Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இளமை புதுமை பல்சுவை

Featured Replies

  • தொடங்கியவர்

14 நாள்கள்

 
கடந்த இரண்டு வாரங்களில் பெண்கள் உலகில் நிகழ்ந்தவற்றின் தொகுப்பு... பெண்கள் உலகம் நிவேதிதா லூயிஸ்

 

பெண்ணின் மரணத்தால் மாறும் சட்டம்!

திக அளவில் கத்தோலிக்க கிறிஸ்தவர்கள் வாழும் அயர்லாந்தில், தாயின் உயிருக்கு ஆபத்து ஏற்பட்டாலொழிய கருக்கலைப்பு செய்து கொள்ள பெண்களுக்கு உரிமை இல்லை. ஆபத்தான கருச்சிதைவு, வன்புணர்வு போன்ற காரணங்களால்கூட கருக்கலைப்பு செய்துகொள்ள அங்குள்ள பெண்களுக்கு அனுமதி இல்லை.

p18a_1528699831.jpg

இப்போது இதில் மாபெரும் மாற்றம்.காரணம்... இந்திய வம்சாவளி பல் மருத்துவர் சவீதா ஹாலப்பனவர்.

2012-ல், நான்கு மாத கர்ப்பிணியான சவீதாவுக்கு அயர்லாந்து நாட்டில் கருச்சிதைவு நிகழ, பலமுறை கோரியும் கருக்கலைப்பு செய்துகொள்ள அனுமதி மறுக்கப்பட்டது. துரதிர்ஷ்டவசமாக `செப்டிசிமியா' என்ற நோய்த்தொற்று ஏற்பட்டு, 31 வயதில் அகால மரணம் அடைந்தார் சவீதா. இவரின் மரணத்துக்குப் பின் கருக்கலைப்புத் தடை சட்டத்தை ரத்து செய்யக் கோரி அயர்லாந்து நாட்டில் பெண்கள் போராட்டங்களில் ஈடுபடத் தொடங்கினர். பிரதமரும் நாடாளுமன்றமும் சட்டத்தை நீக்க பொது வாக்கெடுப்புக்கு இசைவு தர, அதில் மூன்றுக்கு இரண்டு பங்கு வாக்குகள் பெற்றதால், கருக்கலைப்புக்கு எதிரான சட்ட வரைவை நீக்கும் நடவடிக்கையில் இறங்கியுள்ளது அயர்லாந்து குடியரசு.

பெண் உடல் மீதான உரிமை அவளுக்கே!


பிஞ்சுக் குழந்தைகள் நலம்நாடும் பிரியங்கா சோப்ரா!

.நா சபையின் யுனிசெஃப் குழந்தைகள் நல்லெண்ணத் தூதராக நியமிக்கப்பட்ட நடிகை பிரியங்கா சோப்ரா சமீபத்தில் மியான்மரின் ரோஹிங்கியா முஸ்லிம் குழந்தைகள் வசிக்கும் காக்ஸ் பஜார் அகதிகள் முகாமைப் பார்வையிட்டார். பங்களாதேஷ் தலைநகர் டாக்காவில் இருக்கும் இந்த முகாமில் மிகக் கடினமான சூழலில் வசிக்கும் குழந்தைகளைச் சந்தித்த பிரியங்கா, ஏழு லட்சம் ரோஹிங்கியா அகதிகளில் 60% பேர் குழந்தைகள் என்றும் அவர்கள் வாழும் சூழல் மிகவும் மோசமாக இருப்பதாகவும் படங்களுடன் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு செய்தார். இந்தக் குழந்தைகளில் பலர் பள்ளிக்குச் செல்வது இதுவே முதன்முறை என்கிற அவர், மருத்துவ வசதிகளையும் பார்வையிட்டார்.

p18b_1528699843.jpg

`உணவு, இருப்பிடம் இல்லாமல் தவிக்கும் இவர்கள் கல்வி, தங்க ஓரிடம் கைக்கெட்டினாலும், தொடர் மழையால் பாதிக்கப்பட்டுள்ளனர். ஒரு தலைமுறையே தன் எதிர்காலம் என்னவென்று தெரியாமல் உள்ளது. சிரிப்பையும் தாண்டி அவர்கள் கண்களில் வெறுமையே காண்கிறேன்’ என்று உருக்கமாக எழுதியிருக்கிறார்.

இதற்கிடையே, பா.ஜ.க எம்.பி வினய் கத்தியார், `ரோஹிங்கியா அகதிகளைப் பிரியங்கா சந்தித்தது தவறு. அவர்களுடன் தொடர்புகொண்ட எவருக்கும் இந்தியாவில் இடம் இல்லை' என்று காட்டமாகக் கருத்து கூறியிருக்கிறார். பிரியங்காவோ இந்தக் கருத்துக்குப் பதில் எதுவும் கூறாமல் அந்தக் குழந்தைகளுக்கு உதவிகள் கிடைக்கச் செய்யும் பணிகளில் கவனம் செலுத்திக்கொண்டிருக்கிறார்.

லவ் யூ... பிரியங்கா!


தன்னம்பிக்கை விதைக்கும் டென்னிஸ் தாரகை!

டந்த 2017-ம் ஆண்டு ஜனவரி மாதம் நடைபெற்ற ஆஸ்திரேலிய ஓப்பன் டென்னிஸ் போட்டிகளில் மகளிர் ஒற்றையர் பட்டத்தைத் தட்டிச் சென்றபோதே, தான் கருவுற்று இருப்பதாக அறிவித்தார் முதல் நிலை ஆட்டக்காரரான செரீனா வில்லியம்ஸ். தற்காலிகமாக டென்னிஸ் விளையாடுவதிலிருந்து ஓய்வும் பெற்றார். கடந்த செப்டம்பர் மாதம் அழகிய பெண் குழந்தையைப் பெற்றெடுத்த செரீனா, மே மாத இறுதியில் தொடங்கிய இந்த ஆண்டின் பிரெஞ்சு ஓப்பன் கிராண்ட்ஸ்லாம் போட்டியின் முதல் சுற்றில் பங்கேற்றார். ரத்தம் கட்டுவதைத் தவிர்ப்பதற்கென சிறப்பாக வடிவமைக்கப்பட்ட கறுப்பு நிற `கேட்-சூட்’ ஆடை அணிந்து, கிரிஸ்டினா பிலிஸ்கோவாவை எதிர்த்து விளையாடி வென்றார். வெற்றிக்குப் பின் ஊடகங்களுக்குப் பேட்டி அளித்த செரீனா, தான் போட்டியில் விளையாடுவதை, பெண்களையும் குழந்தைகளையும் ஊக்கப்படுத்தக் கிடைத்த ஒரு சந்தர்ப்பமாகவே கருதுவதாகத் தெரிவித்தார். `பிளாக் பாந்தர்’ திரைப்படத்தில் வரும் கற்பனை நாடான வகாண்டாவால் ஈர்க்கப்பட்டு வடிவமைக்கப்பட்ட `கேட்-சூட்’டை அணிந்ததாகத் தெரிவித்த செரீனா, ஒரு போர் வீராங்கனையாகவே தன்னைக் கருதுவதாகவும் குறிப்பிட்டார்.

p18c_1528699855.jpg

`நான் எப்போதும் ஒரு கற்பனை உலகத்திலேயே வாழ்கிறேன்; ஒரு சூப்பர் ஹீரோவாகும் ஆர்வம் எப்போதும் எனக்குள் இருந்தது. சூப்பர் ஹீரோவாகவே வாழவும் செய்கிறேன். இதுபோன்ற ஆடை எனக்குள் அந்தக் கனவை அணையாமல் வைத்திருக்கிறது' என்றும் கூறினார். குழந்தை அலெக்ஸிஸ் ஒலிம்பியா பிறக்கும்போது தான் செத்துப் பிழைத்ததாகவும் செரீனா முன்னர் பதிவு செய்திருந்தார். நான்காம் சுற்று வரை முன்னேறிய செரீனாவின் உடல்நிலை அதற்கு மேல் இடம் கொடுக்காததால், மரியா ஷரபோவாவை எதிர்த்து விளையாடும் நான்காம் சுற்றுப் போட்டியில் இருந்து விலகிக்கொண்டார். பல்மனரி தசைப்பிடிப்பால் பாதிக்கப்பட்டபோதும், தங்கை வீனஸ் வில்லியம்ஸுடன் இணைந்து இரட்டையர் போட்டியில் விளையாடினார் செரீனா. முழுவதுமாக போட்டிகளில் பங்கேற்காவிட்டாலும்கூட, கருவுற்ற பெண்கள் மற்றும் இளம் தாய்களுக்குத் தன்னம்பிக்கையை விதைத்துச் சென்றிருக்கிறார் செரீனா.

செமையா கலக்கிடீங்க செரீனா!


நெகிழவைத்த போட்டோ ஷூட்!

மெரிக்காவின் பைன்ஹர்ஸ்ட் நகரைச் சேர்ந்தவர் பிரிட்டானி கிறிஸ். இவரின் கணவர் அமெரிக்க ராணுவத்தில் பணிபுரிந்துவந்த கிறிஸ் ஹாரிஸ். கடந்த 2016-ம் ஆண்டு இவர்கள் ஆஷ்வில் நதிக்கரையில் திருமணம் செய்துகொண்டார்கள். அதன்பின் ஆப்கானிஸ்தான் நாட்டுக்கு சிறப்புப்பணிக்காக அனுப்பப்பட்டார் ஹாரிஸ். அவர் அங்கு சென்ற ஒரு வாரத்தில் தந்தையாகப் போகும் செய்தியைக் கணவருக்கு அறிவித்தார் பிரிட்டானி. மகிழ்ச்சியில் திளைத்திருந்த பிரிட்டானிக்குப் பெரும் அதிர்ச்சி காத்திருந்தது. சில நாள்களிலேயே படைப்பிரிவின் மீது நடந்த திடீர்த் தாக்குதலில் ஆகஸ்ட் மாதம் மரணமடைந்தார் ஹாரிஸ். தனித்து விடப்பட்ட பிரிட்டானியைத் தாங்கிக்கொண்டனர் அவரின் கணவருடன் பணிபுரிந்த ராணுவ வீரர்கள். பிறக்கப்போவது பெண் குழந்தை என்பதை சிறப்பு அனுமதி பெற்று அறிந்த வீரர்கள், பிரிட்டானிக்கு ஆப்கானிஸ்தானிலிருந்து முகநூல் காணொளி மூலம் அறிவித்தார்கள்.

p18d_1528699885.jpg

திருமணம் செய்துகொண்ட ஆஷ்வில் நதிக்கரையில், தன் மெட்டர்னிட்டி போட்டோ ஷூட்டை தனியே நின்று செய்துகொண்டார் பிரிட்டானி. அந்தப் படங்கள் இணையத்தில் வெளிவந்தன. மார்ச் 17 அன்று கிறிஸ்டியன் மிஷேல் ஹாரிஸ் என்ற அழகிய பெண் குழந்தைக்குத் தாயானார் பிரிட்டானி. நண்பனின் குழந்தையைக் கொஞ்சுவதற்குச் சமீபத்தில் நாடு திரும்பினர் நேதன் பாக்லி உள்ளிட்ட ஹாரிஸின் நண்பர்கள். தந்தையின் இருபது நண்பர்கள் புடைசூழ குழந்தை கிறிஸ்டியனின் முதல் போட்டோ ஷூட் எடுக்கப்பட்டது. முழு ராணுவ உடையில், கைகளில் நீலக் கண்கள் ஒளிரும் குழந்தை கிறிஸ்டியனைக் கொஞ்சிக்கொண்டிருக்கும் படைவீரர்களின் போட்டோ ஷூட் புகைப்படங்களைக் கண்டு வியந்து நிற்கிறது அமெரிக்கா.

மூழ்காத ஷிப்பே ஃப்ரெண்ட்ஷிப்!


நான்கு வயது சுட்டி எழுத்தாளர்!

யன் கொகோய் கோஹெயின். நான்கு வயதான இந்த சுட்டிப் பையன்தான் இந்தியாவின் மிக இளம் வயது எழுத்தாளர். `ஹனிகோம்ப்’ என்ற ஆங்கிலப் புத்தகத்தை எழுதியிருக்கும் அயனின் இந்தச் சாதனையை அங்கீகரித்திருக்கிறது இந்தியா புக் ஆஃப் ரெக்கார்ட்ஸ். அசாம் மாநிலத்தின் லக்ஷ்மிபூர் மாவட்டத்தைச் சேர்ந்த அயன், ப்ரீ-ஸ்கூல் மாணவன். இந்த ஆண்டு ஜனவரி மாதம் வெளியிடப்பட்ட இந்தப் புத்தகத்தில், 30 வாசகங்களும், அவற்றுக்கான விளக்கப்படங்களும் இடம்பெற்றுள்ளன. ஒரு வயதிலேயே வரையத் தொடங்கிய அயன், மூன்று வயதில் தானாகவே கதைகள் புனைந்து சொல்லும் ஆற்றலைப் பெற்றான். தன் தாத்தா பாட்டியுடன் வசிக்கும் அயன், `என்னைச் சுற்றி நடப்பதைக் கவனித்தே நான் எழுதுகிறேன். தாத்தாவுடன் நான் பேசுவது, என் மனதுக்குத் தோன்றுவது, இப்படி எதுவானாலும்…' என்கிறான்.

p18e_1528699902.jpg

அயனின் பெற்றோர் மிசோரம் மாநிலத்தில் தனியாக வசிக்கிறார்கள். `என் தாத்தாதான் என் கதைசொல்லி, ராக்ஸ்டார், என் பெஸ்ட் ஃப்ரெண்டு எல்லாம்' என்கிறான் அயன். 250 ரூபாய்க்கு விற்கப்படும் ஹனிகோம்ப் புத்தகத்தின் அட்டைப்படம்கூட, தன் பேரன் வடிவமைத்ததுதான் என்று பெருமிதம் பொங்கக் கூறுகிறார் வங்கியில் பணியாற்றி ஓய்வுபெற்ற தாத்தா பூர்ணகாந்த் கொகோய். அமெரிக்க எழுத்தாளர் ஜோன் லியோட்டா, `எந்த வயதினரையும் அயனின் புத்தகம் கவரும்' என்கிறார்.

சூப்பர்... சுட்டி குட்டி!

https://www.vikatan.com/

  • Replies 11.3k
  • Views 1.5m
  • Created
  • Last Reply
  • தொடங்கியவர்

பீச்சில் படுத்துறங்கிய கண்ணதாசன்... தடியால் எழுப்பிய போலீஸ்! பிறந்ததின சிறப்புப் பகிர்வு

 

கவியரசு கண்ணதாசன் பிறந்த தினத்தை முன்னிட்டு அவர் பற்றிய சிறப்புக் கட்டுரை...

பீச்சில் படுத்துறங்கிய கண்ணதாசன்... தடியால் எழுப்பிய போலீஸ்! பிறந்ததின சிறப்புப் பகிர்வு
 

சென்னைக்கு வரும் அவர், மெரினா கடற்கரைக்குச் செல்கிறார். அந்தக் கடற்கரைக்குச் செல்லாதவர்கள் யார்தான் உண்டு? அழகான காட்சிகளையும், அலங்கோல காட்சிகளையும் அனுதினமும் தந்துகொண்டிருப்பதில் மெரினா என்றால் மிகையாகாது. அதனால்தான் பலமொழி மாநிலத்தவரும் அங்கு படையெடுக்கின்றனர். மெரினாவைக் காணும் அதே ஆசையில்தான் நாம் சொல்லும் நபரும் அங்கே பயணிக்கிறார். 

கண்ணதாசன்

காதலர்கள் மீது பொறாமை!

 

 

மாலை வேளை வந்துவிட்டது என்பதைச் சூரியனுக்குச் சொல்லிக்கொண்டிருந்தது கடிகார முட்கள். அந்த நேரத்தில், அப்படியே மண்ணில் கால்பதித்து அமர்கிறார் நம்மவர். அப்போது, ஒரு பொருளுக்கு இரண்டு குழந்தைகள் ஆசைப்படுவதைப் பார்க்கிறார். அந்தப் பொருள் ஒரு குழந்தைக்குக் கிடைத்துவிடுகிறது. ஆனால், அதே பொருள் மற்றொரு குழந்தைக்குக் கிடைக்கவில்லை. இதைக் கவனிக்கும் அவர், இதுதான் உலகமா என்று விந்தையுடன் யோசிக்க ஆரம்பிக்கிறார். அடுத்து, அதே இடத்தில் ஒரு காதலர்களைப் பார்க்கிறார். அவர்கள் அடிக்கடி சிரித்து மகிழ்வதையும், அடித்து விளையாடுவதையும் பார்த்து பொறாமை கொள்கிறார். 

 

 

அதைப் பார்க்கும் நம்மவர், `நாமும் காதலித்திருக்கிறோம்... ஆனால், இதுபோல் நடந்துகொண்டதில்லையே... காதல் என்பது கண்கள் வரை அல்லவா' என்று ஏங்குகிறார்; `இவர்களிடம் காதல் எல்லை தாண்டிப் போகிறதே' என்று எண்ணுகிறார். அதற்குமேல் அந்தக் காட்சிகளைச் சகித்துக்கொள்ளாதவர், அதிலிருந்து பார்வையை விலக்கிக் கடலில் பயணிக்கும் கட்டுமரங்களையும், படகுகளையும் பார்க்கிறார். அதன்மூலம் உழைத்து குடும்பத்தைக் காப்பாற்றும் மீனவர்களின் உயர்ந்த நிலையை எண்ணிப் பெருமைகொள்கிறார். 

நண்டினால் பயம்!

அந்த நேரத்தில்தான் அவர் காலடியில் வந்து ஒரு பெரிய நண்டு விழுகிறது. இதை ஓர் அலை, துணிச்சலுடன் செய்துவிட்டு மறைந்துவிடுகிறது. ஆனாலும், அவர் அதைச் சற்றும்  எதிர்பார்க்கவில்லை. பயத்தில், ஒருவித பதற்றத்தில் அப்படியே எழுந்துநிற்கிறார். கரையில் விழுந்த நண்டு மீண்டும் கடலுக்குள் போய்விடுகிறது. இது, அவருக்கு நம்பிக்கையை விதைக்கிறது. சமூகம் நம்மை வெளியே தள்ளினாலும், அந்தச் சமூகத்துக்குள்ளேயே நாம் நிரந்தர இடத்தைப் பிடிக்க வேண்டும் என்ற ஆவலை அவர் மனம் இறுகப்பிடித்துக்கொள்கிறது. அந்த ஆசையிலேயே அங்கேயே உறங்கிவிடுகிறார். 

 

 

மு.கருணாநிதியுடன்... கண்ணதாசன்

தட்டியெழுப்பிய போலீஸ்!

அடுத்தநொடி, போலீஸாரின் கைத்தடி தட்டியெழுப்புகிறது. ஒருகாலத்தில் தந்தை பெரியாரின் கைத்தடி, நாட்டிலிருந்த சமூக அவலங்களைத் தோலுரித்துக் காட்டியதுடன் உண்மையை உலகுக்கும் உணர்த்தியது. அதன்மூலம் மக்களை விழித்துக்கொள்ளவும் வகை செய்தது. ஆனால் இன்று, ஆட்சியின் அதிகாரபலத்தால் விழித்திருக்கும் மக்களைக்கூடக் காவல் துறையின் கைத்தடிகள் காயப்படுத்தி, `இனி நீங்கள் விழிக்கவே கூடாது' என்று எச்சரிக்கின்றன. அந்த நிலைதான் அவருக்கும்.

 ``ஏய், நீ யாரு... இங்கே எதற்கு வந்தாய்... சொந்த ஊரு எது... கையில் எவ்வளவு காசு வைத்திருக்கிறாய்... கடற்கரையில் தூங்கக்கூடாது என்று உனக்குத் தெரியாதா... இங்கிருந்து எழுந்து போ'' எனத் துளைத்தெடுத்தது அந்தப் போலீஸ்காரரின் குரல். உண்மையிலேயே நம்மவரிடம் அன்று பைசா இருந்து போலீஸாரிடம் கொடுத்திருந்தால், நிச்சயம் அங்கு உறங்குவதற்கு இடம் கிடைத்திருக்கலாம். ஏனென்றால், இந்த உலகமே லஞ்சம், ஊழல் உள்ளிட்டவற்றில்தானே கொடிகட்டிப் பறக்கிறது. போலீஸாருக்குப் பயந்து அங்கிருந்து போனவர் மீண்டும் அதே கடற்கரையில் வேறோர் இடத்தில் படுத்தத் தூங்க ஆரம்பித்தார். 

நம்பிக்கை விதை!

இந்த முறை சில்மிஷம் செய்யும் காற்றுக்கூட அவரது தூக்கத்தைக் கெடுக்கவில்லை. ஓடிப்போன சூரியன் மீண்டும் வந்ததைக் கண்டு பொழுது புலர்ந்துவிட்டதை நம்மவர் உணர்ந்துகொண்டார். இப்போது ஒரு முடிவுக்கு வந்தார், அவர். எந்த வேலை கிடைத்தாலும் செய்ய வேண்டும் என்று. ஆம், அப்படிப்பட்ட முடிவை இந்த உலகில் எந்த மனிதன் எடுத்தாலும், அதுவும் குறிப்பாகக் கெளரவம் பார்க்காமல் நேர்மையுடனும், திறமையுடனும் உழைத்தால் நிச்சயம் ஜெயிப்பான். அதனால்தான் நம்மவரும் பின்னாளில் ஜெயித்தார். 
அவர், வெற்றி கண்டது திரைத்துறையில்... அதன்மூலம் நின்றார் பலருடைய மனத்திரையில்! எத்தனையோ தோல்விகளையெல்லாம் தாங்கிக்கொண்ட அவர், அதன் மொத்த வலிகளையெல்லாம் தன்னுடைய முதல் பாட்டிலேயே நம்பிக்கை விதையாய் விதைத்தார். 

``கலங்காதிரு மனமே - உன் கனவெல்லாம்
நனவாகும் ஒரு தினமே!''

- என்று எழுதினார். 

கண்ணதாசன்அரசியலில் சூடு!

உண்மையில், அவருடைய கனவு வென்றது. அந்த வெற்றி, அவரை அரசியல் பாதைக்கும் அழைத்துச் சென்றது. சினிமாவிலிருந்து வந்தவர்கள் அரசியலிலும் ஜெயித்திருக்கிறார்களே... அதன் தொடர்ச்சி, இன்றும் அரங்கேறுகிறதே? நம்மவரும், நட்பின் மூலம் அரசியலுக்குள் புகுந்தார். ஆனால், போகப்போக அரசியல் நமக்குச் சரிப்பட்டு வராது என்பதை அவர் புரிந்துகொண்டார். 

ஒருமுறை தேர்தலில் தோல்வியுற்ற அவர், அதன் வருத்தத்தை, வலி மிகுந்த வேதனையை இப்படிப் பதிவு செய்தார். 

``யாரை எங்கே வைப்பது என்று 
யாருக்கும் தெரியல்லே
அட அண்டங்காக்கைக்கும் குயில்களுக்கும் 
பேதம் புரியல்லே பேதம் புரியல்லே!

பேரெடுத்து உண்மையைச் சொல்லி 
பிழைக்க முடியல்லே
இப்போ பீடிகளுக்கும் ஊதுபத்திக்கும் 
பேதம் தெரியல்லே!'' 

- என்று `பலே பாண்டியா' படத்தில் எழுதினார். 

அதேபோல், அரசியலில் சூடுபட்டுக் கொண்டதை `ஆலயமணி' படம் மூலம் உணர்த்தினார். அந்தப் படத்தில் எழுதியுள்ள ஒரு பாடலில், 

``சட்டி சுட்டதடா கை விட்டதடா
புத்தி கெட்டதடா நெஞ்சைத் தொட்டதடா
நாலும் நடந்து முடிந்த பின்னால்
நல்லது கெட்டது தெரிந்ததடா!'' 

- என்று உண்மையை உணர்த்தியிருப்பார். 

இப்படி, பல மனிதர்களிடையே பழகி அதற்கான அனுபவங்களைப் பெற்றதால்தான் அவர், “எப்படியெல்லாம் வாழக்கூடாதோ, அப்படியெல்லாம் வாழ்ந்தவன் நான். அதனால் இப்படித்தான் வாழ வேண்டும் என்று அறிவுரை சொல்லும் தகுதி எனக்கு இருக்கிறது'' என்று எல்லோருக்கும் அறிவுரை வழங்கும் அளவுக்கு அனுபவமிக்கவராக விளங்கினார். அவர், வேறு யாருமல்ல... கவியரசு கண்ணதாசன். அவருடைய பிறந்த தினம் இன்று.

https://www.vikatan.com

  • தொடங்கியவர்

சுவரை அலங்கரிக்கும் தட்டுகள்

 

 
JKRTANJORE

தஞ்சாவூர்த் தட்டு   -  THE HINDU

 

தஞ்சாவூர்த் தட்டு தமிழ்நாட்டின் பெருமைமிகு கலை வடிவங்களுள் ஒன்று. நினைவுப் பரிசாக வழங்கப்படும் இந்தத் தட்டைப் பலரும் பார்த்திருப்போம். இந்தத் தட்டு இந்தியாவைத் தாண்டியும் புகழ்பெற்றது.

         
 
wallFrench

பிரெஞ்சு அலங்காரத் தட்டு

 

இந்தத் தட்டு தயாரிப்புக்கென ஒரு பிரத்யேக நடைமுறையை அங்குள்ள கலைஞர்கள் கடைப்பிடித்துவருகின்றனர்.

wallGod

மார்பிள் அலங்காரத் தட்டு

 

வெள்ளி, பித்தளை, செம்பு போன்ற உலோகங்களால், ஒரே மாதிரியான முறையில் செய்கிறார்கள். நடுவில் கடவுளரின் உருவங்கள் செதுக்கப்பட்டிருக்கும்.

wallMandala

புத்த அலங்காரத் தட்டு

 

ஆனால், இன்றைக்கு இதிலும் புதுமைகள் வந்திருக்கின்றன. இந்த வகைத் தட்டுகள் பரிசுப் பொருளாகக் கொடுப்பதற்கு மட்டுமல்ல, வீட்டின் சுவர்களை அலங்கரிக்கும் பொருளாகவும் பயன்படுத்தப்படுகின்றன.

wallchinese

சீன அலங்காரத் தட்டு

 

இதுமாதிரி அலங்காரத் தட்டுகளைச் சுவரில் மாட்டி அழகுபடுத்தும் கலாச்சாரம் இங்கு மட்டுமல்ல. உலகின் பல பாகங்களிலும் உள்ளது.

wallplateKalamkari

கலம்கரி அலங்காரத் தட்டு

 

அம்மாதிரியான தட்டுகள் குறித்த ஒளிப்படத் தொகுப்பு இது. இந்த வகை அலங்காரத் தட்டுகள் ரூ.600-லிருந்து கிடைக்கின்றன.

http://tamil.thehindu.com

  • தொடங்கியவர்

சாலைகள்.. பாதைகள்: பிபிசி நேயர்களின் சிறந்த புகைப்படங்கள் #BBCTamilPhotoContest

 

#BBCTamilPhotoContest

 

கண்ணன் பாலாஜி

#BBCTamilPhotoContest

 

கந்தவேலு, புதுச்சேரி

#BBCTamilPhotoContest

 

நரேன் கிருஷ்ணா, திருவாரூர்

#BBCTamilPhotoContest

 

செல்லத்துரை

#BBCTamilPhotoContest

 

நுவரெலியா - அட்டன் பிரதான வீதி. பா. பிரதீசன், கொட்டகலை, இலங்கை

#BBCTamilPhotoContest

 

டையூ தீவில் ஓர் அதிகாலை, இக்வான் அமீர், எண்ணூர்

#BBCTamilPhotoContest

 

டாப்ஸ்லிப்பில் இருந்து மூனாறு போகும் பாதை, சாகுல் ஹமீது அதிராம்பட்டினம்

 

 

https://www.bbc.com

  • தொடங்கியவர்

வாட்ஸ் அப் கலக்கல்: பிரியாணி கிடைக்குமா?

 

 
mem%206
 

சென்ற வாரம் சமூக ஊடங்களில் அதிகம் கேட்ட குரல் இதுதான். ரம்ஜானுக்கு வாழ்த்து சொன்னவர்களைவிட பிரியாணி கேட்டவர்கள்தான் அதிகமாக இருந்தார்கள். அதோடு ரம்ஜான் பிரியாணி தொடர்பான மீம்ஸ்களையும் உலவவிட்டார்கள். அவற்றில் சிரிக்க வைத்த சில மீம்கள்:

 
mem%201
mem%202
mem%203
mem%204
mem%205
mem%207
mem%208
mem%209
meme
  • தொடங்கியவர்
‘தவறுகளும் உள்நுழைந்து விடுகின்றன’
 

image_8bd4b16e37.jpgநல்லவர்கள், பெரியோர்கள் என்றைக்காவது ஒருநாள் தவறு செய்பவர்களாக இருப்பார்கள். ஆனால், கெட்டவர்கள் எப்பொழுதுமே தனக்கும் பிறருக்கும் தீங்கு செய்பவர்களாகவே இருப்பார்கள். இவர்கள், தாங்கள் செய்துவரும் கெடுதல்கள், தவறுகளை ஒப்புக்கொள்வதுமில்லை. 

ஆனால், நற்குணமுடையோர், சின்னச் சின்னத் தவறுகளையும் நினைத்துத் துன்பப்படுவதுடன் தங்களைத் தாங்களே உணர்ந்து திருந்திக் கொண்டும் விடுவார்கள். 

வாழ்க்கையில் பற்பல சம்பவங்கள் இணைந்துள்ளன. இதன்போது, எம்மை அறியாமல் மூளையில் சில விடயங்கள் பதியாமல் போகும்.எல்லாச் சமயங்களிலும் எச்சரிக்கை உணர்வு பிசகிப் போகலாம்.இதனாலேயே அறிவை மயக்கித் துன்பம் சூழ்கின்றது; தவறுகளும் உள்நுழைந்து விடுகின்றன. 

எனவே, மனிதர் நெறி பிறழாமல் வாழ்வதற்கு, தீட்சண்யமான பார்வையுடன் உலகை நோக்க வேண்டும். இந்தத் திறனை, பண்பு நெறியூடாக வளர்த்து, இயங்க வேண்டியவனாகின்றான் மனிதன். பண்பு துன்பத்தை அறுக்கும்.

  • தொடங்கியவர்

மைக்கல் ஜாக்சன் இறந்த தினம்: ஜூன் 25- 2009

 
மைக்கல் ஜாக்சன் இறந்த தினம்: ஜூன் 25- 2009
 
மைக்கல் ஜோசப் ஜாக்சன் (Michael Joseph Jackson, ஆகஸ்ட் 29, 1958 - ஜூன் 25, 2009) அமெரிக்க பாப் இசைப் பாடகர், நடன இயக்குனர், பாடல் ஆசிரியர், தொழில் அதிபர், மற்றும் வள்ளல் என பல முகங்கள் கொண்டவர்.

புகழ்பெற்ற ஜாக்சன், இசைக் குடும்பத்தில் ஏழாம் பிள்ளை. 1964-ல் இவரின் நான்கு சகோதரர்களுடன் சேர்ந்து ஜாக்சன் 5 என்ற இசைக்குழுவில் சேர்ந்தார்.

பின் 1971-ல் தனியாக கச்சேரிகள் செய்ய ஆரம்பித்து புகழ் அடைந்தார். கிங் அஃப் பாப் (பாப் இசையின் மன்னர்) என்றும் எம்.ஜெ. என்றும் சிறப்புப் பெயரால் அழைக்கப்படுகிறார்.

இவரால் வெளியிடப்பட்ட இசைத்தொகுப்புகளில் ஐந்து உலகெங்கும் பெருமளவில் விற்பனை செய்யப்பட்டதாகும். 1982-ல் வெளிவந்த திரில்லர் உலகில் பெருமளவில் விற்பனை செய்யப்பட்ட இசைத் தொகுப்புகளின் பட்டியலில் முதலாம் நிலையில் உள்ளது. உலகெங்கிலும் உள்ள பல தரப்பு மக்களின் மத்தியில் நாற்பது ஆண்டு காலமாக பிரபலமானவராக வாழ்ந்து வந்துள்ளார்.

பாடல் எழுதி, அதற்கு இசையமைத்து, பாடலுக்கு ஏற்றாற் போல் நடனம் ஆடுவது, இடை இடையே நடிப்பு என அனைத்தும் கலந்த 'பாப்' புதிய நடனத்தை அவர் படைத்தார்.

1980-களின் ஆரம்பத்தில் பாப் இசை உலகில் புகழ் பெற்ற பாடகரானார். அமெரிக்காவில் முதலாக பல மக்கள் செல்வாக்குப் பெற்ற கருப்பின இசைக்கலைஞரானார். இவரின் இசை நிகழ்படங்களை எம்.டி.வி. ஒளிபரப்பு செய்து எம்.டி.வி.யும் புகழடைந்தது. இதனாலும் இசை நிகழ்படம் படைப்பு ஒரு முக்கியமான கலை ஆனது. ஜாக்சன் படைத்த ரோபாட், மூன்வாக் போன்ற நடன வகைகளும் பிரபலமானது. இவரின் நடனமாலும் இசையாலும் பல இசை வகைகள் தாக்கம் பெற்றன.

பல சமூக சேவைகளுக்கு உலக முழுவதிலும் கச்சேரிகளை நடத்தி நிதியுதவி செய்துள்ளார். ஆனால் குழந்தைகளுடன் உடலுறவு செய்தார் என்று 1993-ல் இவர் குற்றம் சாட்டப்பட்டார். இறுதியில் இவர் குற்றமில்லாதவர் என்று தெரிவித்துள்ளது, ஆனாலும் இவர் பற்றிய பொது மக்களின் கருத்துகள் மோசமானது. இன்று வரையும் அமெரிக்கப் பரவலர் பண்பாட்டில் இவர் ஒரு செல்வாக்கு பெற்றவர் ஆவார்.

2009, ஜூன் 25 அன்று இவர் லாஸ்ஏஞ்சலஸ் நகரில் உள்ள தனது வீட்டில் மர்மமான முறையில் இறந்தார். அதேநேரம் அளவுக்கு அதிகமான சக்தி வாய்ந்த மாத்திரை வழங்கியதுதான் அவரது மரணத்திற்கு காரணம் கண்டறியப்பட்டது.

இதே தேதியில் நிகழ்ந்த முக்கிய நிகழ்வுகள்:-

1940 - பிரான்ஸ் அதிகாரப்பூர்வமாக ஜெர்மனியிடம் சரணடைந்தது.
 
1944 - இரண்டாம் உலகப் போர்: நோர்டிக் நாடுகளின் மிகப் பெரும் சமர் சோவியத் ஒன்றியத்துக்கு எதிராக பின்லாந்தில் ஆரம்பமானது.
 
1950 - வட கொரியாவின் தென் கொரியா மீதான படையெடுப்பை அடுத்து கொரியாப் போர் ஆரம்பமானது.
 
1967 - உலகின் முதலாவது செய்மதித் தொலைக்காட்சி நிகழ்ச்சி நம் உலகம் (Our World) 30 நாடுகளில் காண்பிக்கப்பட்டது.
 
1975 - இந்தியப் பிரதமர் இந்திரா காந்தி நாட்டில் அவசரகாலச் சட்டத்தை பிறப்பித்து தேர்தல்கள், மற்றும் மனித உரிமைப் போராட்டங்களைத் தடை செய்தார்.
 
1975 - போர்த்துக்கல்லிடமிருந்து மொசாம்பிக் விடுதலை அடைந்தது.

1983 - லண்டனில் நடந்த உலகக் கிண்ணத் துடுப்பாட்டப் போட்டிகளின் இறுதி ஆட்டத்தில் இந்தியா மேற்கிந்தியத் தீவுகளை 43 ஓட்டங்களால் வென்றது.
 
1991 - குரொவேசியா, சிலவேனியா விடுதலையை அறிவித்தன.
 
1996 - சவுதி அரேபியாவில் கோபார் கோபுரத்தில் இடம்பெற்ற குண்டுவெடிப்பில் 19 அமெரிக்க இராணுவத்தினர் கொல்லப்பட்டனர்.

1997 - புரோகிரஸ் ஆளில்லா விண்கலம் ரஷ்ய விண்வெளி ஆய்வுக்கூடம் மீருடன் மோதியது.
 
1998 - வின்டோஸ் 98 முதற் பதிப்பு வெளியானது. 2007 - கம்போடியாவில் விமானம் வீழ்ந்து நொருங்கியதில் அதில் பயணம் செய்த 22 பேரும் கொல்லப்பட்டனர்.

https://www.maalaimalar.com/

  • தொடங்கியவர்

உயரே செல்ல உதவும் ஏணி எது? - தன்னம்பிக்கைக் கதை #MotivationStory

 

உண்மையில் நம்மை மட்டம் தட்டுபவர்களைப் பழிவாங்க என்ன செய்ய வேண்டும் தெரியுமா?

உயரே செல்ல உதவும் ஏணி எது? - தன்னம்பிக்கைக் கதை #MotivationStory
 

நம்பிக்கைக் கதை

`நமக்கு வாழ்க்கையில் ஊக்கம் கொடுப்பவற்றில் முக்கியமான ஒன்று பழியுணர்வு’ - இப்படிக் குறிப்பிட்டிருக்கிறார் அமெரிக்க எழுத்தாளர் கே.எஸ்.புரூக்ஸ் (K.S.Brooks). வாழ்க்கையில் அடிபடும்போதெல்லாம், நம் சுய மரியாதைக்கு பங்கம் ஏற்படும்போதெல்லாம் தொடர்புடைய நபர் மேல் ஒருவருக்கு எழுவது பழிவாங்கும் உணர்வு. `உன்னை நான் என்ன பண்றேன் பாரு...’ என்று மனதுக்குள்ளேயே வஞ்சம் வைத்துக் காத்திருக்கும் நபர்கள் ஏராளம். சிலரிடம் அது வெளிப்படையாகத் தோன்றி, விபரீதத்தில் முடிவதும் உண்டு. உண்மையில் நம்மை மட்டம் தட்டுபவர்களைப் பழிவாங்க என்ன செய்ய வேண்டும் தெரியுமா? வாழ்க்கையில் முன்னேறிக் காட்ட வேண்டும்; வெற்றி பெற்றுக் காட்ட வேண்டும். இதைவிட பழிவாங்குவதற்கு சிறந்த வழி வேறொன்று இருக்க முடியாது. இந்த அழகான, எளிய உண்மையை எடுத்துக்காட்டும் கதை... 

இந்தியாவின் வட மாநிலத்தில் வசிக்கும் நண்பர் ஒருவர் சொன்ன கதை இது. ``அந்தச் சிறுவன் ஒரு கிராமத்தில் வசிப்பவன். வீட்டில் அப்பா சரியில்லை... குடிகாரர். உடன் பிறந்தவர்கள் ஐந்து பேர். சொல்ல வேண்டுமா... சிரமமான வாழ்க்கை. அம்மா, கூலி வேலைக்குப் போவார். வயல் வேலை, வீட்டு வேலை, ரோடு போடுவது, கட்டட வேலை... கிடைத்த வேலைக்கெல்லாம் போவார். சில நாள்கள் வேலையிருக்கும்; பல நாள்களுக்கு வேலையிருக்காது. என்னதான் சம உரிமை பேசினாலும், உடலுழைப்பில் இன்னமும் ஆண்களுக்கு இணையாகப் பெண்கள் பார்க்கப்படுவதில்லை என்பதே யதார்த்தம். பசி, பட்டினி, வறுமையோடு நகர்ந்துகொண்டிருந்தது வாழ்க்கை.  

 

 

சாப்பிட சப்பாத்தி, தொட்டுக்கொள்ள பச்சை வெங்காயம், தண்ணீர்... இது மூன்று வேளைக்குக் கிடைத்தாலே அந்த வீட்டுக்கு அது பொன்னாள். இரவில் சாக்கை விரித்துத்தான் படுப்பார்கள். இந்தக் கஷ்டமான சூழலிலும், ஏதோ ஒரு மன உறுதியில் அந்தச் சிறுவனைப் பள்ளிக்கு அனுப்பிக்கொண்டிருந்தார் அவன் அம்மா. 

 

 

பசி

ஒருநாள் அவன் பள்ளியிலிருந்தபோது மழை பிடித்துக்கொண்டது. வெளுத்து, வாங்கிய மழை பூமியையே புரட்டிப் போடுவதுபோலப் பெய்துகொண்டிருந்தது. அவன் வீட்டுக்குப் போகும் வழியிலிருந்த ஆற்றில் வெள்ளம் கரைபுரண்டு ஓடிக்கொண்டிருந்தது. அதைத் தாண்டித்தான் அவனால் வீட்டுக்குப் போக முடியும். அருகிலிருந்து வந்திருந்த மாணவர்களைத் தவிர, அந்தச் சிறுவனும் வேறு சில மாணவர்களும் பள்ளியிலேயே மாட்டிக்கொண்டார்கள். அன்று இரவு அவன், தன் நண்பர்களில் ஒருவன் வீட்டில் தங்கிக்கொண்டான். 

அடுத்த நாள் மழை நின்றது. ஆற்றிலும் வெள்ளம் வடிந்துவிட்டதாகச் சொன்னார்கள். அந்தச் சிறுவன், அவனுடைய நண்பன் இருவரும் கிளம்பினார்கள். சிறுவனை பத்திரமாக வீட்டில் கொண்டுபோய்ச் சேர்ப்பதற்காக நண்பனின் தந்தையும் உடன் வந்தார். சிறுவனுக்கு பசி வயிற்றைக் கிள்ளியது. அவர்கள் யாருமே காலையில் எதுவும் சாப்பிட்டிருக்கவில்லை. அவர்கள் கடைத்தெருவுக்கு வந்தார்கள். ஒரு ஹோட்டலிலிருந்து விதவிதமான சிற்றுண்டிகளின் வாசனை சாலையில் `கமகம’வென மணம் பரப்பிக்கொண்டிருந்தது. சிறுவன் நாக்கை சப்புகொட்டிக்கொண்டான். நண்பனின் தந்தை ஹோட்டல் வாசலில் நின்றார். அந்தச் சிறுவனை அழைத்தார். 

 

 

``இங்கே பாருப்பா... உன் வீட்லருந்து உன்னோட அம்மாவோ, அப்பாவோ உன்னைத் தேடிக்கிட்டு வந்தாலும் வருவாங்க. அப்பிடி வந்தா இந்த வழியாத்தான் வரணும். அதனால, நீ இங்கேயே நின்னு பார்த்துக்கிட்டிரு. நாங்க உள்ள போயிட்டு வந்துடுறோம்...’’ 

நண்பனும் அவன் தந்தையும் ஹோட்டலுக்கு நுழைவதை அந்தச் சிறுவன் வெறித்துப் பார்த்தபடி நின்றிருந்தான். அவனைத் தேடிக்கொண்டு வீட்டிலிருந்து யாரும் வரவில்லை. சிறிது நேரம் கழித்து நண்பனும் அவன் அப்பாவும் சாப்பிட்டுவிட்டு வெளியே வந்தார்கள். 

``உங்க வீட்லருந்து யாரும் வர்ற மாதிரி தெரியலையே... சரி வா, நானே கொண்டு போய் விட்டுடுறேன்...’’ அவர் நடக்க ஆரம்பித்தார். சிறுவன் அவரையும் நண்பனையும் வேதனையோடும் பசியோடும் பின்தொடர்ந்தான். 

வெற்றி

நாள்கள் நகர்ந்தன. வருடங்கள் ஓடின. ஆனால், அந்த நிகழ்ச்சி சிறுவனின் மனதில் ஆறாத காயமாக அழுத்தமாகப் பதிந்து போய்விட்டது. `இதற்குப் பதிலுக்கு ஏதாவது செய்தே ஆக வேண்டும்’ என்று அவன் அப்போதே முடிவெடுத்திருந்தான். அவனுக்கு இருந்த ஒரே வழி ஜெயித்துக் காட்டுவது. அதற்கு, பாடங்களைப் படித்துத் தேறுவது. படிப்பிலேயே மூழ்கிக் கிடந்தான். நண்பர்களின் பழைய, கிழிந்த உடைகளைத்தான் அணிந்திருப்பான். பல நேரங்களில் மாணவர்கள் வீசியெறியும் பென்சில்கள்தான் அவனுக்கு எழுதுவதற்குக் கைகொடுத்தன. `படிப்பில் கில்லி’ என்ற நற்பெயர் அவனுக்குக் கைகொடுத்தது. விமானப்படையில் வேலைக்குச் சேரும் அளவுக்கு உயர்த்திவிட்டது. பத்தாண்டுகள் விமானப் படையில் பணிபுரிந்த பிறகு ஓய்வு பெற்றான்.

உதவி

இப்போது அந்தச் சிறுவன்... அல்ல... அவர் ஒரு பன்னாட்டு நிறுவனத்தில் உயர் பதவியிலிருக்கிறார். பல நாடுகளுக்குப் போய் வந்துவிட்டார். ஒரு வருடத்துக்கு ஆறு மாதங்களுக்குத்தான் வேலை. என்றாலும், வருமானம் டாலராகக் கொட்டுகிறது. அவருடைய நண்பரின் மகளுக்கு சமீபத்தில் திருமணம் நடந்தது. அதற்காக நண்பருக்கு பெரும் தொகை ஒன்றைக் கொடுத்தார் அவர். அந்த நண்பர் வேறு யாருமல்ல... அவரை வாசலில் நிறுத்திவிட்டு, அப்பாவோடு சாப்பிடச் சென்ற அதே நண்பர். அந்தத் தொகையை மட்டும் அவர் கொடுக்காமலிருந்திருந்தால், அந்தப் பெண்ணுக்குத் திருமணமே நடந்திருக்காது. என்னைப் பொறுத்தவரை, ஒருவரைப் பழிவாங்க வாழ்க்கையில் வெற்றி பெறுவதுதான் சிறந்த வழி. அவர் இவ்வளவு உயர்ந்திருந்தாலும், தன் பூர்வீகத்தை மறக்கவில்லை. தன்னால் இயன்ற உதவியை இன்றைக்கும் அந்தக் கிராமத்துக்குச் செய்துகொண்டுதான் இருக்கிறார். அந்தக் கிராமமே அவரை மரியாதையோடு பார்க்கிறது...’’ 

நண்பர் சொல்லி முடித்தார். நான் அவரிடம் கேட்டேன்... `யார் அந்த மனிதர்?’’ 

நண்பர் மெல்லிய புன்னகையோடு சொன்னார்... ``என் அப்பா!’’ 

https://www.vikatan.com

  • தொடங்கியவர்

 

பெண்கள் ஆண்களைவிட ஆரோக்கியமானவர்களா?

உலகம் முழுதும் பெண்களின் சராசரி வாழ்நாள் ஆண்களைவிட அதிகம். இதய நோய்கள் மற்றும் புற்று நோயால் இறக்கும் வாய்ப்பு பெண்களைவிட ஆண்களுக்கே அதிகம். அதனால் பெண்கள்தான் ஆரோக்கியமானவர்கள் என்று கூறிவிட முடியுமா?

  • தொடங்கியவர்

கதை சொல்லியாக வாழ்ந்த சமையல் நிபுணர்

 

 
anthony-bourdain
 
 

உணவு மற்றவர்களை அறியவும் மற்ற கலாச்சாரங்களை அறியவும் உதவும் சாதனம் என்று நினைத்தவர் அந்தோணி போர்தைன். 61 வயதில் ஒரு விடுதியில் சமீபத்தில் தற்கொலை செய்து கொண்ட அவர், புகழ்பெற்ற சமையல்காரர், தொலைக்காட்சி ஆளுமை இவற்றையெல்லாம் தாண்டி அவர் சிறந்த கதைசொல்லி.

   
 

சிஎன்என்னில் அவர் செய்துவந்த “பார்ட்ஸ் அன்நோன்”( Parts Unknown) உள்ளிட்ட தொடர்களில் அவர் எந்த நாட்டின் முக்கியமான ஸ்தலங்களுக்குச் சென்றாலும் அங்கேயுள்ள உணவு விடுதிகளிலும் அங்குள்ள சமையலறைகளிலும் தனது நேரத்தை அதிகமாகச் செலவிட்டவர். ஒரு நாட்டின், குறிப்பிட்ட சமூகக் குழுவின் கலாச்சாரத்தைச் சமையலறை வழியாகவே உலகத்துக்கு உணர்த்தியவர் அவர்.

anthony-bourdain%202
 

மேற்கத்திய ஊடகங்கள் ஆப்பிரிக்கா குறித்து வழக்கமாகக் காண்பிக்கும் காட்சிகளையும் உருவாக்கும் கருத்துகளையும் அந்தோணி போர்தைன் தனது நிகழ்ச்சிகளின் வாயிலாக உடைத்தெறிந்தார். ஒரு டஜனுக்கும் மேற்பட்ட ஆப்பிரிக்க நாடுகளில் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளைச் செய்த அவர் அங்குள்ள மக்களின் இசை, கலை, வரலாறு, உள்ளூர்ப் பண்பாடுகளை மக்களிடையே சாப்பிட்டுக்கொண்டே பேசுவதன் வழியாக சர்வதேசப் பார்வையாளர்களுக்கு ஆப்பிரிக்க நாட்டினர் குறித்த நேர்மறையான பார்வையை உருவாக்கினார். யானைகள், சிங்கங்கள், ஒட்டகச்சிவிங்கிகள், காண்டாமிருகங்கள் உலவும் நாடு மட்டுமே அல்ல ஆப்பிரிக்கா என்பதை ஆப்பிரிக்கப் பெருநகர் கலாச்சாரங்கள், விருந்துகள், நவீன மாற்றங்கள் போன்றவை அடங்கிய தனது நிகழ்ச்சிகள் வழியாகக் கவனப்படுத்தியவர்.

உணவோடு அதைச் சாப்பிடும் இடமும் சேர்ந்து சாப்பிடுவதும் மிகவும் முக்கியமானது என்பதை போர்தைன் தன் தந்தை மூலம் கற்றுக்கொண்டவர். “மற்றவர்களைவிட நான் என்னை உசத்தியாக என்றுமே நினைத்துக் கொண்டதேயில்லை. அதுதான் என் தந்தை எனக்குக் கற்றுக்கொடுத்த பாடம். இந்த உலகம் முழுக்க பயமோ முன்தீர்மானங்களோ இன்றிப் பயணம் செய்வதற்கும் சாப்பிடுவதற்கும் அவரது அறிவுரைதான் எனக்கு வழிகாட்டுகிறது. சந்தோஷத்தை அனுபவிக்க, ஒருவர் தன்னை அனுபவங்கள் எல்லாவற்றுக்கும் திறக்க வேண்டும்” என்று எழுதியவர் அவர்.

“நோ ரிசர்வேஷன்ஸ்” என்ற தனது புகழ்பெற்ற தொடரின் கடைசிப் பகுதியை மலேசியாவில் முடித்தபோது அவர் சொன்னது இது.

charles-2
 

“பயணம் உங்களை மாற்றும். அது உங்களை மாற்ற வேண்டும். உங்கள் நினைவு, பிரக்ஞை, இதயம், உடல் எல்லாவற்றிலும் அது தடயங்களை ஏற்படுத்தும். நீங்கள் உங்களுடன் எதையோ எடுத்துக்கொள்கிறீர்கள், நம்பிக்கையோடு, சில நல்லவற்றையும் பயணத்தில் உங்கள் ஞாபகமாக விட்டுச் செல்கிறீர்கள்”.

வியட்நாமின் ஹனோய் நூடுல் ஷாப்பில் அந்தோணி போர்தைனுடன் முன்னாள் அமெரிக்க அதிபர் ஒபாமா சேர்ந்து சாப்பிட்டுள்ளார். அந்த நூடுல் ஷாப்பின் உரிமையாளர் அந்தோணியின் அகால மரணச் செய்தி கேட்டு அதிர்ச்சியடைந்துள்ளார். பன்றிக்கறி நூடுல்ஸ், ஸ்பிரிங் ரோல், ஒரு பீரோடு சேர்த்து மலிவான பிளாஸ்டிக் ஸ்டூலில் உட்கார்ந்து ஒபாமாவும் அந்தோணி போர்தைனும் சேர்ந்து இரவு உணவு சாப்பிடும் புகைப்படம் இப்போது உலகம் முழுக்கப் பிரபலமாகியுள்ளது. சிஎன்என் தொலைக்காட்சியில் இது இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் ஒளிபரப்பானது. இந்தக் கடையில் தரப்படும் பன் சாவும், மீன் சாஸ் குழம்பும் அந்தோணிக்கு மிகவும் விருப்பமானது என்கிறார் உரிமையாளர்.

உயரம் குறைந்த ப்ளாஸ்டிக் ஸ்டூல், மலிவான ஆனால் ருசியான நூடுல்ஸ், சில்லிடும் ஹனோய் பீர். இப்படித்தான் நான் அந்தோணியை நினைவுகூர்வேன். அவர் நமக்கு உணவைப் பற்றிக் கற்பித்தார். முக்கியமாக நம் எல்லாரையும் ஒருமைப்படுத்தும் உணவின் திறனைக் கற்பித்தார். அறியாதது குறித்த பயத்தை அவர் உணவின் வழியாக நீக்கினார். நாம் அவரை மறக்கவே முடியாது. இதுதான் ஒபாமா அவருக்கு விடுத்திருக்கும் அஞ்சலிக் குறிப்பு.

http://tamil.thehindu.com

  • தொடங்கியவர்

பூகம்பத்துக்கும் வரப்போகுது இமோஜி!

 

 
emoji
 
 

வாட்ஸ்அப்பிலோ சாட்டிங்கிலோ இமோஜியைச் சேர்த்துக்கொள்வது அரட்டையைச் சுவாரசியப்படுத்தும். ஆனால், பேரிடர் கால தகவல் தொடர்பை மேம்படுத்த இமோஜியைச் சேர்த்துக்கொள்ள வேண்டும் எனச் சொன்னால் நம்ப முடிகிறதா? பூகம்பத்தை உணர்த்தக்கூடிய இமோஜி உருவாக்கப்பட வேண்டும் என்று சர்வதேசக் குழு ஒன்று கோரிக்கை வைத்துள்ளது. அது மட்டுமல்ல; இதற்கான இமோஜியை உருவாக்கி சமர்பிக்க உலகளாவிய போட்டியையும் அறிவித்துள்ளது.

 

 

இமோஜி சேவை

வாட்ஸ்அப் உள்ளிட்ட சமூக ஊடக உரையாடல்களிலும் அரட்டைகளிலும் உருவ எழுத்துகள் அடிக்கடி பயன்படுத்தப்படுகின்றன. இந்த உருவ எழுத்துகள் புதிய மொழியாகவே உருவாகி இருக்கின்றன. பெரும்பாலும் நகைச்சுவை நோக்கில் பயன்படுத்தப்பட்டாலும், சொற்களுக்குப் பதில் உணர்வுகளை வெளிப்படுத்துவதில் இமோஜிகள் முக்கியப் பங்கு வகிக்கின்றன. எனவே, இமோஜியை விளையாட்டுச் சங்கதியாக நினைத்துவிட முடியாது.

இவை இணைய உரையாடலிலும் தகவல் தொடர்பிலும் முக்கியத்துவம் பெற்றுள்ளன. ஆகவே, புதிய இமோஜிகளை உருவாக்குவதற்கான தேவையும் அதிகரித்துவருகிறது. அதேநேரம், புதிய இமோஜிகளைத் தனியாகவோ எந்த நிறுவனமோ இஷ்டம்போல அறிமுகம் செய்துவிட முடியாது. புதிய இமோஜிகளை அங்கீகரித்து ஏற்றுக்கொள்ளும் பொறுப்பு இணைய எழுத்துருக்களை நிர்வகிக்கும் யூனிகோட் கூட்டமைப்பு வசம் உள்ளது. எனவே, புதிய இமோஜிக்கான கோரிக்கையை இந்த அமைப்பிடம் சமர்ப்பித்து, அது ஏற்கப்படக் காத்திருக்க வேண்டும்.

இப்படிப் பல கோரிக்கைகள் ஏற்கப்பட்டு அங்கீகரிக்கப்பட்ட புதிய இமோஜிகள் அண்மையில் அறிமுகமாகத் தொடங்கியுள்ளன. கடந்த பிப்ரவரியில் இதற்கான பட்டியலை யூனிகோடு கூட்டமைப்பு வெளியிட்ட நிலையில், நிறுவனங்கள் புதிய இமோஜிகளைத் தங்கள் இயங்குதளங்களில் வெளியிடத் தொடங்கியுள்ளன.

 

பூகம்பக் குறியீடாக...

அந்த வகையில்தான் இப்போது, பூகம்பத்தை உணர்த்த ஒரு பிரத்யேக இமோஜி தேவை எனும் கோரிக்கை எழுந்துள்ளது. இந்தக் கோரிக்கையை வைத்திருப்பது சாதாரண அமைப்பு அல்ல; சர்வதேச விஞ்ஞானிகளை உள்ளடக்கிய குழு ஒன்று. இந்தக் கோரிக்கையை வலியுறுத்தும் வகையில், யூனிகோடு கூட்டமைப்பில் சமர்ப்பிக்க உள்ள பூகம்ப இமோஜியை உருவாக்கும் போட்டியையும் அறிவித்துள்ளது. இதற்காக ‘இமோஜிகுவேக்’ (https://www.emojiquake.org/ ) எனும் இணையதளத்தையும் அமைத்துள்ளது. ஜூலை 14-ம் தேதிவரை வடிமைப்பாளர்கள், இமோஜி ஆர்வலர்கள் இந்தத் தளத்தில் பூகம்ப இமோஜிக்கான வடிவமைப்பைச் சமர்ப்பிக்கலாம். இது தொடர்பாகச் சமர்ப்பிக்கப்படும் ஐடியாக்களை ‘#emojiquake’ எனும் ஹாஷ்டேக் மூலம் பின்தொடரலாம்.

பூகம்ப இமோஜி எளிமையானதாக, எல்லோருக்கும் புரியக்கூடியதாக, தனித்தன்மைமிக்கதாக, பூகம்பத்தை உணர்த்தக்கூடியதாக இருக்க வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. பூகம்ப இமோஜி அவ்வளவு முக்கியமா? இணைய உரையாடலில் இமோஜிகள் அதிக அளவில் பயன்படுத்தப்படுவதோடு, பல விஷயங்களை எளிதாக உணர்த்தவும் கைகொடுக்கின்றன. பத்துச் சொற்கள் தேவைப்படும் இடங்களில் ஒரு இமோஜி கச்சிதமாகப் பொருந்திவிடுகிறது.

எல்லாம் சரி, பூகம்ப இமோஜியால் என்ன பயன்?இமோஜிகள் உலகில் பரவலாகப் பயன்படுத்தப்படுகின்றன. உலகில் வேகமாக வளர்ந்தும்வருகின்றன. அதே நேரத்தில் உலகின் பெரும்பாலான பகுதிகள் பூகம்பப் பாதிப்புகளுக்கு உள்ளாகின்றன. பூகம்பம் தொடர்பான தகவல்களைப் பகிர்ந்துகொள்வதில், அதற்கான பிரத்யேக இமோஜி பேருதவியாக இருக்கும் எனக் கருதப்படுகிறது.

 

ஒரே மொழி வழக்கு

பூகம்பம் போன்ற பேரிடர்களின்போது, ட்விட்டர் உள்ளிட்ட சமூக ஊடகங்களில் மக்கள் அது பற்றிய தகவல்களைப் பகிர்ந்துகொள்வதை வழக்கமாகக் கொண்டுள்ளனர். ட்விட்டரில் பகிர்ந்துகொள்ளப்படும் தகவல்களை வைத்தே பூகம்பம் தொடர்பான கணிப்புகளை மேற்கொள்ள முடிவதாகவும் ஆய்வாளர்கள் கருதுகின்றனர். பூகம்பத்தை உணர்ந்த மக்கள் சமூக ஊடகங்களில் அது பற்றிய தகவல்களைப் பகிர்வதை அடிப்படையாகக்கொண்டு குறிப்பிட்ட பகுதியில் ஏற்பட்ட நிலநடுக்கத்தைக் கண்டறியலாம்.

ஆனால், சமூக ஊடகப் பகிர்வில் உள்ள சிக்கல் என்னவெனில், இவை பல மொழிகளில் வெளியாகும்போது அவற்றை ஒருங்கிணைத்துப் புரிந்துகொள்ள வழியில்லை. இந்தச் சிக்கலுக்குத் தீர்வாகத்தான், பூகம்பத்துக்கு ஒரு இமோஜி தேவை என வலியுறுத்துகின்றனர். பூகம்பப் பாதிப்பு தகவல் எந்த மொழியில் வெளியிடப்பட்டாலும், அதனுடன் பூகம்ப இமோஜி இணைக்கப்பட்டிருந்தால், அதை வைத்தே எளிதாகப் புரிந்துகொண்டு விடலாம்.

சூறாவளி, புயல், எரிமலை போன்ற இயற்கை நிகழ்வுகளைக் குறிக்க இமோஜி இருக்கும்போது, பூகம்பத்தைக் குறிக்க மட்டும் இமோஜி இல்லை. இந்த நிலை மாறவே இந்தக் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. பூகம்பப் பாதிப்புகளைக் கண்டறிவதில் மட்டுமல்லாமல் மீட்பு பணிகள், நிவாரண உதவிகளை ஒருங்கிணைப்பதிலும் பூகம்ப இமோஜி கைகொடுக்கும் என நம்பப்படுகிறது.

http://tamil.thehindu.com

  • தொடங்கியவர்
‘சாய்ந்து படுத்தபடி சாதனை செய்ய முடியாது’
 

image_4489d12e95.jpgஅதீத கற்பனைகள் ஆபத்தானவை. கண்டபடி கற்பனைகளை ஓடவிட்டுத் தரக்குறைவான கதைகளை உருவாக்க வேண்டாம். கலாசார பாரம்பரியங்களைத் தவறான கண்ணோட்டத்துடன் பரப்பியும் வருகின்றனர்.

அறிவைத் தூய்மையாக வைத்திருந்தால், சித்தம் சிதறாது.கற்பனை வளம் உத்தமமாய் அமையும். நற்பண்பு உள்ளவரால்த்தான் அற்புதமான கற்பனையூடாக நல்ல காரியங்களை ஆற்றிட முடியும்.

சோம்பேறிகள் பொழுது போக்குக்காக, மனதைக் கண்டபடி ஓடவிட்டுப் பொய்யான விடயங்களுக்குப் புது வேஷம் கொடுப்பார்கள். சாய்ந்து படுத்தபடி சாதனை செய்ய முடியாது.

உழைக்காமல் இருக்கும் மனிதர்களுக்கு, அடுத்தவன் செய்யும் எதுவுமே, அது எளிதானது எனச் சொல்லிவிடுவார்கள். புல்லையே அசைக்கத் தயங்குபவர்கள், மலையை உடைத்துக் கோட்டை கட்டுவார்களா? சொல், செயல் வல்லவனுக்கே உரியது. 

  • தொடங்கியவர்

சித்திரவதைக்கு ஆளானோருக்கான சர்வதேச ஆதரவு நாள்: ஜூன் 26- 1987

 
அ-அ+

சித்திரவதைக்கு ஆளானோருக்கான சர்வதேச ஆதரவு நாள் (International Day in Support of Torture Victims), என்பது உலகெங்கணும் உள, உடல் ரீதியாக பல்வேறு சித்திரவதைகாளுக்கு ஆளானோருக்கு ஆதரவு தெரிவுக்கும் வகையில் ஐக்கிய நாடுகள் அவையினால் ஜூன் 26ம் நாளன்று கொண்டாடப்படும் ஒரு சிறப்பு நாளாகும். ஜூன் 26 1987-ம் ஆண்டில் ஐக்கிய நாடுகள் பொதுச்சபைக் கூட்டத்தில் சித்திரவதைக்கெதிரான தீர்மானம் எடுக்கப்பட்டது.

 
 
 
 
சித்திரவதைக்கு ஆளானோருக்கான சர்வதேச ஆதரவு நாள்: ஜூன் 26- 1987
 
சித்திரவதைக்கு ஆளானோருக்கான சர்வதேச ஆதரவு நாள் (International Day in Support of Torture Victims), என்பது உலகெங்கணும் உள, உடல் ரீதியாக பல்வேறு சித்திரவதைகாளுக்கு ஆளானோருக்கு ஆதரவு தெரிவுக்கும் வகையில் ஐக்கிய நாடுகள் அவையினால் ஜூன் 26ம் நாளன்று கொண்டாடப்படும் ஒரு சிறப்பு நாளாகும்.

ஜூன் 26 1987-ம் ஆண்டில் ஐக்கிய நாடுகள் பொதுச்சபைக் கூட்டத்தில் சித்திரவதைக்கெதிரான தீர்மானம் எடுக்கப்பட்டது. மனித சமூகத்தின் அடிப்படை உரிமைகள் பாதுகாக்கப்படுவதன் மூலமே உலகில் விடுதலை, நீதி, மற்றும் அமைதி ஏற்பட வாய்ப்புண்டு என்பதை இத்தீர்மானம் எடுத்துக்காட்டுகின்றது.

இன்று உலகெங்கணும் ஐநா அவையின் ஆதரவில் 200க்கும் மேற்பட்ட மையங்கள் சித்திரவதைக்கு ஆளானோருக்கு சிகிச்சை அளிக்கின்றன.

இதே தேதியில் நிகழ்ந்து முக்கிய போட்டிகள்:-

* 1483 - மூன்றாம் ரிச்சார்ட் இங்கிலாந்தின் மன்னனாக முடி சூடினான். * 1541 - இன்கா பேரரசை முடிவுக்குக் கொண்டு வந்த பிரான்சிஸ்கோ பிசாரோ கொல்லப்பட்டான். * 1690 - தென்மேற்கு இங்கிலாந்தின் நகரான டெயின்மவுத் நகரை பிரான்ஸ் முற்றுகையிட்டது. * 1718 - தனது தந்தை மன்னர் முதலாவது பியோத்தரை கொல்லச் சதி செய்ததாக மரணதண்டனை விதிக்கப்பட்ட ரஷ்யாவின் இளவரசன் அலெக்சி பெட்ரோவிச் மர்மமான முறையில் இறந்தான். * 1723 - அசர்பைஜான் தலைநகர் பாக்கூ ரஷ்யாவிடம் வீழ்ந்தது.

* 1924 - அமெரிக்க ஆக்கிரமிப்புப் படை டொமினிக்கன் குடியரசை விட்டு விலகியது. * 1948 - முதலாவது இருதுருவ திரிதடையத்துக்கான காப்புரிமத்தை வில்லியம் ஷோக்லி பெற்ற்றார். * 1960 - சோமாலிலாந்து பிரித்தானியாவிடம் இருந்து விடுதலை அடைந்தது. * 1975 - இந்திரா காந்தி இந்தியாவில் அவசரகாலச் சட்டத்தைப் பிறப்பித்தார். * 1976 - உலகின் மிக உயரமான கட்டிடமான கனடாவின் சி.என் கோபுரம் பொதுமக்கள் பயன்பாட்டிற்காக திறக்கப்பட்டது.
 

https://www.maalaimalar.com

  • தொடங்கியவர்

கண்டுபிடிப்புகளின் கதை: டெலஸ்கோப்

 

 
Telescope%20-4
Telescope%20-5
 
 

தூரத்தில் இருக்கும் பொருட்களையும் காட்சிகளையும் அருகில் காண்பதற்கும், அருகில் இருக்கும் பொருட்களையும் காட்சிகளையும் தொலைவில் காண்பதற்கும் பைனாகுலரைப் பயன்படுத்தியிருப்பீர்கள். இந்த பைனாகுலரில் இரண்டு சிறு தொலைநோக்கிகள் இருப்பது உங்களுக்குத் தெரியுமா?

   
 

தொலைநோக்கி எளிய சாதனம்தான். ஆனால் அது வானை நோக்கித் திரும்பியபோது மனித குலத்துக்குப் பயன்பட்ட மகத்தான சாதனமாக மாறியது! சூரியன், பூமி, சூரியக் குடும்பம் பற்றிய ஏராளமான அறிவியல் உண்மைகளை எடுத்துக் காட்டியது.

தொலைநோக்கியைக் கண்டுபிடித்தது யார்? இந்தக் கேள்விக்கு அவ்வளவு எளிதாகப் பதில் அளித்துவிட முடியாது.

Galileo-picturejpg

கலிலியோ கலிலி

16-ம் நூற்றாண்டிலேயே கண் கண்ணாடி செய்பவர்கள் லென்ஸுகளை உருவாக்கிவிட்டனர். இரண்டு லென்ஸுகளை வைத்து என்னவெல்லாம் செய்ய முடியும் என்ற ஆராய்ச்சிகளில் இறங்கியிருந்தனர். 1608-ம் ஆண்டு டச்சு நாட்டைச் சேர்ந்த கண்ணாடி தயாரிப்பாளர் ஹான்ஸ் லிப்பர்ஷே, தான் தொலைநோக்கியைக் கண்டுபிடித்திருப்பதாகச் சொல்லி, காப்புரிமைக்கு விண்ணப்பித்தார். இவரது தொலைநோக்கியில் குழி, குவி ஆடிகளைப் பயன்படுத்தி மூன்று மடங்கு தூரத்தில் உள்ள பொருட்களைப் பார்க்கும்படி அமைத்திருந்தார்.

இவர் வசித்த நகரத்திலேயே ஜசாரியஸ் ஜான்சென் என்பவரும் தொலைநோக்கித் தயாரிப்பில் இறங்கியிருந்தார். சில வாராங்களில் அவரும் காப்புரிமை கேட்டு விண்ணப்பித்தார். இருவரது தொலைநோக்கிகளையும் ஆராய்ந்தவர்கள், மிக எளிய வடிவமைப்பாக இருப்பதால் எல்லோரும் எளிதாகச் செய்துவிடுவார்கள். அதனால் இன்னும் சற்றுக் கடினமான அமைப்பாக மாற்றும்படிச் சொல்லிவிட்டனர். இருவரும் தொலைநோக்கியில் மேலும் சில முன்னேற்றங்களைச் செய்தனர். ஹான்ஸ் லிப்பர்ஷேவுக்குத் தொலைநோக்கிக்கான காப்புரிமையும் ஜான்செனுக்கு கூட்டு நுண்ணோக்கிக்கான காப்புரிமையும் வழங்கப்பட்டன.

சில வாரங்களில் மேலும் ஒரு டச்சுக்காரரான ஜேக்கப் மெஷியஸ் தான் கண்டுபிடித்த தொலைநோக்கிக்கான காப்புரிமை கேட்டு விண்ணப்பித்தார். நெதர்லாந்து அரசாங்கம் ஜேகப்புக்குச் சிறு ஊக்கத்தொகை வழங்கியது. லிப்பர்ஷேவுக்குத் தொலைநோக்கிகளை உருவாக்கச் சொல்லிப் பணம் கொடுத்தது.

GalileoDonatojpg

தொலைநோக்கியை அறிமுகம் செய்கிறார் கலிலியோ.

 

1609-ம் ஆண்டு கலிலியோ கலிலி டச்சு நாட்டு லென்ஸுகளைப் பற்றிக் கேள்விப்பட்டார். ஒரு சில நாட்களில் அதுவரை யாரும் பார்த்திராத அளவுக்கு லென்ஸுகளை உருவாக்கிவிட்டார். இவரது தொலைநோக்கி 20 மடங்கு தூரத்தில் இருந்த பொருட்களையும் காட்டியது. இதை செனட் சபையில் அறிஞர்கள் முன்னிலையில் அறிமுகம் செய்து வைத்தார் கலிலியோ. வியந்த சபை உறுப்பினர்கள், படுவா பல்கலைக்கழகத்தின் விரிவுரையாளர் பணியை வழங்கினார்கள். சம்பளம் இரண்டு மடங்கு உயர்த்தப்பட்டது.

Lipperheyportraitjpg

ஹான்ஸ் லிப்பர்ஷே

அதுவரை உளவு பார்க்கும் கருவியாக இருந்த தொலைநோக்கியை, கலிலியோதான் வானை நோக்கித் திருப்பினார். தொலைநோக்கியில் மேலும் மேலும் முன்னேற்றங்களைக் கொண்டுவந்தார். அதன் மூலம் சந்திரனில் இருந்த மலைகளையும் குன்றுகளையும் கண்டுபிடித்துச் சொன்னார். பிறகு பால்வெளி மண்டலத்தில் ரிப்பன் போன்ற ஒளி வளையத்தைக் கண்டுபிடித்தார். சனிக் கோளின் வளையங்களையும் வியாழன் கோளின் சந்திரன்களையும் கண்டறிந்தார். பிற்காலத்தில் இவரது பெயரிலேயே வியாழனின் சந்திரன்கள் அழைக்கப்பட்டன.

ஐரோப்பாவில் தொலைநோக்கி உருவாக்கம் வேகமாகப் பரவ ஆரம்பித்தது. ஜெர்மனியைச் சேர்ந்த ஜோஹன்னஸ் கெப்ளர், இரண்டு குவி லென்ஸுகளை வைத்து தொலைநோக்கியை உருவாக்கினார். இதில் உருவங்கள் தலைகீழாகத் தெரிந்தன. கெப்ளரின் ஆராய்ச்சிகளை வைத்து, இங்கிலாந்தைச் சேர்ந்த ஐசக் நியூட்டன் தொலைநோக்கியில் மேலும் பல முன்னேற்றங்களைச் செய்தார்.

அதன் விளைவாக 1668-ம் ஆண்டு ஒளி பிரதிபலிப்பு தொலைநோக்கியை உருவாக்கினார். நியூட்டனின் இந்தத் தொலைநோக்கிதான் பிற்காலத்தில் வானியலில் ஆதிக்கத்தைச் செலுத்தியது.

தொலைநோக்கிக்கு முன்பு இருந்த சாதனத்தை உருவாக்கியதால் ஹான்ஸ் லிப்பர்ஷேயைவிட, தொலைநோக்கியை உருவாக்கிய கலிலியோ கலிலியைத்தான் உலகம் தொலைநோக்கிக் கண்டுபிடிப்பாளராகக் கருதுகிறது. ஆனால் தொலைநோக்கிக் கண்டுபிடிப்பில் பலரது பங்களிப்பும் இருப்பதை யாரும் மறுக்க முடியாது.

Telescope%20-1
 

இன்று கலிலியோ பயன்படுத்திய லென்ஸ்கள் சிறிய தொலைநோக்கிகளில் மட்டுமே பயன்படுத்தப்படுகின்றன. நியூட்டனின் பிரதிபலிப்பு தொலைநோக்கிதான் சக்தி வாய்ந்த தொலைநோக்கிகளில் பயன்படுத்தப்பட்டு வருகின்றன.

(கண்டுபிடிப்போம்)

http://tamil.thehindu.com

Edited by நவீனன்

  • தொடங்கியவர்

எஸ்பிரஸ்ஸோ, லாட்டே, கேப்புச்சினோ... ஒரு சூடான காபி ரவுண்டப்!

 

அடுத்த முறை காபி ஷாப்புக்குச் செல்லும்போது எந்த காபி எப்படிப்பட்டது என்று தெரிந்துகொண்டால் வேலை ஈசியாகுமே பாஸ்! இதோ குட்டியாக ஒரு காபி ரவுண்டு! 

எஸ்பிரஸ்ஸோ, லாட்டே, கேப்புச்சினோ... ஒரு சூடான காபி ரவுண்டப்!
 

கடைசி நாள் தேர்வு `ட்ரீட்’முதல் கல்யாணப் பேச்சுவரை இப்போது எல்லாமுமே காபி ஷாப்பில் நடக்கிறது. முதல் முறையாக ஒரு காபி ஷாப்பிற்குள் நுழைந்த அனுபவத்தை அவ்வளவு எளிதாக யாரும் மறந்திருக்க மாட்டோம். நம் வீடுகளில் காய்ச்சியப் பால், சர்க்கரை, காபித்தூள்/டிகாக்ஷன் என்று இருந்த காபி திடீரென்று நூறு வகை தோசை மாதிரி நூறு வகையாக, லேசாக வாயில் நுழையாதப் பெயர்களாக மாறியதும்,ஏதோ ஒரு காபி ஆர்டர் செய்து சுவைத்த அனுபவமும் நம்மில் பலருக்கு வாய்த்திருக்கும்தானே? அடுத்த முறை காபி ஷாப்பிற்குச் செல்லும்போது எந்த காபி எப்படிப்பட்டது என்று தெரிந்துகொண்டால் வேலை ஈசியாகுமே பாஸ்! இதோ குட்டியாக ஒரு காபி ரவுண்டு! 

காபி

முதலில் காபிக்கொட்டை பற்றிப் பார்ப்போம். இதில் இரண்டு வெரைட்டி. இரண்டும் கொஞ்சம் வெவ்வேறு தட்பவெப்ப சூழ்நிலையில் வளர்வதால் ருசியும் குணமும் சற்றே மாறுபடும். 

 

 

முதல் வகை: அராபிகா – கொஞ்சம் உயரமான இடங்களில் மட்டுமே வளரும் காபிக்கொட்டை இது. மென்மையான சுவை கொண்டது, எனவே, கொஞ்சம் உயர்தர காபியில் மட்டுமே இதனைப் பயன்படுத்துவார்கள். 

இரண்டாம் வகை: ராபஸ்டா – எளிதாக வளர்க்கலாம். அராபிகாவைவிட caffeine அளவு அதிகம் என்பதால் கசப்புச்சுவை அதிகமாக இருக்கும். இன்று பெரும்பாலான இடங்களில் பயன்படுத்துவது இந்த வகை காபிக்கொட்டையைத்தான். 

 

 

இனி, காபி வகைகள்:

எஸ்பிரஸ்ஸோ:

ஒரே ஒரு தோசைமாவை வைத்துக்கொண்டு நம்ம மக்கள் எப்படி விதம்விதமாக தோசையைச் சுட்டுத்தள்ளுகிறார்களோ, அதைப்போலத்தான் இந்த எஸ்பிரஸ்ஸோவின் கதையும். குட்டியாக நம் வீடுகளில் பாப்பாவுக்கு எல்லாம் பால் புகட்ட பாலாடை வைத்திருப்போமே, அந்த சைசில் குட்டியாக( ரொம்பவே குட்டியாக ) ஒரு ஷாட் திக்கான, சர்க்கரை கலக்காத, தூய காபி டிகாக்ஷன்தான் எஸ்பிரஸ்ஸோ. கொஞ்சோண்டு இருந்தாலும் ரொம்ப அடம். எவ்வளவு சர்க்கரை கலந்தாலும் அவ்வளவு கசப்பாக இருக்கும். சில மணி நேரம் குறுகுறுவென்று பார்த்துக்கொண்டே இருக்க வேண்டும். தூக்கம் வரக் கூடாது என்று நீங்கள் விநோத வேண்டுதல் ஏதாவது வைத்திருந்தால் எஸ்பிரஸ்ஸோ உங்களுக்குக் கைகொடுக்கும்! இதுதான் அடிப்படை காபி. இதிலிருந்துதான் மற்ற காபி எல்லாம் செய்வார்கள்- வெவ்வேறு அளவில் பால், பால் நுரை, தண்ணீரின் அளவு, இல்லை அதில் சேர்க்கப்படும் சாக்லேட் சிரப் போன்றவற்றைவைத்துதான் மற்ற காபி மாறுபடும். 

 

 

மாக்கியாட்டோ (macchiato) 
எஸ்பிரஸ்ஸோவின் கசப்பு தாங்க முடியாமல் அதன் மண்டையில் கொஞ்சம் பாலும், பால் நுரையும் சேர்த்தபோது பிறந்ததுதான் இந்த மாக்கியாட்டோ. இதிலே இரண்டு வகை உண்டு – short மற்றும் long. இரண்டுக்கும் உள்ள வித்தியாசம், long மாக்கியாட்டோவில் இரண்டு மடங்கு எஸ்பிரஸ்ஸோ சேர்க்கப்படும். 

லாட்டே(latte): 
ஒரு பங்கு எஸ்பிரஸ்ஸோ, மூன்றுமுதல் ஐந்து மடங்கு காய்ச்சிய பால். இதுதான் லாட்டே. கூட இன்னும் கொஞ்சம் ருசி வேண்டும் என்று நினைப்பவர்கள் வெனிலா, சாக்லேட், ஹஸல்நட் போன்ற இத்யாதிகளைச் சேர்த்துக்கொண்டு ருசியோ ருசியென்று ருசிப்பார்கள். 

கேப்புச்சினோ(cappuccino): 
கொஞ்சம் பாப்புலரான காபி. இரண்டு மடங்கு எஸ்பிரஸ்ஸோ. கூடவே காய்ச்சிய பால் சேர்த்துக் கலக்கும்போது ஒரு இரண்டு அல்லது மூன்று சென்டிமீட்டருக்கு நுரை தளும்பி நின்றால் அதுவே கேப்புச்சினோ. இந்த வகை காபிக்கும் வெனிலா, சாக்லேட், ஹஸல்நட் போன்ற சடங்கு சம்பிரதாயம் எல்லாம் உண்டு

மோகா(mocha): 
ஹாட் சாக்லேட் மற்றும் காபி இரண்டுக்கும் நடுவில் எங்கேயோ விளையாடிக்கொண்டிருக்கும் காபி வகை இது. எஸ்பிரஸ்ஸோ, சாக்லேட் பவுடர், காய்ச்சிய பால் என்று அனைத்தையும் கலந்து, மண்டை மேலே கொண்டையாக பால் நுரையையும், இன்னும் கொஞ்சம் இருக்கட்டும் என்று சாக்லேட் பவுடரையும் தூவி (இப்போவே கண்ணக்கட்டுதே என்று நினைத்தால் கம்பெனி பொறுப்பில்லை) இறக்கினால் கமகம மோகா ரெடி. சில சமயம் இதில் கேரமல் போன்றவற்றையும் சேர்ப்பார்கள். 

https://www.vikatan.com

  • தொடங்கியவர்

 

உலகின் மிகவும் அழகற்ற செல்லப்பிராணிக்கான போட்டி!

உலகின் மிகவும் அழகற்ற செல்லப்பிராணியைத் தேர்வு செய்யும் போட்டி சான் ஃப்ரான்சிஸ்கோவில் நடைபெற்றுள்ளது. இங்க்லீஷ் புல் டோக் ரக செல்லப்பிராணி, தனது நீளமான நாக்கை கொண்டிருக்கும் காரணத்தால், அழகற்ற செல்லப்பிராணி பட்டத்தை வென்றது.

  • தொடங்கியவர்

இவ்வளவு படங்களை பூமி தாங்குமா!

 

 
jkipng

என்னுடைய பழைய டிஜிட்டல் கேமராவில் நான் எடுத்த புகைப்படங்களையும் கேமரா கைபேசி வாங்கிய பிறகு நான் எடுத்த புகைப்படங்களையும் சில நாட்களுக்கு முன்பு தேடித் தொகுத்தேன். கிட்டத்தட்ட எட்டு ஆண்டு காலப் புகைப்படங்கள் சிதறியும் அழிந்தும்போய்விடக் கூடாது என்பதற்காக அந்த முயற்சியில் ஈடுபட்டிருந்தேன். அப்போது ஒரே கணினியின் பல்வேறு கோப்புகளில் ஒரே படத்தின் நகல்கள் சேமிக்கப்பட்டிருந்ததைக் கண்டறிந்தேன். நகல்களை அழிப்பதன் மூலம் கணினியில் இடத்தைச் சேமிக்கலாம் என்பதற்காக எல்லாப் புகைப்படங்களையும் ஒரே இடத்தில் வந்து கொட்டினேன். அப்படிக் கொட்டும்போது ஒரே படங்கள் ஒன்றுக்கும் மேற்பட்ட இடங்களில் இருந்தால், அவற்றைச் சேர்த்துக்கொள்ளலாமா இல்லை விட்டுவிடலாமா என்று கணினி கேட்கும் அல்லவா? அதன் மூலம் நகல்களைக் கண்டுபிடித்துக் களையெடுத்தேன். கணினியில் மட்டுமல்லாமல் ஹார்ட் டிஸ்க்கிலும் அதே படங்கள் பல முறை பல்வேறு கோப்புகளில் இருப்பதைக் கண்டறிந்தேன். எல்லாவற்றையும் ஒரே இடத்தில் கொட்டிக் களையெடுத்து முடித்தபின் புகைப்படங்களின் எண்ணிக்கையைப் பார்த்து மலைத்துப் போய்விட்டேன். எட்டு ஆண்டுகளில் 11 ஆயிரத்துக்கும் மேற்பட்ட புகைப்படங்கள். அதாவது சராசரியாக ஒரு நாளைக்கு 3 படங்கள்.

என்னைப் பொறுத்தவரை அதிகமாக இருக்கலாம். ஆனால், உலக சராசரி

 

யைப் பொறுத்தவரை என்னுடைய தனிப்பட்ட எண்ணிக்கை மிகவும் குறைவே.

கேமரா கைபேசியை வைத்திருக்கும் ஒரு நபர் சராசரியாக ஒரு நாளைக்கு 10 படங்கள் எடுப்பதாக ஒரு தரவு கூறுகிறது. அப்படியென்றால் ஒரு ஆண்டுக்கு 3,650 படங்கள். இன்றைய தேதியில் உலக மக்கள்தொகை சுமார் 760 கோடி; அதில் சரிபாதி மக்களிடமாவது கேமரா கைபேசி இருக்கும் என்று கணிக்கப்படுகிறது. ஆக,

3,650-ஐ 380 கோடியால் பெருக்கினால் 13 லட்சத்து 87

ஆயிரம் கோடி (13,87,000,00,00,000). ஒரு படம் ஏறத்தாழ

ஒரு எம்.பி. அளவில் இருக்கிறது என்று வைத்துக்கொண்

டால், ஒரு ஆண்டுக்கு மொத்தம் 13 லட்சத்து 87 ஆயிரம் கோடி எம்.பி. அளவில் படங்கள் எடுக்கப்படுகின்றன.

சிக்கல் இங்குதான்! எடுத்த படங்களை என்ன செய்வோம்? கைபேசியிலிருந்து கணினியில் சேமித்துக் கொள்வோம், கணினியிலிருந்து பென்டிரைவ், ஹார்ட் டிஸ்க் போன்றவற்றில் சேமித்துக்கொள்வோம். வாட்ஸ்-அப்பிலும் மின்னஞ்சலிலும் அனுப்பிக்கொள்வோம். ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட சமூக ஊடகங்களில் பகிர்வோம், கூகுள் டிரைவ், கிளவுட் போன்ற இணைய சேமிப்பகங்களில் சேமித்து வைப்போம். ஆக, முன்பு போல படச்சுருள்கள், அவற்றைக் கழுவி உருவாக்கிய படங்கள், அவற்றுக்கான ஆல்பங்கள் போன்று இடத்தை அடைக்கும் சேமிப்பு முறை தற்போது இல்லை என்று நாம் எண்ணிக்கொண்டிருக்கிறோம். உண்மையில், படங்கள் என்ற பெயரில் நாம் போட்டுக்கொண்டிருக்கும் டிஜிட்டல் குப்பைகள் முந்தைய படச்சுருள்களைவிட அதிகமாகவே இடத்தை அடைத்துக்கொண்டிருக்கின்றன.

ஒரு ஆண்டுக்கு உலகத்தில் எடுக்கப்படும் படங்கள் அனைத்தையும் ஹார்ட் டிஸ்க்குகளில் சேமிக்க வேண்டும் என்றால், ஆயிரம் ஜி.பி. சேமிப்பு வசதியுள்ள சுமார் 1,38,70,000 ஹார்ட் டிஸ்க்குகள் தேவைப்படும். ஒரு ஹார்ட் டிஸ்க் இந்திய மதிப்பில் ரூ.4,000 என்று வைத்துக்கொண்டால் ஒட்டுமொத்தமாக ரூ. 5,548,00,00,000. ஆக, ஒன்று இடத்தை அடைக்கிறது என்றால் அது அடைக்கும் இடமானது பணத்துடனும் தொடர்புடையது. கூடவே, அதை உருவாக்குவதற்கும் பயன்படுத்துவதற்கும் உள்ளிடப்படும் மனித உழைப்பு, இயற்கை - செயற்கை வளங்கள், நேரம் போன்றவற்றையும் கணக்கில் எடுத்துக்கொண்டு பாருங்களேன்.

டிஜிட்டல் யுகம் நம் உணர்விலிருந்து இடத்தையும் காலத்தையும் மறைத்து விடுவதால், இது எதுவுமே நமக்கு உறைப்பதில்லை. எந்த ஒன்றையும் அதீதமாக ஜனநாயகப்படுத்தும்போது அது தன்னைத்தானே அழித்துக்கொள்ளும் என்று சொல்வார்கள். டிஜிட்டல் தொட்ட பல விஷயங்களுக்கு இது பொருந்தும். முன்பெல்லாம் கேமராவுக்கான படச்சுருள் வாங்கும்போது 36 படங்கள்தான் எடுக்க முடியும் என்பதால் பார்த்துப் பார்த்து எடுத்தோம். டிஜிட்டல் யுகத்துக்கு முன்பு ஒரு மனிதர் தன்னுடைய படங்கள் பத்து வைத்திருந்தாலே அதிகம். அதிகபட்சமாக நூறு படங்கள் வரை வைத்திருக்க வாய்ப்புண்டு. பொது வாழ்க்கையில் ஈடுபடும் மனிதரென்றால், பத்திரிகைகளால் அடிக்கடி புகைப்படம் எடுக்கப்படும் வாய்ப்பிருப்பதால் நூற்றுக் கணக்கில் புகைப்படங்கள் எடுக்கப்பட்டிருக்கலாம். ஆனால், அப்படிப்பட்டவர்கள் லட்சத்தில் ஒருவராகத்தான் இருப்பார்கள். முன்பெல்லாம் ஒரு ஆளுமையைப் பற்றி ஆவணப்படம் எடுக்க வேண்டுமென்றால் அவரது அரிதான ஒன்றிரண்டு புகைப்படங்களை வைத்து, மற்றவர்களின் நினைவுகளை அதில் பின்னி ஆவணப்படம் எடுப்பார்கள். இன்றோ, நாம் வாழ்நாள் முழுவதும் எடுத்திருக்கும் புகைப்படங்களை வரிசையாக ஒன்றிணைத்து அடுத்தடுத்து ஓட்டினால் ஒவ்வொருவருக்கும் ஒரு ஆவணப்படம் கிடைத்துவிடும்.

2015-ம் ஆண்டின் உலகப் புகழ்பெற்ற புகைப்படம் எது தெரியுமா? ஹாலிவுட் நடிகர் ஜானி டெப் வருகைதந்த ஒரு நிகழ்வில் எடுக்கப்பட்ட புகைப்படம் அது. ஜானி டெப் வரும்போது வேடிக்கை பார்த்த அனைவரும் கைபேசி ஏந்திக்கொண்டு புகைப்படம் எடுத்தபடியோ வீடியோ எடுத்தபடியோ இருக்க, ஒரே ஒரு பாட்டி மட்டும் கைபேசி இல்லாமல் ஜானி டெப்பை வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்தார். நிகழும் கணத்தில் முழுமையாய் வாழ்பவர் என்று ஒரே நாளில் உலகெங்கும் அவரது படம் பிரபலமானது. நம்மில் பலரும் நிகழும் கணத்தை அனுபவிப்பதைவிட அதைப் படமெடுப்பதிலேயே அதிக கவனம் செலுத்துகிறோம். அதனால், ஒரு நிகழ்வுக்கு சாட்சியாக நாம் எடுக்கும் புகைப்படங்கள் நம்மிடம் இருந்தாலும் அந்த நிகழ்வு சார்ந்து அனுபவரீதியான உணர்வு ஏதும் இல்லாமல் போகிறது.

klpng
 

“ரயில், பேருந்து, டாக்ஸி என்று பல வாகனங்களில் பயணித்து, பல நாட்கள் செலவிட்டு இமயமலையில் அழகான இடமொன்றுக்குப் போவோம். பின்னணியில் மலைச்சிகரம் தெரிய சில செல்ஃபிகள் எடுத்துவிட்டுத் திரும்பிவிடுவோம். பணத்தையும் நேரத்தையும் இவ்வளவு செலவுசெய்து அந்த இடத்துக்கு வந்தது செல்ஃபி எடுக்கத்தானா? அதை ரசிக்க இல்லையா?” என்று நண்பர் ஒருமுறை வருத்தப்பட்டதை இங்கு நான் நினைத்துப்பார்க்கிறேன். “சிந்திக்கிறேன், அதனால் இருக்கிறேன்” என்று பிரெஞ்சு தத்துவ அறிஞர் ரெனே தேகார்த் கூறினார். நாமோ இன்று, “செல்ஃபி எடுக்கிறேன், அதனால் இருக்கிறேன்” என்று அந்தத் தத்துவத்தை மறு வரையறை செய்திருக்கிறோம்.

எல்லாவற்றுக்கும் இடம் தேவை, காலம் தேவை. இந்த இடத்தில் டிஜிட்டல் படங்களுடன் நினைவுகளை ஒப்பிடத் தோன்றுகிறது. நினைவுகள், யோசனைகள் போன்றவை உருவமில்லாதவை; அதனால், இடத்தை அடைத்துக்கொள்ளாதவை என்று நாம் நினைத்துக்கொண்டிருக்கிறோம். நினைவுகளும் யோசனைகளும் உருவமில்லாதவைதான். ஆனால், அவை உருவாவதற்கு உருவமுள்ள ஒன்று தேவைப்படுகிறது. நம் மூளை. அது இடம் சார்ந்தது. அதற்கும் எல்லை இருக்கிறது. கருவில் நம் மூளை உருவான கணத்திலிருந்து இந்தக் கணம் வரை நாம் எதிர்கொண்ட அனுபவங்கள் மூளையில் நிரந்தரமாகப் பதிந்திருக்க நம் மூளையில் போதுமான இடம் கிடையாது. அதனால்தான், தேவைப்படுபவற்றை மட்டும் நிரந்தர நினைவாகவும் தேவையற்றவைகளைத் தற்காலிக நினைவாகவும் மூளை பராமரிக்கிறது. இதற்கு மறதி என்னும் வசதி மிகவும் பயனுள்ளது. எந்த நினைவுமே அழியாமல் நம்முள் இருந்தால் நம் மூளை என்னவாகும்? நாம் என்ன ஆவோம்?

இணையவெளியும் மூளையைப் போன்

றதுதான். அதற்குள் படங்கள் என்ற பெயரில் கணக்கற்ற நினைவுகளை நாம் போட்டு அடைத்துக்கொண்டே வருகிறோம். அவை, இணைய குப்பைகளாகவும், அதன் விளைவாக மின்

னணுக் குப்பைகளாகவும் வாழ்க்கைக்கும் சூழலுக்கும் பெருங்கேடு விளைவிப்பவையாக மாறிவருகின்றன.

நம் கையில் வசதியாக ஒரு சாதனம் இருக்கிறது. அது நம் அனுபவங்கள், நினைவுகளையெல்லாம் படமாகப் பதிவுசெய்து தள்ளுகிறது. இதற்குத் தேவையான முயற்சி ஒரு பொத்தான் குறியீட்டை அழுத்துவது மட்டுமே. ஆகும் நேரம் ஒரு நொடி மட்டுமே என்பதால், தினமும் கணக்கில்லாத படங்களை எடுக்கிறோம். நம் கைபேசி, கணினி, ஹார்ட் டிஸ்க், இணையம் என்று எல்லாவற்றையும் நிரப்பிக்கொண்டிருக்கிறோம். இப்படியாக வாழ்க்கை முழுவதும் புகைப்படங்கள்!

படங்களை விட முக்கியமானது வாழ்க்கை. முதலில் வாழ்வனுபவங்களைச் சேகரிப்போம். அவற்றின் அரிய பதிவுகளாக மட்டும் புகைப்படங்கள் இருக்கட்டும். அழகிய நினைவுகளுக்கும் அழகிய பூமிக்கும் அதுவே நல்லது!

http://tamil.thehindu.com

  • தொடங்கியவர்

1976 – உலகின் மிக உயரமான கட்டிடமான கனடாவின் சி.என் கோபுரம் பொதுமக்கள் பயன்பாட்டிற்காக திறக்கப்பட்டது.

வரலாற்றில் இன்று….
ஜூன் 26

நிகழ்வுகள்

363 – ரோமப் பேரரசன் ஜூலியன் கொல்லப்பட்டான்.
1483 – மூன்றாம் ரிச்சார்ட் இங்கிலாந்தின் மன்னனாக முடி சூடினான்.
1541 – இன்கா பேரரசை முடிவுக்குக் கொண்டு வந்த பிரான்சிஸ்கோ பிசாரோ கொல்லப்பட்டான்.
1690 – தென்மேற்கு இங்கிலாந்தின் நகரான டெயின்மவுத் நகரை பிரான்ஸ் முற்றுகையிட்டது.
1718 – தனது தந்தை மன்னர் முதலாவது பியோத்தரை கொல்லச் சதி செய்ததாக மரணதண்டனை விதிக்கப்பட்ட ரஷ்யாவின் இளவரசன் அலெக்சி பெட்ரோவிச் மர்மமான முறையில் இறந்தான்.
1723 – அசர்பைஜான் தலைநகர் பாக்கூ ரஷ்யாவிடம் வீழ்ந்தது.
1924 – அமெரிக்க ஆக்கிரமிப்புப் படை டொமினிக்கன் குடியரசை விட்டு விலகியது.
1948 – முதலாவது இருதுருவ திரிதடையத்துக்கான காப்புரிமத்தை வில்லியம் ஷோக்லி பெற்ற்றார்.
1960 – சோமாலிலாந்து பிரித்தானியாவிடம் இருந்து விடுதலை அடைந்தது.
1975 – இந்திரா காந்தி இந்தியாவில் அவசரகாலச் சட்டத்தைப் பிறப்பித்தார்.
1976 – உலகின் மிக உயரமான கட்டிடமான கனடாவின் சி.என் கோபுரம் பொதுமக்கள் பயன்பாட்டிற்காக திறக்கப்பட்டது.

பிறப்புகள்

1824 – வில்லியம் தாம்சன், அயர்லாந்தைச் சேர்ந்த இயற்பியல் அறிஞர் (இ 1907)
1838 – பான்கீம் சட்டர்ஜி, வங்காள எழுத்தாளர் (இ. 1894)
1892 – பெர்ல் பக், அமெரிக்க எழுத்தாளர், நோபல் பரிசு பெற்றவர் (இ. 1973)
1924 – இளையபெருமாள், தமிழ்நாடு தலித் அரசியல் தலைவர் (இ. 2005)
1906 – ம. பொ. சிவஞானம், தமிழக அரசியல்வாதி, தமிழறிஞர் (இ. 1995)

இறப்புகள்

1995 – ஏர்னெஸ்ட் வோல்ட்டன், நோபல் பரிசு பெற்றவர் (பி. 1903)

சிறப்பு தினம்

சித்திரவதைக்கு ஆளானோருக்கான சர்வதேச ஆதரவு தினம்
மடகஸ்கார் – விடுதலை தினம்
ருமேனியா: கொடி தினம்
சோமாலிலாந்து – விடுதலை தினம்

http://metronews.lk

  • தொடங்கியவர்
‘அப்பாவிகளின் கோபம் ஆபத்தானது’
 

image_8777633876.jpgஒருவரது மனதைக் கிண்டிக் கிளறி, உழுது அவரை இம்சைக்குள்ளாக்குவது அத்துமீறிய அநாகரிகமான காரியமாகும். ஓர் அடிமையைப் போல, கேள்விக்கு மேல் கேள்விகளைத் தொடுத்து, திக்குமுக்காடச் செய்வது, விருப்பமான சமூகப்பணிபோல் எண்ணும் பிரகிருதிகள் உள்ளனர். தங்களைப் பெரியவர்களாகக் காட்டிக்கொள்ள இத்தகைய காரியங்களைச் செய்கின்றனர்.

ஒருவரது அந்தரங்கங்களை ஆராயும்  உள்நோக்கத்துடன் இத்தகைய இழிகாரியங்களைச் செய்யும் நபர்கள், தங்களைப் புலனாய்வுத்துறை அதிகாரிகள் போல எண்ணுவது வேடிக்கை.

எல்லை மீறுவதால் ஏற்படும் விபரீதங்கள் பலவுண்டு. சீண்டினால் சண்டைதான் உண்டாகும். மனிதனின் இயல்பான அமைதியான குணங்களும் கூட, மூர்க்கத்தனமாகலாம். அப்பாவிகளின் கோபம் ஆபத்தானது.

எல்லோரையும் மகிழ்ச்சிக்குள்ளே வரவழைப்பதுதான் மானுட நேயத்துக்கு அழகு. 

  • தொடங்கியவர்

புகழ்பெற்ற அமெரிக்க பெண் எழுத்தாளர் ஹெலன் கெல்லர் பிறந்த தினம்: ஜூன் 27- 1880

புகழ்பெற்ற அமெரிக்க பெண் எழுத்தாளர் ஹெலன் கெல்லர் பிறந்த தினம்: ஜூன் 27- 1880
 
ஹெலன் கெல்லர் (ஜூன் 27, 1880- ஜூன் 1, 1968) புகழ்பெற்ற எழுத்தாளராகவும் பேச்சாளராகவும் விளங்கிய அமெரிக்கப் பெண்மணி. இவர் இளம் வயதிலேயே கண் பார்வை, கேட்கும் திறன், பேசும் திறன் ஆகியவற்றை இழந்தவர்.

ஹெலன் கெல்லர், அமெரிக்காவின் அலபாமா மாகாணத்தில் உள்ள துஸ்கும்பியாவில் 1880-ம் ஆண்டு ஜூன் 27-ம் நாள் பிறந்தார். பிறக்கும் பொழுது ஆரோக்கியமாகவே பிறந்தார். அவர் பிறந்து 19 மாதங்களில் ஏற்பட்ட கடும் காய்ச்சல் காரணமாக கண் பார்வை, கேட்கும் திறன், பேசும் திறன் ஆகியவற்றை இழந்தார். தனது உணர்ச்சிகளைச் சரியான முறையில் வெளிப்படுத்த முடியாமல் தவித்த ஹெலன் கெல்லர், முரட்டுத்தனமாக நடந்துகொண்டார்.

1887-ம் ஆண்டு, ஹெலன் கெல்லரின் பெற்றோர், அலெக்சாண்டர் கிரகாம் பெல்லை சந்தித்தனர். அலெக்சாண்டர், அவர்களை பார்வையற்றோருக்கான பெர்கின்ஸ் பள்ளிக்கு அனுப்பினார். கிரகாம்பெல், ஆன் சல்லிவன் என்ற ஆசிரியை ஹெலன் ஹெல்லருக்கு அறிமுகம் செய்து வைத்தார். ஆன் சல்லிவன், கெல்லரின் ஆசிரியராக நியமிக்கப்பட்டார். அடுத்த 49 ஆண்டுகள் கெல்லரும் சல்லிவனும் ஒன்றாகவே கழித்தனர்.

பிறர் பேசும்பொழுது அவர் உதடுகளில் கை வைத்து அதிர்வுகள் மூலம் அவர் பேசுவதை புரிந்துகொள்ளும் கலையை கெல்லருக்கு சல்லிவன் கற்பித்தார். மேலும், கெல்லரின் உள்ளங்கைகளில் எழுதி, எழுத்துக்களைப் புரிந்து கொள்ள பழக்கினார். இப்படி ஒவ்வொரு பொருளையும் தொட்டு தொட்டுத் உணர்ந்து கற்றார் ஹெலன் கெல்லர். பிறகு சிறிது சிறிதாக எழுத கற்றுக்கொண்ட கெல்லர் கண் பார்வையற்றோருக்கோன பிரெயில் எழுத்து முறையை கற்றுக் கொண்டார். எதையும் விரைவாக கற்றுக்கொள்ளும் திறமை கெல்லருக்கு இயல்பாகவே இருந்தது. பத்து வயது நிறைவதற்கு முன் ஹெலன் கெல்லர், கண் பார்வை அற்றோருக்கான பிரெயில் முறையில் ஆங்கிலம், பிரெஞ்சு, ஜெர்மன், கிரேக்கம், லத்தீனம் ஆகிய மொழிகளைக் கற்றார்.

1888-ல் ஹெலன் கெல்லர் பார்வையற்றோருக்கான பெர்கின்ஸ் பள்ளியில் சேர்ந்தார். 1904-ம் வருடம், கெல்லர், சல்லிவனுடன் நியூயார்க் சென்று அங்கேயிருந்த காது கேளாதோருக்கான ரைட்-ஹுமாஸன் பள்ளியில் சேர்ந்தார். அங்கு கெல்லருக்கு பேசக் கற்றுத்தர சாராஃபுல்லர் என்ற ஆசிரியை உதவினார். தனது ஆசிரியை சாராஃபுல்லர் பேசும்போது அவரது வாய் உதடுகள் மற்றும் நாக்கின் அசைவுகளைத் தொட்டு தொட்டு உணர்ந்து கொஞ்சம் கொஞ்சமாக பேசக் கற்றுக்கொண்டார் ஹெலன் கெல்லர். தட்டுத் தடுமாறி பேசத் தொடங்கிய அவர் பல ஆண்டுகள் பயிற்சி செய்தார். கடைசிவரை அவரால் தெளிவாகப் பேச முடியவில்லை. ஆனால் ஹெலன் கெல்லர் ஒருமுறைகூட மனம் தளரவில்லை.

மகளிருக்கான கேம்பிரிட்சு பள்ளியில் இணைந்தார். தனியாகப் பாடங்களை கற்றுக்கொண்ட கெல்லர் பல்கலைக் கழகத்திற்கு செல்ல விரும்பினார். 1900-ல் ராட்கிளிஃப் பல்கலைக்கழகம் மிகுந்த தயக்கத்துடன் கெல்லரை சேர்த்துக்கொண்டது. ஆன் சல்லிவனை துணைக்கு வைத்துகொண்டு தொய்வின்றி உழைத்த கெல்லர் 1904-ம் ஆண்டு தன்து 24-வது வயதில் இளங்கலை பட்டம் பெற்றார். கண்பார்வையின்றி காது கேளாமல் பல்கலைக் கழகத்தில் படித்துப் இளங்கலைப் பட்டம் பெற்ற முதற்பெண்மணி என்ற சிறப்பும் பெற்றார்.

ஆஸ்திரிய தத்துவவியலாளரான வில்லம் ஜெருசலம் என்பவர் ஹெலன் கெல்லருடைய எழுத்தார்வத்தை வெளிக்கொணர உதவினார். தனது கல்லூரி நாட்களிலேயே 1903-ல் 'தி ஸ்டோரி ஆஃப் மை லைப்’ என்ற தலைப்பில் தனது சுயசரிதையை எழுதினார் கெல்லர். தன் வாழ்நாளில் மொத்தம் 12 நூல்களை எழுதியுள்ளார். கல்லூரி நாட்களில் வெளிப்பட்ட ஹெலனின் எழுத்தார்வம் ஐம்பது ஆண்டுகளுக்கும் மேலாய் அவரைத் தொடர்ந்திருந்தது. 'தி ஸ்டோரி ஆஃப் மை லைப்’ என்ற அவருடைய படைப்பு பெண்கள் இதழொன்றில் தொடராக வெளிவந்து பின் புத்தகமாகப் பதிப்பிக்கப்பட்டது. மராத்தி உள்ளிட்ட ஐம்பதுக்கும் மேற்பட்ட உலகமொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டு, ஹெலனின் படைப்புகளில் இன்றும் தலைசிறந்ததாகப் போற்றப்படுகிறது.

நன்னம்பிக்கை- ஒரு கட்டுரை, நான் வாழும் உலகம், கற்சுவரின் கீதம், இருளிலிருந்து, என் மதம், மாலைக்காலத்து அமைதி, ஸ்காட்லாந்தில் ஹெலன் கெல்லர், ஹெலன் கெல்லரின் சஞ்சிகை, நம்பிக்கை கொள்வோம், ஆன் சல்லிவன் மேஸி- என் ஆசிரியை, திறந்த கதவு போன்றவை அவருடைய பிரசுரமான படைப்புகள் சில. இவை தவிர காது கேளாமை, பார்வையின்மை, சமூகவியல், சமூகம் சார்ந்த பிரச்சனைகள், பெண்ணுரிமை போன்றவை தொடர்பாக பல கட்டுரைகளையும், ஆக்கங்களையும் நாளிதழ்களுக்கும், வாராந்திர, மாதாந்திரப் பத்திரிகைகளுக்கும் பங்களித்தவண்ணமிருந்தார்.

அறிவாற்றலிலும் நெஞ்சுரத்திலும் சாதாரண மனிதர்களுக்கு சற்றும் சளைக்காதவரான கெல்லர், சிறந்த பேச்சாளராகவும் எழுத்தாளராகவும் உருவெடுத்தார். இவர் உழைப்பாளர் உரிமைகளையும், சோசியலிச தத்துவத்தையும் ஆதரித்து பல கட்டுரைகளும் புத்தகங்களும் எழுதினார். தன் பெயரிலேயே பார்வையற்றோர் நலனுக்காக லாப நோக்கற்ற அமைப்பை ஏற்படுத்தினார். ஹெலன் தன் வாழ்நாளைக் கண்ணிழந்தோர் மற்றும் காதுகேளாதோர்க்காகச் செலவிட்டார். அதற்காக, அல்லும் பகலும் அயராது உழைத்தார்.

அவர்களுக்கென பள்ளிகள் திறக்கச் செய்யும் பொருட்டு மொழிபெயர்ப்பாளர் ஒருவரின் உதவியுடன் உலக நாடுகள் பலவற்றுக்கும் சுற்றுப்பயணம் மேற்கொண்டார். ஹெலன் கெல்லர், ஆன் சல்லிவனுடன் 39 நாடுகளுக்குச் சென்றுள்ளார். ஹெலன் கெல்லர் நிதி என்ற பெயரில் நிதி ஒன்றினைத் தொடங்கி, அதில் சேர்ந்த தொகையான ரூபாய் ஒன்றரை கோடியை பள்ளிகளுக்கு வழங்கினார். பார்வையற்றோர்க்கென தேசிய நூலகம் ஒன்றனை உருவாக்கி, உலகம் முழுவதிலும் இருந்து நூல்கள் வந்து குவிய ஏற்பாடு செய்தார். தன்னைப்போல அவர்களும் மீட்சி பெற வேண்டும் என்ற எண்ணத்துடன் தன் எண்பத்தெட்டு வயது வரை அயராது உழைத்தார்.

ஆன் சல்லிவன் ஹெலன் கெல்லருக்கு ஆசிரியராக சேர்ந்தது முதல் நீண்ட நாள் அவருடனே தங்கினார். 1905-ல் அவர் ஜான் மேக்கி என்பவரை மணந்தார். ஆனால் 1914-ல் இருந்து சல்லிவனின் உடல்நிலை மோசமடையத் தொடங்கியது. எனவே பாலி தாம்சன் என்ற ஸ்காட்லாந்துநாட்டைச் சேர்ந்த இளம்பெண் ஹெலன் கெல்லருக்கு உதவியாளராகவும் மொழிபெயர்பாளராகவும் வந்து சேர்ந்தார். இவருக்கு காது கேளாதோர் மற்றும் கண்பார்வையற்றோரை பராமரிப்பதற்கான முன்னனுபவம் ஏதும் இல்லாதவராவார். ஆனால் நாளடைவில் இவர் ஹெலன் கெல்லருடைய காரியதரிசியாகவும் ஒரு நல்ல கூட்டாளியாகவும் இறுதிவரை உடனிருந்து பணிபுரிந்தார்.

கெல்லர் குவீன்சிலுள்ள ஃபாரஸ்ட் ஹில் என்ற இடத்திற்கு ஜான், சல்லிவன் மற்றும் பாலி தாம்சனுடன் குடிபெயர்ந்தார். அங்கு தனது இல்லத்தை கண்பார்வையற்றோருக்கான அமெரிக்க நிறுவனமாக மாற்றினார். *ஹெலன் கெல்லர் வாஷிங்டன் நகரின் புகழ்பெற்ற பெண்மணியாகத் திகழ்ந்தார். 1936 ஆம் ஆண்டு நினைவு மீளா நிலையில் ஹெலன் கெல்லரின் கையைப் பிடித்தபடி ஆன் சல்லிவன் உயிர் துறந்தார்.[4] கெல்லர் தனது மொழிபெயர்ப்பாளர் பாலி தாம்சன் என்பவரின் உதவியுடன் வாழ்ந்துவரலானார்; இவர்கள் பின்னர் கன்னக்டிகட் நகருக்குக் குடிபெயர்ந்தனர். இருவரும் இணைந்து உலக நாடுகள் பலவற்றுக்கும் சுற்றுலா மேற்கொண்டு பார்வையற்றோருக்கான நிதி திரட்டினர். 1957 இல் பாலி தாம்சன் பக்கவாத நோயால் தாக்கப்பட்டார். ஆனால் இறுதிவரை அவர் மீள இயலவில்லை. 1960 இல் தாம்சனும் இறந்தார். அதன் பிறகு 1957-ல் பாலி தாம்சனுக்கு உதவிகள் புரிய வந்த வின்னி கார்பல்லி என்ற செவிலியர் ஹெலன் கெல்லரின் இறுதி வரை உடனிருந்தார்.

கெல்லர் ஒரு உலகப் புகழ் பெற்ற பேச்சாளராகவும் எழுத்தாளராகவும் திடழ்ந்தார். மாற்றுத் திறனாளிகளுக்கான ஒரு வழக்குரைஞராகவும் திகழ்ந்தார். அவர்களுக்கான உரிமைகளைப் பெற்றுத் தந்ததில் ஹெலன் கெல்லரின் பங்களிப்புகள் அதிகமானது. உட்ரோ வில்சனின் எதிர்பாளராகவும் ஒரு சோசலிச வாதியாகவும் விளங்கினார். அமெரிக்க பிறப்புக் கட்டுப்பாடு சங்கத்தின் ஆதரவாளராக தீவிர அரசியலில் ஈடுபட்டார். 1915-ம் ஆண்டு அவர் ஜார்ஜ் கெஸ்லர் இன்பவருடன் இணைந்து 'ஹெலன் கெல்லர் சர்வதேச அமைப்பு'(HKI) ஒன்றைத் தொடங்கினார்.

இந்நிறுவனம் பார்வை, உடல் நலம் மற்றும் ஊட்டச்சத்து சார்ந்த ஆய்வுகளுக்காக நிறுவப்பட்டது 1920-ம் ஆண்டு அவர் அமெரிக்க உள்நாட்டு உரிமைகளுக்கான ஒன்றியம் (ACLU) ஒன்றைத் தொடங்கினார். 40 நாடுகளுக்கு ஆன் சல்லிவனுடன் சுற்றுப்பயணம் மேற்கொண்டார். கெல்லர் அடிக்கடி ஜப்பான் சென்று வந்ததால் ஜப்பான் மக்களின் மனங்கவர்ந்த பெண்மனியாக ஆனார்.

கெல்லர் குரோவர் கிளீவ்லேண்ட், லிண்டன் பி ஜான்சன் உள்ளிட்ட பல அமெரிக்க அதிபர்களைச் சந்தித்தார். புகழ்பெற்ற நபர்களான அலெக்சாண்டர் கிரகாம் பெல், சார்லி சாப்ளின், மார்க் டுவெயின் போன்றோருடன் தொடர்பில் இருந்தார். கெல்லர் மற்றும் ட்வைன் 20 ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் கெல்லர் மற்றும் மார்க் டுவெயின் ஆகியோருடைய கருத்துகளால் இருவரும் தீவிரவாதிகளாகக் கருதப்பட்டனர். ஆனால் இருவருடைய மக்களுக்கான பொதுநலப் பணிகளே மேலோங்கியதால் இவர்களுடைய அரசியல் கருத்துகள் மறக்கப்பட்டன. கெல்லர் அமெரிக்க சோசலிசக் கட்சியின் உறுப்பினராகவும் ஆதரவாளராகவும் இருந்தார்.

ஹெலன் கெல்லர் 1961-ல் பக்கவாத நோயால் பாதிக்கப்பட்டார். இதனால் தனது இறுதி நாட்களில் வீட்டிலேயே முடங்கிக் கிடக்க வேண்டியதாயிற்று. 1964, செப்டம்பர் 14-ல் அமெரிக்க ஐக்கிய நாடுகளின் அதிபர் லின்டண் பி. தாம்சன் அதிபருக்கான சுதந்திரப் பதக்கத்தை ஹெலன் கெல்லருக்கு வழங்கினார். இது அமெரிக்கக் குடியரசின் மிக உயர்ந்த இரு பதக்கங்களுள் ஒன்றாகும். 1965-ல் கெல்லர் நியூயார்க்கில் நடைபெற்ற ஒரு நிகழ்ச்சியில் நாட்டின் மிகச்சிறந்த பெண்மணியாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

கெல்லர் பார்வையற்றோருக்கான நிதி திரட்டுவதிலேயே தனது வாழ்நாள் முழுவதும் ஈடுபட்டார். இன்னும் ஒரு வாரத்தில் தனது 88 ஆவது பிறந்தநாள் வரவிருக்கும் நிலையில் 1968, ஜூன் 1 ஆம் நாள் தூக்கத்திலேயே உயிர் துறந்தார். இவரது சேவையைக் கருதி இவரது உடல் வாஷிங்டன் டி. சியில் ஆன் சல்லிவன், பாலி தாம்சன் ஆகியோர்ரது உடலருகே நல்லடக்கம் செய்யப்பட்டது.

https://www.maalaimalar.com

  • தொடங்கியவர்

லட்சியம் நிறைவேற என்ன செய்ய வேண்டும்? - உண்மைக் கதை! #MotivationStory

 
லட்சியம் நிறைவேற என்ன செய்ய வேண்டும்? - உண்மைக் கதை! #MotivationStory
 

`ஒரு கனவு நிஜமாவது ஏதோ மாயாஜாலத்தால் நிகழ்வதில்லை. அதற்கு அரும்பாடுபட வேண்டும்; மன உறுதி வேண்டும்; கடின உழைப்பு வேண்டும்’ என்று வலியுறுத்துகிறார் முன்னாள் அமெரிக்கத் தளபதி பதவி வகித்தவரும், அரசியல்வாதியுமான காலின் போவெல் (Colin Powell). நாம் நம் குழந்தைகளைக் கனவு காணச் சொல்கிறோமே தவிர, அதற்காக எப்படியெல்லாம் மெனக்கெட வேண்டும் என்பதைச் சொல்லித் தருவதில்லை. பிறரைப் பார்த்து அல்லது நிறைவேறாத நம் ஆசைகளைத்தான் நம் குழந்தைகளிடம் திணிக்கிறோம். ஒரு கட்டத்தில் பொறியியல் படிப்பில் அதிகமாக மாணவர்கள் சேருகிறார்களா... அதில் நம் பிள்ளைகளைச் சேர்க்கப் பிரயத்தனப்படுகிறோம். டாக்டர் படிப்புக்கு மவுசா... `நீ எப்பிடியாவது டாக்டராகிடணும். இப்பவே `நீட்’-டுக்குத் தயாராகு!’ என்று குழிகள் நிறைந்திருக்கும் ஏதோ ஒரு பாதையைக் காட்டி, பிள்ளைகளைப் போகச் சொல்கிறோம். ஒரு மாணவனுக்கு எதன் மீது ஆர்வம் அதிகமிருக்கிறது என்று கண்டுகொண்டு, அந்தத் துறையில் அவனைத் தயார்ப்படுத்தும் ஆசிரியரோ, பெற்றோர்களோ இங்கே மிகக் குறைவு. விரும்பாமல் செய்கிற 100 வேலைகளைவிட விரும்பிச் செய்கிற ஒரு வேலை சிறந்தது. இந்த உண்மையை உணர்ந்திருந்த ஒரு தந்தையின் கதை இது! 

டி.வி ஷோ காம்பியர்

அமெரிக்கா, க்ளீவ்லேண்டிலிருக்கும் (Cleveland) கிளென்வில்லி ஹைஸ்கூலில் (Glenville High School) அந்த மாணவன் படித்துக்கொண்டிருந்தான். அவனுக்கு அப்போது 12 வயது. ஒருநாள் பாடம் எடுத்து முடித்திருந்தார் ஆசிரியை. வகுப்பு முடிய இன்னும் நேரமிருந்தது. மாணவர்களிடம் `நீங்க எதிர்காலத்துல என்னவாக ஆக விரும்புறீங்கனு ஒரு கேள்வி உங்க பாடத்துல இருக்குல்ல... அதுக்கான பதிலை எழுதுங்க!’ என்றார். ஒரு வரி பதில் அது. எல்லா மாணவர்களும் நிமிடத்தில் அதற்கான பதிலை எழுதிவிட்டார்கள். எழுதிய பேப்பரில் தங்கள் பெயரை எழுதி, ஆசிரியையிடம் கொண்டுபோய்க் கொடுத்தார்கள். எல்லா பேப்பர்களையும் படித்துப் பார்த்தார், அவருக்கு திருப்தியாக இருந்தது, அந்த ஒரு மாணவன் எழுதிய பதிலைத் தவிர. 

 

 

அன்றைக்கு பள்ளிக்கூடம் முடிந்ததும், அந்த மாணவனின் வீட்டுக்குப் போனார் ஆசிரியை. அவர் போன நேரத்தில், அந்த மாணவனின் தந்தையும் வீட்டில்தான் இருந்தார். ஆசிரியையை வரவேற்றார். அமரச் சொன்னார். மனைவியை அழைத்து காபி கொண்டு வரச் சொன்னார். மாணவனுக்கு டீச்சரைப் பார்த்ததும் உதறலெடுக்க ஆரம்பித்துவிட்டது. அதற்குக் காரணமும் இல்லாமலில்லை. அவனுடைய அப்பா மிகவும் கண்டிப்பானவர். டீச்சரோ சாதாரணமாக யார் வீட்டுக்கும் போகிறவரில்லை. `அவர் இங்கே வந்திருக்காருன்னா, என்னைப் பத்தி ஏதாவது புகார் சொல்றதுக்காகத்தான் இருக்கும்’ மாணவனுக்கு நெஞ்சு `திக் திக்’ என்று அடித்துக்கொண்டது. 

 

 

ஆசிரியர் - தந்தை

``சொல்லுங்க மேடம்... என்ன விஷயம்?’’ நேரடியாக விஷயத்துக்கு வந்தார் தந்தை. 

``ஒண்ணுமில்லை. இன்னிக்கி ஸ்கூல்ல ஒரு டெஸ்ட்... ஸ்டூடன்ஸ்கிட்ட உங்க கனவு என்ன, எதிர்காலத்துல நீங்க என்னவா ஆக விரும்புறீங்கனு ஒரு கேள்வி... அதுக்கு உங்க பையன் அபத்தமான ஒரு பதிலை எழுதியிருந்தான்...’’ 

அப்பா, மகனை அழைத்தார். ``பேப்பர்ல நீ என்ன பதில் எழுதியிருந்தே?’’ 

அவன் தயங்கினான். அப்பாவையும், ஆசிரியையும் மாறி மாறிப் பார்த்தான். பிறகு சொன்னான்... ``டி.வி ஷோவுல பெரிய ஆளா வரணும்னு எழுதியிருந்தேன்.’’ 

அப்பா, ஆசிரியையின் பக்கம் திரும்பினார். ``இதுல என்ன தப்பு?’’ 

``என்ன சார் நீங்களும் புரியாத மாதிரி கேட்குறீங்க... சாத்தியமே இல்லாத ஒண்ணை எழுதுறது அபத்தமில்லையா? இந்தப் பையனாவது... டி.வி ஷோவுல வர்றதாவது! இருக்குறதை விட்டுட்டு பறக்குறதுக்கு ஆசைப்படலாமா?’’ 

அப்பா ஒரு கணம் யோசித்தார். மகனை அவன் அறைக்குப் போகச் சொன்னார். அந்த மாணவன் பயந்து, நடுங்கியபடி தன் அறைக்குள் போனான். இன்றைக்கு அப்பா அடி வெளுத்து வாங்கிவிடுவார் என்று நினைத்துக்கொண்டான். 

அவர் இப்போது ஆசிரியையிடம் சொன்னார்... ``ரொம்ப நன்றி மேடம். நான் என் பையனை இனிமே கவனமாப் பார்த்துக்குறேன்.’’ 

ஆசிரியை கிளம்பிப் போனார். அப்பா, மகனின் அறைக்குள் நுழைந்தார். ``சொல்லுப்பா... இன்னிக்கி டீச்சர் எழுதச் சொன்ன கேள்விக்கு புத்தகத்துல இருக்குற பதில் என்ன?’’ 

ஒளிப்பதிவாளர் - நிகழ்ச்சித் தொகுப்பாளர்

``புத்தகத்துல இருக்குற பதில், `நான் ஃபுட்பால் ப்ளேயராக ஆகணும்’கிறது. எல்லாரும் அதைத்தான் எழுதினாங்க. எனக்கு என்னவோ, எதிர்காலத்துல டி.வி-யில பெரிய ஆளா வரணும், எல்லாரும் என்னைப் பார்க்கணும்னு ஆசை. அதனாலதான் `டி.வி ஷோவுல வேலை பார்க்கணும்கிறது என் ஆசை’னு எழுதிவெச்சேன்.’’ 

அப்பா, மகனை நெருங்கினார். அவன் பயத்தோடு அவரைப் பார்க்க, அவனைத் தழுவிக்கொண்டார். 

``நீ ஒண்ணு பண்ணு. உன் டீச்சர் எதிர்பார்க்கிற பதிலை எழுதி, அவங்ககிட்டயே குடுத்துடு. ஆனா, உண்மையிலேயே நீ என்னவாகணும்னு நீ விரும்புறியோ, அந்தக் கனவை ஒரு பேப்பர்ல எழுதி உன் டெஸ்குக்குக் கீழே வெச்சுக்கோ. அது உனக்கே உனக்கான பேப்பர். தினமும் காலையில படுக்கையிலருந்து எந்திரிச்சதும் அதை எடுத்துப் படிச்சுப் பாரு; ராத்திரி தூங்கப் போறதுக்கு முன்னால அதைப் படி... விடாமப் படி... நீ நினைக்கிற, விரும்புற வாழ்க்கை உனக்குக் கிடைக்கும்.’’ அப்பா போய்விட்டார். 

 

 

ஸ்டீவ் ஹார்வி

(PC: Wikimedia)

அந்த மாணவன், அப்பா சொன்னதை வேதவாக்காக நினைத்து அப்படியே கடைப்பிடித்தான். அடுத்த பதினாறே ஆண்டுகள்... அந்த மாணவர் அமெரிக்காவின் பிரபல தொலைக்காட்சி ஒன்றில் நிகழ்ச்சித் தொகுப்பாளர் ஆகிவிட்டார். கனவு கண்டு, அதை நிஜமாகவும் ஆக்கிய அந்த மாணவர் அமெரிக்காவின் சிறந்த தொலைக்காட்சித் தொகுப்பாளர்களில் ஒருவர் எனக் கருதப்படும் ஸ்டீவ் ஹார்வி (Steve Harvey). 

ஒரு கட்டத்தில் வாரத்தின் ஏழு நாள்களும் தொலைக்காட்சியில் ஏதாவது ஒரு நிகழ்ச்சியில் தோன்றிக்கொண்டிருந்தார் ஸ்டீவ் ஹார்வி. அவ்வளவு பிரபலமான மனிதராக ஆன பின்னரும், தன் பழைய டீச்சரை அவர் மறக்கவில்லை. ஒவ்வோர் ஆண்டும் கிறிஸ்துமஸ் தினத்தன்று தன் டீச்சருக்கு ஒரு டி.வி-யை பரிசாக அனுப்பிவைப்பதை வழக்கமாக வைத்திருந்தார். ஒருநாள், தொலைபேசியில் டீச்சர் அழைத்தார்... ``ஹார்வி! வீட்டுல நிறைய டி.வி சேர்ந்து போச்சு... இனிமே வேண்டாமே!’’ 

``பரவாயில்லை டீச்சர். அதுபாட்டுக்கு இருந்துட்டுப் போகட்டும்...’’ மென்மையான குரலில் பதில் சொன்னார் ஹார்வி.  

https://www.vikatan.com

  • தொடங்கியவர்

 

பிறந்தநாளை இப்படியும் கொண்டாடலாமா?

 

தெற்கு இங்கிலாந்தில் வசிக்கும் இவா லூயிஸ் என்ற நூற்று இரண்டு வயது பாட்டி அந்தரத்தில் பறந்து தமது பிறந்த நாளை வித்தியாசமாக கொண்டாடினார்.

  • தொடங்கியவர்

கால்பந்து மைதானத்தில் தொலைந்த பறவை... நாய்க்கு மரண தண்டனை... மிரண்ட ஆடு... 3 சம்பவங்கள்!

 

ஆயிரக்கணக்கான போட்டியாளர்களைப் போலவே ஒரு சிறிய பறவையும் பார்வையாளராக அரங்கத்திற்குள் அமர்ந்திருந்தது. ஆனால், பார்வையாளர் பகுதியில் அல்ல. ஆடுகளத்தின் நடுவே!

ஃபிஃபா போட்டியின் நடுவே பறவையைக் காப்பாற்றிய ஸ்பானிய வீரர்:

கடந்த 20-ம் தேதி இரானுக்கு எதிரான ஃபிஃபா உலகக் கோப்பைப் போட்டியில் ஸ்பெயின் மும்முரமாக விளையாடிக்கொண்டிருந்தபோது ஸ்பானிய கால்பந்து வீரர்களான இஸ்கோ மற்றும் ஜெரார்டு பிகே இருவரும் திடீரென்று ஆட்டத்தை நிறுத்தினர். பார்வையாளர்கள் முதல் ஆட்ட நடுவர் உட்பட அனைவரும் ஏனென்று புரியாமல் அவர்களை கவனித்தனர்.
 

பறவை

 

 

Photo Courtesy: Rosario Pompizzi/Twitter

வீடியோவைக் காண...

ஆயிரக்கணக்கான போட்டியாளர்களைப் போலவே ஒரு சிறிய பறவையும் பார்வையாளராக அரங்கத்திற்குள் அமர்ந்திருந்தது. ஆனால், பார்வையாளர் பகுதியில் அல்ல. ஆடுகளத்தின் நடுவே. அதைக் கண்ட ஜெரார்டு பிகே தனது ஆட்டத்தை மறந்துவிட்டார். அந்தப் பறவையை யாரேனும் மிதித்துவிடக் கூடும் என்று புரிந்துகொண்டார். முதலில் அதுவாகப் பறந்துவிடுமென்று நினைத்தவர். இது ஆட்டக்களமென்று தெரியாத சின்னஞ்சிறு பறவை நிற்பது புல்வெளியின் மீது. புல்வெளியைக் கண்ட ஆர்வத்தில் அங்கேயே பறந்து இன்புற்றுக்கொண்டிருந்தது. அதுவாக வெளியேறாது என்று உணர்ந்த பிகே அதைப் பிடித்துப் பாதுகாப்பாக ஆடுகளத்திற்கு வெளியே கொண்டுவிட நினைத்தார். ஆனால், அழகோடு வேகமாகவும் பறந்துகொண்டிருந்த பறவை அவரது கையில் அகப்படவில்லை. பிடித்தாலும் நழுவிவிடுகிறது. அவர் கைகளிலிருந்து நழுவிய பறவை இஸ்கோவின் அருகே சென்றபோது லாகவமாகவும் மென்மையாகவும் அதைப் பிடித்த இஸ்கோ ஓடிச்சென்று ஆடுகளத்துக்கு வெளியே ஓர் ஓரமாக விட்டுவிட்டுப் பிறகு தங்கள் ஆட்டத்தைத் தொடர்ந்தனர். இதைக் கண்ட பார்வையாளர்கள் மிகவும் நெகிழ்ந்துபோயினர்.

 

 

வெறும் விளையாட்டு வீரர்களாக மட்டுமன்றித் தற்போது அவர்கள் கால்பந்து ரசிகர்களால் ஹீரோக்களாகப் பார்க்கப்படுகிறார்கள். இதைக் கண்ட விலங்குகள் ஆர்வலர்கள் அவர்கள் இருவரையும் பாராட்டி வருகின்றனர். ``ஓர் உயிரினத்தின் உயிரைக் காப்பாற்றுவதைவிட எந்த விளையாட்டும் முக்கியமில்லை. இன்று அவர்கள் இதைப் புரியவைத்து, மற்றவர்களுக்கு முன்னுதாரணமாக விளங்குகின்றனர்." கட்டிவைத்த சிறுவன், மனதை உறுத்திய ஒளிப்படம்: குழந்தைகளே வருங்காலம். அவர்களுக்குச் சரியானவற்றைக் கற்றுக்கொடுக்க வேண்டியது பெற்றோர்களின் கடமை. பெரும்பான்மைச் சிறுவர்களும், இளைய தலைமுறையினரும் சுற்றுச்சூழல் குறித்த விழிப்பு உணர்வு, விலங்குகள் மீதான வன்முறைக்கு எதிரான போராட்டங்கள் போன்ற மேலும் சில சமூகம் சார்ந்த நடவடிக்கைகள் மேற்கொள்வதன் மூலம் எதிர்காலத்தின் மீதான நம்பிக்கையை விதைக்கின்றனர். ஆனால், நாம் இன்னும் நீண்டதூரம் செல்ல வேண்டியுள்ளது.

 

 

ஆட்டுக்குட்டி

Photo Courtesy: Unparalleld Suffering Photography

கால்நடைகளாக வளர்க்கப்படும் விலங்குகள் துன்புறுத்தப்படுவதும், போதுமான கவனிப்பு கிடைக்காமல் வாடுவதும் இன்னமும் நிகழ்ந்துகொண்டுதான் இருக்கிறது. அவற்றைச் செய்பவர்கள் வருங்காலத் தலைமுறையினருக்கும் தவறான முன்னுதாரணமாக நின்று அவர்களையும் தவறான பாதையில் இட்டுச்செல்கின்றனர். Unparalleled suffering photography என்ற முகப்புத்தகப் பக்கத்தில் கடந்த திங்கள் அன்று (25-06-2018) ஓர் ஒளிப்படம் பகிரப்பட்டது. அதில் ஒரு சிறுவன் ஓர் ஆட்டுக்குட்டியின் கால்களைக் கட்டிக்கொண்டிருக்கிறான். அந்தப் புகைப்படம் ஆட்டுக்குட்டியின் முகத்தையும் அது மிரண்டிருப்பதையும் தெளிவாகக் காட்டுகிறது. ஒளிப்படத்திலிருக்கும் சிறுவன்மீது யாரும் குற்றம் சுமத்தமுடியாது. அதைச் செய்யத் தூண்டிய பெரியவர்களே குற்றவாளிகள்.

இவ்வாறு செய்யத் தூண்டியதோடு, அவன் அவ்வாறு செய்வதை ஊக்குவித்துப் புகைப்படமும் எடுத்த அவர்கள் குழந்தைகளுக்குக் கற்றுத்தரும் பாடம் மிகவும் ஆபத்தானது. உயிர்களின் மீதான இரக்கமற்ற தன்மையைச் சிறுவனின் இதயத்தில் விதைத்துக்கொண்டிருக்கும் பெரியவர்களே இங்குக் குற்றவாளிகள். இவ்வாறான பழக்கங்களை ஊக்குவிப்பது, அவர்கள் வளரும்போது தனக்கு எதிரே இருப்பது வேறு உயிரினமாயினும், மனிதராகவே இருப்பினும் அவர்களை எந்தவிதக் குற்றவுணர்ச்சியுமின்றிக் காயப்படுத்தப் பழகிவிடுவார்கள். இதனால்தான் மற்ற உயிரினங்களின் மீது செய்யப்படும் கொடுமைகள் மனிதர்கள் மீதான கொடுமைகளுக்கு எதிரான விளைவுகளைப் போலவே கடுமையாக இருக்கவேண்டுமென்று விலங்குநல ஆர்வலர்கள் போராடிக்கொண்டிருக்கின்றனர். ``பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்" என்ற சிந்தனையைச் சிறுவர்கள் மனதில் மட்டுமன்றிப் பெரியவர்கள் மனதிலும் விதைக்கவேண்டியது தற்போதைய காலகட்டத்தில் மிகவும் அவசியமாகிறது.

காப்பாற்றிய நாய்க்கு மரண தண்டனை விதித்த காவல்துறை:

கைலோ

Photo Courtesy: Kylo Bristollive/WS

அவர்கள் இங்கிலாந்தின் பிரிஸ்டால் நகரத்தில் குடியிருக்கும் கணவன்-மனைவி. அதே வீட்டில் அவர்களுக்கு முன்னால் ஒரு பாலியல் வன்கொடுமை குற்றவாளி குடியிருந்தான். அவனைத் தாக்குவதற்காக 20 பேர் கொண்ட கும்பல் ஒன்று அந்த வீட்டுக்குள் புகுந்துவிட்டனர். அந்த நபர் தற்போது இங்கே இல்லை என்பதையும், இவர்களுக்கும் அவனுக்கும் எந்தவிதச் சம்பந்தமுமில்லை என்பதையும் கணவன்-மனைவி இருவரும் எவ்வளவோ விளக்கிச் சொன்னார்கள். ஆனால், மனம் முழுவதும் வன்முறையை நிரப்பி வைத்திருந்த கும்பல் இவர்கள் சொன்ன எதையும் நம்புவதாக இல்லை. இருவரையும் கடுமையாகத் தாக்கத் தொடங்கினார்கள். மிகக் கடுமையாக தாக்கிக் கொண்டிருந்தார்கள். அங்கே ஒரு கறுப்பு லேபரேடர் நாய் ஓடி வந்தது. அதன் பெயர் கைலோ. அதன் எஜமானர்கள் அடிவாங்கிக் கொண்டிருப்பதைக் கண்டதும் அனைவரையும் கடுமையாகக் குரைத்து மிரட்டுவதும் கடிப்பதுமாக 20 பேருக்கும் நடுவே புகுந்துவிட்டது. வெறி பிடித்ததுபோல் கடுமையாகத் தாக்கிய கைலோ அவர்கள் தூக்கி வீசியபோதும்கூட தனது காயங்களைப் பொருட்படுத்தாமல் மீண்டும் மீண்டும் அவர்களைத் தாக்கியது. அதன் கடிகளைத் தாங்கமுடியாமல் 15 பேர் ஓடிவிட்டனர். 5பேர் மட்டும் பின்வாங்காமல் அதன் எஜமானர்களைத் தாக்கிக் கொண்டேயிருப்பதைக் கண்ட கைலோ ஐவரையும் விடாமல் கடித்து அவர்கள் அந்த வீட்டைத் தாண்டி ஓடும்வரை துரத்தியது. உடல் முழுவதும் காயத்தோடு திரும்பிவந்த கைலோ அடிபட்டுக்கிடந்த எஜமானர்களைக் காப்பாற்ற பக்கத்துவீட்டுக்காரரை உடன் அழைத்துவந்தது.

நாய்

கைலோ மட்டும் வராமல் போயிருந்தால் கணவன்-மனைவி இருவரும் அன்றே இறந்திருப்பார்கள். காவல் துறை அதிகாரிகள் வந்தபோதும் கைலோ அவர்களைக் கண்டு ஆபத்தானவர்கள் என்றெண்ணிக் குரைத்தபடி வழிவிடாமல் நின்றது. அதனால் அதன் உரிமையாளர் ஓர் அறைக்குள் விட்டுப் பூட்டிவிட்டார். காவல்துறை அதிகாரிகள் விசாரணையை முடித்துவிட்டுத் திரும்பிச் சென்றபோது அறைக்கதவைத் திறந்துவிட்டார் உரிமையாளர். தனது எஜமானர்கள் தாக்கப்பட்ட அதிர்ச்சியிலிருந்து இன்னும் மீளாத கைலோ அவர்களும் எதிரிகள் தானென்று நினைத்து ஓடிச்சென்று இருவரையும் கடித்துவிட்டது. அதன் உரிமையாளர்களான கணவன்-மனைவி இருவரும் அதிகாரிகளிடம் உள்ளதை விளக்கி எவ்வளவோ மன்னிப்பு கேட்டனர். ஆனால், அதிகாரிகள் கைலோ மிக ஆபத்தானது என்றும் அதை விட்டுவைக்க முடியாதென்றும் கூறி அழைத்துச்சென்றுவிட்டனர். தற்போது கைலோவைக் கருணைக்கொலை செய்ய முடிவெடுத்திருக்கிறார்கள். தங்கள் உயிரைக் காப்பாற்றிய கைலோ, எந்தச் சூழ்நிலையில் அப்படி நடந்துகொண்டது என்பதை விளக்கிக்கூறி அவர்கள் அதைக் காப்பாற்றப் போராடிக் கொண்டிருக்கிறார்கள். தனது எஜமானனைக் காப்பாற்றிய நிம்மதியிலும், அவர்களை பிரிந்து வாழும் வேதனையிலும் இருக்கிறது கைலோ. தான் சாகப்போவது தெரியாமலிருக்கும் அது, தெரிந்தாலும் பொருட்படுத்தப்போவதில்லை. ஏனென்றால், சாகப்போவதைவிட எஜமானர்களை மீண்டும் யார் காப்பாற்றுவார்கள் என்பதே அதன் தலையாய வேதனையாக இருக்கும்.

https://www.vikatan.com

  • தொடங்கியவர்

பேசும் படம்: பாரம்பரியத்தின் வண்ணங்கள்!

 

 
pesum%205

 

pesum%206
         
 
 
pamban
 

 

pesum%202
 
pesum%203
 

 

http://tamil.thehindu.com

  • தொடங்கியவர்

கண்டுபிடிப்புகளின் கதை: பற்பசை

 

 

 
tooth%20pastejpg

ப ற்கள், ஈறுகளின் ஆரோக்கியத்துக்காகத் தினமும் காலை, இரவு இரு வேளை பல் துலக்குகிறீர்கள்தானே? பற்பசை அல்லது பற்பொடி கொண்டு பல் துலக்குவீர்கள். ஆனால் உங்கள் தாத்தா, பாட்டியிடம் கேட்டுப் பார்த்தால், அவர்கள் சாம்பல், கரித்தூள், வேப்பங்குச்சி, ஆலங்குச்சி போன்றவற்றை வைத்துப் பல் துலக்கியதாகச் சொல்வார்கள். இந்தச் சாம்பலையும் கரித்தூளையும் வைத்துப் பல் துலக்கும் வழக்கம் சுமார் எழு ஆயிரம் ஆண்டுகளாக இருந்துவருகிறது. சமீபக் காலத்தில்தான் சாம்பலும் கரித்தூளும் தங்கள் செல்வாக்கை இழந்து, அந்த இடத்தைப் பற்பொடியும் பற்பசையும் பிடித்துக்கொண்டன.

சாப்பிடும் உணவுப் பொருட்களால் கிருமிகள் வளர்ந்து, பற்களைச் சேதப்படுத்துவதை கி.மு. 5 ஆயிரம் ஆண்டிலேயே எகிப்தியர்கள் அறிந்திருந்தனர். அதனால் பற்களைச் சுத்தம் செய்வதற்குப் பல விதத்தில் ஆய்வுகளை மேற்கொண்டிருந்தனர். பாரோ மன்னர்கள் சாணத்தின் சாம்பல், பொடித்த முட்டை ஓடுகள், பால் வடியும் குச்சிகள், மாவுக் கல் போன்றவற்றைப் பல் துலக்கப் பயன்படுத்தினர். ரோமானியார்களும் பொடித்த சிப்பி ஓடுகள், கரித்தூள், மரப்பட்டைகள் போன்றவற்றை வைத்துப் பல் துலக்கினார்கள். அந்தக் கால ரோம மருத்துவர்கள் மனிதர்களின் சிறுநீரில் பற்களைச் சுத்தம் செய்யும் உப்பும் அமிலமும் இருப்பதாகச் சொல்லி, அதையும் பயன்பாட்டில் வைத்திருந்தனர்.

 

கி.மு. 5-ம் நூற்றாண்டில் இந்தியாவிலும் சீனாவிலும் கரித்தூள், சாம்பல், வேப்பங்குச்சி, ஆலங்குச்சி போன்றவற்றை வைத்துப் பல் துலக்க ஆரம்பித்தனர். கி.பி. 4-ம் நூற்றாண்டில் சாம்பலும் கரித்தூளும் பற்களுக்கு உகந்தது அல்ல என்ற முடிவுக்கு வந்தார்கள் எகிப்தியர்கள். அதனால் புதினா, உப்பு, மிளகு உட்பட ஏராளமான பொருட்களை இடித்து, முதல் பற்பொடியை உருவாக்கினார்கள். அதன் செய்முறையையும் எழுதி வைத்தனர். ஆனால் இந்தப் பற்பொடியை அரசர்கள் மட்டுமே பயன்படுத்தி வந்ததால், தயாரிப்பு முறை ரகசியமாக வைக்கப்பட்டது. அதே காலகட்டத்தில் சீனாவில் உப்பு, மூலிகைகள், மூலிகை வேர் போன்றவற்றைப் பயன்படுத்தி பற்பொடி தயாரிக்கப்பட்டது.

27chsujSheffieldpng

வாஷிங்டன் வென்ட்வொர்த் ஷெஃப்பீல்ட்

கி.பி. 9-ம் நூற்றாண்டில் பாரசீகத்தைச் சேர்ந்த அறிஞரும் கலைஞருமான ஸிர்யாப், எகிப்தியர்களின் பற்பொடி தயாரிக்கும் முறையை வைத்து, ஐரோப்பாவில் முதல் பற்பொடியைத் தயாரித்தார். நறுமணம் மிக்க இந்தப் பற்பொடியில் பல் துலக்கிய பிறகு புத்துணர்ச்சியும் கிடைத்தது. ஸிர்யாப் பற்பொடிதான் உலகில் ஏற்றுக்கொள்ளப்பட்ட முதல் பற்பொடி. இவரும் தனது தயாரிப்பு முறையை ரகசியமாகவே வைத்திருந்ததால் அவருக்குப் பிறகு அந்தப் பற்பொடி காணாமல் போனது.

கி.பி. 18-ம் நூற்றாண்டில் ஐரோப்பாவில் படிகாரம், லவங்கப்பட்டை, பாக்குத்தூள் போன்றவற்றைச் சேர்த்துப் பற்பொடிகள் தயாரிக்கப்பட்டன. இந்தப் பற்பொடியில் தண்ணீர் சேர்த்து மக்கள் பயன்படுத்த ஆரம்பித்தபோது, 1850-ம் ஆண்டில் பற்பசை உருவானது. இது ஜாடிகளில் அடைத்து விற்கப்பட்டது. 1873-ம் ஆண்டு நியூயார்க்கைச் சேர்ந்த கோல்கேட் நிறுவனம், பெரிய அளவில் பற்பசை தயாரிக்கும் தொழிலில் இறங்கியது.

இங்கிலாந்தைச் சேர்ந்த வாஷிங்டன் வென்ட்வொர்த் ஷெஃபீல்ட் என்ற பல் மருத்துவர் கால்ஷியம் புளோரைடு வைத்து பற்பசையைத் தயாரித்தார். இவரே 1892-ம் ஆண்டு குழாய்க்குள் பற்பசையை அடைத்து விற்கும் முறையையும் உருவாக்கினார். ஆனால் ஷெஃப்பீல்ட் தன்னுடைய பற்பசைக்கும் குழாய்க்கும் காப்புரிமை பெறுவதற்குள் கோல்கேட் நிறுவனம் குழாய் பற்பசைகளைப் பெருமளவில் விற்பனைக்குக் கொண்டுவந்துவிட்டது. இன்றுவரை ஷெஃபீல்டின் பற்பசைத் தயாரிப்பு முறையே பெருமளவில் பயன்படுத்தப்பட்டு வருகிறது.

shutterstock133159673%20Converted

குடிசைத் தொழிலாக இருந்த பற்பொடி, பற்பசைத் தயாரிப்பு, இன்று சர்வதேச வியாபாரமாக உருவெடுத்திருக்கிறது. நிறுவனங்களுக்கு ஏற்றவாறு 3 வகை ஃபுளோரைடுகளால் பற்பசைகள் தயாரிக்கப்படுகின்றன.

பிரஷ் முழுவதும் பற்பசையை வைத்துத் தேய்க்க வேண்டிய அவசியமில்லை. ஒரு பட்டாணி அளவு வைத்தாலே போதுமானது. பற்பசையை விழுங்கக் கூடாது, சிறிது விழுங்கினாலும் ஆபத்து ஒன்றும் இல்லை. குழந்தைகளுக்கும் விண்வெளி வீரர்களுக்கும் விழுங்கக்கூடிய பற்பசைகள் இருக்கின்றன.

ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக கரியால் பல் துலக்கி வந்ததை ஆரோக்கியம் குறைவு என்று பற்பொடிகளும் பற்பசைகளும் வந்தன. இன்று கரியும் உப்பும் நல்லது என்று பற்பசைகளில் சேர்த்துவிட்டனர்.

(கண்டுபிடிப்போம்)

http://tamil.thehindu.com

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.