Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இளமை புதுமை பல்சுவை

Featured Replies

  • தொடங்கியவர்

 

வட கொரிய தலைவர் கிம்மிற்கு பிடித்த செய்தி வாசிப்பாளர்!

வட கொரியாவில் ராக்கெட் ஏவுதல் அல்லது ஏவுகணை தாக்குதலின் போது ரீ சூன் ஹீ தான் செய்தி வாசிப்பாளர். வட கொரியா, அமெரிக்கா இடையே ஏற்பட்டுள்ள பதட்டத்தையடுத்து ஓய்வு பெற்ற இவர் மீண்டும் தொலைக்காட்சியில் செய்தி வாசிக்கிறார்.

  • Replies 11.3k
  • Views 1.5m
  • Created
  • Last Reply
  • தொடங்கியவர்

உங்களுக்குச் சேரவேண்டியது கிடைத்தே தீரும்! - உண்மை உணர்த்தும் கதை #MotivationStory

 
 

கதை

ன்பை வெளிப்படுத்தும் ஒரே உலக மொழி, மலர்ந்த புன்னகை மட்டுமே!’ என்கிறார் அமெரிக்க எழுத்தாளர் வில்லியம் ஆர்தர் வார்டு (William Arthur Ward). வாழ்க்கையில் எத்தனையோ அனுபவங்களை மனிதர்கள் பெற்றிருந்தாலுமேகூட பல நேரங்களில் உண்மையான அன்பை கவனிக்கத் தவறிவிடுகிறார்கள். உள்ளன்போடு உதவ வருபவர்களைத் தவறாக எடைபோடுகிறார்கள்; மென்மையான சிரிப்பை உதிர்க்கிறவர்களைக்கூட அச்சத்தோடு பார்க்கிறார்கள். ஆனாலும் நல்ல மனம் கொண்டவர்கள் இவற்றையெல்லாம் பொருட்படுத்துவதில்லை. தங்களால் இயன்ற உதவியைப் பிறருக்குச் செய்ய அவர்கள் ஒருபோதும் தவறுவதேயில்லை. சக மனிதர்களின்பால் அக்கறையும் அன்பும் கொண்ட ஓர் இளைஞனின் கதை இது. அது மட்டுமல்ல... உலகம் ஒரு சிறிய வட்டம் என்பதை அழுத்தமாக உணர்த்தும் கதையும்கூட.

 

கதை

அமெரிக்கா... நகருக்கு வெளியேயிருக்கும் ஒரு சாலை. காலை 11 மணிக்கு மேல் ஆகியிருந்தாலும்கூட, பனிப்பொழிவு அதிகமாக இருந்ததால், ரோட்டில் வாகனங்களோ, உருவங்களோ தெளிவாகத் தெரியவில்லை. அந்த இளைஞன் தன் ஓட்டைக் காரில் போய்க்கொண்டிருந்தான். ஏதோ ஒரு பாப் பாடலை விசிலடித்துக்கொண்டிருந்தான். உடலை மெள்ள ஊடுருவும் குளிர், ஜில்லென்று அடிக்கும் காற்றின் இதம்... அவனுக்கு மிக உற்சாகமாக இருந்தது. அப்போதுதான் சாலையோரத்தில் ஒரு கார் நிற்பதையும் அதனருகே ஒரு பெண்மணி குளிரில் லேசாக நடுங்கியபடி நிற்பதையும் பார்த்தான். தன் காரை ஓரம் கட்டினான்.

அவர் ஒரு மூதாட்டி. காரில் இருந்து அந்த இளைஞன் இறங்குவதைப் பார்த்தாள். அவன் காரை நிறுத்தாமல் இறங்கியிருந்தான். அந்தப் பழைய மாடல் கார் இரைச்சலிட்டபடி, லேசாகக் குலுங்கிக்கொண்டிருந்தது. கடந்த ஒரு மணி நேரமாக மூதாட்டி அங்கே நின்றுகொண்டிருந்தாள். ஒரு வாகனம்கூட நிற்கவில்லை. அவள் ஏன் இங்கு தனியாக நிற்கிறாள் என்று கேட்கக்கூட யாரும் வரவில்லை. மூதாட்டிக்கு இளைஞனைப் பார்க்க அச்சமாக இருந்தது. அவனுடைய நைந்துபோன பழைய ஆடைகள், தேய்ந்துபோன ஷூ, கிழிசல் விட்டிருந்த மேல் கோட்... பார்த்தாலே ஏழை என்பது தெரிந்தது. இவையெல்லாம் அவளின் பயத்தை அதிகப்படுத்தின. இத்தனைக்கும் அந்த இளைஞன் ஒரு மலர்ந்த புன்னகையோடுதான் அவளை நெருங்கிக்கொண்டிருந்தான். மூதாட்டியோ, அவன் தன்னை எதுவும் செய்துவிடுவானோ, பணம் பறிக்க வருகிறானோ என்றெல்லாம் பயந்துகொண்டிருந்தாள்.

முகத்தைப் பார்த்தே அந்த மூதாட்டி என்ன நினைக்கிறார் என்பதை அந்த இளைஞன் புரிந்துகொண்டான். ஆனாலும், அதே புன்னகையோடு அவளருகே வந்தான். வணக்கம் சொன்னான். அது, விலை உயர்ந்த மெர்சிடிஸ் பென்ஸ் கார்.``மேடம் ஏன் இப்படி தனியா நிக்கிறீங்க? இவ்வளவு குளிர் அடிக்குதே... கார்ல போய் உட்கார்ந்திருக்கலாம்ல?’’ என்று கேட்டான். மூதாட்டி பதில் எதுவும் சொல்லவில்லை.

``என் பெயர் ஆண்டர்சன்...’’ என்று அறிமுகப்படுத்திக்கொண்டான் இளைஞன். அதற்கும் அவள் பதில் எதுவும் சொல்லவில்லை. இளைஞன் காரைச் சுற்றி வந்தான். காரின் பின் சக்கரம் பஞ்சராகியிருப்பது தெரிந்தது. ``ஓ... இதுதான் பிரச்னையா?’’ என்றவன், மேற்கொண்டு தாமதிக்கவில்லை. அவனாகவே அந்த காரின் டிக்கியைத் திறந்தான். ஸ்டெப்னி, ஜாக்கி ஒரு டயரை மாற்றத் தேவையான இதர உபகரணங்கள் எல்லாம் இருந்தன. அவற்றை எடுத்துக்கொண்டு இளைஞன், காருக்கடியில் தவழ்ந்து போனான். கால் மணி நேரத்தில் பஞ்சரான டயரைக் கழற்றிவிட்டு, இன்னொன்றை மாற்றிவிட்டான். அவன் காருக்கடியிலிருந்து வெளியே வந்தபோது அவன் உடைகளில் அழுக்கும் சேறும் படிந்திருந்தன. ஒரு விரலில் கீறல் விழுந்து லேசாகக் காயம்பட்டிருந்தது.

பணிப்பெண்

இளைஞன் பஞ்சரான டயர், இதர பொருள்களையெல்லாம் அந்த மூதாட்டியின் கார் டிக்கியில் வைத்து மூடினான். ``எங்கேருந்து வர்றீங்க?’’ என்று கேட்டான்.

``செயின்ட் லூயிஸ்லருந்து...’’

``ஓ...’’

அப்போதும்கூட அவள் அவனுக்கு ஒரு நன்றிகூடச் சொல்லவில்லை. தன் ஹேண்ட் பேக்கைத் திறந்தாள். அவன் முகத்தை நேருக்கு நேராகப் பார்க்காமலேயே ``இந்த வேலைக்கு நான் எவ்வளவு தரணும்?’’ என்று கேட்டாள்.

இளைஞனின் முகம் சுருங்கிப்போனது. இதை அவன் எதிர்பார்க்கவில்லை. அவன் உதவி செய்யத்தான் வந்திருந்தானே தவிர, டயரை மாற்றும் வேலைக்கு அல்ல. அது அவன் வேலையும் அல்ல. அவன் நினைத்திருந்தால், அந்த மூதாட்டியிடம் எவ்வளவு வேண்டுமானாலும் கேட்டிருக்கலாம்.

``மேடம்... பணத்துக்காக நான் உங்களுக்கு ஹெல்ப் பண்ணலை. எனக்கு எதுவும் வேணாம். இந்த வேலைக்குப் பணம் கொடுக்கணும்னு விரும்பினீங்கன்னா, கஷ்டப்படுறவங்க யாரையாவது பார்ப்பீங்கல்ல... அவங்களுக்கு உதவி பண்ணுங்க. அப்போ... என்னையும் நினைச்சுக்கங்க...’’ என்று சொல்லிவிட்டு இளைஞன் தன் காரில் ஏறிக் கிளம்பிவிட்டான்.

***

அந்த மூதாட்டி வழியில் ஒரு ரெஸ்ட்டாரன்ட்டில் தன் காரை நிறுத்தினாள். சாப்பிடுவதற்காக உள்ளே நுழைந்தாள். அது ஒரு பழையகாலக் கட்டடம். உள்ளே ஆட்களும் அதிகமில்லை. ஒரு மேஜையில் இரண்டே இரண்டு பேர் அமர்ந்து சாப்பிட்டுக்கொண்டிருந்தார்கள். மூதாட்டி தயக்கத்தோடு ஒரு மேஜையில் அமர்ந்தாள். வந்தனம் சொன்னபடி ஒரு பணிப்பெண் வந்தாள். அவள் முகத்தில் மலர்ந்த சிரிப்பு. மூதாட்டியின் ஈரத் தலையைத் துவட்டிக்கொள்ள சுத்தமான ஒரு டவலை நீட்டினாள். துவட்டி முடித்ததும் ஆர்டர் எடுத்துக்கொண்டு, விரைவாக உணவைக் கொண்டு வந்து வைத்து அழகாகப் பரிமாறினாள். மூதாட்டி ஒன்றைக் கவனித்திருந்தாள். அந்த பணிப்பெண் நிறைமாத கர்ப்பிணி. ஆனால், தன் வலியையோ, தான் கர்ப்பமாக இருக்கிறோம் என்பதையோக் கொஞ்சம்கூட வெளிக்காட்டாமல் சிரித்த முகத்தோடு மூதாட்டிக்கு வேண்டியவற்றைப் பரிமாறினாள். மூதாட்டிக்கு தனக்கு உதவிய இளைஞனின் நினைவு வந்தது.

பில் வந்தது. மிக மிகக் குறைந்த தொகை. மூதாட்டி ஒரு நூறு டாலர் கரன்ஸியை எடுத்து பில்லோடு வைத்தாள். பணிப்பெண் பில்லுக்கான பணத்தைச் செலுத்திவிட்டு வந்து பார்த்தபோது மூதாட்டி அங்கே இல்லை. சாப்பாட்டு மேஜையில் மூதாட்டி எழுதிவைத்திருந்த ஒரு குறிப்பு இருந்தது. அதில், `இது உன் வேலைக்காக அல்ல... உன் சேவைக்காக. இந்தப் பணம் வேண்டாம் என்று நினைத்தால், கஷ்டப்படும் வேறு யாருக்காவது உதவி செய்’ என்று எழுதியிருந்தது. அந்தக் குறிப்புச் சீட்டுக்குக் கீழே மேலும் நான்கு 100 டாலர் கரன்ஸிகள் இருந்தன.

***

ஆண்டர்சன் மனைவியுடன்

பணிப்பெண் இரவு வீடு திரும்பினாள். அன்றைக்கு நடந்தது அவளுக்கு ஆச்சர்யமாக இருந்தது. `அந்த அம்மாவுக்கு நான் கஷ்டப்படுறேன்னு எப்படித் தெரியும்? பிரசவத்துக்கு நாள் நெருங்கிக்கிட்டிருக்கு. பிரசவ செலவுக்கு என்ன பண்றதுனு தெரியாம நானும் அவரும் முழிச்சிக்கிட்டு இருந்தோம். கடவுள் மாதிரி இந்தம்மா உதவி செஞ்சுட்டுப் போறாங்களே...’ என்று திரும்பத் திரும்ப அன்று நடந்ததையே நினைத்து வியந்துகொண்டிருந்தாள். அவள் கணவனும் வீடு திரும்பினான். அவன் சாப்பிட்டு முடித்து படுக்கைக்கு வந்ததும் அன்று நடந்ததையெல்லாம் அந்தப் பணிப்பெண் சொன்னாள். அவன் கேட்டுக்கொண்டிருந்தான்.

``அந்தக் கடவுளுக்குத்தான் நாம நன்றி சொல்லணும்... இல்லையா ஆண்டர்சன்?’’

அவன் மௌனமாகத் தலையசைத்தான்.

https://www.vikatan.com/

  • தொடங்கியவர்

உலக தொழில் முனைவோர் மாநாட்டில் கவனம் ஈர்த்த 13 வயது ஆட்டிசம் மாணவர்

 

ஹைதராபாத்தில் நடைபெற்று வரும் உலக தொழில் முனைவோர் மாநாட்டில் 13 வயதாகும் ஹமிஷ் ஃபின்லேசன் என்ற மாணவர் அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளார்.

உலக தொழில் முனைவோர் மாநாட்டில் கவனம் ஈர்த்த 13 வயது ஆட்டிசம் மாணவர்

உலக தொழில் முனைவோர் மாநாடு ஹைதராபாத்தில் நவம்பர் 28 முதல் 30 வரை நடைபெற்றது.

7 ஆம் வகுப்பு படிக்கும் ஆட்டிசம் பாதிக்கப்பட்டுள்ள இளம் மாணவரான ஹமிஷ் இதுவரை 5 செல்பேசி மென்பொருட்களை (apps) உருவாக்கியுள்ளார்.

"வீடியோ கேம்கள் என்றால் எனக்கு மிகவும் பிடிக்கும். நான் வீடியோ கேம்களை விளையாடுகிறேன். இதற்கான நிரல்களை உருவாக்குவதைக் கற்றுக்கொண்டு திறன்பேசிகளுக்கான செயலிகளை உருவாக்கி வருகிறேன். என்னிடம் சில புதிய யோசனைகள் உள்ளன. நான் புதிய விளையாட்டுக்களை உருவாக்கி, அவற்றை மேம்படுத்தி வருகிறேன். வீடியோ கேமின் டிஜிட்டல் வெளியில் வேலை செய்ய விரும்புகிறேன்," என்று ஹமிஷ் பிபிசியிடம் தெரிவித்துள்ளார்.

"ஆட்டிசம் பாதிக்கப்பட்ட ஒவ்வொரு தனி நபரும் வேறுபட்ட அளவில் பாதிக்கப்படுகின்றனர். மனிதர்களை அடையாளம் காணுதல், எழுதுதல் மற்றும் வாசிக்கும் போன்ற திறன்கள் ஆட்டிசம் பாதித்த ஒவ்வொரு நோயாளிகளுக்கும் அளவில், தன்மையில் வேறுபடுகின்றன. சிலர் அதிக திறமையுடையவர்களாக இருப்பர். சிலர் கணக்குகளை மிக நன்றாகவே செய்வர்" என்கிறார் ஹமிஷின் தந்தை கிரேம் ஃபின்லேசன்.

"ஹமிஷ் எங்களோடு மட்டுமே இருப்பார். சில நாட்கள் அவர் நன்றாக இருப்பார். சில நாட்கள் துன்பப்படுகிறார், பள்ளிக்கு செல்லும் அவர், கணிதம், அறிவியல், தொழில்நுட்பம் ஆகிய பாடங்களை கற்கிறார். இருப்பினும், அவர் எழுதுவதற்கு கஷ்டப்படுகிறார்" என்று அவருடைய தந்தை தெரிவிக்கிறார்.

சுற்றுச்சூழல் பாதுகாப்பு மற்றும் ஆட்டிசம் தொடர்பான திறன்பேசி செயலிகளை ஹமிஷ் உருவாக்கியுள்ளார்.

"நானொரு ஆட்டிசம் பாதித்த குழந்தை. பலருக்கு ஆட்டிசம் பற்றி அதிகம் தெரியாது. ஆட்டிசம் பாதித்த குழந்தைகளை மக்கள் கேலி செய்கின்றனர். அவர்கள் பாரபட்சமாக நடத்தப்படுகிறார்கள். ஆட்டிசம் பற்றி மக்கள் கொண்டிருக்கும் மனத் தடைகளை உடைத்தெறிய நான் முயல்கிறேன். ஆட்டிசம் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்காக செல்பேசி செயலிகளை உருவாக்கி அவர்களும் சிறந்ததொரு வாழ்க்கை வாழ்வதற்கு உதவ முயல்கிறேன்" என்று ஹமிஷ் கூறியிருக்கிறார்.

விளையாட்டு மற்றும் தொழில்நுட்பத்தில் ஹமிஷ் கொண்டிருக்கும் விரும்பம், குழந்தைப் பருவத்தில் இருந்தே செல்பேசி செயலிகளை உருவாக்கச் செய்துள்ளது. தற்போது அவர் தமது 6வது செல்பேசி செயலியை உருவாக்கி வருகிறார்.

http://www.bbc.com/

  • தொடங்கியவர்

 

வெளிச்ச மாசு மனிதர்களையும், விலங்குகளையும் எவ்வாறு பாதிக்கிறது?

வெளிச்ச மாசு மனிதர்களையும், விலங்குகளையும் எவ்வாறு பாதிக்கிறது என்பதைத் தெரிந்துகொள்ள இந்தக் காணொளியைப் பார்க்கவும்.

  • தொடங்கியவர்

வலைபாயுதே

 

சைபர் ஸ்பைடர்

 

facebook.com/buhariraja

முன்னாடியெல்லாம் பொங்கலுக்குதான் கேட்காமலயே உளுந்த வடை வச்சீங்க, அப்றம் இட்லி தோசைக்கும் வச்சீங்க, இப்ப என்னடா பூரி பரோட்டாவுக்கெல்லாம் உளுந்தவடை வைக்க ஆரம்பிச்சுட்டீங்க!

twitter.com/chithradevi_91

வாழ்க்கை திங்கள் முதல் வெள்ளி வரை டெஸ்ட் மேட்ச் மாதிரியும் சனிக்கிழமை ஒன்டே மேட்ச் மாதிரியும் ஞாயிற்றுக் கிழமை மழையால் பாதிக்கப்பட்ட நாலு ஓவர் டி20 மாதிரியும் முடிஞ்சிருது.

twitter.com/azam_twitz

திருமண மண்டபத்தில் சொந்தக்காரர்களின் நடுவில் மாட்டிக்கொள்ளுவதும் ட்ராஃபிக் போலிஸிடம் மாட்டிக்கொள்வதும் ஒன்றுதான். இருவரும் நம்மிடம் எது இல்லையோ அதைத்தான் துருவித் துருவிக் கேட்பார்கள்!

p105a_1511861983.jpg

twitter.com/iindran

பேச ஒண்ணும் இல்லையெனில் எமோஜிகளாய் அனுப்பி சாவடிக்கும் அரியவகை உயிரினங்களை...அல்லையில் மிதி என்கிறான் புத்தன்.

twitter.com/sundartsp

இந்தியப் பெருங்கடலில் சுனாமி வருமாம். ஆப்கானிஸ்தான்கூட பாதிக்கப் படுமாம், ஏன்டா, வதந்தின்னாலும் ஒரு லாஜிக் வேண்டாமா, முதல்ல மேப்பைப் படிங்கடா.

twitter.com/amuduarattai

மனைவியின் மௌனத்தில் உள்ள கோபத்தை, ஊர்கூட அறியும். ஆனால், கணவனின் மௌனத்தில் உள்ள திருட்டுத்தனத்தை, மனைவி மட்டுமே அறிவாள்.

twitter.com/Thaadikkaran

மாசக்கடைசியில் எதைப் பார்த்தாலும் சாப்பிடத் தோன்றுவதே காசு இல்லாதவனின் டிசைன்!

p105b_1511862004.jpg

twitter.com/mymindvoice

டின்னருக்கு ஒருத்தவங்க வீட்டுக்கு வந்து ஒரு மணி நேரமாச்சு... இன்னும் சாப்பிடுங்கன்னு சொல்ல மாட்டேங்கறாங்க... இன்னைக்குன்னு பார்த்து எக்கச்சக்கமா பசிக்குது #எந்தப்பிறவி பாவத்துக்குத் தண்டனையோ.

twitter.com/jeranjit

தலையில் பாலிதீன் பையோடு மழையில் சென்றால்,சாதாரண தூறல்கூட நியூஸ்சேனலில் சொல்லப்படுவதுபோல் பயங்கர மழையாகத் தெரிகிறது.

twitter.com/MJ_twets

எல்லோரையும் நம்பினால் ஏமாற்றத்தை அளிக்கிறது. யாரையும் நம்பாமல் இருந்தால் தடுமாற்றத்தை அளிக்கிறது. #விசித்திரமான_வாழ்க்கை

p105c_1511862023.jpg

twitter.com/meenammakayal

ஆணுடனான உறவில், பொதுவில் முக்கியத்துவத்தையும் தனித்திருக்கையில் பாதுகாப்பையும் உணரும் பெண் காதல் வயப்படுகிறாள்.

twitter.com/aayilyan

கல்யாணம் ஆனபிறகு, அந்தப் பய ஜோக்கும் அடிக்கணுமாம்! #யம்மாடியோவ்_எவ்ளோ_பெரிய_பேராசை.

twitter.com/manipmp

கட் அவுட் உள்ளது
மெதுவாகச் செல்.

p105d_1511862046.jpg

twitter.com/iindran

துண்ட கட்டிட்டு பாத்ரூம் போறதுக்கு முன்னாடி தண்ணி வருதானு செக் பண்ணிக்கணும். #தினம் ஒரு பாடம்.

twitter.com/mekalapugazh

விற்கத் தெரியாதவன், மோசமான பொருளை விற்பதில்லை.

twitter.com/kumarfaculty

இடியாப்பச் சிக்கலின் நியூ வெர்ஷன் ஹெட்போன் சிக்கல்...!

p105e_1511862062.jpg

twitter.com/thoatta

விஐபி 2, சென்னையில் ஒரு நாள் 2’ன்னு இந்த வருஷம் வந்ததெல்லாம் சொதப்புறதுனால, ஓபிஎஸ், `தர்மயுத்தம் 2’வ ஜனவரில ஆரம்பிக்கலாம்.

twitter.com/mufthimohamed1

என் துணிய நானே துவைக்கிறேன், சாப்பிட்ட தட்டை நானே கழுவி வைக்கிறேன். இதவிட ஒரு பொண்ணுக்கு நல்ல மாப்பிள்ளை வேற எங்க கிடைப்பான்!

twitter.com/Rathikagenius

அம்மாவுக்கு டிவி
அப்பாவுக்கு அக்கவுண்ட்ஸ்
அக்காவுக்கு வாட்ஸப்
தம்பிக்கு பேஸ்புக்
எனக்கு ட்விட்டர்
யாராவது பேச மாட்டார்களா என்று
ஏக்கமாய்ப் பார்த்தபடி
இருக்கிறது
வீடு

p105f_1511862079.jpg

twitter.com/meenammakayal

`என்னை உனக்குப் பிடிக்குமா?’ என்ற கேள்விக்கு சிரித்துக்கொண்டே இல்லை என்பதும்... `போகட்டுமா?’ என்ற கேள்விக்கே அழுதுகொண்டே போவென்பதும் காதல்

facebook.com/Araathu R

கோவை கெத்து, மதுரை கெத்து, நத்த மேடு கெத்து என ஸ்டேட்டஸ் போடும் பலரும் சென்னையில் இருந்து அதைப் போடுவதுதான் சென்னையின் கெத்து!

https://www.vikatan.com

Edited by நவீனன்

  • தொடங்கியவர்

உலக அழகி மனுஷி சில்லரின் கேள்விக்கு கேப்டன் விராட் கோலி அளித்த பளீச் பதில்!

 
 

டெல்லியில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் இந்தியக் கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட் கோலியும் அண்மையில் உலக அழகியாகப் பட்டம் வென்ற மனுஷி சில்லரும் கலந்துகொண்டனர். 

Kohli_17551.jpg

 
 

Photo Credit: Twitter/FeminaminssIndia

இந்த நிகழ்ச்சியில் முதன்முதலாக விராட் கோலியைச் சந்தித்த மனுஷி சில்லர், தனது பேவரைட் கிரிக்கெட்டர் விராட்தான். அவர் செய்த சாதனைகள் ஏராளம் என்று புகழ்ந்து தள்ளினார். முடிவில் விராட் கோலியிடம், மனுஷி சில்லர் ஒரு கேள்வியை முன்வைத்தார். `இந்தத் தருணத்தில் உலகின் தலைசிறந்த பேட்ஸ்மேன் நீங்கள். நீங்கள் மற்றவர்களுக்குச் சிறந்த முன்னுதாரணமாகவும் திகழ்கிறீர்கள். சமூக முன்னேற்றத்துக்கு உங்களது பங்களிப்பையும் அளித்து வருகிறீர்கள். ஆனால், இளம் வயதினர் ஏராளமானவர்கள் உங்களைப் பின்பற்ற விழைகிறார்கள். கிரிக்கெட்டைப் பொறுத்தவரை அவர்களுக்கு நீங்கள் சொல்ல விரும்புவது என்ன’ என்ற கேள்வியை விராட் கோலிக்கு முன்வைத்தார் மனுஷி சில்லர். 

 

ஒரு கிரிக்கெட் வீரராகவும் மனிதராகவும்தான் முதிர்ச்சியடைந்தது குறித்து கேப்டன் விராட் கோலி பேசினார். அவர் கூறுகையில், ‘‘கிரிக்கெட் களத்தில் ஒரு வீரராக நீங்கள் என்ன செய்கிறீர்கள் எப்படி உங்களின் உணர்வுகளை வெளிப்படுத்துகிறீர்கள் என்பதைப் புரிந்துகொள்வது முக்கியமான ஒன்று. உண்மையான உங்கள் உணர்வுகளைத் தன்மையாக வெளிப்படுத்த வேண்டும். இல்லாவிடில், நீங்கள் நடிப்பதைப் போன்ற தோற்றம் ஏற்பட்டுவிடும். அதேபோல், ஒவ்வொருவரும், தங்களின் சொந்த அடையாளங்களை இழந்துவிடாமல் இருப்பது முக்கியம். நான் வேறு ஒருவராக இருக்க வேண்டும் என்று எப்போதும் முயன்றது கிடையாது. நான் நானாகவே இருக்க விரும்புகிறேன். அதனால், எனக்கு எந்தப் பிரச்னையும் இதுவரை ஏற்பட்டதில்லை. வேறு ஒருவரைப்போல் நீங்கள் நடந்துகொள்ள முயன்றால், உங்களால் எப்போதும் வெற்றியை ருசிக்க முடியாது’' என்றார்.

https://www.vikatan.com

  • தொடங்கியவர்

இந்தோனீசியாவின் வித்தியாசமான திருவிழா

350 ஆண்டுகளுக்கு முன்பு, சிறிய ரூன் தீவுக்காக மன்ஹாட்டன் என்ற ஒரு சதுப்பு நிலத்தை டச்சு நிர்வாகம் பிரிட்டிஷுக்கு வழங்கியது. இந்தோனேஷியாவின் அங்கமான ரூன் தீவில் இந்நிகழ்வை நினைவுகூறும் விதமாக கொண்டாடப்பட்ட மன்ஹாட்டன் திருவிழாவை நேரில் பதிவு செய்தது பிபிசி.

  • தொடங்கியவர்

சரித்திரத்தில் என்றென்றும் நீங்காது நிலைபெற்ற அந்த 3 பேரழகிகள் யார்?

 

 
cleopatra1

பண்டைய உலகம் அழகான, அறிவார்ந்த மற்றும் துணிச்சலான பல குறிப்பிடத்தக்க பெண்களைக் கொண்டிருந்தது. இவர்களில் பல பெண்ணரசிகள் இன்றும்கூட வரலாற்று புத்தகங்களிலும், பல்வேறு கலாச்சாரங்களின் நூல்களிலும், சிலையாகவும் சிற்ப அழகிகளாகவும் நமது கவனத்தை கவர்ந்துள்ளனர். 

வாழும் காலத்தில் சூழ்ச்சிகளால் கொன்றொழிக்கப்பட்டு, சரித்திரத்தின் நீண்ட பக்கங்களில் சில சமயம் இருட்டடிப்பு செய்யப்பட்டும் இருந்தாலும், அவர்களின் புகழ் ஒருபோதும் மங்கி மறைவதில்லை. காலம்தோறும் வெவ்வேறு வகையில் வீறு கொண்டு அவர்களைப் போலவே உயிர்த்தெழுந்து கொண்டிருக்கிறது அவர்களின் புகழ். சந்திரர் சூரியர் உள்ளவரை அவர்களின் பெயர்கள் என்றென்றும் நிலைக்கும். அவ்வகையில் மறக்க முடியாத இந்த மூன்று அழகிகள் இன்றளவும் உலகிற்கு ஒரு தூண்டுதலாக கருதப்படுகிறார்கள். 

நவீன காலம் 16-ம் நூற்றாண்டில் தொடங்கியது எனலாம். எனவே நவீன காலத்திற்கு முன்னால், நம் பண்டைய நாகரிகத்தில் பேரழகிகள் இவர்கள். இவர்கள் அழகில் மட்டுமில்லை, தம் வாழ்நாளில் தொடங்கி வரலாறு தோறும் பெரும்புகழ் பெற்றவர்கள். 

Cleopatra_-_John_William_Waterhouse.jpg

1. கிளியோபாட்ரா VII (பிறப்பு - கி.மு. 69 - இறப்பு - கிமு 30)
 
சரித்திரத்தில் நிலைபெற்றுவிட்ட உலகப் பேரழகி யார் என்ற கேள்விக்கு பதில் கிளியோபாட்ரா என்றுதான் இன்றும் பதில் சொல்வார்கள். கற்பனைக்கும் எட்டாத பேரெழில் உருவம் பெற்றவள் கிளியோபாட்ரா. பண்டைய எகிப்திய வரலாற்றில் அழகின் கலைச் சின்னமாக விளங்கியவள் அவள். 

cleo.jpg

எகிப்து அரசன், பன்னிரெண்டாம் டாலமியின் மகளாகப் பிறந்தவள் க்ளியோபாட்ரா. தனது தந்தையின் மறைவுக்குப் பின் இளைய சகோதரன், பதிமூன்றாம், டாலமியுடன் இணைந்து எகிப்திய சாம்ப்ராஜ்யத்தின் ஆட்சிப் பொறுப்பை ஏற்றாள் 18 வயதே நிரம்பியிருந்த கிளியோபாட்ரா. சங்கீதம் போன்ற தேன் குரல், பார்ப்பவர் கண் எடுக்க முடியாமல் மீண்டும் பார்க்க வைக்கும் அழகிய கண்கள், செதுக்கி வைத்த சிற்பம் போன்ற உடல் அமைப்பு என்று கிளியோபாட்ராவின் அழகை வர்ணிக்க வார்த்தைகள் இல்லை. அழகு மட்டுமல்லாமல் அறிவிலும் வீரத்திலும் சிறந்து விளங்கியவள் அந்த பேரரசி.

elizabeth-taylor.jpg

ஒன்பது மொழிகளைப் பேசும் திறமை, வேகம், அரசியல் சாணக்யம், மனத் துணிவு ஆகிய குணங்களுடன் தன்னிகரற்ற அரசியாக விளங்கினாள். காதல், வீரம், சாகஸம் என்று புகழ் ஏணியின் உச்சத்தில் இருந்த அவளுடைய வாழ்க்கை அதே காதலுக்காக உயிரை நீக்கிக் கொள்ளும் அளவுக்கு வீழ்த்தியது.

death-cleopatra.jpg

ஆனால் காதலுக்காக தற்கொலை செய்துகொண்ட அவளை சரித்திரத்தின் பக்கங்கள் பத்திரப்படுத்தியிருக்கிறது. க்ளியோபாட்ரவின் உடலானது இந்தப் பூமிப் பரப்பில் புதைந்து, கரைந்து, காணாமலாகியிருக்கலாம். ஆனால், அவளது புகழ் பல்லாயிரம் ஆண்டுகளுக்குப் பின்னரும் நிலைத்திருப்பது அவளுக்குக் கிடைத்த பெரும் பேறு.

cleopatra-liz-taylor-580.jpg

1963-ம் ஆண்டில் பிரபல ஹாலிவுட் நடிகை எலிசபெத் டெய்லர் நடிப்பில் கிளியோபாட்ரா படம் வெளிவந்து உலக ரசிகர்களை பெருமளவில் ஈர்த்தது. இதன் படமாக்கத்தின்போது டெய்லர் தன்னுடைய வருங்கால கணவரான ரிச்சர்ட் பர்டனுடன் காதல் கொள்ளத் தொடங்கினார், திரைப்படத்தில் அவர் மார்க் ஆண்டனியாக நடித்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

2. சம்யுக்தா (12 வது நூற்றாண்டு)
 
பண்டைய பாரதத்தில் கன்னோஜ் நாட்டின் மன்னன் ஜெய்சந்த் என்பவரின் அழகான மகள்தான் இளவரசி சம்யுக்தா. பண்டைய வரலாற்றில் மிக அழகிய இந்திய பெண்கள் அவர். 

 

ஜெய்சந்த், தில்லியின் அரசன் பிரிதிவிராஜ் சௌகானும் இராஜபுத்திர குலத்தவராக இருந்தாலும் இருவரும் ஒருவர் மீது மற்றவர் பகையுணர்வுடன் இருந்தனர். பிரிதிவிராஜின் வீரத்தையும் புகழையும் அறிந்து, சம்யுக்தா, அவர் மீது காதல் கொண்டாள். பிரிதிவிராஜும் சம்யுக்தாவின் மீது தீராக் காதல் கொண்டான். ஆனால் தந்தை ஜெய்சந்த் இருவரின் காதலை ஏற்று திருமணம் செய்து வைக்க மறுத்து, சம்யுக்தாவிற்கு திருமண சுயம்வரத்திற்கு ஏற்பாடு செய்தார்.

samyuktha.jpg

சுயம்வரத்திற்கு பிரிதிவிராஜ் சௌகானைத் தவிர மற்ற இளவரசர்க்ளுக்கு அழைப்பு விடுத்தார். இதனை கேள்விப்பட்ட பிரிதிவிராஜ் சௌகான் மிகுந்த கோபம் கொண்டு, சம்யுக்தாவை கன்னோஜிலிருந்து கடத்திச் சென்று, தில்லியில் அவளை மணம் புரிந்தான். இது ஜெய்சந்தின் கோபத்தை பன்மடங்காக்கியது.

கோரி முகமது தில்லியின் மீது முதலில் படையெடுப்பு செய்தபோது பிரிதிவிராஜ் சௌகான் வென்றார். இரண்டாம் முறை கோரி முகமது பெரும்படையுடன் தில்லி மீது படையெடுக்கையில், பிரிதிவிராஜ் சௌகான் மீதான கோபத்தின் காரணமாக, ஜெய்சந்த் போரில் உதவி செய்ய மறுத்ததால், பிரிதிவிராஜ் போரில் தோல்வியுற்று மரணமடைந்தார். கணவனின் மரணத்தை அறிந்த சம்யுக்தாவும், இராஜபுத்திர குலப் பெண்களும் கூட்டாகத் தீக்குளித்து மாண்டனர். அதன் பின்னர் கோரி முகமது, கன்னோஜி நாட்டையும் சூறையாடி ஜெய்சந்தை வென்று, பெருஞ்செல்வங்களை கொள்ளை கொண்டு நாடு திரும்பினான் என்கிறது வரலாறு.

Samyukta.jpg

தமிழில் எம்.ஜி.ஆர் மற்றும் பத்மினி நடித்த ராணி சம்யுக்தா என்ற திரைப்படம் 1962-ல் வெளிவந்தது. சம்யுக்தா - பிரிதிவிராஜ் சௌகான் காதல் கதையும், பிரிதிவிராஜ் சௌகானின் வீரம் குறித்தும் தொலைக்காட்சி (ஸ்டார் பிளஸ்) தொடர்கள் வெளிவந்தது. மேலும் ராணி சம்யுக்தா என்ற பெயரில் பல வரலாற்று புதினங்கள் வெளியாயின. பல்லாயிரம் ஆண்டுகள் கழித்தும் சம்யுக்தாவின் பெயர் சரித்திரத்தில் நிலைத்துவிட்டக் காரணம் அவளது அழகு மட்டுமல்ல, தான் நேசித்த ஒருவருக்காக உயிரையும் மாய்த்துக் கொண்ட தியாகமும்தான்.

3. ஜோன் ஆப் ஆர்க் (14-வது நூற்றாண்டு)
 
ஜோன் ஆஃப் ஆர்க் பிரான்சின் மிக அழகான மற்றும் துணிச்சலான பெண். தொலைநோக்குப் பார்வையும், ஈடில்லாத தன்னம்பிக்கையும் கொண்ட போராளி இவள். இராணுவத் தலைவி, தியாகி, துறவி, பிரான்சின் கதாநாயகி என பன்முகத்தன்மையுடன் விளங்கிய ஜோன் உலக மக்களால் இன்றளவும் நினைக்கப்படுகிறாள்.

joan-of-arc.jpg

பிரான்ஸ் நாட்டின் ‘தோம்ரிமி’(Domrémy) என்ற  கிராமத்தில், ஜனவரி 6-ம் தேதி 1412-ம் ஆண்டு சாதாரண விவசாயக் குடும்பத்தில் பிறந்த ஜோன் பின்னாளில் தனது தாய் நாட்டையே காக்கும் அளவுக்கு வீர மங்கையானாள். தனது பதினெட்டாவது வயதில் பிரான்ஸை அந்நிய ஆட்சியிலிருந்து மீட்க சூளுரைத்து செயலில் இறங்கினாள். 

fb.jpg

15-ம் நூற்றாண்டில். இங்கிலாந்து மற்றும் பிரான்ஸ் நாடுகளுக்கு இடையே கடுமையான போர் நடந்தது. பிரான்ஸின் பல பகுதிகளை இங்கிலாந்து கைப்பற்றியது. இதனால் பிரான்ஸ் அரசனான ஏழாவது சார்லஸ் பதவியில் இருந்தும் செயலற்றுப் போனான்.மன்னரைச் சந்தித்து தனது தலைமையில் ஒரு படையை தருவித்தால் பிரான்ஸை எப்பாடுபட்டாவது மீட்பேன் என்று தெரிவித்தாள். சார்லஸ் மிகுந்த தயக்கத்திற்குப் பிறகேஐந்தாயிரம் போர்வீரர்களை அனுப்பினான். ஆணைப் போல் கவசம் அணிந்து, போர் வீரனைப் போல உருமாறிய ஜோன் தனது கரத்தில் உருவிய வாளுடன் பெரும் உத்வேகத்துடன் குதிரையின் மீதேறி புறப்பட்டாள்.

joan_of_arc_1.jpg

பல நாட்கள் தொடர்ந்த போரின் இறுதியில் ஜோன் வென்றாள். ஆர்லென்ஸ் நகரைக் கைப்பற்றினாள். மக்கள் மகிழ்ச்சியுடன் இந்த வெற்றியைக் கொண்டாடினார்கள். ஆனால் ஜோனின் இந்த வீரச் செயல் திரிக்கப்பட்டு தீய எண்ணம் கொண்ட சிலரால் மதபோதக சபையின் முன்னால் நீதிவிசாரணைக்கு உட்படுத்தப்பட்டாள். அதில் அவள் தோல்வியுற்று உயிருடன் தீ வைத்து எரிக்கப்பட்டாள். ஜோன் போன்றோரின் வீர மரணத்தாலும் ரத்த கறையாலும் தான் சரித்திரத்தில் அவர்கள் பெயர்கள் எழுதப்பட்டிருக்கிறது. டானிஷ் இயக்குநர் கார்ல் டிரையர் இயக்கிய தி பேஷன் ஆஃப் ஜோன் ஆஃப் ஆர்க் ( The Passion of Joan of Arc) எனும் மெளனப் படம் ஜோனின் புகழை உலகெங்கிலும் மொழிகள் கடந்த பறைசாற்றிக் கொண்டிருக்கும்.

http://www.dinamani.com/

  • தொடங்கியவர்
‘கணவன், மனைவி உறவு விசித்திரமானது’
 

image_56bff643a0.jpgகணவன், மனைவி உறவு ரொம்பவும் விசித்திரமானதுதான். எங்கோ பிறந்து, எங்கோ வளர்ந்து, பின்னர் எப்படியோ கணவன் , மனைவியாகிவிடுகின்றனர்.  

அப்புறம் நடப்பது என்ன? ஒருவரை ஒருவர் நேசிக்க ஆரம்பிக்கின்றனர். இதைக் காதல் என்ற வார்த்தைக்குள் மட்டும் அடக்கிவிட முடியாது. ஒருவரை ஒருவர் பிரிந்துவிட முடியாமல் தவிக்கின்றனர். ‘இவள் இல்லாமல் நான் இல்லை; இவன் இல்லாமல் நான் இல்லை’ என்றவாறான இருவரின் இருப்புகளும், அவர்களின்  அசைவுகளிலும் நினைப்புகளிலும் லயிப்புகளிலும்  எப்படித் தெரிகின்றது?  

பிள்ளைகளைப் பெற்று, அவர்கள் வளர்ந்த பின்னரும் கூட, எந்தவொரு மனைவியும் கணவனை, வளர்ந்த, முதிர்ச்சியடைந்த ஆன்மாவாக, நபராக கருதுவதேயில்லை.அவனைத் தனது குழந்தையாக , பிள்ளையாகவே கருதும் பாட்டி வயது அம்மாக்களை, நாங்கள் கண்டதுண்டு.  “இன்னமும் இவருக்குப் பொறுப்பேயில்லை; சின்னப்பிள்ளைபோல் இருக்கின்றார்” என்பாள். கணவன் சாப்பிடாமல் இருந்தால், இவளுக்கு மனம் பொறுப்பதேயில்லை. தன்னையே அவருக்கு அர்ப்பணிக்கின்றாள். அவனும் அப்படியே! இந்த யுகாந்திரத்துக்கும் மேலான பிணைப்பு எப்படி?  

  • தொடங்கியவர்

சப்பாத்தி தயாரிப்பது கஷ்டம், நன்றாக பருப்பு சமைப்பேன்: ஒபாமா ருசிகரம்

புதுடெல்லியில் நேற்று ஆங்கில பத்திரிகை நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அமெரிக்க முன்னாள் ஜனாதிபதி ஒபாமா இந்திய உணவு பண்டங்கள் குறித்த கேள்விக்கு ருசிகரமாக பதில் அளித்துள்ளார்.

 
சப்பாத்தி தயாரிப்பது கஷ்டம், நன்றாக பருப்பு சமைப்பேன்: ஒபாமா ருசிகரம்
 
புதுடெல்லி:

ஒரு ஆங்கில பத்திரிகை நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக, அமெரிக்க முன்னாள் ஜனாதிபதி ஒபாமா நேற்று முன்தினம் டெல்லிக்கு வந்தார். நேற்று அந்நிகழ்ச்சியில், பத்திரிகையாளர் கரண் தாப்பருடன் உரையாடினார்.

இந்திய உணவு பண்டங்கள் குறித்த பேச்சு வந்தபோது, ஒபாமா கூறியதாவது:-

டெல்லியில் வியாழக்கிழமை நான் இரவு உணவு சாப்பிட்டபோது, பருப்பும் வைத்திருந்தனர். பருப்பு என்றால் என்ன என்று அவர்கள் விளக்க முற்பட்டபோது, ‘பருப்பை பற்றி எனக்கு தெரியும். எனது கல்லூரி அறை நண்பர்களாக இருந்த ஒரு இந்தியர் மற்றும் பாகிஸ்தானியரின் தாயார்கள் எனக்கு பருப்பு சமைக்க கற்றுத் தந்துள்ளனர்’ என்று நான் பதில் அளித்தேன்.

நான் நன்றாக பருப்பு சமைப்பேன். அதை சமைக்க தெரிந்த முதல் அமெரிக்க ஜனாதிபதி நான்தான் என்பதை உறுதியாக தெரிவித்துக் கொள்கிறேன். மட்டன் கீமா, சிக்கன் ஆகியவற்றையும் ஓரளவுக்கு சமைப்பேன்.

இவ்வாறு ஒபாமா கூறினார்.

சப்பாத்தி தயாரிப்பது பற்றி கேட்டபோது, ‘சப்பாத்தியை சரியான பக்குவத்தில் தயாரிக்க வேண்டும். அது கஷ்டம்’ என்று ஒபாமா பதில் அளித்தார். 

http://www.maalaimalar.com

  • தொடங்கியவர்

உஷ்ஷ்ஷ்ஷ்... ஆயிரம் யானைகள் வாக்கிங் போகுது...! திகில் சைலன்ட் வேலி - ஊர் சுத்தலாம் வாங்க... பாகம் -2 #SilentValley

 
 

Silent Valley

 

 

கூகுளில் `சைலன்ட் வேலி (Silent Valley)’ என்று டைப் செய்தால், ரெசார்ட், மூவ்மென்ட், மூவி, ஊட்டி, வியூ பாயின்ட், நேஷனல் பார்க், பாலக்காடு என மனைவியைப்போல் முந்திக்கொண்டு பதில் சொல்லும். உங்களுக்கும் வழக்கம்போல் எதைத் தேர்ந்தெடுப்பது என்று தலைசுற்றும். நாம் இந்த வாரம் டூர் அடிக்கப்போவது, கேரளா மாநிலம் மன்னார்காடு பகுதியில் உள்ள `சைலன்ட் வேலி தேசியப் பூங்கா'.

கார், பைக் வைத்திருப்பவர்கள் மட்டும் இந்த டூருக்கு ஸ்கெட்ச் போடுவது பெஸ்ட். வழக்கம்போல், சென்னையில் இருந்துதான் பயணம். `எதுவா இருந்தாலும் நைட் டிராவல் வேண்டாமே’ என்று ஆசிரியர் கட்டளையிட்டிருந்தார். `காலையிலதானே... டிராஃபிக் இருக்காது’ என்று காலங்காத்தாலேயே பொங்கல் சாப்பிட்டுவிட்டு மந்தமாகக் கிளம்பினால், டிராஃபிக்கில் தூக்கம் தூக்கமாய் வந்தது.

Silent valley

மழைக்காலத்தில் கடனை உடனே வாங்கி ரெயின்கோட் வாங்கியதும் மழை நின்று சுள்ளென வெயில் அடிக்குமே... அது போன்றதொரு ராசி எனக்கு! செங்கல்பட்டிலிருந்து கோயம்புத்தூருக்கு (450 கி.மீ) ஆறு மணி நேரம் ஆனது. மதுரவாயல் பைப்பாஸிலிருந்து செங்கல்பட்டு வருவதற்கு (50 கி.மீ) இரண்டரை மணி நேரம் ஆனது. பீக் ஹவர்ஸ் டிராஃபிக், சிட்டிக்குள்ள மட்டும்தான் இருக்கும்னு எனக்குப் புரியவெச்ச இந்தப் பயணத்துக்கு நன்றி. பொங்கல் செமித்திருந்தது. கோயம்புத்தூரில் `வேணு பிரியாணி போகணும்’ என்று விசாரித்து, லன்ச்சை முடித்தேன். கோவையில் இது ரொம்ப ஃபேமஸ் என்றார்கள். கோயம்புத்தூரில் இருப்பவர்கள், இனி நிமிர்ந்து படிக்க வாய்ப்புண்டு. நிறைய கோவைவாசிகளுக்கு சைலன்ட் வேலி என்றால், ஊட்டியில் உள்ள அவலாஞ்சி போன்ற இடம்தான் தெரியும். ஆனால், பாலக்காட்டில் உள்ள மன்னார்காட்டில் இப்படி ஓரிடம் இருப்பது நிறைய பேருக்குத் தெரிந்திருக்கவில்லை. சைலன்ட் வேலிக்கு, கோவைதான் சென்டர் பாயின்ட்.

Silent Valley

கோவையிலிருந்து வெறும் 113 கி.மீ-தான். பாலக்காடு, ஆனைகட்டி என இரண்டு வழிகள். இதைத் தேர்ந்தெடுப்பதிலும் ஒரு புத்திசாலித்தனம் வேண்டும். பாலக்காட்டில் நம் ஊர்க்காரர்கள்தான் சாலை கான்ட்ராக்ட் எடுத்திருப்பார்கள்போல. ‘‘இன்னும் வேலை நடந்துகிட்டுத்தான் இருக்கு!’’ (அதாவது நடக்காமலே இருக்கு) என்றார்கள். அதனால் பாலக்காடு ரூட், சோமாலியா போய்விட்டு வந்ததுபோல் அலுப்பைத் தந்துவிடும். பீ கேர்ஃபுல்!

``இன்னொரு வழி இருக்கு பாஸ்’' என்றார் நம் புகைப்பட நிபுணர் விஜய். ஆனைக்கட்டி, அட்டப்பாடி, முக்காலி, மன்னார்காடு... அப்புறம் சைலன்ட் வேலி. ரூட் நீளமாக இருப்பதுபோல்தான் தோன்றும். ஆனால், மன்னார்காடு வரை ஆக்ஸிலரேட்டர் மிதிக்கவே மனசுயில்லை. அத்தனை ரம்மியம். அம்புட்டும் மலைப்பாதை. இந்த நேரத்தில் கார்களில் எலெக்ட்ரானிக் பவர் ஸ்டீயரிங் இருந்தால், இன்னும் ஜாலி. ஸ்கார்ப்பியோ, ஹெக்ஸா, சஃபாரி போன்ற ஹைட்ராலிக் ஸ்டீயரிங்கொண்ட படா படா கார்கள், ஆஃப்ரோடுக்கு ஓகே-தான். ஆனால், மலைச்சாலையில் திருப்பி ஓட்ட எலெக்ட்ரானிக் பவர் ஸ்டீயரிங்தான் நல்ல ஆப்ஷன்.

35 நிமிடத்தில் ஆனைக்கட்டி வந்திருந்தது. அங்கிருந்து இடதுபுறம் திரும்பினால், நீலகிரி பயோஸ்பியர் இயற்கைப் பூங்கா. பூச்சிகள், பறவைகள், பாம்புகள் என உயிரியல் பூங்காவாகவும் பராமரித்துக்கொண்டிருக்கிறார்கள். ‘பச்சை நிறமே... பச்சை நிறமே!’ என்று மாதவன்போல் கத்திப் பாட வேண்டும்போல் இருந்தது. எங்கே திரும்பினாலும் பச்சை வாசம். பூக்களும் செடிகளும் சிரிப்பதுபோலவே இருந்தன. 25,000-க்கும் மேற்பட்ட செடி கொடி பூக்கள் இருப்பதாகச் சொன்னார்கள். பூக்களுக்கும் மனிதர்களுக்கும் ஒரு சின்ன... இல்லை பெரிய வித்தியாசம். ‘80 ஆண்டுகள் வாழும் மனிதன் அழுதுகொண்டே பிறக்கிறான்; சில மணி நேரங்கள் மட்டுமே வாழும் பூக்கள் சிரித்துக்கொண்டே பிறக்கின்றன!’ (`சொல்வனம்' கவிதை ஆசிரியர், கவனிக்க...) உங்கள் வீட்டு வாண்டுகளுக்குச் சரியான ஆப்ஷன் இந்த இயற்கைப் பூங்கா. பூக்களோடு பூக்களாய் செல்ஃபி எடுத்துக்கொண்டிருந்தார்கள் குழந்தைகள்.


ஊர் சுத்தலாம் வாங்க!  பாகம்-2

கவிஞனைத் தட்டித் தூங்கவைத்துவிட்டு, மறுபடியும் கார் இன்ஜினை உசுப்பினேன். அடுத்து, அட்டப்பாடி. கேரளாவுக்குள் வந்தாலே ஸ்வெட்டரை மறந்துவிடாதீர்கள். ‘கதவை மூடு; ஏ.சி வெளியில போகுது’ என்பதுதான் நெடுஞ்சாலை கார் பயணங்களுக்கான ஆகமவிதி. மலைச்சாலையில் நித்யானந்தாவை ஃபாலோ செய்வதுதான் பெஸ்ட்.  ‘கதவைத் திற; காற்று வரட்டும்!’ செம சில்னெஸ். கைகளைப் பரபரவெனத் தேய்த்து முகத்தில் வைத்தால், அடுத்த மைக்ரோ செகண்டில் மறுபடியும் சில்லென்றாகிவிடும் குளிர். வெளியே டெம்ப்ரேச்சர் 18 டிகிரி என்றது காரின் க்ளைமேட் கன்ட்ரோல் மீட்டர்.

சைலன்ட் வேலிக்கு பார்டர் ஏரியா இந்த அட்டப்பாடிதான். இதை ‘Buffer Zone’ என்கிறார்கள். பாதுகாக்கப்பட்ட வனப்பகுதி என்றும் சொல்லலாம். இந்த ரிசர்வ் ஃபாரெஸ்ட்டில் பழங்குடி இனத்தவர்கள் அதிகம் வசிப்பதாகச் சொன்னார்கள். ஆன்மிக அன்பர்களுக்கு ஓர் அன்புத்தகவல். இங்கு உள்ள செம்மனூர் மல்லேஸ்வரன் கோயிலில் சிவராத்திரித் திருவிழாவில், பழங்குடிகளுடன் ‘சூரியன்’ பட கவுண்டமணிபோல் ‘டண்டக்கு டண்டக்கு...’ என்று குத்தாட்டம் போடலாம். பிப்ரவரி, மார்ச் மாதங்களில் இது ஜெகஜோதியாக ஜொலிக்குமாம்.

இருட்டுவதற்குள் மன்னார்காடு போக வேண்டும். சைலன்ட் வேலி பயணம் மேற்கொள்பவர்கள், அட்டப்பாடியில் தங்குவதை சிபாரிசு செய்ய மாட்டேன். இங்கு காட்டேஜ்கள் இல்லை என்பது முக்கியக் காரணம். மன்னார்காட்டில் ரூம் புக் செய்திருந்தேன். இந்த மாதிரி நேரத்தில் ரூம்களை புக் செய்துவிட்டுப் பறந்தால்தான், ‘ஹேப்பி ஜெர்னி’யாக அமையும்.

silent valley

மன்னார்காடு வருவதற்கும், சூரியன் ‘பை’ சொல்வதற்கும் சரியாக இருந்தது. இங்கு சீஸன் நேரம் என்பது, ஏப்ரல் முதல் ஆகஸ்ட் வரையிலான சம்மர் நேரம்தான். மற்றபடி வீக் எண்டும் மன்னார்காட்டுக்கு சீஸன் டைம்தான். பாலக்காட்டில் இருக்கும் குட்டி நகரம் மன்னார்காடு. ‘தடுக்கி விழுந்தால் காட்டேஜ்கள்’ என்பதெல்லாம் இங்கே கிடையாது. புக் செய்த ரூமில் டிரெஸ் சேஞ்ஜ் பண்ணிவிட்டு, கால்நடையாகத் தேடிப் பார்த்தேன். மொத்தமே ஆறு முதல் ஏழு காட்டேஜ்கள்தான் கண்ணில் பட்டன. சீஸன் நேரம் இல்லை என்பதால், ``சேட்டா, ரூம் புக் வேணுமானு’’ என்று நான்-சீஸனில் கூவி அழைக்கும் பஸ் கண்டக்டர்கள்போல் கூவி அழைத்தார்கள் சேட்டன்கள். பூரம், சிவராத்திரி போன்ற திருவிழா நேரங்களில், இது அப்படியே உல்டாவாக மாறும். புள்ளகுட்டியோடு சென்று ‘ரூம் வேணும்’ என்று கதறினாலும், சேட்டன்கள் கண்டுகொள்ளமாட்டார்கள்.

Silent valley

KFC தந்த பாதிப்போ என்னவோ, BFC, YFC என்று ஆல்ஃபபெட்டிக்கலாக ஃப்ரைட் சிக்கன் சென்டர்கள் இருந்தன. இப்போதெல்லாம் கேப்பைக் கூழ் சாப்பிடுவதைவிட KFC-ல் சாப்பிடுவதுதானே கெளரவம்!? கடலைக் கறியும் மீன் வறுவலும் சப்பாத்தியும் பெஸ்ட் போல் தோன்றியது. ஆனால், `இங்கு உள்ள ‘மலபார் சிக்கன்’ எனும் கோழி வெரைட்டியை ஒரு கை பார்க்கவில்லை என்றால், மலபார் பயணத்துக்கே அர்த்தம் இல்லை ப்ரோ' என்று சொன்னது மனம். நான் மனசாட்சிப்படி நடப்பவன். `மலபார் கறியை ஒரு கை பார்த்துவிட்டு, கடலைக் கறியைக் காலையில பார்த்துக்கலாம்’ என்று ஏ.சி இல்லாத ரூமில் குளுகுளுவெனத் தஞ்சம் புகுந்தேன்.

மன்னார்காட்டில் இருந்து சைலன்ட் வேலிக்கு 40 கி.மீ-தான். குண்டு குண்டான மலபார் அணில்கள், சிறுத்தைகள், புலிகள், யானைகள், நாகப்பாம்புகள், மலைப்பாம்புகள் என்று சைலன்ட் வேலியைப் பற்றி நிறையக் கேள்விப்பட்டிருந்தேன். நினைக்கும்போதே த்ரில்லிங்காக இருந்தது. கும்பிடப்போன தெய்வம்போல் குறுக்கே வந்த ஒரு கைடு, பிரயோஜனமான தகவலைச் சொன்னார். அதாவது, காலை 8 மணி முதல் மதியம் 1 மணி வரைக்குள் மட்டுமே சைலன்ட் வேலிக்குள் அனுமதி. சோம்பேறித்தனம், கடலைக் கறி போன்ற ஆசைகளை டிஸ்லைக் செய்துவிட்டு, நல்லவேளையாக 8 மணிக்குள்ளாகவே சைலன்ட் வேலியில் டயர் பதித்தேன்.

Silent valley

வாசலில் ஓர் உணவகம் இருந்தது. பழங்களையும் இட்லிகளையும் விழுங்கிவிட்டுத் தெம்பாகக் கிளம்பினேன். ‘4 கி.மீ ட்ரெக்கிங் போகோணும்’ என்று எச்சரித்திருந்தார்கள். அதற்குத்தான் இந்த விழுங்கல். காருக்கு இனிமேல் வேலை இல்லை. இனி ஜீப் பயணமும் நடைப்பயணமும்தான்.

சைலன்ட் வேலிக்குள்ளே செல்பவர்கள், அலுவலகத்தில் ரிஜிஸ்டர் செய்ய வேண்டும். ஒரு ஜீப்புக்கு 1,500 ரூபாய். 5 பேர் வரை அனுமதி. இது இந்தியர்களுக்கான கட்டணம். வெளிநாட்டுக்காரர்களும் வந்திருந்தார்கள். அவர்களுக்கு தனி ரேட்! ஒரு நாளைக்கு 10 ஜீப்புகளில் 50 பேருக்கு மட்டும்தான் அனுமதி. ஆபீஸ் போவதுபோல் லேட்டாகப் போனால், மன்னார்காட்டில் ரூம் வாடகையை அடுத்த நாள் வரை எக்ஸ்டெண்ட் பண்ணவேண்டியதுதான். நல்லவேளையாக, முதல் ஜீப்பே நான் புக் செய்ததுதான்.

Silent valley

இனிமேல்தான் ரியல் அட்வெஞ்சரே இருக்கிறது என்று பில்ட்-அப் கூட்டியிருந்தார்கள். சத்தியமாக பில்ட்-அப் கொடுக்கலாம். காட்டிலாகா அலுவலகமே மிரட்டலாக இருந்தது. அலுவலக வாசலில் ஒரு படம் மாட்டியிருந்தார்கள். அதாவது, புலி ஒன்று யானையை வேட்டையாடி தினமும் வந்து டின்னர் முடிப்பதை கேமராவில் ஃப்ரேம் செய்து மாட்டியிருந்தார்கள். பார்த்ததுமே கூஸ்பம்ப் அடித்தது. ‘‘காட்டைச் சுத்தி மொத்தம் 70 கேமராவுக்கு மேல் ஃபிட் செய்திருக்கோம்.’’ என்று ஒவ்வொரு நாளும் படம் பிடிக்கப்பட்டதை மானிட்டரில் காட்டினார் அதிகாரி ஒருவர். சிறுத்தைகள் ஃபேமிலியாகக் கூடி மகிழ்ந்தது, யானைகளின் ஜில் குளியல், வேட்டையாடப்பட்ட விலங்கைத் தின்ன போட்டி போட்ட மற்ற மிருகங்கள் என்று டிஸ்கவரி சேனல் பார்ப்பதுபோல் இருந்தது.

இங்கு உள்ள ஜீப் டிரைவர்கள் அனைவருக்கும் கிட்டத்தட்ட அனைத்து பாஷைகளும் தெரிந்திருக்கிறது. ‘‘ஞாம் இப்போ போப்போறது ரிசர்வ் ஃபாரஸ்ட்டானு’’ என்று மலையாளம் கலந்த தமிழில் நம் ஜீப் டிரைவர் வெளுத்துவாங்கினார். ‘ஜூராஸிக் பார்க்’ படத்தில் வருவதுபோல் ‘வெல்கம் டு சைலன்ட் வேலி’ என்று மரங்களால் செய்யப்பட்ட என்ட்ரன்ஸ் ஆர்ச்சே மிரட்டியது. ஜீப் பயணம் தொடங்கியது.

silent valley

 

 

silent valley

கேரளாவில் மனிதர்களைவிட காடுகளுக்கும் மிருகங்களுக்கும்தான் அதிக முக்கியத்துவம். இது சைலன்ட் வேலியின் அமைதியைப் பார்த்தாலே தெரியும். பிளாஸ்டிக் பைகள், பாட்டில்கள், ஆபத்தான பொருள்கள், காட்டுக்குள் சத்தம் போடுதல், விலங்குகளுக்கு ஸ்நாக்ஸ் கொடுப்பது என்று நாம் இங்கே ஃபன்னாக நினைக்கும் எந்த விஷயத்துக்கும் அனுமதியில்லை. கூடவே ஒரு கைடும் வந்திருந்தார். ‘‘நீங்க ஆபீஸ் வாசல்ல ஒரு படம் பார்த்தீங்கள்லானு... அது இவிடதான்!’’ என்று ஓர் இடத்தைக் காட்டினார் கைடு பழநி. புலி, யானையைக் குதறிப் போட்டு ருசி பார்த்த அதே இடம். புலி, சிறுத்தை போன்ற விலங்குகள் வேட்டையாடியதை ஆன் தி ஸ்பாட்டில் சாப்பிடுவதைவிட, ரத்தத்தை உறிஞ்சி இரையை அழுகவைத்து உண்பதைத்தான் விரும்புமாம். வேட்டையாடிய இரையை ஓர் இடத்தில் பாதுகாத்து வைத்துவிட்டு, ஒவ்வொரு நாளாக வந்து சாப்பிடுவதுதான் வாடிக்கையாம்.

silent Valley

சைலன்ட் வேலியின் கைடுகள், கிட்டத்தட்ட காட்டுவாசிகளாகவே வாழப் பழகியிருந்தார்கள். பழநியும் அப்படித்தான். கொடிய மிருகங்களைச் சந்திக்கும்போது எப்படி சாதுர்யமாகத் தப்பிக்க வேண்டும்... யானைகளை எப்படிச் சமாளிக்க வேண்டும் என்றெல்லாம் டிப்ஸ் கொடுத்துக்கொண்டே வந்தார். இன்னும் சிலருக்கு மோப்ப சக்திகூட இருப்பதாகச் சொல்லி கிலியூட்டினார். ‘இந்தப் பக்கம் சிறுத்தை இருக்கு. 500 மீட்டரில் யானை இருக்கு’ என்று ‘வேட்டையாடு விளையாடு’ கமல்போல துப்பறியும் கைடுகளெல்லாம் சைலன்ட் வேலிக்கு சிறப்பம்சம்.

Silent valleyசில இடங்களில் கேமரா ட்ராப் வைத்திருந்தார்கள். அசைவுகள் தெரிந்தால், அது உடனே கேமராவில் பதிவாகிவிடும். நான்கூட கேமராவில் பதிவாகியிருக்கலாம். 13 கி.மீ வரை செம டெரராக இருந்தது. சில இடங்களில் யானை பார்த்தோம். யானையும் எங்களைப் பார்த்திருக்கலாம். ‘சத்தம் போடாம வரணும்’ என்று எச்சரித்திருந்தார் பழநி.

ஜீப்பைவிட்டு இறங்கச் சொன்னார்கள். இனி ‘கோர் ஃபாரெஸ்ட்; வாகனங்களுக்கு அனுமதி இல்லை’ என்று அறிவித்திருந்தார்கள். இதுவரை வந்தது ரிசர்வ் ஃபாரெஸ்ட். நடைப்பயணம் தொடர்ந்தது. ‘ஏரியா சைலன்ட்டா இருக்கும்போல. அதான் சைலன்ட் வேலி’ என்று சைலன்ட் வேலியைச் சாதாரணமாக நினைத்துவிட்டேன். கண்ணை மூடி 30 விநாடி தியானம் செய்தால், எங்கோ ஒரு யானை கிளையை முறிக்கும் சத்தம் கேட்கலாம்; ஏதோ ஓர் இடத்தில் பட்டாம்பூச்சி சிறகு அசைப்பதைக்கூடக் கேட்கலாம். அப்படி ஓர் அமைதி. ‘சிக்காடா’ எனும் பூச்சி வகை, சைலன்ட் வேலியின் சொத்து. மிகக் குறைந்த டெசிபளில் இந்தப் பூச்சிகள் எழுப்பும் மெல்லிய சத்தம்கூடக் கேட்பதால், இதற்கு `சைலன்ட் வேலி' என்று ஆங்கிலேயர்கள் பெயர்வைத்தார்களாம். சைலன்ட் வேலியில் இசையமையப்பாளர்களுக்கு எக்கச்சக்க ரெஃபரென்ஸ் கிடைக்கலாம். ‘அமைதியாய் இருக்கிறாய்; பயமாய் இருக்கிறது’ என்று என்னோடு வந்த ஒருவரும் கவிஞர் அவதாரம் எடுத்தார்.

பட்டர்ஃப்ளைதான் இங்கே மெயின் அட்ராக்‌ஷன் என்றார்கள். கலர் கலரான வண்ணத்துப்பூச்சிகள், சைலன்ட் வேலிக்குச் செம அழகு. செல்லும் வழியெங்கும் குட்டிக்குட்டி அருவிகள். ஒவ்வொன்றுக்கும் ஒவ்வொரு மருத்துவத்தன்மை இருப்பதாகச் சொன்னார் பழநி. கால் நனைத்து அதே தண்ணீரைச் சுவைப்பது செல்லமாக இருந்தது.

அருவி மற்றும் சுனைநீரைக் குடிப்பவர்களுக்கு ஒரு முக்கியமான டிப்ஸ்: ``காடுகளில் உள்ள சுனைகளில் நீர் அருந்தும்போது, மிகவும் கவனமாக இருக்க வேண்டும். வளர்ச்சி அடையாத அட்டைப்பூச்சிகள் மூக்கு மற்றும் வயிற்றுக்குள் சென்றால்... வெளியே எடுப்பதற்குள் பெரும்பாடாகிவிடும்'' என்றார் பழநி.

மனதில் திடமும், கால்களில் உறுதியும் இருப்பவர்களுக்கான ட்ரெக்கிங் இது. கையில் ஒரு சிறு குச்சியுடன் நம்மைச் சுற்றும் முற்றும் பார்த்தபடி வழிநடத்திச் சென்றுகொண்டிருந்தார் பழநி. ‘எந்த நேரத்துல எது வரும்னு தெரியாது. வந்தாலும் பிரச்னை இல்லை. நான் இருக்கேன்’ என்று தைரியம் சொல்லிய அவரது தன்னம்பிக்கைக்கு, `நன்றி சொல்ல உனக்கு வார்த்தை இல்லை எனக்கு...' பாடலை ஏதாவது மியூசிக் சேனலில் டெடிகேட் செய்ய வேண்டும்.

அனகோண்டா, ஜங்கிள் புக் பட ஸ்க்ரீனுக்குள் புகுந்து புறப்படுவதுபோலவே இருந்தது. செல்லும் வழியில் 500 வயதான மரமெல்லாம் காட்டினார். சில மரங்களின் பட்டைகளுக்கு, கேன்சரைக் குணமாக்கும் சக்தி இருக்கிறதாம்.

திடீரென ஓர் இடத்தில் ஏதோ கால் தடங்களை ரெஃபர் செய்தவராக நம்மை அலெர்ட் செய்தார். ‘‘இந்த இடத்துல 1,500 கிலோ எடைகொண்ட காட்டெருமைங்க கூட்டத்தோடு போயிருக்குங்க!’’ என்று கிலி ஏற்படுத்தினார். அந்தக் கால் தடங்களின் அழுத்தத்தை வைத்து அவர் எடையைச் சொன்னது அவரின் காட்டுத்தனமான எக்ஸ்பீரியன்ஸைக் காட்டியது. ‘படிக்காதவன்’ படத்தில் வில்லனிடம் அடி வாங்கப்போகும் விவேக்போல் மாறியது எனது மூஞ்சி. விசித்திரமான ஒலி எழுப்பியபடி முன்னே போனார் பழநி. காட்டு மாடுகள் கூட்டம் விலகிச் செல்வதற்காகவாம்.

சைலன்ட் வேலிக்கு ஒரு முக்கியமான பெருமை என்னவென்றால், கேரள காட்டு யானைகளின் வழித்தடத்தின் கடைசி எல்லை இதுதான். அதனால், முன் அந்தி நேரங்களில் எல்லா யானைகளும் இங்கேதான் சந்திக்குமாம். இங்குள்ள ‘வாட்ச் டவர்’தான் நமக்கான எல்லை. இந்த டவரில் ஏறி நின்று மொத்தக் காட்டின் அழகையும் ரசிப்பதற்கு, தைரியம் கலந்த ரசனை வேண்டும். ``மாலை நேரத்தில் இந்த டவரில் ஏறி நின்றால், கிட்டத்தட்ட 600 முதல் 1000 யானைகளை மொத்தமாகப் பார்க்கலாம்'' என்று அவர் சொன்னபோது, புல்லரிக்காதவர்கள் மனிதர்களே இல்லை. ‘‘இங்கேதான் எல்லாமே தண்ணி குடிக்க வரும்ங்க!’’ என்று ஓர் நீரோடயைக் காட்டினார்.

இந்த டவரில் செக்யூரிட்டி வேலைக்கு ஆள் கிடைக்காமல் திண்டாடுவதாகச் சொன்னார். அப்படியே கிடைத்தாலும், இங்குள்ள டெரர் சூழ்நிலை காரணமாக, ஒன்றிரண்டு வாரங்களுக்குமேல் யாரும் தாக்குப்பிடிப்பதில்லையாம். கடைசியாகச் சேர்ந்த செக்யூரிட்டி ஒருவர், காலை தூக்கக்கலக்கத்தில் பல் தேய்த்து சிறுத்தையின் முகத்தில் எச்சில் துப்ப, கடுப்பான சிறுத்தைக்குப் பயந்து டவரின் மேலேயே மணிக்கணக்கில் இருந்த செக்யூரிட்டியின் கதை, சிரிப்பாகவும் திகிலாகவும் இருந்தது.

திகில் செல்ஃபிக்கள் எடுத்த பிறகு, மீண்டும் ரிட்டர்ன் பயணம். அதே வழித்தடம். இந்த முறை, எங்கேயாவது எங்கள் கால் தடங்களைப் பார்த்து மாடுகளோ, யானைகளோ அலெர்ட் ஆகியிருக்கலாம். கிட்டத்தட்ட நான்கு மணி நேரம். தாயின் கருவறையைப்போல் அத்தனை சுத்தமான ஒரு சுவாசத்தை அனுபவித்த பிறகு, மீண்டும் காரில் கால் வைக்க மனமே இல்லை.

Silent valley

பயம் மொத்தமும் கலைந்து மனதில் இப்போது ஒரு பெருமை ஏற்பட்டது. ‘மனிதர்களைவிட விலங்குகளுக்கும் காடுகளுக்கும் கேரளா முக்கியத்துவம் தருகிறது’ என்று சொன்னதற்கு  ஒரு முக்கியக் காரணம் இருக்கிறது. இந்த இடத்தில் ‘இடுக்கி’ போன்ற பிரமாண்டமான அணை கட்டுவதற்காக பாறைகளை வெடி வைத்துத் தகர்த்தபோது, விலங்குகளுக்கும் மரங்களுக்கும் சேதம் ஏற்பட்டுவிடக்கூடும் என்று அந்தத் திட்டத்தையே பாதியில் விட்டுவிட்டதாம் கேரள அரசு.

மனிதர்களின் பேராசைக்கு இலக்காகாமல், அமைதியாக இருக்கும் அமைதிப் பள்ளத்தாக்கு ஒருவகையில் உங்கள் தேடலுக்கு முடிவாகக்கூட இருக்கலாம். இப்போது, காட்டைப்போல் மனதும் அமைதியாக இருந்தது.

https://www.vikatan.com

  • தொடங்கியவர்

 

இப்படி ஒரு ஆகாய சாகசத்தை பார்த்திருக்கிறீர்களா?

மலை உச்சியில் இருந்து குதிப்பது சாதாரணமானதல்ல. இந்த இரண்டு ஃபிரான்ஸ் டேர்டேவில்சும். ஆல்ப்ஸ் மலைமீது பறக்கும் இந்த விமானத்தில் இறங்க உள்ளனர்.

  • தொடங்கியவர்

குளிச்சுக்கிட்டே சாப்பிடலாம்... சாப்பிட்டுக்கிட்டே குளிச்சுக்கலாம்...

 

104p1.jpg

ரேமாதிரியான ஹோட்டல்களில் ஒரேமாதிரியாகச் சாப்பிட்டுச் சாப்பிட்டுப் போரடித்துப்போனவர்கள் கண்டுபிடித்த கான்செப்ட்தான் ‘தீம் ரெஸ்டாரன்ட்’. உலகம் முழுவதும் விதவிதமான ரெஸ்டாரன்ட்களுக்கான கான்செப்ட்களை உருவாக்குவதற்குத் தலையைப் பிய்த்துக்கொள்கிறார்கள்.

சரி, அவர்கள் பிய்த்துக்கொள்ளட்டும். நாம் அப்படி ஒரு வித்தியாசமான ‘தீம் ரெஸ்டாரன்ட்’ பற்றிப் பார்ப்போம்.

பிலிப்பைன்ஸ் நாட்டின் மத்தியில் உள்ள சான் பாப்லோ நகரின் புறநகர் பகுதியில் இருக்கிறது இந்த ரெஸ்டாரன்ட். செழிப்பு மிகுந்த பகுதியான அங்கு புலாக்கின் நதி ஓடுகிறது. 

வருடம் முழுவதும் நீர் பெருக்கெடுத் தோடும் ஜீவநதி இது. இந்த நதியின் கரையில் அமைந்துள்ளது ‘வில்லா எஸ்டுரோ’ ரிசார்ட். புலாக்கின் நதியிலிருந்து அரசு அனுமதியுடன் சிறு செயற்கைக் கால்வாய் அமைத்து இந்த ரிசார்ட்டினுள் வரவைத்துள்ளனர்.

அங்கு ஒரு தடுப்பணை கட்டி அதிலிருந்து பெருகும் நீரைச் செயற்கை அருவியாக மாற்றியுள்ளனர். காலுக்குக் கீழ் சலசலவென ஓடிக்கொண்டிருக்கும் நீர், கண்ணெதிரே கண்ணாடித் துண்டுகள் உடைந்து விழுவதைப்போல கொட்டும் சிறு அருவி, அடர் மரங்கள் சூழ்ந்த சூழல் என அந்த இடமே இயற்கை அற்புதமாகக் காட்சியளிக்கிறது.

104p2.jpg

குற்றாலத்தில் குளிரக்குளிர குளித்துவிட்டு வரும்போது மனதும் வயிறும் உடனடியாகத் தேடுவது உணவகங்களைத்தான். இங்கோ, எவ்வளவு நேரம் வேண்டுமானாலும் குளிக்கலாம். குளித்தவுடன் சுடச்சுட உணவும் அதே இடத்திலேயே பரிமாறப்படும்.

இங்கு கிடைக்கும் உணவுகளில் முக்கியமானது லம்பியா (Lumpia).  இறாலைக் கோதுமை மாவில் சுற்றி, பொரித்து எடுக்கப்படும் பண்டம் இது.

சிக்கன் லெக்பீஸ்களை எலுமிச்சைச் சாற்றில் ஊறவைத்து சோயா சாஸில் சமைக்கும் சிக்கன் பிஸ்டெக் (ChickenBistek), நம்ம ஊர் பொங்கல் மாதிரியான பைகோ (Biko) என்று புதிய வகை உணவுகளும் இங்கு பரிமாறப்படுகின்றன.

இந்த உணவகத்தின் அழகிய போட்டோக்களைப் பார்த்தாலே வயிறு நிரம்பிடுமே!

https://www.vikatan.com

  • தொடங்கியவர்

ஐக்கிய அரபு எமிரேட்ஸ் விடுதலை பெற்ற நாள்: 2-12-1971

 

ஐக்கிய அரபு எமிரேட்ஸ் அரபியத் தீபகற்பத்தின் தென்கிழக்கில் அமைந்துள்ள எண்ணெய் வளம் மிக்க ஒரு பாலைவன நாடாகும். இது அபுதாபி, அஜ்மான், துபை, புஜைரா, ராஸ் அல்-கைமா, சார்ஜா மற்றும் உம் அல் குவெய்ன் என்னும் அமீரகங்களை உள்ளடக்கியது. ஓமான், சவூதி அரேபியா மற்றும் கத்தார் இதன் அயல் நாடுகளாகும். ஐக்கிய அரபு அமீரகம் எண்ணெய், இயற்கை வாயு வளங்களைக் கொண்டது. 1970-களில், நிகழ்ந்த நேரடியான வெளிநாட்டு முதலீடுகளினால்

 
ஐக்கிய அரபு எமிரேட்ஸ் விடுதலை பெற்ற நாள்: 2-12-1971
 
ஐக்கிய அரபு எமிரேட்ஸ் அரபியத் தீபகற்பத்தின் தென்கிழக்கில் அமைந்துள்ள எண்ணெய் வளம் மிக்க ஒரு பாலைவன நாடாகும். இது அபுதாபி, அஜ்மான், துபை, புஜைரா, ராஸ் அல்-கைமா, சார்ஜா மற்றும் உம் அல் குவெய்ன் என்னும் அமீரகங்களை உள்ளடக்கியது. ஓமான், சவூதி அரேபியா மற்றும் கத்தார் இதன் அயல் நாடுகளாகும்.

ஐக்கிய அரபு அமீரகம் எண்ணெய், இயற்கை வாயு வளங்களைக் கொண்டது. 1970-களில், நிகழ்ந்த நேரடியான வெளிநாட்டு முதலீடுகளினால் இந்நாடு செல்வம் கொழிக்கும் நாடாக மாறியது. ஆசிய நாடுகளைப் பொறுத்தவரை ஒப்பீட்டளவில் உயர்ந்த மனித வளர்ச்சிக் குறியீட்டைக் கொண்ட ஐக்கிய அரபு அமீரகம் உலக அளவிலும் 39-வது இடத்தில் உள்ளது. அத்துடன், அமெரிக்காவின் மையப் புலனாய்வுத் துறையின் தகவலின்படி இதன் தலைக்குரிய மொத்த உள்நாட்டு உற்பத்தி உலக அளவில் 5-வது இடத்தில் உள்ளது.

http://www.maalaimalar.com

  • தொடங்கியவர்

திருவண்ணாமலை அற்புதங்கள்!

 
thiruvannamalaijpg

திருவண்ணாமலையில் கோலோச்சும் அம்பாளின் திருநாமம் உண்ணாமுலை அம்பாள். வடமொழியில் அம்பாளின் பெயர் ‘பிதகுசாம்பாள். கருணையும் கனிவும் கொண்டவள். அண்ணாமலையாரைப் போலவே, தன்னை நாடி வந்து, சந்நிதியில் நிற்பவர்களை ஒருபோதும் கைவிடுவதில்லை அன்னை!

ஆறு பிராகாரங்களையும், ஒன்பது கோபுரங்களையும் கொண்டது திருவண்ணாமலை கோயில். நான்கு திசைகளிலும் நான்கு உயரமான கோபுரங்கள் கம்பீரமாகக் காட்சி தருகின்றன. ஒவ்வொரு கோபுரத்தின் பின்னணியிலும் சுவையான வரலாறு பொதிந்திருக்கின்றன.

ராஜகோபுரத்தில் நுழைந்தால் ஏறக்குறைய நூறடி தூரத்தைக் கடந்தால்தான் ஆலயத்தின் முதல் பிராகாரத்தையே அடைய முடியும். ராஜகோபுரத்தின் உட்புறம் நடக்கும்போது வலப் புறமும், இடப்புறமும் பார்த்தால் கோபுரத்தின் உட்புறத்தில் அவ்வளவு அற்புதமான சிற்பங்கள்!

வலப்புறம் எதிரே... ஆயிரங்கால் மண்டபம். இந்த ஆயிரங்கால் மண்டபத்தின் அருகில் இருக்கும் பாதாள லிங்கேஸ்வரர் சந்நிதி, ரொம்பவே விசேஷமானது. இந்த பாதாள லிங்கேஸ்வரர் சந்நிதியில்தான் பகவான் ரமண மகரிஷி இளமையில் தியானம் செய்தார்.

இடது புறம் எதிரே கம்பத்து இளையனாராக அருணகிரிநாதருக்குக் காட்சி கொடுத்த முருகப் பெருமானின் சந்நிதி. இந்த முருகன் கோயிலுக்குத் தெற்கில் சிவகங்கை தீர்த்தக் குளம் அமைந்து உள்ளது.

முருகன் கோயிலுக்கு நேர் பின்புறம் சர்வ ஸித்தி விநாயகர் கோயில் உள்ளது. இவரை வழிபட்டு வலம் வந்து வெளிப்பட்டால், உத்திராட்ச மண்டபம் எனும் அழகிய நாற்கால் மண்டபத்தையும், அதை அடுத்து இருக்கும் நந்தி மண்டபத்தையும் காணலாம். இந்த மண்டபத்தில் அமைந்திருக்கும் நந்தியம்பெருமான் ஆலயத்துச் சந்நிதியில் எழுந்தருளியிருக்கும் அண்ணாமலையை நோக்கியவாறு அமையாமல் ஆலயத்துக்குப் பின்னால் காட்சி தரும் மலையையே தரிசித்த வண்ணம் அமர்ந்திருக்கிறார். ஏன்? எதனால்? மலையே சிவமென இருக்கிறார் அல்லவா சிவபெருமான்.

இந்த நந்தி மண்டபத்தைக் கடந்து சென்றால் எதிர்ப்படுவது வல்லாள மகாராஜா கோபுரம். நீண்ட நெடிய கோபுரத்தின் உச்சியிலிருந்துதான் அருணகிரிநாதர் தன் வாழ்வை முடித்துக் கொள்ளக் கீழே குதித்திருக்கிறார். அவரை முருகப் பெருமான் தாங்கி, தடுத்தாட் கொண்டார்.

இந்த கோபுரத்துக்கு அடுத்து இருக்கும் பிராகாரத்தில், தெற்கில் பிரம்மதீர்த்தம் உள்ளது. இந்தப் பிராகாரத்தில் இருக்கும் வினை தீர்க்கும் விநாயகர் சந்நிதியிலும் மக்கள் வந்து வணங்குகிறார்கள். இந்தப் பிராகாரத்தில் புரவி மண்டபம் இருக்கிறது. நளேஸ்வரர், வித்யாதரேஸ்வரர், பிரம்ம லிங்கம் ஆகியோரும் எழுந்தருளியிருக்கும் பிராகாரம் இது.

இதை அடுத்து இருக்கும் மூன்றாம் கோபுரம் கிளிக் கோபுரம் எனப்படுகிறது. இந்தக் கோபுரத்தில்தான் அருணகிரிச்சித்தர் தனது பூதவுடலை விட்டு, கூடு விட்டுக் கூடு பாயும் சித்து வேலை செய்து, தன் உயிரை ஒரு கிளியின் உடலில் புகுத்தி, பாரிஜாத மலரைத் தேடிக் கொண்டுவரச் சென்றார்.

கிளி உருவில் பாரிஜாத மலருடன் திரும்பி வந்து பார்த்தால், அவரது பூத உடல் அங்கே இல்லை. கிளி உருவிலேயே இந்த கோபுரத்தில் இருந்து அவர் கந்தர் அனுபூதியைக் களிப்புடன் பாடியிருக்கிறார்.

கிளிக் கோபுர வாயிலைக் கடந்து உள்ளே சென்றால், மூன்றாம் பிராகாரத்தை அடையலாம். இங்கேதான் மங்கையர்க்கரசி எனும் சிவனடியார் எழுப்பிய பதினாறு கால் மண்டபம் உள்ளது. இதற்குத் தீப தரிசன மண்டபம் என்றும் பெயர் உண்டு. இங்கு திருக்கார்த்திகைத் திருநாளில் பஞ்சமூர்த்திகள் மலையை நோக்கி நிற்க, மலை மீது தீபம் ஏற்றும் விழா நடைபெறும்.

ஆக, திருவண்ணாமலை கோயிலின் மிக முக்கியமான இடம் இது.

http://tamil.thehindu.com

  • தொடங்கியவர்

பூமி என்னும் சொர்க்கம் : சூரியன் எவ்வளவு தூரம்?

 

 
Earth%20-4

பூமியானது சூரியனைச் சுற்றிச் சுற்றிவருகிறது. ஆனால் பூமி சுற்றும் பாதையானது கன கச்சிதமான வட்டமாக இருப்பது இல்லை. மாறாக அது சற்றே நீள் வட்டமாக (ellipse) உள்ளது. இதன் விளைவாக பூமியிலிருந்து சூரியன் உள்ள தூரம் ஆண்டில் எல்லா நாட்களிலும் ஒரே மாதிரியாக இருப்பது கிடையாது.

2018 -ம் ஆண்டு ஜனவரி மாதம் 3-ம் தேதியன்று பூமியானது ஒப்புநோக்குகையில் சூரியனுக்கு மிக அருகாமையில் இருக்கும். அன்றைய தினம் சூரியனுக்கு உள்ள தூரம் 14 கோடியே 70 லட்சம் கிலோ மீட்டராக இருக்கும். இத்துடன் ஒப்பிட்டால் 2018 ஜூலை 6-ம் தேதியன்று பூமியானது ஒப்புநோக்குகையில் மிகத் தொலைவில் இருக்கும். அன்றைய தினம் சூரியனுக்கு உள்ள தூரம் சுமார் 15 கோடியே 20 லட்சம் கிலோ மீட்டராக இருக்கும்.

அதாவது ஜனவரியில் உள்ள தூரத்துக்கும் ஜூலையில் உள்ள தூரத்துக்கும் இடையிலான வித்தியாசம் சுமார் 50 லட்சம் கிலோ மீட்டர். பூமியின் சுற்றுப்பாதை சற்றே நீள் வட்டமாக உள்ளது என்பதை இது காட்டுகிற்து. ஆண்டு தோறும் ஜனவரி முதல் வாரத்தில்தான் சூரியன் நமக்கு அருகாமையில் இருந்துவருகிறது.

ஜனவரியில் சூரியன் நமக்குப் பக்கத்தில் இருக்கிறது என்று சொல்கிறீர்களே, ஜனவரியில் தானே நல்ல குளிர் அடிக்கிறது, அது எப்படி என்று நீங்கள் கேட்கலாம். சூரியனுக்கு அருகில் இருந்தால் வெயில்தானே கடுமையாக இருக்க வேண்டும் என்றும் நீங்கள் கேட்கலாம்.

இதில் இரண்டு விஷயங்கள் உள்ளன. ஜனவரியில் பூமியின் நடுக்கோட்டுக்கு வடக்கே உள்ள நாடுகளில்தான் குளிர் காலம். பூமியின் நடுக்கோட்டுக்குத் தெற்கே இருக்கிற ஆஸ்திரேலியா, நியூசிலாந்து, தென்னாப்பிரிக்கா, அர்ஜெண்டினா முதலான நாடுகளில் அப்போது நல்ல வெயில் காலம்.

சூரியனுக்கு உள்ள தூரத்துக்கும் பூமியில் குளிர்காலம், வெயில் காலம் ஏற்படுவதற்கும் எந்தச் சம்பந்தமும் இல்லை. குளிர்காலமும் வெயில் காலமும் பூமியின் சாய்மானத்தால் ஏற்படுவதாகும். பூமியானது 23 டிகிரி சாய்ந்தபடி சூரியனைச் சுற்றி வருகிறது. அந்த அளவில் சூரியனின் கிரணங்கள் செங்குத்தாக விழுகிற பகுதிகளில் கோடைக் காலம் ஏற்படுகிறது. ஏப்ரல் முதல் ஜூலை, ஆகஸ்ட் வரையிலான மாதங்களில் பூமியின் நடுக்கோட்டுக்கு வடக்கே உள்ள பகுதிகளில் சூரிய கிரணங்கள் செங்குத்தாக விழுகின்றன. எனவே அந்தப் பகுதிகளில் கோடைக்காலம் நிலவுகிறது.

அதே பகுதிகளில் டிசம்பர், ஜனவரி, பிப்ரவரி மாதங்களில் சூரிய கிரணங்கள் மிகவும் சாய்வாக விழுகின்றன. எனவே அந்த மாதங்கள் குளிர்காலமாக உள்ளது.

Earth%20-1
 

பூமியின் நடுக்கோட்டுக்குத் தெற்கே உள்ள நாடுகளில் இதற்கு மாறான நிலைமை உள்ளது. நவம்பர், டிசம்பர், ஜனவரி மாதங்கள் அவர்களுக்கு நல்ல வெயில் காலமாகவும் ஏப்ரல், மே, ஜூன் முதலான மாதங்கள் நல்ல குளிர் காலமாகவும் உள்ளன.

பூமியானது சூரியனைச் சுற்றி வருகையில் ஆண்டில் எல்லா நாட்களிலும் ஒரே சீரான வேகத்தில் செல்வதாகக் கூற முடியாது. சூரியனை நெருங்குகையில் அதன் வேகம் அதிகரிக்கிறது. அப்போது அதன் வேகம் வினாடிக்கு 30.3 கிலோ மீட்டராக உள்ளது. இது ஜூலையில் இருக்கக்கூடிய வேகத்தை விட வினாடிக்கு ஒரு கிலோ மீட்டர் அதிகம்.

சூரிய மண்டலத்தில் உள்ள கிரகங்கள் எந்த அளவுக்குச் சூரியனிலிருந்து தொலைவாக உள்ளதோ அந்த அளவுக்கு அவற்றின் வேகம் குறைவாக இருக்கும். இது இயற்கை விதி. இதனை ஜெர்மன் விஞ்ஞானி ஜோகன்னஸ் கெப்ளர் (1571-1630) பல நூற்றாண்டுகளுக்கு முன்னரே கண்டுபிடித்துக் கூறியிருக்கிறார்.

பூமியின் சாய்மானம் எப்போதும் 23 டிகிரி அளவில் இருப்பது கிடையாது. பல ஆயிரம் ஆண்டுகளில் அது மாறிக்கொண்டே இருக்கிறது. தவிர, பூமியின் சாய்மானம் நேர் எதிர்ப்புறத்துக்கு மாறலாம். அப்படி மாறினால் பருவங்களும் மாறும். அப்போது நமக்கு டிசம்பர், ஜனவரி மாதம் கோடைக் காலமாக மாறிவிடும். ஏப்ரல், மே மாதங்கள் கடும் குளிர் காலமாக மாறிவிடும். இப்படியான மாற்றம் பல ஆயிரம் ஆண்டுகளில் மெல்ல நிகழ்வதாக இருக்கும். எனவே தாவரங்கள் மெல்ல புதிய நிலைமைக்கு மாறிவிடும்.

பூமியின் சுற்றுப்பாதை மட்டுமல்ல, பூமியைச் சுற்றி வருகிற சந்திரனின் சுற்றுப்பாதையும் இப்படி நீள் வட்டமாகத்தான் இருக்கிறது. சந்திரன் பூமிக்கு மிக அருகாமையில் இருக்கும்போது சந்திரனுக்கு உள்ள தொலைவு 3,56,509 கிலோ மீட்டர். மிகத் தொலைவில் இருக்கும்போது சந்திரனுக்கு உள்ள தூரம் 4,06,662 கிலோ மீட்டர்.

http://tamil.thehindu.com

  • தொடங்கியவர்

மரணத்தின் போதும், அதன் பிறகும் நடப்பது என்ன தெரியுமா? ஆய்வு சொல்லும் உண்மைகள்! #lifeafterdeath

  • தொடங்கியவர்

விடைபெறும் 2017: இளைஞர்களின் ஃபேஷன் அலப்பறைகள்!

 

 
Desktopjpg

வ்வோர் ஆண்டுமே ஃபேஷன் என்னும் பெயரில் இளைஞர்கள், யுவதிகள் புதிய டிரெண்ட்டை ஏற்படுத்துவது வாடிக்கை. இந்த 2017-ம் ஆண்டிலும் அப்படியான விநோத ஃபேஷன்களை இளைஞர்கள் ஆராதித்து ஆரத் தழுவியிருக்கிறார்கள். அவற்றில் சில ஃபேஷன்களைப் பார்ப்போம்:

மெக்கின்ஸ்

இளம் பெண்கள் மட்டும் லெக்கின்ஸ் அணியலாம்; ஆண்கள் அணியக் கூடாதா என்று யாரோ ஒரு புண்ணியவான் யோசித்ததன் விளைவுதான் ‘மெக்கின்ஸ்’. உடலில் ஒட்டிக்கொள்ளும் அளவுக்கு மிகவும் டைட்டாக அணிந்துகொள்ளும் உடை இது. பாரிஸ், டோக்கியோ போன்ற நகரங்களில் இந்த உடைக்குக் கிடைத்த வரவேற்பு, இன்று உலகெங்கும் இளைஞர்களின் விருப்ப உடையாக இதை மாற்றியிருக்கிறது.

சாகிங் பேன்ட்

நம்ம ஊரிலேயே இந்த வகையான பேன்ட்டைப் பார்த்திருப்பீர்கள். இடுப்பில் நிற்காமல் நழுவி, உள்ளாடை தெரியும்படி பேன்ட்டை அணிந்துசெல்பவர்களைப் பார்க்கிறபோது, பெல்ட் போட்டால் குறைந்தாவிடும் என்னும் ரீதியில் முறைத்திருப்பீர்கள். உண்மையில் இது ஒரு வகையான ஃபேஷன். இந்த வகையான பேன்ட்டுக்குப் பெயர் சாகிங் பேன்ட். பல ஆண்டுகளாகப் புழக்கத்தில் இருந்தாலும், இந்த ஆண்டு இந்த பேன்டுக்கு இளைஞர்கள் மத்தியில் வரவேற்பு கூடியிருக்கிறதாம். இந்த பேன்ட்டை அணியும்போது உள்ளாடைக்குப் பதில் ட்ரவுசர் அணிய வேண்டும் என்று சொல்லிச் சிரிக்கிறார்கள் இளைஞர்கள்.

பிளாஸ்டிக் ஜீன்ஸ்

ஜீன்ஸ் பேன்ட்களைப் பிடிக்காத இளசுகள் நிச்சயம் யாருமே இருக்க மாட்டார்கள். முரட்டுத் துணியால் தயாரிக்கப்படும் ஜீன்ஸ் பேன்ட்களுக்குப் பதில் பிளாஸ்டிக்கில் ஜீன்ஸ் தயாரித்தால் எப்படி இருக்கும்? அதுதான் ‘கிளியர் பிளாஸ்டிக் ஜீன்ஸ்’ பேன்ட். வெளியே தெரியும்படியான பிளாஸ்டிக்கைப் பயன்படுத்தி இந்த பேன்ட் தயாரிக்கப்படுகிறது. பார்வையாளர்களை ஈர்க்க முயலும் இளையோர் மத்தியில் இந்த ஜீன்ஸுக்கு வரவேற்பு கிடைத்திருக்கிறது. குறிப்பாக, இளம் பெண்கள் அதிகம் விரும்புகிறார்களாம். ஆனால், இந்த வகை ஜீன்ஸுக்குச் சில நாடுகளில் எதிர்ப்பும் கிளம்பியிருக்கிறது.

மட்டட் பேன்ட்

‘கறை நல்லது’ என்ற விளம்பரத்தைப் பார்த்திருப்பீர்கள். உண்மையில் சேறு படிந்திருக்கும் பேன்ட்தான் மட்டட் பேன்ட் (சேறு பேன்ட்). சுரங்கம், குவாரி, கட்டுமானப் பணிகள் போன்ற கடினமான பகுதிகளில் பணியாற்றுவோரின் உடை அழுக்காகவே காட்சியளிக்கும். அதையே ஃபேஷனாக்கி இந்த உடையைத் தயாரித்திருக்கிறார்கள். வழக்கமான ஜீன்ஸ் பேன்ட் அணிந்து போரடித்தவர்களுக்கு ஏற்ற உடை இது என்கிறார்கள் இளைஞர்கள். அழுக்கு ஜீன்ஸும் இந்த ஆண்டு ஃபேஷன்களில் ஒன்றாகிவிட்டது.

காது வளையம்

காதில் தோடு அணிவது, வளையம் போட்டுக்கொள்வது எல்லாம் புதிய ஃபேஷனா என்று நினைத்துவிடாதீர்கள். ஆப்பிரிக்கப் பழங்குடிகள் அணிந்த காது வளையம்தான் இப்போது வெளிநாட்டு இளைஞர்கள் மத்தியில் பிரபலம். இது வழக்கமான காது வளையம் அல்ல. இந்த வளையத்தை அணிந்துகொள்ள காதில் துளையிட்டு, வளையத்தின் அளவுக்கு ஏற்ப குடைய வேண்டும். கொஞ்சம் ரிஸ்க்கான கொஞ்சம் காஸ்ட்லியான இந்த ஃபேஷனுக்கு மேற்கத்திய நாடுகளின் இளைஞர்கள் மத்தியில் அமோக வரவேற்பு கிடைத்திருக்கிறது. இப்போது ஆசிய நாட்டு இளைஞர்கள் மத்தியிலும் இந்தக் காது வளையத்துக்கு மவுசு கூடியிருக்கிறது. எங்க ஊரு பாட்டிகள் போட்ட பாம்படத்தையே ஃபேஷனா மாத்திட்டீங்களேப்பா!

Cowboy%20boots
கவ்பாய் பூட்ஸ்

‘கவ்பாய்’ ஸ்டைல் பூட்ஸ்களுக்கு இந்த ஆண்டு இளையோர் மத்தியில் ஆதரவு கூடியிருக்கிறது. ‘இந்திய மகாராஜா ஸ்டைல் பூட்’ என்றழைக்கப்படும் இந்த பூட்ஸ்களுக்கு மெக்சிகோ இளையோர் மத்தியில் அமோக வரவேற்புக் கிடைத்திருக்கிறதாம். பார்ப்பதற்குக் கம்பீரத் தோற்றத்தைத் தருவதால் இந்த வகையாக பூட்ஸ்களை விரும்பி அணிகிறார்களாம். குறிப்பாக, இளம் பெண்கள் விரும்பும் பூட்ஸ்களில் இதற்குதான் முதலிடம்.

வுட்டன் சன் கிளாஸ்

இந்த ஆண்டு இளைஞர்கள் மிக அதிகம் விரும்பி வாங்கிய பொருட்களில் வுட்டன் சன் கிளாஸ் எனப்படும் மர மூக்குக் கண்ணாடிக்குத்தான் முதலிடம். வழக்கமாகத் தயாரிக்கப்படும் மூக்குக் கண்ணாடி அல்ல இது. கண்ணாடியின் பிரேம்கள் முழுக்க முழுக்க மரத்தாலானவை. தங்கம் முதல் பிளாட்டினம்வரை கண்ணாடி பிரேம்களில் பலவகையான வெரைட்டிகள் இருந்தாலும், இந்தக் கண்ணாடிக்கு இளைஞர்கள் மத்தியில் அமோக வரவேற்பு கிடைத்திருக்கிறது. இப்போது மர வகைகளுக்கு ஏற்ப சந்தைகளில் வுட்டன் சன் கிளாஸ்கள் வரத் தொடங்கியுள்ளன.

http://tamil.thehindu.com

  • தொடங்கியவர்

கேட்வாக் கேர்ள்ஸ்!

 
 

கானப்ரியா

 

ஃபேஷன் உலகில் சூப்பர் மாடலாய் கெத்து கேட்வாக் போடும் லேட்டஸ்ட் அழகிகளின் க்யூட் அறிமுகம் இங்கே!

p46a_1511780322.jpg

காரா டெலிவின் : ( CARA DELEVINGNE )

பாடகி, கிடாரிஸ்ட், டிரம்ஸ் ப்ளேயர், ஆடை வடிவமைப்பாளர், கதாசிரியர் எனப் பல திறமைகளைக் கொண்ட சகலகலா வல்லவிதான் காரா டெலிவின். லண்டனில் 1992-ம் ஆண்டு பிறந்த காரா, தனது பத்தாவது வயதிலேயே பர்பெரி (burberry), டோல்ஸ் அண்ட் கப்பானா எனப் பல முன்னணி நிறுவனங்களில் ஸ்டார் மாடலாகிவிட்டார். 2012 மற்றும் 2014-ம் ஆண்டிற்கான `மாடல் ஆஃப் தி இயர்’ விருதைத் தட்டித்தூக்கிய காராதான், கூகுளில் அதிகம் தேடப்பட்ட ஃபேஷன் பொண்ணு. காராவிற்கு பெட் அனிமல்ஸ் என்றால் அம்புட்டு பிரியமாம்.

p46b_1511780335.jpg

மிராண்டா கெர் : (MIRANDA KERR )

`மிராண்டா பொண்ணு... மிரட்டலான கண்ணு’ என உருகுகிறார்கள் இந்த பியூட்டியின் ரசிகர்கள். மாடலிங் கன்னிகளின் கனவு நிறுவனமான `விக்டோரியா சீக்ரெட்’-ன் முதல் ஆஸ்திரேலியா மாடல் மிராண்டாதான். ஆஸ்திரேலியா, நியூயார்க் என உலகம் முழுக்க டாப் மாடலாய் வலம் வந்து கொண்டிருப்பவர், `கோரா ஆர்கானிக்ஸ்’ எனும் ஆர்கானிக் சருமப் பராமரிப்பு நிறுவனத்தைத் தொடங்கி தொழிலதிபராகவும் கெத்து காட்டுகிறார். உலகின் மிகவும் கவர்ச்சிகரமான பெண்கள் பட்டியலில் நிரந்தர இடம்பிடித்திருப்பவர் மிராண்டா.

p46c_1511780364.jpg

கேண்டிஸ் ஸ்வானபோல் : (Candice Swanepoel)

உலகின் லேட்டஸ்ட் ஹாட்டஸ்ட் சூப்பர் மாடல் கேண்டிஸ் ஸ்வானபோல், தென்னாப்பிரிக்காவைச் சேர்ந்தவர். ஃபெண்டி, டாமி ஹில்ஃபிகர், ரால்ஃப் லாரென் போன்ற முன்னணி நிறுவனங்களுக்கு ஸ்டார் மாடலாகப் பணியாற்றி அனைவருடைய மனதிலும் இடம் பிடித்தவர். அமெரிக்கப் பத்திரிகைகளில் மட்டுமல்லாது, இத்தாலி, பிரிட்டிஷ், ஸ்பானிஷ், ஜெர்மனி, கொரியன், சீனா போன்ற பல்வேறு மொழிப் பத்திரிகைகளின் அட்டைகளையும் அலங்கரித்துக்கொண்டிருக்கும் உலக நாயகி இவர்!

p46cc_1511780389.jpg

ஜிஜி ஹடிட் : (Gigi Hadid)

மாடலிங் உலகின் அதிர்ஷ்ட தேவதை ஜிஜி ஹடிட். இரண்டு வயதிலேயே மாடலிங் துறைக்குள் தவழ்ந்து வந்தவர். தற்போது 22 வயதை எட்டியிருக்கும் ஜிஜி, அமெரிக்கா, இங்கிலாந்து, ஸ்பெயின், பிரான்சு உள்ளிட்ட பல நாடுகளின் டாப் பத்திரிகைகளின் முகப்புப் பக்கத்தை நிரப்பிவிட்டார். 2016-ம் ஆண்டின் ‘சர்வதேச மாடல்’ பட்டத்தைத் தட்டிச் சென்றுள்ள இவர். குறும்படங்கள், நிகழ்ச்சித் தொகுப்பாளினி என பிஸியாகச் சுற்றிக் கொண்டிருக்கிறார். 2014-ம் ஆண்டு ஹாஷிமோட்டோ (Hashimoto) எனும் நோயால் பாதிக்கப்பட்டவர், தன்னம்பிக்கையால் அதிலிருந்து விடுபட்டு, `கேட் வாக்’கைத் தொடர்ந்துகொண்டிருக்கிறார். சல்யூட்... ஜிஜிக்கு சல்யூட்!

p46ccc_1511780412.jpg

நீனா அக்தால் : (Nina Agdal)

டென்மார்க்கிலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட அழகோவியம் நநீனா அக்தால். முன்னனுபவம் ஏதுமின்றி மாடலிங் துறையில் காலடி எடுத்து வைத்த சில நாள்களிலேயே அமெரிக்காவின் மிகப் பெரிய பத்திரிகையின் ஐம்பதாவது ஆண்டுச் சிறப்பிதழின் முகப்புப் பக்கத்திற்கு போஸ் கொடுக்கும் அளவிற்கு உயர்ந்தார். மிகக் குறுகிய காலத்தில் 2016-ம் ஆண்டின் ‘ஹாட்டஸ்ட் மாடல்’ என்ற பெருமைக்குரிய பட்டதைத் தட்டிச் சென்றார் இந்தப் பொன்னிறச் சிகையழகி. நீனாவுடன் காதல் வயப்பட்டு மயக்கத்தில் இருந்தவர் நம்ம டைட்டானிக் ஹீரோ. ஆமாம், லியானார்டோ டி காப்ரியோவின் முன்னாள் காதல் க்யூட்டி நீனாதான்.

p46d_1511780440.jpg

ஐரினா ஷைக் : (Irina Shayk)

கட்டுக்கோப்பான உடலமைப்பும், ஒளிரும் கண்களும் மாடலிங் உலகின் உச்சத்திற்கு ஐரினாவைக் கொண்டு சென்றது. 1986-ல் பிறந்த இவர், ரஷ்யாவின் ‘ஹாட்டஸ்ட் உமன்’ என்ற பட்டத்துக்குச் சொந்தக்காரர். அதுவே 2014-ம் ஆண்டு வெளிவந்த ‘ஹெர்குலஸ்’ எனும் ஆங்கிலப் படத்தில் `ராக்’ புகழ் டுவைன் ஜான்சனுடன்  நடிக்கும் வாய்ப்பை ஏற்படுத்திக்கொடுத்தது. கால்பந்து சூப்பர் ஸ்டார் கிறிஸ்டியானோ ரொனால்டோவுடன் 5 வருட டீப் காதல் கசந்துபோக 2015-ல் அமெரிக்காவின் ஸ்டைலிஷ் ஹீரோவான ப்ராட்லி கூப்பரைத் திருமணம் செய்துகொண்டார் ஐரினா. லியா என்னும் குழந்தைக்குத் தாயான ஐரினாவின் ரீ-என்ட்ரிக்காக ஃபேஷன் உலகம் வெயிட்டிங்! 

p46dd_1511780453.jpg

ஏட்ரியானா லிமா : (Adriana Lima)

பிரேசில் நாட்டைச் சேர்ந்த லிமா, ‘விக்டோரியா சீக்ரெட்’டின் தேவதை என 2017 -ம் ஆண்டு மகுடம் சூட்டப்பட்டார். இறக்கை இல்லா தேவதை இவர். தன் 15வது வயதிலேயே ‘சூப்பர் மாடல் ஆஃப் பிரேசில்’ பட்டத்தைத் தட்டிச்சென்ற லிமா, தற்போது ஃபேஷன் உலகின் சூப்பர் ஸ்டாராக கெத்து காட்டிக்கொண்டிருக்கிறார். ஆஃப்ரோ - பிரேசிலியனான லிமாவிற்கு போர்ச்சுகீஸ், ஆங்கிலம், ஸ்பானிஷ் மற்றும் இத்தாலியன் ஆகிய நான்கு மொழிகளும் அத்துப்படி. தனது தோழிக்குத் துணையாகச் சென்றவர் மாடலிங் உலகில் காலடி எடுத்து வைத்தது எதிர்பாராத நிகழ்வு. 2008-ம் ஆண்டு முதல் இன்று வரை ‘மிகவும் கவர்ச்சிகரமான மாடல்’ என்ற பெயரைத் தன்னிடமே தக்க வைத்திருக்கிறார் லிமா. சூப்பர்மா...

p46ddd_1511780467.jpg

கேட் அப்டன்: (Kate Upton)

வேர்ல்பூல் (Whirlpool) நிறுவனத்தின் இணை நிறுவனரான ஃபிரெட்ரிக் அப்டனின் கொள்ளுப் பேத்திதான் இந்த கேத்தரின் எலிசபெத் அப்டன். சுருக்கமாக கேட் அப்டன். அமெரிக்காவின் பிரபலமான ‘ஸ்போர்ட்ஸ் இல்லஸ்ட்ரேடட்’ ஸ்விம்சூட் இதழில் 2017-ம் ஆண்டின் முகப்புப் பக்கத்தில் இடம்பெற்ற அந்த ஊர் இடையழகி. ஒரு பக்கம் மாடலிங், மறுபக்கம் படங்கள் என பியூட்டி செம பிஸி. கடவுள் நம்பிக்கை அதிகம் கொண்டவரான இவர், தன்னுடன் எப்போதுமே கடவுள் இருக்க வேண்டுமென சிலுவை சிம்பல் தனது விரலில் வரைந்திருக்கிறார். பக்திப்பொண்ணு!

p46e_1511780481.jpg

டவுட்ஸன் க்ரோஸ் : (Doutzen Kroes)

எட்டு மில்லியன் டாலரை ஒரே ஆண்டில் அள்ளிச் சென்ற அழகி டவுட்ஸன் க்ரோஸ். மாடலிங்குக்கு வந்தது அவரின் காலி பாக்கெட்டை நிரப்புவதற்காகத்தான் என்று புன்னகைக்கிறார். டச்சு மாடலான டவுட்ஸன், `லாரியல் பாரிஸி’ன் அம்பாசிடராகத் தொடர்ந்து பத்து ஆண்டுகள் பணியாற்றியவர். பூனைக் கண்களுக்குச் சொந்தக்காரியான டவுட்சனுக்கு விலங்குகள் என்றால் கொள்ளைப் பிரியம். அவரின் சகோதரியுடன் சைக்கிளிங், ஸ்கேட்டிங் செய்வது பிடித்தமான பொழுதுபோக்கு. `சிறுவயதில் நான் ஒரு டாம் பாய்’ எனச் சொல்லிக்கொள்ளும் இந்த அழகுச் சிலைக்கு ஆம்ஸ்டர்டாமில் மெழுகுச் சிலையும் வைத்து கௌரவப்படுத்தியிருக்கிறார்கள். அட..!

p46ee_1511780495.jpg

லியூ வென் : (Liu Wen)

ஃபேஸ்புக், ட்விட்டர், இன்ஸ்டாகிராம் என ஆல் ஏரியாவிலும் அதிக ஃபாலோயர்களைக் கொண்ட கில்லி லியூ. கிழக்காசியாவின் முதல் ‘சூப்பர் மாடல்.’ சீனாவில் பிறந்த லியூ, 2014-ம் ஆண்டு வெளிவந்த வோக் பத்திரிகையில் ஆப்பிள் கைக்கடிகாரத்தை ஏந்தி போஸ் கொடுத்திருந்தார். ஒரே ஆண்டில் உலகின் பிரபலமான ஃபேஷன் ஷோக்களில் 74 முறை ராம்ப் வாக் செய்து உலக சாதனை படைத்தவர். இப்படி மேலும் பல சாதனைகளுக்கு நெருங்கிய சொந்தமான லியூவின் கனவு, சுற்றுலா வழிகாட்டி ஆவதுதானாம். கெட் ரெடி ஃபோக்ஸ்... சீக்கிரம் பாஸ்போர்ட் எடுத்துக்கோங்க!

https://www.vikatan.com

  • தொடங்கியவர்

சர்வதேச விண்வெளி நிலையத்தில் இருந்து பதிவு செய்யப்பட்ட மின்னல்

  • தொடங்கியவர்

நடைமுறையில் இருக்கும் உலக வரைபடங்கள் தவறாக இருப்பதின் காரணம் தெரியுமா? தெரிந்துகொள்ளுங்கள்!

 
 

ஜெரார்டஸ் மெர்கட்டர்

Chennai: 

ன்று நாம் நினைத்த இடத்துக்கு விமானம் மூலமாக மிக எளிதில் சென்றுவிடலாம். ஆனால், சென்ற நூற்றாண்டுக்கு முன்புவரை கடல்வழிப் பயணம் மட்டும்தான். திசைதெரியாத கடல்வழிப் பயணம் என்பது அவ்வளவு சுலபமானது அல்ல... கொடூர முறை மரணத்தை நுனி நாக்கால் சுவைப்பதற்குச் சமம். கடல்வழிப் பயணத்தில் நாடுகளைக் கண்டுபிடித்து, வெற்றிபெற்ற வெகு சிலரை மட்டுமே வரலாறு பதிவு செய்துவைத்திருக்கிறது. ஆனால், அதே கடல் பயணத்தில் புதிய நிலப்பகுதிகளைக் கண்டுபிடிக்கப்போன பல்லாயிரக்கணக்கானவர்கள் என்ன ஆனார்கள் என்று யாருக்குமே தெரியாது. புதிய நிலப் பகுதிகளைத் தேடிய கடல்வழிப் பயணத்தில், அனைவருக்கும் இருந்த சிக்கல்களைக் கலைந்தவர் நெதர்லாந்து நாட்டைச் சேர்ந்த 'ஜெரார்டஸ் மெர்கட்டர் (Gerardus Mercator)' என்றே சொல்லலாம். அவர் அப்படி என்ன செய்தார் என்று தெரிந்துகொள்வதற்கு முன் இன்றைய தினத்தில் அதாவது, 1594-ம் ஆண்டு டிசம்பர் 2-ம் நாள் மெர்கட்டரின் நினைவு நாள் என்பதையும் அறிந்துகொள்வோம்.

 

உலக வரைபடம்

நீங்கள் அடிக்கடி கூகுள் மேப் அல்லது உலக வரைபடம் பார்க்கும் பழக்கம் உள்ளவரா? இல்லையென்றாலும் பரவாயில்லை. இப்போது உங்களுக்கு ஒரு சின்ன டெஸ்ட். உங்கள் பிரௌசரில் கூகுள் மேப்பை ஓப்பன் செய்துகொள்ளுங்கள் அல்லது உங்கள் வீட்டில் இருக்கும் உலக வரைபடத்தை எடுத்துக்கொள்ளுங்கள். தற்போது உங்கள் பார்வைக்குப் பெரிய பரப்பளவுகளைக் கொண்ட ஐந்து நாடுகளையும், மூன்று கண்டங்களையும் சொல்லுங்கள். அதிகப் பரப்பளவு கொண்ட நாடுகளில் முதல் இடத்தில் ரஷ்யா, இரண்டாவது கனடா, மூன்றாவது கிரீன்லாந்து, நான்காவது அமெரிக்கா மற்றும் ஐந்தாவது இடத்தில் சீனா என்று வகைப்படுத்தி இருப்பீர்கள். அதுபோல கண்டங்கள் என்று எடுத்துக்கொண்டால், பரப்பளவில் முதல் இடத்தில் அன்டார்டிக்கா, இரண்டாவது இடத்தில் ஆசியா மற்றும் மூன்றாவது இடத்தில் வட அமெரிக்கா என்று வகைப்படுத்தியிருப்போம். நாம் வகைப்படுத்தி இருப்பதை யாராவது தவறு என்று சொன்னால், நாம் ஏற்றுக்கொள்வோமா? நிச்சயம் இல்லை... 'கூகுள் பொய் சொல்லாது... கூகுள் மேப் இப்படித்தான் இருக்கிறது' என்று அவர்களைத் துவம்சம் செய்துவிடுவோம். உண்மையில், 'கூகுள்' பொய் சொல்லாது. ஆனால், 'கூகுள் மேப்' பொய் சொல்லும். என்ன ஆச்சர்யமாக இருக்கிறதா? 

கூகுள் மேப் அல்லது வீட்டில் இருக்கும் உலக வரைபடத்தைப் பார்த்து கணித்துவைத்துள்ள பெரிய நாடுகள் மற்றும் கண்டங்களின் வரிசைகள் உண்மையில் தவறானவையே. மேப்பில் சற்று உற்றுக் கவனியுங்கள். உலக வரைபடத்திலேயே அதிகப் பரப்பளவைக் கொண்டது அன்டார்டிக்காதான். கிரீன்லாந்து மற்றும் கனடா போன்ற நாடுகள் ஆப்பிரிக்கா கண்டம் அளவுக்குப் பெரியதாக இருக்கும். அதுபோல ரஷ்யா என்ற நாடு, தென் அமெரிக்கா என்ற கண்டத்தைவிட பல மடங்கு பெரிதாக இருக்கும். இங்கிலாந்தும், மடகாஸ்கரும் ஒரே அளவில் இருப்பதுபோல இருக்கும். இதேபோன்றுதான் அமெரிக்கா, சீனா, ஆஸ்திரேலியா, நார்வே, ஸ்வீடன், ஃபின்லாந்து போன்ற நாடுகளின் அளவும். இவை அனைத்தின் பரப்பளவுமே மேப்பில் தவறாகக் கொடுக்கப்பட்டிருக்கின்றன. 

உலக உருண்டையில்...

உண்மையில், கிரீன்லாந்தை (2.166 million km²) விட ஆப்பிரிக்கா கண்டம் (30.37 million km²)14 மடங்கு பெரியது. கனடாவை (9.98 million km²) விட ஆப்பிரிக்கா கண்டம் மூன்று மடங்கு பெரியது. அதேபோல ரஷ்யா (17.1 million km²) என்ற நாடு, ஒப்பீட்டளவில் தென் அமெரிக்கா கண்டத்துக்கு (17.8 million km²) இணையானது. துல்லியமாகச் சொல்லப்போனால் தென் அமெரிக்காவைவிட ரஷ்யா பரப்பளவில் சற்றுச் சிறியது. இங்கிலாந்து (2,42,495 km²),நார்வே (3,85,203 km²), ஃபின்லாந்து (3,38,424 km²), ஸ்வீடன் (4,47,435 km²) போன்ற நாடுகள் மடகாஸ்கரை (5,87,041 km²) விட மிகச்சிறியவை. பிரேசில் (8.516 million km²) என்ற நாட்டுக்குள், அமெரிக்காவின் அலாஸ்கா (1.718 million km²) என்ற மாகாணத்தைப்போல் சுமார் ஆறு மாகாணங்களை வைத்துவிடலாம். அனைத்தையும்விட வரைபடத்தையே பரப்பளவில் தனதாக்கிக் கொண்டிருக்கும் அன்டார்டிக்கா கண்டம் (14 million km²) படத்தில் இருப்பதில் ஐந்தில் ஒருபங்குதான் உண்மையான பரப்பளவு. அதாவது, அன்டார்டிக்காவானது ரஷ்யா, வட அமெரிக்கா மற்றும் தென் அமெரிக்காவைவிட அளவில் சிறியது. இன்னும் சொல்லப்போனால் அன்டார்டிக்காவைவிட ஆப்பிரிக்கா இரண்டு மடங்கு பெரியது. ஆசியா மூன்று மடங்கு பெரியது. 

உலக உருண்டையில்...

கிரீன்லாந்து பிரச்னை (greenland problem) என்று கூகுளில் தட்டுங்கள்... இங்கே கொடுக்கப்பட்டிருப்பவை சில உதாரணங்கள் மட்டுமே... புரியவில்லையா? இப்போது உங்கள் கூகுள் மேப்பை (Atlas or Flat), பூமி உருண்டையாக (Glope or Sphere) மாற்றுங்கள். மேற்சொன்ன நாடுகளின் துல்லியமான வித்தியாசங்களைப் பாருங்கள். உலக வரைபடம் அல்லது கூகுள் மேப்பில் கொடுக்கப்பட்டிருக்கும் நாடுகளின் அளவுகள் தவறானவை என்று இப்போது புரிகிறதா? உலக உருண்டைக்குள் நாடுகளின் பரப்பளவு பற்றிய சரியான அளவும், உலக வரைபடத்துக்குள் மட்டும் அவற்றைப் பற்றிய தவறான அளவுகளும் எதற்காகக் கொடுக்கப்பட வேண்டும்.

உலக வரைபடம் வரைந்த முறை...

இப்போது ஜெரார்டஸ் மெர்கட்டர் பற்றியும், நடைமுறையில் இருக்கும் தவறான உலக வரைபடம் எப்படித் தோன்றியது என்பது பற்றியும் தெரிந்துகொள்வோம்... கி.பி. 1453-ம் ஆண்டு ஓட்டோமான் துருக்கியர்கள், கான்ஸ்டாண்டி நோபிளைக் கைப்பற்றினர். இதனால் ஆசிய நாடுகளுடனான ஐரோப்பிய வணிகம் துருக்கியர்களின் கட்டுப்பாட்டுக்குள் சென்றது. ஆசிய நாடுகளுடனான, ஐரோப்பிய வணிகவழித்தடமான தரைவழித்தடம் தடைப்பட்டது. அதனால் கடல்மார்க்கமாகத்தான் ஆசிய நாடுகளைச் சென்றடைய வேண்டும் என்ற நிலை உருவானது. அந்தக் காலகட்டத்தில் நெதர்லாந்தைச் சேர்ந்த புகழ்பெற்ற புவியியல் அளவீட்டு நிபுணரான ஜெரார்டஸ் மெர்கட்டர்க்கு, உலக நாடுகள் அளவுகள் குறித்த வரைபடம் வரையும் பொறுப்பு வழங்கப்பட்டது. அதனால் உலக உருண்டையில் குறுக்கும்நெடுக்குமாகப் பல கோடுகள் வரையப்பட்டன. உருண்டையின் முப்பரிமாணத்தில் உள்ள ஒரு நேர்க்கோட்டைத் தட்டையாக, இருபரிமாணமாக மாற்றும்போது வளைந்த கோடாக மாறியது. இதனால் நிலநடுக்கோட்டுக்கு அருகில் சிறிய அளவிலான கட்டங்களாகவும், நிலநடுக்கோட்டுக்குத் தொலைவில் செல்லச்செல்ல பெரிய கட்டங்களாகவும் மாறின. இதை மையமாகவைத்து 1569-ம் ஆண்டு மெர்கட்டர் உலக வரைபடத்தை வரைந்தார். இப்படி உருவாக்கப்பட்ட வரைபடத்தில் நாடுகளின் பரப்பளவு துருவங்களை நோக்கிச் செல்லச்செல்ல பரப்பளவு பெரிதாக இருந்தது. இந்த வரைபடம் நாடுகளின் திசையைச் சரியாகக் காட்டியது. ஆனால், நாடுகளின் பரப்பளவு பலியாகிவிட்டது. 

உலக வரைபடம் வரைந்த முறை...

இதற்கு ஓர் அறிவியல் காரணமும் வெகுவாகச் சொல்லப்பட்டு வருகிறது. ஒரு சமதள பரப்பின் வளைவு (Flat curvature) பூஜ்ஜியம். ஓர் உருண்டையின் வளைவு (Sphere curvature) பாசிட்டிவ் (positive). ஓர் உருண்டையைச் சரியான சமதளமாக மாற்ற முடியாது. அதுபோல ஒரு சமதளத்தை நம்மால் சரியான உருண்டையாக மாற்ற முடியாது. அறிவியல் வளர்ச்சி கண்ட இந்தக் காலத்தில் மட்டுமல்லாமல் எப்போதுமே அறிவியல் விதி இதுதான். இந்த நிலையே மெர்கட்டர் வரைந்த வரைபடத்திலும் ஏற்பட்டது. 

 

மெர்கட்டர்க்கு முன்னும்பின்னும் பலரால் உலக வரைபடங்கள் வரையப்பட்டிருந்தாலும், நாடுகளின் திசையை அறிய மெர்கட்டர் வரைபடமே சிறந்தது என அனைவரும் ஏற்றுக்கொண்டனர். இந்த வரைபடம்தான் 'மெர்கட்டர் வரைபடம்' (Mercator Map) என தற்போதும் பயன்படுத்தப்பட்டு வருகிறது. ஆனால், இந்த வரைபடம் மூலம் திசைகளை மட்டுமே அறியமுடியும். நாடுகளின் உண்மையான பரப்பளவு மற்றும் இயற்கை அமைப்பைப் பற்றித் தெரிந்துகொள்ள வேண்டுமானால், எப்போதும் உலக உருண்டையைப் பார்த்து தெரிந்துகொள்வதே நல்லது.

https://www.vikatan.com

  • தொடங்கியவர்

 

  • தொடங்கியவர்
‘உங்களை நீங்களே உருவாக்க முனைக’
 

image_1682176887.jpgஇதயத்தில் இனிமையை மட்டும் உட்புகுத்தினால் தகாதவை எவையும் அதில் புகுந்திட இடமேயில்லை. 

நல்ல கருமங்களை விருப்பத்துடன் செய்தால் அனைத்துக் காரியங்களும் உங்களுக்கு நன்மைதரும். 

இடர்கள், தடைகளை ஏற்படுத்தலாம். உடைபடா நெஞ்சுடன் உறுதியுடன் இயங்குவோருக்கு துன்பங்கள் விடைகொடுத்தோடும். 

மற்றவர்களுடன் ஒப்பீடு செய்து, உங்களுக்குள் விமர்சித்துத் தர்க்கிப்பதைத் தவிர்த்து, உங்களை நீங்களே உருவாக்க முனைப்புடன் முனைக. 

நடைபாதையில் எப்படி பராக்குப் பார்த்து நடக்கக் கூடாதோ, அவ்வண்ணமே வாழ்க்கைப் பாதையில், பார்வையை நேரிய திசையில் நிறுத்துக. 

பிறரின் உறுத்தலை, மிரட்டலை அருவெறுப்புடன் தூக்கி எறிக. நீங்கள் உங்களுக்கு மட்டுமானவர் அல்ல; உலகுக்குமானவர். 

  • தொடங்கியவர்

“எனக்கு மன நோய்… என் ஓவியங்களை பாக்கற தைரியம் இருக்கா?” - இன்ஸ்டாகிராமில் திகிலூட்டும் பெண்

 
 

“இன்று கண்விழித்தவுடன் நீங்கள் முதலில் பார்த்த காட்சி நிஜமானது தானா?” இந்தச் சந்தேகம் உங்களுக்கு எப்போதாவது தோன்றியது உண்டா?

“இல்லையே!” என்று பதிலளிக்கும் முன், இந்தச் சந்தேகம் ஒவ்வொரு நாளும், ஒவ்வொரு நிமிடமும் உங்களுக்குத் தோன்றினால் எப்படி இருக்கும் என்று யோசித்துப் பாருங்கள். நீங்கள் காண்பது நிஜமா அல்லது உங்களின் அதீத கற்பனையா என்று தெரியாமல் உங்களால் ஓர் அடி கூட எடுத்து வைக்க முடியாது. இப்படிப் பட்ட மனநிலைகளில் இருப்பவர்களுக்கு, வாழும் ஒவ்வொரு நாளும் நரகமாகிப் போய்விடுகிறது. காட்சிகளைக் கூட விட்டு விடுங்கள். ஏதேனும் செய்து, குழப்பி எடுத்து, இது நிஜம் இது பொய் என்று நம் மன அலமாரியில் அடுக்கிக் கொள்ளலாம். வினோத சப்தங்கள், காதின் அருகில் கிசுகிசுக்கப்படும் வசவுச் சொற்கள், தூரத்து அறையில் இருந்து வந்து பார்க்க சொல்லி அடம்பிடிக்கும் ஒரு குழந்தையின் குரல், இதெல்லாம் கூட பலருக்கு நடப்பதுண்டு என்கிறார்கள் மருத்துவர்கள். இத்தகைய பாதிப்பு உள்ளவர்களுக்கு வந்திருக்கும் பிரச்னையின் பெயர் “மனச்சிதைவு நோய்”, ஆங்கிலத்தில் ஸ்கிசோஃப்ரினியா (Schizophrenia).

 
 

மனநோய்

உங்களுக்கு இந்த நோய் தாக்கினால், இப்படி ஒரு குறை உங்களிடம் இருக்கிறது என்பதை அறியவே பல காலம் ஆகும். மிகவும் ஆபத்தான மனநோயாகக் கருதப்படும் இதன் கொடூரத்தை வார்த்தைகளால் விவரிக்க இயலாது. விடாமல் துரத்தும் பிரச்னைகள், சர்ச்சைகள் மற்றும் மன உளைச்சல்கள் நிறைந்த பால்யப் பருவம் போன்றவை தான் இந்த நோய்க்கு அடித்தளம். அவர்களால் இயல்பான வாழ்க்கையை வாழ முடியும் என்று நம்பிக்கை ஏற்படுத்தும் ஒரு விஷயம் என்றால் அது இசை மற்றும் கலைதான். அதிலும் ஓவியக்கலை அவர்களை எப்போதும் மகிழ்ச்சியில் ஆழ்த்தும்.இன்ஸ்டாகிராமில் திகிலூட்டும் பெண்

கேட் ஃபென்னர் (Kate Fenner) என்ற இந்தப் பெண்ணிற்கும் ஓவியங்கள் தான் உதவுகின்றன. இவருக்கு 17 வயதில் ஸ்கிசோஃப்ரினியா இருப்பதாகக் கண்டறியப்பட்டது. தற்போது, தன் குறையை மறந்து, தன் அன்றாட வாழ்வை ஓவியங்களால் நிரப்பிக் கொண்டிருக்கிறார் இந்தப் பதின்பருவப் பெண். அதை இன்ஸ்டாகிராம் தளத்தில் பதிவிட ஃபாலோயர்ஸ் எண்ணிக்கை ஐம்பதாயிரம் வரை போயிருக்கிறது.

“நான் பிறப்பிலேயே ஓவியத் திறமையுடன் இருந்திருக்கிறேன் என்றே நினைக்கிறேன். ஆனால், இந்த நோய் தான் என் திறமையை எனக்கே அடையாளம் காட்டியிருக்கிறது. எனக்குத் தோன்றும் மாயத்தோற்றங்களை நான் வரைகிறேன். என் ஓவியங்கள் தான் என் உற்றத் துணை. என் ஓவியங்களில் பிரதான இடத்தைப் பிடிப்பவை சிறிய பூச்சிகள், அதிலும் முக்கியமாக ஈக்கள். ஒருவேளை, நானும் இந்த ஈக்களை போலப் பயனற்ற ஒன்றாக இருக்கிறேன், என்று என் கற்பனைகள் உணர்த்தப் பார்ப்பதாய் நினைக்கிறேன்” என்று படபடக்கிறார். அவர் பதிவிட்ட படங்களில் சில…

 

“என் அறையின் மேலுள்ள சிறுதுளை வழியாக இது ஊர்ந்து வந்தது. ‘கிளிக்’ செய்யும் ஒலியை இது எழுப்புகிறது. சில சமயம் பொருள்களின் அடியில் இருந்து கூட இது வெளியே எட்டிப்பார்க்கும்.”

மன நோய்

“இது என் முகம் தான். ஒருநாள் கண்ணாடியை பார்க்கும் போது இப்படி தான் தெரிந்தது.”

இன்ஸ்டாகிராம் படங்கள்

“எனக்குள் தீவிரமான எண்ணங்கள் சில அவ்வப்போது தோன்றும். வித்தியாசமான குரல்கள் வந்து பொருள்களை தீயிட்டு எரிக்கச் சொல்லி தூண்டி விடும்.”

இன்ஸ்டாகிராம் படங்கள்

இன்ஸ்டாகிராம் படங்கள்

“இந்தப் பறவை எனக்காகப் பாடல்கள் பாடும்.”

இன்ஸ்டாகிராம் படங்கள்

Photos Courtesy: Kate Fenner

ஸ்கிசோஃப்ரினியா இருந்தும் உச்சம் தொட்டவர்கள் நிறையப் பேர் உண்டு. ஜான் நேஷ் என்ற பிரபல கணித மேதை இந்த நோய் இருந்தும், பொருளாதார அறிவியலுக்கான நோபல் நினைவுப் பரிசு பெரும் அளவிற்கு உயர்ந்தார். இவரின் வாழ்க்கை ‘A beautiful mind’ என்று ஆங்கிலத்தில் படமாக்கப்பட்டு நான்கு ஆஸ்கர் விருதுகளை அள்ளியது. இந்தப் பிரச்னை உள்ள பெரும்பாலானோர் இசையில் சாதித்துள்ளனர். இயற்பியல் மேதை ஐன்ஸ்டீன் மகனான எட்வர்ட் ஐன்ஸ்டீன் அவர்களுக்குக் கூட இந்த பிரச்னை இருந்தது.

 

இந்தப் பெண்ணின் ஓவியத் திறமையும் அவர் படங்கள் வழியே நன்கு வெளிப்படுகிறது. இவ்வகை பிரச்னைகளை சமாளிக்கத் தேவை மற்றவர்களின் அன்பும் ஆதரவும் தான். அதையும் தாண்டி பாதிக்கப்பட்டவர்களும் இப்படி ஏதேனும் ஒரு கலையில் ஆர்வம் கொண்டவர்களாய் இருக்கலாம். அதை அறிந்து கொண்டு, அவர்களுக்கு உதவ வேண்டியது இயல்பான வாழ்க்கையை வாழும் நம்முடைய கடமை.

https://www.vikatan.com

  • தொடங்கியவர்

ஒன்பது பேர் மட்டுமே வாழும் விசித்திர கிராமம் !

 

அட்லாண்டிக் பெருங்கடல் பகுதியில் அமைந்துள்ள பல்வேறு தீவுகளில் ஒன்றான  பாரோ தீவிலுள்ள கசடலூர் எனும் கிராமத்தில், ஒன்பது பேர் மட்டுமே வசித்து வருகிறார்கள் என்பது பலரை வியப்பில் ஆழ்த்தியுள்ளது.

ஒன்பது   பேர்   மட்டுமே  வாழும்   விசித்திர   கிராமம்  !

அட்லாண்டிக் பெருங்கடல் பகுதியில், மொத்தம் 18 தீவுகள் உள்ளன.

இவை சுரங்கப்பாதைகள், பாலங்கள், படகுப் போக்குவரத்து ஆகியவற்றின் மூலம் ஒன்றுடன் ஒன்று இணைக்கப்பட்டிருக்கின்றன.

 இந்த 18 தீவுகளும் எரிமலைத் தீவுகள் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த தீவுகளில் பனி மூடிய மலைகளுக்கு நடுவில் அமைந்துள்ள குட்டி கிராமமான, கசடலூர் கிராமத்தில் தான் வெறும் 9 பேர் மட்டுமே வசித்து வருகிறார்கள்.

இங்கு வசிக்கும் மிகக்குறைந்த அளவு மக்களின் வீடுகளும் தனித்தனியே தான் காணப்படுகின்றன.

சில வீடுகளில் இருக்கும் சிறுவர்கள் விளையாடுகிறார்கள். பெரியவர்கள் தனிமையை விரும்புகிறார்கள். புத்தகங்கள் படிக்கிறார்கள்.

இந்த கிராமம் மட்டுமல்ல. இதற்கு அருகிலுள்ள மைக்கினஸ் என்னும் கிராமத்தில் 10 பேர் மட்டும் வாழ்கிறார்கள்.

இவற்றைச் சுற்றியுள்ள சில கிராமங்களில் 22 பேர் வசித்து வருகின்றனர். இதுதான் இங்குள்ள அதிகபட்ச மக்கள் வாழும்  தொகை என்பது குறிப்பிடத்தக்கது.

https://news.ibctamil.com

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.