Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

முல்லைத்தீவு, கிளிநொச்சி மாவட்டங்களில் அதிகரிக்கும் கசிப்பு உற்பத்தியும் அதனால் ஏற்படும் மரணங்களும்

Featured Replies

வடமாகாண சபை நடவடிக்கை எடுக்குமா? குளோபல் தமிழ் செய்தியாளர்

முல்லைத்தீவு, கிளிநொச்சி மாவட்டங்களில் அதிகரிக்கும் கசிப்பு உற்பத்தியும் அதனால் ஏற்படும் மரணங்களும்




போருக்குப் பிந்தைய சூழலில் கிளிநொச்சி மற்றும் முல்லைத்தீவு மாவட்டங்களில் கசிப்பு உற்பத்தி அதிகரித்துக் காணப்படுகின்றது. சட்டவிரோதமான இந்த மது உற்பத்தியை தடுத்து நிறுத்த சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்றும் தெரிவிக்கப்படுகிறது. 

கிளிநொச்சி மற்றும் முல்லைத்தீவு மாவட்டங்களில் பெருமளவானவர்கள்  உள்ளுரில் உற்பத்தி செய்யப்படும் கசிப்பு மதுபானத்திற்கு அடிமையாகியுள்ளனர். கசிப்பு உடலுக்கு கடும் தீயை ஏற்படுத்தும் சட்டவிரோத மதுபானமாகும். இதனால் பல மரண சம்பவங்கள் அதிகரித்துக் காணப்படுகின்றன. 

அண்மைய நாட்களில், கசிப்பு அருந்தும் பழக்கமுடைய, 50 முதல் 60 வரையானவர்கள் திடீர் மரணங்களுக்கு உள்ளாகியுள்ளனர். இவர்கள் தினமும் கசிப்பு அருந்துவதாகவும் இதனால் உடல் பாகங்கள் செயழிந்து திடீர் மரணங்களை தழுவியுள்ளதாக தெரிய வருகின்றது. 

இனந்தெரியாத காய்ச்சல், உடல்பாகங்கள் செயழிழப்பு, நோய் எதிர்ப்பு சக்தி இன்மை போன்ற காரணங்களால் குடும்பத் தலைவர்கள் திடீர் மரணங்களுக்கு உள்ளாகியுள்ளனர். இவர்கள் அனைவரும் கசிப்பு அருந்தும் பழக்கமுடையவர்கள் என்பதும் மரண விசாரணைகளில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

கிளிநொச்சி முல்லைத்தீவு மாவட்டங்களில் கசிப்பு என்ற சட்டவிரோத மதுபானம்  மிகவும் எளிதாக கிடைக்கின்றது. மிகவும் குறைந்த வருமானமுள்ளவர்கள் இதனை அருந்துகின்றனர். அதிகாலையிலேயே கசிப்பு அருந்தி விட்டு தமது தொழிலுக்குச் செல்லும் அளவில் அப் பகழக்கிற்கு அவர்கள் அடிமையாகியுள்ளனர்.

இதனால் பெருமளவான குடும்பங்கள் அநாதரவாகியுள்ளன. திருமணம் முடிக்காத பெண் பிள்ளைகளைக் கொண்ட குடும்பங்கள், இளம் வயது மனைவியைக் கொண்ட குடும்பங்கள் என பல  குடும்பங்கள் இதனால் பாதிக்கப்படுகின்றன. குடும்ப கௌரவம் கருதி அவர்கள் இதனை வெளியிடத் தயங்குகின்றனர். 

கசிப்பு சட்டவிரோத மதுபான உற்பத்திகளை தடுக்கும் நடவடிக்கையில் மதுவரித்திணைக்களத்தினரும் பொலிஸாரும் ஈடுபடவில்லை என்றும் கசிப்பு உற்பத்தியாளர்கள் மிகவும் சுதந்திரமாக தமது சட்டவிரோத உற்பத்தி நடவடிக்கைகளில் ஈடுபடுவதாகவும் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. 

இந்த நிலை தொடர்ந்தால் பல அநியாய மரணங்கள் தொடரும் என்றும் இதனால் பல குடும்பங்கள் வீதிக்கு வந்து அநாதரவு நிலையை அடைய நேரிடும் என்றும் இதனால் பெரும் சமூக வீழ்ச்சி ஏற்படும் என்றும் பாதிக்கப்பட்டவர்கள் சுட்டிக்காட்டுகின்றனர். வட மாகாண சபை இதற்கு உரிய நடவடிக்கை எடுக்குமா? 

வன்னியிலிருந்து குளோபல் தமிழ் செய்தியாளர்

 

http://globaltamilnews.net/GTMNEditorial/tabid/71/articleType/ArticleView/articleId/130974/language/ta-IN/article.aspx

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.