Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இளமை புதுமை பல்சுவை

Featured Replies

  • தொடங்கியவர்

திண்டுக்கல் மாணவர்கள் கண்டுபிடித்த சோலார் காருக்கு தேசிய விருது!

 

 

dincar01.jpg

திண்டுக்கல்: திண்டுக்கல் எஸ்.எஸ்.எம். பொறியியல் கல்லூரி மாணவர்கள் கண்டுபிடித்த சோலார் காருக்கு சிறந்த கண்டுபிடிப்புக்கான தேசிய விருது கிடைத்துள்ளது.

மத்தியம் பிரதேசம், போபாலில் 'இம்பீரியல் சொசைட்டி ஆப் இன்னோவேட்டிவ் இன்ஜினியர்ஸ்' அமைப்பின் சார்பில் தேசிய அளவிலான கார் பந்தய போட்டி கடந்த மார்ச் 25-ம் தேதி நடந்தது. இதில் 'சோலார்' கார்கள் பங்கேற்றன. திண்டுக்கல் எஸ்.எஸ்.எம். பொறியியல் கல்லூரி ஆட்டோமொபைல் துறை மாணவர்கள் கண்டுபிடித்த 'சோலார் காரும்' இதில் பங்கேற்றது.

dincar250.jpgஇந்த பேட்டரி காரில் மொத்தம் எட்டு சோலார் பேனல்கள் பொருத்தப்பட்டு, ஒவ்வொரு பேனலிலும் தலா 50 வாட்ஸ் சோலார் மின்சாரம் தயாராகி பேட்டரியில் சேமிப்பாகும். பின், 400 வாட்ஸ் மின்சாரத்தைக் கொண்டு மணிக்கு 40 கி.மீ. வேகத்தில் கார் இயங்கும். இதற்காக 1,500 ஆர்.பி.எம். திறன் கொண்ட மின் மோட்டார் மூலம் கார் இயங்கும்படி வடிவமைக்கப்பட்டது. உயர்தர கார்களில் பயன்படுத்தப்பட்டுள்ள 'கியர் பாக்ஸ்' தொழில்நுட்பமும் இதில் பயன்படுத்தப்பட்டது. இந்த வசதியால் வேகத்தை உடனடியாக கூட்டவும், குறைக்கவும் முடியும்.

இந்த சோலார் கார் மாநில அளவில் மூன்றாவது இடத்தையும், தேசிய அளவில் 12-வது இடத்தையும் பெற்றது. மேலும் சிறந்த வடிவமைப்பிற்கான தேசிய விருதும் கிடைத்துள்ளது. இதேபோன்று இந்த மாணவர்கள், மாற்றுத் திறனாளிகளுக்காக முன்பே தயாரித்த சுற்றுச்சூழல் பாதிக்காத 'இ பைக்'கும் தேசிய அளவில் முதல் பரிசு  பெற்றுள்ளது.

சோலார் காரை கண்டுபிடித்த மாணவர்களுக்கு உதவிய, உதவி பேராசிரியர்கள் மும்மூர்த்தி, விவேக்குமார் கூறுகையில், “இதுபோன்ற இயற்கை சூழலை மாசுபடுத்தாத கண்டுபிடிப்புகளுக்கு கல்லூரிகள் மாணவர்களுக்கு உதவ வேண்டும்'' என்றனர்.

vikatan

  • Replies 11.3k
  • Views 1.5m
  • Created
  • Last Reply
  • தொடங்கியவர்
1987 : புறக்கோட்டை குண்டுவெடிப்பில் 106 பேர் பலி!
 

வரலாற்றில் இன்று.....

ஏப்ரல் - 21

 

7081987---varalaru.jpgகி.மு. 753 : ரொமூலஸ் மற்றும் ரேமுஸ் இரு­வரும் ரோம் நகரை அமைத்­தனர்.

 

1509 : ஏழாம் ஹென்­றியின் இறப்­புக்குப் பின்னர் அவரின் மகன் எட்டாம் ஹென்றி இங்­கி­லாந்தின் மன்­ன­னாக முடி­சூ­டினார்.

 

1526 : இந்­தி­யாவின் பானிப்­பட்டில் முத­லா­வது போர் டில்­லியின் சுல்­தா­னுக்கும் தைமூர் வம்­சத்தைச் சேர்ந்த பாப­ருக்கும் இடையில் இடம்­பெற்­றது. பாபர் இந்­தி­யாவில் முக­லாயப் பேர­ரசை நிறு­வினார்.

 

1792 : பிரேஸில் நாட்டின் விடு­த­லைக்குப் போரா­டிய டைரா­டெண்டெஸ் தூக்­கி­லி­டப்­பட்டார்.

 

1944 : பிரான்ஸில் பெண்­க­ளுக்கு வாக்­கு­ரிமை அளிக்­கப்­பட்­டது. 1945.04.29 ஆம் திகதி நடை­பெற்ற உள்ளு­ராட்சித் தேர்­த­லொன்றில் பிரெஞ்சு பெண்கள் முதல் தட­வை­யாக வாக்­க­ளித்­தனர்.

 

1945 : இரண்டாம் உலகப் போரில் ஜேர்­ம­னியின் பெர்லின் நகரில் சோவியத் படைகள் ஜேர்­ம­னியின் உயர் தலைமைப் பீடத்தைத் தாக்­கினர்.

 

1960 : பிரே­ஸிலின் தலை­ந­க­ராக பிர­சீ­லியா ஆக்­கப்­பட்­டது.

 

1967 : கிறீஸ் நாட்டில் பொதுத்­தேர்­த­லுக்கு சில நாட்­களே இருந்த நிலையில், இரா­ணுவத் தள­பதி ஜோர்ஜ் பப்­ப­ட­ப­வுலோஸ் ஆட்­சியைக் கைப்­பற்றி அடுத்த ஏழாண்­டு­க­ளுக்கு பத­வியில் இருந்தார்.

 

708varau2.jpg1975 : வியட்நாம் போர்: தெற்கு வியட்நாம் ஜனா­தி­பதி நூயென் வான் டியூ சாய்­கோனை விட்டு வெளி­யே­றினார்.

 

1987 : கொழும்பு புறக்­கோட்­டையில் இடம்­பெற்ற குண்­டு­வெ­டிப்பில் 106 பேர் கொல்­லப்­பட்­டனர்.

 

1989 : பெய்ஜிங் நகரில் திய­னன்மென் சதுக்­கத்தில் கிட்­டத்­தட்ட 100,000 மாண­வர்கள் சீர்­தி­ருத்தத் தலைவர் ஹீ யாபாங்கின் மறை­வுக்கு அஞ்­சலி செலுத்தத் திரண்­டனர்.

 

1993 : பொலி­வி­யாவின் முன்னாள் சர்­வா­தி­காரி லூயிஸ் கார்­சியா மேஸா­வுக்கு ஊழல், கொலை, அர­சி­ய­ல­மைப்பை மீறி­யமை தொடர்­பான குற்­றச்­சாட்­டுகள் கார­ண­மாக அந்­நாட்டு உயர்­நீ­தி­மன்றம் 30 வருட சிறைத்­தண்­டனை விதித்தது. 

 

2004 : ஈராக்கின் பஸ்ரா நகரில் இடம்பெற்ற தற்கொலை குண்டுத் தாக்குதல்களில் 74 பேர் உயிரிழந்ததுடன் 160 பேர் காயமடைந்தனர்.

metronews.lk/

Edited by நவீனன்

  • தொடங்கியவர்

venkat_raghvan_20120730.jpgSrinivasaraghavan Venkataraghavan

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் சுழல் பந்துவீச்சாளர், அணித்தலைவராக இருந்து பின்னர் சகலரும் மதிக்கும் சர்வதேச நடுவராகக் கடமையாற்றிய ஸ்ரீனிவாஸ் வெங்கட்ராகவன் அவர்களது பிறந்தநாள்.

 

  • தொடங்கியவர்

பிட்ஸ் பிரேக்

dot1.jpg இங்கிலாந்து அரசக் குடும்பத்தினரை, ஜனாதிபதிகளும் பிரதமர்களும் பிரபலங்களுமே சந்திக்க முடியும் என்பதை மாற்றியிருக்கிறார் 93 வயதான முதியவர் போமன் கோஹினூர். மும்பையில் `பிரிட்டானியா அண்ட் கம்பெனி’ என்கிற பெயரில், ரெஸ்டாரன்ட் நடத்திவரும் போமனின் இரண்டு நிமிட வீடியோ, #willkatemeetme என்ற ஹேஷ்டேகுடன் சோஷியல் மீடியாவில் வைரல்ஹிட். இந்த வீடியோவைப் பார்த்த பிரிட்டிஷ் தூதரக அதிகாரிகள், இது பற்றி இளவரசர் வில்லியம் மற்றும் கேட்டிடம் சொல்ல, தாஜ் ஹோட்டலுக்கு அவரை அரச மரியாதையுடன் அழைத்து வரச்சொல்லி சர்ப்ரைஸ் கொடுத்திருக்கிறது ராயல் ஃபேமிலி. `இளவரசரையும் இளவரசியையும் சந்தித்தேன். அவர்கள் மிகவும் அன்பானவர்கள். இங்கிலாந்து அரசக் குடும்பத்தினரைச் சந்திக்க வேண்டும் என்பது என் வாழ்நாள் கனவு' என நெகிழ்கிறார் போமன்!

p22a.jpg

dot1.jpg  பாலிவுட்டில் ஒரே பயோபிக் சீஸனாக இருக்கிறதே `உங்களுடைய பயோபிக் எப்போது வரும்?' என ஷாரூக் கானிடம் கேட்டபோது, `இதுவரை வந்திருக்கும் எல்லா பயோபிக்கும் இன்ட்ரஸ்ட்டிங் மனிதர்களுடையது. அவர்கள் வாழ்க்கையில் பல சுவாரஸ்யங்கள் இருந்தன. என்னுடைய வாழ்க்கையில் அப்படி எதுவும் இல்லை. இருந்தாலும் என்னுடைய பயோபிக்கில் என் மகன்கள் ஆர்யன் அல்லது ஆப்ராம் நடிப்பது சரியானதாக இருக்கும்' என ஃபீலாகியிருக்கிறார் கிங் கான்!

p22b.jpg

dot1.jpg  கிரிக்கெட் ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலமான ஹர்ஷா போக்லேவை ஐ.பி.எல் கமென்ட்டேட்டர் குழுவில் இருந்து திடீரென கழற்றிவிட்டிருப்பது சலசலப்பை ஏற்படுத்தியிருக்கிறது. `கிரிக்கெட் வீரர்களும் பி.சி.சி.ஐ நிர்வாகிகளும் தங்களை யாரும் விமர்சிக்கக் கூடாது என நினைக் கிறார்கள். அதன் வெளிப்பாடுதான் தோனி, கோஹ்லி, அஷ்வின் உள்ளிட்ட அனைத்து சீனியர் வீரர்களும், பத்திரிகையாளர்கள் மற்றும் விமர்சகர்களிடம் அளவுக்கு மீறி நடந்துகொள்வது. கேள்வி எழுப்புவதும் சந்தேகங்களைத் தெளிவுபடுத்துவதும் பத்திரிகை யாளர்களின் வேலை. அதைக்கூட இன்றைய வீரர்களால் புரிந்து கொள்ள முடியவில்லை. அதன் உச்சம்தான் போக்லேவின் திடீர் நீக்கம்' என்கிறார்கள் கிரிக்கெட் விமர்சகர்கள்!

p22c.jpg

dot1.jpg  `நான் சினிமாவுக்கு வந்த புதிதில் தற்கொலைக்கு முயன்றதாக ஒருவர் சொன்னதை ஊடகங்கள் அப்படியே வெளியிட்டிருப்பது ஆச்சர்யமாக இருக்கிறது. என்னைப் பற்றி சொன்னவர், அதற்கு முன் ஜெயிலில் இருந்தவர். அவர் சொல்வது எப்படி உண்மையாக இருக்க முடியும். நான் மிகவும் தைரியமான பெண். நான் எந்தக் கட்டத்திலும் உடைந்துபோனது இல்லை' என முன்னாள் மேனேஜரின் குற்றச்சாட்டுகளுக்கு பதிலடி கொடுத்திருக்கிறார் பிரியங்கா சோப்ரா.

p22d.jpg

dot1.jpg  `லிபியாவில் ஏற்பட்ட உள்நாட்டுப் போரைத் தடுக்கத் தவறியதுதான், அமெரிக்க அதிபராக இருந்து தான் செய்த மிகப் பெரிய தவறு' என மனம் திறந்திருக்கிறார் பராக் ஒபாமா. `2011-ம் ஆண்டு லிபியாவின் அதிபரான கடாஃபி கலவரக்காரர்களால் கொலை செய்யப்பட்ட பிறகு, அங்கு ஏற்பட்ட மோசமான புரட்சியைக் கட்டுப்படுத்தத் தவறிவிட்டேன். லிபியாவில் பிரிவினைவாதிகள் தோன்றி கலவரங்கள் ஏற்படவும், ஐ.எஸ் தீவிரவாதிகள் அங்கு ஆதிக்கம் செலுத்தவும் இடம்கொடுத்துவிட்டேன். ஆயிரக்கணக்கான பொதுமக்கள் அந்த நாட்டைவிட்டு வெளியேறி, ஐரோப்பிய நாடுகளில் அகதிகளாகக் குடியேறும் சூழல் ஏற்பட்டுவிட்டது' என வருத்தப்பட்டிருக்கிறார் ஒபாமா.

p22e.jpg

dot1.jpg  ஃபேஸ்புக்கில் மிகக் குறுகிய நேரத்தில், அதிக லைக்ஸ் வாங்கிய புகைப்படம் என்ற சாதனை படைத்திருக்கிறது ஃபஹத் பாசில் - நஸ்ரியா போட்டோ. `மகேஷின்டே பிரதிகாரம்' ஹிட்டான மகிழ்ச்சியை, மனைவி நஸ்ரியாவுடன் கொண்டாட லண்டன் பறந்தார் ஃபஹத். `லண்டன்' என்கிற கமென்ட்டோடு ஃபஹத்துடனான போட்டோவை நஸ்ரியா ஃபேஸ்புக்கில் போட, 12 மணி நேரத்துக்குள் 2.75 லட்சம் லைக்ஸைத் தொட்டுவிட்டது இந்த போட்டோ!

p22f.jpg

p22g.jpg

dot1.jpg  லேஸ் விளம்பரத்தில் ரன்பீரை ரகளைசெய்யும் பாட்டியைக் கவனித்திருக்கிறீர்களா? பாட்டியின் பெயர் சுப்புலட்சுமி. விளம்பரம், திரைப்படம் என பாட்டி படுபிஸி. `ரன்பீர், ரொம்ப ஸ்வீட் பாய்; ரொம்ப மரியாதையா பேசுவார். `உங்களோடு ஒரு செல்ஃபி எடுத்துக்கவா?'னு கேட்டேன். `ஏன், ஒண்ணு மட்டும்தானா?'னு கேட்டு நிறைய போட்டோ எடுத்துக் கொடுத்தார்' எனச் சிரிக்கும் பாட்டிக்கு வயது 81. லட்சுமி ராமகிருஷ்ணன் இயக்கும் `அம்மணி' படத்தின் ஹீரோயின் இந்தப் பாட்டிதான்!

vikatan

  • தொடங்கியவர்
ரோபோ பணிப்பெண்கள் சகிதம் ஷொப்பிங் சென்ற வர்த்தகர்
 

சீனாவைச் சேர்ந்த வர்த்­தகர் ஒருவர், ஷொப்பிங் சென்­ற­போது தனது பணிப்­பெண்­களைப் போல் ரோபோக்­களை தன்­னுடன் அழைத்துச் சென்­றுள்ளார். 

 

16165robo-3.jpg

 

குவாங்ஸோ நக­ரி­லுள்ள வர்த்­தகத் தொகு­தி­யொன்றில் கடந்த வாரம் இவர் தனது ரோபோ ஊழி­யர்­க­ளுடன் நடந்துசென்றபோது பிடிக்­கப்­பட்ட படங்கள் இணை­யத்தில் பரவி வரு­கின்­றன.

 

16165robo.jpg1.jpg

 

பெண்­களைப் போல் ஆடை­யலங்காரம் செய்­விக்­கப்­பட்ட 8 ரோபோக்கள் தமது கைகளில் பொருட்­களை ஏந்­தியவாறு மேற்­படி வர்த்­த­க­ருடன் சென்­றமை குறிப்­பி­டத்­தக்­கது.

 

16165robo-2.jpg

 

இந்த வர்த்­த­கரின் பெயர் வெளி­யி­டப்­ப­ட­வில்லை. சீனாவில் மனி­த­ ரோ­போக்­களை பயன்படுத்­து­வது அதி­க­ரித்து வருகிறது. ரோபோக்கள் உணவு பரிமாறும் உணவு விடு­தி­களும் அங்கு திறக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

 
metronews.lk/

Edited by நவீனன்

  • தொடங்கியவர்

பச்சிளம் குழந்தைகள்... `பளீர்' புகைப்படங்கள்...

வித்தியாசமான களத்தில் வியக்கவைக்கும் தமிழ்த் தம்பதி!போட்டோகிராஃபி

 

p43a.jpg

டலைக் குறுக்கிப் படுத்திருக்கும் அழகு, கண்கள் மூடிக்கிடக்கும் அமைதி, பூமி தொடாத பாதம் என பச்சிளம் குழந்தைகளைப் படம் எடுப்பதில் (நியூ பார்ன் போட்டோகிராஃபி), ‘நம்பர் ஒன்’ இடத்தில் இருக்கிறது தமிழ்த் தம்பதி... அமெரிக்காவின் சிகாகோவில்! சமீபத்தில் சென்னைக்கு வந்திருந்தவர்களைச் சந்தித்தபோது, உற்சாகம் ஸ்ரீனிவாசன், ஜனனி பேச்சில்!

7 வயதுப் பையனுக்கு அம்மா என்று நம்பமுடியாத அளவுக்கு தோற்றத்தில் இளமை. பேச்சிலும் வசீகரிக்கிறார் ஜனனி.

‘‘நானும் ஸ்ரீனியும் ஸ்கூல் படிக்கும்போதிலிருந்து ஃப்ரெண்ட்ஸ். ஃபிஸியோதெரபி படிச்சுட்டு, ஹெல்த் அட்மினிஸ்ட்ரேஷன்ல மாஸ்டர் டிகிரி பண்றதுக்காக யு.எஸ் போனேன். அதை முடிச்சுட்டு, சிகாகோவில் ஹாஸ்பிடல் அட்மினிஸ்ட்ரேஷனில் வேலை பார்த்தேன். ஸ்ரீனி பி.காம் படிச்சிட்டு, மேல்படிப்புக்காக யு.எஸ் வந்தார்’’ என்று சொல்லிப் புன்முறுவல் பூக்கும் ஜனனிக்கும், ஸ்ரீனிவாசனுக்கும் 2005-ல் திருமணம் முடிந்திருக்கிறது.

p43c.jpg

பின் கதையைத் தொடங்கிய ஸ்ரீனிவாசன், ‘‘அமெரிக்காவிலேயே எனக்கு வேலையும் கிடைச்சப்போதான், என் நண்பரின் கேமரா லென்ஸை ஒருமுறை எதேச்சையா பார்த்தேன். என் வீட்டு பால்கனியிலிருந்து தூரத்தில் இருந்த கட்டடங்களை லென்ஸ் மூலமா பார்த்தப்போ, துல்லியத்தில் பிரமிச்சுப் போனேன். கேமரா மேல காதல் வந்தது. அந்தச் சமயத்தில்தான் டிஜிட்டல் கேமரா அறிமுகமாகி இருந்தது. அந்த வருஷ பிறந்தநாளுக்கு ஜனனி எனக்கு கேமரா வாங்கிக் கொடுத்தாங்க. அதுதான் என் தொழிலுக்கு அஸ்திவாரம்’’ என்று காதலுடன் மனைவியைப் பார்த்தார்.

‘‘போட்டோகிராஃபியில அவரோட ஆர்வம் தீவிரமாயிட்டே இருக்க, ஒரு கட்டத்தில் வேலையை விட்டுட்டார். வீட்டின் முன் கூடத்தையே ஸ்டுடியோவா மாத்தி, வீட்டின் நம்பர் 13 என்பதால் ‘ஸ்டுடியோ 13’-ஐ ஆரம்பிச்சு, முழுநேர போட்டோகிராஃபர் ஆகிட்டார். ஆர்டர்கள் நிறைய வர ஆரம்பிச்சதும், தனி ஸ்டுடியோ போட்டாச்சு. அவருக்கு வேலைகள்ல உதவுறதுக்காக நானும் என் வேலையை ரிசைன் பண்ணிட்டேன்’’

- முன்நெற்றியில் விழும் கூந்தல் கற்றையை ஒதுக்கியபடி கூறுகிறார் ஜனனி.

p43b.jpg

‘‘மாடல்ஸ் வெச்சுதான் நான் போட்டோ எடுத்துட்டு இருந்தேன். அப்போ என்னுடைய ஒரு மாடல் கர்ப்பமா இருந்தாங்க. ‘எங்களை எல்லாம் நீங்க போட்டோ எடுக்க மாட்டீங்க’னு கிண்டலா சொன்னாங்க. தாய்மைங்கிறது அழகான அனுபவம், மகிழ்ச்சியான உணர்வு. அதை ஏன் கலர்ஃபுல்லா எடுக்கக் கூடாதுன்னு தோணுச்சு. அந்த மாடலையே ‘ப்ரெக்னன்ஸி போட்டோஸ்’ எடுத்தேன்.

தொடர்ந்து, ரெண்டு மூணு ப்ரெக்னென்ஸி போட்டோ ஷூட் பண்ணினோம். வைப்ரன்ட் கலர்களில் டிரெஸ், வித்தியாசமான லொகேஷன், லைட்டிங்னு வெச்சு எடுத்தோம். அட்டகாசமா வர, எல்லோரும் அதே மாதிரி கேட்க ஆரம்பிச்சாங்க. அடுத்து அந்த மாடல் பொண்ணுக்கு குழந்தை பிறந்தப்போ, அதையும் நான்தான் போட்டோ எடுத்தேன். அந்த போட்டோக்களைப் பார்த்துட்டுத்தான் அடுத்தடுத்து குழந்தைகளை போட்டோ எடுக்கச் சொல்லி ஆர்டர் வர ஆரம்பிச்சது. இப்போ மெடர்னிடி, நியூ பார்ன், சில்ட்ரன் போட்டோஸ்னா அமெரிக்காவில் ‘கூப்பிடு  - ஜனா’தான்!’’ - அட்டகாசமாகச் சிரிக்கிறார் னிவாசன்.

p43d.jpg

கணவர் போட்டோ எடுக்க, ஷூட்டுக்கு வரும் பெற்றோர்களுக்கு கவுன்சலிங் செய்து ‘கம்ஃபர்ட்’ ஆக்குவது ஜனனியின் வேலை. இவர்கள் புகைப்படம் எடுப்பது எல்லாமே பிறந்து 2 வாரங்களுக்குள் இருக்கும் குழந்தைகள். எனவே, அதைத் தூக்குவது, ஆன்டிக் ஆன பொருட்களின் மீது சௌகரியமாக, குழந்தைக்கு உறுத்தாமல் படுக்கவைப்பது எல்லாமே ஜனனிதான்.

‘‘எப்போதுமே குழந்தைகள் ஆழ்ந்து தூங்கும்போதுதான் போட்டோ எடுப்போம். அந்த போட்டோஸ் பார்த்தா நமக்கே மனசு அமைதியாகும். அவ்வளவு பரிசுத்தமான முகங்கள், புன்னகைகள்! இப்போ நாங்க ரொம்ப பாப்புலர் ஆயிட்டதால, இந்தியன் கஸ்டமர்களும் வர ஆரம்பிச்சிருக்காங்க.

p43e.jpg

ஒரு பெண் கர்ப்பமானா, எப்படி வளைகாப்பு, சீமந்தம், குழந்தைக்கு புண்ணியாசனம், பேர் வைக்கிறது இதெல்லாம் சடங்குகளோ, அது மாதிரி இப்போ மேல்நாட்டில் ‘நியூ பார்ன் போட்டோஸ்’ ஒரு சடங்காயிடுச்சு. 7-வது மாதத்திலேயே அப்பாயின்ட்மென்ட் புக் பண்ணிடறாங்க. சிகாகோவில் போலீஸ் அதிகாரிகள், கடற்படை அதிகாரிகள் போன்ற மேல்தட்டு மக்களின் குடும்ப விழாக்கள், குழந்தைகள் படங்கள் எல்லாவற்றுக்குமே எங்களோட ‘ஸ்டூடியோ 13’தான். காரணம், நாங்க தம்பதியா இந்த வேலையைச் செய்றதுதான்னு நினைக்கிறோம்’’ என்று சந்தோஷமாகச் சொல்கிறார் ஜனனி. இவர்களின் மகன் வியாஸை விதம் விதமாகப் படம் எடுத்து, இவர்கள் வெப்சைட்டில் (photosbysri.com) பதிவிட்டிருப்பதைப் பார்த்து வரும் கஸ்டமர்களே அநேகம்.

p43f.jpg

‘‘நிறைய கைக்குழந்தைகளைப் பார்ப்பதால, குழந்தையின் கண்கள், சருமம் மற்றும் உடலைப் பார்த்தே சில குழந்தைகளுக்கு மஞ்சள்காமாலை, ஆட்டிஸம்னு அவங்களுக்கு இருக்கிற அப்நார்மாலிட்டீஸை கண்டுபிடிச்சு, பெற்றோர்கள்கிட்ட சொல்லுவோம். அப்படி தங்களோட பிள்ளையின் சிகிச்சை முடிந்து வந்து நன்றி சொல்லிட்டுப் போகும் பெற்றோர்கள் பலர்’’ எனும்போது, ஜனனியின் முகத்தில் தொழில் தாண்டிய ஒரு நிறைவு.

தம்பதிக்கு சபாஷ்!

vikatan

  • தொடங்கியவர்

உங்களுக்கு எவ்வளவு தூக்கம் தேவை?

  • தொடங்கியவர்
1970 : முதலாவது பூமிநாள் அனுஷ்டிக்கப்பட்டது
 

வரலாற்றில் இன்று....

ஏல்ரல் - 22

 

709varalu.jpg1500 : பிரேஸிலில் தரையிறங்கிய முதலாவது ஐரோப்பியரானார் போர்த்துக்கலைச் சேர்ந்த பேதுரோ கப்ரால்.

 

1889 : அமெரிக்காவில் நடுப் பகலில் பல்லாயிரக்கணக்கானோர் காணிகளைக் கைப்பற்றுவதற்கான ஓட்டத்தில் பங்குபற்றினர். சில மணி நேரங்களில் ஐக்கிய அமெரிக்காவில் ஓக்லஹோமா நகரம் மற்றும் கத்ரி ஆகியவற்றில் சுமார் 10,000 பேர் அங்கிருந்த வெற்றுக் காணிகளைக் கைப்பற்றிக் குடியேறினர்.

 

1898 : அமெரிக்க கடற்படையினர் கியூபாவின் துறைமுகங்களை முற்றுகையிட்டு ஸ்பானிய சரக்குக் கப்பல் ஒன்றைக் கைப்பற்றினர்.

 

1906 : நவீன ஒலிம்பிக் போட்டிகள் ஆரம்பமானதன் 10 ஆவது ஆண்டுநிறைவை முன்னிட்டு ஏதென்ஸ் நகரில் விசேட ஒலிம்பிக் விளையாட்டு விழா ஆரம்பமானது. தற்போது அப்போட்டி ஒலிம்பிக் போட்டியாக அங்கீகரிக்கப் படுவதில்லை. 

 

1915 : முதலாம் உலகப் போர்: பெல்ஜியத்தில் ஈப்ரஸ் சமரில் ஜேர்மனி முதன் முதலாக குளோரின் வாயுவை இரசாயன ஆயுதமாகப் பாவித்தது.

 

1944 : இரண்டாம் உலகப் போர்: நேச நாடுகள் நியூ கினியின் ஒல்லாந்தியா என்ற இடத்தில் தரையிறங்கினர்.

 

1945 : குரோஷியாவில் ஜசெனோவாச் வதை முகாமில் கைதிகள் சிறையுடைப்பில் ஈடுபட்டபோது 520 கைதிகள் கொல்லப்பட்டனர். 80 பேர் தப்பியோடினர்.

 

1945 : இரண்டாம் உலகப் போர்: சோவியத் படைகள் பேர்லினில் எபெர்ஸ்வால்ட் நகரை இலகுவாகக் கைப்பற்றியதைக் கேள்வியுற்ற ஹிட்லர் தனது தோல்வியை ஒப்புக் கொண்டார்.

 

1969 : பிரட்டனைச் சேர்ந்த படகோட்ட வீரரானான சேர் ரொபின் நொக்ஸ் ஜோன்ஸன்,  படகில் எங்கும் நிறுத்தாமல் தனியாக உலகை சுற்றிவந்து சாதனை படைத்தார். 

 

1970 : முதலாவது “பூமி நாள்” அனுஷ்டிக்கப்பட்டது.

 

1983 : ஹிட்லரின் நாட்குறிப்புகள் கிழக்கு ஜேர்மனியில் கண்டுபிடிக்கப்பட்டதாக டேர் ஸ்டேர்ன் என்ற ஜெர்மனிய இதழ் அறிவித்தது.

 

1992 : மெக்ஸிகோவில் இடம்பெற்ற குண்டுவெடிப்பில் 206 பேர் கொல்லப்பட்டு 500 பேர் வரையில் படுகாயமுற்றனர்.

 

1997 : அல்ஜீரியாவில் கெமிஸ்ரி என்ற இடத்தில் 93 கிராம மக்கள் படுகொலை செய்யப்பட்டனர்.

 

1997 : பெருவின் தலைநகர் லீமாவில் ஜப்பானிய தூதுவர் இல்லத்தில் 126 நாட்களாகப் பணயக் கைதிகளாகப் பிடித்து வைக்கப்பட்டிருந்த 71 பேர் அரச படைகளின் தாக்குதலின் பின்னர் விடுவிக்கப்பட்டனர்.

 

2000 : ஆனையிறவு படைத்தளம் தமிழீழ விடுதலைப்புலிகளிடம் வீழ்ச்சியடைந்தது. 2009 ஜனவரியில் ஆனையிறவை அரச படையினர் மீண்டும் கைப்பற்றினர்.

 

2004 : வட கொரியாவில் இரண்டு ரயில்கள் மோதியதில் 150 பேர் கொல்லப்பட்டனர்.

 

2005 : உலக யுத்தகாலத்தில் ஜப்பானின் செயற்பாடுகளுக்காக அந்நாட்டுப் பிரதமர் ஜூனிச்சிரோ கொய்சுமி மன்னிப்பு கோரினார்.

 

2006 : நேபாளத்தில் மன்னருக்கு எதிராக கலகத்தில் ஈடுபட்டவர்கள் மீது பொலிஸார் சுட்டதில் 243 பேர் காயமுற்றனர்.

 

2006 : இந்தியாவின் ஒரிசா மாநிலத்தில் உள்ள ஆய்வு மையத்தில் பிரமோஸ் ஏவுகணை வெற்றிகரமாகச் சோதிக்கப்பட்டது.

 

2013 : ரஷ்யாவின் பெல்கோரொட் நகரில் இடம்பெற்ற துப்பாக்கிப் பிரயோக சம்பவத்தல் 6 பேர் உயிரிழந்தனர்.

 

2014 : கொங்கோவில்  ரயில் விபத்தொன்றில் 60 பேர் பலியானதுடன், மேலும் 80 பேர் காயமடைந்தனர். 

.metronews.lk/

Edited by நவீனன்

  • தொடங்கியவர்

13015452_563580507141802_765853985298399

இன்று உலக பூமி (புவி) நாள் - Earth Day 2016

புவி நாள் (Earth Day) என்பது ஆண்டுதோறும் ஏப்ரல் 22ம் நாளன்று புவியின் சுற்றுச் சூழலின் முக்கியத்துவத்தை வலியுறுத்தி, அச்சூழல் மாசடைவதைத் தடுக்கும் நோக்கோடு அனைத்து நாடுகளிலும் 1970ஆம் ஆண்டு முதல் கடைப்பிடிக்கப்பட்டுவரும் ஒரு சிறப்பு நாளாகும்.

1969ஆம் ஆண்டு ஐக்கிய அமெரிக்காவின் சான் பிரான்சிஸ்கோ நகரில் யுனெஸ்கோ மாநாடு ஒன்று நிகழ்ந்தது. அக்கூட்டத்தில் கலந்துகொண்டவர்களுள் ஒருவர் ஜான் மெக்கானெல் (John McConnell).
அவர் உலக அமைதிக்காகக் குரல்கொடுத்த ஒரு மாமனிதர். மனிதரும் பிற உயிரினங்களும் வாழ்கின்ற பூமியின் அழகைச் சிறப்பிக்கவும், பூமியின் இயற்கைச் சூழலைக் குலைத்து மாசுபடுத்தாமல் காக்கவும் மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்துவது தேவை என்று அவர் வலியுறுத்தினார். அதோடு, ஆண்டுதோறும் புவி நாள் என்றொரு நாளைக் கொண்டாடுவது பொருத்தம் என்றும் மெக்கானெல் கருத்துத் தெரிவித்தார்.
இவ்வாறு புவி நாள் என்னும் பெயரும் கருத்தும் எழுந்ததாகக் கருதப்படுகிறது.

அதே சமயத்தில், ஐக்கிய அமெரிக்காவில் சுற்றுச்சூழலியல் நிபுணரும் மேலவை உறுப்பினருமான கேலார்ட் நெல்சன் என்பவர் சுற்றுச்சூழல் பற்றிய அறிவைப் பரப்பத் தகுந்த நாளாக 1970 ஆம் ஆண்டு ஏப்ரல் 22 நடத்த அழைப்பு விடுத்தார். இந்த நாளின்போது புவியின் வடகோளப் பகுதி வசந்த காலமாகவும், தென்கோளப் பகுதி இலையுதிர் காலமாகவும் காணப்படுகிறது.

அவரது அழைப்பை ஏற்று 20 மில்லியன் மக்கள் இந்நிகழ்வில் பங்கெடுத்தார்கள். அன்றிலிருந்து ஆண்டுதோறும் இந்நாள் 175 நாடுகளில் (புவி [பூமி] நாளாகக் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது

  • தொடங்கியவர்

13082558_1029879197060774_91759319453056

இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவர், சர்வதேசக் கிரிக்கெட் பேரவையில், தற்போதைய மிகச் சிறந்த போட்டித் தீர்ப்பாளராக விளங்கும் ரஞ்சன் மடுகல்லேயின் பிறந்தநாள்.
Happy Birthday Ranjan Senerath Madugalle

  • தொடங்கியவர்

ஏப்ரல் 22: லெனின் பிறந்த தின சிறப்பு பகிர்வு.

 

13006727_1120649007993888_36956131664001

 

லெனின்... காரல் மார்க்ஸ் மற்றும் ஏங்கல்ஸ் இருவரும் இணைந்து மூலதனம் நூலை எழுதி, உலகத்தொழிலாளர்கள் கிளர்ந்து எழுந்து புரட்சி செய்து ஆட்சியை கைப்பற்றுவார்கள் என்று சொன்னதை மெய்ப்பித்தது இவர்தான்.

இவர் காலத்தில் ரஷ்யாவை ஜார் மன்னர்கள் ஆண்டு வந்தார்கள். அவர்கள் மக்களின் நலனில் அக்கறை கொள்ளாமல் ஆடம்பரங்களில் மூழ்கினார்கள். எளிய தொழிலாளர்கள் பல இன்னல்களுக்கு உள்ளானார்கள். கோரிக்கைகளை அளிக்க உள்ளே அனுமதிக்கப்பட்ட அப்பாவி மக்களை மிகவும் சாவகாசமாக சுட்டுகொன்ற கொடுமைகள் எல்லாம் நடந்தன. இதை எதிர்த்து பல மக்கள் போராடினார்கள். மிகசிறிய நாடான ஜப்பானிடம் போரில் பரிதாபமாக தோற்கவும் செய்தது ரஷ்யா.

லெனின் அப்பா ரஷ்யாவில் கல்வி அதிகாரியாக இருந்தார். அவரிடம் இருந்து தீரத்தை சகோதரர்கள் கற்று இருந்தார்கள். அண்ணன் அரசரை கொல்லதிட்டமிட்டதாக தூக்கில் போடப்பட்டார். அன்றைக்கு இறுதி தேர்வு மனதை திடப்படுத்திக்கொண்டு தேர்வெழுதினார் லெனின். மாவட்ட அளவில் முதலிடம் பெற்றார். சட்டம் பயில முயன்றார். கல்லூரி இடம் தர மறுக்க நான்கு வருடம் படிக்க வேண்டிய சட்டத்தை ஒன்றரை வருடத்தில் முடித்தார்.

கார்ல் மார்க்ஸ், ஏங்கல்ஸ் வகுத்தளித்த மூலதனம் நூலை படித்தார். தொழிலாளர்களை ஊக்குவித்தார் லெனின். அதிக வேலை நேரத்தை எதிர்த்து போராடினார்கள். அவர்களை பின்னிருந்து இயக்குவது லெனின் எனத் தெரிந்தது. கொடிய சைபீரியாவில் சிறை வைக்கப்பட்டார். 1905-ல் தொழிலாளர் புரட்சி நடத்த முயன்று தோற்றுப்போனார். பின் இங்கிலாந்து, சுவிட்சர்லாந்து, ஜெர்மனி முதலிய நாடுகளில் தலைமறைவு வாழ்க்கை வாழ்ந்தார். வெளியே இருந்து தன் எழுத்தின் மூலம் உத்வேகம் ஊட்டியவண்ணம் இருந்தார். முதல் உலகப்போரில் கலந்துகொண்ட ரஷ்யாவின் மக்கள் பசியால் வாடினார்கள்.

ராணுவ வீரர்கள் ஆயுதங்கள் இல்லாமலும், உணவில்லாமலும் நொந்து போனார்கள். ஜாரின் ஆட்சிக்கு எதிராக கிளர்ந்தெழுந்து பிப்ரவரியில் ஆட்சியை மக்கள் பிடித்தார்கள்; அதை நாடாளுமன்ற குழு ஒன்று நிர்வகித்தது. பின் லெனின் நாடு திரும்பினார். புகழ்பெற்ற அக்டோபர் புரட்சி நடந்து லெனினிடம் ஆட்சி ஒப்படைக்கப்பட்டது.

ஜெர்மனியுடன் அமைதி ஒப்பந்தம் செய்துகொண்டு போரை நிறுத்தினார் தொழிலாளர்கள், விவசாயிகள் ஆட்சி மலர்ந்தது. தேசத்தின் வளங்களை ஒரு சிலர் மட்டும் அனுபவிப்பது முடிவுக்கு வந்தது; அனைத்தும் அரசாங்கத்தின் கட்டுபாட்டுக்கு வந்தது. வயது வந்த அனைவருக்கும் திறமைக் கேற்ற வேலையும், வேலைக்கேற்ப ஊதியமும் வழங்கப்பட்டது.

ஜார்ஜியா மாகாணத்தில் ஒரே ஒரு இளைஞன் மருத்துவம் படிப்பதற்காக எல்லா நூல்களையும் அவனின் தாய்மொழியில் மொழிபெயர்க்க சொன்ன பெருமனது லெனினுக்கு சொந்தமானது.

அனைவருக்கும் இலவச கட்டாயக் கல்வி அளிக்கப்பட்டது. நிலங்கள் பிரித்து எளிய மக்களுக்கு தரப்பட்டன .லெனின் எந்த அளவுக்கு விமர்சனத்தை மதித்தார் என்பதற்கு ஒரு எடுத்துகாட்டு விளாடிமர் மாயகொவஸ்கி ஆட்சியில் அதிகாரிகள் கூட்டம் கூட்டம் எனச்சொல்லி மக்கள் நலன் பற்றி கவலைப்படாமல் இருப்பதாக கவிதை வடித்தார்; அதை வெளியிட பயந்தார்கள்.

லெனின் கேள்விப்பட்டு அவரை அழைத்து ஒரு கவிஞன் இதைத்தான் பாடவேண்டும்; என்னை பற்றி இனிமேல் புகழ்ந்து எழுத வேண்டாம் என்றார். ஓயாத உழைப்பால் உடல்நலம் பாதிக்கப்பட்டது; பக்கவாதம் வந்தது; வலது கை பாதிக்கப்பட இடது கையால் எழுத கற்றுக்கொண்டு தன் கருத்துக்களை அந்த நிலையிலும் சொன்னார். பேசவே முடியாத சூழலிலும் எளிய மக்களுக்காக யோசித்த அவர் பிறந்த தினம் இன்று

  • தொடங்கியவர்

13012782_1029883910393636_76932223579550

உலகின் சிறந்த கால்பந்து வீரர்களில் ஒருவரான பிரேசில் அணியின் காகாவின் பிறந்தநாள் இன்று
Happy Birthday Ricardo Kakà

  • தொடங்கியவர்

மதச் சின்னங்களில் மறைந்திருக்கும் செய்தி இதுதான்!

ந்து, இஸ்லாம், கிறிஸ்தவம் என உலகம் முழுவதும் எத்தனையோ மதங்கள் உள்ளன. எல்லா மதங்களும் அன்பு, அமைதியையே போதிக்கின்றன. அவற்றை உருவாக்கிய மத குருமார்கள், ஞானிகள் வலியுறுத்தியதும் அதையே.

கருத்துகளில் மட்டும் அல்ல, தங்கள் மதங்களுக்காக அவர்கள் உருவாக்கிய சின்னங்கள், உருவகங்களிலும் பல ஒற்றுமைகள் இருப்பது ஆச்சர்யமானது. உதாரணமாக, நட்சத்திரம், பிறை நிலா போன்றவற்றை பல மதங்களிலிலும் பார்க்க முடியும். ஒவ்வொரு மதமும் தாங்கள் உருவாக்கிய சின்னங்களில் அற்புதமான தத்துவங்களையும் செய்திகளையும் பொதித்துவைத்திருக்கின்றன.

கீழே உள்ள இந்தச் சின்னங்கள், எண்களை நாம் பல இடங்களில் பார்த்திருப்போம். இவை சொல்ல வரும் செய்தி என்ன? அந்தச் சின்னங்கள் மீது கர்சரை கொண்டு செல்லுங்கள். செய்திகளைத் தெரிந்துகொள்ளுங்கள்....

 

  • தொடங்கியவர்

ஆயிரம் ஆண்டுகள் பழமை வாய்ந்த ஒலிம்பிக் சுடரேற்றல்: சுவாரஸ்யத் தகவல்கள்

 


 
 

ஆயிரம் ஆண்டுகள் பழமை வாய்ந்த ஒலிம்பிக் சுடரேற்றல்: சுவாரஸ்யத் தகவல்கள்

உலகின் மிகப்பெரும் விளையாட்டுத் திருவிழா எனக் கருதப்படும் ஒலிம்பிக் போட்டியின் மிக முக்கியமானதோர் அம்சம், போட்டிக்காலம் முழுவதும் எரியும் ஒலிம்பிக் சுடர்.

அந்தச் சுடர் ஒவ்வொரு ஒலிம்பிக் போட்டியின் போதும் பழமையான பாரம்பரிய முறையில் கிரேக்கத்தில் ஏற்றப்படும்.

ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் பண்டைக்கால ஒலிம்பிக் போட்டிகளின்போது அச்சுடர் எவ்வாறு ஏற்றப்பட்டதோ அதே முறையே இப்போதும் பின்பற்றப்படுகிறது.

பாரம்பரிய முறையில் இந்தச் சுடரை ஏற்றும் தற்போதைய நடைமுறை 80 ஆண்டுகளுக்கு முன்னர் பெர்லின் ஒலிம்பிக் போட்டிகளின்போது மீண்டும் உயிர்ப்பிக்கப்பட்டது.

சூரிய ஒளியைக் குழியாடியின் மையத்தில் விழும்படிச் செய்து அதனால் உருவாகும் வெப்பத்தைக்கொண்டே ஒலிம்பிக் சுடர் ஏற்றப்படுகிறது.

ஒலிம்பிக் போட்டி எந்த நாட்டில் நடைபெற்றாலும், கிரேக்கத்தின் தென் பகுதி நகரொன்றில் பாரம்பரிய முறையில், நடனம், நாடகம் போன்ற கலையம்சங்களை நடத்தி ஒவ்வொரு முறையும் இச்சுடர் ஏற்றப்படுகிறது.

இந்தச் சுடர் ஏற்றப்படுவதற்கு முன்னர், ஒளிக்கான கிரேக்கக் கடவுள் அப்பலோவிடம் பிரார்த்தனை செய்த பிறகு, நீண்ட உடையணிந்த நடிகை ஒருவர், மிகவும் உளப்பூர்வமாக நிலத்தில் மண்டியிட்டு, குழியாடி ஒன்றில் விழும் சூரியக் கதிர்கள் மூலம் ஏற்படும் வெப்பத்தை, ஒலிம்பிக் சுடரை ஏந்திவரும் விளக்கின் மீது பாய்ச்சி அந்த ஜோதியை ஏற்றுவார்.

பின்னர் அது பாரம்பரிய இசை மற்றும் நடனங்களுடன் உலகெங்கும் பயணமாகக்கூடிய முதல் ஒலிம்பிக் பந்தத்தில் ஏற்றப்படும்.

அந்த முறையில் ஏற்றப்படும் ஒலிம்பிக் சுடரே பல நாடுகளில் பயணித்து, இறுதியாகப் போட்டி தொடங்கும் நாளன்று, புகழ்பெற்ற உள்நாட்டு விளையாட்டு வீரர்களால், அரங்கைச்சுற்றி வலமாக எடுத்துவரப்பட்டு, மிகவும் பிரபலமான வீரர் ஒருவரிடம் கையளிக்கப்படும்.

அவர் அந்த அரங்கில் அமைக்கப்பட்டிருக்கும் கொப்பரை ஒன்றுக்கு அச்சுடரை எடுத்துச் சென்று அங்கு போட்டிக்காலம் முழுவதும் எரியும் ஜோதியை ஏற்றிவைப்பார்.

எனினும், ஒவ்வொரு ஒலிம்பிக்ஸிலும் அந்த ஒலிம்பிக் ஜோதி எவ்வாறு ஏற்றப்படும் என்பது கடைசிவரை இரகசியமாகவே வைக்கப்பட்டிருக்கும்.

இம்முறை ரியோ டி ஜெனீரோவிலுள்ள மாரக்கானா விளையாட்டு அரங்கில் ஒலிம்பிக் ஜோதி ஏற்றிவைக்கப்படும்.

150704093331_olympic_torch_640x360_allsports_nocredit

160421123259-gettyimages-522816584-exlarge-169

160421123228-gettyimages-522816564-exlarge-169

160421123444-gettyimages-522816642-exlarge-169

160421111735_olympic_torch_624x351_gettyimages

160421114149_olympic_torch_640x360_reuters

160421125608-olympic-torch-eleftherios-petrounias-exlarge-169

BBC

  • தொடங்கியவர்

லண்டனில் தன்னை தானே பார்த்து வியந்த மோடி (வைரல் வீடியோ)

ModiMadameTussauds.jpg

 

லண்டன் மேடம் டுசாட்ஸ் அருங்காட்சியகத்தில் வைக்கப்பட்ட தனது மெழுகுச்சிலையை இந்திய பிரதமர் நரேந்திர மோடி பார்வையிட்டுள்ளார்.

லண்டன் செல்லும் சுற்றுலா பயணிகளை அதிகம் ஈர்க்கும் இடங்களில் ஒன்றாக அங்குள்ள மேடம் டுசாட்ஸ் அருங்காட்சியகம் விளங்குகிறது. இங்கு தான் உலக தலைவர்கள் மற்றும் பிரபலங்களின் மெழுகு சிலைகள் இடம்பெற்றிருக்கின்றன. இந்த வரிசையில் இந்திய பிரதமர் மோடியும் இடம்பெற்றுள்ளார்.

மோடியின் மெழுகு சிலை தயாரிப்பு பணி நிறைவு பெற்றதையடுத்து, இந்த சிலை ஏப்ரல் 28ம் தேதி பொதுமக்கள் பார்வைக்காக திறக்கப்பட உள்ளது. இதற்கான திறப்பு விழாவில் மோடி கலந்து கொள்ளவில்லை. இதனால் மெழுகுச்சிலை அவருக்கு காண்பிக்கப்பட்டது. தன்னைப் போலவே காட்சியளிக்கும் அந்த சிலையை பிரதமர் மோடி வியந்து பார்த்தார்.



அசாதாரண வேலை செய்துள்ளதாக மெழுகுச்சிலை தயாரித்த மேடம் டுசாட்ஸ் குழுவினரை பாராட்டிய பிரதமர் மோடி, கடவுள் பிரம்மா செய்யும் பணியை அந்த கலைஞர்கள் செய்து வருவதாக நெகிழ்ச்சி தெரிவித்துள்ளார்.

vikatan

  • தொடங்கியவர்

13072672_1029881180393909_68032318192714

இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் துடுப்பாட்ட நட்சத்திரம் ஜொனதன் ட்ரொட்டின் பிறந்தநாள்
Happy Birthday Jonathan Trott

  • தொடங்கியவர்

அந்த ஆமை என்ன பாவம் செய்தது? அதிர வைக்கும் அவலம்!

PlasticWaste600.jpg

ம் அன்றாட வாழ்வை எளிமையாக்க, சீக்கிரம் மக்கிப் போகாத, அதாவது நெகிழாத தன்மையுடைய பொருட்களைப் பயன்படுத்தினார்கள் நம் முன்னோர்கள். அவை அனைத்தும் இயற்கையான பொருட்களாகவே இருந்தன. முட்டை ஓடு, மிருக ரத்தத்தில் உள்ள புரதம், ரப்பர் மரத்தின் பால் மற்றும் மரப்பட்டையில் செய்த பொருட்கள், இறந்து போன மான், மாடு, ஆடுகளின் பதப்படுத்தப்பட்ட கொம்புகள், இவைதான் அவர்கள் பயன்படுத்தியது.

1800-களில் தொழிற்புரட்சி ஏற்பட்ட நேரத்தில்தான் முதன்முதலில் நெகிழாத தன்மையுடைய பொருட்களை உருவாக்கினார்கள். 1856ல் UKவைச் சேர்ந்த Alexander Parke's கண்டுபிடித்த Parkesine என்பதுதான் முதலில் கண்டுபிடிக்கப்பட்டது. நெகிழவே செய்யாததால் இதை நெகிழி (plastic) என்றே அழைத்தனர். இது, cellulose மற்றும் nitric acid சேர்த்து செய்யப்பட்டதாகும். பிறகு பலர் இந்த ஆராய்ச்சியில் ஈடுபட்டனர். 1900-களில் Bakelite கண்டுபிடிக்கப்பட்டது. முதல் உலகப் போருக்குப் பின்புதான் polythene, polystyrene (நம் உபையோகிக்கும் பைகள், கப்கள் அனைத்தும் இதில்தான் செய்யப்படுகின்றன) கண்டுபிடிக்கப்பட்டது.

ஆரம்பத்தில் வசதிக்காகக் கண்டுபிடிக்கப்பட்ட ஒன்று ஆடம்பரமாக மாறி, இன்று அத்தியாவசியமாக மாறிவிட்டது. இப்போது மனித இனம் மட்டுமல்லாமல், பிற இனங்களும் இதனால் பாதிக்கப்படுகின்றன. இதில் வேதனையளிக்கும் விஷயம், ஆறு அறிவுள்ள நாம் செய்யும் சிறு பெரிய தவறின் விளைவை நாம் மட்டுமே அனுபவிக்க வேண்டும். ஆனால், இப்போது எந்த தவறும் செய்யாத ஐந்து அறிவு ஜீவராசிகள் அனைத்தும் துன்பப்படுகின்றன. 'வினை விதைத்தவன் வினை அறுத்துதான் ஆக வேண்டும்' என்பது உலக நீதி. பிறருக்கு தீங்கு நினைக்காத மிருகங்களும் ஏன் பாதிக்கப்பட வேண்டும்? அனைத்து ஜீவராசிகளை விடவும் ஓர் அறிவு அதிகமாக நமக்கு கடவுள் கொடுக்கக் காரணம், பகுத்தறிவோடு செயல்படவே. ஆனால், நாம் விளைவைப் பற்றி சிறிதும்கூட யோசிக்காமல் செயல்களைச் செய்கிறோம்.

தெருவோரத்தில் யாரும் கண்டுகொள்ளாமல் சுற்றித் திரியும் மாடுகளை தினமும் நாம் பார்க்கிறோம். பார்க்கிறோம் என்பதைவிடக் கடக்கிறோம். என்றாவது, 'நாம் தூக்கி எறியும் குப்பையை அது உண்டால் என்னவாகும்?!8 என்று யாருமே யோசித்தது இல்லை; யோசிக்க நேரமும் இல்லை. தெருவில் மேயும் ஒரு காளையைக் கண்டு அது ஏன் வித்தியாசமாக உள்ளது என்று பார்த்தபோது கிடைத்த அதிர்ச்சி தகவல்: அது 20 கிலோ நெகிழியை உண்டிருக்கிறது!

அதை அறுவை சிகிச்சை மூலம் அகற்றும் வீடியோ காட்சி இங்கே...


மாடு நாம் வாழும் இடத்திலேயே இருப்பதால், நாம் தூக்கிவீசும் நெகிழிப் பையை உண்ணுகிறது. ஆனால், ஆமை எப்படி பாதிக்கப்பட முடியும்? Olive Ridley எனும் வகையைச் சார்ந்த இந்தக் கடல் ஆமையின் மூக்கினுள் 12 செ.மீ நீளமுள்ள plastic straw  சிக்கிவிட்டது. எப்படி? எங்கோ ஒரு மூலையில் நாம் குளிர்பானங்களை குடித்துவிட்டு போடும் straw மழையில் அடித்துச் செல்லப்பட்டு, கடலில் கலந்து பல வாயில்லா ஜீவராசிகளைக் காவு வாங்குகிறது. அதற்கு இந்த ஆமை ஒரு எடுத்துக்காட்டு. 'வாடிய பயிரைக் கண்டபோதெல்லாம் வாடினேன்' என்று கூறிய வள்ளலார் வாழ்ந்த மண்ணில் பிறந்த நம் மனங்கள் நம் அன்றாட வாழ்வின் கவலைகளால் வறண்டு போய்விட்டன. சற்றேனும் ஈரம் மிச்சம் இருந்தால் நெகிழியை நாம் இனி தொட மாட்டோம் என்பது திண்ணம். அந்த ஆமையின் கண்களில் வலி தெரிகிறது பாருங்கள்:


நிலம், நீர், ஆகாயம் என அனைத்து இடங்களில் உள்ள வாயில்லா ஜீவன்களையும் நாம் விட்டு வைக்கவில்லை. காற்றில் சிறகடித்து சுதந்திரமாய்ப் பறந்து கொண்டிருக்கும் பறவையையும் நம் நெகிழி கொன்றது. ஆம். நம் ஊர் எல்லையில் ஓர் குப்பைக் கிடங்கும், அதில் உணவிற்காக வட்டமிடும் பறவைகளும் இருக்கும். இது இந்தியாவில் மட்டுமல்ல உலகில் அனைத்து நாடுகளிலும் இருக்கும். அமெரிக்கவிற்கு அருகிலுள்ள ஒரு தீவில் எடுக்கப்பட்ட காட்சி. ஒரு பறவை நெகிழி உண்டால் இறூதியில் என்னவாகும் என்பது பற்றிய உருக்கமான பதிவு.

கடலில் வாழும் மிகப் பெரிய உயிரியான திமிங்கிலத்தையும் நாம் விட்டு வைக்கவில்லை. நீரில் நீந்திச் செல்கையில் நெகிழிப் பையை விழுங்கி மூச்சுத் திணறி உயிர்விட்ட அந்த நொடிகள்:

நாம் ஆராய்ந்து பார்த்தால், நெகிழிப் பொருட்களால் அதிகமாகப் பாதிக்கப்படும் கடல் வாழ் உயிரி கடல் ஆமையாகத்தான் இருக்கும். வெளிநாட்டுக் கலாச்சாரமான Forkஐ வைத்து சாப்பிடும் பழக்கத்தின் விளைவு இந்த வீடியோவில் தெரியும். ஒரு plastic fork நம் மூக்கில் குத்தி உள்ளே நின்றால் ஏற்படும் வலியைக் கற்பனை செய்துகொண்டு இந்த வீடியோவைப் பார்க்கவும்.

கடலில் மீன் பிடிக்கும் போது தூண்டில் கடலில் விழுந்தால் யாரும் கவலைப்படுவதில்லை. அப்படி தொலைந்து போன தூண்டில் கம்பி ஒன்று Green Sea Turtle எனும் வகையைச் சார்ந்த ஆமையின் வாயில் சிக்கியது. அந்தக் கம்பியை எடுத்ததும் 'அப்பாடா, இப்போதான் உசுரே வருது!' என்ற உணர்வு ஆமையின் முகத்தில் தெரியும் பாருங்களேன்!

பாரதி வரம் கேட்கையில்,
"மண் மீதுள்ள மக்கள், பறவைகள்
விலங்குகள், பூச்சிகள், புற்பூண்டு, மரங்கள்
யாவும் என் வினையால் இடும்பை தீர்ந்தே
இன்புற் றன்புடன் இணங்கி வாழ்ந்திடவே
செய்தல் வேண்டும், தேவ தேவா!"

என்றார். உலகில் நம் இருப்பு அனைவருக்கும் இன்பத்தை அளிக்க வேண்டும். 'அனைவருக்கும்' என்பது அனைத்து ஜீவராசிகளும் அடங்கும். நாம் இருக்கும் அவசர உலகில் பிற உயிர்களுக்கு இன்பத்தை அளிக்காவிட்டாலும், துன்பத்தையாவது கொடுக்காமல் இருப்போம்!

vikatan

  • தொடங்கியவர்

உயிர் பிழைத்த திமிங்கலங்கள்
===============================
கிழக்கு ரஷ்ய கடற்கரையில் பனிக் கட்டிகளுக்கு இடையே திமிங்கலங்கள் சிக்கின.

கயிறுகளையும் கம்புகளையும் பயன்படுத்திய நிபுணர்கள் திமிங்கலங்களை விடுவித்தனர்.

உறையவைக்கும் குளிரையும் பொருட்படுத்தாமல், மீட்பு குழுவினர் நீரில் இறங்கியுள்ளனர்.

படம்: ரஷ்யா அவசரநிலை அமைச்சகம்

 

 

  • தொடங்கியவர்

இப்படிக்கு... பூமி...

ஏப்ரல் 22: பூமி தினம் இன்று. பூமியை, பாதுகாப்பது பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக, சர்வதேச பூமி தினம் கடைப்பிடிக்கப்படுகிறது.

13007124_1120648637993925_23150939409829

  • தொடங்கியவர்

ஏப்ரல் 23: உலக புத்தக தினம் - சிறப்பு பகிர்வு

13083325_1121305744594881_23230907230590

இன்றைக்கு உலக புத்தக தினம் .ஷேக்ஸ்பியரின் நினைவாக இந்நாளை அப்படி அனுசரிக்கிறோம் .புத்தகங்கள் உலக வரலாற்றை ஏகத்துக்கும் புரட்டி போட்டிருக்கின்றன . அங்கிள் டாம்ஸ் கேபின் நூல் தான் அடிமைகளின் வலிகளை அமெரிக்க உணர்ந்து தன் மனசாட்சியை மறுபரிசோதனை செய்து கொள்ளும் உள்நாட்டு போருக்கு விதையானது .

காமன் சென்ஸ் நூல் தான் அமெரிக்க விடுதலைப்போரை வீறு கொண்டு எழச்செய்த காரணி . அது நாற்பத்தி எட்டு பக்க நூல் ! நோபல் பரிசு பெற்ற ஹெமிங்க்வேயின் புகழ் பெற்ற கிழவனும்,கடலும் நூல் நூறு பக்கங்களுக்குள் தான். பெண்ணியப்பார்வையை தமிழ் மண்ணில் ஆழமாக விதைத்த 'பெண் ஏன் அடிமையானாள்' நூலும் அளவில் சிறிய புத்தகமே !

படிக்கிற நூல் எதுவோ அது மனிதனின் குணத்தையும் மாற்றும். கடையனுக்கும் கடைத்தேற்றம் காந்தியை மகாத்மா ஆக்கியது. நீட்ஷேவின் நெருப்பு வாதங்கள் ஹிட்லரை இனப்படுகொலை செய்யும் வெறியனாக ஆக்கியது !

bookfb.jpg

ஒரு நூல் கிடைப்பதற்கு எத்தனை ஆண்டுகாலம் ஆகிறது ? ஒரு எழுத்தாளன் ஒரு அற்புதமான படைப்பைத்தரவோ அல்லது ஒரு நூலை கண்டேடுக்கவோ எத்தனை ஆண்டுகாலம் ஆகிறது ? சங்க நூல்களை தேடிய உ.வே.சாவுக்கு தன் வாழ்நாளே அவற்றைப்பதிப்பதில் கழிந்தது. மார்க்குவேஸ் பதினெட்டு மாதங்கள் வீட்டுக்குள் தவங்கிடந்து வார்த்தது கடந்த நூற்றாண்டின் தலை சிறந்த நூல் என்று கொண்டாடப்படும் நூற்றாண்டு காலத்தனிமை நாவல். பன்னிரெண்டு வருடங்கள், பதினாறாயிரம் மைல்கள்  டிக்கன்ஸ் எங்கெங்கோ தேடித்தந்தது ப்ரோக்கன் தி ஹெல் நூல். அது கிடைத்ததும் "உலகின் மகிழ்ச்சியான மனிதன் நான் தான். இந்த நூலை பதிப்பித்த பின் என் உயிரே போனாலும் கவலையில்லை !" என்றார் அவர்.

டார்வினின் உயிரினங்களின் தோற்றம் நூல் பெருத்த அலைகளை உண்டு செய்தது. அந்த நூல் வெளிவந்தால் கடவுளின் இருப்பும்,மதங்கள் குரிப்பிட்டவையும் கேள்விக்குள்ளாகும் என்பது தெரிந்ததால் பத்தாண்டுகள் வரை அந்த குறிப்புகளை எடுக்காமலே வைத்திருந்தார். மகளின் மறைவுக்கு பின்னரே அந்நூலை வெளியிட்டார். பகுத்தறிவின் சாளரங்கள் மேலும் வெளிச்சமாகின. மார்க்ஸ் தன்னுடைய மூலதனம் நூலை டார்வினுக்கே சமர்ப்பணம் செய்தார்.

நிராகரிப்பு என்பது இன்றைக்கு புகழ் பெற்றிருக்கும் நூல்களுக்கும் ஏற்பட்டு இருக்கிறது. ஹாரி பாட்டர் நாவலை எழுத ஆரம்பித்தபோது, ஒழுங்கான இடம் கிடையாது, பசியால் வாடி, மன உளைச்சலுக்கு உள்ளானார். காபி கடைகளில் உட்கார்ந்து, பழைய டைப்ரைட்டரில் அடித்தே கதையை முடித்தார். அதைப் பல பதிப்பாளர்களிடம் கொண்டுபோய் நீட்ட, அவர்கள் நிராகரித்தனர். லண்டனின் மிகச் சிறிய பதிப்பு நிறுவனமான ப்ளும்ஸ்பரி, 1,000 பிரதிகளுக்கு 2,250 பவுண்டு தருவதாக ஒப்புக்கொண்டது. நாவல் வந்த வேகத்திலேயே விற்றுத் தீர்ந்தது.

ஹக்கில்பெரி பின் நூலை மார்க் ட்வைன் எழுதிய பொழுது போஸ்டன் நூலகத்துக்குள் அந்நூல் நுழையக்கூடாது என்று சொன்னார்கள். ஜேம்ஸ் ஜாய்ஸ் உலிசஸ் நூலை எழுதிய பொழுது இங்கிலாந்தும்,அமெரிக்காவும் தடை செய்திருந்தன. சேத்தன் பகத்தின் முதல் நாவல் ஆக்ஸ்போர்ட் பதிப்பக எடிட்டர்களால் நிராகரிக்கப்பட்டு ரூபா பதிப்பகத்தால் வெளிவந்து பல லட்சம் பிரதிகள் விற்றது.

அண்ணா மேரி கரோலியின் மாஸ்டர் கிறிஸ்டியன் நூலை மரணம் நெருங்கிக்கொண்டு இருந்த பொழுது வாசித்துக்கொண்டு இருந்தார். "இந்த நூலை படித்து முடித்தபின் மரணம் என்னைத் தழுவிக் கொண்டால் பரவாயில்லை !" என்றார் அவர். பகத் சிங் தூக்கு மேடைக்கு கிளம்ப வேண்டிய நேரத்தில் தாமதப்படுத்தினார். "என்ன செய்கிறீர்கள் ?" என்று கேட்கப்பட்ட "ஒரு புரட்சியாளன் இன்னொரு புரட்சியாளனுடன் பேசிக்கொண்டு இருக்கிறேன் !" என்று சொன்னார் அவர் கையில் இருந்தது லெனின் அவர்களின் அரசும்,புரட்சியும் நூல்...

ஒரு பொய்யான நூல் உலகின் வரலாற்றை மாற்றிப்போட்டது.  ஜான் மாண்டேவல்லி எனும் இங்கிலாந்து நபர் 'the travels' நூலில்  நாய் தலை உள்ள பெண்கள்,ஒற்றைக்கண் ராட்சதர்கள்,பெரிய நத்தைகள்,முட்டிகளுக்கு நடுவே தொங்கிய விதைப்பைகளை கொண்ட ஆண்கள் ஆகியோரை எல்லாம் கடந்து இந்தியா வந்ததாகவும் அங்கே ப்ரெஸ்டர் ஜான் எனும் கிறிஸ்துவ மதத்தில் நம்பிக்கை கொண்டவர் ஆள்வதாகவும் கதை அளந்திருந்தார். மேலும் முப்பது அரசர்கள்,எழுபத்தி இரண்டு சிற்றரசர்கள்,முன்னூற்றி அறுபது பிரபுக்கள் அவருக்கு கீழ் இருந்ததாகவும் கிளப்பி விட்டிருந்தார். உலகம் உருண்டை,மேற்கில் பயணம் செய்தால் இந்தியாவை அடையலாம் என்று அவர் சொன்னதை நம்பி போன கொலம்பஸ் திசைமாறி அமெரிக்காவில் லேண்ட் ஆனார். பல்வேறு கடல் சாகசக்காரர்கள் நூற்றாண்டுகளுக்கு இந்த பொய்யை நம்பினார்கள்.

இவ்வளவும் படிச்சோம். இதுக்கு மேலே தமிழ் நாட்டில் தெருவுக்கு தெரு மதுக்கடைகள் இருக்கின்றன .புத்தக கடைகள் இருக்கின்றவனவா ?எழுத்தாளனை நாம் கொண்டாடுகிறோமா ?கேரள மக்கள் புத்தக வாசிப்பை மூச்சாக செய்பவர்கள் .எழுத்தாளர்களை மதிப்பவர்கள் ;வாசுதேவன் நாயர் ஞான பீட விருது பெற்ற பொழுது முதல்வர் அந்தோணியின் கார் அவர் வீட்டு முன் வாழ்த்த வந்து நின்றது.அப்படி ஒரு நிலை நோக்கி நம் சமூகம் பயணிக்க வேண்டும்

ஒரு சமூகத்தை கட்டமைப்பதில், மிகப்பெரிய மனிதர்களை உருவாக்குவதில் ,நமக்குள் புது புது தேடல்கள் செய்ய நூல்கள் உதவும். பிள்ளைகளுக்கு வீடியோ கேம்களை வாங்கித்தரும் நீங்கள் நல்ல நூல்களை வாங்கித்தாருங்கள் ;நூலகங்களில் சேர்த்து விடுங்கள் .சிந்திக்க மறுக்கிற சமூகம் என யாரையும் முத்திரை குத்துவதற்கு முன் அந்த சமூகத்தை சிந்திக்க வைக்கும் நூல்கள் சார்ந்து அவர்களை திசை திருப்ப வேண்டிய பொறுப்புணர்வு எல்லாருக்கும் உண்டு.

vikatan

  • தொடங்கியவர்

உலகில் ஏன் இத்தனை மதங்கள்...

madham1.jpg

ஷோவிடம் ஒரு சீடர் கேட்கிறார், ''எதற்கு உலகில் இத்தனை மதங்கள்?''

ஓஷோ சொல்கிறார், “இத்தனை மதங்கள் இருப்பது இயல்பானதுதான்…பார்க்கப் போனால் ஒவ்வொரு மனிதனுக்கும் ஒரு மதம் இருக்க வேண்டும். ஒவ்வொரு மனிதனும் தனிபட்டவன். பிறரிடமிருந்து வேறானவன். எனவே ஒவ்வொருவருக்கும் ஒரு மதம் இருக்க வேண்டும். ஒவ்வொருவரும் கடவுளை சென்றடைய தனிப்பட்ட மார்க்கம் இருக்க வேண்டும். ஒரே மதத்தை ஸ்தாபிக்க முடியாது. ஒரே மதம் என்ற பெயரில் ஏதாவது ஒன்றை எல்லோர் மீதும் திணிக்கலாம். ஆனால் அவர்களுடைய ஆத்மா அழிந்து போகும்…”

எவ்வளவு ஆழமான பதில். இங்கு ஒவ்வொரு மனிதனும் தனிப்பட்டவன். யோசனை, செய்கை மனிதர்களுக்கு மனிதர்கள் வித்தியாசப்படும் என்னும் போது, எப்படி ஒரு மதம் மட்டும் அனைவருக்கும் பொதுவானதாக இருக்க முடியும்?

இங்கு மதங்கள் என்பது ஆறுகள் என்றால், இறை என்பது கடல். இங்கு அனைத்து ஆறுகளும் கடல்களிலேயே சங்கமிக்க வேண்டும் என்பதுதான் பொது விதி. ஆனால், கறைபடிந்த நம் செயல்களால், ஆறுகளை சாக்கடை ஆக்கிவிட்டோம். இப்போது ஆறுகள், எங்கும் கடலில் கலப்பதில்லை.

அன்பு தான் இறை:

நாம் இறை நிலையை உணர வேண்டுமென்றால், முதலில் அகவிடுதலை அடைய வேண்டும். முன் முடிவுகளுடன் விஷயத்தை அணுகுவதை நிறுத்த வேண்டும். அன்பை எங்கும் பரவவிட வேண்டும். அகவிடுதலைக்கும், புறவிடுதலைக்கும் ஒரே தீர்வு அன்புதான். அன்பு மட்டும்தான். எல்லா பிரச்னைகளுக்கும் அன்பினால் நாம் தீர்வை காணலாம். இதையேதான் அனைத்து மதங்களும் போதிக்கின்றன.
 
புத்தர் இப்படி சொல்கிறார், “இவ்வுலகில் எக்காலமும் பகைமை, பகைமையால் தணிவதில்லை. பகைமை அன்பினாலேயே தணியும். இதுவே அறநெறி.”

மேலும் சொல்கிறார், “எத்தகைய நற்கருமங்களாயினும், அவையாவும் இதயத்தை திறந்து வைக்கும் அன்பிலே பதினாறில் ஒரு பகுதிக்கு கூட ஈடாகாது. இதயத்தைத் திறந்து வைக்கும் அன்பிலே அவை அடங்கி உள்ளன. அன்பு பிரகாசிக்கின்றது. அது ஒளி அளிக்கிறது” என்கிறார் புத்தர்.

ஏசுவும் இதே அன்பைதான் முன்மொழிந்தார், “ஒருவரை ஒருவர் நேசியுங்கள். நான் உங்களை நேசிப்பது போல், நீங்கள் ஒருவரை ஒருவர் நேசியுங்கள்” என்றார்.

ஆம்.. அன்பு மட்டும்தான் இங்கு பொது மொழி. கிழக்கையும், மேற்கையும் இணைப்பது கப்பல்களும், வானூர்திகளும் அல்ல அன்புதான். அன்பு அமைதியை மட்டும் தராது. எப்போதும் புறச்சூழலில் ஏற்படும் பிரச்னைகளுக்கும் தீர்வாக இருப்பது அன்பு மட்டும்தான். மரத்தின் மீதான அன்பு, காட்டழிவை தடுக்கிறது. சக மனிதன் மீதான அன்பு, போரைத் தடுக்கிறது. நாம் நம் குழந்தைகளையும், அடுத்த தலைமுறையையும் நேசிக்கும் போது இயற்கையை சுரண்டுவதை நிறுத்துகிறோம்.

ஆம்...அன்பு மட்டும்தான் அனைத்திற்கும் தீர்வு. இந்த அன்பைதான் அனைத்து மதங்களும் போதிக்கின்றன. ஆனால், நாம் மதத்தின் உன்னத பொருளை மறந்துவிட்டு, அன்பால் ஆன மதங்களை நாமே கொன்றுவிட்டோம்.

அன்பு எத்தகையானதாக இருக்க வேண்டும்?

பேருண்மையை அடைய அன்புதான் வழி என்றால், அந்த அன்பு எப்படியானதாக இருக்க வேண்டும். அன்பு நிர்பந்தங்களும், நிபந்தனைகளும் அற்றதாக இருக்க வேண்டும். “அன்பு என்பது உங்களுக்கு சுதந்திரம் தரும் போதுதான் நேர்மையாகிறது” என்கிறார் ஓஷோ. ஆம்..அழுத்தங்களால் நாம் வேறு ஏதோ ஒன்றை வேண்டுமானால் பெறலாம். எப்படி அன்பை பெற முடியும் ?

அன்பாக இருக்கும் மனிதனை புறச்சூழல்கள் எதுவும் தொந்தரவு செய்ய முடியாது. அன்பு நாம் நாமாகவே இருக்கும் சுதந்திரத்தை தரவல்லது. அன்புள்ள மனிதன்தான் அன்பு செலுத்துபவர் துன்பப்படுவதை விட தான் துன்பமடைவதையே விரும்புவான். இத்தகையதாக அன்பு நம்மிடம் இருக்கும்போது, மதங்கள் தேவையற்றதாக ஆகிறது.

நீதி தான் இறை:

அன்பு மட்டும் அல்ல, சத்தியமும், நீதியும்தான் இறை. இஸ்லாமில் அல்லாவின் இன்னொரு பெயர் அல் - ஆதில். இதற்கான அர்த்தம் நீதி. 'உண்மையான இஸ்லாமியன் என்பவன் நீதியின் பக்கம் நிற்பவன்' என்கிறார் எழுத்தாளர் மற்றும் செயற்பாட்டாளர் அஸ்கர் அலி என்ஜினியர். அதாவது நியாயத்தின் பக்கம் நிற்பதன் மூலம் இறைவனை அடையலாம். நியாயத்தின் பக்கம் நிற்பது என்பது, அநியாயம் எந்த வடிவில் வந்தாலும் அதை எதிர்ப்பது, பிறர் துன்பங்களை போக்குவது.

உலகில் முன்னூற்று சொச்சம் மதங்களே இருக்கின்றன. ஆனால் முன்னூறு கோடிக்கு மேலான மனிதர்கள் இருக்கிறார்கள். ஆக அன்பு, நீதி, உண்மை இதுதான் இறைவனை அடைய உண்மையான வழிகள். இதை சாராம்சமாக கொண்டு உங்களுக்கான பிரத்யேக மதத்தை நீங்களே உருவாக்குங்கள்.

vikatan

  • தொடங்கியவர்

ஏப்ரல் 23: இசைக்குயில் எஸ்.ஜானகி பிறந்தநாள் இன்று..

13043229_1121305104594945_41120587636627

 

எஸ்.ஜானகி

 
S_Janaki_2825522h.jpg
 

பிரபல பின்னணிப் பாடகி

தேசிய விருதை 4 முறை பெற்ற பிரபல பின்னணிப் பாடகி எஸ்.ஜானகி (S.Janaki) பிறந்தநாள் இன்று (ஏப்ரல் 23). அவரைப் பற்றிய அரிய முத்துக்கள் பத்து:

l ஆந்திர மாநிலம் குண்டூர் மாவட்டத்தில் உள்ள பள்ளபட்லா என்ற ஊரில் (1938) பிறந்தவர். மூன்று வயதில் தொடங்கி 10 வயது வரை இசை கற்றார். முதல் மேடை நிகழ்ச்சியில் பாடியபோது இவருக்கு 9 வயது.

l வி.சந்திரசேகர் என்ற கலைஞரின் நாடக இடைவேளைகளில்தான் முதலில் பாடத் தொடங்கினார். 1956-ல் அகில இந்திய வானொலி நடத்திய பாட்டுப் போட்டியில் 2-ம் பரிசு பெற்றார். இதைத் தொடர்ந்து சென்னை வந்தவர், ஏவி.எம். ஸ்டுடியோவில் ஒப்பந்த அடிப்படையில் பாடகியாக நியமனம் பெற்றார்.

l ‘விதியின் விளையாட்டு’ (1957) என்ற படத்தில் ‘பெண் என் ஆசை பாழானது’ என்பதுதான் இவர் பாடிய முதல் பாட்டு. அடுத்த நாளே ஒரு தெலுங்குப் படத்தில் பாடும் வாய்ப்பு கிடைத்து. கண்டசாலாவுடன் இணைந்து பாடினார்.

l முதல் ஆண்டிலேயே 6 மொழிகளில் 100 பாடல்களைப் பாடினார். கொங்கணி, துளு, சவுராஷ்டிரம், இந்தி, வங்காளம், சமஸ்கிருதம், சிங்களம், ஆங்கிலம், ஜப்பான், ஜெர்மனி ஆகிய மொழிகளிலும் பாடியுள்ளார். 17 மொழிகளில் பாடிய ஒரே பாடகி என்ற பெருமை பெற்றவர்.

l ‘கொஞ்சும் சலங்கை’ திரைப்படத்துக்காக பாடிய ‘சிங்கார வேலனே’ பாடல் இவரது வாழ்க்கையில் பெரும் திருப்பத்தை ஏற்படுத்தியது. இசைத்தட்டு விற்பனையிலும் இது சாதனை படைத்தது.

l ஏறக்குறைய அனைத்து இசையமைப்பாளர்களின் இசையிலும், அனைத்து பின்னணிப் பாடகர்களுடனும் இணைந்தும் பாடியுள்ளார். ‘இளையராஜா - எஸ்.பி.பாலசுப்ரமணியம் - எஸ்.ஜானகி’ கூட்டணி தென்னிந்திய இசைத் துறையில் தனி முத்திரை பதித்தது.

l பாடலில் பொதிந்துள்ள உணர்ச்சி மற்றும் நடிகைகளுக்கு ஏற்ற வகையில் குரலை மாற்றிப் பாடக்கூடியவர். குழந்தைக் குரலில் பாடுவதிலும் வல்லவர். இவர் பாடிய ‘தூக்கம் உன் கண்களைத் தழுவட்டுமே’, ‘செந்தூரப் பூவே’, ‘காற்றில் எந்தன் கீதம்’, ‘நெஞ்சினிலே நெஞ்சினிலே’, ‘ராதைக்கேற்ற கண்ணனோ’ போன்றவை காலத்தால் அழியாதவை.

l திரைப்படப் பின்னணிப் பாடல்கள், தனிப் பாடல்கள் என பல்லாயிரக்கணக்கான பாடல்களைப் பாடியுள்ளார். தமிழ், தெலுங்கு மொழிகளில் பல பக்திப் பாடல்களை தானே எழுதி, இசையமைத்துப் பாடியுள்ளார். ஒரு தெலுங்குப் படத்துக்கு இசையமைத்துள்ளார்.

l கலைமாமணி, கேரள மாநில சிறப்பு விருது பெற்றவர். சிறந்த பாடகிக்கான தேசிய விருது 4 முறை, கேரள அரசு விருது 14 முறை, ஆந்திர அரசு விருது 10 முறை, தமிழக அரசு விருது 7 முறை பெற்றவர். இலங்கையில் 1992-ல் இவருக்கு ‘ஞான கான சரஸ்வதி’ என்ற பட்டம் வழங்கப்பட்டது. 2013-ல் மத்திய அரசு பத்மபூஷண் விருது அறிவித்தது. மிகவும் தாமதமாக கிடைக்கும் கவுரவம் என்று கூறி அதை ஏற்க மறுத்து விட்டார்.

l அரை நூற்றாண்டுக்கு மேல் பாடிவரும் ஜானகி இன்று 78-வது வயதில் அடியெடுத்து வைக்கிறார். தற்போது சென்னையில் மகனுடன் வசிக்கிறார்.

  • தொடங்கியவர்

 

  • தொடங்கியவர்

உலகப் புகழ்பெற்ற திரைப்பட மேதை - உலகத் தரம் வாய்ந்த திரைப்படங்கள் பலவற்றைத் தந்த - திரைத் துறையில் பன்முகத்தன்மை கொண்ட இந்திய (வங்காள மொழி) இயக்குனர்
சத்யஜித் ராய் அவர்களின் நினைவு தினம்

11416137_1029890077059686_51734228314610

 

ஏப்.:23: ஆஸ்கார் நாயகன் சத்யஜித் ரே நினைவு தினம்... சிறப்பு பகிர்வு!

சத்யஜித் ரே இந்திய சினிமாவின் போக்கை மாற்றிய இணையற்ற திரை நாயகன். எளிமையாக வாழ்க்கையை வாழ்ந்த மனிதர் இவர். மொத்தம் வாழ்நாளில் எடுத்ததே முப்பத்தி ஆறு படங்கள் தான். ஆனால், அவர் இந்திய சினிமாவை மடைமாற்றியவர். அப்பா இளம் வயதிலேயே தவறி விட அம்மாவின் சொற்ப வருமானத்தில் தான் வாழ்க்கை கழிந்தது அவருக்கு.

தாகூரின் சாந்தி நிகேதனில் சேர்ந்து ஓவியம் கற்றுத்தேறிய பொழுது அப்படி ஒரு ஆனந்தம் அவருக்கு உண்டானது .அங்கே தாகூரிடம் தன் பிறந்த நாளுக்கு வாழ்த்து பெற போனார்; ஒரு படபடக்கும் தாளில் ஒரு கவிதை எழுதி தந்து இதைப் பெரியவன் ஆனதும் படி என்று கொடுத்து விட்டு போய் விட்டார். இவர் ஒரு விளம்பர நிறுவனத்தில் மாதம் எண்பது ரூபாய்ச் சேர்ந்தார். அங்கே நன்றாகப் போய்க்கொண்டு இருந்தாலும் அடிக்கடி ஆங்கிலேயருக்கும் இந்தியர்களுக்கும் சச்சரவு உண்டானது, கூடவே வாடிக்கையாளர்களின் ரசிப்புத்தன்மை வெறுப்பு உண்டு செய்ய வெளியேறினார் மனிதர்.
புத்தக நிறுவனம் ஒன்றில் சேர்ந்து அட்டைப்பட ஓவியங்கள் வரைய ஆரம்பித்தார். நேருவின் டிஸ்கவரி ஆப் இந்தியா நூலுக்குக் கூட ஓவியம் வரைந்திருக்கிறார்.

பின் ழான் ரீனோர் எனும் பிரெஞ்சு திரைப்பட இயக்குனரை பார்த்ததும், பைசைக்கிள் தீவ்ஸ் படமும் அவரைப் படம் எடுக்கு உந்தி தள்ளியது. தாகூர் கொடுத்த கவிதை தாளை பிரித்துப் பார்த்தார்;

“உலகம் முழுக்க
எத்தனையோ நதிகள் நீர்நிலைகளுக்கு
சென்று இருக்கிறேன் ;
இறைவா
ஆனால்
என் வீட்டின்
பின்புறம் இருந்த சிறிய புல்லின்
நுனியில் தவழ்ந்து சிரிக்கும்
பனித்துளியை கவனிக்க
தவறி விட்டேன்"
எனும் வரிகள் அவரை உலுக்கின.

ஆனால் தன் முதல் படத்தை வங்கத்தின் தலை சிறந்த நூலான பதேர் பாஞ்சாலியை படமாக்க முடிவு செய்தார்.

மூன்று வருட போராட்டம்; நிதி இல்லை. மனைவியின் நகைகளை அடமானம் வைத்தார். கொஞ்சம் பகுதிகள் எடுத்த பொழுது படம் நின்று போனது; அரசிடம் படத்துக்கு நிதி கேட்டார் முதல்வர் பி சி ராய் அதிகாரிகளைப் படத்தைப் பார்க்க சொன்னார்.

"என்ன படம் இது தேறாது!" என்று விட்டனர். நேரு வரை போய் அரசாங்கத்துக்கு படத்தின் உரிமையைத் தாரைவார்த்து படமெடுக்க நிதி பெற்றார். படம் வெளிவந்த பொழுது தான் அதன் மகத்துவம் புரிந்தது .தேசிய விருது கிடைத்தது உலகம் முழுக்க மிகப்பெரும் கவனம் பெற்றது .படத்தைத் திட்டி நியூ யார்க் டைம்ஸ் எழுதியும் அமெரிக்காவில் படம் ஹவுஸ் புல்லாக ஓடியது.

பெரிய நகைமுரண் படத்தைப் பார்த்து விட்டு அந்த நாவலை எழுதிய ஆசிரியர், "என்னய்யா இப்படி சொதப்பி இருக்கே!" என்றாராம். அபராஜிதோ தங்க சிங்கம் விருதை பெற்றுத்தந்தது.
அவர் குழந்தைகளுக்காக கதைகள் எழுதிய அனுபவம் உள்ளவர். பெலூடா எனும் கதாபாத்திரம் மறக்கவே முடியாதது; அறிவியியல் புனை கதைகளும் எழுதியவர். படமெடுத்து பொருளீட்ட கூடிய தருணத்தில் திரும்ப வந்து சந்தேஷ் எனும் தாத்தா உண்டாக்கிய பத்திரிக்கையைப் புதுப்பித்து எண்ணற்ற கதைகள் எழுதினார்.

வங்கத்தின் நடுத்தர மற்றும் ஏழை மக்களின் வாழ்க்கையைப் படம் பிடிப்பதாக அவரின் படங்கள் இருந்தன .வறுமையைப் படமாக்கி காசு பார்க்கிறார் என விமர்சித்தார்கள். சிக்கிம் அரச பரம்பரை பற்றி இவர் எடுத்த படத்தைப் போடவே விடாமல் அரசு தடை செய்தது அவர், மரணத்துக்குப் பல ஆண்டுகள் கழித்து அப்படம் வந்த பொழுது பார்த்தால் சிக்கிமின் வனப்பை பற்றியே படம் பேசி இருக்கிறது எனத் தெரிந்தது; படத்தைப் பார்க்காமலே தடை செய்திருக்கிறார்கள்.

சாருலதா எனும் அவரின் பெண்மொழி பேசும் படத்தில் பைனாகுலரில் கணவன் வருவதை பெண் பார்த்து விட்டு கதவை திறக்கிற ஷாட்டைப் பதினைந்து நிமிடம் வைத்திருப்பார் ."ஒரு பெண் வாசலுக்கு வந்து கதவைத் திறப்பதை 15 நிமிடம் காட்டவேண்டுமா?: என ஒருவர் கேட்க , "ஒரு பெண் வாசலுக்கு வரும் ஒரு 15 நிமிடத்தை உங்களால் பொறுக்கமுடியவில்லை எனில், இவ்வளவு ஆண்டுகாலமாக வெளியே வராமலேயே இருக்கும் பெண்களைப் பற்றி உங்களுக்குக் ஒன்றுமே தெரியவில்லையா? "என்றார்

பெரும்பாலும் நல்ல நாவல்களையே படமாக்கினார். நகர வாழ்வை வெறுத்து காடு புகும் நண்பர்கள் பற்றி ஒரு படம், மகளை வேசியாக்கி விடும் அப்பா, எளிய பெண்ணைத் தேவியாக்கி விடும் மக்கள், விமானத்தில் சீட்டு கிடைக்காத காரணத்தால், இரயிலில் பயணம் செய்யும் ஒரு நடிகனுக்குப் பொது இடத்திலஏற்படும் அனுபவங்கள், அறிவுத்துணையாகத் தன் கொழுந்தனை பார்க்கும் பெண் என அவர் எடுத்துக்கொண்ட கதைக்கருக்கள் தனித்துவம் வாய்ந்தவை.

ஏலியன் என்கிற கதை ஸ்க்ரிப்டை அமெரிக்க நிறுவனத்தோடு சேர்ந்து எடுக்க முயன்று முடியாமல் நின்று போனது; அதே பாணியில் ஈ டி படம் வந்த பொழுது அதைத் தன் கதையின் திருட்டு என ரே சொன்னார்.

அவருக்குப் பிரான்ஸ் அரசு விருது வாங்கிக் கவுரவித்தது. உலகத் திரையுலக பிதாமகர் அகிரோ குரோசோவா இப்படிச் சொல்கிறார், "ரேவின் படங்களை பார்க்காதவர்கள் வானில் சூரியனையும்,சந்திரனையும் காணாதவர்கள்.”

எந்த அளவுக்கு அவருக்குத் திரைத்துறை மீது காதல் இருந்தது எனச் சொல்லி இந்த கட்டுரையை முடிக்கலாம். GhareBaire எனும் தாகூரின் கதையின் படமாக்கி கொண்டிருந்த இரண்டு முறை மாரடைப்பு வந்தது மனிதருக்க. கொஞ்ச நாளில் மீண்டு வந்தவர் எடுத்த ஒய்வு என்ன தெரியுமா? ஓயாமல் மூன்று படங்கள் இயக்கியது.

ஸ்ட்ரெச்சர் ஆம்புலனஸ் தயாராக இருக்கும் மனிதர் படம் எடுத்து கொண்டிருப்பார். மரணப்படுக்கையில் இருந்த பொழுது வாழ்நாள் சாதனைக்கான ஆஸ்கர் அறிவிக்கப்பட்டது. அவரால் போக முடியாததால் ஆஸ்கர் அவர் படுக்கைக்கே வந்து சேர்ந்தது. ரே உலகை இந்தியாவை நோக்கி திருப்பிய துணிச்சல்காரர்.

சினிமா என்னும் மொழியின் திரை நாயகன் சத்யஜித் ரேவின் நினைவு தினம் இன்று! அவரின் படைப்புகள் உணர முடியாத உணர்ச்சிகளையும், காட்சிகளின் மூலம் உணரவைக்கும் மந்திர திறவுகோல்.
திறக்க முடியாத மனக்கதவிலும் மாறுதலை ஏற்படுத்தும் மகா சக்தி. இந்திய சினிமாவின் மாறுதலுக்கு இவர் எடுத்த முப்பத்தி ஆறு படங்கள்தான் காரணம்.

 

Edited by நவீனன்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.