Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இளமை புதுமை பல்சுவை

Featured Replies

  • தொடங்கியவர்

வலைபாயுதே

 

p110a.jpg

facebook.com/senthilnathan.aazhi

ஒவ்வொரு முறையும் ஜெயலலிதாவின் தனித்த மேடையைப் பார்க்கும்போது, அவர் மட்டும் அதில் தனித்து அமர்ந்து பேசுவதைப் பார்க்கும்போது, `நீ எனக்கு இரண்டாயிரம் ஆண்டு அடிமையாக இருந்தவன்' என்று அவர் நம்மைப் பார்த்துச் சொல்வதைப் போலக்கூடத் தோன்றவில்லை. `அம்மா, இன்னும் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு தங்களிடம் அடிமையாகச் சேவைசெய்ய நாங்கள் தயாராக இருக்கிறோம்’ என்று நாம்தான் அவர் காலடி பணிந்து சொல்வதைப்போல தோன்றுகிறது. இழிவின் உச்சம்; அடிமைத்தனத்தின் உச்சம். இந்தியாவில் வேறு எங்கும் காணாதது!

facebook.com/r.selvakkumar

மக்களை மழை வெள்ளத்தில் தவிக்க விட்டபோது வீட்டைவிட்டே வெளியே வரவில்லை. இப்போது சுட்டெரிக்கும் வெயிலில் தவிக்கவிட்டு குளுகுளு மேடையில் அமர்ந்துகொண்டு ரசிக்கிறார். இந்தக் காரணத் துக்காகவே நான் ஜெயலலிதாவையும் அவர் கட்சியையும் நிராகரிக்கிறேன்!

facebook.com/bommaiyamurugan.murugan

மல்லையாவின் பாஸ்போர்ட் முடக்கம்...

#அப்படியே அவரோட ரேஷன் கார்டையும் முடக்கிவைங்க ஆபீஸர்ஸ். அரிசி, சர்க்கரை, பாமாயில் வாங்க முடியாம கஷ்டப்படட்டும்!

facebook.com/gokulakrishnan.loganathan.3

குளோபல் வாமிங் பற்றி நாசா விஞ்ஞானிகள் விளக்கிச் சொன்னப்ப எல்லாம், `ஹேய்...

திஸ் இஸ் பெங்களூருடா... sea level-ல இருந்து 900 meters altitude-டா’ என்று காலர் தூக்கிவிட்ட நாங்க, இன்று கழுத்தில் வியர்வை துடைத்து, மூஞ்சியில் பேஸ்தடித்து நிற்கிறோம். இப்போது மழை பெய்யாமல் - இந்த பெங்களூரு குளிர்வடையாமல்போனால், வாட்ஸ்அப்பில் வந்த `திஸ் சம்மர் மே ரீச் 45 டிகிரி’ங்கிற மெசேஜை மதித்து, பறவைகள் குடிக்க மொட்டைமாடியில் கிண்ணத்தில் தண்ணி ஏந்தி நிற்போம் என்பதை வியர்வையுடன் தெரிவித்துக்கொள்கிறோம்!

facebook.com/ramansubramanian:

`வாழ்க்கையே பிடிக்கலை’ங்கிற பொண்ணுகிட்ட `அப்படின்னா என்கிட்ட குடுத்துரும்மா’னு சொல்லி புரப்போஸ் பண்ணணும். ;-)))

p110b.jpg

facebook.com/sonia.arunkumar:

முன்னர் எல்லாம் எங்கே பார்த்தாலும் மெசேஜ் டைப் பண்ண குனிஞ்சிக்கிட்டே கும்பல் கும்பலா சுத்திட்டிருந்தாங்க. இப்ப எல்லாம் செல்ஃபி எடுக்க சைடா மேல பார்த்துட்டே போனைத் தூக்கிப் பிடிச்சுட்டுச் சுத்துறாங்க!

twitter.com/ Sricalifornia: ஆண்கள் அலுவலுக்கு வீட்டைவிட்டுச் செல்கிறார்கள். பெண்களோ எங்கு சென்றாலும் வீட்டைச் சுமந்தபடியே...

twitter.com/writercsk: கொலை பண்ணியது அவர் தப்புதான். அதேபோல் செத்துப்போனது இவர் தப்பு # நடுநிலைமை!

twitter.com/ Araikurai: ஒருவேளை முதலமைச்சர் ஆகிட்டார்னா கேப்டன்கூட மல்லுக்கட்ட முடியாம மத்திய அரசு நம்மளை தனி நாடா அறிவிக்கக்கூட வாய்ப்பு இருக்கு!

twitter.com/ gpradeesh: `நீங்களே எண்ணிப்பார்க்காத, எதிர்பார்க்காத வற்றைச் செயல்படுத்தியிருக்கிறேன்’  - ஜெ # அர்த்தராத்திரியில் தண்ணியைத் தொறந்துவிடுவீங்கனு எதிர்பார்க்கலை தான்!

twitter.com/ aroobii: தனிமனிதத் தவறுகளை `தனிமனித சுதந்திரம்' எனக் கடந்துவிடவும் ஏற்றுக்கொள்ளவும் பழகுகிறீர்கள்!

twitter.com/ swamy662: விருத்தாசலத்தில் இருவர் இறந்தது எப்படி? - முதலமைச்சர் ஜெயலலிதா விளக்கம்.  # வேறு எப்படி... மூன்று மாதத்து வெயில் ஒரே நாளில் அடிச்சுருச்சுபோல!

twitter.com/ arattaigirl: `நல்லா வாழ மாட்ட’ என்பதைவிட `நல்ல சாவு வராது’ என்பதுதான் மோசமான சாபம்!

p110c.jpg

twitter.com/ BoopatyMurugesh: கணபதி ஐயர் பேக்கரி டீலிங்கைக் கேட்கும் நமக்குத்தான் அது கேவலமாகத் தெரியும். வீரபாகுகளைப் பொறுத்தவரை அது ராஜதந்திரம்!

twitter.com/ chevazhagan1: `பா.ஜ.க கூட்டணிக் கதவு சாத்தப்பட்டது’ ஹெச்.ராஜா # யாராவது வெளிப்பக்கம் பூட்டியிருப்பாங்க!

twitter.com/ iKrishS: `பேய் பட ட்ரெண்டை ஒழிப்போம்’னு யாராவது தேர்தல் வாக்குறுதி தந்தா தேவலை!

twitter.com/ thirumarant: தேர்தல் அறிக்கைவிட்டாத்தானே, `சொன்னீங்களே செஞ்சீங்களா?'னு கேட்பீங்கனு இந்தத் தடவை அறிக்கையே கிடையாதுபோல.

#அம்மாடா!

twitter.com/ writercsk: இந்தியாவில் சமையலறையில் பல்லி இருந்தால், நாம் பயப்படுகிறோம். சீனாவில் பல்லிகள் பயப்படும்!

p110d.jpg

twitter.com/ KingViswa: ஒரு பிரபலம் தன் நண்பனாக இருக்கவே அனைவரும் விரும்புகின்றனர். தன் நண்பன் பிரபலமாவதை நிறையப் பேர் மனதார விரும்புவதும் இல்லை; ரசிப்பதும் இல்லை!

twitter.com/ Enfielderstweet: ஜெயலலிதா மாவட்டம்தோறும் நடத்திக்கொண்டிருப் பதற்குப் பெயர் பிரசாரம் அல்ல... கும்பிபாகம்!

twitter.com/ Sath_Yeah:  Definitely-க்கு ஸ்பெல்லிங் தெரியாத ஒருத்தன்தான் sure-ங்ற வார்த்தையைக் கண்டுபிடிச்சிருப்பான்!

twitter.com/ Araikurai: காலையில ட்விட்டரைத் திறந்தா, கடைசி ட்வீட் எவ்ளோ நேரம் முந்திப் போட்டதோ அவ்ளோ நேரம் தூங்கியிருக்கோம்னு தெரியுது # இந்த லட்சணத்துல இருக்கு நம்ம நிலைமை!

vikatan

  • Replies 11.3k
  • Views 1.5m
  • Created
  • Last Reply
  • தொடங்கியவர்

13001114_1029884537060240_44297765049715

ஆங்கில இலக்கிய உலகின் தலைசிறந்த நாடகாசிரியர் வில்லியம் ஷேக்ஸ்பியரின் நினைவு தினம் இன்றாகும்.

  • தொடங்கியவர்

இனிக்கும் கோலா கசக்கும் உண்மைகள்

 

கவனம் கார்பனேட்டட் டிரிங்க்ஸ்

 

 

பாட்டிலை ஓப்பன் செய்யும்போது நுரைத்துக் கிளம்பும் பானத்தைப் பார்க்கும்போதே ஈர்ப்பு வந்துவிடுகிறது. ‘இந்தியாவின் தேசிய பானம் எது?’ எனக் கேட்டால், `கோலா’ எனச் சொல்லும் அளவுக்குப் பிரபலமாக இருக்கின்றன, கார்பனேட்டட் டிரிங்க்ஸ். முழுக்க முழுக்க செயற்கைச் சுவையூட்டிகள், மணமூட்டிகள், பதப்படுத்திகள், நிறமிகள் மற்றும் கார்பன் டை ஆக்சைடு கலந்து தயாரிக்கப்படும் இந்த பானங்கள்தான், இளைய தலைமுறையினருக்குத் தங்களை ஸ்டைலாக, ட்ரெண்டியாகக் காட்டிக்கொள்ளும் அடையாளம்.

எங்காவது, எப்போதாவது இந்தக் குளிர்பானங்களின் ஆரோக்கியம் குறித்த செய்தி ஒன்று திடீரெனப் பரபரப்பாகும். பிறகு, அலை அலையாக வந்துகொண்டிருக்கும் செய்திகளின் வெள்ளத்தில் மீண்டும் இந்தப் பிரச்னை ஆழத்துக்குப் போய்விடும். உண்மையில், குளிர்பானங்கள் எந்த அளவுக்கு நம் ஆரோக்கியத்துக்குப் பாதிப்பை ஏற்படுத்துகின்றன என்ற விழிப்புஉணர்வு இல்லாமலேயே இருக்கிறோம்.

p40a.jpg

கார்பனேட்டட் பானங்கள்

கார்பனேட்டட் பானங்கள் அதீத அழுத்தத்தில் கார்பன் டை ஆக்சைடு வாயுவைத் தண்ணீரில் செலுத்துவதன் மூலம் உருவாக்கப்படுகின்றன. இன்று, சந்தையில் உள்ள பன்னாட்டு கம்பெனிகளின் குளிர்பானங்கள் முதல் கிராமங்களில் தயாரிக்கப்படும் பன்னீர் சோடா, ஜிஞ்ஜர் சோடா வரை அனைத்திலும் கார்பன் டை ஆக்சைடு உள்ளது. இந்த பானங்களில் இனிப்புச் சுவையைச் சேர்ப்பதற்காக, சாக்கரின் சேர்க்கப்படுகிறது. கோலாவில் அளவுக்கு அதிகமான சர்க்கரை அல்லது செயற்கை  இனிப்பூட்டிகள்  சேர்க்கப்படுகின்றன. இதனால் கலோரி அதிகமாகிறது. பெரிய மால்களிலும், ஃபுட் கோர்ட்டுகளிலும், தியேட்டர்களிலும், பன்னாட்டு ரெஸ்டாரன்ட்களிலும் ‘காம்போ ஆஃபர்’ என்ற பெயரில் இது போன்ற பானங்களை வழங்கி, மக்களைப் பழக்கப்படுத்திவிட்டனர். இவற்றில் பெரும்பாலான பானங்கள் `அடிக்டிவ்னெஸ்’ எனப்படும் அடிமைப்படுத்தும் தன்மை உடையவை. ஒரு முறை குடித்த பின் மீண்டும் மீண்டும் குடிக்கத் தூண்டுபவை.

எனர்ஜி டிரிங்க்

குளுகோஸ் பவுடர்களைத் தண்ணீரில் கரைத்துக் குடித்தால், அதிக எனர்ஜி கிடைப்பது போன்ற விளம்பரங்களைப் பார்த்திருப்போம். இந்த பவுடர்களில் இருப்பது, ஃப்ரக்டோஸ். இது தேன், பழங்களில் இயற்கையாக உள்ள ஓர் இனிப்பான மூலப்பொருள். இது, ரத்தத்தில் குறைவான அளவிலேயே சர்க்கரையைச் சேர்ப்பதால், கணையம் அதிக அளவில் இன்சுலினை உற்பத்தி செய்ய வேண்டியது இல்லை. ஆனால், இன்று பல குளிர்பானங்களில் `கிரிஸ்டலைன் ஃப்ரக்டோஸ்’ எனப்படும்  செயற்கை ஃப்ரக்டோஸ் சேர்க்கப்படுகிறது. இது, அமிலத்தன்மை உடையது. கல்லீரலைப் பாதிப்பதுடன், ஜீரணமாக அதிக நேரம் எடுத்துக்கொள்ளும். உடல்பருமன், தோல் சுருக்கம், இதய நோய்கள், உடலில் யூரிக் அமில அளவு அதிகரிப்பு ஆகியவற்றுக்கு வழிவகுக்கும்.

p41c.jpg

உடல்பருமன்

கார்பனேட்டட் பானங்களினால் வரும் முக்கியமான ஆபத்து, உடல்பருமன். பசி எடுக்கும்போது இந்த பானங்களைப் பருகுவது மிகவும் தவறான பழக்கம். இதனால், வயிற்றின் அமிலத்தன்மை அதிகமாகிறது.

சாப்பிட்டு முடித்ததும் வயிறு உப்புசமாக உள்ளது என, ஜீரணத்துக்காக சோடா குடிப்பவர்கள் பலர்.  சோடாவில் உள்ள கார்பன் டை ஆக்சைடு  மற்றும் சர்க்கரை, கணையத்தைத் தேவைக்கு அதிகமான இன்சுலினை சுரக்கவைக்கும். அது வயிற்றில் உள்ள சர்க்கரையை உடைக்க, வேகமாகச் செயல்பட்டு, சாப்பாட்டை உடனே ஜீரணித்துவிடும். உடலுக்குத் தேவையான கலோரிகளை எடுத்துக்
கொண்டு மீதத்தைத் தோலுக்கு அடியில் கொழுப்பாக மாற்றிச் சேர்த்துவைக்கும். அதிகமாகச் சுரந்த இன்சுலின் சாப்பிட்ட மூன்று மணி நேரத்தில் மீண்டும் பசியைத் தூண்டும். இவ்வாறு, உடல் பருமனான பிறகும்  அடிக்கடி சோடா குடிப்பதால், மீண்டும் மீண்டும் பசி உணர்வு தூண்டப்படும். உடலில் கெட்ட கொழுப்பு சேர்ந்துகொண்டே இருக்கும்.சோடாவில் உள்ள சுக்ரோஸ், ஃப்ரக்டோஸ், சோடியம் மற்றும் காஃபைன் போன்றவை, குடித்த சில நிமிடங்களில் நாவறட்சியை ஏற்படுத்தும். உடலின் சராசரி நீர் அளவை வற்றவைக்கும்.

மதுவில் கலக்கப்படும் குளிர்பானங்கள் p41b.jpg

மதுவின் கசப்பு தெரியாமல் இருக்க, குளிர்பானம் கலந்து குடிக்கும் வழக்கம் நம் ஊரில் உள்ளது. ஆல்கஹால் கார்பன் டை ஆக்சைடுடன் சேரும்போது, பல ரசாயன மாற்றங்கள் நிகழ்கின்றன. மேலை நாட்டினர் இப்படிப் பருகுவது இல்லை என்பதை நாம் கவனிக்க வேண்டும். பல குளிர்பான நிறுவனங்கள், இந்தியர்களின் மதுப்பழக்கத்தை நம்பியே இந்தியாவில் கடை விரித்திருக்கின்றன என்பது ஒரு கசப்பான உண்மை.

பற்களில் பாதிப்பு

பற்களின் வெளிப்புற பகுதியான டென்டைன் மற்றும் எனாமல் நமது எலுப்பைவிடக் கடினமானது. கடினமான உணவையும் மெல்ல, அரைக்க இது உதவுகிறது. தொடர்ந்து கோலா பருகும்போது, எனாமல் அரிக்கப்படுவதால் பற்கூச்சம் மற்றும் பற்சொத்தை ஏற்பட வாய்ப்பு உள்ளது.

எப்போதாவது ஒரு முறை கார்பனேட்டட் பானங்களையும் கோலாவையும் அருந்துவது தவறு இல்லை. ஆனால், அதை ஃபேஷன் என்றும், ட்ரெண்ட் என்றும் போலியாக நம்பி, தொடர்ச்சியாக அருந்தி, நோயை விலை கொடுத்து வாங்குவது புத்திசாலித்தனம் அல்ல.

- வி.மோ.பிரசன்னா வெங்கடேஷ்


குளிர்பானம் தவிர்க்க 10 காரணங்கள்

கல்லீரல் பாதிப்பை ஏற்படுத்துகிறது.

இதய நோய்க்கான வாய்ப்பை அதிகரிக்கிறது.

உடல் பருமனை ஏற்படுத்துகிறது.

சர்க்கரை நோய்க்கான வாய்ப்பை அதிகரிக்கிறது.

மூளையின் செயல்பாட்டைப் பாதிக்கிறது.

பூப்பெய்துதலை விரைவுபடுத்துகிறது.

புற்றுநோய்க்கான வாய்ப்பை அதிகரிக்கிறது.

வயதான தோற்றத்தை ஏற்படுத்துகிறது.

எலும்பைப் பாதிக்கிறது.

செரிமான மண்டலத்தைப் பாதிக்கிறது.

vikatan

  • தொடங்கியவர்

காகிதத்தில் கலக்குறாங்க!

ஸ்யா கொசைனா, ரஷ்ய நாட்டைச் சேர்ந்த வித்தியாசக் கலைஞர். இவர் காகிதங்களைக் கொண்டே விக்குகள் உருவாக்கியிருக்கிறார். இவை அனைத்தையும் ‘பரோக் ஸ்டைல்’ எனப்படும், 1600-களில் ஐரோப்பிய நாடுகளில் கோலோச்சிய கலை பாணியில் உருவாக்கியிருக்கிறார். இந்த மேட்டர், இணையத்தில் இப்போது செம வைரல். இதே போல், 2014-ம் ஆண்டு காகிதங்களால் இவர் உருவாக்கிய மங்கோலிய நாட்டு திருமண உடைகளையும் தோண்டி எடுத்து வைரல் ஆக்கியிருக்கிறார்கள்.

p14a.jpg

p14b.jpg

இது பற்றி அஸ்யா கொசைனா, ‘‘நான் ஏதாச்சும் வித்தியாசமா பண்ணணும்னு நினைச்சேன். பாரம்பரியத்தோடு நம்ம ஸ்டைலையும் கொஞ்சம் மிக்ஸ் செய்து அடித்தால் பரபரனு ஃபேமஸ் ஆகலாம்னு நினைச்சுதான் இதைப் பண்ணினேன். எனக்கு பொதுவாகவே வரலாற்றுக் காலங்களில் உபயோகித்த விக்குகள் என்றால் ரொம்பப் பிடிக்கும். அதிலும் பரோக் ஸ்டைல் விக்குகள் என்றால் மிக இஷ்டம். இதை இப்போது நாம் பயன்படுத்த முடியாது. அழகியல் நிரம்பியிருக்கும் அற்புதமான கலைப்பொருட்களாக எடுத்துக்கலாம்” என்கிறார்.

p14c.jpg

போங்க பாஸு, இதெல்லாம் ஒரு மேட்டரா? நாங்க எல்லாம் பள்ளிக்கூடத்து காலத்துலயே பேப்பரில் பவர் ரேஞ்சர்ஸ் டிரெஸ் செஞ்சவங்க என காலரைத் தூக்கி விடுபவர்களா நீங்கள்... இன்னும் கொஞ்சம் ரசனை, திறமை, பொறுமையோடு பேப்பரையும் வெச்சு மறுபடியும் முயற்சி செய்தால் அஸ்யா மாதிரியே நீங்களும் வைரலாகலாம். எனக்கு இன்னும் பேப்பர்ல கத்திக் கப்பலே செய்யத் தெரியாது.

vikatan

  • தொடங்கியவர்

62 வயதிலும் ஜாக்கிஜான் எப்படி இவ்வளவு ஃபிட்டாக இருக்கிறார்?

4.jpg

62 வயதில் அசால்டாக சிக்ஸர் அடிக்கிறார் ஜாக்கிசான். இந்த மனிதரின் எலும்புகள் ரப்பரில் செய்யப்பட்டிருப்பவையோ என்று சந்தேகம் கொள்ளும் அளவுக்கு என்னென்னவோ வித்தைகள் செய்து உலக ரசிகர்களை எல்லாம் கட்டிப் போட்டு வைத்திருக்கும் ஜாக்கியின்  அடுத்தப் படம்’குங்ஃபூ யோகா’. இதற்கான படப்பிடிப்புக்காக இந்தியாவுக்கு வந்த ஜாக்கிசானை, ஒரு சுற்றுலா தளம்  போல மக்கள் வியந்து, வியந்து ரசித்து ரசித்துப் பார்த்தார்கள்.  இந்த இண்டர்நேஷனல் அல்டிமேட் ஸ்டார், இந்த வயதிலும் தன் உடம்பை ஃபிட்டாக வைத்துக்கொள்ள என்னென்ன விஷயங்களைப் பின்பற்றுகிறார்?

* தேர்வில் ஃபெயில் ஆனதால் பெற்றோர்களால் தற்காப்புக் கலைப் பள்ளியில் ஜாக்கி சேர்க்கப்பட்டபோது அவருக்கு வயது எட்டு. அப்போதில் இருந்தே அவரது மொத்த இலக்கும் உடலைக் கட்டுக்கோப்பாக வைத்துக்கொள்வது எப்படி, தேவையற்ற கொழுப்பைக் கரைப்பது எப்படி என்பதிலேயே இருந்திருக்கிறது. குங்ஃபூ பயிற்சியைத் தவிர்த்து ஒரு நாளைக்கு இரண்டு மணி நேரம் உடற்பயிற்சி செய்வாராம். அவர் அப்போது செய்த தீவிர பயிற்சிதான் இன்றுவரை அவரை ஃபிட்டாக வைத்திருக்கிறது.

1.jpg

* சிறுவயதில் ஜாக்கி மிகவும் கறாரான உணவுக்கட்டுப்பாடு உடையவர். இப்போது அதை சற்றே தளர்த்தி தனக்கு மிகவும் பிடித்த ஐஸ்கிரீமை ஒரு கை பார்க்கிறார். எப்போதும் கார்போஹைட்ரேட், கொழுப்பு, சோடியம் இந்த மூன்றையும் உணவில் மிகவும் குறைவான அளவே எடுத்துக் கொள்வார். அதேசமயம் தசைகள் இறுகுவதற்கு புரோட்டீன் மிகவும் அவசியம் என்பதால் நிறைய புரோட்டீன் உள்ள உணவைத்தான் விரும்பி சாப்பிடுவார்.

* இளம்வயதில் தம்ப் பிரஷ்ஷர் அப், ஸ்பிளிட்ஸ், பேக் பெண்ட்ஸ், டீப் நீ ஸ்குவாட்ஸ், ஆக்ரோபாட்டிக் லீப்ஸ் என கடும் உடற்பயிற்சிகள்  பயின்ற ஜாக்கி, இருபது வயதைக் கடந்தவுடன், தினமும் ஐந்து கி.மீ. ஜாக்கிங் , கார்டியோ, சிட் அப்ஸ், புஷ் அப்ஸ் என மேற்கத்திய உடற்பயிற்சிகளை பின்பற்றத் தொடங்கினார்.

3.jpg

* தனது 17  வயதில் இருந்து திரைப்படங்களில் முழு நேரமாக நடிக்கத்தொடங்கிய ஜாக்கி, புரூஸ்லீயின் என்டர் - த - ட்ராகன், ஃபிஸ்ட் ஆஃப் ஃயூரியில் ஸ்டன்ட் மேனாக நடிக்க ஆரம்பித்ததில் இருந்து பல விபத்துகள், காயங்களை கடந்து வந்திருக்கிறார். அவரிடம் ஒருமுறை ’உங்களுக்கு நடந்ததிலேயே எதை மோசமான விபத்தாக நினைக்கிறீர்கள்?’  என்று கேட்டதற்கு, ’ஆர்மர் ஆஃப் காட்’ படத்தில் நடந்த விபத்துதான் என்றார். அடிக்கடி விபத்துகளில் சிக்குவதால் ஒரு கட்டத்தில் உடற்பயிற்சியை தொடர்ந்து செய்வதில் அவருக்கு பிரச்னை வந்தது. ஐம்பது வயதில் கணுக்காலில் அடிபட்டு ஜாக்கிங் செல்லக்கூட முடியாமல் சிரமப்பட்ட ஜாக்கி, தனது உடற்பயிற்சி ஸ்டைலை மாற்றினாரே தவிர, ஒரு நாளும் உடற்பயிற்சி செய்யாமல் இருந்ததே இல்லை.

* ஜாக்கிக்கு மிகவும் பிடித்த விஷயங்களில் பாக்ஸிங்கும் ஒன்று. அதுவும் மற்றவர்களுக்கு பாக்ஸிங் சொல்லிக்கொடுப்பது அவருக்கு மிகவும் பிடிக்கும்.  இளம்வயதில் உடற்பயிற்சியே பிரதான வேலையாக இருந்த ஜாக்கி, தற்போது ’உடலைக் கட்டுக்கோப்பாக வைத்துக்கொள்ள தீவிரமான உடற்பயிற்சி மட்டும்தான் செய்யவேண்டும் என்ற தேவையில்லை. தற்காப்புக் கலைகளின் அடிப்படை விஷயங்கள், பாக்ஸிங்கின் அடிப்படை, இப்படி பிடித்த  விஷயங்களையே நான் பயன்படுத்திக் கொள்கிறேன்’ என்கிறார். 

vikatan

  • தொடங்கியவர்

பாரத ரத்னா சச்சின் டெண்டுல்கர் சிறப்பு பகிர்வு....

 

sachinvc1.jpg

1.சச்சின் ஆசைப்பட்டது டென்னிஸ் ஆட. மரத்தில் இருந்து வால்த்தனம் செய்ததற்கு தண்டனையாகத்தான் கிரிக்கெட் பக்கம் அனுப்பப்பட்டார்.

2.சச்சினுக்கு மிகவும் பிடித்த உணவு வடாபாவ்.  சின்ன வயதில் யார் அதிகம் வடா சாப்பிடுவது என்கிற போட்டியில் சச்சினே ஜெயிப்பார். அடிக்கடி பிள்ளைகளை சண்டைக்கு இழுப்பதும் உண்டு.

3.தவளை பஜ்ஜி செய்து தரச்சொல்லி குறும்புகள் செய்த நாயகன்.

4. சச்சினின் டென்னிஸ் ஆதர்சம் மெக்கன்ரோ, கிரிக்கெட்டில் சுனில் கவாஸ்கர்.

5.ரஞ்சி, துலிப், இரானி போட்டிகளில் அடித்த சதங்கள் இந்தியா அணிக்குள் இடம் பெற்றுத்தந்தது.

6 .சச்சின் தேவ் பர்மன் எனும் இசைகலைஞரின் நினைவாக தந்தையால் அந்த பெயர் சூட்டப்பட்டது

7.சச்சின் இளம் வயதில் உள்ளூர் போட்டிகளில் கலக்கிக்கொண்டு இருக்கும்போது சுனில் கவாஸ்கர் தன்னை பாராட்டி எழுதிய கடிதத்தை இன்னமும் பாதுகாக்கிறார்.

8. பாகிஸ்தான் தொடரில் வாக்கரின் பந்தில் மூக்கில் ரத்தம் கொட்ட வெளியேறி, பின் திரும்பி வந்து பவுண்டரிகளை விளாசியபோது, உலக கிரிக்கெட் சச்சினை உற்றுநோக்க ஆரம்பித்தது.

9.முதல் சதம் அடிக்கும் வாய்ப்பை சச்சினிடம் இருந்து நியூசிலாந்து அணியின் நபர் ஒருவர் காட்ச் பிடித்து தட்டிப் பறித்தார். அவர்தான் பின்னாளைய கோச் ஜான் ரைட்.

10.ஆஸ்திரேலியா அணிக்கு எதிராக உலக அளவில் அதிகபட்ச தாண்டவம் சச்சினுடையது. அதிலும் ஷேன் வார்னே இவர் கையில் சிக்கிக்கொண்டு பட்ட பாடு உலக பிரசித்தி.

p1%2810%29.jpg

 

11.குரு ராம்காந்த் அச்ரேகரின் மீது சச்சினுக்கு பிரியம் அதிகம். அவர் கொடுத்த ஒற்றை ரூபாய் நாணயங்களை தொலைத்ததற்காக ஏகத்துக்கும் வருந்தி இருக்கிறார்.

12. சச்சினுக்கு மனக்கட்டுப்பாடு அதிகம். கவர் டிரைவ் ஷாட்டில் தொடர்ந்து அவுட் ஆக, 241 ரன்கள் அடித்தபோது ஒரு கவர் டிரைவ் ஷாட் கூட அடிக்கவில்லை

13.மூப்பத்து மூன்று வயதில் மிகப்பெரிய வீழ்ச்சியை சந்தித்தார். மன மற்றும் உடல் ஒருங்கிணைவை வீழச்செய்யும் சாம்பர்க் விளைவு காரணம். அதை விட்டு வெற்றிகரமாக மீண்டார்.

14. கிரிக்கெட்டில் கண்கலங்கிய தருணங்கள் முக்கியமாக மூன்று. அப்பாவின் மரணத்திற்கு பின் சதம் அடித்தபோது; எண்டுல்கர் என டைம்ஸ் ஆப் இந்தியா குறித்தபோது; உலகக்கோப்பை வெற்றியின்போது! ஒவ்வொரு சதத்தின்போதும் வானை நோக்கி வணக்கம் சொல்வது தந்தைக்கு.

15.சச்சின் ஆட ஆரம்பித்து கோடிகளில் புரள ஆரம்பித்த பிறகும் தன் எளிய வேலையை விட்டுவிடாத தன் அம்மா, தன் எளிமைக்கான ஆதர்சம் என்பார்.

16.பெடரர், ஷுமாக்கர், ஹாரி பாட்டர் புகழ் ரட்க்ளிப்ப் சச்சினின் ரசிகர்களில் சிலர்.

17. "சச்சினுக்கு பந்து போட நான் ஹெல்மெட் அணிந்து கொள்ள வேண்டும்; மட்டையில் இவ்வளவு ஆற்றல் இவரிடம் உள்ளது" - அவரின் பதினாறு வயதில் அவருக்கு பந்து போட்ட பின் டென்னிஸ் லில்லி சொன்னது.

18. பட்டோடிக்கு அடுத்தபடியாக மிக இளம் வயதில் (23) இந்திய கிரிக்கெட் கேப்டன் ஆனார். சொந்த மண்ணில் வெற்றிகளைப் பெற்றாலும், வெளிநாடுகளில் இவர் தலைமையிலான அணி பல தோல்விகளைக் கண்டதால், தானாகவே கேப்டன்பொறுப்பில் இருந்து விலகினார்.

19. உலக அளவில் மட்டுமல்ல; ஐ.பி.எல்.லிலும் அதிகபட்ச பவுண்டரிகள் இவர் வசம்தான்.

20. விமர்சனங்களுக்கு பதில் சொல்வதை பெரும்பாலும் தவிர்ப்பார். எனினும் சச்சினின் கிரிக்கெட்டின் மீதான காதலை குறைத்து கிரேக் சாப்பல் பேசியபோது மட்டும் நெடிய பதில் சொன்னார். அப்பொழுதும் அவர் அப்படி சொல்லி இருந்தால் மட்டுமே இந்த பதிலை கணக்கில் எடுத்துக்கொள்ளுங்கள் என்றார்.

sachintendulkar_1585015c.jpg

21. இந்திப் பின்னணிப் பாடகர் கிஷோர் குமாரும் இங்கிலாந்து ராக் இசைக்குழு ‘டைர் ஸ்ட்ரெயிட்ஸ்’ம் சச்சினுக்கு பிடித்தவர்கள். பிடித்த நூல் காரி சோபர்ஸ் அவர்களின் 'TWENTY YEARS AT THE TOP!'

22.கவுண்டி போட்டிகளில் விளையாட ஒப்பந்தம் செய்யப்பட்ட முதல் வெளிநாட்டு வீரர் இவர்தான்.

23. சென்டிமென்ட்டுகளை அதிகம் நம்புபவர். கிரிக்கெட் என்றால் 10-ஆம் நம்பர் ஜெர்சி இல்லாமல் விளையாடமாட்டார். அவரது அனைத்துக் கார்களின்
நம்பரும் 9999-தான்.

24. இரட்டை சதம் அடித்தபோது யார் பாதிக்கப்படர்களோ இல்லையோ, கிரிக்இன்போ கிராஷ் ஆனது.

25. எந்தப் போட்டியும் தொடங்குவதற்கு ஒரு மணி நேரத்துக்கு முன்பே, பெவிலியனில் இருந்து பிட்ச் வரை நடந்து திரும்புவார் சச்சின்.

26. சச்சினின் மொபைலில் இருந்து யாருக்கு எஸ்.எம்.எஸ். வந்தாலும், 'தேங்க்ஸ் அண்ட் லவ் சச்சின்’ என்பதே இறுதி வரியாக இருக்கும்.

27.மதுபான விளம்பரங்களில் நடிக்க மறுத்து, நாட்டின் இளைஞர்கள் மீதான அக்கறையை அழுத்தமாக சொன்னவர். தன்னை சட்டை இல்லாமல் படம் எடுப்பதை கூட அனுமதிக்காதவர். தன்னை ஒழுக்க சீலராக பார்க்கும் இளைஞர்கள் தவறாக எடுத்துக்கொள்வார்கள் என்றார்.

28. விளையாடப் போவதற்கு முன்னால் தன்னுடைய இடது பக்க பேடைத்தான் முதலில் அணிவார். ஆடப்போகும் பிட்ச்சில் முன்னரே ஒரு நடை நடந்துவிட்டு வருவார்;
போட்டிக்கு முன்னர் இசைக்கேட்பது எப்பொழுதும் பழக்கம்.

sachifb.jpg

சச்சின் பிறந்தநாள் சிறப்பு ஆல்பம்... க்ளிக் செய்க...

 

29. தன் ஹெல்மெட்டில் தேசிய கொடியை முதலில் அணிந்த வீரர்; வெளியே மாறுவேடத்தில் போகிற பழக்கம் உண்டு. ரோஜா படத்துக்கு போய், விக் கழன்று
விழுந்து பெரிய ரணகளம் ஆனது. மும்பை தாக்குதலுக்கு பிறகு மாறுவேடம் நின்று போனது.

30. நூறாவது சதம் அடித்ததும் "நான் கடவுள் இல்லை; நான் சச்சின் !"என்றார்

31. 1988ல் பிராபோர்னேவில் நடந்த போட்டியில், பாகிஸ்தானுக்காக, இந்தியாவுக்கு எதிரான ஒருநாள் பயிற்சிப் போட்டியில் ஃபீல்டிங் செய்திருக்கிறார். அடுத்த வருடம் வான்கடேவில் இந்தியாவுக்கும் ஜிம்பாப்வேக்கும் நடந்த உலகக்கோப்பைப் போட்டியில் ‘பால் பாய்’ஆக பணியாற்றியிருக்கிறார்.

31. அப்னாலயா என்கிற அமைப்பில் உள்ள எல்லா ஆதரவற்ற குழந்தைகளின் வளர்ப்புத்தந்தை சச்சின்தான்.

32.பிராட்மன்  “தன்னைப்போலவே ஆடுகிறார். சச்சின் என் மகன் போன்றவர்” என சிலாகித்து சொன்னார்.

33. பிராட் ஹாக் தன் விக்கெட்டை எடுத்த பின், அந்த பந்தில் கையெழுத்து வாங்கியபோது ‘இது மீண்டும் நடக்காது’ என எழுதி தந்தார். அது அப்படியே நடக்கவும் வைத்தார் (பத்து போட்டிகளுக்கு பிறகும்).

34. ஆஸ்திரேலியாவில் சச்சினுக்கு ரசிகர்கள் அதிகம்! சச்சினின் பெயரில் ஒரு தெரு உள்ளது. சச்சின் ஆட வரும்போது அனைவரும் எழுந்து நின்று கைதட்டுவார்கள். அங்கே பலB_Id_138277_sachin.jpg குழந்தைகளுக்கு சச்சின் என்கிற பெயர் உண்டு.

36. சிட்னியில் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் பதினெட்டு வயதில் 148 அடித்து கலக்கி எடுத்தார் சச்சின். ''சிட்னி கிரிக்கெட் மைதானத்தில் சதம் அடிப்பதே சாதனை. அதை 18 வயதுச் சிறுவன் செய்வதைப் பார்த்தபோது ஏதோ அதிசயம் நடப்பதைப் போல உணர்ந்தேன்!'' என்று சொன்னார் ஆலன் பார்டர்.

37. ஓயாத வெற்றிக்கான காரணம் என்ன என கேட்டபோது, "பேயை போல பயிற்சி செய்யுங்கள், தேவதையை போல ஆடுங்கள்!" என்றார்

38. பல முதன்முதல்களை வைத்து இருக்கும் சச்சின்தான், முதன்முதலாக தேர்ட் அம்பையர் கையால் அவுட் ஆனார்.

37. சவுரவ் கங்குலியின் அறை தண்ணீரில் மிதந்து கொண்டிருந்தது; சச்சின்தான் ஹோஸ் பைப்பை குழாயோடு இணைத்து இதைச்செய்தார். அதிலிருந்து, சச்சின், கங்குலியை ‘பாபு மோஷல்’ என்று அழைப்பார். கங்குலி, சச்சினை ‘சோட்டா பாபு’ என்று அழைப்பார்.

39. மும்பை தாக்குதலுக்கு பின், சென்னையில் அடித்த சதம் அதிக பட்ச வலிக்கு நடுவே அடித்த மறக்க முடியாத சதம் என்றார்.

40. நீங்கள் உங்கள் தவறுகளை சச்சின் ஆடும்போது செய்யவும். கடவுளும் கவனிக்கமாட்டார். ஏனெனில் சச்சின் ஆடுவதை அவர் பார்த்துக்கொண்டு இருக்கிறார் அல்லவா?’ - மெல்பர்ன் நகரில் உள்ள வாசகம்.

sachinvc2.jpg

 

41.சச்சினுக்கு ஒரு போட்டியில் பதினெட்டு வயதுக்குள் சதமடித்ததுக்கு ஆட்ட நாயகன் விருதோடு ஷாம்பெயின் பாட்டில் பரிசாக தரப்பட்டது. இந்திய விதிகளின்படி பதினெட்டு வயதுக்கு கீழே இருக்கும் பிள்ளைகளை அதை பயன்படுத்தக்கூடாது. சச்சின் அதை திறக்காமல் வைத்திருந்து தன் மகளின் முதல் பிறந்தநாளின் பொழுது அன்போடு திறந்தார். தன்னுடைய பெராரி காரின் மீது தீராக்காதல். அதை அஞ்சலியை கூட ஓட்ட விடமாட்டார் சச்சின்

41 "நீ நன்றாக ஆடினாய் சச்சின் !” என்று தட்டிக்கொடுக்காமல் என்றைக்கும் தன்னுடைய மாணவனுக்கு தலைக்கனம் ஏற்படக்கூடாது என்று மவுனம் காத்த இன்றைக்கு மட்டும் ஆட்டத்தை ஆடுகளத்தில் காண வந்த அச்ரேக்கர் அமைதியாகநிற்கிறார்.பாரத ரத்னா விருதைப்பெற்றதும் சச்சின்  “என் ஆசானே ! இப்பொழுது நான் நன்றாக ஆடினேன் என்று சொல்லுங்கள். இனிமேல் நான் ஆட ஆட்டங்கள் இல்லையே !” என்று அந்த குரலில் தான் எத்தனை வலி ?.

vikatan

13071891_1031081386940555_43698746454763

கிரிக்கெட் உலகின் சாதனை நாயகன் சச்சின் டெண்டுல்கருக்கு இன்று பிறந்த நாள்.

இந்திய கிரிகெட் இதுவரை கண்டிராத இந்த சாதனையாளன்
இன்றுவரை கிரிகெட் உலகின் கடவுளாகவே பார்க்கப்படுகிறார் சாதனைகளில் சாதனை செய்தவர்
தன் வாழ்க்கைக்காலத்தின் பாதிக்காலத்தை கிரிக்கெட்டுக்காகவே
வாழ்ந்து காட்டி பெருமை சேர்த்தவர்

25 வருடகால கிரிக்கெட் வாழ்க்கையை வாழ்ந்து, இந்திய கிரிக்கெட் மட்டுமல்லாது
உலக கிரிக்கெட் அரங்குகளிலும் முத்திரை பதித்த சாதனைச் சிகரம்!

சாதனைகளில் சரித்திரம் படைத்து உச்சம் தொட்டவர். இவர் மிச்சம் வைத்திட்ட சாதனைகள் சொற்பமே.

Edited by நவீனன்

  • தொடங்கியவர்

ஏப்:24 ’எழுத்து சிங்கம்’ ஜெயகாந்தன் பிறந்தநாள் சிறப்பு பகிர்வு...

jayakanthan_25_1.jpg

 

காலக் குடுவையில் தமிழ்ச் சமூகத்தைக் குலுக்கிப் போட்ட எழுத்துச் சிங்கம் ஜெயகாந்தனின் பெர்சனல் பக்கங்கள் இதோ...

ரயிலில் டிக்கெட் இல்லாத பயணியாகப் புறப்பட்டு வந்த ஜெயகாந்தன் பார்த்த உத்தியோகங்கள்... மளிகைக் கடைப் பையன், டாக்டரிடம் பை தூக்கும் வேலை, மாவு மெஷின் கூலி, தியேட்டரில் பாட்டுப் புத்தகம் விற்றது, டிரெடில் மேன், அச்சுக் கோப்பாளர், பவுண்டரியில் இன்ஜின் கரி அள்ளிப்போட்டது, இங்க் ஃபேக்டரியில் கை வண்டி இழுத்தது, ஜட்கா வண்டிக்காரரிடம் உதவியாளர், பத்திரிகை புரூஃப் ரீடர், உதவி ஆசிரியர். பின் முழு நேர எழுத்தாளர்!


சிறுகதைகள் 200-க்கு மேல், குறுநாவல்கள் 40, நாவல்கள் 15, கட்டுரைகள் 500, வாழ்க்கைச் சரிதத்தை ஆன்மிக, அரசியல், கலையுலக அனுபவங்களாகப் பிரித்து மூன்று புத்தகங்கள் என எழுதியிருக்கிறார் ஜெயகாந்தன்!

சுருதிசுத்தமாக வீணை வாசிக்கத் தெரியும். இசை படித்தவர். நல்ல சினிமா பாடல்களாக இருந்தால் சுருதி கூட்டி குரல் இசைய, லேசாக விரல்கள் தாளமிட, இது இந்த ராகம் என நண்பர்களிடம் சொல்வார்!

'இந்த உலகம் உங்களைப் புரிந்துகொள்ளவில்லை என்றால் நான் ஆச்சர்யப்பட மாட்டேன். இந்த உலகத்தை நீங்கள் புரிந்துகொள்ளாவிட்டால், ஆச்சர்யம் மட்டுமல்ல; வருத்தமும் அடைவேன்' என்று ஜே.கே-விடம் சொன்னாராம் எஸ்.எஸ்.வாசன். நண்பர்களிடம் இதைச் சொல்லி, தனக்கு உத்வேகம் கிடைத்த விதத்தைச் சொல்லிப் பெருமைப்படுவார்!

காமராசரின் மீது மிகுந்த மரியாதையும் அன்பும்கொண்டவர். முதல்வராக இருந்தும், தனது தாய்க்கு வசதிகள் செய்து தராத அவரது நேர்மையைச் சொல்லும்போதெல்லாம் தழுதழுப்பார். காமராஜரை காங்கிரஸில் இருந்த கம்யூனிஸ்ட் எனக் குறிப்பிடுவார்!

ஜெயகாந்தனின் சபையில் பெரும்பாலும் அவரே பேசுவார். மற்றவர்கள் கேட்டுக்கொண்டு இருப்பார்கள். கேள்வியும் அவரிடம் இருந்தே வரும். சிறிது நேரம் மௌனம் காப்பார். பிறகு பதிலும் அவரிடம் இருந்தே வரும்!

p_22.jpg



ஜெயகாந்தனின் சபையில் அடிக்கடி ஆஜரானவர்கள், நாகேஷ், எஸ்.வி.சுப்பையா, சந்திரபாபு, பீம்சிங், எம்.பி.சீனிவாசன், கண்ணதாசன், இளையராஜா, பார்த்திபன், லெனின் ஆகியோர் அடக்கம்!

ராஜராஜன் விருது, பாரதிய பாஷா பரிஷத் விருது, சாகித்ய அகாடமி, ஞானபீடம், நேரு விருது (சோவியத் நாடு கொடுத்தது) பத்மபூஷண் இவை அனைத்தும் பெற்ற ஒரே தமிழ் எழுத்தாளர் ஜே.கே-தான்!

1977 சட்டமன்றத் தேர்தலில் தி.நகர் தொகுதியில் சிங்கம் சின்னத்தில் ஜெயகாந்தன் போட்டியிட்டார். 481 வாக்குகள் பெற்று தோல்வி அடைந்தார். 'சிங்கத்துக்குப் பிடித்த உணவு நம்ம டெபாசிட் போலும்' என நகைச்சுவையாக அதை எடுத்துக்கொண்டார்!

கவிஞர் பாரதிதாசன் ஜெயகாந்தனின் மேல் பிரியம்கொண்டவர். திருவல்லிக்கேணி பாண்டியன் ஸ்டுடியோவில் இருவரும் சேர்ந்து எடுத்த புகைப்படம் இப்போதும் ஜே.கே-யின் வீட்டில் இருக்கிறது!

'என் வாசகனுக்குப் பிடித்தவிதமாக எல்லாம் எழுத முடியாது. நான் எழுதுவதை விரும்புகிறவனே எனது வாசகன்' எனச் சொல்வார். எழுதாமல் இருப்பதைப் பொருட்படுத்துவதில்லை. கேட்டால், 'நான் எழுதியதை எல்லாம் முதலில் படிங்க' என்பார். இன்னும் கேட்டால், 'உங்க அம்மாதான் உன்னைப் பெத்துப்போட்டா. அதுக்காக, இன்னும் பெத்துக் குடுன்னு கேட்டுட்டே இருப்பியா?' என்பார் கோபமாக!

பயணங்கள் என்றாலே நண்பர்களோடுதான். கிண்டலும் நகைச்சுவையும் கரை புரண்டோடும். யாரையும் புண்படுத்துவதாக அந்த நகைச்சுவை அமையாது!

கமல் தன் ஒவ்வொரு திரைப்படத்தையும் ஜெயகாந்தனுக்கு தனியாகப் போட்டுக் காண்பித்து, அபிப்பிராயத்தைக் கேட்டு அறிந்துகொள்வார்!

p_40.jpg



பாரதியார் பாடல்கள், திருக்குறள், சித்தர் பாடல்கள் எதுவாக இருந்தாலும் அதனை வெறுமனே சொல்ல மாட்டார் ஜே.கே. ஒரு சந்தமும், சுதியும் சேர்ந்து வர அர்த்தங்கள் இயல்பாக வெளிப்படும்!

மிகுந்த ஞாபகசக்திகொண்டவர். தான் படித்த இலக்கியங்களில் இருந்து மேற்கோள் காட்டுவதிலாகட்டும், தனது பொருட் களைக் கவனமாக வைத்திருப்பதிலாகட்டும் மறதியைப் பார்க்கவே முடியாது!

ஜெயகாந்தனின் சிறு வயதுத் தோழர் கி.வீரமணி.

ஜெயகாந்தனின் படைப்புக்களான 'புதுச் செருப்பு கடிக்கும்', 'சில நேரங்களில் சில மனிதர்கள்', 'காவல் தெய்வம்', 'உன்னைப்போல் ஒருவன்', 'ஒரு நடிகை நாடகம் பார்க்கிறாள்', 'கருணையினால் அல்ல', 'யாருக்காக அழுதான்' ஆகியவை திரைப்படங்களாக வெளிவந்திருக்கின்றன!

காலையில் சிறிது நேரம் யோகாசனம். அதற்குப் பிறகுதான் உணவு. எந்தக் குளிரையும் பொருட்படுத்தாமல் பச்சைத் தண்ணீரில் குளித்துவிடுவார் ஜே.கே!

ஜே.கே-யின் பிறந்த நாள் ஏப்ரல் 24 - 1934. ஒவ்வொரு வருடமும் அந்தக் கொண்டாட்டத்தில் கலந்துகொள்ள முதல் நாளில் இருந்தே நண்பர்கள் குவிய ஆரம்பித்துவிடுவார்கள். சபை களை கட்டி பாட்டும், சிரிப்பும், பேச்சுமாகக் கலகலக்கும். அன்றைக்கு எல்லோருக்கும் உணவு அவர் வீட்டில் பரிமாறுவது வழக்கம்

ஆசையுடன் நாய் வளர்த்தார். 'திப்பு' எனச் செல்லமாக அழைப் பார். 'திப்பு' இறந்த துயரத்துக்குப் பிறகு பிராணிகள் வளர்ப்பதை விட்டுவிட்டார்!

p_4.jpg



'எங்களுக்குள் இருப்பது முரண்பாடு இல்லை; வேறுபாடு. முரண்பாடு என்பது தண்ணீரும் எண்ணெய்யும் மாதிரி... சேராது. வேறுபாடு தண்ணீரும் பாலும் போல... சேர்ந்துவிடும்' என்று கலைஞர் தன்னைப்பற்றி சொன்னதை, ரசித்து ரசித்துக் குறிப்பிடுவார் ஜெயகாந்தன்!

 'நாளை சந்திப்போம்...' என்பது மாதிரியான வாக்குறுதிகள் கொடுத்தால், கூடவே 'இன்ஷா அல்லா' என்று சொல்லிதான் முடிப்பார்!

ஒரு கூட்டம் முடிந்து வெளியே வந்தபோது "இன்றைக்கு நீங்கள் விஸ்வரூபம் காட்டவில்லையே, ஏன்?" என்றார் ஒரு வாசகர். உடனே "விஸ்வரூபம் என்பது காட்டுவது அல்ல; காண்பது" என்றார் ஜெயகாந்தன்.

'குப் குப்' என்று புகைவிட்டு... 'கூ கூ' என்று கூச்சலிட்டு... 'வருகுது வருகுது ரயில் வண்டி... வேகமாக வருகுது... புகை வண்டி.'-அவர் குழந்தைகளுக்குச் சொல்லிக்கொடுக்கும் பாட்டுக் களில் இதுவும் ஒன்று!

எந்தப் பிரச்னை என்றாலும் அது சரியாகும் என்று நம்புபவர். எல்லாவற்றுக்கும் தீர்வுகள் உண்டு என்பதில் உறுதிகொண்டவர். ஒருபோதும் 'இது முடியாது' என்றோ, 'அவ்வளவுதான்' என்றோ அவர் வாயிலிருந்து வார்த்தைகள் வராது!

vikatan

 

13047723_1031131110268916_51308626090015

சாகா வரம் பெற்ற படைப்புக்களின் சொந்தக்காரர் மறைந்த எழுத்தாளர் ஜெயக்காந்தனின் பிறந்தநாள் இன்று

தமிழ்பேசும் மக்களின் இலக்கிய ரசனையினையும் , சிந்தனையினையும் அதிக அளவில் பாதித்த எழுத்தாளர்களுள் மிக முக்கியமானவர் எழுத்தாளர் ஜெயகாந்தன். இவர் நவீன இலக்கியம் தொடங்கி அரசியல், கலை மற்றும் பத்திரிகை உலகில் கடந்த ஐம்பது ஆண்டுகளாக தீவிரமாக செயற்பட்டு வந்தவர். இவருடைய கதைகள் இலக்கிய தரமும், ஜனரஞ்சகமும் கொண்டவை.

மிகுந்த ஆற்றலும், ஆளுமையும், வேகமும், உயர்வும், தனித்துவமும் கொண்ட தலைச்சிறந்த எழுத்தாளர்களுள் ஒருவராக இருக்கும் மறைந்த எழுத்தாளர் ஜெயக்காந்தன்

 

Edited by நவீனன்

  • தொடங்கியவர்

10 செகண்ட் கதைகள்

 

 

நீர் சேவை!

p201.jpg

‘குடிநீரை வீணாக்காதீர்’ என்ற வாசகத்துடன் தெரு முழுவதும் நீர் தெளித்துப்போகிறது, மாநகராட்சி குடிநீர் வண்டி.

- ரவீந்திரன்

ஆயுள்

p202.jpg

`புகைப்படம் எடுத்தால் ஆயுசு குறையும்’ என்ற சினிமா வசனத்தைக் குழப்பமாகப் பார்த்தான் செல்ஃபி எடுக்கும் சிறுவன்.

- அ.மணிமாறன்

முடிவு!

p203.jpg

எதிர்க்கட்சியை உடைக்க ஏற்பாடு செய்துவிட்டு வீட்டுக்கு வந்த தலைவரிடம் மகன் சொன்னான்... ``அப்பா, நாங்க தனிக்குடித்தனம் போறோம்!''

- பூங்கதிர்

பேச்சுலர்... சாமி!

p204.jpg

`இந்த வருஷமாவது திருமணம் நடக்க வேண்டும்’ என, பிள்ளையாரிடம் வேண்டிக்கொண்டிருந்தான் முருகன்.

- அபிசேக் மியாவ்

இருக்கு... ஆனா இல்லை!

p205.jpg

நாய் வாங்காமல், `நாய்கள் ஜாக்கிரதை’ போர்டை கேட்டில் மாட்டினார் கஞ்சன் கணேசன்.

- அபிசேக் மியாவ்

கஜானா காவலர்

p206.jpg

`மாசக் கடைசி... பயங்கர பணக் கஷ்டம்’ - புலம்பிக்கொண்டிருந்தார் ஏ.டி.எம் காவலாளி!

- ரியாஸ் அஹமத்

அவரவர் நியாயம்

p207.jpg

“என்னங்க இது... அவ பேச்சைக் கேட்டுக்கிட்டுப் போயிட்டானே...” - அழுது புலம்பியவளிடம் சொன்னார், “அப்படித்தானே நான் உன்கூட வந்தேன்!”

- கி.ரவிக்குமார்

தானே... தன்னைத்தானே...

p208.jpg

`ஒரு நாளைக்கு எத்தனை முறைதான் கண்ணாடி பார்ப்பே?' என அம்மா தன்னைக் கேட்டது மனதுக்குள் மின்னலடித்துப்போனது சுகந்திக்கு, `ஒரு நாளைக்கு எத்தனை முறைதான் செல்ஃபி எடுத்துப்பே?’ என்று மகளிடம் கேட்டபோது.

- அஜித்

கைங்கர்யம்

p209.jpg

கோயில் திருவிழாவில் சாமி ஊர்வலம் வந்தபோது, எல்லோரும் மறக்காமல் செல்ஃபி எடுத்துக்கொண்டிருந்தனர்.

- அபிசேக் மியாவ்

ஆள் வேட்டை

p2010.jpg

டச் விட்டுப்போன தோழிகளை எல்லாம் தேடித் தேடி பிடித்தாள் ரோகிணி... தன் எம்.எல்.எம் பிசினஸுக்கு ஆள் சேர்க்க!

 - பெ.பாண்டியன்

vikatan

 

Edited by நவீனன்

  • தொடங்கியவர்
வரலாற்றில் இன்று: ஏப்ரல் 24
 
 

article_1429853558-babaaa.jpg1877: ஒட்டோமன் பேரரசுக்கு எதிராக ரஷ்யா யுத்தப் பிரகடனம் செய்தது.

1898: ஸ்பெய்னுக்கு எதிராக அமெரிக்கா யுத்தப் பிரகடனம்.

1904: லித்துவேனியாவில் 40 வருடங்களாக அமுலில் இருந்த ஊடகத் தடை நீக்கப்பட்டது.

1918: உலகில் முதல் தடவையாக இராணுவத் தாங்கிகளுக்குhன சமர், பிரான்ஸில் அமெரிக்க, ஜேர்மனிய படைகளுக்கிடையில் இடம்பெற்றது.

1926: 3 ஆவது நாடொன்று தாக்குதல் நடத்தும்போது நடுநிலை வகிப்பதற்கு இணங்கும் ஒப்பந்தத்தில் ரஷ்யாவும் ஜேர்மனியும் கையெழுத்திட்டன.

1967: சோயுஸ் 1 விண்கலத்தின் பரசூட் விரிய மறுத்ததால் சோவியத் விண்வெளி வீரர் விளாடிமிர் கொமாரோவ் அவ்விண்கலத்தில் இறந்தார்.

1968: ஐ.நாவில் மொரிஷியஸ் அங்கத்துவம் பெற்றது.

1970: சீனாவின் முதலாவது செய்மதி ஏவப்பட்டது.

1990: ஹப்பிள் விண்வெளி தொலைநோக்கி விண்வெளிக்கு ஏவப்பட்டது.

1993: இந்தியாவில் பஞ்சாயத்து அரசுத் திட்டம் அமைக்கப்பட்டது.

2005: உலகின் முதலாவது குளோனிங் நாயான ஸ்னப்பி, தென் கொரியாவில் பிறந்தது.

2006: நேபாள மன்னருக்கு எதிராக இடம்பெற்ற கலவரங்களை அடுத்து 2002இல் கலைக்கபட்ட நாடாளுமன்றத்தை மீள அமைக்க மன்னர் உத்தரவிட்டார்.

2007: பலாலி இராணுவத்தளம் மீது தமிழீழ விடுதலைப் புலிகளின் விமானங்கள் தாக்குதல் நடத்தின.

2011 : ஸ்ரீ சத்ய சாயி  பாபா இறையடி  எய்தினார்.

tamilmirror.lk

Edited by நவீனன்

  • தொடங்கியவர்

வெட்டிய மரத்தில் இருந்து உயிருடன் வெளிவந்த பாம்பு : வீடியோ

 

அமெரிக்காவில்  ஒருவர் தனது வீட்டின் பின்புறத்தில் இருந்த மரத்தை வெட்டியுள்ளார்.இரண்டு துண்டுகளாக வெட்டிய மரத்தின் மையப்பகுதியில் பாதியாக அறுபட்ட நிலையில் வெளிவந்த பாம்பு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மரத்தின் மையத்தில் ‘வைரம்’ என்றழைக்கப்படும் நடுப்பகுதியில் இருந்து மண்ணொளியான் பாம்பைப்போல் கறுகறுவென வெளியாகும் அந்த தலையில்லா பாம்பை பார்த்தவுடன் அந்த மரத்தை வெட்டியவர் பயத்தில் கூச்சலிடும் வீடியோ யூடியூப்பில் வெளியாகி நான்கே தினங்களில் சுமார் 80 இலட்சம் மக்கள் பார்த்து ரசித்துள்ளனர்.

virakesari.lk

  • தொடங்கியவர்

இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் சகலதுறை வீரரும், இந்நாளில் சர்வதேசக் கிரிக்கெட் நடுவர்களில் தலைசிறந்தவர்களில் ஒருவராகக் கருதப்படுபவருமான குமார் தர்மசேனவின் பிறந்தநாள்.
13092011_1031201546928539_18476534131790


Happy Birthday Kumar Dharmasena

  • தொடங்கியவர்

mallaiya1.jpg

இந்தியாவின் இரண்டு விலையுயர்ந்த பொருட்கள் லண்டனில்!

  • தொடங்கியவர்

கவுண்டமணி உடற்பயிற்சி கழகம்!

து கவுண்டமணியின் கலகல ஜிம். இங்கே நம்ம தலைவர்கள்தான் அவருக்கு கஸ்டமர்ஸ். ஒவ்வொருத்தரையும் பெண்டு கழட்டுகிறார் கவுண்டமணி. அப்போது அவரின் மைண்ட் வாய்ஸ் என்னவாக இருக்கும்?

சும்மா... தோணுச்சு பாஸ்!

p58a.jpg

 

p58b.jpg

 

p58c.jpg

 

p58d.jpg

vikatan

 

 

  • தொடங்கியவர்
 
 

வரலாற்றில் இன்று...

ஏப்ரல் - 25

 

710sarath-fonseka.jpg1898 : ஸ்பெயி­னுக்கு எதி­ராக ஐக்­கிய அமெ­ரிக்கா மீது போர்ப் பிர­க­டனம் செய்­தது.

 

1915 : முதலாம் உலகப் போர்: அவுஸ்­தி­ரே­லியா, பிரித்­தா­னியா, நியூ­ஸி­லாந்து மற்றும் பிரெஞ்சுப் படைகள் துருக்­கியின் கலிப்­பொ­லியை முற்­று­கை­யிட்­டனர்.

 

1916 : அயர்­லாந்தில் இரா­ணுவச் சட்­டத்தை ஐக்­கிய இராச்­சியம் பிறப்­பித்­தது.

 

1945 : ஹிட்­லரின் நாசி ஆக்­கி­ர­மிப்பு இரா­ணுவம் வடக்கு இத்­தா­லியில் இருந்து வில­கி­யது.

 

1960 : அமெ­ரிக்கக் கடற்­ப­டையின் யூ.எஸ்.எஸ்.ட்ரைட்டன் எனும் நீர்­மூழ்கி, நீரடிப் பய­ணத்தின் மூலம் உலகை சுற்றி வந்த முதல் நீர்­மூழ்­கி­யா­னது.

 

1966 : உஸ்­பெ­கிஸ்­தானின் தாஷ்கெண்ட் நக­ரத்தின் பெரும் பகுதி நில­ந­டுக்­கத்தால் அழிந்­தது. 300,000 பேர் வீடு­களை இழந்­தனர்.

 

1974 : போர்த்­துக்­கலில் 40 ஆண்­டு­க­ளுக்கு மேலாக ஆட்சி செய்த பாசிஸ அரசு கவிழ்க்­கப்­பட்டு ஜன­நா­யக ஆட்சி ஏற்­ப­டுத்­தப்­பட்­டது. அதன்பின் ஏப்ரல் 25 ஆம் திகதி போர்த்­துக்­கலில் சுதந்­திர நாளாக அனுஷ்­டிக்­கப்­ப­டு­கி­றது.

 

1982 : கேம்ப் டேவிட் ஒப்­பந்­தத்தின் அடிப்­ப­டையில் இஸ்­ரே­லியப் படைகள் முழு­வ­து­மாக சினாய் தீப­கற்­பத்தில் இருந்து வெளி­யே­றி­யது.

 

1983 : பய­னியர் 10 விண்­கலம் புளூட்டோ கிர­கத்தின் சுற்­றுப் ­பா­தையைத் தாண்டிச் சென்­றது.

 

1983 : ஹிட்­லரால் எழு­தப்­பட்­ட­தாகச் சொல்­லப்­படும் "ஹிட்­லரின் நாட்­கு­றிப்­புகள்" நூலின் முதல் பகு­தியை ஜேர்­ம­னியின் "ஸ்டேர்ன்" இதழ் வெளி­யிட்­டது.

 

1986 : சுவா­ஸி­லாந்தின் மன்­ன­னாக மூன்றாம் முசு­வாட்டி முடி­சூ­டினார்.

 

1988 : இரண்டாம் உலகப் போரில் இழைத்த குற்­றங்­க­ளுக்­காக ஜோன் டெம்­ஜா­னுக்கு இஸ்ரேல் மரண தண்­டனை விதித்­தது.

 

2005 : இத்­தா­லிய ஆக்­கி­ர­மிப்­பா­ளர்­களால் 1937 இல் திரு­டப்­பட்ட 1700 ஆண்­டுகள் பழ­மை­யான சதுர நினை­வுத்­தூ­பியின் கடைசித் துண்டு எதி­யோப்­பி­யா­வுக்கு கொண்­டு­வ­ரப்­பட்­டது.

 

2005 : ஜப்­பானில் ரயில் விபத்தில் 107 பேர் உயி­ரி­ழந்­தனர்.

 

2006 : கொழும்பில் இரா­ணுவத் தலை­மை­ய­கத்தில் தற்­கொ­லை­தா­ரி­யினால் மேற்­கொள்­ளப்­பட்ட குண்­டு­வெ­டிப்பில் அப்போதைய இராணுவத் தளபதி சரத் பொன்சேகா படுகாயமடைந்ததுடன் 9 பேர் உயிரிழந்தனர்.

 

2015 : நேபாளத்தில் ஏற்பட்ட 7.8 ரிச்டர் அளவிலான பூகம்பத்தினால் சுமார் 9,100 பேர் உயிரிழந்தனர்.

.metronews.lk/

Edited by நவீனன்

  • தொடங்கியவர்

13102647_1031639326884761_50144193455867

நடிகை மல்லிகா கபூரின் பிறந்தநாள்

  • தொடங்கியவர்

காட்சிப் பொருளாகிறது "தங்கத்தில் கழிப்பறை" பயன்படுத்தவும் முடியும்.!

 

1461263369588.jpg

அமெரிக்க நியூயார்க் நகரில் கக்கன் ஹேம் அருங்காட்சியகத்தில் 18 காரட் தங்கத்தால் ஆன கழிப்பறை விரைவில் நிர்மானிக்கப்பட உள்ளது. 

இதை பார்வையிடுவதற்கு மட்டுமின்றி பயன்படுத்தவும் அனுமதி அளிக்கப்பட உள்ளதாக அருங் காட்சியகத்தின் செய்தித் தொடர்பாளர் மொல்லி ஸ்டூவர்ட் தெரிவித்துள்ளார்.

மவுரிஸியோ கேட்டிலன் என்ற சிற்பக்கலைஞர் பணியிலிருந்து ஓய்வு அறிவிக்கும் முன் தனது இறுதிப் படைப்பாக இதனை வடிவமைத்துள்ளார்.

இந்தக் கழிப்பறைச் சிற்பத்தைப் பாதுகாக்க முழுநேர பாதுகாவலர் நியமிக்கப்பட உள்ளார்.

.virakesari.lk

  • தொடங்கியவர்

எழுத்துலகின் புரியாத ஞானி புதுமைபித்தன் - பிறந்த தின சிறப்பு பகிர்வு

புதுமைப்பித்தன் எனும் மாபெரும் மனிதன் எழுத்துலகில் தமிழ் நாட்டை மடைமாற்றியவர்.கரடுமுரடான நடையில் சிக்கிக்கொண்டு இருந்த தமிழ் கவிதையை பாரதி திசை திருப்பினான் என்றால்,சிறுகதையின் எல்லைகளை எளியவனின் திசை நோக்கி பரப்பியவர் இந்த திருநெல்வேலி திருமகன்.எள்ளலும் ,சுருட்டு வாசனையும் எப்பொழுதும் மிகுந்து இருந்த மாபெரும் அங்கதக்காரன்.எதை தவறு என பட்டாலும் உரக்க இடித்த எழுத்துலகின் புரியாத ஞானி.

இலக்கியம் என்று அவர் எளிய மக்களின் வாழ்வை சொல்வதையே நினைத்தார் .சீலைப்பேன் வாழ்வு போல காதல் கத்தரிக்காய் என இருநூறு ஆண்டுகாலம் இலக்கியத்தை தேங்க வைத்து விட்டார்கள் என அவர் கருதினார் .ஏழை விபசாரியின் வாழ்க்கை போராட்டத்தை,தான் பார்க்கிற எளிய மக்களின் வாழ்க்கையை பதிவு செய்வதை பெருமையாக கருதினார் .முடிவு தருவது தன்னுடைய வேலை இல்லை என்பது அவரின் பாணி
 

puthumaipithan.jpg

பெண்களின் அவல நிலையை காட்டுகிற இடங்களில் அவர் எழுதிய வரிகள் சுரீர் என்று தைக்கும் எடுத்துக்காட்டுக்கு “இருவரும் இருளில் மறைகிறார்கள், அம்மாளு முக்கால் ரூபாய் சம்பாதித்துவிட்டாள். ஆம் புருஷனுக்குப் பால் கஞ்சி வார்க்கத்தான். என்னமோ கற்பு கற்பு என்று கதைக்கிறார்களே! இதுதான், ஐயா, பொன்னகரம்!”

பரத்தை என ஒரு பெண்ணை சொல்கிற பொழுது  “நான் பரத்தையன்று. நான் ஒரு பெண். இயற்கையின் தேவையை நாடுகிறேன்”என சொல்கிறாள் .விதவைகளின் வாழ்க்கையின் அவலங்களையும் தொட்டு போகும் இவர்.சாஸ்திர சடங்குகளை இப்படி கேள்வி கேட்கிறார் “பெண்ணுக்கு இந்தச் சமூகத்தில் உரிமையே கிடையாதா? அவள் நிலைமை என்ன? சாம்ராஜ்யப் பிரஜையின் நிலைதானா? சமூகம் என்ன செய்ய முடியும்? வேதம் சொல்லுகிறது, தர்ம சாஸ்திரம் சொல்லுகிறது என்று பேத்திக் கொண்டிருக்கும்.............?” படிக்கிற பொழுது எந்த ஆயாசமும் தராமல் புதுமைப்பித்தன் உங்களை பிரமிக்க வைப்பார் ,நெல்லைத்தமிழை எளியவர்களின் மொழியை எழுத்தில் கொண்டு வந்ததும் அவரே தமிழின் முதல் அறிவியல் புனைகதை இவரின் கடவுளும்  கந்தசாமிப்பிள்ளையும் தான் என்பார் சுஜாதா .த்ரில்லர்,பேய்க்கதை என எத்தனையோ புதுப்புது முயற்சிகள் செய்த இவர் சினிமாவிலும் கொஞ்ச காலம் வேலை பார்த்தார் .

சிறுகதை என அவர் எழுதியது மட்டும் நூற்றியெட்டு வரும் என்கிறார்கள் .இதில் அவர் காலத்தில் வெளியானது ஐம்பதுக்கும் குறைவானதே .மொழிபெயர்ப்பிலும் தனிமுத்திரை பதித்த இவர் .இலக்கியத்தழுவல்களை சாடினார் –அதை இலக்கியத்திருட்டு என்றார் .பாசிஸ்ட் ஜடாமுனி,கப்சிப் தர்பார் என முசோலினி மற்றும் ஹிட்லரின் வாழ்க்கை வரலாறுகளை வார்த்தார் வேளூர் வெ.கந்தசாமிப் பிள்ளை  என்கிற பெயரில் கவிதைகளும் எழுதி உள்ளார் இவர் , நாடகம், சினிமா, எனவும் விரிந்து செயல்பட்டவர் .என்றாலும் சிறுகதையில் தான் இவரின் தனி முத்திரை தெரியும்

puthumaipithan1.jpgசந்திர பாபு தினமணி அலுவலகம் வந்த பொழுது தடுக்கி விழுந்தார் ,அவரை மருத்துவமனையில் சேர்த்து உதவினார் அங்கே  வேலைப்பார்த்து கொண்டிருந்த விருத்தாசலம் (புதுமைப்பித்தன் ) ”நீலப் பந்து என்ற கதையை நீங்கள் படித்திருக்கிறீர்களா? ஸ்டார் ரைட்டர் புதுமைப்பித்தன் எக்ஸலென்ட்டா டச்சஸ் கொடுத்து எழுதி இருக்கான்…” என்று சொல்லி இருக்கிறார் . தனக்கு புதுமைப்பித்தன் எழுதும் கதை, கட்டுரைகள் என்றால் உயிர் என்றும் கூடுதலாக சொன்ன பொழுதும் மனிதர் எந்த சலனமும் இல்லாமல் அமைதியாக இருந்து விட்டார் கொஞ்சநாள் கழித்து விஷயம் தெரிந்த பொழுது சந்திரபாபு அலறி அவரைப்போய் அவர் முன்னமே அவன் இவன் என்று விட்டேனே என்று புலம்பி இருக்கிறார் .

பல சமயங்களில் இவர் எழுத்தில் சாவகாசம் தெரியும் அப்படியே வாழ்க்கையை வாழ்ந்த மனிதன்.வறுமைக்கு யாவற்றையும் இழந்தும் தன்னை இழக்காத தன்மானன்."நெறைய படிக்கணும்,குறைவா எழுதணும்!" என்கிற இந்த மாமேதையின் வார்த்தைகள் தமிழ் சமூகத்தின் காதில் விழாமல் போனது வருத்தமான விஷயம் தான் !கடவுளைக்கூட காபி கிளப்புக்கு அழைத்துச் செல்லும் அபூர்வமான நையாண்டி கொண்ட எழுத்து புதுமைப்பித்தனுடையது. காசநோய் தாக்கி 42 வயதில் மரணமடைந்தார்  இந்த அபூர்வ கலைஞன்.தமிழ் சிறுகதையின் தந்தை என அறியப்படும் தென்னகத்து மாப்பசான் புதுமைப்பித்தனின் பிறந்த நாள் இன்று

 

vikatan

 

Edited by நவீனன்

  • தொடங்கியவர்

பலரும் அறிந்திராத சேலைத்தேர்

பலரும் அறிந்திராத சேலைத்தேர்

அண்மையில் லிந்துலை - சென்றெகுலர்ஸ் தோட்டத்தில் ஸ்ரீ முத்து மாரியம்மன் ஆலயத்தில் வருடாந்த தேர் திருவிழா உற்சவம் இடம்பெற்றது. இங்கு அமைக்கப்பட்ட “சேலைத்தேர்” பலரும் அறியாத ஒரு விடயமாகவே உள்ளது.

சேலைத்தேர் என்பது முழுதும் சேலைகளால் உருவாக்கப்பட்ட தேராகும். 1932ம் ஆண்டு அந்த தோட்டத்தில் வாழ்ந்த கருப்பண்ணன் என்ற தொழிலாளி ஒருவரினால் இது உருவாக்கப்பட்டது. இவர் கைக்கத்தி (கவ்வாத்துக்கத்தி) என்று சொல்லக் கூடிய கத்தியிலேயே இதனை வடிவமைத்து உள்ளார்.

இங்கு சேலைத்தேர் என்று அழைக்கப்பட்டாலும் இந்தியாவில் நாமக்கல் பிரதேசத்தில் “நாமக்கல்” தேர் என்றே அழைக்கப்படுகின்றது.

இந்த தோட்டத்தில் வாழும் பெரும்பாலான மக்கள் இந்தியாவில் பெரம்பத்தூர் மற்றும் நாமக்கல் பிரதேசங்களில் இருந்து இலங்கைக்கு வந்துள்ளனர். அதனால் அந்த பிரதேசங்களின் பண்பாடு சமய வாழ்க்கை மற்றும் கலாசாரங்கள் இங்கு உள்ளெடுக்கப்பட்டு வருகின்றன. இங்கு வாழும் ஒரு பெண் வருடத்தில் முதன்முதலாக எடுக்கும் சேலையை அம்மன் கோயிலுக்கு ஒதுக்கி விடுவார்களாம்.

அந்த சேலை திருவிழா காலங்களில் ஆலயத்திற்கு வழங்கப்படும். அவ்வாறு ஒரு தோட்டத்தில் 300 பெண்கள் இருந்தால் கிட்டதட்ட 200க்கும் மேற்பட்ட சேலைகள் ஆலயத்தை வந்தடைகின்றன.

பின் அவை வழங்கியவர்களின் பெயர்களுக்கு ஏற்ப அடையாளமிட்டு தேரை அலங்கரிக்கப் பயன்படுத்தப்படுகின்றன. முற்றிலும் இந்த வண்ண வண்ண சேலைகளின் மூலம் தேர் அலங்கரிக்கப்படுகிறது.

ஆணி பாவிக்கப்படுவதில்லை சனல்களினாலேயே கட்டப்படுகின்றன. தேரின் தூண்களுக்கு வர்ண பூச்சுக்கள் பூசப்படுவதில்லை. ஆரம்ப காலத்தில் இந்த தேரில் வைக்கப்பட்ட அம்மன் சிலையை தோட்டவாரியாக தூக்கிச் சென்று உலா வருதல் கடைபிடிக்கப்பட்டது. தற்போது ட்ரக்டர் வண்டி மூலம் கொண்டு செல்லப்படுகின்றது.

விழா முடிவுற்றதும் இந்த சேலைகள் குறித்தவர்களிடம் ஒப்படைக்கப்படுகின்றது.

adaderana.lk

  • தொடங்கியவர்

ஈஸி சார்ஜர்!

p43a.jpg

உலகின் மிகச் சிறிய செல்போன் சார்ஜரை நிப்பர் நிறுவனம் தயாரித்துள்ளது. கீ செயின் போல இருக்கும் இந்த சிறிய கருவியுடன் பேட்டரியை இணைத்தால் போதும். இதன் எடை 10 கிராம்தான். சாதாரண சார்ஜரைவிட 20 சதவிகிதம் அதிவேகமாக சார்ஜ் செய்யும் என்பது இதன் ஸ்பெஷல்.

 

 

 

 

உயரமான மலை!

p43b.jpg

உலகில், மிக உயரமான மற்றும் மிகப் பெரிய மலைகளில் சில, கடலின் அடியில் அமைந்துள்ளன. அவற்றில் ஒன்று, ஹவாய் தீவில் அமைந்துள்ள மவுனா கேய் (Mauna Kea). நீருக்குள் அமைந்துள்ள மிகப்பெரிய மலை இதுதான்.  பசுபிக் கடலில் அமைந்துள்ள இந்த மலையின் உயரம், கடலின் அடியிலிருந்து 33,474 அடிகள். கடலுக்கு மேலேயும்  13,796 அடி உயரத்துக்கு கம்பீரமாக நிற்கிறது மவுனா கேய்.

 

 

 

 

 

மிமிக்ரி பறவை!

p43c.jpg

ஆஸ்திரேலியாவின் கிழக்குப் பகுதிக் காடுகளில் காணப்படும் ஒரு விநோதப் பறவை, லயர் பேர்டு (lyre bird). இந்தப் பறவையின் வால் சிறகுகள், ‘லயர்’ என்ற இசைக் கருவியைப் போல இருப்பதால், இந்தப் பெயர்.

இதன் தோகை, 16 இறகுகள்கொண்டது. நடு இரண்டு இறகுகள், கம்பி போன்று நீண்டவை. வெளி இரண்டு இறகுகள் சிறிது அகலமானவை. மற்ற 12 இறகுகளும் நுண்ணிய பட்டு இழைகளால் செய்தது போல இருக்கும். ஆண் பறவை, சுமார் 80 முதல் 98 சென்டிமீட்டர்  நீளமும், பெண் பறவை 74 முதல் 84 சென்டிமீட்டர் நீளம் வரையும் இருக்கும். நகைச்சுவை நிகழ்ச்சிகளில் பல குரல்களில் பேசி அசத்தும் வித்தகர்களைப் போல இந்த லயர் பறவை, பல பறவைகள் மற்றும் சில உயிரினங்களின் குரல்களை ஒலித்து, கேட்பவர்களை ஆச்சர்யத்தில் மூழ்கடிக்கும்.

 

 

 

 

ஜொலிக்கும் பனி உலகம்!

p43d.jpg

நாம், சாதாரண பனிக்கே  தலை, காதுகளை மறைக்க விதவிதமான குல்லாய்களை  வாங்கி அணிந்துகொள்கிறோம். ஆனால், சீனாவின் குளிர்ப் பிரதேசமான ஹார்பின் நகரில், உடலை உறையவைக்கும் மைனஸ் டிகிரி குளிர் காலத்தில், பனிச்சிற்பத் திருவிழா நடக்கும். இந்தத் திருவிழாவில் பங்கேற்பதற்காக, சிற்பக் கலைஞர்களும் ரசிகர்களும் உலகம் முழுவதிலும் இருந்து ஆயிரக்கணக்கில் வந்து குவிவார்கள்.  இந்த ஆண்டும் ஜனவரியில் தொடங்கிய திருவிழா, ஒரு மாதம் வரை மக்களை குதூகலப்படுத்தியது. பனிச் சிற்பங்கள் பல வண்ணங்களில் நிஜத்தை விஞ்சும் அளவுக்கு மனதைக் கவர்ந்தன.

 

 

 

 

 

 

 

கால் முளைத்த மரங்கள்!

p43f.jpg

‘நடக்கும் மரம்’ என்று சொல்லப்படும் சொக்ரேட்டியா எக்ஸார்ஹிஸா, வெயிலைத் தேடி தினமும் இரண்டு செ.மீ நகர்ந்து செல்கின்றனவாம். இந்த மரங்களைக் காண்பதற்காகவே, சுற்றுலா பயணிகள் வந்து குவிகிறார்கள். லத்தீன் அமெரிக்காவில் உள்ள மழைக்காடுகளில் இந்த மரங்கள் உள்ளன. மரத்தின் வேர்கள் வெளிப்பக்கமாகத் தெரியும். புதிய வேர்கள் முளைத்ததும் பழையவை தானாகவே மடிந்துவிடும். புதிய வேர்கள் சுமார் 20 மீட்டர் வரை சென்று நிலத்தில் பதிவதால், மரம் இடம் பெயர்வதாகத் தெரிகிறது என்கிறார், தொல்லுயிரியியல் ஆராய்ச்சியாளர் பீட்டர் விசான்ஸ்கி.

vikatan

  • தொடங்கியவர்

13076834_1593970874252484_13595124237605

என்ன செய்ய? மரங்கள் ஆக்சிஜனைத் தானே தருகிறது.

  • தொடங்கியவர்

எரியும் நதி. ஆஸ்திரேலியாவின் குவீன்ஸ்லாந்தில் பரபரப்பு. சுருக்கமான கானொளி விளக்கம்

  • தொடங்கியவர்

சில செய்திகள்

 

p122a.jpg

உலகைக் காக்க நறுக்குனு நான்கு

கடந்த ஏப்ரல் 22-ம் தேதி, பூமி தினமாகக் கொண்டாடப்பட்டது. நாம் வாழும் உலகை, நமக்குப் பிறகும் அடுத்த தலைமுறை பயன்படுத்த, நாம் இதை அழிவில் இருந்து பாதுகாக்க வேண்டும். உலகைக் காக்க நான்கு வார்த்தையில் #SaveTheEarthIn4Words  ஐடியா சொல்லுங்கள் என யாரோ ஒருவர் ட்விட் கொளுத்திப் போட, ட்விட்டுகளைக் கொட்டினர் நெட்டிசன்ஸ். அதில் ஒருவர் இட்ட ட்விட் தவறானது என்றாலும், உலகைக் காக்க அது சிறந்த வழிதான் என்றனர் நெட்டிசன்ஸ். அது ‘எதைப்பற்றியும் யோசிக்காமல் மனிதர்களைக் கொன்றுவிடுங்கள்’. அவ்வளவு கொடுமை பண்ணி இருக்கோம் பூமிக்கு! இருந்தாலும் இவ்ளோ ஃபீலிங் ஆகாது!

மறுபடியும் வேதாளமா?

p122b.jpg

கடந்த தீபாவளியன்று வெளியான ‘வேதாளம்’ படத்தை, அவ்வளவு எளிதில் யாரும் மறந்துவிட முடியாது. ‘தெறி’ படத் தயாரிப்பாளருக்கும், திரை அரங்க உரிமையாளர்களுக்கும் ஏற்பட்ட சண்டையில், சில இடங்களில் ‘தெறி’ படம் வெளியாகவில்லை. சற்றும் மனம் தளராத சிலர், மீண்டும் ‘வேதாளம்’ படத்தை திரையிட, அப்போதும்  #ReturnOfVedalam என்று ட்ரெண்ட் அடித்து மரண மாஸ் காட்டியிருக்கிறார்கள் அஜித் ரசிகர்கள்.  உங்க மன தைரியத்தைப் பாராட்டி...

வாடா போடா ட்ரெண்டிங்ஸ்

ட்விட்டரில் தமிழ் மொழியில் ட்ரெண்ட் அடிக்கலாம் என்றதும், பல வார்த்தைகள் ட்ரெண்ட் அடிக்க ஆரம்பித்தன. திட்டுவதற்கு ஏதுவாக இருக்க, சங்கடமே படாமல், சில வார்த்தைகளை ட்ரெண்ட் அடிக்கின்றனர் நெட்டிசன்ஸ். கடந்த வாரம் மட்டும், #வாடா, #போடா , #சில்றப்பய போன்ற வார்த்தைகள் ட்ரெண்ட் அடித்தன. இதில் பாரபட்சமே இல்லாமல், எல்லா நாயகர்களின் ரசிகர்களும் இருக்கிறார்கள். இதெல்லாம் நல்லாவா பாஸ் இருக்கு?

தெர்ர்ர்ர்ர்ர்ர்றீ

p122c.jpg

‘தெறி’ படம் வெளியாகி ஒரு வாரத்தைக் கடந்துவிட்டது. சில இடங்களில் வெற்றிகரமாக படம் ஓடவும் செய்கிறது. செங்கல்பட்டு ஏரியாவில் படம் வெளியாகாவிட்டாலும், படம் நல்ல வசூல் எனத் தயாரிப்பாளர் தாணு, வசூலை ‘ரமணா’ பட விஜயகாந்த் பாணியில் பட்டியிலிட, டபுள் குஷி ஆனார்கள் விஜய் ரசிகர்கள். ஒரு வாரத்திற்குள், #TheriJoins100crClub என்ற டேக்கை வெளியிட்டு ஷாக் கொடுத்தனர் விஜய் ரசிகர்கள். 100 கோடி, நீ பார்த்தே?

நட்சத்திர கிரிக்கெட்

p122d.jpg

‘கட்டடத்தை மளமளனு கட்டி எழுப்புங்கலே’ என புரட்சித்தமிழன் சரத்குமார் ஒரு விளம்பரத்தில் சொல்வார். அதற்கு ஏற்றார் போல், ‘நானும் மதுரைக்காரன்தாண்டா, கட்டடத்தை கட்டியே தீருவேன்’ எனத் தன் முடிவில் மாறாமல் இருக்கிறார் புரட்சித்தளபதி விஷால், நட்சத்திர கிரிக்கெட் என்ற பெயரில், மாபெரும் கிரிக்கெட் போட்டியை விஷால் நடத்த, ஞாயிறு முழுவதும் தொலைக்காட்சியில் தமிழகமே  கிரிக்கெட் பார்த்தது. கடும் ஆரவாரத்தோடு இறங்கிய சூர்யா, டக் அவுட் ஆக, ஒரு ஓவரை ஒன்பது மணி நேரம் வீசினார் சூர்யாவின் தம்பி கார்த்தி. #natchathiracricket என்ற டேக்கில் தேசிய அளவில் ட்ரெண்ட் அடித்தனர் நம் ஹீரோக்கள். காமெடி ஆட்டம்!

ராம் கோபால் வர்மாவின் வஞ்சப்புகழ்ச்சி

p122e.jpg

இயக்குநர் ராம் கோபால் வர்மா போல் ட்விட்டரை ஜாலியாகப் பயன்படுத்துவது யாரும் கிடையாது. மேகி நூடுல்ஸைத் தடை செய்தபோது, தினமும் மேகி நூடுல்ஸ் செம டேஸ்ட் என நூடுல்ஸ் சாப்பிடுவதை போட்டோ எடுத்துப் போடுவார். எப்போதும், டோலிவுட் நடிகர் பவன் கல்யாணை நக்கல் அடிக்கும் ராம் கோபால் வர்மாவிற்கு, இந்த வாரம் சிக்கியது நம்ம ரஜினிகாந்த். ரஜினியைப் பற்றி சொன்ன கருத்துக்கு, ரஜினி ரசிகர்கள் பொங்கி எழ, இன்னும் அதிவேகமாய் ஓட்டித் தள்ளினார். உலக ஸ்டார்கள் மட்டும் அல்ல, பால்வெளி முழுக்க இருக்கும் ஒரே ஸ்டார் ரஜினிதான். பவன் கல்யாணைவிட ரஜினிக்குதான் லூசு ரசிகர்கள் அதிகம். என்னுடைய ஹிட் படங்களைவிட, ரஜினியின் ஃப்ளாப் படங்களை அதிகமுறை பார்த்தவன் நான். போன்ற ட்விட்டுகளை, தன் ஐ.டியில் @RGVzoomin கொட்டினார் வர்மா. இதெல்லாம் பாவம் பாஸ்!

1 லட்சம் லைக்ஸ் அள்ளிய ‘சுல்தான்’

p122f.jpg

சல்மான்கான் மல்யுத்த வீரராக நடிக்கும் திரைப்படம் ‘சுல்தான்’. ‘சுல்தான்’ படத்தின் டீசர் 1 லட்சம் லைக்குகள் பெற்றுவிட்டதை அடுத்து, சல்லுபாயின் ரசிகர்கள் #SULTAN1stTeaserWith100KLikes என்ற டேக்கை ட்விட்டரில் ட்ரெண்ட் அடித்தனர். கடுப்பான தல-தளபதி ரசிகர்கள், ஒரு லட்சம் எல்லாம் ஒரு சாதனையா என ஆரம்பிக்க, ‘நாங்க பாலிவுட்டுக்கு சொன்னோம், கோலிவுட் எல்லாம் திரைப்படமா’ என மல்லுக்கட்டினர் சல்லு ரசிகர்கள். ஒரு வழியாய் வேற டாபிக் கிடைக்க, ட்விட்டரில் பெரும் அசம்பாவிதம் தடுக்கப்பட்டது. மேய்க்கிறது எருமை, இதுல என்ன பெருமை?

இதெல்லாம் ரொம்ப ஓவர் கெயில்

அதிரடி ஆட்டக்காரரான கெயில், சமூக வலைதளங்களிலும் கொடூரத்தனமாக காமெடி செய்பவர். தற்போது ஐ.பி.எல் போட்டிகளில் விளையாடி வரும் கெயில், தன் குழந்தையைக் காண கடந்த வாரம் ஜமைக்கா பறந்தார். பிறந்த தன் மகளுக்கு ‘பிளஷ்’ என் பெயர் வைத்து இருக்கிறார் கெயில். ‘பிளஷ்’ என்றால் வெட்கப்படு என அர்த்தம். என் ‘பிளஷ்’ வெட்கப்பட மாட்டாள் என ஜாலியாய் ட்விட்டுகிறார். ‏@henrygayle என்ற ஐ.டி, உலக அளவில் ட்ரெண்ட் அடித்தது. வாழ்த்துகள்!

vikatan

  • தொடங்கியவர்

அயராத உழைப்பு!

 

p80b.jpg

றுபத்து ஆறு வயதிலும் தன் தளராத உழைப்பால் வெற்றிகரமான பிசினஸ் உமனாக செயல்பட்டு, ‘சபாஷ்’ போடவைக்கிறார், நந்தினி ஷர்மா. 1977-ம் வருடத்தில் 25 ஆயிரம் ரூபாய் முதலீட்டில்  ‘த்ரிவேணி எக்ஸ்போர்ட்ஸ்” என்ற பெயரில் ஆரம்பிக்கப்பட்ட  இவரது நிறுவனம், ஆரம்பத்தில் தோல் பொருட்களைத் தயாரிப்பதுடன் ஏற்றுமதியும் செய்துவந்தது. கால மாற்றத்தில், மக்களின் ரசனைக்கேற்ப `நஷா’ஸ் பெயின்ட்டர்ஸ் கார்டன்' என பெயர் மாற்றம் அடைந்து தற்போது கஸ்டமைஸ்டு கிஃப்ட் ஷாப்பாக சென்னை, தி.நகரில் இயங்கி வருகிறது. 40 வருடங்களாக பிசினஸில் வெற்றிநடை போட்டுக்கொண்டிருக்கும் பெண்மணியான நந்தினி ஷர்மாவிடம் பேசினோம்.

p80.jpg

``பிசினஸ் பண்ணணும்னு முடிவெடுத்த சமயத்துல தோல் பொருட்களோட விலை ரொம்ப அதிகமா இருந்துச்சு. குறைஞ்ச விலையில்  தரமான தோல் பொருட்களை உற்பத்தி செய்து கொடுத்தா நல்ல வரவேற்பு இருக்கும்னு எனக்கு தோணுச்சு. இதுக்காக, சில கனரக தயாரிப்பு இயந்திரங்களை இறக்குமதி செஞ்சேன். அதுக்கப்புறம்  எக்ஸ்போர்ட் புரமோஷன் கவுன்சிலின் உதவியுடன், ஜெர்மனி, அமெரிக்கா போன்ற நாடுகளுக்கு ஏற்றுமதி செய்தேன். ஆர்டர்கள் நிறையவே வர ஆரம்பிச்சது. எல்லா ஆர்டர்களையும் இழுத்துப் போட்டுக்கிட்டு செய்ய ஆரம்பிச்சேன்’’ என்னும் நந்தினி ஷர்மா பிசினஸில் தான் உணர்ந்த தவறு பற்றியும் பேசினார்.

``நமக்கு வர்ற ஆர்டர்களை மிஸ் பண்ணக் கூடாதுன்னு எல்லாத்தையும் கையில எடுத்தப்ப ஒன்றிரண்டு ஆர்டர்களை டெலிவரி செய்ய தாமதம் ஆகிடும். அப்படி நடந்துச்சுன்னா அது நமக்குதான் நஷ்டம். சரியான நேரத்துல பொருட்களுக்கான சரியான தொகை கிடைக்காம போயிடும். என் தவற்றை உணர்ந்து அதை நான் ஆரம்பத்துலயே சரிபண்ணிக்கிட்டேன்.

p80c.jpg

அதுக்கப்புறம்  உற்பத்தி வேலைகளை குறைச்சுக்கிட்டு, கார்ப்பரேட் கிஃப்ட்ஸ் செய்யலாம் என முடிவு செய்தேன். அதற்கு நல்ல மார்க்கெட்டும் இருந்தது. வங்கியின் உதவியுடன் என் கம்பெனியின் பொருட்களின் மேல் ஓவர்டிராஃப்ட் எடுத்து, தொழிலை மேம்படுத்தினேன். ஐந்தே ஆண்டுகளில் சென்னையில் இருக்கும் முன்னணி கார்ப்பரேட் கிஃப்ட் தயாரிப்பாளர்களோடு என்னுடைய  நிறுவனமும் போட்டியில் இறங்கியது. என்னுடையே சிநேகிதி வல்சா ஷ்யாம் சுந்தர் எனக்குத் துணையாக மார்க்்கெட்டிங் செய்ய முன்வந்தார்” என்று கூறியவர், தன்னுடைய கணவரின் பணி ஓய்வுக்குப் பிறகு, தன்னுடைய வேலைகளை கொஞ்சம் லேசாகக் குறைத்துகொண்டு, `நஷா’ஸ் பெயின் டர்ஸ் கார்டன்’ என்கிற கஸ்டமைஸ்டு கிஃப்ட் ஷாப்பை தொடங்கியிருக்கிறார்.  கண்கவர் கிஃப்ட் பொருட்களுடன் பல கஸ்டமர்களின் ஆதரவையும் தன்னகத்தே வைத்திருக்கும் நந்தினி ஷர்மா புதிதாக தொழில் தொடங்குவோருக்கு ஆலோசனை சொல்லும்போது,

``சிறு தொழில் செய்ய ஆரம்பிப்பவர் களுக்கு நான் சொல்வதெல்லாம் இந்த மூன்று விஷயங்கள்தான். தரம், நேரம் தவறாமை, மார்க்கெட்டிங்... ஆகியவற்றில் நீங்கள் கவனம் செலுத்தினால் வெற்றி நிச்சயம்’’ என்கிறார்  நம்பிக்கையூட்டும் விதமாக!

vikatan

  • தொடங்கியவர்

ஏப்ரல் 26: கணிதத்தின் துருவ நட்சத்திரம், கணித மேதை ராமானுஜன் நினைவு தின சிறப்பு பகிர்வு..

கணிதத்தின் துருவ நட்சத்திரங்கள் மிக அரிதானவர்கள் .அப்படி ஒருவர் ஸ்ரீனிவாச ராமானுஜன் .அப்பா ஒரு துணிக்கடையில் கணக்கர் ;மிக இளம் வயதிலேயே தவறி இருந்தார் .ஈரோட்டில் பிறந்தாலும் கும்பகோணத்தில் தான் பள்ளிகல்வி .பல நேரங்களில் பிள்ளையை அம்மா கோமளவல்லியால் கண்டுபிடிக்க முடியாது ,கோயிலில் சாக்பீஸ் கொண்டு வரைந்து கணக்கு போட்டுவிட்டு அதற்கான விடைகளை கனவில் தேடிய அற்புதம் அவர் .பூஜ்யத்துக்கு மதிப்பு இல்லை என ஆசிரியர் வகுப்பில் சொன்ன பொழுது ;பூஜ்யத்தை ஒரு எண்ணுக்கு பின்னாடி போட்டால் மதிப்பு வருகிறதே என கேட்ட பொழுது அவருக்கு வயது பத்துக்குள்

ramanujam1.jpg

அவருக்கு கணிதத்தின் மீது ஈடிலா ஆர்வம் வருவதற்கு ஒரு எளிய சம்பவம் காரணம் .,அவரின் நண்பன் சாரங்கபாணி நாற்பத்தி ஐந்துக்கு நாற்பத்தி மூன்று வாங்கியிருந்தார் .இவர் ஒரு மதிப்பெண் குறைவாக வாங்கி இருந்தார் ,அதனால் அவருடன் பேசுவதை நிறுத்திக்கொண்டு கணிதத்தில் கல்லூரி மாணவர்கள் படிக்கும் புத்தகத்தை படிக்க ஆரம்பித்தார் .லோனியின் மட்ட திரிகோணவியல் ஒரு நூல் ;இன்னொன்று காரின் சினாப்சிஸ் .இந்த நூலின் சிக்கல் இது கல்லூரி மாணவர்கள் மனப்பாடம் செய்து கொள்ள வேண்டிய அல்லது ஞாபகத்தில் வைத்துக்கொள்ள வேண்டிய சூத்திரங்கள்,தேற்றங்களை குறிப்பிட்டு இருக்கும் .எப்படி வந்தது என விளக்கம் இருக்காது . அதைப்படித்து தான் ராமானுஜன் தன் கணித தாகத்தை தணித்துக்கொண்டார் .அவரே அது எப்படி வந்தது என கண்டறிந்தார் .பேப்பர் வாங்க காசில்லாததால் ஸ்லேட்டில் கணக்குகளை போட்டு பார்த்து விட்டு முடிவுகளை மட்டும் நோட் புக்கில் எழுதினார் .குமபகோணம் அரசு கல்லூரியில் மூன்று முறை முயன்றும் ஆங்கிலத்தில் தேற முடியாமல் பட்டம் வாங்க முடியாமல்,பச்சையப்பா கல்லூரி போனார் .


அங்கே சிங்கார முதலியாரின் அறிமுகம் கிடைத்தது .இவரின் சூத்திரங்கள் அவரை கவர்ந்தன .எண்ணற்ற நூல்களை படித்தார் .சென்னை துறைமுகத்தில் எழுத்தராக சேர்ந்தார் ;இந்தியாவில் வந்த கணித இதழில் எண்ணற்ற கணக்குகளை வெளியிட்டு கொண்டிருந்த இந்திய கணிதக் குழுவை நிர்மாணித்த வி. ராமசுவாமி ஐயர் கண்ணில் இவரின் கணக்குகள் பட்டன ;கூடவே கிண்டி பொறியியல் கல்லூரியில் பயின்ற துறைமுக தலைவர் ஸர் பிரான்ஸிஸ் ஸ்பிரிங் கண்ணில் பட்டது .அவர் கிண்டி பொறியியல் கல்லூரி பேராசிரியர்களிடம் அறிமுகம் தந்தார் ,அவர்கள் இவரை கேம்ப்ரிட்ஜ் பல்கலைக்கு கடிதம் எழுத சொன்னார்கள் .

எண்ணற்ற நபர்களுக்கு இவரின் சூத்திரங்கள் போய் சென்றன.பலர் குப்பையில் போட்டார்கள் பயின்ற காட்பிரே ஹரால்ட்  ர்டிக்கு கடிதம் போனது .அதில் இருந்த வரிகள் இவை “எனக்குத் தேவை என்பதெல்லாம் ஒரே ஒரு வேளை உணவுதான். எனக்கு அதுவும் கிடைப்பது மிகஅரிதாக இருக்கிறது. ஆகவே, தாங்கள் எனது கணித முயற்சிகளைப் பிறர் அறிய எழுதினால் நல்லது. ஏனெனில், என் நிலைமையை அறிந்து பல்கலைக்கழகமோ அல்லது அரசோ ஏதேனும் உதவிசெய்ய முன்வரக் கூடும். இதனால் எனது வறுமை சற்று நீங்குவதுடன், கணித ஆராய்ச்சிகளைத் தொடர்ந்து செய்ய உற்சாகம் ஏற்படும்”

ஜனவரி பதினாறு அன்று 1913 இல் அக்கடிதம் ஹார்டியின் கைக்கு போனது; எதோ கிறுக்கல் என நினைத்து முதலில் எடுத்து வைத்த ஹார்டி இரவு படிக்கும் பொழுது மெய்சிலிர்த்து போனார்; இரவெல்லாம் தூக்கத்தை தொலைத்து ஒரு இணையற்ற கணித மேதையை கண்டுவிட்டதற்கு பூரித்தார். உடனே ராமானுஜத்தை கேம்பிரிட்ஜ் வரும்படிக் கடிதம் எழுதி அழைப்பு விடுத்தார்.

அங்கே ஓயாமல் பல்வேறு எண் கோட்பாடுகளில்,செறிவெண் சார்ந்தும் அவரின் ஆய்வுகள் பிரமிப்பானவை ;அவரின் தேற்றங்கள் கண்டுபிடிப்புகள் பள்ளி பாடப்புத்தகங்களில் இடம் பெறும் அளவுக்கு எளிமையானவை இல்லை .அவரின் பல கணித தேற்றங்கள் இன்றைக்கு [Computer Algorithmsல் பயன்பட்டு சிக்கலான கணிதச் சிக்கல்களைத் தீர்க்கப் பயன்படுகின்றன.. ramanujam3.jpgஎண்கோட்பாடுகளிலும் (number theory), செறிவெண் (complex number) கோட்பாடுகளிலும் இவர் கண்டுபிடித்துக் கூறியவை இன்று அடிப்படை இயற்பியற் துறை முதல் மின்தொடர்புப் பொறியியல் துறை வரை பல துறைகளில் உயர்மட்டங்களில் பயன்படுத்தபபட்டு வருகின்றன.

அத்தோடு அவரின் எல்லையற்ற திறமையை கண்டு வியந்து அவருக்கு இன்றைய முனைவர் பட்டத்துக்கு இணையான பட்டத்தை ட்ரினிட்டி கல்லூரி வழங்கியது .ராயல் சொஸைட்டியில் அவரை பெல்லோவாக சேர்த்துக்கொண்டார்கள் . ராமானுஜத்தை தொடர்ந்து கொண்டாடிய ஹார்டியின் வரிகளில் “எனக்கு 25 மதிப்பெண்ணும், தலைசிறந்த ஜெர்மன் கணித வல்லுநர் டேவிட் ஹில்பெர்ட்டுக்கு 80 மதிப்பெண்ணும், சந்தேகமே இல்லாமல் ராமானுஜனுக்கு 100 மதிப்பெண்ணும் வழங்குவேன் “என்றார்.

அவரின் பல்வேறு படைப்புகள் பல நோட் புத்தகங்களில் இருந்தன .அவற்றை கண்டு பிடித்து எடிட் செய்யும் வேலையை  ர்ஜ் ஆண்டிரூஸ், புரூஸ் பெர்ண்ட் எனும் இரண்டு அறிஞர்கள் செய்து வருகிறார்கள் .ப்ரூஸ் பெர்ண்ட் என்ன சொல்கிறார் என்றால் ,”கிட்டத்தட்ட இரண்டாயிரம் முடிவுகளை இதுவரை அவரின் நோட்களில் கண்டு இருக்கிறோம் .இதில் தொன்னூறு சதவிகிதம் துல்லியமாக இருக்கிறது .இவ்வளவு வெற்றி விகிதம் எந்த கணித மேதைக்கும் இல்லாதது !”என்கிறார் “அவரின் கணித முடிவுகள் ஆய்லர்,ஜகோபி போன்ற கணித மாமேதைகளுக்கு இணையாக ஒப்பிடும் தரத்தில் இருந்தது” “என்றும் ஹார்டி கூறியுள்ளார்.

ராமானுஜம் காசநோயால் முப்பத்தி மூன்று வயதில் மரணம் அடைந்தார் .அப்பொழுது அவருக்கு நிகழ்ந்தது பெருங்கொடுமை . கடல் கடந்து போனதற்காக அவரை ஜாதி விலக்கு செய்திருந்தார்கள் . அவர் மரணத்தின் பொழுது இறுதிச் சடங்குகளைச் செய்ய மறுத்தார்கள். அன்றைய ஹிந்து இதழ் ஆசிரியரின் முயற்சியால் ஒருவர் சடங்கு செய்ய முன்வந்தார். மொத்தமாகவே ஆறேழு பேர்தான் சுடுகாடு வரை சென்றார்கள். காலங்கள் கடந்தாலும் மேதைகளுக்கு இதுதான் நிலைமை போலும்

ஆங்கிலத்தில் தேறாமல் இந்தியாவை விட்டு கிளம்பி தன் அறிவு வெளிச்சத்தால் கணித உலகின் துருவ நட்சத்திரமாக திகழும் ராமானுஜத்தின் நினைவு நாள் இன்று.

vikatan

  • தொடங்கியவர்
வரலாற்றில் இன்று: ஏப்ரல் 26
 
 

article_1430050240-pattithidal.jpg1942: சீனாவில் இடம்பெற்ற சுரங்க விபத்தொன்றில், 1549 பேர் உயிரிழந்தனர்.

1956: உலகின் முதலாவது கொள்கலன் கபப்லான எஸ்.எஸ். ஐடெக்ஸ் எக்ஸ், அமெரிக்காவின் நியூஜேர்ஸி நகர துறைமுகத்திலிருந்து புறப்பட்டது.

1960: ஏப்ரல் புரட்சியின் காரணமாக, தென்கொரிய ஜனாதிபதி சிங்மன் றீ ராஜினாமா செய்தார்.

1962: நாஸாவின் ரேஞ்சர் -4 விண்கலம் சந்திரனின் மீது மோதியது.

1963: லிபியாவில் அரசியலமைப்பு திருதத்தப்பட்டது. பெண்களும் தேர்தலில் பங்குபற்ற அனுமதிக்கப்பட்டனர்.

1964: தான்கானிகா மற்றும் ஸான்ஸிபார் நாடுகள் ஒன்றிணைந்து தான்ஸானியா நாடு உருவாக்கப்பட்டது,

1986: சோவியத் யூனியனின் செர்னோபில் அணுஉலையில் பாரிய வெடிப்பு ஏற்பட்டது. உலகின் மிக மோசமான அணுஉலை விபத்து இதுவாகும்.

1977: தந்தை செல்வா காலமானார்.

1981: மட்டக்களப்பு, பட்டித்திடல் வயலில் வேலை செய்துகொண்டிருந்த 16 தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டனர்.

1982: தென் கொரியாவில் முன்னாள் காவல்துறையினன் ஒருவன் துப்பாக்கிச் சூடு நிகழ்த்தியதில் 57 பொது மக்கள் கொல்லப்பட்டனர்.

1986: உக்ரைனில் செர்னோபில் அணுமின் உலையில் பெரும் விபத்து ஏற்பட்டது. உலகின் மிகப்பெரும் அணுவுலை விபத்து இதுவாகும்.

1989: பங்களாதேஷில் டோர்னடோ சுழல்காற்றின் காரணமாக 1300 பேர் பலியாகினர்.

1994: சீன விமானமொன்று ஜப்பானில் விபத்துக்குள்ளானதால் 271 பயணிகளில் 264 பேர் பலியாகினர்.

1994: உச்சி குவார்க் (Top Quark) உபஅணுத் துணிக்கை ஓன்றைத் தாம் அவதானித்ததாக இயற்பியலாளர்கள் அறிவித்தனர்.

2005: 29 ஆண்டுகால இராணுவ ஆக்கிரமிப்புக்குப் பின்னர் சிரியா தனது 14,000 இராணுவத்தினரை லெபனானில் இருந்து முற்றாக விலக்கிக் கொண்டது.

.tamilmirror.lk/

Edited by நவீனன்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.