Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

விலை போவதாக இருந்தால் த.தே கூட்டமைப்பு எத்தனையோ அமைச்சுப் பதவிகளைப் பெற்றிருக்க முடியும் - வியாழேந்திரன்

Featured Replies

3581_1460791329_ffff.jpg

அற்ப சொற்ப சலுகைக்காக விலை போவதாக இருந்தால் த.தே கூட்டமைப்பு எத்தனையோ அமைச்சுப் பதவிகளைப் பெற்றிருக்க முடியும்

மட்டக்களப்பு பெரிய போரதீவு பட்டாபுரம் கிராமத்தில் சித்திரைப்புத்தாண்டு நிகழ்வில் கலந்துகொண்ட பா.உ சதாசிவம் வியாழேந்திரன் உரையாற்றுகையில்
தற்போது இந்த நாட்டில் ஏற்பட்டிக்கின்றதான ஒரு சிறந்த நல்லாட்சியான சூழ்நிலையை நாம் பார்க்கக்கூடியதாகவுள்ளது. காரணம் கடந்த அரசில் மக்கள் நடமாடும் போது அனைவருக்கும் பின்னால் ஒரு துப்பாக்கி இருப்பது போன்ற உணர்வுவை  கானக்கூடியதாகயிருந்தது ஆனால் தற்போது இந்த நல்லாட்சி அரசில் அப்படியான உணர்வு துளியும் இல்லை அதாவது முன்னைய அரசை விட இந்த அரசில் சுதந்திரம் அதிகரிப்பதை காணக்கூடியதாகவுள்ளது. 
தற்போது இந்த அரசு நல்லாட்சி என்ற  ஒரு தீர்வுத்திட்டத்தை முன்வைத்துள்ளது இந்த தீர்வுத்திட்டத்திலே மக்களுக்கான சிறந்த தீர்வை பெற்றுக்கொடுப்பதாகும்.
 
தமிழ் தேசிய கூட்டமைப்பாகிய நாங்கள் எங்கள் கட்சியின் பெருந்தலைவர் கௌரவ இரா சம்பந்தன் ஐயா அவர்களுடைய தலமையைில் ஒன்றாக அணி திரண்டிருக்கிறோம்.
இந்த நேரத்தில் தமிழ் மக்களாகிய நாங்கள் எல்லோரும் ஒன்றுதிரண்டு ஒரு சிறந்த தீர்வுத்திட்டத்தை பெறுவதற்கு நாம் வெளியில் இருந்துகொண்டு தேவையற்ற விமர்சணங்களையும் விசமத்தனங்களையும் பேசுவதையும் விட்டுவிட்டு தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலமைத்துவத்தையும், தமிழ் தே.கூட்டமைப்பையும் பலப்படுத்தும் வகையில் எம்மாலான ஆதரவை வழங்கவேண்டும்.  
நாம் ஒரு சிறந்த தீர்வுத்திட்டத்தை நோக்கி சென்று கொண்டிருக்கின்ற அதேவேளை எம் மக்கள் சார்ந்த அபிவிருத்தி தொடர்பிலும் எங்களை நாங்கள் ஈடுபடுத்துகின்றோம் என்றும் கூறினார்.
அவர் தொடர்ந்து உரையாற்றுகையில் கடந்த சில நாட்களின் முன்பு டக்ளஸ் தேவானந்தா அவர்கள் தமிழ் தேசிய கூட்டமைப்பு  எதிர்க்கட்சி தலைவர் பதவியையும், பாராளுமன்ற பிரதித் தவிசாளர் பதவியையும் எடுத்துக்கொண்டு அவர்கள் சுகபோகமாக இருப்பதாக கூறியிருந்தார்.

இக் கருத்துக்கு தாம் கடந்த ஊடகவியலாளர் சந்திப்பில் பதிலடியை  வழங்கியிருந்ததாகவும் கூறினார். 

நாம் எப்போதும் எமது மக்களின் உரிமைக்காக ஒரு சிறந்த தீர்வுத்திட்டத்தை பெற்றுக்கொடுப்பதற்காக போராடிக்கொண்டிருப்பவர்கள். இவ்வாரான அற்ப சொற்ப அற்ப சொற்ப சலுகைகளுக்காக விலை போபவர்கள் நாங்கள் அல்ல அப்படியிருந்திருந்தால் கடந்த எத்தனையோ அரசுகளில் தமிழ் தேசிய கூட்டமைப்பு எத்தனையோ அமைச்சுப் பதவிகளைப் பெற்றிருக்க முடியும் என்றும் இன்றைய சித்தரை புத்தாண்டு நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றினார்.

http://battinaatham.com/description.php?art=3581

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.