Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இளமை புதுமை பல்சுவை

Featured Replies

  • தொடங்கியவர்

வரலாற்றில் இன்று…

செப்டெம்பர் – 04

 

476 : கடைசி ரோமப் பேர­ரசர் ரொமூலஸ் அகஸ்டஸ் முடி­து­றந்தார்.


1666 : லண்டன் மாந­கரில் மூன்று நாட்­க­ளாக ஏற்பட்ட பெரும் தீ விபத்தில் 13,000 இற்கும் அதி­க­மான வீடுகள் அழிந்­தன.


1781 : அமெ­ரிக்­காவின் லொஸ் ஏஞ்சல்ஸ் நகரம் ஸ்பானிய ஆளு­ந­ரான ஃபிலிப்பே டி நெவெ என்­ப­வரால் அமைக்­கப்­பட்­டது.


1870 : பிரான்ஸ் மன்னன் மூன்றாம் நெப்­போ­லியன் பத­வியிலிருந்து அகற்­றப்­பட்டார். அரசி யூஜின் தனது பிள்­ளை­க­ளுடன் இங்­கி­லாந்­துக்குத் தப்பிச் சென்றார். பிரான்ஸில் மூன்­றா­வது குடி­ய­ரசு ஸ்தாபிக்­கப்­பட்­டது.


151884 : குற்­ற­வா­ளி­களை அவுஸ்­தி­ரே­லி­யாவின் நியூ சவுத் வேல்­ஸுக்கு அனுப்பும் கொள்­கையை பிரிட்டன் கைவிட்­டது.


1886 : அமெ­ரிக்­காவில் 30 ஆண்­டுகள் போரின் பின்னர் அப்­பாச்சி பழங்­கு­டி­களின் தலைவர் ஜெர­னிமோ தனது படை­க­ளுடன்  சர­ண­டைந்தார்.


1888 : அமெ­ரிக்­காவைச் சேர்ந்த ஜோர்ஜ் ஈஸ்ட்மன், தான் கண்­டு­பி­டித்த புகைப்­பட சுருள் கெம­ரா­வுக்கு கொடாக் எனும் வர்த்­த­க­நா­மத்தை பதி­வு­ செய்­த­துடன் அதற்­கான காப்­பு­ரி­மை­யையும் பெற்றுக் கொண்டார்.


1951 : கண்­டங்­க­ளுக்கு இடை­யே­யான முத­லா­வது நேரடித் தொலைக்­காட்சி ஒளி­ப­ரப்பு அமெ­ரிக்­காவின்  சான் பிரான்­சிஸ்கோ நகரில் நடை­பெற்ற ஜப்­பா­னிய சமா­தான  சமா­தான மாநாட்­டி­லி­ருந்து மேற்­கொள்­ளப்­பட்­டது. 


1956 : வன்­தட்டு நினை­வ­கத்தைக் கொண்ட உலகின் முத­லா­வது கணி­னியை ஐ.பி.எம். அறி­மு­கப்­ப­டுத்­தி­யது.


1963 : சுவிஸ் எயார் விமானம் சுவிட்­ஸர்­லாந்தில் வீழ்ந்து நொருங்­கி­யதில் அதில் பயணஞ் செய்த 80 பேரும் கொல்­லப்­பட்­டனர்.


1970 : சிலி நாட்டின் ஜனா­தி­ப­தி­யாக  சல்­வடோர் அலெண்டே பத­வி­யேற்றார்.


1971 : அமெ­ரிக்­காவின் அலாஸ்­காவில் விமானம் ஒன்று வீழ்ந்­ததால் அதில் பயணம் செய்த 111 பேரும் கொல்­லப்­பட்­டனர்.


1972 : ஐக்­கிய அமெ­ரிக்­காவின் மார்க் ஸ்பிட்ஸ் ஜேர்­ம­னியின் மியூனிக் நகரில் இடம்­பெற்ற ஒலிம்பிக் போட்­டி­களில் நீச்­சலில் ஏழா­வது தங்கப் பதக்­கத்தைப் பெற்று சாதனை படைத்தார்.


1996: கொலம்­பிய புரட்சிப் படை­யினர், கொலம்­பி­யாவின் இரா­ணுவ முகா­மொன்றைத் தாக்­கினர். மூன்று வாரங்கள் நீடித்த இந்த கெரில்லா போரில் 130 பேர் கொல்­லப்­பட்­டனர்.


1998 : கூகுள் நிறு­வ­னத்தை  லெறி பேஜ், சேர்ஜி பிரின் இணைந்து ஸ்தாபித்­தனர்.


2006 : இஸ்­ரேலின் டெல் அவீவ் நகரின் பாட­சாலை ஒன்றின் அடியில் கி.மு. முதலாம் நூற்­றாண்டைச் சேர்ந்­த­தாகக் கரு­தப்­படும் புதை­குழிக் குகை ஒன்று கண்­டு­பி­டிக்­கப்­பட்­டது.


2007 :  சூறாவளி ஃபீலிக்ஸ் நிக்கராகுவாவைத் தாக்கியதில் பலத்த நிலச்சரிவுகளும் உயிரிழப்பு களும் ஏற்பட்டன.


2010 : நியூ­ஸி­லாந்தின் தென் ­ப­கு­தியில் 7.1 ரிச்டர் அள­வி­லான பூகம்பம் ஏற்­பட்­டது.

http://metronews.lk/

 

 

முதன்முறையாக ஜப்பானில் இருந்து கலிபோரினியாவுக்கு நேரடி தொலைக்காட்சி ஒளிபரப்பான நாள்- 4-9-1951

முதன்முறையாக 1951-ம் ஆண்டு செப். 4-ந்தேதி ஜப்பானில் இடம்பெற்ற அமைதி மாநாடு, டெலிவிசன் கான்பிரன்ஸ் மூலம் கலிபோரினியாவின் சான் பிரான்சிஸ்கோ நகரில் ஒளிபரப்பப்பட்டது. இதே தேதியில் நிகழ்ந்து முக்கிய நிகழ்வுகள்:- * 1939 - இரண்டாம் உலகப் போர்: நேபாளம் ஜெர்மனி மீது போரை அறிவித்தது * 1939 - இரண்டாம் உலகப் போர்: ஐரோப்பியப் போரில் ஜப்பான் நடுநிலையை அறிவித்தது * 1956 - ஹார்டு டிஸ்க் நினைவகத்தைக் கொண்ட உலகின் முதலாவது கணினியை ஐபிஎம் அறிமுகப்படுத்தியது.

 
 
 
 
முதன்முறையாக ஜப்பானில் இருந்து கலிபோரினியாவுக்கு நேரடி தொலைக்காட்சி ஒளிபரப்பான நாள்- 4-9-1951
 
முதன்முறையாக 1951-ம் ஆண்டு செப். 4-ந்தேதி ஜப்பானில் இடம்பெற்ற அமைதி மாநாடு, டெலிவிசன் கான்பிரன்ஸ் மூலம் கலிபோரினியாவின் சான் பிரான்சிஸ்கோ நகரில் ஒளிபரப்பப்பட்டது.

 

 

அண்ணா பல்கலைக்கழகம் அமைக்கப்பட்ட நாள்: 4-9-1978

 

அண்ணா பல்கலைக்கழகம் இந்தியாவின் தலைசிறந்த பல்கலைக்கழகங்களில் ஒன்றாகும். 1978-ம் ஆண்டில், சென்னையில் நிறுவப்பட்ட இப்பல்கலைக்கழகம், பொறியியல், தொழில்நுட்பம் மற்றும் தொடர்புடைய அறிவியல் துறைகளில் உயர்கல்வி பட்டப்படிப்புகள் வழங்குவதுடன் ஆராய்ச்சிப் பணிகளையும் மேற்கொள்கிறது. 1978-ம் ஆண்டு, செப்டம்பர் 4-ல், சென்னையின் பழம்பெரும் தொழில்நுட்பக் கல்வி நிறுவனங்களான கிண்டி பொறியியல் கல்லூரி,

 
அண்ணா பல்கலைக்கழகம் அமைக்கப்பட்ட நாள்: 4-9-1978
 
அண்ணா பல்கலைக்கழகம் இந்தியாவின் தலைசிறந்த பல்கலைக்கழகங்களில் ஒன்றாகும். 1978-ம் ஆண்டில், சென்னையில் நிறுவப்பட்ட இப்பல்கலைக்கழகம், பொறியியல், தொழில்நுட்பம் மற்றும் தொடர்புடைய அறிவியல் துறைகளில் உயர்கல்வி பட்டப்படிப்புகள் வழங்குவதுடன் ஆராய்ச்சிப் பணிகளையும் மேற்கொள்கிறது.

1978-ம் ஆண்டு, செப்டம்பர் 4-ல், சென்னையின் பழம்பெரும் தொழில்நுட்பக் கல்வி நிறுவனங்களான கிண்டி பொறியியல் கல்லூரி, அழகப்பர் தொழில்நுட்பக் கல்லூரி, மெட்ராசு தொழில்நுட்ப கழகம் ஆகியவற்றை ஒருங்கிணைத்து ஒற்றைப் பல்கலைக்கழகமாக பேரறிஞர் அண்ணா தொழில்நுட்பப் பல்கலைக்கழகம் உருவாக்கப்பட்டது.

பின்னர் 1982-ம் ஆண்டு பேரறிஞர் அண்ணா தொழில்நுட்ப பல்கலைக்கழகம் என்னும் பெயரிலிருந்து 'பேரறிஞர்' மற்றும் 'தொழில்நுட்ப' ஆகிய சொற்கள் நீக்கப்பட்டு அண்ணா பல்கலைக்கழகம் என்று பெயர் மாற்றப்பட்டது.

2001-ம் ஆண்டு: டிசம்பர் முதல் ஏறக்குறைய தமிழ்நாட்டில் உள்ள அனைத்துப் பொறியியல் கல்லூரிகளும் அண்ணா பல்கலைக்கழகத்தின் கீழ் இணைக்கப்பட்ட பின் சேர் பல்கலைக்கழகமாக, அண்ணா பல்கலைக்கழகம் செயல்பட்டு வருகிறது.

2007-ம் ஆண்டு: நிர்வாக வசதிகளுக்காக ஜனவரி முதல் அண்ணா பல்கலைக்கழகம் கீழ்கண்டவாறு 6 பல்கலைகழகங்களாகச் செயல்பட்டு வந்தது.

அண்ணா பல்கலைக்கழகம், சென்னை அண்ணா தொழில்நுட்பப் பல்கலைக்கழகம்,

சென்னை முன்பு அண்ணா தொழில்நுட்ப பல்கலைக்கழகம்,

திருச்சிராப்பள்ளி- அண்ணா பல்கலைக்கழகம்

சென்னை - மண்டல அலுவலகம்,

திருச்சிராப்பள்ளி  அண்ணா பல்கலைக்கழகம், திருநெல்வேலி         அண்ணா தொழில்நுட்பப் பல்கலைக்கழகம், மதுரை அண்ணா தொழில்நுட்பப் பல்கலைக்கழகம், கோயம்புத்தூர்.

2007-ம் ஆண்டு: அனைத்து அண்ணா பல்கலைக்கழகங்களையும் ஒருங்கிணைக்க சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

2012-ம் ஆண்டு: ஆகஸ்ட் 1 முதல் அனைத்து அண்ணா பல்கலைகழகங்கள் மற்றும் வளாகங்களும், அண்ணா பல்கலைகழகத்துடன் ஒருங்கிணைக்கப்பட்டன.

http://www.maalaimalar.com

  • Replies 11.3k
  • Views 1.5m
  • Created
  • Last Reply
  • தொடங்கியவர்

"#நீதிக்கதை"
.
பாலைவனத்தில் பயணம் செய்து கொண்டிருந்த ஒருவன் குடிக்கத் தண்ணீர் இல்லாமல் மயங்கி விழும் நிலைக்கு வந்து விட்டான். தாகத்தால் உயிர் போய்விடுமோ என்று நினைத்த போது தூரத்தில் ஒரு குடிசை போல ஏதோ ஒன்று தெரிந்தது. மிகவும் கஷ்டப்பட்டு அவன் அந்த இடத்திற்கு சென்று விட்டான்.
.
அங்கே ஒரு கையால் அடித்து இயக்கும் பம்ப்பும், அதன் அருகில் ஒரு ஜக்கில் தண்ணீரும் இருந்தன. ஒரு அட்டையில் யாரோ எழுதி வைத்திருந்தார்கள். "ஜக்கில் உள்ள தண்ணீரை அந்தப் பம்ப் செட்டில் ஊற்றி அடித்தால் தண்ணீர் வரும். குடித்து விட்டு மறுபடியும் ஜக்கில் தண்ணீரை நிரப்பி வைத்து விட்டுச் செல்லவும்."
.
அந்தப் பம்ப்போ மிகவும் பழையதாக இருந்தது. அது இயங்குமா, தண்ணீர் வருமா என்பது சந்தேகமாக இருந்தது. அது இயங்கா விட்டால் அந்தத் தண்ணீர் வீணாகி விடும். அதற்குப் பதிலாக அந்தத் தண்ணீரைக் குடித்து விட்டால் தாகமும் தணியும், உயிர் பிழைப்பதற்கு உத்திரவாதமும் உள்ளது.
அவன் யோசித்தான். தண்ணீரைக் குடித்து விடுவதே புத்திசாலித்தனம் என்று அறிவு கூறியது. ஒரு வேளை அதில் எழுதி வைத்திருப்பது போல் அந்தப் பம்ப் இயங்குவதாக இருந்து அது இயங்கத் தேவையான அந்தத் தண்ணீரைக் குடித்து விட்டால், இனி தன்னைப் போலத் தாகத்தோடு வருபவர்களுக்கு அது பயன்படாமல் போகத் தானே காரணமாகி விடுவோம் என்று மனசாட்சி எச்சரித்தது.
.
அவன் அதற்கு மேல் யோசிக்கவில்லை. ஆனது ஆகட்டும் என்று அந்தப் பம்பில் அந்தத் தண்ணீரை ஊற்றி விட்டு அதை அடித்து இயக்க ஆரம்பித்தான். தண்ணீர் வர ஆரம்பித்தது. தாகம் தீர, வேண்டிய அளவு தண்ணீர் குடித்து விட்டு அந்த ஜக்கில் நீரை நிரப்பி விட்டுச் செல்கையில் அவன் மனம் நிறைந்திருந்தது.
.
நாம் அவசியமான காலத்தில் அனுபவிப்பதை அடுத்தவருக்கும் அதே போல பயன்படும்படி விட்டுப் போக வேண்டும். எந்த நன்மையும் நம்முடன் நின்று விடலாகாது. இந்தக் காலக் கட்டத்தில் பெரும்பாலான மனிதர்களிடம் அந்த நல்லெண்ணம் இருப்பதில்லை. 
.
நம் வேலை ஆனால் சரி, அடுத்தவர் எக்கேடு கெட்டால் நமக்கென்ன என்ற அலட்சியம் பலரிடமும் மேலோங்கி உள்ளது.
.
"யான் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம்" என்ற மனநிலையில் ஒவ்வொருவரும் இருந்தால் இந்த உலகம் இன்பமயமாகி விடுமல்லவா?

  • தொடங்கியவர்
படும் துன்பங்களுக்கு என்ன பதில்?
 

image_ada7d0d543.jpgமிகவும் வெட்கப்படக்கூடியதும் கேவலமானதுமான விடயங்களில் ஒன்று, தனக்கு உரிமையில்லாத எந்தப் பொருட்களிலும் உரிமை கோருவதாகும். 

இன்று பேராசையினாலும் அதிகார வெறியினாலும் பிறரது சொத்துகளை அபாண்டமாகப் பறிக்க எண்ணும் போக்கிரிகளின் தொகை அதிகரித்துவிட்டது. 

இவர்களிடம் இருந்து தப்பிக்க முடியாமல் பலர் அவஸ்தைப்படுவதும் அவர்களுக்குக் கைகொடுத்து உதவிபுரிய எவரும் முன்வராமல் இருப்பதும் துரதிஷ்டமானதாகும். 

நீதிமன்றம், பொலிஸ்நிலையங்களின் வாசற்படிகள் ஏறி, இறங்கத் தெரியாதவர்களால் என்ன செய்ய முடியும். அதிகார வர்க்கத்தின், இடுக்கிப் பிடியினுள் உலகம் கட்டுப்பட்டுவிட்டதாகக் குமுறும் மக்கள் ஏராளம். நீதி கிடைக்க நீண்டகாலம், வேண்டுமென்றால் படும் துன்பங்களுக்கு என்ன பதில் உண்டு?

  • தொடங்கியவர்

thumb_large_mom.jpg

பாசமுள்ள பார்வையில்... அன்பின் மறுஉருவம் அன்னை தெரேசா

நிலாவில் ஏழைகள் இருந்தால், அங்கே போய் அவர்களுக்கும் நிச்சயம் பணிவிடை செய்வேன் என்ற வார்த்தைக்கு சொந்தக்காரர் இன்று எம்முடன் இல்லாவிட்டாலும் அந்த வார்த்தைகள் ஒட்டுமொத்த மனித சமுதாயத்தையே சிந்திக்க வைத்ததுடன் மனித நேயத்தின் ஒப்பற்ற வார்த்தையாகவும் அது போற்றப்படுகின்றது. 

அன்பு என்ற மூன்றெழுத்தில் அகிலமே அடங்கியிருப்பதாக அனைத்து மதங்களும் போதிக்கின்ற நிலையில் தனது வாழ்க்கையில் ஒவ்வொரு நொடியையும் அன்பாகவே கழித்து, பிறருக்கு பணிவிடை செய்வதில் செலவழித்து,அண்டசராசரமே போற்றும் ஒப்பற்ற தேவதையாக மாறியஅன்னை தெரேசாவால் உதிர்க்கப்பட்ட வார்த்தைகளே அவை.  

உலகில் பெரிதும் அறியப்படாத நாடுகளில் ஒன்றான அல்பேனியாவில் 1910ஆம் ஆண்டு ஆகஸ்ட் 26ஆம் திகதி பிறந்த ஆக்னஸ் கோன்ஜா போஜாஜியு என்ற இயற்பெயரை கொண்ட அன்னை உலகில் எத்தனையோ அநாதைகளுக்கு தான் தாயாக விளங்கப்போவதை ஊகிக்க முன்னரே தனது எட்டாவது வயதில் தந்தையை இழந்து சொல்லொணா துயரங்களை அனுபவித்தார். சிறுவயது முதலே தெய்வ பக்தியோடு வாழ ஆரம்பித்தசிறுமி ஆக்னஸ் 12 வயதில் தெய்வ நம்பிக்கையுள்ள ஒரு வாழ்க்கை வாழ்வதற்கு தன்னை அர்ப்பணித்தார்.  

ஏழை, எளியவருக்கு சேவை செய்தல், மாற்றுத் திறனாளிகளுக்கு உதவி செய்தல், மருத்துவ மனைகளுக்கு சென்று நோயாளிகளுக்கு மருந்து போட்டு விடுதல் போன்ற சமூக சேவைகள் பற்றி சிறுவயது முதலே தனது தாயாரிடம் கேட்டறிந்த அன்னை தெரேசா, இத்தகைய நற்பணிகளின் பின்னணியில் லொரொட்டோ சபையின் சகோதரிகள் இருப்பதையும் தனது தாயார் மூலம் அறிந்துகொண்டார். தானும் அப்பணியில் இணைந்து கொண்டு ஏழைகளுக்கு உதவ வேண்டும் என்ற ஆவல் அவரை சூழ்ந்துகொண்டதுடன் அந்தநாளுக்காக காத்துக்கிடந்தார்.  

ஒரு இளநங்கையாக தனது 18ஆவது வயதில்அயர்லாந்திலுள்ள லொரேட்டோ சகோதரிகளின் சபையில் தன்னை இணைத்துக் கொண்டதன் மூலம் பொதுவாழ்க்கை என்ற கடுமையான பாதையில் வழிநடந்து செல்ல ஆரம்பித்த தெரேசா அம்மையார் 19 ஆவது வயதில் தனது கனவு தேசமான இந்தியாவின் கல்கத்தாவுக்கு வருகை தந்தார்.

தனது கடைசி மூச்சு வரை இந்தியாவில் தங்கி ஏழைகளுக்கு உதவப்போவதையும் தனது வாழ்நாளில் ஏனைய 68 ஆண்டுகளையும் இந்தியாவில் கழிக்கப்போவதையும் உணர்ந்தாரே இல்லையோ என்பதை பார்க்கிலும் அவரது கருணை மழையில் நனையும் பாக்கியம் இந்தியர்களுக்கு கிடைத்தமையானது ஒட்டுமொத்த இந்திய மக்கள் செய்த பெரும் பாக்கியமாகும்.  

1931 ஆம் ஆண்டு மே மாதம் 24ஆம் திகதி உத்தியேகபூர்வமாக அருட்சகோதரியாக நியமனம் பெற்றுக்கொண்டு தனது பணியை ஆரம்பித்த அன்னை தெரேசா அம்மையார் அவ்வருடம் முதல் 1948 ஆம் ஆண்டு வரையான காலப்பகுதியில் கல்கத்தாவிலுள்ள,புனித மரியாள் உயர்தர கல்லூரியில் ஆசிரியையாக கடமையாற்றியிருந்தார். இக்காலகட்டத்தில் கல்லூரியில் சுவர்களுக்குள் அவரது காலம் செலவழிந்தபோதிலும், சுவர்களுக்கு வெளியே கல்கத்தா வாழ் மக்கள் எதிர்நோக்கிய துன்பங்கள், பசி, நோய் ஆகியன தொடர்பிலும் கவனம் செலுத்த அன்னை தவறவில்லை.  

உலக வல்லரசுகள் தமது அதிகாரத்தை நிரூபிக்கும் பொருட்டு ஏனைய நாடுகளுடன் போட்டி போட்டுக்கொண்டு இரண்டாவது உலக மகா யுத்தத்தை நடத்திக்கொண்டிருந்த காலகட்டத்தில் ஒரு இளம் கன்னிகை அணுஆயுதத்தை பார்க்கிலும் அன்பின் ஆயுதமே உயர்ந்தது என்ற தத்துவத்தை உலகிற்கு உணர்த்திக்கொண்டிருந்ததை உலக நாடுகள் கவனிக்க ஆரம்பித்தன. 

கன்னிமடத்திலிருந்தால் ஏழைகளுக்கு முழு நேரமும் தொண்டு செய்ய முடியாது என்பதை உணர்ந்து அன்னை 1948 ஆம் ஆண்டில் ஏழைகளுடனான தனது ஊழியத்தை ஆரம்பித்ததுடன் பாரம்பரிய லொரோட்டாவின் அங்கிகளை களைந்து நீல கரையிடப்பட்ட சாதாரண வெண்ணிற பருத்தி புடவையை அணிந்து தமது பணியை ஆரம்பிக்க வெளி யேறியமையானது சமாதான புறா தனது கூண்டிலிருந்து வெளியே வருவதற்கு சமனாக இருந்தது.  

அன்னை தெரேசா தனது நாட்குறிப்பில், தனது முதல் வருடம் கஷ்டங்கள் நிறைந்ததென்றும்,வருமானமில்லாத காரணத்தால் உணவுக்காகவும் ஏனைய பொருட்களுக்காகவும் யாசிக்க நேர்ந்ததென்றும் குறிப்பிட்டிருந்ததன் மூலம் அன்னை ரோஜா தோட்டத்தில் அல்ல முட்பாதைகளுக்குள்  பயணித்திருக்கின்றார் என்ற உண்மை தெளிவாகின்றது. 

ஒருமுறை ஏழைகளுக்கு உதவ அன்னை தெரேசா ஒரு செல்வந்தரிடம் கையேந்தி நின்ற போது அந்த செல்வந்தர் அன்னையின் கைகளில் காறி உமிழ்ந்திருக்கின்றார். கைக்குள் விழுந்த எச்சிலைமூடிக் கொண்டு இந்த எச்சில் எனக்குப் போதும் ஏழை குழந்தைகளுக்கு ஏதாவது கொடுங்கள் என்ற அமைதியான பதிலால் திக்குமுக்காடிப் போன அந்நபர் அன்னையின் கால்களில் வீழ்ந்து கதறியழுது மன்னிப்பு கோரியதுடன் ஏழைகளுக்கு வாரி வழங்க முன்வந்தார். இது அன்னையின் பொறுமைக்கு கிடைத்த பரிசு.  

 நீ காணும் உன் சகோதரனிடத்தில் அன்பு காட்டாமல் நீ காணாத கடவுளிடம் அன்பு காட்டுவது எவ்வாறு என்ற திருவிவிலிய வார்த்தையை அடிக்கடி மேற்கோள்காட்டி தனது உரைகளை நிகழ்த்தியுள்ள அன்னை அந்த வார்த்தையே அர்த்தமுள்ளதாக்கி அதற்கமைய வாழ்ந்து காட்டினார். 

 மிஷனரிஸ் ஒப் செரிட்டி என்ற அமைப்பு அன்னை தெரேசாவால் தோற்றுவிக்கப்பட்டதுடன் அவரது ஒப்பற்ற சேவையின் பலனாக இன்று 133 நாடுகளில் 4,500 க்கும் அதிகமான கன்னியாஸ்திரிகளால் மக்களுக்கு சேவையாற்றப்படுகின்றது. 

தனது பணிக்கு ஒருபோதும் விளம்பரம் தேடாத அன்னை தெரேசாவை நோக்கி விருதுகளும் பட்டங்களும் படையெடுத்தன. உலக சமாதானத்துக்காக வழங்கப்படும் நோபல் பரிசு 1979 ஆம் ஆண்டு அன்னைக்கு வழங்கப்பட்டதுடன் சமாதான தேவதையின் கரங்களில் தவழ்ந்த நோபல் பரிசுக்கு அன்றுதான் உண்மையான வரைவிலக்கணம் கிடத்தது.

நோபல் சமாதான விருது வழங்கும் விழாவில் கருக்கலைப்பானது உலகில் இருக்கும் மிகக் கொடிய பயங்கரமான செயல் என அன்னை தெரிவித்திருந்த கருத்துக்கள் பலரையும் கவர்ந்தது. ஒரு சிசுவை கொலை செய்வதை ஒருபோதும் ஏற்றுக்கொள்ள முடியாது என்ற அவரது வாதத்துக்கு எத்தரப்பினரும் எதிர்வாதம் செய்ய முன்வரவில்லை. நோபல் விருது வழங்கப்பட்டதன் பின்னர் நடைபெறவிருந்த விருந்து உபசாரத்தை இரத்து செய்யுமாறும் அதற்கு செலவிடப்படும் தொகையை ஏழை மக்களுக்கு வழங்குமாறு அன்னை கோரிக்கைவிடுத்தபோது அவரது சுயநலமற்ற அன்பை உலகமே உணர்ந்துக்கொள்ளத் தவறவில்லை. 

23ஆவது போப் ஜான் அமைதி விருது, நல்ல சமாரியன் விருது, கென்னடி விருது, டெம்பிள்டன் விருது, இங்கிலாந்தின் கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகம் வழங்கிய டாக்டர் பட்டம், பெல்ஜிய நாட்டு பல்கலைக்கழகம் வழங்கிய டாக்டர் பட்டம், சுதந்திரத்துக்கான பிரசிடென்ஷியல் விருது, அமெரிக்காவின் கௌரவப் பிரஜை உள்ளிட்ட சர்வதேச விருதுகள் அவரை தேடிவந்து தமது விருதுகளுக்கான கௌரவத்தை அவை பெற்றுச் சென்றன. 

1962 இல் பத்மஸ்ரீ விருது,1972இல் சர்வதேச புரிந்துணர்வுக்கான ஜவஹர்லால் நேரு விருது,1980-இல் இந்தியாவின் உயரிய குடிமக்களுக்கு வழங்கப்படும் விருதான பாரத ரத்னா உட்பட பிரதான இந்திய உயர்விருதுளை இந்திய அரசாங்கம் அவருக்கு வழங்கி இந்தியாவுக்கு பெருமையை பெற்றுக்கொண்டது.  

மாரடைப்பினாலும்  நுரையீரல், சிறுநீரகம் ஆகியன பாதிக்கப்பட்ட நிலையிலும் கல்கத்தாவில் தங்கியிருந்த அன்னைக்கு இற்றைக்கு 17 ஆண்டுகளுக்கு முன்னர் இரவு 9.30 மணிக்கு திடீரென மாரடைப்பு  ஏற்பட்டதுடன் அவரது அறையிலிருந்து இயேசுநாதரின் புகைப்படத்தை பார்த்தவாறே அவர் தனது பணியை நிறைவுபடுத்திக்கொண்ட முழுதிருப்தியுடன் மண்ணுலகிற்கு விடைகொடுத்தார். 

அன்பென்ற மழையில் இந்த அகிலத்தை நனைய வைத்த உன்னத அன்னையின் உயிர்மூச்சு அவரது 87ஆவது வயதில் நின்ற போது எதற்கும் கலங்காத கண்களும் கலங்கின.தாம் வாழ்ந்த போது அவரிடமிருந்த சொத்தெல்லாம் மூன்று வெள்ளைச் சேலைகளும் ஒரு சிலுவையும், ஒரு ஜெபமாலையும்தான். ஆனால் விலைமதிப்பற்ற அன்பை மட்டும் அவர் அமுத சுரபியாக அள்ளிஅள்ளி வழங்கினார். 

அன்பு, நேசம், பாசம், கருணை அத்தனைக்கும் ஒட்டுமொத்த இலக்கணமாக வரைவிலக்கணமாக வாழ்ந்து இன்றும் கோடிக்கணக்கான உள்ளங்களில் வாழ்ந்துகொண்டிருப்பவர் அன்னை தெரேசா. அன்பு என்றால் அன்னை தெரேசா என்ற பெயரை வரலாற்றிலிருந்து ஒருபோதும் நீக்க முடியாது.  

உன்னை நேசிப்பதை போல பிறரையும் நேசி என்ற வார்த்தைக்கு முன்னுதாரணம். இந்த உலகில் அனைவராலும் நேசிக்கப்பட்ட, நேசிக்கப்படும், நேசிக்கப்படப்போகின்ற ஒருவர் அன்னை தெரேசாவே. இவரது முகம் அன்பை தவிர வேறு எதனையும் மனிதருக்கு போதிக்கவில்லை. 

அன்னை தெரேசா மரணித்த தினமான செப்டம்பர் 5ஆம் திகதியை சர்வதேச கருணை தினமாக ஐக்கிய நாடுகள் சபை பிரகடனப்படுத்தியுள்ளமையானது மனிதநேயம் கொண்ட சமுதாயத்துக்கு கிடைத்த வெற்றியாகும்.  

நீ கருவுற்றிருந்தால் ஒரு குழந்தைக்கு தான் தாயாகி இருப்பாய் ஆனால் நீ கருணையுற்றதால் பல்லாயிரம் குழந்தைகளுக்கு தாயாகி இருக்கிறாய்

http://www.virakesari.lk

  • தொடங்கியவர்

வரலாற்றில் இன்று…

செப்டெம்பர் – 05

 

1666 : லண்டன் நகரில் ஏற்­பட்ட பாரிய தீ அணைந்­தது. இத்­தீ­யினால் 13,200 வீடு­களும் 87 தேவா­ல­யங்­களும் அழிந்­தன. 16 பேர் கொல்­லப்­பட்­டனர்.


1698 : ரஷ்ய பேர­ரசர் முதலாம் பீட்டர், தாடி வைத்­தி­ருப்­ப­வர்­க­ளுக்கு வரி அற­விட உத்­த­ர­விட்டார்.


Varalaru-1990---vantharoomoolai-21800 : பிரித்­தா­னி­யா­வினால் மோல்டா  கைப்­பற்­றப்­பட்­டது.


1839 : சீனாவில் முத­லா­வது ஒப்­பியம் போர்  சீன, பிரித்­தா­னிய படை­க­ளுக்கு இடையில் ஆரம்­ப­மா­னது.


1880 : ரஷ்­யாவில் சென் பீட்­டர்ஸ்­பேர்க்கில் உலகின் முத­லா­வது மின்­சார டிராம் வாகனம் வெற்­றி­க­ர­மாகச் சோதிக்­கப்­பட்­டது.


1881 : அமெ­ரிக்­காவின் மிச்­சி­கனில் இடம்­பெற்ற தீயினால் மில்­லியன் ஏக்­கர்கள் வரை நாச­ம­டைந்­தது. 282 பேர் கொல்­லப்­பட்­டனர்.


1882 : ஐக்­கிய அமெ­ரிக்­காவின் முத­லா­வது தொழி­லாளர் நாள் பேரணி நியூயோர்க் நகரில் இடம்­பெற்­றது.


1887 : இங்­கி­லாந்தில் எக்­செட்டர் நகரில் நாடக அரங்கில் தீப்­பி­டித்­ததில் 186 பேர் கொல்­லப்­பட்­டனர்.


1905 : ரஷ்­ய – -­ஜப்­பா­னியப் போர்: அமெ­ரிக்க ஜனா­தி­பதி தியோடர் ரூஸ்­வெல்ட்டின் சமா­தான முயற்­சியை அடுத்து இரு நாடு­க­ளுக்கும் இடையில் அமைதி உடன்­பாடு நியூ ஹாம்ப்­ஷ­யரில் எட்­டப்­பட்டு போர் முடி­வுக்கு வந்­தது.


1914 : முதலாம் உலகப் போரில்­பா­ரிஸின் வட­கி­ழக்கே பிரெஞ்சுப் படைகள் ஜேர்­ம­னியப் படை­களை தோற்­க­டித்­தன.


1932 : பிரெஞ்சு மேல் வோல்ட்டா பிள­வ­டைந்து ஐவரி கோஸ்ட், பிரெஞ்சு சூடான், நைஜர் என மூன்று தனி நாடு­க­ளா­கி­யது.


varalaru--1972-isreal1939 : இரண்டாம் உலகப் போரில் ஐக்­கிய அமெ­ரிக்கா போரில் தனது நடு­நிலை தீர்­மா­னத்தை அறி­வித்­தது.


1960 : ரோம் நகரில் நடை­பெற்ற ஒலிம்பிக் போட்­டியில் அமெ­ரிக்­காவின் கல்­சியஸ் கிளே (மொஹமட் அலி) தங்­கப்­ப­தக்கம் வென்றார்.


1961 : அணி­சேரா நாடு­களின் முத­லா­வது மாநாடு யூகோஸ்­லா­வி­யாவின் பெல்­கிரேட் நகரில் இடம்­பெற்­றது.


1969 : அமெ­ரிக்க இரா­ணுவ லெப். வில்­லியம் கலி, 109 வியட்­நா­மிய பொது­மக்­களைக் கொலை செய்­த­தாகக் குற்­றஞ்­சாட்­டப்­பட்டான்.


1972 : ஜேர்­ம­னியில் மியூ­னிக்கில் இடம்­பெற்ற ஒலிம்பிக் போட்­டி­களில் பங்­கு­பற்றச் சென்ற இஸ்­ரே­லிய ஒலிம்பிக் குழு உறுப்­பி­னர்கள் 11 பேர் பணயக் கைதி­க­ளாக்­கப்­பட்­டனர். அன்­றைய தினம் மோதல்­களில் இரு­வரும் மறுநாள் 9 பேரும் கொல்­லப்­பட்­டனர்.


1977 : வொயேஜர் 1 விண்­கலம் விண்­ணுக்கு ஏவப்­பட்­டது.


1978 : இஸ்­ரே­லியப் பிர­தமர் பெகி­னுக்கும் எகிப்­திய ஜனா­தி­பதி அன்வர் சதாத்­துக்கும் இடையில் அமெ­ரிக்­காவின் மேரி­லாந்தில் அமைதி ஒப்­பந்த மாநாடு ஆரம்­ப­மா­னது.


1980 : உலகின் மிக நீள­மான நெடுஞ்­சாலைச் சுரங்­க­மான கோதார்ட் சாலைச் சுரங்கம் (16.224 கி.மீ.) சுவிட்­ஸர்­லாந்தில் திறக்­கப்­பட்­டது.


1986 : அமெ­ரிக்க பான் ஆம் நிறு­வ­னத்தின் விமானம் 358 பேருடன் கராச்­சியில் கடத்­தப்­பட்­டது.


1990 : மட்­டக்­க­ளப்பு வந்­தா­று­மூலைப் பல்­க­லைக்­க­ழ­கத்தில் அக­தி­க­ளாகத் தங்­கி­யி­ருந்த 158 தமி­ழர்கள்  படு­கொலை செய்­யப்­பட்­டனர்.


2005 : சுமத்­ராவில் பய­ணிகள் விமானம் ஒன்று தரையில் மோதி­யதில் தரையில் இருந்த 39 பேர் உட்­பட மொத்தம் 143 பேர் கொல்லப்பட்டனர்.


2012 : தமிழகத்தின் சிவகாசியில் பட்டாசு தொழிற்சாலையில் ஏற்பட்ட விபத்தில் 40 பேர் உயிரிழந்ததுடன் மேலும் 50 பேர் காயமடைந்தனர். 


2012 : துருக்­கிய இரா­ணுவ ஆயுதக் களஞ்­சி­ய­சா­லையில் ஏற்­பட்ட விபத்­தினால் 25 படை­யினர் உயி­ரி­ழந்­தனர்.

http://metronews.lk

  • தொடங்கியவர்

மாடித்தோட்டம்... வெர்ட்டிகள் கார்டன்... அடுத்து கடலுக்கடியில் விவசாயம்..!

 

வெளிநாடுகளைப் பொறுத்தவரையில் விவசாயத்தில் சாகுபடிப் பரப்பு குறைப்பதற்காக வெர்ட்டிக்கல் கார்டன் என்ற விவசாய முறை பின்பற்றப்படுகிறது. இம்முறையில் குறைந்த இடங்களில் பல அடுக்குகளை வைத்து அதில் தொட்டி அமைத்து விவசாயம் செய்யப்படுகிறது. இந்தியாவில் பெரும்பான்மையான விவசாயம் நேரடியாக நிலங்களில்தான் நடந்து வருகிறது. ஒரு சில இடங்களில் மட்டுமே ஹைட்ரோஃபோனிக்ஸ் முறையில் விவசாயம் பின்பற்றப்படுகிறது. இதுபோல பலபல விவசாய முறைகளைப் பின்பற்றி விவசாயம் செய்து வந்தாலும் நீருக்கு அடியில் விவசாயம் செய்வதென்பது முடியாத ஒன்றாகவே இருந்து வந்தது. நீருக்கடியில் மின்சாரம் கொண்டுபோக முடிந்த விஞ்ஞானிகளால் விவசாயத்தைச் செய்ய முடியவில்லை. பல ஆண்டுகளாகச் செய்யாத முயற்சியை விஞ்ஞானிகள் இப்போது செய்ய ஆரம்பித்து இருக்கின்றனர். தண்ணீருக்கு அடியில் விவசாயம் செய்யும் வழிமுறைகளைத் தற்போது ஆராய்ச்சி செய்து வருகின்றனர்.

கடலுக்கு அடியில் விவசாயம்

ஒரு காருக்கோ அல்லது விமானத்துக்கோ மாற்று எரிபொருளுக்கான தேவையை ரோபோட்டிக் தொழில்நுட்பத்தில் பெற முடியும். ஆனால், விவசாயத்துக்கு மாற்று எந்த ரோபோட்டிக் தொழில்நுட்பத்தில் இருந்து பெறுவது?... இதற்கான மாற்றுத் தொழில்நுட்பத்தைத்தான் கலிஃபோர்னியாவில் தேடிக் கொண்டிருக்கிறார்கள். அந்தத் தொழில்நுட்பத்தின் பெயர் நீர் உயிரிச் சக்தி தொழில்நுட்பம். நீர்மூழ்கி ட்ரோன்களை வைத்துக்கொண்டு நீருக்குள் இருக்கும் விவசாய பரப்பை கவனித்துக் கொள்ளலாம். பயிர்களுக்குத் தேவையான வெளிச்சத்தையும் ட்ரோன் மூலம் கொடுக்க முடியும். இதற்கான ஆராய்ச்சியும் இதுவரை தொடக்க ஆராய்ச்சிக் கட்டத்தில்தான் இருக்கிறது. இது கலிஃபோர்னியாவிலுள்ள கேத்தோலினா ஐலாந்தில் நடைபெற்று வருகிறது. இந்தத் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தினால் உயிர் எரிபொருளானது புதைபடிவ எரிபொருளான டீசல் போன்ற பொருள்களுடன் விலையை ஒப்பிடும்போது இரண்டுமே சமமாக இருக்கும்.

கடல் விவசாயம்

நீர் உயிரிச் சக்தி தொழில்நுட்பத்தில் வளர்க்கப்படும் தாவரங்கள் அனைத்தும் நீண்ட பைப்புகளின் மூலம் இணைக்கப்பட்டிருக்கும். இந்தத் தொழில்நுட்பத்தின் சோதனை வெற்றியடைந்தால் கலிஃபோர்னியா மற்றும் ஹவாய் தீவுகளில் திறந்த கடல் பண்ணையை அமைத்து செயல்படுத்தப் போகிறார்கள். இவ்வாராய்ச்சியை மேற்கொள்ளும் விஞ்ஞானிகள் பசிபிக் வடமேற்கு ஆய்வகத்துடன் இணைந்து பணியாற்றி வருகின்றனர். இந்த ஆய்வகத்துடன் இணைந்து மேற்கொள்ளப்படுவதால் உயிரியல் ரீதியால் வெற்றியடையும் எனவும் ஆராய்ச்சியாளர்கள் நம்புகின்றனர். இதன் முதல்கட்டமாக இயற்கை எரிபொருள்களை உருவாக்கும் தாவரங்களைத்தான் ஆராய்ச்சி செய்து வருகின்றனர். இத்தொழில்நுட்பத்தின் மூலம் விவசாயப் பொருள்களை உற்பத்தி செய்வது சாத்தியம் என்றாலும் கூட, சில விவசாயப் பொருள்களை நேரடியாகத் தண்ணீரில் உற்பத்தி செய்ய முடியாது. இந்த ஆராய்ச்சிகளால் நாள்கள்தான் வீணாகும் என்கிறார்கள் மற்றொரு தரப்பினர். இருந்தாலும் நீருக்கடியில் விவசாய ஆராய்ச்சி முழுமூச்சோடு நடந்து வருகிறது. ஆனால், இதையெல்லாம் கடலுக்கு அடியில் செய்ய முடியுமா என்ற ஆராய்ச்சி, இதற்கு அடுத்த கட்டமாகத்தான் தொடரும் எனவும் ஆராய்ச்சி விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். கடலுக்கு அடியில் வளரும் பயிர்களுக்கு நேரடியாக உரங்களைக் கொடுக்க முடியாது. அதற்கும் தனியாகக் குழாய்கள் அமைக்கலாம். இதுதவிர, ஏற்கெனவே அமைக்கப்பட்டுள்ள குழாய்களின் மூலமும் உரங்களைக் கொடுக்கலாம். இப்பயிர்களுக்கு முக்கியமான தேவை சூரிய வெளிச்சம். இதற்காக ரோபோட்டிக் தொழில்நுட்பம் மூலம் முயற்சிகள் எடுக்கப்பட்டு வருகிறது. இம்முயற்சி சோதனை இடங்களில் வெற்றி காணப்பட்டால், உடனடியாகக் கடலில் செய்துவிட முடியாது. அதற்காகத் தேர்ந்தெடுக்கும் இடம் கடற்பகுதியில் புயல் வராமலும், கப்பல்கள் வராத பகுதியாகவும், தண்ணீர் அதிகம் மாசுபாடு அடையாததாகவும் இருக்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல ஆராய்ச்சிகள் அடுத்தகட்டமாக ஆரம்பிக்கும்.

 

எல்லாம் சரிதான், இறுதியாக இவர்கள் சொல்லும் கருத்து, இத்தொழில்நுட்பத்தை வடிவமைத்து வெற்றி கண்டால் செயல்படுத்த பல லட்சம் ரூபாய் செலவாகுமாம்... இது சாத்தியமானால் கடல் நீரிலும் பிளாட்டுகள் பிரிப்பார்கள் போல!

http://www.vikatan.com/

  • தொடங்கியவர்

ஸ்னோஃப்ளேக்ஸ்களுக்கு இப்படி ஒரு வடிவம் எங்கிருந்து வந்தது? விளக்கும் அறிவியல்!

 
 

ஸ்னோஃப்ளேக்ஸ்

பனி படர்ந்த சூழலையே நாம் மலைப்பிரதேசத்திற்கு சென்றால் மட்டுமே பார்க்க முடியும். நம் ஊரில், நமக்குத் தெரிந்தது எல்லாம் மார்கழி மாத வெள்ளைப் பனிமூட்டமும், உதிக்கும் சூரியனை ஜெயித்து இலைகளில் தங்கியிருக்கும் பனித்துளிகளும்தான். எப்போதாவது இலங்கை அணி கிரிக்கெட்டில் ஜெயிப்பது போல், ஆலங்கட்டி மழை பெய்யும். அப்போதும் அதை ரசிக்காமல், ஃபேஸ்புக்கில் லைவ் வீடியோ போட்டுக்கொண்டிருப்போம். மேற்கத்திய நாடுகளில் பனிப் பொழிவு (Snowfall) என்பது வருடா வருடம் நடக்கும் கோலாகல இயற்கை நிகழ்வு. முதல் பனிப்பொழிவை பார்ப்பவர்கள், ஏதோ சாதித்து விட்டதாகத் துள்ளிக் குதித்து கொண்டாடுவார்கள். இந்தியாவில் இருந்து வெளிநாடு சென்றவர்கள் முதன்முறையாகப் பனிப்பொழிவை பார்த்தவர்கள் தங்கள் மகிழ்ச்சியை இந்தியாவிலிருக்கும் அனைத்து உறவினர்களுக்கும் கூறி பொறாமைப்பட வைப்பார்கள். ஸ்னோஃப்ளேக்ஸ் (Snowflakes) என்ற ஒன்றை அவ்வளவு படங்கள் பிடித்து நம்மையும் அதில் டேக் (Tag) செய்து வெறுப்படைய செய்வார்கள்.

அது சரி! இப்போது அதுவல்ல பஞ்சாயத்து. அந்த ஸ்னோஃப்ளேக்கிற்கு எப்படி அப்படி ஒரு வடிவம் வந்தது? எத்தனை வகைகள் இருக்கின்றன? முதன்முதலில் அதை யார் படம்பிடித்தார்கள்? எல்லாம் பார்த்து விடுவோம்.

முதல் ஸ்னோஃப்ளேக் புகைப்படம்

வில்சன் பென்ட்லி (1865 - 1931) என்ற புகைப்படக்காரர்தான் முதன் முதலில் ஸ்னோஃப்ளேக்கை படம்பிடித்தார். அளவில் மிகச் சிறியதாக இருக்கும், இதில் என்ன சுவாரஸ்யம், இதற்காக இவ்வளவு செலவு செய்து படம் பிடிக்க வேண்டுமா என அனைவரும் கண்டுகொள்ளாமல் இருக்க, வில்சன் மட்டும் இதில் ஒரு ஈர்ப்பு இருப்பதாய் உணர்ந்தார். தன் கேமரா லென்ஸின் முன் ஒரு நுண்ணோக்கி (Microscope) ஒன்றை மாட்டிக்கொண்டார். குறுகிய காலகட்டத்தில் படபடவென 5000 ஸ்னோஃப்ளேக்குகளைப் படம் பிடித்துத் தள்ளினார். அவரின் புகைப்படங்களைப் பார்த்துத்தான், ஸ்னோஃப்ளேக்குகளில் இவ்வளவு வடிவங்கள், வித்தியாசங்கள் இருக்கின்றன எனப் பலரும் தெரிந்து கொண்டார்கள்.

ஸ்னோஃப்ளேக்ஸ் வகைகள்

வகைகளும், வடிவங்களும்

1951ல் சர்வதேச சைரோஸ்பெரிக் அறிவியல் சங்கத்தை (International Association of Cyrospheric Sciences - IACS) சார்ந்த விஞ்ஞானிகள் ஸ்னோஃப்ளேக்குகள் குறித்த ஆராய்ச்சியில் ஈடுபட்டனர். அவர்கள் இதில் 10 வித்தியாசமான வடிவங்கள் இருப்பதைக் கண்டறிந்தனர். தற்போது அதில் 8 வடிவங்கள் மட்டுமே அதிகமாகக் காணப்படுகின்றன. அதிலும் 80 வகைகளில் தனிப்பட்ட மாறுபாடுகள் கொண்ட ஸ்னோஃப்ளேக்குகள் இருக்கின்றன.

எப்படி அதன் வடிவங்களைப் பெறுகின்றன?  

கலிஃபோர்னியா இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜியின் இயற்பியல் பேராசிரியர் கென்னத் லிப்ரெட்ச்ட் ஸ்னோஃப்ளேக்குகள் குறித்து விரிவான கண்காணிப்புகளை நடத்தினார். பனி படிகங்கள் கீழே இறங்கும்போது, அதில் தண்ணீர் மற்றும் காற்றின் மூலக்கூறுகள் நிகழ்த்தும் ஜாலமே இந்த விதவிதமான வடிவங்களுக்குக் காரணம் என்று கூறினார். இன்னொரு சுவாரஸ்ய செய்தியாகக் காற்றில் ஈரப்பதம் இருக்கும்போது மட்டுமே விதவிதமாக சிக்கலான வடிவங்கள் வருவதாகவும், உலர் நிலைகளில் உருவாகும் ஸ்னோஃப்ளேக்குகள் சாதாரண வடிவம் கொண்டே இருக்கின்றன என்றும் தெரிவித்தார்.

ஸ்னோஃப்ளேக்ஸ்

இதற்கு அடுத்தபடியாக, இந்த ஸ்னோஃப்ளேக்கிற்கு இந்த வடிவம்தான் என்று முடிவு செய்வது வெப்பநிலை. - 22 டிகிரி செல்சியஸிற்கு (- 7.6 டிகிரி ஃபாரன்ஹீட்) கீழ் உருவாகும் ஸ்நோஃப்ளேக்குகள் பெரும்பாலும் எளியப் படிகத் தகடுகள் மற்றும் பத்திகளாகவே இருக்கின்றன. ஆனால்,சற்று அதிகமான வெப்பநிலையில் உருவாகும் ஸ்னோஃப்ளேக்குகள் பல்வேறு கிளைகள் கொண்டதாய், பூப்போல வடிவம் பெற்று விடுகின்றன.

 

வெப்பநிலை மற்றும் ஈரப்பதம்தான் இந்த இயற்கையின் விந்தைக்குக் கலை வடிவம் கொடுப்பதாய் அமைகின்றன. சூடான வெப்பநிலை, அதே சமயம் ஈரப்பதம் கொண்ட காற்று பனிப்பொழிவை அற்புத சிற்பங்களாக மாற்றி நம் கண்களுக்கு விருந்து படைக்கின்றன. ஸ்னோஃப்ளேக் செல்ஃபி எடுக்கவே வெளிநாடு போக வேண்டும் போல!

http://www.vikatan.com

  • தொடங்கியவர்

“சேலை கட்டிக்கொண்டு 100 கி.மீ பயிற்சி செய்தேன்!” - மாரத்தானில் சாதித்த ஜெயந்தி சம்பத்குமார்

 

ஜெயந்தி

அந்த மாரத்தான் பந்தயத்தில் பலரும் உத்வேகத்துடனும் உற்சாகமாகவும் ஓடிக்கொண்டிருந்தனர். அதில் ஒருவர் மட்டும் தனித்துவமாக அனைவரின் கவனத்தையும் ஈர்த்தார். அவர்தான் ஜெயந்தி சம்பத்குமார். முதன்முறையாக புடவை கட்டிக்கொண்டு மாரத்தானில் கலந்துகொண்ட பெண் என்ற பெருமைக்குச் சொந்தக்காரர். சமீபத்தில் ஹைதராபாத்தில் நடந்த மாரத்தான் பந்தயத்தில், மடிசார் கட்டியபடி கிட்டத்தட்ட 42 கிலோ மீட்டர் தூரத்தை 5 மணி நேரத்தில் கடந்திருக்கும் அவரை அலைபேசியில் தொடர்புகொண்டோம். 

''ஹைதராபாத்தில் வசித்தாலும் என் சொந்த ஊர் சென்னைதான். இந்தியாவுல ஒவ்வொரு மாநிலத்திலும் பிரத்யேகமாகக் கிடைக்கிற புடவைகளை வாங்கி வெச்சிருக்கேன். ஆனா, வேலை காரணமா அதிகம் உடுத்த முடியுறதில்லை. ஒரு நாள் என் கணவர், 'நீ வாங்குற சேலையை எல்லாம் கபோர்ட்தான் கட்டிக்குது'னு கிண்டலா சொன்னார். அது உண்மையும்கூடனு தோணுச்சு. அதுல இருந்து, தினமும் ஆபீஸுக்கு புடவை கட்டிட்டுப் போறதுனு முடிவெடுத்தேன். 

எனக்கு எப்பவுமே கைத்தறிப் புடவைகள்னா ரொம்பப் பிடிக்கும். அந்தப் புடவைகளுக்குப் பின்னாடி இருக்கிற நெசவாளர்களோட உழைப்பு யாருக்கும் தெரியாது. அந்தப் புடவைகளோட முக்கியத்துவத்தை மக்கள்கிட்ட கொண்டுபோய் சேர்க்கணும்னு நினைச்சேன். நான் 10 வருஷமா ஓட்டப் பந்தயங்களிலும், ஒரு வருஷமா மாரத்தான் பந்தயத்திலும் கலந்துக்கிட்டு வர்றேன். 'சரி புடவை கட்டிட்டு மாரத்தான் ஓடுவோம்... அது கைத்தறி புடவைக்கான ஒரு வெளிச்சமா அமையும்'னு நினைச்சேன்'' என்ற ஜெயந்தி, அதற்கு மடிசார் ஸ்டைலைத் தேர்ந்தெடுத்ததற்கான காரணத்தைச் சொன்னார். 

ஜெயந்தி“எங்க அம்மா, எங்க பாட்டியெல்லாம் மடிசார் கட்டிட்டுதான் எல்லா வேலைகளையும் பார்ப்பாங்க. ஆனா, புடவை கட்டிட்டு அதைப் பண்ண முடியாது, இதைப் பண்ண முடியாதுனு இப்போ ஒரு பிம்பம் இருக்கு இல்லையா... அதை உடைக்கணும்னு நினைச்சேன். புடவை கட்டிட்டு மாரத்தான் போட்டியில கலந்துக்க முடிவு செய்ததும், என்ன ஸ்டைலில் கட்டலாம்னு யோசிச்சேன். ஆந்திரா, மகாராஷ்ட்ரா, தமிழ்நாடுனு ஒவ்வொரு ஸ்டைலிலும் புடவை கட்டிப்பார்த்து மாரத்தான் போட்டிக்குப் பயிற்சி எடுத்தேன். அவற்றில் மடிசார் ஸ்டைல் ஓடுறதுக்கு வசதியா இருந்தது. 

தினமும் காலை 5 மணிக்கு புடவை கட்டிட்டு மாரத்தான் ப்ராக்டீஸை ஆரம்பிப்பேன். ஏப்ரல் மாசத்துல இருந்து கிட்டத்தட்ட 100 கிலோ மீட்டர்வரை  மாரத்தான் பயிற்சி  பண்ணியிருப்பேன். அதுக்கு ஒத்துழைப்பா இருந்த என் பெற்றோருக்கும் கணவருக்கும் நன்றி சொல்லணும். காலையில் நான் பயிற்சிக்குப் போயிடுவேன் என்பதால், வீட்டு வேலை, பசங்களை ஸ்கூலுக்குக் கிளப்பி அனுப்புறதுனு அவங்கதான் எல்லாம் பார்த்துக்கிட்டாங்க. 

மாரத்தான் போட்டில கலந்துக்க மற்றோரு முக்கியமான விஷயம், காலணிகள். முதல்ல நான் வெறுங்கால்ல கலந்துக்கலாம் என்ற ஐடியாவிலதான் இருந்தேன். ஆனா, அப்படி முயற்சி பண்ணும்போது, கல், முட்கள், பள்ளம்னு கால்ல காயங்கள் ஏற்பட ஆரம்பிச்சது.  அதனால், ஷூ போட்டுறதை தவிர்த்திட்டு, சாதாரணமா செருப்பு போட்டு கலந்துக்கிட்டேன்.

போட்டியன்று புடவையோட நான் ஓடினப்போ, நான் எதிர்பார்த்த மாதிரியே பலரும் கவனிச்சுப் பார்த்தாங்க. முழு மாரத்தானில் இதுவரை புடவை கட்டி யாரும் ஓடினதில்லை என்பதால், என் முயற்சியை கின்னஸ் சாதனையில் இடம்பெறச் செய்யும் வேலைகளில் இறங்கியிருக்கோம். என்னோட இந்தச் சிந்தனைக்கும் முயற்சிக்கும் மீடியா வெளிச்சமும் கிடைச்சது சந்தோஷமான விஷயம். இதன் மூலமா சொல்ல வர்ற மெஸேஜ் இதுதான்... ‘புடவையைக் கொண்டாடுவோம். நெசவாளர்களுக்கு வாழ்வளிப்போம்!’ " என்கிறார் ஜெயந்தி உற்சாகமாக.

http://www.vikatan.com

  • தொடங்கியவர்

ஐ வில் பி (ஃ)பேக்!

 

 
arnold1

அர்னால்ட்.

இந்தப் பெயருக்குத்தான் எத்தனை வலிமை. எத்தனை பெருமை!

வியர்வை ஆறாகக் கொட்ட, நரம்புகள் புடைக்க, இரும்பு போன்ற தசைகளைப் பெறுவதற்காக ஒவ்வொரு நாளும் ‘ஜிம்’மில் தவமாகக் கிடக்கிற எந்த ஒரு இளைஞரிடம் வேண்டுமானாலும் கேளுங்கள், ‘உங்களின் பாடிபில்டிங் ரோல்மாடல் யார்?’ என்று. அவர்கள் சொல்லும் முதல் பெயர், அர்னால்டாகத்தான் இருக்கும்!

அர்னால்ட், பாடிபில்டிங்குக்காக மட்டுமே ரோல்மாடலாக இருக்கவில்லை. ஆஸ்திரியாவில் சாதாரண ஜிம்மில் ‘பெஞ்ச் பிரஸ்’ செய்துகொண்டிருந்த ஒரு வாலிபன், பின்னாளில் ஹாலிவுட்டையே திரும்பிப் பார்க்கவைத்து, ரசிகர்களின் நெஞ்சங்களை அள்ளி, பிறகு கலிஃபோர்னியா கவர்னராகவும் ஆன பாதை இளைஞர்கள் பலருக்கும் ஒரு படிப்பினை!

ஆஸ்திரியாவில் பிறந்த அவர், தனது 15 வயது முதல் ஜிம்முக்குச் செல்ல ஆரம்பித்தார். 20 வயதில் ‘மிஸ்டர் யுனிவர்ஸ்’ பட்டத்தை வென்றார். 7 முறை ‘மிஸ்டர் ஒலிம்பியா’ பட்டத்தைத் தக்கவைத்துக்கொண்டார்.

பாடிபில்டிங் மட்டுமே செய்துகொண்டிருப்பது வாழ்க்கைக்கு உதவாது என்று நினைத்த அர்னால்ட், நடிப்பில் ஆர்வம் காட்டத் தொடங்கினார். அதன் பலன், பல ஹாலிவுட் படங்களில் அடியாளாக வலம் வந்தார். ‘உன்னுடைய உடல் பார்ப்பதற்கு ஒரு மாதிரியாக இருக்கிறது’, ‘உன்னுடைய ஆங்கில உச்சரிப்பு சரியாக இல்லை’, ‘உன்னுடைய பெயர் ரொம்ப நீளமாக இருக்கிறது’- இப்படியெல்லாம் உப்புச் சப்பில்லாத விமர்சனங்களை அவர் எதிர்கொள்ள வேண்டியிருந்தது.

இப்படிப் போய்க்கொண்டிருந்த காலத்தில் 1977-ம் ஆண்டு பாடிபில்டிங் பற்றிய ‘டாக்கு ட்ராமா’ படமான ‘பம்பிங் அயர்ன்’ எனும் படத்தில் நடித்தார். அந்தப் படம் வெளியான பிறகு அவருக்கு நிறைய படங்களில் முக்கியக் கதாபாத்திரத்தில் நடிப்பதற்கான வாய்ப்புகள் வந்தன. அவற்றைச் சரியாகப் பயன்படுத்தி வளர்ந்துவந்த அவருக்கு 1982-ம் ஆண்டு வெளியான ‘கானன் தி பார்பேரியன்’ எனும் படம் திருப்புமுனையாக அமைந்தது.

01CHDKNARNOLD

அர்னால்ட்   -  AP

அதற்குப் பின், ‘கமாண்டோ’, ‘ப்ரிடேட்டர்’, ‘ரெட் ஹீட்’, ‘டெர்மினேட்டர்’ எனப் பல வெற்றிப் படங்களில் நடித்து, ஆக்‌ஷன் ஹீரோவாகப் புகழின் உச்சிக்குச் சென்றார். ‘டெர்மினேட்டர்’ படத்தில் அவர் சொல்லும் ‘ஐ வில் பி பேக்’ (நான் திரும்பி வருவேன்) எனும் வசனம், பிரபலமோ பிரபலம்!

மேற்கண்ட பல படங்களைப் பார்த்து, உலகம் முழுவதும் அன்றைக்கு இருந்த பல இளைஞர்கள் பாடிபில்டிங்கை நோக்கி ஈர்க்கப்பட்டார்கள். இன்றைக்குப் பல இளைஞர்கள், பாடிபில்டிங்கையே ஒரு தொழிலாக வைத்திருக்கிறார்கள். அவர்களுக்காகவே ‘அர்னால்ட்: தி எஜுகேஷன் ஆஃப் எ பாடிபில்டர்’ என்ற புத்தகத்தை எழுதினார். ‘ஊமை விழிகள்’ படத்தில் அறிமுகமான அருண்பாண்டியன், அர்னால்டின் புத்தகத்தைப் படித்துத்தான் ‘இணைந்த கைகள்’ படத்துக்காகத் தன் உடலை ஏற்றியதாக ஒரு பேட்டியில் கூறியிருக்கிறார்.

நடிப்பில் உச்சத்தைத் தொட்ட அர்னால்ட், 2003-ல் கலிபோர்னியா மாகாணத்தின் கவர்னராகவும் போட்டியிட்டு வெற்றிபெற்றார். தான் பதவியிலிருந்த காலத்தில், புவி வெப்பமயமாதல் குறித்துப் பேசியதோடு அல்லாமல், பசுங்குடில் வாயுக்களைக் குறைப்பதற்கான புதிய சட்டம் ஒன்றையும் இயற்றினார். அமெரிக்காவிலேயே கலிஃபோர்னியாவில்தான் அப்படி ஒரு சட்டம் முதன்முதலாக வந்தது.

இப்படிப் பல பெருமைகள் கொண்ட அர்னால்ட், சென்ற வாரம், தன் சிலை உள்ள ஓட்டலின் முன்பு தூங்கியது போன்ற ஒளிப்படம் வெளியானபோது, இணைய உலகில் அது வைரலானது. அந்தப் படத்தின் கீழே ‘காலம் எப்படி மாறிவிட்டது?’ என்றும் எழுதப்பட்டிருந்தது.

தான் பதவியிலிருந்த காலத்தில் அமெரிக்காவின் ஒஹையோ மாகாணத்தில், தன்னை மாடலாக வைத்துச் செய்யப்பட்ட ‘கொலம்பஸ்’ சிலை உள்ள ஓட்டல் ஒன்றை அவர் திறந்துவைத்தார். தற்போது அவர் கவர்னர் பதவியில் இல்லாததாலும், பட வாய்ப்புகள் இல்லாததாலும் வறுமையால் வாடிய அவருக்கு, தங்குவதற்கான அனுமதியை அந்த ஓட்டல் நிர்வாகம் மறுத்தது. அதனால், தன் சிலை முன்பே படுத்துவிட்டார்.

இதைத்தான் கண்ணதாசன், ‘உன் நிலைமை கொஞ்சம் இறங்கிவந்தால் நிழலும்கூட மிதிக்கும்’ என்றாரோ?

இந்தக் கட்டுரையை இப்படி முடிப்போம் என்று நீங்கள் நினைத்தால் அது தவறு. வைரலான அந்தப் படம் உண்மை. ஆனால் அதற்குப் பின்னால் உள்ள கதை கட்டுக்கதை!

சென்ற ஆண்டு ஒஹையோவில் அந்தச் சிலை இருக்கும் பகுதியில் அர்னால்ட் கலந்துகொண்ட படம் ஒன்றின் ஷூட்டிங் நடந்தது. அப்போது குறும்பாக, இப்படி ஒரு படத்தை எடுத்துக்கொண்டு, அதைத் தனது ‘இன்ஸ்டாகிராம்’ பக்கத்திலும் ‘ஹவ் டைம்ஸ் ஹேவ் சேஞ்ச்ட்!’ என்ற வாக்கியத்துடன் பகிர்ந்திருந்தார். அதுதான் இன்று ‘ஓட்டல் கதை’யாகத் திரிக்கப்பட்டிருக்கிறது. இத்தனைக்கும் அந்தச் சிலைக்குப் பின்னால் இருக்கும் கட்டிடம், ஓட்டல் அல்ல. அது ‘கிரேட்டர் கொலம்பஸ் கன்வென்ஷன் சென்டர்’ எனும் ஒரு அரங்கம்.

அட போங்கப்பா! அர்னால்டாவது, வறுமையிலாவது, அடுத்த ஆண்டு ‘தி எக்ஸ்பெண்டபிள்ஸ் 4’-ல் அதிரடியா வருவார் பாருங்க… ஆமாம், ஹி வில் பி பேக்!

http://tamil.thehindu.com/

  • தொடங்கியவர்
On 4.9.2017 at 11:22 AM, நவீனன் said:

27 மதுபான குவளைகளை இரண்டு கைகளில் சுமந்து சென்று சாதனை!

 
 
27 மதுபான குவளைகளை இரண்டு கைகளில் சுமந்து சென்று சாதனை!
 

ஜேர்மனியில் 27 மதுபானக்குவளைகளை இரண்டு கைகளில் சுமந்து சென்று ஓலிவர் ஸ்ட்ரமும்பெல் என்பவர் சாதனை படைத்துள்ளார்.

27 குவளைகளில் மதுபானத்தை நிரப்பி ஒரே நேரத்தில் இரண்டு கைகளால் சுமந்து 40 மீற்றர் தூரம் வரை நடந்து சென்று குவளையில் உள்ள மதுபானம் சிந்தாமல் சிதறாமல் பத்திரமாக மேசையில் இறக்கி வைத்து சாதனை படைத்தார்.

இவர் சுமந்து சென்ற மொத்த குவளைகளும் 69 கிலோ கிராம் நிறை கொண்டது.

இதற்கு முன்பாக 29 குவளைகளை சுமந்து சென்று அதில் 2 ஜக்குகள் தவறி விழுந்தது.

இதையடுத்து இரண்டாம் கட்ட முயற்சியில் அவர் வெற்றி பெற்றார்.

 

http://newuthayan.com

 

 

 

பியரில் சாதனை படைத்த ஜெர்மானியர் 1f37b.png?1f37b.png?1f37a.png

  • தொடங்கியவர்

மனி­தர்கள் பூமியில் எப்­ப­டி­யெல்லாம் பர­வி­னார்கள்?

pix-p2-3f91242d78cab519d01ccb4a43807c118ed71e7e.jpg

 

2016ஆம் ஆண்டின் மக்கள் தொகை கணக்­கெ­டுப்­பின்­படி உலகின் மொத்த மக்கள் தொகை 7.442 பில்­லியன். இப்­போது இந்த பூமிப்­பந்து முழு­வதும் நாம் பரவிக் கிடந்­தாலும், மனி­தர்­கள் ­தோன்­றி­ய­போது இந்த நிலை நிச்­சயம் இருந்­தி­ருக்­காது.

DNA மூலக்­கூறு ஆராய்ச்சி மூலம் பல உண்­மைகள் வெளிச்­சத்­துக்­கு ­வந்­துள்­ளன. பண்­டைய மனி­தன் புகழ்­பெற்ற நேஷனல் ஜீயோ­கி­ராஃபி சேனல் 2005-ஆம் ஆண்டு “ஜெனோ­கி­ராஃபிக் ப்ராஜெக்ட்” என்ற ஒன்­றை ­ஆ­ரம்­பிக்­கி­றது. இதற்கு பல்­வேறு நாடு­களில் இருக்கும் மானு­ட­வி­ய­லா­ளர்கள் (Anthropologists) மற்றும் மெய்ப்­பொருள் மூல ஆராய்ச்­சி­யா­ளர்கள் (Paleontologists) ஆத­ரவு தெரி­வித்து உதவி வரு­கின்­றனர்.

எங்கே மனித இனம் தோன்­றி­யது,?

2,00,000 வரு­டங்­க­ளுக்கு முன்:  500,000 வரு­டங்­க­ளுக்கு முன்பே பழங்­கால மனி­தர்கள் தோன்றி இருந்­தாலும் அவர்கள் உட­ல­மைப்பில் சற்று வேறு­பட்டே இருந்­தனர். தற்­போது இருக்கும் மனித இனம் ஹோமோ சேபி­யன்கள் இனத்தைச் சார்ந்­தது. இவர்கள் முதன் முதலில் கிழக்கு ஆ­பி­ரிக்­காவில் 200,000 வரு­டங்­க­ளுக்கு முன் உரு­வா­கின்­றனர்.

70,000 வரு­டங்­க­ளுக்கு முன்: பனி யுகத்தின் குளிர்ந்த, உலர்ந்த காலத்­துக்குள் பூமி நுழை­கி­றது. பல்­வேறு பழங்­கால மனித இனங்கள், விலங்கு மற்றும் பறவை இனங்கள் இதில் அழிந்­தி­ருக்­கலாம் என்று நம்­பப்­ப­டு­கி­றது.

60,000 வரு­டங்­க­ளுக்கு முன்: அது­வரை ஆ­பி­ரிக்­காவில் மட்டும் இருந்து வந்த ஒரு சில மனித இனங்கள் முதன்­மு­றை­யாக அந்தக் கண்­டத்தை விட்டு வெளியே வரு­கின்­றனர். கால்­ந­டை­யா­கவே நெடும்­ப­யணம் மேற்­கொள்­கின்­றனர்.

50,000 வரு­டங்­க­ளுக்கு முன்: முதன் முறை­யாக மனித இனம் ஆசியா வழி­யாகக் கடல் கடந்து ஆஸ்­தி­ரே­லி­யாவில் கால் பதிக்­கி­றது. அதே சமயம், மற்றொரு கூட்டம், முதன் முறை­யாகச் செங்­க­டலை கடந்து அது­வரை சென்­றி­டாத இடங்­க­ளுக்கு எல்லாம் ஆச்­சர்­யங்­க­ளுடன் பய­ணிக்­கின்­றனர்.

40,000 வரு­டங்­க­ளுக்கு முன்: தென் கிழக்­காக பய­ணப்­பட்ட மனி­தர்கள் ஐரோப்­பாவில் வாழத் தொடங்­கு­கின்­றனர். அதே சம­யத்தில், நீயாண்­டர்தால் (Neanderthals) இன மனி­தர்கள் அழியத் தொடங்­கு­கின்­றனர். இவர்­க­ளுக்கும், நமக்கும் 99.7% DNA ஒற்­றுமை உண்டு. அதே போல் ­ம­னி­தர்கள் மற்றும் சிம்­பன்ஸி குரங்­கு­க­ளுக்கும் 98.8% DNA பொருத்தம் உண்டு.

எனவே, இந்த மூன்று இனங்­களும், ஒரு பொது­வான இனத்தில் இருந்து உரு­வாகி இருக்­கலாம் என்று நம்­பப்­ப­டு­கி­றது.

35,000 வரு­டங்­க­ளுக்கு முன்:

  இப்­போது அவர்கள் மத்­திய கிழக்கு மற்றும் மத்­திய ஆசிய பூமியை ஆக்­கி­ர­மித்து வாழத் தொடங்­கி­யி­ருந்­தனர்.

25,000 வரு­டங்­க­ளுக்கு முன்: 

பனி யுகத்தின் கடைசி அதி­க­பட்ச பனிப்­பொ­ழிவு ஏற்­பட்டு பல வகை உயி­ரி­னங்கள் அழிந்து போயின.

15,000 வரு­டங்­க­ளுக்கு முன்: 

முதன்­மு­றை­யாக மனித இனம் பெரிங் ஸ்ட்ரெய்ட்டை கடந்து அமெ­ரிக்­கா­வுக்குள் நுழை­கி­றது. இந்த வழித்­தடம், ஒரு குறு­கிய கடல் பாதை. பனி­யு­கத்தால் உரு­வான பாதை­யான இது ரஷ்­யாவில் இருக்கும் சைபீ­ரி­யா­வையும், அமெ­ரிக்­காவின் அலாஸ்­கா­வையும் இணைக்­கி­றது. இதைக் கடந்து வந்­ததன் மூலம் மனி­தர்கள் பூமியின் அனைத்து வாழக்­கூ­டிய ஸ்தலங்­க­ளுக்கும் சென்று ஆக்­கி­ர­மித்­து­விட்­டனர்.

12,000 வரு­டங்­க­ளுக்கு முன்: 

வேட்­டை­யாடி மட்டும் இனி வாழ முடி­யாது என்­பதை மனிதன் உணர்­கிறான். முதன்­மு­றை­யாக விவ­சாயம் செய்யத் தொடங்­கு­கிறான்.

இன்றுமக்கள் தொகை பெருக்கெடுக்க அனைவருக்கும் வாழ்வாதாரம் கிடைக்காமல் திண்டாடிக் கொண்டிருக்கிறார்கள். அறிவியலும், பூமியை விடுத்து வேறு கிரகங்கள் எங்காவது போய் வாழ முடியுமா என்று தேடிக் கொண்டிருக்கிறோம்.

http://www.virakesari.lk/

  • தொடங்கியவர்

பிரிட்டிஷ் இளவரசி கேட் மூன்றாவது முறையாக தாயாகிறார்

பிரிட்டிஷ் இளவரசர், கேம்பிரிட்ஜ் கோமகன், வில்லியமும் அவரது மனைவி, கேத்தரைனும், மூன்றாவது முறையாக ஒரு குழந்தைக்கு பெற்றோராகப் போகிறார்கள்.

இளவரசர் வில்லியம், மனைவி கேட்படத்தின் காப்புரிமைGETTY IMAGES Image captionமூன்றாவது முறையாக கர்ப்பம்

இத்தகவலை இளவரசரின் கென்ஸிங்டன் மாளிகை அதிகார பூர்வமாக அறிவித்த்து.

பிரிட்டிஷ் அரசி எலிசபத்தும், இளவரசர் மற்றும் கேத்தரைனின் குடும்பத்தாரும் இச்செய்தியால் மிகவும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர் என்று தெரிகிறது.

35 வயதாகும் கேட் வில்லியம் , அவரது முந்தைய இரண்டு கர்ப்ப காலங்களைப் போலவே, இப்போது கர்ப்பிணிகளுக்கு காலையில் ஏற்படும் கடும் மசக்கையால் பாதிக்கப்பட்டுள்ளாராம்.

எனவே இன்று அவர் கலந்துகொள்வதாக இருந்த ஒரு நிகழ்ச்சியில் அவர் கலந்து கொள்ளமாட்டார்.

வில்லியம் மற்றும் கேத்தரைனுக்கு ஏற்கனவே ஜார்ஜ் (4) மற்றும் ஷார்லோட் (2) ஆகிய இரு குழந்தைகள் உள்ளனர்.

மசக்கை பொதுவாக 200ல் ஒரு கர்ப்பிணிகளை பாதிக்கிறது. இதன் காரணமாக கடும் தலைசுற்றலும் வாந்தி எடுக்கும் உணர்வும் ஏற்படும்.

பிரிட்டிஷ் ராஜ குடும்பம்படத்தின் காப்புரிமைPA Image captionபெரிதாகும் பிரிட்டிஷ் ராஜ குடும்பம்

இந்த வாரம் இந்த அரச குடும்ப தம்பதியருக்கு முக்கிய வாரம் என்று கூறும் பிபிசியின் அரச குடும்ப விவகாரச் செய்தியாளர் நிக்கோலஸ் விட்ச்செல், இளவரசர் ஜார்ஜ் இந்த வாரம்தான் தொடக்கப் பள்ளிக்கு செல்லத் தயாராகிக்கொண்டிருந்தார், அவரை பள்ளிக்கூடத்துக்கு இட்டுச்செல்ல கேத்தரைன் விரும்பியிருக்கலாம்; ஆனால் இப்போதைய நிலையில் அது சாத்தியமா என்று தெரியவில்லை, என்கிறார்.

 

பிறக்கவிருக்கும் இக்குழந்தை பிரிட்டிஷ் அரசபீடத்துக்குத் தகுதியாக இருப்போர் வரிசையில் , இளவரசர் சார்லஸ், இளவரசர் வில்லியம், இளவரசர் ஜார்ஜ் மற்றும் இளவரசி ஷார்லோட்டுக்கு அடுத்து ஐந்தாவதாக வரும்.

பிரிட்டிஷ் ராஜ குடும்ப வரிசைப் பட்டியலில் ஆண் வாரிசுகள் அவர்களுடன் கூடப் பிறந்த பெண்களை முந்திக்கொள்ளும் வழக்கம் 2015ம் ஆண்டு கொண்டுவரப்பட்ட சட்டம் ஒன்றின் மூலம் முடிவுக்கு வந்தது.

பிறக்கவிருக்கும் இக்குழந்தை பிரிட்டிஷ் அரசி எலிசபத்தின் ஆறாவது கொள்ளுப் பேரன்(அல்லது பேத்தியாக) இருக்கும்.

இச்செய்தி குறித்து, இளவரசர் சார்லஸ் மற்றும் அவரது மனைவி கெமிலா மற்றும் பிரிட்டஷ் பிரதமர் தெரிசா மே ஆகியோர் மகிழ்ச்சி தெரிவித்து டிவிட்டரில் செய்தி வெளியிட்டுள்ளனர்.

http://www.bbc.com

  • தொடங்கியவர்

`உன் கண்ணீரின் கனத்தை பூமி தாங்காது' - கிரிக்கெட் வீரர் கம்பீரின் மறுபக்கம்

 
 

அது நல்ல ஆட்டமோ, அவ்வளவாகச் சிறப்பில்லாத ஆட்டமோ இந்திய கிரிக்கெட் அணியின் கெளதம் கம்பீர் முகத்தில் எந்தவித உணர்ச்சிகளையும் பார்க்க முடியாது. ஆனால், அவருக்கு வேறோரு முகம் உண்டு எனக் காட்டியுள்ளார். இந்திய பாதுகாப்புப் படை வீரர்கள் குறித்து பலமுறை நெகிழ்ச்சியாகக் கருத்து சொல்லியிருக்கிறார். இன்னும் கூடுதலாக இதற்கு முன் சத்தீஸ்கரில் நடந்த தாக்குதலில் கொல்லப்பட்ட 25 சி.ஆர்.பி.எஃப் வீரர்களின் பிள்ளைகளுக்கு தனது அறக்கட்டளை மூலம் முழுமையான கல்விச்செலவை ஏற்றுக்கொண்டது குறிப்பிடத்தக்கது.  தற்போது செய்திருக்கும் செயலால் மற்ற வீரர்களுக்கும் உதாரணமாக இருந்துள்ளார். 

கம்பீர்

கம்பீர், ஸோக்ராவின் முழு வாழ்க்கைக்குமான கல்விச் செலவை ஏற்றுக்கொண்டுள்ளார். ஸோக்ரா, காஷ்மீரின் ஆனந்த்நாக் பகுதியில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் பலியான உதவி துணை ஆய்வாளர் அப்துல் ரஷீத்தின் மகள். `ஸோக்ரா, தாலாட்டுப் பாடி உன்னை என்னால் தூங்கவைக்க முடியாது. ஆனால், உன் கல்விக்கனவுகளை நீ அடைய உன்னை விழிக்கவைக்க முடியும். உன் வாழ்க்கை முழுவதற்குமான கல்வி பயில உதவி செய்வேன் இந்தியாவின் மகளே' என தன் டிவிட்டரில் குறிப்பிட்டுள்ளார். அப்துல் ரஷீத் இறந்தபோது ஸோக்ரா கதறி அழும் படம், இந்திய ஊடகங்களில் வைரலாகப் பரவியது. அந்தப் படம்தான் கம்பீரை இப்படியான முடிவு எடுக்கச் செய்துள்ளது. 

அதற்கு அடுத்தும் ஒரு டிவிட் எழுதியுள்ளார் கம்பீர். ஸோக்ரா கண்ணீர்விட்டு கதறும் படம்கொண்ட அந்த டிவிட்டில் `உன் கண்களிலிருந்து வழியும் கண்ணீரை பூமியில் வழியவிடாதே! உன் மனவேதனையைத் தாங்கும் வலிமை பூமித்தாய்க்கே இல்லை. உன் தந்தை மாவீரர் அப்துல் ரஷீத்துக்கு வணக்கங்கள்' எனத் தெரிவித்துள்ளார்.  கம்பீர் - நட்டாஷா தம்பதிக்கு, கடந்த 2011-ம் ஆண்டு திருமணம் நடந்தது. அவர்களுக்கு ஏற்கெனவே ஆசின் என்கிற பெண் குழந்தை உள்ளது. தற்போது, இரண்டாவதாக பெண் குழந்தை பிறந்துள்ளது. இரண்டுமே பெண் குழந்தைகள் கொண்டுள்ள கௌதம் கம்பீருக்கு, ஸோக்ராவின் கண்ணீர் மனதை நெகிழ்த்திவிட்டது. 

 அப்துல் ரஷீத்தைப் போன்று களப்பலியாகும் காவல் துறையினரின் குடும்ப நிதிக்கு அந்த மாநில காவல்துறை நன்கொடை கேட்டு ஓர் அறிக்கை வெளியிட்டது. இந்த அறிக்கை, சமூக ஊடகங்களில் பரபரப்பாகப் பகிரப்பட்டது. இதைத் தொடர்ந்து காஷ்மீரின் பல்வேறு பகுதிகளில் இருக்கும் பொதுமக்களிடமிருந்து நன்கொடைகள் குவியத் தொடங்கியுள்ளன. 

 

ஸோக்ராவுக்கு ஆறுதல் சொல்லி தெற்கு காஷ்மீரின் டி.ஐ.ஜி முகநூலில் ஒரு நிலைத்தகவல் பதிந்துள்ளார். அது, படிப்பவர்களுக்குக்  கண்ணீர் வரவழைக்கும் அளவுக்கு உள்ளது. அதில் `மகளே, உண்மையில் என்ன நடந்துள்ளது என்பதை நீ புரிந்துகொள்ளும் வயதில் இல்லை. ஆனால், உன் தந்தை செய்துள்ள தியாகம் அளப்பரியது' என்று தொடங்கும் அந்தக் கடிதத்தில் `நம் காவலர்களின் குடும்பங்கள் இதுபோன்ற பல இழப்புகளை எதிர்கொண்டு மிகப்பெரிய அதிர்ச்சிகளைச் சந்தித்து வருகின்றன.  நாட்டுக்காக தியாகம் செய்த வீரர்களும், அந்த வீரர்களின் குடும்ப உறுப்பினர்களின் முகங்களும் நமக்கான மிகப்பெரிய வரலாற்றை உருவாக்குகின்றன. நாங்கள் இந்தக் காலகட்டத்தில் வாழ்ந்தோம். இந்த நாட்டைக் காப்பாற்றுவதற்காக அளப்பரிய தியாகங்களைச் செய்துள்ளோம் என்கிற பெருமைமிகுந்த வரலாற்றை ஏற்படுத்துகிறது' என்ற அந்த முகநூல் நிலைத்தகவல்,  ஆயிரக்கணக்கில் பகிரப்பட்டது. இந்த ஸ்டேட்டஸ்தான் கம்பீர் கவனத்தை ஈர்த்துள்ளது. அதில் பார்த்த ஸோக்ராவின் படம் அவரின் கண்களைக் கலங்கச் செய்துவிட்டது.

http://www.vikatan.com

  • தொடங்கியவர்

சல்வார் கமீஸில் கலக்கிய இந்திய மல்யுத்த வீராங்கனை!

 

லக மல்யுத்தப் பொழுதுபோக்கு (டபிள்யூ.டபிள்யூ.இ), இந்தியப் பங்கேற்பாளர்களுக்குப் புதியதல்ல. WWE சாம்பியனான கிரேட் காளியின் பயிற்சியின் கீழ், நிறைய மல்யுத்த வீரர்கள் உருவாகிறார்கள். அந்த வரிசையில், இந்தியாவின் முதல் பெண் மல்யுத்த வீரராக ஹரியானாவின் கவிதா தேவியும் தற்போது இணைந்துள்ளார்.

முதல் போட்டியில், நியூஸிலாந்து மல்யுத்த வீரர் டகோட்டா  காய் (Dakota kai) உடன் போட்டிபோட்ட கவிதா, முதல் சுற்றில் தோல்வி அடைந்தாலும், அவரது மல்யுத்தத் திறன்கள் மற்றும் அவரது ஆடை (சல்வார் கமீஸ்) மல்யுத்த ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தது.

கவிதா தேவி

 


பஞ்சாப் மல்யுத்த ஊக்குவிப்பு மற்றும் பயிற்சி அகாடமியில் ஹரியானாவிலிருந்து வருகை தந்த மல்யுத்த வீரர்,  தி கிரேட் காளி (தலிப் சிங் ரானா) வழிகாட்டலின் கீழ், ஒரு தொழில்முறை மல்யுத்த வீரராகப் பயிற்சிபெற்றார். இவர், பி புல் புல் (B Bull Bull)  என்கிற பெண் மல்யுத்த வீரருடன் மல்யுத்தம் செய்யும் வீடியோ, சமூக வலைதளங்களில் அதிக அளவு பகிரப்பட்டது. அந்த வீடியோவுக்குப் பின்னர், அவர் பெரிய அளவில் புகழ்பெற்றார்.

WWE டேலன்ட் டெவலப்மென்ட் துணைத் தலைவர் கனியன் சேமான், "அவர் ஒரு விளையாட்டு வீரர் மற்றும் மிக வலுவான பெண், WWE-வில் வரவிருக்கும் மே யங் கிளாசிக் போட்டியில் நிச்சயம் அவரது திறமையை வெளிப்படுத்துவார்' என்றார். இந்த வாய்ப்பைப் பற்றி பேசிய கவிதா, "WWE -யின் முதல் பெண்கள் போட்டியில் போட்டியிடும் முதல் இந்தியப் பெண்ணாக நான் கருதப்படுகிறேன். மற்ற இந்தியப் பெண்களை ஊக்குவிப்பதற்காகவும், இந்தியாவைப் பெருமைப்படுத்தவும் இந்த மேடையைப் பயன்படுத்த விரும்புகிறேன்" என்றார்.

http://www.vikatan.com/

  • தொடங்கியவர்

செக்கிழுத்தச் செம்மலும் ஆன்மிகமும் - வ.உ.சி பிறந்தநாள் சிறப்புப் பகிர்வு

 
 

செக்கிழுத்தச் செம்மல் வ. உ.சிதம்பரத்தை சுதந்திரப்போராட்ட வீரராக, தொழிலாளர் வர்க்கப் போராளியாக அறிந்திருப்போம். ஆனால் அவரது நூல்கள், அவரை ஓர் ஆன்மிக எழுத்தாளராகவும் அடையாளம் காட்டுகிறது. ஆரம்ப காலத்தில், தூத்துக்குடியில் வ.உ.சி நடத்தி வந்த 'விவேக பானு' என்ற ஆன்மிக இதழில் ஸ்ரீராமகிருஷ்ணர், சுவாமி விவேகானந்தர் ஆகியோரைப் பற்றி கட்டுரைகள் வெளியிட்டு வந்தார். அப்போது 1901-ம் ஆண்டு சுவாமி ராமகிருஷ்ணாவுடன் உண்டான நட்பே வ.உ.சி-க்கு சுதேசி எண்ணங்களை உருவாக்கியது என்று அவரே தெரிவித்துள்ளார்.  சிதம்பரம், கண்ணனூர் சிறையில் உடனிருந்த கைதிகளுக்கு கற்பிக்கவென்றே, 10 அதிகாரங்களைக்கொண்ட 100 வெண்பாக்கள் அடங்கிய 'மெய்யறிவு' என்ற நூலை இயற்றினார். 

வ.உ.சி

இந்த நூல், 1.தன்னையறிதல், 2. விதி அறிதல் 3. உடலை வளர்த்தல், 4. மனதை ஆளுதல் 5. தன்னிலை நிற்றல் 6. மறம் களைதல் 7. அறம் செய்தல் 8. தவ வாழ்வு 9. மெய் உணர்தல் 10. மேன்மை அடைதல் என்ற அதிகாரங்களைக்கொண்டிருந்தது. இந்த நூலின் வழியே, மெய்ஞான வழியில் நம் வாழ்வை எப்படி அமைத்துக்கொள்வது  என்று கற்பித்தார். மேலும்,  'அகமே புறம்' என்ற மொழிபெயர்ப்பு  நூல் வழியே அமைதியான வாழ்வும், அதன் வழி வீடு எனும் சொர்க்கத்தை அடையும் விதம்குறித்து எழுதினார். மேலும், மெய்கண்டார் எழுதிய சிவஞானபோதத்தை ஆராய்ந்து உரை எழுதியுள்ளார். இவர் எழுதிய 'பாடல் திரட்டு' ஞான மார்க்கத்தை விவரிக்கும் நூலாக வெளியானது. இந்த நூலில், 380 பாடல்கள் அமைந்திருந்தன. அதில் 100 பாடல்கள் இறைவன் பற்றியும், 100 பாடல்கள் ஒழுக்கமான வாழ்வைப் பற்றியும் இருந்தன. மீதமிருந்த 180 பாடல்கள் உறவும், நட்பும் எப்படி அமைய வேண்டும் என்பதைச் சொல்லியது. இவருடைய 16 நூல்களில் அரசியல், விடுதலைச் செய்திகள் எதுவுமின்றி, இலக்கியம், ஆன்மிகம்குறித்தே எழுதப்பட்டிருந்தன. இதனாலேயே, பின்னாளில் சுவாமி சகஜானந்தர், ராஜாஜி போன்றவர்கள் வ.உ.சி-யிடம் பயின்றார்கள் என வரலாறு கூறுகிறது.

வ. உ. சிதம்பரம்

 

இவரது இறுதிக் காலத்தில்கூட, 'தூத்துக்குடி சைவசித்தாந்த சபை' என்ற அமைப்பை நிறுவி, ஆன்மிகத் தொண்டு செய்துவந்தார். தன் வாழ்நாள் முழுக்க தேசிய விடுதலையை மட்டுமன்றி ,ஆன்மிகத் தேடுதலுக்கான நீதியையும் வ.உ.சி வழங்கியே வந்துள்ளார். அந்தப் பெருமானாரின் பிறந்த தினம் செப்டம்பர் 5-ம் நாள் கொண்டாடப்படுகிறது. இந்நாளில், இவரை நினைவுகூர்ந்து போற்றுவோம்.

http://www.vikatan.com

  • தொடங்கியவர்
‘கண்டு கொள்ளாமல் இருப்பதே நல்லது’

image_95a5e5639d.jpgமனதையும் அறிவையும் முடக்கிவிடச் சிலர் குதர்க்கத்தை ஆயுதமாகக் கொள்கின்றார்கள். 

ஒருவரது சிந்தனை, தெளிவாக இருக்கும்போது, தேவையற்ற கருத்துகளை விதைத்துக் குழப்புவதே சிலருக்குச் சந்தோசகரமான பொழுதுபோக்காக இருக்கிறது. மக்கள் கூட்டத்தை, தங்களது குதர்க்க வாதத்தால் கலங்கடிக்கச் செய்வது, அரசியல்வாதிகளின் அசுர பலமாகிவிட்டது.

மதம், மொழி, இனபேதங்களை உருவாக்கி, அவர்களைச் சிந்திக்கவே விடாமல்ச் செய்யும் இந்தப் பாவ ஆத்மாக்கள், எதிர்கால உலகத்துக்காகச் செய்யும் அனர்த்தமானது சுனாமி, நிலஅதிர்வு, எரிமலை வெடிப்பு போன்றவற்றை விட மோசமானது. 

வெறும் வாயால், தீயனவற்றை மட்டும் உச்சரிக்கும், இழிவானோரைக் கண்டு கொள்ளாமல் இருப்பதே நல்லது.  

  • தொடங்கியவர்

வரலாற்றில் இன்று…

செப்டெம்பர் – 06

 

1522 : பேர்­டினண்ட் மக­லனின் விக்­டோ­ரியா கப்பல் உயிர் தப்­பிய 18 பேருடன் ஸ்பெயினை வந்­த­டைந்து, முதன் முதலில் உலகைச் சுற்றி வந்த கப்பல் என்ற பெயரைப் பெற்­றது.


1620 : வட அமெ­ரிக்­காவில் குடி­யே­று­வ­தற்­காக இங்­கி­லாந்தின் பிளை­மவுத் நக­ரி­லி­ருந்து மேபி­ளவர் எனும் கப்­பலில் மக்கள் புறப்­பட்­டனர்.


1776 : கரி­பியன் தீவான குவா­த­லூப்­பேயை சூறா­வளி தாக்­கி­யதில் 6000 பேர் கொல்­லப்­பட்­டனர்.


varaaru-06-09-Verwoerd_Transvaler1873 : இலங்­கையில் புதி­தாக வட­மத்­திய மாகாணம் அமைக்­கப்­பட்டு, இலங்­கையின் மாகா­ணங்கள் ஏழாக அதி­க­ரிக்­கப்­பட்­டது. 


1901 : அமெ­ரிக்க ஜனா­தி­பதி வில்­லியம் மெக்­கின்லே நியூ­யோர்க்கில் லியோன் சியால்கோஸ் என்­ப­வனால் சுடப்­பட்டுப் படு­கா­ய­ம­டைந்தார்.


1930 : ஆர்­ஜெண்­டீ­னாவின் ஜனா­தி­பதி ஹிப்­போ­லிட்டோ இரி­கோயென் இரா­ணுவப் புரட்­சியை அடுத்து பத­வியிலிருந்து அகற்­றப்­பட்டார்.


1936 : அவுஸ்­தி­ரே­லி­யாவின் தஸ்­மே­னியா தீவில் கடைசி தஸ்­மா­னியப் புலி,  ஹோபார்ட் நகரில் இறந்­தது.


1939 : இரண்டாம் உலகப் போரில் ஜேர்­ம­னிக்கு எதி­ராக தென் ஆபி­ரிக்கா போர்ப் பிர­க­டனம் செய்­தது.


1946 : ஐக்­கிய தேசியக் கட்சி டி. எஸ். சேன­நா­யக்­கா­வினால் ஆரம்­பிக்­கப்­பட்­டது.


1966 : தென் ஆபி­ரிக்க நிற­வெறி ஆட்­சியின் சிற்பி என வர்­ணிக்­கப்­படும் பிர­தமர் ஹெண்ட்ரிக் வேர்வேர்ட் (64), கேப் டவுண் நகரில் நாடா­ளு­மன்ற அமர்வின் போது நாடா­ளு­மன்ற ஊழி­ய­ரான திமித்ரி என்­ப­வனால் கத்­தியால் குத்தி கொலை செய்­யப்­பட்டார்.


1968 : ஐக்­கிய இராச்­சி­யத்­திடம் இருந்து சுவா­ஸி­லாந்து சுதந்­திரம் பெற்­றது.


1970 : ஐரோப்­பாவிலிருந்து நியூயோர்க் சென்று கொண்­டி­ருந்த இரண்டு பய­ணிகள் விமா­னங்கள் கடத்­தப்­பட்டு ஜோர்­தா­னுக்குக் கொண்டு செல்­லப்­பட்­டன.


1990 : யாழ்ப்­பாணக் கோட்டை மீதான புலி­களின் முற்­று­கையின் போது இலங்­கையின் குண்­டு­வீச்சு விமானம் ஒன்று சுட்டு வீழ்த்­தப்­பட்­டது.


1991 : ரஷ்­யாவின் லெனின்­கிராட் நகரம் மீண்டும் சென் பீட்­டர்ஸ்பேர்க் எனப் பெயர் மாற்றம் செய்­யப்­பட்­டது.


1997 : பிரித்­தா­னிய இள­வ­ரசி டயா­னாவின் உடல் அடக்கம் செய்­யப்­பட்­டது. 250 கோடி மக்கள் தொலைக்காட்சி மூலம் இந்நிகழ்வைப் பார்வையிட்டனர்.


2009 : பிலிப்பைன்ஸில் 971 பேருடன் பயணித்துக் கொண்டிருந்த கப்பல் ஒன்று கவிழ்ந்தது. 10 பேரைத் தவிர ஏனையோர் காப்பாற்றப்பட்டனர்.


2012 : துருக்­கி­யி­லி­ருந்து கிறீஸ் நோக்கி குடி­யேற்­ற­வா­சி­களை ஏற்­றிச்­சென்ற மீன்­பிடிப் பட­கொன்று பாறையில் மோதி கவிழ்ந்­ததால் 61 பேர் உயிரிழந்தனர்.

http://metronews.lk

  • தொடங்கியவர்

ஜான் ஜேம்ஸ் ரிக்கர்ட் மெக்லியோட் 06CHRGNMACLOED%202

ஸ்காட்லாந்து நாட்டைச் சேர்ந்த உயிரிவேதியியலாளரும் விஞ்ஞானியும் மருத்துவத்துக்கான நோபல் பரிசை வென்றவருமான ஜான் ஜேம்ஸ் ரிக்கர்ட் மெக்லியோட் (John James Rickard Macleod) பிறந்த தினம் இன்று (செப்டம்பர் 6). அவரைப் பற்றிய அரியமுத்துக்கள் பத்து:

* மத்திய ஸ்காட்லாந்தின் க்ளுனி என்ற இடத்தில் பிறந்தார் (1876). இவரது தந்தை வட கிழக்கு ஸ்காட்லாந்தின் ஆபர்டீன் நகருக்குப் பணியிட மாற்றம் செய்யப்பட்டவே அங்குள்ள கிராமர் பள்ளியில் பயின்றார். பின்னர் ஆபர்டீன் பல்கலைக்கழகத்தில் மருத்துவப் படிப்பில் சேர்ந்தார். 1898-ல் மருத்துவத்தில் முனை வர் பட்டம் பெற்றார்.

* ஜெர்மனியில் உள்ள லீப்ஸிக் பல்கலைக்கழகத்தில் உயிரிவேதியியல் பயின்றார். பிரிட்டன் திரும்பியவுடன் லண்டன் ஹாஸ்பிடல் மருத்துவக் கல்லூரியில் வேலை கிடைத்தது. 1902-ல் உயிரிவேதியியல் துறையின் விரிவுரையாளராக நியமிக்கப்பட்டார்.

* 1903-ல் அமெரிக்கா சென்று, வெஸ்டர்ன் ரிசர்வ் பல்கலைக்கழகத்தில் உடலியல் துறை விரிவுரையாளராகப் பதவியேற்றார். முதல் உலகப்போரில், பல்வேறு போர்க்கால கடமைகளையும் ஆற்றினார். போருக்குப் பிறகு டொரென்டோ பல்கலைக்கழகத்தில் உடலியல் துறை ஆய்வுக்கூடத்தின் இயக்குநராகவும் மருத்துவ டீனின் உதவியாளராகவும் நியமிக்கப்பட்டார்.

* மைக்ரோ பாக்டீரியம் காசநோய், மின் அதிர்ச்சிகள், கிரியேட்டனின் வளர்சிதை மாற்றம் மற்றும் மூளையின் ரத்த ஓட்டம் ஆகியன குறித்து ஆராய்ந்தார். 1905-ல் கார்போஹைட்ரேட் வளர்சிதை மாற்றம், நீரிழிவு குறித்த ஆராய்ச்சிகளில் அதிக கவனம் செலுத்தத் தொடங்கினார்.

* டொரென்டோ பல்கலைக்கழகத்தில் 6 ஆண்டு மருத்துவப் படிப்பு உருவாக முக்கிய காரணமாக இருந்தார். 1920-ல் கனடாவைச் சேர்ந்த இளம் மருத்துவர் பாண்டிங் இவரிடம் நீரிழிவு நோயை கணையத்திலிருந்து பெறப்படும் பொருளின் மூலமாகக் குணப் படுத்த முடியும் என்று யோசனை தெரிவித்தார்.

* இந்த ஆராய்ச்சிக்காக ஆய்வுக்கூட இடம், சோதனைக்கான விலங்குகள், பகுப்பாய்வு நுட்பங்கள் மற்றும் அவருக்கு உதவ தன் மாணவர்களுக்குத் தந்து உதவினார். பிறகு, அவர்களோடு இணைந்து இன்சுலின் ஆராய்ச்சி மேற்கொண்டார். அடுத்தடுத்த வெற்றிகளுக்குப் பிறகு, அந்த ஒட்டுமொத்த ஆராய்ச்சிக் கூடத்தையுமே இன்சுலின் ஆராய்ச்சி நிலையமாக மாற்றிவிட்டார்.

* 1922-ல் இந்தக் குழு முதன்முதலாக மருத்துவ ரீதியாக மனிதரிடம் நடத்தப்பட்ட சோதனையில் வெற்றி கண்டது. 1923-ல் இன்சுலின் கண்டுபிடிப்புக்கும் பிரித்தலுக்குமான இவரது பங்களிப்புகளுக்காக ஃபிரெட்ரிக் பாண்டிங்குடன் இணைந்து உடலியல் அல்லது மருத்துவத்துக்கான நோபல் பரிசை வென்றார்.

* 1928-ல் ஸ்காட்லாந்து அபெர்தீன் பல்கலைக்கழகத்தில் உடலியங்கலியல் துறை பேராசிரியராகவும் பின்னர் மருத்துவத் துறை டீனாகவும் பணியாற்றினார். ‘பிசியாலஜி அன்ட் பயோகெமிஸ்ட்ரி இன் மாடர்ன் மெடிசின்’, ‘பிராக்டிகல் ஃபிசியாலஜி’, ‘டயாபெடீஸ்: இட்ஸ் பாதாலஜிகல் ஃபிசியாலஜி’, ‘கார்போஹைட்ரேட் மெடபாலிசம் அன்ட் இன்சுலின்’ உள்ளிட்ட 11 நூல்களை எழுதினார்.

* தனியாகவும் பிறருடன் இணைந்தும் 200-க்கும் மேற்பட்ட கட்டுரைகளை எழுதியுள்ளார். கார்போஹைட்ரேட்டின் சமநிலையைப் பராமரிப்பதில் முக்கியப் பங்காற்றும் மத்திய நரம்பு மண்டல ஆராய்ச்சிகளுக்கு மிகப் பெரிய பங்களிப்பை வழங்கினார்.

* ஆராய்ச்சிகளுக்காகவே தனது வாழ்நாள் முழுவதும் செலவிட்டவரும் உடலியல், மருத்துவத்துறைகளில் மகத்தான பங்களிப்பை வழங்கியவருமான ஜான் ஜேம்ஸ் ரிக்கர்ட் மெக்லியோட் 1935-ம் ஆண்டு தமது 59-வது வயதில் மறைந்தார்

http://tamil.thehindu.com

  • தொடங்கியவர்

இடம் பொருள் மனிதர் விலங்கு: அறிவு வேட்டைக்கு நீங்கள் தயாரா?

 

 
6chsujIdamBjpg

யா

னைபோல் ஆடி அசைந்து ஒரு பெரிய கப்பல் எகிப்தில் உள்ள அலெக்ஸாண்ட்ரியா துறைமுகத்தில் வந்து நின்றது. அதற்காகவே காத்திருந்ததுபோல் கரையில் இருந்த வீரர்களும் அரசு அதிகாரிகளும் கப்பலில் தாவி ஏறினார்கள். சரக்குகள் வைக்கும் அறை, ஆட்கள் அமரும் இடம், கப்பலைச் செலுத்தும் இடம் என்று எதையும் விட்டுவைக்காமல் கவனமாகத் தேட ஆரம்பித்தார்கள். பல மணி நேரத்துக்குப் பிறகு அவர்கள் தேடிய விலை மதிக்க முடியாத பொருள் அகப்பட்டது. அரசு மரியாதை கொடுத்து உற்சாகத்துடன் அதை எடுத்துக்கொண்டு போனார்கள்.

இது நடந்தது கிட்டத்தட்ட 2,300 ஆண்டுகளுக்கு முன்பு. அந்தப் பொருளின் பெயர் புத்தகம். எகிப்தில் வந்து நிற்கும் ஒவ்வொரு கப்பலையும் சோதனை போட்டு புத்தகங்களைக் கண்டுபிடித்து அள்ளிக்கொண்டு போவது அப்போதைய வழக்கம். இப்படிச் சேகரிக்கப்படும் புத்தகங்களை ஒரு பெரிய கட்டிடத்தில் அடுக்கி வைத்தார்கள். மனிதர்கள் வசிப்பதற்கு எப்படி வீடு முக்கியமோ அப்படிப் புத்தகங்கள் வசிப்பதற்கு ஓர் இடம் தேவை என்று நினைத்தார் அப்போது எகிப்தை ஆண்டுவந்த முதலாம் தாலமி சோத்தர் என்ற மன்னர். உலகின் முதல் நூலகம் இப்படிதான் உருவாக ஆரம்பித்தது. அதன் பெயர், அலெக்ஸாண்ட்ரியா நூலகம்.

நூலகத்தைக் கவனித்துக்கொள்ள அதிகாரிகள் நியமிக்கப்பட்டிருந்தனர். கப்பலில் இருந்தும் பிற இடங்களில் இருந்தும் தங்களுக்கு வந்துசேரும் ஒவ்வொரு புத்தகத்தையும் இந்த அதிகாரிகள் கவனமாக ஆராய்வார்கள். ஏற்கெனவே இந்தப் பிரதி நம்மிடம் இருக்கிறதா என்று பார்ப்பார்கள். இருக்கிறது என்றால் சம்பந்தப்பட்டவர்களிடமே திருப்பிக் கொடுத்துவிடுவார்கள். இல்லை என்றால் மகிழ்ச்சியோடு உள்ளே அடுக்கி வைத்துவிடுவார்கள்.

சில நேரம், மிகவும் அரிதான ஒரு புத்தகம் கிடைக்கும். தொட்டால் உடைந்துவிடும் அளவுக்கு அது பழசாக இருக்கும். அதை அப்படியே உள்ளே வைப்பது ஆபத்து அல்லவா? எனவே நூலகத்தில் இருப்பவர்கள் அந்த அரிய புத்தகத்தைப் பிரித்து, ஒவ்வொரு பக்கமாகக் கவனமாகத் திருப்பி, ஒரு புதிய பிரதியை எடுப்பார்கள். பழைய புத்தகத்திலிருந்து ஒரு புதிய புத்தகம் தயார்!

சரி, எதற்காக இந்தப் புத்தக வேட்டை? அறிவுக்கு முடிவு இல்லை. எனக்குக் கிடைக்கும் புத்தகங்களைப் படித்தால் மட்டும் போதாது. பக்கத்து நாட்டில் உள்ள மக்கள் என்ன எழுதியிருக்கிறார்கள் என்று பார்க்கவேண்டும். அதையெல்லாம் வாங்கிப் படித்தாலும் போதாது. அதற்குப் பக்கத்தில் உள்ள நாடுகளில் என்ன எழுதப்படுகிறது என்று தேடவேண்டும். பிறகு அதற்கும் பக்கத்தில் உள்ள நாடுகள். இப்படியே உலகம் முழுக்கத் தேடிக்கொண்டே இருந்தால்தான் நம் அறிவு விரிவடையும். இது எகிப்தியர்களின் நம்பிக்கை.

நாடு பிடிக்கும் ஆசை கொண்ட மன்னர்கள் இப்படித்தான் இருப்பார்கள். அவர்களுக்கு ஒரு நாடு போதவே போதாது. பக்கத்து நாட்டின்மீது போர் தொடுத்து அதை இணைத்துக்கொள்வார்கள். பிறகு அதற்குப் பக்கத்திலுள்ள நாடு. பிறகு அதற்கு எதிரிலுள்ள நாடு. இப்படியே உலகம் முழுவதையும் ஆக்கிரமிக்கவேண்டும் என்று துடிப்பார்கள்.

3chsujIdamAjpg
 

நாட்டை விரிவாக்குவது போலவே அறிவையும் விரிவாக்கவேண்டும் என்று எகிப்தியர்கள் நினைத்ததால்தான் அலெக்ஸாண்ட்ரியா நூலகம் உருவானது. நாலாபுறமும் தேடித்தேடி லட்சக்கணக்கான புத்தகங்களைச் சேமித்து வைத்திருந்தார்கள். எல்லாமே பாபிரஸ் தாவரத்திலிருந்து தயாரிக்கப்பட்ட காகிதங்களைக் கொண்டு உருவாக்கப்பட்டவை.

படிப்பதற்கான இடம் மட்டுமல்ல அது. எல்லோரும் கூடி அமர்ந்து விவாதிக்கலாம். நீ சொல்வது தப்பு, நான் சொல்வதுதான் சரி என்று வாதம் செய்யலாம். அதை இன்னொருவர் மறுத்துச் சண்டைபோடலாம். இரண்டு பேருமே தப்பு என்று தாடி வைத்த ஒரு தாத்தா வந்து இருவரையும் சமாதானம் செய்யலாம். சுற்றி நிறைய இடம் இருக்கும், நடந்துகொண்டே பேசலாம். வண்ண மலர்த் தோட்டங்கள் இருக்கும். அப்படியே காலை நீட்டி புல்லின்மீது படுத்துக்கொண்டு கவிதை படிக்கலாம்.

இன்னோர் அறை இருந்தது. அங்கே அறிஞர்கள் உரையாற்றுவார்கள். கேட்டு மகிழலாம். அல்லது, கண்ணை மூடிக்கொண்டு தத்துவம் பற்றிச் சிந்திக்கிறேன் என்று சொல்லிவிட்டுத் தூங்கிவிடலாம். பிறகு எழுந்து வேறோர் அறைக்குச் சென்று இன்று என்ன கிடைக்கும் என்று கேட்டு வாங்கிச் சாப்பிடலாம். மொத்தத்தில் அது ஒரு தனி உலகம். ஆனால் பாவம், பிற்காலத்தில், நாடு பிடிக்கும் ஆசை கொண்ட யாரோ சிலர் அலெக்ஸாண்ட்ரியா நூலகத்தை இடித்துவிட்டார்கள். எல்லாப் புத்தகங்களும் அழிந்துவிட்டன. வரலாற்றின் மிகப் பெரிய இழப்பு இது.

ஆனாலும் இறுதியில் வென்றவர்கள் எகிப்தியர்கள்தாம். நாட்டை விரிவாக்கிக்கொண்டே போன மன்னர்கள் அனைவரும் காணாமல் போய்விட்டார்கள். அறிவை விரிவாக்கும் நூலகமோ மேலும் மேலும் வளர்ந்துகொண்டிருக்கிறது. ஓர் அலெக்ஸாண்ட்ரியா நூலகம் இருந்த இடத்தில் இன்று பல லட்சம் சிறிய அலெக்ஸாண்ட்ரியாக்கள் உலகம் முழுக்க முளைத்துவிட்டன.

அவற்றில் ஏதேனும் ஒரு நூலகத்துக்குச் சென்று உங்களுக்குப் பிடித்த ஒரு புத்தகத்தை எடுத்துப் படிக்க ஆரம்பியுங்கள். உலகமே அமைதியாகிவிடும். உலகை வெல்ல இதுதான் ஒரே வழி என்பது ஏனோ அந்த மன்னர்களுக்குத் தெரியாமலேயே போய்விட்டது.

http://tamil.thehindu.com

  • தொடங்கியவர்

உன்னை விட உயர்ந்தது இல்லை

 

ஒன்றை விட ஒன்று சிறந்ததாக இருக்கிறது என்று நினைத்துக் கொண்டு, மனதை மாற்றிக்கொண்டே செல்லக் கூடாது. எப்போதும் உன்னை விட உயர்ந்தவர் இல்லை என்று நினைக்க வேண்டும்.

 
ஜென் கதை: உன்னை விட உயர்ந்தது இல்லை
 
அது ஒரு ஜென் மடாலயம். அங்கிருந்த சீடர் களுக்கு தத்துவ கதை ஒன்றை குரு கூறினார். அந்தக் கதை இதுதான்.

அவன் ஒரு கல் உடைக்கும் தொழிலாளி. அந்தத் தொழிலில் அவனுக்கு பெரிய வருமானம் ஒன்றும் கிடைக்கவில்லை. அன்றாட வாழ்க்கையை ஓட்டுவதே பெரும் சுமையாக இருந்தது. அதனால் அவனுக்கு வாழ்க்கையே வெறுப்பாக இருந்தது.

ஒரு நாள், அவன் போன வழியில் ஒரு பணக்கார வீடு தென்பட்டது. அந்த வீட்டின் வாசல் வழியே அவன் கண்ணில் பட்ட அத்தனை பொருட்களும், செல்வங்களும் அவனை விழிபிதுங்க வைத்தன.

அடடா.. அந்த பணக்காரனுக்கு எத்தனை செல்வாக்கு. பணக்காரன் மீது பொறாமையாக இருந்தது. தனக்கும் அப்படி ஒரு வாழ்க்கை கிடைத்தால் எப்படியிருக்கும்? என நினைத்துப் பார்த்தான்.

என்ன அதிசயம்! அவன் பணக்காரனாகி விட்டான். வாழ்க்கையில் அவன் நினைத்துப் பார்த்திராத அளவுக்கு செல்வங்கள் குவிந்துவிட்டன.

மற்றொரு நாள் ஒரு பெரிய அரசு அதிகாரி பல்லக்கில் அவனை கடந்து சென்றார். அந்த அதிகாரியின் பின்னே பல சேவகர்கள், படை வீரர்கள். மக்கள் பயந்து கும்பிட்டு வழிவிட்டனர். அதிகாரியின் உத்தரவு தூள் பறந்தது. எப்பேர்ப்பட்ட பணக்காரனும் விழுந்து வணங்கினான். இப்போது கல் உடைப்பவன் மனசெல்லாம் அந்த அதிகாரிதான் நின்றார்.

‘இருந்தா இப்படியல்லவா இருக்கணும். என்னா அதிகாரம்’ என்று நினைத்தான். அவன் நினைப்பு பலித்தது. பெரும் அதிகாரம் படைத்த அதிகாரியாகி விட்டான். அவனைப் பார்த்தாலே எல்லோரும் பயந்தனர். கொஞ்ச நாளில் மக்கள் வெறுக்கும் அளவுக்கு அவன் அதிகாரம் எல்லை மீறிப் போனது.

ஒரு கோடை நாள், தனது பல்லக்கில் பயணித்துக் கொண்டிருந்தான், இப்போது அதிகாரியாக இருக்கும் கல் உடைப்பவன். வெயில் சுள்ளென்று சுட்டது. இருக்கையில் உட்காரவே முடியாத அளவு வெப்பம் தகித்தது. அண்ணாந்து பார்த்தான். வானத்தில் கம்பீரமாக தகதகத்தது சூரியன்!

‘ஓ! உலகத்துக்கு மேலே உட்கார்ந்துகிட்டு இந்த சூரியன் என்னமா ஆட்டிப் படைக்குது. இருக்கட்டும்! நானும் சூரியனாகி எல்லாரையும் எனக்கு கீழே வச்சி வாட்டி எடுப்பேன்’ என்றான்.

அவன் இப்போது சூரியனாகிவிட்டான்!

தனது கிரகணங்களை பல மடங்கு வெப்பமாக்கி பூமியில் செலுத்தி அத்தனைப் பேரையும் துன்புறுத்தினான். அவனுக்கு விவசாயிகளும் தொழிலாளர் களும் சாபமிட்டனர். அந்த நேரம் பார்த்து ஒரு கரிய மேகம் கடந்துபோனது. சூரியன் அந்த மேகத்துக்குள் மறைய, மக்கள் மகிழ்ந்தார்கள்.

‘ஓகோ.. மேகம் நினைச்சா சூரியனையே காலி பண்ணிடுமா! அப்ப நானும் மேகமாகிட்டா போச்சு’ என நினைத்தான். நினைத்தபடி மேகமாகிவிட்டான்.

இப்போது பூமியெங்கும் மழையை மடை திறந்த வெள்ளம் போல கொட்டினான். எங்கும் வெள்ளக்காடு. மக்கள் சபித்தனர். திடீரென பலத்த காற்று வீச, மேகம் தாக்குப் பிடிக்காமல் ஓடிப் போனது.

‘இந்த காற்றுக்கு எவ்வளவு சக்தி.. நானும் காற்றாக மாறி உலகத்தை ஒரு வழி பண்றேன்’ என்று நினைத்தான் மேகமாக இருந்த கல் உடைப்பவன்.

அப்படியே நடந்தது. மேகம் இப்போது வலிமையான காற்றாகி மாறி, பூமியையே ஆட்டிப் பார்த்தது. மரங்களையும் வீடுகளையும் பெயர்த்தெடுத்து வீசியது. மக்கள் கோபமாகி திட்டித் தீர்த்தனர். அப்போது திடீரென ஏதோ ஒரு பெரிய உருவம் தடுத்து நிறுத்தியது போல உணர்வு. பார்த்தால் ஒரு பெரும் பாறை.

‘காற்றையும் தடுக்கும் அளவு இந்தப் பாறைக்கு பலமா, நானும் பாறையாவேன்’ என்றான். பாறையானான். பூமியில் யாராலும் அசைக்க முடியாத பலத்துடன் இருந்தான். அப்போதுதான் அந்த சத்தம் கேட்டது. ஒரு உளியை வைத்து தன் மீது யாரோ அடிக்கும் சத்தம்.

‘அட.. உலகின் சர்வ பலம் மிக்க இந்த பாறையை விட பலமானவன் யாரடா அது?’ என்று பார்த்தான், பாறையாக இருந்த கல் உடைப்பவன்.

அந்தப் பாறையை உளியால் உடைத்துக் கொண்டிருந்தான் ஒரு கல் உடைப்பவன்.

கதையை சொல்லி முடித்த குரு, ‘ஒன்றை விட ஒன்று சிறந்ததாக இருக்கிறது என்று நினைத்துக் கொண்டு, மனதை மாற்றிக்கொண்டே செல்லக் கூடாது. எப்போதும் உன்னை விட உயர்ந்தவர் இல்லை என்று நினைக்க வேண்டும்’ என்றார்.

http://www.maalaimalar.com

  • தொடங்கியவர்

இலங்கை மண்ணில் இடது கையில் துடுப்பெடுத்தாடிய விராட் கோலி (வீடியோ இணைப்பு)

 
 

இந்திய கிரிக்கெட் அணியின் தலைவரான விராட் கோலி இலங்கை வீதியொன்றில் கிரிக்கெட் விளையாடிய வீடியோ வைரலாக பரவி வருகின்றது.

இலங்கையுடனான ஐந்தாவது ஒருநாள் போட்டியில் தனது 30 ஆவது சதத்தை பூர்த்தி செய்த பின்னர், வீதி விளையாட்டில் கோலி ஈடுபட்டுள்ளார்.

குறித்த வேளையில் கோலி இடது கை துடுப்பாட்டத்தில் ஈடுப்பட்டமை குறிப்பிடத்தக்கது

  • தொடங்கியவர்

 

முகத்தை ஸ்கான் செய்து பொருள் விற்கும் தொழில்நுட்பம்

சீனாவில் உங்கள் முகத்தை பார்த்தே பணம் மற்றும் கடனட்டை எதுவும் பயன்படுத்தாமல் உணவு வாங்க முடியும்.

துரித உணவு விடுதிகளில் முகத்தை ஸ்கான் செய்து பொருள் விற்கும் தொழில்நுட்பத்தை சில்லறை வணிக பெருநிறுவனமான அலிபாபா அறிமுகம் செய்துள்ளது.

உங்கள் முகத்தை ஸ்கான் செய்தால் உங்கள் கணக்கில் இருந்து பணம் வெட்டப்பட்டு செலுத்தப்பட்டுவிடும்.

ஆனால், இந்த தரவுகள் எவ்வாறு பயன்படுத்தப்படுகின்றன என்ற கவலையும் எழுந்துள்ளது.

BBC

Edited by நவீனன்

  • தொடங்கியவர்

சுமார் 4,000 ஆண்டுகளுக்கு முன்னர் ஆண்கள் என்ன செய்தார்கள்?

 


சுமார் 4,000 ஆண்டுகளுக்கு முன்னர் ஆண்கள் என்ன செய்தார்கள்?
 

சுமார் 4,000 ஆண்டுகளுக்கு முன்னர் Bronze Age காலகட்டத்தில் ஐரோப்பியப் பெண்கள் தங்கள் குடும்பங்களை உருவாக்குவதற்காக தூர தேசப் பயணங்களை மேற்கொண்டு, புதிய கலாசார விடயங்களைக் கற்றனர்.

புதிய வாழ்க்கைக்காக இடமாற்றத்திற்குத் தங்களை உட்படுத்திக் கொண்டனர்.

அதே நேரத்தில், ஆண்கள் தாங்கள் பிறந்த பகுதியிலேயே தங்கிவிட்டனர். இப்பழக்கம் கிட்டத்தட்ட 800 ஆண்டு காலம் இருந்து வந்தது என்கிறது சமீபத்திய ஆய்வு.

அக்காலத்துப் பெண்கள் கலாசார பொருட்கள் மற்றும் கருத்துக்களின் பரிமாற்றத்தை நிகழ்த்துவதில் முக்கிய பங்கைக் கொண்டிருந்தனர்.

இது Bronze Age இல் புதிய தொழில்நுட்பங்களின் வளர்ச்சியை ஊக்குவிப்பதாக இருந்தது என ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.

Bronze Age என்ற பத்திரிகையில் வெளியிடப்பட்டுள்ள இந்த ஆய்வில், கி.மு.1650 காலகட்டத்தில் புதைக்கப்பட்ட 84 நபர்களின் எச்சங்களைப் பரிசோதித்து, Stone Age முடிவில் மற்றும் Bronze Age இன் ஆரம்பகட்டத்தில் அம்மக்கள் வியக்கத்தக்க வகையினில் தெற்கு லெக், தெற்கு ஆக்ஸ்பர்க் (இந்நாளைய ஜெர்மனியில்) தங்களுடைய குடும்பத்துடன் குடிபுகுந்திருந்தனர் என்பதைக் கண்டறிந்தனர்.

இதில் பெரும்பான்மையான பெண்கள் இப்பகுதிக்கு வெளியிலிருந்து வந்திருக்கலாம் என்று அறியப்படுகிறது.

ஒருவேளை, போஹேமியா அல்லது மத்திய ஜெர்மனியிலிருந்து அவர்கள் வந்திருக்கக்கூடும். ஆனால், ஆண்கள் அதே பிரதேசத்தில் பிறந்தவர்கள் என்றும் அறியப்படுகிறது.

இந்த பெண்களின் வம்சாவளிகளில் அதிக வேறுபாடுகள் காணப்படுவதால், இவர்கள் பல்வேறு இடங்களிலிருந்து பயணப்பட்டு கடைசியில் லெக் பிரதேசத்திற்கு வந்திருக்கலாம் என்று ஜெர்மனியில் உள்ள மேக்ஸ் பிளாங்க் நிறுவனத்தைச் சேர்ந்த ஆய்வாளர் அலிஸா மிட்னிக் கூறியுள்ளார்.

ஒட்டு மொத்தக் குழுவினராகவும், சில சமயங்களில் தனிப்பட்ட பயணமாகவும் இப்பெண்களின் இடம்பெயர்வு இருந்து வந்துள்ளது. இது அவர்களுக்கு தற்காலிகமான ஒன்றல்ல. ஆண்டாண்டு காலமாக, அதாவது கிட்டத்தட்ட 800 ஆண்டுகளுக்கு இது தொடர் நிகழ்வாகவே இருந்துள்ளது.

கணவன் என்பவன் ஒரே இடத்தில் இருக்க, மனைவி வேறொரு இடத்திலிருந்து அங்கு வந்தவளாக இருந்து வந்தாள். ஓரிடத்தில் பிறந்து வேறு ஒரு இடத்தில் புலம் பெயர்வது என்பது காலம் காலமாக பெண்களின் நிலையாக இருந்து வருகிறது என ஆய்வாளர் சுட்டிக்காட்டியுள்ளார்.

http://newsfirst.lk/tamil

  • தொடங்கியவர்

288 நாள் விண்வெளி பயணம்! சாதனைப் படைத்த பெக்கி விட்சன்

சாதனைக்கு வயதில்லை என்பதைத் தனது செயல்திறனால் நிரூபித்துள்ளார், அமெரிக்க நாட்டு விண்வெளி வீராங்கனை பெக்கி விட்சன்.

benny witson

கடந்த நவம்பர் 17-ம் தேதி விண்வெளிக்குச் சென்ற இவர், 288 நாள்களுக்குப் பிறகு மீண்டும் நேற்று பூமியில் தரையிறங்கி சாதனை படைத்துள்ளார். 57 வயது நிரம்பிய பெக்கி,  இதுவரை 665 நாள்கள் விண்வெளியில் இருந்ததன்மூலம் விண்வெளி ஆராய்ச்சியில் அதிக நாள்கள் ஈடுபட்ட அமெரிக்கர் என்ற சாதனையையும், அதிக வயதில் விண்வெளியில் நீண்ட நாள்கள் இருந்த பெண்மணி என்ற பெருமையையும் பெற்றுள்ளார்.

witson

இவரது கடைசிப் பயணத்தின்மூலம் அதிக அனுபவம்பெற்ற விண்வெளி வீராங்கனை என்ற பெருமையையும் இவர் பெற்றுள்ளார். அதுமட்டுமல்லாமல், ஓர் அணிக்கு இருமுறை தலைமைதாங்கிய முதல் பெண்மணி என்ற பெருமையையும் இவர் பெற்றுள்ளார்.

சர்வதேச விண்வெளி ஆராய்ச்சி மையத்தில் தனது இறுதிப் பயணத்தைத் தொடங்கிய இவர், 196.7  மில்லியன் கிலோமீட்டர் தூரம் விண்வெளிப் பயணம் மேற்கொண்டுள்ளார். தனது சாதனைகுறித்துப் பேசிய இவர், "நாங்கள் தொடர்ச்சியாகப் பல முந்தைய சாதனைகளை முறியடிப்பதே எங்களுக்கு ஊக்கத்தையும் உத்வேகத்தையும் கொடுத்துள்ளது" என்று பெருமையாகக் கூறுகிறார். சாதனைகளை முறியடிக்கவும் படைக்கவும் வயது ஒரு தடை அல்ல, முயற்சியே முக்கியம் என்பதை அனைவருக்கும் உணர்த்துகிறார், பெக்கி விட்சன்.

http://www.vikatan.com

  • தொடங்கியவர்

வெளியே செல்லாமல் வீட்டுக்குள்ளே இருந்தால் என்ன நடக்கும்?

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.