Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இளமை புதுமை பல்சுவை

Featured Replies

  • தொடங்கியவர்

22  வருடங்களுக்கு முன்பு சுற்றுலா பயணி: தற்போது இங்கிலாந்து அரண்மனையில் இளவரசி

 

 
jnmpng%E0%AE%9C%E0%AF%8D

இங்கிலாந்து  இளவரசர் ஹாரி, அமெரிக்க நடிகை மெகன் மார்கல் திருமணம் கடந்த சனிக்கிழமை கோலாகலமாக நிறைவடைந்தது.

இங்கிலாந்தில் உள்ள வின்ட்சர் கோட்டையில் இளவரசர் ஹாரி மெகன் மார்கல் திருமணம்  ட்விட்டரில் நேரடியாக ஒளிப்பரப்பு செய்யப்பட்டது. இந்த திருமண விழாவில் உலகில் பல்வேறு நாடுகளிலிருந்து வருகை தந்த பிரபலங்கள் பலர் கலந்து கொண்டனர்.

 

இளவரசர் ஹாரியை திருமணம் செய்தன்  மூலம் இங்லாந்து அரச குடும்பத்தில் முதல் கருப்பின கலப்பின இளவரசி என்ற பெருமையை பெற்றுள்ள அமெரிக்க நடிகை மெகன் மார்கல் பற்றிய சுவரஸ்சியமான தகவல்கள் சமூக வலைதளங்களில் வலம் வந்து கொண்டிருக்கின்றன.

அவற்றில் பலரது கவனத்தை பெற்றது பக்கிங்காம் மாளிகையின் மூன் 22 வருடங்களுக்கு முன்னர் மெகன் எடுத்துக் கொண்ட புகைப்படம்.

ஆம் சுற்றுலா பயணியாக தனது 15 வயதில் தனது தோழியுடன் பக்கிங்காம் அரண்மனை முன் மெகன் அமர்திருக்கிறார். சுமார் 22 வருடங்களுக்கு பிறகு அந்த அரண்மனையைச் சேர்ந்த இளவரசர் ஹாரியை மெக்கன் திருமணம் செய்திருக்கிறார்.  நிச்சயம் இது கனவு வாழ்க்கைத்தான் என்று பலரும் ட்விட்டர் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருகின்றனர்.

இங்கிலாந்து இளவரசி டயானாவுக்கு மெகனுக்கு   சில ஒற்றுமைகள் காணப்படுகின்றன. பிரட்டிஷ் இளவரசிகளிலே  டயானா மக்கள் சேவை வெளிப்படையால எதையும் பேசும் தன்மை இவற்றால் தனித்து அறியப்பட்டார். டயானா இங்கிலாந்து மக்களால் இதன் காரணமாக கொண்டாடப்பட்டார்.

பெண்ணியம், பெண் முன்னேற்றம், பெண்களின் சம உரிமை குறித்து மெகனின் கருத்துகள் அவரை டயானாவுடன் ஒப்பிட்டு  பிரிட்டிஷ் மக்களை பார்க்க வைத்துள்ளது.

மெகன், டயானாவை போல் பேசப்படுவரா...பொறுந்திருந்துதான் பார்க்க வேண்டும்.

http://tamil.thehindu.com

  • Replies 11.3k
  • Views 1.5m
  • Created
  • Last Reply
  • தொடங்கியவர்

‘குட்டிபையன், மிதிவண்டி மற்றும் ஒரு பலூன்’ - ஓர் ஊர்சுற்றியின் சுவாரஸ்ய கதை

 

ஒரு நாள் கதை சொல்வற்காக தமிழகத்தின் ஏதோ ஒரு நிலத்தின் பயணம் செய்து கொண்டிருந்த போது சில காட்சிகள் என் நினைவில் மின்னலென வந்து சென்றது. அந்த காட்சி தரிசனத்துக்கு என்னை முழுவதுமாக ஒப்புகொடுத்தேன். அந்த ஒப்படைப்புதான் என்னை கேரளா, கர்நாடகா, குஜராத், கங்கோதரி, ஹரித்வார், டெல்லி என இந்தியாவின் அனைத்து நிலபரப்புகளுக்கும் என்னை அழைத்து வந்து இருக்கிறது என்று கவித்துவமாக பேசுகிறார் குமார் ஷா.

குமார் ஷா

 

குமார் ஷா

பயணி, கதை சொல்லி, நாடக கலைஞர் என பன்முக திறமை கொண்டவர் குமார் ஷா. ஆனால், இது எதுவும் என் திறமை அல்ல என்கிறார் அவர். "நான் எப்போதோ பார்த்த காட்சிகள், நான் எங்கேயோ கேட்ட கதைகள்... இவைதான் நான். இவற்றுடன் ஊடாடல்தான்."என்கிறார் குமார்.

'இருநூறு ரூபாயுடன் தொடங்கிய பயணம்'

"ஒரு நாள் குழந்தைகளுக்கு கதை சொல்லிவிட்டு ஊர் திரும்பி கொண்டிருந்தபோது, மின்னல்வெட்டாக எனக்கு சில காட்சிகள் தோன்றின. ஒரு சிறுவன் ஒரு சைக்கிளில் ஒரு பலூனுடன் பயணம் செய்வதாய் இருந்தது அந்த காட்சி. அந்த காட்சி என்னை தொந்தரவு செய்தது. பலூனுடன் பயணம் செய்யும் அந்த சிறுவன் எத்தனை எத்தனை நிலப்பரப்புகளை பார்ப்பான். எவ்வளவு மனிதர்களை சந்திப்பான் என்ற யோசனையே அலாதியானதாக இருந்தது. மின்னல் வெட்டாய் வந்த காட்சி தரிசனம் என்னை நெகிழ செய்தது. அந்த சிறுவனாக என்னை உருவகப்படுத்திக் கொண்டேன். சைக்கிள் எடுத்துக்கொண்டு பயணத்தை தொடங்கினேன்" என்று தாம் பல்லாயிரம் கிலோமீட்டர் பயணம் செய்ய தூண்டிய கதையையும், அந்த பயணத்தில் அவர் உறவாடிய நிலபரப்பு, மனிதர்கள் குறித்து சொல்ல தொடங்குகிறார் குமார்.

'இருநூறு ரூபாயுடன் இந்திய பயணம்' - சுவாரஸ்ய கதைபடத்தின் காப்புரிமைFACEBOOK/KUMARSHAW

"இந்த பயணம் தொடங்கும் போது இங்குதான் செல்ல வேண்டும், இவர்களைதான் சந்திக்க வேண்டும் என்ற பயணதிட்டமும் இல்லை. உண்மையை சொல்ல வேண்டுமானால் என்னிடம் இருநூறு ரூபாய்க்கு மேல் பணமும் இல்லை. ஆனால், அந்த பலூன் குழந்தையின் காட்சி என்னை செலுத்தியது. அந்த இருநூறு பணத்துடன் என்னை பயணத்தை தொடங்கினேன்." என்கிறார் அவர்.

'மொழியை கடந்து செல்லுதல்'

குமார் ஷாபடத்தின் காப்புரிமைFACEBOOK/KUMARSHAW

"சிவகங்கை வழியாக மிதிவண்டியில் சென்று கொண்டிருந்தபோது ஒரு டீ-கடையில் 90 வயது மதிக்கத்தக்க பெரியவர் ஒருவரை சந்தித்தேன். அவருடன் உரையாடிய போது, தனது அனுபவங்களை, இத்தனை ஆண்டுகளாக அவர் தரிசித்த விஷயங்களை கதையாக என்னிடம் கடத்தினார். ஆனால், தமிழக எல்லையை கடந்தபின் மொழி எனக்கு முதலில் பெரும் தடையாக இருந்தது. நான் சொல்வதற்கும் அவர்கள் பேசுவதற்கு இடையே ஒரு வெளி உண்டாக்கியது. வெற்றிடத்தை காற்று நிரப்பும்தானே... அது போல் அந்த வெற்றிடத்தை அன்பு நிரப்பியது" என்று அன்பு மொழியை வவரிக்கிறார் குமார்.

 

 

"நான் இருநூறு ரூபாயுடன்தான் இந்த பெரும்பயணத்திற்கு கிளம்பினேன் என்று சொன்னேன்தானே, ஆனால், இந்த பயணத்தில் ஒரு நாள்கூட பசியுடன் உறங்கியது இல்லை. மொழி, இனம் தாண்டி மனிதர்கள் என்னை அரவணைத்துக் கொண்டார்கள். இந்த உலகம் இன்னும் ஜீவித்து இருக்கிறது அன்பினால் மட்டும்தான் என்பதை முன்பின் அறிமுகம் இல்லாத அந்த நண்பர்கள் புரியவைத்தார்கள்" என்கிறார் குமார் ஷா.

குமார் ஷா

 

குமார் ஷா

கேரளா, அகமதாபாத், ராஜஸ்தான், ஹிமாச்சல் பிரதேஷ் என போகிற வழிகளில் எல்லாம் பள்ளிகளில் பணி செய்து இருக்கிறார் குமார். அங்கு பொம்மலாட்டம் நடத்துவது, பேப்பரில் கலை பொருட்கள் செய்வது மற்றும் நாடக பயிற்சி அளிப்பது என பயணம் முழுவதும் குழந்தைகளுடன் இருந்திருக்கிறார் குமார் ஷா.

'ஹிப்பி நாட்கள்'

பொம்மலாட்டம்படத்தின் காப்புரிமைFACEBOOK/KUMARSHAW

"நாம் இவ்வளவு பயணம் செய்கிறோம். நமக்கு எல்லாம் தெரியும், எல்லோரைப் பற்றியும் புரியும் என்ற அகந்தை கோவாவில் உடைந்தது. ஹிப்பி என்றால் தான்தோன்றிகள் என்ற எண்ணம் எனக்கு இருந்தது. ஆனால், கோவாவில் அவர்களை கவனித்தபோது, அவர்களிடம் இருந்த ஒரு ஒழுங்கு புரிந்தது. அவர்கள் யாரையும் தங்கள் நலத்திற்காக தொந்தரவு செய்வது இல்லை. குறிப்பாக, நாங்கள்தான் வாழ்க்கையை வாழ்கிறோம் என்று தங்கள் வாழ்க்கை முறையை பிரசாரம் செய்வது இல்லை. திணிக்க முயற்சிப்பதில்லை. இதுதான் முக்கியம் என்று கருதுகிறேன். இங்கு உள்ள அனைத்து பிரச்சனைகளும் இந்த திணித்தலில்தான் தொடங்குகிறது. இதுபோன்ற என்னுடைய பல முன்முடிவுகள் இந்த பயணத்தில் உடைந்தன. " என்கிறார்.

'நிலம், மனிதர்கள்'

"நிலமும், மனிதர்களும் வெவ்வேறு அல்ல. அந்த நிலத்தின் தன்மைதான் அந்த மனிதர்களிடம் பிரதிபலிக்கிறது. நிலத்தை மதிப்பது, மனிதர்களை மதித்தல் என்பதை இந்த பயணம் உணர்த்தியது"

'இருநூறு ரூபாயுடன் இந்திய பயணம்' - சுவாரஸ்ய கதைபடத்தின் காப்புரிமைFACEBOOK/KUMARSHAW

இந்த பயணத்தின்போது டேராடூனிலிருந்து கங்கோதரி வரை 8 நாட்கள் வரை நடந்து சென்றோம். அந்த நடைபயணம் என்னை முழுவதுமாக மாற்றி போட்டு இருக்கிறது. இன்னும் 10 நாட்களில் டெல்லியிலிருந்து கிளம்புகிறேன். வடகிழக்கு மாநிலங்கள் செல்கிறேன். பின் அங்கிருந்து புறப்பட்டு தமிழ்நாடு செல்கிறேன்.

மின்னல் வெட்டாக வந்த ஒரு பையனின் காட்சி என்னை இந்தியா முழுவதும் சுற்ற வைத்து இருக்கிறது. அந்த பையனின் மூலமாக நான் கண்ட நிலபரப்பும், மனிதர்களும் என்னுள் கதி ஊற்றை உண்டாக்கி இருக்கிறது. என் நினைவில் இந்தியாவின் பெரும்பாலான பகுதியின் நிலபரப்புகள் பதிந்துள்ளன. இனி கதைகளில் இது ஊற்றெடுக்கும் என்கிறார் குமார் எனும் பயணி.

https://www.bbc.com

  • தொடங்கியவர்

1904 – பாரிசில் சர்வதேச உதைபந்தாட்ட கூட்டமைப்பு (FIFA) ஆரம்பிக்கப்பட்டது.

வரலாற்றில் இன்று….
மே 21

நிகழ்வுகள்

996 – புனித ரோமப் பேரரசின் மன்னனாக 16 வயது மூன்றாம் ஓட்டோ முடி சூடினான்.
1502 – போர்த்துக்கீச மாலுமி ஜொவாவோ டா நோவா புனித ஹெலெனா தீவைக் கண்டுபிடித்தார்.
1792 – ஜப்பானில் ஊன்சென் மலை வெடித்ததில் இடம்பெற்ற சூறாவளி மற்றும் சுனாமியினால் 14,300 பேர் கொல்லப்பட்டனர்.
1851 – கொலம்பியாவில் அடிமைத்தொழில் ஒழிக்கப்பட்டது.
1859 – பிக் பென் மணிக்கூடு முதன் முறையாக இயக்கப்பட்டது.
1864 – ரஷ்ய-கோக்கசஸ் போர் முடிவடைந்தது.
1871 – பிரெஞ்சு அரசுப் படைகள் பாரிஸ் கம்யூனைத் தாக்கினார். ஒரு வார முற்றுகையில் 20,000 கொம்ம்யூன் மக்கள் கொல்லப்பட்டு 38,000 பேர் கைது செய்யப்பட்டனர்.
1894 – 22 வயது பிரெஞ்சு கொடுங்கோலன் எமிலி ஹென்றி கழுத்து துண்டிக்கப்பட்டு மரண தண்டனைக்கு உள்ளாக்கப்பட்டான்.
1904 – பாரிசில் சர்வதேச உதைபந்தாட்ட கூட்டமைப்பு (FIFA) ஆரம்பிக்கப்பட்டது.
1917 – அட்லாண்டாவில் இடம்பெற்ற பெருந்தீயில் பெரும் அழிவு ஏற்பட்டது.
1941 – இரண்டாம் உலகப் போர்: பிரேசிலில் இருந்து 950 மைல் தூரத்தில் ரொபின் மூர் என்ற அமெரிக்க போர்க் கப்பல் ஜெர்மனியின் யூ-படகினால் மூழ்கடிக்கப்பட்டது.
1991 – முன்னாள் இந்தியப் பிரதமர் ராஜீவ் காந்தி சென்னைக்கருகில் மனிதக் குண்டுவெடிப்பொன்றில் கொல்லப்பட்டார்.
1991 – எதியோப்பியாவின் கம்யூனிச அரசுத் தலைவர் மெங்கிஸ்டு ஹைலி மரியாம் நாட்டில் இருந்து தப்பி வெளியேறினார். எதியோப்பிய உள்நாட்டுப் போர் முடிவுக்கு வந்தது.
1994 – யேமன் மக்களாட்சிக் குடியரசு யேமன் குடியரசில் இருந்து விலகியது.
1996 – தான்சானியாவில் பூக்கோவா என்ற என்ற பயணிகள் கப்பல் மூழ்கியதில் 1000 பேர் வரையில் கொல்லப்பட்டனர்.
1998 – 32 ஆண்டுகள் இந்தோனீசியாவை ஆண்ட சுகார்ட்டோ பதவி விலகினார்.
2003 – வடக்கு அல்ஜீரியாவில் நிகழ்ந்த நிலநடுக்கத்தில் 2,000 பேருக்கு மேல் கொல்லப்பட்டனர்.

பிறப்புகள்

கிமு 427 – பிளாட்டோ, கிரேக்கத் தத்துவவியலாளர் (இ. கிமு 347)
1919 – எம். என். நம்பியார், நடிகர் (இ. 2008)
1921 – அந்திரே சாகரொவ், ரஷ்ய இயற்பியலாளர் (இ. 1989)
1954 – டி. பி. எஸ். ஜெயராஜ், ஊடகவியலாளர்
1960 – மோகன்லால், தென்னிந்திய நடிகர்
1972 – நொடோரியஸ் பி.ஐ.ஜி, அமெரிக்க ராப் இசைக் கலைஞர்

இறப்புகள்

1964 – ஜேம்ஸ் பிராங்க், செருமானிய இயற்பியலாளர், நோபல் பரிசு பெற்றவ செருமானிய இயற்பியலாளர் (பி. 1882)
1991 – ராஜீவ் காந்தி, முன்னாள் இந்தியப் பிரதமர் (பி. 1944)
2014 – ஆர். உமாநாத், இந்திய இடதுசாரி அரசியல்வாதி (பி. 1922)

சிறப்பு நாள்

சிலி – கடற்படையினர் நாள்
இந்தியா – பயங்கரவாதத்திற்கு எதிரான நாள்

http://metronews.lk

 

  • தொடங்கியவர்

இணையத்தைக் கலக்கும் தோனி மகளின் வீடியோ!

 
 

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் டோனி, தன் மகள் ஸிவாவுடன் மைதானத்தில் விளையாடும் காட்சிகள் தற்போது இணையத்தைக் கலக்கி வருகிறது. 

தோனி

 

மகாராஷ்ட்ரா மாநிலம் புனே மைதானத்தில் பஞ்சாப் அணி மற்றும் சென்னை அணிக்கு இடையேயான போட்டி நேற்று நடைபெற்றது. டாஸ் வென்ற சென்னை அணி பந்து வீச்சைத் தேர்வு செய்தது. பஞ்சாப் அணியின் தொடக்க வீரர்களாகக் களமிறங்கிய லோகேஷ் ராகுல்
7 ரன்களிலும் கிறிஸ் கெயில் ரன் ஏதும் எடுக்காமலும் ஆட்டமிழந்தார். அடுத்தடுத்து விக்கெட்டுகள் இழந்தது. கருன் நாயர் அதிகபட்சமாக 54 ரன்கள் எடுத்தார். இறுதியில் 19.4 ஓவரில் 10 விக்கெட் இழப்புக்கு பஞ்சாப் அணி 153 ரன்கள் எடுத்தது.

அடுத்து களமிறங்கிய சென்னை அணியின் தொடக்க ஆட்டக்காரர் அம்பதி ராயுடு 1 ரன்களிலும் டூப்லளிஸ் 14 ரன்களிலும் ஆட்டமிழந்தனர். சுரேஷ் ரெய்னா அதிகபட்சமாக 61 ரன்கள் எடுத்தார். இறுதியாகக் களமிறங்கிய டோனி அவரது ஸ்டைலில் சிக்சர் அடித்து போட்டியை முடித்தார். சென்னை அணி 19.1 ஓவரில் 5 விக்கெட் இழப்புக்கு 159 ரன்கள் எடுத்து வெற்றிபெற்றது. 

இதைத்தொடர்ந்து டோனி தன் மகள் ஸிவாவுடன் மைதானத்தில் விளையாடிய காட்சிகள் சமூக வலைதளத்தில் மிகவும் வேகமாக வைரலாகிவருகிறது. அந்த வீடியோவில் குழந்தை ஸிவா தன் தந்தை டோனியின் சி.எஸ்.கே தொப்பியைக் கழற்றி மாட்ட முயற்சி செய்கிறது. பிறகு, தோனியே அதைச் செய்துவிடுகிறார். தொப்பி மாட்டிய குஷியில் ஸிவா துள்ளிக்குதிக்கும் காட்சிகள் காண்போர் மனத்தை வெகுவாக கவர்ந்து இழுக்கிறது. இதுதான் சமூக வலைதளத்தில் இன்றைய நம்பர் ஒன் வீடியோ.

https://www.vikatan.com/

Edited by நவீனன்

  • தொடங்கியவர்

ஹாரி-மார்கில் திருமணத்தில் உடைக்கப்பட்ட விதி எது தெரியுமா? #RoyalWedding

 
Chennai: 

பிரின்ஸ் ஆஃப் வேல்ஸ் சார்லஸ் - டயானா தம்பதியின் இளைய மகனான பிரின்ஸ் ஹாரி மற்றும் அமெரிக்க நடிகை மேகன் மார்கில் திருமணம், மே 19-ம் தேதி அரச குடும்பத்துக்குச் சொந்தமான `தி வின்சர் கேஸில்' எனும் கோட்டையில் உள்ள St.George's Chapel ஆலயத்தினுள் நடைபெற்றது. இந்தத் திருமண நிகழ்வுக்குச் சுமார் 250 கோடி ரூபாய் செலவு செய்யப்பட்டுள்ளது. வழக்கமான திருமண நிகழ்வைவிட அரச குடும்பத்தின் நிகழ்வுக்கு ஏகப்பட்ட வழிமுறைகள் இருக்கின்றன. அந்த வகையில், முதலில் Duke and Duchess of Sussex என்று ஹாரி மற்றும் மார்க்கிலுக்கு மகுடம் சூட்டப்பட்டு, பிறகு தங்களின் உறுதிமொழியை ஏற்று, மோதிரம் மாற்றிக்கொண்டனர்.

மேகன் மார்கில்

 

உலகமே வியந்துப் பார்த்த பிரின்ஸ் ஹாரி மற்றும் மேகன் மார்கில் திருமணத்தில் சில சுவாரஸ்ய நிகழ்வுகள் இதோ...

மார்கிலின் தந்தை உடல்நிலை சரியில்லாமல் இருப்பதால், மணப்பெண்ணை சபைக்கு அழைத்து வருவது யார் என்ற குழப்பம் இருந்தது. இறுதியில், ஹாரியின் தந்தை சார்லஸ், மார்கிலின் தந்தை ஸ்தானத்தில் இருந்து அனைத்துச் சம்பிரதாயங்களையும் முன்னின்று நடத்தினார்.

Prince Charles

தேர்ந்தெடுக்கப்பட்ட 600 சிறப்பு விருந்தினர்கள் உள்பட 2,500 பேர் மட்டுமே இந்தத் திருமண நிகழ்வுக்கு அழைக்கப்பட்டனர். அவர்களில், பிரபல பாடகி Mel B, Spice Girls ராக் பேண்ட், கால்பந்து வீரர் டேவிட் பெக்காம் மற்றும் அவரின் மனைவி விக்டோரியா பெக்கம், பாலிவுட் நடிகை பிரியங்கா சோப்ரா போன்ற பிரபலங்களும் அடங்குவர்.

Priyanka Chopra in Royal Wedding

திருமண நிகழ்வு முடிந்த பிறகு விருந்தினர் அனைவருக்கும், `Standing Reception' என்றழைக்கப்படும் ராயல் விருந்து கொடுக்கப்பட்டது. இதற்கான செலவு 6,80,000 டாலர்.

மேகன் மார்கிலின் திருமண உடை, வெள்ளைப் பட்டுத்துணியால் அந்நாட்டு பிரபலங்களின் ஃபேவரிட் டிசைனர் வெயிட் கெல்லர் என்பவரால் வடிவமைக்கப்பட்டது. போட் நெக், A-லைன் வடிவம் என அதிக வேலைப்பாடுகள் ஏதுமின்றி, எளிமையான ஆடையை உடுத்தியிருந்தார் மேகன்.

Megan Markle Wedding Dress

மேகன், அடிப்படையில் ஒரு சமூக ஆர்வலர். சமூகப் பிரச்னைகள் குறித்து அடிக்கடி இன்ஸ்டாகிராம், ட்விட்டர் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் கருத்துப் பதிவு செய்வது அவரது வழக்கம். இத்தனைநாள் சமூக ஆர்வலராக இருந்த மேகன் இனி அரச குடும்பத்தின் மருமகள். அரச குடும்ப விதிமுறைகளை அவரும் கடைப்பிடிக்க வேண்டும். மேகன் பின்பற்ற வேண்டியவை குறித்து ஒரு லிஸ்ட்டே இருக்கிறது. `ஆட்டோகிராஃப்' போடுவது, சமூக வலைதளங்களை உபயோகிப்பது, முட்டிக்கும் மேல் ஆடைகள் உடுத்துவது, சாக்ஸ் இல்லாமல் ஷூ போடுவது, செல்லப் பிராணிகள் வளர்ப்பது, தனியாக அல்லது நண்பர்களுடன் பயணம் செல்வது, வெளியில் சாப்பிடுவது, அரசியல் சம்பந்தமாகப் பேசுவது போன்றவற்றுக்கு `தடா'. எல்லாவற்றையும்விட ராணி எலிசபெத் சாப்பிட்ட பிறகுதான் மற்றவர்கள் சாப்பிட வேண்டும். மேகனும் இனி அப்படித்தான்.

உறவினர்களின் வருகை, நண்பர்களின் கேலி, குழந்தைகளின் விளையாட்டு, மேளதாள முழக்கத்தில் புதியதாய் முளைக்கும் காதல், தாலி கட்டப்போகும் நேரத்தை ஆவலுடன் எதிர்பார்த்துக் காத்துக்கொண்டிருக்கும் மணமக்கள், கடமையைச் செய்துவிட்டோம் என்ற பெற்றோர்களின் நிம்மதி... இப்படி பல உணர்வுகள் ஒன்றுசேர்வதுதான் `திருமணம்'. பொதுவாகவே ஆட்டம் பாட்டம் கொண்டாட்டங்கள் நிறைந்திருக்கும் திருமண நிகழ்வுகளுக்கு, பள்ளிகளில் உள்ளதுபோல் `ரூல்ஸ்' இருந்தால் எப்படி இருக்கும்? இப்படித்தான் இருக்கும் எனப் பதிலளிக்கும்விதமாக இருந்தது பிரிட்டிஷ் அரச குடும்ப திருமண நிகழ்வு.

ரூல் 1:

தொலைபேசி உபயோகிப்பதற்கு அனுமதியில்லை. இந்தக் காலத்தில் மொபைல் போன் இல்லாத ஆள்களே இல்லை. ஆனால், இவர்களின் திருமண நிகழ்வுக்குச் சென்றால், கட்டாயமாக மொபைல் போன் உபயோகிக்கக் கூடாது. எந்தவிதமான சமூக வலைதளங்களை உபயோகிக்கவும், புகைப்படங்கள் எடுப்பதற்கும் இங்கு அனுமதியில்லை.

ரூல் 2:

தங்களுக்கென ஒதுக்கப்பட்ட இருக்கையில்தான் அமர வேண்டும். 800 இருக்கைகள் கொண்டிருக்கும் ஆலயத்தின் வலதுபுறம் மணமகன் உறவினருக்கானது, இடதுபுறம் மணமகள் உறவினருக்கானது. அதிலும் முன்வரிசையில் இருக்கும் இருக்கைகள் மணமக்களின் பெற்றோர்கள் மற்றும் நண்பர்களுக்கு மட்டுமே.

ரூல் 3:

ராணி எலிசபெத் வருகையின்போது அனைவரும் தலை தாழ்த்தி வணங்க வேண்டும். திருமணத்தின்போது பெரும்பாலானவர்கள் புதியவர்களாக இருப்பார்கள். எனவே, அறிமுகத்தின்போது ராணி எலிசபெத் முன் தலை தாழ்த்தி வணங்கி, `யுவர் மெஜெஸ்டி' என்று கூறி அழைக்க வேண்டும். நன்கு பரிச்சயமான பிறகு `Mam' என்று அழைக்கலாம். எல்லாம் ஒரு மரியாதைதான்!

ரூல் 4:

ராணியைப் பார்த்ததும் ஆவேசப்பட்டோ, ஆசைப்பட்டோ ஓடிப்போய் அவரிடம் பேசிவிடக் கூடாது. அனைவரையும் ராணியே சந்தித்துப் பேசுவார். அதுவரைக்கும் அமைதிகாப்பது அவசியம். பொறுமை ரொம்ப முக்கியம்!

Queen Elizebeth

ரூல் 5 :

குறிக்கப்பட்ட திருமண நிகழ்வு நேரத்துக்கு ஒரு மணி நேரம் முன்னதாகவே அனைவரும் அவரவர் இடத்துக்கு வர வேண்டும். ராணி எலிசபெத்தின் வருகைக்கு முன்னதாகவே அனைவரும் அமர்ந்திருக்க வேண்டும். ராணி வந்த பிறகு மணமக்கள் வருவார்கள். இவங்க ரொம்ப ஸ்ட்ரிக்ட்!

ரூல் 6 :

 

பிரிட்டிஷ் அரச குடும்ப திருமண நிகழ்வு, வார நாளில்தான் நடைபெறும்; வார இறுதியில் நடைபெறாது. ஆனால், இந்தக் கோட்பாட்டை முதன்முறையாக உடைத்தவர்கள் பிரின்ஸ் ஹாரி மற்றும் மேகன் மார்கில்.

https://www.vikatan.com/

  • தொடங்கியவர்

வைரலாகும் ஐஸ்வர்யா ராயின் எல்.கே.ஜி புகைப்படங்கள்!

 
 

ஐஸ்வர்யா ராய் பச்சன் - புகைப்படங்கள் 

பள்ளிப் பருவத்தில் சக மாணவர்களுடன் எடுத்துக்கொண்ட புகைப்படங்களைப் பத்திரமாகப் பாதுகாத்து வருபவர்கள் இன்றளவும் இருக்கத்தான் செய்கிறார்கள். இதேபோல், முன்னாள் உலக அழகியும் பாலிவுட்டின் முன்னணி நடிகையுமான ஐஸ்வர்யா ராய் பச்சன் தனது பள்ளிப் பருவத்தில் எடுத்துக்கொண்ட புகைப்படங்களை ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ளார். புகைப்படங்கள் வெளியான அடுத்த நொடியில், ஐஸ்வர்யா ராயைக் கண்டுபிடிக்கும் வேலையில் ரசிகர்கள் இறங்கிவிட்டனர். 

 

ஐஸ்வர்யா ராய் பச்சன்

ஐஸ்வர்யா ராய் பச்சனுக்கு 44 வயதாகிவிட்டது என்று சொன்னால் யாரும் நம்பமாட்டார்கள். இன்னும், உலகளவில் தனக்கென ஒரு இடத்தைக் கெட்டியாகப் பிடித்துள்ளார். அண்மையில்கூட, பிரான்ஸில் நடைபெற்ற கேன்ஸ் திரைப்பட விழாவில் கலந்துகொண்ட ஐஸ்வர்யா ராயின் புகைப்படங்கள் இணையதளங்களில் வெளியாகி வைரலானது. ஐஸ்வர்யா ராய்க்கு நிகர் ஐஸ்வர்யா ராய்தான் என்று சொல்லும் அளவுக்குச் செய்துவிட்டார். 

ஐஸ்வர்யா ராய் பச்சன்  

 

இந்த நிலையில், ஐஸ்வர்யா ராய் இன்ஸ்டாகிராம் பக்கத்தில், எல்.கே.ஜி மற்றும் கிரேடு 1 நிலை வகுப்பில் சக மாணவிகளுடன் தான் எடுத்துக்கொண்ட புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். தற்போது, இணையதளத்தில் இந்தப் புகைப்படங்கள் வைரலாகி வருகிறது. ரசிகர்களும் ஐஸ்வர்யா ராயைக் கண்டுபிடிக்கும் வேலையில் மூழ்கிவிட்டனர்.

https://www.vikatan.com

  • தொடங்கியவர்

ஹிட்லரின் மரணச் செய்தியை உலகத்திற்கு பிபிசி அறிவித்தது எப்படி?

 
ஹிட்லர்படத்தின் காப்புரிமைKEYSTONE

1945ஆம் ஆண்டு மே ஒன்றாம் தேதி மாலை. லண்டன் மேற்கில் இருந்து 40 மைல்கள் தொலைவில் உள்ள ரீடிங் பகுதியில் தன் பணியில் இருந்தார் கார்ல் லேமான்.

பெர்லினை சோவியத் படைகள் சூழ்ந்துவிட, ஜெர்மனி உடனான போரும் அதன் இறுதி நிலைகளை அடைந்தது.

24 வயதான கார்ல், ஜெர்மனி அரசின் ரேடியோ ஒலிபரப்பை கேட்டுக் கொண்டிருந்தார். அப்போது, ஒரு முக்கியமான அறிவிப்பு வெளியிடப்பட உள்ளதாகவும் அதற்கு தயாராக இருக்குமாறும் ரேடியோவில் கூறப்பட்டது.

கேரளாவில் பரவும் நிப்பா வைரஸுக்கு பலர் பலி கேரளாவில் பரவும் நிப்பா வைரஸுக்கு பலர் பலி

"ஹிட்லர் இறந்துவிட்டார் என்று அறிவித்தபோது புனிதமான இசை இசைக்கப்பட்டது" என்று கார்ல் நினைவு கூர்ந்தார். "ரஷ்ய கம்யூனிச முறையான போல்ஸேவிசத்தை எதிர்த்து ஹிட்லர் போராடி வீழ்ந்தார் என்று சோகமாக அறிவிக்கப்பட்டது" என்கிறார் அவர்.

யூதர்களை அதிகளவில் நாஜிக்கள் துன்புறுத்த, அவர்களிடம் இருந்து தப்பிக்க ஜெர்மனியில் இருந்து பிரிட்டனுக்கு கார்லும் அவரது சகோதரரும் அனுப்பி வைக்கப்பட்டனர். அவரது தந்தை ஜெர்மனி நாட்டு யூதராவார்.

ஹிட்லரின் மரண

"என் வாழ்வை சீரழித்த ஹிட்லரின் மரணச் செய்தியை கேட்டதும் நிம்மதியாக உணர்ந்தேன்" என்று கூறுகிறார் கார்ல்.

இரண்டாம் உலகப் போர் நடைபெற்ற போது, பிபிசியின் கண்காணிப்புக் குழுவில் பணிபுரிந்து வந்தார் கார்ல்.

ஜெர்மனி மற்றும் அதன் கூட்டாளி நாடுகளில் ஒலிபரப்பப்படும் ரேடியோ நிகழ்வுகளை கேட்டு, மொழிபெயர்த்து பிரிட்டன் அரசாங்கத்திடம் கூறுவதுதான் கண்காணிப்புக் குழுவின் பிரதாக நோக்கம்.

"ஹிட்லர் இறந்துவிட்டார் என்ற அறிவிப்பை பிரிட்டனில் முதலில் கேட்டது நாங்கள்தான்" என்று கூறுகிறார் கார்ல்.

"எங்கள் கட்டடத்தில் இருந்த அனைவரும் உற்சாகமடைந்தனர். அது எவ்வளவு முக்கியம் என்பதை உணர்ந்தோம். ஜெர்மனிக்கு எதிரான போர் முடிவுக்கு வருகிறது என்று அர்த்தம்."

ஹிட்லர் உயிரிழந்ததில் சந்தேகம் இல்லை என்றாலும், அவர் தன்னை தானே கொலை செய்து கொண்டார் என்பது பின்புதான் தெரிய வந்தது.

Presentational grey line

ஹிட்லரின் வீழ்ச்சி 1945

ஹிட்லரின் மரணம்படத்தின் காப்புரிமைHULTON ARCHIVE/GETTY IMAGES

ஏப்ரல் 15 - 16 ஜெர்மன் படைகள் மீது சக்திவாய்ந்த பீரங்கித் தாக்குதலை சோவியத் படைகள் நிகழ்த்தியது.

ஏப்ரல் 21 பெர்லினின் புறநகர் பகுதிகளில் புகுந்த செம்படை, அதனை கைப்பற்றியது.

ஏப்ரல் 27 ஜெர்மனிய ராணுவத்தை வெற்றிகரமாக பிரித்து, எல்பெ நதி அருகே அமெரிக்கா மற்றும் சோவியத் படைகள் சந்தித்துக் கொண்டன.

ஏப்ரல் 29 ஹிட்லரும் ஈவா பிரவுனும், ரைக் சேன்ஸலரி தலைமையகத்தின் அடியில் இருந்த பதுங்கு குழியில் திருமணம் செய்து கொண்டனர்.

ஏப்ரல் 30 ஹிட்லரும் அவரது மனைவியும் தற்கொலை செய்து கொண்டனர். பின்பு, அவரது உடல்கள் எரிக்கப்பட்டன.

மே 1 ஹிட்லரின் மரணமடைந்ததாக ஜெர்மன் ரேடியோ அறிவித்தது

மே 7 ஜெர்மனி நிபந்தனையற்று சரணடைந்ததையடுத்து, ஆறு ஆண்டுகளாக ஐரோப்பியாவில் நடைபெற்று வந்த போர் முடிவுக்கு வந்தது.

Presentational grey line

"அவர் தற்கொலை செய்து கொண்டார் என்பதை அவர்கள் ஒப்புக் கொள்ளவில்லை. ஆனால், ஹிட்லர் உயிரிழந்துவிட்டதாக ஜெர்மனியர்களே அதிகாரப்பூர்வமாக அறிவித்தனர்."

ஹிட்லர் இறந்ததாக ஜெர்மனியர்கள் அறிவித்ததை உடனடியாக மொழிபெயர்த்தார் ஜெர்மன் கண்காணிப்புக்குழுவில் இருந்த எர்ன்ஸ்ட் கொம்பிரிஜ்.

"அவர் அதனை சிறு காகிதத்தில் எழுதினார். அவர் செய்த மோசமான விஷயம் அதுதான். ஏனெனில் அவர் கையெழுத்து மிகவும் மோசமாக இருந்ததாக" கூறுகிறார் எர்ன்ஸ்டினுடன் பணி புரிந்தவர்.

பின்பு, அரசாங்கத்துக்கு இச்செய்தியை தெரியப்படுத்த லன்டனில் உள்ள கேபினட் அலுவலகத்தை தொலைப்பேசி மூலம் தொடர்பு கொண்டார் எர்ன்ஸ்ட்.

ஹிட்லரின் மரணபடத்தின் காப்புரிமைKARL LEHMANN

பிபிசி செய்தி அறைக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டு, பின்பு இச்செய்தி உலகம் முழுவதும் ஒலிபரப்பப்பட்டது.

தற்போது 97 வயதாகும் கார்ல், இச்செய்தியை கேட்ட உலக மக்கள் உற்சாகமடைந்ததாக நினைவு கூர்கிறார்.

ஹிட்லர் இறந்தபோது, கவர்ஷம் பார்க்கில் இருந்த பிபிசி கண்காணிப்புக்குழுவில் 1000 பேர் வேலை பார்த்துக் கொண்டிருந்தனர்.

ஜெர்மன் பிரிவில் இருந்த 40 பேரில், நாஜி துன்புறுத்தலால் தப்பித்து வந்த யூதர்கள், சமதர்மவாதிகள் மற்றும் தொழிற்சங்கவாதிகள் பலர் இருந்தனர்.

அவர்கள் அனைவரும் ஹிட்லரின் மரண செய்தியை கேட்டு மகிழ்ந்ததாக கார்ல் தெரிவித்தார்.

ஹிட்லரை மொழி பெயர்ப்பது மிகவும் கடினமானது என்கிறார் கார்ல்.

அவர் ஒரு மோசமான எழுத்தாளர். அதனை ஜெர்மன் மொழியில் படித்தால் அவரது உரைகள் ஈர்க்கக்கூடியதாக இருக்காது. ஆனால், அவர் அதனை பேசும் போது முற்றிலும் வேறு மாதிரி இருக்கும். அவர் அவரது பேச்சு திறனை நம்பியிருந்தார்.

https://www.bbc.com

  • தொடங்கியவர்

ரைட் சகோதரர்கள் தங்கள் பறக்கும் கருவிக்கு காப்புரிமை பெற்ற நாள்: மே 22-1906

 
ரைட் சகோதரர்கள் தங்கள் பறக்கும் கருவிக்கு காப்புரிமை பெற்ற நாள்: மே 22-1906
 

ரைட் சகோதரர்கள் தங்கள் பறக்கும் கருவிக்கு 1906-ம் ஆண்டு மே 22-ந்தேதி காப்புரிமை பெற்றனர்.

இதே தேதியில் நிகழ்ந்த முக்கிய நிகழ்வுகள்:-

* 1809 - வியன்னாவுக்கு அருகில் நெப்போலியன் பொனபார்ட்டின் படைகள் முதற்தடவையாக தோற்கடிக்கப்பட்டன.

* 1834 - இலங்கையில் சட்டசபையின் முதலாவது கூட்டம் கொழும்பில் இடம்பெற்றது.

* 1840 - நியூ சவுத் வேல்சுக்கு பிரித்தானியக் குற்றவாளிகளை நாடு கடத்துதல் நிறுத்தப்பட்டது.

* 1844 - பாரசீக மதகுரு பாப் தனது பாபிசம் என்ற தனது மதக்கொள்கையை வெளியிட்டார். இவரே பஹாய் சமயத்த்தைத் தோற்றுவித்த பகாவுல்லாவின் முன்னோடி எனக் கருதப்படுகிறது.

* 1906 - ரைட் சகோதரர்கள் தமது பறக்கும் கருவிக்கான காப்புரிமத்தைப் பெற்றனர். * 1915 - ஐக்கிய அமெரிக்காவில் லாசன் முனை வெடித்தது.

* 1915 - ஸ்காட்லாந்தில் ஐந்து ரெயில்கள் ஒன்றோடொன்று மோதியதில் 227 பேர் கொல்லப்பட்டனர். 246 பேர் காயமடைந்தனர்.

* 1942 - இரண்டாம் உலகப் போர்: மெக்சிகோ நேச நாடுகள் தரப்பில் போரில் குதித்தது.

* 1958- இலங்கை இனக்கலவரம்- இலங்கையில் ஏற்பட்ட கலவரங்களில் நூற்றுக்கணக்கான தமிழர்கள் சிங்களவர்களால் படுகொலை செய்யப்பட்டனர்.

* 1960 - தெற்கு சிலியில் நிகழ்ந்த 9.5 அளவு நிலநடுக்கம் மற்றும் ஆழிப்பேரலையினால் ஆயிரக்கணக்கானோர் கொல்லப்பட்டனர். இதுவே இதுவரையில் பதியப்பட்ட அதிசக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஆகும்

. * 1967 - பெல்ஜியம் தலைநகர் பிரசல்சில் கடைத் தொகுதி ஒன்று தீப்பிடித்ததில் 323 பேர் கொல்லப்பட்டு 150 பேர் காயமடைந்தனர்.

* 1968 - அமெரிக்க நீர்மூழ்கிக் கப்பல் ஸ்கார்ப்பியன் மூழ்கியதில் 99 பேர் கொல்லப்பட்டனர்.

* 1972 - இலங்கையில் புதிய அரசியலமைப்புச் சட்டம் அமலுக்கு வந்து குடியரசு ஆகியது. சிலோன், ஸ்ரீலங்கா எனப் பெயர் மாற்றம் பெற்றது. பொதுநலவாய நாடுகள் அமைப்பில் அங்கத்துவம் பெற்றது.

* 1990 - வடக்கு ஏமன் மற்றும் தெற்கு ஏமன் ஆகியன இணைந்து ஏமன் குடியரசு ஆகியது.

* 1990 - விண்டோஸ் 3.0 வெளியிடப்பட்டது.

* 2004 - நெப்ராஸ்காவில் இடம்பெற்ற சூறாவளியினால் ஹலாம் நகரம் முற்றிலும் அழிந்தது.

 

https://www.maalaimalar.com

  • தொடங்கியவர்

'சுட்டவனைத் தேடி வீட்டுக்கே வந்த புலி..!' - இது சைபீரியன் புலியின் ரிவெஞ்ச் கதை

 
 

உணவு விஷயத்தில் மனிதர்களும் விலங்குகளும் ரிஸ்க் எடுக்க வேண்டும். ஏனெனில், பனிக் காடுகளில் உணவுக்கு வேறு வழியே இல்லை. மனிதன், விலங்கு என இரு  இனத்துக்கும் பிழைத்திருக்க வேட்டையாடுவது ஒன்றே வழி. அதிலும் குறுகி வரும் காடுகள், அழிக்கப்படும் காடுகளால் இரண்டு இனத்துக்கும் பிழைத்திருப்பது என்பதே சவாலான விஷயமாக இருக்கிறது. அதிலும் சைபீரியன் புலிகள் பிழைத்திருப்பது மிகப் பெரிய சவால்.

ரஷ்யா மற்றும் சீனாவின் எல்லையில் 600 மைல்களுக்கு மிகப் பெரிய காடு பறந்து விரிந்து கிடக்கிறது. அந்தக் காடுகளில் இருக்கிற மக்களுக்கு முக்கிய தொழிலே வேட்டையாடுவதுதான். வனம் முழுவதும் பனி படர்ந்திருக்கிறது. பனிப் பிரதேசம் என்பதால் எப்போதும் பனிப் படர்ந்தே காணப்படும். இந்தக் காடுகளில் சைபீரியன் புலிகள் அதிக எண்ணிக்கையில் வசிக்கின்றன. வேட்டையாடுவது தொடர்ந்தாலும் சைபீரியன் புலிகள் தங்களின் இருப்பைத் தக்கவைத்துக்கொண்டிருக்கின்றன. புலிகளை வேட்டையாடுவதைத் தடுக்கவும் அதன் எண்ணிக்கையை உயர்த்தவும் அரசு “கான்ஃபிளிக்ட் டைகர் (Conflict Tiger)” என்கிற அமைப்பை  யூரி என்பவரின் தலைமையில் உருவாக்குகிறது. மனிதர்களுக்கும் புலிக்குமான மோதல்களைத் தவிர்ப்பதே இந்த அமைப்பின் பணி. சோபோலைன் என்கிற ஒரு கிராமம் இருக்கிறது. சைபீரியன் புலிகளை வேட்டையாடுவதற்குச் சரியான இடமாக அது இருக்கிறது. பல இடங்களிலிருந்தும் வருகிற வேட்டைக்காரர்கள் இங்கிருந்த இடங்களில் தங்கி வேட்டையாடுகிறார்கள். அவர்களின் இலக்கு முழுவதும் சைபீரியன் புலிகளை வேட்டையாடுவதுதான். சீனாவில் புலிகளுக்கு மிகப் பெரிய மார்க்கெட் இருக்கிறது. அதன் உடல் உறுப்புகள், தோல் என எல்லாமே பல ஆயிரம் டாலர்களில் விலைபோகும். அதற்காகவே இங்கே தங்கி வேட்டையாடுகிறார்கள். 

 

செர்பியன் புலி

இவான் டுங்காய் என்கிற முதியவர் ஒருவர் காலங்காலமாக  அந்தக் கிராமத்தில் வசிக்கிறார். அவரின் வாழ்க்கையில் பெரும்பகுதியை வேட்டையாடுவதிலேயே கழித்தவர். அவரைத் தவிர்த்து சிலர் வேட்டையாட அங்கே தங்கியிருக்கிறார்கள். அங்கு மார்கோவ் என்கிறவர் புலிகளை வேட்டையாட வருகிறார். முதியவர் டுங்காய் தனக்குச் சொந்தமான ஒரு வீட்டை மார்க்கோவ் தங்கிக்கொள்ளத் தருகிறார். விலங்குகளால் இந்தப் பகுதியில் ஆபத்து இருப்பதாகவும், குறிப்பாகப் புலிகள் விஷயத்தில் கவனமுடன் இருக்க வேண்டுமென எச்சரிக்கிறார். ஒருவேளை புலியை நேருக்கு நேர் சந்திக்க நேர்ந்தால் அதைத் தாக்க வேண்டும். இல்லையெனில், உயிர் போக வாய்ப்பிருப்பதாகவும் கூறுகிறார். புலிகளின் கால்தடத்தைத் தொடர்ந்து சென்று அதை வேட்டையாடுவது எளிதான காரியம், ஆனால், பனிப் பிரதேசங்களில் புலியின் காலடியைத் தொடர்ந்து செல்லும்போது  புலி பதுங்கியிருந்து தாக்க வாய்ப்பிருக்கிறது. 

சில நாள்களில் மார்க்கோவ் வேட்டையாடுவதற்காகக் காட்டுக்குள் செல்கிறார். ஓரிடத்தில் உறுமல் சத்தம் வரத் துப்பாக்கியைப் பாதுகாப்பாக வைத்துக்கொண்டு சத்தம் வந்த இடத்தை உற்றுப்பார்க்கிறார். சுமார் 3 மீட்டர் நீளத்தில் ஓர் ஆண் புலி வருவதை மார்க்கோவ் பார்க்கிறார். மார்க்கோவ் மட்டும் புலியைப் பார்த்திருந்தால் பிரச்னை இல்லை. இப்போது புலியும் மார்கோவை பார்த்துவிட்டது. உறுமிக் கொண்டே படர்ந்திருந்த பனிப் படலத்தைக் கிழித்துக்கொண்டு புலி மார்கோவை நோக்கிப்  பாய்ந்து வருகிறது. வேறு வழியின்றி மார்க்கோவ் புலியை நோக்கிச் சுடுகிறார். குண்டு புலியைத் தாக்கியதை உணர்ந்த மார்க்கோவ் அங்கிருந்து கிளம்பி தன்னுடைய இருப்பிடத்திற்கு வந்து விடுகிறார். புலியைப் பற்றிய பயம் அவரின் உடல் முழுமைக்கும் தொற்றிக் கொள்கிறது. 

பயத்தில் அன்றைய இரவு கழிந்தது. விடியற்காலையில் வீட்டிலிருந்து மார்க்கோவ் வெளியே வருகிறார். சில நொடிகளில் விசித்திரமான சத்தம் கேட்பதை உணர்கிற மார்க்கோவ் ஒரு வித பயத்துடனே சுற்றிப்  பார்க்கிறார். இப்போது சத்தம் அதிகமாக  வருகிறது. புலியினுடைய உறுமல் சத்தம் என்பதை உறுதி செய்கிற மார்க்கோவ் நொடியும் தாமதிக்காமல் வீட்டிற்குள் ஓடி துப்பாக்கியை எடுத்து தோட்டாக்களை  நிரப்புகிறார். மார்க்கோவ் சுட்டதில் காயம்பட்ட புலி எப்படியோ தப்பித்துவிட்டது. மார்கோவின் காலடித் தடத்தை பின்தொடர்ந்து அவரது வீட்டிற்கே வந்துவிட்டது. மார்க்கோவ் வீட்டின் ஜன்னலில் இருந்து புலியின் நடவடிக்கையைக் கவனிக்கிறார். ஐந்து நிமிடங்களுக்குப் பிறகு புலி மார்கோவ்  வீட்டிற்கு முன்னாள் நின்று உறுமுகிறது. மார்க்கோவ்  புலியின் அச்சுறுத்தலில் பயந்து போகிறார். புலி இப்போது அவரது வீட்டிற்குப் பக்கத்தில் வந்து விடுகிறது. பயத்தில் துப்பாக்கியால் பல முறை வீட்டிற்கு வெளியே சுடுகிறார். துப்பாக்கி சத்தத்தில் மிரண்டு போகிற புலி அங்கிருந்து கிளம்பிவிடுகிறது. புலி கிளம்பியதை உறுதிசெய்த மார்க்கோவ் இனியும் இங்கிருந்தால் உயிருக்கு ஆபத்து என்பதை உணர்கிற மார்க்கோவ் தனக்கு இருப்பிடம் கொடுத்த டுங்காய் வீட்டிற்குக் கிளம்புகிறார்.  

                                              புலி                                                                                               Photo : shasasnow                                                                         

மார்க்கோவ் முதல் முறை டுங்காயைச் சந்திக்கும் போதே ஒரு விஷயத்தைக் கூறியிருந்தார். 'உன்னுடைய உயிருக்கு நீயே  பொறுப்பு. ஒரு வேலை சைபீரியன்  புலியால் உனக்கு ஆபத்து நேர்ந்தால்  என்னைத் தேடி வர வேண்டாம். உன் காலடியை பின் தொடர்ந்து புலி வந்து விடும்' என்று எச்சரித்திருந்தார். ஆனால் மார்க்கோவ் பொறுமையாக இருப்பதாக இல்லை. பத்தடி தூரத்தில் புலியைப்  பார்த்ததும் பயந்து டுங்காய் இருக்கிற இடத்திற்கு வந்துவிடுகிறார்.  “இதற்கு மேல என்னால இங்க இருக்க முடியாது. காலைல வீட்டுக்கே புலி வந்துருச்சு. பத்து மீட்டர் பக்கத்துல புலிய பாத்ததும் உயிரே இல்ல இனி என்னால இங்க இருக்க முடியாது நான் போகிறேன்”  என்கிறார். ஆனால் டுங்காய் “இந்த நேரத்தில் நீ இங்கிருந்து போவது நல்லதல்ல, விடியும் வரை இருந்து விட்டு காலையில் போ” என்கிறார். பயத்தின் உச்சத்தில் இருந்த மார்கோ “இங்க இருந்த நா செத்துருவேன். நீ இங்கயே இருந்து சாவு” என்று சொல்லிவிட்டு  அவரது பேச்சைக் கேட்காமல் அங்கிருந்து கிளம்பிவிடுகிறார். 

அடுத்த நாள் காலை புலி தாக்கி ஒருவர்  இறந்து போனதாக புலி வேட்டைத் தடுப்புக் குழுவின் தலைவர் யூரிக்கு தகவல் வருகிறது. அவர் தன்னுடைய குழுவை அழைத்துக் கொண்டு இறந்தவரின் உடலைத் தேடி காட்டுக்குள்  கிளம்புகிறார்கள். காட்டில் புலியினுடைய கால் தடம் தென்படுகிறது. குழுவிலிருந்து மோப்ப நாய் கிட்டி, புலியின்  காலடி தடத்தைப் பின் தொடர்ந்து செல்கிறது. ஓரிடத்தில் புலி ஒருவரை வேட்டையாடிக் கொன்றிருப்பதற்கான தடயம் கிடைக்கிறது. ஆனால் கண்ணுக்கு எட்டிய தூரம்வரை எந்த உடல் பாகங்களும் கிடைக்கவில்லை. குழு தன்னுடைய தேடுதலைத் தீவிரமாக மேற்கொள்கிறது. காட்டின் ஓரிடத்தில் இறந்து போன ஒரு மனித உடல் கிடக்கிறது. உடலின் எல்லாப் பாகங்களும் விலங்குகளால் உண்ணப்பட்டு கால் பகுதி மட்டுமே கிடைக்கிறது. அதை மீட்டு எடுத்துக்கொண்டு குழு திரும்பிவிடுகிறது. விசாரணையில் இறந்து போனது மார்க்கோவ் என உறுதி செய்யப்படுகிறது.

கிராமத்தில் இருக்கிறவர்களை  எச்சரிக்கையாய் இருக்கும்படி யூரி சொல்கிறார். அடுத்த ஒரு வாரம் கழித்து புலியின் நடமாட்டம் இருப்பதை அதன் காலடி தடம் கொண்டு மக்கள் உறுதி செய்கிறார்கள். அந்த வாரத்தின் இறுதியில் ராணுவத்தில் பணிபுரிகிற ஆண்ட்ரு என்பவர்  விடுமுறைக்கு அவருடைய கிராமத்திற்கு வருகிறார். கிராமத்தில் எல்லோரும்  ஆண்ட்ருவை  வீட்டை விட்டு வெளியே வராதீர்கள், புலியால் ஆபத்து இருக்கிறதென எச்சரிக்கிறார்கள். ஆனால் ராணுவ வீரர் “புலியைப்  பார்த்து எனக்குப் பயமில்லை” என்று சொல்லிவிட்டு கையில் துப்பாக்கியோடு  காட்டுக்குள் நுழைகிறார். பனிப் படர்ந்தக் காட்டுக்குள் புலியை எதிர்பார்த்து முன்நோக்கி நடக்கிறார். உண்மையில் புலியை எதிர்கொள்ள மனித உடலுக்கு அதிக சக்தி தேவைப்படும். இது வரை யாரும் புலியை நேருக்கு நேர் சந்தித்து உயிரோடு திரும்பியதில்லை என்கிற மோசமான வரலாறு இப்போதும் இருக்கிறது. ஆனால் ராணுவ வீரர் எதைப் பற்றியும் கவலைப்படாமல் புலியை தேடிச் செல்கிறார். சில தூரங்கள் சென்றதும் அவர் இது வரை கேட்காத ஒரு வித்தியாசமான சத்தம் ஒன்றை கேட்கிறார். ஆனால் அந்தச் சத்தம் எங்கிருந்து வருகிறது என்பதை அவரால் யூகிக்க முடியவில்லை. சில நொடிகளில் புலி அவர் மீது பாய்ந்து விடுகிறது. அவருக்கு என்ன ஆனது என்கிற விஷயம் கிராமத்தில் யாருக்கும் தெரியாமல் இருக்கிறது. இரண்டாவது இறப்பு சம்பவமும் நடந்தேறியது. ராணுவ வீரனின் இழப்பு ஊர் மக்களை இன்னும் பீதிக்குள்ளாக்குகிறது.  உணவு, தண்ணீர் என அளவுக்கு அதிகமாக வீடுகளில் சேமித்து வைக்க ஆரம்பிக்கிறார்கள். யாரும் வெளியே வராமல் இருக்கிறார்கள்.

காண்ப்ளிக்ட் யூனிட்

ராணுவ வீரர் இறந்த தகவல் புலி வேட்டைத் தடுப்புக் குழுவுக்குக் கிடைக்கிறது. அவர்கள் வாகனத்தில் மீண்டும்  பனிக்காடுகளுக்குள் செல்கிறார்கள். குழுவில் இருக்கிற மோப்ப நாய் கிட்டி புலியின் தடயத்தைப் பின் தொடர்ந்து செல்கிறது. குழுவிலுள்ள நான்கு பேரும்  துப்பாக்கியோடு பின் தொடர்கிறார்கள். ஏற்கனவே இறந்து போன மார்கோவின் உடலை எப்படித் தேடினார்களோ அப்படியே இரண்டாவதாக இறந்து போன ராணுவ வீரரின் உடலைத் தேடுகிறார்கள். ஓரிடத்தில் மோப்ப நாய் ராணுவ வீரனின் உடையைக் கண்டுபிடித்து குரைக்க ஆரம்பிக்கிறது. மார்கோவின் உடலில் கால்களையாவது குழுவால் மீட்க முடிந்தது. ஆனால் ராணுவ வீரன் உடலில் ஒரு பாகத்தை கூட மீட்க முடியாமல் போகிறது. அவரின் உடையைத் தவிர மொத்த உடலையும் புலி சாப்பிட்டிருந்தது. மொத்த குழுவும் அதிர்ந்து போகிறார்கள். ஏனெனில் புலி மனிதர்களை உண்ண ஆரம்பித்துவிட்டால் அதையே திரும்ப செய்யும் குணமுடையது எனக் குழுவின் தலைவரான யூரி சொல்கிறார். இதற்கு முன்பு நடந்த புலித் தாக்குதல் குறித்த தகவலைக் குழு பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை. உண்மையைச் சொல்லவேண்டுமானால் புலியைக் குறைத்து மதிப்பிட்டார்கள். இன்னொரு உயிர்ப் பலி நடந்துவிடக் கூடாது உடனடியாக புலியை பிடித்தாக வேண்டுமென குழு உறுப்பினர்கள் முடிவெடுக்கிறார்கள்.

ராணுவ வீரரின் உடை மற்றும் தடயங்கள் கிடைத்த இடத்திலிருந்து புலி தேடலைத் தொடங்குகிறார்கள். புலி கடந்து போன பாதையை அதன் காலடிதடங்களைக் கொண்டு பின் தொடர்கிறார்கள். அப்போது புலியின் காலடித் தடத்தில் இருக்கிற ஒரு வித்தியாசத்தை யூரி கண்டுபிடிக்கிறார். புலி கடந்த பாதையில் புலியின் மூன்று கால்களின் தடம் மட்டுமே தென்படுகிறது. அப்படியெனில் புலியின் ஒரு காலில் காயமிருக்கலாம் என யூகிக்கிறார்கள். புலி பொதுவாக தன்னுடைய எல்லையில் சுமார் 100 கிலோ மீட்டர்கள் பயணிக்கும். ஆனால் புலியின் ஒரு கால் காயம்பட்டிருப்பதால் புலியால் அதிக தூரம் சென்றிருக்க முடியாது என்பதை உணர்ந்து எல்லோரும் எச்சரிக்கையுடன் புலியை தேடுகிறார்கள். யூரி மற்றும் குழு பின் தொடர அவர்களுக்கு முன் 40 மீட்டர் முன்னால் கிட்டி மோப்ப நாய் செல்கிறது. திடீரென முன்னாள் சென்ற மோப்ப நாய் மெல்லிய சத்தத்துடன்  பின் வாங்குகிறது. நாயின் உடல் மொழியில் பதற்றம் இருப்பதை அறிகிற குழு அதே இடத்தில் நின்று சூழ்நிலையை கவனிக்கிறார்கள். புலி அவர்களுக்கு அருகில் இருப்பதை உணர்ந்து கொள்கிறார்கள். ஒட்டு மொத்த குழுவுக்கும் இப்போது புலி குறித்த பயம் முகத்தில் தெரிய ஆரம்பிக்கிறது. யூரி புலியின் உறுமல் சத்தத்தை தெளிவாகக் கேட்கிறார். அந்த இடம் அமைதியாக இருக்கப் புலியின் சத்தம் மட்டும் தெளிவாக கேட்கிறது. பதுங்கியிருந்த புலி முன்னால் இருந்த யூரியின் மீது பாய்கிறது. கண் இமைக்கும் நேரத்தில் புலியை நோக்கி கண்ணை மூடிக் கொண்டு சுடுகிறார். சில நொடிகளில் சுதாரித்து எழுகிற யூரி தான் உயிரோடு இருப்பதை உணர்கிறார். அவருக்கு முன்னாள் 10 மீட்டர்கள் தள்ளி புலி அவரது துப்பாக்கியை வாயில் கவ்வியபடி கிடக்கிறது.

9586406._SX540__18162.jpg

புலியைப் பார்த்ததும் யூரி மட்டுமல்லாது ஒட்டு மொத்த குழுவும் புலியைச் சுட்டிருக்கிறார்கள். கீழே விழுந்த யூரியை குழு நண்பர்கள் தூக்குகிறார்கள். அவரது கழுத்தில் புலி நகம் பதிந்திருந்தது. குண்டு பாய்ந்ததால் புலி உயிருக்குப் போராடிக்கொண்டிருந்தது. புலியின் உடலை யூரி சோதனை செய்கிறார். அதன் வலது காலில் ஒரு காயம் இருப்பதைக் கண்டு பிடிக்கிறார். ஒரு காலில் காயம் இருப்பதால் புலியால் காட்டு மிருகங்களைத் தாக்கி வேட்டையாட முடியாது. அதனால் தான் எளிதாக கொல்லக்  கூடிய மனிதர்களைப் புலி தாக்கியது என்பதை உணர்கிறார்கள். புலியின் உடலிலிருந்து குண்டுகளை சம்பவ இடத்திலேயே வெளியே எடுக்கிறார்கள். குழு பயன்படுத்திய தோட்டாக்கள் தவிர்த்து மேலும் இரண்டு குண்டுகளை புலியின் உடலிலிருந்து எடுக்கிறார்கள். அதில் ஒன்று மார்க்கோவ் புலியிடமிருந்து தப்பிக்க முதல் முறை சுட்டது. பின்னர் புலியை அரசு அதிகாரிகளிடம் ஒப்படைத்துவிடுகிறார்கள். சம்பவம் நடைபெற்ற ஒரு வாரம் கழித்து ஊருக்குள் புகுந்து நாய்களை ஒரு புலி தூக்கிச் சென்றது. நிம்மதியில் இருந்த மக்கள் மீண்டும் பயத்திற்குள்ளாகிறார்கள். யூரி மற்றும் அவரது குழு மீண்டும் இன்னொரு புலியை  தேடி காட்டுக்குள் செல்கிறார்கள். இதுவரை பார்த்த ஒட்டு மொத்த காட்சியையும் அந்த ஒரு காட்சி உடைத்து நொறுக்கியது. ஒரு வயதேயான இரண்டு ஆண்  புலி குட்டிகள் இறந்து போய் பணியில் உறைந்து போய் கிடந்தன. உணவில்லாமல் இரண்டு குட்டிகளும் இருந்திருப்பது தெரியவந்தது. மனிதர்களைக் கொன்ற புலி தன்னுடைய குட்டிகளுக்கு உடல்களை உணவாகக் கொடுத்திருப்பது தெரியவந்தது.  இறந்த குட்டிகளின் உடலைச் சுமந்து கொண்டு மொத்த குழுவும் திரும்பி வந்தது. வேட்டையாட வந்தவர்களை வேட்டையாடிய புலியை, வேட்டையாடிக் கொன்றதை அடிப்படையாக வைத்து ஆவணப்படமாக எடுத்திருக்கிறார்கள். பல சர்வதேச திரைப்பட விழாக்களில் பரிசும் வென்றிருக்கிறது. இன்றைய உலகில் புலியை  கொல்வது கடினமான விஷயமல்ல, அவற்றைப் பாதுகாப்பதே கடினமாக இருக்கிறது. 

மனித இனம் எப்போதுமே தனக்கு எது வசதி என்பதில் எது சரி என்பதை மறந்துவிடுகிறது.

https://www.vikatan.com

  • தொடங்கியவர்

 

33026528_2446816465343804_78112609339504
 
 

பிரிட்டள் இளவரசர் ஹரி மற்றும் நடிகை மேகன் மெர்க்கலின் திருமணம் கோலாகலமாக நடந்து முடிந்துள்ளது.

திருமணத்துக்குப் பின்னர் 1968 ஆம் ஆண்டு வடிவமைத்து வெளியிடப்பட்ட பச்சை வண்ண ஜாகுவார் காரில் புதுமண தம்பதிகள் வரவேற்பு விழாவுக்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.

இதன் விலை 350,000 பவுண்ட் ஆகும். காரின் நம்பர் பிளேட்டில் E190518 என இவர்களது திருமண திகதி அச்சிடப்பட்டிருந்தது. உலகில் மிக அழகான மின்சார கார் ஜாகுவார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

 

புதுமண தம்பதியர் இளவரசர் ஹாரி மற்றும் மெகன் மார்கில் விண்ட்சரில் நடைபெறும் தங்களது திருமண வரவேற்பு நிகழ்வில் கலந்துகொள்வதற்காக 1960ஆம் ஆண்டு உருவாக்கப்பட்டு மறுசீரமைக்கப்பட்ட ஜாகுவார் நிறுவன காரில் செல்கின்றனர். #RoyalWedding2018

Edited by நவீனன்

  • தொடங்கியவர்

பேசும் படம்: 20.05.18

 

20CHMMHPF
20CHLRDISRALE
20CHLRDNAVEET2

Navneet Kaur (C) of India celebrates after scoring a goal during the women's field hockey match between India and England at the 2018 Gold Coast Commonwealth Games on the Gold Coast on April 8, 2018. / AFP PHOTO / Anthony WALLACE   -  AFP

20CHLRDNEVEE

GOLD COAST, AUSTRALIA - APRIL 12: Navneet Kaur of India battles for the ball with Ashlea Fey and Stephanie Kershaw of Australia during Women's Semifinal hockey match between Australia and India on day eight of the Gold Coast 2018 Commonwealth Games at Gold Coast Hockey Centre on April 12, 2018 on the Gold Coast, Australia. (Photo by Dean Mouhtaropoulos/Getty Images)   -  Getty Images

20CHLRDWANURIKAHIU

71st Cannes Film Festival - Photocall for the film "Rafiki" in competition for the category Un Certain Regard – Cannes, France, May 9, 2018. Director Wanuri Kahiu, cast members Sheila Munyiva and Samantha Mugatsia. REUTERS/Stephane Mahe   -  REUTERS

20CHMMHPF
20CHLRDISRALE

டந்த வாரம் உள்ளூர் முதல் உலகம்வரை பெண்கள் சார்ந்து பல சம்பவங்கள் நடந்துள்ளன. துயரமும் மகிழ்ச்சியும் பெருமிதமும் நிறைந்த உணர்வுகளின் கலவையான ஒளிப்படத் தொகுப்பு இது:

 

கொரியாவில் ஐந்தாவது ஆசிய சாம்பியன்ஷிப் ஹாக்கிப் போட்டி நடைபெற்றுவருகிறது. அதன் தொடக்க ஆட்டத்தில் ஜப்பான் அணியை 4-1 என்ற கோல் கணக்கில் இந்திய மகளிர் அணி் வீழ்த்தியது. இந்திய வீராங்கனை நவ்நீத் கவுர், சிறப்பான ஆட்டத்தால் வெற்றிக்கு வித்திட்டார்.

ன்பாலின உறவாளர்கள் குறித்து, கென்யாவைச் சேர்ந்த இயக்குநர் வனூரி கஹியூ இயக்கிய ‘ரஃபிகி’ திரைப்படம் கென்யாவில் தடைசெய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் மதிப்புமிக்க கான் திரைப்பட விழாவில் இப்படம் திரையிடப்பட்டு வரவேற்பைப் பெற்றது. விழாவில் இயக்குநர் வனூரி கஹியூ (இடமிருந்து முதல்) படத்தில் நடித்த நடிகைகள் ஷீலா முனிவா, சமந்தா முகாசியா ஆகியோருடன்.

பாலஸ்தீனப் பகுதிக்கு உட்பட்ட கெரீம் ஷாலோம் எல்லைப் பகுதியை இஸ்ரேல் ராணுவம் மூடியதற்கு எதிர்ப்பு தெரிவித்து பாலஸ்தீனத்தில் போராட்டம் நடத்திவருபவர்களில் இரண்டு பெண்கள்.

தாமிரபரணி ஓடும் திருநெல்வேலியும் தண்ணீர்ப் பஞ்சத்துக்குத் தப்பவில்லை. திருநெல்வேலியை அடுத்த வன்னிக்கோனேந்தல் கிராமத்தைச் சேர்ந்த பெண்கள் தண்ணீர் கேட்டு, காலிக் குடங்களுடன் ஆட்சியர் அலுவலகம் முன்பு போராட்டம் நடத்தினர்.

http://tamil.thehindu.com

  • தொடங்கியவர்

1960 – தெற்கு சிலியில் நிகழ்ந்த 9.5 அளவு நிலநடுக்கம் மற்றும் ஆழிப்பேரலையினால் ஆயிரக்கணக்கானோர் கொல்லப்பட்டனர். இதுவே இதுவரையில் பதியப்பட்ட அதிசக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஆகும்.

வரலாற்றில் இன்று….
மே 22

நிகழ்வுகள்

கிமு 334 – மகா அலெக்சாண்டர் தலைமையில் கிரேக்க இராணுவம் பேர்சியாவின் மூன்றாம் டாரியஸ் மன்னனைத் தோற்கடித்தனர்.
1809 – வியென்னாவுக்கு அருகில் நெப்போலியன் பொனபார்ட்டின் படைகள் முதற்தடவையாக தோற்கடிக்கப்பட்டன.
1834 – இலங்கையில் சட்டசபையின் முதலாவது கூட்டம் கொழும்பில் இடம்பெற்றது.
1840 – நியூ சவுத் வேல்சுக்கு பிரித்தானியக் குற்றவாளிகளை நாடுகடத்துதல் நிறுத்தப்பட்டது.
1844 – பாரசீக மதகுரு பாப் தனது பாபிசம் என்ற தனது மதக்கொள்கையை வெளியிட்டார். இவரே பஹாய் சமயத்த்தைத் தோற்றுவித்த பகாவுல்லாவின் முன்னோடி எனக் கருதப்படுகிறது.
1906 – ரைட் சகோதரர்கள் தமது பறக்கும் கருவிக்கான காப்புரிமத்தைப் பெற்றனர்.
1915 – ஐக்கிய அமெரிக்காவில் லாசன் முனை வெடித்தது.
1915 – ஸ்கொட்லாந்தில் ஐந்து தொடருந்துகள் ஒன்றோடொன்று மோதியதில் 227 பேர் கொல்லப்பட்டனர். 246 பேர் காயமடைந்தனர்.
1942 – இரண்டாம் உலகப் போர்: மெக்சிக்கோ நேச நாடுகள் தரப்பில் போரில் குதித்தது.
1958- இலங்கை இனக்கலவரம் – இலங்கையில் ஏற்பட்ட கலவரங்களில் நூற்றுக்கணக்கான தமிழர்கள் சிங்களவர்களால் படுகொலை செய்யப்பட்டனர்.
1960 – தெற்கு சிலியில் நிகழ்ந்த 9.5 அளவு நிலநடுக்கம் மற்றும் ஆழிப்பேரலையினால் ஆயிரக்கணக்கானோர் கொல்லப்பட்டனர். இதுவே இதுவரையில் பதியப்பட்ட அதிசக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஆகும்.
1967 – பெல்ஜியம் தலைநகர் பிரசல்சில் கடைத் தொகுதி ஒன்று தீப்பிடித்ததில் 323 பேர் கொல்லப்பட்டு 150 பேர் காயமடைந்தனர்.
1968 – அமெரிக்க நீர்மூழ்கிக் கப்பல் ஸ்கோர்ப்பியன் மூழ்கியதில் 99 பேர் கொல்லப்பட்டனர்.
1972 – இலங்கையில் புதிய அரசியலமைப்புச் சட்டம் அமுலுக்கு வந்து குடியரசு ஆகியது. . சிலோன், ஸ்ரீலங்கா எனப் பெயர் மாற்றம் பெற்றது. பொதுநலவாய நாடுகள் அமைப்பில் அங்கத்துவம் பெற்றது.
1990 – வடக்கு யேமன் மற்றும் தெற்கு யேமன் ஆகியன இணைந்து யேமன் குடியரசு ஆகியது.
1990 – விண்டோஸ் 3.0 வெளியிடப்பட்டது.
2004 – நெப்ராஸ்காவில் இடம்பெற்ற சூறாவளியினால் ஹலாம் நகரம் முற்றிலும் அழிந்தது.

பிறப்புகள்

1772 – ராஜாராம் மோகன் ராய்  உடன்கட்டை ஏறுதலை எதிர்த்தவர்.
1859 – சேர் ஆர்தர் கொனன் டொயில், துப்பறியும் எழுத்தாளர் (இ. 1930)
1867 – உமையாள்புரம் சுவாமிநாத ஐயர், கருநாடக இசைக் கலைஞர் (இ. 1946)
1944 – வை.கோபாலசாமி மறுமலர்ச்சி திராவிட முன்னேற்ற கழகத்தலைவர்.
1926 – தமிழ்வாணன் தமிழக எழுத்தாளர், இதழாசிரியர் (இ.1977)

இறப்புகள்

1885 – விக்டர் ஹியூகோ, பிரெஞ்சு எழுத்தாளர் (பி. 1802)

சிறப்பு நாள்

சர்வதேச பல்லுயிர் பெருக்க தினம்
யேமன் – தேசிய நாள்
இலங்கை – தேசிய வீரர்கள் நாள், குடியரசு நாள் (1972

http://metronews.lk

  • தொடங்கியவர்

பயணம்: தித்திப்பான மைசூரு!

 

 
mysorejpg
 
 

மைசூருவையும் தசராவையும் பிரித்துப் பார்க்கவோ பேசவோ முடியாது. தசரா கொண்டாட்டத்துக்குப் பெயர்போன நகரங்களில் ஒன்று, மைசூரு. விஜயதசமி தினத்தன்று ‘ஜம்போ சவாரி’ எனும் யானைகள் அணிவகுப்பும் இங்கே புகழ்பெற்றது. எங்கே திரும்பினாலும் விளக்கொளி வைபோகம், வாணவேடிக்கை, நடன நிகழ்ச்சிகள், இசை நிகழ்ச்சிகள், நாட்டுப்புறக் கலை நிகழ்ச்சிகள் என மைசூரு நகரமே தசரா கொண்டாட்டத்தின்போது விழாக்கோலம் பூண்டிருக்கும். தசரா திருவிழாவுக்கு அடுத்த நாள் மைசூருவுக்குச் சுற்றுலா செல்வதைப் போல் சிறந்த வாய்ப்பு வேறொன்றில்லை.

 

மைசூருவை அடையும்போதே, அது இயற்கை ஆட்சி செய்யும் பகுதி என்பதைப் புரிந்துகொள்ள முடிகிறது. பழமை மாறாமல், இயற்கையைத் தொந்தரவு செய்யாமல் அந்த நகரை அமைத்திருக்கிறார்கள்.

மைசூரு என்றவுடனே ‘அம்பா விலாஸ்’ அரண்மனை என்றழைக்கப்படும் ‘மைசூரு அரண்மனை’தான் எல்லோருக்கும் முதலில் நினைவுக்கு வரும். இந்தியாவில் தாஜ்மகாலுக்கு அடுத்தபடியாக, சுற்றுலாப் பயணிகளை அதிகம் ஈர்ப்பது இந்த அரண்மனைதான். வெளியிலிருந்து பார்ப்பதற்குக் கம்பீரமாகக் காட்சியளிக்கும் அரண்மனைக்குள் செய்யப்பட்டிருக்கும் உள் அலங்கார வேலைப்பாடும் ‘ஆஹா அற்புதம்!’ ரகம். தஞ்சாவூர், மைசூர் பாணி ஓவியங்கள் அரண்மனையின் உள் அலங்காரத்துக்குத் தனி அழகு சேர்க்கின்றன.

 

அரண்மனை நகரம்

அடுத்து நாங்கள் சென்றதும் இன்னொரு அரண்மனைதான். அது ஜெகன்மோகன் அரண்மனை. இங்கு விஷ்ணுவின் தசாவதாரக் காட்சியும் சிற்ப வடிவமாகச் செதுக்கப்பட்டுள்ள இரண்டு பெரிய மரக் கதவுகளும் மைசூர் மகாராஜாக்களின் ஓவியங்களும் அவர்கள் பயன்படுத்திய கலைப்பொருட்களும் அவசியம் பார்க்க வேண்டிய அம்சங்கள்.

இரண்டு அரண்மனைகளைச் சுற்றிப் பார்த்த பிறகு, வேறு ஏதாவது புதிய இடத்துக்குச் செல்லலாம் என்று நினைத்தோம். ஆனால், மூன்றாவதாகச் சென்றதும் ஓர் அரண்மனைக்குத்தான். அதன் பெயர் லலித மகால். இது சாமுண்டி மலை அடிவாரத்தில் அமைந்துள்ளது. இந்த அரண்மனை 1921-ம் ஆண்டு அப்போதைய இந்திய வைஸ்ராய்க்காக நான்காம் கிருஷ்ணராஜ உடையாரால் கட்டப்பட்டது.

 

சாமுண்டி மலை

அரண்மனை தரிசனங்களுக்குப் பிறகு மாலையில் சாமுண்டி மலையில் உள்ள சாமுண்டீஸ்வரியைத் தரிசிக்கப் புறப்பட்டோம். மைசூரு நகரிலிருந்து 13 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது சாமுண்டீஸ்வரி மலை. 3,489 அடி உயரத்திலிருக்கும் மலையிலிருந்து எந்தத் திசையில் பார்த்தாலும் மைசூரு நகரம் அழகாகத் தெரிகிறது. இந்த மலையில் உள்ள பிரம்மாண்ட நந்தியும் சாமுண்டீஸ்வரி கோயிலுக்குப் பெருமை சேர்க்கிறது.

 

நந்தகுமாரன் இல்லாத பிருந்தாவனம்

மயக்கும் மாலையை மேலும் அழகாக்க பிருந்தாவன் பூங்காவில் மையம் கொண்டோம். கிருஷ்ணராஜ சாகர் சாலை வழியாகச் செல்லும்போதே தொலைவிலேயே அணை பிரம்மாண்டமாகத் தெரிந்தது.

brindavanjpg
 

உண்மையில் பிருந்தாவன் பூங்கா கொள்ளை அழகு! கிருஷ்ணராஜ சாகர் அணையின் இடதுபுறம் அமைந்துள்ள பிருந்தாவன் பூங்காவில் திரும்பிய பக்கமெல்லாம் அழகழகான நீருற்றுகள், பசுமையான புல்வெளி, மரங்கள் என எங்கே திரும்பினாலும் ரம்மியமான சூழல். இரவில் அணை வெவ்வேறு வண்ணங்களில் ஜொலிக்கும்படி விளக்கொளி ஏற்பாடு செய்திருக்கிறார்கள். இசைக்கு ஏற்றபடி வண்ண விளக்குகள் ஒளியைப் பொழிந்து நடனமாடும், நீரூற்றுகளின் நடனக் காட்சிகளை மெய்ம்மறந்து ரசித்தோம்.

 

ரங்கப்பட்டணம் கோட்டை

அடுத்து ரங்கப்பட்டணத்தைச் சென்றடைந்தோம். திப்பு சுல்தானின் கோட்டை உள்ள இடம். ரங்கப்பட்டணத்துக்குள் நுழையும்போதே பெரிய மதில் சுவர் வரவேற்கிறது. அகழியைத் தாண்டினால் திப்புவின் கோட்டை மதில் சுவர் இருக்கிறது. ஆனால், சிதிலமடைந்து காணப்படுகிறது. அந்த வாயிலைத் தாண்டிச் சென்றால் ரங்கநாதர் கோயில் கோபுரம் வரவேற்கிறது.

ரங்கப்பட்டணத்தில் உள்ள ரங்கநாதர் கோயில் ஒன்பதாம் நூற்றாண்டில் கங்க மன்னரால் கட்டப்பட்டது. பின்னர், ஹொய்சாள மன்னர்கள், விஜயநகர மன்னர்களின் ஆட்சியில் புதுப்பிக்கப்பட்டு விரிவுபடுத்தப்பட்டிருக்கிறது.

 

திப்பு அரண்மனை

ரங்கநாத சுவாமி கோயிலிலிருந்து கூப்பிடும் தூரத்திலேயே உள்ளது திப்பு சுல்தானின் கோட்டை. வெறும் தரையும் ஆங்காங்கே தலைகாட்டும் குட்டிச் சுவர்களும்தாம் திப்புவின் கோட்டையாக எஞ்சியிருக்கின்றன. வீரமும் வரலாறும் சேர்ந்த அந்தப் பகுதியைப் பார்த்துவிட்டுக் கடந்தோம். சற்றுத் தள்ளி ஒரு மேட்டுப் பகுதி. இங்கே கர்னல் பெய்லிஸ் டன்ஜன் என்றழைக்கப்படும் திப்பு சுல்தான் உருவாக்கிய சிறை தென்பட்டது. இந்தச் சிறைச்சாலை மிகவும் நுட்பமாகக் கட்டப்பட்டுள்ளது.

தண்ணீர் வாயில்

அங்கிருந்து ஐந்து நிமிடப் பயணத்தில் காவிரி ஆற்றின் கரையில் அமைந்துள்ள தண்ணீர் வாயில் (Water Gate) தென்பட்டது. இதைத் ‘துரோகத்தின் நினைவுச் சின்னம்’ என்று அழைப்பதுண்டு என்று வழிகாட்டி சொன்னார். சூழ்ச்சி செய்து திப்பு சுல்தானை இந்த வாயில் வழியாக வந்துதான் ஆங்கிலேயர்கள் கொன்றதாக வழிகாட்டி சொன்னார்.

தண்ணீர் வாயிலைச் சிறிது நேரம் பார்த்துவிட்டுப் புறப்பட்டோம். சிறிது தூரம்தான் சென்றிருக்கும். 1799 மே 4 அன்று திப்புவின் உடல் கண்டுபிடிக்கப்பட்ட இடம் என்று அவருடைய நினைவிடத்தைக் காட்டினார்கள். ஒரு மாவீரரைத் துரோகம் வீழ்த்திய கதையை மனதில் சுமந்தபடி அங்கிருந்து மவுனமாகப் புறப்பட்டோம்.

 

tippujpg
கோடை மாளிகை

15 நிமிட பயணத்துக்குப் பின் திப்பு சுல்தானின் கோடை மாளிகைக்குச் சென்றோம். தாஜ்மகால் பாணியில் நீண்ட பாதை. பாதையின் இருபுறங்களிலும் கண்ணைக் கவரும் தோட்டம். ‘தாரியா தவுலத்’ என்றழைக்கப்படும் இந்த மாளிகை, சந்தனப் பலகைகளால் கட்டப்பட்டது. இதைப் பார்த்த பிறகு, அங்கிருந்து சில நிமிடப் பயணத்தில் கும்பஸ் என்ற இடத்தில் திப்பு சுல்தானின் சமாதிக்குச் சென்றோம். மறைந்த தன் பெற்றோருக்காக திப்பு சுல்தான் கட்டியது இது. திப்பு சுல்தான் கொல்லப்பட்ட அடுத்த நாளே, அவருடைய சடலத்தை ஆங்கிலேயர்கள் இங்கே அடக்கம் செய்தார்கள்.

உயிரோட்டமான நகரமைப்பும் சிறப்பான வரலாற்றுப் பின்னணியும் கொண்ட மைசூரு நகரத்தை கர்நாடகத்தின் ‘பண்பாட்டுத் தலைநகரம்’ என்று அழைப்பது மிகவும் பொருத்தமானது. அதே நேரம் இந்திய விடுதலைப் போரில் வகித்த பங்கு ரங்கப்பட்டணத்தைத் தனித்துக் காட்டுகிறது. அருகருகே இருந்தாலும் இரண்டு ஊர்களும் வேறுபட்ட பரிமாணங் களைக் கொண்டிருக்கின்றன. இரண்டு நகரங்களையும் அந்த மாநில அரசு சிறப்பாகப் பராமரித்துவருகிறது. மைசூருவையும் ரங்கப்பட்டணத்தையும் முழுமையாகப் பார்த்து ரசித்தது, மனதை 200 ஆண்டுகள் பின்னோக்கி இழுத்துச் சென்றிருந்தது.

http://tamil.thehindu.com

  • தொடங்கியவர்
‘பிறரது மகிழ்ச்சியை அழிக்காதீர்’
 

image_75a69127be.jpgசந்தோசமான காரியங்கள் நடைபெற்றுக்கொண்டு இருக்கும்போதுகூட, துன்பமான விடயங்களை மீட்டுப்பார்க்கும் இயல்புடன் சிலர் நடந்து கொள்கின்றார்கள். 

எப்பவோ, எங்கேயோ நடந்த விடயங்களை மறக்க முயற்சிப்பதை விடுத்து, நல்ல காரியங்கள் நடக்கும்போது நினைவுபடுத்துதல் என்றும் நிறைவைத் தரமாட்டாது. எனினும், சோகமே சுகமானது என எண்ணுவது கோணல் புத்திதான். 

உங்களைச் சுற்றி சந்தோஷங்களை மட்டுமே பரப்புவீர்களாக. மறக்க வொண்ணா நினைவுகள் பலவும் எம்மை ஆக்கிரமிக்கலாம். அவை ஒவ்வொருவர் வாழ்க்கையிலும் நிகழ்பவைதான். மனிதன் தன்னை ஆசுவாசப்படுத்தி, தொடர்ந்தும் இயங்குபவனாக இருந்தேயாக வேண்டும். 

அழுகை மூலம் மற்றவர்களைக் கோழையாக்க முனைதல் அறிவீனம். எவரையும் பலவீனப்படுத்தும் வகையில் நடப்பது, சுயநலமானதும் கூட. தன்னைப்போல மற்றவர்களும் கவலைப்படுதல் வேண்டும் எனக் கருதுதல் வக்கிரமான சிந்தனை. மகிழ்ச்சியாக வாழத் தெரியாதவர்கள், பிறரது மகிழ்ச்சியை அழிக்காமல் இருந்தாலே போதும்.

  • தொடங்கியவர்

மிக்கி மவுசின் முதலாவது பேசும் கார்ட்டூன் வெளி வந்த நாள்: மே 23- 1929

 

மிக்கி மவுசின் முதலாவது பேசும் கார்ட்டூன் கார்னிவல் கிட் 1929-ம் ஆண்டு மே மாதம் 23-ந்தேதி வெளிவந்தது.

இதே தேதியில் நிகழ்ந்த முக்கிய நிகழ்வுகள்:-

* 1805 - நெப்போலியன் பொனபார்ட் இத்தாலியின் மன்னனாக முடி சூடினான்.

* 1813 - தென்னமெரிக்க விடுதலைப் போராட்டத் தலைவர் சிமோன் பொலிவார் வெனிசுவேலாவின் முற்றுகைக்குத் தலைமை வகித்துச் சென்று விடுவிப்பாளர் எனத தன்னை அறிவித்தார்.

* 1846 - மெக்சிக்கோ ஐக்கிய அமெரிக்கா மீது போரை அறிவித்தது.

 
 
 
 
மிக்கி மவுசின் முதலாவது பேசும் கார்ட்டூன் வெளி வந்த நாள்: மே 23- 1929
 
மிக்கி மவுசின் முதலாவது பேசும் கார்ட்டூன் கார்னிவல் கிட் 1929-ம் ஆண்டு மே மாதம் 23-ந்தேதி வெளிவந்தது.

இதே தேதியில் நிகழ்ந்த முக்கிய நிகழ்வுகள்:-

* 1805 - நெப்போலியன் பொனபார்ட் இத்தாலியின் மன்னனாக முடி சூடினான்.
 
* 1813 - தென்னமெரிக்க விடுதலைப் போராட்டத் தலைவர் சிமோன் பொலிவார் வெனிசுவேலாவின் முற்றுகைக்குத் தலைமை வகித்துச் சென்று விடுவிப்பாளர் எனத தன்னை அறிவித்தார்.
 
* 1846 - மெக்சிக்கோ ஐக்கிய அமெரிக்கா மீது போரை அறிவித்தது.
 
* 1865 - வாஷிங்டன், டிசியில் அமெரிக்க உள்நாட்டுப் போர் முடிவுற்றமை கொண்டாடப்பட்டது.
* 1915 - முதலாம் உலகப் போர்: இத்தாலி ஆஸ்திரியா-ஹங்கேரி மீது போரை அறிவித்தது.
 
* 1929 - மிக்கி மவுசின் முதலாவது பேசும் கார்ட்டூன் "கார்னிவல் கிட்" வெளி வந்தது.

* 1949 - ஜெர்மன் கூட்டாட்சி குடியரசு அமைக்கப்பட்டது.
 
* 1951 - திபெத்தின் விடுதலைக்கான 17 அம்ச உடன்பாட்டில் திபெத்தியர்கள் கட்டாயமாகக் கையெழுத்திட வைக்கப்பட்டார்கள்.
 
* 1958 - ஐக்கிய அமெரிக்காவின் முதலாவது செய்மதி எக்ஸ்புளோரர் 1 தனது பூமியுடனான தொடர்பை இழந்தது.
 
* 1998 - புனித வெள்ளி உடன்பாட்டிற்கு ஆதரவாக வட அயர்லாந்து மக்களின் 71 விழுக்காட்டினர் வாக்களித்தனர்.
 
 
 

https://www.maalaimalar.com

Edited by நவீனன்

  • தொடங்கியவர்

உங்கள் பலம் என்ன... உங்களுக்குத் தெரியுமா? - வாழ்க்கைப் பாடம் சொல்லும் கதை! #MotivationStory

 
 

கதை

ரு வேலையைச் செய்து முடிக்க ஒருபோதும் குழந்தைக்கு உதவாதீர்கள். ஏனென்றால், `நம்மால் முடியும்’ என்று அந்தக் குழந்தை நினைத்துவிடக்கூடும்.’ - தெளிவாகச் சொல்கிறார் இத்தாலியைச் சேர்ந்த கல்வியாளரும் மருத்துவருமான மரியா மான்டிஸ்ஸோரி (Maria Montessori). குழந்தைக்கு ஏன் உதவி செய்யக் கூடாது? ஏனென்றால், ஒரு வேலையை முழுமையாக, பிறரின் உதவியில்லாமல் செய்ய அந்தக் குழந்தை கற்றுக்கொள்ளாமலேயே போய்விடும். குழந்தைக்குச் சரி... வளர்ந்த பெரியவர்களுக்கு? அவர்களுக்கும் ஒரு பொன்மொழி உண்டு. அது வேறு ரகம்! `ஒரு வேலையைச் செய்து முடிக்க உங்களுடைய எல்லா ஆற்றலையும் பயன்படுத்துங்கள்’ என்கிறது ஒரு பிசினஸ் மேனேஜ்மென்ட் வாசகம். ஒருவர், தன்னுடைய பலமென்ன, தன்னிடம் என்னென்ன ஆற்றல் இருக்கின்றன என்பதைத் தெரிந்துவைத்திருந்தால்தான் இது சாத்தியம். இந்த உண்மையை அழகாக எடுத்துச் சொல்கிறது ஒரு கதை.

 

அது ஒரு காடு. ஒரு தந்தையும் அவரது மகனும் நடந்து போய்க்கொண்டிருந்தார்கள். மகனுக்கு 12 வயதிருக்கலாம். பள்ளி விடுமுறைக் காலம். அதோடு அவன் ஒரு சாகச விரும்பி என்பதால், காட்டுக்குள் ஒரு ரவுண்டு போய் வரலாம் என்று அப்பா அவனை அழைத்து வந்திருந்தார். மரங்கள், பூச்சிகள், விலங்குகள், பறவைகள்... எனப் பார்க்கும் ஒவ்வொன்றைப் பற்றியும் அவன் கேள்வி கேட்டான். அப்பா, பொறுமையாக பதில் சொல்லிக்கொண்டு வந்தார். சில கேள்விகளுக்குப் பதில் தெரியாதபோது, `தெரியாது’ என்று உண்மையை ஒப்புக்கொண்டார். காடு அந்தச் சிறுவனுக்கு அதிசயமாக இருந்தது. சதா வீட்டிலும் பள்ளியிலும் மைதானத்திலும் நகர்ந்துகொண்டிருந்த வாழ்க்கை, இந்தக் காட்டுக்கு முன்னால் ஒன்றுமே இல்லை என்று தோன்றியது. இதைச் சொன்னபோது, தந்தை சிரித்தார். `நாம நகரத்துலதானே வாழவேண்டியிருக்கு கண்ணு!’ என்று சொன்னார்.

இருவரும் நடந்தார்கள். வழியில் ஒரு பெரிய மரக்கட்டை கிடந்தது. அப்பா, மகனைப் பார்த்தார். அவனும் அவரைப் பார்த்தான். ``ஏம்ப்பா... இந்த மரக்கட்டை போற வர்றவங்களுக்கு இடைஞ்சல்தானே?’’ என்று கேட்டான்.

மரக்கட்டை

``நடந்து போறவங்களுக்கு பிரச்னையில்லை. இதைச் சுத்திக்கிட்டு போயிடலாம். வாகனங்கள் ஏதாவது வந்தால்தான் கஷ்டம்.’’

``வாகனங்கள் இந்தப் பக்கம் வருமா என்ன?’’

``வருமே... வனத்துறையைச் சேர்ந்தவங்களோட ஜீப், டிரக்கெல்லாம் வரும்.’’

``சரிப்பா. அப்படின்னா, நான் வேணும்னா இந்த மரக்கட்டையை நகர்த்திப் போடட்டுமா?’’

``ம்... முயற்சி செய்யேன்.’’

``என்னால இந்தக் கட்டையை நகர்த்திட முடியும்னு நீங்க நினைக்கிறீங்களாப்பா?’’

``உன்னுடைய எல்லா ஆற்றலையும் பயன்படுத்தினா உன்னால முடியும்.’’

சிறுவன் தன்னுடைய தோள் பையைக் கீழே வைத்தான். அந்தக் கட்டையைக் கையைக் கொடுத்து மெள்ள அசைத்துப் பார்த்தான். பிறகு தன் பலத்தையெல்லாம் திரட்டி அதை நகர்த்த முயன்றான். அதை அசைக்கவே அவனால் முடியவில்லை.

ஏமாற்றத்தோடு அவன் சொன்னான்... ``அப்பா நீங்க சொன்னது தப்பு. என்னால இதை அசைக்கவே முடியலை.’’

``மறுபடியும் முயற்சி செஞ்சு பாரேன்...’’ என்று பதிலுக்குச் சொன்னார் தந்தை.

மறுபடியும் அந்தச் சிறுவன் மரக்கட்டையை நகர்த்தப் பார்த்தான். எவ்வளவு முயன்றும் அவனால் அதை நகர்த்த முடியவில்லை.``என்னால முடியலைப்பா’’ என்று பலவீனமான குரலில் சொன்னான்.

தந்தை - மகன்

அப்பா கடைசியாகச் சொன்னார்... ``மகனே நான் உன்கிட்ட என்ன சொன்னேன்? `உன்னுடைய எல்லா ஆற்றலையும் பயன்படுத்து’னு சொன்னேன் இல்லையா? நீ அதைச் செய்யலை. நீ என்னை உதவிக்குக் கூப்பிடவே இல்லை.’’

குறிப்பு: நமக்குத் தேவைப்படும்போது பிறரின் உதவியையோ, ஆதரவையோ கோருவது பலவீனத்தின் அடையாளமல்ல. ஞானத்தின் அடையாளம். ஒருவரையொருவர் சார்ந்து வாழும் இந்தக் கூட்டு வாழ்க்கையில் மிகப் பெரிய ஆற்றலைப் பெறுவதற்கான அழைப்பு அது. அது எந்த வேலையாகவும் இருக்கட்டும்... அதை உங்களால் மட்டும் முடிக்க முடியவில்லையா... உங்களுடைய எல்லா ஆற்றலையும் பயன்படுத்துங்கள்... திரும்பிப் பார்த்து, சத்தமாக ஆதரவு, உதவி கேளுங்கள்.

https://www.vikatan.com

  • தொடங்கியவர்

சீனர்களின் காதலர் தினத்துக்கும் நிலவுக்குச் செல்லும் `குய்ஹியாவோ' செயற்கைக்கோளுக்கும் என்ன சம்பந்தம்

 
 

விண்வெளி விஞ்ஞானம் இன்று அபரிமிதமாக வளர்ச்சியடைந்திருக்கிறது. உலகின் பல நாடுகளும் செயற்கைக்கோள்களை நிலவுக்கும் செவ்வாய்க்கும் அனுப்பி, சோதனைகளை மேற்கொண்டு வருகின்றன. மனிதன் நிலவில் காலடி பதித்த 1969-ம் ஆண்டிலிருந்து இன்றுவரை பல நாடுகளும் விண்வெளிக்குச் செயற்கைக்கோள்களை அனுப்பி ஆராய்ச்சிகளை மேற்கொள்வது வாடிக்கையாகிவிட்டது. மேலும், தகவல் தொடர்பு வசதியைப் பெறுவதற்காகவும் பல செயற்கைக்கோள்கள் விண்வெளியில் நிலைநிறுத்தப்பட்டுள்ளன. இந்த நிலையில் நிலவின் மர்மமான பக்கங்களை ஆய்வுசெய்வதற்காக, சீனா ஒரு செயற்கைக்கோளை நிலவுக்கு அனுப்பியிருக்கிறது. அந்தச் செயற்கைக்கோளின் பெயர் 'குய்ஹியாவோ' (Queqiao) .இதற்கு `வால் காக்கைப் பாலம்' (Magpie Bridge ) என்று அர்த்தம். சீனா அனுப்பியிருக்கும் செயற்கைக்கோளைவிட சுவாரஸ்யமானது அதற்குச் சூட்டப்பட்டிருக்கும் பெயரான `குய்ஹியாவோ.’

குய்ஹியாவோ

 

இந்தப் பெயரின் பின்னணியில் ஒரு தேவதையின் காதல் கதை சொல்லப்படுகிறது.

அந்தக் கதை...

சீனப் புராணக் கதைகளின்படி, சொர்க்கத்தில் வாழ்ந்துகொண்டிருந்த ஸின்யூ என்ற பெண் தேவதை ஒருமுறை பூமிக்கு வருகிறாள். பூமிக்கு வந்தவள் மாடு மேய்க்கும் இளைஞன் ஒருவனைப் பார்க்கிறாள். அவன் பெயர் நியூலங். அவனைக் கண்டதும், தான் ஒரு தேவதை என்பதையும் மறந்து அவனிடம் காதல்கொள்கிறாள். அவனைத் திருமணம் செய்துகொண்டு வாழத் தொடங்குகிறாள். இருவரின் அன்புமயமான இல்லற வாழ்க்கையின் பயனாக இரண்டு குழந்தைகளும் பிறக்கிறார்கள்.

காலம் இப்படி இனிமையாகச் சென்றுகொண்டிருக்கும் நிலையில், சொர்க்கத்தில் இருந்த ஸின்யூவின் தாய், பூமிக்குச் சென்ற தன் மகள் பூமியிலேயே வசித்து வருவதைக் கண்டு கவலைகொள்கிறாள். மேலும், பூமியில் வசிக்கும் தன் மகள், `மரணமில்லாப் பெருவாழ்வு' என்னும் தெய்விகத் தன்மையைச் சிறிது சிறிதாக இழந்துவருகிறாளே என்றும் வருத்தப்படுகிறாள். உடனே தன்னுடைய தெய்விக சக்தியால் தன் மகளை மறுபடியும் சொர்க்கத்துக்கே அழைத்துக்கொள்கிறாள். அப்படிச் செல்லும்போது நியூலங் வளர்த்து வரும் ஓர் எருதுவுக்கு, சில ஆற்றல்களைத் தந்துவிட்டுச் செல்கிறாள்.

குய்ஹியாவோ

திடீரென்று மாயமாக மறைந்துபோன தன்னுடைய காதல் மனைவி ஸின்யூவை நியூலங்கும் அவனது இரண்டு குழந்தைகளும் பல இடங்களிலும் தேடி அலைகிறார்கள். எங்கு தேடியும் அவனால் தன் காதல் மனைவியைக் கண்டுபிடிக்க முடியவில்லை. அழுது புலம்புகிறான்.

அப்போது அவன் வளர்த்து வந்த எருது அவனிடம் வந்து, ``உன் மனைவி சாதாரணப் பெண் கிடையாது. அவள் சொர்க்கத்தில் வசிக்கும் தேவதை. என்னைக் கொன்று என் தோலை ஆடையாக அணிந்துகொள். அப்போது உன்னால் சொர்க்கத்துக்குப் பறந்து செல்ல முடியும். உனக்காக உன் காதலி அங்கே காத்துக்கொண்டிருக்கிறாள். அவளும் உன்னை நினைத்து அங்கே வருந்திக்கொண்டிருக்கிறாள்’’ என்று சொல்கிறது.

குய்ஹியாவோ

Image Courtesy : Google Doodle

தான் வளர்த்த எருதைக் கொன்று, அதன் தோலை ஆடையாக அணிந்துகொண்டு தன் இரு குழந்தைகளையும் அழைத்துக்கொண்டு சொர்க்கத்துக்குப் பறந்து செல்கிறான் நியூலங். சொர்க்கத்தில் தன் காதலியைப் பார்த்ததும், அவளை நோக்கி ஆசையுடன் ஓடுகிறான். ஸின்யூவும் நியூலங்கைக் கண்டதும் ஓடி வருகிறாள். ஸின்யூ மீண்டும் பூமிக்குச் சென்றுவிட்டால், அவளது தெய்விகத் தன்மை அழிந்துவிடும் என்பதை அறிந்த சொர்க்கத்தின் கடவுள், தன் கூந்தலை முடித்திருந்த குத்தூசியை எடுத்து வானில் ஒரு கோடு கிழிக்கிறாள். உடனே அகலமான ஓர் ஆறு உருவாகிறது. அது, நியூலங்கையும் ஸின்யூவையும் பிரித்துவிடுகிறது. ஒரு கரையில் ஸின்யூவும், மறு கரையில் நியூலங்கும் நின்றுகொண்டு, ஒருவரையொருவர் பார்த்தபடி அழுகிறார்கள்.

சொர்க்கத்திலிருக்கும் வால் காக்கைப் பறவைகள், காதல் தம்பதியின் அழுகுரல் கேட்டு வருத்தம் கொள்கின்றன. அவர்களைச் சேர்த்து வைப்பதற்காக அந்தப் பறவைகள் அனைத்தும் ஒன்று கூடி ஆற்றைக் கடக்க ஒரு பாலம் அமைக்கின்றன. வால் காக்கைப் பறவைகள் ஏற்படுத்திய பாலத்தில் காதலர்கள் இருவரும் கூடி மகிழ்ச்சியுடன் சேர்ந்துகொள்கிறாள். தன் மகளின் துயரத்தைப் பார்த்த சொர்க்கத்தின் கடவுள், வருடத்தில் ஒருநாள் மட்டும் காதலர்கள் இருவரும் சந்திக்க அனுமதிக்கிறாள். அந்த ஒருநாள் சீன நாட்காட்டியின் படி ஏழாவது மாதத்தின் ஏழாவது நாள்.

குய்ஹியாவோ

Image Courtesy : Google Doodle

ஒவ்வொரு வருடமும் இந்த நாளில் ஸின்யூவின் தாய் அமைத்த ஆற்றைக் கடக்க, வால் காக்கைப் பறவைகள் அனைத்தும் ஒன்று கூடி பாலம் அமைக்கும். அந்தப் பாலத்தின் வழியே ஆற்றைக் கடந்து காதலர்கள் இருவரும் ஒன்று சேர்ந்து மகிழ்வார்கள். மற்ற நாள்களில் இருவரும் ஆற்றின் இரு கரைகளில் அமர்ந்து ஒருவரையொருவர் பார்த்தபடி காலத்தைக் கழித்துக்கொண்டிருப்பார்கள்.

காதலர்கள் இணையும் நாளைத்தான் சீனர்கள், `குய்ஹியாவோ' என்ற பெயரில் காதலர் தினமாகக் கொண்டாடுகிறார்கள்.

வால் காக்கைப் பறவைகள் காதலர்கள் இருவரும் இணையப் பாலம் அமைத்ததைப்போலவே, நிலவுக்கு அனுப்பப்படும் செயற்கைக்கோளும், நிலவுக்கும் பூமிக்கும் ஒரு பாலமாக இருந்து, நிலவின் மறுபக்க மர்மங்களை வெளிப்படுத்தும் என்று சீனர்கள் எதிர்பார்க்கிறார்கள். அதனால்தான் தங்களது செயற்கைக்கோளுக்கு `குய்ஹியாவோ' என்று பெயரிட்டிருக்கிறார்கள்.

வால் காக்கைகள், காதலர்கள் இருவரும் ஒன்றுகூட ஏற்படுத்திய பாலத்தைப் போலவே குய்ஹியாவோ செயற்கைக்கோள் நிலவின் மர்மத்தை வெளிப்படுத்தி, பூமிக்குப் பாலமாக அமையட்டும்!

https://www.vikatan.com/

  • தொடங்கியவர்

1929 – மிக்கி மவுசின் முதலாவது பேசும் கார்ட்டூன் “கார்னிவல் கிட்” வெளி வந்தது.

வரலாற்றில் இன்று….
மே 23

நிகழ்வுகள்

1430 – ஜோன் ஒஃப் ஆர்க் பிரான்சில் பேர்கண்டியரினால் கைது செய்யப்பட்டாள்.
1568 – நெதர்லாந்து ஸ்பெயினிடம் இருந்து விடுதலையை அறிவித்தது.
1805 – நெப்போலியன் பொனபார்ட் இத்தாலியின் மன்னனாக முடி சூடினான்.
1813 – தென்னமெரிக்க விடுதலைப் போராட்டத் தலைவர் சிமோன் பொலிவார் வெனிசுவேலாவின் முற்றுகைக்குத் தலைமை வகித்துச் சென்று “விடுவிப்பாளர்” எனத தன்னை அறிவித்தார்.
1846 – மெக்சிக்கோ ஐக்கிய அமெரிக்கா மீது போரை அறிவித்தது.
1865 – வாஷிங்டன், டிசியில் அமெரிக்க உள்நாட்டுப் போர் முடிவுற்றமை கொண்டாடப்பட்டது.
1915 – முதலாம் உலகப் போர்: இத்தாலி ஆஸ்திரியா-ஹங்கேரி மீது போரை அறிவித்தது.
1929 – மிக்கி மவுசின் முதலாவது பேசும் கார்ட்டூன் “கார்னிவல் கிட்” வெளி வந்தது.
1949 – ஜெர்மன் கூட்டாட்சி குடியரசு அமைக்கப்பட்டது.
1951 – திபெத்தின் விடுதலைக்கான 17 அம்ச உடன்பாட்டில் திபெத்தியர்கள் கட்டாயமாகக் கைச்சாத்திட வைக்கப்பட்டார்கள்.
1958 – ஐக்கிய அமெரிக்காவின் முதலாவது செய்மதி எக்ஸ்புளோரர் 1 தனது பூமியுடனான தொடர்பை இழந்தது.
1998 – புனித வெள்ளி உடன்பாட்டிற்கு ஆதரவாக வட அயர்லாந்து மக்களின் 71 விழுக்காட்டினர் வாக்களித்தனர்.

பிறப்புகள்

1707 – கரோலஸ் லின்னேயஸ், தற்கால வாழ்சூழலியலின் முன்னோடி (இ. 1778)
1920 – காயத்திரி தேவி, ஜெய்ப்பூர் மகாராணி (இ. 2009)
1922 – பாலா தம்பு, இலங்கை இடதுசாரித் தொழிற்சங்கவாதி (இ. 2014)
1951 – அனத்தோலி கார்ப்பொவ், ரஷ்ய சதுரங்க வீரர்.

இறப்புகள்

1906 – ஹென்ரிக் இப்சன், நவீன நாடக இலக்கியத்தின் தந்தை (பி. 1828)
1997 – அல்பிரட் ஹேர்ஷ்லி, நோபல் பரிசு பெற்றவர் (பி. 1908)
1981 – உடுமலை நாராயணகவி தமிழ்த்திரைப்பட பாடலாசிரியர் (பி. 1899)

http://metronews.lk

  • தொடங்கியவர்

இந்த 5 பயங்கரமான விளைவுகள்தாம் காலநிலை மாற்றம் நிகழ்வதற்கான நிஜ சாட்சிகள்!

 
 

திடீரென பெயர் தெரியாத மர்ம நோய்கள் மனிதர்களிடம் பரவுவதும் பல்வேறு பலிகளுக்குப் பின் அந்த நோய்களுக்கான மருந்துகள் கண்டுபிடிக்கப்படுவதும் மனிதகுலம் காப்பாற்றப்படுவதும் ஒவ்வொரு காலகட்டத்திலும் நிகழ்ந்திருக்கிறது. ஆனால் இந்த மர்ம நோய்களையெல்லாம் விட ஒரு சொல்தான் உலக நாடுகள் பலவற்றுக்குமான அச்சமாக இருக்கிறது. அதுதான் `காலநிலை மாற்றம்’.

சர்வதேச அரசியலைத் தீர்மானிக்கும் சக்தியாகக் காலநிலை மாற்றம் மாறியிருப்பதற்கு அதன் விளைவுகளே சாட்சி. இயற்கையினைச் சமநிலைப்படுத்த ஒவ்வொரு நாடும் ஒவ்வொரு முறையில் முயன்று வருகிறது. இவையெல்லாம் ஒருபுறமிருக்கக் காலநிலை மாற்றத்தால் பூமிக்கோ மனிதர்களுக்கோ ஒன்றும் இல்லை என்ற பரப்புரைகளும் நிகழ்ந்து வருகின்றன. காலநிலை மாற்றம் நிகழ்வதற்கான ஆதாரங்களைப் பார்க்க சூப்பர் கம்ப்யூட்டரெல்லாம் தேவையில்லை. இந்தக் கட்டுரையில் இருக்கும் ஐந்து விளைவுகள் போதும். இதை அடிக்கடி செய்திகளிலோ, ஆராய்ச்சி முடிவுகளிலோ பார்க்கலாம். இந்த ஐந்து விளைவுகளும்தாம் காலநிலை மாற்றத்தின் ஆதாரங்கள். 

 

கார்பன் டை ஆக்ஸைடு வெளியீடு 

காற்று மாசுபாட்டுக்கு முழுமுதற் காரணம் எனப் பள்ளி வகுப்புகளில் படித்திருப்போம். காற்று மாசுபாடு மட்டுமல்ல பூமியைச் சூடாக்கும் பசுமை இல்ல வாயுக்களின் ஆதிமூலமும் இந்த CO2 தான். பூமியில் ஏற்படும் பசுமை இல்ல வாயு வெளியேற்றத்தில் 70 சதவிகிதத்துக்கும் மேலே கார்பன் டை ஆக்ஸைடினால்தான் நிகழ்கிறது. வளிமண்டலத்தில் உள்ள கார்பன் டை ஆக்ஸைடின் அளவு பார்ட்ஸ் பெர் மில்லியன் (parts per million (ppm)) என்ற அளவால் அளக்கப்படுகிறது. கடந்த 8,00,000 ஆண்டுகளில் எப்போதும் இல்லாத அளவுக்குப் பூமியின் கார்பன் டை ஆக்ஸைடு அளவு தற்போது உயர்ந்துள்ளது. பல நூற்றாண்டுகளாக 400ppm குள் இருந்த அளவு 2013ல் அசால்ட்டாக 400ஐத் தாண்டியது. கடந்த ஐந்து ஆண்டுக்குள் அதன் அளவு மடமடவென உயர்ந்து தற்போது 412.03ppmல் நிற்கிறது. 400ஐத் தாண்டும்போதே எச்சரிக்கை மணி அடித்த அறிவியலாளர்கள் தற்போது அபாயச் சங்கை ஊதுகின்றனர். கார்பன் டை ஆக்ஸைடின் அளவைக் கட்டுக்குள் கொண்டு வர வேண்டியது மிக முக்கியமான விசயம். பரவலாக மரபுசார் ஆற்றலைப் பயன்படுத்தப்படுவதே கார்பன் டை ஆக்ஸைடின் அதீத வெளியீட்டுக் காரணம். மரபுசார் ஆற்றலைப் படிப்படியாகக் குறைத்து சூரிய ஆற்றல், காற்றாலை போன்றவற்றைப் பயன்படுத்துவதன் மூலம்தான் CO2 அளவைக் குறைக்க முடியும். இல்லையென்றால் புவி வெப்பமயமாதலின் விளைவுகளைச் சந்திக்க வேண்டி வரும்

காலநிலை மாற்றம்


வறட்சி 

வரலாற்றில் வறட்சிகள் இல்லாமல் இல்லை. சோளக்கஞ்சியைச் சண்டைப் போட்டு வாங்கிக் குடித்த வறட்சிக் கதைகளை நம் தாத்தா பாட்டிகளிடம் இன்றும் கேட்கலாம். இவையெல்லாம் அரிதாக ஏற்படும் வறட்சிகள். இயற்கையில் இவற்றுக்கு இடம் உண்டு. ஆனால் இப்போது ஏற்படும் வறட்சிகளெல்லாம் செயற்கையாய் நிகழ்பவை. வறட்சியின் அளவு D0 விலிருந்து D44 வரை பிரிக்கப்படுகிறது. D33யைத் தாண்டினாலே அந்த வறட்சியின் தாக்கம் பயங்கரமானது. மழை பொய்த்துப் போவது இப்போதெல்லாம் வாடிக்கையாகி விட்டது. இதற்கான காரணங்களுக்குள்தாம் காலநிலை மாற்றம் ஒளிந்துள்ளது. ஆறுகளையும் நிலத்தடி நீரையும் கபளீகரம் செய்துவிட்டு தண்ணீர் இல்லை, தண்ணீர் இல்லை என இயற்கையைக் கூற முடியாது. இதற்கு கண்முன்னே உதாரணமாகத் தென்னாப்பிரிக்காவின் கேப்டவுனில் நடப்பவை இருக்கிறது. ஒருசொட்டுத் தண்ணீர் கூட இல்லாத நகரகமாக கேப்டவுன் மாறிக்கொண்டிருக்கிறது. அவ்வளவு ஏன் இந்தியாவிலும் தமிழ்நாட்டிலும் வறட்சியால் தற்கொலை செய்துகொள்ளும் விவசாயிகளைச் செய்தித்தாள்களில் படித்திருப்போம். இவையெல்லாம் செயற்கையாக ஏற்படுத்தப்பட்ட வறட்சியே. காலநிலை மாற்றத்தைக் கருத்தில் கொண்டு நீர்நிலைகளையும் நிலத்தடி நீரையும் கவனமாகக் கையாள்வது வறட்சியைத் தடுக்கலாம். 


உலகளாவிய சராசரி கடல் மட்டம் ( Global Mean Sea Level (GMSL)) 

காலநிலை மாற்றத்தின் நேரடி விளைவாக இவற்றைக் காணலாம். புவிவெப்பமயமாதலால் துருவப் பகுதி பனிக்கட்டிகள் உருகி கடலின் நீர்மட்டம் வெகுவாக உயர்ந்து வருகிறது. கடல்நீர்மட்ட உயர்வு மில்லி மீட்டர் அளவில் அளக்கப்படுகிறது. வருடத்துக்கு 3.4மிமீ என்ற அளவில் கடல்நீர் மட்டம் உயர்கிறது. கடந்த நூறு ஆண்டுகளில் இந்த அளவுக்கு நீர்மட்டம் உயரவில்லை. 20 ம் நூற்றாண்டை விட இந்த அளவு பெரியது. கடல் நீர்மட்ட உயர்வால் பல்வேறு சிறிய தீவு நாடுகள் கடலுக்குள் மூழ்கும் நிலையில் இருக்கின்றன. சில தீவு நாடுகளில் கடல் பெருமளவு உட்புகுந்துவிட்டது. 2015 பாரிஸ் பருவநிலை அறிக்கையில் கூட இந்த விளைவுகளைக் கருத்தில் கொண்டு நாம் விரைவாகச் செயலாற்ற வேண்டும் என்று கூறியுள்ளனர். முதலில் சொன்ன மாதிரியே புவி வெப்பமயமாதலைக் கட்டுப்படுத்துவதன் மூலம்தான் இதனையும் கட்டுப்படுத்த முடியும். 

காலநிலை மாற்றம்

கடல் மேற்பரப்பு வெப்பநிலை (Sea Surface Temperature (SST)) 

கடல் நீர்மட்டம் உயர்வதைப் போன்றே இந்த விளைவும் புவி வெப்பமயமாதலால்தான் நிகழ்கிறது. கடல்நீரானது வெப்பத்தை உறிஞ்சக் கூடியது. புவிப்பரப்பின் வெப்பம் உயரும்பொழுது கடல்நீரின் மேற்பரப்பின் வெப்பநிலையும் அதிகரிக்கிறது. 2016ல் தான் இந்தவெப்பநிலை அதிகபட்சமாக 0.75 டிகிரி செல்சியஸ் அளவுக்குப் பதிவாகியுள்ளது. கடந்த நூறு ஆண்டுகளில் இதுதான் அதிகமான வெப்பநிலை. இந்த அளவு அதிகரிக்கவும் வாய்ப்பு இருக்கிறது. கடலின் மேற்பரப்பு வெப்பநிலை அதிகரிப்பால் கடல் வாழ் உயிரினங்களும் தாவரங்களும் பாதிக்கப்படும். கடற்சூழலியலில் பெரிய மாற்றங்களே நிகழலாம் என்கின்றனர். பசுமை இல்ல வாயுக்களைக் கட்டுப்படுத்துவதுதான் இதன் தீர்வாகவும் இருக்க முடியும். 


துருவப் பகுதிகளின் பரப்பு குறைதல் 

துருவப்பகுதிகளின் பனிக்கட்டிகள் வெறுமனே கடல்பகுதிக்கானது மட்டுமல்ல. அவை சூரிய ஒளியைப் பிரதிபலித்துக் குளிர்விக்கும் பணியைச் செய்கின்றன. பூமியின் துருவப்பகுதிகளின் குளிர்த்தன்மை துருவப் பனிக்கட்டிகளின் மூலம்தான் சமநிலையில் வைக்கப்படுகிறது. பூமியைக் குளிர்விப்பதிலும் இதற்கான பங்கு அதிகம். கடல்நீரைக் குளிர்விப்பதும் இவையே. காலநிலை மாற்றத்தின் விளைவில் இவற்றின் அளவுகள் சுருங்கி வருகின்றன. துருவப் பனியின் பரப்பு குறைந்தால் புவி வெப்பமயமாதலின் விளைவுகள் இன்னும் பயங்கரமாக இருக்கும். கடந்த ஐந்து வருடங்களில் 150 லிருந்து 250 கியூபிக் கிலோமீட்டர் வரை குறைந்துள்ளது. 

காலநிலை மாற்றம்

 


மிகவும் கூர்ந்து கவனித்தால் மேலே இருக்கும் ஐந்து ஆதாரங்களும் ஒன்றோடொன்று தொடர்புடையவை. ஒன்றின் விளைவு மற்றொன்றைத் தாக்கும். இப்படித்தான் காலநிலை மாற்றமும் நிகழ்ந்து வருகிறது. நாம் ஒரு பிரச்னைக்கு மட்டும் தீர்வு கண்டுபிடிக்க முயன்றால் பயனில்லை. காலநிலை மாற்றத்தை முற்றிலும் போக்கும் செயல்பாடுகளை முன்னெடுக்க வேண்டும். கொள்கை அளவில் உலக நாடுகள் இணைந்து முன்னெடுக்க வேண்டிய செயல்பாடு இது. அரசுக்கான அழுத்தங்களைக் கொடுப்பதில் தனிநபர்களின் பங்கு இருக்கும். கண்முன்னே நிற்கும் பெரிய பிரச்னையை மனிதகுலம் இணைந்துதான் எதிர்கொள்ள வேண்டும். 

https://www.vikatan.com

  • தொடங்கியவர்
‘தேற்றுதல் பண்பு, ஆறுதலை ஏற்படுத்த வல்லது’
 

image_0bb85b20fd.jpgமரணத்தை எவருக்குத் தான் பிடிக்கும்? தற்கொலை முயற்சியில் ஈடுபட்டு, இறக்கும் தறுவாயில், தனது தவறை உணராமல் இருக்க முடியாது.  

ஒருவரது இறப்பால் உலகம் உறங்கிப் போகாது.

தான் இறந்தால், தன்னைச் சுற்றி இருப்பவர்கள், சதா சோகத்தில் இருக்கட்டும் எனும், வன்மம் நிறைந்த கீழ்த்தரமான போக்கே, தற்கொலை முயற்சிக்கான காரணங்களில் ஒன்றாக இருக்கலாம்.  

ஆனால், தீராத நோயின் அவஸ்தை தாங்க முடியாமல், சோக நிகழ்வுகள், வாழ வழியில்லாத ஏழ்மை நிலைகள் எல்லாமே, இந்த உலகுக்கான வடுவாகும் வண்ணம், இந்த உலகை விட்டுப் பிரியச் சிலர் விரும்பித் தற்கொலையை ஏற்படுத்திக்கொள்கின்றனர்.  

எங்களில் பலர், சோகத்தில் உள்ளவர்களைக் கண்டும் காணாமல் இருக்கின்றார்கள்.

தேற்றுதல் பண்பு, மற்றவர்களுக்கு ஆறுதலை ஏற்படுத்த வல்லது. பொருள், பண்டம் கொடுக்க இயலாதவிடத்து, அன்புடன் நல்ல வார்த்தைகளைச் சொன்னால் என்ன?  

எவர் மனத்தையும் உறுத்துவது போல பேசுதல் ஆகாது.

அநேகமான துர்மரணங்கள், மனதை நோகடிக்கும் வார்த்தைகளாலேயே ஏற்படுகின்றன. அன்பான குடும்ப உறுப்பினர்களை நிந்திப்பதைத் தவிர்க்க, பாசத்துடன் பழகினால், பல பிரச்சினைகள் கருவிலேயே எரிந்துவிடும்.

  • தொடங்கியவர்

கோலாகலமான காதல் எக்ஸ்பிரஸ்!

 

 
estern%20railway%203

ஈஸ்டர்ன் எக்ஸ்பிரஸ் - இன்று துருக்கி இளைஞர்கள் அதிகம் உச்சரிக்கும் பெயர் இதுதான். ஒன்றரை ஆண்டுக்கு முன்புவரை பயணிகள் யாரும் இல்லாமல் காத்துவாங்கிக்கொண்டிருந்த ரயில் இது. ஆனால், இன்றோ இந்த ரயிலில் பயணிக்க வேண்டுமென்றால், பல மாதங்களுக்கு முன்பே முன்பதிவு செய்திருந்தால்தான் முடியும். ஒன்றரை ஆண்டுகளில் தலைக்கீழ் மாற்றம். அப்படி என்ன நடந்தது? சமூக வலைத்தளங்கள்தாம் காரணம். அவற்றின் உபயத்தால், ‘காதல் எக்ஸ்பிரஸ்’ என்ற பெயரில் இந்த ரயில் தூள்கிளப்பிக்கொண்டிருக்கிறது.

     
 

 

காற்று வாங்கிய ரயில்

துருக்கி தலைநகர் அங்காராவிலிருந்து அந்த நாட்டின் கிழக்குப் பகுதியில் உள்ள அர்ஸ் என்ற இடத்துக்கு சென்றுவருகிறது இந்த ஈஸ்டர்ன் ரயில். 1,365 கிலோ மீட்டர் தூரம் பயணிக்கும் இந்த ரயிலில் பயணிக்க இந்திய மதிப்பில் சுமார் 750 ரூபாய் (11 டாலர்) இருந்தால் போதும். ஆனால், இந்தத் தூரத்தைக் கடக்க 24 மணி நேரம் பயணிக்க வேண்டும். ஆனால், இதே தூரத்தை விமானத்தில் வெறும் 2 மணி நேரத்தில் கடந்துவிடலாம் என்பதால், இந்த ரயிலில் கூட்டம் குறைய ஆரம்பித்து, 2016-ம் ஆண்டு இறுதியில் முழுவதும் காத்து வாங்க ஆரம்பித்தது.

ஆனால், கடந்த ஆண்டு ஓர் இளைஞர் பட்டாளம், விமானப் பயணத்தைப் புறக்கணித்துவிட்டு இந்த ரயிலில் ஏறியது. ரயிலில் ஒரு நாள் முழுவதும் கொண்டாட்டமாக அவர்கள் சென்றனர். ஊர் போய் சேர்ந்த பிறகு ரயிலில் தாங்கள் அடித்த லூட்டிகளையும் கும்மாளத்தையும் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டனர். ரயிலில் ஒவ்வொரு நிமிடமும் அவர்கள் பெற்ற உற்சாகத்தை புட்டுப்புட்டு வைத்தனர். ஈஸ்டர்ன் ரயில் பயணத்தில் கிடைத்த அனுபவத்தையும் மனநிம்மதியையும் நண்பர்களுடன் பகிர்ந்துகொண்டனர்.

estern%20railway%201
 

 

அலைமோதும் கூட்டம்

இதை ஆச்சரியத்துடன் பார்த்த நெட்டிசன்கள், அவற்றை சமூக ஊடங்களில் பரப்பினர். அதனால், ஈஸ்டர்ன் எக்ஸ்பிரஸுக்கு திடீர் மவுசு கூடியது. இதனால் ரயிலில் பயணிக்க கூட்டம் கொஞ்சம் கொஞ்சமாக அதிகரித்தது. குறிப்பாக நீண்ட தூரம் பேசியபடி செல்ல விரும்பும் காதலர்கள், இந்த ரயிலை தேர்வு செய்ய ஆரம்பித்தனர். இதனால் காதலர்களின் எண்ணிக்கையும் கூடியது. விளைவு, ஒன்றரை ஆண்டுகளுக்கு முன்பு 5 பெட்டிகளுடன் காற்றுவாங்கி ஓடிக் கொண்டிருந்த இந்த ரயில், இன்று 11 பெட்டிகளுடன் ஹவுஸ்புல்லாக ஓடிக்கொண்டிருக்கிறது.

இந்த எக்ஸ்பிரஸ் ரயிலை இளைஞர்களும் காதலர்களும் விரும்ப இன்னொரு காரணமும் இருக்கிறது. இந்த ரயில் வழித்தடத்தில் இயற்கைக் காட்சிகள் கொட்டிக்கிடக்கின்றன. எனவே, இயற்கைக் காட்சிகளை ரசித்தபடி அரட்டை அடித்தபடி செல்ல அவர்கள் விரும்புகிறார்கள். அது மட்டுமல்ல, ரயிலில் ஒதுக்கப்படும் பெட்டியைப் பயணிகள் எப்படி வேண்டுமானாலும் அலங்கரித்துக்கொள்ளவும் அனுமதி வழங்கப்படுகிறது. இளைஞர்களும் காதலர்களும் இந்த ரயிலை விரும்ப இதுவும் ஒரு காரணம்.

estern%20railway%202
 

 

ரயில் மீது ஈர்ப்பு

துருக்கியில் உள்ள பல இளைஞர்கள் தங்கள் காதலை வெளிப்படுத்த இந்த ரயிலைதான் தேர்வு செய்கிறார்கள். காதலன் அல்லது காதலியை அழைத்துக்கொண்டு ஈஸ்டர்ன் எக்ஸ்பிரஸில் பயணத்தைத் தொடங்கும் அவர்கள், ரயில் பெட்டிக்கு உள்ளேயே டின்னருக்கு ஏற்பாடு செய்து கொள்கிறார்கள். பின்னர் மெழுகுவர்த்தி ஏற்றி, அந்த ஒளியில் இயற்கை அழகை ரசித்தபடியே, காதலையும் வெளிப்படுத்துகிறார்கள்.

வயல்கள், அடர்ந்த காடுகள், குன்றுகள், மலைகள், ஆறுகள், பனி படர்ந்த பிரதேசம் என ஈஸ்டர்ன் எக்ஸ்பிரஸ் ரயில் இயற்கை அழகுக்கு வெகு அருகிலேயே பயணிப்பதால், 24 மணி நேரப் பயணம் இளைஞர்களுக்கு புதுவேகத்தையும் உற்சாகத்தையும் கரைபுரளச் செய்கிறது. இதுபோன்ற தருணங்களில் பயணிக்கும்போது தயக்கமின்றிக் காதலைச் சொல்வதும் அவர்களுக்கு எளிதாகிவிடுகிறது. ஈஸ்டர்ன் எக்ஸ்பிரஸ் மீதான இளைஞர்களின் ஈர்ப்புக்கு முக்கிய காரணம் இதுதான்.

estern%20railway%204
 

 

சமூக ஊடக உதவி

காதலர்கள் மட்டுமல்ல, நண்பர்கள், தோழிகளுடன் மறக்க முடியாத பயணத்தை மேற்கொள்ளவும் ஈஸ்டர்ன் எக்ஸ்பிரஸ் ரயிலைத் துருக்கி இளைஞர்கள் நாடுகிறார்கள். அங்காராவில் பயணத்தைத் தொடங்குவதற்கு முன்பாக ரயிலின் முன்பு செல்ஃபி எடுத்துக்கொள்வதில் தொடங்கி 24 மணி நேரம் நீடிக்கும் இந்த நீண்ட பயணத்தில், ஆட்டம், பாட்டம் எனக் கேளிக்கைச் செயல்களிலும் ஈடுபட்டு அவற்றை ஒளிப்படங்களாக எடுத்துக்கொள்கிறார்கள். சமூக வலைத்தளங்களில் உடனுக்குடன் பகிர்ந்துகொள்கிறார்கள்.

சமூக வலைத்தளங்கள் மூலமாக இதுபோன்ற மாற்றம் ஏற்பட்டிருப்பதை நம்புவது கொஞ்சம் கஷ்டம்தான். ஆனால், அதை உண்மை என நிரூபிக்க வைத்திருக்கிறது துருக்கியின் ஈஸ்டர்ன் எக்ஸ்பிரஸ் ரயில்.

http://tamil.thehindu.com

Edited by நவீனன்

  • தொடங்கியவர்

கார்ல் மார்க்ஸின் ஒரே ஒரு கையெழுத்துப் பிரதி ரூ.3.58 கோடிக்கு ஏலம்

 

 
das

கார்ல் மார்க்ஸின் தாஸ் கேப்பிடல் நூல். இதுதற்போது ஜெர்மனியில் உள்ள டிரியர் நகரில் கார்ல் மார்க் நினைவு இல்ல அருங்காட்சியகத்தில் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளது. 2-வது படம் பொருளாதார மேதை கார்ல் மார்க்ஸ்

ஜெர்மனிய பொருளாதார அறிஞரும், கம்யூனிஸவாதியுமான கார்ல் மார்க்ஸின் ஒரே ஒரு கையெழுத்துப் பிரதி சீனாவின் தலைநகர் பெய்ஜிங்கில் நடந்த ஏலத்தில் ரூ.3.58 கோடிக்கு விற்பனையானது.

கார்ல் மார்க்ஸின் கையால் எழுதப்பட்ட ‘டாஸ் கேப்பிடல்’ என்ற நூலின் ஒற்றைப் பக்கம், அடிப்படை விலையைக் காட்டிலும், 10 மடங்கு விலைக்கு ஏலம் கேட்கப்பட்டு விற்பனையானது.

 

பெய்ஜிங் நகரைச்சேர்ந்த பெங் லன் எனும் வர்த்தகரிடம் கார்ல் மார்க்ஸின் இந்த கையெழுத்துப் பிரதி இருந்தது.

கடந்த 1850 செப்டம்பர் முதல் 1853ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் வரை லண்டனில் மூலதனம் குறித்து கார்ல் மார்க்ஸ் 1,250 பக்கங்களுக்கு மேல் எழுதினார். அதில் நூலின் ஒருபக்கம்தான் சமீபத்தில் ஏலம் விடப்பட்டுள்ளது. பொருளாதாரத்தில் கார்ல் மார்க்ஸின் சிந்தனைகள் குறித்து அறிந்து கொள்ள உலகின் தலைசிறந்த நூலாக இன்றளவும் ‘டாஸ் கேப்பிட்டல்’ கருதப்படுகிறது.

கார்ல் மார்க்ஸின் 200-வது பிறந்ததினம் இந்த மாதம் வருகிறது, இதையொட்டி இந்த ஏலம் நடந்துள்ளது. இதே ஏலத்தில், கார்ல் மார்க்ஸின் நண்பரும் பொருளாதார அறிஞருமான பிரட்ரிக் ஏங்கெல்ஸ் கையால் எழுதிய கம்யூனிஸ்ட் மேனிபெஸ்ட்டோ என்ற நூலின் ஒரு பக்கம் ஏலம்விடப்பட்டது. இது ரூ.1.78 கோடிக்கு ஏலம் போனது.

http://tamil.thehindu.com

  • தொடங்கியவர்

இறுதி மூச்சை நிறுத்தி – மில்லியன் கணக்கான – இதயங்களை கவர்ந்த இளம்பெண்!!

பதிவேற்றிய காலம்: May 24, 2018
 
 
 

தனது ஊக்கமளிக்கும் பதிவுகளால் இன்ஸ்டாகிராமில் மில்லியன் கணக்கான நண்பர்களை கொண்டுள்ள 24 வயது மொடல் அழகி வயிற்று புற்றுநோயால் இறந்துள்ளமை சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

நாரா அல்மிடா (24) என்ற மொடல் அழகிக்கு அதிகமான ரசிகர்கள் இருக்கிறார்கள். குறிப்பாக இவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், பதிவிடும் நேர்மறையான பொன்மொழிகள் மற்றும் உலக நடப்புகள் அதிகளவில் அனைவராலும் கவரப்பட்டது.

இதன் காரணத்தினாலேயே இவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தை 4.5 மில்லியன் பேர் பின்பற்றுகிறார்கள்.

 

இந்த நிலையில் கடந்த 2017 ஆம் ஆண்டு வயிற்று புற்றநோயால் பாதிக்கப்பட்ட இவர், அதற்கான சிகிச்சை எடுத்துவந்தார். புற்றுநோயின் தாக்கம் அதிகரித்ததால்மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார்.

மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த போது கூட, தனது உடல்நிலை குறித்து அவ்வப்போது சமூகவலைதளத்தில் பதிவிட்டு வந்தார், இவர் குணமடைய வேண்டும் என்பதற்காக இவரது ரசிகர்கள் பிராத்தனை செய்தனர்.

ஆனால், சிகிச்சை பலனின்றி மில்லியன் கணக்கான மக்களை கவர்ந்த இந்த இளம்பெண் நேற்று தனது இறுதிமூச்சை நிறுத்திக் கொண்டார்.

இந்தத் தகவலை இவரது காதலன் சமூகவலைதளத்தில் பதிவிட்டுள்ளார், வாழ்க்கையோடு போராடி வந்த நாரா உயிரிழந்துவிட்டார். அவளின் இறப்பு எனது இதயத்தில் ஒரு வெற்றிடத்தை ஏற்படுத்திவிட்டது. அவள் இறந்தாலும் எனது இதயத்தில் என்றும் வாழ்ந்துகொண்டுதான் இருக்கிறாள். எனக்கு முன்மாதிரியாக இருந்த அவள் இனி நிரந்தரமாக ஒய்வெடுக்க சென்றுவிட்டாள் எனக் கூறியுள்ளார்.

இவரின் இந்தப் பதிவை 2 மில்லியன் பேர் பார்த்துள்ளனர் எனக் கூறப்படுகிறது.

13692621_151156001956048_12767979103879913413514_140161309722184_44465640981240213501859_143577826047199_191191644456917

http://newuthayan.com

Edited by நவீனன்

  • தொடங்கியவர்

மைக்கேல் ஜேக்சன் நடன அசைவின் ரகசியம் வெளியானது

 
 
 

பாப் இசைக் கலைஞர் மைக்கேல் ஜேக்சன் தனது ஸ்மூத் கிரிமினல் (Smooth Criminal) இசைத் தொகுப்பில் எப்படி கீழே விழாமல் நேர்கோட்டில் சாய்ந்து நடனமாடினார் என்பதற்கு நரம்பியல் நிபுணர்கள் விளக்கம் அளித்துள்ளனர்.

மைக்கேல் ஜேக்சன்படத்தின் காப்புரிமைGETTY IMAGES

1987இல் வெளியான அந்த இசைத் தொகுப்பில் கீழே விழாமல், 45 டிகிரி கோணத்தில் தனது உடலை நேர்கோட்டில் சாய்த்து நடனமாடினார் மைக்கேல் ஜேக்சன்.

பலரும் அவரைப் பார்த்து செய்ய முயன்ற இந்த மிகவும் பிரபலமான நடன அசைவின் பின்னணியில் அதற்கென பிரத்தேயேகமாக வடிவமைக்கப்பட்ட காலணிகள் மற்றும் ஜேக்சனின் உடல் வலிமை இருந்ததை அவர்கள் கண்டறிந்துள்ளனர்.

சண்டிகரில் உள்ள முதுநிலை மருத்துவ கல்வி மற்றும் ஆராய்ச்சி மையத்தைச் சேர்ந்த மஞ்சுல் திரிபாதி மற்றும் குழுவினர் இது குறித்த ஆய்வுக் கட்டுரை ஒன்றை ஜர்னல் ஆஃப் நியூரோசர்ஜரி எனும் சஞ்சிகையில் வெளியிட்டுள்ளனர்.

அதில், "நன்கு பயிற்சி பெற்ற நடனக்கலைஞர்களால் தங்கள் உடலை நேர்கோட்டில் 25 முதல் 30 டிகிரி கோணம் வரை சாய்க்க முடியும். மைக்கேல் ஜேக்சன், புவி ஈர்ப்பு விசை கீழே இழுக்காமல் தனது உடலை 45 டிகிரி சாய்த்துள்ளார்," என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

இது எப்படி சாத்தியமானது?

ஜேக்சன் அந்த நடன அசைவை செய்யும்போது, நேராக இருக்கும் முதுகின் தண்டுவடத்தை விடவும், கணுக்கால்களில்தான் அதிகம் அழுத்தம் உண்டாகும்.

Michael Jacksonபடத்தின் காப்புரிமைMANJUL TRIPATHI

எனவே மைக்கேல் ஜேக்சன் போன்ற திறமையும் வலிமையையும் உள்ளவர்களால் கூட ஒரு குறிப்பிட்ட அளவுதான் முன்னோக்கி நேராக சாய முடியும் என்கிறார் உதவிப் பேராசிரியர் மஞ்சுல்.

எனினும், அவரால் இன்னும் கூடுதலாக சாய முடிந்ததன் காரணம் அதற்கென சிறப்பாக வடிவமைக்கப்பட்ட காலணிகளே என்கிறார் அவர்.

அவரது காலனிகளின் கீழ் பகுதியில் 'V' வடிவத்தில் ஒரு விரிசல் உண்டாக்கப்பட்டிருந்தது. அதில் தடுப்பாக கீழ் நோக்கி ஒரு ஆணி சொருகப்பட்டிருக்கும். மைக்கேல் ஜேக்சன் முன்னோக்கி சரியும் போது, அந்த ஆணி தரையை நோக்கி கீழே சென்று, தளத்துடன் இறுக்கப் பற்றிக்கொள்ளும். அது மைக்கேல் ஜேக்சனுக்கு கூடுதல் வலுவை கொடுத்துள்ளது.

Michael Jacksonபடத்தின் காப்புரிமைMANJUL TRIPATHI

காப்புரிமை பெறப்பட்ட இந்த காலனி கண்டுபிடிக்கப்படும் முன்பு, தனது இடுப்பைச் சுற்றி கச்சை ஒன்றைக் கட்டிக்கொண்டு ஒரு கயிற்றின் உதவியுடன் மைக்கேல் அந்த நடன அசைவை ஆடியுள்ளார்.

இந்த காலணிக்கான உந்துதலாக அமெரிக்க விண்வெளி வீரர்கள் பயன்படுத்திய காலணிகள் இருந்துள்ளன.

காலணிகள் உதவி இருந்தாலும் அந்த நடன அசைவுக்கு அதீத உடல் வலிமை தேவை.

"இதில் கணுக்காலில் காயம் உண்டாவதற்கான வாய்ப்புகள் அதிகம். இதைச் செய்வது அவ்வளவு ஒன்றும் எளிதல்ல," என்கிறார் மருத்துவர் மஞ்சுல்.

https://www.bbc.com

  • தொடங்கியவர்

”அலகைக் கூர்தீட்டும், 70 ஆண்டு வாழும், அமிலம் துப்பும்!” - பிணந்தின்னிக் கழுகுகள் பற்றிய கதைகள்

 
 

ழுகுகளைத் தமிழில் ‘பாறு’ என்கிற பெயரில் அழைப்பார்கள். ஆனால் வழக்கு மொழியில் பிணந்தின்னிக் கழுகுகள் என்றே அழைக்கப்படுகின்றன. உலகில் 23 வகையான பிணந்தின்னிக் கழுகுகள் இருக்கின்றன. அவற்றில் ஒன்பது வகையான கழுகுகள் இந்தியாவில் இருக்கின்றன. அதில் நான்கு வகையான கழுகுகள் தென் இந்தியாவில் இருக்கின்றன. குறிப்பாக நீலகிரி காடுகள், கேரளா முத்தங்கா வனப்பகுதி, தெலுங்கானா மாவட்டத்தில் இருக்கிற வனப்பகுதி ஆகிய இடங்களில் காணப்படுகின்றன. ஆண் கழுகு  தன்னுடைய இறுதிக் காலம் வரை ஒரு பெண் கழுகோடு மட்டும்தான் இணை சேரும். நான்கு வயதிலிருந்து 37 வயது வரை கழுகுகள் உயிர்வாழ்கின்றன. வருடத்திற்கு ஒரு முட்டையிடும் கழுகுகள் அவற்றை 50 நாட்களிலிருந்து 60 நாட்கள் வரை அடைகாத்து குஞ்சு பொரிக்கின்றன.

பிணந்தின்னிக் கழுகு

 

பொதுவாக மனிதன் உண்கிற  உணவுகளைச் செரிமானம் செய்வதற்கு ஹைட்ரோ குளோரிக் அமிலம் பயன்படுகிறது. அதைப் போல கழுகுகளுக்குச் செரிமானம் ஆவதற்குக் கந்தக அமிலம் பயன்படுகிறது. இறந்து பல நாள்கள் ஆகியும் அழுகிய நிலையில் இருக்கிற விலங்குகளின் உடல் பாகங்களை செரிமானம் செய்வதற்கு கந்தக அமிலம் பயன்படுகிறது. பல நாள்களாக அழுகிய நிலையில் இருக்கிற உடல்களில் இருக்கிற பாக்டீரியா மற்றும் வைரஸ்களால் நோய் தொற்று  ஏற்படாமலும் கந்தக அமிலம் பாதுகாக்கிறது. எதிரிகளைத் தாக்கவும் தன்னுடைய முட்டைகளைப் பாதுகாக்கவும் ஆபத்து நேரங்களில் உடலிலிருக்கிற கந்தக அமிலத்தைக் கழுகுகள் உமிழ்கின்றன. கந்தக அமிலம் எந்த ஓர் உயிரினத்தின் மீது பட்டாலும் கருகிவிடும்.

கழுகுகள் காடுகளுக்குள் புலிகளைப் பின் தொடர்ந்து செல்லும் பழக்கமுடையவை. ஏனெனில் புலிகள் வேட்டையாடிய இரையை இரண்டு நாள்களுக்குப் பாதுகாத்து உண்ணும். அப்படி வேட்டையாடப்பட்ட விலங்குகளின் உடலைக் கழுகுகள் உண்ணும். கழுகுகள் ஓரிடத்தில் தொடர்ந்து வட்டமடித்தால் ஒன்று அங்கு விலங்கின் இறந்த உடல் இருக்கும்; அல்லது புலி இருக்கும். கழுகுகளுக்கு உடலில் வியர்வைச் சுரப்பிகள் இருப்பதில்லை.  அதனால் உடலிலுள்ள அழுக்குகளை தன்னுடைய கழிவின் மூலமாக அவை சுத்தப்படுத்தி கொள்கின்றன. அழுகிய நிலையில் இருக்கும் உடலை உண்பதற்கு முன்பு தன்னுடைய கால்களின் மீது தன்னுடைய உடல் கழிவுகளை கொட்டிப் பாதுகாக்கும். ஒவ்வொரு முறையும் இறந்த உடலை உணவாக எடுத்துக் கொண்ட பின்பு குளித்த பிறகே மீண்டும் தன்னுடைய கூட்டுக்குத் திரும்பும்.

தி பார்சி டவர் ஆப் சைலென்ஸ்

கழுகுகள் குறித்த செய்திகளில் நம்பகத்தன்மை இல்லாத ஒரு விஷயம் இணையம் முழுவதும் சுற்றி வருகிறது.

கழுகு தன்னுடைய 40 வயது வரை நல்ல ஆரோக்கியமாக வேட்டையாடி உயிர் வாழும். அப்படியான காலகட்டத்தில் கூர்மையாக இருக்கும் கழுகின் அலகானது கீழ் நோக்கி வளைந்திருக்கும். அந்த அலகைப் பயன்படுத்தி கழுகால் இரையை வேட்டையாட முடியாது. எளிதில் இரைகள் கழுகிடமிருந்து தப்பித்து விடும்.  கழுகுகளின் இறகுகள் அதற்குப் பெரிய சுமையாக மாறிவிடும். வேட்டையாட முடியாமல் இருக்கிற கழுகுகள் உடல் மெலிந்து பசியில் இறந்துவிட வாய்ப்பிருக்கிறது. கழுகுகள் தொடர்ந்து வாழ வேண்டுமானால், அதன் வாழ்க்கையைத் தீர்மானிக்கிற இரண்டு விஷயங்கள் கழுகுக்கு முன் இருக்கின்றன. இரண்டு வழிகளில் ஒன்று, அவை உணவில்லாமல் பட்டினியால் இறந்து விட வேண்டும்; அல்லது வேறு வழியில் தன்னுடைய அலகை மீண்டும் பழைய நிலைக்குக் கூர்மையாகக் கொண்டு வர வேண்டும். அப்படியான நேரங்களில் கழுகு மலை உச்சிக்குச் சென்று தன்னுடைய அலகைப் பாறைகளில் குத்தியே உடைத்தாக வேண்டும். ஆனால் அந்த நிகழ்வை சாதாரணமாக செய்துவிட முடியாது. அலகு உடைந்தால் மீண்டும் வளரக் குறைந்தபட்சம் ஐந்து மாதங்கள் வரை ஆகும். அது வரை வேட்டையாட முடியாது. உணவிற்காக மிகப் பெரிய போராட்டத்தைச் சந்தித்தாக வேண்டும்.  ஐந்து மாதங்கள் கழித்து உடைந்த அலகு மீண்டும் பழைய நிலைக்கு வளர்ந்து வரும். அப்போது மீண்டும் கழுகு வேட்டையாடச் செல்லும். இந்த நிகழ்வு நடந்த பிறகு கழுகு மேலும் முப்பது ஆண்டுகள் வரை அதாவது 70 ஆண்டுகள் வரை வாழும்

ஆனால், உண்மையில் கழுகின் அதிகபட்ச வாழ்நாளே 37 ஆண்டுகள்தான். மேற்கூறிய தகவல்கள் எதுவும் இப்போது வரை நிரூபிக்கப்படவில்லை.

டவர் ஆப் சைலென்ஸ் கழுகு

இந்தியாவில் பார்சி இன மக்கள் இப்போது வரை யாராவது இறந்துவிட்டால் அவர்களை மலையின் உச்சியில் கொண்டு  சென்று வைத்து விடுவார்கள். அதற்காக பிரத்யேகமாக “டவர் ஆப் சைலன்ஸ்” என்கிற பெயரில் பெரிய கிணறு போன்ற பகுதியை அமைத்திருக்கிறார்கள். இறுதிச் சடங்குகள் முடிந்த பிறகு இறந்த உடலிலிருந்து உடைகள் அப்புறப்படுத்தப்பட்டு  பிணந்திண்ணி கழுகுகளுக்கு இரையாக அப்படியே விட்டு விடுகிறார்கள். கழுகுகள் கூட்டமாக வந்து உடல்களைத் தின்று விட்டுச் செல்கின்றன. பல ஆண்டுகளாக பார்சி இன மக்கள் இந்த முறையை பின்பற்றி வருகிறார்கள். இப்போது பார்சி இனமக்கள்  ஓரளவிற்கு நாகரிக வாழ்க்கைக்குத் திரும்பிவிட்டாலும் அவ்வப்போது சில இறுதிச் சடங்குகள் இப்படித்தான் நடக்கின்றன.

கழுகுகளின் எண்ணிக்கை குறைவுக்கு மிக முக்கிய காரணியாக இருப்பது டைகுளோஃபினாக் என்கிற வலிநிவாரணி மருந்து. வீட்டில் வளர்க்கிற கால்நடைகளான ஆடு மற்றும் மாடு போன்ற விலங்குகளுக்கு வலி நிவாரணியாக டைகுளோஃபினாக் மருத்துவரால் கொடுக்கப்படுகிறது. அப்படிக் கொடுக்கப்படுகின்ற மருந்துகள் மாட்டின் உடலில் எச்சமாகத் தேங்கி விடுகின்றன. சிகிச்சை பலனளிக்காமல் இறந்து போகிற மாடுகளை வனப்பகுதியில் விட்டு விட்டு வந்து விடுகிறார்கள். அப்படி இறந்து போகிற உடலில் டைகுளோஃபினாக் வலி நிவாரணி மருந்து தேங்கியே இருக்கும். மருந்து இருக்கிற உடலைக் கழுகுகள் உண்பதால் அவற்றின் சிறுநீரகங்கள் செயல் இழந்து இறந்து விடுகின்றன. இப்படித்தான் தமிழக வனப்பகுதிகளில் வசித்த  செந்தலைப் பாறு (Red headed Vulture), மஞ்சள் திருடிக் கழுகு (Egyptian Vulture), வெண்முதுகுப் பாறு (White-backed Vulture), நீண்ட அலகுப் பாறு (Long billed Vulture ) ஆகிய கழுகுகளின் இனங்கள் கொஞ்சம் கொஞ்சமாக அழிந்து போயின. பிணந்தின்னிக் கழுகுகள் இப்போது அழிந்து வரும் உயிரினங்களின் பட்டியலில் இருக்கிறது. பல இடங்களில் சாதாரணமாக தென்பட்ட  பிணந்தின்னிக் கழுகுகள்  இப்போது அதிகம் தென்படுவதில்லை.

இன்னும் எத்தனை நாட்களுக்கு அவை தென்படுமென்பதுதான் இப்போதைய கேள்வியே!

https://www.vikatan.com

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.