் பத்து:

* லண்டனின் இஸ்லிங்டன் பகுதியில் (1875) பிறந்தார். தந்தை மண்பாண்ட வியாபாரி. பள்ளிக்கல்விக்குப் பிறகு கேம்பிரிட்ஜ் ட்ரினிட்டி கல்லூரியில் இயற்கை அறிவியல் பயின்றார். உடலியல், விலங்கியல் பாடங்களில் நன்கு நிபுணத்துவம் பெற்றார்.

* உதவித்தொகை பெற்று, லண்டன் செயின்ட் பார்த்தலோமியோ மருத்துவமனையில் மருந்தியல் தொடர்பாகப் பயின்றார். உடலியல் ஆராய்ச்சி ஆய்வகத்தில் ஆராய்ச்சியாளராகத் தன் தொழில் வாழ்வைத் தொடங்கினார். 6 ஆண்டுகள் அங்கு பணியாற்றினார். அப்போது, தனது முதல் அறிவியல் ஆய்வுக் கட்டுரையை வெளியிட்டார்.

* இதற்கிடையே, உதவித்தொகை பெற்று மருத்துவம் பயின்றார். 1909-ல் மருத்துவத்தில் முதுகலைப் பட்டம் பெற்றார். ஜார்ஜ் ஹென்றி லூயிஸ் உதவித்தொகை பெற்று, லண்டன் கல்லூரியில் ஆராய்ச்சி மாணவராகச் சேர்ந்தார். அங்கு தன் வாழ்நாள் நண்பராக நீடித்த ஓட்டோ லோவியை சந்தித்தார். இவர் ஜெர்மனியை சேர்ந்த மருந்தியல் நிபுணர் ஆவார்.

* லண்டன் தேசிய மருத்துவ ஆராய்ச்சி அமைப்பின் உயிரி வேதியியல், மருந்தியல் துறை இயக்குநராக நியமிக்கப்பட்டார். நண்பர் ஓட்டோ லோவியுடன் இணைந்து பல்வேறு ஆராய்ச்சிகளையும் மேற் கொண்டுவந்தார். உடலில் உள்ள ரசாயனங்கள் உடல் இயக்கத்தை எவ்வாறு கட்டுப்படுத்துகின்றன என்பது குறித்து ஆராய்ந்தார்.

* விலங்கு திசுக்களில் ஹிஸ்டமின் கலவையை அடையாளம் கண் டார். ரத்தக்குழாய் விரிவடைதல், மென்மையான நரம்புகள் சுருங்கு தல் உள்ளிட்ட உடலியலின் ரசாயன விளைவுகள், நரம்பு மண்டல அமைப்பில் முக்கியத்துவம் பெற்றுள்ளதை நிரூபித்தார். நரம்புத் தூண்டலின் வேதியியல் பரிமாற்றத்தில் அசிட்டைல்கோலினின் பங்களிப்பை இவரது ஆய்வுகள் உறுதிசெய்தன.

* லண்டன் ராயல் சொசைட்டியின் செயலாளராகவும், பின்னர் தலைவராகவும் பணியாற்றினார். 1932-ல் சர் பட்டம், ஆர்டர் ஆஃப் மெரிட், ஆர்டர் ஆஃப் பிரிட்டிஷ் எம்பயர் உள்ளிட்ட பல்வேறு கவுரவங்களைப் பெற்றார். 2-ம் உலகப்போரின்போது இங்கிலாந்து பாதுகாப்பு அமைச்சகத்தின் அறிவியல் ஆலோசனைக் குழுவில் பணியாற்றினார்.

* ராயல் இன்ஸ்டிடியூட்டின் டேவி ஃபாரடே ஆராய்ச்சிக்கூடத்தில் இயக்குநராகப் பதவி ஏற்றார். அங்கு வேதியியல் பேராசிரியராகவும் பணியாற்றினார். நரம்புத் தூண்டுதலின் வேதியியல் பரிமாற்றம் குறித்த கண்டுபிடிப்புகளுக்காக, தனது நண்பர் ஓட்டோ லோவியுடன் இணைந்து 1936-ல் மருத்துவத்துக்கான நோபல் பரிசைப் பெற்றார்.

* உலகம் முழுவதும் மருத்துவ ஆராய்ச்சிகளை ஊக்கப்படுத்திவரும் ‘வெல்கம் ட்ரஸ்ட்’ அமைப்பின் தலைவராக 20 ஆண்டுகள் பணியாற்றினார். 1946-ம் ஆண்டுமுதல் தனது அறிவு, ஆற்றல் அனைத்தையும் இந்த அமைப்பின் மேம்பாட்டுக்காகவே பயன்படுத்தினார்.

* மருத்துவ ஆராய்ச்சித் திட்டங்களில் தகுதியானவர்களுக்கு உதவித்தொகை வழங்கப்படுவதை உறுதி செய்தார். ஏராளமான ஆய்வுக் கட்டுரைகளை வெளியிட்டார். ‘அட்வென்சர்ஸ் இன் ஃபிசியாலஜி’, ‘ஆட்டம் கிளினிங்’ உள்ளிட்ட நூல்களையும் எழுதியுள்ளார்.

* உலகம் முழுவதும் பல புகழ்பெற்ற அறிவியல் அமைப்புகளில் கவுரவ உறுப்பினராக நியமிக்கப்பட்டார். 20-க்கும் மேற்பட்ட பல்கலைக்கழகங்கள் இவருக்கு கவுரவ டாக்டர் பட்டம் வழங்கின. உலகெங்கும் மருத்துவ ஆராய்ச்சிகள் தழைக்க அரும்பாடுபட்ட சர் ஹென்றி ஹாலெட் டேல் 93-வது வயதில் (1968) மறைந்தார்.

http://tamil.thehindu.com

  • தொடங்கியவர்

“திருமண முறிவின் கசப்பை, இனிமையாக்கியது யோகா!” - யோகா ஆசிரியையின் நெகிழ்ச்சிக் கதை

 
 

யோகா

பெண்கள் வாழ்வின் முழுமையே திருமண பந்தத்தில்தான் உள்ளது என்ற சூழல் சமூகத்தில் நிலவுகிறது. பெண்கள் சிறந்த குடும்பத் தலைவியாக செயல்படுவதில்தான் தங்கள் பிறப்பின் லட்சியமே அடங்கியுள்ளது என மீண்டும் மீண்டும் வலியுறுத்தப்படுகிறது. பல பெண்கள் தனக்கென வேலை, பொழுதுப்போக்கு என எதுவும் இல்லாமல், அனைத்தையும் துறந்து குடும்பமே கதி என இருக்கின்றனர். கணவன் மனைவிக்குள் கருத்து வேறுபாட்டால் பிரச்னைகள் எழும்போது அந்தப் பெண்ணின் வாழ்வு கேள்விக்குறியாகி விடுகிறது. குடும்பத்தின் அன்றாடத் தேவைக்கு என்ன செய்வது? குழந்தைகளை எப்படி வளர்த்து ஆளாக்குவது? எனப் பெரும் கவலைக்குள் மூழ்கிவிடுகின்றனர். அதிலிருந்து ஃபீனிக்ஸ் பறவை போல் மீண்டு வரும் பெண்களில் ஒருவராக, சாதனைப் பெண்மணியாகத் திகழ்கிறார் சிவகாசியைச் சேர்ந்த யோகா ஆசிரியை ஞானவாணி. குடும்ப வலி தந்த வலிமையில்தான் சாதித்த கதையை நம்முடன் பகிர்ந்து கொண்டார்.

‘‘என்னோட சொந்த ஊர் சாத்தூர். எல்லா பொண்ணுங்களைப் போல எனக்கும் பட்டப்படிப்பு முடிச்சதும் கல்யாணம். கல்யாணங்கிற பந்தத்தை நாங்க இரண்டு பேரும் முழுசா புரிஞ்சுக்கிறதுக்குள்ள குழந்தைப் பொறந்துருச்சு. கணவர்தான் நமக்கு எல்லாம்னு முடிவு பண்ணி எந்த வேலைக்கும் போகாம, வீட்டு வேலை, குழந்தையை வளர்க்கிறதுனு இருந்தேன். சின்னச்சின்ன கருத்து வேறுபாடுகள் தொடங்கி டைவர்ஸ் நோட்டீஸ் வர்ற அளவுக்குப் போயிடுச்சு. வேலைக்கே போகாத எனக்கு இரண்டு குழந்தைகளையும் வளர்க்கிற பொறுப்பு. எனக்கு வெளியுலகமே தெரியாது. இனி இப்படிதான் நம் வாழ்க்கை என்பதை ஏத்துக்கவே முடியல. அழுது அழுது மனஅழுத்தம் அதிகமாயிருச்சு. இனி குழந்தைகளுக்கு நான் மட்டும்தானு மனசுக்கு தெரிஞ்சாக்கூட என்னால அந்த வலியிலிருந்து வெளியேற முடியல'’ எனச் சொல்லும் போதே குரல் தழுதழுத்தது.

யோகா

‘‘மன அழுத்ததிலிருந்து விடுபடுறதுக்காக யோகா கத்துக்கிட்டேன். அப்ப என்னோட பெரிய பையன் பத்தாவது படிச்சிட்டு இருந்தான். சின்ன பையன் எல்.கே.ஜி. முதல்ல சிரமமா இருந்துச்சு. தொடர்ந்த முயற்சி, பயிற்சியோட பலனா யோகாலேயே பிஜி டிகிரி படிக்கிற வரைக்கும் உயர்ந்தேன். என்னோட பொறந்த வீட்ல கொஞ்சம் எனக்கு சப்போர்ட் பண்ணினாங்க. சமூகத்துல அங்கீகாரம் கணவர்தானு நினைச்ச என் நினைப்பு பொய்யாயிருச்சு. அவரோட அடையாளம் இல்லாம, நமக்குனு ஒரு அடையாளம் வேணும்ன்ற வெறி மட்டும் மனசுல நெருப்பா இருந்தது. ஸ்கூல்ல போயி பிள்ளைகளுக்கு யோகா கிளாஸ் எடுத்தேன். வீட்லேயும் பெண்கள், குழந்தைகளுக்குனு பிஸியா கிளாஸ் எடுத்துட்டு இருந்தேன். அந்தச் சமயத்துல மாநில அளவுல யோகா போட்டி நடந்தது. அதுல கலந்துக்கிட்டு முதலிடத்துல வந்தேன்’’ எனப் பெருமையாக சொன்னவர், அதன் பின் நடந்த சாதனைகளை விவரிக்கத் துவங்கினார்.

“முதல் வெற்றி தந்த ஊக்கத்தால 2013-ல் 20 நிமிஷத்துல 310 ஆசனங்கள் செஞ்சு உலக சாதனை பண்ணினேன். அடுத்து, 2015-ல ஜிம் பால்ல 1875 ஆசனங்கள் பண்ணி இந்தியா புக் ஆப் ரெக்கார்ட்ஸ், யுனிவர்சல் அச்சீவர்ஸ் புக் ஆப் ரெக்கார்ட்ஸ்ல இடம் பிடிச்சேன். இப்பக்கூட கின்னஸ் சாதனைக்கு முயற்சி பண்ணிட்டு இருக்கேன். அதுவும் சீக்கிரம் கிடைச்சிரும்னு’’ என நம்பிக்கையோடு பேசுகிறார் ஞானவாணி.. தான் கற்ற வித்தையை மற்றவர்களுக்குக் கற்பிக்கும் விதத்தைப் பகிர்ந்தார்.

 

“வர்மக்கலையும் எனக்கு அத்துப்பிடி. யோகா, வர்மக்கலையால பெண்களோட வாழ்க்கையில ஏற்படுற மனப்பிரச்னை, உடல் பிரச்னையைத் தீர்க்க முடியும். அதுக்கான பயிற்சிகளைப் பெண்களுக்குக் கத்துக் கொடுத்துட்டு வர்றேன். எனக்குப் பாரம்பர்யத்துல அவ்ளோ பற்று. வளர்ற தலைமுறை நல்ல உணவு, ஆரோக்கியத்தோட இருக்கணும்ன்றதுதான் என்னோட ஆசை. அதனால குழந்தைங்களுக்கு இலவச யோகா பயிற்சியோட, சித்தர் வாழ்வியல் நெறி முறைகளையும் கற்றுத் தர்றேன். குழந்தைங்க நிறையப் பேர் ஆர்வமா கத்துக்கிட்டு வர்றாங்க. யோசிச்சுப் பார்க்கிறப்ப, எவ்ளோ அடிச்சாலும், ஸ்பின் பால் மாதிரி உயர எழுந்ததாலதான் நாம இன்னிக்கு இந்த அளவுல உயர முடிஞ்சதுனு நினைச்சுப்பேன்’’ என்றார் நெகிழ்ச்சியுடன்.

http://www.vikatan.com

  • தொடங்கியவர்

வால்ட் டிஸ்னியின் டொனால்ட் டக் வரைகதை வெளிவந்தது: ஜூன் 9

வால்ட் டிஸ்னி உலகப் புகழ் பெற்ற ஓவியர். மிக முக்கியமான கார்ட்டூன் ஓவியர். மிக்கி மௌஸ், டொனால்ட் டக், ஸில்லி சிம்பொனிஸ் போன்றவற்றை உருவாக்கியவர். திரைப்பட இயக்குனராகவும் தயாரிப்பாளராகவும் பணிபுரிந்தவர். வால்ட் டிஸ்னி தயாரிப்பு நிறுவத்தின் இணை-நிறுவனரான டிஸ்னி(தன் அண்ணன் ராய்.ஒ.டிஸ்னியுடன்) உலகின் புகழ்பெற்ற திரைப்பட தயாரிப்பாளர் ஆவார்.

 
 
 
 
வால்ட் டிஸ்னியின் டொனால்ட் டக் வரைகதை வெளிவந்தது: ஜூன் 9
 
வால்ட் டிஸ்னி உலகப் புகழ் பெற்ற ஓவியர். மிக முக்கியமான கார்ட்டூன் ஓவியர். மிக்கி மௌஸ், டொனால்ட் டக், ஸில்லி சிம்பொனிஸ் போன்றவற்றை உருவாக்கியவர். திரைப்பட இயக்குனராகவும் தயாரிப்பாளராகவும் பணிபுரிந்தவர். வால்ட் டிஸ்னி தயாரிப்பு நிறுவத்தின் இணை-நிறுவனரான டிஸ்னி(தன் அண்ணன் ராய்.ஒ.டிஸ்னியுடன்) உலகின் புகழ்பெற்ற திரைப்பட தயாரிப்பாளர் ஆவார்.

இருபதாவது நூற்றாண்டின் கேளிக்கை உலகில் தன் தாக்கதிர்காக பெயர்ப்பெற்றவர் டிஸ்னி. மேலும் பல வணிக நோக்குடைய பூங்கா வடிவமைப்பு மற்றும் அசைப்படம் எடுப்பதில் வல்லுனரும் கூட. அவரும் அவரின் பணியாளர்களும் இணைந்து உருவாக்கியது தான் மிக்கி மௌஸ் போன்ற கற்பனை கதாப்பாத்திரங்கள். இவர் அய்பத்தி ஒன்பது ஆஸ்கார் விருதுக்கான நியமனங்களும் மற்றும் இருபத்தாறு ஆஸ்கார் வென்றுள்ளார்,இதில் ஒரே ஆண்டில் நான்கு வென்றது ஓர் உலகசாதனை. இதனால் இவரே மற்றவரை விட அதிக நியமனங்களும்,விருதுகளும் பெற்றார். ஏழு எம்மி விருதுகளும் வென்றார். இவர் தான் ஐக்கிய அமெரிக்க நாடுகளில் அமைந்துள்ள டிஸ்னிலாந்து மற்றும் வால்ட் டிஸ்னி உலக உல்லாசநகரம் பொழுதுபோக்கு பூங்காக்கள்,ஜப்பான்,பிரான்ஸ் மற்றும் ஹாங்காங் போன்ற பூங்காக்களின் பெயர்க்காரணியும் ஆவார்.

புளோரிடாவில் தன் கனவு திட்டபணியான வால்ட் டிஸ்னி உலக உல்லாசநகரம் திறப்புக்கு சில வருடங்கள் முன்னரே 1966-ஆம் ஆண்டு டிசம்பர் பதினைந்தாம் தேதி டிஸ்னி நுரையீரல் புற்றுநோயால் இறந்தார்.

http://www.maalaimalar.com

  • தொடங்கியவர்

 

மனிதர்கள் தோன்றி 3 லட்சம் ஆண்டுகள்: புதிய ஆதாரம் கண்டுபிடிப்பு

நாம் இதுவரை அறிந்திருப்பதைவிட ஒரு லட்சம் ஆண்டுகளுக்கு முன்பே மனித இனம் தோன்றியிருக்கக்கூடுமெபன்பதற்கான புதிய ஆதாரங்கள் கிடைத்துள்ளன.

வட ஆப்ரிக்காவில் கிடைத்திருக்கும் ஐந்து மனித புதை படிமங்கள், ஆதிமனித இனம் முன்பு நினைத்திருந்ததை விட ஒரு லட்சம் ஆண்டுகளுக்கு முன்பே உலகில் தோன்றியதாக காட்டுகின்றன.

மனித இனத்தின் தோற்றம் குறித்த அறிவியல் பாடங்களையே இது மாற்றிப்போடவல்லது என பலர் நம்புகிறார்கள்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.