Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

வடக்கு, கிழக்கு அபிவிருத்திக்கு விரைவில் விசேட நிதியம்; பிரதமர் ரணில் அறிவிப்பு

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

வடக்கு, கிழக்கு அபிவிருத்திக்கு விரைவில் விசேட நிதியம்; பிரதமர் ரணில் அறிவிப்பு

[ Monday,11 January 2016, 03:58:08 ]   
ranil.jpg

யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட வடக்கு, கிழக்கு மாகாணங்களின் பொருளாதார அபிவிருத்தியை நோக்காகக் கொண்டு விசேட நிதியமொன்றை இந்த வருடத்தில் ஆரம்பிப்பதற்கு திட்டமிட்டுள்ளதாக பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.

மேலும் சர்வதேச வங்கிகள் மற்றும் நாணய பரிமாற்றல்களின் கேந்திர நிலையமாக ஸ்ரீலங்காவை மாற்றியமைக்க உள்ளதாகவும், இந்த திட்டத்தை அமுல்படுத்துவதற்கு கொழும்பு துறைமுக நகரத்தை பயன்படுத்தவுள்ளதாகவும் பிரதமர் குறிப்பிட்டார்.

தேசிய இளைஞர் சம்மேளன பிரதிநிதிகளை நேற்று ஞாயிற்றுக்கிழமை அலரிமாளிகையில் சந்தித்து கலந்துரையாடுகையிலேயே பிரதமர் இவ்வறு கூறினார்.

மனித உரிமையையும் தேசிய நல்லிணக்கத்தையும் கட்டியெழுப்பும் புதிய அரசியலமைப்பு சர்வஜன வாக்கெடுப்பிற்கு விடப்படும். இதன்போது நாட்டு மக்கள் பூரண ஆதரவை வழங்க வேண்டும் என்றும் அவர் கோரிக்கை விடுத்தார்.

பிரதமர் ரணில் விக்கிரமசிங்க மேலும் குறிப்பிடுகையில்,

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ஆட்சிக்கு வந்து ஒரு வருடம் பூர்த்தியாகியுள்ளது. இதன்படி வருட பூர்த்தியின் 52 ஆவது வாரத்தில் அரசியல் ரீதியாக புதிய பயணத்தை ஆரம்பிப்பதற்கான அத்திவாரம் இடப்பட்டுள்ளது. மேற்படி புதிய அரசியலமைப்பை தயாரிப்பதற்காக முழு நாடாளுமன்றத்தையும் அரசியலமைப்பு பேரவையாக மாற்றும் பிரேரணை சபையில் சமர்ப்பிக்கப்பட்டது.

21ஆம் நுற்றாண்டின் வளர்ச்சிக்கு ஏற்ப புதிய அரசியலமைப்பு தயாரிக்கப்படும்.

இந்நிலையில் மக்களுடைய கருத்துக்களுக்கு மதிப்பளித்து உருவாக்கப்படவுள்ள புதிய அரசியலமைப்பினை நாடாளுமன்றத்தில் பெரும்பான்மையுடன் நிறைவேற்றியதன் பின்னர் சர்வஜன வாக்கெடுப்பிற்கு உட்படுத்துவோம். இதன்போது நாட்டின் எதிர்காலத்தை கருத்திற்கு கொண்டு முழு நாட்டு மக்களும் புதிய அரசியலமைப்பிற்கு பூரண ஆதரவினை வழங்க வேண்டும்.

நாட்டின் இரண்டு பிரதான கட்சிகளும் ஒன்றிணைந்தமையின் விளைவாக 2016 ஆம் ஆண்டின் போது ஸ்ரீலங்கா அரசியல் ரீதியாக ஸ்திரமடைந்து காணப்படும் என்றும் சர்வதேச பொருளாதாரம் சீர்குலையும் சந்தர்ப்பத்தில் ஸ்ரீலங்காவின் பொருளாதார வளர்ச்சி வீதம் சிறப்பான மட்டத்தை காண்பிக்கும் என்றும் சர்வதேச பிரநிதிகள் நம்பிக்கை வெளியிட்ட வண்ணமுள்ளனர்.

கடந்த வருடத்தின் போது அரசியல் ரீதியான விடயங்களுக்கே நாம் முக்கியத்துவம் கொடுத்தோம். இருந்தபோதிலும் இந்த வருடத்தின் போது தொழில் பிரச்சினைகள் மற்றும் பொருளாதார விடயங்களுக்கு முக்கியத்துவம் அளிக்கவுள்ளோம்.

இதன்படி பாடசாலை கல்வி, தொழில் பயிற்சி, தொழில் வாய்ப்பு, தகுந்த சம்பளம், வீட்டு வசதிகள், சுகாதாரம், ஓய்வூதியம் மற்றும் வளமான வாழ்க்கை என்ற சாதாரண மக்களின் அடிப்படை பிரச்சினைகளுக்கு இந்த வருடத்தின் போது தீர்வு காணப்படும். இதனை நோக்காகக் கொண்டு அதிகளவிலான முதலீட்டாளர்களை ஸ்ரீலங்காவிற்கு அழைத்து வரவுள்ளோம்.

முப்பது வருடகால யுத்தத்தின் காரணமாக வடக்கு கிழக்கு மாகாணங்கள் பெருமளவில் பாதிப்படைந்துள்ளன. இதன்காரணமாக அப்பகுதி இளைஞர்கள் யுவதிகள் தொழிலின்றி வாழ்க்கையை கொண்டு செல்கின்றனர்.

யுத்தத்தினால் இடம்பெயர்ந்த மக்களுக்குரிய காணிகளை விடுவித்து மீள்குடியேற்றத்தை துரிதப்படுத்த வேண்டியுள்ளது. ஆகவே இதனை அடிப்படையாக கொண்டு ஜப்பானின் உதவியுடன் விசேட பொருளாதார அபிவிருத்தி மாநாட்டை வடக்கு கிழக்கில் நடத்தவுள்ளோம். இதனூடாக வடக்கு கிழக்கின் அபிவிருத்திக்காக விசேட நிதியமொன்று உருவாக்கப்படும்.

மேலும் இத்தகைய திட்டங்களை முன்னெடுப்பதற்கு முன்னர் அபிவிருத்தி துறைக்கேற்ற சட்டத்திட்டங்களை நாடாளுமன்றத்தில் சமர்ப்பித்து நிறைவேற்ற வேண்டியுள்ளது.

ஆகவே 2016 ஆம் ஆண்டு ஸ்ரீலங்கா வரலாற்றில் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த வருடமாகும். இந்த வருடத்தில் யுக மாற்றமொன்றை ஏற்படுத்துவோம். தேசிய அரசாங்கத்தின் மாற்றமிகு வேலைத்திட்டத்திற்கு நாட்டு மக்கள் அனைவரும் பூரண ஆதரவினை வழங்க வேண்டும் - என்றார்.

http://ibctamil.com/news/index/16765

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.