Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இளமை புதுமை பல்சுவை

Featured Replies

  • தொடங்கியவர்

நாளைய தீர்ப்பில் என்ட்ரி... இன்றைய ஹிட் ஹிஸ்ட்ரி... 'வாவ்' விஜய்! #HBDVijay

 
 

vijayssdsd1_09168.jpg

வர் திரைத் துறையில் முக்கியமான ஓர் இயக்குநர். அவரின் மகனை ஹீரோவாக்கிப் பார்க்க வேண்டும் என நினைத்தார். அதற்கு மகன்தான் காரணம். ரசித்து ரசித்து ஒரு கதை எழுதி, படப்பிடிப்பைத் தொடங்கினார். மகனின் முகவெட்டில் சில பிரச்னைகள். போட்டோ ஷூட் செய்த சிலர் `இந்த ஆங்கிள்ல ஷாட் வெச்சா ம்ஹூம்... நல்லாயிருக்க மாட்டார்' எனச் சொல்ல, படத்தை கவனத்துடன் ஷூட் செய்தார். ஏகப்பட்ட ரீடேக்குகள், ஏகப்பட்ட செலவுகள். எதைப் பற்றியும் கவலையின்றி மகனுக்காகச் செய்தார். படம் ரிலீஸ் ஆனது. பிளாக்பஸ்டர். முதல் படத்திலேயே ஏகப்பட்ட பெண் ரசிகைகள். அரங்குகளில் ரசிகர்களின் ஆராவாரம். அதுவரை அறிமுக நாயகர்கள் யாருக்கும் கிடைக்காத வரவேற்பு. அதன் பிறகு தொட்டதெல்லாம் ஹிட். நடனத்துக்கு அவர்தான் அகராதி. கோடிக்கணக்கான ரசிகர்கள். தவிர்க்க முடியாத சக்தி ஆனார். அந்த நடிகர், ஹ்ருத்திக் ரோஷன். அந்த அப்பா, ராகேஷ் ரோஷன். அந்தப் படம் `கஹோ நா ப்யார் ஹை'.

விஜய்

இந்தக் கட்டுரை அவரை பற்றியல்ல. மேலே சொன்னதில் இந்த நாயகனுக்கும் பொருந்தும் விஷயம், அவரது அப்பா இயக்குநர் என்பதும் முதல் படத்திலேயே ஹீரோவுக்கான முகவெட்டு இவருக்கும் இல்லை என்பதும் மட்டும்தான். இவரது முதல் படம் பிரமாண்டமாக எடுக்கப்படவில்லை; அதிக செலவு செய்யப்படவில்லை; பிளாக்பஸ்டர் ஆகவில்லை; ரசிகைகள் காத்திருக்கவில்லை; சினிமா ரசிகர்களில் பலர் அவரை அடையாளம்கூட கண்டுக்கொள்ளவில்லை. ஆனால், ஹ்ருத்திக்குக்கு சினிமாவில் என்னவெல்லாம் கிடைத்தனவோ, அவை எல்லாம் இவருக்கும் கிடைத்தன. தொட்டதெல்லாம் ஹிட். நடனத்துக்கு இவர்தான் அகராதி. கோடிக்கணக்கான ரசிகர்கள். தவிர்க்க முடியாத சக்தி ஆனார். அந்தப் படம் `நாளைய தீர்ப்பு'. நடிகர், விஜய்!

ஒரு பிரபலத்தின் மகனாகப் பிறப்பது சில விஷயங்களில் செளகர்யம்தான். அது ஒரு என்ட்ரியை எளிதாக்கும். ஆனால், அந்தச் சலுகையைச் சரியாகப் பயன்படுத்தி அடுத்த கட்டத்துக்குத் தாண்டவில்லையெனில், அதே சலுகை சவுக்கடியாகவும் மாறும். அந்தச் சலுகை கிடைக்காத ஒருவன் சாதிக்கவில்லையெனில், அது ஒரு விஷயம் கிடையாது. ஆனால், கிடைத்தவன் சாதிக்கவில்லையென்றால் தீர்ந்தது விஷயம். அந்தத் தோல்வி தரும் மன உளைச்சல் நகரவே விடாது. அதைத் தாங்கிக்கொள்ளும் பக்குவம் எல்லோருக்கும் வாய்க்காது. பக்குவம் வாய்த்தாலும் மீண்டும் எகிறி அடிக்க பலம் போதாது. அந்தப் பக்குவம், பலம் இரண்டும் விஜய்க்கு இருந்தன. சினிமாவில் நுழைய வேண்டும் என்பது விஜய்யின் ஆசை. நுழைந்த பிறகே அதிலுள்ள சிரமங்கள் அவருக்குப் புரிந்தன.

VIjayவெற்றி-தோல்விகளைப் பற்றி கவலைப்படாமல் படங்கள் நடித்தார். சீனியர் நடிகர்களுடன் நடித்து, அனுபவத்தைப் பெற்றார். படப்பிடிப்பு இல்லாத நேரங்களில் கதவை  மூடிக்கொண்டு வெறித்தனமாக நடனம் ஆடினார். நாம் திரையில் பார்க்கும் ஒவ்வொரு நிமிட நடனத்துக்குப் பின்னும் விஜய்யின் பல மணி நேர பயிற்சி இருக்கிறது. படப்பிடிப்புக்கு நேரத்துக்கு வந்துவிடுவார். எந்த அறிமுக இயக்குநரையோ, நடிகர்களையோ துச்சமாக நினைக்க மாட்டார். 

விஜய் அளவுக்கு தன் கரியரைத் தெளிவாக வரையறுத்தவர்கள் எவரும் இல்லை என்றுதான் தோன்றுகிறது. முதல் எட்டு படங்கள் தனக்கான சோதனைக்களமாகக்கொண்டார். கொஞ்சம் மசாலா தூக்கலாகத்தான் இருக்கும். அதிலிருந்து தன்னை விடுவித்துக்கொள்ள `பூவே உனக்காக' கதையைத் தேர்வுசெய்தார். அந்தப் படத்தின் வெற்றி, அவரை குடும்பங்களுக்குள் கொண்டுசென்றது. `லவ் டுடே', `காதலுக்கு மரியாதை', `துள்ளாத மனமும் துள்ளும்' என அந்த வகை படங்களில் (Genre) அவர் தந்த வெற்றிகள் அவரின் போட்டியாளர்கள் யாரும் தந்திராத வெற்றி. பிறகு `என்றென்றும் காதல்', `நிலாவே வா', `கண்ணுக்குள் நிலவு' என வரிசையாகத் தோல்விகள். தன்னைப் புதுப்பித்துக்கொள்ள முடிவுசெய்தார். அப்போது அவர் நடித்த படம்தான் `குஷி'. 

இது வேறு மாதிரியான விஜய்யை ரசிகர்களுக்குக் காட்டியது. கொஞ்சம் மாடர்ன் ஆனார். ராஜுசுந்தரத்தின் உதவியால் அவரது நடனம் மாறியது. `குஷி', `பத்ரி', `யூத்' எனப் பாடல்களுக்காகவே அவரது படங்கள் பட்டையைக் கிளப்பின. சாட்டிலைட் சேனல்களும் படையெடுத்த காலம் அது. அனைத்து சேனல்களிலும் எப்போதும் விஜய்தான் ஆடிக்கொண்டிருப்பார். `நடுக்காட்டுல ஒரு டிவி இருந்தால் போதும்... விஜய் பாட்டைப் பார்த்துட்டே எவ்ளோ வருஷம் வேணும்னாலும் இருப்பேன்' என அப்போது நிறைய தங்கைகள் சொல்லி நாம் கேட்டிருப்போம். தன் உயரம் வளர்வதை விஜய் அறியாமலிருப்பாரா? நிறைய படங்கள் நடிக்காமல், ஆண்டுக்கு மூன்று படங்கள் என எண்ணிக்கையைக் குறைத்தார். இது அவரது மார்க்கெட் வேல்யூவைக் கூட்டியது.

2000 - கண்ணுக்குள் நிலவு, குஷி, பிரியமானவளே

2001 - பிரெண்ட்ஸ், பத்ரி, ஷாஜகான்

2002 - தமிழன் யூத், பகவதி

2003 - வசீகரா, புதிய கீதை, திருமலை

2004 - உதயா, கில்லி, மதுர

`கில்லி', விஜய்யின் கிராஃபை ராக்கெட் வேகத்தில் உயர்த்திய படம். சென்னை உதயம் காம்ப்ளெக்ஸில் அனைத்து திரைகளிலும் ஓடி சாதனை புரிந்தது. ரிலீஸுக்கு முன்பே `sure shot' என விளம்பரப்படுத்தும் அளவுக்கு விஜய்யின் மார்க்கெட் இருந்தது. அதற்கு அதன் தயாரிப்பாளரும் ஒரு காரணம். இதுவரை விஜய்யும் ஏ.எம்.ரத்னமும் மூன்று படங்களில் இணைந்திருக்கிறார்கள். மூன்றுமே ஹிட் (குஷி, கில்லி, சிவகாசி)

கில்லி

2006-ம் ஆண்டில் விஜய்க்கு மீண்டும் ஒரு தேக்க நிலை ஏற்பட்டது. `தன்னுடைய ஸ்க்ரீன் பிரசென்ஸ் மக்களுக்கு போரடிக்கிறதோ!' என்ற சந்தேகம். `ஆமாம்' என்றது `ஆதி'யின் படுதோல்வி. அந்த வருடம் வேறு எந்தப் படமும் நடிக்கவில்லை விஜய். `போக்கிரி' மூலம் தன்னை  மாற்றிக்கொண்டார். `மகேஷ்பாபு ஸ்டைலைக் காப்பியடிக்கிறார்' என்ற குற்றச்சாட்டு இருந்தாலும், `போக்கிரி' வெற்றி, விஜய்யைத் தொடரச் செய்தது. அதன் பிறகு இரண்டு ஆண்டுகளுக்கு மூன்று படங்கள் எனக் குறைத்துக்கொண்டார்.

2007, 2008 - போக்கிரி, அழகிய தமிழ் மகன், குருவி

2009, 2010 - வில்லு, வேட்டைக்காரன், சுறா

இவற்றில் `போக்கிரி'யைத் தவிர மற்ற எதுவும் பெரிய வெற்றிபெறவில்லை. சினிமா மாறுவதை விஜய் கவனிக்காமலா இருப்பார்? தன்னால், இனி நடிப்புக்கு முக்கியத்துவம் இருக்கும் படங்களும், பெரிய இயக்குநர்களுடனான படங்களும் பண்ண முடியும் என நம்பினார். `நண்பன்' தொடங்கியது. அமீர் கான் அசத்திய கதாபாத்திரத்தை விஜய் சமாளித்துவிட்டார் எனப் பெயர் வாங்கினார். அதே ஆண்டு வந்த `துப்பாக்கி', விஜய்யை மீண்டும் பல கட்டங்கள் முன்னால் கொண்டுசென்றது. 

`கில்லி' வெற்றிபெற்ற பிறகு `மதுர' படம் வெளிவந்தது. `கில்லி'யின் வெற்றி, `மதுர' படத்தின் மவுசை எங்கேயோ தூக்கிச் சென்றது. தயாரிப்பாளர் நினைத்ததைவிட பல மடங்கு அதிக பணம் தந்து ஏரியாக்கள் வாங்கப்பட்டன. அதுதான் சினிமா. ஆனால், இன்று முந்தைய படத்தின் வெற்றி-தோல்விகள் விஜய்யின் மார்க்கெட்டை ஒன்றும் செய்வதில்லை. அதையெல்லாம் தாண்டி அவர் வளர்ந்துவிட்டார்.

`உயரத்தை அடைந்துவிட்டால் எல்லா பக்கங்களிலும் சரிவுதான்' என்பார்கள். ஆனால், உயரத்தைக் கூட்டிக்கொண்டேயிருப்பதுதான் விஜய்யின் ஸ்டைல். வளர்ந்துவிட்டதாக அவர் எப்போதும் நினைப்பதேயில்லை. `வளர்ந்துகொண்டேயிருப்பேன்' என விஜய் முடிவுசெய்திருக்கிறார். அதை அவர் நிச்சயம் செய்வார். ஏனென்றால், ஒரு தடவை முடிவுபண்ணிவிட்டால் அவர் பேச்சை அவரே கேட்க மாட்டார்!

http://www.vikatan.com

Bild könnte enthalten: 1 Person, lächelnd, Sonnenbrille und Text

  • Replies 11.3k
  • Views 1.5m
  • Created
  • Last Reply
  • தொடங்கியவர்

உணவு, உறக்கம் இன்றி தொடர்ந்து 55 மணி நேரம் யோகாசனம் செய்து 32 பேர் கின்னஸ் சாதனை: சென்னை பல்கலைக்கழகத்தில் பாராட்டு

 
தொடர்ந்து 55 மணி நேரம் யோகாசனம் செய்து கின்னஸ் சாதனை நிகழ்த்திய யோகா பயிற்சியாளர்களுடன் சென்னை பல்கலைக்கழகத் துணைவேந்தர் பி.துரைசாமி, பதிவாளர் எஸ்.கருணாநிதி உள்ளிட்டோர்
தொடர்ந்து 55 மணி நேரம் யோகாசனம் செய்து கின்னஸ் சாதனை நிகழ்த்திய யோகா பயிற்சியாளர்களுடன் சென்னை பல்கலைக்கழகத் துணைவேந்தர் பி.துரைசாமி, பதிவாளர் எஸ்.கருணாநிதி உள்ளிட்டோர்
 
 

சென்னை பல்கலைக்கழகத்தில் உணவு, உறக்கம் இல்லாமல் தொடர்ந்து 55 மணி நேரம் யோகாசனம் செய்து 32 யோகா பயிற்சியாளர்கள் நேற்று கின்னஸ் சாதனை நிகழ்த்தினர்.

சர்வதேச யோகா தினத்தை முன் னிட்டு சென்னை பல்கலைக்கழ கமும், காஞ்சிபுரம் மகா மகரிஷி அறக்கட்டளையும் இணைந்து கின் னஸ் சாதனைக்காக தொடர் யோகா நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்திருந் தன. இந்த நிகழ்ச்சி திங்கள்கிழமை காலை 7.30 மணிக்கு தொடங்கியது. மகா மகரிஷி அறக்கட்டளையைச் சேர்ந்த 6 பெண்கள் உள்பட 32 யோகா பயிற்சியாளர்கள் இந்த கின்னஸ் சாதனை முயற்சியில் இறங்கினர்.

அவர்கள் உணவு உண்ணாமல், தூங்காமல் தொடர்ந்து பல வகை யான ஆசனங்களை செய்யத் தொடங்கினர். அவர்களை உற் சாகப்படுத்தும் வகையில் பொது மக்களும், மாணவ-மாணவிகளும் அவர்களோடு சேர்ந்து யோகாசனம் செய்தனர். அவர்களின் தொடர் யோகாசன நிகழ்ச்சி நேற்று மாலை 4.30 மணி வரை நீடித்தது. அவர்கள் உணவு, உறக்கம் இன்றி தொடர்ந்து 55 மணி நேரம் 4,500 ஆசனங்களை செய்து கின்னஸ் சாதனையை நிகழ்த்தியுள்ளனர். நிறைவு விழா நிகழ்ச்சியில், அந்த 32 சாதனையாளர்களுக் கும் சென்னை பல்கலைக்கழகத் துணைவேந்தர் பி.துரைசாமி, கூடுதல் டிஜிபி அமரேஷ் பூஜாரி, ஓய்வுபெற்ற நீதிபதி அரிபரந்தாமன் ஆகியோர் பரிசுகள் வழங்கி கவுரவித் தனர்.

இந்த நிகழ்ச்சியில் சென்னை பல்கலைக்கழக பதிவாளர் (பொறுப்பு) எஸ்.கருணாநிதி மற் றும் பேராசிரியர்கள் கலந்து கொண்டனர்.

http://tamil.thehindu.com

  • தொடங்கியவர்

புற்றுநோய்க்குள்ளான 5 வயதுச் சிறுமிக்கு 6 வயது நண்பருடன் திருமணம்!

 
 
புற்றுநோய்க்குள்ளான 5 வயதுச் சிறுமிக்கு 6 வயது நண்பருடன் திருமணம்!
 

ஸ்கொட்லாந்தில் புற்றுநோயால் பாதிக்கப்பட்ட 5 வயதுச் சிறுமிக்கு அவரது நெருங்கிய 6 வயது நண்பருடன் திருமணம் நடத்தப்பட்டது. சிறுமியின் ஆசையை அடுத்தே பெற்றோர் இந்தத் திருமணத்தை நடத்தியுள்ளனர்.

 

nintchdbpict000332701728.jpg

போரஸ் பகுதியைச் சேர்ந்தவர் 5 வயதான எம்லெய்த் பாடர்சன். இந்தச் சிறுமி நியூரோபிளாஸ்டோமா என்ற அரிய வகைப் புற்றுநோயால் பாதிக்கப்பட்டு மரணத்துடன் போராடி வருகின்றார்.

பாடர்சனுக்குத் தான் திருமணம் செய்ய வேண்டும் என்ற ஆசை இருந்தது. அதைப் பெற்றோர்கள் நிறைவேற்றத் தீர்மானித்தனர். சிறுமியின் நெருங்கிய நண்பரான 6 வயது ஹரிசன் க்ரியர் மணமகனானார். திருமணம் நடத்தப்பட்டது. இரு வீட்டினர் உட்பட 200க்கும் மேற்பட்டவர்கள் திருமணத்தில் கலந்து கொண்டனர்.

பாடர்சனுக்கு எதிர்வரும் சனிக்கிழமை இரத்தம் மாற்றும் சிகிச்சை உள்ளது. அதற்கு முன்னராக அவளின் ஆசையை நிறைவேற்றி மகிழ்ச்சிக்குள்ளாகியுள்ளனர் பெற்றோர்.

uthayandaily

Edited by நவீனன்

  • தொடங்கியவர்

இந்தியாவில் பிறந்த யோகா!

 

india_yoga_3177388f.jpg
 
 
 

ஜூன் 21: சர்வதேச யோகா தினம்

‘‘கனவு காணுங்கள், கனவு காணுங்கள். இந்தக் கனவுகளை ஒருநாள் சிந்தனையாக்குங்கள். பிறகு அதற்குச் செயல்வடிவம் கொடுங்கள். வாழ்வில் நீ சாதிக்கலாம்’’ என்றார் உங்களுக்கெல்லாம் ரொம்பப் பிடித்த மறைந்த குடியரசுத் தலைவர் அப்துல் கலாம். நம் மனதுக்கும் செயலுக்கும் மிக நெருங்கிய தொடர்பு இருக்கிறது. மனதில் மலரும் எண்ண ஓட்டங்களுக்குச் செயல்வடிவம் கொடுக்க வேண்டுமானால், உடல் ஆரோக்கியமாக இருக்க வேண்டுமல்லவா? ‘சுவர் இருந்தால்தான் சித்திரம் வரைய முடியும்’ என்று பெரியவர்கள் சொல்லிக் கேட்டிருப்பீர்கள். உடல், மனம் என்ற இரண்டையும் தூய்மையாக்கி, வலிமையாக்கி, நம் முன்னேற்றத்துக்குத் தூண்டுகோலாக இருப்பதுதான் யோகா.

வேதங்களிலேயே யோகா பற்றிய குறிப்புகள் காணப்படுவது, இதன் பழைமைக்குச் சான்று. அந்தக் காலத்திலிருந்தே பயிற்சி செய்யப்பட்டுவந்த கலை இது. இந்தியா எடுத்த முயற்சியின் காரணமாக, ஆண்டுதோறும் ஜூன் 21-ம் தேதியை சர்வதேச யோகா தினமாக அறிவித்தது ஐ.நா. சபை. இதற்காகக் கடந்த 2014-ம் ஆண்டு ஐ.நா. சபையில் தீர்மானமும் நிறைவேற்றப்பட்டது. இதன்படி 2015-ம் ஆண்டிலிருந்து ஜூன் 21 சர்வதேச யோகா தினமாகக் கொண்டாடப்பட்டுவருகிறது. இன்றைய நாள் 3-வது சர்வதேச யோகா தினம்.

யோகா பயில்வதால் என்ன பலன்? உடல் ஆரோக்கியமாகிறது. உடல் ஆற்றல் அதிகரிக்கிறது. கை, கால்கள், மூட்டுகள் வலுப்பெறுகின்றன. உறக்கம், சுவாசம், செரிமானச் செயல்கள் சீராகின்றன. பயம் குறைந்து நம்பிக்கை அதிகரிக்கிறது. உடலுக்குப் போதிய ஓய்வு கிடைக்கிறது. நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கிறது. மனம் அமைதியடைகிறது. விழிப்புணர்வு அதிகரிக்கிறது. படிப்பில் கவனம் கூடுகிறது. நினைவாற்றல் அதிகரிக்கிறது. செய்யும் செயலில் முழுக் கவனத்தோடு அதிக ஈடுபாடு காட்ட முடிகிறது. குறிக்கோள் தெளிவாவதால், அதை நோக்கிய பயணம் எளிதாகிறது.

இது மட்டுமா? உள்ளம் தெளிவடைகிறது. ஆரோக்கியமான போட்டி மனநிலை வருகிறது. எதையும் நேர்மறையாக எடுத்துக்கொள்ளும் பக்குவம் பிறக்கிறது. பள்ளி மட்டுமல்லாது, கல்லூரி மாணவர்களுக்கும் இதுதான் இன்றைய முக்கியத் தேவையாக இருக்கிறது. உடலோடு, மனதையும் ஆரோக்கியமாக வைத்துக்கொண்டால் கல்வி என்பது ஒரு சுமையாக இல்லாமல், படிக்கும் காலத்தை இனிமையாக மாற்றிக்கொள்ள முடியும்.

உலகுக்கு இந்தியா எத்தனையோ கொடைகளை வழங்கியுள்ளது. அதில் ஒன்று ‘யோகா’. யோகாவின் சிறப்பை வெளி நாட்டவர்களும் உணர்ந்ததால்தான், 2014-ல் சர்வதேச யோகா தினம் பிறந்தது. அதற்காக 175 உறுப்பு நாடுகள் ஆதரவு அளித்தன. நம் இந்தியத் தோட்டத்தில் மலர்ந்த ‘யோகா’வின் மகத்துவத்தை நாமும் உணர்வோம், முறையாகப் பின்பற்றி வாழ்வில் உயர்வோம்!

http://tamil.thehindu.com

  • தொடங்கியவர்

 

குளத்தில் சிக்கிய குட்டி யானை; குதித்துக்காப்பாற்றிய அம்மா யானை

யானைகள் தண்ணீரை சோதிக்க விரும்பினால் அவை தம் துதிக்கையை அதற்கு பயன்படுத்தும்.

அப்படி செய்யும்போது சில சமயம் அவை நிலைகுலையும்.

தென் கொரியாவின் சோல் கிராண்ட் பூங்காவின் குளத்தில் அப்படி தவறிவிழுந்து தத்தளித்த யானைக்குட்டியை நோக்கி, அதன் அம்மாவும் சித்தியும் பதற்றத்தோடு ஓடின.

தொலைவில் இருந்த மற்றொரு யானையும் அதேபோல் பதற்றமாக காணப்பட்டது.

யானைக்குட்டியை காப்பாற்ற அதன் அம்மாவும் சித்தியும் வேகமாக குளத்திற்குள் குதித்து ஓடின. குட்டியை பாதுகாப்பாக கரைக்கு கொண்டுவந்தன.


ஒருவழியாக நெருக்கடி தீர்ந்தது. யானைக்குட்டி நீரிலிருந்து மீண்டது.

  • தொடங்கியவர்

விக்ரம் வேதா படத்தின் ட்ரெய்லர்..!

புஷ்கர்-காயத்ரி இயக்கத்தில் மாதவன் விஜய் சேதுபதி, ஸ்ரதா ஸ்ரீநாத், வரலட்சுமி நடித்திருக்கும் படம் 'விக்ரம் வேதா'. படத்தின் டீசரும், பாடல்களும் முன்பே வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்றிருக்கிறது. 

 

 

 

இந்தப் படத்தின் ட்ரெய்லரை சிவகார்த்திகேயன் வெளியிடுவார் எனப் படத்தின் ஃபேஸ்புக் பக்கத்தில் அறிவிக்கப்பட்டிருந்தது. தற்போது, இந்த ட்ரெய்லரை 'பாலிவுட் பாட்ஷா' ஷாரூக்கானும் சிவகார்த்திகேயனும் இணைந்து வெளியிட்டுள்ளனர்.

  • தொடங்கியவர்

விஞ்ஞானிகளையே அதிர வைக்கும் 5 ரோபோக்கள்

அணுவிபத்து கழிவுகளை சுத்தம் செய்யும் மனிதக் குரங்கு போன்ற ரோபோ முதல் பெரிய பொருட்களை துவக்க உதவும், மின்சக்தியால் இயங்கும் ரோபோ வரை என ரோபோ தொழில்நுட்பங்கள் நம்பமுடியாத அளவிற்கு வேகமாக வளர்ந்து வருகின்றன.

விஞ்ஞானிகளையே ஆச்சரியமடைய வைக்கும் ஐந்து ரோபோக்களைப் பற்றி நாசாவின் ஜெட் புரோபல்ஷன் ஆய்வகத்தில் உள்ள தலைமை பொறியாளரான அஷெடி ட்ரெபி ஓளினு கூறுகிறார்.

ரோபோசிமியன்

RoboSimianபடத்தின் காப்புரிமைJPL CALTECH Image captionரோபோசிமியன்

மீட்பு பணிகளுக்காக தயாரிக்கப்பட்ட மனித குரங்கை போன்ற இந்த ரோபோ பல அங்கங்களைக் கொண்டது.

தீ விபத்து, ரசாயனக் கசிவு, அணு விபத்து போன்றவற்றால் பாதிக்கப்பட்ட இடங்களை சுத்தம் செய்வதே இதன் பணி.

கலிஃபோர்னியா, பசடேனாவில் உள்ள நாசா ஜெட் புரோபல்ஷன் ஆய்வகத்தில் தயாரிக்கப்பட்ட இந்த ரோபோவை, எந்தவொரு வேலைக்கும் மறுகட்டமைப்பு செய்யமுடியும் என இதன் படைப்பாளர்கள் கூறுகின்றனர்.

அடா

Ada holding a memory cardபடத்தின் காப்புரிமைOPEN BIONICS Image captionஅடா

அடா என்பது 3டி தொழில்நுட்பத்தில் அச்சிடப்பட்ட ரோபோ கை.

இதனை பிரிட்டன் நிறுவனமான ஓபன் பையோனிக்ஸ் உருவாக்கியுள்ளது.

இந்த கையின் தொழில்நுட்ப வரைபடம் ஆன்லைனில் கிடைக்க ஏற்பாடு செய்துள்ளனர்.

இதற்கு பொருத்தமான ப்ரிண்டரை கொண்ட எவரும் இதனை பயன்படுத்தலாம்.

"உற்பத்தி பற்றி நாம் நினைத்துக்கொண்டிருப்பதை, இந்த 3டி பிரிண்டிங் மாற்ற போகிறது" என விளக்குகிறார் ட்ரெபி ஓளினு.

"உங்கள் கணினியில் நீங்கள் எதை டிசைன் செய்தாலும் ஒரே பொத்தானை அழுத்தி உருவாக்கலாம்.

இன்னும் சில ஆண்டுகளில் உங்கள் படுக்கையறையில் உங்களுக்கு சொந்தமான ரோபோவை உருவாக்கி அச்சிட முடியும்."

பீனிக்ஸ்

Phoenix legsபடத்தின் காப்புரிமைUS BIONICS Image captionஃபீனிக்ஸ்

அமெரிக்காவின் பியோனிக்ஸ்-ல் உருவாக்கப்பட்ட ஃபீனிக்ஸ், சக்தி வாய்ந்த புற உடற்கூடினை கொண்டது.

ஒருமுறை சார்ஜ் போட்டால் தொடர்ந்து 4 மணி நேரம் நடக்கும் திறன் கொண்ட ஃபீனிக்ஸ், 12.25 கிலோ எடை கொண்டது என இதனை உருவாக்கிய நிறுவனத்தின் இணையதளம் கூறுகிறது.

"மிகப்பெரிய பொருட்களை தூக்குவது போன்ற, உங்களால் செய்ய முடியாத காரியங்களை செய்வதற்கு இது உதவுகிறது.

மாற்றுத்திறனாளிக்கும் இது உதவியாக இருக்கும்.

''மனித மற்றும் ரோபோ கலப்பினமாக மனிதர்கள் பரிணாம வளர்ச்சி பெறுவதற்கு இது உதவும் என நினைக்கிறேன்" என்கிறார் நாசா பொறியாளர்.

பெப்பர்

Pepperபடத்தின் காப்புரிமைREUTERS Image captionபெப்பர்

உணர்ச்சி நுண்ணறிவு மிக்க ஒரு மனித உருவமாக பெப்பர் உள்ளது.

மற்றவர்கள் உணர்வுகளைப் புரிந்துகொள்ளும் தன்மை என்பது ரோபோக்களிடம் இல்லாத ஒரு விஷயம்.

''ரோபோக்களுடன் நாம் தொடர்பு கொள்ளும் விதத்தையும், ரோபோக்கள் வீட்டுக்கு எப்படிப் பயன்படுத்தப்படலாம் என்பதையும் இது மாற்றப் போகிறது.''

ஜப்பானில் சாப்ட் வங்கி ரோபாட்டிக்சால் தயாரிக்கப்பட்ட பெப்பர், சில கடைகளில் வாடிக்கையாளர்களை வரவேற்றுக்கொண்டிருக்கிறது.

கியூரியாசிட்டி மார்ஸ் ரோவர்

Curiosity Roverபடத்தின் காப்புரிமைNASA Image captionகியூரியாசிட்டி மார்ஸ் ரோவர்

நாசாவின் முதன்மை பொறியியாளரின் முதல் ஐந்து பட்டியலில் கடைசியில் இருப்பது, கியூரியாசிட்டி மார்ஸ் ரோவர், இது அவர் பணிபுரிந்த ஒரு திட்டமாகும்.

அது 2012 ல் செவ்வாய்க் கிரகத்தில் தரையிறங்கியது.

பூமியில், ஓர் அறை அளவு இருக்கக்கூடிய ஒரு கருவியை, ஒரு காலணிப் பெட்டி அளவுக்குக் குறைப்பதன் மூலம், அதை மற்ற கிரகங்களுக்கு அனுப்ப வகை செய்வதே, விஞ்ஞானிகள் முன்னுள்ள சவாலாக இருந்தது.

இதற்கு 120 வாட் என்ற மிகக்குறைந்த ஆற்றலே தேவைப்படுகிறது.

ஆனால் பூமியில், தொலைதூரத்தில் உள்ள , எளிதில் அணுகமுடியாத பகுதிகளுக்கு மருத்துவ உபகரணங்களை எடுத்துச் செல்ல இதைப் பயன்படுத்த முடியும்.

http://www.bbc.com

  • தொடங்கியவர்

பும்ரா நோபால் வீசியதை சாலை விழிப்புஉணர்வுக்குப் பயன்படுத்திய போலீஸ்!

சாம்பியன்ஸ் ட்ராபி இறுதிப் போட்டியில்... இந்திய அணி, பாகிஸ்தான் அணியிடம் படுதோல்வியடைந்தது. இந்திய வேகப்பந்து வீச்சாளர் பும்ரா வீசிய பந்தில், பாகிஸ்தான் தொடக்க வீரர் ஃபாக்தர் ஜமான், விக்கெட் கீப்பர் தோனியிடம் பிடிகொடுத்தார். பும்ராவோ, நோபால் வீசியிருந்தார். அவுட்டிலிருந்து தப்பித்த ஜமான், இந்தியப் பந்துவீச்சை விளாசித்தள்ளினார். ஒருநாள் போட்டியில் முதல் சதமடித்த அவர், 111 ரன்கள் எடுத்த பின்னரே வீழ்ந்தார்.

pumara_12150.jpg

பாகிஸ்தான் அணி, இந்திய அணிக்கு 338 ரன்கள் என்ற இமாலய இலக்கு நிர்ணயிக்க, ஜமானின் சதமும் உதவியாக இருந்தது. பும்ரா மட்டும் நோபால் வீசாமல் இருந்திருந்தால், ஆட்டத்தின் போக்கே மாறியிருக்கும். சரி, அதற்கு இப்போ என்ன என்கிறீர்களா..? பும்ரா நோபால் வீசும் புகைப்படத்தைப் பயன்டுத்தி, ஜெய்ப்பூர் போலீஸ் சாலைப் பாதுகாப்பு விழிப்புஉணர்வில் ஈடுபட்டுவருகிறது.

 

அதாவது, பும்ரா நோபால் வீசும் படத்தையும், சாலையில் கறுப்பு வெள்ளைக் கோட்டைத் தாண்டாமல் நிற்கும் கார்களின் புகைப்படத்தையும் இணைத்து மீம் உருவாக்கி, 'லைனைக் கடந்தால் கொடுக்கும் விலை என்னவென்று உங்களுக்குத் தெரியும்'  என்று சமூக வலைதளங்களில் பரவவிட்டுள்ளது. அந்த மீம், வைரலாகியுள்ளது.

http://www.vikatan.com

  • தொடங்கியவர்

விஜய் பிறந்தநாளுக்கு சிறப்பு டீசர்... அசத்திய 'போக்கிரி சைமன்' படக்குழு!

தமிழகத்தைப் போலவே கேரளாவிலும் ரசிகர் படைகளை வைத்திருப்பவர் விஜய். அவரது படம் வெளியானால், தமிழகத்தைப் போலவே கேரளாவிலும் திருவிழா போல அவரது ரசிகர்கள் கொண்டாடுவர். கேரளாவில், "போக்கிரி சைமன்" என்று ஒரு படம் உருவாகி வருகிறது. விஜய்யின் மூன்று ரசிகர்களை மையமாக வைத்து இந்தப் படம் எடுக்கப்பட்டு வருகிறது. 

Pokkiri Simon

ஜிஜோ ஆன்டனி படத்தை இயக்குகிறார். இந்நிலையில் விஜய் பிறந்தநாளை முன்னிட்டு, இந்தப் படக்குழுவினர் ஒரு வீடியோவை வெளியிட்டுள்ளனர். விஜய்க்கு பிறந்தநாள் வாழ்த்து கூறுவதற்காக, "போக்கிரி சைமன்" குழுவினர் வீடியோவை வெளியிட்டு அசத்தியுள்ளனர்.

 

 
  • தொடங்கியவர்

இன்பாக்ஸ்

 

* ‘வில்லன்’. விஷால் மலையாளத்தில் அறிமுகமாகும் படத்தின் பெயர் இதுதான். மோகன்லால், மஞ்சு வாரியார், ஹன்சிகா, ராஷி கன்னா என முழுக்க முழுக்க ஸ்டார்களால் நிறைந்திருக்கிறது `வில்லன்’ டீம். விஷாலுக்கு மட்டுமல்ல, ஹன்சிகாவுக்கும் இதுதான் மலையாளத்தில் முதல் படம்!  ஹோ... அறியும்...அறியும்!

p36a.jpg

* தமிழ், தெலுங்கு என இரண்டு மொழிகளிலும் முதல் இடத்தைப் பிடிப்பதில் ஆர்வமாக இருக்கிறார் ரகுல் ப்ரீத்சிங். முருகதாஸ் இயக்கத்தில் மகேஷ்பாபுடன் நடிக்கும் ‘ஸ்பைடர்’, கார்த்தியுடன் ‘தீரன் அதிகாரம் ஒன்று’ என கோலிவுட்டில் ரகுல் சீசன் விரைவில் ஆரம்பமாக இருக்கிறது! ரகுல்களை வாழவைப்போம்!

p36b.jpg

*  அடையாற்றில் உள்ள டி.டி.வி. தினகரன் வீட்டை எந்நேரமும் கண்காணிப்பு வளையத்துக்குள் வைத்திருக்கிறது தமிழ்நாடு போலீஸ். தினகரனின் ஒவ்வொரு அசைவு களையும் உளவுப்பிரிவு உன்னிப்பாகக் கவனித்து வருகிறது. ``ஆளுங்கட்சியின் துணைப் பொதுச்செயலாளரையே வேவு பார்க்கிறீர்களா?’’ என தினகரன் டென்ஷனானாலும், கண்காணிப்பில் எந்தத் தொய்வும் இல்லை. தமிழ்நாடு போலீஸ்னா சும்மாவா?

* கங்கனா என்றாலே அதிரடிதான். அதில் லேட்டஸ்ட் அதிரடி, 80 வயது பாட்டியாக நடிக்க இருப்பதுதான்.  `தேஜு’ எனப் பெயரிடப்பட்டிருக்கும் இந்தப் படம் முழுக்க முழுக்க முதியவர்களைப் பற்றியது. படம் 2018-ல் ரிலீஸ்! பியூட்டி பாட்டி!

p36c.jpg

*  கோஹ்லி தொடங்கி அஷ்வின் வரை இந்தியன் டீம் ஃபிட்னஸில் கில்லியாக இருக்க, ஒரு தமிழர்தான் காரணம். இந்திய அணியின் ஸ்ட்ரெங்க்த் மற்றும் கண்டீஷனிங் பயிற்சியாளர் ஷங்கர் பாசு. சென்னையைச் சேர்ந்த பாசு, லண்டனில் முறையாக ஃபிட்னஸ் படித்தவர். ``பாசு இல்லைனா நான் இல்லை’’ என கோஹ்லியே ட்வீட் போட்டு பாராட்ட, நெகிழ்ந்து போயிருக்கிறார் பாசு. இவர் இயக்குநர் மகேந்திரனின் மருமகனும்கூட! ஆல் தி பெஸ்ட் பாசு!

*  கார்த்திகா இப்போது டிவி சீரியல் தேவசேனா. இந்தியில் `ஆரம்ப்’ என்னும் வரலாற்று மெகா தொடரில் நடிக்கிறார். “சீரியல்தானே ஜாலியா நடிச்சிட்டுப் போயிடலாம்னு நினைச்சேன். ஆனால் கத்திச்சண்டை,வாள்சண்டை, குதிரையேற்றம்னு ஷூட்டிங் ஆரம்பிக்கிறதுக்கு முன்னாடியே ஏகப்பட்ட பயிற்சிகள்” என்கிறார் கார்த்திகா. ஃபைட்டர் பொண்ணு!

p36d.jpg

*  மீண்டும் மணிரத்னம் படம் மூலம் தமிழுக்கு வருகிறார் ஐஸ்வர்யா ராய். தமிழ் மற்றும் இந்தியில் உருவாகும் இந்தப் படத்தின் ஹீரோ அபிஷேக் பச்சன். வாம்மா...அழகம்மா!

  • தொடங்கியவர்
‘தக்க அறிவூட்டல் இன்றியமையாதது’
 

image_5fb8b239aa.jpgஉலக யதார்த்தங்களை உணராதவரை துன்பங்கள்தான் மிஞ்சும். இதுஇப்படித்தான் என வாழும் முறையை அறக்கருத்துகள் சொல்லிக்கொண்டே இருக்கின்றன. 

இதைச் செவிமடுக்காமல், திடீரெனக் குறுக்கு வழியில் பணம்புரட்டப் போவதும், தெரியாத கருமங்களில் நாட்டம் கொண்டு, இருப்பதையும் இழப்பதும் சாதாரண சம்பவங்களாகி விட்டன.  

இன்று இருப்பது, நாளை வேறுவிதமாக மாறிவிடும். அன்றன்றைய மாற்றங்களை உள்வாங்கி நீதி, நியாயங்களுடன் நாம் செயற்பட வேண்டும்.  யாரோ ஒருவனோ, ஒருத்தியோ தீயவழியில் சட்டவிரோதமாகச் செயற்பட்டால், அதுவே புத்திசாலித்தனமான முயற்சி எனக் கருதிவிடக்கூடாது.

பல நபர்கள் பங்குச்சந்தையில், அது குறித்த அறிவு எதுவும் இல்லாமல், அதற்குள் புகுந்து அல்லல்பட்ட சந்தர்ப்பங்களை நீங்கள் சந்தித்திருக்கலாம்.

குடும்ப வாழ்க்கையிலும் கணவன், மனைவி இருவரும் தமது பிள்ளைகளுக்குச் சமூகத்தின் யதார்த்தநிலை, குடும்பநிலை குறித்துப் புரியவைக்க வேண்டும். தக்க அறிவூட்டல் இன்றியமையாதது. அவர்கள் புரிந்து கொள்வார்கள்.

  • தொடங்கியவர்

தனிமையிலும் வெல்லலாம்... மகிழ்ச்சியை அள்ளலாம்! #MorningMotivation

 
 

`எவ்வளவு நாள்தான் தனியாகவே இருப்பது?' என்று யோசிக்கிறீர்களா, கவலையைவிடுங்கள்! தனியாக இருப்பது ஒன்றும் தவறான விஷயம் அல்லவே. அதிலும் பல நல்ல விஷயங்கள் இருக்கின்றன.  தனியாக இருந்தாலும் எப்படி மகிழ்ச்சியாக இருப்பது, தனியாக இருப்பதை எப்படி நல்ல விஷயங்களுக்குப் பயன்படுத்தலாம்... உங்களின் முன்னேற்றத்துக்கான துணையாக, வழிகாட்டியாக எப்படி அமைத்துக்கொள்வது என்பதைப் பார்ப்போமா...

மகிழ்ச்சி

நீங்கள்தான் ராஜா:

தனியாக இருப்பதற்காக வருத்தப்படாதீர்கள். உங்களுக்கு நீங்கள்தான் ராஜா; நீங்கள்தான் மந்திரி. தனியாக இருப்பதன் மூலம் உங்கள் திறமையை உணர்ந்துகொள்ளலாம். உங்கள் முடிவை நீங்களே எடுக்கலாம். உங்கள் முடிவுகளில் மற்றவர்கள் தலையிடும் வாய்ப்புகள் குறைவு என்பதால், நீங்கள் சுதந்திரமாகச் செயல்படலாம்.

சுற்றுப்புறங்களிலிருந்து கற்றுக்கொள்ளுங்கள்:

தனியாக இருப்பதால் உங்களால் சுற்றுப்புறத்தை வேறொரு கோணத்தில் பார்க்க முடியும். எனவே, உங்களைச் சுற்றி நடக்கும் நிகழ்விலிருந்து மற்றவர்களைவிட அதிகம் கற்றுக்கொள்ள முடியும். சரியோ தவறோ, எல்லாவற்றையும் ஆராயுங்கள். சரியானவற்றை அறிந்துகொள்ளும் பக்குவம் வந்துவிட்டால், பெரும்பாலான தவறுகளைத் தவிர்த்துவிடலாம்.

மனதோடு பேசுங்கள்:

`அருகில் பேச எவரும் இல்லையே!' என்று கவலையா? உங்கள் மனதோடு பேசுங்கள். மனதைவிட அருமையான பேச்சுத்துணை எவரும் இருக்க முடியாது. அருகில் இருப்பவர்கள்கூட நெகட்டிவாக ஏதாவது கூறலாம். ஆனால் நம் மனமோ, நமக்கு என்றுமே நம்பிக்கை அளிக்ககூடியது. எனவே, மனதோடு பேசிப்பாருங்கள்.

Happy

நேரம் உங்களுக்கு அதிகம்:

கொஞ்சம் யோசித்துப்பாருங்கள், மற்றவர்களைவிட உங்களுக்கு நேரம் அதிகம் கிடைக்கும். அந்த நேரத்தை ஆக்கபூர்வமான வழிகளில் உபயோகப்படுத்துங்கள். மற்றவர்களைவிட உங்களுக்கு இடையூறு குறைவுதானே! புத்தகங்கள் படியுங்கள், இயற்கையை ரசியுங்கள், பாடல்கள் கேளுங்கள். எதுவாயினும் நேரத்தை உபயோகிக்கக் கற்றுக்கொள்ளுங்கள். ஏனெனில், காலம் பொன் போன்றது!

அமைதியை உணருங்கள்:

வீட்டில் என்ன செய்வதென்றே தெரியாமல் வெறுப்பாக இருக்கிறீர்களா... கவலைப்படாதீர்கள். அந்தச் சூழ்நிலைதான் அமைதியை உணர ஏற்ற தருணம். கண்களை மூடி, நிசப்தத்தை ரசிக்கக் கற்றுக்கொள்ளலாம். அமைதியின் அருவம், உங்கள் வாழ்க்கைக்கான நல்வழிகளை நிச்சயம் காட்டும்.

உங்களுக்கென தனி வழியை உருவாக்குங்கள்:

தனியாகவே இருந்துட்டு, உங்களுக்கென தனி வழியை உருவாக்கவில்லை என்றால் எப்படி? நாளை செய்யவிருக்கும் வேலை முதல் உங்களின் எதிர்காலத் திட்டம் வரை தெளிவாக முடிவெடுங்கள். அதற்காக, உங்கள் சுதந்திரத்தை முழுதாகப் பயன்படுத்துங்கள்.

பரிசோதனை முயற்சிகள் உங்களுக்குச் சாதனைகள்தான்:

ஒரு குழுவாக இணைந்து செயல்படுவதில் எவ்வளவு பலன் கிடைக்குமோ, அதைப்போலவே தனியாக இருந்து வேலைபார்ப்பதிலும் பலன் கிடைக்கும். குழுவாகப் பணியாற்றினால்கூட பரிசோதனை முயற்சிகள் செய்து பார்க்க சில தயக்கங்கள் இருக்கலாம். ஆனால், தனியாக இருந்தால் பரிசோதனை முயற்சியால் கிடைக்கும் முழு பலனும் உங்களுக்கே என்பதால், தயங்காமல் களத்தில் இறங்குங்கள்.

அறிவுரைகளை ஏற்றுக்கொள்ளத் தயக்கம் வேண்டாம்:.

அறிவுரைகள் அதிகமாகவே கிடைக்கும். இருந்தாலும் எதையுமே தவிர்க்காதீர்கள். ஒருசிலவற்றை உங்களுக்குப் பயன் தரலாம். எதுவாக இருந்தாலும், கடைசியில் முடிவு எடுக்கப்போவது நீங்கள்தான்.

பொழுதுபோக்கு:

பொழுதைத் தனியாக எப்படிப் போக்குவது என யோசிக்கிறீர்களா? உங்கள் அறையைச் சுத்தம் செய்யுங்கள். ஒழுங்கு இல்லாமலிருக்கும் பொருள்களை அடுக்கிவையுங்கள். எல்லாவற்றையும் முடித்துவிட்டீர்களா? ஜாலியாக ஒரு படத்துக்குச் சென்று வாருங்கள்.
தனியாகப் படத்துக்குச் செல்வதே தனி அனுபவம்தானே!

எண்ணங்களை நேர்மறையாக்குங்கள்:

 

தனியாக இருந்தால் நல்லது கெட்டது எனப் பல எண்ணங்கள் தோன்றும். அதில் நல்ல எண்ணங்களுக்கு மதிப்பளியுங்கள். தீய எண்ணங்களை ஒதுக்கிவிடுங்கள். எண்ணங்களைச் சிந்திப்பதோடு மட்டுமல்லாமல், கூடுமானவரை அவற்றைச் செயல்படுத்தவும் முயலுங்கள். ஏனென்றால், நல்ல எண்ணங்களே வெற்றியை எளிதாக்கும்.

http://www.vikatan.com

  • தொடங்கியவர்

`அண்டாவ காணோம்’ முதல் `ஆந்திரா மெஸ்’ வரை... - மிஸ் பண்ணக் கூடாத படங்கள்!

 

'உறியடி', 'துருவங்கள் பதினாறு', 'மாநகரம்', 'எட்டு தோட்டாக்கள்', 'ஒரு கிடாயின் கருணை மனு' என சமீபகால படங்கள் பெரிய அளவில் வரவேற்பைப் பெற்றுள்ளன. இத்தனைக்கும் இந்தப் படங்களில் மிகப் பிரபலமான நட்சத்திரங்கள் இல்லை, பெரிய இயக்குநர்கள் இயக்கவில்லை, ஃபாரின் லொகேஷன் பாடல்கள் இல்லை, பிரமாண்டம் இல்லை, அதிக  பொருட்செலவும் இல்லை. இவை எல்லாவற்றையும் மீறி இந்தப் படங்களின் ட்ரீட்மெண்ட்டும், புத்துணர்ச்சியான கதைக்களமும் பெரிதும் கவர்ந்தது. பெரும்பாலும் இந்தப் படங்களைப் பற்றி பாசிட்டிவ் விஷயங்களைப் பரப்பியது படம் பார்த்த ரசிகர்கள்தான். இதே போல டிரெய்லர்/டீசர் மூலம் பெரிதும் கவனம் ஈர்த்து, எதிர்பார்ப்பைத் தூண்டியிருக்கும் படங்களின் தொகுப்புதான் இது.

படங்கள்

அண்டாவ காணோம்:

ஒரு அண்டாவை வைத்துக் கதை சொல்ல முடியுமா? அது காணாமல் போவதை வைத்தே கதை சொல்லலாம் என டிரெய்லர் மூலம் காட்டியிருக்கிறார் இயக்குநர் வேல்மணி. ஸ்ரேயா ரெட்டி நடித்திருக்கும் இப்படத்தில் அண்டாவிற்கு வாய்ஸ் கொடுத்திருப்பது நடிகர் விஜய் சேதுபதி. சமீபத்தில் வெளியான டிரெய்லர்களில் இது ரசிகர்களை வெகுவாகக் கவர்ந்தது. 

குரங்கு பொம்மை:

 

 

சமீபத்தில்தான் வெளியானது இந்தப் படத்தின் டிரெய்லர். படத்தின் களமும் கதை ஓட்டமும் வித்தியாசமாக இருக்கும் என டிரெய்லர் சொல்கிறது. நாளைய இயக்குநர் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு குறும்படங்கள் இயக்கியவர் நித்திலன். இவர் இயக்கியதில் 'புன்னகை வாங்கினால் கண்ணீர் இலவசம்' குறும்படம் பிரபலம். 'குரங்கு பொம்மை' பற்றி கேட்டால், "படத்தின் கதை ரொம்ப பழசுதான். எல்லோரும் பார்த்து பார்த்து பழகின கதை. சொல்லப் போனா அதைக் கதைனு கூட சொல்ல முடியாது. ஏன்னா ஒரு சம்பவம் நடக்கும், அதை வெச்சு செய்யும் ப்ளேயாதான் படம் நகரும்" என சொல்கிறார். விதார்த், பாரதிராஜா, டெல்னா டேவிஸ், டி.எல்.தேனப்பன் ஆகியோர் நடித்திருக்கிறார்கள்.

சைனா:

இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸின் உதவி இயக்குநர் ஹர்ஷவர்தனா இயக்கியிருக்கும் படம். கலையரசன், ரித்துவர்மா, டேனியல் ஆனி போப், யோக் ஜேப்பி நடித்திருக்கிறார்கள். பர்மா பஜாரில் கடைவைத்திருக்கும் கலையரசனுக்கு ஒரு பொருள் தேடிவருகிறது. அது என்ன பொருள், அதனால் என்ன ஆகிறது, அவனை எப்படி பாதிக்கிறது என்பதுதான் கதை. 

பண்டிகை:

சூழ்நிலை காரணமாக சட்ட விரோதமான சண்டை போட்டிக்கு தள்ளப்படும் ஒருவனின் மோதலும் - காதலும்தான், 'பண்டிகை' படத்தின் கதை. கிருஷ்ணா - ஆனந்தி நடித்திருக்கும் இப்படத்தை ஃபெரோஸ் இயக்கியிருக்கிறார். 

ஆந்திரா மெஸ்:

"தயவுசெஞ்சு எதையும் எதிர்பார்க்காதீங்க! நம்ம திரைக்கதை அமைப்பு ஹாலிவுட் ஸ்டைலான மூன்று அடுக்கு பாணியில்தான் இருக்கு. ஆனா, இந்தப் படத்துல அப்படி இல்லை. அவ்ளோ ஏன்... படத்துல கதையே இல்லை. வெறும் சம்பவங்களின் தொகுப்புதான் படம். ஒரு சைக்கலாஜிக்கல் பயணம்னு வெச்சுக்கங்களேன்" - இதுதான் படம் பற்றி இயக்குநர் ஜெய் கொடுக்கும் டிஸ்க்ரிப்ஷன்.  படத்திற்கு இசையமைத்திருப்பது சமீப மலையாள சினிமாக்களில் கவனம் ஈர்த்த (அனுராக கரிக்கின் வெள்ளம், அங்கமாலி டைரீஸ், சகாவு) பிரசாந்த் பிள்ளை. 

இரவுக்கு ஆயிரம் கண்கள்:

ஒரே நாளில் நடக்கும் கதை. ஒரு பிரச்னையில் சிக்கிக் கொள்ளும் ஒருவன் எப்படி அதிலிருந்து தப்பிக்கிறான் என்பதுதான் படத்தின் ஒன்லைன். அருள்நிதி, அஜ்மல், மஹிமா நம்பியார், ஆனந்த் ராஜ் ஆகியோர் நடித்திருக்கும் இப்படத்தை மு.மாறன் இயக்கியிருக்கிறார். 

கிரகணம்:

இரண்டு வெவ்வேறு சம்பவங்களால் படத்தின் கதாபாத்திரங்களுக்குள் ஏற்படும் தொடர்பும் அதன் விளைவுகளும்தான் கிரகணம் படத்தின் கதை. முழுக்க முழுக்க இரவு நேரத்திலேயே நகரும்படியான படத்தை த்ரில்லராக உருவாக்கியிருக்கிறார் இயக்குநர் இளன். கிருஷ்ணா, சந்திரன், நந்தினி, கருணாகரன், ஜெயப்பிரகாஷ் மற்றும் பலர் இதில் நடித்திருக்கிறார்கள். 

திரி:

நாம் தினமும் சந்திக்கும், சந்தித்துக் கொண்டிருக்கும், சந்திக்கப் போகும் அன்றாடப் பிரச்னை ஒன்றுதான் படத்தின் களம். டிரெய்லர் பார்க்கும் பொழுது கல்வியை மையப்படுத்தி ஒரு கதாநாயகன் சந்திக்கும் பிரச்னைகளும், அதன் விளைவுகளுமே திரி படத்தின் கதைக்களம் எனத் தெரிகிறது. அசோக் அமிர்தராஜ் இயக்கியிருக்கும் இப்படத்தில் அஸ்வின், ஸ்வாதி, கருணாகரன், ஜெயப்பிரகாஷ், அழகப்பன் ஆகியோர் நடித்திருக்கிறார்கள். படம் ஜூலை 7ம் தேதி வெளியாகவிருக்கிறது. 

கூட்டத்தில் ஒருத்தன்:

லாஸ்ட் பெஞ்ச்சும் இல்லாமல், ஃபர்ஸ்ட் பெஞ்ச்சும் இல்லாமல் மிடில் பெஞ்ச் மாணவனைப் பற்றிய படம். எல்லாவற்றிலும் ஆவரேஜாக இருக்கும் ஒருவனைப்பற்றிய கதைதான் 'கூட்டத்தில் ஒருத்தன்'. இந்தப் படம் மூலம் த.செ.ஞானவேல் இயக்குநராக அறிமுகமாகிறார். அஷோக் செல்வன், பிரியா ஆனந்த், சமுத்திரக்கனி, அனுபமா குமார், பால சரவணன் ஆகியோர் நடித்திருக்கும் இப்படத்திற்கு இசையமைத்திருக்கிறார் நிவாஸ் கே பிரசன்னா. 

ஒரு பக்க கதை: 

"21 வயசுல ஒரு பையன், ஒரு பொண்ணு. அவங்க ரெண்டு பேருக்குள்ள நிகழும் ஒரு விஷயம், அவங்க லைஃபை எப்படியெல்லாம் புரட்டிப்போடுது; அதை இந்த உலகம் எப்படிப் புரிஞ்சுக்குது... அதான் 'ஒரு பக்க கதை’" என்கிறார் இயக்குநர் பாலாஜி தரணிதரன். நடிகர் ஜெயராமின் மகன் காளிதாஸ் ஹீரோ. ஹீரோயின் 'எனை நோக்கிப் பாயும் தோட்டா' நாயகி மேகா ஆகாஷ்.

 

மலையாளத்தில் மட்டுமல்ல தமிழிலும் நிறைய நல்ல, தரமான படங்கள் வெளியாகிக் கொண்டுதான் இருக்கின்றன. தொடர்ந்து ஆதரவு தந்தால், சின்ன பட்ஜெட், பெரிய பட்ஜெட், பெரிய ஹீரோ எல்லாம் தாண்டி மிக மிக நல்ல படங்கள் தொடர்ந்து வந்து கொண்டே இருக்கும்.

http://www.vikatan.com

  • தொடங்கியவர்

சூப்பர்மாடல் மாரி மாலிக்

  • தொடங்கியவர்
வரலாற்றில் இன்று: ஜூன் 23
 

article_1435034761-syria-chemical-weapon1757: இந்தியாவின் பிளாசிப் போரில் 50,000 பேர் கொண்ட சிராஜ உத் தலாவின் படைகளை பிரித்தானிய ரொபர்ட் கிளைவின் 3000 பேர் கொண்ட படை தோற்கடித்தது.

1894: சர்வதேச ஒலிம்பிக் குழு பாரிஸ் நகரில் ஆரம்பிக்கப்பட்டது.

1968: ஆர்ஜென்டீனாவில் கால்பந்தாட்டப் போட்டியொன்றின்போது சன நெரிசலில் சிக்கி 74 பேர் பலியாகினர்.

1985: கனடாவிலிருந்து புறப்பட்ட எயார் இன்டியா விமானமொன்று அயர்லாந்துக்கு அருகில் பறந்துகொண்டிருந்தபோது சீக்கிய தீவிரவாதிகளால்  வெடி குண்டு வைத்து தகர்க்கப்பட்டது. இதனால் விமானத்திலிருந்த 329 பேரும் பலியாகினர்.

1990: சோவியத் ஒன்றியத்தில் இருந்து மல்தாவியா விடுதலையை அறிவித்தது.

2001: பெருவின் தெற்கே இடம்பெற்ற 8.4 ரிச்டர் அளவிலான நிலநடுக்கம், மற்றும் ஆழிப்பேரலையால் 74 பேர் உயிரிழந்தனர்.

2010: உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாடு, கோயம்புத்தூரில் ஆரம்பமானது.

2014: இரசாயன ஆயுதங்களை அழிப்பதற்கு சிரியா நடவடிக்கை எடுத்தது.

http://www.tamilmirror.lk/today-history/வரலாற்றில்-இன்று-ஜூன்-23/99-199243

  • தொடங்கியவர்

295 பறவைகள்... 200 வகை பட்டாம்பூச்சிகள்... க்ளிக் செய்ய காடுகளில் தவம் கிடக்கும் சென்னைப் பெண்!

யற்கையை அழித்து, பறவைகளைக் கொன்று வரும் மக்கள் மத்தியில் காடுகளையும், பறவைகளையும் நேசித்து அதனைப் புகைப்படங்களாய் எடுத்து பொக்கிஷமாக பாதுகாத்து வருகிறார் சென்னையைச் சேர்ந்த சுபிக்‌ஷா. அம்மாவின் கைப்பிடித்து காடுகளில் சுற்றித் திரிவது அழகான அனுபவம் என்று மெய்சிலிர்க்கும் சுபிக்‌ஷா, இதுவரை 295க்கும் மேற்பட்ட பறவைகளையும், 200க்கும் மேற்பட்ட பட்டாம்பூச்சிகளையும் புகைப்படங்களாக சேகரித்துள்ளார்.

ஃபோட்டோகிராபர் சுபிக்‌ஷா

”என்னோட சொந்த ஊர் சென்னை. விலங்கியல்ல பட்டப்படிப்பு முடிச்சிருக்கேன்.  அம்மாவும், அப்பாவும் ரயில்வேஸ்ல வேலை பாக்குறாங்க. அம்மாவுக்கு சிறு வயதிலேயே விலங்கியல் மேல ஆர்வம் இருந்துருக்கு. ஆனா அவங்களால தொடர்ந்து அந்த ஆர்வத்தை வெளிப்படுத்த முடியல. எனக்கு தாவரங்கள், பறவைகள் பத்திலாம் நெறைய சொல்லி கொடுப்பாங்க. அவங்களோட தூண்டுதலால தான் எனக்கு இயற்கை மேல ஆர்வம் வந்துச்சு. 

சென்னைல நெருக்கடிக்கு நடுவுல தான் எங்க வாழ்க்கை. விடுமுறைக்கு  நெய்வேலியில் உள்ள பாட்டி வீட்டுக்கு போறதே எனக்கு புது அனுபவமா இருக்கும். எங்க பாத்தாலும் பச்சை பசேலுனு பறவைகள் கூட்டம், கூட்டமா பறந்துட்டு இருக்குறது கண்ணுக்கு மட்டுமல்ல மனசுக்கும் குளிர்ச்சியா இருக்கும். அங்க தான் பறவைகளை படம் பிடிக்கணும்னு ஆர்வம் தோணுச்சு.

எட்டாம் வகுப்பு படிக்கும் போது தான் முதல் முதலா பறவைகளைப் பார்ப்பதற்காக கோத்தகிரி மலைக்கு போனேன். அங்க தான் பறவைகள்ல இத்தனை வகைகள் இருக்குதுனே தெரிஞ்சிக்கிட்டேன். அப்போதிலிருந்து இப்போ வரைக்கும் படம் பிடிச்சிட்டு இருக்கேன். இந்தியாவில் எந்தப் பகுதியில் வன உயிரிகளைப் பற்றி கருத்தரங்கு நடந்தாலும் நானும், அம்மாவும் பங்கேற்றுடுவோம். பறவைகள், பட்டாம்பூச்சுகள் சேகரிப்பைத் தொடர்ந்து தும்பி வகைகளை படம் பிடிக்க தொடங்கியுள்ளேன்.

சுபிக்‌ஷாவின் பறவை புகைப்படம்

பறவைகளின் குரல்கள் மனதிற்கு புத்துணர்ச்சியை ஏற்படுத்தும். அப்படி தான் பறவைகளை ரசித்தவாறு மேகமலையில் புகைப்படம் எடுத்துக் கொண்டிருந்தேன். அப்போது 24 “ஹான்பில்" பறவைகள் ஒன்று சேர்ந்து வானில் வட்டமிட்டு கொண்டு இருந்தன. அதுவரை அத்தனை ஹான்பில் பறவைகளை ஒன்றாக நான் பார்த்தது இல்லை. அது என் வாழ்வின் மறக்க முடியாத அனுபவமாக அமைந்தது.

காடுகளுக்குள் ஒரு பெண்ணாக பயணிப்பது சற்று சிரமமான ஒன்று தான். காடுகளில் வனத்துறை சார்பாக நடக்கின்ற பறவைகள் கணக்கெடுப்பில் ஒவ்வொரு ஆண்டும் சேர்ந்துகொள்வேன். காட்டிற்கு செல்லும் போது ஏதாவது விடுதியில் தங்கி விடுவோம். ஸ்ரீவில்லிபுத்தூர் அருகிலுள்ள ஒரு மலைப்பகுதிக்கு பறவைகள் கணக்கெடுப்பிற்கு சென்றிருந்தேன். ஆனால் அங்கு தங்குவதற்கு எந்த வசதியும் இல்லை. குடிப்பதற்கு தண்ணீர் கூட இல்லை. காட்டில் என்னை நடுவில் படுக்க வைத்து விட்டு என்னை சுற்றிலும் என்னுடன் வந்திருந்த அதிகாரிகள் பாதுகாப்பிற்காக படுத்திருந்தனர். 

ஆரம்பத்துல பேசிக் டிஜிட்டல் கேமரா தான் வச்சிருந்தேன். என்னோட புகைப்பட ஆர்வத்தைப் பார்த்து வீட்ல கேனான் 1200 வாங்கி கொடுத்தாங்க. பெரும்பாலும் நான் காட்டிற்கு செல்லும் போது அம்மாவும் என்னுடன் வந்துருவாங்க. எனக்கு பெரிய பலமே அம்மா தான். நான் கேமராவ தூக்குனாலே எல்லாரும் என்னை வியப்பா பார்ப்பாங்க.. அதுவே எனக்கு பெரிய தன்னம்பிக்கை கொடுக்கும்.

சுபிக்‌ஷாவின் பட்டர்ஃப்ளை புகைப்படம்

 

மாதவிடாய் நாட்களா இருந்தா தான் கொஞ்சம் கஷ்டமா இருக்கும். ஆனா பறவைகளைப் பார்த்தா வலியைலாம் மறந்துட்டு படம் எடுக்க ஆரம்பிச்சிருவேன். எழுத்தாளர் பானுமதி எழுதிய பட்டர்பிளை புக்ல நான் எடுத்த பட்டர்பிளை புகைப்படங்கள் இடம் பெற்றிருக்கு. பெரும்பாலும், எல்லா வீட்டுலையும் நினைக்குற மாதிரி தான் எங்க வீட்டுலையும் ஆரம்பத்துல காட்டுக்கு பயணிக்க தடை போட்டாங்க. இப்போ அவங்களே எனக்கு உறுதுணையா இருக்காங்க. நேஷனல் ஜியோகிராப்பில வேலை பார்க்கணும்னு ரொம்ப ஆசையா இருக்கு.. முயற்சி திருவினையாக்கும்னு நம்புறேன்” எனப் புன்னகையோடு விடைபெற்றார் சுபிக்‌ஷா.

http://www.vikatan.com

  • தொடங்கியவர்

 

மரணக் கிணற்றில் 12 வயது சிறுமியின் சாகசம்

கர்மிலா புர்பா 'பீப்பாய் சவாரி'யை கற்றுக்கொள்ள ஆரம்பித்தபோது அவருக்கு வயது 12 மட்டுமே. மரணக் கிணற்றுக்குள் 40 கி.மீ வேகத்தில் மோட்டார் வாகனத்தை ஓட்டுவதுதான் இதிலுள்ள சாகசம்.

  • தொடங்கியவர்

மச்சான் தோனி! இன்னமும் சென்னை சூப்பர் கிங்ஸ் பாசத்தில் பிராவோ!

இந்தியா, மேற்கிந்திய மண்ணில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது. ஆகவே, ஐந்து ஒருநாள் போட்டிகளிலும், ஒரு டி20 போட்டிகளிலும் விளையாடுகிறது. கோலி தலைமையிலான இந்திய அணியில் தோனி, யுவராஜ் உள்ளிட்ட சீனியர்களும் இடம் பெற்றிருக்கின்றனர். இன்றைய தினம் முதல் ஒருநாள் போட்டி போர்ட் ஆப் ஸ்பெயினில் நடந்து வருகிறது. 

இன்றைய தினம் போட்டி தொடங்குவதற்கு முன்னதாக தோனி, பாண்டியா உள்ளிட்ட வீரர்களை நேரில் சந்தித்துப் பேசியிருக்கிறார் பிராவோ. இப்போதைய மேற்கிந்திய அணியில் பிராவோ இல்லை. எனினும், தோனி தனது நண்பர் என்பதால் பார்ப்பதற்காகச் சென்றிருக்கிறார். தோனி உள்ளிட்ட வீரர்களுடன் பேசிக் கொண்டிருக்கும் புகைப்படத்தை ட்விட்டரில் வெளியிட்டது பிசிசிஐ. 

பிராவோ

இந்தப் படத்தை ரீட்வீட் செய்துள்ள டுவைன் பிராவோ " எனது மச்சானை பார்த்ததில் மகிழ்கிறேன். இந்தியா, மேற்கிந்தியத் தீவு ஆகிய இரண்டு அணிகளுக்கும் எனது வாழ்த்துகள்" என ட்வீட்டியிருக்கிறார். இந்த ட்வீட்டை தோனி ரசிகர்களும், சென்னை சூப்பர் கிங்ஸ் ரசிகர்களும் வாட்ஸ்அப் உள்ளிட்ட பல தளங்களில் பரப்பி வைரலாக்கி வருகின்றனர்.  

Nice to see my machan @msdhoni and #TeamIndia in

http://www.vikatan.com

Edited by நவீனன்

  • தொடங்கியவர்

ஆடும் மனிதனும் கலந்து பிறந்த விநோத ஆட்டுக்குட்டி: பொதுமக்கள் அதிர்ச்சி

 


ஆடும் மனிதனும் கலந்து பிறந்த விநோத ஆட்டுக்குட்டி: பொதுமக்கள் அதிர்ச்சி
 

தென்னாபிரிக்காவில் ஆடு ஒன்றிற்கு பிறந்த குட்டியானது, ஆடும் மனிதனும் சேர்ந்த கலவை போன்று இருந்ததால், அதனைக் கண்ட கிராம மக்கள் அதிர்ச்சிக்குள்ளாகினர்.

தென்னாபிரிக்காவின் கிழக்கு மாகாணத்தில் அமைந்துள்ளது கிறிஸ் ஹானி மாவட்டம். இங்கு அமைந்துள்ள சிறிய கிராமமே லேடி பிரரி. இந்த கிராமத்தில் அதிகளவில் விவசாயிகள் வாழ்ந்து வருகின்றனர்.

இங்குள்ள ஆடு ஒன்றிற்கு பிறந்த குட்டிதான் மக்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.

பாதி மனிதன் மற்றும் பாதி ஆடு போன்ற உடலமைப்புடன் இந்த குட்டி காணப்படுவது தான் இதற்கு காரணம்.

இதைக் கண்டவுடன் கிராம மக்கள் அனைவரும் இந்த குட்டியானது சாத்தானால் அனுப்பப்பட்டுள்ளது என்று பேசிக்கொண்டதால், கிராமத்தில் பரபரப்பு உண்டானது.

இது தொடர்பான தகவல் தெரிய வந்தவுடன், கிராமப்புற அபிவிருத்தி அதிகாரிகள் உடனடியாக மருத்துவர் ஒருவருடன் அங்கு விரைந்து சென்று ஆய்வுகளை மேற்கொண்டுள்ளனர்.

இது கண்டிப்பாக ஆட்டுக்குட்டிதான். மக்கள் பயப்பட வேண்டாம். மேலும், இந்த குட்டி கருவிலிருக்கும் பொழுது, அதன் தாய்க்கு ரிப்ட் வேலி என்ற நோய் பாதிப்பு இருந்துள்ளது. இதனால் குட்டி பிறக்கும் பொழுதே இறந்த நிலையில், இவ்வாறு பிறந்துள்ளது என அவர்கள் தெரிவித்துள்ளனர்.

இருந்தும் மக்களின் சந்தேகம் தீராத காரணத்தால், அந்த குட்டியின் பிரேதப் பரிசோதனை அறிக்கையை மக்கள் முன்னிலையில் தெரியப்படுத்தவுள்ளதாக மருத்துவர் கூறியுள்ளார்.

http://newsfirst.lk/

  • தொடங்கியவர்

வலைபாயுதே

 

 

facebook.com/muthu siva
தோணியும் ஜட்டுவும் ஒருவரை ஒருவர் பார்த்துக்கொண்டும் சிரித்துக்கொண்டும் இருந்தனர் - விராட் கோஹ்லி.

twitter.com/sathya_0555
அதெப்படி உங்களுக்கு ஹாக்கி, தேசிய விளையாட்டுங்கிற ஞாபகம், இந்தியா கிரிக்கெட்ல தோக்குற அன்னைக்கு மட்டும்  வருது.

twitter.com/mekalapugazh
நல்ல தூக்கம் என்பது... குறட்டை விட்டுத் தூங்குவது. மிக நல்ல தூக்கம் என்பது... பக்கத்தில் இருப்பவர்கள் குறட்டை விடும்போதும் தூங்குவது.

facebook.com/Thippu Sulthan K
சண்டை போட்டால், பேசாமல் இருந்த காலம்போய்... சண்டை வரும் எனப் பேசாமல் இருக்கும் நிலைக்கு வந்துவிடுகிறோம். #உறவுகள்!

p112a.jpg

twitter.com/manipmp 
*கண்டிப்பாகப் படிக்கவும்
*பொறுமையாகப் படிக்கவும்
*அவசியம் படிக்கவும்
#வாட்ஸ் அப் வல்லூறுகளின் பதிவுகள்.

twitter.com/BoopatyMurugesh
பசங்கதான் தோனி - கோஹ்லின்னு சண்டை போட்டுட்டுருக்கானுங்க. பொண்ணுங்க  `வாவ் பாண்டியா’ ன்னு போய்ட்டாங்க.

twitter.com/HAJAMYDEENNKS 
இந்தியாவில் மக்கள் தொகை அதிகம். அதைவிட மக்களை ஏமாற்றும் விளம்பரங்களும் அதிகம்..!

twitter.com/vyaasan  
`பெயரைக் கேட்டாலே, சும்மா அதிருதுல்ல’ ன்ற வசனம் இன்னிக்கு
பெரியார் பெயருக்கும் பிரபாகரன் பெயருக்கும் மட்டுமே பொருந்துகிறது.

p112b.jpg

twitter.com/mkd_ganesan 
கலாசாரத்தைக் காப்பாத்துறோம்னு சொல்றவன் பூரா மறைமுகமா சாதியை காப்பத்தத்தான் பாக்குறானுக.

twitter.com/Baashhu
சென்னை போலீஸ் இப்ப கொஞ்சம் பரவாயில்ல போல, 50 ரூபாய்க்கு சேஞ்ச் இல்லைனு 100 நீட்டினாலும், 50 எடுத்துகிட்டு மிச்சம் தர்றாங்க.

twitter.com/jeytwits
சொந்தக்காரனுக எல்லாம் சமுத்திரக்கனி மாதிரி. ஒன்னும் பண்ணலைனாகூட நம்மைப் பார்த்த உடனே ஆக்ரோஷமா அட்வைஸ் பண்ண ஆரம்பிச்சுடுறாங்க.

twitter.com/thoatta
அப்பாவோட பைக்கின் பெட்ரோல் டேங்க் போன்ற அற்புத சிம்மாசனம், வளர்ந்தபின் குழந்தைகளுக்கு எப்போதும் வாய்ப்பதேயில்ல ;-)

twitter.com/CreativeTwitz 
`தம்பி நாம மோசம் போய்ட்டோம்பா’
`ஆமான்னே மேட்ச் பிக்சிங் மாதிரிதான் தெரியிது.’
`அது இல்லப்பா, அந்தப் புள்ள கிரவுண்டுக்கு வரவே இல்ல.’
// இவனுங்கள வெச்சிகிட்டு...

p112c.jpg

facebook.com/திலிப் குமார்
தொடக்கமும் இல்லாதது, முடிவும் இல்லாதது, வீட்டு வேலைகள்...ஸ்சப்பா!

twitter.com/Kozhiyaar 
சாதாரண விஷயத்தைக்கூட ஆச்சர்யமாகத்தான் சொல்கிறார்கள் குழந்தைகள்!

twitter.com/latha_Bharathy  
தன் பக்கம் ஆதரவாய் அப்பா நிற்பது தெரிந்தபின்னரே அம்மாவுடனான சண்டையில் வலு கூட்டுகின்றன பெண் குழந்தைகள்.

twitter.com/thoatta 
 நல்ல கணவன்         மனைவிக்கிடையேயான சண்டை, கலைஞரின் உண்ணாவிரத நேரத்தைத் தாண்டி நீடிப்பதில்லை.

p112d.jpg

twitter.com/naaraju
தம் பிள்ளைகளை அரசுப் பள்ளியில் சேர்த்துப் படிக்கவைக்க நிறையப் பெற்றோர் தயாராகவே இருக்கிறார்கள். பக்கத்து வீடுகள்தான் அதை அனுமதிப்பதில்லை.

twitter.com/Selvaa__ 
பயணிப்பது மிருகங்களுடன் என்று உணர்ந்தவன் மனிதம் பேசுவதில்லை.


ட்ரெண்டிங்

சென்ற வாரம் ராகுல் காந்தி தன்னுடைய 47-வது பிறந்தநாளைக் கொண்டாடினார். அவருக்கு காலையிலேயே தன் டவிட்டர் பக்கத்தில் முதல் ஆளாகப் பிறந்தநாள் வாழ்த்துச் சொல்லி அதிர்ச்சி கொடுத்தார் பிரதமர் நரேந்திர மோடி! ``காங்கிரஸ் துணைத்தலைவர் ராகுல் காந்திக்கு பிறந்தநாள் வாழ்த்துகள். அவர் நீண்ட ஆயுளோடு ஆரோக்யமான வாழ்வை வாழ பிரார்த்தனை செய்கிறேன்.’’ என்று ட்விட் போட அவருடைய பக்தர்களோ ‘`இதுதான் அரசியல் நாகரிகம்’’ எனப் பிரதமரின் பெருந்தன்மையை வியந்தோதிக் கொண்டாடினர்!
 

  • தொடங்கியவர்

உலகின் 5 'தி பெஸ்ட்' தீம் ஹோட்டல்கள் இவைதானாம்! அப்படி என்ன தீம்?

சுற்றுலாவில் மிக முக்கியப் பங்கு ஹோட்டல்களுக்கு உண்டு. தங்குவதற்கு ஏதோ ஓர் இடம் என்பது மாறி, தற்போது சொகுசு, பலதரப்பட்ட சேவைகள், வசதிகள் எனப் பல்வேறு விதங்களில் நவீன ஹோட்டல்கள் பங்காற்றிவருகின்றன. வசதியான இடமும் ருசியான உணவும் கிடைத்தாலே போதும் சுற்றுலாவில் பாதி நிறைவடைந்த திருப்தி ஏற்பட்டுவிடும். அப்படித் தங்கும் இடத்துக்கு முக்கியத்துவம் அளித்து பல்வேறு தீம்களில் ஹோட்டல்கள் வடிவமைக்கப்பட்டுள்ளன. உலகின் அதிமுக்கியத்துவம் வாய்ந்த ஐந்து வகையான தீம் ஹோட்டலின் குயிக் விசிட் இதோ...

தீம் ஹோட்டல்

வி 8 ஹோட்டல் (ஜெர்மனி) :

இரவு முழுக்க காரில் பயணம் செய்து தூங்க முடியாமல் தவித்த அனுபவம் நம் அனைவருக்கும் இருக்கும். ஆனால், `காரிலேயே சில நாள்கள் தங்கினால் என்ன?' என்று ஜெர்மானியர்கள் யோசித்திருப்பார்கள்போல. காருக்குள் இரண்டு மெத்தை விரிப்புகள், சோபா செட்டுகள் என அமைக்கப்பட்டிருந்தால் எப்படி இருக்கும்? நிற்க... நீங்கள் நினைக்கும்படி இது சாதாரண ஹோட்டல் அல்ல. மொத்தம் 34 அறைகள்கொண்ட `4 ஸ்டார்' ஹோட்டல். அதில் பத்து அறைகள் வின்டேஜ் கார்கள், ஸ்போர்ட்ஸ் கார்கள், க்ளாசிக் கார்கள் என வடிவமைத்து மிரட்டியிருக்கிறார்கள். இந்த ஹோட்டலுக்குள் சென்றவுடன் ஏதோ கார் ஷோ ரூமுக்குள் சென்றதுபோல் கார்கள் வரிசைகட்டி நிற்கின்றன. அதில் ஏதாவது ஒரு காரை புக்செய்து தங்கிக்கொள்ளலாம். படுக்கைகள் ஒவ்வொன்றும் ஒரு வின்டேஜ் காரை நினைவுபடுத்துகிறது. ஹோட்டல் அமைந்திருக்கும் இடம்கூட புகழ்பெற்ற கார் சந்தையான ஸ்டூர்ட்கார்ட்டில்தான். `வி 8' என்பது கார்களில் பொருத்தப்படும் இன்ஜினின் பெயர். அதன் பெயரையே ஹோட்டலுக்கும் வைத்துள்ளார்கள். 

இந்த ஹோட்டலிலுள்ள தீம் ரூம்களில் இருவர் ஓர் இரவு தங்குவதற்கு 175 யூரோ கட்டணமாகப் பெறப்படுகிறது. அதாவது, இந்திய மதிப்பில் சுமார் 13,475 ரூபாய். 

தீம் ஹோட்டல், ட்ரீ தீம்

ட்ரீ ஹோட்டல் (ஸ்வீடன்) :

`மரத்தின் மேல் பறவைகள் கூடுகட்டி வாழ்வதுபோல் ஒருநாள் இருந்தால் எப்படி இருக்கும்!' என்ற ஆசை உண்டா உங்களுக்கு? அப்படியானால், ட்ரீ ஹோட்டல்தான் உங்களுக்கு ரைட் சாய்ஸ். இரண்டு குழந்தைகள் உள்ள நான்கு பேர்கொண்ட குடும்பம் தங்குவதுபோல் அமைக்கப்பட்டுள்ளது இந்த தீம் ஹோட்டலின் அறைகள். அப்படியே அச்சு அசலாக மரத்தில் பறவையின் கூடு எப்படி இருக்குமோ அப்படி அமைக்கப்பட்டுள்ளது. கூடு சிறியதாக இருக்குமே. அதில் எப்படித் தங்குவது என்றுதானே நினைக்கிறீர்கள்?  கவலை வேண்டாம்... இந்த அறை 17 சதுரமீட்டர் பரப்பளவுகொண்டது. ஜன்னல்கள்கூட உண்டு. இந்த ஜன்னலின் வெளியிலிருந்து பார்த்தால் உள்ளே இருப்பவர்கள் தெரியாது. காட்டுக்கு நடுவில் ஒரு அடேங்கப்பா டெக்னாலஜி!

இந்த தீம் ஹோட்டலில் இருவர் ஓர் இரவு தங்குவதற்கு 7,500 ரூபாய் கட்டணம் வசூலிக்கப்படுகிறது. 

தீம் ஜம்போ

ஜம்போ ஸ்டே (ஸ்வீடன்) :

அடிக்கடி விமான பயணம் மேற்கொள்பவர்களாக இருந்தாலும் சரி, இந்த விமானத்தில் தங்குவதுபோல் வராது. அப்படியென்ன விசேஷம்? 1972-ம் ஆண்டில் தயாரிக்கப்பட்ட ஜம்போ விமானம் ஓய்வுக்குப் பிறகு ஹோட்டலாக மாற்றப்பட்டுவிட்டது. 747 போயிங் ஜம்போ விமானம்தான் ஜம்போ நிறுவனத்தின் முதல் பிராப்பர்ட்டி. இதில் மொத்தம் 24 அறைகள் உள்ளன. ஒவ்வோர் அறையும் நான்கு சதுரமீட்டர் பரப்பளவுகொண்டதாக நவீன வசதிகளுடன் அமைக்கப்பட்டுள்ளது. 

இப்படி சும்மா கிடந்த விமானத்தை ஹோட்டலாக மாற்றி, தங்குவதற்கு வசூலிக்கப்படும் கட்டணம் எவ்வளவு தெரியுமா? இருவர் ஓர் இரவு தங்குவதற்கு 8,505 ரூபாய். 

டாக் பார்க்

டாக் பார்க் இன் (அமெரிக்கா) :

அடர்ந்த காட்டுக்குள் கட்டப்பட்டிருக்கிறது இந்த தீம் ஹோட்டல். அந்தப் பாதையைக் கடந்து செல்பவர்களுக்கு இருக்கும் ஒரே ஒரு நல்ல லேண்ட்மார்க் இதுதான்போல. `அதோ பாருங்க... ஒரு நாய் நிக்குதா... அதுதான் ஹோட்டல்' என்று வழி கூறுகிறார்கள் இங்குள்ள மக்கள். இந்த ஹோட்டலில் இதற்கு முன் தங்கிய அனுபவசாலிகள், நாயின் கண் பகுதியிலிருக்கும் அறையில் தங்குவது கொண்டாட்டத்தின் உச்சம் என்று கூறுகிறார்கள். நாயின் மூக்குப் பகுதி பால்கனியாகப் பயன்படுத்தப்படுகிறது. ஹோட்டலின் வெளிப்பகுதியும், அறையின் உள்பகுதியும் நாய்களை நினைவுபடுத்தும்வண்ணம் அமைக்கப்பட்டுள்ளது. 

இந்தத் தீம் ஹோட்டலில் இருவர் ஓர் இரவு தங்குவதற்கான கட்டணம் 6,025 ரூபாய். 

ஐஸ்

ஐஸ் ஹோட்டல் (வடக்கு ஸ்வீடன்) :

ஹோட்டல்கள் எல்லாமே ஒரே ஒருமுறை கட்டப்பட்டு நிரந்தரமாக இருக்கக்கூடியவை. ஆனால், இந்த ஐஸ் ஹோட்டல் ஒவ்வொரு வருடமும் புதிதாகக் கட்டப்படுகிறது. எப்படியென்றால்...`டோர்ன் நதி' ஒவ்வொரு வருடமும் டிசம்பர் மாதத்தில் மைனஸ் 5 டிகிரிக்கு சென்றுவிடுவதால், உறைந்துபோய் அப்படியே பனிக்கட்டியாக மாறிவிடும். அப்போது பனிக்கட்டி சிற்பக் கலைஞர்களுக்கு அழைப்புவிடுவார்கள். அவர்கள் வந்து அந்தப் பனிக்கட்டியில் விதவிதமான அறைகளை உருவாக்குவார்கள். இந்த ஹோட்டல் ஏப்ரல் மாதம் வரை செயல்படும். அதன் பிறகு வெப்பம் அதிகமாவதால், பனிக்கட்டிகள் உருகி மீண்டும் நதி ஓடத் தொடங்கிவிடும். இப்படித்தான் ஒவ்வொரு வருடமும் இந்த ஹோட்டல் அமைக்கப்படுகிறது. இதுதான் உலகின் முதல் ஐஸ் ஹோட்டல். 

பனிக்கட்டியிலேயே செய்யப்பட்ட கட்டில்கள், நாற்காலிகள், மேஜைகள் என இதில் தங்குவது வித்தியாசமான ஓர் அனுபவத்தைக் கொடுக்கும். இந்த இடம் `நார்தன் லைட்ஸ்' உருவாகும் இடம் என்பதால், இரவில் தெரியும் வான வர்ணஜாலங்களைக் கண்டு ரசிக்கலாம். ஹனிமூன் தம்பதிகள் இங்கு அதிகம் வருவதாகக் கூறப்படுகிறது. 

இந்தத் தீம் ஹோட்டலில் இருவர் ஓர் இரவு தங்குவதற்கு 22,552 ரூபாயிலிருந்து ஆரம்பமாகிறது. 

 

நமக்குப் பிடித்தமான வகையில் தங்குமிடம் அமைந்திருந்தால், நம் கொண்டாட்டத்துக்கு அளவே இல்லை. அப்படிப்பட்ட இடங்களில் ஒருநாள் சொர்க்கத்தை அனுபவிப்பது அலாதியானதுதான். 

http://www.vikatan.com

  • தொடங்கியவர்
‘சுற்றிநிற்பவர்கள் சிந்திக்கவே விடுவதில்லை’
 

image_9ae1d939e7.jpgதங்களின் அறியாமையால் ஏற்பட்ட துன்பங்களை நினைத்து, நினைத்து உருகுபவர்கள் பலர் உள்ளனர். ஆனால், இத்தகையவர்கள் எவர் வந்து புத்தி சொன்னாலும் கேட்கமாட்டார்கள். இத்தகையவர்கள் விதிதான் காரணம் என்பார்கள்.  

படித்த அறிவாளிகளுக்கும் இந்தப் பிரச்சினையுண்டு. எல்லாமே அறிந்தா நாங்களும் பிறந்தோம்.  

உண்மைகளை உதறாமல், உலக நீதிகளை ஏற்றுநடந்தால், பலவிடயங்கள் புரிந்துவிடும். சுற்றிநிற்பவர்களில் சிலர் மற்றையவர்களைச் சிந்திக்கவே விடுவதில்லை. 

வீட்டுக்குள்ளேயே கணவன், மனைவி பிரச்சினையில் பலரும் தங்களது விருப்பத்தையே முன்னிறுத்துவார்களே தவிர, பரஸ்பரம் உண்மைகளைத் தேட முனைவதில் தயக்கம் காட்டுகின்றனர். இதைக் குடும்ப அங்கத்தவரின் அறியாமை என்றே கூற வேண்டும்.  

வீட்டுப் பிரச்சினைகளையே சமாளிக்க முடியாதவர்கள், அடுத்தவர் வீட்டுக்கு வந்து நியாயம் பேசலாகாது. 

வாழ்க்கையில் இன்ப துன்பங்கள் வருவதற்கு நாங்கள் மட்டும் காரணமல்ல; உணர்ச்சிவசப்படாமல் உணர்வுடன் இயங்குவதே மேன்மை.  

  • தொடங்கியவர்

கால்பந்தின் லிட்டில் மாஸ்டர், பிளேஸ்டேஷன்... எல்லாமே மெஸ்சிதான்! #HBDMessi

 

2015 கோபா டெல் ரே ஃபைனல். பார்சிலோனா அணி, அத்லெட்டிக் க்ளப் அணியை தன் சொந்த மண்ணில் எதிர்த்து விளையாடிக்கொண்டிருக்கிறது. இடம், பார்சிலோனாவின் ஹோம் ஸ்டேடியமான கேம்ப் நூ. 98,000 பார்வையாளர்கள் ஆட்டத்தை பார்த்துக்கொண்டிருக்கிறார்கள். ஆட்டத்தின் 20-வது நிமிடம். டேனி ஆல்வ்ஸ் நடுகளத்தில் கடத்திக்கொடுத்த பந்தை பெறுகிறார் மெஸ்சி. வெறும் 2.73 செகண்ட் கால அளவில் 19.5 மைல் (எம்.பி.எச் ) வேகமெடுக்கிறது மெஸ்சியின் கால்கள். மூன்று டிஃபெண்டர்கள் தலா ஆறு அடி தூரத்தில் மெஸ்சியை சுற்றிவளைக்கிறார்கள். வெறும் 1.2 செகண்டில் மூன்றே மூன்று சிறிய டச்கள் மூலம் அவர்களை ஓரம் கட்டிவிட்டு எதிரணியின் கோல் பாக்சுக்குள் நுழைகிறார்.

மெஸ்சி

பாக்சுக்குள் நுழைந்ததும் ஒரு இன்ஸைடுஅவுட் (உள்ளே வெளியே) மூவ் தான், ஷாட்டுக்குத் தயாராகிறார். பாக்சுக்குள் உள்ள டிஃபெண்டர்களுக்கும் மெஸ்சிக்குமான தூரம் வெறும் 5 அடி தான். இருந்தாலும் 48 மைல் (எம்.பி.எச் ) திசைவேகத்தில் பந்து கோல்கீப்பரின் நீண்ட இடதுகையை 6 இன்ச் தொலைவில் ஏமாற்றிவிட்டு  கண்ணிமைக்கும் நேரத்திற்குள் வலைக்குள் பந்து சென்றது. பந்தை வாங்கியதிலிருந்து கோல் அடிக்கும்வரை 60 யார்ட்ஸ் தொலைவை கடக்க (டிராவல்) மெஸ்சி எடுத்துக்கொண்ட கால அளவு வெறும் 11.4 செகண்டுகள்தான். இதைவிட ஆச்சர்யமான விஷயம் மெஸ்சியின் ஷாட்தான்.  14 யார்டு தொலைவிலிருந்து மெஸ்சி உதைத்த பந்து எப்படி வலைக்குள் சென்றது என்பதுதான். மெஸ்சி சரியாக பந்தின் மையப்பகுதியை உதைக்காமல் வெறும் 1.5 மி.மீ அளவு பந்தை இடதுபுறமோ இல்லை வலதுபுறமோ தள்ளி உதைத்திருந்தால் பந்து கீப்பரின் கைகளில் பட்டு வெளியேறி இருக்கும். இல்லை, கோல்கம்பத்தை விட்டே வெளியேறியிருக்கும்.

இத்தனை விவரங்களும் அறிவியல் பூர்வமாக வல்லுநர்களால் நிரூபிக்கப்பட்டிருக்கிறது. ஆட்டத்தின் இந்த முதல் கோலை மெஸ்சி அடித்தபோது கிளம்பிய ரசிகர்கள் கூட்டத்தின் ஆர்ப்பரிப்பு அடங்க வெகுநேரமானது; பார்வையாளர்களும் சரி, சக வீரர்களும் சரி சிறிது நேரம் என்ன நடந்தது என்று தெரியாமல் திகைத்துப் போயினர். அந்த திகைக்க வைக்கும் வேகமும் எதிரணி வீரர்களை திணறவைக்கும் விவேகமும் தான் மெஸ்சியின் சிறப்பம்சங்கள். மெஸ்சியின் இந்த ஒற்றை கோலுக்கே இத்தனை ஆச்சர்யங்கள் என்றால் இதுபோன்ற பல கோல்களை ஜஸ்ட் லைக் தட் என தனது கால்பந்து வாழ்க்கையில் பதிவு செய்திருக்கிறார் இந்த லிட்டில் மாஸ்டர். உலகின் நம்பர் ஒன் வீரராக வெற்றிவாகை சூடிக்கொண்டிருக்கும் மெஸ்சி இன்று தனது 30-வது வயதில் அடியெடுத்து வைக்கிறார். 

மெஸ்சி

கடுகு சிறுத்தாலும் காரம் குறைவதில்லை என்ற பழமொழிக்கு சிறந்த உதாரணம் லியோனல் மெஸ்சி. இவரது உயரம் வெறும் 5 அடி 7 அங்குலம்தான். கால்பந்து உலகைக் கடந்த 10 வருடங்களுக்கு மேலாக ஆண்டு வரும் சூப்பர்ஸ்டாரான இவர் அசாத்தியமான பல சாதனைகளுக்குச் சொந்தகாரர். மெஸ்சியின் தொழில்முனை போட்டியாளரான கிறிஸ்டியானோ ரொனால்டோவைத் தவிர ஏறக்குறைய கால்பந்து உலகின் லெஜண்டுகள், சிறந்த வீரர்கள், சக போட்டியாளர்கள் என அனைவருமே கால்பந்து உலகின் தலைசிறந்த வீரர் என கை காட்டுவது இவரைத்தான். இவர்  படைத்த சாதனைகளை பட்டியலிட்டால் அது நீண்டு கொண்டே இருக்குமே தவிர அதற்கு முடிவு என்பதே இருக்காது. தன் 17 வயதில் பார்சிலோனா அணிக்காக முதன்முதலில் களமிறங்கிய மெஸ்சி இன்றுவரை வெற்றிமேல் வெற்றிகளை வாங்கி பார்சிலோனா அணிக்குப் பெருமை சேர்த்துக்கொண்டிருக்கிறார். அர்ஜெண்டினா தேசிய அணிக்காகவும் பல வெற்றிகளைப் பெற்றுத்தந்துள்ளார். 

ஆரம்பத்தில் அடுத்த மாரடோனா என்று புகழ்ப்பட்ட மெஸ்சி, இன்று தனக்கென ஒரு அடையாளத்தை உருவாக்கி வளர்ந்து வரும் இளம் வீரர்களுக்கு ஒரு முன்னுதாரணமாகவே விளங்குகிறார். 2008-ம் ஆண்டிலிருந்தே நிலையான ஆட்டத்தை வெளிப்படுத்தி வரும் மெஸ்சிக்கு இன்றுவரையில் தேய்வு என்பதே இல்லை.

Lionel Messi

மெஸ்சி, அர்ஜெண்டினாவின் ரோசாரியோ நகரில் 1987-ம் ஆண்டு பிறந்தவர். சோதனையை சாதனையாக மாற்றியவர் என்ற சொல்லுக்கு தாராளமாக இவரை உதாரணம் சொல்லலாம். ஆம், சிறு வயதிலேயே குரோத் ஹார்மோன் டெஃபீசியன்சி எனக்கூடிய ஹார்மோன் வளர்ச்சிக் குறைபாட்டால் பாதிக்கப்பட்டவர் மெஸ்சி. பார்சிலோனா அணி நிர்வாகம் இவரது மருத்துவ செலவை பார்த்துக்கொள்வதாக உறுதியளிக்கவே அர்ஜெண்டினாவிலிருந்து ஸ்பெயினுக்கு குடி வந்தது மெஸ்சியின் குடும்பம். 

பார்சிலோனா யூத் அகாடமியான லா மசியாவில் பால பாடம் பயின்ற மெஸ்சி, பார்சிலோனா சி, பார்சிலோனா பி என தன் கடின உழைப்பு மற்றும் விடாமுயற்சினால் முன்னேறி இறுதியாக 2005-ல் பார்சிலோனா சீனியர் அணியில் இடம் பிடித்தார். மே 1, 2005-ல் மெஸ்சி பார்சிலோனா அணிக்காக  தன் முதல் கோலை பதிவுசெய்தார். மெஸ்சியின் முதல் கோலுக்கான அசிஸ்டை அளித்தவர் பார்சிலோனா லெஜண்ட் பிரேசில் நாட்டு வீரரான ரொனால்டினோ. மெஸ்சியின் திறமைகளைக் கண்டறிந்து சீனியர் அணியில் அவரைச்  சேர்க்க பார்சிலோனா நிர்வாகத்தை வலியுறுத்தியவர்களில் ரொனால்டினோ முதன்மையானர். ‘கால்பந்து வாழ்க்கையில் எனக்குக் கிடைக்காத பெருமை மெஸ்சியுடன் பல சீஸன்கள் சேர்ந்து விளையாடாமல் போனதுதான்’ என்று  பல வருடங்கள் கழித்து ரொனால்டினோ  சொன்னார். முதல் கோல் அடித்தவுடன் மகிழ்ச்சியில் ரொனால்டினோ தன் முதுகில் மெஸ்சியை சுமந்து மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார். அன்றிலிருந்து இன்று வரை மெஸ்சியின் புகழ் கிராப் இறங்கவே இல்லை.

Lionel Messi

மெஸ்சி  ஆக்ரோஷமான வீரர் இல்லை, ஆஜானுபாகுவான உடல்வாகும் இல்லை. ஆனாலும், மெஸ்சி அளவுக்கு யாரும் அதிக கோல்கள் அடிப்பதில்லை. மெஸ்சி, பலத்தை நம்புவதில்லை.  திறமையை நம்பக்கூடியவர். எத்தனையோ வீரர்கள் தாங்கள் மட்டுமே கோல் அடிக்க வேண்டும் என்று துடிக்கும் நிலையில் தனக்குக் கிடைக்கும் வாய்ப்புகளைக்கூட சக வீரர்களுக்கு பகிர்ந்து அவர்களையும் கோல் அடிக்க வைத்து சந்தோஷப்படுவது மெஸ்சிக்கு விருப்பமான ஒன்று. 170 செ.மீ உயரம், 72 கிலோ எடை கொண்ட மெஸ்சி, பிரதானமாக பயன்படுத்துவது தன் இடது காலைத்தான். ஃபினிஷிங், பாஸிங் என எதிலும் துல்லியம் பிசகாது. பந்து காலுக்கு வந்ததும் கண்ணிமைக்கும் நேரத்துக்குள்  டிரிபிளிங், நட்மெஜ், பாடி ஃபெயிண்ட் என பல மேஜிக்குகளை செய்து எதிரணி வீரர்களின் கண்களில் மண்ணைத் தூவிவிட்டு எதிரணியின் கோல் போஸ்ட்டிற்கு கடத்திச் சென்று விடுவார்.

எதிரணி வீரர்களுக்கு சிம்ம சொப்பனமாகத் திகழும் இவரிடமிருந்து பந்தை பறிப்பதென்பது எந்தஒரு டிஃபெண்டருக்கும் அவ்வளவு எளிதாக இருக்காது. வேகம் இவரது அசாத்திய பலம். திடீரென்று வேகமெடுத்து ஓடக்கூடிய கால்கள் இவரின் பிரதான பலம். தொலை தூரத்திலிருந்தாலும் கூட துல்லியமக பாஸ் செய்வது, அத்தனை டிஃபெண்டர்களையும் ஓரங்கட்டி சக வீரர்களை கோல் அடிக்கச் செய்வது, கோல் கீப்பரை ஏமாற்றி பந்தை வலைக்குள் திணிப்பது என அனைத்து ஏரியாக்களிலும் திறமையான ஆல்ரவுண்டர். பார்சிலோனா அணிக்காக எட்டு லீக் டைட்டில்கள், 29 டிராபிக்களை வென்றுள்ளார். அர்ஜெண்டினா அணிக்காக ஒலிம்பிக்கில்  தங்கப் பதக்கம் வாங்கியிருக்கிறார். ஆனால், 2014 பிரசேில் உலகக் கோப்பை ஃபைனலில், அர்ஜெண்டினாவை தனி ஆளாக உலகச் சாம்பியனாக்கும் வாய்ப்பு வந்தது. ஆனால், அது நிறைவேறவில்லை. கோபா அமெரிக்க தொடரிலும் அடுத்தடுத்து தோல்வி.

Lionel Messi

 க்ளப்புக்காக விளையாடுவதைப் போல, தேசிய அணிக்கு விளையாடும்போது அக்கறை காட்டுவதில்லை என விமர்சனங்கள் வந்தன. ‘தேசிய அணிக்கு இனி விளையாட மாட்டேன்’ என, ஓய்வை அறிவித்தார். பலரும் கேட்டுக்கொண்டதற்கிணங்க, மீண்டும் அர்ஜெண்டினாவின் ஜெர்ஸி அணிய சம்மதித்தார். ரஷ்யாவில் 2018-ம் ஆண்டு நடக்கவுள்ள உலகக் கோப்பையில் ஜொலித்து, அர்ஜெண்டினாவை வேர்ல்ட் சாம்பியனாக மாற்றுவார் என அவரது ரசிகர்கள் நம்புகின்றனர். 

பிஃபா வின் உலகின் சிறந்த கால்பந்து வீரருக்கான விருதை ஐந்து முறை வென்றிருக்கிறார். நான்கு முறை யூரோப்பியன் கோல்டன் ஷூ விருதை பெற்றிருக்கிறார். ஒரு வருடத்தில் அதிக கோல்கள் அடித்து கின்னஸ் சாதனையும் படைத்திருக்கிறார் (2012 ம் ஆண்டு 91 கோல்கள்). இதுவரை ஒட்டுமொத்தமாக தன் கால்பந்து வாழ்க்கையில் 701 போட்டிகளில் விளையாடியுள்ள மெஸ்சி 565 கோல்கள் அடித்துளார். 231 கோல்கள் விழ துணைபுரிந்துள்ளார் (அசிஸ்ட்).

சமீபத்தில் நடைபெற்ற பார்சிலோனா, ரியல் மாட்ரிட் அணிகளுக்கிடையேயான லா லிகா ஆட்டத்தில் மெஸ்சி அடித்த இரண்டாவது கோல் பார்சிலோனா அணிக்காக அவர் பதிவு செய்த 500-வது கோல். ஆட்டத்தின்போது முன்னதாக ரியல் மாட்ரிட் அணி டிஃபெண்டர்களால் வாயில் இரத்தம் வருமளவுக்கு காயம்பட்டார் மெஸ்சி. ஆனாலும் சோர்ந்து விடாமல் தனது அற்புதமான கோல்களால் ரியல் மாட்ரிட் அணியைத் தோற்கடித்து ரியல் மாட்ரிட் வீரர்களை புலம்ப வைத்து வெற்றிகரமாக ரிவெஞ்ச் எடுத்தார். தன் 500-வது கோலை அடித்ததும் சிங்கத்தின் குகைக்குள்ளேயே நுழைந்து அதன் பிடரியைப் பிடித்து உலுக்குவதைப்போல, ரியல் மாட்ரிட் ரசிகர்கள் முன் தன் ஜெர்சியை கழற்றி மெஸ்சி என்ற தன் பெயர் தெரியுமாறு கெத்தாக அவர்களை நோக்கி காட்டிவிட்டு, வித்தியாசமான முறையில் அதைக் கொண்டாடினார். 

lionel messi

களத்தில் பம்பரமாகச் சுழலும் மெஸ்சியின் கால்களை வரி ஏய்ப்பு என்னும் பாம்பு சுற்றி வதைத்தது. வழக்கு, சிறைத்தண்டனை, அபராதம் என ஒரு கட்டத்தில் மெஸ்சிக்கு போதாத காலம். ஆனாலும் அது எதுவும் களத்தில் பிரதிபலிக்காதபடி பார்த்துக்கொண்டார்.  இப்போது மீண்டும் புது உற்சாகத்துடன் வலம் வருகிறார். காதலி மற்றும் இரண்டு மகன்களுடன் மகிழ்ச்சியாக வாழ்கிறார். கூடுதல் மகிழ்ச்சி என்னவென்றால் மெஸ்சிக்கும் அவரது காதலி அண்டோனெல்லாவுக்கும் அடுத்த வாரம் திருமணம். 

இப்போது போல எப்போதும் மெஸ்சி, கால்பந்து உலகை ஆள்வார் என்பதில் மாற்றுக் கருத்தேயில்லை. எட்டு வயதில் ஹார்மோன் வளர்ச்சி குறைபாட்டால் பாதிக்கப்பட்ட மெஸ்சியால் உயரமாய் வளர முடியவில்லை; ஆனால் இப்போது மெஸ்சியின் சாதனைகளின் எண்ணிக்கை உயர்வதை எந்த சக்தியாலும் தடுக்க முடியவில்லை. விடாமுயற்சி இருந்தால், திறமையை வளர்த்துக்கொள்ளும் வெறி இருந்தால் இந்த உலகத்தில் எந்த உயரத்திற்கும் செல்லலாம் என உலகிற்கு உணர்த்தியவர் லியோனல் மெஸ்சி. 

உலகின்  தலைசிறந்த  கால்பந்து பயிற்சியாளர்களுள் ஒருவரான பெப் கார்டியோலா ஒரு முறை மெஸ்சியைப் பற்றி இப்படிக் கூறினார் “அவரைப் பற்றி எழுத வேண்டாம். அவரை விவரிக்க வேண்டாம்; அவரைக் கவனியுங்கள்.”. ஆம், அவர் சொல்வது அத்தனை உண்மை. ஒருமுறை மெஸ்சி விளையாடுவதை பாருங்கள்.  உங்களையே நீங்கள் மறந்து மெஸ்சியை ரசிக்கத் தொடங்கியிருப்பீர்கள்.

மெஸ்சி பற்றி பிரபலங்கள் சொன்னது

டீகோ மரடோனா: அர்ஜெண்டினா கால்பந்தில் என் இடத்திற்கு வாரிசான வீரரை பார்த்திருக்கிறேன். அவர் பெயர் மெஸ்சி.

லூயிஸ் ஃபிகோ : மெஸ்சி விளையாடுவதைப் பார்ப்பது எனக்கு ஒரு இன்பம். அது உச்சகட்டத்தை பெறுவதைப் போன்றது. அது ஒரு நம்பமுடியாத இன்பம்.

ரால் : மற்றொரு நாள் நான் அவரது ஆட்டங்களில் ஒன்றை பார்த்தேன். அவர் பந்துடன் ஒரு நூறு சதவீதம் முழுவேகத்தோடு ஓடிக்கொண்டிருந்தார். எத்தனை தொடுதல்களை எடுத்துக்கொண்டார் என தெரியவில்லை. ஐந்து அல்லது ஆறாக இருக்கலாம். ஆனால் பந்து அவரது காலில் பசையிடப்பட்டிருந்தது. அது நடைமுறையில் சாத்தியமற்றது.

பாலோ மால்டினி : அவர் மாரடோனாவின் நிலையை அடைந்து விட்டார்; அதையும் மிஞ்சிவிட்டார். 

பெப் கார்டியோலா : அவரைப்பற்றி எழுதாதீர்கள்,அவரை விவரிக்க முயற்சிக்காதீர்கள். வெறுமனே அவரைக் கவனியுங்கள்.

ஃப்ராங்க் ரிஜ்கார்ட்: லியோவின் கோல்கள் கலையில் படைப்புகள்.

அர்சீன் வெங்கர்: மெஸ்சி ஒரு பிளேஸ்டேஷன்.

ராடமெல் ஃபால்கேயோ: மெஸ்சி ஒரு உண்மையான வீரரா அல்லது பிளேஸ்டேஷன் கதாபாத்திரமா?

ஜவி ஹெர்னாண்டஸ் : மற்ற எல்லாரையும்விட மெஸ்சி ஒருபடி மேலே இருக்கிறார். இதை எவரால் பார்க்கமுடியவில்லையோ அவர்கள் குருடர்களாக இருக்கிறார்கள் என்று அர்த்தம்.

ஆண்டர் ஹெரேரா : அவர் ஒரு மனிதன் என்பதை என்னால் உறுதியாக சொல்ல இயலவில்லை.

ஜியான்லுய்ஜி புஃபோன் : அவர் நம்மைப்போல மனிதனாக இருப்பதை உறுதிப்படுத்த விரும்பினேன்.

கார்லோஸ் பிலார்டோ : மெஸ்சி உடற்கூறியல் சட்டங்களை மீறுகிறார். நிச்சயமாக அவருடைய கணுக்காலில் ஒரு கூடுதல் எலும்பு இருக்க வேண்டும்.

ஃக்ரிஸ்டோ ஸ்டாய்க்கோவ் : ஒருகாலத்தில் என்னை பிஸ்டல் மூலம் மட்டுமே நிறுத்த முடியும் என்றார்கள். இன்று மெஸ்சியை தடுக்க உங்களுக்கு ஒரு மெஷின்கன் தேவைப்படும்.

ராடோமிர் அண்டிக் : மெஸ்சி கால்பந்தின் மொசார்ட்.

மேக்சி் ரோட்ரிகுவெஸ் : சந்தேகமேயில்லை, நீங்கள் வேறு கேலக்சியிலிருந்து வந்தவர். நன்றி லியோ.

லூயிஸ் என்ரிக்கே : உண்மையில் அவரைப்பார்த்தால் எனக்கு மனிதனாகவே தெரியவில்லை.

டேனி ஆல்வ்ஸ் : மெஸ்சி ஒரு தெய்வீகப் பரிசை கூடவே வைத்திருக்கிறார்.

ஸ்லடான் இப்ராஹிமோவிச் : மெஸ்சிக்கு அவரது வலதுகால் தேவையில்லை. அவர் பெரும்பாலும் இடது காலை மட்டுமே உபயோகிக்கிறார். இப்போதும் உலகின் தலைசிறந்த வீரராக இருக்கிறார். கற்பனைசெய்து பாருங்கள், ஒருவேளை அவர் தனது வலது காலையும் உபயோகப்படுத்தினால் நாம் தீவிரமான சிக்கல்களை சந்திக்க நேரிடும்.

 

கிறிஸ்டியானோ ரொனால்டோ : நாங்கள் நல்ல நண்பர்கள். நாங்கள் ஒன்றாக சாப்பிட்டதில்லை. ஆனாலும் அவரை நான் மதிக்கிறேன். அவர் என்னுடைய போட்டியாளர்தானே தவிர எதிரி இல்லை.

  • தொடங்கியவர்

காரணம் ஆயிரம்: எந்தத் திசையில் எடை அதிகம் ?

21chsuj_karanam1_j_3177108f.jpg
 
 
 

ஒரே விதமான தோற்றமும் எடையும் கொண்ட மனிதர்கள் எதிர் எதிர்த் திசையில் ஒரே வேகத்தில் நடக்கிறார்கள். ஒருவர் மேற்குத் திசை நோக்கி நடக்கிறார். இன்னொருவர் கிழக்குத் திசை நோக்கி நடக்கிறார். இந்த இருவரில் யாருடைய எடை அதிகமாக இருக்கும் ?

ஒரே எடை கொண்டவர்கள் என்றால் எப்படி எடை மாறுபடும்?

இருவரும் 50 கிலோ எடை கொண்டவர்கள். ஆனால், மேற்குத் திசை நோக்கி நடப்பவர்தான் அதிக எடை கொண்டவராக இருப்பார். பூமியின் சுழற்சிக்கு எதிர்த் திசையில் நடப்பவர் மீது அதிக அழுத்தம் செயல்படுவதால், மேற்கு நோக்கி நடப்பவரின் எடை, கிழக்கு நோக்கி நடப்பவரின் எடையைவிட அதிகமாக இருக்கும்.

பூமி தன்னைத்தானே சுற்றிக்கொண்டு, சூரியனையும் சுற்றி வருகிறது. தன்னைத்தானே பூமி நொடிக்கு 460 மீட்டர் வேகத்தில் சுற்றுகிறது.

பூமி தன்னைத்தானே சுற்றிக்கொள்ளும்போது மேற்கிலிருந்து கிழக்குத் திசையில் சுற்றிக்கொள்கிறது. பூமியின் சுழற்சி திசையிலேயே ஒருவர் நடக்கும்போது தன்னுடைய செயல் ஆற்றலை இழக்கிறார்.

இரு சக்கர வாகனத்தில் ஒருவர் மேற்குத் திசையிலிருந்து கிழக்குத் திசை நோக்கி மணிக்கு 60 கிலோ மீட்டர் வேகத்தில் பயணம் செய்கிறார். இவருக்குப் பக்கவாட்டில் இவர் பயணம் செய்யும் திசையிலேயே மேற்கிலிருந்து கிழக்கு நோக்கி ஒரு பேருந்து மணிக்கு 100 கிலோ மீட்டர் வேகத்தில் வருகிறது. பேருந்து இரு சக்கர வாகனத்தைக் கடக்கும் சில வினாடிப் பொழுதுகளில், இரு சக்கர வாகனத்தைத் தன் திசையில் இழுத்துச் செல்வதைக் கவனத்திருப்பீர்கள்.

பேருந்தின் திசையிலேயே அதைவிட எடை குறைந்த இரு சக்கர வாகனம் பயணிக்கிறபோது அதன் திசை வேகம் அதிகரிக்கிறது. இரு சக்கர வாகனத்தின் செயல்பாடு இல்லாமலேயே அதன் வேகம் அதிகரிக்கிறது. ஏனென்றால், அது பேருந்தின் திசைவேகத்தில் இழுத்துச் செல்லப்படுகிறது. பேருந்து கடந்து செல்லும் சில விநாடிகளில் மட்டும் இரு சக்கர வாகனத்தின் திசைவேகம் மணிக்கு 160 கிலோ மீட்டராக மாறிவிடுகிறது.

சாலையில் காகிதம் அசையாமல் கிடக்கிறது. இப்போது அதன் பக்கவாட்டில் பேருந்து பயணிக்கிறபோது காகிதம் தன் எடை முழுவதையும் இழந்து பேருந்தின் திசையில் பயணிக்கிறது.

அதுபோலத்தான் பூமி மேற்கிலிருந்து கிழக்காகச் சுற்றுகிறது. எனவே, மேற்குத் திசையிலிருந்து, கிழக்கு நோக்கிப் பயணிக்கும் ஒருவர் புவி வட்டப் பாதையின் இயக்கத்தில் தன்னை இணைத்துக்கொள்கிறார்.

பூமியின் திசைவேகத்தோடு, நடப்பவரின் திசைவேகமும் சேர்ந்துகொள்கிறது. பூமியின் பயணத் திசையில் நடப்பவர் இழுத்துச் செல்லப்படுகிறார். எனவே, காகிதத்துக்கு நடந்ததுபோல் பூமியின் சுற்றுப் பாதையின் திசையில் நடப்பவர் தன் எடையை இழந்துவிடுகிறார். ஆனால், மிகப் பெரும் பரப்பான பூமியின் சுழற்சி வேகத்தை நம்மால் உணர முடிவதில்லை. அதனால் எவ்வளவு எடையை இழக்கிறோம் என்பதையும் உணர முடிவதில்லை.

இதற்கு நேர் மாறாகக் கிழக்கிலிருந்து மேற்காக நடப்பவர் எதிர் திசையில் அதிக அழுத்தத்தை எதிர்கொள்ள வேண்டியிருக்கிறது. எதிர் காற்றில் சைக்கிள் மிதிப்பதும், இரு சக்கர வாகனங்கள் ஓட்டுவதும் எவ்வளவு கஷ்டமாக இருக்கிறது. மணிக்கு 60 கிலோ மீட்டர் வேகத்தில் பயணம் செய்பவரை எதிர்க் காற்று தடுத்து பயண வேகத்தைக் குறைக்கிறது. எதிர் திசையில் பயணம் செய்பவர் மீது அழுத்தம் அதிகரிக்கிறது. அழுத்தம் அதிகரிக்கும்போது எடையும் அதிகரிக்கும். உயரே செல்லச் செல்ல நம் எடை குறைந்துகொண்டே போகிறது. இதற்குக் காரணம் மேலே செல்லச் செல்லக் காற்றின் அளவு குறைவதுதான்.

காற்று நம் மீது அதிக அழுத்தத்தைச் செலுத்துகிறபோது நம் எடை அதிகரிக்கும். பூமியின் இயக்கத் திசைக்கு எதிராக நாம் பயணிக்கிறபோது அதன் இயக்க விசைக்கு எதிராக நாம் செயல்பட வேண்டியிருக்கிறது. காற்று நம்மை அதிகமாக அழுத்துகிறது. எனவே, எடை அதிகரிக்கிறது. ஒரே மாதிரியான வடிவமும் எடையும் கொண்டிருந்தாலும் எதிர் எதிர்த் திசையில் செல்லும் பேருந்துகள், லாரிகள், ரயில்கள் ஆகியவற்றின் எடை, பூமியின் சுழற்சியால் பாதிக்கப்படுகிறது. திசைவேகத்தைப் பொறுத்தும் இது மாறுதலுக்கு உட்படும்.

எடை, உருவம், தோற்றம் ஒரே மாதிரியாக இருக்கும் இருவர் மணிக்கு 8 கிலோ மீட்டர் கிழக்கு மேற்காக எதிர் எதிர் திசையில் நடக்கும்போது எவ்வளவு எடை வித்தியாசம் இருக்கும் ?

மேற்கிலிருந்து கிழக்காக நடப்பவரைவிட, கிழக்கிலிருந்து மேற்காக நடப்பவரின் எடை ‘2’ கிராம் அதிகமாக இருக்கும்!

http://tamil.thehindu.com

  • தொடங்கியவர்

குழந்தைகளை நிமிடத்தில் மரணிக்கச் செய்யும் செடி இருக்கிறதா? வாட்ஸ்அப் தகவல் உண்மையா?

“ஜாக்கிரதை... இது ஓர் உண்மைக் கதை. சமீபத்தில் என் மகன், இந்தச் செடியின் இலையை சாப்பிட்டதால் இறந்து விட்டான். இது நம் வீடுகளிலும், அலுவலகங்களிலும் சாதாரணமாகக் காணக் கிடைக்கும் ஒரு செடிதான். ஆனால், நாம் நினைப்பதுபோல் இது அத்தனை அழகானது அல்ல... மிகவும் ஆபத்தானது. இது ஒரு குழந்தையை ஒரு நிமிடத்தில் கொன்றுவிடும். ஒரு பெரியவரை 15 நிமிடத்தில் கொன்றுவிடும். இந்தச் செடியில் கைகளை வைத்துவிட்டால், தயவு செய்து அதைக் கண்களில் படாமல் பார்த்துக் கொள்ளுங்கள். உங்கள் பார்வை பறி போகும் வாய்ப்புகள் அதிகம். உங்கள் குடும்பத்தினரிடமும், நண்பர்களிடமும் இதைப் பகிர்ந்து, அவர்களைக் காப்பாற்றுங்கள்..." சமீபத்தில் இந்தச் செய்தி வாட்ஸ் அப்பில் அதிகம் பகிரப்பட்டது. இதே செய்தி இரண்டு வருடங்களுக்கு முன்னரும் இப்படி பகிரப்பட்டது. ஆனால், இது உண்மை தானா?

குழந்தைகளைக் கொல்லும் என சொல்லப்படும் செடி

இன்று டெக்னாலஜி ஆளும் யுகத்தில் இருக்கிறோம். ஜஸ்ட் ஒரு க்ளிக்... அவ்வளவுதான். எங்கும், எப்போதும் , எதுவும், கிடைக்கும். இன்று தகவல்கள் என்பது ஒரு கடல் அலை பொங்கி வருவது போல் நமக்கு கிடைக்கின்றன. அதிகப்படியான விஷயங்களைத் தெரிந்துக் கொள்வது நல்லதுதான். ஆனால், பல சமயங்களில் அந்த அலை பல குப்பைகளையும் கொண்டு வந்து விடுகிறது. இந்தத் தகவல்களில் உண்மையையும், பொய்களையும் பிரித்தறிவது என்பது சிரமமான விஷயமாக இருக்கிறது... அல்லது அதற்கான சிரத்தையை நாம் மேற்கொள்வதில்லை. சரி... இந்த செய்திக்கு வருவோம். நிச்சயம் நம்மில் பலர் இந்த செய்தியையோ... இப்படியான ஏதோ ஓர் செய்தியையோ அது என்ன, ஏது என்ற உண்மையை ஆராயமல் பலருக்கும் பகிர்வோம். அது பலருக்கும் தேவையற்ற அச்சத்தையும், உணர்வுக் கொந்தளிப்புகளையும் ஏற்படுத்தும். இந்தச் செய்தியும் கிட்டத்தட்ட அப்படித்தான்...

இது " டைஃபன்பேக்கியா " ( Dieffenbachia ) என்ற ஒரு செடி வகை. இது அழகிற்காக வளர்க்கப்படும் செடி. பெரும்பாலும் அபார்ட்மெண்ட்களில், அலுவலகங்களில் உள்ளேயே வைத்து வளர்க்கப்படுகிறது. இரண்டு வாரத்திற்கொரு முறை இதற்கு தண்ணீர் ஊற்றினால் போதும். குறைந்தளவிலான சூரிய வெளிச்சம் இதற்குப் போதும். தேவையும் அதுதான். வெட்டவெளியில் வைத்து வளர்த்தால் மொத்த செடியும் கருகிவிடும். இதன் பூர்வீகம் மெக்சிகோ, மேற்கிந்தியத் தீவுகள் மற்றும் அர்ஜெண்டினா என்று சொல்லப்படுகிறது. இன்று உலகம் முழுக்கவே, அலங்காரத்திற்காக இந்தச் செடி வளர்க்கப்படுகிறது. பரவும் செய்திகள் சொல்லும் அளவிற்கு இது அபாயகரமானதா என்று கேட்டால்... பதில் இல்லை என்பதுதான். 

டைஃபன்பேக்கியா செடி

டைஃபன்பேக்கியா குறித்து முழுமையான ஆராய்ச்சியை மேற்கொண்டவர், அமெரிக்காவின் பிட்ஸ்பெர்க் யூனிவர்சிட்டியின் பேராசிரியர் எட் க்ரென்ஸெலோக். அவர் பரவும் இந்த வதந்திகள் குறித்து இப்படியாக பதிவிட்டுள்ளார்...

“நான் பல ஆண்டுகளாக இந்த ஆராய்ச்சியில் ஈடுபட்டுள்ளேன். என்னைச் சுற்றி இந்த "டைஃபன்பேக்கியா"க்கள் எப்போதும் இருக்கும். ஆனால், என் அனுபவத்தில் இதுவரை இதனால் உயிரிழப்புகள் ஏதும் ஏற்பட்டதில்லை. சமயங்களில் இதிலிருந்து வெளியேறும் பால் கைகளிலோ, கண்களிலோ பட்டால் சற்றும் எரிச்சலை ஏற்படுத்தும்." என்று சொல்லியுள்ளார். மேலும், அவர் சில முக்கிய அறிவியல் விளக்கங்களையும் கொடுத்துள்ளார்.

டைஃபன்பீக்கியாவில் கால்சியம் ஆக்சோலேட் ( Calcium Oxalate ) என்ற வேதியியல் பொருள் உள்ளது. அது ஒரு ஊசியைப் போல, ஒரு பக்கம் கூர்மையாக உருமாறுகிறது. இதை ராஃபைட்ஸ் ( Raphides ) என்று சொல்கிறார்கள். அந்தச் செடியின் இலைகளை உடைக்கும் போதோ, அல்லது பிற பகுதிகளை தொந்தரவு செய்யும் போதோ, இந்த ராஃபைட்ஸ் நம் கைகளில் படும் வாய்ப்புகள் இருக்கின்றன. இது ஒரு வித எரிச்சலை அளிக்கும். சமயங்களில் மரத்துப் போகும் உணர்வினை ஏற்படுத்தும். கண்களில் பட்டால் சமயங்களில் மற்றபடி பார்வை பறி போகும் என்பதெல்லாம் வதந்திதான்.

செடியில் இருக்கும் ராஃபைட்ஸ்

டைஃபன்பேக்கியாவை "டம்ப் பிளான்ட்" ( Dumb Plant ) என்று சொல்கிறார்கள். அதாவது, " ஊமைச் செடி ". இதை சாப்பிடுபவர்கள் ஊமையாகிவிடுவார்கள் என்ற ஒரு வதந்தியும் இருக்கிறது. ஆனால், அது அப்படிக் கிடையாது. இலை நாவில் படும்போது, ராஃபைட்ஸ் நாவினை மரத்துப் போகச் செய்கிறது. அதுமட்டுமல்லாமல், அது வாயை வீங்கச் செய்துவிடும். இதனால், சில மணி நேரங்களுக்கு சரியாக பேச முடியாது. இது குறித்த ஒரு வரலாற்றுப் பதிவையும் குறிப்பிடுகிறார்கள். அதாவது, அந்தக் காலங்களில் ஆப்ரிக்கர்களை அடிமைகளாக கொண்டு செல்வார்கள். அப்போது, சில முதலாளிகள் அடிமைகளின் வாய்களில் இந்தச் செடிகளைப் போட்டு, அவர்கள் பயப்படுவதைக் கண்டும், பேச முடியாமல் அலறுவதைக் கண்டும் சிரித்து விளையாடுவார்கள் என்று சொல்லப்படுகிறது. 

இப்படி, நிகழ்கால ஆராய்ச்சிகளிலும், கடந்த கால வரலாறுகளிலும் கூட இந்தச் செடிகள் உயிரைப் பறித்தாக எந்த சான்றுகளும் இல்லை. இதுகுறித்து, கோவை வேளாண் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த உதவி வேளான் அலுவலரான  ரூபன் செல்வக்குமாரிடம் கேட்டபோது, 

"அழகிற்காக வளர்க்கப்படும் இந்தச் செடிகள் அவளவு ஆபத்தானவை அல்ல. இதுகுறித்த ஆராய்ச்சிகள், தமிழ்நாட்டில் எங்கும் நடந்ததில்லை. அதனால், வெளிநாட்டு ஆராய்ச்சியாளர்கள் சொல்வதைதான் நாம் ஏற்றுக் கொள்ள வேண்டியிருக்கிறது. மேலும், அதுதான் உண்மையாகவும் இருக்க வாய்ப்புகள் இருக்கின்றன. ஏனென்றால், இந்தச் செடி உயிர் பறிக்கும் தன்மை வாய்ந்ததாக இருக்கும்பட்சத்தில், உலகளவில் இது பெரும் உயிரிழப்புகளை ஏற்படுத்தியிருக்கும். ஏனென்றால், அத்தனை வீடுகளிலும், அலுவலகங்களிலும் இந்தச் செடிகள் நிறைந்திருக்கின்றன. " என்று சொல்கிறார். இப்படி மொத்தமாக ஆராய்ந்துப் பார்க்கும்போது, பல லட்சம் ஷேர்களைக் கண்ட அந்த செய்தி, அடிப்படை ஆதாரமற்றது என்பது நிரூபணமாகிறது. 

விஷச் செடி உண்மை தானா ?

 

இன்றைய யுகத்தின் ஆகச் சிறந்த ஆயுதமாக இருப்பது நம்முடைய செல்போன்கள். அதில் நாம் பகிரும் ஒவ்வொரு தகவல்களும், ஒரு அணுகுண்டிற்கு ஒப்பானவை. எனவே, அந்த அணுகுண்டுகளைக் கைமாற்றும் போது அதீத கவனத்துடன் செயல்பட வேண்டிய அவசியமிருக்கிறது. ஏனென்றால், அந்த குண்டு வெடித்தால் பாதிக்கப்படப் போவது நீங்களும் , நானும் தான்...

http://www.vikatan.com

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.