Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இளமை புதுமை பல்சுவை

Featured Replies

  • தொடங்கியவர்

போகிற போக்கில்: மன அமைதி தரும் ஓவியங்கள்

 

 
Desktop_3176341f.jpg
 
 
 

குடும்பத் தலைவி, பள்ளி ஆசிரியர் என இரண்டு பொறுப்புகளிடையே பரபரப்பாக இயங்கிக்கொண்டிருக்கிறார் சென்னையைச் சேர்ந்த பூர்ணிமா. கடினமான வேலைப் பளு அவரைச் சூழ்ந்துகொண்டிருந்தாலும் அதிலிருந்து மீள உதவியாக இருப்பது அவருடைய ஓவியங்கள்தான்.

சிறுவயதில் பொழுதுபோக்குக்காக ஆரம்பித்த ஓவியக் கலை, தற்போது பூர்ணிமாவின் தீவிர ஆர்வமாக மாறிவிட்டது. ஓவியங்கள் மட்டுமில்லாமல் காகிதங்களைக்கொண்டு கைவினைப் பொருட்களைச் செய்வது, இவரின் தனித்திறமைகளில் ஒன்று. பென்சில் ஓவியம், கண்ணாடி ஓவியம், இயற்கை நிலக் காட்சிகள், பட்டு நூலில் செய்யப்படும் கம்மல், நெக்லஸ், பழைய நாளிதழ்களைக்கொண்டு செய்யப்படும் காகித கிராப்ட் என அவருடைய கலைப் படைப்புகளின் பட்டியல் நீண்டுகொண்டே போகிறது.

Desktop1_3176340a.jpg

பரம்பரைத் தொடர்ச்சி

“என்னுடைய சொந்த ஊர் செய்யாறு. கூட்டுக் குடும்பமாக வசித்த என்னுடைய வீட்டில் பள்ளி விடுமுறை நாட்களில் குழந்தைகள் எப்போதும் ஓடியாடி விளையாடிக்கொண்டே இருப்போம். இதில் எங்களை ஒரே இடத்தில் உட்கார வைக்கும் விஷயம் என்றால், அது ஓவியம்தான். அப்போது ஒரு விளையாட்டு போலதான் ஓவியம் வரையக் கற்றுக்கொண்டேன். எங்கள் சகோதரிகளில் யார் முதலில் வரைந்து முடிப்பது என்ற போட்டியில், வெற்றிபெற வேண்டும் என்பதற்காகவே ஓவியங்களைச் சீக்கிரமாக வரைந்து முடித்துவிடுவேன். என்னுடைய அப்பாவிடம்தான் ஓவியம் கற்றுக்கொண்டேன். அவரும் ஓவியர் என்பதால், எனக்கு ஓவியம் வரைவது இயல்பாக இருந்தது” என்கிறார்.

தற்போது ஓவியக் கலையில் டிப்ளமோ படித்துள்ள பூர்ணிமா, தனியார் பள்ளி ஒன்றில் கணிதம், கணினி அறிவியல் பாடங்களைக் கற்பித்துவருகிறார். “வேலை டென்ஷன், குடும்பத்தில் ஏதேனும் பிரச்சினை என்றால், அதிலிருந்து விடுபட எனக்கு உதவியாக இருப்பவை ஓவியங்கள்தான். ஓவியம் வரையத் தொடங்கியதும் என் முழுக் கவனமும் அதிலேயே சென்றுவிடும். இதனால் மன அழுத்தம் குறைந்து இயல்புக்கு வந்துவிடுவேன். மனதும் லகுவாகிவிடும்.அடுத்ததாக, தஞ்சை ஓவியங்களை வரைய வேண்டும் என்ற ஆசை உள்ளது. அதற்கான முயற்சி விரைவில் கைகூடும் என நம்புகிறேன்” என்கிறார் உற்சாகமாக.

http://tamil.thehindu.com

  • Replies 11.3k
  • Views 1.5m
  • Created
  • Last Reply
  • தொடங்கியவர்

உலகமே அலர்ட்... 15,000 உயிரினங்கள் சுட்டிக் காட்டும் அழிவின் ஒலி..!

 

இந்தக் கதைகளைப் படித்து முடித்ததும் சில நிமிடங்கள் கண்களை மூடி உட்காருங்கள். சுற்றியிருக்கும் இயற்கையின் ஒலிகளைக் கேளுங்கள். அதில் உங்களுக்குச் சில விஷயங்கள் கேட்கலாம். பல விஷயங்கள் புரியலாம். 

தன் உரையை இப்படித் தொடங்குகிறார் பெர்னி க்ராவ்ஸ் ( Bernie Krause ) .

"சான் பிரான்சிஸ்கோவிற்கு கிழக்கே இருக்கும் சியரா நிவேடா மலைப்பகுதியின் ' லிங்கன் மியடோ'. 1988 ல் நான் பதிவு செய்த இந்த ஒலியைக் கேளுங்கள் ..." என்று சொல்லி அதை ஒலிக்க விடுகிறார். ஓடையின் மெல்லிய சத்தம், பறவைகள் பறக்கும்போது வரும் சிறகடிக்கும் சத்தம், காதலோடும், அன்போடும் அவை பாடும் சத்தம், பூச்சிகளின் சத்தம் என... அத்தனை இன்பமாய் இருக்கிறது. அந்தக் காலத்தில் எடுக்கப்பட்ட ஒரு புகைப்படத்தைக் காண்பிக்கிறார். பசுமையாக இருக்கிறது. 

இயற்கையின் ஒலி

" 1988 ல் அங்கு மரம் அறுக்கும் ஒரு தனியார் நிறுவனம் வந்தது. அந்தப் பகுதி மக்களிடம், 'நாங்கள் 'செலக்டிவ் லாகிங்' என்ற புது முறையில் மரங்களை வெட்டப் போகிறோம். இதனால், காடு மொத்தமாக அழிக்கப்படாது. அங்கொன்றும், இங்கொன்றுமாக மரங்களை வெட்டுவோம். காட்டின் உயிர்ச்சூழலுக்குப் பாதிப்பு ஏற்படாது ' என்று சொல்லி வேலைகளைத் தொடங்குகிறார்கள். இப்போது இதைக் கேளுங்கள்...." என்று சொல்லி சமீபத்திய புகைப்படம் ஒன்றையும் காண்பிக்கிறார். காட்டின் முகப்பைக் காட்டும் அந்த இரண்டு புகைப்படங்களில் பெரிய மாற்றமில்லை. ஆனால், அந்த ஒலி... அது சொல்லும் செய்தி அபாயகரமானதாக இருக்கிறது. 

இப்போது கேட்கும் அந்த ஒலியில்... ஓடையின் சலசலப்பு அதிகமாகக் கேட்கிறது. காற்றின் ஓசை மெலிதாகக் கேட்கிறது. பறவைகளின் அந்த இன்பச் சத்தங்களை ஒன்றும் கேட்க முடியவில்லை. சில மரங்கொத்திப் பறவைகளின் " டொக்...டொக்..." என்ற ஒலி கேட்கிறது. அது ரொம்பவே வறட்சியான ஓர் ஒலியாகக் கேட்கிறது. இப்படியாக, காட்சிகளால் அதிக மாற்றத்தைக் கண்டிராத பல இடங்களின் ஒலி மாற்றத்தை, ஒலிக்கவிடுகிறார். அதில் இயற்கை அழிக்கப்படும் பேரவலத்தின் அழுகுரல் அத்தனை ஆழமாய்க் கேட்கிறது. 

இயற்கையின் ஒலி

" ஒரு புகைப்படம் ஆயிரம் வார்த்தைகளுக்குச் சமம். ஒரு ஒலிக் குறிப்பு ஆயிரம் புகைப்படங்களுக்கு சமம்... ஆனால், காட்சியின் ஈர்ப்பு, ஒலியின் குரலை அழுத்திவிடுகிறது. இந்த இயற்கையின் அழிவை காட்சிகள் மூலம் உணர்வதைவிட, ஒலிகளின் மூலம் உணர்வதுதான் உண்மைகளை எடுத்துரைக்கும் " என்று சூழலியல் பிரச்னைக் குறித்த மிக முக்கியக் கருத்தைப் பதிவு செய்கிறார் பெர்னி. உலக இசைக் கலைஞர்கள் வகையிலும், சூழலியலார்கள் வகையிலும் பெர்னி மிகவும் தனித்துவமானவர்.

அமெரிக்காவைச் சேர்ந்த பெர்னி தன்னுடைய நான்கு வயதிற்குள்ளாகவே கிடார் இசையில் தேர்ச்சிப் பெற்றிருந்தார். தொடர்ந்து ஹாலிவுட் உலகில் முக்கிய இசைக் கலைஞராக இருந்து வந்தார். " வீவர்ஸ்" என்ற புகழ்பெற்ற இசைக் குழுவைத் தொடங்கி, உலகம் முழுக்க பல இசைக் கச்சேரிகளை நடத்திவந்தார். 1968ம் ஆண்டில் வார்னர் பிரதர்ஸ் நிறுவனம், தன்னுடைய ஒரு படத்திற்காகக் காட்டின் ஒலிகளைப் பதிவு செய்ய விரும்பி பெர்னியைக் காடுகளுக்கு அனுப்பியது. அதுவரை அறைகளுக்குள்ளும், ஸ்டூடியோக்களிலும், மேடைகளிலும் மட்டுமே இசை இருப்பதாக நினைத்திருந்த பெர்னிக்கு... அந்த இயற்கையின் ஒலி... தனி ஒளியைப் பாய்ச்சியது. அந்த ஒலிகளைக் கேட்ட அந்த நொடி..இனி இங்குதான், இதில்தான், தன் மிச்ச வாழ்வும் அடங்கியிருப்பதாக நம்பினார். தொடர்ந்து பயணித்து இயற்கையிடம் தன் காதுகளைக் கொடுத்து கேட்க ஆரம்பித்தார். 

இயற்கையின் ஒலி

இதுவரை 4500 மணிநேரங்களை இந்த ஒலிகளைப் பதிவு செய்வதில் செலவிட்டுள்ளார். 15 ஆயிரத்திற்கும் அதிகமான உயிரினங்களின் சத்தங்களைப் பதிவு செய்துள்ளார். உலகின் பல காடுகள் அழிந்த வரலாற்றை ஒலிக்குறிப்புகளாக தன்னிடம் வைத்துள்ளார். 
" 40 வருடங்களுக்கு முன்னர் 10 மணி நேரம் பதிவு செய்தால், அதிலிருந்து ஒரு மணி நேரத்திற்கான தரமான ஒலிக் குறிப்புகளைப் பிரித்தெடுக்க முடியும். ஆனால், இன்று பூமி வெப்பமயமாதல், வளங்கள் சூறையாடப்படுவது, காடுகளுக்குள் மனிதனின் கைகள் ஓங்கியது உட்பட பல காரணங்களால் கிட்டத்தட்ட ஆயிரம் மணி நேரங்களைச் செலவிட்டால் தான் அந்த ஒரு மணிநேர ஒலிக் குறிப்பை நம்மால் எடுக்க முடிகிறது.." என்று சொல்கிறார். 

அறிவியல்பூர்வமாகவும், தொழில்நுட்ப ரீதியிலும் ஒலிப்பதிவு சம்பந்தமாக இவர் பல கண்டுபிடிப்புகளையும், கோட்பாடுகளையும் உருவாக்கியிருக்கிறார். ஒரு குறிப்பிட்ட இடத்தில் இருக்கும் ஒலிக்குறிப்பை இவர் மூன்று வகைகளாகப் பிரிக்கிறார். 

ஒரு இடத்தில் ஒலிக்கும் உயிரற்ற உயிர்களின் ஒலியை... எ-கா - மரத்திலிருந்து வரும் காற்றின் ஓசை, கடல் அலைகளின் ஓசைப் போன்றவை ஜியோஃபோனி ( Geophony ).

ஒரு இடத்தில் வாழும் உயிர்கள் எழுப்பும் சப்தங்கள்... எ- கா - பறவைகள், மிருகங்கள் , மீன்கள் எழுப்பும் சப்தங்கள் பயோஃபோனி ( Biophony ). 

ஒரு இடத்தில் மனிதன் ஏற்படுத்தும் அல்லது மனிதனால் ஏற்படுத்தப்படும் சப்தங்களை ஆந்த்ரோஃபோனி  ( Anthrophony ) என்று வகைப்படுத்துகிறார். இதில் தன்னுடைய 40 ஆண்டுகால வனப் பயணங்களில்  ஜியோஃபோனியும், பயோஃபோனியும் மிக அதிக அளவில் பாதிக்கப்பட்டுள்ளதாகக் கூறியுள்ளார். 

இயற்கையின் ஒலிகளை பதிவு செய்யும் பெர்னி

தன் வாழ்வில், தன்னை உலுக்கிய, தன் கண்ணீரை உருக்கியெடுத்த ஓர் ஒலியைப் பற்றி பெர்னி எப்போதும் குறிப்பிடுவார். 
அது கிட்டத்தட்ட 16 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் உருவான ஓர் ஏரி. பனிக்காலத்தின் இறுதி நாட்களில் உருவான ஏரி. அதில் ஒரு நீர்நாய்க் குடும்பம். நீர்நாய்கள் பொதுவாக , தங்களைக் காத்துக் கொள்ள சிறு குளம் போல் உருவாக்கி, அரண்களை ஏற்படுத்தி வாழும். அன்றும் அப்படித்தான்... அந்தப் பெண் நீர்நாயும், அதன் குழந்தைகளும் மகிழ்ச்சியாக விளையாடிக் கொண்டிருந்தன. ஆண் நீர்நாய் உணவை சேகரிக்க சென்றிருந்தது. பெர்னியின் நண்பர் அந்த சந்தோஷப் பாடல்களைப் பதிவு செய்து கொண்டிருந்தார். அப்போது... அங்கு திடீரென வந்த அந்த வனக் காவலர்கள் சிறு குண்டை அந்த நீர்நாய்களின் வீட்டில் போடுகின்றனர். சிரித்தபடியே அங்கிருந்து நகர்கிறார்கள். 

சில நிமிடங்களுக்கு முன்னர் வரை பிள்ளைகளோடு விளையாடிக் கொண்டிருந்த அந்த நீர்நாய்கள் செத்து மிதந்தன. அங்கு நிலவும் அந்த அமைதியையும் ஒலிப்பதிவு செய்தபடியே , அந்த நண்பர் என்ன செய்வதென அறியாமல் நீண்ட நேரம் அங்கேயே உட்கார்ந்திருந்தார். அப்போது... உணவு சேகரிக்கச் சென்றிருந்த அந்த நீர்நாய் அங்கு திரும்ப வந்தது. தன் மனைவிக்கும், பிள்ளைகளுக்கு உணவளிக்கலாம்... அவர்களோடு சேர்ந்து விளையாடலாம் என்ற ஆசையோடு வந்து பார்க்கிறது. அங்கு தன் மொத்தக் குடும்பமும் சின்னாபின்னமாய் கிடப்பதைக் கண்டு அமைதியாக இருக்கிறது.

இயற்கையின் அழுகுரல்

சில நிமிடங்கள் கழித்து, மெதுவாக நீந்தத் தொடங்குகிறது. நீந்திக் கொண்டே மெதுவாக அழத்தொடங்குறது. கொஞ்சம், கொஞ்சமாக கதறியழத் தொடங்குகிறது. தன்னுடைய முழு பலத்தையும் கொண்டு, இயன்ற வரை... கத்தி அழுகிறது. அந்தக் குரல் தான்... அந்த வலி மிகுந்த குரல் தான் இதுவரை தான் கேட்ட குரல்களிலேயே வேதனையானது என்று குறிப்பிடுகிறார் பெர்னி. 

 

இயற்கைக்கு எதிராக மனிதன் நடத்தும் யுத்தத்தில் இது போன்ற சின்னஞ்சிறு உயிர்களின் அழுகுரல் வெளியில் கேட்காமலேயே அழுந்திவிடுகிறது. ஆனால், அது ஒவ்வொன்றும் சாவின் வலி... அழிவின் ஒலி... அவைகளுக்கு மட்டுமல்ல, மனிதர்களுக்கும் தான் என்று சொல்கிறார் பெர்னி க்ராவ்ஸ். 

http://www.vikatan.com/

  • தொடங்கியவர்

Bild könnte enthalten: 1 Person, lächelnd

தமிழின் முன்னணி நடிகை
அழகு நடிகை காஜல் அகர்வாலின்
பிறந்தநாள் இன்று
பிறந்தநாள் 

Happy Birthday Kajal Aggarwal

Bild könnte enthalten: 1 Person, lächelnd, Text und Nahaufnahme

இரும்பு பெண்மணி ஆங் சான் சூக்கியின் பிறந்தநாள் இன்று

வாழும்போதே வரலாறாக திகழ்கின்றவர்கள் சிலர்
அந்த சிலரில் தலைசிறந்தவர் மியன்மார் நாட்டின்
ஜனநாயகத்திற்கான தேசிய லீக் கட்சி தலைவரும் தற்போதைய
மியன்மாரின் வெளியுற அமைச்சருமான ஆங் சான் சூக்கி

தன்னுடைய பொதுவாழ்வில் 22 ஆண்டுகள் சிறையிலேயே கழித்தவர்.
மியான்மர் சமூக பெண் ஜனநாயகவாதி, அரசியல்வாதி, ஆசிரியை, அயல்நாட்டு தூதர், முதல் மாநில ஆலோசகர், ஜனநாயக தேசிய லீக் கட்சியின் தலைவர். என்ற பன்முக அற்றல் கொண்ட ஜனநாயக போராளிக்கு  பிறந்தநாள் வாழ்த்துக்கள்

Bild könnte enthalten: 1 Person, Anzug und Brille

உலகப் புகழ் பெற்ற ஆங்கில நாவல் ஆசிரியர் சல்மான் ருஷ்டியின் பிறந்தநாள் இன்று.

இந்தியாவில் பிறந்து இங்கிலாந்து குடியுரிமை பெற்ற எழுத்தாளர்.
இந்தியச் சூழலில் தனது படைப்புகளை உருவாக்குபவர். கிழக்கு மேற்கு நாடுகளிடையே உள்ள தொடர்புகள், பரஸ்பர தாக்கங்கள், குடிபெயர்வுகள் மற்றும் அதுசார்ந்த பிரச்சினைகளை மையமாக வைத்து எழுதுபவர். 1988-ல் வெளிவந்த இவரது ‘தி சாட்டனிக் வெர்சஸ்’, என்ற நாவல் உலகம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இவரது சில படைப்புகள் திரைப்படங்களாகவும் தொலைக்காட்சி தொடராகவும் வெளிவந்தன. 69 வயதாகும் சல்மான் ருஷ்டி தற்போதும் எழுதிவருகிறார்.

Happy Birhday Salman Rushdie

  • தொடங்கியவர்

 

ஹிஜாப் அணிந்து பாலே ஆடும் எகிப்திய பெண்

  • தொடங்கியவர்

வெளியானது செல்வராகவனின் 'நெஞ்சம் மறப்பதில்லை' ட்ரெய்லர்-3!

 

எஸ்.ஜே.சூர்யா நடிப்பில், செல்வராகவன் இயக்கியுள்ள 'நெஞ்சம் மறப்பதில்லை' படத்தின் 3-வது ட்ரெய்லர் வெளியாகியுள்ளது.

நெஞ்சம் மறப்பதில்லை

வித்தியாசமான படங்களை மட்டுமே இயக்கிவரும் செல்வராகவன், தற்போது 'நெஞ்சம் மறப்பதில்லை' என்ற படத்தை இயக்கியுள்ளார். எஸ்.ஜே.சூர்யா, ரெஜினா, நந்திதா உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ள இந்தப் படத்துக்கு, யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்துள்ளார். புதுப்பேட்டைக்குப் பிறகு, செல்வராகவனுடன் யுவன் ஷங்கர் ராஜா  இணைவதால், எதிர்பார்ப்பு எகிறியுள்ளது.  

இதனிடையே 'நெஞ்சம் மறப்பதில்லை' படத்தின் 3-வது ட்ரெய்லர் தற்போது வெளியாகியுள்ளது. இதற்கு முன்பே, இந்தப் படத்தின் டீசர் மற்றும்  ட்ரெய்லர்கள் வெளியாகி யூ-டியூப்பில் கலக்கியது. பேய் படமாக உருவாகியுள்ள 'நெஞ்சம் மறப்பதில்லை' வரும் ஜூன் 30 ஆம் தேதி வெளியாகிறது. 'காதல் கொண்டேன்', '7 ஜி ரெயின்போ காலனி', 'புதுப்பேட்டை' உள்ளிட்ட படங்களில் பயணித்த செல்வா-யுவன்-அரவிந்த் கிருஷ்ணா கூட்டணி, இந்தப் படத்தில் மீண்டும் இணைவது குறிப்பிடத்தக்கது.

 

 

 
  • தொடங்கியவர்

புது பூமி புது அனுபவம்: அடையாளத்தை மறக்கவைத்த தாய்லாந்து!

 

 
thai_3171314f.jpg
 
 
 

தாய்லாந்து செல்கிறோம் என்றதும் நண்பர்கள் முகத்தில் மெல்லிய புன்னகை இழையோடியது. சிலர் ‘தாய்லாந்துக்கா’ என்று கேட்கவும் செய்தார்கள். தாய்லாந்து குறித்து முழுமையாக அறியாமல் பயணத்தைத் திட்டமிட்டுவிட்டோமோ என்ற சிந்தனையில் அந்த மண்ணில் இறங்கினோம். ஆனால், அங்கே அடுக்கடுக்கான ஆச்சரியங்கள் காத்திருந்தன!

அதிகாரிகள், பணியாளர்கள், துப்புரவுத் தொழிலாளர்கள், வியாபாரிகள், விற்பனைப் பிரதிநிதிகள், பேருந்து ஓட்டுநர்கள், சமையல் கலைஞர்கள், பரிசாரகர்கள், சுற்றுலா வழிகாட்டிகள், மசாஜ் செய்பவர்கள், பைக் விமன் என்று எங்கு பார்த்தாலும் பெண்கள். எல்லோரும் சுறுசுறுப்பாக வேலை செய்துகொண்டிருந்தார்கள். தாய்லாந்தில் ஆண்களைவிடப் பெண்களின் தொகை சற்றே கூடுதல் என்பதாலும், அந்தப் பெண்களில் 47% பேர் வேலை செய்கிறார்கள் என்பதாலும் எங்கு நோக்கினாலும் பெண்களாகத் தெரிந்தார்கள்.

ஏன் வேலை?

ஆசியாவிலேயே முதலாவதாக 1932-ம் ஆண்டில் வாக்குரிமையைப் பெற்றவர்கள் தாய்லாந்துப் பெண்கள். வேலைகளில் பெண்கள் நிறைந்திருந்தாலும், அரசியலிலும் உயர் பதவிகளிலும் பெண்களின் பங்களிப்பு இன்றைக்கும் குறைவாகவே இருக்கிறது. குழந்தைகளின் கல்விக்கு அதிகம் செலவு செய்ய வேண்டியிருப்பதே ஆண்களும் பெண்களும் வேலை செய்ய வேண்டிய கட்டாயத்தை உருவாக்குகிறது. பெரும்பாலான பெண்கள் ஓரளவு படித்துவிட்டுச் சிறிய வேலைகளுக்குச் சென்றுவிடுவதால், ஆணுக்கும் பெண்ணுக்குமான வருமானத்தில் பாகுபாடும் நிலவுகிறது.

t3_3171316a.jpg

ஆடையும் வசதியும்

அளவான உயரத்தில் ஒல்லியாக இருக்கும் பெண்கள், நேர்த்தியாக உடையணிந்திருக்கிறார்கள். பெரும்பாலான பெண்களின் விருப்பமான உடை ஷார்ட்ஸும் டாப்ஸும். அதேநேரம் ஜீன்ஸ், மிடி என்று எந்த உடையை அணிந்தாலும் அவர்களுக்கு மிகவும் பொருத்தமாக இருக்கிறது!

‘ஆசையே துன்பத்துக்குக் காரணம்’ என்று ஞானம் பெற்ற புத்தரை, விதவிதமாகத் தங்கத்தில் செய்து வைத்துவிட்டு, தங்கத்தைப் புறக்கணித்திருக்கிறார்கள் தாய்லாந்து பெண்கள். எளிமையான வெள்ளித் தோடுகளை அணிகிறார்கள். ஒரு சிலர் வெள்ளி வளையல் போன்றவற்றை அணிகிறார்கள். சுற்றுலா வரும் வெளிநாட்டினர்தான் தாய்லாந்தின் புகழ்பெற்ற தங்க நகைகள் மீது அதிக ஆர்வம் காட்டுகிறார்கள்.

உடையை வைத்தோ, அலங்காரத்தை வைத்தோ பெண்களிடம் வர்க்க பேதத்தைச் சட்டென்று கண்டுபிடிக்க முடியவில்லை. அதிகாரியாக இருப்பவரும் தேநீர் விற்பவரும் நேர்த்தியாக உடுத்தியிருக்கிறார்கள். சாலையோரத்தில் இரண்டு பெண்களை வெவ்வேறு இடங்களில் பார்த்தபோது, அவர்கள் யாசகம் கேட்டு அமர்ந்திருக்கிறார்கள் என்று தோன்றவேயில்லை. ஒரு சிலர் நாணயங்களைக் கொடுத்துவிட்டுச் சென்றதை வைத்துதான், யாசகர்கள் என்பதைப் புரிந்துகொள்ள முடிந்தது. அவர்களின் முகத்திலோ உடையிலோ வறுமையும் அழுக்கும் தெரியவில்லை. பணமோ கல்வியோ அங்கு பெண்களுக்கிடையே வேறுபாடுகளை உண்டாக்கவில்லை என்ற விஷயம் மகிழ்ச்சியையும் வியப்பையும் ஒருசேர அளித்தது.

t4_3171315a.jpg

நாகரிகமும் சகிப்புத்தன்மையும்

பெண்கள் மென்மையாகப் பேசுகிறார்கள். கை கூப்பி வணக்கம் தெரிவிக்கிறார்கள். பொறுமையாக நடந்துகொள்கிறார்கள். தெரியாதவர்களைக்கூட நேருக்கு நேர் சந்திக்கும்போது சிறிய புன்னகையை உதிர்க்கிறார்கள். அநியாயமாகப் பேரம் பேசுபவர்களிடம்கூட எதிர்வாதம் செய்யாமல், அமைதியாகப் பேசுகிறார்கள். அவர்கள் நீண்டகாலமாகக் கடைப்பிடிக்கும் பவுத்த நெறிகளிலிருந்து நாகரிகமும் சகிப்புத்தன்மையும் இவர்களிடத்திலும் வந்திருக்கலாம். நாட்டில் 85% பேர் பவுத்த மதத்தைப் பின்பற்றுபவர்கள்.

வாக்கிங் ஸ்ட்ரீட்

கடற்கரை நகரமான பட்டயா பற்றிச் சிறு அறிமுகம் கொடுத்தார் எங்கள் வழிகாட்டி. ‘இது தூங்கா நகரம். இங்கு பெரும்பாலான கடைகள் இரவு முழுவதும் திறந்திருக்கும். ஷாப்பிங் செய்யலாம். வாக்கிங் ஸ்ட்ரீட்டுக்குள் ஆண்கள் செல்லலாம். இந்தியப் பெண்கள் தவிர்க்கலாம்’ என்று சொல்லி மார்க்கெட் பகுதியில் இறக்கிவிட்டார்.

வேடிக்கை பார்த்துக்கொண்டே வாக்கிங் ஸ்ட்ரீட்டுக்குள் நுழைந்துவிட்டோம். அதற்குப் பிறகுதான் வழிகாட்டி எதற்காக அப்படிச் சொன்னார் என்பதும் தாய்லாந்து என்றதும் எப்போதும் தோன்றும் மர்மப் புன்னகைக்கான காரணமும் புரிந்தது. இரு பக்கங்களிலும் மது விடுதிகள், காபரே நடன விடுதிகள். ஒவ்வொரு விடுதியின் வாயிலிலும் குறைந்த உடையோடு இன்முகத்துடன் பெண்கள் நின்றுகொண்டிருந்தார்கள். சில நிமிடங்களுக்குள் திரும்பிவிட்டோம்.

t2_3171317a.jpg

மேஜிக்கைத் தேடி

அடுத்த நாள் குழந்தைகளுக்காக டர்கிஷ் மேஜிக் ஐஸ்க்ரீமைத் தேடி இரவு பத்து மணிக்கு புறப்பட்டோம். நகர் முழுவதும் மக்கள் நடமாடிக்கொண்டிருந்தார்கள். மேஜிக் ஐஸ்க்ரீம் கடை வாக்கிங் ஸ்ட்ரீட்டில் இருக்கிற விஷயம் தெரியவந்தது. அந்தத் தெருவுக்குள் நுழைந்தோம். முதல் நாள் இருந்த தயக்கம் இல்லை.

புன்னகையுடன் வரவேற்ற துருக்கிகாரர் தாடியிலும் உடையிலும் வித்தியாசமாகத் தெரிந்தார். இப்படி அப்படி என்று கோனைக் கவிழ்த்து, விளையாட்டு காட்டி குழந்தைகளிடம் ஐஸ்க்ரீமைக் கொடுத்தார். சுவைத்துக்கொண்டே டாக்ஸி மூலம் தவறான இடத்துக்குச் சென்றுவிட்டோம். மீண்டும் நீண்ட தூரம் நடந்தோம். எல்லோருக்கும் கால் வலி, கால் மசாஜ் செய்தால் தேவலாம் போலிருந்தது. அப்போது இரவு பதினோரு மணி. மசாஜ் பார்லர் மூடும் நேரம் என்றாலும், அங்கிருந்தவர்கள் மகிழ்ச்சியுடன் மசாஜ் செய்யத் தயாரானார்கள். மணி 12 ஆனாலும் மசாஜ் செய்துவிட்ட பெண்களிடம் வீட்டுக்குச் செல்ல வேண்டும் என்ற பதற்றம் இல்லை. வீட்டு வேலைகளையும் குழந்தைகள் பராமரிப்பையும் ஆண்களும் பகிர்ந்துகொள்கிறார்கள் என்பதால்தான் இந்த நிதானம். நாங்கள் பன்னிரண்டரை மணிக்கு விடுதிக்கு வந்துசேர்ந்தோம்.

அரிய அனுபவம்

மொழி தெரியாத, ஓர் அந்நிய தேசத்தில் பெண்களும் குழந்தைகளுமாக நள்ளிரவில் தனியாகச் சுற்றிவிட்டு வர முடிந்ததை நினைத்து அனைவருக்கும் விவரிக்க இயலாத மகிழ்ச்சி ஏற்பட்டது. நிச்சயம் எங்களில் யாரும் இந்தியாவின் எந்த நகரத்திலும் இப்படியோர் உலா செல்வது பற்றி யோசித்திருக்கக்கூட மாட்டோம். பாலியல் தொழிலாளர்கள் நிறைந்திருந்த தெருக்களிலும் மதுவும் காபரேவும் ஆக்கிரமித்த வாக்கிங் ஸ்ட்ரீட்டுக்குள்ளும் நள்ளிரவில் பெண்கள் மட்டுமே சென்று திரும்பியிருந்தோம்.

இருந்தும் மோசமான பார்வையோ, அநாகரிகமான பேச்சோ, கிண்டலோ, உரசலோ எதுவும் இல்லை. கண் சிவக்கக் குடித்துவிட்டு, நாற்றத்துடன் தள்ளாடும் மனிதர்களைப் பார்க்க முடியவில்லை. சிறு தயக்கமோ, பயமோ இல்லாமல் எங்களால் இயல்பாகச் சென்றுவர முடிந்தது என்றால், அங்கே பெண்களை எப்படி நடத்துகிறார்கள் என்பது புரிந்தது.

வாழ்நாளில் பெண் என்ற அடையாளத்தை மறந்து, மனிதன் என்ற அடையாளத்துடன் தாய்லாந்தில் கழிந்த அந்த நாட்கள் அபூர்வமானவை!

http://tamil.thehindu.com

  • தொடங்கியவர்
‘முடிவுகளும் மாறுபாடு அடையும்’
 

image_ab3f7d523d.jpgஎமது அறிவு ஒரு முடிவு எடுத்துவிட்டால், அது, தான் சொன்னது சரி என்றே உறுதி செய்துவிடும். காலப்போக்கில் அதே அறிவு, தான், முன்னர் எண்ணியது பிழை என உணர்ந்து, தன்னை மாற்றிக் கொள்ளும். இதுதான் அறிவின் நிலை. அவ்வளவே! 

விஞ்ஞானிகளின் கண்டுபிடிப்புகளும் பல தடவைகள் இவ்வண்ணமே நிகழுகின்றன. ஒரு விஞ்ஞானி கண்டுபிடித்ததைப் பல வருடங்கள் கழிந்த பின்னர் வேறோரு விஞ்ஞானி அது பிழை என நிரூபித்து விடுகின்றார். ஆனால், இருவருக்கும் நோபல் பரிசு கிடைத்துவிடுகின்றது. இதில் தவறு கிடையாது. அறிவு முதிர்ந்துகொண்டே போனால் முடிவுகளும் மாறுபாடு அடையும்.  

சாதாரண வாழ்க்கையில்கூட, எங்கள் முடிவுகளை, நாங்கள் அறிவுக்கேற்ப மாற்றிக் கொள்வதுண்டு.  

ஆனால், ஞானம் அப்படியானதல்ல; அது முடிந்த முடிவுகளையே அகத்தினுள் ஆணி அடித்தால்போல், சொல்லிவிடும். அறிவின் மேலாம் ஞானம். 

வாழ்

  • தொடங்கியவர்

1991 : ஜேர்­ம­னியின் தலை­ந­கரை பேர்­லி­னுக்கு மாற்ற அங்­கீ­காரம் அளிக்­கப்­பட்­டது.

varalaru

 

1605 : ரஷ்­யாவில் 3 மாதங்கள் மாத்­திரம் ஆட்­சி­யி­லி­ருந்த சார் மன்­ன­ரான 16 வய­தான 2 ஆம் பியோடர்         படு­கொலை செய்­யப்­பட்டார்.


1819 : எஸ்.எஸ். சவன்னா எனும் நீராவிக் கப்பல் அமெ­ரிக்­கா­வி­லி­ருந்து புறப்­பட்டு இங்­கி­லாந்தை அடைந்­தது. அத்­தி­லாந்திக் சமுத்­தி­ரத்தைக் கடந்த முத­லா­வது நீராவிக் கப்பல் இது­வாகும்.


1837 : பிரிட்­டனில் விக்­டோ­ரியா ராணியார் ஆட்­சிக்கு வந்தார்.


1877 : உலகின் முத­லா­வது வர்த்­தக தொலை­பேசி சேவை கன­டாவின் ஹமில்டன் நகரில் அலெக்­ஸாண்டர் கிரஹம் பெல் ஆரம்­பித்தார்.


1877 : இந்­தி­யாவின் மிக பர­ப­ரப்­பான ரயில் நிலை­ய­மான விக்­டோ­ரியா ரயில் நிலையம் மும்­பையில் திறக்­கப்­பட்­டது.


1895 : உலகின் மிக பர­ப­ரப்­பான செயற்கை நீர்­வழி பாதை­யான கீல் கால்வாய் ஜேர்­ம­னியில் உத்­தி­யோ­க பூர்வமாக திறக்­கப்­பட்­டது.


1919 : பியூர்ட்டோ ரிக்­கோவில் ஏற்­பட்ட தீவி­பத்தில் 150 பேர் உயி­ரி­ழந்­தனர்.


1940 : பிரான்ஸ் மீது இத்­தாலி படை­யெ­டுத்­தது. இப்­ப­டை­யெ­டுப்பு தோல்­வியில் முடிந்­தது.


1944 : பின்­லாந்து நிபந்­த­னை­யற்ற வகையில் சர­ண­டைய வேண்­டு­மென சோவியத் யூனியன் வலி­யு­றுத்­தி­யது.


1945 : ஹிட்­லரின் ஆட்­சிக்­கா­லத்தில் ஜேர்­ம­னியின் ரொக்கெட் நிர்­மா­ணத்­துக்கு முக்­கிய பங்­காற்­றிய விஞ்­ஞா­னி­யான வார்ன்ஹர் வொன் பிரவுண் மற்றும் அவரின் குழு­வி­னரை அமெ­ரிக்­கா­வுக்கு இடம்­மாற்­று­வ­தற்கு அமெ­ரிக்க இராஜாங்க செயலர் அங்­கீ­காரம் வழங்­கினார். பின்னர் அமெ­ரிக்க ரொக்கெட் தொழில்­நுட்ப அபி­வி­ருத்­திக்கு இவர்கள் பெரும் பங்­காற்­றினர்.


1959 : கன­டாவில் ஏற்­பட்ட சூறா­ வ­ளி­யினால் 59 பேர் உயி­ரி­ழந்­தனர்.


1959 : பிரான்­ஸி­ட­மி­ருந்து மாலி கூட்­ட­மைப்பு சுதந்­திரம் பெற்­றது.


1963 : கியூபா ஏவு­கணை விவ­கார சர்ச்­சை­யை அடுத்து, அமெ­ரிக்க, சோவியத் யூனியன் தலை­வர்­க­ளுக்கு இடை­யி­லான அவ­சர உரை­யா­ட­லுக்­காக “சிவப்பு தொலை­பேசி” எனும் விசேட தொலை­பேசி இணைப்பு ஏற்­ப­டுத்­தப்­பட்­டது.


1982 : பிரிட்­ட­னு­ட­னான போக்­லாந்து யுத்­தத்தில் ஆர்­ஜென்­டீ­னாவின் கடைசி இரா­ணுவத் தளம் சரணடைந்தது.


1991 : கிழக்கு, மேற்கு ஜேர்மனிகள் மீள இணைக்கப்பட்டதையடுத்து,  ஜேர்மனியின் தலைநகரை பொன் நகரிலிருந்து மீண்டும் பேர்லினுக்கு மாற்றுவதற்கு அந்நாட்டு நாடாளுமன்றம் அங்கீகாரமளித்தது.

http://metronews.lk/

  • தொடங்கியவர்

உலக அகதி நாள்: ஜூன் 20- 2000

 

உலக அகதி நாள் ஆண்டுதோறும் ஜூன் 20-ம் நாளன்று நினைவுகூரப்பட்டு வருகின்றது. 2000 ஆம் ஆண்டில் ஐக்கிய நாடுகள் பொதுச்சபையின் சிறப்புத் தீர்மானமொன்றின்படி, அகதிகளுக்கான தமது ஆதரவினை வெளிப்படுத்தும் முகமாக, உலக அகதிகள் தினமாக ஏற்றுக் கொள்ளப்பட்டது. ஆப்பிரிக்க அகதிகள் நாள் ஜூன் 20-ல் கொண்டாடப்படுவதால் இந்நாள் உலக அகதிகள் நாளாகப் பிரகடனப்படுத்தப்பட்டது. பல்வேறு மோதல்களுக்குள் சிக்கி அகதிகளாக தாம் வசிக்கும்

 
 
 
 
உலக அகதி நாள்: ஜூன் 20- 2000
 
உலக அகதி நாள் ஆண்டுதோறும் ஜூன் 20-ம் நாளன்று நினைவுகூரப்பட்டு வருகின்றது. 2000 ஆம் ஆண்டில் ஐக்கிய நாடுகள் பொதுச்சபையின் சிறப்புத் தீர்மானமொன்றின்படி, அகதிகளுக்கான தமது ஆதரவினை வெளிப்படுத்தும் முகமாக, உலக அகதிகள் தினமாக ஏற்றுக் கொள்ளப்பட்டது.

ஆப்பிரிக்க அகதிகள் நாள் ஜூன் 20-ல் கொண்டாடப்படுவதால் இந்நாள் உலக அகதிகள் நாளாகப் பிரகடனப்படுத்தப்பட்டது. பல்வேறு மோதல்களுக்குள் சிக்கி அகதிகளாக தாம் வசிக்கும் நாட்டினுள், பிற நாடுகளிலென இடம்பெயர்ந்து பல்வேறு துன்பங்களுக்குள்ளாகி வாழ்ந்துவரும் அகதிகள் பற்றிய விழிப்புணர்வினை உலக மக்களிடத்தில் ஏற்படுத்துவதே இந்நாளின் முக்கியமான நோக்கமாகும்.

அன்றைய நாள் உலகின் பல்வேறு பகுதிகளிலும் நடைபெறும் பல்வேறு போர்களால் அரசியல், சமூகச் சூழல்களால் அகதிகளாக அல்லலுறும் அகதிகளை நினைவு கூரும் வகையில் கூட்டங்கள், ஆர்ப்பாட்டங்கள், கருத்தரங்குகள், இசை நிகழ்ச்சிகள், நினைவஞ்சலி நிகழ்வுகளெனப் பல்வேறு நிகழ்வுகள் ஏற்பாடு செய்யப்படுகின்றன. அகதிகளுக்கான ஐக்கிய நாடுகளின் ஆணையம் (UNHCR) ஒவ்வோர் ஆண்டும் இந்நிகழ்வுகளுக்கான கருப்பொருளைத் தீர்மானிக்கிறது.

http://www.maalaimalar.com

  • தொடங்கியவர்

நெட்டிசன் நோட்ஸ்: இந்தியா - பாகிஸ்தான் மேட்ச்- நீங்கள் தேச துரோகியா?

 

 
 
பட உதவி: குமரேசன்
பட உதவி: குமரேசன்
 
 

ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி தொடரின் இறுதி ஆட்டத்தில் இந்திய அணியை 180 ரன்கள் வித்தியாசத்தில் வென்ற பாகிஸ்தான் அணி முதன்முறையாக சாம்பியன் பட்டம் வென்றது. இதுகுறித்து நெட்டிசன்கள் தங்கள் கருத்துகளைப் பகிர்ந்து வருகின்றனர். இவை #INDvPAK #CT17Final என்ற ஹேஷ்டேகுகளில் இந்திய அளவில் ட்ரெண்டாகின. அவற்றின் தேர்ந்தெடுக்கப்பட்ட தொகுப்பு இன்றைய நெட்டிசன் நோட்ஸில்...

வேஷம் போடாதவன் @iam_Yobu

கிரிக்கெட் மேல இருந்த பைத்தியம் மட்டும் நம்ம தமிழ்நாடு அரசியல் மேல இருந்துருந்தா, நல்ல திறமையான அரசியல எப்பவே உருவாக்கி இருந்திருப்போம்!

சண்டியர் @BoopatyMurugesh

வயலிலும் சரி, கிரிக்கெட் மைதானத்திலும் சரி இந்தியர்களுக்கு வேண்டிய நேரத்தில் மழை வருவதில்லை.. #INDvPAK

K N A‏ @AlwaysKNA

கிரிக்கெட் போனா என்ன?- ஹாக்கிய பார்த்து மனச தேத்திக்க வேண்டியதுதான்! #INDvPAK

அம்மு‏ @itsNayagi

விடுயா... கிரிக்கெட் கண்டுபுடிச்ச சொந்த நாட்டுக்காரனே சொந்த நாட்டுலயே தோத்து போறான். இதுல நம்ம என்ன?

ஆல்தோட்டபூபதி‏ @thoatta 1

டிவி கீழ் இடதுல 'கிரிக்கெட் பார்ப்பது உடல் நலத்துக்கு தீங்கானது, கிரிக்கெட் உயிரை கொல்லும்' போட்டுவிடுங்க, off பண்ணிட்டு படுத்துக்கிறோம்

சத்யா_கேசவன்‏ @sathya_0555

அதெப்படி உங்களுக்கு ஹாக்கி தேசிய விளையாட்டு-ங்கற நியாபகம், இந்தியா கிரிக்கெட்ல தோக்கற அன்னைக்கு மட்டும் வருது?

MSDian‏ @ItzThanesh

#MSDhoni - நீ ஃபார்மில் இல்லாதபோது உன்னை வெறுக்க நான் கிரிக்கெட் ரசிகன் அல்ல, உடன் பிறவா சகோதரன்.

Joe Selva‏ @joe_selva1

இந்தியா ஜெயிச்சா அவ்வளவு கொண்டாடுற கிரிக்கெட் ரசிகர்கள், தோத்தா கோவத்துல உருவ பொம்மையை எரிக்கத்தான் செய்வாங்க .....

புகழ்‏ @mekalapugazh

இந்தியா - பாகிஸ்தான் போட்டி என்றாலே இந்தியாதான் ஜெயிக்கும் என்ற நினைப்பை மாற்றிய பாகிஸ்தான் இளம் அணிக்கு வாழ்த்துக்கள்..

இரும்புகடை இயக்குனர்‏ @MohammedMastha

இந்தியா தோத்து போனதுகூட பரவாயில்ல, ஆனா பேப்பர்ல "இந்தியா அவுட்டு கோலி பதவி டவுட்டுனு"நியூஸ் போடுவாங்கனு நினைக்கும் போதுதான் பதறுது.

Dheena Shankar‏ @Dheena_shankar

இந்தியா தோக்குறது கூட வருத்தமா தெரியலை...ஆனா இந்த ஜடேஜா, பாண்டியாவை அவுட் ஆக்கி விட்டதுதான் ரொம்ப ரொம்ப கடுப்பா இருக்கு.

cric1_3176596a.jpg

Shahjahan R

2015க்கும் 2017க்கும் ஒரே ஒரு வித்தியாசம்- அன்று இந்திய ஹாக்கி மகளிர் அணி வென்றது, அதைப் பற்றி யாருக்குமே தெரிய வரவில்லை. இன்று இந்திய ஹாக்கி ஆடவர் அணி வென்றது, கிரிக்கெட் நடைபெற்ற அதே லண்டன் என்பதாலும், தோற்றுப் போனது பாகிஸ்தான் என்பதாலும் இதைப்பற்றி சிலருக்குத் தெரிய வந்தது. அதுவும்கூட ஹாக்கி ஆட்டத்தைப் பார்த்துத் தெரிந்து கொண்டதல்ல, சும்மா போகிற போக்கில் தெரிந்து கொண்டது.

Pragash Ramadoss‏ @ramadosspragash

ஏங்க எப்பவாவது இந்தியா வெற்றி பெறலன்னா அத தோல்வினு எழுதுறிங்க. "இந்தியாவின் எதிரான கிரிக்கெட் ஆட்டத்தில் இலங்கை வெற்றினு"ன்னு எழுந்துங்களேன்.

குழந்தை அருண் 2.0‏ @aruntwitzzz

கிரிக்கெட் பார்க்க வேண்டியது, ஜெயிச்சா கத்த வேண்டியது, தோத்தா திட்ட வேண்டியது, இதை விட ஏதாவது உருப்படியான வேலைகளிலிருந்தால் பாருங்கள் மக்களே...

Jay Kumaar‏ @Jaykumaar

இன்னைக்கி இந்தியா தோத்ததுகூட அவ்ளவா ஃபீல் ஆகல, ஆனா நேத்து முந்தாநேத்து கிரிக்கெட் பாக்க ஆரம்பிச்சவங்கள்லாம் கோலிக்கு அட்வைஸ் பண்றத பாத்தாதான்...

இடும்பாவனம் கார்த்தி‏ @idumbaikarthi

தேசபக்தி என்பது இந்தியா - பாகிஸ்தான் கிரிக்கெட் போட்டியின்போது மட்டுமே வெளிப்படுமென்றால் சத்தியமாக நான் தேசத் துரோகிதான்!

gautham‏ @gkgauthamganesh

கிரிக்கெட் விளையாட்டுல ஜெயிச்சவங்களுக்கு 14 கோடி, தோற்றவங்களுக்கு 7 கோடி, வெறுமனே வேடிக்கை பார்த்தவங்களுக்கு தெருக்கோடி.

Gowtham Gaja

கிரிக்கெட் என்னும் மாயவலையில் இருந்து என்னை மீட்ட கோலி படைக்கு நன்றி. 2003-க்குப் பிறகு பின்பு மிகப்பெரிய ஏமாற்றம், இனிமேல் "மண்ணெண்ண, வேப்பெண்ணெ, விளக்கண்ணெ, யாரு கப் அடிச்சா எனக்கு என்ன?''

S. Charu Hasan

அன்று ஒரு நாள் தோனி வீட்டை அடித்து நொறுக்கினோம்… இன்று கிரிக்கெட் கேப்டன் கோலி விட்டை உடைக்க ஆள் அனுப்பியிருப்போம்… சினிமா நடிகர்களும் கிரிக்கெட் பந்தாட்டக்கரர்களும் இந்த நாட்டின் தலைவிதியை நிர்ணயிக்கலாமா?

Elamathi Sai Ram

அட்டகாசமாக விளையாடி ஜெயித்த பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர்களை வாழ்த்துவோம். தோற்றவர்களை தூற்றாமல் அரவணைப்போம்.. நாமளாச்சும் விளையாட்டை விளையாட்டா அணுகுவோம் மக்களே..!

Shanmuganathan Swaminathan

கிரிக்கெட் தோல்வியில் கண்டு கொள்ளப்படாத இரண்டு கொண்டாட்ட தருணங்கள்.

1) 'ஏழுக்கு ஒன்று' என்கிற கோல் கணக்கில் பாகிஸ்தானுடனான ஹாக்கி வெற்றி.

2) இந்தோனேஷியன் ஒப்பன் பட்டத்தை வென்ற ஸ்ரீகாந்த் கிடாம்பி.

வெற்றிக்கு போகிற வழியில், அவர் உலக நம்பர் ஒன்னை தோற்கடித்ததை இங்கு குறிப்பிட வேண்டும். பாராட்டுகள்.

cric_3176597a.jpg

Sakthi Saravanan

பாகிஸ்தான் விர்ர்ர்ர்ர், இந்தியா கொர்ர்ர்ர், இந்திய ரசிகர்கள் கிர்ர்ர்ர்.

Dhana Sakthi

போராடவே இல்லை

சப்பைக்கட்டு

அப்புறம் வெற்றி மட்டும் இல்லை, எந்த மகிழ்ச்சியுமே கிட்டாது

#இது கிரிக்கெட் பதிவு அல்ல

Anas Sulthana

நீங்கள் பாகிஸ்தானுக்கு வாழ்த்து சொன்னால் நடுநிலைவாதியாக கருத்தப்படுவீர்கள் ஆனால் ஒரு முஸ்லீம் பெயர் தாங்கி வாழ்த்து சொன்னால் அவன் இருப்பே சந்தேகிக்கப்படும்..

இந்தியா கோப்பையை வெல்லாமல் போனது வருத்தம் தான் அதற்காக பாகிஸ்தான் அணியை வாழ்த்தாமல் விடுவது நாகரீகம் அல்ல... வாழ்த்துக்கள் பாகிஸ்தான். ஆனால் மீண்டும் உங்கள் அணியை வெல்லுவோம்...

http://tamil.thehindu.com/opinion/blogs/நெட்டிசன்-நோட்ஸ்-இந்தியா-பாகிஸ்தான்-மேட்ச்-நீங்கள்-தேச-துரோகியா/article9730251.ece

  • தொடங்கியவர்

சீனப் பெருஞ்சுவரில் யோகா பயிற்சி!

நாளை யோகா தினம் கொண்டாடப்படுவதையொட்டி, சீனப் பெருஞ்சுவரில் யோகா ஆர்வலர்கள் கூட்டாக சேர்ந்து யோகா பயிற்சியில் ஈடுபட்டனர். 

33_16448.jpg

நாளை, உலக யோகா தினம் கொண்டாடப்படுகிறது. யோகாவின் மகத்துவத்தை உலகுக்கு எடுத்துச் சொல்லவும் அதைப் பற்றிய விழிப்பு உணர்வை ஏற்படுத்தும் நோக்கிலும் ஒவ்வொரு ஆண்டும் ஜூன் 21 ஆம் தேதி கொண்டாடப்படுகிறது.  இந்திய அரசால் கடந்த 2015 ஆம் ஆண்டு இதற்கான முயற்சி முன்னெடுக்கப்பட்டது. ஐ.நா சபையின் அங்கீகாரம் பெற்றதால் ஒவ்வொரு ஆண்டும் யோகாவின் வீச்சு சர்வதேச அளவில் அதிகரித்த வண்ணம் உள்ளது. 

44_16574.jpg

இந்நிலையில், யோகாவைப் பற்றி சீனாவில் விழிப்புஉணர்வு ஏற்படுத்த, உலக அதிசயங்களில் ஒன்றான சீனப் பெருஞ்சுவரில் பெரும் திரளான யோகா ஆர்வலர்கள் பங்கேற்று பல்வேறு யோகா பயிற்சிகள் செய்தனர். இதில் சீனர்கள் மற்றும் இந்தியர்கள் கூட்டாக பங்கேற்றது கூடுதல் சிறப்பாக அமைந்தது. சீன தலைநகர் பீஜிங்கில் உள்ள இந்திய தூதரகம் மூலம் இந்த நிகழ்ச்சி ஒருங்கிணைக்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில், மத்திய அமைச்சர் வி.கே.சிங் பங்கேற்று, யோகா ஆர்வலர்களுடன் பயிற்சியில் ஈடுபட்டார்.
 

 

55_16150.jpg

http://www.vikatan.com

  • தொடங்கியவர்

கோல்ப் மைதானத்தில் தரையிறங்கிய விமானம்

  • தொடங்கியவர்

சீனாவில் 3.5 நொடிகளில் தகர்க்கப்பட்ட பாலம் (Video)


சீனாவில் 3.5 நொடிகளில் தகர்க்கப்பட்ட பாலம் (Video)
 

சீனாவில் மிக நீண்ட பாலம் ஒன்று வெடிகுண்டு வைத்து தகர்க்கப்பட்டுள்ளது.

3.5 நொடிகளில் இந்த பாலம் தகர்க்கப்பட்ட வீடியோ காட்சிகளும் வெளியிடப்பட்டுள்ளது.

சீனாவில் உள்ள ஜிலின் மாகாணத்தில் சங்சுன் நதியின் குறுக்கே கடந்த 1978 ஆம் ஆண்டு 150 மீட்டர் நீளமும், 25மீட்டர் அகலமும் கொண்ட நன்ஹு என்ற மிக நீண்ட பாலம் கட்டப்பட்டுள்ளது.

39 ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்ட இந்த பாலம் பழுதடைந்தமையால் சில ஆண்டுகளாக போக்குவரத்திற்கு தடைவிதிக்கப்பட்டது.
இதையடுத்து, அப்பகுதியில் மற்றொரு புதிய பாலம் கட்டப்பட்டுள்ளது, இந்நிலையில், அந்த பழைய பாலத்தை சுமார் 710 கிலோ வெடிபொருட்களை பயன்படுத்தி 3.5 நொடிகளில் தகர்த்துள்ளனர்.

இதையடுத்து, தூசிகள் மற்றும் புகைமண்டலம் அப்பகுதியை சூழ்ந்துள்ளன.

 

http://newsfirst.lk/

  • தொடங்கியவர்

''எங்களுக்கு ஓட்டுரிமை இல்லை. ஆனால், எங்களைச் சொல்லி ஓட்டு வாங்குகிறார்கள்!" - ஓர் அகதியின் ஆதங்கம் #WorldRefugeeDay

 
 

அகதிகள் முகாம்

தாய்நாட்டில் ஏற்பட்ட பிரச்னையால் தங்கள் உடமைகள், உறவுகளை இழந்து, உயிர் மட்டும் சுமந்து அயல்நாட்டில் தஞ்சம் புகுந்து வாழும் அகதிகளின் கதை, துயர் என்ற தூரிகை கொண்டு எழுதியது. ஜூன் 20, அகதிகளுக்கான தினமாகக் கடைப்பிடிக்கிறது ஐக்கிய நாடுகள் சபை.

உலகின் பெரும்பாலான நாடுகளில் அகதிகளாகத் தஞ்சம் அடைந்திருப்பவர்கள் இலங்கைத் தமிழர்களே. இலங்கையில் ஏற்பட்ட இனக் கலவரங்களில் கடும் இன்னல்களைச் சந்தித்தவர்கள். நாடு, வீடு, உடமை, உறவுகள் என எல்லாவறையும் இழந்து இந்தியாவுக்கு அகதிகளாக வந்து சேர்ந்த இலங்கைத் தமிழர்களுக்காக தமிழ்நாட்டில் மட்டும் 112 முகாம்கள் உள்ளன. இவற்றுள் புழல் மற்றும் கொட்டப்பட்டு என இரண்டு சிறப்பு முகாம்களும் அடக்கம். இந்த முகாம்களில் உட்பதிவாக 62,712 பேரும், வெளிப்பதிவாக 36,890 பேரும் என சுமார் 99 ஆயிரம் பேர் அகதிகளாகத் தங்கியுள்ளனர். இதில் மண்டபத்தில் உள்ள மாற்று முகாமில் மட்டும் இன்றைய நாள் வரை 565 குடும்பங்களைச் சேர்ந்த 1,844 பேர் தங்கியுள்ளனர்.
 
கடந்த 35 ஆண்டுகளுக்கும் மேலாக அகதிகளாக வாழ்ந்து வரும் இந்தச் சக மனிதர்களுக்கு, அடிப்படை வசதிகள்கூட பெரும்பாலான முகாம்களில் இருப்பதில்லை. இருக்க நல்ல இடமோ, குடிக்க நல்ல தண்ணீரோ கிடைக்காத பல முகாம்கள் தமிழகத்தில் உள்ளன. 'சுத்தமான இந்தியா' பற்றி நொடிக்கு ஒரு முறை விளம்பரம் செய்யும் இதே டிஜிட்டல் யுகத்தில், சில முகாம்களில் இயற்கை உபாதையைக் கழிக்க கருவேலங்காடுகளே உள்ளன அவர்களுக்கு. 

மண்டபம்



ஒரு நாட்டின் குடிமகன் என்ற அடையாளத்தை இழந்து அகதி என்ற ஒற்றைச் சொல்லின் கீழ் வாழ்ந்து வரும் இலங்கை அகதிகளின் இன்றைய நிலை எப்படி இருக்கிறது என விசாரித்தோம். தன் பெயரை வெளியிட வேண்டாம் என்ற கோரிக்கையுடன் பேசினார் அந்தப் பெண். 

''இலங்கை, திரிகோணமலை பிச்சைவலி பகுதியில் நிம்மதியாக வாழ்ந்து வந்தது எங்கள் குடும்பம். 1990களில் எங்கள் வசிப்பிடங்களில் இலங்கை அரசு கடும் தாக்குதல் நடத்தியது. விவசாயத்தில் செழித்து விளங்கிய எங்கள் பகுதியில் ஏராளமானோர் இலங்கை ராணுவத்தினரால் விரட்டியடிக்கப்பட்டனர். அப்போதுதான் எனக்குத் திருமணம் முடிந்து மூன்று மாதங்கள் ஆகியிருந்தது. எஞ்சியிருந்த உயிரைக் காப்பாற்றிக்கொள்ள எங்கள் குடும்பம் இங்கே அகதிகளாக வந்திறங்கினோம். பல பேருக்கு வேலை கொடுத்து சம்பளம் வழங்கி வந்த என் அப்பா இங்கே வந்து கூலி வேலைக்குச் சென்றார். அந்நிலையை அவர் மனம் ஏற்றுக்கொள்ள மறுக்க, 'செத்தாலும் சொந்த நாட்டிலேயே சாவோம்' எனச் சொல்லி இலங்கைக்கே திரும்பிவிட்டார். ஆனால், எங்களை அவர் உடன் அழைத்துச் செல்லவில்லை. ஏனெனில், நாங்கள் உயிருடன் இருக்க வேண்டும் என்று நினைத்தார். இலங்கையில் இன்று வரை தமிழர்களுக்கு நியாயம் கிடைக்கவே இல்லை. எங்களின் வீடு, நிலம், வியாபாரத் தலங்கள் எல்லாவற்றையும் இலங்கை ராணுவம் எடுத்துகொண்டுவிட்டது.

முகாம்



நாங்கள் கடந்த 30 வருடத்துக்கும் மேலாக இந்தியாவில் வசிக்கிறோம். இருந்தும் எங்களுக்கு ஏகப்பட்ட கட்டுப்பாடுகள் உள்ளன. முகாமை விட்டு காலை 6 மணிக்கு மேல்தான் வெளியே செல்ல வேண்டும். மீண்டும் மாலை 6 மணிக்குள் முகாமுக்குத் திரும்பிவிட வேண்டும். அனுமதியின்றி வெளியிடங்களுக்குச் செல்லக்கூடாது. முகாம் சார்ந்த பகுதிகளுக்கு வி.ஐ.பிக்கள் வருகை தந்தால் முகாமில் தங்கியிருப்பவர்கள் மூன்று நாள்களுக்கு வெளியே செல்லக்கூடாது. சொந்தமாக கால்நடைகள் வளர்க்கக்கூடாது. மாதம் ஒரு முறை குடும்பத்தோடு அதிகாரிகள் முன் கணக்கெடுப்புக்கு ஆஜராக வேண்டும். அதிகாரிகள் குறிப்பிடும் சில தினங்களில் விசேஷ கணக்கெடுப்பின்போதும் ஆஜராக வேண்டும் என ஏக கெடுபிடிகளோடு வாழ்ந்து கொண்டிருக்கிறோம்.

அகதிகள்

 


 
மாதந்தோறும் அரசு வழங்கும் நிதியினைக் (குடும்பத் தலைவருக்கு 1000, மற்றவர்களுக்கு 750, சிறுவர்களுக்கு 400) கொண்டும், மாதத்துக்கு இலவசமாக வழங்கப்படும் 20 கிலோ அரிசி மற்றும் 3 லிட்டர் மண்ணெண்ணெயைக் கொண்டு வாழ்க்கை நடத்தி வருகிறோம். நாங்கள் அகதிகள் என்பதால் நன்கு படித்திருந்தாலும் அதற்கு உரிய வேலைவாய்ப்பினை அரசோ, தனியார் நிறுவனங்களோ கொடுக்க மறுக்கின்றன. இதனால் பொறியியல் படிப்பு முடித்தவர்கள்கூட மீன் சுமக்கும் கூலி வேலைக்கும், கட்டடம் கட்டும் சித்தாள் வேலைக்கும் செல்லும் நிலையே உள்ளது.

இந்நிலை மாற எங்களுக்கு இந்தியக் குடியுரிமை கேட்டு குரல் கொடுத்தும் எந்த அரசாங்கமும் அதை காதில் வாங்குவதில்லை. எங்களிடம் ஓட்டு இல்லாத போதிலும், எங்களைச் சொல்லி தமிழ்நாட்டு மக்களின் ஓட்டுகளை வாங்குகிறார்கள். அவர்களும்கூட தேர்தல் சமயங்களில் மட்டுமே எங்களைப் பற்றி பேசுகின்றனர். அதற்குப் பின் எங்களைப் பற்றி நினைப்பதில்லை. ஜெயலலிதா அம்மா முதல்வராக இருந்தபோது எங்களுக்கு இரட்டைக் குடியுரிமை வழங்க வேண்டும் என கோரிக்கை விடுத்தார். அதனை நிறைவேற்றாமல் தொண்டு நிறுவனங்கள் மூலம் எங்களை மூளைச் சலவை செய்து மீண்டும் இலங்கைக்கே திருப்பி  அனுப்ப நெருக்கடி கொடுத்து வருகிறார்கள். தமிழர்களின் கிராமங்கள் எல்லாம் சிங்களர்களின் இருப்பிடங்களாக மாற்றப்பட்டுவிட்ட நிலையில் நாங்கள் மீண்டும் அங்கே போய் எப்படி நிம்மதியாக வாழ முடியும்? எனவே அரசு எங்களை இந்த நாட்டின் மக்களாகவோ அல்லது இரட்டை குடியுரிமை கொண்டவர்களாகவோ அங்கீகரிக்க வேண்டும்!" 

அந்தப் பெண்ணின் கண்களில் கண்ணீர் விரக்தியாய் உறைந்திருக்கிறது! 

http://www.vikatan.com

  • தொடங்கியவர்
‘முடிவுகளும் மாறுபாடு அடையும்’
 

image_ab3f7d523d.jpgஎமது அறிவு ஒரு முடிவு எடுத்துவிட்டால், அது, தான் சொன்னது சரி என்றே உறுதி செய்துவிடும். காலப்போக்கில் அதே அறிவு, தான், முன்னர் எண்ணியது பிழை என உணர்ந்து, தன்னை மாற்றிக் கொள்ளும். இதுதான் அறிவின் நிலை. அவ்வளவே! 

விஞ்ஞானிகளின் கண்டுபிடிப்புகளும் பல தடவைகள் இவ்வண்ணமே நிகழுகின்றன. ஒரு விஞ்ஞானி கண்டுபிடித்ததைப் பல வருடங்கள் கழிந்த பின்னர் வேறோரு விஞ்ஞானி அது பிழை என நிரூபித்து விடுகின்றார். ஆனால், இருவருக்கும் நோபல் பரிசு கிடைத்துவிடுகின்றது. இதில் தவறு கிடையாது. அறிவு முதிர்ந்துகொண்டே போனால் முடிவுகளும் மாறுபாடு அடையும்.  

சாதாரண வாழ்க்கையில்கூட, எங்கள் முடிவுகளை, நாங்கள் அறிவுக்கேற்ப மாற்றிக் கொள்வதுண்டு.  

ஆனால், ஞானம் அப்படியானதல்ல; அது முடிந்த முடிவுகளையே அகத்தினுள் ஆணி அடித்தால்போல், சொல்லிவிடும். அறிவின் மேலாம் ஞானம். 

  • தொடங்கியவர்

2004: தனியார் விண்வெளி ஓடம் முதல் தடவையாக விண்வெளியை அடைந்தது

வரலாற்றில் இன்று…

ஜுன் – 21

 

1529 : இத்­தா­லியின் வட பகு­தி­யி­லி­ருந்து பிரெஞ்சுப் படை­களை ஸ்பானிய படைகள் வெளி­யேற்­றின.


1791 : பிரெஞ்சுப் புரட்­சி­யின்­போது, மன்னன் 16 ஆம் லூயியும் அவரின் குடும்­பத்­தி­னரும் பாரிஸ் நக­ரி­லி­ருந்து தப்பிச் செல்ல ஆரம்­பித்­தனர்.

varalaru---space-ship-one

 

1898 : குவாம் தீவை ஸ்பெய்­னி­ட­மி­ருந்து அமெ­ரிக்கா கைப்­பற்­றி­யது.


1900 : அமெ­ரிக்கா, பிரிட்டன், பிரான்ஸ், ஜப்பான் ஆகிய நாடு­க­ளுக்கு எதி­ராக சீனா உத்­தி­யோ­கபூர்வமாக போர்ப் பிர­க­டனம் செய்­தது.


1930 : பிரான்ஸில் இரா­ணு­வத்­துக்­கான ஒரு வருட கட்­டாய ஆட்­சேர்ப்பு அமுல்­ப­டுத்­தப்­பட்­டது.


1942 : அமெ­ரிக்­காவின் ஓரிகன் மாநில கரை­யோ­ரத்­துக்கு அருகில் தோன்­றிய ஜப்­பா­னிய நீர்­மூழ்­கிகள் 17 ஷெல்­களை ஏவின. அமெ­ரிக்க பிர­தான நிலப்­ப­ரப்பில் ஜப்­பா­னிய படை­யி­னரால் மேற்­கொள்­ளப்­பட்ட ஒரு சில தாக்­கு­தல்­களில் இதுவும் ஒன்­றாகும்.


1948 : நீண்­ட­நேரம் இயங்­கக்­கூ­டிய ஒலிப்­ப­திவுத் தட்­டுக்­களை கொலம்­பியா ரெக்கோர்ட்ஸ் நிறு­வனம் அறி­மு­கப்­ப­டுத்­தி­யது.


1970 : அமெ­ரிக்­காவின் ரயில் பாதை நிர்­மாண நிறு­வ­ன­மான “பென் சென்ட்ரல்” நிறு­வனம் வங்­கு­ரோத்­தா­ன­தாக அறி­விக்­கப்­பட்­டது. அமெ­ரிக்க வர­லாற்றில் வங்­கு­ரோத்­தான மிகப்­பெ­ரிய நிறு­வனம் இது­வாகும்.


1957 : கன­டாவின் முதல் பெண் அமைச்­ச­ரவை அமைச்­ச­ராக எலன் பெயர்­குளோவ் பத­வி­யேற்றார்.


1982 : அமெ­ரிக்க ஜனா­தி­பதி ரொனால்ட் றீகனை படு­கொலை செய்ய முயன்­ற­தாக குற்றம் சுமத்­தப்­பட்ட ஜோன் ஹின்க்லே மன­நிலை பாதிப்­புக்­குள்­ளா­னவர் என்­பதால் விடு­த­லை­யானார்.


2004 : விண்­வெ­ளிக்குச் சென்ற முதல் தனியார் விண்­வெளி ஓடம் என்ற பெரு­மையை “ஸ்பேஸ்ஷிப் வன்” விண்­வெளி ஓடம் அடைந்­தது.


2006 : புளூட்­டோவின் புதி­தாக கண்­டு­பி­டிக்­கப்­பட்ட சந்­தி­ரன்­க­ளுக்கு நிக்ஸ், ஹைட்ரா எனப் பெய­ரி­டப்­பட்­டது.


2012 : இந்­தோ­னே­ஷி­யாவின் ஜாவா தீவுக்கும் அவுஸ்திரேலியாவின் கிறிஸ்மஸ் தீவுக்கும் இடையில் 200 பேருடன் பயணம் செய்துகொண்டிருந்த படகு கவிழ்ந்ததால் 17 பேர் உயிரிழந்தனர். 70 இற்கும் மேற்பட்டோர் காணாமல் போயினர்.

http://metronews.lk

  • தொடங்கியவர்

அரண்மனையைச் சத்திரமாக மாற்றிய துறவி! - ஜென் கதை #ZenStory

 
 

வ்வொரு நாளும் இந்த உலகத்தில் நம்மைச் சுற்றியிருக்கும், நாமே அறிந்திருக்காத நுட்பமான ஒரு விஷயத்தை, ஞானத்தை நமக்கு உணர்த்துவதுதான் ஜென் தத்துவம். `நீங்கள் எங்கே இருந்தாலும், அங்கே முழுமையாக இருங்கள்!’ என்பது ஒரு புகழ்பெற்ற வாசகம். இதன்படி வாழ்பவர்கள் வாழ்க்கையை நிறைவாக வாழ்கிறார்கள்; திருப்தி அடைகிறார்கள்; முழுமை பெறுகிறார்கள். இதை விளக்குகிற ஒரு ஜென் கதை இங்கே...

ஜென் 

அவர் ஒரு துறவி. அந்தப் பகுதி மக்களால் நன்கு அறியப்பட்டவர். அவர் ஒருநாள் நகரத்துக்கு வந்தார். நடை என்றால் அப்படி ஒரு வேக நடை. விடுவிடுவென எட்டு வைத்து அவர் நடந்து போக, சாலையின் இருபுறமும் இருந்த நகர மக்கள் அவரை வணங்கினார்கள்.

துறவி யாரையும் பார்க்கவில்லை; நகரச் சந்தடிகூட அவருக்கு உறைக்காததுபோல நடந்தார். அவர் கவனம் முழுக்க அரண்மனையை நோக்கியே இருந்தது. அரண்மனை வாயிலில் இருந்த காவலர்கள் அவரை அறிவார்கள். அவரை யாரும் தடுக்கவில்லை. வணங்கி வழிவிட்டார்கள்.

துறவி நேராக உள்ளே போனார். அந்த மாட மாளிகைக்குள் அவர் இதற்கு முன்னர் வந்ததில்லை. இருந்தாலும், அந்த இடம் நன்கு பழக்கப்பட்டதுபோல தாழ்வாரங்களையும் பெரிய பெரிய அறைகளையும் கடந்து உள்ளே போனார். அரண்மனை தாதிகள், பணியாளர்கள், காவலர்கள், அதிகாரிகள் யாரையும் அவர் சட்டை செய்யவில்லை. துறவி, அரசனின் பிரமாண்ட அறையை அடைந்தார். அரசனுக்கு முன்னே போய் நின்றார். அரசன் கல்வி, கேள்விகளில் சிறந்தவன். தரும சிந்தனை உள்ளவன். நல்லாட்சி வழங்குபவன் என மக்களிடம் பெயர் பெற்றவன். அவன் எழுந்து நின்று துறவியை வணங்கினான். பிறகு, கேள்விக்குறியோடு துறவியைப் பார்த்தான்.

ஜென்

``குருவே... வருக, வருக! முதலில் அமருங்கள். உங்கள் வருகையால் என் அரண்மனை புனிதம் அடைந்தது’’ என வரவேற்றான். பிறகு, ``என்ன வேண்டும் குருவே... ஆணையிடுங்கள்!’’ என்று கேட்டான்.

``ஒன்றும் இல்லை. இந்த விடுதியில் எனக்குத் தூங்கக் கொஞ்சம் இடம் வேண்டும்.’’

இந்தப் பதில் அரசனைத் துணுக்குற வைத்தது. பரம்பரை பரம்பரையாக வாழும் அரண்மனை. இவ்வளவு பிரமாண்ட மாளிகையைப் பார்த்து இந்தத் துறவி `விடுதி’ என்கிறாரே என்ற கோபமும் அவனுக்கு வந்தது. ஆனாலும் கோபத்தை அடக்கிக்கொண்டான். ``குருவே... இது விடுதி அல்ல. என் அரண்மனை!’’ என்றான் கடுகடுத்த குரலில்.

``சரி நான் உன்னை ஒரு கேள்வி கேட்கலாமா?’’

``கேளுங்கள் குருதேவா.’’

``இந்த அரண்மனை இதற்கு முன்னால் யாருக்குச் சொந்தமாக இருந்தது?’’

``என் தந்தைக்குச் சொந்தமாக இருந்தது.’’

``அவர் எங்கே?’’

``அவர் இறந்துவிட்டார்.’’

``அவருக்கும் முன்னால் இது யாருக்கு சொந்தமாக இருந்தது?’’

``என் பாட்டனாருக்கு.’’

``சரி. அவர் இப்போது எங்கே?’’

``அவரும் இறந்துவிட்டார்.’’

``ஆக, உன் தந்தை, பாட்டனார் இருவரும் இங்கே சில காலம் வந்து தங்கியிருக்கிறார்கள். வந்த வேலை முடிந்ததும் கிளம்பிப் போய்விட்டார்கள். அப்படியென்றால் இது விடுதிதானே! நீ என்னடாவென்றால் இதை அரண்மனை என்கிறாய்.’’

ஜென் நிலை 

 

அரசன் துறவியின் பதிலைக் கேட்டுத் திகைத்துப் போய்விட்டான். `துறவி கூறியது உண்மைதானே! இருக்கும் சின்ன வாழ்க்கையை வாழ மனிதன் வந்து தங்கிச் செல்லும் இடம்தானே இந்த பூமி. அதில் இருக்கும் இந்த அரண்மனை எனக்கும் என் அப்பாவுக்கும் என் தாத்தாவுக்குமேகூட விடுதி என்பதை மறுக்க முடியுமா? எவ்வளவு பெரிய தத்துவத்தை, இவ்வளவு எளிமையாக துறவி விளக்கிவிட்டாரே!’ என வியந்துபோனான். `என் அரண்மனை’ என்கிற வார்த்தையைச் சொன்னதற்காக வெட்கப்பட்டான். துறவியிடம் மன்னிப்புக் கோரினான். `நீங்கள் எங்கே இருந்தாலும், அங்கே முழுமையாக இருங்கள்’ என்கிற வாசகம் அந்த அரசனுக்கும் பொருந்தும். அரசன் முழுமை பெற்றவனாக இருந்திருந்தால், துறவி கேட்டவுடனேயே உண்மையை உணர்ந்திருந்திருப்பான். முழுமையான, நிஜமான நிறைவை நோக்கி மனிதனை நகர்த்துவதே ஜென் தத்துவம். அது அரசனுக்குப் புரிபட்டபோது துறவி அங்கே இல்லை. அவர் தன் வழியில் போய்க்கொண்டிருந்தார்.

http://www.vikatan.com

  • தொடங்கியவர்

யோகாசன பயிற்சிகளில் மத்திய அமைச்சர்கள் (புகைப்படத் தொகுப்பு)

 

சர்வதேச யோகா தினம் இந்தியா முழுக்க இன்று (புதன்கிழமை) கொண்டாடப்பட்ட நிலையில், ஆளும் பா.ஜ.கவை சேர்ந்த அமைச்சர்கள் மற்றும் மாநில முதல்வர்கள் இன்றைய தினம் யோகா பயிற்சியில் ஈடுபட்டனர். அதுகுறித்த புகைப்படத் தொகுப்பு.

பிரதமர் நரேந்திர மோதி லக்னோவில் நடைபெற்ற யோகா விழாவில் கலந்து கொண்டார்.படத்

 

பிரதமர் நரேந்திர மோதி லக்னோவில் நடைபெற்ற யோகா விழாவில் கலந்து கொண்டார்.

கேரளாவில் யோகா பயிற்சியில் மத்திய அமைச்சர் நிர்மலா சீத்தாராமன்

கேரளாவில் யோகா பயிற்சியில் மத்திய அமைச்சர் நிர்மலா சீத்தாராமன்

 

 புதுதில்லியில் யோகா பயிற்சியில் வெங்கையா நாயுடு

 

புதுதில்லியில் யோகா பயிற்சியில் வெங்கையா நாயுடு

 

ஹிமாச்சல பிரதேசத்தில் ரவிஷங்கர் தலைமையிலான யோகா விழாவில் கலந்து கொண்ட மத்திய அமைச்சர் ஸ்மிரிதி இராணி

 

ஹிமாச்சல பிரதேசத்தில் ரவிஷங்கர் தலைமையிலான யோகா விழாவில் கலந்து கொண்ட மத்திய அமைச்சர் ஸ்மிரிதி இராணி

 

ராஜஸ்தான் முதல்வர் வசுந்துரா ராஜே ஜெய்பூரில் யோகா பயிற்சியில் ஈடுபட்டார்.

 

ராஜஸ்தான் முதல்வர் வசுந்துரா ராஜே ஜெய்பூரில் யோகா பயிற்சியில் ஈடுபட்டார்.

மும்பையில் நடைபெற்ற யோகா விழாவில் மத்தியமைச்சர் சுரேஷ் பிரபு.

 

மும்பையில் நடைபெற்ற யோகா விழாவில் மத்தியமைச்சர் சுரேஷ் பிரபு.

மஹாராஷ்ட்ரா முதல்வர் தேவேந்திர ஃபட்நாவிஸ் மும்பையில் யோகா விழாவில் கலந்து கொண்டார்.

மஹாராஷ்ட்ரா முதல்வர் தேவேந்திர ஃபட்நாவிஸ் மும்பையில் யோகா விழாவில் கலந்து கொண்டார்.

 

யோகா குரு பாபா ராம் தேவ் உடன் யோகா பயிற்சியில் அமித் ஷா

 

யோகா குரு பாபா ராம் தேவ் உடன் யோகா பயிற்சியில் அமித் ஷா

 

http://www.bbc.com/

Edited by நவீனன்

  • தொடங்கியவர்

வைரலாகும் சாய்பல்லவி டப்பிங் வீடியோ

தமிழ்நாட்டுப் பெண்ணான  சாய்பல்லவி மலையாளத்தில் நிவின் பாலியின் 'ப்ரேமம்' படத்தின் மூலம் சினிமாவுக்கு அறிமுகமானார். மலர் டீச்சராக பலர் மனதைக் கொள்ளையடித்த இவர், தற்போது இயக்குநர் விஜய்யின் 'கரு' படத்தில் ஹீரோயினுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் ஒரு கதாபாத்திரத்தில் நடித்துக்கொண்டிருக்கிறார்.

sai pallavi


தெலுங்கில் இவர் நடிப்பில் விரைவில் வெளிவரப்போகும் 'ஃபிடா' படத்தின் டீசர், சமீபத்தில் வெளியாகி ஹிட் அடித்தது. தற்போது சாய்பல்லவி 'ஃபிடா' படத்துக்காக டப்பிங் பேசும் வீடியோ ஒன்றை, படத்தின் இயக்குநர் சேகர் கம்முலா ஃபேஸ்புக்கில் வெளியிட்டுள்ளார். 
அந்த வீடியோவில் அவருக்குத் தெலுங்கு தெரியாததால் வசனத்தை இரண்டு மூன்று முறை பேசிப் பார்த்த  பின்பு பேசுவதுபோல் உள்ளது. இந்த வீடியோ தற்போது இணையத்தில்  வைரலாகி வருகிறது. வருண் தேஜ் இந்தப் படத்தில் சாய்பல்லவிக்கு ஜோடியாக நடித்துள்ளார்.

 

  • தொடங்கியவர்

 

காஃபிக்கு ஆபத்து

புவிவெப்பமடைவதால் கோடிக்கணக்கானவர்களின் காலைபானமான காஃபி காணமல் போய்விடுமா?


போகக்கூடும் என்கிறார் “காஃபி ரிபோர்ட்" அறிக்கையின் துணை ஆசிரியரும் கிவ்பூங்கா ஆய்வாளருமான ஆரோன் டேவிஸ்.


பூமி வெப்பமடைவதை உடனடியாக தடுக்காவிட்டால் காஃபிகொட்டை விளைச்சல் குறையும்; காஃபியின் சுவை மோசமாகும்; அதன் விலையும் பலமடங்கு அதிகரிக்கும் என எச்சரிக்கிறார் அவர்.


புவி வெப்பமடையும் போக்கு ஏற்கனவே காஃபி கொட்டை பயிரிடலை பாதிக்கத் துவங்கிவிட்டது என்கிறார் அவர்.


காஃபியின் பிறப்பிடம் எத்தியோப்பியா. ஆப்ரிக்காவின் மிகப்பெரிய காஃபி ஏற்றுமதி நாடும் அதுவே.


தற்போது எத்தியோப்பியாவின் காஃபி பயிராகும் நிலத்தில் 60% புவி வெப்பமடைவதால் காணாமல் போகுமென கணக்கிடப்படுகிறது.


சூடான காஃபி சுவையான பானமாக இருக்கலாம். ஆனால் பூமி சூடானால் காஃபியே காணாமல் போய்விடும் என்கிறார்கள் ஆய்வாளர்கள்.

Edited by நவீனன்

  • தொடங்கியவர்

சிக்கன் சாப்பிட ஒரு வாரம் லீவு வேண்டும்: சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவும் ரெயில்வே தொழிலாளியின் கடிதம்

 

சத்தீஸ்கர் மாநிலத்தை சேர்ந்த ரெயில்வே தொழிலாளி ஒருவர், சிக்கன் சாப்பிடுவதற்காக ஒரு வாரம் விடுமுறை தேவை என தனது உயர் அதிகாரிக்கு எழுதிய கடிதம் சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது.

 
சிக்கன் சாப்பிட ஒரு வாரம் லீவு வேண்டும்: சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவும் ரெயில்வே தொழிலாளியின் கடிதம்
 
நாம் அனைவரும் குடும்பத்துடன் சுற்றுலா செல்வதற்காக முன்னேற்பாடுகள் செய்தபின் அலுவலகத்தில் விடுமுறை கேட்பது வழக்கம்.

ஆனால், சத்தீஸ்கர் மாநிலம் பிலாஸ்பூர் மாவட்டத்தில் உள்ள தீப்கா ரெயில்வே நிலையத்தில் பணியாற்றும் தொழிலாளி பங்கஜ் ராஜ் என்பவர், சிக்கன் சாப்பிடுவதற்காக ஒரு வாரம் விடுமுறை வேண்டும் என கேட்டு தனது உயர்  அதிகாரிக்கு கடிதம் எழுதியுள்ளார்.

அந்த கடிதத்தில் அவர் கூறியுள்ளதாவது:-

விரைவில் ஷ்ரவன் மாத (வட மாநிலங்களில் மழைக்காலத்தின் தொடக்கம்) பண்டிகை வரவிருக்கிறது. இதனால் அந்த மாதம் முழுவதும் எங்கள் வீட்டில் அசைவ உணவை சமைக்க மாட்டோம். 

எனவே சிக்கன் சாப்பிடுவதற்காக எனக்கு ஒரு வாரம் (ஜூன் 20 முதல் 27 ஆம் தேதி வரை) விடுமுறை வேண்டும். அப்போதுதான் உடலுக்கு தேவையான சத்துக்கள் கிடைத்து என்னால் உற்சாகமாக வேலை செய்ய முடியும் என தனது மேலதிகாரியான ஸ்டேஷன் மாஸ்டரிடம் அளித்துள்ள அந்த கடிதத்தில் தெரிவித்துள்ளார்.
201706211832475076_Capture._L_styvpf.gif
இப்போது, அந்த கடிதம் சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது. அவருக்கு விடுமுறை அளிப்பது தொடர்பான அதிகாரம் கொண்ட ரெயில்வே ஸ்டேஷன் மாஸ்டரின் முத்திரையும் அந்த கடிதத்தில் தெளிவாக காணப்படுகிறது.

ஆனால், ஸ்டேஷன் மாஸ்டர் பங்கஜ் ராஜுக்கு விடுமுறை கொடுத்தாரா, இல்லையா? என்பது குறித்த தகவல்கள் கிடைக்கவில்லை.

http://www.maalaimalar.com

  • தொடங்கியவர்

உலக இசை தினம்: ஜூன் 21

ஒவ்வொரு வருடமும் ஜூன் 21-ந்தேதி உலக இசை தினமாக கொண்டாடப்படுகிறது. இந்தியா, ஆஸ்திரேலியா, பிரிட்டன், சீனா உள்ளிட்ட 110-க்கும் மேற்பட்ட நாடுகளில் இது கொண்டாடப்படுகிறது. இதே தேதியில் நிகழ்ந்து முக்கிய நிகழ்வுகள்:- * 1734 - கியூபெக்கில் மொண்ட்றியால் நகரில் மரீ-ஜோசெப் அஞ்சலிக் என்ற கறுப்பின அடிமைப்பெண், அவளது எசமானின் வீட்டைத் தீயிட்டுக் கொழுத்தியமைக்காகவும், அதனால் நகரின் பெரும் பகுதி அழிந்தமைக்காகவும் குற்றம் சாட்டப்பட்டு மக்கள் மத்தியில்

 
 
 
 
உலக இசை தினம்: ஜூன் 21
 
ஒவ்வொரு வருடமும் ஜூன் 21-ந்தேதி உலக இசை தினமாக கொண்டாடப்படுகிறது. இந்தியா, ஆஸ்திரேலியா, பிரிட்டன், சீனா உள்ளிட்ட 110-க்கும் மேற்பட்ட நாடுகளில் இது கொண்டாடப்படுகிறது.

இதே தேதியில் நிகழ்ந்து முக்கிய நிகழ்வுகள்:-

* 1734 - கியூபெக்கில் மொண்ட்றியால் நகரில் மரீ-ஜோசெப் அஞ்சலிக் என்ற கறுப்பின அடிமைப்பெண், அவளது எசமானின் வீட்டைத் தீயிட்டுக் கொழுத்தியமைக்காகவும், அதனால் நகரின் பெரும் பகுதி அழிந்தமைக்காகவும் குற்றம் சாட்டப்பட்டு மக்கள் மத்தியில் சித்திரவதை செய்யப்பட்டுத் தூக்கிலிடப்பட்டாள்.

* 1788 - நியூ ஹாம்சயர் ஐக்கிய அமெரிக்காவின் 9வது மாநிலமாக இணைந்தது. * 1798 - ஐரியத் தீவிரவாதிகளின் எழுச்சி பிரித்தானியாவினால் முறியடிக்கப்பட்டது. * 1898 - குவாம் தீவை ஐக்கிய அமெரிக்கா ஸ்பெயினிடம் இருந்து கைப்பற்றியது. * 1940 - இரண்டாம் உலகப் போர்: பிரான்ஸ் ஜெர்மனியிடம் வீழ்ந்தது. * 1942 - இரண்டாம் உலகப் போர்: லிபியாவின் டொப்ரூக் நகரம் இத்தாலி, மற்றும் ஜெர்மனியப் படைகளிடம் வீழ்ந்தது.

* 1945 - இரண்டாம் உலகப் போர்: ஒகினவா சண்டை முடிவுற்றது. * 1970 - பிரேசில் இத்தாலியை 4-1 என்ற கோல் கணக்கில் தோற்கடித்து உதைபந்தாட்ட உலகக் கிண்ணத்தை வென்றது. * 1990 - மன்னாரில் கொண்டச்சி இராணுவ முகாம் விடுதலைப் புலிகளால் தாக்கி அழிக்கப்பட்டது. * 1999 - அப்பிள் கணினி நிறுவனம் தனது முதல் iBook இனை வெளியிட்டது. * 2002 - உலக சுகாதார நிறுவனம் ஐரோப்பாவை போலியோ நோய் அற்ற கண்டமாக அறிவித்தது.

* 2004 - விண்கப்பல் ஒன்று (SpaceShipOne) தனது முதலாவது தனியாரினால் ஆதரவளிக்கப்பட்ட விண்பயணத்தை முடித்துக்கொண்டது. * 2006 - புளூட்டோவின் புதிதாகக் கண்டுபிடிக்கப்பட்ட துணைக்கோள்கள் நிக்ஸ் மற்றும் ஹைட்ரா எனப் பெயரிடப்பட்டது.

http://www.maalaimalar.com

  • தொடங்கியவர்

அரசியல், உறவுகள், ஊழல், மரணம்... பெனாசிர் புட்டோ டைரிக் குறிப்புகள்! - பிறந்தநாள் சிறப்புப் பகிர்வு#Benazir

 

பெனாசிர் புட்டோ

முன்குறிப்பு: பெனாசிர் புட்டோ வாழ்வின் அரசியல் அத்தியாயங்கள் உங்களுக்கு யாரையாவது நினைவுபடுத்தினால், கமென்டில் பதியலாம். 

பெனாசிர் புட்டோ. பாகிஸ்தானைச் சேர்ந்த பெண் அரசியல்வாதி. உலகிலேயே, ஓர் இஸ்லாமிய நாட்டுக்குத் தலைமைப்பொறுப்பேற்ற முதல் பெண்மணி என்ற பெருமைக்கு உரியவர். 1953-ல் பிறந்து 2007 வரை வாழ்ந்த அவர் வாழ்வின் அரசியல் பக்கங்கள், பல திருப்புமுனைகளால் தொகுக்கப்பட்டவை. 

பெனாசிருடைய அப்பா ஜுலிபிகார் அலிபுட்டோ, முன்னாள் பாகிஸ்தான் பிரதமர். இதனால் இளவயதிலேயே அரசியல் அறிமுகம் கிடைத்தது பெனாசிருக்கு. பட்டப்படிப்பு, அரசியல் ஆர்வம், அதோடு பதவியிழந்த தன் அப்பா தூக்கிலிடப்பட்ட கோபம் இவையெல்லாம் பெனாசிரை 24 வயதிலேயே அரசியலில் காலூன்ற வைத்துவிட்டன. 1988-90, 1993-96 என இரண்டு முறை பாகிஸ்தானின் பிரதமராக ஆட்சி செய்தார். 

பெனாசிருடைய அப்பா ஜுல்பிகார் அலி மரணத்தைத் தொடர்ந்து பெனாசிருடைய அம்மா நுஸ்ரத் புட்டோ பாகிஸ்தான் மக்கள் கட்சியின் தலைமைப் பொறுப்பை ஏற்றார். ஆனால், அவரை விட அவருடைய மகள் பெனாசிருக்கே அதிக செல்வாக்கு இருந்தது. இதனால் அம்மா, பெண் இடையே புகைச்சல் கிளம்பியது. 

அரசியலில் பெனாசிர் தோற்றதற்கு வெளியில் பல காரணங்கள் சொல்லப்பட்டாலும், உண்மைக் காரணம் உறவினர்களாக அவரைச் சூழ்ந்திருந்தவர்கள்தாம். ஒரு பக்கம் பெனாசிரின் தாய், தன் உறவுகள் ஒவ்வொருவராகத் தேடித் தேடி அரச பதவிகளைக் கொடுத்துக் கொண்டிருந்தார். மறுபக்கம் பெனாசிரின் காதல் கணவர் ஆஸிஃப் சர்தாரி,  மிகப்பெரிய பிசினஸ் மேனாகப் பல துறைகளில் கால் பதித்தவர். பிரதமரின் கணவர் என்ற அதிகாரத்தைப் பயன்படுத்தி நாடறிய ஊழலில் சம்பாதித்தார். பின்நாள்களில் இனக்கலவரம் ஏற்படவும், பெனாசிர் சிறை செல்லவும் காரணமானது இந்த ஊழல்.  மூன்றாவதாக, பெனாசிரின் சகோதரர் மிர் முர்தாஸா. தன் தந்தை இறந்தவுடன் ஆஃப்கான் ஆதரவுடன் ‘அல் ஜுல்பிகர்’ என்ற தீவிரவாத அமைப்பை ஆரம்பித்த இவர், அக்கா பிரதமரான பின்பும் தான் ஆரம்பித்த தீவிரவாத அமைப்பைத் தொடர்ந்தார். மக்களுக்கிருந்த பெனாசிர் மீதான நம்பிக்கையில் விழுந்த விரிசலின் தொடக்கம் இதுதான். 

இப்படித் தன்னைச் சுற்றியுள்ளவர்கள் தனக்கு ஏற்படுத்தும் சங்கடங்களைச் சமாளிக்கவே பெனாசிர் விழிபிதுங்கி நின்று கொண்டிருந்த நேரத்தில்தான், ஆட்சியில் பல பிழைகளையும் செய்தார். பாகிஸ்தான் உளவு அமைப்பைக் கண்டுகொள்ளாமல் விட்டார். எல்லையில் தொடங்கிய தீவிரவாத அமைப்புகளை கண்டறிந்து கலைக்காமல் விட்டார். ராணுவத்துக்கு உதவும் வகையில் வேலைவாய்ப்பில்லாத இளைஞர்களை ஒன்று திரட்டி அளிக்கும் பயிற்சி என்று ஆரம்பித்து, பின்னர் பயங்கரவாதப்படையாக மாறிய அந்த சிவிலியன் படையைத் தொடர்ந்து கண்காணித்து தடுத்து நிறுத்தாமல் விட்டார். அடுத்ததாக பாகிஸ்தானின் பொருளாதரத்தையே சீர்குலைத்த போதைப்பொருட்களின் ஆதிக்கம். பாகிஸ்தான் உள்ளே போதை பொருட்களை விற்கவே யோசித்த வரலாற்றை மாற்றி, அதை ஒரு போதை சாம்ராஜ்ஜியமாக வளரவிட்டார். 

அப்போது நவாஸ் ஷெரீஃபின் முஸ்லீம் லீக் பிரதான எதிர்க்கட்சி. எதிர்கட்சி தன் வேலையைக் கட்சிதமாகச் செய்து மக்கள் மனதில் பெனாசிர் மீதான நம்பிக்கையைக் கலைத்தது.

ஒரு பக்கம் சொந்த உறவுகள், இன்னொரு பக்கம் கூட்டணிக் குழப்பம், அரசியல் தந்திரங்கள் என பெரும் கலவரத்தைச் சந்தித்துக் கொண்டிருந்தார் பெனாசிர். அப்போது இனக்கலவரம் ஏற்படவே உடனடியாக ராணுவம் தலையிட்டது. ராணுவத்தளபதியாக இருந்த மிர்ஸா அஸ்லம் பேக் பெனாசிரின் ஆட்சியைக் கலைத்து நவாஸ் ஷெரீஃபை பிரதமராக நியமித்தார். பெனாசிர் மீது ஊழல் குற்றச்சாட்டு சுமத்தப்பட்டது. பெனாசிரும் அவரது கணவரும் வெவ்வேறு சிறைகளில் அடைக்கப்பட்டனர். 

காலச்சக்கரம் சுழன்றது. அடுத்தடுத்து வந்த பிரதமர்களின் மீது மக்கள் நம்பிக்கை இழந்திருந்தனர். அப்போது பிரதமாரக இருந்த முஷாரஃப், வரவிருக்கும் தேர்தலில் தான் போட்டியிட்டால் நிச்சயம் தோல்வியடைவோம் என்பதை உணர்ந்திருந்தார். அதனால் வேறுவழியின்றி  வெளிநாட்டில் சிறைவைக்கப்பட்டிருந்த பெனாசிர் புட்டோவை பாகிஸ்தானுக்கு வரவழைத்தார். ஆனால் பெனாசிரோ முஷாரஃப் உடன் கூட்டணி சேராமல் நவாஸுடன் கூட்டணி சேர்ந்தார். அப்போது வெளியான கருத்துக்கணிப்புகள் எல்லாம் பெனாசிருக்கு ஆதரவாகவே இருக்க, அடுத்த பிரதமர் பெனாசிர்தான் என்று அனைவரும் நம்பத்துவங்கியிருந்தனர். 

யாரும் எதிர்பாராதவிதமாக 2007ம் ஆண்டு டிசம்பர் மாதம் 27-ம் தேதி தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் படுகொலை செய்யப்பட்டார் பெனாசிர். பாகிஸ்தான் மட்டுமல்லாமல் உலகையே உலுக்கியது இந்தப் படுகொலை! கொலைக்குக் காரணம் வெளிநாட்டில் சிறைவைக்கப்பட்டிருந்த பெனாசிரை கூட்டணிக்காக அழைத்த முஷாரஃப்தான், ராணுவம்தான்  என்று மக்கள் அலறினார்கள். உண்மையில் கொலைக்குக் காரணம் தான் இல்லை என்றாலும், ஒரு சர்வாதிகாரியாகச் செயல்பட்டதால் அதனை மக்கள் மத்தியில் நம்ப வைக்கும் தகுதியை இழந்திருந்தார் முஷாரஃப். பெனாசிர் மீதான அனுதாப அலையைத் தனக்குச் சாதமாகப் பயன்படுத்திக்கொண்டார் பெனாசிரின் கணவர் ஆசிஃப் அலி. மனைவியின் பெயரைச் சொல்லி அரசியல் செய்த அவருடன் கைகோத்துக்கொண்டார்  நவாஸ் ஷெரிஃப். 2008ம் ஆண்டு முஷ்ரஃப் தன் பதவியை ராஜினாமா செய்ய, பாகிஸ்தானின் பிரதமரானார் ஆசிப் அலி சர்தாரி.

 

பாகிஸ்தானின் அரசியல் வரலாற்றுப் பக்கங்களின் முக்கியப் பெண் ஆளுமையாக வாழ்ந்துகொண்டிருக்கிறார் பெனாசிர் புட்டோ! 

 

 

http://www.vikatan.com

  • தொடங்கியவர்
‘அடங்காத ஆசைகள் ஆபத்து’
 

image_7773230e29.jpgமனதை மயக்கும் வசீகரப் பொருள்களை வாங்குவதற்கு அவசரப்பட வேண்டாம். இன்றைய நவீன உலகில், இலத்திரனியல் சாதனங்கள், அழகுச்சாதனப் பொருள்களின் தரத்தை அறியாமல், பணத்தை மனம்போன போக்கில் செலவழித்து இழத்தலாகாது. 

பொருள்களின் மீது அதீத ஆசைகொண்டால், பணம் படைத்தவர்கள் அதை வெகுசுலபமாக வாங்கி விடுவார்கள். இருக்கும் கறுப்புப் பணத்தை வைத்திருந்து என்னதான் செய்வது? 

ஆனால், நடுத்தர வர்க்க மக்களுக்கோ, ஆடம்பர இலத்திரனியல் பொருள்களை, வாகனங்களை கடன் அடிப்படையில் கொள்ளைக்காரக் கொம்பனிகளிடமிருந்து கொள்வனவு செய்து, படும் அவஸ்தைகள் கொஞ்சநஞ்சமானது அல்ல. 

ஆனால், ஏழைகளுக்கு இந்தப் பிரச்சினையே கிடையாது. சுமாரான எளிய உணவு, படுக்க, சமைக்க குடிசை மட்டுமே போதுமானது எனத் திருப்திப்பட்டுக் கொள்வார்கள். அடங்காத ஆசைகள் ஆபத்தானது. இருக்கின்ற களிப்பை இழத்தலாகாது. 

  • தொடங்கியவர்

1658 : யாழ்ப்­பா­ணத்தை போர்த்­து­க்கே­ய­ரி­ட­மி­ருந்து ஒல்­லாந்தர் கைப்­பற்­றினர்

வரலாற்றில் இன்று

ஜூன் – 22

 

1593 : குரோ­ஷி­யர்கள் சிசாக் என்ற இடத்தில் இடம்­பெற்ற சமரில் துருக்­கி­யர்­களை வென்­றனர்.


1633 : பிர­பஞ்­சத்தின் மையம் பூமி அல்ல, சூரியன் என்ற தனது அறி­வியல் கொள்­கையை உரோம அர­சுப்­ப­டை­களின் வற்­பு­றுத்­தலின் பேரில் கலி­லியோ கலிலி வாபஸ் பெற்றுக் கொண்டார்.

vararu-june--22

1658 : போர்த்­துக்­கே­ய­ரிடம் இருந்து ஒல்­லாந்தர் யாழ்ப்­பா­ணத்தைக் கைப்­பற்­றினர்.


1783 : ஐஸ்­லாந்தின் லாக்கி எரி­ம­லை­யி­லி­ருந்து வெளி­யேறிய நச்சு வளி பிரான்ஸின் ல ஹாவ்ரா நகரைத் தாக்­கி­யது.


1812 : முதலாம் நெப்­போ­லி­யனின் பிரெஞ்சுப் படைகள் ரஷ்­யாவை முற்­று­கை­யிட்­டன.


1825 : பிரித்­தா­னிய நாடா­ளு­மன்றம் நில­மா­னிய முறையை நீக்­கி­யது.


1848 : பாரிஸில் தொழி­லா­ளர்­களின் ஜூன்  எழுச்சி ஆரம்­ப­மா­யிற்று. ஆயி­ரக்­க­ணக்­கானோர் கொல்­லப்­பட்­டனர்.


1893 : காம்­பர்­டவுன் என்ற ரோயல் கடற்­படைக் கப்பல் ஒன்று விக்­டோ­ரியா என்ற பிரித்­தா­னிய மத்­தி­ய­தரைக் கடற்­படைக் கப்­ப­லுடன் மோதி­யதில் 358 பேர் கொல்­லப்­பட்­டனர்.


1898 : ஸ்பானிய, அமெ­ரிக்கப் போரில் அமெ­ரிக்கக் கடற்­ப­டை­யினர் கியூ­பாவில் தரை­யி­றங்­கினர்.


1911 : ஐக்­கிய இராச்­சி­யத்தின் மன்­ன­ராக ஐந்தாம் ஜோர்ஜ்  முடிசூடினார்.


1940 : இரண்டாம் உலகப் போரில் நாசி ஜேர்­ம­னி­யுடன் சமா­தான உடன்­பாடு செய்­து­கொள்ள பிரான்ஸ்  ஒப்புக் கொண்­டது.


1941 : கிழக்குப் போர்­முனை: ஜேர்­ம­னியப் படை­யினர் சோவியத் ஒன்­றி­யத்தை முற்­று­கை­யிட்­டனர்.


1941 : சோவியத் ஆக்­கி­ர­மிப்­புக்கு எதி­ரான லித்­து­வே­னி­யாவின் விடு­தலைப் போர் ஆரம்­ப­மா­னது.


1962 : எயார் பிரான்ஸின் போயிங் விமானம் மேற்­கிந்­தியத் தீவு­களில் கௌத­லூபே தீவில் விபத்­துக்­குள்­ளா­கி­யதில் 113 பேர் கொல்­லப்­பட்­டனர்.


1976 : கன­டாவில் மர­ண­தண்­டனை வழங்கு­வது நிறுத்­தப்­பட்­டது.


1978 : புளூட்­டோவின் சாரண் என்ற துணைக்கோள் கண்­டு­பி­டிக்­கப்­பட்­டது.


1986 : மெக்­ஸி­கோவில் நடை­பெற்ற உலகக் கிண்ண கால்­பந்­தாட்டத் தொடரின் கால் இறுதிப் போட்­டியில் ஆர்­ஜென்­டீன வீரர் மர­டோனா கையால் பந்தை தட்டி கோல் புகுத்­தினார். அதே போட்­டியில் அவர்  இங்­கி­லாந்து வீரர்கள் ஐவரைக் கடந்­து­சென்று இந்­நூற்­றாண்டின் மிகச் சிறந்த கோல் என வர்­ணிக்­கப்­படும் மற்­றொரு கோலையும் புகுத்­தினார்.


2002 : ஈரானில் 6.5 ரிச்டர் அள­வி­லான பூகம்­பத்­தினால் 261 பேர் கொல்­லப்­பட்­டனர்.


2009 : அமெ­ரிக்­காவின் தலை­நகர் வொஷிங்டன் டி.சி.யில் நிறுத்­தி­வைக்­கப்­பட்­டி­ருந்த ரயி­லுடன் மற்­றொரு ரயில் மோதி­யதால் 9 பேர் உயி­ரி­ழந்­த­துடன், 81 பேர் காயமடைந்தனர். 


2012 : பராகுவே ஜனாதிபதி பெர்னாண்டோ லுகோ, குற்றவியல் பிரேரணை மூலம் பதவியிலிருந்து நீக்கப்பட்டார்.


2015 : ஆப்கானிஸ்தான் நாடாளுமன்றக் கட்டடத்தின் மீது தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தினர்.
 

http://metronews.lk

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.