Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இளமை புதுமை பல்சுவை

Featured Replies

  • தொடங்கியவர்
‘சும்மா இருந்தால் சுகம் கிட்டாது’
 

image_b7cb153c1b.jpgஅறிவை நம்பும் நாம், கடவுளின் குரலான மனச்சாட்சியையும் சாதாரண மனித உணர்வுகளையும் நம்பித்தான் ஆகவேண்டும்.

அதேசமயம் தேவையான சந்தர்ப்பங்களில், கற்ற பாடத்தில் பெற்ற அறிவை, மெய்யுணர்வுடன் இணைத்துச் செயல்பட வேண்டும்.

மெய்யறிவு, கல்வியறிவு எல்லாமே, கடவுளால் அருளப்பட்டவை. எனவே, எமக்குத் தேவையான பயன்களைப் பெற, மெய்யறிவு, புலனறிவு, கல்வியறிவு எல்லாமே ஒன்றாக இணைந்து பயணப்பட்டாலே, ஆன்மா பேரின்பப் பெருவாழ்வை அனுபவிக்க முடியும்.

இந்த அவனியும் அதிலிருந்து பெற்றவை எல்லாமே, உலக உயிர்களுக்கானவை. அவைகளை, நாம் உரிய வகையில் பயன்பெற, நேரிய வழியில் செயற்பட வேண்டும்.

ஒன்றுமே இல்லாமல், எதுவும் ஜெனித்ததேயில்லை. இவைகள், மெய்யறிவு, புலனறிவு மூலம் தங்களை ஸ்திரமாக்க முடியும். சும்மா இருந்தால் சுகம் கிட்டாது.

  • Replies 11.3k
  • Views 1.5m
  • Created
  • Last Reply
  • தொடங்கியவர்
வரலாற்றில் இன்று: ஒக்டோபர் 17
 

1091: லண்டனில் பெரும் சூறாவளி இடம்பெற்றது.

1346: இங்கிலாந்தின் மூன்றாம் எட்வேர்ட், ஸ்கொட்லாந்தின் இரண்டாம் டேவிட் மன்னனைச் சிறைப்பிடித்து, பதினோராண்டுகள் லண்டன் கோபுரத்தில் அடைத்து வைத்தான்.

1448: கொசோவோவில் ஹங்கேரிய இராணுவம், ஒட்டோமான் படைகளினால் தோற்கடிக்கப்பட்டனர்.

1604: ஜெர்மனிய வானிலையாளர் ஜொகான்னஸ் கெப்லர், வானில் திடீரென மிக ஒளிர்வுள்ள விண்மீன் (எஸ்.என். 1604) தோன்றுவதைக் கண்டார்.

1610: பதின்மூன்றாம் லூயி, பிரான்சின் மன்னனாக முடி சூடினான்.

1660: இங்கிலாந்தின் முதலாம் சார்ல்ஸ் மன்னனுக்கு மரண தண்டனையை அறிவித்த ஒன்பது பேர் தூக்கிலிடப்பட்டனர்.

1662: இங்கிலாந்தின் இரண்டாம் சார்ல்ஸ், டன்கேர்க் நகரை 40,000 பவுணிற்கு பிரான்சுக்கு விற்றான்.

1800: டச்சு குடியேற்ற நாடான குரக்காவோ, இங்கிலாந்தின் கட்டுப்பாட்டில் வந்தது.

1805: நெப்போலியனின் போர்கள் - ஊல்ம் நகரில் இடம்பெற்ற சமரில் ஆஸ்திரியப் படையினர், நெப்போலியன் பொனபார்ட்டின் படைகளிடம் வீழ்ந்தன.

1806: எயிட்டியின் மன்னன் முதலாம் ஜாக், படுகொலை செய்யப்பட்டான்.

1907: மார்க்கோனி, அட்லாண்டிக் நகரங்களுக்கிடையேயான தனது முதலாவது கம்பியில்லாத் தொடர்பை கனடாவின் நோவா ஸ்கோசியாவுக்கும், அயர்லாந்துக்கும் இடையே ஏற்படுத்தினார்.

1912: முதலாம் பால்க்கன் போர் - பல்கேரியா, கிரேக்கம், சேர்பியா ஆகியன ஒட்டோமான் பேரரசுடன் போரை அறிவித்தன.

1917: முதலாம் உலகப் போரில் ஜெர்மனி, பிரித்தானியா மீதான தனது முதலாவது குண்டுத்தாக்குதலை நிகழ்த்தியது.

1933: அல்பேர்ட் ஐன்ஸ்டைன் நாசி, ஜெர்மனியில் இருந்து வெளியேறி ஐக்கிய அமெரிக்காவில் குடியேறினார்.

1941: இரண்டாம் உலகப் போரில் முதற் தடவையாக ஜெர்மனிய நீர்மூழ்கிக் கப்பல், அமெரிக்கக் கப்பலைத் தாக்கியது.

1961: பாரிசில் போராட்டத்தில் ஈடுபட்ட நூற்றுக்கணக்கான அல்ஜீரியர்கள், காவல்துறையினரால் சுட்டுக் கொல்லப்பட்டனர்.

1965: 1964 நியூயோர்க் உலகக் கண்காட்சி இரண்டாண்டுகளின் பின்னர் முடிவுற்றது. மொத்தமாக 51 மில்லியன் மக்கள் இக்கண்காட்சியைக் கண்டு களித்தனர்.

1966: நியூயோர்க்கில் கட்டிடம் ஒன்றில் இடம்பெற்ற தீயில், 12 தீயணைப்புப் படையினர் சிக்கி இறந்தனர்.

1979: அன்னை தெரேசா, அமைதிக்கான நோபல் பரிசைப் பெற்றார்.

1995: யாழ்ப்பாணத்தை, விடுதலைப் புலிகளிடம் இருந்து கைப்பற்ற, இலங்கை இராணுவத்தின்  ரிவிரெச நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டது.

1998: நைஜீரியாவில் பெற்றோலியம் குழாய் வெடித்ததில், 1200 கிராமத்தவர்கள் கொல்லப்பட்டனர்.

2003: தாய்ப்பே 101 உலகின் மிக உயரமான வானளாவி ஆனது.

2006: ஐக்கிய அமெரிக்காவின் மக்கள் தொகை 300 மில்லியனை எட்டியது.

2006: புலிகளின் குரல் வானொலி ஒலிபரப்பு நிலையம், இலங்கை அரசின் வான்குண்டுத் தாக்குதலில் முழுமையான சேதமடைந்தது.

http://www.tamilmirror.lk/

  • தொடங்கியவர்

அறிமுகத்திலேயே அரசியல் நையாண்டியில் புகுந்து விளையாடிய துணிச்சல் டிம்..! - #HBDTimRobbins

 
 

நடிகர், இயக்குநர், தயாரிப்பாளர், திரைக்கதை ஆசிரியர், இசைக்கலைஞர், சமூகச் செயற்பாட்டாளர் எனப் பன்முகத்தன்மை கொண்ட ஹாலிவுட் திரை வித்தகர், டிம் ராபின்ஸ் (Tim Robbins). ஹாலிவுட் திரைப்படப் பட்டியலில் மக்கள் மனதில் இன்றும் முதல் இடத்தில் இருப்பது `தி ஷாசங் ரிடெம்ஷன்' (The Shawshank Redemption) என்ற படம்தான். இந்தப் படத்தில் ஆண்டி டியுஃப்ரெஸ்னே (Andy Dufresne) வாக நடித்து அந்தக் கதாபாத்திரத்துக்கு நியாயம் சேர்த்தவர்தான் இந்த டிம். சினிமா தெரிந்த ஒவ்வொருவரும், இந்தப் படத்தைக் குறைந்தபட்சம் ஒருமுறையேனும் பார்த்திருப்பர்.

டிம் ராபிம்ஸ்

 

அப்பா, நாட்டுப்புறப் பாடகர், அம்மா நடிகை, மனைவி சூசன் சரண்டன் (Susan Sarandon) இவரைவிட 12 வயது மூத்தவர், நடிகை. மகன் ஒரு பாடகர் என இவரின் குடும்பமே  ஒரு கலைக்குடும்பம்தான். திமோத்தி பிரான்சிஸ் ராப்பின்ஸ் (Timothy Francis Robbins) என்பதுதான் இவரது முழுப்பெயர். 1958-ம் ஆண்டு அக்டோபர் 16-ல் பிறந்தார். இரண்டு சகோதரிகள், இரண்டு மகன்கள். இவரது மனைவியுடனான 21 வருடக் காதல் வாழ்க்கை, 2009-ம் ஆண்டு முடிவுக்கு வந்தது.

அவரது டீன் பருவம், `தியேட்டர் ஆஃப் தி நியூ சிட்டி' (Theatre of the New City) என்ற நாடகக் குழுவிலிருந்து தொடங்கியது. அதன்பிறகு வீதி நாடகக் குழுக்கள். தன் நண்பர் ஜான் குசாக் (John Cusack)குடன் சேர்ந்து `ஆக்டர்ஸ் கேங்' என்ற நாடக் குழுவை உருவாக்கினார். 1982-ம் ஆண்டில் முதன்முதலாக `செயின்ட் எல்ஸ்வேர்' (St.Eleswhere) என்ற தொலைக்காட்சித் தொடரில் நடித்தார். பிறகு 1985-ம் ஆண்டு `மூன் லைட்' (Moon Light) என்ற பிரபலமான தொலைக்காட்சித் தொடரில் சிறப்புத் தோற்றத்தில் சில எபிசோட்களில் நடித்தார். ஃபிராடெர்னிட்டி வெக்கேஷன்' (Fraternity Vacation) என்ற திரைப்படம்தான் இவரது முதல் வெள்ளித்திரைத் தோற்றம். `டாப் கன்' (Top Gun) என அடுத்தடுத்து படங்கள் வெளியாகின.

1992-ம் ஆண்டில் வெளிவந்த `தி பிளேயர்' (The Player) என்ற படத்துக்குச் சிறந்த நடிகருக்கான `கன்னாஸ்' விருது பெற்றார். இந்தப் படத்தின் இயக்குநர் ராபர்ட் ஆல்ட்மன்ஸ் ஆறு முறை ஆஸ்கர் விருதைப் பெற்றவர். அப்போது தொடங்கிய ராபின்ஸின் விருது வேட்டை, 2004-ம் ஆண்டில் `மிஸ்டீரியஸ் ரிவர்' (Mysteries River) என்ற திரைப்படத்துக்குச் சிறந்த நடிகருக்கான ஆஸ்கர் விருது வரை கொண்டு நிறுத்தியது. உலகிலேயே சினிமாவின் உயரிய விருதை வாங்கிய உயர்ந்த மனிதர். ஆம், இவரது உயரம் 6'5''. 6'7'' உயரம்கொண்ட ஜேம்ஸ் க்ரோம்வெல் ஆஸ்கர் பரிந்துரையில் மட்டுமே இருந்தார்.

டிம் ராபின்ஸ்

இதற்கிடையே இவரே எழுதி இயக்கி நடித்த `டெட் மேன் வாக்கிங்' (Dead Man Walking) திரைப்படம் மூலம் சிறந்த இயக்குநருக்கான நாமினேஷனில் இருந்தார். இதற்கு முன் டிம் எழுதி, இயக்கி, நடித்த `பாப் ராபர்ட்' (Bob Robert) என்ற சினிமா, அமெரிக்க அரசியல் சூழலைக் கேலி பேசியது. தன் முதல் படத்திலேயே இப்படி ஓர் அரசியல் நையாண்டித்தனம் செய்ய தனி தைரியம் வேண்டும்தான். அந்தப் படம், நினைத்ததைவிட அதிக வரவேற்பைப் பெற்றது. இதுதான் முதன்முதலில் இவர் எழுதி இயக்கிய படம். ஐந்து முறைக்குமேல் இவர் கோல்டன் குளோப் விருதுக்குப் பரிந்துரைக்கப்பட்டுள்ளார். பல்வேறு பிரிவுகளில் இதுவரை 36 விருதுகளையும், 38 பிரிவுகளின்கீழ் பரிந்துரையிலும் இருந்துள்ளார்.

டிம் ராபின்ஸ்

திரைப்படங்கள், சீரியல் என நடிகராக 73 படங்கள், இயக்குநராக 10 படங்கள், திரைக்கதை ஆசிரியராக 7 படங்கள், இசை அமைப்பாளராக 7 படங்கள் என, திரைத் துறையில் கால் பதிக்காத துறையே இல்லை எனும் அளவுக்குச் செயல்பட்டுள்ளார். இவர் நடித்த படங்களிலேயே `தி ஷாசங் ரிடெம்ஷன்' (1994), `புல் துஹ்ராம்' (1988), `டெத் மேன் வாக்கிங்' (1995), `மிஸ்டீரியஸ் ரிவர்' (2003) போன்றவை ஆகச்சிறந்த படங்கள்.  `அகிரா குரோஷிவாவின் `செவன் சாமுராய்' எனக்குப் பிடித்த படம்’ என்பார் டிம் ராபின்ஸ்.

``நான் நடிகருக்கேற்ற மாதிரிதான் வசனத்தை எழுதுகிறேன். திரைக்கதை என்பது, கடைசி நிமிடத்தில்கூட மாற்றி அமைக்கக்கூடியதாக இருக்க வேண்டும். விமர்சனங்களை ஏற்றுக்கொள்ளும் மனநிலை இன்னும் எனக்கு வரவில்லை. கதாபாத்திரங்கள்தான் எப்போதும் தெரிய வேண்டும். உங்கள் வாழ்வின் ஒவ்வொரு பகுதியையும், நீங்கள் செய்யவேண்டியது என்ன, செய்துகொண்டிருப்பது என்ன என்பதையும் உங்களுக்குத் தெரிவித்துக்கொண்டே இருக்கும். நான் என் வாழ்க்கையிலிருந்தே நான் செய்யவேண்டியவற்றைக் கண்டுபிடித்துக்கொள்கிறேன். நமக்கு தோன்றுவதைச் செய்ய வேண்டும். ஆனால், அது கலையின்  உந்துதல் இல்லாமல் எதையும் பெரிதாகச்  செய்ய முடியாது. பில் கிளின்டன் செய்த எந்தத் தவற்றையும் மீடியாக்கள் வெளிப்படுத்தவில்லை. அதே நேரத்தில் பல பொய்களை அடுக்கியே புஷ், ஈராக் மீது போரைத் தொடுத்தார். இப்போது பின்லேடனைவிடக் கொடுமையானவர்களே அமெரிக்காவின் சார்பில் ஆட்சி அமைத்துள்ளனர். ஹாலிவுட்டில் யாரையும் எப்போதும் நம்ப முடியாது. உங்களுக்கு உண்மையான நண்பர்கள் என யாரும் இருக்கப்போவதில்லை'' என அரசு மீதும் ஹாலிவுட் மீதும் மிகுந்த வெறுப்பை திரைப்படங்களில் காண்பித்தார். போருக்கு எதிரான போராட்டங்கள் பலவற்றிலும் ஈடுபட்டுள்ளார்.

டிம் ராபின்ஸ்

 

எல்லோருக்கும் வாழ்க்கை சரியாக அமைந்துவிடுவதில்லை. தனக்கான வாய்ப்புகள் வரும்போது அதைச் சரியாகச் செயல்படுத்த வேண்டும். தான் சொல்வதைக் கேட்க ஒரு கூட்டம் இருக்கிறது எனும்போது அதை ஆக்கபூர்வமாகப் பயன்படுத்த வேண்டும். இந்த இரண்டையும் தனது திரைப்படங்கள் மூலமும் செயல்பாடுகள் மூலமும் சரியாகப் பயன்படுத்திவரும் இவரின் எதிர்காலச் செயல்பாடுகளும், நமக்குச் சிறந்த அனுபவங்களைத் தரப்போகின்றன என்ற மகிழ்ச்சியில் அவருக்கு வாழ்த்துகள்!

vikatan.com/

  • தொடங்கியவர்

குத்துவிளக்கேற்றி தீபாவளி கொண்டாடிய கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூட்!

 
 

கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூட், பன்மைத்துவ கலாசாரத்துக்கு மதிப்பு கொடுப்பவர். அவர், தொடர்ச்சியாக இந்திய மற்றும் தமிழகப் பண்டிகைகளைக் கொண்டாடுவதில் ஆர்வம் காட்டிவருகிறார். இந்நிலையில், கனடாவின் தலைநகர் ஒட்டாவாவில், இந்திய மக்கள் முன் குத்துவிளக்கேற்றி தீபாவளிப் பண்டிகையைக் கொண்டாடினார். 

ஜஸ்டின் ட்ரூட்

 

இந்தக் கொண்டாட்டத்தின்போது, கனடாவுக்கான இந்தியத் தூதர் விகாஸ் ஸ்வரரூப் உடனிருந்தார். இதுகுறித்து ட்ரூட், 'தீபாவளி வாழ்த்துகள். நாங்கள் இன்றிரவு தீபாவளியை ஒட்டாவாவில் கொண்டாடுகிறோம்' என்று அவரது அதிகாரபூர்வ ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். தீபாவளியைக் கொண்டாடும் நோக்கில், கடந்த மாதம் இந்திய அஞ்சலகமும் கனடாவின் அஞ்சலகமும் இணைந்து இரண்டு அஞ்சல்தலைகளை வெளியிட்டது குறிப்பிடத்தக்கது.

http://www.vikatan.com/

  • தொடங்கியவர்

எரியும் நெருப்பில் எண்ணெய்யைத் தான் ஊற்றக்கூடாது; ஆனால் கோகோ-கோலாவை ஊற்றலாம்! 

Coca-Cola-Zero-Sugar-launch-596x334

 

கோகோ-கோலாவை ஊற்றி கழிவறையை கழுவினால் கழிவறை பளிச்சிடும் போன்ற பல வீடியோக்களை நாம் பார்த்திருப்போம், ஆனால் கோகோ-கோலாவை வைத்துப் பற்றி எரியும் நெருப்பை எளிதில் அணைத்துவிடலாம் என்பதை அறிவீர்களா? ஆம், தீயணைப்பு வீரர் ஒருவர் கோகோ-கோலாவை ஊற்றி எரியும் தீயை அணைக்கும் இந்த வீடியோ தற்போது இணையதளத்தில் வேகமாகப் பரவி வருகிறது.

1886-ல் அறிமுகமான இந்த கோகோ-கோலா உலகில் பல நாடுகளில் அதிகம் விற்கப்படும் குளிர்பானங்களில் ஒன்று. அதன் பிறகு வந்த பல ஆராய்ச்சி முடிவுகளில் இதைக் குடிப்பது மிகவும் ஆபத்தான ஒன்று என்றும், உடலுக்குப் பல தீங்குகளைத் தரக்கூடியது என்றும் தெரிய வந்தது. நமது இந்தியாவில் இது வெளிநாட்டுக் குளிர்பானம் என்பதால் இதைக் குடிப்பதை தவிர்க்க வேண்டும், இதைப் போன்ற அந்நிய நாட்டுப் பொருட்களாலேயே டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு குறைவாக உள்ளது என்று கூறப்பட்டது. மேலும் குறிப்பாக நமது தமிழ் நாட்டில் ஜல்லிக்கட்டு போராட்டத்திற்கு பிறகு இந்த நிறுவனங்கள் நமது விவசாயத்திற்குத் தேவையான நிலத்தடி நீரை உரிந்து எடுத்து தங்களது தொழிற்சாலைகளை அமைக்கின்றன போன்ற விஷயங்கள் தெரியவந்து வணிக நிறுவனங்களே இந்தக் குளிர்பானங்களை புறக்கணித்தன. இப்படிப் பல எதிர்ப்புகள் கோகோ-கோலாவிற்கு எதிராக இந்தியாவில் உள்ளது.

maxresdefault.jpg

சரி, இதெல்லாம் ஒரு பக்கம் இருக்கட்டும் விஷயத்துக்கு வருவோம். நமது நாட்டில் அனைத்து வீடுகளிலும் தீயணைப்பு சாதனங்கள் இருப்பதில்லை, உண்மையைச் சொல்ல போனால் தீயணைப்பு சாதனங்கள் கட்டாயமாக இருக்க வேண்டிய பள்ளிக்கூடங்கள், வணிக வளாகங்களிலேயே இவை இருப்பதில்லை. ஆனால் இவற்றிற்கெல்லாம் ஒரு எளியத் தீர்வாக கோகோ-கோலா அமையவுள்ளது.

இதைப் பயன்படுத்தி பெரிய அளவிலான தீயை அணைக்க முடியாது என்றாலும் தீ பரவுவதற்கு முன்பு அது சிறிய அளவில் இருக்கும் போதே அதை அணைத்துவிட இது உதவும். கோகோ-கோலா பாட்டிலை வேகமாக குலுக்குவதன் மூலம் அதில் அடைக்கப்பட்டு இருக்கும் காற்று அதைப் பொங்க வைக்கும், அது பொங்கி வரும் அந்தச் சந்தர்ப்பத்தில் கட்டை விரலைப் பயன் படுத்தி எரியும் நெருப்பிற்கு எதிர்த் திசையில் வேகமாகக் கோலாவை பீச்சி அடிப்பதால் தீ அணைந்து விடும். 

இதைச் செயல் வடிவில் தீயணைப்பு வீரர் ஒருவர் செய்து காட்டியுள்ளார். அந்த வீடியோ பதிவு தற்போது சமூக வலைத்தளத்தில் வலம் வருகிறது. தீயணைப்பு சாதனங்களின் விலை அதிகம் என்பதாலும் பலரது வீடுகளில் அவற்றை நாம் வாங்கி வைப்பதில்லை, ஆனால் ஒரு லிட்டர் கோகோ-கோலாவின் விலை 100 ரூபாய்க்கும் கீழே தான். குழந்தைகள் எடுத்துக் குடித்து விடாமல் இருக்க வீட்டைச் சுத்தம் செய்யும் பொருட்களான ஆஸிட் போன்றவற்றை வைக்கும் உயரமான இடங்களில் இதை வைப்பது நல்லது. எனவே அனைவரது வீட்டிலும் அதாவது தீயணைப்பு சாதனங்கள் இல்லாதவர்கள் வீட்டில் நிச்சயம் இருக்க வேண்டிய ஒன்று கோகோ-கோலா. 

 

http://www.dinamani.com

  • தொடங்கியவர்
கடுப்பான இஷா
 

image_2833994865.jpg

பொலிவூட் நடிகை இஷா குப்தா, அறை ஆடை புகைப்படம் மற்றும் நிர்வாணப் புகைப்படங்களை, சமூக வலைத்தளங்களில் வெளியிட்டார். இதைப் பார்த்த இரசிகர்கள், தொடர்ந்து அவரைக் கலாய்த்து வருகின்றனர். 

image_78959010fd.jpg

இந்நிலையில், வேலை எதுவும் இல்லாமல் இருப்பவர்கள் தான், அடுத்தவர்களை ஒன்லைனில் கிண்டல் செய்து கொண்டிருக்கிறார்கள் என்றும் என்ன செய்வது என்று தெரியாமல் ஒன்லைனில் நேரத்தை கழிப்பவர்களே, இவ்வாறு பேசுகின்றவர்கள் என்று, நடிகை கூறியுள்ளாராம்.  

image_01bdb5476c.jpg

“ஒன்னுமில்லாதவர்களின் கருத்தை மதித்தால், அது என் தவறாகிவிடும்” என்றும் அவர் தெரிவித்துள்ளாராம். “கடவுளின் அருளால் பெயரும், புகழும் கிடைத்தால், படங்களை விளம்பரம் செய்வதை தவிர, நாம் தெரிவிக்க விரும்பும் கருத்துகளையும் தெரிவிக்க வேண்டும் என்று நினைக்கிறேன். 

image_ab589a9cc9.jpg

“கருத்தைத் தெரிவிக்கும் உரிமை அனைவருக்கும் உண்டு. ஆனால் கலாய்ப்பவர்கள் எதை வேண்டுமானாலும் கலாய்ப்பார்கள். அவர்கள் உருப்படியாக ஏதாவது வேலை செய்ய வேண்டும் என நான் விரும்புகிறேன்” என்றாராம் இஷா. 

image_805fd226db.jpg

http://www.tamilmirror.lk/

  • தொடங்கியவர்

தண்ணீரில் இருக்கும் ஆர்செனிக் விஷத்தை இந்த பிசின் மணிகள் தீர்க்குமா?

  • தொடங்கியவர்

பத்துக்குப் பத்து எடுத்த இந்திய கிரிக்கெட்டின் ஜம்போ! #HBDJUMBO

 
Chennai: 

ஒரு பேப்பர் பேனா எடுத்துக்கொண்டு, 20-ம் நூற்றாண்டின் தொடக்கத்தில், இந்திய கிரிக்கெட்டின் மானம் காத்தவர்கள் பெயர்களைப் பட்டியலிட்டால், அதில் நிச்சயம் இடம் பிடிக்கும் பெயர் அனில் கும்ப்ளே.

HBO_Kumle_12543.jpg

 

இந்திய அணியின் வெற்றிகளில் மிக முக்கியப் பங்காற்றிய வீரர்களில் ஒருவர். டெஸ்ட் போட்டிகளின் வெற்றி தோல்விகள் பந்துவீச்சாளர்களால் தீர்மானிக்கப்படுகிறது என்றால், அதில் கும்ப்ளே தன் பங்கிற்கு இந்தியாவிற்கு தலைசிறந்த வெற்றிகளைத் தேடித்தந்துள்ளார். ஜம்போ – இந்தியப் பந்துவீச்சாளர்களில் முதன்மையானவர், முத்திரை பதித்தவர்!

தன்னுடைய மானசீக குருவான, பகவத் சந்திரசேகர் பிறந்த மண்ணில் பிறந்த காரணத்தாலோ என்னவோ, ஒரு வேகப்பந்து வீச்சாளருக்கான உயரமும், நேர்த்தியும் இருந்தும், ‘லெக் ஸ்பின்னில்’ புதுமையைப் புகுத்தி, 19 வயதிலேயே இந்திய அணிக்குத் தேர்வானார். 1990-ல் தன்னுடைய முதல் போட்டியை விளையாடினாலும், அடுத்த வாய்ப்புக்காக இரண்டு ஆண்டுகள் காத்திருக்க வேண்டியிருந்தது. இதற்கிடையே, நிறவெறி சர்ச்சையிலிருந்து மீண்டு சர்வதேச கிரிக்கெட்டுக்குத் திரும்பியது தென்னாப்பிரிக்கா. இந்த நேரத்தில் கும்ப்ளே, இரானி கோப்பையில், 13 விக்கெட்டுகளைச் சாய்த்து, தேர்வாளர்களின் கவனத்தை ஈர்த்து, தென்னாப்பிரிக்கா சுற்றுப் பயணத்தில் இடம்பிடித்தார்.

கும்ப்ளே, தன் வருகையை அந்நிய நாட்டில், அதுவும் வேகப்பந்து வீச்சாளர்களுக்குச் சாதகமான ஜோஹன்னஸ்பர்க் ஆடுகளத்தில் அறிவித்தார். 44 ஓவர்கள் வீசி, 53 ரன்கள் மட்டும் விட்டுக்கொடுத்து ஆறு விக்கெட்டுகள் வீழ்த்திய அந்தத் தருணமே, கும்ப்ளே சர்வதேச அரங்கில் தனித்துத் தெரிந்துவிட்டார். கிரிக்கெட்டில், லெக் ஸ்பின் என்பது மிகவும் கடினமான வித்தை. ஆஃப் ஸ்பின் போடுவதைப்போல் அசாத்தியமான ‘கன்ட்ரோல்’, லெக் ஸ்பின்னில் இருக்காது. ஆஃப் ஸ்பின் என்பது, கையின் முன் பக்கத்திலிருந்து பந்தைச் சுழல வைக்க வேண்டும். அப்படிச் செய்கையில், பந்து ‘புஃல் டாஸாக’ மாறுவதற்கு வாய்ப்பில்லை. மேலும், ஆஃப் ஸ்பின் போடுவது என்பது கொஞ்சம் இயல்பாக அனைவரும் செய்யக்கூடிய வித்தைகளில் ஒன்று. இதற்கு, சுரேஷ் ரெய்னா, கேதார் ஜாதவ், மாக்ஸ்வெல், டுமினி... என அணிக்கொரு வீரரை உதாரணம் சொல்லலாம். ஆனால், இவர்கள் எல்லோரும் எப்போதும் விக்கெட் வீழ்த்துவார்களா என்றால், அதற்கு உத்தரவாதம் இல்லை.

கும்ப்ளே

அதேநேரத்தில், லெக் ஸ்பின் போடுவது கடினம். பந்து உங்களது புறங்கையிலிருந்து வெளிப்பட வேண்டும். பந்தை சுழல வைக்க, மணிக்கட்டை மட்டும் சுழற்றாமல், ஒட்டுமொத்த உடம்பையும் வளைக்க வேண்டும். ஆடுகளத்தில் பெரிதாகப் பந்து வீச்சாளர்களின் காலடித் தடங்கள் பதிந்திருக்கவில்லை என்றால் (ஏனென்றால் அந்தத் தடத்தை பயன்படுத்திதான் லெக் ஸ்பின் பௌலர்கள் விக்கெட்டை அள்ளுவார்கள்) பேட்ஸ்மன்களுக்குக் கொண்டாட்டம்தான். லெக் ஸ்பின் பௌலர்களின் பந்தை அல்வா சாப்பிடுவதைப் போல சாப்பிட்டு விடுவார்கள். இப்படி, லெக் ஸ்பின் போடுவதே கொஞ்சம் கடினமான விஷயமாக இருக்கையில், 18 வருடங்கள், கொஞ்சம் கூட அலுக்காமல் சலிக்காமல், எவ்வித தொய்வுமின்றி, விக்கெட் ஒன்று மட்டுமே குறி என்று இயங்கிய கும்ப்ளேவின் முக்கியத் தருணங்களைப் பார்ப்போம்.

பகவத் சந்திரசேகரைப் போலவே, ஒரு ஸ்பின்னருக்குத் தேவையான ரன் அப்பை விட அதிகமாகவே ஓடி வந்து போடக்கூடிய பௌலர், கும்ப்ளே. ஆடுகளம் சுழலுக்கு ஏதுவாக இல்லாவிட்டாலும், ஒரு பக்கம் அப்படியே ரன்னைக் கட்டுப்படுத்தும் வேலையில் இறங்கிவடுவார். மற்ற ஸ்பின்னர்களை அடித்து ஆடுவதைப்போல, கும்ப்ளேவை இறங்கி வந்தெல்லாம் அடிக்க முடியாது. காரணம், கும்ப்ளேவின் உயரம். தன் ஆறடி உயரத்தைக் கொண்டு, அதற்கு மேலும், கையை ஓர் அடி உயர்த்தி, சுமார் ஏழு அடி உயரத்திலிருந்து நூறு கிலோமீட்டர் வேகத்தில் பந்தை விக்கெட்டுகளை நோக்கி செலுத்திக்கொண்டே இருந்தால் எங்கிருந்து அடிப்பது? டெஸ்ட் கிரிக்கெட்டில், ஒரு ‘ஸ்பெல்’ என்பது மிஞ்சிப்போனால் பத்து முதல் பதினைந்து ஓவர்கள் வரை ஸ்பின்னர்கள் வீசுவார்கள். இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர்கள் ரன்களை அள்ளிக்கொடுத்தாலும் ஒரே நாளில் சளைக்காமல் 35 ஓவர்கள் கூட வீசி எதிரணியினரைக் கட்டுக்குள் வைத்திருப்பார் இவர்.

கிரிக்கெட்

மாடர்ன் ஆஸ்திரேலியாவின் தலைசிறந்த கேப்டன்களில் ஒருவரான, ஸ்டீவ் வாஹ், கும்ப்ளேவைப் பற்றி குறிப்பிடுகையில், “ஷேன் வார்னைப் போல, அதிரி புதிரியாக எந்நேரமும் தலைப்புச் செய்தியாக கும்ப்ளே இல்லாவிடினும், அவருடைய வேலையை மிகவும் நிதானமாக இந்திய அணிக்குச் செய்து முடிப்பதில் வல்லவர். அவரின் நேர்த்தியான பந்துவீச்சைச் சமாளித்து மற்றவர்களை அடித்து ரன் குவிப்பது என்பது இயலாத காரியம்” என்றார்.

முதல் இன்னிங்ஸ்

அனில் கும்ப்ளேவின் கிரிக்கெட் வாழ்க்கையை இரண்டு பகுதியாகப் பிரிக்கலாம். ஆரம்பத்தில், இரண்டு வருடங்கள் பொறுத்து, உள்நாட்டு போட்டிகளில் தொடர்ந்து விக்கெட்டுகளைக் குவித்தாலும், அதேபோன்ற மேஜிக்கை சர்வேதச அரங்கில் பிரதிபலிக்க முடியவில்லை. தன்னை மெருகேற்றிக்கொள்ள, இங்கிலாந்தின் உள்நாட்டு போட்டிகளில் பங்கேற்று ஒரே சீசனில் 100 விக்கெட்டுகளுக்கு மேல் குவித்து,  அணி வெற்றிபெற உதவினார். 2011-ல் நடைபெற்ற உலகக்கோப்பையை இந்தியா வெல்லும் என்று எதிர்பார்த்ததைப்போல, 1996 உலகக்கோப்பையிலும் பெரிதும் எதிர்பார்த்தனர் ரசிகர்கள். அரையிறுதியில் இந்தியா ஏமாற்றமளித்தாலும், கும்ப்ளேதான் பங்கேற்ற ஏழு ஆட்டங்களில் 15 விக்கெட்டுகளை வீழ்த்தினார். இங்கிலாந்தில் கற்ற வித்தைகளைக் கொண்டு, அடுத்தடுத்து இந்தியாவில் நடந்த டெஸ்ட் ஆட்டங்களில் முகமது அசாருதீன் தலைமையில், தொடர்களைக் கைப்பற்றி, மொத்தத்தில் இந்தியாவை இந்திய மண்ணில் வீழ்த்துவதென்பது இயலாத காரியம் என்பதை தன்னுடைய சுழல் கொண்டு சுழற்றி அடித்தார்.

ஜம்போ

1999-ம் ஆண்டில், கார்கில் பிரச்னை முடிவுக்கு வந்த பின்னர், பாகிஸ்தான் இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு சென்னை, டெல்லி ஆகிய இடங்களில் விளையாடிய டெஸ்ட் போட்டிகளை யாருமே மறக்கமுடியாது. முதுகு வலியோடு தனியாளாக சச்சின் போராடி, வெற்றிக்கு மிக அருகில் அணியை அழைத்துச் சென்று அவுட் ஆனவுடன், சடசடவென மற்றவர்கள் அவுட் ஆக, 12 ரன்களில் வெற்றியை இழக்க, அடுத்த போட்டியில் வென்றே தீர வேண்டிய கட்டாயத்துக்கு இந்திய அணி தள்ளப்பட்டது. 400 ரன்களுக்கு மேல் இலக்கை நிர்ணயித்தாலும், பாகிஸ்தான் அணியின் தொடக்க வீரர்கள் 100 ரன்களுக்கு மேல் விக்கெட்டை இழக்காமல் சவால் விடுக்க, கும்ப்ளேவின் என்ட்ரி, அன்றைய நிஜ மெர்சல் என்ட்ரி. தன்னுடையை ‘ஸ்டம்ப் டு ஸ்டம்ப்’ பந்துவீச்சால் பத்து விக்கெட்டையும் அள்ளினார். உலகமே வாயடைத்துப்போனது. ஒரு சுவாரஸ்யமான விஷயம் என்னவென்றால், இரண்டு டெஸ்ட் போட்டிகளின் நான்கு இன்னிங்ஸிலும், தலா ஐந்து விக்கெட்டுகள் என, பாகிஸ்தானின் சக்லைன் முஷ்டாக் மொத்தம் 20 விக்கெட்டுகள் கைப்பற்றியிருந்தார். கும்ப்ளேவோ, 6,4,1 என மொத்தமாக 11விக்கெட்டுகளை மட்டுமே தன்னுடைய கணக்கில் வைத்திருந்தாலும், புல்லட் ரயிலைப் போல, கடைசி இன்னிங்ஸில் பத்து விக்கெட்டையும் வீழ்த்தி, “என்னுடைய இடத்தில நாந்தான் ராஜா” என்று சொல்லாமல் சொன்னார்.

இரண்டாம் இன்னிங்ஸ்   

சர்வேதச அரங்கில், 12 வருடங்கள் கழித்தே டெஸ்ட் போட்டிகளில் 300 விக்கெட்டுகளை வீழ்த்தினார். கிரிக்கெட் விமர்சகர்கள் எப்போதுமே கும்ப்ளேவைப் பெரிதாக எடுத்துக்கொண்டதில்லை. ஏனென்றால், விக்கெட் வீ ழ்த்துவதின் இடைவெளி (ஸ்ட்ரைக் ரேட்) கும்ப்ளேவிற்கு சராசரியைவிட அதிகமாக இருந்ததே காரணம். 2000-த்துக்குப் பிறகு, தன் பௌலிங் ஸ்டைலை மாற்றி, கூக்ளி எனப்படும், லெக் ஸ்பின்னரின் இயல்புக்கு எதிராகச் சுழலும் பந்தையும், டாப் ஸ்பின் எனப்படும் எகிறி எம்பி அடிக்கக் கூடிய அஸ்திரத்தையும் செயல்படுத்தத் தொடங்கினார். இதனால், இந்தியாவில் மட்டுமல்லாமல், இங்கிலாந்து, ஆஸ்திரேலிய மண்ணிலும் டெஸ்ட் போட்டிகளை வெல்ல உதவினார்.

“கும்ப்ளே இல்லையென்றால், நான் கேப்டன் பதவியிலிருந்து விலகிக்கொள்கிறேன்” என்று பகிரங்கமாக கங்குலி அறிவிக்க, அதன் பின்னரே வெளிநாட்டுச் சுற்றுப்பயணங்களில் கும்ப்ளேவை நீக்காமல் தேர்வாளர்கள் செயல்பட்டனர். பௌலிங் போடும் ‘கிரீசை’ வெவ்வேறு ஆங்கிள் கொண்டு பயன்படுத்தி, ஆடுகளம் ஸ்பின் பௌலிங்கிற்கு ஏதுவாக இல்லாவிட்டாலும், பந்தின் வேகம், மற்றும் பந்தை ரிலீஸ் செய்யும் விதத்தில் ஹர்பஜன் உடன் கூட்டுச் சேர்ந்து பட்டையைக் கிளப்பினார். இதன் காரணமாகவே, முதல் பன்னிரண்டு வருடங்களில் 300 விக்கெட்டுகளும், அடுத்த ஏழு வருடங்களில் 319 விக்கெட்டுகளும் வீழ்த்தி ஆச்சர்யப்படவைத்தார்.

கிரிக்கெட்

டிராவிட் தலைமைப் பொறுப்பிலிருந்து விலக, சச்சின் எனக்கு வேண்டாம் எனச் சொல்ல, தோனியோ அப்போதுதான் இருபது ஓவர் அணியைக் கரை சேர்த்துக்கொண்டிருக்க, தன்னுடைய கடைசிக்கட்டத்தில், அணியின் தேவையை உணர்ந்து தலைமையேற்க ஒப்புக்கொண்டார். பல்வேறு சர்ச்சைகளை உள்ளடக்கிய 2007-2008 ஆஸ்திரேலிய சுற்றுப்பயணத்தை மிகுந்த நேர்மையோடும், துணிவோடும் அவர் வழிநடத்தியதே இதற்குச் சான்று.

டெஸ்ட் ஆட்டங்களில் மட்டுமே தன்னுடைய ஆளுமையை நிறுவாமல், ஒருநாள் போட்டிகளிலும் 337 விக்கெட்டுகளை தன் வசம் கொண்டு, மொத்தமாக 956 விக்கெட்டுகள் என இந்திய அணியின் சுமையைப் பெரிதும் சுமந்த போர் வீரர்களில் ஒருவராக கும்ப்ளே என்றென்றும் நினைவுக்கூரப்படுவார். தாவாங்கட்டையில் அடிபட்டால் கூட, கட்டுப்போட்டுக்கொண்டு வந்து, லாராவின் விக்கெட்டை வீழ்த்திய செயலொன்று போதும், கும்ப்ளே கிரிக்கெட்டை எப்படி நேசித்தார் என்பதற்கு...

 

ஐபிஎல் போட்டிகளில் அணிகளை நிர்வகித்தது, பயிற்சி கொடுத்தது எனத் தன் அனுபவத்தின் மூலம், இந்திய அணியை ஒரு வருடம் திறம்பட வழிநடத்தினார். 1-1 என்ற நிலையில், இந்த வருடம் இமாச்சல பிரதேசத்தில் நடைபெற்ற கடைசி ஆட்டத்தில், விராட் கோலி காயம் காரணமாக விலக, அவருக்குப் பதில் ஒரு பேட்ஸ்மேனை அணியில் சேர்க்காமல், இன்று நாடே கொண்டாடும் குல்தீப் யாதவை சேர்த்து, ஆஸ்திரேலியர்களுக்கு அதிர்ச்சியளித்தார். அவரின் சுழலைச் சமாளிக்க முடியாமல், முதல் நாளே இந்தியா ஆதிக்கம் செலுத்தத்  தொடங்க, அட்டகாசமான வெற்றியை இந்தியா பதிவுசெய்தது.

 

திரும்பிப் பார்த்தால், 26 வருடங்கள், கிரிக்கெட்டை மிகுந்த மரியாதையுடனும், நேர்மையோடும் விளையாடி, நிர்வகித்து மகத்தான கிரிக்கெட் வீரராக நிற்கிறார் கும்ப்ளே. தன்னுடைய சொந்த ஊரில், ஒரு தெருவுக்குத் தன்னுடைய பெயரைப் பதித்த ‘ஜம்போவிற்கு’ பிறந்தநாள் வாழ்த்துகள்!

http://www.vikatan.com

  • தொடங்கியவர்

 

அண்ட வெளியின் அதிசய அதிர்வலைகள்

நூற்றி முப்பது மில்லியன் ஆண்டுகளுக்கு முன், பேரண்டத்தின் நியூட்ரான் நட்சத்திரங்கள் என்று அழைக்கப்படும் இறந்த நட்சத்திரங்கள் இரண்டு மோதிக் கொண்டதன் பின்விளைவுகளை முதன் முறையாக விஞ்ஞானிகள் தற்போது ஆராய்ந்துள்ளனர்.

  • தொடங்கியவர்

அரசியலை வெறுத்த அரசியல்வாதி..! கண்ணதாசனின் நினைவு நாள் பகிர்வு

 

கண்ணதாசன்
 

"நான் நிரந்தரமானவன் அழிவதில்லை" என்ற பாடல் வரிகள் மூலம் இன்னும்  நம்முடைய சோகமான, சுகமான, சந்தோஷமான மனதுகளின் வழியே கண்ணதாசன் வாழ்ந்து கொண்டிருக்கிறார்.

 

முதல் பாடல்

காரைக்குடியின் சிறுகூடல் பட்டி தந்த கவிஞர் கண்ணதாசன், இளம் வயதிலேயே சென்னைக்கு வந்தவர். சில பத்திரிகைகளில் பணியாற்றி விட்டு, மாடர்ன் தியேட்டர் நிறுவனத்தில் கதைவசன கர்த்தாவாக வேலைக்குச் சேர்ந்தார். ஒரு கட்டத்தில் ஜூபிடர் நிறுவனம் தயாரித்த 'கன்னியின் காதலி' என்ற திரைப்படத்தில் பாடல் எழுதுவதற்கு அவருக்கு வாய்ப்புக் கிடைத்தது. அந்தப் படத்தில், 'கலங்காதிரு மனமே...' என்ற பாடலை எழுதினார். இதுதான் அவர் எழுதிய முதல்பாடல்.  கவிஞர் கண்ணதாசன். சென்னை தியாகராய நகரில் வசித்து வந்தார்.  தியாகராய நகருக்கும் கண்ணதாசனுக்கும் இடையே நிறையத் தொடர்புகள் இருக்கின்றன.

காத்திருந்த தயாரிப்பாளர்கள்

ஆரம்பத்தில் கண்ணதாசன், மியூசிக் அகாடமி அருகில் வசித்து வந்தார். பின்னர் அடையாற்றில் வசித்து வந்தார். இதன் தொடர்ச்சியாக தியாகராய நகரில் கிரசண்ட் பூங்கா தெருவில் வாடகை வீட்டில் வசித்து வந்தார். அந்த சமயத்தில் எம்.ஜி.ஆர்., சிவாஜி இருவர் நடித்த பல படங்களுக்கு பாடல் எழுதிப் புகழின் உச்சத்தில் இருந்தார். எங்கு திரும்பினாலும் கண்ணதாசன் பாடல்கள் ஒலித்துக் கொண்டிருந்த நேரம் அது. பாடல் பதிவுக்கு கண்ணதாசனை அழைத்துச் செல்வதற்காக காலை நேரத்தில் தயாரிப்பாளர்கள் கார்களுடன் காத்திருப்பார்கள். கண்ணதாசன் அன்றைக்கு யாருடைய காரில் ஏறுகிறாரோ? அந்த நிறுவனத்தின் படத்துக்குத்தான் பாட்டு எழுதப் போகிறார் என்று அர்த்தம். மற்றவர்கள் திரும்பிப் போய்விடுவார்கள். மீண்டும் மறுநாள் வந்து கண்ணதாசனுக்காகக் காத்துக்கிடப்பார்கள்.
அப்போது  கண்ணதாசனின் நண்பரும், பாரதி பதிப்பகத்தின் உரிமையாளருமான சிதம்பரம் செட்டியார், கண்ணதாசனிடம் "என்னப்பா நீ பிள்ளை குட்டிகளை வச்சுக்கிட்டு இன்னும் எத்தனை நாளைக்கு வாடகை வீட்டில் இருக்கப்போறே" என்று கேட்டிருக்கிறார்.

சொந்த வீடு

அதோடு நில்லாமல் கண்ணதாசனிடம் இருந்து வீடு வாங்குவதற்கு என கொஞ்சம், கொஞ்சமாகப் பணம் வாங்கி வைத்து, அந்தப் பணத்தில்தான் கண்ணதாசனுக்கு அவர் வீடு வாங்கிக் கொடுத்தார்.  இது குறித்து கண்ணதாசனின் மகனும், கண்ணதாசன் பதிப்பக உரிமையாளருமான காந்தி கண்ணதாசனிடம் பேசினோம். "சிதம்பரம் செட்டியார்தான் இந்த வீட்டை என் தந்தைக்கு வாங்கிக் கொடுத்தார். இன்றளவுக்கும் அவருக்கு நாங்கள் நன்றிக்கடன் பட்டிருக்கிறோம். இந்த வீடு அத்தனை பேருக்கும் போதாது என்பதால், என் தந்தை சில மாற்றங்கள் செய்து வீட்டை புதுப்பித்தார்.
டி.ஆர்.ரமணா கம்பெனி உள்ளிட்ட  சினிமா கம்பெனிகள் தி நகரில்தான் இருந்தன. என் தந்தை பாடல் கம்போசிங் போவதற்கு எளிதாக இருந்தது. எங்கள் வீட்டுக்கு எதிரில் இருக்கும் பார்க்கில்தான்,என் தந்தை அடிக்கடி ரிலாக்ஸ் ஆக அமர்ந்திருப்பார்.

 

கருணாநிதியுடன் கண்ணதாசன்

அரசியல் கடந்த நேசம்

அண்ணா, கலைஞர் கருணாநிதி உள்ளிட்ட பிரபலங்கள் என் தந்தையைப் பார்க்க வருவார்கள். குறிப்பாக பொங்கல் பண்டிகையின்போது என் தந்தையைப் பார்ப்பதற்காக காமராஜர், எம்.ஜி.ஆர், சிவாஜி உள்ளிட்டோர் வருவார்கள். அப்படி வந்த பிரபலங்கள் எல்லாம் எங்கள் வீட்டின் மாடியில் அப்போது இருந்த டைனிங் ஹாலில் அமர்ந்து சாப்பிட்டிருக்கிறார்கள். அந்த டைனிங் ஹால் ஒரே நேரத்தில் 50 பேர் சாப்பிடும் வசதியுடன் இருந்தது. தி.நகர் வீடு எங்கள் ரத்தத்தோடு ஊறிய ஒன்றாக இருக்கிறது. இப்போதும் அந்த வீட்டில்தான் நான் என் குடும்பத்தினருடன் இருக்கிறேன். வீட்டின் மேல் மாடியில்தான் கண்ணதாசன் பதிப்பகத்தின் அலுவலகம் இருக்கிறது. எந்த ஊருக்குச் சென்றாலும், தி நகர் வீட்டுக்கு எப்போது திரும்பி வருவோம் என்ற நினைவே இருக்கும்.
பல சினிமா நிறுவனங்கள் கோடம்பாக்கத்தில் செயல்பட்டன. எனவே பல்வேறு சினிமா நட்சத்திரங்கள் சிவாஜி, எம்.ஜி.ஆர்., என்.டி.ராமராவ், கன்னட நடிகர் ராஜ்குமார், அந்த காலத்தய நட்சத்திரங்களான கண்ணாம்பாள், ராஜாம்பாள் உள்ளிட்டோரும் தி.நகரில்தான் இருந்தனர்.
தி.நகரில் இருந்து கோடம்பாக்கத்துக்கு சில நிமிடங்களில் காரில் சென்று விடலாம். இதனால், அப்போது சினிமாவை நம்பி இருந்த பலர் தி நகரில் வீடு வாங்குவதை விரும்பினர். மேலும் இங்குதான் அப்போது 4 கிரவுண்ட், 5 கிரவுண்ட் என இடம் வாங்கி வசதியாகக் கட்டும் அளவுக்கு இடமும் இருந்தது" என்றார்.

தி.மு.க மீது வெறுப்பு, கருணாநிதியுடன் நேசம்

தி.மு.க-வில் கண்ணதாசன் தமது அரசியல் பயணத்தைத் தொடங்கினார். கல்லக்குடி மும்முனைப் போராட்டத்தில் பங்கேற்று சிறை சென்றார். கருணாநிதிக்கும், ஈ.வி.கே. சம்பத்துக்கும் பிரச்னை எழுந்த து. இதனால், ஈ.வி.கே. சம்பத் தி.மு.க-வை விட்டு வெளியேறினார். அப்போது அவருக்கு ஆதரவாக கண்ணதாசனும் தி.மு.க-வில் இருந்து வெளியேறினார்.
எனினும், கருணாநிதியுடன் அரசியலுக்கு அப்பாற்பட்டு நட்புக் கொண்டிருந்தார். எம்.ஜி.ஆர் தி.மு.க-வில் இருந்து விலகும் போது, முக்கியமான தருணங்களை கண்ணதாசனுடன் கருணாநிதி பகிர்ந்து கொண்டார். இதை கண்ணதாசன் தமது வனவாசம் புத்தகத்தில் குறிப்பிட்டிருக்கிறார். எம்.ஜி.ஆரை தி.மு.க-வில் இருந்து நீக்கியது தவறு என்றே குறிப்பிட்டிருக்கிறார்.

 

எம்.ஜி.ஆருடன் கண்ணதாசன்

எம்.ஜி.ஆர் கொடுத்த பதவி

 

அரசியல் ரீதியாக எம்.ஜி.ஆரை கண்ணதாசன் கடுமையாக விமர்சனம் செய்திருக்கிறார். தம்மை பற்றி கண்ணதாசன் விமர்சித்தபோதிலும் தமிழக அரசின் அரசவைக் கவிஞராக கண்ணதாசனை எம்.ஜி.ஆர் நியமித்தார்.
தி.மு.க., ஈ.வி.கே.சம்பந்த்தின் தமிழ் தேசிய காங்கிரஸ், காங்கிரஸ் என அரசியல் கட்சிகளில் மாறி, மாறி பயணம் செய்தார். எனினும், இறுதி காலத்தில் அரசியல் மீது வெறுப்புக் கொண்டிருந்தார். அர்த்தமுள்ள இந்துமதம் என்ற கட்டுரைத் தொகுப்பை எழுதியவர் ஆன்மீகத்தில் ஈடுபாடு கொண்டிருந்தார்.  சிலகாஙம் தாம் அரசியல் ஈடுபாடு கொண்டிருந்ததால், தம்முடைய கவி வாழ்க்கையில் இன்னும் அதிகமாக சாதித்திருக்க முடியும் என்று சொல்லி இருக்கிறார். அரசியலை வெறுத்தாலும், அவரும் எல்லைகளைக் கடந்த அரசியல்வாதியாகத்தான் இருந்தார்.
கண்ணதாசன் எழுதிய கடைசி பாடல் மூன்றாம் பிறை திரைப்பட்டத்தில் வரும் கண்ணே கலைமானே பாடல். இதில் அவர் எழுதியிருக்கும் வரிகளே அவரது மரணத்தை முன் அறிவித்து விட்டது என்று சொல்லாம்.
அந்த வரிகள்...
ஏனோ தெய்வம் சதி செய்தது
பேதை போல விதி செய்தது...

http://www.vikatan.com

 

  • தொடங்கியவர்

பாரம்பரியத்தை எடுத்து சொல்லும் மலேசிய தீபாவளி.. தொன்று தொட்டு வரும் பண்பாடு

 

பாரம்பரியத்தை எடுத்து சொல்லும் மலேசிய தீபாவளி.. தொன்று தொட்டு வரும் பண்பாடு

மலேசியாவில் வாழ்ந்து வரும் இந்தியர்களுக்கு தீபாவளி முதன்மை பண்டிகையாக விளங்குகிறது. இந்நிலையில் நாளை தீபாவளி கொண்டாடப்படுகின்ற நிலையில் மலேசிய இந்தியர்கள் பண்டிகைக்கு மும்மரமாக ஆயுத்தமாகி வருகின்றனர்.

பாரம்பரியத்தை எடுத்து சொல்லும் மலேசிய தீபாவளி.. தொன்று தொட்டு வரும் பண்பாடு

மலேசியாவை பொறுத்தவரை தீபாவளி இந்துக்கள் கொண்டாடும் பண்டிகை மட்டுமல்ல அது மத வேற்றுமையை கடந்து அனைவராலும் கொண்டாடப்படும் தேசிய பண்டிகையில் ஒன்றாக போற்றப்படுகிறது. மேலும் தீபாவளிக்கான விற்பனை இங்கு ஒரு மாதத்திற்கு முன்னதாகவே தீவிரமாக தொடங்கிவிட்டது.

பாரம்பரியத்தை எடுத்து சொல்லும் மலேசிய தீபாவளி.. தொன்று தொட்டு வரும் பண்பாடு

ஒரே இடத்தில் பண்டிகைக்கு தேவையான அனைத்து பொருட்களும் கிடைக்கத்தக்க வகையில் அமைக்கப்பட்டுள்ளது. மேலும் மலேசியாவின் தனி சிறப்பாகவே கருதப்பட்டு வரும் " லிட்டில் இந்தியா " பகுதிகளில் தீபாவளி களை கட்டியுள்ளது. மேலும் பண்பாட்டை காக்கும் வகையில் கலாச்சார காரணிகளுடைய அணிகலன்களுக்கும் மக்கள் முக்கியத்துவம் கொடுத்து வருகின்றனர்.

https://news.ibctamil.com

  • தொடங்கியவர்

Bild könnte enthalten: 1 Person, lächelnd, Hut und Text

இலங்கை கிரிக்கெட்டின் கலக்கல் நட்சத்திரம் அரவிந்தவுக்கு பிறந்தநாள்.

இலங்கை கிரிக்கெட் அணியின் வரலாற்றின் மிகச் சிறந்த துடுப்பாட்ட மேதை,
1996 இல் இலங்கை அணி உலகக்கிண்ணம் வெல்வதற்கு முக்கிய காரணங்களில் ஒருவரான அரவிந்த டீ சில்வாவின் 50வது பிறந்தநாள்.

இலங்கை அணியின் பல்வேறு துடுப்பாட்ட சாதனைகளுக்கு சொந்தக்காரராக இருந்த முன்னாள் தலைவர் / உப தலைவர்.
சகலதுறை வீரர்.
தேர்வாளராகவும் பாராட்டப்பட்டவர்.
இப்போது மீண்டும் இலங்கை கிரிக்கெட்டை நிமிர்த்தும் முயற்சியில் ஸ்ரீலங்கா கிரிக்கெட்டுடன் சேர்ந்து செயற்பட முன்வந்துள்ளார்.

இலங்கை கிரிக்கெட்டின் ஆரம்ப காலங்களிலேயே சர்வதேசமெங்கும் புகழப்பட்ட இலங்கையின் துடுப்பாட்டத் தூணுக்கு இனிய வாழ்த்துக்கள்.

Happy Birthday Aravinda de Silva

  • தொடங்கியவர்

WR_20171018001828.jpeg

தீப ஒளி திருநாளை வரவேற்கும் விதமாக தூங்கா நகரமான மதுரையில் விண்ணில் பறந்த பட்டாசுகள் வெடித்து, வண்ண வண்ண கோலமிட்டு இரவை இதமாக்கியது.

  • தொடங்கியவர்

Bild könnte enthalten: Text

 

Bild könnte enthalten: eine oder mehrere Personen und Text

அனைவருக்கும் தீபாவளி நல்வாழ்த்துக்கள்..!

  • தொடங்கியவர்
‘கெடு மதியை விட்டால் நீடூழி வாழலாம்’
 

image_aeee15bb12.jpgவணக்க ஸ்தலத்துக்குச் செல்லுமுன், உங்கள் இல்லத்தையும் உங்கள் உடலையும் இதயத்தையும் சுத்தம் செய்து புறப்படுங்கள்.  

வசிக்கும் வீடும், எமது தேகமும் சுத்தமாக அமைந்தால் மனமும் மகிழ்வெய்யும். ஆன்மாவும் குதூகலிக்கும்.  

சின்ன வீட்டையும் சங்காரமாக வைத்திருங்கள். வீடு கோட்டையாக இருந்தும் நெஞ்சத்தில் வஞ்சனையைப் புகுத்தினால் இல்லத்தில் வாழ்வோருக்கு கேட்டையே தரும்.  

கெட்ட எண்ணம் ஈடேற வேண்டும் என ஒருவன் எண்ணுவதுபோல, மூடத்தனம் வேறு ஏது? சமய நூல்கள் சொன்ன நீதிகளை ஏன்தான் கேட்ட மறுக்கின்றார்கள்?  

கெடு மதியை விட்டால் நீடூழி வாழலாம். 

  • தொடங்கியவர்

அழகு... அதிர்ச்சி... பிரமிப்பு... பயம்... கண்ணைக் கவரும் காட்டுயிர் புகைப்படங்கள்..! #WildLifePhotography

ஒவ்வொரு வருடமும் உலகின் ஒருவர் சிறந்த காட்டுயிர் புகைப்படத்திற்கான விருதைப் பெறுகிறார். விருது பெறுகிற ஒவ்வொரு புகைப்படத்திற்கு பின்னாலும் அது சார்ந்த பயணங்களும் கதைகளும் இருக்கின்றன. காட்டுயிர் புகைப்படங்களைப் பொறுத்தவரை அர்ப்பணிப்பு, பொறுமை, தேடல் அவசியம். காடுகளில் புகைப்படங்கள் எடுக்கிறதென்பது ஆபத்தான செயல். உலகில் யாரும் எடுக்க முடியாத விலங்குகளின் சிறந்த தருணத்தைப் புகைப்படமாக சேமிப்பது மிகப்பெரிய சவால். கடந்த சில ஆண்டுகளாக விருதுபெற்ற புகைப்படங்கள்  மற்றும் புகைப்படக்காரர்கள் பற்றிய ஒரு பார்வை. 

டிம் லமென் - 2016

 

டிம் லமென் காட்டுயிர்

photo courtesy : Tim Laman

அமெரிக்கப் புகைப்படக்காரர் டிம், இந்தோனேசியாவிலுள்ள குணங் போலுங் தேசியப் பூங்காவில் பெரிய மரத்திலிருந்து இளம்  உராங்குட்டான் குரங்கு ஒன்று இறங்குவதைப் பார்க்கிறார். எப்படியும் உராங்குட்டான் திரும்பி அதே மரத்திற்கு வரும் என்பதால் தன்னிடமிருந்த கோப்ரோ (Go Pro) கேமராவை அந்த மரத்தின் மேற்பரப்பில் பொருத்தி விடுகிறார்.  உராங்குட்டான்  திரும்பி வரும் என்கிற நம்பிக்கையில் மூன்று நாள்களாக அங்கே காத்திருக்கிறார். உணவு தேடச் சென்ற உராங்குட்டான் திரும்பி வருகிறது. அந்த நிமிடங்களுக்காகக் காத்திருந்து, உராங்குட்டான் மரம் ஏறிக்கொண்டிருக்கும் பொழுது ரிமோட் மூலமாக இந்தப் புகைப்படத்தை எடுத்திருக்கிறார். முதல் பரிசைப் பெற்ற இந்தப் புகைப்படம் உலக வெப்பமயமாவதைத் தடுக்கும் பொருட்டு விழிப்புஉணர்வுக்குப் பயன்படுத்தப்படுகிறது. 2015 ஆம் ஆண்டு போர்னியோ காடுகளில் ஓரங்குட்டான் வசிக்கிற காடுகளில் 21000 சதுர கிலோ மீட்டர்கள் காட்டுத் தீயால் அழிந்து போயிருக்கின்றன. இதைத் தடுத்தாக வேண்டும் என்கிறார் டிம்.

 

டான் குடோஸ்கி - 2015

டான் குடோஸ்கி காட்டுயிர்

photo courtesy : Don Gutoski 

டான் அவசர சிகிச்சைப் பிரிவு மருத்துவராக இருக்கிறார். நேரம் கிடைக்கும்  கேமராவை எடுத்துக்கொண்டு காடுகளுக்குள் சென்று விடுவார். கனடா நாட்டின் வாபுஷ்க் தேசியப் பூங்காவில் எடுக்கப்பட்ட படம்தான் வருடத்தின் சிறந்த படமாகத் தேர்ந்தெடுக்கப்பட்டது. அன்றைய நாளில், தொலைவில் செந்நரி ஒரு விலங்கை துரத்திக் கொண்டு போவதைப் பார்க்கிறார். நரியைப் பின்தொடர்ந்துப் போய் பார்த்தபோது, துரத்திச் சென்ற விலங்கைச் செந்நரி கொன்று விடுகிறது. வெகு பக்கத்தில் பார்க்கும் போதுதான் தெரிகிறது இரையாகக் கொல்லப்பட்டது ஆர்டிக் நரி. கொல்லப்பட்ட ஆர்டிக் நரியைச் செந்நரி தூக்கிக்கொண்டு போவதைப் புகைப்படமாக எடுக்கிறார். உயர்ந்து வரும் வெப்பநிலை காரணமாக ஆர்டிக் பனி பிரதேசம் உருகி வருகிறது. இதன் விளைவாகச் செந்நரிகள் தங்களின் இருப்பிடத்தை விரிவு செய்கின்றன. அப்படியான நேரங்களில் இதுபோன்ற மோதல்கள் தவிர்க்க முடியாத ஒன்று என்கிறார் டான்.

மைக்கேல் நிக்கோலஸ் - 2014

மைக்கேல் நிக்கோலஸ் புகைப்படம்

photo courtesy : Michael Nicholas

அமெரிக்காவைச் சேர்ந்த நிக்கோலஸ், தான்சானியாவிலுள்ள செரெங்கெட்டி தேசியப் பூங்காவில் இந்தப் புகைப்படத்தை எடுத்திருக்கிறார். அன்றைய தினம் ஐந்து பெண் சிங்கங்கள் அதன் குட்டிகளுடன் படுத்திருக்கிறது. அதைப் புகைப்படம் எடுத்திருக்கிறார். அதற்கு முன்பு அந்தப் பெண் சிங்கங்கள் இரண்டு ஆண் சிங்கங்களுடன் சண்டையிட்டு வந்திருக்கின்றன. அந்தச் சுவடுகள் இல்லாமல் அவை அங்கிருந்த பாறைகளின் மேல் படுத்திருக்கின்றன. நிக்கோலஸ் இந்தப் புகைப்படம் எடுக்கும் முன்பு ஆறு மாதங்களாகச் சிங்கங்களைப் பின்தொடர்ந்து வந்திருக்கிறார். நிகோலஸ் சிங்கங்கள் இருக்கிற பகுதிக்கு வருவதும் போவதுமாக இருந்ததால் அவை பழகிவிட்டன என்கிறார்.  அன்றைய தினம் அந்தச் சிங்கங்கள் இருக்கிற பகுதிக்கு அருகில் இருந்துதான் இந்தப் புகைப்படத்தை எடுத்திருக்கிறார். ??????1_(1)_17099.jpg

கிரேக் டு டோய்ட் 2013

காட்டுயிர்

photo courtesy : Greg Du Toit 

கிரேக் தென் ஆப்பிக்காவைச் சேர்ந்த காட்டுயிர் புகைப்படக்காரர். போட்வானாவின் வடக்கு டூலி விளையாட்டு ரிசர்வ் பகுதியில் இந்த யானைகள் புகைப்படம் எடுக்கப்பட்டிருக்கிறது. கிரேக், யானைகள் பற்றிய தேடுதலில் அதிக ஆர்வம் கொண்டவராக இருக்கிறார். புகைப்படம் எடுக்கப்பட்ட அன்றைய தினம் யானைக்கு மிக அருகில் நின்று இந்தப் படத்தை எடுத்துள்ளார். ”பொதுவாக யானைகளை கேமராவுக்குள் கொண்டு வருவது என்பது மிகவும் சிரமமான காரியம். கேமராவின் லோ ஷட்டரைப் பயன்படுத்தி எடுக்கும்போது ஒரு மாயத்தோற்றம் என்னைக் கடந்து போனது போல இருந்தது” என்கிறார் கிரேக்

http://www.vikatan.com

  • தொடங்கியவர்

இன்பாக்ஸ்

 

36p1.jpg

* ஷ்ரத்தா கபூரும், ஆலியா பட்டும்தான் பாலிவுட்டின்  ஹிட் ஹாட் ஹீரோயின்ஸ். ஷ்ரத்தா நடிப்பில் இந்த ஆண்டு மட்டுமே 3 படங்கள் வர, அடுத்த ஆண்டு பிரபாஸுடன் `சாஹோ’, சாய்னா நேவால் பயோபிக் என இரண்டு படங்களில் நடிக்கத் தயாராகிக்கொண்டிருக்கிறார். ஆலியா பட்டுக்கு 2019 வரை கால்ஷீட் ஃபுல். இருவருமே ஒரு படத்தில் நடிக்க 4-5 கோடி ரூபாய் சம்பளம் வாங்குகிறார்கள். கோடி லேடீஸ்!

36p2.jpg

* தெருவில் என்ன நடந்தாலும் வேடிக்கை பார்த்துக்கொண்டு கடந்துசெல்பவர் அல்ல சூர்யா. கடந்த வாரம் நள்ளிரவில் சூர்யாவை காரில் பார்த்த சில ரசிகர்கள் அவரை பைக்கில் அதிவேகமாகப் பின்தொடர, காரை ஓரமாக நிறுத்திவிட்டு ரசிகர்களிடம் மனம்விட்டுப் பேசியிருக்கிறார்.‘தயவுசெய்து பைக்கை வேகமா ஓட்டாதீங்க. என்மேல அன்பு வெச்சிருந் தீங்கன்னா நான் சொல்றதைக் கேளுங்க. உங்க வாழ்க்கையோட விளையாடாதீங்க’ என நட்போடு பேச, ரசிகர்கள் எல்லாம் ஹைஃபை சொல்லி விடை பெற்றிருக்கிறார்கள். சூப்பர் சூர்யா!

* சினிமாவாகிறது பி.டி.உஷாவின் வாழ்க்கை. ஜோதிகா, குஷ்பு, சரிதா நடிப்பில் வெளியான ‘ஜூன்-ஆர்’ படத்தை இயக்கிய ரேவதி வர்மா இந்தப் படத்தை இயக்குகிறார். படத்துக்கு இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான்தான் இசை. பி.டி. உஷாவாக நடிக்கும் ரேஸில் பிரியங்கா சோப்ரா முன்னணியில் இருக்கிறார்! வாழ்க்கைப்பாடம்!

36p3.jpg

* ஒரு பாடலுக்காக மட்டுமே 1 மாதம் கால்ஷீட் கொடுத்து ஆடி முடித்திருக்கிறார் எமி ஜாக்ஸன். 2.0 படத்தில் ரோபோவாக எமியின் ஆட்டம் மட்டுமே 12 நாள்கள் படமாக்கப்பட்டிருக்கிறது. ஆனால், பாடல் படம் பிடிப்பதற்கு முன்பாக 10 நாள்கள் ரிகர்சல் செய்யப்பட்டிருக்கிறது. ‘‘ `ஐ’ படத்தில் ‘என்னோடு நீ இருந் தால்’ பாடலையும் இப்படித்தான் பல நாள்கள் ஷூட் செய்தோம். அதேபோல் இந்தப் பாடலும் 10 நாள் ஷூட்டைத் தாண்டியிருக்கிறது. இந்தப் பாடலைப் பார்ப்பதற்கே தனி ரசிகர் கூட்டம் தியேட்டருக்கு வரும்’’ என்கிறார் எமி. பேபிம்மா சொன்னா சரிதான்!

* தன் தந்தையும் முன்னாள் முதல்வருமான என்.டி.ராமராவின் வாழ்க்கையை சினிமாவாக்கும் முயற்சியில் இறங்கியிருக்கிறார் மகன் பாலகிருஷ்ணா. என்.டி.ஆர் அவதாரம் எடுக்க இருப்பவர் பாலகிருஷ்ணாவே. என்.டி.ஆர் தனது கடைசிகாலத்தில் இரண்டாவது மனைவி லட்சுமி பார்வதியுடன் இருந்த போர்ஷனை மட்டும் நீக்கிவிட்டு பயோபிக் எடுக்கத் திட்ட மிட்டிருக்கிறார்கள். வெட்டுவதில் வல்லவர்கள்!

36p4.jpg

* ‘மாரி-2’விலும் அனிருத் இல்லை. ‘பவர் பாண்டி’, ‘விஐபி-2’ படங்களுக்கு ஷான் ரோல்டன் இசையைத் தேர்ந்தெடுத்த தனுஷ்  மாரி-2-வில் யுவன் ஷங்கர் ராஜாவுடன் இணைந்திருக்கிறார்.  ஹீரோயின் சாய் பல்லவி, வில்லனாக டொவினோ தாமஸ், முக்கியமான கேரக்டரில் இயக்குநர் விஷ்ணு வர்தனின் தம்பி கிருஷ்ணா என காஸ்ட்டிங் களைகட்டுகிறது. வேற `மாரி’ எடுங்க பாய்ஸ்!

36p5.jpg

* த்ரிஷாவுக்கு சினிமாவில் இது 18-வது ஆண்டு. தமிழில் `சதுரங்க வேட்டை -2’, `கர்ஜனை’, `மோகினி’, மலையாளத்தில் நிவின் பாலியுடன் `ஹே ஜூட்’ என  நான்கு படங்கள் ரிலீஸுக்குக் காத்திருக்க, விஜய்சேதுபதியுடன் `96’,  `பரமபதம்’என இரண்டு படங்களில் செம பிஸியாக நடித்துக்கொண்டிருக்கிறார் த்ரிஷா. ‘‘2017 எனக்கான வருஷமா இருக்கும்னு நினைச்சேன். ஆனால், 4 படங் களுமே ரிலீஸாகாமலிருப்பது ரொம்ப கஷ்டமா இருக்கு” என வருத்தப்பட்டிருக்கிறார் த்ரிஷ். ரிலாக்ஸ் பேபி! 

* மலையாளத்தில்  ஹிட் அடித்த ‘மகேஷிண்டே பிரதிகாரம்’ படம் தமிழில் `நிமிர்’ ஆகவிருக்கிறது. பிரியதர்ஷன் இயக்க உதயநிதி ஸ்டாலின் நடிக்கிறார்.இந்தப்படத்துக்கு சமுத்திரக்கனி வசனம் எழுதி நெகட்டிவ் ரோலிலும் நடிக்கிறார். உதயநிதியின் அப்பாவாக இயக்குநர் மகேந்திரன் நடிக்கிறார். கூட்டணி சினிமா

http://www.vikatan.com

  • தொடங்கியவர்

மைக்ரோசாஃப்ட் சாலிடர் ஆட்டத்தைக் கண்டுபிடித்தவர் இப்போது என்ன செய்கிறார்?

 
 

சாலிடர்

4G, 3G இன்டர்நெட் பிராட்பேண்ட் எல்லாம் இல்லாத காலம் அது. இன்டர்நெட் உலகில் நீங்கள் கால்பதிக்க வேண்டுமென்றால், டயல் அப் பேக்கேஜ்கள் வாங்க வேண்டும். இன்டெர்னல் மோடம் கொண்டு கனெக்ட் செய்ய வேண்டும். அந்த இன்டர்நெட் வசதியும் நம் 2G வேகத்தைப் போல தட்டுத் தடுமாறி நம்மை அலைக்கழிக்கும். வெறும் மெயில் செக் செய்யவே அரை மணி நேரம் காத்திருக்க வேண்டும். அப்படிக் காத்திருக்கும்போது பொழுது போக விண்டோஸ் மென்பொருளுடன் இணைப்பாக வரும் கேம்ஸ்கள் மிகவும் உதவும். அவற்றுள் முதன்மையானது சாலிடர் (Solitaire) ஆட்டம். ஒழுங்கில்லாத நிலையில் இருக்கும் சீட்டு கட்டை வரிசைப்படி, டிசைன் படி ஒழுங்காக அடுக்க வேண்டும். கொஞ்சம் மூளையைப் பயன்படுத்தி விளையாட வேண்டிய இந்த ஆட்டம், மிகவும் சுவாரஸ்யமானது. இப்போதும் இதற்கு வெறித்தனமான ரசிகர் கூட்டம் உண்டு. இந்த சாலிடர் ஆட்டத்தின் கதை தெரியுமா? நீங்கள் நினைப்பது போல் அதை உருவாக்கியது ஒரு குழுவோ அல்லது ஓர் அனுபவசாலியோ அல்ல. அவர் ஒரு சாதாரண இன்டெர்ன்!  

 

வெஸ் செர்ரி என்பவர் 1988 ம் ஆண்டு மைக்ரோசாஃப்ட் நிறுவனத்தில் பயிற்சி பெற (Intern) வந்தவர்களில் ஒருவர். பயிற்சி பெறவே வந்திருந்தாலும் தங்களுக்கும் இலக்கு, நிறைய வேலைகள் இருந்தன. அதற்கிடையில், அவ்வப்போது நேரம் கிடைக்கும் போதெல்லாம் தனக்குப் பிடித்த வேலைகளைச் செய்வார் வெஸ். அப்படி ஒரு நாள் வேலை இல்லாத தருணத்தில் உதித்த யோசனைதான் இந்த சாலிடர் ஆட்டம். இந்தச் சுவாரஸ்ய கதை குறித்து வெஸ் செர்ரி இவ்வாறு விவரிக்கிறார். 

“அப்போதெல்லாம் கேம்ஸ் குறைவாகத்தான் இருக்கும். நாங்கள்தான் புதிதாக உருவாக்க வேண்டும். இந்த ஆட்டத்தில், ஒழுங்கில்லாமல் இருக்கும் சீட்டுக்கட்டை எண் வரிசைப்படி, டிசைன் படி அடுக்க வேண்டும். வெற்றிபெற்றால் அடுக்கடுக்கான கார்டுகள் (Cascading Cards) திரையை நிரப்பும். இந்த அனிமேஷன் மிகவும் பிரபலமான ஒன்று. பில் கேட்ஸ் அவர்கள் இந்த ஆட்டத்தைப் பார்த்துவிட்டு முதலில் சொன்ன விஷயம் வெற்றிபெறுவது மிகவும் கடினமாய் உள்ளது என்பதுதான். ஆரம்பகாலத்தில் மவுஸை எவ்வாறு பயன்படுத்த வேண்டும் என்று மக்கள் கற்றுக்கொள்ளவே இந்த ஆட்டம் என்று விளம்பரப்படுத்தியது மைக்ரோசாஃப்ட் நிறுவனம். ஆனால், உண்மையில் அது ஒரு ஜாலியான ஆட்டம். பொழுதுபோக்கிற்காக உருவாக்கப்பட்டது” என்று உண்மையை உடைக்கிறார் வெஸ்.

வெஸ் செர்ரி

Photo Courtesy : Capitol Cyder

1990ம் ஆண்டு வெளியான விண்டோஸ் 3.0 மென்பொருளில் முதன் முதலில் வெளியான சாலிடர் ஆட்டம் தற்போதைய விண்டோஸ் 10 வரை தவறாமல் இடம்பெற்று வருகிறது. இந்த ஆட்டத்தில் முதலில் வெஸ் ‘பாஸ் கீ’ (Boss Key) என்ற ஒரு வசதியை வைத்திருந்தார். அதாவது இதை அலுவலகத்தில் விளையாடிக்கொண்டிருக்கும்போது பாஸ் வந்துவிட்டால், இந்த கீயை அழுத்தினால் போதும். ஒரு எக்ஸல் ஸ்ப்ரெட்சீட் ஓப்பனாகி விடும். பின்பு நீங்கள் வேலை செய்வதுபோல் நடித்தால் போதும். பாஸிடமிருந்து தப்பித்துக் கொள்ளலாம். ஆனால், மைக்ரோசாஃப்ட் இந்த வசதியைப் பின்னர் நீக்கிவிட்டது.

அதெல்லாம் சரி. இப்படி ஒரு சரித்திர சாதனையைச் செய்த வெஸ் செர்ரிக்கு மைக்ரோசாஃப்ட் நிறுவனம் என்ன செய்தது?

“எனக்கு இதற்காக எந்தப் பணமும் மைக்ரோசாஃப்ட் இதுவரை கொடுக்கவில்லை. ஒவ்வொரு முறை இந்த ஆட்டம் பிரதி எடுக்கப்படும் போதும் எனக்கு ஒவ்வொரு டாலர் கிடைத்திருந்தாலும் இப்போது நான் கோடீஸ்வரன் ஆகியிருப்பேன்!” என்று வருத்தத்துடன் தெரிவிக்கிறார்.

 

சாலிடர் கேம் நம் அன்றாட வாழ்வில் ஒன்றாகி விட்டது. ஆனால், இதை உருவாக்கிய வெஸ் தற்போது என்ன செய்கிறார் தெரியுமா? ஆப்பிளுடன் வேலை செய்கிறார். ஆப்பிள் என்றால் மைக்ரோசாஃப்ட்டின் போட்டி நிறுவனம் ‘ஆப்பிள்’ அல்ல. ஆப்பிளிலிருந்து சைடர் தயாரிக்கும் நிறுவனம் ஒன்றை நடத்தி வருகிறார். சாதனையாளர்களைச் சார்ந்தவர்கள் மறந்துவிட்டாலும், சரித்திரம் மறப்பதில்லை!

http://www.vikatan.com

  • தொடங்கியவர்

ஆர்டிக் பகுதியில் அதிசய ஆசிரியர்!

ஆர்டிக் பனிப் பிரதேசத்தில் பணியாற்றும் இந்த ஆசிரியர் தனது மாணவர்களுக்கு வித்தியாசமான முறையில் கல்வியை பயிற்றுவிக்கிறார். இவரது வகுப்பறைகள் நான்கு சுவர்களுக்குள் அடங்குவதில்லை. இங்கு படிக்கும் மாணவர்கள், கடும் குளிரில் பல மைல் தூரம் கடந்து வருகிறார்கள்.

  • தொடங்கியவர்

கனவுகள்... காரணம், அர்த்தம் மற்றும் மீட்டெடுக்கும் வழிகள்! #ScienceOfDreams

 
 

கனவுகள்

உங்களுக்குக் கனவுகள் அடிக்கடி வருமா?

 

உங்கள் நண்பருடன் காபி ஷாப்பில் காபி குடித்துக்கொண்டே பேசிக்கொண்டிருக்கிறீர்கள் என்பது போன்ற கனவு வந்தால், அது நினைவிலிருக்கும். ஆனால், யோசித்து பார்த்தால் நீங்கள் எப்படி வந்தீர்கள் என்பது தெரியாது. கனவின் ஆரம்பம் யாருக்கும் தெரியாது. 
கனவுகள் என்பது நினைவலைகளால் உருவாக்கப்படும் காட்சிகள். இந்த நினைவுகள் பல கதாபாத்திரங்களை உருவாக்கி நம்பமுடியாத கற்பனை உலகத்திற்கு நம்மைக் கூட்டிச்செல்லும்.  

இந்தக் கனவில் தோன்றும் நடிகர்களுக்கு கால்ஷீட் பிரச்னை இல்லை. பின்னணி இசைக்கும் சம்பளம் கொடுக்க தேவையில்லை. இவை நாம் பார்த்த, கேட்ட ஓசைகள், உணர்வுகளால் உருவாக்கப்படுபவை.

நீங்கள் இப்போது தூங்கிக் கொண்டிருக்கிறீர்கள். உங்கள் நண்பன் உங்கள் முகத்தைப் பார்க்கிறார் என வைத்துக்கொள்வோம். அப்போது, திடீரென்று உங்கள் கண்கள் வலது இடது புறம் ஓடிக் கொண்டே இருந்தால் இப்போது நீங்கள் கனவு காண ஆரம்பித்திருக்கிறீர்கள் என்று அர்த்தம். இதைத்தான் Rapid eye movement என்கிறார்கள்.

கனவில் நடக்கும் விஷயங்களுக்கு அர்த்தம் இருக்கிறதா இல்லையா? உளவியலாளர்கள் (psychiatrist) என்ன சொல்கிறார்கள் என்று பார்ப்போம்.

யாரோ துரத்துவது போல கனவு கண்டால்..

உளவியல் ரீதியாகப் பார்த்தால், உங்கள் பிரச்னைகளைக் கண்டு நீங்கள் பயந்து ஓடி ஒளிந்துகொள்கிறீர்கள் என்று அர்த்தம். யார் துரத்துகிறார்கள் என்பது பிரச்னையைப் பொறுத்து அமையும்.

பரீட்சை (Exam) எழுதுவது போல...

இது நாம் எல்லோரும் கண்ட கனவுதான். கடைசிவரைக்கும் தேர்வு அறையைத் தேடித்தான் அலைவோம். இந்தக் கனவுக்கு “ஒரு முடிவை தேடி அலையக் கூடிய நபராக இருப்பீர்கள். உங்கள் வாழ்க்கையிலுள்ள பிரச்னையின் தீர்வு என்ன என்று தெரியாமல் கவலைப்படுகிறீர்கள் என்பது அர்த்தம்” என்கிறார்கள்.

திடீரென  மாடியில் இருந்து குதிப்பது போல்: 

இதுவும் அடிக்கடி வரும் கனவு. நீங்கள் பாதுகாப்பற்ற நிலையில் இருக்கிறீர்கள் என்று அர்த்தம். முக்கியமான விஷயம் கட்டுப்பாட்டை மீறி சென்று விட்டாலும் இந்த மாதிரி கனவுகள் வரும்.  

ஓடிக் கொண்டேயிருப்பது போல:

ஒரு பிரச்னை தீராமல் சென்று கொண்டிருக்கிறது. பல முயற்சிகள் செய்தாலும் அடுத்த பிரச்னை வருகிறது என்பதால்தான் இந்த மாதிரியான கனவுகள் வருகின்றன.

பறப்பது போல் கனவு கண்டால்..

உங்கள்மீது அதீத சுய நம்பிக்கை. மேலும் எந்தப் பிரச்னையும் இல்லாமல் வாழ்த்து கொண்டிருக்கிறீர்கள்.

திடீரென்று இதுவரை நீங்கள் பார்த்திராத நபர்கள் உங்கள் கனவில் பலமுறை பார்த்ததுண்டு. யார் அவர்கள்? எங்கே இருந்து தானே வருகிறார்கள் என்று யோசிக்கிறீர்கள்? நீங்கள் இதுவரை பார்க்காத நபர்களை நினைவலைகள் கனவில் உருவாக்குவதில்லை. 
அவர்கள் உங்களுடன் பஸ் அருகில் உட்கார்ந்தவர், லிப்ட்லில் வந்தவர், ஷாப்பிங் செல்லும்போது எதிரில் சென்றவர்களாக இருக்கலாம். சமீபகாலமாக ட்விட்டர் மற்றும் ஃபேஸ்புக்கில் நாம் பின் தொடர்பவர்கள் கூட கனவில் வருகிறார்களாம்.

95% கனவுகள் கண் விழிக்கும் போது மறந்து விடுகின்றன என்கிறார்கள் மருத்துவர்கள். இதனால் நாம் எழுந்தாலும் கனவுகள் மறக்காமல் இருக்க விஞ்ஞானிகள் கனவை ரெக்கார்டு செய்வதற்கான முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர். 

நம் மனதுக்குள் ஒரு விஷுவலை உருவாக்கும்பொழுது குறிப்பிட்ட நீயூரல் பேட்டர்னை மூளை உருவாக்கும். ஆக, கனவின் போது உருவாகும் காட்சிகளுக்கும் இப்படி ஒரு பேட்டர்னை மூளை உருவாக்கும். அந்த டேட்டாவை பிடித்துவிட்டால், கனவை ரெக்கார்டு செய்துவிடலாம் என்கிறார்கள் ஜப்பானிய ஆராய்ச்சியாளர்கள். 2013ல் இருந்தே இதற்கான ஆய்வுகள் நடந்துவருகின்றன.

 

வருங்காலத்தில் நம் கனவுகளை நமது நண்பர்களுடன் சேர்ந்து மொபைல் திரையில் பார்த்து மகிழலாம். கொஞ்சம் ரிஸ்க்கான கனவு என்றால் தனியே பார்த்துக்கொள்ளலாம்.

http://www.vikatan.com

  • தொடங்கியவர்

இந்தியாவிற்கு பட்டாசு அறிமுகமானது எப்படி?

தீபாவளியன்று இந்தியர்களால் கொண்டாட்டத்துடன் வெடிக்கப்படும் பட்டாசை கண்டுபிடித்தது யார்? பட்டாசு எப்படி இந்தியாவிற்கு அறிமுகமானது?

  • தொடங்கியவர்
 
 
 
Bild könnte enthalten: 2 Personen, Text
 

எடிசனுக்கு அவர் தாய் கற்றுக் கொடுத்த அந்த ஒரு குணம்!

இரவை ஒளியால் நிரப்பிய அற்புத மனிதர் தாமஸ் ஆல்வா எடிசன். அறிவியல் மீதான அதீத ஆர்வமும் விடா முயற்சியுமே உலகமே கொண்டாடும் மனிதராக அவரை மாற்றியது. அவரின் வாழ்க்கையை பலரும் முன்மாதிரியாக கொண்டு வாழ்ந்துவருகின்றனர். அப்படியான அவரின் வாழ்வில் நிகழ்ந்த ஆச்சர்யமான சம்பவம் ஒன்று தெரியுமா?

எடிசன் பள்ளியில் படித்துக்கொண்டிருந்த நாளில், அவரிடம் ஒரு கடிதத்தைக் கொடுத்திருந்தார் ஆசிரியர். அந்தக் கடிதத்தை அம்மா மட்டுமே படிக்கவேண்டும் என்று சொல்லியிருந்தார் அவரின் ஆசிரியர். அதன்படி அம்மாவிடம் கொடுத்தார். அந்தக் கடிதத்தைப் படித்த எடிசனின் அம்மாவின் கண்களிலிருந்து நீர் வழிந்தது. கடிதத்தில் என்ன எழுதியிருக்கிறது என எடிசன் கேட்டபோது, "உங்கள் மகன் மிகவும் புத்திசாலி. அவரின் அறிவுக்கு ஏற்றளவில் இந்தப் பள்ளி இல்லை. அதனால் எடிசனை வீட்டிலிருந்தே படிக்க வையுங்கள்" என்று அம்மா உரக்க படித்ததைக் கேட்டு எடிசன் உற்சாகமாக சத்தமிட்டார்.

ஆண்டுகள் படு வேகமாக கடந்தன. தாமஸ் ஆல்வா எடிசன் புதிய புதிய கண்டுபிடிப்புகள் மூலம் உலகமே போற்றும் மகத்தான விஞ்ஞானியாக திகழ்ந்து வந்தார். பாராட்டுகள் குவிந்த வண்ணம் இருந்தன. ஒருநாள் எடிசனின் அம்மாவும் இறந்துபோனார். அதன்பின் சில நாட்கள் கழித்து எடிசன் வேறு ஏதோ தேடுகையில், சின்ன வயதில் ஆசிரியர் கொடுத்தனுப்பிய கடிதம் கிடைத்தது. தன்னைப் பற்றி உயர்வாக எழுதிய கடிதத்தை மீண்டும் படிக்க ஆசைப்பட்டு படித்தார். ஆனால் கடிதத்தில் இருந்த வரிகள் அம்மா வாசித்தவை அல்ல.

"உங்களின் மகன் மனநிலை சரியில்லை எனக் கருதுகிறோம். அவனை எங்கள் பள்ளியில் படிக்க தொடர அனுமதிக்க முடியாது"

இந்தக் கடிதத்தைப் படித்ததும் எடிசன் உறைந்துவிட்டார். இந்த விஷயம் தனது சின்ன வயதில் தெரிந்திருந்தால் எந்தளவுக்கு மனதளவில் முடங்கிபோயிருப்போம் என்பதை ஒரு நிமிடம் நினைத்து தன்னை உதறிக்கொண்டார். அந்த அதிர்ச்சியிலிருந்து மீள்வதே பெரிய விஷயமாக இருந்தது. தன் உழைப்பையும் முயற்சியையும் பாராட்டி ஊக்கமளித்த அம்மாவை மனதார நன்றியோடு நினைத்துக்கொண்டார்.

ஒருவர் தன்னைப் பற்றிய விஷயங்கள் முழுவதையும் தெரிந்து கொள்ளவேண்டும். அப்போதே தனது பழக்க வழக்கங்களில் ஓர் ஒழுங்கைக் கொண்டு வரமுடியும் என்பார்கள். ஆனால் ஒருவருக்கு தன்னைப் பற்றிய சில விஷயங்கள் தெரியகூடாதவை என்பதும் இருக்கிறது. அதுவும் அவரின் வாழ்க்கைக்கு மிகவும் உதவியாக இருக்கும். இதைத்தான் எடிசனுக்கு அவரது தாய் மறைமுகமாக கற்றுக்கொடுத்திருக்கிறார்.

அந்தக் கடிதத்தை எடிசன் படிக்கவே கூடாது என அவரின் தாய் நினைத்திருந்தால் அதை தீயில் எரித்திருப்பார். ஆனால் அதை பின்வரும் காலத்தில் எடிசன் படிப்பது சரிதான் என நினைத்ததாலே அதைப் பத்திரப் படுத்தி வைத்திருக்கக்கூடும். குழந்தை வளர்ப்பின் ஒவ்வோர் அடியையும் மிகவும் கவனத்துடன் நகர்த்த வேண்டும் என்பதற்கு இது ஆகச் சிறந்த உதாரணம்.

குழந்தைகள் வளர வளர பல புதிய விஷயங்களைத் தெரிந்துகொள்கின்றனர். அவற்றைக்கொண்டு கூடுதலாக யோசிக்க ஆரம்பிக்கின்றனர். அப்போது எதிர்கொள்பவற்றை புதிய கோணத்தில் பார்க்கின்றனர். அதேபோல பழைய விஷயங்களை முதிர்ச்சியோடு அசைப்போடுகின்றனர். அதனால் பெற்றோர் தங்கள் பொறுப்புகளை கூடுதல் கவனத்துடன் செய்ய வேண்டியிருக்கிறது.

எடிசன் தன் அம்மாவை நெகிழ்ச்சியோடு நினைவுக்கூர்வதுபோல தங்கள் பிள்ளைகளும் நினைவு கொள்ளவேண்டும் என்பதே ஒவ்வொரு பெற்றோரின் எண்ணமாக இருக்கும்.

  • தொடங்கியவர்

Bild könnte enthalten: 1 Person, lächelnd, Text

 

தமிழ்த் திரையுலகில் என்றும் ரசிகர்கள் மனதை வென்ற முன்னணி நடிகை - என்றுமே இனிய நடிகை ஜோதிகாவின் பிறந்தநாள்.
36 வயதினிலே மூலம் சில வருடகால இடைவெளிக்கு பிறகு மீண்டும் திரைப்பக்கம் திரும்பியிருந்த திருமதி.சூர்யாவுக்கு 'மகளிர் மட்டும்' இன்னொரு எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஜோவுக்கு  பிறந்தநாள் வாழ்த்துக்கள்.

Happy Birthday Jyothika

  • தொடங்கியவர்
‘உங்களை நீங்கள் சரிசெய்க’
 

image_1f9363ba8d.jpgஉங்களைப் பிடிக்காதவர்கள், நீங்கள் சொல்லும் நல்லவைகளையும் கேட்கப் பிடிக்காமல் விலகிவிடுவார்கள்.  

நல்ல விடயங்களை எவர் சொன்னாலும், செவியில் ஏற்கப் பிரியப்படுங்கள் தோழர்களே! 

எதிரிக்கும் நல்ல மனம் இருக்கலாம். எல்லா எதிரிகளும் எல்லாச் சமயத்திலும் கெட்டவர்களாக இருப்பதுமில்லை.  

எனவே, அவர்கள் மனம் திருந்தி, மீள வந்தால் வெறுக்க வேண்டாம். சமானியமான நபர்களை ஏற்றுக்கொள்வதுபோல், ஏற்று நடப்பீர்களாக.  

மற்றவர்களையே எடைபோடும் நாம், எம்மை நாம் எடைபோடுகின்றோமா? 

எனவே, ஒருவரை வெறுக்கும்முன், உங்களை நீங்கள் சரிசெய்க. உங்களை நீங்கள் நீதிபதியாகக் கருதலாம். அதற்காக மற்றவர்களை எதிரியாகப் பார்ப்பது பற்றிச் சிந்தியுங்கள்.

  • தொடங்கியவர்

வரலாற்றில் இன்று…
ஒக்டோபர் – 19

 

1216 : இங்கிலாந்தின் ஜோன் மன்னன் இறந்ததையடுத்து, அவரின் ஒன்பது வயது மகன் மூன்றாம் ஹென்றி ஆட்சிக்கு வந்தான்.

1469 : அரகன் நாட்டு இளவரசன் இரண்டாம் பேர்டினண்டுக்கும் காஸ்டில் நாட்டின் இளவரசி இசபெல்லாவுக்கும் திருமணம் நடைபெற்றது. இந்நிகழ்வு பின்னர் 1516 இல் ஸ்பெய்ன் நாடு ஒருங்கிணைக்கப்பட வழிகோலியது.

1806 : ஹெயிட்டியின் மன்னன் முதலாம் ஜாக் படுகொலை செய்யப்பட்டார்.

varalru-indonesia.jpg1812 : பிரான்ஸின் நெப்போலியன் போனபார்ட் ரஷ்யாவின் மொஸ்கோவில் இருந்து பின்வாங்கினான்.

1813 : ஜேர்மனியின் லைப்சிக் நகரில் நடைபெற்ற போரில் பிரான்ஸின் நெப்போலியன் போனபார்ட் பெரும் தோல்வியடைந்தார். இதையடுத்து ரைன் கூட்டமைப்பு முடிவுக்கு வந்தது.

1912 : லிபியாவின் திரிப்போலி நகரை இத்தாலியப் படைகள் ஒட்டோமன் பேரரசிடம் இருந்து கைப்பற்றினர்.

1921 : லிஸ்பன் நகரில் இடம்பெற்ற புரட்சியை அடுத்து போர்த்துக்கல் பிரதமர் அந்தோனியோ கிராஞ்சோ உட்படப் பல அரசியல்வாதிகள் கொல்லப்பட்டனர்.

1935 : எதியோப்பியாவை இத்தாலி கைப்பற்றியதை அடுத்து நாடுகளின் கூட்டணி இத்தாலி மீது பொருளாதாரத் தடைகளை அறிவித்தது.

1944 : இரண்டாம் உலகப் போரில் ஐக்கிய அமெரிக்கப் படைகள் பிலிப்பைன்ஸில் தரையிறங்கின.

1956 : சோவியத் ஒன்றியம், ஜப்பான் ஆகியவற்றுக்கிடையிலான யுத்தத்தை உத்தியோகபூர்வமாக முடிவுக்கு கொண்டுவரும் வகையிலான கூட்டுப் பிரகடனம் வெளியிடப்பட்டது.

1960 : கம்யூனிஸக் கியூபா மீது அமெரிக்கா பொருளாதார தடைகளை விதித்தது.

1976 : சிம்பன்சி உலகின் அருகி வரும் மிருக இனமாக பிரகடனப்படுத்தப்பட்டது.

varalru-Nimalarajan-240x400.jpg1983 : கிரெனடாவில் இடம்பெற்ற இராணுவப் புரட்சியை அடுத்து அதன் பிரதமர் மோரிஸ் பிஷொப் படுகொலை செய்யப்பட்டார்.

1986 : மொஸாம்பிக் ஜனாதிபதி சமோரா மேச்சல் உட்பட 33 பேர் விமான விபத்தொன்றில் கொல்லப்பட்டனர்.

1991 : இத்தாலியில் ஏற்பட்ட 7.0 ரிச்டர் அளவான நிலநடுக்­கம் காரணமாக 2,000 பேர்வரை இறந்தனர்.

2000 : ஊடகவியலாளர் மயில்வாகனம் நிமலராஜன் யாழ்ப்பாணத்தில் படுகொலை செய்யப்பட்டார்.

2001 : 400 அகதிகளை ஏற்றிச் சென்ற இந்தோனேஷியப் படகு கிறிஸ்மஸ் தீவில் கவிழ்ந்ததில் 353 பேர் உயிரிழந்தனர்.

2003 : பாப்பாரசர் இரண்டாம் அருள்ளப்பர் சின்னப்பர் அன்னை தெரேசாவை முக்திப்பேறு பெற்றவராக பிரகடனப்படுத்தினார்.

2005 : மானிடத்துக்கு எதிரான குற்றங்கள் தொடர்பாக ஈராக்கின் முன்னாள் ஜனாதிபதி சதாம் ஹுசேனுக்கு எதிரான வழக்கு ஆரம்பமாகியது.

2012 : லெபனான் தலைநகர் பெய்ரூத்தில் இடம்பெற்ற குண்டுவெடிப்பில் 8 பேர் பலியானதுடன் சுமார் 100 பேர் காயமடைந்தனர்.

2013 : ஆர்ஜென்டீனாவின் பியூனர்ஸ் அயர்ஸில் இடம்பெற்ற ரயில் விபத்தில 105 பேர் காயமடைந்தனர்.

2015 : கஹவத்த கொட்டகெதன பிரதேசத்தில் மர்ம ஆயுதபாணிகள் நடமாடுவதாக முறைப்பாடு செய்யப்பட்டதையடுத்து 500 விசேட அதிரடிப்படையினர் பாதுகாப்பு நடவடிக்கையில் ஈடுபடுத்தப்பட்டனர்.

http://metronews.lk/

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.