Jump to content
இணைய வழங்கி மாற்றம் காரணமாக நானை  (17/11/2024) ஐரோப்பிய நேரம் 20:00 மணிமுதல் இணைய வழங்கியில் தடங்கல் ஏற்படும் என்பதை அறியத்தருகின்றோம்.

செல்வராகவன் - சோனியா திருமணம் : ரஜினி வாழ்த்து


Recommended Posts

பதியப்பட்டது

கை முளைத்து கால் முளைத்து வந்த கிசுகிசுக்களுக்கெல்லாம் இன்று முற்றுப்புள்ளி வைத்தது சோனியா அகர்வால் கழுத்தில் செல்வராகவன் போட்ட மூன்று முடிச்சு.

'காதல் கொண்டேன்' படத்தின்போதே செல்வாவும் - சோனியாவும் ஒருவரையொருவர் காதல் கொண்டார்கள். இதனையடுத்து கருத்து வேறுபாட்டால் பிரிந்துவிட்டனர் என செய்திகள் கசிந்துகொண்டே இருந்தது. இதனிடையே கடந்த மாதம் இருவருக்கும் திருமண நிச்சயதார்த்தம் நடைபெற காசிப்புகள் கப்சிப் ஆனது.

சென்னை எழும்பூரில் உள்ள ராஜா முத்தையா திருமண மண்டபத்தில் காலை 8.30 மணியிலிருந்து 10 மணிவரை முகூர்த்தம் குறிக்கப்பட்டிருந்தது. சரியாக 8.25 மணிக்கு மணமக்கள் மேடைக்கு வர சம்பிரதாய சடங்குகள் ஆரம்பமானது.

பொன்நிற பட்டுப்புடவை, ஒட்டியாணம், நெற்றிச்சுட்டி, கைகளில் சிம்பொனி இசைத்த வளையல்கள், நகக்கண் தொடங்கி முழங்கை வரை வரையப்பட்டிருந்த மருதாணி, பஞ்சாபி ஸ்டைலில் தொங்கவிடப்பட்டிருந்த மூன்றடுக்கு கிளிகூண்டு என ஜொலி ஜொலித்தார் புதுப்பெண் சோனியா. சில நொடிகள் மென்சோகம், சில நொடிகள் பளீர் சிரிப்பு என சோனியா ரியாக்ஷ்ன் சூப்பர் ரசனையாக இருந்தது.

கழற்றப்படாத கண்ணாடி, பட்டு வேட்டி சட்டையில் இருந்த செல்வராகவனின் முகத்தில் மாப்பிள்ளை களை.

செல்வராகவனின் இரண்டு சகோதரிகளும், ஐஸ்வர்யா தனுஷும் ஒரே கலர் பட்டுப்புடவையில் மணமக்களுக்கு ஒத்தாசையாக மணவறையை நிறைத்துக் கொண்டிருந்தனர். 'பரட்டை என்கிற அழகுசுந்தரம்' கெட்டப்பில் நீண்ட தலைமுடியுடன் உறவினர்களை உபசரித்து கொண்டிருந்தார் தனுஷ்.

செல்வாவின் நெருங்கிய தோழர்களான யுவன்ஷங்கர்ராஜாவும் கேமிராமேன் அரவிந்த் கிருஷ்ணாவும் மேடையின் கீழே ஒரு ஓரத்தில் நின்றபடி டி.வி. திரையில் தங்கள் தோஸ்த்தின் கல்யாண கோலத்தை ரசித்துக் கொண்டிருந்தனர்.

மணமக்கள் இருவரும் தங்களின் பெற்றோருக்கு பாதபூஜை செய்தனர். இதனையடுத்து செல்வராகவனுக்கு அவரது மைத்துனர் (சோனியாவின் தம்பி) பாதபூஜை செய்து மோதிரம் அணிவித்தார்.

சடங்குகள் நடந்து கொண்டிருந்தபோது சலசலப்பு ஏற்பட்டது. சட்டென திரும்பிப்பார்த்தால் மனைவி லதாவுடன் உள்ளே நுழைந்தார் ரஜினி. குர்தா அணிந்து வெள்ளை தாடியுடன் காணப்பட்ட சூப்பர்ஸ்டார், மேடை ஏறி மணமக்களுக்கு பூக்களால் அச்சதை தூவி, கைக்கொடுத்து வாழ்த்து தெரிவித்தார். சில நிமிடங்கள் நின்றுகொண்டிருந்த ரஜினி மாப்பிள்ளையிடம் ஏதோ சொல்லிவிட்டு விடைபெற்றார்.

சரியாக 9.10 மணிக்கு கெட்டிமேளம் கொட்டப்பட, சோனியா கழுத்தில் தாலி கட்டினார் செல்வராகவன். இதனையடுத்து இருவரும் மாலை மாற்றிக்கொண்டு அக்னி வலம் வந்தனர்.

நடிகர்கள் சிவக்குமார், ராஜேஷ், கார்த்தி, ஸ்ரீகாந்த், முரளி, ரவிகிருஷ்ணா, தெலுங்கு நடிகர் வெங்டேஷ், நடிகைகள் சினேகா, மஞ்சுளா, ப்ரீத்தா, சுஹாசினி, சந்தியா, இயக்குனர்கள் மணிரத்னம், ப்ரியதர்ஷன், ராஜ்கபூர், கவிஞர் வைரமுத்து, பிலிம்சேம்பர் தலைவர் கே.ஆர்.ஜி. உள்ளிட்ட பலர் கலந்துகொண்டு வாழ்த்தினர். <_<<_<

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.