Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஆணிவேரில் மாணவி கிருஷாந்தியாக நடித்த நீலிமாவின் நேர்காணல்

Featured Replies

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அண்மையில் வெளியாகிய ஆணிவேர் திரைப்படம் புலம்பெயர் வாழ் தமிழ் மக்களின் உள்ளங்களில் நீங்காத இடத்தைப் பெற்றிருக்கிறது. அத்திரைப் படத்தில் மாணவி கிருஷாந்தியாக நடித்து பார்வையாளர்களின் கண்களை எல்லாம் பனிக்க வைத்த நடிகை நீலிமா அவர்களை வஜ்ரம் என்ற இதழுக்காக பேட்டி காணும் வாய்ப்பு எனக்குக் கிடைத்தது. யாழ் இணையத்தள நண்பர்களுக்காக அதனைத் தருவதில் மகிழ்ச்சி அடைகிறேன்.

neelimacs9.png

- : உங்களைப் பற்றிச் சொல்லுங்கள் நீலிமா, நீங்கள் எப்படி தமிழ்த் திரையுலகில் அறிமுக மானீர்கள்?

நீலிமா : நான் 1993ல் தேவர்மகன் படத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானென். என் அப்பா ஒரு எழுத்தாளர்.

- : நீங்கள் ஆணிவெர் என்ற திரைப்படத்தில் மாணவி கிருஷாந்தியாக நடித்திருக்கின்றீர்கள். ஆணிவெர் திரைப்படம் சிறந்த தொழில் நுட்பத்தோடு எடுக்கப்பட்ட ஈழத் திரைப் படம். அதற்கு முன் வந்த திரைப் படங்கள் எல்லாம் பெரும்பாலும் வீடியோ படங்களாகத்தான் வெளிவந்திருக்கின்றன. உலகத் தரத்துடன் வெளிவந்திருக்கிற தமிழ் ஈழத் திரைப்படம் ஒன்றில் முக்கியமான பாத்திரம் ஒன்றில் நடித்த படியால் உங்களுடைய பெயரும் ஈழத் திரைப்பட வரலாற்றில் பதிவாகியிருக்கிறது. இந்த வாய்ப்பு உங்களுக்கு எப்படிக் கிடைத்தது?

நீலிமா :அந்தப் படத்தில் சிறீ அப்படின்னு ஒரு அசிஸ்டன்ட் கமரா மேன் வேலை பார்த்தார். எனக்கு அந்த யூனிட்டில் யாரையும் தெரியாது. சிறீ சார் என்னைப் பற்றி ஜான் சார் கிட்ட செல்லியிருக்கிறார். இந்த மாதிரி நீலிமா என்றொரு ஆர்ட்டிஸ்ட் இருக்கிறாங்க நீங்க அவங்களைக் கேட்டுப் பாருங்க. அந்தக் காரக்டரக்குப் பொருத்தமா இருப்பாங்க, ஏன்னா ரியல் காரக்டர் இல்லையா! அந்த மாதிரி சொல்லியிருக்கிறார். உடனே அவர் எனக்கு போன் பண்ணி இந்த மாதிரி ஒரு படம் பண்ணப்போறம் ஸ்ரீலங்காவில் சூட்டிங் உங்களால பண்ண முடியுமா என்று என்னைக் கேட்டப்போ நான் வந்து டைரக்டர் சாரைப் பார்கணும், என்ன கதைன்னு தெரியாம என்னால பண்ண முடியாதுன்னு சொல்லியிருந்தேன். உடனே டைரக்டர் சார் என்னைக் கூப்பிட்டு நேரடியாவே சொன்னார். இந்தப் படம் ஸ்ரீலங்கா அரசாங்கத்திற்கு எதிரா பண்ணப் போற படம். அங்கே இருக்கிற தமிழர்களுக்கு நடந்த கொடுமைகளை சொல்லப் போற படம், நீங்க இதில் நடிக்க முடியுமா? இது வந்து ஒரு ரியலைஸ்ட் காரக்டர், அங்கே தமிழ் பெண்களுக்கு நடந்த அத்தனை கஷ்டங்களையும் இந்த ஒரு காரக்டர்தான் வெளிப்படுத்தும். யாழ்ப்பாணத்தில் படித்துக் கொண்டிருந்த ஒரு பெண்ணினுடைய காரக்டர். உங்களுக்கு பண்ண விருப்பம் இருக்கா? ஏன்னா இது ரொம்ப ரிஸ்கி. அது உங்களுக்கே தெரியும் அப்படீன்னு அவர் சொன்னதுக்கு அப்பறம் காட்சியை விளங்கப் படுத்தினார். அந்தப் பெண்ணுக்கு நடந்த பிரச்சனைகளை எல்லம் விளக்கினதுக்கு அப்புறம் என்ன கஷ்டம் வந்தாலும் இந்தப் படத்தில் நான் நடிக்கிறேன்னு சொன்னேன்.

- : இந்தப் படத்தில் நடிப்பதற்கு முன் ஈழத் தமிழர் பிரச்சனை பற்றி அறிந்திருக்கின்றீர்களா ஏனென்றால் நீங்கள் ஏற்று நடித்த கிருஷாந்தி என்பவர், இற்றைக்கு 10 ஆண்டுகளுக்கு முன் 1996ம் ஆண்டு என்று நினைக்கின்றேன், சிங்கள இராணுவத்தினரால் பாலியல் வல்லுறவுக்கு உள்ளாகப்பட்டு கொலை செய்யப் பட்ட பெண் அவர். இந்தச் செய்திகளை எல்லாம் நீங்கள் முன்னாடியே அறிந்திருக்கிறீர்களா?

நீலிமா : டைரக்டர் சார் சொன்னதுக்கு அப்புறம் தான் இந்தமாதிரி கொடுமைகளை அங்கே நடக்கிறது எனக்கு தெரியவந்தது.

neelima3te7.jpg

- : நீங்கள் தமிழீழத்தில் எத்தனை நாள் தங்கியிருந்தீர்கள்.

நீலிமா : எட்டு நாள்கள் தங்கியிருந்தேன்.

- : அந்த நாடு உங்கள் பார்வைக்கு எப்படி இருந்தது?

நீலிமா : இயற்கையா இருந்தது. பெரிய பெரிய கட்டிடங்கள் எல்லாம் கிடையாது பொலியூஷன் கிடையாது. எனக்குப் பிடிச்சிருந்தது.

- : நான் ஏற்கனவே மதுமிதாவிடம் கேட்ட ஒரு முக்கியமான கேள்வி இது. தமிழ்த் திரையுலகில் ஆணாதிக்கம் நிறைந்திருக்கின்றது. திரைப்படங்களின் கதைகளையே ஆணை வைத்துத்தான் எழுதுவார்கள். பொதுவாக திரைப்படங்களில் கதாநாயகனின் பெயரைப் போட்டதற்குப் பின் கதாநாயகியின் பெயரைப் போடுவார்கள். ஆனால், கதாநாயகனைக் காதலிப்பதைத் தவிர அந்தப் பெண்ணிற்கு வேற வேலையே இருக்காது. அவள் ஒரு தொடர்கதை, மறுபடியும். போன்ற படங்களில் கூட பெண் ஆளுமை முழுமையாக வெளிப்படவில்லை. தமழ்த் திரையுலகின் ஆணாதிக்கத் தன்மை பற்றி நீங்கள் என்ன நினைக்கின்றீர்கள்?

நீலிமா : இது இன்றைக்கு நேற்றல்ல அந்தக் காலத்திலிருந்தே நடந்து கொண்டிருக்கிற ஒரு விஷயம் ஆணாதிக்கம்தான். ஆனால் தொடர்கள் என்று வரும்போது பெண்களை மையப்படுத்தித்தான் தொடர்கள் வந்து கொண்டிருக்கின்றன. நீங்களோ பாருங்க இப்போ டிவி தொடர்களை எடுத்தால் லட்சுமி, கஸ்தூரி, செல்வி இந்த மாதிரி எல்லாமே பெண்களின் பெயர்களில்தான் வருகிறதே தவிர எனக்குத் தெரிந்தவரை எந்த ஆணின் பெயரிலும் ஒரு மெகா சீரியலுமே வந்ததில்லை. தொடர்களை அவங்க வீட்டில இருந்தே பார்ப்பாங்க. திரைப் படங்களைப் போல் வெளியில் சென்று பணம் கொடுத்து பார்க்க வேண்டிய தேவை இல்லை. சித்தி, அண்ணாமலை, செல்வி, கோலங்கள் எல்லாமே பெண்களை மையப் படுத்தி எடுத்த தொடர்கள் தானே.

- : பெண்களை மையப்படுத்தி எடுத்தாலும் அந்தத் தன்மைகள் மிகவும் பிற்போக்குத் தனமாகத்தானே இருக்கின்றன. நீங்களும் பல தொடர்களில் நடித்தக் கொண்டிருக்கும் நடிகை என்ற வகையில் என்ன நினைக்கின்றீர்கள். அந்த தொடர்களில் வரும் பெண்கள் முற்போக்காக இல்லையே! சில தொடர்களின் கதைகளே அற்பத்தனமாக இருக்கின்றன.

நீலிமா : சில கதைகள் தான் அப்படி, நீங்கள் சொல்வது மாதிரி சில கதைகள் அப்படி. மற்றும்படி பொதுவா பார்த்தா முக்கியத்துவம் நிறைய இருக்கு. நீங்க சொல்லுற ஆதிக்கம் குறைஞ்சு கொண்டு போகுது.

- : நான் இங்கே அதைச் சொல்லவில்லை. காலம் செல்லச் செல்ல பழைய மரபுகளில் மாற்றங்கள் வந்து கொண்டு தான் இருக்கின்றன. முற்று முழுதாக நல்ல மாற்றம் வந்துவிட்டது என்று சொல்ல மாட்டேன். ஆனால் முன்பிருந்த ஆதிக்கம் இப்போது இல்லை. இது வெளி உலகைப் பற்றியது. நான் இங்கே குறிப்பிட வருவது வெளி உலகைப் பற்றியது அல்ல. கதைகளில் காட்டப்படும் ஆதிக்கத் தன்மைகளைப் பற்றியும் பிற்போக்குத் தன்மைகளைப்; பற்றியும்தான் குறிப்பிடுகிறேன். அதாவது அந்தப் பெண்களுக்குக் கொடுக்கப் படும் கதாபாத்திரங்கள் முற்போக்குத் தன்மையுடன் இல்லை.

நீலிமா : அதைத்தான் நானும் சொல்ல வருகிறேன். கதாபாத்திரங்களைப் பற்றித்தான் நானும் சொல்லுறன் திரைப் படங்களைப் பார்தீங்கன்னா கதாநாயகன் அவனோட தங்கை இந்த மாதிரித்தான் கதை நகரும். ஆனால் தொடர்கள் அப்படியல்ல. செல்வியை எடுத்தால் செல்வியோட கணவர் செல்வியோட தம்பி கோலங்களை எடுத்தால் அபியோட கணவர், அபியோட தம்பி, அபியோட தங்கை இப்படித்தான் வருகிறதே தவிர ஆண்களை மையப் படுத்தி வருவதில்லை.

- : நீங்கள் ஈழத்திற்குப் போயிருந்தபோது அங்கே பெண்களும் ஆண்களுக்கு நிகராக விடுதலைப் போரில் ஈடுபட்டு வருவதைப் பார்த்திருப்பீர்கள். அந்தப் பெண்களைப் பற்றி நீங்கள் என்ன நினைக்கின்றீர்கள்?

நீலிமா : அவர்களை பார்க்கும்போது எனக்கு வியப்பாக இருந்தது. RX100 எல்லாம் ஓட்டிக் கிட்டிருந்தாங்க. நான் கொஞ்சம் பேரோடு பழகியிருக்கிறேன். குயிலினி, கஜாலி இன்னும் நிறைய பெண்கள் RX100 பைக்கை ரொம்ப சாதாரணமா ஓட்டிக்கிட்டுப் போவாங்க. சத்தியமா சொல்றேன் அந்தத் தைரியம் எங்களுக்குக் கிடையாது.

- : நீங்கள் தற்போது என்னென்ன திரைப்படங்களில், தொடர்களில் நடித்துக் கொண்டிருக்கின்றீர்கள்?

நீலிமா : இப்போ நான் பண்ணி முடிச்ச படம் திமிரு. மொய் என்று ஒரு படம் பண்ணிக்கிட்டிருக்கேன். நான் பண்ணிக்கிட்டிருக்கிற தொடர்கள் வந்து சாரதா, கஸ்தூரி, கோலங்கள். தெலுங்கில மூணு தொடர்கள் பண்ணிக்கிட்டிருக்கேன்.

neelima2jq1.jpg

- : மற்றப் படங்களைப்போல் அல்லாமல் ஆணிவேர் திரைப்படம் உண்மையாக நடந்த நிகழ்வுகளை பதிவு செய்த திரைப்படம் மற்ற திரைப்படங்களில், தொடர்களில் நடித்ததற்கும் ஆணிவேரில் நடித்ததற்கும் என்ன வேறுபாட்டை உணர்ந்தீர்கள்?

நீலிமா : திருப்தின்னு ஒண்ணு இருக்கும் இல்லையா அது ரொம்ப அதிகமாகவே இருந்தது ஆணிவேரில்தான். ஏன் என்றால் அங்கே இருக்கிற அத்தனை பெண்களையும் வெளிப்படுத்தக்கூடிய ஒரே கதாபத்திரம் இந்த சிவசாந்தி மட்டும் தான். சிவசாந்தியைத் தவிர எந்த இடத்திலேயும் வேற ஒரு தமிழ் பெண்ணை அவங்க படத்தில காட்டவில்லை. மிகப் பெரிய வாய்ப்பா நான் அதை எடுத்துகிட்டேன். அங்கே என்ன நடிக்கிறது என்று ஒண்ணுமே தெரியாத என்னை மாதிரி ஒருத்திக்கு, அந்த இடத்துக்குப் போய் அங்கே நடக்கிறதை எல்லாம் தெரிஞ்சுகிட்டு, அந்த மக்களோடு பழகி, அவங்க படுற கஷ்டங்களை எல்லாம் உணர்ந்து, வீடியோ கிளிப்புக்களை எல்லாம் போட்டுப் பார்த்து, டைரக்டர் சார் சொன்னார் கிருஷாந்தி என்ற உண்மைக் கதாபாத்திரத்தில நடிக்கிறீங்க, படத்தில் இராணுவத்தால் அடிவாங்குவது போல் காட்சிகள் வரும், படத்தை எதார்த்தமாக எடுக்க இருப்பதால் உண்மையாகவே நீங்கள் அடிபட வேண்டிவரும்னு சொன்னார். நான் சொன்னேன், அடி வாங்குறன் சார், அந்த மக்கள் இதைவிட மனசளவிலும் உடலளவிலும் அடி வாங்கியிருக்கிறாங்க இன்னும் வாங்கிக்கிட்டிருக்கிறாங்க. அந்த மக்களின் துயரங்களை வெளிக்காட்டிற பாத்திரத்தில் நடித்தது எனக்கு பெரிய மனநிறைவைத் தருகிறது.

- : படத்தில் அந்தக் காட்சி மிக நன்றாக எடுக்கப்பட்டிருக்கிறது. பொதுவாக மற்றத் திரைப்படங்களில், குறிப்பாகத் தமிழகத்திலிருந்து வெளி வருகின்ற திரைப் படங்களில் என்ன செய்வார்கள் என்றால், இந்த மாதிரி பாலியல் பலாத்காரக் காட்சிகளில் அந்த நடிகையை ஓட விடுவார்கள், வில்லனோ அல்லது வில்லனின் அடியாட்களோ அந்த நடிகையைத் துரத்துவது போலவும், ஆடையைக் கிழிப்பது போலவும் காட்டுவார்கள். இப்படிக் காட்டுவதால் அதிலுள்ள சோகம் மறைந்து விரசம்தான் வெளிப்படுகிறது. ஆனால் ஆணிவேரில் அந்தக் காட்சி முழுக்க முழுக்க சோகத்தை வெளிப்படுத்தும் விதமாகவே அமைந்திருக்கிறது. உங்களையும் ஆமிக்காரர்களை எதிர்த்துப் பேசும் தைரியமான பெண்ணாகக் காட்டியிருப்பார்கள்.

நீலிமா : ஆமாம், நான் அந்தப் படத்தில் 10 நிமிடங்கள் தான் வருவேன், பாடல் காட்சி ஒன்று வரும். அதைத் தவிர மற்றக் காட்சிளில் நான் வெறும் பத்து நிமிடங்கள் தான் வருவேன். அந்தப் பத்து நிமிடங்களில் தமிழீழப் பெண்ணையும் அவளோட உணர்ச்சிகளையும் வெளிக்காட்டியாக வேண்டும். அந்த கொஞ்ச நேரத்துக்குள் ஒரு பெண்ணை அமைதியாகவும் மென்மையாகவும் காட்ட முடியாது. குறிப்பிட்ட அந்த நேரத்திற்குள் எந்தளவிற்கு உணர்ச்சிகளை வெளிக்காட்ட முடியுமோ அந்த அளவிற்கு வெளிக்காட்ட வேண்டிய தேவை இருந்தது. சூட்டிங் பண்ணும் போது கிருஷாந்தி என்று தான் பெயர் இருந்தது. அதற்குப் பிறகு அந்தப் பெயரை வைக்க வேண்டாம் என்று நினைச்சதால, சிவசாந்தி என்று மாற்றினார்கள்.

- : உங்கள் தந்தையார் ஒரு எழுத்தாளர் என்று சொன்னீர்கள் அவரை பற்றிச் சொல்லுங்கள்

நீலிமா : என் அப்பா, விஸ்வா மோகன், தெலுங்கில் 300 நாவல்களை எழுதி வெளியிட்டிருக்கிறார்.

- : தமிழ் இலக்கியங்களைப் படித்திருக்கின்றீர்களா?

நீலிமா : இல்லை. தமிழ் படிப்பேன், அனால் இலக்கியங்களைப் படித்துப் புரிந்து கொள்ளும் அளவுக்கு எனக்கு தமிழறிவு காணாது ஆனாலும் தமிழ் விரும்பிப் படிப்பேன்.

- : தற்போது உள்ள எழுத்தாளர்கள், உதாரணத்திற்கு இந்துமதி, சுஜாதா, சுபா இவர்களின் எழுத்துக்கள் இலக்கியத் தமிழில் இல்லாமல் நடைமுறைத் தமிழில்தான் வெளி வருகின்றன. இவர்கள் எழுதிய கதைகளை வாசித்திருக்கின்றீர்களா?

நீலிமா : இல்லை, ஆனால் ஆங்கிலத்தில் எனக்குப் பிடித்த எழுத்தாளர் Sydney Sheldon. The other side of me அப்படின்னு தன்னுடைய, சுயசரிதையை எழுதினார். அதைத்தான் நான் முதலில் வாசித்தேன். அதைப் படிச்சதுக்குப் பிறகு எனக்கு அவரை ரொம்ப பிடிச்சுப் போச்சு. அவர் எழுதிய Rage of angel என்ற நாவலையும் The naked face என்ற நாவலையும் விரும்பி வாசித்தேன். படம் எப்படி போய்க்கிட்டிருக்கு?

- : நல்லாப் போய் கொண்டிருக்கிறது. லண்டனில் ஓடி முடிந்து தற்போது மற்ற ஐரோப்பிய நாடுகளிலும், கனடா ஆவுஸ்திரேலியா போன்ற நாடுகளிலும் ஓடிக்கொண்டிருக்கிறது. நான் லண்டனில் அந்தப் படத்தைப் பார்க்கப் போயிருந்தேன். சரியாக நீங்கள் வரும் காட்சி முடிந்தவுடன் இடைவேளைக்காக லைற்றைப் போட்டார்கள். நான் திரும்பிப் பார்க்கும்போது அத்தனை பேருமே அழுத கண்களைத் துடைத்துக் கொண்டிருந்ததர்கள்.

நீலிமா : ரொம்ப சந்தோஷமாயிருக்கு, என்னால லண்டன் வரமுடியிலேன்னு வருத்தமாக் கூட இருக்கு. இந்தியாவில வெளியிட்டால் முதல்ல சந்தோஷப் படக்கூடிய ஆள் நான்தான்.

- : அதற்கான முயற்சிகள் நடந்து கொண்ருக்கின்றன.

நீலிமா : ஜான்சாரும் அதைத்தான் சொன்னார். இங்க ரிலீஸ் பண்ணினா நான் ரொம்ப சந்தோஷப் படுவேன். ஏன்னா ஆடியன்ஸ்ஸோட உணர்வுகளை நான் நேரடியாவே பார்க்க முடியும்.

- : இதுபோன்று ஈழத் திரைப்படங்களில் நடிக்கக் கூடிய வாய்ப்புக்கள் வந்தால் தொடர்ந்து நடிப்பீர்களா?

நீலிமா : கண்டிப்பா நடிப்பேன்.

- : ஈழப் போராட்டம் 50 ஆண்டுகளுக்கு மேலாக நடந் கொண்டிருக்கிறது. முதல் 20 ஆண்டுகள் காந்திய வழியிலும், அதன்பின் 1970 இற்குப் பிறகு ஆயுதம் தாங்கிய ஒரு போராட்டமாகவும் நடந்து கொண்டிருக்கிறது. இந்தப் போராட்டத்தைப் பற்றி உங்களுடைய பார்வை என்ன?

நீலிமா : நான் பார்த்துத் தெரிஞ்சுகிட்ட விஷயம், அவங்களுக்கு இருக்கிற நம்பிக்கை இன்னிக்கு இல்லேன்னாலும் நாளைக்கு விடுதலை கிடைக்கும் என்கிற நம்பிக்கை. அங்கே இருக்கின்ற தமிழர்களுக்கு மட்டுமல்ல அந்த நம்பிக்கை எல்லாருக்கும் கண்டிப்பா இருக்கணும். அவங்க வாழ்க்கையா இருக்கட்டும் தொழிலா இருக்கட்டும், தங்களின் நாடா இருக்கட்டும் அந்த மக்களுக்கு இருக்கின்ற நம்பிக்கை எங்களுக்கெல்லாம் இல்லையேன்னு நினைக்கும்போது நிஜமாவே வருத்தமா இருக்கு. It is something great. இது எங்கள் வீடு என்று அந்தப் படத்தில சொல்லுற மாதிரி அவங்க நிஜமாவே சொல்லும்போது, எனக்கு ரொம்ப சந்தோஷமாயிருக்கு

- : நல்லது நீலிமா, உங்கள் கருத்துக்களை என்னுடன் பகிர்ந்து கொண்டதற்கு மிக்க நன்றி. இன்னொரு தடவை மற்றுமொரு சந்தர்ப்பத்தில் பேசிக்கொள்வோம், நன்றி வணக்கம்

நீலிமா : நன்றி வணக்கம்

Edited by ilango3112

  • கருத்துக்கள உறவுகள்

இணைப்புக்கு நன்றி

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

கறுப்பியக்கா என்னிடம் நீலிமாவின் படங்கள் இருக்கின்றன. பேட்டியோடு இணைக் விரும்புகிறேன் முடியவில்லை. எப்படி?

  • கருத்துக்கள உறவுகள்

இதில் தரவேற்றி விட்டு இணையுங்க.http://www.imageshack.us/

எண்ட படத்தையும் தரவா இளங்கோ சார்

இணைப்புக்கு நன்றி

  • கருத்துக்கள உறவுகள்

படங்கள் இணைத்தது மேலும் அழகு.

உங்கட முயற்சிக்கும் வாழ்த்து

நன்றி அண்ணா இணைப்புக்கு

பேட்டி இணைப்புக்கு நன்றி இளங்கோ

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.