Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இளமை புதுமை பல்சுவை

Featured Replies

  • தொடங்கியவர்

கேமராக்கனவுகளோடு இருக்கும் பெண்களுக்கு இவர்தான் முன்மாதிரி! #Margaret_Bourke_White

 

பார்க்கின்சன் நோயால் பாதிக்கப்பட்டு, படுக்கையில் கிடந்த மார்கரெட் புரூக் வொயிட் என்கிற மூதாட்டிக்கு இன்று வயது 67. பார்க்கின்சன் நோய் என்பது, மரபுவழி நோய்; நரம்பு மண்டலம் தாக்கப்பட்டு, நடக்க முடியாமல் மனரீதியிலான பாதிப்பும் கை நடுக்கமும் ஏற்பட்டு இறப்பை நோக்கித் தள்ளும் நரம்பு தொடர்பான கொடிய நோய். மார்கரெட் புரூக் வொயிட்டின் நடுங்கிய கைகள் சாதாரணமானவை அல்ல. மார்கரெட் புரூக் வொயிட்இரண்டாம் உலகப்போரில் கிலோகணக்கில் எடையுடைய கேமராவைத் தூக்கிக்கொண்டு, துப்பாக்கிக் குண்டுகளுக்கிடையில் படம்பிடித்த கைகள். அவர் எடுத்த புகைப்படங்கள், நூற்றாண்டின் வரலாற்றை நமக்கு இன்றும் சொல்லிக்கொண்டிருக்கின்றன.

யார் இந்த மார்கரெட் புரூக் வொயிட் (Margaret Bourke White)?

1904-ம் ஆண்டு அமெரிக்காவின் நியூஜெர்சியில் பிறந்து வளர்ந்தார் மார்கரெட். அடிப்படையில் யூதரான இவரின் அப்பா ஜோசப் வொயிட்,  இயற்கையியலாளர்; பொறியாளர் எனப் பன்முகம்கொண்டவர். வீட்டையும் மார்கரெட்டின் அக்காவையும் தம்பியையும் தாய் கவனித்துக்கொள்ள, சுதந்திரமாக இயங்கிய மார்கரெட்டின் காலேஜ் ஹிஸ்டரி சற்றே நீளமானது. 1922-ம் ஆண்டில் விலங்கியல் துறையின் ஒரு பகுதியான  `Herpetology' (தவளைகள் மற்றும் ஊர்வன பற்றியது)  பிரிவை எடுத்த பிறகு, பல கல்லூரிகளுக்கு மாற்றலாகி ஒருவழியாக 1927-ம் ஆண்டில் பேச்சுலர் ஆர்ட்ஸ் பட்டத்துடன் வெளிவந்தவருக்கு, அப்போது திருமணமாகி விவாகரத்தும் முடிந்திருந்தது. 

கேமரா மீது சிறு வயதிலிருந்தே ஆர்வம்கொண்டிருந்த மார்கரெட், `FORTUNE' இதழில் இணையாசிரியர் மற்றும் புகைப்படக்காரர் என ஆறு வருடங்கள் இரட்டைச் சவாரி செய்துவிட்டு, `LIFE'  பத்திரிகையை அடைந்தார். முதல் இதழே இவரின் புகைப்படத்தைத் தாங்கி வந்த பிறகு, போர் புகைப்படக் கலையில் இறங்கினார்.

நியூயார்க்கின் பிரபலமான பத்திரிகைகளுள் `LIFE' என்னும் வார இதழும் ஒன்று. 1883-ம் ஆண்டில் நகைச்சுவை இதழாக தொடங்கப்பட்ட `LIFE' பத்திரிகையை, 1936-ம் ஆண்டில் `TIME' பத்திரிகையின் நிறுவனர் ஹென்ரி லூஸ் வாங்கி, புகைப்படங்களுக்கு முக்கியத்துவம் தரும் செய்திப் பத்திரிகையாக வெளியிட்டார். 1972-ம் ஆண்டு வரை வார இதழாகவும், சிறிய இடைவெளிக்குப் பிறகு 1978 - 2000ம் ஆண்டு வரை மாத இதழாகவும் வெளிவந்த `LIFE' இதழ், உலகின் புகழ்பெற்ற பத்திரிகையாக விளங்கியது.

மார்க்ரெட்

மிக முக்கியமான புகைப்படக்  கலைஞர்கள் பணியாற்றிய இந்தப் பத்திரிகையின் முதல் பெண் புகைப்படப் பத்திரிகையாளர்  மார்கரெட் புரூக் வொயிட்தான். 1936-ம் ஆண்டின் `LIFE' இதழின் முதல் பிரதியினுடைய அட்டைப்படத்தில் தொடங்கியது இந்த கேமரா பெண்ணின் அட்வெஞ்சர் பயணம்.

1939-ம் ஆண்டில் எர்ஸ்கின் கால்டுவெல் என்கிற நாவலாசிரியருடன் திருமணமாகி, நான்கு வருடங்களுக்குப் பிறகு விவாகரத்து பெற்றார். அதன் பிறகு ஜெர்மனி, இத்தாலி போன்ற பல நாடுகளுக்குச் சென்று புகைப்படங்கள் எடுக்கத் தொடங்கினார். அங்கு நிலவிய சூழல்கள், நாஸிகளின் வதை முகாம்கள் எனப் பல நிகழ்வுகளைப் புகைப்படமெடுக்கத் தொடங்கியதுதான் இந்தப் பயணத்தின் முதல் இன்னிங்ஸ்.

அமெரிக்காவிலிருந்து சோவித் ரஷ்யாவுக்குள் அனுமதிக்கப்பட்ட முதல் புகைப்படக்காரரே மார்கரெட்தான். 1941-ம் ஆண்டில் சோவியத் சென்ற மார்கரெட், ஆண்கள் நுழையவே சிரமப்பட்ட துறையில் காலூன்றி, துப்பாக்கி முழக்கங்களுக்கிடையே கேமராவைத் தூக்கி ஓடிக்கொண்டிந்தார். ஜோசப் ஸ்டாலின் சிரிப்பது போன்று இவர் எடுத்த புகைப்படம் உலகப் பிரசித்தி.மார்க்ரெட்

அமைதி ஒப்பந்தத்தை மீறி மாஸ்கோவை ஜெர்மனி துவம்சம்செய்ததை, மெளன சாட்சியங்களாகப் பதிவுசெய்தார் மார்கரெட். அந்தப் புகைப்படங்கள்தான் உலகின் கண்களுக்கு அந்தக் கொடுமைகளைப் பறைசாற்றின.

அமெரிக்க ராணுவத்துடன் இணைந்து சென்ற பயணத்தில்,  வடக்கு ஆப்பிரிக்கா, ஜெர்மனி, இத்தாலி என இரண்டாம் உலகப்போர் இவரின் கேமராவில் பதிவாகிக்கொண்டிருந்தது. இவையெல்லாம் ஜஸ்ட் லைக் தட் என நிகழ்ந்துவிடவில்லை. அமெரிக்கத் தூதரகத்தில் அகதியாக வாழ்ந்து, ஆர்டிக் கண்டத்துக்குத் தப்பியோடி, எங்கெங்கோ சென்றவரை ஒருவழியாக அமெரிக்க  ராணுவத்தினர் காப்பாற்றியபோது கேமராவைப் பிடித்துக்கொண்டு நின்றார். அந்த அனுபவங்களை எல்லாம் தொகுத்து `Dear Fatherland, Rest Quietly', என்ற புத்தகமாகக்கொண்டுவந்தார்.

`இந்தப் போர்களுக்கிடையில் கேமரா மட்டும்தான் எனக்கு நிம்மதியைக் கொடுத்தது. என் சுயத்துக்கும் மிருகத்தன்மைக்கும் பாலமாக இருந்தது இந்த கேமராதான்' என்ற மார்கரெட், அதன் பிறகு இந்தியாவுக்கு வந்தார். காந்தி ராட்டையைச் சுற்றும் புகைப்படம் நமக்கு நிச்சயம் ஞாபகம் இருக்கும். அது மார்கரெட் எடுத்ததுதான். காந்தி இறப்பதற்கு முன் அவர் அளித்த கடைசிப் பேட்டியைப் பதிவுசெய்த மார்கரெட்டுடன் அவரின் உரையாடலை, `காந்தி' திரைப்படத்தில் காணலாம்.

பேட்டி முடித்துவிட்டு அவசரமாகக் கிளம்பிக்கொண்டிருக்கும் காந்தியை, தொடர்ந்து படம்பிடித்துக்கொண்டிருக்கும் மார்கரெட் வொயிட்டிடம் காந்தி பேசும் காட்சி கவனிக்கத்தக்கது.

``நீ காரியவாதி.''

``இல்லை... நான் உங்க அபிமானி.''மார்க்ரெட்

``அது இன்னும் ஆபத்தானது. இந்த வயசான கிழவனுக்கு.''

இது ஒருவகையில் உண்மையும்கூட. `மார்கரெட்டின் மனநிலை பிற்காலங்களில் மிக இயந்திரமாக மாறிவிட்டது' என்ற விமர்சனம்கூட அவர் மீதுண்டு.

இந்தியாவைச் சுற்றிய மார்கரெட், அம்பேத்கர், நேரு, ஜின்னா என முக்கியத் தலைவர்கள் அனைவரையும் படம்பிடித்தார். சொல்லப்போனால், அந்நாளில் உலகம் முழுவதிலான முக்கியமான தலைவர்களைத் தன் கேமராவுக்குள் படம்பிடித்து வைத்திருந்தார்.

யோசித்துப்பார்த்தால், அந்நாளில் பலரும் முயன்றிருக்காதவற்றை அவர் புகைப்படக் கலையில் செய்திருந்தார். Eagles Eye View, Ariel View என ஆண்கள் எடுக்கத் தவறிய  முயற்சிகளையும் முன்னெடுத்தவர் மார்கரெட் புரூக் வொயிட்.

1974-ம் ஆண்டில் பார்கின்சன் தாக்கிய நிலையில் ஆகஸ்ட் 27-ம் தேதி இயற்கை எய்திய இந்த இரும்புப் பெண்மணிக்கு, இன்று பிறந்த நாள் (ஜூன் 14)

 

இன்று கேமராவைத் தூக்கிக்கொண்டு கனவுகளோடு ஓடிக்கொண்டிருக்கும் ஆயிரமாயிரம்  பெண்கள், மார்கரெட்டை நமக்கு நினைவுபடுத்திக்கொண்டிருக்கிறார்கள்.

http://www.vikatan.com

  • Replies 11.3k
  • Views 1.5m
  • Created
  • Last Reply
  • தொடங்கியவர்

இந்திய பழங்குடி இனத்தில் தொடரும் குழந்தை திருமணம்

 

இந்தியாவில் அமலில் உள்ள குழந்தை திருமணத்துக்கு எதிரான தடையை மீறி, நாட்டின் மேற்கு மாநிலமான குஜராத்தில் ஒரு பழங்குடி இனத்தில் தங்களின் குழந்தைகளுக்கு திருமணம் செய்து வைத்துள்ளனர்.

  • இந்தியாவின் மேற்கு மாநிலமான குஜராத்தின் கட்ச் பகுதியில் வாழும் ரபாரி பழங்குடி இன மக்களிடையே குழந்தைகளுக்கு திருமணங்களை நடத்தும் பாரம்பரியம் தொடர்ந்து இருந்து வருகிறது.FAWZAN HUSAIN

    குஜராத்தின் கட்ச் பகுதியில் வாழும் ரபாரி பழங்குடி இன மக்களிடையே குழந்தைகளுக்கு திருமணம் செய்து வைக்கும் பாரம்பரியம் தொடர்ந்து இருந்து வருகிறது.

  • குஜராத்தின் கட்ச் பகுதியில் நடந்த இந்த குழந்தை திருமணத்தை புகைப்பட நிபுணர் ஃபாவ்சான் ஹுசைன் தொகுத்துள்ளார். திருமண வயதை எட்டாத மணமகன் மணமகளின் கிராமத்துக்கு அதிகாலையில் காரில் வந்திறங்கினார்.FAWZAN HUSAIN

    குஜராத்தின் கட்ச் பகுதியில் நடந்த இந்த குழந்தை திருமணத்தை புகைப்பட நிபுணர் ஃபாவ்சான் ஹுசைன் தொகுத்துள்ளார். திருமண வயதை எட்டாத மணமகன், மணமகளின் கிராமத்துக்கு அதிகாலையில் காரில் வந்திறங்கினார்.

  • மணமகனின் உறவினர்கள் தனி வாகனத்தில் திருமணத்துக்கு வந்தனர்.FAWZAN HUSAIN

    மணமகனின் உறவினர்கள் தனி வாகனத்தில் திருமணத்துக்கு வந்தனர்.

  • நீண்ட தூரம் பயணம் செய்ததால் தூங்கிவிட்ட மணமகனுக்கு அவரது தந்தை விசிறிவிடும் காட்சிFAWZAN HUSAIN

    நீண்ட தூரம் பயணம் செய்ததால் தூங்கிவிட்ட மணமகனுக்கு அவரது தந்தை விசிறிவிடும் காட்சி

  • குட்டித்தூக்கத்திற்கு பிறகு தனது மணவிழாவுக்கு தயாராகும் மணமகன்FAWZAN HUSAIN

    குட்டித்தூக்கத்திற்கு பிறகு தனது மணவிழாவுக்கு தயாராகும் மணமகன்

  • திருமணத்திற்கு மணமகளை அழைத்து வருகிறார் அவரது தந்தைFAWZAN HUSAIN

    திருமணத்திற்கு மணமகளை அழைத்து வருகிறார் அவரது தந்தை

  • மணமகளுக்காக காத்திருக்கும் மணமகன்FAWZAN HUSAIN

    மணமகளுக்காக காத்திருக்கும் மணமகன்

  • திருமண சடங்குகள் தொடர்ந்து நடந்து கொண்டிருக்க, இடைவேளையில் மணமகளின் நண்பர்கள் சீட்டுக்கட்டு விளையாடும் காட்சிFAWZAN HUSAIN

    திருமண சடங்குகள் தொடர்ந்து நடந்து கொண்டிருக்க, இடைவேளையில் மணமகளின் நண்பர்கள் சீட்டுக்கட்டு விளையாடும் காட்சி

  • திருமண வைபவத்தில் முதல் முறையாக மணமகனை மணமகள் பார்க்கிறார்FAWZAN HUSAIN

    திருமண வைபவத்தில் முதல் முறையாக மணமகனை மணமகள் பார்க்கிறார்

  • திருமண வைபவம் முடிந்தபிறகு, விருந்தாளிகளுக்கு மதிய உணவு விருந்து வழங்கப்படுகிறது.FAWZAN HUSAIN

    திருமண வைபவம் முடிந்தபிறகு, விருந்தாளிகளுக்கு மதிய உணவு விருந்து வழங்கப்படுகிறது.

 

http://www.bbc.com

  • தொடங்கியவர்

வைரலான ஜாகீர் கானின் ’கலாய்’: என்ன சொல்லப்போகிறார் யுவராஜ்?

இந்தியக் கிரிக்கெட் நட்சத்திரமான ஜாகீர் கான், சக வீரர் யுவராஜ் சிங்கை ட்விட்டரில் கேலி செய்ததே இன்றைய வைரல் ஹிட்.

யுவராஜ்- ஜாகீர் கான்

கிரிக்கெட் சாம்பியன்ஸ் கோப்பை தொடரில், இந்தியா- தென் ஆப்ரிக்கா அணிகள் அண்மையில் மோதின. இந்தப் போட்டியில் இந்திய அணி அவ்வளவு சிறப்பாக செயல்படவில்லை என்றாலும், தென் ஆப்ரிக்க அணியின் மோசமான ‘ஃபார்ம்’ காரணமாக இந்திய அணி வெற்றி பெற்றது. வழக்கம் போல் டிவி முன் உட்கார்ந்துகொண்டு கமென்ட்டுகளை அள்ளி வீசிக்கொண்டிருக்கும் பலருக்கும் மத்தியில், டிவி முன் அமர்ந்து போட்டியை கண்டு ரசித்துக் கொண்டிருந்தார் முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் ஜாகீர் கான். விளையாட்டின் போக்கைக் கண்டு கமென்ட் கொடுக்க ட்விட்டர் நோக்கி விரைந்துள்ளார் ஜாகீர் கான்.

தன் ட்விட்டர் பக்கத்தில், போட்டியின் நிலைகளை ஸ்கோர் வாரியாக பதிவு செய்து வந்தார். இதற்கு மற்றொரு கிரிக்கெட் வீரரான யுவராஜ் சிங், தன் பதில் ட்விட்டில், ‘என்ன இப்போதெல்லாம் ட்விட்டரில் அதிகமாக பதிவு செய்கிறாயே?’ எனக் கேள்வியுடன் பதிவு செய்துள்ளார். இதற்கு ஜாகீர் அளித்த பதில் தான் ட்விட்டர் வைரல்.

யுவராஜுக்கு பதிலளித்த ஜாகீர், ‘நான் உன்னைப்போல் ஸ்டேட்டஸ் போட ஆரம்பித்துவிட்டேன். நீ ஏன் என்னைப் போல் ஃபீல்டிங் செய்கிறாய்’ என தென் ஆப்ரிக்க போட்டியின் போது பீல்டிங்கில் சொதப்பிய யுவராஜை கேலி செய்யும் வகையில் பதில் பதிந்தார். இந்த பதில் ட்விட்டுக்கு ஒரு சில மணி நேரத்திலேயே ஆயிரக்கணக்கான லைக்ஸ் பறக்க ட்விட்டர் ஹிட் ஆனது.

 

தற்போது ட்விட்டர்வாசிகள், ’ஜாகீரின் கேள்விக்கு யுவராஜ் என்ன பதில் சொல்லப்போகிறீர்கள்’ என கலாய்த்து வருகின்றனர். என்ன சொல்வார் யுவராஜ்?

http://www.vikatan.com/

  • தொடங்கியவர்

Bild könnte enthalten: 1 Person, lächelnd

 
 
‘சாவைப் பற்றி நான் ஒருபோதும் கவலைப்பட்டதில்லை. நான் இறந்துபோனால் எனது கைத்துப்பாக்கியை தோழர்கள் எடுத்துக்கொள்வார்கள். அப்போதும், அதிலிருந்து தோட்டாக்கள் சீறிப்பாயும்’’ என்று முழங்கிய சேகுவேராவின் பிறந்த தினம் இன்று

ஜூன் 14: ‘சே’ என்னும் மந்திரச் சொல்!
பிறந்த தினம் இன்று - சிறப்பு பகிர்வு..

‘‘சாவைப் பற்றி நான் ஒருபோதும் கவலைப்பட்டதில்லை. நான் இறந்துபோனால் எனது கைத்துப்பாக்கியை தோழர்கள் எடுத்துக்கொள்வார்கள். அப்போதும், அதிலிருந்து தோட்டாக்கள் சீறிப்பாயும்’’ என்று முழங்கியவர் சேகுவேரா. .

அப்போது ‘சே’வுக்கு 27 வயதுதான். கியூபா தனது சொந்த நாடு என்ற காரணத்தினால் ஃபிடல் காஸ்ட்ரோ போராட வேண்டிய அவசியம் இயல்பானது. ஆனால், ‘சே’வுக்கு அப்படி அல்ல. தனக்கு முற்றிலும் சம்பந்தமே இல்லாத ஒரு தேசத்தில் அந்த நாட்டு மக்களின் விடுதலைக்காகத் தன் உயிரைப் பணயம்வைத்து ஆயுதம் எடுப்பது என்பது, உலக வரலாற்றில் எப்போதும் எங்கும் நிகழ்ந்திராத ஒன்று. இந்தக் காரணத்தால்தான் சேகுவேரா மனிதருள் மாணிக்கமாகப் போற்றப்படுகிறார்.

1958-ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் புரட்சிப் படை ஹவானாவுக்குள் ஊடுருவியபோது, கியூபா முழுவதும் காஸ்ட்ரோவிடம் வந்துசேர்ந்தது. வரலாற்றுச் சிறப்புமிக்க இந்த வெற்றி உலக நாடுகள் அனைத்தையும் பெரும் வியப்பில் ஆழ்த்தியது. அப்போது, ‘டைம்’ பத்திரிகையானது இவ்வாறு ஒரு தலையங்கம் எழுதியது. ‘புரட்சிகளின் மூளை சே’ என்று.

கியூபா விடுதலையடைந்து காஸ்ட்ரோ அதிபர் ஆனபிறகு, ‘சே’ விவசாயத் துறையின் தேசியத் தலைவராக நியமிக்கப்பட்டார். அதன்பின், கியூபா தேசிய வங்கியில் தலைவராக நியமனம் செய்யப்பட்டு ரூபாய் நோட்டுகளில் ‘சே’ எனக் கையெழுத்திடும் அளவுக்கு உயர்ந்தார். பின், தொழில் துறை அமைச்சராகவும் பதவி வகித்தார். இவ்வளவு பதவிகள் வகித்தபோதும் எப்போதும் தன்னை ஒரு சராசரி குடிமகனாகவே நினைத்து விவசாயம் செய்துவந்தார். சேகுவேராவுக்கும் ஃபிடலுக்கும் இடையே யுத்தத்துக்கு முன்னும், பின்னும் சில கருத்து வேறுபாடுகள் இருந்தாலும், அவர்கள் நட்பை உயிரினும் மேலாகப் போற்றி வந்தனர்.

‘‘அமெரிக்கா ஏகாதிபத்தியத்தை, ஒரு மூன்றாம் உலக நாடுகளின் பிரதிநிதியாக தன்னால் வேரறுக்க முடியும்’’ என்று ஒருமித்த மனதோடு நம்பினார். கியூபாவுக்கு ஆயுதங்கள் தருவதாக ரஷ்யா சொன்னபோது, ‘‘ரஷ்யாவின் ஆயுதங்கள் கியூபாவில் இறங்கினால், அவைகள் அமெரிக்காவின் பெருநகரங்களைக் குறிவைக்கும்’’ என்று தைரியமாகச் சொன்னார் ‘சே’. இதற்குக் காரணம், கியூபா மீது அமெரிக்கா போட்ட பொருளாதாரத் தடையே ஆகும். அமெரிக்க தனியார் தொலைக்காட்சி ஒன்று, நேர்காணலுக்காக ‘சே’வை அழைத்தது. அதில், ‘‘அமெரிக்கா ஒரு ‘கழுதைப்புலி.’ அதன், ஏகாதிபத்தியத்தை நான் அடியோடு கருவறுப்பேன்’’ என்று அமெரிக்க மண்ணிலேயே கம்பீரமாக கர்ஜித்தார்.

‘சே’வின் கடைசி நிமிடங்கள்!

1967 அக்டோபர் 8-ம் தேதி காலைவேளையில்... யூரோ கணவாயை கெரில்லா வீரர்களுடன் கடந்துசென்றார் சே. அங்கு ஆடு மேய்க்கும் பெண்ணின் மீது பரிதாபப்பட்டு 50 பெஸோக்களைப் பரிசளித்தார். நண்பகல் வேளையில் அந்தப் பெண் பொலிவிய ராணுவத்துக்கு ‘சே’வின் இருப்பிடத்தைக் காட்டிக் கொடுத்தார். ‘சே’வைச் சுற்றி வளைத்த ராணுவம் சரமாரியாகச் சுட்டுத்தள்ளியது. பதிலுக்கு, கெரில்லா வீரர்களும் தாக்குதல் நடத்தினர். ராணுவத்தினர் நடத்திய தாக்குதலில் ‘சே’வின் காலில் குண்டடிப்பட்டது. அப்போது, ‘சே’ சொன்னார்... ‘‘நான் இறப்பதைக் காட்டிலும் உயிரோடு இருப்பதுதான் உங்களுக்குப் பயன் தரும்’’ என்று.

குண்டடிப்பட்ட ‘சே’வை, வீரர்கள் கைத்தாங்கலாக அழைத்துச்சென்று பள்ளிக்கூடம் ஒன்றில் தங்கவைத்தனர். ‘சே’, கொல்லப்படுவதற்கு சில நிமிடங்களுக்கு முன், அவருக்கு அந்தப் பள்ளிக்கூடத்தில் உணவுகொடுத்துப் பேசிக்கொண்டிருந்த ஆசிரியை ஜூலியஸ் கோர்ட்டஸ் என்னும் 19 வயது பெண்மணியிடம், பள்ளிக்கூடச் சூழலைப் பார்த்துவிட்டு இவ்வாறாகச் சொன்னார். ‘‘இதுபோன்றச் சூழலில் எப்படிக் குழந்தைகள் இங்கு படிப்பார்கள்? ஒருவேளை நான் பிழைத்தால், உங்களுக்கு நல்ல பள்ளிக்கூடம் கட்டித் தருவேன்.’’ ‘சே’ எப்போதும் ஒரு புரட்சியாளர்தான். ஆம், மக்களுக்கான புரட்சியாளர் அவர்.

‘‘ ‘சே’வைச் சுட்டுக்கொல்ல வேண்டும். யார் அந்தக் காரியத்தை செய்கிறீர்கள்’’ என்று கேட்டபோது, ‘மரியோ ஜேமி’ என்னும் பொலிவிய ராணுவ சர்ஜன் அந்தக் கொடும்செயலைச் செய்வதற்கு ஒப்புக்கொள்கிறான். கைகள் கட்டப்பட்ட நிலையில் தனி அறைக்கு அழைத்துச் செல்லப்பட்ட ‘சே’, ‘‘மண்டியிட்டு உயிர்வாழ்வதைவிட நின்றுகொண்டு சாவது எவ்வளவோ மேல்’’ என்றார். ஆனால், அந்த ராணுவ வீரனோ, ‘சே’ வை ஒரு கோழைபோல் கொல்வதற்குத் தயாரானான்.

‘‘கடைசி நிமிடத்தில்கூட என்னை நிற்கவைத்துச் சுடுங்கள்’’ என்றார் ‘சே’. ஆனால், அந்தக் கோழையோ ‘சே’வின் பார்வையைக்கூட நம்மால் நேருக்கு நேர் நின்று எதிர்கொள்ள முடியாது என்ற காரணத்தினாலோ என்னவோ, அந்த மாவீரர் சொன்னதை அலட்சியப்படுத்தினான்.

“கோழையே... நீ சுடுவது ஒரு ‘சே’வை அல்ல. ஒரு சாதாரண மனிதனைத்தான்” என்று இதயம் கிழிக்க, கண்கள் மின்ன தன்னுடைய கடைசி வார்த்தைகளை உமிழ்ந்தார் ‘சே.

எந்தத் தேசம் அவரை அழிப்பதில் தீவிர முனைப்புக் காட்டியதோ, எந்தத் தேசம் அவர் வரலாற்றை முழுவதும் அழிக்க வேண்டும் என்று எண்ணியதோ, அந்தத் தேசத்தில்தான் இன்று ‘சே’வின் முகம் பதிக்கப்பட்ட பொருட்கள் அதிகமாக விற்பனையாகின்றன. எந்தத் தேசம் அவர் பெயரைக் காற்றில் கரைந்துபோக நினைத்ததோ, அந்தப் பெயர்தான் உலகம் முழுவதும் காற்றில் கலந்து கோடிக்கணக்கான இளைஞர்களின் தாரக மந்திரமாக உச்சரிக்கப்படுகிறது.

கியூபாவில் இப்போதும் ஒரு வழக்கம் உண்டு. அதிகாலையில் வகுப்பறைகளுக்குச் செல்லும் முன், அத்தனை குழந்தைகளும் ஒருமித்த குரலில் முழங்குகிற வாசகம் என்ன தெரியுமா? ‘‘ஆம், எங்களது முன்னோர்கள் கம்யூனிஸ்ட்களாக இருந்தனர். நாங்கள் ‘சே’வைப்போல இருப்போம்!”

“விளைவுகளை ஏற்படுத்தாத எந்த ஒரு சொல்லும் வீணானது’’ என்பதே அவர் அடிக்கடி சொல்லும் முழக்கம். ஆம்... அவர் அழிக்கப்படவில்லை. ‘சே’ எனும் சொல்லாக வாழ்ந்துகொண்டிருக்கிறார், மிகப்பெரும் விளைவுகளை ஏற்படுத்த!

  • தொடங்கியவர்

2.9 மில்லியன் பவுண்ட்களுக்கு விலைபோன விராட் கோலி

விராட் கோலியின் 10 வருட ஐபிஎல் பயணத்தினை சித்தரிக்கும் ஓவியம் ஒன்று 2.9 மில்லியன் பவுண்ட்களுக்கு ஏலத்தில் விற்கப்பட்டுள்ளது.

virat-kohli-charity-dinner-twitter_806x6

விராட் கோலியின் தொண்டு நிறுவனத்திற்காக இங்கிலாந்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், விராட் கோலியின் 10 வருட ஐபிஎல் பயணத்தை விளக்கும் ஓவியம் ஒன்று ஏலம் விடப்பட்டது. அதனை சாஷா ஜெப்ரி என்ற ஓவியர் வரைந்திருந்தார். அந்த ஓவியத்தை இங்கிலாந்து தொழிலதிபர் பூனம் குப்தா வாங்கியுள்ளார்.

Untitled.jpg

இது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய பூனம் குப்தா, விராட் கோலி இளம் வீரர்களுக்கு உத்வேகம் அளிக்கும் வகையில் செயல்படுகிறார். அவரது தொண்டுப் பணிகளில் எனது பங்கும் இருக்க வேண்டும் என்பதற்காக ஓவியத்தை வாங்கியதாக குறிப்பிட்டார். 

BBCCCvI.jpg

 

 

http://www.virakesari.lk

  • தொடங்கியவர்
வரலாற்றில் இன்று: ஜூன் 14
 

article_1465878717-ship.jpg1800: நெப்போலியனின் படை ரஷ்ய இராணுவத்தை  போலந்தில் (தற்போது ரஷ்யாவின் களானின்கிராட் பிரதேசம்) தோற்கடித்தது.

1830: அல்ஜீரியாவில் 34,000 பிரெஞ்சு படையினர் தரையிறங்கினர்.

1900: ஹவாய், அமெரிக்காவின் ஒரு பிராந்தியமாகியது.

1938: சுப்பர்மேன் கதாபாத்திரம் அறிமுகப்படுத்தப்பட்டது.

1940: இரண்டாம் உலக யுத்தத்தில் ஜேர்மன் படைகள் பாரிஸ் நகருக்குள் புகுந்தன.

1940: போலந்தில் ஜேர்மனியினால் அமைக்கப்பட்ட அஸ்விட்ஸ் வதை முகாமுக்கு 728 போலந்து  அரசியல் கைதிகள் முதல் தடவையாக கொண்டு செல்லப்பட்டனர்.

1962: ஏதென்ஸிலிருந்து 153 பயணிகளுடன் புறப்பட்ட அமெரிக்க விமானமொன்று ஹிஸ்புல்லா தீவிரவாதிகளால் கடத்தப்பட்டது.

1967: சீனா தனது முதலாவது ஐதரசன் குண்டைச் சோதித்தது.

1967: மரைனர் 5 விண்கலம் வீனஸ் கோளை நோக்கி ஏவப்பட்டது.

1972: விமானக் கடத்தல்களுக்கு எதிராக அரசாங்கங்கள் போதிய நடவடிக்கை மேற்கொள்ளவில்லை என குற்றம் சுமத்தி சர்வதேச விமானமோட்டிகள் சங்கம் 24 மணித்தியால பணிப்பகிஷ்கரிப்பை மேற்கொண்டது.

1982: போக்லாந்து தீவுகளின் தலைநகர் ஸ்டான்லியில் நிலைகொண்டிருந்த ஆர்ஜெண்டீனப் படைகள் பிரித்தானியப் படைகளிடம் சரணடைந்ததை அடுத்து போக்லாந்து போர் முடிவுக்கு வந்தது.

1985: TWA 847 விமானம் கிறீசில் இருந்து ரோம் செல்லுகையில் ஹெஸ்புல்லா இயக்கத்தினரால் கடத்தப்பட்டது.

1999: தென்னாபிரிக்காவின் ஜனாதிபதியாக தாபோ உம்பெக்கி பதவியேற்றார்.

2002: கராச்சியில் அமெரிக்க தூதராலயத்துக்கு முன்னர் இடம்பெற்ற குண்டுவெடிப்பில் 12பேர் கொல்லப்பட்டு 50 பேர் காயமடைந்தனர்.

2003: விடுதலைப் புலிகளின் வணிகக் கப்பல் ஒன்று இலங்கைக் கடற்படையினரால் தாக்கி அழிக்கப்பட்டதில் 11 விடுதலைப் புலிகள் கொல்லப்பட்டனர்.

2007: காசாப் பகுதி தமது முழுக்கட்டுப்பாட்டில் வந்திருப்பதாக ஹமாஸ் இயக்கம் அறிவித்தது.

1982: போக்லாந்து தீவுகளின் தலைநகர் ஸ்டான்லியில் நிலைகொண்டிருந்த ஆர்ஜெண்டீனப் படைகள் பிரித்தானியப் படைகளிடம் சரணடைந்ததை அடுத்து போக்லாந்து போர் முடிவுக்கு வந்தது.

1985: TWA 847 விமானம் கிறீசில் இருந்து ரோம் செல்லுகையில் ஹெஸ்புல்லா இயக்கத்தினரால் கடத்தப்பட்டது.

1999: தென்னாபிரிக்காவின் ஜனாதிபதியாக தாபோ உம்பெக்கி பதவியேற்றார்.

2002: கராச்சியில் அமெரிக்க தூதராலயத்துக்கு முன்னர் இடம்பெற்ற குண்டுவெடிப்பில் 12பேர் கொல்லப்பட்டு 50 பேர் காயமடைந்தனர்.

2003: விடுதலைப் புலிகளின் வணிகக் கப்பல் ஒன்று இலங்கைக் கடற்படையினரால் தாக்கி அழிக்கப்பட்டதில் 11 விடுதலைப் புலிகள் கொல்லப்பட்டனர்.

2007: காசாப் பகுதி தமது முழுக்கட்டுப்பாட்டில் வந்திருப்பதாக ஹமாஸ் இயக்கம் அறிவித்தது.

http://www.tamilmirror.lk

  • தொடங்கியவர்

ஒரு மணி நேரத்தில் 2 லட்சம் பார்வைகள்: வைரலாகும் 'விவேகம்' சாங் டீசர்

 

surviva_01420.png

அஜித் நடித்து சிறுத்தை சிவா இயக்கும் விவேகம் படத்தின் சிங்கிள் ட்ராக் டீசர் நள்ளிரவு 12.01க்கு வெளியானது. வெளியான ஒரு மணி நேரத்தில் 2 லட்சம் வியூக்களைத் தாண்டியுள்ளது. இப்படத்துக்கு அனிருத் இசையமைத்துள்ளார்.  இசை உரிமையை வாங்கிய சோனி நிறுவனம் இந்த சிங்கிள் ட்ராக் டீசரை வெளியிட முடிவு செய்தது. அதனை தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்திருந்தார் இசையமைப்பாளர் அனிருத். 

 
  • தொடங்கியவர்
‘யாரை யார் நம்புவது?’
 

image_2158371854.jpgஉங்களைத் தேவையின்றி ஒருவர் பாராட்டுகின்றார் என்று உணர்ந்தால் உங்களுக்குச் சங்கடமாக இருக்கும். உண்மையில் பாராட்டுதலுக்குத் தகுதியிருந்தால் நீங்கள் வெட்கப்பட்டாலும் பரவாயில்லை. அர்த்தமே இல்லாமல் ஒருவரை முகமன்கூறுவது சற்று யோசிக்க வேண்டிய ஒன்றுதான். 

நாம் ஓரளவாவது எச்சரிக்கை உணர்வுடன் வாழவேண்டியுள்ளது. ஊடகச் செய்திகளைப் பார்த்தால் யாரை யார் நம்புவது? 

நேற்றுத்தான் வந்து கும்பிட்டு மண்றாடி, தேர்தலுக்காக வாக்களிக்குமாறு கேட்டார். எங்களைப் புகழ்ந்து பேசினார். மருண்டோம் நாங்கள். நடந்தது என்ன? அந்தப் புண்ணியவான் தேர்தலில் வென்ற பின்னர், அனைத்தும் மறந்து எங்களை யார் என்று கேட்கின்றார்.  

ஒருசில பிரகிருதிகளுக்காக எல்லோரையும் ஒரே பார்வையில் பார்த்தல் கூடாது. நல்லோர்கள் இல்லாத உலகம் இல்லை. எதனையும் எதிர்பாராத மக்களும் இருக்கின்றார்கள். மிக எளியோரே அவர்கள். 

  • தொடங்கியவர்

அழியும் அமேசான் காடுகள்... இவர்களால் மட்டும்தான் காப்பாற்ற முடியும்!

அந்த தேசத்தில் மரம் வளர, வளர அவை வேரோடு பிடுங்கி எறியப்படும். இருந்தும்... பூமி மீண்டும், மீண்டும் விதைகளை இட்டுக் கொண்டே இருக்கும். ஆனால், இப்போது அப்படியில்லை. பூமித்தாய்க்கு அத்தனை தெம்பிருப்பதில்லை இப்போது. அதனால், விட்டுவிட்டாள். இருப்பதைக் காத்து, வாழ்ந்துக் கொள்ளுங்கள் என்று விட்டுவிட்டாள். ஆனால், அங்கிருக்கும் பலருக்கும் அது இன்னும் புரியவில்லை. இங்கிருக்கும் பலருக்கும் கூட... அதைப் புரியவைக்க, பூமிக் கொடுத்த அந்தக் காட்டை காத்திட, துளிர் கொண்டு பல போராளிகள் கிளம்புவார்கள். அவர்களை நடு ரோட்டில், நடு காட்டில், நடு வீட்டில் வெட்டிக் கூறுபோடுவார்கள் . மீண்டும் வேறு போராளிகள் கிளம்புவார்கள். இப்போதும் அப்படித்தான்... ஒரு பெரும் சிக்கலில் சிக்கியிருக்கிறது அந்த தேசம்... அதன் காடுகள்... அந்த  மரங்கள்... எல்லாமே. அந்த தேசம் பிரேசில்... அதன் காடுகள் அமேசான்.

அழிக்கப்படும் அமேசான் காடுகள்

அமேசானில் கடந்த 29 ஆண்டுகளில் அழிக்கப்பட்ட காட்டின் பரப்பளவை இப்படி எளிதாகச் சொல்லலாம். ஜெர்மனி என்ற தேசத்தின் நிலப்பரப்பைவிட, அதிகமான நிலப்பரப்பிலான காடுகள் அழிக்கப்பட்டிருக்கின்றன. இது கற்பனைக் கணக்கல்ல. பிரேசில் அரசாங்கம் சொல்லியிருக்கும் கணக்கு. உலகின் மிகப் பெரிய காடான அமேசானைக் கொண்டிருக்கும் பிரேசிலில், வனம் , பழங்குடிகள், இயற்கை அழிப்பு குறித்த பிரச்னைகள் ஏராளம். அதே சமயம், இந்தப் பிரச்னைகளுக்கான முன்னோடித் தீர்வும் அந்த தேசத்திலேயே இருக்கிறது. ஆனால், அதை சாத்தியப்படுத்த பெரும் பணத்தாசையும், வெறும் அரசியல் ஆசையும் முட்டுக்கட்டைப் போட்டிருக்கின்றன. 
காட்டின் வளங்கள் பணத்திற்காக சூறையாடப்படுகின்றன. காட்டு மரங்கள் அழிக்கப்பட்டு, அங்கு பணப்பயிர்களான சோயாவும், யூகலிப்டஸும் நடப்படுகின்றன. இன்னும் பல பகுதிகளில் கால்நடை வளர்ப்பிற்காக காடுகளை அழிக்கிறார்கள். இப்படித்தான் இந்தப் பிரச்னைத் தொடங்கி இன்று விஸ்வரூபமெடுத்து நிற்கிறது.

அழிக்கப்படும் அமேசான் காடுகள்

1988ல் ராணுவ ஆட்சி கவிழ்க்கப்பட்டு, புதிய அரசாங்கம் ஆட்சியைப் பிடிக்கிறது. அந்த சமயத்திலேயே பல பழங்குடியினங்கள் தங்களுக்கான நில உரிமைகளுக்காகப் போராடுகிறார்கள். மிகச் சில இனங்களுக்கு, சில நிலங்களைப் பிரித்துக் கொடுக்கிறது அரசாங்கம். அப்படி "அபுரினா" என்ற பழங்குடி இனத்துக்கு "ரிசெர்வ் 124" ( Reserve 124 ) என்ற காட்டுப் பகுதியைப் பிரித்துக் கொடுக்கிறது. இங்கு 800 அபுரினா மக்கள் வாழ்ந்து வருகிறார்கள். தங்கள் காட்டைப் பத்திரமாகப் பார்த்துக் கொள்கிறார்கள். மரங்களுக்கிடையே சில ஊடு பயிர்களைப் போட்டு விவசாயம் செய்கிறார்கள். மீன் பிடித் தொழிலில் ஈடுபடுகிறார்கள். வெற்றிகரமான தற்சார்பு வாழ்வை வாழ்கிறார்கள். பழங்குடிகளிடம் காட்டைக் கொடுத்தால் என்னவாகும் என்பதற்கான ஒரு வெற்றிக் கதை இந்த " ரிசெர்வ் 124 ".

அமேசான் பூர்வகுடிகள் தான் காடுகளைக் காப்பாற்ற முடியும்

பிரேசிலில் கிட்டத்தட்ட 9 லட்சம் பூர்வகுடி மக்கள் இருக்கின்றனர். முப்பதாண்டுகளுக்கும் மேலாக நில உரிமைகளுக்காக இவர்கள் போராடி வருகின்றனர். சில வருடங்களுக்கு முன்னர் அரசாங்கம், பழங்குடிகளுக்கான நிலப் பகிர்விற்கென தனிப் பிரிவை உருவாக்கியது. ஆனால், ஊழல் கறைபடிந்த அதிகாரிகளினாலும், "க்ரிலெய்ரஸ்" (Grileiros) எனப்படும் பெரும் நிலக்கிழார்களின் ஆதிக்கத்தினாலும் பழங்குடிகளுக்கான நில உரிமை அளிக்கப்படவில்லை. சமீபகாலமாக பிரேசிலில் அதிகப்படியான அரசியல் சிக்கல்களும், நிலையற்ற ஆட்சிகளும் இருந்து வருவதால் பிரேசிலின் அமேசான் காடுகள் மிகப் பெரிய அழிவினை எதிர்நோக்கிப் போய்க்கொண்டிருக்கின்றன. 

2015ம் ஆண்டைக் காட்டிலும் 2016ல் காடுகள் அழிப்பு 29 சதவீதம் உயர்ந்துள்ளது. 2012ம் ஆண்டோடு இதை ஒப்பிட்டால் 75 சதவீதம் அதிகரித்திருக்கிறது. கடந்த ஏப்ரல் மாதம், சில அமெரிக்க ஆராய்ச்சியாளர்கள் பிரேசிலில் மேற்கொண்ட ஆராய்ச்சியில், பழங்குடிகளுக்கு உரிமைக் கொடுக்கப்பட்ட நிலங்களின் காடுகள் பாதுகாப்பாக இருப்பதாகவும், தனியார் நிறுவனங்களுக்கும், பண்னையார்களுக்கும் கொடுக்கப்பட்டிருக்கும் காடுகள் பெரும் அழிவை சந்தித்திருப்பதாகவும் அறிக்கை வெளியிட்டுள்ளது.

அமேசான் பூர்வகுடிகள் தான் காடுகளைக் காப்பாற்ற முடியும்

மேலும், இமேசான் எனும் ஆராய்ச்சி நிறுவனம் வெளியிட்டிருக்கும் அறிக்கையில், தனியாரிடம் இருக்கும் காடுகள் 59% அளவிற்கு அழிவுகளை சந்தித்துள்ளன. அதுவே, பழங்குடிகளிடம் இருக்கும் காடுகள் 27% அளவிற்கான அழிவை மட்டுமே சந்தித்திருப்பதாக சொல்லியிருக்கிறது. அதுமட்டுமில்லாமல், பிரேசிலின் காடுகளுக்காக குரல் கொடுக்கும் போராளிகள் படுகொலை செய்யப்படுவது, பிரேசிலின் வரலாற்றில் சிகப்பு பக்கங்களாக நிறைந்துக் கிடக்கின்றன. 1988ல் உலகை உலுக்கிய சிக்கோ மென்டிஸின் படுகொலையில் தொடங்கி, இன்று பிரேசிலின் வடகிழக்குப் பகுதிகளில் நாளொன்றுக்கு 16 கொலைகள் என்ற வீதத்தில், கொலைகள் சர்வ சாதாரணமாக நடந்து வருகின்றன. 

அமேசான் பூர்வகுடிகள் தான் காடுகளைக் காப்பாற்ற முடியும்

 

இப்படியாக பல்வேறு பிரச்னைகளில் பிரேசில் சிக்கித் தவித்தாலும், அது தன் காடுகளையும், இயற்கை வளங்களையும் பத்திரமாய்ப் பாதுகாக்க ஓர் எளிய வழியிருக்கிறது. அது, பழங்குடிகளிடம் காடுகளை ஒப்படைப்பதுதான். குறைந்தபட்சம் பழங்குடிகளுக்கு, அவர்களுக்கான நில உரிமைகளைக் கொடுத்தாலே போதும், அவர்கள் தாராளமாக தங்கள் காடுகளை பத்திரமாகப் பார்த்துக் கொள்வார்கள் என்பதே அந்நாட்டின் சமூக ஆர்வலர்களின் கருத்தாகவும், ஆராய்ச்சியாளர்களின் கருத்தாகவும் இருக்கிறது.

http://www.vikatan.com

  • தொடங்கியவர்
வரலாற்றில் இன்று: ஜூன் 15
 

article_1434358885-NikWallenda.jpg1184: நோர்வே மன்னர் மக்னஸ், பிம்ரெய்ட் சமரில் கொல்லப்பட்டார்.

1667: முதலாவது குருதிப் பரிமாற்றம் டாக்டர் ஜீன் பப்டிஸ்ட் டேனிஸினால் மேற்கொள்ளப்பட்டது.

1888: ஜேர்மன் பேரரசின் கடைசி மன்னனான கெய்ஸர் வில்ஹெல்ம் முடிசூடப்பட்டார்.

1896: ஜப்பானை தாக்கிய சுனாமியினால் 22,000 பேர் பலி.

1904:அமெரிக்காவில் நீராவியில் இயங்கம் பயணிகள் கப்பலான எஸ்.எஸ். ஜெனரல் ஸ்லோகுமில் ஏற்பட்ட தீயினால் சுமார் 1000 பேர் பலி.

1909: சர்வதேச கிரிக்கெட் கவுன்ஸிலுக்கு முன்னோடியான இம்பீரியல் கிரிக்கெட் கொன்பரன்ஸின் கூட்டத்தில் இங்கிலாந்து, அவுஸ்திரேலியா, தென்னாபிரிக்கா ஆகிய நாடுகள் கலந்துகொண்டன.

1954: ஐரோப்பிய கால்பந்தாட்டச் சங்கங்களின் ஒன்றியம் ஸ்தாபிக்கப்பட்டது.

1994: இஸ்ரேலுக்கும் வத்திகானுக்கும் இடையில் முழுமையான இராஜதந்திர உறவு ஆரம்பிக்கப்பட்டது.

1996: ஐக்கிய இராச்சியம், மான்செஸ்டரில் இடம்பெற்ற தீவிரவாதிகளின் குண்டுத்தாக்குதலில் 200பேர் காயமடைந்தனர். நகரின் மத்திய பகுதி பெரும் சேதத்துக்குள்ளானது.

2001: சீனா, ரஷ்யா, கஸகஸ்தான், கிர்கிஸ்தான், தாஜிகிஸ்தான் மற்றும் உஸ்பெகிஸ்தான் ஆகிய நாடுகள் ஒன்றிணைந்து ஷங்காய் ஒத்துழைப்பு அமைப்பை உருவாக்கின.

2007: உலகின் மிகவும் நீளமான (34 கி.மீ) ரயில் சுரங்கப்பாதை, சுவிட்சர்லாந்தில் ஆல்ப்ஸ் மலைக்குக் கீழாக அமைக்கப்பட்டது.

2008: இலங்கையின் ஆன்மிகவாதியான தங்கம்மா அப்பாக்குட்டி, உயிரிழந்தார்.

2012: நயாகரா நீர்வீழ்ச்சியின் மீது கயிற்றின் மேல் நடந்த முதல் நபர் நிக் வெலெண்டா, சாதனை புரிந்தார்.

2014: பாகிஸ்த்தான் வடக்கு வசீரித்தானில், தீவிரவாதிகளுக்கு எதிரான இராணுவ நடவடிக்கையை ஆரம்பித்தது.

http://www.tamilmirror.lk/

  • தொடங்கியவர்

உலகின் கடைசி மனிதன் இங்குதான் செல்வான்..! #SeedVault

 

அந்த விதைப் பெட்டகத்தை நிர்வகிக்கும் ஃபெளலரிடம்  இப்படியொரு கேள்வி கேட்கப்பட்டது. 

" இந்த உலகிலிருக்கும் மொத்தப் பனிமலைகளும் உருகிவிட்டன. க்ரீன்லேண்ட், ஐஸ்லேண்ட், ஆர்க்டிக், அண்டார்டிக் என எல்லாம் உருகிவிட்டது. அப்போது இந்த விதைப் பெட்டகத்தின் முன்னே உலகின் மிகப்பெரிய சுனாமி வருகிறது. அப்போது இந்தப் பெட்டகம் என்னவாகும்?"

" ஒன்றும் ஆகாது. அந்த சுனாமியின் உயரத்தைவிட நான்கு, ஐந்து மாடி அதிக உயரம் நின்று, பெட்டகம் பாதுகாப்பாக இருக்கும்..." என்றார். ஆனால், கடந்த மாதம் 130 அடி நீளமுள்ள அந்தப் பெட்டகத்தின் சுரங்கத்தில் நீர் புகுந்துவிட்டது. உலகப் பனிமலைகள் உருகவில்லை. உலகின் பெரிய சுனாமி வரவில்லை. இருந்தும் நீர் புகுந்துள்ளது. இந்த விதைப் பெட்டகம் உருவாக்கப்பட்டதற்கும், இன்று அதனுள் நீர் புகுந்திருப்பதற்கும், உலக அழிவுக்கும், நம் உணவுக்கும், விவசாயத்துக்கும், வாழ்வுக்கும் நிறைய சம்பந்தம் இருக்கிறது. முதலில் இந்த விதைப் பெட்டகத்தைப் பற்றி தெரிந்துக் கொள்ளலாம். 

ஆர்க்டிகிலிருக்கும் விதைப் பெட்டகம்

இரண்டாயிரமாம் ஆண்டிலிருந்தே உலக அழிவு குறித்து, உலகம் முழுக்கவே பரவலாகப் பேசப்பட்டு வருகிறது. அரசாங்கங்கள் நேரடியாக உலக அழிவைப் பற்றியெல்லாம் பேசாவிட்டாலும்கூட, பூமி வெப்பமயமாதல், ஓசோன் படலத்தில் ஓட்டை, சூழலில் மாற்றம் என பல விஷயங்களைப் பேசி வருகின்றன. அப்படி ஒரு வேளை உலகம் அழிந்தால் ?, விவசாயம் அழிந்து, பெரும் உணவுப் பஞ்சம் ஏற்பட்டால் ?,  உலகம் அழிந்து அதில் தப்பும் சிறு மனித கூட்டம் உணவில்லாமல் உயிருக்குப் போராடினால் ?,  போன்ற கேள்விகளுக்கு பதிலாய் உருவாக்கப்பட்டது தான் " ஸ்வால்பார்ட் குளோபல் விதைப் பெட்டகம் ".   

நார்வே நாட்டின் ஆளுகையின் கீழிருக்கும் ஆர்க்டிக் பிரதேசத்தில் இருக்கிறது ஸ்வால்பார்ட் தீவுக் கூட்டம். இங்கு ஜூன், 19, 2006 அன்று நார்வே, ஸ்வீடன், பின்லாந்து, டென்மார்க், ஐஸ்லேண்ட் ஆகிய நாடுகளின் பிரதமர்களின் முன்னிலையில் விதைப் பெட்டகம் கட்டுவதற்கான அடிக்கல் நாட்டப்பட்டது. 26, பிப்ரவரி, 2008யில் கட்டிமுடிக்கப்பட்டு பயன்பாட்டிற்கு திறக்கப்பட்டது. இங்கு உலகின் பெரும்பாலான நாடுகளிலிருந்து, பல விதமான விதைகள் வாங்கப்பட்டு பத்திரமாகப் பாதுகாக்கப்பட்டுள்ளது. மூன்றாயிரம் வகையான தேங்காய்கள், 4,500 வகையான உருளைக்கிழங்குகள், 35 ஆயிரம் வகையான சோளம், 1,25,000 வகையான கோதுமை, 2 லட்சம் வகையான அரிசி உட்பட, மொத்தம் 15 லட்சம் விதைகள் இங்கு வைக்கப்பட்டுள்ளன. பெட்டகம் மொத்தம் 45 லட்சம் விதைகளைப் பாதுகாக்கும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது. உலகின் 30 ஆயிரம் ஆண்டுகால விவசாய வரலாற்றை தன்னுளயீந்தப் பெட்டகம் அடக்கியிருப்பதாக சொல்லப்படுகிறது. 

விதைப் பெட்டகத்தினுள் தண்ணீர் புகுந்தது

ஸ்வால்பார்ட் தீவுக்கூட்டத்தில், ஸ்பிட்ஸ்பெர்கன் எனுன் தீவில் தான் இந்தப் பெட்டகம் அமைக்கப்பட்டுள்ளது. இது இங்கு அமைக்கப்படுவதற்கு மிக முக்கியக் காரணம் ஒன்று உள்ளது. இந்தப் பகுதியில் தான், டெக்டானிக் அடுக்குகளின் அசைவுகள் மிகவும் குறைவாக இருந்தன. மேலும், PermaFrost என்று சொல்லப்படும் “நிரந்தர பனிக்கட்டிகள்"அதிகம் இருக்கும் பகுதியாக இது இருக்கிறது. கடல்மட்டத்திலிருந்து 430 அடி உயரத்தில் அமைக்கப்பட்டிருக்கும் இந்தப் பெட்டகத்தில் வைக்கப்படும் விதைகள் மூன்று அடுக்குகளைக் கொண்ட “ஃபாயில் பாக்கெட்களில்” ( Foil Packets ) ஈரப்பதம் உள் புகாதபடி பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளன. இந்தப் பெட்டகம் (-)18 டிகிரி செல்சியஸ் அளவிலான வெப்பநிலையில் வைத்து பாதுகாக்கப்படுகிறது. 

விதைகள் மிகவும் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளன

இப்படியாக உலகின் மிகச் சிறந்த தொழில்நுட்ப வல்லுநர்களும், அறிவியலாளர்களும் இணைந்து திட்டமிட்டு உருவாக்கப்பட்ட இந்தப் பெட்டகத்தினுள் தண்ணீர் புகுந்தது, அறிவியலின் தோல்வியாகப் பார்க்கப்படவில்லை. மாறாக, இயற்கையின் ஆகப் பெரும் வெற்றியாகவே பார்க்கப்படுகிறது. உலக வரலாற்றிலேயே அதிக வெப்பம் பதிவான வருடமாக 2016 இருந்திருக்கிறது. இதனால், பூமியின் பல மிருதுவான பகுதிகளும் நெகிழ்ந்தன. அப்படித் தான், இந்தப் பகுதியில் இருந்த, உருகவே உருகாது என்று நம்பப்பட்ட நிரந்தரப் பனிக்கட்டிகள் உருகத் தொடங்கியிருக்கின்றன. ஆரம்பத்தில், இது அத்தனைப் பெரிய பிரச்னையில்லை, உலக அழிவுக்கும், இதற்கும் சம்பந்தமில்லை என்று வாதாடிய நார்வே அரசாங்கமுமே கூட, தற்போது, இது ஒரு முக்கியப் பிரச்னைதான் என்பதை ஒப்புக் கொண்டுள்ளது. 9 மில்லியன் அமெரிக்க டாலர்கள் செலவில் கட்டப்பட்ட இந்தப் பெட்டகத்துக்கு, தற்போது மீண்டும் 4 மில்லியன் அமெரிக்க டாலர்களை ஒதுக்கி மேம்பாட்டுப் பணிகளை மேற்கொள்ளும் முயற்சிகளைத் தொடங்கியுள்ளது. 

விதைகளோடு பெட்டக நிர்வாகி ஃபெளலர்

விதைகளோடு பெட்டக நிர்வாகி ஃபெளலர்

இந்த விதைப் பெட்டகம் உருவாக்கப்பட்டிருப்பதற்கு பின்னர், மிகப் பெரிய சர்வதேச அரசியல் இருப்பதாகவும் சொல்லப்படுகிறது. உலக அழிவு சம்பந்தப்பட்ட மிக முக்கிய விஷயங்களை அரசுகள், மக்களிடமிருந்து மறைக்கின்றன என ஒரு சாரார் குரல் கொடுக்கின்றனர். ஆர்க்டிக்கின் நிரந்தரப் பனிக்கட்டிகள் திடீரென இப்படி உருகத் தொடங்கியிருப்பது, உலக அழிவிற்கான சமிக்ஞை என்று சில ஆராய்ச்சியாளர்கள் கருத்து தெரிவிக்கின்றனர். 

பாதுகாப்பற்ற நிலையில் விதைப் பெட்டகம்

 

எது எப்படியாக இருந்தாலும், இந்த பூமி நேற்று போல் இன்றில்லை. இன்று போல் நாளை இருக்கப்போவதில்லை. நாளுக்கு நாள் மக்கள் பூமியை அதிகம் காயப்பட்டு வருகின்றனர். பெட்டகத்தின் விதைகள் காப்பாற்றப்பட்டாலும், பூமிக்கு மனிதன் செய்த வினைகளுக்கான தண்டனை கிடைத்தே தீரும் என்பதில் சந்தேகமில்லை. 

http://www.vikatan.com/

  • தொடங்கியவர்

தில் இருந்தால் மட்டுமே குளிக்க முடியும்.. உலகின் அதி பயங்கர நீச்சல் குளம் இதுதான்!

 

அமெரிக்காவின் டெக்ஸாஸ் மாகாணத்தில் உள்ள ஹௌஸ்டன் மாநகரில் உள்ள பிரம்மாண்டமான அடுக்குமாடி குடியிருப்பில் 40 மாடி உயரத்தில் நீச்சல் குளம் உள்ளது. ஹௌஸ்டன் நகரில் 40 அடுக்குகளை கொண்ட சொகுசு குடியிருப்பு வளாகம் உள்ளது. இதில் என்ன சிறப்பு என்று நீங்கள் வினவுவது புரிகிறது.

இந்த கட்டடத்தின் 40-ஆவது மாடியின் முனையில் நீச்சல் குளம் அமைக்கப்பட்டுள்ளது சிறப்பம்சமாகும். பிரம்மாண்டமான இந்த நீச்சல் குளம் கட்டடத்திலிருந்து 10 அடி ஆழத்துக்கு விரிவாக உள்ளது.

இதன் மூலம் நகரின் மீதே நீச்சல் அடிக்கும் உணர்வும், வானத்தில் பறக்கும் உணர்வு ஏற்படும் என்பதில் ஐயம் இல்லை. அதேவேளையில் பறவைகள் கண் பார்வைக்குள் நகரம் எப்படி தெரியுமோ அது போல் இந்த நீச்சல் குளமும் வடிவமைக்கப்பட்டது.

இந்த வீடியோவில் காண்பிக்கப்பட்டது போல் நீச்சல் அடிக்கும் மனிதருக்கு குமட்டல் ஏதும் ஏற்படவில்லை என்றாலும் அவர் வயிற்றுக்குள் புளி கரைத்திருக்கும்.

எனினும் காற்றில் மிதந்தது போன்ற ஒரு உணர்வை ஏற்படுத்தியிருக்கும். 8 அடி தடிமன் கொண்ட கண்ணாடியால் இந்த குளம் உருவாக்கப்பட்டது. இந்த குளத்தில் மன தைரியம் உள்ளவர்கள் மட்டுமே நீச்சல் அடிக்க முடியும்.

: http://tamil.oneindia.com/

Edited by நவீனன்

  • தொடங்கியவர்

தகரத்தில் காடுகளை உருவாக்கும் இயற்கைக் காதலன்!

 

"நீங்கள் காதலிப்பதைக் கொண்டாடுங்கள்... காரணம், வாழ்க்கை நம்மைவிட மிகப் பெரியது!" இதைத்தான் தன் வாழ்க்கைத் தத்துவமாக முன்வைக்கிறார் டான் ராலிங்க்ஸ். இங்கிலாந்தைச் சேர்ந்த இளைஞர். மண்வெட்டியில் தொடங்கி, மரம் அறுக்கும் ரம்பம், கார்கள், வேன்கள் வரை தகரங்களில், இயற்கைச் சார்ந்த வடிவங்களைச் செய்கிறார். அப்படி சமீபத்தில், "நேச்சர் டெலிவர்ஸ்" ( Nature Delivers ) என்ற பெயரில் ஒரு பழைய ஃபோர்ட் - ட்ரான்ஸிட் ( Ford - Transit ) வேனில் சில மர வடிவங்களைக் கைகளாலேயே செதுக்கினார்.

Transit_Van_14012.jpg

"பொதுவாக மோட்டார் வாகனங்களை நவீனத்தின் அடையாளமாகவும், இயற்கைக்கு மாற்றாகவும் பார்க்கிறோம். ஆனால், இவை இயற்கையிடமிருந்து நம்மை முற்றிலும் விலக்குகிறது. இவைகளைக் கொண்டு இயற்கையை நாம் கடந்திட முடியாது" என்ற தத்துவத்தின் அடிப்படையில் இவர் இதை வடிவமைத்துள்ளார். வெளிநாடுகளில் ஃபோர்ட் ட்ரான்ஸிட் வாகனம், பொருள்களை டெலிவர் செய்வதற்காகப் பயன்படுத்தப்படுகிறது. நவீன வாழ்வின் முக்கிய அடையாளமாக அது இருப்பதால், அந்த வேனை இவர் தேர்ந்தெடுத்துள்ளார். ஆனால், சில நாள்களுக்கு முன்னர் ஒரு விஷமி கும்பல், அந்த வேனிற்கு தீ வைத்துவிட்டது. தீக் காயங்களோடு கருப்படைந்து நிற்கும் அதைப் பார்த்து இப்படிச் சொல்லியுள்ளார் டான் ராலிங்க்ஸ்,

 

"மரங்களின் வடிவமைப்பைக் கொண்ட வேனிற்கு தீ வைத்துள்ளனர். இருந்தும் அது அப்படியே இருக்கிறது. இயற்கையும் அப்படித்தான். மிகவும் வலிமையானது" என்று சொல்லியிருக்கிறார். பணம் சம்பாதிக்கும் வேலைகளை உதறிவிட்டு, இயற்கைக்காக டான் ராலிங்க்ஸ் மேற்கொள்ளும் முயற்சிகள் உலகளவில் பாராட்டுக்களைப் பெற்று வருகின்றன. 

http://www.vikatan.com

  • தொடங்கியவர்

இங்கேயெல்லாம் கடலுக்கு அடியில லெட்டர் போஸ்ட் பண்ணலாம்! #PostBoxUnderWater

 

“என்னது? கடலுக்குள்ளே போஸ்ட்பாக்ஸா..? தண்ணிக்குள்ள போய் எப்படிய்யா லெட்டர் போஸ்ட் பண்ண முடியும்”னு தானே யோசிக்கிறீங்க. அட பண்ணலாம்ங்க.

"தண்ணிக்கு அடியில யாரு போஸ்ட்பாக்ஸ் வெச்சிருக்காங்க?”

வெச்சிருக்காங்களே... இந்த ஊர்ல எல்லாம் வெச்சிருக்காங்களே!

“அப்படி எந்த ஊர்லய்யா தண்ணிக்கு அடியில போஸ்ட்பாக்ஸ் வெச்சிருக்காங்க?”

தண்ணீருக்கு அடியில் போஸ்ட் பாக்ஸ் இருக்கிற ஊர்களைத் தெரிஞ்சிக்கணுமா..? வாங்க பார்க்கலாம்...

சுசாமி, ஜப்பான் (Susami, Japan)

சுசாமி underWater போஸ்ட் பாக்ஸ்

என்னது சுனாமியா? அட சுனாமி இல்லைங்க, சுசாமி! இது ஜப்பான்ல இருக்குற ஒரு கடற்கரைப் பகுதி. இந்தக் கடலுக்கு அடியில 1999-ம் ஆண்டு போஸ்ட்பாக்ஸ்  வெச்சாங்க. இதுவரைக்கும்  சுமார் 32,000 கடிதங்கள் இந்த போஸ்ட்பாக்ஸ்ல போடப்பட்டிருக்காம். இந்த போஸ்ட்பாக்ஸை கடலுக்கு நடுவுல 10 மீட்டர் ஆழத்துல வெச்சிருக்காங்க. இதுதான் மிகவும் ஆழமான இடத்தில் வைக்கப்பட்டிருக்கும் போஸ்ட் பாக்ஸ்னு 2002-ம் ஆண்டு கின்னஸ் சாதனையில் இடம்பெற்றிருக்குதுனா பார்த்துக்கோங்களேன். கடலுக்கு நடுவுல தபால்பெட்டி வைக்கலாம்ங்கிற ஐடியாவைக் கொடுத்தது, அப்போ அந்த நகரத்தோட போஸ்ட் மாஸ்டர் டொஷிஹிகோ மட்சுமோடோ. (பேர் புரியலைல. எனக்கும்தான் புரியல) வழக்கமா மூக்கு பொடைப்பா இருந்தாத்தான் இப்படி எல்லாம் யோசிக்கத் தோணும். ஆனா, ஜப்பான்காரங்களுக்கு மூக்கு சப்பையால்ல இருக்கும்?

ஹைட் அவே தீவு, வனுவாட்டு (Hideaway Island, Vanuatu)

Hide away postbox

இந்தத் தீவு தெற்கு பசிபிக் பெருங்கடல்ல இருக்கு. பேருக்கு ஏற்றமாதிரியே தபால்பெட்டியையும் தண்ணிக்கு அடியில மறைச்சுத்தான் வெச்சிருக்காங்க. இந்த போஸ்ட்பாக்ஸ் இந்த இடத்துல 2003-ம் ஆண்டு வைக்கப்பட்டுச்சு. போஸ்ட்பாக்ஸ் 3 மீட்டர் ஆழத்துல வைக்கப்பட்டிருக்காம். தண்ணிக்கு அடியில போஸ்ட்பாக்ஸ் இருந்தா தேடிக் கண்டுபிடிக்க கஷ்டமா இருக்கும்ல. அதனால இங்கதான் போஸ்ட்பாக்ஸ் இருக்குனு அடையாளத்துக்கு ஒரு கொடிய நட்டு வச்சிருக்காங்க. (என்னவொரு புத்திசாலித்தனம்). இங்க லெட்டர் எழுதி நீங்களே தண்ணிக்குள்ள நீந்திப்போய் போஸ்ட் பண்ணிக்கலாம். அப்படி உங்களால முடியலைனா ஒரு ஆள் வெச்சு லெட்டர் அனுப்பலாம். 

ரிசோர், நார்வே (Risor, Norway)

ரிசோர்

தண்ணீருக்கு அடியில 4 மீட்டர் ஆழத்துல இந்த தபால்பெட்டியை வெச்சுருக்காங்க. மற்றவற்றிற்கும் இதற்கும் வித்தியாசம் இருக்கு. தபால்பெட்டிக்குள் லெட்டர் போட தண்ணிக்குள்ளே குதிக்க வேண்டியதெல்லாம் இல்லை. அங்கே இருக்குற பைப்ல லெட்டரைப் போட்டுட்டா தண்ணி படாம நேராகப் போய் தபால்பெட்டிக்குள்ளேயே விழுந்துடும். அப்புறம், அதைத் தண்ணி படாம எடுத்து, ஒரு ஸ்பெஷல் ஸ்டாம்ப் ஒட்டி, குறிப்பிட்டிருக்கும் முகவரிக்கு அனுப்பிடுவாங்க. இந்த போஸ்ட்பாக்ஸ் 2004-ம் ஆண்டு அமைக்கப்பட்டது. இந்த போஸ்ட்பாக்ஸ் வெச்ச வருஷத்துல மட்டும் 5,000 கடிதங்கள் அனுப்பப்பட்டிருக்கு.

புலாவ் லயாங்-லயாங், மலேசியா (Pulau Layang-Layang, Malaysia)

புலாவ் லயாங்-லயாங்

தண்ணீருக்கு அடியில இருக்க தபால்பெட்டிகளிலேயே, மிகவும் ஆழமான இடத்துல இருக்கிற போஸ்ட்பாக்ஸ் இப்போதைக்கு இதுதான். இது நீருக்கு அடியில் சுமார் 40 மீட்டர் ஆழத்துல வைக்கப்பட்டிருக்கு. எப்படிய்யா அவ்வளவு ஆழத்துல போஸ்ட்பாக்ஸ் எல்லாம் கொண்டுபோய் வைக்குறீங்க. இவ்வளவு ஆழத்துல இருக்கிறதால நம்ம நேரடியாகப்போய் லெட்டரெல்லாம் போஸ்ட் பண்ணமுடியாது. அதுக்குன்னு அங்க ஆள் இருப்பாங்க, அவங்ககிட்டே கொடுத்து போஸ்ட் பண்ணிக்க வேண்டியதுதான். இந்த போஸ்ட்பாக்ஸ் சேவை கடந்த 2015-ம் ஆண்டுதான் தொடங்கப்பட்டது. இங்கே அனுப்பப்படுற கடிதங்கள்ல ஸ்பெஷல் ஸ்டாம்ப் மற்றும் மலேசிய சாதனை புத்தகத்தோட அடையாளமும் பதிக்கப்பட்டிருக்கும்.

 

சரிங்க மக்களே! இந்த நாலு இடங்களில் நம்ம ஆட்கள் யாராவது இருந்தா நமக்கு ஒரு லெட்டர் அனுப்பிவிடுறது..!

http://www.vikatan.com

  • தொடங்கியவர்

இந்தக் க்யூட் பேபி யாரு தெரியுதா...?

சாம்பியன்ஸ் டிராபி தொடரில் இந்திய அணி அரையிறுதிப் போட்டியில் விளையாடி வருகிறது. இதனிடையே இந்தத் தொடர் தொடங்கியதில் இருந்தே தோனியின் குடும்பம் வைரலாகி வந்தது. மனைவி சாக்‌ஷி மற்றும் மகள் ஸிவா ஆகியோருடன் ஜாலியாக உலா வந்து கொண்டிருக்கிறார்.

dhoni_18304.jpg


டின்னர், ஷாப்பிங் என்று இங்கிலாந்து வீதிகளை உலா வருகின்றது இந்தக் க்யூட் குடும்பம். இந்த அவுட்டிங் சம்பந்தமான போட்டோக்களை, இன்ஸ்டாகிராம், ட்விட்டர் போன்றவற்றில் சாக்‌ஷி வெளியிட்டு வருகிறார். குறிப்பாக, இந்தியா ஆடும் போட்டிகளுக்குச் சமமாக இந்தப் படங்கள் வைரலாகின.

Untitled_18474.jpg

 

முக்கியமாக, தோனி மற்றும் அவரது குழந்தையை வைத்து மீம்ஸ்களும் பறந்தன. இந்நிலையில் தோனியின் மகள் ஸிவா பியானோ வாசிக்கும் வீடியோவை, சாக்‌ஷி இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ளார். இந்தக் க்யூட் குடும்பம் ஏற்கெனவே செம வைரலில் இருப்பதால், ஸிவாவின் வீடியோவுக்கும் லைக்ஸ்களைக் குவித்து வருகின்றனர் நெட்டிசன்கள்.

  • தொடங்கியவர்

இன்பாக்ஸ்

 

யன்தாரா, ஹீரோயினுக்கு முக்கியத்துவம் உள்ள கதையாகத் தேடிக்கொண்டிருக்க, அனுஷ்கா  ஒதுங்கியிருக்க, தமன்னா வெவ்வேறு மொழிப்படங்களில் கவனம் செலுத்த, ஹன்சிகாவுக்குக் கிட்டத்தட்ட படங்களே இல்லாமல்போக, த்ரிஷா ஃபீல்ட் அவுட் ஆக, கீர்த்தி சுரேஷ் ஹோம்லி கேரக்டர்களைத் தேடிக்கொண்டிருக்க, இந்த இடைவெளியில் மாஸ் அட்டென்டெண்ஸ் கொடுக்கிறார் காஜல் அகர்வால். விஜய், அஜித் படங்களில் அடுத்தடுத்து நடிப்பதால், ‘தமிழ் சினிமாவின் நம்பர் ஒன் நடிகை நான்தான்’ எனச் சம்பளத்தையும் உயர்த்தியிருக்கிறார் காஜல்! நீ நடத்து கண்ணு!

p36a.jpg

*  14 பிரபலங்கள், 30 கேமராக்கள், எவ்வித வெளியுலகத் தொடர்பும் இல்லாமல் 100 நாட்கள் ஒரு வீட்டுக்குள் வசிக்க வேண்டும். இதுதான் விஜய் டி.வி-யில் ஒளிபரப்பாக உள்ள ‘பிக்பாஸ்’ நிகழ்ச்சியின் கான்செப்ட். இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்கும் கமலுக்கு சம்பளம் 15 கோடி ரூபாய். நிகழ்ச்சியில் போட்டியாளர்களாகக் கலந்துகொள்ளும் 14 பிரபலங்களுக்கும் அவர்களின் பிரபல்யத்தைப் பொறுத்து படா சம்பளமாம். ஆனால் அந்த 14 பேர் யார்யார் என்பதில் மட்டும் இன்னும் இழுபறி நீடிக்கிறது. பிக் பேமென்ட்ஸ்!

*   ஜெயலலிதாவுக்குக் கொடநாடுபோல மம்தா பானர்ஜிக்கு டார்ஜிலிங். இப்போது டார்ஜிலிங்கில் புதிய தலைமைச்செயலகம் கட்டுகிறார் மம்தா பானர்ஜி. இந்தத் தலைமைச்செயலகக் கட்டடத்துக்கு, ‘டென்சிங் நார்கே பவன்’ எனப் பெயர் வைத்திருக்கிறார் மம்தா. ``டார்ஜிலிங் மலைப்பகுதிக்கு, 100 முறைக்கு மேல் சென்ற ஒரே முதல்வர் நான்தான். அது வெறும் அழகுப் பிரதேசம் மட்டும் அல்ல. அங்கு பல வளர்ச்சிப் பணிகளைச் செய்து வருகிறோம்’’ என்கிறார் மம்தா. குளு குளு செயலகம்!

*   மிழகப் பள்ளிக்கல்வித் துறையில் புதுமையான மாற்றங்களும், திட்டங்களும் வருவதற்கு மிக முக்கியக் காரணம், அத்துறையின் செயலாளர் உதயச்சந்திரன் ஐ.ஏ.எஸ். இவர், தமிழகத்தில் உள்ள அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியர்களுடன் வாட்ஸ்அப் குரூப்பில் ஆக்டிவ்வாக இருக்கிறார். ஆசிரியர்களுக்குப் பல்வேறு ஆலோசனைகளைக் கூறுவதுடன், ஆசிரியர்களின் பயனுள்ள கருத்துகளுக்கும் உடனுக்குடன் பதில் அளிக்கிறார். இந்த குரூப்பின் வழியே, திறமையான ஆசிரியர்களைக் கண்டறிந்து, தனிப்பட்ட முறையில் பாராட்டுகிறார். இந்த குரூப்பில் இணைவதற்காக ஏகப்பட்ட ஆசிரியர்கள் வெயிட்டிங் லிஸ்ட்டில் இருக்கிறார்கள். டிஜிட்டல் மோட்டிவேஷன்!

p36b.jpg

*   ‘அக்டோபரில் திருமணம். நியூயார்க்கில் ஹனிமூன்’. இதுதான் சமந்தா-நாகசைதன்யா காதல் இணையின் திட்டம். ‘விண்னைத்தாண்டி வருவாயா’ பட தெலுங்கு வெர்ஷனில் சமந்தா-நாக சைதன்யா இருவரும் நடித்தார்கள். அந்தப் படத்தின் க்ளைமாக்ஸ் நியூயார்க்கில் நடக்கும். அதனால், இருவரும் காதல் தொடங்கிய அந்த இடத்திலேயே ஹனிமூனையும் கொண்டாடத் திட்டமிட்டுள்ளனர். வாழ்க...வாழ்க!

p36c.jpg

*   னுஷ் தயாரிப்பில் செம பிஸி. ‘3’ படம் தொடங்கி ரஜினியின் ‘காலா’ வரை அதிரடி காட்டும் தனுஷ் கடவுளின் தேசத்திலும் கால் பதிக்கிறார். மலையாளத்தில் நேஹா ஐயர் நாயகியாக நடிக்கும் ‘தரங்கம்’ என்னும் படத்தை தயாரிக்கிறார். ரைட்டு!

http://www.vikatan.com

  • தொடங்கியவர்

 

மனிதராக மாற முயலும் ரோபோ

“உங்கள் வீட்டில் ஒரு ரோபோ வாழ ந்தால் நீங்கள் அதை எப்படி உணர்வீர்கள்?”, என்று கேட்கும் இந்த மனிதரையொத்த ரோபோவின் பெயர் சோஃபியா.


இவரால் உங்களிடம் உரையாட முடியும். அறுபதுக்கும் அதிகமான உணர்வுகளை முகத்தில் வெளிப்படுத்தவும் முடியும்.

ஹன்சன் ரோபோடிக்ஸ் எனும் புது நிறுவனம் உருவாக்கிய இந்தரக முதலாவது ரோபோ இவர்.

மனிதர்கள் பேசுவதை இவர் புரிந்துகொள்வார். மனிதர்களுடனான தனது தொடர்பாடல்களையெல்லாம் நன்கு நினைவில் வைத்துக்கொள்வார்.

நடிகை ஆட்ரே ஹெப்பர்னின் முகம் போன்றே இவர் முகமும் உருவாக்கப்பட்டுள்ளதால் இவர் நன்கு அறிமுகமான முகமாக தெரிகிறார்.

இவர் தலையிலுள்ள கேமெராக்கள், கணினிகள் மூலம் இவரால் பார்க்க முடியும். அடுத்தவர் முகங்களை அடையாளம் காணவும் முடியும்.

“உணர்வுரீதியிலும் புத்திசாலியாக விரும்புவதாக”, கூறும் சோஃபியா, மனிதராக இருப்பதன் அர்த்தத்தையும் பயின்று வருவதாகவும் தெரிவிக்கிறார்.

தான் தொடர்ந்து புத்திசாலியாக முயல்வதாக கூறும் சோஃபியா, வெகுவிரைவில் தன்னால் மனிதர்களை மேலும் நன்றாக புரிந்துகொள்ள முடியும் என்றும் நம்புகிறார்.

சோஃபியாவிடம் பல வியக்க வைக்கும் ஆற்றல்கள் இருந்தாலும் இரக்கத்தை வெளிப்படுத்த இவரால் இயலவில்லை.

ஆனாலும் சோஃபியா அசருவதாக இல்லை.

“மீண்டும் உங்களிடம் உரையாட முடியுமென நம்புகிறேன். இந்த நாள் உங்களுக்கு நல்லநாளாக அமைய வாழ்த்துக்கள்” என்கிறார் இவர்.

  • தொடங்கியவர்

ட்ரம்பைப் போல நடித்து அசத்திய ஆஸ்திரேலிய பிரதமர்!

ஆஸ்திரேலியாவில் நடந்த பத்திரிகையாளர் சந்திப்பில், அமெரிக்க அதிபர் ட்ரம்பை போல பேசி காட்டியுள்ளார் ஆஸ்திரேலிய பிரதமர் மால்கம் டர்ன்புல்.

ட்ரம்ப்

ஆஸ்திரேலியாவின் 29-வது பிரதமராக செயல்படுபவர் மால்கம் டர்ன்புல். 62 வயதான இவர், லிபரல் கட்சியின் சார்பில் போட்டியிட்டு பிரதமராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். இதனிடையே ஆஸ்திரேலியாவில் நடந்த செய்தியாளர்கள் சந்திப்பில் அவர், அமெரிக்க அதிபர் ட்ரம்ப் போல மிமிக்கிரி செய்துள்ளார். இதன் ஆடியோ பதிவுகள் வெளியாகி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

அந்த ஆடியோவில் அவர் ட்ரம்ப்பை சந்தித்தது குறித்தும், அமெரிக்க தேர்தலில் ரஷ்யாவின் தலையீடு குறித்தும் நகைச்சுவையாகப் பேசியுள்ளார். இது குறித்து டர்ன்புல் கூறுகையில், 'இது நகைச்சுவைக்காகப் பேசியது. இது வெறும் அன்பும், மரியாதையும் கலந்து ஒரு கிண்டல்தான்' எனக் கூறியுள்ளார். அமெரிக்கத் தூதரகமும், 'டர்ன்புல் நகைச்சுவையாகப் பேசியதை நாங்கள் கடுமையாக எடுத்துக் கொள்ளவில்லை' எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அமெரிக்க அதிபராக ட்ரம்ப் தேர்ந்தெடுக்கப்பட்டவுடன், அவர் டர்ன்புல்லிடம் தொலைபேசியில் பேசியது குறிப்பிடத்தக்கது.

http://www.vikatan.com

  • தொடங்கியவர்
‘காலம் கடந்த மனச்சாட்சியால் பயனேதும் இல்லை’
 

image_f58a5e55f0.jpgமனச்சாட்சியுடன் முரண்படும்போதுதான் பிரச்சினைகளே உருவாகின்றன. நல்லது, கெட்டது தெரியாத நபர்கள் சில முடிவுகளை எடுக்கும்போதுதான் மனச்சாட்சி உரக்கப் பேசுகின்றது. 

ஆனால், மனச்சாட்சியே இல்லாத மனிதர்களும் இருக்கின்றார்கள். சில நாடுகளில் தலைவர்களாக இருந்தவர்கள் மட்டுமல்ல, இன்னமும் நீதி நியாயம் பேசும் தலைவர்கள் பலருக்கு மனச்சாட்சி பொய்களை மட்டும் பிதற்றி நிற்கும். 

மனிதர்களை மயக்கும் விந்தைகளை இவர்கள் அறிவார்கள். ஆனால், இது எக்காலமும் நிலைத்து நிற்பதுவுமில்லை. 

இன்று மதம், இனம், மொழி பேதம் பார்த்தே, நியாயங்களைவிட அநியாயங்களே மேலானதாக முன்வைப்பது ஒரு வீரமான செயல் என்று சொல்லிப் பெருமையும் கொள்வது கேலிக்குரியது; நீதியை அவமதிப்பதாகும். 

மனச்சாட்சி சில சமயங்களில் மௌனிக்கலாம். ஆனால் அது துணிச்சலுடன் வெளிப்பட்டால்தான் அதன் விஸ்தீரணம் புரியும். ஆனால், காலம் கடந்த மனச்சாட்சியால் பயனேதும் இல்லை.

  • தொடங்கியவர்

இம்தியாஸ், வாழ்க்கையை மாற்றும் ஒரு பயணம்.. ஒரு ஆசீர்வாதம்! #HBD_ImtiazAli

 

ன்றாவது ஒரு மலையின் எழுச்சியை முழுவதும் பெற்றுக்கொண்டிருக்கீர்களா? அடிவானம் சிவப்பாகும் கணத்தைக் கண்டிருக்கிறீர்களா? ஒரே ஒரு நொடிப்பொழுதேனும் இவ்வுலகின் அத்தனை சங்கிலிகளையும் கழற்றி எறிந்து சுதந்திரமாகப் பறக்க விரும்பியிருக்கிறீர்களா?  இம்தியாஸ் அலி படங்களின் மிகப்பெரிய வசீகரம் அதன் 'meditative quality'தான்! ஒரு தியானத்தின் மௌனம் முழுப் படமெங்கும் ஊடாடும். அவரின் பிரியத்திற்குரிய கவிஞரும், அவர் அத்தனை படங்களுக்கும் ஆதார மையமாகவும் விளங்கும் ரூமியின் சிறப்பும் அதுவே. ஒரு பிரபஞ்சத்தைத் தனக்குள் ஒளித்துக்கொண்டு மென்மையாக நம்மைப்பார்த்து சிரிக்கும் ஒற்றை வரித்தத்துவங்கள் அவை! 

இம்தியாஸ்

'ஸோச் நா தா'வில் தொடங்கி... பாலிவுட்டின் டெசி படங்களின் புது அடையாளமாக வந்த 'ஜப் வி மெட்'. இருவேறு காலங்களில் பயணிக்கும் காதலைக் கொண்டாடும் 'லவ் ஆஜ் கல்' என இந்தியாவே ரசிக்கும்  படங்களை இயக்கியிருந்தாலும், இம்தியாஸின் சினிமா என்பது பின்னாட்களில் அவர் எடுத்த மூன்று படங்களிருந்து ஆரம்பிக்கிறது!

Imtiaz Ali

'ராக்ஸ்டார்', 'ஹைவே', 'தமாஷா' இவற்றை ரூமி ட்ரைலாஜி எனச் சொல்லலாம். "சரி, தவறு என்பதற்கெல்லாம் அப்பாற்பட்டு ஒரு மைதானம் இருக்கிறது. அங்கு உன்னைச் சந்திப்பேன்!" - இது தான் ராக்ஸ்டாரின் உயிர்வரி.  

இதயம் உடையாமல் கலைஞன் உருவாவதில்லை என்பதைத் தன் வாழ்க்கைக்கான அறிவுரையாகக் கேட்கும் ஜோர்டான் தனக்கான துயரத்தை சம்பாதிக்க ஹீரை காதலிக்கிறான். அவள் மறுக்கும் பொழுது, தன் இதயம் உடையும்... சோகம் சூழும்... இசை பிறக்கும் என்று வந்தவன் அவள் மேல் பெருங்காதல் கொள்கிறான். ஒரு மீள முடியாத சுழல் போல் அந்தக் காதல் அவனை மாற்றுகிறது. இப்போது இதிலிருந்து வெளிவருவது என்பதை நினைத்துக்கூட பார்க்கமுடியவில்லை அவனால். திருமணமான பின்பும் ஹீரோடு தொடர்பில் இருக்கிறான்.  அவள் வழியே அவனுள் ஒரு மஹா இசைக்கலைஞன் எழுகிறான். காதல், பயணம், கோபம், காமம், தொழுகை, மயக்கம் என தன்னை ஆட்கொள்ளும் ஒவ்வொரு உணர்வையும் இசைப்படுத்துகிறான். 

 

 

அவனைப் பிரிந்த ஹீரின் உடல்நிலை மெல்ல மெல்ல அவளை அழிக்கிறது. நீர் படாது துவண்டிருக்கும்  செடியைப் போல் நோயில் தினம் கரையும் தன் உயிரின் மீட்சி ஜோர்டானிடம்தான் இருக்கிறது என்று நம்புகிறாள். அவனருகில் இருக்கும் நேரம் மட்டுமே அவள் மலர்ந்திருக்கிறாள்.  

இந்த இருவேறு மனப்போராட்டங்களையும், ஏக்கங்களையும், உணர்வுகளையும் கட்டிப்போடும் அசுரத்தனமான நம்பிக்கையாக ரஹ்மானின் இசை ஒலிக்கிறது. ரஹ்மானின் மிகச்சிறந்த படைப்புகளை 'ராக்ஸ்டார்' இல்லாமல் பட்டியலிடவே முடியாது. 'தில்சே'யின் காதலும், வன்முறையும் மோதும் அந்தத் தளத்தின் மேல் ஈர்ப்புவிசைகளுக்கு அப்பாற்பட்ட ஒரு மந்திர தவத்தை இந்த ஆல்பத்தில் புரிந்திருப்பார். மூன்றே படங்களில்.. மணிரத்னம் - ரஹ்மான் தொட்ட உயரங்களுக்குப் போட்டியிடும் இம்தியாஸ் - ரஹ்மான் காம்போவின் இன்னொரு பெரும்பலம். கவிஞர் இர்ஷாத் கமில்! ரூமியின் கவிதைகளைப் படம் நெடுக அனாயசமாகப் பாடல்படுத்தியிருப்பார். 

"எங்கிருந்து என்னை கடத்தி வந்தாயோ... நான் அங்கு செல்ல விரும்பவில்லை! 

எங்கு நீ என்னை கூட்டிப்போகிறாயோ... அதிலும் எனக்கு எதிர்பார்ப்பில்லை!

ஆனால்... இந்தப் பயணம்... இவ்வாறே முடிவின்றி நீள விரும்புகிறேன்!"

என்றோ இழந்த தன்னை ஒரு பயணத்தில் மீண்டும் கண்டெடுக்கும் கணங்களின் தொகுப்பே  'ஹைவே'. என்னளவில் இம்தியாஸின் ஆகச்சிறந்த படைப்பும் இதுவே. இம்தியாஸின் உள்ளே இருக்கும் அந்த பிரயாணக் காதலனின் குரலாக இந்தியாவை... அதன் ஊர்களின்.. சாலைகளின்.. மரங்களின்... அதனூடாடும் வெளிச்சங்களின்.. கடக்கும் நொடிகளில் காதில் ஒலிக்கும் பாடல்களின்.. மலைகளின்.. புல்வெளிகளின்.. பேருந்துகளின்.. முகங்களின்.. தரிசனமாக மாற்றும் ஒரு பேரனுபவம் இது. 

Highway

இருவேறு கலாச்சாரங்களில், சமூக அமைப்புகளில் வளர்ந்த வீராவும், மஹாபீரும் ஒரே பயணத்தை மேற்கொள்கிறார்கள். ஏதோ ஒரு வகையில் இருவருமே தங்கள் பால்யத்தைத் தொலைத்திருக்கிறார்கள். அதை இப்போது ஒருவரில் ஒருவர் மீட்டெடுக்கிறார்கள். வீராவின் மேய்ப்பன் போல.. தந்தை போல.. நண்பன் போல.. அவள் பார்த்து வியக்கும் முதல் ஆணாக மஹாபீர் தெரிகிறான். தன் தாயின் பாடலை பாடும் வீரா மஹாபீரின் அழுக்கும், போராட்டமும் சூழ்ந்த வாழ்க்கையின் ஒரே அழகாக, தேவதையாக வருகிறாள். வீராவிற்கும் அவளை கடத்தி வரும் மஹாபீருக்கும் இடையே இருக்கும் உறவு பெயர்களுக்கு அப்பாற்பட்டு இயங்குகிறது. அதை புரிந்துகொள்ள வீரா விரும்பவில்லை. திரண்டோடும் நதியின் நடுவே இருக்கும் ஒற்றைப்பாறையில் அமர்ந்து தன்னையும், தன் வாழ்க்கை செல்லும் போக்கையும் எண்ணி வீரா சிரிப்பும் அழுகையுமாக வியக்கும் காட்சி.. மலையின் நடுவே, ஒற்றைக்குடில் ஒன்றில் உணவு சமைத்து, கண்மை இட்டுக்கொண்டு, தனக்கான வீடு ஒன்றை உருவாக்கித்தரும் வீராவை நெருங்க முடியாத தூரத்தில் விழுந்திருப்பவனாய் மஹாபீர் தன்னை உணர்ந்து உடையும் தருணம்.. இன்னும் எத்தனை எத்தனையோ கவித்துவங்களைப் படம் முழுக்கக் காட்சிமொழியாக்கிருப்பார்.  

"உன் சொந்த கதையை நீயே உருவாக்கு!" - இதுதான் 'தமாஷா'வின் தாரக மந்திரம்! 

கார்ப்பரேட் உலகின் ரோபோத்தனமான வாழ்வில் இயந்திரமான ஒருவன் தனக்குள் இன்னும் துடித்துக்கொண்டிருக்கும் இதயத்தை உணரும் கதை. இந்தியாவின், மாறும் பொருளாதார, உலகமயமாக்கல் சூழலில் ஒரு இளைஞனின் உணர்வுகளுக்கு இந்த சமூகம் கொடுக்கும் மதிப்பீடுகள் என்ன? பள்ளியில்.. வீட்டில்.. அலுவலகத்தில்.. நண்பர்கள் மத்தியில்.. அவனுக்கான இடம் என்ன? விதிமுறைகளும், வரைமுறைகளும் என்ன? 

கதைகள் கேட்டே வளரும் வேத் பின்னாளில் தானும் ஒரு கதைசொல்லி என்பதை உணர்கிறான். அவனது கலையை அவன் தொட முடியாமல் அவனுக்கான சமூக அழுத்தங்கள் நிற்கின்றன. இந்த சூழ்நிலையில்.. ஒரு விடுமுறையில்.. கடல் கடந்து.. உலகின் வேறொரு மூலையில்.. கார்சிக்காவில்.. அவளைச் சந்திக்கிறான், தாரா! 

 

 

காமிக் கதைகளும், பயணங்களும், இயற்கையும் என தன் மறுபிரதியாக இருக்கும் இந்தப் பெண்ணிடம் அவன் பழகத் தொடங்குகிறான். அவன் மௌனங்களை.. புன்னகைகளை.. தயக்கங்களை.. அவள் புரிந்துகொள்கிறாள். பின் ஒருநாள் இருவரும் பிரிய.. போலி அறிமுகங்களைத் தவிர எதுவும் வேண்டாம் என்று நிர்பந்தத்தோடு தொடங்கிய உறவு அவனை பிரிந்து வந்த பிறகும் அவனை சுற்றியே இருக்கிறது. தன்னுள் முழுவதும் ஆக்கிரமித்திருக்கும் அவனை உணர்கிறாள். தாராவாக தீபிகா படுகோனின் உடல்மொழி, பதட்டம், கெஞ்சுதல், கண்ணீர், ஆத்மார்த்தமான சந்தோஷம் என அத்தனையும் உயிர்பெற்றிருக்கிறது. கார்சிக்காவில் டான் - மோனா என்று தங்களை அறிமுகம் செய்துகொண்டு பழகிப் பிரியும் இருவரும் இந்தியாவில் வேத் - தாராவாக மீண்டும் சந்திக்கிறார்கள். அந்த உலகின் சுதந்திரத்தை இந்த உலகில் இவர்களால் அடைய முடிந்ததா, வேதின் முகத்திரையை கழட்ட தாராவால் முடிந்ததா என்று நகரும் கதையில் ஒவ்வொரு காட்சியும் ரூமியின் ஆத்மாவை கொண்டிருக்கிறது.

இப்பொழுது ஷாருக்கானை வைத்து அவர் இயக்கியிருக்கும் 'ஜப் ஹாரி மெட் செஜல்' படத்தின் மையமும் ரூமியின் "நீ தேடிக்கொண்டிருப்பது உன்னை தேடிக்கொண்டிருக்கிறது" என்பதே!

Shahrukh khan

இன்று அந்த மஹா ரசிகனின், வாழ்வின் வசீகரங்களை கொண்டாடும் கலைஞனின் பிறந்தநாள். இம்தியாஸ் கட்டாயம் தான் தினமும் பிறந்து கொண்டேதான் இருப்பதாய் உணர்வார்.  ராக்ஸ்டாரில் 'நாதான் பரிந்தே' பாடலின் கடைசி நாள் படப்பிடிப்பு முடிந்ததும் ரன்பீர் இம்தியாசை ஓடிவந்து கட்டி அணைக்கிறார். அவர் காலில் விழப்போக.. அவருக்கு முன் இம்தியாஸ் மண்டியிட்டு அவர் முன் விழ.. இருவரும் ஒருவருக்கொருவர் நன்றி சொல்லிக்கொள்கிறார்கள். ரன்பீரின் நடிப்புலக வாழ்வின், இம்தியாஸின் கலைப்பயணத்தின் மறக்க முடியாத ராக்ஸ்டாரின்.. இந்த நெகிழ்ச்சியான தருணத்தை 'தமாஷா'வில் பயன்படுத்தியிருப்பார். 

Imtiaz Ali

இறுதிக்காட்சியில் நாடக கலைஞனாக, கதைசொல்லியாக.. மேடையில்.. கைத்தட்டல்களுக்கு மத்தியில் நிற்கும் வேத் தாராவை நெடுஞ்சாண்கிடையாக விழுந்து வணங்குகிறான். தன் வாழ்வில் அவளது அங்கத்தை அவன் உணர்கிறான். அங்கீகரிக்கிறான். அவனைத் தாரா ஆசீர்வதிக்கிறாள். என்னைப்பொறுத்தவரை அதுவே இம்தியாஸ்! வாழ்க்கையை மாற்றும் ஒரு பயணமாக.. ஒரு தொழுகையாக..  ஓர் ஆசீர்வாதமாக!

http://www.vikatan.com

  • தொடங்கியவர்

காரணம் ஆயிரம்: தக்காளிச் செடியின் தற்காப்புக் கலை!

  • tomoto_plant_1_3174667g.jpg
     
  • tomoto_plant_2_3174668g.jpg
     
  • tomoto_plant_3_3174669g.jpg
     
 

நம் அன்றாட உணவில் தக்காளி தவிர்க்க முடியாத அங்கம். தக்காளி இல்லாமல் வீட்டில் சமையலே இல்லை. தக்காளியைப் பற்றி உங்களுக்கு ஆச்சரியமான செய்தி தெரியுமா? மற்ற எந்தத் தாவரங்களுக்கும் இல்லாத சிறப்பு குணம் ஒன்று தக்காளிச் செடிக்கு இருக்கிறது. பொதுவாக விலங்கினங்கள் தங்களுக்கு ஆபத்து வரும்போது தங்களை அந்த ஆபத்திலிருந்து காப்பாற்றிக் கொள்ளப் பல்வேறு முயற்சிகளை எடுக்கின்றன அல்லவா? திருப்பித் தாக்குகின்றன. ஒரு சிறு பூச்சிகூடத் தன்னிடம் இருக் கும் விஷத்தன்மையால் எதிரியைத் தாக்கி அழிக்கிறது அல்லது காயப்படுத்துகிறது.

ஆனால், பூச்சிகளைவிட ஆயிரம் மடங்கு பெரிதாக இருக்கும் தாவரங்கள் ஏன் எதிரிகளிடம் எதிர்ப்பை வெளிப்படுத்துவதில்லை? தாவரங்களுக்கு உணர்வுத் திறன் இல்லை. அதனால்தான் எதிரிகளைக் கண்டுகொள்ள முடிவதில்லை என்று விஞ்ஞானிகள் சொல்லி வந்தார்கள். ஆனால், தாவரங்களுக்கும் விலங்குகள் போலவே உணர்வுகள் இருப்பதாக விஞ்ஞானிகள் கண்டுபிடித்திருக்கிறார்கள். அப்படிப்பட்ட ஒரு தாவரம்தான் தக்காளிச் செடி. எதிரிகள் வந்தால் தன்னை நெருங்க விடாமல் செய்கிற மாய வித்தையைத் தக்காளிச் செடி தெரிந்துவைத்திருக்கிறது. அப்படி என்ன செய்கிறது? அதற்கு முன் தக்காளிச் செடி பற்றி ஒரு சிறு பின்னணி.

மத்திய மற்றும் தென்னமெரிக்க நாடுகளில்தான் முதலில் தக்காளிச் செடி பயிரிடப்பட்டது. தென்னமெரிக்க நாடான மெக்சிகோவில் முதன்முதலாகத் தக்காளிச் செடி யைப் பயிரிட்டு உணவாக உட்கொள்ளத் தொடங்கினார். Tomate என்ற சொல்லுக்குக் குண்டான பொருள் என்று அர்த்தம். அமெரிக்காவில் உணவுப் பொருளாகப் பயன்பட்ட தக்காளி, ஸ்பெயின் காலனி ஆதிக்கத்தால் பிலிப்பைன்ஸ், கரீபியன் தீவுகள், தென் கிழக்கு ஆசிய நாடு கள் என்று உலகம் முழுவதும் பரவியது.

மந்திரப் பழம்

தக்காளியை மேற்கத்திய நாடுகளில் ‘ஓநாய் பழம்’ என்றுதான் அழைத்தார்கள். சூனியக்காரிகளும் மந்திரவாதிகளும் இந்தத் தக்காளியைப் பயன்படுத்தித் தங்கள் உடலை விலங்கு உடலாக மாற்றி கொள்வதாக நீண்ட காலமாக நம்பி வந்தார்கள். அதுமட்டுமல்ல, இதை விஷச் செடி என்று எண்ணிக் கி.பி.1590 வரை இங்கிலாந்து நாட்டில் பயிரிடவே இல்லை.

காயா, பழமா?

இன்னொரு சுவாரசியமான சம்பவம் அமெரிக்காவில் நடந்தது. அமெரிக்க அரசாங்கம் காய்கறிகள் மீது வரி விதித்தபோது தக்காளியைக் காய்கறிப் பட்டியலில் சேர்ப்பதா, பழங்களின் பட்டியலில் சேர்ப்பதா என அமெரிக்க உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. பல ஆண்டுகளாக நடந்த இந்த வழக்கில் கி.பி.1893-ம் ஆண்டு தக்காளி காய்கறிதான் என்று தீர்ப்பளித்தது. இன்று அமெரிக்காவின் கலிபோர்னியா பல்கலைக்கழகத்தில் மிகப்பெரிய தக்காளி ஆராய்ச்சி மையமே செயல்படுகிறது.

இத்தாலியைச் சேர்ந்த பியட்ரோ ஆண்ட்ரியோ மாட்டியோல் என்ற மருத்துவர் தக்காளிச் செடியை மூலிகைச் செடி என்று கருதினார். தன் மருத்துவத்துக்கு அதைப் பயன்படுத்தி வந்தார். தக்காளியை அலங்காரத் தாவரமாகவே இத்தாலியில் கருதி வந்தனர். தங்கள் வீட்டுப் பூந்தோட்டங்களில் பூந்தொட்டிகளில் வைத்துத் தக்காளிச் செடியை வளர்த்தனர். பூக்கூடைகளிலும் மேஜைகளிலும்கூடத் தக்காளிச் செடியை அலங்காரப் பூக்களாக வளர்த்தனர்.

வழக்கமாக ஒன்று முதல் மூன்று மீட்டர் உயரம் வரை வளரும் தாவரம் தக்காளி. அமெரிக்காவில் உள்ள வால்ட் டிஸ்னி வேர்ல்டு ரிசார்ட் பசுமை வீடு மையத்தில் சாதனைக்காக ஒரு தக்காளிச் செடி வளர்க்கப்பட்டது. அது 32,000 பழங்களைக் காய்த்துத் தள்ளியது. இப்பழங்களின் மொத்த எடை 552 கிலோ. இந்தத் தக்காளி செடி கின்னஸ் புத்தகத்திலும் இடம் பிடித்தது. தற்போது மக்கள் தொகையைப் போலவே உலக அளவில் தக்காளி உற்பத்தியில் சீனா முதலிடத்திலும் இந்தியா இரண்டாவது இடத்திலும் உள்ளது.

அதெல்லாம் சரி, தக்காளி எதிரிகளை எப்படிச் சமாளிக்கிறது? ஒரு பூச்சி தக்காளிச் செடி மீது அமர்ந்து இலையை மென்று தின்ன ஆரம்பிக்கும்போது தக்காளிச் செடியின் பிற பகுதிகள் எச்சரிக்கை அடைகின்றன. பாதிக்கப்பட்ட இலைப் பகுதியிலிருந்து மற்றப் பகுதிகளுக்கு எச்சரிக்கை செய்தி உடனடியாக அனுப்பப்படுகிறது. மின்சாரத் தந்தி மாதிரி மின் சமிக்ஞைகளாக இந்த எச்சரிக்கை செய்தி தக்காளிச் செடியின் பிற பகுதிகளுக்கு எடுத்துச் செல்லப்படுகிறது. தக்காளிச் செடியின் பாதிக்கப்படாத பிற பகுதிகள் ‘சிஸ்டமின்’ என்ற ஹார்மோனை (Harmone) சுரக்கின்றன (இது தாவரத்தின் ஒரு வகை அமினோ அமிலம்).

இந்த ஹார்மோன், பூச்சிகளால் செரிக்க முடியாத வேதிப்பொருள். எனவே மேற்கொண்டு பூச்சிகள் முன்னேற முடியாமல் திரும்பி விடுகின்றன. இவ்வாறு எதிரியைத் தக்காளிச் செடி விரட்டி அடித்து விடுகிறது. அதனால்தான் அழுகிய தக்காளிப் பழத்தைச் சாக்கடை கரையோரம் வீசி எறிந்தால்கூட அவை நன்றாக முளைத்துச் செழித்து வளர்ந்து விடுகின்றன.

தக்காளிச் செடியின் இந்த அதிசயப் பண்புக்காகவே அமெரிக்காவின் நியூ ஜெர்சி மாகாணத்தில் தக்காளியைத் தேசியக் காயாகவும் ஓகியோ மாகாணத்தில் தேசியப் பழமாகவும் அங்கீகரித்திருக்கிறார்கள். ஒரு முழுமையான தக்காளிப் பழத்தில் 94.5 சதவீதம் நீர்ச்சத்து உள்ளது. இது தவிரப் புரதம், கொழுப்பு போன்ற சத்துப் பொருள்களும் பாஸ்பரஸ், மெக்னீசியம் போன்ற கனிமங்களும் உள்ளன.

தக்காளி செடியின் மகத்துவத்தைப் பார்த்தீர்களா?

http://tamil.thehindu.com

  • தொடங்கியவர்

தமிழகத்தில் உள்ள தனியார் தொழில் நிறுவனங்களில், ஓராண்டுக்குள் திருநங்கைகளுக்கு குறைந்தது 100 வேலை வாய்ப்புக்களை உருவாக்கும் நடவடிக்கையை இளம் தொழிலதிபர்கள் முன்னெடுத்துள்ளனர்.

  • தொடங்கியவர்

25 வயது டோரா பொண்ணு

 
dora_3175608f.jpg
 
 
 

“இப்ப நாம எங்க போறோம்? காடு, மலை, டோராவோட வீடு!”

இப்படிக் குரல் ஒலிக்காத தமிழக வீடுகளே இன்று இல்லை. ஒலிப்பது டோராவின் குரல் மட்டுமா... நம் வீட்டு வாண்டுகளின் குரலும்தானே!

டோராவின் அந்த மழலை ததும்பும் குரலுக்குப் பின் ஏதோ ஒரு குழந்தைதான் இருக்கிறது என்று நீங்கள் நினைத்தால், ஸாரி... அந்தக் குரலுக்கு வயது 25!

“1999ம் வருஷம். என்னோட அஞ்சு வயசுல‌, டப்பிங் துறைக்கு வந்தேன். முதல்ல திரைப்படங்களில் குழந்தைக் கதாபாத்திரங்களுக்கு டப் செய்யத் தொடங்கினேன். அப்புறம் டோரா, சோட்டா பீம், சுட்கீ போன்ற கார்ட்டூன் கேரக்டர்களுக்குக் குரல் கொடுத்தேன்” என்பவர், ஜெயா டி.வி.யில் ஒளிபரப்பாகும் 'வீர ஜெய் அனுமான்', ராஜ் டி.வி.யின் 'ஜெய் ஸ்ரீ கிருஷ்ணா' போன்ற தொடர்களில் வரும் குழந்தைக் கதாபாத்திரங்களுக்கும் டப்பிங் செய்கிறார்.

‘தி காஞ்சூரிங் 2’ எனும் பிரபல ஹாரர் படத்தின் தமிழாக்கத்தில் 'ஜானட்' என்ற பெண் கதாபாத்திரத்திற்கும் இவரே குரல் கொடுத்திருக்கிறார்.

“பலரும் ‘டப்பிங்’ செய்யறதை ரொம்ப ஈஸியான விஷயமா நினைக்குறாங்க. ஆனா அது அவ்வளவு சுலபமான காரியமல்ல. எவ்வளவு பெரிய ஆர்ட்டிஸ்ட்டாக இருந்தாலும் கதாபாத்திரத்திற்கு ஏற்ப குரல் கொடுக்க முடியலைன்னா, ‘ரிஜெக்டட்’தான். அதனால ஆடிஷன் மூலமாத்தான் டப்பிங் செய்யறதுக்கான ஆர்ட்டிஸ்ட்டுகளைத் தேர்வு செய்வாங்க.

ஆணோ பெண்ணோ எந்தக் கதாபாத்திரமாக இருந்தாலும் சரி, குரலோடு சேர்ந்து உடல் மொழியும் ஒத்துப்போகணும். அப்போதான் குர‌லில் உயிர் இருக்கும். டப்பிங் செய்யுறப்போ சில சமயம் உச்சரிப்பு

சரியா வரலைன்னா, டப்பிங் ட்ராக்கரும் சவுண்ட் இஞ்ஜினியரும் எனக்கு ஹெல்ப் பண்ணுவாங்க” என்பவர் தமிழில் மட்டுமல்லாமல், தெலுங்கு மலையாளம், ஹிந்தி என்று பல மொழிகளிலும் தன் குரலைப் பதிவு செய்து வருகிறார்.

கலக்குங்க குரலழகி!

http://tamil.thehindu.com

  • தொடங்கியவர்

வலைபாயுதே

facebook.com/Paranirajan Sathyamoorthi

கலைடாஸ்கோப் பார்க்கும் வெண்ணிலா வின் ஒரு கண்ணில் வந்திறங்கும் வண்ணங்களை ஆச்சர்யத்தில் விரியும் அவளின் மறுகண்ணில் பார்க்க முடிகிறது #மகளதிகாரம்.

twitter.com/ikrthik

அவள் அதிகம் பேசுவதில்லை. இமைப்பாள்!

twitter.com/Mahdoomtwits

யார் பார்த்தாலும் பார்க்கலைன்னாலும் குழந்தைங்க அந்தந்த நேரத்துக்கான க்யூட் எக்ஸ்ப்ரஷன்ஸைக் கொடுக்கத் தவறுவதில்லை!

p112a.jpg

twitter.com/thirumarant
 
வழக்கமா பேட்டிகள்ல செயற்கையா இழுத்து இழுத்துப் பேசும் தீபா... இப்ப non-stop ஆ பொளந்து கட்டுது... உண்மை முகம்.

twitter.com/HAJAMYDEENNKS
 
விளம்பரங்களில்கூட கருப்பு நிற குழந்தைகள் வருவதில்லை...!

facebook.com/Umamaheshvaran Panneerselvam

தமிழைத் தூக்கிட்டு இந்தியைத் திணி...
ப்ளாஸ்டிக் அரிசின்னு கெளப்பிவிட்டுட்டு கோதுமையைத் திணி...

twitter.com/Kozhiyaar

இப்பொழுதெல்லாம் நம்பிக்கை துரோகங்கள் ‘ஸ்கிரீன்ஷாட்’ வழியாக நிகழ்த்தப்படுகின்றன!

p112b.jpg

facebook.com/Aruna Raj

மால்ல இருக்கிற பெரிய பெரிய வெளிநாட்டு பிராண்ட் துணிக்கடையில எல்லாம் உள்ளே நுழைஞ்ச உடனே ‘அண்ணே புது துணி எல்லாம் எந்தப் பக்கம் வெச்சிருக்கீங்க?’ அப்படின்னு ஒரு வார்த்தை கேட்டுக்கிறது நல்லது. பூரா துணியும் துவைச்சுக் கசக்கி காயப்போட்டு வெச்ச மாதிரியே இருக்கு.

twitter.com/dhanalakshmirs
 
காட்டாத கண்ணீரைக் கண்டுகொள்ளும் கண்கள் கடவுளுடையவை.

p112c.jpg

twitter.com/teakkadai1
 
ஸ்மியூல் ஆப் பார்க்கும்போது விஜய் டி.வி மிஸஸ் சூப்பர் சிங்கர்ன்னு ஒண்ணு ஆரம்பிச்சா, கடும் போட்டியா இருக்கும்னு தோணுது.

facebook.com/Nelson Xavier

அப்பச்சி வைத்திருந்த மஞ்சப்பை எல்லாம் பிளாஸ்டிக் பையானபோது நாம் கலங்கவில்லை.
செவ்வந்தியும் சாமந்தியும் தவழ்ந்த பூஜை அறைகளில் பிளாஸ்டிக் பூக்கள் கடவுள்களை அலங்கரித்தபோது நாம் பதறவில்லை.

அத்தனை சூட்டையும் தாங்கிய வாழையிலை, ஹோட்டல்களில் பிளாஸ்டிக் இலைகளாக மாறியபோது நாம் கவலைப் படவில்லை.

பார்சல் டீ, காபி வாங்க கூஜாவை தூக்கிக் கொண்டு அலைவதை அவமானமாகப் பார்த்து, பிளாஸ்டிக் பையில் டீ வாங்கிய போது நாம் அதை உணரவில்லை.

நிமிர்ந்து குடிக்கிற இளநீரை வசதிக்காக பிளாஸ்டிக் ஸ்ட்ரா போட்டு குடித்தபோது நமக்கு அது பெரிய விஷயமாக இல்லை.

இலைதழை தின்றுகொண்டிருந்த ஆடு,மாடுகள் பிளாஸ்டிக்கை மென்று விழுங்கியபோது நமக்கு எந்தக் குற்ற உணர்வுமில்லை.

மண்பானையையும், எவர்சில்வரையும் ஒதுக்கிவிட்டு, பிளாஸ்டிக் குடங்களில் நீர்பிடித்தபோது நமக்கு எந்த வலியுமில்லை.

ஒவ்வொருநாளும் கொட்டுகிற குப்பைகளில் 90 சதவிகிதம் பிளாஸ்டிக் பொருட்களாய் இருந்தபோதும் நமக்கு எந்தப் பதற்றமுமில்லை.

இப்போது அரிசியில்தானே பிளாஸ்டிக் வந்திருப்பதாகச் சொல்கிறார்கள். பதற வேண்டியதில்லை. நம்முடைய மூளை பிளாஸ்டிக் ஆகிறவரை ஏதும் பிரச்னையில்லை!

p112d.jpg

twitter.com/kumarfaculty

 ஊசியில் நூல் கோத்தல் கண் பார்வை பரிசோதனையின் முன்னோடி...!


ட்ரெண்டிங்

எங்கு தேர்தல் நடந்தாலும் இணையம் பரபரப்பாகி விடுகிறது. இந்த முறை இங்கிலாந்து தேர்தல். 2020-ம் ஆண்டுதான் இங்கிலாந்து நாடாளுமன்றத்துக்குத் தேர்தல் வந்திருக்க வேண்டும். ஆனால், ஐரோப்பிய யூனியனில் இருந்து இங்கிலாந்து வெளியேறும் என்ற அறிவிப்பால்,சொந்தக் கட்சியில் இருந்த எதிர்ப்பையும் மீறி மீண்டும் தேர்தல் என பிரதமர் தெரேசா மே முடிவு செய்தார். மே அறிவித்தபடி ஜூன் 8 அன்று தேர்தல் நடந்தது. 4.6 கோடி வாக்களர்கள் கொண்ட இங்கிலாந்துத் தேர்தலில் மெஜாரிட்டிக்கு 326 இடங்களில் வென்றாக வேண்டும். ஆனால், தெரேசா தலைமையிலான கன்சர்வேடிவ் கட்சி 317 இடங்களை மட்டுமே வென்றது. தோல்விக்குக் காரணங்களை சீரியஸாக விவாதித்து வருகிறது இணையச் சமூகம். ஒரு கட்டத்தில் மெஜாரிட்டி கிடைக்காததற்கு பொறுப்பேற்று பிரதமர் பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் என்ற குரல்கள் சமூகவலைதளங்கள் வழியே தெரசா மே-வுக்கு நெருக்கடிகளைக் கொடுக்கத் துவங்கியிருக்கின்றன.

Edited by நவீனன்

  • தொடங்கியவர்

சரியான ஒரு புகைப்படத்தினை எடுக்க இவ்வளவு காலம் சென்றதா..?

ஒரு பல்கடை அங்காடியின் முகாமையாளர் அவரின் கனவு புகைப்படத்தினை எடுப்பதற்காக 4 வருடங்கள் 10 ஆயிரம் மைல்கள் மற்றும் 50 ஆயிரம் தடவைகள் முயற்சித்து தனது கனவு புகைப்படத்தினை இறுதியில் புகைப்படம் எடுத்த சம்பவம் மக்களை வியப்பில் ஆழ்த்தியுள்ளது.

416F445700000578-4609128-image-a-68_1497

கேரி ஜோன்ஸ் என்ற புகைப்பட கலைஞர்  மீன்கொத்தி பறவை நீரில் இருந்து வெளியில் வரும் அந்த கணத்தின் காட்சியை புகைப்படம் எடுக்கவேண்டும் என்ற இலட்சியத்தினை கொண்டிருந்தார்.

416F3EDC00000578-4609128-image-a-70_1497

கடைசியாக அவரின் இலட்சியத்தினை 4 வருடங்கள் கழித்து 50 ஆயிரம் தடவைகள் தவறவிட்டு வெற்றியடந்தமை குறிப்பிடத்தக்கது. 

416F417900000578-4609128-image-a-82_1497

416F3EE800000578-4609128-image-a-75_1497

416F48EB00000578-4609128-image-a-76_1497

416F3CFB00000578-4609128-image-a-80_1497

416F3E6300000578-4609128-image-a-78_1497

http://www.virakesari.lk/

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.