Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இளமை புதுமை பல்சுவை

Featured Replies

  • தொடங்கியவர்
புதியவகை பாம்பினம் கண்டுபிடிப்பு
 

image_2d29859a27.jpgஇலங்கைக்கே உரித்தான புதியவகை பாம்பு இனமொன்று, சிவனொளிபாதமலை காட்டுப் பகுதியில், ஆய்வாளர்களால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

 எஸ்பிடிரா ராவனாய் (Aspidurai Ravanai) என அழைக்கப்படும் இந்த பாம்பு இனம், சிவனொளிபாத மலையின் மேற்கு மலையடிவாரத்திலிருந்தே கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இந்த பாம்பு தொடர்பில், ஆராய்ச்சி சஞ்சிகையான சூடாஸ்கா சர்வதேச சஞ்சிகையில்வெளியிடப்பட்டுள்ளது.

கண்கொத்தி பாம்பு இன வர்க்கத்தைச் சேர்ந்த இந்த பாம்பு, இலங்கைக்கே உரித்தான இனமாகும்.
இந்த கண்டுபிடிப்புடன் இலங்கைக்கே உரிய 51 பாம்பு இனங்களின் எண்ணிக்கை 52 ஆக அதிகரித்துள்ளது. இலங்கையில் இதுவரை 104 வகை பாம்பு இனங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

சிவனொளிபாதமலையில் வாழும் உயிரினங்கள் பற்றி மேற்கொள்ளப்பட்ட ஆராய்ச்சியில், இந்த பாம்பு இனங்கள் கடந்த 2013ஆம் ஆண்டு கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

அலெக்ஸ்சாண்டர் சைரன் உட்பட ஆராய்ச்சியாளர்கள், இந்த பாம்புகளைக் கண்டுபிடித்துள்ளதுடன், இவை தொடர்பான மேலதிக ஆராய்ச்சிகளையும் மேற்கொண்டு வருகின்றனர்.

http://www.tamilmirror.lk

  • Replies 11.3k
  • Views 1.5m
  • Created
  • Last Reply
  • தொடங்கியவர்

கங்குலி, தோனி, கோலியெல்லாம் கொண்டாடலாம்... ஆனா, விதை கபில் தேவ் போட்டது! #WhyKapilIsLegend #NeverMiss

 
 

கபில் தேவ் என்ற வார்த்தையை எவரேனும் தப்பித்தவறி உச்சரித்து விட்டால், அங்கிருந்து கபில் குறித்த நினைவுகள் மலரத் தொடங்கிவிடும் என்பதற்கு சென்ற வார, ட்விட்டர் ட்ரெண்டிங் ஒரு உதாரணம்... ஏனெனில், அந்தப் பெயரின்  வசீகரம் அப்படி!

கபில் தேவ்

 

கபில் தேவ், என்றதும் பழங்கதை என்று நினைத்துவிடாதீர்கள். இன்று, புதுமை, இளமை, வேகம் என ஓடிக்கொண்டிருக்கும் T-20 என்ற வடிவத்தை முதன்முதலில் இந்தியாவில், இந்தியன் கிரிக்கெட் லீக் என ஆரம்பித்து வைத்தது கபில் தேவ்தான். இன்று எல்லா உறுப்பையும் யார் யாரோ தானம் செய்கிறார்கள். ஆனால், விதை, ஹித்தேந்திரன் என்ற இளைஞனின் இதய தானமே. அதுபோலத்தான், இன்று இந்திய கிர்க்கெட் என்பது ஒரு சாம்ராஜ்யம் போல் பரந்து விரவி இருக்கிறது எனில் அதன் முதல் சக்கரவர்த்தி, கபில் தேவ் எனும் சாமன்யன் சமரன்.

கபில் தேவ் என்ற பெயரைக் கேட்ட மாத்திரத்தில் தன் வயதை மறந்து தன்னை இளைஞனாய் பாவித்துக்கொண்டு கண்கள் விரிய, “அப்பிடியே பேக்ல ஓடிப்போய் பிடிச்சாரு பாரு, க்க்க்ளாஸ், ரிச்சட்ஸ் செத்துட்டார்” என மருகும் பெருசுகளை நீங்கள் இப்போதும் கடக்க நேரிடும். கபில் என்றால் அப்படி ஓர் வசீகரம். ஏன்?

70-கள் வாக்கில் இந்தியக் கிரிக்கெட் அணியின் வேகப்பந்து வீச்சு என்றால் என்னவென்று நினைக்கிறீர்கள்! பந்தின் சைனிங் போவதற்காக ‘சும்மா’ நாலு ஓவர் தரையில் போடுவது’ கணக்குதான் அது. அதாவது சுழல் சிங்கங்கள் கையைப் பின்னால் கட்டிக்கொண்டு காத்திருக்கும் வைபவம் மட்டுமே வேகப்பந்து வீச்சு என்பது.

மதன்லாலாவது திப்பிடி திப்பிடி எனத் தலை தெறிக்க ஓடிவந்து ஆஃப் ஸ்பின் போடுவார். மொஹிந்தர் அமர்நாத் எல்லாம் ஓடிவருகிறாரா, நடந்து வருகிறாரா என பேட்ஸ்மேன் மண்டைகாய்ந்து நிற்பார். அவர்தான் அப்படி என்றால் அவர் எறிந்த பந்து இந்தப் பக்கம் வருவதற்குள் ஒரு டீ சொல்லி சாப்பிட்டுவிடலாம் ரேஞ்சு. இதில் கொடுமை என்னவென்றால், மற்ற நாடுகள் கேலி செய்யுமே என்ற எண்ணத்தில் விக்கெட் கீப்பரும் அவ்வளவு தள்ளி நிற்பார் பாருங்கள். பந்து நாலைந்து முறை பிட்ச்சாகி கீப்பரை அடையும். பந்தைப் பொறுத்தவரை அது ஒரு ‘நீண்ட நெடும் பயணம்’ வகை.

கபில் தேவ்

இந்தியக் கிரிக்கெட்டின் ஆரம்பம் முதலே சுழல்பந்துதான் ஆதிக்கம். ஸ்ரீனிவாச வெங்கட்ராகவன் என்பவரின் கை மணிக்கட்டின் மூட்டே மொத்தமாய்ச் சுழலும் என்பார்கள். அதை உபயோகித்து சுழற்றோ சுழற்று என்று சுழலவிட்டுவிடுவார். பிஷன்சிங் பேடி ஸ்லோ மீடியம் என மெதுவான, மிக மெதுவான அடைமொழிகளைப் போட்டுக்கொண்ட பவுலர். இப்படியான ஒரு பிசுபிசுத்த வேகப்பந்து வீச்சுக் கட்டத்தில்தான் காலம் ஒரு பெயரை உச்சரித்தது, கபில்தேவ், என. அதன் பிறகு கபில்தேவின் காலகட்டம் என்றானது.

கர்சன் காவ்ரியும் கபில்தேவும் இரட்டைக்குழல் துப்பாக்கித் தோட்டாக்கள் போல் குனிந்து சீறத் தொடங்கியபோது உலகம் இந்தியப் பந்துவீச்சை நிமிர்ந்து பார்க்கத் தொடங்கியது. எழுபதுகளின் இறுதியில் அணியில் நுழைந்தவர், 80 களில் இந்தியர்களின் இதயத்தில் நுழைந்தார். ஆரம்பத்தில் சொன்னதுபோல் இன்றைய எல்லாவற்றின் முதன்முதல்களும் கபில்தேவ் சாத்தியப்படுத்தி போட்டுக்கொடுத்த பாதை. கருவேலம் முட்களை முறித்துக் குடைந்து பாதை செய்து கொடுத்துவிட்டுப் போன ஆதிகாலத்தின் அசல் நாயகன் கபில்தேவ். அந்தப் பாதையை கங்குலி அகலப்படுத்தினார் என்றால் தோனி விரிவுபடுத்தினார் என்றாகலாம்.

ஆனால், ஒரு சாமன்யன், பேசவே கூச்சப்படும், திறமையைத் தவிர காலணா கையில் இல்லாத, பின்தங்கிய கிராமத்து இளைஞன், திறமையும் முயற்சியும் இருந்தால் இந்திய அணியில் இடம்பெறலாம், அதற்கு தலைமையும் ஏற்கலாம், உலகமே வாயைப் பிளந்து அண்ணாந்து பார்த்த உலகக் கோப்பையையே தன் நாட்டுக்காக வாங்கித்தரலாம் என்ற நிகழ்வுகளுக்கு முன் முதல் உதாரணம் கபில்தேவ்.

கபில் தேவ்

கபில்தேவிற்கு முன்னர், அணியில் ஒருவர் பேட்ஸ்மேன் என்றால் அவர் பேட்ஸ்மேன்தான். அதாவது அந்த சார்வாள், அவரைக் கடந்து போகும் பந்தைப் பிடிக்கமாட்டார். கொஞ்ச தூரம் ஓடிச் சென்று பவுண்ட்ரி லைனுக்கு முன்னர் ஸ்டைலாக நின்று, பார்வையாளார்களிடம் இருந்து பந்தை வாங்கிக்கொண்டு போவார்கள். ஏனெனில், பேட்ஸ்மேன்கள் எதற்கு ஃபீல்டிங் செய்ய வேண்டும் எனும் எண்ணம்தான். போலவே, பவுலர்கள் அல்லது அப்படியாக சொல்லப்பட்டவர்கள், பவுலிங் முடிந்ததும் வீட்டிற்குப் போய்விடுவார்களோ என்ற நிலை. மணிந்தர் சிங் வரை, ஏதேனும் ஆட்டத்தில் வேறு வழி இல்லாமல் பேட்டிங்கிற்கு இறங்கும் நிலை வந்தால், ஏதோ உலகின் ஆகப்பெரிய பாவத்தை செய்யச் சொன்னதுபோன்ற முகபாவத்தில், பந்தை பார்த்து ஓடுவதும், குனிவதும் அழுவதும் என, நாங்கள் பந்துவீச்சாளர்கள் எங்களிடம் ஏன் மட்டையைத் தருகிறீர்கள் ரீதியில் நடப்பார்கள்.

இதை மாற்றியதும் கபில்தேவ்தான். ஆம். கபில்தேவ்தான் இந்தியாவின் முதல் அங்கீகரிக்கப்பட்ட ஆல் ரவுண்டர். கவாஸ்கர், வடேகர், குண்டப்பா விஸ்வநாத், கோபால் போஸ் என பேட்டிங் என்றாலே சூத்திரம் சார்ந்த ஒன்று, இப்படி வந்தால் அப்படித் தொடவேண்டும் என்ற ரீதியில் புத்தக அடிப்படையில் இருந்ததை போர்வீரனைப் போல் மாற்றிக்காட்டினார். “இருப்பா, கபில் வந்து ரெண்டு காட்டு காட்டுவான்” என ரசிகர்கள் காத்திருக்க ஆரம்பித்தார்கள். தடவும் ஆட்கள் எப்போது அவுட் ஆவார்கள் என இந்திய ரசிகர்களே விரும்ப ஆரம்பித்தார்கள்.

கபில் தேவ்

கபில் தேவை சமரன் வீரன் எனத் தொடர்ந்து குறிப்பிடக் காரணம் இருக்கிறது. ஜிம்பாபேவுடனான போட்டியில் அவர் அடித்த 175 ரன்கள் என்பது ஏன் சாதாரணமானது அல்ல எனில், மறுமுனையில் பந்தைப் பார்த்தாலே பயந்து ஓடும் மட்டைவீரர்களை வைத்துக்கொண்டு, ஆனாலும், அசராமல் களத்தில் முன் நின்று சண்டையிடும் படைத்தலைவன் போல் அன்று நின்றதே. கபில்தேவ் அடித்த ஒரே சதம் அதுதான். ஆனால் ஒரு கேப்டன், சதம் எப்படி எப்போது அடிக்க வேண்டும் என்பதன் ஒரு சோறு பதம், அந்த ஒரு சதம்.

இந்த போர்க்குணம்தான் உலகக் கோப்பையும் முதன்முதலில் நமக்குப் பெற்றுத் தந்தது. 183 ரன்களில் ஆல் அவுட் என்றதும் மேற்கிந்திய வீரர்கள் மதியமே பார்ட்டி மூடுக்குப் போய்விட்டார்களாம். இடைவேளையில் கபில்தேவ் வீரர்களிடம் பேசியது, வெறுத்துப் போய் ஊர் திரும்ப நினைத்த வீர்ரகள் முன்னர் பாபர் நிகழ்த்திய உரை போன்று இருந்திருக்கக் கூடும் என்பார்கள். பேசியதைப் போலவே, களத்திலும் செய்து காட்டினார். விவியன் ரிச்சட்ஸ் எனும் ராட்சசன் அடித்த பந்தை பின்னோக்கி ஓடிப் போய் பிடித்த கபில்தேவ் உண்மையில் கையில் பிடித்தது உலகக் கோப்பையைத்தான். ஆம், அந்தக் கேட்சை கபில் பிடித்தது மட்டுமே கோப்பைக்கான முதன்மைக் காரணம் என்பதை கிரிக்கெட் அறிந்தோர் அறிவர்.

கபில் தேவ்

கிரிக்கெட் என்பதே பேட்ஸ்மேன்களின் கேம் என்றோர் கூற்று உண்டு. அதை உடைத்த பெருமையும் கபில்தேவையே சாரும்.
இடது கையை ஒரு கத்தி போல் மார்பில் வைத்து காற்றைக் கிழித்துக்கொண்டு ஓடும் கம்பீரம், ஸ்டெம்பின் உயரத்திற்கு தாவி பந்தை ரிலீஸ் செய்யும் நேர்த்தி. விக்கெட் எடுத்ததும் அலட்டாமல் வலது கையை உதறிச் சிரிக்கும் பாங்கு என கபில்தேவை மெள்ள ஆராதிக்கத் தொடங்கினர் ரசிகர்கள்.

இன்று ஆயிரம் கோடி லட்சம் கோடி என விளம்பரங்களில் கொழிக்கிறார்கள் வீரர்கள். இதற்கும் ஆரம்பப் புள்ளி கபில்தேவின் “பாவோலிவ் கா ஜவாப் நஹி” எனும் கபிலின் கொச்சையான ஹிந்திக் குரல்தான். இன்று எத்தனையோ சாதனைகள் நிகழ்த்தப்படுகின்றன. அவற்றை போகிற போக்கில் எவரேனும் முறியடிக்கிறார்கள். ஆனால், உலகமே உற்றுப் பார்த்து கொண்டாடிய தருணம் எனில் அது கபில்தேவ் ரிச்சர்ட் ஹாட்லியின் 434 என்ற சாதனையை முறியடித்த நொடிகள்தான். கபில்தேவ் எனும் ஆளுமையின் அடர்த்தி அப்படி.

இந்திய அணிக்குள் இருந்த அத்தனை அரசியலையும் தன் சாந்தமான அணுகுமுறையால் கையாண்டு, முன்னேறினார் கபில்தேவ்.
டெட்லி காம்பினேசன் எனச் சொல்லப்படும் நிதானம், மூர்க்கம் இரண்டும் சரிவிகித்ததில் அமையப் பெற்றவர் கபில். தன்னலமற்ற, அணியின் வெற்றி என்பதை மட்டுமே இலக்காக இறுதிவரை கொண்டவர் என்பதே கபில்தேவின் சிறப்பு.

கபில் தேவ்

இந்தியப் பந்துவீச்சாளர்களாலும் பந்தை ஷார்ப்பாக ஸ்விங் செய்ய முடியும் என்று நிகழ்த்திக் காட்டியவர். எதிரணியின் ஓப்பனிங் பார்ட்னர்ஷிப்பை முதல் ஓரிரு ஓவர்களிலேயே உடைத்துவிடுபவர். கபில்தேவ் எல் பி டபுள்யூ க்ளைம் செய்தார் எனில் 99% அம்பயர் கையைத் தூக்கிவிடுவார். அவ்வளவு துல்லியம். இலக்கு நோக்கி எய்வதில் வல்லவர். ஆரம்பத்திலிருந்து இறுதிவரை தன்னை மதிக்காக வாரியம், பஞ்சாப் கிரிக்கெட் சங்கம் என அனைத்தையும் புன்சிரிப்போடு எதிர்கொண்டு வாகை சூடியவர்.

பவுலிங்கின் அத்தனை சூட்சுமங்களையும் அறிந்தவர் என்றாலும் மனோஜ் பிராபகரின் ஒரு பந்தைப் பார்த்துவிட்டு உடனே அவரிடம் ஓடிச்சென்று, ‘அந்தப் பந்தை எப்படிப் போட்ட’ என ஆர்வமாய்க் கேட்டு, பழகிக் கொண்டவர். ‘மனோஜிடம் இருந்துதான் பழைய பந்தில் ரிவர்ஸ் ஸ்விங் செய்ய கற்றுக்கொண்டேன்’  என அதைப் பதியவும் செய்தார். தன் அந்திமக் காலத்தில், தன் மீது எழுந்த அநியாயக் குற்றச் சாட்டை சுமந்து அதுகுறித்து விளக்கும்போது அவர் சிந்திய கண்ணீர், இந்திய விளையாட்டுத் துறையின் பெரும் சாபம்.

 

கபில் போன்ற வெகுளியான வெள்ளந்தி மனிதனின் வெற்றி என்பது எளிய மனிதர்களின் வெற்றி என்றே வரலாற்றில் இடம்பெறும்.
போலவே, கபில் தேவ் எனும் பெயருக்குக் கம்பீரம் என்றும் பொருள் கொள்ளப்படும்.

https://www.vikatan.com

  • தொடங்கியவர்
வரலாற்றில் இன்று: நவம்பர் 18
 

1307: சுவிட்ஸர்லாந்தைச் சேர்ந்த வில்லியம் டெல் என்பவர் தனது மகனின் தலையில் வைக்கப்பட்ட அப்பிளை துப்பாக்கியால் சுட்டார்.

1421: நெதர்லாந்தில் ஸுய்டர்ஸீ எனும் இடத்தில் கடலிலிருந்து பாதுகாப்பதற்காக கட்டப்பட்டிருந்த மதில் உடைந்ததால் 72 கிராமங்களில் கடல்நீர்புகுந்து சுமார் 10 ஆயிரம் பேர் பலி.

1493: கிறிஸ்டோபர் கொலம்பஸ் பியூர்ட்டோ ரிக்கோ தீவை முதல் தடவையாக கண்டார்.

1809: வங்காள விரிகுடாவில் கிழக்கிந்திய கம்பனியின் படைகளை பிரெஞ்சு படைகள் தோற்கடித்தன.

1903: அமெரிக்கா கனடாவில் ஆயிரக்கணக்கான இருந்த நேர வலயங்களுக்குப் பதிலாக  5 நேர வலயங்கள் ஏற்படுத்தப்பட்டன.

1905: டென்மார்க் இளவரசர் கார்ல், நோர்வேயின் 7 ஆம் ஹக்கோன் மன்னரானார்.

1918: ரஷ்யாவிலிருந்து லத்வியா சுதந்திரப் பிரகடனம் செய்தது.

1926: ஜோர்ஜ் பேர்னாட்ஸா தனத நோபல் பரிசுப் பணத்தை பெற்றுக்கொள்ள மறுத்தார்.

1943: இரண்டாம் உலக யுத்தத்தில் பேர்லின் நகர் மீது பிரிட்டனின் 440 விமானங்கள் தாக்குதல் நடத்தியதில் 131 பேர் கொல்லப்பட்டனர். பிரிட்டன் 9 pமானங்களையும் 53 படையினரையும் இழந்தது.

1945: ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ பிறந்தார்.

1947: நியூஸிலாந்தில் கடைத்தொகுதியொன்றில் தீவிபத்து ஏற்பட்டதில் 41 பேர் பலி.

1961: அமெரிக்க ஜனாதிபதி கென்னடி 18 ஆயிரம் இராணுவ ஆலோசகர்களை வியட்நாமுக்கு அனுப்பினார்.

1963: பொத்தான் இலக்கங்களை கொண்ட தொலைபேசிகள் சேவைக்கு வந்தன.

1978: கயானாவில் மதநிலையமொன்றின் அறிவுறுத்தல் காரணமாக 270 சிறார்கள் உட்பட 900 பேர் கூட்டாக தற்கொலை.

1987: லண்டனில் பாதாள ரயில் நிலையமொன்றில் ஏற்பட்ட தீ விபத்தில் 31 பேர் பலி.

http://www.tamilmirror.lk

  • தொடங்கியவர்

’ராக்கி கட்டிய அலெக்ஸாண்டர் மனைவி...தமிழக அரசியல் தயிர் சட்டி எலி!’ - பிச்சை புகினும் புத்தகம் வாசிக்கும் சுவாரஸ்ய பிச்சைக்காரர்!

 
 

எடப்பாடி பழனிசாமி  ஒ பன்னீர்செல்வம்

ப்படித்தான் ஆரம்பித்தது அவருடனான உரையாடல்... "அண்ணா இன்று காசு கொண்டுவரவில்லை; நாளை தருகிறேன்'' என்றதும், ''பரவாயில்லையம்மா. உன்னுடைய இந்தப் பேச்சு டால்ஸ்டாயை நினைவுப்படுத்துகிறது'' என்றார்... ''என்னது, டால்ஸ்டாயா? என்ன ஐயா சொல்கிறீர்கள்'' என்றேன். பேச ஆரம்பித்தார், அண்ணா சாலை சப்வேயில் பிச்சை எடுக்கும் அந்த முதியவர். இவரை பிச்சைக்காரர் என்று சொல்வதற்கு மன்னிக்கவும். அப்படித்தான் இருக்கிறது, அவருடன் பேசியது.

 

"டால்ஸ்டாய், நாள்தோறும் தான் செல்லக்கூடிய பாதையில் உள்ள ஒரு பிச்சைக்காரனுக்குப் பிச்சை போடுவாராம். ஒருநாள் அந்தப் பிச்சைக்காரனைக் கடந்துசெல்லும்போது, 'நண்பா, இன்று காசு கொண்டுவரவில்லை. நாளை தருகிறேன்' என்றாராம். அப்படித்தான் நீயும் சொல்கிறாய் அம்மா...'' என்று டால்ஸ்டாய் பற்றி சொன்னதும் அருகே சென்று அமர்ந்து அவரிடம் பேச்சுக் கொடுத்தேன் . ''டால்ஸ்டாய் பற்றி எல்லாம் பேசுகிறீர்கள்...என்ன படித்துள்ளீர்கள்?'' என்றேன். ''டால்ஸ்டாயைப் பற்றிப் படிக்க ஏட்டுக்கல்வி எதற்கு?'' என்று சிரிப்புடன் தொடர்ந்தார்.

''என் பெயர் லோகநாதன். என்னுடன் பிறந்தவர்கள் மொத்தம் எட்டுப் பேர். நான், அதிகமாகப் படித்தவன் இல்லை. எட்டாம் வகுப்புவரை மட்டுமே படித்துள்ளேன். அப்பா, ரயில்வேயில் ’ஸ்கில்டு லேபர்’ ஆகப் பணியாற்றி வந்தார். அவருடனே நானும் ஒப்பந்த ஊழியராகப் பணியாற்றினேன். அண்ணன், தம்பி, தங்கை, அக்கா என எனது சகோதரிகள் எல்லாம்  நல்ல பொறுப்புக்குச் சென்றனர். இப்படியான சூழலில் எனக்குத் திருமணம் நடந்தது.கொஞ்ச நாள் எங்கள் திருமண வாழ்வு நன்றாகப் போனது. எங்கள் வீட்டில் உள்ள மற்றவர்களுடன் ஒப்பிடுகையில், நான் வசதி குறைவான நிலையில் இருந்தேன். அதனால், என் மனைவி என்னிடமிருந்து நிரந்தரமாக விலகிச் சென்றார். எங்களுடைய குடும்பத்தில் குழப்பம் இருந்த நிலையில், தனியான வாழ்கைக்கு வந்துவிட்டேன். கிடைத்த வேலைகளை எல்லாம் செய்யத் தொடங்கினேன்.முதலில் ஐஸ் கம்பெனியில் வேலை; அதன் பின்னர், சேமியாவில் தயாராகும் உணவை விற்கும் வேலை. அந்த உணவு விற்ற பணத்துக்குப் பதிலாக பழைய புத்தகங்களை வாங்குவேன்..

அப்படி வந்த புத்தகங்களில், தலைவர்களின் புகைப்படங்களைப் பார்ப்பேன். அதன் பின்னர், நேரம் கிடைக்கும்போது அவர்களைப் பற்றி படிக்கத் தொடங்கிய பழக்கம், நாளடைவில் தீவிரமாகி விட்டது. அரைகுறையாகத் தெரியும் இந்தக் கண்களை வைத்துக்கொண்டு பேப்பரைப் படித்து உலக அரசியலைப் பற்றித் தெரிந்துகொள்கிறேன்'' என்றவரிடம், ''சரி... என்னென்ன புத்தகங்கள் படித்துள்ளீர்கள் என்று கேட்டேன். ''தலைப்பை வைத்தோ அல்லது எழுத்தாளர்களை வைத்தோ புத்தகங்களைப் படிப்பதில்லை. வரலாற்றுத் தலைவர்களையும் தற்கால அரசியல்வாதிகள் பற்றியும் படித்துள்ளேன்” என்று வரலாற்றின் நீள அகலங்களை விவரிக்கத் தொடங்கினார். 

''நெப்போலியனின் சூழ்ச்சியைக் கண்டு அதிர்ந்தேன்!''

”மாவீரன் நெப்போலியன், அலெக்ஸாண்டர், லியோ டால்ஸ்டாய் , ஹிட்லர் உள்ளிட்ட பல தலைவர்களைப் பற்றிப் படித்துள்ளேன். வரலாற்றை எடுத்துக்கொண்டால், நாம் பெர்பெஃக்ட் (perfect) என்று பெரிதும் மதிக்கக்கூடிய தலைவர்கள்  பலரும் நேர்மையானவர்கள் என்று கருதிவிட முடியாது. அதனை எழுதிய வரலாற்று ஆசிரியர்கள் அவ்வாறு திரித்துக் கூறியுள்ளார்கள். 

குறிப்பாக, ஐரோப்பிய கண்டத்தை தனது ஆளுகைக்குக் கீழ் கொண்டுவந்த நெப்போலியன், சாதாரண வீரர்தான். அவர் ஆட்சிக்கு வருவதற்கு செய்த அரசியல் சூழ்ச்சி குறித்து படித்தேன்; அதிர்ந்துபோனேன். பிரான்ஸ் பேரரசின் முக்கியப் பொறுப்பில் இருந்தவர்களைக் கைக்குள் போட்டுக்கொண்டு, காய்களை நகர்த்தி எவ்வாறு ஆட்சியைக் கவிழ்த்து எப்படிப் பேரரசர் ஆனார் என்பது குறித்து நெப்போலியனைப் பற்றி விரிவாகப் படித்தவர்களுக்குத் தெரியும் என்று நினைக்கிறேன்.

இப்படி, நெப்போலியன் என்ற ஒரு வரலாற்றுத் தலைவரை மட்டும் வைத்துக் குறிப்பிடவில்லை. பெரும்பாலான தலைவர்கள் முக்கியப் பதவிக்கு வருவதற்கு அறத்தை மீறியுள்ளவர்களாக இருந்துள்ளார்கள். இதில், ஆபிரஹாம் லிங்கனை உயர்த்திப் பிடிக்கலாம். அவர், மனிதநேயப் பண்பாளர்; அடக்குமுறையாலும் புறக்கணிப்பாலும் உழண்டவர்களுக்குக் கருணைக் கடவுளாக விளங்கியுள்ளார்.

அலெக்ஸ்சாண்டர்ராக்கி கட்டிய அலெக்ஸாண்டர் மனைவி!

அலெக்ஸாண்டரின் வீரம் பற்றியும் அறிவுக்கூர்மை பற்றியும் பெருமைபொங்க வரலாற்றுப் புத்தகங்களில் எழுதியுள்ளனர். ஆனால், அவருமே போர்களில் வெற்றியடைய அரசியல் காய்களை நகர்த்தியுள்ளார். அவருடைய அறிவுக்கூர்மைக்கு எடுத்துக்காட்டாக நீதிபதியிடமிருந்து கைதிகளைக் காப்பாற்றிய கதைப் பற்றியும், அரிஸ்டாட்டிலிடம் அவர் வைத்த வாதம் பற்றியும் குறிப்பிடத் தவறமாட்டார்கள். ஆனால், அதெல்லாம் முழுக்க உண்மை என்று சொல்ல முடியாது. 

அவர், போரஸ் மன்னனிடம் வெற்றிபெற்று அந்த மன்னனிடமே நாட்டை ஒப்படைத்ததாகப் பெருமையாகச் சொல்வார்கள். ஆனால், அது உண்மை இல்லை என்கிறது ஒரு வரலாற்று நூல். பல நாடுகளில் வெற்றியைக் கண்ட அலெக்ஸாண்டர், இந்தியாவின் மீது கவனத்தைத் திருப்புகிறார். பஞ்சாப் மன்னன் போரஸிடம் போரிட அலெக்ஸாண்டர் முடிவு செய்கிறார். அப்போது, போருக்கு  முன்னதாக ஒற்றர்களை அனுப்பி நாட்டைக் கண்காணிக்க வைக்கிறார். பஞ்சாப் வந்த ஒற்றன், நாட்டைக் கண்காணித்து அலெக்ஸாண்டரிடம் அறிக்கை கொடுக்கிறான். அதில், 'அந்த நாட்டில் ராக்கி கட்டும் பழக்கம் என்பது மிகவும் உணர்வுபூர்வமான நடக்கும் விழா. ராக்கி கட்டும் பெண்களை அந்த நாட்டு ஆண்கள் சகோதரிகளாக ஏற்க வேண்டும் என்பது பண்பாடு' என்று குறிப்பிடுகிறான். இதனைத் தொடர்ந்து, ஒரு ராக்கிக் கயிற்றை எடுத்து தன் மனைவியிடம் கொடுத்தனுப்புகிறார் அலெக்ஸாண்டர். அவரும், பஞ்சாப் சென்று போரஸ் என்ற புருஷோத்தமனுக்குக் கட்டுகிறார்.

இந்த நிகழ்வு முடிந்து சில காலம் கழித்து பஞ்சாப்மீது படையெடுக்கிறார் அலெக்ஸாண்டர். குதிரையின் மீது இருந்தவாறு வாளைச் சுழற்றுகிறார் போரஸ். அப்போது, 'நீங்கள் கையில் கட்டியிருக்கும் ராக்கிக் கயிறு என் மனைவி கட்டியது. இருந்தாலும், போரைத் தொடங்குங்கள்' என்கிறார் அலெக்ஸாண்டர். இதைக் கேட்டு வாளை அப்படியே போட்டுவிடுகிறார் போரஸ். ஆனால், புத்தகங்களில் அலெக்ஸாண்டரின் பெருமையை மேம்படுத்த... தோற்ற போரஸ் மன்னனுக்கு நாட்டைத் தந்தார் அலெக்ஸாண்டர் என்கிறார்கள். இதில் சிந்திக்க வேண்டிய விஷயம், தோற்ற மன்னனுக்கு எந்த மன்னன் நாட்டை மீண்டும் வழங்குவான்? இப்படி ஒவ்வொரு வரலாற்று ஆசிரியர்களும் ஒவ்வொரு கதையைக் கூறுகின்றனர். 

என்னதான் ஆர்வமாக வாசித்தாலும் வயதாக வயதாகப் பார்வை மங்க ஆரம்பித்தது. வேலையில் தடுமாற்றம் ஏற்பட்டது. நான் வேலை செய்த கடையில், 'வேறு இடத்தில் வேலையைப் பார்த்துக்கொள்ளுங்கள்' என்றனர். இந்த நிலையில்தான் சேப்பாக்கத்துக்கு வந்து தங்கிய நான் வருமானத்துக்காகப் பிச்சை எடுக்க ஆரம்பித்தேன்” என்றவரிடம், ''தலைவர்கள் யாரும் பெர்பெஃக்ட் இல்லை என்று சொல்கிறீர்கள்... நீங்கள் மட்டும் இப்படிக் காசு வாங்குவது பெர்பெஃக்ட்டா?'' என்று  கேள்வி எழுப்பினேன். 

 குறைத்து  மதிப்பீடாதீர்கள்....

அதற்குப் பதிலளித்த அவர், ''இப்போதைக்கு அம்பேத்கர் சொன்ன பொன்மொழிதான் எனக்கு நினைவுக்கு வருகிறது. 'வாழ்வதற்கு ஏற்றச் சூழல் ஒரு மனிதனுக்கு இல்லை என்றால், எத்தனை நாளைக்கு அவனால் உயிர்ப்போடு ஓட முடியும்?' என்னால் ஓட முடியாத நிலையில்தான் முடங்கி விட்டேன். இதிலும், நான் பெர்பெஃக்ட் ஆன மனிதனாகத்தான் இருக்கிறேன். யாரிடமும் கையேந்தி நச்சரிக்க மாட்டேன். சில நேரங்களில் பிச்சை போடுபவர்கள், கைப்பைக்குள் கையைவிட்டுக் காசைத் தேடுவார்கள். அவர்களிடம், 'பரவாயில்லை அம்மா... பஸ்ஸுக்கு நேரமாகிவிடும். நாளை வந்தால் கொடுங்கள்' என்பேன். பலரும் என்னை உறவுமுறைவைத்து அழைத்து காசு கொடுப்பார்கள். சிலர், 'சாப்பிட்டீர்களா?' என்பார்கள். அதற்கு ஈடு இணை என்ன இருக்கிறது. நான் யாருமற்றவனாக இருந்தாலும் என்னுடைய குணத்தால் இங்கும் நல்ல உறவுகளைச் சம்பாதித்துவைத்துள்ளேன்.

வாரத்தில் நான்கு நாள்கள் செய்தித்தாள்களை வாங்குகிறேன். ஒருமுறை நான் ஆங்கிலச் செய்தித்தாள் ஒன்றை வாங்கச் சென்றபோது, கடையில் இருந்த ஒரு பையன், என்னை (என் தோற்றத்தைவைத்து) ஒருமாதிரியாகப் பார்த்ததோடு, 'நீயெல்லாம் ஆங்கிலம் பேப்பர் வாங்குகிறாயா... உனக்கு ஆங்கிலம் படிக்கத் தெரியுமா?' என்று கேட்டான். அந்தப் பேப்பரை வாங்கி நான் அவனிடம் படித்துக்காட்டிய பிறகு... என்னை அவன் நிமிர்ந்துகூடப் பார்க்கவில்லை. பிறகு அவனிடம் நான், 'நாம் எங்கு இருக்கிறோம் என்பது முக்கியமல்ல... அந்த இடத்தை எப்படி அழகாக்குகிறோம் என்பதே முக்கியம்' என்று சொல்லிவிட்டு அங்கிருந்து நகர்ந்தேன் என்றவரிடம், ''சர்வதேச அரசியல்,  தத்துவமெல்லாம் பேசறிங்க தமிழக அரசியலைக் கவனிக்கறிங்களா?'' என்று சுவாரஸ்யம் பொங்கக் கேட்டேன். 

எடப்பாடி  பழனிசாமி ஒ பன்னீர்செல்வம் - அரசியல்

 ஈ.பி.எஸ், ஓ.பி.எஸ் இருவரும் தயிர்பானையில் விழுந்த எலிகள்

”தமிழக அரசியல்தானே? அது குறித்து இப்படி விவரித்தால்தான் சரியாக இருக்கும். இரண்டு எலிகள் தயிர் சட்டியில் விழுந்து விட்டன. அதில் ஓர் எலி, 'அய்யோ... நாம் அவ்வளவுதான்' என்றதாம். மற்றோர் எலி அந்த எலியின் வார்த்தையைக் காதில் வாங்காமல் வானுக்கும் பூமிக்குமாக குதித்துக் கொண்டிருந்ததாம். அதில், குதித்துக்கொண்டிருந்த எலி, உருண்டுவந்த வெண்ணெய்யில் ஏறி மேலே வந்துவிட்டதாம். மேலே ஏறிய அந்த எலிதான் எடப்பாடி பழனிசாமி. உள்ளே லாக் ஆன எலிதான் ஓ.பன்னீர்செல்வம். இதுதான் தமிழக அரசியலின் நிலை'' என்று கலாய்த்தவரிடம் விடைபெற முயன்று நூறு ரூபாயை எடுத்து நீட்டினேன்.

அதற்கு, ''நான் பேசியதற்குக் கூலியாகிவிடும், வேண்டாம்மா!'' என்று பிடிவாதமாக மறுத்துவிட்டார் லோகநாதன். உங்களை ஒரு புகைப்படம் எடுத்துக்கலாமா? என்றதும். எனக்குப் பிரச்னையில்லை. என் உறவினர்களுக்கு, இப்படிப் பிச்சைக்காரனாகப் பார்த்தால்  கவுரவ குறைச்சலாக இருக்குமே என்று சிரித்தவரை அப்படியே ஒரு ‘க்ளிக்’..

 லோகநாதன் தாத்தா

இங்கே நட்பு பாராட்ட, மனிதனைச் சக மனிதனாக நடத்த ஸ்டேடஸ் பார்க்கப்படுகிறது. இதுதான் சமூகத்தின் உறவை மேம்படுத்துவதற்கான ஆகச் சிறந்த தகுதியாக வைக்கப்படுகிறது. இங்கு, புறக்கணிப்பைப் பற்றியும் மனிதநேயத்தைப் பற்றியும் நீட்டி முழக்கும் நாம், பொருளாதாரத்தில் பின்தங்கியவர்களையும் அழுக்கான ஆடை அணிபவர்களையும் ஒதுக்கிவைத்து அவர்களுடைய உணர்வுகளை மதிக்கத் தவறிவிடுகிறோம்.

 

அடுத்தமுறை அண்ணா சாலை சப்வேயில் நடந்துசெல்லும் வாய்ப்புக் கிடைத்தால் லோகநாதனைச் சந்தித்து விடுங்கள். பிச்சைப் புகினும்  தொடர்ந்து கற்றுக்கொண்டிருக்கும் ஒரு நல்ல நட்பை நீங்கள் பெற வாய்ப்பிருக்கிறது.

https://www.vikatan.com

  • தொடங்கியவர்

நடிகர் நயன்தாரா 'தோழர் நயன்தாரா' ஆனது எப்படி..? #HBDNayanthara

 
 

"வெளிப்படைத்தன்மை ஒத்த மெய்யறிவு வேறேதுமில்லை" என்பர். நடிகர் நயன்தாரா மீது ரசனையைத் தாண்டிய ஈர்ப்பு தொற்றியதற்கு இதுவும் ஒரு முக்கியக் காரணம்.

நயன்தாரா

 

நடிப்பாற்றலை வெளிப்படுத்துவதால் எவராலும் சிறந்த நடிகர் ஆகமுடியும். ஆனால், மக்கள் நேசிக்கும் கலைஞர் ஆவதற்கு ஆற்றல் மட்டுமே போதுமானது அல்ல. மக்கள் மத்தியில் நட்சத்திர இடத்தைப் பெறுவது கடினம். அதுவும், பெண் நடிகர்களின் ரசிகர்களில் பெரும்பாலானோர் இயல்பிலேயே 'பொசசிவ்' தன்மை மிகுந்தவர்கள். அவர்கள் மனதில் ஆழமாக நீண்ட காலம் தங்குவது அரிது. அதை நடிகர் நயன்தாராவால் சாத்தியப்படுத்த முடிந்திருப்பதற்குப் பின்னால் மலைக்கத்தக்க அம்சங்கள் நிறைந்துள்ளது தெளிவு.

நடிகர் நயன்தாரா நட்சத்திர நிலையை அடைவதற்கு அடிப்படையாக இருந்த மூலதனம் என்னவோ வசீகரமும் கவர்ச்சியும்தான். ஆனால், இவற்றுடன் நடிப்பாற்றலும் அணுகுமுறையும்தான் அந்த நட்சத்திர உச்ச நிலையைத் தக்கவைத்துக்கொள்ள துணைபுரிந்திருகிறது. 

முன்னணி நடிகர்கள், இயக்குநர்கள், தயாரிப்பு நிறுவனங்களின் படங்கள் வரிசையாக வாய்ப்பு வந்தபோது, அவற்றில் தனக்குப் பிடித்தமானவற்றைத் தேர்ந்தெடுத்து நடிக்கத் தொடங்கினார். ஒட்டுமொத்தமாக மக்களுக்கு ஏதோ ஒரு வகையில் பொழுதுபோக்கவோ அல்லது ரசிக்கவோ வாய்ப்புள்ளது என்றுதான் கணித்த படங்களில், தன் பங்களிப்பு குறைவாக இருந்தபோதும் ஒப்புக்கொள்வதை வழக்கமாகக் கொண்டிருந்தார். இதுதான் திரைத்துறையின் படைப்பாளிகளுக்கும் கலைஞர்களுக்கும் இவர் மீதான மதிப்பை வெகுவாகக் கூட்டியது.

நயன்தாரா

வணிக நோக்கம் கொண்ட பொழுதுபோக்குப் படங்களுக்கு நடுவே அசல் சினிமாவிலும் அவ்வப்போது முத்திரைப் பதிப்பதில் ஈடுபாடு கொண்டதை 'ஈ', 'மாயா' முதலானவற்றைச் சுட்டிக்காட்டலாம்.

தற்போதையச் சூழலில், தமிழ் சினிமாவை வர்த்தக ரீதியில் நோக்கும்போது, ஒரு பெண் நடிகர் இடம்பெற்றுள்ளார் என்பதற்காகவே தயாரிப்பு, வெளியீடு, விநியோகம் ஆகியவற்றில் நம்பி முதலீடு செய்ய முன்வருகிறார்கள் என்றால், அது நடிகர் நயன்தாரா என்ற பெயருக்காகத்தான் இருக்கும். நட்சத்திர ஆண் நடிகர்களுக்கு மட்டுமே இதுபோன்ற நம்பகத்தன்மை மிகுதியாக உள்ள சூழலில், பெண் நடிகருக்கும் ரசிகர்களின் வரவேற்பை அடிப்படையாகக் கொண்டு முதலீட்டை நிர்ணயிக்கும் இடத்தை எட்டிவிட்டார் என்பதை 'மாயா' மூலம் அறிந்துகொள்ள முடிந்தது.

'தனி ஒருவன்', 'இருமுகன்', 'நானும் ரெளடிதான்', 'காஷ்மோரா' போன்ற ரசிகர்களின் கவனத்தை ஈர்க்கும் படங்களுக்கு நடுவே மலையாளத்தில் 'புதிய நியமம்' என்ற படைப்பை தேர்ந்தெடுத்து நடித்தது நயன்தாரா எனும் நடிகர் மீதான மதிப்பை பயங்கரமாகக் கூட்டியது. அந்த க்ரைம் த்ரில்லர் படத்தில் நயன்தாராவின் பங்களிப்பு வியக்கத்தக்கது. தமிழ் சினிமா 13 ஆண்டு காலமாக நயன்தாரா எனும் மகத்தான நடிகரை கச்சிதமாகப் பயன்படுத்தாமல் போய்விட்டதே என்ற கோபம் கொப்பளித்தது. 'மாயா'வுக்குப் பின் 'அறம்' மூலம் அவரின் நடிப்புத் தரத்தை தமிழ் சினிமா கண்டுணரும் வாய்ப்பு ஏற்பட்டதில் அந்தக் கோபம் தணிந்தது.

நயன்தாரா

நிழலில் நயன்தாரா மீதான ஈர்ப்பு நிரம்பி வழிந்த சூழலில், நிஜத்தை நோக்கி நகர ஆரம்பித்தபோதுதான் அவரது தோழமை மனப்பான்மையை முற்றிலும் புரிந்துகொள்ள முடிந்தது. ஆம், தோழர் நயன்தாரா மீதான ஈடுபாடு உயர்ந்தது. தன் துறைசார்ந்த பணிகளில் அவருக்கு இருக்கும் ஈடுபாடு அர்ப்பணிப்பு நிறைந்தது. இயக்குநர் 'ப்ரேக்' சொன்னால் மட்டுமே கேரவனுக்குள் நுழையும் பழக்கம் உள்ளவர். அதுவரை தனக்கான காட்சி இல்லாதபோதும், படப்பிடிப்புத் தளத்தில் இயக்குநரின் பார்வைக்கு முன்தான் இருப்பார். இயக்குநர் நினைத்த மாத்திரத்தில் கேமரா முன்பு தன்னை நிறுத்திக்கொள்ளலாம் என்ற ஆர்வம் அது. காலதாமதம் என்பது நயன்தாராவின் அகராதியில் கால் நுழைக்காத ஒன்று. ஒருநாள் சென்னையில் இரவு 10 மணி வரை படப்பிடிப்பு. அடுத்த நாள் காலையில் கும்பகோணத்தில் வேறொரு படப்படிப்பு. அந்த இரவில் காரில் விரைந்தவர், அதிகாலை 7 மணிக்கு முதல் ஆளாகப் படப்பிடிப்பில் தயாராக இருந்தார். வேறென்ன சொல்ல!

தன்னால் துடைக்கத்தக்க துயர்பற்றி கேட்டறிந்தால் சத்தமின்றி செய்துவிடுவதிலும் பேரன்புத் தோழமை மிக்கவர். நட்சத்திர கலைஞர்களாக இருப்பவர்கள் பொருளுதவிகள் சார்ந்த சேவையை அளிப்பதும், அதுதொடர்பான செய்திகள் வெளியாவதும் 'க்ளிஷே' ஆகிவிட்டதுதான். ஆனால், சம்பந்தப்பட்டவர்களின் பிரைவசி கருதி, தன்னால் உதவி பெறுபவர்களின் விவரம் வெளியில் தெரியக் கூடாது என்பதில் கவனத்துடன் இருப்பவர் என்பதால், அவரது உதவிப் பட்டியலையும் இங்கே வெளியிடாமல் விட்டுவிடுகிறேன். ஆனால், அன்போடு கூடிய தோழமை உள்ளம் நிறைந்தவரின் நற்பணிகளைப் பொதுவாகவேனும் பதிவு செய்யாமல் இருக்க முடியவில்லை என்பதால்தான் இந்த பாரா.

இயக்குநர் கோபி நயினார் கதை சொன்னது தொடங்கி 'அறம்' ப்ரொமோஷன்களில் நயன்தாரா தீவிரம் காட்டியது வரை நம்மில் பலரும் அறிந்ததே. மக்கள்மீது அக்கறை கொண்ட தோழமைக்காக தன் கொள்கைகளுக்கு ஓய்வளிக்கத் தயக்கம் காட்டுவது இல்லை என்பது இதன் மூலம் தெளிவு கிடைக்கிறது. இயக்குநர் கோபி நயினார் கடந்து வந்த பாதையை அறிந்துகொண்ட நயன்தாரா, தமிழ் சினிமா படைப்புத்தளத்தில் அவருக்கு உரிய இடத்தைப் பெற்றுத் தருவது தனது விருப்பம் என்று தாமே முன்வந்து 'அறம்' மக்களைச் சென்றடையவும், வெற்றி பெறவும் தன்னால் இயன்ற அனைத்தையும் செய்திருக்கிறார்.

நயன்தாரா

'டோரா' குறிப்பிடத்தக்க வர்த்தக வெற்றி பெறாத காரணத்தால், 'அறம்' படத்துக்கு மறைமுக நெருக்குதல்கள் தோன்றின. ஆனால், இயக்குநர் கோபி நினைத்தபடி 'அறம்' வெளிவர வேண்டும். அப்படத்தில் எவ்வித சமரசத்துக்கும் இடமில்லை என்று தெளிவுடனும் உறுதியுடனும் இருந்தார். சரியான தருணம் அமையும் வரை நம்பிக்கையூட்டவும் தவறவில்லை.

'அறம்' பட டைட்டில் கார்டில் இயக்குநர் விக்னேஷ் சிவனுக்கு நன்றி தெரிவிக்கப்பட்டிருப்பதைக் கவனத்திருப்பீர்கள். 'அறம்' நேர்த்தியாக வெளிவருவதற்கு தன் உறுதுணைத் தோழரிடமும் உறுதுணைப் பெறத் தயங்கவில்லை தோழர் நயன்தாரா. அதேபோல், இயக்குநர் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் 'நானும் ரெளடிதான்' படம் எவ்வித நெருக்கடியுமின்றி வெளிவருவதற்கு நயன்தாரா உறுதுணையாக இருந்திருக்கிறார் என்ற தகவலையும் கேட்டறிந்ததுண்டு.

 

தங்களுக்குப் பிடித்த நட்சத்திரங்கள் மீது எல்லையற்றை நேசத்தைக் கொட்டுவதில் தமிழ் சினிமா ரசிகர்களுக்கு நிகர் அவர்களே. 12 ஆண்டு காலமாக ரசிகர்கள் எண்ணிக்கை நாளுக்கு நாள் கூடிக்கொண்டே வருவதற்கு நயன்தாராவின் தோழமை மிக்க வெளிப்படையானதும் உண்மையானதுமான அணுகுமுறைதான் என்பதில் துளியும் ஐயமில்லை. தனி வாழ்க்கையில் கடைப்பிடிக்கும் நேர்மையும் வெளிப்படைத்தன்மையும் தங்கள்மீது கொண்டுள்ள நம்பிக்கையின் அடையாளமாகவே ரசிகர்கள் பார்க்கிறார்கள் என்று நம்புகிறேன். திரைத்துறையில் மட்டுமன்றி சொந்த வாழ்க்கையிலும் தன்னளவில் நூறு சதவீத உண்மையான பேரன்புடன் இருப்பதை ரசிகர்கள் கவனிக்காமல் இல்லை. அந்தப் பேரன்புதான் ரசிகர்களை 'தோழர்' என நடிகர் நயன்தாராவை நேசத்துடன் விளிக்கவைக்கிறது.

https://cinema.vikatan.com

  • தொடங்கியவர்

ஓராண்டு விண்வெளியில் கழித்த மனித உடலுக்கு என்ன நடக்கும்?

ஈர்ப்பு விசை இல்லாத வெற்றிட நிலையில் ஓராண்டு விண்வெளியில் கழித்த மனித உடலுக்கு என்ன நடக்கும்? என்ற ஆய்வின் விபரங்களை காட்டும் காணொளி.

  • தொடங்கியவர்

‘டான்ஸ் டாக்டர்!’ உலக அழகிப் போட்டியின் இந்திய அழகியிடம் என்ன விசேஷம்? #MissWorld2017

உலக அழகி போட்டியாளர் மனுஷி

2017-ம் ஆண்டுக்கான உலக அழகிப் போட்டி இன்று (சனிக்கிழமை) இரவு சீனாவில் நடைபெறவுள்ளது. பல்வேறு நாடுகளைச் சேர்ந்த 108 அழகிகள் கலந்துகொள்ளும் இந்தப் பிரமாண்ட அழகிப் போட்டியில், இந்தியா சார்பாக ஹரியானாவைச் சேர்ந்த 21 வயது மருத்துவ மாணவி மனுஷி சில்லர் (Manushi Chillar) கலந்துகொள்கிறார். இந்த ஆண்டு தொடக்கத்தில் நடந்த “மிஸ் இந்தியா 2017” போட்டியில், 29 மாநிலங்களைச் சேர்ந்த அழகிகளை வென்று, பட்டத்தைத் தட்டிச் சென்றார். இதையடுத்து,  உலக அழகிப் போட்டியில் இந்தியா சார்பாக கலந்துகொள்ளவிருக்கும் அழகியாக இவர்  தேர்ந்தெடுக்கப்பட்டார்.

 

மனுஷி சில்லரின் அப்பா மித்ரா பாசு சில்லரும், அம்மா நீலம் சில்லரும் மருத்துவர்கள். டெல்லி செயின்ட் தாமஸ் பள்ளியில் பள்ளிப்படிப்பை முடிந்த இந்த அழகி, இதய அறுவை சிகிச்சை நிபுணராக வேண்டும் என மருத்துவப் படிப்பைத் தேர்ந்தெடுத்தார். ஹரியானாவிலுள்ள பகத் பூல் சிங் மருத்துவக் கல்லூரியில் தற்போது படித்துவருகிறார். ஆனால், உலக அழகிப் போட்டியில் கலந்துகொள்ளும் ஆர்வத்தில், ஒரு ஆண்டு படிப்பை தற்காலிகமாக நிறுத்தியிருக்கிறார். இவர் ஒரு தேர்ந்த குச்சிபுடி நடனக் கலைஞரும்கூட. அவ்வப்போது ஓவியமும் வரைவதும் பிடிக்கும்! விடுமுறை நாள்களில், பாரா கிளைட்டிங், ஸ்குபா டைவிங், பங்கி ஜம்பிங் போன்ற சாகச விளையாட்டுகளில் நேரம் கழிப்பது இவருக்கு மிகவும் பிடிக்குமாம்! இவருடைய ஃபிட்னெஸ் சீக்ரெட்டும் இதுவே. தினமும் யோகா பயிற்சி, எட்டு மணி நேரம் தூக்கம், தூங்குவதற்கு இரண்டு மணிநேரம்முன் செல்போன் பயன்படுத்தாமல் இருப்பது, ஒரு நாளுக்கு மூன்று லிட்டர் தண்ணீர் குடிப்பதுதான் மனுஷியின் ஃபீட்னஸ் சீக்ரெட்ஸ்!

Manushi Chhillar

காலையில் எழுந்ததும் கொஞ்சம் எலுமிச்சைச் சாறுடன் தண்ணீர் குடிப்பார். காலைச் சிற்றுண்டியாக பழங்கள் அல்லது ஒட்ஸ் கஞ்சி சாப்பிடுவார். மதிய உணவுக்கு ஒரு கப் சாதத்துடன் கேரட், பீட்ருட் போன்ற காய்கறிகள், மாலை சிற்றுண்டியாக பழச்சாறுகள், டின்னருக்கு சிக்கன்/வெஜிடபிள் சூப், கொஞ்சம் புலாவ் வகை உணவுகள் - இது மனுஷியின் டயட் பிளான்!

இந்த அழகிப் போட்டியில் கலந்துகொள்வது பற்றி கூறுகையில், “என்னுடைய சிறுவயதிலிருந்தே இந்தப் போட்டியில் கலந்துகொள்ளவேண்டும் என்று விருப்பம் இருந்தது. உலக அழகிப் போட்டியில் பட்டம் வெல்வது என்னுடைய கனவு மட்டுமல்ல. என் பெற்றோர், நண்பர்களின் கனவும்கூட. இந்தப் போட்டியின் முடிவு எப்படி இருந்தாலும், நான் இந்தப் பயணத்தில் நிறையக் கற்றுக்கொள்ளவிருக்கிறேன். என்னுடைய பள்ளிப் படிப்பை டெல்லியில் படித்ததும் எனக்கு மிகவும் உதவியாக இருந்தது. டெல்லியில் இருக்கும் பெண்கள் மிகவும் தன்னம்பிக்கையாகவும், தைரியமாகவும் இருக்கிறார்கள். டெல்லி பெண்களிடமிருந்துதான் நான் இதைக் கற்றுக்கொண்டேன்’ என்று ஒரு பேட்டியில் கூறியிருக்கிறார். 

உலகப் போட்டியில் ஒரு பகுதியாக, "பியூட்டி வித் எ பர்பஸ்” (beauty with a purpose) என்ற தலைப்பில் தன்னார்வல புராஜெக்ட் ஒன்றைச் செய்யவேண்டும். இதற்காக, மனுஷி எடுத்துக்கொண்ட தலைப்பு, மாதவிடாய் காலத்தில் சுகாதாரம் பற்றி கிட்டதட்ட 20 கிராமங்களுக்குச் சென்று, விழிப்பு உணர்வு பிரசாரம் செய்தார். 

 

தற்போது, உலக அழகிப் போட்டியில் முதல் 40 இடங்களில் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறார் மனுஷி! கடைசியாக கடந்த 2000-ம் ஆண்டு பிரியங்கா சோப்ரா உலக அழகிப் பட்டத்தை வென்ற இந்தியப் பெண் என்கிற பெருமைக்கு உள்ளானார். 17 வருடங்கள் கழித்து, மனுஷி சில்லர் இந்த வரலாற்றை மீண்டும் எழுதுவாரா என்பதைப் பொறுத்திருந்து பார்ப்போம்!

https://www.vikatan.com

  • தொடங்கியவர்

டென்னிஸ் உலகில் முடிசூடா ராணிக்கு திருமணம்

 

டென்னிஸ் உலகில் முடிசூடா ராணியாக விளங்கும் செரீனா வில்லியம்ஸ் அவரது காதலரான அலெக்ஸிஸ் ஒஹானியனை நேற்று திருமணம் செய்து கொண்டுள்ளார்.

online_New_Slide.jpg

கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் செரீனா, அமெரிக்காவின் பிரபல சமூக ஊடக நிறுவனமான ரெட்டிட் நிறுவனத்தின் துணை நிறுவனரான அலெக்சிஸ் ஒஹானியனுடன் தனக்கு நிச்சயம் செய்யப்பட்டதாக அறிவித்தார்.

இதனைத் தொடர்ந்து சேர்ந்து வாழ்ந்துவந்த இவர்களுக்கு கடந்த செப்டம்பர் 1ஆம் திகதி பெண் குழந்தை பிறந்தது.

இந் நிலையில்  இவர்களது திருமணம் நேற்று நியூ ஓர்லன்ஸில் நடைபெற்றது. இத்திருமணத்தில் செரினா மற்றும் அலெக்ஸின் நெருங்கிய உறவுகள் மற்றும் நண்பர்கள் மட்டும் கலந்து கொண்டனர்.

http://www.virakesari.lk/

  • தொடங்கியவர்

பூமி என்னும் சொர்க்கம் 19: பூமியின் காந்தப் புலம்

 

15CHSUJEARTH3
15CHSUJEARTH1
15CHSUJEARTH3
15CHSUJEARTH1

காந்தக் கட்டை (magnet) பற்றி நீங்கள் படித்திருக்கலாம். காந்தக் கட்டையைச் சுற்றிக் காந்தப் புலம் இருக்கும். பூமியின் மையத்தில் ராட்சத காந்தக் கட்டை இருந்தால் எப்படி இருக்கும்? அது மாதிரி பூமிக்கும் காந்தப் புலம் உள்ளது. பூமியின் இந்தக் காந்தப் புலம்தான் பூமியில் உள்ள உயிரினத்தைக் காப்பாற்றிவருகிறது. இந்தக் காந்தப் புலம் பூமியைச் சுற்றி அமைந்துள்ளது. இதை நம்மால் பார்க்க முடியாது. ஆனால் நுட்பமான கருவிகள் மூலம் பூமியின் காந்தப் புலத்தை அறியமுடியும். பூமியின் இந்தக் காந்தப் புலம் நமக்கு எப்படி உதவுகிறது?

   

பூமியிலிருந்து சுமார் 15 கோடி கிலோ மீட்டர் தொலைவில் உள்ள சூரியனிலிருந்து ஓயாது ஆற்றல் மிக்கத் துகள்கள் வெளிப்பட்டுக் கொண்டிருக்கின்றன. இவற்றுக்கு ஆங்கிலத்தில் Solar Wind என்று பெயர். தமிழில் இதைச் சூரியக் காற்று என்று சொல்ல முடியாது. ஏனெனில் உண்மையில் இது காற்று அல்ல. ஆனால் எப்படியோ இந்தத் துகள்களுக்கு விஞ்ஞானிகள் ’சூரியக் காற்று’ என்று பொருள்படும்படியாக ஒரு பொருத்தமில்லாத பெயரை வைத்து விட்டனர். சூரியத் துகள் வீச்சு என்று சொன்னால் பொருத்தமாக இருக்கும்.

15CHSUJEARTH
 

சூரியத் துகள்கள் சூரியனிலிருந்து நாலாபுறங்களிலும் மணிக்கு சுமார் 14 லட்சம் கிலோ மீட்டர் வேகத்தில் பாய்ந்து கொண்டிருக்கின்றன. இந்தத் துகள்களின் அளவும் வேகமும் மாறுபடுவது உண்டு. சூரிய மண்டலத்தில் உள்ள கிரகங்களை இந்தத் துகள்கள் தாக்குகின்றன.

பூமியைச் சுற்றி உள்ள காந்தப் புலமானது இந்தத் துகள்களைத் தடுத்து விடுகின்றன. இவை பூமியில் உள்ள உயிரினங்களைத் தாக்குமானால் கடும் பாதிப்பு ஏற்படும். விண்வெளியிலிருந்து காஸ்மிக் கதிர்களும் வருகின்றன. இவையும் உயிரினத்தைப் பாதிக்கக்கூடியவையே. பூமியின் காந்த மண்டலமும் காற்று மண்டலமும் சேர்ந்து காஸ்மிக் கதிர்களைத் தடுத்துவிடுகின்றன,

பூமி எப்படிக் காந்தப் புலத்தைப் பெற்றிருக்கிறது? பூமியின் மையத்தில் மிகுந்த வெப்பத்தில் ஏராளமான இரும்பு உள்ளது. கடும் அழுத்தம் காரணமாக இது குழம்பு வடிவில் இன்றி, கெட்டியாக உள்ளது. அதைச் சுற்றி இரும்பு, நிக்கல் மற்றும் பல உலோகங்களால் ஆன நெருப்புக் குழம்பு உள்ளது. இது மையத்தில் உள்ள கெட்டி இரும்பைச் சுற்றிச் சுற்றிவருகிறது. இதன் விளைவாகவே பூமிக்குக் காந்தப் புலம் உள்ளதாக விஞ்ஞானிகள் கருதுகின்றனர்.

15CHSUJEARTH2
 

நதியின் நீரானது நதியின் நடுவே உள்ள தீவைத் தாண்டும்போது இரண்டாகப் பிரிந்து செல்வதைப்போல, சூரியத் துகள்கள் பூமியின் காந்தப் புலத்தைத் தாண்டும்போது பக்கவாட்டில் பிரிந்து சென்று விடுகின்றன. இப்படித் தாண்டியதும் அவற்றில் சில துகள்கள் பூமியின் வட, தென் துருவ முனைகளை நோக்கி வருகின்றன. இதன் விளைவாக துருவப் பகுதிக்கு மேலே வண்ண வான் ஒளிகள் தெரிகின்றன. வட துருவத்துக்கு மேலே தெரியும் இந்த ஒளியை அரோரா பொரியாலிஸ் (Aurora Borealis) என்று அழைக்கின்றனர்.

தென் துருவப் பகுதிக்கு மேலேயும் இப்படி அதிசய ஒளி தெரியும். ஆனால் வட துருவ ஒளிதான் பார்ப்பதற்கு மிக அழகாகத் தெரியும். துருவப் பகுதிகளுக்கு மேலே காற்று மண்டலத்தின் உயரே உள்ள அணுக்கள் மீது சூரியத் துகள்கள் மோதும் போது ஏற்படும் விளைவுகளால் இந்த ஒளிகள் தோன்றுகின்றன.

பூமியுடன் ஒப்பிட்டால் செவ்வாய் கிரகத்துக்கு காந்தப் புலம் கிடையாது. இதன் விளைவாக சூரியத் துகள்கள் செவ்வாய் கிரகத்தின் மெலிந்த காற்று மண்டலத்துடன் நேரடியாக மோதுகின்றன. இதனால் செவ்வாய் கிரகம் தனது காற்று மண்டலத்தைக் கொஞ்சம் கொஞ்சமாக இழந்துவருகிறது. செவ்வாய் கிரகத்துக்கு அமெரிக்காவின் நாஸா அனுப்பிய ‘மாவென்’ என்னும் பெயர் கொண்ட விண்கலம் இதை அண்மையில் உறுதிப்படுத்தியுள்ளது.

15CHSUJEARTH4

பல கோடி ஆண்டுகளுக்கு முன்னர் செவ்வாய் கிரகம் அடர்த்தியான காற்று மண்டலத்தைப் பெற்றிருக்க வேண்டும். சூரியத் துகள்களின் தாக்குதலால் அந்தக் காற்று மண்டலம் அடர்த்தியை இழந்திருக்க வேண்டும் என்றும் விஞ்ஞானிகள் கருதுகின்றனர். செவ்வாயின் காற்று மண்டலம் அடர்த்தியாக இருந்த காலத்தில் செவ்வாயில் நதிகள் பெருக்கெடுத்து ஓடியிருக்க வேண்டும் என்றும் சொல்கிறார்கள். செவ்வாயில் இன்று தண்ணீர் இல்லை. ஆனால் நதிகள் பெருக்கெடுத்து ஓடியதற்கான தடங்கள் மட்டும் இருக்கின்றன.

பூமிக்கு உள்ளதைப் போலவே செவ்வாயிலும் அதன் மையத்தில் இரும்புக் குழம்பு இருந்திருக்க வேண்டும். ஆனால் பூமியைவிட வடிவில் சிறியதான செவ்வாய் கிரகத்தின் மையத்தில் இருந்த இரும்புக் குழம்பு ஏதோ ஒரு கால கட்டத்தில் ஆறிப் போனதால் காந்தப் புலம் இல்லாமல் போய்விட்டது. எனவே அது கொஞ்ச நஞ்ச காற்று மண்டலத்தையும் இழந்துவருகிறது.

http://tamil.thehindu.com

  • தொடங்கியவர்

 

பவளப் பாறைகளை வட்டமிடும் மீன்கள் கூட்டம் - 360 டிகிரி காணொளி

பிபிசி எர்த் மற்றும் அலூசியா புரொடக்ஷன்ஸ் புளூ பிளானட் தொடருக்காக போர்னியோ தீவுக்கு அருகே எடுத்த ஆழ்கடல் பகுதியில் உள்ள பவளப் பாறைகளின் பிரத்யேக காணொளி. கடல் பரப்பில் 1% மட்டுமே அமைந்துள்ள பவளப் பாறைகள், 25% கடல் வாழ் உயிரிகளின் இனங்களுக்கு வாழ்விடமாக உள்ளன.

  • தொடங்கியவர்

காந்தியிடம் வட்டி வாங்க மறுத்த வ.உ.சி! - வ.உ.சி. நினைவு தின பகிர்வு

 

வ.உ.சி.

“நாம் எல்லோரும் பலமாக மூச்சுவிட்டால் போதுமே... அம்மூச்சுக் காற்றில் பறந்துபோகாதா வெள்ளையர் ஆதிக்கம்” என்று ஆங்கிலேயருக்கு எதிராகக் குரல்கொடுத்தவர் வ.உ.சி என்கிற சிதம்பரனார். அவருடைய நினைவு தினம் இன்று. 

 

மேடைப் பேச்சுகள்மூலம் நாட்டின் விடுதலைக்கு வித்திட்ட வ.உ.சி. குறுகிய காலத்திலேயே இந்தியா முழுவதும் பிரபலமானார். ஒருசமயம், காங்கிரஸ் மாநாட்டில் கலந்துகொள்வதற்காக 1907-ம் ஆண்டு சூரத் நகருக்குச் சென்றார். அங்கு, தென்னிந்திய பிரதிநிதிகள் தங்கியிருந்த இடத்துக்கு நேரே சென்ற மகான் அரவிந்தர், “எங்கே என் மிஸ்டர் பிள்ளை” எனக் கேட்டு வ.உ.சி-யிடம் நலம் விசாரித்தாராம். 

மாலையிட்டு மரியாதை செய்த மக்கள்!

ஒருமுறை 1919-ம் ஆண்டு அமிர்தசரஸ் நகரில் நடைபெறவிருந்த காங்கிரஸ் மகாசபைக்குச் செல்ல வ.உ.சி-க்கு ஆசை ஏற்பட்டது. அவரிடம் கையில் சுத்தமாகப் பணம் இல்லை. இதையறிந்த ஈ.வெ.ரா., வ.உ.சி-க்கு ரயிலில் முதல் வகுப்பு டிக்கெட் எடுத்துக் கொடுக்கச் சொல்லி தண்டபாணியாரிடம் பணத்தைக் கொடுத்திருக்கிறார்.  வ.உ.சி-யை மனதில் எண்ணிய தண்டபாணியாரோ, பெரியார் கொடுத்த பணத்தில் மூன்றாம் வகுப்புப் பயணச்சீட்டை எடுத்துக்கொடுத்து... மீதிப்பணத்தைத் திரும்பி வருவதற்காக வ.உ.சி-யிடம் கொடுத்துவிட்டார். இதுபற்றிப் பெரியாரிடமும் ஏதோ சொல்லி தண்டபாணியார் சமாளித்துவிட்டார். பூனா நகர் ரயில் நிலையத்தில் வ.உ.சி-யை வரவேற்க மக்கள் கூட்டம் மாலை மரியாதைகளுடன் குழுமியிருந்தது. அந்த ரயிலில் முதல் மற்றும் இரண்டாம் வகுப்புகளில் பயணம் செய்த தலைவர்கள், தமக்குத்தான் மாலை மரியாதை என்று நினைத்துத் தலைகளை வெளியே நீட்டியபடி இறங்கினர். ஆனால், மக்களோ... மூன்றாம் வகுப்புப் பெட்டியில் அமர்ந்திருந்த வ.உ.சி-யைத் தேடிப் பிடித்து ‘ஜே’ என்று கோஷமிட்டு... மாலையிட்டு மரியாதை செய்து அவரையே திக்குமுக்காடச் செய்துவிட்டனராம்.

வ உ சி

“ஆளப்பிறந்த மக்கள் அடிமைகளா வாழ்வதா?”

வெள்ளையர்களை விரட்டுவதற்காகச் சுதேசிக் கப்பல் கம்பெனியை ஆரம்பித்தார் வ.உ.சி. அந்தக் கப்பலின் வருகையால் அதிர்ந்துபோன ஆங்கிலேய அரசாங்கம், அந்தக் கப்பலுக்கு எதிராகப் பல சதிவேலைகளில் ஈடுபட்டது. “நான் ஆரம்பித்த இந்தக் கம்பெனி, வியாபாரக் கம்பெனி மட்டுமல்ல... மூட்டை முடிச்சுகளுடன் வெள்ளையர்களை இந்நாட்டைவிட்டு வெளியேற்றுவதற்கே இக்கப்பல்” என்று முழங்கினார். இதைக் கேட்ட அவரது நண்பர் சுப்பிரமணிய சிவாவோ, “மூட்டை முடிச்சுகளுடன் போவானேன்; அவற்றை இங்கேயே போட்டுவிட்டுப் போகட்டும். இந்நாட்டில் சுரண்டிச் சேர்த்த மூட்டைகள்தானே” என்று கூடவே சீறினார். 

இப்படி, வ.உ.சி. சுதேசிக் கப்பல் மக்களை அரசியல்படுத்தியதுடன், ஆங்கிலேய அரசுக்கு எதிரான போராட்ட உணர்வையும் அதிகரிக்கச் செய்தது. “ஆளப்பிறந்த மக்கள் அடிமைகளா வாழ்வதா... பண்டம் விற்க வந்த வணிகக் கூட்டம் பாரத நாட்டை ஆள்வதென்றால், அதை நாம் பார்த்திருப்பதா. முப்பது கோடி மக்களை, ஆறாயிரம் மைல்களுக்கு அப்பாலிருந்து வந்த ஐந்து லட்சம் ஆங்கிலேயர்கள் ஆள்வதென்றால், இதைவிட அவமானம் வேறென்ன இருக்க முடியும்” என்கிற அனல்மிக்க வார்த்தைகள் மூலம் மக்களிடம் விடுதலை உணர்வை வளர்த்தார் வ.உ.சி. 

“சதையைத் துண்டாக வெட்டினாலும் முடிவு மாறாது!

“பேச்சுரிமை உண்டு; ‘தாய் நாடு வாழ்க’ என்று முழக்கமிடுவது குற்றமா... எங்கள் நாட்டு வாணிகம் வளம்பெற கப்பல் ஓட்டுவது குற்றமா... நாங்கள் முப்பது கோடி மக்களும் ஒன்றுபட்டு உங்களை எதிர்ப்பது என்ற முடிவுக்கு வந்துவிட்டோம். இனியும், அடக்குமுறைகளால் ஆள்வது ஆகாத காரியம். சுட்டுக்கொல்வது அல்ல... சதையைத் துண்டுதுண்டாக வெட்டியெடுத்து வேதனைப்படுத்தினாலும் எங்கள் முடிவு மாறாது. இதயத்தே வளரும் சுதந்திரப் பற்றும் மாயாது. இது உறுதி” என்று அப்போதைய ஆங்கிலேய அரசின் மாவட்ட ஆட்சியருக்கு எதிராகவும் முழங்கினார். இதனால் கடும் சினமடைந்த மாவட்ட ஆட்சியர், “திருநெல்வேலியைவிட்டு உடனே வெளியேற வேண்டும். அரசியல் போராட்டத்தில் ஈடுபடக் கூடாது” என வ.உ.சி-யை எச்சரித்தார். அதற்கு ஒப்புக்கொள்ளாததால், வ.உ.சி. கைதுசெய்யப்பட்டார். 

ஆங்கிலேய அரசை நிந்தனைப்படுத்திப் பேசியதற்காகவும், சுப்பிரமணிய சிவாவுக்கு உதவியதற்காகவும் காவல் துறையினர் வ.உ.சி. மீது வழக்குப் பதிந்து விசாரணை நடத்தினர். தீர்ப்பில், அவருக்கு நாற்பதாண்டுக் கடுங்காவல் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டதுடன், “பெரிய ராஜத் துரோகி... அவரது எலும்புகூட ராஜ விசுவாசத்துக்கு விரோதமானது. சுப்பிரமணிய சிவா, அவரது கையில் அகப்பட்ட ஒரு கோல். திருநெல்வேலி கலவரத்துக்கு இவர்கள்தான் காரணம்” என்றும் சொல்லப்பட்டது.

வ.உ.சி.காந்தியடிகளுக்கு எழுதிய கடிதம்! 

இந்தியாவின் விடுதலைக்கு வித்திட்ட அவருக்கு, ஆங்கிலேய அரசு கொடுத்த துயரங்கள் கொஞ்சம்நஞ்சமல்ல. மனதாலும், உடலாலும் பாதிக்கப்பட்ட அவரை, வறுமையும் வேறு குடிகொண்டிருந்தது. அதுபோன்ற காலகட்டத்தில் அவர், காந்தியடிகளுக்கு ஒரு கடிதம் எழுதுகிறார். அதில், “கடந்த இரண்டாண்டுக் காலமாக தென் ஆப்பிரிக்கா நண்பர்கள் தயவே என் குடும்பத்தைக் காத்து வருகிறது. எனக்குத் தரப்பட்ட பணத்தை நான் வேண்டாம் என்று சொல்ல எக்காரணமும் இல்லை. இப்போதிருக்கும் நிலையில், அந்தப் பணம் வேண்டாம் என்று சொல்வேனானால், அது எனக்கும் என் குடும்பத்துக்கும் நான் இழைத்த தவறாகும்” என்று எழுதியுள்ளார். 

வ.உ.சி-க்கு உதவுவதற்காகத் தென் ஆப்பிரிக்காவில் வசித்த வேதியப்பார் என்பவர், 5,000 ரூபாய் வசூலித்து காந்தியடிகள் மூலம் கொடுத்துயனுப்பியிருக்கிறார். அதை காந்திஜி, அரசியல் காரணங்களால் மறந்துபோய்விட்டார். பின்னர், கடும் அலைச்சல்களுக்கிடையே எட்டு வருடங்கள் கழித்து வட்டியுடன் அந்தப் பணத்தைப் பெற்றுக்கொள்ளுமாறு வ.உ.சி-யிடம் காந்தியடிகள் வேண்டியிருக்கிறார். அதற்கு அவர், “அவர்கள் அனுப்பிய பணத்தை மட்டும் கொடுத்தால் போதும்... அதற்கு வட்டி எல்லாம் வேண்டாம்” என்றாராம்.

 

இப்படித் தன் கஷ்டத்தைப் பற்றியெல்லாம் கவலைப்படாமல், இந்தியாவின் விடுதலைக்காகக் கடைசிவரை உழைத்துத் தன்னுயிரையே நீத்த வ.உ.சி., “என்னைச் சிறையிலடைத்துத் துன்புறுத்தியவர்கள் முன்னால் நான் சுதந்திர இந்தியாவில் வாழ முடியவில்லையே” என்று கூறி வருத்தப்பட்டாராம்.

https://www.vikatan.com

  • தொடங்கியவர்

20 விநாடிக்காக மன்னிப்புக்கேட்ட ஜப்பான் ரயில்வே!

 
 

ப்பானில், 20 விநாடிகள் முன்னதாக ரயில் கிளம்பியதற்காக ரயில்வே நிர்வாகம் மன்னிப்பு கேட்டுள்ளது. 

ஜப்பான் ரயில்

 

ஜப்பான் மக்கள், நேரம் தவறாமையைக் கடைபிடிப்பதில் உலகத்துக்கே முன்னோடியாகத் திகழ்பவர்கள். விழாக்கள், நிகழ்ச்சிகள், குறித்த நேரத்தில் தொடங்கும். பேருந்து, ரயில் போன்ற பொதுமக்கள் சாதனங்கள், ஒரு விநாடிகூட தாமதிக்காமல் சென்று வருபவை. 

உலகின் மிகப் பெரிய நகரமும் அதிக ஜனத்தொகைகொண்ட டோக்கியோ நகரத்தின் முதுகெலும்பு, ரயில் போக்குவரத்துதான். தினமும் லட்சக்கணக்கான ஜப்பானியர்கள் ரயில்களில்தான் அலுவலகங்களுக்குச் செல்கின்றனர். அதுபோல, நாட்டின் முக்கிய நகரங்களைப் புல்லட் ரயில்கள் இணைக்கின்றன. மணிக்கு 300 கி.மீ வேகத்தில் செல்லக்கூடியவை, புல்லட் ரயில்கள். 

முதன்முறையாக ஜப்பானில், ரயில் ஒன்று குறிப்பிட்ட நேரத்தைவிட, 20 விநாடிகள் முன்னதாகக் கிளம்பியுள்ளது. நேற்று, மினாமி நகரயாஹமா என்ற இடத்திலிருந்து டோக்கியோ செல்லவேண்டிய சுகுபா எக்ஸ்பிரஸ், காலை 9.44.40 விநாடிகளுக்குப் புறப்பட வேண்டும். ஆனால், 20 விநாடிகள் முன்னதாகப் புறப்பட்டுப் போய்விட்டது. இதனால், எந்தப் பயணியும் பாதிக்கப்படவில்லை. எனினும், சுகுபா ரயில்வே நிர்வாகம் பயணிகளிடம் மன்னிப்புக் கேட்டுக்கொண்டுள்ளது. இந்தச் செய்தி, சமூக வலைதளங்களில் வைரலானதைத் தொடர்ந்து, ஜப்பான் அரசை மக்கள் பாராட்டிவருகின்றனர். 

https://www.vikatan.com

  • தொடங்கியவர்

ஐஸ்க்ரீம் ஸ்பூன், டயப்பர், பலூன்... விநோதமான மணப்பெண் உடைகள்! #

 
 

டலுக்கு அடியில கல்யாணம், பாரசூட்ல பறந்துக்கிட்டே கல்யாணம்னு விதவிதமான கல்யாணங்களைப் பார்த்திருப்பீங்க... வில்லங்கமான மணப்பெண் ஆடைகளைப் பார்த்திருக்கீங்களா... ! 

1. பிறந்த நாள் விழாக்கள்ல கலர் கலரா பலூன் கட்டிப் பார்த்திருப்போம். இந்தப் பொண்ணு பலூன்களான வெட்டிங் கவுன் போட்டிருக்கிற அழகைப் பாருங்க. ஏதாவது, சேட்டைக்காரப் பொடிசு ஊசியால குத்தாம இருந்தா சரி. 

 

உடைகள்

   

 2. இது கள்ளிச்செடியில் பூப்  பூத்த மணப்பெண் ஆடை. முள்ளு வைக்க மறந்துட்டாங்க போல...

உடைகள்

 

   3. கணவன் - மனைவி ரெண்டு பேருக்குமே உடம்போட முக்கியமான இடங்களை மட்டும் மெல்லியத்  துணியால மறைச்சிட்டு , மத்த இடங்கள்ல பாடி பெயின்ட்  பண்ணியிருக்காங்க.  

உடைகள்

 

  4. இது மம்மி டைப் மணப்பெண் ஆடை. 

உடைகள்

 

  5. பாவம் குட்டீஸ்கள், அவர்களுடைய டயப்பர்ஸ் எல்லாம் கல்யாண கவுன் ஆகிவிட்டதே!

உடைகள்

   

6. இது கொசுவலையில் தைக்கப்பட்ட கல்யாண கவுன். வெயில் காலத்துல கல்யாணம் பண்ணிக்கிறவங்களுக்கு செம டிரஸ்.  

உடைகள்

   

7. வேட்டைப் பிரியர்களுக்கு ஏத்த மணப்பெண் ஆடை. 

உடைகள்

   

8. செம்மறியாட்டு முடியில நெய்யப்பட்ட கல்யாண கவுன். இங்கயிருக்கிற கல்யாண  கவுன்கள்லேயே இதுதான் விலைக்குறைச்சல். 

உடைகள்

   

 9. இது தேவதை கவுன். பபுள்கமை மென்று ஊதினால் எப்படி இருக்கும்கிற ஐடியாவுல உருவானது. 

உடைகள்

   

 10. பார்க்கிறத்துக்கு வெளிநாட்டுக்காரங்களோட பாரம்பர்ய மணப்பெண் ஆடை மாதிரி தெரியுதில்ல... ஆனா, இந்த கவுன் எதனால தைக்கப்பட்டது தெரியுமா, கையுறைகளால..!

உடைகள்

 

 

11. இது பாட்டில் மூடிகளால் உருவாக்கப்பட்ட மணப்பெண் ஆடை. வாங்கத்தான் இன்னும் ஆள் வரலை. 

உடைகள்

 

https://www.vikatan.com

  • தொடங்கியவர்

Bild könnte enthalten: 1 Person, lächelnd, Text

தமிழ் திரையுலகின் Lady SuperStar நயன்தாராவின் பிறந்தநாள் இன்று

வசியம் செய்யும் வசீகர அழகு
நடிப்பில் என்றும் முத்திரை பதிக்கும் முதற்தரம்
சர்ச்சைகளின் நாயகி, கதாநாயர்களின் கனவுக் கன்னி.
தன்னம்பிக்கை மாறாத தங்கதாரகை
சாதனைகளில் தொடர்ந்து சவாரி செய்யும் "தனிஒருத்தி"

Happy Birthday Nayanthara

 

Bild könnte enthalten: 1 Person, lächelnd, Text

இலங்கை அணியின் டெஸ்ட் அணித் தலைவர்
துடுப்பாட்ட வீரர்,
தற்போதைய கலக்கும் நம்பிக்கை நட்சத்திரமுமான தினேஷ் சந்திமாலின் பிறந்தநாள்.
Happy Birthday Dinesh Chandimal

  • தொடங்கியவர்

காதலரை மணந்தார் பிரபல டென்னிஸ் வீராங்கனை செரீனா வில்லியம்ஸ்! (புகைப்படங்கள்)

 

 
serena10

 

பிரபல டென்னிஸ் வீராங்கனை செரீனா வில்லியம்ஸ் (36), பிரபல இணையதளமான "ரெட்டிட்'-இன் உரிமையாளர்களில் ஒருவரான அலெக்ஸிஸ் ஒஹானியன் (34) ஆகிய இருவரும் திருமணம் செய்துகொண்டுள்ளார்கள்.

கடந்த டிசம்பரில் அலெக்ஸிஸ் ஒஹானியனுடன் நிச்சயதார்த்தம் முடிந்துவிட்டதாக செரீனா தெரிவித்திருந்தார். இதையடுத்து செப்டம்பர் மாதம், ஃபுளோரிடா மாகாணத்தின் மேற்கு பால்ம் பீச் பகுதியில் உள்ள புனித மேரி மருத்துவ மையத்தில் செரீனாவுக்குப் பெண் குழந்தை பிறந்தது. அலெக்ஸிஸ் ஒலிம்பியா ஒஹானியன் ஜூனியர் எனத் தன் குழந்தைப் பெயரிட்டார் செரீனா. 

இந்நிலையில் செரீனாவுக்கும் ஒஹானியனுக்கும் திருமணம் நடைபெற்றுள்ளதாக பிரபல வோஹ் பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது. கடந்த வியாழன் அன்று நடைபெற்ற திருமண விழாவில் பியான்சே உள்ளிட்ட பல பிரபலங்கள் கலந்துகொண்டுள்ளார்கள். 2 மாதக் குழந்தையுடன் செரீனா - ஒஹானியன், உறவினர் மற்றும் நண்பர்களுடன் எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் சமூகவலைத்தளங்களில் வெளியாகியுள்ளன.

35 வயது செரீனா கடந்த சிலமாதங்களாக அவர் எந்தப் போட்டியிலும் பங்குபெறவில்லை. கடந்த ஆஸ்திரேலிய ஓபன் போட்டியின்போது 3 மாதம் கர்ப்பமாக இருந்தார். எனினும் துணிச்சலுடன் போட்டியில் கலந்துகொண்டு சாம்பியனாகவும் ஆனார். இந்தப் பட்டத்தை வென்றதன் மூலம் 'ஓபன் எரா'வில் (1968-ல் அமெச்சூர் வீரர்களுடன் தொழில்முறை வீரர்களும் டென்னிஸ் போட்டியில் பங்கேற்க அனுமதிக்கப்பட்டனர். அது முதலான காலமே "ஓபன் எரா' ஆகும்.) அதிக பட்டங்களை (23) வென்றவர் என்ற சாதனையைப் படைத்தார் செரீனா. முன்னதாக ஸ்டெஃபி கிராஃப் 22 கிராண்ட்ஸ்லாம் பட்டங்கள் வென்றிருந்ததே சாதனையாக இருந்தது. இன்னும் ஒரு கிராண்ட்ஸ்லாம் பட்டம் வெல்லும்பட்சத்தில் மகளிர் டென்னிஸ் வரலாற்றில் அதிக கிராண்ட்ஸ்லாம் பட்டங்கள் வென்றவரான மார்க்ரெட் கோர்ட்டின் சாதனையை சமன் செய்வார் செரீனா.

ஜனவரி மாதம் நடைபெறுகிற ஆஸ்திரேலியன் ஓபன் போட்டியில் பங்கேற்க உள்ளதாக செரீனா சமீபத்தில் கூறினார்.

வெள்ளையர்கள் மட்டுமே ஆதிக்கம் செலுத்தி வந்த பணக்காரர்களின் விளையாட்டான டென்னிஸில் தொழில்முறை வீராங்கனையாக 1995-ல் செரீனா கால் பதித்தார். அப்போது அவருக்கு வயது 14. அதன்பிறகு அபாரமாக ஆடிய செரீனா 1998-ல் முதல்முறையாக கிராண்ட்ஸ்லாம் போட்டியில் ஆடும் வாய்ப்பை பெற்றார். அந்தப் போட்டியின் 2-வது சுற்றில் தனது மூத்த சகோதரியான வீனஸிடம் தோல்வி கண்ட செரீனா, 1999-ல் நடைபெற்ற அமெரிக்க ஓபனில் ஸ்விட்சர்லாந்தின் மார்ட்டினா ஹிங்கிஸை வீழ்த்தி முதல் கிராண்ட்ஸ்லாம் பட்டத்தைக் கைப்பற்றினார். அதன்பிறகு டென்னிஸ் உலகின் தவிர்க்க முடியாத வீராங்கனையாக உருவெடுத்த செரீனா, ஏறக்குறைய 6 ஆண்டுகள் தரவரிசையில் முதலிடத்தில் இருந்துள்ளார்.

serena901.jpg

serena808.jpg

serena_family1.jpg

 
 

serena1.jpg

serena8.jpg

serena4.jpg

serena66.jpg

serena7.jpg

serena3.jpg

 
 

serena5.jpg

serena99.jpg

serena999.jpg

serena2.jpg

 

 

http://www.dinamani.com

  • தொடங்கியவர்
‘வாழ்க்கை என்பது புரியாத சூத்திரம் அல்ல’
 

image_7eabb96a3f.jpgபலமுள்ளவன்தான் பேசவேண்டும்; சமானியனுக்குப் பேச உரிமையில்லை. சொல்வதைக் கேட்கும் ஜடம்தான், பொதுமகன் கடமை என எண்ணும் மேலாதிக்க உணர்வு இன்னமும் அஸ்தமிக்கவில்லை. 

ஏதோ ஒரு பயமுறுத்தல் மூலம் நியாய தர்மங்களைப் பேசினால் பயமுறுத்தப்படுவோம் என்ற பயம் இன்றும் நிலவுகின்றது.  

‘கேட்டு நட; அல்லது வாயை மூடிக்கொண்டு போ’ எனப் பகிரங்கமாகச் சொன்னால், சந்தேகத்துக்குரிய விடயங்களைத் தீர்ப்பது எப்படி?  

கடவுளுக்குக் கூடப் பாடம் சொல்லிக் கொடுக்க முடியும் என எண்ணும் தலைவர்கள் இன்னமும் தண்டனை கிடைக்காமையால், கண்டபடி பேசித் திருப்திப்பட்டுக் கொள்வதுண்டு.  

மக்களை நேசிக்காது விட்டால், வார்த்தைகளும் மூர்க்கத்தனமாகி விடும். வாழ்க்கை என்பது புரியாத சூத்திரம் அல்ல; அன்பினால் இணைந்துள்ள இதயங்களின் மொழி, இனியஇசையை மீட்கும். இதை உணர்ந்தால் பௌவியம், பணிவு தானாய் வரும்.   

  • தொடங்கியவர்

தென்னிலங்கையில் இன்று அதிகம் பேசப்பட்ட பெண் இவர்தான்!

 

தென்னிலங்கையில் இன்று அதிகம் பேசப்பட்ட பெண் இவர்தான்!

இலங்கையில் முதன்முதலாக லம்போஹினி மகிழுந்து (car) வாங்கிய பெண் ஒருவர் பற்றி குறித்த தகவல் ஒன்று கிடைத்துள்ளது. அதிக விலை கொடுத்து ஒரு மகிழுந்தை வாங்கிய முதல் பெண்ணாக குறித்த பெண் இலங்கையில் திகழ்வதாக தென்னிலங்கையில் பேசப்படுகிறது.

Image may contain: car and outdoor

பெவரியன் மோட்டார் நிறுவனத்தின் (Bavarian Motors Pvt Ltd) உரிமையாளரான ஜிஹான் ஹமீட் என்ற பெண்ணே Lamborghini Huracán Coupé LP 610-4 ரக மகிழுந்தை இலங்கைக்கு கொண்டு வந்துள்ளார்.

குறித்த மகிழுந்து கொழும்பு துறைமுகத்தில் பரிசோதனைக்காக நிறுத்திவைக்கப்பட்டுள்ளது. எனினும் குறித்த மோட்டார் நிறுவனம் குறித்த மகிழுந்து பற்றிய புகைப்படங்களை வெளியிட்டுள்ளது.

ஜிஹான் ஹமீட் தனது மகிழுந்தினுள் மகிழ்ச்சியுடன் அமர்ந்திருக்கும் புகைப்படத்தினையே குறித்த நிறுவனம் வெளியிட்டுள்ளது.

தென்னிலங்கையில் இன்று அதிகம் பேசப்பட்ட பெண் இவர்தான்!

இதேவேளை முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ஷவின் புதல்வர்களும் முன்னர் லம்போஹினி மகிழுந்தை இலங்கைக்குக் கொண்டுவந்திருந்தாலும் தற்பொழுது முதன்முதலாக குறித்த மகிழுந்தினை இலங்கைக்கு கொண்டுவந்த பெண்ணாக ஜிஹான் ஹமீட் திகழ்வது குறிப்பிடத்தக்கதாகும்.

https://news.ibctamil.com

  • தொடங்கியவர்

இந்திரா காந்தி பிறந்த தினம்: 19-11-1917

 

இந்திரா பிரியதர்சினி 1917ஆம் ஆண்டு நவம்பர் 19ஆம் நாள் காசுமீரி பண்டிட் குடும்பத்தைச் சேர்ந்த ஜவஹர்லால் நேருவிற்கும், கமலா நேருவுக்கும் மகளாகப் பிறந்தார். இந்திரா பிரியதர்சினி அவர்களின் ஒரே குழந்தையாவார். இந்திரா காந்தி இந்தியாவின் மூன்றாவது பிரதமர் ஆவார். அவர், இந்தியாவின் முதல் பிரதமரான ஜவகர்லால் நேருவின் ஒரே மகளும் ஆவார். இவரது இயற்பெயர் இந்திரா பிரியதர்சினி நேரு, ஃபெரோஸ் காந்தியுடனான திருமணத்திற்கு பின் இந்திரா பிரியதர்சினி

இந்திரா காந்தி பிறந்த தினம்: 19-11-1917
 
இந்திரா பிரியதர்சினி 1917ஆம் ஆண்டு நவம்பர் 19ஆம் நாள் காசுமீரி பண்டிட் குடும்பத்தைச் சேர்ந்த ஜவஹர்லால் நேருவிற்கும், கமலா நேருவுக்கும் மகளாகப் பிறந்தார். இந்திரா பிரியதர்சினி அவர்களின் ஒரே குழந்தையாவார்.

இந்திரா காந்தி இந்தியாவின் மூன்றாவது பிரதமர் ஆவார். அவர், இந்தியாவின் முதல் பிரதமரான ஜவகர்லால் நேருவின் ஒரே மகளும் ஆவார். இவரது இயற்பெயர் இந்திரா பிரியதர்சினி நேரு, ஃபெரோஸ் காந்தியுடனான திருமணத்திற்கு பின் இந்திரா பிரியதர்சினி காந்தியாக மாறினார், சுருக்கமாக இந்திரா காந்தி. இவருக்கும் மகாத்மா காந்திக்கும் எந்த வித இரத்த தொடர்பும் இல்லை. இந்தியாவின் இரண்டாவது பிரதமராக இருந்த லால் பகதூர் சாஸ்திரியைத் தொடர்ந்து சில நாட்கள் தற்காலிகப் பதவி வகித்த குல்சாரிலால் நந்தாவுக்குப் பின்னர் 1966-ம் ஆண்டு ஜனவரி 19-ந்தேதி பிரதம மந்திரியாகப் பதவியேற்ற இவர் மார்ச் 24 1977 வரை பதவியில் இருந்தார்.

1977-ல் நடைபெற்ற பொதுத்தேர்தலில் பெரும் தோல்வியடைந்த இவர் மூன்று ஆண்டுகளுக்குப் பின்னர் நடைபெற்ற தேர்தலில் மீண்டும் வெற்றி பெற்றார். 14 ஜனவரி 1980-ல் பிரதமராக மீண்டும் பொறுப்பேற்றுக் கொண்ட இவர் 1984-ல் கொலை செய்யப்படும் வரை பதவியில் இருந்தார்.

இதே தேதியில் நிகழ்ந்த முக்கிய நிகழ்வுகள்:-

1816- வார்சா பல்கலைக்கழகம் அமைக்கப்பட்டது. 1881- உக்ரைனில் உள்ள ஒடீசா நகரில் விண்கல் ஒன்று வீழ்ந்தது. 1932- சோவியத் தலைவர் ஜோசப் ஸ்டாலினின் இரண்டாவது மனைவி தனது வீட்டில் மர்மமான முறையில் இறந்து கிடக்கக் காணப்பட்டார். 1941- இரண்டாம் உலகப்போர்: மேற்கு ஆஸ்திரேலியாவில் எச்.எம்.எ.எஸ். சிட்னி, மற்றும் எச்.எஸ்.கே. கோர்மொரன் என்ற போர்க் கப்பல்களுக்கிடையில் நிழந்த மோதலில் இரண்டும் மூழ்கின. இதில் 645 ஆஸ்திரேலியக் கடற்படையினரும் 77 நாசி ஜெர்மனியக் கடற்படையினரும் இறந்தனர். 1942- இரண்டாம் உலகப்போர்: ஸ்டாலின்கிராட் சண்டை- சோவியத் படையினர் ஸ்டாலின்கிராட் நகர் மீது மீள் தாக்குதலை ஆரம்பித்தனர். இது பின்னர் அவர்களுக்கு வெற்றியை அளித்தது.

1946- ஆப்கானிஸ்தான், ஐஸ்லாந்து, சுவீடன் ஆகியன ஐ.நா.வில் இணைந்தன. 1969- அப்போலோ 12 விண்கலத்தில் சென்ற சார்ள்ஸ் கொன்ராட், அலன் பீன் ஆகியோர் சந்திரனில் இறங்கி நடந்த மூன்றாவது, நான்காவது மனிதர்கள் என்ற பெயரைப் பெற்றனர். 1969- பிரேசில் கால்பந்த வீரர் பெலே தனது 1,000-வது கோலைப் பெற்றார். 1977- எகிப்திய அதிபர் அன்வர் சதாத் அமைதிப் பேச்சுக்களுக்காக இஸ்ரேல் சென்றடைந்தார். இஸ்ரேல் சென்ற முதல் அரபுத் தலைவர் இவரே. 1977- போர்ச்சுக்கல் போயிங் விமானம் ஒன்று மெடெய்ரா என்ற இடத்தில் விபத்துக்குள்ளாகியதில் 130 பேர் கொல்லப்பட்டனர். 1984- இலங்கை ராணுவத்தின் வட மாகாணத் தளபதி பிரிகேடியர் ஆரியப்பெரும யாழ்ப்பாணம், கட்டுவன் என்ற இடத்தில் கண்ணி வெடித்தாக்குதலில் கொல்லப்பட்டார். 1984- மெக்சிக்கோ நகரில் எண்ணெய்க் கிடங்கில் ஏற்பட்ட பெரும் வெடிப்புகளினால் ஏற்பட்ட தீ விபத்தில் சிக்கி 500 பேர் கொல்லப்பட்டனர்.

1985- பனிப்போர்: அமெரிக்க அதிபர் ரொனால்ட் ரேகன், சோவியத் அதிபர் மிக்கைல் கொர்பச்சோவ் இருவரும் ஜெனீவாவில் முதன் முறையாகச் சந்தித்தனர். 1991- தமிழீழ காவல்துறை நிறுவப்பட்டது. 1999- மக்கள் சீனக் குடியரசு தனது முதலாவது சென்ஷோ விண்கலத்தை ஏவியது. 2005- ராஜபக்சே இலங்கையின் 5-வது ஜனாதிபதியாகப் பதவியேற்றார்.

http://www.maalaimalar.com

  • தொடங்கியவர்

மிஸ் இந்தியா- மிஸ் வேர்ல்டு: மானுஷி சில்லரின் சாதனை பயணம் (புகைப்பட தொகுப்பு)

 

பதினேழு ஆண்டுகளுக்குப் பின்னர் இந்திய பெண் ஒருவர் உலக அழகி பட்டம் வென்றுள்ளார்.

மானுஷி சில்லர்

2017-ஆம் ஆண்டிற்கான 'மிஸ் வேர்ல்டு' எனப்படும் உலக அழகிப் பட்டத்தை இந்தியாவைச் சேர்ந்த 20 வயதான மானுஷி சில்லர் வென்றுள்ளார்

மானுஷி சில்லர்

பதினேழு ஆண்டுகளுக்குப் பின்னர் இந்திய பெண் ஒருவர் உலக அழகி பட்டம் வெல்வது இதுவே முதல் முறை

 

மானுஷி சில்லர்

இதற்கு முன்பு, கடந்த 1966-ஆம் ஆண்டில் இந்தியாவின் ரீட்டா ஃபரியா உலக அழகிப் பட்டத்தை வென்றார். அதன்பிறகு ஐஸ்வர்யா ராய் 1994-ம் ஆண்டும், டயானா ஹேடன் 1997-ம் ஆண்டும், 2000-ம் ஆண்டு பிரியங்கா சோப்ராவும் இப்பட்டத்தை வென்றுள்ளனர்,

 

மானுஷி சில்லர்

சீனாவில் சான்யா நகரில் நடந்த போட்டியில் உலகம் முழுவதும் இருந்து 118 போட்டியாளர்கள் கலந்துக்கொண்டனர்

மானுஷி சில்லர்

மானுஷி சில்லர் மருத்துவக் கல்வி பயின்று வருகிறார்

மானுஷி சில்லர்

மானுஷி சில்லர் பாரம்பரிய நடனத்தில் நன்கு பயிற்சி பெற்றவர்

மானுஷி சில்லர்

மிஸ் இந்தியா பட்டம் வென்றபிறகு, உலக அழகிப் பட்டத்திற்கு தயாரானார். தற்போது இப்பட்டத்தையும் வென்றுள்ளார்

மானுஷி சில்லர்

இவர் விளையாட்டிலும் ஆர்வம் உள்ளவர். ஆழ்கடல் நீச்சல்(ஸ்கூபா டைவிங்), பாராகிளைடிங் போன்ற விளையாட்டுகளில் பங்கேற்கிறார்

மானுஷி சில்லர்

இதய அறுவை சிகிச்சை நிபுணராக வேண்டும் என்பது இவரது லட்சியம்

 

மானுஷி சில்லர்

கிராமப்புறங்களில் லாப நோக்கமல்லாத மருத்துவமனைகளை திறக்க மானுஷி சில்லர் விரும்புவதாக மிஸ் வேர்ல்டு வலைத்தளத்தில் கூறப்பட்டுள்ளது

மானுஷி சில்லர்

மானுஷி சில்லர்MANOJ DHAKA

"என்னுடைய மிகப்பெரிய உத்வேகம் என் தாயார்தான். அம்மாவாக இருப்பதே சிறந்த பணி'' என போட்டியின் கடைசி கேள்வியில் பதிலளித்தார்

மானுஷி சில்லர்

ஆண்களுடன் ஒப்பிடும் போது பெண்களின் எண்ணிக்கை குறைவாக உள்ள ஹரியானா மாநிலத்தை சேந்தவர் இவர்

http://www.bbc.com

  • தொடங்கியவர்

ஆண்களைக் கெளரவப்படுத்தும் சர்வதேச ஆண்கள் தினம் இன்று !

 

சர்வதேச பெண்கள் தினம் மார்ச் 8-ம் திகதி கொண்டாடப்படுவது அனைவரும் அறிந்ததே.

ஆண்களைக் கெளரவப்படுத்தும்  சர்வதேச  ஆண்கள் தினம்  இன்று !

ஆண்கள் தினமும் முறையே கொண்டாடப்பட வேண்டும்  என்ற கோரிக்கை ஆண்களால் எழுப்பப்பட்டது.

சா்வதேக மகளிா் தினத்தில் பெண்கள் போற்றப்படுவதைப் போன்று, உலகில் ஆண்களை கெளரவப்படுத்தவும், ஆண்களின் உாிமைகள் மற்றும் பாதுகாப்புக் குறித்த விழிப்புணா்வு கருதியும் சா்வதேச ஆண்கள் தினம் ஒவ்வொரு ஆண்டும் கடைபிடிக்கப்படுகிறது.

நவம்பா் 19ஆம் திகதியான இன்று சா்வதேச ஆண்கள் தினமாக உலகம் முழுவதும் கொண்டாடப்படுகிறது.

ஐ.நா சபையில் அங்கீகரிக்கப்பட்ட இந்த தினம்,  1999-ம் ஆண்டு மேற்கிந்தியத் தீவுகளில் உள்ள டிரினிடாட் டொபாகோ (Trinidad and Tobago)  நாட்டில் தொடங்கப்பட்டது.

சர்வதேச மகளிர் தினம் கொண்டாடப்படுவதால் உலகப் பெண்களின்  சாதனைகள் வெளிச்சத்துக்கு வரும் தினமாக அது இருந்து  வருகின்றது. பெண்களின்  சக்தியை, அதன் மகத்துவத்தை ஆண்கள் உணரத் தொடங்கிவிட்டதால், ஆண்கள் தினத்தை பெண்கள் வரவேற்கவே செய்கிறார்கள்.

ஒவ்வொரு  ஆணின் வெற்றிக்குப் பின்னும் ஒரு பெண் இருக்கிறாள் என்பது சற்று மாறி, சாதிக்கும் பெண்களின் பக்கபலமாக இருந்து வருகிறார்கள் தன்னலமற்ற ஆண்கள்.

வாழ்க்கை முறை உள்ளிட்ட பல சந்தா்ப்பங்களில் போற்றக்கூடிய அளவிலான, மகத்தான  தியாகங்களை மேற்கொண்டு வரும் ஆண்கள் குலத்தின் பெருமையை, சமுதாயம் அங்கீகரிக்க இந்த நாள் ஒரு நினைவுப்படுத்தும் நாளாகவும் அமைவதோடு, பல்வேறுபட்ட நாடுகளில் இத்தினம் கொண்டாடப்பட்டு வருகின்றமை  குறிப்பிடத்தக்கது.

https://news.ibctamil.com

  • தொடங்கியவர்

மயில் தோகை... சோப்பு நுரை... எண்ணெய்க் குமிழி... வர்ணஜாலம் காட்டுவது ஏன்? #Iridescence

 
 

Iridescence

 வண்ணங்கள் மிகவும் அழகானவை. வண்ணங்களை நோக்கி சட்டென மனித கண்கள் ஈர்க்கப்பட்டு விடும். வண்ணங்களைப் பார்க்கும்  பொழுது மனதுக்குள் ஒரு புத்துணர்ச்சியை உணரமுடிகிறது. ஆனால், இத்தகைய வண்ணங்கள் எப்படி கண்களுக்குத் தெரிகிறது?

 

ஒரு பொருளின்மீது வெளிச்சம் படும்போது அந்தப் பொருள் வெளிச்சத்தைப் பிரதிபலித்தால் அப்போது வண்ணங்கள் உண்டாகும். இதற்கு ஆக்கபூர்வமான தலையீடு என்று பெயர். ஆனால், ஒளியைப் பிரதிபலிக்காமல் தடை செய்தால் அவை அழிவுகரமான தலையீடு.  

Iridescence என்பதற்கு வானவில் என்று பொருள். மற்ற நேரங்களுடன் ஒப்பிடுகையில் Iridescence  வானவில் வண்ணங்கள் ஒரு தனித்துவத்தைப் பெற்றுள்ளது. இதுகுறித்த  ஆராய்ச்சியில் ஈடுபட்டார்கள் அரிசோனா மாநிலப் பல்கலைக்கழக பட்டதாரி மாணவர்கள். இவர்கள் பல்வேறு துறைகளில் உள்ள விஞ்ஞானிகளைக் கொண்டு (குறிப்பாக ஒளியியல், வளர்ச்சி, பாரம்பர்யம், வேதியல், தயாரிப்பு, பரிணாமம்) இயற்கையாக நிகழும் மாறுபட்ட வண்ணங்களின் செயல்பாடுகளை "உயிரியோமேடிக் தொழில்நுட்ப பயன்பாட்டை"  ஆய்வு செய்தனர்.  மேலும், இந்த மாணவர்கள் அறிவியலாளர்களையும், கல்வியாளர்களையும், கலைஞர்களையும் ஒரு மாநாட்டில் பங்குபெறச் செய்து Iridescence பற்றி கலந்துரையாடினர். 

Iridescence :
இவை  கோனியோகுரோமிசம் (Goniochromism) என்றும் அறியப்படுகிறது. பொதுவாக பார்வைக் கோணம் அல்லது வெளிச்சத்தின் கோணத்தை மாற்றும்பொழுது இந்த வானவில் வண்ணங்கள் தோன்றும். உதாரணத்துக்கு, ஒரு மயில்  தோகையை விரித்தாடும்போது அதை எதிரில் நின்று பார்ப்பவருக்கும், பக்கவாட்டில் நின்று பார்ப்பவருக்கும், தொலைவில் நின்று பார்ப்பவர்க்கும் வெவ்வேறு விதமான வண்ணங்களோடு தெரியும்.  மயிலின் இறகானது பழுப்பு நிறம்தான். ஆனால், ஒரு நபரின் பார்வைக்கோணம் மாறும்பொழுது அவை மின்னும்  நீலமாகவும், பச்சை வண்ணங்களாகவும் தெரியும்.

இந்த வண்ணங்கள் பெரும்பாலும் பிரகாசிக்கும்; மினு, மினுக்கும் தன்மையுடன் இருக்கும். உதாரணமாக , தெருவில் சிந்தப்பட்ட எண்ணெய் தூரத்தில் இருந்து  நடந்துவருபவருக்கு பிரகாசித்து, மினுமினுப்பாக பல வண்ணங்களோடு தெரியும்.பார்வைக் கோணம் அல்லது வெளிச்சத்தின் கோணம் மாறும்போது சில பொருள்களின் மேற்பரப்பில் பல வண்ணங்கள் தோன்றும். இதற்கு உதாரணமாக சோப்பு குமிழிகளைக் கூறலாம். சோப்புக் குமிழியின் மீது வெளிச்சத்தின் கோணம் மாறும்போது அதன் மேற்பரப்பில் பல வண்ணங்கள் தோன்றும். இந்த வண்ணங்களின் நிகழ்வுகளை, பட்டாம்பூச்சி இறக்கைகள், கடல் சிப்பிகள் மற்றும் சில கனிமங்களிலும் காணலாம்.

Iridescence

உயிரியலில் இரிடெசன்ஸ் (Iridescence):
இந்த வானவில் வண்ணங்களை சில தாவரங்கள் மற்றும் பல விலங்குகளிலும் காணலாம். இரண்டு அல்லது  மூன்று நிறங்களுக்கிடையே  உள்ள கோண மாற்றம் அல்லது மாறுபட்ட வண்ணங்களைக் காணமுடியும். சிலவகையான மலரிதழ்கள் ஒரு சிதறல் வண்ணத்தை உருவாக்குகிறது. பெரும்பாலும் இவை மனிதக் கண்களுக்கும், மலரில் அமரும் பூச்சிகளுக்கும் தெரிவதில்லை. ஏனெனில் இவை தாவரத்தின் நிறங்களோடு ஒத்திருப்பதால் மறைந்துவிடுகின்றன.

  எந்தெந்த உயிரினங்களிலும், பொருள்களிலும் இந்த வானவில் வண்ணங்களைக் காணமுடியும்???    

1. பறவைகளின் இறக்கைகள்: (கிங் பிஷர்,  ஹம்மிங் பறவை, கிளிகள், வாத்து, மற்றும் மயில்)

2. பிஸ்மத் படிகம்

3. இயந்திர எண்ணெய் கசிவு

4. (குறுந்தகடு) சிடி-யின் மேற்பரப்பு, டிவிடி-க்கள் .

5. மேக சீர் குலைவின்போது மேகங்களின் ஓரங்களில் உருவாகும் வண்ணங்கள்.

6. நீரில் விடப்பட்ட எண்ணெய் மற்றும் சோப்பு குமிழி.

https://www.vikatan.com

  • தொடங்கியவர்

வரவேற்பறை மூலைகளையும் பயன்படுத்தலாம்

 

 
18chgowlivingroomcorner4

பெ

ரும்பாலான வீடுகளில் வரவேற்பறையின் மூலைகள் பயன்படுத்தப்படாமல்தான் இருக்கின்றன. அதற்குக் காரணம் அவற்றை வடிவமைப்பதில் எதிர்கொள்ளும் சிக்கல்கள்தான். வீட்டின் உள் அலங்கார வடிவமைப்பைத் திட்டமிடும்போதே மூலையின் வடிவமைப்பைத் திட்டமிட்டால், அந்த இடத்தைத் திறம்படப் பயன்படுத்த முடியும். வரவேற்பறை மூலைகளை வடிவமைப்பதற்கான சில ஆலோசனைகள்...

 

திறந்தவெளி மூலைகள்

வீட்டின் வரவேற்பறை மூலையின் கதவுகளை வடிவமைத்து வாசலாக மாற்றிவிடலாம். உட்புறம், வெளிப்புறம் என வித்தியாசமான வடிவமைப்பைச் செய்வதைத் தவிர்க்க முடியும்.

18chgowlivingroomcorner5

 

பகுதி சோஃபா

வீட்டின் மூலைகளைப் பயன்படுத்துவதற்காகவே ‘பகுதி சோஃபா’ (Sectional Sofa) வடிவமைக்கப்பட்டிருக்கிறது. சிறிய வரவேற்பறைக்கு ஏற்றவையாக இந்தப் ‘பகுதி சோஃபா’ இருக்கும். இந்த சோஃபாவில் ஒரு பகுதியில் தரை விளக்கையோ மேசை விளக்கையோ பொருத்தி அதை வாசிக்கும் இடமாக மாற்றிக்கொள்ளலாம்.

 

 

திரைச்சீலைகள்

வரவேற்பறை மூலைகளில் ஜன்னல்கள் இருந்தால், அறையின் உயரம், அகலத்தைப் பொறுத்து திரைச்சீலைகள் அமைக்கலாம். இது வரவேற்பறைக்குப் புதிய தோற்றத்தைக் கொடுக்கும்.

 

சிற்பம்

வரவேற்பறை மூலையில் உங்கள் ரசனையை வெளிப்படுத்தும்படி ஒரு சிற்பத்தை அமைக்கலாம்.

 

இயற்கை விரும்பிகள்

இயற்கையை விரும்புபவர்களாக இருந்தால், வீட்டின் மூலையில் பெரிய உயரமான செடிகளை வடிவமைக்கலாம். இந்தச் செடிகள் அறைக்குப் பசுமையைக் கொண்டுவரும்.

 

வாசிப்பு மூலை

ஒரு வசதியான நாற்காலி, சிறிய மேசை, படிக்கும் விளக்கு போன்றவற்றை வைத்து வரவேற்பறையின் மூலையை வாசிக்கும் மூலையாக மாற்றிவிடலாம்.

 

18chgowlivingroomcorner6a
உரையாடல் மூலை

வாசிப்பில் ஆர்வமில்லாதவர்கள், இரண்டு நாற்காலிகள், ஒரு கண்ணாடி வட்ட மேசையை வைத்து வரவேற்பறையில் ஓர் உரையாடல் மூலையை உருவாக்கலாம்.

 

கண்ணாடியும் மேசையும்

ஒருவேளை, உங்கள் வீட்டின் வரவேற்பறை மூலை சிறியதாக இருந்தால், அந்தச் சுவரில் ஒரு கண்ணாடியையும் சிறிய மேசையையும் அமைக்கலாம். இது அறையைப் பெரிதாக்கிக் காட்ட உதவும்.

 

மர அலமாரிகள்

உங்களிடம் பாரம்பரிய அழகுடன் இருக்கும் மர அலமாரி இருந்தால், அவற்றைப் புதிதாக வண்ணமடித்து வரவேற்பறையின் மூலையில் வைக்கலாம். இது அறைக்குள் நுழைபவர்களின் கவனத்தை ஈர்க்கும்.

 

புத்தக அலமாரி

நீங்கள் புத்தகப் பிரியர் என்றால், வீட்டை வடிவமைக்கும்போதே வரவேற்பறையின் மூலையில் புத்தக அலமாரியை உருவாக்குவதற்குத் திட்டமிடலாம்.

 

தற்கால மூலை ஜன்னல்

தற்போதைய சமகால வடிவமைக்கப்படும் மூலை ஜன்னல்களை அமைப்பதைப் பற்றியும் பரிசீலிக்கலாம். இந்த மூலை ஜன்னல்கள் அறைக்குப் புதிய தோற்றத்தைக் கொடுக்கும்.

18chgowlivingroomcorner7
 

http://tamil.thehindu.com/

  • தொடங்கியவர்

தரவுகளை சேகரிக்கும் துணி

pix-2-e4d06d3ad0efed880f243d808fa8fc21725191bb.jpg

 

இலத்­தி­ர­னியல் பல­கைகள் ஏது­மின்றிப் பாது­காப்பு கட­வுச்சொல், Identification tags போன்­ற­வற்றை சேமித்து வைக்கக் கூடிய ஒரு­வகை துணியை கணனி வல்­லு­நர்கள் உரு­வாக்­கி­யுள்­ளனர்.

 வொஷிங்டன் பல்­க­லைக்­க­ழ­கத்தில் தகவல் தொழில்­நுட்ப குழு­வொன்றே இவ்­வகை துணி­யொன்றக் கண்டு பிடித்­துள்­ளது. இத்­துணித் துண்டை உடையில் தைத்து பாவித்­துக்­கொள்­ளலாம். அதா­வது இதில் தர­வு­களை சேக­ரித்து வைக்க முடியும் என்­கின்­றனர் இவ் ஆய்­வுடன் தொடர்­பு­பட்ட கணனி வல்­லு­நர்கள்.

 உதா­ர­ண­மாக இந்த துணித்­துண்டை வீட்டின் உரி­மை­யாளர் ஒருவர் தனது சேர்ட்டின் கைப்­ப­கு­தியில் பொருத்தி தைத்­து­விட்டு அதில் தனது வீட்­டுக்­க­தவின் இலத்­தி­ர­னியில் பூட்டின் கடவுச் சொல்லை சேமித்து வைக்­கலாம். வெளியில் சென்று பின்னர் வீட்­டிற்கு வந்து அந்தப் பூட்டின் முன் சேர்ட்டின் கைப்­ப­கு­தி­யி­லுள்ள குறித்த துணியை பூட்டின் முன் வைத்து அசைத்தால் அதி­லி­ருந்து வெளிப்­படும் சமிக்ஞை Magnetometer இல் வாசிக்­கப்­பட்டு அந்தக் கதவு திற­படும்.

அதே போன்று இடுப்­புப்­பட்டி ( Belt ) , கழுத்­துப்­பட்டி (Tie) , necklece, wristle band போன்­ற­ வற்றை உரு­வாக்­கி­யுள்­ளார்கள். இவ்­வா­றான துணியை நெய்­வ­தற்கு வழக்­க­மான தையல் இயந்­தி­ரங்­க­ளையே பாவிக்­கின்­றனர். ஏனைய காந்­த­சக்­தியை கொண்ட சாத­னங்கள் போலவே இதிலும் காந்த சமிக்­ஞையின் வலு­வா­னது ஒரு வார­கால பாவ­னைக்குப் பின்னர் 30 % ஆகக்­கு­றைந்து விடக்­கூடும். இருப்­பினும், இந்தத் துணி­யா­னது பல தட­வைகள் தாமே காந்­தத்­தன்­மையை மீள உற்­பத்தி செய்­யக்­கூ­டி­யது.

அத்­துடன், சோத­னையின் போது இத்­து­ணியை சலவை இயந்­தி­ரத்தில் துவைத்­தாலும், காய­வைத்­தாலும் அல்­லது 320 பாகை பரன்­ஹைட்டில் Iron பண்­ணி­னாலும் இது தர­வு­களை அவ்­வாறே தக்­க­வைத்துக் கொள்­கின்­றது.

அத்­துடன், பொக்­கட்­டி­லுள்ள ஸ்மார்ட் கைத்­தொ­லை­பே­சி­யி­னுடன் தொடர்பு கொள்ள காந்த சக்தி உள்­ள­டக்­கப்­பட்ட கையு­றை­களை இந்­தக்­குழு வடி­வ­மைத்­துள்­ளது. அதன் விரல்­களில் காந்­தத்­துணி தொடுக்­கப்­பட்­டுள்­ளது. ஆகவே, அதை ஸ்மார்ட் கைத்­தொ­லை­பே­சி­யுடன் கம்­பி­யில்லா முறையில் தொடர்­பு­ப­டுத்தி நமது விரலை அசைத்தால் அதன் ஒவ்­வொரு அசை­விற்­கேற்­ற­வாறு ஸ்மார்ட் கைத்­தொ­லை­பே­சியின் செயற்­பா­டுகள் இயங்கும். அதா­வது ஒவ்­வொரு அசை­விற்கு ஏற்­றாற்போல் ஸ்மார்ட் கைத்­தொ­லை­பே­சியில் பாட்டு ஒலிக்கும், அழைப்பை மேற்கொள்ளலாம். ஆகவே இதன்மூலம் ஸ்மார்ட் கைத்தொலைபேசியை அடிக்கடி பொக்கட்டிலிருந்து வெளியே எடுக்காமல் தொடர்ச்சியாக அக் கையுறைமூலம் தேவையான வேலைகளை செய்து கொள்ளமுடியும். அத்துடன், ஸ்மார்ட் கைத்தொலைபேசியின் தொழிற்பாடுகளை ஆறுவித சை.ைககளுடன் பொருத்தி மேற்கொள்ளப்பட்ட ஆய்வும் 90வீத வெற்றியில் முடிந்தது. அடுத்த கட்டமாக இந்த துணிவகையில் அதிக தரவுகளை சேமித்துக் கொள்வதற்கான ஆய்வுகள் மேற்கொள்ளப்படவுள்ளன. 

http://epaper.virakesari.lk

  • தொடங்கியவர்

‘‘எனக்குத் தீங்கு செய்தவர்கள்தான் அதிகம்!’’ இந்திரா காந்தி பிறந்த தினப் பகிர்வு!

இந்திரா காந்தி

‘‘இளமைக் காலத்திலிருந்தே தைரிய உணர்வு என்னுள் ஒரு நெருப்பாகச் சுடர்விட்டுக் கொண்டிருக்கும். இது,தேவைப்பட்ட காலத்தில் பெரிதாகப் பற்றி ஒளிவிடும்போதுதான் மற்றவர்களுக்குத் தெரியும்’’ என்று சொன்ன அந்தத் தைரியசாலி வேறு யாரும் அல்ல... மறைந்த முன்னாள் பிரதமர் இந்திரா காந்திதான். அவருடைய பிறந்த தினம் இன்று. 

 

தைரியத்தைக் கொடுத்த நேரு!

இந்திரா காந்தியின் தந்தையான நேரு, சுதந்திரத்துக்காகப் பலமுறை சிறையில் காலந்தள்ளியபோதிலும் தன் மகளுக்கு அவர் கடிதம் எழுதத் தவறியதே இல்லை. ஒருமுறை தன் மகளுக்கு எழுதிய கடிதத்தில்,‘‘தைரியம் மட்டும் உன்னோடு இருந்துவிட்டால் போதும். மற்ற எல்லா நல்லவைகளும் அதைத் தொடர்ந்து உன்னிடம் வந்துவிடும்’’ என்று தைரியமான வார்த்தையைப் பதிவுசெய்து இருந்தார். அந்தத் தைரியம்தான் அவரைப் பின்னாளில் உயரத்துக்கு அழைத்துச் சென்றது. நேரு, தைரியத்தை மட்டும் தன் மகளுக்குப் பதிக்கவில்லை. ஒட்டுமொத்த உலக அரசியலையும், வரலாற்று நிகழ்வுகளையும் கடிதம் மூலம் தன் மகளுக்குக் கற்பித்துக்கொண்டே இருந்தார். அந்தக் கடிதங்கள் மூலம் பெற்ற ஞானம்தான், இந்திரா காந்தியை இரும்புப் பெண்மணியாக உலகுக்குக் காட்டியது. 

சிறுவயது துணிச்சல்!

பொதுவாகத் தலைமைப் பொறுப்பில் உள்ளவர்கள் தைரியசாலிகளாகத்தான் இருப்பார்கள் என்று சொல்லப்படுவது உண்டு. சிறுவயது முதலே தைரியசாலியாகத்தான் விளங்கினார் இந்திரா காந்தி. லக்னோ நகர கல்லூரி, நிகழ்ச்சி ஒன்றுக்கு ஏற்பாடு செய்திருந்தது. சிறப்பு விருந்தினராக இந்திராவை அழைத்திருந்தனர். அவர், செல்வதற்கு முன், மாணவன் ஒருவன் தன் தேசியக்கொடியை இரும்புத் தொப்பிகளிடமிருந்து காப்பாற்றுவதற்காக அதைக் கீழே விழாதவாறு கெட்டியாகப் பிடித்துக் கொண்டான். ஆனால், ஆங்கிலேயச் சிப்பாயோ அதைக் கீழே போடச்சொல்லிப் பலமாகத் தாக்கினான். குருதி சிந்தக் கீழே சாய்ந்தான் அந்த மாணவன். கொடி கீழே விழும்முன் அம்புபோலப் பாய்ந்து அதைத் தூக்கிப்பிடித்து நிறுத்தினார் இந்திரா. காவல் துறையினர் மூர்க்கமாகத் தாக்கினர். இந்திராவுக்கும் முதுகில் அடி விழுந்தது. ஆனாலும், தூக்கிப் பிடித்த கொடியைப் பறக்கவைத்துவிட்டே வீட்டுக்குச் சென்றார். அப்படிப்பட்ட துணிச்சல்மிகுந்த பெண்ணாக அன்றே விளங்கினார் இந்திரா.

இந்திரா காந்தி

நேர்மையான குணம்!

வீட்டில் நிலவிய சுதந்திரப் போராட்டச் சூழல், தாயின் உடல்நிலை இவற்றால் இந்திரா, பல ஊர்களில், பல பள்ளிகளில் படிக்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது. சாந்தி நிகேதனில் இந்திரா படித்தபோது, அவருடன் படித்த சக மாணவி ஒருவர் தனது தங்க நகையைக் காணவில்லை என்று விடுதிக் காப்பாளரிடம் புகார் சொன்னார். அவர், இந்திராவின் பெட்டியைத் தவிர, மற்ற மாணவிகளின் பெட்டிகளைச் சோதனையிட விரும்பினார். ஆனால், இந்திராவோ தன்னுடைய பெட்டியை முதலாவதாகத் திறந்து காட்டிச் சோதனைக்கு உட்படுத்தினார். இறுதியில், அந்த மாணவியின் நகைகள் குளியல் அறையில் இருப்பது தெரியவந்தது. இந்தச் செயல், இந்திராவின் நேர்மையான குணத்தைப் பிரதிபலித்தது.

‘‘இந்தியாவை ஆள முடியுமா?’’ 

தன் தந்தையிடம் கற்றுக்கொண்ட அரசியல் பாடம் இந்திராவுக்கு ஒருபுறம் கைகொடுத்தாலும்... மறுபுறம், மனந்தளராது துணிவுடன் போராடியதால்தான் இளம் வயதிலேயே இந்தியாவின் முதல் பெண் பிரதமராக உருவெடுத்தார். இந்தியாவின் பிரதமராக அவர் பதவியேற்றபோது, ‘‘ஒரு பெண்மணியினால் இந்தியாவை ஆள முடியுமா’’ என ஒரு பத்திரிகையாளர் கேட்டார். அதற்கு இந்திரா, ‘‘I am no woman but human’’ என்று பதிலளித்தார்.

‘‘உலகில் இரு வகையான மனிதர்கள் உள்ளனர். ஒரு வகையினர், கடமையைச் செய்வோர்; மற்றொரு வகையினர், அதற்கான சன்மானத்தை எடுத்துக்கொள்வோர். நீங்கள் முதல் வகையினராக இருங்கள்... அங்குதான் போட்டிக் குறைவு’’ என்று சொன்ன இந்திரா, அதுபோலவே வாழ்ந்து காட்டினார். 

‘‘தீங்கு செய்தவர்கள்தான் அதிகம்!’’

‘‘அரசியலில் உங்களுக்கு எப்போதாவது அலுப்புத் தோன்றி இருக்கிறதா’’ என்று அன்னை இந்திரா காந்தியிடம் ஒருமுறை கேட்கப்பட்டது. அதற்கு அவர், ‘‘நான் அரசியலின் அடிப்படை அம்சத்தைத்தான் நோக்குகிறேன். அதை ஒரு தொழிலாகவோ, போட்டிக்குரிய விஷயமாகவோ  பார்ப்பதில்லை’’ எனப் பதிலளித்தார்.

 

இப்படி இந்தியாவின் விடுதலையிலும், ஆட்சியிலும் தன்னை இணைத்துக்கொண்டு வாழ்ந்த அன்னை இந்திரா காந்தி, ‘‘எனக்கு நல்லது செய்தவர்களைவிட, தீங்கு செய்தவர்கள்தான் அதிகம். ஆனால், என்னிடம் அவர்கள் திரும்ப வரும்போது யாரிடமும் எதுவும் சொல்லிக்காட்டாமல் அவர்களை நான் முழுமையாக ஏற்றுக்கொள்வது எத்தனை உண்மையோ, அத்தனை உண்மை அவர்கள் மேல் கசப்புணர்வு தோன்றாமல் இருப்பதும்’’ என்றவர் அவர். கசப்புணர்வு அவருக்கு உண்மையிலேயே தோன்றாததால்தான் என்னவோ தெரியவில்லை... எதிரிகளின் துப்பாக்கிக் குண்டுகளை முழுமையாக ஏற்றுக்கொண்டுவிட்டார்.

https://www.vikatan.com

  • தொடங்கியவர்
‘தெரியாத முகங்களே கனிவுடன் நோக்குகின்றன’
 

image_3026ea5b56.jpgமுகம் தெரிந்த முகங்களைவிட, தெரியாத முகங்களே கனிவுடன் நோக்குகின்றன. எங்கோ ஒரு திசையில் நான் சந்தித்த, இந்த முகவரி தெரியாத அன்பு உள்ளங்களே, என்னைத் தொடர்ந்து இயங்குமாறு தூண்டுகின்றன.

எவ்வித எதிர்பார்ப்பும் இல்லாத பந்தங்கள்; அவை உறவுகளும் அல்ல. ஆனால், மனிதர்களைவிட, பட்சிகள், பறவைகள், பிராணிகள் கூட என்னுடன் வாழ்ந்து கொண்டிருக்கும் ஜீவன்கள்தான். இவைகளுக்குக் குரோத, வைராக்கியங்கள் இல்லை. நேசிக்கும் அல்லது விரும்பாத உறவுகளுடன் கூடவே இவைகளையும் இரட்சித்து மகிழுங்கள்.

இவைகளின் சத்தங்களைப் ஸ்பரிசிப்பது ஆயுள்விருத்திக்கு உதவும். அன்புடன் நேசிக்காதவர்களையும் ஆசீர்வாதம் செய்வதில் பரம ஆனந்தம் உண்டு. அதை ஒரு முறையாவது அனுபவிக்கப் பிரியப்படுங்கள். அந்தப் பரமஆனந்தத்தின் உண்மையைப் புரிந்து கொள்வீர்கள்.

என்றும் இன்பமயமான இந்த உருண்டை உலகு, உங்களுக்கே சொந்தமாக, பேதம் பார்க்காது, உறவுகளை இறுக்கிக் கொள்ளுங்கள். 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.