Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சுற்றாடல் சுத்தம் யார் பொறுப்பில்?

Featured Replies

டெங்கு நோயின் அபாயம் எங்களைத் துரத்திக் கொண்டே இருக்கிறது. இதனோடு காலத்துக்குக் காலம் எங்களை நோக்கி படை எடுக்கும் தொற்று நோய்கள் இன்னமும் தணிந்தபாடில்லை. 
இத்தகையதோர் மோசமான சூழ்நிலையில் டெங்குக் கட்டுப்பாட்டில் எவ்வளவுதான் நடவடிக்கை எடுத்தாலும் டெங்கின் அபாயம் ஏதோ ஒருவகை யில் பீறிக் கொள்வதை காணமுடியும். 

டெங்கு காய்ச்சல் எதனால் ஏற்படுகிறது? டெங்கு நுளம்பு பெருகுகின்ற இடங்கள் எவை? இது போன்ற கேள்விகளுக்கு சிறு குழந்தைகள் கூட பதில் அளிக்கும் அளவில் சுகாதாரக் கல்வி சென்றடைந்துள்ளது.
டெங்கு தொடர்பிலான அறிவு தாராளமாக இருக்கின்ற போதிலும் மக்களின் மனப்பாங்கு என்பது இன்னமும் மாற்றமுறாமல் இருப்பதன் காரணமாகவே டெங்குக் காய்ச்சலை இதுவரை கட்டுப்பாட்டில் வைத்திருக்க முடியவில்லை. இதற்கு மேலாக மக்கள் தங்கள் வீட்டுக் கழிவுகள், குப்பை கூழங்களை வீதிகளில் வீசி விடுகின்ற பழக்கத்தை வழக்கமாக்கிக் கொண்டுள்ளனர். இதனால் வீதி எங்கும் கழிவு பொட்டலங்கள் காணப்படுவதுடன் தெரு நாய்களும் கால்நடைகளும் அவற்றை துவம்சம் செய்துவிட எங்கள் சுற்றுச் சூழல் என்பது நரகமாகி விடுகிறது. 

தமது வீட்டுக் குப்பைகளை வீதிகளில் கொட்டுவது எவ்வளவு அபத்தமானது என்பதைத் தெரிந்திருந்தும் பொறுப்பற்ற முறையில் ஒரு பகுதி மக்கள் நடந்து கொள்வது எந்த வகையிலும் நியாயமாகாது.  
வீதிகளில் குப்பைகளைக் கொட்டுவது எதற்காக என்ற ஆய்வை மேற்கொள்ளும் போது, ஐயா! இங்கே குப்பை கொட்டாதீர்கள் என்ற விளம்பரப் பலகைகளை நாட்டுபவர்கள் குப்பைகளை எங்கே கொட்டுவது என்பதையும் அறியப்படுத்த வேண்டுமல்லவா? ஏன் அதனை சம்பந்தப்பட்டவர்கள் செய்யவில்லை என்ற கேள்வி பதிலுக்கு எழுப்பப்படுகிறது.
உண்மையில் வடபுலத்தில் இன்னமும் கழிவகற்றலுக்கான முகாமைத்துவக் கட்டமைப்பு தலை எடுக்கவில்லை என்பதை சொல்லித்தானாக வேண்டும். 

21ஆம் நூற்றாண்டிலும் குப்பைகள் அகற்றப்படவில்லை என்று ஊடகங்களில் செய்தி பிரசுரிக்கும் அளவிலேயே நமது நிலைமை இருப்பது மிகப் பெரும் துரதிர்ஷ்டவசமானது.
குப்பைகளை அகற்றுவதற்காக ஒரு சீரான வேலைத்திட்டம் அமுல்படுத்தப்படவேண்டும். 
வீட்டு வாசலுக்கு முன்பாக குப்பைகளை வையுங்கள். அவை வாகனங்களில் எடுக்கப்படும் என்ற அறி வித்தல் கட்டாக்காலி நாய்களினால் படுதோல்விகண்டு விட்டது. 

எனவே பொருத்தமான கழிவகற்றல் செயற்றிட்டம் உடனடியாக அமுலுக்குக் கொண்டுவரப்பட வேண்டும்.
இதுதவிர குப்பைகளை இங்கு கொட்டாதீர்கள் என்பதற்குப் பதிலாக இவ்விடத்தில் குப்பைகளை கொட்டுங்கள் என்ற அறிவிப்புகளை முன்வையுங்கள். அதற்கான இடத்தை தெரிவு செய்யுங்கள்.
இது விடயத்தில் உள்ளூராட்சி அமைப்புகள் அதிக கவனம் செலுத்த வேண்டும். குப்பைகள் அதிகமாக சேருகின்ற இடங்களில் ரைக்டர் பெட்டிகளை நிறுத்தி அவற்றில் குப்பைகளைக் கொட்ட வைப்பது அவற்றை சுலபமாக அகற்றுவதற்கு உதவியாக இருக்கும். 

இதேபோல பொருத்தமான முறைமைகள் நடை முறைப்படுத்தப்பட வேண்டும்.

http://www.valampurii.lk/valampurii/content.php?id=9751&ctype=news

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.