Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இளமை புதுமை பல்சுவை

Featured Replies

  • தொடங்கியவர்

தமிழ் மொழி செம்மொழியாக அறிவிக்கப்பட்ட நாள்: ஜூன் 6- 2004

 
அ-அ+

தமிழ் மொழி தமிழர்களினதும், தமிழ் பேசும் பலரதும் தாய்மொழி ஆகும். தமிழ் திராவிட மொழிக் குடும்பத்தின் முதன்மையான மொழிகளில் ஒன்றும் செம்மொழியும் ஆகும். இந்தியா, இலங்கை, மலேசியா, சிங்கப்பூர் ஆகிய நாடுகளில் அதிக அளவிலும், ஐக்கிய அரபு அமீரகம், தென்னாப்பிரிக்கா, மொரிசியசு, பிஜி, ரீயூனியன், டிரினிடாட் போன்ற நாடுகளில் சிறிய அளவிலும் தமிழ் பேசப்படுகிறது. 1997-ம் ஆண்டுப் புள்ளி விவரப்படி உலகம் முழுவதிலும் 8 கோடி (80

 
 
 
 
தமிழ் மொழி செம்மொழியாக அறிவிக்கப்பட்ட நாள்: ஜூன் 6- 2004
 
தமிழ் மொழி தமிழர்களினதும், தமிழ் பேசும் பலரதும் தாய்மொழி ஆகும். தமிழ் திராவிட மொழிக் குடும்பத்தின் முதன்மையான மொழிகளில் ஒன்றும் செம்மொழியும் ஆகும்.

இந்தியா, இலங்கை, மலேசியா, சிங்கப்பூர் ஆகிய நாடுகளில் அதிக அளவிலும், ஐக்கிய அரபு அமீரகம், தென்னாப்பிரிக்கா, மொரிசியசு, பிஜி, ரீயூனியன், டிரினிடாட் போன்ற நாடுகளில் சிறிய அளவிலும் தமிழ் பேசப்படுகிறது.

1997-ம் ஆண்டுப் புள்ளி விவரப்படி உலகம் முழுவதிலும் 8 கோடி (80 மில்லியன்) மக்களால் பேசப்படும் தமிழ், ஒரு மொழியைத் தாய்மொழியாகக் கொண்டு பேசும் மக்களின் எண்ணிக்கை அடிப்படையில் பதினெட்டாவது இடத்தில் உள்ளது.

இரண்டாயிரத்து ஐந்நூறு ஆண்டுகளுக்கும் மேல் பழைமை வாய்ந்த இலக்கிய மரபைக் கொண்டுள்ள தமிழ் மொழி, தற்போது வழக்கில் இருக்கும் ஒரு சில செம்மொழிகளில் ஒன்றாகும்.

திராவிட மொழிக்குடும்பத்தின் பொதுக்குணத்தினால் ஒலி மற்றும் சொல்லமைப்புகளில் சிறிய மாற்றங்களே ஏற்பட்டுள்ளதாலும் மேலும் கவனமாகப் பழைய அமைப்புக்களைக் காக்கும் மரபினாலும் பழங்கால இலக்கிய நடை கூட மக்களால் புரிந்து கொள்ளும் நிலையில் உள்ளது.

எடுத்துக்காட்டாக, பள்ளிக் குழந்தைகள் சிறுவயதில் கற்கும் அகர வரிசையான ஆத்திசூடி 1,000 ஆண்டுகளுக்கு முன்னர் இயற்றப்பட்டது. திருக்குறள் ஏறத்தாழ 2,000 ஆண்டுகளுக்கு முன் இயற்றப்பட்டது.

https://www.maalaimalar.com

  • Replies 11.3k
  • Views 1.5m
  • Created
  • Last Reply
  • தொடங்கியவர்

 

இது ஒரு ஆறு என்றால் நீங்கள் நம்புவீர்களா?

  • தொடங்கியவர்

நெதர்லாந்து தலைமை அமைச்சர் மார்க் ரூடே நாடாளுமன்றத்தில் தன்னையறியாமல் கையிலிருந்து தேநீரை கீழே சிந்தினார். அதனைச் சுத்திகரிப்பாளர்கள் சுத்தப்படுத்த முன்வந்த போதும், அவர் அதனை மறுத்து தானே சுத்தப்படுத்துவதாக முன்வந்து சுத்தம் செய்தார்.

இந்தச் செயபார்ப்போரை வியப்பில் ஆழ்த்தியதோடு, அனைவரினது பாராட்டையும் அவர் பெற்றது.

 

  • தொடங்கியவர்

அழகான குளியலறை பட்டியலில் இடம்பிடித்த இலங்கை!!

l
Movenpick-Colombo-Bathroom-750x430.jpg
 
 
 

உலகின் மிக அழகான இயற்கை காட்சிகளை கொண்ட குளியலறைகள் சிலவற்றை பிரிட்டன் ஊடகமொன்று பட்டியலிட்டுள்ளது.

குளியறை அமைந்துள்ள இடத்தை சுற்றி சிறப்பான இயற்கை காட்சிகள் அமைந்திப்பதனை கொண்டே இந்த பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.

சுற்றுலா பயணிகள் தங்களுக்கு விருப்பமான முறையில் தங்கள் பயணிக்க வேண்டிய இடங்களைத் தெரிவு செய்வதற்கு இந்த பட்டியல் உதவியாக இருக்கும் எனக் கருதப்படுகின்றது.

 

அதற்கமைய இந்த பட்டியலில் இலங்கை குளியலறை ஒன்றும் இடம்பிடித்துள்ளது.

அண்மையில் கொழும்பில் திறக்கப்பட்ட 5 நட்சத்திர ஹோட்டலின் குளியறையே இந்த பட்டியலில் இடம்பிடித்துள்ளது.

24 மாடிகளை கொண்ட இந்த ஹோட்டலில் மொத்தமாக 219 அறைகள் உள்ளன.

ஒவ்வொரு அறைக்கும் தனியான ஒரு குளியலறை உள்ளது. அந்த குளியலறையில் இயற்கை அழகு நிறைந்த காட்சிகள் அமைந்துள்ளன. இதனாலேயே இந்த பட்டியலில் இடம்பிடிக்க இலங்கைக்குச் சந்தர்ப்பம் கிடைத்துள்ளது.

http://newuthayan.com

Edited by நவீனன்

  • தொடங்கியவர்

2004 – இந்தியாவில் தமிழ் மொழி செம்மொழியாக அறிவிக்கப்பட்டது.

வரலாற்றில் இன்று….
ஜூன் 06

நிகழ்வுகள்

1508 – புனித ரோமப் பேரரசன் முதலாம் மாக்சிமிலியன் பிரியுல்லா என்ற இடத்தில் வெனிசியப் படைகளிடம் தோற்றான்.
1644 – கின் அரசமரபின் மஞ்சு படைகள் பெய்ஜிங் நகரைக் கைப்பற்றினர்.
1711 – யாழ்ப்பாணத்தில் இந்து மதச் சடங்குகளுக்கு ஒல்லாந்து அரசினால் தடை விதிக்கப்பட்டது.
1752 – மொஸ்கோவின் மூன்றில் ஒரு பங்கு தீயினால் அழிந்தது. 18,000 வீடுகள் சேதமடைந்தன.
1761 – சூரியனுக்கும் பூமிக்கும் இடையில் வீனஸ் கோளின் நகர்வு பூமியின் பல இடங்களிலும் அவதானிக்கப்பட்டது.
1808 – நெப்போலியனின் சகோதரன் ஜோசப் பொனபார்ட் ஸ்பெயின் மன்னன் ஆனான்.
1832 – பாரிசில் மாணவர் எழுச்சி முறியடிக்கப்பட்டது.
1844 – கிறிஸ்தவ இளையோர் அமைப்பு (YMCA) லண்டனில் அமைக்கப்பட்டது.
1859 – குயின்ஸ்லாந்து என்ற பெயரில் புதிய குடியேற்ற நாடு நியூ சவுத் வேல்ஸ் இலிருந்து பிரித்தெடுக்கப்பட்டது.
1862 – அமெரிக்க உள்நாட்டுப் போர்: அமெரிக்கப் படைகள் டென்னசியில் மெம்ஃபிஸ் நகரை கூட்டமைப்புப் படைகளிடம் இருந்து கைப்பற்றினர்.
1882 – அரபிக் கடலில் இடம்பெற்ற புயலால் பம்பாயில் 100,000 பேர்களுக்கு மேல் கொல்லப்பட்டனர்.
1912 – அலாஸ்காவில் நொவரப்டா எரிமலை வெடித்தது.
1930 – இலங்கையில் வீரகேசரி நாளிதழ் தொடங்கப்பட்டது.
1944 – இரண்டாம் உலகப் போர்: நோமண்டி சண்டை ஆரம்பமானது.
1971 – சோயுஸ் 11 ஏவப்பட்டது.
1974 – சுவீடனில் நாடாளுமன்ற் முடியாட்சி அமைக்கப்பட்டது.
1981 – இந்தியாவில் தொடருந்து ஒன்று பகுமதி ஆற்றில் தடம் புரண்டு வீழ்ந்ததில் ஆயிரத்துக்கும் அதிகமானோர் கொல்லப்பட்டனர்.
1984 – இந்திய இராணுவத்தினர் அம்ரித்சரில் உள்ள பொற்கோயிலில் தாக்குதல் நடத்தியதில் 576 பேர் கொல்லப்பட்டு 335 பேர் காயமுற்றனர்.
1993 – மங்கோலியாவில் முதலாவது நேரடியான அதிபர் தேர்தல் நடைபெற்றது.
2004 – இந்தியாவில் தமிழ் மொழி செம்மொழியாக அறிவிக்கப்பட்டது.

பிறப்புகள்

1799 – அலெக்சாண்டர் புஷ்கின், ரஷ்ய எழுத்தாளர், கவிஞர் (இ. 1837)
1893 – கருமுத்து தியாகராஜன் செட்டியார், இந்திய விடுதலை இயக்கத்தில் முக்கியப் பங்கு வகித்தவர் (இ. 1974)
1901 – சுகர்னோ, இந்தோனீசியாவின் முதல் அதிபர் (இ. 1970)
1930 – சுனில் தத், இந்தியத் திரைப்பட நடிகர் (இ. 2005)
1948 – சுப்ரமண்ய ராஜு, தமிழ் எழுத்தாளர் (இ. 1987)
1986 – பாவனா, தமிழ், மலையாளத் திரைப்பட நடிகை

இறப்புகள்

1947 – மு. சி. பூரணலிங்கம் பிள்ளை, தமிழறிஞர் (பி. 1866)
1968 – ரொபேர்ட் எஃப். கென்னடி, அமெரிக்க செனட்டர் (பி. 1925)
1996 – ஜோர்ஜ் ஸ்நெல், நோபல் பரிசு பெற்றவர் (பி. 1903)
2007 – வீ. கே. சமரநாயக்க, இலங்கையின் அறிவியியலாளர் (பி. 1939)
2008 – ஜோர்ஜ் சந்திரசேகரன், இலங்கை வானொலி ஒலிபரப்பாளர் (பி. 1940)
2009 – ராஜமார்த்தாண்டன், கவிஞர், எழுத்தாளர்

சிறப்பு தினம்

தமிழீழம் – மாணவர் எழுச்சி தினம்
சுவீடன் – தேசிய தினம்
தென் கொரியா – நினைவு தினம்
குயின்ஸ்லாந்து தினம்

http://metronews.lk

  • தொடங்கியவர்

Bild könnte enthalten: 1 Person, Text

  • தொடங்கியவர்

இஸ்ரேல் படைகள் ஜெருசலேம் நகருக்குள் நுழைந்த நாள்: ஜூன் 7- 1967

 

 
இஸ்ரேல் படைகள் ஜெருசலேம் நகருக்குள் நுழைந்த நாள்: ஜூன் 7- 1967
 
1967-ம் ஆண்டு ஜூன் 7-ந்தேதி இஸ்ரேல் படைகள் ஜெருசலேம் நகருக்குள் நுழைந்தது

இதே நாளில் நிகழ்ந்து முக்கிய நிகழ்வுகள்:-

* 1967 - இஸ்ரேலியப் படைகள் ஜெருசலேம் நகரினுள் நுழைந்தனர். * 1981 - இஸ்ரேலிய வானூர்திகள் ஈராக்கின் ஒசிராக் அணுக்கரு உலை மீது குண்டு வீசித் தாக்கி அழித்தன. * 1989 - சுரினாமில் விமானம் ஒன்று வீழ்ந்ததில் 168 பேர் கொல்லப்பட்டனர். * 1991 - பிலிப்பைன்சில் பினடூபோ எரிமலை வெடித்து 7 கிமீ உயரத்திற்கு அதன் தூசிகள் பறந்தன.

* 2000 - கொழும்பில் இடம்பெற்ற குண்டு வெடிப்பில் அமைச்சர் சி. வி. குணரத்ன மற்றும் தெகிவளை மாநகர உதவி மேயர் ஆகியோர் கொல்லப்பட்டனர். * 2006 - மட்டக்களப்பு மாவட்டத்தில் நெடுங்கல் கிராமத்தில் இடம்பெற்ற கண்ணி வெடியில் சிக்கி 6 மாதக் குழந்தை உட்பட 10 பேர் கொல்லப்பட்டனர். * 2007 - கொழும்பு விடுதிகளில் இருந்து தமிழர் கட்டாயமாக வெளியேற்றப்பட்டனர்.

https://www.maalaimalar.com

  • தொடங்கியவர்

வெறும் 57 சென்ட் பணத்தில் சரித்திரம் படைத்த சிறுமி! - உண்மைக்கதை #FeelGoodStory

 
 

FeelGoodStory

`பிறருக்காக வாழ்வது மட்டும்தான் பயனுள்ள வாழ்க்கை!’ - ஒவ்வொருவரும் மனதில் பதித்துக்கொள்ளவேண்டிய இந்த வாசகத்தைத் தெளிவாகச் சொல்லியிருக்கிறார் விஞ்ஞானி ஆல்பர்ட் ஐன்ஸ்டீன் (Albert Einstein). ஆனால், அது அத்தனை எளிதான காரியமல்ல. பொது வாழ்க்கையில் இருப்பதாகச் சொல்லிக்கொள்கிற பலரும்கூட தங்களுக்காகவும் குடும்பத்துக்காகவும் வாழ்கிற காலம்! உண்மையில், பிறருக்காக வாழ்பவர்கள், வாழும் காலத்தில் அறியப்படாமல் போனாலும், வரலாற்றில் நிலைத்து நிற்பார்கள். மற்றவர்களுக்கு நல்லது நினைக்கும் அவர்களின் சுபாவம், சரித்திரத்தில் அவர்களுக்கு மாறாத இடத்தையும் புகழையும் பெற்றுத் தந்துவிடும். அப்படி வரலாற்றில் இடம்பெற்ற இருவரின் கதை இது! 

 

ஐரோப்பிய நாடுகளில் `சன்டே ஸ்கூல்’ என்று ஒன்று உண்டு. வாரம் முழுக்க வேலைக்குச் செல்லும் இளைஞர்களுக்காகவும் சிறார்களுக்காகவும் சர்ச்சில் நடத்தப்படும் பள்ளி. ஞாயிற்றுக்கிழமைகளில் இந்தப் பள்ளிகளில் நடத்தப்படும் வகுப்புகளில் எழுத, படிக்க, கணக்குப் பாடம் மற்றும் பைபிளிலிருந்து சில பாடங்களும் கற்றுக் கொடுக்கப்படும். 

அது ஒரு ஞாயிற்றுக்கிழமை. காலை நேரம். ஒரு சின்னஞ்சிறு சர்ச்சுக்கு அருகே ஒரு சிறுமி நின்றுகொண்டிருந்தாள். அவள் கண்களில் நீர் துளிர்த்திருந்தது. அந்த வழியாக வந்த பாதிரியார் ஒருவர் சிறுமியைப் பார்த்தார். அவள் தேம்புவதும் தெரிந்தது. 

``என்ன குழந்தை... ஏன் அழுதுகிட்டு நிக்கிறே?’’ என்று கேட்டார்.  

``என்னால சன்டே ஸ்கூலுக்குப் போக முடியலை. அங்கே... சர்ச்சுக்குள்ள ஒரே கூட்டமா இருக்கு...’’ தேம்பிக்கொண்டே சொன்னாள் அந்தச் சிறுமி. பாதிரியார் அந்தச் சிறுமியை இப்போது நன்றாகக் கவனித்தார். பரட்டைத் தலை, கிழிந்த ஆடைகள்... பார்த்தாலே ஏழ்மையான குடும்பத்தைச் சேர்ந்தவள் என்பது தெரிந்தது. அதன் காரணமாகக்கூட அவளுக்குச் சர்ச்சில் இடம் கிடைக்காமல் போயிருக்கலாம். பாதிரியார் அந்தச் சின்னக் குழந்தையின் கைகளைப் பிடித்துக்கொண்டார். அவளுடன் பேசியபடியே, அவளை அழைத்துக்கொண்டு மெள்ள நடந்தார். சர்ச்சுக்குள் நுழைந்தார். ஒரு பொருத்தமான இடமாகப் பார்த்து, ஞாயிற்றுக்கிழமை பள்ளி வகுப்பில் அவளை அமரவைத்தார். அந்தச் சிறுமி மகிழ்ச்சியோடு அவரைப் பார்த்து கையசைத்து, சிரித்தாள். பாதிரியார் வெளியே போனார். அன்றிரவு தூங்குவதற்கு முன்னர் வெகு நேரத்துக்குச் சிறுமி, ஞாயிற்றுக்கிழமை பள்ளியில் அவளைப்போல அமர இடம் கிடைக்காத சிறார்களைப் பற்றியே யோசித்துக்கொண்டிருந்தாள்.   

சிறுமியின் கதை

அது நடந்து இரண்டாண்டுகள் ஆகியிருந்தன. அந்தப் பாதிரியார் ஏழைகள் வசிக்கும் ஒரு குடியிருப்புப் பகுதிக்கு அழைக்கப்பட்டிருந்தார். அங்கே யாரோ இறந்து போயிருந்தார்கள், அவர்களுக்கு இறுதிச் சடங்குகள் செய்ய வேண்டும் என்பது தகவல். அங்கே போன பிறகுதான் இறந்து போயிருந்தது ஒரு சிறுமி என்பது பாதிரியாருக்குத் தெரிந்தது. ஞாயிற்றுக்கிழமை பள்ளியில் அவர் கொண்டுவிட்ட அதே சிறுமி. அந்தக் குழந்தையின் மரணம் அவருக்கே கலக்கத்தை ஏற்படுத்தியிருந்தது. 

அந்தச் சிறுமியை அவளின் படுக்கையிலிருந்து இறக்கினார்கள். அப்போதுதான் படுக்கையின் தலையணைக்குக் கீழே நைந்து போய், லேசாகக் கிழிந்திருந்த ஒரு பர்ஸைப் பார்த்தார் பாதிரியார். குப்பையில் கிடக்கவேண்டிய ஒன்று அங்கே இருப்பதுபோல அது இருந்தது. பாதிரியார் அந்த பர்ஸைப் பிரித்தார். அதற்குள் சில நாணயங்களும், கசங்கிப் போயிருந்த சில கரன்ஸிகளும் இருந்தன. மொத்தம் 57 சென்ட்கள் பணம். கூடவே குழந்தைக் கிறுக்கலில் குறிப்பு ஒன்று இருந்தது. அதைப் பிரித்துப் படித்தார். `சின்ன சர்ச்சை பெரிதாக்கிக் கட்டுவதற்காக இந்தப் பணத்தைச் சேர்த்து வைத்திருக்கிறேன். சின்ன சர்ச், பெரிதானால்தான் நிறைய குழந்தைகள் ஞாயிற்றுக்கிழமை பள்ளிக்குப் போக முடியும்...’ இதைப் படித்ததும் பாதிரியாரின் கண்கள் கலங்கின. இரண்டு வருட காலமாக இந்தச் சிறுமி, இந்தச் சிறு தொகையைக் கொஞ்சம் கொஞ்சமாகச் சேர்த்துவைத்திருக்கிறாள் என்பது தெரிந்தது. அதோடு, இனி மேற்கொண்டு என்ன செய்ய வேண்டும் என்பதும் அவருக்குப் புரிந்தது. 

church

அந்தச் சிறுமியின் இறுதிச் சடங்கு முடிந்தது. பாதிரியார் சிறுமி சேர்த்துவைத்திருந்த 57 சென்ட் பணத்தையும், அவள் எழுதிய குறிப்பையும் கையோடு எடுத்துக்கொண்டார். அன்றைக்குத் தேவாலயத்தில் பிரார்த்தனையின்போது மேடையில் சிறுமி குறித்தும், அவளின் சுயநலமற்ற குணத்தையும் விருப்பத்தையும் உருக்கமாகச் சொன்னார். அன்று மட்டுமல்ல... ஒவ்வொரு பிரார்த்தனை நேரத்திலும் சர்ச் மேடையில் நின்று அந்த விஷயத்தைச் சொன்னார். தன் உதவி பாதிரியார்களுக்கு `எப்படியாவது பணம் புரட்டி, தேவாலயத்தைப் பெரிதாக்கிக் கட்ட வேண்டும்... அதற்கான வேலைகளைச் செய்யுங்கள்’ என்று உத்தரவு போட்டார். 

சில நாள்களில் இந்தக் கதையை எப்படியோ தெரிந்துகொண்ட ஒரு பத்திரிகை அதைச் செய்தியாக வெளியிட்டது. இதைப் படித்த ஒருவர், பல ஆயிரக்கணக்கான டாலர் பெறுமானமுள்ள தன் நிலத்தை சர்ச் கட்டுவதற்காகக் கொடுக்க முன்வந்தார். ஆனால், சர்ச் தரப்பிலிருந்து அவ்வளவு பணத்தைத் தங்களால் கொடுக்க முடியாது என்று சொல்லப்பட்டது. அதற்கு அந்தத் தரகர் சொன்னார்... `அந்த 57 சென்ட்களைக் கொடுங்கள்... நிலத்தை எடுத்துக்கொள்ளுங்கள்!’ பாதிரியார் ரஸ்ஸல் ஹெச் கான்வெல்லின்

பிரமாண்டமான பெரிய தேவாலயத்தைக் கட்ட இடம் கிடைத்துவிட்டது. கொஞ்சம் கொஞ்சமாக நன்கொடைகள் குவிய ஆரம்பித்தன. ஐந்தே ஆண்டுகளில் நன்கொடையாக சர்ச்சுக்கு வந்த பணம் 2,50,000 டாலர். அந்தக் காலத்தில் அது சாதாரண தொகையல்ல. அந்தச் சிறுமியின் தன்னலமற்ற உள்ளம் வாரிக் கொடுத்த தொகை அது. 

இப்போது அமெரிக்காவின் பிலடெல்பியா நகரில் உயர்ந்து நிற்கிறது அந்த பிரமாண்டமான டெம்பிள் பாப்டிஸ் தேவாலயம் (Temple Baptist Church). அங்கே ஒரே நேரத்தில் 3,300 பேர் வரை அமரலாம். அங்கிருக்கும் தேவாலயப் பல்கலைக்கழகத்தில் ஆயிரக்கணக்கான மாணவர்கள் கல்வி கற்றுக்கொண்டிருக்கிறார்கள். தேவாலயம் கட்டப்பட்ட பிறகு, ஞாயிற்றுக்கிழமை பள்ளியில் ஒரு குழந்தைகூட வெளியில் நிற்கவேண்டிய அவசியம் ஏற்படவில்லை. 

 
 

தேவாலயத்தின் ஓர் அறையில் 57 சென்ட்கள் கொடுத்த சிறுமியின் முகம் ஓவியமாக வரைந்து மாட்டப்பட்டிருக்கிறது. பக்கத்திலேயே அந்தப் பாதிரியார் ரஸ்ஸல் ஹெச் கான்வெல்லின் (Russell Conwell) புகைப்படமும் இருக்கிறது. வெறும் 57 சென்ட்கள் பணம்தான்... ஆனால் ஒரு சிறுமியின் சுயநலமற்ற உள்ளம் ஒரு சரித்திரத்தை உருவாக்கிய உண்மை! 

 

https://www.vikatan.com/

  • தொடங்கியவர்

பிட்ஸ் பிரேக்

 

53p_1_1528279578.jpg

கால்பந்து உலகக் கோப்பைக்கு பிரேசில் ரெடி. இந்த முறை கோப்பை பிரேசிலுக்குதான் என எல்லோருமே எதிர்பார்க்கிறார்கள். ஆனால் அந்த அணியின் நட்சத்திர ஆட்டக்காரர் நெய்மார்தான் இன்னும் தயாராகவில்லை. சமீபத்தில் கால் எலும்பில் உண்டான காயத்தால் தொடர்ந்து அவதிப்பட்டு வந்தார் நெய்மார். இதனால் உலகக் கோப்பை போட்டிகளில் அவர் ஆடுவாரா மாட்டாரா என்கிற சஸ்பென்ஸ் நீடிக்கிறது. ‘‘அவர் தயார், காயம் குணமாகிவிட்டது, களத்தில் கலக்குவார்’’ என சகவீரர் பெர்னான்டினோ கூறியிருக்கிறார்.  வா தல!


25p1_1528279948.jpg

`செம’ ஹீரோயின் அர்த்தனா பிளஸ் டூ படித்துக் கொண்டிருக்கும்போதே நடிக்க வந்துவிட்டார்.

இதனால் கல்லூரிப் படிப்பைத் தொடர முடியவில்லை. இந்த ஆண்டுதான் படிப்பதற்காகப் பல கல்லூரிகளில் விண்ணப்பித்துள்ளார். இப்போதைக்கு ‘நோ சீரியஸ் ரிலேஷன்ஷிப்’ என்ற கொள்கையைக் கடைப்பிடிக்கிறார்.

‘காதலின் வலி மிகக் கொடூரமானது. காதல் என்றாலே அது தோல்வியில்தான் முடியும்’ என்கிறாராம்.


19p1_1528279971.jpg

சென்னையில் பிறந்து, பெங்களூரில் வளர்ந்த தமிழச்சி `காளி’ ஹீரோயின் அம்ரிதா. சினிமாவுக்கு முன் மாடலிங்கில் இருந்தவர். சிம்ரன், திரிஷா இருவரும்தான் ரோல்மாடல்கள். `காளி’க்குப் பிறகு அடுத்து `பேய்ப்பசி’யிலும், தெலுங்கில் ஒரு படத்திலும் நடிக்கிறார் அம்ரிதா. புத்தகங்கள் வாசிப்பது ரொம்ப பிடிக்குமாம். இதற்காக வீட்டிலேயே மினிலைப்ரரியே வைத்திருக்கிறாராம்!

https://www.vikatan.com

  • தொடங்கியவர்

கண்டுபிடிப்புகளின் கதை: வெல்க்ரோ

 

 
shutterstock240133552
 
 

துணி, ஷு, செருப்பு, திரைச்சீலை, கடிகாரப் பட்டை, கையுறை, பை போன்றவற்றில் பசை இல்லாமல் ஒட்டுவதற்கு வெல்க்ரோ பயன்படுத்தப்பட்டு வருகிறது. ஒரு பக்கம் இருக்கும் கொக்கிகளையும் இன்னொரு பக்கம் இருக்கும் இழைகளையும் ஒன்றோடு ஒன்று சேர்க்கும்போது இறுக்கமாகப் பற்றிக்கொள்கிறது. இதுதான் வெல்க்ரோவின் எளிய நுட்பம். இதை ‘ஜிப் இல்லாத ஜிப்’ என்றும் அழைக்கிறார்கள்.

   
 

1948-ம் ஆண்டு பொறியாளரும் மலையேற்ற வீரருமான ஜார்ஜ் டி மெஸ்ட்ரல் தன் நாயுடன் மலையேறினார். வீட்டுக்குத் திரும்பிய பிறகு அவரது உடையிலும் நாயின் வாலிலும் ஆடையொட்டிச் செடியின் காய்கள் ஒட்டியிருப்பதைக் கண்டார். மெதுவாக ஒவ்வொன்றையும் நீக்கினார். அப்போதுதான் இந்தக் காய்கள் எப்படி உடையிலும் நாயின் வாலிலும் ஒட்டிக்கொள்கின்றன என்று ஆராய்ச்சியில் இறங்கினார்.

6chsujinventionjpg

ஜார்ஜ் டி மெஸ்ட்ரல்

காயின் மேலிருந்த முட்கள்தான் மென்மையான துணியில் ஒட்டிக்கொண்டிருக்கின்றன என்பதை அறிந்தார். மென்மையான இழைகளில் கொக்கிகள் மாட்டிக்கொண்டால் அவை இறுக்கமாகப் பற்றிக்கொள்ளும் என்ற முடிவுக்கு வந்தார். இந்த நுட்பத்தை வைத்து எளிமையாக பிரித்துச் சேர்க்கும் ஒரு பொருளைக் கண்டுபிடிக்க முடிவு செய்தார்.

தன்னுடைய கண்டுபிடிப்பைச் செயல்படுத்துவதற்காக பிரான்ஸுக்குச் சென்றார். அங்கிருந்த நெசவாளர்கள் இப்படிப் பசை இல்லாமல் ஒட்டும் பொருளை உருவாக்க வாய்ப்பு இல்லை என்று கூறிவிட்டனர். பட்டு நெசவாளர் ஒருவர் மெஸ்ட்ரலுக்கு உதவ முன்வந்தார். அவர் கொடுத்த பஞ்சு இழைகளில் கொக்கிகள் ஒட்டிக்கொண்டன. அந்த மகிழ்ச்சி சில நிமிடங்கள் கூட நீடிக்கவில்லை. கொக்கிகளும் இழைகளும் பிரிந்துவிட்டன. பலவித முயற்சிகளுக்குப் பிறகு, நைலான் இழைகளைக் கொண்டு பரிசோதனைகளைச் செய்தார். அது வெற்றியைத் தேடித் தந்தது. என்றாலும் பெருமளவில் வெல்க்ரோவை உருவாக்குவதற்கு மேலும் 10 ஆண்டுகள் தேவைப்பட்டன. 1955-ம் ஆண்டு தன்னுடைய கண்டுபிடிப்புக்குக் காப்புரிமை பெற்றார் மெஸ்ட்ரல்.

ஆரம்பத்தில் வெல்க்ரோவுக்கு எதிர்பார்த்த அளவுக்கு வரவேற்பு இல்லை. அமெரிக்காவின் நாசா விண்வெளி நிலையம் வெல்க்ரோவைப் பயன்படுத்த ஆரம்பித்தது. 1968-ம் ஆண்டுக்குப் பிறகு பெரிய நிறுவனங்கள் வெல்க்ரோவைத் திரும்பிப் பார்க்க ஆரம்பித்தன. 1980-ம் ஆண்டில் சர்வதேச ஷு நிறுவனங்களான பியுமா, அடிடாஸ், ரீபோக் போன்றவை குழந்தைகளுக்கான ஷுக்களில் வெல்க்ரோவைப் பயன்படுத்தின.

shutterstock553720381
 

வெல்க்ரோ பயன்பாடு அதிகரித்தபோது, கொக்கி – இழைக்கான காப்புரிமை முடிந்துவிட்டது. இதனால் பலரும் வெல்க்ரோவை குறைந்த விலையில் குறைந்த தரத்தில் உருவாக்க ஆரம்பித்தனர். வெல்க்ரோ தன்னுடைய பெயரையும் தரத்தையும் நிலைநாட்டப் போராடிக்கொண்டிருந்தது. அதேநேரத்தில் உலகம் முழுவதும் மலிவு விலை வெல்க்ரோ பரவிவிட்டது.

shutterstock1098770597
 

வெல்வெட் என்ற இழைகளில் இருந்தும் க்ரோசே என்ற கம்பிகளில் இருந்தும் ’வெல்க்ரோ’ என்ற பெயர் உருவானது. இன்று 159 நாடுகளில் விண்வெளி உடைகளில் இருந்து செயற்கை இதயம்வரை சுமார் 300 பொருட்களில் வெல்க்ரோ பயன்படுத்தப்பட்டு வருகிறது. கொக்கிகள் எந்த அளவுக்கு இழைகளைப் பற்றிக்கொண்டிருக்கின்றன என்பதைப் பொறுத்து வெல்க்ரோவின் வலிமை அதிகரிக்கும்.

(கண்டுபிடிப்போம்)

http://tamil.thehindu.com

  • தொடங்கியவர்
சுட்டெரிக்கும் வெயிலில் மீன் சமைக்கும் சீனப் பெண்
 

சீனாவில் சுட்டெரிக்கும் வெயிலின் தாக்கத்தை எடுத்துரைக்கும் புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது.

சீனாவைச் சேர்ந்த பெண் ஒருவர் சுட்டெரிக்கும் வெயிலில் கார் மீது மீனை வைத்து நெருப்பு இல்லாமல், வெயிலின் தாக்கத்தில் மீனை சமைக்கின்றார். இச்சம்பவம் அனைவரிடமும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

சீனாவில் சுட்டெரிக்கும் வெயிலினால் மக்கள் பாரிய அசௌகரியங்களுக்கு முகங்கொடுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

image_3e4441aee3.jpg

http://www.tamilmirror.lk/

  • தொடங்கியவர்

இன்பாக்ஸ்

 

36p1_1528264052.jpg

ன்பீர்கபூருக்கும் அலியா பட்டுக்கும் காதல் என்று கொஞ்ச நாளாகவே பேச்சு இருந்தது. அதை உறுதி செய்திருக்கிறார் ரன்பீர். ‘‘இது எங்களுக்குப் புதிதாக இருக்கிறது. இது எங்கு போய் முடிகிறது எனப் பார்க்கவேண்டும். கொஞ்சம் டைம் கொடுங்க’’ என்று சொல்லி இருக்கிறார். புதுஜோடி புதுரூட்டு!


36p2_1528264070.jpg

சுயம்வரமெல்லாம் முடித்து மீண்டும் சுறுசுறுப்பாகப் பட வேலைகளில் இறங்கிவிட்டார் ஆர்யா. அடுத்து ஞானவேல்ராஜா தயாரிக்க, ‘மௌனகுரு’ சாந்தகுமார் இயக்கும் த்ரில்லர் படத்தில் நடிக்கவுள்ளார். ‘அறம்’ இயக்குநர் கோபி நயினாரின் அடுத்தப் படத்திலும் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். வெல்கம்பேக் மாப்ளே!


36p3_1528264084.jpg

லாலாவின் வாழ்க்கை திரைப்படமாகிறது. அமைதிக்கான நோபல் பரிசைப் பெற்ற மலாலாவின் பயோபிக்கை ‘குல் மகாய்’ என்ற பெயரில் அம்ஜத்கான் இயக்கிவருகிறார். ‘குல் மகாய்’ என்ற புனைப்பெயரில் ‘தலிபான்கள் பிடியில் வாழ்க்கை’ என்று வலைப்பதிவில் தனது அனுபவங்களை எழுதினார், மலாலா. அதனால் படத்திற்கு அந்தப்பெயரையே வைத்திருக்கிறார்கள்! போராளியின் கதை


36p4_1528264101.jpg

‘லா லா லேண்ட்’ படத்தில் நடித்த எம்மா ஸ்டோன் இப்போது அமெரிக்காவின் லேட்டஸ்ட் ஸ்வீட் ஹார்ட். இருக்காதா... ஆஸ்கர் விருதுக்குப் பிறகு தன் காதலர் ஜஸ்டின் தொராக்ஸை விட்டு விலகியவர், கலிபோர்னியா ரேடியோ நிகழ்ச்சியொன்றில் `பாய்ஃப்ரெண்ட் இல்லாமல் தவிக்கிறேன். தகுந்த ஆட்கள் என்னை அணுகவும். கன்டிஷன்ஸ் அப்ளை!’ என்று சொல்லி பரபரப்பைக் கிளப்பியி ருக்கிறார். தினமும் எக்கச்சக்க மெயில்கள், போன்கால்கள் வருகின்ற னவாம்.  அப்ளை பண்ணுங்கப்பா!


லகெங்கும் கலவரமும் போரும் சூழ்ந்த நாடுகளில் ஐநா தன் வெவ்வேறு நாட்டு ராணுவத்தினரை அமைதிப்படைகளாக அனுப்பி நிலைமையை சரிசெய்ய முயற்சி செய்யும். கடந்த 70 ஆண்டுகளில் அப்படி அனுப்பிவைக்கப்பட்டு களத்தில் போராடி உயிர்நீத்த ராணுவ வீரர்களின் எண்ணிக்கை 3737, இதில் இந்திய ராணுவத்தை சேர்ந்தவர்கள் 163 பேர் என்று சமீபத்தில் அறிவித்துள்ளது ஐநா. உலக அளவில் மற்ற இராணுவங்களோடு ஒப்பிடும்போது இதுவே அதிகம். ராயல் சல்யூட்!


36p5_1528264129.jpg

ல்மான்கானின் சகோதரர் அர்பாஸ்கான் ஐபிஎல் சூதாட்டப் புகாரில் சிக்கி இருக்கிறார். கையும் களவுமாகக் காவல்துறையில் சிக்கியதும் சூதாட்டம் நடந்ததை ஒப்புக்கொள்ளவும் செய்திருக்கிறார். இதில் விளையாட்டு வீரர்கள் தொடர்பு இருக்கிறதா, வேறு யாரெல்லாம் இந்த வலைப்பின்னலில் இருக்கிறார்கள் என்று விசாரணை நடைபெற்றுவருகிறது. மறுபடியும் மொதல்லருந்தா!


36p6_1528264142.jpg

மிழ் மற்றும் மலையாளப் படங்கள் மீது காதல் வயப்பட்டிருக்கிறார் அபிஷேக் பச்சன். அனுராக் காஷ்யப்பின் அடுத்த படமான ‘மன்மர்ஸியான்’ படத்தில் பிஸியாக நடித்துக் கொண்டிருக்கும் அபிஷேக், ஷூட்டிங் இடைவெளியில் சமீபத்தில் வெளியான தமிழ் மற்றும் மலையாளப் படங்களைப் பார்த்திருக்கிறார். ‘நிச்சயம் ஒரு படமாவது தமிழ் மற்றும் மலையாளத்தில் நடிப்பேன்! சினிமாவின் உண்மையான முகம் அங்கிருக்கிறது’ என்று இன்ஸ்டாவில் சொல்லியிருக்கிறார். நல்ல கதை உள்ளவர்கள் மும்பை ஜூஹுவுக்கு ஒரு எட்டு போய் வரலாம். பச்சன் ரெடி!


36p7_1528264163.jpg

ந்தியாவின் வட்டெறிதல் சாம்பியன்களில் ஒருவரான விகாஸ் கவுடா, ஓய்வு பெறுவதாக அறிவித்திருக்கிறார். மைசூரில் பிறந்து அமெரிக்காவில் வளர்ந்தவர் 6அடி9அங்குல உயரம்கொண்ட விகாஸ். அமெரிக்காவில் வளர்ந்தாலும் இந்தியாவுக்காகவே உலகெங்கும் தொடர்ந்து போட்டிகளில் விளையாடி, பதக்கங்கள் வென்றுகொடுத்தவர். 2014 காமன்வெல்த் போட்டிகளிலும், 2013 மற்றும் 2015 ஆசியப் போட்டியிலும் தங்கம் வென்று இந்தியாவின் பெருமை உயர்த்தியவர் விகாஸ். தாங்க்ஸ் விகாஸ்!


36p8_1528264180.jpg

ராஜஸ்தானின் பரஸ்ரம்புரா என்ற கிராமத்தில் சமீபகாலமாக `நீர்த்திருடர்கள்’ அதிகரித்திருக்கிறார்கள். அந்தப் பகுதியில் நிலவிவரும் குடிநீர்த் தட்டுப்பட்டால் வீட்டில் ட்ரம்களில் நிரப்பி வைத்திருக்கும் குடிநீரை இரவு நேரங்களில் பொதுமக்களே வீடுபுகுந்து திருடிச் செல்வதால் ஊரில் எல்லா ட்ரம்களுக்கும் பூட்டுப்போட்டிருக்கிறார்கள். இங்கேயும் நடக்கலாம்!

https://www.vikatan.com

  • தொடங்கியவர்
‘இங்கு நீதி, நியாயம் எடுபடாது’
 

image_045fd39053.jpgவலிமை மிகுந்தவர்கள் அரசியல்வாதிகளாக இருந்தால் அவர்கள் ஒருவரை ஒருவர் வீழ்த்துவதிலேயே குறியாக இருப்பார்கள். வெளியே இவர்கள் சிரித்தபடி, உள்ளுக்குள் மனக்குமுறல்களுடன் வாழ்வார்கள். இவர்களிடம் நட்புக் கிடையவே கிடையாது. 

ஆனால், மக்கள் முன் அரவணைத்துக் கொள்ளும் காட்சிகள், அவர்களுக்கே தெரிந்த திரைப்படக் காட்சிகள்தான். புத்திசாலித்தனம் கூட ஒருவரை ஒருவர் தள்ளி வீழ்த்த உதவும் என நம்புகின்றார்கள். அறிவில் முதிர்ச்சியடைய ஆணவம் தலைகாட்டுவதுபோல, ஆட்சியைப் பிடித்தால் அன்பு குன்றி, ஆசைகள் மெருகேறி விடுகின்றன. இங்கு நீதி, நியாயம் எடுபடாது.

நியாயம், நீதியுள்ளவனை மக்கள் ஆதரிக்க வேண்டும். ஆனால், எவரையும் குற்றவாளிகளாக்கும் வல்லமை அரசியலுக்கே சாத்தியமாகின்றது. இதனாலேயே வல்லமையில்லாத நல்லவர்கள், இந்த அரசியல் பிரவேசத்துக்குள் வர மறுக்கிறார்கள்.

மக்கள் உட்காரக்கூடாது; எழுந்து துஷ்டரை வீழ்த்துங்கள்.

  • தொடங்கியவர்

எதற்கெடுத்தாலும் குறைப்பட்டுக்கொள்வது சரியா? - பாடம் சொல்லும் கதை! #MotivationStory

 
 

Motivation Story

`குறுகிய மனோபாவம், மோசமான மனநிலை, எதிர்மறை எண்ணங்கள் ஆகியவற்றோடு நாம் இருக்கவே கூடாது!’ என்கிறார் 20-ம் நூற்றாண்டின் இணையற்ற கவிஞர்களில் ஒருவராகக் கருதப்படும் டி.எஸ்.எலியட் (T.S.Eliot). உண்மையில், இன்றையச் சூழலில் பாசிட்டிவ் மனநிலையை வளர்த்துக்கொள்ள வேண்டும் என்று நினைப்பவர்களுக்குக்கூட நெகட்டிவாக சிந்திப்பது தவிர்க்க முடியாததே! `இவ்வளவு பிரச்னை ஒரு மனுஷனுக்கு வரவே கூடாது... என்னை ஏன் கடவுள் இவ்வளவு சோதிக்கிறார்?’ என்று வருத்தப்படுபவர்கள் நம்மில் ஏராளமானோர். இதற்குக் காரணம் எதிர்மறையான மனநிலைதான். `எல்லாம் தப்பு தப்பாகவே நமக்கு நடக்கிறது’ என்று நினைப்பவர்கள், அந்தக் காரியங்களின் மறுபுறத்தை ஆராய்ந்தால், ஒருவேளை நமக்கு நன்மை செய்வதற்காகக்கூட அவை நடந்திருப்பதை அறிந்துகொள்ளலாம். `எல்லாம் நன்மைக்கே!’ என்கிற மனநிலை வாய்த்தவர்கள் அதிகம் பிரச்னைக்கு ஆளாவதில்லை. அந்த மனோபாவம்தான் பாசிட்டிவ் அணுகுமுறைக்குத் தேவை. இந்த உண்மையை உணர்த்தும் கதை இது. 

 

அவர் ஒரு தனியார் நிறுவனத்தில் உயர் பொறுப்பில் இருப்பவர். அன்றைக்கு வேலை முடிந்து அவர் வீடு திரும்ப இரவு ஏழு மணிக்கு மேலாகிவிட்டது. காரைவிட்டு இறங்கியவர், நேரே வீட்டுக்குள் செல்லாமல், பின் பக்கத்திலிருக்கும் தன் பிரத்யேக ஜிம்முக்குள் போனார். சில நிமிடங்கள்தான்... வெளியே வந்துவிட்டார். அவர் முகம் இறுகிக் கிடந்தது. எதிர்கொண்டு அழைத்த மனைவியிடம்கூட ஒரு வார்த்தை பேசவில்லை. நேராகத் தன் அறைக்குப் போனார். உடையை மாற்றிக்கொண்டு கட்டிலில் படுத்துவிட்டார். ஏதோ யோசனை வந்தவராக, போனை எடுத்தார், டயல் செய்தார்... கடவுளிடம் பேசினார். 

``கடவுளே... வணக்கம். உங்களிடம் ஒரு கேள்வி கேட்கலாமா?’’ 

``தாராளமாகக் கேள்.’’ 

``இன்னிக்கி ஏன் எனக்கு இவ்வளவு கஷ்டம் குடுத்தீங்க கடவுளே?’’ 

``என்னப்பா சொல்றே? எனக்குப் புரியலை.’’ 

``வழக்கத்தைவிட நான் இன்னிக்கி கொஞ்சம் லேட்டாத்தான் எந்திரிச்சேன். அதனாலேயே பல வேலைகள் நின்னு போய் பரபரப்பாயிட்டேன். உங்களுக்குத் தெரியும்தானே?’’ 

``ஆமா.’’ 

``ஆபிஸுக்குக் கிளம்பும்போது என் கார் உடனே கிளம்பலை. ஸ்டார்ட் ஆக ரொம்ப நேரம் ஆச்சு.’’ 

``சரி...’’ 

``மதியம் சாப்பாடுகூட சரியான நேரத்துக்கு வரலை. அதைக் கொண்டு வர்ற ஆளுக்காக நான் ரொம்ப நேரம் காத்திருந்தேன். அப்புறம் வேற சாப்பாட்டை ஹோட்டல்லருந்து வரவழைச்சு சாப்பிடவேண்டியதாகிடுச்சு. சாப்பிட்டு முடிச்சதும், வழக்கமா வர்ற ஆள் சாப்பாட்டோட வந்து நிக்கிறார்...’’ 

``ம்...’’ 

``ஆபிஸ்லருந்து கார்ல திரும்பும்போது யாரோ போன் பண்ணினாங்க. எடுத்து `ஹலோ’ சொல்றதுக்குள்ள போன் சார்ஜ் தீர்ந்து போய் டெட்டாயிடுச்சு...’’ 

``ஆமா.’’ 

``இது எல்லாத்துக்கும் மேல எனக்கு கால்ல வலின்னா அப்படி ஒரு வலி. சரி... வீட்ல இருக்குற ஜிம்முக்குப் போயி கொஞ்ச நேரம் காலை மசாஜ் செஞ்சுக்கலாம்னு போனேன். அங்கே என்னோட ஃபுட் மசாஜர் (Foot Massager) வேலை செய்யலை. வலியோட வீட்டுக்குள்ள வந்துட்டேன். இன்னிக்கி எனக்கு எதுவுமே சரியா நடக்கலை கடவுளே! எனக்கு ஏன் இவ்வளவு பிரச்னைகளைக் கொடுத்தீங்க?’’ 

கார்

மறு முனையில் கடவுள் சிரிப்பது அவருக்குக் கேட்டது... ``சரி... எல்லாத்துக்குமே பதில் சொல்றேன். இன்னிக்கிக் காலையில நீ தூங்கிக்கிட்டு இருக்கும்போது மரண தேவதை உன்னை அழைச்சுட்டுப் போறதுக்காக உன் கட்டில்கிட்ட வந்தது. நான்தான் உனக்கு இங்கே செய்யறதுக்கு நிறையா வேலை பாக்கி இருக்குனு, இன்னொரு தேவதையை அனுப்பி, அதன் மூலமா மரண தேவதையை அங்கேயிருந்து கிளப்பிவிடச் சொன்னேன். இதெல்லாம் நடந்து முடிகிறவரைக்கும் நீ எந்திரிச்சிடக் கூடாதுனுதான் உன்னை இன்னும் கொஞ்ச நேரம் தூங்கவெச்சேன்.’’ 

``அப்படியா?!’’ 

``உன் காரைக் கிளப்பினப்போ, நீ போற வழியில ஒரு டிரைவர் குடிச்சிட்டு காரை ஓட்டிக்கிட்டு வந்துக்கிட்டு இருந்தான். அவன் உன் கார்ல மோதி ஆக்ஸிடன்ட் ஆகிடக் கூடாதுனுதான் உன் கார் உடனே ஸ்டார்ட் ஆகாமப் பார்த்துக்கிட்டேன்...’’ 

``அடடா!’’ 

``உன் சாப்பாடு ஏன் லேட்டாச்சுன்னா, வழக்கமா அதைக் கொண்டு வர்ற ஆளுக்கு இன்னிக்கி ஒரு இன்ஃபெக்‌ஷன். அதோடதான் சமைச்சிருந்தார். அந்தச் சாப்பாட்டை நீ சாப்பிட்டிருந்தீன்னா, உனக்கும் இன்ஃபெக்‌ஷனாகி நோய்வாய்ப்பட்டிருப்பே. அதைத் தாங்கிக்கிற சக்தி உனக்கு இல்லை. அதனாலதான் சாப்பாடு லேட்டா வர்ற மாதிரி செஞ்சேன்.’’ 

``ஐயய்யோ...’’

``போன்ல பேசினவன் உன்னை ஏமாத்தப் பார்த்தான். அவனோட தெளிவான, தேனொழுகுற பேச்சைக் கேட்டுட்டு நீ, அவன் கூப்பிட்ட இடத்துக்குப் போயிருப்பே. அவன் உன்கிட்ட இருக்குறதையெல்லாம் பிடுங்கிட்டுப் போயிருப்பான். அதுனாலதான் சார்ஜ் இல்லாமப் பண்ணினேன்...’’ 

``இது எனக்கு தெரியாமப் போச்சே கடவுளே!’’ 

நேர்மறைச் சிந்தனை கொண்ட கதை

``அப்புறம் என்ன... அந்த ஃபுட் மசாஜர்... அதுல ஒரு முக்கியமான பகுதி செயலிழந்து போச்சு... நீ மட்டும் அதை ஆன் பண்ணியிருந்தேன்னா, உன் வீட்ல இருக்குற மொத்த கரன்ட்டும் போயிருக்கும். ராத்திரி முழுக்க காத்து இல்லாம, இருட்டுல நீ இருக்குறது எனக்குப் பிடிக்கலை. அதனாலதான் ஃபுட் மசாஜர் வொர்க் ஆகாமப் பார்த்துக்கிட்டேன்...’’ 

``கடவுளே என்னை மன்னிச்சிடுங்க...’’ 

``மன்னிப்பெல்லாம் கேட்காதே! நல்லது நடக்குதோ, கெட்டது நடக்குதோ முதல்ல என்னை நம்புறதுக்குப் பழகு! எதுக்கெடுத்தாலும் ஏன் இப்படி நடக்குதுனு குறைப்பட்டுக்காதே, சந்தேகப்படாதே... பாசிட்டிவ் அப்ரோச்சை வளர்த்துக்கோ!’’ 

``சரி கடவுளே...’’ 

அந்த நேரத்தில் யாரோ அவருடைய தோளைப் பிடித்து உலுக்கினார்கள். ``அப்பா... அப்பா...’’ என்ற குரலும் கேட்டது. 

அவர் திடுக்கிட்டு கண்விழித்தார். எதிரே அவருடைய ஆறு வயதுச் சிறுமி நின்றுகொண்டிருந்தாள். 

``என்னப்பா... வந்தவுடனே தூங்கிட்டீங்க?’’ 

அப்போதுதான் மலர்ந்த மலர் போன்ற முகத்தோடு நிற்கிற மகளின் முகத்தைப் பார்த்தார். அப்படியே வாரி அணைத்து, தோளில் போட்டு, முத்தமாரி பொழிந்தார். 

https://www.vikatan.com

  • தொடங்கியவர்

1783 – ஐஸ்லாந்தில் லாக்கி எரிமலை வெடிக்க ஆரம்பித்ததில் எட்டு மாதங்களில் வரட்சி, மற்றும் வறுமை காரணமாக 9,000 பேர் வரையில் கொல்லப்பட்டனர்.

வரலாற்றில் இன்று….
ஜூன் 08

நிகழ்வுகள்

1405 – யோர்க் ஆயர் ரிச்சார்ட் ஸ்க்ரோப், நோர்ஃபோக் இரண்டாம் நிலை மன்னர் தொமஸ் மோபிறே ஆகியோர் மன்னர் இங்கிலாந்தின் நான்காம் ஹென்றியின் ஆணையின் பேரில் தூக்கிலிடப்பட்டனர்.
1783 – ஐஸ்லாந்தில் லாக்கி எரிமலை வெடிக்க ஆரம்பித்ததில் எட்டு மாதங்களில் வரட்சி, மற்றும் வறுமை காரணமாக 9,000 பேர் வரையில் கொல்லப்பட்டனர்.
1861 – அமெரிக்க உள்நாட்டுப் போர்: டென்னசி அமெரிக்கக் கூட்டில் இருந்து விலகியது.
1887 – ஹேர்மன் ஹொலரித் துளையிடும் அட்டை கொண்ட கணிப்பானுக்கான காப்புரிமம் பெற்றார்.
1929 – ஐக்கிய இராச்சியத்தில் முதற் தடவையாக தொழிற் கட்சி ஆட்சி அமைத்தது.
1941 – இரண்டாம் உலகப் போர்: நேச நாடுகள் சிரியா, மற்றும் லெபனான் மீது தாக்குதலை ஆரம்பித்தன.
1942 – இரண்டாம் உலகப் போர்: ஜப்பானிய நீர்மூழ்கிக் கப்பல்கள் அவுஸ்திரேலியாவின் சிட்னி, நியூகாசில் நகரங்கள் மீது குண்டுத்தாக்குதலை நடத்தின.
1984 – அவுஸ்திரேலியாவின் நியூ சவுத் வேல்ஸ் மாநிலத்தில் ஓரினச்சேர்க்கை சட்டபூர்வமாக அனுமதிக்கப்பட்டது.
1992 – முதலாவது உலகக் கடல் நாள் கொண்டாடப்பட்டது.
1995 – படிவ நிரலாக்க மொழி பி.எச்.பி வெளியிடப்பட்டது.
2006 – அல் குவைதாவின் ஈராக்கியத் தலைவர் அபு முசாப் அல்-ஜர்காவி அமெரிக்க விமானக் குண்டுவீச்சில் கொல்லப்பட்டார்.
2007 – அட்லாண்டிஸ் விண்கப்பல் 7 பேருடன் சர்வதேச விண்வெளி நிலையத்துக்கு ஏவப்பட்டது.
2007 – இலங்கையில் புத்தளத்தில் 9 உடல்கள் மிகவும் சிதைந்த நிலையில் காவற்துறையினரால் கண்டுபிடிக்கப்பட்டன.
2007 – ஆஸ்திரேலியாவில் நியூ சவுத் வேல்ஸ் மாநிலத்தில் இடம்பெற்ற பெரும் காற்று, மற்றும் வெள்ளத்தினால் 9 பேர் கொல்லப்பட்டனர்.

பிறப்புகள்

1867 – பிரான்க் லாய்டு ரைட், (இ. 1959)
1874 – சேர் வைத்திலிங்கம் துரைசுவாமி, இலங்கையின் முன்னாள் சட்டசபை சபாநாயகர்
1921 – சுகார்ட்டோ, இந்தோனேசியாவின் முன்னாள் அரசுத் தலைவர் (இ. 2008)
1930 – இர. ந. வீரப்பன், மலேசிய எழுத்தாளர் (இ. 1999)
1975 – ஷில்பா ஷெட்டி, பாலிவுட் நடிகை

இறப்புகள்

632 – முகம்மது நபி, கடைசி நபி (பி. 570)
1809 – தாமஸ் பெய்ன், ஆங்கிலேய-அமெரிக்க எழுத்தாளர் (பி. 1737)
1845 – ஆன்ட்ரூ ஜாக்சன், ஐக்கிய அமெரிக்காவின் ஏழாவது குடியரசுத் தலைவர் (பி. 1845)
1969 – அருணாசலம் மகாதேவா, இலங்கைத் தமிழ் அரசியல்வாதி (பி. 1885)
2012 – கே. எஸ். ஆர். தாஸ், இந்திய இயக்குனர் (பி. 1936)

சிறப்பு தினம்

உலகக் கடல் தினம்

http://metronews.lk

  • தொடங்கியவர்

வலைபாயுதே

சைபர் ஸ்பைடர்

 

twitter.com/Kozhiyaar

இந்த வெயிலிலும் நாம் ஷுவும், டையும் மாட்டிக்கொண்டு அலைவதே அடிமைத்தனத்தின் மிச்சம்தான்!

twitter.com/amuduarattai

கடவுளிடம் ‘எனக்கு எந்தக் கஷ்டமும் வராமல் பார்த்துக்கோ’ என்று  சொன்னால்,கார் ரிவர்ஸ் பார்த்த ‘ஆண்பாவம்’ பாண்டியராஜன் போல் நடந்துகொள்கிறார் கடவுள்.

110p1_1528201402.jpg

twitter.com/manipmp

டி.வி ரிமோட்தான் முதல் வாரிசுரிமைப் போரை உருவாக்குகிறது

twitter.com/Thaadikkaran

``நான் சாமி இல்லை பூதம்” - தூத்துக்குடிப் போராட்டத்துக்கு முதல்வருக்கு எதிர்ப்பு தெரிவிக்க படத்தில் சேர்த்த டயலாக்கா இருக்குமோ..?!

110p2_1528201415.jpg

facebook.com/karthekarna

மாடியில நின்னு ‘அப்பா வந்துட்டாங்க’ன்னு சந்தோஷமாக் கத்தியதைக் கேட்டு, ‘புள்ளை தேடுதே’னு மூச்சிறைக்க மூணுமூணு படியாத் தாவி ஓடிவந்தா, ‘கேம் விளையாட போன் கொடுப்பா’ங்குது.

facebook.com/lvinkanna786

90’ஸ் கிட்ஸ் புரளிகள் :

அண்டர்டேக்கருக்கு ஏழு உயிர்...

பாண்டிங் பேட்ல ஸ்பிரிங்...

சூப்பர் ஸ்டார் யாருன்னு கேட்டால் சின்னக் குழந்தையும் சொல்லும்.

110p3_1528201428.jpg

facebook.com/md.riyas.31924

+2வில் முதலிடம் பெற்ற மாணவரிடம் நிருபர்கள் கேள்வி : “அடுத்து என்னவாக விருப்பம்?”

மாணவன் : “துணை வட்டாட்சியர் ஆவதே என் லட்சியம்!”

twitter.com/sharabaanuchand

கர்நாடகாவில் ‘காலா’ படத்துக்குத் தடை. ரத்தம் கொதிக்கிறது. போராடத் துடிக்கிறது. ஆனால்... நாடு சுடுகாடாய்ப் போயிருமே என்று தயக்கம்...

110p4_1528201443.jpg

facebook.com/kpk003

“வீட்ல பொருள், பணம் எல்லாம் வெச்சிட்டு எப்படி தைரியமா ஊருக்குப் போயிட்டு வந்தீங்க...?”

“ ‘வீடு வாடகைக்கு’னு போர்டு மாட்டிட்டுப் போயிட்டேன்!!”

facebook.com/karthekarna

நான் ஆறு வருஷம் சீரியஸா (ஃபர்ஸ்ட்) லவ் பண்ண புள்ளைகிட்ட லவ்லெட்டரும் ‘ஆசை’ சாக்லேட்டும் கொடுத்தப்ப இதான் கேட்டுச்சு. #யார் நீங்க ?

110p5_1528201461.jpg

facebook.com/elambarithi.k

ஆண்கள் பெண்களைக் ‘கண்ணம்மா’ என்று அன்பில் விளிப்பதுபோல, ஆண்களைக் ‘கண்ணப்பா’ என்று விளித்துவிடமுடிவதில்லை.

www.facebook.com/RedManoRed

காதலில் முதிர்ச்சியின்மை என்பது, சரியாகப் பொய் சொல்லத் தெரியாமல் மாட்டிக்கொள்வது.

https://www.vikatan.com

  • தொடங்கியவர்

"நான் பார்க்கும் இயற்கைக் காட்சிகள்... வாவ்!” - சைக்கிளில் உலகைச் சுற்றும் பெண்

 

"நான் இதை எல்லோரும் செய்ய வேண்டும் என்று சொல்லவில்லை. இது கஷ்டம்தான். நான் செய்வதை யாரையும் நான் செய்யச் சொல்வதில்லை. எனக்குப் பிடித்திருப்பதால் நான் இதைச் செய்கிறேன் அவ்வளவுதான். "

கலைந்திருக்கும் தன் முடியை, சரி செய்தபடியே தொடங்குகிறார் லேயல் வில்காக்ஸ் (Lael Wilcox). முடியைக் கோதிக் கொண்டிருந்தவர் எதையோ நினைத்து பலமாகச் சிரிக்கிறார். 

 

சைக்கிளில் உலகம் சுற்றும் பெண்

"நான் ஒரு தடவை தொடர்ச்சியாக 17 நாள்கள் குளிக்கவேயில்லை. சைக்கிள் ஓட்டிக் கொண்டேயிருந்தேன். ரொம்பப் பசி. ஒரு கடையில் நிறுத்திவிட்டு, சாப்பிட ஏதாவது வாங்க உள்ளே சென்றேன். ஹெல்மெட்டைக் கழற்றினேன். என்னைக் கடப்பவர்கள் அத்தனை பேரும் என்னை ஏதோ மாதிரி பார்த்தார்கள். பில்லிங் கவுன்டரை நெருங்கினேன். அந்தப் பெண் சீரியஸாக முகத்தை வைத்துக்கொண்டு `எந்தப் புயலிலிருந்து தப்பி வந்தீர்கள்?' என்று கேட்டார். நான் உடனே ஓடிப் போய் கண்ணாடியில் என் முகத்தைப் பார்த்தேன். என் மொத்தக் கூந்தலும் சிக்காகி, வானத்தை நோக்கி நின்று கொண்டிருந்தது. அன்று முதல் மக்கள் மத்தியில் நான் ஹெல்மெட்டைக் கழற்றுவதே கிடையாது" என்று சொல்லி விடாமல் சிரிக்கிறார். 

வில்காக்ஸ் - அலாஸ்கா

வில்காக்ஸின் காதல் கதை மிகவும் அழகானது. அமெரிக்காவின் அலாஸ்கா மாகாணத்தைச் சேர்ந்த வில்காக்ஸ், தன் கல்லூரிக் காலத்தில் நிகோலஸ் கார்மென் (Nicholas Carmen) என்பவரிடம் காதல் வயப்படுகிறார். நிகோலஸ், வில்காக்ஸிற்கு ஒரு சைக்கிளைப் பரிசளிக்கிறார். அந்த சைக்கிள் அவருக்கு மிகவும் பிடிக்கிறது. அந்த சைக்கிளில் பயணிப்பது அவருக்குப் பெரு மகிழ்ச்சியைக் கொடுக்கிறது. இருவரும் படித்து முடிக்கிறார்கள். இருவரும் சைக்கிளில் பயணிக்க வேண்டும் என்று முடிவு செய்கிறார்கள். கையில் பணமில்லை. 

அது கோடைக்காலம். இருவரும் வெவ்வேறு வேலைகளில் சேர்ந்து பணம் சேர்க்கிறார்கள். இலையுதிர் காலம் தொடங்கும் சமயத்தில் தங்கள் பயணத்தைத் தொடங்குகிறார்கள். 

"அந்த நாளை என்னால் மறக்கவே முடியாது. பல வண்ணங்களில் இலைகளும், பூக்களும் விழுந்திருந்த சாலையில் எங்கள் பயணத்தைத் தொடங்கினோம்...." என்று அந்த நாளை நினைவு கூர்கிறார் நிகோலஸ். 

நிகோலஸ் மற்றும் வில்காக்ஸ்

அவர்கள் நெடுந்தூரம் பயணித்தார்கள். பணம் தீரும்போது இருவரும் வேலைகளை எடுத்துச் செய்வார்கள். பின் அதைக் கொண்டு பயணத்தைத் தொடர்வார்கள். இப்படியாகக் கிட்டத்தட்ட 6 ஆண்டுகளில் உலகின் பெரும்பாலான பகுதிகளுக்குப் பயணித்தனர். 
சரியாக மூன்றாண்டுகளுக்கு முன்பு இஸ்ரேலில் இருக்கும் போது, ஒரு சைக்கிள் ரேஸ் குறித்து கேள்விப்படுகிறார்கள். நிகோலஸிற்கு போட்டிகளில் பங்கெடுப்பதில் ஆர்வமில்லை. ஆனால், வில்காக்ஸ் முயற்சி செய்யலாம் என்று அதில் பங்கேற்கிறார். பல வலிமையான ஆண்களுக்கு மத்தியில் அந்தப் போட்டியில் கலந்துகொண்டார். அது கடினமாக இருந்தது. அந்தக் கஷ்டம் வில்காக்ஸிற்குப் பிடித்திருந்தது. அது முதல் உலகின் மிகக் கடினமான பல சைக்கிள் போட்டிகளில் பங்கெடுத்தார். முதலில் தோல்விகளைச் சந்தித்தாலும், மிக விரைவிலேயே பல வெற்றிகளைக் குவிக்க ஆரம்பித்துவிட்டார். குறிப்பாக, நெடுந்தூர சைக்கிள் போட்டியான "ட்ரான்ஸ் ஆம்" (Trans Am) போட்டிகளில் வெற்றிகளைக் குவித்தார். 

வில்காக்ஸ் பயணங்களைப் பெருமளவு குறைத்துக்கொண்டார். போட்டிகளில் கவனம் செலுத்தினார். ஒரு வருடத்துக்குத் தோராயமாக 20 ஆயிரம் மைல்கள் சைக்கிள் ஓட்டுகிறார். கடந்த மூன்றாண்டுகளில் 60 ஆயிரம் மைல்களுக்கும் அதிகமாக சைக்கிள் ஓட்டியிருக்கிறார். ஒரு நாளைக்கு அதிகபட்சமாக 3 மணி நேரம் மட்டுமே தூங்குகிறார். மற்ற நேரம் மொத்தமும் சைக்கிள் ஓட்டுவதிலேயே கழிக்கிறார். இது உடலுக்குப் பெரும் கேட்டை ஏற்படுத்தும் என்று பல மருத்துவர்களும் அறிவுறுத்தியுள்ளனர். ஆனால், வில்காக்ஸ் அதைப் பெரிதாக எடுத்துக் கொள்வதில்லை. 

வில்காக்ஸ்

"இங்கு எவருடைய உடலும் கெடத்தான் போகின்றன. எல்லோரும் சாகத்தான் போகிறோம். யார் வாழ்க்கையும் இங்கு கஷ்டமில்லாமல் இருக்கப் போவதில்லை. எனக்கும் அப்படித்தான். ஆனால், என் சைக்கிளை ஓட்டும் போது நான் பார்க்கும் அந்தக் காட்சிகள்...அது என்னைப் பெருமகிழ்ச்சிக்கு உள்ளாக்கும். நான் இதில் வெற்றிகளைக் கணக்கில் கொள்வதில்லை. என் மகிழ்ச்சியைத்தான் கணக்கில் எடுத்துக் கொள்கிறேன்." என்று சொல்கிறார் வில்காக்ஸ். 

11 ஆண்டுகளாக காதலோடு இணைந்து பயணப்பட்ட வில்காக்ஸும், நிகோலஸும் தற்போது ஒன்றாக இல்லை. பிரிந்துவிட்டார்கள்.

சைக்கிளில் உலகம் சுற்றும் பெண்

படங்கள்: https://laelwilcox.com/

"சில மாறுபட்ட அதிசயங்களால்...அது ஏற்படுத்திய நிகழ்வுகளால் வில்காக்ஸ் என்னைவிட்டு தனியாக நீண்ட தூரம் போய்விட்டாள். அதற்கான காரணத்தை என்னால் புரிந்துகொள்ள முடியவில்லை. இந்த 11 ஆண்டு கால வாழ்க்கை... கடுமையான சாலைகளிலும், மேடு, பள்ளங்களிலும், வெயில், குளிரிலும், மழையிலும் உழன்று வாழ்ந்த எங்கள் வாழ்க்கை இன்று மொத்தமாக ஆவியாகி மறைந்துவிட்டது. எனக்குக் கொஞ்சம் வலிக்கிறது..."

 

தங்கள் பிரிவை இந்த வலியான வார்த்தைகள் மூலம் வெளிப்படுத்துகிறார் நிகோலஸ். 

https://www.vikatan.com

  • தொடங்கியவர்

வால்ட் டிஸ்னியின் டொனால்ட் டக் வரைகதை வெளிவந்தது: ஜூன் 9

 
அ-அ+

வால்ட் டிஸ்னி உலகப் புகழ் பெற்ற ஓவியர். மிக முக்கியமான கார்ட்டூன் ஓவியர். மிக்கி மௌஸ், டொனால்ட் டக், ஸில்லி சிம்பொனிஸ் போன்றவற்றை உருவாக்கியவர். திரைப்பட இயக்குனராகவும் தயாரிப்பாளராகவும் பணிபுரிந்தவர். வால்ட் டிஸ்னி தயாரிப்பு நிறுவத்தின் இணை-நிறுவனரான டிஸ்னி(தன் அண்ணன் ராய்.ஒ.டிஸ்னியுடன்) உலகின் புகழ்பெற்ற திரைப்பட தயாரிப்பாளர் ஆவார்.

 
 
 
 
வால்ட் டிஸ்னியின் டொனால்ட் டக் வரைகதை வெளிவந்தது: ஜூன் 9
 
வால்ட் டிஸ்னி உலகப் புகழ் பெற்ற ஓவியர். மிக முக்கியமான கார்ட்டூன் ஓவியர். மிக்கி மௌஸ், டொனால்ட் டக், ஸில்லி சிம்பொனிஸ் போன்றவற்றை உருவாக்கியவர். திரைப்பட இயக்குனராகவும் தயாரிப்பாளராகவும் பணிபுரிந்தவர். வால்ட் டிஸ்னி தயாரிப்பு நிறுவத்தின் இணை-நிறுவனரான டிஸ்னி(தன் அண்ணன் ராய்.ஒ.டிஸ்னியுடன்) உலகின் புகழ்பெற்ற திரைப்பட தயாரிப்பாளர் ஆவார்.

இருபதாவது நூற்றாண்டின் கேளிக்கை உலகில் தன் தாக்கதிர்காக பெயர்ப்பெற்றவர் டிஸ்னி. மேலும் பல வணிக நோக்குடைய பூங்கா வடிவமைப்பு மற்றும் அசைப்படம் எடுப்பதில் வல்லுனரும் கூட. அவரும் அவரின் பணியாளர்களும் இணைந்து உருவாக்கியது தான் மிக்கி மௌஸ் போன்ற கற்பனை கதாப்பாத்திரங்கள். இவர் அய்பத்தி ஒன்பது ஆஸ்கார் விருதுக்கான நியமனங்களும் மற்றும் இருபத்தாறு ஆஸ்கார் வென்றுள்ளார்,இதில் ஒரே ஆண்டில் நான்கு வென்றது ஓர் உலகசாதனை. இதனால் இவரே மற்றவரை விட அதிக நியமனங்களும்,விருதுகளும் பெற்றார். ஏழு எம்மி விருதுகளும் வென்றார். இவர் தான் ஐக்கிய அமெரிக்க நாடுகளில் அமைந்துள்ள டிஸ்னிலாந்து மற்றும் வால்ட் டிஸ்னி உலக உல்லாசநகரம் பொழுதுபோக்கு பூங்காக்கள்,ஜப்பான்,பிரான்ஸ் மற்றும் ஹாங்காங் போன்ற பூங்காக்களின் பெயர்க்காரணியும் ஆவார்.

புளோரிடாவில் தன் கனவு திட்டபணியான வால்ட் டிஸ்னி உலக உல்லாசநகரம் திறப்புக்கு சில வருடங்கள் முன்னரே 1966-ஆம் ஆண்டு டிசம்பர் பதினைந்தாம் தேதி டிஸ்னி நுரையீரல் புற்றுநோயால் இறந்தார்.

https://www.maalaimalar.com

  • தொடங்கியவர்

 

ஒரு பெண்கூட இல்லாத பணக்கார விளையாட்டு வீரர்கள் பட்டியல்

உலகிலேயே அதிகமாக சம்பாதிக்கும் விளையாட்டு வீரர்கள் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. அதில் பெண்கள் ஒருவர் பெயர்கூட இல்லை.

  • தொடங்கியவர்

காதலுக்கு மரியாதை!

 

 
8chgowLove%20sculpture

ஸ்பானிய மொழியில் அமைந்திருக்கும் காதல் சிற்பம்

8CHGOWLOVE1

பிலடெல்பியாவின் காதல் பூங்காவில் அமைந்திருக்கும் காதல் சிற்பம்.   -  AP

8chgowIndianapolis

இண்டியானாபோலிஸ் நகரில் 1970-ல் முதன் முதலில் வடிமைக்கப்பட்ட காதல் சிற்பம்

8chgowLove%20sculpture

ஸ்பானிய மொழியில் அமைந்திருக்கும் காதல் சிற்பம்

8CHGOWLOVE1

பிலடெல்பியாவின் காதல் பூங்காவில் அமைந்திருக்கும் காதல் சிற்பம்.   -  AP

உலகளவில் புகழ்பெற்ற ‘காதல்’ (Love) சிற்பங்களை உருவாக்கியவர் ராபர்ட் இண்டியானா. அமெரிக்காவைச் சேர்ந்த இவர் இரண்டு வாரங்களுக்கு முன்னால் காலமானார். தனது மரணத்துக்குப் பிறகு தனது வீடும் ஸ்டூடியோவும் அருங்காட்சியகமாக மாற வேண்டும் என்பது அவரது ஆசை. அந்த ஆசைக்கு தற்போது வடிவம் கொடுத்துகொண்டிருக்கிறார்கள். விரைவில் அவரது வீடும் ஸ்டூடியோவும் அருங்காட்சியகமாக மாற இருக்கின்றன.

 

1965-ம் ஆண்டு, ‘LOVE’ என்ற வார்த்தையை வைத்து ‘மியூசியம் ஆஃப் மாடர்ன் ஆர்ட்ஸ்’ அருங்காட்சியகத்துக்கு ஒரு கிறிஸ்துமஸ் வாழ்த்து அட்டையை வடிவமைத்தார் ராபர்ட். அவரது இந்தப் கலைப் படைப்புக்கு கிடைத்த வரவேற்பையடுத்து, 1970-களில் ‘LOVE’ சிற்பங்களை ஒரு கலைத் தொடராக வடிவமைக்கத் தொடங்கினார் ராபர்ட். முதல் கட்டமாக அமெரிக்காவின் பிரபல நகரங்களில் வடிவமைக்கப்பட்ட இந்த ‘LOVE’ சிற்பம், உலகின் பிரபல நகரங்களிலும் பின்னர் வடிவமைக்கட்டது.

8CHGOWROBERTINDIANA

சிற்பக் கலைஞர் ராபர்ட் இண்டியானா   -  NYT

ஆங்கிலத்துடன் ஹீப்ரு, இத்தாலிய, ஸ்பானிய மொழிகளிலும் இந்தச் சிற்பம் வடிவமைக்கப்பட்டிருக்கிறது. ஐரோப்பா, ஆசியா, அமெரிக்காவின் பிரபல நகரங்களில் வண்ணமயமாக இந்தக் காதல் சிற்பங்கள் பரவியிருக்கின்றன.

1950-களின் இறுதியில் பிரிட்டனிலும் அமெரிக்காவிலும் வெகுஜனக் கலைகளைப் பிரதிபலிப்பதற்காக உருவான ‘பாப் ஆர்ட்’ இயக்கத்தின் (Pop Art Movement) அங்கமாக இந்தக் காதல் சிற்பம் அமைந்திருக்கிறது. அமெரிக்காவின் ‘பாப் ஆர்ட்’ இயக்கத்தின் பிரபல கலைஞர்களின் ஒருவராக உலகம் முழுவதும் அறியப்படுகிறார் ராபர்ட் இண்டியானா. அவரது வீடு, தற்போது அமெரிக்காவின் ‘வரலாற்றுச் சிறப்புமிக்க இடங்களுக்கான தேசிய பதிவி’லும் இடம்பெற்றிருக்கிறது.

 

http://tamil.thehindu.com

Edited by நவீனன்

  • தொடங்கியவர்

கலர் கலராக மின்னும் வானவில் மலைத்தொடர்... குவியும் சுற்றுலாப் பயணிகள்!

 
 

அதிசயம் என்பது தண்ணீரில் நடப்பது கிடையாது, அதிசயம் என்பது பசுமையான பூமியில் நடப்பது, தற்போதைய தருணத்தில் ஆழமான உணர்வுகளுடன் வாழ வேண்டும்

- திஷ் நாட் ஹான்(Thich Nhat Hanh)

 

எனும் புத்த துறவியின் வார்த்தைகளின்படி பசுமையான பூமியில் நடப்பதுதான் தற்போது அதிசயமாக இருக்கிறது. தொடர்ந்து பூமியை மாசுபடுத்திக்கோண்டே சுத்தமான காற்றைத் தேடியும் பசுமையான பூமியைத் தேடியும் அலைந்துகொண்டேயிருக்கிறோம். உலகமயமாக்கலுக்குப் பின் அழுத்தம் நிறைந்த வாழ்க்கையிலிருந்து சற்று ஆசுவாசப்படுத்திக் கொள்ள மனிதன் நாடுவது இயற்கையைத்தான். இயற்கையின் அதிசயங்களைத் தேடிக் கண்டு வியந்து நெகிழ்கிறான். பூமி தோன்றி பல கோடி ஆண்டுகள் ஆன பின்னும் இயற்கையின் பல்வேறு ரகசியங்களைப் புரிந்து கொள்ளாமல் தெரிந்து கொள்ளாமல்தானிருக்கிறோம். இயற்கையாகவே அவையெல்லாம் வெளிப்படும்போது இயற்கையில் கரைந்து போவதை விட ஆன்ம சுகம் வேறெதுவும் இருப்பதில்லை. இயற்கையில் ஒரு மலைத்தொடரே வானவில்லாகக் காட்சியளிக்கிறது. வானவில் மலைத்தொடர்(Rainbow Mountains) என்றே அழைக்கப்படும் அந்தப் பகுதி பல்வேறு சுற்றுலாப் பயணிகளால் அதிகம் விரும்பப்படும் பகுதியாக மாறி வருகிறது.

உலகின் முக்கியமான மலைத்தொடர்களில் ஒன்று ஆண்டிஸ் மலைத்தொடர்(Andes Mountains). தென் அமெரிக்க கண்டத்தில் காணப்படும் இந்த மலைத்தொடரின் ஒரு பகுதியில்தான் இந்த வானவில் வண்ண மலைத்தொடர்கள் காணப்படுகின்றன. பெருவின் அசுங்கேட் மலைப்பகுதியில் (Ausangate Mountain) இவை அமைந்துள்ளன. 2013 வரை மற்ற மலைகளைப் போலத்தான் இதுவும் காணப்பட்டது. அதுவரை இதன்மேல் பனி படர்ந்து இருந்ததாக அங்குள்ள உள்ளூர்வாசிகள் சொல்கின்றனர். மொத்தமாகப் பனி உருகியதால் இந்த வானவில் வண்ணப் பாறைகள் உலகிற்குத் தெரிய வந்துள்ளன. இந்தப் புகைப்படங்களில் பார்ப்பதற்கு மலையை போட்டோஷாப் செய்தது போலத் தோன்றும் அளவிற்குத் துல்லியமான அழகுடனான வண்ணத்தில் இருக்கின்றன. இந்த மலையானது எரிமலைஸ் சங்கிலித் தொடருடனும் தென் அமெரிக்க மற்றும் நாஸ்கா டெக்டானிக் தட்டுகளின் விளிம்பிலும் அமைந்திருப்பது அப்பகுதியை அதிக கனிம வளம் உடையப் பகுதியாக வைத்திருக்கிறது. இந்த மலைத்தொடர் முழுவதும் அரிதான கனிமங்கள் அதிகமாகக் காணப்படுவதுதான் இந்த வானவில் வண்ணத்திற்குக் காரணம் என்கின்றனர். ஒவ்வொரு வண்ணத்திற்கும் ஒவ்வொரு கனிமம் காரணமாக உள்ளது. சிவப்பு நிறத்திற்கு இரும்பு ஆக்சைடு துருவும்(Iron Oxide rust) ஆரஞ்ச், மஞ்சள் நிறங்களுக்கு இரும்பு சல்பைடு( Iron Sulphide) வும் நீலபச்சை வண்ணத்திற்கு குளோரைடும்(Chloite) காரணமாக இருக்கின்றன. இப்படி மலையின் மேற்பரப்பில் வண்ணங்கள் அனைத்தும் ஒன்றின் பின் ஒன்றாக வரி வரியாக அமைந்துள்ளன. இதே வரம்பில் அருகில் உள்ள மலைகள் எப்போதும் போல வண்ணங்களற்று சாதரணமாகவே காணப்படுகின்றன. அவற்றிலும் கனிமங்கள் அதிகமாகக் காணப்படுவதால் இதேபோன்ற வண்ணங்கள் மேற்புறத்திற்கு அடியில் இருக்க வாய்ப்புள்ளது என்றும் சொல்கின்றனர். வானவின் மலைத்தொடர் கூட தொடர்ச்சியான காலநிலை மற்றும் மலையின் மேற்பரப்பு அரிப்பு ஆகியவற்றின் காரணமாக உட்புறத்தில் இருந்த வண்ணங்கள் வெளிப்பட்டிருக்கின்றன.

வானவில் மலைத்தொடர்

பார்த்தவுடன் மனதைப் பறிகொடுக்கும் அளவுக்கு அழகாக இருக்கும் இந்த மலைக்கு வரும் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே வருகிறது. மலையின் அருகில் இருக்கும் பகுதியின் மக்கள் சுற்றுலா வழிகாட்டிகளாக இருக்கின்றனர். இதனால் அப்பகுதியின் பொருளாதாரம் குறுகிய காலத்திலேயே உயர்ந்துள்ளது. 5௦௦ உள்ளுர்வாசிகள் தங்களது வேலையை விட்டுவிட்டு சுற்றுலா வழிகாட்டியாக மாறிவிட்டனர். நாளொன்றுக்கு 1௦௦௦ சுற்றுலாப் பயணிகளுக்கு மேல் இங்கு வருகின்றனர். ஒருவரிடம் இருந்து 3 டாலர் மட்டுமே கட்டணமாக பெறுகின்றனர். ஒட்டுமொத்தமாக ஆண்டுக்கு 4,௦௦,௦௦௦ டாலர்கள் இந்த மலையால் வருவாய் வருகிறது

வானவில் மலைத்தொடர் கடல்மட்டத்திலிருந்து 5௦௦௦ மீட்டருக்கும் மேல் உயரத்தில் அமைந்துள்ளது. கீழிருந்து மேலே துணையில்லாமல் ஏற முடியாது. பாதைத் தடத்தை மறந்துவிட்டால் ஆபத்தான பாதைக்கு செல்லக்கூட வாய்ப்புள்ளது. அங்குள்ள உள்ளுர்வாசிகளும் கடந்த ஐந்தாண்டுகளாகத்தான் மலையேறுகின்றனர். இங்கிருந்து 1௦௦கிமீ தொலைவில் உள்ள குஸ்கோ( Cusco) நகரில்தான் அனைத்து சுற்றுலாப் பயணிகளும் தங்குகின்றனர். அங்கிருந்து இந்த மலைப்பகுதிக்கு வழிகாட்டி உதவியில்லாமல் வர முடியாது. சுற்றுச்சூழல் செயற்பாட்டாளர்கள் இதனை வேறு பார்வையில் எச்சரிக்கின்றனர். அளவுக்கு அதிகமான சுற்றுலாப் பயணிகள் வருவதால் மலையின் சூழல் பாதிக்கப்படும். கண்முன்னே சாட்சியாக குறைந்த காலத்தில் அதிகமான மக்கள் மலையேறியதில் 4கிமீக்கும் மேற்பட்ட மலைப்பாதையானது முற்றிலும் அழிக்கப்பட்டுவிட்டது. அதுமட்டுமில்லாமல் அருகில் இருக்கும் காடுகளுக்கும் மச்சு பிச்சுவிற்கும் கூடப் பாதிப்பு ஏற்படலாம்.

வானவில் மலைத்தொடர்

சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கையைச் சமாளிக்கும் அளவிற்கு போதிய சுற்றுலா வழிகாட்டிகள் இங்கு இல்லை. மேலும் ஏற்கெனவே இருக்கும் வழிகாட்டிகளும் அங்குள்ள உள்ளூர்வாசிகள். அவர்களுக்கு முறையான முதலுதவியோ, சுற்றுலாப் பயணிகளை எப்படி ஒழுங்காகக் கூட்டிச்சொல்வது என்பதோ தெரிவதில்லை.கனிம வளங்கள் அதிகமாகக் காணப்படுவதால் அதனை வெட்டியெடுத்து மலையை நாசமாக்கப் பெருமுதலாளிகளும் இந்த மலையைக் குறி வைத்துள்ளனர். தற்போதே இரண்டு, மூன்று பன்னாட்டு நிறுவனங்கள் கனிமம் எடுக்க அனுமதி வாங்கியுள்ளன. அப்பகுதியில் இருக்கும் பழங்குடியினர் இந்த மலையை வழிபடுகின்றனர். அவர்களது வரலாற்றில் இந்த மலைக்கு அதிகம் முக்கியத்துவம் இருக்கிறது. ஆண்டுக்கொருமுறை ஸ்டார் ஸ்னோ விழாவிற்காக ஆயிரக்கணக்கான மக்கள் இம்மலைக்கு வரும் பழக்கம் உள்ளது. தேனியின் பொட்டிபுரமாக இருக்கலாம், பெருவின் குஸ்கொவாக இருக்கலாம். பூமியின் எப்பகுதியானாலும் மண்ணின் பூர்வகுடிகள் அப்பகுதியின் இயற்கையோடு மிக நெருங்கிய தொடர்பைக் கொண்டிருக்கிறார்கள். அதிகாரமும், அரசும்தான் அதனைக் கண்டுகொள்வதே இல்லை.        

https://www.vikatan.com/

  • தொடங்கியவர்

வாட்ஸ் அப் கலக்கல்: டோராவுக்கு அஞ்சலி

 

 
Untitled-1

சென்ற வார அலப்பறை

சில மாதங்களுக்கு முன்பு ஷின் ஷானை வைத்து ‘அமைதி.. அமைதி.. அமைதியோ அமைதி...’ என்று மீம்ஸ் போட்ட நெட்டிசன்கள், சென்ற வாரம் ‘டோரா, புஜ்ஜி, குள்ள நரி’யை வைத்து மீம்ஸ்கள் போட்டு சமூக ஊடங்களில் உலவவிட்டனர். டோராவையும் புஜ்ஜியையும் குள்ள நரி தாக்கியதால் மருத்துவ மனையில் அவர்கள் சேர்க்கப்பட்டிருப்பதாகவும், டோரா இறந்துவிட்டதாகவும், டோரா மரணத்துக்கு தலைவர்கள் அஞ்சலி எனவும், குள்ள நரியைத் தேடும் போலீஸ் என்றும் வரிசைக்கட்டி மீம்ஸ்கள் வந்தன. மீம்ஸ் ‘கிரியேட்டிவிட்டி’க்கு பற்றாக்குறையோ என்னவோ!

     
 
mem%206
mem%207
mem%208
mem%209
mem%204
mem%203
meme11
mem%202
mem%2011
 
mem%201
 
meme22
  • தொடங்கியவர்

மாட்டு வண்டியில் மாப்பிள்ளை ஊர்வலம்... நாட்டு மாடுகள், பாரம்பர்யத்தை காக்கும் வேலா குமாரசாமி!

 
 

மாப்பிள்ளை ஊர்வலம், பெண் அழைப்பு போன்ற சடங்குகளுக்குப் புகை கக்கும் அலங்கார வாகனங்களைப் பயன்படுத்தி மனதுக்கும் சூழலுக்கும் ஒவ்வாமையையே ஏற்படுத்திக்கொண்டிருக்கிறோம். ஈரோடு மாவட்டத்தைச் சேர்ந்த வேலா குமாரசாமி என்பவர் ஸ்பீக்கர்கள், கலர் லைட்டிங், செல்போனுக்கு சார்ஜ் போட பிளக் பாயின்ட், வண்டிக்குள் இருபுறங்களிலும் சாய்ந்து அமர மெத்தை அமைப்பு உள்ளிட்ட வசதிகளோடுகூடிய மாட்டுவண்டியில் மாப்பிள்ளை ஊர்வலம், பெண் அழைப்பு உள்ளிட்ட சடங்குகளை நடத்தும் தொழிலைச் செய்து, தமிழ்ப் பாரம்பர்யத்தைக் காத்துவருகிறார்.

மாட்டுவண்டி

 

கரூர் மாவட்டம் அரவக்குறிச்சியில் சமீபத்தில் நடைபெற்ற ஒரு திருமண நிகழ்வில் மாப்பிள்ளையை தனது மாட்டுவண்டியில் ஏற்றிக்கொண்டு ஊர்வலம் வந்தார். அங்கே இருந்தவர்கள் அனைவரும் அதை வியந்து பார்த்தனர். நிகழ்ச்சி முடிந்ததும் வேலா குமாரசாமியிடம் பேசினோம்... மாட்டுவண்டி

"எனக்குச் சொந்த ஊர் அரச்சலூர் பக்கத்துல கண்ணம்மாள்புரம். சொந்தமா பத்து ஏக்கர் நிலம் இருக்கு. அதுல சோளம், கம்பு, நெல், காய்கறில்லாம் பயிர்செய்றேன். எனக்கு இப்போ 45 வயசு. 20 வருஷமா நாட்டுமாடுகளை வளர்க்கிறேன். காங்கேயம் காளைகள், பொலிக்காளைகள், பூச்சிக்காளைகள்னு பல நாட்டு ரகங்களை வளர்க்கிறேன்.

என்கிட்ட இப்போ இருபதுக்கும் மேற்பட்ட மாடுகள் இருக்கு. அதோடு, காங்கேயம் பசுக்களுக்கு காளைகளைக்கொண்டு இனவிருத்தியும் செய்றேன். பாரம்பர்ய மாடுகளை காபந்துபண்ணணும், அதை அழியவிடக் கூடாதுங்கிற கொள்கையை 100 சதவிகிதம் கடைப்பிடிக்கிறேன். அதோடு, ரேக்ளாவண்டிகள், மாட்டுவண்டிகளும் வெச்சிருக்கேன். காங்கேயம் காளைகளைக்கொண்டு, தமிழகம் முழுக்க நடக்கும் பல ரேக்ளா ரேஸ்கள்ல கலந்துக்கிட்டு, பல பரிசுகளை வாங்கியிருக்கேன். 

கடந்த 2010-ல் இருந்து தமிழகம் முழுக்க நடக்கும் நாட்டுமாடுகள் ஷோக்களில் கலந்துகிட்டு, அழகு மாடுகளுக்கான விருதை பலமுறை வாங்கியிருக்கேன். காங்கேயம், ஈரோடு, வெள்ளக்கோயில், திருப்பூர்னு பல இடங்கள்ல என் மாடுகள் பரிசு வாங்கியிருக்கு. பொள்ளாச்சிக்குப் பக்கத்துல உள்ள சமத்தூர் ஜமீன் நடத்துற `கால்நடைத் திருவிழா'வுல தொடர்ந்து நாலு வருஷம் சிறந்த பூச்சிக்காளைக்கான விருதை வாங்கியிருக்கேன். போன வருஷம் நடிகர் கார்த்திக் கையால் அந்த விருதை வாங்கினேன்.

விருது

Photo Courtesy: Studio KCT

கடந்த ரெண்டு வருஷங்களுக்கு முன்னாடி அந்தியூர் சந்தையில 30,000 ரூபாய் கொடுத்து பழைய சவாரி மாட்டுவண்டி ஒண்ணு வாங்கினேன். அதை சொந்தப் பயன்பாட்டுக்கு வெச்சுக்க நினைச்சேன். வீட்டுல கார் வாங்கச் சொன்னாங்க. அதுக்கு மாற்றாவும் நம்ம பாரம்பர்யத்தை நிலைநாட்டவும், வெளியூர்ல நடக்கும் நல்லது கெட்டதுகளுக்கு இந்த மாட்டுவண்டியில போய் வரவும் ஆரம்பிச்சோம். இந்த வண்டிக்கு, ரெண்டரை லட்சம் ரூபாய்க்கு வாங்கிய காங்கேயம் காளைகளைப் பயன்படுத்தினேன். இதைப் பார்த்த என் உறவினர் ஒருவர், தனது வீட்டு திருமணத்துக்கு மாப்பிள்ளை அழைப்பை இந்த வண்டியில நடத்த கேட்டார்.

நானும் வண்டியைக் கொடுத்தேன். அதுக்கு செம ரெஸ்பான்ஸ். அதைப் பார்த்ததும், 'இதை ஏன் நாம ஒரு தொழிலா செய்யக் கூடாது?'னு தோணுச்சு. உடனே, மேற்கொண்டு ஒரு லட்சம் ரூபாய் செலவுபண்ணி இந்த வண்டியை அலங்காரப்படுத்தினேன். கலர்ஃபுல் லைட்டுகள், வண்டிக்குள் அமர்வதற்கும் இருபுறமும் சாய்ந்துகொள்வதற்கும் வசதியா மெத்தை அமைப்புகள், ஸ்பீக்கர்கள், செல்போன் சார்ஜ் போட பிளக் பாயின்ட்னு வண்டியை இழையோ இழைன்னு இழைச்சேன். ரெண்டு வருஷம் ஆச்சு. மாசத்துக்கு நாலஞ்சு சவாரி கிடைக்குது. பெரும்பாலும் நானே ஓட்டுவேன். 24 மணி நேரம், 12 மணி நேரம், 3 மணி நேரம்னு சவாரி எடுப்பாங்க. குறைந்த சார்ஜ்தான் வாங்குறேன்.

மாட்டுவண்டி

திருமண வீடுகள்ல மாப்பிள்ளை ஊர்வலம், பெண் அழைப்பு, திருமணம் முடிஞ்சு மணமக்களை ஊர் வரைக்கும் அழைத்துச் செல்ல, பெண் சடங்கு, சீர்வரிசை கொண்டு போக, தேர்தல், பொது நிகழ்ச்சிகள்னு எல்லா நிகழ்வுகளுக்கும் இந்த வண்டியை எடுக்குறாங்க. இன்னும் பலர், இந்த வண்டியை மாடுகளோடு திருமண மண்டபத்துல சும்மா நிறுத்தி வெச்சிருப்பாங்க. பாரம்பர்ய முறையில திருமணம் செய்றவங்க இதை விரும்பி செய்வாங்க. அதோடு, திருமண வீடுகளுக்கு வர்றவங்க இந்த வண்டியையும் காங்கேயம் காளைகளையும் பார்த்து ஆர்வமாகி, இதுக்கு முன்னாடி நின்னு செல்ஃபி எடுத்துக்குவாங்க.

மாட்டுவண்டி 

இன்னும் சில இடங்கள்ல, என்னை இறக்கிவிட்டுட்டு பொண்ணை மட்டும் உட்காரவெச்சு மாப்பிள்ளையே ஓட்டிக்கிட்டுப் போவார். அப்போ, வண்டியில் உள்ள ஸ்பீக்கரில், 'வண்டி மாடு எட்டுவெச்சு முன்னே போவுதம்மா... வாக்கப்பட்ட பொண்ணு மனம் பின்னே போகுதம்மா...'ங்கிற மாதிரியான டைமிங் பாடல்களை ஒலிக்கவிட்டு அந்த மாப்பிள்ளை - பெண்ணுக்கு புது அனுபவத்தை ஏற்படுத்துவோம்.  திருமணம் முடிஞ்சதும், `திருமணத்துக்கு வந்தவர்கள்ல முக்கால்வாசி பேர் `இந்தப் பாரம்பர்ய வண்டியில் பொண்ணும் மாப்பிள்ளையும் வந்த நிகழ்வைத்தான் மெச்சிப் பேசினாங்க'னு திருமண வீட்டார் சொல்வாங்க. பெருமையா இருக்கும். இன்னும் பலர், திருமண வீடுகள்ல என் வண்டியையும் காளைகளையும் பார்த்துட்டு, 'நாங்களும் இதே மாதிரி வண்டி வாங்கி, நாட்டுக்காளைகளை வண்டியில பூட்டி, நல்லது கெட்டதுகளுக்குப் போய் வரணும்'னு சொல்லிட்டுப் போவாங்க. 

மாட்டுவண்டி

ஆமாம், என்னதான் நாம மாடர்னா மாறினாலும், மாப்பிள்ளைக்கு வேட்டியும், பெண்ணுக்குப் புடவையும்தானே கட்டுறோம். பெண் கழுத்துல தாலிதானே கட்டவைக்குறோம். திருமணம் உள்ளிட்ட சுபநிகழ்வுகள்ல நமது பாரம்பர்யச் சடங்குகளைத்தானே செய்றோம். ஆனா, நமது முன்னோர்கள் பயன்படுத்திய மாட்டுவண்டிகளைத் தவிர்த்துட்டு, இன்னிக்கு கார், வேன்னு இயற்கைக்குக் கேடு விளைவிக்கிற வாகனங்களைப் பயன்படுத்துகிறோம்.

 

இன்றைய இளைய தலைமுறை, நாட்டுமாடுகளை காபந்து பண்ண ஆர்வப்படுது. அவர்களை இன்னும் ஊக்கப்படுத்ததான், இதுமாதியான நாட்டுமாடுகளை வெச்சு பாரம்பர்ய மாட்டுவண்டியில நமது சுப நிகழ்வுகளை நடத்தி விழிப்புஉணர்வு ஏற்படுத்திக்கிட்டிருக்கேன். நமது பாரம்பர்ய விஷயங்களும், கலாசாரத் தொன்மங்களும் உலக நாடுகளுக்கே சவால்விடக்கூடியவை. ஆனா, அந்தப் பாரம்பர்யங்களை அழிச்சுட்டு, வெளிநாட்டு மோகத்துல திரியுறோம். நம்ம பாரம்பர்யத்தை அழியவிடக் கூடாதுங்கிறதை ஒவ்வொருத்தரும் உணரவேண்டிய தருணம் இது. அந்த உணர்வை ஏற்படுத்த என்னாலான சின்ன முயற்சிதான் இந்த மாட்டுவண்டியும் காங்கேயம் காளைகளும்" என்றார் தமிழர்களுக்கே உரிய தன்னடக்கத்துடன்.

https://www.vikatan.com

  • தொடங்கியவர்

 

உலகக்கோப்பை கால்பந்து: 10 வியப்பூட்டும் தகவல்கள்

 
  • தொடங்கியவர்

'உழைப்பு' - பிபிசி நேயர்களின் சிறந்த புகைப்படங்கள் #BBCTamilPhotoContest

'உழைப்பு' என்பதை மையக்கருவாகக் கொண்டு பிபிசி தமிழ் நடத்திய 27ஆவது வார புகைப்படப் போட்டியில் தேர்வு செய்யப்பட்ட பிபிசி நேயர்களின் சிறந்த புகைப்படங்கள்.

ஜெரோம் கிளிண்டன், வேலூர்

 

ஜெரோம் கிளிண்டன், வேலூர்

கந்தவேலு, புதுச்சேரி

 

கந்தவேலு, புதுச்சேரி

நரேன் கிருஷ்ணா, திருவாரூர்

 

நரேன் கிருஷ்ணா, திருவாரூர்

அருள் முருகன், சென்னை

 

அருள் முருகன், சென்னை

அசோக் தமிழ், தாராபுரம் அசோக் தமிழ், தாராபுரம் இக்வான் அமீர், சென்னை

 

இக்வான் அமீர், சென்னை

நவீன் குமார்

 

நவீன் குமார்

ராகவ் பிரசன்னா, நங்கநல்லூர்

ராகவ் பிரசன்னா, நங்கநல்லூர்

அருண் கிஷோர்

 

அருண் கிஷோர்

வள்ளி சௌத்ரி, கோவில்பட்டி

 

வள்ளி சௌத்ரி, கோவில்பட்டி

பீர் முஹம்மது, காயல்பட்டினம்

 

பீர் முஹம்மது, காயல்பட்டினம்

 

https://www.bbc.com

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.