Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சிவில் உடையில் வந்தோரால் இளம் குடும்பஸ்தர் கைது : யாழ். நுணாவில் பகுதியில் சம்பவம்

Featured Replies

யாழ்ப்­பாணம் நுணாவில் பகு­தியில் சிவில் உடையில் வானில் வந்­த­வர்­க ளால் இளம் குடும்­பஸ்தர் ஒருவர் கடந்த ஞாயிற்றுக்கிழமை கைது­செய்­யப்­பட்டுள்ளார்.

mother1.jpg

இது தொடர்பில் கைது செய்யப்பட்டவரின் தாயாரால் யாழ். மனி­த­ உ­ரிமை ஆணைக்­கு­ழுவில் நேற்றை­ய ­தினம் முறைப்­பாடு செய்­யப்­பட்­டுள்­ளது. இரா­ச­துரை ஜெயந்தன் என்ற இளம் குடும்­பஸ்­தரே இவ்­வாறு கைது­செய்­யப்­பட்டுள்ளார்.

கைது சம்­பவம் தொடர்­பாக இளம் குடும்­பஸ்­த­ரது தாயார் தெரி­வித்­த­தா­வது,

கடந்த ஞாயிற்­றுக்­கி­ழமை காலை எனது வீட்­டிற்கு மோட்டார் சைக்­கிளில் சிவில் உடையில் ஒரு­சிலர் வந்­தனர். அவர்­களின் கையில் துப்­பாக்கி இருந்தது. இந்­நி­லையில் அவர்கள் தம்மை பொலிஸார் எனத் தெரி­வித்­த­துடன் எனது வீட்டை சோத­னை­யிட வேண்டும் எனக்­கூறி சோத­னை­யிட்­டனர்.

அவ்­வாறு குறித்த நபர்கள் சோத­னை­யிட்­டுக்­கொண்­டி­ருக்கும் வேளை மேலும் சிலர் வானில் அங்கு வந்­தனர். இந்­நி­லையில் வீட்­டி­லி­ருந்த எனது மகனை வானில் வந்­த­வர்கள் கைவி­லங்­கிட்டு அழைத்துச் செல்ல முற்­பட்­டனர்.

எனது மகனை எதற்­காக கைது செய்­கி­றீர்கள் என அவர்­க­ளிடம் நான் கேட்­ட­போது அவர்கள் என்னை அருகில் வர­வேண்டாம் விலகிப் போங்கள் எனத் தெரி­வித்­தனர்.

எனது மகன் எந்தக் குற்­றமும் செய்­ய­வில்­லையே எதற்­காக அவரைக் கைது­செய்­கி­றீர்கள் என நான் மீண்டும் அவர்­க­ளிடம் கேட்­ட­போதுஇ எனது மக­னோடு மட்­டும்தான் பேச­வேண்­டி­யுள்­ளது எனவும் மகனை எதற்­காக கைது செய்­கின்றோம் என்­ப­தெல்லாம் விசா­ர­ணை­களின் பின்னர் உங்­க­ளுக்குத் தெரி­ய­வரும் என கூறி­விட்டு எனது மகனை கைவி­லங்­கிட்டு வானில் ஏற்றிச் சென்­றனர்.

அவ்­வாறு அவர்கள் எனது மகனை கைது­செய்து அழைத்­துச்­செல்­லும்­போது அதில் ஒரு நபர் என்­னிடம் வந்து 2 மணி­நேரம் கழித்து அரி­யா­லையில் உள்ள தமது அலு­வ­ல­கத்­திற்கு வரு­மாறு கூறிச் சென்றார். அத்­துடன் எனது வீட்டில் நின்ற இரு­மோட்டார் சைக்­கி­ளையும் அவர்கள் எடுத்­துச்­சென்­றுள்­ளனர். இவ்­வாறு குறித்த கைது நட­வ­டிக்கை சம்­பவம் இடம்­பெற்­ற­தை­ய­டுத்து உட­ன­டி­யா­கவே நான் சாவ­கச்­சேரிப் பொலிஸ் நிலை­யத்தில் எனது மகன் சிவில் உடை தரித்­த­வர்­களால் கைது­செய்­யப்­பட்­டுள்ளார் என்ற அடிப்­ப­டையில் முறைப்­பாட்டை மேற்­கொள்ளச் சென்­றி­ருந்தேன்.

இதன்­போது அங்­கி­ருந்த பொலிஸ் அதி­காரி குறித்த முறைப்­பாட்டை தாம் பெற்­றுக்­கொள்ள முடி­யாது எனத் தெரி­வித்­த­துடன் எனது மகனை கைது­செய்­த­வர்கள் கூறிய இடத்­திற்கு செல்­லு­மாறு என்­னிடம் தெரி­வித்தார்.

இந்­நி­லையில் எனது மகனை மீட்க கைது­செய்­த­வர்கள் கூறிய இடத்­திற்குச் சென்­றி­ருந்தேன். இதன்­போது அங்கு எனது மகனை கைது­செய்ய வந்­த­வர்­களில் ஒருவர் நின்றார். அவ­ரிடம் எனது மகன் எங்கே என வின­வி­ய­போது, எனது மகனை வாக­னத்தில் தாம் வைத்­தி­ருப்­ப­தா­கவும் அவரை பார்க்­க­மு­டி­யாது எனவும் மறுநாள் என்னை வவு­னி­யா­விற்கு வரு­மாறு கூறி தொலை­பேசி இலக்கம் ஒன்­றையும் தந்­தி­ருந்தார்.

குறித்த நபர் கூறி­ய­தற்கு அமைய மறுநாள் வவு­னியா சென்று அவர்கள் குறிப்­பிட்ட இடத்­திற்கு சென்­றதன் பின்னர் அவர்கள் தந்த தொலை­பேசி இலக்­கத்­திற்கு தொடர்பை மேற்­கொண்டேன். தொலை­பே­சியில் உரை­யா­டிய ஒரு நபர் என்னை நிற்கும் இடத்­திற்கு அருகில் உள்ள சிறு­வீதி பகுதி ஊடாக வரு­மாறும் அவ்­வாறு வந்தால் அலு­வ­லகம் காணப்­படும் எனவும் தெரி­வித்தார். அவர் கூறி­ய­தற்கு அமைய அந்த அலு­வ­ல­கத்­திற்கு சென்று எனது மகன் எங்கே என அங்கு நின்ற அதி­கா­ரி­யிடம் கேட்­ட­போது, எனது மகனை பூசா­வுக்கு கொண்டு சென்றுவிட்டதாக கூறினார் என குறித்த தாய் தெரிவித்தார்.

இதேவேளை கைதுசெய்யப்பட்ட குறித்த நபர் விடுதலைப்புலிகள் அமைப்பின் உறுப்பினராக இருந்து கடந்த 2011 ஆம் ஆண்டு புனர்வாழ்வின் பின்னர் குடும்பத்தாருடன் இணைந்திருந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறமை குறிப்பிடத்தக்கது.

http://www.virakesari.lk/article/5227

 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.