Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இளமை புதுமை பல்சுவை

Featured Replies

  • தொடங்கியவர்

இப்படியும் சில வேலை வாய்ப்புகள்!

 

 
im11

தலையைப் பிய்த்துக் கொண்டு எப்போதும் மன அழுத்தத்துடன் பார்ப்பதுதான் வேலையா?  செய்யும் வேலையே மகிழ்ச்சி தருவதாகவும், எளிதாகவும், இனிமையாகவும் இருந்தால்? அப்படியும் சில வேலை வாய்ப்புகள் இருக்கத்தான் செய்கின்றன. அவற்றில் சிலவற்றைப் பார்ப்போம்:
தனியார் தீவு நிர்வாகிகள்  (Private Island Caretakers): தற்போதய நிலையில் பெருங்கோடீஸ்வரர்கள்   தீவுகளை விலைக்கு வாங்கும் போக்கு வளர்ந்து வருகிறது. மனிதச் சந்தடியில் இருந்து விலகி, செழுமையான, அமைதியான ஒரு தீவை வாங்கி, அங்கு வீடு, அலுவலகங்களைக் கட்டிக்கொண்டு ஆண்டுக்கு சில மாதங்கள் மட்டும் அங்கு தங்கி பொழுதுபோக்கும் பெரும் பணக்காரர்கள் அதிகரித்து வருகின்றனர். இதுபோன்ற தீவுகளை நிர்வகிக்க திறமையான இளைஞர்கள்  அவர்களுக்குத் தேவைப்படுகின்றனர்.  

ஒருசிலர் தீவுகளை விலைக்கு வாங்கி, அவற்றில் பொழுதுபோக்கு அம்சங்களுடன் கூடிய ஓய்வு விடுதிகளை உருவாக்கி அவற்றை வணிகரீதியில் பயன்படுத்தி வருகின்றனர். இவற்றை நிர்வகிக்கவும் அவர்கள் திறமையான இளைஞர்களை தேடிவருகின்றனர்.  இங்கு பணியாற்ற வாய்ப்புக் கிடைப்போருக்கு ஆண்டுக்கு ரூ. 10 லட்சம் முதல் 81 லட்சம் வரை ஊதியமாக வழங்கப்படுகிறது. 

ஃபிளேவர் குரு (Ben & Jerry’s Flavor Guru): அமெரிக்க நிறுவனமான  பென் அன்ட் ஜெர்ரி  ஐஸ் க்ரீம் தயாரிப்பில்  பெயர்பெற்றது. இதில் Food Science  படித்த ஏராளமான இளைஞர்கள் ஃபிளேவர் குருவாக பணியாற்றி வருகின்றனர். இவர்களின் முக்கிய பணி, ஐஸ் க்ரீம், கேண்டி (மிட்டாய்), அனைத்து வகையான சிரப்புகளிலும் (Syrup)  சரியான அளவில் இனிப்பு கலக்கப்பட்டுள்ளதா என்பதை ஆய்வு செய்வதுதான். இவர்களுக்கான ஆண்டு ஊதியம் ரூ. 27 லட்சம் முதல் ரூ. 1.36 கோடி வரை. 

தண்ணீர் சறுக்கு சோதனையாளர் பணி  (Water Slide Tester) : சிறுவயதிலிருந்தே தண்ணீரில் சறுக்கி விளையாடுவது என்றால்  நமக்கு மிகவும் பிடிக்கும். மணிக்கணக்கில் தண்ணீரிலிருந்து வெளியே வரமாட்டோம். 

தண்ணீரில் சறுக்கி விளையாடுவதே ஒரு  வேலையாக இருக்கிறது. வணிகரீதியிலான பெரிய பொழுதுபோக்கு பூங்காக்களில் பல புனைக்கால்வாய்களுடன் உள்ள தண்ணீர் சறுக்கு அமைப்பின் உயரம், வேகம், தண்ணீரின் அளவு, தண்ணீர் குளத்தை அடையும் கால்வாயின் அமைப்பு போன்றவற்றை அவ்வப்போது சறுக்கி விளையாடி சோதனை செய்வதும், அவற்றை வாடிக்கையாளர்கள் அல்லது பொதுமக்களின் விருப்பத்திற்கு ஏற்ப மாற்றியமைத்து அவர்களை திருப்திபடுத்துவதும்தான் இந்த  வேலை. 

சர்வதேச அளவில் அனைத்து நாடுகளிலும் இந்தப் பணிக்கான தேவை எழுந்துள்ளது. இதில் பணியாற்றுவோருக்கு ஆண்டு ஊதியமாக ரூ. 18  லட்சம் வரை வழங்கப்படுகிறது.

படுக்கை பணிகள் - (Luxury Bed Tester & Human Bed Warmer): வேலையில் இருக்கும் ஒருவர் சாவகாசமாக படுக்கையில் படுத்திருந்தால் யாராவது ஊதியம் கொடுப்பார்களா? ஆனால், கொடுப்பதற்கும் ஆட்கள் இருக்கிறார்கள். மிகப்பெரிய நட்சத்திர விடுதிகள், உல்லாச ஓய்வு விடுதிகளில் உள்ள உயர்தர படுக்கைகள், படுத்து ஓய்வெடுப்பதற்கும், சுகமாக தூங்குவதற்கும் ஏற்ற வகையில் உள்ளதா என்பதை ஆய்வு செய்யும் வேலைதான் அது -Luxury Bed Tester- இந்த வேலை செய்பவர் படுக்கையில் அமர்ந்து, சிறிது நேரம் படுத்திருந்து அதன் தரத்தைச் சோதனை செய்ய வேண்டும்.

குளிர் பிரதேசங்களில் உள்ள நட்சத்திர விடுதிகளில் வாடிக்கையாளர்களின் வேண்டுகோளுக்கு இணங்க, அவர்கள் அறைக்கு வந்து தங்குவதற்கு முன்னதாக Human Bed Warmer  வாடிக்கையாளர்களின் படுக்கையில் படுத்திருந்து அதை வெதுவெதுப்பான நிலைக்கு கொண்டு வர வேண்டும். வாடிக்கையாளர்கள் அறைக்கு வந்தவுடன் இளம்சூட்டில் உள்ள படுக்கையில் படுத்து தூங்குவதற்கான வசதி செய்து கொடுப்பதே இதன் நோக்கம்.  இந்தப் பணிக்கான ஊதியமாக ஆண்டுக்கு ரூ. 14 லட்சம் வழங்கப்படுகிறது.

தொழில்முறை பயணி  (Professional Traveller) : வேலையில்லாமல் ஊரைச் சுற்றினால் எல்லாரும் திட்டுவார்கள்.  ஊரைச் சுற்றி வருவதே வேலையாக இருந்தால்? அந்த வேலைதான் அதுதான் தொழில்முறை பயணி   வேலை. 

கடந்த 2009-இல் TheBigTrip.com  என்ற இணையதள நிறுவனம் பயண வலைப்பதிவுக்காக பயண நிருபர்களை  (Travel Correspondent) தேர்ந்தெடுத்து அமெரிக்காவை சுற்றிப் பார்க்க அனுப்பிவைத்தது. முழு ஹெல்த் இன்சூரன்ஸ், அனைத்து பயண கட்டணங்களோடு ஆண்டு ஊதியமாக ரூ. 34 லட்சம் வழங்கியது அந்த நிறுவனம். பயண நிருபர்களைப் போல, மருத்துவர்கள், செவிலியர்கள், பொறியாளர்கள், ஆசிரியர்கள் என பல துறை சார்ந்தோருக்கும் இதுபோன்ற தொழில்முறை பயணி பணிகள் பல தளங்களில் உள்ளன.

"ஆச்சரியம்... ஆனால் உண்மை...'  என்பார்களே, அதுபோலத்தான் இந்த வேலைவாய்ப்புகள். இப்போதெல்லாம் வேலைவாய்ப்புகள் மரபுசார்ந்ததாக, கல்வி சார்ந்ததாக மட்டுமே இருக்க வேண்டும் என எதிர்பார்க்க வேண்டியதில்லை. ஓரளவு கல்வி, ஓரளவு உலக அறிவு, மொழி அறிவு என அனைத்திலும் ஓரளவு தேர்ச்சி பெற்றிருந்து தைரியம், விடாமுயற்சியுடன் தேடினால்,  நினைத்த வேலை மட்டுமல்ல, நினைக்காத வேலைகூட, நினைத்துப் பார்த்திராத ஊதியத்தில் கிடைக்கும் வாய்ப்பிருக்கிறது. தேடல்தான் முக்கியம்.   

http://www.dinamani.com/

  • Replies 11.3k
  • Views 1.5m
  • Created
  • Last Reply
  • தொடங்கியவர்

மாடர்ன் உலகின் முதல் துப்பறிவாளன் ஆலன் போ..! நினைவுதினப் பகிர்வு

 
 

சிறுவர் இலக்கியம் / காமிக்ஸ்,  மர்ம நாவல், தீவிர இலக்கிய வாசிப்பு... இவைதாம் நாம் அனைவருமே பின்பற்றும் பாதை. இதில், தீவிர வாசிப்புப் பழக்கத்தை பெருமளவில் பரவச் செய்ததில் `பல்ப் ஃபிக்‌ஷன்' என அழைக்கப்படும் மர்ம நாவல்களின் பங்களிப்பு மிகவும் முக்கியமானது. இதைப் பற்றி இரண்டு கேள்விகளை முன்வைத்து இந்தக் கட்டுரையை ஆரம்பிப்போம்.ஆலன் போ

  • சமகால உலகின் முதல் துப்பறியும் நாவலை எழுதியவர் யார்?
  • எழுதுவதையே தனது முழு நேரத் தொழிலாகக்கொண்ட உலகின் முதல் எழுத்தாளர் யார்?

அறிவியல் புதினங்களை வெகுஜன ரசனையோடு மக்களிடையே கொண்டுசேர்த்தவர்களில் முதன்மையானவரான எட்கர் ஆலன் போ(வ்)தான், இந்தப் பெருமைகளுக்கெல்லாம் உரியவர். இது மட்டுமல்ல,

 
  • திகில் கதைகளின் மன்னன்,
  • சிறுகதை என்ற எழுத்து வகையைப் பிரபலப்படுத்தியவர்,
  • கதை, கவிதைகளை நேர்மையாக, துணிவாக விமர்சிப்பவர்

என்றெல்லாம் இவரைக் கொண்டாடுகிறார்கள். நமக்கெல்லாம் நன்று அறிமுகமான ஷெர்லாக் ஹோம்ஸ் உருவாக அடிப்படைக் காரணமாக இருந்தது, ஆலன் போ(வ்) உருவாக்கிய உலகின் முதல் துப்பறிவாளரான `சி அகஸ்டே டுபான்' தான்.

எட்கர் ஆலன் போ(வ்): அமெரிக்காவின் பாஸ்டன் நகரில் 1809-ம் ஆண்டு பிறந்த எட்கரின் தாய்-தந்தை இருவருமே தொழில்முறை நடிகர்கள். ஒரு வயதில் தந்தை குடும்பத்தைவிட்டுப் பிரிய, தன் இரண்டாவது வயதில் தாயைப் பறிகொடுத்தார் எட்கர். பிறகு, இவர் ஜான் மற்றும் பிரான்சஸ் ஆலனின் பாதுகாப்பில் வளர ஆரம்பித்தார். சுமுகமான வாழ்க்கை என்பது எட்கருக்கு அமையவே இல்லை. கொடுமையான சூழலில் வளர்ந்து, பணப் பிரச்னையால் கல்லூரிப் படிப்பை முதலாம் ஆண்டிலேயே கைவிட்டு, துயரத்தின் நிழலிலேயே வாழ்ந்தார். தன் 18-வது வயதில் முதல் கவிதைத் தொகுப்பைக் கொண்டுவந்தார். அதன் பிறகு, வேறு வேலைகளில் ஈடுபடாமல் எழுதுவதையே முழுநேரத் தொழிலாக்கிக்கொண்டார்.

வாழ்நாள் முழுவதும் சிரமத்தை மட்டுமே சந்தித்துவிட்டு, 1849-ம் ஆண்டில் தன்னுடைய 40-வது வயதில் இறந்த இவரின் எழுத்துகளில், ஆழமான சோகமும் அதீத குரோதமும் தெரியும். இவரது ஒவ்வொரு கதையுமே மிகவும் பிரபலம். அதில் ஒரே ஒரு கதையை மட்டும் விவாதிக்கலாம். 160 ஆண்டுகளுக்கு முன் எழுதப்பட்டிருந்தாலும், அந்த ஒரு கதையின் மூலமாக அவரது வாழ்க்கையையும், அதில் நிறைந்திருந்த சோகத்தையும் புரிந்துகொள்ளலாம்.

`The Facts in the Case of M.Valdemar' கதைச் சுருக்கம்:

1845-ம் ஆண்டு டிசம்பர் 20-ம் தேதியன்று வெளியான இந்தச் சிறுகதை, மிகவும் பிரபலமாகப் பேசப்பட்டது. Tuberculosis நோய் தாக்கப்பட்டு, மரணப்படுக்கையில் இருக்கும் எர்னஸ்ட் வால்டெமார் என்கிற எழுத்தாளரின் வேண்டுகோளுக்கு இணங்க, அவரை மனோவசியப்படுத்துகிறார் அவரது நண்பரான மருத்துவர் ஒருவர்.

அந்தக் காலகட்டத்தில் சாகப்போகும் நபரை யாரும் மனோவசியப்படுத்தியதில்லை என்பதால், முறையாகக் சாட்சிகளுடன் அவரை மெஸ்மரிசம் செய்கிறார். மரணத்தின் வாயிலில் இருந்த வால்டெமாரை, மனோவசியத்தால் மூச்சுப் பேச்சில்லாமல் அடுத்த ஏழு மாதங்கள் வரை ஒருவிதமான திரிசங்கு நிலையில் தக்கவைக்கிறார் அந்த மருத்துவ நண்பர். பிறகு அவரை மறுபடியும் மனோவசியம் செய்து, பழைய நிலைக்குக் கொண்டுவர முயற்சி செய்கிறார். ஆனால், மனோவசியத்திலிருந்து விடுபட்டு உயிருடன் திரும்பாமல் திட-திரவ கலவையாக சாம்பல்போலக் கரைந்துவிடுகிறார் வால்டெமார்.

ஆலன் போ

·  சாகப்போகும் ஒருவரை எதற்காக மனோவசியம் செய்து, அவரை சாகவும் விடாமல் வாழவும் விடாமல் வைத்திருக்க வேண்டும்?

·  இப்படிப்பட்ட குரூரமான சிந்தனையுள்ள கதையை எதற்கு ஆலன் போ(வ்) எழுதினார்?

·  இந்தத் திரிசங்கு நிலை கதைக்கான அவசியம் என்ன? இதன்மூலம் அவர் என்ன சொல்ல வருகிறார்?

இதுபோன்ற கேள்விகளுக்கு பதிலளிக்கும் முன், அச்சில் இந்தக் கதை முதன்முறையாக வெளியானபோது நடந்த சில சுவையான சம்பவங்களைச் சொல்லியே ஆகவேண்டும்.

இந்தக் கதையை முதலில் வெளியிட்டபோது, பலரும் இதை உண்மை என்றே நம்பினர். இதைப்போலவே சம்பவங்கள் நடந்ததாகவும், பலரை உயிர்ப்பித்ததாகவும் கதைகளைப் பரப்பத் தொடங்கினர். இதை Case Study ஆக எடுத்துக்கொண்டு தாமஸ் சவுத் என்பவர் ஒரு புத்தகத்தையே எழுதிவிட்டார்.

மக்கள் பலரும் இது உண்மையா? என்று ஆலன் போ(வ்)விடம் கேட்க, அவர் `இது ஒரு கட்டுக்கதை' என்று சொல்லிவிட்டார். `Daily Tribune' என்ற அமெரிக்கச் செய்தித்தாளின் எடிட்டர் Horace Greeley, இது உண்மையல்ல என்று தன்னுடைய தினசரியில் செய்தி வெளியிட்ட பிறகுதான் பெரும்பான்மையான மக்கள் இது ஒரு புனைவு / கதை என்பதை ஒப்புக்கொண்டனர்.

இப்போது மேலே முன்வைக்கப்பட்ட கேள்விகளுக்கு வருவோம்.

ஆலன் போ

1845-ம் ஆண்டு இந்தக் கதையை எழுதும்போது, ஆலன் போ(வ்)வின் மனைவி இந்தக் கதையில் வரும் வால்டெமாரைப்போல Tuberculosis நோயால் பாதிக்கப்பட்டு, நான்கு வருடங்களாகத் தொடர்ந்து படுக்கையிலேயே தன் வாழ்க்கையைக் கழித்துவந்தார். தன்னுடைய மனைவிமேல் தீராக்காதல் கொண்டிருந்த ஆலன் போ(வ்), அவரை எப்படியாவது காப்பாற்ற முடியுமா எனச் சிந்தித்துக்கொண்டிருந்தபோது (1845) எழுதியதே இந்தக் கதை.

நம் அன்புக்குரியவர்கள் மரணமடையப்போகிறார்கள் என்பது நிச்சயமானால், அவரைக் காப்பாற்ற எந்த அளவுக்கும் மனிதர்கள் துணிவார்கள். இதற்கு எழுத்தாளர்களும் விதிவிலக்கல்ல என்பதை, ஆலன் போ(வ்) இந்தக் கதையின் மூலம் நிரூபித்துள்ளார். நிஜ வாழ்வில் தன் மனைவியைக் காப்பாற்ற என்னென்னவோ முயற்சிகளை மேற்கொண்ட போ(வ்), கடைசியில் தன் புனைவிலாவது இப்படியொரு முயற்சியை மேற்கொள்ளலாமா என்று எழுதியதுதான் இந்தக் கதை.

சில பின்குறிப்புகள்:

·  ஆலன் போ(வ்)வுக்குத் திருமணம் நடந்தபோது அவருக்கு 27 வயது.  அவருடைய மனைவிக்கு வயது 13. இந்தக் கதை எழுதி, இரண்டு ஆண்டுகளில் (1847-ம் ஆண்டில்) மனைவி இறக்கும்போது அவரது வயது 24.

·  இந்தக் கதையை முழுவதுமாக ஆங்கிலத்தில் படிக்க, இங்கே க்ளிக்கவும். http://www.eapoe.org/works/tales/vldmard.htm

·  பிரபல ஹாலிவுட் இயக்குநர் George A Romero இந்தக் கதையை திரைப்படமாகவும் இயக்கியுள்ளார் (1990 – Two Evil Eyes).

·  1841-ம் ஆண்டில் எட்கர் ஆல்ன் போ(வ்) எழுதிய முதல் துப்பறியும் கதையைப் படிக்க, இங்கே க்ளிக்கவும் https://poestories.com/text.php?file=murders

·  இந்தக் கதையில்தான் உலகின் முதல் டிடெக்டிவ் ஆன `சி அகஸ்டே டுபான்' அறிமுகமாகிறார்.

 

இன்று, எட்கர் ஆலன் போ(வ்)வின் 170-வது நினைவு நாள். அவருக்கு அஞ்சலி!

http://www.vikatan.com/

  • தொடங்கியவர்

உலகின் மகிழ்ச்சியான பாலினம் ஆணா பெண்ணா? #VikatanInfographics

 
 

கபாலி படத்தில் சூப்பர் ஸ்டாரின் மாஸ் வசனம் `மகிழ்ச்சி' . எல்லோருமே வாழ்க்கையில் மகிழ்ச்சியாக இருக்க வேண்டும் என்றுதான் நினைப்போம். 365 நாள்களும் ஒருவர் மகிழ்ச்சியாக இருக்க என்ன செய்ய வேண்டும் என்று கேட்பவர்களுக்கு இந்த சுவாரஸ்யமானத் தகவல்கள் பதில் சொல்லும். உலகில் அதிக மகிழ்ச்சியாக இருக்கும் பாலினம் ஆணா... பெண்ணா? அதிக நண்பர்கள் இருப்பது பலமா? 33, 55, 70 ஆகிய வயதுகளில் ஒருவர் எப்படி இருப்பார் என்ற தகவல்கள் இங்கே...

 

மகிழ்ச்சி

 

http://www.vikatan.com

  • தொடங்கியவர்

ஜாக்கெட்டில் கடவுள்!

களைகட்டும் ஆரி வேலைப்பாடுகள்

- ஷாலினி நியூட்டன்

ஒரு பெண்ணுக்கு எப்படிப்பட்ட டிசைனில் ப்ளவுஸ் தைத்தால் அவருக்கு பிடிக்கும்? அல்லது ஒரு பெண்ணை திருப்தியடைச் செய்ய எந்த டிசைனில் ப்ளவுஸ் தைக்க வேண்டும்? இப்படி ஒரு கேள்வி கேட்டால் ‘ஹைப்போதெடிக்கல் குவெஸ்டீன்’ என கோரஸாக சொல்லிவிடுவார்கள் டிசைனர்கள். காரணம், ஒருவருக்கும் பதில் தெரியாது! இதன் காரணமோ என்னவோ, விதவிதமான வேலைப்பாடுகளும், டிசைன்களும் மார்க்கெட்டில் நாளொருமேனியும் பொழுதொரு வண்ணமுமாக நுழைந்தவண்ணம் இருக்கின்றன. அந்த வகையில் இதோ பக்தி ஸ்டைல் ப்ளவுஸ்கள்!
19.jpg
‘அட... என்ன இது? ப்ளவுஸில் மகாலக்ஷ்மி, கிருஷ்ணர்..?’ ஆச்சர்யத்துடன் டிசைனர்களைப் பிடித்தோம். கணபதி முதல் குழலூதும் கண்ணன் வரை இருக்கும் டிசைன்ஸ் அனைத்தையும் குவித்தார்கள். ‘‘ப்ளவுஸ் மட்டுமல்ல... க்ராப் டாப், மிடி, கவுன்கள் என எல்லாவற்றிலும் இந்த கடவுள்களை டிசைன் செய்து கொண்டிருக்கிறோம். இது பார்க்க பளிச்சென ஏதோ கிருஷ்ணரோ, முருகனோ ஒட்டி வைத்தாற்போல்  இருக்கும். ஆனால், இவை நுணுக்கமாக செய்யப்பட்ட ஆரி வேலைப்பாடுகள்...’’ என்றார் காஸ்ட்யூம் டிசைனர் கீதா (Mabyo Fashions).
அதென்ன ஆரி வேலை? என்று கேட்டதும் படபடவென சொல்ல ஆரம்பித்தார்.

‘‘ஒரிசாவின் பழங்காலத் தையல் கலை. ஜமிக்கி, கண்ணாடி, கற்கள், கோல்டன் ஜரிகைகள் கொண்டு செய்வதுதான் ஆரி வேலை. தமிழகத்தில் முறைப்படி இதை செய்ய ஆட்கள் கிடையாது. எனவே நாங்களே ஒரிசாவில் இருந்து இதற்காக பிரத்யேகமான நபர்களை அழைத்து வந்து இங்கே தங்க வைத்திருக்கிறோம். பெரும்பாலும் இவர்கள் குடும்பத்தோடு இந்த வேலைக்காகவே இங்கு வந்து வீடு பிடித்து தங்கியிருப்பார்கள். நாங்கள் துணியில் இந்த டிசைன் வேண்டும் என பேட்டர்னாக வரைந்தோ அல்லது ட்ரேஸிங்கோ எடுத்துக் கொடுத்து விடுவோம்.
19a.jpg
அதன்பிறகு இவர்கள் ஒருவரோ இருவரோ இணைந்து ஒவ்வொரு பாகமாக கண்ணாடி, ஜர்தோஸி, ஜமிக்கி, கற்கள் வைத்து இதை தைப்பார்கள். ஒரு சில டிசைன்களை ஐந்து பேர் இணைந்து கூட ஒரே நேரத்தில் தைப்பார்கள். ஏன், இதிலேயே இந்த ஆலிலை கிருஷ்ணர் மற்றும் கிருஷ்ணரும் ராதையும் இணைந்திருக்கும் டிசைன்களுக்கு சுமார் நான்கு பேர் கைகோர்த்து பகுதி பகுதியாக செய்திருக்கின்றனர். எங்களிடம் பத்துபேர் இந்த ஆரி வேலைக்கு மட்டும் இருக்கிறார்கள். அனைவருமே ஒரிசாகாரர்கள். ஆரி வேலைக்கு மட்டும் தனியாக மேற்பார்வைக்கு ஆள் வைத்திருக்கிறோம்...’’ என்று கீதா நிறுத்த, சுஷ்மிதா தொடர்ந்தார்.

‘‘எங்களிடம் ஆட்கள் நிறைய பேர் இருப்பதால் சிம்பிள் டிசைன் எனில் இரண்டு நாட்களிலும், கொஞ்சம் அதீத வேலைகள் எனில் மூன்று நான்கு நாட்களிலும் முடித்துக் கொடுப்போம். சிலர் கடவுள் படங்களை முதுகிலோ அல்லது உடையிலோ போட விரும்ப மாட்டார்கள். அவர்களுக்கு தேர், பூக்கள், மயிலிறகு, கதகளி, ஏன், சர்ச் டிசைன்கள் கூட  போட்டுக் கொடுப்போம். இதோ லேட்டஸ்ட் ட்ரெண்ட் ‘ஜிமிக்கி கம்மலும்...’ இருக்கு. இந்த ஜிமிக்கி கம்மல் எம்போஸ் ஆன சிலை போல் இருக்கும். இங்கே நடராஜர் டிசைனில் அவரின் உடை கூட நூலில் தைத்திருப்போம்.
19b.jpg
அதாவது நல்ல பெயிண்டிங்கில் கலர் கொடுத்தால் எப்படி அந்த டார்க் லைட் ஷேடோக்கள் வருமோ அப்படி நூல் எம்பிராய்டரியில் கொண்டு வந்திருப்போம். ஒரு சிலர் டிசைன்கள் இல்லாத ப்ளைன் புடவைகளைக் கொடுத்து அதில் ஆரி வேலைகள் செய்து வாங்கிக் கொள்வார்கள். குறைந்தது ரூ.2000ல் தொடங்கி ரூபாய் ஒரு லட்சம் வரை ஆரி வேலைப்பாடுகள் செய்கிறோம். நடிகர்களும், விஐபிகளும் விலையுயர்ந்த கற்களை ஆரி வேலைப்பாடுகளுடன் சேர்த்து பதித்துத் தரச் சொல்வார்கள்.

பாகிஸ்தானில் இந்த ஆரி வேலைப்பாடுகள் செய்த திருமண உடைகளின் ஆரம்ப விலையே லட்சம்தான்! அதற்கேற்ப உடைகளும் அவ்வளவு கனமாக பார்க்கவே மனதைக் கவரும்படி இருக்கும். மெட்டீரியல், டிசைன் உள்ளிட்டவற்றை நாங்கள் கவனித்தாலும் உடையின் அழகைத் தூக்கி நிறுத்துபவர்கள் இந்த ஆரி பணியாளர்கள்தான். ஆரி டிசைன்ஸை எல்லா மெட்டீரியல்களிலும் போட்டுவிட முடியாது. கனமான கற்கள், ஜர்தோஸிகளைத் தாங்கும் அளவுக்கு துணி தரமாக இருக்க வேண்டும். புதிதாகவே இருப்பினும் ஒருமுறை நனைத்துவிட்டே இந்த டிசைன்களைத் தைக்க ஆரம்பிப்போம். இல்லையேன்றால் தைத்து முடித்து துணி சுருங்கினால் பட்ட பாடெல்லாம் வீணாகிவிடும்.
 
அதேபோல் ஒரு டிசைன் முடிவாகிவிட்டாலும் கடவுள் படங்களைப் போடும் முன் வாடிக்கையாளர்கள் குடும்பத்தாரோடு பேசி உறுதிப்படுத்திய பிறகுதான் அதை உடைகளில் கொண்டு வருவோம். ஏனெனில் ஒருமுறை டிசைன் செய்துவிட்டால் அதில் மாற்றமே செய்ய முடியாது.  எத்தனை நாட்களுக்குத்தான் மாங்கா, மயில் என அரதப்பழசான டிசைன்ஸையே அணிவது? வாடிக்கையாளர்களுக்கு போரடிக்காதா? அதனால்தான் இப்போது கடவுள்களின் அணிவகுப்பை தங்கள் உடைகளில் கேட்கிறார்கள்...’’ என சுஷ்மிதா கண்சிமிட்ட, அதை ஆமோதிக்கிறார் கீதா. மொத்தத்தில் பெண்களை அழகுபடுத்த மட்டும் ஒரு அண்டர்க்ரவுண்ட் உலகமே இயங்கிக்கொண்டிருக்கிறது. நல்லா வருவீங்க பாஸ்!
19c.jpg
மாடல்கள்: பவித்ரா, அவந்திகா
உடைகள் டிசைன்: கீதா, சுஷ்மிதா (Mabyo fashions)
மேக்கப்: ஜெயந்தி
குமரேசன் & பத்மினி முகிலன் (Pro bridal Studio)
ஸ்பெஷல் கிரெடிட்: ஷிவ்

www.kungumam.co

  • தொடங்கியவர்
‘சுயநலவாதிகளுக்கு நீதி’
 

image_0d27b1c430.jpgதங்களது ஒரே மகன், இலண்டனில் வௌ்ளைக்காரப் பெண்ணொருவரைத திருமணம் செய்த செய்தியை அறிந்து, பெற்றோர் அதிர்ந்தே போனார்கள்.

கொதித்தெழுந்த தந்தை, இவனுக்கும் எங்களுக்கும் எந்தவிதத் தொடர்புமே வேண்டாம் எனக் கர்ஜனை செய்தார். மகனும் எந்தத் தொடர்பையும் ஏற்படுத்தவே இல்லை. ஆனால் இலண்டனில் வசித்த உறவினர் சொன்ன செய்தி, மேலும் கவலையடைய வைத்தது. அவர் சொன்ன தகவல் இதுதான்.

உங்கள் மகன், தனது சுயநலத்துக்காக அந்த வௌ்ளைக்காரப் பெண்ணை ஏமாற்றிக் காதலித்துத் திருமணம் செய்து கொண்டான். உண்மையில் இங்கிலாந்து நாட்டில் விசா பெறவே இப்படிச் செய்தான். இவனுக்கு விசா கிடைத்ததும், அவளை விவாகரத்துச் செய்துவிட்டு, வேறு ஒருத்தியை மணம் செய்துவிடுவான்.

இந்தத் தகவலைக் கேட்ட பெற்றோர், அட, இவன் எங்கள் உறவுக்காறப் பெண்ணைத் திருமணம் செய்வதாக நிச்சயிக்கப்பட்டு விட்டது. இனி இன்னும் ஒரு பெண்ணை ஏமாற்றவா நினைக்கிறான் எனச் சொல்லித் திட்டினர். தாய்நாட்டைத் துறந்து, இப்படி ஒரு வாழ்க்கை தேவைதானா? சுயநலவாதிகளுக்கு நீதி.

  • தொடங்கியவர்

உலகின் விலையுயர்ந்த காபி புனுகுப் பூனையின் கழிவா? #CivetCat

 

வாசனைத் திரவியங்கள் தயாரிக்கவும், புகையிலை பொருள்களுக்கு வாசனை கூட்டவும், மருந்துக்காகவும் வேட்டையாடப்பட்ட உயிரினங்களில் முக்கியமானது புனுகுப் பூனை. அழிந்துவரும் உயிரினங்கள் பட்டியலிலிருந்து, அரிய வகை உயிரினங்களின் பட்டியலுக்கு வந்திருக்கிறது புனுகுப் பூனை.

புனுகு பூனையின்

 

புனுகுப் பூனைகளில் பன்னிரண்டுக்கும் மேற்பட்ட வகைகள் இருப்பதாக விலங்கியல் அறிஞர்கள் சொல்கிறார்கள். அதில் ஆப்பிரிக்க புனுகுப் பூனைகள்தான் பிரபலமானவை. இந்தியாவிலும் பல வகையான புனுகுப் பூனைகள் உண்டு. மலபாரைத் தவிர்த்த மற்ற பிரதேசங்களில் சிறிய வகையான புனுகுப் பூனைகள் இருந்தன. மலபார் வகை புனுகுப் பூனை, ஆப்பிரிக்கா வகையைப் போல பெரியது. வாலைத் தவிர்த்து உடல் மட்டுமே சுமார் நான்கு அடி வரை இருக்கும். நான்கரை கிலோ வரை இதன் எடை இருக்கும். மேற்குத் தொடர்ச்சி மலைக் காடுகள்தான் இவற்றின் வாழ்விடம். தமிழகத்தில் மரநாய் என்கிற பெயரும் புனுகுப்  பூனைக்கு உண்டு. பலரும் நினைப்பதைப் போல் புனுகு என்பது அந்தப் பூனையின் கழிவு அல்ல. வால் பகுதியில் இருக்கும் இரண்டு சுரப்பிகளில் சுரக்கும் ஒரு வகை வாசனைக் கலந்த திரவமே புனுகு.  இந்தப் பிசின் போன்ற திரவம்தான் இவற்றின் இனப்பெருக்கத்துக்கு உதவுகிறது.  

civetசேலம் மற்றும் நாமக்கல் மாவட்ட கெளரவ வனஉயிர் காப்பாளர் திரு.சரவணன் அவர்களிடம் பேசியதில்  ”புனுகுப் பூனைகள் இந்தியாவின் மேற்குத் தொடர்ச்சி மலைகளில் அதிகம் காணப்படுகிற ஓர் உயிரினம். இருக்கிற பூனை வகைகளில் மலபார் பூனை வகைகள்தாம் அழிந்து வரும் உயிரினங்களின் முதல்  பட்டியலில் இருக்கிறது. புனுகுப் பூனைகள் இரவில் இரைதேடும். மேற்குத் தொடர்ச்சி மலையின் எல்லா இடங்களிலும் காணப்படும் இப்பூனைகள் காடுகளின் விதை பரவலுக்கு முக்கியக் காரணியாக விளங்குகின்றன. வாசனைத் திரவியத்திற்காகக் காடுகளில் இவை வேட்டையாடப்படுவது அதிகரித்திருக்கிறது. புனுகுப் பூனைகளை உணவிற்காகவும் ஒரு சிலர் வேட்டையாடுவதும் இதன் எண்ணிக்கை குறைவதற்கு காரணமாய் இருக்கிறது. காடுகள் அழிக்கப்படும்  பொழுது சாலைகளுக்கு வருகிற இவ்வகை பூனைகள் வாகனங்களில் அடிப்பட்டு இறந்து போவதும் தொடர்ந்து நடைபெறுவது வேதனையாக இருக்கிறது” என்கிறார். 

திருப்பதி கோவிலில் ஒவ்வொரு வெள்ளிக்குக் கிழமையிலும் வெங்கடாஜலபதி சிலைக்கு பூர்ணாபிஷேகம் செய்ய புனுகுப் பூனைகளில் இருந்து பெறப்படுகின்ற புனுகு வாசனைத் திரவியம் தேவைப்படுகிறது. இத்துடன் குங்குமப்பூ, சந்தனம், கற்பூரம் போன்றவற்றைப் பயன்படுத்தி இந்த அபிஷேகத்தைச் செய்கிறார்கள். கடந்த 2008 ஆம் ஆண்டு வரை கோயில் நிர்வாகம் புனுகுத் தேவைக்காகப் புனுகுப் பூனைகளை வளர்த்து வந்தது. 1972 வன விலங்குகள் சட்டம் அனைத்துப் பிரிவுகளிலும் விலங்குகளைப் பயன்படுத்துவதை தடை செய்திருந்தது. ஆந்திர வனத்துறை கோயில் நிர்வாகத்திடமிருந்த புனுகுப் பூனைகளைக் கைப்பற்றி ஸ்ரீவெங்கடேஸ்வரா விலங்கியல் பூங்காவில் சேர்த்தது. பூங்காவில் இருந்துதான் தேவையான புனுகுத் திரவியத்தைக் கோயில் நிர்வாகம் பெற்றுக்கொள்கிறது.  

புனுகு புனுகு


உலகின் விலை உயர்ந்த காபியான லூவா (Luwak) காபி புனுகுப் பூனைகளின் கழிவுகளிலிருந்துதான் தயாரிக்கப்படுகிறது. காபி பழங்களை உண்ணும் இந்தப் பூனைகள், கொட்டைகளை விழுங்கி விடுகின்றன. செரிமானத்துக்குப் பின்னர் இவை கழிவுகளில் வெளியேறும். கழிவுகளிலிருந்து வெளியேறும் கொட்டைகள்  சுத்தம் செய்யப்படுகிறது. சுத்தம் செய்யப்பட்ட கொட்டைகளைப் பதப்படுத்தி காபித் தூளாக பயன்படுத்துகிறார்கள். வெளிநாடுகளில் இவ்வகை காபித் தூளின் ஒரு கிலோ விலை 20000 இருந்து 25000 ரூபாய். 

http://www.vikatan.com

  • தொடங்கியவர்

கிறிஸ்துவ முறைப்படி சமந்தா-நாக சைதன்யா திருமணம்

 

 
Samantha-Naga-Chaitanya-wedding-Christian-7
Samantha-Naga-Chaitanya-wedding-Christian-1
Samantha-Naga-Chaitanya-wedding-Christian-2
Samantha-Naga-Chaitanya-wedding-Christian-3
Samantha-Naga-Chaitanya-wedding-Christian-4
Samantha-Naga-Chaitanya-wedding-Christian-5
Samantha-Naga-Chaitanya-wedding-Christian-6
Samantha-Naga-Chaitanya-wedding-Christian-7
Samantha-Naga-Chaitanya-wedding-Christian-1
PreviousNext

தெலுங்கு திரையுலகின் பிரபல நடிகர் நாகர்ஜூனாவின் மகனும், நடிகருமான நாக சைதன்யாவுக்கும், நடிகை சமந்தாவுக்கும் இந்து முறைப்படி கோவாவில் உள்ள நட்சத்திர ஓட்டலில் நடைபெற்றது, இந்நிலையில் கிறிஸ்துவ முறைப்படியும் இவர்களது திருமணம் நடைபெற்றது. இதில் உறவினர்கள் மற்றும் நெருங்கிய நண்பர்கள் அனைவருமே அட்சதைத் தூவி புதுமண தம்பதிகளுக்கு வாழ்த்தினர். இதனிடையே, ஹைதராபாத்தில் வரும் 10ம் தேதி திருமண வரவேற்பு நிகழ்ச்சி நடைபெற உள்ளது.

  • தொடங்கியவர்

வாட்ஸ்அப் கலக்கல்: சிஸ்டம் வைரஸ்

IMG-20170920-WA0016
fb-1
fb-2
fb-4
fb-5
fb-6
memes11
memes5
  • தொடங்கியவர்

வலைபாயுதே

 

 

facebook.com/Muthu Krishnan13.jpg

ஹோட்டலில் சாப்பிட்டு பில் குடுக்கும் போது, மோடியும் எடப்பாடியும் நம்முடன் சேர்ந்து சாப்பிட்ட உணர்வு வருகிறது #GSTWOES

p348a1.jpgtwitter.com/MadrasCentraI

சிவனேனு இருந்தவனுங்ககிட்ட பதற்றமடையாதீங்க போலீஸ் தயாரா இருக்குன்னு பீதியைக் கிளப்பி விட்டுட்டு வதந்தியைக் கிளப்ப வேண்டாம்னு அறிக்கை வேற. அடேய்

twitter.com/veeratalks

அட ஆயுத பூஜைக்கு போலிஸ் ஸ்டேஷன சுத்தம் பண்ண வரச் சொல்லிருக்கானுவ

twitter.com/Maga_raja

ஆரம்பக் கட்டத்திலேயே கவனிக்கப்பட வேண்டியவை ‘நோய்கள்’மட்டுமல்ல, ‘தொப்பையும்’தான்!!!!!

twitter.com/Thaadikkaran 

நம் பண்டிகைகால உடைகள் சொல்லிவிடும் அப்பாவின் வருமானத்தை..!!

p348b.jpg

twitter.com/BoopatyMurugesh

மோடி புதுத்திட்டம் அறிவிக்கப் போறேன்னாலே ATMல கூட்டம் கூடிடறானுங்க. அதுலயும் ஒருத்தன் கார்டே கொண்டு வராம இடம் புடிச்சு நின்னுட்டிருக்கான்.

 twitter.com/skclusive

ரயிலில் பயணிக்கையிலும் ரயில் பார்த்தால் குதூகலமாகிறது.

twitter.com/CreativeTwitz 

முதல்ல யூஸ் அன்ட் த்ரோ கண்டுபுடிச்சது தமிழன்தான்! எங்கூர்ல தெனம் ஒரு வேப்பங்குச்சில பல்லு வெளக்கராங்கே!

twitter.com/yugarajesh2 

‘ஃப்ரெண்ட்ஸ்’ படத்தில் பெயிண்டிங் அடிக்க வடிவேலுக்கு வாய்த்த ஆட்கள் மாதிரிதான் அதிமுகவுக்கும் அமைச்சர்கள் வாய்த்திருக்கிறார்கள்.

twitter.com/RamoEvsir

மதிக்கப்படாத பொருளில் போக்குவரத்து சிக்னலும் ஒன்று!

twitter.com/Kozhiyaar

11 மாசம் வெட்டு வெட்டுனு வெட்டுறவன், புரட்டாசி மாசம் கறி சாப்பிடுறவனை கொலைகாரனைப் பார்க்கிற மாதிரி பார்க்கிறதெல்லாம் நெம்ப ஓவர்டா!

twitter.com/Aruns212

சுருட்டி வைத்த பேப்பரை நேராக்கும் ஒவ்வொரு மனிதனில் இருந்தும், சுருண்ட பாயை நேராக்கும் வடிவேலு வெளிப்படுகிறார்.

twitter.com/HAJAMY DEENNKS

கனவுகூட அது இஷ்டத்துக்குத்தான் வருது!

twitter.com/abuthahir707

ஒவ்வொரு வீடாக ஏறி பத்திரிகை வைத்த காலம் போய் ஒவ்வொரு குரூப்பிலும் பத்திரிகையைப் பதிவிடும் காலத்தில் இருக்கிறோம்.

twitter.com/Srilaksman0

ஒரு காலத்தில டெஸ்ட் மேட்ச் மாதிரி இருந்த மனித வாழ்க்கை  T20 மேட்ச் மாதிரி ஆகிவிட்டது. #அவசர வாழ்க்கை

twitter.com/iamlaxmi1

கடையில் தொங்கும் மினரல் வாட்டர் பாட்டில்களில் நம் நதிகள் தூக்கிலிடப் படுகின்றன!

twitter.com/sathya_0555

கொசுவை ஒழிக்க கடவுளால்தான் முடியும் என்று கூறும் நீதிமன்றம், தான் தேக்கி வைத்திருக்கும் பல கோடி வழக்குகளையாவது ஒழித்துக் கட்டலாமே..

twitter.com/Calmrade

உடன்பிறப்புக்கள் கமலிடம் எதிர்பார்க்கும் தீவிர திராவிட, இடதுசாரி நிலைப்பாட்டை ஸ்டாலினிடம் கோருவதில்லை! ;-))

twitter.com/MJ_twets

ஆபீஸில் அதிக வேலை செய்பவர்கள் “இந்த ஆபீஸிலே நீங்கதான் பிரில்லியன்ட்” என்ற பொய்யை நம்பிய வெகுளிகள்.

p348c.jpg

twitter.com/azam_twitz 

டிவிட்டரில் மட்டும் இருந்தால் முதலமைச்சராக முடியாது - ஜெயக்குமார்

#நீங்க மட்டும் இப்போ தேர்தலில் நின்றால் வார்டு கவுன்சிலர்கூட ஆக முடியாது!!

twitter.com/teakkadai1

என்ன வேண்டுமானாலும் கிண்டல் செய்யலாம். ஆனால் தமிழ்நாட்டில் பெரும்பாலானோரின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்தியது பொறியியல் கல்விதான்.

twitter.com/ajmalnks

புல்லட்டை ஓட்டும்போது பெருமையாக நினைப்பவர்கள் அதைத் தள்ளும்போது  எருமையாகவே நினைப்பார்கள்.

twitter.com/yugarajesh2 

கமலால் தேர்தல் பிரசாரத்துக்கு வரமுடியாமல் போனால்,யாரையாவது ஒருத்தரைக்காட்டி ‘கமல்தான் மாறு வேஷத்தில் வந்திருக்காருன்னு’ சொல்லிக்கலாம்.

twitter.com/rajaatwits 

ஒரு நண்பன் துரோகி ஆகறதகூட தாங்கிக்கலாம் எல் ஐ சி ஏஜென்ட் ஆனாதான் தாங்கிக்க முடில.

காலையிலயே போன் அடிச்சு அரை மணி நேரம் பாலிசி பாலிசிங்கறான்.

twitter.com/manipmp

நேரா நேரத்துக்கு சாப்பிட வேண்டுமென அம்மாவால் கிளப்பி விடப்பட்ட  வதந்திதான் ‘அவன் பசி தாங்கமாட்டான்’ என்பது!

twitter.com/mekalapugazh

செல்ஃபோன் கம்பெனிக்காரனின் கலக்சன் முடிந்தாயிற்று... இனி கரன்ட்டுக் கம்பெனிக்காரன் காலம்போல.

twitter.com/yugarajesh2

அம்மாவோட கேஸை விசாரிக்கிற ஆளுங்க பேர் எல்லாம், குமாரசாமி ஆறுமுகசாமின்னே இருக்கேய்யா!

twitter.com/Maga_raja 

எத்தனை பேர் சுட்டாலும் ஹீரோ மேல படாத புல்லட்ஸ் மாதிரி, அத்தனை பேர் பார்வையும் அவள் மீதிருந்தும் அலட்டிக்காமல் செல்லும் அவளின் இயல்பு பேரழகு!!

p348d.jpg

twitter.com/Kozhiyaar
 
குழந்தைகள் கூட்டமாய் இருக்கும் இடத்தில் போராடி ஒரு ஐஸ்கிரீம் விற்றுவிட்டால் போதும்! மற்றவை தானாக விற்றுத் தீர்ந்துவிடும்!

twitter.com/Thaadikkaran

சாவின் விளிம்புவரை சென்றவன் கும்பிடாத தெய்வங்களே இல்லை, கஷ்டத்தின் விளிம்புவரை சென்றவன் திட்டாத தெய்வங்களே இல்லை!

twitter.com/penpeyar

ஒரு மூணு மணி நேரம் பஸ்ல உக்காந்து வந்ததுக்கு கால் வலிக்குது.. உடம்ப ரொம்ப செல்லம் கொடுத்துக் கெடுத்து வச்சிருக்கேன் போல :(((

twitter.com/Aruns212

உடுக்கை இழந்தவன் கைபோல ரூம்மேட் வைத்த அலாரத்தை ஆஃப் செய்யுமாம் நட்பு.

http://www.vikatan.com/

  • தொடங்கியவர்

மனைவிக்குச் சன்மானம் வழங்கிய பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம்! நினைவுதினப் பகிர்வு!

 

பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம்

கிட்டத்தட்ட அறுபது எழுபது ஆண்டுகளுக்கு முன் திரைப்படக் கவிஞர்களை ஏளனமாகவும், கேலியாகவும் விமர்சித்தார் சினிமா பத்திரிகை ஆசிரியர் ஒருவர். அதற்கு, கவிஞர் கண்ணதாசனும் பலியானார். விழா ஒன்றில்... அந்தப் பத்திரிகை ஆசிரியரைச் சந்தித்த ஒரு கவிஞர், ‘‘(கண்ணதாசனைக் குறிப்பிட்டு) கவிஞர்கள் என்றால் உனக்கு ஏளனமா? கருவாட்டு வியாபாரம் செய்கிற உனக்குக் கவிதையைப் பற்றி என்ன தெரியும்?’’என்று கோபத்துடன் கேட்டாராம். கவிஞர்கள் விஷயத்தில் யாரையும் விட்டுக்கொடுக்காத அந்தக் கவிஞர் வேறு யாருமல்ல... ‘‘பாட்டெழுதி நம்மைக் கவர்ந்த பாட்டாளி. அவன், நாட்டிலுள்ள நல்லவரின் கூட்டாளி’’ என்று எழுத்தாளர் ஜெயகாந்தனால் பாராட்டப்பெற்ற நம் மக்கள் கவிஞர் பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம்தான் அந்தக் கவிஞர். அவருடைய நினைவு தினம் இன்று. 

 

‘நண்டு செய்த தொண்டு!'

கல்யாணசுந்தரம் வசித்த ஊரில் ஒரு மிராசுதார் இருந்தார். அவரிடம் ஒரு சிறுநிலத்தைக் குத்தகைக்கு விவசாயம் செய்துவந்தது கவிஞரின் குடும்பம். ஒருநாள் வயலுக்குத் தண்ணீர் பாய்ச்சச் சென்றார், கவிஞர். அப்போது மிராசுதார், ‘‘எங்க வயலுக்கு இப்பத்தான் தண்ணி பாய்ச்சிக்கிட்டு இருக்கோம். அது, முடிஞ்சப்புறம் உங்க வயலுக்குத் தண்ணி பாய்ச்சு’’ என்று சொல்ல... வேறு வழியின்றி வீட்டுக்குத் திரும்பினார் கவிஞர். மிராசுதாருக்குப் பலவேலி நிலம் என்பதால், அவை அனைத்துக்கும் தண்ணீர் பாய இரவாகிவிடும். ஆகையால், மறுநாள் காலையில்தான் நம் நிலத்துக்குத் தண்ணீர் பாய்ச்ச முடியும் என்று நினைத்த கவிஞர், அப்படியே தூங்கிப்போனார். மறுநாள் காலை எழுந்ததும், வயலுக்குச் சென்றார் கவிஞர். அங்கே, அவருடைய நிலத்திலும் தண்ணீர் தேங்கியிருந்தது.நமது நிலத்துக்கு யார் தண்ணீர் பாய்ச்சியிருப்பார்கள் என்று யோசித்த அவர்,நண்டு போட்ட துளை வழியாகத் தண்ணீர் வந்திருப்பதைத் தெரிந்துகொண்டார். இதைத்தான், ‘நண்டு செய்த தொண்டு’ என்ற தலைப்பில் ஒரு கவிதையாக எழுதினார் கல்யாணசுந்தரம். அந்தக் கவிதை, ‘ஜனசக்தி’ இதழில் வெளியானது.

17 வகையான தொழில்கள்!

''என் முதல்வர் நாற்காலியின் மூன்று கால்கள் எவை என்று எனக்குத் தெரியாது. ஆனால்,நான்காவது கால் பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம்’’ என்று புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆரால் புகழப்பட்ட கல்யாணசுந்தரம், இளம்வயதிலேயே தன்னுடைய பாடல்களில் பொதுவுடைமை கருத்துகளைக் கொட்டிக் கவிதை புனைந்தவர். 

கல்யாணசுந்தரம்

‘ஓடிப்போ... ஓடிப்போ கெண்டைக் குஞ்சே!
கரை ஓரத்தில் மேயாதே கெண்டைக் குஞ்சே...
தூண்டில்காரன் வரும் நேரமாச்சு - ரொம்பத்
துள்ளிக் குதிக்காதே கெண்டைக் குஞ்சே!’

- என்று தன்னுடைய 15-வது வயதிலேயே வாழ்க்கையின் தத்துவத்தைத் தன் அனுபவ நிகழ்வின் மூலம் கவிதையாக எழுதியவர் கல்யாணசுந்தரம். அவர், பாடல் எழுதத் தொடங்கும்போதெல்லாம், ‘வாழ்க பாரதிதாசன்’ என்ற தலைப்பில் எழுதிவிட்டுத்தான் பாடல் எழுதுவதை வழக்கமாகக் கொண்டிருந்தார். தன்னுடைய 29 வயதுக்குள் 17 வகையான தொழில்களைச் செய்து பழகியவர் அவர். அதனால்தான், ''அவருடைய பாடல்களில் பன்முகங்களைக் காட்ட முடிந்தது'' என்று புகழ்ந்தவர்கள் பலர். அவருடைய பாடல்களைத் தொகுத்த பாலகிருஷ்ணன் என்பவர், ''கல்யாணசுந்தரம் பாடல்களை 12 வகைகளாகப் பிரிக்கலாம்’’ என்று கூறியுள்ளார்.

நிருபரிடம் சொன்ன வாழ்க்கை வரலாறு!

‘‘உங்கள் வாழ்க்கை வரலாற்றைப் பத்திரிகையில் எழுதவேண்டும்’’ என்று கேட்டநிருபர் ஒருவரை, தம் வீட்டிலிருந்து அழைத்துக்கொண்டு தெருவில் சிறிது தூரம்நடந்துசென்றார் கல்யாணசுந்தரம். பிறகு, ரிக்‌ஷா ஒன்றில் அவரை அழைத்துச்சென்றார். அதன் பிறகு, பஸ்ஸில் பயணம். கடைசியில் கார் ஒன்றில் ஏறி, தன் பாடல் பதிவான ரெக்கார்டிங் ஸ்டூடியோவில் போய் இறங்க... தன்கூடப் பயணித்த நிருபர், ‘‘கவிஞரே, வாழ்க்கை வரலாறு’’ என்று ஞாபகப்படுத்தியுள்ளார். அதற்கு, ‘‘முதலில் நடையாய் நடந்தேன்; பிறகு, ரிக்‌ஷாவில் போனேன்; அதன் பிறகு,பஸ்ஸில் போக நேர்ந்தது; இப்போது கார். இதுதான், என் வாழ்க்கை. இதில் எங்கே இருக்கிறது வரலாறு?’’ என்று சிரித்துக்கொண்டே தன் வாழ்க்கையைச்சொல்லிவிட்டுப் போய்விட்டாராம் கவிஞர்.

பட அதிபருக்கு எழுதிய கவிதை!

கல்யாணசுந்தரம், ஆரம்பத்தில் கஷ்டப்பட்டாலும் துணிச்சல்மிக்கவராக இருந்தார். திரைப்படம் நிறுவனம் ஒன்றுக்கு அவர் பாட்டு எழுதிக்கொடுத்தார். ஆனால், பணம் கைக்கு வந்துசேரவில்லை. பணத்தைப் பெறுவதற்காகப் பட அதிபரிடம் நேரில் சென்று கேட்டிருக்கிறார். ‘‘பணம் இன்னிக்கு இல்லே...நாளைக்கு வந்து பாருங்கோ’’ என்று பட அதிபர் பதில் சொல்ல... அதைக் கேட்ட கல்யாணசுந்தரமோ, பணம் இல்லாமல் அந்த இடத்தைவிட்டு நகருவதில்லை என்ற உறுதியுடன் நின்றார். ‘‘நிக்கிறதா இருந்தா நின்னுண்டே இரும்’’ என்று பட அதிபர் சொல்லிவிட்டு வீட்டுக்குள் போய்விட்டார். உடனே கல்யாணசுந்தரம்,சட்டைப்பையில் இருந்த ஒரு தாளையும் பேனாவையும் எடுத்து சில வரிகள் எழுதி, மேஜை மீது வைத்துவிட்டுச் சென்றுவிட்டார்.

‘தாயால் வளர்ந்தேன்...
தமிழால் அறிவு பெற்றேன்...
நாயே - நேற்றுன்னை நடுத்தெருவிலே சந்தித்தேன்...
நீ யார் என்னை நில் என்று சொல்ல?’ 

- என்று அதில் இருந்ததைப் பார்த்த பட அதிபர், அடுத்த நிமிடமே பணத்தைக் கொடுத்தனுப்பினாராம்.

கல்யாணசுந்தரம்

மனைவிக்குச் சன்மானம்!

அதேநேரத்தில், மற்றவர் மூலம் தனக்குக் கிடைத்த சன்மானத்தை அவருக்கே திருப்பிக்கொடுத்து அழகு பார்த்தவர் கல்யாணசுந்தரம். ஒருநாள் அவருடைய அண்ணன் மனைவிக்கு வளைகாப்பு. அன்று... அவர் மனைவி கவிஞரிடம், ‘‘அக்காளுக்கு வளைகாப்பு. அத்தான் முகத்துல பொன் சிரிப்பு’’னு கிண்டலாகச் சொன்னாராம். இதைத்தான் அவர், ‘கல்யாணப் பரிசு’ படத்தில் பல்லவியாகப் போட்டு பாட்டு எழுதினார். ‘‘இது, நீ எழுதிய பாட்டு. இந்தாப் பிடி சன்மானம்’’என்று அந்தப் பாட்டுக்குக் கிடைத்த பணத்தை அவர் மனைவியிடம் கொடுத்தாராம். 

‘தானா எவனும் கெடமாட்டான்
தடுக்கி விடாம விழமாட்டான்
போனா எவனும் வரமாட்டான் - மேலே
போனா எவனும் வரமாட்டான் - இதப்
புரிஞ்சிக்கிட்டவன் அழமாட்டான்!’

 

 - என்று கவிஞர் கல்யாணசுந்தரம் தாம் இறப்பதற்கு முன் ஒரு திரைப்படத்துக்கு, பாடல் ஒன்றை எழுதியிருந்தார். ஆம் உண்மைதான். மேலே போனா எவனும் வரமாட்டான் என்று எழுதியதால்தான் என்னவோ தெரியவில்லை. அவரை இளம்வயதிலேயே அழைத்துக்கொண்ட காலனும் பூமிக்குத் திருப்பியனுப்பவில்லை. 

http://www.vikatan.com

  • தொடங்கியவர்

ஊர் கூடி சோறு இழுப்போம்!

 

 

நெதர்லாந்து நாட்டின் தலைநகரான ‘ஆம்ஸ்டர்டாம்’ விமான நிலையம், இன்றைய தேதியில் உலகின் பரபரப்பான விமான நிலையங்களின் பட்டியலில் 12-வது இடத்தில் உள்ளது.  ஆண்டுக்கு ஆறு கோடி பயணிகள் பயன்படுத்தும் சர்வதேச விமான நிலையம் இது.

இந்த விமான நிலையத்துக்குள் சென்ற ஒருவர், மற்றொருவரைப் பார்க்கிறார் என்றால் கண்டிப்பாக அவர் ஒரே நாட்டைச் சேர்ந்தவராக இருக்க மாட்டார். அப்படி ஒரு சிறப்பு இதற்கு உண்டு. அதிலும் டிசம்பர் 15 அன்று தொடங்கும் கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டுக் கால விடுமுறைக் காலத்தில் மிக அதிகப் பயணிகள் பயணம் செய்வார்கள்.

p47a.jpg

இத்தனைப் பரபரப்புகளுக்கு இடையே இந்த விமான நிலையத்தைத் தலைமையகமாகக்கொண்டு செயல் படுகிறது  ‘கேஎல்எம்’ என்கிற நெதர்லாந்து நாட்டின் விமான நிறுவனம். இந்த நிறுவனம் ஆம்ஸ்டர்டாம் விமான நிலையத்தைக் கடக்கும் பயணிகளைக்கொண்டே  உலகுக்கு ஒற்றுமையை உணர்த்தியது.

ஒரு நகரம் போல அகன்று விரிந்து பரந்திருக்கும் ஆம்ஸ்டர்டாமின் விமான நிலையத்தில் பல்வேறு பயணிகள் காத்திருக்கும் இடங்கள் உள்ளன. வெவ்வேறு விமானங்களுக்குக் காத்திருக்கும் வெவ்வேறு நாட்டு பயணிகள்... ஒருவருக்கு ஒருவர் அறிமுகம் கிடையாது. பெரும்பாலும் வெறித்த பார்வை, இல்லையெனில் மொபைலுக்குள் தலையைப் புதைத்துக் கொள்வதே பயணிகளின் வழக்கமாக இருந்தது.

டிரான்ஸிட் நேரத்தில் ஏராளமான பயணிகள் பசியுடனே அடுத்த விமானத்துக்காகக் காத்திருப்பார்கள். விமான நிலையத்தில் விற்கும் உணவுகளின் விலை சொல்லவே வேண்டாம். அதை நினைவில்கொண்ட `கேஎல்எம்’ நிறுவனம் பயணிகள் காத்திருப்பு இடங்களின் அருகில் இருபது நாற்காலிகளைக்கொண்ட வட்ட மேஜையை அமைத்தது. அந்த மேஜையின் சிறப்பு என்னவென்றால், அது 15 அடி உயரத்தில் இருக்கும். கீழே உள்ள இருபது நாற்காலிகளில் ஆட்கள் அமர அமரக் கொஞ்சம் கொஞ்சமாகக் கீழே இறங்கி வரும்.

அசுரப் பசியுடன் காத்திருக்கும் பயணிகளுக்கு இன்ப அதிர்ச்சி அளிக்கும் வகையில் அருமையான விருந்து அந்த மேஜையில் படைக்கப்பட்டிருக்கும்.

p47b.jpg

கூட்டுறவினால் மட்டுமே அந்த உணவு மேஜையைக் கீழே கொண்டுவர முடியும். முகங்களை மொபைலில் புதைத்துக்கொண்டவர்களானாலும் சரி, எங்கோ வெறித்து சகமனிதர்களைத் தவிர்ப்பவர்களானாலும் சரி... உணவைப் பெற வேண்டுமானால் அடுத்தவர் உதவியை நாட வேண்டும்.

அந்த நாற்காலியில் யதார்த்தமாக அமர்ந்த ஒரு பெண்ணுக்கு மேலே உணவு இருக்கிறது என்று தெரியவருகிறது. அதன்பின் நடந்தது சுவாரஸ்யம்... அவர் அமர்ந்தபின் கொஞ்சம் தள்ளி அமர்ந்திருந்த இன்னொருவரை அழைக்க, அவர் இன்னொருவரை அழைக்க என்று இருபது பேர் சேர்ந்து மேஜையைக் கீழே இறக்கினார்கள். அப்படி இறக்கியவுடன் சடாரென்று விமானப் பணிப்பெண்கள் வந்து சர்வீஸ் செய்யத் தொடங்கினார்கள். மேஜையில் சுவையான கிறிஸ்துமஸ் விருந்து. பணிப்பெண்கள் பரிமாறத் தொடங்க, அமர்ந்திருந்த 20 பேரும் ஜாலியாக அரட்டையடித்தபடி சாப்பிட்டனர்.

p47c.jpg

ஆப்பிரிக்க பெண்மணி, ஜெர்மானிய முதியவர், இங்கிலாந்தின் இளம்பெண், பிரான்ஸ் நாட்டு இளைஞர் என வித விதமான கலாசாரங்களும் வாழ்க்கை முறையும் மனநிலையும் விருப்பங்களும் கொண்ட மனிதர்கள் மனித வாழ்வின் அடிப்படையான உணவின் காரணமாக ஒன்றுசேர்ந்த அற்புத நிகழ்வு நடந்தேறி யது. 

இந்த ஆண்டும் இதுபோன்ற ஒற்றுமையை உணர்த்தும் நிகழ்ச்சியை ஆம்ஸ்டர்டாமில் ‘கேஎல்எம்’ நிகழ்த்தவிருக்கிறது.

இதில் முக்கியமான ஒரு செய்தி என்னவென்றால், உம்மென்று அமர்ந்திருந்த அந்த 20 பேரும் விருந்தைச் சாப்பிடத் தொடங்கியதும் நேரம்போனதே தெரியாமல் பேசிக் கொண்டிருந்தனராம். அவரவரின் விமானத்துக்குக் குறிப்பிட்ட நேரத்துக் குள் அனுப்புவதற்குள் பணிப் பெண் களுக்கு போதும் போதும் என்றாகி விட்டதாம்.

இந்த மனிதர்களே இப்படித்தான்!

http://www.vikatan.com

  • தொடங்கியவர்

பீகார் சிறுமிக்கு நான்கே மாதத்தில் தமிழ் கற்றுத்தந்த அரசுப் பள்ளி ஆசிரியர்! #CelebrateGovtSchool

 

ஆசிரியர்

கல்வியே ஒருவரின் அனைத்து வகையான அறியாமைகளிலிருந்து விடுதலையை அளிக்கக்கூடியது. குறிப்பாக, பல்வேறு ஒடுக்குமுறைகளுக்கு உள்ளாகும் பெண்களுக்குப் பிரகாசமான வெளிச்சத்தைத் தருவது கல்விதான். ஆனால், பெண் குழந்தைகளைப் படிக்கவைக்காமல் குழந்தைப் பருவத்திலேயே திருமணம் செய்துவைக்கும் கொடுமை இன்றும் நடந்துவருகிறது. அந்த மனநிலையில் இருந்த பீகாரைச் சேர்ந்த ஒருவரின் பெண் குழந்தை, தற்போது அரசுப் பள்ளியில் கல்வி ஒளி பெற்றுவருகிறது. 

 

திண்டிவனத்திலிருந்து மரக்காணம் வரும் வழியில் உள்ளது, கட்டளை கிராமம். அங்கே உள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியின் தலைமை ஆசிரியர், ஆர்.துளசி மற்றும் பிற ஆசிரியர்களின் பெரும் அக்கறையாலும் முயற்சியாலும் பீகாரைச் சேர்ந்த அ.ஜைனப் காதூன் கல்வி கற்றுவருகிறாள். முதலாம் வகுப்புப் படிக்கும் இவருக்குத் தமிழில் பேசவே தெரியாது. ஆனால், பள்ளி தொடங்கி நான்கே மாதத்தில் மிகத் தெளிவாக, சரியான உச்சரிப்போடு தமிழ் வார்த்தைகளைப் படிக்கிறாள். அ முதல் ஃ வரை, க் முதல் ன் வரை தடங்களின்றி படிக்கிறாள். இதை வீடியோவில் பார்க்கும்போது நிச்சயம் ஆச்சர்யம் அடைவீர்கள். ஏனெனில், தமிழுக்கே உண்டான சிறப்புமிக்க, உச்சரிக்கச் சிரமமான வார்த்தைகளையும் அழகாகப் படிக்கிறாள். 'ழ்' எழுத்து அவர் நாவில் அவ்வளவு அழகாக நடனமாடுகிறது. 

ஆசிரியர்

ஜைனப் காதூன் பள்ளிக்கு வந்த சுவாரஸ்யமான கதையை அந்தப் பள்ளியின் ஆசிரியர் சுகதேவ் சொல்கிறார். "ஜைனப் காதூனின் குடும்பத்தினர் பீகாரின் ஒரு கிராமத்திலிருந்து வந்தவர்கள். இந்தப் பகுதியில் உள்ள மசூதியில் அவரின் அப்பா வேலை பார்க்கிறார். வீட்டின் செல்லக் குழந்தை ஜைனப் காதூன். அவளை முதன்முதலில் பார்த்ததும், 'பள்ளியில் சேர்க்கும் வயது. சேர்த்துவிடுங்கள்' என்று சக ஆசிரியர்கள் சொல்லி இருக்கிறார்கள். அவள் அப்பா, அம்மாவுக்குத் தமிழில் பேசத் தெரியாது. இந்தி மட்டுமேதான் தெரியும். அதனால், அடுத்த நாள் நான் சென்றேன். என் அம்மா இந்தி பண்டிட் என்பதால், எனக்கு இந்தி தெரியும். ஜைனப் காதூன் வீட்டுக்குச் சென்று, அவளைப் பள்ளியில் சேர்க்கச் சொன்னபோது, அப்பா சொன்னது ஆச்சர்யமாக இருந்தது. 

'எங்கள் ஊரில் பன்னிரண்டு, பதிமூன்று வயது வரை பெண் குழந்தைகளை வளர்த்து, திருமணம் செய்துகொடுத்துவிடுவோம். அதனால், தேவையில்லாமல் படிக்கவைக்க வேண்டாம் என விட்டுவிட்டேன்' என்றார். நான் அவரிடம் பொறுமையாகப் பேசி, சம்மதிக்கவைத்தேன். இப்போது, அவர்தான் தினமும் காலையில் மகளைப் பள்ளிக்கு அழைத்துவருகிறார். பள்ளி முடிந்ததும் நானோ அல்லது வேறு ஆசிரியரோ கொண்டுபோய்விடுவோம்" என்கிறார் சுகதேவ். 

ஜைனப் காதூன் நான்கே மாதத்தில் இவ்வளவு தெளிவாகத் தமிழில் படிக்கும் அதிசயம் நிகழ்ந்தது எப்படி? 

"ஜைனப் காதூனுக்கு க்ளோஸ் ஃப்ரெண்ட் நான்தான். ஏனென்றால், இந்தப் பள்ளியில் எனக்கு மட்டும்தான் இந்தி தெரியும். அதனால், என்னோடு அதிகம் பேசுவாள். சேர்ந்த ஒரு மாதத்தில், தன்னுடன் யாரும் பேசுவதில்லை என்று வருத்தத்துடன் சொன்னாள். மற்றவர்களுக்கு இந்தி தெரியாது என்று நான் சொன்னதை அவளால் புரிந்துகொள்ள முடியவில்லை. நாள்கள் செல்ல, செல்ல மற்ற மாணவர்களோடு பழக ஆரம்பித்தாள். ஒன்றாக விளையாடினாள். ஒரு சில தமிழ் வார்த்தைகளைப் பேசவும் கற்றுக்கொண்டாள். 

நான் என்ன சொல்கிறேனோ அதை முழுமையாகப் புரிந்துகொள்கிறாள். தமிழ் எழுத்துகளை உச்சரிக்கச் சிரமப்பட்டபோது, நான் உதவினேன். ஒவ்வோர் எழுத்தையும் முழுமையாக உச்சரிக்கிறாள். எழுத்துக்கூட்டி, தெளிவாகப் படிக்கிறாள். பார்க்கும் உங்களுக்கு ஆச்சர்யமாக இருக்கலாம். ஆனால், கல்வியில் இருக்கும் அவளின் ஆர்வத்தை ஆரம்பத்திலிருந்து பார்த்த எனக்கு வியப்பாக இல்லை" என்கிறார் சுகதேவ். 

 

http://www.vikatan.com

  • தொடங்கியவர்

ரஷ்யாவில் முரண்டு பிடித்தது சௌதி மன்னரின் தங்கப்படிக்கட்டு

இதுவரை சௌதி மன்னர் எவரும் ரஷ்யா சென்றதில்லை. முதல் முறையாக தற்போதைய மன்னர் சல்மான் விமானம் மூலம் அந்நாட்டுக்குப் அரசு முறைப் பயணமாகச் சென்றார். ஆனால், இந்தப் பயணம் அவருக்கு ஒரு இனிய துவக்கத்தைக் கொடுக்கவில்லை.

  • தொடங்கியவர்

கோட்டை ரகசியங்கள்

shutterstock518576287

உதய்ப்பூர் அரண்மனைக் கோட்டை, ராஜஸ்தான்

யா

ராவது தீவிர சிந்தனையில் ஆழ்ந்தால் ‘என்ன ஏதாவது கோட்டை கட்டுகிறாயா?’ என்று கேட்பதுண்டு. கோட்டை கட்டுவது அதிக உழைப்பைக் கோரும் ஒரு செயல் என்பதாலாயே அப்படிக் கேட்கிறோம். மனக்கோட்டையை எளிதில் கட்டிவிடலாம் ஆனால், நிஜக் கோட்டைகளை உருவாக்குவது அவ்வளவு எளிதல்ல.

             

கோட்டைகளுக்குப் பெயர் பெற்ற நாடு இந்தியா. இங்குதான் எத்தனை பேரரசர்கள், சிற்றரசர்கள் ஆண்டிருக்கிறார்கள்? இவர்களின் கோட்டைகளுள் சில கால மாற்றத்தால் அழிக்கப்பட்டுவிட்டன. தலைநகர் டெல்லியில் இருக்கும் ஆக்ரா கோட்டையிலிருந்து இந்தியாவின் தென்கோடி முனையில் திருவிதாங்கூர் சமஸ்தானத்தில் இருந்த வட்டக்கோட்டை போன்ற சில கோட்டைகள் இன்னும் அழியாமல் இருக்கின்றன.

shutterstock163061444

ஆக்ரா கோட்டை, உத்தரப்பிரதேசம்

 

இந்த மாதிரியான கோட்டைகள் உருவாக்குவதற்கான முயற்சிகள், தந்திரத் திட்டங்கள், தேவைப்படும் நிதி எல்லாமே பிரம்மாண்டமானவை, மலைப்பூட்டுபவை. வேல்ஸ் பகுதியில் தனக்கான கோட்டையை எழுப்பும்போது அதற்கான கட்டுமானச் செலவு ஒரு லட்சம் டாலருக்கும் அதிகமாகிவிட, மன்னர் முதலாம் எட்வர்டு அதிர்ச்சி அடைந்திருக்கிறார். காரணம் அரசாங்க கஜானாவே கிட்டத்தட்ட திவாலாகிவிட்டது. சும்மாவா? 3,000 கட்டிட ஊழியர்களுக்கு வேண்டிய பொருட்களும் ஊதியமும் கொடுக்க வேண்டி இருக்குமே.

shutterstock500842615

ஜெய்ப்பூர் ஆம்பர் கோட்டை, ராஜஸ்தான்

 

பொதுவாக அந்தந்தப் பகுதியிலுள்ள கற்கள், களிமண், மரங்கள் ஆகியவற்றைத்தான் கட்டுமானப் பொருட்களாகத் தேர்ந்தெடுப்பார்கள். அப்போதெல்லாம் கற்சுவர்கள்தான். இதற்காகப் பாறைகளைத் தேர்ந்தெடுக்கும்போது அவற்றில் எங்கெங்கெல்லாம் கோடுகள் (சின்னச் சின்ன பிளவுகள்) தெரிகின்றன என்பதைக் கவனிப்பார்கள். காரணம் அந்தப் பகுதியில் பாறைகளை உடைப்பது எளிதாக இருக்கும். கல் கிடைக்கும் இடங்களிலிருந்து கோட்டை கட்டும் இடத்துக்குக் கற்களை எடுத்துவர குதிரை வண்டிகள் பயன்பட்டன. பாறைகளை நகர்த்த எக்கக்கச்சமானவர்கள் தேவைப்பட்டனர். பழங்காலக் கோட்டைகளைப் பார்க்கும்போது அவை கண்ணுக்கு விருந்தாகக் காட்சிதரும். ஆனால், அவற்றிலுள்ள ஒவ்வொரு விஷயத்துக்குப் பின்னாலும் அழுத்தமான ஒரு காரணம் உண்டு.

shutterstock294604763

குவாலியர் கோட்டை, மத்தியப் பிரதேசம்

 

முக்கிய நுழைவு வாயில் அகலமாக இருந்தாலும் அது திடீரென்று குறுகும். படிகள் வெவ்வேறு அளவு கொண்டவையாக இருக்கும். இரண்டு படிகள், சட்டென்று கொஞ்சம் சமதளம், மூன்று படிகள் அதற்கு மேல் கொஞ்சம் சமதளம் என்பது போல இருக்கும். அதாவது வேகமாகப் படிகளில் ஏறும் எதிரிப் படையினர் எதிர்பாராத படிகளின் அமைப்பால் சட்டென்று நிலை தடுமாறி விழுந்துவிடுவார்கள். இதனால் கலவரச் சூழல் உண்டாகி எதிரிப் படைகள் உள்ளுக்குள் வருவது தடைபட்டு கோட்டை வீரர்கள் சுதாரித்துக் கொள்ள நேரம் கிடைக்கும்.

shutterstock271662995

கோல்கொண்டா கோட்டை, தெலுங்கானா

 

உதய்பூர் அரண்மனைக் கோட்டையில் இன்னொரு தந்திரத்தையும் பார்க்க நேர்ந்தது. மேல்தளத்துக்கு வருவதற்கு முன்னால் ஒரு சிறிய குகை போன்ற அமைப்பு இருக்கும். அப்படி வரும்போது தலையைக் கொஞ்சம் குனிந்து கொண்டுதான் வர வேண்டும். அது எதிரியாக இருந்தால் மேல் தளத்தில் காத்திருக்கும் கோட்டை வீரர்கள் அந்தத் தலையைக் கொய்து விடுவார்கள்.

shutterstock12724348

தவ்லதாபாத் கோட்டை, மகாராஷ்டிரா

 

அதேபோல் சுழல் படிகள் அமைக்கப்பட்டிருக்கும் விதமும் வித்தியாசமாக இருக்கும். இவை கடிகாரச் சுற்றுக்கு எதிர்த் திசையில் அமைந்திருக்கும். எந்தப் படையிலும் பெரும்பாலான வீரர்கள் வலது கைப்பழக்கம் கொண்டவர்களாகத்தான் இருப்பார்கள். இதுபோன்ற சுழல் படிகளில் மேலிருந்து கோட்டை வீரர்களால் மேலேறி வரும் எதிரிகள் மீது எளிதில் வாள் வீச்சை நடத்த முடியும். ஆனால், இந்தப் படிகளில் முன்னேறிவரும் எதிரி வீரர்களால் எளிதில் தங்கள் வாள்களைப் பயன் தரும் வகையில் இயக்க முடியாது. காரணம் சுழல் படிக்கட்டின் சுவர் அதைத் தொடர்ந்து தடுத்துக்கொண்டிருக்கும்.

TiruchirapalliRockFort

மலைக் கோட்டை, திருச்சி, தமிழ்நாடு

 

கோட்டையைச் சுற்றி அகழி, வெளிப்புறத்திலிருந்து கோட்டைக்கு இணைக்க ஒரே ஒரு அகலமான, உறுதியான பலகை, அந்தப் பலகையை உட்புறமாகச் சாத்த முடியும் போன்ற எல்லாமே கோட்டைக் கட்டுமானத் தந்திரங்கள்தான். கோட்டையின் மேற்புறத்திலிருந்து எதிரிகளின் மீது அம்பு மழை பொழியும் வசதி இருக்க வேண்டும். அதே சமயம் எதிரிகளின் அம்புகள் நேரடியாக அவர்கள்மீது பாய்ந்துவிடக் கூடாது. இதற்கேற்ப மறைப்பு வசதிகளும் இருக்க வேண்டும்.

07JKRVATTAKOTTAI

கன்னியாகுமரி வட்டக்கோட்டை, தமிழ்நாடு

 

எதிரிகளின் தாக்குதலைத் தாங்கக்கூடிய அளவுக்குக் கட்டுமானம் சிறப்பானதாக இருக்க வேண்டும். தவிர ரகசியக் கட்டுமானங்களும் இதில் இருக்கும். கோட்டையிலிருந்து வெளியேறுவதற்கான சுரங்கப்பாதை என்பது வேறு என்னவாம்?

http://tamil.thehindu.com

  • தொடங்கியவர்

வரலாற்றில் இன்று…
ஒக்டோபர் – 09

 

1582 : கிற­கோ­ரியன் நாட்­காட்டி அறி­மு­கப்­ப­டுத்­தப்­பட்­டதை அடுத்து இத்­தாலி, போலந்து, போர்த்­துக்கல், ஸ்பெயின் ஆகிய நாடு­களில் புதிய நாட்­காட்­டியில் அவ்­வாண்டின் ஒக்­டோபர் 9 ஆம் திகதி இடம்­பெ­ற­வில்லை.

1799 : லூட்டின் என்ற கப்பல் நெதர்­லாந்தில் 240 பேரு­டனும் பெறு­ம­தி­யான பொருட்­க­ளு­டனும் மூழ்­கி­யது.
1804 : அவுஸ்­தி­ரே­லி­யாவின் தாஸ்­மா­னியா மாநில தலை­நகர் ஹோபார்ட் ஸ்தாபிக்­கப்­பட்­டது.

che-guevera1-500x331.jpg1820 : ஈக்­கு­வ­டோரின் கயாக்கில் பிராந்­தியம் ஸ்பெயி­னிடம் இருந்து சுதந்­திரம் பெறு­வ­தாக பிர­க­டனம் செய்­தது.

1824 : கொஸ்­டா­ரிக்­காவில் அடிமை முறைமை ஒழிக்­கப்­பட்­டது.

1835 : கொழும்பு ரோயல் கல்­லூரி ஆரம்­பிக்­கப்­பட்­டது.

1854 : ரஷ்­யாவில் செவஸ்­தபோல் மீதான தாக்­கு­தலை பிரித்­தா­னியா, பிரான்ஸ் மற்றும் துருக்­கியப் படைகள் ஆரம்­பித்­தன.

1871 : அமெ­ரிக்­காவின் சிக்­கா­கோவில் மூன்று நாட்­க­ளாக பர­விய பெரும் தீ அணைக்­கப்­பட்­டது. நூற்­றுக் ­க­ணக்­கானோர் கொல்­லப்­பட்­டனர்.

1888 : வொஷிங்டன் நினைவுச் சின்னம், ெவாஷிங்டன் டிசியில் பொது­மக்கள் பார்­வைக்குத் திறக்­கப்­பட்­டது. இது அக்­கா­லத்தில் உலகின் உய­ர­மான கட்­டி­ட­மாக விளங்­கி­யது.

1910 : மாறு­வே­டத்தில் உலகப் பயணம் மேற்­கொண்ட பின்னர் வ. வே. சு. ஐயர் புதுச்­சேரி திரும்­பினார்.

Malala-Nobel.jpg1914 : முதலாம் உலகப் போரில் பெல்­ஜி­யத்தின் அண்ட்வேர்ப் நகரம் ஜேர்­ம­னி­யிடம் வீழ்ந்­தது.

1934 : யூகோஸ்­லா­வி­யாவின் மன்னன் முதலாம் அலெக்­ஸாண்­டரும் பிரெஞ்சு வெளி­வி­வ­கார அமைச்சர் லூயிஸ் பார்த்­தோவும் பிரான்ஸில் நடை­பெற்ற வைப­வ­மொன்­றின்­போது துப்­பாக்­கி­தா­ரி­ யொரு­வனால் கொல்­லப்­பட்­டனர்.

1941 : பனா­மாவில் இடம்­பெற்ற புரட்­சியின் பின்னர் ரிக்­கார்டோ டெலா கார்­டியா ஜனா­தி­ப­தி­யானார்.

1962 : பிரித்­தா­னி­யா­விடம் இருந்து உகாண்டா சுதந்­திரம் பெற்­றது.

1963 : வடக்கு, கிழக்கு இத்­தா­லியில் இடம்­பெற்ற நிலச்­ச­ரிவில் 2,000 பேர் கொல்­லப்­பட்­டனர்.

1967 : ஆர்­ஜென்­டீ­னாவில் பிறந்து பிடெல் காஸ்ட்­ரோ­வுடன் கியூப புரட்­சியில் பங்­கு­பற்­றிய கெரில்லா தலைவர் சே குவெரா, பொலி­வி­யாவில் ஒக்­டோபர் 8 ஆம் திகதி கைது செய்­யப்­பட்டு, அடுத்­தநாள் (ஒக்­டோபர் 9) புரட்­சியைத் தூண்­டினார் என்ற குற்­றச்­சாட்டில் சுட்டுக் கொல்­லப்­பட்டார்.

1970 : கம்­போ­டி­யாவில் கெமர் குடி­ய­ரசு அறி­விக்­கப்­பட்­டது.

1981 : பிரான்ஸில் மர­ண­தண்­டனை ஒழிக்­கப்­பட்­டது.

1983 : பர்­மாவின் ரங்­கூனில் தென் கொரிய ஜனா­தி­பதி சுன் டூ-ஹ்வான் மீது இடம்­பெற்ற குண்­டுத்­தாக்­கு­தலில் அவர் உயிர் தப்­பினார். நான்கு அமைச்­சர்கள் உட்­பட பலர் உயி­ரி­ழந்­தனர்.

2004 : ஆப்­கா­னிஸ்­தானில் முதற்­த­ட­வை­யாக ஜன­நா­யகத் தேர்தல் நடை­பெற்­றது.

2006 : வட கொரியா தனது முத­லா­வது அணு­வா­யுதச் சோத­னையை வெற்­றி­க­ர­மாக நடத்தியதாக அறிவிக்கப்பட்டது.

2012 : பாகிஸ்தானிய சிறுமி மலாலா யூசுப் ஸாய், தனது பாடசாலையிலிருந்து வீடு நோக்கி  சென்று கொண்டிருந்த போது தலிபான்களால் சுடப்பட்டு படுகாயமடைந்தார். 2014 ஆம் ஆண்டு அவருக்கு நோபல் சமாதான பரிசு வழங்கப்பட்டது.

http://metronews.lk/

  • தொடங்கியவர்

தோனி மகளுடன் விளையாடிய விராட் கோலி : வைரலாகும் வீடியோ

 

 

இந்திய அணியின் முன்னாள் கேப்டன் தோனியின் மகள் ஷிவாவுடன் விளையாடும் வீடியோவை விராட் கோலி டுவிட்டரில் பதிவு செய்தார்.

இந்தியா - ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான மூன்று போட்டிகள் கொண்ட டி20 கிரிக்கெட் தொடர் நடைபெற்று வருகிறது. முதல் போட்டி ராஞ்சியில் 7 ஆம் திகதி நடைபெற்றது. முதலில் விளையாடிய ஆஸ்திரேலிய அணி மழை குறுக்கிட்டதால் 18.4 ஓவர்களில் 8 விக்கெட் இழப்பிற்கு 118 ரன்கள் எடுத்தது. 

 

 

இதையடுத்து, டக்வொர்த் லீவிஸ் விதிப்படி இந்தியாவின் வெற்றிக்கு 6 ஓவர்களில் 48 ரன்கள் என்ற இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டது. இந்திய அணி 5.3 ஓவர்களில் ஒரு விக்கெட் இழப்புக்கு 49 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. இந்த வெற்றியின் மூலம் மூன்று போட்டிகள் கொண்ட டி 20 தொடரில் இந்திய அணி 1-0 என்ற கணக்கில் முன்னிலை பெற்றது.

இந்த வெற்றிக்கு பின்னர் இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி டுவிட்டரில் முன்னாள் கேப்டன் தோனியின் மகள் ஷிவாவுடன் விளையாடும் ஒரு வீடியோவை பகிர்ந்தார். அந்த விடியோவில், “ஷிவாவுடன் மீண்டும் இணைந்தேன். தூய குற்றமற்றவர்களுடன் இருப்பது மிகப்பெரிய ஆசீர்வாதம்”, என கூறியுள்ளார்.

இந்த வீடியோ சமூக வளைதளங்களில் வைரலாக பரவிவருகிறது. இதற்கு முன்னதாக கடந்தாண்டு மார்ச் மாதமும் ஷிவாவுடன் எடுத்துக்கொண்ட ஒரு புகைப்படத்தை இன்ஸ்டாகிராமில் கோலி பகிர்ந்தார். அந்த புகைப்படம் இந்திய கிரிக்கெட் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது. 

 

http://www.virakesari.lk/

Edited by நவீனன்

  • தொடங்கியவர்

19 சென்றி மீற்றர் நீளத்தில் நாக்கா…..?

 

இந்த உலகில் கடவுளின் படைப்பில் ஒவ்வொன்றும் அதிசயமே அவ்வாறான ஒன்றுதான் கின்னஸ் புத்தகத்தில் இடம்பெற்றுள்ள நீண்ட நாக்கை கொண்ட நாய்.

19 சென்றி மீற்றர் நீளத்தில் நாக்கா…..?

அமெரிக்காவின் தெற்கு டகோட்டா மாநிலத்தைச் சேர்ந்த இந்த நாய் உலகிலேயே மிக நீண்ட நாக்கைக் கொண்டது என கின்னஸ் புத்தகத்தில் இடம்பெற்றுள்ளது.

உலகில் உள்ள அனைத்து நாய்களையும் விட மிக நீளமான நாக்கைப்பெற்றுள்ளதாக கின்னஸ் நிறுவனத்தால் இந்த நாய் அறிவிக்கப்பட்டுள்ளது.

19 சென்றி மீற்றர் நீளத்தில் நாக்கா…..?

தெற்கு டகோட்டாவின் Sioux Falls பகுதியில் வளர்ந்து வரும் Mochi ‘Mo’ Rickert என்ற இந்த நாய்க்கு எட்டு வயதாகிறது.

இதன் நாக்கு 19 சென்றி மீற்றர் நீளத்தில் உள்ளதாக கூறப்படுகிறது.

19 சென்றி மீற்றர் நீளத்தில் நாக்கா…..?

கார்லா ரிக்கெட் என்ற பெண் ஒருவர் இந்த நாயை வளர்த்துவருவதாகவும், ஒரு முறை வெளியில் பயணம் சென்றிருந்த போது இந்த நாயைக் கண்டெடுத்து வந்து கடந்த ஆறரை ஆண்டுகளாக வளர்த்துவருவதாக அவர் தெரிவித்துள்ளார்.

அத்தோடு இந்த நாய் பீனட் பட்டரினை விரும்பி உண்ணுவதாகவும் அவர் கூறியுள்ளார்.

19 சென்றி மீற்றர் நீளத்தில் நாக்கா…..?

கின்னஸ் புத்தகத்தில் இந்த நாய் இடம்பெற்றுள்ளது தொடர்பான சான்றிதழை அவர் பெருமையுடன் அனைவரிடமும் காட்டி மகிழ்கின்றமை குறிப்பிடத்தக்கது.

https://news.ibctamil.com

  • தொடங்கியவர்

உலகம் முழுக்க ‘ஒன்லி சேலை’ சுற்றுலா செல்லும் தமிழ்ப் பெண்! #Smruthi #SareeLove

 
 

ஸ்மிருதி

‘அப்பப்பா... இந்தச் சேலையைக் கட்டிக்கிட்டு எப்படி ஆபீஸ் போறாங்க?’, ‘சேலையைக் கட்டிக்கிட்டெல்லாம் ஒருநாள் முழுக்க இருக்க முடியாது’, 

 

இந்தக் காலத்துப் பெண்களிடமிருந்து இப்படியான டயலாக்குகளை பலமுறை கேட்டிருப்போம். ஆனால், சிங்கப்பூர், பிரான்ஸ், ஸ்பெயின் என உலகம் முழுவதும் இந்திய கலாசாரத்தை சுமந்தபடி பயணித்துக்கொண்டிருக்கிறார் கோயம்புத்தூரைச் சேர்ந்த, ஸ்மிருதி கெளரிசங்கர் (Shmruthi Gowrisankar). அவரின் வித்தியாசமான முயற்சி குறித்து கேட்டோம். 

''உங்களைப் பற்றி சொல்லுங்க மேடம்?''

“பிறந்து வளர்ந்தது எல்லாமே ஈரோடு. பத்தாவது வரை, ஈரோடு பி.வி.பி பள்ளியில் படிச்சேன். அப்பாவுக்கு கோயம்புத்தூருக்கு டிரான்ஸ்ஃபர் ஆச்சு. கோவையில் அவிலா கான்வென்டில் பிளஸ் டூ முடிச்சுட்டு, சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் பி.டெக் படிச்சேன். எனக்கு மேனேஜ்மென்ட் படிப்பில் ஆர்வம். அதற்கு ஸ்காலர்ஷிப் கிடைக்க, பிரான்ஸுக்குப்போய் பிசினஸ் மேனேஜ்மென்ட் படிச்சேன். இப்போ, சிங்கப்பூரில் ஒரு பன்னாட்டு நிறுவனத்தில் வேலை பார்த்துட்டிருக்கேன்.''

ஸ்மிருதி கெளரிசங்கர்

எப்போது ஆரம்பித்தது உங்களுடைய சேலைக் காதல்?'' 

“சின்ன வயசிலிருந்தே சேலை மேல் ஒரு ஈர்ப்பு. சென்னை காலேஜில் படிக்கும்போது, அடிக்கடி சேலைதான் கட்டுவேன். ஆனால், வெளிநாட்டில் சேலை கட்டிக்கிறதுக்கான வாய்ப்பு ரொம்ப கம்மியா இருந்துச்சு. படிப்பு, வேலைனு அஞ்சு வருஷத்தில், ஏழு நாடுகளுக்கு பயணிச்சிருக்கேன். ஒவ்வொரு நாட்டிலும் எட்டு மாசமோ, ஒரு வருஷமோ தங்குவேன். புதுச் சூழலையும் சீக்கிரமே பழகிக்க ஆரம்பிச்சேன். ஆனாலும் என் அடையாளம் இந்தியன்தானே. அதை ரொம்பவே மிஸ் பண்ற மாதிரி தோணுச்சு. அதனால், இந்த ஆண்டிலிருந்து எங்கே போனாலும், புடவை கட்டிக்கிட்டுப் பயணம் செய்யறதுனு முடிவெடுத்தேன்.'' 

''எந்த நாட்டில் உங்களின் சேலைக்கு அதிக வரவேற்பு கிடைச்சது?'' 

''சுவிட்சர்லாந்துக்குப் பக்கத்தில் இருக்கும் குட்டி நாடு, லிச்டென்ஸ்டெய்ன் (Liechtenstein). இங்கே பலருக்கும் சேலைன்னா என்னனுகூட தெரியாது. நான் சேலை கட்டிட்டு இருக்கிறதை முதல்முறையாகப் பார்த்து ஆச்சர்யப்பட்டாங்க. என்ன இது, எப்படி கட்டறதுனு ஆர்வமா கேட்டுத் தெரிஞ்சுக்கிட்டாங்க. வெளிநாட்டில் ஆபிஸூக்கு முதல் தடவை சேலையைக் கட்டிட்டுப் போனபோது, பதற்றமா இருந்துச்சு. ஆனால், என்னுடன் வேலை பார்க்கிறவங்க ரொம்ப அழகாக இருக்குனு பாராட்டினதும் ரொம்ப சந்தோஷமாகிட்டேன். சிங்கப்பூர், ஜெர்மனி, சுவிட்சர்லாந்து அலுவலகங்களுக்கு சேலையைக் கட்டிக்கிட்டுப் போயிருக்கேன்.'' 

ஸ்மிருதி கெளரிசங்கர்

உங்க பிளவுஸ் டிசைனும் வித்தியாசமாக இருக்கே... நீங்களே வடிவமைக்கிறீங்களா?'' 

''எனக்கு ஃபேஷன் டிசைனிங்ல ஆர்வம் உண்டு. ஒய்வு நேரங்களில் ஏதாவது டிசைனிங் செஞ்டுட்டிருப்பேன். இணையதளத்துல நிறைய ஐடியாஸ் கொட்டி கிடைக்குதே. அதைப் பார்த்துச் செய்த பிளவுஸ் டிசைன்களே இவை. டிசைன் பண்ணி என் அம்மாவுக்கு வாட்ஸ்அப் பண்ணுவேன். அவர் கோயம்புத்தூரில் கொடுத்து ரெடி பண்ணி அனுப்புவாங்க.'' 

பெரும்பாலும் லைட் வெயிட் புடவையை பயன்படுத்தறீங்க போல... ஹெவி வெயிட் பிடிக்காதா?'' 

''சமீபத்தில் வாங்கிய எல்லாச் சேலைகளும் கைத்தறிச் சேலைகள். அதுதான் பயணங்களில் கட்டிக்க ஈஸியா இருக்கும். நமது கைத்தறி தொழில் அழிந்துபோகாமல் காக்கும் என் சிறிய பங்களிப்பாகவும் எடுத்துக்கலாம். விசேஷங்களுக்கு ஹெவி வெயிட் சேலையைக் கட்டுவேன்.'' 

ஸ்மிருதி கெளரிசங்கர்

“எங்கிருந்து புடவைகளை வாங்கறீங்க?” 

''80 சதவிகிதம் ஆன்லைனில்தான் வாங்குவேன். இன்ஸ்ட்டாகிராமில் பார்த்து, நம்பிக்கையான இடம்தான் எனத் தெரிஞ்சுக்கிட்டு வாங்குவேன். சில சேலைகள் அம்மாவும் மாமியாரும் அனுப்பியவை.'' 

''மறக்க முடியாத அனுபவம்...'' 

'ஸ்லோவேனியா நாட்டுக்குப் பயணம் செய்தபோது, ஒரு பெண்மணியின் வீட்டில் நானும் கணவரும் தங்கினோம். வீட்டுக்குள் நுழைந்ததுமே எனது சேலையைப் பார்த்து மிகவும் குஷியாகிவிட்டார். வீட்டிலிருந்த ஒவ்வொருவரிடமும் அழைத்துச் சென்று அறிமுகப்படுத்திக் கொண்டாடினார். அவரது உற்சாகம் எங்கள் பயணக் களைப்பையே விரட்டிடிச்சு.'' 

''நீங்கள் அடுத்து செல்ல நினைக்கும் இடம்...'' 

 

''உலகம் முழுவதும் ஒரு நாடு விடாமல் சுற்றுவதே ஆசை. இனிவரும் அனைத்துப் பயணங்களிலும் சேலை என்னுடன் பயணிக்கும்''

http://www.vikatan.com/

  • தொடங்கியவர்

ஒரு நிமிடத்தில் காயத்தை ஆற்ற முடியும் !

பொஸ்டனில் உள்ள Northeastern பல்கலைகழக விஞ்ஞானிகள் குழு ஒன்று சத்திரசிகிச்சைகளின் போது ஏற்படும் காயங்கள் மற்றும் ஏனைய தோல் கழிவு போன்றவை 6௦ செக்கன்களில் ஆறச்செய்வதற்கான பசை ஒன்றினை உருவாக்கியுள்ளனர்.

ஒரு  நிமிடத்தில்  காயத்தை  ஆற்ற  முடியும் !

இது தோல்களில் ஏற்படும் காயங்களை மட்டுமன்றி உடலினுள் காணப்படும் அங்கங்களில் ஏற்படக்கூடிய காயங்களிற்கும் பயன்படுத்த முடியும் என கூறப்படுகிறது.

இந்த பசை மீ ட்ரோ [Me Tro] என அழைக்கப்படுகிறது.

எனினும் இதனை உடனடி தீர்வாகவே பயன்படுத்த முடிவதுடன் பாரிய காயங்களுக்கு பயன்படுத்த முடியாது என கூறுகின்றனர்.

அத்துடன் இந்த பசை இதுவரையில் பன்றிகளின் நுரையீரல்களில் மட்டுமே வெற்றிகரமாக பரிசீலிக்கப்பட்டுள்ளது. மனிதனில் பரிசீலிக்கப்படவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.

https://news.ibctamil.com

  • தொடங்கியவர்

'மெர்சல்' படத்தின் புரொமோ வீடியோஸ்!

 

மெர்சல்

விஜய், சமந்தா, காஜல் அகர்வால், நித்யா மேனன், எஸ்.ஜே.சூர்யா, வடிவேலு, கோவை சரளா எனப் பல நட்சத்திரங்கள் நடித்து தீபாவளிக்கு ரிலீஸாகயிருக்கிறது மெர்சல். 'தெறி' படத்துக்குப் பிறகு, 'மெர்சல்' மூலம் இரண்டாவது முறையாக விஜய்யை இயக்கியிருக்கிறார், இயக்குநர் அட்லி. 

 

'உதயா', 'அழகிய தமிழ் மகன்' படங்களுக்குப் பிறகு, மூன்றாவது முறையாக விஜய் - ஏ.ஆர்.ரஹ்மான் கூட்டணி இந்தப் படத்தில் இணைந்துள்ளது. பாடல்கள் ரசிகர்களின் லைக்ஸை வாங்கியிருப்பதால், பாடல்களின் விஷுவலைப் பார்க்க ரசிகர்கள் காத்திருக்கின்றனர். 

மெர்சல்

'மெர்சல்' படத்தின் டீசர் வெளியாகி செம ட்ரெண்ட் அடித்ததால், ட்ரெய்லர் ரிலீஸை ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்துக்கொண்டிருக்கும் வேளையில் படத்துக்கான இரண்டு புரொமோ வீடியோக்களைப் படக்குழு வெளியிட்டிருக்கிறது. 

 

 

 

‘ஒரு குழந்தை உருவாகுறதுக்கு 10 மாதம்... ஒரு பட்டதாரி உருவாகுறதுக்கு மூணு வருஷம்... ஆனா ஒரு தலைவன் உருவாகுறதுக்கு ஒரு யுகமே தேவைப்படுது...’ என விஜய் பேசும் ஒரு புரொமோ வீடியோதான், தற்போது யூடியூபில் டாப் ட்ரெண்டிங்கில் இருக்கிறது. டீசரில் காட்டாத வடிவேலு, கோவை சரளா, சமந்தா, காஜலை மற்றொரு புரொமோவில் காட்டியுள்ளனர். அதுமட்டுமல்லாமல், விஜய்யும் எஸ்.ஜே.சூர்யாவும் நேருக்கு நேர் முறைத்துக்கொள்ளும் போஸ்டர் ஒன்றும் வெளியாகியுள்ளது. 

  • தொடங்கியவர்

கொதித்த பெண்கள் : வருத்தம் தெரிவித்த டவ் நிறுவனம்!

 
 

டவ்

கடந்த வெள்ளிக்கிழமை டவ் சோப்பின் சார்பாக விளம்பரம் ஒன்று முகப்புத்தகத்தில் பதிவேற்றப்பட்டது. ஜிஃப் வடிவிலான அந்த விளம்பரத்தைப் பார்த்த அனைவருக்கும் பெரிய அதிர்ச்சி. ஒரு கறுத்த நிறத்திலான பெண், அதே நிறத்திலான உடையை களையும் போது, அங்கு அடுத்ததாக ஒரு வெள்ளை நிறப்பெண், வெள்ளை நிறச் சட்டையை அணிந்திருக்கும் பெண் திரையில் தோன்றுகிறார். இதுதான் அந்த விளம்பரம்.

 

நிறத்தினை முன்னிலைப்படுத்தாமல் ‘இயற்கை அழகு’ என்று பெரிய அளவிலான விழிப்புஉணர்வு நிகழ்வுகளை நடத்திய, மற்ற சோப் நிறுவனங்களிலிருந்து வேறுபட்டு, விளம்பரங்களில் மாநிறப்பெண்களை நடிக்க வைக்கும் டவ் நிறுவனத்திடமிருந்து இதுபோலொரு விளம்பரத்தை யாரும் எதிர்ப்பார்த்திருக்கமாட்டார்கள்தான். பலத்த எதிர்ப்புகளுக்கு மத்தியில் அந்த விளம்பரம் சனிக்கிழமை நீக்கப்பட்டது. பின் இணையதளத்தில் டவ்வின் இந்தச் செயலைக் கண்டித்து நடந்த மிகப்பெரிய அளவிலான பிரசாரங்களுக்கு நடுவே, தற்போது ‘தங்களுடைய விளம்பரம் பெண்களை பிரதிநிதித்துவப்படுத்துவதில் தவறிவிட்டதாக’ கூறி வருத்தம் தெரிவித்திருக்கிறது டவ் நிறுவனம்.

http://www.vikatan.com/

Edited by நவீனன்

  • தொடங்கியவர்

'இதயத்தில் போராட்ட குணம் விதைக்கப்படும்!' - 'சே' நினைவு தின சிறப்புப் பகிர்வு

 
 

உறுதியான, அழகான முகம். சுருள் சுருளாக ஒழுங்குபடுத்தாத தாடி, கடுமையாகத் தெரியும் தோற்றம். புன்னகைக்க ஆரம்பித்தால் வெளிபடும் இளமை, பச்சை நிறத்திலான தொள தொளத்த காற்சட்டை, பூட்ஸ்களும், கறுப்புத் தொப்பியும் அதில் சிவப்பு நட்சத்திரமும் என தனக்கென தனி அடையாளங்கள் மூலம் மக்களிடம் பிரபலமானவர்தான் சேகுவேரா. அவருடைய ஏதோவொன்று, மனிதர்களின் இதயத்துக்குள்ளும் மூளைக்குள்ளும் கலந்துவிட்டிருக்கிறது. 

'சேகுவேரா' என்று அழைக்கப்படும் எர்னெஸ்டோ குவேரா 1928 ஜூன் 14-ம் நாள், அர்ஜென்டினா ரோசாரியோவில் பிறந்தவர். சேகுவேரா, வசதியான நடுத்தரக் குடும்பத்தைச் சேர்ந்தவர். 

 

che_09326.jpg

1952-ல், பியூனோஸ் எய்ரஸ் பல்கலைக்கழகத்திலிருந்து பட்டம் பெற்ற ஒரு மருத்துவ மாணவர். பிற்காலத்தில், 'லட்சிய வீரர்' என்று உலகளவில் பெயரெடுத்தார். மாணவப் பருவத்திலேயே, பெரோண் ஆட்சியை எதிர்த்து, அரசியலில் ஈடுபடவும் ஆரம்பித்தார்.

சேகுவேராவின் வீட்டில் 3,000 நூல்களுக்கு மேல் இருந்தன. நூல்களை வாசிப்பதில் அவருக்கு இருந்த ஆர்வத்துக்கு இது ஒரு காரணம் எனலாம். இவற்றுள், மார்க்ஸ் (Karl Heinrich Marx), போல்க்னர், வேர்னே போன்றவர்கள் எழுதிய நூல்களில் அவருக்கு சிறப்பான ஆர்வம் இருந்தது. ஜவஹர்லால் நேரு, லெனின் போன்றவர்களது நூல்களையும், பிரான்ஸ், ஏங்கெல்ஸ், வெல்ஸ், புரொஸ்ட் ஆகியோருடைய நூல்களையும் அவர் விரும்பி வாசித்தார். சில காலத்துக்குப் பிறகு, சேகுவேரா தன்னை ஃபிடல் காஸ்ட்ரோவின் போராட்ட இயக்கத்தில் இணைத்துக்கொண்டார். அந்த இயக்கம், 1959 ல் கியூபாவின் ஆட்சி அதிகாரத்தைக் கைப்பற்றியது. அதன் பின்னர், கியூபாவின் மத்திய வங்கித் தலைவராக 14 ஆண்டுகள் பணியாற்றினார்.

அந்தக் காலகட்டத்தில், கரந்தடிப் போர்முறை பற்றிய பல கட்டுரைகளையும் புத்தங்களையும் எழுதினார். 1964 டிசம்பர் 11-ம் தேதி, கியூபாவின் பிரதிநிதியாக ஐக்கிய நாடுகள் அவையின் 19-வது பொது அமர்வில் உரையாற்றினார். விடுதலையின் குரலாகவும் ஏகாதிபத்தியத்துக்கு எதிராகவும் செயல்பட்டுவந்தார் சேகுவேரா.

1967 அக்டோபர் 8ல், தென் அமெரிக்கச் சரித்திரத்தில் ஓர் இருண்ட தினம். யூரோ கணவாயை ஆறு கெரில்லா வீரர்களுடன் சேகுவேரா கடந்து சென்றபோது, வழியில் தென்பட்ட ஆடு மேய்க்கும் ஒரு பெண்ணின் மேல் பரிதாபப்பட்டு, 50 பெஸோக்களைப் பரிசாகத் தந்தார்.  அந்தப் பெண் பொலிவிய ராணுவத்துக்கு சேகுவேராவின் இருப்பிடத்தைக் காட்டிக்கொடுத்துவிட்டார். அலறிப் புடைத்துப் பறந்துவந்த பொலிவிய ராணுவம், சுற்றி வளைத்துச் சரமாரியாக சுடத் தொடங்கியது. பதிலுக்கு கொரில்லாக்களும் துப்பாக்கியால் சுட்டனர். காலில் குண்டடிபட்ட  நிலையில், தன்னைச் சுற்றித் துப்பாக்கியுடன் சூழ்ந்த பொலிவிய ராணுவத்திடம், ‘‘நான்தான் சேகுவேரா. நான் இறப்பதைக் காட்டிலும், உயிருடன் பிடிப்பது உங்களுக்குப் பயனுள்ளதாக இருக்கும்’’ என்றார்.      

அருகிலிருந்த லா ஹிகுவேராவுக்கு வீரர்கள் சேகுவேராவை அழைத்துச் சென்றனர். அங்கிருக்கும் பழைய பள்ளிக்கூடம் ஒன்றில் சேகுவேரா கை, கால்கள் கட்டப்பட்ட நிலையில் சிறைவைக்கப்பட்டார். சேகுவேரா பிடிபட்டார் என சி.ஐ.ஏ-வுக்குத் தகவல் போனது. அதே சமயம், சேகுவேரா உயிருடன் இருக்கும்போதே இறந்துவிட்டதாகப் பொய்யான தகவல் பொலிவிய ராணுவத்தால் பரப்பப்படுகிறது. தனக்கு உணவு வழங்க வந்த பள்ளி ஆசிரியையிடம், ‘‘இது என்ன இடம்?’’ என்று சேகுவேரா கேட்க, ''பள்ளிக்கூடம்'' என அந்தப் பெண் கூற, ‘‘பள்ளிக்கூடமா… ஏன் இத்தனை அழுக்காக இருக்கிறது?’’ என வருத்தப்பட்டார். சாவின் விளிம்பிலும் சேகுவேராவின் இதயத்தை எண்ணி அப்பெண் வியந்தார்.      

லா ஹிகுவேராவின் பள்ளிக்கூட வளாகத்தில் ஒரு ஹெலிகாப்டர் வந்து இறங்கியது. அதிலிருந்து சக்திவாய்ந்த ரேடியோ மற்றும் கேமராக்களுடன்  ஃபெலிக்ஸ் ரோட்ரிக்ஸ் எனும் சி.ஐ.ஏ உளவாளி இறங்கினார். பிடிபட்டிருப்பது சேகுவேராதான் என அமெரிக்காவுக்குத் தகவல் பறந்தது. சேகுவேராவின் டைரிகள் மற்றும் உடைமைகள் கைப்பற்றப்பட்டன. தான் கொண்டுவந்த கேமராவில், சேகுவேராவை பல கோணங்களில் புகைப் படங்கள் எடுத்தார் ஃபெலிக்ஸ். கைவிடப்பட்ட யேசு கிறிஸ்துவைப்போல காட்சிதரும் சேகுவேராவின் அப் புகைப்படங்கள் இன்றளவும் வரலாற்றின் மிச்சங்கள்.    

சேகுரோவை உயிருடன் வைத்துக்கொண்டு விசாரணை நடத்தினால், அது உலகம் முழுக்க அவர் மேல் பரிதாபத்தையும் நாயகத் தன்மையையும் உருவாக்கிவிடும் என்பதால், அவரை உடனடியாகத் தீர்த்துக்கட்டுவதுதான் சரி என சி.ஐ.ஏ-விடம் இருந்து தகவல் வந்தது. வாலேகிராண்டாவிலிருந்து வந்த அந்தத் தகவல் 500, 600 எனக் குறிச்சொற்களைத் தாங்கி வந்தது. 500 என்றால் சேகுவேரா, 600 என்றால் கொல் என்பவை அதன் அர்த்தங்கள். சேகுவேராவைச் சுட்டுக் கொல்வது என முடிவெடுக்கப்பட்டபோது, யார் அதைச் செய்வது எனக் கேள்விவந்தது. ‘மரியோ ஜேமி’ (Mario Jemy) என்னும் பொலிவிய ராணுவ சர்ஜன், அந்தக் காரியத்துக்காகப் பணியமர்த்தப்பட்டார்.   

மரியோ, அவரை ஒரு கோழையைப்போல கொல்லத் தயாரானார். தன்னை நிற்கவைத்துச் சுடுமாறு சேகுவேரா கேட்க, அதை அலட்சியப்படுத்துனார். ‘‘கோழையே, சுடு! நீ சுடுவது சேகுவேராவை அல்ல ஒரு சாதாரண மனிதனைத்தான்!’’ அவரது கடைசி வாசகம் இதுதான். சேகுவாரா என்றால் விடுதலை. சேகுவாரா என்றால் நசுக்கப்பட்ட மனிதர்களின் இதயம். அந்த இதயத்தைச் சுட்டுக்கொன்றது, அமெரிக்கா தலைமையிலான பொலிவிய நாட்டு இராணுவம். அவரது மரணத்தின் தடயங்களையும் அவர் உடலையும் புதைத்து மறைத்தாலும், சேகுவாரா மக்களின் மனதில் இன்னும் எழுந்துகொண்டே இருக்கிறார். அதற்கு சாட்சியாக, இன்றைய இளைஞர்களின் அணிகலன்களில் அவரது புகைப்படம். சேகுவேரா புரியாதவருக்குப் புதிர். இன்றைய இளைஞர்களுக்கு எடுத்துக்காட்டாய் விளங்கும் சேகுவேராவின் வாழ்க்கையைப் படித்தால், படிப்போர் இதயத்தில் போராட்ட குணம் விதைக்கப்படும்.

http://www.vikatan.com

  • தொடங்கியவர்

தூத்துக்குடியில் ரோச் பூங்காவில் பயன்படாத இரும்பு பொருள்களைக் கொண்டு தத்ரூபமாக தயாரிக்கப்பட்ட கடல்வாழ் உயிரினங்கள்... புகைப்படத் தொகுப்பு ... படங்கள் - ஏ.சிதம்பரம்

 
 
261418.jpg 261419.jpg 261420.jpg 261421.jpg 261422.jpg 261423.jpg 261424.jpg 261425.jpg 261426.jpg 261427.jpg 261428.jpg 261429.jpg 261430.jpg 261431.jpg 261432.jpg 261433.jpg 261434.jpg 261435.jpg 261436.jpg 261437.jpg 261438.jpg 261439.jpg 261440.jpg

http://www.vikatan.com

  • தொடங்கியவர்

அலமாரிக்கடியில் சிக்கிய தம்பியைக் காத்த இரண்டு வயது அண்ணன்

  • தொடங்கியவர்

விண்வெளி வீரர்களுக்கு நாசா தரும் ஜீரோ கிராவிட்டி பயிற்சி இப்படித்தான் நடக்கும்!

அது என்ன ஜீரோ கிராவிட்டி? ஈர்ப்பு விசைக் கொஞ்சமே கொஞ்சம் இருக்கும் நிலை. இதை மைக்ரோ கிராவிட்டி என்றும் அழைப்பார்கள். விண்வெளி முழுக்க இந்த நிலைதான். எனவே, சர்வதேச விண்வெளி நிலையத்தில் வேலை செய்யவிருப்பவர்கள், விண்வெளி பயணம் மேற்கொள்ள இருப்பவர்கள் இந்த ஜீரோ கிராவிட்டியில் எப்படிச் செயல்படவேண்டும் என்று புரிந்து கொள்வது அவசியம். அதற்காகவே நாசா போன்ற விண்வெளி ஆராய்ச்சி நிலையங்கள் அவர்களுக்குச் சிறப்பு பயிற்சி அளிக்கின்றன

ஜீரோ கிராவிட்டி

 

Photo courtesy: jurvetson

“எப்படி உணர்கிறீர்கள்?”

“எ...என் உடலின்.. எடையே எ...எனக்குத் தெரியவில்லை!” மிதந்து கொண்டே சற்று பதற்றத்துடன் கூறினார் அந்தப் பெண்மணி.   

“உங்கள் முன் மிதந்து கொண்டிருக்கும் அந்தப் பொருளை இங்கே கொண்டு வர முடியுமா?”

செய்கிறார். சுலபமாகக் கொண்டு வருகிறார். அதன் எடை எப்படியும் 200 கிலோவிற்கு மேல் இருக்கும். ஆம். ஜீரோ கிராவிட்டியில் இது சாத்தியம்.

ஜீரோ கிராவிட்டி எந்தப் பாரபட்சமும் பார்க்காது. அது எல்லாப் பொருள்களும் ஒரே நிறை கொண்டது என்று நினைத்துக் கொள்ளும். அதாவது, இயல்பான ஈர்ப்பு விசையுள்ள சூழலில் ஒரு பந்தையும், கோழி இறகையும் மேலிருந்து கீழ் வீசினால் பந்து வேகமாகத் தரையை அடைந்து விடும், கோழி இறகு கீழே வர நேரம் எடுத்துக் கொள்ளும். இதற்குக் காரணம், பந்து கோழி இறகை விட கனமானது. ஆனால், இதே நிகழ்வு ஜீரோ கிராவிட்டியில் நிகழும்போது இரண்டு பொருட்களுமே ‘தடையின்றி தானே விழல்’ என்ற வினையின் படி, ஒரே முடுக்கத்தில், ஒரே நேரத்தில் தான் தரையைத் தொடும். அதற்குப் பொருட்களின் நிறை ஒரு பொருட்டே இல்லை.

பூமியில் ஜீரோ கிராவிட்டி

அது சரி, பூமியில் தான் புவிஈர்ப்பு விசை இருக்கிறதே? பிறகு எப்படி விண்வெளி வீரர்களுக்குப் பயிற்சி அளிக்க முடியும்? நாசா போன்ற விண்வெளி ஆராய்ச்சி நிறுவனங்கள் பூமியிலேயே பிரத்தியேகமாக ஜீரோ கிராவிட்டியை உருவாக்கி பயிற்சி அளிக்கின்றன. அதற்காக இந்தக் கடினமான முறையைக் கையாள்கின்றன.

உயரப் பறக்கும் விமானம்

45 டிகிரி கோணம்

Photo courtesy: NASA

பயிற்சி பெறப்போகும் வீரர்களை இதற்காகவே தயார் செய்த விமானம் ஒன்றில் ஏற்றி விடுவார்கள். அது 24,000 அடி உயரம் சென்ற பின்பு, 45 டிகிரி கோணத்தில் வானை நோக்கி, காற்றைக் கிழித்து கொண்டு உயரப் பறக்க தொடங்கும். சரியாக 32,000 அடிகளைத் தொட்டவுடன், சம நிலையில் பறக்க தொடங்கும். அதாவது 180 டிகிரியில். 20ல் இருந்து 25 வினாடிகள் இந்த நிலையிலேயே இருக்கும். இப்போது விமானத்தின் உள்ளே இருப்பவர்கள் புவிஈர்ப்பு விசைக் குறைவாக இருக்கும் நிலைக்குத் தள்ளப்படுவார்கள். இது விண்வெளியில் மிதக்கும் நிலையைப் போன்றது தான். இந்தக் கால இடைவெளியைப் பயன்படுத்தி ஜீரோ கிராவிட்டியின் தன்மையை உணர்ந்துகொள்வார்கள்.

20-25 வினாடிகளுக்குப் பிறகு, அதே 45 டிகிரி கோணத்தில், விமானம் கீழே இறங்கத் தொடங்கும். இதுவரை அந்த விமானம் பயணித்த வடிவம் ஒரு பரவளையம் (Parabola) போல இருக்கும். கீழே 24,000 அடிகளை மீண்டும் தொட்டவுடன், திரும்ப அதே 45 டிகிரி கோணத்தில் மேலே ஏறத் தொடங்கும். 32,000 அடிகள் வந்தவுடன் மீண்டும் அதே புவிஈர்ப்பு விசை இல்லாத நிலை. இரண்டிலிருந்து மூன்று மணி நேரங்கள் பறக்கும் இந்த விமானம் மூலம், இதே போல் 30ல் இருந்து 40 முறைகள் புவிஈர்ப்பு விசை இல்லாத நிலைக்கு அழைத்துச் செல்வார்கள். இப்படித் தொடர்ந்து பயிற்சி எடுத்தால் விண்வெளி பயணம் எளிதாகி விடும். ஜீரோ கிராவிட்டியும் நண்பனாகி விடும். மிகவும் ஆபத்தான பயிற்சியான இது, பலரின் உடல்நிலையைப் பாதித்து இருக்கிறது. இதனாலே இந்த வகை பயிற்சிக்கு ‘Vomit Comet’ என்று ஒரு பெயர் உண்டு.

என்ன விமானம் பயன்படுத்துகிறார்கள்?

ஜீரோ ஜி கார்ப் விமானம்

photo courtesy: jurvetson

நாசா முதன் முதலில் இவ்வகை பயிற்சியை 1959ம் ஆண்டு ஆரம்பித்தது. தற்போது ஜீரோ ஜி கார்ப் (Zero G Corp) என்ற நிறுவனத்துடன் இணைந்து இந்தப் பயிற்சியை வீரர்களுக்கு அளித்து வருகிறது. இதற்காக அந்த நிறுவனம் பயிற்சிக்கு ஏற்றவாறு மாற்றங்கள் செய்யப்பட்ட போயிங் 727, ஜி ஃபோர்ஸ் ஒன் விமானத்தைப் பயன்படுத்துகிறது. 1990களில் ‘அப்போலோ 13’ (Apollo 13) என்ற ஆங்கில படத்திற்காக டாம் ஹாங்க்ஸ் உள்ளிட்ட நடிகர்கள் இவ்வாறுதான் பயிற்சி பெற்றனர். மொத்த படமும் விண்வெளியில் என்பதால், இவ்வாறு ஒரு விமானத்தை வாடகைக்கு எடுத்து ஆறு மாதங்கள் முப்பது முப்பது வினாடிகளாகப் படம் எடுத்தனர்.

இதே போல், இந்த ஜீரோ கிராவிட்டி அனுபவத்தை நீங்களும் பெற வேண்டும் என்றால் உங்களை வரவேற்கக் காத்திருக்கிறது ஜீரோ ஜி கார்ப் நிறுவனம். ஒரு முறை விமானத்தில் சென்று வர ஆகும் செலவு ஒருவருக்கு 4,950 டாலர்களாம். இதில் 15 முறை பரவளைய உணர்வைப் பெற முடியும்.

 

ரைடுக்கு நீங்கள் ரெடியா?

http://www.vikatan.com/

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.