Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இளமை புதுமை பல்சுவை

Featured Replies

  • தொடங்கியவர்

Dwayne "DJ" Bravo - Champion

 

 

dwayne-bravo-champion-dance.jpg

  • Replies 11.3k
  • Views 1.5m
  • Created
  • Last Reply
  • தொடங்கியவர்

தாய்லாந்தில் தண்ணீர் திருவிழா
==================================

தாய்லாந்தில் ஆண்டுதோறும் நடைபெறும் தண்ணீர் திருவிழாவின் ஒரு பகுதியாக இது நடைபெற்றுள்ளது.

தண்ணீரை அடுத்தவர் மேல் கொட்டுவது சுத்திகரிப்பை குறிக்கிறதாம்.

ஒருவரது பாவங்களையும், துரதிர்ஷ்டத்தையும் இது கழுவிவிடுமாம்.

1 hour ago, நவீனன் said:

தண்ணீரை அடுத்தவர் மேல் கொட்டுவது சுத்திகரிப்பை குறிக்கிறதாம்.

ஒருவரது பாவங்களையும், துரதிர்ஷ்டத்தையும் இது கழுவிவிடுமாம்.

புங்கை வேற அவுசில்  தண்ணி இல்லையாம் (வீட்டுல) . இதுக்குள்ள உங்களுக்கு தண்ணில விளையாட்டா 

  • தொடங்கியவர்
1 minute ago, ஜீவன் சிவா said:

புங்கை வேற அவுசில்  தண்ணி இல்லையாம் (வீட்டுல) . இதுக்குள்ள உங்களுக்கு தண்ணில விளையாட்டா 

அது  அவுஸ் இது தாய்லாந்து..<_<

அதை விட அவர் சொன்னது  போத்தில் போத்திலா குடிக்கிற சுடுதண்ணி... :rolleyes: இப்பவாது விளங்குதா

  • தொடங்கியவர்

14257_1148874318486674_38226997493508067

  • தொடங்கியவர்

யுத்த முனையில் ஒரு மாரத்தான்!

மாரத்தான் என்பது சமவெளியிலும் நடக்கிறது; மலைப் பகுதியிலும் நடக்கிறது; கரடு முரடான பகுதியிலும் நடக்கிறது. ஆனால் ஒரு யுத்தக் களத்தில் மாரத்தான் நடத்துவது சாத்தியமா? ‘சாத்தியம்’ என்கிறது 'பாலஸ்தின் மாரத்தான்' டீம். சோதனைச் சாவடிகள், தடுப்புக் கட்டைகள், அகதி முகாம்கள் நிறைந்த உலகின் நீண்ட கால பதற்றப் பகுதியான பாலஸ்தீன பகுதியில் வெற்றிகரமாக மூன்றாவது ஆண்டாக நடந்து முடிந்திருக்கிறது 'பாலஸ்தின் மாரத்தான்'.

டென்மார்க்கைச் சேர்ந்த லார்க் ஹெய்ன், சைன் பிஷெர் என்ற இருவர் தொடங்கி வைத்த ஓட்டம் இது. மக்கள் பொதுவெளியில் சுதந்திரமாக உலவுவது ஓர் அடிப்படை உரிமை. அது பாலஸ்தீன மக்களுக்கும் கிடைக்க வேண்டும் என்ற எண்ணத்தில்,  மூன்று ஆண்டுகளுக்கு முன்பு இவர்கள் Right to Movement என்ற பெயரில் ஒரு மாரத்தானைத் தொடங்கினார்கள். முதல் ஆண்டு ஆதரவுக் குறைவாக இருந்தது. இஸ்ரேல் முட்டுக் கட்டைப் போட்டது. இருப்பினும் ஒரு போட்டி என்ற வகையில் 'பாலஸ்தின் மாரத்தான்' வெற்றிகரமாக நடந்தது.

logo.jpg

அடுத்த ஆண்டே பாலஸ்தின் மாரத்தான் சூப்பர் ஹிட் ஆனது. போட்டியாளர்களின் எண்ணிக்கை ஆயிரங்களைத் தாண்டியது. மொத்தப் போட்டியாளர்களில் 39 சதவிகிதம் பேர் பெண்கள். உலகின் இதரப் பகுதி மாரத்தான்களுடன் ஒப்பிடும்போது,  சதவிகிதம் மிக அதிகம். இதற்குக் காரணம்,  போட்டியில் வெற்றிபெறுவது என்பதைக் காட்டிலும், ஓடுவது என்பது பாலஸ்தீன பெண்களுக்கு ஒரு தற்காலிக விடுதலை. அதேபோல, இந்த அமைதிக்கான ஓட்டம் எப்போதும் ஒரு பயங்கரவாத தாக்குதலுக்கு உள்ளாகலாம் என்பதையும், தங்கள் உயிருக்கே ஆபத்து இருப்பதையும் இந்த ஓட்டக்காரர்கள் அறிந்துள்ளனர். இருப்பினும், ஒரு பொது நோக்கத்தை முன்னிட்டு அவர்கள் இந்த அச்சத்தை எதிர்கொள்கின்றனர்.

02BETHLEHEM1-master675.jpg

2016-ல், இந்த பாலஸ்தின் மாரத்தானில் வெற்றிபெற்ற அல் மஸ்ரி, ‘’நான் மாரத்தானில் வெற்றிபெற்றது மகிழ்ச்சி. அதைவிட, காஸா ஸ்ட்ரிப்பில் இருந்து வெளியில் வர முடிந்தமைக்கும், மேற்குக் கரையில் உள்ளே நுழைய முடிந்தமைக்கும்தான் நான் கூடுதல் மகிழ்ச்சி அடைகிறேன்.’’ என்கிறார். காஸா ஸ்ட்ரிப்பில் உள்ளவர்களை மாரத்தான் போட்டியில் பங்கேற்க செய்ய, போட்டிக் குழுவினர் தொடர்ந்து முயற்சி செய்கின்றனர். ஆனால், இஸ்ரேல் இதற்கு ஒத்துழைக்க மறுக்கிறது. அதனால்தான் இந்த ஆண்டு போட்டியில் வெற்றிபெற்ற அல் மஸ்ரி கூட, "அடுத்த முறை என்னால் காஸா ஸ்ட்ரிப்பில் இருந்து வெளியில் வந்து போட்டியில் பங்கேற்க முடியுமா என்பது தெரியவில்லை" என்கிறார்.

மூன்றாவது ஆண்டாக நடைபெறும் இந்த பாலஸ்தின் மாரத்தானில்,  இந்த ஆண்டு உலகம் எங்கிலும் இருந்து வந்த 3,000-த்துக்கும் அதிகமானவர்கள் ஓடினார்கள்.  இந்த மூன்றாவது ஆண்டு ஓட்டத்தில்,  காஸா ஸ்ட்ரிப் பகுதியில் இருந்து மொத்தம் 46 பேர் வந்து கலந்துகொண்டிருக்கின்றனர். சிக்கல் தீர்ந்துவிடவில்லை. ஆனால் பொதுவெளிக்கு வந்து மூச்சிரைக்க ஓடுவதன் மூலம் பாலஸ்தீன மக்கள்,  தங்கள் குரலை வெளி உலகுக்கு சொல்வதற்கான ஒரு புதியக் கருவியைக் கண்டுபிடித்திருக்கிறார்கள்.

இவர்களைப் பொறுத்தவரை மாரத்தான் என்பது போருக்கு எதிராக இவர்கள் நடத்தும் யுத்தம்.

vikatan

  • தொடங்கியவர்

ஆட்ட நாயகன்!

 

 

 

p112a.jpg

டந்த முடிந்த உலகக்கோப்பை டி20 போட்டியில் மேற்கிந்திய அணியினர் ஆடிய வெற்றி நடனம் ‘சாம்பியன்ஸ்’ எனும் பாப் பாடலில் வரும் நடனம் என்பது தெரியுமா? அதுவும், அந்தப் பாடலை இசையமைத்து, அதில் தோன்றி ஆடிப் பாடியது அதே மேற்கிந்திய அணியின் நட்சத்திர ஆல்-ரவுண்டர் டுவைன் பிராவோ. அவரைப் பற்றி நாம தெரிஞ்சுக்க இன்னும் நிறைய இருக்கு, அதில் ‘நச்’னு சில பாயின்ட்டுகள்.

red-dot2.jpg பிராவோ பிறந்தது 1983-ம் ஆண்டு ட்ரினிடாட் மற்றும் டொபாகோ தீவில் உள்ள சாண்டா க்ரஸ் எனும் இடத்தில். பிராவோவின் முழுப் பெயர் டுவைன் ஜான் பிராவோ.

red-dot2.jpg பிராவோவுக்கு சிறுவயதில் இருந்தே விளையாட்டுகளின் மீது அதீத ஆர்வம் இருந்தது. கிரிக்கெட் மட்டுமல்லாது கால்பந்து, கைபந்து, தடகளம் என எல்லா விளையாட்டுகளையும் விரும்பி ஆடுவாராம் பிராவோ.

red-dot2.jpg பிராவோவும், கிரிக்கெட் ஜாம்பவான் பிரெயன் லாராவும் உறவினர்கள். அதே போன்று சக வீரரான டேரன் பிராவோவும் டுவைன் பிராவோவுக்கு ஒன்றுவிட்ட சகோதரர்.

p112b.jpg

red-dot2.jpg தனது 19-ம் வயதில் ட்ரினிடாட் மற்றும் டொபாகோ அணிக்காகக் களமிறங்கினார் பிராவோ. அதேபோல் 2004-ம் ஆண்டு தனது 21-வது வயதில் இங்கிலாந்துக்கு எதிரான தனது முதல் சர்வதேச டெஸ்ட் போட்டியிலும், ஒருநாள் போட்டியிலும் களமிறங்கினார்.

red-dot2.jpg பிராவோவுக்கு திருமணம் ஆகி இரண்டு குழந்தைகளும் உள்ளனர். முன்பு பிராவோவின் ஜெர்ஸி எண் 47. பின்னர், அதை 3 ஆக மாற்றிவிட்டார். காரணம், அவரது மகனும், மகளும் பிறந்த தினம் 3. பாசக்கார அப்பா.

red-dot2.jpg பொதுவாகவே, மேற்கிந்திய அணியினர் களத்திலும் கிரிக்கெட்டோடு நடனம், கும்மாளம் என ஜாலியாகத்தான் விளையாடுவார்கள். அதில் பிராவோ ஒரு படி மேலே. முன்னே குறிப்பிட்டது போல தானே இசையமைத்து, பாடி, நடித்து சில பாப் பாடல்களையும் வெளியிட்டிருக்கிறார்.

red-dot2.jpg பிராவோ நம் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் விளையாடிய செல்லப் பிள்ளை. மும்பை இந்தியன்ஸ் அணியில் இருந்து 2011-ம் ஆண்டு சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு வந்தார் பிராவோ. சுருக்கமாக பிராவோ சென்னை அணியின் தூண் எனச் சொல்லலாம். வரவிருக்கும் ஐ.பி.எல்லில் குஜராத் லயன்ஸ் அணிக்காக ஆடவிருக்கிறார்.

red-dot2.jpg பிராவோ பேட்ஸ்மேனை பந்துவீசி அவுட் செய்துவிட்டாலோ, கேட்ச் பிடித்துவிட்டாலோ நடனம் ஆடுவார். அவர் நடனத்திற்கு நாளடைவில் ரசிகர்கள் பெருக, ‘உலா’ எனும் தமிழ்ப் படத்தில் ‘டல்மேனி டல்மேனி’ எனும் பாடலைப் பாடி, நடனமும் ஆடியிருக்கிறார்.

p112c.jpg

red-dot2.jpg 2010-ம் ஆண்டில் டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார் பிராவோ. ஒருநாள், டி20 போட்டிகளில் மட்டுமே இப்போது விளையாடி வருகிறார்.

red-dot2.jpg 2014-ம் ஆண்டு பிராவோ தலைமையில் மேற்கிந்திய அணி கிரிக்கெட் ஆட இந்தியா வந்திருந்தது. அப்போது, மேற்கிந்திய அணிகளின் கிரிக்கெட் வாரியம் வீரர்களுக்கு சரியான சம்பளம் தரவில்லை என ஆட்டத்தை பாதியிலேயே புறக்கணித்து அணியைக் கூட்டிக்கொண்டு நாடு திரும்பிவிட்டார்.

red-dot2.jpg இந்த உலகக்கோப்பையை ஜெயித்த பிறகும் ‘எங்கள் வாரியத்தை விட பி.சி.சி.ஐ-யிடம் கிடைத்த உறுதுணையே அதிகம்’ எனக் கூறி பரபரப்பைக் கிளப்பினார் பிராவோ. செம தைரியம். பிராவோ... பிராவோ...

vikatan

  • தொடங்கியவர்

12983825_1023758624339498_91015336768596

மேற்கிந்தியத் தீவுகள் கிரிக்கெட் அணியின் சகலதுறை வீரரான ட்வெயின் ஸ்மித்தின் பிறந்தநாள்
Happy Birthday Dwayne Smith

  • தொடங்கியவர்

பிரேசில் நாட்டில் உள்ள 30 மீட்டர் உயரம் கொண்ட பாலத்தின் மீது இருந்து ஒரே நேரத்தில் வரிசையாக 149 பேர் கயிற்றைக் கட்டிக்கொண்டு குதித்தனர். 'ரோப் ஜம்ப்'-ல் உலக சாதனை செய்யவேணுட்ம் என்பதற்காக இந்த நிகழ்ச்சி நடத்தப்பட்டது.

12990892_705922236176988_579179600053479

13006674_705922229510322_827643789755719

12963940_705922226176989_432568801845916

13001298_705922272843651_763042009034305

vikatan

  • தொடங்கியவர்

இன்பாக்ஸ்

 

dot11.jpgமைச்சரவையில், `மகிழ்ச்சி’க்குத் தனியாக துறை ஒதுக்கப்போவதாக அறிவித்திருக்கிறார் மத்தியப்பிரதேச மாநில முதல்வர் சிவ்ராஜ் சிங் சௌஹான். பூடான் நாட்டில் மக்களின் மகிழ்ச்சிக்கு அரசு முக்கியத்துவம் கொடுப்பதைப்போல, தனது மாநிலத்திலும் தனித் துறை ஒன்றைத் தொடங்கப்போவதாக அறிவித்திருக்கிறார். `மக்கள் மகிழ்ச்சியாக இருப்பதற்காகவே இந்தத் துறை. இதன்மூலம் மன அழுத்தத்தில் இருந்து விடுபடவும், தற்கொலை போன்றவற்றைத் தடுக்கவும் முடியும். யோகா, தியானம் போன்ற பயிற்சிகளுக்கும் ஏற்பாடு செய்வோம். தொடர்ந்து மக்களின் மனதை மகிழ்விக்கும் வேலைகளை இந்தத் துறை செய்யும்’ என்கிறார் சிவ்ராஜ். ஹேப்பி அண்ணாச்சி

p68a.jpg

dot11.jpg ஆஸ்கர் வாங்கிய கையோடு, இந்தோனேஷியாவின் சுமத்ரா தீவுக்கு விசிட் அடித்திருக்கிறார் நடிகர் லியோனார்டோ டிகாப்ரியோ. ஆனால், இது ஜாலி பார்ட்டி டூர் இல்லை. சுமத்ரா தீவில், அழிவின் விளிம்பில் இருக்கும் யானைகளுக்காகக் குரல்கொடுப்பதற்கான விழிப்புஉணர்வு விசிட். `பாமாயிலுக்காக நடப்படும் பனைமரங்களால் காடுகளின் பரப்பளவு குறைந்துகொண்டே வருகிறது. அழிந்துவரும் சுமத்ரா யானைகளுக்கும் உராங்குட்டான்களுக்கும் வாழ்வதற்குச் சிறந்த இடம் இங்கு இருக்கும் மழைக்காடுகள்தான். அவற்றைப் பாதுகாத்து, சரணாலயம் அமைக்க அரசு முன்வரவேண்டும்’ எனக் கோரிக்கை வைத்திருப்பதோடு, தனது அறக்கட்டளை மூலம் செயலிலும் இறங்கியிருக்கிறார் டிகாப்ரியோ. ரியல் ஹீரோ!

dot11.jpg கடந்த வாரம் முழுக்க சமூக வலைதளங்களில் ட்ரெண்டிங்கில் இருந்தது இந்த செல்ஃபிதான். காரணம், இதில் இருக்கும் நபர்கள் அல்ல, இவர்களுக்குப் பின்னால் இருக்கும் ஜன்னலில் தெரியும் உருவத்தில் அந்தப் பெண்ணைப் பார்த்தால் புரியும். இணையதளம் ஒன்றில் பதிவிடப்பட்ட இந்தப் புகைப்படத்தை ட்விட்டரில் ஒருவர் ஷேர் செய்ய, `எதுவும் போட்டோஷாப் வேலையா?', `இப்படி ஒரு செல்ஃபி எடுக்க முடியுமா?' என பரபர வைரல் ஆனது போட்டோ. பலரும் அது `பேய் பொண்ணு, அய்யோ பயமாயிருக்கு' என அச்ச ஸ்மைலியும் போட்டிருக் கிறார்கள். ஏப்ரல் ஃபூல் பண்ணியிருக் காங்க!

p68b.jpg

dot11.jpg `வயசு ஏற, ஏற மகிழ்ச்சிதான் எனக்கு’ என்கிறார் ஜெசிகா ஆல்பா. வயது 35 தொடப்போகிறது. `என்ன மேடம் வயசாகிடுச்சே...' என சமீபத்தில் பலரும் விசாரிக்க, `25 வயது ஆகும்போது இருந்த மகிழ்ச்சியைவிட, இப்போது அதிகம் மகிழ்ச்சியாக இருக்கிறேன். கொண்டாட நிறைய நிம்மதி இருக்கிறது. வருங்காலத்தைச் சந்திக்க ஆர்வம் அதிகமாகிறது’ என்று ஷார்ப்பாக வந்து விழுகிறது பதில். 35 வயதினிலே!

p68c.jpg

dot11.jpg பார்க்க அச்சு அசலாக பெண்ணைப்போலவே இருக்கும் இது நிஜமான பெண் அல்ல, ஒரு ரோபோ. சிறுவயதில் இருந்து முயன்ற கனவை 42 வயதில் வெற்றிகரமாகச் செய்துமுடித்திருக்கிறார் ஹாங்காங்கைச் சேர்ந்த ரிக்கி மா. மனிதனைப் போலவே பேசும், முகபாவனைகளைக் காட்டும் இந்த ரோபோவின் பெயர், மார்க் 1. முழுதாக உருவாக்கியதும் இதற்கு ஒரு ஹாலிவுட் நடிகையின் பெயரை வைக்கயிருக்கிறாராம் ரிக்கி. கிட்டத்தட்ட இந்திய மதிப்பில் 33 லட்ச ரூபாய் வரை செலவழித்து இதை உருவாக்கியிருக்கிறார். எதற்காகத் தெரியுமா... பொழுதுபோக்கவாம்!
மிஸ் ரோபோ!

p68d.jpg

dot11.jpg தெலங்கானா மாநிலத்தில், அரசு புதிதாக ரிலீஸ் செய்த ஆண்ட்ராய்டு ஆப் செம ஹிட். ‘எம்-வாலட்’ எனப் பெயரிடப்பட்டிருக்கும் இதை மொபைலில் இன்ஸ்டால் செய்தால் போதும். டிராஃபிக் போலீஸிடம் லைசென்ஸ், ஆர்.சி.புக் என எதுவும் காகிதமாக இல்லாமல், மொபைலிலேயே காட்டிவிட முடியும். பிராக்டிக்கலாக உதவும் இந்த டிஜிட்டல் ஐடியா ஹிட் அடித்ததில், குஷியாக இருக்கிறது தெலங்கானா அரசு. லஞ்சத்துக்கு ஆப்பு!

dot11.jpg `உலகின் அதிக சம்பளம் வாங்கும் சி.இ.ஓ’-வாக மாறியிருக்கிறார் சுந்தர் பிச்சை. கடந்த வருடம் அவர் சம்பளமாகப் பெற்ற பங்குகளின் மதிப்பு மட்டும் 662 கோடி ரூபாய். `இந்தத் தொகை இந்த வருடம் இன்னும் அதிகமாகும்’ என்கிறது கூகுள் வட்டாரம். அவரின் செயல்பாடுகள் மற்றும் அதிகரித்துவரும் பொறுப்புகளுக்கு இது ஊக்கம் அளிக்கும்’ என அறிவித்துள்ளது கூகுள். கோடீஸ்வர பிச்சை!

dot11.jpg கேத்ரீனா கைஃபுக்கும் ரன்பீர் கபூருக்கும் நடுவில் உரசல், இருவருக்கும் பிரேக்அப் என பாலிவுட்டில் பேசிக்கொண்டாலும், இருவரும் ஒன்றாக `ஜக்கா ஜஸூஸ்' படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார்கள். ஒரு பாடல் காட்சிக்காக மொராக்கா போவதாக ப்ளான் போட்டு, இவர்களுடைய வம்புச் சண்டை யால் அதை மும்பையிலேயே முடித்துக்கொண்டிருக்கிறது படக்குழு. இப்போது இருவரும் ஷூட்டிங் ஸ்பாட்டில் ஒருவரை ஒருவர் பார்த்துக்கொள்வதுகூட இல்லையாம்.`சீக்கிரமே இருவருக்கும் பிரேக்அப் என அஃபீஷியல் அறிவிப்பு வரும்’ என்கிறார்கள். இது ஒரு பிரேக்அப் காலம்!

p68e.jpg

dot11.jpg டி 20 உலகக் கோப்பை அரையிறுதிப் போட்டியில் இந்திய அணி தோல்விக்குப் பிறகு நடந்த தோனி – சாம் ஃபெரிஸ் சந்திப்புதான் டாக் ஆஃப் தி கிரிக்கெட் வட்டாரம். ஓய்வு குறித்துக் கேட்ட ஆஸ்திரேலிய நிருபரை அருகில் அழைத்து, கலாய்த்து அனுப்பிய தோனியின் செயல் எல்லோரையும் கவர்ந்தது. `ஒரே நாளில் ஒட்டுமொத்தக் கவனத்தையும் உலகக் கோப்பையைவிட்டு என்மேல் திருப்பிவிட்டார் தோனி. கிரிக்கெட்டில் அவர் செய்யாத சாதனையே கிடையாது. யாரும் எதிர்பார்க்காத நேரத்தில் டெஸ்ட் கிரிக் கெட்டில் இருந்து ஓய்வுபெற்றதைப்போல, இப்போதும் நடக்கலாம் என நினைத்துதான் அப்படிக் கேட்டேன். உடனே தோனி அருகில் அழைத்தார். உலகின் சிறந்த கேப்டன் அழைக்கும்போது போகாமல் இருக்க முடியுமா? ஒரே இரவில் என்னை எல்லோரும் ரசிக்கும்படி செய்துவிட்டார்’ எனச் சொல்கிற சாம் முகத்தில் அவ்வளவு வெட்கம். கேப்டன்கூல்னா சும்மாவா?

p68g.jpg

p68f.jpg

dot11.jpg செம குஷியில் இருக்கிறார் டாப்ஸி. ஷூட்டிங் இடைவெளியில் எந்நேரமும் அமிதாப் பச்சனை வைத்து, செல்ஃபி மேல் செல்ஃபியாகச் சுட்டுத்தள்ளுகிறார். இருவரும் இணைந்து நடிக்கும், ‘பிங்க்’ படத்தின் ஷூட்டிங்கில்தான் இந்த ஜாலி. `அவர் என்னைப் பற்றி என்ன நினைப்பார் என்றே தெரியவில்லை. ஆனால் தினமும் அவரைப் பார்த்துக்கொண்டே இருக்கிறேன். நேரம் கிடைக்கும்போது எல்லாம் செல்ஃபி எடுத்துக் கொள்கிறேன்’ எனச் சிரிக்கிறார். ரியல் செல்ஃபி புள்ள!

vikatan

  • தொடங்கியவர்
 

உலகிலேயே மிகப்பெரிய இராட்சத மலைப்பாம்பு மலேசியாவில் பிடிபட்டது (Photos)

உலகிலேயே மிக நீளமான மற்றும் பருமனான இராட்சத மலைப்பாம்பு மலேசியாவில் பின்னாங் நகரில் பிடிப்பட்டுள்ளது.

கட்டுமானப் பணிகளில் தொழிலாளர்கள் ஈடுபட்டிருந்த போது மரத்தின் அடியில் மலைப்பாம்பு ஒன்று இருந்ததைக் கண்ட தொழிலாளர்கள் மீட்புப் படையினருக்கு தகவல் அளித்துள்ளனர்.

இதையடுத்து, அங்கு சென்ற அதிகாரிகள் நீண்ட நேரம் போராடி இந்த பிரம்மாண்ட மலைப்பாம்பைப் பிடித்துள்ளனர்.

 

_89172879_snake5 1280 giant-python-penang-data giant-snake-penang python-found-in-malaysia-could-be-longest-ever-caught-136405128534203901-160411130139 snake-largest-malaysia1

http://newsfirst.lk/

  • தொடங்கியவர்

நாய்கள் வண்டி இழுக்கும் போட்டி
===============================
ஸ்கேண்டினேவியன் பிராந்தியத்தின் வடக்கில் கடும்பனியில் இது ஆண்டுதோறும் நடைபெறும் போட்டி.

கடுங்குளிரை மீறியும் 300 கிலோமீட்டருக்கு நாய்கள் வண்டி இழுக்கும்.

ஒவ்வொரு ஆண்டும் ஆயிரம் பேர் வரை இந்த போட்டிக்கு விண்ணப்பிப்பார்கள்.

  • தொடங்கியவர்

மக்கள் எல்லோரும் அணுகவேண்டிய மனநல மருத்துவர் இவர்தான்

 

 

Charel56.jpg

சார்லி சாப்ளினைப் போல இந்த உலகில் நம்மைச் சிரிக்க வைத்ததோடு, நம் இதயத்தை ஆழமாகத் தொட்டவர் யாருமே இல்லை.இன்றைக்கு நாம் ஏன் அவரை நினைவு கூற வேண்டும். இன்றைக்கு ஏன் நாம் சார்லி சாப்ளினின் படங்களைப் பார்க்க வேண்டும் ? என்ற கேள்விகளுக்கு பதிலாக இருப்பது ஒன்றே ஒன்று தான். நாம் இன்றைக்கு சிரிப்பதையே மறந்து விட்டோம். நவீன வாழ்க்கைச் சூழல் நம் உடலை மட்டுமில்லாமல் மனதையும் சீர் குலைத்து வைத்திருக்கிறது. எவ்வளவு தான் உடற்பயிற்சி செய்து நம் உடலை ஆரோக்யமாக வைத்திருந்தாலும் மன அழுத்தம் நம் உடல் ஆரோக்யத்தை சிதைத்து விடுகிறது. நகைச்சுவையைப் போல மன அழுத்தத்துக்கு சிறந்த மருந்து எதுவும் இல்லை.

மற்றவர்களைக் கேலி , கிண்டல் செய்வதில் இருந்து உருவாவது இல்லை நகைச்சுவை. அது ஒரு உன்னதமான உணர்வு. அந்த உன்னதமான நகைச்சுவைக்காகவே நாம் சார்லியைத் தேடிப்போக வேண்டி இருக்கிறது. அவரைப் பொறுத்தவரை நம் வேதனைகள் பிறரைச் சிரிக்க வைக்கலாம். ஆனால் ஒரு போதும் நம் சிரிப்பு மற்றவர்களை வேதனைப்படுத்தக்கூடாது. அவரின் படங்கள் நகைச்சுவையோடு வாழ்வின் உன்னதமான விஷயங்களை நம்முடன் பகிர்ந்து கொள்கிறது. மன அழுத்தத்தில் இருந்து விடுபட மட்டுமில்லாமல் , நம் கவலைகள், பிரச்னைகளை மறந்து உடல், மன ஆரோக்யத்தோடு நம் வாழ்வையையும் செழிப்பாக மாற்றுகிறது அவரின் திரைப்படங்கள் . இன்றைக்கு மனதை ஆரோக்யமாக வைத்துக்கொள்ள ஒரு மன நல மருத்துவரை நாடிச் செல்வதை விட சார்லி சாப்ளினின் படங்களைப் பார்ப்பது சிறந்தது. இதோ அவரின் படங்கள்

மாடர்ன் டைம்ஸ் (modern times )

முதல் மற்றும் இரண்டாம் உலகப்போர்களுக்கிடையில் உலக நாடுகளிடையே ஏற்பட்ட முக்கியமான ஒரு நிகழ்வு பொருளாதார வீழ்ச்சி.. அமெரிக்கப் பங்குச்சந்தையில் ஏற்பட்ட சரிவே பொருளாதார வீழ்ச்சிக்கு முக்கிய காரணமாகச் சொல்லப்படுகிறது . அந்த கால கட்டத்தில் உருவான முக்கியமான படம் தான் மாடர்ன் டைம்ஸ்.இதன் இயக்குநர் சார்லி சாப்ளின் .

Charli.jpg

சாப்ளின் ஒரு மாபெரும் தொழிற்சாலையில் இயந்திரங்களை இயக்கும் வேலையைச் செய்கிறார்.. தொழிலாளர்களின் ஒவ்வொரு நடவடிக்கையும் கண்காணிக்கப் படுகிறது .வாழ்க்கை இயந்திரங்களுடன் ஒரு போராட்டமாக மாறுகிறது ..சந்தர்ப்ப சூழ்நிலையால் காவல்துறையால் கைது செய்யபடுகிறார். அப்போது தன்னைப் போலவே வறுமையில் கஷ்டப்படும் பெண்ணைச் சந்திக்கிறார்..இடையில் சில வேலைகளைச் செய்தாலும் எதிலும் தன்னை ஈடுபடுத்திக் கொள்ள அவரால் முடிவதில்லை ..இறுதியில் சார்லியும் அந்த பெண்ணும் இணைவதோடு படம் முடிகிறது

இந்தப் படத்தில் நகைச்சுவைக்குப் பஞ்சமில்லை .. தொழிற்சாலையில் உற்பத்தியை அதிகரிக்க ஒரு திட்டம் கொண்டு வருவார்கள் தொழிலாளர்கள் உணவிற்கு செல்வதால் நேரம் விரயமாகிறது .அதனால் உற்பத்தி பாதிக்கிறது ..அந்த நேரத்தை மிச்சப் படுத்த தொழிலாளி வேலை செய்து கொண்டு இருக்கும் போதே அவனுக்கு உணவளிக்கும் ஒரு இயந்திரத்தை உருவாக்கி இருப்பார்கள்.. அந்த இயந்திரம் சரியாக வேலை செய்கிறதா என்பதை ஒரு தொழிலாளியை வைத்து சோதித்துப் பார்ப்பார்கள் அந்த தொழிலாளி நம்ம சாப்ளின் தான் .. சோதனை தோல்வியில் முடிந்தாலும் சாப்ளினுக்கும் இயந்திரத்திற்கும் இடையே நடைபெறும் போராட்டம் நம்மை வயிறு வலிக்கச் சிரிக்க வைக்கிறது . இன்றைக்கு இந்தப் படம் நமக்கெல்லாம் ஒரு மன நல மருத்துவர் என்று சொன்னால் அது மிகையாகாது

Charlie2.jpg

தி கிட் ( The kid)

தாயால் அனாதையாக விடப்பட்ட குழந்தைக்கும் , அந்தக் குழந்தையை கண்டெடுக்கிற நாடோடிக்கும் இடையேயான அழகான உறவை கண்ணீரும் சிரிப்பும் கலந்து சித்தரிக்கிறது தி கிட்.

நாடோடியால் கண்டெடுக்கப்பட்ட குழந்தை வளர்ந்து சிறுவனாகிறான். நாடோடியின் வேலை உடைந்த ஜன்னல்களின் கண்ணாடியைச் சரி செய்வது .. சிறுவன் நாடோடியிடம் இன்றைக்கு எந்தத் தெருவில் வேலை என்று கேட்கிறான். நாடோடி ஒரு தெருவைச் சொல்கிறான். இருவரும் வேலைக்குச் செல்கின்றனர் .. முதலில் சிறுவன் யாருக்கும் தெரியாமல் கற்களை வீசி ஜன்னல் கண்ணாடியை உடைப்பான் ..

Charle1.jpg

சரியாக அந்த நேரத்தில் நாடோடி அந்தப்பக்கம் வருவான். உடைந்த கண்ணாடியை சரிசெய்வார்.. கொஞ்சம் பணம் கிடைக்கும்.. இதுதான் இவர்களின் அன்றாட வேலை ..இப்படி சிறுவனும், நாடோடியுமான சார்லியும் படம் முழுவதும் தங்களின் சேட்டை களாலும்,குறும்புகளாலும் நம்மை வயிறு குலுங்க சிரிக்க வைக்கின்றனர். இறுதியில் அந்தச் சிறுவன் தாயுடன் இணைவதோடு  படத்தை முடித்திருப்பார் சார்லி சாப்ளின்.

சிட்டி லைட்ஸ் ( city lights )

இந்தப் படத்தில், நாடோடிக்கு பூக்கடை நடத்தும் பார்வையற்ற பெண்ணின் மீது காதல் வருகிறது.. சந்தர்ப்ப சூழ்நிலையால் நாடோடி தன் காதலியைப் பிரிய நேரிடுகிறது .. காதலிக்குப் பார்வை கிடைக்கிறது...நாடோடி காதலி இருக்கும் திசையில் ஏதேச்சையாக வருகிறான் .. நாடோடி தன் காதலியை அடையாளம் கண்டுகொள்கிறான் .. காதலியால் அடையாளம் காணமுடிவதில்லை.காதலி, நாடோடியை பிச்சைக்காரன் என்று நினைத்து அவன் கையைப் பிடித்து காசு போடுகையில் .. பார்வை இல்லாதபோது முத்தமிட்ட தன் காதலனின் கை என்று உணர்கிறாள். அவனை அடையாளம் கண்டு கொள்கிறாள் . இருவரும் இணைகிறார்கள் .. காதலை வார்த்தைகள் இல்லாமல் உணர்வுகள் மூலம் வெளிப்படுத்திய இத் திரைப்படம் நகைச்சுவை கலந்த காதலைப் பற்றிய படங்களில் சிறந்த படமாக எப்போதுமே நிலைத்திருக்கும்.

chaplin345x308.jpgபடத்தில் சார்லியின் நண்பனாக ஒரு பணக்காரன் இருக்கிறான். அவன் போதையில் மட்டுமே சார்லியை அடையாளம் கண்டு கொள்வான். போதை தெளிந்தவுடன் சார்லியை மறந்துவிடுவான். சார்லிக்கும் , அவனின் பணக்கார நண்பனுக்கும் இடையேயான காட்சிகள் ரகளையாக இருக்கும். தன் காதலியின் பார்வையை சரிசெய்ய தேவைப்படும் பணத்துக்காக சார்லி குத்துச்சண்டை போட்டியில் கலந்து கொள்வார். திரைப்பட வரலாற்றில் மிகுந்த நகைச்சுவையான காட்சிகளில் ஒன்று அந்தக் குத்துச் சண்டைக் காட்சி. மன அழுத்தத்தில் இருந்து விடுபட மட்டுமில்லாமல் காதலின் உன்னதத்தை அறிந்து கொள்ளவும் இந்தப் படத்தை நாம் இன்று பார்க்க வேண்டியிருக்கிறது.

இந்தப் படங்களுடன் ஹிட்லர் காலத்திலேயே ,ஹிட்லரைப் பற்றிய படமான தி கிரேட் டிக்டேட்டர், கடும் குளிரில் தங்கத்தைத் தேடிச் செல்லும் பயணத்தை மையமாக கொண்ட கோல்டு ரஷ் மற்றும் சர்க்கஸ் போன்ற படங்களையும் அவசியம் நாம் பார்க்க வேண்டும். இது போக ஏராளமான குறும்படங்களையும் சார்லி சாப்ளின் எடுத்திருக்கிறார். இவையெல்லாம் இன்றைக்கு இணையத்தில் கிடைக்கின்றன மன அழுத்தத்தில் இருந்து விடுபட்டு மகிழ்ச்சியான மனிதனாக வாழ்வதற்காக நாம் சார்லி சாப்ளினின் படங்களை இன்றைக்கு பார்க்க வேண்டியிருக்கிறது.

vikatan

  • தொடங்கியவர்

இங்கு ஆண்கள் நுழைய முடியாது!

 

 

p10c.jpg

பொதுவா கிராமத்தில் எதெல்லாம் இருக்காது? கரன்ட் இருக்காது. நேரத்துக்கு பஸ் இருக்காது. ஆனால்  கென்யாவில் ஒரு கிராமத்தில் ஆண்களே இல்லை!

p10b.jpg

p10a.jpg

இந்த அதிசயக் கிராமத்துக்குப் பெயர் உமோஜா. சம்புரு எனும் பகுதியில் மவுன்ட் கென்யாவின் அடிவாரத்தில் இந்தக் கிராமம் அமைந்திருக்கிறது. ரபெக்கா லோலோசோலிங்கிற பெண்தான் இந்தக் கிராமத்தின் தலைவி. அதெல்லாம் சரி... இந்தக் கிராமம் உருவாக அப்படி என்னதான் காரணம்னு கேட்கிறீங்களா? ஆண்களின் கொடுமையால் பாதிக்கப்பட்ட பெண்கள், விவாகரத்தான பெண்கள், குழந்தை திருமணத்தால் பாதிக்கப்பட்ட பெண்கள் என மொத்தமாக எல்லோரும் ஒன்று கூடி 1990-ல்  உருவாக்கியதுதான் இந்தக் கிராமம். ஒரு ஆண்கூட உள்ளே வர முடியாது.
 

p10d.jpg

ங்கிருக்கும் ஜேன் என்ற பெண் ‘‘ராணுவத்தினரின் அராஜகம் இங்கு அதிகம். என்னை ராணுவவீரர்கள் பலாத்காரம் செய்தார்கள்’’ என்று கூறியிருக்கிறார். கிராமத்துத் தலைவி ரபெக்காவையும் பிரிட்டன் ராணுவத்தினர் பலாத்காரம் செய்தார்களாம். இப்படி ஒவ்வொருவருக்குப் பின்னாலும் ஒவ்வொரு கதை. மருத்துவமனையில் சிகிச்சை முடிந்து திரும்பிய ரபெக்காவுக்குத்தான் தனி கிராமம் ஐடியா முதலில் வந்ததாம். இங்குள்ள மக்கள் கென்யாவின் வெவ்வேறு பகுதியில் இருந்து வந்திருந்தாலும் அவர்களுக்குள் மொழிப்பிரச்னை இல்லையாம். இந்தக் கிராமத்தில் தற்போது 47 பெண்களும் 200 குழந்தைகளும் வாழ்ந்து வருகிறார்கள். இந்தப் பகுதி சுற்றுலாத்தலம் என்பதால் சுற்றுலாவாசிகளுக்கு கூடாரங்களை அமைப்பதாலும், விதவிதமான நகைகளை உருவாக்கி விற்பதாலும் இவர்களுக்கு வருமானம் கிடைக்கிறது. அக்கம் பக்கம் கிராமங்களில் உள்ள ஆண்கள் அடிக்கடி வந்து தொந்தரவு கொடுத்தாலும் எல்லாவற்றையும் சமாளித்து வாழ்கிறார்கள் இங்குள்ள பெண்கள். இந்தக் கிராமத்துக்கு இப்போது வயது 25. வாழ்த்துகள் பெண்களே!

vikatan

  • தொடங்கியவர்

உங்கள் வீடே ஜிம்! எளிமையான 5 ஃபிட்னெஸ் டிப்ஸ்கள்!

ErgometerACT-210Mann-trainiertGalerie256

டம்பை ஃபிட்டாக வைத்துக்கொள்ள ஜிம்மிற்கு செல்கிறோம். தேடித் தேடி ஆர்கானிக் உணவுகளை உண்ணுகிறோம், விதவிதமான டயட்டை பின்பற்றுகிறோம். இன்னமும் இதைத்தான் செய்கிறீர்களா....இதெல்லாம் பழைய கதை பாஸ்...உங்க வீட்டில் சில விஷயங்களை மாற்றினாலே நீங்கள் ஃபிட்டா இருப்பீங்க.


உங்க வீட்டுச் சுவற்றின் வண்ணத்திலோ, வெளிச்சமாக வீட்டை அலங்கரிப்பது துவங்கி வீட்டில் இருக்கும் சின்ன சின்ன விஷயங்களை மாற்றுவது வரை எதையாவது செய்துகொண்டே இருங்கள். அப்புறம் பாருங்கள்...உங்க ஃபிட்னஸ்  ரகசியம் எதில் அடங்கியுள்ளது என்பதை புரிந்துகொள்வீர்கள். நீங்கள் பார்க்கும் சிறு சிறு வீட்டு வேலைகள் எல்லாமே ஒரு ஃபிட்னெஸ் தான்....

உங்கள் வீட்டை 'ஜிம்'மாக்கும் 5 விஷயங்கள் இதோ...

1. நமக்கு பிடித்த உணவு வகை மூன்று தடவைக்கு மேல் கண்ணில்பட்டால் அதனை எடுக்க வேண்டும் என்ற ஆவல் எழுமாம். அதனால் திண்பண்டங்களை உங்கள் கண்ணில் படாதவாறு பாத்துக் கொள்ளுங்கள். பழங்களை உங்கள் கண்ணில் படுமாறு வைத்துக் கொள்ளுங்கள். அப்போதுதான் வீணாய்ப் போகிறதே என்று அவற்றை சாப்பிடத் தொடங்குவீர்கள்.

sleep1.jpg

சமையலறையில்  செல்ஃப் இருந்தால் நடு செல்ஃபில் பழங்கள், நட்ஸுகளை வைத்துவிட்டு, கண்ணில் படாமல் இருக்கும் மேல் செல்ஃபிலோ, கீழ் செல்ஃபிலோ மற்ற உணவுகள் வைக்கப் பழகுங்கள். நாளடைவில் உடலுக்குக் கேடான நொறுக்குத்தீனிகளை குறைக்க ஆரம்பிப்பீர்கள். நல்ல விஷயத்தை தொடங்குவதற்குதான் பாஸ் தயங்குவோம். சாப்பிடப் பழகிவிட்டால் அது பழகிவிடும்.

2. உங்களுக்கு பிடித்த பாடலையோ, படத்தையோ பார்க்கும்போது அதிகமாக சாப்பிடுவீர்கள். பசிக்கு சாப்பிடுவது போய் தேவையில்லாமல் உணவு உள்ளே இறங்கும். அதனால் சாப்பிடும்போது டி.வி பார்ப்பது, பாட்டு கேட்பது என்று இல்லாமல் சீக்கிரம் உணவு சாப்பிடப் பழகுங்கள். அது சரியான உணவையும் உங்கள் தேவைக்கு சரியான அளவு உணவையும் எடுத்து கொள்வீர்கள்!

sleeping.jpg



3. வீட்டில் அதிகமான சோஃபாக்களை தவிருங்கள். வீட்டில் எங்கு பார்த்தாலும் சொகுசு இருக்கைகள் இருந்தால், சோம்பேறித்தனத்துடன் அமரதான் மனம் எண்ணும். வேலை செய்ய தோன்றாது. அதில் அமர்ந்து டி.வி பார்த்தால் ஏதேனும் சாப்பிட வேண்டும் என்று தோன்றும். உங்கள் வீட்டில் ட்ரெட் மில் அல்லது உடற்பயிற்சி உபகரணங்கள் இருந்தால் அதனை மூலையில் வைக்காமல் ஹாலில் இடம் மாற்றுங்கள். அதில் நடந்து கொண்டே டி.வி பாருங்கள். செடிகளைப் பராமரிப்பது, நாய்க்குட்டி வளர்ப்பது என‌ சின்னச்சின்ன விஷயங்களை மாற்றினால் ஆக்டிவாக இருக்கத் தொடங்குவீர்கள்.

பருமனான ஒருவர் சராசரியாக ஒரு வேலையும் செய்யாமல் தினமும் ஒன்றரை மணிநேரம் சோஃபாவிலேயே அமர்ந்திருப்பதாக மயோ கிளினிக் ஆய்வு ஒன்று சொல்கிறது.
 
4. தினமும் எட்டு மணி நேரம் தூங்க வேண்டும் என்பது எல்லாருக்கும் தெரிந்தது தான். ஆனால் நீங்கள் அதைவிட குறைந்த நேரம் தூங்குகிறீர்கள் என்றால் நீங்கள் ஆரோக்கியமான இருப்பதற்கு சான்ஸ் மிகவும் குறைவு. தூக்கமின்மைக்கு ஸ்ட்ரெஸ், செரிமானக் கோளாறு என பல காரணங்கள் உள்ளன.

பிடித்த நிறத்தில் தலையணை, கர்ட்டன்ஸ், சுவற்றின் நிறத்தை மற்றுவது, இரவுகளில் விரைவில் செரிக்கும் உணவை சாப்பிடுவது, தூங்கச் செல்லும்போது போனை நோண்டாமல் கைக்கு எட்டாத இடத்தில் வைத்து தூங்குவது என சில விஷயங்களை மாற்றிக் கொண்டால் தூக்கம் நன்றாக வரத்தொடங்கும். எட்டு மணிநேரம் தூங்குகிறீர்கள் என்றால் அதிகாலை சீக்கிரம் எழுவது, உடற்பயிற்சி செய்வது.. என நல்ல தூக்கத்தால் உங்களது லைஃப் ஸ்டைல் உங்களை அறியாமலேயே மாறத்துவங்கும்.

Home-Fitness-Programs.jpg

5. பெரும்பாலான உயர்தர உணவகங்களில் லைட்டிங் மிகவும் டல்லாக இருப்பதை கவனித்திருப்பீர்கள். அதற்கு காரணம் நீங்கள் அதிக நேரம் அமர்ந்திருப்பீர்கள், சமைக்கப்பட்ட உணவினை அதிக நேரம் வைத்து அதன் தன்மையே மாறும் அளவுக்கு மாற்றிவிடுவீர்கள்.

அதிக நேரம், சாப்பிடுவது உங்கள் உடலுக்கு கேடு என்பதால் சீக்கிரம் சாப்பிடுங்கள். அதுமட்டுமின்றி  வீட்டிலும் இருட்டில் அமர்ந்தோ, டல்லடிக்கும் லைட்டிங்கிலோ சாப்பிடாதீர்கள். எப்போதும் பளிச் லைட்டில் உண்பதால் சுறுசுறுப்பாகவும் வேகமாகவும், தேவையானதை மட்டும் சாப்பிடுவீர்கள்.

vikatan

  • தொடங்கியவர்

நேரம் சொல்லும் பறவைகள்!

 

ப்போது மணி என்ன எனக் கேட்டால், உடனே கடிகாரத்தைப் பார்ப்போம். நம் முன்னோர்கள், காலையில் பறவைகள் சத்தமிடுவதை வைத்தே நேரத்தைக் கண்டுபிடித்தார்களாம். எந்தப் பறவை எந்த நேரத்தில் சத்தமிடும் என்பதைத் தெரிந்துகொள்வோமா?

p86a.jpg

p86b.jpg

p86c.jpg

p86d.jpg

p86e.jpg

p86f.jpg

p86g.jpg

vikatan

  • தொடங்கியவர்

வலைபாயுதே

 

facebook.com/jeevan.rajaram:

என் மகள், என் மனைவியிடம் ஏதோ சுவாரஸ்யமாகப் பேசிக்கொண்டிருந்தாள்... டி.வி-யை மியூட் செய்துவிட்டு காதுகொடுத்தேன்.

மகள்: மம்மி, நாம எர்த்ல மட்டுமே ஏன் இருக்கோம்... மூனுக்குப் போலாம்ல?

மனைவி: இல்லம்மா, அங்கே நாம வாழ முடியாது.

மகள்: ஏன்?

மனைவி: ஆக்ஸிஜன், வாட்டர் ஏதுவுமே அங்கே இல்லை, அதான்.

மகள்: சோ வாட், நாம எடுத்துட்டுப் போவோம்.

மனைவி: அதெல்லாம் முடியாது. உனக்குச் சொன்னா புரியாது... போய் விளையாடு.

மகள்: மம்மி, மூனுக்கு ஏற்கெனவே ரெண்டு பேர் போயிட்டு வந்திருக்காங்களாம், எங்க மிஸ் சொன்னாங்க.

twitter.com/kumarfaculty: உலகின் முதல் தெர்மாமீட்டர், அம்மாவின் கையாகத்தான் இருந்திருக்கும்!

twitter.com/arasu1691: எதுவுமே பேசாத கரடி பொம்மைகளை அணைத்துக்கொண்டு உறங்கும் பெண்களின் உளவியல்தான் ஆண்களுக்கான முதல் எச்சரிக்கை!

twitter.com/thalabathe: `தேவர்மகன்' சிவாஜி மாதிரி வாழ்ந்து, வயசாகி, ஒரு மதிய சாப்பாட்டுக்குப் பிறகு குழந்தைகளை ஏறி மிதிக்கச்சொல்லி, அப்படியே செத்துப் போயிடணும்!

twitter.com/MrElani: ஒரு சென்ட்ரல் மினிஸ்டரே, `முதலமைச்சரைப் பார்க்க முடியலை'னு புலம்புறார். இந்த லட்சணத்துல நான் உங்கள் சகோதரி, சித்திபொண்ணுனு  வாட்ஸ்அப் ஆடியோ வேற!

p108a.jpg

twitter.com/Vino_Twitz: `டீ, காபி குடிக்கும் போது தும்மல் வந்தா, கிளாஸைக் கீழே வெச்சுட்டு தும்மவும்' - பொதுநலன் கருதி...

twitter.com/MrElani: கோச்சிட்டு பொண்டாட்டிட்ட பேச ஃப்ளைட்டையே கடத்தியிருக்கான் ஒருத்தன். இப்பதான் தெரியுது, தீவிரவாதி எல்லாம் எப்படி உருவாகு றானுங்கனு!

twitter.com/VignaSuresh: `இந்தா' என, குழந்தை இரண்டு கைகளையும் நீட்டி தன்னையே தருகிறது!

twitter.com/arattaigirl: கடவுள் இங்கேதானே கிடப்பார். ஆனால், பிரசாதம் தீர்ந்துவிடும் என்பதைப் புரிந்துகொண்டு முதலில் அந்த வரிசைக்குச் செல்கின்றனர் பக்தர்கள்!

twitter.com/urs_priya: அன்னக் கரண்டியை கைபோலவே வடிவமைத் தவரின் ரசனையை எண்ணி வியக்கேன்!

twitter.com/Asalttu: கலைஞர்: தம்பி, ஏன் வெளியே நிக்கிற... இந்தா உனக்கும் ரெண்டு ஸீட் வெச்சுக்க!

வந்தவர்: அய்யா, நான் தண்ணி கேன் போட வந்தேனுங்க!

twitter.com/urs_priya: இன்னிக்கு உடம்பு சரியில்லைன்னாலும் லீவு எடுக்காம ஆபீஸ் போற பூரா பயலுங்களும், ஒருகாலத்துல `உடம்பு சரியில்லை'னு பொய் சொல்லி ஸ்கூலுக்கு கட் அடிச்சவங்கதான்!

twitter.com/BoopatyMurugesh: இந்தியாவுல நடக்கிற ஃபைனலில் எவனோ ரெண்டு பேரு விளையாடு றதைப் பார்க்கிறது, லவ் பண்ண புள்ளையை புருஷனோட பார்க்கி றதைவிட கொடுமை! :-(

p108b.jpg

twitter.com/writercsk: பிரேமலதாவை, `புரட்சித்தலைவி' என்று அழைத்ததற்கு அதிர்ச்சியுறுகிறார்கள். இந்த அதிர்ச்சி, ஜெயலலிதாவை அப்படி அழைக்கும் போதும் வந்திருக்க வேண்டுமே!

twitter.com/Lekhasri_g: ஒரு நாளைக்கு அஞ்சு டிரெஸ் போட, பணக்காரனாக இருக்கவேண்டிய அவசியம் இல்லை; குழந்தையாக இருந்தாலே போதும்!

twitter.com/chevazhagan1: விருந்தாளி வீட்டுக்குச் செல்லும்போது 500 ரூபாய்க்கு ஸ்நாக்ஸ் வாங்கியும் அரை கவர் நிறம்பல... நாலே நாலு `லேஸ்' பாக்கெட்டைத் திணிச்சேன்... செம ஹேப்பி!

twitter.com/mekalapugazh: மருத்துவர்கள் நமக்குக் கொடுக்கும் Appointment என்பது, நாம் க்ளினிக் சென்று சேரவேண்டிய நேரம் மட்டுமே.

twitter.com/RajiTalks: காதலுக்கு, தங்கைகளைப்போல அண்ணன்கள் உதவி செய்வது இல்லை # ஏன்னா, தங்கைகளுக்கு காதலைப் பற்றி தெரியும், அண்ணன்களுக்கு ஆண்களைப் பற்றி தெரியும்.

twitter.com/jebz4: ப்ளஸ் டூ ரிசல்ட் ஒன்றுக்காக, பல ஒலிம்பிக் மெடல் களைத் தியாகம் செய்த நாடுதான் நம் நாடு.

p108c.jpg

facebook.com/jeevan.rajaram:

`பழைய சோறு சாப்பிட ஆசை இருக்கு!'னேன், `நாளைக்கு பிரிப்பேர் பண்ணித் தர்றேன்'கிறார் மனைவியார். ‪#மிச்ச‬ சோத்துல தண்ணி ஊத்துறது எல்லாம் பிரிப்பரேஷனாம்!

facebook.com/prabhu.kalidas:

சென்னை முழுவதும் ஒவ்வோர் அடுக்கு மாடிக் குடியிருப்பிலும் 60 வயதுக்கு மேற்பட்ட ஆண்கள் செக்யூரிட்டிகளாக இருப்பார்கள். ஏதோ ஒரு வெறுமையைச் சுமந்துகொண்டு நொந்துபோய் அமர்ந்திருப்பார்கள்.

இவர்களுக்கு ஒரு பெரும் தொல்லை என்னவென்றால், இவர்கள் கண்ணாடி அணியக் கூடாது. அப்படி அணிந்தால், செக்யூரிட்டியாக இருக்க இவர்களுக்குத் தகுதி இல்லை. அதனால் டியூட்டியில் இருக்கும்போது கண்ணாடியைப் பதுக்கிவைத்திருப்பார்கள். இதனால் இவர்களுக்குப் பார்வையில் துல்லியம் இருக்காது. பக்கத்தில் போனால் ஒருமாதிரி குறுகுறுவெனப் பார்த்து, பிறகுதான் வணக்கம் வைப்பார்கள்.

60 வயது ஆள், எழுந்து நின்று நமக்கு வணக்கம் வைக்கும்போது ஒருமாதிரி வயிற்றைக் கலக்க ஆரம்பித்துவிடும். இதில் கொடுமை என்னவென்றால், இவர்கள் எங்கேயாவது ஒதுங்கி அமர்ந்து சாப்பிட்டுக்கொண்டு இருக்கும்போது கார் வந்து ஹார்ன் அடிக்க, பதறியபடி ஓடிவந்து கதவைத் திறந்து, எச்சில் கையை பின் பக்கமாக மறைத்துக்கொண்டு சீனாக்காரன் போல் உடலை வளைத்து, தலை குனிந்து, அந்த கார் கடக்கும் வரை அப்படியே நிற்க வேண்டும். அப்படி நிற்காதபட்சத்தில் அவரை வேலையைவிட்டுத் தூக்கிவிடுவார்கள். பெரும்பாலும் இவர்கள் பேச ஆசைப்படுபவர்களாக இருப்பார்கள்.

என் உறவினர் வீட்டில் இப்படி வயசான ஒரு செக்யூரிட்டி, நான் சென்றபோது இருட்டில் என்னைக் கணிக்க நேரம் எடுத்துக்கொள்ள, கணித்தப் பிறகு ஒரு வணக்கம் வைத்து, ஒரு இன்ச் சதுரத்தில் ஒரு பேப்பரைக் கையில் வைத்துக்கொண்டு ``சார், இது ரீசார்ஜ் கார்டு. இதுல இருக்கிற 16 நம்பரை தமிழ்ல மெதுவா சொல்லுங்க சார்'' எனக் கொடுத்தார். சொன்னேன். ``அப்பாடா... பத்து ரூவா கார்டு சார். ஒரு மணி நேரமா யாராச்சும் உதவுவாங்களானு நின்னுக்கிட்டு இருந்தேன். ரொம்ப நன்றி சார்...'' என்றார்.

போன வாரம் ஒடிசி போயிருந்தபோது, கடை திறப்பதற்கு முன்னர் பார்க்கிங் ஏரியாவில் வைத்து இந்த வயதான செக்யூரிட்டிகளுக்குப் பயிற்சி அளித்துக்கொண்டிருந்தார் நடுவயது ஆள் ஒருவர். ஒவ்வொருவராக அந்த நடுவயது ஆளுக்கு முன்பு நின்று உடல் விறைக்க சல்யூட் வைக்க வேண்டும். கொஞ்சம் சல்யூட் தொய்வாக இருந்தால், அந்த நடுவயது ஆள் ஒருமுறை சல்யூட் வைத்துக்காட்டி, `இப்படி வெக்கணும்யா...' எனத் திட்டி, பயிற்சி அளித்தார்.

இருப்பதிலேயே கொடுமை என்னவென்றால், அடுக்குமாடிக் குடியிருப்புகளில் உள்ள செக்யூரிட்டிகள், அங்கு குடியிருக்கும் சுள்ளான் போன்ற குழந்தைகளுக்கு எல்லாம் சல்யூட் வைக்க வேண்டும். அந்தச் சுள்ளான் பயல்கள் அந்த வணக்கத்தைக் கண்டும் காணாதது போல் அவர்கள் பெற்றோர்கள் பாணியில் விறைப்பாகச் செல்வார்கள். நகரம் கொடூரமானது.

vikatan

 

Edited by நவீனன்

  • தொடங்கியவர்

உப்பில் உருவான ஓட்டல்!

 
 
salt_2812482f.jpg
 

ஸ்டார் ஓட்டல் என்று கேள்விப் பட்டிருப்பீர்கள். சால்ட் ஓட்டலைத் தெரியுமா? தனி உப்புப் பாளங்களால் ஒரு ஓட்டல் கட்டப்பட்டுள்ளது. ‘பேலசியோ டி சால்’ (Palacio de saal) என்று அழைக்கப்படுகிறது அந்த ஓட்டல். பொலிவியா நாட்டில் உள்ள உலகின் மிகப் பெரிய உப்பு பிளாட்டான ‘சாலர் டி உயுனி’ (Salar de Uyuni) என்ற இடத்தில் இது அமைந்துள்ளது. உப்பு பிளாட் என்பது உப்பு மட்டுமே மிஞ்சியுள்ள காய்ந்த ஏரிப் படுகை.

14 அங்குல கனத்தில் இருக்கும், ஒரு மில்லியன் உப்புப் பாளங்களால் இந்த ஓட்டல் 1993-ல் உருவாக்கப்பட்டது. தரை, சுவர், கூரை, கட்டில், மேஜை, நாற்காலி, சிலைகள் என இங்கு எல்லாமே உப்பால் செய்ததுதான். நீச்சல் குளம், கோல்ஃப் மைதானம் கூட உப்புதானாம். நீராவிக் குளியலறை, நீர்ச்சுழல் குளியலறையும் உண்டாம்.

salt_2_2812483a.jpg

புகழ்பெற்ற சுற்றுலாத் தலமான சாலர் டி உயுனிக்கு வரும் சுற்றுலாப் பயணிகள் தங்க இடமில்லாமல் தவித்தனர். கட்டுமானப் பொருட்கள் கிடைக்காத இந்த ஒதுக்குப்புறமான பகுதியில், உப்புப் பாளங்களால் ஓட்டல் கட்டலாம் என்ற யோசனை உருவானதாம். 4,500 சதுர அடியில் அமைந்துள்ள இந்த ஆச்சரியமூட்டும் ஓட்டலைக் கட்ட இரண்டு வருடங்கள் பிடித்ததாம். ஒவ்வொரு வருடமும் மழைக் காலம் முடிந்த பின், மழையால் கரைந்த சில சேதங்களை மறுசீரமைப்பது வழக்கம்.

‘டான் ஜுவான் க்வீசடா’ என்ற படைப்பாளியின் மூளையில் உருவான இந்த ஓட்டல்தான், உலகின் முதல் உப்பு ஓட்டல் ஆகும். இதற்குப் பின் சில உப்பு ஓட்டல்கள் திறக்கப்பட்டபோதிலும், ‘பேலசியோ டி சால்’தான் உலகின் மிகப் பெரியது. ‘பேலசியோ டி சால்’ என்றால் ‘உப்பு அரண்மனை’ என்று அர்த்தம்.

tamil.thehindu

  • தொடங்கியவர்

கண்ணொடு காண்பதெல்லாம்...

 

p44a.jpg

‘ஜீன்ஸ்’ படத்தில் வரும் ‘கண்ணோடு காண்பதெல்லாம்’ பாட்டில் கம்ப்யூட்டர் உதவி மூலம் இன்னொரு ஐஸ்வர்யா ராயின் உருவத்தை ஆடவைத்து, நாசர் குடும்பத்தினர் கண்களில் விரலை விட்டு ஆட்டுவார்களே அந்த டெக்னாலஜியை மெய்யாலுமே மைக்ரோசாஃப்ட் நிறுவத்தினர் ‘ஹோலோபோர்டேஷன்’ என்ற பெயரில் கண்டுபிடித்துவிட்டார்கள். இதில், யாருடைய ஹோலோகிராஃப் உருவத்தை நாம் காணப் போகிறோமோ அவர் இருக்கும் இடத்தில் அவரைச் சுற்றிலும் முப்பரிமாண கேமராக்கள் பொருத்தப்பட்டிருக்கும். அந்த கேமராக்களில் அவரது ஒவ்வொரு அசைவுகளும் பதிவாகி மற்றொரு இடத்தில் தத்ரூபமாக முப்பரிமாணத்தில் அவரது உருவம் அதே அசைவுகளோடு ப்ரொஜெக்டர்கள் மூலம் ரிப்ளை ஆகும். சிம்பிள்.

p44b.jpg

p44c.jpg

அதேபோல் இதை ரெக்கார்டு செய்து மீண்டும் நீங்கள் போட்டுப் பார்க்கலாம். உருவத்தை சிறியதாகவோ அல்லது பெரியதாகவோ மாற்றம் செய்யலாம். சூப்பரா இருக்குல்ல... இதுபற்றி தற்போதைக்கு ஒரு வீடியோவை மட்டும் வெளியிட்டிருக்கும் மைக்ரோசாஃப்ட் நிறுவனம், எப்போது இதை மக்களின் பயன்பாட்டுக்கு வெளியிடும் என்பது தெரியவில்லை. ஆனால், சீக்கிரமே வெளியிட்டுவிடுவார்கள் எனவும் விலை 2,000 யூரோக்கள் வரை இருக்கலாம் எனவும் தகவல். வந்தால் நம் ஊரில் அந்த ஹோலோகிராஃப் உருவங்களுக்குப் பேய் பிடிப்பது மாதிரியான கதையம்சம் கொண்ட திரைப்படங்கள் உருவாக நிறையவே வாய்ப்பு இருக்கு. சொல்லிட்டேன்!

vikatan

  • தொடங்கியவர்

கண்டபடி கலாய்க்கிறாங்களாமாம்!

 

 

 

p62a.jpg

ணையவெளி எங்கும் PRANKS எனப்படும் கேன்டிட் வீடியோக்கள் கொட்டிக்கிடக்கின்றன. ஒருவரைப் பயமுறுத்தி இன்பம் காணும் இந்த வீடியோக்களில் சில பல சர்ச்சைக்கு உள்ளாகி இருக்கின்றன. அவற்றுள் அச்சில் ஏற்ற முடிந்த ப்ராங்குகளின் லிஸ்ட்..!

ஒரு திங்கட்கிழமை காலை பரபரவென அலுவலகத்துக்குள் என்ட்ரி கொடுத்து உங்கள் கம்ப்யூட்டரை ஆன் செய்து உங்கள் இருக்கையில் உட்காருகிறீர்கள். உங்கள் சிஸ்டம் லோடு ஆகும் முன்பே பலான படத்தின் முக்கல் முனகல் ஒலி உங்களுக்கேத் தெரியாமல் கணிணியின் ஸ்பீக்கரில் இருந்து ஹைபிட்ச்சில் கேட்க ஆரம்பிக்கிறது. வால்யூமை நீங்கள் குறைத்தாலும் அந்த ஆபாச ஒலி கேட்டுக்கொண்டே இருக்கிறது. நீங்கள் நிராயுதபாணியாக அசடு வழிந்து கம்ப்யூட்டருக்கு வரும் மின்சாரத்தைத் துண்டித்தாலும் அந்த ஒலி நிற்கவில்லை. உங்கள் ரியாக்‌ஷன் எப்படி இருக்கும்? அதிலும் பெண் அலுவலக ஊழியர்கள் உங்கள் முகத்தைப் பார்க்கும்போது உங்கள் முகம் எப்படி இருக்கும்?

மேலே சொன்னது யூ டியூபில் நாம் பார்த்த ஹிட்டான டெரர் ப்ராங்க் எனப்படும் கேலி வீடியோக்களில் ஒன்று. அலுவலக நண்பர் ஒருவர் செய்த வினோத ப்ராங்க் சேட்டை இது. சம்பந்தப்பட்ட ஆளுக்கே தெரியாமல் மைக்ரோ ஸ்பீக்கரை கம்ப்யூட்டருக்குள் வைத்து அதற்கான இணைப்பை பக்கத்தில் இருக்கும் அந்த ஆசாமி தன் கம்ப்யூட்டரில் இருந்து இயக்கி ஆளைப் பயமுறுத்தி இருக்கிறார்.

இணையத்தை உலுக்கும் இன்னொரு வகையான ப்ராங்க் ரொம்பவே டார்ச்சர் ரகம். ‘டாய்லெட் ப்ராங்க்’. ஷாப்பிங் மால்களில் இருக்கும் கழிவறைகளில் பொதுவாக கால்கள் மட்டும் தெரியும் வண்ணம்  டாய்லெட்டுகள் மிக நெருக்கமாக இருக்கும். உள்ளே உட்கார்ந்திருக்கும் நபர்களை இடுக்குகளின் வழியே பெட்ரோல் கேனில் இருக்கும் திரவத்தை (தண்ணீரை) உள்ளே ஊற்றுவார்கள். லைட்டரை இடுக்கின் வழியே உள்ளே ஒளிரவிட்டு பயமுறுத்துவார்கள். தண்ணீருக்குப் பதில் பெட்ரோலாக இருந்திருந்தால் அவ்வளவுதான். உட்கார்ந்த நிலையில் டூ பாத்ரூம் போய்க் கொண்டிருப்பவர்கள் திடீரென ஒரு கை உள்ளே வந்து இதுபோன்று செய்தால் என்ன ஆவார்கள்?

p62c.jpg

இவை எல்லாவற்றையும்விடக் கொடுமை நடிகையும் பாப் பாடகியுமான பாரிஸ் ஹில்டனை வைத்து துபாயில் எகிப்து நாட்டைச் சேர்ந்த ஒரு என்டர்டெயிண்மென்ட் நிறுவனம் செய்த கொலவெறி ப்ராங்க்தான்.

p62b.jpg

குட்டி விமானத்தில் பறந்து கொண்டிருந்தபோது அந்த நிறுவனம் பக்காவாக நான்கைந்து ஸ்கை டைவர்களின் உதவியோடு ஒரு போலியான விமான விபத்தை வானில் நிகழ்த்திக் காட்டினார்கள். நம்ப வைக்க அந்த டைவர்களில் ஒருவர் பயணியைப்போல உயிர் பயத்தில் பாராசூட்டுடன் குதிக்கவும் செய்ய, பாரிஸ் ஒப்பாரி வைத்து அழ ஆரம்பித்து விட்டார். கீழே பத்திரமாக விமானி இறக்கிய பிறகுதான் எல்லாமே செட்-அப் என்பது மேடத்துக்குத் தெரிய வந்தது. அந்த பிராங்கை பக்காவாக செய்த ரமீஸ் கலால் துபாயில் முக்கியமான டி.வி நடிகர் மற்றும் ப்ராங்க் ஸ்பெஷலிஸ்ட். இவருக்கு இதான் வேலை!

ஏன்யா இப்பிடி?

vikatan

  • தொடங்கியவர்

நாற்பது வினாடியில் நாற்பது வருடங்கள் - அசத்தும் அப்பிள் காணொளி -

  • தொடங்கியவர்

’’சிக்கன் சாப்பிட்டேன்... விஜய்கிட்ட சிக்கிட்டேன்!’’ - ‘தெறி’ பேபி சமந்தா

 

 

DSC3185LS.jpg

தெறி ஹீரோயின். விஜய்யின் செல்ஃபி பேபி, சமந்தா எப்போதுமே அழகுதான். அவரை பார்த்ததுமே 'ரொம்ப அழகா இருக்கீங்களே.... என்ன சீக்ரெட்?" என கேட்டு கேள்வியை ஆரம்பித்தால்... வெட்கப்பட்டு சிரிக்கிறார்.
 
"உண்மையாகவே அழகா இருக்கேன்ல. என் மேக்கப் மேனும், சினிமால என் சினிமாட்டோகிராபரும் தாங்க என் அழகு சீக்ரெட்டுக்கு காரணம். அவங்க தான் என்னை அழகா காட்டுறாங்க. அவங்களுக்கு தான் இந்த கிரெடிட்ஸ் எல்லாம்போகும்." என சிரிக்கிறார்.

'தெறி'யில விஜய்க்கு நான் மனைவி.  ரொமான்ஸ்க்கு பஞ்சமே இருக்காது. அவ்வளவு லவ்லியாக நடிச்சு இருக்கோம். ஒவ்வொரு சீனும் ரொமான்ஸ்ல சும்மா தெறிக்க விட்டு இருக்கோம். எனக்கே என்னை ஸ்கிரீன்ல பார்க்கும்போது அவ்வளவு பிடிக்குது!"

 'தெறி' படத்துல ஷூட்டிங் ஸ்பாட்ல விஜய் கூட நடந்த கலகல சம்பவங்கள் நிறைய இருக்குமே?"

 "நைட்ல ஷூட்டிங் நடக்கும்போது விஜய் சாப்பிடவே மாட்டார். எல்லாமே பக்காவாக செட் ஆகி முடிஞ்சதுக்கு பிறகுதான் சாப்பிடுவார். ஆனால், என்னால பசி தாங்க முடியாது. மீன், சிக்கன்னு வெளுத்து கட்டிடுவேன். ஒருநாள் நைட் ஷூட்டிங் அப்ப இதை தெரிஞ்சுகிட்ட விஜய் சாரும், அட்லியும் செமய்யா கலாய்ச்சாங்க. அன்னைக்கு சிரிச்சதுல கண்ணுல தண்ணி வந்திருச்சு!’’

"சினிமாவுக்குள் நுழைந்து கடந்த பிப்ரவரி மாதத்தோட ஆறு வருஷம் ஆகுது. என்ன எல்லாம் கத்துகிட்டீங்க?"

"ம்ம்.. எக்கசக்கமான அனுபவம். நான் சினிமாவுக்கு வருவேன்னு நினைக்கவே இல்லை. தற்செயலாக தான் வந்தேன். வந்ததுக்கு பிறகு மூணு நாலு படம் தான் பண்ணப்போறோம்னு தோணும். ஆனால், தொடர்ந்து இதுவரை 27 படங்களுக்கும் மேல பண்ணிட்டேன். அதுவும் டாப் ஸ்டார்கள் கூடவும் நடிச்சாச்சு. திடீர்னு வாழ்க்கை தலைகீழாக மாறும்னு சொல்லுவாங்களே. அதுக்கு என் வாழ்க்கையே உதாரணம். கெளதம் மேனன் சாருக்கு தான் பெரிய தாங்ஸ் சொல்லணும். என் வாழ்க்கை மேஜிக் போல மாற்றியவர் கெளதம் சார்தான். தாங்ஸ் சார்."

DSC15588LS.jpg

புல்லட் ஸ்பீட் கேள்விகளுக்கு ஸ்மார்ட் சமந்தா பதில்கள்!


"ஃப்ரீ டைம்ல என்ன பண்ணுவீங்க?"

"சென்னைல இருந்தால் சத்யம் தியேட்டர் வந்து படம் பார்ப்பேன். ஆனா, அப்போவெல்லாம் என்னை நீங்க கண்டுபிடிக்கவே முடியாது. அது ஒரு சீக்ரெட்!’’

"செல்லப் பெயர்?"

"சாம்."

"வாழ்க்கையின் தத்துவம்?"

"All or Nothing."

"சினிமால உங்க பெஸ்ட் ப்ரெண்ட் யார்?"

"என் முதல் படத்தின் ஹீரோ நாக சைதன்யா!’’

"யாரைப் பார்த்தால் பயம்?"

"எனக்கு மனுஷங்க மீது பயம் இல்லைங்க. ஆனால், என் வேலை மேல ரொம்ப பயபக்தி."

"செய்ய நினைத்து செய்யாமல் போனது?"

யோகா செய்யணும்னு நினைப்பேன். ஆனால், எங்க நேரமே கிடைக்கமாட்டேங்குது."
 

DSC3837LS.jpg


"இன்னமும் அழிக்காமல் வைத்திருக்கும் மெசேஜ்?"
 
"நான் யார் மெசேஜையும் அழிக்க மாட்டேங்க. எல்லா மெசேஜும் அப்படியே இன்பாக்ஸ்ல இருக்கும்!’’

"அடிக்கடி முணுமுணுக்கும் பாட்டு?"
 
"இப்போ என் ரிபீட் மோட் பாடல் 'தெறி' படத்துல வர 'தாய்மை வாழ்கென' பாடல்தான்."
 
"பிடித்த இடம்?"
 
"என் பெட் ரூம் எனக்கு அவ்வளவு பிடிக்கும். ஷூட்டிங் முடிந்து வந்தால் அப்பாடானு எல்லாதையும் மறந்துட்டு.... ஃபுல் ரெஸ்ட்தான்!’’

"யாருடன் டேட்டிங் போகணும்?"
 
"ம்ம்ம். ஒருத்தர் கூட டேட்டிங் போகணும்னு ஆசை இருக்கு. ஆனால், யாருனு சொல்ல மாட்டேனே!"

vikatan

  • தொடங்கியவர்

தாமஸ் ஜெஃபர்சன்

10_2812442f.jpg
 

அமெரிக்க முன்னாள் அதிபர்

அமெரிக்க முன்னாள் அதிபரும், ஐக்கிய அமெரிக்காவை உருவாக்கிய தலைவர்களில் முக்கியமானவருமான தாமஸ் ஜெஃபர்சன் (Thomas Jefferson) பிறந்த தினம் இன்று (ஏப்ரல் 13). அவரைப் பற்றிய அரிய முத்துக்கள் பத்து:

# அமெரிக்காவின் வர்ஜீனியா மாநிலம் ஷேட்வில் நகரில் (1743) பிறந்தார். விவசாயத் தொழில் செய்த தந்தை, சர்வேயராகவும் இருந்தார். ஜெஃபர்சன் அதே ஊரில் 9 வயதில் ஆரம்பக் கல்வி கற்றார். குதிரை சவாரியும் கற்றார். 11 வயதில் தந்தையை இழந்தார்.

# சிறு வயது முதலே புத்தகங்கள் படிப்பதில் ஆர்வம் கொண்டிருந்தார். ஒரு ஆசிரியரிடம் வரலாறு, அறிவியல், தொன்மையான மொழிகள் கற்றார். 16 வயதில் கல்லூரியில் சேர்ந்து, கணிதம், மாறாநிலைவாதம், தத்துவம் பயின்றார். பிரெஞ்ச், கிரேக்கம், லத்தீன் மொழிகளில் நிபுணத்துவம் பெற்றார். வயலின் கற்றார்.

# ஜார்ஜ் வித் என்ற வழக்கறிஞரிடம் 5 ஆண்டுகள் சட்டம் பயின்ற பிறகு, 1767-ல் வழக்கறிஞராக உரிமம் பெற்றார். விடுதலையை விரும்பும் அடிமைகளின் வழக்குகளை ஏற்று நடத்தினார். திறமையாக வாதாடி, சிறந்த வழக்கறிஞர் என்று பெயர் பெற்றார். மாஜிஸ்திரேட், மாவட்ட துணை அதிகாரி, வர்ஜீனியா சட்டமன்ற உறுப்பினர். வர்ஜீனியா மாநில ஆளுநர் என்று படிப்படியாக உயர்ந்தார்.

# ஏராளமான நூல்களைப் படித்தார். தான் படித்த மற்றும் தந்தை கொடுத்த நூல்களைப் பாதுகாத்து 1770-ல் நூலகம் அமைத்தார். அந்த புத்தகங்கள் ஒரு தீ விபத்தில் நாசமாகின. மனம்தளராத ஜெஃபர்சன் மீண்டும் 1,250 நூல்களைத் திரட்டி நூலகம் அமைத்தார். 40 ஆண்டுகளில் நூல்களின் எண்ணிக்கை 6,500 ஆக அதிகரித்தது. ‘‘புத்தகங்கள் என் சுவாசம். அவை இல்லாமல் என்னால் வாழ முடியாது’’ என்று குறிப்பிட்டுள்ளார்.

# கான்டினென்டல் காங்கிரஸ் உறுப்பினராக 1775-ல் தேர்ந்தெடுக்கப்பட்டார். அமெரிக்க சுதந்திர பிரகடனத்தை (Declaration of Independence) எழுதுவதற்கான குழுவுக்கு 33 வயதில் தேர்ந்தெடுக்கப்பட்டார். அமெரிக்க சுதந்திர பிரகடனத்தை எழுதிய முதன்மை ஆசிரியர் இவர்தான்.

# பிரான்ஸில் அமெரிக்க தூதராக 3 ஆண்டுகள் பணியாற்றினார். அமெரிக்காவின் முதல் அதிபரான ஜார்ஜ் வாஷிங்டன் இவரை முதலாவது மாநிலச் செயலராக நியமித்தார். அமெரிக்காவின் துணை அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.

# அமெரிக்காவின் 3-வது அதிபராக 1800-ல் பதவியேற்றார். 1809 வரை இப்பதவியில் நீடித்தார். இவரது ஆட்சிக் காலத்தில், பிரான்ஸிடம் இருந்து லூசியானா பெறப்பட்டது.

# ஜனநாயகக் கொள்கைகளில் அதிக பற்று கொண்டவர். தனிநபர் உரிமைகளுக்கு அதிக முக்கியத்துவம் அளித்தார். மத்திய பட்ஜெட்டின் முக்கியத்துவத்தை குறைத்து, மாநிலங்களுக்கு மீண்டும் அதிகாரத்தை வழங்கினார். வரிகளைக் குறைத்தார்.

# புகழ்வாய்ந்த தனது மாளிகையை இவரே வடிவமைத்தார். வர்ஜீனியா பல்கலைக்கழகத்தை தொடங்கினார். அந்த கட்டிடத்தை இவரே வடிவமைத்தார். அதன் முதல் தலைவராகவும் பணியாற்றினார். கடற்கொள்ளையர்களை ஒடுக்க கடற்படையை அனுப்பினார். சிறிய போர் போல நடைபெற்ற இத்தாக்குதல் ‘ஃபர்ஸ்ட் பார்பேரி போர்’ எனப்படுகிறது.

# புகழ்பெற்ற அமெரிக்க அதிபர்களில் ஒருவராக இன்றளவும் போற்றப்படுபவர். வரலாற்று அறிஞர், தத்துவ மேதை, கட்டிடக் கலை நிபுணர் என பன்முகத் திறன் படைத்த தாமஸ் ஜெஃபர்சன் 83-வது வயதில் (1826) மறைந்தார்.

tamil.thehindu

  • தொடங்கியவர்

கொரில்லாவின் நடன திறமை
==============================

வடஇங்கிலாந்தின் மிருகக்காட்சி சாலை ஒன்றிலுள்ள லோப் என்ற 3 வயது கொரில்லா இது.

லோப்-இன் நடன திறமையை வெளிப்படுத்தும் இந்த வீடியோ இணையத்தில் பிரபலமடைந்துள்ளது.

  • தொடங்கியவர்

கிரிக்கெட்டுக்கே பார்ட்டிதான்!

 

டி20 உலகக்கோப்பையை வென்று மேற்கு இந்தியத் தீவு வீரர்கள் மைதானத்தில் ஆடியபோது, `அவர்களுடன் சேர்ந்து ஆட வேண்டும்' என ஒவ்வொரு  கிரிக்கெட் ரசிகனும் நினைத்திருப்பான். ஆம்... கிரிக்கெட்டை ஏதோ தொழில்நுட்பம் போல அணுகி, புதிய டெக்னிக்குகளை உருவாக்கி வெல்லும் அணி அல்ல மேற்கு இந்தியத் தீவு அணி. கிரிக்கெட்டை உயிராக, உண்மையாக, ஜாலியாக, ஃபன்னாக, ஒரு விளையாட்டாக ஆடி உலகக்கோப்பையை வென்று `நாங்க வேற மாதிரி' என உலகுக்குக் காட்டியிருக்கிறது.

ஆண்கள் உலகக்கோப்பை மட்டும் அல்ல, பெண்கள் உலகக்கோப்பை, பிப்ரவரி மாதம் நடந்து முடிந்த 19 வயதுக்கு உட்பட்டோருக்கான ஜூனியர் உலகக்கோப்பை என ஐ.சி.சி-யின் அனைத்து உலகக்கோப்பைகளுமே இப்போது மேற்கு இந்தியத் தீவுகளிடம்தான் இருக்கின்றன. `கிரிக்கெட்டின் அண்டர் டாக்ஸ்' என அழைக்கப்பட்டுவந்த மேற்கு இந்தியத் தீவுகள் அணியின் இந்த விஸ்வரூபம், யாருமே எதிர்பாராதது. இந்த வெற்றி எப்படிச் சாத்தியமானது?

பயம் இல்லை!

இந்தியா, தென்ஆப்பிரிக்கா, ஆஸ்திரேலியா என இந்த உலகக்கோப்பையில் வலுவான அணிகள் அனைத்துமே திணற, ஒவ்வொரு போட்டியையும் ஜஸ்ட் லைக் தட் ஜெயித்து ஆச்சர்யப்படுத்தியது மேற்கு இந்தியத் தீவுகள் அணி. ஆனால் இந்த சாம்பியன் அணியின் 15 வீரர்களும் சேர்ந்து, உலகக்கோப்பை தொடங்குவற்கு முன்னர் ஒரு மீட்டிங்கூட போடவில்லை. இந்தியாவுக்கு ஃப்ளைட் ஏறுவதற்கு முன்னர் வரை எந்த வீரர் வேண்டுமானாலும் தொடரில் இருந்து விலகிவிடலாம் என்ற நிலைதான் இருந்தது. சம்பளப் பிரச்னை, மேற்கு இந்திய கிரிக்கெட் வாரியத்தின் அடாவடிப்போக்கு எல்லாவற்றையும் சமாளித்து ஒரு வழியாக இந்தியா வந்த பின்னர் பயிற்சிப் போட்டியிலேயே இந்தியாவிடம் மண்ணைக் கவ்வினார்கள். `இவங்க தேறவே மாட்டங்க' என ட்விட்டர் முதல் டிரெஸ்ஸிங் ரூம் வரை விமர்சனங்கள் பறந்தன. ஆனால், எதற்கும் அசையவில்லை.

p8a.jpg

p8b.jpg

இங்கிலாந்துக்கு எதிரான முதல் போட்டியில் 48 பந்துகளில் 100 ரன்கள் அடித்து, 18.1 ஓவரிலேயே இங்கிலாந்தின் கதையை முடித்தார் கிறிஸ் கெயில். அடுத்து தென்ஆப்பிரிக்கா அணியை கடைசி ஓவரில் சிக்ஸர் அடித்து விரட்டினார் பிராத்வொயிட். இந்த வெற்றிக்குப் பிறகுதான் எல்லோரது பார்வையும் வெஸ்ட் இண்டீஸ் பக்கம் திரும்பியது. ஆனால், அடுத்த போட்டியில் அறிமுக அணியான ஆப்கானிஸ் தானிடம் வீழ்ந்தார்கள். அப்போதும் அவர்களிடம் பயமோ பதற்றமோ இல்லை. `நாங்கள் வெறும் 15 பேர். மும்பை மண்ணில் பல கோடி இந்தியர்களுடன் மோதவிருக்கிறோம் என்ற உண்மை எங்களுக்குத் தெரியும். ஆனால், எங்களைப் பொறுத்தவரை எங்களுக்கு எது வருமோ அதைச் சரியாகச் செய்வோம்' என்றார் கேப்டன் டேரன் சமி. ஆமாம், அவர்களுக்குப் பயம் கிடையாது. அதனால்தான் ஆட்டத்தின் போக்கு எப்படி மாறினாலும் பௌண்டரிகளும் சிக்ஸர்களும் பறந்துகொண்டே இருந்தன.

‘15’ சாம்பியன்கள்

`நீங்கள் கெயிலைப் பார்த்து மட்டுமே பயப்படுகிறீர்கள். அவரைப் பற்றி மட்டுமே என்னிடம் கேட்கிறீர்கள். நாங்கள் ஒருவரை நம்பி இல்லை. எங்கள் அணியில் 15 மேட்ச் வின்னர்கள் இருக்கிறார்கள்' என்றார் சமி. லீக் போட்டியில் இலங்கைக்கு எதிரான போட்டியில் கெயிலுக்கு திடீரென காயம் ஏற்பட, ஃபிளெட்சர் தொடக்க ஆட்டக்காரராகக் களம் இறங்கி வெளுத்து வாங்கினார். அரை இறுதிப் போட்டியில் சிம்மன்ஸ், சார்லஸ், ரஸ்ஸல் என மூன்று பேரும் சேர்ந்து அடித்ததில் நிலைகுலைந்தது இந்திய அணி. இறுதிப் போட்டியில் மீண்டும் கெயில், சிம்மன்ஸ் மீது கவனம் திரும்ப சாமுவேல்ஸும் பிராத்வொயிட்டும் இங்கிலாந்தைச் சிதைத்துவிட்டார்கள். அணியில் இருக்கும் எந்த ஒரு வீரரும் இன்னொரு வீரரைவிடக் குறைந்தவர் இல்லை. இங்கே ஒன் மேன் ஷோவுக்கு இடம் கிடையாது என்பதைக் காட்டியது மேற்கு இந்தியத் தீவுகள் அணியின் பேட்டிங் வரிசை.

தெறி ஆல்ரவுண்டர்ஸ்

பேட்டிங், பௌலிங், ஃபீல்டிங் என மூன்றிலுமே பெஸ்ட்டான வீரர்கள்தான் டி20 போட்டிகளுக்கு மிகச் சரியானவர்கள். அந்த மிகச் சரியானவர்களைக் கொண்டிருந்ததால்தான் மே.இ.தீவு அணியால் இந்திய மண்ணில் சாம்பியன் பட்டம் வெல்ல முடிந்தது. கெயில், ரஸ்ஸல், பிராவோ, பிராத்வொயிட், சமி என அதிரடியான ஐந்து ஆல்ரவுண்டர்களைக் கொண்டிருந்தது அந்த அணியின் பலம். கிறிஸ் கெயில் பேட்டிங்கில் சொதப்பினால், பௌலிங்கில் அசத்தினார். சமி ஃபீல்டிங்கில் கலக்கினார்.

p8c.jpg

6 டவுண் பேட்ஸ்மேனான பிராத்வொயிட் சிக்ஸர்களைச் சிதறவிட்டார். முழுக்க முழுக்க ஆல்ரவுண்ட் பலத்தால் மட்டுமே மேற்கு இந்தியத் தீவுகளுக்கு இந்த உலகக்கோப்பை சாத்தியமானது.

ஜாலி விளையாட்டு இந்தியாவில் கேப்டன் மட்டும்தான் கூல். மேற்கு இந்தியத் தீவில் ஒட்டுமொத்த அணியுமே கூல். லீக், அரை இறுதி, இறுதி என எந்தப் போட்டியானாலும் ஜாலியாக விளையாடுவது  இவர்களின் ஸ்டைல். வெற்றிபெற்றால் செம கொண்டாட்டம் போடுவார்கள். தோல்வி அடைந்தாலும் கவலைப்படுவது இல்லை. ஆப்கானிஸ்தான் அணி இந்த முறை மேற்கு இந்தியத் தீவுகளை வென்றது. சிறிய அணியிடம் தோல்வி அடைந்த அதிர்ச்சி அவர்களிடம் கொஞ்சமும் இல்லை. மாறாக, கெயில் ஆப்கானிஸ் தான் வீரர்களுடன் சேர்ந்து ஆட்டம்போட்டார். ஐ.பி.எல்., பிக்பாஷ் என எங்கே டி-20 லீக் போட்டிகள் நடந்தாலும் வெஸ்ட் இண்டீஸ் வீரர்கள் அங்கே இருப்பார்கள். அதனால்தான் இந்தியா, இங்கிலாந்து, ஆஸ்திரேலியா, தென் ஆப்பிரிக்கா என உலகில் எந்த நாட்டில், எப்பேர்பட்ட பிட்சில் மேட்ச் நடந்தாலும் வெஸ்ட் இண்டீஸ் வீரர்களால் வெளுத்து வாங்க முடிகிறது.

p8d.jpg

p8e.jpg

தளராத தன்னம்பிக்கை

`இந்த இரவை நான் வெகுநேரம் கொண்டாட விரும்புகிறேன். ஏனெனில், இனிமேல் எப்போது இந்த வீரர்களுடன் இணைந்து விளையாடப் போகிறேன் என்பது தெரியவில்லை. எங்களை ஒருநாள் தொடருக்கும் தேர்ந்தெடுக்க மாட்டார்கள்.  இனி நாட்டுக்காக விளையாடுவேனா இல்லையா என்பதுகூட உறுதியாகத் தெரிய வில்லை. இந்த வெற்றியை கரீபியன் மக்களுக்குச் சமர்ப்பிக்கிறோம்' என கோப்பையை வென்றதும் வருத்தத்துடன் சொன்னார் கேப்டன் சமி.

கிரிக்கெட் நிர்வாகம் கொடுத்த அத்தனை மன உளைச்சல்களுக்குப் பிறகும் எதைக்கண்டும் சோர்ந்துவிடாமல் உற்சாகத்தோடு விளையாடிய மேற்கு இந்தியத் தீவு வீரர்களிடம் இருந்து கற்றுக்கொள்ள நிறையவே இருக்கின்றன.

நீங்க ஜெயிச்சா கிரிக்கெட்டுக்கே பார்ட்டிதான் பாய்ஸ்!

vikatan

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.