Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இளமை புதுமை பல்சுவை

Featured Replies

  • தொடங்கியவர்

உத்தரவின்றி உள்ளே வராதீர்கள்... மீறினால் கொல்லப்படுவீர்கள்! - திகில் தீவு செண்டினல்

அந்தமான் பக்கத்தில் இருக்கிற குட்டித் தீவு செண்டினல். நூறு ஆண்டுகளுக்கும் மேலாக இத்தீவில் இருக்கிற மனிதர்கள் பற்றிய குறிப்புகளைப் பல நாடுகளைச் சேர்ந்த பல ஆராய்ச்சியாளர்கள் வலை வீசித் தேடி கொண்டிருக்கிறார்கள். இதுவரை அவர்கள் பற்றிய ஒரு துரும்பைக் கூடக் கண்டுபிடிக்க முடியாமல் திணறுகிறது ஒட்டு மொத்த உலகமும். அவர்களை எப்படி அணுகினாலும் பதிலாக வருவது வில்லும் அம்புகளும்தான். தப்பிப் பிழைத்தவர்கள் வெளி உலகத்துக்குச் சொன்ன செய்திகள் ஒவ்வொன்றும் திகில் ரகம். செண்டினல் தீவு மக்கள் இந்த உலகத்துக்குச் சொல்வதெல்லாம் ஒன்றேயொன்றுதான் “உத்தரவின்றி உள்ளே வராதீர்கள்.”

செண்டினல்

சம்பவம் ஒன்று:

ஆவணப்படக் குழு ஒன்று படப்பிடிப்புக்காக செண்டினல் தீவுக்குப் படகில் செல்கிறது. போகும் பொழுது சில பரிசுப் பொருள்களைக் குழு கொண்டு செல்கிறது. தீவில் கரை இறங்கிய இரண்டொரு வினாடிகளில் நான்கு புறமிருந்து ஈட்டிகளும் அம்புகளும் வந்து விழுகின்றன. பதறிப் போன மொத்த குழுவும் உயிரைக் கையில் பிடித்துக்கொண்டு திரும்பி வந்திருக்கிறார்கள். திரும்பி கரையைப் பார்க்கும்போது  ஒரு அம்பு படகில் வந்து குத்துகிறது. திரும்பி வரக் கூடாது என்பதற்கு எச்சரிக்கைதான் அந்த அம்பு. சம்பவம் நடந்த ஆண்டு 1974

சம்பவம் இரண்டு:

கப்பல் ஒன்று செண்டினல் தீவின் பவளப்பாறைகளில் மோதிக் கரை தட்டி நிற்கிறது. கப்பல் கேப்டன் உதவிக் கேட்டு காத்திருக்கிறார். இரண்டாவது நாள் அதிகாலையில் கரையை நோக்கி சிலர் வருகிறார்கள். உற்றுக் கவனித்ததில் வந்தவர்கள் எல்லோர் கையிலும் வில் அம்பு ஈட்டி என வைத்திருக்கிறார்கள். கவனிக்க வேண்டிய முக்கிய விஷயம் எல்லோரும் நிர்வாணமாக இருந்திருக்கிறார்கள். ஏதோ ஆபத்து வருகிறது என்பதை உணர்ந்த கேப்டன் பதறிப்போய் வயர்லெஸ்ஸில் கடற்படைக்குத் தகவல் சொல்ல ஹெலிகாப்டரில் வந்து எல்லோரையும் மீட்டு வந்திருக்கிறது இந்திய கடற்படை. சம்பவம் நடந்த ஆண்டு 1981. கப்பலின் பெயர் ப்ரைம்ரோஸ். கூகுள் மேப்பில் இப்போதும் இந்த சிதிலமடைந்த கப்பலின் உருவம் தென்படுகிறது.

செண்டினல்

சம்பவம் மூன்று:

2006 ஜனவரி மாதம் இரண்டு மீனவர்கள் மீன்பிடித்துவிட்டு தீவின் கரையில் ஒதுங்குகிறார்கள். இரண்டு நாள்கள் கழித்து அவர்களின் இறந்துபோன உடல்கள் கரை ஒதுங்கி இருக்கின்றன. உடலெங்கும் ஈட்டி குத்திய தடயங்களுடன் கிடந்திருக்கின்றன. உடல்களை மீட்கச் சென்ற கடலோர காவல்படையினரை நோக்கி அம்புகளும் ஈட்டிகளும் வர உடல்களை மீட்காமலே திரும்பி இருக்கிறது கடற்படை.

60000 ஆண்டுகள் பழைமை வாய்ந்த பழங்குடியினர் வசிக்கிற தீவு செண்டினல். வங்காள விரிகுடா கடலில் இருக்கிறது. உலகம் இத்தீவில் இருக்கிற மக்களை செண்டினலீஸ் என அழைத்துக்கொண்டிருக்கிறது. அந்தமான் தீவுக்கு அருகில் இருக்கும் இந்தத் தீவு இந்திய அரசின் கட்டுப்பாட்டில் இருக்கிறது. பசுமை சூழ்ந்த காடுகள் அழகிய மணல் பரப்புகளைக் கொண்ட தீவின் மொத்த பரப்பளவு 72 சதுர கிலோ மீட்டர்கள். தீவில் எத்தனைப்  பேர் இருக்கிறார்கள், அவர்களின் பழக்கவழக்கம் என்ன என்பது பற்றிய எந்தக் குறிப்பும் இதுவரை இல்லை. மரங்களும் செடிகளும் சூழ்ந்திருப்பதால் ஆகாய மார்க்கமாக எடுக்கப்பட்ட படங்களில் அவர்கள் பற்றிய எந்த விவரங்களும் இல்லை. விலங்குகள், மீன்களை வேட்டையாடுவதை முக்கியத் தொழிலாகக் கொண்டிருக்கிறார்கள். உலகின் எந்தத் தொடர்பும் இல்லாமல் இருக்கிற தீவில் 50ல் இருந்து 250 வரை மக்கள் தொகை இருக்கலாம் எனத் தரவுகள் தெரிவிக்கின்றன.

செண்டினல்

2004-ம் ஆண்டு சுனாமியின்போது இந்தத் தீவு அழிந்துவிடும் என நினைத்தவர்களுக்கு எதிர்மறையான பதில்களே கிடைத்திருக்கின்றன. ஆழிப்பேரலையில் எந்தப் பாதிப்பும் நிகழாமல் இருந்திருக்கிறது. சுனாமியை முன் கூட்டியே உணர்ந்த தீவு மக்கள், உயர்ந்த இடங்களுக்குச் சென்று தப்பித்திருக்கலாம் என்கிறார்கள் ஆராய்ச்சியாளர்கள். சுனாமிக்கு பிறகான நாள்களில் செஞ்சிலுவைச் சங்கம் சென்டினல் தீவு மக்களுக்கு மருந்து மற்றும் உணவுகளை விமானத்தில் இருந்தபடியே போட்டிருக்கிறது. ஆனால், தீவு மக்கள் அவற்றை ஏற்றுக் கொள்ளாமல் ஈட்டிகளையும் அம்புகளையும் திருப்பி அனுப்பி இருக்கிறார்கள். விமானத்தை ஈட்டி பதம் பார்க்க, போன வழியிலேயே திரும்பி இருக்கிறது செஞ்சிலுவைச் சங்கம்.

இந்தத் தீவுக்குச் சென்று வெற்றிகரமாகத் திரும்பியவர்களும் இருக்கிறார்கள். 1991-ம் ஆண்டு இந்திய தொல்லியல் துறையின் திருலோகிநாத் பண்டிட் என்கிறவரின் தலைமையில் ஒரு குழு சென்றிருக்கிறது. பல ஆண்டுகளாக அவர்களைப் பற்றி முழுதும் தெரிந்து கொண்டு பயணித்திருக்கிறார். பல தடைகளுக்குப் பிறகு ஒரு முறை அம்மக்களை சந்தித்திருக்கிறார்கள். குழுவினர் கொடுத்த தேங்காய்களைப் பழங்குடியினர் பெற்றுக்கொண்டு அடுத்த பத்தாவது நிமிடத்தில் குழுவினரை திரும்பிப் போகச் சொல்லி சைகை செய்திருக்கிறார்கள். குழு சில புகைப்படங்களை எடுத்துக்கொண்டு திரும்பியிருக்கிறது.

செண்டினல்

அந்தமானின் ஜாரவா, கிரேட் அந்தமானிஸ், சென்டினலிஸ் போன்ற பழங்குடியின மக்களிடம்தான் உலகின் ஒட்டு மொத்த மனித வரலாறும் புதைந்து கிடக்கிறது. ஜாரவா இன மக்கள் நவீன மக்களுடன் இணைந்து வாழும்போது பல பிரச்னைகளை சந்திக்கிறார்கள். சில வருடங்களுக்கு முன்பு ஜாரவா மக்களிடம் சில வெளிநாட்டுப் பயணிகள் பழங்களைக் கொடுத்து ஆடச் சொல்கிற காணொளி ஒன்றை யூடியூபில் காணமுடிகிறது. பல ஆயிரம் வருடப் பாரம்பர்யம் கொண்ட ஒர் இன மக்களை ஆடச் சொல்லி வேதனைப் பட வைத்திருக்கிறார்கள் சுற்றுலாப் பயணிகள். செண்டினல் தீவு மக்கள் வெளி நபர்களை அனுமதிக்காமல் இருப்பதால்தான் இன்னமும் அங்கே வாழ்ந்துகொண்டிருக்கிறார்கள். ஒரு வேளை அனுமதித்திருந்தால் ஜாரவா இன மக்களுக்கு நேர்ந்ததைப் போல நடப்பதற்குச் சாத்தியம் இருக்கிறது.

இந்திய அரசின் கட்டுப்பாட்டில் இருக்கும் இத்தீவுக்கு யாரும் போக கூடாது என்ற உத்தரவும் இன்று வரை இருக்கிறது. தீவைச் சுற்றிய மூன்று கடல் மைல்களைப் பாதுகாப்பு வளையமாக அறிவித்திருக்கிறது  இந்தியக் கடற்படை. அந்தமான் அரசு 2005-ம் ஆண்டு செண்டினல் மக்களின் வாழ்வியல் மீதும் வாழ்விடங்கள் மீதும் ஒரு போதும் தலையிடப் போவதில்லை என அறிவித்திருக்கிறது.

இறுதியாக ஒரு விஷயம். செண்டினல் என்கிறப்  பெயருக்கு “காவலாளி” என்று பொருள்.

http://www.vikatan.com

  • Replies 11.3k
  • Views 1.5m
  • Created
  • Last Reply
  • தொடங்கியவர்

100 கோடி சொத்துகளைத் துறந்து, குழந்தையை மறந்து துறவறம்!

 
 

த்தியப் பிரதேசத்தில், ரூ.100 கோடி மதிப்புள்ள சொத்துகளைத் துறந்து, குழந்தையை மறந்து ஒரு தம்பதி துறவறம் மேற்கொள்ள எதிர்ப்புக் கிளம்பியுள்ளது. 

துறவறம் மேற்கொள்ளும் ஜெயின் தம்பதி

போபாலிலிருந்து 400 கி.மீ தொலைவில் உள்ள நீமுக் என்ற நகரத்தைச் சேர்ந்தவர்கள், சுமீத் ரத்தோர் - அனாமிகா தம்பதி. நீமுக் நகரத்தில் சுமீத் குடும்பத்தினருக்கு பல்வேறு நிறுவனங்கள் உள்ளன. ரூ.100 கோடிக்கு மேல் சொத்து உள்ளது. ஏராளமான தொழிலாளர்களும் இவர்களை நம்பியுள்ளனர். சுமீத்தே அனைத்தையும் நிர்வகித்துவந்தார். சுமீத்- அனாமிகா தம்பதிக்குத் திருமணமாகி  நான்கு ஆண்டுகள் ஆகின்றன. எபியா என்ற மூன்று வயது பெண் குழந்தையும் இருக்கிறது.

இந்நிலையில், சுமீத் தனக்குள் ஏதோ மனமாற்றத்தை உணர்ந்துள்ளார். இல்வாழ்க்கையிலிருந்து விலகி, ஆன்மீகப் பாதையில் செல்லத் தீர்மானித்து மனைவியிடம்  விருப்பத்தைக் கூற, அவரும் சம்மதித்தார். தொடர்ந்து,  இருவரும் ஜெயின் துறவிகளாக மாற முடிவு செய்தனர். சூரத்தில், செப்டம்பர் 23-ம் தேதி நடைபெறும் சடங்கில், இவர்களுக்கு ஜெயின் மத மூத்தத் துறவி ஆச்சார்யா ராம்லால் மகராஜ் தீட்சியை அளிக்கிறார்.

சுமீத்தின் சொத்துக்கள் அனைத்தையும் குழந்தை எபியா பெயருக்கு மாற்றி எழுதியுள்ளார். எனினும், குழந்தையைக் கைவிட்டு, தம்பதி துறவியாக மாற எதிர்ப்புக் கிளம்பியுள்ளது. ''குழந்தை  எபியாவை தங்களின் பெற்றோர் பார்த்துக்கொள்வார்கள், ஒருவரின் தனிப்பட்ட விருப்பத்தைத் தடுக்க யாருக்கும் உரிமையில்லை'' என சுமீத் தம்பதியர் பதில் அளித்துள்ளனர். துறவியாக மாறும் முடிவிலும் உறுதியாக இருக்கின்றனர். சுமீத், லண்டனில் படித்தவர். அனாமிகா, இன்ஜினீயரிங் படித்துள்ளார். 

ஜெயின் மதத் துறவிகள், கடினமான வாழ்க்கை முறையைக் கடைபிடிக்க வேண்டும். பிச்சை எடுத்துதான் உண்ண வேண்டும். இந்த உலகில் வாழ விரும்பாத முதியவர்கள்  உணவு, தண்ணீர் அருந்தாமல் உண்ணாநிலையைக் கடைபிடித்தும், தவக்கோலம் பூண்டும் ’சவ்மாஸா’ அல்லது ‘சந்த்தாரா’ எனப்படும் ஜீவசமாதி நிலையை  அடைவதற்கும் சமண மதத்தில் வழியுள்ளது. 

 

இத்தகைய முறையில் உயிரை மாய்த்துக்கொள்ள சட்டம் அனுமதிப்பதில்லை. எனினும், வடமாநிலங்களில் இதுபோன்ற ‘சந்த்தாரா' நிலையைக் கடைபிடித்து, உயிரை மாய்த்துக்கொள்ளும் ஜெயின் மக்கள் உண்டு. 

http://www.vikatan.com

  • தொடங்கியவர்

களத்தில் பீமன், வெளியே போகன்! #HBDGayle

 

பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் அமர்ந்து ஐ.பி.எல் பார்க்கும் ரசிகனின் கண்களில், உற்சாகத்தோடு பயமும் கலந்திருக்கும். போலீஸ் படை குவிக்கப்பட்டிருந்தாலும் அந்த ரசிகனின் கரம், சிரத்துக்கு பாதுகாப்பு குறைவே. மணிக்கு 140, 150 கி.மீ வேகத்தில் வீசப்படும் பந்து அதைவிட வேகத்தில் வந்து தாக்கினால்? அதுவும் அந்த மனிதன் களத்தில் இருக்கும்போது கேலரியை நோக்கி பந்து படையெடுத்துக்கொண்டே இருக்கும். அப்படியிருக்கையில் யாருக்குத்தான் அச்சம் ஏற்படாது. அந்த மனிதனுக்குள் அப்படி என்னதான் இருக்கிறது? டாப் எட்ஜ் ஆகும் பந்து கூட எப்படி பவுண்டரி எல்லையைக் கடக்கிறது. ஒருவேளை அவன் நாடி , நரம்பு, ரத்தம் அனைத்திலும் கிரிக்கெட் கலந்திருக்குமோ? இருக்கலாம். கரீபியத் தீவில் பிறந்தவனாயிற்றே. இன்று அவனுக்குப் பிறந்த நாள். அவனைப் பற்றி அறிந்துகொள்ள விரும்பினால் கூகுளில் கெய்ல் என்று தட்டுங்கள். பின் கொஞ்சம் ஸ்பேஸ் விட்டு புயல் என்று தட்டுங்கள்!

Gayle

இந்தியாவில் மிகவும் உணர்வுப்பூர்வமாக அணுகுவதைப்போல கிரிக்கெட்டை மேற்கிந்திய தீவுகள் அணுகுவதில்லை. மாறாக அவர்கள் கிரிக்கெட்டை கொண்டாட்டமாகப் பார்க்கிறார்கள். ப்ரையன் லாரா தனி ஆளாக தன்னுடைய தனிப்பட்ட வாழ்க்கையோடும், மேற்கிந்திய தீவுகளின் கிரிக்கெட் நிர்வாகத்துடனும் முட்டிமோதிக்கொண்டிருந்த வேளையில், தன்னுடைய 19 வயதில் தேசிய அணிக்காக தேர்ந்தெடுக்கப்பட்டார், கெய்ல். லாரா, எப்பாடு பட்டாவது அணியை சரிவிலிருந்து மீட்டுவிடவேண்டுமென்று நினைத்திருந்த சமயத்தில், பேட்டிங் இலக்கணங்களுக்கு அப்பாற்பட்டு, டெக்னிக், ஃபுட்வர்க் இதைப்பற்றியெல்லாம் மருந்துக்குக் கூட கவலைப்படாமல், நின்ற இடத்திலிருந்து பந்துகளை கொஞ்சம் கூட சலனமில்லாமல் அடித்து நொறுக்கத் துவங்கினார். மற்ற அணிகள், கெய்லை வீழ்த்துவதற்கு பிரத்யேகமாக ஆலோசனை கூட்டமெல்லாம் நடத்த ஆரம்பித்தார்கள். 

இந்தியாவுக்கு எதிராக 7 போட்டிகள் கொண்ட தொடரில் மூன்று சதங்கள் விளாசி, தொடரின் நாயகனானர். ஸ்ரீநாத், 'அந்தக்கால' நெஹ்ரா, ஹர்பஜன் போன்றவார்களால் கூட கெய்லைக் கட்டுப்படுத்த முடியவில்லை. 2003 உலகக் கோப்பைக்கு சற்று தெம்போடு மேற்கிந்திய தீவுகள் செல்வதற்கு கெய்ல் போன்றவர்கள் நம்பிக்கை அளிக்கத் தொடங்கினர். சந்தர்பால், லாரா, ஹூப்பர் என ஸ்லோ பேட்ஸ்மேன்கள் நிறைந்த அந்த அணியின் ஸ்டிரைக்கிங் கில்லி கெய்ல்தான். வீழ்ச்சியை நோக்கிப் பயணித்துக் கொண்டிருந்த அணியின் மாபெரும் நம்பிக்கையே இவர்தான். அணி வெற்றி பெற வேண்டுமானால் கெய்ல் நல்ல ஓபனிங் கொடுத்தாக வேண்டும்.

Gayle

ஒருநாள் போட்டிகளில் தன்னை மெருகேற்றி வந்தாலும், டெஸ்ட் போட்டிகளில் கெய்லின் ஆக்ரோஷம் வெகு நாட்களாக எடுபடவில்லை. காரணம், ஸ்ட்ரோக், டிரைவ், டிஃபன்ஸ் போன்ற கிரிக்கெட் டெர்மினாலஜிகளுக்கான அர்த்தம் அவருக்குத் தெரியாது. 2004-ம் ஆண்டில் தென் ஆப்பிரிக்காவில் நடைபெற்ற டெஸ்ட் போட்டியில், அணி மிகவும் பின்தங்கிய நிலையில், வெகுண்டெழுந்து சதம் அடித்தார். அடுத்த வருடம், சொந்த மண்ணில் அணி நிர்வாகத்துடன் ஏற்பட்ட பிரச்னையால் ஒதுக்கப்பட்டு, பலதரப்பட்ட பேச்சுவார்த்தைகளுக்கு பின்னர், அதே தென் ஆப்பிரிக்காவை எதிர்த்து சொந்த மண்ணில் 317 ரன்களைக் குவித்தார். பின், சாம்பியன்ஸ் கோப்பையை தக்கவைப்பதில் முனைப்புக் காட்டி, 8 போட்டிகளில் 3 சதங்கள் உட்பட 474 ரன்கள் குவித்து தொடர் நாயகன் விருதை வென்றார். 

 

 

சுழற்பந்து வீச்சாளர்களின் சொர்க்கமான இலங்கையில், தன் இரண்டாவது முச்சதத்தைப் பதிவுசெய்து, டான் பிராட்மன், சேவாக் வரிசையில் இணைந்தார். அதிரடிக்கே பேர்போனாலும், 2009-ம் ஆண்டில் அடிலெய்டில் ஆஸ்திரேலியாவிற்கு எதிராக ஏழரை மணி நேரம் போராடி அணியைத் தோல்வியிலிருந்து மீட்டெடுத்தார். அடுத்த போட்டியிலேயே அதிவேகமாக அரைசதம் அடித்து தன் உண்மையான அடையாளத்தை வெளிப்படுத்தினார். 

இருபது ஓவர் உலகக்கோப்பை கெய்லுக்காகவே படைக்கப்பட்டதோ என்று ஆச்சர்யப்படும் வகையில், 2007 டி-20 தொடரின் முதல் போட்டியிலேயே 57 பந்துகளில் 100 ரன்களை கடந்தார். அடுத்த வருடம் இந்தியன் ஐ.பி.எல் தொடரில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்காக விளையாட ஆரம்பித்தார். நான்காவது சீசனில், கெயிலின் ஃபார்ம் நன்றாக இல்லாத காரணத்தால் யாரும் ஏலம் கேட்கவில்லை. தொடரின் பாதியில் பெங்களூரு அணிக்காக மல்லையா கெய்லை அழைத்து வந்தார். அப்போது யாரும் அறிந்திருக்கவில்லை இனி ஐ.பி.எல் எனும் தொடர், இந்த மனிதனால் மோட்சம் பெறும் என்று. ஃபாஸ்ட் பவுலர்கள் தூக்கம் தொலைத்தனர். ‘கேலரியில்தான் ஃபீல்டர்களை நிற்க வைக்க வேண்டுமோ’ என்று கேப்டன்கள் குமுறினார்கள். எந்த அணி தன்னை கழட்டி விட்டதோ, அதே அணிக்கு எதிராக வீறுகொண்டெழுந்து 101 ரன்களை குவிக்க, அதன் பின் இருபது ஓவர் போட்டிகளில் கெய்லை சமாளிக்க முடியாமல் திணறின எதிரணிகள். 

கெயில்

2013-ம் ஆண்டில் புனே வாரியர்ஸ் கெய்லிடம் சிக்கி சின்னாபின்னமானது. 20 ஓவர்களில் ஓர் அணியின் சராசரி ரன்களை விட அதிகமாக அடித்து (175) ரசிகர்களுக்கு விருந்தளித்தார். ‛நான் ஸ்ட்ரைக்கர்’ எண்டில் இருந்த தில்ஷன் ‛என் வாழ்வில் எதிர்முனையில் இருந்து பார்த்த பெஸ்ட் இன்னிங்ஸ் இதுவே’ என மனதார பாராட்டினார். ஐ.பி.எல் மட்டுமல்ல உலகில் எங்கெல்லாம் டி-20 தொடர் நடக்கிறதோ அங்கெல்லாம் நங்கூரம் பாய்ச்சினார். ஆஸ்திரேலியாவின் பிக் பாஷ், பாகிஸ்தான் சூப்பர் லீக், கரீபியன் லீக் போன்றவற்றில் இதுவரை 10,000 ரன்களுக்கும் அதிகமாக அடித்து 40 ரன்களுக்கு அதிகமாக சராசரி வைத்திருக்கும் ஒரே வீரர் கெய்ல் மட்டுமே. அதுமட்டுமல்ல, டி-20 போட்டிகளில் 20 சதங்கள்! ஆம் 20... இது இன்னும் அதிகரிக்கலாம்.

டி-20 யில் சதம், ஒருநாள் போட்டியில் இரட்டைச் சதம், டெஸ்டில் முச்சதம் என்ற அற்புத சாதனையை நிகழ்த்தியிருக்கும் ஒரே ஆள் இவர்தான். எப்போதும் சிரிப்புடனும், கங்னம் ஸ்டைல், ரொனால்டோ ஸ்டைல் போன்றவைகளை உலகிற்கு அறிமுகப்படுத்தி, வெற்றி, தோல்வி இரண்டையும் அலட்டிக்காமல் ஏற்றுக்கொண்டு அடுத்தடுத்த போட்டிகளில்  அசாதாரணமான ஆட்டத்தை வெளிப்படுத்துவதெல்லாம் கெய்லுக்கு மட்டுமே கைவரும் கலை. 

 

2019 ஆண்டு உலகக்கோப்பை வரை ஆடுவார் என்று எதிர்பார்க்கப்பட்டாலும், வயதும் உடலும் ஒத்துழைக்குமா என்று தெரியாது. ஏனெனில் அவர் வயது 38. எதிர்கொள்ளும் ஒவ்வொரு பந்திலும், பவுலர்களை அலறவிட்ட ஒரு சகாப்தம் விரைவில் முடிவுக்கு வரப்போகிறது. ஆனால் இன்றும் கூட அவரால் அசால்டாக 105 மீட்டர் சிக்சர்கள் அடிக்க முடியும். அது அவரது சிறப்பம்சம் அல்ல. அதுவே அவரது ஹாபி! கிறிஸ்டோஃபர் ஹென்றி கெயில் - ஜமைக்காவின் மற்றுமொரு ஜாம்பவான்.

 

ஹேப்பி பர்த்டே டூ தி யுனிவர்சல் பாஸ்!

http://www.vikatan.com

 

Happy birthday to Windies Cricket opener Chris Gayle! 1f389.png

Edited by நவீனன்

  • தொடங்கியவர்
மறுபிறவியெடுத்த பென்னி
-

image_17ec228d35.jpgimage_9a7108a5e6.jpgimage_7f52469bcf.jpgimage_276c01800d.jpgபென்னி என்ற நாய்க்குட்டி தன் வாழ்நாளின் பாதியை, பாதாள உலகத்திலேயே கழித்துள்ளது. வாரத்துக்கு மூன்று முறை மட்டுமே உணவு என வெளியுலகமே பார்க்காமல் அடைத்து வைக்கப்பட்டிருந்தது.

தினமும் மன ரீதியாகவும் உடல் ரீதியாகவும் பல்வேறு சித்திரவதைகளை சந்தித்திருக்கிறது பென்னி. கடந்த வருடம் சில தன்னார்வலர்கள் பென்னியை, பாதாள உலகிலிருந்து மீட்டுள்ளனர்.

இந்நிலையில், பல வருடங்கள் ஒரேயிடத்தில் அடைத்துவைக்கப்பட்டிருந்ததால் பென்னிக்கு வெளியுலக தொடர்பு தெரியவில்லை.

இதனால் பென்னியை வாங்க ஒருவரும் முன்வரவில்லை.  ஆனால், டெலுகா என்பவருக்கு பென்னி மீது தனிப்பிரியம் வந்துவிட்டது. அவர் அந்த நாயை அழைத்துச் செல்ல விருப்பம் தெரிவிக்க, நாயை மீட்டவர்களோ இந்த நாயைப் பற்றி விவரித்திருக்கிறார்கள்.  பென்னி மனதளவில் சரியில்லாமல் இருப்பதால், கொடுக்க முடியாது என்றும் தெரிவித்திருக்கிறார்கள்.

கிடைக்காது என்ற எண்ணத்தில் பென்னி அருகில் சென்று தடவிக்கொடுக்க, பென்னி டெலுகாவை நோக்கி வந்து வாலாட்டியிருக்கிறது. அப்போதே இந்த நாய் தனக்கு வேண்டும் என்று அடம்பிடித்து வாங்கிவிட்டார் டெலுகா.

பென்னியை வீட்டுக்கு அழைத்து சென்ற பின்னர்தான் டெலுகா சில பிரச்சினைகளை சந்தித்திருக்கிறார். வீட்டிலேயே அடைத்து வைக்கப்பட்டிருந்ததால்,  எதைப்பார்த்தாலும் பயந்து கொண்டேயிருந்திருக்கிறது பென்னி.

மனிதர்கள், தொலைக்காட்சி, நாற்காலி, மேசை என அனைத்துக்குமு பயந்திருக்கிறது பென்னி.

கண்களால் வெளியுலகை பார்க்கக் கூட முடியாதளவுக்கு பென்னி பாதிக்கப்பட்டிருந்தது.

ஆனால், டெலுகா  பென்னியை தனது  குழந்தையை போன்று பராமரித்துள்ளார். இந்த உலகத்தை பென்னிக்கு பழக்க வேண்டும் என்றும் முடிவெடுத்துள்ளார்.

இவரின் நண்பர்கள் தாங்கள் வைத்திருக்கும் நாயுடன் டெலுகா வீட்டுக்கு வந்திருக்கிறார்கள். அவற்றுடன் பழக ஆரம்பித்த பிறகு, பென்னியிடம் நல்ல மாற்றம் தெரிந்திருக்கிறது. தொடர்ந்து உலகத்தை அறிமுகப்படுத்த நினைத்த டெலுகா, பென்னியுடன் சாகச பயணத்தை மேற்கொள்ள திட்டமிட்டுள்ளார்.

பல வருடங்கள் வீட்டுக்குள்ளேய அடைத்து வைக்கப்பட்டிருந்த பென்னி வெளியுலகத்தை வெகுவாக ரசிக்க ஆரம்பித்துவிட்டது.

அதேசமயம், கையிற்றின் மூலமாக மலையேறுவது, பாறைக்கு பாறை தாவுவது என தன்னை அனைத்துக்கும் பழக்கிக்கொண்டது.

http://www.tamilmirror.lk/

  • தொடங்கியவர்

ஹாரி பாட்டரை போன்று பயணிக்க விரும்புகிறீர்களா?

லோக் ஷீல் பகுதியை நோக்கி அமைந்துள்ள இந்த ரயில் பாதை ஒரு குறிப்பிட்ட மாயாஜால சிறுவனால் பிரபலமடைந்துள்ளது.

  • தொடங்கியவர்

உலக அமைதி நாள் (செப்.21, 2002)

ஐக்கிய நாடுகளின் பொது அவையின் பிரகடனத்தின் மூலம் ஒவ்வோர் ஆண்டும் செப்டம்பர் 21-ம் தேதி அனைத்து ஐநா உறுப்பு நாடுகளிலும் உலக அமைதி நாள் கொண்டாடப்பட்டு வருகிறது. இந்நாள் 1981-இல் இருந்து ஓவ்வோர் ஆண்டும் செப்டம்பர் மாதத்தில் வரும் மூன்றாம்

 
உலக அமைதி நாள் (செப்.21, 2002)
 
ஐக்கிய நாடுகளின் பொது அவையின் பிரகடனத்தின் மூலம் ஒவ்வோர் ஆண்டும் செப்டம்பர் 21-ம் தேதி அனைத்து ஐநா உறுப்பு நாடுகளிலும் உலக அமைதி நாள் கொண்டாடப்பட்டு வருகிறது. இந்நாள் 1981-இல் இருந்து ஓவ்வோர் ஆண்டும் செப்டம்பர் மாதத்தில் வரும் மூன்றாம் செவ்வாய்க்கிழமையிலேயே கொண்டாடப்பட்டு வந்தது. ஆனாலும் 2002-ம் ஆண்டு முதல் செப்டம்பர் 21-ம் தேதி கொண்டாடப்பட்டு வருகிறது.

• 1942 - மேற்கு உக்ரைனில் 2500 யூதர்கள் நாசிகளினால் கொல்லப்பட்டனர்.

• 1990 - மட்டக்களப்பு ஆரையம்பதியில் புதுக்குடியிருப்பு கிராமத்தில் 17 தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டனர்.

• 1995 - விநாயகரின் சிலைகள் பால் குடிக்கும் அதிசயம் உலகின் பல இடங்களில் இடம்பெற்றது.
 
 
 
 

துபாயில் உலகிலேயே உயரமான ‘புர்ஜ் கஃலிபா’ கட்டிடத்தின் கட்டுமானப் பணி தொடங்கியது (செப்.21, 2004)

ஐக்கிய அரபு அமீரகத்தின் துபாயில் அமைந்துள்ள வானளாவிய கட்டிடமான புர்ஜ் கலிஃபா கட்டிடத்தின் கட்டுமானப் பணிகள் 2004-ம் ஆண்டு இதே தேதியில் ஆரம்பிக்கப்பட்டன. இதன் கட்டுமானப் பணிகள் முடிவடைந்து 2010-ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 4-ஆம் தேதி இந்த கட்டிடம் திறந்து வைக்கப்பட்டது.

 
 
 
 
துபாயில் உலகிலேயே உயரமான ‘புர்ஜ் கஃலிபா’ கட்டிடத்தின் கட்டுமானப் பணி தொடங்கியது (செப்.21, 2004)
 
ஐக்கிய அரபு அமீரகத்தின் துபாயில் அமைந்துள்ள வானளாவிய கட்டிடமான புர்ஜ் கலிஃபா கட்டிடத்தின் கட்டுமானப் பணிகள் 2004-ம் ஆண்டு இதே தேதியில் ஆரம்பிக்கப்பட்டன. இதன் கட்டுமானப் பணிகள் முடிவடைந்து 2010-ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 4-ஆம் தேதி இந்த கட்டிடம் திறந்து வைக்கப்பட்டது.

2684 அடி உயரம் கொண்ட இந்த கட்டிடத்தில் 160 மாடிகள் அமைந்துள்ளன. இதுவே உலகின் உயரமான கட்டிடமும் ஆகும். இக்கட்டிடத்தின் உரிமை ‘இமார்’ என்ற சர்வதேச ரியல் எஸ்டேட் நிறுவனத்தைச் சார்ந்தது. இக்கட்டிடம் திறக்கப்படுவதற்கு கடைசி நிமிடம் வரை புர்ஜ் துபை என்றே அனைவராலும் அழைக்கப்பட்டது. அப்போது, துபை வேர்ல்டன் கடன் சுமையை அபுதாபி கலிஃபா 10 பில்லியன் அளவில் பைல் அவுட் செய்ததன் நன்றிக்கடனாக ‘புர்ஜ் கலிஃபா’ என பெயர் சூட்டப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

http://www.maalaimalar.com

  • தொடங்கியவர்

 

'நீ விதைத்த வினையெல்லாம் உன்னை அறுக்கக் காத்திருக்கும்'

  • தொடங்கியவர்

 

2,000 டன்கள் எடை கொண்ட அரங்கத்தை நகர்த்திய சீனர்கள்

ஷாங்காயின் ஜேட் பெளத்த கோயிலை தினந்தோறும் சுமார் 1 லட்சம் பேர் பார்வையிடுகின்றனர்.

  • தொடங்கியவர்

உங்கள் குழந்தையின் படங்களை இணையத்தில் பகிர்கிறீர்களா? #Sharenting

Sharenting


Sharenting (அல்லது oversharenting) என்பது சமூக வலைதளங்களில் தங்கள் குழந்தைகளின் புகைப்படங்களை அதிக அளவில் பதிவிடும் பெற்றோர்களைக் குறிப்பிடும் சொல்.

80% க்கும் மேற்பட்ட குழந்தைகள் தனது இரண்டு வயதிற்குள்ளே ஆன்லைன் உலகில் கால் பதித்து விடுகின்றனர். சராசரியாகப் பெற்றோர்கள் தங்கள் குழந்தையின் ஐந்தாவது பிறந்தநாளுக்கு முன்பே கிட்டத்தட்ட 1,500 படங்களை ஆன்லைனில் பகிர்ந்துகொள்வதாக ஓர் ஆய்வு முடிவு தெரிவிக்கிறது.

OFCOM இலிருந்து வந்த இந்த சமீபத்திய அறிக்கையில் பல பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளின் படங்களைப் பகிர்ந்துகொள்வதை உறுதிப்படுத்துகின்ற அதே வேலையில், 56%க்கும் மேற்பட்ட பெற்றோர்கள் தங்கள் குழந்தையின் படங்களைப் பகிர்வதில்லை என்றும் குறிப்பிடுகிறது.

"இணையத்துடன் வளர்ந்து வரும் (Growing up with internet )" வெளியிட்ட அறிக்கையின் படி, சில பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளை தர்மசங்கடத்திற்கு உள்ளாக்கும் தகவலைப் பகிர்ந்து கொள்கின்றன என்றும், சிலர் தங்கள் குழந்தைகளின் நலன்களை அவர்கள் வெளியிடும் முன் ஒருபோதும் கருதுவதில்லை என்றும் கூறுகிறது.

CBBC நியூசவுண்ட்டிற்காக சமீபத்தில் நடத்தப்பட்ட ஓர் ஆய்வானது, Sharenting செய்யப்பட்ட கால் பங்கு குழந்தைகள் இந்த நடவடிக்கைகளால் பெரும் மன கஷ்டத்திற்கு உள்ளாவதாக சொல்கிறது.

பெற்றோர்கள் அடுத்தமுறை தங்கள் குழந்தைகளின் புகைப்படங்களை இணையத்தில் பகிரும் முன் நன்கு யோசித்துக்கொள்ளுங்கள்.

http://www.vikatan.com

  • தொடங்கியவர்

துப்பாக்கிச் சூட்டிலும் அசத்தும் தோனி! - வைரல் வீடியோ

இந்தியா-ஆஸ்திரேலியா அணிகள் இடையிலான இரண்டாவது ஒருநாள் போட்டி, கொல்கத்தா ஈடன்கார்டன் மைதானத்தில் இன்று நடைபெறுகிறது. 

kolkatta_08304.jpg

Photo Credit: Kolkatta Police

கொல்கத்தாவில் மழை பெய்துவருவதால், தொடர்ந்து இரண்டாவது நாளாக இந்திய வீரர்களின் பயிற்சி ரத்துசெய்யப்பட்டது. இதையடுத்து, கொல்கத்தா காவல்துறையின் துப்பாக்கிச் சுடுதல் பயிற்சி மையத்துக்குச் சென்ற இந்திய அணியின் முன்னாள் கேப்டன் தோனி, துப்பாக்கி சுடுதல் பயிற்சியில் ஈடுபட்டார். அவர், துப்பாக்கிச் சுடுதல் பயிற்சியில் ஈடுபடுவது போன்ற புகைப்படத்தை கொல்கத்தா போலீஸார், சமூக வலைதளங்களில் பதிவிட்டுள்ளனர். அதில், குறிபார்த்துச் சுடும் தோனியின் திறன் வியக்கத்தக்க அளவில் இருப்பதாக கொல்கத்தா போலீஸார் பாராட்டியுள்ளனர். முதலில் புகைப்படத்தை மட்டுமே வெளியிட்ட அவர்கள், ரசிகர்களின் தொடர் கோரிக்கைகளை ஏற்று, தோனி பயிற்சி பெறுவது போன்ற வீடியோ ஒன்றையும் பதிவிட்டனர். இந்த வீடியோ, சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. 

இந்திய அணியின் கேப்டன் பொறுப்பிலிருந்து கடந்த ஜனவரியில் விலகிய தோனி, அதன்பின்னர் விளையாடிய 19 ஒருநாள் போட்டிகளில் 627 ரன்கள் குவித்துள்ளார். இந்தியக் கிரிக்கெட்டுக்கு தோனி அளித்துள்ள பங்களிப்பைப் பாராட்டும் வகையில், அவருக்கு பத்மபூஷண் விருது வழங்க மத்திய அரசுக்கு இந்தியக் கிரிக்கெட் வாரியம் பரிந்துரை செய்துள்ளது.  

 

 

http://www.vikatan.com

  • தொடங்கியவர்

ஸ்ரீலங்காவில் மணப்பெண் நிகழ்த்திய உலக சாதனை; உலகிலேயே மிக நீளமாம்!

 

ஸ்ரீலங்காவின் மத்திய மாகாணம் கண்டியில் வித்தியாசமான உலக சாதனைத் திருமணம் ஒன்று இடம்பெற்றுள்ளது. இதனை மக்கள் பலரும் வீதிக்கு வந்து அதிசயமாகப் பார்த்துள்ளனர்.

குறித்த திருமணத்தின் மணமகளாலேயே இந்த சாதனை நிலை நாட்டப்பட்டுள்ளது. அதாவது 3,200 மீற்றர் நீளமான ஒசரிபுடவையை மணமகள் அணிந்து இந்தச் சாதனையை பதிவுசெய்துள்ளார்

ஸ்ரீலங்காவில் மணப்பெண் நிகழ்த்திய உலக சாதனை; உலகிலேயே மிக நீளமாம்!

கண்டி கன்னொருவ சந்திக்கு மணமக்கள் வந்துள்ளனர். இதன்பின்னர் உலக கின்னஸ் சாதனையைக் கண்காணிக்கும் குழுமுன்னிலையில், ஒசரி புடவையின் நீளம் அளவிடப்பட்டுள்ளது.

குறித்த மணமகளின் புடவையானது கண்டி கெடம்பே சந்தியிலிருந்து ஈரியகம சந்தி வரை நீண்டு காணப்பட்டுள்ளது. இவற்றின் நீளம் குறித்த குழுவினரால் கணக்கிடப்பட்டு உலக சாதனையாகப் பதிவு செய்யபட்டுள்ளது.

ஸ்ரீலங்காவில் மணப்பெண் நிகழ்த்திய உலக சாதனை; உலகிலேயே மிக நீளமாம்!

குறித்த ஒசரி புடவை பாரவூர்தியொன்றில் கொண்டு வரப்பட்டது. பின்னர் மணமகளுக்கு அணிவிக்கப்பட்டு வீதி நெடுகிலும் சுமார் 250மாணவர்களால் தாங்கிபிடிக்கப்பட்டிருந்தது. இதன்போது மத்திய மாகாணமுதலமைச்சர் சரத் ஏக்கநாயக்கவும் கலந்துகொண்டார்.

ஸ்ரீலங்காவில் மணப்பெண் நிகழ்த்திய உலக சாதனை; உலகிலேயே மிக நீளமாம்!

இதற்கு முன்னரும் இதேபோன்றதொரு சாதனையை இந்தியாவைச் சேர்ந்த பெண்ணும் நிகழ்த்தியிருந்தார். அதன்போது அவர் அணிந்திருந்த சேலையின் நீளம் 2,800 மீற்றராக காணப்பட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கதாகும். அந்த சாதனையே இன்றைய தினம் 3200மீற்றர் நீளத்தால் முறியடிக்கப்பட்டுள்ளது.

ஸ்ரீலங்காவில் மணப்பெண் நிகழ்த்திய உலக சாதனை; உலகிலேயே மிக நீளமாம்!

https://news.ibctamil.com

  • தொடங்கியவர்
கடமைகளை செய்தபடி இருப்போமாக’
 

image_21e0f269bd.jpgநாம் எங்கே இருந்தோம்? என்னவாக முன்னர் இருந்தோம்? தற்போது என்ன செய்துகொண்டிருக்கின்றோம்? இனிமேல் என்ன செய்வோம்? என்று எல்லோருமே தங்களைத் தாங்கள் கேட்பதுண்டு.  

அப்படி ஓர் உண்மை விளக்கத்தைத் தம்மிடம் கேட்பதற்கு யாருக்கும் இஷ்டம் இல்லை. அதனால் என்ன வந்துவிடப்போகிறது எனவும் உள்மனம் சொல்லும். 

வாழ்க்கை முடிச்சுகள் எல்லாமே அவிழ்க்கக் கூடியதுமல்ல; எந்தப் புத்திசாலிக்கும் ஏன் நல்ல நடத்தை, அறிவு நிரம்பியவர்களுக்குத் தெளிவு பூரணமாகி விடுமோ? அறியோம்! 

ஆனால், ஒன்றைக் கேள்மின். எங்களுக்கான கடமைகளைப் புனிதமாகச் செய்தபடி இருப்போமாக. நீதியை தர்மத்தின் வழியே நல்லது எனத் தெளிந்து, அவ்வண்ணம் ஒழுகுவீர்களாக. மனம் விழித்தால், அகிலம் எமக்குள்.

  • தொடங்கியவர்

எம்டன் போர்க்கப்பல் சென்னையில் குண்டு மழை பொழிந்த நாள் (செப்.22, 1914)

எஸ்.எம்.எஸ் எம்டன் என்ற ஜெர்மனிய கடற்படையின் விசித்திர போர்க் கப்பல் 1914 ஆகஸ்ட் இறுதியில் சீனக் கடற்பகுதியில் தனது சாகசத்தைக் காண்பித்துவிட்டு, இந்தியக் கடல் எல்லைக்குள் நுழைந்தது. அதனுடைய திடீர் தாக்குதல் வியப்பானது. ஆங்காங்கு தனது கொடியை இடத்திற்கு தக்கவாறு மாற்றிக் கொண்டு அந்தந்த நாட்டு துறைமுகங்களில் தனக்கு வேண்டிய

 
 
 
 
எம்டன் போர்க்கப்பல் சென்னையில் குண்டு மழை பொழிந்த நாள் (செப்.22, 1914)
 
எஸ்.எம்.எஸ் எம்டன் என்ற ஜெர்மனிய கடற்படையின் விசித்திர போர்க் கப்பல் 1914 ஆகஸ்ட் இறுதியில் சீனக் கடற்பகுதியில் தனது சாகசத்தைக் காண்பித்துவிட்டு, இந்தியக் கடல் எல்லைக்குள் நுழைந்தது. அதனுடைய திடீர் தாக்குதல் வியப்பானது. ஆங்காங்கு தனது கொடியை இடத்திற்கு தக்கவாறு மாற்றிக் கொண்டு அந்தந்த நாட்டு துறைமுகங்களில் தனக்கு வேண்டிய நிலக்கரி மற்றும் வேறு சாதனங்களைத் தந்திரமாகப் பெற்றது.

1914-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் இதே தேதியில் இரவு 9.30 மணிக்கு 'எம்டன்' சென்னைக் கடற்கரையை நெருங்கி தனது பீரங்கிக் குண்டுகளை ஏவியது. 'எம்ட'னிலிருந்து கிளம்பிய குண்டுகள் சென்னைத் துறைமுகத்திற்கு வெளியே நின்றிருந்த பிரிட்டிஷ் கப்பல், ஆங்கிலேயருக்குச் சொந்தமான 'பர்மா ஷெல் ஆயில் டாங்குகள்', சென்னை உயர்நீதி மன்றம், 'செயின்ட் ஜார்ஜ் கோட்டை' போன்றவற்றில் வீழ்ந்து வெடித்தன. மொத்தம் 130 குண்டுகளை அது வீசியது.
 
 
 

இலங்கையில் நாகர்கோயில் பாடசாலை சிறார்கள் படுகொலை நடந்த நாள் (செப்.22, 1995)

 

இலங்கையில் யாழ்ப்பாணம் பகுதியில் நாகர்கோயில் என்ற இடத்தில் உள்ள மத்திய பாடசாலை ஒன்று இருந்தது. இங்கு 1995-ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் இதே தேதியன்று பகல் 12.30 மணிக்கு மதிய நேர இடைவேளைக்கு மணியடித்தபோது பிள்ளைகள் வெளியே வந்து விளையாடிக் கொண்டிருந்தனர். பகல் 12.50 மணியளவில் இலங்கை விமானப் படைகளின் ‘புக்காரா’ விமானங்கள்

 
 
இலங்கையில் நாகர்கோயில் பாடசாலை சிறார்கள் படுகொலை நடந்த நாள் (செப்.22, 1995)
 
இலங்கையில் யாழ்ப்பாணம் பகுதியில் நாகர்கோயில் என்ற இடத்தில் உள்ள மத்திய பாடசாலை ஒன்று இருந்தது. இங்கு 1995-ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் இதே தேதியன்று பகல் 12.30 மணிக்கு மதிய நேர இடைவேளைக்கு மணியடித்தபோது பிள்ளைகள் வெளியே வந்து விளையாடிக் கொண்டிருந்தனர். பகல் 12.50 மணியளவில் இலங்கை விமானப் படைகளின் ‘புக்காரா’ விமானங்கள் இந்த இடத்தில் கண்மூடித்தனமாக குண்டுகளை வீசின. ஏதும் அறியாத மாணவர்கள் மரத்தின் கீழே சென்று பதுங்கிக் கொண்டனர். அப்போது, மரத்துக் கீழே பதுங்கியிருந்த 25 சிறுவர்கள் உடல் சிதறி பரிதாபமாக உயிரிழந்தர். இந்த தாக்குதலில் ஒட்டுமொத்தமாக 39 பேர் பலியாயினர். 200 பேர் வரையில் படுகாயமடைந்தனர். உயிரிழந்தவர்கள் 6 வயது குழந்தை முதல் 16 வயதுடைய சிறுவன் வரை அடங்குவர்.

http://www.maalaimalar.com

  • தொடங்கியவர்

காணாமல் போன விமானங்கள்... விடை தெரியாத மர்மங்கள்! #MysteryStories

 
 

'இருட்டில் தொலைத்துவிட்டு வெளிச்சத்தில் தேடாதே' என்பார்கள். சர்வதேச நாடுகள் பலவும் இருட்டில் தொலைத்த விமானங்களை  வெளிச்சம் இருக்கிறது என்கிற காரணத்தால் வேறு ஒரு இடத்தில்  தேடிக்கொண்டிருக்கிறார்கள். ஓடவும் முடியாது ஒளியவும் முடியாது என்கிற ரீதியில் 24 மணி நேரக் கண்காணிப்பிலேயே இருந்த விமானங்கள் பலவும் தொலைந்து போய் இன்றுவரை கண்டுபிடிக்க முடியாமலே இருக்கிறது. வெறுமனே விமானங்கள் மட்டும் காணாமல் போயிருந்தால் தேடாமல் விட்டிருக்கலாம். எல்லா விமானங்களிலும் 200 பயணிகளுக்கும் மேலாக இருந்திருக்கிறார்கள் என்பதுதான் சோகமான விஷயமாய் இருக்கிறது. குறிப்பிட்ட காலம் வரை தேடிவிட்டு கடலில் விழுந்திருக்கலாம் என ஜஸ்ட் லைக் தட் அறிக்கை கொடுத்துவிட்டு கடந்து வந்திருக்கின்றன சம்பந்தப்பட்ட அரசுகள். எல்லாமே முழு பூசணிக்காயை சோற்றில் மறைக்கிற சம்பவங்கள். ராணுவ விமானங்கள், போர்க்கப்பல்கள் எனச் சர்வதேச படைகளின் கூட்டுத் தேடல்களில் இன்று வரை விடை கிடைக்காத விமானங்கள் ஏராளம்.

விமானம்

டிசம்பர் 28, 1948 அன்று, மியாமி (புளோரிடா) தலைநகரான போர்டோரிகோவின் சான் ஜுவான் விமான நிலையத்திலிருந்து  டக்ளஸ் டகோடா DC-3 என்கிற விமானம் இரவு 10.03 மணிக்குப் புறப்பட்டது. 28 பயணிகள் மூன்று விமான சிப்பந்திகளுடன் பயணித்தது. “வந்துகொண்டிருக்கிறோம். மியாமியினுடைய விளக்குகள் எனக்கு மங்கலாகத் தெரிகின்றன. இறங்குவதற்கான தகவலுக்காக காத்திருக்கிறேன்”  என விமானி செய்தி அனுப்புகிறார்.  அந்த விமானத்திலிருந்து கடைசியாய் வந்த தகவல் இது மட்டும்தான். இப்போது வரை அந்த விமானம் தரை இறங்காமலே இருக்கிறது. 


1948, ஜனவரி 30-ம் தேதி இரண்டாம் உலகப்போரில் வீர தீரச் செயல்கள் புரிந்த ஏர் மார்ஷல் ஆர்தர் கோணிங்கம் பயணம் செய்த ஸ்டார் டைகர் விமானம் 6 பணியாளர்கள் மற்றும் 25 பயணிகளுடன் பெர்முடா தீவில் இருந்து கிளம்பிய நேரத்தில் இருந்து இதுவரை தரை இறங்கவில்லை. எங்கெங்கோ தேடியவர்கள் கடைசியில் பெர்முடா முக்கோணத்தைக் கைகாட்டிவிட்டு அப்படியே ஒதுங்கிவிட்டார்கள். 


1949-ம் ஆண்டு ஜனவரி 17 அன்று பெர்முடாவிலிருந்து ஜமைக்காவுக்கு கிளம்பிய ஸ்டார் ஏரியல் விமானம் கட்டுப்பாட்டு அறையின் அனைத்துத் தொடர்புகளையும் இழந்தது.  விமானத்தில் இருந்து கிடைக்கப்பெற்ற கடைசிச் செய்திகளும் சாதாரணமானவை. தேடுதலைக் கைவிட்ட பிறகு  1998ல் ஆண்டிஸின் மலைகளில் காணாமல் போனதற்கான சாத்தியக்கூறு கண்டுபிடிக்கப்பட்டது. ஆனால், அது ஸ்டார் ஏரியல் விமானம்தான் என்பதற்கு ஆதாரங்கள் இல்லாததால் இப்போது வரை கிடப்பிலேயே கிடக்கிறது விமானமும் அதுசார்ந்த கோப்புகளும். 

விமானங்கள்

1962-ம் ஆண்டு அமெரிக்க  ராணுவ விமானம் ப்ளையிங் டைகர் லைன் விமானம் 739 மாயமானது. இந்த விமானமானது மேற்கு பசிபிக் பெருங்கடலின் வழியே செல்லும்போது திடீரென்று மாயமாகிவிட்டது. விமானத்தில் 93 அமெரிக்க போர் வீரர்கள் மற்றும் வியட்நாமைச் சேர்ந்த மூன்று பேர் என மொத்தம் 107 பேர் பயணித்தனர். விமானம்குறித்த தகவலும் பயணிகள்குறித்த தகவலும் இப்போது வரை தேடப்படும் பட்டியலில்தான் இருக்கிறது. விமானம் வெடித்திருக்குமோ என்று பார்த்தால், அதற்கான ஆதாரம் ஏதும் கிடைக்கவில்லை. விமானத்தைத் தேடுவதை கைவிட்டு மாமாங்கம் ஆகிறது. 
 
ஏர் பிரான்ஸ் விமானம் 447 விமானம் கடந்த 2009-ம்  ஆண்டு 228 பேருடன் பிரேசில் வான்வெளியில் இருந்து, செனகல் வான் எல்லைக்குள் நுழையும்போது, கட்டுப்பாட்டு அறையுடன் கொண்டிருந்த அனைத்துத் தொடர்புகளும் துண்டிக்கப்பட்டது. இன்று வரை என்ன நடந்தது ஏன் நடந்தது என்று யாருக்கும் தெரியவில்லை. தீவிர  விசாரணைக்குப்  பிறகு, அந்த விமானம்  அட்லாண்டிக் பெருங்கடலைக் கடக்கும்போது வெடித்திருக்கும் என்று யூகித்து அப்படியே விட்டுவிட்டார்கள். 228 பயணிகளும் உயிரிழந்ததாக அறிவிக்கப்பட்டது. 2 ஆண்டுகள் கழித்து அதன் கறுப்புப் பெட்டி கண்டெடுக்கப்பட்டதைத் தொடர்ந்து அது விபத்தில் வெடித்துச் சிதறியது உறுதியானது. 

மலேசியத் தலைநகர் கோலாலம்பூரில் இருந்து சீனத் தலைநகர் பெய்ஜிங்குக்கு 2014-ம் ஆண்டு மார்ச் 8-ம் தேதி அன்று 00:41 மணியளவில் 239 பயணிகளுடன் போயிங் 777- 200 MH 370 விமானம் புறப்பட்டது. தகவல்களின்படி அதிகாலை 01:22 அல்லது 2.40 மணியளவில் தாய்லாந்து வளைகுடாவைக் கடக்கும்போது இவ்விமானம் கட்டுப்பாட்டு அறையுடனான தொடர்பை இழந்தது. பிரேக்கிங் செய்திகள் அலற மலேசிய சீன நாடுகளைப் பதற்றத்தில் ஆழ்த்தியது. விமானம் கடத்தப்பட்டிருக்கலாம் என்கிற நோக்கில் இரு நாடுகளும் புலன் விசாரணையில் இறங்கின. உலகம் முழுவதிலும் பிரார்த்தனைகள் தொடர்ந்துகொண்டே இருந்தது. விமானம் பற்றிய  எந்தத் தகவலும் கிடைக்காத இரண்டொரு நாளில் உலக நாடுகளின் உதவியை நாடியது மலேசிய அரசு. உலகம் முழுவதிலும் இருந்து 25 நாடுகளின் விமானங்கள் மற்றும் கப்பல்கள் உதவியுடன் தேடியும் ஒரு துப்பு கூடக் கிடைக்காமல் போனது. கடல் மார்க்கம் ஆகாய மார்க்கம் என இந்தியப் பெருங்கடலில் ஆரம்பித்து ஆஸ்திரேலிய கடல் பகுதி வரை  சல்லடைப்  போட்டு தேடியும் எந்தத் தகவலும் கிடைக்காமல் போன பரிதாப விமானம் போயிங் 777. இப்போது வரை விமானத்தின் பாகங்கள் அங்கே கிடைத்தது இங்கே கிடைத்தது என உறுதிப்படுத்த முடியாத  தகவல்கள் வந்துகொண்டே இருக்கிறது. விமானம் என்ன ஆனது என்றுதான் இப்போது வரை மர்மமாகவே இருக்கிறது

விமானங்கள்

2016 ஜூன் 21-ம் தேதி 29 பேருடன்  தாம்பரத்தில் இருந்து அந்தமான் கிளம்பிய ராணுவ விமானம் நடுவானில் காணாமல் போனது. தகவல் கிடைத்த நொடியில் இருந்து ஆறு கப்பல்கள் பதினைந்து விமானங்கள் எனப் பல இடங்களில் தேடியும் விமானத்தின் சிறிய பகுதிகூட இப்போது வரை கண்டுபிடிக்க முடியவில்லை. பயணம் செய்த 29 பேரும்  இறந்துவிட்டதாக அரசு அறிவித்திருக்கிறது. 

பெரும்பாலான விமானங்கள் இயந்திரக் கோளாறுகளால் விபத்துக்குள்ளாகின்றன. சில விபத்துகள் வானிலை மாறுவதால் நடந்திருக்கின்றன. சில விமானங்கள் பறவை மோதுவதால் நிகழ்கின்றன. ஆனால் காணாமல் போன விமானங்கள் எப்படி நடந்தன என்கிற எந்த எந்தக் குறிப்பையும் கொடுக்காமல் காணாமல் போயிருக்கின்றன. 

விமானம் விபத்தில் சிக்கினால் அந்த விமான விபத்துக்குக் காரணம் என்ன என்பதைக் கறுப்புப் பெட்டியை வைத்துக் கண்டறிந்துவிடலாம். விமானி உரையாடலில் தொடங்கி விமானத்தின் அனைத்துத் தகவல்களையும் சேமித்து வைக்கும் கறுப்புப் பெட்டியை விமானத்தின் வால் பகுதியில் பொருத்தி இருப்பார்கள். எளிதில் பாதிக்கப்படாத வண்ணம் கறுப்புப் பெட்டி வடிவமைக்கப்பட்டிருக்கும். விமானம் செயல் இழந்தாலும் முப்பது நாள்களுக்கு சிக்கனல்களை வழங்கிக்கொண்டே இருக்கும். 2012 டிகிரி வெப்பத்தையும், 1000 டன் எடையையும் தாங்கும் விதமாகக் கறுப்பு பெட்டிகள் இருக்கும். எப்படி இருந்தாலும் மனிதனால் தயாரிக்கப்பட்ட சில தொழில்நுட்பங்கள் எல்லாக் காலங்களிலும் உதவியாய் இருக்கும் எனச் சொல்லிவிட முடியாது. மேற்கூறிய விமான விபத்துகளில் மலேசிய விமானத்தின் கறுப்பு பெட்டியைக் கூட இப்போதுவரை கண்டுபிடிக்க முடியவில்லை என்பதுதான் தொழில் நுட்ப வளர்ச்சியின் முரண்.

 

இந்த எல்லா விமானங்களும் மாயமானதற்கான காரணங்கள் இருக்கின்றன. ஆனால், காரணம் தெரிந்தவர் யாரும் உயிரோடு இல்லை. 

http://www.vikatan.com

  • தொடங்கியவர்

இன்பாக்ஸ்

 

38p1.jpg

* சாய்னாவுக்கும், சிந்துவுக்கும் பேட்மின்டனில் மட்டுமல்ல; ட்விட்டரிலும் பலத்த போட்டி. 50 லட்சம் ஃபாலோயர்களுடன் லீடிங்கில் இருக்கிறார் சாய்னா நேவால்! அசத்துங்க கேர்ள்ஸ்!


38p2.jpg

* கிட்டத்தட்ட 10,000 பேர் மட்டுமே வாழும் லாஸ் ஆல்டோஸ் ஹில்ஸ் என்னும் கலிஃபோர்னியாவில் உள்ள சிறிய நகரில் வசிக்கிறார் சுந்தர் பிச்சை. அமைதியும் அழகும் தவழும் இந்த சிறிய மலைப்பிரதேசத்தில் வீடுகளுக்கு மட்டுமே இடம். கடைகள் கிடையாது. அபார்மென்ட்டுகளும் கிடையாது. வாழ்க்கைடா!


38p3.jpg

* மீண்டும் `இந்தியன்’ அவதாரம் எடுக்கிறார் உலக நாயகன். ஷங்கருடன் இணைந்து `இந்தியன்-2’ படத்துக்கான கதை விவாதம் அனல்பறக்க நடந்துகொண்டிருக்கிறது. அடுத்த ஆண்டு பிப்ரவரி முதல் ஷூட்டிங் ஆரம்பமாம்... சூப்பரு


38p4.jpg

* ரவிச்சந்திரன் அஷ்வின் இப்போது லண்டன் வாசி. சென்னையில் சிலநாள் வாசம் மட்டுமே. `ஆஸ்திரேலியா தொடரில் அஷ்வினுக்கு ரெஸ்ட்’ எனச் சொல்லும் பி.சி.சி.ஐ. அஷ்வின் அடுத்த ஆண்டு இங்கிலாந்தில் நடைபெற இருக்கும் தொடருக்காக இங்கிலாந்திலேயே தங்கிப் பயிற்சி எடுக்கிறார் என்கிறது. நல்லவை நடக்கட்டும்!


* ஓவியர், எழுத்தாளர், அரசியல்வாதி என ஆல் ரவுண்டராகக் கெத்து காட்டும் மேற்கு வங்காள முதல்வர் மம்தா பானர்ஜியின் அடுத்த அவதாரம் பாடலாசிரியர் மற்றும் இசையமைப்பாளர்.`மாத்ரி மா’ எனப் பெயரிடப்பட்டிருக்கும் இந்த ஆல்பத்தில் சில பாடல்களை எழுதி, இசையமைத்து வெளியிட்டிருக்கிறார் தீதீ. ``டார்ஜிலிங் மலைக்குப் போய்க்கொண்டிருக்கும்போதுதான் எனக்குப் பாடல் எழுதும் எண்ணம் உதித்தது. அப்படியே எழுதி டியூனும் போட்டுவிட்டேன். இப்படி மலைவாசஸ்தலங்களுக்குப் போகும்போதுதான் நமக்குள் இருக்கும் திறன்கள் வெளியே வருகின்றன’’என நெகிழ்ந்திருக்கிறார் மம்தா. கொடநாட்டுக்கும் வாங்க தோழர்!


38p5.jpg

* சில ஆண்டுகளுக்கு முன்புவரை கார் ஃப்ரீக்காக இருந்த ஆர்யா, இப்போது கார்களை அதிகம் தொடுவதில்லை. சைக்கிள் ரைடு, மெட்ரோ ரெயில் பயணம், வாக்கிங், ஜாக்கிங் என லிவ் சிம்பிள் மோடில் இருக்கிறார். கலக்கல் ப்ரோ...

  • தொடங்கியவர்

 

சிங்கப்பூர் : மழலையர் பள்ளியிலும் ரோபோக்கள்

தொழில்நுட்பத்துடன் கலக்க குறைந்த வயது என்ன? நல்லது நீங்கள் சிங்கப்பூரில் இருந்தால் முன்பள்ளியிலேயே உங்கள் உற்ற நண்பனாக ஒரு ரோபோ கிடைத்துவிடும்.

குழந்தைகள் கற்பதற்கு உதவுவதற்காக முன்பள்ளி கற்கைகளில் அங்கு ரோபோ பொம்மைகளை அறிமுகம் செய்திருக்கிறார்கள். பிள்ளைகள் எப்படி அதனை ரசிக்கிறார்கள்?

  • தொடங்கியவர்

++

இயற்கையின் அதிசயம்: சீனாவில் கல் முட்டையிடும் குன்று

சீனாவில் உள்ள குன்று ஒன்றை ”முட்டையிடும் மலை” என மக்கள் அழைக்கின்றார்கள்.

சீனாவின் கைஸொவ் மாகாணத்தில் உள்ள சான் டா யா குன்றில் 30 ஆண்டுகளுக்கு ஒருமுறை கல் முட்டைகள் வெளிவருவதாகக் கூறப்படுகிறது.

9 அடி உயரமும் 65 அடி நீளமும் கொண்ட சமதளமற்ற குன்றில் டசன் கணக்கில் கோள வடிவ முட்டைகள் வெவ்வேறு அளவுகளில் உருவாகியிருக்கின்றன.
குன்றுக்கு அருகில் இருக்கும் குலு கிராமத்தைச் சேர்ந்த மக்கள், இந்த மலை நன்றாக சாப்பிட்டு, 30 ஆண்டுகளுக்கு ஒருமுறை கல் முட்டைகளை இடுவதாகச் சொல்கிறார்கள்.

இந்த விசித்திரமான முட்டை இடும் மலையை ஆய்வு செய்வதற்குப் புவியியலாளர்கள் மிகவும் சிரமப்படவேண்டியிருக்கிறது.

நகரிலிருந்து நீண்ட தூரம் பயணம் செய்து, ஒதுக்குப்புறமான குன்றை அடைய வேண்டும். குன்று கடினமான பாறைகளால் ஆனது. முட்டைகள் சுண்ணாம்புப் பாறைகளால் ஆனவை. எல்லா முட்டைகளும் ஒரே விதமான பாறையால் உருவாகவில்லை. இதுவரை இந்தக் குன்றிலிருந்து ஏன் முட்டை வடிவப் பாறைகள் உருவாகின்றன என்ற கேள்விக்கு பதில் கிடைக்கவில்லை.

இன்னும் சில கோடி ஆண்டுகளுக்குப் பிறகு கல் முட்டைகள் எப்படி உருவாகின்றன என்று தெரியவரலாம் என்கிறார்கள்.

பல தலைமுறைகளாக இந்தக் குன்று முட்டைகளை இடுவது குறித்து குலு கிராம மக்கள் அறிந்து வைத்திருக்கின்றனர்.

அவர்கள் அடிக்கடி குன்றுக்கு வந்து, முட்டைகளைத் தொட்டு வணங்குகிறார்கள். ‘கடவுள் முட்டைகள்’ என்றும் ’அதிர்ஷ்டம் தரும் முட்டைகள்’ என்றும் மக்கள் நம்புகின்றார்கள்.

கிராமத்தில் வசிக்கும் 125 குடும்பங்களும் குறைந்தது ஒரு கல் முட்டையையாவது வைத்திருக்கின்றன. மற்ற கிராமங்களில் இருந்தும் முட்டைகளை எடுத்துச் செல்கிறார்கள். சமீபத்தில் இந்தக் குன்று பிரபல சுற்றுலாத்தலமாக மாறிவிட்டது.

1

2

4

^

http://newsfirst.lk

Edited by நவீனன்

  • தொடங்கியவர்

ஈக்களை ஏன் அடிக்க முடியவில்லை தெரியுமா?

வீட்டில் பறந்துக்கொண்டிருக்கும் ஈக்களை நாம் அடிக்க முயலும்போது, அவை எப்படியாவது தப்பித்து சென்றுவிடும். ஈக்களை நம்மால் ஏன் அடிக்க முடிவில்லை என்பதை விளக்கும் காணொளி.

  • தொடங்கியவர்

இன்ஸ்டாகிராமில் காண கிடைக்கும் இந்தியாவின் ரயில் பயணங்கள்

ரயில் பயணங்களை மிகவும் விரும்புகின்ற ஷான்னு பாபார் ஒவ்வொன்றையும் ஆவணப்படுத்த, பிறரும் அவரோடு சேர்ந்து ஆவணப்படுத்தினர்

இந்த சுயப்படம் இந்தியாவின் தெற்கு பகுதியிலுள்ள கேரளா மாநிலத்தின் தலைநகரான திருவனந்தபுரத்திலுள்ள ஒரு ரயில் நிலையம் ஒன்றில் 2015 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் எடுக்கப்பட்டது.

 

5 வயது குழந்தையாக இருந்தபோது ஷாயனு பாபார் முதல்முறையாக ரயிலில் பயணம் செய்தார். ரயில் பயணங்களின் மீது நீண்டகாலமாக தொடரும் விருப்பம் அப்போதுதான் தொடங்கியது. கல்லூரியில் படிக்கும்போது, ஆய்வுக் கட்டுரைக்காக தன்னுடைய ரயில் பயணங்களை அவர் ஆவணப்படுத்தினார். இந்த சுயப்படம் இந்தியாவின் தெற்கு பகுதியிலுள்ள கேரளா மாநிலத்தின் தலைநகரான திருவனந்தபுரத்திலுள்ள ஒரு ரயில் நிலையம் ஒன்றில் 2015 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் எடுக்கப்பட்டது.

 

ஒவ்வொரு ரயில் பெட்டியும் வேறுப்பட்ட வணிக பிராண்டுகளின் விளம்பரங்களை கொண்டிருக்கின்றன.

2015 ஆம் ஆண்டு ஜூலை 21: இஸ்டாகிராமில் பாபார் தன்னுடைய பயணங்களை பதிவு செய்ய “@வின்டோசீட்புராஜெக்ட்” என்ற ஹேஸ்டேக்கோடு பதிவிட தொடங்கினார். “சன்னலோர இருக்கை”தான் இத்தகைய ரயில் பயணங்களில் அவர் எப்போதும் அமர விரும்புகிற இடம் என்கிறார். இந்தியாவின் தெற்குப் பகுதியில் வண்ணமயமான ஏர்காடு விரைவு ரயிலில் இந்த புகைப்படத்தை எடுப்பதற்கு சௌகரியமான இடமும் இந்த சன்னலோரம்தான். ஒவ்வொரு ரயில் பெட்டியும் வேறுப்பட்ட வணிக பிராண்டுகளின் விளம்பரங்களை கொண்டிருக்கின்றன.

அதிக பொருட்களின் மத்தியில் களைப்படைந்த தொழிலாளர்கள் குட்டித் தூக்கம் போடுவதை பார்ப்பது மனதை இளக செய்கிறது.

 

2015 ஆம் ஆண்டு, பிற இன்ஸ்டாகிராம் பயனாளர்களும் “@வின்டோசீட்புராஜெக்ட்” ஹேஸ்டேக்கோடு சேர்த்து தங்களுடைய இந்திய ரயில் பயணங்களை வரிசையாக பதிவிடதொடங்கினர். கொல்கத்தாலுள்ள இந்த உள்ளூர் ரயிலில் இருந்து எடுக்கப்பட்ட இந்த புகைப்படம் உள்பட இந்தப் படங்களை எல்லாம் பாபார் மீண்டும் பதிவிட்டுள்ளார். அதிக பொருட்களின் மத்தியில் களைப்படைந்த தொழிலாளர்கள் குட்டித் தூக்கம் போடுவதை பார்ப்பது மனதை இளக செய்கிறது.

இவ்வளவு கேன்களை வைக்க ரயிலுக்குள் இடமில்லை என்பதால்தான் இவ்வாறு செய்கிறார்கள்

பங்களிப்போர் பலரிடம் இருந்து புகைப்படங்கள் வெள்ளம்போல பெருகத் தொடங்கியதால், “@வின்டோசீட்புராஜெக்ட்” அதிக புகைப்படங்களை காணத்தருகின்ற காட்சி நூலகமாகியது. இந்தியாவில் கிராமப்புற பண்ணைகளில் இருந்து நகர்ப்புறப் பண்ணைகளுக்கு பால் விவசாயிகள் பாலை எப்படி பிற இடங்களுக்கு அனுப்புகிறார்கள் என்பது பற்றி இதில் பாபார் காட்டுகிறார். இவ்வளவு கேன்களை வைக்க ரயிலுக்குள் இடமில்லை என்பதால்தான் இவ்வாறு செய்கிறார்கள்

இந்த புகைப்படத்தில் சட்டை இல்லாமல், குளிரூட்டும் வசதியில்லாத ரயில் பெட்டியில் இருவர் படுத்துள்ளனர்.

மீண்டும் பதிவிடப்பட்டுள்ள இந்த புகைப்படம், ரயில் பயணங்களில் காண கிடைக்கின்ற தராள இயற்கைக்காட்சிகளை காட்டுவதாக பாபார் தெரிவிக்கிறார். அறியாதவர் சிலர் காத்திருப்போர் பட்டியலில் இருந்தால் அவர்களோடு படுக்கின்ற இடத்தை பகிர வேண்டிய கட்டாயம் ஏற்படும். அவர்களுடைய முன்பதிவு, அவர்கள் ரயிலில் ஏறிய பின்னர்தான் உறுதி செய்யப்படும். இந்த புகைப்படத்தில் சட்டை இல்லாமல், குளிரூட்டும் வசதியில்லாத ரயில் பெட்டியில் இருவர் படுத்துள்ளனர்.

 

குடும்பங்களின் விருந்துகளை இந்த உணவு பொருகள் நினைவூட்டுவதாக அவர் தெரிவிக்கிறார்.

ரயில் பயண வழிகளில் கிடைக்கின்ற பல வகையான உணவு பொருட்கள் இந்திய ரயில் பயணங்களின் ஒரு பாரம்பரியம் என்கிறார் பபார். குழம்புகள், ரொட்டிகள், சோறு மற்றும் மசாலா கலக்கப்பட்ட பாலாடையுடன் கிடைக்கும் மசாலா பூரிகள் என இந்தியாவின் மேற்கு பகுதியிலுள்ள குன்றுகளையொட்டி ஆண்டுதோறும் செல்லுகின்றபோது, குடும்பங்களின் விருந்துகளை இந்த உணவு பொருகள் நினைவூட்டுவதாக அவர் தெரிவிக்கிறார்.

இந்த புகைப்படம் “@வின்டோசீட்புராஜெக்ட்”டில் மீண்டும் பதிவிடப்பட்டது.

2015 ஆம் ஆண்டு ஜூலை மாதம் மதிய வேளையில் டெல்லியில் நிஸாமுதீன் ரயில் நிலையத்தில் உள்ளூர் ரயிலில் இந்த மனிதர்களை கடந்து நடந்து சென்றதை நினைவுகூர்கிறார் புகைப்படக்லைஞரான ஹார்ஷிதா மகாஜன். அவர்களின் கவனத்தை ஈர்க்கும் அளவுக்கு பெரியதொரு புகைப்படக் கருவியை அவர் வைத்திருந்தார். “அவர்களுடைய வெளிப்பாடுகளில் இருந்து ஆர்வமும், உற்சாகமும்தான் என்னை மிகவும் தொட்டது” என்று அவர் கூறுகிறார். இரண்டு ஆண்டுகளுக்கு மேலான பின்னர், இந்த புகைப்படம் “@வின்டோசீட்புராஜெக்ட்”டில் மீண்டும் பதிவிடப்பட்டது

 

சீட்டு ஆட்டம்

சீட்டு விளையாடுவதைவிட வேறு எதுதான் நம்முடைய அறிமுகமின்மையை நீக்க முடியும்?” என்று வினவுகிறார் பாபார். இந்த விளையாட்டின் மூலம், மனிதர்கள் சிரித்தனர், கூக்குரலிட்டனர், விவாதித்தனர். அவர்கள் தங்களுடைய பெயரையே பரிமாறிக்கொள்ளாத அந்நியர்கள். ஆனால், அவர்கள் நண்பர்களைபோல விளையாடினர் என்று அவர் கூறுகிறார். பாபார் இந்த சீட்டு விளையாட்டில் பங்கேற்கவில்லை. அவர்களுக்கு அடுத்ததாக நடைபெற்று கொண்டிருந்த கெரோக்கி அமர்வை புகைப்படம் எடுத்து கொண்டிருந்தார்.

பெண் ஒருவர் தன்னுடைய ரயில் நிலைய நிறுத்ததை பார்க்கிறார்.

வழக்கமற்றவைகளில் இருந்து தீங்கற்றவைகள் வரை “@வின்டோசீட்புராஜெக்ட்” ஹேஸ்டேக்கில் 26 ஆயிரம் படங்கள் உள்ளன என்று பாபார் தெரிவித்திருக்கிறார். இந்த புகைப்படம் ஹௌரா-ஜமால்பூர் விரைவு ரயில் எடுக்கப்பட்டு பாபாரால் மீண்டும் பதிவிடப்பட்டது. இந்த ரயில் பாதை இந்தியாவின் கிழக்கில் அமைந்துள்ள மேற்கு வங்கத்தை 9 மணிநேரத்தில் செல்ல உதவுகிறது. முதியோரும், ஏழைகளும் ரயில் கால அட்டவணையை வாசிக்க தெரியாதவர்களாக இருப்பதால் பெண் பயணிகள் மிகவும் கவலையோடு தொன்றுவதாக அவர் எண்ணுகிறார்.

 

படுக்கையில் தூங்கும் நாய்

இந்த புகைப்படத்தை எடுத்த திவ்யா துர்கா, நாங்கள் இந்த விலங்கு குட்டிகளோடு முதல் வகுப்பில் பணிக்கிறோம்” என்கிறார். செல்ல விலங்க்களோடு ரயில் பயணம் மேற்கொள்வோர் தங்களுடைய படுக்கையையும், அல்லது கூண்டையும் முதல் வகுப்பிலேயே வைக்க இடம் ஒதுக்க வேண்டும். இதுதான் அவளுடைய நாய், மார்க்கோபோலோ, டெல்லியில் இருந்து இமய மலைக்கு செல்கிறது. அவர் தன்னுடைய செல்ல நாயோடு 4 மறை ரயிலில் பயணித்துள்ளார். மிக நீண்ட தூர பயணம் 30 மணிநேரங்கள். துர்க்காவின் புகைப்படங்கள் ஒரேயொரு முறை “@வின்டோசீட்புராஜெக்ட்” ஹேஸ்டேக்கில் பதிவிடப்பட்டது

மக்களின் பழக்கம் மிகவும் விநோதமானவை என்று அவர் தெரிவிக்கிறார்.

 

2017 ஆம் ஆண்டு மார்ச் மாதத்தில், இந்தியாவின் மத்தியில் செல்லும் ஷோபூர் கலன் விரைவு ரயிலின் மேற்கூரையில் ஏறிவிட்டார் பாபார். ரயிலின் உள்ளே இடம் இல்லாததால் பயணிகள் கூரையில் ஏறி அமர்ந்தனர். அவர்கள் செய்தித்தாள் வாசித்தனர். தூங்கினர். குகைப்பகுதியை நெருங்கியபோது, அனைவரும் ஒன்றாக தலையை தாழ்த்தி கொண்டனர் என்று பாபார் நினைவுகூர்கிறார். மக்களின் பழக்கம் மிகவும் விநோதமானவை என்று அவர் தெரிவிக்கிறார்.

http://www.bbc.com/

  • தொடங்கியவர்

பயணிகளை குளிப்பாட்டிய மும்பை ரயில்

மும்பையில் பெய்த கடும் மழையால் ஏற்பட்ட வெள்ளம் தெருக்களை மட்டும் சூழவில்லை ரயில் பாதைகளையும் சூழ்ந்து கொண்டது. மும்பையிலுள்ள ஒரு ரயில் நிலையத்தில் தண்டவாளத்தை சூழ்ந்திருக்கும் வெள்ள நீரை கிழித்துக்கொண்டு செல்லும் ரயில் காணொளியை ட்விட்டர் பயன்பாட்டாளர் ஒருவர் தன்னுடைய சமூக வலைத்தளத்தில் பதிவிட்டிருந்தார். அதனோடு, மும்பை ரயில்களுக்கு கிடைத்த சிறப்பான வாட்டர் ரைட் என்று கிண்டல் செய்து ஸ்டேடஸ் பதிந்திருந்தார். அது இணையத்தில் மிகவும் வைரலாக சென்றது குறிப்பிடத்தக்கது.

  • தொடங்கியவர்

 

இசைப்புயல் A.R. ரஹ்மானின் இசையில் வெளிவந்த மெர்சல் திரைப்பட பாடல்களின் மெர்சலான இசைக்கோர்ப்பு.
இளையதளபதியின் அசத்தலான நடனத்தையும் அழகாய் உங்கள் கண்முன்னே கொண்டுசேர்க்கும் அற்புத முயற்சி.
ரசியுங்கள்

  • தொடங்கியவர்

திருமணமானவர்கள் மட்டும் இதை படிங்க: மத்தவுங்க வேண்டாம் ப்ளீஸ்

திருமணமானவர்கள் மட்டும் இதை படிங்க: மத்தவுங்க வேண்டாம் ப்ளீஸ்

கட்டுன புருஷனாவே இருந்தாலும் ஒரு சில விஷயங்களை பொண்டாட்டிகிட்ட கேக்க கூடாது. அது மாதிரி கேக்குறது 'வேலில போற ஓணானை புடிச்சு வேஷ்ட்டிக்குள்ள விட்ட கதையா' தான் இருக்கும். அதுல ஒருசில கேள்விகளை தான் பாக்க போறோம்.

"நீ கொஞ்சம் வெயிட்டு போட்டுட்ட போல...?"

இந்த கேள்வியை தப்பி தவறி கூட கேட்டுராதிங்க, அப்பறம் ரொம்ப வருத்தப்படுவீங்க.

"அட இவன ஏன்டா கல்யாணம் பண்ணோம்-னு என்னிக்காவது கவலை பட்டதுண்டா?"

இந்த கேள்விய ஜென்மத்திற்கும் கேட்டுவிட வேண்டாம். அப்புடி கேட்டிங்கனா இந்த கேள்வியை கேட்ட கொஞ்ச நாள்ல உங்க மனைவி இதையே பதிலா சொல்லுவாங்க.

திருமணமானவர்கள் மட்டும் இதை படிங்க: மத்தவுங்க வேண்டாம் ப்ளீஸ்

"நீ என்ன எப்பவாவது ஏமாத்தி இருக்கியா?"

இந்த கேள்வி கேக்குறது குடும்பத்துல குண்டு போட்ட மாதிரி. கொஞ்ச நேரத்துல பெரிய பூகம்பமே வந்துரும்.

"அதுல நான் கில்லியா? உனக்கு ஓகே வா...?"

இதுபோன்ற 18+ கேள்வியை கேட்டால் நிச்சயம் உங்கள் மானம் போய்விடும். அவர்கள் விளையாட்டிற்கு கூட வேறு யாரவது பெயரை கூறிவிட வாய்ப்புண்டு.

"கோபமா இருக்கியா?"

மனைவிக்கு பிடிக்காத ஒன்றை செய்துவிட்டு, அவர் ருத்ர தாண்டவம் ஆடும்பொழுது கோவமா இருக்கியா என்பது எரியும் நெருப்பில் எண்ணெயை ஊற்றுவது போல.

திருமணமானவர்கள் மட்டும் இதை படிங்க: மத்தவுங்க வேண்டாம் ப்ளீஸ்

"உங்க அப்பா, அம்மா வீட்டுக்கு போயே ஆகணுமா? "

இந்த கேள்விய தைரியமா கேட்டுருவீங்கன்னா உங்களுக்கு நீங்களே சபாஷ் போட்டுக்குங்க. ஆனா ஒன்னு, இந்த கேள்விய அவங்க ரொம்ப தைரியமா, அசால்ட்டா கேட்பாங்க...

"எதுக்கு நீ இவ்வளோ மேக்கப் பண்ற...? "

இந்த கேள்வியை கேட்ட உடனே நெருப்பை பத்தவச்ச மாதிரி எரிய ஆரம்பிச்சுருவாங்க. "இல்ல சாதாரணமாவே அழகா தானே இருக்க.. எதுக்கு அழகுக்கு அழகுசாதன பொருட்கள்..." இதுமாதிரி சொல்லி சமாளிச்சுக்கிருங்க.

"நான் என் பிரண்ட்ஸ் கூட வெளிய போயிட்டு வரட்டா?"

அதென்னமோ தெரியல, நம்ம பிரண்ட்ஸ கண்டாலே ஏதோ தீவிரவாதி மாதிரி பாக்குறாங்க...

திருமணமானவர்கள் மட்டும் இதை படிங்க: மத்தவுங்க வேண்டாம் ப்ளீஸ்

https://news.ibctamil.com

  • தொடங்கியவர்

சென்னையை ரசித்த வார்னரின் குழந்தைகள்

 

இந்தியா மற்றும் அவுஸ்திரேலிய அணிகளுக்கிடையேயான 5 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடர் தற்போது இந்தியாவில் நடைபெற்று வருகின்றது.

இதில் முதல் ஒருநாள் போட்டி சென்னையில் நடந்து முடிந்த நிலையில்இரண்டாவது ஒருநாள் போட்டி இன்று கொல்கத்தாவிலும் நடைபெற்றது.

இரண்டு போட்டிகளிலும் இந்திய அணி வெற்றி பெற்று தொடரில் 2-0 என்று முன்னிலையில் உள்ளது.

சென்னையை ரசித்த வார்னரின் குழந்தைகள்

இந்நிலையில் அவுஸ்திரேலிய அணியின் துவக்க வீரரான டேவிட் வார்னரின் இன்ஸ்டிராகிராம் புகைப்படம் தற்போது இணையத்தில் பரவியுள்ளது.

அதில் வார்னர் சென்னைக்கு வந்த எனது குழந்தைகள் சென்னையை அழகாக ரசித்தனர் என குறிப்பிட்டுள்ளார்.

சென்னையை ரசித்த வார்னரின் குழந்தைகள்

அதுமட்டுமின்றி காரை நிறுத்தி தேசிக்காய் சாறு வேண்டும் என அடம்பிடித்து வாங்கிக் குடித்தனர் என்றும் பதிவேற்றம் செய்துள்ளார்.

  • தொடங்கியவர்

 

  • தொடங்கியவர்
வார்த்தைப் பாணங்களின் வலிக்கு என்ன விலை?
 

image_4d74a2a1da.jpgநீங்கள் ஒருவருடன் கோபிப்பதால், திருப்திப்படுகின்றீர்கள். எப்படியாவது உங்களது கோபத்தின் தாகம் தணிக்கப்பட்டு விட்டதாகக் கருதியும் கொள்ளலாம். 

ஆனால், உங்களால் ஏற்பட்ட ஆத்திரம் கேட்பவர்களை எங்ஙனம் பாதிக்கின்றது என உணர்ந்ததுண்டா? 

நியாயபூர்வமான கோபம் வருதல் மானிட சுபாவம்தான். ஆனால் எல்லை மீறிய மனத்தாக்கங்களை வார்த்தைகளால் அல்லது வேறுவிதமான செய்கைகளினால் பழிவாங்குவதால் வருவது ஒரு, சுயதிருப்தி என எண்ணுதலும் அது தவறே அல்ல; நினைப்பது சரிதானா எனச் சற்றே சிந்திப்பீர்களாக. 

 அடிக்கடி பிறருடன் கோபித்துக் கண்டபடி வார்த்தைகளை அவிழ்த்துவிடுவதும் பின்னர், அவர்களிடமே மன்னிப்புக் கேட்டு, அதன்பின்னர் மனம் சாந்தியடையலாம். ஆனால், நீங்கள் தொடுத்த வார்த்தைப் பாணங்களின் வலிக்கு என்ன விலை?  

“கோபம் தொடுத்தலால், தொடுத்தவரே பாதிக்கப்படுவார்”

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.