Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

வடக்கின் தீர்வுத்திட்ட வரைபுக்கு எதிராக ஜே.வி.பி. போர்க்கொடி

Featured Replies

வடக்கின் தீர்வுத்திட்ட வரைபுக்கு எதிராக ஜே.வி.பி. போர்க்கொடி!

முப்பது வருடகால யுத்தம் நிறைவடைந்து நாட்டை நல்லிணக்கத்தை நோக்கி நகர்த்திச் செல்லாமல் மீண்டும் இலங்கையில் இனவாதத்தைக் கட்டவிழ்த்து விடவே வடக்கில் சி.வி.விக்னேஸ்வரன் தலைமையிலானவர்களும், தெற்கில் மஹிந்த ராஜபக்ஷ தலைமையிலானவர்களும் முயற்சி செய்கின்றனர் என்று மக்கள் விடுதலை முன்னணியின் (ஜே.வி.பி.) பொதுச் செயலாளர் ரில்வின் செல்வா தெரிவித்தார்.

இலங்கையில் புதிய அரசமைப்பைக் கொண்டுவருதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுவரும் சூழலில் தேசிய இனப்பிரச்சினைக்கானத் தீர்வுத்திட்ட வரைபுக்கான முன்மொழிவுகளை கடந்த வியாழக்கிழமை வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி. விக்னேஸ்வரன் மாகாண சபையில் சமர்ப்பித்தார். இதில் மொழிவாரியாக இலங்கை இரண்டு (தமிழ், சிங்களம்) மாநிலங்களாகப் பிரிக்கப்பட வேண்டும் என்பதுடன், இலங்கையை சமஷ்டிக் குடியரசாகப் பிரகடனப்படுத்தப்பட வேண்டும் எனவும் வலியுறுத்தப்பட்டிருந்து. வடக்கு மாகாணசபையின் இந்தத் தீர்வுத்திட்ட வரைபு குறித்து மக்கள் விடுதலை முன்னணியின் பொதுச் செயலாளர் ரில்வின் சில்வாவிடம் வினவியபோது அவர் தெரிவித்த கருத்துக்கள் வருமாறு:-

"இலங்கை முப்பது வருடகால யுத்த அனுபவத்தைக் கொண்ட நாடு. யுத்தத்தால் பாரிய இழப்புகளை சந்திக்க நேரிட்டது. யுத்தத்தின் மூலம் ஏற்பட்ட காயங்கள் இன்னமும் மக்கள் மனங்களில் இருந்து ஆறவில்லை. தமிழ் மக்களின் தீர்வு காணப்படாத பல பிரச்சினைகள் காணப்படுகின்றன. அவர்களின் காணிகள் இன்னமும் முழுமையாகக் கையளிக்கப்படவில்லை. வடக்கில் மீனவர்களின் வாழ்வாதாரத்தை இந்தியர்கள் சுரண்டிச் செல்கின்றனர். விவசாய நடவடிக்கைகள் தொடர்பில் பல பிரச்சினைகள் காணப்படுகின்றன. மக்களின் எண்ணில் அடங்காத அடிப்படை பிரச்சினைகள் காணப்பட்டும் வடக்கு மாகாண சபை அது தொடர்பில் ஆக்கபூர்வான வேலைகள் எதனையும் செய்யவில்லை. மாறாக மீண்டும் நாட்டில் இனவாதத்தை கட்டவிழ்த்துவிடும் முயற்சியில் ஈடுபட்டுள்ளது.

30 வருடகால யுத்தம் முடிவுக்குக் கொண்டுவரப்பட்டும் நாடு இன்னமும் நல்லிணக்கத்தை அடையவில்லை. நாடு நல்லிணக்கம் நோக்கிப் பயணிக்கும் வேலையில், வடக்கில் முதலமைச்சர் விக்னேஸ்வரன் தலைமையிலானவர்களும், தெற்கில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ சார்பானவர்களும் மீண்டும் நாட்டை பின்நோக்கி நகர்த்தி இனவாத்தை கட்டவிழ்த்துவிட்டு வருகின்றனர். இவர்களின் செயற்பாட்டால் நல்லிணக்கம் என்பது பாரதூரமான பிரச்சினையாக மாறக்கூடிய சந்தர்ப்பம் உள்ளது. தெற்கில் இனவாதம் துளிர்விடும் சூழலில் வடக்கின் அடிப்படைவாதிகளும் அதற்கு நேசக்கரம் நீட்டுகின்றனர். தேசிய இனப்பிரச்சினைக்கான தீர்வுத்திட்டம் வடக்கு மாகாண சபையில் இருந்து வர வேண்டியது அல்ல. அந்த மக்கள் சார்பான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நாடாளுமன்றில் உள்ளது. அவர்கள் மூலம் இந்த விடயம் வர வேண்டும். வடக்கு மாகாண சபையின் இந்தச் செயற்பாடுகள் நாட்டில் மீண்டும் இனவாதத்தை தோற்றுவிக்கும் வகையிலேயே அமைந்துள்ளது" - என்றார்.

இதேவேளை, வடக்கு மாகாண சபையின் அரசியல் தீர்வுத் திட்ட வரைபு மீதான விவாதம் எதிர்வரும் 12 ஆம் திகதி முழுமைபெற்று அன்றைய தினமே தீர்வுத் திட்டம் இறுதிசெய்யப்பட்டு, 16 ஆம் திகதி எதிர்க்கட்சித் தலைவரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவருமான இரா.சம்பந்தனிடம் யாழ்ப்பாணத்தில் வைத்துக் கையளிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

http://malarum.com/article/tam/2016/04/09/14266/%E0%AE%B5%E0%AE%9F%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%80%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F-%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%88%E0%AE%AA%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%8E%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%95-%E0%AE%9C%E0%AF%87-%E0%AE%B5%E0%AE%BF-%E0%AE%AA%E0%AE%BF-%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8A%E0%AE%9F%E0%AE%BF-.html#sthash.P2MdMoqD.dpuf

 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.