Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இளமை புதுமை பல்சுவை

Featured Replies

  • தொடங்கியவர்

 

நிறங்களை இனம்காண முடியாதவர்களுக்கான சிறப்பு கண்ணாடி (காணொளி)

நிறங்களை இனம் காணமுடியாதவர்கள் பயன்படுத்துவதற்காக புதிய சிறப்பு கண்ணாடி தயாரிக்கப்பட்டுள்ளது. இந்த கண்ணாடி, வெவ்வேறு நிறங்களின் அலைநீளத்தை வடிகட்டி காண்பிக்கும் திறன்கொண்டது. இந்த கண்ணாடி குறித்த காணொளி

  • Replies 11.3k
  • Views 1.5m
  • Created
  • Last Reply
  • தொடங்கியவர்

ரொனால்டோவின் அண்டர் கட் ஆர்ட், ஜஸ்டின் பெய்பரின் ஃபோஹாக்... 2017-ன் ஸ்டைலிஷ் ஹேர்ஸ்டைல்!

`என்னதான் வெரைட்டியான டிரெஸ் அணிந்தாலும் ஸ்டைலா தெரியலையே!' என்பது பலரின் மைண்ட்வாய்ஸ். மேலாடை விதவிதமாக உடுத்தியும் மாறாத தோற்றம், லேசாகத் திருத்தம் செய்யப்படும் சிகையலங்காரத்தால் வெளிப்படும். அந்த வகையில், ஹேர் கலரிங், ஸ்ட்ரெயிட்னிங், கர்லிங் போன்றவற்றின் மீது இந்தக் காலத்து இளைஞர்களுக்கு ஆர்வம் எக்கச்சக்கம். அதிலும், தனக்குப் பிடித்த பிரபலங்களின் வித்தியாசமான தோற்றத்தைக் கண்டு, அவர்களைப்போல் தங்களை மாற்றிக்கொள்ள விரும்பும் டீன்ஸோ ஏராளம். அவர்களுக்காகவே, பிரபலங்கள் சிலரின் சூப்பர் டூப்பர் ஹேர்ஸ்டைல் டீட்டெய்ல்.

டேவிட் பெக்காம் :

 

டேவிட் பெக்காம் ஹேர்ஸ்டைல்

கால்பந்து வீரரான டேவிட் ராபர்ட் ஜோசப் பெக்காம், 19 முறை வெற்றிக்கோப்பையைத் தக்கவைத்துக்கொண்டவர். இவரின் விளையாட்டுத் திறமைக்கு மட்டுமல்ல, விதவிதமான ஹேர்ஸ்டைலுக்கும் தீவிர ரசிகர் பட்டாளம் உண்டு. ஒவ்வொரு முறையும் விதவிதமான ஸ்டைல்களில் தோன்றும் பெக்காமின் தாய் சாண்ட்ரா ஜார்ஜினா, சிகையலங்கார நிபுணர். இதனால்தான் என்னவோ டேவிட்டின் ஒவ்வொரு ஹேர்ஸ்டைலும் பலரால் ஈர்க்கிறது. ஷார்ட், லாங் என எல்லா வகையான ஸ்டைல்களிலும் டேவிட் டாப். பஸ்கட் (Buzzcut), மொஹாக் (Mohawk), தி மேன் பன் (The man Bun) போன்ற விதவிதமான ஸ்டைல்களை அறிமுகப்படுத்தியது டேவிட்தான். சலூன்களில் அவரை உதாரணமாகக் காட்டி முடித்திருத்தம் செய்துகொள்ளும் ஆண்கள் பலர்.


பிராட் பிட் :Brad Pitt Hairstyle

பிராட் பிட் என்றாலே நினைவுக்கு வருவது `லாங்' ஹேர்ஸ்டைல்தான். தனf நடிப்பால் மட்டுமல்ல, மிடுக்கான தோற்றத்திலும் ஆண், பெண் அனைவரையும் கட்டிப்போட்டவர். புதுமையான பல ஹேர்ஸ்டைல்களை அறிமுகம் செய்தவர். 90-களின் ஹாலிவுட் நாயகனாக விளங்கிய பொன்னிற சிகை அழகன் பிராட் பிட், பல இளைஞர்களின் கனவு ஹேர்ஸ்டைல்களுக்குச் சொந்தக்காரர். அதில், `ஸ்வீப் பாக் (Sweep Back)' என்பது மீடியம் அளவு சிகைக்கென உருவான ஸ்டைல். இதன் ஸ்பெஷாலிட்டி, சிறிதளவு ஜெல்லை தலையில் தடவி, அனைத்து முடிகளையும் பின்னே தள்ளப்பட்டு, பாதி கலைந்தும் மீதி திருத்தமான அமைப்பையும் கொடுக்கும். இது யூத்களால் அதிகம் வரவேற்கப்பட்ட ஸ்டைல். இதுபோல பல ஹேர்ஸ்டைல்களை உலகுக்கு அறிமுகம் செய்தவர் பிராட் பிட். 

 

ஜஸ்டின் பெய்பர் :
ஷார்ட், லாங், மீடியம் என எந்த வகையாக இருந்தாலும், விதவிதமான ஹேர்கட்டுக்கு பேர்போன பிரபலங்களில் ஒருவர் தான் ஜஸ்டின் பெய்பர். அதிகளவில் ஹேர்ஸ்டைலில் ட்ரெண்ட் செட் செய்தவர். பல இளைஞர்கள் அவரின் கன்டெம்போரரி ஸ்டைலைத்தான் பின்பற்றுகின்றனர். ஹேர்கட் அல்லது ஹேர்ஸ்டைல் என்றாலே டீன்ஸ்களின் மனதில் சட்டெனத் தோன்றுவது பெய்பர்தான். பௌல் கட் (Bowl Cut), பாப் பங்க் (Pop Punk), க்விஃப் (Quiff) போன்ற ஹேர்ஸ்டைல் பெய்பரின் ட்ரேட்மார்க். ஜஸ்டின் பெய்பரின் இந்த ஆண்டின் சூப்பர் கட்டின் பெயர் அன்டர்கட் ப்ரஷ்ட் அப் ஃப்ரிஞ் (UnderCut Brushed Up Fringe). இது அன்டர்கட் மற்றும் ஃபோஹாக் (Fohawk) என இரு வெவ்வேறு ஹேர்கட்டை இணைத்து உருவான புதுமையான மாடல்.

Justin Hairstyle


கிறிஸ்டியானோ ரொனால்டோ :
CR7 உலகப் புகழ்பெற்ற கால்பந்து வீரர் மட்டுமல்ல, அழகான ஃபேஷன் ஐகானும்தான். தன்னை மெருகேற்றவே அதிக நேரத்தை செலவிடுவார். முக்கியமா ஹேர்ஸ்டைலுக்காக. கிறிஸ்டியானோவின் ஹேர்கட் அனைத்தும் மீடியம்-ஷார்ட் அளவிலானது. தற்போது அதிகம் இளைஞர்கள் செய்துகொள்ளும் அன்டர்கட் ஆர்ட் டிசைனுக்கு இவரே முன்னோடி. வின்ட் ப்லோன் (Wind Blown), வெட் லுக் முதலியவை ரொனால்டோவின் டாப் ஸ்டைல்.  இந்த ஆண்டு அன்டர் கட், ஹார்ட் பார்ட் (Hard Part), கோம்ப் ஓவர் (Comb Over) ஆகிய ஸ்டைல்களை ஒன்றுசேர்த்து முற்றிலும் புதிய தோற்றத்தில் இருக்கிறார் ரொனால்டோ.

Ronaldo Hairstyle


கிறிஸ் ஹேம்ஸ்வொர்த் :
'தோர்' என்று அனைவராலும் செல்லமாக அழைக்கப்படும் கிறிஸ் ஹேம்ஸ்வொர்த், நீளமான ஹேர்ஸ்டைலில்தான் அதிகம் காணப்படுவார். இப்பொழுதெல்லாம் பெண்களின் சாய்ஸ் ஷார்ட் ஹேர்ஸ்டைல், ஆண்களின் ஆப்ஷன் லாங் ஹேர்ஸ்டைல் என ட்ரெண்ட் மாறிக்கொண்டு வருகிறது. நீளமான முடி உள்ளவர்கள், விதவிதமான ஸ்டைல்களை முயற்சி செய்து பார்க்கின்றனர். அப்படிப்பட்டவர்களுக்கு ஹேம்ஸ்வொர்த்தின் ஸ்டைல் உதவும். பார்டெட் லாங் ஹேர் (Parted Long Hair) எனப்படும் எளிமையான ஹேர்ஸ்டைல்தான் கிறிஸின் தற்போதைய சாய்ஸ்.

Thor Hairstyle


இதுபோல் நிறைய ட்ரெண்டி ஹேர்ஸ்டைல் வந்துகொண்டே இருக்கிறது. அவையெல்லாம் உலகிலுள்ள பல பிரபலங்கள் மூலம் நம்மையும் வந்து சேர்ந்துவிடுகிறது. நம்ம நாட்டிலும் பிரபலங்கள் பலர், தங்களின் திரைப்படத்துக்காகவும், விளம்பரங்களுக்காகவும் விதவிதமான ஹேர்ஸ்டைலில் தோன்றுவதுண்டு. அந்த வகையில் 'அவள்' திரைப்படத்தில் சித்தார்த்தின் ஸ்டைல் முதலிடத்தில் உள்ளது. `கிளாசிக் சைடு பார்ட் (Classic Side Part) எனும் அவரின் ஹேர்ஸ்டைல், பெரும்பாலான இளைஞர்களின் ஃபேவரைட். மருத்துவருக்கான அத்தனை பண்புகளையும் உள்ளடக்கி, தன் நடிப்பால் கைதட்டல்களைக் குவித்த சித்தார்த்தின் காஸ்டியூம்கள் அனைத்தும் `வாவ்' சொல்லவைக்கும். அதற்கேற்ற வகையில் சிகையலங்காரம் கூடுதல் ப்ளஸ்.

Sidharth Hairstyle

 


ஆனால், நடைமுறையில் எல்லா ஹீரோக்களும் ரொம்ப சிம்பிள். கிளாசிக் ஸ்டைல்தான் நம்ம ஹீரோக்களின் இன்றைய விருப்பமாக உள்ளது. தோனி, ஏ.ஆர்.ரஹ்மான் உள்ளிட்டோர் நம் ஊர் ஃபேஷன் ஐகான்களாக வாழ்ந்தவர்கள்.

https://www.vikatan.com

  • தொடங்கியவர்

 

  • தொடங்கியவர்

1972 : யூஜின் சேர்னன், சந்திரனில் நடந்த கடைசி மனிதர் ஆனார்.

வரலாற்றில் இன்று…

டிசம்பர் – 14

 

1287 : நெதர்­லாந்தில் ஏற்­பட்ட பெரும் வெள்­ளத்­தினால் சுமார் 50000 பேர் கொல்­லப்­பட்­டனர்.

1972-last-man-on-the-mooon-240x400.jpg
1900 : மாக்ஸ் பிளாங்க் தனது கரும்­பொருள் கதிர்­வீச்சு பற்­றிய கொள்­கையை நிறு­வினார்.

1911 : ரோல்ட் அமுண்ட்சென் தலை­மை­யி­லான 5 பேர் அடங்கிய குழுவினர் தென் முனையை அடைந்த முத­லா­வது மனி­தர்கள் என்ற பெயரைப் பெற்­றனர்.

1918 : பின்­லாந்தின் மன்­ன­னாக ஜேர்­ம­னியின் இள­வ­ரசன் பிறீட்ரிக் கார்ல் வொன் ஹெஸ்சென் தெரிவு செய்­யப்­பட்டார்.

946 : ஐ.நா.வின் தலை­மை­ய­கத்தை நியூயோர்க் நகரில் அமைப்­ப­தற்கு ஐ.நா. பொதுச்­சபை தீர்­மா­னித்­தது.

 

1962 : நாசாவின் மரைனர் 2 விண்­கலம் வெள்ளிக் கோளை அண்­மித்­தது. இதுவே
வெள்­ளியை அண்­மித்த முத­லா­வது விண்க­ல­மாகும்.

1972 : அப்­பல்லோ 17 விண்­க­லத்தில் பயணித்த அமெ­ரிக் ­காவின் யூஜின் சேர்னன் சந்­தி­ரனில் நடந்த கடைசி மனிதர் ஆனார்.

2012-shooting.jpg2003 : பத­வி­யி­லி­ருந்து வெளி­யேற்­றப்­பட்ட ஈராக்­கிய ஜனா­தி­பதி சதாம் ஹுஸைன் கைது செய்­யப்­பட்ட செய்­தியை ஐக்­கிய அமெ­ரிக்­காவின் ஜனா­தி­பதி ஜோர்ஜ் டபிள்யூ புஷ் அதி­கா­ர­பூர்­வ­மாக அறி­வித்தார்.

2003 : பாகிஸ்தான் ஜனா­தி­பதி பர்வேஸ் முஷாரப் கொலை முயற்சி ஒன்­றி­லி­ருந்து உயிர் தப்­பினார்.

2004 : பிரான்சில் மில்லோ எனும் உலகின் மிக உய­ர­மான பாலம் திறக்­கப்­பட்­டது.

2012 : அமெ­ரிக்­காவின் கனக்­டிகட் மாநி­லத்தில் சான்டி ஹூக் நகரில் ஆரம்பப் பாட­சா­லை­யொன்றில் துப்­பாக்­கி­தாரி ஒரு­வனால் 20 சிறார்கள் உட்பட 28 பேர் கொல்லப்பட்டனர்.

http://metronews.lk

  • தொடங்கியவர்

கேமராவுடன் மூன்று ஆண்டுகள் காத்திருந்த புகைப்படக்காரர்... சிக்கிய வெள்ளைக் கடமான்! #ViralVideo

 
 

அழிந்து வரும் இனங்களின் பட்டியலில் புலி, பனிக்கரடி, நீர் யானைகள் உள்ளிட்ட பல விலங்குகள் இடம்பெற்றுள்ளன. அதில் வெள்ளைக் கடமானுக்கு முக்கிய இடம் உண்டு. கடமான் இனம் உலகில் அதிகமான நாடுகளில் பரவலாக காணப்பட்டாலும், தெற்கு ஆசியாவில் காணப்படும் மான் இனங்களில் மிகப்பெரியது. ஒடிசாவின் மாநில விலங்காக இருப்பதும் கடமான் என்று சொல்லக்கூடிய கடம்பை மான் தான். கடமான்கள் உலகம் முழுவதும் பரவலான எண்ணிக்கையில் இருந்தாலும், வெள்ளைக் கடமான்கள் எண்ணிக்கையில் குறைந்த அளவிலேயே உள்ளன. கடமான்கள் கேட்கும் திறனையும், நுகரும் திறனையும் அதிகமாகக் கொண்டிருக்கும். ஆண் கடமானின் கொம்புகள் ஆண்டுதோறும் விழுந்து மீண்டும் முளைக்கும். இக்கொம்புகள் மிகவும் கூர்முனையுடன் மிகக்கடினமாக இருக்கும். கொம்புகளின் மேலே மிக மிருதுவான தோல் போன்ற அமைப்பைப் பெற்றிருக்கும். 

வெள்ளைக் கடமானின் கொம்பு கூர்மையாக இல்லாமல், முனை மழுங்கியதாக இருக்கும். பருவமடைந்த வெள்ளைக் கடமானின் எடை 220 முதல் 320 கிலோ வரை இருக்கும். உயரம் 100 செ.மீ முதல் 160 செ. மீ. வயது வந்த ஆண் வெள்ளைக் கடமானுக்கு 30-40 அங்குல நீளமுள்ள பெருங்கொம்புகள் உண்டு. பெண் வெள்ளைக் கடமானுக்குக் கொம்புகள் இருக்காது. ஆனால், பெண் வெள்ளைக் கடமானின் தலைமையில்தான் மற்ற கடமான்கள் இயங்குகின்றன. கொம்பின் மேலுள்ள தோலில் ரத்த ஓட்டம் இருப்பதால், சிறு காயம் பட்டாலும் ரத்தம் வந்துவிடும் வாய்ப்புகள் அதிகம். ஆகையால் கொம்புகள் நன்கு வளரும் வரை கடமான் மிகவும் கவனமாகத்தான் நடமாடும். இதனால்தான் வெள்ளைக் கடமான்களை அதிகமாகக் காண முடிவதில்லை. கொம்புகள் முழு வளர்ச்சி அடைந்ததும் மேல் தோல் உலர்ந்து உதிர்ந்துவிடும். 

 

வெள்ளைக் கடமான்கள் சுவீடனில் மட்டுமே காணப்படுகிறது. வெள்ளைக் கடமான்களை காண்பது மிகவும் அரிது. எப்போதாவது ஒருமுறை மட்டுமே காணமுடியும். அதற்கு நீர் நிலைகளை மையமாகக் கொண்ட அவற்றின் வாழ்க்கையும் ஒரு முக்கியமான காரணம். வெள்ளைக் கடமான்கள் தனித்து வாழும் பழக்கம் கொண்டது. இதன் முக்கிய உணவு  தாவரங்கள் மட்டும்தான். திறந்தப் புல்வெளிகளில் மாலை, இரவு, விடியற்காலை பொழுதுகளில் மட்டும் மேய்ச்சலுக்காகச் செல்லும். இதனால் அரிதாகவே காணமுடிந்த இக்கடமானை இயற்கை ஆர்வலர் அன்ஸ் நீல்சன் தனது கேமராவில் வீடியோ எடுத்துள்ளார். இதற்காக அவர் காத்திருந்தது மூன்று ஆண்டுகள் என்றால் நம்ப முடிகிறதா? அவர் எடுத்துள்ள வீடியோவில் ஆற்றை நீந்திச் செல்லும் வெள்ளைக் கடமான் மூன்று ஆண்டுகளாக அந்த இடத்தைக் கடந்து கொண்டுதான் இருந்திருக்கிறது. ஆனால், முழுமையாகத் தனது கேமராவில் பதிவு செய்யாமல் தவித்திருக்கிறார், அன்ஸ் நீல்சன். வீடியோவில் தோன்றும் கடமான் அழகிய தோற்றமும், நீந்திச் செல்வதும் பார்ப்போரை நிச்சயமாக ஈர்க்கும். சுவீடனில் அதிகபட்சமாக 100 கடமான்கள் மட்டுமே இருக்கின்றன என்பதுதான் வருத்தம் கொடுக்கக் கூடியதாக இருக்கிறது. அந்த அளவுக்கு வெள்ளைக் கடமான்களின் இனம் அழிவின் முடிவை நெருங்கிவிட்டது. இதற்குக் காரணம் சுவீடன் அரசு இதைக் கவனிக்காததுதான் என்பது இயற்கை ஆர்வலர்களின் குற்றச்சாட்டு. 

 

மனிதர்கள் பிறப்பதற்கு முன்னர் தோன்றிய விலங்குகள் அழிவினைச் சந்தித்து வருவது, அடுத்தது மனித இனம் அழிவினை சந்திக்கப் போகிறது என்பதற்கான எச்சரிக்கை மணி என்பதை நாம் எப்போது உணரப் போகிறோம்?

https://www.vikatan.com/

  • தொடங்கியவர்

`இந்தியா வல்லரசாக மாறும், மூன்றாம் உலகப் போர் நிச்சயம்...’ - அதிரவைத்த நாஸ்ட்ரடாமஸ்! #HBDNostradamus

 
 

ந்த உலகில் முன்கூட்டியே நடப்பவை பற்றிச் சிலர் கூறித்தான் வருகின்றனர். அவற்றில் சில நடக்கின்றன; பல நடக்காமலும் போகின்றன. ஆனால், நாஸ்ட்ரடாமஸ் கூறிய அனைத்தும் நடந்துவருகின்றன. அவருடைய குறிப்புகளைத் திரும்பத் திரும்ப ஆராய்ந்து, அவர் சொன்னவற்றில் எவையெல்லாம் நடந்திருக்கின்றன என்று வியந்துபோகிறார்கள் ஆய்வாளர்கள். அவரால் எப்படிச் சரியாக எதிர்காலத்தைக் கணிக்க முடிந்தது என்பது யாராலும் விளங்கிக்கொள்ள முடியாத ஆச்சர்யம். யார் இந்த நாஸ்ட்ரடாமஸ்? பார்ப்போம்...

நாஸ்ட்ரடாமஸ்

 

1503-ம் ஆண்டு, டிசம்பர் 14-ம் தேதி ஃபிரான்ஸில் பிறந்தார் மைக்கேல் என்ற நாஸ்ட்ரடாமஸ். இவர் யூத இனத்தைச் சேர்ந்தவர். அதனால் இவருக்கு சிறுவயதிலேயே ஜோதிடம், ஆருடம் போன்றவற்றில் ஆர்வம் இருந்தது. கிரேக்கம், லத்தீன், ஹீப்ரு போன்ற மொழிகளைக் கற்றார்.' இவனுடைய எதிர்காலம் என்னாவது?' என்று பெற்றோர்கள் கவலைப்பட்டனர். மான்ட்பெலியர் (University of Montpellier) பல்கலைக்கழகத்தில் சேர்ந்து, மருத்துவப் படிப்பை முடித்துவிட்டு மக்களுக்குச் சேவை செய்துவந்தார். பின்னர் திருமணம் செய்துகொண்டார். அவருக்கு ஓர் ஆண், ஒரு பெண் குழந்தை. 1537-1538 காலகட்டத்தில் தன்னுடைய மனைவி மற்றும் குழந்தைகளை பிளேக் நோய்க்குப் பறிகொடுத்தார். அதன் பின்னர் நாடோடி வாழ்க்கையை நடத்திவந்தார். பிறகு இரண்டாம் திருமணம் செய்துகொண்டார்.

எழுதுவதில் ஆர்வம் ஏற்பட்டது எழுத ஆரம்பித்தார்

உலகம் முடியும் வரைக்குமான தன்னுடைய கணிப்புகளை எழுதத் தொடங்கினார். `தி சென்சுரீஸ்’ (The Centuries) என்ற நூலில் தன்னுடைய கணிப்புகளை எழுதினார். இதனால் இவர்மீது வழக்குத் தொடுக்கப்பட்டது. பலர் இவரைப் பழித்தும் பேசினார்கள். தன்னுடைய இறுதி நாள்களில் மூட்டு தொடர்பான உபாதைகளால் கஷ்டப்பட்டார். அப்போது, உயில் எழுதுவதற்காக பதிவாளர் வரவழைக்கப்பட்டார். அவரிடம் நாஸ்ட்ரடாமஸ், ``நான் நாளை காலை இறந்துவிடுவேன்’’ என்று கூறினார். அது நடந்தது.

வரலாற்றுச் சம்பவங்கள்...

அப்படி என்னதான் நாஸ்ட்ரடாமஸ் தன் புத்தகத்தில் சொல்லி இருக்கிறார்? நெப்போலியன், கென்னடி சகோதரர்கள் படுகொலை, இங்கிலாந்து இளவரசி டயானா கார் விபத்தில் மரணம் அடைந்தது... மூன்றாம் உலகப்போர் குறித்தும், உலகம் அழிவது குறித்தும் பல சம்பவங்களை 'தீர்க்கதரிசியாக'க் கண்டறிந்துள்ளார். அவற்றில் சில...

இரட்டைக் கோபுரம்

இரட்டை கோபுரத் தாக்குதல் :

`21-ம் நூற்றாண்டின் தொடக்க காலகட்டத்திலேயே 45 டிகிரி கோணத்தில் வானத்தில் தீப்பிழம்புகள் தோன்றும். தீ நகரத்தையே ஆக்கிரமிக்கும். பயங்கரவாதத்தின் பேரரசன் வருவான். அவன் எதனிடமும் இரக்கம் காட்ட மாட்டான்’ என்று சொன்னதோடு மட்டுமல்லாமல், `வானில் இரண்டு இரும்புப் பறவைகள் பறக்கும்; புகையும் நெருப்பும் புது நகரத்தையே மூடும்’ என்று குறிப்பிட்டிருக்கிறார். `45 டிகிரி கோணத்தில் அமைந்துள்ளது அமெரிக்கா. பயங்கரவாதப் பேரரசன் வேறு யாரும் இல்லை, பின்லேடன்தான்’ என்கிறார்கள்.

ஹிட்லர் :

`முற்றுகையிட்டவர்களின் கோட்டை துப்பாக்கி மற்றும் வெடி மருந்தால் மூடப்பட்டிருக்கிறது. துரோகிகள் உயிரோடு சமாதி ஆவார்கள்’ என்று நாஸ்ட்ரடாமஸ் குறிப்பில் உள்ளது. அதாவது, ஹிட்லர் மற்றும் அவருடைய கூட்டாளிகள் பதுங்குகுழியில் இறந்ததைக் கூறுகிறது.

ஹிரோஷிமா-நாகசாகி :லூயி பாஸ்டர்

`துறைமுகத்துக்கருகில் இரண்டு நகரங்கள் முன்பு ஒருபோதும் கண்டிராத அளவுக்குப் பேரழிவுக்கு உள்ளாகும். பஞ்சம், கொள்ளை நோய் இருக்கும். மக்கள் உதவி கேட்டு ஓலமிடுவார்கள்.’ - இது ஹிரோஷிமா மற்றும் நாகசாகிச் சம்பவங்களை உணர்த்துகிறது.

இஸ்ரேல் தோற்றம் :

`புதிய நிலத்தில் புதிய சட்டம். சிரியா, பாலஸ்தீனம், ஜூடியா போன்றவை பிரியும்.’ - இஸ்ரேல் நாடு உருவானதை இது குறிக்கிறது.

லூயி பாஸ்டர் :

`நீண்டகாலமாக மறைந்துகிடந்த விஷயங்கள் கண்டுபிடிக்கப்பட்டன. இவர் கடவுளைபோல் போற்றப்படுவார். சந்திரனின் பெரிய சுழற்சி முடியும் நாளன்று இது நடக்கும். ஆனால், சீக்கிரம் எதிர்ப்புக்கு உள்ளாவார்.’- இதன்படியே லூயி பாஸ்டர், வாயு மண்டலத்தை பாதிக்கும் கிருமிகளைக் கண்டறிந்தார். பின்னர் 'ஹைட்ராபோபியா' நோய்க்கு இவர் கண்டுபிடித்த ஊசி பலத்த எதிர்ப்புக்குள்ளானது.

முசோலினி

`பாமர மக்களிடையே அந்த நீசன் விவாதப் பொருளாக இருப்பான். மிகவும் கீழ்மட்ட குடும்பத்தில் பிறந்து, இத்தாலியை ஆளும் நிலையை அடைவான். தன்னுடைய கட்சியினருக்கு துரோகமிழைத்து ஆட்சியுரிமையைக் கைப்பற்றுவான்' - இது முசோலினியைக் குறிக்கிறது.

இந்தியாவைப் பற்றி நாஸ்ட்ரடாமஸ் சொன்னவை...

இந்திரா காந்தி

'மூன்று புறம் கடல் சூழ்ந்த நாட்டில், பெரும் அதிகாரம்கொண்ட பெண்மணி எதிர்க்கட்சிகள் ஒற்றுமை இன்றி இருப்பதால் அதிகாரத்தை மீண்டும் பெறுவார். தனது சொந்த மெய்க்காப்பாளர்களாலேயே அவர் 67-ம் வயதில் கொல்லப்படுவார். நூற்றாண்டு முடிய 16 ஆண்டுகள் இருக்கும்போது இது நடக்கும்' என்று கூறியிருக்கிறார் நாஸ்ட்ரடாமஸ். எமர்ஜென்ஸியால் தேர்தலில் தோற்றுப்போன இந்திரா காந்தி எதிர்க்கட்சிகள் ஒற்றுமை இல்லாமல் தமக்குள் சண்டை போட்டுக்கொண்டதால் மீண்டும் ஆட்சியைக் கைப்பற்றியதையும், 1984-ம் ஆண்டில் அவர் சொந்த மெய்க்காப்பாளர்களில் ஒருவனால் சுடப்பட்டதையும் இது குறிக்கிறது.

இந்திரா காந்தி

நேதாஜி

`தன்னுடைய நாட்டைவிட்டு, அந்நிய நாடுகளில் சுற்றிக்கொண்டிருப்பவர். ஓர் இந்திய தலைவர். தனது நாட்டின் விடுதலைக்காக அவர் பல நாடுகளுக்கும் செல்வார். ஒரு விடுதலைப் படையை உருவாக்கி ஆளும் அரசை எதிர்ப்பார். இந்த தலைவர் விமான விபத்தில் கொல்லப்படுவார்.’ - இதுவும் உண்மையானது.

மகாத்மா

`இந்தியாவின் சிறந்த தலைவர் ஒருவர் பாமர மக்களிடம் கருணை கொண்டவராக இருப்பார். தன்னுடைய அறிவால் மாற்றத்தை ஏற்படுத்துவார். ஆனால், துரதிர்ஷ்டவசமாகக் கொல்லப்படுவார். நாடே துயரக் கடலில் மூழ்கும்.’ - இந்தக் கூற்றும் அப்படியே நடந்தது.

சிலர், `நாஸ்ட்ரடாமஸ் கூறியது பொய்’ என்று கூறுகின்றனர். தன் நூலை சிலர் சுயநலத்துக்காகப் பயன்படுத்துவார்கள் என்று கருதி தனது கணிப்புகளை புதிர்போல் செய்யுள் வடிவில் அமைத்தார் நாஸ்ட்ரடாமஸ். பிற்காலத்தில் மொழிபெயர்ப்பாளர்கள் சரியாக மொழிபெயர்க்காததே தவறு ஏற்படுவதற்கு அடிப்படைக் காரணம் என்று அறிவியலாளர்கள் கூறுகின்றனர். `இந்தியா 21-ம் நூற்றாண்டில் வல்லரசாக மாறும்’ என்றும் அவர் கூறியிருக்கிறார்.

https://www.vikatan.com

  • தொடங்கியவர்

ஆழம் அதிகமானால் அப்பளம்போல உடையும் நீர்மூழ்கிக் கப்பல்... ஏன்? #Submarine

 
 

நீர்மூழ்கி

கடலில் எதிரிகளுக்கு உண்மையான ராட்சனாக வலம் வருபவன் நீர் மூழ்கிக் கப்பல்.  நீர்மூழ்கி கப்பலால்,  அறிவியல் முறைகளை பயன்படுத்தி நீருக்கு உள்ளேயே இருந்து ஏவுகணைகளை தாக்கவும் முடியும். ஒரு வேளை ,சில அறிவியல் விதிகளை தெரியாமல் பயன்படுத்தினால், அதே அறிவியலால் அழிவு நிச்சயம். 

 

எந்த மாதிரியான விதி என்று பின் பார்ப்போம். அதற்கு முன்  எப்படி நீருக்குள் மூழ்கிறது, வேலை செய்கிறது என்பதை அறிந்துகொள்வோம்.

ஆரம்பம் : 

1620ல் தொடங்கி, பலப்பல வளர்ச்சிகளை கண்டு முழு அந்தஸ்து பெற்றது முதல் உலகப் போரில் தான்.  சில மணி நேரம் மட்டும் மூழ்கக் கூடிய நிலையிலிருந்து 6 மாதங்கள் வரை நீருக்குள் இருக்கும் வரை தொழில்நுட்பம் வளர்ச்சியடைந்துள்ளது.

எப்படி மிதக்கிறது:

தற்போது 6ம் வகுப்பில் படித்த ஆர்க்கிமிடிஸ் தத்துவத்திற்கு வருவோம். தண்ணீரில் ஒரு பொருள் தன் எடையை விட அதிக எடையுடைய நீரை வெளியேற்றினால் மட்டுமே அப்பொருள் நீரில் மிதக்கும். இந்தத் தத்துவத்தின் அடிப்படையில்தான் கப்பல்கள் மிதக்கின்றன.

எடுத்துக்காட்டாக, ஒரு நாணயத்தை தண்ணீரில் தூக்கிப் போட்டால் அது உள்ளே மூழ்கி விடும். அதாவது அது எடைகேற்ப அளவான நீரை வெளியேற்ற வில்லை. அதனால் தான் மூழ்கி விடுகிறது. அதே போல் நீர்மூழ்கி கப்பல் வடிவம் எவ்வித மாற்றமுமின்றி நீரின் மேற்பரப்பில் மிதக்கும் வகையில் உருவாக்கப்படுகிறது. நீர்மூழ்கி கப்பல் என்றால், நீரில் மூழ்க வேண்டுமல்லவா ஆக, நீர் மூழ்கி கப்பலின் எடைய கூட்டினால், அதிக எடைகொண்ட நீரை வெளியேற்றாமல் நாணயத்தை போல் நீரில் மூழ்கும். 

ஆனால் எவ்வளவு மீட்டர் அல்லது அடிவரை மூழ்க வேண்டும் என்பதை முடிவு செய்ய நாம் சரளை தொட்டிகளை (Ballast tank) ஐ பயன்படுத்துகிறோம். இந்தத் தொட்டிகள் நீர் மூழ்கி கப்பல்களை சுற்றி வடிவமைக்கப்பட்டிருக்கும். இது காற்றால் நிரப்பப்பட்டிருக்கும். சுற்றி காற்று இருப்பதால் நீரில் மிதக்கும். காற்றைவெளியேற்றினால் அந்த இடத்தில் நீரானது நிரம்பும். இப்படி நிரம்பினால் எடை அதிகரிக்கும். நீரில் மூழ்க தொடங்கும். 

மேலும் forward trim tank & Rear trim tank மூலம் ஆழத்தின் அளவை  கூட்டவும் முடியும் , குறைக்கவும் முடியும்.  ஆழக்கட்டுப்பாட்டு தொட்டிகள் (Depth Control Tanks) இதைக் கண்காணிக்க பயன்படுகிறது.

கப்பல்

இரு வாசிகள் : 

"6 மாசமா எப்படிப்பா தண்ணிக்குள்ளே இருக்க முடியும்? சுவாசிக்க ஆக்ஸிஜன் வேணாமா?" என்று கேட்டால், அறிவியலில் இதற்கும் பதில் உண்டு. இதற்கு நாம் 8ம் வகுப்பு படித்த மின்னாற் பகுப்பு (Electrolysis) பயன்படுத்தினால் போதும். இது நீரை(H20) இரண்டாக பிரிந்து ஹைட்ரஜனாகவும், ஆக்ஸிஜனாகவும் தருகிறது.

மேலும், கட்டுப்பாட்டு கருவி மூலம் தேவையில்லாத CO2 நீக்கப்படுகிறது. குடிப்பதற்கு, எதிர் சவ்வூடு பரவல் (Reverse osmosis) முறை பயன்படுத்தப்படுகிறது.

நொறுங்குமா ?:

பல அறிவியல் விதிகளில் Boyle's law முக்கியமானதாகும். அதாவது விதியின் மூலம் PV =K 

p என்பது அழுத்தம் (pressure)

 V என்பது கன அளவு(volume)

K என்பது மாறிலி (Constant).

P = 1/v. ஆக அழுத்தம் அதிகரிக்க அதிகரிக்க கன அளவு குறையும்.  அழுத்தமானது கன அளவிற்கு எதிர்த்தகவில் (Inversly proportional )உள்ளது.

சில எடுத்துக்காட்டுகளுடன் விவாதிப்போம்.

1.ஒரு காற்று நிரப்பப்பட்ட பலூனை எடுத்துக்கொள்வோம். உங்கள் இரண்டு கையால் அதை அழுத்தும் போது கன அளவு குறையும்.  மேலும் அழுத்தத்திற்கு உட்படுத்தினால் அது வெடிக்கும். ஆக அழுத்தம் அதிகரித்தால் கன அளவு குறையும். இது நீர் மூழ்கி கப்பலுக்கும் பொருந்தும். நீருக்குள் செல்ல செல்ல அழுத்தம் அதிகரிக்கும். 

ஆகவே , ஒவ்வொரு நீர் மூழ்கி கப்பலுக்கும் Crash level point இருக்கும். அதற்கு மேல் அது பலூனை போல் சிதறி விடும். 

உதாரணமாக , Crash Level சுமார் 400 மீட்டர்  ஆழம்வரை தான் உள்ளே செல்ல முடியும் என்று வைத்துக்கொள்வோம். ஒரு வேளை அதற்கு மேல் 500, 600 மீட்டர் சென்று விட்டால் சுமார் தோராயமாக 20000 டன் அழுத்தத்தை கொடுக்கும். அதாவது ஒரு முட்டை மீது ஒரு லாரி ஏறி நிற்பது போல் என்று நினைத்து பாருங்கள். 

கப்பலின் பயன்படுத்தக் கூடிய வெளிப்புற உலோகத்தை பொறுத்தே இது கணக்கிடப்படுகிறது .எஃகு வை பயன்படுத்தினால் 4 Mpa வரையிலும்,Titanium பயன்பத்தினால் 10 mpa வரை தாங்க கூடும். ஆக, நீர்மூழ்கி கப்பலை பயன்படுத்துவதற்கு இது எவ்வளவு ஆழம் வரை செல்ல முடியும் என்பதை இது போன்ற அறிவியல் விதிகளை கணக்கில் எடுத்துக் கொண்டு தான் முடிவு செய்யப்படுகிறது

https://www.vikatan.com

  • தொடங்கியவர்

127 மில்லியன் டாலர் வருமானம்... யூடியூப் மூலம் மில்லினர்கள் ஆன ட்ரெண்டிங் ஸ்டார்கள்!

 
 

2017-ம் ஆண்டு நிச்சயம் யூடியூபுக்கு பொற்காலம்தான். காரணம், இதற்கு முன் இல்லாத அளவுக்கு பயனாளர்களின் எண்ணிக்கையும், புதிய வீடியோக்களின் எண்ணிக்கையும் பலமடங்கு அதிகரித்துவிட்டது. முன்பு இருந்ததுபோல, டேட்டா தீர்ந்துவிடுமே என்ற கவலையும் ஜியோவின் வருகைக்குப் பின்னர் மாறிவிட்டதால், மொபைலில் வீடியோ பார்ப்பவர்களின் எண்ணிக்கையும் உயர்ந்துள்ளது. தமிழ், தெலுங்கு, இந்தி, ஆங்கிலம் என எல்லா மொழிகளிலும் வீடியோக்கள் நிரம்பிவழிவதால், இந்தியாவின் எல்லா ஏரியாவிலும் இருந்தும் யூடியூபுக்குப் பயனாளர்கள் குவிகின்றனர். இப்படி, பயனாளர்களால் யூடியூப் பெற்றுள்ள வளர்ச்சி ஒருபுறமிருக்க, இன்னொருபுறமோ, யூடியூப் மூலம் மில்லியன் கணக்கில் பணம் சம்பாதித்து ஆச்சர்யப்படுத்திக் கொண்டிருக்கின்றனர் சிலர். இந்த வருடம் யூடியூப் மூலம் அதிகவருமானம் பெற்றவர்களின் பட்டியலை, ஃபோர்ப்ஸ் பத்திரிகை வெளியிட்டுள்ளது. அதில் முதலிடம் பெற்றுள்ள டேனியல் மிடில்டன், கடந்த ஜூன் மாதம் முதல் இந்த ஆண்டு ஜூன் மாதம் வரைக்கும் யூடியூப் மூலம் சம்பாதித்துள்ள தொகை எவ்வளவு தெரியுமா? 16.5 மில்லியன் டாலர்கள். (₹106.5 கோடி)

யூடியூப்

 
 

இவர்களும் பிரபலங்கள்தான்!

டேனியலின் DanTDM யூடியூப் சானலுக்கு இருக்கும் சப்ஸ்கிரைபர்களின் எண்ணிக்கை சுமார் 1.7 கோடி. கேமிங் வீடியோக்கள்தான் இவரின் ஸ்பெஷல். இவருக்கு அடுத்த இடத்தில் இருக்கும் இவான் ஃபாங் சம்பாதித்த தொகை 15.5 மில்லியன் டாலர்கள். இவரும் கேமர்தான். இந்த டாப் 10 பட்டியலில் இருக்கும் யூடியூப் பிரபலங்கள் மொத்தமாக, ஒரு ஆண்டில் சம்பாதித்த தொகை மட்டும் 127 மில்லியன் டாலர்கள். இந்தப் பட்டியலில் 8-வது இடத்தில் இருக்கும் ஒரு நபர்தான், இந்த பட்டியலின் ஒட்டுமொத்த ஆச்சர்யம். அந்த நபர் ரியான். இவரின் வயது 6. ஆம்... 6 வயது சிறுவனான ரியான்தான் கடந்த ஆண்டு 11 மில்லியன் டாலர்களை யூடியூப் மூலம் ஈட்டியிருக்கிறான். இத்தனைக்கும் ரியான் செய்வது பொம்மைகளை ரிவ்யூ செய்வது மட்டுமே. யூடியூபின் ட்ரெண்டிங் ஸ்டாரான, ரியானின் ரிவ்யூக்காகவே காத்திருக்கின்றனர் கோடிக்கணக்கான ரசிகர்கள். ரியானின் 'Ryan ToysReview' என்ற சானலுக்கு இருக்கும் மொத்த சப்ஸ்கிரைபர்களின் எண்ணிக்கை மட்டுமே 1 கோடி.

4 வயதில் தொடங்கிய யூடியூப் சானல்

ரியான் சின்ன வயதில் இருந்தே பொம்மைகளின் பிரியன். அவைகுறித்து யூடியூபில் வரும் வீடியோக்களுக்கு ரசிகன். இதைக்கண்ட ரியானின் பெற்றோர்களுக்கு உதித்த ஐடியாதான், இந்த யூடியூப் சானல். உடனே பொம்மைகளை ரிவ்யூ செய்வதற்காக ஒரு சானல் துவங்கப்பட்டது. 2015-ம் ஆண்டு மார்ச் மாதம் துவங்கப்பட்ட இந்த சானல், மிகக் குறுகிய காலத்திலேயே அமெரிக்காவில் வைரலாகத் தொடங்கியது. உடனே பிரபலமாகிவிட்டான் ரியான். வீடியோவில் ரியான் மட்டுமே ரிவ்யூ செய்தாலும், இந்த நிகழ்ச்சிகளை முழுக்க முழுக்கத் திட்டமிடுவது ரியானின் அம்மாதான். இந்த சானலின் வளர்ச்சியால், ரியானின் அம்மா, தான் பார்த்துவந்த ஆசிரியர் பணியையே விட்டுவிட்டார். தற்போது அமெரிக்காவின் மிகவும் பிரபலமான சானல் ரியானுடையதுதான்.

இத்தனைக்கும் ஒரு நேர்த்தியான ஸ்டூடியோ, திட்டமிடப்பட்ட உரையாடல்கள் என எந்த கமர்ஷியல் அம்சமும் ரியானின் வீடியோக்களில் இருக்காது. ஆனால், 'அதெல்லாம் எதுக்கு? ரியானின் மழலை மொழியும், குறும்பு சேட்டைகளுமே எங்களுக்குப் போதும்' என கமென்ட்ஸ் தட்டுகின்றனர் ரியானின் ஃபேன்ஸ். 

ரியான்

யூடியூப் மில்லினர்கள்

 

6 வயது மில்லினரான ரியான் ஒரு உதாரணம்தான். இப்படி இன்னும் எத்தனையோ யூடியூப் நட்சத்திரங்கள், இதன்மூலம் அதிகளவில் வருமானம் ஈட்டிவருகின்றனர். இப்படி, டிவி மற்றும் பிறஊடகங்களுக்கு இணையாக யூடியூப் வளர்ந்துவந்தாலும், இங்கே இருக்கும் முக்கியமான சிக்கல்களில் ஒன்று, போலியான மற்றும் தவறான வீடியோக்களும் அதிக கவனம் பெறுவது. யூடியூப் ட்ரெண்டிங் வீடியோக்களில் அதிகமாக இடம்பெறும் வீடியோக்களை கவனித்தாலே இதனை உணர்ந்துகொள்ள முடியும். யார் வேண்டுமானாலும் சானல் ஆரம்பிக்கலாம்; யார் வேண்டுமானாலும் தன் வீடியோவை வெளியிடலாம் என்பதுதான் யூடியூபின் பெரும்பலம். ஆனால், இந்த சுதந்திரமே பலருக்கும் வசதியாகிவிடுகிறது. இதனால்தான் தேவையற்ற அவதூறுகள், தவறான கருத்துகளை பரப்பும் வீடியோக்கள், வதந்திகள் போன்றவையும் யூடியூபில் வைரலாகின்றன. பயங்கரவாதம் மற்றும் பாலியல் ரீதியான தவறான வீடியோக்களைத் தடைசெய்ய, AI மூலம் யூடியூப் முயற்சி செய்துவருகிறது. ஆனால், இதுமாதிரியான தவறான வீடியோக்களுக்கு எவ்விதக் கட்டுப்பாடுகளும் இல்லை. இந்த விஷயத்தில் மட்டும் யூடியூப் கூடுதல் கவனத்துடன் செயல்பட்டால், வருமானம் பெறும் இடமாக மட்டுமின்றி, ஆரோக்கியமான ஒரு ஊடகமாகவும் யூடியூப் இருக்கும்.

https://www.vikatan.com

  • தொடங்கியவர்

மிரள வைத்த ஐந்து மீட்டர் மலைப் பாம்பு

ஆஸ்திரேலியா: 5 மீட்டர் பாம்புடன் புகைப்படம் எடுத்த அதிகாரிபடத்தின் காப்புரிமைQUEENSLAND POLICE

ஆஸ்திரேலிய காவல்துறை அதிகாரி ஒருவர், 5 மீட்டர் நீள மலைப்பாம்பை, ரோந்துப்பணியின் போது பார்த்த புகைப்படம் இணையத்தில் வைரலாகியுள்ளது.

புகைப்படத்திலுள்ள அதிகாரியும், அவரின் சக அதிகாரியும், குவின்ஸ்லாந்து பகுதியின் வடக்கு பகுதியில், ரோந்துப்பணியில் ஈடுபட்ட போது, இந்த பாம்பை கண்டுள்ளனர் என்று காவல்துறை தெரிவித்துள்ளது.

இந்த வாய்ப்பை பயன்படுத்திக்கொண்ட அதிகாரி, அந்த பாம்பு ஊர்ந்து செல்லும் வேளையில் புகைப்படம் எடுத்தார்.

"அந்த பாம்பு ஐந்து மீட்டருக்கும் அதிகமான நீளம் இருக்கும் என்று நிச்சயமாக கூறலாம். ஒரு அளக்கும் கருவியை அருகில் கொண்டுசென்று, அளக்கும் வகையிலான உயிரி அல்ல அது" என்று அந்த காவல்துறை அதிகாரி, பிபிசியிடம் கூறியுள்ளார்.

இந்த ஆண்டின் தொடக்கத்தில் எடுத்த இந்தப் புகைப்படத்தை, குவின்ஸ்லாந்து காவல்துறை பகிர, திங்கட்கிழமை மிகவும் அதிகமான சமூகவலைதளங்களில் பரவியது.

 

Some things you get trained for, some things you can’t!

இந்த புகைப்படத்தை இரண்டு மில்லியன் மக்கள் பார்த்ததோடு, பத்தாயிரம் பேர் இது குறித்து கருத்து கூறியுள்ளனர்.

"நாங்கள் சாதாரண விஷயங்களை செய்வதில்லை" என்று அந்த பதிவில் குறிப்பிடப்படுகிறது.

"உங்களின் பணிநேரத்தில் நீங்கள் எதைத்தாண்டி வருவீர்கள் என்பது உங்களுக்கு எப்போதுமே தெரியாது"

கைரன்ஸ் நகரின் வடக்குப்பகுதியில், 345 கி.மீட்டர் தொலைவில், வுஜுல் வுஜுல் என்ற இடத்தின் அருகில் அதிகாரிகள் இந்த பாம்பை பார்த்தனர்.

ஸ்கிரப் பைத்தான் என்ற இந்த வகை பாம்புகள், ஏழு மீட்டர், அதாவது 23அடி வரையில் வளரக்கூடியது என்கிறது ஆஸ்திரேலிய உயிரியல் பூங்கா.

http://www.bbc.com/

  • தொடங்கியவர்

தினமும் 40 கேன் கோகோ-கோலா குடித்தவரின் இன்றைய நிலை! சுவைக்கு அடிமையானதால் வந்த ஆபத்து!!

 

 
pri_63022031

 

ஷேன் டிரென்ச் என்னும் இந்த நபர் தினமும் 40 கேன் அதாவது 13 லிட்டர் கோகோ-கோலா-வை குடித்து வந்துள்ளார். 21-வயதே ஆன இவர் இதன் சுவைக்கு அடிமையாகி நாள் ஒன்றிற்கு இவ்வளவு சர்க்கரை கலவையைக் குடித்த காரணத்தால் இவரது உடல் எடை 203 கிலோவைத் தொட்டது.

மீன் சாப்பிடுவதாக இருந்தால் கூட அந்த மீனை கோகோ-கோலாவை ஊற்றித் தான் இவர் கழுவி சமைப்பாராம். காலை, மதியம், இரவு என எப்போது உணவு உண்டாலும் தண்ணீருக்கு பதிலாக இதைத் தான் குடிப்பாராம். இவருடைய இந்த கோகோ-கோலா வெறி நாளொன்றிற்கு 5,250 கெலோரிகளை தந்தது. இதனால் இவரது உடல் அதிக பருமனடைந்ததோடு, கோக்கில் இருக்கும் அதிக சர்க்கரை இவருக்குப் பல ஆரோக்கிய சீர்கேட்டையும் தந்தது.

இந்த அதீத உடல் எடையால் நடக்க, நீண்ட நேரம் நிற்க, படிக்கட்டுகள் ஏறி, இறங்க என அனைத்து வேலைகளும் இவருக்குக் கடினமானது. சில சமயங்களில் தன்னுடைய வேலைகளைக் கூட இவரால் செய்து கொள்ள முடியவில்லை. இதற்காக மருத்துவர்களை ஆலோசித்த போது தான் இவருக்கான அதிர்ச்சி காத்திருந்தது.

e4a87aa144d038358b5c24fde521b5e6.jpg

இவரது உடலை முழுமையாகப் பரிசோதித்த மருத்துவர்கள் இவர் இந்தப் பழக்கத்தை இப்படியே தொடர்ந்தால் இன்னும் சில நாட்களில் இவர் இறந்து விடுவார் என்று தெரிவித்துள்ளனர். உயிர் மீது வந்த பயத்தால் எப்படியாவது இந்தப் பழக்கத்தில் இருந்து மீள வேண்டும் என்று முடிவெடுத்த ஷேனுக்கு அப்போது தான் உண்மையான சவால் ஒன்று வந்தது. இதன் சுவைக்கு அடிமையாகிப் போனதால் இவரால் இந்தப் பழக்கத்தை கை விட முடியாமல் தவித்தார்.

தன்னுடைய சுவை அரும்புகளை ஏமாற்ற இவர் ஷான் ஒரு முடிவெடுத்து, சாதாரண கோகோ-கோலாவுக்கு பதிலாக சர்க்கரை சேர்க்கப்பட்டாக கோகோ-கோலா ஸீரோ-வை குடிக்கத் துவங்கினார். இதனால் இவர் உடலின் சர்க்கரை அளவு மிகவும் குறைந்ததால் மிகவும் சோர்வடைந்து செயலிழந்து போனார். ஆனால் அதையெல்லாம் பொருட்படுத்தாமல் போராடி 69 கிலோ எடையைக் குறைத்தார்.

பின்னர் மெல்ல மெல்ல மொத்தமாக கோக் குடிப்பதையே நிறுத்தினார். முன்னர் இருந்த உடல் எடையைச் சரி பாதியாகக் குறைத்ததால் இவருடைய ஆரோக்கியம் சற்று தேரியது. 2016-ம் ஆண்டு இரைப்பையில் பைப்பாஸ் அறுவை சிகிச்சையை இவர் செய்து கொள்ள வேண்டும் என்று மருத்துவர்கள் அறிவுறுத்தினர், ஆனால் இந்தத் தீய பழக்கத்தை விடுத்து சில உடற் பயிற்சிகளின் மூலமே எந்தவொரு அறுவை சிகிச்சையும் செய்யாமல் இவர் குணம் அடைந்ததைக் கண்டு மருத்துவர்களே வியந்து போனார்கள். 

af8e680d8eb2bc7ab326db3679525c25.jpg

இவருடைய இப்போதைய உடல் எடை 127 கிலோ, இதையும் குறைத்து 100 கிலோவிற்கு வரவே தான் முயற்சி செய்து கொண்டிருப்பதாக இவர் கூறியுள்ளார். கட்டுக்கோப்பே இல்லாத உணவு பழக்கம் நமக்கு எமனாய் வந்து அமையும் என்பதற்கு இவருடைய வாழ்க்கை ஒரு நல்ல உதாரணம்.

http://www.dinamani.com

  • தொடங்கியவர்

கூகுளில் இந்தியர்கள் அதிகம் தேடியவை எவை? 7 சுவாரஸ்ய தகவல்கள்

ஜல்லிக்கட்டுபடத்தின் காப்புரிமைARUN SANKAR

தேடுதல் தளமான கூகுள் தனது தேடுதல் பொறியில் இந்த ஆண்டு உலகம் முழுவதும் எந்தெந்த நாட்டில் எந்தெந்த விஷயங்கள் குறித்து மக்கள் அதிகளவு தேடியிருக்கிறார்கள் என்பது குறித்து பட்டியலிட்டுள்ளது.

இர்மா சூறாவளிபடத்தின் காப்புரிமைGERBEN VAN ES

1. உலகம் முழுவதும் அதிகம் தேடப்பட்டது இர்மா சூறாவளி (HURRICANE IRMA) குறித்தே. இரண்டாவது இடத்தில் ஐஃபோன் 8 (iPhone 8), மூன்றாவது இடத்தில் ஐஃபோன் எக்ஸ் (iPhone X) ஆகியவை உள்ளன. இந்திய தேசிய கிரிக்கெட் அணி குறித்து உலகம் முழுவதும் அதிகம் தேடியுள்ளதால் இந்த வார்த்தையும் டாப் 10 பட்டியலில் பத்தாவது இடத்தில் இடம்பெற்றிருக்கிறது.

2. உலகம் முழுவதும் அதிகம் தேடப்பட்ட பாடல்கள்/பாடல் வரிகள் குறித்த பட்டியலில் டெஸ்பசீட்டோ (Despacito), ஷேப் ஆஃப் யூ (Shape Of You) ஆகியவை முறையே முதல் இரண்டு இடங்களை பிடித்துள்ளன. அதிகம் தேடப்பட்ட நடிகர்கள் பட்டியலில் இங்கிலாந்து இளவரசரை மணக்கவுள்ள அமெரிக்க நடிகை மேகன் மார்க்லே முதலிடம் பிடித்துள்ளார்.

உத்தர பிரதேசத் தேர்தல்படத்தின் காப்புரிமைGETTY IMAGES

3. அதிகம் தேடப்பட்ட தேர்தல்கள் குறித்த பட்டியலில் பிரான்ஸ் தேர்தலே உலகம் முழுவதும் அதிகம் தேடப்பட்டதாக உள்ளது. இதற்கடுத்த இரண்டு இடங்களில் ஜெர்மனி பொதுத் தேர்தலும், பிரிட்டன் தேர்தலும் உள்ளன. நான்காவது இடத்தில் உத்தரப் பிரதேச மாநிலத் தேர்தல் உள்ளது.

4. இந்தியாவில் இந்த ஆண்டு அதிகம் தேடப்பட்ட வார்த்தை பட்டியலில், முதலிடத்தில் இருப்பது பாகுபலி 2.. ஐபிஎல் இரண்டாவது இடம் பிடித்திருக்கிறது. தங்கல் திரைப்படம் நான்காவது இடத்தில் உள்ளது.

5. ஒரு விஷயத்தை எப்படிச் செய்ய வேண்டும் என்பது குறித்து கூகுளில் தேடுபவர்கள் மிகவும் அதிகம். உதாரணமாக எப்படி செட்டிநாடு சிக்கன் குழம்பு வைப்பது, எப்படி நிலநடுக்கம் வரும் சமயங்களில் தற்காப்புகளை மேற்கொள்வது என தேடுவார்கள். அது போலவே இந்த ஆண்டு 'எப்படி இதனை செய்ய வேண்டும்' (How To...) என இந்தியர்கள் கூகுளில் தேடிய வாக்கியங்களின் பட்டியலும் வெளியிடப்பட்டுள்ளது.

ஆதாருடன் பான் கார்ட் எண்ணைஇணைப்பது எப்படி? என்பது குறித்தே இந்தியர்கள் அதிகம் தேடியுள்ளார்கள். ஜியோ மொபைலை முன்பதிவு செய்வது எப்படி? இந்தியாவில் பிட்காயின் வாங்குவது எப்படி என்பன உள்ளிட்ட கேள்விகள் அடுத்தடுத்த இடங்களில் உள்ளன.

சன்னி லியோன்படத்தின் காப்புரிமைSTR

6. இந்தியாவில் அதிகம் தேடப்பட்ட நபர்கள் குறித்த பட்டியலில் சன்னி லியோன் முதலிடம் பிடித்துள்ளார். இரண்டாவது இடத்தில் நடிகை அர்ஷிகானும், சப்னா சவுதரி என்ற பெண் மூன்றாவது இடத்திலும் வித்யா வாக்ஸ், திஷா படானி ஆகியோர் அடுத்தடுத்த இடங்களிலும் உள்ளனர்.

ஜல்லிக்கட்டுபடத்தின் காப்புரிமைDELSTR

7. ஒரு விஷயத்தை பற்றி என்ன என்பது குறித்து தெரிந்து கொள்ள இந்தியர்கள் அதிகம் தேடியது எதைத்தெரியுமா ஜிஎஸ்டி குறித்துதான். இரண்டாவது இடத்தில் பிட்காயின் உள்ளது. மூன்றாவது இடத்தில் ஜல்லிக்கட்டு இடம்பெற்றுள்ளது. ஜல்லிக்கட்டு குறித்து அதிகம் தேடிய மாநிலங்களில் முதல் இடத்தில் தமிழ்நாடு உள்ளது. மூன்றாவது இடத்தில் கோவாவும் ஐந்தாவது இடத்தில் காஷ்மீரும் உள்ளன.

http://www.bbc.com/

  • தொடங்கியவர்

மெரினா கலங்கரை விளக்கமும் சில சுவாரஸ்யத் தகவல்களும்..!

 
 

கலங்கரை விளக்கம்

உலகில் கடல் பயணங்கள் தோன்றிய காலங்களிலேயே கலங்கரை விளக்கங்களும் தோன்றிவிட்டன. தூரத்தில் வரும் கப்பல்களுக்குக் கரையைக் காட்டுவதே கலங்கரை விளக்கங்களின் வேலை. எகிப்தின் ‘பாரோஸ் ஆஃப் அலெக்ஸாண்ட்ரியா’ மற்றும் கிரீஸின் ‘கொலாஸஸ் ஆஃப் ரோட்ஸ்’ ஆகிய இரண்டு கலங்கரை விளக்கங்கள் பண்டைய கால உலக அதிசயங்களில் இடம்பெற்றிருந்தன. 
தமிழ்நாட்டில் மொத்தம் 25 கலங்கரை விளக்கங்கள் உள்ளன. அவற்றுள் சென்னை மெரினா கடற்கரையில் அமைக்கப்பட்டிருப்பது முக்கியமான ஒன்றாகும். சுமார் நாற்பத்து ஐந்து அடி உயரத்தில் பத்து தளங்களுடன் கட்டப்பட்ட இது சென்னையின் நான்காவது கலங்கரை விளக்கம் ஆகும்.

 

சென்னையின் முதல் கலங்கரை விளக்கம் 1796 ஆண்டு ‘ஆபீஸர்ஸ் மெஸ் கம் எக்ஸ்சேஞ்ச் பில்டிங்’ன் (தற்போதைய செயின்ட் ஜார்ஜ் கோட்டையில்) மொட்டை மாடியில் அமைக்கப்பட்டது. தற்போது இருப்பது போல் நவீன தொழில்நுட்பத்துடன் இல்லாமல் வெளிச்சம் தரும் பெரிய விளக்காக மட்டுமே அது இருந்தது. இது 1841 வரை செயல்பட்டது. பின்னர் அது செயின்ட ஜார்ஜ் கோட்டையாக மாற்றப்பட்டது. 
இரண்டாவது கலங்கரை விளக்கம் முப்பத்து எட்டு அடி ஊதா நிற கோபுரம். செயின்ட் ஜார்ஜ் கோட்டையின் வடக்கில் பிரத்யேகமாக அமைக்கப்பட்டது. இது 1884ஆண்டு  ஜனவரி ஒன்றாம் தேதி முதல் செயல்படத் தொடங்கியது. அந்த இடம் தற்போதைய உயர் நீதிமன்ற வளாகத்தில் உள்ளது. 1894 ஆம் ஆண்டு வரை செயல்பட்ட இது அர்பன் விளக்குகள் மற்றும் பிரதிபலிப்பான்களுடன் கூடிய ஒளிரும் விளக்காக அமைக்கப்பட்டிருந்தது.

மூன்றாம் கலங்கரை விளக்கம் 1894 ஆம் ஆண்டு, அப்போது புதிதாக கட்டப்பட்ட சென்னை உயர் நீதிமன்றத்தின் மத்திய பிரதான குவிமாடத்தில் அமைக்கப்பட்டிருந்தது. இந்த இந்தோ-சரசெனிக் கட்டடக்கலை பாணியானது கலங்கரை விளக்க உபகரணங்கள் அமைப்பதற்கு ஏதுவான முறையில் வடிவமைக்கப்பட்டிருந்தது. 1894ஆம் ஆண்டு ஜுன் 1ஆம் தேதி முதல் செயல்பாட்டுக்கு வந்த இது கடல் மட்டத்திலிருந்து 175 அடி உயரத்தில் அமைக்கப்பட்டிருந்தது. மின் சக்தியின் வருகைக்கு முன்னால் மண்ணெண்ணெய், நீராவி விளக்குகளையே இது பயன்படுத்திக் கொண்டிருந்தது.

Light house


சென்னையின் நான்காம் கலங்கரை விளக்கமாக தற்போது இருக்கும் நாற்பத்து ஆறு அடி உயர சிவப்பு மற்றும் வெண்மை நிற பட்டைகளுடன் கூடிய முக்கோண கட்டடம். இது 1977ஆம் ஆண்டு ஜனவரி 10ஆம் தேதி முதல் செயல்பாட்டுக்கு வந்தது. இந்தியாவிலேயே நகரத்தின் எல்லைக்குள்ளேயே இடம் பெற்றிருக்கும் ஒரே கலங்கரை விளக்கம் இதுவே. மொத்தம் பத்து தளங்களுடன் கூடிய இந்தக் கலங்கரை விளக்கத்தில் ஒன்பதாவது தளத்தில் மக்கள் பார்வையிடுவதற்காக வியூவிங் கேலரி ஒன்று அமைக்கப்பட்டிருக்கின்றது. அங்கே கம்பிகள் அமைக்கப்பட்டு பார்வையாளர்கள் பாதுகாப்பாக நின்று ரசிக்கும்படி அமைக்கப்பட்டிருக்கின்றது. பாதுகாப்புக் காரணங்கள் கருதி, முன்னர் பார்வையாளர்கள் அனுமதிக்கப்படாமல் இருந்த நிலையில் 2013ஆம் ஆண்டு நவம்பர் 14ஆம் தேதி முதல் மீண்டும் குறிப்பிட்ட நேரம் மட்டும் பார்வையாளர்களுக்காகத் திறக்கப்படுகிறது. 

Light house


இந்தக் கலங்கரை விளக்கத்தின் பத்தாவது தளத்தில் உயர் பாதுகாப்பு ரேடார் அமைக்கப்பட்டுள்ளதால் பார்வையாளர்கள் பத்தாம் தளத்திற்கு அனுமதிக்கப்படுவதில்லை. கீழே இருந்து மேலே செல்வதற்கு அதிவேக மின் தூக்கியும்(lift) இங்குள்ளது. இருபத்து எட்டு கடல் மைல்கள் வரை இதன் ஒளி தெரியும். மேல் தளத்தில் அமைக்கப்படுள்ள ரேடார் மூலம் 100 கிலோமீட்டர் வரை கடலில் உள்ள படகுகள் கப்பல்களை கண்டறிய முடியும்.

இந்தக் கலங்கரை விளக்கத்தின் தரை தளத்தின் பின்னால் பாரம்பர்ய அருங்காட்சியகம் ஒன்றும் உள்ளது. இங்கு இதற்கு முன்னால் அமைக்கப்பட்டிருந்த கலங்கரை விளக்கத்தில் பயன்படுத்தப்பட்ட தொழில்நுட்பங்களைக் காட்டும் கருவிகள் இடம்பெற்றுள்ளன. அதே போல் சென்னை கலங்கரை விளக்கங்களின் ஓவியங்களும் இடம் பெற்றிருக்கின்றன.

மெரீனா

ஒன்பதாம் தளத்தில் கேலரியிலிருந்து பார்க்கும் பொழுது சென்னை மாநகரமும் மெரினா கடற்கரையும் இணைந்து அழகாகக் காட்சியளிக்கின்றது. கலங்கரை விளக்கத்தைக் காண வந்திருந்த சுற்றுலாப் பயணிகளிடம் அவர்களின் அனுபவங்களைக் கேட்டோம்.
“நாங்க மைசூருலிருந்து வர்றோம். இந்த லைட் ஹவுஸை சுத்திப் பார்த்தது நல்லா இருந்துச்சு. மேல கேலரிலதான் இடம் ரொம்ப கம்மியா இருந்ததால வசதியா நின்னு பார்க்க முடியல. மத்தபடி செம” எனத் தங்கள் அனுபவத்தை பகிர்ந்துகொண்டனர் மேரி குடும்பத்தினர்.
அங்கே நேவிகேஷன் ஆபீஸராகப் பணிபுரியும் நீலகண்டன் அவர்களிடம் பேசினோம், ”வழக்கமா தினமும் நானூறுலிருந்து ஐநூறு பேர் வரை வருவாங்க. விடுமுறை நாள்கள்னா 800 பேர் வருவாங்க. இந்த லைட் ஹவுஸ்க்கு ”சிறந்த லைட் ஹவுஸ்”னு தமிழ்நாடு சுற்றுலாத் துறையிலிருந்து போன வருஷம் அவார்டு குடுத்தாங்க” என முடித்தார். 

சென்னையில் மறக்காமல் பார்க்க வேண்டிய இடங்களில் இந்தக் கலங்கரை விளக்கமும் ஒன்று.

https://www.vikatan.com

  • தொடங்கியவர்

முகத்தை வைத்து தனி நபர்களை அடையாளம் காணும் தொழில்நுட்பம்

ஜெர்மனியில் முகத்தை வைத்து தனி நபர்களை அடையளம் காணும் தொழில்நுட்பம், தலைநகர் பெர்லின் மெட்ரோ ரயில் நிலையங்களில் அறிமுகமாகியுள்ளது. ஆனால், அந்த தொழில்நுட்பம், கண்காணிப்பாளர்களால் தவறாகப் பயன்படுத்தப்படக் கூடாது என்பது பொதுமக்களின் கவலை.

  • தொடங்கியவர்

இன்பாக்ஸ்

 

 இலங்கை அணிக்கெதிரான டி-20 தொடருக்குத் தேர்வு செய்யப்பட்டுள்ளார் தமிழக வீரர் வாஷிங்டன் சுந்தர். சீனியர் வீரர்கள் பலருக்கும் ஓய்வு கொடுத்துவிட்டு, இளம் வீரர்களுக்கு வாய்ப்பு வழங்கியுள்ள பி.சி.சி.ஐ, இந்த 18 வயது இளைஞரையும் டிக் அடித்துள்ளது. 2016 ஐ.பி.எல் தொடரில் பவுலிங்கில் அசத்திய வாஷிங்டன், `டி.என்.பி.எல் போட்டியின் டாப் ரன் ஸ்கோரர்’, `இரண்டாவது பெஸ்ட் பௌலர்’ என ஆல் ரவுண்டராக அசத்தித் தொடர் நாயகன் விருதையும் வென்றார். இலங்கைக்கு எதிராகக் களமிறங்கினால், டி-20 போட்டிகளில் இந்திய அணிக்காக ஆடிய இளம் வீரர் இவர்தான்! வாஷிங்டன்னா சும்மாவா!

p35a_1513077195.jpg

தியாகராஜன் குமாரராஜா இயக்கிவரும் `சூப்பர் டீலக்ஸ்’ தனித்தனியான ஐந்து கதைகளை கொண்ட திரைப்படம். சமீபத்தில்தான் மிஷ்கின், அவர் சம்பந்தப்பட்ட காட்சிகள் சிலவற்றை நடித்துக்கொடுத்திருக்கிறார். விஜய்சேதுபதி, ஃபஹத் ஃபாசில், சமந்தா, டி.ஆர் என்று பெரிய பட்டாளமே இருந்தாலும், இவர்களைவிட முக்கியக் கதாபாத்திரத்தில் ஒரு சிறுவன் நடிக்கிறான். `ஸீ தமிழ்’ தொலைக்காட்சியில் அடிக்கடி தோன்றும் புகழ்பெற்ற குழந்தை நட்சத்திரமான அஷ்வந்த்தான் அந்தச் சிறுவன். சூப்பர் டீமா இருக்கே!

‘மில்லியன் டாலர் பேபி’ க்ளின்ட் ஈஸ்ட்வுட் இயக்கி நடித்த பிளாக்பஸ்டர் திரைப்படம். சிறந்த திரைப்படம் உள்ளிட்ட நான்கு ஆஸ்கர்களை வென்ற திரைப்படம். அதை ரீமேக் செய்யவிருக்கிறது பாலிவுட். க்ளின்ட் ஈஸ்ட்வுட் நடித்த பாத்திரத்தில் `2.0’ வில்லன் அக்‌ஷய் குமார் நடிக்கவிருக்கிறார். படத்தை இயக்கவிருப்பவர் ஏ.ஆர்.முருகதாஸ். ஹிட்டு காம்போ!

முனை ஆற்றில் சென்ற ஆண்டு மார்ச் மாதம் `உலகக் கலை விழா’ நடத்தி அந்த நதியின் வெள்ளச் சமவெளிகளை சேதப்படுத்தியதாகக் குற்றஞ்சாட்டப்பட்டது ஸ்ரீரவிஷங்கரின் வாழும் கலை அமைப்பு. நதியைப் பாழாக்கிய இந்தச் செயலுக்காக இப்போது வாழும் கலை அமைப்பிற்கு 5 கோடி ரூபாய் அபராதம் விதித்திருக்கிறது தேசியப் பசுமை வாரியம். இது நதியின் பாதிக்கப்பட்ட பகுதிகளைச் சரிசெய்வதற்குப் பயன்படுத்தப்படுமாம். பணம்போதவில்லை என்றால் மேலும் ஆகிற செலவையும் வசூலிக்கச் சொல்லியிருக்கிறார் நீதிபதி். தீர்ப்பு... சிறப்பு! 

p35b_1513077220.jpg

ந்தியில் மட்டுமல்லாது, தமிழ், தெலுங்கு என இந்தியா முழுக்கவும், சீனாவிலும் டப் செய்யப்பட்டு வெளியாகி சூப்பர் ஹிட் அடித்த சீரியல் `நாகினி’. முதல் இரண்டு பாகங்கள் ஏற்கெனவே முடிந்து இப்போது மூன்றாவது பாகம் தயாராகிக்கொண்டிருக்கிறது. ஆனால், மூன்றாவது பாகத்தில் நாகினியாக மௌனிராய் நடிக்கப்போவதில்லை என சீரியல் தயாரிப்பாளர் ஏக்தா கபூர் அறிவித்துள்ளார். இந்த முறை புதுமுகம் ஒருவரை நாகினியாக அறிமுகப்படுத்தப்போகிறார்களாம். இந்தச் செய்தியைக் கேள்விப்பட்டு அகில உலக மௌனிராய் ரசிகர்களும் ஆன்லைனில் கொந்தளித்துக் கொதித்து ஏக்தா கபூரை விமர்சித்து வெளுத்துக்கட்டினர். ஆனாலும் தன் முடிவில் மாற்றமில்லை, மௌனிராய் நிச்சயமாக நாகினி 3-ல் இல்லை என அறிவித்திருக்கிறார் ஏக்தா கபூர்! மிஸ் யூ மௌனி!

p35c_1513077238.jpg

னுஷ்கா இப்போது ஆல்நியூ லுக்கில் அசத்தலாக மாறிவிட்டார். நடுவில்  கொழுகொழுவென அமுல் பேபியாக இருந்தவர், கடுமையாக உடற்பயிற்சி செய்து 15 கிலோ வரை எடை குறைத்திருக்கிறார். `விசுவாசம்’ படத்துக்காகத்தான் இந்த ஸ்லிம் ஃபிட்டாம்! `தல’யும் ஃபிட்டு, தலைவியும் ஃபிட்டு!

டம் தோல்வியடைந்தால் போராட்டம் நடத்தி நஷ்ட ஈடு கேட்கிற ட்ரெண்ட் பாலிவுட்டிலும் தொடங்கியிருக்கிறது. ஷாரூக்கான் நடித்த `ஜப் ஹாரி மெட் செஜல்’ படம் இந்த ஆண்டு வெளியாகி மிகப்பெரிய தோல்வியைச் சந்தித்தது. இதையடுத்து படத்தை அதிக விலைகொடுத்து வாங்கிய விநியோகஸ்தர்கள் ஷாரூக்கிடம் ``எங்க காசைத் திருப்பிக்கொடுங்க’’ என்று கேட்க ஆரம்பித்திருக்கிறார்கள். ஃப்ளாப்பானா ஆப்புதான்!

p35d_1513077261.jpg

ஃப்சான் ஆசீக்தான் சமீபத்திய வைரல். ஜம்மு காஷ்மீர் மாநிலப் பெண்கள் கால்பந்தாட்ட அணியின் கேப்டன் அஃப்சான். அவருக்கு இன்னொரு அடையாளமும் இருக்கிறது! காஷ்மீரில் நடந்த காவல்துறை அடக்குமுறைக்கு எதிரான போராட்டங்களில் ஈடுபட்ட போராளி இவர். ஆக்ரோஷமாகக் காவல்துறைமீது அஃப்சான் கல்லெறிகிற படம் ஒன்று சென்ற ஆண்டு இந்திய மீடியாக்களில் பரவலாக வெளியானது. அப்போது யார் இந்தப்பெண் என எல்லோருமே தேடி அலைந்தார்கள். கண்டுபிடிக்க முடியாமல் போகவே, மீடியாக்கள் அவரை மறந்துவிட்டன. இப்போது கால்பந்தாட்ட சாம்பியனாகத் திரும்பி வந்திருக்கிறார் அஃப்சான். போராளி எப்படி கால்பந்தாட்ட சாம்பியன்  ஆனார் என்கிற அவருடைய கதை இப்போது பாலிவுட்டில் படமாகவிருக்கிறது! பக்கா பயோபிக்!

https://www.vikatan.com

  • தொடங்கியவர்

.
"எப்ப பாரு Facebook லையே இருக்கியே உனக்கு வெக்கமா இல்ல...1f60f.png?"அர்ஜூன் கேள்வி தொடுக்க...

அதற்கு தெள்ளத் தெளிவாக பதில் தரும் ரகுவரன்...1f644.png?
"ஒருநாள் நீ வந்து பாரு...1f60e.png?
எத்தனை பேரு எங்களுக்கு போஸ்ட் போடறாங்கனு ...
ஒரே ஒரு நாள் Facebook ல நீ இருந்து பாரு அப்ப புரியும் எங்க வலி என்னனு

எவ்வளவு post

எவ்வளவு டென்ஷன்

எத்தனை லைக்

எத்தனை கமெண்ட்

எத்தனை ஷேர்

எத்தனை சண்டை

எத்தனை பஞ்சாயத்து

எத்தனை group call

எத்தனை கெஞ்சல்கள்

எத்தனை கொஞ்சல்கள்

இதெல்லாம் அனுபவிச்சு பார்த்தான்யா தெரியும்...

இது இல்லாம
புரபைல் பிக்சர் போட்டா ஹாஹான்னு வராத சிரிப்பு இமோஜி...1f609.png?

இன்பாக்ஸ் தோழி கிட்ட
Good morning
Good afternoon
Good night
Saptya
Nalarkiya
Enna panra
மூஞ்சி சுமாரா இருந்தாலும்
Wow , nice , super , excellent, beautiful
வாய் கூசாம பொய் வேற...

பெண்ணியம் பேசனும்
ஆணியம் பேசனும்....

எல்லா தோழிக்கும் friend request
கொடுத்து ஆறு மாசம் கழிச்சு தான் accept பண்ணுவாங்க ..

அத தொலை நோக்கு பார்வையோட handle பண்ணனும்...

மாமா மச்சி அக்கா தங்கச்சி அண்ணன் தங்கச்சி தோழா தோழின்னு உறவுமுறை வைத்து கமென்டு போடனும்....

இன்பாக்ஸ்ல ரொம்பவும் வழியவும் கூடாது, அதுக்காக இன்பாக்ஸ்ல பேசாம இருக்கவும் கூடாது....

முக்கியமா வாரம் ஒரு தடவை சண்டை போடனும்...

எதையும் வந்து பார்த்தா தான்யா தெரியும் எங்க கஷ்டம் என்னன்னு...

தீக்குள்ள விரல விட்டா சுடும்னு சொல்றேன் உனக்கு புரியல...1f612.png?"
1f601.png?1f637.png?1f637.png?1f3c3_200d_2642.png?‍♂️1f3c3_200d_2642.png?‍♂️1f3c3_200d_2642.png?‍♂️

Bild könnte enthalten: 1 Person
 
 

 

 

  • தொடங்கியவர்

முகமற்றவர்களின் குரலாக ஒலிக்கும் புகைப்படங்கள்! - சிறையிலிருந்தவர் ஸ்ட்ரீட் போட்டோகிராபர் ஆன கதை #MotivationStory

 

கதை

ரு பள்ளியின் கதவைத் திறப்பவர், சிறையின் கதவை மூடுகிறார்’ என்கிறார் ஃபிரெஞ்ச் நாவலாசிரியரும் கவிஞருமான விக்டர் ஹியூகோ (Victor Hugo). கல்வி, மற்ற எல்லா தீமைகளையும் அடித்து விரட்டிவிடும் என்பது மறுக்க முடியாத உண்மை. சிறைச்சாலை என்பது மனிதர்களைத் திருத்துவதற்கான இடம். சரி. உண்மையில் அது எத்தனை பேரைத் திருத்தியிருக்கிறது என்பது மிகப் பெரிய கேள்வி. ஆனால், விக்டர் ஹியூகோ சொல்வதில் ஆழமான ஒரு பொருள் இருக்கிறது. ஏதோ ஒரு கலை... ஆர்வத்தோடு அதைக் கற்றுக்கொள்கிறார் ஒருவர். தான் கற்றதை ஆக்கபூர்வமாகப் பயன்படுத்தினால், அவர் சிறையில் இருந்தவராக இருந்தாலும், குற்றச் செயல்களில் ஈடுபடுபவராக இருந்தாலும் அதிலிருந்து மீண்டுவிடுவார். அதற்கு உதாரணம், டொனேடோ டிகேமிலோ-வின் (Donato DiCamillo) கதை.

 

டொனேடோ டிகேமிலோ

நியூயார்க்கில் இருக்கும் புரூக்ளினில் பிறந்தார் டொனேடோ டிகேமிலோ. அம்மாவும் அப்பாவும் இத்தாலியிலிருந்து அமெரிக்காவில் வந்து குடிபுகுந்தவர்கள். உடன் பிறந்தவர்கள் மூன்று பேர். எல்லா நாடுகளிலும், சமூகங்களிலும் சில குழந்தைகளுக்கு இப்படி நடப்பதுண்டு. வறுமை, நண்பர்கள் சேர்க்கை சரியில்லை... இளம் வயதிலேயே நடத்தைக் கோளாறுகளுக்கு (Behavioral Problems) ஆளானார் டொனேடோ. யார் மீது, எதன் மீது என்று தெரியாத கட்டுக்கடங்காத கோபம் அவருக்கு வந்தது. அவருடைய முரட்டு சுபாவம் காரணமாக அவரை நெருங்கவே எல்லோரும் பயந்தார்கள். இத்தனைக்கும் அவருக்கு பெரிய கனவெல்லாம் இருந்தது... சாகசங்கள் புரிய வேண்டும், பல நாடுகளுக்குப் பயணம் செய்ய வேண்டும், உலகின் பல பகுதிகளிலிருக்கும் பல கலாசாரங்களைப் பார்த்து, தெரிந்துகொள்ள வேண்டும் என்கிற கனவு. அது அவருக்குக் கைகூடவே இல்லை.

அவர் குழந்தையாக இருந்தபோது ஒரு சம்பவம் நடந்தது. அவருடைய முதல் நண்பன்... ஒன்பது வயது... அவர் கண் முன்னாலேயே ஒரு விபத்தில் இறந்துபோனான். இப்படிப் பல விபத்துகளையும் அதிர்ச்சி சம்பவங்களையும் தொடர்ந்து எதிர்கொண்டார் டொனேடோ. அதனாலேயே உள்ளுக்குள் முரட்டுத்தனம் மிக மூர்க்கமாக வளர்ந்தது. அவர் வளர்ந்த புரூக்ளின் அவரை மேலும் மேலும் வன்முறை நிறைந்த மனிதனாக்கும் ஊராக இருந்தது.

பள்ளியும் டொனேடோவை அரவணைத்துக்கொள்ளவில்லை. ஆசிரியர்கள், சக மாணவர்கள் அத்தனை பேரிடமும் அவருக்குக் கெட்ட பெயர். ஒரு வன்முறைச் சம்பவத்தில் ஈடுபட்டதற்காக, நிர்வாகம் அவரைப் பள்ளியிலிருந்து துரத்தியபோது, அவருக்கு 16 வயது. அதற்குப் பிறகு வாழ்க்கைக் கொஞ்சம்கூட சீராக இல்லை. சிறைச்சாலைகளுக்கும், சீர்திருத்தப் பள்ளிகளுக்கும் போவதும் வருவதுமாக இருந்தார் டொனேடோ. வாழ்க்கை சிலருக்கு எந்தப் பிடிப்புமில்லாமல் போய்க்கொண்டிருக்கும். அதை அப்படியே ஏற்றுக்கொள்ளப் பழகிக்கொள்வார்கள் சிலர். வேறு சிலரோ பற்றிக்கொள்ள ஏதோ ஒன்று கிடைத்துவிட்டால், அதை சிக்கென்று பிடித்துக்கொண்டு வேறோர் ஆரோக்கியமான வாழ்க்கையை வாழப் பழகிக்கொள்வார்கள்.

சிறைச்சாலை

ஒருமுறை, ஏதோ ஒரு குற்றத்துக்காக அமெரிக்கா, விர்ஜினியாவின் பீட்டர்ஸ்பர்க் சிறையிலிருந்தார் டொனேடோ. அங்கேதான் அவருக்கு போட்டோகிராபியின் மேல் ஆர்வம் வந்தது. அதுதொடர்பான புத்தகங்கள் படித்தார். பூச்சிகளையும் தாவரங்களையும் படம்பிடிக்க ஆரம்பித்தார். ஒரு கட்டத்தில் இனி போட்டோகிராபிதான் தன் வாழ்க்கை என்று முடிவே செய்துவிட்டார். 2012-ம் ஆண்டு, சிறையிலிருந்து வெளியே வந்ததும் புகைப்படங்களை எடுக்க ஆரம்பித்தார். அவரை `ஸ்ட்ரீட் போட்டோகிராபர்’ என்றுதான் அமெரிக்காவில் அழைக்கிறார்கள். அதில் உண்மையில்லாமல் இல்லை. அவர் கேமராவில் படங்களாக விழுபவர்கள்... ஏதுமற்றவர்கள், எளியவர்கள், மனநலம் குன்றியவர்கள், பிச்சைக்காரர்கள்... சுருக்கமாக விளிம்புநிலை மனிதர்கள். நியூயார்க் முழுக்க பயணம் செய்து இப்படிப்பட்டவர்களை கேமாராவில் படம்பிடிக்கிறார் டொனேடோ டிகேமிலோ. அந்த மனிதர்களைப் பற்றி இப்படிக் குறிப்பிடுகிறார் டொனேடோ... `இவர்களெல்லாம் இங்கே சுற்றிச் சுற்றி வந்தாலும் முகங்களற்றவர்கள்.’

சரி... அவர் எடுத்த புகைப்படங்களில் சில சாம்பிள்கள்...

ரோசாரியோ (Rosario)

வயது 55-க்கும் அதிகமாக இருக்கலாம் என்கிற தோற்றம். ஒரு கண்ணில் பூ விழுந்ததுபோல வெள்ளையாக மரு. விழித்துப் பார்த்து நம்மை பயப்படவைக்கும் முகம். ரோசாரியோவைப் பற்றி இப்படிக் குறிப்பிடுகிறார் டொனேடோ... ``சிசிலியில் பிறந்தவர் ரோசாரியோ. சிறு வயதிலேயே பெற்றோரை இழந்தவர். வளர்த்தவர்களால் கைவிடப்பட்டு தெருவில் விரட்டப்பட்டவர். குழந்தையாக இருந்தபோது ஓர் அனாதை இல்லத்தில் நடந்த மோதலில், ஒரு கண்ணில் அடிபட்டு அவருக்கு இப்படியாகிவிட்டது. இப்போது எந்த அளவுக்கு சிறப்பாக வாழ முடியுமோ அந்த வாழ்க்கையை வாழ்கிறார். சிலபல வேலைகளைச் செய்து பிழைத்துக்கொண்டிருக்கிறார்.’’

புகைப்படக் கலைஞன்

இதுபோல நாம் அன்றாடம் எதிர்கொள்ளும் எத்தனையோ மனிதர்களின் புகைப்படங்களை அவர் எடுத்திருக்கிறார். 91 வயதிலும் உடற்பயிற்சி செய்யும் பாட்டி, பற்களை எந்த அளவுக்கு முடியுமோ அந்த அளவுக்கு கறையாக்கிவைத்திருக்கும் இளைஞன், அமெரிக்க ராணுவத்தில் பணியாற்றிவிட்டு இருக்க ஒரு வீடுகூட இல்லாத மிலிட்டரிகாரர், மனநலம் குன்றிய இரு குழந்தைகளை வீட்டில் வைத்து வளர்க்கும் தாய்.. என நீள்கிற புகைப்படங்கள் நம்மை உலுக்கியெடுக்கின்றன.

இன்றைக்கு உலகம் முழுக்க டொனேடோ பிரபலமாகிவிட்டார். `பிபிசி’, `வாஷிங்டன் போஸ்ட்’... உள்ளிட்ட பிரபல ஊடகங்களிலெல்லாம் அவர் வந்துவிட்டார். அவர் எடுத்த புகைப்படங்கள் விரைவில் ஒரு புத்தகமாகவும் வரவிருக்கின்றன.

டொனேடோ டிகேமிலோவின் மேலும் சில புகைப்படங்களைப் பார்க்க...

https://www.donatodicamillo.com/

https://www.vikatan.com/

  • தொடங்கியவர்

ஹாய் டிஜிட்டல் ரேடியோ... பை பை எஃப்.எம்! - ரேடியோவுக்கு மூடுவிழா நடத்தின நார்வே

 
 

டிஜிட்டல் ரேடியோ

இந்தியா 1983ல் கிரிக்கெட்டில் உலகக் கோப்பை வென்றதை நிறைய மக்களுக்குத் தெரிவித்த ஊடகம் ரேடியோவாகத்தான் இருக்கும். அந்தக் காலத்தில் ரேடியோ கமென்ட்ரிக்கென ஒரு பெரிய ரசிகப் பட்டாளமே இருந்தது. இடையில் சில ஆண்டுகள் தொலைக்காட்சியின் அசுர வளர்ச்சிக் காரணமாக ரேடியோ ஓய்வெடுத்தது. அதன் பின், 21ம் நூற்றாண்டின் தொடக்கத்தில் எஃப்.எம். சேனல்கள் மீண்டெழுந்தன. மொபைல் போன்களின் வளர்ச்சியும் எஃப்.எம். ரேடியோக்களுக்கு வாழ்வளித்தன. ஆனால், ஸ்மார்ட்போன்கள் காலத்தில் அது மீண்டும் சரிவைச் சந்தித்தது. ஃப்ளாக்‌ஷிப் மாடல் மொபைல்களில் எஃப். எம் வசதியே தரப்படுவதில்லை. இந்தச் சூழ்நிலையில், நார்வே நாடு தனது மொத்த ரேடியோச் சேவையையும் டிஜிட்டலாக மாற்றியிருக்கிறது. இனி அந்த நாட்டில் எஃப்.எம் சேனல்களே கிடையாது. வெறும், டிஜிட்டல் ரேடியோ மட்டும்தான். இந்த ஆண்டு ஜனவரி மாதம் தனது டிஜிட்டலை நோக்கியப் பயணத்தை நார்வே தொடங்கியது. அது, டிசம்பர் மாதம் முழுமையடைந்திருக்கிறது.

 

டிஜிட்டல் ரேடியோ:
ரேடியோ அலைகளின் அடுத்த தலைமுறைதான் டிஜிட்டல்ரேடியோ. இதில், டிஜிட்டல் சிக்னல்களை டிஜிட்டல் ரிசீவர்கள் உள்வாங்கி, நமக்கு ஏற்ற வகையில் கேட்கும் ஒலிகளாக மாற்றும். டிஜிட்டல் என்பதால் இதன் துல்லியமும் தரமும் அதிகம். எஃப்.எம் ரேடியோக்களில் இந்த சிக்னல் அனலாக் சிக்னலாக இருந்தன.

என்ன வித்தியாசம்:
டிஜிட்டல் ரேடியோவில் ஒலியின் தரம் அதிகம். துல்லியமான சத்தத்தையும் நம்மால் கேட்க முடியும். கூடவே, அந்த ஒலிக்கேற்ற குறிப்புகளை எழுத்துகளாக சிக்னல் கடத்தும். நமது ரிசீவரின் டிஸ்ப்ளேயில் பாடல் பற்றிய தகவல்களைப் பார்க்கலாம். இவை தவிர வானிலை அறிவிப்புகள், செய்திகள் ஆகியவையும் பகிர முடியும். மேலும், குறைவான பேண்ட்விட்த் கொண்டு அதிக சிக்னல்களைக் கடத்தும். அதனால், குறைவான செலவே ஆகும்.

என்ன மைனஸ்:
என்ன மழை பெய்தாலும் கேபிள் டிவி வேலை செய்யும். ஆனால், டி.டி.ஹெச் செய்யுமா? அதே பிரச்னைதான் இங்கேயும். ‘ஆனா ஹீரோதான் சார். நான் வெயிட் பண்றேன்” என்பதுதான் டிஜிட்டல்ரேடியோவின் பன்ச் ஒன்று, தரமான சிக்னல்களைத் தரும். அல்லது, வரவே வராது.

digital radio

செலவு:
அனலாக் எஃப்.எம் ரிசீவர்கள் மிக குறைந்த விலையிலே கிடைத்தன. ஆனால், டிஜிட்டல் ரிசிவர்கள் அப்படி இருக்காது. அதனால், ஆரம்பச் செலவு என்பது அதிகமாக இருக்கும். 

எதிர்காலம்:
டிஜிட்டல்ரேடியோ நல்ல விஷயம்தான். ஆனால், கூடவே இணைய ரேடியோ என்ற விஷயமும் வளர்ந்து வருகிறது. இன்டெர்நெட் டேட்டா அதிகப் பணமெடுக்கும் விஷயமாக இருந்தவரை வேறு கதை. இன்று தினமும் 2 ஜி.பி. மொபைல் டேட்டாவே 15 ரூபாய்க்கு கிடைக்கிறது. மாதம் 1000 ஜி.பி பிராட்பேண்டுக்கு 1000 ரூபாய் மட்டுமே செலவாகிறது. இந்தச் சூழலில் இணைய ரேடியோ பெரிதாக வளரும் வாய்ப்புண்டு. டிஜிட்டல் ரேடியோவை விட இணைய ரேடியோவில் துல்லியமும் தரமும் அதிகம். அது மட்டுமின்றி, நமக்குப் பிடித்த பாடலை கேட்கும் வசதியும் அதிலுண்டு. இருந்தாலும், டிஜிட்டல் ரேடியோவுக்கு இணையம் தேவையில்லை என்பது வலுவான பாயின்ட் தான்.

நார்வே:
ஐரோப்பா நாடுகள் அனைத்துமே டிஜிட்டல் ரேடியோ பக்கம் திரும்பிவிட்டன. அதில் நார்வேதான் முழுமையாக மாறின நாடு. டிஜிட்டல் ரேடியோவுக்கு மாறிய ஸ்டேஷன்களின் வாடிக்கையாளர் எண்ணிக்கை முதலில் கடும் சரிவைச் சந்தித்தது. ஆனால், பின்னர் அது சரியானதாகச் சொல்கிறார்கள். அதனால், மக்கள் மாற்றத்துக்குச் சரியான கால அவகாசம் தந்தால், டிஜிட்டல் ரேடியோவுக்கு அவர்கள் தயாராகிவிடுவார்கள் என்கிறது நார்வே.

 

இந்தியா:
இந்தியாவிலும் டிஜிட்டல் பற்றி ஆலோசிக்கப்பட்டது. TRAI தான் இதை முன்னெடுக்க வேண்டும். சென்ற ஆண்டு இதுபற்றி பேசப்பட்டது. ஆனால், அதற்கு பலத்த எதிர்ப்பு எழுந்தது. ஏனெனில், இந்திய எஃப்.எம் நிறுவனங்கள் அடுத்த 15 ஆண்டுக்கும் சேர்த்து முன்பணம் கொடுத்து லைசென்ஸ் வாங்கியிருக்கிறார்கள். இப்போது டிஜிட்டலாக மாறினால் அந்த லைசென்ஸ் செல்லா காசாகிவிடும். மேலும், டிஜிட்டல் ரிசிவரின் விலை இந்திய ரூபாயில் 2000 முதல் 20000 வரை இருக்கும். அந்த மாற்றத்துக்கு இந்தியர்கள் செலவு செய்வார்களா என்பது கேள்விக்குறி. அப்படி மாறாமல் போனால், ரேடியோ என்ற துறையின் வருமானம் பாதிக்கப்படும். இப்போதைக்கு இந்தியாவுக்கு டிஜிட்டல் ரேடியோ முழுமையாக வர வாய்ப்பில்லை. சில குறிப்பிட்ட நகரங்களுக்கு வரலாம்.

https://www.vikatan.com

  • தொடங்கியவர்

கோலியின் வரவேற்பு பத்திரிகையில் புதுமை.!

கோலி, அனுஷ்கா சர்மாவின் திருமண வரவேற்பு பத்திரிகையை வழங்குவதில் இருவரும் புதுமையை கடைபிடித்துள்ளனர்.

Viruska-Anushka-Sharma-and-Virat-Kohli-g

இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட் கோலி, தனது காதலியான இந்தி நடிகை அனுஷ்கா சர்மாவை இத்தாலியில் வைத்து கரம் பிடித்தார். அடுத்து இவர்களது திருமண வரவேற்பு நிகழ்ச்சி 21 ஆம் திகதி டெல்லியிலும், 26 ஆம் திகதி மும்பையிலும் நடக்கிறது. வரவேற்பு பத்திரிகையை வழங்குவதில் இருவரும் புதுமையை கடைபிடித்துள்ளனர். 

பத்திரிகையுடன் இணைத்து ஒரு மரக்கன்றையும் கொடுத்து வருகிறார்கள். மும்பையில் ஏராளமான பிரபலங்களுக்கு இந்த மாதிரியே அழைப்பிதழை கொடுத்துள்ளனர். இதற்கிடையே, தனக்கு திருமண வாழ்த்து கூறிய கிரிக்கெட் வீரர்கள் அனைவருக்கும் விராட் கோலி, ‘டுவிட்டர்’ மூலம் தனித்தனியே நன்றி தெரிவித்துள்ளார். 

http://www.virakesari.lk

  • தொடங்கியவர்

வலைபாயுதே

 
 

 

 

twitter.com/Piramachari

வீட்டுக்கு விருந்தாளிக வந்தானுங்கன்னா நாலு பப்ஸ் வாங்கி வெச்சிடணும். கீழே சிந்தாமத் திங்கக் கூச்சப்பட்டு அப்டியே வச்சிடுவாங்க. அப்புறமா நம்ம தின்னுக்கலாம். # சற்றுமுன்பு கண்டுகொண்டேன்

twitter.comVinithan_Offl

“சைடு ஸ்டேண்ட் எடுத்து விடுங்க’’
“லைட் எரியுது ஆஃப் பண்ணுங்க’’ -
என்று சொல்லும் சாலை சீர்திருத்தவாதிகள்
``ஹெல்மெட் போடலை” என்று
சின்ன சைகைகூடக் காட்டுவதில்லை.

p105a_1513163228.jpg

twitter.com/Thaadikkaran

முன்னெல்லாம் ஒரு விஷயத்தைப் புரிய வைக்குறதுக்குள்ள போதும் போதும்னு ஆயிரும், இப்பெல்லாம் ஒரு வடிவேலு போட்டோ போதும்னு ஆயிருச்சு..!!

twitter.com/Aruns212

‘ஹிட்’ அடித்தும் வீழ்வதெல்லாம் கரப்பான் பூச்சிகளும், தமிழ் சினிமாத் தயாரிப்பாளர்களுமே.

twitter.com/ckcbe

டைம் என்னங்கற கேள்விக்கு
சூரியனைப் பாத்து சொன்னதுக்கும்
வாட்சைப் பாத்து சொன்னதுக்கும்
ஃபோனைப் பாத்து சொன்னதுக்கும்
நடுவுல இருக்கறதுதான் தலைமுறை இடைவெளி

twitter.com/SKtwtz

பதில் தெரியாதவனின் கேள்வியைவிட பதில் தெரிந்தவனின் கேள்வி ஆபத்தானது...

p105b_1513163245.jpg

twitter.com/yugarajesh2

சிறு நகரங்களில், சிடி விற்ற கடைகள் எல்லாம் ரீசார்ஜ் கடைகளாகவும், பஜ்ஜி விற்ற கடைகள் எல்லாம் பானிபூரிக் கடைகளாகவும் மாறிடுச்சு.

twitter.com/MJ_twets

எத்தனை ஆடைகளை அணிந்து கொண்டாலும் அதை உலகம் மொட்டை மாடி என்றே அழைக்கும்!

twitter.com/gpradeesh

வாழ்க்கைன்றது உளுந்தவடை மாதிரி, நல்ல புஜ்ஜுக்கு புஜ்ஜுக்குனு இருக்கும். நடுவுல டக்குனு மிளகு வந்துரும்

facebook.com/Saravanan Chandran

தமிழ்நாடு தனித்தனியாகப் பிரிந்து கிடக்கிறது. விவசாயிகளின் போராட்டத்திற்கு மீனவர்கள் வர மாட் டார்கள். மீனவர்களின் போராட்டத்திற்கு வணிகர்கள் வர மாட்டார்கள். வணிகர்களின் போராட்டத்திற்கு நெசவாளர்கள் வர மாட்டார்கள். தஞ்சைக் கடைமடையில் ஏற்படும் பாதிப்பு ஒட்டுமொத்தத் தமிழகத்திற்கும்தான் என்பதோ கடலில் நடக்கும் பாதிப்புகள் நிலத்தையும் பதம் பார்க்கும் என்பதையோ அறிந்துகொள்ளத் தயாராக எப்போதும் இருப்பதில்லை. எதுவாக இருந்தாலும் என்டர்டெயின்மென்ட் இருந்தால்தான் எட்டிப்பார்க்கவே தலைப்படுவோம். சிம்பிளாக இப்படிப் புரிந்துகொள்கிறேன். தமிழகம் ஒட்டுமொத்தமாக மாட்டிற்காகக் கூடும். ஒருபோதும் மனிதர்களுக்காகக் கூடாது!

facebook.com/N Naveenkumar

ஒரு பாத்திரம் நிறைய சூடாக புதுக்குழம்பு இருந்தாலும், காலையில் ஆபீஸ் கிளம்பும் அவசரத்தில் பெரும்பாலும் நமக்குக் கிடைப்பதென்னவோ முந்தைய தினத்தின் மிச்சமான பழைய குழம்பு தான். இந்த உள்வீட்டு சதி எனக்குப் புரிய கொஞ்சம் தாமதம் ஆனது. இருந்தாலும் அதன் பின் உஷாராகி சாப்பிடும்போது கேஷுவலாகப் பார்ப்பது போல ‘ஆமா இதுல என்ன இருக்கு?’ என்று ஆரம்பித்து, பல போராட்டங்களை (அவமானங்களை) தாண்டி என் இலக்கை(புதுக்குழம்பை) அடைவது வழக்கமாகிப்போனது. அவமானத்தின் போதெல்லாம் உறுதுணையாக இருந்தது ‘சோறா, சொரணையா? சோறுதான்’ எனும் வடிவேலுவின் தாரக மந்திரமே. இது என் அன்றாட வாழ்க்கையில் அங்கமாக மாறிவிட, சமீபத்திய போராட்டத்தின் போது எப்பொழுதும் போல கேஷுவலாக ‘அந்தக் கொழம்புல கரண்டி போடலயே’ என்று ஆரம்பித்தேன்.. ‘ம்ம்ம்.. எந்தக் கொழம்புல கரெண்டி இருக்கோ அத மட்டும் சாப்டு போதும்’ என்று புதிய யுத்தியைக் கையாண்டார் மனைவியார். #Thuglife

p105c_1513163263.jpg

twitter.com/amuduarattai

பொருள்களில் தொடங்கிய “Use and throw” கலாசாரம், மனிதர்களில் வந்து முடிந்திருக்கிறது.

facebook.com/Nelson Xavier

கொள்கைகளையும் அமைப்பையும் நம்பாமல் அல்லது ஏற்க விரும்பாமல், கட்சிகளையும் தனிநபரின் ஆளுமைகளையும் மட்டும் நேசித்ததன் “இன்னொரு” பக்க விலை என்ன என்பதை இப்போது பார்த்துக் கொண்டிருக்கிறோம்.

p105d_1513163282.jpg

twitter.com/Kozhiyaar

குறட்டை போலத்தான் தவறுகளும்...
செய்பவருக்கு அது தெரிவதேயில்லை!

facebook.com/Anu Vidya

காலம் என்னதான் வேகமாக ஓடினாலும்  ஒரு வருடத்தில் எனக்கு ஒரு வயதுதான் கூடியிருக்கிறது..!

twitter.com/manipmp

ஒவ்வொரு resume க்குப் பின்னாலும் ஒரு resignation letter இருக்கிறது.

https://www.vikatan.com

  • தொடங்கியவர்

இந்த யானை ஒரு வாகனத்தை துரத்திக் கொண்டு செல்வது ஏன்?

இது நடந்தது அம்பாந்தோட்டை விமான நிலையத்துக்கு அருகில்

  • தொடங்கியவர்

Bild könnte enthalten: 2 Personen, Personen, die lachen

யாரென்று தெரிகிறதா?
காலம் வென்று நிற்கும் பராசக்தி காவிய நாயகர்கள்

  • தொடங்கியவர்

ராக்கெட் எப்படி பறக்கிறது... ஏன் வெடிக்கிறது... ஜாலியா தெரிஞ்சிக்கலாம்! #RocketScience

 
 

ராக்கெட்


ராக்கெட்டும் அது தொடர்பான செய்திகளும் எப்போதும் ஆச்சர்யமும் சந்தோஷமும் கொடுக்கக் கூடியது. ராக்கெட்டுகளுக்கும் நியூட்டன் விதிகளுக்கும் என்ன தொடர்பு? எப்படி மேலே பறக்கிறது? ஒரு சில நேரத்தில் ஏன் பாதை மாறி செல்கிறது? ஏன் வெடிக்கிறது? இது போன்ற பல விஷயங்களுக்குப் பின்னும் அறிவியல் இருக்கிறது.

 

ஆரம்பம் :

சீனர்கள்தான் முதன் முதலாக போரிலும், வாண வேடிக்கைகளுக்காகவும் ராக்கெட்டைப் பயன்படுத்தினர். அப்படியே இந்தியாவுக்கு திப்பு சுல்தான் மூலம் வந்தது. அப்படியே பல முன்னேற்றங்கள் அடைந்து இரண்டாம் உலகப்போர் கால கட்டத்தில் நவீன ராக்கெட் ஏவப்பட்டு, தற்போது செயற்கைகோள்களை (Satellite) ஏந்திச் சென்று ஆர்பிட்டில் நிலை நிறுத்தவும் மேலும் பல செயல்களுக்கு ராக்கெட் பயன்படுத்தப்பட்டு வருகிறது.

அது எப்படி மேலே பறக்கிறது என்பதற்கான விதியை நியூட்டன்தான் சொல்லியிருக்கிறார்.

நியூட்டனின் 3ம் விதி:

முதலில் ராக்கெட்டை உருளை வடிவில் (Cylindrical Shape) உள்ளது என வைத்துக்கொள்வோம். அந்த உருளைக்குள் அழுத்தப்பட்டகாற்று (Compressed air ) உள்ளது என வைத்துக்கொள்வோம். இப்போது அது வெளியில் செல்ல எந்த வழியும் இல்லாததால் முட்டி மோதிக்கொள்ளும்.

இப்போது நீங்கள் வட்டமான ஓட்டையை அதன் அடியில் போட்டால் பீறிட்டு வெளியே வரும். இதற்கு nozzleகள் பயன்படுத்தபடுகின்றன. Nozzle என்பது வேகத்தை அதிகப்படுத்தும் ஒரு குழாய் வடிவம் போன்றது. தோட்டத்திற்கு தண்ணீர் பாய்ச்சும் போது பைப்பை பாதி மூடி, பாதி மட்டும் திறந்தால் அதிக வேகத்துடன் வெளிவரும் அல்லவா? அதைப் போலத்தான்.

இப்போது உங்கள் கையில் காற்று நிரப்பப்பட்ட பலூன் ஒன்று உள்ளது. மேலே பார்த்தபடி பலூனின் காற்றை வெளியே போகும்படி செய்தால் எல்லாக் காற்றையும் அதிக வேகத்துடன் வெளியே தள்ளி மேலே பறக்கும் இல்லையா? இதே தத்துவம்தான் ராக்கெட்டிலும் பயன்படுகிறது.

எவ்வளவு வேகத்துடன் காற்று வெளியேறுகிறதோ அவ்வளவு அளவு அது மேலே பறக்கும். அதாவது நியூட்டனின் 3ம் விதி, ஒவ்வொரு வினைக்கும் சமமான எதிர்வினை உண்டு. ஒரு பந்தை சுவற்றின் மீது எவ்வளவு வேகத்தில் எறிகிறோமோ அவ்வளவு வேகத்தில் திரும்பி வரும். இது தான் ராக்கெட்டிலும் நடக்கிறது. இப்போது வெளிப்புறத்தை பற்றி பேசி விட்டோம் உள்ளே என்ன நடக்கிறது? அதற்கு என்ன விதி பயன்படுகிறது என்று பார்ப்போம்.

நியூட்டனின் 2 ம் விதி:

நியூட்டனின் 2ம் விதிக்குச் செல்வதற்கு முன் முடுக்கம் (acceleration) என்ன என்று பார்ப்போம். திசை வேகம் மாறும் விதமே முடுக்கம்.
1. இப்போது ஒரு பந்தை ஒரு மாடியிலிருந்து கீழே தூக்கிப் போட்டால், ஆரம்பத்தில் அது 0m/s ஆக இருக்கும். ஒரு வினாடிக்குப் பின் 9.81 m/s ஆக இருக்கும். 2 வினாடிக்குப் பின் 19.6  m/ ஆக இருக்கும். நேரத்தைப் பொறுத்து திசைவேகம் மாறினால் அதன் பெயர்தான் முடுக்கம்.
இதனால்தான் ஆடி, பென்ஸ் கார்கள் (0-100 km / hr) வேகத்தை4 - 6 விநாடிகளில் எட்ட முடியும் என்று கூறுகிறது. 

இப்போது கதைக்குள் வருவோம்,

நியூட்டனின் 2ம் விதியின் படி F= ma .
M என்பது Mass (நிறை).
a - acceleration (முடுக்கம்).F - Constant என்றால் 
a = 1/m என வரும் .
ஆக நிறை (mass) குறைய குறைய, முடுக்கம் அதிகரிக்கும்.

அப்போது ராக்கெட்டின் நிறையை குறைத்தால் முடுக்கத்தை அதிகரிக்கலாம். ராக்கெட்டுகள் மேலேபறக்க எரிபொருள்கள் அவசியம். இதற்கு எரிபொருள் (fuel) + ஆக்ஸிஜனேற்றி (oxidiser) பயன்படுகிறது. இது Liquid propellant என்றும்  அழைக்கப்படுகிறது.

இந்த இரண்டும் ஒன்று சேர்ந்தால் நெருப்பை உருவாக்கும். Nozzle மூலமாக அதிகவேகத்துடன் இந்த நெருப்பு வெளியேறும். அந்த வேகத்துக்கு ஏற்ப ராக்கெட் மேலே செல்கிறது (நியூட்டனின் 3ம் விதி). இப்படியே செல்லும் போது எரிபொருளின் அளவு குறையும். அப்படியானால் நிறையும் குறையும்.

நிறை குறைந்தால் மேலே மேலே செல்லும் போது நியூட்டனின் 2ம் விதியின் படி முடுக்கம் அதிகரிக்கும். முடுக்கம் அதிகரித்தால் எட்ட வேண்டிய நிலையைச் சரியான நேரத்தில் அடைய இயலும்.

இந்த 2 விதிகளை மையமாகக் கொண்டு ராக்கெட் செயல்படுகிறது. மேலும், அது எப்படி வெடிக்கிறது, ஏன் வேறு திசையில் செல்கிறது என எடுத்துக்காட்டுகளுடன் விவரிப்போம்.

ஏன் வெடிக்கிறது:

பெரும்பாலும் ராக்கெட் வெடித்து சிதற பல காரணங்கள் இருந்தாலும் எரிபொருள்கள் சம அளவு (Ratio) மிக்ஸ் ஆகாமல் இருப்பதே முக்கிய காரணமாக அமைகிறது. எரிபொருளும் ஆக்ஸிஜனேற்றியும் தனித்தனி தொட்டியில் வைக்கப்படுகிறது.

நாம் அதிகமாக 4 முறைகள் பயன்படுத்துகிறோம்.
1.மண்ணெண்ணெய் மற்றும் திரவ நிலையிலுள்ள ஆக்ஸிஜன் கலந்த கலவை
2. ஆல்கஹால் மற்றும் திரவ நிலையிலுள்ள ஆக்ஸிஜன்
3.gasoline மற்றும் நைட்ரிக் அமிலம்
4. திரவ நிலையிலுள்ள ஹைட்ரஜனும் மற்றும் திரவ நிலையிலுள்ள புளோரினும்.

இந்த இரண்டு கலவையும் வெப்பத்தை உருவாக்கி Nozzle வழியே அதிக வேகத்துடன் வெளியேறுகிறது. ஒரு வேளை சம அளவு கலக்காமல் இருந்தாலும், Combustion Chamberல் குறைபாடு இருந்தாலும், அந்த வெப்பம் ராக்கெட்டை வெடிக்கவைக்க போதுமானது.

ஏன் திசைமாறிச் செல்கிறது:

நாம் பல தடவை பார்த்தி்ருப்போம் ராக்கெட் வழி மாறி வேறொரு திசையில் செல்லும். அது ஏன் மற்றும் எப்படி என்று பார்க்கலாம்
இதற்கு நிறையின் மையம் (center of Mass) மற்றும் அழுத்தத்தின் மையம்(Center of pressure) கண்டுபிடிக்க வேண்டும். இப்போது தீபாவளி ராக்கெட்டை எடுத்துக்கொள்ளுங்கள் இந்த ராக்கெட்டை உங்கள் ஒரு விரலில் வைத்துக் கொள்ளுங்கள். கொஞ்சம் கொஞ்சமாக நகர்த்தி எந்த இடத்தில் கீழே விழாமல் நிலையாக உள்ளதோ அந்தப் புள்ளியையே நிறையின்மையம் (Center of mass) என்கிறோம்.

centre of gravity

ராக்கெட் பறந்துகொண்டிருக்கும் போது காற்று எல்லா இடத்திலும் படும் அல்லவா? அப்படிப்படும் எல்லா அழுத்தமும் ஒரு குறிப்பிட்ட இடத்தில் குவிக்கப்படுகின்றன. அதை நாம் அழுத்தத்தின் மையம் (center of pressure) என்கிறோம்.

இன்றும் எளிமையாகச் சொல்ல வேண்டுமென்றால், Centre of pressure எந்தப் புள்ளியில் இருக்கிறதோ, அதற்கு மேல் உள்ள பரப்பளவும் (Area) கீழ் உள்ள பரப்பளவும் சமமாக இருக்கும். 

அதற்கு நாம் வால்களைச் (fins) சேர்த்தால் அல்லது அளவை அதிகரித்தால் கீழே பரப்பளவு அதிகரிக்கும். அப்போது அழுத்தத்தின் மையத்தில் கீழே பரப்பளவு அதிகரித்தால், மையம் முன்னே இருந்ததை விட கொஞ்சம் கீழே இறங்கி காணப்படும். 

rocket science

முக்கியமாக நிறையின் மையம், அழுத்தத்தின் மையத்தை விட மேலே இருந்தால்தான் நேர்க்கோட்டு பாதையில் செல்லும் , 
இதனால் Centre of mass மேலே இருக்கும். ஒரு வேளை Center of pressure மேலே சென்றால் என்ன ஆகும்,

இரண்டு ஆராய்ச்சிகளுடன் செய்து பார்ப்போம்.

1. தீபாவளி ராக்கெட்டை எடுத்து விரலில் வைத்து எந்தப் புள்ளியில் ஆடாமல் நிலையாக நிற்கிறதோ அதைநிறையின் மையம் (Center of Mass) எனக் குறித்துக்கொள்வோம்.

அதே ராக்கெட்டை ஒரு நூலில்கட்டி தொங்க விட்டு கொஞ்சம் கொஞ்சமாக நகர்த்தி எந்தப் புள்ளியில் ஆடாமல் நிலையாக நிற்கிறதோ அதை அழுத்தத்தின் மையம்(Center of pressure) எனக் குறித்துக்கொள்வோம். நீளமான குச்சிகொண்ட ராக்கெட்களுக்கு எப்போதும் Center of Mass மேலேயும் Center of pressure கீழேயும் இருக்கும். 

இப்போது இதை பறக்க விட்டால் ஒரே நேர்க்கோட்டில் செல்லும். இதனால்தான் தீபாவளி ராக்கெட்களுக்கு குச்சிகள் எப்போதும் நீளமாக தயாரிக்கப்படுகிறது.

2.இப்போது அந்த ராக்கெட் குச்சியை பாதி உடைத்து , இரண்டையும் குறித்துக் கொள்வோம்.
இப்போது சுற்றி, வழி மாறிச் செல்லும். பரப்பளவு குறைவதால் Centerof pressure ஆனது Center of Massக்கு அருகிலோ அல்லது மேலே சென்று விடும். சென்று விட்டால் வழி மாறும். ஆக ராக்கெட்டை வடிவமைக்கும் முன் இந்த  2 காரணிகளைச் சரியாகக் கணக்கிடுவது அவசியம்.

 

ராக்கெட்டை நாம் ஆக்கத்துக்குப் பயன்படுத்தி, Missile போன்றவை அழிவுக்குப் பயன்படுத்தாமல் இருந்தால் நல்லது. அறிவியலை ஆக்கத்துக்கு மட்டும் பயன்படுத்தினால் அதனால் ஏற்படும் பயன்கள் பல.

https://www.vikatan.com

  • தொடங்கியவர்

உலகெங்கிலும் உள்ள வித்தியாச கட்டடங்கள் (புகைப்படத் தொகுப்பு)

2017 ஆம் ஆண்டு கட்டக்கலை புகைப்பட போட்டியில் 12 புகைப்படங்கள் இறுதியாக தேர்வு செய்யப்பட்டுள்ளன. அந்தப் புகைப்படங்களை கண்களுக்கு விருந்தாக உங்களுக்கு வழங்குகின்றோம்.

"கோபுரத்தின் கண்"

இத்தாலியில் வெரோனாவிலுள்ள இந்த கோபுரத்திலுள்ள மாடிப்பகுதி மற்றும் பெல் ஆகியவற்றின் தனித்துவமான நிலையின் காரணமாக மெக்மெட் யாசாவின் இந்தப் புகைப்படம் "கோபுரத்தின் கண்" என்று அழைக்கப்படுகிறது.

 

 

கோலாலம்பூர் கோயிலில் ஒரு மனிதர்

ஹான்சிங் ச்சுவின் இந்தப் புகைப்படம் மலேசியாவின் தேசிய மசூதியில் எடுக்கப்பட்டது. "இந்த கட்டடத்தின் மீது சூரிய ஒளி விழுகின்றபோது, பிரகாசமும். நிழலும் ஒன்றையொன்று சந்தித்து கனவு போன்ற காட்சியை வழங்குகிறது" என்று அவர் கூறுகிறார். "இன்செப்ஷன் என்ற திரைப்படத்தை இது எனக்கு நினைவூட்டுகிறது" என்கிறார் அவர்.

மிதி வண்டி ஓட்டுபவர்

 

ஸ்பெயின் வட பகுதியில் அவிலஸ் கலாசார மையத்தில் எடுக்கப்பட்ட இந்தப் புகைப்படத்தில், ஹான்ஸ் விச்மான், மிதிவண்டி ஓட்டிச்செல்லும் ஒருவரை ஆவணப்படுத்தியுள்ளார். "பெரிய மற்றும் சிறிய மக்களுக்கு பழையதொரு தொழில்துறை இடத்தில் ஆஸ்கார் நைமேயரால் கட்டப்பட்ட நவீன கட்டடங்களின் வெற்றிக்கரமாக ஒன்றிணைப்பு" என்று இந்த அருங்காட்சியகத்தை அவர் அழைக்கிறார்.

நினைவகத்தின் உள்பகுதி

பிரான்சிஸ் மெஸ்லெட் இந்தப் புகைப்படத்தில் மேல்நோக்கி பார்த்து படம் பிடிக்க தெரிவு செய்துள்ளார். முதலாம் உலகப் போரின் நூற்றாண்டை அடையாளப்படுத்தும் பிரெஞ்சு நினைவகத்தில் இந்தப் படம் எடுக்கப்பட்டது.

 

பிரான்சிலுள்ள திரையரங்கம்

"இந்த வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த திரையரங்கம் ஒருபுறம் மேடை, பல்லடுக்கு மாடிகள், வேறு எல்லாவற்றிலும் பலகணிகள் உள்ளடங்க நீள்வட்ட வடிவில் கட்டப்பட்டுள்ளது" என்று பிரான்ஸில் பார்-லெ-டுவிலுள்ள திரையரங்கத்தை பற்றி புகைப்படக்லைஞர் லின்டா த வான் ஸ்லோபி கூறுகிறார். "இது அழகாக அலங்காரங்களை கொண்டுள்ளது" என்று அவர் கூறுகிறார்.

 

ஃபிரெஸ்நோவில் கைவிடப்பட்ட கட்டடம்

 

ராபர்ட் காஸ்சவேயின் இந்தப் புகைப்படம் அமெரிக்காவில் மொன்டானாவில் ஃபிரெஸ்நோ பற்றிய பெரியதொரு தொடரின் பகுதியாக "த வேனிஸிங் வெஸ்ட்" என்று அழைக்கப்படுகிறது. ஃபிரெஸ்நோவில் வாழ்ந்த குடும்பங்கள் அவ்விடத்தை விட்டு சென்ற பின்னர், புறக்கணிப்பின் மூலம் சிதைந்துபோக விடப்பட்ட கட்டடத்தின் மீது காலமும், வானிலையும் காட்டியுள்ள அழிவின் தடங்களை இது காட்டுகின்றது" என்று அவர் கூறுகிறார்.

சிங்கப்பூர் புனித ஆன்ட்ரூ பேராலயம்.

சிங்கப்பூரில் 19 ஆம் நூற்றாண்டின் மத்தியில் கட்டப்பட்ட நவீன கூம்பு வடிவ கட்டடக்கலை கட்டடமாக விளங்கும் புனித ஆன்ட்ரூ பேராலயத்தின் கோபுரம். அதனுடைய முற்காலத்திய வடிவத்தை இன்னும் பாதுகாத்து வருகின்ற இந்தப் பேராயலயம் அதனுடைய சுற்றுப்புறங்களோடு கம்பீரமாக நிற்கிறது.

 

ரஷ்யாவின் ரியாசனில் கைவிடப்பட்ட கட்டுமானம்

21 ஆம் நூற்றாண்டு கல்லறை என்பது ரஷ்யாவின் ரியாசனில் எடுக்கப்பட்ட பெட்ர் ஸ்டாராஃபின் புகைப்படத்தின் தலைப்பாகும். இந்த புகைப்படம் வணிக வளாகம் ஒன்றின் கட்டுமானம் இடைநிறுத்தப்பட்டுள்ளதைக் காட்டுகிறது.

 

சீனாவின் குவாங்தொங்கிலுள்ள சாலைகள்

புவொ ஜி ஹூவா படம் பிடித்துள்ள சீனாவின் குவாங்தொங்கிலுள்ள இத்தகைய சாலைகள் குறுக்கு பாலம் வால்ஸ் என்று பெயர் பெற்றுள்ளன. ஆளில்லா விமானத்தின் மூலம் இது படம் பிடிக்கப்பட்டுள்ளது. "இந்த வேலைப்பாட்டின் குறுக்கு சந்திப்பு, அழகின் சுருக்கமான வரிபோல உள்ளது" என்று அவர் தெரிவித்திருக்கிறார்.

துபாய், யுஏஇ

இன்னொரு புகைப்படக் கலைஞர் டிமிட்ரோ லேவ்சும் மேலே பார்த்து புகைப்படம் எடுக்க முனைந்துள்ளார். துபாயில் எடுக்கப்பட்ட இந்தப் புகைப்படம் நிறங்கள் மற்றும் வடிவத்தை பிரதிநிதித்துவப்படுத்துகின்றன.

இரான்

இரானிலுள்ள நவீன குடியிருப்பு கட்டடத்தில் சோதனை முயற்சியாக கட்டடப்பட்டுள்ள கட்டடக்கலையின் வடிவங்களை ஹூசைன் யோனிசி படம் பிடித்துள்ளார்.

 

நியூ யார்க் ரயில் நிலையம்

நியூ யார்க்கில் ஒரு ரயில் நிலையத்தில் தலைக்கு மேலுள்ள முரட்டுத்தனமான கடின கேபிள் குழாய்கள்,அச்சுறுத்தும் வடிவத்தை கொண்டுள்ளது" என்கிறார் கௌதம் கமாத் பாம்போல்கார்.

 

http://www.bbc.com

Edited by நவீனன்

  • தொடங்கியவர்

உலகிலேயே முதன்முறையாக....

உலகிலேயே முதன்முறையாக, ஒட்டகங்களுக்கென்று பிரத்தியேகமான வைத்தியசாலை ஒன்று டுபாயில் திறக்கப்பட்டுள்ளது.

7_Camel.JPG

சுமார் எட்டு மில்லியன் பவுண்ட்ஸ் செலவில் (இலங்கை மதிப்பில் சுமார் 165 கோடி ரூபா) அதிநவீன மருத்துவ உபகரணங்கள், உலகின் சிறந்த கால்நடை மருத்துவர்கள் என, உயர் தரக் கட்டமைப்பில் உருவாகியுள்ளது இந்த மருத்துவமனை.

பாலைவனங்களில் மட்டுமன்றி, நகரங்களில் ஒட்டகப் பந்தயம், ஒட்டக அழகுப் போட்டிகள் என ஒட்டகங்களை மையப்படுத்திய நிகழ்வுகள் பலவும் மத்திய கிழக்கு நாடுகளில் நடைபெற்று வருகின்றன.

டுபாயிலும் ஒட்டகங்களை செல்லப் பிராணிகளாக வளர்க்கும் செல்வந்தர்கள் பலரும் இருக்கிறார்கள். அவர்களுக்கு உதவும் வகையிலேயே இந்த மருத்துவமனை திறக்கப்பட்டுள்ளது.

மனிதர்கள் மட்டுமே பெற்றுக்கொள்ளும் எக்ஸ்ரே, அல்ட்ராசௌண்ட் போன்ற அனைத்துப் பரிசோதனை வசதிகளுடன், சத்திர சிகிச்சைக் கூடங்கள், ஒட்டகங்கள் தங்கி சிகிச்சை பெற்றுக்கொள்ளும் வகையில் பெரிய அறைகள் என அனைத்து வசதிகளும் இங்கு உண்டு.

இந்த மருத்துவமனை மூலம் ஒட்டகங்கள் பற்றி இதுவரை தெரியவராத பல இரகசியங்களைத் தெரிந்துகொள்ள முடியும் என்பதுடன், அவற்றுக்கான தரமான மருந்துகளை உற்பத்தி செய்யவும் முடியும் என இதன் நிறுவனர்கள் தெரிவிக்கின்றனர்.

http://www.virakesari.lk

  • தொடங்கியவர்

 

பாடல்களால், கேட்டல் குறைபாடுக்கு தீர்வு கிடைக்குமா?

பாடல்கள் பாடுவது, கேட்டல் குறைபாடுடையவர்களுக்கு ஒரு சிகிச்சையாகவும் அவர்கள் தொடர்புகொள்வதற்கான வலிமையான வழியாகவும் உள்ளதை புதிய ஆய்வுகள் கண்டுபிடித்துள்ளன

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.