Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இளமை புதுமை பல்சுவை

Featured Replies

  • தொடங்கியவர்

Bildergebnis für christmas gif

உறவுகள் அனைவருக்கும்  இனிய கிறிஸ்மஸ் வாழ்த்துக்கள்

 

Edited by நவீனன்

  • Replies 11.3k
  • Views 1.5m
  • Created
  • Last Reply
  • தொடங்கியவர்

ஃபேப்ரிக் பெயின்ட்டிங் பழகினால், ஒரே புடவையில் 10 ஆயிரம் வரை சம்பாதிக்கலாம்! #FabricPainting

 

ஃபேப்ரிக் பெயின்ட்டிங்

''என்னதான் ஃபேஷனில் அப்டேட்டாக இருந்தாலும், பெண்களுக்குப் புடவை வாங்குவதில் உள்ள ஆர்வம் என்றைக்குமே குறைவதில்லை. கடை கடையாக ஏறி இறங்கி புடவை எடுப்பது, ஒவ்வொரு இடத்துக்குத் தகுந்த மாதிரி உடுத்திச் செல்வது எனப் புடவைக்கான வரவேற்பும் பெண்களின் மெனக்கெடலும் அலாதியானது. எனவே, புடவைகளுக்கான ஃபேப்ரிக் பெயின்ட்டிங் கற்றுக்கொண்டால், அழகான பிஸினஸாக லாபம் சம்பாதிக்கலாம்'' என்கிறார் மதுரையைச் சேர்ந்த  துளசி. இவர் 15 ஆண்டுகளாக அஜந்தா ஆர்ட்ஸ் என்னும் சிறிய நிறுவனம் மூலம் ஃபேப்ரிக் பெயின்டிங் கற்றுத்தந்து வருபவர். 

 

''பட்டு, காட்டன் தொடங்கி பனியன் கிளாத் வரை எல்லா வகையான துணிகளிலும் ஃபேப்ரிக் பெயின்ட்டிங் செய்ய முடியும். ஒரு புடவைக்கு பெயின்ட் செய்ய குறைந்தது இரண்டு நாள்கள் தேவைப்படும். சுடிதார், ஜீன்ஸ் டாப்ஸ், மேசை விரிப்புகள் வரை இந்த பெயின்டிங்கால் அசத்தலாம். ஆரம்பத்தில், என் கிரியேட்டிவிட்டியால் சாரீஸ் டிசைன் பண்ணிட்டிருந்தேன். பலரும் குறிப்பிட்ட. டிசைனைக் கொடுத்து, அதுபோல பெயின்ட் பண்ணித்தர கேட்டார்கள். பிறகு, மணமகளுக்கான ரிசப்ஷன் புடவையும் கொடுக்க ஆரம்பிச்சேன். அதில் என் தனித்துவத்தைப் பார்த்து, நிறைய ஆர்டர் வந்துச்சு. வெளியூரிலும் என் பிஸினஸ் விரிவடைந்தது. புடவை ஒன்றுக்கு 1000 ரூபாயிலிருந்து 10,000 ரூபாய் வரை கட்டணம் வாங்கலாம். நல்லா டிராயிங் வரையத் தெரிஞ்சவங்கதான் இதைச் செய்யமுடியுமோனு தயக்கம் வேண்டாம். இதுவரை டிராயிங் தெரியாதவங்களும் ஆர்வம் இருந்தால், ஃபேப்ரிக் பெயிட்டிங்கை ஒரு மாசத்தில் கத்துக்கலாம். இதில், தொழிலுக்கான முதலீட்டைவிடச் செலவிடும் நேரமும் நுணுக்கமும்தான் முக்கியம்'' எனப் புன்னகைக்கும் துளசி, 3டி மியூரல் பெயின்டிங் என்பது பற்றியும் சொல்கிறார். 

thulasi

''ஃபேப்ரிக் பெயின்ட்டிங் செய்யறவங்க, மியூரல் பெயின்டிங்கையும் ஈஸியா கத்துக்கலாம். மியூரல் பெயின்டிங்கில் இடம்பெறுபவை, நளினமான பெண் ஓவியங்களாக இருக்கும். ஆரம்பத்தில் கோயில் சுவர்களிலும், மகாராஜாக்களின் அரண்மனைகளிலும் இயற்கைச் சாயங்களால் இந்த ஓவியம் வரையப்பட்டது. சுவர்களில் வரையப்பட்ட இந்த பெயின்டிங்கை இப்போ ஆர்டிபிசியல் அக்ரிலிக் கலர்ஸ் மூலம் கான்வாஸ் துணிகளிலும் வரையலாம். குறைந்த முதலீட்டில் அதிக லாபம் தரும் தொழில் இது. ஓவியத்தின் அளவு மற்றும் வேலைப்பாடு பொறுத்து கட்டணம் நிர்ணயிக்கலாம். சிறிய தாளில் ஓவியம் தீட்டிப் பயிற்சி பெற்று இதில் ஈடுபடலாம். புது வீடு கட்டுபவர்கள், அடிக்கடி வீட்டின் சுவர்களை அலங்காரம் செய்யறவங்க என மியூரல் பெயின்டிங்கை ஆர்டர் கொடுக்கிறாங்க. அலுவலகங்கள், பெரிய பெரிய ஷோ ரூம்களிலும் அலங்கார ஓவியங்களா என் பெயின்ட்டிங்ஸ் மிளிருது. இப்போதெல்லாம் கல்யாண போட்டோஸையும் மியூரல் ஓவியமாக செஞ்சு, வீட்டுச் சுவரில் அலங்கரிக்கறாங்க'' எனக் கண் சிமிட்டுகிறார் துளசி.

பெண்களின் முன்னேற்றத்துக்கான பாதைகளை நாம் வெளியில் மட்டுமே தேட வேண்டும் என்பது இல்லை. நாம் புழங்குற பொருள்களில் ஏதேனும் புதிய மாற்றத்தைக் கொண்டு வர முயன்றால் எளிதில் உயர்ந்து விட முடியும். துளசியும் புடவையில் தன் கற்பனையோடு உருவாக்கும் ஃபேப்ரிக் பெயின்ட்டிங் டிஸைன்கள் பார்ப்பவரைக் கவருவதோடு, விற்பனையையும் அதிகரிக்கிறது. வழக்கமான முறையிலிருந்து சின்னஞ்சிறிய மாற்றங்கள் கூட பெரிய வளர்ச்சியைத் தந்துவிடக் கூடும். அதற்கு விடா முயற்சி மட்டுமே முதல் மூலதனம்.

https://www.vikatan.com

  • தொடங்கியவர்

கிறிஸ்துமஸ் தாத்தாவின் கிராமத்திற்குள் ஒரு பயணம்

 
கிருஸ்துமஸ் தாத்தாவின் கிராமத்திற்குள் ஒரு பயணம்

அமெரிக்காவின் இண்டியானா மாகாணத்தின் தென்மேற்கு பகுதியில், எவான்ஸ்வில், ஜாஸ்பர் என்று இயல்பான பெயர்களை கொண்ட பல இடங்கள் உள்ளன. ஆனால், 162 வழித்தடத்தை நோக்கி சென்றால், சாண்டா கிளாஸ் 4 மைல் தொலைவில் உள்ளது என்ற பதாகையை பார்க்கமுடிகிறது.

அந்த 4 மைல் பயணம் முடிவுக்கு வந்துள்ளது என்பதை, குறிக்கும் வகையில், 10 அடி உயரத்தில் சாண்டா கிளாஸ் சிலை நம்மை வரவேற்கிறது.

இங்குள்ள பிரதான தெருவின் பெயர் கிறிஸ்துமஸ் பௌல்வார்ட். அந்த கிராமத்தில் வசிக்கும் 2500 பேரும் வாழக்கூடிய இடத்தின் பெயர் கிறிஸ்துமஸ் ஏரி கிராமம்.

இந்த பகுதியில் உள்ள முக்கிய வீதிகளுக்கு, மெல்கியோர், பல்தசர் மற்றும் காஸ்பர் என்று மூன்று முக்கிய நபர்களின் பெயர்கள் வைக்கப்பட்டுள்ளன.

சாண்டா கிளாஸ் கிராமத்தில் 365 நாளும் கிறிஸ்துமஸ்தான். ஆனால், அங்குள்ள மக்களை இது சலிப்படைய வைத்துள்ளதா?

இந்த கேள்விக்கு இல்லை என்று பதிலளிக்கிறார், மைக்கில் ஜோஹன்ஸ். "நான் இங்கு 27ஆண்டுகளாக வாழ்கிறேன். முழுநேரமும் இதற்காக இணைந்து பணியாற்றியுள்ளேன். கிறிஸ்துமஸ் எங்களில் ஓர் அங்கம்" என்று பதிலளிக்கிறார்.

19ஆம் நூற்றாண்டில், இந்த கிராமம், சாண்டா ஃபீ என்று அழைக்கப்பட்டது.

கிருஸ்துமஸ் தாத்தாவின் கிராமத்திற்குள் ஒரு பயணம்

அங்கிருந்த மக்கள், அப்பகுதிக்கு ஒரு தபால்நிலையம் வேண்டும் என்று விண்ணப்பித்தபோது, ஏற்கனவே சண்டா ஃபீ என்ற ஒரு இடம் உள்ளதால், புதிய பெயரை தேர்வு செய்யுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டது.

இது உண்மை என்பதை நிரூபிக்கும் வகையில், 1856 இல் வழங்கப்பட்ட ஆவணங்கள், அப்பகுதியின் அருங்காட்சியகத்தில் மக்கள் பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளது. ஆனால், அவர்கள் எவ்வாறு சாண்டா கிளாஸ் என்ற பெயரை தேர்வு செய்தார்கள் என்பது தெளிவாக இல்லை.

இதுகுறித்து ஒரு சிறந்த கதை உள்ளது.

கிருஸ்துமஸ் தினத்தின் மாலை வேளையில், சாண்டா ஃபீயில் உள்ள மக்கள் எல்லோரும், புதிய பெயரை தேர்வு செய்ய ஒன்று கூடினார்கள்.

பானையில் புதிய பெயர்களைப்போட்டு அவர்கள் குலுக்கல் முறையில் எடுக்கவிருந்திருந்தனர். திடீரென கதவுகள் திறந்தன.

அங்கிருந்த சிறுமி, கதவுகள் திறந்து, மனி அடிக்கப்பட்டதை பார்த்ததும், `சாண்டா கிளாஸ்!` என்று கத்தியுள்ளார்.

அவ்வளவுதான், ஊருக்கான புதிய பெயர் பிறந்துவிட்டது.

இதற்கு முன்பு, தேர்வு செய்யப்பட்டிருந்த பெயரோ, விட்டன்பாட்ச்.

"நாங்கள் மட்டும் அந்த பெயரை தேர்வு செய்திருந்தால், நீங்கள் இவ்வாறு வருகை தந்திருக்கமாட்டீர்கள்" என்கிறார், அப்பகுதியின் தலைமை எல்ஃப், பாட் குக்.

கிருஸ்துமஸ் தாத்தாவின் கிராமத்திற்குள் ஒரு பயணம்

எல்ஃப் என்ற கற்பனை உருவம் என்பது, கிறிஸ்துமஸ் தாத்தாவிற்கு உதவியான பணிகளை செய்யும் ஒரு சிறிய உயிரினம். அதன் பதவியில் இங்கு இவர் இருக்கிறார்.

உடனடியாக, சாண்டா கிளாஸ் கிராமம் பெரிய கவன ஈர்ப்பு விஷயமாக மாறிவிடவில்லை. மிகவும் குறைந்த தபால்கள் வருகின்றது என்பதால், சிறப்பாக செயல்படாத தபால் நிலையம் என்பதை விவரிக்கும் வகையில், அந்த நிலையத்திற்கு 4 நட்சத்திரங்களே கொடுக்கப்பட்டிருந்தன.

ஆனால், 1914களில், குழந்தைகளிடமிருந்து, சாண்டா கிளாஸ் கிராமத்திற்கு தபால்கள் வரத்தொடங்கியதாக கூறுகிறார், தலைமை தபால் அதிகாரியான ஜேம்ஸ் மார்ட்டின். அதற்கு, அந்த கிராமமும் பதிலளிக்கத் தொடங்கியுள்ளது.

தற்போது, சாண்டா கிளாஸ் நிலையத்திற்கு ஆண்டுதோறும் 20 ஆயிரம் கடிதங்கள் வருகிறன. இதில் பெரும்பான்மையானவற்றில் சரியான முகவரி இருக்கும், சிலவற்றில், சாண்டா கிளாஸ், வடதுருவம் என்று மட்டுமே இருக்கும்.

இந்த தபால்களுக்கு பதிலளிக்கும் பொறுப்பு, பாட் குக் என்று அழைக்கப்படும், தலைமை எல்ஃபிடம் உள்ளது. 86 வயதாகும் இவர், செவிலியர் படிப்புடன் சேர்த்து, இறையியல் படிப்பும் படித்துள்ளார்.

கிருஸ்துமஸ் தாத்தாவின் கிராமத்திற்குள் ஒரு பயணம்

குக்குடன் சேர்ந்து 200 தன்னார்வலர்கள் செயல்படுகிறார்கள். அவர்கள் கடிதங்களை படிப்பதுடன், அதற்கான பதில் கடிததத்தையும் தயாரிக்கின்றனர், மேலும், அதில் குறிப்பிட்ட குழந்தையின் பெயரை எழுதி, பதிலளிக்கின்றனர்.

இந்த கடிதங்களுக்கான பதில்கள், மிகவும் கவனத்துடன் அமைய வேண்டும் என்று அவர் கூறுகிறார்.

கடிதங்கள் ஒரே மாதிரியாக மடிக்கப்படுகின்றன. அதனால், கடிதத்தை பிரிக்கும்போது, முதலில் கிறிஸ்துமஸ் தாத்தாவின் உருவம் தெரியும்.

"இந்த கடிதங்களுக்கான பதிலளிக்கும் செயல் என்பது, முறைப்படி இருக்கவேண்டும். இவை மிகவும் இலகுவாக எடுத்துக்கொள்ளக்கூடிய விஷயங்களல்ல." என்று கூறுகிறார் குக்.

ஆண்டுதோறும், இந்த கடிதங்களை அனுப்புவதற்கு, 10 ஆயிரம் டாலர்கள் வரையில் செலவாகிறது. கடிதங்கள் அனுப்பும் குழந்தைகள், ஒரு டாலர் அல்லது ஐந்து டாலர்கள் அனுப்புவார்கள். ஆனால், இந்த பதில் கடிதங்களுக்கு செலவாகும் தொகை பெரும்பாலும், நன்கொடைகளாலும், அருங்காட்சியகத்திலிருந்து கிடைக்கும் பணத்திலிருந்தும் அனுப்பப்படுகிறது.

திருமதி. குக்

காற்றில் பண்டிகையின் வாசம் பரவத்தொடங்கிவிட்ட நிலையில், சாண்டா தனது அடுத்த பதில் கடித்ததை அனுப்புகிறார்.

திருமதி. குக்கின் குடும்பம் நடத்தும் ஹாலிடே வேர்ல்ட் மற்றும் ஸ்பிலாஷிங் சஃபாரி என்ற இரு பொழுதுபோக்கு பூங்காக்களே அங்கு மிகவும் பிரபலமானவை.

இந்த பூங்காக்களுக்கு ஆண்டுதோறும் பத்து லட்சம் மக்கள் வருகிறார்கள். ஆனால், நவம்பர் மாதத்தில், இந்த பூங்காக்கள் மூடப்பட்டுகின்றன.

சமூகக்கூடத்திற்கு வெளியே, தபால் நிலையத்திற்கு வெளியே என்று இங்கு பல இடங்களில் கிறிஸ்துமஸ் தாத்தாவின் சிலைகள் உள்ளன.

இந்த பகுதியிலுள்ள கிரிங்கில் பிளேஸ் என்ற இன்னொரு இடமும், கடைகளால் நிரம்பப்பட்ட கார்கள் நிறுத்தும் பகுதியாகும். இங்கு பல இடங்களில் கிறிஸ்துமஸ் தொடர்புடைய அலங்காரங்களாகவே இருந்தாலும், அங்கு மற்ற கடைகளும் இருக்கத்தான் செய்கின்றன.

இந்த இடத்தை பொருத்தவரையில், இங்குள்ள கட்டடங்களைவிட, மக்களே இந்த பண்டிகையின் வாசத்தை சுமந்துசெல்கின்றனர்.

சாண்டா கிளாஸின் கிறிஸ்துமஸ் கடையும், அந்த பூங்காக்களைப்போல, நிறைய அலங்கார பொருட்களையும், பரிசுகளையும் விற்பனை செய்கின்றது.

அந்த கடையின் கடைசியில், கிறிஸ்துமஸ் தாத்தா அமர்ந்திருக்கிறார்.

கிருஸ்துமஸ் தாத்தாவின் கிராமத்திற்குள் ஒரு பயணம்

சாண்டா கிளாஸ் கிராமத்தை பொருத்தவரையில், அந்த மனிதர், கிறிஸ்துமஸ் தாத்தாவாக நடிக்கவில்லை, வாழ்கிறார்.

ஜனவரி மாத்ததிலும் மக்கள் அவரை கிறிஸ்துமஸ் தாத்தா என்றே அழைக்கின்றனர். அவரின் உண்மையான பெயர் தெரிந்தாலும், யாரும் அழைப்பதில்லை.

அவரின் தாடி, தலைமுடி என எல்லாமே நிஜமானவை. அவர் சாதாரண ஆடைகளில் இருந்தாலும், குழந்தைகளின் கிறிஸ்துமஸ் பரிசு குறித்தே அவர்களிடம் பேசுகிறார்.

தனது மகனிடம் கூறிய கதை குறித்து விவரிக்கிறார், மைக்கில் ஜொஹன்ஸ்.

"நீங்கள், சாண்டாவோடு, கோல்ஃப் விளயாடியுள்ளீர்களா என்று என் மகன் கேட்டதற்கு நான் ஆம் என்று பதிலளித்தேன்.`

வெற்றி பெற்றீர்களா என்று கேட்ட்தற்கும் ஆம் என்று கூறினேன்.

அதற்கு அவர், "நீங்கள் அவரை ஜெயித்ததால், நான் வாழும் வரையில், எனக்காக கிறிஸ்துமஸ் பரிசு கிடைக்காது என்று கூறியதாக" தெரிவிக்கிறார்.

கிருஸ்துமஸ் தாத்தா

பூங்கா மூடப்பட்டிருந்தாலும், டிசம்பர் மாதத்தில் மக்கள், அங்கு வருகிறார்கள். டிசம்பரின் முதல் மூன்று வார இறுதிகளிலும், முக்கிய நிகழ்ச்சிகள் நடக்கின்றன.

ஆம்ஸ்ட்ராங் குடும்பத்தினர், இந்தப் பகுதிக்கு வருவதற்காக, ஆறு மணிநேர வாகனப்பயணத்தை மேற்கொண்டுள்ளனர்.

"இங்குள்ள பல கடைகளுக்கும் நாங்கள் சென்று வருகிறோம். கிறிஸ்துமஸ் தாத்தாவிற்கு நாங்கள் கடிதங்கள் அனுப்பியுள்ளோம், எங்களுக்கு வரவிருக்கும் பதில் கடிதத்தில் அவரின் தபால் குறியீட்டை பெற ஆவலாக உள்ளோம்" என்று ஆஷ்லே ஆம்ஸ்டிராங் கூறுகிறார்.

மக்கள், சாண்டா கிளாஸ் கிராமத்தில் வசிக்க மிகவும் விரும்புகிறார்கள். நிஜமாகவே, உங்களுக்கு கிறிஸ்துமஸ் பிடிக்காது என்றால், நீங்கள் வாழ்வதற்கு, டேல், ஜாஸ்பர் என்று பல இடங்கள் உள்ளன.

ஆம்ஸ்டிராங் குடும்பத்தினர்

"இது ஒரு எழுதப்படாத பிரசாரம், இங்கு நான் செல்லும் ஒவ்வொரு வீட்டிலும், மக்கள், `நான் நம்புகிறேன்` என்ற அடையாள பதாகையை வைத்துள்ளனர்" என்று கூறுகிறார், மைக்கில் ஜோஹன்ஸ்.

"அவர்கள் கிறிஸ்துமஸை நம்புகிறார்கள், கிறிஸ்துமஸ் தாத்தாவை நம்புகிறார்கள். அந்த நம்பிக்கைதான் மக்களை ஒரு சமூகமாக்கி, தொடர்ந்து வளர உதவுகிறது" என்று அவர் கூறுகிறார்.

"கிறிஸ்துமஸ் பண்டிகையின் உண்மையான உணர்வு என்பது இங்குள்ளது. இது அமெரிக்காவின் கிறிஸ்துமஸ் நகரமாக இருக்கலாம், ஆனால் எனக்கு இது உண்மையிலேயே ஒரு வரம்" என்று கூறுகிறார், சாண்டா கிளாஸ் கிராமத்தின் கிறிஸ்துமஸ் தாத்தா.

http://www.bbc.com/tamil/

Edited by நவீனன்

  • தொடங்கியவர்

இந்தக் கிராமத்தில் பிணக்குழி தோண்ட 3 நாள்கள் தேவைப்படும்...காரணம்?!

 
 

"அப்டியே அந்தக் குளிரு... சில்லுன்னு தோல குத்திக் கிழிச்சு, நரம்பெல்லாம் அறுத்து எறிஞ்சு எலும்புக்குள்ளப் போய் ஒரு குத்தாட்டம் போடும் பாருங்க... ச்ச்சசப்பாபாபா... மனுசன் செத்துருணும். அப்படி ஒரு குளிர் அது..." இந்த வர்ணனை ஏதோ ஊட்டி, கொடைக்கானல் குளிருக்கானது அல்ல. அதுக்கும் மேல... காஷ்மீரா?...இல்ல அதுக்கும், அதுக்கும் மேல... 

உலகின் அதிக குளிரான கிராமம்

 

Photo Credits: Amos chapple

ரஷ்யாவின் வடகிழக்கில், சைபீரியாவின் ஒரு மூலையில் அமைந்திருக்கிறது "ஓய்மியகன்"(Oymyakon) எனும் இந்தக் கிராமம். இங்கிருந்து ஆர்க்டிக் துருவத்திற்கு சில நூறு கிலோமீட்டர்கள் மட்டுமே. இன்றைய தேதிக்கு, உலகிலேயே மக்கள் நிரந்தரமாக வாழும் மிகவும் குளிரான சில பகுதிகளில் இது முக்கியமான இடம். இவ்வளவு குளிரான பகுதியில் மக்கள் நிரந்தரமாக வாழ்கிறார்கள் என்றால், அவர்களின் வாழ்க்கை எப்படியானதாக இருக்கும்? அந்த இடமும், அந்த வாழ்க்கையும் எந்த மாதிரியானதாக இருக்கும்?
குளிர்காலங்களில் மிகச் சாதாரணமாக வெப்பநிலை (-) 50 டிகிரி  செல்ஷியஸாக இருக்கும். அப்படியான அந்தக் குளிர்காலங்களில் பகல் வெளிச்சம் என்பது அதிகபட்சமாக 3 மணி நேரம் வரை மட்டுமே இருக்கும். அதிகபட்ச குளிராக 1933ம் ஆண்டு, பிப்ரவரி மாதம் 6ம் தேதி (-) 71 டிகிரி செல்ஷியஸை எட்டியுள்ளது இந்தக் கிராமம். 

உலகின் அதிக குளிரான கிராமம்

Photo Credits: Amos chapple

இந்தக் கிராமத்தில் மொத்தம் 500 பேர் வரை வாழ்கிறார்கள். 1920களில் கலைமான் (Reindeer) மேய்ப்பர்கள் இந்தப் பகுதியில் நிறுத்தி மான்களுக்குத் தண்ணீர் காட்டுவார்கள். இந்தக் கிராமத்தில் ஒரு வெந்நீர் ஊற்று (Thermal Spring) இருக்கிறது. நாடோடிகளாக சுற்றிக் கொண்டிருக்கும் அந்த மேய்ப்பர்களைக் கட்டுப்படுத்தி, அரசின் ஆளுகைக்குள் கொண்டுவர வேண்டும் என்றால் அவர்களை முதலில் ஒரு இடத்தில் குடியமர்த்த வேண்டும் என்று நினைத்தது அன்றைய சோவியத் அரசு. அதன் அடிப்படையில்தான் இந்தக் கிராமம் உருவாக்கப்பட்டது. 

கோடைக் காலங்களில் ஒரு நாளைக்கு 21 மணி நேரம் வரை வெளிச்சம் இருக்கும். 2010 ன் ஒரு கோடைக்காலத்தில் வெப்பநிலை அதிகபட்சமாக 35 டிகிரி செல்ஷியஸை எட்டியுள்ளது. 

உலகின் அதிக குளிரான கிராமம்

Photo Credits: Amos chapple

இந்தப் பகுதிகளில் விவசாயத்திற்கு வாய்ப்பில்லை என்பதால் பெரும்பாலும் கறிதான் இவர்களின் முக்கிய உணவாக இருக்கிறது. மீன், மான், குதிரை ஆகியவற்றை சாப்பிடுகிறார்கள். 

இந்தப் பகுதி மக்கள் பெரும்பாலும் வீட்டிற்குள்ளேயே இருக்க விரும்புகிறார்கள். அடிப்படை தேவைகளை விற்பனை செய்ய ஒரேயொரு கடை இந்தக் கிராமத்தில் இருக்கிறது.

உலகின் அதிக குளிரான கிராமம்

அந்தக் கிராமத்தில் இருக்கும் ஒரே கடை... (Photo Credits: Amos chapple)

பெரும்பாலானோர் வீட்டிற்குள் கழிவறை வைப்பதில்லை. ப்ளம்பிங் வேலைகளைச் சரிவர செய்ய முடிவதில்லை, பைப்கள் எல்லாம் உறைந்து செயலற்று போய்விடுகின்றன. ஆதலால், வீட்டிற்கு வெளியில் இவர்களுக்கான கழிவறை.

உலகின் அதிக குளிரான கிராமம்

வீட்டிற்கு வெளியே இருக்கும் கழிவறை... (Photo Credits: Amos chapple)

பேனாவில் இங்க் உறைந்துவிடும். கண்ணாடிகள் பனியால் உறைந்துவிடும். செல்போன், கேமரா உட்பட எந்த கேட்ஜெட்களும் சரியாக வேலை செய்யாது. பேட்டரி பவர் வெகு விரைவிலேயே குறைந்து விடும்.

 கார்களைப் பெரும்பாலும் "சூடேற்றப்பட்ட ஷெட்களில்" (Heated Garage) பார்க் செய்கிறார்கள். சமயங்களில் வெளியில் நிறுத்த வேண்டியிருந்தால், நாள் முழுக்கக் கூட காரை ஆஃப் செய்யாமல் ஓடவிட்டபடியே வைத்திருக்கிறார்கள்.

இந்தக் கிராமத்திற்கு வரும் சாலையின் பெயர் "M56 கொலிமா நெடுஞ்சாலை". இதை "தி ரோடு ஆஃப் போன்ஸ்" (The Road of Bones) என்றும் சொல்கிறார்கள். சாகச விரும்பிகள் இந்தச் சாலையில் பைக்குகளையும், கார்களையும் ஓட்ட ஆசைப்படுகிறார்கள்.

"ஈஸ்ட் சைபீரியன் லைக்காஸ்" (East Siberian Laikas) மற்றும் "சைபீரியன் ஹஸ்கி" (Siberian Husky) (அடப்பாவிங்களா?! இந்தக் குளிர்ல இருக்குற நாயவாடா சென்னை வெயில்ல வாக்கிங் கூட்டிப் போறீங்க?!) ஆகிய இரண்டு வகை நாய்கள் இந்தப் பகுதிகளில் அதிகம் இருக்கின்றன. 

உலகின் அதிக குளிரான கிராமம்   உலகின் அதிக குளிரான கிராமம்  உலகின் அதிக குளிரான கிராமம்

Photo Credits: Amos chapple

காய்கறிகளைச் சாப்பிடாவிட்டாலும் கூட இந்த மக்களுக்கு நியூட்ரிஷன் குறைபாடு பெரிதாக ஏற்படுவதில்லை. அதற்கு காரணம் அந்த மிருகங்களின் பாலை இவர்கள் அருந்துவதுதான் என்று சொல்கிறார்கள் மருத்துவர்கள்.

இவர்கள் படும் பெரும்பாடு இறந்தவர்களைப் புதைப்பதற்குத்தான். ஒருவர் இறந்துவிட்டால், அவரைப் புதைக்க, குழி தோண்டுவதற்கு குறைந்தது மூன்று நாள்கள் தேவைப்படும். பனியால் இறுகியிருக்கும் அந்த நிலத்தில் கரி போட்டு நெருப்பு மூட்டி, நெகிழச் செய்து கொஞ்சம், கொஞ்சமாகக் குழியைத் தோண்டுகிறார்கள். 

உலகின் அதிக குளிரான கிராமம் - 3

Photo Credits: Amos chapple

இந்தக் கிராமத்தின் புகைப்படங்கள் இதுவரை பெரியளவில் வெளிவந்தது கிடையாது. ஆனால், சில ஆண்டுகளுக்கு முன்னர் இதைப் பற்றிக் கேள்விப்பட்ட நியூசிலாந்து புகைப்படக்காரர் அமோஸ் சாப்பல் (Amos Chapple) என்பவர் இந்த மக்களின் வாழ்வை போட்டோவாக்கியிருக்கிறார். அது அவ்வளவு எளிதில் நடந்துவிடவில்லை. பனிக்காலத்தில் வெளியில் வரும்போது தன் ஆடைக்குள், தன் உடலை ஒட்டி கேமராவை அணைத்து வைத்திருப்பார். அது கேமராவிற்குக் கொஞ்சம் வெதுவெதுப்பைக் கொடுக்கும். 
கேமராவை க்ளிக் செய்யும்போது, மூச்சை இழுத்து பிடித்தபடியே இருப்பார். மூச்சை விட்டுவிட்டால் அந்தப் புகை லென்ஸில் படர்ந்துவிடும். 

அந்தக் கிராமத்தின் Top Angle போட்டோவை எடுக்க, ஒரு உயரமான கம்பத்தில் மீது ஏறியிருக்கிறார். கைகளின் க்ளவுஸைக் கழற்றிவிட்டு கேமரா பட்டனை அழுத்தியிருக்கிறார். அந்த சில நொடிகளிலேயே , அவரின் விரல் விறைத்து, உறைந்துப் போய்விட்டது. கிட்டத்தட்ட விரலே உடைந்து விழுந்துவிடும் நிலைக்குச் சென்றுவிட்டது. இப்படியாக, பெரும்பாடு பட்டுதான் இந்தப் புகைப்படங்களை அவர் எடுத்துள்ளார். 

https://www.vikatan.com

  • தொடங்கியவர்

திருமணம் முடிந்த 10-வது நாளில் இந்த நல்ல செய்தியை சொல்கிறார் அனுஷ்கா ஷர்மா!

 

 
anush

 

அனுஷ்கா ஷர்மா விராட் கோலி திருமணம் முடிந்த பத்தாவது தினத்தில் ஒரு நல்ல செய்தியை அனுஷ்கா தனது டிவிட்டரில் பகிர்ந்துள்ளார்.

anush.jpg

இந்த காதல் ஜோடி சமீபத்தில் இத்தாலியில் திருமணத்தையும்,  ஸ்விஸில் ஹனிமூனையும் கொண்டாடி மகிழ்ந்தனர். இவர்களின் திருமண புகைப்படங்கள் சமூக வலைத்தளங்கள் முழுவதும் வைரலாகின.

618078-virushka-2.jpg

இந்நிலையில் அனுஷ்கா தற்போது டிவிட்டரில் ஒரு செய்தியை பகிர்ந்துள்ளார். ஃபோர்ப்ஸ் பத்திரிகையில் செலிப்ரிட்டி வரிசையில் அனுஷ்கா 100-வது நபராக இடம்பெற்றுள்ளார் என்பதே அந்த செய்தி. இது தனக்கு இரட்டிப்பு மகிழ்ச்சி என்று கூறியிருக்கிறார் அனுஷ்கா.

anushka1.jpg

ஆண்டொன்றுக்கு சுமார் 25.26 கோடி வருமானம் ஈட்டும் நுஷ் (Nush) என்ற நிறுவனத்தை அனுஷ்கா நடத்தி வருகிறார். இந்த Nush ஃபோர்ப்ஸின் பட்டியலில் 32-வது ரேங்கில் உள்ளது.

anushka_smile.jpg

ஏற்கனவே ஃபோர்ப்ஸ் பத்திரிகையில் தீபிகா படுகோன் 11 இடத்திலும், பிரியங்கா சோப்ரா 7-வது இடத்திலும் இடம் பிடித்திருப்பது குறிப்பிடத்தக்கது.

http://www.dinamani.com

  • தொடங்கியவர்

உலகெங்கிலும் நடந்த வண்ணமயமான கிறிஸ்துமஸ் கொண்டாட்டங்கள்

 

உலகின் வெவ்வேறு பகுதிகளில் உள்ள மக்கள் மகிழ்ச்சியுடன் கிறிஸ்துமஸ் கொண்டாடியது குறித்த புகைப்படத் தொகுப்பு இது.

கிறிஸ்துமஸ் சிறப்பு புகைப்படத் தொகுப்பு

பிரேசில் தெருக்களில் வழியெங்கிலும் சென்று குழந்தைகளுக்கு பரிசுப்பொருட்களை வழங்கும் சாண்டா கிளாஸ்

கிறிஸ்துமஸ் சிறப்பு புகைப்படத் தொகுப்பு

அம்ரிஸ்டரில் உள்ள புனித பவுல் தேவாலயத்தில் ஒரு சிறிய குழந்தை மெழுகுவர்த்தி ஏற்றும் காட்சி

 

கிறிஸ்துமஸ் சிறப்பு புகைப்படத் தொகுப்பு

சிட்னி கடற்கரையில் அமைக்கப்பட்டுள்ள கிறிஸ்துமஸ் மரம்

கிறிஸ்துமஸ் சிறப்பு புகைப்படத் தொகுப்பு

கிறிஸ்துமஸ் அன்று பெர்லினில் உள்ள ஏரி ஒன்றில் குளித்து மகிழும் மக்கள்

கிறிஸ்துமஸ் சிறப்பு புகைப்படத் தொகுப்பு

வங்கதேசத்தில் கிறிஸ்துமஸ் தினத்தைக் கொண்டாடும் குழந்தைகள்

கிறிஸ்துமஸ் சிறப்பு புகைப்படத் தொகுப்பு

இந்தோனீசிய கிறிஸ்தவர்கள் வடக்கு சுமத்ராவில் உள்ள கரோவில் கிறிஸ்துமஸ் கொண்டாட்டங்களின் அணிவகுப்பில் பங்கேற்கின்றனர்

கிறிஸ்துமஸ் சிறப்பு புகைப்படத் தொகுப்பு

காஸா நகரில் கிறிஸ்துமஸ் அன்று வண்ணமயமாக அலங்கரிக்கப்பட்டிருக்கும் கடைகள்

http://www.bbc.com/

 

 

  • தொடங்கியவர்

நடுவானில் பெற்றோரை நெகிழ்ச்சிக்குள்ளாக்கிய பிலிப்பைன்ஸ் விமானி!

பிலிப்பைன்ஸை சேர்ந்த ஜூவான் பாலோ ஃபெர்மின் என்ற விமானி கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு நடுவானில் தன் பெற்றோரை ஆச்சரியப்படுத்திய காணொளி ஒன்று சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது.

ஃபேஸ்புக்கில் அவர் பதிவேற்றிய காணொளி ஒன்று லட்சக்கணக்கானோரால் பார்க்கப்பட்டு 10,000-க்கும் மேற்பட்டோரால் பகிரப்பட்டுள்ளது.

''ஒவ்வொருவருக்கும் கனவுகள் எடுக்கும் வடிவம் மிகவும் சுவாரஸியமாக இருக்கும். அதுபோல என்னுடைய கனவு மிகவும் எளிமையானது. நான் விமானியாக இருக்கும் விமானத்தில் அவர்களை வீட்டிற்கு கொண்டு செல்ல வேண்டும்.'' என்று தனது ஃபேஸ்புக் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார் ஜுவான் பாலோ ஃபெர்மின்.

ஜுவானின் பெற்றோர் கிறிஸ்துமஸ் பண்டிகை கொண்டாடுவதற்காக பிலிப்பைன்ஸில் உள்ள தங்கள் மகனின் வீட்டிற்கு பெர்முடாவிலிருந்து புறப்பட்டுள்ளனர்.

ஜுவான் விமானியாக பணிபுரியும் பிலிப்பைன் ஏர்லைன்ஸ் விமான நிறுவனத்தில் ஜுவான் பெற்றோர் பயண டிக்கெட்களை முன்பதிவு செய்திருந்தனர்.

இதைமுன்பே தெரிந்து கொண்ட ஜுவான், அவரது பெற்றோர் பயணம் செய்யும் விமானத்தின் பணியாளர் குழுவில் இடம்பெற்றிருந்தார். ஆனால், தாங்கள் பயணிக்கும் விமானத்தை ஓட்டுவது தங்கள் மகன்தான் என்பது ஜுவான் பெற்றோர்களுக்கு தெரியாது.

தனது பணி சூழல் காரணமாக கடந்த 16 ஆண்டுகளாக ஜுவானால் தன் பெற்றோர்களுடன் கிறிஸ்துமஸ் பண்டிகையை கொண்டாட முடியவில்லை. அதனால் இந்த கிறிஸ்துமஸ் பண்டிகைக்கு இப்படியோரு ஆச்சரிய பரிசை பெற்றோருக்கு கொடுக்க எண்ணி, விமானம் நடுவானில் பறந்து கொண்டிருக்கையில் பயணிகள் வரிசையில் அமர்ந்திருந்த பெற்றோர் முன் திடீரென தோன்றி அவர்களை திக்குமுக்காட செய்துவிட்டார் ஜுவான்.

ஜுவானை பார்த்த மகிழ்ச்சியில் அவரது தாய் கண்ணீர் மல்க கட்டிப்பிடிக்கும் இந்த நெகிழ்ச்சி காணொளி சமூக ஊடங்களில் பரவலாக பகிரப்பட்டு வருகிறது.

பெற்றோர் பயணித்த விமானத்தில் பணியாளர் குழுவில் இடம்பெற உதவியதற்காக விமான நிறுவனத்திற்கு தனது நன்றிகளை தெரிவித்துள்ளார் ஜுவான்.

 

http://www.bbc.com

 

  • தொடங்கியவர்

சிறுமிகளையும் பெண்களையும், பாலியல் மயப்படுத்தும் ஆச்சிரமங்கள், கடவுளரின் அவதாரபுருசர்களிடையே, மனிதனாக உயர்ந்த தொழிலதிபர் சவானி!!!

 
தந்தையில்லாத 251 பெண்களுக்கு ஆடம்பர திருமணம் செய்து மகிழ்ந்த  தொழிலதிபர் சவானி….
தந்தையில்லாத வசதி குறைந்த 251 பெண்களுக்கு ஒரே நேரத்தில் ஆடம்பர  திருமணம்  செய்து வைக்கப்பட்டுள்ளது.  குஜராத்தைச் சேர்ந்த தொழிலதிபர்  சவானியின் இந்த உயர்ந்த செயல்  சம்பவம் அனைவரிடமும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
 

தந்தையில்லாத 251 பெண்களுக்கு ஆடம்பரமாக திருமணம் செய்து வைத்த சூரத் தொழிலதிபர்

 

குஜராத் மாநிலம் சூரத்தைச் சேர்ந்த தொழிலதிபர் சவானி கடந்த 5ஆண்டுகளாக தந்தையை இழந்து வறுமையில் வாடும் பெண்களுக்கு இலவசமாக திருமணம் செய்து வைத்து வருகிறார்.  இந்நிலையில், 251 தந்தையை இழந்த பெண்களுக்கு, சவானி,  நேற்று (24.12.17)  ஆடம்பரமாக திருமணம் செய்து வைத்தார். மிக பிரம்மாண்டமாக ஏற்பாடு செய்யப்பட்ட  நிகழ்ச்சியில், சாதி, மத பாகுபாடின்றி அனைத்து மதத்தினருக்கும் அவரவர் முறைப்படி திருமணம் நடைபெற்றது.

201712251246443224_1_massmarriagesurat._L_styvpf.jpg?resize=615%2C350

251 மணப்பெண்களில் 108 பெண்களுக்கு சவானி குடும்பத்தினர் கன்னியாதானம் செய்து வைத்தனர். ஒரே சமயத்தில் நடைபெற்ற திருமண விழாவில் சமூக ஆர்வலர்கள், எழுத்தாளர்கள் மற்றும் மதத்தலைவர்கள் கலந்து கொண்டனர். ஒவ்வொரு பெண்களுக்கும் 5 லட்சம் ரூபாய் செலவில் திருமணம் நடத்தி வைக்கப்பட்டுள்ளது.

201712251246443224_2_suratmarriahe._L_styvpf.jpg?w=1320

தந்தை இல்லாத பெண்களுக்கு திருமணம் செய்து வைப்பது மனதிற்கு மகிழ்ச்சியளிப்பதாக சவானி கூறியுள்ர்ளார். கடந்த 5 ஆண்டுகளில் 824 பெண்களுக்கு திருமணம் செய்து வைத்துள்ள இவர்  மேலும், 1300 பேருக்கு பொருளாதார ரீதியாக உதவி செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

http://globaltamilnews.net

  • தொடங்கியவர்

சார்லி சாப்ளின் இறந்த தினம்: 25-12-1977

 
 
 

சர் சார்லஸ் ஸ்பென்ஸர் சாப்ளின் என்ற இயற்பெயர் கொண்ட சார்லி சாப்ளின், 1889-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 16-ந்தேதி பிறந்தார். ஹாலிவுட் திரையுலகின் பெரும் புகழ்பெற்ற கலைஞராக விளங்கினார். இவருக்கு நடிகர், இயக்குநர், இசையமைப்பாளர், திரைக்கதை எழுத்தாளர், திரைப்படத் தொகுப்பாளர், திரைப்படத் தயாரிப்பாளர் என்று பல முகங்கள் உள்ளன. சாப்ளின், லண்டனில் உள்ள வால்வோர்த்தில் சார்லஸ்- ஹன்னா ஹாரியட் ஹில் தம்பதிக்கு மகனாகப் பிறந்தார். இவரது பெற்றோர்கள் மியூசிக் ஹால் கலைஞர்கள். சாப்ளின் பிறந்த சில நாட்கள் கழித்து இவர்களது

 
 
சார்லி சாப்ளின் இறந்த தினம்: 25-12-1977
 
சர் சார்லஸ் ஸ்பென்ஸர் சாப்ளின் என்ற இயற்பெயர் கொண்ட சார்லி சாப்ளின், 1889-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 16-ந்தேதி பிறந்தார். ஹாலிவுட் திரையுலகின் பெரும் புகழ்பெற்ற கலைஞராக விளங்கினார். இவருக்கு நடிகர், இயக்குநர், இசையமைப்பாளர், திரைக்கதை எழுத்தாளர், திரைப்படத் தொகுப்பாளர், திரைப்படத் தயாரிப்பாளர் என்று பல முகங்கள் உள்ளன.

சாப்ளின், லண்டனில் உள்ள வால்வோர்த்தில் சார்லஸ்- ஹன்னா ஹாரியட் ஹில் தம்பதிக்கு மகனாகப் பிறந்தார். இவரது பெற்றோர்கள் மியூசிக் ஹால் கலைஞர்கள். சாப்ளின் பிறந்த சில நாட்கள் கழித்து இவர்களது திருமண வாழ்க்கை முறிந்தது. சாப்ளின் தனது அன்னையின் கண்காணிப்பில் வளர்ந்தார். 1896-ம் ஆண்டில் ஹாரியட்டிற்கு வேலை ஏதும் கிடைக்காத நிலையில், சார்லியும் அவரது சகோதரர் சிட்னியும் லாம்பெத் வொர்க்கவுசில் இருக்கும் நிலை ஏற்பட்டது.

பின்னர் இருவரும் Hanwell School for Orphans and Destitute Children என்னும் ஆதரவற்றோருக்கான பள்ளி ஒன்றில் வளர்ந்தனர். இதற்கிடையில், சாப்ளினின் தந்தை குடிப்பழக்கத்தால் உடல் நலம் குன்றி சாப்ளினின் பனிரெண்டாவது வயதில் இறந்தார். இதனால் இவர் தாயும் பெரும் மன உளைச்சலுக்கு உள்ளாகி கிராய்டனில் இருந்த கேன் ஹில் அசைலம் என்ற மன நலம் பாதிக்கப்பட்டோருக்கான காப்பகம் ஒன்றில் சேர்க்கப்பட்டார். பின்பு இவரும் 1928-ம் ஆண்டில் இறந்தார். சாப்ளின் ஐந்து வயதிலேயே நடிக்கத் தொடங்கி விட்டார். முதன் முதலில் 1894-ம் ஆண்டில் மியூசிக் ஹாலில் தனது தாய்க்குப் பதிலாக ஒரு வேடத்தில் நடித்தார்.

சிறுவனாக பல நாட்கள் உடல் நலக்குறைவால் படுத்த படுக்கையாக இருந்தபொழுது, இரவுகளில் அவரது தாய் சன்னல் ஓரம் அமர்ந்து வெளியில் நடக்கும் நிகழ்வுகளை நடித்துக் காட்டுவார். சாப்ளினுக்கு பத்து வயதாக இருந்த பொழுது சிட்னி லண்டன் ஹிப்போட்ரோமில் சின்ட்ரெல்லா பாண்டோமைமில் ஒரு பூனையாக, நகைச்சுவையான பாத்திரத்தில் நடிக்கும் வாய்ப்பை வாங்கித் தந்தார்.

1903-ம் ஆண்டில் ஜிம், எ ரொமான்ஸ் ஆஃப் காக்கைய்ன் நாடகத்தில் நடித்தார். இதற்குப் பிறகு அவருக்கு நிரந்தர வேலை கிடைத்தது. செர்லாக் ஹோம்ஸ் நாடகத்தில் செய்தித்தாள் விற்கும் சிறுவன் பில்லி வேடம். இதனைத் தொடர்ந்து கேசீஸ் கோர்ட் சர்க்கஸ் நடத்திய பல்சுவை நிகழ்ச்சியிலும், Fred Karno's Fun Factory slapstick நகைச்சுவை நிறுவனத்தில் கோமாளி வேடத்திலும் நடித்தார். அமெரிக்காவின் குடிபெயர்வுப் பதிவுகளின்படி கார்னோ குழுவுடன் அக்டோபர் 2, 1912- அன்று அமெரிக்கா வந்தடைந்தார்.

கார்னோ குழுவிலே ஆர்த்தர் ஸ்டான்லே ஜெப்பர்சனும் இருந்தார்- இவரே பின்னர் ஸ்டான் லாரலாக பிரபலமானார். இருவரும் சிறிது காலம் ஒரே அறையில் தங்கினர். தயாரிப்பாளர் மாக் செனட் சாப்ளினின் திறமையைக் கவனித்து அவரது நிறுவனமான கீஸ்டோன் திரைப்பட நிறுவனத்தில் சேர்த்துக் கொண்டார். முதலில் சாப்ளினுக்கு கீஸ்டோன் நடிப்பு முறைக்கு தன்னை மாற்றிக் கொள்வது சற்று கடினமாக இருந்தது. ஆனால் மிக விரைவில் தன்னைப் பழக்கிக் கொண்டு கீஸ்டோனின் சிறந்த கலைஞராக வளர்ந்தார். இவரது கிடுகிடு வளர்ச்சிக்குக் காரணமாக அமைந்தது அவர் தனக்கென்று உருவாக்கிக் கொண்ட நாடோடி வேடமும், நிறுவனத்தில் இவருக்கு இயக்கவும் புது படைப்புகள் படைக்கவும் கொடுக்கப்பட்ட உரிமையுமாகும்.

இவரது வளர்ச்சியையும், இவரது நிர்வாகியாக பணிபுரிந்த சிட்னியின் ஆற்றலையும் சாப்லினின் சம்பளப் பட்டியல் எடுத்துக்காட்டியது. இவர் 1919-ம் ஆண்டில் மேரி பிக்போர்ட், டக்லஸ் ஃபேர்பேங்க்ஸ், கிரிபித்துடன் இணைந்து யுனைட்டடு ஆர்டிஸ்ட்ஸ் ஸ்டுடியோவைத் துவங்கினார். 1927-ம் ஆண்டில் ஓசையுடன் கூடிய திரைப்படங்கள் வெளிவரத் துவங்கி மிகவும் பரவலானாலும் 1930-ம் ஆண்டு வரை சாப்ளின் பேசும் படங்களில் இருந்து ஒதுங்கியே இருந்தார். சாப்ளின் சினிமாவின் பல துறைகளில் கை தேர்ந்தவராகத் திகழ்ந்தார். 1952-ம் ஆண்டில் வெளிவந்த லைம்லைட் திரைப்படத்தில் நடன அமைப்பையும் 1928-ம் ஆண்டுத் திரைப்படம் "தி சர்க்கஸ்" படத்தின் தலைப்பு இசை அமைப்பையும் இவரே செய்தார். இவர் இசையமைத்த பாடல்களில் பெரும் புகழ் பெற்றது ஸ்மைல்.

இவரது முதல் டாக்கீஸ் 1940-ம் ஆண்டில் வெளியான "தி கிரேட் டிக்டேடர்". இது அடால்ஃப் ஹிட்லரையும் அவரது பாசிச கொள்கையையும் எதிர்த்து குரல் கொடுத்த படம். இப்படம் அமெரிக்கா இரண்டாம் உலகப் போரில் புகுவதற்கு ஒரு வருடம் முன்பு அங்கு வெளியிடப்பட்டது.

இதில் சாப்ளின் இரு வேடங்கள் பூண்டிருந்தார். ஹிட்லர் மற்றும் நாசியர்களால் கொடுமையாக கொல்லப்படும் யூத இனத்தைச் சேர்ந்த ஒரு நாவிதன். சினிமா மீது மோகம் கொண்ட ஹிட்லர் இப்படத்தை இருமுறைப் பார்த்தார். போர் முடிந்த பிறகு, ஹோலோகாஸ்ட்டின் கொடுமை உலகிற்கு தெரியவந்த பிறகு சாப்ளின் இக்கொடுமைகள் எல்லாம் தெரிந்திருந்தால் ஹிட்லரையும், நாசியர்களையும் கிண்டல் செய்திருக்க முடியாது என்றார் இவரது கடைசி திரைப்படங்கள் "தி கிங் இன் நியூ யார்க்" (1957), "தி சாப்லின் ரெவ்யூ" (1959) மற்றும் சோஃபியா லாரென், மார்லன் ப்ராண்டோ நடித்த "அ கௌண்டஸ் ·ஃப்ரம் ஹாங்காங்". இவரது திரையுலக வெற்றிகள் மூலமாக இவருக்கு கிடைத்த புகழ், பலமுறை தன் தனிப்பட்ட வாழ்வினால் பெரிதும் பாதிக்கப்பட்டது.

அக்டோபர் 23 1918-இல் இருபத்தியெட்டு வயது சாப்ளின் பதினாறு வயது மில்ட்ரெட் ஹாரிசை மணந்தார். இவர்களுக்கு பிறந்த குழந்தை சிறு வயதிலேயே இறந்தது. இவர்களது திருமண வாழ்க்கை 1920-ம் ஆண்டு விவாகரத்தில் முடிந்தது. முப்பத்தி ஐந்து வயதில் "தி கோல்ட் ரஷ்" திரைப்படத்திற்கு தயார் செய்து கொண்டிருந்த பொழுது, பதினாறு வயது லீடா க்ரே மீது காதல் கொண்டார். நவம்பர் 26 1924-ல் க்ரே கர்ப்பமான நிலையில் இவர்களது திருமணம் நடைபெற்றது. இவர்களுக்கு இரு மகன்கள் பிறந்தனர். இவர்களது மண வாழ்க்கையும் $ 8, 25,000 ஒப்பந்ததுடன் விவாகரத்தில் முடிந்ததது. இந்த கசப்பான விவாகரத்தினாலும் வருமான வரி சிக்கல்களாலும் மன அழுத்தத்திற்கு ஆளாகி இவரது தலைமுடி நரைக்கத் துவங்கியது.

மேலும் நீதிமன்றம் வெளியிட்ட அறிக்கையில் சாப்ளினைப் பற்றிய பல அந்தரங்க செய்திகள் இடம்பெற்றது. இதனால் இவரை எதிர்த்து பிரச்சாரங்கள் நடைபெற்றன. சாப்ளினின் நாற்பத்தி ஏழாவது வயதில் பாலட் கொடார்டை ஜூன் 1936-ல் ரகசியமாக மணமுடித்தார். சில வருடங்கள் மகிழ்ச்சியாக வாழ்ந்தபின் இத்திருமணமும் விவாகரத்தில் முறிந்தது.

இக்காலகட்டத்தில் நடிகை ஜோன் பேரியுடன் இவருக்கு உறவு ஏற்பட்டது. ஆனால், பேரி சாப்ளினை துன்புறுத்தியதால் மெதுவாக அவ்வுறவினை முடித்துக் கொண்டார். ஆனால் மே 1943-ம் ஆண்டு தனது குழந்தைக்கு சாப்ளினே தந்தை என்று வழக்கு தொடர்ந்தார். இரத்த பரிசோதனைகள் சாப்ளினை குற்றமற்றவர் என்று காட்டினாலும், அக்காலத்தில் இரத்த பரிசோதனைகள் நீதி மன்றங்களில் சாட்சிகளாக எடுத்துக்கொள்ளப்படவில்லை.

குழந்தை 21 வயது வரும் வரை வாரம் $75 வழங்குமாறு உத்தரவிடப்பட்டார். சில நாட்கள் கழித்து, ஐகன் ஓ'நீலின் மகள், ஓனா ஓ'நீலை சந்தித்தார். இவரை ஜூன் 16, 1943 அன்று மணந்தார். சாப்ளினின் வயது அப்பொழுது 54, ஓ'நீலின் வயது 17. இத்திருமண வாழ்க்கை மகிழ்ச்சியுடன் பல வருடங்கள் நீடித்தது. இவர்களுக்கு எட்டு குழ்ந்தைகள் பிறந்தனர்.

சாப்ளின், 1977-ம் ஆண்டு கிறிஸ்மஸ் தினத்தன்று தனது எண்பத்தி எட்டாவது வயதில் வேவேவில் இறந்தார். இவரது உடலை வாட் நகரில் உள்ள கார்சியர்-சுர்-வெவே கல்லறையில் அடக்கம் செய்தார்கள்.

மார்ச் 1, 1978-ம் ஆண்டு இவரது உறவினர்களிடமிருந்து பணம் பறிப்பதற்காக இவரது உடல் கல்லறையிலிருந்து திருடப்பட்டது. ஆனால் இத்திட்டம் தோல்வியுற்று, திருடர்கள் பிடிபட்டனர். பதினொரு வாரங்களுக்குப் பின் ஜெனீவா ஆற்றின் அருகில் சாப்ளினின் உடலைக் கைப்பற்றினார்கள். சாப்ளினின் நினைவாக வேவேவில் அவரது சிலை ஒன்றை அமைத்துள்ளனர்.

http://www.maalaimalar.com

  • தொடங்கியவர்

 

துப்பாக்கிசூட்டில் அசத்தும் 80 வயது மூதாட்டி

உத்தரபிரதேசத்தில் கடந்த 20 வருடங்களாக துப்பாக்கிசுடும் போட்டிகளில் பங்கெடுத்து, பதக்கங்களை குவித்து வருகிறார் 80 வயது மூதாட்டி.

  • தொடங்கியவர்

உலகின் மிகச் சிறிய நத்தார் வாழ்த்து அட்டை (Photos)

 

 

உலகின் மிகச் சிறிய நத்தார் வாழ்த்து அட்டை (Photos)
 

நாடு முழுவதும் இன்று நத்தார் பண்டிகை கொண்டாடப்படும் சூழ்நிலையில் உலகிலேயே மிகச்சிறிய நத்தார் வாழ்த்து அட்டை தயாரிக்கப்பட்டுள்ளது.

இந்த அட்டை 15 மைக்ரோ மீட்டர் அகலமே உடையது. 20 மைக்ரோ மீட்டர் நீளம் கொண்டது. அதாவது 15X20 மைக்ரோ மீட்டர் என்ற அளவில் இது தயாரிக்கப்பட்டுள்ளது.

மிகச்சிறிய நத்தார் வாழ்த்து அட்டையை அதிக சக்தி வாய்ந்த மைக்ரோஸ் கோப் மூலமே பார்க்க முடியும். அப்போதுதான் அதில் எழுதப்பட்டிருக்கும் வாசகங்களை படிக்க முடியும்.

இது பிளாட்டினத்தில் தயாரிக்கப்பட்டுள்ளது. இதன் மீது சிலிகான் நைட்ரேட் முலாம் பூசப்பட்டுள்ளது. எலக்ட்ரானிக்ஸ் மூலமே இதை பயன்படுத்த முடியும்.

உலகிலேயே மிகச்சிறிய அளவிலான நத்தார் வாழ்த்து அட்டை என சாதனை படைத்துள்ள இதை இங்கிலாந்தின் தேசிய இயற்பியல் ஆய்வக விஞ்ஞானிகள் டேவிட்காஸ், கென்மிஸ்கார்ட் ஆகியோர் உருவாக்கினர்.

 

christmasjpg

201712251020256758_1_christmasgard._L_styvpf

http://newsfirst.lk/

  • தொடங்கியவர்
‘இளைஞர்களே முதியோர் ஆகின்றார்கள்’
 

image_0bb66c687e.jpgதனது தாத்தாவிடம் பேரன் கேட்டான், “தாத்தா உங்களுக்கு எத்தனை வயதாகிறது” அவரும் “52” என்றார்.

“அப்படியானால் பாட்டிக்கு எத்தனை  வயதாகிறது” எனக் கேட்டான்.

அவரும் “47” என்றார்.

“அப்பா தனக்கு 38 வயதென்கிறாரே, அப்படியானால் பாட்டி 11 வயதிலயா அப்பாவைப் பெற்றார்?” என்று கேலியுடன் கேட்டான்.

தங்களது வயதைக் குறைத்துச் சொல்வதில் பலரும் விருப்பப்படுகின்றனர். உண்மையில் முதுமை என்பதே ஒரு பெரிய கொடைதான். எல்லோருமே முதுமையுடன் நீண்டகாலம் வாழ ஆசைப்படுவதுண்டு. ஆனால், இளைஞனாகவே இருக்கவே பிரியப்படுவதுதான் விநோதம்.

முதியவர் என்று சொல்லிக்கொள்ளப்பிடிக்காமல் பராயத்தை மறைப்பது கடவுள் தந்த நீண்ட ஆயுளை நிந்திப்பதுமாகும்.

இளமையும் முதுமையும் இயற்கையின் நிகழ்வு. எந்த வயதிலும் மனத்திண்மையுடன் இயங்கலாம். திறன் இருந்தும் அதனைப் பயன்படுத்தாத இளைஞர்களே முதியோர் ஆகின்றார்கள்.  

  • தொடங்கியவர்

ஒருவர் இருந்தால் போதும்... போகுமிடமெல்லாம் வெற்றியே! யார் அந்த ஒருவர்? #MotivationStory

 

கதை

`தாவோயிஸத்தின் தந்தை’ என்று போற்றப்படும் லாவோ ட்ஸு (Lao Tzu) இப்படிச் சொல்கிறார்... `அக்கறையோடு கூடிய அன்பிலிருந்துதான் தைரியம் பிறக்கிறது.’ நம் மீது அக்கறையும் நம்பிக்கையும் கொண்ட ஒரே ஒருவர் இருந்துவிட்டால் போதும், எப்பேர்ப்பட்ட இக்கட்டான சூழ்நிலையாக இருந்தாலும், நம்மால் அதிலிருந்து மீண்டு வந்துவிட முடியும்; பல உயரங்களைத் தொட முடியும். நமக்குக் குடும்பம் இருக்கிறது, நண்பர்கள், உறவினர்கள் இருக்கிறார்கள். அவர்களில், நம்மை உண்மையான அன்போடு விரும்புகிற, நம் முன்னேற்றத்தில் விருப்பம் கொண்ட ஒருவர் நிச்சயம் இருக்கத்தான் செய்வார். அவரை நினைத்துக்கொண்டால் போதும்... தோல்விகளை உடைக்கலாம்; வெற்றி இலக்கை எளிதாக அடையலாம். இந்த உண்மையை உணர்த்துகிறது இந்தக் கதை.

 

அவர் பெயர் லா லிட்டில் (Lau Little). அமெரிக்காவின் பிரபல கால்பந்தாட்ட வீரர், பயிற்சியாளரும்கூட. லிட்டில், அமெரிக்காவின் லா லிட்டில்ஜார்ஜ்டவுன் கல்லூரியில் (இப்போது பல்கலைக்கழகம்) பயிற்சியாளராக வேலை பார்த்துக்கொண்டிருந்த காலம் அது. ஒருநாள் கல்லூரியின் பிரின்ஸிபால் அவரைத் தேடி வந்தார். ஒரு மாணவனின் பெயரைச் சொல்லி, ``அவனை உங்களுக்குத் தெரியுமா லிட்டில்?’’ என்று கேட்டார்.

``நல்லாத் தெரியுமே. நாலு வருஷமா காலேஜ் ஃபுட்பால் டீமில் இருக்கான், நான்தான் அவனுக்கு ட்ரெயினிங் குடுக்குறேன். திறமைசாலி. ஆனா, இதுவரைக்கும் அவனை எந்த மேட்சுலயும் விளையாடவிடலை. இன்னும் அவனுக்குப் பயிற்சி தேவைனு நினைக்கிறேன்.’’

``சரி. இப்போதான் காலேஜுக்கு ஒரு தகவல் வந்துச்சு. அவனோட அப்பா இறந்துபோயிட்டாராம். இதை எப்படியாவது அவன்கிட்ட சொல்லிடுங்களேன்...’’ பிரின்ஸிபால் விடைபெற்றுப் போய்விட்டார்.

துக்கச் செய்தியை அறிவிப்பதுபோல தர்மசங்கடமான வேலை, வேறொன்று இருக்க முடியாது. அவன் வளர்ந்துவரும் இளைஞன். அதிலும், இறந்துபோனது அவன் தந்தை. எப்படி அவனிடம் சொல்வது? சொல்லித்தான் ஆக வேண்டும். வேறு வழியில்லை. லிட்டில் அந்த மாணவனைத் தேடிப் போனார். வகுப்பறையிலிருந்து அவனை வெளியே அழைத்துவந்தார். கால்பந்தாட்ட வீரர்களுக்கெனெ ஒதுக்கப்பட்டிருந்த தனி அறைக்கு கூட்டிப்போனார். அவன் தோளில் கைபோட்டு, மென்மையான குரலில், தேறுதல் வார்த்தைகளையெல்லாம் சொல்லி, அவன் தந்தை இறந்த தகவலைச் சொன்னார்.                                                                                                                                                                                                                                                                                                                                                                       (PC : Wikipedia)

``உனக்கும், உன் குடும்பத்துக்கும் என் ஆழ்ந்த அனுதாபங்கள். வீட்டுக்குப் போ. ஒரு வாரம் லீவு எடுத்துக்கோ. அப்புறம் வா...’’ என்று சொல்லி அனுப்பிவைத்தார்.

அடுத்த நாள் லிட்டில் கல்லூரிக்கு வந்தபோது, அவருக்கு ஆச்சர்யம் காத்திருந்தது. அந்த மாணவன், மைதானத்தில் தீவிரமாக கால்பந்தாட்டப் பயிற்சியில் ஈடுபட்டுக்கொண்டிருந்தான். லிட்டில், அவனை அழைத்தார்.

``இங்கே என்னப்பா பண்ணிக்கிட்டு இருக்கே?’’

``இன்னிக்கி சாயந்திரம் ஒரு மேட்ச் இருக்குல்ல... அதுல விளையாட ப்ராக்டீஸ் பண்ணிக்கிட்டு இருக்கேன்.’’

``ஆனா, லிஸ்ட்ல இன்னும் உன் பேரைச் சேர்க்கலியே..? உன்னை நான் தயார் பண்ணணுமே..!’’

``இன்னிக்கி தயார் பண்ணுங்க. நிச்சயமா நான் நல்லா விளையாடுவேன். என்னை நம்புங்க.’’ அந்த மாணவனின் கண்கள் கெஞ்சுவதை அவரால் பார்க்க முடியவில்லை. ஒரு கணம் யோசித்தார். ``சரி. ப்ராக்டீஸ் பண்ணு. ஆனா, இன்னிக்கி சாயந்தர மேட்ச்ல உன்னை விளையாட விடுவேன்னு உறுதியா என்னால சொல்ல முடியாது.’’ மாணவன், மைதானத்துக்குள் ஓடினான்.

சில சிக்கல்களுக்கு தீர்வு காண்பது அத்தனை எளிதான காரியமல்ல. சில நம்பிக்கைகள்கூட கை கொடுக்கும்.லிட்டில், தனக்குத் தானே ஒரு தீர்மானம் செய்துகொண்டார். அன்றைய மேட்சில் டாஸ் வென்றால், அவனை விளையாட அனுமதிக்கலாம்; இல்லையென்றால், பிறகு பார்த்துக்கொள்ளலாம்.

ரக்பி

அன்றைக்கு அதிர்ஷ்டம் அந்த மாணவனின் பக்கம் இருந்தது. கல்லூரிகளுக்கு இடையேயான அந்த கால்பந்தாட்டப் போட்டியில் ஜார்ஜ்டவுன் கல்லூரி அணிதான் டாஸ் வென்றது. லிட்டில், அந்த மாணவனைக் களமிறக்கினார். முதல்நாள்தான் தன் தந்தையைப் பறிகொடுத்திருந்த அவன் மைதானத்தில் சூறாவளியாகச் சுழன்றான். அது அவன் விளையாடும் முதல் மேட்ச். பார்த்தால் அப்படித் தெரியவேயில்லை. அவன் பந்தைத் தடுப்பது, சாமர்த்தியமாக சக வீரர்களுக்கு `பாஸ்’ செய்வது, விரட்டிச் செல்வது... அத்தனையிலும் ஒரு லாகவம் தெரிந்தது. லிட்டில், பிரமித்துப் போனார். அன்றைக்கு ஜார்ஜ்டவுன் கல்லூரி அணி வெற்றி பெற்றதற்கு முக்கியக் காரணமாக அவன் இருந்தான்.

ஆட்டமெல்லாம் முடிந்து, தங்களுக்காக ஒதுக்கப்பட்டிருந்த `லாக்கர்’ அறைக்கு வந்தபோது லிட்டில், அவனிடம் கேட்டார். ``எப்பிடிப்பா உன்னால இவ்வளவு அபாரமா விளையாட முடிஞ்சுது?’’

 

``சார்... இதுவரைக்கும் என் அப்பாவை நீங்க பார்த்தது இல்லேல்ல? என் மேல ரொம்ப அன்பும் அக்கறையும் கொண்டவர். ஃபுட்பால்ல நான் பெரிய ஆளா வருவேனு நம்பினார். ஆனா பாவம்... அவருக்கு கண்ணு தெரியாது. ஆனா, இன்னிக்கி என்னோட முதல் மேட்சை எங்கேயிருந்தோ அவர் பார்த்துக்கிட்டே இருக்கார்னு நம்பினேன். அதனாலதான் என்னால நல்லா விளையாட முடிஞ்சுது. இப்பக்கூட நான் விளையாடினதை அவர் நிச்சயம் பார்த்திருப்பார்னுதான் எனக்குத் தோணுது...’’

லிட்டில், அவனை ஆதுரத்துடன் அணைத்துக்கொண்டார்.

https://www.vikatan.com

  • தொடங்கியவர்

சுற்றுலா பயணிகளை கவர சர்வதேச விண்வெளியில் ஆடம்பர சொகுசு ஓட்டல்: ரஷியா கட்டுகிறது

சுற்றுலா பயணிகளை கவர சர்வதேச விண்வெளியில் 5 நட்சத்திர சொகுசு ஆடம்பர ஓட்டலை கட்ட தனியார் மற்றும் ரஷிய அரசும் இணைந்து திட்டமிட்டுள்ளது.

 
சுற்றுலா பயணிகளை கவர சர்வதேச விண்வெளியில் ஆடம்பர சொகுசு ஓட்டல்: ரஷியா கட்டுகிறது
 

மாஸ்கோ:

பூமிக்கு மேல் விண்வெளியில் 400 மைல் சர்வதேச விண்வெளி ஆய்வகம் கட்டப்பட்டு வருகிறது. அமெரிக்கா, ரஷியா, ஜப்பான், கனடா மற்றும் இங்கிலாந்து, பிரான்ஸ், ஜெர்மனி, டென்மார்க், பெல்ஜியம் உள்ளிட்ட 17 ஐரோப்பிய நாடுகளின் விண்வெளிகழகமும் இணைந்து அதை உருவாக்கி வருகிறது.

அதற்காக இதுவரை 150 பில்லியன் டாலர் (ரூ,96 லட்சத்து 75 ஆயிரம் கோடி) செலவிடப்பட்டுள்ளது. இந்த நிலையில் அங்கு 5 நட்சத்திர சொகுசு ஆடம்பர ஓட்டலை கட்ட ரஷியா திட்டமிட்டுள்ளது.

அங்கு கட்டப்படும் ஓட்டலில் 4 ஆடம்பர அறைகள் கட்டப்பட உள்ளன. ஒவ்வொன்றும் 4 கன மீட்டர் அளவில் இருக்கும். இங்கு மருத்துவ வசதி, உடற்பயிற்சி கூடம் வை-பை வசதி போன்றவை ஏற்படுத்தப்பட உள்ளது.

விண்வெளிக்கு சுற்றுலா பயணிகளை கவர இந்த ஓட்டல் கட்டப்படுகிறது. இந்த ஓட்டல் ரூ.2100 கோடியில் இருந்து ரூ.3360 கோடி செலவில் கட்டப்பட உள்ளது. தனியார் மற்றும் ரஷிய அரசும் இணைந்து விண்வெளியில் ஓட்டல் கட்டுகின்றனர்.

இங்கு ராக்கெட் மூலம் வரும் சுற்றுலா பயணிகளிடம் கட்டணமாக ரூ.300 கோடி வசூலிக்கப்படும். அவர்கள் இங்கு 1 முதல் 2 வாரங்கள் தங்கலாம்.

அவர்கள் இங்கு மேலும் ஒரு மாதம் தங்கவும், விண்வெளியில் நடக்கவும் கூடுதலாக ரூ.130 கோடி வசூலிக்கப்படும். விண்வெளியில் நடக்க ஆய்வகத்தில் தங்கியிருக்கும் வீரர்கள் உதவி செய்வார்கள்.

http://www.maalaimalar.com

  • தொடங்கியவர்

இவை கண்ணாடிப் பொருள்கள் அல்ல... கண்ணாடி உயிர்கள்! #TransparentSpecies

 
 

இது இயற்கையின் மற்றுமோர் ஆச்சர்யம். ஒவ்வொரு உயிரையும் நிறத்தின் அடிப்படையில் குறிக்கும் வழக்கம் காலங்காலமாக இருக்கிறது. கருப்பு, வெள்ளை என மனிதர்களிடத்தில் அந்த நிறம் வேற்றுமைகளையும் உருவாக்கியிருக்கிறது என்பதும் நிஜம். ஆனால், இதோ இந்த சில உயிரினங்கள் குறிப்பிட்ட நிறமாக அல்லாமல்,  "ட்ரான்ஸ்பெரண்ட்" (Transparent) தோல் உடைய உயிரினங்கள். 

க்ளாஸ்விங்க்டு பட்டர்ஃப்ளை (GlassWinged Butterfly):

 

ஸ்பானிய மொழியில் இதை "எஸ்பெஜிடோஸ்" (espejitos) என்று சொல்வார்கள். அதாவது "சின்ன கண்ணாடி" (Little Mirrors) என்று அர்த்தம்.
இந்தப் பட்டாம்பூச்சிகளுக்கு "Greta Oto" என்றொரு பெயரும் உண்டு.

கண்ணாடி உயிர்கள்

 பட்டாம்பூச்சிகளுக்கான இந்த ட்ரான்ஸ்பெரன்ட் தன்மை என்பது, எதிரிகளிடமிருந்து அதைக் காக்க உதவுகிறது. எந்தப் பகுதியில் அது இருந்தாலும், அதன் இறக்கைகளின் வழி ஒளிபுகும் என்பதால், அதனை அடையாளம் காண்பது மிகவும் கடினம். இது எதிரிகளிடம் தங்களை தற்காத்துக் கொள்ள அந்தப் பட்டாம்பூச்சிகளுக்கு பெருமளவில் உதவி புரிகிறது. 

எதிரிகளிடமிருந்தான பாதுகாப்பிற்காக மட்டுமல்லாமல், வெப்பத்தைத் தடுக்கவும் இந்த ட்ரான்ஸ்பெரன்ட் இறக்கைகள் அவைகளுக்கு உதவுகின்றன. 

கண்ணாடி உயிர்கள்

நீண்ட தூரம் வலசை (Migration) செய்யும் இயல்பு கொண்டவை.

இதன் இறக்கைகள் மிகவும் மெல்லியதாக தெரிந்தாலும், தன்னைவிட 40 மடங்கு எடை அதிகமான பொருட்களை இதனால் சுமக்க முடியும். இறக்கைகளின் அளவு 5.6செமீ இருந்து 6.1செமீ வரை இருக்கும். 

கண்ணாடி உயிர்கள்

மதிய நேரத்திலோ அல்லது மாலை நெருங்கும் வேளையில் கூடும் வழக்கம் கொண்டவை. ஆங்கிலத்தில் LEK என்று சொல்லக்கூடிய, ஆண் தன்னை நிரூபித்து பென்ணை வெல்லும் நிகழ்வு இந்தப் பட்டாம்பூச்சிகள் மத்தியில் நடக்கின்றன. 

க்ளாஸ் ஈல்ஸ் (Glass Eels) :

தன் வாழ்நாளின் பல்வேறு காலகட்டங்களில் வெவ்வேறு நிறங்களில் உருவெடுக்கும் ஓர் நீர்வாழ் உயிரினம் இந்த ஈல்ஸ்.

பிறந்து பல வருடங்களுக்கு ட்ரான்ஸ்பெரன்ட்டாக இருக்கும். இந்தக் காலகட்டத்தில் நிறத்தை உருவாக்கும் செல்களான "க்ரோமாடோஃபோர்ஸ்" (Chromatophores)) மற்றும் "மெலனோஃபோர்ஸ்" (Melanophores) இல்லாததே இதற்கு காரணம் என்று சொல்லப்படுகிறது. 

கண்ணாடி உயிர்கள்

5 வருடங்களிலிருந்து 20 வருடத்திற்குள்ளாக சில்வர் நிறத்திற்கு மாறும். 

நீருக்குள் இருக்கும் போது இதை அடையாளம் காண்பது மிகவும் கடினம். தண்ணீரைப் போலவே தான் இதுவும் தெரியும். இதனால், தன் எதிரிகளிடம் அவ்வளவு எளிதில் சிக்கிவிடாது. 

கண்ணாடி உயிர்கள்

நீண்ட தூரங்களுக்குப் பயணம் செய்யும் வழக்கம் கொண்டது. இதைப் பிடித்து தொட்டியில் அடைத்து ஆராய்ச்சிக்கு உட்படுத்தப்பட்ட போது 85 ஆண்டுகள் வரை வாழ்ந்தது. இயற்கையான சூழலில் இதன் ஆயுட்காலம் எவ்வளவு என்பதை இன்னும் கண்டுபிடிக்கவில்லை.

க்ளாஸ் ஃப்ராக் (Glass Frog):

இந்த தவளையின் உடலுக்குள் என்ன இருக்கிறது என்பதை நம் வெறும் கண்களால் தெளிவாக பார்க்கும் அளவிற்கு இதன் தோல் ட்ரான்ஸ்பெரன்ட் தன்மை கொண்டது.

கண்ணாடி உயிர்கள்

இலைகளின் மீது உட்கார்ந்திருக்கும் போது, ஏதோ இலைகயோடு இலையாய் உருகி ஒட்டியிருப்பதைப் போல் தெரியும்.
மத்திய மற்றும் தென் அமெரிக்க மழைக்காடுகளில் அதிகம் இருக்கிறது. பூமி வெப்பமயமாதலின் காரணமாக இந்த மழைக்காடுகளின் வெப்பம் அதிகரிக்க, அது இந்த தவளை இனத்தின் அழிவிற்கு வித்திட்டிருக்கிறது. 

கண்ணாடி உயிர்கள்

இரவில் தான் சுறுசுறுப்பாக இயங்கும். மழைக்காலங்களில் இணை சேரும் பெண் தவளைகள் ஒரே தடவையில் 20லிருந்து 30 முட்டைகள் வரை இடும். 

ஸீ ஸால்ப் (Sea Salps):

அண்டார்டிகா கடல் பகுதியிலும், வாஷிங்கடனை ஒட்டியிருக்கும் கடற் பகுதியிலும் அதிகமாக வாழக்கூடியது. பீப்பாய் வடிவில் இருக்கக் கூடிய உயிரினம். 

கண்ணாடி உயிர்கள்

ஒரு ஸால்ப்பினுடைய அளவு என்பது 10செமீ வரை இருக்கும். பல ஸால்ப்புகள் ஒன்றோடு ஒன்று இணைந்து, ஒரு பெரிய சங்கிலியாய் நகரும். அந்தச் சங்கிலி என்பது 15 அடி நீளம் வரை இருக்கும்.

கண்ணாடி உயிர்கள்

க்ளாஸ் கேட்ஃபிஷ் (Glass Catfish):

உலகிலேயே அதிக ட்ரான்ஸ்பரென்ட் தன்மைக் கொண்ட ஓர் உயிரினம். 

உயிர்கள்

அதன் பெரும்பாலான உறுப்புகள், அதன் தலையைச் சுற்றியே அமைந்திருக்கும். கொஞ்சம் கூர்ந்து கவனித்தால் அதன் இதயம் துடிப்பதைக் கூட தெளிவாகப் பார்க்க முடியும். 

கண்ணாடி உயிர்கள்

ஒரு சில சமயங்களில் ஒளி நேராக அதன் மீது படும்போது, அது வானவில் நிறத்தில் ஜொலிப்பதைப் பார்க்க முடியும். 
தாய்லந்து, மலேசியா, இந்தோனேசியாவில் அதிகம் இதைப் பார்க்க முடியும். இறந்த பின், பால் வெள்ளை நிறத்திற்கு மாறிவிடும். 

https://www.vikatan.com

  • தொடங்கியவர்

2004 - இல் உலகையே புரட்டிப்போட்ட சுனாமி (புகைப்படத் தொகுப்பு)

26 டிசம்பர் 2004 அன்று இந்தோனேசியாவின் சுமத்ரா தீவு அருகே ஆழ்கடலில் ஏற்பட்ட நில அதிர்வு காரணமாக எழுந்த பேரலைகள் தாய்லாந்து, இந்தோனேசியா, மலேசியா, இந்தியா இலங்கை உள்ளிட்ட பல நாடுகளில் பேரழிவை ஏற்படுத்தின.

2004 - இல் உலகையே புரட்டிப்போட்ட சுனாமி

நீரில் மூழ்கிய இந்தோனீசியாவின் மொலாபோ நகரம்

 

2004 - இல் உலகையே புரட்டிப்போட்ட சுனாமி

இந்தோனீசியாவில், வடக்கு சுமத்ராவில் உள்ள சிரோம்பு கிராமத்தில் 2004 - இல் ஏற்பட்ட சுனாமியால் சேதமடைந்த வீடுகள்

2004 - இல் உலகையே புரட்டிப்போட்ட சுனாமி

இந்தோனீசியாவில் சுனாமியில் சேதமடைந்த பகுதிகளை அமெரிக்க கடற்படை ஹெலிகாப்டரிலிருந்து பார்வையிட்டபோது எடுக்கப்பட்ட புகைப்படம்

2004 - இல் உலகையே புரட்டிப்போட்ட சுனாமி

டிசம்பர் 2004 இல் சுனாமி தாக்கியதையடுத்து சென்னை மெரினா கடற்கரையைப் பார்வையிடும் மக்கள்

2004 - இல் இந்தியாவையே புரட்டிப்போட்ட சுனாமி

சுனாமியால் பாதிக்கப்பட்ட தமிழ்நாட்டைச் சேர்ந்த புதுகுப்பம் கிராமம்

2004 - இல் உலகையே புரட்டிப்போட்ட சுனாமி

சுனாமியால் தாக்கப்பட்ட நாகப்பட்டினத்தைச் சேர்ந்த பெண்மணி

2004 - இல் உலகையே புரட்டிப்போட்ட சுனாமி

டிசம்பர் 26, 2004 அன்று ஏற்பட்ட சுனாமியால் பாதிக்கப்பட்டு சேதமடைந்த இந்தோனீசிய கடலோரப்பகுதி மீண்டு வரும் காட்சி

2004 - இல் உலகையே புரட்டிப்போட்ட சுனாமி

26 டிசம்பர் 2004 அன்று தெற்கு இலங்கையின் கடலோர ரயில் பாதையில் எடுக்கப்பட்ட புகைப்படம்

2004 - இல் உலகையே புரட்டிப்போட்ட சுனாமி

இந்தோனீசியாவில் ஏற்பட்ட சுனாமியால் இறந்துபோன தனது மனைவியின் சடலம் அருகே துயரத்துடன் அமர்ந்திருக்கும் கணவன்

 

2004 - இல் உலகையே புரட்டிப்போட்ட சுனாமி

தாய்லாந்தில் ஏற்பட்ட சுனாமியால் மோசமாக பாதிக்கப்பட்ட நீச்சல்குளம்

 

2004 - இல் உலகையே புரட்டிப்போட்ட சுனாமி

இறந்துபோன தங்களது உறவினர்களின் சடலங்களைக் கண்டு அழுது புலம்பும் கடலூர் பெண்கள்

 

2004 - இல் உலகையே புரட்டிப்போட்ட சுனாமி

இலங்கையில் ஏற்பட்ட ஆழிப்பேரலையில் தனது மூன்று சகோதரர்களைப் பறிகொடுத்த 12 வயது பாத்திமா நுஸ்ரத்

2004 - இல் உலகையே புரட்டிப்போட்ட சுனாமி

2004 சுனாமியால் தங்கள் வீடுகளை இழந்து தவிக்கும் அக்கரப்பட்டி மீனவர் குடியிருப்பைச் சேர்ந்த மக்கள்

2004 - இல் உலகையே புரட்டிப்போட்ட சுனாமி

 

தங்கள் வீடருகே வெள்ளம் சூழ்ந்ததால், வீட்டை விட்டு வெளியேறும் இந்தோனேசிய கிராம மக்கள்

2004 - இல் உலகையே புரட்டிப்போட்ட சுனாமி

26 டிசம்பர் 2004 இல் ஏற்பட்ட சுனாமியில் தனது வீட்டையும் குடும்பத்தையும் இழந்த இலங்கை பெண்மணி

http://www.bbc.com

  • தொடங்கியவர்

பௌத்த விகாரையில் நத்தார்

கற்­பிட்டி தீப­கற்­பத்தில் அமைந்­துள்ள ஒரே­யொரு பௌத்த விகா­ரை­யான தலுவ ஸ்ரீ சும­னா­ரா­மய விகா­ரையில் இம்­முறை நத்தார் கொண்­டாட்­டங்­க­ளுக்­காக தொழுவம் அமைக்­கப்­பட்­டுள்­ளது. இவ்­வி­கா­ரையின் பாலர் பிக்­குமார் மற்றும் அப்­பி­ர­தே­சத்­தி­லுள்ள கிறிஸ்­தவ மற்றும் பௌத்த சிறு­வர்­க­ளுடன் இணைந்து இதனை நிர்மாணித்திருந்தனர்.

Christmas3.jpg

Christmas.jpgChristmas1.jpg

http://metronews.lk

  • தொடங்கியவர்

“வலியா அது எப்படி இருக்கும்?”... பிறந்தது முதல் வலியே அறிந்திராத குடும்பம்!

 
 

அந்தக் குடும்பத்தில் இருக்கும் ஆறு பேருக்கு ஒரு சூப்பர் பவர். காமிக்ஸ் எழுத்தாளர்களிடம் அவர்கள் கதையைச் சொன்னால், இந்நேரம் ஓர் உடையை வடிவமைத்து அவர்களை சூப்பர்ஹீரோ குடும்பமாகச் சித்திரித்து கதைகள் எழுதியிருப்பார்கள். அவர்களின் சூப்பர் பவர் இதுதான். அவர்கள் அனைவரும் பிறந்ததிலிருந்தே வலி என்ற ஒன்றை உணர்ந்ததே இல்லை. அதாவது வலியை உணரும் திறன் இவர்களிடம் மிகவும் குறைவு அல்லது இல்லவே இல்லை என்றும் எடுத்துக்கொள்ளலாம். வலி ஏற்படும் அளவிற்கு உடலில் அடிபட்டாலோ, அல்லது தீக்காயம் ஏற்பட்டாலோ, “வலிக்கவே இல்லையே!” என்று திகிலூட்டுகிறது இத்தாலி நாட்டைச் சேர்ந்த மார்சிலி குடும்பம்.

மார்சிலி குடும்பம்

 

78 வயது பெண்மணி, அவருக்கு நடுத்தர வயதில் இரண்டு பெண்கள், அவர்களுக்கு மொத்தம் மூன்று குழந்தைகள் என ஆறு பேருக்கும் இந்தப் பிரச்னை(?) இருப்பதாக அவர்களைச் சோதித்த மருத்துவர்கள் கூறுகிறார்கள். நாம் இயல்பாக வலியை உணர்வதைப் போல அவர்களால் உணர முடியாததால் உடலில் எந்த இடத்தில் அடிபட்டிருக்கிறது, எங்கே எலும்பு முறிவு ஏற்பட்டுள்ளது என்பதைக் கூட இவர்களால் கண்டறிய முடிவதில்லை. ஆச்சர்யம் என்னவென்றால், இந்தப் பெண்மணிக்கும், அவரின் மகள்களுக்கும், அவர்களுக்குப் பிறந்த பிள்ளைகளுக்கும் மட்டுமே இந்தப் பிரச்னை இருக்கிறது. குடும்பத்தில் வேறு யாரையும் இது பாதிக்கவில்லை.

“சில நேரங்களில் அவர்களால் வலியை உணர முடிகிறது. ஆனால், அந்த உணர்வு ஒரு சில நொடிகள் மட்டுமே நீடிக்கிறது. இந்தக் குடும்பத்தை சேர்ந்த லெட்டிஸியா என்ற பெண் ஒருமுறை பனிச்சறுக்கு விளையாடிருக்கிறார். அப்போது அவரின் தோள்பட்டையில் எலும்பு முறிவு ஏற்பட்டுள்ளது. ஆனால், அதை அவர் உணரவே இல்லை. இயல்பாக வீட்டிற்குச் சென்று எப்போதும் போல உறங்கிவிட்டார். அடுத்த நாள்தான் இந்த விஷயமே அவருக்குத் தெரிந்திருக்கிறது.

மற்றொரு முறை, மூத்தவரான அந்த 78 வயதான பெண்மணி ஷாப்பிங் மால் சென்று வரும்போது எஸ்கலேட்டரிலிருந்து தவறி விழுந்து கணுக்காலை உடைத்துக்கொண்டார். மருத்துவமனையில் ஸ்கேன் செய்த போது, அவரின் கணுக்காலில் ஏற்கெனவே பல முறிவுகள் இருப்பது தெரியவந்துள்ளது. ஆனால், அதை அவர் உணரவே இல்லை” என்று ஆச்சர்யப்படுகிறார் இவர்களைச் சோதித்த லண்டன் பல்கலைக்கழக கல்லூரியின் ஜேம்ஸ் காக்ஸ்.

இவரும் இவரின் ஆராய்ச்சிக் குழுவும் இணைந்து, இந்தக் குடும்ப உறுப்பினர்களின் மேல் நடத்திய பரிசோதனையில்தான் இதற்கான காரணம் கண்டறியப்பட்டுள்ளது. பரிசோதனையின் முடிவுகள் உடல்நலனில் எதுவும் குறையில்லை, எல்லாம் சீராகவே இயங்குவதாகக் கூறின. தசைகள் மற்றும் அதன் செயல்பாடுகள், தோல் நரம்புகள் என எல்லாம் சரியாக இருந்தன. மரபணுக்களை ஆராய்ந்த போதுதான் காரணம் புலப்பட்டிருக்கிறது. அவர்கள் அனைவருக்கும் ‘ZFHX2’ என்ற மரபணுவில் மிகப்பெரிய மாற்றம் (Gene Mutation) இருப்பதாக அறியப்படுகிறது. இதுவே இந்த வலி உணராத் தன்மையை அவருக்குக் கொடுப்பதாகப் புரிந்துகொண்டனர்.

அடிபட்ட வலி

பொதுவாக, எல்லா விலங்குகளுக்குள்ளும் இருக்கும் இந்த மரபணுவின் பயன்பாட்டை அறிய ஓர் எலியைத் தேர்ந்தெடுத்தனர். இந்த ‘ZFHX2’ மரபணு நீக்கப்பட்ட எலி, வலியை உணரவேயில்லை. அதன் வாலில் அழுத்தம் கொடுத்த போதும் அமைதியாகவே நின்றது. ஆனால், அதே சமயம் வெப்பம் அதிகரிப்பதை நன்கு உணர்ந்துகொண்டது. பின்பு, இந்தக் குடும்ப உறுப்பினரின் மாற்றமடைந்த ‘ZFHX2’ மரபணுவை எலிக்குக் கொடுத்தனர். இப்போது அதனால் வலியை மட்டுமல்ல, வெப்பத்தைக் கூட தாங்க முடிந்தது. எதுவும் நடக்காதது போல் இயல்பாகவே இருந்தது. இதன் மூலம் கண்டறியப்பட்ட உண்மை, உடலின் வலியை மூளைக்கு உணர்த்தும் 16 வகை மரபணுக்களை, இந்த ‘ZFHX2’ என்ற தலைமை மரபணுதான் கட்டுப்படுத்துகிறது. இதன் தன்மையைப் பொறுத்தே அந்த 16 மரபணுக்களின் செயல்பாடுகளும் இருக்கும். இவர்களுக்கு அந்த மரபணுவில் இப்படி ஒரு மாற்றம் இருப்பதால் வலியை உணராமல் ஒரு வித்தியாசமான வாழ்வை அவர்கள் வாழ்கிறார்கள்.

இவர்களின் அந்த மரபணுவைக் கொண்டு, தீராத வலிக்கு மருந்துகள் கண்டறியும் முயற்சியில் இறங்கியுள்ளது ஜேம்ஸ் காக்ஸ் அவர்களின் குழு. இது வெற்றிபெற்றால் தீரா வலியுடன் அவதிப்படுபவர்களுக்கு இது ஒப்பற்ற மருந்தாக இருக்கும்.

 

இந்த ஆராய்ச்சியைத் தொடங்கும் முன், மார்சிலி குடும்பத்திடம், மற்ற மனிதர்களைப் போல நீங்களும் வலியை உணரவேண்டுமா, அதை என்னால் செய்ய முடியும். இயல்பான வாழ்க்கை வாழலாம் என்ற போது, வேண்டவே வேண்டாம் என்று மறுத்துவிட்டனர்” என்று கூறி சிரிக்கிறார் ஜேம்ஸ் காக்ஸ். வலியே அறியாத சூப்பர்ஹீரோ குடும்பம் - ஜாலியாக இருந்துவிட்டுப் போகட்டுமே பாஸ்!

https://www.vikatan.com

  • தொடங்கியவர்

ஒளிரும் கண்கள்  குதூகலம் கூட்டும் நீர்

 

 
22CHVAN-Selvan100jpg

செங்கல் சூளை தொழிலாளர்களுடைய குழந்தைகளின் கள்ளமில்லாச் சிரிப்பு, காவேரிப்பட்டி, சேலம்

கர்நாடகத்திலிருந்து தமிழகத்துக்குள் காவிரி பாய்ந்துவரும் (இப்போது அல்ல) ஒகேனக்கல்லின் செங்குத்தான பாறைகளுக்கு இடையே நானும் ‘வேர்கள்’ ராமலிங்கமும் ஒரு முறை பரிசலில் செல்ல வாய்ப்பு கிடைத்தது. பாய்ந்துவரும் தண்ணீருக்கு எதிராகப் பரிசல்காரர் துடுப்புப் போட மெல்லமெல்லச் சுழன்று நகர்ந்துகொண்டிருந்தது எங்களுடைய பரிசல்.

         
22CHVAN-Selvan104618jpg

மாந்தோப்பில் தூளி கட்டி விளையாட்டு, -------க்குடி, வேதாரண்யம்

 

எங்களுக்கு முன்னே நகர்ந்துகொண்டிருந்த பரிசலில் இருந்த பெரியவர் கைகளைத் தூக்கி, உயர்ந்து நின்ற செங்குத்தான பாறை மீது வரிசையாக அமர்ந்திருந்த சிறுவர்களைப் பார்த்து, ‘குதி’ என்றார். சுழன்று நகர்ந்துகொண்டிருக்கும் பரிசலில் அமர்ந்த நிலையில், கையில் வைத்திருந்த பென்டாக்ஸ் கே 1000 ஃபிலிம் கேமராவைச் சட்டென உயர்த்தி குதிக்கும் சிறுவனை இமைப்பொழுதில் செய்த பதிவுதான் ‘காவிரியில் குதிக்கும் சிறுவன்’ என்ற படம்.

22CHVAN-Selvan13JPG

ஊட்டி அனிக்கொரி மலைவாழ் கிராமக் குழந்தைகளின் பசுமை குன்றாத சிரிப்பு.

 

ஐந்து ரூபாய் கொடுத்தால் 60 அடி உயர செங்குத்துப் பாறை மீதிருந்து ஓடும் காவிரியில் குதித்து மூழ்கி, பிறகு நீந்திப் பரிசல் அருகே வந்து நனைந்த உடலுடன் ஈரக்கையை நீட்டி ஐந்து ரூபாயைப் பெற்றுக்கொண்டு, மீண்டும் மேலிருந்து குதிக்கத் திரும்பிவிடுகிறார்கள். தண்ணீர் வடியும் கால் சட்டையோடு செங்குத்தான பாறையைப் பிடித்து வழுக்காமல் சரசரவென்று ஏறி, உச்சிக்குச் சென்று அடுத்த கையசைப்புக்காகக் காத்திருக்கிறார்கள்.

22CHVAN-Selvan2jpg

ஓடை அருகே சாய்ந்திக்கும் மரத்தில் மகிழ்ச்சியில் திளைத்திருக்கும் சிறுவர்கள், வேதாரண்யம்.

 

ஒரு சிறுவனுக்கு வாய்ப்புக் கொடுத்தால், மற்ற சிறுவர்கள் ஏமாற்றமடைந்து விடுவார்கள் என்று அனைத்துச் சிறுவர்களையும் ஒருவர் பின் ஒருவராக குதிக்கச் சொல்லி காசு கொடுத்தது ஒரு குடும்பம். பள்ளிக்குச் செல்லும் இச்சிறுவர்கள் வறுமையின் காரணமாகத் தண்ணீருக்குள் குதிக்கிறார்களா அல்லது வேடிக்கை விளையாட்டுக்காக இப்படிச் செய்கிறார்களா என்ற எண்ணம் மனதில் ஓடிக்கொண்டிருந்தது. இது ஒரு ஆபத்தான சாகசம்தான்.

22CHVAN-Selvan7JPG

வேதாரண்யம் குளம் ஒன்றில் தாமரை பறிக்கும் சிறுவன்.

 

நான் அடிக்கடி சென்றுள்ள வேதாரண்யத்தில் நீர் நிறைந்த ஓடை ஒன்றின் அருகே சிறு மரம் ஒன்று ஓடைப் பக்கம் தலை சாய்ந்த நிலையில் நின்றது. அதன் மீது பள்ளிச் சிறுவர்கள் ஏறி ஓடைக்குள் குதிப்பதும் குதூகலிப்பதும், மீண்டும் மரத்தின் மீது ஏறித் தொங்கிக்கொண்டும் மகிழ்ந்திருந்த காட்சியைப் பதிவுசெய்தபோது மனதில் தனி நிறைவு உண்டானது. இன்றைக்கும் அப்படத்தைப் பார்க்கும்போது மனதில் தொற்றிக்கொள்கிறது மகிழ்ச்சி!

நீருக்கும் சிறுவர் சிறுமிகளுக்கும் இடையேயான உறவு ஆத்மார்த்தமானது.

22CHVANSelvan1-BigSizeJPG

ஐந்து ரூபாய்க்காக ஒகேனக்கல்லில் பாறை உச்சியிலிருந்து தண்ணீருக்குள் குதிக்கும் சிறுவர்கள், 1996.

 

கட்டுரையாளர், ஓவியர் மற்றும் ஒளிப்படக் கலைஞர்

http://tamil.thehindu.com

Edited by நவீனன்

  • தொடங்கியவர்

தோனி மகளின் செல்ல வாழ்த்துக்காகவே புத்தாண்டு சீக்கிரம் வர வேண்டும்! #ViralVideo

 

தோனியின் மகள் கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு வாழ்த்து சொல்லும் வீடியோ ஒன்று வைரலாகி வருகிறது.

ziva
 

 
 

இந்திய அணியின் முன்னாள் கேப்டன் தோனியின் மகளுக்கு ரசிகர்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றனர். அவ்வபோது தன் குட்டி தேவதை ஜிவா, மழலை குரலில் பாடுவாதை வீடியோ எடுத்து சமூக வலைத்தளங்களில் பகிர்வதை வழக்கமாக கொண்டுள்ளார் தோனி. இதனால் இணையத்தில் ஜிவாவுக்கு ஃபேன்ஸ் அதிகம்.

சமீபத்தில் ஜிவா மழலைக் குரலில் மலையாள கிருஷ்ணா பக்தி பாடலைப் பாடிய வீடியோ வைரலானது. ’ஜிவாவின் மலையாள உச்சரிப்பு அற்புதம்’ என்று நெட்டிசன்கள் உருகினர். தற்போது வெளியான வீடியோவில் கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு வாழ்த்து சொல்லி ஆங்கில பாடலை செல்லக் குரலில் இழுத்து இழுத்துப் பாடுகிறார் ஜிவா. ஆங்கில வார்த்தைகளின் உச்சரிப்பும் அற்புதம்!

 

https://www.vikatan.com

  • தொடங்கியவர்

#வேலைக்காரன் குழுவினரை வறுத்தெடுக்கும் தீவிர ரசிகன்..

  • தொடங்கியவர்

பழம்பெரும் நடிகை சாவித்திரி இறந்த நாள் டிச.26- 1981

 
 

கொம்மாரெட்டி சாவித்திரி என்ற சாவித்திரி 1935-ம் ஆண்டு டிசம்பர் மாதம் 6-ந்தேதி பிறந்தார். இவர் தென்னிந்தியத் திரைப்பட நடிகை, திரைப்பட இயக்குனர், தயாரிப்பாளர் ஆகியவற்றில் முத்திரை பதித்தார். இவர் தமிழ், தெலுங்கு, கன்னடம், இந்தி மொழிகளில் 318 படங்களில் நடித்திருக்கிறார். சாவித்திரி ஆந்திரப் பிரதேசத்தில் குண்டூரில் சிறாவூர் என்ற இடத்தில் நிசங்கார ராவ் குருவையா, சுபத்திராம்மா ஆகியோருக்குப் பிறந்தவர். சிஸ்டா பூர்ணையா சாத்திரிகளிடம் இசை மற்றும் நடனம் பயின்றார்.

 
 
பழம்பெரும் நடிகை சாவித்திரி இறந்த நாள் டிச.26- 1981
 
கொம்மாரெட்டி சாவித்திரி என்ற சாவித்திரி 1935-ம் ஆண்டு டிசம்பர் மாதம் 6-ந்தேதி பிறந்தார். இவர் தென்னிந்தியத் திரைப்பட நடிகை, திரைப்பட இயக்குனர், தயாரிப்பாளர் ஆகியவற்றில் முத்திரை பதித்தார். இவர் தமிழ், தெலுங்கு, கன்னடம், இந்தி மொழிகளில் 318 படங்களில் நடித்திருக்கிறார்.

சாவித்திரி ஆந்திரப் பிரதேசத்தில் குண்டூரில் சிறாவூர் என்ற இடத்தில் நிசங்கார ராவ் குருவையா, சுபத்திராம்மா ஆகியோருக்குப் பிறந்தவர். சிஸ்டா பூர்ணையா சாத்திரிகளிடம் இசை மற்றும் நடனம் பயின்றார்.

இளம் வயதிலேயே மேடைகளில் தோன்றி நடித்தார். காதல் மன்னன் ஜெமினி கணேசனை திருமணம் செய்துகொண்டார். இவர்களுக்கு விஜயா சாமுண்டீஸ்வரி, சதீஷ்குமார் ஆகிய இரண்டு குழந்தைகள் பிறந்தனர். 1981-ம் ஆண்டு டிசம்பர் மாதம் 26-ந்தேதி மரணம் அடைந்தார்.
 
 

இதே தேதியில் நிகழ்ந்த முக்கிய நிகழ்வுகள்:-

* 1811 - வெர்ஜினியாவின் ரிச்மண்ட் நகரில் நாடக அரங்கில் இடம்பெற்ற தீவிபத்தில் வெர்ஜினியாவின் ஆளுநர் ஜார்ஜ் வில்லியம் ஸ்மித் இறந்தார். * 1825 - முதலாம் நிக்கலாஸ் மன்னனுக்கு எதிராக மூவாயிரத்துக்கும் அதிகமான ரஷ்ய ராணுவத்தினர் செனட் சதுக்கத்தில் திரண்டனர். இவர்களின் கிளர்ச்சி சார் மன்னனால் முறியடிக்கப்பட்டது. * 1862 - ஐக்கிய அமெரிக்காவின் மினசோட்டாவில் 39 பேர் தூக்கிலிடப்பட்டனர். * 1870 - ஆல்ப்ஸ் மலைத்தொடருடான 12.8-கிமீ நீள ரெயில் சுரங்கப் பாதை அமைக்கப்பட்டது. * 1882 - யாழ்ப்பாணம், மன்னார் உட்பட இலங்கையின் பல இடங்களிலும் பலத்த மழையுடன் சூறாவளி பெரும் சேதத்தை உண்டுபண்ணின. * 1898 - ரேடியம் கண்டுபிடிக்கப்பட்டது.

* 1925 - இந்திய கம்யூனிஸ்ட் கட்சி ஆரம்பிக்கப்பட்டது. * 1925 - துருக்கி கிரிகோரியன் நாட்காட்டிக்கு மாறியது. * 1933 - பண்பலை வானொலி காப்புரிமம் பெறப்பட்டது. * 1944 - ஆங் சான் பர்மாவின் நவீன ராணுவத்தை உருவாக்கினார். * 1943 - இரண்டாம் உலகப் போர்: நார்வேயில் ஜெர்மனிய போர்க்கப்பல் ஷார்ன்ஹோஸ்ட் பிரித்தானியக் கடற்படையினால் தாக்கி மூழ்கடிக்கப்பட்டது. * 1948 - கடைசி சோவியத் இராணுவம் வட கொரியாவில் இருந்து விலகியது. * 1973 - சோவியத்தின் சோயூஸ் 13 விண்கலம் ஒரு வார பயணத்தின் பின் பூமி திரும்பியது. * 1974 - சோவியத்தின் சல்யூட் 4 விண்கலம் விண்ணுக்கு அனுப்பப்பட்டது. * 1976 - நேபாள கம்யூனிஸ்ட் கட்சி (மாவோயிஸ்ட்) அமைக்கப்பட்டது.

* 1979 - சோவியத் விசேட படையினர் ஆப்கானிஸ்தானின் அதிபர் மாளிகையைக் கைப்பற்றினர். * 1985 - கொரில்லா பற்றி ஆய்வுகள் நடத்திய அமெரிக்கப் பெண் டயான் ஃபொசி கொல்லப்பட்டார். * 1986 - உலக மக்கள்தொகை 5 பில்லியனை எட்டியது * 1991 - சோவியத் ஒன்றியம் கலைக்கப்பட்டது. * 1998 - அயர்லாந்து, வடக்கு இங்கிலாந்து மற்றும் தெற்கு ஸ்கொட்லாந்தில் இடம்பெற்ற புயலால் பலத்த சேதம் ஏற்பட்டது. * 2003 - தென்கிழக்கு ஈரானில் பாம் நகரில் ஏற்பட்ட 6.6 ரிக்டர் நிலநடுக்கத்தால் பல்லாயிரக்கணக்கானோர் மாண்டனர்.

* 2004 - இந்து சமுத்திரத்தில் ஏற்பட்ட 9.3 ரிக்டர் அளவு நிலநடுக்கம், சுனாமி ஆழிப்பேரலையை ஏற்படுத்தி இலங்கை, இந்தியா, இந்தோனேசியா, தாய்லாந்து, மலேசியா, மாலை தீவுகள் ஆகிய நாடுகளில் பலத்த சேதத்தை ஏற்படுத்தியது. 3,00,000 பேருக்கு மேல் இறந்தனர். * 2006 - சதாம் உசேனின் மேன்முறையீடு நிராகரிக்கப்பட்டு மரணதண்டனை உறுதி செய்யப்பட்டது.

http://www.maalaimalar.com

  • தொடங்கியவர்

சீன புரட்சியாளர் மா சே துங் பிறந்த தினம் இன்று!

  • தொடங்கியவர்

மும்பை: கோலி - அனுஷ்கா திருமண வரவேற்பு நிகழ்ச்சி - மணமக்களை வாழ்த்திய கிரிக்கெட், பாலிவுட் பிரபலங்கள்

மும்பையில் இன்று நடைபெற்ற இந்திய அணி கேப்டன் விராட் கோலி - அனுஷ்கா திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் பாலிவுட் பிரபலங்கள் மற்றும் கிரிக்கெட் நட்சத்திரங்கள் பங்கேற்று வாழ்த்தினர்.

 
மும்பை: கோலி - அனுஷ்கா திருமண வரவேற்பு நிகழ்ச்சி - மணமக்களை வாழ்த்திய கிரிக்கெட், பாலிவுட் பிரபலங்கள்
 
மும்பை:

மும்பையில் இன்று நடைபெற்ற இந்திய அணி கேப்டன் விராட் கோலி - அனுஷ்கா திருமண வரவேற்பு நிகழ்ச்சியில்  பாலிவுட் பிரபலங்கள் மற்றும் கிரிக்கெட் நட்சத்திரங்கள் பங்கேற்று வாழ்த்தினர்.

இந்திய அணி கேப்டன் விராட் கோலியும், இந்தி நடிகை அனுஷ்கா சர்மாவும் கடந்த 11-ம் தேதி இத்தாலியில் உள்ள டுஸ்கேனியில் இருக்கும் சொகுசு விடுதியில் திருமணம் செய்து கொண்டனர். 4 ஆண்டு கால காதலுக்கு பிறகு மிகவும் ரகசியமாக நடத்தப்பட்ட இந்த திருமண நிகழ்ச்சியில் நெருங்கிய உறவினர்களும், குடும்ப நண்பர்களுமே பங்கேற்றனர்.

இதற்கிடையே, கடந்த 21ம் தேதி புதுமண தம்பதியினர் இந்தியா திரும்பினர். அவர்கள் பிரதமர் மோடியை சந்தித்து வாழ்த்து பெற்றனர். அதைத்தொடர்ந்து, டெல்லி தாஜ் ஹோட்டலில் விராட் கோலி - அனுஷ்கா ஜோடியின் வரவேற்பு நிகழ்ச்சி நடந்தது. இருவீட்டாரின் உறவினர்கள் பங்கேற்ற இந்த நிகழ்ச்சியில் பிரதமர் மோடி கலந்துகொண்டு மணமக்களை வாழ்த்தினார்.

இந்நிலையில், மும்பையில் ஐந்து நட்சத்திர ஓட்டலில் இன்று மற்றொரு வரவேற்பு நிகழ்ச்சி நடத்தப்பட்டது.

இதில், அனில் கும்ப்ளே, சுனில் கவாஸ்கர், வீரேந்தர் சேவாக், உமேஷ் யாதவ்,குல்தீப் யாதவ், செடேஷ்வர் புஜாரா, ரவீந்திர ஜடேஜா, ஜஸ்பிரீத் பும்ரா, சந்தீப் படேல், ரவிச்சந்திரன் அஸ்வின், சாய்னா நேவால் உள்ளிட்ட  விளையாட்டு வீரர்கள் கலந்து கொண்டனர்.

மேலும், ஷாருக் கான், அமிதாப் பச்சன், ஐஸ்வர்யா ராய் பச்சன், ரேகா, கங்கனா ரனாவத், கரன் ஜோகர் உள்பட பாலிவுட் பிரபலங்கள் இந்த விருந்தில் பங்கேற்று புதுமண தம்பதியரை வாழ்த்தினர்.
 

Bild könnte enthalten: 6 Personen, Personen, die lachen, Personen, die stehen, Hochzeit und Anzug

Bild könnte enthalten: 2 Personen, Personen, die stehen

Bild könnte enthalten: 3 Personen, Personen, die stehen

 

  • தொடங்கியவர்

 

எப்படிப் பெருமை பேச முடியும்?
 

image_1546e22268.jpgதங்களது பேரன், பேத்திகளையே தெரியாமல் வாழ்பவர்கள் அநேகர். அதாவது பாட்டன், பாட்டிமார்களைத்தான் சொல்கின்றேன். 

தூரதேசங்களுக்கு தங்கள் தாய், தந்தையை விட்டுவிட்டுச் செல்பவர்களில் அநேகர், இன்னமும் தத்தமது தாய் நாடுகளுக்குத் திரும்பாமலே இருக்கின்றனர்.  

இந்த இலட்சணத்தில், முன்னைய தலைமுறைகளான பாட்டன்மார்களை நினைவுகூராமல் இருப்பது ஒன்றும் புதுமையானதுமல்ல. ஆனால், மேற்கத்தைய நாடுகளில், தங்களது குடும்ப உறுப்பினர்களின் வம்சத்தின் பெயர்களையே, இன்னமும் தங்கள் பெயர்களுடன் இணைத்து வைத்து வருகின்றனர்.  

எங்கள் குடும்பத்தில் எனது மூன்று தலைமுறைகளின் பெயரையே வைத்துள்ளனர். தாங்கள் எந்தத் தலைமுறையில் இருந்து வந்தோம் என்பதை அறியாமல் இனம், மொழிப்பற்று எப்படிப் பெருமை பேச முடியும்?  

பரம்பரை என்பது வெறும் பேச்சளவில் மட்டுமல்ல; அது இனம், மொழி சார்ந்த உன்னதமானது. 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.