Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இளமை புதுமை பல்சுவை

Featured Replies

  • தொடங்கியவர்

ரெடிமேட்' உணவுகள் சரியா... தவறா?

 

பரோட்டா, சப்பாத்தி, இடியாப்பம்...

 

ன்றைய அவசர உலகில் சென்னை, மும்பை, டெல்லி போன்ற மெட்ரோபாலிட்டன் நகரங்கள் முதல், அடுத் தடுத்த இடங்களில் இருக்கும் நகராட்சிகள் வரை வேர் ஊன்றி உள்ளது 'ரெடி டு ஈட்’ உணவுகளின் வியாபாரம். 'பெரு நகரங்களில் 82% குடும்பங்கள் ரெடிமேட் உணவுகளிடம் சரணடைந் துள்ளன' என்கிறது சமீபத்தில் வெளியான ஒரு புள்ளிவிவரம். பல மணி நேர சமையலறைச் சுமையை, சில நிமிடங்கள் ஆக்கியிருப்பதாலே பலராலும் விரும்பப்படும் இந்த ரெடிமேட் உணவுகளில் கலக்கப்படும் ரசாயனங்களும், அது ஏற்படுத்தக்கூடிய பாதிப்புகளும் நிறைய நிறைய! அதைப் பற்றியதே இந்தக் கட்டுரை! 

உங்கள் உணவில் எத்தனை கெமிக்கல்கள்?!

''காஸ்மெடிக் பொருட்கள் வாங்கும்போதுகூட நார்மல் சருமத்துக்கானதா, வறண்ட சருமத்துக்p90b.jpg கானதா, காலாவதி தேதி என்ன என்பதை எல்லாம் பார்த்து வாங்கும் நம் மக்கள், உண்ணும் உணவு விஷயத்தில் அந்த அக்கறையைக் காட்டாதது வேதனைக்குரிய விந்தை!'' என்று நொந்து போய் சொல்லும், சென்னை, இ.எஸ்.ஐ மருத்துவமனையின் ஊட்டச்சத்து நிபுணர் பவானி, விரிவாகவே பேசினார்.

''சப்பாத்தி, பரோட்டா, இடியாப்பம், பனீர் மசாலா, மீன் கிரேவி என வகை வகையாக வந்திருக்கும் ரெடிமேட் உணவுகளை வாங்கும்போது, அதில் கலந்துள்ள பொருட்கள் என்னென்ன, அந்தப் பொருட்கள் ஏற்படுத்தும் விளைவுகள் என்ன, அந்நிறுவனம் அரசு அனுமதி பெற்றதா போன்றவற்றைப் பார்க்க வேண்டும் என்ற விழிப்பு உணர்வுகூட இங்கு பலருக்கும் இல்லை. 'ரெண்டு நிமிடம் அடுப்பில் வைத்து இறக்கினால், சமையல் முடிந்தது' என்கிற எளிமையை மட்டுமே பார்த்து வாங்கிச் சாப்பிடும் அந்த உணவுகளில் பலவும்... 15 வயதில் கேன்சரையும், 25 வயதில் சர்க்கரை நோயையும் தரவல்லது என்பதை அறிவீர்களா?

காலையில் சமைக்கும் உணவு, இரவுக்குள் கெட்டுவிடும் என்பதே இயல்பு. கெடவேண்டும் என்பதுதான் இயற்கையின் நியதி. ஆனால், ஓர் உணவுப் பொருளை, நாள் கணக்கில்... மாதக்கணக்கில் எல்லாம் கெடாமல் வைக்க வேண்டும் என்றால், அதில் எந்தளவுக்கு செயற்கைப் பொருட்களைச் சேர்க்க வேண்டும்? அப்படிச் சேர்க்கப்படும் பதனப்பொருட்கள் (preservative) மற்றும் ரசாயனங்கள் உடலில் நச்சுத்தன்மையை உண்டாக்கி சிறுநீரகம், கல்லீரல் ஆகியவற்றை பாதிக்கும்தானே!

p90a.jpg

உணவுப்பொருட்கள் நீண்ட நாள் கெடாமல் பதப்படுத்து வதற்காகச் சேர்க்கப்படும் சல்ஃபைடு, ஆஸ்துமா மற்றும் மனநலன் சார்ந்தபிரச்னையை விளைவிக்கக்கூடும். ரெடிமேட் உணவுகள் பெரும்பாலும் குளிர்விக்கப்பட்ட அல்லது உறைந்த நிலையில் இருப்பதால், அந்த உணவின் சுவை குறைவது இயல்பு. இதைத் தவிர்க்கும் பொருட்டு, ரெடிமேட் உணவு வகைகளைத் தயாரிக்கும் நிறுவனங்கள், சுவையைத் தக்கவைக்க சர்க்கரை, உப்பு, கொழுப்பு, நறுமணம், வண்ணங்கள் போன்றவற்றை அளவுக்கதிகமாகச் சேர்க்கிறார்கள். ரெடிமேட் உணவுகளில் உள்ள அதிக கொழுப்பு, இதயத்தைக் கடுமையாகப் பாதிக்கக்கூடும். சரும நோய்கள், உடல் பருமன், நீரிழிவு, உயர்ரத்த அழுத்தம் போன்ற வளர்சிதை மாற்ற பிரச்னைகளையும் தரவல்லது இந்த ரெடிமேட் உணவுகள். அசைவ உணவுகளைப் பதப்படுத்த சேர்க்கப்படும் சோடியம்... அலர்ஜி, வாந்தியில் தொடங்கி, புற்றுநோய் வரை பாதிப்புகளை ஏற்படுத்தலாம்.  

வீட்டில் தயாராகும் உணவுகளைவிட, ரெடிமேட் உணவுகள் வழங்கும் ஊட்டச் சத்துகள் குறைவு. அவை கெட்டுப் போகாமல் இருக்க பல வேதியியல் முறைகளுக்கு உட்செலுத்தப்படும்போது, அதிலுள்ள சத்துகள் அழிந்துபோகும். எனவே, ஒருவர் தொடர்ந்து ரெடிமேட் உணவுகளை எடுத்துக் கொள்ளும்போது, உடலுக்குத் தேவையான ஊட்டச்சத்துகள் கிடைக்காமல் போவதோடு, அது அவரின் உடல் வளர்ச்சியைக் குறைத்து, நோய் எதிர்ப்பு சக்தியையும் கரைக்கும்.

உணவு அரசியல்!

ரெடிமேட் உணவுகள், ஓர் உலக அரசியல் காரணி. சந்தையில் தங்களின் பொருளை நிலைநிறுத்த பெரும்பாலான நிறுவனங்களும் லாபத்தை மட்டுமே குறிக்கோளாகக் கொண்டு, மக்களின் ஆரோக்கியம் பற்றிய அக்கறையை புறந்தள்ளுகின்றன. தேவை லாபம். அதைப் பெற, மணம், வண்ணம், கெட்டுப்போகாமல் நீடிக்கும் தன்மை என இவற்றுக்காக எதையும் சேர்க்கலாம் என்பது இவர்களின் கொள்கை. அவற்றை வாங்கிச் சாப்பிடும் நமக்கு என்ன நேரும் என்று கவலைப்பட, அவர்கள் நம் அம்மாவோ, பாட்டியோ இல்லையே!

2011-ம் ஆண்டு மேற்கொள்ளப்பட்ட ஆய்வு, 2015-ம் ஆண்டுக்குள் இந்தியாவில் 'பேக்' செய்யப்பட்டு விற்பனை செய்யப்படும் உணவுப்பொருட்களின் விற்பனை 30 பில்லியன் டாலரைத் தொடக்கூடும் என்கிறது. இதில் உங்களுடைய பணமும் சேரத்தான் போகிறதா?!'' என்று கேட்டு முடித்தார், ஊட்டச்சத்து நிபுணர் பவானி.

கெமிக்கல் விருந்து!

மக்களிடையே உணவுப் பொருட்கள் குறித்த விழிப்பு உணர்வை தொடர்ந்து ஏற்படுத்தி வருபவர், சென்னையைச் சேர்ந்த 'கான்சர்ட்' எனும் தன்னார்வ நிறுவனத்தின் இயக்குநர் சந்தானராஜன். அவர் பேசும்போது, ''ரெடிமேட் உணவுகளில் பல வகையான கெமிக்கல்கள், குறைந்த விலையில் கிடைக்கும் தடைசெய்யப்பட்ட வண்ணங்கள், பாதிப்புகளை ஏற்படுத்தும் கலவைகள் என பலவற்றையும் கேட்பாரற்றுக் கலந்து வருகின்றன பல நிறுவனங்கள். மேலும், பேக் செய்யப்படும் பிளாஸ்டிக்குகள் ஏற்படுத்தும் பாதிப்புகளும் பல. அப்படியான பிளாஸ்டிக் மெட்டீரியலில் பேக் செய்யப்பட்ட உணவுகளை நாங்கள் 'கெமிக்கல் விருந்து’ என்று குறிப்பிடுவோம்.

p90c.jpg

சாதாரணமாகவே பிளாஸ்டிக் ஆபத்தை விளைவிக்கக்கூடியவை. இதில் மாதக்கணக்கில் உணவு பதப்படுத்தப்படும்போது ஏற்படும் மாற்றங்களும், விளைவிக்கும் கேடுகளும் நிறைய. எங்கள் 'கான்சர்ட்’ அமைப்பும், இன்னும் பல நுகர்வோர் அமைப்புகளும் 'உணவுப் பொருட்களின் பயன்பாட்டுக்குத் தகுதியான பிளாஸ்டிக் பொருட்களுக்கு பிரத்யேக முத்திரை ஒதுக்குங்கள்’ என்று பல முறை அரசிடம் வலியுறுத்தி ஓய்ந்துவிட்டோம்!

வண்ணமும், குறியீடும்!

p90d.jpgபொதுவாக, உணவு வகைகளில் பயன்படுத்தக்கூடிய வண்ணங்களில் இரண்டு வகை உண்டு. ஒன்று இயற்கை வண்ணம் (natural),மற்றொன்று செயற்கை வண்ணம் (synthetic).கறிவேப்பிலையில் உள்ள பச்சை நிறம், கேரட்டில் உள்ள ஆரஞ்சு நிறம் போன்றவை இயற்கை வண்ணங்கள். செயற்கை நிறங்களில் அனுமதிக்கப்பட்டுள்ள 8 நிறங்களைத் தவிர மற்ற நிறங்களைப் பயன்படுத்தக்கூடாது என்பது விதிமுறை. ஆனால், பெரும்பாலான நிறுவனங்கள் மிகக்குறைந்த விலைக்கு கிடைக்கிறது என்பதற்காக தடைசெய்யப்பட்டுள்ள வண்ணங்களை ரெடிமேட் உணவுகளில் பயன்படுத்தி வருகிறார்கள்.

விளம்பரங்களை நம்ப வேண்டாம்!

விளம்பரங்களில், 'இதில் இந்தச் சத்து உள்ளது’, 'ஃப்ரெஷ்ஷாக கிடைக்கும்’, 'ரெண்டே நிமிஷத்தில் சமையல் ரெடி’ என்றெல்லாம் கூவுபவர்கள், தங்களுக்கு தரப்பட்ட தொகைக்காக கேமரா முன் பேசியவர்களே! எனவே, விளம்பர யுக்திகளுக்கும், விளம்பரங்களில் தோன்றுபவர்களின் வார்த்தைகளுக்கும் ஏமாறாதீர்கள்.

கொதிக்காத ரசம், முக்கால் பதம் வெந்த கத்திரிக்காய், மசித்த கருணைக்கிழங்கு என்று ஒவ்வொரு உணவையும் பதம் பார்த்துச் சமைத்தவர்கள் நம் பாட்டிகளும், அம்மாக்களும். சமைப்பதற்கு சோம்பேறித்தனப்பட்டு rupee_symbol.pngரெடி டு ஈட்' உணவுகளை வாங்கிச் சாப்பிடும்போது, அதன் விலைக்கு தோல் அலர்ஜியில் இருந்து புற்றுநோய் வரை நமக்கு இலவசமாகத் தரப்படுகிறது என்பதை நொடிப்பொழுது மனதில் நிறுத்துங்கள்!''

அக்கறையுடன் அழுத்தமாகச் சொன்னார், சந்தானராஜன்!

சமைப்போம்!


''வேண்டவே வேண்டாம்!''

ரெடிமேட் உணவு தயாரிக்கும் நிறுவனம் ஒன்றில் வேலை செய்யும் நண்பர் ஒருவர், தன் பெயர் தவிர்த்துப் பேசினார்.

''நான் கண்கூடாகப் பார்க்கும் அனுபவத்தில், ரெடிமேட் உணவுகளை விஷம்னுதான் சொல்வேன். 99% ரெடிமேட் உணவு நிறுவனங்களுக்கு லாபம் மட்டுமே இலக்கு. யார் குறைந்த விலைக்கு உணவைக் கொடுத்து, அதிக வாடிக்கையாளர்களைப் பிடிக்கிறாங்கனு அந்த நிறுவனங்களுக்கு இடையில நடக்குற போட்டியில, உணவுப் பொருள்ல கலக்கப்படும் கெமிக்கல்ஸ், அதோட தரம் பத்தி எல்லாம் அவங்களுக்கு கவலையே இல்ல. ரெடிமேட் உணவு தயாரிக்கும் நிறுவனங்கள்ல வேலை செய்யும் பணியாட்களில் இருந்து, உரிமையாளர்கள் வரை அந்த உணவுகளை யாரும் சாப்பிட மாட்டாங்க. ஏன்னா, அந்தளவுக்கு அதில் அட்டூழியம் நடக்குது. மனசாட்சி உறுத்தலோடதான் இந்த வேலையைப் பார்க்குறேன். வேற வேலை தேடிட்டு இருக்கேன். முடிந்தவரை யாரும் ரெடிமேட் உணவுகள் சாப்பிடாதீங்க!'' என்றார் வருத்தத்தோடு.


கிராமங்களிலும் ரெடிமேட்!

இந்தியாவில் ரெடிமேட் உணவைப் பயன்படுத்து கிறவர்களில் 78% பேர் நகரங்களைச் சேர்ந்தவர்கள், 22% பேர் கிராமங்களைச் சேர்ந்தவர்கள் என்பது ஓர் ஆய்வு சொல்லும் அதிர்ச்சித் தகவல்.

கிழக்கு மற்றும் வடகிழக்கு இந்தியப் பகுதிகளைச் சேர்ந்தவர்கள் 21% பேர், வட இந்தியாவைச் சேர்ந்தவர்கள் 38% பேர், தென் இந்தியாவைச் சேர்ந்தவர்கள் 28% பேர், மேற்கு இந்தியாவைச் சேர்ந்தவர்கள் 36% பேர் ரெடிமேட் உணவைப் பயன்படுத்துகிறார்கள்.  

அடுத்த ஐந்து ஆண்டுகளில், இது 40%  60% அதிகரிக்கும் என்பது கணிப்பு.


மிளகாய்த்தூளையும் விட்டுவைக்கவில்லை!

'கான்சர்ட்’ நிறுவனம், இந்திய நுகர்வோர் துறையின் அனுமதியின் பெயரில் மிளகாய்த்தூள்p90e.jpg குறித்த ஆய்வு ஒன்றை மேற்கொண்டது. 'மிளகாய்த்தூள் விலையுயர்ந்த பொருளாக இருப்பதால், அதனுடன் மிளகாய் காம்பு, இதழ்கள் முதலியன சேர்க்கப்பட்டு அரைக்கப்படுகின்றன. இதனால் அதன் வண்ணம் குறையும் என்பதால், அதில் சூடான் வண்ணம் எனும் பெட்ரோலியப் பொருளுக்கு போடப்படும் வண்ணம் சேர்க்கப்படுகிறது. இதைச் சாப்பிடுவதால் கேன்சர் வருவதற்கான வாய்ப்பு அதிகரிக்கிறது.

மேலும், மிளகாய்த்தூளில் இயற்கை வண்ணம் மற்றும் காரத்தன்மை நீடிக்க 2% தாவர எண்ணெய் சேர்க்க அனுமதிக்கப்படுகிறது. ஆனால், அதிகமான நிறுவனங்கள் தாவர எண்ணெய்க்குப் பதிலாக மினரல் எண்ணெய் சேர்ப்பதுடன், அதனை லேபிளில் சரிவர தெரியப்படுத்துவது கிடையாது. இதுவும் புற்றுநோய்க்கான வாய்ப்பை அதிகரிக்கும் அபாயப் பொருளே!’ என்கிறது அந்த ஆய்வு.

மொத்த நுகர்வோரில், 75% பேர் நிறுவனத்தின் பெயரை மட்டுமே பார்த்துவிட்டு, அதிலுள்ள தகவல்களை கவனிக்காமல் வாங்குகிறார்கள். மீதமுள்ள 25% பேரில் 39% நுகர்வோர் பயன்பாட்டு நாளையும், 27% நுகர்வோர் தயாரிப்பு தேதியையும் பார்த்து வாங்குகிறார்கள்.


குழந்தைகளைக் கண்காணியுங்கள்!

'ரெடி டு ஈட்' உணவு சாப்பிட்ட நாளைத் தொடர்ந்த நாட்களில் உடலில் ஏற்படும் மாற்றங்களைக் கவனியுங்கள். கூடவே, தொடர்ந்து ரெடிமேட் உணவுகளைச் சாப்பிட்டு வரும் குழந்தைகளிடம் ஏற்படும் மாற்றங்களைக் கண்காணியுங்கள். ஒன்று, அது அதிக துறுதுறு என்று மாறும். அல்லது மந்தமாக மாறும். குழந்தைகளின் இந்த நடவடிக்கை மாற்றங்களுக்கும், அவர்கள் சாப்பிடும் ரெடிமேட் உணவுகளுக்கும் சம்பந்தம் உண்டு என்பது நிரூபிக்கப்பட்ட உண்மை!

vikatan.com

  • Replies 11.3k
  • Views 1.5m
  • Created
  • Last Reply
  • தொடங்கியவர்

 

கெத்து - தில்லு முல்லு பாடல்

  • தொடங்கியவர்

12489187_665535400215672_434312048996746

12417678_665535273549018_675353005232923

12508972_665535263549019_692082857898229

12491972_665535316882347_366052956175326

12471400_665535360215676_729382861818446

12410524_665535366882342_231960428316256

சீனாவில் 32-வது ஹர்பின் (Harbin) பனித் திருவிழா கோலாகலமாகத் தொடங்கியது. ஜனவரி 5-ம் தேதி முதல் பிப்ரவரி இறுதிவரை நடைபெறும் இந்த பனித் திருவிழாவின் , ஐஸ் சிற்பங்கள் பார்வையாளர்களை மிகவும் கவர்ந்துள்ளன.

  • தொடங்கியவர்

சொல்வனம்

என்ன பேசிக்கொண்டிருக்கும்?

அப்பா திண்ணையில்தான்

பல் துலக்க வருவது முதல் படுத்திருப்பார்

சீரகத் தண்ணியோ, கருப்பட்டிக் காபியோ

வேண்டுமென்றால்

கைத்தடியால்தான் சமிக்ஞை செய்வார்

ஓரடி ஈரடியென்று

ஒவ்வொன்றிற்கும் அர்த்தமிருக்கும்

அம்மாவும் பதிலுக்கு

வளையொலியால் பேசுவாள்.

வெகுநாளாக மூலையில்

சிலந்திவலை சுமந்திருக்கும்

அப்பாவின் கைத்தடியும்

கழற்றிப் போட்டு காலமாகியிருந்தாலும்

இன்னும் உருண்டையாயிருக்கும்

அம்மாவின் நெகிழி வளையலும்

என்ன பேசிக்கொண்டிருக்கும்?

 

p96b.jpg

தொலையாத பயணம்

நெடுஞ்சாலை பேருந்துப் பயணம் சுகமானது

பெயர்ப் பலகைகளே இல்லாத ஊர்களுக்குள்  

உணவு தேநீர் இளநீர் அருந்தி

வெள்ளரிப் பிஞ்சு கடலைமிட்டாய் தின்று

சற்றே இளைப்பாறித் தென்படும் மனிதரிடம்

ஊர் பெயர் கேட்டு ஆடு மாடுகளையும்

சந்தைகளையும் முண்டாசு மீசைகளையும்

கண்டாங்கிச் சேலைகளையும்

கோடாலிக் கொண்டைகளையும்

பிளந்துகொண்டு வாகனங்கள்

திணறிச் செல்லும் அழகே அழகு.

இப்போது சாலைகளெங்கும் பளபளவென

அம்புக்குறியிட்ட பெயர்ப் பலகைகள்

மட்டுமே தென்படுகின்றன.

ஊர்களும் மரங்களும் மட்டுமல்ல

கேட்டுத் தெரிந்துகொள்ள மனிதருமின்றி

வெறிச்சோடிக்கிடக்கிறது பூமி.

p96c.jpg

வாகனங்கள் உருளும் நெடுஞ்சாலைகள்

செத்த பாம்பாகக் கிடக்கின்றன ஜீவனற்று...

இரவு நேர தேநீர் கடைகளில் நம்மோடு

தொற்றிக்கொண்ட இளையராஜா மட்டும்

40 வருடங்களாக விடாது

கூடவே வந்துகொண்டிருக்கிறார் தாலாட்டியபடியே.

விபத்துக்குள்ளானாலும்கூட சுகமானது

நெடுந்தூர அரைத்தூக்க

விரைவுப் பேருந்துப் பயணம்.

vikatan.com

  • தொடங்கியவர்

என்றைக்காவது இதைப் பற்றி சிந்தித்ததுண்டா? - வீடியோ!

 

நாம் அன்றாடம் உட்கொள்ளும், பயன்படுத்தும் பொருட்களில் யார் இருக்கிறார்கள்?

இதைப் பற்றி என்றைக்காவது சிந்தித்ததுண்டா? நம்மை நாமே கேள்வி கேட்டதுண்டா?

நீங்கள் சிந்தித்திருக்காவிட்டாலும், கேள்வி கேட்காவிட்டாலும் நிச்சயமாக இருப்பது இந்திய விவசாயிகள்தான்...

ஆம்... கோடிக்கணக்கான இந்திய விவசாயிகளுக்கு நன்றி செலுத்தும் வகையில், ‘The Most Important Job’ (உலகில் மிக முக்கியமான தொழில்) என்ற பெயரில் குறும்படம் ஒன்று உருவாக்கப்பட்டுள்ளது. இந்த குறும்படம், பொதுமக்களின் மத்தியில் குறிப்பாக, நகரத்தில் வாழும் இளைய தலைமுறையினர் மத்தியில் விவசாயம் மற்றும் விவசாயிகளின் முக்கியத்துவத்தை சுவாரஸ்யமாக சொல்கிறது. இயற்கையின் நன்கொடைகளான மண், நீர், சூரியன், கால்நடைகளுக்கு நன்றி செலுத்தும் விதத்தில் பொங்கல் மற்றும் சங்கராந்தி பண்டிகை கொண்டாடப்படுகிறது. இந்த தருணத்தில், இந்த குறும்படம் யு டியூப்பில் வெளியிடப்பட்டுள்ளது.

இந்தக்  குறும்படத்தில் பிரபல ரேடியோ நிகழ்ச்சித் தொகுப்பாளர்களான ஆர்.ஜே. பாலாஜி மற்றும் வெங்கி ஆகியோர், “ மக்கள் மனதில் மிகவும் முக்கியமான தொழிலாகக் கருதப்படுவது  எது?” என்று நகைச்சுவையாக கலந்துரையாடி வினவுகிறார்கள்.

இதைத் தொடர்ந்து வரும் துடிப்பான பாடல் மூலம், நம்முடைய தினசரி வாழ்க்கையில் விவசாயிகளின் பங்களிப்பு எப்படி இருக்கிறது என்பதை இந்தக்  குறும்படம் சித்தரிக்கிறது.


                 

சுரேஷ் கைலாஷ் என்பவர் எழுதிய இந்தப் பாடலுக்கு டிமொதிமதுகர் இசையமைத்துள்ளார். பிரபல பாடகர்களான மால்குடி சுபா, ஷாலினி மற்றும் கோபால் ஷர்மா ஆகியோர் இந்தப் பாடலை பாடியுள்ளனர்.

கருத்தாக்கம் இன்டர்ஃபேஸ் கம்யூனிகேஷன்ஸ் நிறுவனம், இயக்குனர் ஹரிஹரன். இந்த குறும்படத்தை முருகப்பா குழுமம் தயாரித்து வெளியிட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது

vikatan.com

  • தொடங்கியவர்

வரலாற்றில் இன்று....

ஜனவரி - 14

 

644varalaru-2.jpg1539 : கியூ­பாவை ஸ்பெயின் தனது ஆட்­சியின் கீழ் இணைத்துக் கொண்­டது.

 

1690 : கிளா­ரினெட் இசைக்­க­ருவி ஜேர்­ம­னியில் வடி­வ­மைக்­கப்­பட்­டது.

 

1724 : ஸ்பெயின் மன்னன் ஐந்தாம் பிலிப் முடி துறந்தார்.

 

1761 : இந்­தி­யாவில் மூன்­றா­வது பனிப்பட் சமர் ஆப்­கா­னி­யர்­க­ளுக்கும் மராத்­தி­­யர்­க­ளுக்கும் இடையில் இடம்­பெற்­றது. ஆப்­கா­னி­யர்­களின் வெற்றி இந்­திய வர­லாற்றில் ஒரு பெரும் திருப்­பு­மு­னை­யாக அமைந்­தது.

 

1784 : அமெ­ரிக்கப் புரட்சிப் போரின்­போது, ஐக்­கிய அமெ­ரிக்கா இங்­கி­லாந்­துடன் ஒப்­பந்தம் செய்து கொண்­டது.

 

1814 : நோர்­வேயை  மேற்கு பொமி­ரா­னி­யா­வுக்­காக சுவீ­ட­னுக்கு டென்மார்க் விட்­டுக்­கொ­டுத்­தது.

 

1858 : பிரான்ஸின் மன்னர் மூன்றாம் நெப்­போ­லியன் கொலை­மு­யற்சி ஒன்­றி­லி­ருந்து தப்­பினார்.

 

1907 : ஜமெய்க்­காவில் இடம்­பெற்ற பூகம்­பத்தால்  ஆயி­ரத்­துக்கும் மேற்­பட்டோர் கொல்­லப்­பட்­டனர்.

 

1933 : அவுஸ்­தி­ரே­லி­யா­வுக்கு எதி­ரான டெஸ்ட் கிரிக்கெட் போட்­டியில் இங்­கி­லாந்து பந்­து­ வீச்­சா­ளர்கள் எதி­ரணி துடுப்­பாட்ட வீரர்­களின் உடலை தாக்கும் வித­மாக பந்­து­வீ­சினர். அவுஸ்­தி­ரே­லிய அணித்­தலைவர் இபில் வூட்புல் இங்­கி­லாந்து வீரர் ­டக்ளஸ் ஜார்­டினின் பந்­து­வீச்சில் காய­ம­டைந்தார். இது  “பொடி லைன்” தந்­தி­ரோ­பாயம் என அழைக்­கப்­பட்­டது. 

 

1943 : இரண்டாம் உலகப் போர்: பிராங்­கிளின் ரூஸவெல்ட், வின்ஸ்டன் சேர்ச்சில் கச­பி­ளாங்­காவில் சந்­தித்து போரின் அடுத்­த­கட்ட நகர்­வுக்­கான தீர்­மா­னங்­களை எடுத்­தனர்.

 

1950 : சோவியத் ஒன்­றி­யத்தின் மிக்-17 போர் விமானம் வெள்­ளோட்டம் விடப்­பட்­டது.

 

1969 : ஹவா­யிற்கு அருகில் அமெ­ரிக்கக் கடற்­படைக் கப்பல் ஒன்றில் இடம்­பெற்ற குண்­டு­வெ­டிப்பில் 27 பேர் கொல்­லப்­பட்­டனர்.

 

1994 : ஐக்­கிய அமெ­ரிக்கத் தலைவர் பில் கிளின்டன் மற்றும் ரஷ்யத் தலைவர் போரிஸ் யெல்ட்சின் கிரெம்­ளினில் புதிய பாது­காப்பு ஒப்­பந்தம் ஒன்றைச் செய்து கொண்­டனர்.
1998 : ஆப்­கா­னிஸ்­தானின் சரக்கு விமானம் ஒன்று பாகிஸ்­தானில் மலை ஒன்றில் மோதி­யதில் 50 பேர் கொல்­லப்­பட்­டனர்.

 

1999 : கன­டாவின் டொரண்டோ நகரில் ஒரு மீற்றர் உய­ர­மான  பனிப்­பொ­ழிவு இடம்­பெற்­றதால்   அந்­ந­கர மேயர் இரா­ணு­வத்­தி­னரை உத­விக்கு அழைத்தார்.

 

2000 :  1993  ஆம் ஆண்டு பொஸ்­னிய கிரா­ம­மொன்றில் சுமார் 100 முஸ்­லிம்­களைக் கொன்ற குற்­றத்­திற்­காக பொஸ்­னிய குரோ­ஷி­யர்கள் ஐவ­ருக்கு 25 வரு­ட ­காலம் வரை­யான சிறைத்­தண்­டனை விதிக்­கப்­பட்­டது.

 

2005 : சனிக் கோளின் டைட்டான் என்ற நிலாவில் ஐரோப்­பாவின் இயூஜென் விண்­கலம் இறங்கியது.

 

2011 : டுனீஷியாவின் ஜனாதிபதி பென் அலி மக்களின் எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்களையடுத்து சவூதி அரேபியாவுக்கு தப்பிச் சென்றார். அரபு வசந்தத்தின் ஆரம்பமாக டுனீஷிய புரட்சி கருதப்படுகிறது.

- See more at: http://www.metronews.lk/dayinhistory.php?historyno=644#sthash.LAPC67sA.dpuf
  • தொடங்கியவர்

12402015_665558143546731_511417064220819

12469656_665558136880065_692742249201972

12496093_665558140213398_875670590298781

12491921_665558170213395_387724393553586

12465826_665558173546728_367707014844925

12489412_665558176880061_781809520544843

12471504_665558216880057_853680119459013

886384_665558226880056_70832823251258258

12471662_665558223546723_288221749701235

12513874_665558253546720_888647591425955

12486084_665558263546719_907616560463927

10650048_665558320213380_112565792566222

பாலஸ்தீனத்தின் காசா (Gaza)... இந்தப் பெயரைக் கேட்டாலே உங்களுக்குப் புரிந்திருக்கும். பல தாக்குதல்களை சந்தித்த நகரம். இதனால் வீடுகளை இழந்த மக்கள், முகாம்களில் வசித்துவருகிறார்கள். தாக்குதல்களினால் சேதமுற்று களை இழந்த வீடுகள், தற்போது புதுப் பொலிவுடன் காணப்படுகிறது.
30 கலைஞர்கள் ஒன்று சேர்ந்து, தாக்குதலினால் சாம்பல் நிறத்தில் மாறிய வீடுகளுக்கு வர்ணங்களைப் பூசியும், ஓவியங்களை வரைந்தும் வர்ணஜாலமாக மாற்றிவிட்டனர். முகாம்களில் தங்கியுள்ள மக்களும் தங்கள் வீடுகள் புதுப் பொலிவுடன் காட்சி அளிப்பதைக் கண்டு, உற்சாகத்தில் உள்ளனர். அதிலும் குறிப்பாக சுட்டிகள்...

Vikatan

  • தொடங்கியவர்

12573087_1055201704538619_28314271738912

டேவிட் வார்னருக்கு பெண் குழந்தை

ஆஸ்திரேலிய அணியின் முன்னணி கிரிக்கெட் வீரர் டேவிட் வார்னருக்கு பெண் குழந்தை பிறந்துள்ளது. மூத்த மகள் ஐவி தங்கையை ரசிக்கிறாள்.

 
  • தொடங்கியவர்

பாசக்கிளிகள் பறந்துவரும்...இலவச சத்தம் இருதயம் வரை இடிக்கும்! ( கவிதை)

 

னிதேர்தல் காலம்
பாசக்கிளிகள்
பறந்துவரும்
அன்புச்சகோதரியும்
அருமை சகோதரனும்
தாயையும் தகப்பனையும்
பரஸ்பரம்
அறிமுகம் செய்து
சிலாகிப்பர்
றந்த பால் மடிபுகும்
காகிதப்பூ மணம்வீசும்
குவாட்டர் தீர்த்தமாகும்

கோழிகள்
பிரியாணியாகும்
துரோகி தோழனாவான்
தோழன் துரோகியாவன்
தோள்கள் மட்டும் நிரந்தரமாக
துண்டுகள் நிறம் மாறும்

தொண்டன் குண்டனாவான்
குண்டன் தொண்டனாவான்
இலவச சத்தம்
இருதயம் வரை இடிக்கும்
கையில் காகிதம்
கரன்சியாகும்
கடந்த கால செய்வினை
எதிர்கால செய்யப்போகும்
வினைபொருத்து
ஆரம்ப நிலை கட்சிகளின்
அக(த்திற்கு)நானூறு பார்முலா
ஆளும்கட்சியால்
ஆளுக்கு நானூறாகி
அரசியல்இலக்கியமாய்
இலக்கணமாய்
இடையூறு செய்யும்
இரட்டினக்கால் தோரணையில்
மக்களும்
சிலநாள் சுகம் அனுபவிப்பர்

ருநாள்
மயான அமைதிக்குப்பின்
காலை எழுந்து
கடன்கழித்து
நெய்பூசி நேர் வகிடு எடுத்து
கிழவி தேடி
கொத்தாய் அள்ளி
சஞ்சிகைக்கு முகம் காட்டி
சாவடி சென்று
பின் மை காயுமுன்
பாதியில் கிழவி உதிர்த்து
பாசத்தொண்டன்
தன் இருமுடிகளைவான்

vadivelu%20politician%20308.jpgவாக்குப்பெட்டியில்
வேட்பாளர் அடைத்து
வாசலில் காவலர்
துப்பாக்கி தொட்டு
முத்திரை சிதையாமல்
சிலநாள்
நித்திரை தொலைப்பர்

முடிவான நாளில்
மூடித்திறக்கும் பெட்டி
முகம்காட்டும்
புலிஎலியாகும்
எலி புலியாகும்
வானொலி தொல்லைக்காட்சியின்
வாய் கிழியும்
முன்னாள் இன்னாள் ஆவர்
இன்னாள் முன்னாள் ஆவர்
மன்ற உறுப்பினர்
மாண்புமிகு ஆவர்
தன் முதலீட்டிற்கு
முன்னுரை எழுதுவர்
நாளிதழ்கள் வழியும்
நாட்காட்டி கிழியும்

லவு காத்த கிளியென
வாக்காளன்
இடைத்தேர்தலுக்கும்
ஆண்டு ஐந்து மாண்டு
இன்னுமொரு
கவிதை எழுத
நானும்
காத்திருப்போம் !!!

.vikatan.com

  • தொடங்கியவர்

 

டைட்டானிக் நாயகி கேட் வின்ஸ்லெட்டின் அட்டகாசமான நடிப்பில் ட்ரிபிள் 9 படத்தின் டிரெய்லர்!

  • தொடங்கியவர்

மெட்றாஸ் ஸ்டேட், தமிழ்நாடு என்று பெயர் சூட்டி அழைத்த நாள் இன்று

 

ஒவ்வொரு விஷயத்தையும் போராடியே பெற்று வந்திருக்கிறது இந்த தமிழ் மண். மதறாஸ் மாநிலம் என்றும் மெட்றாஸ் ஸ்டேட் என்றும் 1967 வரை இப்படித்தான் அழைக்கப் பட்டு வந்தது, நம் தமிழ்நாடு. அதை தமிழ்நாடு என்று மாற்றுவதற்கு நம் தமிழாய்ந்த முன்னோடிகள் எடுத்துக் கொண்ட முயற்சிகள் கொஞ்சமல்ல... மெட்றாஸ் ஸ்டேட்டை,  தமிழ்நாடு என்று பெயர் சூட்டி அழைத்த அந்த நாள் இன்றுதான்.

சங்கரலிங்கமும் தமிழ்நாடும்

தமிழ்நாடு என்ற வார்த்தையை உச்சரிக்கும் போதெல்லாம் யாரும், சங்கரலிங்க நாடார் எனப்படும் கண்டன் சங்கரலிங்கத்தை மறந்து விடக் கூடாது. இதை நம்முடைய சந்ததியினருக்கும் sanga_vc1.jpgதாய்ப்பாலோடு புகட்டி வளர்க்க வேண்டும். அப்படி என்னதான் செய்தார் சங்கரலிங்கம் ? பிள்ளைகள், தங்கள் பள்ளியில் இதைப் பாடமாக படித்து தெரிந்து கொண்டிருக்கலாம், தெரிந்து கொள்ளாமலும் இருக்கலாம்... சங்கரலிங்கம் யார்? அண்ணா யார்? ம.பொ.சி. யார் ?  மொழி, மாநில உரிமைகளில் இவர்களின் பங்களிப்பு எவ்விதம் அமைந்திருந்தது, சொல்லிக் கொடுப்பது நம் கடமையும் கூட.



தமிழ்நாடு பெயர் கேட்டு மனு

எந்தவொரு அரசியல் பின்னணியோ, அரசியல் கட்சியில் பொறுப்பிலோ இல்லாதிருந்தவர், விருதுநகர் மாவட்டத்தின் மண்மலைமேடு கிராமத்தைச் சேர்ந்த சங்கரலிங்கம்.  அதே வேளையில் வசதியான பின்புலம் கொண்டிருந்தவர். எத்தனை காலம்தான் என் தாய்த்தமிழ் பேசும் மாநிலத்தை மெட்றாஸ் ஸ்டேட் என்று சொல்லிக் கொண்டிருப்பீர்கள், இனியும் அது முடியாது என்று வெளிப்படையாய் கொதித்தவர். பல மனுக்களை மாநிலத்தில் ஆண்டு கொண்டிருந்த காங்கிரஸ் அரசுக்கும், மத்திய அரசுக்கும் கொடுத்துக் கொடுத்து சோர்ந்து போனார் சங்கரலிங்கம்.

உண்ணாநிலை முடிவு
 
அந்தவேளையில்தான் டெல்லியின் செங்கோட்டையே நடுங்கும் விதமாக, அகிம்சா முறையில் சாகும் வரை அல்லது கோரிக்கை நிறைவேறும் வரை தண்ணீர் கூட அருந்த மாட்டேன் என்று கூறி உண்ணா நிலை என்ற ஆயுதத்தை கையிலெடுத்தார். ஆனால், ஆட்சியாளர்கள் அதைக் கண்டு அச்சப்பட வில்லை. சங்கரலிங்கமும் தன் போராட்டத்தை கை விடவில்லை. ஒரு நாள், இருநாள் அல்ல, தொடர்ந்து 75 நாட்கள் உண்ணா நிலையிலேயே இருந்து தன்னுடைய கோரிக்கை நிறைவேறாமலே மூச்சை நிறுத்திக் கொள்ளும் நிலைக்கு, அவர் உடல்நிலை போய் விட்டது.

உயிர்நீத்தார், சங்கரலிங்கம்

 அக்டோபர் 10, 1956- வீட்டின் முன்பாக உண்ணாநிலையில் இருந்த சங்கரலிங்கம் மயங்கிக் கீழே சாய்ந்தார். அவரை மருத்துவமனைக்கு கொண்டு போய் காப்பாற்றி விடும் முயற்சியில் பலர்  தீவிரம் காட்டினர். அவர்களின் முயற்சியை மதிப்பது போல அடுத்த இரண்டு நாட்கள் வரை மட்டுமே உயிரோடு இருந்த சங்கரலிங்கம் 13-ந்தேதி இதயத்துடிப்பை நிறுத்திக் கொண்டார். தனியாக மொழிவழி மாகாணம், அரசியல் தலைவர்கள் தங்களின் ஆடம்பர செலவினங்களை குறைக்க வேண்டும், இந்தியா முழுவதும் பூரண மதுவிலக்கை கொண்டு வரவேண்டும் என்பது உள்பட 12 அம்ச கோரிக்கைகளை முன் வைத்துதான் சங்கரலிங்கத்தின் உண்ணாநிலை பயணம் இருந்தது... ஆனால், அதில் தமிழ்நாடு என்ற ஒரு கோரிக்கைப் பயணம் மட்டும் வெற்றிப் பயணமானது,  ஆனால், அதைப் பார்க்கத்தான் அவர் இல்லை.

sanga_vc2.jpg



சமாதானம் செய்த அண்ணா

 சங்கரலிங்கத்தின் உடல்நிலை நாளுக்கு நாள் மோசமாகப் போய்க் கொண்டிருப்பதைக் கண்டு அவர் வீட்டுக்கே காமராஜர், அண்ணா, ஜீவா, ம.பொ.சி. என்று பல தலைவர்கள் போய் பேசிப் பார்த்தும் சங்கரலிங்கம் மசியவில்லை. என்னிடம் பேச்சு வார்த்தை நடத்தும் நேரம், மத்திய மாநில அரசுகளிடம் பேசிப் பாருங்கள் என்பது போலத்தான் அவர்களை பார்த்தார். சங்கரலிங்கம் தமிழுக்காக, தமிழ்நாடு என்ற பெயருக்காக உண்ணா நிலையைக் கையிலெடுக்க, ம.பொ.சி.யின் தமிழரசுக் கழகம் நடத்திய தொடர் போராட்டங்களே உத்வேகத்தை கொடுத்தன.

 தோல்வியும், வெற்றியும்

1962--_ மார்ச்ச்சில் நாடாளுமன்றத்தில் தமிழ்நாடு பெயர் கோரும் தனி மசோதாவே கொண்டு வரப்பட்டும் அதை தோல்வியடையச் செய்தனர். 1964- ஜனவரியில் மெட்றாஸ் மாநில சட்டமன்றத்திலும்  தமிழ்நாடு பெயர் கோரும் தீர்மானம் தள்ளுபடியானது. பெரும் முயற்சிக்குப் பின்னர் 23.11.1968-ல் நாடாளுமன்றத்தில் மசோதா நிறைவேற்றம் செய்யப் பட்டது.  இதே நாள்( ஜனவரி 14) 1968-ல் தமிழ்நாடு என்ற பெயர் முழுமை பெற்று அதிகாரப் பூர்வமாக அறிவிக்கப்பட்டது.

அண்ணாவின் பண்பு

 ... அண்ணா, உங்களுக்கு இப்போதுள்ள  உடல் சூழ்நிலையில் ஓய்வு அவசியம். மெட்றாஸ் ஸ்டேட்டுக்கு தமிழ்நாடு என்று உங்கள் ஆட்சிகாலத்தில் தான் பெயர் சூட்டப் பெற்றது, இதை நாங்கள் பெருமையாக கருதுகிறோம். தயவு செய்து ஓய்வெடுங்கள், இப்போது இதில் பங்கேற்க வேண்டாம்... என்று தொண்டர்கள் மட்டுமல்ல,  சிகிச்சை அளித்த மருத்துவர்களும் மன்றாடிக் கேட்டுக் கொண்டனர். ஆனால், அந்த பொன்னான தருணத்தை இழக்க விரும்பாத அண்ணா, தமிழ்நாடு என்ற பெயர் சூட்டு விழாவில் பங்கேற்றார், ஒரு தமிழனாக...

http://www.vikatan.com/news/miscellaneous/57695-madras-state-renamed-as-tamil-nadu.art

  • தொடங்கியவர்

அனைவருக்கும் இனிய பொங்கல் திருநாள் வாழ்த்துகள் 

23iuhz9.png

  • தொடங்கியவர்

அனைவருக்கும் நாயகன்... மார்டின் லூதர் கிங் பிறந்த தினம் சிறப்பு பகிர்வு!

1963-லிங்கன் சதுக்கம்…ஒரு உரை…ஒட்டுமொத்த நீக்ரோக்களின் ரத்தத்தில் உத்வேகத்தையும் நம்பிக்கையையும் பாய்ச்சியது. தங்கள் உரிமைக்காக அறவழியில் போராடத் தூண்டியது. தங்கள் விடுதலைக்காகக் கனவு கானச் சொன்னது. அமெரிக்காவில் நடந்த இனப்போராட்டத்தின் முடிவைத் தொடங்கிவைத்ததில் அவ்வுரைக்கும் அதைப் பேசிய அம்மனிதனுக்கும் மிகப்பெரிய பங்குண்டு. தனது உயிருக்கு ஆபத்து என்று தெரிந்தும் அதைத் தேடிச் சென்று தனது போராட்டத்தில் வெற்றி கொண்ட வரலாற்றுச் சிறப்பு மிக்க மனிதன் மார்டின் லூதர் கிங்கின் பிறந்த தினம் இன்று.

ஆபிரகாம் லிங்கனுக்குப் பிறகு அடிமைகைளாக இருந்த கருப்பர் இனத்தவரின் விடிவெள்ளியாய், நம்பிக்கை நாயகனாய் திகழ்ந்தவர் மார்டின் லூதர் கிங் (ஜனவரி 15,1829–ஏப்ரல் 4,1868). அவரிடம் இருந்து வெளிப்பட்டவையெல்லாம் வெறும் சொற்கள் அல்ல. அவை பிரம்மாஸ்தரத்தை ஏவும் வில்கள். உரையும் குளிரில் ரத்ததைக் கொதிக்க வைக்கும் தீப்பிழம்புகள் அவை. ஆனால் அமைதியை மட்டுமே வலியுறித்தியவை. இன்றும் உலக வரலாற்றின் தலைசிறந்த பேச்சுகளில் அவர் பேசிய ‘ஐ ஹேவ் எ டிரீம்’ (எனக்கொரு கனவுண்டு) உரை தலையாயதாகக் கருதுப்படுகிறது. ஒவ்வொரு கருப்பு அமெரிக்கனையையும் தனது சுதந்திரத்திற்காகப் போராட வைத்த அவ்வுரையின் சாராம்சம் இங்கே…

திருப்தியடையப் போவதில்லை

    “100 ஆண்டுகள் ஆனபின்னும் நீக்ரோக்கள் இங்கு அடிமையாகவே உள்ளோம். நியாயம் என்னும் கஜானா இங்கு காலியாக இருக்கிறது. நமக்கு இங்கு சமத்துவம் கிடைக்காமல் ஓயப்போவதுமில்லை அமைதியடையப் போவதுமில்லை. இந்தப் போராட்டம் தீவிரவாதமாக மாறப் போவதில்லை. இந்தப் போராட்டம் வெறும் தொடக்கம் தான். நீக்ரோக்களுக்கு எதிரான வன்முறைகள் அடங்கும் வரை, போராடி சளைத்த நமது தேகம் ஓய்வெடுக்க நகரத்தின் ஹோட்டல்களில் இடம் கிடைக்கும் வரை, மிசிசிப்பியின் மூளையில் இருக்கும் ஒரு நீக்ரோவிற்கு ஓட்டுப்போடும் உரிமை கிடைக்கும் வரை நாம் திருப்தி அடையப்போவதில்லை” என்றார் மார்டின். அவருடைய பேச்சின் ஒவ்வொரு வரிக்கும் இடையே எழுந்த கரகோஷமும் ஆரவாரமுமே அந்த வார்த்தைகளின் பலத்தை எடுத்துக்காட்டின. இவரது பேச்சு கருப்பர்களை மட்டுமல்ல, ஆயிரக்கணக்கான வெள்ளையர்களையும் ஈர்த்தது. அவர்களும் நீக்ரோக்களின் வாழ்வாதாராத்திற்காகப் போராட முன்வந்தனர். அதுதான் மார்டின் பேச்சின் ஜாலம்.

9h76h4.jpg

எனக்கொரு கனவுண்டு

    இதுதான் அவ்வுரையின் சிறப்பான அத்தியாயம். தான் கானும் கனவுகளாக, மார்டின் பேச அங்கு கூடியிருந்த ஒவ்வொரு நீக்ரோவின் கண்களிலும் ஆனந்தக் கண்ணீர் பெருக்கெடுத்தது. “ஒருநாள் ஜார்ஜியாவில் முன்னாள் அடிமைகளும், அவர்களை அடிமைப்படுத்தியவர்களும் ஒன்றாக அமர்ந்து உணவு உண்பார்கள் என்ற நம்பிக்கை எனக்குள்ளது. எனது நான்கு குழந்தைகளும் நிறத்தால் வேறுபாடு காட்டாத ஒரு நாட்டில் வாழ்வார்கள் என்ற கனவு எனக்குள்ளது. ஆம். எனக்கொரு கனவுண்டு.ஒருநாள் பள்ளத்தாக்குகள் மேன்மையடையும். மலைச்சிகரங்கள் உயரம் தாழும். சமத்துவம் நிச்சயம் தலைத்தோங்கும்” என்று அவர் சொல்லி முடிக்கையில் அத்தனை நீக்ரோக்களின் மனதிலும் அசைக்க முடியாத ஒரு கனவு நாயகனாக மாறிப்போனார் மார்டின் லூதர் கிங்.



    அவரது மனம் ஒவ்வொரு நாளும், ஒவ்வொரு நிமிடமும் நீக்ரோக்களின் உரிமைகளுக்காவவே துடித்தது. 1968ல் அவர் சுடப்பட்ட போது, அவருக்கு மருத்துவம் பார்த்த மருத்துவர்கள், “அவருக்கு வயது 39 தான் என்றாலும், இதயம் ஒரு 60 வயதுடையவரைப் போன்றதாகவே இருந்தது” என்று கூறினர். சுமார் 18 வருடங்கள் கருப்பர்களின் விடுதலைக்காகவும் உரிமைகளுக்காகவும் போராடிக்கொண்டே இருந்ததால் தான் அவரது இதயம் பலவீனமடைந்தது. தான் கடைசியாக மிசிசிப்பியில் உரையாற்ற வருகையில், அவரக்கு கொலைமிரட்டல் இருந்தது. ஆனாலும் அதைப் பொருட்படுத்தாமல் அங்கு பங்கேற்றார். “வெள்ளைக்கார சகோதரர்களால் எனக்கு என்ன வந்துவிடப்போகிறது. கடவுளின் ஆனைக்கினங்க என் பயணம் தொடரும். நான் மலையின் உச்சியை நோக்கிப் பயணிக்கிறேன். நான் எதற்கும் பயப்படவில்லை. நடப்பது நடக்கும்” என்று தைரியாமாக அக்கூட்டத்தில் பங்கேற்று உரையாற்றினார் மார்டின். ஆனால் அதுவே அவரது கடைசி உரையானது தான் பெரும் சோகம். அவர் வெரும் பேச்சாளர் மட்டுமல்ல. மாபெரும் செயல் வீரர். நீக்ரோக்களின் உரிமைக்காகவே மூச்சையும் விட்டவர். கருப்பர்களின் மனதில் மட்டுமல்ல, ஒட்டுமொத்த அமெரிக்காவின் வரலாற்றிலும் இவரது பெயர் அழிக்க முடியாத ஒன்று.

அமைதிக்கான நோபல் பரிசை இம்மனிதன் வென்றது வெற்றியல்ல. அவர் கண்ட கனவைப் போல அந்நாடு இன்றொரு கருப்பர் இனத்தைச் சார்ந்தவரால் ஆளப்படும் மாற்றத்தைச் சந்தித்திருக்கிறதே, அதுதான் மார்டின் லூதர் கிங்கின் போராட்டத்திற்குக் கிடைத்த மாபெரும் வெற்றி.


மார்டின் லூதர் கிங்கின் ‘ஐ ஹேவ் எ டிரீம்’ வீடியோவைக் காண

.vikatan

 

  • தொடங்கியவர்

1zqaiw8.jpg

* ஆஸ்திரேலியாவில் நடந்துவரும் பிக்பாஷ் கிரிக்கெட் லீக் போட்டியின்போது அதிரடி வீரர் கிறிஸ் கெய்ல், டி.வி வர்ணனையாளரை கொஞ்சம் அளவுக்கு மீறிக் கலாய்க்க, விவகாரம் விபரீதம் ஆனது. பெண் நிருபரிடம் ஓவராகப் பேசினார் என கிறிஸ் கெய்லுக்கு 10,000 டாலர் அபராதம் விதிக்கப்பட்டது. அடுத்த நாளே, `பார்ட்டிக்குப் போகக் காசு இல்லை. என் பாக்கெட் காலியாக இருக்கிறது. பிராவோதான் இன்றைய பார்ட்டிக்கு ஸ்பான்சர் செய்கிறார்' என இன்ஸ்டாகிராமில் போட்டோ போட்டு ஆஸ்திரேலிய கிரிக்கெட் போர்டைக் கலாய்த்திருக்கிறார் கெயில். கொஞ்சம் ஓவர்டி!

 

 

**  `அணுகுண்டைவிட பல மடங்கு சக்திவாய்ந்த ஹைட்ரஜன் குண்டை வெற்றி கரமாகப் பரிசோதித்துப் பார்த்துவிட்டோம்’ என அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது வட கொரிய அரசு. `ஹிரோஷிமா அழிவை ஏற்படுத்திய `லிட்டில் பாய்’ அணுகுண்டைவிட இது மிகவும் சக்திவாய்ந்தது. இந்த முறையில் வெடிப்பை நிகழ்த்தினால், அணுகுண்டால் ஏற்படும் அழிவைவிட ஆயிரம் மடங்கு அதிகமாக இருக்கும்’என்கிறார்கள் நிபுணர்கள். `மற்ற நாடுகள், எங்கள் நாடு மீது தாக்குதல் நடத்தினால்தான் நாங்கள் இதைப் பயன்படுத்து வோம்' என்கிறார் வட கொரிய தலைவர் கிம் ஜோங் உன். இந்தியா, அமெரிக்கா உள்பட பல நாடுகள் இதற்குக் கண்டனம் தெரிவித்தபடி அதிர்ச்சியில் ஆழ்ந்திருக் கின்றன. அழிவு அரசியல்!

 

** உண்மைச் சம்பவங்களும் வாழ்க்கை வரலாறுகளும்தான் இப்போது பாலிவுட்டின் ட்ரெண்ட் சினிமா. இந்த முறை இவர்கள் கண்வைத்திருப்பது பிரதமர் மோடி மீது. `ஸ்கிரிப்ட் தயார். ஆனால் இன்னும் மெருகேற்ற உழைக்கிறோம். அது முழுமையானதும் படப்பிடிப்பு நடக்கும்’ என்கிறார் இந்தி நடிகர் பரேஷ் ராவல். அமிதாப் பச்சனை மோடியாக நடிக்கவைக்கும் முயற்சியும் நடக்கிறது. தில்வாலே மோடி!

 

**  தமிழில் பேய் பட சீஸன் ஒழிந்தாலும் ஹாலிவுட்டில் ஒழியாது. பேய் பட ரசிகர்களை தியேட்டரில் வைத்து திகிலடித்து அனுப்பிய ‘காஞ்சூரிங்’ படத்தின் அடுத்த பகுதி ஜூன் மாதம்  வெளியாகிறது. சமீபத்தில் வெளியான இதன் டீஸர் இணையத்தைப் பதறவைத்தது. அமெரிக்காவில் அமானுஷ்ய நிகழ்வுகள் பற்றி ஆய்வு செய்யும் எட்வர்டு, லொரைன் என்கிற இருவர் சந்தித்த அமானுஷ்யங்கள்தான் கதை.  இது இன்டர்நேஷனல் காஞ்சனா!

 

2vx4mlh.jpg

** இந்த மூன்று வயது பாட்டி அழகாக இருக்கிறாரா? அதிர்ச்சியடைய வேண்டாம். இந்த குட்டிப் பெண்ணின் அத்தை செய்த மேக்கப் மேஜிக்தான் இது. ‘நான் மேக்கப் போட்டுக்கொண்டிருந்த போது எனக்கும் மேக்கப் போடச் சொல்லிக் கேட்டாள் இவள். எப்படி இருக்கிறது?’ என இந்த போட்டோவை ட்விட்டரில் பகிர, கொஞ்ச நேரத்திலேயே தெறி ஹிட். வைரல் பாட்டி! 

2qlvjuc.jpg

** டெக்னாலஜி, மனிதர்களை மட்டும் அல்ல... விலங்குகளையும் விட்டுவைக்கவில்லை. செல்லப்பிராணிகள் வளர்ப்பவர்களுக்கு அதைப் பத்திரமாகப் பார்த்துக்கொள்ளவேண்டும் என்ற கவலையும் இருக்கும். அவர்களுக்காகத்தான் இந்த WonderWoof BowTie ஜி.பி.எஸ் ட்ராக்கர் பொருத்தப்பட்ட இந்த பெல்ட்டை, செல்லப்பிராணியின் கழுத்தில் கட்டிவிட்டு மொபைல் அப்ளிகேஷன் மூலம் கண்காணிக்கலாம். செல்லப்பிராணி என்னென்ன செய்கிறது, வீட்டைவிட்டு குறிப்பிட்ட தூரத்தைக் கடந்துவிட்டால் எச்சரிக்கை செய்யும் அலாரம், தினமும் அதன் வளர்ச்சி என அனைத்தையும் மொபைலில் பார்க்கலாம். விலை 175 அமெரிக்க டாலர். எல்லாம் டெக் மயம்!

jhez54.jpg

**  அமெரிக்காவில் மிகவும் மதிப்புமிக்கது `பீப்பிள்'ஸ் சாய்ஸ் விருது’. முழுக்க முழுக்க மக்கள் தேர்வுசெய்யும் நபர்களுக்கே விருது. இந்த வருடம் ‘புதுமுகத் தொலைக்காட்சி நடிகைக்கான பீப்பிள்'ஸ் சாய்ஸ் விருது நம் ப்ரியங்கா சோப்ராவுக்குக் கிடைத்திருக்கிறது. ‘குவான்டிகோ’ தொலைக்காட்சித் தொடரில் நடித்தற்காக இந்த விருது. பொண்ணு இப்போ செம ஹேப்பி!
பிளஸ் யூ ப்ரியங்கா!

vikatan

Edited by நவீனன்

  • தொடங்கியவர்

சிரியா சிறுமி ஹைனா... தாய் நாட்டுக்காக பாட்டு பாடி கண்ணீர் விட்டார்! (நெகிழ்ச்சி வீடியோ)

அராபிக் டேலன்ட் ஷோ (Arabic Talent show) நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பாடிய சிறுமி, தனது தாய்நாடான சிரியாவிற்கு அமைதி வேண்டும் என்று கண்ணீர் சிந்தி பாடியது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சிரியாவில் நிலவி வரும் உள்நாட்டுப்போர் காரணமாக அப்பாவி மக்கள் உடைமைகளை இழந்து உயிரை காப்பாற்றிக்கொள்வதற்காக அண்டை நாடுகளை நோக்கி படையெடுக்கின்றனர். மேலும், போரின் காரணமாக ஏற்பட்டுள்ள பொருளாதாரா பிரச்னை, அமைதியின்மை போன்ற காரணங்களால் மக்கள் நிம்மதியின்றி தவித்த வருகின்றனர்.

இந்நிலையில், பாட்டுப்போட்டி நிகழ்ச்சியில் (Arabic Talent show) கலந்து கொண்ட ஹைனா போவ் ஹெம்டன்ஸ் என்ற 9 வயது சிறுமி, எங்கள் தாய்நாடான சிரியாவிற்கு அமைதி வேண்டும், எங்களின் குழந்தை பருவத்தை நாங்கள் பெற வேண்டும் என்ற பாடலை பாடியுள்ளார். இந்த பாடலை பாடிக்கொண்டிருந்தபோது, அச்சிறுமி தன்னை அறியாமல் கண்ணீர் விட்டு அழுதுள்ளார்.

அழுகையை கட்டுப்படுத்த முடியாமலும், மேற்கொண்டு பாடலை பாட முடியாமலும் திணறிய அச்சிறுமியை பார்த்த நடுவரான லெபனான் பாடகி நான்சி அஜ்ரம், உடனே தனது இருக்கையை விட்டு எழுந்து சென்று அச்சிறுமியை கட்டியணைத்து பாடலை பாட தொடர்ந்து உற்சாகப்படுத்தியுள்ளதோடு மட்டுமல்லாமல் மேற்கொண்டு சிறுமியுடன் சேர்ந்து அப்பாடலை பாடியுள்ளார்.

மற்ற இரு நடுவர்களும் சிவப்பு பொத்தானை அழுத்தி அச்சிறுமியை அடுத்த சுற்றுக்கு தெரிவு செய்தனர், மேலும் இவரின் பாடலால் அரங்கம் மட்டுமல்லாமல் இச்சிறுமியின் உறவினர்களும் உணர்ச்சிபூர்வமாக கண்ணீர் சிந்தி, அச்சிறுமியை உற்சாகப்படுத்தினர்.

 

vikatan.com

லெபனான் பாடகியான நான்சி, அச்சிறுமியை, தனது குழுவில் பாடுவதற்கு தெரிவு செய்துள்ளார். 

  • தொடங்கியவர்

ஜனவரி 16: திருவள்ளுவர் தினம் இன்று கொண்டாடப்படுகிறது.

இரண்டடியில் வாழ்க்கை தத்துவத்தை போதித்தவரும், தமிழர்களின் பண்பாட்டுச் செறிவின் அடையாளமாகவும் திகழும் திருவள்ளுவர் பிறந்த தினம் இன்று கொணாடப்படுகிறது.

இந்த திருவள்ளுவர் தினத்தில் உங்களுக்கு பிடித்த திருக்குறளை பகிர்ந்து அவரை போற்றுங்கள்.

'இன்னாசெய் தாரை ஒறுத்தல் அவர்நாண
நன்னயம் செய்து விடல்'

2wp6kg2.jpg

  • தொடங்கியவர்

உலகிலேயே செல்ஃபிக்காக உயிரிழப்பு அதிகம் நடக்கும் நாடு எது? ஆய்வில் அதிர்ச்சி தகவல்!

அண்மைக்காலமாக, செல்ஃபி எடுத்துக் கொள்ளும் மோகம் வேகமாக பரவி வருகிறது. ஒருபுறம் செல்ஃபி மகிழ்ச்சியை தந்தாலும் மற்றொரு புறம் சோகத்தையும் தந்து விடுகிறது. இந்தியாவில் சமீப காலமாக, செல்ஃபியால் ஏற்படும் உயிரிழப்புகள் அதிகரித்து வருவதாகவும், உலகிலேயே இந்தியாவில் தான் அதிகளவு உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளதாகவும் பிரபல செய்தி நிறுவனமான வாஷிங்டன் போஸ்ட் தெரிவித்துள்ளது.

2m4eg01.jpg

இந்நிறுவனம் உலகம் முழுவதும் நடத்திய ஆய்வில் சென்ற ஆண்டு மட்டும் 27 பேர் செல்ஃபி எடுத்துக் கொள்ளும் போது உயிரிழந்துள்ளது தெரியவந்துள்ளது. இதில், பாதி பேர் இந்தியாவை சேர்ந்தவர்கள்.

மதுராவிற்கு அருகில் உள்ள கொசிகலாவில் 3 கல்லூரி மாணவர்கள் ஓடும் ரயிலின் முன் செல்ஃபி எடுத்துக் கொள்ள முயற்சித்த போது பரிதாபமாக உயிரிழந்தனர். அதேபோல், 7 இளைஞர்கள் தனது நண்பனின் பிறந்தநாளை படகில் கொண்டாடிக் கொண்டிருக்கும் போது செல்ஃபி எடுத்துக் கொள்ள முயற்சித்தனர். ஆனால், துரதிர்ஷ்டவசமாக படகு கவிழ்ந்து பரிதாபமாக உயிரிழந்தனர்.

இதுதவிர, தமிழகத்தின் நாமக்கல்லில் ஒரு இளைஞர் உயர்ந்த பாறையின் மீது செல்ஃபி எடுக்க முயற்சித்த போது கால் தவறி கீழே விழுந்து பலியானார். நர்மதா கால்வாயில் குதிக்கும் போது செல்ஃபி எடுக்க முயன்ற இரண்டு இளைஞர்கள் ராஜ்கோட்டில் உயிரிழந்தனர். இதேபோல் இந்த ஆண்டும் பல உயிரிழப்புகள் தொடர்ந்து கொண்டுதான் இருக்கின்றன.

இந்த மாதம் கூட மும்பையில் இருவர் செல்ஃபியால் உயிரிழந்துள்ளனர். இதனால், செல்ஃபி மோகத்தை கட்டுக்குள் கொண்டுவர மும்பை போலீஸ் 16 இடங்களை கண்டறிந்து அங்கு செல்ஃபி எடுப்பதை தடை செய்துள்ளனர்.

vikatan.com

  • தொடங்கியவர்

szbxjp.jpg

4uj28o.jpg

யாழில் சேலை அணிந்து அசத்தும் வெள்ளைக்காரப் பெண்கள் !
யாழ் நல்லூர் ஆலயத்தின் சுற்றுப்புறத்தில் தமிழர் கலாச்சார ஆடைகளுடன் வெள்ளைக்காரப் பெண்கள் வளம் வருவதை காணக்கூடியதாக உள்ளது.

முகநூல்

  • தொடங்கியவர்

 

கணிதப்பு(ளி)லி குமாரசாமி எப்படி கணக்கு படித்தார்?
இப்படி தான்!

  • தொடங்கியவர்

 

வாட்ஸ் அப் கலக்கல்: ஜல்லிக்கட்டு கலாய்ப்புகள்

j5b3gk.jpg

2iggnme.jpg

2eyevfa.jpg

16o379.jpg

http://tamil.thehindu.com

  • தொடங்கியவர்

 

தலைவர்கள் எப்போதும் தலைவர்களாக இருக்க வேண்டிய அவசியமில்லை

 

அமெரிக்க அதிபர் ஒபாமா ஒரு சாதாரன மனிதர் போல உலகின் வேகமான மனிதரான உசேன் போல்ட்டுடன் ஒர் கலகலப்பான சந்திப்பு காணொளி

  • தொடங்கியவர்
தமிழன் 2.0

 

பீட்சா சாப்பிடுவான், பீர் குடிப்பான், பிள்ளைகளை சைட் அடிப்பான், மக்களுக்கு ஆபத்து என்றால் அரைபாடி லாரி பிடித்து அப்போதே கிளம்புவான்... இவன்தான் `ட்யூட்' தமிழன். ஹமாம் சோப், ஸ்ப்ளெண்டர் பைக், முட்டை பரோட்டா, நோக்கியா போன் என தனக்குன்னு ஒரு தனி ரூட்டு, தனி டேஸ்ட் வெச்சிருப்பான். தமிழனின் இந்த நிறம், குணம், மனம் எல்லாம் எப்படி மாறியிருக்கின்றன?

உணவு

பொழுதன்னிக்கும் திங்கிறது அரிசிச் சோறா இருந்தாலும், பரோட்டாதான் இவனுக்குக் கனவு, உணவு எல்லாமே! தாய்மாமன் தந்த காசுல திருவிழாக் கடையில பரோட்டா சாப்பிட்டு, வருஷம் பூரா அந்த ருசியை அசைபோட்டவன், கொஞ்ச வருஷமா ஃப்ரைடு ரைஸ் பக்கம் சைடு ஸ்டாண்டு போட்டிருக்கான். உலகத்துக்கே டூப்ளிகேட் போடுறவன் சைனாக்காரன். அவனையே அசரவெச்சு, `சைனீஸ் ஃபிரைடு ரைஸ்', `சைனீஸ் நூடுல்ஸ்' போடுறான் பாரம்பர்ய பச்சைத் தமிழன். அதையும் தாண்டி இப்போ முக்குக்கு முக்கு பிக்கப்பாகி வருது பிரியாணி கடை. திண்டுக்கல், ஆம்பூர், ஹைதராபாத், வாணியம்பாடி என ஊரு பேர்ல சோறு போட்டு, சோற்றுக்குள்ள பீஸை வெச்சு, அந்த மசாலா வாசத்துலயே மயங்கிக்கிடக்கிற தமிழனின் பிரியாணி தாகம் தாறுமாறா எகிறுது. `இயற்கை உணவு சாப்பிட்டா இதயத்துக்கு நல்லது ப்ரோ'னு பத்து பேர் சொல்றதைக் கேட்டுட்டு, பதினோரு கடை ஏறி இறங்கி விலை விசாரிப்பான். `கேப்பை 200 ரூபாய், குதிரைவாலி 300 ரூபாய்'னு அங்க சொல்ற விலையைக் கேட்டு, `ஒரு சிக்கன் பிரியாணி பார்சேல்...'னு க்யூவில் வந்து நிற்பான்.

p101a.jpg

உடை

அஞ்சு ஜீன்ஸ் பேன்ட்டும், பத்து ரவுண்டு நெக் டி-ஷர்ட்டும்தான் ப்ரோ தமிழனின் வார்ட்ரோப். உள்ளாடை தெரிய பேன்ட் போட்ட பயல், இப்போ வெல்குரோ வேட்டியில் பண்பாடு காக்கிறான். ஆனால், இந்த `ஒட்டிக்கோ கட்டிக்கோ' வேட்டிக்கு அலுவலகங்களில் ஆண்டுக்கு ஒருமுறைதான் என்ட்ரி பாஸ். பொங்கல் சடங்கு முடிந்ததும், `வேட்டிக்கு வேலிடிட்டி முடிஞ்சிருச்சு... மடிச்சுக்கோ வெச்சுக்கோ' என பாரம்பர்யத்தில் பஞ்சர் போடுகின்றனர். `கோயிலுக்கு ஜீன்ஸ் போட்டு வராதீங்க.

லெகிங்ஸ் போட்டா உள்ளே விடாதீங்க' எனச் சொன்னால், `அப்போ அர்ச்சகர், மேல்சட்டை போடலியே, அது பரவாயில்லையா?' என ட்விட்டடித்துத் திணற வைக்கிறார்கள். `செல்ஃபி வித் வேட்டி' என விதவிதமாக ஒளிப்படம் எடுத்த இவன்தான், `அது லெகிங்ஸோ, லுங்கியோ... என் உடை என் உரிமை' என உறுதியாக நிற்கிறான்.

p101b.jpg

பொழுதுபோக்கு

தமிழனின் தன்னிகரற்ற ஒரே பொழுதுபோக்கு, டாஸ்மாக். பண்டிகையா, சாவா, திருமணமா, சுற்றுலாவா... நாலு பேர் கூடினால் போதையில் பொங்கல் வைப்பதே இவனது ஒரே பொழுதுபோக்கு. தியேட்டருக்குப் போனாலும் போதையே கதியாகக் கிடக்கிறான். போதை இல்லாத காலங்களில் வாட்ஸ்அப் குரூப்களில் நாட்டுக்கு நல்ல செய்தி சொல்கிறான். ஃபேஸ்புக்கில், ட்விட்டரில் உக்கிரமாக வெடிக்கிறான்.

மெகா சீரியல்களின் கலரோ வேறுமாதிரி மாறிவிட்டது. இளம்பெண்களுக்கு, சப்பை மூக்கு அழகன்களின் கொரியன் சீரியல். இளம் பையன்களுக்கு, இங்கிலீஷ் சீரியல்கள். குழந்தைகளுக்கு மோட்டுபொட்லு என கார்ட்டூன் சீரியல்கள். போக்குவதற்கு மேற்கொண்டும் பொழுது இருந்தால், போனில் கேண்டிக்ரஷ் ஆடுவான். ஆக்ஸிஜனுக்குப் பதிலாக சினிமாவை உள் இழுப்பான். படம் பார்க்கும்போதே சமூக வலைதளங்களில் கழுவி ஊற்றுவான். உலக சினிமா பார்த்து உள்ளூர் இயக்குநர்களை அம்பலப்படுத்துவான். `நல்ல சினிமாவை நாமதான் ஓடவைக்கிறோம்' என மிக்ஸர் சாப்பிட்டுக்கொண்டே ஆன்லைனில் படம் பார்த்து அல்வா கொடுப்பான்.

பெயர்கள்

குஸ்கிதா, நஷ்டிகா, ஜிஷ்டுகா என `இஸ்க்கு புஷ்க்கு’ இல்லாமல் தமிழனால் பெயர்வைக்க முடியாது. காளகேயர்கள் மொழிகூட புரியும், ஆனால் தமிழ்க் குழந்தைகளின் பெயர்களைப் புரிந்துகொள்ள தனி அகராதி தேவை. பிள்ளை பிறந்ததும் அதற்கு `ல, லா, லு, லூ-வில் வருகிற மாதிரி பேர் வெச்சிருங்கோ' என ஜோசியர் ஏதாவது எழுத்தைச் சொல்லிவிட, `ல லா லூவும் வரணும், ஸ், ஷ், ஜ்-ம் வரணும்’ என்றால் பாவம் அவன்தான் என்ன செய்வான்? கடைசியில் `லூஜ்மா’, `லிஜ்பிகா’ என விநோதமாகப் பெயர் வைத்துவிட்டு, `பேர் யுனிக்கா இருக்குல்ல... உலகத்துலயே வேற யாருக்கும் இந்தப் பேர் இருக்காது' என கெத்துகாட்டி முட்டுக்கொடுப்பான். பேரன், பேத்திகளின் பெயர்களை மனப்பாடம் செய்வதற்குள் தாத்தா  பாட்டிகளுக்கு நாக்குத் தள்ளிப்போவது, ட்ராஜடி ஆஃப் தி செஞ்சுரி.

p101c.jpg

உறவுகள்

`ஐயம் இன் ரிலேஷன்ஷிப்'னு ஸ்டேட்டஸ் போடுவான். ஆனா, எந்த ரிலேஷன்ஷிப்பும் யாருனு தெரியாது. அப்பாவைத் தவிர எல்லாருமே அங்கிள்; அம்மாவைத் தவிர எல்லாருமே ஆன்ட்டி. அம்மாவின் அக்கா கணவர் தூரத்துச் சொந்தம், தாத்தாவின் தம்பி பையன் ரொம்பத் தூரத்துச் சொந்தம்... அவ்வளவுதான் உறவு. `கொழுந்தியானா என்ன உறவுமுறை?'னு ட்யூட் தமிழன்கிட்ட கேட்டா, மூஞ்சில பூரான் வுட்ருவான். குடும்பமா உட்கார்ந்து பேச இவனுக்கு நேரமே இல்லை. அதுக்கு ஊரே வெள்ளத்துல மிதக்கணும்; கரன்ட் போகணும்; டி.வி ஆஃப் ஆகணும்.

லைக் போடாததால் கோபப்படும் பாசக்காரத் தங்கைகள், அப்பாவையே பிளாக் பண்ணும் கோபக்கார தனயன்கள் என சமூக வலைதளங்கள் வேறு தமிழன் வாழ்வில் கபடி ஆடத் தவறுவதே இல்லை.

வேலைவாய்ப்பு

நாலு ஏக்கர் நிலத்தை வித்து கம்ப்யூட்டர் இன்ஜினீயரிங் படிச்சா, மாசம் எட்டாயிரம் சம்பளத்துக்குக்கூட வேலை கிடைக்கலை. யாருமே வேலை குடுக்காம எல்லாரும் எக்ஸ்பீரியன்ஸ் கேட்டா, பாவம் தமிழன் என்ன பண்ணுவான்?

`பேப்பர் போட்டுட்டேன் ப்ரோ'ங்குறான் ஐ.டி தமிழன். உண்மை என்னன்னா... ஐ.டி வேலை கொத்துக்கொத்தாக் காலியாகுது. `வீட்டு டியூ என்ன பண்றது, கார் இ.எம்.ஐ எப்படி அடைக்கிறது?’னு முழி பிதுங்கி நிக்கிறான்.

வயக்காட்டை வித்து, படிச்சு, வேலைக்குப் போன காலம் போக, இப்போ ஐ.டி வேலையை விட்டுட்டு ஆர்கானிக் விவசாயம் செய்ய கிராமத்துக்குக் கிளம்புறான் நவீன தமிழன். இன்னொரு பக்கம் கிராமத்தில் களையெடுத்து நாற்று நட்டுக்கொண்டிருந்த விவசாயக் கூலிகள் எல்லாம் நூறு நாள் வேலைவாய்ப்புத் திட்டத்தில் பிஸியாகிவிட, விவசாய வேலைக்கு ஆள் கிடைக்காமல் நாக்ரி டாட்காமில் விளம்பரம் கொடுக்கவேண்டிய கட்டாயம். நகரங்களில் செக்யூரிட்டி வேலைபார்க்கிற பாதிப் பேர், விவசாயத்தைக் கைவிட்ட முன்னாள் விவசாயிகள்தான்.

p101d.jpg

பயணம்

`ஏப்ரல்ல குடும்பத்தோட கோவா போகணும் பாஸ்' என்பான். `எந்த ஏப்ரல்?’ என நாமும் கேட்பது இல்லை; அவனும் சொல்வது இல்லை. வீட்டுக்கும் ஆபீஸுக்கும் போய் வருவதுதான் தமிழனின் ஒரே பயணம். குடும்பத்தோடு கூடிக் குழுமி மகிழ்ந்திருந்த காட்சி எல்லாம் 30 வயதிலேயே ஃப்ளாஷ்பேக் ஆகிவிட்டது.

`லீவ் இல்ல பாஸ், சேலரி கட் ஆகிடும், வேலையை யார் பார்க்கறது, குழந்தைங்களை என்ன பண்றது..?’ என பயணம் போகாமல் இருக்க ஆயிரம் காரணம் கண்டுபிடிக்கிற இவன், பயணத்துக்கு ஒரு காரணத்தைக்கூட கண்டறிய மாட்டான். வீட்டில் டார்ச்சர் அதிகரித்தால், புளிசாதம், சப்பாத்தியோடு செம்மொழிப் பூங்காவுக்கு ஷேர் ஆட்டோவில் போய் வருவான். வீடு திரும்பி `எவ்ளோ செலவாச்சு?' என கணக்குப்போட்டுக் கவலைப்படுவான். ஆனால், `ஒரு பத்து நாள் எல்லாத்தையும் விட்டுட்டு எங்கேயாவது நிம்மதியா போய்ட்டு வரணும்ங்க' என கடைசிவரைக்கும் சொல்லிக்கொண்டே இருப்பான்.

காதல்

ஜெனிஃபர் டீச்சரைக் காதலித்தவன், இப்போது மலர் டீச்சரின் மீது பிரேமம்கொண்டு அலைகிறான். ஃபேஸ்புக் சாட்டில் ரூட் பிடித்து, வாட்ஸ்அப் சாட்டில் `டபுள் டிக்'கடித்து பவர் பேங்க் உடன் கடலை வறுக்கிறான். தமிழ் தின்று, ஆங்கிலம் கொன்று இவன் டைப் செய்யும் தமிங்கிலீஷ், எப்படித்தான் அந்தப் புள்ளைக்குப் புரியுமோ? ரெண்டு வார்த்தை டைப் செய்ய சோம்பேறித்தனம்.
எமோடிகான்ஸைவெச்சே காலம் தள்றான். `ஆர் யூ ஓ.கே பேபி?' என ஃபீலிங்கில் பிராண்டி, இரண்டாவது விண்டோவில் `ட்ரூலி மேட்லி'யில் வலை வீசுகிறான். டேட்டிங் அழைப்பில்தான் சாட்டிங்கையே தொடங்குவான். ஆனாலும் `வெர்ஜின் பசங்க சாபம் சும்மா விடாதுடி' என வாள் சுழற்றுவான். காதல் தோல்விகளை லாங் ஜம்ப் தாண்டுவான். டாஸ்மாக்கில் `இந்தப் பொண்ணுங்க ரொம்ப மோசம்' என சூப் சாங் பாடுவான். `ரீசார்ஜ்லாம் வேண்டாம். எனக்கு ஐந்நூறு எம்.பி டேட்டா ட்ரான்ஸ்ஃபர் பண்ணிவிட்ரு' என்பது சமீபத்திய காதல் சங்கீதம். காதலிக்கும்போது ஜாலியாக எடுத்துக்கொண்ட ஜாயின்ட் செல்ஃபிக்களை, பிரேக்அப்புக்குப் பிறகு பரப்பிவிடுவது புதுவகை காதல் பழிவாங்கல்!

vikatan

  • தொடங்கியவர்

ஜனவரி 17: குத்துச்சண்டை வீரர் முகமது அலி பிறந்தநாள் சிறப்பு பகிர்வு

 

சில மனிதர்களை பற்றி எழுதுகிற பொழுதே ஒரு சிலிர்ப்பு தோன்றும் . அப்படி ஒரு வாழ்க்கை வாழ்ந்தவர் முகமது அலி. காசியஸ் க்ளே என்கிற பெயரோடு பிறந்த இவர் பிறப்பால் அமெரிக்க ஆப்ரிக்கர். அப்பா பில் போர்டுகளுக்கு படம் வரைந்த கொண்டு இருந்த எளிய மனிதர்'க்ளேவாக குத்துச்சண்டை  களத்துக்குள் புகுந்த இவர் அங்கே பெற்றதெல்லாம் வெற்றி வெற்றி தான்.

தொடர்ந்து பல்வேறு வெற்றிகளை குவித்த இவர் ஒரே பஞ்ச்சில் எதிராளிகளை வீழ்த்திய வரலாறெல்லாம் உண்டு.  "பட்டாம்பூச்சியை போல மிதந்திடுங்கள் ; தேனீயைப்போல கொட்டிவிடுங்கள் !" என்கிற அவரின் வாசகம் அமெரிக்கா முழுக்க எதிரொலித்தது.  "I'M THE GREATEST !" என்று அவர் சொன்ன பொழுது ரசிகர்களும் "ஆமாம் ! ஆமாம் "என்று கொண்டாடினார்கள்.

mohameedali.jpg

இரண்டுமுறை ஹெவி வெய்ட் சாம்பியனாக இருந்தவருக்கு ஒரு சோதனை வந்தது -சரியாக சொல்வதென்றால் பற்பல சோதனைகளின் உச்சகட்டம் எனலாம். இவர் ஒலிம்பிக்கில் தங்கபதக்கம் பெற்று வந்தவுடன் இனவெறி காரணமாக வரவேற்க கூட ஆளில்லை; நிறவெறி-வெய்ட்டர் கூட மதிக்கவில்லை. கடுப்போடு அந்த பதக்கத்தை நதியில் வீசிவிட்டு நடந்தார்.

இஸ்லாமிய மதத்திற்கு மாறிய பின் கலந்துகொண்ட போட்டியில் அவரைமுகமது அலி என அழைக்க எதிர் போட்டியாளர் மறுத்து விட்டார் ; கூட்டமும் ஏளனம் செய்தது. ஆனாலும்,உலக சாம்பியன் ஆனார். வியட்நாம் போரில் இளைஞர்களை ஈடுபட வைக்க   அமெரிக்கா கட்டாய ராணுவ சேவையை கொண்டு வந்து அதில் இவரையும் சேர சொன்னது,"அப்பாவி மக்களை கொல்லும் போரில் கலந்துகொள்ள மாட்டேன் !"என இவர் சொன்னது பெரிய அலையை உண்டு பண்ணியது.

காத்திருந்த அமெரிக்க அரசு அவரை குத்துசண்டையில் கலந்து கொள்வதற்கான லைசன்சை நீக்கியது; மூன்று வருடம் வனவாசம்.பின் பல்வேறு போராட்டத்துக்கு பின் மீண்டு வந்தால் தோல்வியே சந்திக்காத அவர் தோற்றுப்போனார். அவ்வளவு தான் என நாடே நகைத்தது.

அப்பொழுது தான் உலக சாம்பியன்ஷிப் வந்தது ,ஒரே ஒருவரை தவிர பதக்கம் இழந்து பலகாலம் கழித்து சாம்பியன்ஷிப்பை யாரும் வென்றது இல்லை ;மூன்று வருட வனவாசம் வேறு. ஆனாலும் வென்று காண்பித்தார் முகமது அலி ! அவர் தலையில் வாங்கிய அடிகள் அவரை முடக்கிபோட்டது -பர்கின்சன் சிண்ட்ரோம் அவரை பாதித்து முடக்கிபோட்டது.ஆனாலும்,அவர் பல்வேறு நிதிதிரட்டல்கள் மூலம்  எளியவர்களுக்கு உதவிவந்தார்.

அவருக்கு பண்ணிய அவமானங்களுக்கு பிரயசித்தமாக அவரை அட்லாண்டா ஒலிம்பிக் ஜோதியை ஏற்ற அனுமதித்தார்கள் ,"என் இடக்கை பார்கின்சன் சிண்ட்ரோமால் நடுங்குகிறது. வலது கை பயத்தால் நடுங்குகிறது இதற்கு நடுவே நான் ஜோதியை ஏற்றி விட்டேன் !"என்ற வரிகளுக்கு பின் தான் எவ்வளவு நம்பிக்கை. அவரின்
பிறந்தநாள் இன்று

vikatan

  • தொடங்கியவர்

லண்டனில் தாரை தப்பட்டை பொங்கல்! (வீடியோ)

லண்டன் வாழ் தமிழர்கள் தாரை தப்பட்டை ஒலிக்க பொங்கல் வைத்து கொண்டாடிய காட்சிகள் வீடியோவாக சமூக வலைத்தளங்களில் வைரலாகியுள்ளது.  

தமிழர்கள் எங்கு இருந்தாலும் தங்களின் பாரம்பரிய பழக்க வழக்கங்களை மறக்க மாட்டார்கள் என்பதற்கு உதராணமாக,லண்டன் வாழ் தமிழர்கள் தாரை தப்பட்டை அடித்து உற்சாகமாக பொங்கல் விழாவைக் கொண்டாடியுள்ளனர். இந்த விழாவில் பஞ்சாப் சிங் ஒருவர் பரதம் ஆட, இங்கிலாந்து இளம்பெண் வாடி ராசாத்தி பாடலுக்கு அபிநயம் பிடிக்க என்று அமர்க்களமாக கொண்டாட்டங்கள் நடந்துள்ளன.
 

 

 

 

  • தொடங்கியவர்

ஜனவரி 17: எம்.ஜி.ஆர். பிறந்தநாள் சிறப்பு பகிர்வு..

 

mgr2.jpg

சினிமா, அரசியல் தாண்டி ஓர் ஆளுமையாக எம்.ஜி.ஆர். அனைவருக்குமான ரோல்மாடல். இன்னமும் அவரைப் பற்றி சிலாகித்துச் சொல்ல ஆயிரம் சங்கதிகள் இருந்தாலும்... 25 மட்டும் இங்கே!

dot%284%29.jpgஎம்.ஜி.ஆர். நடித்த மொத்தப் படங்கள் 136. முதல் படம்சதிலீலா வதி(1936). கடைசிப் படம் மது ரையை மீட்ட சுந்தர பாண்டியன் (1977).

dot%284%29.jpgபெரும்பாலும் (60 படங்கள்) தெலுங்குப் படங்களைத்தான் ரீ-மேக் செய்வார் எம்.ஜி.ஆர். அத்தனையும் என்.டி.ஆர். நடித்த தாகவே இருக்கும். 'உரிமைக் குரல்' மட்டும் விதிவிலக்கு. அது நாகேஸ்வரராவ் நடித்த தெலுங்குப் படம்!

dot%284%29.jpgஎம்.ஜி.ஆரின் முதல் மனைவி தங்கமணி. இரண்டாவதாக சதானந்தவதியைத் திருமணம் செய்தார். அவரது மறைவுக்குப் பிறகு வி.என்.ஜானகி!

dot%284%29.jpgஎம்.ஜி.ஆர். நடித்த 50படங் களுக்குப் பாடல்கள் எழுதியவர் கண்ணதாசன். அவரின் 'அச்சம் என்பது மடமையடா... அஞ்சாமை திராவிட உடைமையடா' பாட்டு எம்.ஜி.ஆரின் காரில் எப்போதும் ஒலிக்கும்!

விடுதலைப் புலிகளின்தலைவர் பிரபாகரனுக்கு 6 கோடியே 37 லட்சம் ரூபாய் பணம் கொடுத்து உதவியவர் எம்.ஜி.ஆர். அவருக்கு ஏ.கே. 47 ரக துப்பாக்கியைப் பரிசாக அளித்தார் பிரபாகரன்!

dot%284%29.jpgசிகரெட் பிடிப்பது மாதிரிநடிப்பதைத் தவிர்த்தார். 'நினைத்ததை முடிப்பவன்' படத்தில் சிகரெட்டை வாயில் வைப்பார். இழுக்க மாட்டார். மலைக்கள்ளனில்'ஹ¨க்கா' பிடித்தது மாதிரி வருவார். இந்தக் காட்சியை வைப்பதா, வேண்டாமா என்ற குழப்பத்திலேயே படம் ரிலீஸ் ஆவதில் தாமதம் ஏற்பட்டதாம்!

mgr3.jpg

dot%284%29.jpgமுதலமைச்சர் பதவியை ஏற்றுக்கொண்டால் ஷூட்டிங் போக முடியாது என்பதால், பதவியேற்பு விழாவையே 10 நாட்கள் தள்ளிப் போட்டு 'மதுரையை மீட்ட சுந்தரபாண்டியன்' படத்தை முடித்துக் கொடுத் தார்!

dot%284%29.jpg'கர்ணன்' படத்தில் சிவாஜிக்கு முன்னதாக எம்.ஜி.ஆரைத்தான் கேட்டார்கள். 'புராணப் படம் பண்ண வேண்டாம்' என்று அண்ணா சொன்னதால் மறுத்துவிட்டார் எம்.ஜி.ஆர்!

dot%284%29.jpgநம்பியாரும் அசோகனும்தான் எம்.ஜி.ஆருக்குப் பிடித்த வில்லன்கள். பி.எஸ்.வீரப்பாவும், ஜஸ்டினும் இருந்தால் சண்டைக் காட்சிகளில் குஷியாக நடிப் பார்!

dot%284%29.jpgஎம்.ஜி.ஆருடன் அதிக படங்களில் ஜோடியாக நடித்தவர் சரோஜா தேவி. அடுத்தது ஜெயலலிதா!

dot%284%29.jpgஎம்.ஜி.ஆர் - கருணாநிதி இணைந்து வெற்றி பெற்ற படம் 'மலைக்கள்ளன்'. ஜனாதிபதி விருது வாங்கிய முதல் தமிழ் சினிமா. இந்தியாவில் உள்ள பெரும்பாலான மொழிகளில் எடுக்கப்பட்ட படம் இது!

dot%284%29.jpgகாஞ்சித் தலைவனில் இருந்து தனது கட்டுமஸ் தான உடம்பைக் காண்பித்து நடிக்கத் தொடங்கினார். எண்ணெய் தேய்த்துக் குளிக்கும் 'உரிமைக் குரல்' காட்சி, பெண்களை அவர் பக்கம் ஈர்ப்பதில் பெரும் பங்கு வகித்தது!

mgr4.jpg

dot%284%29.jpgநாடோடி மன்னன், உலகம் சுற்றும் வாலிபன், மதுரையை மீட்ட சுந்தரபாண்டியன் - மூன்றும் எம்.ஜி.ஆர் டைரக்ஷன் செய்த படங்கள்!

dot%284%29.jpgசினிமாவில் அதுவரை கட்சிக் கருத்துக்களைப் புகுத்துவார்கள். ஆனால், எம்.ஜி.ஆர் காட்சிகளையே புகுத்தினார். தி.மு.க. கொடி, உதயசூரியன் சின்னம், அண்ணா படம் இல்லாத படமே இல்லை என்ற அளவுக்கு வைத்தார்!

mgr6.jpgdot%284%29.jpgஎம்.ஜி.ஆர். எத்தனையோ குழந்தைகளுக்குப் பாதுகாவலராக இருந்து படிக்கவைத்தார். அதில் முக்கியமான இரண்டு பேர், அரசியலைக் கலக்கிய துரைமுருகன். சினிமாவில் வலம் வந்த கோவை சரளா!

dot%284%29.jpgதமிழ் சினிமா ரசிகர்கள் பற்றி 1970-ம் ஆண்டு எம்.ஜி.ஆர். அடித்த கமென்ட் இதுதான்... 'அந்தக் காலத்து ரசிகர்கள் மாதிரி இப்ப உள்ளவங்க இல்லை. 10 நிமிஷங்களுக்கு ஒரு க்ளைமாக்ஸ் கேட்குறாங்க. அப்படி வெச்சாத்தான் படம் ஓடும்!'

dot%284%29.jpg'பொன்னியின் செல்வன்' கதையைத் தமிழிலும் ஆங்கிலத்திலும் எடுக்க நினைத்தார் எம்.ஜி.ஆர். ஆங்கில வசனத்தை அண்ணாவை எழுதவும் கேட்டுக் கொண்டார். ஆனால், ஆசை நிறைவேறவில்லை!

dot%284%29.jpgஅறிமுகம் இல்லாதவராக இருந்தால், உடனே கை கொடுத்து 'நான் எம்.ஜி.ராமச்சந்திரன் - சினிமா நடிகர்' என்று அறிமுகம் செய்துகொள்வார்!

dot%284%29.jpgராமாவரம் தோட்டத்தில் ஆடு, மாடு, கோழி, நாயுடன் ஒரு கரடியும், சிங்கமும் வளர்த்தார் எம்.ஜி.ஆர். இவற்றைக் கவனிக்க தனி டாக்டர் வைத்திருந்தார்!

dot%284%29.jpgரொம்பவும் நெருக்கமானவர்களை 'ஆண்டவனே!' என்றுதான் அழைப்பார்!

dot%284%29.jpgஅடிமைப் பெண் பட ஷூட்டிங்குக்காக ஜெய்ப்பூர் போன எம்.ஜி.ஆர். குளிருக்காக வெள்ளைத் தொப்பி வைக்க ஆரம்பித்தார். பிடித்துப்போகவே அதைத் தொடர்ந்து பயன்படுத்த ஆரம்பித்தார்!

dot%284%29.jpgஎம்.ஜி.ஆர். பகிரங்கமாகக் காலில் விழுந்து வணங்கிய பெருமை இரண்டு பேருக்கு உண்டு. ஒருவர், நடிகர் எம்.கே.ராதா. கத்திச் சண்டை, இரட்டை வேடங்களுக்கு இவர்தான் எம்.ஜி.ஆருக்கு இன்ஸ்பிரேஷன். இரண்டாமவர், ஹிந்தி டைரக்டர் சாந்தாராம். இவரது படங்களைத்தான் நிறையப் பின்பற்றினார் எம்.ஜி.ஆர்!

mgr5.jpg

dot%284%29.jpgமுழுக்கை சில்க் சட்டை, லுங்கியுடன் தொப்பி, கண்ணாடி இல்லாமல் தன் காரை தானே டிரைவ் செய்து எப்போதாவது சென்னையை வலம் வருவது எம்.ஜி.ஆரின் வழக்கம். 'யாருக்கும் என்னைத் தெரி யலை. தொப்பி, கண்ணாடி இருந்தாதான் கண்டு பிடிப்பாங்க போல' என்பாராம்!

dot%284%29.jpgஅன்னை சத்யாவை வணங்க ராமாவரம் தோட்டத்துக்குள்ளேயே கோயில் வைத்திருந்தார்!

dot%284%29.jpg'நான் ஏன் பிறந்தேன்?' - ஆனந்த விகடனில் எம்.ஜி.ஆர் எழுதிய சுயசரிதைத் தொடர்.

அதை அவர் முழுமையாக எழுதி முடிக்கவில்லை. அடுத்ததாகத் தொடங்கிய 'எனது வாழ்க்கை பாதையிலே' தொடரும் முற்றுப் பெறவில்லை. இன்றும் அவர்வாழ்ந்து கொண்டு இருப்பதாகவே நினைக்கும் ரசிகர்கள் இருக்கிறார்கள். முற்றும் பெறவில்லை அவர் பெருமைகள்!

.vikatan

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.