Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இளமை புதுமை பல்சுவை

Featured Replies

  • தொடங்கியவர்

பொம்மைப் பாம்பை வீசி பயமுறுத்தியவரை பழிதீர்த்த சன்னி லியோன்: வைரலாகும் வீடியோ

 
1jpg

நடிகை சன்னி லியோன் மீது, ஒருவர் பொம்மை பாம்பை வீசிப் பயமுறுத்திய வீடியோவும் பதிலுக்கு சன்னி லியோன் அவரின் முகத்தில் கேக்குகளை  பூசிக் கொண்டாடும் வீடியோவும் இணையத்தில் வைரலாகி வருகிறது.

படப்பிடிப்பு இடைவேளையின்போது ஸ்கிரிப்டைப் படித்துக் கொண்டிருந்த நடிகை சன்னி லியோன் மீது, அவரின் குழுவைச் சேர்ந்தவரே பாம்பை வீசிப் பயமுறுத்தினார். அது பொம்மை பாம்பு என்பதை அறியாத சன்னி, அலறியடித்து ஓடினார். இந்த வீடியோவை சன்னி லியோனே தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்தார்.

இதைத் தொடர்ந்து மற்றொரு வீடியோவை வெளியிட்ட சன்னி லியோன், 'இதுதான் என்னுடைய பழிவாங்கல்' என்று பதிவிட்டார். அந்த வீடியோவில் இரண்டு கேக்குகளை கையில் ஏந்தி வரும் சன்னி லியோன் பொம்மை பாம்பை வீசிய நபரின் முகத்தில் பூசுகிறார். அந்த நபர் சன்னி லியோனைத் துரத்த, வேகமாக ஓடி மறைகிறார் சன்னி.

இந்த இரண்டு வீடியோக்களும் இணையத்தில் வைரலாகி வருகின்றன.

http://tamil.thehindu.com/

 

  • Replies 11.3k
  • Views 1.5m
  • Created
  • Last Reply
  • தொடங்கியவர்

உலக மாற்றுத்திறனாளிகள் நாள்: 3-12-1982

 

உலக மக்கள் அனைவரும் மாற்றுத்திறனாளிகளின் பிரச்சனைகளைப் புரிந்து கொள்வதுடன், அவர்களுக்கு மேன்மையையும், உரிமைகளையும் வழங்கப்பட வேண்டும் என்ற நோக்கத்தால் ஐ.நா சபை உலகம் முழுவதும் பன்னாட்டு மாற்றுத்திறனாளிகள் நாள் (அனைத்துலக ஊனமுற்றோர் நாள்) என டிசம்பர் 3-ஐ அனுசரிக்கின்றது. 1981-ம் ஆண்டை உலக மாற்றுத்திறனாளிகள் ஆண்டாக ஐக்கிய நாடுகள் அவை அறிவித்தது. 1982-ஆம் ஆண்டு டிசம்பர் 3-ம் தேதியை

 
உலக மாற்றுத்திறனாளிகள் நாள்: 3-12-1982
 
உலக மக்கள் அனைவரும் மாற்றுத்திறனாளிகளின் பிரச்சனைகளைப் புரிந்து கொள்வதுடன், அவர்களுக்கு மேன்மையையும், உரிமைகளையும் வழங்கப்பட வேண்டும் என்ற நோக்கத்தால் ஐ.நா சபை உலகம் முழுவதும் பன்னாட்டு மாற்றுத்திறனாளிகள் நாள் (அனைத்துலக ஊனமுற்றோர் நாள்) என டிசம்பர் 3-ஐ அனுசரிக்கின்றது.

1981-ம் ஆண்டை உலக மாற்றுத்திறனாளிகள் ஆண்டாக ஐக்கிய நாடுகள் அவை அறிவித்தது. 1982-ஆம் ஆண்டு டிசம்பர் 3-ம் தேதியை பன்னாட்டு மாற்றுத்திறானாளிகள் நாளாக அறிவித்தது. அன்று முதல் ஒவ்வொரு ஆண்டும் இந்த நாள், உலக நாடுகளால் பன்னாட்டு மாற்றுத்திறனாளிகள் நாள் என கொண்டாடப்படுகின்றது. உலகின் பல நாடுகளிலும் பல்வேறு மட்டத்தில் இந்நாள் கொண்டாடப்பட்டு வருகின்றது. பொதுவாக தன்னார்வலர்களினாலேயே இந்நாளில் பல முன்னெடுப்புகள் இடம்பெறுகின்றன.

பல நாடுகல் அரசு நிறுவனங்கள், மற்றும் அரசு சார்பற்ற தொண்டு நிறுவனங்கள் ஊனமுற்றோர்களின் நிலையை உயர்த்துவதற்கான செயல் திட்டங்களை தீட்டி, அவர்களின் முயற்சிகளுக்கு உறுதுணை புரிகின்றன. அத்துடன், சமுதாயத்தில் ஊனமுற்றோர்களின் நிலை உயர சிறப்புக் கருத்தரங்கங்கள், பயிற்சி மற்றும் விழிப்புணர்வு முகாம்கள், பிரசாரங்கள், ஊடகங்கள் வழியாக விழிப்புணர்வு விளம்பரங்கள் ஆகியவற்றின் வாயிலாக சமூகத்தில் சம உரிமைகளுடன் ஒவ்வொரு துறையிலும் ஊனமுற்றோர்கள் சிறந்து விளங்க முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன.

இதே தேதியில் நிகழ்ந்த முக்கிய நிகழ்வுகள்:-

* 1971- இந்திய- பாகிஸ்தான் போர், 1971: இந்தியா கிழக்கு பாகிஸ்தானை முற்றுகையிட்டது. முழுமையான போர் ஆரம்பித்தது. * 1973- வியாழனின் முதலாவது மிகக்கிட்டவான படங்களை பயனியர் 10 விண்கலம் பூமிக்கு அனுப்பியது. * 1976- ரெகே பாடகர் பொப் மார்லி இரு தடவைகள் சுடப்பட்டுக் காயமடைந்தார். ஆனாலும் இவர் இரு நாட்களின் பின்னர் இசை நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். * 1978- வேர்ஜீனியாவில் பயணிகள் ரெயில் ஒன்று தடம் புரண்டதில் 6 பேர் கொல்லப்பட்டு 60 பேர் காயமடைந்தனர்.

* 1989- மால்ட்டாவில் இடம்பெற்ற பேச்சுவார்த்தைகளை அடுத்து அமெரிக்க அதிபர் ஜோர்ஜ் எச். டபிள்யூ. புஷ், சோவியத் அதிபர் மிக்கைல் கொர்பச்சோவ் ஆகியோர் பனிப்போர் முடிவடையும் கட்டத்தில் உள்ளதாக அறிவித்தனர். * 1997- நிலக் கண்ணி வெடிகளைத் தயாரிப்பது, மற்றும் பயன்படுத்துவது தடை செய்யும் ஒப்பந்தத்தில் 121 நாடுகள் ஒட்டாவாவில் கையெழுத்திட்டனர். அமெரிக்கா, ரஷ்யா, சீனா ஆகியன இவ்வொப்பந்தத்தில் கையெழுத்திடவில்லை.

* 1999- செவ்வாய்க்கோளை நோக்கி ஏவப்பட்ட Mars Polar Lander இன் தொடர்புகளை நாசா இழந்தது. * 2007- இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னணி சுழற்பந்து வீச்சாளர் முரளிதரன் டெஸ்ட் கிரிக்கெட்டில் 709 விக்கெட்டுக்கள் வீழ்த்தி உலக சாதனைப் படைத்தார்.

http://www.maalaimalar.com

  • தொடங்கியவர்

வாட்ஸ் அப் கலக்கல்: இங்கிலீஷ் திணிப்பு

 

 
memes%204
memes%201
memes%2010
memes%202
memes%203
memes%205
memes%206
memes%208
memes%209

http://tamil.thehindu.com

  • தொடங்கியவர்

மூன்று மணிநேரம் வரை உருகாத அதிசய குளிர்களி !

 

ஜப்பான் நாட்டின் கனசவா பல்கலைக்கழகத்தின் (Kanazawa University) ஆராய்ச்சியாளர்கள்,  குளிர்களி( ice-cream) உருகிவிடாமல் அதன் உருவத்தினை பராமரிக்கும் ஒரு வழியினை கண்டுபிடித்துள்ளனர்.

மூன்று    மணிநேரம்    வரை   உருகாத   அதிசய   குளிர்களி !

ஜப்பான் நாட்டின், கனசவா பல்கலைக்கழகத்தின் ஆராய்ச்சியாளர்கள்,  அறை வெப்பநிலைக்கேற்ப, மூன்று மணிநேரம் வரை உருகாது,  அதன் உருவத்தினை பராமரிக்கும்  குளிர்களியைக் கண்டுபிடித்துள்ளனர்.

பரிசோதனையில் தலைமுடி உலர்த்தும் கருவி மூலம் சூடான‌ காற்றினை வீசச் செய்த‌ போதும்கூட குளிர்களி உருகவில்லை. ஐந்து நிமிடம் சுடுகாற்று பட்டும் கூட‌ குளிர்களி உருமாற‌வில்லை.

இது எவ்வாறு சாத்தியமாகும் என ஆராய்ந்ததில் குளிர்களியில்  சேர்க்கப்பட்ட‌ பாலிபினால் என்ற திரவம்தான் காரணம் என விஞ்ஞானிகள் விளக்கமளித்துள்ளனர்.

செம்புற்றுப்பழங்களிலிருந்து (Strawberries)  பிரித்தெடுக்கப்பட்ட பாலிபினோல் திரவத்துடன் குளிர்களி  தயார் செய்யப்பட்டுள்ளது.

மூன்று    மணிநேரம்    வரை   உருகாத   அதிசய   குளிர்களி !

பாலிபினோல் திரமானது,  நீர் மற்றும் எண்ணெயை பிரிக்க முடியாதபடி ஒட்டிக்கொள்ளும் தன்மையினை கொண்டுள்ளது  என கனசவா பல்கலைக்கழகத்தில் பேராசிரியரான டோமிஹீசா குறிப்பிட்டுள்ளார்.

இந்தவகை குளிர்களியானது  சொக்லேட், வென்னிலா, ஸ்ட்ராபெர்ரி  எனப் பல்வேறு சுவைமணங்களில் (flavour) கிடைக்கின்றமை குறிப்பிடத்தக்கது.

https://news.ibctamil.com

  • தொடங்கியவர்

வியப்பூட்டும் இந்தியா: சாளுக்கியர்களின் கலைநயம் பட்டடக்கல்

 

 
29CHSUJBADAMI1

சாளுக்கிய மன்னர்கள் கி.பி. 6-ம் நூற்றாண்டிலிருந்து 12-ம் நூற்றாண்டு வரை தென்னிந்தியாவையும் மத்திய இந்தியாவையும் ஆண்டுவந்தனர். சாளுக்கிய மன்னர்களில் தலை சிறந்த அரசராக இரண்டாம் புலிகேசி விளங்கினார். இவர் வாதாபிக்கு அருகில் உள்ள அய்கோல் நகரைத் தலைநகராகக்கொண்டு ஆட்சி செய்துவந்தார். பல நாட்டு மன்னர்களுடன் போரிட்டு, தனது ஆட்சி எல்லையை விரிவுபடுத்தினார். கட்டிடக் கலை மீது அளவற்ற ஆர்வம் கொண்டிருந்தார்.

       

சாளுக்கிய மன்னர்கள் அய்ஹோல், வாதாபி போன்ற நகரங்களைத் தலைநகராகக் கொண்டு ஆண்டாலும், அருகில் உள்ள பட்டடக்கல் நகரை மிகப் புனிதமாகக் கருதினர். மன்னர்கள் முடி சூட்டிக்கொள்வதற்காகவே இந்த நகரம் உண்டாக்கப்பட்டிருந்தது.

22CHSUJIHOLE
 

வட கர்நாடகாவின் பாகல்கோட் மாவட்டத்தில் உள்ள இந்த நகரம் மிகச் சிறந்த கட்டிடக் கலைக்கு எடுத்துக்காட்டாக இருக்கிறது. திராவிடக் கட்டிடக் கலையையும், வட இந்தியக் கட்டிடக் கலையையும் சேர்த்து இங்கு கோயில்கள் கட்டப்பட்டுள்ளன.

பட்டடக்கல் யுனெஸ்கோவின் பாரம்பரியச் சின்னமாக அறிவிக்கப்பட்டிருக்கிறது. இந்த வளாகத்தில் 8 கோயில்களும் ஊருக்கு வெளியே 2 கோயில்களும் உள்ளன. இதில் ஒன்று மட்டும் ஜைனக் கோயில். மற்ற ஒன்பதும் சிவன் கோயில்கள். மன்னர்கள் பட்டம் சூட்டிக்கொள்வதற்காக இந்த நகரம் அமைக்கப்பட்டதால் செல்வச் செழிப்பு மிக்க தலைநகராகக் கட்டப்பட்டது.

29CHSUJBADAMI
 

கோயில்களின் வெளித் தோற்றம் மிக அழகாகக் கட்டப்பட்டிருக்கிறது. ஒவ்வொரு கல்லும் முப்பரிமாணத் தோற்றத்தில், மிக நுட்பமாகச் செதுக்கப்பட்டிருக்கிறது. கோயில் தூண்களில் உள்ள சிற்பங்களும் சுற்றுச் சுவர்களில் உள்ள சிற்பங்களும் கலைநயம் மிக்கவையாகக் காட்சியளிக்கின்றன.

மலப்பிரபா ஆற்றங்கரையில் அமைந்துள்ள பட்டடக்கல்லில் இருந்து 10 கி.மீ. தொலைவில் ஐஹோல் என்ற இன்னொரு வரலாற்றுச் சிறப்பு மிக்க இடம் இருக்கிறது. இது சாளுக்கிய மன்னர்களின் முதல் தலைநகரமாக இருந்தது. இங்கு ஏராளமான கல்வெட்டுகள் இருக்கின்றன. இவற்றில் இரண்டாம் புலிகேசியின் வெற்றிகளும் பல்லவர்களுடன் இருந்த மோதல்களும் ஆட்சி முறையும் குறிப்பிடப்பட்டிருக்கின்றன. ஐஹோலில் பலவிதமான கட்டிடக் கலைகளும் பரிசோதனை முயற்சியில் செய்து பார்க்கப்பட்டன. இங்குள்ள சிவன், துர்கை சிலைகள் மிக அழகாகச் செதுக்கப்பட்டிருக்கின்றன.

29CHSUJPATTADAKAL

பட்டடக்கல்லில் இருந்து 22 கி.மீ. தூரத்தில் இருக்கிறது வாதாபி. இதுவும் சில காலம் சாளுக்கியர்களின் தலைநகரமாக இருந்தது. குடைவரைக் கோயில்களுக்கு வாதாபி புகழ்பெற்றது. அகத்தியர் ஏரியைச் சுற்றியுள்ள குன்றுகளில் கி.பி. 6-ம் நூற்றாண்டுக்கும் 8-ம் நூற்றாண்டுக்கும் இடைப்பட்ட காலத்தில் உருவாக்கப்பட்டிருக்கிறது. சிவனுக்காக உருவாக்கப்பட்ட முதல் குடைவரை கோயில் இது என்பது குறிப்பிடத்தக்கது.

இங்கே விஷ்ணு, புத்தர், கணபதி சிலைகளும் வடிக்கப்பட்டிருக்கின்றன. வாதாபி குன்றிலிருந்து பார்க்கும்போது பச்சை நிற ஏரியும் சுற்றியுள்ள கிராமமும் கண்கொள்ளா காட்சியாக இருக்கும். முதலாம் நரசிம்மவர்ம பல்லவர் இரண்டாம் புலிகேசியை வாதாபியில் அழித்ததால், வாதாபிகொண்டான் என்ற பெயரைப் பெற்றார்.

29CHSUJPATTADAKAL1
 

சாளுக்கிய மன்னர்களின் வீழ்ச்சிக்குப் பின்னர் மராட்டியர்களும் இஸ்லாமியர்களும் ஆங்கிலேயர்களும் படையெடுத்த காரணத்தால் பல சிலைகள் சேதமடைந்திருக்கின்றன. ஆனாலும் சாளுக்கியர்களின் கட்டிடக்கலையின் சிறப்பை அவை எந்தவிதத்திலும் குறைத்துவிடவில்லை. அய்ஹோலும் வாதாபியும் கட்டிடக் கலையில் சிறந்து விளங்கினாலும் பட்டடக்கல் நகர் இவை இரண்டை விடவும் பலவிதங்களில் சிறப்புப் பெற்று விளங்குகிறது.

29CHSUJPATTADAKAL2
 

 

http://tamil.thehindu.com

  • தொடங்கியவர்

 

  • தொடங்கியவர்

யாழ்.குடாநாட்டில் திருக்கார்த்திகை விளக்கீடு

 

DSC_8258-683x1024.jpg

யாழ். குடாநாட்டில் இன்று ஞாயிற்றுக்கிழமை (03.12.2017) திருக்கார்த்திகை விளக்கீடு வெகுவிமரிசையாக இடம்பெற்றது.
 
இந்து ஆலயங்களிலும் பெரும்பாலான இல்லங்களிலும் தீபங்கள் ஏற்றியதுடன் அடியவர்கள் சொக்கப்பானை ஏற்றியும் வழிபட்டனர்.
 
 படங்கள் – ஐ.சிவசாந்தன்
DSC_8201-1024x683.jpgDSC_8202-1024x683.jpgDSC_8204-1024x683.jpgDSC_8207-1024x683.jpgDSC_8209-1024x683.jpgDSC_8211-1024x683.jpgDSC_8213-683x1024.jpg DSC_8214-1024x683.jpgDSC_8216-1024x683.jpgDSC_8219-1024x683.jpgDSC_8221-683x1024.jpg DSC_8224-1024x683.jpgDSC_8226-683x1024.jpg DSC_8229-1024x683.jpgDSC_8232-1024x683.jpgDSC_8236-1024x683.jpgDSC_8240-683x1024.jpg DSC_8242-1024x683.jpgDSC_8248-1024x683.jpgDSC_8254-1024x683.jpgDSC_8258-1-683x1024.jpg DSC_8261-1024x683.jpgDSC_8263-1024x683.jpgDSC_8268-1024x683.jpgDSC_8275-1024x683.jpg

http://globaltamilnews.net/

 

யாழில் கட்டின பிங்கும பெரஹரா…

 
 
யாழில் கட்டின பிங்கும பெரஹரா இன்று ஞாயிறுக்கிழமை நடைபெற்றது.  யாழ். பண்ணை பகுதியில் இருந்து ஆரம்பமான பெரஹரா யாழ்.நாக விகாரையை சென்றடைந்தது. 
IMG_8428-1024x768.jpgIMG_8458-1024x768.jpgIMG_8501-1024x768.jpgIMG_8549-1024x657.jpgIMG_8580-1024x684.jpgIMG_8594-1024x652.jpgIMG_8647-1024x768.jpgIMG_8685-1024x750.jpg

http://globaltamilnews.net/

  • தொடங்கியவர்
‘திருந்தியோரை மன்னிக்கவும்’
 

image_86b208933e.jpgஒருவர் சில பொய்களைச் சொல்லி, அவை ஏனையவர்களால் நிரூபிக்கப்பட்டால், அவர் நம்பிக்கையற்ற, ஏமாற்றுப் பேர்வழி எனப் பிரகடனப்படுத்தப்படுபவர் ஆகின்றார். 

இதனால் ஒதுக்கி வைக்கப்பட்ட நபராகவும் கருதப்பட இடமுண்டு. இத்தகையவர்களால் மிகவும் பாதிக்கப்படுபவர்கள் அவர்களின் குடும்பத்தினரேயாவர். 

பொய்மையாளரிடம் பொறுப்புகளைக் கையளிக்க எவர் விரும்பப் போகின்றார்கள்? வாய்மை உள்ளவர்கள் ஏழ்மை நிலையில் வாழ்ந்தாலும் போற்றப்படுவார்கள். 

எனினும், தங்களுக்கு உண்டான கெட்ட பெயரை, நீக்கிக் கொள்ள பிராயச் சித்தமாகச் சமூக நலன் சார்ந்த விடயங்களில் புலனைச் செலுத்தித் தங்களைத் தூய்மைப்படுத்துதலே அதி சிறந்த நன்மார்க்கமாகும். திருந்தியோரை மன்னித்து, நிரந்தர நல்லோராக மாற்றுக.  

  • தொடங்கியவர்

1918 : அமெரிக்க ஜனாதிபதியொருவர் முதல் தடவையாக ஐரோப்பாவுக்கு விஜயம்

வரலாற்றில் இன்று…

டிசம்பர் – 04

 

1259 : பிரான்ஸின் ஒன்­பதாம் லூயி இங்­கி­லாந்தின் மூன்றாம் ஹென்­றியும் பாரிஸ் ஒப்­பந்­தத்தில் கையெ­ழுத்­திட்­டனர். இதன் படி நோர்­மண்டி உட்­பட ஐரோப்­பாவில் உள்ள பிரெஞ்சுப் பகு­தி­க­ளுக்கு ஹென்றி உரிமை கொண்­டா­டு­வ­தில்லை எனவும் ஆங்­கில புரட்­சி­யா­ளர்­க­ளுக்கு லூயி ஆத­ரவு வழங்­கு­வ­தில்லை எனவும் முடி­வா­கி­யது.

1639 : வெள்ளிக் கோள் சூரி­ய­னுக்கும் பூமிக்கும் இடையில் செல்­வதை ஜெரி­மையா ஹொரொக்ஸ் முதன் முத­லாக அவ­தா­னித்தார்.

varalaru2-240x400.jpg1791 : உலகின் முத­லா­வது ஞாயிறு இத­ழான “தி ஒப்­சேர்­வரின்” முத­லா­வது இதழ் பிரிட்­டனில் வெளி­வந்­தது.

1829 : ஆங்­கி­லேய ஆட்­சியின் கீழ் இருந்த இந்­தி­யாவில் “உடன்­கட்டை ஏறல்” முறையை ஒழிக்க ஆளுநர் வில்­லியம் பெண்டிங்க் பிர­புவால் சட்டம் நிறை­வேற்­றப்­பட்­டது.

1918 : முதலாம் உலகப் போரை முடி­வுக்குக் கொண்­டு­வரும் பொருட்டு பேச்­சு­வார்த்தை நடத்த ஐக்­கிய அமெ­ரிக்க ஜனா­தி­பதி வூட்ரோ வில்சன் பிரான்ஸ் சென்றார். பத­வியில் உள்ள அமெ­ரிக்க ஜனா­தி­பதி ஒருவர் ஐரோப்பா சென்­றமை இதுவே முதற்தட­வை­யாகும்.

1943 : இரண்டாம் உலகப் போர்: யூகோஸ்­லா­வி­யாவின் எதிப்புத் தலைவர் மார்ஷல் டிட்டோ “ஜன­நா­யக யூகோஸ்­லா­விய அர­சாங்கம்” ஒன்றை தற்­கா­லி­க­மாக அமைத்தார்.

1945 : ஐ.நாவில் ஐக்­கிய அமெ­ரிக்கா இணை­வ­தற்கு ஒப்­புதல் அளித்து அந்­நாட்டு செனட் சபை வாக்­க­ளித்­தது.

1957 : ஐக்­கிய இராச்­சி­யத்தில் லூவிஷாம் என்­னு­மி­டத்தில் இடம்­பெற்ற ரயில் விபத்தில் 92 பேர் கொல்­லப்­பட்­டனர்.

1958 : பிரெஞ்சு அதி­கா­ரத்தின் கீழ் டொஹெமி சுயாட்சி உரிமை பெற்­றது.

 

1959 : ஐக்­கிய அமெ­ரிக்­காவின் மேர்க்­குரித் திட்­டத்தின் கீழ், சாம் என்ற குரங்கு 55 மைல்கள் உயரம் கொண்டு செல்­லப்­பட்டு பாது­காப்­பாக பூமி திரும்­பி­யது.

1967 : வியட்நாம் போர்: ஐக்­கிய அமெ­ரிக்கா மற்றும் தெற்கு வியட்நாம் படைகள் மேக்கொங் டெல்ட்டா பகு­தியில் வியட் கொங் படை­க­ளுடன் மோதினர்.

1971 : பங்­க­ளாதேஷ் தொடர்­பாக இந்­தி­யா­வுக்கும் பாகிஸ்­தா­னுக்கும் இடையில் ஏற்­பட்ட கொந்­த­ளிப்­பான நிலை­மையை ஆராய ஐ.நா. பாது­காப்புச் சபை அவ­ச­ர­மாகக் கூடி­யது.

197 : பாகிஸ்­தானின் கடற்­ப­டை­யி­ன­ரையும் கராச்சி நக­ரையும் இந்­தியக் கடற்­ப­டை­யினர் தாக்­கினர்.

1976 : இந்­தோ­னே­ஷி­யாவின் ஆச்சே விடு­தலை இயக்கம் அமைக்­கப்­பட்­டது.

1977 : மலே­ஷி­யாவின் விமானம் ஒன்று கடத்­தப்­பட்டு ஜொகூர் என்ற இடத்தில் வீழ்ந்து விபத்­துக்­குள்­ளா­கி­யதில் 100 பேர் கொல்­லப்­பட்­டனர்.

1984 : குவைத் விமானம் ஒன்றை ஹெஸ்­புல்லா அமைப்­பினர் கடத்­தி­யதில் நான்கு பய­ணிகள் கொல்­லப்­பட்­டனர்.

1991 : லெப­னானில் கடத்­தப்­பட்ட டெரி அண்­டர்சன் எனும் அமெ­ரிக்க ஊட­க­வி­ய­லாளர் 7 ஆண்­டு­க­ளுக்குப் பின்னர் பெய்­ரூத்தில் விடுவிக்கப்பட்டார்.

1992 : சோமாலியாவுக்கு அமெரிக்கா 28,000 அமெரிக்கப் படைவீரர்களை அனுப்பியது.

2005 : ஹொங்­கொங்கில் பல்­லா­யிரக் கணக்­கானோர் ஜன­நா­ய­கத்­துக்­காக ஆர்ப்­பாட்­டத்தில் ஈடுபட்டனர்.

http://metronews.lk/

  • தொடங்கியவர்

பணம் இல்லாமல் 11 மாநிலங்களைச் சுற்றிய பயணக்காதலன்!

 
 

“மனிதர்கள் மீது எனக்கு அபாரமான நம்பிக்கை. என்மீதும்தான். சவாலாக எடுத்துக்கொண்டு, ஒரு ரூபாய் செலவில்லாமல் பல மாநிலங்களுக்குப் பயணிப்பதென முடிவெடுத்தேன். யார் எதைக் கொடுத்தாலும், மறுக்காமல் ஏற்றுக்கொள்ளவேண்டும் என்று மட்டும் சபதம் எடுத்தேன். டிக்கெட் இல்லாமல் பயணிக்கக்கூடாது என்பதிலும் உறுதியாக இருந்தேன்” - விமல் கீதானந்தனின் இந்த ஃபேஸ்புக் ஸ்டேடஸ் பார்த்து ஜெர்க் ஆனேன்!

                                                                                                                                 பயணம்                                  

 

பாலோ கோயலோ தன் ‛ஆல்கிமிஸ்ட்’ புத்தகத்தில், “உனக்குத் தேவைப்படும்போது, மொத்த உலகமும் அதைக் கொடுத்து உதவும்” என குறிப்பிட்டிருப்பார். 23 வயது விமலுக்கு, அப்படித்தான் அனுபவம் வாய்த்திருக்கிறது.

பைசாவும் இல்லாம, டிக்கெட்டும் வாங்குவேன்னு சத்தியம் பண்ணிட்டு ஒரு பயணமா! என்னடா இது முரட்டு சபதமா இருக்கே என்று . ஃபேஸ்புக்கில் சாட் செய்து, மொபைல் எண்ணை வாங்கி பேசினேன்.

'என்ன விமல், டிக்கெட்டுக்கு காசு கொடுக்காமல் போகமாட்டேன் என்றெல்லாம் சபதம் போட்ருக்கீங்க... பயணம் எப்படி இருந்தது?' எனக் கேட்டதும்  உற்சாகமானார் விமல். “டெண்ட் அமைப்பதற்கான பொருட்கள், படுக்கை, நான்கு செட் துணிகள், ஒரு லேப்டாப், மொபைல், அதற்கான  பவர் பேங்க் - இதுதான் இந்த பயணத்துக்கான முன் தயாரிப்பு. ஆந்திர மாநிலம் அனந்தபூர் என் சொந்த ஊர். வீட்டிலிருந்து ஜூலை 2016-ல் பயணத்தைத் தொடங்கி, கடந்த மார்ச் மாதம் வரைக்கும் மொத்தம் 9 மாதங்கள் பயணித்து, கொல்கத்தாவில் பயணத்தை முடித்தேன்” என்கிறார்.

குறைந்தபட்ச தேவைகளுக்குக்கூட பணம் எடுத்துக்கொள்ளாமல், தெரிந்தவர்களிடமிருந்து எந்த உதவியும் பெறக்கூடாது என்ற வைராக்கியத்துடன் பயணம் செய்திருக்கும் விமலிடம், பேசுவதற்கு நிறைய விஷயங்கள் இருக்கின்றன. திட்டங்கள் எதுவும் இல்லாமல் வாழ்க்கையை இலகுவாய் நேசிக்கிறார்.

'இந்தப் பயணத்தைத் தொடங்குறதுக்கு எது உங்களைத் தூண்டிவிட்டது?' என்று கேட்டதும், “என் அம்மா சிங்கிள் மதர். வாழ்க்கைல பெரிய திட்டங்கள் எதுவுமில்ல. நானே ஆரம்பிச்ச வேலைகளை நானே செய்து முடிப்பேன். அவ்வளவுதான். அனந்தபூர் ஜே.என்.டி.யூல இன்ஜினியரிங் படிச்சேன். ட்ராப் அவுட். ஃப்ரெண்ட்ஸ் அதிகம். அவங்ககிட்ட பேசுறப்போ, பலரும் தன் கனவுகளைச் சொல்வாங்க. கனவுகளை எப்படித் துரத்தணும்னு பேசறதுக்குப் பதிலா, அந்தக் கனவைச் செயல்படுத்தலாம்னு தோணுச்சு... கிளம்பிட்டேன். அம்மாவ கன்வின்ஸ் பண்ணேன். எப்படியும் என் முடிவ மாத்தமுடியாதுன்னு தெரிஞ்சதால, நீ எங்க இருக்கேன்னு அடிக்கடி சொல்லுன்னு மட்டும் சத்தியம் வாங்கிட்டு அனுப்பிட்டாங்க ”- சொல்லிவிட்டு சத்தமாகச் சிரிக்கிறார்.

பயணம்

அனுபவங்களைப் பற்றிக் கேட்டதும், “அனுபவங்கள்தானே.. நிறைய ட்யூட். அடிக்கடி அழக்கூட செஞ்சேன். பயணத்தோட ஒவ்வொரு நிமிஷத்தையும் அனுபவிச்சிட்டேன். பயணமும், சந்தோஷமும் எப்பவும் இணைச்சுப் பேசப்படற விஷயமாத்தானே இருக்கும். என்னைப் பொறுத்தவரைக்கும் அப்படியில்ல. வாழ்க்கையில் எது ரொம்ப முக்கியம், எது மேலெல்லாம் நம்ம நிறைய கவனம் செலுத்தணும்னு உணர்ந்தேன். தனிமையா உணர்ந்தா அழுவேன். அழுதப்புறம் கிடைக்குமே ஒரு நிம்மதி... ஆஹா” என்கிறார்.

இந்த அனுபவங்களுக்குப் பிறகு, வாழ்க்கைல எது முக்கியம்னு உணர்ந்தீங்க? இப்போ எதெல்லாம் நிம்மதியைத் தருது உங்களுக்கு? - இது நான்.

“அனந்தபூர்லேர்ந்து பெங்களூரு போற வழி. ‘அஸ்கர்’னு ஒரு ட்ரக் ட்ரைவர்கிட்ட லிஃப்ட் கேட்டுப் போனேன். அவர் ஓட்டுநர் மட்டுமில்ல, உங்கள மாதிரி ஒரு செய்தி நிருபரும்கூட. சாலை விபத்துகள், பயணத்தின் நடுவில் நடக்கிற நிகழ்வுகள படம்பிடிச்சு நியூஸ் சேனல்களுக்கு அனுப்புறதோட மட்டுமில்லாம, சம்பவங்களைப் பத்தின தகவல்களையெல்லாம் வாய்ஸ் நோட்டா அனுப்புறாரு தெரியுமா? அது ரம்ஜான் நேரம். அவரு நோன்புல இருந்த அந்த நேரத்திலயும், என்னை வயிறு நிரம்ப சாப்பிடவெச்சார். பயணத்தப் பத்தி இருந்த கொஞ்சம் பயமும், அஸ்கர் அண்ணணோட அன்புல கரைஞ்சுபோச்சு. 

சோஷியல் மீடியாக்கள்ல நான் இருந்த இடத்தைப் பத்தியும், பயணத்தைப் பத்தியும் அப்டேட் பண்ணுவேன். பல பேர் அந்தப் பதிவுகளைப் பாத்துட்டு, சாப்பிட, தங்க இடம் கொடுத்தாங்க. கேரளாவுக்குள்ள பயணம் பண்ணப்ப, மூணாறுகிட்ட ஒரு சின்ன கிராமம். குடிசை வீட்டுல வசிச்ச அவங்க, சாப்பாடும், தங்குறதுக்கு இடமும் கொடுத்தாங்க. எனக்கு கட்டில கொடுத்துட்டு, அந்த வீட்டுக்காரங்க எல்லாரும் தரையில படுத்துக்கிட்டாங்க. என் வாழ்க்கையிலேயே ரொம்ப சுவையான மீன் கறிய, நான் அவங்க வீட்லதான் சாப்டேன். உலகம் முழுக்க அன்புதான் இருக்கு. எல்லாரும் வேற எதையோ தேடி ஓடுறாங்கன்னு நினைக்கிறேன். தெலங்கானா, ஆந்திரா, கர்நாடகா, கேரளா, தமிழ்நாடு, கோவா, மஹாராஷ்டிரா, அசாம், மேகாலயா, நாகாலாந்து, மேற்கு வங்கம்னு 11 மாநிலங்களையும் சுத்திட்டேன். எங்கயும் எனக்கு கசப்பான உணர்வுகளில்லை. ” என்று புன்னகை உதிர்க்கிறார் விமல்.

                                                                                                                                                  பயணம்

‛இப்போ என்ன செஞ்சிட்டு இருக்கீங்க... அடுத்து என்ன செய்யப்போறீங்க’ என்ற கேள்விக்கு, “நான் கேக்காமலேயே டிக்கெட் எடுத்து கொடுத்திருக்காங்க. சாப்பாடு கொடுத்திருக்காங்க. ஒவ்வொரு இடத்திலிருந்து புறப்படும்போது அரவணைப்பை பரிசா கொடுத்திருக்காங்க. நான் திரும்ப என்ன செய்யமுடியும்? நான் பயணத்துல சந்திச்ச எல்லாரையும் என் வீட்டுக்கு அழைச்சிருக்கேன். அதே அன்பை, இன்னும் பத்துமடங்கா அவங்களுக்கு திருப்பிக் கொடுக்கணும். ஆசியாவோட மிகப்பெரிய சிவப்பு விளக்குப் பகுதிகள்ல ஒன்னா இருக்குற, கொல்கத்தாவின் சோனாகாச்சிக்கு போனேன். அங்க நடக்குற சுரண்டலும், மனிதமில்லாத சித்ரவதையும் ரொம்ப வலியைக் கொடுத்தது. பாலியல் தொழிலாளர்கள், பாலியல் தொழில்ல ஈடுபடுத்த கடத்தப்படும் பெண்கள், குழந்தைகள் குறித்த விழிப்புஉணர்வை ஏற்படுத்தி, அவர்களை மீட்பதற்கான உதவிகளைச் சேகரித்து ஒழுங்குபடுத்துவதற்காக ஒரு அமைப்பு தொடங்கும் வேலைகள் நடக்குது. இதுதான் ப்ளான்” என்று தன் நேயக்கனவை விவரித்தார் விமல்.

 

அன்பும், வாழ்த்துக்களும் பாஸ்!

https://www.vikatan.com

  • தொடங்கியவர்

உயிரின் விலை ஒரு டாலர் பதினோரு சென்ட் - அன்பு வென்ற கதை! #MotivationStory

 
 

தன்னம்பிக்கை கதை

ற்புதம், அதிசயம்... இவற்றின் மேலெல்லாம் உங்களுக்கு நம்பிக்கை இருக்கிறதா... என்றாவது ஒருநாள் நம் வாழ்க்கையிலும் அற்புதமெல்லாம் நிகழும் என்கிற உறுதியோடு இருக்கிறீர்களா? அப்படியென்றால், நிச்சயம் அது நடக்கும். அப்படி நடக்கப் போகும் அதிசய நிகழ்வுகளுக்கு அடிநாதமாக இருப்பது ஏதோ ஒரு மாய மந்திர சக்தி அல்ல... உங்களின் நம்பிக்கை. அது, நம்மை எப்போதும் கைவிடாது. அந்த உண்மையை வெகு அநாயசமாக உணர்த்தும் கதை இது.

 

சிறுமி

அந்த சின்னஞ்சிறு பெண்ணின் பெயர் டெஸ் (Tess). அவளுக்கு ஆண்ட்ரூ என்ற ஒரு குட்டித் தம்பியும் உண்டு. கொஞ்ச நாள்களாக வீடு சுமுக நிலையில் இல்லை.  அம்மாவும் அப்பாவும் வித்தியாசமாக நடந்துகொள்கிறார்கள். வழக்கமான சிரிப்போ, கலகலப்போ அவர்கள் முகத்தில் இல்லை. அம்மாவும் அப்பாவும் தாழ்ந்த குரலில் பேசிக்கொண்டிருந்ததைக் கேட்டுக் கேட்டு டெஸ், ஒரு விஷயத்தைப் புரிந்துகொண்டாள். `தம்பிக்கு உடம்பு சரியில்லை. தம்பியின் நோயைக் குணப்படுத்த அம்மா, அப்பாவிடம் பணமில்லை. அவனுடைய மருத்துவச் செலவு கூடிவிட்டபடியால், இப்போதிருக்கும் வசதியான வீட்டை விட்டுவிட்டு, கூடுபோன்ற அப்பார்ட்மென்ட் குடியிருப்பு ஒன்றுக்கு இடம்பெயரப் போகிறார்கள். தம்பியின் நோய் குணமாக வேண்டுமென்றால், அவனுக்குப் பெரிய ஆபரேஷன் ஒன்றைச் செய்ய வேண்டும்; அதற்கு நிறையச் செலவாகும். அந்தப் பணத்தைக் கடனாகக் கொடுக்கக்கூட யாரும் தயாராக இல்லை.’

கண்ணீருடன் நின்றுகொண்டிருந்த அம்மாவிடம் அப்பா ஒருநாள் இப்படிச் சொல்லிக்கொண்டிருந்தார்... ``ஏதாவது ஒரு அதிசயத்தால மட்டும்தான் அவனைக் காப்பாத்த முடியும்...’’

`அதிசயம்...’ அந்த வார்த்தை டெஸ்ஸின் மனதில் அழுத்தமாக விழுந்துவிட்டது. இதைக் கேட்ட கணத்தில் தன் அறைக்குப் போனாள் டெஸ். யாருக்கும் தெரியாமல்(!) அதுவரை அவள் ஒளித்துவைத்திருந்த தன் சின்ன உண்டியலை எடுத்தாள். உண்டியலைக் கவிழ்த்து, அதிலிருந்த மொத்தப் பணத்தையும் மெதுவாக எண்ணினாள். இரண்டு, மூன்று முறை கவனமாக அந்தக் காசுகளை எண்ணினாள். மொத்தம் ஒரு டாலர் 11 சென்ட் பணம் அவளிடமிருந்தது. டெஸ்ஸுக்கு, அவள் வீட்டிலிருந்து சற்று தூரத்திலிருந்த மருந்துக்கடை நினைவுக்கு வந்தது. உண்டியல் காசை எடுத்துக்கொண்டாள். அம்மாவுக்கும் அப்பாவுக்கும் தெரியாமல், பின் கதவைத் திறந்துகொண்டு வெளியே போனாள்.

உதவி கேட்கும் சிறுமி

அந்த ரெக்ஸால்’ஸ் மருந்துக்கடை (Rexall's Drug Store) முன்னால் போய் நின்றாள். பிறகு, அந்த மருந்துக்கடையின் கண்ணாடிக் கதவைத் திறந்துகொண்டு உள்ளே போனாள். வாடிக்கையாளர்கள் யாரும் இல்லை. மருந்துக்கடைக்காரர் அங்கிருந்த யாரிடமோ மும்முரமாக எதையோ பேசிக்கொண்டிருந்தார். டெஸ், அவர் தன்னைப் பார்ப்பாரா என்று கொஞ்ச நேரம் காத்திருந்தாள். அவர் இவள் பக்கம் திரும்பக்கூட இல்லை. கொஞ்ச நேரம் பொறுத்துப் பார்த்துவிட்டு, டெஸ் தன் தொண்டையைச் செருமினாள். அப்போதும் அந்த மருந்துக்கடைக்காரர் அவள் பக்கம் திரும்பவில்லை. கடைசியாக, அவள் தன் உண்டியல் பணத்திலிருந்து கொஞ்சத்தை எடுத்து அவருக்கு முன்னால் இருந்த கண்ணாடி மேஜையில் சத்தம் எழுகிற மாதிரி வைத்தாள். அவ்வளவுதான்.

மருந்துக்கடை

``உனக்கு என்ன வேணும்? பல வருஷம் கழிச்சு இப்போதான் சிகாகோவுல இருந்து வந்திருக்குற என் சகோதரன்கிட்ட பேசிக்கிட்டிருக்கேன்... அது பொறுக்கலையா உனக்கு?’’

``நல்லது சார். நான் என் தம்பியைப் பத்தி உங்ககிட்ட சொல்லணும்... அவனுக்கு... அவனுக்கு உண்மையிலேயே உடம்பு சரியில்லை. அதனால... அவன் சரியாகணும்னா எனக்கு... எனக்கு... ஒரு அதிசயம் விலைக்கு வேணும்...’’

``என்னம்மா சொல்றே? எனக்குப் புரியலை.’’

``என் தம்பி பேரு ஆண்ட்ரு. அவன் தலைக்குள்ள மோசமா, கெட்டதா ஏதோ வளர்ந்துடுச்சாம். எங்க அப்பா, அம்மாகிட்ட சொல்லிக்கிட்டு இருந்தாரு... `அதிசயத்தால மட்டும்தான் அவனைக் காப்பாத்த முடியும்’னு. அந்த அதிசயத்தோட விலை என்னனு சொன்னீங்கன்னா, காசைக் குடுத்துட்டு வாங்கிட்டுப் போயிடுவேன்.’’

``இங்க பாரு குட்டிப் பொண்ணு... அதிசயத்தையெல்லாம் நாங்க இங்கே விக்கிறதில்லை... சாரி.’’ அவள் நிலையைப் புரிந்துகொண்டவராக மென்மையான குரலில் சொன்னார் அந்த மருந்துக்கடைக்காரர்.

டெஸ் பிடிவாதமான குரலில் சொன்னாள்... ``இங்கே பாருங்க... அதிசயத்தை வாங்குறதுக்கு என்கிட்ட காசு இருக்கு. இது பத்தலைன்னா சொல்லுங்க... மிச்சத்தையும் எப்படியாவது கொண்டுட்டு வர்றேன். அதோட விலை என்ன... அதை மட்டும் சொல்லுங்க...’’

இதுவரை நடந்த உரையாடல்கள் அனைத்தையும் கேட்டுக்கொண்டிருந்தார், மருந்துக்கடைக்காரரின் சகோதரர். ஆஜானுபாகுவான உடல்வாகுடன், நேர்த்தியான உடை அணிந்திருந்த அந்த மனிதர், கடையைவிட்டுக் கீழே இறங்கி, டெஸ்ஸின் அருகே வந்தார்.

``உன் தம்பிக்கு என்ன மாதிரியான அதிசயம் வேணும் பாப்பா?’’ என்று கேட்டார்.

``எனக்குத் தெரியலை. அம்மா அவனுக்கு ஆபரேஷன் செய்யணும்னு சொல்லிக்கிட்டு இருந்தாங்க. அப்பாகிட்ட அதுக்குப் பணமில்லை. அதனாலதான் நான் என் காசை எடுத்துக்கிட்டு வந்தேன்.’’

``சரி... எவ்வளவு பணம்வெச்சிருக்கே?’’

``ஒரு டாலர், 11 சென்ட் சார்...’’

பரிசோதிக்கும் மருத்துவர்

மருந்துக்கடைக்காரரின் சகோதரர், டெஸ்ஸிடம் இருந்து அந்தப் பணத்தை வாங்கிக்கொண்டார். தன்னை அவள் வீட்டுக்கு பெற்றோர் குழந்தைஅழைத்துப்போகும்படி சொன்னார். ``நான் உன் அம்மா, அப்பா, தம்பியைப் பார்க்கணும். அப்போதான் உனக்குத் தேவையான அதிசயம் என்கிட்ட இருக்கானு என்னால சொல்ல முடியும்’’ என்றார்.

அவர் சாதாரண ஆளில்லை. டாக்டர். அதுவும், நியூரோ சர்ஜரியில் புகழ்பெற்றவர். டாக்டர் கார்ல் ஆர்ம்ஸ்ட்ராங் (Dr. Carl Armstrong) என்பது அவர் பெயர். டெஸ்ஸின் வீட்டுக்கு வந்தவர், ஆண்ட்ருவைப் பார்த்தார். பரிசோதித்தார். அறுவைசிகிச்சை செய்தார். அதற்காக ஒரு பைசாவைக்கூட அவர் மேற்கொண்டு கேட்கவில்லை. ஆண்ட்ரு பிழைத்துக்கொண்டான். 

சில மாதங்கள் கழித்து அம்மா, அப்பாவிடம் ஹாலில் பேசிக்கொண்டிருந்தது டெஸ்ஸின் காதில் விழுந்தது. ``அந்த ஆபரேஷன் உண்மையிலேயே அதிசயம்தான்... இல்லே? இந்த மாதிரி ஒரு ஆபரேஷனுக்கு எவ்வளவு பணம் செலவாகும்னு நான் யோசிச்சுக்கிட்டே இருக்கேன்.’’

இதைக் கேட்ட டெஸ் சிரித்துக்கொண்டாள். அவளுக்குத் தெரியும்... `ஒரு டாலர் 11 சென்ட்’ என்று. நமக்குத் தெரியும்... அந்தச் சிறுமியின் அசைக்க முடியாத நம்பிக்கை, தம்பியின் மேல் அவள் கொண்டிருக்கும் பாசம் என்று.

(அமெரிக்க வலைதளங்களில் மிகவும் பிரபலமான ஒரு கதை இது...)

https://www.vikatan.com/

  • தொடங்கியவர்

43 வருடங்களை கடந்தும் நினைவில் நிற்கும் இலங்கையை அதிர வைத்த விமான விபத்து.!

 

 
 

1974ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 4ஆம் திகதி இரவு 10 மணி 10 நிமிடம் மஸ்கெலியா நோட்டன்பிரிட்ஜ் தெப்பட்டன் பகுதியை மட்டுமல்லாது அப்பிரதேசத்தை அண்டிய ஏனைய பகுதி மக்களையும் பீதியடைச் செய்த சம்பவம் அது.

6a473b70-0d0d-4e96-8483-e3914d19ef71.jpg

ஆம் இந்தோனேசியா சுராபயாவிலிருந்து 182 ஹஜ் பயணிகளை ஏற்றிக்கொண்டு மக்கா நோக்கி பயணித்த மார்டின் எயார் டீ.சீ 8 ரக பயணிகள் விமானம் சப்த கன்னியா என அறியப்படும் ஏழுகன்னியர் மலையில் ஐந்தாவது குன்றின் மீது விமானம் மோதி சிதறிய நாள் அது. விமானமோட்டிகள் உட்பட 191 பேரும் அதே இடத்தில் உடல் சிதறி பலியாகினர்.

flight-54.jpg

இலங்கை நாட்டை பொறுத்தவரை இது வரை வெளிநாட்டு விமானம் ஒன்றுக்கு ஏற்பட்ட மிக மோசமான விபத்து இதுவாகும். மலையகத்திற்கு இது ஓர் அதிர்ச்சியளித்த புது அனுபவம். 191 பேரை பலியெடுத்த இந்த ஏழு கன்னியர் மலை ஆங்கிலத்தில் வில்கின் ஹில்ஸ் என்று அழைக்கின்றனர். இவ்விபத்தில் பலியான 190 பேர் தெப்பட்டன் தோட்ட கொத்தலென பகுதியில் அவ்விடத்திலேயே புதைக்கப்பட்டனர். அடையாளம் காணக்கூடியவாறு இருந்த விமானப்பணிப்பெண்ணில் உடலை அவரின் காதலர் ஹெலிகொப்டர் மூலமாக இந்தோனேசியாவுக்கு கொண்டு சென்ற நெகிழ்ச்சியான சம்பவமும் இதில் அடங்கும்.

flight-11.jpg

அத்தோடு விபத்துக்குள்ளான விமான பாகங்களில் எஞ்சியிருக்கும் டயர்கள் இரண்டு மட்டும் இதுவரை பாதுகாக்கபட்டு வருகின்றது. ஒரு டயர் நோட்டன் பொலிஸ் நிலையத்தில் உள்ளது. நல்லநிலையிலிருக்கும் டயர் நோட்டன் விமலசுரேந்திதர அணைக்கட்டுக்கும் செல்லும் வழியில் சம்பவங்ளை சுருக்கமாக தாங்கி பார்வைக்காக காட்சியப்படுத்தப்பட்டுள்ளது.

flight-44.jpg

அவ்விடத்தில் சேகரிக்கப்பட்ட டொலர் தாள்கள் இன்னோரன்ன பொருட்களை அப்பிரதேச மக்கள் பாதுகாத்து வருகின்றனர்.

அணைவரையும் புதைக்கப்பட்ட இடத்தில் நினைவுத்தூண் ஒன்றும் அமைந்துள்ளது. ஆனால் இன்று அப்பகுதி காடாக காட்சியளிக்கின்றமை கவலைக்குரியதாக இருக்கின்றது.

இறந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்த ஒவ்வொரு வருடமும் டிசம்பர் 4ஆம் திகதி இந்தோனேசியாவிலிருந்து உறவினர்கள் இவ்விடத்திற்கு வந்து செல்வது பலருக்கு தெரியாத விடயமாகவுள்ளது. விமானத்தின் கருப்புப்பெட்டி தகவலின் படி தொழில்நுட்ப கோளாறு காரணமாகவே இவ்விமானம் விபத்துக்குள்ளாகியுள்ளது.

flight-33.jpg

இவ்விபத்து சம்பவம் நடந்த இடத்தில் வசித்தவர்கள் இன்னமும் அப்பகுதிக்கு செல்பவர்களுக்கு சம்பவத்தை எடுத்துக்கூறுபவர்களாகவும் உள்ளனர். இவ்விமானத்தை செலுத்திய விமானி 8 தடவைகள் இலங்கை மார்க்கமாக மக்காவிற்கு விமானத்தை செலுத்திய அனுபவஸ்தர் என்பது இங்கு குறிப்பிடப்பட வேண்டிய ஒரு முக்கிய விடயமாகும். இவ்வருடம் டிசம்பர் 4ஆம் திகதியுடன் இவ்விபத்து இடம்பெற்று 43 வருடங்கள் கடந்துவிட்டன.

இன்னமும் இச்சம்பவம் குறித்த நினைவுகளில் இப்பகுதி மக்கள் வாழ்ந்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

http://www.virakesari.lk

  • தொடங்கியவர்

ஐஸ் மாரத்தான் போட்டி: அண்டார்டிகாவில் சாதனை புரிந்த அயர்லாந்து வீரர்!

 

ஐஸ் மாரத்தான் போட்டி: அண்டார்டிகாவில் சாதனை புரிந்த அயர்லாந்து வீரர்!

அண்டார்டிகாவில் நடைபெற்ற மாரத்தான் போட்டியில் அயர்லாந்து வீரர் வெற்றி பெற்று சாதனை புரிந்துள்ளார்.

ஐஸ் மாரத்தான் போட்டி: அண்டார்டிகாவில் சாதனை புரிந்த அயர்லாந்து வீரர்!

அயர்லாந்தின் பால் ராபின்சன் நவம்பர் 25-ம் தேதி அண்டார்டிகாவில் நடைபெற்ற மாரத்தான் போட்டியில் பங்கேற்று சாம்பியன் பட்டத்தை வென்றார். இப்போட்டியானது மைனஸ் 20 டிகிரி செல்ஸியஸ் வெப்பநிலையில் ஒன்றேமுக்கால் தூரம் கொண்டதாக அமைந்திருந்தது. இதில் ஓடும் வீரரின் வேகமானது செயற்கைகோளின் உதவியுடன் ஜிபிஎஸ் மூலம் கண்டறியப்பட்டது.

ஐஸ் மாரத்தான் போட்டி: அண்டார்டிகாவில் சாதனை புரிந்த அயர்லாந்து வீரர்!

இதில் கலந்துகொண்டு ஓடிய 26 வயதான ராபின்சன் ஒரு நிமிடத்தில் 17.9 விநாடிகளில் தூரத்தை எட்டினார். இறுதியாக பந்தய இலக்கை 4 நிமிடங்கள் 17.9 வினாடிகளில் கடந்து சாதனை படைத்தார். இதுவே அண்டார்டிக்காவில் குறைவான நேரத்தில் வேகமாக இலக்கை கடந்த சாதனை என போட்டி அமைப்பாளர்கள் கூறியுள்ளனர்.

ஐஸ் மாரத்தான் போட்டி: அண்டார்டிகாவில் சாதனை புரிந்த அயர்லாந்து வீரர்!

https://news.ibctamil.com

  • தொடங்கியவர்

சர்ச்சையாகும் முஸ்லீம் மாணவிகளின் ஜிமிக்கி கம்மல் நடனம் (வீடியோ இணைப்பு)

கேரளா மாநிலத்தில் முஸ்லீம் மாணவிகள் நடுரோட்டில் ஜிமிக்கி கம்மல் பாடலுக்கு நடனமாடிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

மோகன்லால் நடிப்பில் வெளியான வெளிப்பயின்டே புஸ்தகம் என்ற படத்தில் இடம்பெற்ற ஜிமிக்கி கம்மல் பாடல் ரசிகர்கள் மூலம் நாடு முழுவதும் பிரபலமடைந்தது குறிப்பிடத்தக்கது. அந்த பாடலுக்கு ரசிகர்கள் நடனம் ஆடி வெளியான வீடியோ பிரபலமடைந்ததை அடுத்து ஜிமிக்கி கம்மல் பாடல் பிரபலமானது.

இந்நிலையில் கேரளா மலப்புரத்தில் பல் மருத்துவக் கல்லூரியில் பயிலும் முஸ்லீம் மாணவிகள் 3 பேர் நடுரோட்டில் ஜிமிக்கி கம்மல் பாடலுக்கு நடனமாடிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. எய்ட்ஸ் விழிப்புணர்வை ஏற்படுத்தும் நிகழ்ச்சிக்காக மாணவிகள் நடமானடியுள்ளனர். 

சிலர் இஸ்லாமிய கொள்கைக்கு எதிராக அவர்கள் உடை அணிந்திருப்பது கண்டிக்கத்தக்கது என கடுமையாக சாடியுள்ளனர். ஆனால் பலரும் இதற்கு வரவேற்பு தெரிவித்துள்ளனர். தற்போது இந்த வீடியோ பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

 

http://www.virakesari.lk

  • தொடங்கியவர்

 

கிரிக்கெட் விளையாடிய பிரபல ரெஸ்லிங் வீரர் ஜோன் சினா!!!

  • தொடங்கியவர்

 

ராஸ் கடலில் என்ன நடக்கிறது?

உலகில் மிகப்பெரிய அளவில் பாதுகாக்கப்பட்ட அண்டார்டிகா கடல் பகுதியில், நியூசிலாந்து கடற்படை கப்பல்கள் கண்காணிப்பில் ஈடுபடத் தொடங்கியுள்ளன. இதுபோன்ற பல இடங்களை பாதுகாக்க மொனாக்கோ இளவரசர் ஆல்பர்ட் உள்ளிட்ட சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் குரல் கொடுத்து வருகிறார்கள். ஆனால், தற்போதைய சர்வதேச அரசியல் சூழலில் அது சாத்தியமாகுமா என்ற கவலை அதிகரித்துள்ளது.

  • தொடங்கியவர்

ஒரு வயது மகளுடன் தள்ளுவண்டியில் 1,800 கி.மீ பயணித்த சாகச தம்பதி

சாகச தம்பதிபடத்தின் காப்புரிமைJUSTIN AND LAUREN JONES

ஒரு தம்பதி தங்களது ஒரு வயது மகளுடன் ஆஸ்திரேலியாவில் 1,800 கிலோ மீட்டர் தூரத்திற்கு பயணித்துள்ளனர்.

சிட்னியை சேர்ந்த ஜஸ்டின் ஜோன்ஸ் மற்றும் லாரன் ஜோன்ஸ் சமீபத்தில் தங்களது 102 நாள் பயணத்தை முடித்துள்ளனர்.

கை ரிக்‌ஷா போன்ற கையால் இழுக்கப்படும் வண்டியில் தங்களது மகளுடன் இந்த பயணத்தை முடித்துள்ளனர்.

''குடும்பத்துடன் சாகச வாழ்க்கை வாழ முடியும் என எங்களை நாங்களே நிரூபிக்கும் முயற்சியாக இதைச் செய்தோம்'' என்கிறார் ஜோன்ஸ்.

சாகச தம்பதிபடத்தின் காப்புரிமைJUSTIN AND LAUREN JONES

ஜோன்ஸ் ஒரு அனுபவமிக்க பயணி. அண்டார்டிகாவில் மலையேற்றம் போன்ற பல சவால்மிக்க பயணங்களை இதற்கு முன்பு மேற்கொண்டுள்ளார்.

ஆஸ்திரேலியா முழுவதும் நடந்து பயணிக்க வேண்டும் என்ற தனது ஆசையை மகள் பிறந்தபிறகு கைவிட்டுவிட்டதாக ஜோன்ஸ் கூறுகிறார். குடும்பத்துடன் இதைச் செய்வது சாத்தியமில்லாதது என அவர் நினைத்தார். ஆனால் அவரது மனைவிக்கு மற்றொரு யோசனை இருந்தது.

சாகச தம்பதிபடத்தின் காப்புரிமைCOPYRIGHTJUSTIN AND LAUREN JONES

''குடும்பம் வந்தபிறகு சாகச வாழ்க்கை இருக்காது என கூறப்படுவதற்கு சவால் விடும் முயற்சியாக, நாம் ஏன் குடும்பத்துடன் ஆஸ்திரேலியா முழுக்க பயணிக்க கூடாது என மனைவி லாரன் கேட்டபோது ஆச்சரியமாக இருந்தது'' என்கிறார் ஜோன்ஸ்.

இக்குடும்பம் ஒவ்வொரு நாளும் 25 கிலோ மீட்டர் நடந்தது. பாலைவனத்திலும், செடிகள் நிறைந்த பகுதியிலும் நடப்பது போராட்டமாக இருந்தது என்கிறார் அவர்.

 

சாகச தம்பதிபடத்தின் காப்புரிமைJUSTIN AND LAUREN JONES

ஜீரோ டிகிரியில் இருந்து 41 டிகிரி வரையிலான மாற்றுப்பட்ட தட்பவெப்பநிலையில் பயணித்துள்ளனர்.

உணவு, தண்ணீர், கூடாரம் போன்ற்றை தள்ளுவண்டியின் பின்புறத்தில் வைத்துவிட்டனர். 270 கிலோ எடை கொண்ட இப்பொருட்கள் இருக்கும் வண்டியை ஜோன்ஸ் இழுத்துச் செல்வார். மற்றொரு சிறிய தள்ளுவண்டியில் மகளை அமரவைத்து லாரன் இழுத்துச் செல்வார்.

சாகச தம்பதிபடத்தின் காப்புரிமைJUSTIN AND LAUREN JONES

தங்களது பயணத்தில் மகளையும் அழைத்துச் சென்றது திருப்திகரமான ஒன்றாக ஜோன்ஸ் நினைக்கிறார்.

''எங்கள் மகளை வலுவான, இயற்கையை விரும்பும் ஒரு பெண்ணாக உருவாக்க விரும்புகிறோம். சிட்னியில் உள்ள எங்களது அடுக்குமாடி குடியிருப்பில் இதைச் செய்வது மிகவும் சிரமம்'' என்கிறார்.

http://www.bbc.com/

  • தொடங்கியவர்

ஜப்பானில் பெண்களுக்கு காதலிக்க நேரமில்லை.... ஏன் தெரியுமா?

 |  

 
japanees_women


ஜப்பானில் காதலில் விழுவதற்குப் பொருத்தமான வயதிலிருக்கும் இளம்பெண்களில் 60 சதவிகிதம் பேர்களுக்கு காதலிக்க நேரமே இல்லையாம். அலுவலக வேலை நேரம் போக வீட்டிலும் அவர்களுக்கான வேலைகள் சரியாக இருப்பதால் பலரும் வீடு, வீடு விட்டால் அலுவலகம்... மீண்டும் வீடு என்றே உழன்று கொண்டிருக்கிறார்கள். காரணம் வேலைப்பளுவால் மூளையோடு சேர்ந்து மனமும் உடலும் கூட அதிகச் சோர்வுக்கு உள்ளாவதால் வார இறுதிகளில் காதலரோடு வெளியில் சுற்றவோ, விடுமுறையைக் கொண்டாடவோ ஆர்வமற்றும் போகிறதாம் அவர்களுக்கு.

பெரும்பாலான பெண்களும் விடுமுறை நாட்கள் என்றால் வீட்டு வேலைகளை முடித்து விட்டு ஹாயாக சோபாவில் அமர்ந்து கொண்டு தொலைக்காட்சித் தொடர்களைக் கண்டுகளிக்கவே விரும்புகிறார்களாம். காதலரோடு ஊர் சுற்றுவதை விட இதில் கிடைக்கும் ஆனந்தமே பேரானந்தம் என்று நினைக்கத் தலைப்பட்டிருக்கிறார்கள் என ஜப்பானைச் சேர்ந்த cocoloni.jp எனும் இணையதள சர்வே முடிவு ஒன்று கூறுகிறது.

ஜப்பானில் மட்டுமல்ல தெற்கு ஆசியாவைப் பொறுத்தவரை இன்று ஆண்களுக்கு இணையாகப் பெண்களுக்கும் அலுவலகத்தில் வேலைப்பளு அதிகமே. அலுவலகக் காதல்கள் நீண்ட கால நம்பிக்கைக்கு உரியவை அல்ல, கண்டதும் காதல் என்பது மாதிரியாகக் குருட்டுத் தனமாகக் காதலில் விழுவதும் பல நேரங்களில் ஒத்து வராததோடு தீவிர மன உளைச்சலுக்கும் காரணமாகி விடுகிறது. எனவே காதலிப்பதை விட தொலைக்காட்சித் தொடர்களைக் கண்டு பொழுது போக்குவது தேவலாம் என்ற முடிவுக்கு பெண்கள் வந்து விட்டார்கள். பற்றாக்குறை விடுமுறை தினங்கள். சுமக்க முடியாத அளவுக்கு அதிக வேலைப்பளு இரண்டும் தான் இதற்கு முழு முதன்மையான இரு காரணங்கள் என இந்த இணையதள சர்வே நிகழ்வை நடத்திய Xinhua செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.

ஜப்பானில் நடத்தப்பட்ட இந்த சர்வேயில் தெரியவந்தவை;

  • டேட்டிங் செல்லும் பெண்களில் நான்கில் ஒருவர் அச்சமயத்தில் வாரம் முழுவதும் நீடித்த வேலைப்பளுவினால் நேர்ந்த சோர்வின் காரணமாக தூங்கி விடுவதால் ஒருவருக்கொருவர் கலந்து பேசிக் கொள்தல் எனும் டேட்டிங் கான்செப்ட்டே அடிபட்டுப் போகிறது. இதனால் டேட்டிங் செல்வதற்கான காரணமே அர்த்தமற்றதாகி விடுகிறது என்கிறது அந்த சர்வே;
  • அதுமட்டுமல்ல; ஜப்பானைச் சேர்ந்த ஆன்லைன் டேட்டிங் இணையதளமான லவ்லி.காமிலிருந்து சரசரவெனப் பல பெண்கள் வெளியேறியதன் பின்னணி ஆன்லைன் டேட்டிங்கும், அதன் பிற்சேர்க்கையாக உருவாகவிருக்கும் புதுப் புதுக் காதல்களும் ‘சுத்த டைம் வேஸ்ட்’ என்று அவர்கள் கருதத் தலைப்பட்டதால் தான் என அவ்விணையதளம் குறிப்பிடுகிறது.
  • காதலிப்பதில் நேரம் செலவளிப்பதைக் காட்டிலும் தங்களுடன் இணைந்து சிறந்த குழந்தைகளைப் பெற்றுத் தரவல்ல ஐடியல் கணவர்களைத் தேடிக் கண்டுபிடிப்பதே சாலச்சிறந்தது என ஜப்பானியப் பெண்கள் கருதத் தொடங்கியதால் அவர்களது தேடலில் முதலிடம் பெறுபவர்கள் கணவர்களைத் தேடித்தரும் ஆன்லைன் திருமண இணையதளங்களே. மாறாக காதலிக்கிறோம், ஒருவரை ஒருவர் புரிந்து கொள்கிறோம் என நேரத்தை விரயம் செய்ய இப்போதைக்கு ஜப்பானியப் பெண்கள் தயாரில்லை என்கிறது சர்வே!
  • 1980 களில் 20 வயதுகளில் இருக்கும் ஜப்பானிய பெண்களில் 60 சதவிகிதம் பெண்கள் காதல்வயப்பட்டவர்களாக இருந்தனர். ஆனால் தற்போது அவர்களது எண்ணிக்கை வெகுவாகக் குறைந்து கொண்டே வந்து தற்போது அதலபாதாளத்தில் இருக்கிறது.

நிலமை இப்படியே சென்றால் ஜப்பானியப் பெண்களுக்கு காதல் என்றாலே வேப்பங்காயாகக் கசக்கத் தொடங்கி விடக்கூடும் என்கிறது மேற்கண்ட சர்வே.

ஜப்பானில் மட்டுமல்ல இப்போது தெற்காசியா முழுவதிலுமே பெண்களின் நிலமை இது தான். 

http://www.dinamani.com

  • தொடங்கியவர்

 

LIGHT POLLUTION (செயற்கை வெளிச்சத்தால், தொலைந்து வரும் இயற்கை இரவுகள்)

பூமியில் இரவு நேரத்தில் செயற்கையாக ஒளிரூட்டப்படும் விளக்குகளின் வெளிச்சம் பிரகாசமாகி வருவது ஆண்டுதோறும் மேலும் தீவிரமாகி வருகிறது. இந்த ஒளி மாசுபாட்டால், இயற்கையான இரவைத் தொலைப்பதுடன், எதிர்மறையான தாக்கத்தை மனித சுகாதாரமும் சுற்றுச்சூழலும் எதிர்கொள்ளும் நிலை ஏற்பட்டுள்ளதாக விஞ்ஞானிகள் கூறுகிறார்கள்.

  • தொடங்கியவர்

ஒளிரும் கண்கள் : மனதுக்குக் கொஞ்சம் நெருக்கமாக…

 
01CHVAN11jpg

இரட்டையர்கள்?, வேதாரண்யம்

மண் சார்ந்து படைப்புகளை உருவாக்கும் எழுத்தாளர் கண்மணி குணசேகரனை ஒளிப்படம் வழி ஆவணப்படுத்த கடலூர் மாவட்டம் மணக்கொல்லை கிராமத்தில் வலம்வந்துகொண்டிருந்தபோது, மெலிந்து எலும்புகள் தெரிய, வயிறு ஒட்டிப்போன நாய் தன் குட்டிகளுக்குப் பாலூட்டிக் கொண்டிருப்பதைப் பார்த்தேன். மெய்மறந்த நிலையில் அது கண்மூடி நின்ற காட்சியைப் பார்த்ததும், ‘தாய்மை’ என்ற ஒற்றைச் சொல்லுக்கான அர்த்தம் புரிந்தது.

         
01CHVAN10JPG

மேய்ப்பனின் பிள்ளைகள், வேதாரண்யம்

 

ஒளிப்படத் துறையில் முதன்முதலாக அடியெடுத்து வைப்பவர்கள் பெரும்பாலும் எடுக்கும் படங்கள் பூக்கள், சூரிய உதயம், அஸ்தமனம், இயற்கைக் காட்சிகள், குடும்பத்தினர், உறவினர்கள், நண்பர்கள், குழந்தைகள் சார்ந்ததாகவே இருக்கும்.

01CHVAN1BigsizeJPG

தாய்மை, மணக்கொல்லை கிராமம்

 

காலப்போக்கில் தனித்து இயங்க விரும்பும் ஒளிப்படக் கலைஞன் தன் பாதையைத் தேர்ந்தெடுத்து, விரும்பிய கருவைச் சுமந்து தன் தேடலை நோக்கிய திசையில் பயணிக்கிறான்.

01CHVAN2JPG

இரண்டு தாய்கள் தங்கள் பிஞ்சுகளுடன், தேனி

 

எனது தேடல் எப்போதும் மனிதர் குறித்ததாகவே இருந்தது. அவர்களின் இருப்பை, உணர்வுகளை, வாழ்க்கை முறையைச் சூழலுடன் பதிவுசெய்வதே எப்போதும் என் எண்ணம். இத்தேடலின் பாதையில் மறக்க முடியாத காட்சிகள் நம் கண் முன்னே நிகழும்.

01CHVAN3jpg

01CHVAN_

 

மனிதர்களைத் தாண்டி கவனத்தை ஈர்க்கக்கூடிய வேறு எதுவாக இருந்தாலும் அக்காட்சியைப் பதிவுசெய்து, தான் கண்டடைந்ததைச் சக மனிதருடன் பகிர்ந்துகொள்வதுதானே ஒரு ஒளிப்படக் கலைஞனின் வேலையாக இருக்க முடியும்? அப்படித்தான் அந்தத் தாய் நாயின் மெய்மறத்தலை நான் நினைக்கிறேன்.

01CHVAN5jpg

அலைக்கெல்லாம் அஞ்சமாட்டோம், சென்னை மெரினா

 

ஓயாது அலை அடித்துக்கொண்டிருக்கும் சென்னை மெரினா கடற்கரையில் மிகப் பெரிய அலை ஒன்று வீரியத்துடன் நான்கு எருமை மாடுகளின் மீது மோதித் தெறித்தது. எந்தச் சலனமும் இல்லாமல் உறுதியாகவும் அமைதியாகவும் அதை எதிர்கொண்டு நிற்கும் அந்த நான்கு எருமைகளும் வியப்பையே தருகின்றன. இப்படி நம் கவனத்தை ஈர்க்கும் ஏதாவது ஒரு நிகழ்வைப் பார்க்கும்போது மனிதர்களைத் தாண்டி இயற்கையும் உயிரினங்களும் என் கேமராவுக்கும் மட்டுமில்லாமல் மனதுக்கு நெருக்கமாகவே இருந்திருக்கின்றன.

கட்டுரையாளர், ஓவியர் மற்றும் ஒளிப்படக் கலைஞர்

http://tamil.thehindu.com

Edited by நவீனன்

  • தொடங்கியவர்

பன்றியின் பித்தப்பை கல்லால் கோடீஸ்வரரான விவசாயி


பன்றியின் பித்தப்பை கல்லால் கோடீஸ்வரரான விவசாயி
 

சீனாவில் தனது பண்ணையில் கிடைத்த பன்றியின் பித்தப்பை கல் மூலம் விவசாயி ஒருவர் கோடீஸ்வரர் ஆன சம்பவம் அப்பகுதியில் வாழும் மக்களிடையே ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

சீனாவில் 51 வயதான விவசாயி ஒருவருக்கு அவரது பண்ணையில் உள்ள விவசாய நிலத்தில் விதைத்துக் கொண்டிருந்த போது, வித்தியாசமான கல் போன்ற பொருள் கிடைத்தது.

அது 4 அங்குல நீளமும் 2.5 அங்குல அகலமும் கொண்டிருந்தது. அதன் மீது அடர்த்தியான ரோமங்கள் படிந்திருந்தன.

அது பற்றிய விபரங்களைத் தன் நண்பர்களிடம் அவர் கேட்டுள்ளார்.

அதன்போது, பன்றியின் பித்தப்பையில் உருவாகிய ‘கல்’ என தெரிய வந்தது.

அதை ‘கோரோசனை’ என்றும் அழைப்பார்கள்.

இது பலவிதமான நோய்களைத் தீர்க்கும் ஒரு மருந்தாகும்.

மேலும், உடலில் சுரக்கும் நச்சுகளை வெளியேற்றும் தன்மையுடையது. எனவே இதை மருந்துகளில் கலக்கின்றார்கள். சீனாவில் இது விலை மதிக்க முடியாதது.

இதன் மூலம் அவர் ‘திடீர்’ கோடீஸ்வரர் ஆகியுள்ளார்.

http://newsfirst.lk

  • தொடங்கியவர்
துன்பம் அழிவது; பயம் எதற்கு?
 

image_37f810668a.jpgதுன்பங்கள் சூழும்போதுதான், ஒருவருடைய நாணயம் புலப்படுகின்றது. கஷ்டங்கள் வந்துவிட்டால் இஷ்டப்படி வாழாமல் நேரிய வழியில் செல்பவனே தரணியில் உயர்ந்தோராகக் கருதப்படுகின்றான். 

இடர்வந்தால், இது பொதுவான ஒன்று எனக் கருதி, தொடர்ந்து பயணிக்க வேண்டியதே, மானுடப் பெரும் பொறுப்புமாகும். 

தங்களுக்கு ஏற்படும் கஷ்டங்களுக்காகப் பிறர்மீது பழிசொல்வதும் வஞ்சிப்பதும் ஏற்புடையதல்ல. ஆயினும், சில சமயங்களில் பிறர் மூலமும் பிரச்சினைகள் எழுவதுண்டு.  

நாம் வாழும் முறையில் கண்ணியமும் நேர்மையும் இருந்தால் வருகின்ற பயன்கள் பன்மடங்காகும். எதிரிகளால் ஏற்படுத்தப்படும் வினைகளுக்கு அவர்கள் விதியே தகுந்த பதில் அளிக்கும். 

தண்டனை வழங்குபவர் நாங்கள் அல்லர். நேர்மை நேரியது; துன்பம் அழிவது; பயம் எதற்கு?  

  • தொடங்கியவர்

1995 : யாழ்ப்­பா­ணத்தை இலங்கை அரச படைகள் கைப்­பற்­றின

வரலாற்றில் இன்று…

டிசம்பர் – 05

 

1360 : பிரெஞ்சு நாண­ய­மான பிராங்க் அறி­மு­கப்­ப­டுத்­தப்­பட்­டது.

1492 : கிறிஸ்­டோபர் கொலம்பஸ், ஹிஸ்­ப­னி­யோலா தீவை (தற்­போ­தைய ஹெய்ட்டி, டொமி­னிக்கன் குடி­ய­ரசு) அடைந்தார்.

1497 : போர்த்­துக்­கல்லின் மன்னன் முதலாம் மனுவேல், யூதர்கள் அனை­வரும் கிறிஸ்­த­வத்­துக்கு மதம் மாறு­மாறும் அல்­லது நாட்டை விட்டு வெளி­யே­று­மாறும் பணித்தான்.

varalaru2-1.jpg1746 : ஸ்பானிய ஆட்­சிக்­கெ­தி­ராக ஜெனோ­வாவில் கிளர்ச்சி ஆரம்­ப­மா­னது.

1831 : அமெ­ரிக்க முன்னாள் ஜனா­தி­பதி ஜோன் குயின்ஸி அடம்ஸ், நாடா­ளு­மன்ற உறுப்­பி­ன­ராக பத­வி­யேற்றார். அமெ­ரிக்க ஜனா­தி­ப­தி­யாக பதவி வகித்­தபின் நாடா­ளு­மன்ற உறுப்­பி­ன­ராக பதவி வகித்­தவர் இவர் மாத்­தி­ரமே.

1848 : கலி­போர்­னி­யாவில் பெரு­ம­ளவு தங்கம் கண்­டு­பி­டிக்­கப்­பட்­ட­தாக அமெ­ரிக்க ஜனா­தி­பதி ஜேம்ஸ் போக் அறி­வித்தார்.

1896 : சென்னை கன்­னி­மாரா பொது நூலகம் பொது மக்­க­ளுக்­காகத் திறந்து விடப்­பட்­டது.

1936 : சோவியத் ஒன்­றியம் தனது புதிய அர­சி­ய­ல­மைப்பை அறி­மு­கப்­ப­டுத்­தி­யது. கிர்­கிஸ்தான் சோவியத் ஒன்­றி­யத்­திற்குள் முழு­மை­யான குடி­ய­ர­சாக அறி­விக்­கப்­பட்­டது.

1941 : இரண்டாம் உலகப் போரில் பின்­லாந்து, ஹங்­கேரி, ருமே­னியா நாடு­களின் மீது பிரித்­தா­னியா போரை அறி­வித்­தது.

1941 : ஜேர்­ம­னிய ஆக்­கி­ர­மிப்­புக்கு எதி­ராக கியோர்கி சூக்கொவ் தலை­மையில் சோவியத் படைகள் மொஸ்­கோவில் பெரும் தாக்­கு­தலைத் தொடுத்­தன.

1957 : இந்­தோ­னே­ஷி­யாவில் இருந்து அனைத்து (326,000) டச்சு மக்­களும் வெளி­யேற்­றப்­பட்­டனர்.

1958 : எஸ்.டி.டி. தொலை­பேசி இணைப்பு சேவை ஐக்­கிய இராச்­சி­யத்தில் இரண்டாம் எலி­சபெத் மகா­ரா­ணியால் ஆரம்­பிக்­கப்­பட்­டது.

1969 : வியட்­னாமின் மை லாய் படு­கொ­லைகள் தொடர்­பான தக­வல்­களை லைஃப் இதழ் வெளி­யிட்­டது.

1978 : சோவியத் ஒன்­றியம், ஆப்­கா­னிஸ்­தா­னுடன் நட்­பு­றவு ஒப்­பந்­தத்தில் கைச்­சாத்­திட்­டது.

1983 : ஆர்­ஜென்­டீ­னாவில் இரா­ணுவ ஆட்சி கலைக்­கப்­பட்­டது.

1995 : யாழ்ப்­பா­ணத்தை விடு­தலைப் புலி­க­ளிடம் இருந்து அரச படை­யினர் முழு­மை­யாகக் கைப்­பற்­றி­ய­தாக இலங்கை அர­சாங்கம் அறி­வித்­தது.

2003 : தெற்கு ரஷ்­யாவில் ரயில் ஒன்றில் இடம்­பெற்ற தற்­கொலைக் குண்டுத் தாக்­கு­தலில் 46 பேர் கொல்­லப்­பட்­டனர்.

2003 : இந்­திய விண்­வெளி ஆராய்ச்சிக் கழகம், குளிர்­தி­ரவ ஏவு­க­ணையை வெற்­றி­க­ர­மாக பரி­சோ­தித்­தி­ருப்­ப­தாக அறி­வித்­தது.

2006 : பிஜி யில் இரா­ணுவப் புரட்சி மூலம் அதன் இராணுவத் தளபதி வொரெக் பைனிமரமா அரசைக் கைப்பற்றினார்.

2013 : யேமன் தலைநகர் சனாவனில் அந்நாட்டு பாதுகாப்பு அமைச்சு கட்டடத் தொகுதியில் ஆயுதபாணிகள் நடத்திய தாக்குதலில் 56 பேர் பலியானதுடன், 200 பேர் காயமடைந்தனர்.

http://metronews.lk/

  • தொடங்கியவர்

ஹோட்டல் தொழிலாளி 111 கடைகளுக்கு உரிமையாளரான கதை! #MotivationStory

 
 

கதை

வியாபாரத்தில், தொழிலில் வெற்றி பெறுவதென்பது சாதாரண விஷயமில்லை. ஒரு குறுகலான தெரு. எதிரெதிரே இரண்டு டீக்கடைகள். ஒன்றில், கூட்டம் அம்மும். மற்றொன்றில், ஓரிருவர் நின்றுகொண்டிருப்பார்கள். இது, நாம் அன்றாடம் எதிர்கொள்ளும் ஒரு காட்சியாகக்கூட இருக்கலாம். இதற்குக் காரணம் என்ன? `தொழில் உத்தி’, `வியாபாரத் தந்திரம்’... என்று எதை வேண்டுமானாலும் பதிலாகச் சொல்லலாம். உண்மையில், `ஈடுபாடு’ என்கிற மகா மந்திரம்தான் ஒரு தொழில்முனைவோரை, தொழிலதிபரை உருவாக்குகிறது. கடைக்கு கூட்டம் அதிகமாக வரும் டீக்கடைக்காரர், தன் வாடிக்கையாளரை பெர்சனலாக அணுகுகிறார். பெயரை, தொடர்புடைய மனிதரின் வேலைத் தன்மையைத் தெரிந்துகொள்கிறார். உரிமையோடு `சார்...’, `தம்பி...’, `அப்பு...’, `அண்ணே...’, `சார்...’ என்கிற வார்த்தைகளையெல்லாம் போட்டு அழைத்து, வேண்டுவதைக் கொடுக்கிறார். வருபவரின் டேஸ்ட் என்ன, டீ குடித்த பிறகு அவர் என்ன பிராண்ட் சிகரெட் குடிப்பார் என்பதையெல்லாம் அனுமானித்து வைத்துக்கொள்கிறார். அதற்கேற்ப செயல்படுகிறார். கூட்டம் அதிகம் வராத கடைக்குச் சொந்தக்காரர், `கடனே...’ என கடமைக்கு வேலை பார்க்கிறார். கடைக்கு வருபவர்களுக்கு, கேட்பதைக் கொடுக்கிறார். இதுதான் வித்தியாசம். `ஈடுபாடு’, அதிலும்தான் மேற்கொள்ளும் தொழிலில் `சிரத்தை மிகுந்த ஈடுபாடு’ ஒருவரை எந்த உயரத்துக்குக் கொண்டு போகும் தெரியுமா? பார்க்கலாம். அதற்கு  உதாரணம்தான் மேரி காலண்டரின் (Marie Callender)-ன் கதை. 

 
 

`உங்களால் `முடியும்’ என்று யோசியுங்கள் அல்லது `முடியாது’ என்று யோசியுங்கள். ஏதோ ஒரு வழியில் நீங்கள் நினைத்தது மிகச் சரியாக இருக்கும்’ என்று சொல்லியிருக்கிறார் பிரபல தொழிலதிபர் ஹென்றி ஃபோர்டு. `என்னால் முடியும்’ என நினைத்து, அதை அப்படியே முற்றும் முழுவதுமாக நம்பி செயல்பட்டவர்கள் சாதனையாளர்கள் ஆகிறார்கள். மேரி காலண்டரை, அந்த வகையில் `ஒரு சாதனையாளர்’ என்றே சொல்லலாம். 

அது இரண்டாம் உலகப்போர் நடந்துகொண்டிருந்த காலகட்டம். மேரி காலண்டர்,  லாஸ் ஏஞ்சல்ஸில் இருந்த ஒரு ஹோட்டலில் வேலை செய்துகொண்டிருந்தார். அமெரிக்காவில் அப்போது பிரபலமாக இருந்த உருளைக்கிழங்கு சாலட், கோல் ஸ்லா (Cole Slaw) சாலட் போன்றவற்றைச் செய்வதுதான் ஆரம்பத்தில் அவருடைய வேலையாக இருந்தது. 

கதை

(PC : Wikipedia)

ஒருநாள், ஹோட்டல் முதலாளி மேரியிடம் வந்தார். ``மத்தியான நேரத்துல கூட்டம் அதிகமா இருக்கு. நீ ஏன் அமெரிக்கன் பை (American pie) செய்யக் கூடாது? நாலுபேரு அதையும் சாப்பிடுவாங்கள்ல?’’ என்று கேட்டார். `பை’ என்பது பீட்சா மாதிரியான ஒரு மேற்கத்திய உணவு. வாடிக்கையாளர்களுக்கு முழுவதுமாகக் கொடுப்பார்கள்... அல்லது துண்டுகளாக்கியும் கொடுப்பார்கள். அதுவரை மேரி அதை முயற்சி செய்துகூடப் பார்த்ததில்லை. ஆனால், பாஸ் சொல்லிவிட்டார்... எப்படியாவது செய்தாக வேண்டுமே! `என்னால் முடியும்’ என நம்பினார். ஈடுபாட்டோடு அதைச் செய்வதற்குக் கற்றுக்கொண்டார். 

ஆரம்பத்தில் பைஸ் (Pies)-களை வீட்டில் செய்து கொண்டுவந்தார். மேரி செய்த `அமெரிக்கன் பை’ ஹோட்டல் வாடிக்கையாளர்களை வெகுவாகக் கவர்ந்தது. அதற்காகவே ஹோட்டலுக்கு வருபவர்களின் எண்ணிக்கையும் அதிகமானது. மேரி, ஹோட்டல் வேலையை விட்டுவிட்டார். `பை’ செய்து ஹோட்டல்களுக்குக் கொடுப்பதை மட்டுமே தன் தொழிலாக ஆக்கிக்கொண்டார். ஆர்டர்கள் ஒரு கட்டத்தில் அதிகமாகின. 

அது 1948-ம் வருடம். மேரியின் கணவர் தன் காரை விற்றார். அதில் கிடைத்த பணத்தைக் கொண்டு மேரியும் அவர் கணவரும் முதலில் ஒரு குடிலை வாங்கினார்கள். அமெரிக்காவில் அதை `க்வான்செட்’ (Quonset) என்று சொல்வார்கள். அதாவது, நம் தொழிலை நடத்திக்கொள்வதற்கான ஓர் இடம் அது. பிறகு, ஒரு மைக்ரோவேவ் அவன், ஃபிரிட்ஜ் எல்லாம் வாங்கினார்கள்.  `பை’ தொழில் சூடுபிடித்தது. 

`பேக்கிங்’ (Baking) முறையில் மேரி `பைஸ்களை’த் தயாரிப்பார். அவருடைய கணவர், அதை கடைகளுக்கு, ஹோட்டல்களுக்கும் கொண்டுபோய் டெலிவரி செய்வார். மேரி, இதை ஆரம்பித்தபோது ஒரு நாளைக்கு `10 பை’ செய்துகொண்டிருந்தார். இரண்டே வருடங்களில் அந்த எண்ணிக்கை, `ஒரு நாளைக்கு 200’ என ஆனது. 16 வருடங்கள் கழித்து அந்த எண்ணிக்கை ஒரு நாளைக்கு `பல்லாயிரக் கணக்கில்...’ என்று ஆனது.

ஹோட்டல்

(PC : Wikipedia)

அது, 1964-ம் ஆண்டு. மேரியும் அவர் கணவரும் இணைந்து, அமெரிக்காவின் `ஆரஞ்ச் கவுன்ட்டி’யில் சொந்தமாகத் தங்கள் கடையைத் தொடங்கினார்கள். கணவரும் மகனும் மேரிக்கு உதவி செய்ய, தொழில் பரந்து விரிந்தது. அமெரிக்காவின் 14 மாகாணங்களில் மேரியின் கடை கிளைகள் முளைத்தன. மேரி காலண்டரின் பைஸ் மிகப்பிரபலமாகத் தொடங்கியது. சந்தேகமே இல்லாமல், அருமையான சுவை, உயர்தரம் என்பதற்கு உத்தரவாதமாக இருந்தது மேரியின் பைஸ். அதோடு, மேரி காலண்டர் கடையில் தயாரான எல்லா உணவுகளுமே சுகாதாரம், சுத்தம், ருசி... அத்தனைக்கும் பேர்போனவையாக இருந்தன. 

 

1986-ம் ஆண்டு. ராமடா இன்ஸ் இன்க் (Ramada Inns Inc.,) என்ற பிரபல நிறுவனம், மேரி காலண்டரின் மகனிடமிருந்து, அவர்களின் கடைகளை மொத்தமாக விலைக்கு வாங்கியபோது, அந்தக் கடைகளின் எண்ணிக்கை 115. அப்போது ராமடா நிறுவனம், மேரி காலண்டரின் நிறுவனத்துக்காகக் கொடுத்த விலை... ஒன்பது கோடி டாலர்! `என்னால் முடியும்’ என்று நினைத்தார் மேரி. சாதித்துக் காட்டிவிட்டார்.   

https://www.vikatan.com

  • தொடங்கியவர்

அமீரகத்தில் கார் கழுவியே பல கார்களுக்கு அதிபரான இந்தியர்!

 
 

சுமார் 27 ஆண்டுகளுக்கு முன் அமீரகம் சென்ற இந்தியர் ஷாஜஹான் அப்பாஸுக்கு, மற்ற இந்தியர்களைப்போல் வேலை செய்துவிட்டு ஓய்வுக்குப் பிறகு இந்தியா திரும்பும் எண்ணமில்லை. அமீரகத்திலேயே, தொழில் தொடங்க வேண்டும் என்பதுதான் அவரின் இலக்கு. ஷாஜஹானின் தந்தை, அபுதாபியில் கார் கழுவும் நிறுவனத்தில் பணிபுரிந்தார். கேரளாவில் தகவல் தொடர்புத் துறையில் டிப்ளோமா பெற்றிருந்த ஷாஜஹானுக்கு, அரபி மொழியும் தெரியும். இந்தத் தகுதிகளுடன் அமீரகம் சென்ற அவருக்கு, தந்தையைப்போலவே கார் கழுவும் வேலைதான் கிடைத்தது. செய்யும் தொழில்தான் ஷாஜஹானுக்குத் தெய்வம். 

அமீரகத்தில் தொழிலதிபரான இந்தியர்

 
 

Photo courtesy : Kaleej Times

கார் கழுவும் வேலையை மனநிறைவுடன் செய்தார். எப்படியாவது வாழ்க்கையில் சாதித்துக்காட்ட வேண்டும் என்ற எண்ணம் மனதுக்குள் ஓடிக்கொண்டிருந்தது. சிறிது காலம் அந்த நிறுவனத்தில் ஷாஜஹான் பணிபுரிந்தார். பிறகு சேமிப்பை எல்லாம் திரட்டி, கார் கழுவும் நிறுவனத்தை உருவாக்கினார். அபுதாபியின் புறநகர்ப் பகுதியில் `ஒயாஸிஸ்' என்ற பெயரில் நிறுவனம் தொடங்கப்பட்டது. 

தன் படிப்பு, தன்னை உயர்த்தும் என்பதுதான் ஷாஜஹானின் நம்பிக்கை. நிறுவனத்தைத் தொடங்கியது முதல் கடுமையாக உழைக்க ஆரம்பித்தார். வாடிக்கையாளர்களின் தேவையை அறிந்தும் மனதைப் புரிந்துகொண்டும் பணியாற்றினார். விரைவிலேயே, அபுதாபி மக்களிடையே ஒயாஸிஸ் நிறுவனம் பிரபலமடைந்தது. கார் ப்ரியர்களான அரபிகளுக்கு, ஷாஜஹானின் தொழில்நேர்த்தி பிடித்துபோனது. ஒயாஸிஸ் கார் நிறுவனம் வளரத் தொடங்கியது. தன் நிறுவனத்தில் பணிபுரிபவர்களையும் கனிவுடன் நடத்தினார் ஷாஜஹான்.

ஒயாஸிஸ் கார் கழுவும் நிறுவனம் வெற்றிபெற்று பெரும் லாபம் ஈட்டியது. கிடைத்த லாபத்தை மற்ற துறைகளிலும் முதலீடு செய்தார். ரியல்எஸ்டேட், ஹெல்த் கேர் எனத் தொழிலை விரிவுப்படுத்தினார். அமீரகம் முழுவதுமே சலூன் கடைகளைத் திறந்தார். சூப்பர்மார்க்கெட்டுகளையும் ஆங்காங்கே ஏற்படுத்தினார். பணியாளர்களை இந்தியாவிலிருந்து வரவழைத்தார். ஏராளமான இந்தியர்களுக்கு அமீரகத்தில் அடைக்கலம் கொடுக்கும் நிறுவனமாக ஒயாஸிஸ் குழுமம் திகழ்ந்தது. 

ஷாஜகான் கால் வைத்த இடமெல்லாம் பணம் கொட்டியது. தொழிலை மென்மேலும் விரிவுப்படுத்திக்கொண்டு சென்ற ஒயாஸிஸ், இன்று அமீரகத்தில் பாப்புலரான நிறுவனமாக உருவெடுத்துள்ளது. அரபு நாட்டில் இந்தியர் தொழில் தொடங்கி, பெரிய நிறுவனமாக வளர்த்தெடுப்பது என்பது  சாதாரண விஷயமல்ல, சாதனைக்குரியது. 

ஷாஜகானின் சாதனையைப் பாராட்டி, புகழ்பெற்ற வளைகுடா பத்திரிகையான `கலீஜ் டைம்ஸ்' செய்தி வெளியிட்டுள்ளது.  ஷாஜகான் அளித்துள்ள பேட்டியில் “1990-ம் ஆண்டு வெறுங்கையுடன் இந்த நாட்டுக்கு வந்தேன். ஆனால், தெளிவான பார்வை என்னிடம் இருந்தது. நான் படித்த படிப்பு என்னைக் கைவிடாது என்ற நம்பிக்கைகொண்டிருந்தேன். பிரச்னைகள் வராமல் இல்லை. அவற்றை எல்லாம் தைரியமாக அணுகினேன். பிரச்னைகளை அணுகத் தயங்கக் கூடாது. என்னைப் பலரும் ஏமாற்றிச் சென்றுள்ளனர். அந்தச் சமயங்களில் `தாய்நாட்டுக்குப் போய்விடலாமா?' என்றுகூட தோன்றும். பிரச்னைகள்தான் எனக்கு வாழ்க்கையைக் கற்றுக்கொடுத்தன. ஒரு காலத்தில் கார் கழுவிய நான், இப்போது பல கார்கள் வைத்துள்ளேன். 

அமிரகத்தில் ஷாஜஹான் நடத்தும் கார் கழுவும் நிறுவனம்

Photo courtesy : Facebook

என் நிறுவனம் வளர்ந்துவிட்டாலும், கடைநிலை ஊழியர்களுடன் நின்று இப்போதும் பணிபுரிகிறேன். அமீரக அரசர்களிடமிருந்து நான் கற்றுக்கொண்ட பழக்கம் இது. அமீரகம் போன்ற நாடுகளில் மற்ற நாட்டைச் சேர்ந்தவர்கள் தொழில் புரிந்து வெற்றிபெறுவது கடினம் என்று பலரும் சொல்லக் கேட்டிருக்கிறேன். இங்கே நான் எவ்வளவு பிரச்னைகளை எதிர்கொண்டேனோ, அதே அளவுக்கு நல்ல மனிதர்களையும் சந்தித்தேன். அவர்கள் செய்த உதவிகளை மறக்க முடியாது'' என நெகிழ்ந்துள்ளார். 

ஷாஜகானுக்கு, ஃபாத்திமா என்கிற மனைவியும் நான்கு குழந்தைகளும் உள்ளனர். அனைவருமே அமீரகத்தில்தான் வசித்துவருகின்றனர். தன் நிறுவனத்திலிருந்து கிடைக்கும் லாபத்தின் ஒரு பகுதியைக்கொண்டு இந்தியாவில் வசிக்கும் ஏழை மக்களுக்கு ஷாஜஹான் உதவி செய்துவருகிறார். 

 

உழைப்பு, உயர்த்தும் என்பதற்கு ஷாஜஹான் ஓர் உதாரணம்!

https://www.vikatan.com/

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.