Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இளமை புதுமை பல்சுவை

Featured Replies

  • தொடங்கியவர்
வரலாற்றில் இன்று: ஏப்ரல் 28
 
 

article_1430207941-Sivaram300.jpg1792: ஆஸ்திரிய நெதர்லாந்து (தற்போதைய பெல்ஜியம்) மீது பிரான்ஸ் படையெடுத்தது.

1920: சோவியத் யூனியனுடன் அஸர்பைஜான் இணைக்கப்பட்டது.

1930: முதலாவது இரவுநேர கூடைப்பந்தாட்டப்போட்டி அமெரிக்காவின் கான்ஸாஸ் நகரில் நடைபெற்றது. 1932: மனிதர்களின் மஞ்சள் காமாலை நோய்க்கு தடுப்பூசி கண்டுபிடிக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டது.

1945: இத்தாலிய சர்வாதிகாரி பெனிட்டோ முசோலினியும் அவரின் சாதலியும் கிளர்ச்சியாளர்களால் கொல்லப்பட்டனர்.

1952: இரண்டாவது சீன – ஜப்பானிய யுத்தத்தை முடிவுக்கு கொண்டுவருவதற்கான சீன – ஜப்பானிய சமாதான ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்டது.

1969: பிரெஞ்சு ஜனாதிபதி சார்ள்ஸ் டி கோல் ராஜினாமா செய்தார்;.

1970: வியட்நாமில் கம்யூனிஸ்ட் கிளர்ச்சியாளர்களுக்கு எதிராக போரிடுவதற்கு அமெரிக்கத் துருப்புகளுக்கு அமெரிக்க ஜனாதிபதி ரிச்சர்ட் நிக்ஸன் அதிகாரிமளித்தார்.

1978: ஆப்கானிஸ்தான் ஜனாதிபதி மொஹமட் தாவூத் கான், கம்யூனிஸ்ட் சார்பு கிளர்ச்pயாளர்களால் சதிப்புரட்சியொன்றில் பதவி கவிழ்க்கப்பட்டு, கொல்லப்பட்டார்.

1995: பலாலியில் அவ்ரோ விமானம் சுட்டு வீழ்த்தப்பட்டது. இதற்கு அடுத்த நாள் இன்னுமொரு விமானம் வீழ்த்தப்பட்டது.

1996: அவுஸ்திரேலியா, தாஸ்மேனியாவில் "மார்ட்டின் பிறையன்ட்" என்பவன் துப்பாக்கிச் சூடு நடத்தியதில் 35பேர் கொல்லப்பட்டு 37பேர் காயமடைந்தனர்.

2000: இலங்கை இராணுவத்தினருக்கு எதிரான விடுதலைப் புலிகளின் ஓயாத அலைகள் மூன்று நடவடிக்கை முடிவுக்கு வந்தது.

2001: அமெரிக்க கோடீஸ்வரர் டென்னிஸ் டிட்டோ முதலாவது விண்வெளி சுற்றுலா பயணியானார்.

2005: பிரபல ஊடகவியலாளர் தர்மரத்தினம் சிவராம் கொழும்பில் கடத்தப்பட்டு சுட்டுக்கொல்லப்பட்டார்.

2008: சீனாவில் ஷான்டோங் நகரில் ரயில் விபத்தொன்றில் 72 பேர் பலியாகினர்.

tamilmirror.lk

Edited by நவீனன்

  • Replies 11.3k
  • Views 1.5m
  • Created
  • Last Reply
  • தொடங்கியவர்

13071848_1033415506707143_26531150560618

ஈராக்கின் முன்னாள் அதிபர் காலஞ்சென்ற சதாம் ஹுசெய்ன் பிறந்த நாள்.
கிட்டத்தட்ட கால் நூற்றாண்டு ஈராக்கை ஆண்ட தலைவர்.

 

Edited by நவீனன்

  • தொடங்கியவர்

எண்களில் புகுந்து விளையாடி ஆச்சரியப்படுத்தும் சிறுவன்

  • தொடங்கியவர்

வெல்வெட் கேக், ஆர்டினரி கேக் ரெண்டும் பார்சல் சமந்தாவுக்கு!! #HBDSamantha

600pix.jpg

தமிழ்நாட்டு இளைஞர்கள் தம் காதலிகளை 'அம்மு' எனக் கொஞ்சியது போய் 'சம்மு' எனக் குழையவைத்த அழகு தேவதை சமந்தா. ஆர்ட்ஸ் காலேஜில் படித்துக்கொண்டே மாடலிங் செய்துகொண்டிருந்த பெண் ரவிவர்மனின் கண்களில் சிக்கி 'மாஸ்கோவின் காவிரி' படத்தில் வாய்ப்பு பெற்று இன்று டாப் ஹீரோயின். வடநாட்டு நாயகிகளையே கொண்டாடும் தமிழ் ரசிகர்களுக்கு நம்ம ஊர் நடிகை ஏக்கத்தைத் தீர்க்க வந்த பக்கா பல்லாவரம் பொண்ணு இந்த சமந்தா.

சென்னைப்பெண்ணாக இருந்தாலும் சமந்தா பேசப்பட்டது என்னவோ தெலுங்குத் திரையுலகின் மூலம் தான். 2010 ல் நம்மூர் இளைஞர்களின் காதல் படமான 'விண்ணைத்தாண்டி வருவாயா'வின் ஒரிஜினலான 'ஏ மாய சேசாவே' தெலுங்குப் படத்தில் 'ஜெஸ்ஸி'யாக அறிமுகமானார். நாயகனை விட இரு வயது மூத்தவராக, படம் முழுக்க மெச்சூர்ட் டைப் பெண்ணாக வரவேண்டும். திருமணம் செய்துகொள்ள விருப்பமிருந்தாலும் கூட தன் குடும்பத்தினருக்கு பிடிக்காது எனும் காரணத்தினால் விலகி விலகிப் போகும் ஒரு பெண்ணின் காதல் தான் கதை. காதல், குடும்பம் இரண்டில் எதுவெனத் தீர்மானிக்கும்  இடங்களில் வசனத்தை விடவும் முகபாவம் மிக முக்கியம். அதைத் திறம்படச் செய்திருப்பார் சமந்தா.

பின்பு, 'பாணா காத்தாடி' படத்தின் மூலம் மீண்டும் தமிழுக்குத் தலைகாட்டிய சமந்தா  அதன்பின்னர் 2012 ல் 'நீதானே என் பொன்வசந்தம்' திரைப்படத்தில் நித்யா எனும் பாத்திரத்திற்கு உயிர் கொடுத்தார். ஜீவாவுடன் கலகலவென காதலிப்பதாகட்டும், ஈகோ மோதலில் டூ விட்டுப் பிரிவதாகட்டும், குறும்புப் புன்னகையோடு கண்களால் ஜீவாவைத் தேடுவதாகட்டும். எல்லாக் காட்சிகளிலும் ரசிக்க வைக்கும் சமந்தா சோ க்யூட். படத்தின் இறுதிக்காட்சிகளில் ஜீவாவின் திருமண ரிஷப்சனில் கலந்துகொண்டு சமந்தா கலங்கும் இடத்தில் நம் மனதையும் கல்லாக்கிக் கொண்டுதான் பார்க்க வேண்டும். அத்தனை எக்ஸ்ட்ரெசன்களையும் அநாயசமாகத் தன் கண்களால் வெளிப்படுத்தியிருப்பார்.

sidestill.jpgசமந்தா வித்தியாசமான கதாபாத்திரங்களில் நடித்திருந்தாலும் பெரும்பாலானோரால் நினைவுகொள்ளப்படுவது 'நான் ஈ - பிந்து'வாகத் தான். நானியை புறக்கணிப்பது போல் நடித்துக் கொண்டே அவரை காதலிக்கிறேன் என்ற வார்த்தையை நடப்பது அறியாமல் சொல்கின்றவரையிலும் அவரது பாவனை அத்தனையும் அசத்தல் ரகம். நானியின் ஒவ்வொரு கமெண்ட்டுக்கும் சமந்தா கொடுக்கிற ஆக்சன் சூப்பர்ப்.. அதிலும் குறிப்பாக கோவிலில், “நான் அவளுக்கு ரொம்ப ஸ்பெஷல்..” என நானி சொல்லும்போது  சமந்தாவின் ரியாக்சனை பார்க்கணுமே..? யப்பா!!

இதேபோல, சுதீப்பை திடீரென்று தனது அலுவலகத்தில் பார்த்தவுடன் அதிர்ச்சியாகும் காட்சியில் அவரது முகம் மனதின் பயம் சொல்லும். அதற்குப் பிறகும் பல வித்தியாசமான கதாபாத்திரங்களாலும், நடிப்பாலும் பட்டையைக் கிளப்பிக்கொண்டிருக்கிறது இந்த பல்லாவரம் பால்கோவா.

'பத்து எண்றதுக்குள்ள' திரைப்படத்தில் வாளெடுத்து சுழற்றும் கடுமையான வேடம் ஒன்று, அதற்கு நேர் எதிரான குறும்புத்தனமான க்யூட் சமந்தா கேரக்டர் மற்றொன்று என டபுள் ஆக்ஷன் ட்ரீட் கொடுத்தார். எதிரில் இருப்பவர்களைப் புகைப்படம் எடுப்பதாகச் சொல்லி தன்னையே படம்பிடித்துக்கொள்ளும் காட்சி, விக்ரம் லேஸ் பாக்கெட்டைப் பிரித்ததும் சட்டென விழித்து அதைப் பறித்துத் தின்னும் காட்சி, நிறைமாதக் கர்ப்பிணியாக நடிக்கும் காட்சியில் "இருந்தாலும் உன் பையன் ரொம்பத்தான் துள்ளுறான்.." எனச் சொல்லும்போதும் பப்ளி அண்ட் லவ்லி சமந்தாவாக டோட்டல் ஸ்கோர் செய்திருப்பார். 'நான் ஈ - பிந்து' விற்கும் இந்த ஷகீலா கேரக்டருக்கும் ஆறென்ன? ஆயிரம் வித்தியாசங்கள் கண்டுபிடிக்கலாம்! இரண்டிலும் செஞ்சுரி ஸ்கோர் நடிப்பை வழங்கியிர

இவர் வாங்கிய ஃப்லிம்ஃபேர் விருதுகளும், நந்தி விருதும் இவரது சோ க்யூட் புன்னகைக்கு முன்பு ஒன்றுமே இல்லை. தமிழ் சினிமாவில் தற்போது சமந்தா காற்று தீவிரமாக வீசுகிறது. பிந்து, ஷகீலா என்று கதாபாத்திரங்களில் கலக்கிய சமந்தா, மித்ராவாக விஜய்யுடனுடம் தெறிக்கவிட்டார். அடுத்து சூர்யா, விஜய் சேதுபதி  என முன்னணி ஹீரோக்களுடன் வரிசையாகப் பட வாய்ப்புகள் குவிந்துகொண்டிருக்கிறது. அடுத்த வருடம் வரை அம்மணி அம்புட்டு பிஸி.

நடிப்பில் மட்டுமல்லாமல் சமூக சேவைகளில் மிகுந்த அக்கறையுள்ள சமந்தா விளம்பரங்கள் மற்றும் தொடக்கவிழா நிகழ்வுகளில் பங்கேற்பதால் கிடைக்கும் பணத்தை தனது அறக்கட்டளையின் மூலம் 'ப்ரதியுஷா' அமைப்பிற்காக வழங்குகிறார்.

600inside.jpg

2015 ஆம் ஆண்டு முதல் ஆந்திரா ஹாஸ்பிட்டல்ஸில் அதிதீவிர சிகிச்சை பெறும் 21 வயதுக்கு உட்பட்டவர்களில் வாரம் ஒருவரது மருத்துவ செலவில் மூன்றில் ஒரு பங்கினை சமந்தா ஏற்றுக்கொண்டுள்ளார். அதன்பின்னர், ஆறு மாதங்களுக்கு உட்பட்ட எல்லாக் குழந்தைகளின் தடுப்பூசி செலவுகளையும் தான் வழங்குவதாகத் தெரிவித்தார். மேலும், சென்னை, மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டபோது பல்லாவரம் மற்றும் அதைச்சுற்றியுள்ள பகுதிகளின் மீட்புப் பணிகளுக்காக முப்பது லட்சம் ரூபாய் அளித்து சமந்தா ஆல்வேஸ் சமர்த்து என சொல்லாமல் சொல்லிக்கொண்டிருக்கிறார். இப்படி ஸ்டாரென்ற பந்தா இல்லாமல், சத்தமில்லாமல் பல சமூக சேவைகளும் செய்துவரும் இவருக்கு வெல்வெட் கேக், ஆர்டினரி கேக் இரண்டுமே பார்சலாகக் கொடுக்கலாம். முகம் முழுக்க, அவரது டிரேட் மார்க் புன்னகையோடு வாங்கிக் கொள்வார்!

ஹேப்பி பர்த்டே டு லவ்லி பேபி சம்மு!

vikatan

13072806_1033407203374640_88130028813799

  • தொடங்கியவர்

வாட்சன் பாட, கோலி- கெய்ல் ஆடிய கலக்கல் வீடியோ!

பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணி வீரர்களுக்கு அளிக்கப்பட்ட விருந்தில் கேப்டன் கோலி, அதிரடி மன்னன் கிறிஸ் கெய்ல், வாட்சன் உள்ளிட்ட வீரர்கள் பங்கேற்றனர். அப்போது, வாட்சன் பாட, கோலி- கெய்ல் கலக்கல் டான்ஸ் போட்டினர். அதன் கலக்கல் ஆட்டம் போட்ட வீடியோவை காண..

 

 

  • தொடங்கியவர்

13072894_1033426190039408_82845420985561

இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர், உலகின் மிகச் சிறந்த அணித் தலைவர்களில் ஒருவராக இன்றும் கருதப்படும் மைக் ப்ரியர்லியின் பிறந்தநாள்.
Happy Birthday Mike Brearley

  • தொடங்கியவர்

ஆள் பாதி ஆப்ஸ் பாதி!

 

p54a.jpg

த்துல தூண்டிலை வீசிக் காத்திருந்து மீன் பிடிச்ச அனுபவம் எத்தனைபேருக்கு இருக்கும்னு தெரியாது. இப்பெல்லாம் ஆறே இருக்கானு தெரியாதுங்கிறீங்களா... ரைட்டு! ஆனா, மீன் பிடிக்கிறது கொஞ்சம் ஜாலியான அனுபவம்தான். மீன் தூண்டியலைக் கவ்வியதுமே தூக்கிப்பிடிச்சு கரைக்கு கொண்டுவந்துட்டா, கெத்து காட்டலாம். மீன் உஷாராகி உதறிட்டு ஓடிடுச்சுன்னா சுத்தி நிற்குற கூட்டம் சிரிக்கும். சரி, அதெல்லாம் இப்போ எதுக்கு? ஆறும் இல்லை. ஆத்துல மீனும் இல்லை. ஆனாலும், மீன் பிடிக்கணும்னு ஆசையா இருக்கா? இந்தா பிடிங்கனு கொடுக்குது ‘ஐ ஃபிஷ்ஷிங் ஃபிளை ஃபிஷ்ஷிங்’ என்ற ஆண்ட்ராய்டு அப்ளிகேஷன்.

p54b.jpg

இது ஒரு கேம் அப்ளிகேஷன். இன்ஸ்டால் செய்ததும், மொபைலிலேயே ஆறு தெரியும். தூண்டிலும் தெரியும். இரு கைகளுக்கும் நடுவில் மொபைலைப் பிடித்து, தூண்டிலை வீசுவதாகவே நினைத்துக்கொண்டு வெடுக்கென வீசினால், தூண்டில் ஆற்றில் விழும். சில நொடிகள் கழித்துத் தெரியும் சிறிய சலனத்தைச் சரியாகப் பயன்படுத்திக்கொண்டு, மீண்டும் மொபைலைத் தூண்டிலாகவே நினைத்துக்கொண்டு வெளியே இழுத்தால், உங்களுக்கு மீன் நிச்சயம். அதுக்குத் தகுந்த ‘ஸ்கோரும்’ நிச்சயம்!

p54c.jpg

விளையாட்டு அப்ளிகேஷனாக இருந்தாலும், தத்ரூபமாகவே ‘மீன் பிடிக்கலை’யைக் கற்றுத் தரும் முயற்சி என்பதால், விளையாடும்போது மொபைலை வலது, இடது, மேல், கீழ்.. என நாலாபுறமும் ஆட்டிக்கொண்டிருக்க வேண்டிய சூழ்நிலை வரும். மீன் சிக்காத கடுப்பில் மொபைலைத் தூக்கியெறியும் சூழ்நிலையும் வரும். எனவே, டென்ஷன் பார்ட்டிகள் மீன் பிடிப்பதைத் தவிர்க்கவும். ஆனால், ஜாலி பார்ட்டிகளுக்கு ‘செம என்ஜாய்’ அப்ளிகேஷன் இது. மொத்தமாக வட்டம் போட்டு உட்கார்ந்தால், போட்டி போட்டுக்கொண்டு ஆடலாம். ஒரே லொக்கேஷனில் மீன் பிடிக்கக் கடுப்பாக இருந்தால், அருவி, நீரோடை, மலைப்பகுதி, பனிப்பிரதேசம், குளம் என ‘செட்டிங்’கை மாற்றிக்கொண்டும், மீன் பிடிக்கலாம். தூண்டில்போடும் கொக்கியையும் விதவிதமாக மாற்றிக்கொள்ளலாம்.

p54d.jpg

மொத்தத்துல, நீங்க மீன் பிடிக்கணும், அவ்வளவுதான்!

vikatan

  • தொடங்கியவர்
கைகள் இல்லாத வாடிக்கையாளருக்கு தானே உணவூட்டிய உணவக ஊழியர்
 

1629132.jpgஅமெ­ரிக்­கா­வி­லுள்ள உண­வ­க­மொன்றின் ஊழியர் ஒருவர், கைகல் அற்ற வாடிக்­கை­யாளர் ஒரு­வ­ருக்கு உண­வூட்டி பலரின் மனதை நெகிழ வைத்­துள்ளார். 

 

22 வய­தான அலெக்ஸ் ரூயிஸ் எனும் இந்த ஊழியர், ஜோர்­ஜியா மாநி­லத்தின் டக்­ளஸ்­வில்லே நக­ரி­லுள்ள உணவு விடு­தி­யொன்றில் பணி­யாற்­று­கிறார்.

 

அண்­மையில் இவர் வாடிக்­கை­யாளர் ஒரு­வ­ருக்கு உண­வூட்­டிக்­கொண்­டி­ருந்­த­போது மற்றொரு வாடிக்­கை­யாளர் அக் ­காட்­சியை படம்­பி­டித்து இணை­யத்தில் வெளி­யிட்­டுள்ளார். 

 

அலெக்ஸ் ரூயிஸ் உணவூட்டிய சாரதி கைகள் அற்­றவர் எனவும் அவர் அந்த உணவு விடு­தியின் வழக்­க­மான வாடிக்­கை­யா­ளர்­களில் ஒருவர் எனவும் தெரி­விக்­கப்­ப­டு­கி­றது.

 

மேற்­படி வாடிக்­கை­யா­ள­ருக்கு 30 நிமி­டங்­க­ளுக்கு மேலாக முழு உண­வையும் தானே ஊட்­டினார். இடையில் ஒரு தட­வை­கூட அவர் மேசை­யி­லி­ருந்து எழ­வில்லை அவ்­ வி­டு­தியில் பணி­யாற்றும் மற்­றொரு ஊழி­ய­ரான கிறிஸ்டல் பிகு­வேரா எனும் பெண் தெரி­வித்­துள்ளார். 

 

இந் ­ந­ட­வ­டிக்­கைக்­காக அலெக்ஸ் ரூயிஸை பலரும் புகழ்ந்­துள்­ளனர். ஆனால், மேற்­படி வாடிக்­கை­யாளர் உணவு உண்­ப­தற்கு உதவி கோரி­யதை தான் செவி­ம­டுத்­த­தை­ய­டுத்து அவ­ருக்குத் தான் உதவியாக கூறியுள்ளார். “சரியானதை நான் செய்தேன் அவ்வளவு தான்” என்கிறார் அலெக்ஸ் ரூயிஸ், பணிவுடன்.

.metronews.lk

Edited by நவீனன்

  • தொடங்கியவர்

13055097_1033425220039505_72746291174318

பிரபல ஹொலிவூட் நடிகை ஜெசிக்கா அல்பாவின் பிறந்தநாள்.
Happy Birthday Jessica Alba

  • தொடங்கியவர்

‪#‎இன்று‬
வேலையின் போது பாதுகாப்புக்கும் நலத்துக்குமான உலக நாள்

13062143_1185529894791073_35255930268711

World day for safety and health at work 2016.

  • தொடங்கியவர்

இது மிதக்கும் பாலம், சீனாவில் உள்ள ஹான் ஆற்றி குறுக்கே அமைந்திருக்கிறது. நாட்டின் பழமையான பாலங்களில் இதுவும் ஒன்று . இந்த பாலத்தின் பெயர் குவாங்ஜி (Guangji Bridge).

13043498_711966522239226_741144633790606

12115819_711966535572558_440599007927154

13083361_711966518905893_247376623408620

 

  • தொடங்கியவர்

13119964_1033422780039749_17802773792490

சிம்பாப்வே கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவர், விக்கெட் காப்பாளர், உலகத்தின் மிகச்சிறந்த துடுப்பாட்ட வீரர்களில் ஒருவரான அண்டி ஃப்ளவரின் பிறந்தநாள்.
Happy Birthday Andy Flower

இங்கிலாந்து அணியின் பயிற்றுவிப்பாளராகவும் கடமையாற்றி பாராட்டுக்களைப் பெற்றுக்கொண்டார்.

  • தொடங்கியவர்
உலகின் மிக உயரமான திறந்தவெளி லிப்ட்
 

சீனாவில் செங்­குத்­தான மலை­யொன்றின் உச்­சியை அடை­வ­தற்­காக 1070 அடி (326 மீற்றர்) உயர­மான லிப்ட் (உயர்த்தி) தொகுதி நிர்­மா­ணிக்­கப்­பட்­டுள்­ளது.

 

162951.jpg

 

உலகில் திறந்த வெளியில் நிர்­மா­ணிக்­கப்­பட்ட மிக உய­ர­மான லிப்ட் இது­வாகும். ஹுனான் மாகா­ணத்தின் ஸாங்­ஜி­யா­ஜியே வனப் பூங்கா எனும் சுற்­றுலாத் தலத்தில் இந்த லிப்ட் நிர்­மா­ணிக்­கப்­பட்­டுள்­ளது.

 

162952.jpg

 

கண்­ணாடி சுவர்­களைக் கொண்­ட­தாக இந்த லிப்ட் உள்­ளதால் இயற்­கையை ரசித்­த­வாறு இதில் பய ணம் செய்­யலாம்.

 

162953.jpg

 

இந்த லிப்ட் மூலம் 1070 அடி உய­ரத்­தை யும் சுமார் 2 நிமி­டங்­களில் கடந்து விடலாம் என்­பது குறிப்­பி­டத்­தக்­கது. ஒரே தட­வையில் 50 பேர் இந்த லிப்ட் டில் பயணம் செய்ய முடியும்.

.metronews.lk

Edited by நவீனன்

  • தொடங்கியவர்

தி ஜங்கிள்புக் படத்தின் பிரம்மாண்ட வெற்றிக்கு என்ன காரணம்? #அசத்தல் வீடியோ ஆதாரம்!

 

 

Video.jpg

90களில் பிறந்த குழந்தைகளுக்கு தூர்தர்ஷனில் ஒளிபரப்பப்படும் ஜங்கிள் புக் மிகவும் பரிச்சயம். இவர்களை டார்கெட் செய்து ஹாலிவுட்டில் உருவாகி இந்தியாவில் முதலில் ரீலீஸ் செய்யப்பட்ட “தி ஜங்கிள் புக்”வெளியான முதல் நாளே 10 கோடி வசூல் சாதனை படைத்தது.

'அயர்ன் மேன்' பட இயக்குநர் ஜான் ஃபேவ்ரூ இயக்கிய  இப்படத்திற்கு விமர்சகர் மற்றும் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு கிடைக்க இந்தி, ஆங்கிலம் மட்டுமின்றி தமிழ், தெலுங்கு என்று மற்ற மொழிகளிலும் மொழிமாற்றம் செய்யப்பட்டுள்ளது.

தற்பொழுது டிஸ்னி நிறுவனம் இப்படம் உருவான விதத்தை 2.21 நிமிட வீடியோவாக வெளியிட்டு மிரளவைத்திருக்கிறது. படப்பிடிப்பின் பின்னணியில் நிகழும் ஆர்ட் ஒர்க்ஸ், கேமரா நுணுக்கங்கள், VFX பற்றிய பிரம்மாண்ட இந்த வீடியோவைப் பார்த்தாலே, இந்த கடுமையான உழைப்பும் அர்ப்பணிப்புமே இந்தப் படத்தின் வெற்றிக்குக் காரணம் என்பது தெரியும்.

vikatan

 

  • தொடங்கியவர்

கேஎப்சி-யில் உணவு பரிமாற ரோபோக்கள்

 

 
kfc_2833303f.jpg
 

உலகின் முன்னணி சங்கிலித் தொடர் பாஸ்ட்ஃபுட் நிறுவனமான கெண்டகி பிரைட் சிக்கன் (கேஎப்சி) தனது கடைகளில் உணவுகளை பரிமாற ஊழியர்களுக்குப் பதில் ரோபோக்களைப் பயன்படுத்த உள்ளது. `ஒரிஜினல் +’ என்ற திட்டம் ஷாங்காயில் உள்ள தேசிய மாநாடு மற்றும் கண்காட்சியில் அறிமுகப்படுத்தியுள்ளது.

செவ்வக வடிவ தலையுடன் இந்த ரோபோக்கள் வடிவமைக்கப் பட்டுள்ளன. இந்த ரோபோக்கு `டு மி (Du Mi)’ என்று பெயரிடப்பட்டுள்ளது. இந்த ரோபோக்கள் உணவுகள் விநியோகிப்பது முதல் பணம் செலுத்துவது வரை அனைத்து வேலைகளையும் செய்யுமாறு வடிவமைக்கப்பட்டுள்ளது. சிவப்பு நிறச் சட்டையை அணிந்து மிக அழகாக காட்சியளிக்கிறது இந்த ரோபோ.

பாஸ்ட்ஃபுட் உணவு துறையில் ரோபோக்ககளை அறிமுகப்படுத்தப்படுவது இதுவே முதல் முறை. இந்த செயற்கை நுண்ணறிவு கொண்ட ரோபோக்களை முன்னணி இணையதள நிறுவனமான பய்டு டூய்ங் 2015-ம் ஆண்டு நடைபெற்ற உலக மாநாட்டில் அறிமுகப்படுத்தியது.

tamil.thehindu

  • தொடங்கியவர்
வரலாற்றில் இன்று: ஏப்ரல் 29
 
 

article_1430283110-reutersmedia.jpg1903: கனடாவில் பாரிய மண்சரிவினால் 70 பேர் பலி.

1945: இரண்டாம் உலகயுத்தத்தில் ஜேர்மன், இத்தாலி ஆகியன நேச நாடுகளிடம் நிபந்தனையற்ற வகையில் சரணடைந்தன.

1945: ஜேர்மன் சர்வாதிகாரி அடோல்வ் ஹிட்லர் தனது நீண்டகால காதலியான ஈவா புரோனை பதுங்குக் குழியொன்றில் வைத்து திருமணம் செய்தார்.

1946: ஜப்பானிய முன்னாள் பிரதமர் ஹிடேகி டோஜோ மற்றும் 28 முன்னாள் ஜப்பானிய தலைவர்கள் போர்க்குற்றச்சாட்டு விசாரணையில் குற்றவாளிகளாக காணப்பட்டனர்.

1953: அமெரிக்காவில் முதல் தடவையாக பரீட்சார்த்த முப்பரிமா தொலைக்காட்சி ஒளிபரப்பு நடத்தப்பட்டது.

1970: வியட்கொங் கெரில்லாக்களுக்கு எதிராக போரிடுவதற்காக அமெரிக்க, தென் வியட்னாம் படைகள் கம்போடியாவுக்குள் படையெடுத்தன.

1986: லொஸ் ஏஞ்சல்ஸ் பொதுநூல் நிலையத்தில் ஏற்பட்ட தீயினால் சுமார் 400,000 நூல்கள் எரிந்தன.

1991: பங்களாதேஷில் ஏற்பட்ட பாரிய  சூறாவளியினால் 138,000 பேர் பலி. ஒரு கோடி பேர் வீடுகளை இழந்தனர்.

1992: அமெரிக்காவின் லொஸ் ஏஞ்சல்ஸ் நகரில் கறுப்பின கார் சாரதியொருவரை தாக்கிய பொலிஸார் நிரபராதிகள் என நீதிமன்றம் தீர்ப்பளித்ததையடுத்து இடம்பெற்ற பாரிய வன்முறைகளில் 53 பேர் பலியாகினர். பல கட்டிடங்கள் அழிக்கப்பட்டன.

1995: நவகிரி என்ற இடத்தில் இலங்கை இராணுவத்தினரின் அவ்ரோ விமானம் 50 படையினருடன் விடுதலைப் புலிகளால் சுட்டு வீழ்த்தப்பட்டது.

1997: 1993ஆம் ஆண்டின் இரசாயன ஆயுதங்களுக்கு தடை விதிக்கும் ஒப்பந்தம் அமுலுக்கு வந்தது.

2004: செப்டெம்பர்11 தாக்குதல் தொடர்பான விசாரணைக்குழுவிம் அமெரிக்க ஜனாதிபதி ஜோர்ஜ் புஷ், உப ஜனாதிபதி டிக் செனி ஆகியோர் சாட்சியமளித்தனர்.

2005: 29 ஆண்டு கால முற்றுகையின் பின்னர் லெபனானில் இருந்து சிரியா முற்றாக வெளியேறியது.

2007: வான்புலிகளின் இரண்டு வான்கலங்கள் கொழும்புக்கு வடக்கே 3 மைல் தொலைவில் உள்ள கொலன்னாவ எண்ணெய்க் குதங்களையும் 10 மைல் தொலைவில் உள்ள கெரவலப்பிட்டி எண்ணெய் குதங்களையும் குண்டு வீசித் தாக்கின.

.tamilmirror.lk

Edited by நவீனன்

  • தொடங்கியவர்

ஏப்ரல் 29: காவிய ஓவியர் ராஜா ரவி வர்மா பிறந்த தின சிறப்பு பகிர்வு

 

ஓவியங்கள் என்றால் மேற்குலகம் தான் தனித்துவமானது என்கிற எண்ணம் பலருக்கு இருந்தது. அப்பொழுது இந்தியாவின் ஓவியக்கலையின் கம்பீரத்தை காட்டுகிற அருஞ்செயலை இவர் செய்தார் .கேரளாவில் திருவனந்தபுரத்திலிருந்து 40 கி.மீ. தொலைவிலுள்ள கிளிமனூர் அரண்மனையில் உமாம்பா தம்புராட்டி, நீலகண்டன் பட்டாதிரிபாதி எனும் அரச குடும்பத்தைச் சேர்ந்த தம்பதிகளுக்கு மகனாக பிறந்தார் இவர் .வீட்டில் இசை ஓவியம் என ஒவ்வொரு துறையிலும் ஒவ்வொருவர் சிறந்து விளங்கினார்

இவருக்கு ஓவியக்கலையின் மீது எல்லையில்லா ஆர்வம் வருவதற்கு இவரின் மாமாவான ராஜா ராஜவர்மா காரணம் .அவரிடம் ஓவியக்கலையை கற்க ஆரம்பித்தார் .தஞ்சாவூர் ஓவியக்கலையை அவர் இவருக்கு பயிற்றுவித்தார் .இந்திய ஓவியங்களில் ஒரு சிக்கல் அதில் உபயோகிக்கப்படும் வண்ணங்கள் .மரம், இலை, பூக்கள், கற்கள் ஆகியவற்றில் இருந்து பெறப்பட்ட வண்ணங்கள் ஓவியங்களில் பயன்படுத்தப்பட்டன .ஓவியங்கள் காலப்போக்கில் மங்குவது இதனால் நடக்க ஆரம்பித்தது.

rajaravivarma.jpg

வாட்டர் பெய்ண்டிங் முறையை ராமசாமி நாயுடு கற்றுத்தந்தார் .தைலவண்ண ஓவியங்களில் உள்ள நுணுக்கங்களை தஞ்சாவூர் அரண்மனை ஓவியரான அழகிரி நாயுடுவிடமும் அறிந்து கொண்டார்.அப்பொழுது மேற்சொன்ன வண்ண சிக்கல் எழுந்ததை கண்ட ரவிவர்மா ஆயில் பெய்ண்டிங் பற்றி கேள்விப்பட்டார் .அதைப்பற்றி தெரிந்த ஒரே நபரான மதுரையை சேர்ந்த ராமசாமி நாயக்கர் அதை சொல்லித்தர மறுத்துவிட்டார் .அவரின் சீடர் ஆறுமுகம் பிள்ளை இரவோடு இரவாக இவருக்கு அதன் நுணுக்கங்களை சொல்லிவிட்டு போனார்

தியடோர் ஜென்சன் எனும் ஒரு ஆங்கிலேய ஓவியரிடம் "ஆயில் பைன்டிங்" (oil painting) எனப்படும் எண்ணெய் கலந்த வண்ணக்கலவை கொண்டு ஓவியம் வரையும் கலையைக் கற்றார்.பின்னர் இந்தியாவின் இதிகாசங்களை தன்னுடைய ஓவியத்தில் காண்பிக்க ஆரம்பித்தார் .தமயந்தி,துஷ்யந்தன், தூது சென்ற கிருஷ்ணர், ரிஷிகன்யா ஆகிய ஓவியங்களை என எண்ணறற புராண கதாபாத்திரங்களை அவர் ஓவியமாக்கினார்

இந்தியாவின் செறிவான வண்ணங்கள் அழகியல் ஆகியவற்றோடு எதார்த்தத்தை பிரதிபலிக்கும் ஐரோப்பிய முறையை கலந்து கொண்டார் .இயல்பான இயற்கை சூழலில் இந்திய தெய்வங்களை அவர் வரைந்தது பலரைக்கவர்ந்தது .அவரின் ஓவியங்களில் தெய்வங்களை கோயில்களில் இருக்கும் சிலையைப்போல வரைவதை அவர் தவிர்த்தார் .சேலை அணிந்த அழகிய தென்னிந்திய பெண்களை மாதிரியாக கொண்டு தெய்வங்களை வரைந்தார்

வியன்னா உலக ஓவிய கண்காட்சியில், சிக்காகோ ஓவிய கண்காட்சியில் என உலகம் முழுக்க தங்க பதக்கங்களை தன் ஒவியங்களுக்காக அள்ளினார் .ஓவியம் என்பது ஒருவரோடு போய்விடக்கூடாது என்பதற்காக ஒலியோகிராபி பிரஸ் ஒன்றை மும்பையில் ஆரம்பித்தார் .ஒரு சுவையான சங்கதி பிரண்டிங் மற்றும் சித்திர செதுக்கல் ஆகியவற்றை செய்து தந்தவர் இந்திய திரைப்பட துறையின் தந்தை தாதா சாகிப் பால்கே .இந்தியாவில் லித்தோபிரஸ் முறையை அறிமுகம் செய்ததும் இவர் தான் .ராஜா என்கிற பட்டத்துக்கு அதிகாரப்பூர்வமாக உரியவர் இல்லை என்றாலும் இவரின் திறமையை மெச்சி இவருக்கு கைசர் இ ஹிந்த் பட்டத்தை வழங்கிய பொழுது ஆங்கிலேய அரசு ராஜா ரவிவர்மா என அழைத்தது

அவர் எந்த அளவுக்கு பிரபலமாக இருந்தார் என்றால் அவரின் ஓவியங்களை கேட்டு வந்த கடிதங்களை பெறுவதற்காகவே அவர் ஊரில் ஒரு தனி அஞ்சல் நிலையம் திறந்தார்கள் .நம் வாழ்வில் ராஜா ரவிவர்மா நீக்கமற கலந்து இருக்கிறார் எப்படி என்கிறீர்களா ?இன்றைக்கும் நம் காலேண்டர்களில் பார்க்கும் லக்ஷ்மி, சரஸ்வதி, பரமசிவன், விஷ்ணு, விநாயகர் எல்லாமும் இவரின் ஓவியங்களே அல்லது அவரின் தாக்கத்தில் எழுந்தவை .

vikatan

13086752_1033976909984336_66820682055054

உலகப்புகழ் பெற்ற பல ஓவியங்களைப் படைத்த, இந்தியாவின் மிகச் சிறந்த ஓவியர்களில் ஒருவரான ராஜா ரவி வர்மா பிறந்த நாள்.

இவர் வரைந்த இந்துக் கடவுளர்களின் ஓவியங்கள் உலகப் புகழ்பெற்றவை.

  • தொடங்கியவர்

GEN Z - இவங்க இப்படிதான்!

 

ரு மாலை வேளை. உங்கள் 10 வயது குழந்தையின் அறைக்குள் நுழைந்து, 'ஹோம் வொர்க்  முடிச்சிட்டியாமா?’ எனக் கேட்கிறீர்கள். ஹெட்போன் காதுக்குள் இன்னிசை மழை பொழிய, கையில் இருக்கும் ஸ்மார்ட்போனில் பலருடன் வாட்ஸ்அப் சேட் செய்துகொண்டே, மடியில் இருக்கும் டேப்லெட்டில் யூ-டியூப் வீடியோ பார்த்துக்கொண்டே, உங்கள் பக்கம் திரும்பாமல், 'அதான் செஞ்சிட்டு இருக்கேன். ஃபைவ் மினிட்ஸ்... முடிஞ்சிடும்ப்பா’ எனப் பதில் சொல்கிறாள். 'அடடா... ஒரே நேரத்துல எத்தனை வேலை பார்க்கிறா என் செல்லம்!’ என்ற ஆச்சர்யத்துடன், 'இந்தக் காலத்துப் பசங்க செம ஷார்ப்ல்ல...’ என உங்கள் நண்பர்கள், உறவினர் களைப் பார்க்கும்போது எல்லாம் அந்த ஆச்சர்யத்தைப் பகிர்ந்துகொள்வீர்கள்..!

ஆனால், ஜெனரேஷன் இஸட் (Gen Z) குழந்தைகள் அப்படித்தான். Gen Z..?

1995-ம் ஆண்டுக்குப் பின் பிறந்தவர்களை 'Gen Z 'என்கிறார்கள். இதற்கு முந்தைய தலைமுறை Gen Y அல்லது மில்லேனியல்ஸ் (1975-95 காலகட்டங்களில் பிறந்தவர்கள்). 1950-75-க்கு இடையில் பிறந்தவர்கள்Gen  X. மாறிக்கொண்டே வரும் உலக வழக்கங்களை அடிப்படையாகக்கொண்டு இந்தத் தலைமுறைவரை முறை!

p144a.jpg

முன்னர் எல்லாம் சிறுவர்கள் பேசிக்கொண்டிருக்கும்போது, பெரியவர்கள் யாராவது வந்தால் பேச்சை நிறுத்திவிடுவார்கள். அதை 'மரியாதை’ என, பெரியவர்கள் நினைப்பார்கள். ஆனால், Gen Z குழந்தைகள் பேச்சை நிறுத்துவது இல்லை. காரணம், அது மரியாதைக் குறைவு என அவர்கள் நினைப்பது இல்லை. ஏனெனில், அவர்கள் எதையும் மறைப்பது இல்லை. ரகசியம் என்பதில் அவர்களுக்கு நம்பிக்கை கிடையாது. எல்லா விஷயங்களையும் எங்கேயும் எப்போதும் ஷேர் செய்வதே அவர்கள் இயல்பு!  

இன்றைய தேதியில் உலகம் முழுக்க சுமார் 200 கோடி பேர் Gen Z தலைமுறைதான். இவர்கள் பிறக்கும்போது உலகமே டெக்னாலஜியின் கட்டுப்பாட்டுக்குள் வந்திருந்தது. இவர்களால் எந்தச் சிரமும் இன்றி அலைபேசி, கணினிகளைக் கையாள முடியும். 'பாப்பாக்கு மூணு வயசுதான். ஆனா, ஆங்ரி பேர்ட்ஸ் அட்டகாசமா விளையாடுது’ எனப் பெற்றோர்கள் பெருமை பேசலாம். ஆனால், அது அந்தக் குழந்தைகளின் இயல்பு. தொழில்நுட்பத்தையே சுவாசிக்கும், தினம் புதுப்புது விஷயங்களைத் தெரிந்துகொள்ளும் தலைமுறையினர்... இவர்கள்தான். மல்ட்டி டாஸ்க்கிங், வயதுக்கு மீறிய முதிர்ச்சி, எதையும் எளிதில் கிரகிக்கும்தன்மை ஆகியவை இவர்களின் சிறப்பியல்புகள். 'பிராண்ட்’களுக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கும் இவர்கள்தான் சமூக வலைதளப் போக்கை நிர்ணயிப்பவர்கள்.

p144e.jpg

மிக இளம்வயதிலேயே வாழ்க்கையை 'வாழத்’ தொடங்குவார்கள். போகிறபோக்கில் பெரும்சாதனை புரிவார்கள். Gen Z சாதனையாளருக்கான உதாரணமாக பாகிஸ்தானின் மலாலா யூஸுஃப்சாயைச் சொல்லலாம்.

p144c.jpg

மிகக் குறைந்த வயதில் (17 வயது) நோபல் பரிசு வென்றவர் அவர். இந்தத் தலைமுறையினருக்கு கல்வி முக்கியம். தன்னார்வலர்களாக இருப்பார்கள். Gen Y தலைமுறையில் 39 சதவிகிதப் பேர்தான் 'உலகில் மாற்றத்தை உருவாக்குவேன்’ என்றார்கள். ஆனால், Gen Z -ல் அது 60 சதவிகிதம். குடும்பத்தின் மீது அலாதி அன்பு உண்டு இவர்களுக்கு. இந்தியர்களுக்கு இடையே நடத்தப்பட்ட ஆய்வு முடிவுகளின்படி 'Gen Z தலைமுறையினரால் கூட்டுக் குடும்பம் மீண்டும் செழிக்க வாய்ப்பு இருக்கிறது’ என்கிறார்கள்.

ஒரு நதி ஒரு திசையில்தான் ஓடும். அதில் பயணிக்கும் படகு இரண்டு திசைகளில் பயணிக்க முடியும். நதிக்குள் மீன் நான்கு திசைகளில் நீந்தும். ஆனால், கரையில் இருந்து இவற்றைக் கவனிப்பவனின் மனம் எல்லா திசைகளிலும் பறக்கும். Gen Z அப்படிப்பட்டவர்கள்; படைப்பாற்றல் மிக்கவர்கள்; என்ன வேலை செய்கிறோம் என்பதைவிட அதை எப்படிச் செய்கிறோம் என்பதுதான் அவர்களுக்கு முக்கியம்.  

பொதுவாக 18 வயதுக்கு உட்பட்டவர்கள் அவர்களைச் சுற்றி நடக்கும் விஷயங்களால்தான் கட்டமைக்கப்படுகிறார்கள். முன்னர் 18 வயது வரை வீடு, பள்ளி, கல்லூரி ஆகியவைதான் சுற்றுப்புறமாக இருந்தன. ஆனால், தொழில்நுட்ப வளர்ச்சி Gen Z தலைமுறைக்கு உலகத்தையே உள்ளங்கையில் கொடுத்துவிட்டது. அதனால் அவர்களின் வாய்ப்புகள் எல்லையற்றவை. ஆஸ்திரேலியாவின் வாழ்க்கை முறையில் கவரப்பட்டு ஒருவன் கோயம்புத்தூரிலும் தன் லைஃப்ஸ்டைலை அப்படி அமைத்துக் கொள்ளலாம். சென்னையில் இருந்துகொண்டே ஸ்வீடனின் கலாசாரத்தை ஒருவன் பின்பற்றலாம். எனவே, இந்தத் தலைமுறையை மொழி, பிராந்திய, தேசிய வரையறைக்குள் அடக்குவது என்பது சிக்கலான ஒன்று. 'யாதும் ஊரே யாவரும் கேளிர்’ என்ற மூவாயிரம் ஆண்டு பழைய மொழிக்கு,Gen Z தலைமுறையே மிகச்சிறந்த உதாரணமாகத் திகழும்.

p144d.jpg

எல்லாமே இவர்கள் விரல்நுனியில் கிடைப்பதால் Gen Z -க்கு உடல் உழைப்பு என்பது குறைவு. அதனால் உடல் பருமன் என்பது தவிர்க்கமுடியாத விஷயம். எதிர்காலத்தில் இவர்கள் 40 வயதைத் தாண்டும்போது ஆரோக்கியம் அதிகம் பாதிக்கப்படும் தலைமுறையாகக்கூட இருக்கலாம் என்பது இவர்களுக்கான  எச்சரிக்கை.

Gen Z தலைமுறை 2020-ம் ஆண்டுக்குள் பணிபுரியத் தொடங்குவார்கள். நினைத்துக்கூடப் பார்க்க முடியாத தொழில்நுட்ப விஷயங்களுடன் வளரும் இவர்கள், முற்றிலும் மாறுபட்ட பணியாளர்களாக இருப்பார்கள். டீம்-வொர்க் என்பதை அவ்வளவாக விரும்பமாட்டார்கள். தனித்தனியே இயங்கத்தான் விரும்புவார்கள். அதற்கு ஏற்ப பல ஆய்வு முடிவுகளும் 'இந்தத் தலைமுறையில் பல தொழில்முனைவோர்கள் இருப்பார்கள்’ என்கிறது. நான்கு சுவருக்குள் இருந்தபடி, என்ன சொன்னாலும் செய்துவிடுவார்கள்.  

தலைமுறை இடைவெளி என்பது, எப்போதும் இருக்கும் ஒன்றுதான். ஆனால், இந்த முறை அந்த இடைவெளி தோனியின் சிக்ஸைவிட அதிகமான தூரத்தில் இருக்கிறது. Gen Z - ஐ புரிந்துகொள்வது சிரமம்தான். ஆனால் அவசியமானது. ஏனெனில், இனி உலகம் அவர்களுக்கானது!


 

p144b.jpg

dot1%282%29.jpg தினமும் அதிக முறை பேசுங்கள். ஆனால், அதிக நேரம் தொடர்ந்து பேசாதீர்கள். முடிந்தவரை குறைவான சொற்களைப் பயன்படுத்துங்கள்.

dot1%282%29.jpg குழந்தைகள் என நினைத்து பேசினால் போச்சு. அவர்களுக்கு முந்தைய தலைமுறையினரைவிட அதிக விஷயங்கள் தெரியும்... புரியும்.

dot1%282%29.jpg குடும்ப முடிவுகளில் தங்களின் பங்களிப்பும் இருக்க வேண்டும் என நினைப்பார்கள். உங்கள் புதிய கார் அல்லது பைக் நிறத்தை இனி மனைவிகள் தீர்மானிக்க முடியாது. குழந்தைகள்தான்!

dot1%282%29.jpg அதிகாரம் செல்லாது. அன்பால்தான் இவர்களை வசப்படுத்த முடியும்!

dot1%282%29.jpg விலை முக்கியம் அல்ல. இவர்களுக்கு ஒரு பொருளின் மதிப்புதான் முக்கியம்.

dot1%282%29.jpg நிறைய பொறுப்புகளைக் கொடுங்கள். அதை அவர்கள் விரும்புவார்கள்; நன்றாக செய்தும் முடிப்பார்கள்.

dot1%282%29.jpg Gen Z பொதுநலவாதிகள். எனவே, சமூகம் சார்ந்த விஷயங்களை அவர்களுடன் பேசுங்கள். அப்போதுதான் அவர்களின் மதிப்பைப் பெறமுடியும்!


p144f%281%29.jpg

தற்கும் பதற்றப்படுவது Gen Z  குணம் அல்ல. தடைகள் வந்தால், புதுப்புது வழிகளை கண்டறிந்து அதைத் தீர்ப்பதற்கான பரிசோதனைகளை மேற்கொள்வார்கள்.  நம் ஊரிலேயே அதற்கான உதாரணங்கள் உண்டு. இசை வெளியீட்டுக்கு முன்னரே '3’ படப் பாடல்கள் இணையத்தில் வெளியானதும் பதறிப்போனது படக்குழு. எல்லோரையும் விட அந்தப் படம் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமாகவிருந்த அனிருத்துக்கு அது பெரிய இடி. ஆனால், சுதாரித்த அனிருத் கொடுத்த ஐடியாதான் யூடியூப் ரிலீஸ். சில வீடியோ காட்சிகளைச் சேர்த்து 'கொலவெறி’ பாடலை இணையத்தில் வெளியிட்டனர். அதற்கு முன் தமிழ் சினிமா அப்படி ஒன்றைச் செய்தது இல்லை. அதன் பின் நடந்தது... வரலாறு!

கலைத் துறை மட்டும் அல்லாமல், சமூக அக்கறையுடன் போராடவும் இவர்கள் தொழில்நுட்பத்தையே கையில் எடுத்திருக்கிறார்கள். ஹாங்காங்கைச் சேர்ந்த ஜோஷ்வா ஹோங் 19 வயதிலேயே டைம்ஸ் பத்திரிகையின் 'உலகின் சக்திவாய்ந்த மனிதர்கள்’ பட்டியலில் இடம்பிடித்திருக்கிறார். இப்படி உலகளவில் ஜஸ்டின் பீபர் போல பலரை Gen Z ன் உதாரணங்களாகச் சொல்லலாம். 

vikatan

  • தொடங்கியவர்

ஏப்ரல் 29: தமிழுக்கும் அமுதென்று பேர் -

அந்தத் தமிழின்பத் தமிழெங்கள் உயிருக்கு நேர் பாவேந்தர் பாரதிதாசன் பிறந்த தினம் இன்று..

13055295_1125275284197927_29341315658994

தமிழுக்கும் அமுதென்று பேர்! – அந்தத்
தமிழ் இன்பத் தமிழ்எங்கள் உயிருக்கு நேர்!
தமிழுக்கு நிலவென்று பேர்! – இன்பத்

தமிழ் எங்கள் சமுகத்தின் விளைவுக்கு நீர்!
தமிழுக்கு மணமென்று பேர்! – இன்பத்
தமிழ் எங்கள் வாழ்வுக்கு நிருமித்த ஊர்!
தமிழுக்கு மதுவென்று பேர்! – இன்பத்
தமிழ் எங்கள் உரிமைச்செம் பயிருக்கு வேர்!
தமிழ் எங்கள் இளமைக்குப் பால்! – இன்பத்
தமிழ் நல்ல புகழ்மிக்க புலவர்க்கு வேல்!
தமிழ் எங்கள் உயர்வுக்கு வான்! – இன்பத்
தமிழ் எங்கள் அசதிக்குச் சுடர்தந்த தேன்!
தமிழ் எங்கள் அறிவுக்குத் தோள்! – இன்பத்
தமிழ் எங்கள் கவிதைக்கு வயிரத்தின் வாள்!
தமிழ் எங்கள் பிறவிக்குத் தாய்! – இன்பத்
தமிழ் எங்கள் வளமிக்க உளமுற்ற தீ!


– புரட்சிக்கவி பாரதிதாசன்

 

  • தொடங்கியவர்

13103456_1033980973317263_72384255617722

திரைப்பட நடிகை ஓவியாவின் பிறந்தநாள் இன்று..
Happy Birthday Oviya Helen

 

  • தொடங்கியவர்

காளான் வேரிலும் ஆடை

 

df3fb4bf2d1bf054832a319438c57f7e.jpg

நெதர்லாந்து நாட்டைச் சேர்ந்த ஆடை வடிவமைப்பாளர் Aniela Hoitink காளான் வேரினை பயன்படுத்தி ஆடை ஒன்றினை தயார் செய்துள்ளார்.

உங்கள் தோல் மற்றும் சுற்றுச் சூழலுக்கு ஏற்றவாறு வடிவமைக்கப்பட்ட இந்த ஆடை மக்காத ஆடையாகும்.

ஒரு ஆடையினை தயார் செய்வதற்கு, 350 கிண்ணத்தில் காளான் வளர்க்கப்பட்டுள்ளது, பெண்களின் உடல்களுக்கு ஏதுவாக இருக்கும் இந்த ஆடையினை தயாரிக்க 12 லிற்றர் நீர் போதுமானது என வடிமைப்பாளர் கூறியுள்ளார்.

இதில், வேர் மட்டுமே பயன்படுத்தப்பட்டுள்ளது, காளனை Packaging தொழிலுக்காக மட்டுமே பயன்படுத்துகிறார்கள், பேஷன் துறையில் பயன்படுத்தியல்லை.

எனவே இந்த முயற்சியில் இறங்கியுள்ளேன்.

uthayan

 

Edited by நவீனன்

  • தொடங்கியவர்

13064480_1033983866650307_21834578836526

இந்திய கிரிக்கெட் அணியின் சிரேஷ்ட பந்துவீச்சாளர் ஆசிஷ் நேஹ்ராவின் பிறந்தநாள்.
மீண்டும் இந்திய தேசிய அணிக்குள் 36 வயதில் மீள்வருகை புரிந்து, அணிக்காக சிறப்பாக பந்துவீசி வரும் நேஹ்ராவுக்கு இனிய வாழ்த்துக்கள்.
Happy Birthday Ashish Nehra

 

Edited by நவீனன்

  • தொடங்கியவர்

ஸ்பெயின் தலைநகர் மாட்ரிட் நகரைச் சேர்ந்தவர் OKUDA SAN MIGUEL. இவர் ஒரு அற்புதமான ஓவியர், எங்கேயாச்சும் சுவர்கள் டல்லாகத் தெரிந்தால் போதும் இப்படி வண்ணமயமாக மாற்றிவிடுகிறார். இவர் வரையும் கலர்ஃபுல் சுவர் ஓவியங்களுக்கு அமோக வரவேற்பு கிடைத்துள்ளது.

13118977_713411868761358_703814927606304

13062281_713411875428024_687636623293337

13133391_713411872094691_845296104109455

13076849_713411905428021_165528723109464

13124498_713411908761354_703068468908820

13102882_713411915428020_824715167324285

vikatan

  • தொடங்கியவர்
ஒரே தாவரத்தில் உருளைக்கிழங்கும் தக்காளியும்
 

உருளைக்கிழங்கும் தக்காளியும் ஒரே தாவரத்தில் விளையும் வகையிலான தாரவமொன்றை பிரித்தானிய நிறுவனமொன்று உருவாக்கியுள்ளது. இத் தாவரத்தின் அடியில் உருளைக்கிழங்கு விளையும்.

 

16321t2.jpg

 

மேற்பகுதியில் தக்காளி காய்க்கும். பிரிட்டனின் இப்ஸ்பவிச் நகரை தளமாக்க கொண்ட தோட்டத்துறை நிறுவனமான தொம்சன் அன்ட் மோர்க்ன் நிறுவனத்தினால் இந்த தாவரம் உருவாக்கப் பட்டுள்ளது.

 

16321t-1.jpg

 

தக்காளிக்கான ஆங்கிலப் பதமான tomato மற்றும் உருளைக் கிழங்கைக் குறிக்கும் potato ஆகிய பதங்களை இணைத்து 'TomTato' என இத் தாவரத்துக்குப் பெயரிடப்பட்டுள்ளது.

.metronews.lk

Edited by நவீனன்

  • தொடங்கியவர்

13131222_1033993649982662_54988703753330

மேற்கிந்தியத் தீவுகள் கிரிக்கெட் அணியின் அட்டகாச, அதிரடி சகலதுறை நட்சத்திரம் அன்றே ரசலின் பிறந்தநாள்.
Happy Birthday Andre Russell

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.