Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இளமை புதுமை பல்சுவை

Featured Replies

  • தொடங்கியவர்

சென்னையில் ஒரு திகில் உணவகம்

''பால் நினைந்தூட்டும் தாயினும் சாலப்பரிந்து'' என்பார் மாணிக்கவாசகர். "பேய்கள் சாலப் பரிந்தூட்டும்" உணவகம் ஒன்று சென்னையில் அமைந்திருக்கிறது.

  • Replies 11.3k
  • Views 1.5m
  • Created
  • Last Reply
  • தொடங்கியவர்

பறந்து செல்லும் மீன்!

 
ff_2_3174852f.jpg
 
 
 

பறவைகள் மட்டுமே பறக்கின்றன என்று நினைத்துவிடாதீர்கள். கடலில் வாழும் ஒரு வகை மீனும் பறக்கிறது. தண்ணீரை விட்டு வெளியே வந்த சிறிது நேரத்திலேயே மீன் துடிக்க ஆரம்பித்துவிடுமே! அப்படி இருக்கையில் இந்த மீன் எப்படிப் பறக்கிறது?

ff_1_3174853a.JPG

இந்த மீன் ‘எக்ஸோகோடைடே’ (Exocoetidae) குடும்பத்தைச் சேர்ந்தது. இதை ‘பறக்கும் மீன்’ என்றே அழைக்கிறார்கள். அட்லாண்டிக், பசிபிக், இந்தியப் பெருங்கடல்களில் இவை அதிகம் காணப்படுகின்றன. மீன் நீந்த அதன் துடுப்புகளைப் பயன்படுத்தும் அல்லவா? இந்த மீன் அதைப் பறக்கவும் பயன்படுத்திக் கொள்கிறது. இதன் துடுப்புகள் மற்ற மீன்களுக்கு உள்ளது போல் இல்லை. கொஞ்சம் பெரியதாகவும், பறவைகளின் இறகுகள் போலவும் உள்ளன.

அதனால், கடல் மட்டத்திலிருந்து சற்று உயரே எழுந்து இதனால் பறக்க முடிகிறது. இதன் வால் நிமிடத்துக்குச் சுமார் 70 முறை வேகமாக ஆடக்கூடியது. அதனால் வாலையும் துடுப்பையும் சமநிலையில் வைத்துகொண்டு துடுப்பை நன்றாக விரித்துப் பறக்கிறது. அப்படிப் பறக்கும்போது டால்பின் போலத் தண்ணீரிலிருந்து மேலே எழும்பிப் பறக்கிறது. சுமார் 400 மீட்டர் தூரம்வரை இந்த மீனால் பறக்க முடியும். மீண்டும் தண்ணீருக்குள் செல்லும்போது துடுப்புகளைச் சுருக்கிக் கொண்டு உள்ளே சென்றுவிடும்.

பலே மீன் இது!

http://tamil.thehindu.com

  • தொடங்கியவர்

 

நிலவுக்கு ரோபோ அனுப்பும் இந்திய நிறுவனம்

நிலவுக்கு தனியார் நிறுவனங்கள் ரோபோக்களை அனுப்புவதை ஊக்குவிக்கும் நோக்கத்திலான Google Lunar XPRIZE போட்டியில் இந்த ஆண்டு கலந்து கொள்ள தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கும் ஒரே இந்திய நிறுவனம் டீம் இண்டஸ்.


இந்த நிறுவனம் பெங்களூரில் இருந்து இயங்குகிறது.


இந்த போட்டியின் பரிசுத்தொகை 2 கோடி அமெரிக்கடாலர்.



இந்த போட்டியில் வெல்ல வேண்டுமானால் பங்கேற்கும் குழு தன் ரோபோவை நிலவில் வெற்றிகரமாக இறக்கவேண்டும்.


அந்த ரோபோ குறைந்தபட்சம் 500 மீட்டர் பயணித்து நிலவை ஆராய வேண்டும்.


அங்கிருந்து உயர்தர படங்களை எடுத்து பூமிக்கு வெற்றிகரமாக அனுப்பி வைக்க வேண்டும்.


ஆனால் டீம் இண்டஸ் மிகக்குறைந்த நிதியிலேயே இதையெல்லாம் செய்ய முயல்கிறது.


இதில் வெல்வதற்கு தங்களுக்கு ஒரே ஒரு வாய்ப்பு மட்டுமே இருக்கிறது என்கிறார் ஷீலா ரவிஷங்கர் டீம் இண்டஸ்.


தாங்கள் அனுப்பும் விண்கலன் வெடித்துச் சிதறினால் மாற்று விண்கலன் எதுவும் தம்மிடம் இல்லை என்று கூறும் ஷீலா, “முதல் முயற்சியிலேயே இதை நாங்கள் சரியாக அனுப்பி வெல்வோம் என்கிற நம்பிக்கை இருக்கிறது” என்று பிபிசியிடம் தெரிவித்தார்.


இவர்களின் ரோபோ இந்த ஆண்டு டிசம்பரில் விண்ணுக்கு ஏவப்பட இருக்கிறது.

  • தொடங்கியவர்

ஊட்டி ரயிலில் உற்சாகப் பாடகி!

கு.ஆனந்தராஜ்,, படங்கள்: தி.விஜய்

 

ரு பெண்ணின் நிறைவேறாத கனவு என்னவாகும்? காலத்தின் கரங்களில் தடமில்லாமல் கரைந்துபோகும்.  ஆனால், வள்ளி பாடகியாக வேண்டும் என்ற தன் கனவை, டி.டி.இ ஆன பின்னும் நிறைவேற்றிக் கொண்டிருக்கிறார். ஆமாம். அவரின் நேயர்கள்... ரயில் பயணிகள்!

மேட்டுப்பாளையம் - ஊட்டி மலை ரயில் பயணம், சுகம். தடக் தடக் என்ற இன்ஜின் ஓசை பின்னணி இசையாக, ரசிக்கவைக்கிறது வள்ளியின் தேன்குரல். அவர் டி.டி.இ-யாகப் பணியாற்றும் மேட்டுப்பாளையம் - குன்னூர் வழித்தடப் பயணிகளுக்கு ஜன்னல் வழி மலை, மேகம், பச்சை, பசுங்காற்றுடன் போனஸ்  மகிழ்வு தருவது வள்ளி பாடும் திரைப்பாடல்கள். ‘`தண்டவாளத்தைக் கூட்டிப் பெருக்கும் துப்புரவுப் பணியாளரா வேலையில் சேர்ந்து இன்னைக்கு டி.டி.இ ஆகியிருக்கேன். வாழ நினைக்கிறவங்களுக்கு வழி கொடுக்கத்தான் செய்யுது இந்த வாழ்க்கை” என, அவர் பயோகிராஃபியைக் கேட்கும் ஆர்வத்தை சில வார்த்தைகளிலேயே தூண்டிவிடுகிறார். 

p96a.jpg

“எங்க வீட்டுல ஆறு பிள்ளைங்க. நான் அஞ்சாவது பொண்ணு. பிறந்து வளர்ந்ததெல்லாம் கேரள மாநிலம் ஷொர்ணூர். ஏழ்மையான குடும்பம். அம்மா முனிசிபாலிட்டியில துப்புரவுப் பணியாளராவும், அப்பா ஷொர்ணூர் ரயில்வே ஸ்டேஷன்ல பாயின்ட்ஸ்மேனாவும் வேலைபார்த்து எங்களை வளர்த்தாங்க. மேடை நாடகங்கள்ல பாடவும், நடிக்கவும்னு இருந்த எங்கப்பா, வீட்டுல எங்களுக்கும் பாடச் சொல்லிக்கொடுத்தார். பத்தாவது முடிச்சதும் திருச்சூர்ல ஓர் இசைக்குழுவுல சேர்ந்து மூணு வருஷம் பாடிக்கிட்டு இருந்தேன். ஒருநாள் சம்பளமா நான் வாங்கின 200 ரூபாய், குடும்பத் தேவைக்குப் பெரிய உதவியா இருந்துச்சு. பொழப்புக்காக பாடுறோம்னு இல்லாம, பெரிய பாடகி ஆகணும்ங்கிறது என் வாழ்நாள் கனவாகவும் வளர்ந்தது. நிறைய தமிழ், மலையாளப் பாடல்களைப் பாடக் கத்துக்கிட்டு, மேடை, கைத்தட்டல்கள், ஆட்டம், பாட்டம்னு போயிட்டிருந்த என் வாழ்க்கை திடீர்னு தலைகீழாயிருச்சு’’ என்றவர் சட்டெனப் பயணிகளைப் பார்த்து, ‘ஊருசனம் தூங்கிருச்சு...’ எனப் பாடி, ஒரு குறிப்பிட்ட எழுத்தில் முடிக்கிறார். ரசிகர்களாகிப் போன பயணிகள் அந்த அந்தாக்‌ஷரியை வள்ளியுடன் எடுத்துச் செல்ல, காற்றின் வேகத்தையும் மீறுகிறது அந்தப் பயணத்தின் குதூகலம். ஹில்குரோவ் ஸ்டேஷனில் ரயில் 10 நிமிடங்கள் நின்று புறப்பட, தொடர்கிறார் வள்ளி. 

 “திடீர் உடல் நலக்குறைவால் 1983-ல் தன்னோட பணிக்காலத்துலயே எங்கப்பா இறந்துட்டார். எங்க வீட்டுல பத்தாவது வரை படிச்ச ஒரே ஆள் நான்தான் என்பதால, அவரோட வாரிசா எனக்கு ரயில்வேயில வேலை கிடைச்சது. அப்போ எனக்கு 20 வயசு. ஜானகி அம்மா மாதிரி நானும் சினிமாப் பின்னணிப் பாடகியாகணும்; கேரளா முழுக்க என்னோட குரல் ஒலிக்கணும்ங்கிற ஆசையை  எல்லாம் மூட்டை கட்டிட்டு வேலையில் சேர்ந்தேன். ஆனால், ரயில்வேயில் துப்புரவுப் பணியாளர் வேலை அதுனு தெரிஞ்சப்போ உடைஞ்சுபோயிட்டேன். மனசைக் கல்லாக்கிட்டு, மைக் பிடிச்ச கையால துடைப்பத்தைப் பிடிச்சு வேலை செய்தேன். முன்பு நான் வேலைபார்த்த இசைக்குழுவுல என்கூட வேலை செஞ்ச பலர், ஷொர்ணூர் ரயில் நிலையத்திலிருந்துதான் தினமும் வேலைக்குப் போய் வருவாங்க. அவங்க என் பணிக்கோலத்தைப் பார்த்தா, அவமானமாகிடுமேன்னு துடைப்பத்தோடு அவங்க கண்ணுல பட்டுடாம இருக்க, அவங்க வர்ற நேரம் ஓடிப்போய் ஒளிஞ்சுக்குவேன். இதைக் கவனிச்ச அந்த ஸ்டேஷன் ஹெல்த் இன்ஸ்பெக்டர், என்னைக் கூப்பிட்டு சில வார்த்தைகள் சொன்னார். 

‘எந்த வேலையும் இழிவானதில்லை. வேலை செய்யும் நேரத்துல உனக்குப் பிடிச்ச மாதிரி நீ பாட்டுப்பாடிப் பாரேன்... நீயும் உன்னைச் சுற்றி இருக்கிறவங்களும் சந்தோஷமா இருக்க முடியும்’னு சொன்னார். எந்த இடமா இருந்தாலும், செய்றது என்ன வேலையா இருந்தாலும் நமக்குள்ள இருக்கிற சந்தோஷத்தைக் கொண்டுவர்றது நம்ம கையிலதான் இருக்குங்கிறது அன்னைக்குதான் எனக்குப் புரிஞ்சது’’ என்று சொல்லும் வள்ளிக்கு, இடைப்பட்ட காலத்தில் திருமணம் முடிந்திருக்கிறது. 

p96b.jpg

“மூன்றரை வருஷம் ஷொர்ணூர் ஸ்டேஷன்ல வேலை, அப்புறம் பாலக்காடு ஸ்டேஷனுக்குப் பணிமாறுதல்னு போயிட்டிருந்த வாழ்க்கைக்கு நடுவிலேயும், கூடுதலா இசை கத்துக்கிட்டு வாய்ப்புத் தேடலாம்னு நினைப்பேன். ஆனால், காலையில ஆறு மணிக்குக் கிளம்பி நைட்டு ஏழு மணிக்கு வீடு திரும்புற சூழல்ல, அடுத்தடுத்து மூணு குழந்தைகளும் பிறக்க, சினிமாப் பாடல்களைக் கேட்டுக் கேட்டே இசை கத்துக்க ஆரம்பிச்சேன். வெளியூர் பயணிகளுக்கு நான் இங்கிலீஷ்ல பதில் சொல்ல முயல்வதை கவனிச்சிட்டே வந்த ஓர் அதிகாரி, ‘உனக்குத் திறமை இருக்கு. ஏதாச்சும் புரமோஷனோட டிரான்ஸ்ஃபர் வாய்ப்பு வந்தா சொல்றேன்’னு நம்பிக்கை கொடுத்தார்” என்று சொல்லும் வள்ளி, 17 ஆண்டுகள் குன்னூர் சுற்று வட்டார ஸ்டேஷன்களில் வேலை செய்து வந்த நிலையில், தனது விடாமுயற்சியால் 48-வது வயதில் டி.டி.இ சீருடை அணிந்திருக்கிறார்.

“பிள்ளைங்க வளர்ந்த பிறகு, இனியாச்சும் படிச்சுப் பரீட்சை எழுதி டி.டி.இ வேலைக்குப் போகணும்னு முடிவெடுத்தேன். 47 வயசுல எக்ஸாம் எழுதி ஃபெயில் ஆகிட்டேன். காலம் போன காலத்துல தேவையா இதெல்லாம்னு துவண்டு போகாம, என் கடைசிப் பொண்ணுகிட்ட பொது அறிவு, கணக்கு எல்லாம் கத்துக்கொடுக்கச் சொல்லி, வீட்டுலயும் ரயில்வே பிளாட்ஃபாரத்துலயும், ரயில்லயும் உட்கார்ந்து படிச்சேன். ரெண்டாவது முயற்சியில பாஸ் பண்ணிட்டேன். இப்போ ரெண்டரை வருஷமா மேட்டுப்பாளையம் ஸ்டேஷன்ல டி.டி.இ ஆக இருக்கேன்’’ என்று சொல்லும் வள்ளி, வெளியூர்ப் பயணிகளுக்கு ஊட்டியில் சுற்றிப்பார்க்க வேண்டிய இடங்கள், சாப்பிட, தங்குவதற்கான ஹோட்டல்கள் என்று வழிகாட்டுவதையும் தானாக முன்வந்து இன்முகத்துடன் செய்கிறார்.

வெளி மாநிலப் பயணிகளைப் பார்த்தவுடன்  இந்தி, மலையாளப் பாடல்களையும் பாடி அசத்துகிறார். வெளிநாட்டுப் பயணிகளுடன் கைகோத்து ஆடி உற்சாகமாக்குகிறார். ``ஊட்டிக்கு வர்றவங்க எல்லோரும் டென்ஷன், கவலையெல்லாம் மறந்து ரெண்டுமூணு நாள் சந்தோஷமா இருந்துட்டுப் போகத்தானே வருவாங்க? என்னால முடிஞ்சளவு அவங்களை உற்சாகப்படுத்தத்தான் இதெல்லாம் செய்றேன். எந்தெந்த  ஊரு, நாட்டுல இருந்து வர்றவங்கெல்லாம் ‘சூப்பரா பாடுறீங்க’னு கைகுலுக்கிச் சொல்லிட்டு இறங்கும்போது நிறைவா இருக்கும். மேடை, மைக் இல்லைன்னா என்ன? பார்வையாளர்களா இருக்காங்க என் பயணிகள்... அது போதும்! இப்போ 55 வயசாகுது. இன்னும் அஞ்சு வருஷம் பணிக்காலம் இருக்கு. அதுக்கு அப்புறம் சினிமாவுல சான்ஸ் தேடணும். கிடைக்குமான்னு தெரியலை!”

- வள்ளியின் கண்களில் தேங்கும் நீரை எதிர்க்காற்று வெளியே இழுத்துப்போட்டுக் காட்டிக்கொடுக்க,  புன்னகையால் சமாளிக்கிறார்!

http://www.vikatan.com

  • தொடங்கியவர்

கவாஸ்கர் முதல் சச்சின் வரை... கிரிக்கெட்டில் சிக்ஸர், சினிமாவில் சிங்கிள் பின்னணி!

 
 

விளம்பரப் படங்களில் நடிக்கும் வாய்ப்பு கிரிக்கெட் வீரர்களுக்கு இயல்பாகவே அமையும். அதனாலேயே, கிரிக்கெட் கேரியரின் முடிவுக்குப் பிறகு, சினிமாவில் நடிப்பது கிரிக்கெட் வீரர்களின் சம்பிரதாய சம்பவம் ஆகிவிட்டது. இதோ, சினிமாவில் நடித்த சில கிரிக்கெட் பிரபலங்கள்.

* டெஸ்ட் கிரிக்கெட்டில் 10,000 ரன்களைக் கடந்த முதல் வீரர், சிறந்த ஓப்பனிங் பேட்ஸ்மென், 80-களின் மிகச்சிறந்த கிரிக்கெட் வீரர்களில் ஒருவர் எனப் பல சாதனைகளுக்குச் சொந்தக்காரரான சுனில் கவாஸ்கர் சினிமாவில் சிக்ஸர் அடிக்கவில்லை என்றாலும், சிங்கிள் தட்டியிருக்கிறார். 1980-ல் வெளியான 'சவ்ளீ ப்ரீமசி' என்ற மராத்தி படத்திலும், 1988-ல் வெளியான 'மாலமால்' என்ற பாலிவுட் படத்திலும் சுனில் கவாஸ்கர் சிறப்புத் தோற்றத்தில் நடித்தார்.

* உலகப்புகழ் பெறவில்லை என்றாலும், ஓரளவுக்குப் பெயர் தெரியும்படி விளையாடிய கிரிக்கெட் வீரர், அஜய் ஜடேஜா. 1996-ல் நடந்த உலககோப்பை காலிறுதிப் போட்டியில் பாகிஸ்தானுக்கு எதிராக 25 பந்துகளில் இவர் விளாசிய 45 ரன்கள் மறக்கமுடியாதது. மேட்ச்-பிக்சிங்கில் ஈடுபட்டதாக விளையாடத் தடை விதிக்கப்பட்டு, அதில் இருந்து மீண்டவர், மீண்டும் கிரிக்கெட்டில் பெரிய அளவுக்குக் கவனம் செலுத்த முடியவில்லை. 2003-ல் பாலிவுட்டில் வெளியான 'கேல்' என்ற ஆக்‌ஷன் படத்தில் சன்னி தியோலுடன் இணைந்து நடித்தார் அஜய் ஜடேஜா. 'நடிச்சா ஹீரோ' என்று நினைத்தாரோ என்னவோ, சில வருட இடைவெளிக்குப் பிறகு 'பல் பல் தில் கே சாத்' படத்தில் ஹீரோ ஆனார். இதே படத்தில் சக கிரிக்கெட் வீரர் வினோத் காம்ப்ளி நடித்திருந்தார். சின்னத்திரையில் 'செலிபிரெட்டி டான்ஸ் ஷோ', 'காமெடி ஷோ'க்களில் கலந்துகொண்டவர், இப்போது கிரிக்கெட்டைச் சார்ந்தே இயங்கிக்கொண்டிருக்கிறார். 

கிரிக்கெட் சினிமா

* இந்திய கிரிக்கெட் அணிக்கு முதல் உலகக்கோப்பையைப் பெற்றுக்கொடுத்த கேப்டன், இந்திய கிரிக்கெட் அணியின் ஜாம்பவான்களில் ஒருவர்... கபில் தேவ். கிரிக்கெட்டில் காட்டிய ஆர்வம் சினிமாவில் இல்லை என்றாலும், 'இக்பால்' படத்தில் சிறப்புத் தோற்றத்தில் தலைகாட்டினார்.

* இந்திய அணியின் அதிரடி ஆட்டக்காரர் யுவராஜ் சிங்கின் தந்தை, யோகராஜ் சிங் பஞ்சாபி, பாலிவுட் உள்பட 40 படங்களில் நடித்தவர். அப்பா யோகராஜ் நடித்த 'மென்டி சக்னா டி' என்ற பஞ்சாபி படத்தில் நடித்தபோது, 11 வயது யுவராஜ் சிங்கும் குழந்தை நட்சத்திரமாக இப்படத்தில் அறிமுகம் ஆனார். பிறகென்ன? கிரிக்கெட் அளவிற்கு இல்லையென்றாலும், சினிமா மீது யுவராஜ் சிங்கிற்கு ஆர்வம் அதிகம். அனிமேஷன் படங்களை விரும்பிப் பார்ப்பார். 'ஜம்போ' என்ற பாலிவுட் அனிமேஷன் படத்திற்குக் குரல் கொடுத்திருக்கிறார். வெளியாகாமல் இருக்கும் 'கேப்டன் இந்தியா' என்ற அனிமேஷன் படத்தில் கார்ட்டூன் கேரக்டரில் நடித்திருக்கிறார் யுவராஜ் சிங்

யுவராஜ் சிங் - சினிமா

* மொட்டைத் தலையும், முரட்டு மீசையுமாய் வலம் வந்த இந்திய கிரிக்கெட் அணியின் சையத் கிர்மானி, சக கிரிக்கெட் வீரர் சந்தீப் பாட்டிலுடன் இணைந்து 'கபில் அஜ்னாபி தே' என்ற பாலிவுட் படத்தில் ஆக்‌ஷன் காட்சியில் வில்லத்தனம் காட்டியிருக்கிறார். 

* சச்சின் டெண்டுல்கரின் பால்ய நண்பர். பள்ளிகளுக்கு இடையேயான போட்டியில் சச்சினுடன் இணைந்து 664 ரன்கள் பார்ட்னர்ஷிப் போட்டவர், வினோத் காம்ப்ளி. தன் கிரிக்கெட் கேரியரின் வீழ்ச்சிக்குப் பிறகு அரசியல், சினிமா, சின்னத்திரை என மாறி மாறி சுற்றிக்கொண்டிருந்தார். 2002-ல் வெளியான 'அனார்த்' என்ற பாலிவுட் படத்தின்மூலம் நடிகராக அறிமுகம் ஆனார். அஜய் ஜடேஜா ஹீரோவாக நடித்த 'பல் பல் தில் கே சாத்' படத்தில் துணை நடிகர். 2015-ல் வெளியான 'பெட்டனாஜெர்' என்ற கன்னடப் படத்தில் சிறப்புத் தோற்றத்தில் நடித்தார். 

* ஆக்ரோஷம், புகார், சர்ச்சை, தடை... என தனது கிரிக்கெட் கேரியரின் தொடக்கத்தில் இருந்து முடிவுவரை பரபரப்புகளுடனேயே சுற்றிக்கொண்டிருந்த ஶ்ரீசாந்த், சூதாட்ட சர்ச்சையால் கிரிக்கெட் விளையாடத் தடை செய்யப்பட்டார். பிறகு, சினிமாவில் களமிறங்கியவர், இப்போது அரசியலிலும் பிஸி. பாலிவுட்டில் வெளியான 'அக்ஸார்-2', மலையாளத்தில் வெளியான 'டீம் 5' இரண்டு படங்களும் 'நடிகர்' ஶ்ரீசாந்தின் அடையாளங்கள்.

* ஆஸ்திரேலியாவில் தயாரான 'அன்இந்தியன்' திரைப்படத்தில் பிரெட்லீ ஹீரோ. தனது ஆக்ரோஷமான பந்துவீச்சால் எதிரணி பேட்ஸ்மென்களைத் திணறடித்த பிரெட்லீ, இப்படத்தில் ரொமான்ஸ் நாயகனாக ஜொலித்தார். 

* சச்சின் டெண்டுல்கர்... அறிமுகம் தேவையா என்ன? தனது பயோ-பிக் படமான 'சச்சின்: எ பில்லியன் ட்ரீம்ஸ்' திரைப்படத்தில் நடிக்கவில்லை என்றாலும், தனது வாழ்க்கையின் சுவாரஸ்யமான, துயரமான, துரதிர்ஷ்டவசமான, சந்தோஷமான தருணங்களைப் பேசிப் பகிர்ந்துகொண்டார். சச்சின் பேசியதற்கே, தியேட்டரில் விசில் சத்தம் காதைக் கிழித்தது.

பிராவோ - சினிமா

* தமிழக வீரர்  சடகோபன் ரமேஷ், கிரிக்கெட்டில் பெரிய அளவில் சாதனை செய்தவர் அல்ல. ஆனால், அனில் கும்ப்ளே பத்து விக்கெட்டுகள் வீழ்த்தி சாதித்த டெஸ்ட் போட்டியில், முதல் இன்னிங்ஸில் 60 ரன்களும், இரண்டாவது இன்னிங்ஸில் 96 ரன்களும் அடித்து, இந்திய அணியின் வெற்றிக்கு உதவியவர். கிரிக்கெட்டில் இருந்து ஒதுங்கியபிறகு, ஜெயம் ரவி நடித்த 'சந்தோஷ் சுப்பிரமணியம்' படத்தில் நடிகராக அறிமுகம் ஆனார். கிரிக்கெட்டை மையப்படுத்தி உருவான 'போட்டா போட்டி 50/50' படத்தில் ஹீரோவாக நடித்தார். சடகோபன் ரமேஷ் மட்டுமல்ல, வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் வீரர் பிராவோ, 'உலா' என்ற தமிழ் திரைப்படத்தில் ஒரு குத்தாட்டம் போட்டியிருக்கிறார். 

 

சரி... கிரிக்கெட் வீரர்களின் பயோ-பிக் படங்கள் வந்துகொண்டிருக்கும் சீஸன் இது. கிரிக்கெட் வீரர்கள் நடிப்பதை விடுங்க... எந்தெந்த கிரிக்கெட் வீரர்களின் வாழ்க்கையைத் திரைப்படம் ஆக்கலாம்?

http://www.vikatan.com

  • தொடங்கியவர்
‘எல்லாமே மாயை; கனவு’
 

image_2d2d7fdb9a.jpgதர்ம காரியங்களில் ஈடுபடும் பொது நிறுவனத்தைச் சேர்ந்த அன்பர் ஒருவர், இல்லம் சென்று நிதியுதவி கோரினார். மிகவும் வற்புறுத்தியமையினால் அவர் பத்தாயிரம் ரூபாய் தருவதாகக் கூறினார். அவர்கள் சென்றதும் அவர் மனம் அலைபாய்ந்தது. தெரியாமல் வாக்குக்கொடுத்து விட்டேனே; இனி என்ன செய்வது என்று யோசித்தவாறு மனம் உடைந்துபோனார்.

திடீரென நித்திரை கலைந்து, விழிப்பு நிலைக்கு வந்தபோதுதான், அடடா! நான் இப்போது கண்டதெல்லாம் கனவா... நல்ல காலம் நான் தப்பித்துக் கொண்டேன். எனக்குப் பத்தாயிரம் ரூபாய் இலாபம் எனச் சந்தோசப்பட்டார் அந்த அப்பாவி மனுசன்.

எல்லாமே மாயை; கனவு. இவை தான் வாழ்க்கை என்பார்கள். ஆனால், எதையும் விட்டுக்கொடுக்க மனிதர்கள் தயாராகவில்லை. இறந்தவன் பல வருடங்களின் பின்னர் விழித்தெழுந்தால், இந்த உலக மாற்றங்களைக் கேட்டு என்ன சொல்வான்? அடஇதுதானா வாழ்க்கை? உறங்கி விழித்ததுபோல் இருக்கிறது. அப்படியானால் நான் யார்? பதிலைத் தேடுக!

  • தொடங்கியவர்

தியாகத் துதி வேண்டாம்... பெண்களுக்கு மறுமணம் அவசியம்..!#ChangeTaboo #SupportRemarriage

 
 

பெண்

விபத்து, நோவு போன்ற காரணங்களால் கணவரை இழந்த பெண்கள், அதற்குப் பிறகான வாழ்வை எப்படி வாழ வேண்டும் என்பதற்கு இந்தச் சமூகம் கண்டிப்புடன் கூடிய ஒரு வரையறை வைத்திருக்கிறது. அதேபோல, கணவனிடம் விவாகரத்துப் பெற்றோ, அவனிடமிருந்து விலகியோ தனித்து வாழும் பெண்களுக்கும் அது ஒரு வட்டம்போட்டுக் கொடுத்து, 'இதற்குள் வாழ்' என்கிறது. 

இந்தப் பெண்களுக்கான கட்டுப்பாடுகளில் முதன்மையானது... மற்றொரு துணை பற்றிய எண்ணம் வராமல் அவர்கள் தங்களின் குழந்தைகளுக்காக ஒரு தியாக வாழ்க்கை வாழ வேண்டும் என்பது. அவ்வாறு வாழும் பெண்களை, 'அவ நெருப்பு மாதிரிப் பொம்பள', 'புள்ளைகளுக்காகவே வாழுறவ' என்று துதி பாடித் துதி பாடியே, உணர்வுகளைக் கொன்ற ஒரு வாழ்க்கையை அவள் வாழப் பழக்குகிறது.  

திருமணம் ஆகி சில ஆண்டுகளில் கணவனை இழந்த, கணவனிடமிருந்து விவாகரத்துப் பெற்ற பெண்கள் பலர், கையில் குழந்தைகளை வைத்துக்கொண்டு, வைராக்கியத்துடனும் கடின உழைப்புடனும் வாழ்க்கையை எதிர்கொள்ள ஆரம்பிக்கிறார்கள். தங்கள் குழந்தைகளை அருமையாக வளர்த்து, படிக்கவைத்து, பெரிய வேலைகளில் உட்கார வைத்து, கல்யாணம் செய்து, பேரன் பேத்திகளைப் பார்த்து, என இந்த வாழ்வை வாழ்ந்து முடித்துவிடுகிறார்கள். இந்த அம்மாக்களுக்குத் தங்கள் குடும்பம் மட்டுமே உலகம். அப்படி அவர்கள் தங்கள் உலகத்தை மாற்றிக்கொள்கிறார்கள். இப்படியான பல பெண்களை நாம் கடந்திருப்போம். 

பெண்

ஆனால் ஓர் ஆணுக்கோ, ஒரு பெண்ணுக்கோ தன் பிள்ளைகளைத் தாண்டி, தன் அப்பா அம்மாவைத் தாண்டி, ஒரு துணை எக்காலத்திலும் தேவைப்படுகிறது. இதுதான் இயற்கை. அது உடல் சார்ந்தது மட்டுமல்ல. மனம் சார்ந்ததும்கூட. அது சரி... திருமணத்துக்குத் தன் துணையைத் தேர்ந்தெடுக்கும் சுதந்திரத்தையே பெண்களுக்கு வழங்காத நம் குடும்ப, சமூக அமைப்பு, மறுமணத்தில் என்ன உரிமை கொடுத்துவிடும் அவர்களுக்கு? 

இந்த விஷயத்தில் நாம் மேற்குலக நாடுகளை எடுத்துக்காட்டாகக் கொள்ளவேண்டும். அங்கே திருமணத்துக்கு வயது ஒரு தடை அல்ல. திருமணம் (Companionship) என்பது ஒரு 'Mutual Respect' ஆக அங்கே இருக்கிறது. ஒரு பெண் தனது துணையைத் தேர்ந்தெடுக்கும் சுதந்திரம் அங்கே இருக்கிறது. அது திருமணத்துக்கு முன்பும் சரி, திருமணத்துக்குப் பின்பும் சரி. கணவன் இறந்துவிட்டாலோ, கைவிட்டுவிட்டாலோ ஒரு பெண் அங்கே துவண்டு போய்விடுவதில்லை. அதற்குக் காரணம் என்ன? நிறைய இருக்கின்றன! 

அங்கே, நம் ஊரைப் போன்ற குடும்பம் என்ற பிடிமானம் கிடையாது. உடனே, அவர்கள் பாசமற்றவர்கள் என்றோ, இரக்கமில்லாதவர்கள் என்றோ அர்த்தமில்லை. நம் ஊரை விட, தங்களது வயதான பெற்றோர்களைப் பார்த்துக்கொள்ளும் பிள்ளைகள் அங்கே அதிகம் இருக்கிறார்கள். ஆனால், நமக்கும் அவர்களுக்கும் உள்ள முக்கிய வித்தியாசம்... Respect for Individual Freedom. அதாவது, தனி நபர் சுதந்திரம். 

அங்கெல்லாம் ஒருவனது வாழ்க்கைக்கு அவன் மட்டுமே பொறுப்பாகிறான். ஒரு மனிதன் தன்னைத்தானே பார்த்துக்கொள்ள வேண்டும் என்பது அவர்களின் பண்பாடாக இருக்கிறது. இதனால், பள்ளிப்படிப்பு முடியும் தருவாயிலேயே பெற்றோரை சாராமல் பிள்ளைகள் வாழ்கிறார்கள். பெற்றோர்களுக்கும், தங்களுக்கான வாழ்க்கையை வாழ ஒரு வெளி கிடைக்கிறது. இந்த வெளி நம் ஊர்ப் பெற்றோர்களுக்குக் கிடையாது. கல்யாணம் ஆகி, குழந்தைப்பேறில் ஆரம்பித்து குழந்தைகளின் படிப்பு, வேலை, கல்யாணம், பேரன், பேத்தி என எல்லாவற்றையும் சுமக்கும் பொறுப்பு அவர்களிடம் வந்துவிடுகிறது. அவர்களுக்கான வாழ்க்கையை அவர்கள் இதனூடேதான் வாழவேண்டி இருக்கிறது. இதில், இருவர் ஒருவர் ஆகும்போது பிரச்னை இன்னும் பெரிதாகிறது. 
 
'இதெல்லாம் நம்ம ஊருக்கு ஒத்துவராதுங்க. நம்ம கலாசாரம் என்னாவது, நம்ம பண்பாடு என்னாவது?' ஒரு சமூகத்தை அடிமைப்படுத்தி கலாசாரத்தைக் காப்பதற்கு, மேற்கு நாடுகள் மதிப்பளிக்கும் தனி நபர் சுதந்திரம் எவ்வளவோ மேல். துணை வேண்டாம் என்பது சம்பந்தப்பட்ட பெண்ணின் சுய முடிவெனில், அதுவும் அவளின் தனி நபர் சுதந்திரம்தான். ஆனால், இந்தச் சமூகத்துக்குப் பயந்து அந்த முடிவை எடுக்கும் பெண்களைப் பற்றியே நாம் இங்கு பேசுவது. அந்த எண்ணம்கூட வராத அளவுக்கு அவளைச் சுற்றியுள்ள உலகம் அவளைத் தன் கலாசாரக் கட்டுப்பாட்டில் வைக்கிறது.  

இளவயதில் கணவனை இழந்தாலோ அல்லது ஒரு கசப்பான திருமண முறிவு ஏற்பட்டாலோ, பல பெண்கள் தங்களது வாழ்க்கையைச் சுருக்கிக்கொள்கிறார்கள். 'இனி இந்த வாழ்க்கை எனக்கானது அல்ல. என் பிள்ளைக்கானதும், என் குடும்பத்துக்கானதும்' என்று மாற்றிக்கொள்கிறார்கள். தங்கள் குடும்பத்தைத் தாண்டியும் 'தங்களுக்கான'  ஒரு வாழ்க்கை இருக்கிறது என்று இவர்கள் யோசிப்பதில்லை. தங்களது கூட்டை விட்டு இவர்கள் வெளியே வர விரும்புவதில்லை.

நம் ஆணாதிக்கச் சமூகமும் இதற்கு ஒரு காரணம் என்பதை மறுப்பதற்கில்லை. சமூகம் மாற காலம் ஆகலாம். நம்மளவில் நாம் என்ன செய்யலாம்? சிங்கிள் மதர் பெண்களிடம், அவர்களின் குடும்பத்திடம், அந்தப் பெண்களின் மறுமணம் குறித்து வலியுறுத்தலாம். அவர்களுக்கு நிச்சயம் ஒரு துணை தேவை; அந்த எண்ணமும் உணர்வும் தவறில்லை இயல்பு என்பதான உரையாடல்களைக் குடும்ப அமைப்புகளில் முன்னெடுக்கலாம். குழந்தைகளுக்காகத் தன் சுயம் கொன்று வாழும் ஒரு பெண்ணைக் கண்டால், 'உன்ன மாதிரி முடியுமா ராசாத்தி' என்று கொண்டாடி, 'அதுதான் சரி' என்ற தீர்ப்பை அவள்மீது சர்க்கரை தடவிய விஷமாகத் திணிக்காமல் இருக்கலாம். 'உனக்காக வாழத்தான் நீ பிறந்திருக்க. உம்பிள்ளைங்க வேணும்னா உனக்கு உலகமா இருக்கலாம். ஆனா 18 வயசுக்கு மேல, அதுங்களுக்கு நீயும் ஓர் உறவாகிடுவ. அதனால, உனக்காக வாழு. அது தப்பில்ல. அதுதான் சரி' என்று பேசி, அவள் தியாகச் சால்வையைக் கிழித்தெறிந்து அவளை மீட்கலாம். 

 

செய்வோம்! 

http://www.vikatan.com

  • தொடங்கியவர்

சினிமா வீடு: ஜோதிகா ‘சந்திரமுகி’ ஆன வீடு

 

 
a_3176032f.jpg
 
 
 

கர்நாடக மாநிலத்தில் , அரசர் வாழ்ந்த அரண்மனை என்றாலே நமக்கு நினைவுக்கு வருவது மைசூர் அரண்மனைதான், ஆனால் கர்நாடகாவில் புகழ்பெற்ற இன்னொரு அரண்மனையும் இருக்கிறது. அதுதான் பெங்களூர் பேலஸ். பெங்களூரு கண்டோன்மண்ட் ரயில் நிலையத்தின் மிக அருகில் அமைந்திருக்கிறது, இந்த அரண்மனை. இந்த அரண்மனைக்கு இன்னொரு பெருமையும் இருக்கிறது. சூப்பர்ஸ்டார் ரஜினி காந்த் நடித்து சூப்பர் ஹிட் ஆன ‘சந்திரமுகி’ படத்தின் பல காட்சிகள் இங்குதான் படமாக்கப்பட்டுள்ளன.

சந்திரமுகி படப்பிடிப்புக்காக இந்த அரண்மனையின் பல அறைகள் வாடகைக்கு எடுக்கப்பட்டன. ஒரு நாளின் வாடகை மட்டும் சுமார் ரூ. 1.5 லட்சம். படத்தில் காட்டப்படும் சந்திரமுகியின் அறை, உண்மையில் இந்த அரண்மனையின் அரசர் தங்கும் அறை. படத்தில் நடிகை மாளவிகா, படிக்கட்டுகளில் ஓடிவந்து மயங்கி விழும் காட்சிகள் இங்குதான் படமாக்கப்பட்டன.

s_3176029a.jpg

பல மந்திரக் கயிறுகள் கட்டப்பட்டுப் பெரிய பூட்டுப் போடப்பட்டிருக்கும் சந்திரமுகியின் அறைக் கதவு, படக்குழுவினரால் அமைக்கப்பட்ட செட். அது உண்மையான அறையின் கதவுக்கு முன்னால் பொருத்தப்பட்டது. கதவைத் தவிர்த்து மற்ற அறைகள் அனைத்தும் உண்மையானதே. படத்தில் ஜோதிகா ஜன்னல் வழியாக நடனக் கலைஞரான வினீத் வீட்டைப் பார்த்துத் தன் காதலன் எனக் கற்பனைகொள்வது மாதிரியாகக் காட்சி இருக்கும்.

அந்தக் காட்சியில் வரும் வினீத்தின் வீடு, அங்கே அரண்மனைக்கு அலுவலக ரீதியாக வருபவர்கள் ஓய்வெடுக்கும் விருந்தினர் மாளிகை. இங்கு பல இந்திப் படங்களும் படமாக்கப்பட்டுள்ளன. இந்த அரண்மனை 1887-ல் கட்டி முடிக்கப்பட்டது. மைசூர் ராஜ வம்சத்துக்குச் சொந்தமானது.

d_3176031a.jpg

இந்த அரண்மனை லண்டனில் இருக்கும் வின்ட்சர் கோட்டையை முன்மாதிரியாகக் கொண்டு உருவாக்கப்பட்டது எனக் கூறப்படுகிறது. இதன் கீழ்தளத்தில் மிகப் பெரிய நடுமுற்றம் உள்ளது. இந்தப் பகுதியில் செராமிக் டைல்களும் கிரானைட் கற்களும் பதிக்கப்பட்டுள்ளன. கீழ்த் தளத்தில் மிகப் பெரிய கேளிக்கை அரங்கும் உள்ளது. முதல் தளத்தில் தர்பார் அறை உள்ளது. தர்பார் என்பது அரச சபை. இந்த அறையில்தான் ராஜாங்க அலுவல்கள் எல்லாம் நடக்கும். அதற்குச் செல்லும் படிக்கட்டுகள் அகலமானவை மட்டுமல்ல; மிகக் கம்பீரமானவை. அதன் இருபுறத்திலும் கம்பீரமான சிலைகள் நிறுவப்பட்டுள்ளன.

தர்பார் அறையின் இருபுறங்களிலும் ராஜாரவிவர்மாவின் ஓவியங்கள் மாட்டப்பட்டுள்ளன. ஜன்னல்கள் கண்ணாடிகளால் வடிவமைக்கப்பட்டுள்ளன. கிரேக்க, டச்சு ஓவியங்களால் உள்சுவர் அழகுபடுத்தப்பட்டுள்ளது. நாற்காலிகள், மேஜைகள் எல்லாம் சீன வடிவமைப்பில் உருவாக்கப்பட்டுள்ளன. இவ்வளவு பிரம்மாண்டமான இந்த அரண்மனையை மக்கள் பார்ப்பதற்குச் சில வருடங்களுக்கு முன்னர்தான் அனுமதி வழங்கப்பட்டிருக்கிறது. இதன் நுழைவுக் கட்டணம் இந்தியர்களுக்கு ரூ. 225. வெளிநாட்டவர்களுக்கு ரூ. 450.

jothik_3176033a.jpg

120 ஆண்டுகள் பழமையான இந்த அரண்மனை, சுற்றிலும் மரங்கள், பூக்கள் நிறைந்த தோட்டம், நுழைவாயிலில் பிரம்மாண்டமான கதவு, ஆகாயத்தை எட்டும் கோபுரங்கள் என அற்புதமான கலைநயத்துடன் 430 ஏக்கர் நிலப்பரப்பில் கட்டப்பட்டுள்ளது. திரைப்படங்களுக்கு மட்டுமல்லாமல் திருமணத்துக்கும் இந்த அரண்மனை வாடகைக்கு விடப்படுகிறது. அரண்மனைக்கு உள்ளே இருக்கும் மன்றத்தில் அல்லது அரண்மனையின் வெளியிலிருக்கும் தோட்டத்தில் திருமணங்கள் நடக்கின்றன.

http://tamil.thehindu.com

  • தொடங்கியவர்

 

கோடையில் குழந்தைகளை குளிர்ச்சியாக வைத்திருப்பது எப்படி?

கொளுத்தும் கோடை வெப்பத்திலிருந்து குழந்தையை பாதுகாப்பது எப்படி? சில யோசனைகளைத் தருகிறார் லியோ.



குழந்தைகள் மீது நேரடி சூரிய ஒளிபடாமல் வைத்திருங்கள். குறிப்பாக காலை 11 முதல் மாலை 3 மணி வரை.


கோடைத்தொப்பி குழந்தைகளுக்கு மிகவும் பிடிக்கும். அதிலும் அகலமான தொப்பி குழந்தைகளின் தலையை குளிர்ச்சியாக வைக்க உதவும்.


குழந்தைகளின் தள்ளுவண்டியின் மேல் வெயில்படாமல் இருக்க குடையோ, சூரிய மறைப்போ வையுங்கள்.

ஆனால் அதன்மேல் போர்வையைக்கொண்டு மூடாதீர்கள். அது வெப்பத்தை இன்னும் அதிகப்படுத்தி விடும்.

நிழலில் இருக்கும் தண்ணீர் தொட்டியில் விளையாட குழந்தைகளை அனுமதியுங்கள். ஆனால் கூடவே இருந்து தொடர்ந்து கண்காணியுங்கள்.

சன்கிரீமை தடவுங்கள். குழந்தைகளின் மிருதுவான சருமத்தை பாதுகாக்கவல்ல தரமான சன்கீரீமாக தேர்ந்தெடுங்கள்.

குறிப்பாக குழந்தைகளின் காதுமடல்களை மறக்காதீர்கள். அதிகம் நீரில் விளையாடினால் கூடுதலாக சன்கிரீம் தடவுங்கள்.

குழந்தைகளுக்கு குடிக்க ஏதாவது கொடுத்தபடி இருங்கள். புட்டிப்பாலுடன்
ஆறவைத்த தண்ணீரும் கொடுக்கலாம்.

தாய்ப்பால் மட்டுமே குடிக்கும் குழந்தையென்றால் அதற்கு கூடுதல் தாகமெடுக்கக்கூடும்.

ஆறுமாதங்களுக்கு மேலான குழந்தைகளுக்கு அதிகமான தண்ணீர் கலந்த பழரசமும், வீட்டில் தயாரித்த குச்சி ஐஸும் கொடுக்கலாம்.

இரவிலும் குழந்தைகளுக்கு குளிர்ச்சி தேவை. படுக்கப்போகும் முன்னான குளியலும், குழந்தைகளின் அறையில் மின்விசிறியும் தேவை.

  • தொடங்கியவர்

ஜூன் 17: ஜான்ஸி ராணி லட்சுமிபாய் நினைவு தின சிறப்பு பகிர்வு

''போராடி இறப்பது அடங்கிக்கிடப்பதை விட மேல்'' என்று ஆங்கிலேயரை எதிர்த்து உயிர் விட்ட ஜான்சி ராணி லட்சுமி பாய் நினைவு தினம் இன்று..

பித்தூர் மாவட்ட பெஷ்வாவிடம் வேலை பார்த்துக்கொண்டு இருந்தார் இவரின் தந்தை. அங்கே சுட்டிப்பெண்ணாக அவரை ஈர்க்கவே இவரை தன் சொந்த மகள் போல பெஷ்வா வளர்த்தார். மணிகர்ணிகா என்று இளம் வயதில் அழைக்கப்பட்ட அவர் ஜான்சியின் அரசர் கங்காதர் ராவுக்கு திருமணம் செய்துவைக்கப்பட்டார். பிறந்த ஆண் குழந்தை நான்கே மாதங்களில் இறந்து போனது. அதற்கு பின் வாரிசு இல்லாமல் போகக்கூடாது என்பதற்காக உறவுக்கார பையனை தத்தெடுத்து தாமோதர் ராவ் என்று பட்டம் சூட்டினார்கள்.

டல்ஹவுசி இந்தியாவின் கவர்னர் ஜெனரல் ஆகியிருந்தார். ஆங்கிலேய ஆதிக்கத்தை இந்தியா முழுக்க பரப்ப வேண்டும் என்பதில் தெளிவாக இருந்த அவர். ஏற்கனவே கப்பம் கட்டிக்கொண்டும்,அடிபணிந்தும் கொண்டிருந்த அரசுகளை கைப்பற்ற கிளம்பினார். வாரிசுகளை தத்தெடுக்க கூடாது ; அப்படியே எடுத்தாலும் அதற்கு ஆங்கிலேய ஆட்சி அனுமதி தரவேண்டும். அப்படி தரப்படவில்லை என்றால் அந்த அரசு ஆங்கிலேயர் வசம் போய்விடும் என்பது அவரின் புதுக்கொள்கையாக இருந்தது. இதை அவகாசியிலிக் கொள்கை என்று அழைத்தார் அவர்.

சத்தாரா, செய்ப்பூர், சம்பல்பூர் , நாக்பூர் என்று அரசுகளை அள்ளிப்போட்டுக்கொண்டார் டல்ஹவுசி. ஜான்சியும் மன்னரைஇழந்து ஜான்சி ராணி வசம் வந்திருந்தது. அதே காரணத்தை சொல்லி வாரிசை ஏற்காமல் அரியணையை விட்டு நீக்கி அறுபாதாயிரம் ஓய்வுத்தொகை என்றும் அறிவித்தார்கள். அமைதியாக அப்பொழுது இருந்தாலும் காத்திருந்தார் லட்சுமி பாய்

எண்பத்தி ஏழு காலத்துக்குள் பசி என்றால் என்னவென்றே அறியாத இந்தியாவின் பல பகுதிகளில் பெரிதாக பன்னிரெண்டு பஞ்சங்கள் ஏற்பட்டு இருந்தன . முக்கியமான காரணம் இந்தியாவின் விவசாயம் மற்றும் கைவினைத்தொழில்களை ஆங்கிலேய அரசு ஒட்டுமொத்தமாக காலி செய்து இருந்தது . நிலவரியை ஏகத்துக்கும் ஏற்றியது . ஜமிந்தார்களிடம் சிக்கிக்கொண்டு இருந்த மக்கள் இப்பொழுது லேவா தேவி காரர்களிடம் சிக்கி நிலங்களை இழந்தார்கள் . அரசர்களின் இடங்கள் பறிக்கப்பட்ட பொழுது அங்கே வேலை செய்தவர்கள் நடுத்தெருவில் நின்றார்கள். அரசின் சதி ஒழிப்பு முதலிய நடவடிக்கைகள் மற்றும் கிறிஸ்துவ மிஷினரிகளின் மத பிரச்சாரம் நாட்டில் அச்சத்தை உண்டு செய்தது.

சிப்பாய்களுக்கு சம்பளம் குறைவாக இருந்தது ; கடல் கடந்து போகவும் சொல்லி மதநம்பிக்கைக்கு எதிராக கட்டாயப்படுத்தினார்கள். பன்றி மற்றும் மாட்டு கொழுப்பால் ஆகியிருந்த கேட்ரிட்ஜை லோட் செய்ய மறுத்து மீரத்தில் புரட்சி வெடித்தது. மத்திய மற்றும் வட இந்தியாவில் புரட்சி பரவியது

ஜான்சியில் இருந்த ஆங்கிலேயே அதிகாரி எர்கினிடம் தன்னுடைய பாதுகாப்புக்கு படைகள் உருவாக்கிக்கொள்ள ஜான்சி ராணி அனுமதி கேட்டார். கிடைத்தது. ஒரு விழா நடத்தி ஆங்கிலேய அரசை பார்த்து பயப்பட வேண்டாம் என்று மறைமுகமாக மக்களுக்கு கோடிட்டு காட்டினார்.

ஆங்கிலேய படைகள் மற்ற இடங்களில் புரட்சியை அடக்கிவிட்டு ஜான்சி நோக்கி வருவதற்குள் ஜான்சியில் ஆயுதங்கள் பெருக்கப்பட்டு கோட்டை ராணியின் வசம் வந்திருந்தது. ஹூக் ரோஸ் சரணடைய சொல்லி கேட்ட பொழுது ,"போராடி வென்றால் வெற்றி இல்லையேல் மோட்சம் !" என்று கம்பீரமாக விடை அனுப்பினார் ஜான்சி ராணி.

கோட்டையை சுற்றி போர் நடந்து சுவர் தகர்க்கப்பட்டு ஆங்கிலேய அரசு உள்ளே நுழைந்தது. பெண்கள்,குழந்தைகள் என்று பலரும் ஆயுதம் ஏந்தி போர் புரிந்தார்கள். பெண்கள் ஆயுதங்களை தீட்டுவதும்,குதிரைகளை இயக்குவதும் ஆச்சரியம் தருகிறது என்று பதிவு செய்கிறார்கள் ஆங்கிலேயர்கள். சுவரேறி தன் வளர்ப்பு மகனோடு தப்பினார் ஜான்சி ராணி

குவாலியரை தாந்தியா தோப் உதவியோடு கைப்பற்றினார் லட்சுமி பாய். ஆங்கிலேயருக்கு ஆதரவாக இருந்த மகாராஜா சிந்தியா இவரை எதிர்த்த பொழுது சிந்தியாவின் படைகள் அவரை கைவிட்டு இவரோடு இணைந்து வீர முழக்கம் கொட்டின. மீண்டும் ஆங்கிலேயருடன் போர் வந்தது. பிள்ளையை பின்பக்கம் குதிரையில் வைத்துக்கொண்டு போர் செய்தார் ஜான்சி ராணி. பின்புறம் இருந்து ஒருவன் தாக்கி அவரை கொன்றான். அவருடன் அவரின் அந்தரங்க காவலாளியாக இருந்த முஸ்லீம் பெண்ணும் இறந்து போனாள்

இன்னமும் ஜான்சி ராணியைப்பற்றிய வீரக்கதைகள்,நாட்டுப்பாடல்கள் அப்பகுதிகளில் பாடப்பட்டும் சொல்லப்பட்டும் வருகின்றன. அவற்றையெல்லாம் தொகுத்து மகாஸ்வேதா தேவி ஒரு நூலாக்கினார். போராடி இறப்பது அடங்கிக்கிடப்பதை விட மேல் என்று எண்ணிய அவரின் நினைவு தினம் இன்று..

 

Bild könnte enthalten: 1 Person, Himmel
  • தொடங்கியவர்

டயானா உடமைகள் எத்தனை லட்சத்துக்கு ஏலம் போனது தெரியுமா?

 

மறைந்த இங்கிலாந்து இளவரசி டயானாவின் உடமைகள் பல லட்சங்களுக்கு ஏலம் விடப்பட்டுள்ளன.

டயானா

மறைந்த பிரிட்டன் இளவரசி டயானாவின் உடமைகள் சிலவற்றை சமீபத்தில் இங்கிலாந்தின் ‘டொமினிக் வின்டர்ஸ் நிறுவனம்’ ஏலம் விடுத்தது. இதில் இளவரசி டயானாவின் ‘ஷூ’க்கள், கடிதம், தத்துவக் குறிப்புகள் ஆகியவை ஏலம் விடப்பட்டன. உலகின் முக்கியப் பிரபலமாக உருவான கொஞ்ச காலத்திலேயே இவ்வுலகைவிட்டு மறைந்தவர் இளவரசி டயானா. வேல்ஸ் இளவரசர் சார்லஸின் முதலாவது மனைவி. இவர்களது பிள்ளைகள் இளவரசர்கள் வில்லியம், ஹென்றி.  இளவரசர் சார்லசுடன் டயானா திருமண ஒப்பந்தம் ஏற்படுத்தப்பட்ட நாளில் இருந்து, டயானா பொது வாழ்வில் ஒரு முக்கிய புள்ளியாகக் கருதப்பட்டார்.

 

இத்தகையப் பெருமைகளைக் கொண்ட டயானா, திருமணத்துக்கு முன்னர் பள்ளி ஆசிரியையாகப் பணியாற்றி வந்தவர். பத்தொன்பது வயதில் பள்ளி ஆசிரியையாக இருந்தபோது அவர் அணிந்திருந்த ‘ஷூ’க்கள் ஏலம் விடப்பட்டன. இந்த வெள்ளை நிறத்திலான ‘ஷூ’க்கள் ரூ.1.5 லட்சத்துக்கு ஏலம் எடுக்கப்பட்டுள்ளது. மேலும், டயானாவை பிரிந்திருந்தபோது இளவரசர் சார்லஸ் எழுதியிருந்த கடிதங்களும், டயானாவின் அரண்மனைக் குறிப்பேட்டில் இருந்து கண்டுபிடிக்கப்பட்ட தியானம் மற்றும் பிரெஞ்சு தத்துவங்கள் குறித்த குறிப்புகளும் லட்சங்களில் ஏலம் எடுக்கப்பட்டதாக இங்கிலாந்தின் ‘டொமினிக் வின்டர்ஸ் ஏல நிறுவனம் அறிவித்துள்ளது.

http://www.vikatan.com

  • தொடங்கியவர்

இந்தியா - பாகிஸ்தான் ஃபைனல்... 30 நொடி விளம்பரத்துக்கு 1 கோடி ரூபாய்

இங்கிலாந்தில் தற்போது நடைபெற்று வரும் சாம்பியன்ஸ் டிராபி தொடரின் இறுதிப்போட்டியில் இந்தியா - பாகிஸ்தான் நாளை மோதுகின்றன. பொதுவாக, கிரிக்கெட் அரங்கில் இந்தியா - பாகிஸ்தான் மேட்ச் என்றாலே பெரும் எதிர்பார்ப்பு இருக்கும்.  இந்த இரு அணிகளும் குரூப் சுற்றில் மோதும்போதே விளம்பர வருமானம் கன்னாபின்னாவென எகிறியது. ஃபைனலில் மீண்டும் இந்தியா - பாகிஸ்தான் மோதல் என்றால் சும்மா? டிவியில் ஒளிபரப்பாகும் விளம்பரத்துக்கான கட்டணம் வழக்கத்தைவிட பத்து மடங்கு அதிகரிக்கப்பட்டுள்ளது. 

இந்தியா - பாகிஸ்தான்

இந்தியாவில் சாம்பியன்ஸ் டிராபி போட்டிகளை ஸ்டார் ஸ்போர்ட்ஸ் சேனல் ஒளிபரப்பி வருகிறது. அந்த வகையில் நாளை நடக்கும் ஃபைனலின்போது ஒளிபரப்பாகும் 30 விநாடி விளம்பரத்துக்கு, 1 கோடி ரூபாய் வரை கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இது, அதிகம் பார்க்கப்படும் விளையாட்டுப் போட்டிகளுக்கு வசூலிக்கப்படும் விளம்பரக்கட்டணத்தைவிட பத்து மடங்கு அதிகம். 

சாம்பியன்ஸ் டிராபி தொடரின் விளம்பர பார்ட்னராக உள்ள நிசான் மோட்டார், இன்டெல் கார்ப், எமிரேட்ஸ்,  Oppo, எம்.ஆர்.எஃப் நிறுவனங்கள் முன்கூட்டியே விளம்பரத்துக்கு ஒப்பந்தம் செய்துள்ளன. மேட்ச் ஆரம்பிப்பதில் இருந்து போட்டி முடிந்து மேட்ச் அனலிஸஸ் வரையிலான ஒளிபரப்பு நேரத்துக்கான விளம்பரங்கள் ஏற்கெனவே முன்பதிவு செய்யப்பட்டு விட்டன. இன்னும் 10 சதவீதம் மட்டுமே மீதமுள்ளன. இதில் இடம்பிடிக்க வேண்டுமெனில் ஏற்கெனவே முன்பதிவு செய்த நிறுவனங்களைவிட அதிக தொகை செலுத்த வேண்டும். நிலைமை இப்படி இருந்தாலும், எப்படியாவது இந்தியா - பாகிஸ்தான் மேட்ச்சின்போது ஒளிபரப்பாகும் விளம்பர நிறுவனங்களின் பட்டியலில் தங்கள் நிறுவனமும் இடம்பிடித்துவிட வேண்டும் என, நிறுவனங்களுக்கிடையே கடும் போட்டி நிலவுகிறது.  

இதெல்லாம் ஓவராக இல்லையா என்றால், ‘இந்தியா - பாகிஸ்தான் மேட்ச்னா சும்மாவா... குரூப் மேட்ச்சுக்கே அவ்வளவு கிராக்கி. இது ஃபைனல் வேற...’’ என, பதில் வருகிறது. 

சாம்பியன்ஸ் டிராபிக்கு முன் இந்தியா - பாகிஸ்தான் அணிகள் பங்கேற்ற ஒருநாள் போட்டி என்றால் அது 2015 உலகக் கோப்பைத் தொடர்தான். அந்தப் போட்டி, பிரேசிலில் 2014 ஆம் ஆண்டு நடந்த உலகக் கோப்பை கால்பந்து ஃபைனல், 2012 லண்டன் ஒலிம்பிக் 100 மீட்டர் ஓட்டப்பந்தயம் உள்ளிட்ட உலகளவில் அதிகம் பார்க்கப்பட்ட ஆறு விளையாட்டுப் போட்டிகளில் ஒன்றாக இடம்பெற்றிருந்தது.

குரூப் சுற்றில் நடந்த இந்தியா - பாகிஸ்தான்  ஆட்டத்தை 20 கோடி பேர் பார்த்துள்ளனர். இது ஃபைனல் என்பதால் இந்த எண்ணிக்கை இன்னும் 40 சதவீதம் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

http://www.vikatan.com

  • தொடங்கியவர்

மதுக்கடைக்குள் நுழைந்த மயிலால் 500 அமெரிக்க டொலர்கள் நட்டம் (Video)

 


மதுக்கடைக்குள் நுழைந்த மயிலால் 500 அமெரிக்க டொலர்கள் நட்டம் (Video)
 

அமெரிக்காவில் மதுக்கடைக்குள் நுழைந்த மயில் ஒன்று அங்கிருந்த மது போத்தல்களை உடைத்து, கடைக்காரருக்கு நட்டத்தை ஏற்படுத்தியுள்ளது.

அமெரிக்காவின் தென்மேற்கு மாநிலமான லாஸ் ஏஞ்சல்ஸ் நகரிலிருந்து 13 மைல் தொலைவில் அர்காடியா எனும் நகரம் உள்ளது.
சான் கேப்ரியல் மலைத்தொடரின் அடிவாரப் பிரதேசமான அர்காடியாவில் வண்ணமிகு மயில்கள் உள்ளிட்ட பல்வேறு பறவைகள் அதிக அளவில் வசித்து வருகின்றன.

இதனால், இப்பகுதியில் பறவை வேட்டையில் ஈடுபடுபவர்களுக்கு சிறைத்தண்டனையுடன் அபராதமும் விதிக்கப்படுகிறது.

இந்நிலையில், அர்காடியாவின் அருகில் உள்ள நகரமான சான் பெர்னார்டினோவில் மயிலொன்று மதுக்கடைக்குள் நுழைந்து விட்டது.

மதுக்கடை உரிமையாளர் பொலிஸாருக்கு தகவல் வழங்கியதையடுத்து, மயிலைப் பிடிக்க விலங்குகள் பாதுகாப்பு அதிகாரிகள் கையில் வலையுடன் கடைக்குள் நுழைந்தனர்.

அதிகாரிகளின் வலையில் சிக்காமல், மதுக்கூடத்தில் அங்குமிங்கும் ஓடித்திரிந்த மயிலால் மதுப்போத்தல்கள் பல உடைந்தன.

இறுதியில் ஒரு வழியாக மயிலை வலையில் சிக்க வைத்த அதிகாரிகள் அதனை வெளியே எடுத்துச் சென்றனர்.

90 நிமிடங்கள் வரை அதிகாரிகளை மயில் பாடாய்ப்படுத்தியுள்ளது.

சேதமடைந்த மதுப்போத்தல்களின் விலை மட்டும் 500 அமெரிக்க டொலர்கள் என மதுக்கடை உரிமையாளர் கவலை வெளியிட்டுள்ளார்.

 

http://newsfirst.lk

  • தொடங்கியவர்

இரத்ததானம் செய்யும் நாய்கள்

மனிதர்களை போலவே நாய்களும் இரத்ததானம் செய்யலாம் என்பது பலருக்கு தெரியாது. ஒவ்வொரு முறை ஒரு நாய் இரத்ததானம் செய்யும்போதும் அது நான்கு நாய்களின் உயிரை காப்பாற்றுகிறதாம். இங்கிலாந்தில் மட்டுமல்ல ஆஸ்திரேலியா உள்ளிட்ட பல நாடுகளில் இது நடைமுறையில் உள்ளது.

  • தொடங்கியவர்
வேண்டாம் இது!
 

image_d9239104f6.jpgகவலைப்படுபவர்களை இரண்டு பிரதான பிரிவுகளாகப் பிரிக்க முடியும். ஒருசாராரின் கவலையில் நியாயம் இருக்க முடியும். ஏழ்மையின் தாக்கம், நோய், குடும்பப் பிரச்சினை எனச் சொல்லலாம்.  

இரண்டாவது வகையினர் தேவையற்ற விதத்தில் கவலைப்படுபவர்கள். இவர்கள் பேசுவதும் மிக வேடிக்கையாக இருக்கும். தாங்களே தங்களுக்குள் துன்பம் வரும் என்பார்கள்; வேண்டாத விடயங்களை நோக்குவார்கள். பின்னர் அழுது புலம்புவார்கள். மிகவசதியாக இருப்பவர்கள்கூட, தேவையற்று மனம் வெதும்புவார்கள். 

வெளியுலகத் துன்ப நிகழ்வுகளைக் கண்டுகொள்ளாமல், தங்கள் வாழ்க்கையையே அலசியலசிப் பித்தர்கள்போல் பேசுவதும் அழுவதும் கேட்கச் சகிக்காது. ஆனால், இவர்கள் கூட, பரிதாபத்துக்குரியவர்களேயாவர். 

தங்களை மட்டும் சிந்தித்துப் பிறர் நலன் நோக்காது விட்டால், தேவையற்ற துன்பங்கள்தான் தொடரும். வேண்டாம் இது!

  • தொடங்கியவர்

வைரல் : பாகிஸ்தான் கேப்டனின் குழந்தையைக் கொஞ்சிய தோனி...!

 

சாம்பியின்ஸ் ட்ராபி கிரிக்கெட் இறுதி கட்டத்தை நெருங்கியுள்ளது. இந்தத் தொடரில் தனது முதல் போட்டியை தொடங்கிய பாகிஸ்தானுடனே, இறுதிப் போட்டியிலும் இந்தியா இன்று மோத உள்ளது. பத்து ஆண்டுகளுக்குப் பிறகு, ஐ.சி.சி தொடரில் இந்தியா மோதல், கோலி தலைமையில் முதல் ஐ.சி.சி தொடர், 2,000 கோடி ரூபாய் பெட்டிங், பல கோடிகளில் விளம்பரம் என்று இந்தப் போட்டியில் பரபரப்புக்கு பஞ்சம் இல்லை.

Dhoni


இந்நிலையில், பாகிஸ்தான் கேப்டன் சர்ஃப்ராஸ் அகமதுவின் குழந்தை அப்துல்லாவை, இந்திய அணியின் முன்னாள் கேப்டன் தோனி தூக்கி கொஞ்சும் போட்டோ வைரல் ஆகி வருகிறது. இறுதிப் போட்டியை முன்னிட்டு, இரு அணிகளும் தங்கியுள்ள நட்சத்திர ஹோட்டலில் இந்தச் சந்திப்பு நடந்துள்ளது.

 

அப்போது, பாகிஸ்தான் அணி கேப்டன் சர்ஃப்ராஸ் தனது குழந்தை அப்துல்லாவுடன், தோனியைச் சந்தித்துள்ளார். இந்தச் சந்திப்பின் போது, தோனி அப்துல்லாவை தூக்கிக் கொஞ்சும் போட்டோ எடுக்கப்பட்டது. போட்டோ வெளியான உடனேயே, அது சமூக வலைதளங்களில் செம வைரல் ஆகியது. குறிப்பாக, இரு நாட்டு ரசிகர்கள் இடையேயும், இதற்கு பாஸிட்டிவ் கமென்ட்ஸ்கள் குவிந்து வருகின்றன. 

 

http://www.vikatan.com

  • தொடங்கியவர்

’அப்பா’வை விமர்சிப்பவர்களுக்கு ’அப்பா’வாக இருப்பதன் சவால் தெரியுமா?! #FathersDay

 
 

உறவு

ப்பா... இந்த வார்த்தைக்குக் கட்டுப்படாதவர்கள் மிகக் குறைவு. பெரும்பாலும் கண்டிப்பே அப்பாக்களின் பிம்பமாக இருக்கும். ஆனால், அது பிள்ளைகளின் பார்வையே! உண்மையில் அவர் மனசு என்ன?! பிள்ளைகளின் பார்வையில் தங்களின் ஒவ்வொரு வயதிலும் அப்பா தங்களுக்கு எப்படிப்பட்டவராக இருக்கிறார் என்பதைச் சொல்லும் குட்டிக்கதை ஒன்று உண்டு!

5 வயது - ‘என் சூப்பர் ஹீரோ!’
10 வயது - 'வீட்டில கொஞ்சம் கத்துவார்... மத்தபடி நல்லவர்தான்!'
15 வயது - ‘எப்போ பார்த்தாலும் என்னைத் திட்டிக்கிட்டே இருக்கார்... சொல்லிவைம்மா அவர்கிட்ட!’
20 வயது - ‘எப்படிம்மா இப்படி ஒரு ஆளைக் கல்யாணம் பண்ணிக்கிட்ட?!'
30 வயது - ‘நான் என்ன பண்ணினாலும் குறைசொல்லிக்கிட்டே இருக்கார். இதனாலேயே அவர்கிட்ட நான் பேசுறதைக் குறைச்சுட்டேன்!’
40 வயது - ‘அடிக்கடி கத்துவார்... ஆனா, அடிப்படையில ரொம்ப நல்லவர்!’
50 வயதில் - ‘அந்தக் காலத்தில எங்க குடும்பம் இருந்த நிலைமையில, தன் உழைப்பால எங்களையெல்லாம் கரை சேர்த்திருக்கார். அந்த மனுஷன்தான் எங்களுக்கு எப்பவும் சூப்பர் ஹீரோ!'

தன் அப்பா நல்லவர் என்று நம்பும் குழந்தை, மீண்டும் அந்த மனநிலைக்கு வர 45 வருடகால வாழ்க்கையும் அனுபவமும் தேவைப்படுகின்றன. எல்லா கலை வடிவங்களும் அம்மாவின் அன்பையே கொண்டாடுவதாலோ என்னவோ, பலருக்கும் அப்பாவின் அன்பைப் புரிந்துகொள்ளும் காலம் தாமதமாகவே கனிகிறது; 45 வருடங்கள் எடுத்துக்கொள்கிறோம்!

அப்பா மகள் உறவு

உளவியல் கூறும் ‘ஹீரோ அப்பா' எப்படி இருப்பார்? 'தன் பிள்ளைகளிடம் பொய் பேசாத, தன் கஷ்டங்களை வெளிக்காட்டாத, பிரச்னைகளை நேருக்கு நேர் எதிர்த்து நின்று நேர்த்தியாகச் சமாளிப்பார்கள், தங்கள் குழந்தைகளுக்கு ஆல்-டைம் ஹீரோக்களாக இருப்பார்கள். அப்படிப்பட்ட அப்பாவைப் பார்த்து வளரும் குழந்தை, இந்தச் சமூகத்தைப் புத்திக்கூர்மை மற்றும் மனக்கூர்மையுடன் சந்திக்கும்' என்கிறார் மைக்கேல் ஆஸ்டின் என்ற தத்துவப் பேராசிரியர்.

மகள்களைப் பெற்ற அப்பாக்கள், இன்னும் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள். பெரும்பாலும் மகன்களுக்கும் அப்பாக்களுக்கும் இடையிலான பிணைப்பைவிட, மகள்களுக்கும் அப்பாக்களுக்கும் இடையிலான பிணைப்பு அழகானது, அடர்த்தியானது. அதிலும் சென்ற தலைமுறையைவிட, இந்தத் தலைமுறை அப்பா, மகள் உறவில் சுதந்திரம் அதிகம் சேர்ந்திருக்கிறது. நம் அம்மா - தாத்தாவைப் போல பொத்திவைத்த பாசமாக இல்லாமல், ஒருவருக்கு ஒருவர் தங்கள் நேசத்தை வெளிப்படுத்திக் கொண்டாடுகிறார்கள். குறிப்பாக, டீன் ஏஜ் பெண்களுக்கு அந்த 'கூல் டாடி கூல் பேபி' அணுகுமுறை, அப்பாவை தங்களுக்கு நெருக்கமான முதல் மனிதராக்கியிருக்கிறது. ஒரு பிரச்னை எனில் 'அப்பா திட்டுவாரே' என்ற பயத்தைவிட 'அப்பா இருக்கார்' என்ற தைரியத்தைக் கொடுத்திருக்கிறது. எந்த விஷயத்திலும் ஒரு பாலினத்தவருக்கு மற்றொரு பாலினத்தைச் சேர்ந்தவரின் பார்வையும், யோசனையும் தெரியவரும்போது அதில் ஒரு தெளிவு கிடைக்கும், அதைப் புரிந்துகொள்ளுதல் எளிதாகும். அப்படி சகல விஷயங்களையும் கலந்துரையாடும் எதிர்பாலினத்தவராக தன் அப்பாவே இந்தப் பெண்களுக்குக் கிடைத்திருப்பது எவ்வளவு மகிழ்ச்சியான விஷயம்?!

ஒவ்வொரு வீட்டிலும் பிள்ளைகள் தங்கள் பெற்றோர்களின் இறகுச்சூட்டில் பாதுகாப்பாக வளர்ந்துவிடுகிறார்கள். ஆனால், அந்த அரவணைப்பையும் அக்கறையையும் தரும் அப்பாவாக இருப்பது எவ்வளவு சவாலானது தெரியுமா? 'நம் நடவடிக்கைகளைப் பிள்ளைகள் கவனிக்கிறார்கள், நம் விருப்பு, வெறுப்புகளைப் பிள்ளைகள் கவனிக்கிறார்கள், நம் கோபத்தைப் பிள்ளைகள் கவனிக்கிறார்கள், இந்தச் சமுதாயம் நம்மை எப்படி எதிர்நோக்குகிறது என்பதைப் பிள்ளைகள் கவனிக்கிறார்கள், நாம் வீட்டுக்குக் கொண்டு வரும் வருமானம் என்ன என்பதைப் பிள்ளைகள் கவனிக்கிறார்கள்' - இப்படி தங்கள் பிள்ளைகளுக்குத் தங்களை முடிந்தவரை நேர்மையான, நேசமான, வெற்றியாளரான அப்பாவாகக் காட்டுவதற்கான, நிரூபிப்பதற்கான முனைப்பே அவர்களுக்கு வாழ்க்கையாகிறது. அந்தச் சவாலை விரும்பி ஏற்கும் ஏணிகள் அவர்கள்.

 

இந்தத் தந்தையர் தினத்தில் அப்பாவுக்குச் சொல்லுங்கள் அன்பு வாழ்த்துகள்!

http://www.vikatan.com

  • தொடங்கியவர்

மகன், கணவரின் சாயலில் மரங்களை கத்தரிக்க பெண்

பிரிட்­டனைச் சேர்ந்த பெண்­ணொ­ருவர், தனது வீட்டு வேலி­யி­லுள்ள மரங்­களை தனது மகன் மற்றும் கண­வரின் தலையைப் போன்று வடி­வ­மைத்­துள்ளார்.

treee-copy

48 வய­தான மிஷெல் ஃபொலே எனும் இப்பெண்,  கலைப்­பட்­ட­தாரி ஆவார். தனது வீட்டு வேலி­யி­லுள்ள மரங்­களை கத்­த­ரிக்கத் தீர்­மா­னித்த இவர், தனது கலைத்­தி­ற­மையை வெளிப்­ப­டுத்தும் வகையில் தனது கணவர் அன்ட்ரூ, மற்றும் மகன் பிரெனின் தலை­களைப் போன்று அம்மரங்களை கத்தரித்துள்ளார்.

 

pri_43235094-copy

pri_43235454-e1497508368786-copy

http://metronews.lk

  • தொடங்கியவர்

பெண் திரை: பெண் திரை: ஆண்களையும் மீட்க வந்த அற்புதப் பெண்

 
  • டயானாவின் தாயும் தெமிஸ்ரா தீவின் மகாராணியுமான ஹிப்போலிதா
    டயானாவின் தாயும் தெமிஸ்ரா தீவின் மகாராணியுமான ஹிப்போலிதா
  • ஸ்டீவுடன்
    ஸ்டீவுடன்
 

பெண்களுக்கு ‘சூப்பர்ஹீரோ’ கதாபாத்திரங்களை அணிவித்து அழகு பார்ப்பது ஹாலிவுட் சினிமாவுக்கு ஒன்றும் புதிதல்ல. ‘சார்லி’ஸ் ஏஞ்சல்ஸ்’(Charlie’s Angles), ‘லாரா கிராஃப்ட் டாம்ப் ரைடர்’ (Lara Croft Tomb Rider), ‘கேட்வுமன்’ (Catwoman) எனப் பல படங்களைச் சொல்லலாம். ஆனால், அவை பெண்களைக் கொண்டாடும் படங்களா? உற்றுப் பார்த்தால் அவை பெண் உருவங்களுக்கு ஆண் சிந்தனையைப் போர்த்திய படங்களே. பலம் வாய்ந்தவர்களாகவும் துணிச்சல்மிக்கவர்களாகவும் பெண்களைச் சித்தரிக்கும் அதேவேளையில் அவர்களை ஈவிரக்கமற்றவர்களாவும், சுயபுத்தி இல்லாமல் ஆணால் இயக்கப்படுபவர்களாகவும், கவர்ச்சிப் பண்டங்களாகவும்தான் அவை உருவகப்படுத்தியுள்ளன.

நிச்சயமாக அவர்களிலிருந்து மாறுபட்டுத் தனித்து நிற்கிறார் ‘வொண்டர் வுமன்’ (Wonder Woman). பெண் இயக்குநரான பேட்டி ஜெக்கின்ஸ் (Patty Jenkins) இயக்கத்தில் கால் கேடட் (Gal Gadot) ‘வொண்டர் வுமன்’- ஆகத் திரையில் தோன்றியிருக்கும் இப்படம் கடந்த வாரம் வெளியானது.

அழுத்தமாகவும் ஆழமாகவும்

வன்மமும் பலவீனமும் பிடித்தாட்டும் விதமாக ஆண்களைப் படைக்கிறார் போர்க் கடவுளான ஏரிஸ் (Ares). ஏரிஸிடமிருந்து உலகை மீட்க ஆண் இனமற்ற தெமிஸ்ரா தீவை உருவாக்குகிறார் ஜீயஸ் (Zeus). உலக வரைபடத்தில் இடம்பெறாத இந்தத் தன்னந்தனி தீவில் ‘அமேசான்’ என்ற இனத்தைச் சேர்ந்த போர் வீராங்கனைகள் மட்டுமே பிறக்கிறார்கள்; வசிக்கிறார்கள். அமேசான்களின் இளவரசி டயானா.

மறுபுறம், உலகை ஆக்கிரமிக்க அபாயகரமான ஆயுதங்களைத் தயாரிக்கும் ஆராய்ச்சியில் ஈடுபட்டுவருகிறது ஜெர்மனி. அதன் சதித் திட்டங்களை முறியடிக்க பிரிட்டிஷ் படைத் தளபதியான ஸ்டீவ் முயல்கிறார். போரைத் தடுக்க யத்தனிக்கும் ஸ்டீவுடன் கைகோத்துப் போர்க் கடவுளையே அழிக்க ‘வொண்டர் வுமன்’- ஆக அவதாரம் எடுக்கிறார் டயானா. இப்படி, கிரேக்கப் புராணத்தையும், உலகப் போர் சரித்திரத்தையும் இழையோடவிட்டுப் பெண்ணியத்தை அழுத்தமாகவும் ஆழமாகவும் திரையில் விரிக்கிறது படம்.

பெண்களை ஏற்றத்தாழ்வுடன் நடத்தும் ஆணாதிக்கச் சிந்தனையைக் கேலியாகவும் தீவிரமாகவும் சாடுகிறது படம். குறிப்பாக “ஆண்களின் உலகில் எச்சரிக்கையோடு இரு. உன்னை அடையும் தகுதி அவர்களுக்குக் கிடையாது” என்பது போன்று டயானாவுக்கும் அவருடைய தாய்க்கும் இடையிலான உரையாடல் முக்கியத்துவம்வாய்ந்தது. ஸ்டீவுடன் லண்டன் செல்லும் டயானா முதன்முறையாகப் பெண்களுக்கு எதிரான பாகுபாட்டைக் கண்கூடாகப் பார்க்கிறார்.

போரைத் தடுத்து நிறுத்துவதற்கான பேச்சுவார்த்தைக் கூட்டத்தில் டயானா நிற்பதைக் கண்டு, “அமைதிக்கான பேச்சுவார்த்தையில் பெண்ணுக்கு என்ன வேலை?” என்று ஸ்டீவைத் திட்டுகிறார் ராணுவத் தலைவர். ஆயிரக்கணக்கான மொழிகள் அறிந்த அமேசான் இனப் பெண்ணான டயானாவின் அறிவைக் கண்டு, “ஒரு பெண்ணுக்கு எப்படி இவ்வளவு புத்திக்கூர்மை?” என்று பல ஆண்கள் ஆச்சரியப்படும் காட்சியும் இடம்பெறுகிறது. உடை, நடை என ஒவ்வொன்றிலும் பெண் எவ்வாறு கட்டுப்படுத்தப்படுகிறாள் என்பது கிண்டலான தொனியில் ஆங்காங்கே விமர்சிக்கப்படுகிறது.

ww_3176336a.jpg

கம்பீரமும் கருணையும்

‘நீ அற்புதமானவளாக இருக்கலாம். ஆனால் எனக்கு ஈடாக முடியாது’ என்று ஜெர்மனி படைத்தலைவர் ஆணவமாகப் பேசியதை அடுத்துக் கொல்லப்படும் காட்சியில் ஆணாதிக்கம் நொறுங்கிவிழுகிறது. குறிப்பாக, போர்க் கடவுளான ‘ஏரிஸ்’ உடன் டயானா சண்டையிடும் காட்சி பெண்ணியத்தைப் பறைசாற்றுகிறது. தன் வாள் மட்டுமே ஏரிஸை அழிக்க முடியும் என அதுவரை நம்பியிருந்த டயானாவின் வாளை ஏரிஸ் உடைத்துச் சுக்குநூறாக்குகிறான். அதன் பிறகுதான் தன்னுடைய முழுமையான பலத்தை டயானா உணர்ந்து அவனை அழிக்கிறாள். நிதர்சன வாழ்விலும் பெண்ணின் இயல்பான ஆற்றல் காலங்காலமாக மட்டுப்படுத்தப்பட்டு, அவள் தன் பேராற்றலை அறியாமல் கிடக்கிறாள். ஆனால், வாழ்வின் சில தருணங்கள் அவளுக்கே அவளை அடையாளம் காட்டிவிடுன்றன.

வழக்கமான சூப்பர்ஹீரோ படங்கள் தூக்கி நிறுத்தும் ஆண்மைப் பிம்பத்தைத் தகர்க்கும் அற்புதப் பெண்ணாக ‘வொண்டர் வுமன்’ இருக்கிறாள். ஏனென்றால், அவள் எதிரியை அழித்துத்தொழிக்க மட்டும் புறப்படவில்லை. ‘உலகில் ஆண்களுக்கிடையில் புரிந்துணர்வை உருவாக்கும் பாலமாகத் திகழ்பவர்கள் நாம்தான்’ என்கிறாள் அவள். இப்படிப் பராக்கிரமம் பொருந்தியவளாக இருக்கும் அதேநேரம் மகாகருணையும் அவளிடம் ததும்புகிறது.

ஆக்ரோஷமாகப் போரிடும்போதே உயிர்களை அழிக்க அவள் மறுக்கிறாள். அவளுடைய தாய் உள்ளம் குழந்தையைக் கண்டால் அன்பில் நிரம்பி வழிகிறது, காயமடைந்த போர் வீரர்களையும் அப்பாவி மக்களையும் கண்டு நெகிழ்கிறது. இவ்வுலகை அன்பால் காக்கவும் இயக்கவும் பிறந்தவள் பெண் என்பதை அசாத்தியமாக நிரூபிக்கிறாள் கம்பீரமும் கருணையும் கொண்ட இந்த அற்புதப் பெண்.

http://tamil.thehindu.com

  • தொடங்கியவர்

எயிட்ஸ் நோய் முறையாக கண்டுபிடித்த தினம்: ஜூன் 18- 1981

கலிபோர்னியா, சான் பிரான்சிஸ்கோவின் மருத்துவ ஆய்வாளர்கள் 1981-ம் ஆண்டு ஜூன் 18-ந்தேதி எயிட்ஸ் நோயை முறைபடியாகக் கண்டுபிடித்தனர். இதே தேதியில் நிகழ்ந்து முக்கிய நிகழ்வுகள்:- * 1767 - பிரெஞ்சு மாலுமி சாமுவெல் வாலிஸ் பசிபிக் பெருங்கடலில் டாகிட்டி தீவை முதன் முதலாகக் கண்டான். * 1778 - அமெரிக்கப் புரட்சிப் போர்: பென்சில்வேனியாவின் பிலடெல்ஃபியா நகரை விட்டு பிரித்தானியப் படைகள் அகன்றன. * 1812 - 1812 போர்: அமெரிக்கக் காங்கிரஸ் ஐக்கிய இராச்சியம் மீது போரை அறிவித்தது.

 
 
 
 
எயிட்ஸ் நோய் முறையாக கண்டுபிடித்த தினம்: ஜூன் 18- 1981
 
கலிபோர்னியா, சான் பிரான்சிஸ்கோவின் மருத்துவ ஆய்வாளர்கள் 1981-ம் ஆண்டு ஜூன் 18-ந்தேதி எயிட்ஸ் நோயை முறைபடியாகக் கண்டுபிடித்தனர்.

இதே தேதியில் நிகழ்ந்து முக்கிய நிகழ்வுகள்:-

* 1767 - பிரெஞ்சு மாலுமி சாமுவெல் வாலிஸ் பசிபிக் பெருங்கடலில் டாகிட்டி தீவை முதன் முதலாகக் கண்டான். * 1778 - அமெரிக்கப் புரட்சிப் போர்: பென்சில்வேனியாவின் பிலடெல்ஃபியா நகரை விட்டு பிரித்தானியப் படைகள் அகன்றன. * 1812 - 1812 போர்: அமெரிக்கக் காங்கிரஸ் ஐக்கிய இராச்சியம் மீது போரை அறிவித்தது.

* 1815 - வாட்டர்லூவில் நிகழ்ந்த போரில் நெப்போலியன் பொனபார்ட் தோல்வியுற்றதை அடுத்து தனது அரச பதவியை இரண்டாவதும் கடைசித் தடவையாகவும் இழந்தான். * 1869 - இந்திய ரூபாய் அதன் வெள்ளியில் குறிக்கப்பட்ட துணை அலகுகளுடன் இலங்கையின் சட்டப்படியான நாணயமாக அறிவிக்கப்பட்டது.

* 1908 - ஜப்பானியக் குடியேற்றம் பிரேசிலை ஆரம்பமாகியது. 781 பேர் சாண்டொஸ் நகரை அடைந்தனர். * 1923 - எட்னா மலை வெடித்ததில் 60,000 பேர் வீடற்றவராயினர். * 1948 - மலேசியாவில் கம்யூனிஸ்டுகளின் கிளர்ச்சியையடுத்து அவசரகாலச் சட்டம் பிறப்பிக்கப்பட்டது. * 1953 - எகிப்தில் மன்னராட்சி முடிவடைந்ததை அடுத்து குடியரசாகியது. * 1953 - அமெரிக்க வான்படை விமானம் ஒன்று டோக்கியோவுக்கு அருகில் வீழ்ந்து எரிந்ததில் 129 பேர் கொல்லப்பட்டனர். * 1965 - வியட்நாம் போர்: தெற்கு வியட்நாமில் தேசிய விடுதலை முன்னணிப் போராளிகளின் தளங்களை அமெரிக்க விமானங்கள் குண்டு வீசித் தாக்கின. * 1979 - சோவியத் ஒன்றியத்துக்கும் அமெரிக்காவுக்கும் இடையில் இரண்டாம் சால்ட் ஒப்பந்தம் கைச்சாத்தாகியது.

* 1981 - கலிபோர்னியா, சான் பிரான்சிஸ்கோவின் மருத்துவ ஆய்வாளர்கள் எயிட்ஸ் நோயை முறைபடியாகக் கண்டுபிடித்தனர். * 1981 - அமெரிக்காவில் மசாசுசெட்ஸ் மாநில நாடாளுமன்றத்தில் தமிழ் ஈழத்தை ஆதரித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. * 1983 - சாலஞ்சர் விண்ணோடம்: சலி றைட் விண்ணுக்குச் சென்ற முதலாவது அமெரிக்கப் பெண் ஆனார். * 1985 - விடுதலைப் புலிகளுக்கும் இலங்கைப் படையினருக்கும் இடையில் முதலாவது போர் நிறுத்தம் ஒப்பந்தம் ஏற்பட்டது.

* 2001 - நாகா கிளர்ச்சிக்காரருக்கும் இந்திய அரசுப்படைகளுக்கும் இடையில் போர் நிறுத்தத்தை நீடிக்க மணிப்பூரில் எதிர்ப்பு போராட்டம் இடம்பெற்றது. * 2004 - ஜெனீவாவில் CERN எனப்படும் ஐரோப்பிய துகள்-இயற்பியல் ஆராய்ச்சி மையத்தில் 2 மீட்டர் உயரமுடைய நடராஜர் சிலை நிறுவப்பட்டது. * 2006 - கசக்ஸ்தான் கஸ்சாட் என்ற தனது முதலாவது செய்மதியை அனுப்பியது.

http://www.maalaimalar.com

  • தொடங்கியவர்

பிரச்னை, துன்பம், துயரம்... சமாளிப்பது எப்படி? - மூன்று குட்டிக் கதைகள்!

 

வலையே இல்லாத மனுஷன்னு இன்னைக்கு யாருமே கிடையாது. எல்லோருக்குமே ஏதோ ஒருவிதத்துல கவலை இருந்துக்கிட்டுத்தான் இருக்கு. சின்னக்குழந்தைக்கு, அப்பா தினமும் 'கிண்டர் ஜாய்' வாங்கி தரலையேனு கவலை. மனைவிக்கு `நாம என்ன சொன்னாலும்,  நம்ம வீட்டுக்காரர்  அவர் இஷ்டப்படிதானே செய்றார்’னு கவலை. கணவனுக்கு வருமானத்தைப் பெருக்கணுமேங்கிற கவலை. டிகிரி முடிச்சுட்டு வேலைக்குக் காத்திருக்கிற அண்ணனுக்கு, `மனசுக்குப் பிடிச்ச மாதிரி வேலை கிடைக்கலையே’னு கவலை. 

பிரச்னை

எஸ்.எஸ்.எல்.சி முடிச்சு ப்ளஸ்-டூ வந்து விட்டால் போதும். டென்ஷன் தானா வந்து ஒட்டிக்கும்.  சிலர் 'மச்சான் செம மூட் அவுட் மச்சான்'னு தொட்டதுக்கெல்லாம் மூட் அவுட் ஆயிடுவாங்க. அதிலும்குறிப்பா நாலுபேர் சேர்ந்து உட்கார்ந்து பேச ஆரம்பிச்சிட்டாங்கன்னா ரெண்டு பேர் சேர்ந்து நாலாவது ஆளை கலாய்ப்பாங்க. மூணாவது ஆள் சிரிச்சுக்கிட்டு இருப்பார். நாலாவது ஆளுக்கு 'மூட் அவுட்' ஆகிடும். அதுவும் சின்னச்சின்ன விஷயத்துக்கெல்லாம் அவன் மூட் அவுட் ஆகிறான்னு தெரிஞ்சா போதும், ரொம்பவே கிண்டல் பண்ண ஆரம்பிச்சிடுவாங்க. சரி, இந்த மாதிரி பிரச்னைக்கு என்ன பண்றது? 

பொதுவாகவே, 'யங்ஸ்டர்ஸ்' யாரும் திட்டமிட்டு அவமானப்படுத்துறது இல்லை. சிலசமயம் வார்த்தைகள் அப்படி வந்து விழுந்துடும். கிண்டல், கேலிகள் பண்ணும்போது அவங்களோட 'ஷாஃப்ட் கார்னரை' கிண்டல் பண்ணிணோம்னா அவங்களுக்குக் கோபம் வராது. அவங்களோட வீக்னஸை கிண்டல் பண்ணினால் கோபம் வரும். 

உதாரணமாக சினிமா, பீச், கேளிக்கை விருந்துகளுக்கு வருவதை ஒரு நண்பன் தவிர்க்கிறான்னா, 'அவனை சரியான சாமியார்டா'னு சொன்னா நண்பர் கோபித்துக்கொள்ள மாட்டார். அதே நண்பனை, 'நீ சரியான கஞ்சன்'னு சொல்லிக் கேலி பேசினீங்கன்னா அவனுக்குக் கோபம் வரும். அதுக்கப்புறம் அந்த நண்பன் அந்த நட்பு வட்டத்தை காலப்போக்கில் தவிர்க்க ஆரம்பிச்சிடுவான். 

கேலிப் பேச்சு அப்போதைக்கு வேணும்னா ஜாலியா இருக்கலாம். கிண்டல், கேலிப் பேச்சுகள் எந்த நட்பையும் வளர்க்காது. நாலு பேர்ல நல்ல பழக்கங்களோட ஒரு நண்பன் இருப்பது அந்த நட்பு வட்டத்துக்கு ரொம்பவே நல்லது. அவரிடம் உள்ள நல்ல பழக்கவழக்கங்கள் உங்களை அறியாமலேயே உங்கள் ஆழ்மனதில் பதிந்து உங்களை மாற்றும். 

உறவுகளைப் பிரிஞ்சு தனிக்குடித்தனம் வந்து நகரம் சார்ந்த வாழ்க்கை வாழ ஆரம்பிச்சிட்டோம். இந்த மாதியான வாழ்க்கையில், நல்ல நட்புகள்தான் நம்மை அடுத்தக்கட்டத்துக்கு அழைச்சுக்கிட்டுப்போகும்.
 

சீடர்கள்


ஒரு துறவிக்கு நூற்றுக்கணக்கான சீடர்கள். ரமேஷ், சுரேஷ்னு ரெண்டு நண்பர்களும் அவருக்கு சீடர்களா இருந்தாங்க.வாரா வாரம் சனிக்கிழமை சாயங்காலமானா அவரைச் சந்திப்பார்கள். அப்போதெல்லாம் அவர்கிட்டே சில ஆலோசனைகளைக் கேட்கிறது வழக்கம்.  
ஒரு நாள் ரமேஷ், 'சுவாமி, தியானம் பண்ணும்போது புகைபிடிக்கலாமா?'னு கேட்டான். 'ம்ஹூம், பிடிக்கக் கூடாது'ன்னுட்டார். அவன் போனதும் சுரேஷ் வந்தான், 'சுவாமி,புகை பிடிக்கும்போது தியானம் பண்ணலாமா?'னு கேட்டான். 'ஓ... தாராளமா  பண்ணலாம்'னார்.
ரமேஷுக்குக் குழப்பமாகிடுச்சு. திரும்பவும் சுவாமிகிட்டே போய், `என்ன சுவாமி அவன் கேட்டதுக்கு மட்டும் சரினு சொல்லிட்டீங்க?’ன்னான். இரண்டுக்கும் உள்ள வித்தியாசத்தைப் புரியவெச்சார். 

வீடு


வீட்டைப் பூட்டி விட்டு டூர்  போயிருந்த அந்தக் குடும்பத்தினர் சாவிக்கொத்தை எங்கேயோ மிஸ் பண்ணிட்டாங்க. இன்னொரு சாவிக்கொத்து இருக்குமே. ஆமா இருக்கு. ஆனா, அதுவும் வீட்டுக்குள்ளதான் இருக்கு. அதனால பூட்டை  உடைச்சு வீட்டுக்குள்ள போனாங்க. டேபிளில் இருந்த இன்னொரு சாவிக்கொத்தை எடுத்து அந்தம்மா கண்ணுல ஒத்திக்கிட்டு, சுத்தியலுக்குப் பக்கத்துல வெச்சுட்டுப் போயிட்டாங்க. 

சுத்தியலுக்கு ஆத்திரமான ஆத்திரம். 'நாம இல்லைனா இவங்க வீட்டுக்குள்ளயே வந்திருக்க முடியாது. ஆனா, மரியாதை கொடுக்கிறது என்னவோ உனக்குப்போய் கொடுக்கிறாங்களே'னு  சாவியைப் பார்த்துக் கேட்டுச்சு.

'நீ பூட்டோட மண்டையை உடைக்கிறே. ஆனால், நான்  பூட்டோட இதயத்தைத் திறக்கிறேன். அதனாலதான் எனக்கு இந்த மரியாதை'னு சொல்லிச்சு . எல்லோரிடமும் அன்பா இருக்கிறவங்களுக்கு எதிரிகளே இருக்க மாட்டாங்க. உண்மையில் அப்படிப்பட்டவங்களை எல்லோருமே விரும்புவாங்க.

கல்லூரி

   

அந்தக் கல்லூரியில வருஷத்துக்கு பாதிநாள்கூட வகுப்புகள் சரியாக நடக்காது. குறிப்பா புதுசா படம் ரிலீசானால் போதும், ஸ்டூடண்ட்ஸ் ஸ்டிரைக் பண்ணிடுவாங்க. போதாக்குறைக்கு அந்தக் கல்லூரியில் மாணவர் பேரவைத் தேர்தல் நடந்துச்சுனா ஸ்டூடண்ட்ஸ் ரெண்டு கோஷ்டியா பிரிஞ்சிடுவாங்க. 

தேர்தல் முடியுறதுக்குள்ள போதும் போதும்னு ஆகிடும். தேர்தல் முடிஞ்சாலும், ரெண்டு கோஷ்டியும் 'அக்னி நட்சத்திரம் பிரபு கார்த்திக்' மாதிரிதான் மோதிக்குவாங்க. அப்போதெல்லாம் அந்தக் கல்லூரி முதல்வர் முன்னெச்சரிகையா லீவுல போயிடுவார். அப்படியில்லைனா துணை முதல்வரைத்தான் பசங்களோட பேச்சுவார்த்தைக்கு அனுப்புவார். அவர் எப்போதும் ஒயிட் அண்ட் ஒயிட்டிலதான் கல்லூரிக்கு வருவார். 

சைக்கிள் செயினை எப்பவும்  இடுப்புலயே சுத்தி வைச்சிக்கிட்டு இருக்கிற மாணவன்கூட அவரைப் பார்த்தா 'விஷ்' பண்ணிட்டு நல்ல புள்ளையா போயிடுவான். அதுக்குக் காரணம் ரொம்ப வாஞ்சையா பேசுவார். அவங்க போக்கிலேயே போய் அவங்களைத் திருத்துவார். ஒரு கோஷ்டிய பத்தி அடுத்த கோஷ்டி புகார் பண்ணினா பொறுமையா கேட்பார். 

மகிழ்ச்சி

அவங்களை பேசவிட்டுடுவார். 'பொதுவா ஒருத்தரை முழுசா பேச விட்டுட்டோம்னாலே அவங்களை அதுக்கப்புறம், ஹேண்டில் பண்றது ரொம்ப ஈசி. `பால் கறக்கணும்னா மாட்டோட மடியைப் பிடிச்சுக் கறக்கணும். கொம்பைப் பிடிக்கக்கூடாது’ சொல்வாங்க. வாஸ்தவத்துல நிறைய பேர் அடுத்தவங்க பிரச்னையைக் கேட்கிறதுகூட இல்லைனு சொல்லி கண்சிமிட்டுவார்.  

 

உலகத்தில எல்லாமே இரண்டாகத்தான் இருக்கு. முன்பக்கம்-பின்பக்கம், நல்லது-கெட்டது, இன்பம்-துன்பம், பாவம்-புண்ணியம், பாஸிட்டிவ்-நெகட்டிவ், பூ- தலை என சொல்லிக்கொண்டே போகலாம்.  வாழ்க்கையில் நமக்கு வரும் தடைகள், பிரச்னைகள், துன்பங்கள், துயரங்கள் இவற்றையெல்லாம் எதிர்கொள்ளும்போது நாம் எப்படி செயல்படுகிறோம் என்பது இரண்டாம் பட்சம்தான். அந்தப் பிரச்னையை எப்படி எடுத்துக்கொள்கிறோம் என்பதுதான் ரொம்பவும் முக்கியம். How You make it என்பதைவிட How you take it என்பதுதான் முக்கியம்.

http://www.vikatan.com

  • தொடங்கியவர்
‘உறவின் இறுக்கம் உலகை உயர்த்தும்’
 

image_abc0f7d95e.jpgதிருமணம் என்பது சந்தோசகரமாகவும் சுதந்திரமாகவும் சமூகக் கட்டுப்பாடுகளைக் கௌரவித்து அறம்பல செய்யப் பிரதிக்கினை செய்யும் ஆண், பெண் என்னும் தலைவன், தலைவியின் பிணைப்பினை உலகத்துக்குக் காட்டும் ஆரம்ப நிகழ்ச்சியாகும்.

கணவன் மனைவியிடம் நீ பெரிது, நான் பெரிது எனும் தன்முனைப்பு, அதிகாரம், அகங்காரம் அற்ற அகத்தில் கருணை, பொறுமையுடனான உறவின் இறுக்கமே திருமணத்தின் பின்னரான சத்தியமான வாழ்க்கையாகும்.

இந்த இனிய இல்லறமாகாது, தார்மீக ரீதியில், ஒருவர் ஒருவரிடத்தில் வைத்திருக்கும் காதல், பரிவு, நம்பிக்கையே அவர்களின் சந்ததிக்கும் நல்ல செய்திகளை இட்டுச் செல்லவல்லது.

நல்ல பெற்றோரே நல்ல உலகைச் சிருஷ்டிக்கும் ஆற்றல்மிக்கோராவார். உறவின் இறுக்கம் உலகை உயர்த்தும். 

  • தொடங்கியவர்

வெட்கப்பட, வெட்கப்படுங்கள்! #MondayMotivation #MisterK

சந்தோஷ் நல்ல வேலைக்காரன். மூளைக்காரன். அலுவலகத்தின் பெரும்பாலான புராஜெக்ட்களை குறித்த நேரத்துக்கு முன்பாக அனுப்பி, பெயர் பெறுபவன். உடன் பணிபுரியும் நண்பர்களுக்கு ஒரு சந்தேகம் என்றால் அவனது டெஸ்குக்கு முன்தான் நிற்பார்கள்.

ஒரு பெரிய புராஜெக்ட் வந்தது. அதன் தலைமை  நிச்சயம் சந்தோஷுக்குத்தான் என்று பலரும் கணித்திருக்க,  தலைமை அலுவகத்தில் இருந்து ‘Congrats Mister. K' என்று மிஸ்டர் Kவுக்குச் சென்றது மின்னஞ்சல்.

‘அதெப்படி? மிஸ்டர் K-யும்  திறமைசாலிதான். ஆனால் அவனைவிட நான் என்ன விதத்தில் குறை?’ என்று மண்டைகுடையவே மேலதிகாரியைச் சந்தித்துக் கேட்டான் சந்தோஷ்.

Mister K

”உனக்கே தெரியும் சந்தோஷ். ஏற்கெனவே பலமுறை நானும் சொல்லிருக்கேன். ஒரு மீட்டிங், கான்ஃப்ரன்ஸ்னா உன் கருத்தைப் பகிர்ந்துக்கவோ, கேள்வி கேட்கவோ தயங்கற. வெட்கப்படற. அதே மிஸ்டர் K வை எடுத்துக்கோ. சரியோ, தப்போ, கிண்டல் பண்றாங்களோ, பாராட்றாங்களோ அவன் குரல்தான் ஒரு ஹால்ல முதல்ல ஒலிக்குது.

இந்த புராஜெக்ட் முடியற வரை, பல கட்டங்கள் இருக்கு. டிரெய்னிங்ஸ் இருக்கும். மீட்டிங்ஸ் இருக்கும். பல கம்பெனிகள்ல இருந்து ஆட்கள் வருவாங்க. அங்க வெட்கப்படாம பேசியே ஆகணும். ‘எதாவது நினைப்பாங்க. கிண்டல் பண்ணுவாங்க’னு நீ காக்கற அமைதி, நம்ம நிறுவனத்துக்கே பின்னடைவா இருக்கலாம்.. அதுனாலதான்..”

அன்று மாலை மிஸ்டர் Kயுடன் காஃபிஷாப் சென்றான். 

“எனக்கே தெரியுதுடா. ஆனா கூட்டத்துல பேசவே வெட்கமா இருக்கு. ரொம்ப ஷை டைப்பாவே இருந்துட்டேன்” - புலம்பினான் சந்தோஷ்.

“அதெல்லாம் ஈஸிடா” தோளில் கைபோட்டபடி சொன்னான் மிஸ்டர் K. ”மொதல்ல காஃபி ஆர்டர் பண்ணு” என்றான் சந்தோஷைப் பார்த்து.

“எனக்கு ஒரு சாண்ட்விச். ஒரு காஃபி” என்றுவிட்டு பேச்சைத் தொடர்ந்தவனைத் தடுத்து நிறுத்தினான் மிஸ்டர் K. 

“என்கிட்ட எதுக்கு சொல்ற? கூப்டு ஆர்டர் பண்ணு”

“எப்பவும் நீதான பண்ணுவ?”

“அதான். நீ பண்ணு இனிமே. புது ஆட்கள்கிட்ட பேசப்பழகு. இதான் ஆரம்பம்”

சந்தோஷ் அழைத்து ஆர்டர் செய்துமுடித்து, ‘பண்ணிட்டேன். இதெல்லாம் பண்ணுவேனே.. இதுல என்ன இருக்கு?” என்றான்.
 
கடை இளைஞன் சாண்ட்விச் வைத்ததும், ‘என்ன ப்ரோ. டென்ஷனா இருக்கறாப்ல இருக்கு?” என்றான் மிஸ்டர் K. அடுத்த ஐந்து நிமிடங்களில், அந்த இளைஞனின் பெயர், சொந்த ஊரெல்லாம் கேட்டு ஏதோ பல வருட நண்பர்கள் பேசுவதுபோலப் பேசினான். அந்த இளைஞன் சென்றதும், சந்தோஷிடம் திரும்பினான். 

புதியவர்களிடம் பேசு:

“பொது இடங்கள்ல உனக்கு தேவையானதை மட்டும் சொல்லிட்டு, கம்னு இருக்காத. பேசு. ஆட்டோ, டாக்ஸில ஏறினா பேச்சுக்குடுத்துப் பழகு. அதுவே உன் தயக்கத்தைப் பாதி போக்கும். 

 கேள்வி கேள்:

மீட்டிங், கான்ஃப்ரன்ஸ்ல ஒருத்தர் பேசி முடிச்சதும், ‘எனி கொஸ்டின்ஸ்?’ம் பாரு. உனக்கு நூறு டவுட் இருந்தாலும் கேட்கத் தயங்காத. தப்பா இருந்தாலும், பேசறவர் கோவிச்சுட்டாலும், சுத்தி இருக்கறவங்க சிரிச்சாலும் பரவால்ல. கேளு. அந்தக் கேள்வி, அந்த அறையில் இருக்கறவங்கள்ல 70% மனசுல இருக்கற கேள்வியாகத்தான் இருக்கும்.

இன்னொருவருக்காகப் பேசு:

பப்ளிக்ல யாரோ க்யூவ மீறி முன்னால் போறாங்க. யாருக்கோ ஒரு இடைஞ்சல் நடக்குது.  நமக்கென்னன்னு நெனைக்காம, கேள்வி கேள். பயமோ, தயக்கமோ, வெட்கமோ தேவையே இல்ல இதுல.

நன்றி சொல்:

ஒரு கூட்டம், ஒரு ஆட்டோ பயணம்னு எதா இருந்தாலும் முடியறப்ப முதல் ஆளா நன்றி சொல்லு. அதுக்கு தயக்கமோ, வெட்கமோ தேவையில்லைதானே? ‘ரொம்ப நல்லா இருந்தது. தேங்க்ஸ்’ அப்டினு பலர் முன்னாடி சொல்றப்ப உனக்குள்ள ஒரு தயக்கச் சங்கிலி அறுபடும்.   

இந்த நாலு சிம்பிள் விஷயங்களை மொதல்ல ஆரம்பி. இதெல்லாம் சின்னச்சின்ன விஷயங்கள்தான். ஆனா பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும்!”

மிஸ்டர் K சொல்லிமுடித்ததும், அவனைக் கட்டிக் கொண்டான் சந்தோஷ். ‘இன்னைல இருந்தே ஃபாலோ பண்றேண்டா..” என்றான் மலர்ச்சியுடன். 

http://www.vikatan.com

  • தொடங்கியவர்

கிரிக்கெட் : தோல்வித் துயரத்தை மீம்களில் கரைக்கும் ரசிகர்கள் !

 

பலத்த எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் நேற்று நடந்த இந்தியா மற்றும் பாகிஸ்தானிற்கு இடையில் நடைபெற்ற சாம்பியன்ஸ் கோப்பை இறுதி போட்டியில் இந்தியா வெற்றி பெற்று கோப்பையை வெல்லும் என எதிர்பார்த்த நிலையில் இந்தியா படு தோல்வி அடைந்தது.

கிரிக்கெட் போட்டி அதுவும் இந்தியா பாகிஸ்தான் போட்டி என்பதால் பரபரப்பிற்குப் பஞ்சமில்லை; அந்த பரபரப்பின் அளவிற்கு போட்டிகளை விமர்சித்து வந்த மீம்களும் சமூக ஊடகத்தில் பரவலாக வலம் வந்தன.

கிரிக்கெட்

டாஸை வென்ற இந்திய அணி பந்து வீச்சை தேர்ந்தெடுத்தது. ஆனால் பாகிஸ்தானின் விக்கெட்டுகளை எடுக்க தவறியதால் பாகிஸ்தான் அதிக ரன்களை சேர்க்க நேர்ந்தது.

கிரிக்கெட்

3 ரன்கள் எடுத்த நிலையில், பூம்ரா பந்துவீச்சில் பாகிஸ்தான் தொடக்க வீரர் ஃபகார் ஜமான் ஆட்டமிழந்த போதும், அந்த பந்து 'நோ-பால்' என்பதால் அவர் ஆட்டமிழக்காமல் தப்பினார்.

கிரிக்கெட்

முன்னணி வீரர்கள் பலரும் ஆட்டமிழந்த நிலையில், ஒரு கட்டத்தில் நன்றாக அடித்து ஆடிக் கொண்டிருந்த பாண்ட்யா, ஜடேஜாவால் ரன் அவுட் ஆனார்.

கிரிக்கெட்

கிரிக்கெட்டில் தோற்றால் என்ன ஹாக்கியில் பாகிஸ்தானை இந்தியா வீழ்த்தியுள்ளது. அதுதானே நமது தேசிய விளையாட்டு என்பதை போல் அமைந்த இந்த படம் நேற்று அதிகமாக டிவிட்டரிலும் முகநூலிலும் பகிரப்பட்டது.

கிரிக்கெட்

எனவே கிரிக்கெட் ரசிகர்கள் பலரும் திடீரென தங்களின் கவனத்தை ஹாக்கியின் பக்கம் திருப்பி தங்கள் மனக்கவலைக்கு ஆறுதல் தேடினர்.

கிரிக்கெட்படத்தின் காப்புரிமைTWITTER/@TROLL_CINEMA இந்தியா பாகிஸ்தான்படத்தின் காப்புரிமைFACEBOOK/INIGO VIGNESH

டிவிட்டரில் #INDvPAk என்ற ஹேஷ்டாக் நீண்ட நேரமாக டிரண்டிங்கில் இருந்தது.டிவிட்டர் பதிவுகள் மூலமாக, ரசிகர்கள் தங்கள் ஆதங்கத்தையும், ஆதரவையும் சுவாரஸ்யமாகவும், நகைச்சுவையுடனும் பலர் வெளிப்படுத்தினர்.

டிவிட்டர்படத்தின் காப்புரிமைTWITTER/HARSH GOENKA டிவிட்டர்படத்தின் காப்புரிமைTWITTER/RAHUL SUBRAMANIAN

இது ஒரு விளையாட்டுதான் என்றும், அதில் வெற்றி தோல்வி என்பது சகஜமான ஒன்று, எனவே அதை தீவிரமாக எடுத்து கொள்ள கூடாது என்றும் ட்விட்டுகள் பகிரப்பட்டன; சிலர் பாகிஸ்தானிற்கு தங்கள் பாராட்டுக்களையும் தெரிவித்திருந்தனர்.

கிரிக்கெட்படத்தின் காப்புரிமைTWITTER/VASI REDDY

 பிபிசி தமிழ் :

  • தொடங்கியவர்

பாகிஸ்தான் கிரிக்கெட் அணி கேப்டனின் இந்தியப் பின்னணி தெரியுமா?

பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் கேப்டன் சர்ஃபராஸ் அகமதுவின் தாயார் அகீலா பானு இந்தியர். உத்தரப் பிரதேச மாநிலம் எட்வா பகுதியைச் சேர்ந்தவர். கராச்சி நகரைச் சேர்ந்த ஷகீல் அகமதுவுக்குத் திருமணம் செய்து வைக்கப்பட்டப் பின்னரே, அகீலா பானு பாகிஸ்தான் சென்றார். சர்ஃபராஸ் அகமதுவின் தாய் மாமா மெக்மூத் ஹசன், Etawah Agriculture Engineering கல்லூரியில் க்ளெர்க்காகப் பணி புரிகிறார். மாமாவும் மருமகனும் இதுவரை மூன்று முறை மட்டுமே நேரில் சந்தித்துள்ளனர். 

hasan__13000.jpg

கடந்த 1991ம் ஆண்டு ஹஸனின் திருமணம் எட்வாவில் நடைபெற்றது. திருமணத்தில் பங்கேற்க தாயாருடன்  சர்ஃபராஸ் முதன்முறையாக இந்தியா வந்தார். அப்போது, சர்ஃபராசுக்கு நான்கு வயதுதான் ஆகியிருந்தது. கடந்த டி20 உலகக் கோப்பையின் போது, ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக பாகிஸ்தான் அணி சண்டிகரில் விளையாடியது. அந்த சமயத்தில் இரண்டாவது முறையாக இருவரும் சந்தித்துள்ளனர். பின்னர் 2015ம் ஆண்டு கராச்சியில் நடந்த  சர்ஃபராஸ் அகமதுவின் திருமணத்தில் ஹசன் குடும்பத்தினருடன் கலந்து கொண்டார். 

 

இந்தியாவும் பாகிஸ்தானும் விளையாடும் போது உங்கள் மனம் எந்நிலையில் இருக்கும் என்ற கேள்வி ஹசன் பதிலளிக்கையில், '' ''சர்ஃபராஸ் அகமது அவன் நாட்டுக்காக விளையாடுகிறான்... நான் என் நாடு ஜெயிக்க வேண்டுமென்று பிரார்த்தித்துக் கொண்டிருப்பேன்'' என்கிறார். 

http://www.vikatan.com

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.